பொதுத் திருமுகங்கள்

அருள்திரு. வி.இரபேல், மற்றும் அருள்தந்தை சந்தியாகு சே.ச.

விவிலிய அன்பர்களே,

வணக்கம்,புதிய ஏற்பாட்டில் உள்ள 27 நூல்களுள் 21 கடிதங்களாகஅமைந்துள்ளன. அவற்றுள் ஏழு கடிதங்கள் பொதுத் திருமுகங்கள் என்றுஅழைக்கப்படுகின்றன. செசாரியாவின்யுசேபுஸ்என்பவரின்எழுத்துக்களில்தான் முதன் முதலாக இந்நூல்களைப் #8220;பொதுத்திருமுகங்கள்” என்றுபார்க்கின்றோம். ஆயினும் இவர் தன் வாதத்திற்கு மிகவும் பழையஆசிரியர்களான அப்பலோனியோ (கி.பி. 197), அலெக்சாந்திரியாவின்தியோனிஜி(கி.பி. 200) ஆகியோரின்எழுத்துக்களிலும்பொதுத் திருமுகங்கள்என்னும்குறிப்பு காணப்படுகிறதுஎன்கிறார். மேலும், கி.பி. 250-ம்ஆண்டைச்சார்ந்தஓரிஜின்என்னும்திருச்சபைத்தந்தையும்தன்னுடையஎழுத்துக்களில்பல இடங்களில் இந்த ஏழு கடிதங்களை பொதுத் திருமுகங்கள் என்றேகுறிப்பிடுகின்றார்.

பொதுத் திருமுகங்கள் என்னும் இவ்வார்த்தை புவியியலைஅடிப்படையாக் கொண்டதல்ல. மாறாக இதிலுள்ள இறையியல்கருத்துக்களும், பறைசாற்றும் மீட்பும் அனைவருக்கும் பொதுவானதுஎன்னும்உண்மையைவலியுறுத்துகின்றன. புனித பவுல்எழுதியகடிதங்கள்ஒருசமூகத்திற்கோ (கொரிந்து, உரோமை.. .) அல்லதுதனிநபருக்கோ (தீத்து,திமொத்தேயு, பிலமோன்) என்று உள்ளன. ஆனால், இந்தப் பொதுத்திருமுகங்கள் பநூ?த நிலப்பரப்பில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை,நல்லொழுக்கம், இறையியல்பற்றிப் பேசுகிறது. புனித ஜெரோம்உருவாக்கியவுல்காத்தா என்னும் இலத்தீன் மொழி பெயர்ப்பில் (கி.பி. 4-ம் நூற்றாண்டு)புனித பவுலின்கடிதங்களைத் தொடர்ந்துஇக்கடிதங்களைஅமைத்துள்ளார்.இந்தப் பாரம்பரிய முறையே இப்பொழுதும் தொடர்கிறது.இந்த பொதுத் திருமுகங்களுக்கான விளக்கவுரைகளைப் பாடமாகஎழுதித் தந்தஅருள்திரு வி. இரபேல், அருள்தந்தை. சந்தியாகு சே.ச.

அவர்களுக்குஎமதுநன்றிஉரித்தாகுக!
அன்புடன்அருள்திரு. ஜோமிக்ஸ
;இயக்குநர்.

1.பொதுத் திருமுகங்கள
2.புனித யாக்கோபு எழுதிய திருமுகம்
3.புனித பேதுரு எழுதிய முதல் திருமுகம்
4.புனித பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்
5.புனித யோவான் எழுதிய முதல் திருமுகம்
6.புனித யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்
7.புனித யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்
8.புனித யூதா எழுதியத் திருமுகம்

பொதுத் திருமுகங்கள்

புதிய ஏற்பாட்டின் 27 நூல்களில் 21 நூல்கள் திருமுகங்களாகஉள்ளன. அவற்றில் 13 திருமுகங்கள் புனித பவுலால்எழுதப்பட்டவையாகக் கருதப்படுகின்றன. எபிரேயர் திருமுகம் யாரால்எழுதப்பட்டது எனத்தெரியவில்லை. இவை போக மீதமுள்ள 7திருமுகங்களும் பொதுத் திருமுகங்கள் என அழைக்கப்படுகின்றன.அவை யாக்கோபு 1, 2 பேதுரு 1, 2, 3, யோவான்யூதா திருமுகங்களாகும்.இவை அனைத்தும் திருத்தூதர்களின்பெயரில் வருகின்றன.

பொதுத் திருமுகங்கள் எனத் தமிழில் மொழி பெயர்த்தாலும்ஆங்கிலத்தில் ஊயவாழடiஉ நுpளைவடநள என இவை அழைக்கப்படுகின்றன.அப்படியானால் 'கத்தோலிக்கத் திருமுகங்கள்' என்று இருக்க வேண்டும்.'கத்தோலிக்க' என்பதற்கு உலகளாவிய என்று பொருள். இப்பதத்தையுசேபியுஸ் என்பவர் (கி.பி. 260-340) முதல் முறையாக இந்த 7திருமுகங்களுக்கும் வழங்கினார். தமிழில் கத்தோலிக்கத் திருமுகங்கள்எனும்போது பிரிந்த சபையினர் கொள்ளாத திருமுகங்கள் என ஒருவேளை பொருளாகிவிடலாம். மற்றபடியும் 'கத்தோலிக்க' என்பதுமுழுக்கத் தமிழ்ச்சொல் அல்ல. எனவே அச்சொல்லின் பொருள்உணர்த்தும் 'பொது' எனஅடைமொழியோடு 'பொதுத் திருமுகங்கள்' எனஇவைஅழைக்கப்படுகின்றன.இப்பொதுத் திருமுகங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட சபைகளுக்குஎன்று இல்லாமல் உலகளாவிய திருச்சபைக்கு எழுதப்பட்டுள்ளன.ஆயினும் இப்படி'உலகளாவியத் திருச்சபைக்கு' என்றுகூறுவதுமுழுக்கமுழுக்க பொருந்தாது. ஏனெனில் பொதுத்திருமுகங்களில் ஒன்றாகக்கருதப்படாத 'எபிரேயர் திருமுகம்' குறிப்பாக யாருக்கு எழுதப்பட்டுள்ளதுஎன்பதில் தெளிவில்லை. பொதுத் திருமுகங்களில் ஒன்றானயோவான்எழுதிய 3-ஆம் திருமுகம் ஒரு தனிப்பட்ட ஆளுக்கு எழுதப்பட்டுள்ளது.யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம் பெயரிடப்படாத, ஆனால் ஒருகுறிப்பிட்ட சபைக்கு எழுதப்பட்டுள்ளது. பேதுருவின் முதல் திருமுகமோஆசியா மைனரிலுள்ள பல சபைகளுக்கு எழுதப்பட்டுள்ளது.

இந்த 7 திருமுகங்களுக்கும் திருமுக முன்னுரை இருப்பினும்இவற்றுள் பல, திருமுகம் என்று அழைக்கப்பட இயலாதவை. பழங்காலஉலகில்ஓர் எழுச்சியுரையைக் கடிதப் பாணியில்தருவதுவழக்கம். அதுபோன்றே இவற்றிலுள்ள பல கடிதங்கள் உள்ளன. தற்காலத்தில் நாம்'திறந்த கடிதம்' அல்லது 'பகிரங்க கடிதம்' என்று கூறுவது இப்பொதுத்திருமுகங்களுக்கும் பொருந்தும்.

1 பேதுரு, 1 யோவான் தவிர மற்ற பொதுத் திருமுகங்களைப் புதியஏற்பாட்டின் திருத்தொகையில் சேர்க்க முதலில் திருச்சபை தயங்கியது.இதற்குக் காரணம் அவை உண்மையில் திருத்தூதர்களால்எழுதப்பட்டவைதானா என்ற ஐயப்பாடே. தொடக்ககால கிறிஸ்தவர்கள்புதிய ஏற்பாட்டை திருத்தூதர் நம்பிக்கையின்கருவூலம் என்றே கருதினர்.எனவேதிருத்தூதர்களின்சாட்சியத்தை மட்டுமேபுதியஏற்பாட்டில்சேர்க்கவிரும்பினர். ஆயினும் இன்று நமது சிந்தனை வேறாக உள்ளது.இத்திருமுகங்கள் அனைத்துமே திருத் தூதர்களால் நேரடியாகஎழுதப்பட்டிருக்க இயலாது என நாம் கருதினாலும் அவை திருத்தூதரதுநம்பிக்கையையே கொண்டிருக் கின்றன. எனவே அவற்றைஏற்றுக்கொள்கிறோம். நான்காம் நூற்றாண்டின் இறுதிக்குள் அல்லதுஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குள் பெரும்பாலான எதிர்ப்புகள்மறைந்து இந்த 7 திருமுகங்களும் லத்தீன் திருச்சபையிலும் கிரேக்கத்திருச்சபையிலும் திருத்தொகையில் சேர்க்கப்பட்டுவிட்டன. சிரியாதிருச்சபை மட்டும் விதிவிலக்காயிருந்தது.

 

2. புனித யாக்கோபு எழுதிய திருமுகம்

2.1. ஆசிரியர்
இத்திருமுக ஆசிரியர் தன்னைக் கடவுளுக்கும் ஆண்டவராகியஇயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு என்றுகுறிப்பிடுகிறார் (1:1). அவர் தன்னைக் குறித்து 'போதகர்' (3:1) என்றுகுறிப்பிடுகிறார். மற்றபடி எதுவும் கூறவில்லை. கடிதத்தின் இறுதியில்வாசகர்களுக்குவாழ்த்துஎதுவும் அனுப்பவில்லை. வேறுநண்பர்களின்சில கடிதங்கள் போல் வழக்கமான முடிவு இல்லை. அப்படியிருந்தால்ஆசிரியர் பற்றியும் வாசகர் பற்றியும் சிறிது அறிய இயலும் (உரோ 16;கலா 6:11-18; 1பேது 5:12-14). எனவே இங்கு யாக்கோபு என்ற பெயர்மட்டுமே உள்ளது. யார் இந்த யாக்கோபு?

பரம்பரை நம்பிக்கைப்படி யாக்கோபு ஆண்டவரின் சகோதரர்.எருசலேம் திருச்சபையின் தலைவர். பவுலுடன் தொடர்புகொண்டிருந்தவர் (கலா 1:19; 2:9, 12, திப 15:13). பவுலின் நம்பிக்கைபற்றிய போதனையால் எழுந்த தவறான கண்ணோட்டத்தைக் களையஇவர் இத்திருமுகத்தை எழுதினார் (2:14-26).ஆனால் பலர் இப்பரம்பரை நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதில்லை.

1) இக்கடிதம்2-ஆம்நூற்றாண்டின்இறுதியில்ஓரிசன்காலத்துக்குமுன் அறியப்படவில்லை. திருத்தூதரான யாக்கோபு எழுதியிருந்தால்அவர் பிரபல்யமானவர் என்பதால் உடனேஅதிகம் பரவியிருக்கும்.

2) ஆசிரியருக்கும் இயேசுவுக்கும் இடையே நெருக்கமான உறவுஇருப்பது போல் இக்கடிதம் மூலம் தெரியவில்லை. ஆசிரியர்பெரும்பாலும் கிரேக்க மற்றும் யூத பாரம்பரியங்களையேகையாண்டுள்ளார். எருசலேம் திருச்சபையின்தலைவரான யாக்கோபுஇப்படி மற்றைய பாரம்பரியங்களை எடுத்தாண்டிருக்க மாட்டார். தன்அதிகாரத்தின் அடிப்படையிலும் இயேசுவின் போதனையின்அடிப்படையிலும் எழுதியிருப்பார்.

3) ஆசிரியர் நல்ல கிரேக்க நடையில் எழுதுகிறார். இது அரமேயம்பேசும் எருசலேம் யாக்கோபிற்கு இயல்பானஒன்றாக இருக்க இயலாது.மேற்கண்ட வாதங்கள் முடிவானவை அல்ல் எனினும் அவைபாரம்பரிய நம்பிக்கையை நாம் ஏற்றுக் கொள்ள நம்மைத் தடுக்கிறது.மாறாக பிற்காலத்தில் ஒருவர் பல போதனைகளை எழுதி ஆண்டவரின்சகோதரர் பெயரால் அனுப்பியிருக்கலாம்.

யாக்கோபு என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்ததில் வேறுநோக்கமும்இருந்திருக்கலாம். யாகப்பர் என்பது 'யாக்கோபு' எனும் குலமுதுவர்பெயரின் திரிபு ஆகும். அந்த யாக்கோபு பன்னிரு குலங்களின் தந்தை,புதிய இஸ்ரயேலாகிய திருச்சபைக்கு இப்போது யாக்கோபு தலைவராகஇருக்கிறார் என்ற கருத்தை உணர்த்துவதற்காக இந்தப் பெயரைத் தெரிவுசெய்திருக்கலாம் (காண்1:1).

2.2. வாசகர்கள்
யாக்கோபு திருமுகம் உலகெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிருகுலத்தினருக்கும் எழுதப்பட்டுள்ளது (1:1). இது யூதக் கிறிஸ்தவர்களைக்குறிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களை மட்டும் குறிப்பது அல்ல.ஏனெனில் இக்கடிதத்தில் வரும் போதனை யூதக் கிறிஸ்தவர்களுக்கும்பிற இனக் கிறிஸ்தவர்களுக்கும் உரியது. எனவே இதன் வாசகர்கள்உலகின் எப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களாகவும் இருக்கலாம்.ஆயினும் உலகெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிருகுலத்தினருக்கும் என்பதால் இப்போதைய கிறிஸ்தவர்கள் பழையஇஸ்ரயேலின்தொடர்ச்சியாக வரும் புதிய இஸ்ரயேலைச் சார்ந்தவர்கள்என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

மொத்தத்தில் கடிதத்தில் வரும் பகுதிகளின் அடிப்படையில்பார்த்தால் இக்கடித வாசகர்கள்:

- நம்பிக்கை உள்ளவர்களாக காட்டிக் கொள்பவர்கள். ஆனால்அதன்படி செயல்படாதவர்கள் (2:14-26)
- ஆள் பார்த்து செயல்படுபவர்கள் (2:1-7)
- தங்கள் சோதனைகளுக்குக் கடவுளே காரணம் என்றுகூறுபவர்கள் (1:13).
- தங்கள் நாவை அடக்க இயலாதவர்கள் (3:2-12)
- சண்டை சச்சரவுகளை வளர்ப்பவர்கள் (4:1-12)இப்படிப்பட்டவர்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை வாழஅறிவுரை வழங்குகிறார்.

