பழைய ஏற்பாடு - விடுதலைப் பயணம்

முனைவர் அருட்திரு சுந்தரி மைந்தன்
முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர்


பொருளடக்கம்:

1. முன்னுரை 3
2. விடுதலைப் பயண நூல் 4
3. எகிப்தில் இஸ்ரயேலர் 6
4. மோசேயின் அழைப்பு 10
5. எகிப்து விடுதலை வீரர் மோசே 18
6. பாஸ்கா நிகழ்ச்சிகள் 26
7. உடன்படிக்கை 32

1. முன்னுரை

உலகில் கடவுளரசு நிறுவப்படுவது பற்றி பழைய ஏற்பாட்டின்ஐந்நூல் முழுவதும் பேசினாலும், 'யாவே' கடவுள் தனது 'வலியகரத்தாலும்ஓங்கிய புயத்தாலும் ஒரு 'கடவுள் மைய அரசை' எப்படி ஏற்படுத்துகிறார்என விடுதலைப் பயண நூல் விளக்குகிறது.

இதற்கு முந்திய நூலான 'தொடக்க நூலில்" ஆபிரகாம்மெசபட்டோமியாவிலிருந்து எப்படி அழைக்கப்பட்டார் என்றும் அவரின்வழிமரபினர் கடல் மணலைப் போன்று பெருகுவர் எனும்வாக்குறுதியானது அவரது வழிமரபினரான ஈசாக்கு, யாக்கோபில்புதுப்பிக்கப்பட்டு, எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்றும் காண்கிறோம்.யாக்கோபு தனது இறுதிக் காலத்தில் எகிப்துக்குச் செல்வதைக் கடவுளால்உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகத் தொடக்க நூல் கூறுகிறது:

"உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே. எகிப்துக்குச்செல்ல நீ அஞ்சவேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாகவளரச்செய்வேன்" (தொநூ 46 : 3) அத்துடன் தொடக்க நூலின் இறுதியில் யோசேப்பு இறக்கும்தறுவாயில் கூறும் சொற்கள் தொடக்க நூல் நிகழ்ச்சிகளையும் விடுதலைப்பயணநூல் நிகழ்ச்சிகளையும் இணைப்பதைக் காண்கிறோம்."நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆனால் கடவுள்உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியுடன் வருவார். ஆபிரகாம்,ஈசாக்கு, யாக்கோப்புக்குக் தாம் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு இந்தநாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்"(தொநூ 50 : 24).

இவ்வாறு விடுதலைப்பயணம் நிகழ்ச்சிக்கான முன்னுரையைத்தொடக்கநூல் ஆசிரியரே வகுத்துச் சென்று விட்டார். ஆதலின் மீட்புவரலாற்றில் தொடக்க நூலின் இயல்பானத் தொடர்ச்சியாகவிடுதலைப்பயண நூலைக் காண்கிறோம்.சட்ட நூல்களில் இரண்டாவது நூலான இந்நூலின்உட்கருத்துக்கள் இகூழரயேலரின் சமய வாழ்வின் மையமாகஅமைந்துள்ளன.

 

2. விடுதலைப் பயண நூல்

விவிலியத்தின் எபிரேய மூலத்தில் 'வெ எல்லே ஹ செமோத்'(பொருள்: இவையே பெயர்களாகும்) என்றுதான் விடுதலைப் பயணநூலுக்குத் (யாத்திரை ஆகமம்) தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்இது நூலின் பொருளை வெளிப்படுத்துவதாக இல்லை.(நூலில் வரும் முதல் சொற்களையே அந்நூலுக்குத் தலைப்பாகஇடுவது எபிரேயர் வழக்கம்).

பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பான செப்துவாசிந்து(டுஓஓ) இந்நூலுக்கு 'எக்சோடஸ்' (நுஒழனரள) என்று பெயரிட, இதேபெயரையே இலத்தீன், ஆங்கில மொழிபெயர்ப்புகளும் பின்பற்றின.'வெளியேறுதல்' என்பதே இதன் பொருள். நூலின் மைய நிகழ்வை இதுகுறிக்கிறது. அதே வழியில் 'விடுதலைப்பயண நூல்' என தமிழ் பொதுமொழிபெயர்ப்பில் தற்போது தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இஸ்ரயேலின் வரலாற்று நிகழ்ச்சிகளை மீட்பின் நிகழ்ச்சிகளாகத்தொகுத்துக் கூறும் இந்நூல் இஸ்ரயேலின் சமயக் காவியமாகஅமைகிறது.

"கடும் வேலையால் அவர்ளை ஒடுக்குவதற்காக அடிமை வேலைவாங்கும் அதிகாரிகள் இவர்கள் மேல் நியமிக்கப்பட்டனர்.பார்வோனுக்காக இவர்கள் பித்தோம், இராம்சேசு என்ற களஞ்சியநகரங்களைக் கட்டியெழுப்பினர்"(விப 1: 11). மேற்கண்ட இந்தச்சொற்றொடர் எகிப்தில் இஸ்ரயேலர் பட்ட அடக்கு முறைகளையும்அனுபவித்த தாங்கொண்ணா வேதனைகளையும் வெளிப்படுத்துகிறது.முதலாம் சேத்தி என்ற மாமன்னரின் காலத்தில் (கி.மு.1309-1290)தொடங்கப்பட்ட இக்கொடுமைகள் அவரைப் பின் தொடர்ந்த இரண்டாம்இராம்சேசு (கி.மு.1290-24) ஆட்சியில் அதிகமாயின. இவரதுகாலத்தில்தான் விடுதலைப்பயணம் நிகழ்ந்தது.

கி.மு 13-ஆம் நூற்றாண்டில் இஸ்ரயேல் மக்கள் வரலாற்றில்நடந்த இந்நிகழ்ச்சிகள் வாய்மொழி மரபாக அவர்களதுவழிமரபினரிடையே நிலவி வந்தன. தாங்கள் யார்? தங்கள் கடவுள் யார்?மற்ற மக்களிடமிருந்து தாங்கள் எப்படி வேறுபட்டவர்கள்? போன்றவினாக்களுக்கு அவர்களது விடுதலைப்பயண அனுபவங்கள்விடையளித்தன. தொடர்ந்து வந்த வழி மரபினர் தங்களின்தனித்தன்மையை உணர்ந்து கொள்ள அவர்களது முன்னோரின்விடுதலைப் பயணத்தை நினைவு கூர்ந்தனர். அதனால் விடுதலைப்பயண நிகழ்ச்சிகள் மிகவும் உயிரூயஅp;ட்டமுடன் இஸ்ரயேல் மக்களிடையேநிலவி வந்தன.ஏறக்குறைய, கி.மு.10-ம் நூற்றாண்டளவில் இவ்வாய்மொழி மரபுஎழுத்து வடிவம் பெற்றது. கி.மு. 6-5ம் நூற்றாண்டளவில் நூலாகத்தொகுக்கப்பட்டது. நிகழ்ச்சிகள் நடந்து சுமார் 800 ஆண்டுகளுக்குப்பின்னரே அவற்றை முறையாகத்ரூசூ381; தொகுத்துரூசூ381;எழுதினர்?. அப்படிதொகுக்கும் போது இந்த 800 ஆண்டுகால இஸ்ரயேலரின்இறையனுபவத்தின் கூறுகளையும் புகுத்தி நூலை வடித்தனர்.ஆதலின் இன்று நாம் பயன்படுத்தும் விடுதலைப் பயண நூல்உருவானதில் நான்கு நிலைகளை அறிஞர்கள் காண்கின்றனர்.

முதல் நிலை: இஸ்ரயேலரின் எகிப்திய அனுபவத்தையும்,விடுதலைப் பயண அனுபவத்தையும் நேரிடையாகத் துய்த்துணர்ந்த ஒருகுழுவினர் உண்டாக்கிய மூலக் குறிப்புகள்.

இரண்டாம் நிலை: மேற்சொன்ன வரலாறு நிகழ்ச்சிகளுக்குத்தங்கள் சமய அனுபவத்தின் ஒளியில் கானான் நாட்டில் இஸ்ரயேலர்மீண்டும் உருக்கொடுத்தனர். சுமார் கி.மு. 13 -ஆம் நூற்றாண்டுக்கும்கி.மு. 11-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இது நடந்தது.

மூன்றாம் நிலை: இஸ்ரயேலர் தங்களுக்குள்ளே ஒர் அரசைநிறுவிய போது விடுதலைப் பயண அனுபவங்கள் புதிய அரசமைப்புப்பின்னணியில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. தேசிய விடுதலைப்போராட்டமாக அதற்கு உருக்கொடுத்து நாட்டுமக்களின் ஒன்றிப்பை ஏற்படுத்த முயன்றனர்.இச்சூழலில் விடுதலைப் பயணமானது இருமக்களிடையே ஏற்பட்ட போராட்டமாகக் கருதப்பட்டது. மோசே ஒரு குழுவான இகூழரயேலருக்கும் பார்வோன் அடுத்த குழுவான எகிப்தியருக்கும் தலைவர்கள் என எண்ணப்பட்டனர்.கி.மு.10-ஆம் நூற்றாண்டுக்குப்பின் தோன்றிய இந்நிலையில் விடுதலைப் பயணம்பற்றிய 'எலோகிம்' மரபும் உருவானது.

நான்காம் நிலை: இது விடுதலைப்பயண நூலின் அமைப்பு உருவானகாலக்கட்டம். விடுதலை நிகழ்ச்சியானது'யாவே' கடவுளின் அளவில்லா இறைத் தன்மையை வெளிப்படுத்தும் ஒருசெயல் என்று காட்டப்படுகிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் (கி.மு.6 - ஆம் நூற்றாண்டு) இஸ்ரேயலர் கொடுமைப் படுத்தப்பட்டபோது, எந்தஓர் உரிமையும் இல்லாத ஒரு சூழ்நிலையில் 8 நூற்றாண்டுகளுக்கு முன்அவர்களது முன்னோர் அனுபவித்த விடுதலை நிகழ்ச்சிகளை ஆழ்ந்தசமய ஒளியில் பார்த்தனர். கடவுளின் ஆற்றலை முழுவதும் நம்புகின்றஒரு சமுதாயத் தோற்றமாக அதனை கண்டனர்.

 

3. எகிப்தில் இஸ்ரயேலர்

எபிரேயர்களான இஸ்ரயேலர் எகிப்தில் வாழ்ந்தது பற்றிய எகிப்தியநூல்களில் நேரடிக் குறிப்புகள் இல்லையென்றாலும் விவிலிய மரபுகளின்படி இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் வாழ்ந்தனர் என்பது மறுக்க முடியாதஉண்மை. லேவியர் குலத்தில் எகிப்தியப் பெயர்கள் காணக்கிடப்பதுஇதற்கு வலிமையானதோர் சான்று. (எ.கா.) மோசே, ஒப்னி, பினேகாசு,மெராரி, ஆரோன் என்னும் பெயர்கள் கூட எகிப்தியப் பெயர்கள் தான்என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஏறக்குறைய கி.மு. 18-ம் நூற்றாண்டில் வட எகிப்தியப் பகுதியானநைல் நதி சமவெளிப் பகுதியில் எபிரேய இனத்தவர் நுழைந்துகுடியேறினர். இவர்கள் சிரியா பகுதியிலிருந்து புறப்பட்ட செமித்தியமக்களாக இருந்திருத்தல் வேண்டும். எகிப்திற்குள் எபிரேயர்களின் வரவுகி.மு.16-ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.

அந்நாட்களில் , மத்திய ஆசியப் பகுதியில் உணவுப் பஞ்சம்ஏற்பட்டதால் மக்கள் எகிப்திற்குச் சென்றனர். பல்வேறு இனம், மொழி,நாட்டுப்பின்புலம் கொண்டவர்கள் எகிப்தில் அடிமைகளாகப்பணியமர்த்தப் பட்டனர். அடிமைத்தனம் எகிப்தில் மிகப்பழங்காலந்தொட்டே நிலவி வந்த வழக்கமாகும். இரண்டாம் இராம்சேசுமற்றும் எல்லாப் பார்வோன்களும் (எகிப்திய அரசர்களை 'பார்வோன்'என்றழைப்பது வழக்கம்). கைதிகளையும் அடிமைகளையும் பயன்படுத்திமாபெரும் கட்டடங்களையும் நகரங்களையும் கட்டியெழுப்பினர் (காண்:விப 1 : 11). இத்தகைய அவர்களது வழக்கத்தை ஒடுக்குமுறை என்றுவிவிலியம் அழைக்கிறது (விப 1 : 12).

3.1. அப்பிரு இன மக்கள்
எபிரேய மொழி பேசும் செமித்திய மக்கள் பெருமளவில் வடஎகிப்தில் குடியேறியதன் விளைவாக எகிப்திய மொழியில்நூற்றுக்கணக்கான செமித்திய வார்த்தைகள் கலந்தன. கனானேயதெய்வங்கள் எகிப்தியர்களாலும் வழிபடப்பட்டன. 'அப்பிரு' ('யீசைர) எனும்கூட்டத்தினர் எகிப்தில் வாழ்ந்ததாக கி.மு 15-ம் நூற்றாண்டின் குறிப்புகள்தருகின்றன.மெசபதோமியப் பகுதியில் நூசி என்ற இடத்தில் கி.மு. 15 ஆம்நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளின்படி அப்பிரு என்றஇனத்தவர் அங்கே அரசுப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரியவருகிறது.

எகிப்திய வரலாற்றுக் குறிப்புகளின்படி, இந்த இனத்தவர்பாலஸ்தீன சிரிய மலைப்பகுதியிலிருந்து எகிப்தில் கி.மு. 20 ஆம்நூற்றாண்டிலேயே குடியேறியவர் என்று அறிகிறோம். இவர்கள்செமித்திய இனத்தவர். அவர்கள் நூசியில் சமுதாயத்தின் இரண்டாம் தரமக்களாகவும், அடிமைகளாகவும், வெளிநாட்டவராகவும் கருதப்பட்டதுபோல் எகிப்திலும் கருதப்பட்டனர். கி.மு. 1710 முதல் எகிப்தைஆண்டவர்கள் கிக்சோசு எனும் வெளி நாட்டினர். அவர்கள் காலத்தில்தான் இஸ்ரயேலர் எகிப்தில் சிறப்புற்று விளங்கினர். (யோசேப்பு காலம்?)'அபிரு" "பிரு" 'எபேர்" 'எபிரேயர்" எனும் பெயர்களால் எபிரேயர்அரை நாடோடிக்குழுக்கள் அழைக்கப்பட்டனர்.

