1 கொரிந்தியர் திருமுகம்

முனைவர் வ.மரியதாசன், கோட்டாறு

விவிலிய அன்பர்களே,

வணக்கம்.கொரிந்து நகரை கி.மு. 146 ல்உரோமைப் பேரரசு அழிப்பதற்குமுன்னால் அது செழிப்பும்பெருமையும் நிறைந்த ஒன்றாகத்திகழ்ந்தது. பின்னர் கி.மு. 44 ல்ஜுலியஸ் சீசர் இந்நகரை மீண்டும்கட்டி எழுப்பி உரோமையின்காலனியாக, இத்தாலி நாட்டு வியாபாரிகளின் புதிய கொரிந்து நகராகமாற்றினார். இக்காலத்திற்குப் பிறகு, இது பல நாட்டு வியாபாரிகளும்சாதனையாளர்களும் வந்து செல்கின்ற ஒரு முக்கிய நகராக உயர்ந்தது. கி.மு.29 ல் நிலவிய அமைதி, செழிப்பு இவற்றின்காரணமாகஅக்காயாமாநிலத்தின்செனட் தலைநகராகவும் இது விளங்கிற்று.

மேலும் கொரிந்தின் புவியியல் அமைப்பும் அது முக்கியத்துவம்பெறுவதற்குக் காரணமாய் அமைந்தது. இத்தாலி, ஸ்பெயின் போன்றஐரோப்பிய நாடுகளிலிருந்து பாலஸ்தீனம் போன்ற மத்திய கிழக்குநாடுகளுக்கு கடல் வழியாக நடைபெற்ற வாணிபத்திற்கு மையப்பகுதியாகவும், பண்டமாற்று இடமாகவும், பலவகைச் சமூக, சமய நம்பிக்கைஉடையவர்கள் கூடி வரும் இடமாகவும் இது இருந்தது. மேற்குக் கரையில்அத்ரியாட்டிக் கடலும் கிழக்குக் கரையில் ஆகேயன் கடலும் தொட்டுத்தழுவும் கொரிந்து நகரம், எப்பொழுதும் பரபரப்பான வண்ண மயமானதுறைமுகங்களையும், முதலாளிகள், அடிமைகள், சமயவாதிகள், தத்துவஞானியர், இன்பம் சுவைப்போர் என்று பல வகையான மக்களையும்,கேளிக்கை விளையாட்டு இடங்களையும் கொண்டதாய் இருந்தது.

இத்தகைய நகரில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்துத்திருச்சபையை புனித பவுல் நிறுவினார். ஆனால், இத்திருச்சபை அங்குநிலவிய பல்வகைக் கோட்பாடுகள், ஐதீகங்களால் பிரச்சனைகளுக்குஉள்ளாயிற்று. தனது திருமடல்கள் மூலமாக இப்பிரச்சனைகளைப் புனிதபவுல் எப்படித் தீர்த்தார் என்பதைத்தான் இப்பாடத்தில் படிக்கப்போகிறோம்.இப்பிரச்சனைகள் இன்றைக்கும் நமது சமூகத்திலும் திருச்சபையிலும்நிலவுவதால் புனித பவுலின் பதில்கள் நமக்கும் பயன்தரும்படிஅமைந்துள்ளது இம்மடல்களின் தனிச்சிறப்பு ஆகும். இப்பாடங்களைஎழுதித்தந்த புனித பவுல் விவிலிய நிலையத்தின் முன்னாள் இயக்குநர்பேரருள்திருமுனைவர் வ. மரியதாசன்பேரருள்திருமுனைவர் வ. மரியதாசன்பேரருள்திருமுனைவர் வ. மரியதாசன்அவர்களுக்கும், திருச்சி புனித பவுல்குருத்துவக் கல்லூரி பேராசிரியர்பேரருள்திரு முனைவர் அ. ஸ்டீபன்அவர்களுக்கும் நமது நன்றிகள் உரித்தாகுக.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திருமுனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்

 

பொருளடக்கம்:

1. கொரிந்தியர்

1. முன்னுரை
2. உள்ளடக்கம்
3. பிரச்சனைகளுக்குப் பதில்

3.1. கொரிந்து திருச்சபையில்கட்சிகளும் பிளவுகளும்
3.2. நற்செய்தியாளர் கடமைகள்
3.3. கூடா ஒழுக்கம்
3.4. வேற்றுமறையினர் முன் வழக்காடல்
3.5. பரத்தமை

4. வினாக்களுக்குப் பதில்

4.1. திருமணமும் கன்னிமையும்
4.2. சிலைக்குப் படைத்த பொருளை உண்ணலாமா?
4.3. வழிபாட்டில் நடந்துகொள்ளும் முறை
4.4. அன்பின் விருந்து('ழு'ஞநு) சமபந்தி
4.5. தூய ஆவியாரின் கொடைகள்
4.6. உயிர்ப்பு உண்டா?

1 கொரிந்தியர்

1. முன்னுரை
இரண்டாம் தூதரைப் பயணத்தின் போது தெருபை, லிஸ்திரா,இக்கோனியா, அந்தியோக்கியா, துரோவா, பிலிப்பி, தெசலோனிக்கே,பெரோயா, ஏதென்சு போன்ற இடங்களுக்குச் சென்ற பின், புனித பவுல்கொரிந்து நகரை அடைந்தார். கி.பி. 51-53 வரை அங்கேயே தங்கினார்.அந்நகர் ஒரு துறைமுகப் பட்டணம். பணமும் மோகமும் அதன் இருதெய்வங்கள்! அப்ரோடைட் கோவிலில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டதேவதாசிகள்! இத்தகைய நகரில் எளியோர் பேறு பெற்றோர், தூயஉள்ளத்தோர் பேறு பெற்றோர் எனும் நற்செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்வது கடினம். கொரிந்து எனும் கோலியாத் முன் தாவீது போலகாட்சிதந்தார் பவுல். #8220;அஞ்சாதே, நான்உன்னோடிருக்கிறேன்” என்றார்இயேசு (காண்க. திப 18:1-17). உரோமையிலிருந்து வெளியேற்றப்பட்டுஅண்மையில் கொரிந்துக்கு வந்திருந்த யூதர் அக்கிலா, அவருடையமனைவிபிரிஸ்கிலா ஆகியோரின்வீட்டில்தங்கியிருந்தார் பவுல். முதலில்யூதர்களுக்கும் பிறகு பிற இனத்தாருக்கும் நற்செய்தி அறிவித்தார்.

மனந்திரும்பியவர் நல்லொழுக்கம் நாடி நடைபோட்டனர். ஆவியின்வரங்கள் அதற்குப் பெரிதும் உதவின. எனினும் கொரிந்திய சபைதான்பவுலுக்கு பெரிதும் தொல்லை கொடுத்த சபை. கி.பி. 53-ல் பயணம்முடிவுற்றது.அதே ஆண்டு மூன்றாம் தூதுரைப் பயணம் (1350 மைல்கள்)தொடங்கிற்று. கலாத்தியா, பிரிகியா நாடெங்கும் சுற்றி அவர் எபேசுவந்தடைந்தார். அங்கே 54-57 முடிய தங்கினார். அங்கிருந்து கொரிந்துசபைக்குத் திருமுகங்கள் எழுதினார்.

2. உள்ளடக்கம்

1) அஞ்சலி 1:1-3
2) நன்றி 1:4-9
3) கொரிந்து நகரில் கட்சிகளும் பிரிவினைகளும்

3.1. கொரிந்து நகர திருச்சபையில் கட்சிகள் 1:10-4:21
3.2. நற்செய்தியாளர் கடமைகள்
3.3. கூடா ஒழுக்கமுள்ளவன் 5:1-13
3.4. வேற்று மறையினர் முன்வழக்காடல் 6:1-11
3.5. பரத்தமை 6:12-20

4) கேள்விகளுக்குப் பதில்

4.1. திருமணமும், கன்னிமையும் 7:1-40
4.2. சிலைகளுக்குப் படைத்ததை உண்ணலாமா? 8 : 1-11 : 1
4.3. பெண்களுக்கு அறிவுரை 11 : 2-16
4.4. ஆண்டவரின்திருவிருந்து 11 : 17-34
4.5. தூய ஆவியாரின்கொடைகள் 12: 1-14 : 40
4.6. இறந்தோர் உயிர்த்தெழல் 15 : 1-58

5) முடிவுரை 16 : 1-18
6) இறுதி வாழ்த்து 16 : 13-24

3. பிரச்சனைகளுக்குப் பதில்
கொரிந்து திருச்சபையில் பல பிரச்சனைகள் குடிகொண்டுகிறிஸ்தவ வாழ்வைச் சீர்குலைப்பதாக புனித பவுல் கண்டார்.இத்திருமுகத்தின் மூலம் அப்பிரச்சனைகளைக் களைய முற்படுகிறார்.

3.1. கொரிந்து திருச்சபையில் கட்சிகளும் பிளவுகளும்
நான்பவுலைச் சேர்ந்தவன். நான்அப்பொல்லோவைச் சேர்ந்தவன்.கேப்பாவை... கிறிஸ்துவைச் சேர்ந்தவன் என கொரிந்து நகரத்துத்திருச்சபையில்கட்சிப் பிரிவினைகள்.பதில்பதில்பதில்: போதகர்கள்பிரித்து ஆளவந்தவர்கள் அல்ல. அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தை ஒற்றுமையாக இணைப்பவர்கள்...

3.2. நற்செய்தியாளர் கடமைகள்: போதனையும், நம்பிக்கையும்
கேட்பதால்தான் நம்பிக்கை உண்டாகிறது (உரோ 10:14-15);நம்பிக்கையாலன்றி ஒருவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக இருக்கமுடியாது (எபி 11:6); எனவே போதகம் மிகமிக அவசியம்.திருவழிபாட்டை அணுக முதலில் போதகம் அவசியம் (இறை பணி.எண்9); #8220;இருவரைத் தவிர உங்களில்வேறெவருக்கும்நான்திருமுழுக்குகொடுக்கவில்லை. கிறிஸ்துஎன்னைஅனுப்பியதுதிருமுழுக்குகொடுக்கஅல்ல, நற்செய்தியை அறிவிக்கவே” (1 கொரி 1:14-17). #8220;அண்மையில்திருமுழுக்கு கொடுத்தது கிறிஸ்து அல்ல, அவரது சீடர்களே” (யோவா4:3); ‘நான் மற்ற ஊர்களுக்கும் கடவுளுடைய அரசைப் பற்றியநற்செய்தியை அறிவிக்க வேண்டும்; அதற்காகவே அனுப்பப்பட்டேன்'(லூக் 4:43).

இத்தகையதீவிரப் போதகப்பணிபிறர் அன்புப் பணியிலும், நிவாரணப்பணியிலும் பெரியது. #8220;நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதைவிட்டு விட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும்உறுதியாய் நிலைத்திருப்போம்” (திப 6:2-4).

- நோக்கம் எதுவாக இருந்தாலும், கிறிஸ்து தவறின்றிபோதிக்கப்படுவது பற்றி மகிழ்கின்றார் பவுல் (பிலி 1:15-18).
போதிக்க ஆணையிடுகிறார் பவுல் (2 திமொ 4:17; 4:2)
- ஆயர்கள் போதிக்க வேண்டும் என்கிறார் ( 1 திமொ 3:2; 2 திமொ2:24-25).
- திருச்சபை போதிக்கும்போது கிறிஸ்துபிரசன்னமாயிருக்கிறார் (மத் 28:18-20; மாற் 16:15-16; திப 1:8).
- நற்செய்தியாளர் போதிக்கும்பொழுது கிறிஸ்து உடனிருக்கிறார்(2 கொரி 13:3; 1 தெச 4:2; 2 கொரி 16:1; உரோ 15:30; 2 கொரி5:20; 2:14; லூக் 10:16).
- தமது வார்த்தையில் இயேசு தங்கியிருக்கிறார். ஏனெனில்திருச்சபையில் திருமறை நூல் வாசிக்கப்படும்போது அவரேபேசுகிறார் (இறை பணி7).
- நற்செய்தியின்தொண்டன்ஆனேன்” (எபே 3:7; கொலோ1:23). #8220;நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு”(1 கொரி 9:16).
- கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி போதிக்கலாகாது எனதலைமைக் குரு கூறியபோது பேதுரு அளித்த பதில்:மனிதருக்குக் கீழ்ப்படிவதற்கு மேலாக கடவுளுக்கு அல்லவாகீழ்ப்படிய வேண்டும்...
- நற்செய்தி அறிவிப்போரின்பாதங்கள் எத்துனைஅழகாய்இருக்கின்றன (எசா 52:7; உரோ 10:15).#8220;கடவுளின்வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது” (2 திமொ2:9).
மேற்கூறியவை நற்செய்தி அறிவிப்பின் முக்கியத்துவம்பற்றிய ஒரு சில போதனைகள்.

