புதிய ஏற்பாடு - பொது முன்னுரை

முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர்
திண்டிவனம்

விவிலிய அன்பர்களே,

விவிலியம் பழைய ஏற்பாடுபுதிய ஏற்பாடு என்று இருவகையாகப்பிரிக்கப்படுகின்றது. இயேசுவின்வருகைக்கு முன் இறைவன்வரலாற்றில் பேசியது, செய்தது, மீட்பர்குறித்து வாக்களித்தது யாவும் பழையஏற்பாடாக 46 நூல்களில் காணப்படுகின்றன. (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவபிரிந்தசபையினர் அவற்றில் 39 நூல்களை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர்).

புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் வாழ்வு, மற்றும் இறப்பு, உயிர்ப்புஆகியவற்றின்அடிப்படையில்எழுந்த27நூல்களைக்கொண்டுள்ளது. பிரிந்தசபையினரும் புதிய ஏற்பாட்டில் மீட்பராக 27 நூல்களையும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் யூதர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாததால்புதிய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வதில்லை.பழையஏற்பாடுசட்டநூல்கள், இறைவாக்கினர் நூல்கள்வரலாற்றுநூல்கள்அறிவுரை நூல்கள்என்று நான்கு வகையாகக் கத்தோலிக்கரால்பிரிக்கப்படுகிறது. அதுபோல புதிய ஏற்பாட்டின் 27 நூல்களையும் பலபிரிவுகளாகஅமைக்கலாம். நான்குநற்செய்திநூல்கள், திருத்தூதர் பணிகள்தொடக்ககாலநூலாகவும், 21 கடிதங்கள் அறிவுரை நூல்களாகவும், யோவான்எழுதிய திருவெளிப்பாடு இறைவாக்கினர் நூலாகவும் பிரித்துக் காணலாம்.ஆனால் புதியஏற்பாட்டில் இப்படிப் பிரித்துகாண்பது அவ்வளவு பொதுவானவழக்கமல்ல.பழைய ஏற்பாட்டுநூல்களில் பெரும்பான்மை எபிரேய மொழியிலும் சிலகிரேக்க மொழியிலும் சிலநூல்களின் சில பகுதிகள்அரமேய மொழியிலும்உள்ளன. புதிய ஏற்பாட்டின் நூல்கள் அனைத்தும் கிரேக்க மொழியில்எழுதப்பட்டுள்ளன.பழையஏற்பாட்டு நூல்கள்கிறிஸ்துவின் வருகைக்குத ;தயாரிப்பாகவும்,அவர்குறித்த இறைவாக்குகளின் தொகுப்பாகவும் விளங்குகின்றன என்றால்புதிய ஏற்பாட்டு நூல்கள் அந்த தயாரிப்பின் மற்றும் இறைவாக்குகளின்நிறைவாக கிறிஸ்துவந்துள்ளதை முக்கியமாகக் காட்டுகின்றன.நான்கு நற்செய்தி நூல்கள் உள்ளன. தொடக்ககாலத ;திருச்சபையினர்இவற்றுக்கு அடையாளங்கள் கொடுத்திருந்தனர் (காண்க திருவெளிப்பாடு 4: 7).

மத்தேயு- மனிதன்
மாற்கு- சிங்கம்
லூக்கா - மாடு
யோவான்- கழுகு

இந்த நற்செய்திகளில் கிறிஸ்து உலகிற்குக் காட்டப்படு கின்றார்.அவரின்வாழ்வு, பணி, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம்ஆகியவற்றில்அவரதுநற்செய்திவழங்கப்படுகிறது.

திருத்தூதர்பணிகளில் கிறிஸ்து அறிவிக்கப்படுகின்றார். அவரதுநற்செய்தி உலகெங்கும் பரப்பப்படுகிறது.

திருமுகங்களில் இயேசுவின்நற்செய்தியின் மூலக்கூறு தத்துவார்த்தமாகவும் நடைமுறையிலும்விளக்கப்படுகிறது.

திருவெளிப்பாட்டில் கடவுளின் எல்லா மீட்புத் திட்டமும் மீட்பர்இயேசுவில்நிறைவடைவதுசொல்லப்படுகிறது.

இவ்வாறுபுதியஏற்பாடுபழையஏற்பாட்டிலுள்ளஇறைவாக்குகளின்நிறைவாகவிளங்குகிறது. புதியஏற்பாடுஎனும் கட்டடம் எழுப்பப்பட அடிப்படையாக பழைய ஏற்பாடுவிளங்குகிறது.புதியஏற்பாட்டுநூல்கள்கி.பி. 51-லிருந்து100-க்குள்எழுதப்பட்டிருக்கவேண்டும். முதலில் எழுந்தவை திருமுகங்கள்தாம். நற்செய்தி நூல்கள்வரலாறாக எழுதப்படாமல் மறைக் கல்விநூல்கள் போல் எழுதப்பட்டுள்ளன.எனவேஇவற்றை நாம் நேரடியாகப் புரிந்துகொள்வது சிலநேரம் கடினமே.அவை எழுந்த பின்னணிகள் விவரமாக இங்கே தரப்பட்டுள்ளன.

இறுதியில் புதியஏற்பாடு பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கம் என்னசொல்கிறது என்பது தரப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டின் பின்னணியை அறிவதோடு, அது எழுந்ததிருச்சபையைப் பற்றிஅறிவதோடு, புதியஏற்பாடுபற்றிய ஒரு பொதுவானகண்ணோட்டத்தை அறிவது தொடர்ந்து வரும் புதிய ஏற்பாடு பற்றியநூல்களைக் கண்டு அறிந்திடத் துணைபுரியும்.

இறைவார்த்தைப் பணியில்இறைவார்த்தைப் பணியில்
அருள்திரு முனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்

பொருளடக்கம்:

1. பாலஸ்தீனா பூகோளப் பன்னனி
2. பாலஸ்தீனா வரலாற்றுப் பின்னனி
3. பாலஸ்தீனா சமயப் பின்னனி
4. தாழ்த்தப்பட்டோர்
5. தொழுகைக் கூடம்
6. விவிலிய மொழிகள்
7. புதிய ஏற்பாடு : முக்கிய கால அட்டவனை
8. புதிய ஏற்பாடு பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கம்

1. பாலஸ்தீனா - பூகோளப் பின்னணி

இயேசு கிறிஸ்து பிறந்த நாடு பாலஸ்தீனா. இஸ்ரயேல்மக்களுக்குகடவுள்வாக்களித்த நாடு இது(யோசு 12) என்ற காரணத்தில் யூதர்களும்,இயேசுவின் காரணத்தினால் கிறிஸ்தவர்களும் பாலஸ்தீன நாட்டைப்புண்ணிய பூமியாகக் கருதுகின்றனர். எந்த நாட்டுக்கும் இல்லாதஇத்தகைய சிறப்பினை இந்நாடு பெற்றிருக்கிறது.கடவுள்அளித்த நாடு என்பது ஒருபுறமிருக்க, அந்தக் கடவுளே இந்தஉலகில் தோன்றுவதற்குத் தேர்ந்தெடுத்த நாடு இது (யோவா 1: 14)என்பதும் சிறப்பாகும். கடவுள் மனிதராக நடமாடிய இந்த நாட்டின்அமைப்பு, பூகோளப் பின்னணி என்னவென்று இவண்காண்போம்.

