திருத்தூதர் பணிகள்

அருட்திரு வ. மரியதாசன்,கோட்டாறு
முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர் திண்டிவனம்

விவிலிய அன்பர்களே,

புதிய ஏற்பாட்டு நூல்களுள்தனிச்சிறப்பு வாய்ந்ததும் வரலாற்றுத்தன்மை போன்ற தோற்றம்கொண்டதுமான நூல் திருத்தூதர்பணிகள் நூலாகும். ஆண்டவர்இயேசுகிறிஸ்துவின்விண்ணேற்புக்குப் பிறகு தொடக்ககாலத் திருச்சபைசந்தித்தப் பிரச்சனைகள், நற்செய்தி அறிவித்த முறைகள், நற்செய்திஅறிவிப்பால்விளைந்தபயன்கள், நற்செய்திசென்றடைந்த நபர்கள், இடங்கள்ஆகியவைக்குறித்து இந்நூல்விளக்கமாகப் பேசுகின்றது. வளரும்திருச்சபைசவால்களை வென்றது எப்படி என்பதை இந்நூல் தெளிவுற விளக்குகிறது.

கலிலேயாவிலிருந்து எருசலேமை நோக்கி இயேசுவின் பயணத்தை தமதுநற்செய்தி நூலில் எடுத்துக் கூறிய புனித லூக்கா, இந்நூலில்எருசலேமிலிருந்து உலகின் கடைஎல்லையான உரோமைக்கு நற்செய்தி எப்படிபரவிற்றுஎன்பதை அழகுடன்விளக்குகிறார். காலத்தையும் சூழலையும்அரசியல் பின்னணிகளையும் தூய ஆவியாரின் துணைகொண்டுபுரிந்துஇறையாட்சியின் விழுமியங்களுக்கு சான்றுபகர்வது எப்படி? என்று இந்நூல்நமக்கு பாடம் கற்றுத் தருகின்றது. இந்நூலைப் படித்தும் இந்நூலின்விளக்கங்களை ஆய்ந்தறிந்தும் சிந்திக்கும்ஒருவர், தமது வாழ்வில் நற்செய்திஅறிவிப்புப் பணிக்கு முதன்மை முதலிடத்தை கொடுப்பார் என்பது திண்ணம்.

நன்றி.

இறைவார்த்தைப்பணியில்
அருள்திரு முனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்

 

பொருளடக்கம்:
1. திருத்தூதர் பணிகள்: நூல் அறிமுகம்
2. முக்கியக் கருத்தோட்டங்கள்
3. தூய ஆவியின்வருகை (திப 2)
4. எருசலேமின் இளந்திருச்சபை (திப 3-5)
5. இளந்திருச்சபையில் திருத்தொண்டர் (திப 6-7)
6. சமாரியாவில் திருச்சபை (திப 8)
7. புனித பவுலின்வழியாய்த் திருச்சபை பரவுதல்
8. எருசலேம் திருச்சங்கம் (திப 15)
9. ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு (திப 15 - 18)
10 . எபேசு நகரில் பணி(திப 19)
11. எருசலேமில் பவுல் (திப 21-26)
12. புனித பவுலின் பயணப்பாதை (திப 27-28)

1. திருத்தூதர் பணிகள்: நூல் அறிமுகம்

ஒரு நூலைச் சுவைத்துப் படிக்க வேண்டுமாயின்அதன்ஆசிரியர்,எழுதப்பட்ட சூழ்நிலை போன்றவைகளை அறிதல் வேண்டும். அதேபோன்று'திருத்தூதர் பணிகள்' என்னும்நூலைப் படித்துச் சுவைக்கஅதன்ஆசிரியர், எழுதப்பட்ட காலம், இடம் போன்றவைகளை அறிதல்வேண்டும்.

1. 1. தலைப்பு
ஆசிரியர் தம் நூலுக்கு "பிராக்செய்ஸ்” என்று தலைப்புகொடுத்துள்ளார். தமிழில் அதை மொழிபெயர்க்கும்போது "திருத்தூதர்பணிகள்” என்று அழைக்கின்றோம்.கிரேக்க நாட்டிலே வாழ்ந்த பெரும் வீரர்கள், அரசர்களின்வீரதீரச்செயல்களை எல்லாம் எழுதுவது அன்றைய வழக்கமாகஇருந்தது. உதாரணமாக, மாபெரும் அலெக்சாண்டர் போன்றோரின்தீரச்செயல்கள்எல்லாம் தொகுக்கப்பட்டு'ஞசயஒநளை' என்றுஅழைக்கப்பட்டது.அதே பாணியில் ஆசிரியரும் தனது நூலுக்குத் தலைப்பு அளித்துள்ளார்.அவருடைய நூலின் காவியத் தலைவர்களாக பேதுருவும் பவுலும்இருக்கிறார்கள். இதனால்இந்நூலை'திருத்தூதர்களின்பணிகள்' என்றுஅழைக்கலாமா என்றகேள்விஎழுகின்றது. ஏனென்றால்அழைக்கப்பட்டஎல்லா திருத்தூதர்களின் பணி பற்றி இந்நூலில் நாம் காண்பதுகிடையாது. ஆகவே பன்னிரு திருத்தூர்களின் பணியையெல்லாம்இந்நூலில் தேடலாகாது.

1.2. ஆசிரியர்
கி.பி. 180 ஆம் ஆண்டில், நமக்குக் கிடைத்த திருச்சபையின்மரபின்படி 'திருத்தூதர் பணிகள்' என்ற நூலை எழுதியவர் லூக்கா எனஅறிகிறோம். இவர் கிரேக்கர்; அந்தியோக்கியா என்னும்நகரில்பிறந்தவர்.இவர் ஒரு மருத்துவர். பவுலுடன் பணிபுரிந்தவர். இவர் திருமணம்ஆகாதவர். ஓவியர் என்றும்கூறுவர். தனது84-வதுவயதில்பொயச்சியாஎன்ற இடத்திலே இறந்தார் என்றும் மரபு கூறுகிறது.இளந்திருச்சபைக் காலத்தில் வாழ்ந்து வந்த இரேனியுஸ்,எரோணிமுசு போன்றவர்கள் புனித லூக்கா என்பவர்தான் மூன்றாவதுநற்செய்தியையும், திருத்தூதர் பணிகள்என்றநூலையும்எழுதியவர் என்றுசான்றுபகர்கின்றனர்.

அகச்சான்று
1) எல்லாவற்றிற்கும்மேலாக, லூக்காவின்வார்த்தையில்இருந்தேஅவர்தான் திருத்தூதர் பணிகள் என்ற நூலை எழுதி இருக்க வேண்டும்என்பதை அறிந்து கொள்ளலாம். இந்நூலின் முன்னுரையிலேபின்வருமாறு எழுதுகிறார்; 'தெயோபில் அவர்களே ... யாவற்றையும்குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.' அப்படி என்றால்முதல்பகுதி லூக்காவின் நற்செய்தி என்றும் அவர் எழுதும் இரண்டாம்பகுதிதான்திருத்தூதர் பணிகள்என்றும்நாம் பொருள் கொள்ள வேண்டும்.

2) திருத்தூதர் பணிகள் என்றநூலின் சில பகுதிகளில் 'நாங்கள்'என்று ஆசிரியர் எழுதுவதைக்காண்கிறோம் (16:10-15; 20; 5; 21:18;27:1-28, 16). அந்த 'நாங்கள்' என்பதுயாரைக் குறிப்பிடுகின்றது? அறிஞர்கள்இந்த 'நாங்கள்' என்பது புனித பவுலையும், லூக்காவையுமே குறிக்கும்எனக் கருதுகின்றனர். ஏனெனில்லூக்கா, பவுலின் பயணங்களில் அவருக்குத் துணையாகச் சென்று பணிசெய்திருக்கிறார். பவுலோடு சிறைவாசம் கூட அனுபவித்திருக்கிறார். இந்த'நாங்கள்' பகுதியில் நாம் காணும்நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரில் பார்த்துத் தாமும் அனுபவித்ததுபோல்எழுதப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். எனவே, இந்நூலைஎழுதியவர்நற்செய்தி நூலை எழுதிய புனித லூக்காத்தான் என்பது தெளிவாகிறது.

1.3. காலமும் இடமும்
லூக்கா தமது நூலை கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் அதாவது கி.பி. 80-க்கும் 90க்கும் இடைப்பட்ட காலத்தில்எழுதியிருக்க வேண்டும் என்று விவிலிய அறிஞர்கள் ஒரு மனதாகஎண்ணுகிறார்கள்; இந்நூல் கிரேக்க நாட்டிலுள்ள அகாயா என்றஇடத்திலிருந்து எழுதப்பட்டது.

1.4. எழுதப்பட்டதன் நோக்கங்கள்
1) நற்செய்தி அறிவிக்க:
இந்நூலை லூக்கா கிறிஸ்துவின்நற்செய்தியை அறிவிக்கவே எழுதியுள்ளார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. தமது நற்செய்தியில் காட்டிய இயேசுவையே இந்நூலிலும்காட்ட முயல்கின்றார் லூக்கா. தமது நற்செய்தி நூலில் கிறிஸ்துவின்பிறப்பிலிருந்து உயிர்ப்புவரை அவரின் சாதனைகளையும்,போதனைகளையும் எடுத்துரைக்கின்றார். நற்செய்தி நூலை முதல் பகுதிஎன்றுஅழைக்கிறார், தனதுஇரண்டாம் பகுதியாகிய திருத்தூதர் பணிகள்என்ற நூலில்கிறிஸ்துவிண்ணுக்குச் சென்ற பின்னும் அவர் தொடர்ந்துசெய்து வரும் செயல்களைப் பற்றியே எழுதுகின்றார். எனவேதான்இந்நூலை "உயிர்த்த இயேசுவின் அருஞ்செயல்கள்” அல்லது#8220;திருச்சபையில் தூய ஆவியின் வழியாக உயிர்த்த கிறிஸ்து ஆற்றும்செயல்கள்” என்றும் அழைக்கலாம்.

2) இறை வார்த்தை பரவுதலைக்காட்ட:
கிறிஸ்துவின்நற்செய்தி எவ்வாறு படிப்படியாக எருசலேம் தொடங்கி உலகின் கடைஎல்லைவரை (உரோமைவரை) பரவிச் செல்கின்றதுஎன்பதை அழகாகக்காட்டுகிறார். இதுவே இவரின்முக்கிய நோக்கமாக இருக்கலாம் என்பதுதிப 1:8-ஆம் வசனத்தால் தெரிகிறது.

1.5. யாருக்காக எழுதப்பட்டது?
லூக்கா, திருத்தூதர் பணிகளின் துவக்கத்தில் 'தெயோபில்' என்றதனி நபரைக் குறிப்பிட்டாலும் அந்த ஒரு தனி நபருக்காக மட்டும்எழுதவில்லை; மாறாக திருச்சபைக்காக, உலகம் அனைத்திற்காகஎழுதியுள்ளார்.

1.6. விரிவான அமைப்பு

முன்னுரை: விண்ணேற்றம் (1 : 1-11)

1)புனித பேதுருவின் பணி(1 : 12-12 : 25)

அ.)எருசலேமில் திருச்சபை (1 : 12-5: 42)
ஆ)திருச்சபை பரவுதல் (6-12)

2) புனித பவுலின் பணி(13-28)

அ) பவுல், பர்னபாவின்மறைபரப்புப் பணி;எருசலேம் திருச்சங்கம் (13 : 1-15 : 35)
ஆ) பவுலின்தூதுரைப் பயணங்கள் (15 : 36-19 : 20)
இ) பவுல் கைதானதும், உரோமை வரை திருச்சபை பரவுதலும்(19 : 21; 28 : 30).

2. முக்கியக் கருத்தோட்டங்கள்

2.1. திருத்தூதர் பணிகள்என்ற ஏட்டில்பன்னிருதிருத்தூதர்களின்பணிபற்றிக் காணோம். மாறாக பேதுருவும், பவுலும் திருச்சபையின்இரு தூண்களாகக் காட்சியளிக்கின்றனர். பேதுரு பற்றி நூலின் முதல்பாகமும் (1-12) பவுலைப் பற்றிச் சிறப்பாக நூலின் இரண்டாம் பாகமும்(13-28) கூறுகின்றன. இருவரும் வாழ்விலும் தாழ்விலும், பணியிலும்துன்பத்திலும் ஒன்றுபட்டுள்ளனர். சில சான்றுகள்.

- பேதுருவைப் போலவே பவுலும் தூதுரை அறிவிக்கிறார்(2 : 14- 38 ரூயஅp; 13 : 15-17).
- பேதுரு அருங்குறி ஆற்றுகிறார் (2 : 43; 3 : 12) கால் ஊணமுற்றவரைக்குணமாக்கவும் செய்கிறார் (3 : 1-10); பவுலும் வியத்தகு செயல்கள்செய்கிறார் (14 : 3).
- பேதுரு போலவே; பவுலும் செபிக்க கோயிலுக்குச் செல்கிறார்(3:1ரூயஅp;22 : 17).
- இருவரும் ஆவியால் நிரப்பப்படுகின்றனர் (4 : 8; ரூயஅp; 13 : 9).
- பேதுரு செபிக்கும்போது எருசலேம் கட்டிடம் அதிர்ச்சியுற்றது போலவே(4 : 31) பவுல் செபிக்கும் போதும் பிலிப்பியிலுள்ள சிறையில் அதிர்ச்சிஏற்படுகிறது (16 : 25-26)
- பேதுரு அனனியா, சபிரா இவர்களைக் கழ்?து கொள்ள, அவர்கள்இறந்தது போல (5 : 1-11) எலிமா என்பவனை பவுல் கழ்?து கொள்ளஅவன் பார்வை இழந்து விடுகிறான் (13 : 10-11).
- பேதுரு நிழல் பிணிகளைக் குணப்படுத்துகிறது போல (5 : 15-16)பவுலின் கைக்குட்டை குணப்படுத்துகிறது (19 : 11-12).
- சமாரியாவில் பேதுரு மந்திரவாதியோடு மோதுகிறார் (8 : 9-19);பாப்போ நகரில் மந்திரவாதியை எதிர்க்கிறார் ( 13 : 6-8; 19 : 13-17).
- இருவரும் நோயாளிகளைக் குணப்படுத்துகின்றனர் (9; 33; 28 : 8-10).இருவரும்இறந்தவர்களுக்குஉயிரளிக்கின்றனர் (9:36-41; 20:9-12).
-பேதுரு அற்புதமாகச் சிறைச்சாலையிலிருந்து வெளியேறுதல்போல (5 : 19-20; 12 : 3-11) பவுலும் அற்புதமாகச் சிறையிலிருந்துவிடுதலை பெறுகிறார் (16 : 22-26).

