இயேசுவின் குழந்தைப் பருவம்

முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர்
திண்டிவனம்

விவிலிய அன்பர்களே,

"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தவை பற்றிய அறிவே நான் பெரும் ஒப்பற்ற செல்வம்" (பிலி 3:8) என்று முழங்கினார் புனித பவுல். இயேசு யார்? என்னும் கேள்விக்கு மேலெழுந்தவாரியான பதிலே நம்மில் பலரிடம் உண்டு ஆனால் அவரை ஆழமாக அறிய முயல்தல் வேண்டும்.

இயேசுவை மையப்படுத்தி திருவழிபாட்டில் பல வகையான விழாக்கள் இருந்தாலும் நம் உள்ளங்களை கொள்ளை கொண்டது கிறிஸ்து பிறப்புப் பெருவிழா ஆகும். புதிய ஏற்பாட்டில் நான்கு நற்செயதியாளர்களில் மத்தேயு, லூக்கா ஆகிய இருவர் மட்டுமே இயேசு பிறப்பு பற்றி விபரமாக எழுதியுள்ளனர். வரலாற்று உண்மைகளுடன் தங்களுக்கே உரிய இறையியல் கருத்துக்களையும் கலந்து இந்த நற்செய்கியாளர்கள் தருகின்றனர். கிறிஸ்து பிறப்பு பற்றிய நிகழ்சியினை ஒரு விழாவாகவே கொண்டாடி பழக்கப்பட்ட நாம், அதில் பொதிந்துள்ள ஆழ்ந்த இறையியல் உண்மைகளை அறிந்து கொள்ள இப்பாடம் உதவும். மத்தேயு, லூக்கா நற்செய்தி நூல்களில் முதல் இரண்டு அதிகாரங்களை தனியேப் படித்துவிட்டு இப்பாடங்களை தொடர்ந்து படித்தால் நிறைந்த பயன் அடையலாம்.

நன்றி.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திரு முனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்


பொருளடக்கம்
அ. இயேசுவின்பிறப்புப் பற்றிப் புதிய ஏற்பாடு

1. முன்னுரை
2. புதியஏற்பாட்டில்


ஆ. மத்தேயு நற்செய்தியில் குழந்தைப் பருவநிகழ்ச்சிகள் (மத் 1-2)

1. முன்னுரை
2. தலைமுறைஅட்டவணை
3. மணஒப்பந்தமேஆகியிருக்க
4. நேர்மையாளர்யோசேப்பு
5. தாவீதின்மகன்
6. ஞானிகள்வருகை
7. ஏரோதின்சதி


இ. லூக்கா நற்செய்தியில் குழந்தை பருவ நிகழ்ச்சிகள்(லூக் 1-2)

1. முன்னுரை
2. லூக்காதரும்குறிப்புகளின்கட்டமைப்பு
3. ஆண்டவரின்தூதர் தோன்றினார்
4. இதுஎங்ஙனம்ஆகும்?
5. கன்னித்தாய்மரியாள்
6. மரியாள்- எலிசபெத்துசந்திப்பு
7. பாடல்களின்தோற்றம்
8. மீட்பர் பிறக்கின்றார்
9. கோவிலில் காணிக்கை
10. கோவிலில் இயேசு 39

அ. இயேசுவின் பிறப்பு பற்றிப் புதிய ஏற்பாடு

1. முன்னுரை
காலத்தைக் கடந்த கிறிஸ்து இறைமகன் இயேசுவாக வரலாற்றுநாயகராக இவ்வுலகில் பிறந்தார். அவரைப் பற்றிய செய்தியினைப் புதியஏற்பாட்டில், முக்கியமாகநான்குநற்செய்திநூல்களில்காண்கிறோம். "நானேஉலகின்ஒளி” என்றுமுழக்கமிட்டஇயேசு(யோவா 8:12) மனுக்குலமீட்பின்ஒரே நம்பிக்கையாக (கொலோ 2 : 28) இருக்கிறார். "இயேசு கிறிஸ்துவில்எல்லாரும் உயிர்பெறுவர்”என்ற தளராவிசுவாசம், அவரை ஏற்றுக் கொண்டவர்அனைவருக்கும் இருந்தது (1கொரி 15 : 23); ஆகவே, அவரைப் பற்றியநற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்தனர் (கலா 1 : 15-16). அந்தஅறிவிப்பில் அடங்கிய அவரது குழந்தைப்பருவ நிகழ்ச்சிகள் பற்றியும்அதன்மூலம் இறைவன் நமக்கு வெளிப்படுத்த விரும்பிய மறையுண்மைகள்பற்றியும்காண்பதுதான் இந்தப் பாடத்தில் நமது நோக்கமாகும்.

2. புதிய ஏற்பாட்டில்
புதியஏற்பாட்டுநூல்களில், வரலாற்றில் முதன் முதலில் (கி.பி. 53-55)புனித பவுல் கலாத்தியருக்கு எழுதியதிருமுகத்தில்தான் இயேசுவின்பிறப்புபற்றிய குறிப்பைக் காண்கிறோம். "காலம் நிறைவேறியபோது... கடவுள்தம்மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும்அனுப்பினார்”(கலா4: 4). இத்துடன் நின்றுவிடுகிறார் பவுல். நற்செய்திகளில்கூட "கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின்தொடக்கம்”என்று ஆரம்பித்து, உடனே திருமுழுக்கு யோவானின் பணியிலிருந்துமாற்கு எழுதுகிறார்(1: 1-2). அவர் இயேசுவின் பிறப்புப்பற்றிக் குறிப்பிடவில்லை."தொடக்கத்தில் வாக்கு இருந்தது.... வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையேகுடிகொண்டார்” என்று ஒரு சில வார்த்தைகளில், இயேசு கிறிஸ்துவின்பிறப்பைப் பற்றிக் குறிப்பிடுவதுடன் யோவான் நின்றுவிடுகிறார் (1 : 1). ஆம்,நான்கு நற்செய்தியாளர்களில் இயேசுவின்பிறப்பைப் பற்றி விளக்கமாகஅளித்தவர்கள் மத்தேயுவும் லூக்காவும் மட்டுமேஆவர்.

2.1. ஏன் இந்த நிலை?
நான்கு நற்செய்தியாளர்களில் இருவர்மட்டுமே இயேசுவின் குழந்தைப்பருவம்குறித்துத் தெளிவாகக் கூறுவதற்குக் காரணம் என்ன? என்றகேள்விஎழக்கூடும். இதற்கு, ஆராய்ச்சியாளர்களின் முடிவுப்படி, கிறிஸ்தவப்போதனையில்நிலவிய வளர்ச்சிநிலையே காரணமாகும்.ரூடிரடட்இயேசுவின் இறப்பு, உயிர்ப்புப் பற்றியதுதான் தொன்மையானகிறிஸ்தவப்போதனையாகும்: "நான்பெற்றுக்கொண்டதும், முதன்மையானதுஎனக்கருத pஉங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே மறைநூலில் எழுதியுள்ளவாறுகிறிஸ்து நம்பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில்எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்”என்றபவுலின்திருமுகத்தில் இவ்வுண்மையினைக் காண்கிறோம் (1 கொரி15: 3-4. காண்: திப.2:23, 32; 3:14-15; 4:10; 10:39-40). இதன்பிறகு, கிறிஸ்தவப் போதனையாளர்கள்இயேசுவின் போதனைப்பணியிலும், செயலிலும் கவனம் செலுத்தினர் (1கொரி7:10). இதனால், இயேசு ஆற்றிய பல போதனைகள்- போதித்த உவமைகள்-செய்த அருங்குறிகள்- யாவும் கிறிஸ்தவப் போதனையில் அடங்கின.ரூடிரடட்

ஆகவே, முதன் முதலில் நற்செய்திநூல் எழுதியமாற்கு, இயேசுவின்நற்செய்திபற்றி திருமுழுக்கு யோவானின் போதனையில் ஆரம்பித்து (1:1),'இயேசு உயிர்த்துவிட்டார்' என்ற நற்செய்தியுடன்(16:1-8) முடிக்கிறார். மாற்குஎழுதியகாலத்தில் (கி.பி. 56-60), இளந்திருச்சபையினர் இயேசுவின் குழந்தைப்பருவம் குறித்து அறியும் தேவையை உணரவில்லை. ஆகவே மாற்குஅப்பகுதியை விட்டு விடுகிறார். அதைப் போன்று, யோவான் தமதுநற்செய்தியை எழுதிய காலத்தில்(கி.பி. 90-100) கிறிஸ்துவுக்கும், கிறிஸ்தவவிசுவாசத்திற்கும் எதிராக சில தப்பறையான கொள்கைகள் நிலவின. அதற்குப்பதிலளிக்கும் விதத்தில் எழுதும்போது, இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்துவிளக்கமாக எழுதவேண்டிய தேவையை உணரவில்லை. ஆதலின், அவரும்இப்பகுதியைத் தவிர்க்கிறார். மத்தேயு, லூக்கா- ஆகிய இரு நற்செய்திளார்கள்மட்டுமே இப்பகுத pபற்ற pதெளிவாக எழுதுகின்றனர்.ரூடிரடட்இவர்கள் எழுதுவதன் காரணமென்ன?ரூடிரடட்இரண்டு காரணங்களைக் கூறலாம்.

1 தவறான போதனைகளை எதிர்த்துரூடிரடட்
திருமுழுக்கு யோவானின் சீடர்கள் சிலர் இயேசுவைக் குறைவாகமதிப்பிட்டனர். அவர்மேல் விசுவாசம் கொள்ளவில்லை. ஆதலின், திருமுழுக்குயோவானின் பிறப்புப்பற்றியும், இயேசுவின் பிறப்புப்பற்றியும் இணையாக லூக்காஎழுதி, இயேசு, திருமுழுக்கு யோவானைவிட மேலானவர் என்று காட்டுகிறார்என்றுசிலர் கருதினர். ஆனால் இதைவிட மேலாக, கலிலேயாவிலிருந்து(பெத்லகேம்) மெசியாவாகத் தோன்றிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளத்தயங்கிய சில யூதர்களுக்குப் பதிலளிப்பது மற்றொருநோக்கம் (யோவா7:41-42, 52). இயேசு தவறான வழியில் பிறந்தார் (ஒழுக்கம் தவறிய முறையில்) என்றுசிலர்கூறி - மரியாளிடமிருந்து இயேசு சிறப்பான விதத்தில் பிறந்தார் என்பதைஏற்றுக் கொள்ளவில்லை. இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்தேயுவும்லூக்காவும் இயேசுவின் குழந்தைப் பருவநிகழ்ச்சிகளை எழுதினர்.

2 இறையியல் நோக்கத்திற்காக
இயேசு கிறிஸ்துவே இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த மெசியாஎன்று எடுத்துரைக்கும் வண்ணம், இயேசு தாவீதின் மகனாகப ;பிறந்தார் என்றுவிளக்கவும், உலகிற்கெல்லாம் மீட்பர் அவரே என்று வெளிப்படுத்தவுமேமத்தேயுவும், லூக்காவும் இதனை எழுதினர். இவர்களிருவரும் எழுதியகாலத்தில் (கி.பி. 65- 85) இயேசுவின் பிறப்புப் பற்றி நிலவிய பல மரபு(பாரம்பரியங்) களைத் தொகுத்து, தங்களது இறையியலுக்கேற்ப வடிவம்தந்தனர்.

2.2. ஒற்றுமை - வேற்றுமைகள்
கிறிஸ்தவசமயத்தின் ஆரம்பப் போதனைகளில் இயேசுவின் குழந்தைப்பருவநிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை என்பது அறிஞர்கள் கருத்து. இருப்பினும்,மத்தேயு, லூக்கா இவர்கள் நற்செய்தி எழுதும்போது தங்கள் நூலில்வலியுறுத்தப்போகும் இறையியல் உண்மைகளுக்கு முன்னுரையாக, இயேசுவின்குழந்தைப் பருவநிகழ்ச்சிகளை அமைத்தனர். அவர்களிருவரும் ஒருவரையொருவர் சார்ந்து எழுதினர் என்றுகூற முடியாது. இருவரும் முன்னமேநிலவிய பாரம்பரியங்களை உபயோகித்திருப்பர். இவ்விருவர் தரும் குறிப்புகளைத்தனித்தனியே ஆராயுமுன் அவற்றில் அடங்கியுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைச்சுருக்கமாகக் காண்போம்.மத்தேயு - லூக்கா இவர்களின் குறிப்புகளைப் படிக்கும்போது கீழ்க்கண்டஅடிப்படை உண்மைகளில் ஒத்திருக்கின்றனர்.

பிறந்தகுழந்தை - இயேசுகிறிஸ்து
தாயின்பெயர் - மரியா
வளர்ப்புத்தந்தையின்பெயர் - யோசேப்பு
பிறந்தஇடம் - பெத்லகேம்
நிகழ்ச்சிமுடியுமிடம் - நாசரேத்

தாவீது குலத்தவருக்கு இறைவன்அளித்திருந்த வாக்கும், அவர்கள்கொண்டிருந்தநம்பிக்கையும், இயேசுபாலனால்நிறைவடைகிறது.தூய ஆவியின் துணையால், கன்னி கருத்தரித்து மகனைப்பெற்றெடுக்கிறாள்.இத்துடன், இரண்டு நற்செய்திகளிலும், இரண்டாம் அதிகாரத்தில்தான்குழந்தை இயேசு பெத்லகேமில் பிறந்தது விவரிக்கப்படுகிறது. உடனே, அந்தமாபெரும் நற்செய்தி உலகிற்கு அளிக்கப்படுவதை இருவரும் தருகின்றனர்.ஆயர்களுக்கு அறிவிக்கப்படுவதை லூக்காவும், ஞானிகள் அறிவதைமத்தேயுவும் தருகின்றனர். ஆயர்களுக்கு வானதூதரும், ஞானிகளுக்குவிண்மீன்களும் இந்நற்செய்தியை உணர்த்துவதாக லூக்காவும், மத்தேயுவும்முறையே குறிப்பிடுவதிலிருந்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட கருவிகளைக் கடவுள்பயன்படுத்தியிருக்கிறார் என்பதில் இருவரும் ஒரே கருத்துடையோராய்உள்ளனர்.

ஆக, அடிப்படை இறையியல் வெளிப்பாட்டில் இருவரும் ஒத்திருப்பதைக்காணும்போது, கடவுள் உபயோகப்படுத்தும் கருவி வெவ்வேறாக இருப்பினும்,தெரிவிக்க விரும்பிய உண்மைகள் மாறாது என்பது புலனாகிறது. இருப்பினும்அவர்களுக்கே உரிய இறையியல் நோக்கமும் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைகளும்மாறாக இருப்பதனால், அவர்கள் தரும் குறிப்புகளில், சில வேற்றுமைகளையும்காண்கிறோம்.

மரியாளும் யோசேப்பும், பாலஸ்தீனாவில் கலிலேயப் பகுதியைச்சார்ந்தவர்கள் என லூக்கா குறிப்பிடுகிறார் (2: 4-5). ஆனால் அவர்கள்யூதேயாவைச் சார்ந்தவர்களென்றும், நாசரேத்திற்குகுடிபோகக் கட்டாயப்படுத்தப்பட்டனரென்றும் மத்தேயு குறிப்பிடுகிறார் (2 : 22-23). குழந்தைஇயேசுவின்மேல் ஏரோதுக்கு இருந்த எரிச்சலை அதிகம் விவரிக்கிறார் மத்தேயு(1-2). ஆனால் லூக்காவின் எழுத்தில், ஒரு மகிழ்ச்சியின் சூழ்நிலையைச்சுவைக்கிறோம்.

திருக்குடும்பத்தைத ;தவிர ஏனையோரைக் குறிப்பிடுவதில ;இருவரும்வேறுபடுகின்றனர். ஏரோது, தலைமைகுரு, சட்டவல்லுநர், ஞானிகள், மாசற்றகுழந்தைகள், அர்க்கெலாவு போன்றோரை மத்தேயு குறிப்பிடுகிறார்.மேற்சொன்ன பெயர்களை லூக்கா குறிப்பிடாமல் செக்கரியா, எலிசபெத்,திருமுழுக்குயோவான், ஆயர்கள், சிமியோன், அன்னா போன்றோருடன்குழந்தை இயேசுவுக்கு இருந்த தொடர்பைக் குறிப்பிடுகிறார்.

விண்மீன் மறைந்து, மீண்டும் தோன்றிய போது, ஞானிகளுக்குஉண்டான மகிழ்ச்சியை உணர்த்தும் குறிப்பைத் தவிர மற்ற இடங்களிலெல்லாம்சாதாரண நிகழ்ச்சியுரையாகவே மத்தேயு எழுதுகிறார். மாறாக, லூக்காவின்எழுத்தில் எங்கும் மகிழ்ச்சி பொங்குகிறது தாய் எலிசபெத்தின் வயிற்றில்குழந்தை துள்ளுகிறது(1 : 41); திருமுழுக்கு யோவான் பிறப்பைக் கேட்ட அவரதுஉறவினர் உள்ளம் பூரிக்கின்றனர் (1 : 68); வானதூதர் பாடலில் மகிழ்ச்சிதொனிக்கிறது (2 : 14). ஆயர்கள் குழந்தையைக் கண்டு திரும்பியபோதுமகிழ்ச்சியடைகின்றனர் (2 : 20); மேலும், மகிழ்ச்சியின் காரணத்தால் எழும்நான்கு பாடல்களை லூக்கா குறிப்பிடுகின்றார்; மரியாவின்பாடல்(1 : 46-55),செக்கரியாவின்பாடல்(1 : 66-80), வானதூதர்பாடல்(2: 14), சிமியோன்பாடல்(2 : 29-32).

இவ்விரு நற்செய்தியளார்களின் குறிப்புகளை மேலோட்டமாகப்பார்த்தாலும்,மேற்சொன்ன ஒற்றுமை வேற்றுமைகள்நமக்கு வெளிப்படையாகவேதோன்றும். இதுஇயல்புதான். அதனால் வரலாறு வலுவடைகிறதேயொழிய,பலவீனப்படவில்லை. ஏனெனில், இருவரும் அடிப்படை நிகழ்ச்சிகளை ஏற்றுக்கொள்கின்றனர். அவற்றை விவரிக்கும் முறையில், அவர்கள்கண்ணோட்டத்திற்கு ஏற்பவேறுபாடுகள் இயல்பாகவே தென்படுகின்றன.இனி, இவர்களின் குறிப்புகளைத் தனித்தனியே ஆராய்வோம்.