நாம் வாழும் ஆசியக் கண்டத்தின்மேற்குப் பகுதியில்உள்ளதுதான்பாலஸ்தீனா நாடு. இந்தியாவின் வடக்கே இமயமலை உள்ளது போல்,பாலஸ்தீனாவின் வடக்கே லெபனான் தொடர் உள்ளது. தெற்கேஇதுமெயா பாலைவனமும், மேற்கே மத்திய தரைக்கடலும், கிழக்கேஅரேபியா பாலைவனமும் அரண்களாக அமைந்துள்ளன. இதனால்இயற்கையாகவே பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை இந்நாடு பெற்றுள்ளது.

உலகில் எந்தப் பகுதியும் அடையாத பெருமையும் முக்கியத்துவமும்பெற்ற பாலஸ்தீனா நாடு பரப்பளவில் மிகச் சிறியதுதான். தெற்குவடக்காக அதன் நீளம் - பெயர்செபா முதல் 'தாண்' வரையில் 300 கி.மீட்டரும், வடக்குப் பகுதியில் 40 கி. மீட்டர் பரப்பளவும் கொண்டுள்ளது.உலகை மீட்க வந்த இயேசு, தனது மீட்புப் பணியை ஆரம்பிக்கத்தேர்ந்தெடுத்த நாடு, இவ்வளவு சிறியதாக இருப்பது நமக்கு வியப்பாகஉள்ளது. இறைவனது திட்டத்தை அறிபவர் யார்?

1.1. யோர்தான் நதி
இந்நதி பாலஸ்தீனாவின் வடக்கிலிருந்து தெற்கே பாய்கின்றது.இது இந்நாட்டை மேற்குப் பாலஸ்தீனா, கிழக்கு பாலஸ்தீனா எனப்பிரிக்கிறது. வடக்கே ஹெர்மன் என்ற மலைத் தொடரில் மூன்று கிளைநதிகளாகத் தொடங்கி பிறகு யோர்தான் உருவெடுத்து, கலிலேயாக் கடல்வழியாகப் பாய்ந்து அந்நாட்டின் நிலங்களை வளப்படுத்தி, இறுதியாகசாக்கடலில் சங்கமமாகிறது. வடக்கே ஆரம்பமாகுமிடத்தில் இது சுமார்80 அடி அகலமாகவும், மத்திய தரைக்கடல் மட்டத்திற்கு மேல் 300 அடிஉயரத்திலும் உள்ளது. நைல் நதியைப் போன்று அழகாகத் தோன்றும் இந்த யோர்தான்நதியில்தான், புனித திருமுழுக்குயோவான் இயேசுவுக்குதிருமுழுக்குஅளித்தார் (மத் 3 : 31). யோவான் மெசியாவின் வருகையைப்பற்றிப் போதித்ததும் இந் நதிக்கரையில்தான்.

1.2. எருசலேம்
மீட்பு வரலாற்றின்மையமாகத் திகழ்வது எருசலேம். ஏறக்குறைய2550 அடி உயரமுள்ள ஒரு மலையின் மீது இந்நகர் இருப்பதனால்,இந்நகரைப் பற்றிப் புகழ வந்த திருப்பாடல் ஆசிரியர், "அவர் தம் மலைபுனிதமானது; புகழ் மிக்கது; உலகனைத்திற்கும் மகிழ்ச்சியாய்விளங்குவது'' என்றுரைக்கின்றார் (திபா 47 : 2). கடவுளின்நகரம் என்றுஅழைக்கப்படும் எருசலேம் கி.மு. 1000 ஆம் ஆண்டுதான், தாவீதுஅரசனால் கைப்பற்றப்பட்டு உருவாக்கப்பட்டது. கடல் மட்டத்திற்கு மேல்சுமார் 150 மீட்டர் உயரமுள்ள இந்நகர் கிழக்கே கெதரோன், மேற்கேகெகன்னா போன்ற பள்ளத்தாக்குகளால்சூழப்பட்டு, இயற்கை அரணைப்பெற்றுள்ளது. இந்நகரில்தான் சாலமோன் அரசர் புகழ்மிக்க பெரியஆலயம் ஒன்றை எழுப்பினார் (1 அர 6:1). இந்நகரைச் சுற்றிப் பெரியமதில்சுவரினைநாம் காணலாம். இதுபல முறை இடிக்கப்பட்டு மீண்டும்எழுப்பப்பட்டது. மன்னன்பெரியஏரோதுஇந்த நகரை அழகுபடுத்துவதில்பெருமுயற்சிஎடுத்தான். ஆனால்இந்நகரின்அழகும் பொலிவும் கி.பி.70இல் உரோமை அதிகாரி தீத்து என்பவனால் அழிக்கப்பட்டது.

இயேசு கிறிஸ்து தனது போதனையைக் கலிலேயாவில்தொடங்கினாலும் (மாற் 1: 28-39) எருசலேமில்தான் அவரது வாழ்வின்முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி மன்னராக எருசலேமில்நுழைந்த இயேசு, தனது வாழ்வை நமக்காக அங்குதான்அர்ப்பணிக்கின்றார் (மாற் 9: 30, 10: 30). தாவீதின் நகரம்என்றழைக்கப்படும் எருசலேமின் சிறப்புக்கு இதைவிடச் சிறந்த சான்றுயாது உளது?

