2 கொரிந்தியர் திருமுகம்

முனைவர் மேதகு ஆயர் அ. ஸ்டீபன்

விவிலிய அன்பர்களே,

வணக்கம்.கொரிந்து நகரை கி.மு. 146 ல்உரோமைப் பேரரசு அழிப்பதற்குமுன்னால் அது செழிப்பும்பெருமையும் நிறைந்த ஒன்றாகத்திகழ்ந்தது. பின்னர் கி.மு. 44 ல்ஜுலியஸ் சீசர் இந்நகரை மீண்டும்கட்டி எழுப்பி உரோமையின்காலனியாக, இத்தாலி நாட்டு வியாபாரிகளின் புதிய கொரிந்து நகராகமாற்றினார். இக்காலத்திற்குப் பிறகு, இது பல நாட்டு வியாபாரிகளும்சாதனையாளர்களும் வந்து செல்கின்ற ஒரு முக்கிய நகராக உயர்ந்தது. கி.மு.29 ல் நிலவிய அமைதி, செழிப்பு இவற்றின்காரணமாகஅக்காயாமாநிலத்தின்செனட் தலைநகராகவும் இது விளங்கிற்று.

மேலும் கொரிந்தின் புவியியல் அமைப்பும் அது முக்கியத்துவம்பெறுவதற்குக் காரணமாய் அமைந்தது. இத்தாலி, ஸ்பெயின் போன்றஐரோப்பிய நாடுகளிலிருந்து பாலஸ்தீனம் போன்ற மத்திய கிழக்குநாடுகளுக்கு கடல் வழியாக நடைபெற்ற வாணிபத்திற்கு மையப்பகுதியாகவும், பண்டமாற்று இடமாகவும், பலவகைச் சமூக, சமய நம்பிக்கைஉடையவர்கள் கூடி வரும் இடமாகவும் இது இருந்தது. மேற்குக் கரையில்அத்ரியாட்டிக் கடலும் கிழக்குக் கரையில் ஆகேயன் கடலும் தொட்டுத்தழுவும் கொரிந்து நகரம், எப்பொழுதும் பரபரப்பான வண்ண மயமானதுறைமுகங்களையும், முதலாளிகள், அடிமைகள், சமயவாதிகள், தத்துவஞானியர், இன்பம் சுவைப்போர் என்று பல வகையான மக்களையும்,கேளிக்கை விளையாட்டு இடங்களையும் கொண்டதாய் இருந்தது.

இத்தகைய நகரில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்துத்திருச்சபையை புனித பவுல் நிறுவினார். ஆனால், இத்திருச்சபை அங்குநிலவிய பல்வகைக் கோட்பாடுகள், ஐதீகங்களால் பிரச்சனைகளுக்குஉள்ளாயிற்று. தனது திருமடல்கள் மூலமாக இப்பிரச்சனைகளைப் புனிதபவுல் எப்படித் தீர்த்தார் என்பதைத்தான் இப்பாடத்தில் படிக்கப்போகிறோம்.இப்பிரச்சனைகள் இன்றைக்கும் நமது சமூகத்திலும் திருச்சபையிலும்நிலவுவதால் புனித பவுலின் பதில்கள் நமக்கும் பயன்தரும்படிஅமைந்துள்ளது இம்மடல்களின் தனிச்சிறப்பு ஆகும். இப்பாடங்களைஎழுதித்தந்த புனித பவுல் விவிலிய நிலையத்தின் முன்னாள் இயக்குநர்பேரருள்திருமுனைவர் வ. மரியதாசன்பேரருள்திருமுனைவர் வ. மரியதாசன்பேரருள்திருமுனைவர் வ. மரியதாசன்அவர்களுக்கும், திருச்சி புனித பவுல்குருத்துவக் கல்லூரி பேராசிரியர்பேரருள்திரு முனைவர் அ. ஸ்டீபன்அவர்களுக்கும் நமது நன்றிகள் உரித்தாகுக.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திருமுனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்

2 கொரிந்தியர்

1. முன்னுரை
2. பின்னணி
3. திருமுகத்தின் அமைப்பு
4. திருமுகத்தின் செய்தி
5. நன்கொடை திரட்டுதல்
6. கண்டிப்பும் அன்பும்
7. முடிவுரை

 

2 கொரிந்தியர்

1. முன்னுரை
கொரிந்து சபைக்கு புனித பவுல் அடிகளார் நான்கு அல்லது ஐந்துமடல்கள் வரைந்திருக்கலாம் என அறிஞர்களிடையே வேறுபட்டகருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதோ இருதிருமுகங்களே. முதல் திருமுகத்தில் கட்சிமனப்பான்மை ( 1:10-4:21),கூடா ஒழுக்கம் 5:1-13), அந்நியர் முன் வழக்காடல், விபச்சாரம் (6:1-20),சிலைகளுக்குப் படைத்த உணவு, ஆண்டவரின்விருந்தில் ஏற்றத்தாழ்வு(8:1-11:1) தூய ஆவி, இறப்பும், உயிர்ப்பும் (11:2-16:24) போன்றபிரச்சனைகளுக்கு விடைதந்து உன்னத கருத்துக்களை, உயர்வானசிந்தனைகளாலும், விசுவாச கோட்பாடுகளாலும் மெருகூட்டிக் காட்டும்புனித பவுலை ஒரு எல்லைக்குள் அடக்கிவிட முடியாது.#8220;

இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள்எங்கு சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள்உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள்உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும் போதே நாங்கள் அவரைமுன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம்'(2 கொரி 4: 10-11) எனக் கூறும் பவுல் தனது மடலில் காணப்படும்கருத்துக்களை தனது அனுபவச்சாறாகப் பிழிந்து தருகிறார்.