ஆ.மத்தேயு நற்செய்தியில் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகள்: (மத் 1-2)

1. முன்னுரை
"தாவீதின்மகனும், ஆபிரகாமின்மகனுமாகியஇயேசுகிறிஸ்துவின்மூதாதையர்பட்டியல்”என்றுதொடங்கி, இயேசுகிறிஸ்துவின் பிறப்பையொட்டிஅவரது தலைமுறை அட்டவணையை மத்தேயு தருகிறார். அதன்பிறகுமரியாளிடம் இயேசு பிறந்ததுபற்றியும், அக்குழந்தையைக் காண ஞானிகள்வந்தது குறித்தும், அதனால் ஏரோதுக்கு ஏற்பட்ட பயத்தினாலும்,கோபத்தினாலும், அக்குழந்தையைக் கொல்ல அவன்எடுத்துக் கொண்டமுயற்சிகளையும் மத்தேயு தெரிவிக்கிறார். இறுதியாக, ஏரோதிடமிருந்துதப்பிக்க, இறைவனால் வெளிப்படுத்தப்பட்டு குழந்தை இயேசுவைஎருசலேமுக்குக் கொண்டு சென்று, ஆபத்து நீங்கியதும் குழந்தைஇயேசுவும்பெற்றோரும் எகிப்திலிருந்து திரும்பியதையும் மத்தேயு குறிப்பிடுகிறார்(மத் 1-2).இவைதான் மத்தேயு தருகின்ற நிகழ்ச்சிகளின் சுருக்கமாகும். இனி,இதன் விளக்கத்தையும் செய்தியையும் ஆராய்வோம்.

2. தலைமுறைஅட்டவணை
இயேசு ஒருவரலாற்று நாயகர் என்று காட்டுவதற்காக மட்டும் மத்தேயு,இயேசுவின் தலைமுறை அட்டவணையை அளிக்கவில்லை. இதற்கு வேறுசிலகாரணங்களும்உள்ளன.பொதுவாக எபிரேயர்கள் தலைமுறை அட்டவணையை மூன்றுகாரணங்களுக்காகத் தந்தனர்.
1) தலைமுறைஅட்டவணையின்மூலம்ஒருவர்ஒரு குறிப்பிட்ட குலத்தின் உறுப்பினர் என்று எண்பிக்க விரும்பினர்.
2)ஒருவருக்கு ஒரு பொறுப்புள்ள அலுவல் அளிக்க அவரது தலைமுறைஅட்டவணையை அளித்தனர். இதன்மூலம் அவரது குலத்தின் தன்மைவிளக்கப்படுகிறது(எஸ்ரா 2 : 61; நெகே7 : 64-65 - பொறுப்புள்ளபணியானகுருத்துவப்பணிஏற்கத்தலைமுறைஅட்டவணைபெறப்பட்டது,
3) இறுதியாக,குலமுதுவரின் குணமும் நோக்கமும் ஒருவரில் வெளிப்படுகிறது என்றுதெரிவிக்கவும் தலைமுறை அட்டவணைதரப்பட்டது.

மத்தேயு இயேசுவுக்குத் தலைமுறை அட்டவணையை அளித்ததற்குமேலும் சிலசிறப்பான நோக்கங்கள் இருந்தன. 'இயேசு தாவீதின் மகன்' என்றுதெளிவாக எடுத்துரைப்பது முதல் நோக்கம். அதனால்தான் 'தாவீதின்மகனும்...' என்று தலைமுறை அட்டவணையின் ஆரம்பத்தில் இயேசுகிறிஸ்துவைஅழைக்கிறார். இந்தத் தலைமுறை அட்டவணையின் ஒவ்வொருபகுதியையும்14 தலைமுறைகளாக, மூன்று பகுதிகளாகப்பிரிக்கிறார். 'தாவீது' என்றபெயரின்எண்மதிப்பு 14. ஆக, அட்டவணையின் அமைப்பிலும ;தாவீதுக்கு முக்கியத்துவம்அளிக்கிறார். இத்துடன், பிற இனத்தவருக்கு முக்கியத்துவம் அளித்து -அவர்கள் கிறிஸ்தவமதத்தில் சேருவதை நியாயப்படுத்த 'இயேசு ஆபிரகாமின்மகன்' என்றார். ஆபிரகாம் என்றால்' எல்லா நாட்டினருக்கும் தந்தை' என்பதுபொருள் (மத் 8:11). மேலும், மீட்பு வரலாறு மூலம் கடவுளின் திட்டம்நிறைவேறுகிறது என்று காட்டவும் மத்தேயு இயேசுவின் தலைமுறைஅட்டவணையை அளிக்கிறார். அதனால்தான் பலவிடங்களில் மூத்தவனைவிடுத்து, இளையவனைச் சேர்க்கிறார். அதுதான் மீட்பின்வழி, இறைவனின்வழியாகும் (தொநூ16-17; தொநூ27; 49:10).

பொதுவாக ஆண்களின் பெயர்களே தலைமுறை அட்டவணையில் இடம்பெற, மத்தேயு ஒருசில பெண்களையும் சேர்க்கிறார். அதாவது இயேசுவின்தாய்மரியாவைத் தவிர பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த தாய்மார்கள்,இராகாபு, ரூயஅp;த், பெத்சேபா போன்ற பெண்களையும் குறிப்பிடுகிறார். இதற்குக்காரணமென்ன?இறைவனின் பாராமரிப்பும் இறைத்திட்டமும் இவர்களில் எவ்வாறுசெயல்பட்டன வென்று வெளிப்படுத்தவும், மரியாவுடன் சேர்த்துக் குறிப்பிடுவதில்அவருடன் இவர்கள் எத்தகைய முறையில் ஒப்பிடத்தக்கவர் என்று காட்டவும்இவர்களைக் குறிப்பிடுகிறார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். பொதுவாக,கீழ்க் கண்டவிளக்கங்கள் இதற்கு அளிக்கப்பட்டன.

2.1. இயேசு பிற இனத்தவருக்கும் உரியவர்
மத்தேயு அளிக்கின்ற தலைமுறை அட்டவணையில் வருகின்ற நான்குபெண்களுமே பிற இனத்தைச்சேர்ந்தவர்கள். இராகாபும் தாமாரும் கனானியப்பெண்கள். ரூயஅp;த் மோவாபிய இனத்தைச் சேர்ந்தவள்; உரியாவின் மனைவிபத்சேபா பிறஇனப் பெண்ணா என்று தெளிவாகத் தெரியவில்லையென்றாலும்,அவள் பிற இனத்தவனான உரியாவின் மனைவியாக இருப்பதாலும், ஏத்தையர்குலத்தைச் சார்ந்தவளாயிருப்பதாலும் அவளும் பிற இனத்தவளே. பிறஇனத்தவரான இவர்களனைவரையும் இத்தலைமுறை அட்டவணையில்சேர்ப்பதால் இயேசுவின் வருகைக்காகப் பிற இனத்தவரும் ஆயத்தம் செய்தனர்என்று காட்டவும், பிறஇனத்தவருக்கும் இயேசு உரியவர் என்று எண்பிக்கவும்மத்தேயு எழுதினார் என்று மார்ட்டின் லூத்தர் போன்றோர் கூறினர்.

மரியாவின் தன்மையை விளக்குவதாக இப்பெண்கள் இருக்கவேண்டும்.ஆனால் மரியாள் ஒரு பிற இனப்பெண் அல்ல. மேலும் பிற்கால யூதநூல்கள்இப்பெண்களைப் பிறஇனப் பெண்கள்என்று குறிப்பிடவில்லை. மாறாக,யூதர்களாக மாறுவதற்கு தங்களையே தயாரித்துக் கொண்டிருக்கும் 'ஆயத்தயூதர்கள்' என்றுதான் குறிப்பிட்டன. ஆதலின் மேற்சொன்ன விளக்கத்தைஏற்றுக் கொள்ள இயலாது.

2.2. பாவிகளுக்கும் மீட்பு
புனித எரோணிமுஸ் வேறுவிதமாக இப்பிரச்சனையைக் காண்கிறார்:இப்பழைய ஏற்பாட்டு நான்கு பெண்களை பாவிகளாகவும், ஒழுக்கம்தவறியவாழ்க்i கநடத்தியதாகவும் காண்கிறார். (தொநூ38: 6-30-தாமார்; யோசுவா2 : 1-9 இராகாபு, ரூயஅp;த் 3 : 6-9,14 ரூயஅp;த்; 2 சாமு11 : 1-8 - பத்சேபா) அவர்களின்வழியில ;இயேசு தோன்றியதால் பாவிகளுக்கும் அவரது மீட்புஉண்டென்றும்,வெளிப்படுத்தப்படுகிறது என்று புனித எரோணி முஸ்விளக்கம் தந்தார்.

ஆனால், பழைய ஏற்பாட்டில் நாம் காணுகின்ற முறையில்,இப்பெண்களின் வாழ்க்கை நிலை பாவமானதாகத் தோன்றினாலும், அவர்களதுமேன்மையான பணியினால்அவர்களது பாவ காரியங்கள் வெளித்தோன்றுவதில்லை.

பிள்ளைச் செல்வம் அளிக்காமல் தனது கணவன் இறந்தபோதும்தாவீதின் குலம், மீட்பு வரவேண்டிய குலம் அழியாது நீடிக்கவேண்டும் என்பதைதாமார் நன்கு உணர்ந்திருந்தாள். அதனால், தன்வழியாக எப்படியாகிலும்யூதாவின ;சந்ததியில் இறைவனின் அருளாசீர் கிடைக்க வேண்டுமென்றுதுணிச்சல்கொண்டு செயலாற்றினாள் (தொநூ38: 6-30). ஆதலின், யூதர்கள்இவளைப் பாவியென்றுகருதாமல், இவளது துணிச்சலான செயலினால்குலத்தின் வளர்ச்சியைக் காத்தவள் எனப் போற்றி வந்துள்ளனர். எரிக்கோவில்விலைமாதாக வாழ்ந்த இராகாபு (யோசு2 : 8), ஒரு வீராங்கனையாக நின்றுஇஸ்ரயேலரின் ஒற்றர்கள் தப்பவும், இஸ்ரயேலர் எரிக்கோவைக் கைப்பற்றவும்துணையாயிருந்தாள். இவளைப் பாவியாக இஸ்ரயேலர் கருதவில்லை மாறாக,விசுவாசத்தின் முன்மாதிரியாக ஆதிக்கிறிஸ்தவர்களால்கூட போற்றப்பட்டாள்(எபி11 : 31). ரூயஅp;த்போவாசுடன்பாவவாழ்வுவாழ்ந்ததாகச் சான்றுஇல்லை(ரூயஅp;த் 3 : 6-9). உரியாவின்மனைவிபத்சேபா தாவீதுஅரசனுடன்விபசாரம்செய்தவளானாலும், சாலமோன் அரசனுக்குத் தாயாகத் திகழ்வதால் இவளை"ஞானியின்தாய்”என்று பிற்காலத்தில் போற்றினர்.ஆகவே, இந்நான்குபெண்களும் பாவிகள் என்பதற்காக மத்தேயு இங்கேகுறிப்பிடவில்லை.

2.3. மரியாவின் வாழ்வை விளக்க
இந்த நான்கு பெண்களிலும் முக்கியமான இரு தன்மைகளைக்காண்கிறோம்.

1. அவர்களது துணைவர்களுடன் அவர்களுக்கிருந்த உறவில்ஒருஇயல்புக்கு மாறான, ஒருஇடறல் தன்மையைக் காண்கிறோம். தாமார் தனதுமாமனாருடன் கொண்டிருந்த உறவிலும்(தொநூ38 : 6-10), இராகாபு ஒருவிலைமாதாகச் செயல்பட்டதிலும் (யோசு2: 9), பத்சேபா தாவீது மன்னனுடன்வாழ்ந் தவாழ்க்கையிலும் (2சாமு11: 1-8), ரூயஅp;த் போவாசுடன் வாழ்ந்த விதத்திலும்(ரூயஅp;த்3: 6-9), இயல்புக்கு மாறான, நடைமுறைக்கு ஒவ்வாத, மற்றவர்கள் ஒதுக்கிவிலக்குகின்ற தன்மையைக் காண்கிறோம்.

2. இவர்கள் வேற்று இனப் பெண்களாயினும் இஸ்ரயேல்குலத்தில்தங்களையே இணைத்துக் கொள்வதன் மூலம் கடவுளின் திட்டத்தில்தங்களையே கருவிகளாக்கிக ;கொண்டதை காணமுடிகிறது.அதேபோன்று, இவர்களின் வாழ்வின் இவ்விரு தன்மைகளையும்நாம்மரியாளின்அழைத்தலில் காணமுடிகிறது.இயேசுவை மரியா கருவுற்றுப் பெற்றெடுப்பதில் யோசேப்புக்கும்மரியாவுக்கும் இருக்கும் உறவில் இயல்புக்கு மாறான தன்மையைக்காண்கிறோம். இருவருக்கும் மணஒப்பந்தமே ஆகியிருக்க அவர்கள்கூடிவாழுமுன் தூயஆவியால் கருவுற்றிருந்தார்”(மத்1: 18). இதுவியப்புக்குரியதுஇயல்புக்கு மாறானது. அந்த நான்கு பழைய ஏற்பாட்டுப் பெண்களையும்போன்று மரியா குழந்தையைப் பெற்றெடுப்பதே நடைமுறையில் நாம் காணாத,இயல்புக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.அடுத்து, கடவுளின ;மீட்புத்திட்டம் நிறைவேற மரியா'நான்ஆண்டவரின்அடிமை' என்று மனமுவந்து அர்ப்பணித்ததால் கடவுளின் மிகச் சிறந்தகருவியாக இருக்கிறார். கடவுளின் அழைப்புக்குத் தன்னையேஅர்ப்பணித்ததன்மூலம், அப்பழைய ஏற்பாட்டுப் பெண்களைப்போல் கடவுளின்மீட்புத்திட்டத்தில் தன்னையே விரும்பி இணைத்துக் கொள்கிறாள். ஆதலின்,மேற்குறிப்பிட்ட பெண்களின் வாழ்வு எப்படி இடறலாக அமைந்ததே hஅவ்வாறேமரியாவின் வாழ்வும் மனிதக் கண்ணோட்டத்தில், யூதர்களின் மத்தியில்இடறலாக இருந்தது.

ஆக,மரியாவின்அழைத்தலில் உள்ள தனித் தன்மையையும் சிறப்பையும்விளக்குவதற்காகவே பழைய ஏற்பாட்டில் இந்தநான்கு பெண்களையும் மத்தேயுகுறிப்பிடுகிறார்.

3. மண ஒப்பந்தமே ஆகியிருக்க. . .
திருமணத்திற்குமுன்மணஒப்பந்தம் நடைபெறுவதுயூத குலத்தில்வழக்கம். இதே முறையில் மரியாவுக்கும் யோசேப்புக்கும் மணஒப்பந்தம்ஆகியிருந்தது என்று மத்தேயு தெரிவிக்கிறார் (மத்1 : 18).யூதச் சட்டமுறைமைப்படி ஒருவன் தனது திருமண ஒப்பந்தத்தைத் தானேநேரிடையாகவோ வேறு ஒருவரின் மூலமாகவோ செய்யலாம். ஆனால்,மணப்பெண் எப்பொழுதும் தனது தந்தை அல்லது தனயன் மூலந்தான்நிறைவேற்றுவார் (கூhந ஆiளாயே 323-5). மணஒப்பந்தம்என்பது, ஓர் ஆண்தான் மணக்க விரும்பும் பெண்வீட்டாருடன் ஒப்பந்தம்செய்வது பெண்களுக்குச்சீதனம் அளித்து, மணமகன் ஒப்பந்தம் செய்வதுவழக்கம். இவ்வொப்பந்தம்நடந்த பின் சுமார் ஓராண்டுக் காலம் தன் பெற்றோருடனேயே பெண்தங்கியிருப்பாள். அதன்பின்தான் திருமணம் நடைபெறுவது வழக்கம்.

3.1. இதன் விளைவு என்ன?
ஒப்பந்தம் செய்த பெண்ணையே ஒருவன் மணக்க வேண்டும். அவளைவிடுத்து வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால்,அதற்கு முறிவுச்சீட்டுப் பெறவேண்டும். தான் மணஒப்பந்தம் செய்தவரைவிடுத்து வேறொருவருடன் உடலுறவுகொண்டால் அதனை விபசாரம் என்றுகருதினர் (இச 22 : 23-29). ஆதலின், தன்னோடு மண ஒப்பந்தம்செய்தவருடன் உடலுறவு கொள்ள அனுமதிக்கப்பட்டனர். யூதகலைக் களஞ்சியத்தின் குறிப்புப்படி இதனை விபசாரம் என்று நினைப்பதில்லை.உரோமைப் போர் வீரர்களிடமிருந்து தப்பிக்க, மணஒப்பந்தம் செய்த ஆணும்,பெண்ணும் திருமணம் ஆகாமலேயே ஒன்றாகத்தங்குவது பிற்கால யூதர்களின்வழக்கத்தில் இருந்தது. ஆனால் பொதுவாக முழுத் திருமணம் முடியும் வரையில்மணஒப்பந்தமான பெண் கன்னியாகவே இருந்தாள். அதைத்தான் யூதர்களும்விரும்பினர். மணஒப்பந்தமானவர்களைக் 'கணவன்- மனைவி' என்றுஅழைத்தாலும், திருமணச் சடங்கு முடியும்வரை பெண், தனது தகப்பனின்பாதுகாப்பிலேயே வாழ்வாள்.மரியாவும் யோசேப்பும் மணஒப்பந்தமானவர்கள் என்றுகூறும்போது, கி.பி.70-இல் நடந்த யூத புரட்சிக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்அது நடந்தது.அப்பொழுது, அவர்கள் கட்டுப்பாடான யூத முறைமைகளைக்கடைப்பிடித்திருப்பர். மரியா கன்னியாகத்தான் இருந்திருப்பார். இருப்பினும்மரியா சந்தேகத்திற்கு இடமில்லாமல் கன்னியாகவே இருந்தார் என்பதைத்தெளிவாக மத்தேயு எடுத்துரைக்க, 'அவர்கள் கூடி வாழும் முன் மரியாகருவுற்றிருந்தது தெரிய வந்தது' என்றுகுறிப்பிடுகிறார் (மத் 1 : 18). இதைவிடத்தெளிவாக இப்பகுதியின் இறுதியில், "மரியாதம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடிவாழவில்லை”என்றே குறிப்பிடுகிறார் (1 : 25).இப்படி, மரியாளின் கன்னித ;தன்மையைத ;தெளிவாக நிலைநாட்டும்பொழுது, மண ஒப்பந்தமானவளை மனைவியென்று அழைக்கின்ற யூதவழக்கத்தில், யோசேப்பின் மனைவியாக மரியாவைக் குறிப்பிடுகிறார்: "உம்மனைவி மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்சவேண்டாம்”(மத்1 : 20).

