இணையவழி விவிலிய கல்வி

bi

 

புனித பவுல் விவிலிய கல்வி நிலயம்:

தமிழக கத்தோலிக்க ஆயர்களின் வழிநடத்துதலில், திண்டிவனத்தில் இயங்கிவரும் தமிழ் நாடு விவிலிய - மறைக்கல்வி - திருவழிபாட்டு நடுநிலையத்தின் (Tamil Nadu Biblical Catechetical Liturgical Center, (TNBCLC) Tindivanam, Tamil Nadu, India) மற்றொறு அங்கமாக செயல்பட்டு வருவது புனித பவுல் விவிலிய கல்வி நிலையம் ((St. Paul's Bible Institute). ). சென்னை பூவிருந்தவல்லி பகுதியில் கரையான்சாவடியில் 1982ல் ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனமானது தமிழக கத்தோலிக்க விவிலிய ஆணயத்தின் நேரடி மேற்பார்வையில் இயங்கிவருகிறது. கடவுளின் வார்தையை அறிவிப்பதும் விவிலிய அறிவை அனைவருக்கும் கொடுப்பதுமே இந் நிலயத்தனின் மேலான நோக்கம். இந்நிலைய இயக்குனராக அருட்திரு மைக்கில் செல்வராஜ; (ஜோமிக்ஸ்) பணிபுரிந்து வருகிறார்.

2005ல் இந்நிலைய இணையத் தளம் ( (St. Paul's Bible Institute) மூலமாக விவிலிய கல்வி வழங்கப்பட்டது. தமிழக குருக்களில் விவிலிய படிப்பில் பாண்டித்தியம் பெற்ற பலரின் துணையோடு இந்த விவிலியப் பாடங்களின் தொகுப்பு வெளியிடப்பட்து. (தற்சமையம் அந்த பாடங்கள் அங்கு இடம்பெறவில்லை). தமிழில் PDF (Adobe Portable Format) ஆக "வெப் உலகம்" தமிழ் எழுத்துருவில் தட்டச்சு செய்து வெளியிடப்பட்ட அந்த கோப்புகள் 'மைக்ரோசாப்ட் வோர்டு' க்கு மாற்றப்பட்டு பின்னர் வெப் உலகம் எழுத்துருவிலிருந்து யுனிகோர்டு எழுத்துருவிற்கு மாற்றப்பட்டு, யுனிகோர்டு எழுத்துருவிலிருந்து சாதார்ண தமிழ் தட்டச்சு விசைப்பகைக்கு மாற்றப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கே தரப்படுகிறது.

இந்த பாடங்கள், இறைவார்த்தை மீது இன்னும் அதிக தாகங்கொண்டவர்களாக உங்களை மாற்றி, விசுவாச வாழ்வில் உங்களை உறுதிப்படுத்தவேண்டும் என்று ஆசிக்கிறோம்.

எண் பாடம் ஆசிரியர்
0 பொது முன்னுரை முனைவர் பேராசிரியர் சாக்கோ முள்ளுர்
1 பழைய ஏற்பாடு - பொது முன்னுரை மேதகு ஆயர் தேவதாஸ் அம்புரோஸ்,
முனைவர் அருட்திரு சுந்தரி மைந்தன்
2 தொடக்க நூல் முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர்
3 விடுதலைப் பயணம் முனைவர் அருட்திரு சுந்தரி மைந்தன்
முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர்
4 யோசுவா - நீதத்தலைவர்கள் முனைவர் மேதகு ஆயர் அ. ஸ்டீபன்
5 இஸ்ரயேலின் ஒருங்கிணைந்த பேரரசு அருள்திரு பெ. கல்லரசு
6 தம் பெயரில் நூல் பெறாத இறைவாக்கினர் முனைவர் பேரருட்திரு வ. மரியதாசன்
7 எசாயா, எரேமியா, எசேக்கியேல் -இறைவாக்கினர்கள் அருள்திரு. அலோசியஸ் சேவியர்
8 பன்னிரு இறைவாக்கினர் அருள்திரு எம்.எஸ். மார்டின்
9 திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) அருள்திரு. ஆர்.சே. இராசா சே.ச
10 ஞான நூல்கள் மேதகு ஆயர் சே. சூசைமாணிக்கம்
11 புதிய ஏற்பாடு - போது முன்னுரை முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர்
12 ஒத்தமைபு நற்செய்திகள் அருள்திரு எஸ். ஜே. அந்தோணிசாமி
13 யோவான் நற்செய்தி அருள்திரு கு. எரோணிமுசு
14 இயேசுவின் குழந்தைப் பருவம் முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர்
15 திருத்தூதர் பணிகள் முனைவர் பேரருட்திரு வ. மரியதாசன்
முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர்
16 புனித பவுலின் கடிதங்கள் முனைவர் பேரருட்திரு வ. மரியதாசன்
17 உரோமையர், கலாத்தியர் - திருமுகங்கள் அருள்திரு வி.இரபேல்
முனைவர் அருட்திரு சுந்தரி மைந்தன்
18 1 கொரிந்தியர் முனைவர் பேரருட்திரு வ. மரியதாசன்
19 2 கொரிந்தியர் முனைவர் மேதகு ஆயர் அ. ஸ்டீபன்
17 பொதுத் திருமுகங்கள் அருள்திரு வி.இரபேல்
அருட்திரு சந்தியாகு சே. ச.
18 திருவெளிப்பாடு முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர்