பழைய ஏற்பாடு - தொடக்கநூல்

எழுதியவர் - முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர்

 

பொருளடக்கம்:

1. முன்னுரை
2.படைப்பின் பின்னணி
3. வார்த்தை படைத்தது
4. படைப்பின் சிகரம்
5. கடவுள் ஓய்வு எடுத்தாரா?
6. படைப்பின் குடும்பம்
7. படைப்பின் வீழ்ச்சி
8. சகோதரப் பகை
9. பாவத்தின் வளர்ச்சி
10. நல்லவன் வாழ்வான்
11. சமுதாயப் பாவம்
12. குலமுதுவர் வரலாறு

 

1. முன்னுரை

திருவிவிலியத்தின் முதல் நூல் தொடக்கநூல். இந்நூலின் முதற்பதினொரு அதிகாரங்கள் கடவுளின் படைப்பு, மனிதனின் வீழ்ச்சி,பாவத்தின் பெருக்கம் பற்றி ஓர் இலக்கிய நயத்துடன் விளக்குகிறது.

இந்தப் படைப்பு வரலாறு (தொநூ 1-11) தொடக்கநூலிலுள்ள மற்றபகுதியான குலமுதுவர்களின் வரலாற்றுக்கு (தொநூ 12-50) மட்டுமல்லஐந்நூலுக்கு முன்னுரையாகவும் வருகிறது. 'கடவுள் தமது வலியகரத்தாலும், ஓங்கிய புயத்தாலும் மிக பயங்கரத்துக்குரிய அடையாள,அற்புதங்களைக் காட்டி நம்மை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்' (இச26 : 7) என்று கடவுள் பற்றி இஸ்ரயேலர் நம்பினர். அப்படிப்பட்டசெயலாற்றும் கடவுளே படைக்கும் கடவுள் என்ற நம்பிக்கை உணர்வைஏற்படுத்தியது. அதன் வெளிப்பாட்டினைத்தான் நாம் தொநூ 1-11ல்காண்கிறோம்.நன்றாகப் படைக்கப்பட்ட மனிதன் ஏன் துன்புறுகிறான்? நோய்நோக்காடு எதனால் வருகிறது? பசி வருத்தம், பகையுணர்வு வரக் காரணம்என்ன? இப்படிப்பட்ட அடிப்படைக் கேள்விகளுக்கு இறைநம்பிக்கைஅடிப்படையில் தொடக்கநூல் ஆசிரியர் பதில் காண்கின்றார். அதன்விளைவுதான் தொநூ 1-11.

2. படைப்பின் பின்னணி

2.1. மீட்பே ஆதாரம்
தொடக்கநூலில் முதல் பதினொரு அதிகாரங்களைப் படிக்கும்போதுமனிதனின் தோற்றத்தைப் பற்றி இஸ்ரயேல் மக்கள் ஆரம்பம் முதலேஎழுதி வைத்துள்ளனர் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அவர்கள்படைப்பைப்பற்றி நினைக்க எழுந்த காரணங்கள் வேறு சில இருந்தன.

இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை அறிக்கையினைப் பழையஏற்பாட்டிலே பல இடங்களில் காண்கிறோம் (இச 26 : 5-24; யோசு 24 :1-13). யாவே அவர்களை மீட்டார் என்பதுதான் இவற்றின்மையப்பொருள். எதிரிகளிடமிருந்து யாவே அளித்த மீட்பிலே இயற்கைச்சக்திகள் மீது அவர் கொண்டிருந்த ஆற்றலைக் கண்டுணர்ந்தார்கள்.இத்தகைய கடவுள்தான் இவ்வுலகையும் படைத்திருக்க வேண்டும் என்றநம்பிக்கையே எழுந்தது.

கடவுளின் படைப்பாற்றலிலே இஸ்ரயேல் மக்களுக்கு இருந்தநம்பிக்கை எசா 40:28-31; 7:12 போன்ற வசனங்களிலும்,"உன்னதமானவர் வெவ்வேறு இனங்களுக்கு மக்கள் இனங்களின்எல்லைகளையும் திட்டமிட்டார்" என்றும் (இச 32 : 8), "ஆண்டவரே,விண், மண், கடல் யாவற்றையும் அவற்றில் அடங்கிய யாவற்றையும்ஆக்கியோர் நீரே" என்றும் புகழ்ந்தனர் (திபா 14:15, 17:24).இவ்வாறு அனைத்தையும் படைத்தவர் அவரே (திவெ 4 : 11) என்றநம்பிக்கையின் அடிப்படையில்தான் தொடக்கநூல் படைப்புப் பகுதிகள்எழுதப்பட்டன.

எழுதப்பட்டக் காலம்:
2 : 46-4 : 11 ஆகிய பகுதிகள் கி.மு. 10 ஆம் நூற்றாண்டு.1 : 2-4அ, 5 : 10 ஆகிய பகுதிகள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு.அப்படியே படைப்பு பற்றி எழுதும்போது கூட மீட்பைத்தான் மையக்கருத்தாக விவிலிய ஆசிரியர் கொண்டிருந்தார்.இருளிலிருந்து ஒளியை வெவ்வேறாகப் பிரித்தார் (தொநூ 1 : 4)என்றும் பகலையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிக்க வான்வெளியில்ஒளிப்பிளம்புகளை உண்டாக்கினார் (1 : 14) என்றும் முதல் அதிகாரத்தில்காணப்படுகிற குறிப்புகள் கடவுளின் மீட்புச் செயல்களைவெளிப்படுத்துகின்றன.

2.2. மனித வாழ்வின் பிரதிபலிப்பு
விவிலியத்தில் இப்பகுதியில் நாம் காணும் படைப்பு, மனிதனின்பாவம், வெள்ளப்பெருக்கு போன்ற செய்திகள் பிற சமயப் புராணஇலக்கியங்களிலும் உள்ளன. ஆதலின் விவிலியப் பகுதிக்கும்புராணத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று காண்போம்.

மித்தோஸ் (ஆலவாழள) என்ற கிரேக்கச் சொல்லினைத் தமிழில்புராணக் கதை, வெற்றுப் புனைந்துரை என்று மொழிபெயர்க்கலாம்.கடவுள்களை கதாப்பாத்திரங்களாகக் கொண்டு மனிதனுடையஏக்கங்களையும் ஆவல்களையும் கதைகளாக வடித்தனர்.விவிலிய ஆசிரியரும் தன் காலத்தில் நிலவிய இத்தகைய புராணஇலக்கிய வகையினைப் பயன்படுத்துகிறார்.இதுபற்றிய விரிவான விளக்கத்தை உங்களுக்கு முன்னமேஅனுப்பப்பட்ட 'பழைய ஏற்பாடு பொது முன்னுரை' என்ற நூலில் பக்.26-34 முடிய காண்க.

மனிதன் தனது விருப்பு, வெறுப்புகளை, மத உணர்வுகளைமுழுமையாக நிறைவு செய்ய முடிவதில்லை. அவற்றை இவ்வுலகில்காணாது மறுவுலகில் காண்கிறான். அதற்கு கடவுளர்களைக்கதாபாத்திரங்களாக அமைக்கின்றான். ஆதலின், உலகில் எழுந்தஇத்தகைய புராணக் கதைகளில் மனிதனின் ஏக்கங்களும் ஆவல்களும்பிரதிபலிக்கின்றன.

இஸ்ரயேல் மக்கள் ஒரே கடவுள் கொள்கையுடையவர்கள். ஒருசில உண்மைகளை, இறைவெளிப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தஇத்தகைய கதை உத்திகளைக் கையாண்டனர். மீட்பின் கடவுள் எப்படிபடைக்கும் ஆற்றல் கொண்டு இவ்வுலகைப் படைத்தார் என்று படைப்புப்பற்றி மெசபதொமியாவில் 'எனிமா எலிஷ்' என்ற புராணத்தை ஒட்டிதொடக்க நூல் முதலிரு அதிகாரங்களை விவிலிய ஆசிரியர் எழுதினார்.

அதே போன்று தொநூ 6ஆம் அதிகாரத்தில் வரும் வெள்ளப்பெருக்குபாபிலோனிய 'கில்கமேஷ்' என்ற புராணத்தை ஒத்திருப்பதாகத்தோன்றுகிறது.இருப்பினும், விவிலியம் மேற்குறிப்பிட்ட புராணங்களிலிருந்துமுக்கியமான கொள்கைகளில் மாறுபடுகிறது.எடுத்துக்காட்டாக,

- ஒரே கடவுள் நம்பிக்கையை வலியுறுத்துகிறது.
- 'யாவே' கடவுளே அனைத்தையும் படைத்தார்.
- அவர் படைத்தது யாவும் நல்லவையே!
- மனிதனின் தவறினால்தான் பாவம், தீமை உலகில் உருவானது,பெருகியது.
- பாவம் பெருகப் பெருக மனிதனின் வாழ்நாள் குறுகியது.

2.3. மரபுகள் பல
பொதுவாக விவிலியத்தில் முதல் ஐந்து நூல்களில் நான்குவிதமான மரபுகளைக் காண்கிறோம். தொடக்க நூலை மட்டும்எடுத்துக்கொண்டால் இஸ்ரயேலின் மூன்று மரபுகள் பின்னிப்பிணைந்துள்ளதை நாம் தெளிவாகக் காணலாம். அவை: கடவுளை'யாவே' என்றழைக்கின்ற யாவே மரபும், அவரை 'ஏலோகிம்'என்றழைக்கின்ற ஏலோகிம் மரபும், குருக்கள் மரபும் ஆகும்.

காலம்:
யாவே மரபு கி.மு. 10 ஆம் நூற்றாண்டு
ஏலோகிம் மரபு கி.மு. 8 ஆம் நூற்றாண்டு
குருக்கள் மரபு கி.மு. 6 ஆம் நூற்றாண்டு

மனிதன் கடவுளோடு பேச முடியுமென்றநம்பிக்கையை யாவே மரபு வெளிப்படுத்தும்போது(தொநூ 2 : 46-15; 18 : 2; 4 : 3-16; 11 : 1-9) கடவுள்அனைத்திற்கும், அனைவருக்கும் அப்பாற்பட்டவர்என்ற எண்ணத்தைப் பிற்பாடு எழுந்த குருக்கள்மரபு வலியுறுத்துகிறது (தொநூ 1 : 1 - 2 : 4 அ).

இந்த மரபுகளின் கண்ணோட்டம்வேறுபடுவதனால்தான் படைப்புப் பற்றிமுதலதிகாரத்தில் ஒருவிதமாகவும் இரண்டாம்அதிகாரத்தில் வேறு விதமாகவும் இருக்கின்றன.

பழைய ஏற்பாடு பொது முன்னுரையில் விளக்கம்காண்க.இத்தகைய பின்னணியில் விவிலியத்தில் படைப்புப் பற்றிஆராய்வோம்.

 

3. வார்த்தை படைத்தது

தொடக்க நூல் படைப்பு பற்றிய முதல் பாகத்தை நாம்தொநூ 1 : 1-2 : 4அ முடிய காண்கிறோம்.

இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட பிறகு குருக்கள் மரபு ஆசிரியர்இப்பகுதியை எழுதினார். உலகம் எப்படி உருவானது என்ற கேள்விக்குவிடைகாண விழைவதுதான் இவ்வாசிரியரின் முதன்மையான நோக்கம்.

இங்கே, 'தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும்மண்ணுலகையும் படைத்தார்' (1 : 1) என்பதிலிருந்து, ஆறு நாட்கள்படைத்த கடவுள், ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் (2 : 3) என்பது வரை கூறி,இவையாவும் உலகப் படைப்பின் தொடக்க கால நிகழ்ச்சிகள் ஆகும் என்றுமுடிக்கிறார் ( 2 : 4அ).

3.1. இலக்கிய அமைப்பு
குருக்கள் மரபில் எழுந்த இப்பகுதியானது, ஒரு கட்டுக்கோப்பானஇலக்கிய அமைப்பில் மிளிர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1) கட்டளையிட்டார் - உருவானது
"தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும்படைத்தார்" (1 : 1) என்ற ஆரம்ப வசனத்தையும்,
"இவையே விண்ணுலக,மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம்" (2 : 4அ) என்றஇப்பகுதியின் இறுதி வசனத்தையும் காணும்போது, ஒரு முன்னுரை,முடிவுரையாக இப்பகுதிக்கு அமைகின்றன.

இடையில், 'தோன்றுக' என்ற கட்டளையைக் கடவுள் விடுக்கிறார்.தொடர்ந்து 'தோன்றிற்று' என்ற விளைவையும் 'நல்லது எனக்கண்டார்' என்ற கடவுளின் எண்ணத்தையும் எழுதுகிறார்.

ஆதலின்

முன்னுரை : கடவுள் சொன்னார்
கட்டளை : தோன்றுக
விளைவு : தோன்றிற்று
எண்ணம் : நல்லது எனக் கண்டார்
முடிவுரை : மாலையும் காலையும் சேர்ந்து...

என்ற அமைப்பில் ஒவ்வொரு நாளும் கடவுள் படைத்ததாகஆசிரியர் எழுதி, அகப்படுத்துதல் என்ற இலக்கிய முறையை இவண்கையாளுகிறார்.இப்படிப்பட்ட அமைப்பில் படைப்புப் பற்றி எழுதும் குருக்கள் மரபுஆசிரியரின் மையக்கருத்து என்ன? கடவுள் ஒரு வார்த்தை சொல்ல அதுஅப்படியே நிகழ்ந்தது என்பதை வலியுறுத்தவே விரும்புகிறார்.விருத்தசேதனம் பற்றிய கடவுளின் கட்டளையை குலமுதுவர்கள்உடனுக்குடன் நிறைவேற்றிய தன்மையை ஒத்திருக்கின்றது இது(தொநூ 17 : 10, 23-27).