3.3. கூடா ஒழுக்கம் ( 1 கொரி 5 : 1-13)
ஒருவன் தன் தந்தையின் மனைவியை (மறுமனைவியை)வைத்துக் கொண்டிருக்கிறானாம் (தந்தை மரித்த பின்? விவாகரத்துசெய்த பின்?)கிரேக்கர், யூதர், உரோமையர் போன்றவரது சட்டங்கள் இதனைத்தடைசெய்தன (காண்க. லேவி 20:11; 18:8; 22:30).

பதில்: அவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளிவையுங்கள்என்கிறார் புனிதப் பவுல் (திருத்துவதற்கான வழி இது).பாஸ்காக் காலம் அது; எனவேபாஸ்கா புளியாத மாவிலிருந்துசிலபடிப்பினைகளை எடுத்துரைக்கிறார்.#8220;நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்”(1 கொரி5: 7) (காண்க. பாஸ்கா).

3.4. வேற்று மறையினர் முன் வழக்காடல்(1 கொரி 1-11).
இங்கு நாட்டின் நீதிபதிகளுக்கு வழக்கு தீர்க்கும் அதிகாரம்மறுக்கப்படுவது போல் தோன்றுகிறது. எனினும்,#8220;அதிகாரம் கொண்டவருக்கு அடங்கி யிருப்பாராக் கடவுளிடமிருந்துவராத அதிகாரம் எதுவுமில்லை” (உரோ 13:1-7) எனபவுல்கூறியுள்ளார்.#8220;இயேசுவின்அறிவுரை: சீசருக்குஉரியதைசீசருக்கும் கடவுளுக்குரியதை கடவுளுக்கும்கொடுங்கள்” (மத் 22 : 15-22).ஆனால், பேதுரு கூறுவது போல்,#8220;மனிதனுக்குக் கீழ்ப்படிவதை விடகடவுளுக்கு அல்லவா கீழ்ப்படியவேண்டும்” (திப 5:27-30).இவ்வுலக நீதிமன்றங்களுக்குஅதிகாரம் இருப்பினும், நாம்இப்பொழுது விண்ணக அரசில்(இறையாட்சி) புகுந்து விட்டோம்.எனவே விண்ணரசின் நீதிமன்றத்துக்கும், நீதிக்கும், நடுவருக்கும் பணிவதேமேல். #8220;நமக்கோ விண்ணகமே தாய்நாடு”(பிலி3 : 20) .விண்ணரசின் நீதி என்னவென்றால், முதன் முதலில் பாவம்உங்களிடம் காணப்படக்கூடாது. பகைவரை அன்பு செய்யுங்கள்(லூக் 6 :27-30).அநியாயத்தை ஏன்தாங்கிக் கொள்ளக்கூடாது? (1 கொரி6: 7; மத்5:38-42).

மேலும் சகோதரனைத் திருத்துதல் தேவை (மத் 18 : 15-18).அப்பொழுது நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிராது. வானதூதரையும் தீர்ப்பிடவிருக்கும் புனிதராகிய நீங்கள் (தானி7 : 22; சீஞா 3: 8; திவெ 3 : 21; 20 : 4) கிறிஸ்தவர் அல்லாதவரிடம் - திருமுழுக்குபெறாதவரிடம் - ஏன் செல்கிறீர்கள்?

3.5. பரத்தமை ( 1 கொரி 6 : 12-20)
திப 15: யூதர் அல்லாதார்க்கு எருசலேம் பொதுச் சங்கம் அளித்தமறைக்கல்வியின்படி பரத்தமை தவறு என்பதாகும். இயற்கை நியதி இதுஎனினும் குறிப்பாக கிறிஸ்தவரல்லாதவரிடம் பரவலாகக் காணப்பட்டதுபரத்தமையாகும்.

இரு கொள்கைகளுக்கு மறுப்பு:
1) எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு (1 கொரி 6:12).
2) உணவு வயிறுக்கென்றே உள்ளது; வயிறு உணவுக்கென்றேஉள்ளது. அதைப் போல் தவிக்கும் நாட்டங்களுக்குத் திருப்தி உடலைச்சார்ந்தது; ஒழுக்கச் சார்பற்றது.

ஏன் கெட்ட நடத்தை வேண்டாம்?
1) உடல் தூய ஆவியாரின்ஆலயம் (1 கொரி 3:16)
2) உடல்கடவுளின் சொத்து; எனவே பரத்தமை அநீதியாகும்(1 கொரி 6 : 13, 19; 1 பேது 1 : 18).
3) உங்களதுஉடல்கடவுளின்மகிமை(உரோ 3:23-24; பிலிப் 1:20).
4) நீங்கள்கிறிஸ்துவின்மறை உடலின்உறுப்புக்கள்; வேசியின்உறுப்புகளல்ல. எனவே பரத்தமை தேவ துரோகமாகும்.

4. வினாக்களுக்குப் பதில்

4.1. திருமணமும், கன்னிமையும் ( 1 கொரி 7:1-40).
வ.1 #8220;நீங்கள் எழுதிக் கேட்டவற்றைக் குறித்துப் பார்ப்போம்”ஸ்ரீ ஒருகடிதம் கொரிந்திலிருந்துவந்தது. அதற்குப் பதில்தருகிறார் பவுல்.அக்கடிதத்திலிருந்த பல வார்த்தைகளையும்,சொற்றொடர்களையும் பவுல் பயன்படுத்துகிறார்.

வ.1 #8220;பெண்ணைதொடாமலிருப்பது நல்லது”. ( திருமணம்செய்யாதிருத்தல் நலம்). கடிதத்திலுள்ள சொற்கள் இவை;இத்தகையநிலைஅனைவர் மீதும்திணிக்கப்படவேண்டும்என்பதுகொரிந்தியர் சிலரின்ஆவல்.

வ.2-4 பவுல்அடியார் வெறும்இலட்சியவாதியன்று. பழையஏற்பாட்டைப்பின்பற்றி அவர் திருமணம் செய்வது நல்லது என்றுவலியுறுத்துகிறார்.ஏன் திருமணம்? அல்லது திருமணம் செய்யவில்லையெனில்கெட்டநடத்தை மிகுதியாகும் (வ. 2); காமத்தீயில் உருகிப்போவதைவிட மணம் செய்வது நல்லது (வ.9) போன்ற வசனங்களைத்தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பவுல் திருமணத்தின் உயர்நோக்கத்தை உணர்ந்தவர் (தொநூ1:27; 2: 18-25). திருமணத்தைப்பற்றிய அவரது சிறந்த கருத்து எபே 5 : 22-32-ல் உள்ளது.பிற்காலத்தில் வந்த மணிக்கேயரைப் போன்ற பிரிவினரைப் போல்திருமணம் தன்னிலே தீயது என்றோ, புனித அகுஸ்தீனாரைப்போன்று, மணமானவர் தம் திருமணகடமையைநிறைவேற்றுவதுகுறைந்தது ஓர் அற்பப் பாவம் - எனினும் கடமையின் உயர்ந்தநோக்கத்தை முன்னிட்டு அது அனுமதிக்கப்பட்டுள்ளது - என்றோகருதியவர் அல்லர்.

வ.5-6 செபம் போன்ற உயர் நோக்கத்திற்காகத் திருமண கடமையைச்செய்யாமலிருக்கலாம். ஆனால், நிபந்தனைகள் பல. சிறிதுகாலம்... இருவரும் உடன்பட்டால்...செபத்தில் ஈடுபடுவதற்காக..இக்கடமையைச் செய்யாமலிருக்கலாம்...

வ.7. எல்லாரும் என்னைப் போல் இருக்க வேண்டுமென்பதே என்விருப்பம். அப்படிப்பட்டவரை பவுல் கண்டிக்க மாட்டார்; மகிழ்ச்சிஅடைவார். பவுல் திருமணம் செய்யவில்லை? செய்த பின்மனைவிமரித்துவிட்டாள். அழைப்பு பெற்றுகிறிஸ்தவர் ஆனதால்அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாள் (பல்வேறு கருத்துக்கள்).

வ.8 நல்லது... ஆனால் அது ஒரு வரம்: யாவருக்கும் கொடுக்கப்படுவதில்லை.

வ.9. நீங்கள் கூறுவது போல் என்னைப் போல் தனித்தவராக மணமாகாத வரும், கைம்பெண்களும்இருந்துவிடுவதுநல்லதுதான். என்பெயரைச் சொல்லி இத்தகைய வாழ்வை அனைவர் மீதும்திணிக்கலாமா? எச்சரிக்கை - காமத்தால்தீய்வதை விட திருமணம்செய்து கொள்வதே நல்லது.

வ.10. திருமணம் செய்தவர் பிரிந்துசெல்லல் நல்லதுஎனசிலர் கருதினர்போலும். அது தவறு.ழூ பிரிந்து வாழ்தல் முறையன்றுழூ மணமுறிவு செய்யலாகாது (மத் 5:31; 19:1-9; மாற் 10:11; உரோ7:2-4)

வ.7-16 யூதர் பிற இனத்தாரை மணம் புரிதல் பாவமாகும். அவரோடுஉண்பதே பாவமெனில் திருமணஉறவு எத்தனைப் பெரிய பாவம்(கலா2:12-14). அங்ஙனமிருக்க, கிறிஸ்தவன் நம்பிக்கை கொள்ளாதவளைமணம் புரிதல் பாவமா? நல்ல கேள்வி! (1 கொரி7 : 12-14).

1) பாவமில்லை
2) அவளை விட்டுவிடலாகாது
3) நம்பிக்கை கொள்ளாதவள் மனந்திரும்பக்கூடும்
4) நம்பிக்கை கொள்ளாதவள் புனிதமடைகின்றாள்.
5) அவள் பிரிந்து சென்றால் வேறு திருமணம் செய்யலாகாது.

ஒருவன்யூத மதத்தைத் தழுவிவிட்டால், அவனது பழைய திருமணம்முறிந்து விடுகிறது என்பது யூதரின் கொள்கை. அப்படியிருக்க,கிறிஸ்தவரல்லா தம்பதிகளுள்தலைவன்மட்டும் கிறிஸ்தவன்ஆனால்?

1) அவளை அனுப்பி விடக்கூடாது. ஏனெனில் உண்மையானதிருமணம்.
2) அவள் பிரிந்து சென்றால் செல்லட்டும்; பிரிந்து வாழ நேரிடலாம்
3) வேறு திருமணம் செய்யலாம் எனபவுல் வெளிப்படையாகக்கூறவில்லை.வ. 25-27வ. 25-27

வ. 25-27 திருமணமானவர் ... அந்நிலையிலேயே இருத்தல் நலம்.

1) வ. 29 #8220;இனியுள்ள காலம் குறுகியது” - இரண்டாம் வருகை
2) வ. 262) வ. 262) வ. 26 #8220;இப்போதைய இடர்நிலை”.

‘இடர்நிலை' என்பது யாது?திருமண வாழ்வின் தொல்லைகளா? இல்லை; இறுதி காலபோராட்டத்தை நினைக்கின்றாரா? இல்லை. மாறாக, ஏற்கெனவேஆரம்பமாகியுள்ள விண்ணரசின் ஓர் அடையாளம் கன்னிமை.கன்னிமை ஓர் அடையாள வாழ்வு; விண்ணரசு திருமணத்தால் அன்று,ஆவியால்வளர்கிறதுஎன்பதையும், விண்ணக அரசில்இருக்கிறோம்(மத்22 : 30) என்பதையும் குறிக்கின்ற செயல் கன்னிமை. விண்ணரசைமுன்னிட்டு, கன்னிமை வாழ்வு காலத்தின்கட்டாயம், காலத்தின்தேவை(மத் 19 : 12; 25 : 1-13). இதுவே காலத்தின் நெருக்கடி.

3) மெசியாவின்விருந்துக்காக நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஏர்மாடுவாங்கினேன்- நிலம்வாங்கினேன்- திருமணம்செய்தேன்- என்றுரைத்துவிருந்தை இழந்துவிடலாகாது. நியாயமானஉரிமைகளைக்கூட துறந்துவாழ முன்வர வேண்டும்.