பிற்காலத்தில் அதாவது, கி.மு.16-14 நூற்றாண்டுகளில், இந்த'அப்பிரு' இன மக்கள் எகிப்தில் 'எபிரேயர்' என்று மருவி, அழைக்கப்பட்டபோது தாழ்ந்த இன மக்களாகவே நடத்தப்பட்டனர்.முதலாம் சேத்தி, இரண்டாம் இராம்சேசு போன்றோர் எகிப்தியதலைநகரைக் கட்டியெழுப்பவும், புதுப்பிக்கவும் இந்த அடிமைஎபிரேயர்களைப் பயன்படுத்தினர். "தானிஸ்" என்ற பொதுப்பெயர்உருவான கி.மு.11 ஆம் நூற்றாண்டுவரை அத்தலைநகர் "இராம்சேசின்"இல்லம் என்றே அழைக்கப்பட்டது.

3. 2. போராட்ட வாழ்வு
இத்தகைய சூழ்நிலையில்,'யாவே' கடவுள்மேல் நம்பிக்கைவைத்த எபிரேயர்கள் ஆண்டவரைநோக்கி அவலக்குரல் மட்டுமே எழுப்பமுழ்?தது (விப 3 : 7-9; 6 : 5).அவர்களது தாங்க முடியாதவேதனையினால் அம்மக்கள் தங்கள்முன்னோருக்கு கடவுள் கொடுத்திருந்த வாக்குறுதிகளைக்கூட மறந்துவிட்டனர்."இவற்றையெல்லாம் மோசேஇஸ்ரயேல் மக்களிடம் எடுத்துசொல்லியும், அவர்கள் மனஏக்கத்தாலும், வேலையின் கொடுமையினாலும் மோசேக்குச் செவிகொடுக்கவில்லை" என்ற மறைநூல் ஆசிரியரின் கூற்று (விப 6 : 9) அம்மக்களின்நம்பிக்கையற்ற மனப்பான்மையைக் காட்டுகிறது.

பார்வோன் இம்மக்களை அடிமைத் தனத்திற்கு உள்ளாக்கியது ஓர்அரசியல் நிலைப்பாடு. அந்நிய சமுதாயத்தை எகிப்திய அரசுஅடிமைப்படுத்தி அவர்களது சக்திகள் அனைத்தையும் உறிஞ்சியது.அரசியல் அதிகாரத்தால் அவர்களைக் கொடுமைக்குள்ளாக்கியது.இனக்கொலைகள் அங்கே சர்வசாதாரணம்! கட்டாய வேலையே அன்றாடநடைமுறை."இஸ்ரயேல் மக்களோ குழந்தைகள் பெற்று பலுகிப் பெருகிஎண்ணிக்கையில் உயர்ந்தனர்; இதனால் அந்நாடே அவர்களால்நிறைந்துவிட்டது" எனும் விடுதலைப்பயண நூல் சொற்களையும் (விப 1 : 7),'அவன் (பார்வோன்) தன் குடிமக்களை' நோக்கி , "இதோ, இஸ்ரயேல்மக்களினம் நம்மைவிட பெருந்தொகையதாயும் ஆள்பலம்வாய்ந்ததாயும் உள்ளது; அவர்கள்எண்ணிக்கையில் பெருகிடாதவாறுதந்திரமாய் செயல் படுவோம்வாருங்கள்" என்று அவ்வரசன்கூறுவதாகத் தரப்பட்டுள்ள சொற்களையும் (1 : 9-10) கூர்ந்து ஆராயும்போது மற்றுமோர்உண்மை புலப்படுகிறது.எகிப்திய மன்னன் இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கையை கண்டுஅஞ்சினான். அவனது நிலைத்த அரசியல் தன்மைக்கு அவர்கள் ஒருசவாலாக இருக்கக்கூடும் என்று பயந்தான். அதனால் திட்டமிட்டஇனக்கொலைகள் நடைபெற வழிகோலினான். அந்த இனம் தானாகவேஅழிவதற்கான சமூகச் சூழ்நிலைகளை ஏற்படுத்தினான்."கொடுமைப்படுத்தி வாங்கப்பட்ட ஒவ்வொரு வேலையாலும்,அவர்கள் வாழ்க்கையே கசந்து போகச் செய்தான்" (1 : 14).

எபிரேயர்களின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவாஎன்பவர்களிடம்... "ஆண்மகவு என்றால் அதை கொன்று விடுங்கள்;பெண்மகவு என்றால் வாழட்டும்" என்று எகிப்திய மன்னன் கூறினான்(விப 1 : 15-16).இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அரசியல்கொடுமைகளையும் சமுதாய அழிவுகளையும் சந்தித்தனர். இதனால்அவர்கள் பெறவேண்டியது அரசியல், மற்றும் சமூதாய விடுதலையாகும்.ஆனால் அவர்கள் எவ்வளவுக்கு விடுதலைக்காக ஏங்கினார்களோஅவ்வளவுக்கு அதைப்பெற முடியும் என்ற நம்பிக்கையற்றவர்களாகவாழ்ந்தனர்.இஸ்ரயேலரின் எகிப்திய வாழ்வு மற்றுமோர் உண்மையையும்வெளிப்படுத்துகிறது. அவர்கள் அங்கே வாழ்வுக்கும் சாவுக்குமிடையேஒரு போராட்டத்தை அனுபவித்தனர் என்று விவிலியம் கூறுகிறது."எத்துணைக்கு அவர்களை ஒடுக்கினார்களோ அத்துணைக்குஅவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்; பெருகிப் பரவினர் " (1 : 12).இது முதல் போராட்டம்.

அடுத்து, அவர்களது வளர்ச்சியைக்கண்டு மருத்துவ பெண்கள்மூலம் அவர்களது ஆண்மகவுகளை ஒழிக்கச் சொல்கிறான் மன்னன்.ஆனால் கடவுளுக்கும் உயிருக்கும் பயந்த அப்பெண்கள் அவ்வாறுசெய்யவில்லை (1 : 18). இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில்பெருகச்செய்தனர் ( 1 : 20). எபிரேய பெண்களுக்கும் எகிப்தியமன்னனுக்கும் இடையில் வாழ்வுக்கும் சாவுக்கும் நடக்கும் இரண்டாவதுபோராட்டம் இது.அடுத்து, 'பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல்நதியில் எறிந்துவிடுங்கள்" என்று பார்வோனின் கட்டளை வருகின்றது(1 : 22). பார்வோன் மன்னன் எவ்வாறு எபிரேயர்களை கருவறுக்கத்திட்டமிட்டான் என்பது புலனாகிறது. இது அவர்கள் சந்திக்கும் மூன்றாவதுபோராட்டம்.இவ்வாறு அவர்கள் வலிமையானதோர் ஆக்கிரமிப்புச் சக்திக்குஎதிராக அவர்களது வாழ்வுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும்வேளையில்தான் கடவுள் அவர்கள் பக்கம் வருகிறார்; மோசே என்றகருவி மூலம் கடவுள் விடுதலைக்கு வித்திட்டார் என விடுதலை பயணநூல் கூறுகிறது. இத்தகைய பின்னனியில்? தான்மோசேயின்ரூசூ381;அழைப்பு?வருகிறது.

 

4. மோசேயின் அழைப்பு

எகிப்திய மன்னன் இஸ்ரயேலரை அழிக்க எத்தனித்தபோது கடவுள்அவர்களைப் பாதுகாக்க முன்வருகிறார். ஆதலின், இதனைப்பார்வோனுக்கும் கடவுளுக்கும் நடக்கும் போராட்டமாக விடுதலைப் பயணநூல் ஆசிரியர் காண்கிறார். போராட்ட உத்தியாக கடவுள் எடுக்கும்முதல்படிதான் மோசேயின் வருகை.

4.1. பிறப்பும் வளர்ப்பும்
லேவி குலப் பெற்றோருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது.மூன்று மாதங்கள் அக்குழந்தையை மறைத்து, பின்னர் பேழை ஒன்றில்வைத்து நைல் நதியில் விட அக்குழந்தையை அரசமகள் காப்பாற்றுகிறாள்.அக்குழந்தையின் சகோதரி அங்கே வெளிப்பட்டு அரசமகளுக்காக அதனை வளர்க்க அதன் தாயையே ஏற்பாடு செய்கிறாள்.அவன் வளர்ந்தவுடன் அரச மகள் அவனுக்கு 'மோசே" எனபெயரிடுகிறாள்.

விடுதலை பயண நூலில் நாம் காணும் குறிப்புகள் இவை (விப 2: 1-10). இஸ்ரயேலரின் விடுதலை வீரர் 'மோசே' பற்றி மிகவும் தெளிவானமரபைப் பெற்ற கி.மு 8ஆம்நூற்றாண்டின் விவிலியஆசிரியர் அவரது பிறப்பு பற்றிஎழும்போது இங்கே ஒரு வீரகாவியத்தைப் படைக்கிறார்.பழங்கால மத்தியகிழக்கு நாடுகளில் (யுnஉநைவெ நேயச நுயளவ) இது போன்றேசாவுக்கு உட்படுத்தப்பட்டகுழந்தையொன்று காப்பாற்றப்பட்டு, பின்னர் அவனேஅரசனாக மாறும் கதைகள்நிறையவே உண்டு. எடுத்துக்காட்டாக: கி.மு 30ஆம்நூற்றாண்டில் வாழ்ந்ததாகக்கூறப்பட்ட 'அக்காடு' என்றஇடத்தின் அரசர் சார்கோன்என்பவர் பற்றிய இதே போன்றதொரு கதையுண்டு. பின்னர் கிரேக்கநாட்டில் ஒடிபுஸ் (ழுநனipரள) பற்றிய கதையிலும் இவ்வாறே காண்கிறோம்.இப்புராணக்கதைகளின் வடிவிலே மோசேயின் குழந்தைப் பருவநிகழ்ச்சிகளும் எழுதப்பட்டுள்ளன. இஸ்ரயேலரின் விடுதலைத் தலைவர்இறையருளால் எதிராளியின் அரண்மனையிலேயே வளர்ந்து சிறந்தார்என்பதே ஆசிரியர் கூறவிரும்பும் கருத்து.

விப 1 : 1-7 இல் யாக்கோபின் மூன்றாவது மகனாக லேவிகுறிப்பிடப்படுகிறார். இருப்பினும் இஸ்ரயேலின் மற்ற குலங்கள் போல்லேவியர் குலம் இஸ்ரயேல் குலத்தின் ஒரு குலமாக உருவாகவில்லை.கடவுளின் பணிக்காவே இந்த லேவியர் குலம் புனிதப்படுத்தப்பட்டதாகவிடுதலைப் பயண இறுதியில் காண்கிறோம் (32 : 25-29). ஏனெனில்இஸ்ரயேலின் ஒரே கடவுள் கொள்கையினையும் அவர்களதுநோக்கங்களையும் லேவியர் குலம் விரைவாக ஏற்றுக் கொண்டது.பிற்காலத்தில் இந்த லேவியர் இஸ்ரயேல் சமுதாயத்தில் வகித்தமுக்கியமான இடத்தின் பொருட்டு மோசேயின் பெற்றோரை 'லேவி' என்றேகி.மு.8 ஆம் நுhற்றாண்டின் மறைநுhல் ஆசிரியர் எழுத ஆரம்பித்தார்.(புயழவவறயடனஇ வுசiடிநள ழக ஐளசயநட 35-41).

பார்வோன் மகள் குழந்தைக்கு இட்ட பெயர் 'மோசே'. மோசே(ஆழளாநா) என்ற எபிரேயச் சொல்லுக்கு "வெளியே எடுத்தல்" என்பதுபொருள். அதனால் தான், 'நீரிலிருந்து இவனை எடுத்தேன்' என்று கூறிஅவள் அவனுக்கு 'மோசே' எனப் பெயரிட்டாள் என்று விவிலிய ஆசிரியர்எபிரேயப் பின்னணியைத் தருகிறார்.

ஆனால், ஆராய்ச்சியாளர் முடிவுப்படி 'மோசே' என்பது எகிப்தியச்சொல்லாகும். 'யாமோசே, துத்மோசே, இராமோசே" போன்ற எகிப்தியஅரசர்களின் பெயர்களில் மோசே என்பது துணைப்பெயராகவருவதைக்காணலாம். எகிப்திய மொழியில் 'மோசே' என்றால் 'மகன்'என்பது தான் பொருள். இறையியல் காரணங்களுக்காக எகிப்தியப்பெயரை எபிரேயப் பெயராக எடுத்துக்கொண்டார் விவிலிய ஆசிரியர்.சாவுக்கு உள்ளாக்கப்பட்டு அனாதையாக விடப்பட்ட மோசே அதேபார்வோன் குடும்பத்தால் (மகள்) - (வலிமையான கரம்) - வாழ்வுக்கு'வெளியே எடுக்கப்படுகிறான்! அதேபோன்று எகிப்தில் அடிமைத்தனத்தில்சாவுக்கு உள்ளாக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் 'யாவே" என்றவலிமையான கரத்தினால் வாழ்வுக்கு வெளியே எடுக்கப்படஇருக்கிறார்கள்" (நுஒழனரள). வரவிருக்கும் விடுதலை நிகழ்ச்சிகளைமுன்னமே சுட்டிக் காட்டும் விதத்தில் விவிலிய ஆசிரியர் குழந்தையின்பெயரை 'மோசே" என்று அழைத்து அதற்கு எபிரேயப் பொருளைத்தருகின்றார். அரச குடும்பத்தில் பெரியவனாக வளர்ந்த 'மோசே'நியாயத்திற்கு குரல் கொடுப்பவனாகவும், தனது உண்மையான இனம்எதுவென அறிந்து கொண்டவனாகவும் விவிலிய ஆசிரியரால் காட்டப்படுகிறார். அதனால் தான் எபிரேயன் ஒருவனை எகிப்தியன் அடிப்பதைக்கண்டு அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று புதைக்கிறார் மோசே.அடுத்து எபிரேயர் இருவர் தங்களுக்குள் சண்டையிடுவதைக்கண்டுஅதையும் தட்டிக்கேட்கிறார். தனது குற்றம் அரசனுக்கு தெரியவர,அவனை பார்வோன் தண்டிக்கத் தேடியதை அறிந்த மோசே மிதியான்நாட்டிற்குச் சென்று குடியேறிகிறார்.