மேலே கண்ட இணைமுறை உணர்த்தும் உண்மைகள்:
1)கருத்து: இருவரும் பணி, அதிகாரம், துன்பம், மனப்பான்மைஇவற்றில் ஒன்றுபட்டுள்ளனர்.
2) லூக்கா நற்செய்தியில் காணப்படும் அதே இணைமுறை இங்கேகாணப்படுவதால் இரண்டிற்கும் ஆசிரியர் ஒருவரே என்பதும் தெளிவுபடுகிறது.

2.2 திருத்தூதர் பணிகள் என்ற நூல் "தூய ஆவியின் நற்செய்திஏடு” எனப்படுகிறது. லூக்கா தன்நற்செய்தியில்தூயஆவிக்குச் சிறப்பிடம்அளிப்பது போலவே இந்த நூலிலும் அளிக்கிறார்.திப 1:2, 5, 8, 16; 2:1, 4, 17, 18, 33, 38, 4:8, 25, 31; 5:3, 9, 32; 6;3,, 5,10; 7:51, 55, 59; 8;15, 16, 17, 18, 29, 39; 9:17, 31; 10:19, 38, 44, 45, 47;11:12, 15, 16, 24, 28; 13:2, 4, 9, 52; 15:8; 18:16, 17; 19:1, 2, 6; 20:22, 23, 28;21:4, 11; 23:8, 9; 28:25.

2.3. பெண்களுக்குச் சிறப்பிடம் அளிப்பதில் லூக்கா நற்செய்தியும்திருத்தூதர் பணிகளும் ஒத்திருக்கின்றன.
திப 1:14; 5:1-11, 14; 12:12-15; 16:13-18; 24:24; 25:13.

2.4. லூக்கா நற்செய்தி போலவே திருத்தூதர் பணிகளும்செபத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
திப 1 : 14, 24-26; 2 : 21, 42, 46; 4 : 24-30; 6 : 4, 6; 7 : 59-60; 8 : 15,22-24; 9 : 14, 21, 40; 10 : 2, 4, 9, 30-31; 51 : 5, 12 : 13:3; 14 : 23; 16 : 25; 20: 11, 36; 22 : 16; 28 : 8, 15.

2.5. லூக்கா நற்செய்தி போலவேதிருத்தூதர் பணிகளும் சமூக நீதிவாழ்வுக்கு வழி காட்டுகிறது.
திப 2 : 42-47; 4 : 32-35; 4 : 36-37; 5 : 1-11.2.6.2.6.2.6. லூக்கா நற்செய்திஒருபயணஏடு: இயேசு எருசலேம் நோக்கிச்செய்தபயணத்தைச் சித்தரிக்கும்ஏடுஎனஅறிவோம். திருத்தூதர் பணிகள்ஏடும் பயண நூலாகும். எருசலேமிலிருந்து நற்செய்தி உரோம் வரை(உலகின் எல்லை வரை) செய்த பயணத்தின் ஏடு அது. புனித பவுலின்பயணங்கள் குறிப்பிடத்தக்கவை (பாடம் 8, 9, 10).

3. தூய ஆவியின் வருகை (திப -2 )

'பெந்தகொஸ்தே' என்பதற்கு ஐம்பதாம் நாள் என்பது பொருள்.பாஸ்கா விழாவுக்குப் பின் ஐம்பதாவது நாளில் இவ்விழாகொண்டாடப்பட்டதால் இப்பெயர் வழங்கப்பட்டது. மேலும் இவ்விழா'வாரங்களின்விழா' என்றும் அழைக்கப்பட்டது,யூதர்கள்கொண்டாடிய இவ்விழாவின்நோக்கத்தில் படிப்படியானவளர்ச்சியைக் காண்கிறோம். தொடக்கத்தில் அறுவடை விழாவாகக்கொண்டாடப்பட்ட இவ்விழா பின்னர் உடன்படிக்கையின் நினைவுநாளாக, அதாவதுசீனாய்மலையில்திருச்சட்டம் பெற்றதன்நினைவாகக்கொண்டாடப்பட்டது. இது புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியின்கொடைகள் பொழியப்படும் தூய ஆவியின்பெருவிழாவாக மாறிற்று.

3.1. ஆவியின் பொழிவு
திருச்சபையின் நற்செய்திப் பணிதுவக்கம் தூய ஆவியால்தான். இயேசு மனுவுருஎடுத்தாலும் (லூக்1: 35)அவர் திருமுழுக்குப் பெற்றுப் பொது வாழ்வு தொடங்கியதும் அதேஆவியால்தான்!இவ்விதமே திருத்தூதர்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியைத்தொடங்கியதும் இதே ஆவியாலேயே. ஆதலால்தான் தூய ஆவியின்வருகை நூலின் துவக்கப் பகுதியில் (2 : 2-3) இடம் பெறுகிறது.

3.2. ஆவியின் பொழிவு - 'உலக' திருச்சபையின் தோற்றம்:
திப 2 : 2-3-இல் இரண்டு வியத்தகு செயல்கள் இடம் பெறுவதைக்காண்கிறோம். முதலில் திருத்தூதர்கள் பல மொழிகளில் பேசிஇறைவனின் மாண்பைப் போற்றினார்கள். இரண்டாவது, திருத்தூதர்பேசுவதைப் பலநாட்டவரும் தத்தம் மொழிகளில்புரிந்துகொள்கின்றனர்.அன்றைய அக்கூட்டம் அகில உலகமும் கூடியிருந்ததற்குச் சமம். உலகநாடுகள்அனைத்திற்கும் பிரதிநிதிகள்இவர்கள். எனவே, தூயஆவியின்தினத்தில் அகில உலகத் திருச்சபை உருவாகிறது.

3.3. ஆவியின் பொழிவு- திருக்கூட்டம் ஒன்றிணைதல்:
'சிதறிப்போனஇறை மக்கள்சீயோன்மலைமீது(எருசலேம்) ஒன்றுசேர்க்கப்படுவார்கள். இஸ்ரயேல் மக்கள் திருக்கூட்டமாகஇறைவனைச்சுற்றிக் குழுமிடுவர்' என்று இறைவாக்கினர்எடுத்துரைத்தனர். இவ்விதமே பெந்தெகொஸ்தே அன்று யூதர்கள், யூதரல்லாத பிறமதத்தினர் ஆக எல்லா மக்களும் எருசலேமில் ஒன்றுகூடி, திருத்தூதர்கள்போதித்ததைப் பணிவோடுகேட்டனர். உள்ளத்திலேஏற்று, திருப்பந்தியிலும் பங்குகொண்டு இறைமக்களின்குடும்பமாயினர்.

திருச்சபை எல்லா மக்களையும் இணைக்க வேண்டும்.திருத்தூதர்களின் உரையைத் தத்தம் மொழிகளால் புரிந்து கொள்ளும்புதுமையானது இதைத்தான் உணர்த்துகிறது. பாபேல் கோபுர நிகழ்ச்சியின்போது மொழிக் குழப்பத்தால் ஏற்பட்டபிரிவினை இங்கு முடிவு பெறுகிறது.அனைத்து மக்களையும் தன்னிலேஅணைத்துக் கொள்ளும் திருக்கூட்டமாகிய திருச்சபை பிறக்கின்றது.

3.4. பேதுருவின் திருவுரை
திருத்தூதர் பணிகளில் நாம்காணும் மறையுரைகளில் ஐந்துபேதுருவால் ஆற்றப்பட்டவை. இவைஎல்லாம் ஏறத்தாழ ஒரே அமைப்பினையும், கருத்தினையும் கொண்டுஅமைந்திருப்பது நோக்கத்தக்கது.அதாவது மறையுரையின் தொடக்கத்திலே, சூழ்நிலையைச் சுட்டிக்காட்டும்விதத்தில் அமைந்த முன்னுரையும் (2 : 14-21;3: 12;4: 8; 10 : 34-35);அதைத்தொடர்ந்துகிறிஸ்துவின்வாழ்க்கை, இறப்பு, உயிர்ப்பு, மாட்சிமை,ஆவி, இரண்டாம் வருகை இவற்றின்அறிக்கையிடுதலும் (2 : 22-24; 3: 13-15; 4; 10; 10 : 36-11; 20 : 6-11) அமைகிறது. மறையுரையின்மூன்றாம் பகுதியாக விவிலியத்திலிருந்து நிரூயஅp;பணம் கொடுக்கப்படுகிறது(2 : 25-31; 3 : 22-26; 4 : 11; 10 : 43).

இறுதியாக மனம் வருந்தவும், மனம் மாறவும், விசுவாசம்கொள்ளவும் இவ்வாறு மீட்புப் பெறவும் விடுக்கப்படும் அழைப்போடுமறையுரை முடிவு பெறுகிறது (2 : 38-40).

4. எருசலேமின் இளந்திருச்சபை(திப 3-5)

திருச்சபையின் தொடக்க நிலை பற்றியும், அதன் வாழ்க்கைவளர்ச்சியைப் பற்றியும் புனித லூக்கா தம் திருத்தூதர் பணிகள் என்றநூலில் எடுத்துரைக்கிறார். அன்றைய இளந்திருச்சபையில் நிலவியநற்செய்தி அறிவிப்பு மனப்பான்மையினையும் மறைப்பணியினையும்,அதன்வழியாகத் திருச்சபைப் பெற்ற வளர்ச்சியினையும் பற்றித்திருத்தூதர் பணிகளில் காண்கிறோம்.

4.1. இளந்திருச்சபையின் நற்பணி
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை விரைவில் இருக்கும் எனஎண்ணி எதிர்பார்த்திருந்த காரணத்தால் ஆரம்பத்தில் திருச்சபையில்நற்செய்தி பரப்புப்பணிதிட்டமிட்டுச் செய்யப்படவில்லை. இறைவன்தம்தூதர்களின் வழியாக, எல்லா நாட்டினரையும் எருசலேமில் ஒன்றுசேர்ப்பார் என்ற நம்பிக்கையும் இதற்கு காரணமாகும். இருப்பினும்தொடக்க திருச்சபையிலே, நற்செய்தி பரப்புப்பணியைமுன்னிட்டுஎதுவும்செய்யவில்லை என்று சொல்ல இயலாது. பல நாடுகளுக்கும் சென்றுநற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்குஇல்லையென்றாலும், தன் உடன் சகோதர யூதர்களுக்கு நற்செய்தியைஅறிவிக்க வேண்டும் என்பதில் நாளும் கண்ணாயிருந்தார்கள்.

திபா 1-13 அதிகாரங்களுக்குள் காணப்படும் திருவுரைகளைநற்செய்தி அறிவிப்புப் பணியானது, யூதர்களிடையே எத்துணைஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் தொடரப்பட்டது என்பதற்குச்சான்றுகளாகின்றன. ஆனால் யூதர்கள் நற்செய்தியை ஏற்கத்தயங்குகின்றனர்; மறுக்கின்றனர். இதனால் பிறவினத்தாரிடையேஇப்பணிதொடங்கப்படுகிறது. பிறவினத்தாரோ நற்செய்தியைத் திறந்தமனத்துடன் ஏற்றுக் கொள்கின்றனர். இதனால் பிறவினத்தாரிடையேவிசுவாசிகள்எண்ணிக்கை அதிகரிக்கின்றது.நற்செய்தியை அறிவிக்கும் பணியானது சிறப்பாகத்திருத்தூதர்களுக்கு உரியது என்றாலும், அவர்களுக்கு மட்டுமே உரியதுஎன்பதன்று. இதனால்தான் பந்தியில் பணியாற்றத் தேர்ந்து கொள்ளப்பட்ட திருத்தொண்டர் எழுவரும் போதிப்பதையும் காண்க (6 : 10;8: 5).

மேலும், குறிப்பாக புனித பவுலும், அவருடைய துணையாளர்களான பர்னபா சீலா, திமொத்தேயு ஆகியோரும் போதிப்பதையும், குறிப்பாகப் பிறவினத்தாரிடம் செல்வதையும் காண்கிறோம். வாய்ப்புகள்கிடைக்கும் போது, திருக்கூட்டத்தைச் சேர்ந்த ஒவ்வோர் உறுப்பினரும்,நற்செய்தியை எடுத்துரைக்கின்றனர் (4 : 34;8: 4).

4.2. எருசலேம் தொடங்கி நற்செய்தி அறிவிப்புப்பணி
புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலும், திருத்தூதர்பணிநூலிலும்எருசலேம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. நற்செய்தியின்படிகிறிஸ்துவின் போதனைகளும், சாதனைகளும் அவர் எருசலேம்செல்லும் வழியிலேதான்சிறப்பிடம் பெறுகின்றன. மேலும் எருசலேமில்குழந்தைப் பருவநிகழ்ச்சியிலிருந்து தொடங்கும் நற்செய்தி, எருசலேமில்கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிப்புப்பணி எருசலேமிலிருந்துதான்தொடங்குவதாக அப்பணியின்தொடக்கத்திலேயே குறிப்பிடுகிறார்.

தூய ஆவியைப் பெறும்வரையில் எருசலேமை விட்டு நீங்கவேண்டாமெனப் பணிக்கிறார் கிறிஸ்து (1 : 4). மேலும் நற்செய்திஅறிவிப்புப் பணி எருசலேமில் தொடங்கி பின்னர் உலகின் இறுதிஎல்லைவரை தொடர்ந்திட வேண்டும் என்று பணிக்கிறார் (1 : 8).