4) திருமணம் செய்தவருக்கும், செய்யாதவருக்கும் கவலை உண்டு.திருமணம்செய்யாதவர் தம்கவலையெல்லாம்கடவுளில்வைக்கின்றனர்.திருமண வாழ்வு கணவனை - மனைவியை மகிழ்விக்கும் வாழ்வு;கன்னிமை வாழ்வு கடவுளை மகிழ்விக்கும் வாழ்வு (வ 32-34).

வ.40 இவ்வாறு கூறும் ‘நானும் கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பெற்றிருக்கிறேன்:' என்கிறார் பவுல். கொரிந்திலுள்ளஇலட்சியவாதிகள் ‘பவுல் எங்களைப் போல் உயர் இலட்சியவாதிஅல்ல' என இகழலாம் அல்லவா?

குறிப்பு:
கிறிஸ்துவுக்கு முன்னர் பொதுவாக கன்னிமை வாழ்வுசாபமாகக் கருதப்பட்டது. கன்னியாக இறப்பது கேவலம் (நீத 11:37-40).இறைவனைக் கைவிட்ட இஸ்ரயேல் #8220;கன்னிஇஸ்ரயேல்” என(ஆமோ5:2) பழித்துரைக்கப்படுகிறது. இறைவாக்கினரான எரேமியா மட்டுமேபழையஏற்பாட்டில் கன்னிமைஎனும்வாழ்வுநிலையைகடைபிடித்தவர்.கடைபிடிக்க அழைக்கப்பட்டவர்.

4.2. சிலைகளுக்குப் படைத்த பொருளை உண்ணலாமா?

பதில்: வேறு தெய்வமில்லை எனவே உண்பதில் தவறில்லை. இதுதத்துவம் ( 1 கொரி 8 : 5-6; 10 : 25, 29-30).

1) எனினும், இடைஞ்சல்வருமாயின்பிறரன்பைக் கருதி உண்ணற்க(8 : 7-13; 10 : 23-33).
2) பிறரன்பினால் பவுல் தன்உரிமைகளைத் தியாகம் செய்வது போல்நீங்களும் செய்யுங்கள்; கிறிஸ்துவுக்காக மனைவியை அழைத்துக்கொண்டுபோகும் உரிமையைத் துறந்தார். கோவிலில்பணியாற்றுவோர்கோவில் காணிக்கையிலிருந்து உணவு பெறுவர்; எனினும் பவுலின்உழைப்பு ஊதியமற்ற உழைப்பு (9:1-23).
3) பந்தயத்தில் ஓடுபவர் போல் தியாகப் பண்பு தேவை. அவர்களைப்போல் பரிசு பெறுவதன் பொருட்டு நீங்களும் ஓடுங்கள் (9:24-27).
4) இஸ்ரயேலின் வரலாற்றிலிருந்து நமக்கு ஓர் எச்சரிக்கை ... ஒரேஅழைப்பு ... கடல்.. கடத்தல்... பாறை நீர் (பாறைபின்தொடர்ந்ததுஎன்பதுராபிகளின்விளக்கம்) மன்னா... எனினும்களியாட்டத் துடன்பொற்கன்றுவழிபாடு, தீயஒழுக்கம்இவற்றால்வாக்களிக்கப்பட்டநாட்டைஇழந்தனர்..நிலையாய் நிற்பதாக நினைக்கின்ற கொரிந்தியருக்கும் எச்சரிக்கை.நிலைகுலைந்துபோகலாம் (10:1-13). பேய்க்குப் படைக்கப்பட்ட உணவில்#8220;நம்பிக்கையோடு” பங்கெடுக்கலாமா? ஒருபோதும்கூடாது. நற்கருணைவழியாய் நாம் ஒன்றாகவும், தனித் தனியாகவும் கிறிஸ்துவோடுஐக்கியமாகிறோம். ஆண்டவரின் பந்தியிலும் பேயின் பந்தியிலும்பங்கெடுக்கலாகாது (10:16-22). இக்காரியத்தில் எருசலேம் சங்கம் தந்தஒழுங்கைப் பற்றி (திப 15:20-29) பவுல் எதுவுமே கூறவில்லையே?

சில அறிவுரைகள்: உண்டாலும், குடித்தாலும் - எதைச் செய்தாலும்எல்லாம் கடவுளின் மகிமைக்காகச் செய்யுங்கள் (10:31). நான்கிறிஸ்துவைப் போல் நடப்பது போன்று நீங்களும் என்னைக்கண்டு பாவியுங்கள் (11 : 1).

4.3. வழிபாட்டில் நடந்து கொள்ளும் முறை
1) வழிபாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு அறிவுரை: (11:2-16)
மத ஒழுக்கம் காரணமாக கிரேக்கச் சபையில் பெண்கள்வழிபாட்டின்போது முக்காடு இடும் வழக்கம் இருந்தது.குறிப்பாகக் கிரேக்க பட்டணமாகிய கொரிந்தில் - பெண்கள்சுதந்திரப் பறவைகளாக நடந்தனர். முக்காடின்றிவழிபாட்டுக்குவந்தனர்.(கிறிஸ்தவ சுதந்திரம்? பிற மத பெண்களைக் கண்டு பாவித்து??)வழிபாட்டில் இறைவாக்கு உரைக்கவும் செய்தனர். 11: 2-16 ஐ இருபகுதிகளாகப் பிரிக்க வேண்டும்.

அ) 11:2-10... இது பழமைவாதிகள் கொடுத்த காரணங்கள்
ஆ) 11: 11-16..எது எப்படியாயினும்...எது எப்படியாயினும்...எது எப்படியாயினும்... என்று தொடங்கும் பகுதி.இது பவுல் அடியாரின்சிறப்பானச் சிந்தனை.

அ) பழைமைவாதிகள் தரும் காரணங்கள்
1) முக்காடின்றிவருவோர் இறுதியில்முடியின்றிவருவர் (கேலி. வ6)
(2) முக்காடின்றிசெல்லுதல் அதிகாரம், ஆணவம் இவற்றிற்கும்,முக்காடு இடுதல் பயம், பணிவு இவற்றிற்கும் சின்னம் .
(3) பெண்களுக்கு உரிமை, சமத்துவம் உண்டு; எனினும்இயற்கையில் கணவன்தான்தலைவன். இதை கோவிலிலும் காட்டவேண்டும்.
(4) கடவுள் - கிறிஸ்து கடவுளின் சாயல் - கிறிஸ்துவின் சாயல்மனிதன் - பெண் ஆணின் சாயல் - (எலும்பு) - இதுதான் இயற்கைஒழுங்கு.
(5) உடல் ஊனமுற்றவர்கள் அப்பத்தைப் படைக்க பீடத்தருகேவரக்கூடாது (லேவி 21:17-23)... வழிபடும் இடத்தில் ஒழுங்குபரிபாலிக்கும்தூதருக்கு அது இழுக்கு. கும்ரான் ஏடுகள்இதற்குச் சான்று.முக்காடின்றி வருவதும், தலைமுடியின்றி வருவதும் ஒன்றே (1 கொரி11:10).

ஆ) 11 : 11-6 பவுல் அடியாரின்சிறப்புச் சிந்தனை
(1)#8220;எது எப்படியாயினும்” என்று கூறி, மாற்றுக் கருத்தைத்தெரிவிக்கிறார். மேற்கூறிய முக்காடிடும் பழக்கத்தை வலியுறுத்தும்காரணங்கள் அவருக்குச் சிறந்தவையாகத் தோன்றவில்லை; மேலும்வாக்குவாதம் பயனற்றது. இது பவுல் அடியாருக்குத் தெரியும். எனவேநீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்கிறார் (வ 13); விவாதம்தேவைஇல்லைஎன்கிறார் (வ16). மேலும் ஆணின்றிபெண்ணில்லை;பெண்ணின்றி ஆணில்லை என சமத்துவம் பேசுகிறார் (வ 11).பழைமைவாதிகளின்கடுமையானவாதம் பவுலடிகளில் காணோம்.

(2) சபையில் பெண்கள் பேசாதிருக்கட்டும். நாம் காணும்இப்பகுதியில்இறைவாக்குஉரைக்க வேண்டாம்எனக் கூறவில்லையே?.இறைவாக்குஉரைக்கும்போதுமுக்காடுபோடும் வழக்கம் சிலசபைகளில்இருந்ததையும் சிலர் அதை எதிர்த்ததையும் குறிப்பிடுகின்றார்;அவ்வளவுதான்(காண்க. பக் 20).

2) வழிபாட்டில் ஒற்றுமை குலைக்கும் ஆடவர்
ஆண்டவரின்திருவிருந்துகுடித்து வெறித்துக் கிடக்கும் ஆண்கள் பற்றிய பிரச்சினை;கொரிந்தில் காணப்பட்ட குறைகளைத் திருத்தும் பொழுதுதற்செயலாக திருவிருந்தைப் பற்றிய பல உண்மைகளைஎடுத்துரைக்கிறார் பவுல்.

அன்பின் விருந்து 11:17-22
வசீகர வாக்குகள் 11:23-26
திருவிருந்து ஒரு பலி 11:26
உட்கொள்ளத் தகுதி, தண்டனை 11: 27-32பெறும்
ஞானப் பலன்கள்

4.4. அன்பின் விருந்து (யுபுயுPநு): சமபந்தி
1) பாஸ்கா இரவு உணவிற்கிடையில் இயேசு புதிய அன்பின்கட்டளையையும், நற்கருணைவிருந்தையும் இரண்டறக் கலந்துதந்தார்.செமித்தியர், கிரேக்கர் போன்றோருக்குவிருந்துஎன்பதுஒற்றுமை, அன்புஇவற்றின்சின்னம்; அவற்றை வளர்க்கும் கருவி. உடன்படிக்கைப் பலி,நல்லுறவுப் பலி இவற்றிலுள்ள விருந்து இரத்த உறவு ஏற்படுதல், ஒரேஉயிர் கொண்டிருத்தல், சமத்துவம், அன்பு இவற்றின் சின்னமாகவும்ஊற்றாகவும் அமைந்திருந்தது.

கொரிந்திலும் அன்பின் சமபந்தி விருந்திற் கிடையில் (யுபுயுPநு)நற்கருணை திருவிருந்து நடைபெற்றது. ஆனால், அன்று உபவாசம்இல்லை. காலம் செல்லச் செல்ல பொது விருந்தும் இல்லை. அன்பும் இல்லை. ஒன்று கூடி வந்தனர். ஆனால் பிரிந்து நின்றனர். அதிகாரப்பயன்பாட்டை எதிர்த்து அல்ல் திருவிருந்தின் இடம், காலம், பொருள்,இவற்றில்பிளவு...! வேலைக்குச் சென்றுதாமதித்துவரும் ஏழைகளுக்குஇதுஅவமானம். எனவேஒருவர் ஒருவருக்காகக் காத்திருங்கள்; பசிக்குஉண்பதானால்வீட்டிலேயே உண்ணுங்கள்.கொரிந்தில் நடந்த உணவுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும்வைத்துக் கொள்ளலாம்; ஆண்டவரின் விருந்து என மட்டும் அழைக்கமுடியாது; கிறிஸ்துவின்இராவுணவுக்கும் கொரிந்திய தனிஉணவுக்கும்பொருத்தமில்லை; இரவு உணவு, சபையை ஒன்று கூட்டியது (10:16-17).கொரிந்திய உணவு, மறையுடலை (எபேசி 2:19-22; 4:16) கூறுபோட்டது.இவ்விருந்து விரைவில் நிறுத்தப் பெற்றது. அன்பின் விருந்தைஇன்றுபிரதிபலிப்பவைஆசீர்வதிக்கப் பெற்றஅப்பம்; பெரியவியாழனன்றுகொடுக்கப்படும் 12 அப்பங்கள் ... திருப்பலிக்கு வெளியே சமபந்திகள்.

வசீகர வாக்குகள்

மாற்கு 14:22-25 1 கொரி 11:23-26
இது எனது உடல் உடன்படிக்கையின்இரத்தம்...பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம் இது உங்களுக்கான என் உடல்இதை என் நினைவாகச் செய்யுங்கள்.நீங்கள் இந்த அப்பத்தை உண்டுகிண்ணத்தில் பருகும்போதெல்லாம்ஆண்டவர் வரும் வரையில் அவரதுசாவை அறிக்கையிடுகிறீர்கள்.

2) வ.23 #8220;ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ... அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்”.ஆண்டவரிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்டாரா?