4.2. மிதியானியர் (மிதியான்) நாடு
தொடக்கநூல் 25:1-2 ல் நாம் காண்பது போல் ஆபிரகாம்கெத்தூரா என்ற மற்றொரு பெண்ணை மணந்து அவள் மூலம்பெற்றெடுத்த பிள்ளைகளில் மிதியான் என்பவரும் ஒருவர். ஆதலால்இந்த மிதியானியரும் செமித்திய இனத்தைச் சார்ந்தவர்களே,ஆபிரகாமின் மக்களே!மிதியானின் அர்ச்சகராகிய இரகுவேலின் மகள் சிப்போராவைமணம் முடித்தார் மோசே.

விவிலிய ஆசிரியர் தரும் ஒப்பீட்டுக் கருத்துக்கள் பல :

1. சீனாய்ப் பாலைவனத்தில் ஒரு பகுதி மிதியான் எனப்பட்டது.எல்லா வளமும் கொண்ட எகிப்து உரிமையுடன் வாழத் தகுதியற்ற இடமாகமாறிவிட்ட போது, எதற்கும் பஞ்சமாயுள்ள பாலைவனப்பகுதி உரிமைவாழ்வின் அடைக்கலமாகி விட்டது. நைல் நதியால் செழிப்புற்ற எகிப்துமோசேயை விரட்டியபோது சீனாய்ப் பாலைநிலம் அவருக்கு அடைக்கலம்கொடுத்தது .

2. மிதியான் நாட்டிலும் நீதிக்காகப்போராடுபவராகவும், உயிரைக்காப்பவராகவுமே மோசேயை விவிலிய ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்;அர்ச்சகருடைய பெண்களைப் பகைவரிடமிருந்து பாதுகாக்கிறார்;ஆட்டுமந்தைக்குப் தண்ணீர் காட்டுகிறார் (காண். விப 2 : 16). இதனால்மோசே என்ற தலைவனின் தன்மையையும், அவரது பிற்கால வாழ்வின்போக்கையும் (அழைத்தல்) தெளிவாகக் காட்டுகிறார். அதாவது ஒடுக்கப்பட்டோரின் உரிமை வாழ்வுக்காக மீண்டும் மோசே போராடுகிறார். அவரதுவாழ்வின் குறிக்கோளே இதுதான் என்று காட்ட விரும்புகிறார் விடுதலைப்பயண நூல் ஆசிரியர்.

3. மோசே தனக்குப் பிறந்த குழந்தைக்கு 'கேர்சோம்' என்று பெயர்வைக்கிறார். அதாவது, 'நான் வேற்று நாட்டில் அன்னியனாய் உள்ளேன்'என்பது பொருள். மோசே வேறொரு நாட்டிற்கும் வேறோரு மக்களுக்கும்(இஸ்ரயேலர்) உரிமையுடையவர். அந்த உரிமையை இன்னும் மோசேபெறவில்லை என்பதை இது காட்டுகிறது.இத்தகைய முன்னுரையுடன், அவலக் குரல் எழுப்பும்இஸ்ரயேலரைக் கண்ணோக்கிய கடவுளின் (2 : 23-25) செயல்பாட்டைவிலிலிய ஆசிரியர் தொடர்ந்து விவரிக்கிறார்.

4.3. அழைப்பு வருகிறது!
கி.மு. 1290 இல் எகிப்திய பார்வோன் முதலாம் சேத்தி என்றமன்னன் இறக்கிறான்.புதிய மன்னன் தோன்றும் நேரம் பார்த்து அண்டை நாடுகளும்,உள்ளநாட்டு நிர்வாகத்தில் நம்பிக்கையற்றவர்களும் புரட்சி செய்வதுமத்திய கிழக்கு நாடுகளின் பரவலான வழக்கம்.இத்தருணத்தில்தான் கடவுளும் தம் மக்கள் இஸ்ரயேலைவிடுவிக்க வித்திட்டார் என்று விடுதலைப் பயண நூல் ஆசிரியர்கூறுகிறார் (விப 2 : 25). எபிரேயரும் புரட்சிக்குத் தயாராயிருந்தனர்.தன் மாமனாரின் ஆட்டு மந்தையினை மோசே மேய்த்துக்கொண்டிருக்கிறார்.ஓரேப் மலையை வந்தடைகிறார்.

இதனையே கடவுளின் மலைஎன்று வருணிக்கிறார் எலோக்கிம் மரபு ஆசிரியர் (3 : 1). அம்மலை யாவேமரபில் சீனாய் மலை என்று குறிப்பிடப்படுகிறது.மலைக்கு வந்த மோசே எரியும் முட்புதரைக் காண்கிறார்; அதில்எழும் தீப்பிழம்பில் கடவுளைக் காண்கிறார்.அதாவது, வழக்கத்துக்கு மாறான ஒரு நிகழ்ச்சியில் மோசேயைக்கடவுள் ஆட்கொள்கிறார். கடவுளின் உடனிருத்தலையும் திருவெளிப்பாட்டுச் சூழலையும், அவரது அளவில்லா ஆற்றலையும் உணர்த்தவேதீப்பிழம்பு உருவகத்தை ஆசிரியர் பயன்படுத்துகிறார் (காண். விப 40 :38; 13 : 21; திப 2 : 3; 9 : 3).'மோசே, மோசே' என்று பெயர் சொல்லி அழைத்த கடவுள் தனதுவெளிப்பாட்டை அளிக்கிறார்:முதலில் 'தான் யார்' என்ற பதில் வருகிறது: "உங்கள்மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள்,யாக்கோபின் கடவுள் நானே"" (விப. 3:6).இதுவரை மோசே எகிப்திய உறவு கொண்டிருந்தார். ஓர் எகிப்தியன்என்று கூறும் அளவுக்கு அவரது வளர்ப்பு அமைந்து, எகிப்திய இளவரசன்என்று கருதப்படும் அளவுக்கு வாழ்ந்திருந்தார். அதாவது அடக்கு முறைஅமைப்புக்கு இதுவரை சொந்தம் கொண்டவர். உலகப் பார்வையில்அநீதிக்கும் அக்கிரமத்துக்கும் துணை சென்ற ஓர் இளவரசர். ஆனால்கடவுள் இவரை நீதிக்காகப் போராடும் தனது மக்களுடன் இணைக்கத்திட்டம் கொண்டுள்ளார். அடக்குமுறைக்கு ஆளாகி, அடிமைத்தனத்தில்அவதியுறும் தனது மக்களான இஸ்ரயேல் மக்களுடன் மோசேயைஇணைக்கிறார். அதனால் தான் "உங்கள் மூதாதையரின் கடவுள்" என்றுதன்னை அறிமுகப்படுத்துகிறார்.

அத்துடன் இன்னும் ஓர் உண்மையை வெளிப்படுத்த இத்தகையமுறையில் எழுதுகிறார் விவிலிய ஆசிரியர்:"தலைமுறை தலைமுறையாக உன்னுடனும் உனக்குப்பின் வரும்வழி மரபினருடனும் ... நான் கடவுளாய் இருப்பேன் : நீ தங்கியிருக்கும்நாட்டையும் கானான் நாடு முழுவதையும்... உரிமைச் சொத்தாகக்கொடுப்பேன்: நான் அவர்களுக்குக் கடவுளாயிருப்பேன்" என்று முன்புஆபிரகாமுடன் கடவுள் உடன் படிக்கை ஒன்றைச் செய்துக்கொண்டார்(காண். தொநூ 17 : 6-9).இதையே ஈசாக்குடன் மீண்டும் உறுதி செய்த கடவுள் (தொநூ 26 :25), யாக்கோப்போடு புதுப்பித்துக் கொள்கிறார் (தொநூ 28 : 13-16).இஸ்ரயேல் குலமுதுவர்களுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையானது இன்னமும் நிறைவைக் காணவில்லை.அந்த உடன்படிக்கையை நிலைபெறச்செய்யும் தனது கருவியாகமோசேயைத் தேர்ந்தெடுக்கிறார். எபிரேயர்கள் குல முதுவர்களுடனும்தான் செய்துக்கொண்ட உடன்படிக்கையை நினைவு கூர்ந்த கடவுள் (விப2 : 24), மோசேயை அழைத்து, அவர் மூலம் தனது உடன்படிக்கையைநிறைவேற்ற எண்ணம் கொள்கிறார். இவ்வாறு கடவுள் மோசேயைஇஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு,யாக்கோப்புடன் இணைக்கிறார்! எனவே நீதியின் தூதுவராக, விடுதலைவீரராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என விவிலிய ஆசிரியர் கருதுகிறார்.அதனால்தான், இந்த அழைத்தல் நிகழ்ச்சியில் இஸ்ரயேலர்எகிப்தில் படும் துன்பங்களைக் குறிப்பிட்டக் கடவுள், "இப்போதே போ ...நான் உன்னை பார்வோனிடம் அனுப்புகிறேன்..." என்று கட்டளைகொடுக்கிறார்.இதைக்கேட்ட மோசே தயக்கம் காட்டி, கடவுளின் பெயரைக் கேட்க,"நான் உன்னோடு இருப்பேன்" என்ற நம்பிக்கை செய்தியையும்,'இருக்கின்றவராக இருக்கிறவர் நானே" (3 : 12-14) என்ற தம்தன்மையையும் கடவுள் குறிப்பிட்டார் என ஆசிரியர் எழுதுகிறார்.

4.4. கடவுளின் பெயர்
எபிரேய மூலத்தில் கடவுளின் பெயர் 'யாவே" (லுர்றுர் - லுயாறநா)என்று தரப்பட்டுள்ளது :இதனை 'இருக்கின்றவராக இருக்கிறவர் நானே" என்ற தமிழில்மொழிப் பெயர்க்கிறோம். 'இருக்கிறதை இருக்க வைப்பவர்" என்றும்,'நானே இருக்கின்றவர்' என்றும் அறிஞர்கள் பொருள் கொள்வர்.பொய்மையிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் கடவுள்என்றும் இருப்பவராக இருக்கிறார் என்பது இதனால் புலனாகிறது.அதாவது, உலகமும் அதில் உள்ளவை யாவும் மறையும் தன்மைக்கொண்டவை. ஆனால் கடவுள் என்றும் நிலைத்து நிற்க்கக் கூடியவர்;அவரது வார்த்தைக்கு உயிராற்றல் உண்டு என்று விவிலிய ஆசிரியர்தெளிவுப்படுத்த விரும்புகிறார்.

கடவுளுக்கு 'யாவே" (லுயாறநா) என்னும் பெயர் இஸ்ரயேல்வரலாற்றிலும் மரபிலும் தோன்றியது எப்போது?

கானானில் வாழ்ந்த குல முதுவர்கள் கடவுளை 'எல்- ஷூதாய்",'எல்-ஓதாம்" போன்ற பெயர்களில் வழிப்பட்டனர். எகிப்திலிருந்துவிடுதலையாகி வந்த எபிரேயர் தங்கள் கடவுளை 'யாவே"என்றழைத்தனர். கோட்வால்டு என்ற அறிஞரின் கூற்றுப்படி மோசேசமுதாயத்தினர்தான் முதன் முதலில் கடவுளை 'யாவே" என்றுஅழைத்தனர். எகிப்தில் இருந்து வந்த எபிரேயர்கள் கானான் நாட்டில்'பெத்தேல்" பகுதியில் குடியேறினர். எப்பிராயீம், 'மனாசே" கோத்திரத்தவர்முன்னமே அங்கே வாழ்ந்தனர். இந்த இரு குழுக்களும் சமயஅடிப்படையில் ஒன்று சேர்ந்தனர். இவர்களைத் தான் முழுமையாக'இஸ்ரயேலர்" என்று நாம் அழைக்க முடியும். இது நிகழ்ந்தது கி.மு. 14-13-ம் நூற்றாண்டுகளில். இந்த காலத்தில் தான் கடவுளை யாவே என்றுபெயரிட்டழைத்தனர். இம்மரபில் தோன்றிய விடுதலைப் பயண ஆசிரியர்அப்பெயரின் தோற்றத்தை மோசே காலத்துக்கே சாற்றுகிறார்.பிற்காலத்தில் யாவேக்கு அதிக மரியாதை செய்யும் அளவில்அவரை 'என் ஆண்டவர் 'என்று பொருள்படும் 'அதோனாய்" என்றுஅழைத்தனர். செப்துவாசிந்த் (டுஓஓ) கடவுளை 'ஆண்டவர்" (கீரியோஸ்)என கிரேக்கத்தில் அழைத்தது.

4.5. அழைத்தலின் இலக்கணப் பண்பு
மோசே அழைப்புப் பற்றிய எழுதும் போது விடுதலைப் பயண நூல்ஆசிரியர் விவிலிய மரபில் காணப்படும் அழைத்தல் இலக்கணப்பண்புகளை அப்படியே தருகிறார் (3 : 1-23).

1. காட்சியில் கடவுள் தோன்றுதல் (3 : 2-3)
2. மோசேயை பெயர் சொல்லி அழைத்தல் (3 : 4)
3. மோசேயின் மறுமொழி (இதோ நான் 3 : 4).
4. வெளிப்பாடு (3 : 5-10)
5. மனித பலவீனம் களையப்படுதல் (3 : 11-15)
6. கட்டளை தரப்படல் (3 : 16-23).

இதைப் போன்றதோர் அமைப்பை நாம் பழைய ஏற்பாட்டில்யாக்கோபு, எரேமியா, எசேக்கியேல்... போன்றோரின் அழைப்பிலும், புதியஏற்பாட்டில் மரியா, திருத்தூதர்கள், பவுல் போன்றோரின் அழைப்பிலும்காண்கிறோம்.