தூய ஆவியானவர் திருத்தூதர்களின் மேல் எழுந்தருளிவந்ததும்,துணிவு கொண்ட திருத்தூதர்கள் முதலில் போதிக்கத் தொடங்கியதும்எருசலேமில். புனித பேதுருவினுடைய மறையுரையோடு நற்செய்திஅறிவிப்புப் பணி தொடங்குகிறது. நற்செய்தியை ஏற்று,மனந்திரும்பியவர்களோடு எருசலேமில் திருச்சபை உருவாகி வளர்ந்தது(2:25: 12) இறை வார்த்தையை, நற்செய்தியை, ஏற்றுக் கொண்டோரின்எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றது (6 : 7).

4.3. எருசலேம் திருச்சபையின் கிறிஸ்தவ வாழ்வு
எருசலேமில் கிறிஸ்தவர்கள் 'பன்னிருவரை'ச் சார்ந்தனர்.அவர்களுக்கு செவி கொடுத்தனர். தங்கள் உடைமைகளை விற்றுஅவர்களிடம் கொடுத்தனர் (4 : 34-35). தங்கள் சமூகவாழ்வின்பிரச்சனைகளை அவர்களிடம் வெளியிட்டு தெளிவு கண்டனர் (6 : 1-7)அடிக்கடி ஒரு குடும்பமாய் ஒன்று கூடினர். அப்பம் பிட்குதலிலும்,செபத்திலும் ஒரு மனத்தோடும், முழுமனத்தோடும் ஈடுபட்டனர்.துடிப்போடும், தூய்மையோடும், சகோதர நட்புணர்வோடும் எருசலேமில்திருச்சபை வேரூயஅp;ன்றி வளமாய் வளரத் தொடங்கியது (2 : 42-47).இல்லை என்பவன்எவனுமில்லை அங்கே.பகிர்தல் வாழ்வில், இடைஞ்சலாக நின்ற அனனியா, சபீராஇறந்துவிட்டது பிறர்க்கு ஓர் எச்சரிக்கையாக இருந்தது. இவ்வாறுஆவியில்வாழ்வு, நற்செய்திக்கும், பகிர்தல்வாழ்வுக்கும் துணைநின்றது.

தொடக்க திருச்சபையில் நிலவிய இரு முக்கிய சமூகப் பண்புகள்
1) நட்புறவு (2 : 42),
2) அன்பில் மலரும் பொதுவுடமை (4 : 32).

1) நட்புறவு இந்த வார்த்தை 'கோயினோனியா' என்றகிரேக்க சொல்லிலிருந்துவருகிறது. இதற்குப் பின்வரும் பொருள் உண்டு.

- கிறிஸ்தவர்களுள் இருந்த ஒன்றிப்பு (4 : 32)
- பொருட்களைப் பகிர்தல் - ஒன்றிப்பு
- நற்கருணைவிருந்தினால் ஒன்றிப்பு (2 : 42)
-நிவாரணப்பணி(தருமம் செய்தல்)தொடக்கக் கிறிஸ்தவர்கள் இத்தகைய நட்புறவைவளர்க்கத்துணை நின்றவை பின்வரும் நான்கு செயல்கள்.
- திருத்தூதர் கற்பித்தவற்றைக் கேட்டல்
-நட்புடன்உறவாடுதல்
-அப்பம் பிட்குதல்
-கூடிச் செபித்தல்

நட்புறவு: நேசித்தனர். அடுத்தவரின் மீட்பில் அக்கறைகொண்டனர். நன்மதிப்பை பெற்றனர் (4 : 33)

மக்கள் அனைவருக்கும் வேண்டியவர்களாயிருந்தனர் (2 : 47)பகிர்ந்தனர் (2 : 44; 4 : 34).

2)அன்பில் மலரும் பொதுவுடமை ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் வாழ்ந்தனர்எதன் மீதும் உரிமை பாராட்டவில்லை (4 : 32அ)பகிர்ந்து கொண்டனர்எல்லாம் பொது (4 : 2)வேறுபாடு இல்லைஇது ஒரு "கம்யூனிசம்”

4.4. அடிப்படையில் நான்கு அம்சங்கள்
1. எல்லாம் பொது (4 : 2)
2. உரிமை பாராட்டவில்லை (4 : 32ய)
3. வறுமைப்பட்ட நிலையில்அவர்களுடன்ஒருவனும் இல்லை(4 : 34)
4. தேவைக்கேற்ப பங்கிட்டுக் கொண்டனர் (2 : 45)

- பாலஸ்தீனாவில் கும்ரான்சமூகத்தில் 'எசேனியர்' என்ற சமூகம்இப்பொதுவுடைமைக் கொள்கையைக் கடைப்பிடித்தது.
-அனைத்துத் தீமைக்கும் காரணம் தனியுரிமைக் கொள்கையே'என்றுஞடயவடி என்பவர்சுநயீரடெiஉ என்ற தமதுநூலில்எழுதுகிறார்.
-நெருங்கிய நட்புறவு கொண்டவர்கள் தங்கள் உடைமைகளைப்பகிர்ந்து கொண்டனர்.-இதுவிசுவாசிகள்மத்தியில்இருந்ததுதான் இளந்திருச்சபையின்சிறப்பு.
-"நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றைவிற்று அனைவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப பகிர்ந்தளித்தனர்” (2 :45) என்றும்,
-"திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர்தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்” (4 : 35) என்று ஒரேநூலில்இருவித்தியாசமானமுறையில்புனித லூக்கா எடுத்துரைக்கிறார்.
-அடுத்தது பர்னபாவின்தாராள செயல்தாராள செயல்தாராள செயல் சுட்டிக்காட்டப்படுகிறது(4 : 36-37).
-அனனியா சப்பிராவின்சுயநலம் கண்டிக்கப்படுகிறது (5 : 4).
-யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை எனினும் அதே சமயம்சுயநலம் தீமையானது என்பது காட்டப்படுகிறது. இவ்வாறு தொடக்கக்கிறிஸ்தவர்களின்கூட்டு வாழ்க்கை வலியுறுத்தப்படுகிறது.

4.5. நிர்வாகச் சீர்கேடுகள்
துவக்கத்தில் அறப்பணிசெய்கையில் நன்முறையில் நிர்வாகம்அமையவில்லைகிரேக்கக் கைம்பெண்கள் கவனிக்கப்படவில்லை (6 : 1) என்றமுறையீடு எழுந்தது. இதற்காக எழுவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்எழுவர் ஏன்?

ஏழு என்பது முழுமை! அறப்பணியிலும் முழுமை.எருசலேமை ஏழு வார்டுகளாக பிரித்தனரா?
- யூதர்களுக்கு 12 யூத திருத்தூதர் என்பதுபோல்கிரேக்க கிறிஸ்தவர்களை திருப்திப்படுத்த ஏழு கிரேக்கர் ...முறையான அறப்பணிக்கு தொடக்கத் திருச்சபை எடுத்த முயற்சிபாராட்டுக்குரியது.

5. இளந்திருச்சபையில் திருத்தொண்டர்

ஆண்டவரின் அன்புப்பணி, முதலில் எருசலேமிலும், அடுத்துயூதேயா - சமாரியா முழுவதிலும், பிறகு உலகின் இறுதி எல்லைவரைக்கும், எருசலேமுக்குப்பின் யூதேயாவும், சமாரியாவும் சிறப்பிடம்பெறுகின்றன. இப்பகுதியில்தான் நற்செய்தி அறிவிப்புப்பணிஇரண்டாவது கட்டத்தை அடைகிறது. எருசலேமைத் தவிரபிறவிடங்களில் அறிவிக்கப்படுகிறது நற்செய்தி. மண்ணுலகின் இறுதிஎல்லைவரைக்கும் நற்செய்தி பரவ மேலும் வழி வகுக்கின்றது இப்பகுதி.

5.1. திருத்தொண்டரை ஏற்படுத்துதல்
பன்னிருவருக்கு இணையாக, திருத்தொண்டர் எழுவர் எவ்வாறுதோன்றினர்? இதைப்பற்றிக் கூறுவதே இப்பகுதியின் முக்கியநோக்கமாகும். நற்செய்தி அறிவிப்புப்பணியின்இரண்டாவது கட்டத்தில்வரும் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துதலும் இப்பகுதியில்நடைபெறுகின்றது. எழுவரும் தேர்ந்தெடுக்கப்படுவது நற்செய்திப்பணிதடைபடாமலிருக்கவும், அப்பணி நன்கு கவனிக்கப்படவுமே என்பதுதெளிவு. திருச்சபை வரலாற்றிலே இங்குதான் முதலில் சீடர்கள்'‘கிறிஸ்தவர்கள்” எனஅழைக்கப்படுகின்றனர்.

5.2. திருத்தொண்டரின் தகுதிகள்
சீடர்கள் நன்மதிப்பும், தேவ ஆவியும், ஞானமும் நிரம்பியவர்களாய்இருக்க வேண்டும் (திப6: 3). இத்தகுதியுள்ள எழுவரை சீடர்கள் தேர்ந்தெடுத்தபின்பன்னிருவர்ஜெபம் செய்து அவர்கள்மேல் கைகளை விரிக்க வேண்டும் (திப6: 6).தேர்ந்தெடுக்கப்பட்ட எழுவருமே கிரேக்க மொழி பேசுவோரே எனஅவர்கள் பெயர்களிலிருந்தே அறிந்து கொள்கிறோம்.அறப்பணியைப் பற்றிக் குறை கூறிய கிரேக்க குழுவிலிருந்தேபணிக்கெனத் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களின் தேர்தலிலேஆவியானவர் செயல்பட்டார் என்பது உண்மையிலும் உண்மை.

5.3. திருத் தொண்டரின் பணிகள்
நற்செய்தி அறிவிப்புப்பணி முழுமையாகப் பன்னிருவரைச்சார்ந்தது. அறப்பணி எழுவரைச் சார்ந்தது. ஆனால், நற்செய்திஏடுகளைப் புரட்டினால் திருத்தொண்டர்கள் அறப்பணியோடு நில்லாமல்நற்செய்தி அறிவிப்புப் பணியிலும் ஈடுபட்டனர் என்பது தெளிவாகிறது.ஸ்தேவான்எழுவரில் ஒருவர்; அவருக்கு எதிராகக் கொணரப்பட்டகுற்றச்சாட்டுகளை(6 : 13-14) ஆராயும்போதுஅவரும் போதித்தார் என்பதுபுலனாகிறது.பிலிப்பு - இவரும் எழுவரில் ஒருவராவார். கடவுளின் அரசைக்குறித்தும் இயேசு கிறிஸ்துவின் பெயரைக் குறித்தும் நற்செய்திஅறிவித்தபோது ஆண்களும் பெண்களும் அவர் கூறியதை விசுவசித்துதிருமுழுக்குப் பெற்றனர் (திப 8 : 12). எவ்வாறு எபிரேய மொழிபேசுவோருக்குப் பன்னிருவர் செயல்பட்டார்களோ, அவ்வாறே கிரேக்கமொழி பேசுவோருக்கு இந்த எழுவர் செயல்பட்டனர்.கைகளை விரித்து செபிப்பதின் மூலம், செபிப்போரின் அருளோடுகடமையும், உரிமையும் செபிக்கப்படுவோருக்கு அருளப்படுகிறது.இச்செயலின் மூலம்தான் அப்போஸ்தலர்கள் தங்களுடைய பதவியில்,கடமையில் எழுவருக்கும் பங்களித்தார்கள்.

5.4. திருத் தொண்டர் ஸ்தேவான் பற்றிய பகுதி (6 : 8-8:1 அ)

1) ஸ்தேவானைச் சிறைப்படுத்தியது 6 : 8-15
2) ஸ்தேவானின் அருளுரை 7 : 1-533) ஸ்தேவானின்மீது கல் எறிதல்7: 54-8:1அ

1) ஸ்தேவானைச் சிறைப்படுத்தியதுதலைவனுக்குத் தன்னுயிர் தந்த ஸ்தேவானின் பகுதியைநோக்குமிடத்து ஸ்தேவானுக்கு எதிராகக் கொணரப்பட்ட குற்றங்கள்மூன்று.

1) இவன்புனித கோயிலுக்கெதிராகப் பேசுகிறான்.
2) இவன்திருச்சட்டத்தை எதிர்க்கிறான்.
3) இயேசுஇவ்விடத்தை அழித்துவிடுவார் என்றும்மோசே நமக்குக்காட்டிய முறைகளை மாற்றிவிடுவார் என்றும் கூறுகிறான்.

இவையே குற்றச்சாட்டுகள்.இவை இயேசுவுக்கு எதிராகக் கொணரப்பட்ட குற்றசாட்டுகளுடன்ஒத்திருக்கின்றன. இவ்வாறு ஒற்றுமைப்படுத்தி அளிப்பதன் மூலம்தலைவனுக்குநேர்ந்ததுதான், தொண்டனுக்கும் நேரும் என்பதை புனிதலூக்கா வலியுறுத்துகிறார். தன்னுடைய அருளுரையில் இயேசுவைப்பற்றியும் மோசேவைப் பற்றியும் பேசினாலும் உண்மையில்அவருக்கெதிராகக் கொணரப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் விளக்கம்கொடுக்கவில்லை. ஸ்தேவானின் விசாரணையை இயேசுவின்பாடுகளுடன்ஒப்பிடும் முறையில் லூக்கா விளக்குவதை நோக்குக.

இணை நோக்குக இயேசு ஸ்தேவான்
;1. யூத சங்கத்தின்முன்நிறுத்தப்படுதல்
ஒரேவிதமானகுற்றசாட்டுக்கள்
லூக் 22 : 66 திப6: 9, 12
2. பொய்சாட்சிகள் மாற் 14 : 56 6 : 13
3. நகருக்கு வெளியில் கொல்லப்படுதல் லூக் 23 : 33 7 : 58
4. தங்களைக் கொலை செய்பவர்களுக்காக செபித்தல் லூக் 23 : 34 7 : 60
5. ஆவியைக் கையளித்தல ; லூக் 23 : 4-6 7 : 59

 

2) ஸ்தேவானின் அருளுரை(7: 1-53)
குற்றசாட்டுகளுக்குவிளக்கம்தருவதாகஅமைந்திருக்கவேண்டியஅருளுரை இந்த அருளுரை! அருளுரையில் வரும் பல செய்திகள் சுமத்தப்பட்ட குற்றங்களுடன் தொடர்பு குறைந்தவை. ஆண்டவனின்வாக்குறுதிகளை ஆணவத்தோடு அவமதித்தார்கள் இஸ்ரயேல் மக்கள்என்பதை எடுத்துக் காட்டுகளின் மூலம் விளக்குகின்றார் ஸ்தேவான்.மீட்பின் வரலாறு முதுபெருந்தந்தை ஆபிரகாமில் தொடங்குவதுபோல்,ஸ்தேவான் மீட்பின் வரலாற்றை தந்தை ஆபிரகாமில் தொடங்குகிறார்.ஆனால் மீட்பின்வரலாற்றை மோசேயில் முடித்திருப்பது ஏன்?