(அ) கலா 1:12-ம், 1 கொரி 11:23-25ம்தூயபவுல்ஆண்டவரிடமிருந்துநேரடியாகப் பெற்றுக் கொண்டவை என்கின்றனர் சிலர். நேரடியாகப்பெற்றுக்கொண்டார் என்பதைக் காட்ட கலா 1:12-ல் Pயசயடயடிழn எனும்சொல் உள்ளது. ஆனால் 1 கொரி 11:23-25 -ல் அச்சொல் தொடருக்குப்பதில் யுpழமயடலிளநழள எனும் சொல்உள்ளது. எனவேஇருபகுதிகளையும்ஒரே படியில் நிறுத்தலாகாது.

(ஆ) 1 கொரி 11:23; 1 கொரி 15:35 இவ்விரு பகுதிகளையும் ஒரேபடியில்வைக்க வேண்டும் என்கின்றனர் வேறுசிலர். இருபகுதிகளிலும்நேரடி வெளிப்பாடு இல்லை. ஆனால் சபையில் பரம்பரை வழியாகப்பெற்றுக் கொண்டதால் ஆண்டவரிடமிருந்தே வருகிறது.

(இ) மாற்கு கூறுவது (14:22-25) பாலஸ்தீன் பரம்பரை; அதுதான்காலத்தால் முற்பட்டது. அரமேய மொழிப் பண்புகள் நிறைந்தது. பவுல்கூறுவது (1 கொரி 11:23) கிரேக்கப் பரம்பரை - அந்தியோக்கியா, சின்னஆசியாவில் 30 ஆண்டுகளாக ஏற்கனவே நிலவியிருந்த பரம்பரை இது.எனவே இரா உணவில்கூறப்பட்ட சொற்கள்அப்படியே உள்ளனஎன்றுகூறாமல் பாரம்பரியத்தின் பின் செயல் புரியும் ஆண்டவர் தரும்விளக்கமாகக் கொள்ள வேண்டும்.ழூ வ.23ழூ வ.23ழூ வ.23 #8220;தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில்...” மரிப்பதற்கு முந்தியஇரவு என்று கூறவில்லை.

3) வ.24 இது உங்களுக்கான என் உடல்...வ.25 இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை...இக்கருத்து மாற்கு நற்செய்தியிலும், பவுலிலும் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது. விப 24:8 மோசே இரத்தத்தை மக்கள் மேல்தெளித்து#8220;உடன்படிக்கையின்இரத்தம்இதுவே” என்றார். பழையஉடன்படிக்கை போல் புதிய உடன்படிக்கை பலி இரத்தத்தால்முத்திரையிடப்பட்டது எரேமியா அறிவித்திருந்த புதியஉடன்படிக்கை நிறைவேறுகிறது (எரே 31:32-34; எசே 36:23-28).இவ்வாறு இயேசுவின் இரத்தத்தின் பொருள் யாது எனவிளக்கப்பட்டுள்ளது. தூய பவுலின் ஏனைய ஏடுகளிலும் உடன்படிக்கை முக்கிய இடம் வகிக்கிறது (உரோ 9:4; 11:27; 2 கொரி 3:6;கலா 3:15; 4:24; எபே 2:12).

வ.24,25 இதை என் நினைவாகச் செய்யுங்கள்... #8220;வழிபாட்டில்நினைவாகச் செய்கிறோம். எனவேநினைவாகச் செய்யுங்கள்எனச்சொல்ல வேண்டியதில்லை” (க்ஷநnடிவை). எனவேதான்மாற்கு#8220;நினைவாகச் செய்யுங்கள்” என்ற வார்த்தையை விட்டு விட்டார்.ஆனால்பவுல்கூறுகிறார். பாஸ்கா தினத்தன்றுபாஸ்கா விருந்தின்சட்டதிட்டங்களுக்கேற்ப இரா உணவுநடைபெற்றதாகக்கூறுகிறார்மாற்கு. பவுல்அதைக் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவேபாஸ்காப் பலி(1 கொரி5: 7) என்கிறார் பவுல். பழைய ஏற்பாட்டு பாஸ்காபுதுப்பிக்கப் பட்டு வந்ததாகக் காண்கிறோம். புதிய ஏற்பாட்டின்இயேசுவின் பாஸ்காவும் புதுப்பிக்கப்பட வேண்டும். இயேசுவின்இக்கருத்தை விளக்கிக் கூறுகிறார் பவுல்.விருத்தசேதனமற்றவர் பழையபாஸ்காவில்பங்கெடுக்கக்கூடாது(விப 12:48). நமது பாஸ்காவாகிய கிறிஸ்து யாவருக்கும்பங்களிப்பவர். இதய விருத்தசேதனம் போதும் (கொலோ 2:9-11;இச 10:16; 30:6; எரே 4:4; 9:24-26). அதுவேதிருமுழுக்கு(கொலோ

2:11). அதுவே நம்பிக்கை (உரோ 3:30; கலா 5:6).எசாயா முன்னறிவித்தபடி யாவரும் பங்கு கொள்ளும்மெசியாவின் விருந்து இது (எசா 2:1-5; 25:6-12).மாற் 14:24பலருக்காகச்பலருக்காகச்பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்... என மாற்குகூறியுள்ளார். இது செமித்திய சொல் வழக்கு. ‘பலர்' என்பதன்பொருள்எல்லாரும்! கிறிஸ்து பாஸ்கா பலி; கிறிஸ்து உடன்படிக்கையின் பலி.இவற்றிலுள்ள இரத்தம் பாவப் பரிகாரத்திற்கென தெளிக்கப்படுவதில்லையே? எனவே, பின்வரும் கேள்விஎழுகிறது.

4)எங்ஙனம் கிறிஸ்துவின் இரத்தம் பாவப் பரிகாரம் தர வல்லது?
பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம் எனும்போது, துன்புறும் ஊழியன்பலருக்காகச் (எல்லாருடைய பாவங்களுக்காக) சிந்தும் இரத்தத்தைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது (எசா 53:12). எனவே, பாஸ்கா, துன்புறும்ஊழியன், எனும் கருத்துக்கள் இயேசுவில் இணைக்கப்பட்டுள்ளன.கிறிஸ்துவே துன்புறும் ஊழியன்.இயேசுவின் இரத்தம் பாவ மன்னிப்புத் தரக்கூடியது எனும் கருத்தைவேறு பல இடங்களில் பவுல் கூறியுள்ளார் (எபே 1:7; உரோ 3:25);எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் பவுலின்இக்கருத்து நிரம்ப உள்ளது.

5)இரத்தத்தால் மீட்டார் என்பதன் பொருள் யாது?
(1) மனிதரை அலகையின் கையிலிருந்து மீட்க அலகைக்கு தன்இரத்தத்தை கிறிஸ்துஈடாகக் கொடுத்தார் என்றோ (அம்புரோஸ், ஓரிஜன்).
(2) பாவத்தால் பரம பிதாவுக்குக் கடன்பட்ட நமக்குப் பதிலாக தன்இரத்தத்தை கிறிஸ்து அளித்தார் என்றோ கூறுவதைத் தவிர்த்து
(3) இரத்தம் நம்மைத் தூய்மையாக்கி (பாவப் பரிகாரப் பலி) உடன்படிக்கையை மீளவும் புதுப்பிக்கிறது (உடன்படிக்கையின் பலி) எனவிளக்கம் தர வேண்டும். எகிப்தாகிய பாவத்திலிருந்து மீட்கப்பட்டுவாக்களிக்க்கப்பட்ட நாட்டின் தூய்மைக்கும், உடன்படிக்கையின்அன்புறவுக்கும் கடந்து வருகிறோம் எனல் வேண்டும். அப்பொழுதுகிறிஸ்து நம் மணமகனும், சகோதரரும் ஆவார். நாம் மீட்புப் பெற்றவர்ஆகிறோம்.செமித்தியருக்கு, இரத்தமே உயிர் (இச 12:23; லேவி 17:4).சுவாசமே உயிர் என்பதற்கும் சான்றுண்டு (தொநூ2:7). இறுதியில் இருகருத்துக்களும்இரண்டறக் கலந்துவிட்டன. காற்றைத் தாங்கிச் செல்லும்இரத்தம்அதாவதுவெப்பமானஇரத்தம்தான்உயிர் என்றனர். வெப்பமானஇரத்தம் உயிர் மட்டும் அன்று. தூய்மையின்சின்னம். எனவே, வாழும்உடல் தீட்டு அல்ல. வெப்பமானஇரத்தம் இல்லாத உடலைத் தொடுவது(இறந்த உடலைத் தொடுவது) தீட்டு (எண்19:11-12; லேவி 21:11).வெப்பமான இரத்தம் உயிர், தூய்மை இவற்றின் சின்னம்.ஆதலால் பலியிடும்போது - குறிப்பாக பாவப் பரிகாரப் பலியிடும் போது -புதிய பலிஇட வேண்டும். ஆனால், கிறிஸ்து உயிர்த்துவிட்டதால்அவரதுஇரத்தம் நித்தியத்திற்கும் வெப்பமான இரத்தம்; எனவே, நித்தியத்திற்கும்தூய்மையளிக்கக்கூடிய உயிரளிக்கக்கூடிய இரத்தம்.அது பாவப் பரிகாரப் பலியின்இரத்தம் (எபே 1:7; உரோ 3:25). பாவமாசைக் கழுவுகிறது (எபே 5:2, 25, 26; 2திமொ 2:5-6; தீத் 2:14; கலா2:20; 1:4; உரோ 8:3-9). அது தூய்மைப்படுத்துகிறது (எபி 9:13; 13:12;10:1, 12, 14). அதற்கு ஆக்கும் செயலும் உண்டு. உடன்படிக்கையின்உறவைப் புதுப்பித்து இறைவனோடு வாழ வைக்கிறது (காண்க:உடன்படிக்கைப் பலி).

வ.26 #8220;அவரது சாவை அவர் வரும்வரை அறிக்கையிடுகிறீர்கள்”...கிறிஸ்து வின்மரணத்தோடு நற்கருணையின்தொடர்பை சுட்டிக்காட்டுகிறார் பவுல். #8220;அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில்..”(11:23); இந்த அப்பத்தை உண்டு, கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம்.... சாவை அறிக்கையிடுகிறீர்கள் (11:26).1 கொரி 10:16-21 என்ற பகுதியில் சிலைகளுக்குப் படைக்கப்படுவது பலியும் உணவும்; நற்கருணையை அத்தோடு ஒப்பிடுகிறார்பவுல். எனவே பலிஎன்பதை மறைமுகமாகக் கூறுகிறார்.

6)வ.27. #8220;தகுதியற்ற நிலையில்”....
(1) கிறிஸ்துவின் உடலை சாதாரண அப்பத்துண்டிலிருந்துவேறுபடுத்தியுணர மறுத்திருக்கலாம். இதனால் சாகாவரமருளும் அப்பம்கொல்லும் விஷமாகி, நோய்க்கும் சாவுக்கும் ஏதுவாயிற்று.நற்கருணையினால் அன்று, குற்றத்தால் !(2) இரண்டாம்கருத்து: அவர்கள்வேறுபடுத்திஉணர்ந்திருக்கலாம்.பலியாக அதை மதித்திருக்கலாம். ஆனால், கிறிஸ்துவின் உடல்எதற்காக? நற்கருணையின் பொருள் என்ன என்பதை உணரவில்லைபோலும். அதாவது திருச்சபை கிறிஸ்துவின் மறை உடல் என்பதைமறந்தனர். அதனைத் தங்கள்சுயநலச் செயலில், பிளவுப்பட்ட வாழ்வில்காட்டிவிட்டனர்.