எடுத்துக்காட்டாக:

  எரேமியா மரியா (லூக் 1 : 26-38)
காட்சி : வாக்கு அருளப்படுதல் (1 : 4) வானவர் (கடவுள்)இல்லம்செல்லுதல் (1 : 28)
பெயர்: பெயர் 'அறிதல்' (1 : 5) மரியே (1 : 30)
மறுமொழி : நான் சிறுபிள்ளை (1 : 6) கலங்கினாள் ( 1 : 29)
வெளிப்பாடு: நீ அறிவிப்பாய் (1 : 7-8) 'உம் வயிற்றில் மகனைக்
கருத்தரிப்பாய்(1 : 31-34).
பலவீனம் களைதல்: உனது வாயில் ஊட்டினோம் (1 : 9) இது எங்ஙனம் ஆகும்? (1 : 34)
கட்டளை: எழுந்து போய் அறிவி (1 : 17) இயேசு என்னும்பெயரிடுவீர் (1 : 31)

 

இப்படி விவிலிய மரபின் அடிப்படையில் மோசே அழைப்பைவிவிலிய ஆசிரியர் எழுதுவதன் மூலம், இது ஒரு வரலாற்று நிகழ்ச்சிஎன்று வலியுறுத்துவதை விட, இதன் இறையியல் கருத்தையேதெளிவுபடுத்த விரும்புகிறார்.

4.6. வலியுறுத்தப்படும் இறையியல் கருத்துக்கள;

1. ஆபிரகாம் , ஈசாக், யாக்கோபு போன்ற குலமுதுவர்களும் சரிஎரேமியா, எசேக்கியா போன்ற இறைவாக்கினர்களும் சரி, எல்லாரும்தங்கள் சொந்த பலத்தினால் கடவுளின் மக்களை வழி நடத்தியதில்லை.எல்லாருக்கும் யாவே கடவுளே பலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்.எனவே , மோசேயும் தன் சொந்தப் பலவீனங்களை எண்ணி பயப்படத்தேவையில்லை. "நான் உன்னோடு இருப்பேன்"" என்று அவருக்குக்கூறிய யாவே (விப 3 : 12) அஃதுடன் நிற்கவில்லை. " மனிதனுக்கு வாய்அமைத்தவர் யார்? " என்று கேட்டபின், "இப்பொழுதே போ!, நானே உன்நாவில் இருப்பேன்: நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்" என்றுஉறுதியும் அளிக்கிறார் (4 : 11-12). மேலும் மோசேயுக்கு பதிலாகப்பேசுவதற்கு நாவன்மையுடைய ஆரோனையும் அனுப்புகிறார் (4 : 14-16), அந்த ஆரோனிலும் செயல்படுவர் யாவேதான் என்றும்தெளிவுப்படுத்துகிறார்.ஆதலின், விடுதலைக்காகப் போராடும் தலைவராக மோசேஏற்படுத்தப்பட்டாலும் உண்மையில் விடுதலை வீரராகச் செயல்பட்டவர்"யாவே" தான் என்பதை விவிலிய ஆசிரியர் இங்கே கூறுகிறார்.

2. பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களின் அழைத்தலில் நாம்காண்பது போல (காண்: எசே 2; எரே 1), மோசே அழைத்தலிலும் கடவுளின்ஈடுபாட்டினால் அவரது வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்புமுனைஏற்படுகிறது. மோசேயின் முந்திய வாழ்க்கை முறை முற்றிலும்மாற்றப்பட்டு, கடவுள் சொல்லும் திசையில் செல்லப் பணிக்கப்படுகிறார்.அன்று கடவுள் ஆபிரகாமை அழைத்த போது, "உன் நாட்டில்இருந்தும்... புறப்பட்டு நான் உனக்கு காண்பிக்கும் நாட்டிற்குச் செல்"என்று கூறி (தொநூ 12 : 1) அவரது வாழ்க்கை முழுவதையும் தமதுகையில் அர்ப்பணிக்கப் பணித்தார். அதைப் போன்றதொருஅர்ப்பணத்தை, முற்றிலும் மாற்றம் பெற்ற வாழ்க்கையை மோசேயிடம் கடவுள் எதிர்ப்பார்க்கிறார். தன்னை முழுவதையும் கடவுளின் கரத்தில்ஒப்படைத்த மோசே அவரது ஒளியில் நடக்கும் போது தான் இஸ்ரயேலின்விடுதலை வீரர் என்ற அழைத்தலைப் பெற முழ்?தது என்ற கருத்தையும்விவிலிய ஆசிரியர் தெரிவிக்கிறார். எனவே, கடவுள் ஒருவரைஅழைக்கும் போது அவரது முன்வாழ்வு பற்றி கவலைப்படுவதில்லை.என்பது இதனால் புலானகிறது (ஏடிn சுயன, டீகூ கூhநடிடடிபல ஐஐ, 57).

3. மோசேவை யாவே முற்றிலும் மாற்றி, அவரைத் தன் வழிக்குகொண்டு வந்தாலும், மோசே தொடர்ந்து மறுத்துக் கொண்டே வருகிறார்:'இஸ்ரயேல் மக்களை அழைத்துப் போவதற்கு நான் யார்? அவர் பெயர்என்ன? என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்?" (3 : 11, 13; 4 : 13)எனும் வினாக்களின் மூலம் ஆசிரியர் சொல்ல விரும்பும் கருத்து என்ன?அழைத்தலில் மனிதர் வெரும் உயிரற்ற கருவி அல்ல.அழைக்கப்பட்டவர் மிகுந்த ஈடுப்பாட்டுடன் அந்த அழைத்தலைவாழ்வதற்கு அதில் அடங்கியுள்ள அனைத்துப் பிரச்சனைகளையும்அறிந்து ஆராய்பவராக இருக்க வேண்டும்.

 

5. எகிப்தில் விடுதலை வீரர் மோசே

கடவுளின் கட்டளையை ஏற்று மோசே எகிப்துக்குத் திரும்புகிறார்.ஓர் இளவரசனாகவோ அல்லது குற்றவாளியாகவோ அல்லாமல்எபிரேயர்களை விடுவிக்கும் ஒரு விடுதலை வீரராக மோசே எகிப்துக்குத்திரும்புகிறார். இரண்டு விதமான கடமைகள் அவருக்கு அங்கேகாத்திருக்கின்றன.

5.1. மோசே - எபிரேயர்
பெருந்திரளான (விப 12 : 38) எபிரேயர்களின் நம்பிக்கையை அவர்பெற்றாக வேண்டும். தான் கடவுளின் தூதர் என்றும், அவர்ளைஎகிப்திலிருந்து விடுவிக்க யாவே கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றும்அவர்களை ஏற்றுக் கொள்ள வைக்கவேண்டும். அவர்களது உள்ளம்கடினப்பட்டு விட்டது (விப 5 : 21). நம்பிக்கை என்பது சிறிதளவும்இல்லை. கடவுளின் வழிக்கு அவர்களை அழைத்துச் செல்வது மோசேசந்திக்கும் ஒரு சவால்.

இந்தச் சவாலை மோசே எதிர்கொள்ள கடவுள் அவருக்குஇருவகையில் உறுதுணையாயிருக்கிறார். முதலில் 'இருக்கின்றவராகஇருக்கிறவர் நாமே' என்று 'யாவே' யின் பெயரை அவர்களுக்கு கூறி,அவர்தான் தன்னை அனுப்பி வைத்தார் என்று சொல்லச் சொல்கிறார்(3 : 14). இரண்டாவதாக, கோலைப்பாம்பாக மாற்றுவது, நல்ல கையில்தொழுநோய் பிடிப்பது, தொழுநோயுற்ற கையை நல்லதாகமாற்றுவது போன்ற அருங்குறிகளால் மோசேயை ஆற்றல்மிக்கவராக்குகிறார் (விப 4 : 2-6).

இவற்றையும், இத்துடன்பார்வோனிடம் அவர் ஆற்றிய அருங்குறிகள், பேசிய வார்த்தைகள்இறுதியில் எகிப்திலிருந்து அவர் பெற்றுத் தந்த விடுதலை இவை யாவும்மோசே மேல் எபிரேயர் முழு நம்பிக்கை வைக்க காரணமாய் இருந்தனஎன்று விடுதலைப் பயண நூலின் யாவே மரபு கூறுகிறது (13:18; 4:31).ஆனால், இத்தனைக்குப் பிறகும் மக்களின் கடின உள்ளமும், அவரைப்புறக்கணிக்கின்ற மனப்பான்மையும் அவ்வப்போது மக்களிடையேதொடர்ந்து கொண்டேதான் இருந்தனவென்று ஏலோகிம் மரபு கூறுகிறது(விப 6 : 9; எண் 12 : 16; இச 3 : 4 : 6). ஓர் இறைவாக்கினர் தொடர்ந்துபோராடவேண்டும் என்பதை இது உணர்த்துகிறதேயொழிய அவரதுபணியில் வெற்றியடைய முடியாது என்று குறிப்பிடுவதில்லை.

5.2. மோசே - பார்வோன்
மோசே ஆற்றவேண்டிய இரண்டாவது பணி, பார்வோனின்கடின மனத்தை மாற்றி இஸ்ரயேலரை எகிப்திலிருந்து விடுவிப்பதாகும்.

பார்வோன் மனத்தை மாற்றுவது எப்படி?

கி.மு. 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் எகிப்தியமன்னன் இரண்டாம் இராம்சேசு அடிமைகளின் புகார்களைக்கேட்டறிவதற்காக அவர்களை தனது அரண்மனைக்குள் வரஅனுமதித்திருந்தான். இச்சூழலில் தான் மோசே அங்கே நுழைகிறார்.பார்வோன் அவ்வளவு எளிதில் மனம் இளகும் தன்மையுடையவன்அல்ல. அதனால் ஆண்டவர் மோசேயிடம், "பார், நீ எகிப்திற்குத்திரும்பிச்சென்ற பின், நான் உன் கையில் ஒப்படைத்துள்ள எல்லாஅருஞ்செயல்களையும் பார்வோன் முன்னிலையில் செய்து காட்டு" என்றுபணிக்கிறார் (4:21). இத்தகைய பின்னணியில் தான் மோசேபார்வோனுக்கு எதிராக ஏற்படுத்திய பெருந்துன்பங்களானஅருஞ்செயல்கள் என்று நீண்டதொரு விரிவுரையை விவிலிய ஆசிரியர்தருகிறார் (விப 7-11 அதிகாரங்கள்). 'நானே ஆண்டவர்" என்று அறிந்துகொண்டு, 'என்மக்களைப் போகவிடு" என்ற ஆண்டவரின் கட்டளைக்குஅவர்களை அடிபணிய வைப்பதே பெருந்துன்பங்களின் நோக்கமாகும்.இப்பெருந்துன்பங்களின்முன்னுரையாகவும், ஆரோனும்,மோசேயும் கடவுளின் தூதர்களேஎன்று பார்வோனுக்குக் காட்டவும்அவர்களது கோல் பாம்பாக மாறும்அரும்செயல் ஓர் அடையாளம்.இதில் இரண்டு மரபுகளைதொகுக்கிறார் விடுதலைப் பயணநூல் ஆசிரியர்.ஏலோகிம் மரபுப்படி மோசேமக்கள் முன் இந்த அடையாளத்தைக்காட்டுகிறார். (4-ஆம் அதிகாரம்).குருக்கள் மரபுப்படி ஆரோன்இதனைப் பார்வோன் முன்காட்டுகிறார் (7ஆம் அதிகாரம்).

5. 3. பெருந்துன்பங்களா?அருங்குறிகளா?
பெருந்துன்பங்களைவிவிலிய அறிஞர்கள் பல கோணங்களில் ஆராய்ந்தனர். இத்தீமைகள்நேரடியாக மோசே மூலம் கடவுள் செயல்படுத்திய அற்புதங்கள் என்றுஅண்மைக் காலம் வரை கருதப்பட்டது. ஆனால் இன்றையபெரும்பாலான கத்தோலிக்க அறிஞர்கள் கருத்துப்படி (துடீஊ ஐ, 51)எகிப்தில் அவ்வப்போது நடைபெறும் இயற்கை நிகழ்ச்சிகளைப்பயன்படுத்தி. இறைவன் இஸ்ரயேலர் மீது தாம்கொண்ட பற்றையும்சார்பையும் வெளிப்படுத்தியுள்ளார் என்று அறிகிறோம். இந்த இயல்பானஇயற்கை நிகழ்ச்சிகளையும் அவை தந்த நம்பிக்கையையும் பற்றி அறிந்தபிற்கால விவிலிய ஆசிரியர் அவற்றை மோசேக்குச் சாற்றிக் காண்கிறார்.இருப்பினும் துன்பத்தின் கடினத் தன்மையிலும் தேவைக்கேற்ற நேரத்தில்அவைகள் ஏற்படுவதிலும் கடவுளின் ஈடுபாட்டையும் அதிகாரத்தையும்காண் கின்றனர். மேலும் இயற்க்கை நிகழ்ச்சிகளை அறிவியல்கண்ணோட்டத்தில் இன்று நாம் காண்பதுபோல் பழைய ஏற்பாட்டுசெமித்திய மக்கள் காணவில்லை. எல்லாவற்றையும் கடவுளின் அற்புதச்செயலாகவும் அருங்குறிகளாகவும் நம்பிக்கையின் ஊற்றாகவும்கண்டனர்.

யாவே மரபில் எட்டு (1-2; 4-5 : 7-10), எலோகிம் மரபில் ஐந்து(1 : 7-10), குருக்கள் மரபில் ஐந்து (1-3: 6,10) என வெவ்வேறு மரபினர்வெவ்வேறு துன்பங்களைப் பற்றிக் கூறியுள்ளனர். யாவற்றையும்மொத்தமாகக் கானும்போது பத்துப் பெருந்துன்பங்கள் விவரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்பது துன்பங்கள் எகிப்தில் கோடைக்காலத்திற்கும் வேனிற்காலத்திற்குமிடையில் தோன்றும் இயற்கையானநிகழ்ச்சிகளை ஒட்டியே நடந்தவை.