புனித ஸ்தேவானின் அருளுரை பழைய ஏற்பாட்டில் சுருக்கமாகஇருந்த போதிலும், ஒரு சில வேறுபட்ட செய்திகளையே நாம்காண்கின்றோம். ஸ்தேவான்அருளுரையில்யாக்கோபு "சிக்கேம்” என்றஊரில் அடக்கம் செய்யப்பட்டதாக வாசிக்கின்றோம். மாறாக பழையஏற்பாட்டிலே யாக்கோபு எபிரோனில் புதைக்கப்பட்டதாக ஒருபாரம்பரியமுண்டு (தொநூ 2 : 17-19). இதற்குக் காரணம் என்னவோ?ஒருவேளை, புனித ஸ்தேவான் சமாரியர்களின் பின்னணியில்வளர்ந்தவராக இருக்கலாமா?

சமாரியர்கள் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களைத்தான்கொண்டிருந்தார்கள். "இணைச்சட்டம்”, மோசேவோடுதான்முடிகிறது.இவர்கள் சிந்தனைப்படி மோசேவும், யோசேப்பும் கிறிஸ்துவுக்குமுன்னடையாளங்கள்! சமாரியர் மரபு யாக்கோபு 'சிக்கேம்' என்ற ஊரில்தான் அடக்கம் செய்யப்பட்டாரெனப் பறைசாற்றுகிறது.மேலும் சமாரியர்கள் எருசலேம் கோவிலை வெறுத்தார்கள். இதுஸ்தேவானின்அருளுரையில் பிரதிபலிக்கின்றது.

புனித லூக்கா ஸ்தேவானின்உரையைச் சமாரியர்களின்நற்செய்திநூலின் அடிப்படையில் தயாரித்து அதன் மூலம் புதிய இறையியலைத்தருகிறார். கிறிஸ்தவ மதம், யூதர்களின் குறுகிய நோக்கிலிருந்துமுற்றிலும் மாறுபட்டது. ஒரு மொழியினருக்கோ ஒரு நாட்டினருக்கோஅம்மதம் உரிமையல்ல் அனைவரும் அதில் சேரலாம். ஸ்தேவானின்புது நோக்குக் கொண்ட அருளுரை எருசலேமிலிருந்து பிற பகுதிகளுக்குநற்செய்தி அறிவிக்கப்பட வழிவகுக்கின்றது.

3) ஸ்தேவானின் இறப்பு (கி.பி 36 -37) (7 : 54-8 : 1அ)
புனித ஸ்தேவான் யூத சங்கத்தின் முன் நிறுத்தப்பட்ட போதிலும்அவர்களால் கொலைத் தண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டதாகத்தெரியவில்லை. மக்கள் தாங்களாகவே கல்லெறிந்து அவரைக்கொன்றனர். எவனையும் கொல்ல எங்களுக்கு அதிகாரமில்லைஎன்றுரைத்தவர்கள்(யோவா 18 : 30-31) இங்கே கொலைசெய்கின்றனர்.எப்படி விளக்குவது?

இயேசுவின்இறப்பிற்கும் ஸ்தேவானின்இறப்பிற்கும் இடைப்பட்டகாலம் ஐந்தாண்டு. இந்த இடைப்பட்ட காலத்தில் அரசியல் மாற்றம்ஏற்பட்டிருக்கலாம் என்பர் சிலர். யூத சட்டத்திலே மாற்றம் பெற்று யூதசங்கமே கொலைத் தீர்ப்பிட உரிமை பெற்றிருக் கலாம் என்று வாதாடுவர்சிலர். இயேசு விற்கு உரோமையர்கள் தீர்ப்பளிப்பது போலவே,ஸ்தேவானுக்கு உரோமையர்கள்தீர்ப்பளித்திருக்க வேண்டும். இவ்வாறுகற்பனைசெய்பவர் வேறு சிலர்.

7 : 56-58 வாசிக்கும்பொழுது மக்கள் ஸ்தேவானைக் கொன்றதுஅவரின்வார்த்தைகளைக் கேட்ட அனைவரின்உள்ளத்திலும் தோன்றியகொந்தளிப்பின் இயல்பான முடிவே ஆகும் என்ற முடிவுக்கு வரலாம்.கிறிஸ்துவம் யூதர்களின் சட்டத்திலிருந்தும் அரசியலிலிருந்தும்விடுதலையடைந்துபிறவினத்தாரிடையே பரவஸ்தேவானின்வழக்கும்,இறப்பும் வழியமைக்கிறது.

6. சமாரியாவில் திருச்சபை (திப 8)

ஸ்தேவானின் கொலைக்குப் பிறகு எருசலேமில் திருச்சபைக்குஎதிராகப் பெருங்கலாபனை எழுந்தது. திருத்தூதர்களைத் தவிரமற்றனைவரும் யூதேயா, சமாரியா நாட்டுப்புறமெங்கும் சிதறுண்டுபோனார்கள். அவ்வாறுசிதறுண்டு சென்றவர்கள்சென்றவிடமெல்லாம்நற்செய்தியை அறிவித்தார்கள். இப்பணியில் குறிப்பிடத்தக்கவர்கள்கிரேக்க மொழி பேசுவோரே.

6.1. சமாரியாவில் பிலிப்பு(8 : 4-25)
கலாபனைக்குஅஞ்சிச் சிதறுண்டவர்களின்கிரேக்க மொழிபேசும்பிலிப்பும் ஒருவராவார். அறப்பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்இப்பகுதியின்கதாநாயகன். சமாரியாவில்நற்செய்தி அறிவிப்பவராகவும்,எத்தியோப்பிய அண்ணகன் திருமுழுக்குப் பெற உதவி புரிபவராகவும்காட்டப்படுகின்றார். சமாரியாவில்நற்செய்தி பரவ, எருசலேம் கலாபனைகாரணமாக அமைகிறது. சமாரியாவில் பிலிப்பு, உயிர்த்த கிறிஸ்துவுக்குதம்முடைய சொல்லாலும் புதுமைகளாலும் சான்று பகர்ந்தார். யூதர்கள்சமாரியர்களைப் பிற இனத்தாராகக் கருதினர். அவர்கள் ஆண்டவரின்சபையிலிருந்து அண்ணகர்களை விலக்கி வைத்தனர் (இச 23 : 1).இத்தகையோர் நற்செய்தியை ஏற்பதாகக் காட்டுவதின் மூலம் கிறிஸ்துவமதம் யூத வரைமுறைகளுக்கும் அப்பாற்பட்டதுஎனவிளக்குகிறார் புனிதலூக்கா.

6.2. பிலிப்பும், எத்தியோப்பிய அண்ணகனும்(8 : 26-40)
மோசேயின் சட்டபடி அண்ணகன் எவனும் ஆண்டவனின்அவையினில் சேர்க்கப்படமாட்டான்(இச 23 : 1). அப்படிப்பட்ட ஒருவன்திருமுழுக்குப் பெறுவதின்மூலம் கிறிஸ்துவம் யூதமதக் கோட்பாடுகளைக்கடந்து முழுமை பெற்றிருக்கிறது என்பது தெளிவாக்கப்படுகிறது.திருச்சபையில் பிற்காலத்தில பிறவினத்தார் ஏற்றுக் கொள்ளப்படுதலுக்குமுன் அடையாளமாக எத்தியோப்பிய அண்ணகனின் திருமுழுக்குஅமைந்துள்ளது. ஆண்டவரின்தூதனால் பிலிப்பு வழிநடத்தப்படுகிறார்."எந்நாளும் உங்களோடிருக்கிறேன்” என்று கூறிய ஆண்டவர்உண்மையிலேயேஉடனிருந்துதன்னுடையமக்களைவழிநடத்துகிறார்.சீடர்களின் சொல்லும், செயலும், மக்களின் வேதகலாபனையும்நற்செய்தி அறிவிப்பு பணியிலேபெரும்பங்கை வகிக்கின்றன. எருசலேம்திருச்சபையின் - தாய்த்திருச்சபையின் வளர்ச்சியேலே பன்னிருவர்தலைமைப் பீடம் வகிக்கின்றனர்.

நற்செய்தி எருசலேமிலிருந்து பிறபகுதிகளுக்குப் பரவஅறப்பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரேக்க மொழி பேசும் எழுவரும்அரும்பாடுபட்டனர். இதற்காகத் தங்களுயிரையும் அவர்கள் அளிக்கத்தயங்கவில்லை சமாரியாவில் நடைபெற்ற நற்செய்தி அறிவிப்புப்பணியிலே அவர்கள் ஆண்டவனால் வழி நடத்தப்படுகின்றனர்.கிறிஸ்துவத்தில் அனைவரும் சேரலாம். ஆண்டவர் இயேசுவின் மீதுநம்பிக்கை ஒன்றே போதும். இவைகளே இப்பகுதியின் முக்கியப்படிப்பினைகளாகும்.

7. புனித பவுலின் வழியாய்த் திருச்சபை பரவுதல்

7.1. புனித பவுலின் அழைப்பு(திப 9)
கிறிஸ்துஇயேசுவால்நிறுவப்பட்டசபையைஅழிக்கச் சென்றசவுல்(பவுல்) எப்படி அதைக் கட்டியெழுப்புபவராக மாறினார் என்பது நமதுசிந்தனையைத்தூண்டவேண்டும். தமஸ்குநகருக்குச் செல்லும்வழியில்,அவருக்கும் இயேசுவுக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பு (கி.பி 36-37)சவுலின்வாழ்க்கையே மாற்றி அமைத்தது.

7.2. சவுல் - பவுல்: யூத - கிரேக்க உலகங்களை இணைப்பவர்
சவுல் இஸ்ரயேல் இனத்தவர்; பென்யமீன் குலத்தவர்; எபிரேயர்;திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயர் (திப 22 : 3).இவ்வாறு சவுலின் கிரேக்க கலாச்சாரமும் (தர்சு) யூத பாரம்பரியஉலகமும் (எருசலேம்) சங்கமம் ஆவதைக் காணலாம். 'நான்ஒருயூதன்;சிலிசியாவிலுள்ளதர்சு நகரத்தில் பிறந்தவன். ஆனால் இந்த எருசலேம்நகரில் வளர்க்கப்பட்டவன்; கமாலியேலின் காலடியில் அமர்ந்து, நம்தந்தையின் திருச்சட்டங்களில் நுட்பமாக பயிற்சி பெற்றவன்” (22 : 3)என்கிறார் பவுல். திருச்சபை, தொடக்க காலத்தில் யூத உலகத்தையும்,கிரேக்க உலகத்தையும் இணைக்கக்கூடிய ஒரு மனிதரை எதிர்பார்த்துஇருந்தது. 'எப்போதும் உங்களுடன் இருக்கின்றேன்' எனக்கூறியஇறைவன்தனதுதிட்டத்தில் இருஉலகையும் இணைப்பவராகச் சவுலைஅழைத்தார்.” இந்தச் சவுலைப் பிற்காலத்தில் பவுல் எனக் கூப்பிடுவர்.

'நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுல்லுள்ள தர்சு நகரத்தில்பிறந்தவன். ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்;கமாலியேலின் காலடியில் அமர்ந்து, நம் தந்தையின் திருச்சட்டங்களில்நுட்பமாக பயிற்சி பெற்றவன்” ; கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்தஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையிலடைத்தேன்;சாகும்வரை அவர்களைத் துன்புறுத்தினேன். தலைமைக்குருவும் மூப்பர்சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்த தஸ்கு நகரிலுள்ளசகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு அங்குள்ளகிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு வந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன்” (திப 22 : 3-5) என்பதை ஏற்றுக்கொள்ளுகிறார் பவுல்.

7.3. இயேசு மெசியா பற்றிய உண்மைகள்

1) துன்புறும் மெசியா
யூதர்கள் எதிர்பார்த்த மெசியா மகிமை மிக்க மத, அரசியல்தலைவராக அவதரித்து, யூதர்களை அவர்களது விரோதிகளின்கைகளிலிருந்து விடுவித்து, அனைத்து மக்களும் யூதர்களின்திருச்சட்டத்தை அனுசரிக்கும்படி செய்வார் எனப் பகல்கனவு கண்டுவந்தனர். ஆனால் நாசரேத்தூர் இயேசு துன்புறும் மெசியாவாகவிளங்கியதைச் சவுலாலும் அனைத்து யூதர்களாலும் ஒத்துக் கொள்ளமுடியவில்லை. எனவே நாசரேத்தூர் இயேசுதான் மெசியா என்றுபோதித்தவர்களை துன்புறுத்தத் தொடங்கினர் (திப 2 : 36).