இயேசுவையும் அவரது போதனைகளையும் தான் ஏற்படுத்தியகொரிந்து சபையில் நிலை நாட்ட பவுல் அடைந்த இடர்பாடுகள்,மனவேதனைகள், உள்ளக்குமுறல்கள், சிந்தியகண்ணீர் அனைத்தையும்இம்மடலில் காணலாம் ( 2:4, 7:5; 6:5 அதி 10, 11, 12).தூய பவுல் மனம் விட்டுப் பேசி இதயத்தில் ஒளிவு மறைவு இன்றிபிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல் இம்மடலில் சொல்கிறார் (3:11-13).தானே ஏற்படுத்திய இத்திருச்சபையின் சகோதரர்களை நன்குஅறிந்த பவுல்தனதுமடலில் பரிவு, பாசம் ஒப்புரவுஉணர்வு, (2:4-10, 3:1-3), அதேநேரத்தில்கடுமை, கண்டிப்பு (7:8, 10:10) முதலியஉணர்வுகளைக்காட்டுகிறார்.

2.பின்னணpஏறத்தாழ கி.பி. 55-56 -இல் மாசிதோனியாவிலிருந்து எழுதப்பட்டகொரிந்தியர் இரண்டாம் மடலில்பவுலுக்குஏற்பட்ட பெருந்துயர்களையும்,இடர்பாடுகளையும் அவர் மீதுசாற்றப்பட்ட களங்கங்கள், குற்றச்சாட்டுகள்முதலியவற்றைக் காணலாம். இம் மடல்தான் இதற்குச் சான்றுகள்தருகின்றன. அவற்றை இங்கு நோக்குவோம்.

2.1. பயணம்கைவிடல் #8220;
என் உயிரின் மேல் ஆணையாகச் சொல்கிறேன். உங்களைவருத்தத்துக்கு உள்ளாக்காமல் இருக்கவேஇதுவரை நான்கொரிந்துக்குவரவில்லை... உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுக்கவிரும்பவில்லை” என எழுதுவது பவுல் தான் திட்டமிட்ட பயணத்தைஒருசில காரணங்களுக்காக கைவிட்டு விட்டார் என்பது புலனாகிறது.கொரிந்து நகரில் திருச்சபையை நிறுவினார் பவுல். அங்கே பலஒழுக்கக் கேடுகள் நிலவியதைக் கேள்விப்பட்டு மடல் ஒன்று வரைந்தார்(கொரி முதல் திருமுகம்) இருப்பினும் நிலமை சரியாகவில்லை.

பல போலிப் போதகர்கள் கொரிந்துக்குள் நுழைந்து பவுலின்அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர் (7:8-9). பவுலை இகழ்ந்து,அவர் ஏமாற்றுபவர், அறிமுகமில்லாதவர் (6:8-10) என அவமதித்தனர்.நாவன்மையில்லை, அறிவற்றவன் என இகழ்ந்தனர் (11:6, 16). பவுல்அறிவித்த இயேசுவைத் தவிர வேறொரு ஆவியையும் பற்றிப் பேசினர்(11:4). இந்தக் குழப்பமான சூழ்நிலையில் கொரிந்து நகருக்குச் சென்றபவுலுக்கு அவமதிப்பும் இகழ்ச்சியும் காத்திருந்தது. சூழ்ச்சிகளும்சந்தேகங்களும்நிறைந்த சூழ்நிலையைக் கண்டார் ( 11:19-20). கிறிஸ்தவசமூகம் அவரை நல்ல முறையில் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே,மறுமுறையும் கொரிந்துக்குப் பயணம் செல்லவிருந்த திட்டத்தைக்கைவிட்டு விட்டார் (1:13-16).

இந்நிலையில் மறுபடியும் வந்து வருத்தத்தைக் கொடுக்க பவுல்அடிகளார் விரும்பவில்லை. அவரிடம் உள்நோக்கம் எதுவுமில்லை(1:17-18). ஒரே நேரத்தில்ஆம் என்றும் இல்லையென்றும் சொல்பவரல்லஅவர். கோழைத்தனம் அறவே இல்லை.பவுல் கொரிந்துக்கு வந்தால் பகையும் குழப்பமும் மேலும் வளரநேரிடும். குழப்பியவர்களுக்கு எதிராகக்கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்(10:2, 10). எனவே, பின்விளைவுகள்ஏற்படலாம் என்ற அச்சம்இருந்ததால்திட்டத்தை கைவிட்டார். எனினும் அவரை கோழை என்றும்,சொன்னவாக்கை நிறைவேற்றாதவர் என்றும் குறை கண்டார்கள்.