4.5. தூய ஆவியாரின் கொடைகள்
ஆவிஒருவரே; ஆவியின்கொடைகள்பற்பல் அவர் தன்விருப்பம்போல் கொடுக்கிறார்... ஆவிஅல்லது கொடை பொழியப்படுகிறது (உரோ5:5); அருளப்படுகிறது (உரோ 5:5; 1 தெச 4:8; 1 கொரி 12:8; எபே 1:17);அளிக்கப்படுகிறது (கலா 3:5); ஆவியால் நிறைவு பெறுதல் நிகழ்கிறது(எபே 5:18); தாகம் தணிகிறது (1 கொரி 12:13).11

1)திருச்சபை தொடக்கத்தில்...
தூய ஆவியார் இறங்கி வந்த தினம்... திருத்தூதர் அயல்மொழிகளில் பேசத் தொடங்கினர் (திப 2:4)... திருச்சபையின் பொதுத்தன்மையை அது சுட்டிக் காட்டிற்று (தொநூ11:1-9).பேதுரு பிற இனத்தாரிடம் பேசிக் கொண்டிருக்கையில் ஆவியாம்திருக்கொடை பொழியப்பட்டது. அவர்கள்பல மொழிகளில் பேசினர் (திப10:44-46). யோவானிடம் திருமுழுக்கு பெற்றவர்மேல் பவுல் கைகளைவிரித்ததும் தூய ஆவி அவர்கள் மேல்இறங்கினார்; அப்பொழுதுஅவர்கள்பலமொழிபேசவும், இறைவாக்கு உரைக்கவும்தொடங்கினர் (திப 19:6).குறிப்பாக தூய பவுலுடைய சபைகளில்தெசலோனிக்க சபையில் ஆவியின்கொடைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம்தரப்படவில்லை (எனினும் காண்க 1 தெச5:29-20); அதன் பக்கத்திலுள்ள பிலிப்பிசபையில் அவற்றைப் பற்றிய பேச்சே காணோம்... அவற்றில்நம்பிக்கையில்லையா? துர் பிரயோகம் பற்றிய பயமா?கலாத்தியர், கொரிந்து சபைகளில் ஆவியின் கொடைகள் மிகஅதிகம். பரவச பேச்சுப் பேசுவர், இறைவாக்கினர் போன்றவர்க ளால்சபையில் போட்டியும் குழப்பமும். கலாத்தியர் ஆவியைச் சார்ந்தவாழ்க்கையைத் தொடங்கி ஊனைச் சார்ந்தவற்றில்நிறைவுகாண்பதாகபவுல் குற்றம் சாட்டுகிறார் (கலா 3:3-4).

எபேசு, கொலோசை போன்ற ஆசியசபைகளிலேகொரிந்துநகரில்போலிபோலிபோலி இறைவாக்கினர் இருந்தனர். எனினும் புதிய பொலிவு! எபேசில்அவர்கள் தேவ ஆவிஏவிய திருப்பாடல்கள், புகழ் பாக்கள், ஆவிக்குரியபாடல்கள் இவற்றைக்கொண்டு ஆண்டவருக்கு முழு உள்ளத்துடன்இசை பாடினர்... அனைத்திற்காகவும் எப்பொழுதும் நன்றிகூறினர் (எபே5:19). கொலோசிய சபையிலே அவர்களின் பணி, ஞானத்தோடுபோதித்தல், அறிவு புகட்டுதல்... (கொலோ 3:16).உரோமை சபையில் பரவசப் பேச்சைப்பற்றி ஒன்றுமே காணப்படவில்லை; இறைவாக்கு உரைப்போர் பெற்றிருந்தது அடக்க முடியாதஏவுதல் அல்ல.

2)ஆவியாரின் கொடைகள்

1 கொரி 12:8-101 கொரி 12:28-30ஞானம் நிறைந்த சொல்வளம் திருத்தூதர்அறிவு செறிந்த சொல்வளம் இறைவாக்கினர்நம்பிக்கை (விசுவாசம்) போதகம் (நற்செய்திப் போதகர்எபே 4:11)பிணிதீர்த்தல் அருள்கொடை வல்ல செயல் செய்வோர்வல்ல செயல் செய்யும் ஆற்றல் பிணிதீர்த்தல் வரம் பெற்றோர்இறைவாக்கு உரைக்கு ஆற்றல் துணைநிற்பவர் (பிறர் சேவை)ஆவிக்குரியவற்றைபகுத்தறியும்ஆற்றல் தலைமையேற்று நடத்துவோர்பல்வகைப் பரவசப் பேச்சு பல்வகை பரவசப் பேச்சுஅதை விளக்கும் திறன் பேசுவோர்இன்னும் சிலஇடங்களில்ஆவியின்கொடைகளில்சிலவற்றைக்குறிப்பிடுகிறார் பவுல்: 1 கொரி 14:26; உரோ 12:6-9; எபே 4:11.நோக்கம்தனிநபரின்சுயநன்மைக்காக அல்ல மாறாக, உறுப்பினரின்பொதுநன்மைக்காக (1 கொரி 12:7). உறுப்புகள் அனைத்தும் உடலின்நன்மைக்காக உழைப்பது போல்... (1 கொரி 12:12; உரோ 12:4; எபே 4:4;11:12).ஆவியின்கொடைகள்சபையைக் கட்டியெழுப்புவதற்காக (1 கொரி14:12; 14:26).சில கொடைகள் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குஅடையாளமாக உள்ளன. பரவசப் பேச்சு நம்பிக்கை உடையோருக்கல்லநம்பிக்கை அற்றோருக்கே அடையாளமாய் உள்ளது (1 கொரி 14:22).

3)பல்வேறு கொடைகளின் பட்டியல்
கீழ்வரும் பரவசப் பேச்சு, விளக்கும் திறன், இறைவாக்குரைத்தல்இவைமூன்றும் புகைவள ழக ஐnளிசையவழைn எனப்படுகின்றன.(i)கொரிந்தில் பரவசப் பேச்சுபரவசப் பேச்சில் செபம் செய்தனர் (1 கொரி 14:2; 14:14). சிலபொழுது பரவசப் பாடல் பாடினர் 14:15.பொது வழிபாட்டிலும் பரவசப் பேச்சு 14:16.சொல்வது புரியாது; தொடர்பு தோன்றாது 14:9, 11.

ஏதோ மறைபொருளைப் பேசுகிறார் 14:2; எனவே மனிதரிடமல்லகடவுளிடமே பேசுகிறார் எனல் வேண்டும்... தூதரின்மொழிகள்.எல்லாரும் ஒன்றாகப் பரவசப் பேச்சு பேசியதால் பைத்தியக்காரர்போல் தோன்றினர் (1 கொரி 14:23-25). மேலும் பரவசப் பேச்சைபுகழ்ந்துரைத்து பிற கொடைகளைப் புகழ்ந்துரைக்க மறுத்தனர் (காண்க1 கொரி 12:22-26).

பவுல் அடியாரின் பதில்
வேறு இடங்களில் பரவசப் பேச்சு பேசட்டும்; சபையில் நிறுத்திவிடலாம் என்ற முடிவுக்கு வரவில்லை.நீங்கள் எல்லாரும் பரவசப் பேச்சு தாராளமாய்ப் பேசலாம் (1 கொரி14:5). பரவசப் பேச்சு பேசுவதைத் தடுக்காதீர்கள்; ஆனால், எல்லாம்பாங்கான முறையில் ஒழுங்காக நடைபெற வேண்டும் (1 கொரி 14:39).சபையில் யாவும்... ஞான வளர்ச்சி தர நடைபெற வேண்டும் பரவசப்பேச்சுப் பேசுவதாய் இருந்தால், இருவர் பேசலாம். மிஞ்சினால் மூவர்பேசலாம். ஆயினும் ஒருவர் பின் ஒருவராக பேச வேண்டும்.. விளக்கம்கூறுபவர் இல்லாவிட்டால் சபையில் பேசாதிருக் கட்டும் (1 கொரி 14:5,26-27). புனித பவுலுக்கு பரவசப் பேச்சு இருந்தது. எனினும் வீணாய்உபயோகிக்கவில்லை (14:18, 19)... ஒழுங்கு... (1 கொரி 13:1). பரவசப்பேச்சை ஆவியின்கொடைகளின்பட்டியலில்இறுதி இடத்திற்கே ஒதுக்கிவிட்டார் பவுல்.

(2)பல்வகை பரவசப் பேச்சை விளக்கும் திறன்...

(3)இறைவாக்கு வரம் இறைவாக்கு வரம்இறைவாக்கு வரம் (இறைவாக்கினர்இறைவாக்கினர்இறைவாக்கினர் )இவ்வரம் பரவசப் பேச்சிலும் சாலச் சிறந்தது; ஒரு வரம் சிறந்ததா,இல்லையா என்பது பயனைப் பொறுத்தது. இறைவாக்கு உரைப்பவரோமனிதர்களிடம் பேசுகிறார்; அது ஞான வளர்ச்சி தருகிறது. ஊக்கம்ஊட்டுகிறது; ஆறுதல் அளிக்கிறது (1 கொரி 14:3-5). நம்பிக்கைகொண்டோருக்கும் கொள்ளாதவருக்கும் கடவுளைத் தொழ ஏதுவாகும்(1 கொரி 14:24). கொரிந்தில் இறைவாக்கு உரைப்பதில் ஒழுங்குஇல்லை. மேலும் பெண்களும் முக்காடின்றியும் உரைத்தனர். ஒருவர்பின்ஒருவராக இறைவாக்குரைக்கலாம் (1 கொரி 14:31-33). தாம் பெற்றஏவுதலைஅடக்கிக் கொள்ளவேண்டும். ஏனெனில்கடவுள்குழப்பத்தின்கடவுள் அல்லர்; அமைதியின்கடவுளே; மேற்கூறிய ஏவுதலை அடக்கிக்கொள்ளாத இறைவாக்கினர் பழைய ஏற்பாட்டுஇறைவாக்கினர்சங்கத்தைப்சங்கத்தைப்சங்கத்தைப் போன்றவர் எனலாம்; சான்றாக, இசை கேட்டு இறைவாக்குரைக்கும் எலிசே (2அர 3:11-15); ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு தரையில் புரண்டு இறைவாக்குரைக்கும் சவுல் (1 சாமு 19:20-24; 10:5-6).கீழ்வரும்கீழ்வரும்கீழ்வரும் iஎ, எ, எi - புகைவள ழக சுநஎநடயவழைn (வெளிப்பாட்டுக் கொடைகள்)

(iஎ)திருத்தூதர்ஆவிகளைத் தேர்ந்து தெளிதல், ஞானச் சொல்வளம், அறிவுச்சொல்வளம் ஆகிய மூன்றும் ழுகைவள டிக சுநஎநடயவiடிnஎனப்படுகிறது. பன்னிருவர் மட்டுமல்ல் தம்மை மறந்து பல்வேறு இடம்சென்றுமுழுமூச்சுடன்உழைத்த கிறிஸ்தவரும் இதனுட்பட்டவர். மேலும்புனித பவுலின் ஏடுகள் பவுல் அடியாரைப் பழைய ஏற்பாட்டில்நேரிடையாகஅழைக்கப்பட்டஇறைவாக்கினருக்குஒப்பிட்டுள்ளன. பவுல்,இறைவாக்கினரைப் போல் காட்சியின் வழியாக அழைக்கப்பட்டார்;உயிர்த்த இயேசுவுக்குச் சாட்சி ஆனார். புதுமையாக உடல் நலம்கொடுத்தார்; ஆவியால் தூண்டப்பட்டு செயலாற்றினார், போதித்தார்.மிகமிகத் துன்பப்பட்டார்.12 திருத்தூதர் பழைய ஏற்பாட்டில் நேரடியாக இறைவாக்கினர்போன்றவர் என்கின்றனஒத்தமைப்பு நற்செய்தி ஏடுகள். சான்றாக,மத் 23:34; இதோ நான் இறைவாக்கினரையும், ஞானிகளையும்மறைநூல் அறிஞர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன்... சிலரைக்கொல்வீர்கள்.லூக் 11:49-51; இறைவாக்கினர்களையும், திருத்தூதர்களையும்இவர்களிடம் அனுப்புவேன்... அவர்களுள் சிலரைக் கொலைசெய்வார்கள்.மத் 10:40-41; உங்களை ஏற்றுக் கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். இறைவாக்கினரை இறைவாக்கினராக ஏற்றுக்கொள்பவன்இறைவாக்கினரின்கைமாறு பெறுவான்.மத் 13:17; லூக் 10:24; இறைவாக்கினர், நீதிமான்கள், அரசர்கள்பலர் நீங்கள் காண்பதை காண விரும்பியும் காணவில்லை.இறைவாக்கினர் போல் திருத்தூதர் துன்பப்படுவதாக கூறப்பட்டது.குறிப்பிடத்தக்கது. வெளிப்பாடு பெற்ற பின்தான் திருத்தூதருக்கும்,பேதுருவுக்கும் பணிகள் (மத் 16:18-19).ஸ்தேவான், பிலிப்பு, பர்னபா இன்னும்பலர் இறைவாக்கினர்போன்றவர். காட்சி, அருங்குறி, போதித்தல், துன்பம், தியாக மரணம்இவர்களில் இடம் பெறுகின்றன.பழைய ஏற்பாட்டில் நேரடியாக அழைக்கப்பட்ட இறைவாக்கினர்இறைவாக்கினரின் சங்கத்தவரிலும் மேம்பட்டவர். புதிய ஏற்பாட்டில்திருத்தூதர் (நேரடியாக அழைக்கப்பட்ட இறைவாக்கினர் போன்றவர்)