5.3.1. தண்ணீர் இரத்தமாதல் (7 : 14-24)
ஆப்பிரிக்காவின் மலைப்பிரதேசத்தில் அவ்வப்போது பெருமழைபெய்வதனால் நைல் நதியில் புதுவெள்ளம் கொஞ்ச நாட்களுக்குக்கலங்கித் தோன்றுவது வழக்கம். எகிப்தியர் அதை சிவப்பு நைல் நதி என்றுகூட அழைப்பது உண்டு. அதன் பின்னணியில் :பார்வோன் மனம் கடினப்படவே, அவனது மனத்தை மாற்றும்பொருட்டு மோசே தன்கையில் உள்ள கோலால் நைல் நதியை அடிக்கவேஅது இரத்தமாக மாறியது, எகிப்து நாடு முழுவதும் இரத்தமாக மாறியதுஎன்று கூறி இறையியல் கருத்தைச் சேர்க்கிறார் ஆசிரியர். ஆரோனுக்குசிறப்பிடம் அளிக்கும் குருக்கள் மரபுப்படி மோசே இதனை ஆரோன் மூலம்செய்தார் என்றக் குறிப்பைக் காண்கிறோம் (7 : 20).

5.3.2. தவளைகள் (7 : 25-8 : 11)
நைல் நதி பெருவெள்ளத்தைத் தொடர்ந்து தவளைகள்பெருவாரியாகக் காணப்படும் நிகழ்ச்சியை எடுத்தாலும் மறைநூல்ஆசிரியர் கூறவிரும்பும் திருவெளிப்பாடு என்னவென்றால், தவளைகள்மோசேயின் வார்த்தையால் எண்ணிலடங்கா அளவிற்குப் பெருகினஎன்பதாகும். அதே மோசேயின் வார்த்தையால் அவை குறைக்கப்பட்டன.இவ்வாறு மோசேயில் செயல்படும் ஆண்டவரின் ஆற்றலை வெளிப்படுத்தவிரும்புகிறார் ஆசிரியர்.

5.3.3. கொசுக்கள் ( 8 : 17 - 18)
குருக்கள் மரபில் மட்டும் இப்பெருந்துன்பம் காணப்படுகிறது.இதுவும் நைல் நதியில் ஏற்படும் பெரு வெள்ளத்தின் விளைவே ஆகும்.

5.3.4. ஈக்கள் ( 8 : 21-24) இதுவும் நைல் நதியில் ஏற்படும் புதுவெள்ளத்தால் தொடர்ந்துஏற்படும் ஒரு வேண்டாத விளைவாகும் (8:16-26). இருப்பினும் இதில்விவிலிய ஆசிரியர் காணும் இறைப்பராமரிப்புச் செயல் என்னவென்றால்,ஈக்கள் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு எண்ணிக்கையில்அதிகம். அடுத்துரூசூ381; எபிரேயர் ?வாழ்ந்த? கோகன்ரூசூ381; பகுதியில்? ஈக்களேகாணப்படவில்லை; மேலும் மோசேயின் மன்றாட்டில் அத்தனைஈக்களும் மறைந்து விடுகின்றன. கொசுக்கள் - ஈக்கள் அருஞ்செயல்கள்தொடக்க நாட்களில் ஒரே அருஞ்செயலாகப் பேசப்பட்டது. எழுத்திலக்கியம்தோன்றிய போதுதான் இரு செயல்களாகப் பிரிக்கப்பட்டன. ஆசிரியரின்கருத்துப்படி இதன் பொருட்டும் பார்வோனின் மனம் இளகவில்லை.

5.3.5. கால்நடைகள் சாவு ( 9 : 1-7) எகிப்தியர்களின் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருதுகள்,ஆடுகள் என பல விலங்குகள் இறக்கின்றன. கி.மு. 1710 இல் கிக்சோஇனத்தினர் எகிப்தை ஆண்டபொழுதே குதிரைகள் இருந்திருக்கின்றனஎன்று வரலாறு தெரிவிக்கிறது. ஆனால் தொநூ 12 : 16; 24 : 11 -இல்கூட குறிப்பிடப்படும் ஒட்டகங்கள் ஆபிரகாமின் காலத்திலோ, மோசேயின்காலத்திலோ பயன்படுத்தப்படவில்லை: மாறாக நீதித்தலைவர்களின்காலத்தில் தான் (கி.மு. 1225- 1025) ஒட்டகங்கள் பழக்கத்திற்குவருகின்றன. கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் விடுதலைப் பயணம் எழுதும்விவிலிய ஆசிரியர் பிற்கால விலங்குகளைக் கூட மோசே காலத்திற்குக்கொண்டு செல்கிறார். உலக வரலாறு எழுதும் நோக்கத்தில் மறை நூல்ஆசிரியர் இதை எழுதவில்லை என்பது இதனால் புலனாகிறது.அபயக்குரல் எழுப்பிய தமது எபிரேய மக்களுக்கு வாழ்வளிக்கஅவர்களின் எதிரிகளுடன் கடவுளே போராடி வெற்றி கண்டார் என்றஇறையியல் உண்மையை எடுத்துரைக்கஇவ்வாறு காட்சிகளை அமைக்கிறார்ஆசிரியர்.

5.3.6. அடுத்து வந்த நான்கு துன்பங்கள்(9 : 8-10 : 29)
மனிதர் மேலும், மிருகங்கள் மேலும்கொப்புளங்கள் (நமது வேனல்கட்டி,அம்மை போல) உருவாகி வெடித்தன. இதுஆறாம் துன்பம். இதிலும் பார்வோனின்மனம் இளகவில்லை ஆதலால் மோசேமூலம் கடவுள் கல்மழை பொழிய வைத்தாகமறைநூல் ஆசிரியர் கூறுகிறார்.அதற்கடுத்து வெட்டுக்கிளிகள் பெருமளவில்உண்டாயின, பின்னர் மூன்று நாட்கள் எகிப்தில் காரிருள் (பெருங்காற்றுவீசும் போது ஏற்படும் தூசுப்படலம்) படரவைத்தார் மோசே. இதனாலும் பார்வோன்முழுமையாக மனம் மாறவில்லை.எகிப்தில் அவ்வப்போதுஇயற்கையிலேயே ஏற்படும் இந்நிகழ்ச்சிகளைஇஸ்ரயேல் மக்களை மோசே மூலம் விடுவிக்கஇறைவன் பயன்படுத்தும் நிகழ்ச்சிகளாகமக்களும் நம்பினர்; விவிலிய ஆசிரியரும் அதேகண்ணோட்டத்தில் விவரிக்கின் றார்.மறைநூல் ஆசிரியரின் நம்பிக்கையின்படிஇவையாவும் கடவுளால் ஆற்றப்பட்ட வல்லசெயல்களே! இந்த ஒன்பது துன்பங்களாலும் மனம் இளகாத பார்வேன்மிகப் பெரும் துன்பத்தைச் சந்திக்கிறான். அதுவோ.....

5.3.10. தலைமகன் சாவு (11 : 1-10 - 12 : 20-36)
கடவுள் பார்வோனுக்கு எதிராக ஆற்றிய 10- வது பெருந்துன்பம்தலைமகன் சாவு.தனது மகனே இறப்பதைப் பார்வோன் காண்கிறான். இரத்தஅடையாளமிடாத எல்லா வீடுகளிலும் (எகிப்தியர் வீடுகள் அனைத்திலும்)இத்துன்பம் தாக்கியது. இதனால் பார்வோன் மனம் கலங்கியது:கடவுளுக்கு அவன் பணிந்தான். 'எகிப்தை விட்டு வெளியேறுங்கள்"என்று கட்டளை கொடுக்கிறான் (12 : 31). இத்துன்பத்திலும் வரலாற்றைக்காண்பதை விட, இறை வெளிப்பாட்டையேக் காண வேண்டும்.இஸ்ரயேலை மீட்கக் கடவுள் பல? முயற்சிகளை ரூசூ381;மேற்கொண்டார்.இதனால்ரூசூ381; அவர்ரூசூ381; இஸ்ரயேல்?மீது அன்பையும் தனக்கெதிராக இருப்பவரைஎளிதாக மேற்கொள்ள தான் ஆற்றல் படைத்தவர் என்பதையும்வெளிப்படுத்துகிறார். இத்தகைய இறையியல் கருத்தைத்தான்விடுதலைப் பயண நூல் ஆசிரியர் கூற விரும்புகிறார்.இந்த இறுதித் துன்பம் எல்லாவற்றிற்கும் கொடு முடியாக உள்ளது.மற்றத் துன்பங்களையும் மூன்றாகப் பிரித்துக் காணலாம்:அ ஆ இ1. இரத்தம் 4. ஈக்கள் 7. கல்மழை2. தவளை 5. கால்நடைசாவு 8. வெட்டுக்கிளிகள்3. கொசுக்கள் 6. கொப்புளங்கள் 9. காரிருள்ஒவ்வொரு பகுதியும் ஒரேவித அமைப்பைப் கொண்டிருக்கின்றது.

1. நைல் நதியில் ஆபத்து எச்சரிக்கப்படுகிறது (7 : 15; 8 : 20; 9 : 13).இதனால் கடவுளின் கருவியான மோசே, ஆரோனில் ஆற்றல்வெளிப்படுகிறது.
2. பார்வோன் மாளிகையில்மோசேயின் எச்சரிப்பு (8 : 1; 9 : 1; 10 : 1).
3. எச்சரிக்கையின்றித் துன்பம்வருகிறது (8 : 16; 9 : 8; 10 : 21).கடவுள் ஒப்புமையற்ற வல்லமைஉள்ளவர் என்று நிரூயஅp;பிக்கப்படுகிறது

5.4. நோக்கம் என்ன?
கி.மு 8 ஆம் நூற்றாண்டில் இது பற்றிஎழுத வேண்டிய தேவை என்ன?அக்காலத்தில் இஸ்ரயேலர் கடவுளுக்குநேர்மையாக நடக்கவில்லை. எசாயா,ஆமோஸ், ஓசே, மீக்கா - இன்னும் பலஇறைவாக்கினர்கள் இம்மக்களின் துரோகங்களைச் சுட்டிக்காட்டிஅவர்களை நல்வழிப்படுத்த முயன்றனர். "நன்மையைத் தேடுங்கள்நீங்கள் வாழ்வீர்கள்.... என்றும் (5 : 4), "தீமையைப் பகையுங்கள்:நன்மையை விரும்புங்கள் (5 : 15) என்றும் ஆமோஸ் வலியுறுத்தினார்."... பாகால்களின் விழாக்களை அவள் (இஸ்ரயேல்) கொண்டாடி,அவற்றுக்கு நறுமணப் பொருட்கள் கொளுத்தினாள்" என்றுஇறைவாக்கினர் ஓசே (2 : 13) கூறி அம்மக்கள் மோசே மூலம் கடவுளோடுசெய்த உடன்படிக்கையைக் கடைபிடிக்கத் தூண்டுகிறார்.இத்தகைய பின்னணியில், நேர்மையும் நம்பிக்கையும் கொண்டஎபிரேய மக்களை விடுவிக்கக் கடவுள் எத்தனை நடவடிக்கைகள்எடுத்தார் என்று விடுதலைப் பயணத்தில் குறிப்பிட்டவர், அத்தகையநம்பிக்கை தொடர்ந்து இல்லையென்றால் கடவுள் அவர்களைக்கைவிட்டுவிடுவார் என்று பாவம் செய்யும் தன் காலத்து, எபிரேயர்களைஎச்சரிக்கிறார் ஆசிரியர் (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு).

5.5. பதினோரு துன்பங்களே? தொடக்கக்கால மரபுப்படி கடவுள் 10 துன்பங்களை அளித்தார்என்றே மக்கள் கருதினர். பிறகு வரலாற்றுக் கால ஓட்டத்தில் கோல்பாம்பாக மாறிய அடையாளத்தையும் சேர்த்துப் பதினோரு துன்பங்கள்என்று கணக்கிட்டனர்.அதாவது 1 முதல் 4 அடையாளங்களை ஆரோன் நிறைவேற்றுவதாகவும், 5 ரூயஅp; 6 அடையாளங்களை யாவேயும், 7 முதல் 10அடையாளங்களை மோசேயும் நிறைவேற்றுவதாகவும் எழுதுகிறார்விவிலிய ஆசிரியர்.இதன் பொருள் என்ன? 11 என்பது யூத எண்ணப்படி முழுமையைக்குறிக்கிறது.(எ.கா) தொநூ 1 : 1-2; 4 இல் 11 முறை "என்றார்"" எனும் சொல்வருகிறது.தொநூ 11 தலைமுறை அட்டவணை வருகிறது. யாக்கோபு என்றபெயருக்குரிய எண் மதிப்பு 11. அதனால்தான் அவர் 'இஸ்ரயேல்" என்றபெயரைப் பெறும் சிறப்புப் பெற்றார். யோசேப்பு யாக்கோபின் 11 ஆவதுமகன். அவர் மூலமே யாக்கோபின் குடும்பத்தாருக்கு வாழ்வு வந்தது.இதுபோன்றே, பார்வோனின் கடின மனத்தை இளக வைக்கும்முயற்சியில் 10 அடையாளங்களைக் கடவுள் அளித்தும்பலனளிக்காததால் மிக முக்கியமான அந்த 11 -வது அடையாளமாகதலைமகன் கொலையை அளிக்கிறார். அதனால் பார்வோனின் மனம்கலங்குகிறது. அடையாளங்களின் முழுமையாக இந்த இறுதித்துன்பத்தை விவிலிய ஆசிரியர் காண்கிறார்.

மேற்கண்ட அடையாளங்கள் அல்லது அருங்குறிகளில்அதிகமாகக் கடவுளின் கரத்தைக் காண வேண்டும். மீட்பளிக்கும்இறைவனைக் காண வேண்டும்.அடிமைத்தனத்தில் கி.மு. 6 ஆம்நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்ரயேலருக்கு ஒருநம்பிக்கைச் செய்தியாக இப்பகுதியைஎழுதுகிறார். "நேரிய மக்களுக்காக அன்று அரியசெயல்களை (அருங்குறிகள்) ஆற்றிய கடவுள்,அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த யாவே,உங்களுக்கும் மீட்பளிக்க வல்லவர்! எனவே.நேர்மையாய் வாழுங்கள் "என்ற சமயப்போதனையை இதன் மூலம் அளிக்கிறார்விடுதலைப்பயண றூல் ஆசிரியர்.