2) எங்கும் முழுமை
குருக்கள் மரபு ஆசிரியர், கடவுள் படைப்பில் ஒரு முழுமையைக்காண்கிறார். அதனால், அந்த முழுமையைக் குறிக்கும் ஏழு என்றஎண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். 'படைத்தார்' என்ற பொருளைக்குறிக்கும் எபிரேயச் சொல் 'பாரா' (டீயசய) இப்பகுதியில் ஏழுமுறைவருகிறது. அடுத்து "ஆயிற்று" என்ற சொல்லும் ஏழுமுறை வருகிறது(1 : 6, 9, 11, 15, 20, 24, 30). மேலும் "நல்லது என்று கண்டார்" என்பதுஏழுமுறை வருகிறது.அதே போன்று ஆறு நாட்கள் படைத்து, ஏழாம் நாள் கடவுள்ஓய்ந்திருந்தார் என்று கூறி, ஏழு நாள் முறையைக் கடவுளும்கையாண்டார் என்று உருவகமாக எழுதுகிறார்.

மேலும் பணிகள் பற்றி எழுதும்போதும் நான்கு வித, ஏழுபணிகளை குருக்கள் மரபு ஆசிரியர் எழுதுகிறார்.
1. பிரிப்பதில் இரு பணிகள் (வச 6-8; 9-10)
2. அணி செய்வதில் இரு பணிகள் (வச 11-13; 14-19)
3. உயிர் கொடுப்பதில் இரு பணிகள் (வச 20-23; 24-28)
4. ஒழுங்கு செய்யும் பணி (வச 28அ-30).

இப்படி, தான் எழுதுகின்ற பாணியில் ஏழு என்ற எண்ணுக்கு மிகமுக்கியத்துவம் அளிப்பதைக் காண்கிறோம். யூதக் கண்ணோட்டத்தில் ஏழுஎன்பது முழுமையைக் குறிக்கிறது. கடவுள் படைப்பில் எங்கும் எதிலும்முழுமை இருந்ததென்று வலியுறுத்திக் காட்டவே விவிலிய ஆசிரியர்இவ்வாறு எழுதுகிறார்.

3.2. ஒன்றுமில்லாமையில் படைத்தார்
தொடக்க நூலின் முதல் அதிகாரத்தில் 'படைத்தார்' என்றபொருளைக் குறிக்கும் 'பாரா' என்ற எபிரேயச் சொல்லை விவிலியஆசிரியர் பயன்படுத்துகிறார். எந்தவித உழைப்பும் இல்லாமல் எந்தப்பொருள் ஆதாரத்தையும் கொண்டிருக்காமல் கடவுள் உலகைப்படைத்தார் என்பதைத்தான் இது உணர்த்துகிறது.இஸ்ரயேலர்களின் அண்டை நாட்டவரான மெசபதொமியரின்'எனிமா எலிஷ்' என்ற புராணம் கடவுள் படைப்பு பற்றிக் கூறும்போது,மார்துக் என்ற தெய்வத்துக்கு எதிராக ஒரு குழப்பமான சூழ்நிலைஏற்கெனவே நிலவியது.அது உருவமற்றதொரு கோரமான பொருள். அச்சூழ்நிலையைப்பயன்படுத்தித்தான் அத்தெய்வம் உலகைப் படைக்கிறது.மேலும் தனது எதிரியான தேவதை தியாமத்தைக் கொன்றுமனிதனைப் படைக்கிறது.இப்படிப்பட்ட கருத்துக்கு முற்றிலும் மாறாக, 'ஒரு வார்த்தைசொல்ல அனைத்தும் உண்டாயின' என்ற கருத்தில், எந்தப் பொருளும்கொள்ளாமல், ஒன்றுமில்லாமையில் அனைத்தையும் உருவாக்கினார்என்று கூறி, இஸ்ரயேலர் வழிபடும் கடவுள் மாபெரும் ஆற்றல் படைத்தவர்என்று வெளிப்படுத்த விரும்புகிறார்.

3.3. கடவுளின் அளவிலா ஆற்றல்
"மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவேஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும்வன்மையாக வீசச் செய்து கடலை பின்வாங்கவைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள்பிரிக்கப்பட்டது" (விப 14 : 21) என்று ஆரம்பித்துகடவுளின் பலவித ஆற்றல்மிகு செயல்களைவிவரிக்கிறார் விடுதலைப் பயண நூல் ஆசிரியர்.

அதே ஆற்றலுள்ள கடவுளேஅனைத்தையும் படைத்தார் என்றுகூறும் தொடக்கநூல் ஆசிரியர் அவரதுஆற்றலை விளக்க ஒரு சிலமுறைகளில் எழுதுகிறார்.

1) "அப்போது கடவுள், 'ஒளிதோன்றுக' என்று உரைத்தார்,உரைக்கவே ஒளி தோன்றிற்று"(தொநூ 1 : 3).கடவுள் ஒரு வார்த்தை சொல்லஅனைத்தும் உண்டாயின என்றகருத்தில் எழுதுகிறார்.இக்கருத்தானது விவிலியம் முழுவதும் பரவியிருப்பதையும்காண்கிறோம்.(எ.கா) "பனிக்கட்டியைத் துகள்களாக விழச் செய்கின்றார்.அவர்தம் கட்டளையால் அவற்றை உருகச் செய்கின்றார். தம் காற்றைவீசச் செய்ய நீர் ஓடத் தொடங்குகின்றது". என்று திருப்பாடலும்(147 : 17-18) ".... உம் வார்த்தையால் அனைத்தையும் படைத்தவர் நீரே..."என்று சாலமோனின் ஞானமும் குறிப்பிடுகின்றன (9 : 2).

இதனால், படைப்புப்பொருள் வேறு, படைத்தவர் வேறு என்பதும்,கடவுள் அனைத்தையும் தனது விருப்பத்தினால் படைத்தார் என்பதும்தெளிவாகிறது.

1) பெயரிட்டார்
'கடவுள் ஒளிக்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும்பெயரிட்டார்' என்று தொநூ முதல் அதிகாரத்தில் அறிகின்றோம்.எதுவுமே பெயரில்லாமல் உயிர் வாழ்வதில்லை. அனைத்தும்வாழ்வதற்குக் கடவுளே காரணமென்பதால் அனைத்தையும் கடவுளேபெயரிட்டு அழைப்பதாக எசாயா அறிவிக்கிறார் (40 : 26). ஆதலால் பெயர்இருந்தால்தான் உயிர் இருக்கிறது.அதனால்தான் சவுல் தனது கடைசி காலத்தில் தாவீதை நோக்கி,"எனக்குப் பின்வரும் என் வழிமரபை நீ வேரறுப்பதில்லை என்றும் என்தந்தை வீட்டாரிலிருந்து என் பெயரை அழிக்கமாட்டாய் என்றும்ஆண்டவர் மேல் எனக்கு ஆணையிட்டுக்கூறு" (1 சாமு 24 : 2) என்றுஉறுதிமொழி வாங்கினான்.

பெயரும் ஆள் தன்மையும் இணைந்தே செல்வதாக யூதர் கருதினர்.அதனால்தான், தனக்குரிய ஆசீரை யாக்கோபு கபடமாகப் பெற்றுவிட்டான்என்று அறிந்த ஏசா: "யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே,ஏனென்றால், அவன் இருமுறை என்னை ஏமாற்றிவிட்டான்" என்றுகூறினான் (தொநூ 27 : 36).ஆனால் அதன் பிறகு கடவுளின் தூதர் அவரைச் சந்தித்தபோது,"உன் பெயர் இனி யாக்கோபு இல்லை. இஸ்ரயேல் எனப்படும்" (தொநூ32:28) என்றார்.

இங்கே யாக்கோபின் பெயர் மாற்றத்தில் அவருடைய தன்மையும்பணியும் மாறுபடுகின்றன.அதேப்போன்று கடவுள் படைப்புச் சூழலில் பெயரிடும்போது, தனதுஅதிகாரத்தை நிலைநாட்டுகிறார் என்பது புலனாகிறது.மேலும் அனைத்திற்கும் கடவுளே பெயரிடுவதால், அனைத்தும்நல்லவைகளாகவே படைக்கப்பட்டன என்ற பொருளையும் இங்கே நாம்அறிய முடிகிறது.

 

4. படைப்பின் சிகரம்

தொடக்கநூலின் முதல் அதிகாரத்தில் படைப்பைக் காணும்போது,பல வகையான உயிரினங்களையும், வீட்டு விலங்குகளையும் பூமியின்மீது கடவுள் படைத்தபின், இறுதியில் மனிதனைப் படைத்தார்.

மனிதன் வாழத் தகுதியாயிருக்கும் வண்ணம் வானம், பூமி,அதிலுள்ள அனைத்தையும் உருவாக்கிய பின்னர், கடவுள் மனிதனைப்படைப்பின் சிகரமாகப் படைக்கிறார். மற்ற படைப்புக்கும் மனிதனுக்கும்பெரியதொரு வித்தியாசத்தைக் கடவுள் ஏற்படுத்தி, மனிதனுக்குத்தனித்தன்மையை அளித்தார் என்பதைப் பின்வரும் குறிப்புகளிலிருந்துநாம் அறியலாம்.

4.1. சாயலாகவும், உருவிலும;
கடவுள், "மானிடரை நம் உருவிலும் நம் சாயலிலும்உண்டாக்குவோம்" என்று கூறுகிறார் (தொநூ 1 : 26)."சாயல்" என்ற வார்த்தை "ஷலாமா" (ளுயடயஅய) என்ற எபிரேயமூலத்திலிருந்து வருகிறது. அக்காடிய மொழியில் (யுமமயனயைn) "ஷால்மு"என்று வருகிறது. இதற்கு சிலை, உருவம், சாயல், பிரதி என்றெல்லாம்பொருள் உண்டு. அப்படியென்றால் மனிதன் கடவுளின் பிரதி என்றோஅல்லது உருவம் என்றோ கூற முடியுமா? முடியாது.

பழைய ஏற்பாட்டு ஆசிரியர் இவ்வார்த்தையை எத்தகையபொருளில் கையாள்கிறார்?

இதைப் புரிந்துகொள்ள 'பாவனை' என்ற சொல்லின் பயனைஆராய்ந்தால் தெளிவு பிறக்கும். 'பாவன்' என்ற சொல் தாமா (னுயஅயா)என்ற எபிரேய மூலத்தின் மொழிபெயர்ப்பு. இதற்கு, "போன்றது,ஒத்திருப்பது, பண்பொத்தது, உருவொத்தது" என்று பொருள். எசா 1 : 9;46 : 5; திபா 89; 102 : 7; 144 : 4 போன்ற இடங்களில் இவ்வார்த்தைமேற்கண்ட பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் சம்மந்தப்பட்டநிலைவரும்போது, உருவங்களால் விளக்கும் வழக்கத்தை இஸ்ரயேலர்கொண்டிருந்தனர் என்பதை எசேக்கியேல் நூல் குறிப்பிடுகிறது (எ.கா.)"உயிரினங்களின் தலைகளுக்குமேல் கவிகை போன்ற அமைப்பு ஒன்றுஇருந்தது. அது பளிங்கு போன்ற தோற்றம் கொண்டு அச்சம் தருவதாய்அவற்றின் தலைகளுக்குமேல் விரிந்திருந்தது" (எசே 1 : 22). இறுதியாக,தொடக்கநூல் 1 : 26ல் பாவனை என்று கூறும்போது, மனிதனைக்குறித்தே அதுவும் கடவுளுடன் தொடர்புடைய அவனது நிலையைவிளக்குவதாகவே வருகிறது.

மேலும், இப்பகுதியில் சாயலையும், பாவனையையும் இணைத்தேகூறுவதன் காரணம் என்னவென்றால், "சாயல்" என்ற வார்த்தையின்பொருளை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதன் உட்பொருளைவாசகர்கள் உணர வேண்டும் என்பதற்காகவே "பாவனை" என்றவார்த்தையைச் சேர்த்திருக்கிறார். பொதுவாக "சாயல்" என்பது உடல்நிலையும், அமைப்பும் ஒத்திருப்பதைக் குறிக்கும். ஆனால் மனிதனின்உடல் நிலையும், அமைப்பும் கடவுளின் சாயலுக்கு ஒத்திருப்பதாக யாராலும்கருத இயலாது. ஆனால் அதே நேரத்தில், கடவுளின் சாயலாக மனிதன்இருக்கிறான் என்று கூறும்போது அவனது உள்ளத்து நிலையை மட்டும்விவிலிய ஆசிரியர் கருத்தில் கொண்டார் என்றும் கொள்ள முடியாது.

ஏனெனில், மனிதனை உடல் என்றும் மெய்ப்பொருள் என்றும்பாகுபடுத்திக் காண்பது பழைய ஏற்பாட்டுப் பாரம்பரியம் அல்ல.எடுத்துக்காட்டாக, "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார், நீ கடவுள்சாயலின் முத்திரையாய் இருந்தாய்; ஞானத்தில் நிறைந்திருந்தாய்; அழகில் சிறந்திருந்தாய்... பொன்னான உன் உருபாவனை உன் அழகைவெளிக்காட்டிற்று" என்ற எசேக்கியேல் நூல் வசனமானது மனிதஉடலின் மேன்மை, அழகு பற்றி பழைய ஏற்பாடு கருதுவதைவிளக்குகிறது."அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர்ஆக்கியுள்ளீர்" என்று திருப்பாடல் கூறும்போது (8 : 5) மனிதனைமுழுமையாகவே கண்டார்.ஆகவே, "கடவுளின் சாயல்" என்று சொல்லும்போது கடவுள் தனதுஉருவத்தின் பிரதிபிம்பமாக மனிதனை உருவாக்கவில்லையென்றுதெளிவாகிறது.

கடவுள் உயிராற்றல் கொண்டு செயல்படுகிறார். அதேபோன்றுமனிதனும் உயிராற்றல் கொண்டு செயல்படும் தன்மையை மனிதனுக்குஅளிக்கிறார். கடவுள் தனது ஞானத்திலும் நன்மைத்தனத்திலும்பங்களித்து, உயிராற்றல் கொண்டு செயல்படும் தனது தன்மையைப்பகிர்ந்தளிக்கிறார்.இப்படிப்பட்ட ஆற்றலுடன், மனிதன் செயல்படும்போதுதான் அவன்கடவுளின் சாயலிலும், உருவிலும், இருக்கிறான் என்பது தெளிவாகிறது.