2.2. பவுலின்எதிரிகள்
பவுல் ஒரு குற்றவாளியைப் போல கூண்டில் நிறுத்தப்பட்டவராகஇத்திரு மடலில் காட்சியளிக்கிறார். பவுலின் எதிரிகள் கொரிந்துகிறிஸ்தவர்களின் எண்ணங்களை சீரழியவிட்டு கிறிஸ்துவிடம்விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழக்கும் (11:3) அளவுக்குஅவர்களுக்கு மாற்றுப்போதனைதந்தனர்.பவுலுக்கு எதிராக அவதூறு பேசி, மக்களை மயக்கி அவரதுஅதிகாரத்தை அழிக்க முயற்சித்தனர். இவர்கள் யார் என்பதுதிட்டவட்டமாகத் தெரியவில்லை. இவர்கள் யூத இனத்தைச் சேர்ந்தஉருவகப்படுத்தும் ஆவியினர் என்போர் ஒரு சாரார். மற்றோர் சாரார்இவர்களை ஞானவாதிகள் என்றும் கிரேக்க மொழி பேசிய கிரேக்கப்பிரியர்கள்என்றும் கூறுவர்.பவுல் தன் எதிரியை #8220;மாபெரும் திருத்தூதன்” (11:5; 12:11) என்றுஅழைக்கிறார்.

இவர்கள் பணி புரியாமலேயே பணியாளர்கள் எனக்காட்டுகின்றனர். இத்தகையோர் போலித் திருத்தூதர், வஞ்சகவேலையாட்கள், கிறிஸ்துவின் திருத்தூதராக நடிப்பவர்கள் (10:13-15)எனக் கடுமையாகச் சாடுகிறார். இவர்கள்தங்களைஇஸ்ரயேலர் என்றும்எபிரேயர் என்றும் (11:22) மார்தட்டிக் கொள்வார்கள்.இவர்கள் பவுலின் மடல்கள் கடுமையானவை, ஆற்றல்மிக்கவைஎன்றாலும் இவரே பார்க்கச் சகியாதவர், பேச்சுத்திறனற்றவர் (10:10)என்றனர். இவ்வெதிரிகள் கடவுளின் வார்த்தையை மலிவுச்சரக்காக்கியவர்கள் (2:17). இவர்கள் சான்றுக் கடிதங்கள் பெற்றுவந்தவர்கள். ஆனால் பன்னிரு திருத்தூதர்களிடமிருந்தல்ல. பவுலின்இவ்வெதிரிகள் போலிப் போதகர்கள். இவர்கள் பவுல் போதித்தநற்செய்திக்கு எதிராகப் போதித்து பிற இனத்தாரை யூதச்சட்டத்திற்கு உட்படுத்தி கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தைப் பொருளற்றதாகமாற்றியவர்கள் (கலா 2:4; 2 கொரி 11:4). பவுலிடம் நற்சான்றுக் கடிதம்இல்லாததால்இவரதுதூததிகாரத்தின்மீதும், தூதுரையின்மீதும்களங்கம்கற்பித்தனர் (3:1-3). இரு விதமாகப் பேசும் பண்புடையவர் (1:17-18),நேரடியாக வரமுடியாதவர் (1:23), வஞ்சிப்பவர் (7:2); பிறர் மூலமாகஆதாயம் தேடுபவர் (12:17-18) என்று பவுலை குற்றம் சாட்டினர்.

பவுல் காணிக்கைப் பொருளை கொள்ளையடித்திருக்க முடியும்(8:20-21) என்றும் குற்றப்படுத்தியிருக்கலாம். இவர் தன்னைப் பற்றிப்பெருமையாகவும்(3:1; 12:1-17) தனதுஅதிகாரத்தை அதிகமாகக் காட்டியும்(4:5) வந்தார் என்றும் கூறியிருக்கலாம். இவையெல் லாம் பவுலைஅதிகமாகப் புண்படுத்தி யது. உள்ளம் உடைந்து மனம் நொந்துஇத்திருமடலில் தனது உணர்வுகளையும் கவலைகளையும்கடுமைகளையும் கொட்டி வைக்கிறார்.