2) இயேசு ஆண்டவர்
மோசே சட்டப்படி "யாவே” ஒருவர்தான் 'ஆண்டவர்' எனஅழைக்கப்படத் தகுதி உள்ளவர். ஆனால் கிறிஸ்தவர்கள் 'இயேசு'வை'ஆண்டவர்' எனஅழைத்தனர். இவ்வாறு அழைத்தன்மூலம் அவர்கள்இயேசுவை, யாவேக்குச் சமமாக இணையாக வைத்தனர். ஆனால்ஒரேகடவுளில் பற்றுக் கொண்ட எந்த யூதனாலும் குறிப்பாகச் சவுலால் இந்தஉண்மையை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

3) இயேசு - சிலுவை வழி மீட்பர்
யூதர்கள் சட்டப்படி "தொங்க விடப்பட்டவன், கடவுளால் சபிக்கப்பட்டவன்” (இச 21 : 23). சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவும்கடவுளால் கைவிடப்பட்டவரே, என்று யூதர்கள் கருதினர். அவ்வாறுஇருக்க, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துதான் "மெசியா” எனக்கிறிஸ்தவர்கள்வணங்கியபோது, யூதர்கள்(குறிப்பாக சவுல்எனும் பவுல்)இதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

4) இயேசு - திருச்சட்டத்தின் நிறைவு
யூதர்களுக்கு மோசேயின்சட்டம் அனைத்துமாக இருந்து வந்தது.சட்டத்தை நுணுக்கமாகக் கடைப்பிடிப்பவன் மட்டுமே மீட்பு அடைவான்என்ற கருத்து அவர்களின் உள்ளங்களில் பதிந்து இருந்தது. ஆனால்கிறிஸ்தவர்கள் மோசேயின் சட்டத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம்அளிக்கவில்லை. யூதர்களுக்கும் ஸ்தேவானுக்கும் தர்க்கம் வரக்காரணமாக இருந்தது "திருச்சட்டம்” தான்(திப 6 : 11-14).எனவே, பரிசேயனாகிய சவுல் (பவுல்) கிறிஸ்தவர்களைத்துன்புறுத்தத் தொடங்கியது, அவர் தன்னுடைய யூத மதத்தின் மீதுகொண்டிருந்த அளவு கடந்த மதிப்பினாலும், பற்றினாலுமே.

7.4. தமஸ்கு சந்திப்பு
கிறிஸ்தவர்களை வதைப்பதற்காக தமஸ்கு செல்லும்போதுஇளைஞன்சவுல்உயிர்த்த இயேசுவைச் சந்திக்கிறான். புதியஏற்பாட்டில்நான்குஇடங்களில்இந்த மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சிசித்திரிக்கப்படுகிறது.தமஸ்கு சந்திப்பில் படிகள்.

- காட்சி
- உரையாடல்
- பெயரிட்டழைத்தல் (சவுலே)
- கேள்வி(யார்?)
- அறிமுகம் (இயேசு)
- போதனைப்பணி...

1) மனமாற்றமா? அழைப்பா?
இந்தச் சந்திப்பின்விளைவு 'மனமாற்றம்' எனக் கூறுவர் பலர்.மனமாற்றம் என்பதைவிட அவருடைய 'அழைப்பு' எனக் கூறுவர் வேறுசிலர். பவுலின் புதிய இறையியல் கண்ணோட்டத்திற்கு அடிப்படையாகஅமைவன'தமஸ்கு அனுபவங்களே' என்பது விவிலிய வல்லுநர்களின்ஒருமித்த கருத்தாகும். தமது அழைப்பைப் பற்றிக் கூறும் நான்குஇடங்களிலும் சில முக்கியக் கருத்துக்களை நாம் வரையறுத்துக் கூறமுடியும் (திப 9 : 1-9; 12 : 3-16; 26 : 4-18; கலா 1 : 5-17).

பவுல் பெற்ற அழைப்பும்பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்கள் பெற்ற அழைப்பும் ஒத்திருப்10; எசா 2 : 6-7).

தமஸ்கு சந்திப்பின் மூலம்சிலுவையில் மரித்து உயிர்த்தநாசரேத்தூர் இயேசு உயிரோடிக்கின்றார் என்பதைத் தமஸ்கு சந்திப்பு அவருக்குத் தெளிவுப்படுத்தியது (2 கொரி 4 : 6). அவர் உயிர்த்த கிறிஸ்துவில், தெய்வீகத்தன்மை முழுவதும் வெளிப்பட்டிருந்ததைக் கண்டார் (கொலோ 1 : 15);எனவேதான் பவுல், "அனைவருக்கும் உங்களின் கிறிஸ்துதான்மெசியாவும் கடவுளும் ஆவார்” என்று கூற முடிந்தது. எனவே இந்தச்சந்திப்பின் விளைவால், பவுலும் மற்ற திருத்தூதர்கள் போல் அழைப்புப்பெற்று அவர்களுக்குச் சமமாகும் தகுதி அடைகின்றார்.

சட்டத்தை நுணுக்கமாக, முழுமையாக அனுசரிப்பதனாலும்மனிதன்முயற்சியிலானநன்னடத்தையாலும்மீட்பு அடையமுடியும்என்றுபரிசேயனான பவுல் நம்பி இருந்தார்.ஆனால் தமஸ்கு அனுபவத்திற்குப்பின், மீட்பு கடவுளிடத்தில் விசுவாசம்கொள்வதாலும் கடவுளிடம்தன்னையே ஒப்படைப்பதாலும்தான்அடைய முடியும் என்பதைஉணர்ந்தார்.மீட்பு, சட்டத்தை நுணுக்கமாகஅனுசரிப்பதில் இல்லாமல், உயிர்த்தகிறிஸ்துவின்மேல் கொள்ளும்விசுவாசத்தில் அடங்கி உள்ளதால்தான், இந்த கிறிஸ்து தரும் மீட்பை,சட்டத்தை அனுசரிக்கும் யூதர்மட்டுமல்லாமல் புற இனத்தார்அனைவரும் அடையலாம் எனப்பவுல் உணர்ந்திருந்தார் ( கலா 2 : 15). எனவே பவுல் 'கிறிஸ்துவின்மேல்உள்ள விசுவாசத்தை அனைவரும் கொண்டிருக்க வேண்டும். அதன்வழியாகத்தான்மீட்பு உண்டு' என்ற நற்செய்தியை யூதருக்கும் அறிவிக்கவேண்டியது கடமை என உணர்ந்திருந்தார்.

2) பவுல்: வெளிப்பாடு பெற்றவர்
பவுலின் கிறிஸ்தவ வாழ்வின் அழைப்பும், போதகப் பணியும்தமஸ்கு சந்திப்பின் அடிப்படையில் கட்டப்பட்டது. தமஸ்கு சந்திப்பில்,உயிர்த்த கிறிஸ்து பவுலுக்குத் "தோன்றினார்” (திப 22 : 6)."தோன்றினார்” என்பதைக் குறிப்பிடும் கிரேக்க வார்த்தை ஒப்தே(ழுPர்வுநு). விவிலிய ஆசிரியர்கள், இயேசு அவருக்குத் தன்னைவெளிப்படுத்தினார் எனப் பொருள் கொள்கின்றனர். அதாவது முதல்முயற்சி உயிர்த்த இயேசுவிடம் இருந்து வந்தது. இயேசு அவருக்குத்தன்னை உயிர்த்த, உயிர் வாழும் இறைவனின் மாட்சிமையில்வெளிப்படுத்தினார்.உயிர்த்த இறைமகன் வழியாக சவுலுக்கு அழைப்புஅளிக்கப்பட்டாலும், அந்த அழைப்பை ஏற்கவோ நிராகரிக்கவோ முழுசுதந்திரம்அளிக்கப்பட்டது. 'ஆண்டவரே! நான்என்னசெய்யவேண்டும்?'(திப 22 : 20) என்ற வினாவின்மூலம் சவுல் தனது முழு சம்மதத்தையும்,விருப்பத்தையும் அளிக்கின்றார்.

இப்பகுதியின் மூலம் சவுல் தன்னையே விசுவாசத்தில்இறைவனின் சித்தத்திற்குக் கையளிக்கின்றார். "பிற இனத்தாருக்கும்,அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்லநான்தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாக இருக்கிறார்” (திபா 9 :15). ஆண்டவரின் இக்கூற்றால் பவுல் அப்போஸ்தலனாகமாற்றப்படுகிறார்.

3) பவுலின்வாழ்வு - கிறிஸ்துவில் மலரும் வாழ்வு
பவுலின் தமஸ்கு அனுபவமே அவரது வாழ்வுக்குத் திருப்பமாகஅமைந்தது. தன்னை முற்றிலும் சட்டத்திற்காக ஒப்படைத்து வாழ்ந்தசவுல், இப்போது திடமனத்துடன் தன்னைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணம்ஆக்குகிறார். அந்த அனுபவத்தைப் பற்றிப் பவுல் பிலிப்பியர் 3 : 4-14-இல் உள்ளத்தை உருக்கும் விதத்தில் விவரிக்கின்றார்.இதுவே பவுல் கிறிஸ்துவில் அனுபவித்த புதிய வாழ்வின்தொகுப்பாகும். கிறிஸ்துவுக்கும், கிறிஸ்தவனுக்கும் உள்ளஇன்றியதையாத ஒற்றுமையையும், நெருங்கிய உறவையும் பவுல்'கிறிஸ்துவில்' என்று கூறி வெளிப்படுத்துகின்றார். இந்த இன்றியமையாத பிணைப்பை மேற்கோள்கள் மூலம் எடுத்துக் காட்டுகின்றார்."ஒருவன்கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தால் புதியதொரு படைப்பாகிவிட்டான்.பழையனகழிந்துவிட்டன” (கொரி 5 : 7). மேலும்"வாழ்பவன்நான்அல்ல்கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலா 2 : 20).

4) பவுல் கிறிஸ்துவின்திருத்தூதர் ஆகிறார்!
பவுல் தனது திருத்தூதர் பணியை எப்போதும் தமஸ்குஅனுபவத்துடன்தொடர்புபடுத்திக்கூறுகின்றார். "நானும்ஒருதிருத்தூதன்அல்லவா? நம் ஆண்டவர் இயேசுவைநான்காணவில்லையா? (1 கொரி9 : 1). இந்த திருத்தூதர் பணியை ஆற்ற இயேசு தன்னை வெளிப்பாடுவழித் தேர்ந்தெடுத்ததாகப் பவுல் கூறுகின்றார் (கலா 1 : 15-16).தன்னுடைய எல்லாத் திருமுகங்களின் தொடக்கத்திலும் (உரோ1: 1;1கொரி1: 12; 2 கொரி1: 1; எபேசி1: 1; கொலே1: 1) தன்னை"இயேசுகிறிஸ்துவின்திருத்தூதன்” என்றுஉறுதியாகக் கூறுகின்றார். திருத்தூதர்பணியை அவரே விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை; மாறாக, கடவுளின்திருவுளத்தால்திருத்தூதனாக அழைக்கப்பட்டவன்(1 கொரி1: 1) என்றும்கூறுகின்றார்.

தான் 'கிறிஸ்துவின் திருத்தூதன் என்பதை பல்வேறுகாரணங்களால் எண்பிக்கிறார். (i) மற்ற திருத்தூதர்கள் போலத் தானும்கிறிஸ்துவை (தமஸ்கு செல்லும் வழியில்) கண்ணால் கண்டதைக்கொண்டும் (திப9: 13) (ii) மற்ற திருத்தூதர்களை எங்ஙனம் கிறிஸ்துமறைபரப்புப் பணிக்காக அனுப்பினாரோ அதுபோன்று தானும்நற்செய்தியைப் பரப்புவதற்காகக் கிறிஸ்துவால் அனுப்பப்பட்டவன்(திப 9: 15-16) என்றும் கூறித் தானும் கிறிஸ்துவின் திருத்தூதன் என்பதைநிரூயஅp;பிக்கிறார். மேலும்(iii) ஏனைய திருத்தூதர்களைப் போல் அருங்குறிஆற்றியதையும் (iஎ) நற்செய்திக்காகத் துன்புறுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.

பவுல் நற்செய்தியை அறிவிக்க மேற்கொண்ட மூன்றுபயணங்களும், "நற்செய்தியைஅறிவிக்காவிடில்ஐயோ எனக்குக் கேடு”(1 கொரி 9 : 16) என்ற விருதுவாக்கும் அவரின் திருத்தூதர் பணிஆர்வத்தை நமக்குக் காட்டுகின்றன. "நான் வாழ்ந்தால் அதுகிறிஸ்துவுக்காகவே” (பிலி1: 21) எனக் கூறும் அவர் நற்செய்தியைஅறிவிக்க மேற்கொண்டதியாகங்களும்அடைந்த துன்பங்களும்(2 கொரி11 : 23-29) அவரின் நற்செய்திப் பணிஎவ்வளவு மகத்தான செயல் எனநமக்கு வெளிப்படுத்துகின்றன.

8. எருசலேம் திருச்சங்கம் (திப 15)

முதல் நற்செய்தி அறிவிப்பு (கி.பி. 45-49) பற்றி அறிந்து கொள்ளவாசிக்க வேண்டியபகுதிதிப 13-14 ஆகும். பயணம் சென்றவர்கள்பவுல்,பர்னபா, மாற்கு; பர்னபா, சைப்ரஸ் தீவினர். ஆதலால் அந்தத் தீவில்முதல் முதல் பணிபுரிய விரும்பியதைப் பவுல் ஏற்றுக் கொண்டார். பவுல்உரோமைக் குடிமகனாய் இருந்ததும், கிரேக்கம், எபிரேயம், அரமாய்க்மொழிகளில் புலமை பெற்றிருந்ததும், ஒவ்வொரு பட்டணத்திலும் தம்இனத்தவரான யூத குடியிருப்புகளும், செபக்கூடங்களும் இருந்ததும்அவருக்கு மிகவும் துணைநின்றன. முதல் பயணத்தின்போது,

சென்ற இடங்கள்

முக்கிய நிதழ்ச்சிகள்

அந்தியோக்கியா

 செபித்து வழியனுப்புதல்

செலூக்கியா

 கப்பல் ஏறுதல்

சைப்ரஸ்தீவில் சாலமி

 நற்செய்தி அறிவிப்பு

பாப்போ

 உரோமை ஆளுநருக்கு உரை எலிமா
கண்பார்வை இழத்தல்

பெர்கே

 மாற்கு விட்டுப் பிரிதல்

பிசிதியா அந்தியோக்கியா

 செபக்கூட்டத்தில் பேருரை

இக்கோனியா

 அருங்குறி -அற்புதம் - எதிர்ப்பு

லீஸ்திரா

 பிறவிமுடவன்குணமாதல் கல்லெறியப்படல்

தெர்பே

 நற்செய்திப் பணி

ஒவ்வொரு இடத்திலும் பவுல் பலரை இயேசுவின் சீடராக்கினார்.யூதருக்கு மட்டுமன்றி பிற இனத்தாருக்கும் விசுவாச வாயில் திறந்துவிடப்பட்டது பற்றி மகிழ்ந்தார்.