4. நேர்மையாளர் (நீதிமான்) யோசேப்பு
தாங்கள் இருவரும் கூடிவாழுமுன் தனது 'மனைவி' மரியாகருவுற்றிருப்பதைக் காணும் யோசேப்புக்கு கலக்கம் ஏற்படுகிறது. தனதுமனைவி மரியாவுக்கு அவப்பெயர்ஏற்படா வண்ணம் அவரை 'மறைவாக' விலக்கிவிட யோசேப்பு எண்ணினார். அதற்கு மத்தேயுஅளிக்கும் காரணம்: யோசேப்புநேர்மையாளர் என்பது(மத்1 : 18-19).நேர்மையாளர் என்றால் "சட்டங்களை அனுசரிப்பவர்” என்றுபொருள்படும். ஆனால், இதுமட்டுமல்ல.

4.1. மரியாளின் மேல் இரக்கம்
யோசேப்பின் நேர்மையாளர் தன்மை அவரது இரக்கத்தில்வெளிப்படுகிறது. நேர்மையாளருடைய தன்மை கருணையும், இரக்கமும்காட்டுவது (திபா 36: 21; 11:4). பொதுவாக, யூதமுறைமைப்படி, மனைவியின்வயிற்றிலுள்ள குழந்தை தனது'குழந்தையில்லை' என்று ஒருவன் உணர்ந்தால்,மனைவியின் ஒழுக்கத்தை நிலை நாட்டக் கடினமான சோதனைக்கு அவளைஉட்படுத்த வேண்டும் (எண்5: 11-31). மரியா கருவுற்றிருப்பதை அறிந்திருந்தும்,அவளைக் காட்டிக் கொடுக்கயோசேப்பு விரும்பவில்லை ஒன்றுN மபுரியாதநிலையில் யோசேப்பு இரக்கம் கொண்டார்.

4.2. கடவுள் பயம் கொண்டவர்
மரியா கருவுற்றிருப்பது ஒருதெய்வீக வல்லமையால் என்பதை யோசேப்புஓரளவு அறிந்திருந்தார். ஆதலின், அத்தகைய மரியாவுக்குத்தான் கணவராகஇருக்கத் தகுதியில்லை என்று உணர்ந்து, மரியாவை விலக்கிவிட, அதாவது,தெய்வ பயத்தினால் விலக்கிவிட யோசேப்பு எண்ணினார் என்றுசிலர ;கூறினர்.இத்தகையமுடிவில் அவரது நேர்மையாளர் தன்மையைக் காண்கிறோம் என்றும்கூறினர். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. விலக்கிவிடஎண்ணியபிறகு தான், வானதூதர் யோசேப்புக்கு, "அவர் கருவுற்றிருப்பது தூயஆவியால்தான்”என்று கூறுகிறார் (மத்1 : 20). ஆதலால், இதற்கு முன்னமே,கடவுளின் செயலை யோசேப்பு எப்படி அறிந்திருப்பார் என்றகேள்வ pஎழுகிறது.

4.3. சட்டத்திற்குப் பணிந்தார்
செக்கரியாவும் எலிசபெத்தும் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து,நேர்மையாளர்கள் எனப் பெயர்பெற்றது போல்(லூக்1 : 16), யோசேப்பும் சட்டத்திற்கு அடிபணிந்தார் என்பதை மத்தேயுவின் நற்செய்தியில் காண்கிறோம்.‘மண ஒப்பந்தமானவள் கணவனின் வீட்டிற்கு வரும்போது கன்னியாகஇல்லாவிடில் அவளைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்' என்பதுமோசேயின் சட்டம் (இச 22 : 20-21). ஆனால், தீமையை உன்னிடமிருந்துவிலக்குவாய்” என்ற சட்டத்திற்கு ஏற்ப, யோசேப்பு தனது இரக்க குணத்தின்காரணமாக, மரியாளை வெளிப்படையாக தண்டிக்கவிரும்பாமல், மறைவாகவிலக்கிவிடவிரும்பினார். இதனில் அவரது நேர்மையாளர் தன்மையைக்காண்கிறோம்.ஆதலின், யோசேப்பு நேர்மையாளர் என்று கூறும்போது அவரது இரக்ககுணந்தான் அதிகம் வெளிப்படுகிறது.

5. தாவீதின் மகன்
தலைமுறை அட்டவணையின் முடிவில், "யாக்கோபுக்கு மரியாவின்கணவரான யோசேப்பு பிறந்தார். மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும்இயேசு” என்று மத்தேயு குறிப்பிடுகிறார் (1 : 17). ஆதலின், இயேசுவுக்கும்யோசேப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை. மரியாளின் மூலந்தான் உறவுஏற்படுகிறது. "இவளிடந்தான் பிறந்தார்” என்று வலியுறுத்தி, அதற்கானவிளக்கமாகத் தான் மத்1 : 18-25 யைமத்தேயு எழுதுகிறார்.

ஆக, மரியாவின் கன்னித் தன்மையை மிகவும் வலியுறுத்தும் மத்தேயு,இயேசுவை முழுக்க முழுக்க மரியாவின் மகனாகச் சித்திரிக்கிறார்.தாவீதின் குலத்தில் பிறக்காத மரியாவுக்கு மகனாகப் பிறந்த இயேசுவை,"தாவீதின் மகன்” என்று எப்படி மத்தேயு குறிப்பிடுகிறார் (1 : 1)?யோசேப்பு மரியாவுடன் மண ஒப்பந்தம் செய்து கொண்டதனால்மரியாவுக்குப் பிறந்த குழந்தை யோசேப்பின் மகனாக மாறிவிட முடியுமா?இல்லை. பின் எப்படி இயேசு தாவீதின் மகனாகிறார்?

வானதூதர் யோசேப்புக்குத் தோன்றும்போது, "யோசேப்பே தாவீதின்மகனே, உன்மனைவி மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்ச வேண்டாம்...அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்” என்று கட்டளையிடுகிறார் (மத்1 : 21).யூதர்களின் எண்ணப்படி, ஒருவன் யாருக்குப் பெயரிடுகிறானோ அவன் மேல்பெயரிடுபவருக்கு அதிகாரமும் ஆதிக்கமும் உண்டு. பெயரிடப்படுபவன்அவனுக்குச் சொந்தமாகிறான். ஆதலின், யோசேப்பு இயேசுவுக்குப் பெயரிட்டுஏற்றுக் கொண்டதால் இவர், யோசேப்பின் மகனாகிறார் - அதாவது யோசேப்புயாக்கோபின் மகனென்றாலும், அவரது குலத்தின் காரணமாக, அவர்,"தாவீதின் மகனாவார்”. இயேசுவுக்கு யோசேப்பு பெயரிடுவதனால், அவரதுவளர்ப்புத் தந்தையானதால், "இயேசுவும் தாவீதின் மகனாகிறார்”.

அதாவது, மரியாவைத் தனது மனைவியாக ஏற்றுக்கொண்டதனாலும்,இயேசுவுக்குப் பெயரிடுவதனாலும் யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத்தந்தையாகிறார். ஆதலின், யோசேப்பின் காரணமாக இயேசு, 'தாவீதின்மகனாகிறார்'.

'தாவீதின் குலத்தில் மீட்பர் தோன்றுவார்' என்ற இஸ்ரயேலின்நம்பிக்கை (எசா7: 12-15) இவ்வாறு இயேசு தாவீதின் மகனாகத் தோன்றுவதில்நிறைவேறுகிறது என்று மத்தேயு விளக்கமளிக்க விரும்புகிறார். இதனை நன்குவிளக்கவே,"ஆண்டவரின்தூதர்”கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார் என்றும் "அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்” என்றும்யோசேப்பைக் குறித்து மத்தேயு தெளிவாகN வஎழுதுகிறார் (மத்1 : 24-25).

6. ஞானிகள்வருகை
"ஏரோது அரசன ;காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசுபிறந்திருக்க, இதோ ஞானிகள் கீழ்த்திசையிலிருந்து இயேசுவைக் காணவந்தனர் என்று மத்தேயு குறிப்பிடுகிறார்(மத் 2 : 1-12).இந்த நிகழ்ச்சியில் பின்வரும்கருத்துக்களை காண்கிறோம்.

6.1. யூதேயாவின் பெத்லெகேம்
செபுலும்பகுதியிலுள்ளஓர் ஊரானபெத்லகேமிலிருந்து (யோசு 19 : 15)வேறுபடுத்திக் காட்ட யூதேயாவின்பெத்லெகேமில்இயேசு பிறந்தார் என்றுமத்தேயு குறிப்பிடுகிறார். பழையஏற்பாட்டில், இப்படி வேறுபடுத்திக்காட்டுவதுவழக்கம் (நீத17:7; 19: 1; 1 சாமு17:12). நாசரேத்தூருக்கு வட மேற்காக7 மைல் தூரத்தில் இவ்வூர் உள்ளது."யூதர்களின் அரசர்” என்று ஞானிகள் குறிப்பிடுவதைச்சம்பந்தப்படுத்தவும், "யூதேயாவிலுள்ள பெத்லகேமில் மெசியா பிறப்பார்”என்றுமறைநூல் அறிஞர்கூறியதைத் தொடர்புபடுத்திக் காட்டவும் ஆரம்பத்திலேயே"யூதேயாவிலுள்ள பெத்லகேம்” என்று மத்தேயு குறிப்பிடுகிறார் என்றும்கருதலாம்.

6.2. கீழ்த்திசை ஞானிகள்
கீழ்த்திசையிலிருந்து இயேசு பிறந்திருப்பதை அறிந்த ஞானிகள்வந்தனர்என்றும் அவர்களுக்கு விண்மீன் வழிகாட்டியது என்றும், இச்செய்தியைக்கேட்டு ஏரோதும் எருசலேமும் கலங்கியது என்றும் மத்தேயு குறிப்பிடுகிறார்(மத் 2 : 1-12).ஞானிகள் என்பது'மாகோஸ்' என்ற கிரேக்க வார்த்தையின் தமிழாக்கமாகும்.'மாகோஸ்' என்பது பலதரப்பட்ட பொருள்கொண்டிருந்தது பொதுவாக,மாயமந்திரங்களால் ஞானம் படைத்தவர், மந்திரவாதி, கனவுக்கு விளக்கமளிப்பவர், மருத்துவர், வானசாஸ்திரிபோன்றோரை'மாகோஸ்' என்றுஅழைத்தனர்.மத்தேயுகுறிப்பிடும்ஞானிகள், 'வானநூல்வல்லுநர்' போன்றோராகத்தோன்றுகின்றனர். இவர்கள்அரசர்கள்அல்லர். கிறிஸ்தவமரபில், அண்மைக்காலம்வரையில்இவர்கள்அரசர்களாகவேசித்திரிக்கப்பட்டனர். ஏன்இப்படி?மன்னர் பலர் இஸ்ரயேல் அரசனை வழிபடவருவர்; அவருக்குக் காணிக்கைகள்செலுத்துவர் என்றதிருப்பாடல் வசனம் (திபா71 : 10-11) கிறிஸ்துமஸ் காலத்தில்வாசிக்கப்படுவதாலும், "எருசலேமே எழுந்திரு... பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர்” அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துபை;பர்” என்று எசாயாகூறுவதாலும் (எசா 60: 1-6), இதுபோன்ற மரபு உருவாகியிருக்கலாம். கி.பி.2-ஆம்நூற்றாண்டு முதலே இத்தகைய மரபு நிலவியிருப்பினும், இவர்களை நாம்ஞானிகள் என்று அழைப்பதே சரியாகும்.பொதுவாக மூன்றுபேர் வந்தனர் என்று கருதப்படுகிறது. இருப்பினும்இரண்டு ஞானிகள் என்று புனித பேதுரு, மார்சலினுஸ் கல்லறைக்குகைகளிலும், 4பேர்என்று3-ஆம்நூற்றாண்டுக்குறிப்புகளிலும், 8பேர், 12பேர்என்றுவேறுசிலகுறிப்புகளிலும்காணப்படுகிறது.இயேசுவின் தன்மைகளை விளக்குவதாக அவர்கள் அளித்தகாணிக்கைகள்அமைந்திருந்தன் தூபம், இயேசு கடவுள் என்பதையும், பொன்,இயேசு அரசர் என்பதையும், வெள்ளைப்போளம் இயேசு துன்புற்று மரிப்பவர்என்பதையும் வெளிப்படுத்துகிறது.

6.3. செய்தி என்ன?
'இயேசு ஆபிரகாமின்மகன்' என்று தலைமுறை அட்டவணையில் மத்தேயுகுறிப்பிட்டார ;(மத்1: 1). 'ஞானிகள்வருகை' பற்றிய பகுதியில் அதற்கு விளக்கம்அளிக்கிறார். எப்படி?

ஆபிரகாம் என்றால் எல்லா மக்களுக்கும் தந்தை என்பதுபொருள்.யூதர்களுக்கும் இயேசு உரியவர்என்பதை உணர்த்த, "தாவீதின் மகன்”என்றுகுறிப்பிட்ட மத்தேயு, அதனைத் தொடர்ந்து, இயேசு எல்லா மக்களுக்கும்உரியவர் என்றுகாட்ட,"ஆபிரகாம் மகன்” என்று குறிப்பிடுகிறார் தலைமுறைஅட்டவணையின் ஆரம்பத்தில்(1:1).

"கிழக்கிலும், மேற்கிலுமிருந்து பலர் வந்து(பிறவினத்தார்) ஆபிரகாம்,ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” எனஇயேசு கூறியது(மத்8:9-10), பிறவினத்தாராகிய இந்தஞானிகளின் வருகையினால் நிறைவேறுகிறது. பிற்காலத்தில் மட்டுமன்றி இயேசுவின் குழந்தைப்பருவத்திலும் பிறவினத்தார் இயேசுவைத் தொழ வந்தனர் என்பது இங்கேதெளிவாகிறது. ஆக, இயேசு அனைத்து மக்களுக்கும் உரியவர் என்ற பொதுத்தன்மையினை மத்தேயு இந்தஞானிகளின் வருகையினால் உணர்த்துகிறார்.எண்ணிக்கைமத் 2இரண்டாவது இறையியல் உண்மை: இயேசுவின் வாழ்வில் அவர்சந்தித்தயூதர்எதிர்ப்பும், பிறவினத்தார் ஏற்பும் இக்குழந்தைப்பருவ ஞானிகள்வருகை நிகழ்ச்சியில் முன்னறிவிக்கப்படுகிறது.இயேசுவை பரிசேயர்களும், சதுசேயர்களும் பல முறைஎதிர்த்தனர்.அவர்களது வெளிவேடத்தைக் கிழித்தெறிந்த இயேசுவின ;வார்த்தைகளைமத்தேயு தெளிவாக எழுதுகிறார் (மத்23). யூதர்களின் தலைமைச் சங்கந்தான்,"இவன் சாகவேண்டியவன்” என்று இயேசுவுக்குத் தீர்ப்பிட்டது (மத்26 : 66).ஆனால், "அம்மா, உமது நம்பிக்கைப் பெரியது” என்று கானானியப் பெண்போற்றப்படுகிறார் (மத் 15 : 28), "இஸ்ரயேலில் யாரிடமும் இத்தகையநம்பிக்கையை நான் கண்டதில்லை” என்று நூற்றுவர் தலைவனின்நம்பிக்கையைப் புகழ்கிறார் இயேசு(மத்8: 10).

அதேபோன்று, குழந்தைப் பருவநிகழ்ச்சியில் குழந்தை இயேசுவைக்காண (ஏற்றுக்கொள்ள) ஞானிகள் வருகின்றனர். ஆனால், அக்குழந்தையைப்பற்றிக் கேள்வியுற்ற யூத குருக்களும், மறைநூல் அறிஞர்களும் கலங்கினர்(மத்2: 4); ஏரோதும் கலங்கினான்; அக்குழந்தையை கொல்லவும் முயன்றான்சுருங்கக் கூறின் "எருசலேம் முழுவதும் கலங்கிற்று” என்று யூதர்களின்மனநிலையை அழகாகப்படம் பிடித்துக் காட்டுகிறார் (மத்2:3).ஆக, இந்த ஞானிகள்வருகை பற்றி எழுதும் மத்தேயு, இதன் மூலம்,இயேசு எல்லாருக்கும் உரியவர் என்ற இறையியல் கருத்தையும், இயேசுசந்திக்கும் வரவேற்பும் - எதிர்ப்பும் பற்றிய கருத்தையும் தெளிவுப்படுத்திவிடுகிறார்.

மேற்கண்ட அடிப்படை இறையியல் உண்மையினை எழுதவே ஞானிகள்வருகை பற்றி மத்தேயு குறிப்பிடுகிறாரே யொழிய, இந்நிகழ்ச்சி அப்படியேவரலாற்று உண்மையென்று ஏற்றுக்கொள்வதில் பின்வரும் பிரச்சனைகள்உள்ளன.

6.4. இடர்பாடுகள்
1) கீழ்த்திசையிலிருந்து ஞானிகள் விண்மீன் எழுதலைக் கண்டுவந்தனர். அவர்களை அது எருசலேமுக்கு அழைத்துச்சென்றது அதன்பின்எருசலேமிலிருந்து பெத்லகேமுக்கும் அவர்களை வழி நடத்தியது.இப்படியிருக்க, அன்றைய வரலாற்றுக் குறிப்புகளில் எங்குமே இவ்விண்மீன்பற்றிக் காணப்படவில்லை. மேலும், குழந்தைப் பிறப்புப் பற்றிக் கேள்விபட்டவுடனே, தலைமைகுருக்களையும், மறைநூல் அறிஞரையும் ஏரோதுகூட்டினான் என்றுமத்தேயு குறிப்பிடுகிறார் (2 : 4). ஆனால், ஏரோதுக்கும்அன்றைய குருக்களுக்கும் நிலவியபகையுணர்வினால் இது சாத்தியமாயிருந்திருக்குமா என்பது கேள்விக்குறி.