4.2. கீழ்ப்படுத்துங்கள்
உயிரினங்களைப் படைத்த கடவுள், "அவற்றிற்கு ஆசி வழங்கி,பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள்" என்றார் (1 : 22). அதைப்போன்றதோர் ஆசிரை மனிதனுக்கும் வழங்குகிறார். கடவுள்அவர்களுக்கு (முதல் மனிதர்) ஆசி வழங்கி,'பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்'(1 : 28). ஆனால் இத்துடன் கடவுள்நிற்கவில்லை. 'பலுகிப் பெருகிமண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள்ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்'(கீழ்படுத்துங்கள்) அனைத்தையும்ஆளுங்கள்" என்ற அதிகாரத்தையும்அளித்து மனிதனின் தனித்தன்மையைநிலைநாட்டுகிறார் (1 : 28).

கடவுள் ஆபிராமை ஆசிர்வதிக்கும்போது, "ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்கமாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம்மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக்கொள்வர்" (தொநூ18 : 18) என்றார். அதைபோன்று ஈசாக்கை முன்னிட்டு ஆபிரகாமிடம்கடவுள் கூறும்போது, "அவனுக்கு ஆசி வழங்கி அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர்களுக்கு அவன்தந்தையாவான்" என்று கூறுகிறார் (தொநூ 17:20). ஈசாக்குயாக்கோப்பை ஆசீர்வதிக்கும்போது இத்தகையதொரு கனிவளத்தையேகுறிக்கிறார். அடுத்து யாக்கோபு யோசேப்பின் மக்களைஆசிர்வதிக்கும்போது, "மண்ணுலகில் இவர்கள் பெருந்திரளாகப்பல்குவார்களாக" என்றார் (தொநூ 18:16). இங்கே மக்கள் செல்வம்குறிக்கப்படுகிறது.

சுருங்கக்கூறின், 'பலுகிப் பெருகுங்கள்' என்று கூறும்போதுவிவிலிய ஆசிரியரின் கண்ணோட்டத்தில் மக்கள் செல்வம்மட்டுமல்லாமல், பொதுவாக உலகச் செல்வம் பலுகிப் பெருகுவதைத்தான்உணர்த்துகிறது.ஆனால், கடவுள் அத்துடன் நிற்கவில்லை. "பலுகிப் பெருகிமண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்"என்ற கட்டளையை விடுக்கிறார் (1 : 28).

4.3. இதன் பொருள் என்ன?
குருக்கள் பாரம்பரிய ஆசிரியர் கடவுளை 'எலோகிம்' என்றுஅழைக்கிறார். 'எலோகிம்' என்ற வார்த்தை இரு உண்மைகளைஉணர்த்துகிறது. ஒன்று ஞானம், மற்றொன்று நல்லவர் என்ற தன்மை.அதாவது உயிருள்ள கடவுள் ஞானம் நிறைந்தவர்; நல்லவர் என்றஎண்ணம் பழைய ஏற்பாட்டு மக்களிடையே ஆழப்பதிந்திருந்தது (2 சாமு14 : 20; 1 சாமு 29 : 9).மனிதன் கடவுளின் சாயல் என்றால், கடவுள் தனது ஞானத்திலும்,நன்மைத்தனத்திலும் பங்களிக்கிறார் என்பதுதான் பொருள். அதனால்தான், தான் படைத்தவற்றைக் காணும்போது 'நல்லதெனக் கண்டார்'என்று கூறி விட்டு (1 : 11, 13, 18, 22) படைப்பின் சிகரமான மனிதனைப்படைத்தபோது, "அவை மிகவும் நன்றாய் இருந்தன" என்று கூறுகிறார்(தொநூ 1 : 31).

அதாவது, மற்ற படைப்புகளிலிருந்து மனிதனை முற்றிலும்வித்தியாசமாகப் படைத்த கடவுள், மற்ற படைப்புகளை மனிதன்கீழ்ப்படுத்துவதற்கான தகுதிகளை கடவுளே அளிக்கிறார் (ஞானம்,நன்மைத்தனம்).

இதைக் கருத்தில்கொண்டுதான் திருப்பாடல் ஆசிரியர், "உமது கைபடைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர். எல்லாவற்றையும்அவர்கள் பாதங்களுக்கு கீழ்ப்படுத்தியுள்ளீர்" என்று பாடுகிறார் (8 : 6).மற்ற படைப்புகளைக் கீழ்ப்படுத்தி, ஆண்டு நடத்தும்போது கடவுளதுபணியை மனிதன் பகிர்ந்துகொள்கிறான். இவ்வாறு கடவுளது பணியில்மனிதன் பகிர்ந்து கொள்ளும்போது கடவுளுக்கும் மனிதனுக்கும் ஒருநெருங்கிய உறவு ஏற்படுகிறது. உடன்படிக்கை உருவாகிறது. அதாவது,மனிதன் இங்கே கீழ்ப்படுத்தி வாழ்வதனால் தனக்கே வாழ்வளித்தஇறைவனுடன் நெருங்கிய உறவை உருவாக்குகிறான்.'உட்படுத்தி' ஆள்வதென்பது கடவுளுடைய திட்டத்தில் மனிதன்தன்னை இணைத்துக்கொண்டு, உலகப் படைப்பினை மனித வாழ்வின்மேம்பாட்டிற்கும், உலகம் எப்பொழுதும் "நல்லதாய்" இருக்கவும் பலவளர்ச்சித் திட்டங்களைச் செயலாக்குவது ஆகும்.

சுருங்கச் சொல்ல வேண்டுமாயின், மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாகஇவ்வுலகத்தை அமைத்துக்கொள்ள கடவுள் அவனை ஆசீர்வதித்தார்.

 

5. கடவுள் ஓய்வு எடுத்தாரா?

"கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவுபெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார் (ஏழாம் நாள்)" என்றுவிவிலிய ஆசிரியர் எழுதுகிறார்.

கடவுள் ஓய்ந்திருக்க முடியுமா?

ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார் என்றால் என்ன?"சாபாத்" என்ற எபிரேயச் சொல்லைத்தான் ஓய்வுநாள் என்றுமொழி பெயர்க்கிறோம். இதற்கு நிறுத்துவது, தவிர்ப்பது, முடிப்பதுஎன்றெல்லாம் பொருள் உண்டு.நாடோடி வாழ்க்கையை ஆரம்பத்தில் மேற்கொண்ட இஸ்ரயேல்மக்கள், தங்கள் அன்றாட வேலையிலிருந்து விடுபடுவதற்குஇயலாமற்போயிற்று. கானான் நாட்டில் குடியேறிய பிறகு, ஒரே இடத்தில்தங்கி, பயிர்த்தொழில் செய்ய ஆரம்பித்த இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்குஒரு நாளை ஒதுக்கி விட வேண்டுமென்ற சமய நோக்குடன் பாபிலோனியவழக்கத்திலிருந்த 'ஓய்வுநாள்' முறையினை இஸ்ரயேல் மக்களும்ஏற்றுக்கொண்டனர் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

5.1. எண் ஏழு
காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. செமித்திய மக்களிடையேவாரத்தின் ஏழவது நாளைத் தீமையான நாள் என்றும், எவ்விதப் பலனும்அளிக்காத நாள் என்றும் கருதினர். ஆதலால் அந்த நாளை கண்டிப்பாகத்தவிர்க்க வேண்டுமென்று போதித்தனர். அதனால்தான் இன்றும்கூடபாலஸ்தீன மக்கள் எண்களைக் கூட்டும்போது ஏழு என்ற எண்ணைஉச்சரிப்பதில்லை. அந்த எண்ணை உச்சரித்தாலே தீமை அவர்களைஆட்கொண்டுவிடும் என்ற மூட நம்பிக்கை வன்மையாகப் பரவியிருந்தது.பாபிலோனியரின் நம்பிக்கைப்படி தீமையான ஆவியின் பெயரே ஏழுஆகும்.

இப்பின்னணியில் நோக்கும்போது இஸ்ரயேல் மக்கள் வாரத்தின்ஏழாம் நாளை ஒதுக்கிவிட, அதாவது, செய்யும் வேலை பலனளிக்காதுஎன்ற நம்பிக்கையில், அந்த நாளை வேலையிலிருந்து விடுபட்ட நாளாகஆரம்பத்தில் கருதினர் (ஆமோ 8 : 5).

5.2. இஸ்ரயேலரின் தனித்தன்மை
ஏழாம் நாள் தீமையானது;ஆகவே அன்று வேலைசெய்யக்கூடாது என்ற நம்பிக்கைமட்டுமே பாபிலோனியருக்கும்கனானேயருக்கும் இருந்தது.இது ஓர் எதிர்மறை நோக்கு(நேபயவiஎந யிpசழயஉh).ஆனால் இஸ்ரயேல் மக்கள், இந்த ஓய்வுநாள் வழக்கத்தை தங்கள்அண்டை நாட்டவரிடமிருந்து பெற்றிருந்தாலும், அவர்களிடமிருந்துஒருபடி மேலே சென்று, ஓய்வுநாள் என்பது அன்றாட வேலையிலிருந்துவிடுபடுவது உண்மைதான்; ஆனால் எதற்காக? அந்த நாளைக் கடவுள்வழிபாட்டிற்காகப் பயன்படுத்த வேண்டுமென்று போதித்தனர்.

அதனால், தீமையின் நாள் என்ற கருத்து மறைந்து விழாவின்நாள் என்றும், மகிழ்ச்சியின் நாள் என்றும், ஆண்டவரின் நாள் என்றும்மாற்றிக் கொண்டனர்.இக்குறிப்பை நாம் விடுதலைப் பயண நூலில் காண்கிறோம். 'ஆறுநாள்கள் நீ வேலை செய், ஏழாம் நாளில் ஓய்வுகொள்; உழும்பருவத்திலும் அறுவடைப் பருவத்திலும் கூட ஓய்ந்திரு' (விப 34 : 21),அதன்பிறகு வந்த சட்டம் ஏழாம் நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சேர்த்துக்கொண்டது (விப 23 : 21). மூன்றாவது கட்டமாக,கடவுளை மையமாக வைத்து அந்த ஓய்வு நாளை அனுசரிக்கவேண்டுமென்று போதித்தனர் (இச 5 : 12-15). அதனால் தான் ஓய்வுநாள்புனித நாள் என்ற கருத்தும் தோன்றியது.

5.3. வரலாற்றை மறந்தனர;
"அமாவாசை தோறும், ஓய்வுநாள் தோறும் மானிடர் அனைவரும்என் முன் வழிபட வருவர் என்கிறார் ஆண்டவர்," என்று எசாயா அக்காலமக்களுக்கு மேற்கண்ட கருத்தை வலியுறுத்துகிறார்" (எசா 66 : 23).

ஆனால், நாளடைவில் (கி.மு. 516-486) வேலை செய்யாமல்ஓய்ந்திருப்பதை சமயச் சடங்காகக் கருதினர். ஓய்வுநாளின் நேரியநோக்கத்தை மறந்தனர் (எசா 56 : 4). இப்பின்னணியில்தான்தொடக்கநூல் முதல் அதிகார ஆசிரியர் ஓய்வுநாள் கருத்தினைப் புகுத்திகடவுள் அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்தபின், ஏழாம் நாளில்ஓய்வு எடுத்தார்; அந்த ஏழாம் நாளைப் புனிதப்படுத்தினார் என்று கூறி,ஓய்வுநாளின் சரியான நோக்கத்தை இங்கே வலியுறுத்த விரும்புகிறார்.

'புனிதமாக்குதல்' என்றால் பழைய ஏற்பாட்டில் இரு பொருட்களைஉணர்த்தும்.

அ) பாவமான, தீமையான பொருட்களிலிருந்து பிரிந்து, தனித்துநிற்பது ( 1 சாமு 6 : 20; ஓசே 11 : 9).
ஆ) பக்தியுணர்வைத் தூண்டக் கூடியது .

இப்படிக்காணும்போது, கடவுள் அந்த ஏழாம் நாளை அர்ச்சிக்கிறார்.அதாவது மறைந்த ஆறு நாட்களிலிருந்து பிரித்து வைக்கிறார்.படைப்புகள் கடவுளை நினைத்து மகிமைப்படுத்த ஒருநாளை அவரேஒதுக்கி வைக்கிறார்.கடவுளுக்கும் மனிதனுக்குமுள்ள உறவை வளர்க்க, உறுதிப்படுத்த,வெளிப்படுத்த கடவுள் மனிதனோடு செய்த உடன்படிக்கை ஓர்அடையாளமாயிருக்கிறது. தனக்குள்ள பிரமாணிக்கத்தை மனிதன்வெளிப்படுத்த இந்த ஓய்வு நாள் காரணமாயிருப்பதால், இதனை'உடன்படிக்கையின் சின்னம்' என்றும் கூறலாம்.

ஆதலால், கடவுளைப் புகழவும் போற்றவும் வாரத்தில் ஒருநாளை(ளுயடியவா) ஒதுக்கிவிட வேண்டும். அதற்குக் கடவுளே வழிகாட்டுகிறார்என்பது தொடக்கநூல் ஆசிரியரின் போதனை.

 

6. படைப்பின் குடும்பம்

முன்னமே குறிப்பிட்டதுபோல தொடக்க நூலின் முதற் பதினொருஅதிகாரங்களும் யூதமக்களுக்குக் கூறப்பட்ட மறைக்கல்வி பாடங்கள்என்று சொன்னால் அது மிகையாகாது. உலகின் ஆரம்பம், மனிதனின்ஆரம்பம். பாவத்தின் ஆரம்பம், தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு குலத்தின்ஆரம்பம் என தொடக்கநூல் முழுவதும் பல ஆரம்பக் கதைகளைக்கூறுகின்றன. இவற்றில் மனிதனின் தோற்றம், வீழ்ச்சி பற்றி 'யாவே'பாரம்பரிய ஆசிரியரின் கண்ணோட்டத்தில் தொநூ 2 இல் காண்கிறோம்.கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெற்ற இம்மரபானதுஇக்காலத்திற்கு முன்பே வாய்மொழியாகப் பேசப்பட்டு வந்தது.பாபிலோனிய அடிமைத்தனத்தின்போது (கி.மு. 587-538) இம்மரபானதுபுத்தக வடிவம் பெற்றதனால் அத்தகைய அடிமை வாழ்வின் தாக்கம்நிறையவே காணப்பட்டது.

பாபிலோனியாவில் அடிமைகளாக அவதிப்பட வேண்டியஅளவுக்கு இஸ்ரயேல் என்னும் குடும்பம் ஏன் சீரழிந்து விட்டது என்றும்சிந்திக்கிறார் இம்மரபில் தோன்றிய விவிலிய ஆசிரியர். அதனால் உலகம்,மனிதன் உருவானது எப்படி என்று கூறினாலும், உலகில் உலவும்துன்பங்களுக்குக் காரணம் என்னவென்றும் காண விழைகிறார்.சுருங்கக் கூறின் மனிதனின் அன்றாட அனுபவமான துன்பங்களின்தொடக்கமும் காரணமும் யாது என்று விடையளிப்பதே தொநூ 2 : 3அதிகாரங்களின் நோக்கங்களாகும்.

முதல் அதிகாரத்தில் குருக்கள் மரபு ஆசிரியரும், இரண்டாம்அதிகாரத்தில் யாவே மரபு ஆசிரியரும் படைப்புப் பற்றி எழுதுகின்றனர்.இருப்பினும், இருவருக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதைக்கீழ்க்கண்ட அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம்.

முதல் அதிகாரம்
1. வானமும் பூமியும் தோன்றியது எவ்வாறு என விடை தருகிறது.
2. விண்ணையும் மண்ணையும் படைத்தார் என்று கூறிவிண்ணிலிருந்து ஆரம்பிக்கிறார்.
3. கடவுளின் ஆவியானவர் செயல்புரிகிறார்.
4. படைப்பு என்ற பிரமிடுவில் மனிதன் சிகரம்.
5. கடவுள் மனிதரோடு நெருங்கிய உறவில்லை.
6. கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.
7. இஸ்ரயேல் மக்களிடம் நிலவிய புராணக் கதைகளையும்,நாட்டுப்புறக் கதைகளையும் எடுத்தாண்டு, புராணக் கடவுளின் சக்திகள்,மக்கள் மயங்கிய தீய சக்திகள் ஒன்றுமில்லாதவை என்று காட்டுகிறார்.

இரண்டாம் அதிகாரம்
1. மனிதனின் தன்மை நிலை பற்றி விளக்குகிறது.
2."மண்ணையும், விண்ணையும்" என்று மனிதனுக்கு மிகவும்ஈடுபாடுள்ள மண்ணிலிருந்து ஆரம்பிக்கிறார்.
3. கடவுளே செயல்புரிகிறார்.
4. படைப்பு என்ற 'வட்டத்தில்' மனிதன் மையம்.
5. கடவுள் மனிதனுடன் நெருங்கிய உறவு கொள்கிறார்.
6. மனிதனுக்குத் துணையாகவும் இணையாகவும் பெண்ணைப்படைத்து குடும்பத்தை உருவாக்குகிறார்.
7. உலகில் நிலவும் தீயசக்தியே துன்பத்திற்குக் காரணம் என்றஇஸ்ரயேலரின் எண்ணத்தை நீக்கி, கடவுள் கட்டளைகளை மீறுவதேதுன்பத்திற்குக் காரணம்என்று கூறுகிறார்.

6.1. மனிதனின் தோற்றம்
இரண்டாம் அதிகாரத்தில் 'யாவே' மரபு ஆசிரியரின் குறிப்புகளின்படி, கடவுள் "நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன்நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்"(தொநூ 2 : 7).

இப்படி எழுதி, இரண்டு மரபுக் கருத்துக்களை ஒன்றிணைத்துயாவே மரபு ஆசிரியர் சரியான இறைவெளிப்பாட்டினை அளிக்கிறார்.மெசபடோமியாவின் எனிமா எலிஷ் என்ற புராணத்தில் மனிதப்படைப்புக்குக் கருவியாக களிமண்ணும் துணைக்கருவியாக 'கிங்கு' என்றதெய்வத்தின் இரத்தமும் அமைகிறது. 'மார்துக்' என்ற கடவுள்படைக்கிறார். இத்தகைய புராணத்தை நன்கு அறிந்திருந்த இஸ்ரயேல்மக்களுக்கு சரியான கருத்தை அளிக்க விரும்பிய விவிலிய ஆசிரியர்,அதே 'களிமண்ணை யாவே கடவுள் கருவியாகப் பயன்படுத்தினாலும்,தனது உயிர்மூச்சை அளித்து உயிர் கொடுக்கிறார்' என்று கூறி, மனிதஉயிர் வாழ்வது 'மார்துக்' என்ற தெய்வத்தால் அல்ல் மாறாக, 'யாவே'என்ற ஒரே கடவுளால் தான் என்று போதிக்க விரும்புகிறார்.

அத்துடன், ஒரு விவிலியப் பாரம்பரியத்தையும் இவண்இணைக்கிறார்.

"ஆதாமா" என்றால் பூமி என்று பொருள்படும். அந்தப்பூமியிலிருந்து உருவம் பெற்ற மனிதனை எபிரேய மொழியில் 'ஆதாம்'என்றழைத்தார். மனிதனுக்கும் மண்ணுக்குமுள்ள நெருங்கியதொடர்பினை, பழங்கால யூதர்களின் இந்த எண்ணத்தை இதுவெளிப்படுத்துகிறது.

மேலும், "இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போலஇஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்" என்றஎரேமியாவின் இறைவாக்கையும் (18 : 6) கடவுள் தனது படைப்புகளில்பலவற்றைத் தன் கைவேலையினால் படைத்தாரென்ற விவிலியத்தின்மற்றப் பகுதிகள் கூறுவதையும் (திபா 95 : 5; எசா 45 : 7; ஆமோ 4 : 13;எரே 1 : 5) யாவே மரபு ஆசிரியர் இங்கே வெளிப்படுத்துகிறார்.

கடவுள் உயிர் மூச்சை அளித்தார் என்று கூறுவதன் மூலம் கடவுளேஉயிருக்குக் காரணம் என்ற கருத்து முதன்மையாக வெளிப்படுகிறது."வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது" (திபா 36:9)என்றும், "என்வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்" (திபா 23 : 6) என்றும் திருப்பாடல் ஆசிரியர் புகழ்வதுஇதனால்தான். அத்துடன், கடவுள் தமது உயிர் மூச்சைத் தம்மிடம்மீண்டும் கூட்டிக்கொண்டால் "ஊனுடம்பு எல்லாம் ஒருங்கே ஒழியும்,மனிதர் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவர்" என்று யோபு நூல் கூறுவதைஇங்கு நினைவு கூறுவோம் (யோபு 34 : 15).

6.2. வளமான வாழ்வு
கடவுளே முயற்சி எடுத்து மிகவும் அக்கறையுடன் படைத்த மனிதன்தனது வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று வாழ வேண்டுமென்றுகடவுள் விரும்பினார் என்பது யாவே மரபு ஆசிரியர் கண்ணோட்டம்.அத்தகைய சுகமான வாழ்வுக்குப் பின்வரும் சூழ்நிலைகளை கடவுளேமனிதனுக்கு அமைத்துத் தந்தார் என்று கூறுகிறார்.

1) ஏதேன் தோட்டம்
புவியியல் கண்ணோட்டத்தில் 'ஏதேன்' என்ற இடத்தைக்குறிப்பிட்டுக் கூற முயற்சிப்பது. நல்ல சமாரியன் உவமையில் திருடர்கள்தாக்கிய இடத்தை எருசலேமுக்கும் எரிக்கோவுக்கும் இடையில் உள்ளபாதையில் இருந்த இடமே என்று குறிப்பிடுவது போன்றதாகும்.ஏனெனில் இரண்டுமே ஓர் இறையுண்மையை அல்லதுஇறைவெளிப்பாட்டை விளக்குவதற்கு எழுந்த 'உவமை'களாகும்.

'ஏதேன்' என்ற எபிரேயச் சொல்லுக்கு இன்பம் - மகிழ்ச்சி - சுகம்என்று பொருள்படும். ஆதலால்தான் கிரேக்க மொழிபெயர்ப்புப் பழையஏற்பாட்டில் 'சுகந்தரும் பூங்கா' என்று எழுதப்பட்டது.

இவ்வகையில் நோக்கும்போது, கடவுள் மனிதனை முதன் முதலில்வாழவைத்த இடம் 'இன்பவனமாக இருந்தது' என்ற ஆழ்ந்த கருத்துவெளிப்படுகிறது.

2) நதிகள் பிறந்தன
தான் படைத்த இன்பவனத்தை வளமாக்க நதியொன்று நான்குபிரிவுகளாகக் கடவுள் புறப்படச் செய்தார். உலக முழுமையும்வளமாக்குகின்ற நதி புறப்படுமிடம் கடவுள் உருவாக்கிய இன்பவனமேஎன்று விவிலிய ஆசிரியர் கூற விரும்புகிறார். இதன் பொருள் என்ன?நாகரிக தோற்றத்திற்கு நதிகளே காரணமென்பதுநமக்குத் தெரியும். அந்த நதிகள்உருவாகக் கடவுளே காரணம்.அதாவது, மனிதனது அனைத்துமுன்னேற்றத்திற்கும் கடவுளேகாரணம் என்று தொடக்கநூல்ஆசிரியர் கூற விரும்புகிறார்.

3) மனிதன் ஒரு தீவு அல்ல
தொடக்க நூலின் இரண்டாம்அதிகாரக் குறிப்புகளின்படி கடவுள்மனிதனைத் தனியாக படைத்தார்.ஆனால் அவன் தனியாக இருப்பதுநன்றன்று என்று கடவுளே நினைத்து அவனுக்கு ஒருதுணையை ஏற்படுத்தினார் என்று படிக்கிறோம் (தொநூ 2 : 18-20).தொடக்கநூலின் இரண்டாம் அதிகாரத்தில் மனிதன் யாருடனும்உறவாடக்கூடிய சூழ்நிலையில் இல்லை. இறைவன் அவனை அப்படியேவிட்டுவிடவும் விரும்பவில்லை. அவனுடன் சரிநிகராக, அவனதுஉணர்வுகளைப் பகிர்ந்துக்கொள்ளக்கூடிய ஒரு துணையை ஏற்படுத்தவிரும்பினார்.

'சரிநிகர்' என்று கூறும்போது, அத்துணையானது மனிதனுக்குஅடிமையுமல்ல அதிகாரியுமல்ல. அத்துடன் அவனுக்குக் கீழானஇயல்புடையதோ அல்லது மேலான இயல்புடையதோ அல்ல.அவனைப்போன்ற இயல்புகளைக் கொண்ட, அதேசமயத்தில், அவனுக்குஏற்புடைய, அவனது இயல்புகளுக்குப் பொருந்திய ஒரு துணையையேஅவனுக்குத் தர விரும்பினார்.இத்தகைய கருத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில்தான் கடவுள்ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஓர் எலும்பை எடுத்துப் பெண்ணைஉருவாக்கினார் (தொநூ 2 : 21-22).

அந்த சமயத்தில் ஆணுக்குத் தூக்கத்தைக் கடவுள்அளித்திருந்தாராம். ஏன்?

1) கடவுளின் வல்ல செயல்களை எந்த மனிதனும் தெளிவாகஅறிந்துகொள்ள முடியாது.
2) ஆணைப் படைக்கும்போது, எப்படித் தன்னைக் கடவுள்படைத்தார் என்பதை ஆண் அறிய இயலவில்லையோ அதே போன்றுபெண்ணை உருவாக்கும்போது அவன் அதுபற்றி அறிந்துகொள்ளக்கூடாது என்பதால் கடவுள் அவனைத் தூங்கச் செய்தார்.
3) ஆண் உருவாகும்போதும், பெண் உருவாகும்போதும் ஆணும்பெண்ணும் பிறக்கும் உண்மை பற்றி மனிதன் அறியவில்லை.

இது ஆண், பெண் கொள்ளும் உறவின் ஆழ்ந்த உட்பொருளைஉணர்த்துகிறது. ஆண் - பெண் உறவு புனிதமானது; பாலுணர்வு கடவுள்அளிப்பது. மனித உறவு பற்றி நாம் அறிந்திருப்பினும், புதிய உயிர்(குழந்தை) பிறப்பது கடவுளாலேயே என்ற கருத்தும் இதனால்புலனாகிறது.

4) ஒரே உடலாய் இருப்பர;
"இருவரும் ஒரே உடலாய் இருப்பர்" என்று கடவுள் முதல்பெற்றோரின் உன்னத நிலையை வருணிக்கிறார் (தொநூ 2 : 24). இதற்குமுன் ஒரு வசனம் வருகிறது. "இதனால் கணவன் தன் தாய் தந்தையைவிட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்" (24அ). ஆண்தனது பிறந்த காலத்தை மறந்து விட வேண்டுமா? பெற்றோரை துறக்கவேண்டுமா? விவிலிய ஆசிரியரின் நோக்கம் அதுவல்ல.

மாறாக, பெண்ணின்மேல் ஆணுக்குள்ள இயல்பானகவர்ச்சியையும், பெண்ணில், ஆண் காணும் நிறைவையும்மற்றவர்களைவிடப் பெண்ணின் மேல் ஆணுக்குள்ள ஆசையையும்விளக்குவதுதான் யாவே பாரம்பரிய ஆசிரியரின் நோக்கமாகும்.படைப்பில் ஒன்றாக இருந்த ஆண் - பெண் இருவரும்மனத்தாலும் உறவாலும் ஒன்றித்திருந்தனர் என்று கூறவிரும்பியதால்தான் எபிரேய வழக்கத்தில் 'உடலால்' ஒன்றாயிருந்தனர்என்று கூறுகிறார். அவர்களது மன ஒன்றிப்பின் வெளிப்பாடு அடுத்துவரும்வசனத்தில் தெரிகிறது. 'மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும்ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை' என்றுவிவிலிய ஆசிரியர் கூறுகிறார் (2 : 25).

1) மனிதன் தன் இயலாமையையும், குறையையும் உணர்ந்து,குழம்பிப் போகும்போது (திபா 22 : 6; 68 : 7; எசா 29 : 22; எசே 17 : 17),முதல் மனிதர்கள் எந்தக் குறையையும் உணராமல், குழப்பத்தையும்அடையாமல் இருந்ததால் அவர்கள் வெட்கம் என்பதை அறியவில்லை.