2.3. காலம;இக்கடிதம் பழைய பாரம்பரியங்கள் மற்றும் போதனைகளின்தொகுப்பு எனில் மிக முந்தைய காலத்திலேயே எழுதப்பட்டிருக்கவேண்டும்.சில போதனைகள் இயேசுவின் போதனை காலத்தில்உருவாயிருக்க வேண்டும். சில அதற்கு முன்னமே பழைய ஏற்பாட்டின்அடிப்படையில் உருவாயிருக்க வேண்டும். சில பவுலின் தூதுரைப்பயணங்களுக்குப் பின்உருவாயிருக்க வேண்டும் (2:14-26).இக்கடிதம் பவுலின் போதனையால் எழுந்த தவறானகண்ணோட்டத்தைக்களையஎழுதப்பட்டதுஎனஏற்றுக்கொண்டால்கி.பி.50க்குப் பின் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் மிகப் பின்னையகாலத்தில் இது திருத்தொகையில் சேர்க்கப்பட்டது போன்றவற்றின்அடிப்படையில் பார்த்தால் இது கி.பி. 100க்குப் பின் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

2.4. அமைப்பு

1) வாழ்த்துரை (1:1)
2) துன்பத்திலும் சோதனையிலும் பொறுமை (1:2-18)

அ. துன்பத்தில் மகிழ்ச்சி (1:2-12)
ஆ. சோதனையின் காரணம் ( 1:12-15)
இ. இறைவார்த்தையில் நமது பிறப்பு (1:16-18).

3) உயிருள்ள நம்பிக்கை (1:9-27)

அ. கோபத்தை அடக்குதல் (1:9-21)
ஆ. இறைவார்த்தையின் படி நடப்பவர்கள் (1:22-25)
இ. இறைவனின் தொண்டன் (1:26-27)

4) ஏழைகளை மதித்தல் வேண்டும் (2:1-13)5) நம்பிக்கையும் நற்செயல்களும் (2:14-26)

அ. மையக்கருத்து (2 : 14-17)
ஆ. சில எடுத்துக்காட்டுகள் (2:18-26)

6) நாவடக்கம் (3:1-12)

7) மெய்ஞ்ஞானம் (3:13-18)

8) சண்டை சச்சரவு (4:1-2)

9) பணக்காரருக்கு எச்சரிக்கை (4:13-5:1-6)

அ. எதிர்காலத்தில் நிச்சயமின்மை (4:13-17)
ஆ. எச்சரிக்கை (5:1-6)

10) இறுதி அறிவுரை (5:7-20)

அ. ஆண்டவர் வருகைக்குக் காத்திருத்தல் (5:7-12)
ஆ. நோயில் பூசுதல் (5:13-15)
இ) பாவ அறிக்கையும் செபமும் (5:16-18)
ஈ) பாவிகளின் மன மாற்றம் (5:19-20)

2.5. முக்கிய இறையியல் கருத்துக்கள்
புதிய ஏற்பாட்டு நூல்களில் இறையியல் கொள்கை குறைந்த நூல்யாக்கோபு திருமுகமாகும். பவுல் திருமுகங்களிலோ, புதிய ஏற்பாட்டின்மற்றநூல்களிலோ உள்ளஆழமானஇறையியல்சிந்தனைகள்யாக்கோபுதிருமுகத்தில் இல்லை. எடுத்துக்காட்டாக யாக்கோபு திருமுகம்கிறிஸ்துவின் மனித அவதாரத்தைச் சொல்லவில்லை. கிறிஸ்துவின்பெயர் இரு இடங்களில் மட்டுமே வருகிறது. (1:1, 2:1). கிறிஸ்துவின்பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவை குறித்து மறைமுகமாகக் கூடச்சொல்லப்படவில்லை.ஆனால், இத்திருமுகம் கிறிஸ்துவ வாழ்வின் எதார்த்த நிலைகுறித்துபலஅறிவுரைகளைத் தருகிறது. அதுமட்டுமல்லாமல்இக்கடிதம்யூதக் கடிதம்போல் காட்சியளிக்கிறது. ராபிகளின் யூதக் கருத்துக்கள்இங்குக் கிறிஸ்துவச் சாயம் பூசப்பட்டதாகக் காட்சியளிக்கின்றன.

1) சோதனை
துன்பத்தில் இன்பம், நம் குணத்தைக் கட்டியெழுப்ப சோதனைப்பயன்படுத்தப் படுகிறது என்னும் கருத்துக்கள் யூதப் போதனைகளாகும்.அவை இங்கே காணப்படு கின்றன (1:2-4). இதை விட சோதனையின்காரணம் முக்கியமாய் தரப் பட்டுள்ளது (1:13-15). இங்கும் ஆசிரியர் அவர் காலத்து யூதஇறையியலைப் பிரதிபலிக்கிறார். யூதராபிகளில் பாவம் எப்படி வந்தது எனும்சிக்கலுக்கு விடைகாண முயன்று,மனிதனிடத்தில் இருக்கும் தீய இச்சைஅவனைப் பாவத்திற்கு இட்டுச் செல்கிறதுஎன்றுகூறினர். ஆனால் யாக்கோபு 1:13-15இக்கருத்தை மறுதலிப்பது போல் உள்ளது.கடவுள் எல்லாவற்றையும் படைத்தார்;அப்படியானால் மனிதனிடத்தில் இருக்கும்தீய இச்சையையும் அவரே படைத்தார்.அங்ஙனமெனில் மனிதர் பாவத்திற்குப்பொறுப்பாளிகள் அல்ல எனும் யூத ராபிகளின்போதனையை யாக்கோபுமறுக்கிறார். யாக்கோபு கூறுகின்றபடி ஒவ்வொரு மனிதனும் தன்இச்சையின் கவர்ச்சியால் சோதிக்கப்படுகின்றான். இச்சை பாவத்தைப்பெற்றெடுக்கிறது. பாவம் சாவை ஈன்றெடுக்கிறது (1:14-15).

2) சட்டம்
யாக்கோபு திருமுகம் சட்டம் பற்றிக் கூறுகிறது. ஆயினும்தெளிவானகருத்து இல்லை. திருமுகம் முழுவதும் நல்லொழுக்கம் பற்றிகூறுகிறது. கிறிஸ்துவம் நல்லொழுக்கப் போதனைகளுடன் தரப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் இப்போதனைகள் ஒரு நிறைவானச்சட்டமாகத் தரப்பட்டுள்ளது.இந்தச் சட்டம் நிறைவானது (1:25). ஏனெனில் இது கிறிஸ்துவால்நிறைவாக்கப்பட்டுள்ளது.இந்தச் சட்டம் விடுதலையாக்கும் சட்டம் (1:25). மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது முரண்பாடு போல் தோன்றும். ஏனெனில்சட்டம் என்றாலே கட்டளைகளும் விலக்குகளும் இருக்கும். யாக்கோபுஇங்கேசட்டத்தின்விளைவுகள்பற்றியகண்ணோட்டத்தில்பேசவில்லை.மாறாக பாவத்திலிருந்தும் இச்சையிலிருந்தும் விடுதலையடைந்தமக்களுக்குரிய சட்டம் எனும் கருத்தில் பேசுகிறார்.

3) நம்பிக்கையும் நற்செயல்களும்
யாக்கோபு கூறுகின்றபழ்ம்பிக்கை பக்தியின்அடிப்படை(1:3; 2:5).இது கடவுள் இருக்கிறார் என நம்புவது மட்டுமல்ல் அவர் நல்லவர்என்றும் மக்களுக்கு நன்மை செய்பவர் என்றும் நம்புதல் (1:6, 13),நம்பிக்கை கடவுளின் வல்லமை யிலும், அவர் அற்புதங்களைச் செய்யவல்லவர் என்பதாலும் நம்பிக்கை வைத்தலையும் உள்ளடக்கியது. இதுசெபத்துடன் தொடர்புடையது (5:15-16). இப்பகுதிகள் யாக்கோபுநம்பிக்கையைச் செயல்பாடுஉடையநம்பிக்கையாகக் காண்பதைச்சுட்டிக்காட்டுகின்றன. அதோடுயூதத்துவத்தோடு அவருக்குள்ளதொடர்பையும் சுட்டிக்காட்டுகிறது.ஆனால் யாக்கோபு யூதத்துவத்தின்எல்லையைத் தாண்டி, நம்பிக்கைஇயேசு கிறிஸ்துவில் வைக்கப்படவேண்டும் என்கிறார் (2:1).யாக்கோபு கூறும்நம்பிக்கைக்கும் இயேசுவின் போதனைக்கும்ஒற்றுமைகள் உள்ளன. இயேசு கூறுகின்றபடி நம்பிக்கை தெய்வீகவல்லமையைப் பெறுவது, பலநேரங்களில்குணமாக்கும்வல்லமையுடன்தொடர்புடையது.

- நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் (மாற்கு 9:23).
- ஆகவே உங்களுக்குக் சொல்கிறேன். நீங்கள் இறைவனிடம்வேண்டும் போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ,அவற்றைப்பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள் (மாற்11:24).
- மகளே, உனது நம்பிக்கை உள்னைக் குணமாக்கிற்று.அமைதியுடன் போ (மாற்கு 5:34).மேற்கண்ட கூற்றுகள் செயல்பாடுடைய நம்பிக்கையைக்குறிப்பிடுகின்றன.

யாக்கோபு கூறுவதும் அத்தகையதே.நம்பிக்கை பற்றிய முக்கிய பகுதி யாக் 2:14-26 ஆகும். இங்கேநம்பிக்கையும்நற்செயல்களும்வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. இங்கேயாக்கோபு பவுலின்கருத்துக்களைமறுக்க முடியவில்லை. உண்மையில்இருவரின் கருத்துக்களும் ஒத்தே போகின்றன. ஏனெனில் யாக்கோபுகூறுகின்றபடியும் நம்பிக்கை இயேசுவை மையமாகக் கொண்டது.நம்பிக்கை கொள்பவன் செய்ய வேண்டிய முதற்காரியம் அதன்படிவாழ்தல் என்பதை இருவருமே ஒத்துக்கொள்கின்றனர். 2:14-26 இல்வரும் நம்பிக்கை எபிரேய முறைப்படியான நம்பிக்கையுடன் கூடியநம்பிக்கை அல்ல. யாக்கோபு இதனை உண்மையான நம்பிக்கையாகக்காணவில்லை (தன்னிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லுகிறவன்).புனித பவுலும் இதனைநம்பிக்கை என்று கருதமாட்டார்.

ஆனால் 'யாக்கோபு நற்செயல்கள்' என்று கூறுவது பவுலின்கருத்தினின்று மாறுபட்டதாகும். யாக்கோபைப் பொறுத்தவரைநற்செயல்கள் நம்பிக்கையின் அடிப்படையிலான நற்செயல்கள்,உண்மையானபக்தியைக்காட்டுபவை. அவைபிறரன்புச் செயல்களையும்உள்ளடக்கியவை(2:8). பவுல்இவற்றை ஆவியின்கனிஎன்பார். பவுல்நற்செயல்கள் என்று பேசும் போது சட்டத்தின் செயல்களையும்முக்கியமாய் குறிப்பிடுகிறார். உரோமையர் திருமுகத்திலும் கலாத்தியர்திருமுகத்திலும் இவற்றிற்கு எதிராகவே பேசுகிறார்.எனவேயாக்கோபின்நம்பிக்கை2:14-26 என்பதுபவுலின்கருத்தைமறுப்பதல்ல. மாறாக, பவுலின் நம்பிக்கையினால் ஏற்புடைமை எனும்கொள் கையைத் தவறாகப் புரிந்து கொள்தலைக் கண்டிப்பதாகும்.

4) ஞானம்
ஞானம்பற்றியாக்கோபு கூறுவதுயூதத் தனமாய்உள்ளது. ஞானம்தத்துவார்த்தமானதல்ல, எதார்த்தமானது. இது ஆராயும் வல்லமையோபுத்தி சம்பந்தப்பட்ட சிக்கல்களை உய்த்துணரும் வல்லமையையோகுறிப்பிடுவதுஅல்ல. ஏன்? எதற்கு? என்றுகேள்விகள்பற்றியதுஅல்ல.இது வேண்டுதலினால் தேடப்பட வேண்டியது. இது கடவுளின்கொடை(1:5). இக்கருத்துக்கள்ஞானஇலக்கியங்களிலிருந்துபெறப்பட்டவை(சால7:7, நீமொ 26,சீஞா 1:1).3:13-18 பகுதியில் சர்ச்சைக்குரியவிதத்தில் ஞானம் பற்றி கூறப்பட்டுள்ளது.விண்ணிலிருந்துவரும்ஞானம், மண்ணிலிருந்து வரும் ஞானம், பேய்த்தன்மை வாய்ந்தஞானம் என்றெல்லாம் கூறுவதால் இதுஅக்கால அறிவுத்திறன் கொள்கையை(ழுnடிளவiஉளைஅ) கண்டிப்பதாக இருக்கலாம்எனப் பலர் எண்ணுகின்றனர். (அறிவுத்திறன் கொள்கை அறிவினால்மீட்படைதலைக் குறிக்கிறது - காண்க).

5) இறுதிக்காலம்
மூன்று வகையானஇறுதிக்காலம் பற்றிய கருத்துக்கள் உள்ளன.

அ)இறையாட்சி
இறையாட்சி பற்றிய கூற்று 2:1-7-இல் வரும் ஆள் பார்த்துசெயல்படுதல்பற்றியகூற்றின்அடிப்படையில்எழுகிறது. பணக்காரருக்குஆள்பார்த்து செயல்படுதல் கூடாது. ஏனெனில் உலகின் பார்வையில்ஏழைகளாய் இருப்பவர்களை நம்பிக்கையில் செல்வர்களாகவும், தம்மீதுஅன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப் பேறாகப்பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துக்கொள்ளவில்லையா? (2:5) இதுலூக்கா நற்செய்தியில் வரும் ஏழைகள் பற்றிய போதனையைப்பிரதிபலிக்கிறது.

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்;ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே” (லூக் 6:20).

இறையாட்சி என்பது இவ்வாழ்வில் ஓரளவு நிறைவேற்றம் பெற்றகடவுளின் ஆட்சி. ஆனால் எதிர்காலத்தில் முழு நிறைவையும் பெறும்(யாக் 2:5). இது மீட்பு அல்லது முடிவில்லா வாழ்வு எனும் சொற்களுக்குஇணையானது.

ஆ)தீர்ப்பு
யாக்கோபு திருமுகத்தின்இறுதிக்காலகருத்தில்முக்கியமானதுதீர்ப்புபற்றிய கருத்தாகும்.