 

6. பாஸ்கா நிகழ்ச்சிகள்

தன் தலைமகன் இறந்ததையும், 'இறப்பு இல்லாத வீடுஎதுவுமில்லை' என்ற அளவுக்கு இத்துன்பம் கொடியதாகவும் மாறியதைக்கண்ட பார்வோன் மன்னன், "நீங்களும் இஸ்ரயேல் மக்களும் எழுந்துஎன் மக்களிடமிருந்து வெளியேறிச் செல்லுங்கள். போய் விடுங்கள்"என்று மோசேயை விரட்டினான் (விப 12:31,32).அதே நேரத்தில் எபிரேயர்கள் புளிப்பற்ற அப்பத்தை உண்டுபயணத்திற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனும் கட்டளையும்பாஸ்கா விழா கொண்டாட வேண்டும் என்ற கட்டளையும் தரப்படுகிறது(2 : 21-32). இதன் பின்னணி என்ன?"பெஸ்சா"" என்ற எபிரேயச் சொல்லைத்தான் "பாஸ்கா"" என்றுமொழி பெயர்க்கிறோம். இதற்கு,"கடந்துபோதல்"" அல்லது "தாண்டிச்செல்லல்"" என்பது பொருள் (காண். விப 12 : 13)

இங்கே இரண்டு வித'கடத்தல்"" நடைபெறுகிறது. 'தலைமகன்" கொல்லப்படும் இறுதிஅருஞ்செயலில் கடவுளின் தூதர் இரத்த அடையாளமிட்டிருக்கும்இஸ்ரயேலரின் கதவுகளைத் 'தாண்டி" (கடந்து) எகிப்தியர் வீட்டினுள்நுழைந்து, தலைமகனைக் கொல்கிறார்.அடுத்ததாக, அடிமைத்தனத்தில் வாழும் இஸ்ரயேலர்எகிப்திலிருந்து "கடந்து"" விடுதலை வாழ்வுக்குச் செல்ல விருக்கின்றனர்.இந்த இரண்டாவது கடத்தலை உருவகமாகச் சுட்டிக்காட்டவேஇஸ்ரயேலர் செங்கடலை 'கடந்து" சென்றனர் என்கிறார் விவிலியஆசிரியர் (காண். விப 12:27). ஆனால் இதற்கு இரண்டு காலத்துவரலாற்றுப் பின்னணி உண்டு.

6.1. பாஸ்கா விழா
தொடக்த்தில் எபிரேயர்கள் நாடோடிகளாக, இடையர்களாகவாழ்ந்தனர். அப்போது அவர்களுக்குக் குருக்கள் யாரும் இல்லை.பலிப்பீடமும் இல்லை. மக்களாகவே ஆண்டவருக்கு ஓர் ஆட்டுக்குட்டியைப் பலியாக ஒப்புக் கொடுத்தனர். தங்கள் ஆடுகளுக்கு நல்லமேய்ச்சல் கிடைக்குமாறு இவ்வாறு செய்தனர். அத்துடன், தங்கள்கூடாரத்தின் கழிகளில் அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைத் தடவிஅசுத்த ஆவி அகலச் செய்தனர் (விப 12 : 13, 23)மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் செல்லும் வசந்த காலத்திற்கு முன்இப்பலி நிறைவேற்றப்பட்டது.

அதனால் தான் நாடோடி வாழ்வின் தன்மைகள் இப்பாஸ்காவிழாவில் காணப்படுகின்றன.ஆதலால், எகிப்தில் இஸ்ரயேலர் நாடோடிகளாய் வாழ்ந்ததற்குமுன்னமே இவ்விழா கொண்டாடப்பட்டது. அப்படியென்றால்,முன்னமேயுள்ள ஒரு வழக்கத்தை இஸ்ரயேலர் எகிப்திலிருந்துவிடுதலைபெறும் நிகழ்ச்சியின் கொண்டாட்டமாகக் கடவுள் மாற்றினார்என்கிறார் ஆசிரியர்.

6.2. புளிப்பற்ற அப்ப விழா
'மசொத்' என்றால் புளிப்பற்ற அப்ப விழா. வாற்கோதுமைஅறுவடையின் தொடக்கத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டது.புதுவாழ்வைத் தொடங்குவதற்கு அடையாளமாக புதிய அறுவடையின்தானியத்தை முதல் ஏழு நாட்கள் உண்பர்.அதே நேரத்தில் கடவுள் முன்வெறுங்கையுடன் செல்லாமல் (விப 23:15; 34:20), முதற்கனிகளையே இறைவனுக்கு அளிக்கத் தொடங்கினர்.இப்படி முதற்கனி விழாவும்தோன்றியது (லேவி 23 : 9-14).

ஆனால் இவை யாவும்கானான் நாட்டில் இஸ்ரயேலர்குடியேறிய பின்தான் தோன்றியது(லேவி. 23 : 10). ஏனெனில் இரண்டுவிழாக்களும் உழவுத் தொழிலுடன்தொடர்புடையது. எபிரேயர் கானான் நாட்டில் குடியேறிய பின்கானானேயர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, அறுவடையின் காலமானநீசான் மாதத்தில் கொண்டாடினர்.புளிப்பற்ற அப்ப விழாவிற்கு அண்மையில் வந்த பாஸ்காவிழாவும் நீசான் மாதத்தில் தான் கொண்டாடப்பட்டது, எனவே இருவிழாக்களையும் ஒன்றாக இணைத்துக் கொண்டாடினர்.அநேகமாக யோசியா மன்னனின் சமயச் சீர்திருத்தத்தின் போது(கி.மு. 621) அல்லது பாபிலோனிய அடிமைத்தனத்தின் போது (கி.மு. 587-539) இப்படி ஒன்றாகக் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆக, எபிரேயர் வாழ்க்கையில் எகிப்திய அடிமைத்தனத்துக்கு முன்பேதோன்றிய பாஸ்கா விழாவையும், கானான் நாட்டில் குடியேறியபின்தோன்றிய புளிப்பற்ற அப்ப விழாவையும் ஒன்றாகக் கொண்டாடினர்(லேவி 25:5-8). கி.மு. 4-5 ஆம் நூற்றாண்டில் விடுதலைப் பயணத்தைத்தொகுக்கும் போது இவ்விழாக்களை இறையியல் காரணத்துக்காகஎகிப்திய விடுதலை நிகழ்ச்சியோடு இணைக்கிறார் விவிலிய ஆசிரியர்.எகிப்திலிருந்து இஸ்ரயேலர் விடுதலை பெற்ற நிகழ்ச்சியும்ஆண்டின் இதே காலத்தில் நிகழ்ந்தது; மேலும் இவ்விரு விழாக்களும்எகிப்திய விடுதலையை நினைவுகூறும் விதத்தில் இருந்தன (விப 23 : 15;இச 16 : 16).பழைய பாஸ்கா விழாவை எகிப்திய விடுதலையுடன் எப்படிஇணைத்துக் காண முழ்?தது?புதுவாழ்வின் அடையாளமே பாஸ்கா விழா. இஸ்ரயேலர்எகிப்திலிருந்து விடுதலை பெற்று, உரிமை வாழ்வு வாழப் போவது ஒருபுதுவாழ்வுதானே! அடுத்து பாஸ்கா விழாவின் போது முதற்கனியைபலியாக ஒப்புக்கொடுப்பர். இங்கேயும் முதற்கனியாகிய எகிப்தியத்தலைமகன்கள் பலியாக ஒப்புக்கொடுக்கப்படுகின்றனர்.இத்தகைய ஒப்புமையை ஏற்படுத்திய விடுதலைப் பயண நூல்ஆசிரியர் பாஸ்கா விழாவை எகிப்திய விடுதலையுடன் இணைக்கிறார்.

6.3. விடுதலைப் பயணம் சென்றனர் (12 : 37-18 : 27)
எபிரேயர்கள் எகிப்தில் 400 ஆண்டுகள் அடிமைகளாய் இருந்தனர்என்பதிலும் பாலைவனத்தில் 40 ஆண்டுகள் அவதியுற்றனர் என்பதிலும்வரும் நாற்பது என்ற எண் ஒருமுழுமையைக் குறிக்கிறது. ஆனால்உண்மையில் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாகவே சிறு சிறு கூட்டமாகஎகிப்தை விட்டு வெளியேறி வந்தனர்என்பது அறிஞர்களின் கருத்து. மோசே,ஆரோன், யோசுவா, மிரியாம் போன்றவெவ்வேறு தலைவர்களின் கீழ் வெளிவந்தனர் (விப 18, எண்11)

கானான் நாட்டிற்கு இஸ்ரயேலர்உடனே புறப்பட்டனர். ஆனால் வழக்கமாகபயன்படுத்தப்படும் குறுகியதொலையுடைய சாலையில் எபிரேயர்செல்லவில்லை (13 : 17). மேலும் அரசுஅதிகாரிகள் பயன்படுத்திய சூர் (ளூரச)பாலைநில வழியையும். எகிப்து -அரேபியர் நெடுஞ்சாலையையும் இவர்கள் தவிர்க்கின்றனர். மாறாக,பாலைநிலச் சுற்று வழியாகவே செங்கடலுக்குச் சென்றனர் என்றுஆசிரியர் கூறுகிறார் (13 : 18).அப்படி அவர்கள் செல்லும் போது, பகலில் மேகத்தூண் மூலமும்இரவில் நெருப்புத்தூண் மூலமும் ஆண்டவர் வழி நடத்தினார் என்றகுறிப்பைக் காண்கிறோம் (காண்.13 : 21).ஆண்டவர் அவர்களுக்கு அளித்தப் பாதுகாப்பையும்பராமரிப்பையும் சுட்டிக் காட்டவே ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார்.

6.4. செங்கடலை கடத்தல்
"செங்கடல்"" என்பது செப்துவாசிந்து மொழிப்பெயர்ப்பும், 'வல்கேட்"என்ற இலத்தீன் மொழிப் பெயர்ப்பும் மூலத்தில் செய்த மாற்றத்தின்காரணமாக வழக்கில் வந்துவிட்டது. எபிரேய மூலத்தில் 'யாம் சுப்' (லுயஅளுரி) என்றே தரப்பட்டுள்ளது. இதற்கு 'நாணற் கடல்' (சுநநன ளுநய)என்பதுதான் பொருள். செங்கடலும் மத்திய தரைக் கடலும் இணைகின்றபகுதி நாணல் செடிகள் ஏராளமாக வளரும் சதுப்பு நிலமாகக்காணப்பட்டது. செங்கடலின் வடக்குப் பகுதியில் இது (சுநநன ளுநய)அமைந்திருந்ததால் இதனைச் செங்கடல் (சுநன ளுநய) என்றே விவிலியஆசிரியர் அழைக்கிறார். இப்பகுதி வழியாகத் தான் இஸ்ராயேலர் கடந்துசென்றனர்.கடலைக் கடந்தது என்று கூறுவதன் இறையியல் உண்மைஎன்ன?

கடவுள் அவர்களோடு எப்பொழுதும் இருந்து, எல்லாஇடர்களிலிருந்தும் அவர்களைக் காக்கிறார் என்பது ஓர் உண்மை.அடுத்து, தண்ணீர் வாழ்வுக்கும் சாவுக்கும் உரியது என்பதையும்வெளிப்படுத்துகிறார். செங்கடல் நீரானது எபிரேயர் வாழ்வுக்கும் எகிப்தியர்சாவுக்கும் காரணமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும், நீரில் மூழ்கிஎழுதல் என்பது முழுமையாக அழுக்கைப் போக்கிப் புது வாழ்வுபெறுவதைக் குறிக்கிறது. அடிமைத்தனம் என்ற அழுக்கை இந்த நீரினால்போக்கடித்து, உரிமை வாழ்வு என்ற புத்துணர்ச்சியைப் பெறுகின்றனர்இஸ்ரயேலர். இம்மக்கள் மேல் கடவுள் கொண்டிருக்கும் ஆழ்ந்தஈடுபாட்டையும் இது எடுத்தியம்புகிறது.இஸ்ரயேலர் நூறு இருநூறாக வெவ்வேறு தலைமையின் கீழ்பயணம் செய்தனர். வெவ்வேறு கூட்டத்தின் அனுபவங்கள் எல்லாம்எழுதப்படும்போது ஒன்றாக மோசே தலைமையில் சென்றனர் என்ற மரபுஉருவாயிற்று. அதனையே நூலில் காண்கிறோம்.

6.5. மன்னா, காடை, தண்ணீர்
விடுதலைப்பயணம் 16, 17 அதிகாரங்களில் மன்னா, காடை,பாறையிலிருந்து நீர் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். உணவும் நீரும்கிடைக்காத மக்கள் மோசேவுக்கும் ஆரோனுக்கும் எதிராகமுணுமுணுத்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் உண்பதற்குமன்னாவும், காடையும். குடிப்பதற்குப் பாறையிலிருந்து நீரும்கொடுக்கப்பட்டன என்கிறார் ஆசிரியர்.இப்படி அவர் எழுதுவதற்குச் சீனாய்ப் பாலைநிலப் பகுதியில் இருந்தபூகோளப் பின்னணி என்ன?

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்,அக்டோபர் காலங்களில் வட ஐரோப்பியப் பகுதியிலிருந்து பறவைகள்பறந்து ஆசிய ஆப்பிரிக்கா நாடுகளுக்குச் செல்வது வழக்கம். நீண்டதூரம்கடலில் (மத்திய கடல்) இப்பறவைகள் பயணம் செய்தமையால்களைப்புற்று சீனாய் பாலைநிலப் பகுதியில் இளைப்பாறுவது வாடிக்கை.அப்போது அவற்றைப் பிடிப்பது சுலபமானது.அடுத்து, பாலைநிலத் தென்பகுதியில் 'மன்னா" என்ற மரம் இன்றும்வளர்ந்து வருகின்றது. ஒருவித சவுக்கு போன்றிருக்கும். பறவைகள்வந்து இம்மரத்தைக் கொத்தும்போது ஒருவித பிசின் வெளிவரும். அதுவெள்ளை நிறத்தில் இனிப்பாக இருக்கும். வெயிலில் அது உருகி வடியும்போது ஆடு மேய்ப்பவர் அதை எடுத்து உண்பர். மேலும், ஜுலை, ஆகஸ்ட்மாதங்களில் அது அதிக அளவு வெளிப்படும். ஒரு சிறு கூட்டமேஉண்ணும் அளவுக்கு அது கிடைக்கும். இஸ்ரயேலர் நூறு, இருநூறாகச்சென்றதனால் இந்த 'மன்னா'வை உண்டு. 'மன்னு' என்றனர். 'இதுயாதோ" என்பதைத்தான் 'மன்னு" என்று எபிரேயத்தில் கூறினர்.