1.3. பெத்லகேம்
யூதேயா பகுதியில், எப்ரோனுக்கு வடக்கே 15 மைல் தூரத்திலும்,எருசலேமுக்குத் தெற்கே 5 மைல் தூரத்திலும் அமைந்துள்ள பெத்லகேம்,சுமார் 2500 அடி உயரமுள்ள மலை மீது உள்ள ஒரு சிற்றூர். அரசியல்கண்ணோட்டத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஊர் அன்று; எனினும்இறைமகன் இயேசு கிறிஸ்து மண்ணுலகில் உதிக்க, இவ்வூர் பேறுபெற்றதனால், 'எப்ராத்தா எனப்படும் பெத்லகமே! யூதாவின்குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்' (மீக் 5: 2; மத் 5: 6)என்று இறைவாக்கினர் மீக்கா புகழ்கின்றார். இச்சிற்றூர் மேய்ச்சலுக்குஉகந்த இடம் (லூக் 2:8, 15). இதற்கு தெற்கே ராக்கேலின் கல்லறைஉள்ளது. ஆமோஸ் இறைவாக்கினரின் ஊரான தெக்கோவா இதன்அருகில்தான் உள்ளது. இயேசு பிறந்த இடத்தில் கான்ஸ்டண்டைன்மன்னன் ஒரு பெரிய தேவாலயத்தைக் கட்டினான். அதனை நாம்இன்றும் காணலாம்.

1.4. எரிக்கோ
யூதேயாப் பகுதியின் முக்கிய நகரங்களில் ஒன்று எரிக்கேர்எருசலேமிலிருந்து 17 மைல் தொலைவில் உள்ளது எரிக்கோ. கடல்மட்டத்திலிருந்து 800 அடி கீழே உள்ளது. இவ்வூர்இயேசுவின் நல்ல சமாரியர் உவமையில் இடம்பெறுகின்றது; மலையில் உள்ளஎருசலேமிலிருந்து கீழேயுள்ள எரிக்கோவுக்குஒருவர் பயணம் செய்தார் - (லூக் 10: 30) என்றகுறிப்பை இவ்வுமையில் காணலாம்.

மற்றும், இயேசு வளர்ந்த நாசரேத்,அவரின் முதற் புதுமை நிகழ்ந்த கானா, புனிதபேதுருவின் ஊரான கப்பர்நாகூம், மார்த்தா,மரியாள் ஊரான பெத்தானியா போன்றஇடங்களையும் இம்மேற்குப்பகுதியில்காணுகிறோம். இயேசு தனது 33 ஆண்டுகாலஇவ்வுலக வாழ்க்கையினைப் பாலஸ்தீனா வின்இப்பகுதியில்தான் பெரும்பாலும் வாழ்ந்தார்.

1.5. கலிலேயாக் கடல்
இதனை கெனசரேத்து ஏரி (லூக் 5: 1) என்றும், திபேரியாக் கடல்(யோவா6: 1;2: 1) என்றும் அழைப்பது உண்டு. அழகிய நீல நிறத்துடன்தோன்றும்இந்த ஏரி 15 கி. மீட்டர் நீளமும், 5 கி. மீட்டர் அகலமும் கொண்டுசுமார் 600 அடிகடல்மட்டத்திற்குகீழேஅமைந்துள்ளது. இதன்கரையில்பல பழவகை மரங்களும், வண்ண மலர்ச் செடிகளும் அமைந்துஇக்கடலுக்கு அழகூட்டுகின்றன.

இயேசு பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இயேசு தன் முதல்திருத்தூதர்களைஅழைத்தபோதுஇக்கடலில்தான்அவர்கள்மீன்பிடித்துக்கொண்டிருந்தார்கள் (மத்4: 18; மாற்1: 16 : 20). இயேசு தன்மலைப்பொழிவை ஆற்றியதும் (மத் 5: 1) பல அருங்குறிகளைநிகழ்த்தியதும், அற்புதமாக மீன்கள்பிடிபட்டதும் இங்கேதான். இக்கடலில்இயேசு நடந்தார் (மத் 14: 21-33). இதனில் ஏற்பட்ட புயலை அடக்கினார்(மத் 23: 27). எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்த்த இயேசுகாட்சியளித்ததும் இங்குதான் என்றால் இதன் பெருமையைச்சொல்லவும் வேண்டுமோ?

1.6. சாக்கடல்
இயேசுவின் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றது என்பதற்காகஅல்ல் உலகிலேயே ஓர் அதிசயமான பகுதி என்பதனாலும் இதனைக்காண்போம். இங்குதான்யோர்தான்நதி சங்கமமாகிறது. சுமார் 50 மைல்நீளமும் 10 மைல் அகலமும் கொண்ட இந்நீர்ப் பரப்பை உப்புக்கடல்என்றும் (இச 3 : 17) அராபாக்கடல் என்றும் அழைப்பர். இதன் சிறப்புத்தன்மை என்னவென்றால், இக்கடல், கடல் மட்டத்திற்கு 2000 அடி கீழேஉள்ளது. மேலும், இதில் எந்தவிதமான உயிரினமும் வாழ முடியாது.இதன்கரையில்எந்தப் பயிர்த் தொழிலும் செய்யமுடியாது. ஆதலின்இதுஇறந்த கடல்(னுநயன ளுநய)என்றழைக்கப்படுகிறது. உலகத்திலேயே அதிககன அளவும் அடர்த்தியும் கொண்டு அதிக அளவு உப்பும் இந்நீரில்கலந்துள்ளதால், எல்லா மீன்களும் இங்கு வந்தவுடன் இறந்துவிடுகின்றன. கும்ரான் மக்கள் உருவாக்கிய பழமை வாய்ந்த சுருள்வடிவச் சுவடிகள் இப்பகுதியில கண்டெடுக்கப்பட்டன.

இன்றுஇப்பகுதியில், இஸ்ரயேல், ஜோர்டான்போன்ற நாடுகள்பலஉப்புத் தொழிற்சாலைகளையும், இரசாயனத் தொழிற்சாலைகளையும்நிறுவியுள்ளன.

as

1.7. பருவநிலை
இறைமகன் இயேசு, நம்மைப் போல் மனிதராக மழை, காற்று,வெயில், பசி, தாகம் - அனைத்திலும் பங்கேற்று வாழ்ந்தார். உலகில்உள்ள அனைத்து நாடுகளும் ஒரே விதமானதட்ப வெப்ப நிலையையோஅல்லது சமூக பழக்க வழக்கங்களையோ கொண்டிருப்பதில்லை.ஆதலின் நமதாண்டவர் இயேசு வாழ்ந்த நாடான பாலஸ்தீனாவின்காலநிலை, சமுதாய வாழ்வு பற்றி அறிந்தால், ஆண்டவரைப் பற்றிநன்கறிய அது துணைபுரியும்.