2:12-இல் "விடுதலையாக்கும் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படவேண்டியவர்களுக்கு ஏற்றதாய் உங்கள் பேச்சும் நடத்தையும் அமைதல்வேண்டும்” என்கிறார்.2:13-இல் இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புத்தான்கிடைக்கும் என்கிறார்.தீர்ப்பு நாம்செய்யும்நற்செயல்களின்அடிப்படையில்வழங்கப்படும்.

3:1 - இல் ஆசிரியர் போதர்களுக்கு அறிவுறுத்துகிறார். போதகர்எனும் சலுகையின்அடிப்படையிலும் தீர்ப்பு உண்டு என்கிறார்.கிறிஸ்தவர்கள் அல்லாத செல்வந்தருக்கானத் தீர்ப்புப் பற்றியும்இக்கடிதம் கூறுகிறது1:10-11இல் செல்வமுள் ளவர்களின் வாழ்வுசீக்கிரம் மறைந்து விடுகிறது எனக் குறிப்பிடுகிறார்.

5:1-6-இல் இறைவாக்கினரின் தன்மையுடன் தீர்ப்புப் பற்றியும்குறிப்பிடுகிறார். பணக்கார நிலச்சுவான்தார்கள் இன்பத்தில் திளைத்துஏழைகளை வஞ்சித்துள்ளனர். அவர்கள் நீதிமான்களைக்கொன்றுள்ளனர். இவையனைத்தும் அவர்களுக்குத் தண்டனைத்தீர்ப்பைப் பெற்றுத்தருகின்றன (5:5).தீர்ப்பு பற்றிய இறுதிப் பகுதி (5:9) யாக்கோபுவின் கிறிஸ்துவவாசகர்களுக்கு எழுதப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் வாழ்வில் துன்பச்சூழலில்மனந்தளர்ந்துவிட்டனர். அவர்களுக்குஎழுச்சியுரை கூறுகிறார்."சகோதர சகோதரிகளே, நீங்கள்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறுஒருவர் மற்றொருவருக்கு எதிராகமுறையிடாதீர்கள். இதோ! நடுவர்வாயிலில் நின்று கொண்டிருக்கிறார்(5:9).

இ)வருகை
பற்றிய நம்பிக்கைகிறிஸ்துவ இலட்சிய வாழ்வுக்குஊக்கமூட்டுவது எனும் கருத்து இத்திருமுகத்தில் வருகிறது. ஆண்டவரின்வருகை நெருங்கி வந்துவிட்டது (5:8).எனவே அனைத்துத் துன்பங்களையும்பொறுமையுடன் தாங்க வேண்டும்.வருகை பற்றிய நம்பிக்கை வல்லமையுடையது, உடனடிவருகை என்பது இவ்வகையில் இதுதெசலோனிக்கருக்கு எழுதிய கடிதங்களின் 'வருகை' பற்றியகண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது.

2.6. திருமுறைப் பட்டியலில் யாக்கோபின் திருமுகம்
மத்தேயு நற்செய்தியைத் தவிர்த்து, மற்ற யூதக் கிறிஸ்தவநூல்களைப் போலவே, இந்நூலும் எல்லாராலும் எல்லா இடங்களிலும்திருமுறைப் பட்டியலில் சேர்ந்ததாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.நூலின் ஆசிரியர் பற்றிய ஐயம்,செமித்தியப் பின்னணி, கோட்பாடுகள்இல்லாமை, பவுலுக்கு எதிரான போக்குஇருப்பதாகத் தோன்றுதல் ஆகியகாரணங்களுக்காக இந்நூல் ஓரிசன்வரை திருமுறைப்பட்டியலில் இடம்பெறவில்லை. ஓரிசன் தான் இதனைமுதன் முதலில் திருமுறைப் பட்டியலில்சேர்க்கிறார். இந்நிலைக்கு எதிரானபோக்கைச் சில திருச்சபைகள்கொண்டிருந்தன என்று யூசேபியுகூறுகிறார். மேலைத் திருச்சபையின்திருமுறைப் பட்டியலில் கி.பி. 350க்குபின்தான் இந்நூல் தோன்றுகிறது. இதற்கு எதிரான போக்குடைய"சிர்திருத்தவாதிகள்” சிலரும் பின்பு இதை ஏற்றுக் கொண்டனர்.திரிதெந்தீன் பொதுச்சங்கங்கள் இந்நூலும் திருமுறைப்பட்டியலைச்சேர்ந்தது என்று உறுதியாகக் கூறியது.

2.7. இலக்கிய நடை
நூலின் முன்னுரையில் திருமுகங்களுக்குரிய வாழ்த்துக் கூறுதல்உள்ளது (யாக் 1:1). ஆனல் முடிவுரையில் வாழ்த்தும் ஆசீரும் கூறுதல்இல்லை. நூலில் திருமுகத் தொனியும் இல்லை எனலாம். புதியஏற்பாட்டின்பிறதிருமுகங்களில்சிறப்பாகக்காணப்படும்கோட்பாடுகளும்,அவற்றின் விளக்கங்களும் இந் நூலில் காணப்படவில்லை. நூல்முழுவதும் ஒழுக்கமுறை பற்றிய அறிவுரையாக, ஊக்கவுரையாகஅமைந்துள்ளது. இந்நூல், பழைய ஏற்பாட்டு ஞான இலக்கியநூல்களோடும், பன்னிரண்டு மூதாதையர்களின் ஏற்பாடு, முதலாம்ஏனோக்கு, 4-ஆம் மக்கபேயர், கும்ரானின் சில ஏடுகள் போன்ற புறநூல்களில் காணப்படும் செபக்கூட அறிவுரைகளோடும் தொடர்புடையதாகத் தெரிகிறது. ஆசிரியர், ஸ்தோயிக்குகளின் வாதமுறைகளையும்,கேள்வி - பதில் முறையையும், கற்பனை உரையாடல் முறையையும்அறிந்திருப்பதாகத் தெரிகிறது (யாக் 2:4 தெர் 8, 14தொ 18தெர் 3:11 தெர்4:4 தொ 5:13 தொ). வழிபாடுமற்றும்திருமுழுக்குப் போதக வாசகங்களின்சுவடுகள் காணப்படுகின்றன. தமது காலத்தில் நிலவிய யூத, கிரேக்கஅறிவுரை வடிவங்களையெல்லாம் ஆசிரியர் பயன்படுத்துவதாகத்தெரிகிறது. நூலில் கிரேக்க நடை நயமிக்கதாக உள்ளது.

2.8. நோக்கம்
இந்த நூல் எழுதப்பட்டதற்கு எந்தக் குறிப்பிட்ட நோக்கமும்இருந்ததாகத் தெரியவில்லை. எந்தக் கோட்பாடும் இதில் தனிப்பட்டமுறையில் விளக்கப்படவில்லை. கிறிஸ்தவர்கள் அன்றாட வாழ்வில்கடைப்பிடிக்க வேண்டிய சில காரியங்களைப் பற்றியே அறிவுரைதருகிறார் ஆசிரியர். அவர் தரும் குறிப்புகளும் எடுத்துக்காட்டுகளும்ஒன்றிற்கொன்று தொடர் பற்றவையாகத் தோன்றுகின்றன.இந்நூல் ஒரு கடிதமன்று, ஓர் அறிவுரையாகும். வெறும் தத்துவம்பேசும் கிறிஸ்தவத்தால் பயனில்லை; அதை வாழ்ந்து காட்ட வேண்டும்.கிறிஸ்தவ நம்பிக்கையின் பொருள் வாழ்ந்து காட்டுவதில்தான்அடங்கியிருக்கிறது. அப்படியில்லையெனில் அந்நம்பிக்கைபொருளற்றது, பயனற்றது. இக்கருத்தையே மையமாகக் கொண்டு,அதைப் பற்பல கோணங்களில் விளக்குகிறார் ஆசிரியர்.

2.9. முக்கிய படிப்பினை
இக்கடிதத்தின் நோக்கம் அக்காலத்தில் எழுந்த தவறானகருத்துக்களைக் களைவது, முக்கியமாக இயேசுவைப்பற்றி எழுந்ததவறானகருத்துக்களைக் களைவது. அத்துடன்கிறிஸ்துவச் சமூகத்தின்ஆன்மீக மற்றும் சமூக விழிப்புணர்வை ஆழப்படுத்துவது (3:17).இச்சமூகத்தின் சில முந்தைய உறுப்பினர்கள் (2:19) இயேசுவைமெசியாவாக ஏற்றுக் கொள்ள மறுத்தனர் (2:22). அத்துடன் அவர்உண்மையில் மனிதன் என்பதையும் மறுத்தனர் (4:2). இப்படிப்பட்டத் தவறுகளைக் களையக் கூறுகிறார் இதன் ஆசிரியர். இதை அவர்திருத்தூதுவச் சாட்சியத்தின் அடிப்படையிலும் அதன் தொடர்சியானசாட்சியத்தின் அடிப்படையிலும் செய்யக் கோருகிறார். உண்மையானகிறிஸ்துவ அன்பும், நல்லொழுக்கமும், நம்பிக்கையும் வரலாற்று பூர்வவெளிப்பாடான அடிப்படையிலும் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின்அடிப்படையிலும்தான் எழமுடியும் என்கிறார். தந்தையோடு உள்ளஉறவான கிறிஸ்துவ வாழ்வின் நிறைவு உண்மையான நம்பிக்கையின்அடிப்படையில் எழ வேண்டும். அது சகோதர அன்பு நிறைந்த வாழ்வில்வெளிப்பட வேண்டும். கடவுளைப்பற்றிய அறிவும் சகோதர அன்பும்பிரிக்க முடியாதவை. இதில்ஒன்றில்தவறுஇருந்தால்அதுமற்றதையும்பாதிக்கிறது.

இக்கடிதத்தின்மொழியும் அமைப்பும் நேரடியானது. கூறியதையேமீண்டும் கூறுவது. இதன் ஆசிரியர் ஒளிக்கும் இருளுக்கும் இடையேஉள்ள வேறுபாடுகளைக் காட்டுகிறார். கிறிஸ்துவனுக்கும் உலகுக்கும்உள்ள வேறுபாடுகளைக் காட்டுகிறார். உண்மைக்கும் பொய்க்கும்இடையேஉள்ளவேறுபாடுகளைக் காட்டுகிறார். அதன்மூலம்கிறிஸ்துவவாழ்க்கைக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் அதன் பொறுப்புகளையும்விவரிக்கிறார்.

இக்கடிதம் இறையியல் கட்டுரை என்று கூறப்படினும் ஒருவகையில் கிறிஸ்துவ நம்பிக்கையைச் சிறு சிறு கூற்றுக்களாகக்கூறுதலும் ஆகும். இக்கடிதம் கிறிஸ்துவின் மனிதத் தன்மையையும்தெய்வீகத் தன்மையையும் சுட்டிக் காட்டுகிறது. அது கிறிஸ்துவவாழ்வுக்கு எவ்வளவு தொடர்புடையது என்பதையும் காட்டுகிறது.

2.10. இன்றையச் சூழலில் யாக்கோபு திருமுகம;
இன்று மனித இனமும் திருச்சபையும் சமூக விழிப்புணர்வுகொண்டனவாக விளங்குகின்றன. செல்வத்தை எப்படிப் பயன்படுத்திகூட்டு வாழ்க்கை வாழ்வது என்பதைச் சிந்திக்கின்றன. அப்படிப்பட்டசூழலில் இத்திருமுகம் இன்னும் நன்கு ஆய்வுடன் படிக்கப்படவேண்டியதாகிறது.ஏனெனில் இக்கடிதம் நல்ல சமூகத்தைக் கட்டி எழுப்பும்நற்குணங்கள் பற்றிப் பேசுகிறது.செல்வத்தைப் பாரபட்சமாய் அனுபவிப்ப தால் வரும் சமூகத்தீமைகளையும் சுட்டிக் காட்டுகிறது.இக்காலத்தில் கடவுளின் கடந்த தன்மையும் அவரின்அனைத்தையும் செய்ய வல்ல ஆளுமையும் மறக்கப்படுகின்றன.இக்கடிதமோ மாற்றமில்லா கடவுளைப் பற்றிப்பேசுகிறது. அவரைத் தீயவர்கள் சோதிக்கலாகாது என்கிறது (1:13). அவருக்கு மனிதகுலம்தாழ்ச்சியுடன் தன்னையே அர்ப்பணிக்கவேண்டும் என்கிறது (4:7, 10). அவர் சட்டம்தருபவர், நடுவர், மீட்பர், அழிப்பவர் (4:11-12)என்கிறது. அவர் ஞானமளிப்பவர் (1:15)கருணைகாட்டுபவர் (4:6) என்கிறது.விசுவாசத்தில் நிலைத்து நின்று அவரை அன்புசெய்வோருக்கு வாழ்வில் மணிமகுடத்தைத் தரவாக்களிக்கிறவர் என்கிறது (1:12).

கத்தோலிக்கத் திருச்சபையில் நோயில்பூசுதல் எனும் அருட்சாதனத்தின் போதுயாக்கோபு திருமுகப்பகுதி (5:13-16) வாசிக்கப்படுகிறது. நம்பிக்கையுடன்வேண்டுதல் நோயாளியைக் குணமாக்கும் (5:15) என்பதன்அடிப்படையில் இத் திருவருட்சாதனம் நிறைவேற்றப்படுகிறது. 'அவன்பாவம் செய்தவனாயிருந்தால் மன்னிப்புப் பெறுவான் (5:16) என்பதன்அடிப்படையில் இந்த நோயில் பூசுதல் சடங்கு பாவமன்னிப்புச்சடங்காகவும் விளங்குகிறது.

 

3. புனித பேதுரு எழுதிய முதல் திருமுகம்

3.1. ஆசிரியர்
திருமறைத் தந்தையர் காலத்திலிருந்தே முதல் பேதுரு திருமுகம்திருத்தூதரான பேதுருவால் எழுதப்பட்டது என ஒத்துக்கொள்ளப் பட்டுவந்தது. ஆனால் நவீன காலத்தில் இதற்கு எதிரான கருத்துக்கள்உருவாயின. ஆயினும் அவை பாரம்பரிய நம்பிக்கையை உடைத்தெறிந்துவிடவில்லை.