சீனாய் பாலைவணத்தில் காணப்படும் மலை இடுக்குகளில்தண்ணீர் வடிகிறது. ஆடுமாடு மேய்ப்பவர் பருகி இன்னும் தாகம்தணிக்கின்றனர். வழக்கமாக ஒருசிலர் பருகக்கூடிய அளவே நீர் சுரக்கும்.இவ்வாறு, சீனாய் பாலைநிலப் பகுதியில் காணப்படும் இயற்கைநிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டு கடவுள் தங்களைவழிநடத்தினார் என மக்கள் நம்பினர், அதையே விவிலிய ஆசிரியர் கடவுளின் கரத்தினால் இவையாவும் நிகழ்ந்தனவென்று பிற்காலத்தில்எழுதுகிறார். இயற்கை நிகழ்ச்சிகளை நம்பிக்கை கண்ணோட்டத்துடன்பார்த்து கடவுளின் பராமரிப்பையும் அன்பையும் அவர்கள் உணர்ந்தனர்.இஸ்ரயேலரின் நம்பிக்கையற்றத் தன்மைக்கு (16 : 2) இதுபாடமாக அமைய வேண்டும் என்று ஆசிரியர் இதை எழுதுகிறார்.அதனால், "ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே""என்று கடவுளை முன்னிறுத்தி (16 : 15) "இதில் யாருமே எதையும்காலைவரை மீதி வைக்கக்கூடாது"" என்று கூறி கடவுளின் பராமரிப்பைவலியுறுத்துகிறார் (16 : 19).

இவ்வாறு அவலநிலையில் இருந்த இஸ்ரயேலைப் பாலைநிலத்தில்பாதுகாத்த கடவுள் இன்று நம்மையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கைச்செய்தியை அளிக்கிறார் கி.மு 6 ஆம் நூற்றாண்டின் விவிலிய ஆசிரியர்.

6.6. புதிய ஏற்பாட்டுப் பின்னணி
மோசே செங்கடலைக் கடந்தது போல் புதிய மோசேயான இயேசுயோர்தானைக் கடக்கிறார் (மூழ்கி எழுதல்). அதனால் இவரே உலக மீட்பர்என்று அறிவிக்கப்படுகிறார் (காண்: லூக் 2 : 11).அதேபோன்று திருச்சபையான இயேசுவின் மக்கள் புதுவாழ்வுக்காக நீரைக் கடக்கின்றனர் (திருமுழுக்கு). பாவத்திற்குஅடிமையாயிருந்து மக்கள் திருமுழுக்கில் கடந்து செல்லும்போதுகடவுளின் பிள்ளைகள் என்னும் உரிமை வாழ்வுக்குச் செல்கின்றனர்(காண்: கலா 4 : 1-11).

 

7. உடன் படிக்கை

விடுதலைப் பயண நூலில் 20:22-23:19 வரை "உடன்படிக்கைநூல்" என்று அழைக்கப்பட்டாலும் 19 ஆம் அதிகாரம் முதலேஉடன்படிக்கை பற்றியக் கருத்துக்கள் உள்ளன.இஸ்ரயேலின் விடுதலைப் பயணத்தில் மையமான நிகழ்ச்சி:கடவுள் அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கை ஆகும்.அதனால்தான் அவர்கள் 'கடவுளின் மக்கள்' என்றப் பேற்றினைப்பெற்றனர்.இந்த உடன்படிக்கைப் பகுதியில் இரண்டு முக்கியக் கூறுகள்உள்ளன.

7.1. கடவுள் தந்த கட்டளை
ஒரு புதிய தேசம், அதுவும்கடவுளை மையமாக வைத்து ஒரு புதியநாடு உருவாகப் போகிறது. இதற்குக்கடவுள் மூன்று நிலைகளை தருகிறார்.

(1) கடவுள் தமது உடன்படிக்கையை முன்னறிவிக்கிறார். உடன்படிக்கையை நேர்மையுடன் கடைப்பிடித்தால் " நீங்களே எனது தனிச்சொத்தாக இருப்பீர்கள்" எனும்வாக்குறுதி முதலில் தரப்படுகிறது.
(2) உடன்படிக்கைக்குமுன்னதாக, அதற்கு ஒரு தயாரிப்பாகக்கடவுள் மோசே வழியாக மக்களுக்குக்கட்டளைகளை அளிக்கிறார்.
(3) சீனாய் மலையில் கடவுள்அளித்த மாபெரும் காட்சி (விப19: 3).

கடவுள் தந்த கட்டளைகள் பற்றி இவண் காண்போம்.பத்துக்கட்டளைகள் இஸ்ரயேலுக்கு கடவுளால் அளிக்கப் பட்டவை.எந்தவித விளக்கமோ, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்என்ற நிலையோ இன்றி நேரடியாக இக்கட்டளை அளிக்கப்படுகிறது.இஸ்ரயேல் சமுதாயத்தில் உறுப்பினராக இருக்க இந்தக் கட்டளைகளைக்கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம், சீனாய் மலையில் உருவாக்கப் பட்டபுதிய சமுதாயத்திற்குக் கடவுள் அளித்த ஒழுங்குமுறைகள் இக்கட்டளைகள்.

பழைய ஏற்பாட்டில் விப 20 லும், இச நூல் 5 : 6-21-லும்இக்கட்டளைகள் காணப்படுகின்றன. கி.மு. 2 ஆம் நூற்றாண்டின்"நாஷ்பாப்பிரஸ்" என்ற நூலில் மேற்கண்ட இரண்டு இடங்களில்காணப்படும் கட்டளைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பத்துக்கட்டளைகளின் மூன்றாவது அமைப்பு விப 34 : 11-26 இல் உள்ளது.விப 20-இல் காணப்படும் பத்துக்கட்டளைகள் இஸ்ரயேலின்ஒழுக்க நெறியை வெளிப்படுத்துகின்றன. காலத்தால் இவர்களுக்குமுன்னமே, லிபிக்-ஸ்தார் நெறிமுறைகள், எஷ்னுன்னா நெறி முறைகள்,'முராபி நெறிமுறைகள் மற்றும் இத்தியர்கள் நெறி முறைகள்,தோன்றிவிட்டன. ஆனால் இவற்றிற்கும் இஸ்ரயேலின் நெறிமுறைக்கும்வேறுபாடு உண்டு. மேற்சொன்னவை யாவும் கட்டளையைக்கடைபிடிக்கவில்லையென்றால் இந்தத் தண்டனை கிடைக்கும் என்றதன்மைகளைக் கொண்டவை. மாறாக, இஸ்ரயேலின் பத்துக்கட்டளைகள் தண்டனையைப் பற்றி பேசவில்லை. மற்ற மக்களின்எண்ணப்படி, கட்டளைகளை மீறினால் அவர்களது கடவுளுக்கேதுரோகம் அது இழைப்பதாகும்.

7.2. வரலாற்றுப் பின்னணி
விப 19 : 25- இல், "மோசே கீழே இறங்கி மக்களிடம் இதுப்பற்றிகூறினார்"" என்று ஆசிரியர் குறிப்பிட்டு, மக்கள் புனித மலைக்கு அருகில்வரக்கூடாது என்ற கடவுளின் எச்சரிப்பைத் தெரிவிக்கிறார். அதன் பின்பத்துக் கட்டளைகளை பெறுவதில் மோசேயுக்கு நேரடித் தொடர்புஇருக்கவில்லை. ஏனெனில் விப 20 : 18 இன் படி, கடவுள் பத்துக்கட்டளைகளை அளித்தவுடன், "மக்கள் அனைவரும் இடி மின்னலையும்எக்காள முழக்கத்தையும் புகைகிற மலையையும் கண்டனர்"" என்றும்,இதன்பிறகே, "மோசே கடவுள் இருந்த காரிருளைஅணுகினார்"" என்றும் காணப்படுகிறது (20 : 21).அதாவது 19 : 25 ஆம் சொற்றொடரின்("மோசே கீழே இறங்கி மக்களிடம்இதுப்பற்றி கூறினார்"") தொடர்ச்சியாக20 : 21 ("மக்கள் தொலைவில் நின்றுக்கொண்டிருக்க மோசே கடவுள் இருந்தகாரிருளை அணுகினார்"") வருவதைக்காண்கிறோம்.

அப்படியென்றால் பத்துக்கட்டளைஅடங்கியுள்ள 20 : 1-17 பகுதியைக் தனியேஎடுத்துவிட்டாலும் நூலின் தொடர்ச்சிஅப்படியேதான் இருக்கும்.இது ஒரு முக்கியமான வரலாற்றுஉண்மையை வெளிப்படுத்து கிறது. விடுதலைப் பயண ஆசிரியர் இந்தநூலைத் தொகுக்கும்போது (கி.மு 5 ஆம் நூற்றாண்டு), கடவுளின்கட்டளைகள் அடங்கியப் பகுதியை முன்னமே நிலவி வந்த மரபிலிருந்துஅப்படியே இணைத்துவிட்டார்.இஸ்ரயேல் மக்கள் ஒரு தனிப்பட்ட இனமாக, கடவுளின் மக்கள்என்ற உணர்வைப் பெற்ற கி.மு.18ஆம் நூற்றாண்டு முதல்அச்சமுதாயத்தில் பல நெறிமுறைகளும் ஒழுக்க முறைகளும் தோன்றின.தங்களுக்குக் கடவுள் ஒருவரே என்ற ஆழ்ந்த, அசைக்க முடியாதநம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்பட்டது. சமுதாய அமைப்பின் சமத்துவநிலையை உறுதிப்படுத்தவும் பல சட்டங்கள் காலப்போக்கில் எழுந்தன.கடவுள் அன்பையும் சகோதரஅன்பையும் மையமாக வைத்துப் பலதுணைச் சட்டங்களும் உருவாயின. கி.மு 7-6 நூற்றாண்டுகளில்இச்சட்டங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு மோசேயின் பெயரில் அவைநிலவி வந்தன. பல காலக்கட்டங்களில் பல சூழ்நிலைகளால்ஏற்படுத்தப்பட்டச் சட்டங்கள் எல்லாம் பலமரபுகளில் நிலவி வந்தன.

கி. மு 6 ஆம் நூற்றாண்டில் விடுதலைப் பயணநூலை எழுதியஆசிரியர் விடுதலைப்பயண பின்னணியில் இவை யாவற்றையும்புகுத்துகிறார். அப்படி அவர் செய்யும் போது இவற்றிற்கெல்லாம் கடவுளேஆசிரியர் என்று எழுதுகிறார். கடவுள் பல சட்டங்களை மோசேமூலமாகவே அளித்தார் என்று ஆசிரியர் குறிப்பிட்டாலும், இந்தப்பத்துக்கட்டளைகளை மட்டும் கடவுள் நேரடியாக அளிக்கிறார் என்றேஎழுதுகிறார் (காண். விப.19:25).ஆதலால், சமுதாய நலவாழ்வுக்காகப் பல நூற்றாண்டுகளாகஎழுந்த சட்டங்களை-பத்துக்கட்டளைகளாகத் தொகுத்து சமயச் சாயம் பூசி,கி.மு.14ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்கிறார். பிற்காலத்தில்உருவான சட்டங்களை முற்காலத்திற்குக் கொண்டு செல்கிறார் ஆசிரியர்.

7.3. கட்டளைகளின் விளக்கம்
1. "உனக்குக் கடவுள் நாமே. மற்ற கடவுளை நீ வழி படலாகாது".இது இஸ்ரயேலின் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்துகிறது.தங்களது அண்டை நாடுகள் எல்லாம் பல தெய்வங்களில் நம்பிக்கைக்கொண்டபோது இஸ்ரயேல் மட்டும் ஒரே கடவுள் கொள்கையைஆணித்தரமாக முழங்கியது. இது இவர்களின் தனித்தன்மை. மற்றநாடுகளின் தெய்வங்களால் கவரப்பட்டு தங்களது உண்மைஇறைவனைப் புறக்கணித்த மக்களுக்கு (காண் 1 சாமு 7 : 3, ஓசே) ஒருபோதனையாகவும், எச்சரிக்கையாகவும் இக்கட்டளை உருவானது (காண்.இச 6 : 4). அஃதுடன், இஸ்ரயேலின் கடவுளே மற்ற எல்லாதெய்வங்களுக்கும் மேலானவர் என்ற அவர்களது நம்பிக்கையையும் இதுஉணர்த்துகிறது (விப 15 : 1 ).

2. இரண்டாம் கட்டளை இஸ்ரயேலில் எவ்வித உருவ வழிபாடும்கூடாது என்கிறது. தற்கால அகழ்வு ஆராய்ச்சியின் படி யாவேகடவுளுக்கு எந்த உருவத்தையும் இஸ்ரயேலர் கொண்டிருக்கவில்லை.ஆனால், கனானேயர், எகிப்தியர், பாபிலோனியர் போன்ற அண்டைநாடுகளின் தெய்வ உருவங்ககளைச் சில சமயம் இஸ்ரயேலர்வழிப்பட்டனர். இதை எச்சரிப்பதுடன், யாவே கடவுளை எந்தமனிதனாலும் அடக்கி விட முடியாது என்ற உண்மையையும் அதுஉணர்த்துகிறது.

3. மூன்றாம் கட்டளை தெய்வப் பெயரைப் பயன்படுத்தி அந்ததெய்வத்தையே தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்று பழங்கால மக்கள்கருதினார் (தொநூ 2 : 19; 32 : 27-29). ஆனால் எந்த மனிதனாலும்'யாவே' பெயரை விளக்க முடியாது, அடக்கவும் முடியாது (விப 3 : 14)என்று இக்கட்டளை விளக்குகிறது.

4. நான்காம் கட்டளை ஓய்வுநாளை முறையாக கடைபிடிக்ககூறுகிறது. வாரத்தில் ஒருநாள் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்படவேண்டும் என்பதை இது உணர்த்துகிறது (விப 34 : 21; இச 5 : 12-15;விப 20 : 11). சமுதாய நோக்கமும் இதில் உண்டு அதாவது, கடவுளே'ஓய்வெடுத்தார்' என்பதனால் வாரத்தில் ஒரு நாள் விலங்குகளுக்கும்அடிமைகளுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும்என்றும் போதிக்கப்பட்டது (தொநூ 2 : 2-3; விப20 : 11). இறை உறவையும் பிறர் உறவையும்சீராக்கும் நாள்.