பாலஸ்தீனாவை - கடற்கரைப் பகுதி, மலைப்பகுதி, யோர்தான்நதிப்பள்ளத்தாக்கு - என்ற மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இம்மூன்றுபகுதிகளிலும் மூன்று விதமான காலநிலை நிலவுகின்றன.கடற்கரைப்பகுதியில் அடிக்கடி மழை பெய்வதைக் காணலாம்.மலைப்பகுதிகளிலும் பருவ மழை சுமாராக இருப்பினும், தேவையானமழை பொழிந்து திராட்சைத் தோட்டங்களும் செழிப்புடன் வளர்கின்றன.ஆனால் யோர்தான் நதிப்பள்ளத்தாக்கு வெகு விநோதமானபருவநிலையைக் கொண்டுள்ளது. கோடையில் கடும் வெயில்;சிரோக்கோ போன்ற பகுதியிலிருக்கும் பாலைவனத்திலிருந்து மே முதல்அக்டோபர் வரையில் கடும் வெப்பக் காற்று வீசும் (எசா 27: 8; எரே 4:11).குளிர்காலத்தில் கடும் குளிராக இருக்கும். ஒருவர் யோப்பாவிலிருந்துஎருசலேமுக்குப் போவதற்குள்குளிரால்அவரதுஉடல்மரத்துவிடும்போல்தோன்றும்.

எருசலேம் தேவாலயத்தின் அபிசேகத் திருவிழா இந்தக்குளிர்காலத்தில் நடைபெற்றதனால், பலர் கோவிலுக்குள்ளேயேஇருந்தனர்; இயேசு அதனைப் பயன்படுத்தி, அங்குப் போதித்தார் என்றுபுனித யோவான்எழுதுகிறார் (யோவா 10 : 22-24). ஆக பாலஸ்தீனாவின்பருவ நிலையை மழையோடு கூடிய குளிர்காலம் (அக்டோபர் - மே )என்றும் கடுமையான வெயில் கொண்ட வறட்சிக் காலம் (ஜுன் -செப்டம்பர்) என்றும் இரண்டாகப் பிரிக்கலாம்.

1.8. இயற்கை வளம்
இந்தியாவைப் போன்றுமழையை நம்பி வாழும் நாடு பாலஸ்தீனா.அதனால்தான், "இந்த நாடோ மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ளநாடுஅதற்கு, வானத்தின்மழையேவேண்டும்'' என்றுஇணைச்சட்டம் (11: 11) கூறுகின்றது. நில அமைப்பிற்கேற்ப மழையின் அளவும் இங்கேவேறுபடுகின்றது. மத்திய தரைக் கடலின் அருகேயுள்ள பகுதிகளிலும்,மலைப் பகுதிகளிலும் சனவரி, பிப்ரவரி மாதங்களில் நல்ல மழைபெய்கிறது. எருசலேமில் டிசம்பர் - மார்ச் மாதங்களில் மட்டும் 35அங்குலம் மழை பெய்கிறது. விளைச்சலின் அறுவடைக்கு முன் பெய்கின்ற மழைப்பற்றி விவிலியத்தில் சில இடங்களில் காண்கிறோம்(ஒசே6: 3; எரே5 : 24). எருசலேம், பெத்லகேம், எபிரோன் போன்றஇடங்களில் பனிபெய்வதும் உண்டு.பருவ காலங்களில், எதிர்பார்க்கும் அளவுக்கு மழை பெய்வதுநிச்சயமில்லை. ஆதலால்கிணறுகள்அதிகம் இல்லாத பாலஸ்தீனாவில்பாறையை வெட்டி, மழைக்காலத்தில் நீரால் அதனை நிரப்பிப்பயன்படுத்துவது வழக்கம்.

1.9. பயிர் வளம்
கால நிலைகள் மாறுபட்டுக் காணப்படுவது போல் இங்குள்ளபயிர்வகைகளும் பலதரப்பட்டவைகளாக உள்ளன. யோர்தான் நதிப்பள்ளத்தாக்கில்ஒலிவமரங்களும், திராட்சையும்நிறைந்துள்ளன. மேலும்பூசணிக்காய், வெங்காயம் முதலியவை களும் விளைகின்றன.கடற்கரைப் பகுதியில் ஆரஞ்சும், மலைப் பகுதியில் கோதுமையும்பார்லியும் விளைவதை நாம் காணலாம். பழவகைகளில்திராட்சையோடுஅத்திப்பழம், வாழைப்பழம், முலாம் பழம் போன்றவைகளும்விளைகின்றன.

1.10. சமுதாய வாழ்வு
பொதுவாக பாலஸ்தீனா மக்கள் யூதர்கள் என்றுஅழைக்கப்படுகின்றனர். யூதரின்குடும்பத்தில் தகப்பன்தான்தலைவன்.தன் மகன் திருமணமானவனாக இருந்தாலும் கூட தகப்பன் உயிரோடுஇருக்கும் வரை மகனுக்கு எந்த உரிமையுமில்லை. குற்றம் புரிந்தால்,கொல்லக்கூட தந்தைக்கு அதிகாரம் உண்டு (தொநூ38 : 24).யூதரினத்தில் இயேசுவின் காலத்தில் காதல் திருமணத்தைவிடபெற்றோர்கள் ஏற்பாடு செய்கின்ற திருமணங்கள்தான்வழக்கத்திலிருந்தன (தொநூ 24 : 2-9; 28 : 1-2). மேலும் திருமணத்தில்சீதனம் அளிக்கும் முறையும் அவர்களிடையே உண்டு. சீதனம்என்றவுடன் மணப்பெண்கொண்டுவரும் பணமும் பொருளும்தான் நம்மனத்தில்தோன்றும். ஆனால்இயேசுவாழ்ந்தயூதர்களிடையேமுற்றிலும்மாறாக மணமகன்தான் பொருளோ, பணமோ அல்லது உடலுழைப்போஅளித்து, பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் (காண்தொநூ22 : 28; 29 : 1; சாமு 18 : 27, 25).

பிள்ளைப் பேற்றை இறைவனின் ஆசீராகக் கருதினர். ஒருபெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லையென்றால் அதனைச்சாபக்கேடாகக் கருதினர் (தொநூ 16 : 2; 1 சாமு 15). ஆதலின்அக்குறையை மறைக்க வேற்றுப் பிள்ளைகளைத் தத்து எடுத்துவளர்ப்பதுண்டு (தொநூ 16 : 2, 30 : 3). மேலும் பாலஸ்தீனாவில் முதல்குழந்தைஆணாகப் பிறக்கவேண்டும்என்றுமிகுந்தஆசைப்படுவதுண்டு.ஏனெனில் அவன் தான் வருங்காலத்தில் குடும்பத் தலைவனாகவிளங்குவான்(தொநூ24 : 50; 49 : 3).