கடிதத்தில் வரும் கருத்துக்கள் பலவும் திருத்தூதரான பேதுரு இக்கடிதத்தை எழுதினார் என்பதற்கு எதிரான ஐயப்பாட்டைகளையமுற்படுகின்றன. ஆசிரியர் தன்னை இயேசு கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும் வெளிப்படவிருக்கும் மாட்சிமையில் பங்குகொள்ளப்போகிறவனுமாகிய நான், உடன் மூப்பன் என்றும் கூறுகிறார்(5:1) 5:13-படி பேதுருவில் மொழிபெயர்ப் பாளராக மாற்கு இருந்ததுபூடகமாகச் சொல்லப்படுகிறது. பப்பியாஸ் என்பவர் இதைக் கூறுகிறார்.கிறிஸ்துவின் வாழ்வு பற்றிய மேற்கோள்கள் மற்றும் அவரது போதனைகளின்று மேற்கோள் ஆகியவற்றைத் தருவதன் மூலமும் திருத்தூதரானபேதுரு இக்கடிதத்தின்ஆசிரியர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

நல்லகிரேக்க நடையில்எழுதப்பட்டுள்ளதால்இதனைமீனவரானபேதுருஎழுதியிருக்க இயலாதுஎனக் கருதப்பட்டது. ஆனால், பேதுருதன்செயலாளர் மூலம் இதனை எழுதியிருக்க வேண்டும் 5:12- இல் தான்சில்வான் மூலம் இதை எழுதியதாகக் குறிப்பிடுகிறார். எனவேஇக்கடிதத்தின் கருத்து பேதுருவுடையது. ஆனால் மொழிசெயலாளருடையது என ஏற்றுக்கொள்ளலாம்.

3.2. வாசகர்கள்
இக்கடிதத்தின் முதல் வசனம், ஆசியா மைனரிலுள்ளகிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது என்பதைக் கூறுகிறது. இவர்கள்யூதமதத்தினின்று கிறிஸ்தவ மதத்திற்கு வந்தவர்களா அல்லது பிற இனமதத்தினின்று வந்தவர்களா என்பது வாதத்திற்குரியது. இரண்டுமேசாத்தியம் என்பதால் எந்த வகைக் கிறிஸ்தவர்களும் தனிப்பட்டமுறையில்குறிப்பிடவில்லைஎனலாம். இக்கடிதம்எழுதப்பட்டகாலத்தில்பவுலும் மற்றோரும் பல பிற இனத்தாரை ஆசியாமைனரில்மனந்திருப்பியிருந்தனர். எனவேபேதுருயூதக் கிறிஸ்தவர்கள், பிறஇனக்கிறிஸ்தவர்கள் ஆகிய யாவரையும் மனதில் வைத்தே இதைஎழுதியிருப்பார். வாசகர்கள் பெரும்பான்மையும் ஏழைகளாகஇருந்திருக்க வேண்டும். அவர்களிடையே அடிமைகளும் இருந்திருக்கவேண்டும் (2:18-19).

3.3. காலமும் சூழ்நிலையும்
இக்கடிதம் எழுத ஏதாவது குறிப்பிட்ட சூழ்நிலை (ஏதாவது சம்பவம்நடந்ததை முன்னிட்டு சூழ்நிலை) இருந்ததா எனத் தெளிவாகச் சொல்லஇயலாது. ஆயினும் கடிதத்தில் கண்டிருக்கிறபடி பார்த்தால் இதன்ஆசிரியர் சோதனை காலத்தில் கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தவும்தளர்ந்து போன நம்பிக்கையை மீண்டும் தட்டி எழுப்பவும் எழுதியுள்ளார்எனலாம் (4:12-13).இக்கடிதம் உரோமையிலிருந்து எழுதப்பட்டது எனப் பலர்கூறுகின்றனர். பாபிலோன் (5:13) பற்றிய குறிப்பு மறைமுகமாகஉரோமையைக் குறிப்பதாகும். உரோமை பழங்கால பாபிலோனை விடசெல்வச் செழிப்பில் இருந்தது. பேதுரு உரோமையில் வேதகலாபனையில் நீரோ மன்னன்காலத்தில் இறந்தார். அதற்கு முன்வேதகலாபனை இல்லை. எனவே இக்கடிதம் கி.பி. 64-இல் எழுதப்பட்டிருக்கலாம். இது பவுல் கடிதத்தின் பகுதிகளை பேதுரு தன் கடிதத்தில்குறிப்பிடுவதை விளக்கும் அடிப்படைக் கருத்து. உலகெங்கும் வாழும்சகோதரர்களுடன் இணைந்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின்இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள் (1:18-19). இவர்கள் ஒரு காலத்தில்பாவிக ளாய் (2:24) இருந்தவர்கள்; மிகுந்த அறியாமையில்உழன்றவர்கள் (1:14); இப் போது கிறிஸ்துவுக்கு முழுமை யாய்அர்ப்பணிக்கப்படதேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவர்களின் மீட்பின் பாணி வெகுவாய் விவரிக்கப்பட்டுள்ளது. தந்தையாகவும் இரக்க முள்ளவராகவும் இருக்கும் (1:13)தூயவராகவும் இருக்கும் (1:15-16) கடவுள், உலகம் தோன்றும் முன்னரே(1:20) மனிதரின் மீட்பு குறித்துத் திட்டமிட்டுள்ளார் (1:2). பழையஏற்பாட்டின்இறைவாக்கினருக்குஇத்திட்டம்வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் அதை எடுத்துரைத்தனர் (1:10-12). அதுகிறிஸ்துவின் வருகையில்நிறைவேறியது. அவர்மாசற்றவராயிருந்தும் (1:19;2:22) துன்புற்றார் (2:21-22;4:1). சிலுவையில் மரணம்அடைந்தார் (2:24; 3:18).இந்த பாடுகள் மரணத்தின்பயனாய் மனிதனின் பாவங்கள் கழுவப்பட்டன (1:18; 3:18).

ஆனால், பாவத்திற்குஇறத்தல்என்பதுபுதியவாழ்வுக்குப் பிறத்தல்.அது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் நிறைவேறியது (1:3). அதனைதிருமுழுக்கில் பெறுகிறோம் (3:2). இந்த திருமுழுக்கு பெரு வெள்ளநிகழ்ச்சியில்முன்னுணர்த்தப்பட்டது(3:20-21). கிறிஸ்துவுக்குநம்மையேஅர்ப்பணிப்பதன் மூலமும் (1:2) மீட்பின் வல்லமையில் நம்பிக்கை வைப்பதன் மூலமும் (1:5, 7-9) கிறிஸ்துவர்கள் விண்ணுலகசம்பாவனையை எதிர்நோக்கியிருக்கலாம் (1:3-4; 3:22).இந்தச் சம்பாவனையைப் பெறக்கிறிஸ்தவர்கள்தூய்மையாயிருத்தல் வேண்டும் (1:5-16); பேயின் சோதனைகளைஎதிர்க்க வேண்டும் (5:8-9); பழைய பாவங்களை விட வேண்டும் (1:14,2:11, 4:2-3); இவ்வுலக சோதனைகளையும் துன்பங்களையும் தாங்கவேண்டும் (1:6-9; 2:19-20; 3:13-17; 4:12-17).

3.4. இலக்கிய அமைப்பு
இத்திருமுகம் யாக்கோபு திருமுகம்போல் அடிப்படையில்,எழுச்சியுரைக் கடிதமாகும். இருப்பினும் யாக்கோபு கடிதத்தினின்று பலவகையில் மாறுபட்டதும் கூட. ஒரு கடிதம் போல் நீண்ட முன்னுரைஉள்ளது (1:1-2); தொடர்ந்து செபமும் நன்றி கூறலும் உள்ளன (1:3-5).முடிவில்பிரியாவிடையும் பலருக்குவாழ்த்தும் உள்ளது(5:12-14). இதன்நடை எளிமையானது; தர்க்க ளளதியானது யாக்கோபு திருமுகத்தைவிடமிகுதியாய் கொள்ளைக் கருத்துக்கள் உள்ளன.இக்கடிதம் மீட்புப் பற்றிய இறையியல் மறையுரை எனப்படலாம்.திருமுழுக்கின் போது கொடுக்கப்படும் மறையுரை எனப்படலாம் (1:3, 23;2:2; 3:21). இக்கடிதத்தின்பல பகுதிகள் பழங்கால திருமுழுக்கு சடங்கின்போது கொடுக்கப்படும் மறையுரைக் குறிப்புக்கள் என அறிஞர் பலர்குறிப்பிடுகின்றனர். இப்படிப்பட்ட பகுதிகள் புதிய ஏற்பாட்டின் வேறுஇடங்களிலும் உள்ளன. எனவே புதிய ஏற்பாடு உருவாவதில்திருவழிபாட்டின் பங்கையும் புரிந்து கொள்ளலாம். அத்துடன்தொடக்ககாலக் கிறிஸ்துவச் சபையின் திருவழிபாட்டுத் தன்மையையும்இது சுட்டிக்காட்டுகிறது.

3.5. திருத்தொகையில் இடம்
பெரும்பாலும் தொடக்கத்திலிருந்தே இத்திருமுகம் பலதிருத்தொகை களில் சேர்க்கப்பட்டு வந்துள்ளது. ஆயினும் மூராத்தோரியதிருத்தொகையில் மட்டும் இது காணப்படவில்லை. ஒரு வேளை அதன்சில பக்கங்கள் அழிந்து போனதால் இது இடம் பெற்றது நமக்குத்தெரியாமல் போயிருக்கலாம் என்பர் சிலர்.

3.6. முக்கிய படிப்பினை இக்கடிதம் அடிப்படையில் எழுச்சியுரைக் கடிதம். ஆகையால்ஒழுங்குப்படுத்திய கொள்கைகளைக் காண இயலாது. ஆயினும்,நம்பிக்கை பற்றிய பல பகுதிகள் ஆழமான இறையியலைக்கொண்டிருக்கின்றன. தங்கள் தகுதிக்கு ஏற்றபடி நற் குணங்களைக்கடைப்பிடிக்க வேண்டும் (2:13-17; 5:1-5) முக்கியமாக சகோதர அன்புச்செயல்களை செய்ய வேண்டும் (3:8-12).

இத்தகு வாழ்வு கடினமான ஒன்றுதான். எனினும் இதனைஎளிதாக்க இயலும். கிறிஸ்துவின்மாதிரியைப் பார்ப்பதன்மூலமும் (2:21-25; 3:18-22; 4:1-27) அவரிடத்தில் அண்டி வருவதன் மூலமும் (2:3-4),அவரின் துன்பத்தில் பங்கு பெறுவதை உணர்வதன் மூலமும் (4:13),கடவுளின் பார்வையில் துன்பத்தில் பங்கு பெறுவதை உணர்வதன்மூலமும் (கடவுளின் இல்லத்தில் உயிருள்ள கற்கள் 2:5),தேர்ந்தெடுக்கப்பட்ட மரபினர் அரசர்களின்திருக்கூட்டம், தூய மக்களினத்தினர்,இறைவனுக்கு உரிமைச் சொத்தான மக்கள்(2:9) என்பதை உணர்வதன் மூலமும்இக்கடின வாழ்வை எளிதாக்கலாம்.இவ்வாழ்வு மூலம் கிறிஸ்தவர்கள்நம்பிக்கையுடன் கடவுளின் பராமரிப்பில்ஊன்றி எதிர்பார்ப்புக்களைக் கொள்ளலாம்(5:7). இறுதிக்கால தீர்ப்பை எதிர்நோக்கலாம். பேதுரு அது அண்மையிலுள்ளதாக உணர்கிறார் (4:5, 7, 17). இயேசுவின்மாட்சி வெளிப்படுதலில் அதுஅறிவிக்கப்படுகிறது.

3.7. உள்ளடக்கம;
1:1-2:10 கிறிஸ்தவ வாழ்வின்கடமைகள், உண்மையானவாழ்வு,சகோதர அன்பு வலியுறுத்தப்படுகின்றன.
2:11-4:6 கிறிஸ்துவர்களின்கடமைகள், பேதுரு கிறிஸ்தவர்களின்பிற இனத்தார் மட்டிலும், அரசு அதிகாரிகள் மட்டிலும்,தலைவர்கள், கணவர்கள், மனைவியர் மட்டிலும், அயலார் மட்டிலும் கொண்டகடமைகளைநினைவூட்டுகிறார்.
4:7-5:11 கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய எழுச்சியுரையும்விழிப்புணர்வு தேவை எனவலியுறுத்தலும்.

 

4. புனித பேதுரு எழுதிய2-ஆம் திருமுகம்

4.1. ஆசிரியர்
புதிய ஏற்பாட்டின் மற்ற எந்த நூல்களையும் விட இந்த நூலின்ஆசிரியரைக் குறித்துத்தான்அதிக சர்ச்சை எழுந்துள்ளது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது தேவையற்றதுபோல் தோன்றும்.இக்கடிதத்தில் 'இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதருமானசீமோன்பேதுரு எழுதுவது' எனவருகிறது. இந்த ஆசிரியர் இயேசுவின்தோற்றம் மாறுதலைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார் (1:16-18; மாற் 9:2-3). 3:1-இல் இக்கடிதம் ஆசிரியர் எழுதும் இரண்டாம் கடிதம் எனக்குறிப்பிடுகிறது. அது 1 பேதுரு திருமுகத்தை மனதில் வைத்துதான்எழுதப்பட்டிருக்க வேண்டும்.இப்படிப் பல சான்றுகள் இருப்பினும் அறிஞர்கள் பேதுருதான்இக்கடிதத்தை எழுதினார் என ஏற்றுக்கொள்வதில்லை. இது குறித்தவாதம் மிகப் பழமையானது. 3-ஆம் நூற்றாண்டில் ஓரிசனும், 4-ஆம்நூற்றாண்டில் எவுசேபியுஸ{ம் இவ்வாதங்களைக் குறித்துவைத்துள்ளனர். ஓரிசன் காலத்துக்கு முன் இக்கடிதம் பற்றிய வெளிப்படையான குறிப்பு எதுவும் இல்லை. எனவே இக்கடித ஆசிரியர்பேதுருதானா எனும் ஐயப்பாடு நியாயமானதே.

அக்காலத்தில் ஒருவர் ஒரு கடிதம் அல்லது நூலை எழுதி அதைவேறு ஒருவர் பெயரில் வெளியிடுவது வழக்கமான ஒன்று. முக்கியமாகயார் பெயரால்வெளியிடப்படுகிறதோ அவருடையகருத்துக்களைத் தாங்கிவந்தால் இப்படி வேறு நபர் பெயரில் வெளியிடுவது தவறல்ல என்றஎண்ணமும் இருந்தது.பேதுரு இக்கடிதத்தை எழுதியிருக்க இயலாது என்பதற்குச் சிலகாரணங்கள் உள்ளன. இக்கடிதம் கூறும் சூழ்நிலை பிந்தையச்சூழ்நிலையாக உள்ளது. சிலர் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக்குறித்து ஐயுறுவது போல் தெரிந்தது (3:3-7).