2) பெத்லகேமிலேதான் இயேசுபிறந்தார் என்று லூக்காவும் எழுதுகிறார்.ஆனால், ஏரோதின் இடையூறும், ஞானிகள் வருகையும் பற்றிக் குறிப்பிடவில்லை.பிறந்த சில நாட்களேயான குழந்தையை பெத்லெகேமிலிருந்து வெகுதொலைவிலுள்ள எகிப்துக்குக் கொண்டு செல்வது முடியாத காரியமாகத்தோன்றுகிறது.

3) "எருசலேம் முழுவதும் கலங்கிற்று” என்று மத்தேயு கூறுகிறார் (2:3).எதைக் கேட்டு? 'யூதர்களின் அரசர் பிறந்துள்ளதைக் கேள்வியுற்று”எருசலேமிலிருந்த ஏரோதும் கலங்கினான். அப்படியென்றால், "மரியாவின்மகன்தானே? என்று இயேசுவை எப்படி மக்கள் உதாசீனப்படுத்தினர் (மாற்6:1-6)? "கலிலேயா நாட்டிலிருந்தா மெசியா வருவார்?” என்று அவரை ஏன்ஒதுக்கிவிட்டனர் (யோவா 7: 41)? அடுத்து, ஏரோதின் மகன் ஏரோதுஅந்திப்பாஸ் இயேசுவைப் பற்றிக் கேள்வியுற்று, அவர் யார் என்றகுழப்பத்திற்குள்ளாகிறான். அவரைக் கொல்லத் தேடிய தனது தந்தையின்முயற்சிபற்றியும், இயேசு பற்றியும் முன்னமே அறிந்தவராகத் தெரியவில்லை.

4) பிலயாம் போன்றவர்கள் (எண்24-26) பழைய ஏற்பாட்டில் ஒருசம்பவம்.மோவாபிய சமவெளியில் இஸ்ரயேல் மக்கள ;பயணம் செய்தபோது, அவர்களைக்கண்டு மோவாப் நாட்டுஅரசன் பாலாக் அச்சம் கொண்டான். பிலயாம் என்னும்இறைவாக்கினரை அம்மோனியர் நாட்டிலிருந்து அழைத்துவரச் சொன்னான்.இந்தப்பிலயாம் ஒரு ஞானியும்கூட.

எண்ணிக்கை
மத்தேயு இரண்டாம் அதிகாரம்
பிலயாம் கீழ்த்திசையிலிருந்து வரவழைக்கப்பட்டார். பிலயாம் ஒரு ஞானியென்று Phடைழ என்ற அறிஞர்குறிப்பிடுகிறார். ஞானிகளும் கீழ்த்திசையிலிருந்துவந்தனர்.கீழ்த்திசை ஞானிகளும் வானநூல் அறிஞர்கள்.
கழுதைமேல் பிலயாமும், பக்கத்திலிருந்துவரும், ஆக, மூவர் வந்தனர்(எண்22:23) மூன்றுபொருட்களைக் காணிக்கையாக்கினதின் மூலம் ஞானிகள் மூவர்எனக் கூறப்படுகிறது(மத்2:11).
பிலயாம் வருகையால் பாலாக் அரசனின்சதித்திட்டம் வெளிப்படுகிறது. ஞானிகளின்வருகையால்ஏரோதின்சதித்திட்டம் வெளியாகிறது.
அரசனின் சதித் திட்டத்தை பாலாம்நிறைவேற்றவில்லை. ஞானிகளும் ஏரோதின் சதித்திட்டத்திற்குத் துணைபோகவில்லை
பிலயாம்ஓர் இறைவாக்கினராகஇருப்பதால், கடவுள் அறிவித்ததைமட்டுமேசெய்தார். ஞானிகளும் வானதூதர் அறிவித்ததைமட்டுமே செய்தார்கள்.
பிலயாம் தூக்கத்தில் கடவுளின்"தரிசனம்”கண்டார். ஞானிகளும் கனவுகண்டதாக மத்தேயுகுறிப்பிடுகிறார்
பிலயாம்இஸ்ரயேலைஆசீர்வதித்தபின்வீடுதிரும்பினார். ஞானிகளும் குழந்தையை ஆராதித்துவிட்டு வீடுதிரும்பினர்.

பிலயாம் ஒர் இறைவாக்கினராக இருப்பதனால், அவர் யாருக்குச்சாபமிடுவாரோ அவர்கள் சபிக்கப்படுவார்கள் என்பதனால், இஸ்ரயேல் மக்கள் தனதுநாட்டிலிருந்து செல்வதற்காக அவர்களைச் சபிக்கச் சொன்னான்(எண்22: 6).ஆனால், பிலயாம் சபிக்கவில்லை இஸ்ரயேலை ஆசீர்வதித்தான் (24:17).

இந்தப் பிலயாமுக்கும், கீழ்த்திசை ஞானிகளுக்கும் ஒப்புவமைகள்உள்ளன.இதன்படிபார்க்கும் போது, பழையஏற்பாட்டுப் பிலயாமுக்கு இணையாகஇந்தஞானிகளும் செயல்பட்டனர் என்று மத்தேயு குறிப்பிடுவதன் அடிப்படைநோக்கம்: எதிர்ப்புக்களுக்கிடையே எப்படி பிலயாம் இஸ்ரயேலரின்மகத்துவத்தை உணர்ந்து புகழ்ந்து ஆசீர்வதித்தாரோ அதே போன்று, ஏரோதுபோன்றோரின் எதிர்ப்புக்களுக்கிடையே குழந்தை இயேசுவின் மகத்துவத்தைக்கண்டு இந்தஞானிகள் ஆராதித்தனர் என்று மத்தேயு தெரிவிக்க விரும்பினார்.அத்துடன், பிற இனத்தவராகிய பிலயாம் இஸ்ரயேலை ஏற்றுக் கொண்டதுபோல், பிறஇனத்தவர்களான இந்த கீழ்த்திசை ஞானிகளும் இயேசுவை ஏற்றுக்கொண்டனர் என்றும் மத்தேயு தெரிவிக்கவிரும்புகிறார். ஆகவே, இத்தகையஇறையியல் கருத்துக்களுக்காக, பிலயாம் போன்ற ஞானிகளின் வருகை பற்றிமத்தேயு எழுதும்போது வரலாற்று நுணுக்கங்களை ஆராயத் தேவையில்லை.

5) விண்மீன்! இயேசுபிறந்த போது புதிய விண்மீன் தோன்றி கீழ்த்திசைஞானிகளுக்கு வழிகாட்டியதாக மத்தேயு குறிப்பிடுகிறார் (மத்2: 2). இதற்குப்பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஒரு புது விண்மீன்(ளுரயீநசnடிஎய)தோன்றியது என்று கெப்ளரும், வால் நட்சத்திரம் என்று வேறு சிலரும்கூறுகின்றனர். கி.மு. 12-ஆம்நூற்றாண்டில் ஒருவால் நட்சத்திரம ;தோன்றியது.ஜுபிடர், சத்தூர்ன், மார்ஸ் ஆகிய கோளங்கள் நம்பார்வைக்கு இணைவதால்கி.மு. 7-6-இல் ஏற்பட்ட ஒளி என்றனர் வேறு சிலர். ஆதலின், உலகில்மாபெரும் மனிதர் தோன்றும் போது வானத்தில் ஒரு புதிய விண்மீன்தோன்றுமென்ற யூதர்களின் நம்பிக்கையின் அடிப்படையில், இயேசு பிறப்புக்குஒருசில ஆண்டுகளுக்கு முன்(கி.மு. 12) தோன்றிய விண்மீனை இயேசுவின்பிறப்புடன் மத்தேயு இணைத்திருக்கலாம்.

6) நடந்தது என்ன! மத்தேயுவுக்கு இறையியல் உண்மைகளைவெளிப்படுத்துவது முதன்மையான நோக்கம். அதனால்தான் ஞானிகள் வருகைபற்றிஎழுதுகிறார். ஆனால், அதற்கு அடிப்படையில்லாமல ;இல்லை. கி.மு. 12-இல் ஹால்லியின் வால் நட்சத்திரமொன்று தோன்றியது. இதற்கு இருஆண்டுகளுக்குப் பிறகு ஏரோதைக் காண வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர்வந்தார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் இயேசுவின் பிறப்புடன் மத்தேயுஇணைத்து, வால் நட்சத்திரத்தின் உதவியால் வெளிநாட்டு (கீழ்த்திசை)ஞானிகள் (தூதுவர்கள்) வந்தனர் என்றுஎழுதியிருக்கிறார் என்று இன்றையஅறிஞர்கள் கருதுகின்றனர்.

7. ஏரோதின் சதி
குழந்தை பிறந்துள்ளதை ஞானிகள் மூலம் கேள்வியுற்ற ஏரோதுகலங்கினான். ஞானிகள்குழந்தையைஆராதித்துவிட்டுதன்னிடம்விபரம்கூறவேண்டுமென்றும் கூறியிருந்தான். ஏனெனில்"குழந்தை இயேசுவைத்தொலைக்கமுயற்சித்தான்” (மத்2 : 13-23). மத்தேயுநற்செய்தியின்இப்பகுதியில்பின்வரும்செய்திகளைக்காண்கிறோம்.

7.1. எகிப்துக்குப் பயணம்
"அவர் எழுந்து, குழந்தையையும்அதன்தாயையும்கூட்டிக்கொண்டுஇரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரைஅங்கேயேஇருந்தார்” என்றுமத்தேயுகுறிப்பிடுகிறார் (மத் 2 : 14-15).அக்காலத்தில் அகதிகளுக்கு ஏற்ற நாடாக எகிப்துதிகழ்ந்தது. சாலமோன்மன்னன் தன்னைக் கொல்லத் தேடிய போது ஏரொபவாம், 'எழுந்து எகிப்துக்குஓடினான்' (1 அர11 : 40). மேற்கண்ட மத்தேயுவின் குறிப்புக்கும் இதற்கும்மிக்கஒற்றுமையிருப்பதைக் காணலாம். அதேப்போன்று மன்னன் யோயாக்கிம்தன்னைக் கொல்லத் தேடியபோது செமாயாவின் மகன் உரியா என்றஇறைவாக்கினர் எகிப்துக்குத் தப்பியோடினார் (எரே 26 : 21). மேலும், கி.மு.172-இல்ஓனியால் என்ற பெரியகுருவும் அந்தியோகுஸ் எப்பானுஸ் என்றமன்னனிடமிருந்து தப்பிக்க எகிப்துக்கு ஓடிச்சென்றார்.

அடைக்கலம் புகும் இடமாக எகிப்து இருந்தது என்ற உயிருள்ளபாரம்பரியத்தை மத்தேயுவும் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சியில்பயன்படுத்தியிருக்க வாய்ப்பு உண்டு. மேலும் 'எகிப்திலிருந்து என்மகனைஅழைத்து வந்தேன்' என்றஓசேயா இறைவாக்கினரின் வார்த்தைகள்(11 : 1)இயேசுவில் நிறைவேறுவதாகக் காட்டவும் மத்தேயு விரும்பியிருக்கக்கூடும்.

அதனால், வரலாற்றில் இப்படியொரு நிகழ்ச்சி நடந்தது என்றுமத்தேயுகுறிப்பிட விரும்புகிறார் என்பதைவிட, மேற்கண்ட வரலாற்றுச் சூழ்நிலையில்தனது தனிப்பட்ட முறையிலான, பழைய ஏற்பாடு இயேசுவில் நிறைவேறுகிறது,என்பதை மத்தேயு வெளிப்படுத்தவே இப்படியொரு நிகழ்ச்சியை எழுதுகிறார்.

7.2. குழந்தைகள் கொலை
அன்றையபிறப்பு விகிதப்படி, பெத்லகேம்போன்றஊர்களில்ஆண்டுகளுக்கு 30பேர்தாம் பேர் தாம்பேர் தாம் பிறந்தனர். அப்படியென்றால், இரண்டாண்டுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் 20-க்குமேல்இருக்காது. சுற்றுப்புறத்தையும்கணக்கிலெடுத்தால்மொத்தம்50-க்குமேல்இருக்காது.குழந்தை இயேசுவைத் தொலைக்க எண்ணி, "பெத்லெகேமிலும்அதன்சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும்அதற்கு உட்பட்டதுமான ஆண் குழந்தைகளையெல்லாம் கொன்றான்”என்று மத்தேயு குறிப்பிடுகிறார் (மத்2:16).

பட்டம், பதவி என்றால் எதையுமே செய்யத் துணிந்த ஏரோதின்குணத்தைக் கருத்தில் கொண்டால் ஏரோது குழந்தைகளைக் கொலைசெய்திருப்பான் என்ற கருத்து வலிமை பெறுகிறதுதான். நினைத்த அளவில்தனதுதாய், மனைவி, பிள்ளைகளைக்கூட கொன்றவன் இயேசு பிறப்பின்காலத்தில் ஒரு கிராமத்தில் சில குழந்தைகளைக் கொன்றது வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்காது. அதனால் யோசேப்புஸ் என்றவரலாற்று அறிஞர் இந்நிகழ்ச்சி பற்றித் தனது யூத வரலாற்று நூலில்குறிப்பிடவில்லை.

ஆனால் அதே சமயத்தில், இத்தனைக் கலக்கத்திற்குக் காரணமாயிருந்தகுழந்தையின் இடம் தெரிந்த பின்னும் குழந்தை தப்பிக்க ஏரோது விட்டுவிட்டான் என்பதையோ, அதுவும் சூழ்ச்சியுள்ள ஏரோது ஏமாந்தான்என்பதையோ ஏற்றுக் கொள்ளக் கடினமாக உள்ளது. மேலும், மத்தேயுஅளிக்கின்ற இக்குறிப்பு, அன்றுஇஸ்ரயேல்மக்கள், எகிப்திலிருந்தபோது,பார்வோன் மன்னன் இஸ்ரயேலரின் ஆண்குழந்தைகளைக் கொன்றதுக்குஒப்புமையாக அமைகிறது. இத்துடன், இஸ்ரயேல்மக்கள் அசீரியாவிலும்,பாபிலோனியாவிலும் அடிமைகளாக வாழ்ந்தபோது அனுபவித்தவேதனைகளையும் மத்தேயு இங்கே நினைவூட்டுகிறார். ஏனெனில், அவர்களதுஅடிமைத்தனமும், இரண்டாவது விடுதலைப்பயணமாக இஸ்ரயேல்மக்களால்கருதப்பட்டது (எசா 40 : 3; 52 : 3-6). ஆதலின் இங்கே வரலாற்றுக்குமுக்கியத்துவம் அளிப்பதைவிட, மத்தேயு புகுத்த விரும்பும் விடுதலைப்பயணக்கருத்தைக் காண்போம்.

பெத்லகேமில் இக்கொலை நடந்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார்.ராக்கேல் புதைக்கப்பட்டது பெத்லகேமுக்குச் செல்லும் வழியில்தான். "ராக்கேல்தன்குழந்தைகளுக்காக அழுதுகொண்டு, அவை இல்லாமையால் ஆறுதல்பெறவிரும்பவில்லை”என்று எரேமியா கூறியது இஸ்ரயேல்மக்கள் அடிமைத்தனத்தில்அடைந்த வேதனையை நினைத்துத்தான் (எரே21 : 45; 31 : 15). அதேராக்கேல் மீண்டும் அழுவதாக அந்த அழுகை மீண்டும் நிறைவேறுவதாகமத்தேயு கூறும் போது அத்தகைய விடுதலைப்பயணத்தில் இக்குழந்தைகளின்தாய்மார்கள் பெற்ற வேதனையை நினைவு கூறுகிறார்.

ஆதலின், இஸ்ரயேலை எகிப்திலிருந்து மீட்க மோசே தோன்றிய போதுஎகிப்தில ;குழந்தைகள் கொலையுண்டனர். அதே போன்று உலகின்மீட்பர்இயேசு தோன்றும் போதும் குழந்தைகள் கொலையுண்டனர் என்றுகூறி,இஸ்ரயேலின் கடந்த வரலாற்றை இயேசு வாழ்ந்துகாட்டுகிறார் என்று மத்தேயுதெளிவுபடுத்துகிறார். தாவீதின் ஊரான பெத்லகேமே, விடுதலைப் பயணம்தோன்றிய இடமான எகிப்து, அடிமைத்தனத்தின் துக்கத்திற்குரிய இடமானராமா போன்றவற்றை இங்கே மத்தேயு ஞாபகப்படுத்தி, இஸ்ரயேலின்வரலாற்றுடன், ஆழ்ந்த இறையியலையும் போதிக்கிறார். மேலும், குழந்தைஇயேசுவின் விடுதலைப் பயணமும் (எகிப்துக்கு), பழைய ஏற்பாட்டில் நடந்ததுபோன்று, குழந்தைகள் கொலையுண்டது என்று ஒன்றுபடுத்திக் காண்கிறார்மத்தேயு.

7.3.மூன்று கட்டளைகள்
மத்தேயுவின் குறிப்புப்படி எகிப்தில் யோசேப்புக்கு வானதூதர் கனவில்தோன்றுகிறார்(மத்2:19-23). மூன்று கட்டளைகளைக் கொடுக்கிறார். முதலில்,"குழந்தையையும் தாயையும்கூட்டிக் கொண்டு இஸ்ரயேல்நாட்டுக்குச் செல்லும்”என்பது: இக்கட்டளைபார்வோனின் கட்டுப்பாடுமுடிந்த பிறகு, வாக்களிக்கப்பட்டஇஸ்ரயேல் நாட்டிற்குமோசே வழிநடத்தியதைநினைவூட்டுகிறது.அதாவது, குழந்தைஇயேசுவுக்கு இருந்த தடைநீங்கியது. இனி, தனது பயணத்தை, மீட்பளிக்கும் பயணத்தை இஸ்ரயேல்நாட்டில் தொடரலாம் என்பது தெளிவாகிறது.