2.3. உறவுபழுதானநிலை
பவுலுக்கு எதிராகப் பொய் பிரச்சாரங்கள் செய்து அவரது நல்லமனதுக்குக் களங்கம் கற்பித்தனர் அவரது எதிரிகள். கொரிந்து நகரமக்கள்இந்தக் கபடப் பிரச்சாரத்திற்குப் பலியானார்கள். உண்மைதெரிந்தஒரு சிலரும் அதை எதிர்க்க இயலாமல் கைகட்டி நின்றனர். பவுலைஇழிவாகப் பேசினர், அவமதித்தனர், அவரது அதிகாரத்தை எதிர்த்தனர்,போதனைகளைத் தாக்கினர். பவுலுக்கும் கொரிந்து நகரகிறிஸ்தவர்களுக்கும் உறவில் இடைவெளி ஏற்பட்டது. இதனால்பவுலின்மனம் புண்பட்டது. ஆழ்ந்த அதிர்ச்சிக்கும், மனக்கலக்கத்திற்கும்உள்ளானார்.முதல் திருமுகம் எழுதுகின்ற பொழுது பல குழப்பச் சூழ்நிலைகள்இருந்தாலும் பவுலிடம் தந்தைக்குரிய கட்டுப்பாடும் மக்களிடம்பிள்ளைகளுக்குரிய பணிவும் இருந்தது. ஆனால், இப்போது அவ்வுறவுபாழ்பட்டு விட்டது.இந்த நிலை அச்சமாக மாறுகிறது. ஒருமுறை ஏற்பட்ட அவமதிப்புமறுபடியும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சுகிறார். #8220;நான் அங்கேவரும்போது நான் காண விரும்பும் நிலையில் நீங்கள் இருப்பீர்களோஎன்னவோ.. நான் மீண்டும் உங்களிடம் வரும்போது என் கடவுள்உங்கள்முன்என்னைத் தலைகுனியச் செய்வாரோ என்னவோ!” (12:20-21) என்று அழுது கூறும் இவர் நிலை, உறவு எந்த அளவுக்குத் தாழ்ந்தநிலையில் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

2.4. தீத்துவின் தூதால் உறவு மலர்ந்த நிலை
வீழ்ந்து பாழ்பட்டுப் போனஉறவைத் தூக்கி எழுப்ப பவுல் பலமுறைமடல்கள் வரைந்தார். இத்திருமுகத்திலிருந்தே நாம் அவைகளை அறியவருகிறோம் (2:3, 4, 9; 7:8, 12). வேதனையோடும் உடைந்தஉள்ளத்தோடும் வரையும் இம்மடலில் #8220;நீங்கள் எப்போதும் எனக்குக்கீழ்படிகிறீர்களா?” (2:9) எனச் சோதித்து அறிய அம்மடலை எழுதினேன்என்கிறார்.நேரில் இரண்டாம் முறையாகச் சென்று உறவை வலுப்படுத்தஎடுத்த முயற்சி வீணானது. மாறாக, உறவில் முறிவு ஏற்பட்டது. இவர்இரண்டாம் முறையாகச் சென்றதற்கு 12:14; 13:1 சான்று பகர்கின்றன.மறுபடியும் நேரில் செல்வதை விடுத்து தீத்துவை தூதனுப்புகிறார்.அவரிடம் தனது மடலையும் கொடுத்தனுப்புகிறார். தீத்துவுக்குபிரச்சனைகளை ஆய்ந்தறிந்து அவைகளுக்குத் தீர்வு அளிக்கக் கூடியஆற்றல்இருந்திருக்க வேண்டும். பவுல்இவரை இருமுறை கொரிந்துக்குஅனுப்பி இருக்கலாம் (2:1-3; 6: 13-15). தீத்து கொரிந்துக்குச் சென்றுநிலைமைகளைஆராய்ந்துபவுலுக்குசார்பாக செயல்படத் தொடங்கினார்.அதில் வெற்றியும் கண்டார். தூது சென்று திரும்பிய தீத்துவின் வரவால்பவுல் ஆறுதல் அடைந்தார் (7:6-7). மேலும் மகிழ்ச்சியடைந்தார் (7:13).தீயவனொருவன்மனந்திரும்பியது மட்டற்ற மகிழ்ச்சி தந்தது.மீண்டும் ஒரு முறை தீத்துவும் சகோதரர்களும் கொரிந்துக்குஅனுப்பப்படுகிறார்கள் ( 8:17-23). இம்முறை அவர்கள்சென்றதுஎருசலேம் சபைக் கிறிஸ்தவர்களுக்கு உதவுமாறு காணிக்கைஎடுப்பதற்காக.

3. திருமுகத்தின்அமைப்பு#8220;
வேதனை மடல்” என்று கூறப்படும் கொரிந்தியருக்கு எழுதியஇரண்டாம் திருமுகம் பவுலின் சொந்த உணர்ச்சிகளைவெளிப்படுத்துகிறது. எனவே அதன் பொருளடக்கம் பற்றித் தெளிவானதிட்டம் அமைப்பது கடினம். எனினும் திருமுகத்தில் காணப்படும்குறிப்புக்களைஆதாரமாகக் கொண்டுபவுலின்முக்கியகுறிக்கோள்களைஅறிய வருகிறோம். கொரிந்தில் கொந்தளித்த குழப்பச் சூழ்நிலையால்மடல் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள திருச்சபையில் தனது தூதுவஅதிகாரத்தை மீண்டும் நிலைநாட்ட முயற்சிக்கிறார். கொரிந்துகிறிஸ்தவர்களின் நம்பிக்கையை, நன்மதிப்பை தீத்து வழியாக பெற்றுவிட்டதால் நன்றியுணர்வோடும் தனது வேதனையோடும் எழுதுவதைக்காணலாம்.