தொடக்கக் கிறிஸ்தவர்களிடம் காணப்பட்டஎண்ணங்களில் ஒன்று எருசலேமின் அழிவும்உலக முடிவும் தொடர்புடையவை என்பதாகும்(மத்24:2-3). எருசலேமின்அழிவு முழ்?தவுடன்இரண்டாம் வருகை நடக்கவில்லையானால்அது குறித்த ஐயப்பாடு எழத்தான் செய்யும்.எருசலேம் அழிவு கி.பி. 70-இல் நடந்தது.அதற்குக் கொஞ்சக் காலம் கழித்துத்தான்இரண்டாம் வருகையைக் குறித்த ஐயம்எழும்பியிருக்க வேண்டும். ஆனால்இச்சூழ்நிலைக்கு முன்னமே பேதுரு இறந்துவிட்டார் (கிபி. 60).

இக்கடிதத்தில் இரண்டாம் வருகை எப்போது வரும் என சொல்லஇயலாது என்கிறார் ஆசிரியர் (3:8-10). ஆனால் 1 பேதுருவின்ஆசிரியர்எல்லாவற்றின் முடிவும் நெருங்கிவிட்டது என்கிறார் (1 பேது 4:7, 17).எனவே2-ம்பேதுருதிருமுகத்தின்ஆசிரியர் வேறுகாலத்தில்வாழ்ந்திருக்கவேண்டும்.மேலும் 2-ஆம் பேதுரு 3:4-இல் 'நம் தந்தையரும் இறந்துபோயினர்' எனவருகிறது. இது முதல் தலைமுறைக் கிறிஸ்தவர்களைப்பற்றியது. திருத்தூதர் காலத்தைப் பற்றியது. அதுபோல 'உங்கள்திருத்தூதர் வழியாகத் தந்த கட்டளையையும் நினைவில்கொள்ளுங்கள்'என்று வருகிறது (3:2). இதுவும் முந்தையத் தலைமுறையைப் பற்றியதே.அப்படியானால் இதை எழுதிய ஆசிரியர் பிந்தைய தலைமுறையைச்சார்ந்தவர் என்பது தெளிவு.

3:15, 16-இல் பவுலின் கடிதங்கள் பற்றிய குறிப்பு வருகிறது.அப்படியானால் இக்கடிதம் எழுதப்பட்ட காலத்தில் பவுலின்கடிதங்களில்பல பரவலாக வாசிக்கப்பட்டிருக்க வேண்டும். பிரபலமாகி இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல வேத நூலின் பகுதிகளாக அவைஅங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதற்குக் காலம்பிடித்திருக்க வேண்டும். பவுலின்மரணத்திற்கு முன்அவரின்கடிதங்கள்அவ்வளவு பிரபலமாகியிருக்க இயலாது. வேத நூலின் பகுதிகளாகஅங்கீகாரமும்பெற்றிருக்கஇயலாது. எனவேஇக்கடித ஆசிரியர் பிந்தையகாலத்தவர் எனப் புலனாகிறது.இக்கடிதம் புனித யூதா எழுதிய கடிதத்தைச் சார்ந்துள்ளது. பலஒற்றுமைகள்உள்ளன. யூதா திருமுகம் எழுதப்பட்ட பின்னரே இக்கடிதம்

எழுதப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறுவர். யூதா திருமுகம் கி.பி.70-க்கு பின்னர்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படியானால்திருத்தூதரானபேதுரு, 2- பேதுரு திருமுகத்தை எழுதியிருக்க இயலாது.மேற்கண்டஅனைத்தும்2- பேதுரு திருமுகம்வேறுஒருவரால்தான்எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதற்குச் சான்று பகர்கின்றன. முதல்பேதுருவுக்கும் 2-ம் பேதுருவுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஒருவேளை இது செயலாளர்கள் செய்த வேலை என வாதிட்டாலும்இவ்வளவு வேறுபாடுகள் வர இயலுமா என்ற கேள்விஎழுகிறது.எனவே இக்கடிதத்தை யாராவது ஒருவர் கி.பி. 70-க்குப் பின்னர்எழுதியிருக்க வேண்டும். ஆனால்புனித பேதுருவின்சீடர்களில்ஒருவர்,பேதுருவின்கருத்துக்களால்கவரப்பட்டவர் எழுதியிருக்கவேண்டும். சிலர்இக்கடிதம் மிகப் பிந்தையதுஎன்றும் கி.பி150-இல்தான்எழுதப்பட்டிருக்கவேண்டும் என்றும் கூறுவர்.

4.2. வாசகர்களும் சூழ்நிலையும்
இக்கடிதத்தின்ஆசிரியர் பேதுருஎன்றால்1 பேதுருவில்கூறப்படும்வாசகர்களே இதன் வாசகர்களாகவும் இருக்க வேண்டும் (காண்1 பேது1;1) ஏனெனில் 2 பேது 3:1-இல் இது அவர்களுக்கு எழுதும் இரண்டாம்கடிதம் என்கிறார். ஆனால்ஆசிரியர் பேதுருவாக இல்லாவிடில்வாசகர்களும் யாரெனத் தெளிவாய்ச் சொல்ல இயலாது. அவர்கள்கிறிஸ்தவர்கள் (1:1) (விசுவாசத்தைப் பெற்றவர்கள்) என்று மட்டும்சொல்ல இயலும். அவர்களிடையே பிற இனத்தாராக இருந்துமனந்திருந்தியவர்களும் இருந்தனர் என்று தெரிகிறது (2:18, 20-22)(தவறானவழி நடப்போரிடமிருந்து இப்போதுதான்தப்பியவர்களை...)3:1 இல் வரும் இரண்டாம் கடிதம் என்பது 1 பேதுரு கடிதத்தின்தொடர்ச்சி எனக் காட்டுவதற்கே தவிர அதே வாசகர்களைச்சுட்டிக்காட்டுவதற்கல்ல.

இக்கடிதத்தின் சூழலோ, நோக்கமோ கூட இது யாருக்குஎழுதப்பட்டது என்பதைத் தெளிவாகக் கூறவில்லை. ஆசிரியர் தன்வாசகர்களின் நம்பிக்கையை உயர்வாகக் கருதவும், நற்குணங்களைவெகுவாய்க் கடைப்பிடிக்கவும், பாவத்தையும் பொய்ப் போதகத்தையும்விடவும் பரிந்துரைக்கிறார். இந்தப் பொய்ப் போதகம் பற்றியக் கூற்றுமுக்கியமானது; ஏனெனில் அக்காலத்தில் பல போலிப் போதகர்கள்தோன்றி உண்மையைத் திரித்து மக்களை தவறான வாழ்வு வாழச்செய்தனர் (2:2). இச்சூழ்நிலைதான் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.ஆயினும் இச்சூழ்நிலை பல இடங்களில் இருந்திருக்கலாம். எனவேகுறிப்பிட்ட இடத்துக் கிறிஸ்தவர்களை நாம் இங்கே கருத இயலாது.எங்கிருந்து எழுதப்பட்டது என்பதும் தெரியவில்லை.

4.3. இலக்கிய அமைப்பு
முதல் பேதுருவைப் போல் இக்கடிதமும்திருமுகத் தன்மையைக் கொண்டிருக்கிறது.முன்னுரை, தனிப்பட்ட குறிப்புக்கள் உள்ளன(1:16-18, 3:1-15). எனினும் ஆசிரியர் கிறிஸ்தவசமூகத்தைப் பாதித்த சிக்கல்களைக் குறித்த தன்கருத்துக்களை கடிதப் பாணியில் தந்திருக்கலாம்.எனவே இதுவும் கடிதப் பாணியில் அமைந்தமறையுரையே. பொதுவான முடிவு (3:17-18)வாசகர்களைப் பற்றிய எவ்விதத் தனிப்பட்டகுறிப்புகளும் இல்லாமை ஆகியவை இக்கடிதம்ஒரு மறையுரையே என்பதற்குச் சான்றுபகர்கின்றன.

4.4. திருத்தொகையில் இடம்
முதல் நூற்றாண்டில் இக்கடிதம் பற்றியாரும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. 3-ஆம் நூற்றாண்டில் ஓரிசன்முதலியசிலர் இதைத் திருத்தொகை நூல்களில்ஒன்றாய்கருதினர். அதேநேரத்தில் மக்களிடம் இது குறித்து இருந்த ஐயப்பாட்டையும் குறித்துவைத்தனர். 4-ஆம் நூற்றாண்டில் பலர் இதை ஏற்றுக்கொண்டாலும்ஒன்றுபட்ட கருத்துஇல்லை. 5-ஆம் நூற்றாண்டின்இறுதிக்குள்அல்லது6-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திற்குப் பின்னரே இது பற்றியஐயப்பாடுகள் நீங்கின. 16 ஆம் நூற்றாண்டில் திரிதெந்தின் சங்கம்இந்நூலை திருத்தொகை நூல்களில் ஒன்றாக அறிமுகம் செய்தது.

4.5. முக்கிய படிப்பினை பிற்காலக் கடிதமாக இது இருப்பதால் கிறிஸ்துவைப் பற்றியும்அவரது மறையுண்மைகளைப் பற்றியும் இக்கடிதம் வளர்ச்சியடைந்தகருத்துக்களைக் கூறுகிறது. இந்த மறையுண்மைகளைப் பின்வருமாறுகூறலாம். ஒரு காலத்தில் பாவத்திலும் அறியாமையிலும் இருந்த (1:4;2:18, 2:22) கிறிஸ்தவன் இயேசு கிறிஸ்துவால் விலை கொடுத்துவாங்கப்பட்டுள்ளான் (1 பேது 2:24). எனவே அந்தக் கிறிஸ்து, மீட்பர் என்னும் அடைமொழியிட்டு அழைக்கப்படுகிறார் (1:1, 11; 2:20; 3:2, 18).இந்த மீட்பர் கடவுளாகவும் (1:1, 11) தந்தையின்அன்பு மகனாகவும் (1:17)இருக்கிறார். எனவே அவர் 'ஆண்டவர்' எனஅழைக்கப்படுகிறார் (1:2,8,11, 14, 16; 2:20; 3:15, 18). இந்தப் பட்டம் பழைய ஏற்பாட்டில் தந்தையாம்கடவுளுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இவ்வுலகில் அவரில்வெளிப்படுத்தப்பட்டுள்ள இறை மாண்பு (1:6-17) என்றென்றும்அவருடையதாகும் (3:18).

இந்த மீட்பர் மனிதனுக்கு தெய்வீக வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ள அனைத்தையும் தந்துள்ளார் (1:4; 3:4, 9, 13), இறைத்தன்மையில்பங்கெடுக்கவும்வைத்துள்ளார் (1:4). இறைக் கொடைகளில்முதன்மையானது நம்பிக்கை (1:1). அது கிறிஸ்துவைப் பற்றிய அறிவின்அடிப்படையில்வருவது(1:2-3), அதுநற்பண்புகளைக் கடைப்பிடிப்பதால்வளர்கிறது (1:5-8; 3;18). மனிதன் இதனில் தொடர்ச்சியான முயற்சிசெய்ய வேண்டும் (1:10, 3:11, 14, 17). அதன்மூலம் முடிவில்லா அரசைப்பெற முடியும் (1:11) பாவம் செய்தல் (2:2, 10) கிறிஸ்துவை மறுதலித்தல்(2:1) ஆகியவை முடிவில்லாத் தண்டனைக்கு இட்டுச் செல்லும் (2:3, 9-10, 17). இத்தணை;டனை தீய வானதூதருக்குக் கிடைத்தது (2:4).பண்டைய பாவ மனிதருக்கும் கிடைத்தது (2:5-9).மனிதர்களில் நற்பண்புடன் வாழ வேண்டியதன் முக்கியநோக்கங்களில் ஒன்று இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை (1:16;3:11-14). சிலர் இந்த இரண்டாம் வருகையைக் குறித்து ஐயப்பாடுகொண்டாலும் (3:3-7) திருத்தூதர் சாட்சியமும் (1:16-18) திருத்தூதர்களின்வார்த்தையும் (1:19) இதற்கு அத்தாட்சியாகும். தூய ஆவியால் ஏவப்பட்டமறைநூல் கடவுளின் வார்த்தையைக் கொண்டுள்ளது. அது ஏமாற்றமுடியாது (1:20-21). இரண்டாம் வருகையின் காலம் எப்போது எனத்தெரியவில்லை என்பதால் (3:10) அது நடவாது எனப் பொருளல்ல. அதுமட்டுமல்ல மனிதன் கணக்கிடுவதுபோல் கடவுள் கணக்கிடுவதில்லை(3:8) கிறிஸ்தவன் அந்த நாளின் மகிமையைக் குறித்துத் தியானிப்பதுபோதுமானது (3:10-13).

4.6. அமைப்பு
1. முன்னுரை 1:1-2
2. நற்பண்புகளில் வளர்ச்சி - 1:3-21

அ. வளர்ச்சியின்அடிப்படை - 1:3-4
ஆ. வளர்ச்சியின்தேவை - 1:5-15
இ. வளர்ச்சியின்நோக்கம் - 1:16-21

3. போலிப் போதகர்கள் - 2: 1-22

அ. எச்சரிக்கை - 2:1-3
ஆ. கடந்த காலத்தில் கடவுளின்சினம் - 2 :4-10அ
இ. போலிப் போதகர்களின்அக்கிரமம் - 2:10ஆ-22

4. ஆண்டவருடைய இரண்டாம் வருகை - 3:1-18

அ. எச்சரிக்கை - 3:1-4
ஆ. உண்மைப் போதனை- 3:5-13
இ. எழுச்சியுரை - 3: 14-18

 

5. புனித யோவான் எழுதியமுதல் திருமுகம்

;5.1. திருமுகத்தின்இலக்கிய வடிவம்
இரண்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து இக்கடிதம்பொதுத் திருமுகங்களில்ஒன்றாகக் கருதப்பட்டுவருகிறது. ஆயினும் இதுவழக்கமானவாழ்த்துமற்றும்யாருக்குஎழுதப்படுகிறதுஎனும்குறிப்புக்கள்இன்றிக் காணப்படுகிறது. எனவே பலர் இதனை யாக்கோபு திருமுகம்போலஒருமறையுரை எனக்கூறுவர். அல்லதுஎபிரேயர் திருமுகம் போலஓர் இறையியல் கட்டுரை இது என்பர். எப்படியிருப்பினும் இது ஒரு குறிப்பிட்ட சபையா அல்லதுபலசபைகளின்தொகுப்பா என்றுதெரியாது.இதன்வாசகர்கள் இளைஞரும் பெரியோருமாவர். வயதில் இளையோர்முதியோராகவும் அவர்கள் இருக்கலாம் (2:12-14). இவர்கள்உண்மையில்நிலைத்திருப்பார்கள்; வேறுசிலர் உண்மையினின்றுபோய்விட்டனர் (2:18-27). அதாவதுதொடக்கத்திலிருந்த நட்புறவினின்றுபோய்விட்டனர். உண்மையிலும் நம்பிக்கையிலும் நிலைத்திருப்போருக்குஆசிரியர் ஊக்கமும் எச்சரிப்பும் தருகிறார்.