இறைவாக்கினரின் சங்கத்தவரைப் போன்ற #8220;இறைவாக்கினரிலும்”மேலானவர். எப்பொழுதும் முதலிடம்பெறுபவர் திருத்தூதர்களே ( உரோ1:6; 1 கொரி 12:28).இறைவாக்குஉரைப்பவர் தாம் பெற்ற ஏவுதலைஅடக்கிக் கொள்ளவேண்டும். மேலும், திருத்தூதரின்அதிகாரத்திற்குப் பணிய வேண்டும் (1கொரி 14:31, 32, 33, 37; பிலிப் 3:16).ஆவியின் கொடைகள் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்துநல்லதையே ஏற்றுக் கொள்ள வேண்டும் ( 1 தெச 5 : 19-21); அவைகள்உண்மையானவையா என்பது பற்றியும், அவைகளை ஒழுங்குடன்பயன்படுத்துவது பற்றியும் தீர்மானம் செய்வது திருச்சபையின்தலைமைவகிப்பவருக்கே உரியது. (திருச்சபை பற்றிய மறைக் கொள்கைத் திரட்டு,எண்12).(எ) ஞானம் நிறைந்த சொல்வளம்,(எi) அறிவு நிறைந்த சொல்வளம், நற்செய்தியின்போதகம்.கீழ்வரும் எii, எiii, iஒ - ழுகைவள டிக ஞடிறநச (ஆற்றலின் கொடைகள்)எii) நம்பிக்கை என்பதுமிக வியத்தகுநம்பிக்கைஎiii) பிணிதீர்க்கும்வரம்iஒ) வல்ல செயல் செய்யும் ஆற்றல்...வியத்தகுநம்பிக்கை, பிணிதீர்த்தல், வல்லசெயல்இவைமூன்றும்வல்லமையின் செயல்களாகும் (பகைவள டிக யீடிறநச).நீங்கள் ஆர்வமாய் தேடவேண்டியது மேலான வரங்களையே (1கொரி 12:31). பல மொழிகளைவிட இறைவாக்கு சிறந்தது...ழூ கொடைகளிலெல்லாம் சிறந்தது அன்பு.(i) எந்த வரம் இருப்பினும் அன்பு இல்லையெனில் அது வீண்...எட்டு கருத்துக்கள் ... ( 1 கொரி 13:1-3; 14:1).(எii) அன்பின்தன்மைகள்பதினைந்து(13 : 4-7).(iii) அன்பு ஒருபோதும் அழியாது ( 1 கொரி 13:8-13).ஆவியின் கொடைகள் குழந்தையின் பேச்சு போன்றது;பெரியவராகும்போதுகளைந்துவிட வேண்டியது. ஆவியின்கொடைகள்கண்ணாடியில் மங்கலாய் அரைகுறையாய் காண்பது போன்றது.எவ்வாறு கடவுளைப் பற்றிய குறைவான அறிவு மறைந்து விடுமோஅதைப்போல் ஆவியின் கொடைகளும் மறைந்து போகும்.

இங்கு ஒரு கேள்வி
(1 கொரி 14:34-381 கொரி 14:34-381 கொரி 14:34-38)பவுல் அடியார் சபையில் பெண்கள் பேசக்கூடாது எனச்சொன்னாரா?இன்றைய அறிஞரின்விளக்கப்படி, வசனம் 34-35 முழுவதும் யூதபிற்போக்குவாதிகளின் வார்த்தைகள்; சட்டம் பேசும் அவர்களின்பழமைவாத வாக்குகள் இவண்மேற்கோளாகக் காட்டப்படுகிறது.மாறாக, வச 36 பவுல் அடியாரின் வார்த்தைகள். பழமைபேசுவோரை எதிர்க்கும் வார்த்தைகள். அவர் பழமைவாத ஆடவரிடம்சாடுகிறார். ‘கடவுளின்வார்த்தை(ஆடவரான) உங்களிடமிருந்தா வந்தது?அல்லது (ஆடவரான) உங்களிடம் மட்டுமா வந்தது” என எதிர்த்துப்பேசுகிறார்... காட்டமாக இரண்டு கேள்விகேட்டு மடக்குகிறார்...மேலும் 11:5 இல்பெண்கள்வழிபாட்டில்பேசியதாகவும்,பேசியதாகவும்,பேசியதாகவும், அப்போதுஒருவர் மட்டுமே முக்காடு போட்டுக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

4.6. உயிர்ப்பு உண்டா?
பிரதிபலன் பற்றிய கருத்துக்கள்1 கொரி 15ஐக் கற்றுக் கொள்ளத் தேவையான பின்னணி(நீதி மொழிகள் (கி.மு. 480); யோபு நூல் (கி.மு. 450);சபைஉரையாளர் (கி.மு. 250); சீராக்கின்ஞானம் (190); தானியேல் (167-164); சாலமோனின் ஞானம் (கி.மு. 100-50); 2 மக்கபேயர் (கி.மு. 150),11

1)நன்மை தீமைக்குப் பிரதிபலன் உண்டுகடவுள்நீதியுள்ளவர்; எனவேஇஸ்ரயேலர் பிரதிபலன்எதிர்பார்த்ததுஇயல்பு. திருநூல் இதற்குச் சான்று.

2 )மறுவுலகில் அல்ல, இவ்வுலகில் பிரதிபலன்
ஏன்மறுஉலகில்அல்ல? ஏனெனில்மரித்தவன்பூமிக்கடியிலுள்ளசேயோல் என்னுமிடத்தில் நிழல் போல் இருப்பான்.அது இருள் நிறைந்த இடம் (திபா 88:1-13; யோபு 10:2-22).கால்கள் தடுமாறும் குழி (திபா 94:15-17), பாதாளம் (யோபு 11:8). இதற்குமேலும் ஆழம் உண்டு (இச 32:22; எசா 14:15; திபா 36:12). விழுங்கக்காத்திருக்கும் இராட்சதன்போன்ற இடம் (எசா 5:14; நீமொ 30:16). அச்சம்நிறைந்த இடம் (திபா 14:14; 22:1). கசப்பான, சுமையான வாழ்வு அது(சஉ9:10; யோபு 7:15). ஏற்ற தாழ்வற்ற இடம் (யோபு 3:18-19). மறதியின்பூமி, கைவிடப்படும் இடம். அங்கு இறைவனைக் காண முடியாது.இதனை எண்ணிநல்லவர் இவ்வுலகில் வருந்துகின்றனர் (திபா 6:5-6;88:12-13). சுருக்கத்தில் வருங்கால சேயோல் வாழ்வு நல்லவர்க்கும், தீயோருக்கும் ஒன்றே. எனவே, அது பிரதிபலன் பெறும் இடமாயிருக்கமுடியாது. பிரதிபலன் இவ்வுலகிலேயே உள்ளது. (பழைய ஏற்பாடுஇறந்தோரைப் பற்றி அக்கறைப்படாதிருந்தது; ஒரு தெய்வம் என்றகொள்கைக்கு பெரிதும் உதவிற்று).

3 )இவ்வுலகில் பிரதிபலன் என்றால் எத்தகைய பிரதிபலன;
நன்மைக்குப் பிரதிபலனாக வாழ்வோரின் பூமி எனப்படும்இவ்வுலகில் வாழலாம் (எசா 38:11; எரே 11:19; எசே 32:23, 24, 26; யோபு28:13; திபா 27:13; 52:7; 69:29; 142:6).கடவுள்வாழ்வோரின்ஆண்டவராக இருப்பார். நீண்டகாலம்உடல்நலமாக, அச்சமின்றி வாழலாம்; வெற்றி, செல்வம், பெருமை, அமைதிநிரம்பக் கிடைக்கும் (நீமொ 10:16, 17, 26, 28, 30; 11:19, 11, 17, 18, 25, 30;12:3; 28; 13:9, 21; 14:27; 15:24; 18:21; 19:23; 21:21).அதற்காக செபித்தும் வந்தனர். அதுமட்டுமல்ல, இஸ்ரயேலர்யாவேயின் நாட்டில் வாழலாம் ( 1 சாமு 10:1; 26:19; 2 சாமு 20:19; 21:3;எரே 16:18; 12:7-8).அதாவது பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டில் நிலையாகவாழலாம்; அங்கே இலட்சிய இன்பம்:(i) நல்ல விளைச்சல் (குறிப்பாகத் திராட்சைப் பயிர்)(ii) பெரிய குடும்பம்(iii) வாழவசதி.. பட்டணம், வீடுதீமைக்குத் தண்டனையாக இவற்றை இழக்க வேண்டியிருக்கும்!

4)பொதுப் பொறுப்பு
இவ்வுலகில்பிரதிபலன்அளிக்கும்போதுகுடும்பம், குலம்இவற்றின்பாவங்களுக்காக (நற்செயலுக்காக) தனிநபர் தண்டிக்கப்படுவதும் (ஆசீர்பெறுவதும்) தனிநபரின்பாவத்திற்காக (நற்செயலுக்காக) குடும்பம், குலம்,நாடுபொதுவாகத் தண்டனை(ஆசீர்) பெறுவதும் வேதாகமத்தில்தெளிவு.அன்று தனி நபருக்கு தனி விலையில்லை என்ற மதிப்பீடு!யாவரும் ஒன்று - ஒரே குடும்பம், குலம், நாடு - என்ற எண்ணம் தலைதூக்கி நின்றது. ஒரு தனி நபரை முன்னிட்டு குலம், குடும்பம், நாடுமுழுவதும் தண்டிக்கப்படுகிறது, அல்லது பாதுகாக்கப்படுகிறது.காயினின் பாவத்திற்காக அவன் சந்ததி முழுவதும் தண்டனைபெற்றது (தொநூ 6:7).நல்லவனான நோவா முன்னிட்டு அவரது குடும்பம்காப்பாற்றப்பட்டது (தொநூ 9:28).சோதோமின் பாவத்தால் யாவரும் அழிக்கப்பட வேண்டும்.ஆபிரகாம் பரிந்து பேசுகிறார் (தொநூ 18:22-23).எகிப்து மன்னன்ஆபிரகாமை வேண்டினான்; சுற்றத்தாரும் ஆசீர்பெற்றனர் (தொநூ 20:17).தந்தையின் குற்றத்திற்கு பிள்ளைகள் பொறுப்பு (விப 20:5; இச5:9).பார்வோன்சாராளைவிரும்பியதால்அவனதுகுடும்பம் தண்டிக்கப்பட்டது (தொநூ 12:17).சில லேவியரும் ரூயஅp;பன் குலத்தாரும் பாலை நிலத்தில் கிளர்ச்சிசெய்ததால்அவர்களதுகுடும்பங்களையும் பூமிவிழுங்கிற்று(எண்16:32).ஆக்கான் எரிக்கோ நகரில் சூரையாடிய பொருளை எடுத்துக்கொண்டதால் யூத மக்கள் துன்புற்றனர். அவனது உறவினர்அழிக்கப்பட்டனர் (யோசு 7:2-26).யோவாப் என்பவன் அப்னேரைக் கொன்றதால் அவனது சந்ததிஅழியும் (2சாமு 3:29).யோசுவா செய்திருந்த ஒப்பந்தத்திற்கு(யோசு 9), மாறாக, கிபயோனியரை சவுல் கொன்றதால் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பட்டினியால்பீடிக்கப்பட்டனர்; பின்பு சவுலின்குமாரருள்எழுவர் கொல்லப்பட்டனர் ( 2சாமு 21:1-14). இக்கொள்கைக்கும் மாறாக அனுபவங்கள் உள்ளன ( 2குறி 35:20-24; அப் 1:13) எனவே பிரச்சினை! புதிய அணுகுமுறை!