2) அடுத்து, ஒருவன் பாவம் செய்துவிட்டதாக உணரும்போதுவெட்கம் ஏற்படுகின்றது (எரே 6 : 15; 8 : 12; 31 : 19; 51 : 51; எசே 16 : 52).ஆனால் கடவுள் முன்னிலையில் இவர்கள் தூய்மையாய் இருந்ததால்வெட்கம் அவர்களை ஆட்கொள்ளவில்லை.

மனித வாழ்வின் உன்னத நிலையில் இந்த முதல் பெற்றோர்இருந்தனர் என்று தொடக்கநூல் ஆசிரியர் வருணிக்கிறார்.

 

7. படைப்பின் வீழ்ச்சி

(அதிகாரம் - 3)

கடவுள் எல்லாவற்றையும் நன்றாகப் படைத்தார் என்றால்துன்பங்களுக்கும் பாவங்களுக்கும் யார் காரணம் என்று பதில்அளிக்கிறது இந்த அதிகாரம்.

3-ஆம் அதிகாரத்தின் அமைப்பு:
அ) சோதனையும் வீழ்ச்சியும் (3:1-7)
ஆ) வழக்காடல் (3:8-13)
இ) தண்டனை (3:14-24)

மேற்கண்ட மூன்று நிலைகளை ஒவ்வொன்றாக இவண்காண்போம்.

7.1. சோதனையும் வீழ்ச்சியும் (3 : 1-7).
இந்த அதிகாரத்தின் ஆரம்பத்திலேயே பாம்பைத் தந்திரமுள்ளதாகக்குறிப்பிட்டு, மனித வீழ்ச்சியின் கருவியாகப் பாம்பு உள்ளது என்று யாவேமரபு ஆசிரியர் எழுதுகிறார் (3 : 1).

இதற்குக் காரணமில்லாமலில்லை.
மெசபடோமியா, எகிப்து, கிளளஸ், உரோமை போன்ற நாடுகளில்உள்ள சமயப் புராணங்களில் பாம்பு ஒரு சாத்தானாகக் கருதப்பட்டது.தங்கள் நாட்டின் எல்லை வழியாகத் தவறாகக் கடந்து செல்வோரின் மேல்துன்பங்கள் வரவேண்டுமென்று மெசபடோமிய மக்கள்வேண்டிக்கொண்ட ஒரு சில தெய்வங்களில் பாம்பும் ஒன்றாகும்.பிள்ளைச் செல்வம் பெற மக்கள் வேண்டும் தெய்வத்தின் உருவமும் பாம்புபோன்றே இருந்தது. பாபிலோனியாவில் பாம்பை உற்பத்திக் கடவுளாகவழிபட்டனர். அடிமைத்தனத்தில் பாபிலோனில் இஸ்ரயேல் மக்கள்வாழ்ந்தபோது அத்தகைய வழிபாட்டில் ஈடுபாடு காட்டினர். இதுமிகப்பெரிய துரோகம் என்று காட்ட விரும்புகிறார் விவிலிய ஆசிரியர்.

ஆதலின், சிலை வழிபாட்டை அறவே ஒழிக்கவும், மனிதனின் தீயகுணத்தைக் கண்டிக்கவும் பாம்பைப் புகுத்திய விவிலிய ஆசிரியர்,'தந்திரமுள்ள பாம்பு' என்று குறிப்பிட்டு பின் அது எப்படித் தனது தந்திரகுணத்தால் மனிதனை வீழ்த்தியது என்று தொநூ 3-ல் காட்டுகிறார்.

சோதனை
பெண்ணின் பலவீனத்தைப் புரிந்துகொண்ட பாம்பு, கடவுளைப்பற்றிய நேர்மாறான கருத்துக்களை அவளிடம் கூறுகிறது.

1. கடவுளைப் பற்றிய வெறுப்பை ஊட்டுகிறது.
2. சோதிப்பவனே மனிதனுக்கு நண்பன் என்ற எண்ணத்தைத்தருகிறது.
3. மனிதனக்கு ஆசைகளைக் காட்டி, ஆணவத்திற்கும் தூபம்போடுகிறது.
4. கடவுளே மனித வளர்ச்சியைக் கண்டு மனம் பொறுக்காதவர்என்றும், பொய்யர் என்றும் கூறி பேச்சில் ஒருவித கவர்ச்சியைச்சேர்க்கிறது.

பாம்பு அல்லது தீய சக்தியானது பெண்ணின் பலவீனத்தை நன்குபயன்படுத்திக்கொண்டது. மரத்தின் கனியைப் பெண் நோக்குகிறாள்.கடவுளைப்போல ஆகவேண்டுமென்ற ஆசையினால் தூண்டப்பட்டபெண், அந்தக் கடவுளின் கட்டளையை மீறத் தயாராகிவிட்டாள். அவளதுஉள்ளம் கடவுளிடமிருந்து அகலும்போது தான் விரும்பிய பொருள்(மரத்தின் கனி) அவளுக்கு எல்லா வகையிலும் கவர்ச்சியாகவேகாணப்படுகிறது (தொநூ 3 : 6).

உலகிலுள்ள எல்லாப் பாவங்களுக்கும் காரணமாயுள்ள மூன்றுவகையான ஆசைகள் பெண்ணை ஆட்டிப்படைத்தன் அவளும்பாவத்தில் வீழ்கிறாள்:

1. உண்பதற்கு நல்லது - உடல் இச்சை
2. பார்வைக்கு இனியது - பொருளாசை
3. அறிவைப் பெருக்குவது - ஆணவம்

ஒரு மனிதன் பெறக்கூடிய பின்விளைவுகளைச் சிந்திக்க அவளுக்கு மனமுமில்லை, நேரமுமில்லை, அதைப் பறித்துத் தானும்உண்டாள். தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் அதைத்தின்றான்.

சோதனையின் விளைவு:
கண்கள் திறக்கப்படல். இதன்பொருள் என்ன? மீட்பின் நாளில் "பார்வையற்றோரின் கண்கள்பார்க்கும்" (எசா 35 : 5) என்று எசாயா கூறினாரே, அது போன்றதோ?இல்லை. மாறாக அவர்களது பாவத்தால் தங்களின் இழிநிலையைக்காணும் "மனிதக் கண்கள்" திறந்து கொண்டன. "இயலாமைக் கண்கள்"திறந்து கொண்டன. ஆதலால் வெட்கம் அவர்களை வாட்டியது.தாங்கள் செய்த பாவத்தின் காரணத்தால் கடவுளிடமிருந்துபிரிந்ததனால் அவர்களது இயலாமையையும் கையாலாகாததன்மையையும் உணர்கின்றனர். ஆதலால், கடவுள் முன்னிலையில்நிற்க நாணி, அவரை விட்டுத் தூரப் பயணம் செய்கின்றனர்.

7.2. வழக்காடல்
அந்நேரம் இன்பவனத்தில் உலவிக்கொண்டிருந்த கடவுள்மனிதனின் இச்செயலைக் கண்டு (தொநூ 3 : 8), "எங்கே இருக்கிறாய்"என்று கேட்கிறார். ஆதாம் இருக்கும் இடம் கடவுளுக்குத் தெரியாதுஎன்பதல்ல் மாறாக, மனிதன் தன் குற்றத்தை உணர்ந்துகொள்ளகடவுள் தாமே அவனைத் தேடி அழைப்பு கொடுக்கிறார் என்ற கருத்தைவெளிப்படுத்த இத்தகைய யுக்தியைப் பயன்படுத்துகிறார் விவிலியஆசிரியர்.

கடவுளுடைய பிரசன்னத்தைக் கண்டு குற்றமுள்ள மனிதன்பயப்படுகிறான்.

"நீ ஏன் இவ்வாறு செய்தாய்?" என்று கேள்வியை ஆணிடம்கடவுள் கேட்க, ஆண் பெண்னைக் குற்றம் சொல்ல, பெண் பாம்பின் மீதுகுற்றம் சுமத்துகிறாள். அதாவது, கூடிப் பாவம் செய்தவர்கள் ஒருவர்,ஒருவர் மேல் குற்றம் சாட்டுகின்றனர். பழியை அடுத்தவர் மேல்போடுகின்ற மனிதனின் பொதுவான மனநிலையைக் கூறுவதைவிட,பாவத்தின் தன்மையையும் அதன் விளைவையும் விளக்குவதுதான்விவிலிய ஆசிரியரின் நோக்கமாகும்.

என்ன விளைவுகள்?
முதலில் கடவுளைக் குற்றவாளியாக்குகிறான். ஆதாமின்கண்களுக்கு கடவுள் துரோகம் புரிந்தவராகத் தோன்றுகிறார். அதனால்,ஆரம்பம் முதல் கடவுள் மனிதனோடு கொண்ட தந்தை மகன் என்ற உறவுமுறிகிறது.

அடுத்து, ஆணும் பெண்ணும் ஒரே உடலாக இருந்தவர்கள்,இப்பொழுது 'அவள்தான் பாவி, நான் நீதிமான், என்ற பிரிவினையைஆண் ஏற்படுத்தி இருவருக்குமுள்ள நெருங்கிய உறவை முறித்துக்கொள்கிறான்.இருவரும் ஒரே பாவத்தைச் செய்தனர்; ஆனால் அதே பாவம்அவர்களைப் பிரிக்கிறது.

மேலும், "பாம்புதான் என்னை வஞ்சித்தது"என்பதன்மூலம்இயற்கையுடன் தான் கொண்டிருந்த ஒப்புரவையும் குலைத்துக்கொள்கிறான் மனிதன்.

7.3. தண்டனை
1) பாம்பு பெற்ற தண்டனை: தண்டனையைப் பாம்பிலிருந்து ஆரம்பிக்கிறார். கடவுள் இயற்கைநியதியின்படிப் பார்க்கும்போது, பாம்பு தனது வயிற்றினால் ஊர்ந்துசெல்வதும், மண்ணைத் திண்பதும், மனிதனுடன் எப்பொழுதும் 'பகை'உணர்வைக் கொண்டிருப்பதும் அதன் இயல்புதான். இருப்பினும் ஆழ்ந்தஇறைப்பற்றுள்ள யாவே மரபு ஆசிரியர் அனைத்து நிகழ்ச்சிகளையும்கடவுள் கண்கொண்டு காண்கிறார். மேற்சொன்ன "இயல்புகள்"அவருக்கு ஒரு குறையாக, அதுவும் பாவத்தின் தண்டனையாகத்தெரிகிறது.கடவுளுக்கெதிராக செருக்கினை உருவாக்கிய பாம்பு வயிற்றினால்ஊர்வது, மண்ணைத் திண்பது போன்ற இழி நிலைக்கும், சிறுமைநிலைக்கும் ஆளாக்கப்பட்டது என்றும், மனிதனோடு தொடர்ந்துபோராட்டம் மேற்கொள்ள வேண்டும் என்றும் விவிலிய ஆசிரியர்காண்கிறார். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கும், பாம்புக்கும் ஏற்படும்போராட்டத்தைவிட, மணுக்குலத்திற்கும் தீமைக்கும் நடக்கும்போராட்டத்தை நினைவுக் கூற வேண்டும்.

2) பெண்ணுக்குரிய தண்டனை
ஆசிரியரின் காட்சியமைப்பை உற்றுநோக்கும்போது:

சோதனை : பாம்பு - பெண் - ஆண்
வழக்காடல் : ஆண் - பெண் - பாம்பு
தண்டனை : பாம்பு - பெண் - ஆண்
எல்லாவற்றிலும் நடுநாயகமாக வீற்றிருப்பவள் பெண். ஆவதும்பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்ற கருத்தை மெய்யாகவைத்துக் காண்கிறார் விவிலிய ஆசிரியர்.

பொதுவாக, பழங்கால யூதச் சமுதாயத்தில் பெண்களுக்கு சமுதாயஉரிமை அளிக்கப்படுவதில்லை. அவர்கள் மிகவும் தாழ்ந்த நிலையையேபெற்றிருந்தனர். ஆணின் உடமையாகவே கருதப்பட்டாள் (விப 20 : 17),சமய வழிபாட்டிலும் உரிமையில்லை (இச 16 : 16; லேவி 15 : 16-20).

இதைக் கண்ணுறும் விவிலிய ஆசிரியர், ஆண் சமுதாயம்பெண்களுக்கு இழைக்கும் கொடுமையாக மட்டும் இதைக் கருதவில்லை.இதனை இறைவன் அளித்த தண்டனையாகவும் கருதினார். ஆணையும்,பெண்ணையும் ஒப்பிடும்போது மூன்று விதத்தில் ஆணைவிடப் பெண்அதிக வேதனை அனுபவிப்பதைக் காண்கிறார்.

1) பேறுகால வேதனை
2) ஆண் மேல் ஆர்வமும், அடைக்கலமும் கொள்வது
3) ஆணுக்கு அடங்கி நடப்பதுஇத்தகைய அவல நிலை ஏன்? கடவுள் காரணமல்ல் அவளதுபாவமே காரணம் என்று கண்டார் விவிலிய ஆசிரியர்.

3) ஆண் பெற்ற தண்டனை:
இங்கேயும் மனிதன் அன்றாடம் அனுபவிக்கும் இயல்பானதுன்பங்களை (பூமி சபிக்கப்பட்டதாக, நெற்றி வியர்வை நிலத்தில் விழஉழைப்பது, சாவு) மனிதன் செய்த பாவத்தின் விளைவாகக் காண்கிறார்'யாவே' பாரம்பரிய ஆசிரியர்.

பொதுவாகவே இஸ்ரயேல் மக்களின் புவியியல் பின்னணியில்ஆராயும்போது அவர்களது கூடார நாடோடி வாழ்வும் சரி, அதன் பிறகுஅவர்கள் மேற்கொண்ட விவசாய வாழ்க்கையும் சரி அவர்களுக்குத்துன்பம் நிறைந்ததாகவும், கடினமுள்ளதாகவுமே அமைந்தது.இத்துன்பங்களுக்கெல்லாம் காரணம் மனிதம் செய்த பாவமே என்றுநம்பிய விவிலிய ஆசிரியர்,அதனை முதல் பெற்றோர் செய்ததாகஉருவகித்து எழுதுகிறார்.