5.2. ஆசிரியர்
யோவான் நற்செய்தியைஎழுதியவரே இக்கடிதத்தையும்எழுதினார்எனப்பலர் கூறுவர். இரண்டிலும் ஒரே நடை, ஒரே கருத்தோட்டம்உள்ளன. இரண்டுமே ஒரே காலத்தில் வெளியிடப்பட்டவைபோல்தெரிகின்றன. ஒரே பகுதியில் (மேற்கு ஆசியா மைனர்)வெளியிடப்பட்டவைபோல் தெரிகின்றன. இக்கடிதத்தின் தொடக்கம்யோவான் நற்செய்தியுடன், இதனை தொடக்கத்திலும் (யோவா1:1-14)முடிவிலும் (யோவா 20:19-20) தொடர்புபடுத்துகிறது.ஆயினும் பல வேறுபாடுகளும் உள்ளன. மூலமொழியாககிரேக்கத்தின் நடையில் பல மாற்றங்கள் உள்ளன. கடிதத்தைப்பொறுத்தவரை நாடகப் பாணியோ, உயிரோட்டமான தன்மையோகுறைவு. கீழைநாட்டுமொழித் தன்மை யோவான்நற்செய்தியில் உண்டு.ஆனால்திருமுகத்தில்இல்லை. பழையஏற்பாட்டிலிருந்துமேற்கோள்கள்இல்லை. கடவுளைஒளி(1:5) என்பது'அன்பே கடவுள்' (4:8, 16) என்பதுதிருமுகத்துக்கேயுரிய பாணி. நற்செய்தியும் மற்ற விவிலிய நூல்களும்கடவுளின்தன்மையைஎளிதானசொற்களில்விவரிக்கின்றன. ஆனால்திருமுகம் கடினமானத் தத்துவ வார்த்தைகளால் விவரிக்கிறது.

கடிதத்திலும் சரி, நற்செய்தியிலும் சரி 'கடவுளால் பிறந்தவர்கள்''உண்மையைக் கடைப்பிடித்தல்' 'இருளில் நடத்தல்' உலகைமேற்கொள்ளல்' கட்டளைகளைக் கடைப்பிடித்தல்' என்பவைபொதுவாகஉள்ளன.நற்செய்தியில் காணப்படும் சில அடிப்படை குறிப்புக்கள்திருமுகத்தில் இல்லை. உயிர்ப்பு, நீதித் தீர்ப்பு, அரசு, மாட்சி, கருணை,அமைதி முதலியன திருமுகத்தில் இல்லை. மாறாக 'நட்புறவு''எதிர்க்கிறிஸ்து' முதலிய சொற்கள் நற்செய்தியில் உள்ளன.கிறிஸ்துவின் மீட்புச் செயல் நம் பாவத்தைப் போக்குகிறது (2:2; 4:10)எனும் கருத்துநற்செய்தியில் இல்லை. பரிந்து பேசுபவர் பற்றிய குறிப்பும்இரு நூல்களிலும் வெவ்வேறாகக் காணப்படுகிறது. யோவான்நற்செய்தியில் அவர் தூய ஆவி (யோவா 14:16-17, 26, 15:26; 16:7);திருமுகத்தில் அவர் 'இயேசு கிறிஸ்து'.மேற்கண்ட வேறுபாடுகள் ஒருவேளை வேறு காலங்களில் இருநூல்களும் எழுதப்பட்டதால் (ஒரே ஆசிரியராக இருப்பினும்)எழுதியிருக்கலாம்.

சில அறிஞர்கள் 1 யோவான் திருமுகம் யோவான் நற்செய்திக்குமுன்னுரையாகஎழுதப்பட்டதுஎன்பர். சிலர் அதே ஆசிரியர் வயதுமுதிர்ந்தகாலத்தில் இக்கடிதத்தை எழுதியிருக்கலாம்; எனவேதான்நற்செய்தியில்காணப்படும் நாடகப்பாணிஇதில் இல்லை என்பர்.

5.3. காலம்
முதல் யோவான் திருமுகத்திலிருந்துசெய்யப்பட்ட மிகப் பழமையானமேற்கோள்கள்(2:22,3:8; 4:2-3) சிமிர்னா நகர ஆயர் பொலிக்கார்ப்பு,பிலிப்பி சபைக்கு எழுதிய கடிதத்தில் உள்ளன.அக்கடிதம் கி.பி. 117-க்குச் சற்று முன்னால்எழுதப்பட்டது. பொலிக் கார்ப்பின் சீடரானஇரனேயுஸ் எனும் ஆயர் 1 யோவா. திருமுகம்திருத்தூதரான புனித யோவானால் எழுதப்பட்டதுஎனச் சான்று பகர்கிறார். ஆனால் இரனேயுஸ்காலத்தில்வாழ்ந்த வேறுசிலர் இக்கடிதம் செரிந்துஸ்எனும் யூதக் கிறிஸ்தவரால் எழுதப்பட்டது என்றுஉரைத்தனர். இந்தச் செரிந்துஸ், மதத் தினின்றுபிரிந்து சென்ற புரட்சியாளர், ஆசியா மைனரில் 2-ஆம் நூற்றாண்டின்தொடக்கத்தில் போதித்தவர்.

இன்று யாருமே இக்கடிதம் செரிந்துஸ் என்பவரால் எழுதப்பட்டதுஎன்று சொல்வதில்லை. ஆனால் சரியாக அலசிப் பார்த்தால் இக்கடிதம்செரிந்துஸின் போதகத்துக்குப் பதில் சொல்லும் வண்ணமாகஅமைந்துள்ளது என்பது புலப்படும். இரனேயுஸ்கருத்துப்படி செரிந்துஸ்என்பவர் அறிவுத்திறன் கொள்கையைப் பின்பற்றிய முதல் நபர்களில்ஒருவர். அவர் இவ்வுலகம் எல்லாம் வல்ல கடவுளால் படைக்கப்பட்டதுஎனப் போதித்தார். இயேசு மற்றவர்களைப் போலவேபிறந்தார். ஆனால்அவருடைய நீதியினாலும், விவேகத்தினாலும், ஞானத்தினாலும், 'வானகக் கிறிஸ்து' அவரிடம்திருமுழுக்கின்போது இறங்கினார்.அதிலிருந்துஅவர் 'அறியாத தந்தையை'அறிவித்து, புதுமைகள் செய்தார்.ஆனால் அந்த 'வானகக் கிறிஸ்து'இயேசுவின் சிலுவையிலறைதலுக்குமுன் அவரிடமிருந்து போய்விட்டார்.தந்தையிடம் சென்று விட்டார்.இவ்வாறு செரிந்துஸ் இயேசுவையும்கிறிஸ்துவையும் பிரித்துக் கூறினார்.

வேறு எழுத்தாளர்கள் கூறுவதுசெரிந்துஸ்என்பவர் யூதமயமாக்கலைச்செய்தவராகும். அதாவது சட்டத்திற்குகீழ்படிதல், விருத்தசேதனம் செய்தல்,ஓய்வு நாளைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தியவர்.இந்தயுகம் முழ்?து ஆயிரம் ஆண்டு விழாக் கொண்டாட்டம் உள்ளது.அப்போது இயேசு உட்பட அனைத்து நல்லோரும் மரணத்தினின்றுஉயிர்த்தெழுவர். இது செரிந்துஸின் போதனையாகும். இந்தச்செரிந்துஸைக் குறித்து திருத்தூதரான யோவான் ஒரு முறை அவர்பொதுக் கட்டிடம் ஒன்றில் இருந்த போது, 'நாம் இங்கிருந்து போய்விடுவோம், இல்லாவிடில் இக்கட்டிடம் இழ்?துவிடும். ஏனெனில்செரிந்துஸ்இங்கே உள்ளான்' என்றுகூறியதாக இரனேயுஸ்எழுதுகிறார்.

5.4. நற்செய்திக்கும் இத்திருமுகத்திற்கும் உள்ள உறவு
யோவான் எழுதிய நற்செய்திக்கும் இந்நூலுக்கும்,சொற்றொகுதியில், நடையில், கோட்பாட்டில் உள்ள ஒற்றுமைஅதிகமானது, நெருக்கமானது, ஆழமானது. எ.கா 1 யோவா 1:1-4; 2:4,11, 27; 3:14; 4:9, 12; 5:9 ஆகிய பகுதிகளை யோவா 1:1-14; 8:44; 12:35;16:30; 5:24; 3:16;11:8, 5:34 ஆகிய பகுதிகளோடு ஒப்பிடுக. இயேசுவார்த்தையாகவும், கடவுளாகவும் போதிக்கப்படுகிறார் (1 யோவா 1:1; 5:20;யோவா 1:1; 20:29). அவர் மனிதன் ஆதல் அழுத்திக் கூறப்படுகிறது (1யோவா 1:2; 4:2; யோவா 1:14) நம்பிக்கையும் அறிவும் முடிவில்லாவாழ்வை அளிக்கின்றன் மனிதனான மகனோடு நம்மைஒன்றாக்குகின்றன (1 யோவா 1:2 தெர் 5:10-13; யோவா 17:3; 20:31).இருளும், இறப்புமே எதிர்க்கும் "உலகம்” ஆகும். இஃது அவநம்பிக்கை,வெறுப்பு, பொய், கொலை ஆகியவற்றைச் சிறப்பாகக் கொண்டிருக்கும்(1 யோவா 1:6; 2:22 தெர் 3:12; யோவா 1:5; 3:18 தெர் 8:44; 15:18 தொ).செயல்முறையான நோக்கில் அன்பு என்பது இறைவனுடையவும்கிறிஸ்துவினுடையவும் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதாகும் (1 யோவா2:4; 3:23 தெர் யோவா 14:23 தொ, 31; 15:10, 14). மறை பொருளானஉள்ளுணர்வு பற்றிய "இணைந்திருத்தல்"” ஒரே விதமாகக்கூறப்படுகிறது.

நற்செய்தியில் இயேசுவின் பிரியாவிடை உரை, முதலாம்யோவான்பயன்படுத்தும் உருவகங்களை நிர்ணயிப்பதில், குறிப்பானமுக்கிய பங்குஎடுத்துள்ளதாகத் தோன்றுகிறது. இறைவனுக்கும் (தந்தை, மகன், ஆவி),கிறிஸ்துவனுக்கும் உள்ள உறவை முதலாம் யோவான் பிரதிபலிக்கிறது.தந்தை கிறிஸ்தவனைஅன்பு செய்கிறார் (1 யோவா 4:16; யோவா 14:21).பிரமாணிக்கமுள்ளகிறிஸ்தவனில்மகன்இணைந்திருக்கிறார் (1 யோவா3:24; யோவா 15:4). ஆவி கொடையாக அளிக்கப்படுகிறார் (1 யோவா4:13; யோவா 14:16-17). இறைவனோடுகிறிஸ்தவன்உறவுகொள்வதில்,ஒருவர் மற்றவரில் வாழ்தல் (1 யோவா 3:24; யோவா 14:20),பாவமன்னிப்பு, தூய்மையாதல்(1 யோவா 1:9; யோவா 15:3), முடிவில்லாதவாழ்வு (1 யோவா 2:29; யோவா 17:2), ஏற்புடைமை (1 யோவா 2:29;யோவா 16:10) ஆகியவை சிறப்புக் கூறுகளாகும். கிறிஸ்தவச்சீடனுக்குரியநிபந்தனைகள்மீண்டும்உறுதிப்படுத்தப்படுகின்றன. யோவா16:8-9-இல்வரும்நம்பாத உலகத்திற்கும், 1 யோவா 1:8; 3:4-9-இல்வரும்போலி நிறைவுடையவர்களுக்கும் எதிரான நிலையில்,நம்பிக்கையுடையோர் பாவத்தில் இல்லை. அவன் இயேசுவை அன்புசெய்ய வேண்டும்; அவரது கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் ( 1யோவா 2:3; 22; 3:10, யோவா 14:15) உலகத்தின் போக்கை நிராகரிக்கவேண்டும் (1 யோவா 2:5; 4:1; யோவா 15;18). நம்பிக்கை உலகை வெற்றிகொள்கிறது (1 யோவா 2:13-14; 5:5; யோவா 17:8-9).

முதலாம் யோவான் நான்காம் நற்செய்தியின் திட்டத்தைப்பின்பற்றுவதாகக் கருதுவர் சிலர். நற்செய்தியை எதிரொலிக்கும்முன்னுரைக்குப்பின்(1யோவா1:1-4; யோவா 1:1-14,) திருமுகம்இருபெரும்பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல்பகுதி (2 யோவா 1:5-3:10)"ஒளியில் நடப்பதின்” கடமையை எடுத்துக் கூறுகிறது. இது நற்செய்தியின்"அடையாளங்களின்நூலை” (யோவா 1-12) எதிரொலிக்கிறது. ஒளியில்நடத்தலே நற்செய்திக்குக் காட்டும் உண்மையான பதிலாகும். இதுவே,யோவானின்கிறிஸ்தவர் களைப் பிரிந்துசென்றவர்களிடமிருந்துபிரித்துகாட்டுகிறது. இரண்டாம் பகுதி (1 யோவா 3:11-5:12) ஒருவர் மற்றவர்க்குஅன்பு காட்ட வேண்டியதை வலியுறுத்துகிறது. இது நற்செய்தியின்"மாட்சியின் நூலை”, குறிப்பாக இயேசுவின் பிரியாவிடை உரையைப்பிரதிபலிக்கிறது; அன்புக் கட்டளைநிறுவப்படுகிறது. இயேசுவின்இறப்பு,இறையன்பின் எடுத்துக்காட்டான ஊன் உருவாக எடுத்துக்காட்டப்படுகிறது. திருமுகத்தின் முடிவுரையும், நற்செய்தியின்முடிவுரைக்கு இணையாக உள்ளது (1யோவா 5:13; யோவா 20:30-31).திருமுகத்தின் குறிக்கோள் பற்றியகூற்றும், நற்செய்தி மொழியைநேரடியாகப் பிரதிபலிக்கிறது. நற்செய்தியில் "உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெற”(யோவா 15:11) இயேசுவின் உரைபேசப்படுகிறது. திருமுகத்தில் வாசகர்கள்"எங்களோடுநட்புறவு கொள்ளும்படியும்”,"நம் மகிழ்ச்சி நிறைவுபெறவும்” (1 யோவா1:3-4) ஆசிரியர் எழுதுகிறார். இயேசுவின்வெளிப்பாட்டை ஏற்காத உலகின்மேலானதீர்ப்பு (யோவா 12:44-50), 1 யோவா 3:10-இல் வரும் "இறைமக்கள் அலகையின்மக்களிடமிருந்து” பிரிக்கப்படுவதோடுதொடர்புடையது.