5)இவ்வுலகில் பிரதிபலன்.. ஆனால் அவரவர் செய்த நன்மைதீமைக்கு அவரவர் பொறுப்பு என்ற புதியக ண்ணோட்டம்எரேமியா அவரவர் செயலுக்கு(நன்மை, தீமை) அவரவர் பொறுப்புஎன்ற கண்ணோட்டத்தை வலியுறுத்தினார். தந்தை திராட்சைக் காயைத்தின்றால், பிள்ளைகளின் பற்கள் கூசுமா? (31:29-30).எனினும் தீயவர் செழித்து வளர்வதேன் என்பது அவருக்கேபுரியவில்லை. வருங்கால வாழ்வு பற்றித் தெரியாது (இச 24:16; 2 அர14:6).மக்களின்பாவத்தால் எருசலேம் அழிவதைக் கண்ட எசேக்கியேல்அவரவர் தன்செயலுக்குப் பொறுப்பு எனும் கருத்தை அழுத்திக் கூறுகிறார்(14:12-23; 18:33:11).பாவிக்குமரணம்; நல்லவருக்குநல்வாழ்வு, தீயவரும் மனந்திரும்பிவாழ்வதை இறைவன்விரும்புகிறார். ஒருவரது மீட்பும், அழிவும் அவரதுபெற்றோரையோ, பிறரையோ, பழைய பாவங்களையோசார்ந்திருப்பதில்லை. தற்போதைய மனநிலையை கடவுள் பார்க்கிறார்.ஆயினும் உலகிலேயே நல்லவருக்கு நல்வாழ்வு என்பது சரியாகஇல்லையே? எனவே இங்கும் சிக்கல்!

யோபுவின் நண்பர்கள் நல்லவருக்கு நன்மை எனும் கருத்தையேவலியுறுத்தினர் (யோபு 4:7-8; 15:17-18). ஆனால் யோபுவின்அனுபவத்திற்கு மாறானது அது. பதில் கிடைக்காததால் இறைவன்திருவுளத்திற்குப் பணிவதே சிறந்தது என்கிறது அந்நூல் (27:7-15; 40:3-5; 42:1-6).

சபை உரையாளர் (கி.மு. 250)நல்லவர் நியாயமாக எதிர்பார்க்கும் இன்பம் இவ்வுலகில்கிடைப்பதில்லை. மேலும் நல்லவர் துன்பப்படுகின்றனர் (7:15; 8:4, 10;9:2). எனவே தக்க பிரதிபலன் இவ்வுலகில் இல்லை; கொடுக்கவும்முடியாது. ஏனெனில் நிலம், வீடு, வளம், வாழ்வு யாவும் வீண், விழல்;அவை திருப்தி தர மாட்டா. எனவே, மறுவுலக நித்திய வாழ்வைப் பற்றிகனவு காண்கிறார் ஆசிரியர்.மரணத்துக்குப் பின் தண்டனை, பரிசு உண்டு என்ற படிப்பினைபடிப்படியாக வளர்கிறது.

6)ஒவ்வொருவரும் தாம் செய்த நன்மை தீமைக்குப் பொறுப்பு.. ஆனால், மறுவுலகில்தான் முடிவான பிரதிபலன் என்ற புதிய சிந்தனை:(i) சில திருப்பாடல்கள்கண்ட முடிவு(ii) கிரேக்கர் யூதர் கண்ட முடிவு(iii) கிரேக்கர் அல்லாத யூதர் கண்ட முடிவு

(i)சில திருப்பாடல்களில் காணும் கருத்து இறைவனோடு நமது ஐக்கியம் எத்துணையெனில் அதுமரணத்தோடுமுற்றுப்பெறமுடியாது. நித்தியத்திற்கும்நிலைக்க வேண்டும்(திபா 49:77); எந்நாளும் இறைவன்திருமுகம் கண்டுகளிக்க வேண்டும்(திபா 13:4; 17:15; 27:13-14; 42:3-5). அன்று ஏனோக்கிற்கும்(தொநூ5:24) எலியாவுக்கும் (2 அர 2:9-11) கடவுள் சலுகை செய்ததுபோல், தங்களுக்கும் இரங்கிச் செய்ய வேண்டும் எனவிழைந்தனர்.

(ii)கிரேக்க யூதர் கண்ட முடிவு (சாலமோனின்ஞானம் (கி.மு50). ஆசிரியர் ஓர் அலெக்சாந்திரியாயூதன்).யாவருக்கும் முடிவான பிரதிபலன் பிற்காலத்தில்தான்; உலகிலும்சற்று பிரதிபலன் உண்டு. எனவே, நல்லவர் வாழ்வு வெற்றிகரமானது.தீயவரது முயற்சிகள் வீணாகும் (3:11-18). அவர்களும், அவர்களதுமக்களும் தண்டனை பெறுவர் (3:16; 4:3). நீதிமான்களை ஏளனம்செய்யும் அவர்களைப் பார்த்து கடவுள் நகைப்பார் (4:18-19). அவர்களதுஞாபகம் நிலைக்காது (யோபு 4:17-19; நீமொ 10:7).மனிதருக்கு ஆன்மா உண்டு. ஆன்மா தன்னியல்பிலேஅழியக்கூடியது. எனினும் மரணத்தால் விடுதலை பெற்ற நீதிமானின்ஆன்மா என்றென்றும் வாழும்; உடல் அழியும் (சாஞா 9:15) ஆன்மாவின்சாகாமை, அழியாமை நீதியுள்ள இறைவனின்சம்பாவனை( 2:22; 3:1-14; 4:14; 5:15). அது ஞானத்தோடு ஒன்றித் திருப்பவருக்கும் (8:17),கடவுளின் நீதியையும் வல்லமையையும் அறிபவருக்கும் (15:3),ஞானத்தின்விதிகளுக்குப் பணிபவருக்கும் (6:18-19), நீதி நேர்மையோடுவாழ்பவருக்கும் (1:15) பிரதிப்பலனாகக் கிடைக்கும். இப்பொருளில்தான்கடவுள் மனிதரை நித்தியத்திற்கும் வாழ உண்டாக்கினார் (2:23); தமதுசாகாமையின்சாயலாகஉண்டாக்கினார் (2:23; 5:5); நீதிமான்அதனையேநம்பி வாழ்கிறார். நீதிமான் உடலை இழந்தாலும் ஆன்மாவை இழக்கமாட்டார் (3:1).நீதிமானின்#8220;ஆன்மா” கடவுளோடுவாழும் (3:9; 5:15-16). அவரதுவிண்ணகக் கோவிலில்பிரதிப்பலன்பெறும்(3:14). அவரதுஅரசில்பங்குகொள்ளும் (3:8), அமைதி (3:3), இளைப்பாற்றி (4:7), நீதி (1:15) நிறைந்தஇடம் கிடைக்கும்.அவர்கள் புனிதர்களோடு (வானதூதர்களோடு) வாழ்வார் (5:5).மறுவுலகில் பிரதிபலன் என்பதால் இளைஞர்களின் மரணம் ஒருபிரச்சனையல்ல (4: 7-8).மலடியாக இறப்பதும் ஒரு குறையல்ல (3:13-14). தீயவருக்குத்தண்டனை யாது? வருங்கால தண்டனை தெளிவாக இல்லை.பாவத்தின் பலன் சாவு (1:11-12); கடவுள் சாவை உண்டாக்கவில்லை(1:13); தீயவர் அழிவதைக் கூட கடவுள் விரும்புவதில்லை (எசே 18:23).அலகையின் பொறாமையால் சாவு உலகில் வந்தது. அவனைப்பின்பற்றுவோர் இறந்துவிடுவர் (சாஞா 2:24-25); நல்லோர் வாழும்போதுதீயோர் முற்றும் அழிக்கப்படுவர்(சாஞா 3 :10-19).நல்ல வாழ்வின் பயனாய் என்றும் வாழ படைக்கப்பட்ட ஆன்மாஒருவித மரணத்தில் நிலைத்து நிற்பதே பெரும் தண்டனை; அதுஅழிவிலும் கொடிது (4:19).பாவி இத்தகைய ஆன்ம சாவை ஆவலாய்த் தேடுகிறார் (1:12).இதனைநண்பனாகப் பாவித்துஅதனோடுஉடன்படிக்கையும் செய்கிறார்(1:16).பிரதிபலன்பெறுமுன்ஒருதீர்வைவேண்டும். நீதிபதிமுன்நல்லவர்நம்பிக்கையுடன் நிற்பர். தீயவர் இறந்த பின் (5:13) அச்சத்தாலும்,சீற்றத்தாலும் பீடிக்கப்பட்டு (5:2-8) இருளில் அமிழ்ந்தியிருப்பர்.

இவ்வாறுகிரேக்க யூதர் ஆன்மா, உடல்எனகூறுபோட்டுப் பேசினர்.நல் வாழ்வில் நிலைப்பதும் அல்லது தண்டனைபெறுவதும் ஆன்மாவே!

(iii)கிரேக்கர் அல்லாத யூதர் கண்ட முடிவு: உயிர்ப்பு!(எசாயா பகுதிகள், தானியேல், மக்கபேயர்)ழூமனிதரில் உடல், ஆன்மா என்ற வேறுபாடு உண்டு எனஅவர்களுக்குத் தெரியாது. மறுவுலக பிரதிபலன் பெற வேண்டுமானால்உயிர்ப்புத் தேவை. உயிர்த்தால் முழு மனிதரும் உயிர்ப்பார். ஒரு சிலர்வாழ்வு பெற உயிர்ப்பர் என்பது தெளிவு. சான்றாக,அ) யாn வயின்ஊழியன்(எசா 53:10) நித்திய வாழ்வுபெற உயிர்ப்பு (?)ஆ) நல்லவரான சில இஸ்ரயேலரின் உயிர்ப்பு (எசா 26:19).இ) மக்கபேயர், போரில்மரித்த வீரர்கள்பெறும் உயிர்ப்பு(2 மக் 7:1-42)ஈ) மதத்தைக் கைவிடாமல் போராடிய பலர் (தானி12:13). ழூழூ ஒருசிலர் உயிர்த்து ஜெn'ன்னா அல்லது சேயோவில்துன்புறுவர். சான்றாக,அ) கடவுளுக்குஎதிரானவர் - தீயோர் கூட உயிர்ப்பதுமுதன்முதல்இங்கே தெளிவு (தானி 12:2).ஆ) கிரேக்க அரசன், மத விரோதி துன்புற உயிர்ப்பான்(2 மக் 7:14)777)எனவே புதிய ஏற்பாட்டின் காலத்தில் யூதரின் நம்பிக்கைபின்வருமாறு:அ) ஒரு விதமான தனித்தீர்வை இருப்பதாக மறைமுகமாகஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆ) யாவேயின் நாளில் வரப்போகிற பொதுத் தீர்வை அழுத்திக்கூறப்பட்டது.இ) உயிர்ப்பு உண்டு என்பதை சதுசேயர் மறுத்தனர்ஈ) நீதிமான்களுக்கு உயிர்ப்பு உண்டு என்பது பரிசேயரின்கொள்கை.