இரண்டாவது, "கலிலேயாவுக்குச்செல்” என்றுகூறப்படுகிறது(மத்2:22). கலிலேயா என்பது பாலஸ்தீனாவின் வடபகுதியாகும். இங்கே அதிகமாகப்பிறவினத்தார் வாழ்ந்தனர். ஆதலின், இஸ்ரயேலரிடம் செல்லும் குழந்தைஇயேசு, அத்துடன் நின்றுவிடாமல் பிறவினத்தாருக்கும் மீட்பாகச ;செல்கிறார்என்பதை இக்கட்டளை விளக்குகிறது: "பிறவினத்தார் வாழும் கலிலேயாவே!இருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்” என்ற எசாயாவின்வார்த்தையை இங்கே நினைவுகூறுவோம்.இயேசு, யூதருக்கும், பிறவினத்தாருக்கும், அதாவது உலகினர்யாவருக்கும் உரியவர் என்ற மத்தேயுவின் தொடர்ந்த போதனை இங்கேவலியுறுத்தப்படுகிறது (காண்மத்1: 1;2 : 2-3)

மூன்றாவது, "நாசரேத்துக்குச் செல்ல வேண்டுமென்ற இறைவனின்கட்டளை. இதற்கு, மத்தேயுவே விளக்கம்தருகிறார்: "இவ்வாறு, நசரேயன்எனப்படுவார்” என்று(மத்1 : 23). இயேசுவின் சொந்த ஊர் நாசரேத்து என்றுலூக்காவும் தெரிவிக்கின்றார் (லூக்1 : 26).

'நாசரேத்தூர் இயேசு' என்ற கருத்திற்கு மத்தேயு முக்கியத்துவம்அளிப்பதற்கானகாரணம் என்ன?பொதுமக்கள் இயேசுவை'நாசரேத்தூர்இயேசு' என்று அறிந்திருந்தனர்.கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரில் அவர் குடியிருந்ததால், 'நாசரேயன்''நாசரேத்தூர் இயேசு' என்று அழைக்கப்பட்டார். குணமாக்கக் கோரிய நோயாளிகள் அவரை, "நாசரேத்தூர் இயேசுவே” என்றுஅழைத்தனர் (மாற்1: 23)."கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்த இயேசு என்னும் இறைவாக்கினர்”என்றே அவரை அறிமுகம் செய்தனர்(மத்2: 11). அவரது சிலுவையில்கூட, "நாசரேத்தூர் இயேசுயூதரின் அரசன்” என்றே எழுதிவைத்தனர்.

ஆக, இந்த நாசரேத்தூர் இயேசு பற்றி நன்றாக மக்களுக்குத்தெரிந்திருக்கிறது. நாசரேத்தூரில் வளர்ந்த இந்த இயேசுதான் பெத்லெகேமில்பிறந்தார் என்று விரிவாக இதுவரை எழுதினார். ஏனெனில் 'மெசியா' என்பதுமக்களின் எதிர்பார்ப்பு (மத் 2:5-6). அப்படியே நம்பினர். ஆதலின், இந்தநாசரேத்தூர் இயேசுயார்?அவர்தான்மீட்பர். ஏனெனில் அவர் பெத்லகேமில்பிறந்தவர், என்று யூதர்களுக்கு அன்று பதிலளிக்க விரும்பினார் மத்தேயு.

7.4. முடிவுரை
இயேசுவின் குழந்தைப் பருவக்குறிப்புகளை எழுதும் மத்தேயு, இயேசுஅனைவருக்கும் மீட்பர் என்ற கருத்தை ஆழமாகவும், தெளிவாகவும்கூறுகிறார்.யூதருக்கும் பிற இனத்தவருக்கும் மெசியாவான இயேசுவின் வாழ்வில் பழையஏற்பாடுமக்கள் எதிர்பார்த்தவை அனைத்தும் நிறைவேறின தென்றும் மத்தேயுபல இடங்களில் எடுத்துக் காட்டுகிறார். ஆக, காலங்களின் நிறைவான இயேசுமனிதரின் மீட்பர் என்பது மத்தேயுவின் போதனையாகும்.

 

இ.லூக்கா நற்செய்தியில்

1. முன்னுரை
லூக்கா நற்செய்தி கி.பி. 70-80 இல் எழுதப்பட்டது. பெரும்பாலானஅறிஞர்களின் கருத்துப்படி லூக்கா தனது நற்செய்தி நூலைத் தற்போதுகாணப்படும் 3:1-2 லிருந்துதான் ஆரம்பித்தார். அதாவது திருமுழுக்குயோவான் போதனையிலிருந்து லூக்கா ஆரம்பித்தார். இயேசுவின் குழந்தைப்பருவம்பற்றியுள்ள முதலிரண்டு அதிகாரங்களைத் தனது நற்செய்தி நூலின்முன்னுரையாக இறுதியில் எழுதினார். இதனால்தான், சிரியாவின் எப்ரேம்என்பவர் எழுதிய விளக்கவுரையில் லூக்1 : 5-2: 52- யை பிற்சேர்க்கையாகக்காண்கிறோம். மேலும் மார்சியன் என்பவர் தொகுத்த 'நற்செய்தி' நூலில்இப்பகுதி(1 : 5-2 : 52) விடப்பட்டுள்ளது. ஆதலின், இயேசுவின் குழந்தைப்பருவநிகழ்ச்சிகளை லூக்கா ஒரு முன்னுரையாகவும், பிற்சேர்க்கையாகவும்எழுதினார் என்பதற்கு இப்புறச் சான்றுகளுடன், கீழ்க்காணும் அகச்சான்றுகளும் உள்ளன.

லூக்கா நற்செய்த pஆராய்ச்சியில் புகழ்பெற்றவரான ழ . கொன்சல்மான்என்பவர் லூக்கா நற்செய்தியில் காணும் மீட்பு வரலாற்றை மூன்று பாகங்களாகப்பிரிக்கிறார் இஸ்ரயேலின் காலம்(3 : 1-4 : 13 ),இயேசுவின் காலம் (4 : 13-22: 3) திருச்சபையின் காலம் (22 : 3 -திப. முடிய), ஆதலின், முதலிரண்டுஅதிகாரங்கள் நற்செய்தி நூலுக்கு முன்னுரையாக உள்ளன. முன்னுரை என்றுசொல்லும்போது, நற்செய்தியில் லூக்கா வலியுறுத்தும் முக்கிய கருத்துக்களைஇந்த முதலிரண்டு அதிகாரங்களிலேயே கோடிட்டுக ;காட்டுகிறார்:

1.1. கோவிலுக்கு முக்கியத்துவம்
"என்வீடு இறைவேண்டலின் வீடு என்று மறைநூலில் எழுதியுள்ளதே.ஆனால் நீங்களோ கள்வர்குகையாக்கினீர்கள்”(19:46) என்றார் இயேசு அவர்நாடோறும் கோவிலில் போதித்துவந்தார் (19:47) என்றுகோவிலின்மேல் இயேசுவுக்கிருந்த நெருங்கியதொடர்பை எழுதுகிறார். தமதுநூலின் முதலிரண்டு அதிகாரங்களிலே லூக்கா கோவிலுக்குமுக்கியத்துவம் அளிப்பதைக்காண்கிறோம். செக்கரியாவுக்குவானதூதர் அறிவிப்பு (1:10),இயேசுவைகோவிலில்காணிக்கையாக அளிப்பது (2:21), காணமற்போன இயேசுவைக் கோவிலில்காண்பது (2: 48), ஆக, இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்ச்சி கோவிலிலேயேஆரம்பித்து (1:5. தொட.), கோவிலிலேயே முடிகிறது (2: 49).

1.2. எளியோருக்கு இரக்கம்
லூக்கா நற்செய்தியை இரக்கத்தின் நற்செய்தியென்றும், எளியோரின்நற்செய்தியென்றும் அழைக்குமளவிற்கு லூக்கா ஏழை எளியோருக்குமுக்கியத்துவம்அளிக்கிறார் (6 : 20; 7 : 22; 16 : 19-31; 12 : 13-21). இயேசுவின்பிறப்பு நிகழ்ச்சியிலும் எளியோர்களானஎலிசபெத் - செக்கரியா, மரியாள்-யோசேப்பு, அன்னா - சிமியோன் போன்றவர்களைச் சுற்றி அந்நிகழ்ச்சிகளைஅமைப்பதில் எளியோருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காண்கிறோம்.

1.3. செபத்தை வலியுறுத்துகிறார்
லூக்கா நற்செய்தி செபத்தின் நற்செய்தியென்றும், தூய ஆவியின்நற்செய்தியென்றும் அழைக்கப்படுகிறது. தனது திருமுழுக்கின்போது(3 : 21),பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கு முன் (6: 12), பேதுருவின் விசுவாச அறிக்கையின்முன்(9 : 18), மறுவுருவாவதற்கு முன் (9:28), செபம் சொல்லிக் கொடுக்குமுன்(11 : 1), பாடுகளின் முன்(22 : 41) இயேசு செபம் செய்ததை லூக்கா தெரிவிக்கிறார். அதேபோன்று தூயஆவிபற்றியும் பலமுறை குறிப்பிடுகிறார். (3: 16, 22;4: 1, 14, 18; 10: 21; 11 : 13; 12: 10, 12). தனது முதலிரண்டு அதிகாரங்களிலும்,செபத்தையும்(1:10; 1:46; 2:38, 39, 52), தூய ஆவியின் செயலையும்(1 : 15, 35,41, 67; 2: 25-27) வலியுறுத்துவதை நாம் காண்கிறோம்.

1.4. மகிழ்ச்சி மிளிர்கிறது
லூக்காவின் நற்செய்தியை மகிழ்ச்சியின் நற்செய்தியென்றும் அழைக்கின்றோம். அதனை மேலோட்டமாகப் படித்தாலும் அதனில் மிளிரும் மகிழ்ச்சியானசூழ்நிலையை நாம் உணரலாம் (காண்5 : 26; 6 : 20-22; 7 : 23; 10: 17, 23; 11 :27; 13:17). முதலிரண்டு அதிகாரங்களிலும் இச்சூழ்நிலையை வெளிப்படுத்துகிறார். எலிசபெத்தின் குழந்தை அக்களிப்பால் துள்ளுகிறது(1:45), அக்குழந்தைபிறந்தவுடன் உறவினர்கள் மகிழ்கின்றனர் (1: 58), வானதூதர் பாடலில் மகிழ்ச்சி(2: 14), குழந்தையைக் கண்டவான தூதர்மகிழ்ச்சி(2:20), இன்னும் சிமியோன்,அன்னா, மரியாள், செக்கரியாசின ;பாடலில் மகிழ்ச்சியைக் காண்கிறோம்.மற்றும், லூக்காவுக்கே உரியமுறையிலான இயேசுகிறிஸ்து எல்லாமக்களுக்கும் மீட்பர் என்ற கருத்தும் (2:11) காணப்படுகிறது. அனைத்தும்'எருசலேம் நோக்கிச் செல்கிறது' என்ற கருத்தை நான்கு பயணங்கள்,"விரைந்து சென்று” என்று உபயோகிக்கும் முறையிலும் (1:39; 2:16)காண்கிறோம்.ஆக, இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளடங்கிய தனது நூலின்முதலிரண்டு அதிகாரங்களை, தனது நற்செய்தி நூலுக்கு மட்டுமல்லாமல்,திருத்தூதர் பணி என்ற தனது அடுத்தநூலுக்கும் முன்னுரையாக வேலூக்காஅமைத்தார்:-திருத்தூதர்பணி 1-2 இல் இயேசுவின் காலம் திருத்தூதர்களின்காலத்திற்கு மாறுகிறது. திருத்தூதர்கள் இயேசுவின்காலத்தையும் திருச்சபையின் காலத்தையும் இணைக்கும் பாலமாக அமைகின்றனர். அதே முறையில்லூக்1-2இல் இஸ்ரயேலரின் காலத்திலிருந்து இயேசுவின் காலத்திற் குமாற்றம்உருவாகிறது. இங்கே திருமுழுக்கு யோவான்இரண்டையும் இணைக்கும் பாலமாக இருக்கிறார்.மேலும், லூக் 1-2ல் திருமுழுக்கு யோவானுக்கும்இயேசுவுக்கும் ஒற்றுமையிருப்பதாக ஆரம்பத்தில்நிகழ்ச்சிகளைத் தொகுக்கும் லூக்கா திருமுழுக்குயோவனை இடையில் விட்டுவிட்டு இயேசுவைப்பற்றித் தொடர்ந்து எழுதுகிறார். இதே நிலையில்அப்பணியில் பேதுரு பற்றியும் பவுல் பற்றியும்அவர்களது போதனைப் பணியில் ஒற்றுமையாகஎழுதினாலும் பேதுருவை இடையில் விடுத்து,பவுலை மட்டுமே இறுதிவரை தொடர்கிறார்.இத்தகைய இலக்கியநடை லூக்காவுக்கே உரியது.

2. லூக்கா தரும் குறிப்புகளின் கட்டமைப்பு
லூக்காதரும் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை இருபெரும்பிரிவுகளில்நோக்கலாம்.

2.1. வானதூதர் அறிவிப்பு (1 : 5-381 : 5-381 : 5-38)
இப்பகுதியில்செக்கரியாவுக்குத்தூதர் தோன்றுதல், தூதர் மரியாவைவாழ்த்துதல், குழந்தையைப் பற்றிக் கூறும் செய்திகள், மரியாவின ;கேள்விக்குவானவர் அளிக்கும்பதில் ஆகியவையாவும் பழைய ஏற்பாட்டுச் சொல்முறையில்அமைந்துள்ளன. ஆதலின், பழைய ஏற்பாட்டை நன்கு அறிந்தவரான லூக்கா,அதே பாணியில் இந்நிகழ்ச்சிகளையும் அமைத்துள்ளார். இத்துடன்,இப்பகுதியை (லூக்1:5-38), இரண்டாகப்பிரித்தும் காணலாம்:1 : 5-25 திருமுழுக்கு யோவான் பிறப்புப்பற்றிய வானதூதரின் அறிவிப்பு1 : 26-38 இயேசு பிறப்புப்பற்றிய வானதூதரின் அறிவிப்பு

2.2. இரு பிறப்புகள்
அடுத்த பெரும்பகுதி, இரு குழந்தைகள்(திருமுழுக்குயோவான், இயேசு)பிறப்புபற்றியது (1 : 57-2 : 20). இங்கும் லூக்கா இயேசுவின்பிறப்பு, பெயர்வைத்தல்- போன்றவற்றிற்கு இணையாக திருமுழுக்கு யோவானின் பிறப்பு,பெயர் வைத்தல் பற்றியும ;எழுதுகிறார்: திருமுழுக்கு யோவான்பற்றி 1: 57-58லும், இயேசுபற்றி 2: 1-20லும் குறிப்பிடுகிறார்.

 

மேலும்திருமுழுக்கு யோவான்(அதி.1) இயேசு(அதி.2)
பிறப்பில் பிறப்பில்சுற்றத்தார் மகிழ்ந்தனர் (65-66) பிரப்பில் சிமியோன், அன்னாள்மகிழ்ந்தனர் (25-38)
செக்கரியாவின்பாடல் (68-74) சிமியோன்பாடல் (29-32)
திருமுழுக்கு யோவான்"வளர்ந்தார் இயேசு"வளர்ந்தார்”(40)

ஆக இடையிடையே ஒரு சில இணைந்த பகுதிகள் இருப்பினும்திருமுழுக்கு யோவானும் இயேசுவும் சமமானவர்கள் என்று தோன்றுமளவிற்குஅவர்களது பிறப்பு நிகழ்ச்சிகளை இணையாக எழுதுகிறார். இத்தகைய ஒப்புமைஅமைப்புஏன்? திருமுழுக்கு யோவான் பிறப்பு நிகழ்ச்சிகளைக் கண்முன்வைத்துஇயேசுவின் பிறப்பு நிகழ்ச்சிகளை லூக்கா எழுதினார் என்றனர் சிலர். மாறாக,இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சியே முன் உதாரணமாக இருந்தது என்றனர் வேறுசிலர்.

2.3. ஆனால் உண்மை என்ன?
இயேசுவையும் திருமுழுக்கு யோவானையும் ஒற்றுமைப்படுத்தவேண்டுமென்பது லூக்காவின் எண்ணமல்ல. மாறாக, இத்தகையஒற்றுமைப்படுத்திக் காணும் அமைப்பில் இயேசுவின் தனித்தன்மையைவெளிப்படுத்தி திருமுழுக்கு யோவானைவிட இயேசு மேலானவர் என்பதைலூக்கா காட்டுகிறார்:

திருமுழுக்கு யோவான்இயற்கையாக
கருத்தரிக்கப்பட்டார்
இயேசு, பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார்
திருமுழுக்குயோவான் ஆண்டவர் முன் பெரியவர் இயேசு உன்னதமானவர்(1 : 32)
திருமுழுக்கு யோவான்ஆண்டவர் முன் ;நடப்பவர் (1 : 16-17) இயேசுவேஆண்டவர் அவரே ஆண்டவராகிய மெசியா

 

இயேசுவுக்கேயுரியசிறப்புப்பகுதிகளைலூக்காஇணைக்கிறார்.-திருமுழுக்குயோவான் என்ற இறைவாக்கினர் இயேசு கொண்டுவந்தஇறையரசில் ஓர் அங்கத்தினர் அல்ல (லூக்7 : 26-28). அவரது திருமுழுக்கு,இயேசுவின் திருமுழுக்கிற்கு அப்பாற்பட்டது (3 : 16). திருமுழுக்கு யோவான்மெசியாவல்ல (3: 15)அடுத்து, கடவுளின் மீட்பை அறிவிப்பவர் திருமுழுக்குயோவான்.ஆனால் அதனை அளிப்பவர் இயேசு (2:11).லூக்கா தரும் இயேசுவின் குழந்தைப் பிறப்புக் குறிப்புகளடங்கியமுதலிரண்டு அதிகாரங்களில் நாம் காணும் செய்தியென்னவென்றுசுருக்கமாகக்கண்டோம். ஆனால்அவற்றின் விளக்கத்தை இனிக்காண்போம்.