ஆனால், நற்செய்தியிலும் முதலாம்யோவானிலும் காணப்படும் இறையியல்வேறுபாடுகளைக் கண்டு அறிஞர் சிலர் தயக்கம் காட்டியுள்ளனர்.நற்செய்தியில் காணப்படும் சில முக்கிய சொற்கள் முதலாம் யோவானில்காணப்படவில்லை. திருமுகம் இயேசுவின் மகிமையை நேரடியாகக்குறிப்பிடவில்லை. இயேசுவுக்கும்தந்தைக்குமிடையேயுள்ளஒன்றிப்பைவலியுறுத்துவதுகூட திருமுகத்தில் காணப்படவில்லை. திருமுகத்தின்இறையியல் மொழி, நற்செய்தி கடந்து சென்று விட்ட அல்லது திருந்தமீண்டும் அமைக்கப்பட்ட முந்தையப் பாரம்பரியத்திலிருந்து வருவதாகத்தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, "துணையாளர்” (1யோவா 2:1) என்பதுசமூகத்தை வழி நடத்த நிலையான பிரசன்னமாக துணையாளரின்வருகையில் செயலாற்றும் இயேசுவின் வருகையைவிட, பரிந்துபேசுபவராக இயேசுவையே குறிக்கிறது. இயேசுவுக்கு "நம்மைஏற்புடையவராக்குபவர் (1 யோவா 2:7-8), மெசியா (கிறிஸ்து) (2:22),மகன்(1:3; 3:23) என்றபட்டங்கள்சாற்றிக் கூறப்படுகின்றன. இயேசுவின்சிலுவையில்அவரதுமாட்சியின்வெளிப்பாட்டைக்காண்பதற்குப் பதிலாக,திருமுகம் இயேசுவின்இறப்பு, பரிகாரம் என்ற பழைய பாரம்பரியத்தையேகூறுகிறது (1:7; 2:2; 3:16; 4:10). இறுதிக்காலம் வலியுறுத்தப்பட்டுள்ளது(2:18). சொற்றொகுதிகள்துல்லியமாக இல்லை (1 யோவா 1:1-3, யோவா1:1-14). மூவொருஇறைவனுக்குள்உள்ளஉறவு, ஆவியின்ஆட்தன்மைஆகியவை தெளிவாக இல்லை. சில பகுதிகள் தந்தையையோ,மகனையோ குறிக்கலாம் (1 யோவா 2:20; 3:2, 24) இவற்றில் எல்லாம்,நற்செய்தியில் காணப்படுவதைவிட மூலவடிவில் திருமுகம்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அடிப்படையில் நற்செய்திப்போதகத்தோடு ஒத்தேயிருக்கிறது எனலாம்.

திருமுகம் ஒரே மந்தத்தன்மையுடையது; நாடகப் பாணியற்றது;செமித்தியப் பண்புகள்கொண்டது. மிகக் குறைவாகவேபழையஏற்பாட்டுஎடுத்துக்காட்டுக்களைக் கொண்டுள்ளது என்பர் சிலர். கிரேக்க மொழிதவறற்ற மொழியே ஆனாலும், திருமுகத்தில் செமித்தியப் பண்புகள்அதிகம் காணப்படுகின்றன. ஏற்கனவே, அமைப்புப் பெற்று விட்ட பிறஇனக் கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்ட திருமுகம் பழைய ஏற்பாட்டுக்குறிப்புகளையோ, நற்செய்தியின் நாடகத்தன்மையையோ, இயேசுவின்சொந்தச் சொற்களால் வரும் மாட்சிமையையோ கொண்டிருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், தனக்கே உரியஅழகையும் பெரும் கூற்றுக்களையும் திருமுகம் கொண்டுள்ளது.

நான்காம் நற்செய்திக்கும் முதலாம் யோவானுக்குமிடையேயுள்ளவேறுபாடுகள், இரண்டும் வெவ்வேறான ஆசிரியர்களால் எழுதப்பட்டனஎன்று கருதச் சிலரை தூண்டியுள்ளது. ஆனால் பொதுவாக,இரண்டிற்குமிடையே யுள்ள ஒப்பீட்டில் ஒத்த கருத்துக்களே அதிகமாய்உள்ளன. இஃது இரண்டும் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டவை என்றுகருதுவதே மேல். இதுவே பாரம்பரியச் சான்றாகவும் உள்ளது.

5.5. எப்போது எழுதப்பட்டது?
சில கருத்துக்களில், முதலாம் யோவான் நான்காம் நற்செய்தியில்காணப்படும் வடிவத்தைவிட காலத்தால் முந்திய வடிவைக்கொண்டிருப்பதாகத் தோன்றுவதால், இது நற்செய்திக்கு முன்பேஎழுதப்பட்டது என்றுசிலர் கூறியுள்ளனர். ஆனால், இரண்டும் கருத்தில்கொள்ளும் சமூக அமைப்புகள் வேறுபடுகின்றன. நற்செய்தியூதத்துவத்தாலும், தந்தையால்அனுப்பப்பட்ட காலத்திற்குமுன்பே இருந்தமகனாக இயேசுவைப் பற்றிய போதகத்தை நிராகரித்த யோவானின்சமூகத்திற்குப் புறம்பானவர்களாலும் எழுப்பப்பட்ட சவால்களைத் தீர்க்கமுயற்சிக்கிறது. ஆனால், திருமுகம் யோவான்சமூகத்தையே உடைப்பதுபற்றிப் பேசுகிறது. மேலும் இந்த உடைபடுதலால் வரும் அதிர்ச்சி, ஒருவர்மற்றவர்க்கு அன்பு செய்தலின்முதன்மை, "நீங்கள் தொடக்கத்திலிருந்துகேட்டவற்றிற்கு” பிரமாணிக்கமாய் இருத்தல் வலியுறுத்தப்படுதல்ஆகியவற்றை, நான்காம் நற்செய்திப் பாரம்பரியத்தில் யோவான் சமூகம்ஏற்கனவேஅமைந்துவிட்டதுஎன்றகருத்தின்அடிப்படையில்தான்புரிந்துகொள்ள முடியும். ஆசிரியரும் வாசகர்களும் நற்செய்தி வாசகத்தோடுபழக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில்தான் புரிந்துக் கொள்ளகூடியபகுதிகள் திருமுகத்தில் உள்ளன. நற்செய்தியில் காணப்படும்பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ள பணிச்சட்டம் அளிக்கவே திருமுகம்எழுதப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, நற்செய்திக்குப்பின் முதலாம்யோவான் எழுதப்பட்டது என்று கொள்ளலாம். நற்செய்தி கி.பி. 90-ஐஒட்டித் தோன்றியதென்றால், இத்திருமுகம்கி.பி.110-ஐஒட்டியயோவான்சமூகத்தைப் பிரதிபலிக்கிறது எனலாம்.

5.6. யாருக்கு? ஏன்?
முதலாம் யோவான்திருமுகத்தைப் புரிந்து கொள்ள, அது கருத்தில்கொண்டிருக்கும்பதிதர்களைப் பற்றியஅறிவுஅவசியமாகிறது. இவர்கள்யோவான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். யூதக்கிறிஸ்தவர்கள் அல்லர்.யோவான்சமூகத்தில்அங்கத்தினராக இருந்து, இப்போதுதனிச்சமூகமாகஅமைத்துக் கொண்ட பிற இனக் கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்கள் பிறஇனஉலகில் பரவி, வெற்றியடைந்து கொண்டிருந்தனர் (1 யோவா 2:19;2 யோவா 7). இவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மையைஅறிக்கையிடத்தவறியவர்கள். இவர்கள்இயேசுகிறிஸ்துஊன்உருவில்வந்துள்ள இறைமகனாவார் என்பதை மறுத்தனர். விண்ணகவெளிப்பாட்டாளரின் மண்ணகக் கருவியே ஆவார் இயேசு என்றுபோதித்தனர். ஒழுக்கத் தவறுகளைப் போதித்தனர் (1 யோவா 1:5; 2:11,22 தெர் 3:4-24; 4:2 தொ 5; 5:3-5). இறைவனைப் பற்றிய இரகசியஅறிவைப் கொண்டிருப்பதாகவும் (2:4), பாவமற்றவர்களாகஇருப்பதாகவும் (1:6, 8, 10) உரிமை கொண்டாடினர். இவர்கள்கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்லை;தங்கள் சகோதரர்களை அன்புசெய்வதில்லை; வெறுக்கின்றனர் (2:3 தொ9; 3:10,15). யோவான் இத்திருமுகத்தைஎழுதியபோது செரிந்து என்பவரைக்கருத்தில் கொண்டிருந்தார் என்றுஇரனேயுஸ் கூறுகிறார். இந்தச் செரிந்துஆன்மீகக் கிறிஸ்து திருமுழுக்கின்போதுஇயேசுவின் மேல் இறங்கினார் என்றும்,பாடுகளின்போது விலகிப் போய் விட்டார்என்றும் போதித்தார் (காண்க 2:22; 4:3; 5:5தொ). யோவான் போராடும் பதிதம்,தோசேத்தியம், ஞானவாதம் ஆகியவற்றின்தொடக்க வடிவமாக இருக்கலாம். இப்பதிதர்கள் ஏமாற்றுபவர்கள்,எதிர்க்கிறிஸ்துகள்என்றுகுறிப்பிடப்படுகின்றனர் இந்த "போலிஆவிகள்”நிராகரிக்கப்பட வேண்டும் (1 யோவா 4:1-5). இத்தகைய பிரிவினைப்போதகத்தோடு தொடர்புடையவர்களை "உங்கள் இல்லத்தில்ஏற்காதீர்கள்; வாழ்த்துக் கூறாதீர்கள்” என்று கட்டளையிடப்படுகிறது (2யோவா 8-11).இத்திருமுகத்தின்நோக்கம்இவ்விதம்எச்சரிக்கை செய்வதனாலும்,அதே சமயத்தில், நேரடியானபோதனையினாலும் கொடுக்கப்படுகிறது.

5.7. உள்ளடக்கம்
1. திருத்தூதுவக் கிறிஸ்துவம் 1:1-4
2. உண்மையானகிறிஸ்துவத்தைச் சோதித்தல் 1:5-2:27

அ. கீழ்ப்படிதலைச் சோதித்தல் 1:5-2;17
ஆ. உண்மையைச் சோதித்தல் 2:18-27

3. கடவுளின்மக்களின்புதிய வாழ்வு 2:28-4:12

அ. பாவத்தினின்று விடுபட்ட வாழ்வு 2:28-3:10
ஆ. அன்பு வாழ்வு 3:11-18
இ. உறுதிப்பாடானவாழ்வு 3:19-24
ஈ. கடவுள் சமூகத்தின்வாழ்வு 4:1-12

4. கிறிஸ்துவ உறுதிப்பாடு 4:13-5:12

அ. அன்பு அச்சத்தை நீக்குகிறது 4:13-21
ஆ. அன்பு உண்மையின்மீது கட்டப்பட்டது 5:1-12

5. முடிவுரை

 

6. புனித யோவான் எழுதிய இரண்டாம்திருமுகம்

புனித யோவானின் முதல் திருமுகம் எழுதப்பட காரணமாயிருந்தஅதே சூழ்நிலையே 2-ஆம் 3-ஆம் திருமுகங்கள் எழுதப்படவும்காரணமாயிருந்தது. 2-ஆம் திருமுகமும் 3-ஆம் திருமுகமும் ஒரேஅளவிலானவை. ஒரே ஓலையிலேயே ஒவ்வொன்றும் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஒரு கடிதங்களிலும் ஆசிரியர் தன்னை 'மூப்பர்' என்றுஅழைக்கிறார். இரு கடிதங்களுக்கும் இடையே நடை, வார்த்தைகளில்உள்ள ஒற்றுமை ஆகியவை இரு கடிதங்களும் ஒருவராலேயேஎழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. முக்கியமாகமுன்னுரைகளிலும், முடிவுரைகளிலும் இந்த ஒற்றுமை அபரிமிதமாககாணக்கிடக்கிறது. உண்மை, கிறிஸ்து இயல், சகோதர அன்பு, புதியகட்டளை, எதிர்கிறிஸ்து ஆகியவை காணப்படுதலால் இக்கடிதங்கள்யோவான்கூடாரத்தில்தான்உருவாகியிருக்க வேண்டும் எனகூறலாம்.'மூப்பர்' என்பவர் யார் என்பது வாதத்திற் குரியது.

'மூப்பர்' என்பதுவயதானவரைக் குறிப்பிடுவது மட்டுமல்ல. அக்கால கிறிஸ்தவச்சபைகளில்'மூப்பர்' என்பதுஒருபதவியாகும். பெயர் குறிப்பிடப்படாததால்இந்த மூப்பர் அக்காலத்தில் பிரபல்யமான ஒருவராக இருந்திருக்கவேண்டும் எனப்படுகிறது. (இக்காலத்தில் பெயர் சொல்லாமல் சிலர்தலைவர் எனஅழைக்கப்படுகின்றனர்).பாரம்பரியமாக இக்கடிதம் திருத்தூதரான யோவானால்எழுதப்பட்டது எனக் கருதப்பட்டாலும் அவரின் சீடர்களில் ஒருவர்தான்எழுதியிருக்க வேண்டும். எபேசு நகரத்தில் வைத்து இரு கடிதங்களும்எழுதப்பட்டதாகப் பாரம்பரியம் கூறுகிறது.இக்கடிதம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமாட்டிக்கு எழுதப் பட்டுள்ளது. இது திருச்சபையைக்குறிப்பதாகும். இப்பெருமாட்டிக்குப் பெரியகுடும்பம் உள்ளது. சிலர் அவளுடன்வாழ்கின்றனர். அவர்கள்அன்புக்குரியவர்கள்எனமூப்பராலும் எல்லா உண்மைக் கிறிஸ்தவர்களாலும்கருதப்படுகின்றனர்.இப்பெருமாட்டிக்கு இன்னொரு சகோதரிஉள்ளாள். அவள் இன்னொரு சபையாகும்அவள் இந்த மூப்பர் வாழுமிடத்தில் வாழ்கிறாள்.அவளின் குழந்தைகள் இந்த மூப்பருடன் சேர்ந்து மற்ற பெருமாட்டிக்குவாழ்த்து தெரிவிக்கின்றனர். இந்த மூப்பர், பெருமாட்டியைச் சிலநேரங்களில் ஒருமையிலும் சில நேரங்களில் பன்மையிலும்அழைக்கிறார். இதற்குக் காரணம் இவர்கள் தனிநபர்களல்லர், மாறாகசபைகள் என்பதே.