குழந்தை பிறந்தவுடன் நாம் திருமுழுக்குக் கொடுப்பது போல்யூதர்கள் தங்கள் குழந்தை பிறந்த முதல் வாரத்தில் விருத்தசேதனம்செய்வர் (தொநூ 26 : 4; 29 : 3). அப்பொழுது குழந்தைக்குப் பெயர்சூட்டுவர். குழந்தை யேசுபிறந்த எட்டாம்நாள்மாதாவும்யோசேப்பும்பெயர்சூட்டுவதற்காகப் பாலகனைஆலயத்திற்குகொண்டுசென்றனர் என்றுபடிக்கிறோம் (லூக் 1: 59-68).ஆபிரகாம் கடவுளோடு செய்தஉடன்படிக்கைப்படி பிறக்கும் குழந்தைக்குவிருத்தசேதனம் செய்யக் கடமைப்பட்டிருந்தனர் (காண்தொநூ17 : 9-14).

1.11. சமய அறிவு
விவிலியத்தில் பழைய ஏற்பாட்டுநூல்களில் முதல் ஐந்து நூல்களைத் 'தோரா'என்றழைப்பர். இந்தத் தோரா என்ற சட்டநூல்யூதர்களுக்குப் பாடப் புத்தகமாகும். மேலும் குடும்பஉறுப்பினர்கள் ஒன்றாகக் கூடியிருக்க, குடும்பத் தலைவன், கடவுளின்மாபெரும் செயல்களை விளக்கிக் கூறிப் பழைய பாஸ்கா நிகழ்ச்சிகளைநினைவுறுத்திக்கடவுள்பக்தியில்அவர்களைவளர்க்கும்வழக்கம்உண்டு."கடவுள் ஒருவரே; அவரது கட்டளைகளைத் தவறாது கடைப்பிடிப்பதுஒவ்வொரு யூதனின்கடமை'' என்று கருதினர்.யூதர்களிடையே விருந்தோம்பல் சிறந்து விளங்குவதைக்காண்கின்றோம். விழாக் கொண்டாடுவதும், நண்பர்களை விருந்துக்குஅழைப்பதும் அவர்களது பழக்கமாகும் (1 அர 18 : 20; மத் 22 : 3).இத்தகைய மனிதர்களில் ஒருவராகவே இறைமகன்பிறந்தார்; வளர்ந்தார்;வாழ்ந்தார்!

2. பாலஸ்தீனா: வரலாற்றுப் பின்னணி

பாலஸ்தீனாவின் வரலாற்றை, இயேசு பிறப்பிற்கு முந்தையபாலஸ்தீனா (கி.மு. 63-4), இயேசுவின் காலத்துப் பாலஸ்தீனா (கி.மு. 4கி.பி. 30) என்று இரு பெரும் பிரிவில் அடக்கலாம்.

2.1. இயேசு பிறப்பிற்கு முன் (கி.மு. 63-4)
கி.மு. 63 முதல் கி.மு. 37 க்கு இடைப்பட்ட காலத்தில்பாலஸ்தீனாவில் உரோமையர்களின் ஆட்சி உறுதியாக நிறுவப்பட்டது.அதனால் இக்காலத்தில் 'hஸ்மோனியர் (கிரேக்கர்) அரசகுலம்மறைந்தது. உரோமைப் பேரரசர் போம்பே (Pழஅpநல) என்பவர்தான்எருசலேமை அவ்வேளையில் உரோமை பேரரசில் சேர்த்தார். அதுமுதல்பாலஸ்தீனா உரோமையர்களின் பிரதி நிதிகளால் ஆளப்பட வேண்டும்என்று தீர்மானித்தார். இரண்டாம் 'pர்கானுஸ் என்பவர் தலைமைக்குருவாக நியமிக்கப்பட்டார். இவருடைய காலத்தில் கி.மு. 53 இல்,எருசலேம் தேவாலயக் கருவூலம் சூறையாடப்பட்டது. இதனால் எழுந்தயூதப் புரட்சியைக் காசியுஸ் லொன்ஜினுஸ் திறமையாக அடக்கிவிட்டான்.

கி.மு 49-இல் ஜூலியஸ்சீசர் ரூயஅp;பிகோன் என்ற இடத்தைக் கடந்துசென்றார். இவருடன் போரிட போம்பே கீழ்த்திசை நோக்கிச் செல்லவேண்டியிருந்தது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, இரண்டாம்'pர்கானுஸ{ம் இதுமேயாவைச் சார்ந்த இரண்டாம் அந்திப்பார்என்பவரும் போம்பேயின்நல்லெண்ணத்தையும் சலுகைகளையும் பெற,போம்பேயைஆதரித்தனர். ஆனால்எகிப்தில்பார்சாலுஸ் (Pயசளயடரள)என்றஇடத்தில் கி.மு. 48 ஆம் ஆண்டில் போம்பேயை ஜூலியஸ் சீசர்தோற்கடித்ததால், அந்திப்பாரின்தலைமையில் ஒரு படையைச் சீசருக்குஆதரவாக ஹிர்கானுஸ்அனுப்பினான். இதனால், ஜூலியஸ்சீசர் கி.மு.47 ஆம் ஆண்டில் சிரியாவிற்கு வந்தபோது ஹிர்கானுசுக்கு ஆளுநன்என்ற பட்டத்தை அளித்தார். யூதேயாவின் உரோமையப் பிரதிநிதியாகஅந்திப்பார் நியமிக்கப்பட்டார். அந்திப்பாரின்இருமக்களில், தலைவனானபாசேயலைஎருசலேமுக்கும், ஏரோதை கலிலேயாவிற்கும் ஆளுநர்களாகசீசர் நியமித்தார். பாலஸ்தீன மக்களுக்காக ஜூலியஸ் சீசர் பலவிதநன்மைகளைச் செய்தார். கி.மு. 44 மார்ச் மாதத்தில், ஜுலியஸ் சீசர்கொலை செய்யப்பட்டபோது, உரோமையர்களைவிட யூதர்களேஅதிகமாகத் துக்கம் கொண்டனர்.

சீசரின் மரணத்திற்குப் பின் ஹிர்கானுசின் உதவியாட்கள்அந்திப்பாரை நஞ்சிட்டுக் கொன்றனர். அந்திப்பார் இறந்தபின் அவரதுமகனான ஏரோதுக்கு ஹிர்கானுஸ் தனது பேத்தி மரியாம் என்பவளைத்திருமணம் செய்து வைத்து, தனது உறவைப் பலப்படுத்திக் கொண்டான்.இவ்வேளையில், மார்க் அந்தோனி, ஆக்டேவியன்காசியுஸ் என்பவரால்தோற்கடிக்கப்பட்டதனால், சிரியாவில் உரோமையர் ஆட்சிபலவீனப்பட்டது. இந்தக் குழப்பமான சூழ்நிலையில் பாலஸ்தீனாவில்ஏரோதுவின் செல்வாக்கு உயர்ந்தது.