8.1. திருச்சபையில் கருத்து வேற்றுமைகள்
அக்காலத்தில் யூதர்களின் மன நிலைப்படி யூதர்கள் மட்டுமேஇறைவனால் தேர்தெடுக்கப்பட்டவர்கள். இறைவன் அவர்களுக்கு மட்டுமே உரிமையானவர் என்று நம்பி வந்தனர். எனவே ஒரு பிறஇனத்தவர் திருச்சபையில் சேருமுன் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். அவன்மோசேயின்கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும்என்று எதிர்பார்த்தனர். இன்னும் கூறப்போனால் ஒரு பிற இனத்தவர்கிறிஸ்தவனாக மாறும் முன்அவன்ஒருயூதனாக மாற வேண்டும் என்றுயூதர்கள் எதிர்பார்த்தனர். தொடக்க திருச்சபையில் வாழ்ந்தகிறிஸ்தவர்களுள் யூதர்கள் அதிகமாக இருந்து வந்தனர்.அவர்களிடையே ஒரு சாரார் யூத சட்டத்தை அளவோடு கடைபிடித்துவந்தனர். மற்றொரு சாரார் யூத சட்டத்தின் மீது தளராத நம்பிக்கைவைத்து அதனைநெறி பிறழாது கடைப்பிடித்து வந்தனர். இவர்கள் யூதநெறிப்படி திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவும், விருத்தசேதனம் செய்துகொள்ளவும் வேண்டுமென்று பிறவினத்தாரைக் கட்டாயப்படுத்தினர்.இதுவே திருச்சபையின் குழப்பத்திற்கு வித்தாக அமைந்தது.

இப்படி இருக்க, புனித பவுல் தமது முதல் நற்செய்திப் பயணத்தின்இறுதியில் அந்தியோக்கியாவில் சிறிது காலம் தங்கி அங்குள்ளபிறவினத்தாருக்கு நற்செய்தியை அறிவித்து அவர்களை விசுவாசத்தில்திடப்படுத்திவந்தார். இவ்வேளையில்எருசலேமிலிருந்துசிலர் (பரிசேயக்கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும்) அந்தியோக்கியாவிற்குவருகை தந்தனர். திருச்சட்டத்தினை நெறி பிறழாமல் பின்பற்றவேண்டுமெனக் கருதி வந்தஇக்கட்சியினர், பிறவினத்தாரானஅந்தியோக்கியா கிறிஸ்தவர்களும்சட்டத்தினைப் பின்பற்ற வேண்டுமெனப் போதிக்க ஆரம்பித்தனர்.

இங்குஇன்னுமொருகுழப்பமும்உண்டு. ஓர் உண்மையான யூதன்பிறவினத்தானோடு எந்தவிதத்தொடர்பும் வைத்துக் கொள்ளமுடியாது. அவனை விருந்தினனாகவோ, நண்பனாகவோ எந்தயூதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.இன்னும் கூறப்போனால் வியாபாரத்தொடர்பு கூட வைத்துக் கொள்ளமாட்டான். இப்படி இருக்க பிறவினத்தான் ஒருவன் திருச்சபையில்அனுமதிக்கப்பட்டால் எந்த அளவுக்கு யூதன் அவனோடு தொடர்புவைத்துக் கொள்ள முடியும்? எனவே, பிற இனத்தாரின்விருத்தசேதனம்ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.

8.2. எருசலேம் சங்கத்தில் விவாதம்(கி.பி. 49(50)?
பவுலும் பர்னபாவும் அந்தியோக்கியாவில்நடந்தவற்றை எருசலேம்தலைவர்களிடம் எடுத்து ரைத்திருக்க வேண்டும். ஆனால்; பரிசேயப்பரம்பரையில் வந்த யூதக் கிறிஸ்தவர்கள் மீண்டும் திருச்சட்டத்தைவலியுறுத்தி பிறவினத்தார் அனைவரும் விருத்தசேதனம் செய்யவேண்டும்என்றனர். கலாத்தியர்க்குஎழுதியமடலில்இவர்களை, 'கள்ளச்சகோதரர்கள்: அதாவது கிறிஸ்தவர்களைப் போன்று நடித்தவர்கள் எனஅழைக்கிறார் பவுல். இவர்கள் எல்லாம் வந்தது, திருச்சபையில் சமரசம்ஏற்படுத்த அன்று; குழப்பம் விளைவிக்கவே எனவேதான்திருட்டுத்தனமாய் நுழைந்தார்கள்' என்கிறார்.

8.3. சங்கத்தில் பேதுருவின் அறிவுரை
பேதுருவின் உரை பரிசேயக் கட்சியினரின் விவாதத்திற்குப்பதிலளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஒரு விதத்தில்பிறவினத்தாரிடையே நற்செய்தி அறிவிக்கும் பணியைத் தொடங்கிவைத்தவர் பேதுருதான். கடவுளின் ஏவுதலால் பத்து வருடங்களுக்குமுன்பு பிறவினத்தாரான கொர்னேலியு என்பவருக்குக் கடவுளின்வார்த்தையைஎடுத்துக் கூறிஅவரைத் திருமறையில்சேர்த்த நிகழ்ச்சியைஇங்குச் சுட்டிக் காட்டுகின்றார். பிறவினத்தார் மீது கடவுள் பரிசுத்தஆவியைஅனுப்பிஅவர்களைத் திடப்படுத்தியிருக்கிறார். இவ்விதமிருக்ககடவுளின் திட்டத்திற்கு, உலக மாந்தரின் மீட்புக்கு, திருச்சட்டத்தைத்தடையாக வைப்பது எவ்விதம் பொருத்தமாகும்? திருச்சட்டத்தின்படிபிறவினத்தார் தூய்மையற்றவர்களாக இருக்கலாம். ஆனால் பரிசுத்தஆவியை அனுப்பி அவர்களைத் தூய்மைப்படுத்தியிருக்கிறார். எனவேமீட்புப் பெறுவது கடவுளின்அருளால்தான். அவர் நமக்குக் கொடையாகஅளிக்கின்ற இறையருளை விசுவாசத்தோடு, அவரிடம்சரணடைவதில்தான்உண்மையானமீட்பு அடங்கியிருக்கின்றது. எனவே,திருச்சட்டத்தின் பொருளற்ற ஆசாரங்களையும், கட்டளைகளையும்கடைப்பிடித்து அதன்மூலம் மீட்புப் பெற விழைவது அறிவீனமாகும்.

8.4. சங்கத்தில் யாக்கோபின் உரை
திருத்தூதர்களின் மத்தியில் யாக்கோபுக்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டுவந்தது. எருசலேம் திருச்சபையின், தலைவராகவும் திருச்சபையில்முக்கியமானவராகவும் எல்லோராலும் கருதப்பட்டு வந்தவர், திருச்சட்டத்தினை நெறிபிறழாது கடைப்பிடித்து வந்தவர். பிறவினத்தாரின்விசுவாசத்திற்காகவும், மீட்பிற்கும் திருச்சட்டத்தின் மூலம் தடை விதிக்கமுடியாது என்று பிறவினத்தாருக்குச் சார்பாக இவரே கூறியபோது,அனைவரும் அமைதியடைந்துவிட்டனர்.திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் பிரச்சனை முடிந்துவிட்டது.இருப்பினும் இருசாராரின் சமுதாயப் பழக்க வழக்கங்கள் தடையாகநின்றன. எனவே யூதரும், பிறவினத்தாரும் ஒன்றுபடும் வகையில் மூன்றுவழி முறைகளை எடுத்து வைக்கிறார்.

1) சிலைகளுக்குப் படைக்கப்பட்ட இறைச்சியைப் பிற இனத்தார்உண்ணலாகாது.
2) கெட்ட நடத்தையை விலக்க வேண்டும்
3) மூச்சடைத்து இறந்துபோன விலங்குகளின் இறைச்சி, மிருகஇரத்தம் இவற்றினை உண்ணலாகாது (இரத்தம் உயிரின் உறைவிடம்(லேவி 17 : 11). ஆதலின், மூச்சு அடைத்து இறந்துபோன விலங்குகள்தீட்டுள்ளதாகக் கருதப்பட்டன).

யாக்கோபு கூறிய இவ்வொழுங்கு முறைகள் இருதரப்பினரையும்திருப்திப்படுத்தியிருக்க வேண்டும். எனவே இந்த ஒழுங்கு முறைகள்எருசலேம் சங்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இம்முடிவினைப் பிறவினச் சகோதரர்களுக்குத் தெரிவிக்க,தங்களின் பிரதி நிதிகளாக யூதாஸ், சீலா என்பவர்களை திருத்தூதர்கள்தேர்ந்தெடுத்து பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்குஅனுப்புகின்றனர்.

8.5. பவுலும் திருச்சட்டமும்
திருத்தூதர் பணியினையும் பவுலின்திருமடல்களையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது திருச்சட்டத்தை பொறுத்தமட்டில் இரு மாறுபட்ட பவுலைநம்மால் காணமுடிகிறது. யூதர்கள் முன்பு அவர் ஒரு பரிசேயன் -பரிசேயனின் வழித்தோன்றல் (திப 23 : 6). யூத மத்தின் அடிப்படைக்கோட்பாடுகளைஅவர் ஏற்றுக் கொள்கிறார். மோசேயின்சட்டப்படி தமதுபணியில் உடனுழைத்து வந்த தீமொத்தேயுவையும் விருத்தசேதனம்செய்து சட்டத்தினைக் கடைப்பிடிக்கச் செய்கின்றார் (திப 16 : 3).யூதர்களின் முறைப்படி கெங்கிரேயா நகரில் தமது பொருத்தனையைநிறைவேற்றுகின்றார் (திப 18 : 18). இறுதியாக உரோமையில் யூதபெரியோர்களுடன் விவாதம் செய்யும்போது, தன்னை உண்மையானயூதனாகஅறிக்கையிடுகின்றார் (திப 28 : 17). அவரதுதனிவாழ்க்கையைநன்றாக ஆராய்ந்து பார்க்கும் பொழுது, இறுதியாக அவர் ஒரு யூதராக,யூத மதத்தின் மீது தளராத பற்றுக் கொண்டிருந்த யூதர்களின்திருத்தூதராகவே 'திருத்தூதர் பணிகள்' படம் பிடித்துக் காட்டுகின்றன.

யூதர்களோடு ஒரு யூதனாக வாழ்ந்த போதிலும் பிற இனத்தாரின்திருத்தூதராகப் பவுலை நாம் நோக்கும்போது முழுவதும் மாறுபட்ட ஒருமனிதனை நம்மால் காணமுடி கிறது. திருச்சட்டத்தைப் பற்றிய அவரதுகொள்கைகள்எருசலேம் பொதுச் சங்கத்திலும் அவரது திருமடல்களிலும்மாறுபட்டுக் காணப்படுகின்றன. திரு மடல்களில் - முக்கியமாககலாத்தியருக்கு எழுதிய திருமடலில் மோசேயின் சட்டத்தினைவன்மையாகக் கண்டிக்கிறார் (கலா 3 : 1-2). விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி யூதர்கள் தீத்துவைக் கட்டாயப்படுத்திய போதும் அவர்அதற்கு உடன்படவில்லை. சட்டத்தினின்று கிறிஸ்து விடுதலையளித்துவிட்டதாகத் துணிவோடு எடுத்துக் கூறுகின்றார் (உரோ 7:6; 5: 1).உரோமையருக்கு எழுதிய திருமடலின் பெரும்பகுதி சட்டத்தினின்றுஅளிக்கப்பட்ட விடுதலையையேவிவரிக்கின்றது.

"கிறிஸ்துஇயேசுவோடுஇணைந்திருப்போருக்குவாழ்வுதரும்தூயஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும்சட்டத்தினின்று என்னை விடுவித்து விட்டது” (உரோ 8 : 2). விவிலியஅறிஞர் மெக்கன்ஸிகூறுவது போன்று, கிறிஸ்து திருச்சட்டத்தினின்றும்நமக்குவிடுதலைஅளித்துவிட்டார். ஒரே ஒருசட்டத்தைச் சுமத்துகிறார்;அதுஅன்பின்சட்டம்.

9. ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு
(திப 15-18திப 15-18திப 15-18 )கி.பி. 50-52

புனித பவுலும், திமொத்தேயுவும், அந்தியோக்கியாவிலிருந்துபுறப்பட்டு பிரிகிய, கலாத்தியா போன்ற இடங்களில் கிறிஸ்துவின்நற்செய்தியைப் போதித்துக் கொண்டுவரும் தருணத்தில், மேற்கொண்டுதொடர்ந்து ஆசியாவில் பயணம் செய்யாதவாறு தூய ஆவியால்தடுக்கப்படுகிறார்கள். பித்தியானியாவிற்குச் செல்லமுயன்றபோதும் தூயஆவிதடுக்கின்றார். எனவே மீசியாவிலிருந்து துரோவாவுக்குப் பயணம்செல்கிறார்கள். அங்கு தங்கியிருக்கும் வேளையில் ஒருநாள் இரவு,பவுல் ஒரு காட்சி காண்கிறார். மாசிதோனியாவிலிருந்து ஒருவர்பவுலிடம் வந்து "மாசிதோனியாவிற்கு வாருங்கள். எங்களுக்கு உதவிசெய்யுங்கள்” என்று மன்றாடுகிறார். இக்காட்சிக்குப்பின் பவுல்மாசிதோனியாவிற்குச் செல்கிறார்.

இந்நிகழ்ச்சிகளிலிருந்துநாம்அறிவதுஎன்ன? கிறிஸ்துவின்மீட்பு,நற்செய்தி ஆசியா கண்டத்தைவிட்டு ஐரோப்பாவிற்கு முதல் முதலாகஅறிவிக்கப்படுகிறது. இதற்கு காரணம் திருத்தூதர் மட்டும் அல்லர்;மாறாக, தூய ஆவி முன்வந்து அவர்களை வழி நடத்துகிறார் என்பதுதெளிவாகிறது. தூய ஆவியே பவுலின் ஆசிய பயணத்தைத் தடுத்துஐரோப்பா செல்லப் பணிக்கின்றார்.

9.1. பிலிப்பியில் பவுல்(16 : 11-40)
உரோமைஆட்சிக்குட்பட்டிருந்த மாசிதோனியா நான்குதாலுக்காக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பிலிப்பு என்ற நகரம் ஒரு தாலுக்காவின்பெரிய நகரமாகும். இந்நகரில் பவுல் ஒரு வாரம் தங்கியிருக்கலாம்.இங்கும் முதலில் நற்செய்தி யூதர்களுக்கே அறிவிக்கப்படுகிறது.பிறகுதான்பிறவினத்தாருக்குபவுல்போதிக்கின்றார். லூக்கா இங்குஒருதனிப்பட்ட முறையைக் கையாளுகின்றார்.யூதர்களுக்குப் போதித்தல் - யூதர்களின் மறுதலிப்பு -பிறவினத்தாருக்குப் போதித்தல்.பவுல் போதனை முறையிலும் ஒரு புது வழியைக் காண்கிறோம்.இங்கு ஓய்வு நாளன்று நகருக்கு வெளியே இருந்த ஒரு நீரோடையின்கரையினிலே ஜெபம் செய்யக் கூடியிருந்தவர்களுடன் உரையாடலின்மூலம் நற்செய்தியைப் போதிக்கின்றார். இப்பகுதியில் இரண்டு முக்கியகருத்துக்களை லூக்கா எடுத்துரைக்கிறார்.1) கிறிஸ்துவின் நற்செய்தியே மீட்பு தரும் வழி! எனவேகிறிஸ்துவில் விசுவாசம் கொள்ள வேண்டும்.2) திருமுழுக்குப் பெற வேண்டும்.

9.2. தெசலோனிக்காவில் பவுல்
தெசலோனிக்கா, கிரேக்க நாட்டு மாசிதோனியாவின் ஒருமாவட்டத்தின் தலைசிறந்த இடமாகும். இது உரோமை மாவட்டஆட்சியாளரின்இருப்பிடமாகவும்விளங்கியது. தற்போதுதெசலோனிக்காசோலன்க்கி என்று அழைக்கப்படுகிறது.இங்கேயும் முதலில்யூதர்களுக்கே அவர்களின்ஜெபக்கூடங்களில்நற்செய்தி போதிக்கின்றார். கிறிஸ்துவே யூதர்கள் எதிர்பார்த்த மெசியாஎன்று நிரூயஅp;பிக்க முயல்கின்றார். ஆனால் அதுவே ஒருவகையில்அவர்களின் மன மாற்றத்திற்குத் தடையாக அமைந்தது. எனினும் ஒருசில யூதர்களும், கடவுள் பயமுள்ள கிரேக்கர்ளும், கிறிஸ்துவின் மீதுவிசுவாசம் கொண்டனர்.

as

9.3. ஏதென்சில் பவுல்
ஏதென்ஸ் நகரம் அக்காலத்தில் நாகளளகத்திலும், அறிவிலும்,கலையிலும் சிறந்து விளங்கியது. அகோரா என்ற இடம் ஏதென்ஸ்நகரின் இதயமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் இதுவே பலதத்துவங்களின் பிறப்பிடமாக இருந்தது. இங்குதான் பல தத்துவஞானிகள் சந்தித்து வாக்குவாதம் செய்வார்கள். லூக்கா அக்காலத்தில்தழைத்தோங்கி விளங்கிய இருபெரும் தத்துவ இயல்களைப் பற்றிக்கூறுகிறார். அதாவதுஎப்பிகூரியனிசம் (நுpiஉரசயைnளைஅ) ஸ்டாய்சிசம் (ளுவழiஉளைஅ)ஆகும்.எப்பிகூரஸ் (342-211 க்ஷஉ) என்பவர் 'மித்திலின், லாமஸ்குஸ்என்ற இரு இடங்களில் தனது தத்துவப் பணிகளைத் தொடங்கினார்.கி.மு. 306-இல் ஏதென்ஸில் தனது போதனைகளைப் பரப்பினார்.உலகத்தில் இன்பத்தையே சுவைக்க வேண்டும்; உண்டு, குடித்து, மகிழ்ச்சியாகஇருக்கவேண்டும்என்றதத்துவத்தைப் பரப்பினார். 'செனோ'(ஷ்நnடி ) என்பவரால்'ஸ்டாய்சிசம்' பரப்பப்பட்டது. இயற்கையின்நியதிப்படிநடப்பதே மகிழ்ச்சி தரும் வழி என்ற போதனை முக்கியமானதாகும்.ஏதென்ஸ் நகரின் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால்அங்கே பல தேவதைகளுக்குச் சிலைகளும், பலிபீடங்களும்நிறைந்திருந்தன.

as

9.4. பவுலின் பேருரை(17 : 22-34)
இந்த ஏதென்ஸ் பேருரை லூக்காவின் எழுத்து வன்மைக்கும்நடைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அறிவிலும், கலையிலும்சிறந்து விளங்கிய அறிஞர்கள் மத்தியிலே எப்படி ஒரு கிறிஸ்துவர் தனதுவிசுவாசத்தை எடுத்துரைக்கிறார் என்று ஒரு மாதிரிகை காட்டுகிறார்லூக்கா. இப்போதனைப் பகுதியைமூன்றுபெரும்பகுதிகளாக பிரிக்கலாம்.

முன்னுரை - 17 : 22-23
முதல் பகுதி - 17 : 24-25
இரண்டாம் பகுதி - 17 : 26-27
மூன்றாம் பகுதி - 17 : 28-29
முடிவுரை - 17 : 30-31பவுலின்

முன்னுரையிலே ஒரு 'விளி' இருக்கின்றது. அங்குகூடியிருந்தவர்களை நோக்கித் 'தெய்வபயம் உள்ளவர்களே' எனக்கூறிஅழைக்கின்றார். நகரில் தேவதைகளுக்கு பலி பீடங்கள் பலஎழுப்பப்பட்டிருப்பதைத் தான் கண்டதாகவும், அவற்றுள் "தெரியாதகடவுளுக்கு ஒரு பீடம்” இருப்பதைப் பார்த்ததாகவும், அந்தக் கடவுளைப்பற்றியே போதிப்பதாகத் தனதுபோதனையை அறிமுகம் செய்கிறார்.ஆனால் இதுபோன்ற ஒரு பீடம் அங்கு இருந்ததாக இதுவரை யாரும்கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பழங்கால ஆசிரியர்கள், இதுபோன்றதெரியாத தேவதைகளுக்கான பீடங்கள் பற்றி எழுதியுள்ளார்கள்.

பவுலின் போதனை முறை ஒருதத்துவ விவாதம்போன்றது அன்று.மாறாக ஒரே கடவுளின் மீதுதனக்குள்ள விசுவாசத்தை அறிக்கையிடுதல்போன்று அமைந்துள்ளது. 17 : 24-25 வசனங்களில் இறைவனுக்கும்,இயற்கைக்கும் உள்ள உறவைப் பற்றியும் 26-27 வசனங்களில்இறைவனுக்கும் மனிதனுக்கும் இருந்த இடைவெளி பற்றியும் 28-29 வசனங்களில் மனிதனுக்கும் இறைவனுக்குமிடையே உள்ளநெருங்கியஉறவைப் பற்றியும் பேசுகிறார். இறைவன் எப்படி மனிதர்களைத்தேடிவருகிறார். தன்னிடம் அழைக்கிறார் என்ற கருத்தை எடுத்துக்கூறிமனம் திரும்ப வேண்டும், கடைசி காலம் வந்துவிட்டது என்பதையும்மிகவும் சாதுரியமாகக் கூறுகிறார்.

முடிவில் 'சாவினின்று உயிர்ப்பு' உண்டு என்று பவுல் கூறஅனைவரும் ஏளனச் சிரிப்புடன், 'மீதிப் போதனையை நாளைக்குப்பார்க்கலாம்' என்று கூறிவிட்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.ஏனென்றால் கிரேக்க தத்துவங்களின்படி உயிர்ப்பு என்பதே கிடையாது.பவுலுக்கோ பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்அவருடைய போத னைக்குச் செவிமடுத்தனர்.

9.5. கொரிந்து நகரில் பவுல்
(கி.பி. 51-52)இங்கேயும் யூதர்களுக்கே முதலில் போதிக்கின்றார். கிறிஸ்துவேமெசியா என்பதை அவர்கள்ஏற்க மறுக்கின்றனர். கோபம் கொண்டுதன்ஆடையைக் கிழித்துக் கொண்டு, 'இனிமேல் உங்கள் பாடு, இனிநான்பிற இனத்தாரிடம் போகிறேன்' என்று மற்றவர்களுக்குப் போதிக்கமுற்படுகின்றார்.பவுல் கொரிந்து நகரில் 1, 2 தெச. கடிதங்களை எழுதி மேலும் தன்பணியை முடித்துக் கொண்டு எபேசு வழியாக செசாரியாவில் இறங்கிஎருசலேமிற்குச் செல்கிறார். பிறகுஅங்கிருந்துஅந்தியோக்குசெல்கிறார்.10. எபேசு நகரில் பணி10. எபேசு நகரில் பணி

10. எபேசு நகரில் பணி (திப 19 )

கி.பி. 53-இல் அந்தியோக்கியாவை விட்டுப் புறப்பட்ட பவுல் எபேசுநகரைச் சேர்ந்தவுடன் திருமுழுக்குப் பற்றிய குழப்பம் எழுகிறது;அங்குள்ளவர்கள்யோவானின்திருமுழுக்குப் பெற்றிருந்தனர். அதாவது"மனந்திரும்புதலின் திருமுழுக்கு.” ஆனால் அவர்கள் கிறிஸ்துவில்திருமுழுக்குப் பெறவில்லை. எனவேதூய ஆவியைப் பற்றியும் அவர்கள்அறிந்தாரில்லை. இந்தக் குழப்பமான நிலையிலிருந்து முதல்திருச்சபையினரின் கருத்து ஒற்றுமையின்மை தெரிகிறது.

10.1. பொதுமக்கள் மத்தியில் கலவரம்
பவுல் எங்கு சென்றாலும் கலவரம் ஏற்படுகிறது. இங்கு எபேசில் -"தியானா” தேவையை முன்னிட்டு கலவரம் ஏற்படுகின்றது. "தியானா”தேவதையின் சிலைகளை வடிக்கும் சிற்பிகளால் இப்பிரச்சினைஎழும்புகின்றது. இது மதப் பிரச்சினையைவிட வாழ்க்கைப் பிரச்சினைஎன்றே கூறலாம்; தங்களின் சிலைகளுக்கு வியாபாரம் இராது என்றஅச்சத்தில் அவர்கள் பவுலுக்கு எதிராக எழுகின்றனர். விளைவு, பவுலும்அவரின் உடன் உழைப்பாளர்களும் எபேசை விட்டு வெளியேறவேண்டியிருந்தது. அங்கிருந்து பிலிப்பி, தெசலோனிக்கா வழியாய்க்கொரிந்து சென்றார். பின் எருசலேம் திரும்பினார் (கி.பி. 58).11. எருசலேமில் பவுல்11. எருசலேமில் பவுல்

11. எருசலேமில் பவுல் (திப 21-26)

பவுலுக்கு எருசலேமில் வரவேற்பு கிடைக்கிறது. தன்னுடையசாதனைகளைப் பற்றி, பிறமதத்தினரிடம்ஏற்பட்ட மனமாற்றம் பற்றிபவுல்விளக்கிக் கூறுகிறார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பழையபடியூதர்களின் சட்டத்தையும் புதுக் கிறிஸ்தவர்கள் அனுசரிக்க வேண்டும்என்று பிடிவாதம் கொண்டனர், எருசலேம் யூதக் கிறிஸ்தவர்கள்.பவுலுக்கு வேண்டியது யூதக் கிறிஸ்தவர்களும், பிற இனகிறிஸ்தவர்களும் ஒன்றுபட வேண்டும் என்பதே. எனவேதான்எருசலேம்யூதக் கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொண்டபடி, தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு எருசலேம் தேவாலயத்தில் நுழைகின்றார்.

11.1. தேவாலயக் கலவரம்(கி.பி. 58)
அமைதியும், ஒற்றுமையும் யூதர் மற்றும் புற இனக் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்டதைச் செய்யகோவிலுக்குச் சென்றார் பவுல். அங்கே வந்திருந்த வெளி நகரத்துயூதர்கள் பவுலைக் கண்டதும் சீறி எழுந்தனர். யூதர்களுக்குத்தேவாலயத்தைப் போல புனிதமும், முக்கியமும் வாய்ந்த இடம் நம்கலாச்சாரத்தில் இல்லாததால் நம்மால் அவர்களின் மனநிலையைப்புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் பவுலின் மேல் சாட்டியகுற்றச்சாட்டு பிறமதத்தினனைக் கோயிலுக்குள் கொண்டு வந்தது;பலமுறை யூத சட்டத்திற்கு எதிரியாக நடந்து கலகத்தை உருவாக்கியநிலையில் இருந்த பவுல், இப்போது மரண தண்டனைக்குரிய குற்றம்புரிந்துள்ளார். பழங்குடி மக்களின்மனப்போக்கு இவ்வாறு நினைத்தது.

ஆனால் 'ஆலயம் யாவருக்கும் உரியது' என்றார் இயேசு.கோயிலைப் பற்றிய குறுகிய மனப்பான்மையை எதிர்த்தே ஸ்தேவான்எழுந்தார். இந்த கொள்கையையேகொண்டிருந்தார் பவுல். எனவேதான்அந்த யூதகுலம் இம்மூவர் மேலும் சீறி எழுந்தது.பவுலுக்குப் பெருத்த சோதனைகள் எழுந்தபோதும் கூட சிறிதும்மனம் கலங்காமல் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்ர். அவரின்கைது, உரோமைக்கு அனுப்பப்படல் போன்றவை அனைத்தும்கிறிஸ்துவர்களின்நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.

12. புனித பவுலின் பயணப்பாதை (திப 27-28)

இயேசு விண்ணகம் செல்லும் முன் தம் திருத்தூதர்களுக்குக்கூறிய வார்த்தைகள் (திப1: 8) எவ்வாறு புனித பவுலின் வாழ்வில்நிறைவேறுகின்றன, எவ்வாறு அவர் ஆண்டவர் இயேசுவுக்குஉலகெங்கும் சான்று பகர்ந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள நமக்குஉறுதுணையாக இருக்கும் பல தடயங்களில் முக்கியமான ஒன்று அவர்எருசலேமிலிருந்து உரோமைக்குச் சென்ற பயணப்பாதை.