இந்த நோக்கத்தின் அடிப்படையில் இத்திருமுகத்தை மூன்றுபகுதிகளாகப் பிரிக்கலாம்.

1. முன்னுரை: வாழ்த்தும் ஆசீரும் (1:1-11)
2.பவுல்தனதுசெயல்கள்நியாயமானவைஎன்பதைக்காட்டுகிறார் (1:12-7:16)

2.1. பயணத் திட்டத்தைக் கைவிடல் பற்றி விளக்கம் (1:12-2:13)
2.2. தனது தூதுரைப் பணியை நிலைநாட்டுதல் (2:14-7;4).

1) தூதுப்பணி, கொள்கை, செயல்பாடு (2:14-7:4)
2) புதிய உடன்படிக்கைத் தூதுவரின்சிறப்பு (3:7-4:6)
3) துன்பமும் நம்பிக்கையும் (4:7-5:10)
4) இறைத் தூதுவர் இறைவனின் ஊழியன் (5:11-6:10)
5) கொரிந்தியரோடு உறவு (6:11-7:16).

3. எருசலேம் திருச்சபைக்கு நன்கொடை திரட்டுதல்

3.1. நன்கொடைக்காகவும் - அதைப்பெற அனுப்பப்பட்டவர்களுக்காகவும் பரிந்துரை (8: 1-9:5).
3.2. நன்கொடைக்குச் சன்மானம் (9: 6-15).

4. பவுல்தன்னைப்பற்றிகாப்புரை தருதல்(10:1-13:10)

4.1.. முழுக் கீழ்படிதலைக் கோருதல் (10:1-18)
4.2. தன்னைப்பற்றிப் புகழல் (11:1-12:13)
4.3. தான் வரப்போவதைப் பற்றி எச்சரிக்கிறார் (12:14-13:10)

5. முடிவுரை: வாழ்த்தும் ஆசீரும் (13:11-13)

4. திருமுகத்தின் செய்தி
4.1. பவுலின்தூதுரைப் பணி பவுல் புதிய உடன்படிக்கையின் பணியாளர் (3:6)இவ்வுடன்படிக்கைஎழுதப்பட்டசட்டத்தைச் சார்ந்ததன்று, தூயஆவியைச்சார்ந்தது. இதனால் விளைவது வாழ்வு (3:6) என்று கூறுகிறார்.நற்சான்று பெறாமலே கடவுளிடமிருந்து இத்தூதுவர் தனக்குத் தகுதிவருவதாக தெளிவுப்படுத்து கிறார் (3:5). எனவே நற்சான்றுக் கடிதங்கள்தேவையில்லைஎனமொழிகிறார். கிறிஸ்துவில்இறைவன்உருவாக்கித்தந்த புதிய உடன்படிக்கையின் பணியாளராகவும் உதவியாளராகவும்பவுல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்.

புதிய உடன்படிக்கையின் பணியாளரான பவுல் புதியஉடன்படிக்கைக்கும்பழையஉடன்படிக்கைக்கும்உள்ளவேறுபாடுகளைத்தருகிறார். பின்பு புதிய உடன்படிக்கையின் மேன்மையையும்அவ்வுடன்படிக்கையின் பணியாளர்களின் சிறப்பையும்எடுத்துரைக்கின்றார்.

 

பழையஉடன்படிக்கை புதிய உடன்படிக்கை
சட்டத்தை சார்ந்தது ஆவியைச் சார்ந்தது
கற்களில்பொறிக்கப்பட்டது இதயத்தில் பொறிக்கப்பட்டது(எரே 31:41-34)
சாவைவிளைவிப்பதாயிருந்தது வாழ்வை விளைவிக்கிறது
மாட்சியுடன்அருளப்பட்டது இம்மாட்சிக்கு ஒப்புவமைஇல்லை (3:10)
மறைவதாயிருந்தது நிலையாயிருப்பது (3:11)
தண்டனைத் தீர்ப்பு அளிக்கிறது விடுதலைத் தீர்ப்பு அளிக்கிறது
இதன்பணியாளர் மோசே இதைநிறைவேற்றுபவர் இயேசு
முக்காடுஉளது(3:14) முக்காடு அகற்றப்பட்டது (3:14)
மாட்சி மறைக்கப்படுகிறது மாட்சி வெளிப்படுகிறது.

இவ்வாறு வேறுபாடுகளைத் தந்து புதிய உடன்படிக்கையின்மேன்மையைக் காட்டுகிறார் பவுல். பவுலின் எண்ணப்படி பழையஉடன்படிக்கை கற்பலகைகளில் மோசேக்கு எழுத்து வடிவமாகக்கொடுக்கப்பட்டது. பல கட்டளைகள் அடங்கி இருந்தும் அவற்றைக்கடைபிடிக்க அவை உதவி தரவில்லை. மாறாக சட்டம்வெளிப்படுத்தப்பட்டபிறகுதான் மனிதர் தன் பாவநிலையை உணர்ந்துகொண்டார். திருச்சட்டம் தரப்படுமுன்உலகில்பாவம் இருந்தது. ஆனால்சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை.

பாவ உணர்வைக் கொடுத்த சட்டத்திற்கு, பாவ நிலையிலிருந்துவிடுதலைப்பெறும் ஆற்றல் அளிக்க முடியவில்லை. மாறாக பாவஇச்சைகள்நம்முடையஉறுப்புகளில்செயலாற்றின. அதனால்விளைந்தபயன் சாவு (உரோ 7:5) என்று தெளிவாக விளக்குகிறார். புதியஉடன்படிக்கை பற்றி எரேமியா (31:31-34) இறைவாக்குரைக்கிறார்(காண். லூக் 22:20; 1 கொரி 11:25; எபி 9:9; 9:15), அவர் கூறும் புதியஉடன்படிக்கைபோல் இராது. #8220;என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில்பதிப்பேன்; அதை அவர்களதுஇதயத்தில்எழுதிவைப்பேன்” (31:33 காண்எசே 36:26-27; 11:19) இறைவன் தனது ஆவியை உங்களுள்புகுத்துவதால் இவையெல்லாம் நிகழ்கின்றன.

இஸ்ரயேல் மக்களோடு மோசே வழியாக இறைவன் செய்துகொண்ட உடன்படிக்கையை (இச 19:18-19) காண்கிறோம். மேலும்திருச்சட்டம் பலகைகளைப் பெற்ற மோசே முகத்தில் ஒளி வீசியது (விப 34:29-35). ஆனால் இச்சட்டங்களும் இதன் வழியாக வருகின்றதிருப்பணியும் இஸ்ரயேல் மக்களுக்கு வழிகாட்டியதேயொழியவாழ்வளிக்க முடியவில்லை. சாவைவிளைவித்தது(உரோ 7:9-10; கலா3:21). இவ்வாறு கூறுவதால் பவுல் சட்டங்களில் குறை காண்கிறார்என்றில்லை (உரோ 7:12,14). மாறாக தனது சொந்த அனுபவத்தில்சட்டங்கள்வாழ்வளிக்கும்ஆற்றலைக் கொண்டிருக்கவில்லைஎன்பதைஅறிகிறார்.

4.2. புதிய உடன்படிக்கையின்பணியாளர் (அதி 3-7)
புனித பவுல் இப்பகுதியில் தன்னை #8220;புதிய உடன்படிக்கையின்பணியாளர்” என்பதை வலுயுறுத்துகிறார். புதிய உடன்படிக்கைபணியாளர்களின்சிறப்பு மூன்று கோணங்களில் பார்க்கப்படுகிறது.

1) இத்திருப்பணி வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது (வச 6). தீர்ப்புஅளிப்பதல்ல மாறாக விடுதலைத் தீர்ப்பு ஒப்புரவாக்கும்இத்திருப்பணியால் அளிக்கிறது (வச 9). ஒருவர் கிறிஸ்துவோடுஇணைந்திருக்கும்போதுஅவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய்இருக்கிறார்(5:16-21).

2) சட்டத்தின் மாட்சியும் சட்டப்பணியாளர் மோசேயின் மாட்சியும்காலத்தால் மங்கி மறைந்துப்போனது. இவ்வாறு கூறுவதால் சட்டத்தில்நிலையற்ற தன்மை நற்செய்தியின் நிலையான தன்மைக்கு வழிவகுக்கிறது (வசனங்கள் 10,11). இனிமேல் இம்மாட்சிமையைக்கிறிஸ்துவில் ( 2 கொரி 4:6 தீத் 2:13) காணமுடிகிறது (காண்யோ 1:17;எபி 8).

3) மோசே முகத்தில்முக்காடிட்டிருந்தார் (விப 34:33). இந்தத் திரைபவுலின் கூற்றுப்படி வரலாற்று நிகழ்ச்சி மட்டுமல்ல மாறாக, இன்றும்பழைய ஏற்பாட்டை வாசிக்கும் மக்களுக்கு உண்மையை மறைத்துக்கொண்டிருக்கிறது.சட்டமும் இறைவாக்குகளும் இறுதி வெளிப்பாடுகளல்ல. அவைகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தயாரிப்புக்களாகும் (கலா 3:24).கிறிஸ்துவை அறிவித்து அவரே ஆண்டவர் என இப்பணியாளர்கள் பறைசாற்றுகின்றனர்.தன்னை கிறிஸ்துவின் பணியாளன் என்பதற்கு #8220;நற்சான்றுக்கடிதம் நீங்களே. அது வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது.அதுவும் இதயமாகியபலகையில்(3:3) எனும்போதுபவுல்தனதுஉண்மைநிலையைஅப்பட்டமாகக் காட்டிவிளக்குகிறார். இங்குகடவுள், கிறிஸ்து,ஆவி இணைந்து செயல்படுவதைக் காண்கிறோம். #8220;ஆண்டவரின்ஆவியார் இருக்கும்இடத்தில்விடுதலைஉண்டு” (3:17) எனும்போதுதான்பெற்ற 'விடுதலையின் கிறிஸ்து' அவரை ஆட்கொண்ட (திப 9)அனுபவத்தைத் தருகிறார்.

5. நன்கொடை திரட்டுதல் (8:9)

5.1. திருச்சபையில்நன்கொடை
தொடக்கத்திருச்சபையில் ஏழைகளை மறவாது அவர்களுக்குஉதவும் (கலா 2:10) பணிஒப்பற்றதாகக் கருதப்பட்டது. திருத்தூதுவர்நற்செய்திப் பயணம் மேற்கொண்ட நாடுகளிலெல்லாம் ஏழைகளுக்குநன்கொடை திரட்டும் பணியிலும் தனது உள்ளமொன்றி ஆர்வத்தைக்காட்டினர். கி.பி. 47ஃ48இல்யூதேயாவைக் கடும் பஞ்சம் ஒன்றுதாக்கியது.அப்போது அந்தியோக்கிய கிறிஸ்தவர்கள் நன்கொடை திரட்டி பர்னபாபவுல்வழியாக யூதேயா சகோதரர்களுக்குஅனுப்பினர் (திப 11:27-30-30;12:25). பல ஆண்டுகளுக்குப் பிறகு பவுல் தனது மூன்றாவது தூதுரைப்பயணத்தின்போது கிறிஸ்தவர்கள் அன்புடன்அருளிய நன்கொடையைஎருசலேமுக்குக் கொண்டுசென்றார் (திப 24:17). இத்திருப்பணியில்பவுல்தீவிர ஆர்வம் காட்டினார் (கலா 2:10 காண்1 கொரி 1-4; உரோ 15:25-28).

5.2. நன்கொடைக்குவேறுபெயர்கள்
நன்கொடை திரட்டல் பணி ஆதித்திருச்சபையில் அற்புதவரவேற்பைப் பெற்றிருந்தது. பொருளுதவி(எரே 15:26, 31) நன்கொடை(1 கொரி 16:2), அறப்பணிதிருத்தொண்டு (9:12) (2 கொரி 9:6, 7; 9:1)என்றெல்லாம் பெயரிட்டழைத்தனர்.

5.3. பவுலால் நிதி திரட்டும் பணிநிறைவேறுதல்ஏழைகளுக்குப் பணம் திரட்டும் திட்டத்தை பவுல் கலாத்தியசபையில் துவக்கியவாறே கொரிந்து நகரிலும் துவக்கி வைத்தார். பணம்வசூல் செய்ய வேண்டிய விதிமுறைகளைக் காட்டி தானேஅத்திட்டத்தைமுடித்து வைக்க விரும்பினார் (1 கொரி 16: 1-3). இதற்கிடையில் பவுல்சென்றபோது கொரிந்தில் அவருக்கு அவமதிப்புக் கிடைத்ததால் தீத்துவழியாக வேதனையோடுமடல்வரைந்துகொரிந்துக்குஅனுப்புகிறார். நிதிதிரட்டும்வேலையும்அவரிடம்ஒப்படைக்கப்பட்டது. ஆனால்நிதிசரியாகத்திரட்ட முடியவில்லை. எனவே, மறுபடியும் தீத்துவோடு இருசகோதரர்களையனுப்பி நன்கொடை திரட்டும் பணியை நடத்தி முடிக்கக்கேட்டுக் கொண்டார். இறுதியாக பவுலே கொரிந்து நகருக்குச் சென்றுநன்கொடை சேர்க்கும் பணியை முடித்து, தொகையை எருசலேமுக்குக்கொண்டு போனார் (காண்திப 20:35; உரோ 15:26).

5.4. நன்கொடைபற்றியஅறிவுரை

1) வறுமையிலும் வள்ளன்மையைக் காட்டுதல் (8:2)
2) தங்கள் இயல்புக்கு அதிகமாகவே கொடுத்தார்கள் (8:3)
3) அறப்பணியில் பங்கு கிடைக்க வேண்டுமெனவருந்தி கேட்டுக்கொண்டார்கள் ( 8:4).
4) நன்கொடை மனமுவந்தளிப்பது. கட்டளையோ கட்டாயமோ அல்ல(8:4).
5) நன்கொடை ஓர் அறப்பணி. அது பயனளிக்கும் (8:10)
6) ஆர்வத்தோடும் நிலைக்கேற்றவாறு கொடுத்தலும் இறைவனுக்குஏற்புடைய செயலாகும் (8:12)
7) நன்கொடை சமநிலையளிக்கும். பாகுபாடு அகலும் (8:13)
8) நன்கொடை திரட்டுகையில் நாணயம் தேவை. எவரும் குறைகூறாவண்ணம் நடக்க வேண்டும். கடவுள் முன்னும் மனிதர்முன்னும் கண்ணியம் வேண்டும் (8:20,21).
9) முகமலர்ச்சியோடு கொடுப்பவர், கடவுளின்அன்புக்குரியவர் (9:7)முகவாட்டத்தோடு கொடுக்க வேண்டாம்.
10) கடவுள் அவர்களை எல்லா நலன்களாலும் நிரப்புவார் (9:8)நற்செயல்கள் செய்ய இன்னும் மிகுதியாகத் தருவார்.
11) வாரி வழங்குபவரின்நீதி என்றென்றும் நிலைத்திருக்கும் (9:9).
12) தாரளமுள்ள நற்பண்பு பலரது தேவைகளை நிறைவு செய்யும்.இதன் வழியாக இறைவனுக்குப் பலர் நன்றி செலுத்துவர் (9:11).
13) வள்ளன்மை நற்செய்திக்குக் கீழ்படிதலாகும் (9:11)
14) இதனால் உறவு வளரும், நன்றியும் புகழ்ச்சியும் பெருகும் (9:14).காணிக்கை எடுத்தலைப் பற்றி அரிய காரியங்களை எழுதும்பவுல் அடிகளார் உதவும் செயல் கிறிஸ்தவ ஒற்றுமைக்கும்,பிளவுகள் வேறுபாடுகளைக் கடந்து கிறிஸ்தவ ஒன்றிப்புக்குவழிகோலுகிறதையும் காட்டுகிறார். யூத பிற இனக் கிறிஸ்தவர்கள்என்ற பிரிவினைமறைகிறது. யூத கிறிஸ்தவர்கள் மீதுகொண்டிருந்த பற்றையும் அபிமானத்தையும், மரியாதையையும் பிறஇனக்கிறிஸ்தவர்கள் கொடுக்கும் காணிக்கை வெளிப்படுத்தியது.