3. ஆண்டவரின்தூதர் தோன்றினார்
"ஏரோது யூதேயா நாட்டு அரசனாக இருந்த காலத்தில், அபியாவகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர்...செக்கரியாவுக்கு வானதூதர் தோன்றினார்” என்று லுக்கா குறிப்பிடுகிறார்(லூக்1 : 5-11).தாம் எழுதும் குறிப்புக்கு வரலாற்று வடிவம் கொடுக்க, 'ஏரோதின்காலத்தில்' என்கிறார் லூக்கா. திருமுழுக்கு யோவான் பிறப்பைப்பாலஸ்தீனாவுடன் இணைக்கும் லூக்காவின்முயற்சி இது. இதுலூக்காவின்நடை. இங்கேலூக்கா பெரிய ஏரோதுவைக் குறிப்பிடுகிறார். ஏரோதுகி.மு.37 முதல் பாலஸ்தீனாவை ஆண்டு வந்தான். 'யூதேயா' என்பதுபாலஸ்தீனாவின் யூதேயாப் பகுதியை மட்டுமல்லாமல், பாலஸ்தீனாமுழுவதையுமே குறிக்கிறது(லூக் 7 : 17; லூக் 10 : 37). 'யூதேயா' என்றால்‘யூதர்களின்நாடு' என்று பொருள்படும் என்றும்சில அறிஞர்கள் கருதுகின்றனர்(லூக்4:44;6: 17; 23: 5; திப2:9; 10: 37). கி.மு. 4இல் இந்தப் பெரிய ஏரோதுஇறந்துவிட்டார்.

3.1. இத்தருணத்தில் செக்கரியாவுக்கு வானதூதர் தோன்றுகிறார்
பழைய ஏற்பாட்டில் மனோவாவின ;மனைவ pமலடியாயிருந்தபோதுஆண்டவர் தோன்றினார் (நீத13: 3). பழையஏற்பாட்டில், 'ஆண்டவரின்தூதர்'என்றால் அது ஆண்டவருக்கே சமம் (தொநூ21 : 17; 22 : 10-18; 16 : 7-13; 31 :11-13; விப 3: 2-6; 14: 19-24; நீத2: 1-5). கடவுளின் பிரசன்னம் மனிதரிடையேஇருப்பதை விவரிக்க இப்படிக் குறிப்பிட்டனர் . பிறகு ஒருதனிப்பட்ட நபரைக்குறித்து கூறப்பட்டது (செக்1: 11-14). மேலும், யாவேயின் உன்னத தன்மையைக்காப்பாற்ற (வுசயளெஉநனெயnஉந) யூதர்களால் தங்கள் சமய வழக்கில் தூதர்கள்அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இங்கே, அத்தூதரை, கபிரியேல் என்றுபெயரிட்டுக் குறிப்பிடுகிறார்.தானியேல் என்ற இறைவாக்கினர் பலியிடும் போது கபிரியேல் என்றதூதர்வருகிறார் (தானி9 : 21; காண்8 : 16); மற்றும் மிக்கேல் (தானி10: 13), ரபேல்(தோபி 3 : 17) போன்ற தூதர்களும் பழைய ஏற்பாட்டில் வருகின்றனர்.இவர்களின் பெயர்'யேல்' (எல்) என்று முடிவதால், இவர்கள், 'கடவுளின் மனிதர்'ஆவர்.

செக்கரியாவுக்கு இத்தூதர் தோன்றிய ஆறாம் மாதத்திலே, இதேகபிரியேல் தூதர் மரியாளுக்கும் தோன்றி இயேசுவின் பிறப்புப்பற்றிஅறிவித்ததாக லூக்கா எழுதுகிறார்.திருமுழுக்கு யோவான் மீட்பரை அறிவிக்கிறார் இயேசு மீட்பைஅளிக்கிறார். கடவுளின் மகனான இயேசு இவ்வுலகிற்கு வருகிறார். ஆதலின்,இவர்களின் பிறப்புப் பற்றி வானதூதர் அறிவிப்பதாக எழுதும் லூக்காதெரிவிக்கவிரும்புவது என்ன? மனித மீட்புக்கு இறைவனே வழிகோலுகிறார்.அவரே அதற்கு முதற்காரணமாக இருக்கிறார். இதுதான் இந்த வானதூதரின்வருகைவெளிப்படுத்துகிறது.

அந்த மீட்பர் இயேசுபிறந்தபோது, அப்பிறப்பைப் பற்றி இடையர்களுக்குஆண்டவருடைய தூதர் அறிவித்ததாக லூக்கா எழுதியதற்கும் அதேநோக்கந்தான்(லூக்2: 11). "உங்களுக்காக ஒருமீட்பர் பிறந்துள்ளார்” என்றுஉலகிற்கு (இடையர்) வானதூதர் (ஆண்டவர்) அறிவிக்கின்றனர். ஆதலின்மீட்புவரலாறு என்பது இறைவனின்கொடை என்பது லூக்காவின்கருத்து.

4. இது எங்ஙனம் ஆகும்? (மரியாவின்மனநிலை)
நாசரேத்தூரிலேமரியா என்ற கன்னிகையிடம் ஆண்டவரின்தூதர்வருகிறார்: கிறிஸ்து பிறப்புப்பற்றி அறிவிக்கிறார் (லூக்1 : 26-38).மத்தேயு நற்செய்தியில்(2 : 1) வானதூதர் யோசேப்புக்கு பிறப்புப்பற்றிபெத்லகேமில்அ றிவிக்கிறார்.மரியாவைச் சந்திக்கும் தூதர், "அருள்மிகப் பெற்றவரே வாழ்க” என்றவாழ்த்தை கூறுகிறார். அதாவது, 'மீட்பு உண்டாகப் போகிறது மகிழ்ச்சியடைவாயாக' என்றபொருள ;கொடுக்கும்கய்ரேயின் (முயசைநin) என்றகிரேக்கவார்த்தையைப் பயன்படுத்துகிறார் (காண். செப்3:14; செக்9:9; புல4: 21).

அதன்பிறகு, "மரியே அஞ்சவேண்டாம்” என்றுஆரம்பித்து, "இதோ,கருவுற்று ஒரு மகனைப்பெறுவீர், அவருக்கு "இயேசு” என்னும் பெயரிடுவீர்” என்றுகூறி அக்குழந்தையின ;தன்மைகள் பற்றியும் வானதூதர் மரியாவிடம்அறிவிக்கிறார் (லூக்1 : 30-38).

இதைக்கேட்டமரியா, "இதுஎப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே”என்றுபதிலளிக்கிறாள். ஏன் இப்படிக் கூறுகிறார்? இதற்கு இரண்டுவிதமானவிளக்கங்களைப் பொதுவாக அறிஞர்கள் காண்கின்றனர்.

அதாவது, மரியாளின் உளவியலில் உருவான கேள்வியாகப் பலர்கூறுகின்றனர். இத்தகைய மனநிலை உருவாகப் பின்வரும் காரணங்கள்குறிப்பிடப்பட்டன:-

4.1. கன்னிமை வார்த்தைப்பாடு
மரியாள் இளமையிலிருந்தே கன்னிமை வார்த்தைப்பாடுகொடுத்திருந்தாள் என்பது ஒரு பழைய நம்பிக்கை. புனித அகுஸ்தினார்,கிரகோரியார் போன்றோர் இவ்வாறு நம்பினர். ஆனால் நிச்சயமாகஇக்காரணத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில், மரியா இத்தகையநேர்ச்சி எடுத்ததாக நற்செய்தி கூறவில்லை மரியா வாழ்ந்த காலத்தில் யூதர்சமுதாயம் கன்னிமை வாழ்வை விடத் திருமணவாழ்வையே அதிகம் போற்றியது.மலடி, கன்னிமைத்தன்மை இழித்துரைக்கப்பட்டது (நீத11 : 31-39). மாறாக,யோசேப்புடன் முழுமையான திருமணவாழ்வை ஏற்கும் நோக்கத்தில் தான்யோசேப்புக்கும் மரியாளுக்கும் மண ஒப்பந்தம ;நடைபெற்றது. கன்னிமை நேர்ச்சிஎடுத்துக்கொண்டு, திருமணத்திற்கு மனம் இசைவது முரண்பாடான செயல்.

4.2. பழைய ஏற்பாட்டின் எண்ணத்தில்
நீதித்தலைவர்கள் நூலில் நாம் காணும் ஒருநிகழ்ச்சி: கிதியோனைஇஸ்ரயேலின் விடுதலைவீரராக இறைவன் அழைக்கிறார். அந்த மீட்பின்செய்தியைக் கேட்ட கிதியோன், "என் தலைவரே! எவ்வழியில் நான்இஸ்ரயேலரை விடுவிப்பேன்”என்று கூறுகிறார்(நீத6: 11-24). ஒரு விடுதலைவீரனின் தேவையை நன்கே உணர்ந்திருந்தும், அத்தகைய அழைத்தல் தனக்கேவருவது கண்டு மேலும் விளக்கம் அறிய அப்படிக்கேட்கிறார். அதேபோன்று,ஒருபக்தியுள்ள இஸ்ரயேலான மரியா மெசியா பற்றி எசா7: 14 வழியாகஅறிந்திருந்தாள்: 'ஒருகன்னிப்பெண் கருவுற்று மகனைப் பெறுவாள்' என்று.ஆனால், அக் கன்னிப் பெண்தானாக இருக்க நேர்வதைக் கண்டு- தான்ஒரு மணஒப்பந்தம் ஆனவள் என்றநிலையில் - மேலும் விளக்கம் பெற இப்படிக்கேட்கிறாள்.

4.3. இயல்பானது
வானதூதர் அறிவிப்பைக் கேட்டவுடன், 'இதுஎப்படி நிகழும்? நான்கன்னியாயிற்றே, அதாவது, நாங்கள் கூடிவாழ வேண்டுமா?' என்று கேட்டதாகஅலெக்சாந்தர் ஜோன்ஸ் என்பவர் கூறுகிறார். ஆனால், இன்றையபெரும்பாலான விவிலிய ஆசிரியர்களின் கருத்துப்படி 'நான் இதுவரைமனிதனை அறியவில்லையே! ஆகவே இது எங்ஙனம் ஆகும்' என்றுஇயற்கையான முறையில் மரியாகேட்டாள். அதாவது, மண ஒப்பந்தமே ஆனநிலையில், இது எப்படி ஆகும் என்று வினா எழுப்பும் போது, இயல்பாக எல்லாக்கன்னிப் பெண்களுக்கும் எழும் இயற்கையான கேள்வியே ஆகும்.

4.4. இலக்கிய அமைப்பு ஒரு காரணம்
'இதுஎப்படி நிகழும்?' என்று மரியா கேட்பதாகலூக்கா அமைக்கிறார்;தாம் எழுத விரும்பும் இலக்கிய அமைப்பின் காரணமாக இவ்வாறு அமைக்கிறார்.தமது நற்செய்தியில் திருமுழுக்கு யோவான், இயேசு - இவ்விருவர் பிறப்புப்பற்றிய அறிவிப்பை எழுதும் லூக்கா ஒரே இலக்கிய பாணியைக் கையாள்கிறார்:

1. வானதூதரின்வருகை (1 : 11, 26)
2. அச்சம் (1 : 12, 29)
3. "அஞ்சாதீர்” (1 : 13, 30)
4. குழந்தையின்பண p(1 : 15-17, 32, 33, 35)
5. கேள்வி(1 : 18, 34)
6. அடையாளம்அளித்தல்(1 : 20, 36- 37).

இதனில்கேள்வியும், அடையாளமும்வருகிறது. குழந்தைபிறப்புப்பற்றியஅறிவிப்புஉள்ளபழையஏற்பாட்டுப்பகுதியில்கேள்விகேட்டல்ஒருஅங்கமாகும்(உம். தொநூ18 : 2).

4.5. நோக்கமென்ன?
இக்குழந்தையின் பிறப்பு இயல்பானதன்று கடவுளின் அருளால் நிகழ்வதுஎன்ற கருத்தைத் தெளிவாக இத்தகைய இலக்கிய அமைப்பு அளிக்கிறது.ஆதலின் மரியாவின ;மனநிலையில் எழுந்த வினா என்பதைவிட, மீட்பரின்பிறப்பில் உள்ள சிறப்புத் தன்மையை லூக்கா வலியுறுத்தவே இவ்வாறுஎழுதுகிறார் என்றும் கொள்ளலாம்.

5. கன்னித்தாய் மரியாள்
"இதுஎப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே”என்ற மரியாவின ;கேள்விக்குவானதூதர், "தூயஆவி உம்மீது வரும். உன்னதக ;கடவுளின் வல்லமை உம்மேல்நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தைஇறைமகன் எனப்படும். . .”என்று பதிலளிக்கிறார் (1 : 35-36).

பெரும்பாலான விவிலிய அறிஞர்களின் கருத்துப்படி, கன்னிப் பெண்தனிப்பட்டவிதமாகக் கருவுறுவதைத்தான் லூக்கா இப்பகுதியில்(1 : 35-36)குறிப்பிடுகிறார். இதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்:- மெசியாபிறப்புப்பற்றி பழைய ஏற்பாட்டில் எசாயா புத்தகத்தில் உள்ள குறிப்பைநோக்கும்போது, 'தாவீதின் குலத்தில் கருவுற்றிருக்கும் அந்தஇளம் பெண் ஓர் ஆண்மகவைபெற்றெடுப்பாள்' என்றுள்ளது (எசா 7 : 13-14). மரியாவுக்குக்கணவராக வர மணஒப்பந்தம் செய்துள்ள யோசேப்பு தாவீதின் குலத்தவராகலூக்கா குறிப்பிடுகிறார் (லூக்1 : 27). மேலும், லூக்கா நற்செய்தியில் மரியாவைஇருமுறை கன்னி என்றுகூறி(1 : 26) #8220;கருவுற்று ஒருமகனைப் பெறுவீர்'(1 : 31) என்ற அழைத்தல் மரியாவுக்கு வருகிறது. இச்செய்தி எசா7: 14க்குச்சமமாக வருகிறது. ஆகவே மரியா கன்னித்தாய் என்ற கருத்து குறிப்பிடப்படுகிறது. ஆனால், இதற்கு வேறுசிலமுக்கியக் காரணங்களும ;உள்ளன.

1) இயேசுபிறப்பைப் பற்றியும், திருமுழுக்கு யோவான் பிறப்புப் பற்றியும்சமமாகக் கூறி, சொல்லுகின்ற பாணியிலும், தருகின்ற குறிப்புகளிலும், இயேசுதிருமுழுக்கு யோவானைவிட மேலானவர் என்றும், உன்னதமானவர் என்றும்தெளிவுபடுத்துகிறார். இயேசு, திருமுழுக்கு யோவானைப் போல் இயல்பானமுறையில் பிறந்திருந்தால், அதாவது, மரியாள் எலிசபெத்துபோல்இயற்கையான முறையில் கருவுற்றிருந்தால் இயேசுவின் மேற்சொன்னமுக்கியத்துவம் மதிப்பில்லாமல் போகும்.

2) மரியா எலிசபெத்தைக் காணச்சென்ற போது"ஆண்டவர் உமக்குச்சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய ந Pபேறுபெற்றவர்” என்று உரக்கக் கூவிமரியாவை வாழ்த்தினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் (1 : 45). இதைஎலிசபெத்து கூறும்போது, 'உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசீர்பெற்றதே'(1 : 42) என்று மரியாவை வாழ்த்தியும் இருக்கிறார். இந்நிலையில், "கடவுளால்இயலாதது ஒன்றுமில்லை” என்று குழந்தைப் பிறப்புப் பற்றி வானதூதர்கூற்றினை மரியாள் நம்பியதன் பலனை எலிசபெத்து காண்கிறார். ஆதலின்'கன்னிப்பெண் கருவுறுவதில் சிறப்புத் தன்மை இல்லையென்றால், மரியாவின்நம்பிக்கை (1 : 45) அவசியமற்றது.

3) திருமுழுக்குயோவான் என்ற குழந்தையைப் பெற்றெடுப்பதில்எலிசபெத்துக்குத் தடையாயிருந்தது அவளது முதிர்ந்த வயது (லூக் 1 : 18).கடவுள் அந்தத் தடையை (முதிர்ந்த வயது) நீக்கி குழந்தை பிறக்கச் செய்கிறார்.அதேப் போன்று, 'மரியா ஒருகன்னி' என்று இருமுறை லூக்கா கூறுகிறார். அவர்கருவுருவதில், அவரது நிலையான கன்னித் தன்மை தடையாக இருக்கிறது.எலிசபெத்துக்கு அவரது மலட்டுத் தன்மையும் முதிர்ந்த வயதும் கடவுளால்தவிர்க்கப்பட்டபோது, மரியாவுக்கு அவரது கன்னித் தன்மை ஒருதடையாகஇல்லாமல் கடவுளால் செய்யப்படுகிறது. அதாவது, அவரது கன்னித்தன்மைநிலைக்கிறது. அது ஒருதடையாக இருப்பதை தூய ஆவிநீக்குகிறார் (1 : 35);குழந்தைப்பேறு அளிக்கிறார்.

எனவே, மரியா கன்னித்தாய் என்பதை லுக்கா இங்கே தெளிவாகக்குறிப்பிடுகிறார்.

6. மரியாள் - எலிசபெத்து சந்திப்பு
யூதா மலைநாட்டிலுள்ள ஓர் ஊரில் வாழ்ந்த தமது உறவினளானஎலிசபெத்தை மரியா காணச் சென்றார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்(லூக் 1 : 39-45).லூக்கா மட்டுமே இத்தகைய சந்திப்புப்பற்றித ;தெரிவிக்கிறார்; இதற்குப்பின்வரும் நோக்கங்களைக் கூறலாம்.

1) இயேசுவின் பிறப்பு அறிவிப்பின்போதே (லூக் 1 : 26-38) தூதர்மலடியானஎலிசபெத்துகருவுற்றிருப்பதைஓர் அடையாளமாகக்கொடுத்து(லூக்1 : 36-38) இருதாய்மார்களையும்இணைத்துவிடுகிறார். எலிசபெத்துகருத்தாங்கிஐந்துமாதமளவும்பிறர்கண்ணில்படாதிருந்தார்(1 : 24); ஆனால்ஆறாம்மாதத்தில்மரியா எலிசபெத்தை சந்திப்பதிலிருந்து அவரது "மறைவுநிலை”முடிவடைகிறது. அத்தகைய நிலைக்கு அதாவது தாழ்நிலையிலிருந்துஉயர்ந்த நிலைக்கு மரியாவிடம் கருவுற்றிருக்கிற மீட்பர் இயேசுவேஎலிசபெத்தையும் அழைத்திருக்கிறார் என்பது புலனாகிறது(1 : 24-25).