எருசலேம் தொடங்கி உரோமைக்குச் சென்ற பவுலின் பயணம்,விலங்கிடப்பட்ட கைதியின் கடுமையான, சோகக்கதை. அவர் சென்றஇத்துயரப்பாதையை, எருசலேமிலிருந்து கல்வாரியை நோக்கிச் சென்றநம்ஆண்டவர் இயேசுவின்சிலுவைப் பாதையுடன்ஒப்பிட்டுப் பார்க்கலாம்.இயேசு பட வேண்டிய துன்பங்களில் மீதமிருந்ததை, தான் ஏற்றுக்கொண்டதாகக் கூறும் அவரை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

12.1. பவுல் - ஒரு கைதி
மேற்கு ஆசியப் பகுதியிலிருந்து வந்த யூதர்கள் பவுலின் மீதுஇரண்டு குற்றங்களைச் சாட்டினர்.

- இஸ்ரயேல் மக்களுக்கும், திருச்சட்டத்திற்கும், ஆலயத்திற்கும்எதிராகப் போதிக்கின்றான்.
- தேவாலயத்திற்குள்பிற இனத்தாரை அழைத்துக்கொண்டு வந்துபரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தி விட்டான்.

இக்குற்றங்களுக்காகப் பவுலைத் தொலைக்க எண்ணினர்.விளைவு பவுலுக்கு எதிராகப் பெரும் கலகம் ஏற்பட்டது. உரோமைப்படைவீரர் அவரைக் கைது செய்து பெரிய குருவிடம் அழைத்துச்செல்கின்றனர்.தான் உரோமைக்குடிமகன் என எடுத்துக்கூறித்தப்புகின்றார். யூதர்களின் தீயஎண்ணத்தை அறிந்தபடைத்தலைவன் பவுலைமிகுந்த பாதுகாப்போடுஉரோமைஆளுநரிடம் ஒப்படைத்தான்.எருசலேம்சிறைவாசத்தின் பின்செசாரியாவில் ஈராண்டுகள்கழிந்த பிறகு (58 - 60) பவுல்,தான் உரோமைக் குடிமகன்ஆனதால் உரோமைக்குச்சென்று அங்கு செசாருக்கு முன்விசாரிக்கப்பட விரும்புவதாக்கேட்டுக் கொண்டார். இதன்பிறகுதான் உரோமைப் பயணம்ஆரம்பமாகின்றது.

as

12.2. உரோமை செல்லும் வழியல் ...(கி.பி. 60-61)
பவுலோடு கைதிகள் கூட்டம் ஒன்றை செசாரியாவிலிருந்துஉரோமைக்கு அழைத்துச் செல்ல உரோமைப்படைத்தளபதிஅமர்த்தப்பட்டான். பவுலுடன் அவரது நண்பர் "அரிஸ்டாகுஸ்”என்பவரும் பயணம் செய்திருக்கிறார். கப்பல் செசாரியாவில் புறப்பட்டுசின்னஆசியா வழியாக 'கிரேத்தா' என்ற தீவினைச் சென்றடைந்தது.

பொதுவாக குளிர் காலத்தில் கப்பல் பயணத்தை நிறுத்தி வைப்பதுவழக்கம். ஏனென்றால்அந்தக் காலத்தில்மத்தியதரைக் கடலில்ஏற்படும்கடல் கொந்தளிப்பும் புயலும் பயணத்திற்கு மிகவும் ஆபத்தைவிளைவிப்பது வழக்கம். பவுல் கப்பல் தலைவனைநோக்கி, 'இங்கேயேதங்கிவிடலாம், வேறு துறைமுகம் தேட ஆரம்பித்தால் கப்பலுக்கும்இவர்களுக்கும் சேதம் உண்டாகலாம்' எனக் கூறினார். ஆனால்அவரதுசொல்லை யாரும் கேட்காமல் பயணத்தைத் தொடரவே, கப்பல் தீவைவிட்டு வடகிழக்காக அடித்துச் செல்லப்பட்டது. அவர்களின் உயிருக்கேஆபத்தான நிலை. இறைவன் பவுலுக்குத் தோன்றி, ஆபத்து ஏதுமின்றி,அவர் உரோமைக்குச் சென்றுஅங்குதமக்குச் சாட்சியாக இருப்பார் என்றுஉறுதியளித்தார். பவுல் தன்னுடன் பயணம் செய்த யாருக்கும் கடல்காற்றினால் உயிருக்கு சேதம் இருக்காது என்று உறுதியளிக்கிறார்.அவ்வாறே கப்பல் சேதமான போதிலும் யாருடைய உயிருக்கும்ஆபத்தின்றி 'மால்டா' என்னும் தீவைச் சென்றடைந்தனர். இவ்வாறுமால்டா தீவிற்குச் சென்ற அவர்களைஅத்தீவினர் அன்புடன்வரவேற்று,உபசரித்து, தேவையானபொருட்களுடன்அவர்களைஅனுப்பிவைத்தனர்.

12.3. பவுலின் இறுதி நாட்கள்
பவுல் இரண்டு ஆண்டுகள் (கி.பி. 61-62) கைதியாக வாழ்ந்ததாகத்திருத்தூதர் பணிகள் கூறுகிறது (திப 28 : 20, 31). லூக்கா, அதன் பிறகுபவுலின் முடிவு பற்றியோ, உரோமைத் திருச்சபை பற்றியோ ஒன்றும்கூறவில்லை. ஒருவேளை, துயரமான முடிவுகளை விவரிக்கவிரும்பாமல் இருந்திருக்கலாம்.

திருத்தூதர் பணிகளின் ஆசிரியர், பவுலின் பயணம் இயேசுவின்கட்டளையை நிறைவேற்றுவதாய் அமைவதாகக்குறிப்பிடுகிறார். "நீங்கள்எருசலேமிலும், யூதேயா, சமரியா முழுவதிலும் உலகின்கடையெல்லைவரைக்கும் கடவுளது வல்லமையைப் பெற்று எனக்குசாட்சிகளாய் இருப்பீர்கள்” (திப1: 8).உண்மையில் லூக்கா குறிப்பிடும் உலகின்கடை எல்லை என்பதுபலஆண்டுகளுக்குப் பிறகுதான்ஏற்படும். ஆனால்அப்போதுஇறுதியாகபவுலின் மூலமாக நற்செய்தி உரோமைக்குச் செல்லுகின்றது.அக்காலத்தில் உரோமைப் பேரரசு, மற்ற பல நாடுகளையும் தன்அதிகாரத்தின்கீழ் கொண்டிருந்தது. நாகரிகத்திலும், அரசியல், வணிகம்போன்ற துறைகளிலும் உயர்ந்திருந்த உரோமை நகர், மற்ற நாடுகளுடன்தொடர்பு கொண்டிருந்ததால்உரோமைக்குநற்செய்தி சொல்வதுஉலகின்கடை எல்லைக்கே பரப்பப்படுவதற்கு ஒரு முன் அடையாளம் எனக்குறிப்பிடுவதாகத் திருத்தூதர்பணிகளில் எழுதப்பட் டுள்ளது. ஆகவே"நாங்கள் உரோமை போய்ச் சேர்ந்தோம்” (திப 28 : 14) என்னும்வார்த்தைகள்இதை மிகச் சிறப்பாக விளக்குகின்றன. இவ்வாறுலூக்காநம்மை அழைத்துச் செல்லும் பவுலின் பயணம் இரண்டு முக்கியஇறையியல் கருத்துக்களை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

1) எருசலேமின் முக்கியத்துவம்
எருசலேம்தான்திருத்தூதர்களின்பணித் தொடக்கம். ஆகவே, அதுதாய்த் திருச்சபையாகக் கருதப்பட்டது.

2) திருத்தூதர் பணிகளில் தூய ஆவியின் ஏவுதல்
திருத்தூதர் பணிகளில் முழுவதும் தூய ஆவியின் ஏவுதலும், வழிநடத்தலும், தொடர்வதும் சுட்டிக்காட்டப்படுகின்றன. தொடர்ந்துவிசுவாசிகளின்சபைகள்நிறுவப்படுகின்றன.

12.4. புனித பவுலின் முடிவு
உரோமையில் இரண்டு ஆண்டுகள் (கி.பி. 61-63) ஒரு வீட்டிலேசிறைப்படுத்தப்பட்டார் என்பதோடு, லூக்கா தன்நூலை முடித்துவிட்டார்.அக்கால உலகிற்கு உரோமை நகரம் எல்லா நாட்டு மக்களும் சந்திக்கும்ஒரு பல்நாட்டு சந்திப்பு நகரமாகத் திகழ்ந்தது. ஆனால், உடனே பவுல்இறந்து விட்டாரா என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.திரும்பவும் உரோமையிலிருந்து எபேசு, மாசிதோனியா, கிளளஸ் போன்றஇடங்களுக்குச் சென்றிருப்பார் என்றும், தீத்துவைக் கிரேக்கதிருச்சபையின் தலைவராகவும், திமொத்தேயுவை எபேசு சபையின்தலைவராகவும் நியமித்திருப்பார் என்றும் தெரிய வருகிறது.

பவுலின் முடிவு பற்றிப் பல அறிஞர்கள் பலவிதமாகக்கூறுகின்றனர். யாரும் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறவில்லை.திருச்சபையின் பாரம்பரியத்தின்படி பவுல் தன் இரண்டு ஆண்டுஉரோமைச் சிறைவாழ்விற்குப் பின் விடுதலை பெற்று ஸ்பெயின்நாட்டிற்குச் சென்றதாக (கி.பி. 63-64) ஒரு கருத்து நிலவுகிறது.

உரோமையின்ஆயராக இருந்த கிளமெண்ட்என்பவர் பவுல்மேற்குநோக்கிக் கடை எல்லைவரை சென்றுஉலகம் முழுவதும் நற்செய்தியைப்பரப்பினார் என்று குறிப்பிடுகிறார். அவரது கூற்றிலிருந்து பவுல்ஸ்பெயின்நாட்டுக்குச் சென்றார் என்ற முடிவுக்கு வரமுடியும்.உரோமையிலிருந்துவிடுதலையடைந்த பிறகுபலஇடங்களுக்கும்சென்றுபோதித்துவிட்டு(கி.பி64-66) திரும்பவும்உரோமைக்குவந்த பவுல்,நீரோ மன்னன் காலத்தில் ஏற்பட்ட வேதகலாபனையில் வேதசாட்சியாகமரணமடைந்ததாக (கி.பி. 67) எவுசேபியுஸ்என்பவர் - குறிப்பிடுகின்றார்.பேதுருவும், பவுலும் ஒரே காலத்தில் வேதசாட்சிகளாக உயிர் துறந்ததாகடயோனிசியுஸ் என்பவர் குறிப்பிடுவதாகவும் எவுசேபியுஸ் தெரிவிக்கிறார்.புனித திருமுழுக்கு யோவானைப் போன்று புனித பவுலும்,தலைவெட்டப்பட்டு வேதசாட்சியானார் என்று தெர்துல்லியன் என்றஅறிஞர் கூறுகிறார்.

பொதுவாக நீரோ மன்னன் காலத்து வேதகலாபனையில் இவர்வேத சாட்சியானார் என்பதைத்தான் உண்மையெனப் பலரும்கருதுகின்றனர். இந்த வேதகலாபனை கி.பி. 64 முதல் 68 வரைநடந்திருக்கிறது. ஆக, பவுலின் மரணம் அநேகமாக கி.பி. 67-ஆம்ஆண்டில் நிகழ்ந்திருக்கும் என்பது அறிஞர் பலரின்கருத்து.

பவுல் வாழ்வின் முடிவு பற்றி லூக்கா வரையறுத்து ஏதும்கூறவில்லை. மேலும் திருத்தூதர் பணிகளில் ஒரு வரைமுறையோடுமுடிக்காமல் விட்டது போல் தோன்றுகின்றது. இதற்குப்பின் வரும்ஒருசில காரணங்களைவிவிலிய அறிஞர்கள்காட்டுகின்றனர்.

லூக்கா தன்நூலைஎழுதி முடிக்கும் முன்இறந்திருக்க வேண்டும்.அதே சமயத்தில் இந்நூலின்கடைசி அத்தியாயம் அதாவது 28-ஆம்அதிகாரம் 30, 31 வசனங்களை நோக்கும்போதுலூக்கா இவ்வதிகாரத்தோடு தனது நூலை முடிக்க விரும்பியதாகத் தெரிகின்றது என்று சிலர்கூறுவர்.

வேறு எந்தப் பிரதியிலும் வேறுபட்ட முடிவுடன் இந்நூல்இருப்பதாகவும் தெரியவில்லை.

அநேகமாக லூக்கா, 'திருத்தூதர் பணிகள்' என்ற நூலைத்தொடர்ந்து மூன்றாவது நூல் ஒன்றை எழுதும் எண்ணத்துடன்இந்நூலைஇவ்வாறுமுடித்திருக்கலாம் என்பதும் ஒருகருத்து. குறிப்பாகதிப1: 1 இந்தக் கருத்துக்கு இடமளிக்கிறது.

உரோமையில் பவுலின் தீர்ப்புக்கு முன் இந்நூல்எழுதப்பட்டிருக்கலாம்என்றும்சிலர் கூறுவர். ஆனால், அப்படிஇருந்தால்இந்நூலில் குறிக்கப்பட்டுள்ள பவுலின் இறுதி உரை பொருளற்றதாகிவிடும் (திப 20 : 18-35). பொதுவாகவே லூக்காவின் நற்செய்தியும்,திருத்தூதர் பணியும் கி.பி. 70 ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதப்பட்டதாகஅறிஞர்கள்கருதுகின்றனர். முடிவாக இக்காலவிவிலியஅறிஞர்களும்,ஆசிரியர்களும், லூக்கா, திருத்தூதர் பணிகளை இப்படித்தான் முடிக்கவிரும்பினார் என்றுகூறுகின்றனர்.

 

------------------------------------------
--------------------------
----------------
------
--
-