6. கண்டிப்பும் அன்பும்
6.1.பணியில்கீழ்ப்படிதலைக் கோருதல்

திருத்தூதுவர்களின் ஆற்றலும் வலிமையும் அதிகாரமும்கடவுளிடமிருந்து வருகிறது. #8220;மனித எண்ணங்கள் அனைத்தும்கிறிஸ்துவின்கட்டுப்பாட்டுக்குள்வருமாறுகட்டாயப்படுத்துகிறோம்” (10:5).கீழ்ப்படியாதவர்க ளுக்குத் தண்டனைகொடுக்கவும் தயாராயிருக்கிறோம்(10:6) என்கிறார் பவுல். கொரிந்தியரிடமிருந்து எதிர்ப்பில்லா கீழ்படிதலைஎதிர்பார்க்கிறார். கிறிஸ்துவின் பெயரால் தான்பெற்றுக்கொண்டஅதிகாரம் எல்லோரின் வளர்ச்சிக்காவே (10:8, 13:10) என்று கூறுகிறார்.

6.2. மனவேதனையில்பவுலிடம் சுரக்கும் அன்பு
தீத்து வழியாகக் கொரிந்தியர்கள் பவுலிடம் தங்களது மதிப்பைமீண்டும் காட்டினார்கள். பவுல் மீது வைத்திருந்த தவறான எண்ணம்அகன்றதால் துணிவோடு மனவேதனையிலும் #8220;உங்கள் மீதுகொண்டுள்ள மிகுந்த அன்பை நீங்கள் உணர வேண்டுமஎன்பதற்காகவே அவ்வாறு எழுதினேன்” (2:4) என்கிறார்.#8220;கொரிந்தியர்கள் மன்னித்த ஒழுக்கக்கேடான ஒருவரைத் தானும்மன்னித்து விட்டேன்” எனும்போது (2:10) கொரிந்தியர்களோடு தானும்ஒருவராகிவிடுகிறார்.கடவுள் கொரிந்தியக் கிறிஸ்தவர் மீது கொண்டுள்ள அதேஅன்பார்வத்தை பவுலும் காட்டுகிறார். கிறிஸ்து என்னும்மணமகன்முன்கற்புள்ள கன்னியாக நிறுத்த தான்கொண்டுள்ளஆவலை வெளிப்படுத்துகிறார் (11:2,3).பவுல் அவர்களுக்காகத் தன்னையும் தனக்குள்ளவற்றையும்அளித்திட தயாராக உள்ளார். இவ்வாறு தனது குறைவுபடாஅன்பை எடுத்துரைக்கும் பவுல்அவர்களதுபிரதிஅன்புக்காக ஏங்கிநிற்பதும் நியாயமே.

7. முடிவுரை
நன்றியுணர்வும் வேதனையும் நிறைந்த இம்மடலில் பவுல் தனதுஉணர்வுகள் வழியாகத் தனது இறைப்பற்றையும், நற்செய்தியைஎடுத்தியம்ப தான் ஏற்ற விழுப்புண்களையும் தூதுவராயிருந்தும்யாருக்கும் சுமையாக இராமல் தூது அறிவித்த ஒப்பற்ற செயலையும்எடுத்துக் கூறுகிறார். மனவேதனையிலும், குழப்பத்திலும் இவரிடம்கொரிந்தியர் மீது சுரக்கும் அன்புக்குக் குறைவில்லை. அதே நேரத்தில்கண்டிப்பும் கணிசமாகவே உளது. பல சூழல்களில் கிறிஸ்தவர் எப்படிநடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைநாம் இம்மடலில் காணலாம்.

------------------------------------------
--------------------------
----------------
------
--