2.2. பெரிய ஏரோது (கி.மு. 37-4)
ஏரோது பாலஸ்தீனாவின் "இதுமேயா'' என்ற பகுதியைச்சேர்ந்தவன். அவனுடைய கலாச்சாரமும், சமய நம்பிக்கையும்யூதர்களைவிட கிரேக்கர்களையே சார்ந்திருந்தது. அதனால் அவனைப்பாலஸ்தீன யூதர்கள், ஒரு முழு யூதன் என்றே கருதுவதில்லை.திறமையினாலும் தனது எதிரியை அழித்தே தீரவேண்டும் என்றகொள்கையினாலும், பாலஸ்தீனாவில் செல்வாக்கு மிக்கவனாகவளர்ந்தான். தனது சூழ்ச்சியாலும், வஞ்சக மனப்பான்மை யினாலும்,உரோமைப் பேரரசர்களிடமிருந்து சிறிது சிறிதாகப் பாலஸ்தீனஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பெயருக்கு உரோமையர்களின்கீழ் ஆளுவதாகக் கூறிக் கொண்டு தானேசர்வாதிகாரியாக மாறினான்.கொடூரத்திற்கும் அக்கிரமத்திற்கும் பெயர் பெற்றவனானான்(மத் 2:16-18).

கி.மு. 37-27 ஆம் ஆண்டில் தனது எதிரிகளான மூன்றாம்அரிஸ்டோபுலுஸ், தனது சொந்த சகோதரி சலோமையின் கணவரானயோசேப்பு, தனது சொந்த மனைவியான முதலாம் மரியாம், மாமியார்அலெக் சாண்டராள் போன்றோர்களைக் கொலை செய்து, தனதுஅதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டான். கலாச்சாரமுன்னேற்றத்திற்கான பல பணிகளைக் செய்தான். பல்கலைக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், புதிய நகரங்கள்,தோட்டங்கள், பழமரங்கள், அரச மாளிகைகள், "அந்தோனியா'' என்றபடையரண் போன்றவை இவனது ஆக்கச் செயல்களாகும். பேரரசர்வழிபாட்டையும் ஏரோதுதான் யூதர்களிடையே வற்புறுத்தினான். இதனால்யூதர்களிடையே இவனது செல்வாக்குக் குறைந்தது.எனவேயூதர்களதுசெல்வாக்கைப் பெற தனதுஆட்சியின்18 ஆம்ஆண்டில் எருசலேம் தேவாலயத்தைக் கட்டத் துவங்கினான். இந்தத்தேவாலயம் ஒரு சில ஆண்டுகளில் ஓரளவு முழுமையடைந்தாலும், கி.பி63- ஆம்ஆண்டில்தான், முழுமையாகக் நிறைவுபெற்றது. (ஆனால்கி.பி.எழுபதாம் ஆண்டில் உரோமையர்களால் அழிக்கப்பட்டது). சமாரியாநகரம் இவனால் புதுப்பிக்கப்பட்டது. அங்குப் பல படையரண்கள்அமைக்கப்பட்டன. தனக்கு மிகவும் பிடித்த இடமானஎரிக்கோவில், நாடகஅரங்கு, உடற்பயிற்சிக் கூடம், கோபுரம் போன்றவைகளை நிறுவினான்.இவையெல்லாவற்றிலும் கிரேக்கக் கலாச்சாரம்தான் அதிகம்தென்பட்டது. ஆதலால், இவன் யூதர்களுக்கு அரசனாக இருந்தாலும் யூதஅரசனாக வாழவில்லை.

2.3. இயேசுவின் காலத்தில் (கி.மு. 4 - கி.பி. 30)
புதிய ஏற்பாட்டின் காலத்தில், முக்கியமாக இயேசுவின் காலத்தில்,அகுஸ்துஸ் மன்னன் (அக்டேவியன்) உரோமைப்பேரரசை ஆண்டு வந்தான்.பாலஸ்தீனாவில் ஏரோது இறந்த வுடன்,அவன் ஆண்ட பகுதி, அவனது மூன்றுமக்களானஆர்க்கெலாவு, அந்திப்பாஸ்,ஏரோது பிலிப்பு என்பவர்களுக்குப்பிரித்துக் கொடுக்கப் பட்டது. ஏரோதின்குடும்பத்தாருக்கு அரசு பொறுப்புஅளிக்கப்படுவதை எதிர்த்துப் பலயூதர்கள் உரோமைக்குச் சென்றுபேரரசரிடம் முறையிட்டனர். ஆனால்ஏரோதின் விருப்பத்தை அகுஸ்துஸ்பேரரசன்இறுதியில் நிறைவேற்றினான்.

2.4. ஆர்க்கெலாவு: (கி.மு.4- கி.பி. 6)
பெரிய ஏரோதின் மூத்த மகன் ஆர்கெலாவு. இவனுக்கு நாட்டின்பாதிப்பகுதி அளிக்கப்பட்டது (யூதேயா, சமாரியா, இதுமேயா). அரசன்என்ற பட்டத்தை இவனுக்கு அளிக்க உரோமையப் பேரரசுவிரும்பவில்லை. ஆளுநன் என்ற பட்டத்தை இவனுக்கு அளித்தது.இவன்தன்விருப்பப்படி தலைமைக் குருக்களை மாற்றினான். பலவிதஅக்கிரமங்களைச் செய்தான். "யூதேயாவிலே, ஆர்கெலாவு தன்தந்தைஏரோதிற்குப் பதிலாக அரசாள்வதாகக் கேள்வியுற்று அங்குச் செல்ல அஞ்சினார்'' (மத் 21 : 22) என்றுமத்தேயுஎழுதுகிறார். இங்கே யோசேப்பும்மரியாவும் குழந்தை இயேசுவுடன்எகிப்திலிருந்துதிரும்பியபோதுநிலவியசூழ்நிலையை மத்தேயு குறிப்பிடுகிறார். இவனது கொடுமையைக் கண்டயூதர்கள்உரோமைக்குச் சென்றுமுறையிட்டனர். எனவேஉரோமையைப்பேரரசு இவனைவியன்னாவுக்குகி.பி. 6-ஆம் ஆண்டில்நாடுகடத்தியது.