இறந்தோர் உயிர்த்தெழுதல்

8)புதிய ஏற்பாட்டில் இறந்தோர் உயிர்த்தெழல் பற்றியகருத்துக்கள;உயிர்ப்பைப் பற்றி இயேசு (யோவா 6:52-59; 11:23-26; 8:51).நானே உயிர் (யோவா 11:11-14; 2:18-26).(i)பவுல் அடியார் தரும் கருத்துக்கள்பவுல் ஒரு பரிசேயர்; பரிசேயர் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டவர்(மத் 22:23-32).ஏதென்ஸ் நகரில் அரையோப்பாகுவில் #8220;கிறிஸ்துவும் உயிர்ப்பும்”என பவுல் கூறியதைக் கேட்டதும் அறிஞர்கள் நகைத்தனர். மீண்டும்வந்து பேசும் என்றனர் (திப 17:32). ‘நான் பரிசேயன்...நேர்மையாளர்களுக்கும் நேர்மையற்றவர்களுக்கும் உயிர்ப்பு உண்டு'.இதைக் கேட்டதும் தலைமை சங்கம் பரிசேயர், சதுசேயர் எனஇரண்டாகப்பிரிந்தது (திப 23:6-8).ஆளுனன் பெலிக்ஸ் முன் கூற்று: இவர்கள் நம்பிக்கைகொண்டிருப்பது போலவே நானும் நேர்மையாளர்களுக்கும்நேர்மையற்றவர்களுக்கும் உயிர்த்தெழுதல் உண்டென்று நம்புகிறேன்(திப 24:15).இறந்தோரைக் கடவுள்எழுப்புவதை நம்பக்கூடாது என்று நீங்கள்எண்ணுவதேன்? அக்ரிப்பா பவுலை நோக்கி #8220;பவுலே, என்னஉளறுகிறாய்? உன்னுடைய மிகுந்த படிப்பு உன் மூளையைக்குழப்பிவிட்டது போலும் (திப 26:8, 24).நேர்மையற்றவரின்உயிர்ப்பு மறைமுகமாகவும் கூறப்பட்டுள்ளது (2 தெச 1:9-10; உரோ 2:5-6; யோவா 5:29).அவர்கள்முடிவில்லா அழிவைத் தண்டனையாகப் பெறுவர்.பவுலின் திருமுகங்கள் உயிர்ப்புப் பற்றி அநேக இடங்களில்கூறுகின்றன (1 கொரி 6:14; 2 கொரி 4:14; உரோ 8:11).இறந்தோர் உயிர்த்தெழுதல் அடிப்படை போதகங்களுள் ஒன்று(எபி 6:2). உயிர்ப்பை பற்றிய மிகச் சிறந்த இரு பகுதிகள் 1 தெச 4:13-17;1 கொரி 15.(ii)1 தெச 4:1 3-17வ. 16 ஆண்டவர் வானின்று இறங்கி வருகிறார். அப்பொழுதுகிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில்உயிர்த்தெழுவர்.வ. 14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம்.அப்படியானால் இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக்கடவுள் அவருடன் அழைத்து வருவார். சமீப காலத்தில் இறந்தோரைப்பற்றியபிரச்சனைமட்டும்மனக்கண்முன்நிற்பதுஈண்டுகுறிப்பிடற்பாலது.உடல் ஆவிமயமாக மாறுதல் பற்றி தெசலோனியருக்குப் பவுல்ஒன்றும்கூறக் காணோம். கொரிந்தியருக்குஅதைப் பற்றிஎழுதியுள்ளார்.(iii)1 கொரி 15பிரச்சனை:பிரச்சனை:பிரச்சனை: உடல் ஒரு சிறை. ஆன்மாவின் நல்வாழ்விற்கு ஒருமுட்டுக் கட்டை; இறப்பின் வாயிலாக உடலிலிருந்து ஆன்மா விடுதலை பெறுகிறது. இறப்பு ஆன்மா விடுதலை பெறும் நன்னாள். உடல்உயிர்தெழும் என்பதும், ஆன்மா மீளவும் சிறைபடும் என்பதும் ஒன்றே;இது பிளேட்டோ, சாக்ரடீஸ் இவர்களின் தத்துவம். எனவே உடலின்உயிர்ப்பு கிரேக்கருக்கு- கொரிந்தியருக்குவெறுப்பு; ஆனால்ஆன்மாவின்அழியா வாழ்வை அவர்கள் போற்றி மகிழ்ந்தனர். இத்தகையோருக்குஉடல் பெறவிருக்கும் சிறப்பை சுட்டிக் காட்ட வேண்டும்.

(iஎ)உயிர்த்தெழும் உடல் எத்தகையது தத்துவ விளக்கம் தராமல், ஓர் எடுத்துக்காட்டு வழியாய் உடலில்ஏற்படும் மாற்றத்தை விளக்குகிறார் பவுல். சான்றாக, 1 கொரி 15:36-44;யோவா 12:24-25.

விதைப்பது மடிகிறது... - பின்புத்துயிர்
விதைப்பது விதை... - தோன்றுவது புதிய உருவம்
இறக்கும் உடல்... - உயிர்க்கும் உடல்
அழிவிற்குரியது.. - அழியாதது
இழிவானது - மாட்சிமைக்குரியது
வலுவற்றது - வலிமையுள்ளது
மனித உயிர் கொண்டது - தேவஆவிக்குரிய உயிர் கொண்டது.(உடல் புதைக்கப்படுவதில்லை; மாறாக விதைக்கப்படுகிறது).

ஒரு நொடியில், கண்ணிமைப் பொழுதில்... இறந்தோர்அழிவில்லாதவர் களாய் உயிர்த்தெழுவர்; நாமும் வேற்றுருபெறுவோம்...சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்து கொள்ள வேண்டும்.மண்ணைச் சார்ந்தவரின் சாயலைத் தாங்கியிருந்தது போல,விண்ணைச் சார்ந்தவரின்சாயலையும் தாங்கி இருப்போம்.இயேசு மீட்பர், தம் உடலின்சாயலாகத் தாழ்வுக்குரிய நம் உடலைஉருமாற்றுவார் (பிலி 3:21; உரோ 2:7).கிறிஸ்துவின் உயிர்த்த உடல் பளுவின்மை, நோயின்மை,உருவின்மை, மேலும் சுடர் ஒளிநிலை கொண்டது (யோவா 20:19, 26;லூக் 24:16).உயிர்த்த கிறிஸ்து ஆவியானவர் எனப்படுகிறார் ( 2 கொரி 3:17);உயிர்த்த நம் உடலையும் ஆவி எனலாம்; இத்தகைய உடலுக்குத்தான்விண்ணகத்தில்இடம் உண்டு. ஏனெனில்ஊனும், இரத்தமும் கடவுளின்அரசை உரிமையாகப் பெற முடியாது ( 1 கொரி 15:50).

(எ)ஏன் உயிர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்? (இறந்தவன் புதுமையாக உயிர்த்தான் என்றால் அதைப் பற்றிகிரேக்கருக்கு ஐயமில்லை. ஆனால், இறுதி நாட்களில் நிகழும்உயிர்ப்பைப் பற்றியே ஐயம்).

அ) கிறிஸ்துஉயிர்த்துவிட்டார். தோன்றினார் 1, 12, 500 பேர் என்றுகண்டவர்களில் சிலர் உயிரோடு உள்ளனர் ( 1 கொரி 15:3-8). உயிர்ப்பேஇல்லையெனில் கிறிஸ்துவின் உயிர்ப்பை மறுக்க வேண்டியிருக்கும்.ஆனால் மறுக்கவியலாது.

ஆ) கிறிஸ்து உயிர்க்கவில்லையெனில் தூதுரை பொருளற்றது.நம்பிக்கைப் பொருளற்றது. நாங்கள் பொய்யர்; நாம் இன்னும் மீட்புப்பெறவில்லை; இறந்தோர் அழிந்தனர் ( 1 கொரி 15:12-18).

இ) இறந்தவர்களுக்குள்ளே முதற்கனியாக உயிர்த்தவர் கிறிஸ்து.முதற்கனியைப் போன்றதாக அறுவடை அமைய வேண்டும் ( 1 கொரி15:20; கொலோ 1:18); ஒரு மனிதன் வழியாய் அழிவு; ஒரு மனிதன்வழியாய் உயிர் (1 கொரி 15:22, 45); ஆதாம் பாவத்தின் (மரணத்தின்,துன்பத்தின்) முதற்கனி.. பின் பாவத்தின் அறுவடை.கிறிஸ்துவோவெனில்உயிர்ப்பின்முதற்கனி. பின்உயிர்ப்பின்அறுவடை.

ஈ) கொரிந்து நகரில் (கிறிஸ்தவர் அல்லாதவரில், அல்லதுபாவிகளான கிறிஸ்தவரில்) இறந்தவர்களுக்காகச் சிலர் திருமுழுக்குபெற்று வந்தார்கள் (1 கொரி 15:29). பவுல் அதைக் கண்டிக்கவும்இல்லை; ஆதரிக்கவும்இல்லை; இறந்தவர்கள்உயிர்தெழவேமாட்டார்கள்என்றால்அவர்களுக்காக திருமுழுக்குபெறுவானேன்எனவாதாடுகிறார்.

உ) திருத்தூதர் அனுபவிக்கும் மாபெரும் துன்பம் சொல்லற்கரியது.உயிர்ப்பு இல்லையெனில் அதனால் பலன் என்ன? உயிர்த்தெழுதல்இல்லையெனில்”உண்போம், குடிப்போம், நாளைக்கு மடிவோம்”என்பதே நலம்.கிறிஸ்துவை உயிர்ப்பித்த ஆவியானவர், கிறிஸ்துவின்மறையுடலின்உறுப்பாகிய நம்மை (1 கொரி 6:17) தமது கோவிலாகிய நம்உடலை ( உரோ 8:10) உயிர்ப்பிப்பது தகுதியும், நீதியுமாகும். ஆவி தன்முதற்கொடைகளைத் தருவதுஇறுதிக் கொடையான, இறுதிவெற்றியான( 1 கொரி 15:54) உயிர்ப்பை அளிப்பதின் அச்சாரமாகவே ( 2 கொரி 5:5;எபே 1:15).உலகம் மூன்றடுக்குகள் கொண்டது; விண்ணகக் கடவுள்,மண்ணகம் வாழ்வோரின் ஆண்டவர் மட்டுமல்ல் பாதாளத்தில்வாழ்வோரின் ஆண்டவரும் கூட என்னும் கருத்து பழைய ஏற்பாட்டில்சிறிது சிறிதாக வளர்ந்தது. கிறிஸ்து உயிர்த்ததால் வாழ்வோருக்கும்இறந்தவருக்கும் ஆண்டவர் ஆவார் (உரோ 14:9).

உயிர்ப்பதற்காக நாம் ஏங்குகிறோம். நாம் இதற்காகவும்செபிக்குமாறு ஆவியானவர் துணை நிற்கிறார் (உரோ 8:23-26);கிறிஸ்துவும் உதவுகிறார் (உரோ 8:34).

(எi)கிறிஸ்துவின்இரண்டாம்வருகையின்போதுவாழ்வோரின்உடல;
(கிறிஸ்துவின்வருகை விரைவில்இருக்கும் என்றுகருதியசூழ்நிலை)(2 கொரி 5:2-5; உரோ 8:23) இந்தக் கூடாரத்திலுள்ள நாம் ( இந்தஉடலில் உள்ள நாம்) விண்ணிலிருந்து வரும் நம் உறைவிடத்தை(புத்துடலை) மேலணிந்து கொள்ள ஏங்கி பெருமூச்சு விடுகிறோம். இந்தஉடலைக்களைய விருப்பமில்லை. உடல் வேற்றுரு பெறும்;சாவுக்குரியதெல்லாம் சாகாமையால் விழுங்கப்படும்... இரண்டாம்வருகையின்போதுவாழ்வோருக்குஇதுநிகழும்; எனவேதான்இரண்டாம்வருகையின் மேல் அளவற்ற ஆவல் ( உரோ 8:23; 2 கொரி 5:2).நாம் அனைவரும் சாகமாட்டோம்.. ஒரு நொடியில் கண்ணிமைப்பொழுதில்... நாமும் வேற்றுரு பெறுவோம் (1 கொரி 15:52).

(எii)இரண்டாம் வருகைக்குமுன்இறந்தோரின்நிலை இரண்டாம் வருகை அருகில் இல்லை என்று உணர்ந்தபோதுஇப்பிரச்சனைதலைதூக்கிற்று. உடல்அழியும்; உடனேவேற்றுருபெறாது;ஆனால் ஆன்மா இறைவனிடமிருந்து பிரியாது; கிறிஸ்துவோடுஇருக்கும்; கிறிஸ்துவுக்கே உரியதாய் இருக்கும்; இயேசுவின்ஒன்றிப்பில்உறங்கும்.நாம் குடியிருப்பதற்கு மண் மீதுள்ள இந்தக் கூடாரம் தகர்ந்துவீழ்ந்தாலும் கடவுளிடமிருந்து கிடைத்த வீடு ஒன்று நமக்கு விண்ணில்உள்ளது. இந்த உடலில்குடியிருக்கும் வரை ஆண்டவரின்வீட்டினின்றுதொலைவில் அலைகிறோம்.. இவ்வுடலை விட்டு குடிபெயர்ந்து ஆண்டவர் வீட்டில் குடியேறுவதையே விரும்புகிறோம் (2 கொரி 5:1, 6-8).சாவதோ - ஆதாயமே... உயிர் நீத்து கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல்ஒருபுறம். இதுவேமிகச் சிறந்தது(பிலிப் 1:19-26). சிறைவாசத்தில், மரணஆபத்தில் இக்கடித வரிகள் எழுதப்பட்டன.

எதுவும் - சாவும்கூட - நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது (உரோ 8:35-39).செத்தாலும் ஆண்டவருக்கென்றே சாகிறோம்; ஆகவே ...செத்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாயிருக்கிறோம்.இயேசுவின்ஒன்றிப்பில் அவர் உறங்குவார் ( 1 தெச 4:14).இறுதிநாளில் இறுதி விரோதியானசாவு அழியும்.சாவே உன்வெற்றி எங்கே!சாவேஉன்கொடுக்கு எங்கே!

 
------------------------------------------
--------------------------
----------------
------
--