இந்த மூப்பர் திருச்சபைக்குஎச்சரிக்கை விடுகிறார். பிரிந்துசென்றதப்பறைவாதிகள் கிறிஸ்துவின் மனித அவதாரத்திற்கு எதிராகப்போதிக்கின்றனர். இந்தத் தப்பறைவாதிகள்தங்களைமுன்னேறியவர்கள்எனக் கூறிக்கொள்கின்றனர். ஆனால் அந்த முன்னேற்றம் கிறிஸ்துக்கொள்கையின் எல்லையை மீறியச் செயலாகும். இந்தத் தப்பறைப்போதகர்களைக், கிறிஸ்தவர்கள்வரவேற்கக் கூடாது எனஎச்சரிக்கிறார்.ஏனெனில் அப்படி அவர்களை வரவேற்று உபசரிப்பது அவர்களின்தவறானபணிக்கு உதவிடுவதாகும்.

யோவான் எழுதிய முதல் திருமுகத்தை 'அன்பின் கடிதம்' என்றுஅழைத்தால், இக்கடிதத்தை 'அன்பின் எல்லையின் கடிதம்' என்றுஅழைக்கலாம். இக்கடிதம் கிறிஸ்துவனுக்கு அவன் எப்போது தன்அன்பைப் பிறருக்குக் காட்ட மறுக்க வேண்டும், என்ன எல்லையைவைத்துக் கொள்ள வேண்டும் எனப்போதிக்கிறது. ஒருவரை எவ்வளவுதூரத்திற்குச் சகித்துக் கொள்வது என்பதைச் சொல்லித்தருகிறது. திருச்சபையில் சுதந்திரச் சிந்தனைகள் எழுகையில் எவ்வளவு தூரத்திற்குவிட்டுவைக்கப்படவேண்டும். எப்போதுகட்டுப்படுத்தவேண்டும்என்பதைஅலசுகிறது. திருச்சபையில் இந்தப் பிரச்சினை பல காலங்களிலும்இருந்து வந்துள்ளது. இப்போதும் இருக்கிறது. மாறுபட்ட கருத்துக்களும்,போதனைகளும், பிளவுகளாய் பரிணமிக் கையில் கட்டுப்பாட்டைக்கொண்டு வர திருச்சபை பல நேரங்களில் சகிப்புத் தன்மையை விடவேண்டியிருந்திருக்கிறது. சகிப்புத் தன்மையின் பொருள் யாது எனப்புரியாதவர்க்குச் சகிப்புத் தன்மை காட்டப்படுகையில் அது தவறானவிளைவையே ஏற்படுத்துகிறது.

ஆயினும்சகிப்புத் தன்மையைஇயேசுவின்மலைப்பொழிவுஅதிகம்வலியுறுத்துகிறது. அந்த ஒளியில் பார்க்கையில் இத்திருமுகம் கூறும்அன்பின் எல்லையையும் சகிப்புத் தன்மையின் எல்லையையும் எப்படிவிளக்குவது? இது சிந்திக்க வேண்டிய கேள்வி, விடை காணுதல்எளிதல்ல.

 

7. புனித யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்இத்திருமுகம்

ஒரு மூப்பரால் 'காயு' என்பவருக்கு எழுதப்பட்டது.ஒருவேளை இந்தக் காயு, மூப்பரால் மனம் மாற்றம் பெற்றவராகஇருக்கலாம். இந்தக் காயு கிறிஸ்துவ மறைப்பணியாளர்களைஉபசரித்திருக்க வேண்டும். அந்தப் பிணியாளர்கள் பின் மூப்பரைச்சந்தித்து இதுபற்றி உரைத்திருக்க வேண்டும். காயு இந்த மறைப்பணியாளர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, தியோத்திரேபுஇந்த மூப்பர்களிடமிருந்துகடிதத்தையோ, அவர் அனுப்பும்ஆட்களையோஏற்றுக் கொள்வதில்லை. அவன் பேராசை கொண்டவனாகவும்,பகைமையுடையவ னாகவும் சித்தரிக்கப் பட்டாலும் அவன் தொடக்கத்திருச்சபையின் தனிப்பிரிவு சபை களின் தன்மையையும் எச்சரிக்கைஉணர் வையும் பிரதிபலிக்கின்றான். தொடக்கத்திருச்சபை தன்னைப்பாதுகாப்பதற்காக பல மறைப்பணியாளர்களைப் போலிப் போதகர்கள்என எண்ணிநம்ப மறுத்தது. தியோத்திரரேபு மூப்பரின் வேண்டுதல்களைச் சட்டைசெய்யவில்லை. அதைப்பற்றிகவலைப் படவும்இல்லை.அவனைநேரடியாகச் சந்தித்துப் பேசுவதே இப்பிரச்சனைக்கு தீர்வு தரும்என மூப்பர் நம்புகிறார் (10). கொள்கையளவில் தியோத்திரேபு வேறுபட்டிருக்கலாம். காயுவும் மற்றவர்களும் மூப்பரின் கொள்கைகளைஏற்றுக் கொண்டிருக்கலாம்.

இவ்வாறுஇக்கடிதம்தொடக்ககாலக் கிறிஸ்துவநிலையைஓரளவுசுட்டிக் காட்டுகிறது. திருச்சபையில் தொடக்ககாலம் நீங்கிய கட்டத்தில்ஒவ்வொரு சபையும் சில மூப்பர்களால்பராமரிக்கப்பட்டது. ஆயினும் சிலமுக்கிய மூப்பர்கள் தங்கள் வயது,அனுபவம், திருத்தூதர்களுடன்கொண்டிருந்த உறவுஆகியவற்றின்காரணமாக பரவலானஇடங்களுக்கும் மேற்பார்வை யாளர்களாய்இருந்தனர். அந்தியோக்குஇஞ்ஞாசியார் காலத்தில் தலத் திருச்சபை மூப்பர்களின் குழுவால்ஆளப்பட்டது. அதற்கு ஆயர் தலைமைவகித்தார். இவ்விதம் ஒவ்வொருதலத் திருச்சபையும்சுயச் சார்பு கொண்டதாய்விளங்கியது. இக்கடிதத்தில்வரும் தியோத்திரேபு சம்பவம் அக்காலத்திருச்சபையின் வளர்ச்சியின்படியைக் காட்டுகிறது. அவர் இந்த மூப்பரின் பராமரிப்புக்கு எதிராகக்கிளர்ச்சி செய்கிறார். ஒவ்வொரு சபையும் தனிச்சபையாகச் செயல்படவிழைந்ததனை இது படம் பிடித்துக் காட்டுகிறது. ஒரு சபையிலிருந்தமூப்பர் இன்னொருசபையின்மீதுகொண்டிருந்த அதிகாரம் பிற்காலத்தில்வரவேற்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.

 

8. புனித யூதா எழுதிய திருமுகம்

8.1. ஆசிரியர்
இத்திருமுகம் எழுதிய ஆசிரியர் தன்னை, "இயேசு கிறிஸ்துவின்பணியாளனும் யாக்கோபுவின் சகோதரனுமாகிய யூதா” என்றுகுறிப்பிடுகிறார் (1). இது அவரை திருத்தூதர் என்று காட்டாததால்பன்னிருவருள் ஒருவரான யூதாவாக இருக்க இயலாது (லூக் 6:16; திப1;13). ஆனால், இங்குக்குறிப்பிடப்படும்யூதா நற்செய்திகளில்இயேசுவின்உறவினருள் ஒருவராகக் கருதப்படும் யூதாவாகும்.இவருடைய சகோதரர்; யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதாஅல்லரோ? (மத் 13:55).

- யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் இவர்களுடையசகோதரர்தானே? (மாற் 6:3).இங்குச் சொல்லப்படும் யூதாவின் பெயரில் இத்திருமுகம்எழுதப்பட்டிருக்கலாம். இங்கு வரும் யாக்கோபு பெயரால் யாக்கோபுதிருமுகம் எழுதப்பட்டிருக்கலாம்.

இந்த யூதாவைப் பற்றி எதுவும் தெரியவில்லை. 'யாக்கோபுவின்சகோதரன்' என்று வருணிக்கப்படுவதிலிருந்தே இந்த யூதா அவ்வளவுபிரபல்யமானவரில்லை என்று தெரிகிறது.

8.2. வாசகர்கள்
இறைவனால்அழைக்கப்பட்டு, தந்தையாகியகடவுளின்அன்பிலும்,இயேசு கிறிஸ்துவின் பாதுகாப்பிலும் வாழ்கி றவர்களுக்கு (1) என்றுஇருப்பதால் இது அனைத்துக் கிறிஸ்துவர்களுக்கும் எழுதப்படுவது.ஆயினும் வாசகர் களைப் போலிப் போதகர்களிடமிருந்து பாதுகாப்பதுநோக்கமாக இருப்ப தால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிலசபைகளில் உள்ள கிறிஸ்துவர்களுக்கு எழுதப்பட்டிருக் கலாம். அந்தச்சபைகளில் போலிப் போதகர்கள் தவறான போதனைகள் எழுப்பியதால்ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். இந்த வாசகர்கள் யூதக் கிறிஸ்துவர்களாஎன்றும் சரியாகத் தெரியவில்லை. ஏனெனில் இக்கடிதத்தில்அறிவுத்திறன் கொள்கையின் துவக்ககால தன்மைகண்டிக்கப்படுவதுபோல் தெரிகிறது. அத்தகு அறிவுத்திறன் கொள்கைபெரும்பாலும் பிற இனத்தாரும் பிற இனத்துக் கிறிஸ்துவர்களும் வாழ்ந்தஇடங்களில்தான் பரவியது.

8.3. இலக்கிய அமைப்பு
யாக்கோபு திருமுகம்போலவும் 2-ம் பேதுரு திருமுகம்போலவும் இக்கடிதம்கடிதத்துக்குரிய பாணிகுறைந்ததாக உள்ளது.முன்னுரையும் வாழ்த்தும்மட்டுமே உள்ளன. முடிவுரைஇல்லை. மொத்தம் 25வசனங்களே கொண்ட மிகச்சிறிய கடிதங்களில் ஒன்றாகவிளங்குகிறது.

8.4. பேதுருவுடன் உள்ள தொடர்பு
யூதா திருமுகத்துக்கும் 2 பேதுரு திருமுகத்துக்கும் நல்ல தொடர்புஉள்ளது. முக்கியமாக யூதா 4-16 க்கும் 2பேதுரு 2:1-18க்கும் நெருங்கியதொடர்பு இருக்கிறது. இரு ஆசிரியர்களும் வேறு ஒருவரிடத்திலிருந்துஎடுத்தாண்டிருப்பதற்கு ஆதாரம் இல்லை என்பதால் ஒருவர்இன்னொருவரிடமிருந்து பலவற்றைஎடுத்தாண்டிருக்கலாம்.இரண்டுகடிதங்களுமேபோலிப்போதகர்களிடமிருந்து வாசகர்களைப்பாதுகாக்க எழுதப்பட்டவை.2-ம் பேதுரு 2:4-7 பகுதி யூதா5-7 வரையிலுள்ள பகுதியில்வருவதைச் சரிசெய்து காலத்திற்குஉரைக்கிறது.- எகிப்தினின்று மீட்ட பின்னர்நம்பிக்கையில்லாதவர்களைஅழித்தது.- வானதூதர்களைஅழித்தது- சோதோம் கொமோராவை அழித்ததுஇப்படி யூதா திருமுகத்தில் மாறி வருகிறது.ஆனால் 2 பேதுரு திருமுகத்தில் முதலில் வானதூதர் கதைசொல்லப்பட்டு பின் மற்றவை சொல்லப் படுகின்றன.

2 பேதுரு, யூதா திருமுகத்தில் காணப்படும் சிலவற்றை விட்டுவிடுகிறது (எ.கா) வானதூதர்களின்பாவத்தின்தன்மை என்னஎன்பதுவிசித்திரமானதாக இருந்ததால் அதைவிட்டு விடுகிறது. மிக்கேல்சாத்தானுடன்செய்த விவாதமும் விடப்பட்டுள்ளது.

8.5. ஏனோக்கு நூலுடன் தொடர்பு
மறைந்த அல்லது ஏற்றுக்கொள்ளப்படாத நூல்களுள் ஒன்றாகியஏனோக்கு நூலுடன்இந்நூல் தொடர்புடையது.முக்கியமாய் வசனங்கள் 14-ம் 15-ம் ஏனோக்கு தள்ளுபடி லூhனஆகம வரிகளுடன்அப்படியே பொருந்துகின்றன.

மற்றபடியும் அலைந்து திரியும் வானதூதர் (வச 13) வானதூதரின்தண்டனை இவை - ஏனோக்கு 1:9; 10:4-13; 18:13-16 ஆகியபகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

காலம்
பலர் இத்திருமுகம் முதல் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டதுஎன்பர் இதற்குக் காரணம்.

1. வசனங்கள் 17,18இல் திருத்தூதர்கள் முன்னுரைத்த என்றுவருகிறது. இது முந்தைய காலம் எழுதப்படுவது பிந்தைய காலம் எனஇது காட்டுகிறது.

2. வச 3-இல்அன்றுஒப்படைக் கப்பட்ட விசுவாசம் எனவருகிறது.இதுவும் முற்காலமே.

3. நல்ல கிரேக்க நடை. இது பிற்காலத்தில் எழுதப்பட்டதைச்சுட்டுகிறது.

4. அறிவுத்திறன் கொள்கைகள்கண்டிக்கப்படுவதால்அக்கொள்கைஇருந்த பிற்காலத்தில்இது எழுதப்பட்டுள்ளது எனலாம்.ஆயினும்கி.பி.80-இல் இக்கடிதம்எழுதப்பட்டிருக்கலாம்என்பதே பலர் கூறுவது.

8.6. உள்ளடக்கம்
வசனங்கள் 1-6 போலிப்போதகர்கள் பற்றி குறிப்பு: போலிப்போதகர்களுக்குக் கடவுளின் தண்டனை வருகிறது என்கிறார். யூதப்பாரம்பரியத்தினின்று இதைக் கூறுகிறார்.

வசனங்கள் 17-23 எச்சரிக்கை யூதா தன் வாசகர்கள்திருத்தூதர்களின்போதனைக்குப் பிரமாணிக்கமுள்ளவர்களாய்இருக்கக்கூறுகிறார். அத்துடன்கிறிஸ்துவஅன்பின்கடமைகளைப் பொறுப்புடன்ஆற்றப் பணிக்கிறார்.

------------------------------------------
--------------------------
----------------
------
--