2) எலிசபெத்துகருவுற்றுள்ளதைக்கடவுள்மூலம்அறிகிறார் மரியா.ஆனால், மரியாகருவுற்றிருப்பதைத்தனதுவயிற்றினுள்ளேஉள்ளகுழந்தைஅக்களிப்பால்துள்ளியதின்மூலம்எலிசபெத்துஅறிந்துகொள்கிறார் (1 : 44).இயேசுவின் முன்னோடியாக அழைக்கப்பட்ட திருமுழுக்குயோவான் -"ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்” (1 : 18).தனது தாயின் உதரத்திலிருந்தே அப்பணியை, ஒர் இறைவாக்கினருக்கு உரியபணியை ஆற்றினார் என்பது லூக்காவின்கருத்து. இதன்மூலம், மரியாகுழந்தையுடன் இருப்பதையும், அக்குழந்தைதான் மெசியா என்பதையும்எலிசபெத்து அறிகிறார்.

3) மரியாவும் எலிசபெத்தும் கடவுளின் திருவெளிப்பாட்டையும் அவரதுஇரக்கத்தையும் பராமரிப்பையும் தங்கள் வாழ்வில் உணர்ந்ததனால் அவ்விருவரும் கடவுளை வாழ்த்துவதாக லூக்கா அமைக்கிறார் (1 : 42-45, 46-55).

4) கடவுள் எலிசபெத்துக்குச் செய்த சிறப்பான அருளைவிடமரியாவுக்குச் செய்தது மேன்மைமிக்கதாக உயர்ந்து நிற்கிறது என்பதையும்லூக்கா இந்நிகழ்ச்சி மூலம் தெரிவிக்கிறார். எப்படி?

6.1. பழைய ஏற்பாட்டுப் பின்னணியில்
" கேனியனான கெபேரின் மனைவி யாவேல்! நீ பெண்களுள்பேறுபெற்றவள்! கூடாரம் வாழ் பெண்களுள்நீ பேறுபெற்றவள்” என்றுதெபோரா கூறுகிறாள் (நீத 5 : 24). "மகளே உலகில் உள்ள எல்லாப்பெண்களையும்விட நீஉன்ன தகடவுளின் ஆசிபெற்றவர்” என்று யூதித்தைநகர பெரியவரா னஊசியா வாழ்த்துகிறார். இஸ்ரயேலரின் எதிரிகளைக்கொல்ல ஆண்டவர் இவர்களைக் கருவிகளாகப் பயன்படுத்தியதுதான்இத்தகைய முறையில் இவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதன் காரணம். அதாவது,உடலால் பலவீனமுள்ளவர்கள் வலிமைமிக்கவர்களை வென்றது. அதேபோன்று, மரியாவும் மீட்பரை உலகிற்களிக்கும் கருவியாகக் கடவுளால்தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், "உம் வயிற்றில் வளரும் குழந்தையும்ஆசிப்பெற்றதே” என்று மரியாவை எலிசபெத்து வாழ்த்துவது போன்று கடவுள்மோசேயையும் வாழ்த்துகிறார் (இச 28 : 1-4). மேற்சொன்னபடி, யூதித்தும்,யாவேலும், மோசேவும் தனிப்பட்ட முறையில் வாழ்த்தும், ஆசியும்பெறவில்லைகடவுளின் கருவியாகச் செயல்பட்டதனால் ஆசிபெற்றனர். அதேபோன்று,கடவுளின ;திட்டத்தை நிறைவேற்றுவதில் கருவியாகச் செயல்பட்டதனால்மரியாள் ஆசிபெறுகிறார். இதனால் மரியா உயர்ந்துநிற்கிறாள்.

6.2.புதிய ஏற்பாட்டுப் பின்னணியில்
"உம்மைக் கருத்தாங்கிய பாலூட்டி வளர்த்த உம்தாய்பேறு பெற்றவர்”என்று தன்னைப்புகழ்ந்த ஒருவருக்கு#8220;இறை வார்த்தையைக் கேட்டு அதைகடைபிடிப்போர் இன்னும் அதிலும் பேறுபெற்றோர்” என்று இயேசுபதிலளிக்கிறார் (லூக் 11 : 28). இதே போன்று லூக்8:2 லும் கடவுளின்வார்த்தையைக் கேட்டு நடப்பதை வலியுறுத்துகிறார். இங்கே, எலிசபெத்தின்வாழ்த்தில், "ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பியநீர்பேறுபெற்றவர்'' என்று மரியாவை வாழ்த்தி, மரியாவைக் கடவுளின்வார்த்தைப்படி வாழ்வோருடன் இணைக்கிறார். இவ்வாறு மரியாவின்மேன்மையைலூக்காவெளிப்படுத்துகிறார்.

ஆக, மரியா - எலிசபெத்தின ;சந்திப்பைப்பற்றி குறிப்பிடும் லூக்கா,மரியாவின் மேன்மையை விளக்குவதற்காக அதனைஎழுதுகிறார். அத்துடன்,திருமுழுக்கு யோவானின்ப ணியையும், இறைவன் எளியவர்களை உயர்த்துகிறார்என்றகருத்தையும்கூட எடுத்துக்காட்டுகிறார்.

7. பாடல்களின் தோற்றம்
மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது, "ஆண்டவரை எனதுஉள்ளம்போற்றிப் பெருமைப்படுத்துகின்றது” என்ற நீண்டதொருபாடல் பாடியதாகலூக்கா எழுதுகிறார் (லூக்1 : 46-55). இதன் சூழ்நிலையையும் பொருளையும்அறியுமுன், இக்குழந்தைப் பருவ நிகழ்ச்சியில் காணப்படும் பாடல்களின்பொதுவான விளக்கம் காண்போம்.லூக்கா தரும்குழந்தைப்பருவ நிகழ்ச்சியில் சிறப்பாக மூன்று பாடல்கள்வருகின்றன: மரியாவின்பாடல் (1 : 46-55), செக்கரியாவின்பாடல் (1 : 67-80), சிமியோனின்பாடல் (2 : 29-32).இம் மூன்றையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் பின்வரும் கருத்துகள்வெளிப்படுகின்றன.

1) யார் பெயரில் இப்பாடல்கள் உள்ளனவோ அவரே பாடினாரா?எளியவர்களும், பாமரர்களுமான இவர்கள் நினைத்த நேரத்தில் இப்படிப்பாடல்களை உருவாக்கியிருக்க முடியுமா? இதுகேள்விக்குரியது.

2) லூக்காவே இப்பாடல்களை அமைத்தார் என்று கூறப்படுகிறது.ஆயினும் புதிதாக உருவாக்கவில்லை. முன்னரேயிருந்த பாடல்களை லூக்காஉபயோகித்திருக்கிறார். இஸ்ரயேல், தாவீது- போன்றோருக்கு முக்கியத்துவம்அளிப்பதாலும ;(1 : 54, 69), எங்கள் முன்னோர் என்று குறிப்பிடுவதாலும்(1 : 55,72), பிறவினத்தவர் மத்தியில் இப்பாடல்கள் வந்திருக்காது. யூதர்கள் மூலமோஅல்லது யூதத் கிறிஸ்தவர்கள் மூலமோ இப்பாடல்கள் உருவாக்கப்பட்டு,அவர்களிடமிருந்து லூக்கா எடுத்தாண்டிருப்பார். இப்பாடல்கள் இங்கேஇல்லையென்றாலும ;குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளின் தொடர்பு அற்றுப் போகாது.ஆனால், லூக்காவின் மனநிலையும் இறையியலும் இங்கே வெளிப்படுகிறதுஎன்னஅது?

3) லூக்காவின் மனநிலையும் இறையியலும் இப்பாடல்களில்வெளிப்படுகிறது.செக்கரியாவின் வீட்டிற்கு வந்தமரியா, எலிசபெத்தை வாழ்த்தினார்”என்று மட்டுமே ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (லூக்1 : 40). ஆனால் அதுஎத்தகைய வாழ்த்து என்று லூக்க hகூறவில்லை. ஆகவே மரியாவின் பாடலில்(1:46-55) அதற்கு வார்த்தை வடிவம் அளிக்கிறார் என்பது அறிஞர்களின்கருத்து. மேலும், "இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதியவுடன்செக்கரியா பேசத் தொடங்கி, "கடவுளைப் போற்றினார்” என்று லூக்காகூறுகிறார் (லூக்1:64). ஆனால், "இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரைப்போற்றுவோம்” என்று தொடங்கும் செக்கரியாவின் பாடல் (1:67-80)செக்கரியாவின் மனநிலைக்கு வார்த்தை வடிவம்அளிக்கிறது. சிமியோன்இயேசுவின் பெற்றோருக்கு ஆசி கூறி வாழ்த்தினார் என்று லூக்காகுறிப்பிடுகிறார் (2:34). ஆனால், அவர் மீட்பர் இயேசுவை முன்னிட்டுமனிதர்களான அவரது பெற்றோரைப் புகழுமுன், சிமியோன் கடவுளைப்புகழ்ந்தார்என்றுவெளிப்படுத்த, "ஆண்டவரே, உமதுசொற்படி உம் அடியான்என்னை இப்போது அமைதியாகப் போகச் செய்வீர்” என்ற பாடலைச்சிமியோனுக்கு லூக்கா அமைத்தார்.

4) வெளிப்படும் இறையியல்: கடவுளின் அருளையும் இரக்கத்தையும்உணரும் மனிதர் இறைவனைப் புகழ்வர் கடவுளின் மீட்பு இறைபுகழ்ச்சியைமனிதரிடையே உருவாக்குகிறது என்பது லூக்காவுக்கே உரிய இறையியல்கருத்து. எப்படி யூதித் இறைவனின் ஆசீரைப் பெற்றவுடன் புகழ்க்கீதம்பாடினாரோ (யூதி16 : 1-17), அதேபோன்று லூக்காவின் கதாபாத்திரங்களும்செய்கின்றனர்.

"இது எப்படி நிகழும்?” என்று வானதூதரிடம் மீட்பர் தன்னிடம்பிறப்பதற்கான இயலாமையை வெளிப்படுத்திய மரியா (1:34), #8220;கடவுளால்இயலாதது ஒன்றுமில்லை” என்ற பதிலைப் பெற்று (1:37) இறையருளைநிறையவேபெறுகிறார். ஆதலின், "பெண்களுக்குள்ஆசிபெற்றவர்” (1 :42).இப்பேற்றின் விளைவாக, கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்தஅவரை மரியாபுகழ்கிறார்.

மலடியாயிருந்த தமது மனைவி ஒரு மகனைப் பெறுவார் என்றநற்செய்தியைக் கேட்டு செக்கரியா, "நானோ வயதானவன் என் மனைவியும்வயது முதிர்ந்தவர் ஆயிற்றே”என்று தங்கள் இயலாமையைத் தெரிவிக்கிறார்.ஆனால் அறிவித்தபடியே குழந்தை பிறந்ததைக் கண்டு, அப்பேற்றின்விளைவாக இறைவனைப் புகழ்கிறார் செக்கரியா. அதேபோன்றுதான்,'ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் தாம்சாகப் போவதில்லை' என்றுதூய ஆவியால் அறிவிக்கப்பட்டிருந்தது நிறைவேறியதைக ;கண்ட சிமியோன்கடவுள் தனக்களித்த அம்மாபெரும் பேற்றை நினைத்து, " ஆண்டவரே உம்சொற்படியே உம் அடியான் என்னை இப்போது அமைதியுட்ன் போகச்செய்வீர்”என்று பாடுகிறார் (2 : 29-32).

8. மீட்பர் பிறக்கிறார்
இயேசுவின ;முன்னோடி திருமுழுக்கு யோவான் பிறப்புப் பற்றிஇருவசனங்களிலே முடித்துக் கொள்கிறார் லூக்கா (1 : 57-58). ஆனால்,இயேசுவின்பிறப்பு பற்றி நிரம்பவே கூறப்பட்டுள்ளது. சான்றாக, பெற்றோர்பெத்லகேம் செல்லுதல், அப்போதிருந்த வரலாற்றுச் சூழ்நிலை, அன்றுபெத்லகேமில் இருந்த மக்களின் நிலைபற்றி விவரமாகவும் (2: 1-10) லூக்காஎழுதுகிறார். அத்துடன் இயேசுவுக்கேயுரிய பின்வரும் நிகழ்ச்சிகளையும்குறிப்பிடுகிறார்.இடையருக்குத் தூதரின்செய்தி (2 : 8-12)வானதூதர்களின்பாடல் (2 : 13-14)இடையர்வருகை (வ. 15- 16)பிறருக்கு அவர்களின் அறிவிப்பு (வ. 17- 18)மரியாவின் மனநிலை (வ. 19)இடையர் திரும்புதல ;(வ. 20)இவற்றை நோக்கும் போது இயேசுவுக்கு லூக்கா அளிக்கும் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.

8.1.பிறப்புச் சூழ்நிலை
அகுஸ்துசீசர் உரோமைப் பேரரசராக இருந்தகாலத்தில் இயேசுவின்பிறப்பு நிகழ்ந்ததாக லூக்காவின் முதல்குறிப்பு கூறுகிறது(2 : 2).கி.மு. 27முதல் கி.பி. 14 வரை உரோமைப் பேரரசை இவர் ஆட்சிசெய்தார்.இந்த அகுஸ்து சீசரை குறிப்பிடுவதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்.ஒன்று, இயேசுவின் பிறப்பை உலக வரலாற்றுடன் இணைக்கும் நோக்கு.லூக்காவின் எண்ணப்படி இயேசுவின் பிறப்பும் பணியும் உலக வரலாற்றுடன்இணைந்து செல்கின்றன. இவர் வரலாற்று நோக்குடையவரென்பதை இவரதுநற்செய்தி நூலில் பல இடங்களில ;காண்கிறோம ;(3: 1;3: 2;8: 3;9: 7; 13: 1-2; 13 : 4; 19 : 12-14).

இரண்டாவது காரணம்: இயேசுவின் பிறப்புக்காலத்தில் அமைதியின்மன்னராக அகுஸ்து சீசர் ஆட்சி செய்தததால் அவர் உலக மீட்பர் என்றுஅழைக்கப்பட்டார். ஆனால் இச் சூழ்நிலையில் பிறக்கும் இயேசு தான்உண்மையில் 'உலகின்மீட்பர்' என்றுலூக்காஅறிவிக்க விரும்பினார்: இதனைவானதூதர் மூலம், "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” என்று அறிவிக்கிறார் (2 : 11).

அடுத்தசூழ்நிலை :- "உலகமுழுவதும்” அதாவது உரோமைப் பேரரசில்கணக்கெடுப்பு நடந்தது என்று குறிப்பிட்டு, அக்கணக்கெடுப்பின் காரணமாகயோசேப்பும் மரியாவும் பெத்லகேம் சென்றதாக லூக்கா எழுதுகிறார்.

இக்கணக்கெடுப்பு எப்பொழு துநடந்தது?#8220;

சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதல்முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்டது”. வரலாற்றுக் குறிப்புப்படிகுரேனியு என்பவர் ஆளுநராக கி.பி. 6-7ல்தான் இருந்தார்.அப்பொழுதுதான் கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். ஆனால் இயேசுஏரோதின் காலத்தில் பிறந்தார். இந்த ஏரோது கி.மு. 4-லிலேயே இறந்துவிட்டார். ஆதலால், கி.மு, 4-லிலோ அல்லது அதற்கு முன்னேயோ இயேசுபிறந்திருக்கவேண்டும். ஆதலின், இயேசு பிறந்து சுமார் 10 ஆண்டுகளுக்குப்பின்னே நடந்த கணக்கெடுப்பை அவரது பிறப்புடன் லூக்கா இணைத்துஎழுதுவதன் நோக்கம்: லூக்காவின்படி இயேசுவின் பெற்றோர் நாசரேத்ஊரில்தான் வாழ்ந்தனர் (1 : 26). அவர்கள் பெத்லகேமுக்குச் செல்ல இக்கணக்கெடுப்பு ஒருகாரணமாக அமைகிறது. அடுத்து லூக்காவின் இறையியல்படிஇயேசுவின் பிறப்பு உலகவரலாற்றுடன் இணைந்து செல்கிறது.

8.2. இயேசு பிறக்கிறார்
'மரியா தம்தலை மகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்குஇடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையை துணிகளில் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தினார்' என்ற செய்தியைக் கூறுகிறார் லூக்கா (2 : 6-7).இங்கே, விடுதி (சத்திரம்) என்றால் 'கட்டாலுமா' என்ற கிரேக்கவார்த்தையைக் குறிக்கிறது. இதற்கு வீட்டிலுள்ள பிரதான அறை என்றுதான்பொருள். தீவனத் தொட்டி என்றால் சிறிய இடம் என்றும் பொருள்படும்.ஆதலின், இன்றைய வழக்கில் விடுதி (சத்திரம்) என்றுரைப்பதைவிட,யோசேப்புக்கும் மரியாளுக்கும் வீட்டின் பிரதான அறையில் இடமில்லாததால்,சிறிய இடத்தில் தங்க, அங்கே இயேசு பிறந்தார் என்பதுதான் சரியானவிளக்கமாகும்.

8.3. இடையர்களுக்கு அறிவிப்பு
இயேசு பிறந்த நற்செய்தியை முதன் முதலில் இடையர்களுக்குத்தான்வானதூதர்கள் அறிவித்தனர் (2: 11). ஏன் இடையர்களுக்கு? நமது எண்ணப்படிஇடையர்கள் எளியவர்கள்; ஆதலால், இயேசு பிறப்பு எளியவர்களுக்கு முதலில்அறிவிக்கப்படுகிறது என்று பலபேர் சொல்லிவந்தனர்.

ஆனால் இது உண்மையான விளக்கமல்ல.பாலஸ்தீன இடையர்கள் ஆடு மேய்த்தலையே முழுத்தொழிலாகக்கொண்டிருந்தனர். இவர்கள், பாலைவனம், காடுகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் நிறைய வலிமையும், உறுதியான உள்ளமும் கொண்டிருந்தனர்; மிகவும்தந்திரமுள்ளவர்கள். பல சமயம் மோசமானவர்களும் கூட திருட்டும், பலாத்காரமும் அதிகமாகவே இவர்களிடம் காணப்பட்டது. யூதச் சட்ட நூலான'மிஷ்னா' என்பதில் நான்கு இடங்களில் இத்தொழில் பாவமானது என்றுகூறப்படுகிறது. அத்துடன், பாலஸ்தீன மக்கள் மோசமான தொழில் எனக்கருதும்எட்டுதொழில்களில ;(கழுதை ஓட்டுபவர், ஒட்டகம் ஓட்டுபவர், மாலுமி, கடைக்காரர், மருத்துவர், ஆடுமாடு வெட்டுபவர், இடையர்) இவர்களும் இருந்தனர்.