3 : 15 பற்றிய சிறிய விளக்கம;
"உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்பகையை உண்டாக்குவோம்..."

இப்பகுதி அன்னை மரியைப் பற்றிக் குறிப்பிடுகிறதா?
தொடக்கநூலின் ஆசிரியரின் கண்ணோட்டத்தில், இருளுக்கும்ஒளிக்கும், தெய்வீக சக்திக்கும் தீய சக்திக்கும் இடையே உள்ள போராட்டம்உலகில் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்ற பொதுவானகருத்தைத்தான் நாம் காண்கிறோம். இருப்பினும், மீட்பர் இயேசுவின்பின்னணியில் மரியாவை மறைமுகமாக காண்பதில் தவறில்லை.

தண்டனைக்குப் பின் இன்ப நிலையை மனிதன் இழக்கிறான்.அதை மீண்டும் கடவுள் கொடுத்தாலொழிய மனிதனால்பெற முடியாதுஎன்பதை உணர்த்தவே இன்ப வாயில் மூடப்பட்டதாக ஆசிரியர்காட்டுகிறார். ஆயினும் கடவுளின் இரக்கம் மனிதனைத் தொடர்கிறதுஎன்பதைக் காட்ட தோல் ஆடைகளைத் தருவதாக ஆசிரியர் எழுதுகிறார்.

 

8. சகோதரப் பகை

தொடக்கநூலின் பதினொரு அதிகாரங்களை முதல் பாவம் (அதி 1-3), பாவப் பெருக்கம் (4 - 11) என்று இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு பாவம்பல பாவங்களைப் பிறப்பிக்கிறது என்ற உண்மையை 4 -11 அதிகாரங்கள்விரிவாக எடுத்துரைக்கின்றன. அவற்றின் முதல் அங்கந்தான் சகோதரப்பகை என்பது. மனிதன் கடவுளைப் புறக்கணிக்கும்போது அடுத்து வரும்விளைவு என்ன? ஒருவர் ஒருவரைப் புறக்கணிக்க ஆரம்பிப்போம். இந்தஉண்மையைத்தான் 'காயின் - ஆபேல்' என்ற உருவகக் கதை மூலம்விவிலிய ஆசிரியர் விளக்குகிறார்.

8.1. பிரிவுகள;
இந்த நான்காம் அதிகாரத்தை மூன்றாம் அதிகாரத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது இரு அதிகாரங்களும் ஒரே பாணியில் வடிக்கப்பட்டுள்ளதுதெளிவாகும்.

1) பொறாமை - ஒவ்வொரு தீய செயலுக்கும் இதுதான் தூண்டுதல்(4 : 6 - 7)
2) கடவுள் கட்டளையை மறந்து விடுதல்
3) பாவமும் நீதியும் (1 : 10)
4) தண்டனை (4 : 11-15)
5) பயம், வெட்கம், குற்ற உணர்வு வளர்ந்துகொண்டே செல்லுதல்.

8.2. விளக்கம்
நான்காம் அதிகாரத்தின் ஆரம்பத்தில் உள்ளபடி பார்த்தால் காயின்- ஆபேல் இருவரும் ஆதாம் - ஏவாள் என்ற முதல் பெற்றோரின் நேரடிப்பிள்ளைகள் போன்று தோன்றுகிறது. ஆனால், அவர்களதுதொழிலையும், அந்த அதிகாரத்தில் ஆசிரியர் தரும் மற்ற குறிப்புகளையும்ஆராய்ந்து பார்க்கும்போது காயின் என்பவன் உழவுத் தொழில் செய்தகனானேயர்களையும் ஆபேல் என்பவன் கால்நடைகளை மேய்த்து வந்தஇஸ்ரயேலர்களையும் குறித்து நிற்கும் அடையாளச் சின்னங்களாவர்.

காயின், ஆபேல் இருவரும் தங்கள்உழைப்பின் பலனை கடவுளுக்குக்காணிக்கையாக்குகின்றனர்; ஆனால்காயின், ஆபேல் மேல் பொறாமைகொள்கிறான்! பொறாமை வளர்ந்து தன்சகோதரர் ஆபேலையே ஒழித்து விடுகிறான்!கடவுளை மறந்தவன், தன் சகோதரன்என்ற உறவையும் மறந்து விடுகிறான்.அதனால் பந்தபாசம் மறைந்து விடுகிறது.சுயநலந்தான் விஞ்சுகிறது என்பதைவிவிலிய ஆசிரியர் அழகாகஎடுத்துரைக்கிறார்.

"உன் சகோதரன் எங்கே?" என்றுகடவுள் காயினைப் பார்த்துக் கேட்கிறார் (4 : 9) இது, "நீ எங்கேஇருக்கிறாய்?" என்று ஆதாமைப் பார்த்துக் கேட்டதற்கு ஒத்திருக்கிறது.

"நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" என்றுகாயின் கடவுளைப் பார்த்துக் கேட்டு, தனது குற்றத்தைஅதிகரித்துக்கொள்கிறான். சகோதரர்கள் ஒருவருக்கொருவர்அரவணைத்துச் செல்லவேண்டுமென்ற பழங்கால இஸ்ரயேலரின்உறுதியான எண்ணத்தை இங்கே காண்கிறோம் (தொநூ அதி 36-50).பாவத்தின் மிகக் கொடிய விளைவையும் வளர்ச்சியையும் காயினின்இத்தகைய பதிலில் காண்கிறோம்.

பொறாமை கொண்ட காயின், ஒரு கொலையைச் செய்கிறான்.அந்தக் கொலையைத் தொடர்ந்து கடவுளிடமே பொய்யை சொல்கிறான்.பாவம் எப்படிப் பெருகுகிறது என்பதை விவிலிய ஆசிரியர் அழகாகஎடுத்துரைக்கிறார்.

"உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னைநோக்கிக் கதறிக்கொண்டிருக்கிறது" என்ற நீதியை அளிக்கிறார் கடவுள்(4 : 10). நீதிமானின் இரத்தம் எப்பொழுதும் கடவுளின் இரக்கத்தைப்பெறும் என்ற இஸ்ரயேலரின் ஆழ்ந்த நம்பிக்கை இங்கே வெளிப்படுகிறது.அடுத்து காயின் பெறும் தண்டனையை, கடவுள் பாவிக்குக் காட்டும்இரக்கத்தையும் காண்கிறோம் (4 : 11-15).

- பயிரிடும்போது அது பலன் தராது.
- நாடோடியாகத் திரிவாய்

மேற்கண்ட தண்டனையில், முதலாவது ஆதாமுக்குக் கடவுள்அளித்த தண்டனையை ஒத்திருக்கிறது (3 : 17) இரண்டாவது -கனானேயருக்கும் இஸ்ரயேலருக்கும் உள்ள பகையுணர்வைவெளிப்படுத்துகிறது. தன் சகோதரனையும், கடவுளையும் விட்டுபிரிந்தவன் அநாதையாகத் (நாடோடியாக) திரிவான் என்ற இறையியல்கருத்தும் உள்ளடங்கி நிற்கிறது.

 

9. பாவத்தின் வளர்ச்சி

(தொநூ 5:10)

தொடக்க நூலின் ஐந்தாம் அதிகாரம் ஆதாமின் வழிமரபினர் பற்றிக்குறிப்பிடுகிறது. பத்தாம் அதிகாரம் நோவா புதல்வரின் வழிமரபினர் பற்றியதலைமுறை அட்டவணையைத் தருகிறது.இவற்றில் ஐந்தாம் அதிகாரத்தில் தரப்பட்டுள்ள தலைமுறைஅட்டவணையை ஆராயும்போது பின்வரும் உண்மைகள்வெளிப்படுகின்றன.பொதுவாக தங்கள் இனத் தூய்மையை நிரூயஅp;பிக்க இப்படிப்பட்டதலைமுறை அட்டவணை அளிப்பது யூத மரபினர் வழக்கம். அத்துடன்ஐந்தாம் அதிகாரத்தில் ஒரு சிறப்புக் கருத்தும் இணைந்துள்ளது; ஐந்தாம்அதிகாரத்தின்படி

ஆதாம் உயிர் வாழ்ந்த ஆண்டுகள் - 930
சேத்து உயிர் வாழ்ந்த ஆண்டுகள் - 912
கேனான் உயிர் வாழ்ந்த ஆண்டுகள் - 910
ஏனோசு உயிர் வாழ்ந்த ஆண்டுகள் - 905
மகலேல் உயிர் வாழ்ந்த ஆண்டுகள் - 830

இப்படித் தொடர்ந்து குறிப்பிடும் விவிலிய ஆசிரியர்களின்நோக்கத்தில் காணும்போது, ஆதாமுக்குப் பிறகு அடுத்தடுத்துவாழ்ந்தவர்களின் ஆயுட்காலமும் குறைந்துகொண்டே வருவதை நாம்காண்கிறோம்.

இதன் பொருள் என்ன?
பாபிலோனிய புராண கதாபாத்திரங்களில் வருபவர்களானஅலோரூயஅp;ஸ் என்பவர் 36,000 ஆண்டுகளும், அலாபோருஸ் என்பவர்10,800 ஆண்டுகளும் உயிர் வாழ்ந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வரலாற்று உண்மையை விடப் போதிக்கும் கருத்தைத்தான் நாம்இங்கு காண முயல்வோம்.

அதே போன்று விவிலிய ஆசிரியர் தரும் தலைமுறைஅட்டவணையில் வரும் ஆயுட்காலத்தின் நோக்கம் இவர்களெல்லாம்எவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தனர் என்பதைவிட, எவ்வளவு காலத்திற்குமுன் வாழ்ந்தனர் என்று குறிப்பிட விரும்புகிறார்.அத்துடன், தான் எழுதுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்குமுன்னால் உலகம் தோன்றியது என்பது ஆசிரியருக்குத் தெரியாது.எனவே, உலகம் தோன்றியது முதல் விவிலிய கால நிகழ்ச்சிகளுக்குப்பாலம் அமைக்கவும் நன்மைககளிலும் தீமைகளிலும் நாம் அனைவருமேபங்கு கொள்கிறோம் என்று கூறவுமே தனது மூதாதையருக்கு நீண்டவாழ்நாட்களைத் தந்தார்.

 

10. நல்லவன் வாழ்வான்

(வெள்ளப்பெருக்கு தொநூ 6-9)

தொடக்க நூலின் 6-9 அதிகாரங்களில் நோவா பற்றியகதையினைக் காண்கிறோம்.பாவம் எவ்வளவு பெருகிவிட்டது என்று காட்டவும், அந்தப்பாவத்தின் விளைவாக சமுதாயச் சீர்கேட்டைக் கடவுளே வெள்ளப்பெருக்கின் மூலம் களைந்து, நோவா என்ற நல்லவரை எப்படிக்காப்பாற்றுகிறார் என்று விளக்குவதாகவும் விவிலியத்தின் இப்பகுதிவருகிறது.

அத்துடன் மற்றொரு காரணமும் உள்ளடக்கி நிற்கிறது. வெள்ளப்பெருக்கு பற்றிய பாபிலோனியப் புராணத்தை மறுத்து, விவிலிய ஆசிரியர்நம்பிக்கை கண்கொண்டு தொடக்கநூல் வெள்ளப் பெருக்கைஎழுதுகிறார். (இதுபற்றிய விரிவான விளக்கத்தை ப. ஏற்பாட்டு முன்னுரைபக். 32-33 ல் காண்க).

10.1. இரண்டு விதக் குறிப்புகள;
தொடக்கநூலின் வெள்ளப் பெருக்குப் பற்றிய குறிப்புகளைஆராயும்போது ஒருசில நிகழ்ச்சிகள் 'கூறியது கூறல்' முறையில்காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக

7:12 "நாற்பது பகலும் நாற்பது இரவும் மண்ணுலகில் பெருமழை பெய்தது"
7 : 17 "நாற்பது நாள்களாகப் பெருவெள்ளம் மண்ணுலகில் வந்துகொண்டிருந்து.
அடுத்து ஒரு சில முரணான குறிப்புகளும் உள்ளன.(எ.கா)
7 : 2 "தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும்பெண்ணுமாக ஏழு சோடிகளையும் .." என்றுள்ளது. ஆனால் 7:15"உயிருள்ள அனைத்தும் சோடி சோடியாக நோவாவிடம் பேழைக்குள்சென்றன" என்று காணப்படுகின்றன.

ஏன் இத்தகைய மாற்றம்?
தொடக்க நூலில் வெள்ளப் பெருக்கு பற்றி இஸ்ரயேல் மக்களின்இரு மரபில் தோன்றிய ஆசிரியர்களும் எழுதிய குறிப்புகள் 6, 7, 8, 9,அதிகாரங்களில் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அதனால்தான்ஒருசில இடங்களில் கூறியது கூறல் என்ற தவறும் முரணாகத்தோன்றுவதும் காணப்படுகின்றன.

வெள்ளப் பெருக்கு பற்றி யாவே மரபு ஆசிரியரும் குருக்கள் மரபுஆசிரியரும் எழுதியுள்ளனர். அவர்களின் குறிப்புகளைப் பின்வருமாறுபிரித்துக் காணலாம்.

  யாவே மரபு குருக்கள் மரபு
1 . நோவாவைக் காப்பாற்றிமனுக்குலத்தை அழிக்கக் கடவுள் திட்டமிடுதல் 6:5-8 6:9-22
2. நோவாவைக் காப்பாற்ற கடவுள் எடுக்கும் செயல் முறை 7:1-5
7:10
7:11
13:16அ
3. மனுக்குலத்தை அழிக்கும்கடவுளின்திட்டம் அமுலாக்கப்படல் 7:12,16 ஆ, 17 அ
22, 23 அ, 23 இ
17 அ
18-21,24
4. நோவாவைக் காப்பாற்றும் கடவுளின் திட்டம் 8:26, 3அ
; 6-12,13 ஆ
8:1-2அ
3 ஆ -5
5 நோவாவின் பலி 8:20-22 14-19
6. மனுக்குலத்தை மீட்கக்கடவுளின் திட்டம். 8 : 21-22 9:1-19

10.2. இறை வழிபாடு
பாபிலோனிய 'கில்கமேஷ்' என்ற புராணத்திற்கு ஒப்ப நோவாவின்கதையை விவிலிய ஆசிரியர் அமைத்தாலும், இஸ்ரயேலின் சமயநம்பிக்கையிலிருந்து முற்றிலும் மாறாமலும், அத்தகைய நம்பிக்கையைஇக்கதையின் மூலம் வலியுறுத்திக் கூறியும் எழுதுகிறார்.