5. தாய்தந்தையை போற்றுதல் சமுதாய,குடும்ப ஒற்றுமையையும் வளர்ச்சியையும்உருவாக்க இக்கட்டளை உருவானது.இக்கட்டளை பிள்ளைகளுக்காக மட்டுமல்ல(விப 21 : 17; லேவி 20 : 9), மாறாக,பெற்றோருக்கும் அளிக்கப்படுகிறது (எபே 6:4;கொலோ 3 : 21).6-10 அடுத்து வருகிற ஐந்துகட்டளைகளும் சமுதாய மேன்மைக்காகவும், சமூக ஒழுக்க நெறியைநிலைநாட்டவும் ஏற்படுத்தப்பட்டன. களவு, விபசாரம், கொலை,பொய்சாட்சி, பிறர் பொருளைக் கவர்தல் - இவை யாவும்கண்டிக்கப்படுகின்றன. உடன்படிக்கை சமுதாயத்துக்கு இவையாவும்எதிரிகளாக இருக்கின்றன. எனவே அவற்றை அறவே அகற்ற வேண்டும்.மேலும், குடும்பப் புனிதத்துவத்தைக் காக்கவேண்டும் என்பதன் முக்கியகட்டளையாகவே 'விபச்சாரம் செய்யாதே' என்பதும், 'பிறர் வீட்டைக்கவர்ந்திட விரும்பாதே' என்பதும் கட்டளையாகின்றன (விப 20 : 14, 17).

7.4.சுருக்கமாகக் கூறினால்
முதல் நான்கு கட்டளைகள் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ளஉறவை வெளிப்படுத்துகின்றன. அடுத்து வரும் 6 கட்டளைகளும்மனிதனுக்கும் - மனித சமுதாயத்திற்கும் இருக்க வேண்டிய உறவைவெளிப்படுத்துகின்றன.

இவ்வாறு கடவுள் மனிதனோடு உடன்படிக்கைசெய்துகொள்ளத் தேவையான ஒரு தயாரிப்பாக விடுதலைப் பயணநூலின் ஆசிரியர் இக்கட்டளையைக் காண்கிறார்.அதனால் தான் உடன்படிக்கைப்பற்றிக் கூறும் முன் வேறுபலசட்டங்கள் பற்றியும் எழுதுகிறார் (காண். விப 20 : 22-23 : 33).

7.4.1. உடன்படிக்கை
விடுதலைப்பயணத்தின் மையமானது கடவுள் இஸ்ரயேல்மக்களுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையாகும். இதனை விப 19-24 அதிகாரங்களில் தருகிறார் விவிலிய ஆசிரியர். இப்பகுதி'உடன்படிக்கை நூல்' என்று அழைக்கப்படுகின்றது.

7.4.2. இறையியல் பின்னணி
கடவுள் மனிதரோடு தொடர்புகொண்டது பொதுவாக மனிதர்கள்மூலமே (ஆபிரகாம், மோசே, தாவீது, மானிடமகன் இயேசு). இவர்களோடுகடவுள் செய்த உடன்படிக்கையின் மூலமே அவர் தனதுதிருவெளிப்பாட்டை அளித்தார். கடவுள் மனிதனோடு உடன்படிக்கைசெய்யும் போது, வழக்கமாக சமுதாயத்தின் நிலவும் ஒப்பந்த முறைகளையேகையாளுகிறார். அதில்முக்கியமானது அவரவருக்குரிய கடமைகளைஇருவருமே (கடவுள் - மனிதன்) நிறைவேற்ற வேண்டும் என்பது.மேலும் கடவுள் மனிதனோடு உடன்படிக்கை செய்து கொள்வதன்காரணம் மனிதனை நெறிப்படுத்தவே. குறிப்பாகச் சொல்லப் போனால்இவ்வுலகில் இறையரசை நிறுவவே.உடன்படிக்கையை மீறினால் தண்டனை உண்டு (ஆதாம்மீறியதால் சாவு வந்தது). உடன்படிக்கைக்கான வெளி அடையாளங்கள்அளிக்கப்படுகிறது (பழைய ஏற்பாட்டில் விருத்த சேதனம்; புதிய ஏற்பாட்டில்திருமுழுக்கு). பொதுவாக மனித நலனுக்காக உடன்படிக்கை ஏற்படுத்தகடவுளே முன் வருகிறார்.தொடக்கத்தில் கடவுள் ஆதாமுடன் உடன்படிக்கை செய்துக்கொண்டார். கடவுளுக்கும் ஆதாமுக்கும் இடையில் நிலவிய நல்லுறவைஇது வெளிப்படுத்தியது (தொநூ 2 : 18-23).

அடுத்து, ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை. ஆபிரகாமின்சந்ததியைப் பெருமளவில் பெருக்குவதாகும் (தொநூ 12 : 2; 15 : 5).பாலஸ்தீன் நாட்டை அவருக்கு அளிப்பதாகவும் (தொநூ 12 : 7; 15 : 7, 18),ஆபிரகாமுக்கும் அவர் வழியாக எல்லா மானிடருக்கும் தனது சிறப்புஆசீரை அளிப்பதாகவும் கடவுள் வாக்குறுதி அளிக்கிறார். அதற்கு ஈடாக,ஆபிரகாமும் அவரது சந்ததியினரும் கடவுளுக்கு மட்டுமே பணிசெய்வதாகவும் (தொநூ 17:7), ஒழுக்க நெறியைப் பின்பற்றுவதாகவும்(தொநூ 17:1; 18 : 19; 26 : 5) கடவுளின் வாக்குறுதியில் நம்பிக்கைகொள்வதாகவும் உறுதியளித்தனர் (தொநூ 15 : 6). ஆபிரகாமுடன் செய்தஉடன்படிக்கை புதிய ஏற்பாட்டில் நிறைவேறுவதைக் காண்கிறோம்( லூக் 1 : 55-73).

இருப்பினும் சீனாய் உடன்படிக்கை (மோசேயுடன் செய்துகொண்டது) முற்றிலும் புதிய ஒன்றல்ல. ஆபிரகாம் உடன்படிக்கையின்தொடர்ச்சியாகவும், நிறைவாகவுமே உள்ளது. அந்த நிறைவின்தன்மைகளைத்தான் விடுதலைப்பயண நூல் ஆசிரியர் விளக்குகிறார்.(விப 23:27-33).

7.4.3. வரலாற்றுப் பின்னணி:
கடவுள் மோசேயுடன் செய்த உடன்படிக்கையின் பல நிலைகள்பற்றி விடுதலைப் பயண நூல் ஆசிரியர் எழுதுவதற்கு அவருக்கு ஒரு சிலவரலாற்றுப் பின்னணிகள் துணை நின்றன.ஓர் அரசர் தன் ஆளுகையின் கீழ் உள்ள சிற்றரசரோடுஉடன்படிக்கை ஏற்படுத்துவது பழங்கால வழக்கம். கி.மு 15 முதல் 13 ஆம்நூற்றாண்டு வரை சிறப்புடன் ஆண்ட இத்தியர்கள் மத்தியில் "மேலாட்சிஉடன்படிக்கை" நிலவி வந்தது. அதனில்

1. அரசருடையப் பெயரும் அவருக்குரிய பட்டங்களும்குறிப்பிடப்பட்டு, ஒரு சிறிய முன்னுரை முதலில் அளிக்கப்படும்.

2. அரசருடைய பேரன்புச் செயல்கள் வருணிக்கப்படும்: அதனால்சிற்றரசர்கள் நன்றியுணர்வுடன் அரசருடைய கட்டளைக்குப் பணிவர்.இதனில் " நான் - நீங்கள்" என்ற அமைப்பை அரசருக்கும் சிற்றரசருக்கும்பயன்படுத்தினர்.

3. சிற்றரசருக்குரிய கடமைகள் விவரிக்கப்படும். இதனால் 'இதைசெய்; 'இதை செய்யாதே ' என்ற கட்டளைகள் காணப்படும்.

4. உடன்படிக்கைப் பத்திரத்தைக் கோவிலில் வைக்கவும்,அவ்வப்போது பொதுவில் அவ்வுடன்படிக்கைப் பத்திரத்தைப் படிக்கவும்வேண்டிய கட்டளை உண்டு.

5. தெய்வங்களின் பெயர்ப் பட்டியல் கொடுக்கப்படும். ஏற்படுத்தும்உடன்படிக்கைக்கு இத்தெய்வங்கள் சாட்சிகளாக கருதப்படுவர்.

6. உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் ஏற்படும் ஆசீர்களும்,அதனை மீறினால் உண்டாகும் கேடுகளும் பட்டியல் போடப்படும்.

விவிலியத்தில் சீனாய் உடன்படிக்கையும், யோசுவா நூல் 24 ஆம்அதிகாரத்தில் காணப்படும் உடன்படிக்கையுமே மேற்கண்ட இத்தியர்உடன்படிக்கைகு ஒத்ததாக உள்ளன.

சீனாய் உடன்படிக்கையில்

1. முன்னுரை (விப 20 : 1)
2. அரசரின் பேரன்புச் செயல்கள் (விப 2 : 2)
3. கட்டளைகளின் பட்டியல் (விப 20 : 3-17)
4. கோவிலில் உடன்படிக்கையை வைத்திருக்கவும் அவ்வப்போது மக்களுக்குப் படித்துக் காட்டவும் (இச 10 : 5; 31 : 9-13).
5. வானங்கள் (தெய்வங்கள்) சாட்சியாக அழைக்கப்படுதல்(இச 3 2 : 1; எசா 1 : 2)
6. ஆசீர்ரும் கேடும் (விப 23 : 20-33).

விவிலிய ஆசிரியர் சீனாய் உடன்படிக்கை பற்றி எழுதும் போது,தங்களுக்கு முன்னமே நிலவிய வரலாற்றுக் குறிப்பினை மூலமாகக்கொண்டு எழுதினார் என்பது இதனால் தெளிவாகிறது.

7.5. உடன்படிக்கையின் தன்மைகள்
ஒரு குடும்ப அளவில் ஆபிரகாம் செய்த உடன்படிக்கையை தான்மோசே ஒரு நாடு அளவில் செய்கிறார். "நீ என் சொற்களின் படி நடந்தால்நான் உனக்கு இவ்வாறு செய்வேன்" என்பது தான் உடன்படிக்கை.மக்கள் இஸ்ரயேலர் எவ்வாறு நடக்கவேண்டும் என்பதற்குத் தான் பத்துகட்டகளைகளும் மற்ற சட்டங்களும் அளிக்கப்படுகின்றன (விப 20 : 1-23: 19). அதைத் தொடர்ந்து கடவுளின் வாக்குறுதி வருகிறது (விப 23 : 20-33). இதைக் கேட்ட மக்கள் ஆண்டவர் கூறிய சொற்கள் அனைத்தையும்செயல்படுத்துவோம் என்று கூறுகின்றனர் (விப 24 : 3).

இதனால் 'கடவுளின் மக்கள்' என்ற பேற்றினைப் பெறுகின்றனர்;கடவுள் மைய நாடு ஒன்று உருவாக்கப்படுகிறது. அந்த இஸ்ரயேல்நாட்டில் கடவுள் தான் சமயத்துக்கும் அரசியலுக்கும் கூடத் தலைவர்.அவர்களது அரசர்கள், நடுவர்கள், இறைவாக்கினர்கள்- யாவரும் கடவுள்தமது பெயரில் ஏற்படுத்திய கருவிகள். தமது ஆட்சியைச் சில சமயம்நேரடியாகவும் பெரும்பாலும் இந்தத் தமது கருவிகள் மூலமும்செயலாற்றினார்.உடன்படிக்கை இரத்ததால் உறுதிப்படுத்தப்படுகிறது (விப 24 : 1-11).இது ஒரு பழங்கால முறை (சக் 9 : 11; காண். எபி 9 : 18-20).பீடம் புனிதமாக இருக்கவும், மனித, இறை உறவை உறுதிப்படுத்தவும்இரத்தம் தெளிக்கப்படுகிறது.

7.6. உடன்படிக்கை பேழையும் கூடாரமும்
விப 25-31 வரை குருக்கள் அனுசரிக்க வேண்டிய தூய்மைச்சடங்குகளைக் குறிக்கிறது.

அதைத் தொடர்ந்து விப 32-ஆம் அதிகாரத்தில் இருந்துஉடன்படிக்கைப் பேழை மற்றும் கூடாரம் பற்றியும், அவைஉருவானதற்கான பின்னணியும் தரப்படுகின்றன. பின்னாளில் "பார்க்ககூடிய"" ஒரு பொருள் மூலம் வழிபட விரும்பினர். அதனால் பொற்கன்றுசெய்தனர். ஆனால் கடவுள் அதற்கு மாற்றாக உடன்படிக்கைப் பேழைசெய்து திருவுறைவிடத்தில் வைக்கக் கட்டளை கொடுத்ததாக விடுதலைப்பயண ஆசிரியர் எழுதுகிறார். ஆனால், வரலாற்று ஆய்வின்படி இந்தஎபிரேயர்கள் கானான் நாட்டில் குடியேறிய பின், கானானேயதெய்வங்களால் கவரப்பட்டு, சிலை வழிபாடு செய்தனர். இதனைக்கண்டித்து, இதற்கு ஒரு மாற்றாகவே அப்பொழுது உடன்படிக்கைப்பேழையும் ஓர் உறைவிடமும் ஏற்படுத்தப்பட்டது. எனவே, பிற்காலத்தில்ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை மோசே காலத்துக்கு எடுத்துச் செல்கிறார்ஆசிரியர். இப்பின்னணியில் தான் பொற்கன்று வழிபாடு பற்றியும்எழுதுகிறார் (விப 32).

உடன்படிக்கைப் பேழையும் கூடாரமும் கடவுளின் உடன்இருத்தலை வெளிப்டுத்தின (காண். யோசு 6 : 6; 1 சாமு 4).

------------------------------------------
--------------------------
----------------
------
--