2.5. ஏரோது அந்திப்பா (கி.மு. 4- கி.பி. 39)
கலிலேயாவிற்கும் பெரயாவிற்கும் பொறுப்பாக ஏரோது அந்திப்பாநியமிக்கப் பட்டான். நற்செய்திகளில் அரசன், சிற்றரசன் என்றபெயர்களால் அழைக்கப்படுகின்றான். கலிலேயாவின் மேற்குக்கரையோரத்தில், தனக்கென "திபேரியா''என்ற பெரிய தலைநகர் ஒன்றினைஎழுப்பினான். தந்தையின் எல்லாத் தீயகுணங்களும் ஏரோது அந்திப்பாசுக்குஇருந்தன. அதனால் இயேசு இவரைக்குறித்து, "நீங்கள் போய் அந்தக்குள்ளநரியிடம் இதை அறிவியுங்கள்''என்று கூறுகிறார் (லூக் 13 : 1).நான்காம் அரெடாஸ் என்ற நபாதியாஅரசனின்மகளை முதலில் மணந்து, பிறகுஏரோதியாளின் பொருட்டு அவளைக் கொன்றுவிட்டான். இந்தஏரோதியாள் என்பவள் அவனது சகோதரனின் மனைவி. இந்தஏரோதியாள் தான், திருமுழுக்கு யோவானின் கொலைக்கும்காரணமாயிருந்தவள் (மாற்கு 6 : 17-29; மத் 14 : 3-12).இந்த ஏரோதிடம்தான், பிலாத்து நமதாண்டவரை அனுப்பிவைத்தான். தனது முதல் மனைவியான அரடேயாசின் மகளைக்கொன்றதால், இந்த அந்திப்பாசுக்கு எதிராக அரடேயாஸ்படையெடுத்தபோது, சீரியாவின் உரோமையப் பிரதிநிதி விட்டலியுஸ்(ஏவைவநடடரைள கி.பி. 35-39) இவனுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டான். எனவேஅந்திப்பாஸ் தோற்கடிக்கப்பட்டு தெற்குபிரான்சில் உள்ள லியோன் என்றஇடத்திற்குகி.பி.39 ஆம் ஆண்டில்நாடு கடத்தப்பட்டான். 42 ஆண்டுகள்சிற்றரசனாக ஆட்சி செலுத்தியவன், இறுதியில் ஒரு கைதியாகவாழ்ந்தான்.

2.6. பிலிப்பு (கி.மு. 4 - கி.பி 34)
பெரிய ஏரோதிற்கும் எகிப்தின் கிளியோபாட்ரா என்பவளுக்கும்பிறந்தவன் பிலிப்பு. கலிலேயாவின் கிழக்குப் பகுதிகளுக்கும் வடக்குப்பகுதிகளுக்கும், சிற்றரசனாகப் பொறுப்பேற்றான். மூன்றாம் சலாமேஇவனதுமனைவி. மற்ற இருஆட்சியாளர்களைவிட, பிலிப்பு நல்லவன்.நீதிக்கும் நேர்மைக்கும், அன்பிற்கும் ஆதரவிற்கும் இவன் பெயர்பெற்றவன். மீன் பிடிக்கும் துறையான பெத்சாயிதாவைத் தனதுதலைநகராக மாற்றினான். அகுஸ்துஸ் மன்னன் மகள் ஜுலியாவின்பெயரில் பெத்சாயிதாவுக்கு ஜுலியாஸ்என்று பெயரிட்டான்(மாற்8: 27;மத் 16 : 13). சுமார் 37 ஆண்டுகள் ஆட்சி செய்தபின், தனக்கு வாரிசுயாரும்இல்லாமல்கி.பி. 34-ஆம் ஆண்டில் இறந்தான். எனவேஅவனதுஅரசு சீரியாப் பகுதியோடு இணைக்கப்பட்டது.

2.7. போந்தியுஸ் பிலாத்து (கி.பி. 26-36)
உரோமைப் பேரரசர்கள் பாலஸ்தீனாவை நேரடியாக ஆட்சிசெய்யாமல்தங்களது பிரதிநிதிகளைக் கொண்டு ஆண்டுவந்தனர். இந்தப்பிரதிநிதிகளுக்கு முழு அதிகாரமும் அளிக்கப்பட்டது. பொதுஒழுங்கையும்,உரோமைப் பேரரசுக்குச் சேரவேண்டிய வரி வசூலிப்பையும் கவனிப்பதுஇவர்களின் முக்கியப் பொறுப்பாகும். உரோமை ஆளுநர்களில் மிகவும்முக்கியமானவரும், இயேசுவின் வாழ்வில் அதிகம்தொடர்புடையவருமானவர் போந்தியுஸ்பிலாத்து என்பவர்.

யூதேயாவின் ஆளுநராகப் போந்தியுஸ் பிலாத்து கி.பி. 26 ஆம்ஆண்டில்பதவிஏற்றார் (லூக் 3 : 4). செசாரியா மாரிடிமா என்ற இடத்தில்கண்டுபிடிக்கப்பட்டகல்வெட்டின்படி, யூதேயாவின்ஆளுநராக பிலாத்து,திபேரியு சீசரின் காலத்தில் இருந்ததாகக் காண்கிறோம். 'பிடிவாதகுணமும், கொடூரத்தன்மையும் கொண்டவராக இருந்தார்' பிலாத்து.ஆளுநராக வந்தவுடன், பேரரசின் உருவம் பதித்த சின்னங்களைஎருசலேம் ராணுவத்தினருக்கு அளித்தார். யூதர்களுக்கு இது அறவேபிடிக்கவில்லை. ஆதலால், அவற்றினை நீக்கிவிட பிலாத்துவிடம்வேண்டினர். அவர் அதற்கு மறுக்கவே செசாரியாவில் இருந்த அவரதுமாளிகைக்கு முன் ஐந்து நாட்கள் மௌனமாகத் தங்களது எதிர்ப்பைக்காட்டினர். யூதர்கள் தங்களது புரட்சியைக் கைவிடவில்லையென்றால்,எல்லோரையும் கொன்றுவிடப் போவதாக பிலாத்துஎச்சரித்தார். ஆனால்அவருக்குப் பணிவதைவிட இறக்கவே அனைவரும் தயாராக இருந்ததால்,அவர்களது உறுதியைக் கண்டு வியப்படைந்து, பேரரசின் உருவச்சின்னத்தை நீக்கிவிட இணங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிலாத்து கலிலேயரின் இரத்தத்தை அவர்களுடைய பலியோடுகலந்தான்என்ற செய்தியை லூக்கா குறிப்பிடுகின்றார் (லூக் 13 : 1). இதுஅவனது கொடுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இந்தப் பிலாத்து இயேசுவின் பாடுகள் சமயத்தில், எப்படி ஓர்அரசியல்வாதியாகச் செயல்பட்டான் என்பதை எல்லாநற்செய்தியாளர்களும் குறிப்பிடுகின் றனர்.இவன் யூதர்களைத் திருப்தி செய்ய விரும்பி,பரபாசை விடுதலை செய்து, இயேசுவைச்சாட்டைகளால் அடித்து, சிலுவையில்அறையும்படிக் கையளித்தான் என்றுநற்செய்தியாளர்கள் (மாற் 5: 1; மத் 24; லூக்23 : 24; யோவா 14 : 16) கூறுகின்றனர்.சிலுவையில் அறைந்து கொல்வதற்குஇயேசுவை யூதர்களிடம் கையளிப்பதில்பிலாத்து நடந்து கொண்ட முறையைவிவரிப்பதில் நற்செய்தியாளர் களுக்கிடையேசிறு வேறுபாடுகள் தென்படலாம். ஆனால்,இயேசுவின் குற்றமற்ற தன்மையைஉணர்ந்திருந்தும் அரசியல் காரணங்களால், தனது பதவியைக்காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன், இயேசுவை யூதர்களிடம்கையளித்தான்என்பதில் யாதொரு வேறுபாடும் இல்லை.