இப்படிப்பட்ட பாவிகளுக்கு ஏன் இயேசுவின் பிறப்பு முதலில்அறிவிக்கப்படுகிறது?.இயேசு கிறிஸ்து என்ற 'மனுமகன் நேர்மையாளர்களை அல்லபாவிகளையே அழைக்கவந்தார்' என்றுவெளிப்படுத்தவும், "இழந்து போனதைத்தேடிமீட்கவே மானிடமகன்வந்தார்”(லூக்19: 10) என்பதைஅறிவிக்கவுமே,தமது வாழ்வில் பாவிகளை வரவேற்றஇயேசு (லூக்15 : 2) பிறந்தநற்செய்திமுதன்முதல் பாவிகளான இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்று லூக்காகருதுகிறார்.

9. கோவிலில் காணிக்கை
எட்டாம் நாள்ஆனதும் குழந்தை இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்யஎருசலேம ;கோவிலுக்கு அவரது பெற்றோர் கொண்டு சென்றனர ;என்று லூக்காகூறுகிறார் (லூக்2 : 21). இதுசம்பந்தமாகப் பின்வரும் நிகழ்ச்சிகளை லூக்காவருணிக்கிறார்.

9.1.பெயர் வைத்தல;"மோசேயின் சட்டபடி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள்வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குசென்றார்கள்”(லூக்2: 22) என்று லுக்காவின் நற்செய்தியில் படிக்கும்போது,சட்டத்தை நிறைவேற்ற இயேசுவின் பெற்றோர் எருசலேமுக்குச் சென்றதைத்தெரிவிக்கவே இப்பகுதியை எழுதுகிறார் என்று நினைக்கத் தோன்றும்.

"ஆண்தலைப் பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்”(லூக்2: 23) என்ற மேலான கருத்து அம்மக்களிடையே நிலவி வந்தது (எண்18: 15-16). இயேசுவும் கன்னியான மரியாளிடம் பிறந்ததால் இவரும் தலைப்பேறுஆவார். எனவே, மரியாவும் இயேசுவைக் காணிக்கையாக்க வேண்டியசட்டம்இருந்தது. எனினும் இது ஆலயத்தில்தான் நிகழவேண்டுமா என்பதுசந்தேகத்துக்குரியது. ஆதலின், விருத்தசேதனம் பற்றியும், சட்டத்தைநிறைவேற்ற இயேசுவுக்காக காணிக்கை ஒப்புக்கொடுப்பது பற்றியும் லூக்காஎழுதுவதன் முக்கிய நோக்கங்கள் இரண்டு:

முதலாவது நோக்கம்: குழந்தை எருசலேமுக்கு வருவது பிரதானநோக்கம். லூக்காவுக்கு கோவில் எப்பொழுதும் முக்கியத்துவம் வாய்ந்தது.கோவிலில்தான் குழந்தைப் பருவம் ஆரம்பித்து முடிகிறது. அத்துடன், இயேசுபிறந்து, அவருக்கு பெயர்வைப்பதிலிருந்து இயேசுவின் காலம் ஆரம்பமாகிறது.ஆக, இயேசுவின் காலம் கோவிலில் ஆரம்பமாகிறது என்று காட்டவிரும்புகிறார். மேலும், இப்படிகோவிலில் இயேசுவின் காலம் ஆரம்பிக்கும்போது, அவர் சட்டத்திற்குட்பட்டு, அவற்றை நிறைவேற்றுவதாகக் குறிப்பிடுவதுயூத வரலாற்றுடன் இயேசு தம்மை இணைத்துக் கொள்கிறார் என்பதும்வெளிப்படுகிறது. இயேசுவின் காலத்தை உலகவரலாற்றுடன் இணைக்கின்றலூக்காவின் இறையியல் இது.

இரண்டாவது நோக்கம்: இயேசுவுக்குப் பெயரிடுவதற்கு முக்கியத்துவம்கொடுத்து, நற்செய்தி நூலுக்கும் அப்பணிக்கும் முன்னுரையாக இப்பகுதியைஎழுதுவது, இளந்திருச்சபையின் மத்தியில் இயேசுவின் பெயருக்கு இருந்தமுக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது:

லூக்கா 'பெயர்' என்றவார்த்தையை 94 முறைபயன்படுத்துகிறார். இயேசு என்ற பெயர் குணம் தரும் சக்திவாய்ந்தது என்றும்(திப3:6; 16: 4;7: 10, 12, 18; 4 : 30), பாவம் போக்கும் சக்தி வாய்ந்ததாகவும் (திப 10 : 43),நம்பிக்கை உண்மையாகவும் (3: 16), வழிபடும் சொல்லாகவும் (1 : 18; 2: 21, 38;9: 20; 15 : 18; 17), புதுமை செய்யும் ஆற்றலுள்ளதாகவும் (3 : 6) இளந்திருச்சபையினர்கண்டதாகலூக்காதிருத்தூதர்பணியில்குறிப்பிடுகிறார். ஆகவே,இளந்திருச்சபையினரிடையே இயேசுவின் பெயருக்குள்ள சிறப்பைவெளிப்படுத்த இயேசுவுக்குப் பெயரிடும் நிகழ்ச்சியைக் குழந்தைப் பருவநிகழ்ச்சியில்குறிப்பிடுகிறார்.

9.2. மீட்பரைக் காண்கின்றார்
கடவுள் பக்தியும், தூய ஆவியைப் பெற்றவருமான சிமியோன்இயேசுவைக் காணக் காத்துக் கொண்டிருப்பதாக லூக்கா வருணிக்கிறார்(லூக்2 : 25-28). பிற்காலகிறிஸ்துவச்சீடர்களை ஒத்தவராக இவர் தோற்றம்தருகிறார். இவரை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொடக்கக் கிறிஸ்துவர்களின்வாழ்க்கை நெறியின் தன்மையை லூக்கா வெளிப்படுத்துகிறார் என்பதுதெளிவாகிறது.

சிமியோனின் பாடல் மூலம், இயேசு கிறிஸ்துவை, "பிறவினத்தாருக்குவெளிப்பாடு அருளும் ஒளியாகவும், கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலுக்குபெருமையாகவும்” (2 :32) லூக்கா அறிக்கையிடுகிறார். அதாவது, இயேசுஅனைத்து உலகமாந்தருக்கும் உரியவர் என்பதை முதலில் வானதூதர் மூலம்கூறியலூக்கா, #8220;எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைஉங்களுக்கு அறிவிக்கிறேன்”2:11), இங்கே அதே கருத்தை சிமியோன்பாடல்மூலம் தெளிவுப்படுத்துகிறார். இவரது பாடலின் மையம் கிறிஸ்துதான்!சிமியோன் கடவுளைப் புகழ்ந்து பாடியபின் (2:29-32) குழந்தை இயேசுபற்றியும் அவரது அன்னையைப் பற்றியும் இறைவாக்கு உரைக்கிறார்(2:34-35).

இதனில், #8220;இக்குழந்தை (இயேசு) மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும்எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகஇருக்கும்”#8220; நான் மண்ணுலகிற்கு அமைதியைக் கொண்டு வந்தேனென்றாஎண்ணுகிறீர்கள்? இல்லை. பிரிவினை உண்டாக்கவே வந்தேன்” என்றஇயேசுவின் வார்த்தைகளை நினைவுபடுத்துகிறார். அதாவது, இயேசு(நற்செய்தி), "இடர் கல்லாகவும், தடுக்கிவிழச் செய்யும் பாறையாகவும்இருப்பார்”என்பது(எசா 8:14) நிறைவேறுவதாகக் கூறுகிறார். அடுத்து, 'வாள்ஊடுருவும்' என்று கூறுகிறார். மரியாளின் துன்பத்தைக் குறிப்பதாகப் பலர்எண்ணினர். ஆனால் உண்மைப் பொருள், வாள் பிரிக்கும் இறை நீதியுடையது(எசா 1: 1-17). 'இதயம்' என்று சொல்லும் போது மரியாவின் குடும்பத்தையும்குறிக்கலாம். மரியாவின் குடும்பத்தில் ஏற்படவிருக்கும் பிளவும் இவண்சுட்டிக்காட்டப்படுகிறது (லூக்8:19-21) என்றும் கொள்ளலாம்.

அல்லும் பகலும் கோவிலைவிட்டு நீங்காத அன்னாவைப் பற்றிக்குறிப்பிடும் லூக்கா, அதன்மூலம் தொடக்கக் கிறிஸ்தவக் கைம்பெண்கள்வாழ்ந்த முன்மாதிரியான வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.ஆக, இயேசுவின் 'குழந்தைப் பருவம்' வயதான இருவருடன் (செக்கரியா,எலிசபெத்து) கோயிலின் சூழ்நிலையில் ஆரம்பித்து, வயதான வேறு இருவருடன்(சிமியோன், அன்னாள்) கோவில் சூழ்நிலையிலேயே முடிவுறுவதாகக் காட்டும்லூக்காவின் திறன் வியக்கத்தக்கது.

10. கோவிலில் இயேசு - லூக் 2:39-52
"குழந்தையும் வளர்ந்து வலிமைப் பெற்று ஞானத்தால் நிறைந்துகடவுளுக்கு உகந்ததாய்இருந்தது” இந்த ஒரு குறிப்பை மட்டுமே (2:39-41)குழந்தையாக இயேசு நாசரேத் ஊரில் வளர்ந்தது குறித்து லூக்காதெரிவிக்கிறார்.ஆக, எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தார்?மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் காண அப்பகுதியின் இறுதிவசனத்தையும் நாம் காண வேண்டும்: "இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்துவந்தார்” (2 : 52).

செய்தியென்ன?
1) இயேசு ஞானம் நிறைந்தவராக வளர்ந்தது வலியுறுத்தப்படுகிறது.அதனால்தான் ஆரம்பமும் முடிவும் அதே கருத்தை வெளிப்படுத்துகிறது.அத்துடன், இயேசுவின் ஞானம் வெளிப்படும் வகையில், சிறுவன் இயேசுஆலயத்தில் 'போதகர் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகள் எழுப்பிக்கொண்டும் இருந்தார்”' என்றுலூக்கா குறிப்பிடுகிறார் (2:46-47). மாபெரும் போதகராகத் தமது வாழ்நாளில்விளங்கியது, இயேசு பற்றி தொடக்கக் கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவியஎண்ணமும் இங்கே வெளிப்படுத்தப்படுகிறது.மேலும், இயேசுவின் ஞானத்தை முதலிலும் முடிவிலும் கூறி, மற்றசெய்திகளைஉள்ளடக்கிக்கூறுவதில்லூக்காவின்எழுத்தில்காணும்ஒருங்கிணைந்த இலக்கியக்கட்டமைப்பை (ஐnஉடரளiஎந Pயசயடடயடளைஅ) காண்கிறோம்.

2) கடவுளின்அருளில்வாழ்ந்தார் என்றால்என்ன? லூக்2:52-இல்காண்பதுபோல், கடவுளின் அருளில் வாழ்வதன் அடையாளம், மனிதரின்அருளில்அதாவது, மனிதருக்கு உகந்தவராக வாழ்வது என்பது லூக்காவின்எண்ணம் (லூக் 17 : 9, திப 2 : 47). ஆதலின், இயேசு மனிதரின் நல்லெண்ணத்தில், அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வாழ்வினை மேற்கொண்டதன்காரணம ;(உகந்தவராக), அவர் இறைவனுக்கு ஏற்புடையவராகத் திகழ்ந்தார்.ஆக, 2:40-ல் காணுவது போல் கடவுளின் அருளைப் பெற்றதன் விளைவினால்மனிதருக்கும் உகந்தவரானார் (லூக்2:52).

3)'நீங்கள் ஏன்என்னைத் தேடினீர்கள்?”என்ற இயேசுவின ;கேள்வியில்கடவுளின் திட்டத்தை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டுமென்ற அவரதுஎண்ணம் வெளிப்படுகிறது.#8220;

ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும் அனுப்பியுள்ளார்”என்றும் (லூக்4:43), 'மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமை குருக்கள்,மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டு கொலைசெய்யப்படவும்மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்”என்றும்(9: 22), 'இத்தலைமுறையினால் உதறித் தள்ளப்படவும் வேண்டும்' என்றும் (லூக் 17 : 25),'என்னைப ;பற்றியதெல்லாம ;நிறைவேறி வருகின்றன”என்றும் (லூக்22: 37),கடவுளின் திட்டத்தில் அடங்கிய பல நிலைகளை இயேசு நன்குஅறிந்திருப்பவராக லூக்கா தமது நற்செய்தியில் காட்டுகிறார். "என் விருப்பப்படிஅல்ல உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று இறைவனுக்குத் தன்னையேகையளித்த இயேசுவை (லூக்22 : 42), அவரது குழந்தைப் பருவஇறுதியில்அதே நோக்கத்துடனும் மனநிலையுடனும் இருந்ததாக லூக்கா வெளிப்படுத்தவிரும்புகிறார். அதனால்தான், தனது பெற்றோரிடம் "என் தந்தையின்அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?”என்ற கேள்வி கேட்டதாக லூக்கா எழுதுகிறார் (2 : 49).

4) தனது உள்ளத்தில் இருத்தி..."அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளை யெல்லாம்தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்” என்ற கருத்தைக் குழந்தைப் பருவநிகழ்ச்சிக் குறிப்புகளில் இருமுறை லூக்கா கூறுகிறார் (லூக் 2 : 19, 51). வானவர்அறிவிப்பைக் கேட்ட இடையர் குழந்தை இயேசுவைக்கண்டு, திரும்பும்போது புகழ்ந்துகொண்டுசென்றனர்; ஆனால் மரியா மனத்திலிருத்திச் சிந்தித்துவந்தார் (2 : 19);இயேசுவின் ஞானம் வெளிப்படவும், தனது தந்தையின் எண்ணத்தைநிறைவேற்றுவதே தனது சித்தமென்று இயேசு கூறுவதையும் கேட்டு அவற்i றமரியாசிந்தித்துவந்தார் (2 : 51). இவைதாம் சூழ்நிலைகள்.

இரண்டு சூழ்நிலைகளும் அடிப்படையில் ஒரே செய்தியைத்தெரிவிக்கின்றன. அதனை அறிந்து கொள்ள நாம் முதல் சூழ்நிலையைஆராய்ந்தால் போதும்:

குழந்தை இயேசு பிறந்ததைக் கண்டவான தூதர் புகழ்ந்தனர் (2: 14)
இடையர் அறிவித்தனர் (2: 17)
மரியாளோ சிந்தித்துவந்தார் (2 : 19).

இங்கே, நற்செய்தி(இயேசு) உலகிற்குவந்தசெய்தியைக்குறிப்பிடுகிறார்லூக்கா. இயேசு பிறப்பின்மூலம்மீட்பு உண்டானதை நினைத்துவானவர்போற்றிப்புகழ்ந்தனர். அதைக்கேட்டஇடையர், அந ;நற்செய்தியைக் கண்டு,அதனை அடுத்தவருக்கும் அறிவித்தனர். ஆனால், அறிவிக்கப்பட்ட செய்திபயனளிக்க வேண்டுமென்றால், அது நம்உள்ளத்தில் ஆழப்பதி யவேண்டும்.அதைத் தான் மரியா செய்கிறார். அதாவது, நற்செய்தியைக் கேட்ட மக்களின்வாழ்க்கைநிலைஎப்படியிருக்கவேண்டுமென்பதுதெரிவிக்கப்படுகிறது. ஆககடவுளால் அளிக்கப்பட்ட நற்செய்தி (வானதூதர் பாடலின் கருத்து) ஒருசிலரால்அறிவிக்கப்பட்டு, கேட்டவர் யாவரும் அந்நற்செய்தியுடன்தங்கள்வாழ்வையும்இணைத்துச்செயல்படும்முறைபற்றிச்சிந்திக்கவேண்டும்.

அடுத்த கோணத்தில்இடையர்களால் அறிவிக்கப்பட்ட நற்செய்தியைக் கேட்டமக்கள் இரண்டுவிதமான முறையில் செயல்படுகின்றதை லூக்கா காட்டுகிறார்."பிறருக்குஅ றிவித்தனர்தங்களுக்கு இடையர்கூறியது பற்றி வியப்படைந்தனர்.”"ஆனால், மரியா.... உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார்”என்று லூக்கா எழுதுகிறார் (2 : 19).இங்கே, நற்செய்தியைக் கேட்கும் மக்களின் செயல் முறையைக்காட்டுகிறார்.

வியப்படையும் மக்களில் ஆழ்ந்த விசுவாசமில்லை. ஆனால், சிந்திக்கும்மரியாவிடம் ஆழ்ந்த நம்பிக்கையைக் காண்கிறோம். ஒரே நற்செய்திதான்.ஆனால் அதனை ஏற்கும் மக்களின் மனநிலை இரண்டுவிதம்; அதுவும் ஒருவர்ஏற்பர் (மரியா), மற்றவர் எதிர்ப்பர் (மக்கள் வியப்படைதல்). இக்கருத்தை லூக்காதனது நற்செய்திநூல், திருத்தூதர்பணி - என்ற இருநூல்களிலும் பலமுறைதெரிவிக்கிறார் (காண்: லூக்4: 22: பாராட்டுதல்- வியப்படைதல் 8:4-18, 13:13-14, 15 : 1-2; 21 : 38; 22 : 2; 23 : 33-34; 23 : 39-43; திப 5 : 29, 39; 13 : 48-50; 17 : 32-34; 28 : 24-28). இவை லூக்காவில் காணும ;உதாரணங்களில்சில.

இப்படி நற்செய்தியானது பிரிக்கும் தன்மையுடையது என்பதைசிமியோனின் வார்த்தையிலேயே கூறி விடுகிறார்: "பலரது வீழ்ச்சிக்கும்எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்”- என்பதில் இக்கருத்து தெளிவாகிறது(லூக் 2 : 34).கடவுளின் நற்செய்தியை ஒருசிலர் ஏற்பர்; வேறு சிலர் எதிர்ப்பர்.இது உலக அனுபவமும் இயல்புமாகுமென்பது லூக்காவின் போதனை.

------------------------------------------
--------------------------
----------------
------
--