6 : 1 தொடர்ந்து, தெய்வப் புதல்வர்கள் மனித புதல்வியரோடு உறவுகொண்டனர் என்று ஆசிரியர் எழுதுவதன் மூலம், நல்லவர்களும் நாட்கள்செல்ல செல்லக் கெட்டுவிட்டனர் என்று குறிப்பிடுகிறார்.

தெய்வப் புதல்வர்களைச் சேத்தின் வம்சத்தினராகவும் (4 : 26)நல்லவர்களாகவும் சித்தரிக்கிறார். மாறாக, மனிதன் புதல்வியரை காயீன்வம்சத்தினராகவும், கெட்டவர்களாகவும் சித்தரிக்கிறார். நோவாநல்லவர்களின் கூட்டத்தில் ஒருவர்.நல்லவர்களை என்றும் காத்து, தீயவர்களைக் கடவுள் தண்டிப்பார்என்பதை இங்கு ஆசிரியர் வலியுறுத்துகிறார்.'பெட்டகம்' கடவுளுடைய பராமரிப்பை வெளிப்படுத்துகிறது. 'தக்க'விலங்குகள் என்றும் 'தகாத' விலங்குகள் என்றும் விவிலிய ஆசிரியர்பிரித்து எழுதுவதன் நோக்கம் (7 : 2) யூத மரபில் பலிக்கு எந்த விலங்குகள்ஏற்றவை, எந்த விலங்குகள் ஏற்க தகாதவை என்று பிரித்துவைத்திருந்ததை நினைவு படுத்துகிறார் ஆசிரியர்.ஏழு சோடி, ஏழு நாட்கள், நாற்பது நாட்கள் (6 : 2-4,10) போன்றசொற்களை விவிலிய ஆசிரியர் பயன்படுத்துவதன் காரணம் யூத மரபில்இவ்வெண்கள் முழுமையைக் குறிக்கின்றன.

10.3. உடன்படிக்கை
வெள்ளப்பெருக்கு முடிந்தவுடன் நோவா கடவுளுக்கு நன்றிப்பலிநிறைவேற்றுகிறார். அப்பொழுது கடவுள் நோவாவுடன் ஓர் உடன்படிக்கைசெய்துகொள்கிறார்.

வெள்ளப்பெருக்கின்மூலம் படைப்பிற்கு முந்தி நிலவிய குழப்பநிலை ஏற்படுகிறது (6 : 11; 7 : 4, 11-12). ஆனால் மீண்டும் புதிய சமுதாயம்எழுந்தது. கடவுள் அப்புதிய சமுதாயத்தோடு உடன்படிக்கை செய்கிறார்(9 : 8-17) வானவில் அடையாளமாக அமைகிறது. இந்தஉடன்படிக்கையால் புதிய உரிமைகளும் கடமைகளும் எழுகின்றன.'பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்... மண்ணுலகில் விலங்குகள்,வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும்உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்" (9 : 2,7).

நோவாவின் புதல்வர்கள் ( 9:18-29 )
சேம், காம், எப்பேத்து என்னும் நோவாவின் பிள்ளைகள் பற்றியகுறிப்பு வருகிறது. இவர்கள் பற்றி எழுதுவதன் பொருள்: சேம் -மெசபதொமியா, அரேபியாவில் வாழ்ந்த இனங்களையும், காம் - எப்பேத்துஇனங்களையும் குறிப்பதற்காகவே ஆகும்.உலகில் பல இனங்கள் எப்படித் தோன்றின என்பதற்கு விவிலியஆசிரியர் இதுபோன்ற விளக்கத்தை அளிக்கிறார்."சுனாமி" என்னும் ஆழிப் பேரலைகளால் ஏற்பட்டப் பேரழிவைஇந்நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு சிலர் பேசுவது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

 

11. சமுதாயப் பாவம்( அதிகாரம் -11 )

முதல் மனிதன் செய்த பாவத்தின்காரணத்தால் உலகின் பாவம் பெருகத்தொடங்கியது. முதலில் குடும்பத்துக்குள்ளே ஏற்பட்ட பகையும் பாவமும்(காயின் - ஆபேல்), மக்களிடம்பொதுவாகப் பரவி (பெருவெள்ளம்),மனிதச் சமுதாயம் முழுவதுமே பாவத்தில்உழன்றது என்று காட்ட விரும்புகிறார்விவிலிய ஆசிரியர். அந்த உண்மையைவிளக்கவே தொடக்க நூலின் பதினோறாம்அதிகாரத்தில் 9- வது வசனத்தில் பாபேல் கோபுரக்கதையை எழுதுகிறார்.

'பாபேல்' என்றால், குழப்பம் என்று ஆசிரியரால் தவறான பொருள்தரப்படுகிறது. குழப்பம் என்பதற்கு 'பாலால்' என்பதே சரியான வார்த்தை.'பாபேல்' என்றால் கடவுளின் வாயில் என்பதாகும். பிற இனத்தாருக்குகடவுளின் வாயிலாகவும் நம்பிக்கையின் அடையாளமாகவும் நின்றிருந்தஅடுக்குக் கோபுரங்களை (சிக்குராத் 17) வைத்துத் தனது கருத்துக்குஏற்றவாறு கதையை அமைக்கிறார்.

11.1. அமைப்பு
வ.1: முன்னுரை: "உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரேவிதமான சொற்களும் இருந்தன"என்று முன்னுரைக்கிறார். இப்பகுதியில்சமுதாயப் பாவத்தின் விளைவால் அவர்களில் மொழி வேறுபாடுஉண்டாகி, குழப்பம் ஏற்பட்டு பிரிந்து செல்லப் போவதை எதிர்மறையாகஇது உணர்த்துகிறது.

வச. 2-4 "வாருங்கள்..." என்று மக்கள் ஒன்றுகூடிகடவுளுக்கெதிராக செயல்படுவதைப் பற்றி எழுதுகிறார்.

வச. 5-8: கடவுள் அதற்கு எப்படிச் செயல்புரிகிறார் என்றுகுறிப்பிடுகிறார் ஆசிரியர்.

வச. 9: முடிவுரை: தண்டனை (மக்கள் சிதறுண்டு சென்றனர்).

11.2. பின்னணி
விவிலியத்தில் உள்ள பாபேல் கோபுரக் கதையின் பிரதானநோக்கம் சமுதாயப் பாவத்தைக் குறிப்பிட்டு, அதன் விளைவாக உலகில்மொழிக் குழப்பம் ஏற்பட்டு, மனுக்குலம் சிதறிச் சென்றது என்று கூறுவது.இதையே மாற்றிச் சொல்வதானால், மனுக்குலம் உலகெங்கும் சிதறிக்கிடப்பதற்கான காரணம் என்னவென்று நம்பிக்கை அடிப்படையில்சிந்தித்த விவிலிய ஆசிரியர், மனித சமுதாயத்தின் பாவமே அதற்குக்காரணம் என்றுரைக்கிறார்.உலகில் மனுக்குலம் சிதறிக் கிடப்பதற்குப் பல பழங்காலக் கதைகள்உள்ளன. சுமேரியப் புராணமான 'என்மெர்கார்' என்பதில் "டோங்கெஸ்பாபேல்" என்ற கதை வருகிறது. அதில், விவிலிய குறிப்புகளுக்கு ஒப்பமுதலில் மொழி குழப்பமும், அடுத்து சமுதாயம் சிதறிச் செல்வதாகவும்காணப்படுகிறது. தொடக்கநூல் தரும் குறிப்புகளில் பெரிய வித்தியாசம்:ஒரு கடவுள் கொள்கை தொடக்க நூலில் வலியுறுத்தப்படுகிறது.

11.3. விளக்கம்
11 : 1 "அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரேவிதமான சொற்களும் இருந்தன".

'மனிதரிடையே' என்று குறிப்பிடவே உலகம் முழுவதும் என்றுயாவே மரபு ஆசிரியர் எழுதுகிறார். அதுமட்டுமல்லாமல், ஆசிரியருக்குத்தெரிந்த அன்றைய உலகத்தை மட்டும் அது குறிக்கிறது. 'அக்காலத்தில்அகஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறுகட்டளை பிறப்பித்தார்' என்று லூக்கா எழுதியபோது (லூக் 2 : 1) எப்படிஅவருக்குத் தெரிந்த உரோமை உலகம் மட்டும் குறிக்கப்படுகிறதோ,அதேப்போன்று கி.மு. 6ஆம் நூற்றாண்டில் 'யாவே' மரபு ஆசிரியருக்குத்தெரிந்த உலகத்தை மட்டும் இது குறிக்கிறது.'ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும்' என்று குறிப்பிட்டுஅப்பகுதியில் வரவிருக்கும் எதிர் விளைவினை முன்னுரையாக ஆசிரியர்அழகாகத் தருகிறார். வச. 2-4 மக்கள் எல்லாரும் ஒன்றுகூட "வாருங்கள்"என்று ஒருவர் ஒருவருக்கு அழைப்பு விடுத்தனர். நடக்கவிருக்கும்செயலில் ஒவ்வொடிருவருக்கும் முழுப்பொறுப்பும், ஈடுபாடும் உள்ளதுஎன்பதை இது காட்டுகிறது. அவர்களது உறுதிப்பாட்டையும்உணர்த்துகிறது.

11.4. எதற்காக இத்தகைய அழைப்பு?
கோபுரம் எழுப்ப:'செங்கல் அறுத்து கோபுரம் கொண்ட நகரைக் கட்டினர்' என்றுஎழுதுகிறார் ஆசிரியர். இது பழங்கால எகிப்திய, யூத, மெசபடோமியமுறையைத் தெளிவாக உணர்த்துகிறது. அத்துடன் 'எசாகிலியா' என்றகோபுரம் கட்டுவது பற்றி எனிமா எலிஷ் என்ற பாபிலோனிய புராணத்தில்எத்தகைய குறிப்புகளைப் பார்க்கிறோமோ அவற்றையே விவிலியஆசிரியரும் பயன்படுத்துகிறார் (யுNநுவு 68கு)

"உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி..." என்றுமக்களின் விருப்பம் உள்ளது. ஆனால், அதற்கேற்ப அவர்கள்நடக்கவில்லை என்பதை அதே வசனத்திலேயே ஆசிரியர் குறிப்பிடுகிறார்(வச 4): "வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டிஎழுப்பி, நமது பெயரை நிலைநாட்டுவோம்" என்றனர்.

இதில் கடவுளுக்கு எதிரான அவர்களது இரு மனப்பான்மைகளைக்காண்கிறோம்.

1) வானளாவிய கோபுரம;
வானம் என்பது இஸ்ரயேலருக்குக் கடவுளின் உறைவிடம்.கடவுளின் உறைவிடத்துக்கு நிகரான கோபுரம் என்றால், கடவுளுக்குநிகராக என்பது பொருள். தங்களைப் படைத்துக் காத்து வரும் கடவுளைப்புறக்கணித்து விட்டு, தாங்களே தங்களுக்குக் கடவுளாக மாறிவிடுகின்றஅவர்களது அகங்காரம் இதில் வெளிப்படுகிறது.

2) நமது பெயரை நிலைநாட்டுவோம்:
இஸ்ரயேல் மக்களின் சமய நம்பிக்கை என்னவென்றால்கடவுள்தான் ஒருவரின் பெயரை நிலைபெறச் செய்கிறார். கடவுள் தமதுமீட்புச் செயல்களால் தமது பெயரை நிலைபெறச் செய்கிறார்; மக்களின்பெரையும் நிலைபெறச் செய்கிறார் (எசா 63 : 12; எசே 32 : 20; நெகே 9 :10) கடவுள்தானே ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றகுலமுதுவர்களின் பெயரையும் நிலைபெறச் செய்தார். உண்மைஇப்படியிருக்க, பாவத்தில் உழன்ற இச்சமுதாயம் கடவுளைப் புறக்கணித்தஇச்சமுதாயம் தங்கள் பெயரைத் தாங்களே நிலைநாட்டுவோம் என்னும்அகந்தையுணர்வைப் பெற்றுச் செயல்பட்டது என்று விவிலிய ஆசிரியர்எழுதுகிறார்.

அதாவது கடவுளை மறந்த மக்கள், தங்களையே (தங்கள் பலம்,பலவீனம் என்னவென்று) மறந்தனர் என்று குறிப்பிடுகிறார்.வச. 5-8:இப்பகுதியில் யாவே மரபு ஆசிரியரின் மரபின்படி கடவுள் எப்படிமனுக்குலச் சீரழிவுற்குப் பதிலளிக்கிறார் என்று காண்கிறோம்.இங்கு "வாருங்கள்..."(வச7) என்பது கடவுளின் உறுதியானமுடிவைத்தான் குறிக்கிறதேயொழிய பன்மைப் பொருளில் வருவதில்லை.கடவுள் கொடுத்த தண்டனை: உலகம் முழுவதும் சிதறுண்டுசெல்வது.வழி: மொழிக் குழப்பம்ஒன்றாக இருந்து கடவுளுக்கு எதிராக குற்றம் செய்ததனால் பிரிந்துசென்று அன்னியராகும் தண்டனையைப் பெற்றனர்.எந்த மொழி அவர்களைப் பாவத்துக்கு உட்படுத்தியதோ (வச 1) அதேமொழி அவர்களுக்குத் தண்டனையாக வந்தது.

 

12. குலமுதுவர் வரலாறு: இஸ்ரயேலர் தோற்றம்

( தொடக்க நூல் 12 - 50 )

தொடக்க நூலின் இப்பகுதி ஆபிராம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும்யோசேப்பு என்ற குலமுதுவர்களின் வரலாற்றைத் தருகிறது.ஆபிரகாமின் அழைப்பிலிருந்து ஆரம்பிக்கும் இப்பகுதிதான் (12 : 1)உண்மையில் விவிலிய வரலாற்றின் ஆரம்பம் ஆகும். அதுபோன்றேஆபிரகாம் இஸ்ரயேல் மக்களின் தந்தை என்ற அளவில்தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களான இஸ்ரயேலின் (தொநூ 17 : 5-8)வரலாற்றின் ஆரம்பமும் இதுவே.

விவிலிய விளக்கவுரையில் "வரலாற்றுப் பகுப்பாய்வுப் பொருள்கோள் முறை" (ர்ளைவழசiஉயட ஊசவைiஉயட ஆநவாழசன) கி.பி.18 ஆம் நூற்றாண்டில்உருவானது. இதற்கு முன்பெல்லாம் குலமுதுவர்களின் வரலாறு வெறும்புனைக்கதை என்றே கருதப்பட்டது. ஆனால் அகழ்வாய்வுகள், வரலாற்றுஅறிவியல் ஆய்வு எல்லாம் வளர்ச்சியுள்ள இக்காலத்தில் இவர்களின்வரலாற்றுக் குறிப்புகள் பெரும்பாலும் உண்மையில் நடந்த நிகழ்வுகளாகஉறுதி செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், இன்றைய கால நவீன வரலாறு போன்றுகுலமுதுவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.மாறாக, சமயக் கண்ணோட்டத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லதுதொகுக்கப்பட்ட வரலாறு என்று புரிந்துகொள்ள வேண்டும்.ஒரு குடும்ப வரலாறாகச் சித்தரிக்கப்படும் இஸ்ரயேலரின் கதை(தொநூ 12-50) விவிலியத்துக்குப் புறம்பான சில ஏடுகளில்காணக்கிடக்கும் பழக்கவழக்கங்களுக்கு ஒத்திருக்கின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.

எடுத்துக்காட்டாக தன் மனைவிக்குக் குழந்தைப் பேறுஇல்லாவிடில் வாரிசுக்காக வேலைக்காரி மூலம் குழந்தைப்பேறுஅடைவது கேத்தியரின் வழக்கம் என்று நூசி என்ற இடத்தில்கண்டுபிடிக்கப்பட்ட ஏடுகள் வெளிப்படுத்துகின்றன (தொநூ 16 : 1-2; 30 :1-4). இந்த ஏடுகள் கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டன. அதுபோலஉடன்படிக்கை செய்தல் (தொநூ 15 : 7-11) தலைமகன் உரிமை(தொநூ 25 : 29-34) போன்ற பழக்கவழக்கங்களும் அந்த ஏடுகளில்காணப்படுகின்றன.

இதே போன்று குலமுதுவர் காலத்துப் பெயர்கள் பலவும்விவிலியத்துக்குப் புறம்பான ஏடுகளில் காணப்படுகின்றன.விவிலியத்தில் இந்த அதிகாரங்களை (12-50) இப்பகுதியில்தோற்றுவிக்கும் முதன்மையான கதாபாத்திரங்களை மையமாக வைத்துப்படிப்பது பயனுள்ளதாகும்.

12.1. ஆபிர(க)hம்
தெராகுவின் மகன் ஆபிராம்தான் "ஆபிரகாம்" என்று கடவுளால்பெயரிடப்பட்டார் (தொநூ 17 : 5). இப்பெயருக்கு "இறைவன் உயர்ந்தவர்'என்றும், "பல இனத்தவருடைய தந்தை" என்றும் பொருள் காணலாம்.ஆபிராமின் தந்தை தெராகு மெசபதொமியா நாட்டைச் சார்ந்த"ஊர்" என்ற இடத்தைச் சேர்ந்தவர். இது தற்போதைய குவைத், ஈராக்குநாடுகளின் அருகே உள்ளது. பாபிலோனிய கலாச்சாரத்தில் வளர்ந்துசெழித்த நாடு இது. ஆபிரகாம் எமோரியர் இனத்தைச் சேர்ந்தவர். இதுஆட்டு மந்தையை மேய்க்கும் ஒரு நாடோடி இனமாகும்.

அழைப்பும் உடன்படிக்கையும்
தனது ஆடு மேய்க்கும் தொழிலின் காரணமாக ஆபிராம்மெசபதொமியாவிலிருந்து புறப்பட்டு மேய்ச்சலுக்கு வசதியான கானான்நாட்டு மலைப்பகுதிக்கு கி.மு. 1900-ல் தனது தந்தை தெராகுவுடன் குடியேறினார் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சிறப்பாக,பெத்தேல், எப்ரோன், பெயர்செபா போன்ற இடங்கள மேய்ச்சலுக்குஏதுவான இடங்களாக இருந்தன.

இதனை மீட்புக் கண்கொண்டு திருநூல் ஆசிரியர் எழுதுகிறார்.மெசபதோமியாவிலிருந்து பாலஸ்தீனாவுக்குச் செல்லும்படி கடவுளேஅழைப்பு விடுத்ததாக எழுதுகிறார் (தொநூ 12 : 1-3). இதன் மூலம், மீட்பின்முதல் கருவியான இஸ்ரயேல் மக்களின் அழைப்பு ஆரம்பமாகிறது(12 : 3). இதைத் தொடர்ந்து வரும் வரலாற்று நிகழ்வுகள் கடவுளால்அளிக்கப்பட்ட வாக்குறுதியின் நிறைவாக உள்ளதாக விவிலியம்கூறுகிறது (தொநூ 17 : 1-15; 26 : 4; 28 : 14; விப 9-24).

இதன் அடிப்படையில்தான் ஆபிரகாமின் பெயர் மாற்றமும்(தொநூ 17 : 5), அவரது பல பயணங்களும் அமைகின்றன. சிறப்பாக,கல்தேயாவிலிருந்து கானானில் செக்கேமுக்கும், அங்கிருந்துபெத்தேலுக்கும் (12 : 8) அங்கிருந்து மம்ரேவுக்கும் (13 : 18) நாடோடியாகவாழ்க்கை நடத்தினார். ஆனால் கடவுள் அளித்த வாக்குறுதியின்காரணமாக (தொநூ 13 : 14-16) பாலஸ்தீன நாட்டை யோசுவாவின்தலைமையில் (கி.மு. 1225) பெறுகின்றனர்.விவிலியம் ஆபிரகாமை நம்பிக்கையின் தந்தையாகச்சித்தரிக்கிறது (தொநூ 15 : 6; உரோ 4 : 3; கலா 3 : 6).தொநூ 17:10-ல் வரும் கட்டளையானது ("உங்களுள் ஒவ்வொருஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்") இஸ்ரயேலில்உடன்படிக்கையின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.

தொநூ 19-ல் வரும் சோதோம் கொமோராவின் அழிவு கானானில்முறையற்ற ஒருபால் உறவு பரவலாக இருந்ததைக் காட்டுகிறது. இதுசாக்கடல் பகுதியில் இருந்திருக்கலாம். லோத்தின் மனைவிஉப்புச்சிலையானது ஒரு காரணம் காட்டல் கதையாக வருகிறது.தொநூ 22-ல் வரும் பலி (ஆபிரகாம் ஈசாக்கை பலியிடுதல்)ஆபிரகாமின் ஆழ்ந்த இறைநம்பிக்கையை வெளிப்படுத்தஎழுதப்பட்டதாகும்.புதிய ஏற்பாட்டு ஒளியில் கண்டால், கடவுள் தனது ஒரே மகன்இயேசுவைப் பலியாக்கியது ஒப்புமையாக வருகிறது. ஈசாக்குவிறகுகளைத் தானே சுமந்து சென்றது இயேசு சிலுவையைத் தானேசுமந்ததற்கு ஒப்பாகிறது.

12.2. ஈசாக்கும் யாக்கோபும்
ஆபிரகாமின் முதல் பேறாகிய இஸ்மாயிலை தேர்ந்தெடுக்காமல்இரண்டாவதாகப் பிறந்த ஈசாக்கைத் தேர்ந்தெடுத்து. வாக்குறுதியின்மைந்தனாக (தொநூ 26) அவனை மாற்றுகிறார் கடவுள்.

அதுபோலவே, ஈசாக்கின் மக்களில் மூத்தவன் எசாவை விடுத்து,கடவுள் யாக்கோபைத் தேர்ந்தெடுக்கிறார் (தொநூ 27). இதில் கடவுளின்அழைப்பு என்ற மீட்புத் திட்டம் அடங்கியிருப்பினும், யாக்கோபு செய்ததவறுக்காக, பரிகாரமாக தனது மாமன் வீட்டுக்கு ஓடிப்போய் அங்கு 20ஆண்டுகள் வாழவேண்டியிருந்தது. இருப்பினும், ஆபிரகாமுடனும்ஈசாக்குடனும் கடவுள் செய்த வாக்குறுதி யாகோபில் தொடர்கிறது என்றுவிவிலிய ஆசிரியர் காட்டுவது குறிப்பிடத்தக்கது (தொநூ 28 : 13-14).

அதுபோன்றே, யாக்கோபின் 12 பிள்ளைகளில், யூத மரபுப்படிதலைமகன் முன்னுரிமை பெறாமால், நான்காவது மகனான யூதாமுன்னுரிமைப் பெற்று அவனது சந்ததியில் தாவீது பிறந்து, அவரதுவம்சத்தில் இயேசு கிறிஸ்து தோன்றுகிறார்.மேலும் யாக்கோபு ராகேலைக் காதலித்து மணந்து கொண்டார்.ஆனால் அவர்களுக்குப் பிறந்த மக்களை விடுத்து, தனது மாமனார்லாபானின் சூழ்ச்சியால் மணக்க நேர்ந்த லேயாவுக்குப் பிறந்த மக்களேமீட்பு வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றனர். யாக்கோபுக்கும்லேயாவுக்கும் பிறந்த மக்களின் சந்ததிகளே மோசேவும் தாவீதும்.

இதனால், தானே வரலாற்று நாயகன் என்று கடவுள் காட்டுவதோடு,பலவீனமான கருவிகளைப் பலமுள்ள கருவிகளாகத் தான் மாற்றஇயலும் என்பதைக் கடவுள் தெளிவாகக் காட்டுகிறார்.

தொநூ 32ல் வரும் யாக்கோபு தெய்வீக மனிதரோடு போராடும்நிகழ்ச்சி இரு உண்மைகளை விளக்குவதாக வருகிறது.

(1) இஸ்ரயேல் என்ற பெயர் அத்தருணத்தில் யாக்கோபுக்குஅளிக்கப்பட்டு அந்த இனம் யாக்கோபிடமிருந்து ஆரம்பிக்கிறது என்றுகாட்டப்படுகிறது. இதனால் இஸ்ரயேல் மக்கள் கடவுளால்தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பது வலிமை பெறுகிறது.

(2) மிருகங்களின் தொடைப்பகுதியை யூதர்கள் உண்ணலாகாதுஎன்பதை நியாயப்படுத்தும் கதையாவும் (நுவiடிடடிபல) இது அமைகிறது.

12. 3. யோசேப்பு
யாக்கோபின் மகன் யோசேப்பின் கதை தொநூ 37 முதல்காணப்படுகிறது. இது ஒரு குறுநாவல் போன்று எழுதப்பட்டுஇஸ்ரயேலின் வெற்றி, ஞானம் எல்லாம் கடவுள் பயத்தால் உருவாகிறதுஎன்ற ஆன்மீகக் கருத்தை வலியுறுத்துவதாக வருகிறது.அவ்வகையில் தெய்வபக்திக்கும் அதனால் எழுகின்றஞானத்துக்கும் இலக்கணமாக யோசேப்பு காட்டப்படுகிறார்.

இத்துடன், குடும்பத்தில் பொறாமையும் கயமையும் எப்படிஅவர்களது சகோதரப் பாசத்துக்கு கேடு விளைவிக்கிறது என்று குடும்பப்பண்பையும் விளக்குவதாக அவரது கதை வருகிறது.மேலும், தீயது அனைத்தையும் கடவுள் எப்படி நல்லதாகமாற்றுகிறார் என்றும் (45 : 28; 50 : 20-21) யூதா குலம் எப்படி முதன்மைபெறுகிறது என்றும் (தொநூ 37) விவிலிய ஆசிரியர் இதனில்தெளிவாக்குகிறார்.

எகிப்தில் யோசேப்பு (தொநூ 41 முதல்)
கி.மு. 1720 - 1550 வரையிலான காலக்கட்டத்தில் யோசேப்புபோன்ற செமித்தியர், மற்றும் ஹிக்சோஸ் இனத்தினரால் எகிப்துஆளப்பட்டது என்பது வரலாற்று உண்மை.

இதைப் பின்னணியாகக் கொண்டு பார்த்தால் யோசேப்பு எகிப்தில்எப்படி ஆளுநராக வர நேர்ந்தது என்பது புரியும். இதில்இறைத்திட்டத்தைக் காணும் விவிலிய ஆசிரியரின் பாங்குகுறிப்பிடத்தக்கது (தொநூ 45 : 5; 46 : 1-34).யாக்கோபின் ஆசிரையும் மரணத்தையும் பற்றித் தொடக்க நூலின்இறுதி இரு அதிகாரங்கள் விவரிக்கின்றன (தொநூ 49-50).

இது பல்வேறு மரபுக்களின் தொகுப்பாகும். இஸ்ரயேலின் பன்னிருகுலங்கள் எத்தகைய எதிகாலம் காணவிருக்கின்றன என்பது விவரிக்கப்படுகிறது. இதனில் யூதா குலத்தின் முன்னுரிமை தெளிவாக்கப்படுகிறது.

யாக்கோபு இறந்தபோது தன் சொந்த நாடான கானானில்புதைக்கப்படுவது அவருக்கு அந்நாட்டில் இருக்கும் உரிமையையும் கடவுள்அவர் வழி மரபினருக்கு வாக்குறுதியின் நாடாக அளிக்கவிருப்பதையும்உணர்த்துகிறது (49 : 29-50 : 41).

யோசேப்பு தனது மரணத்துக்கு முன் எல்லாரையும், குறிப்பாக,தனது சகோதரர்களையும் மன்னித்தார் என்று கூறி எலோகிம் மரபுஆசிரியர்கள் தங்கள் இறையியலை வலியுறுத்துகின்றனர் (50 : 20).

 

-----------------------------
-------------------
----------
----
-