கெரிசிம் என்ற மலையில் கூடியிருந்த சமாரியர்களைக்கொடுமைப் படுத்திக் கொலை செய்ததனால், பிலாத்துவுக்கு எதிராகசீரியாவில் இருந்த உரோமைப் பிரதிநிதியான விட்டலியுஸ் (ஏவைவநடடரைள)என்பவரிடம் சமாரியர்கள் முறையிட்டனர். எனவே, பிலாத்துஉரோமைக்குத் திருப்பி அனுப்பப்பட்டான். அதன் பிறகு அவனதுவாழ்வைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை. நீரோ மன்னனால்கொலை செய்யப்பட்டான் என்று அந்தியோக்கியாவின் யோவான்கூறுகிறார்.

2.8. காலத்தை கணிக்கும் முறை
பண்டைக் காலந்தொட்டே மனிதன் பல்வேறு முறைகளில்காலத்தைக்கணித்துவந்தான். சூரியனைக்கொண்டும், விண்மீன்களின்எழுச்சி, வீழ்ச்சியைக் கொண்டும், காலத்தையும் நேரத்தையும் கணித்துவந்தனர். உரோமை நகரம் நிறுவப்பட்ட நாளை அடிப்படையாகக்கொண்டு, உரோமையர் ஆண்டினைக் கணக்கிட்டுவந்தனர். ஒவ்வொருநாளும் உரோமை நகரம் நிறுவிய ஆண்டுடன் இணைத்தேகணிக்கப்பட்டது. கிறிஸ்துவமதம் தோன்றிய பிறகு, கிறிஸ்துவர்கள்கிறிஸ்து பிறந்தநாளை மையமாக வைத்து கிறிஸ்துவுக்கு முன் (கி.மு)என்றும் கிறிஸ்துவுக்குப் பின்(கி.பி.) என்றும், நாளையும் ஆண்டினையும்கணக்கிட்டனர். இம்முறையை இன்று பெரும்பாலோர்கடைப்பிடிக்கின்றனர்.

2.9. இயேசு பிறந்த நாள்
இயேசு பிறந்த போது, உரோமையர்களின் கணிப்புமுறைதான்வழக்கில் இருந்தது. எனவே உரோமையரின் பதிவேட்டில்நமதாண்டவரின் பிறப்பு உரோமைய ஆண்டின் அடிப்படையில்தான்எழுதப்பட்டிருக்க வேண்டும். சீத்தியன் மடத்துத் துறவி, இளையடென்னிஸ் என்பவர் இயேசு பிறந்த ஆண்டு பற்றிய ஆராய்ச்சிநடத்தினார். அதன் பயனாக, உரோம் நகரம் நிறுவப்பட்ட 754 ஆம்ஆண்டுதான், இயேசு பிறந்த ஆண்டு என்ற முடிவுக்கு வந்தார். எனவேகிறிஸ்து பிறந்த ஆண்டிற்கு மையமாகவும் முன்னிருந்த உரோமையஆண்டுகளை உள்ளடக்கி, கிறிஸ்துவுக்கு முன் என்றும், ஆண்டவர்பிறந்த உரோமைய ஆண்டிற்குப் பிறகு வருபவற்றைக் கிறிஸ்துவுக்குப்பின் என்றும் கணித்தார். இன்றுவரை இதைத்தான் உலக மக்கள்எல்லோரும் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் துறவி டென்னிஸ்அப்படிக் கணக்கிடுவதில் ஒரு சிறு தவறு செய்து விட்டார். உரோமையஆண்டின் கணக்குப்படி வரும் 754 ஆம் ஆண்டில்தான், இயேசுபிறந்ததாக, டென்னிஸ் கணக்கிட்டார். ஆனால் இன்றையஆராய்ச்சியின்படி, உண்மையில் இயேசு, உரோமைய ஆண்டின்கணக்குப்படி 750 ஆம் ஆண்டில் பிறந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்விளக்கம் பின்வருமாறு கூறப்படுகிறது.

2.10. உண்மையில் இயேசு பிறந்த ஆண்டு
இயேசு பிறக்க ஒரு சிலநாட்களுக்கு முன், மரியாளும் யோசேப்பும்கணக்கேட்டில் தங்கள்பெயரைப் பதிவு செய்யவேண்டி பெத்லகேமுக்குச்சென்றனர் என்று லூக்கா கூறுகிறார் (லூக் 2 : 14). இந்த கணக்கெடுப்புபற்றிய அறிக்கை வரலாற்றில், அகுஸ்துஸ் மன்னனால் உரோமையஆண்டு 746 இல் (கி.மு. 8) அளிக்கப்பட்டது. பாலஸ்தீனாவில்ஒராண்டிற்குப் பிறகே இது செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே இயேசு உரோமைய 747 ஆம் ஆண்டிற்குப் பிறகு (கி.மு.7) பிறந்திருக்கவேண்டும்.

அடுத்து, உரோமைய ஆண்டு 750-இல் (கி.மு. 4) மன்னர் பெரியஏரோது இறந்தார். அவருடைய வாழ்க்கை பற்றிய வரலாற்றுக்குறிப்புகளின் மூலம் இது தெரிய வருகிறது. மேலும், வரலாற்றுஆசிரியர்களின்கூற்றுப்படி, இந்த ஏரோது மன்னன்இறப்பதற்குச் சற்றேமுன்பு, சந்திர கிரகணம் ஒன்று தோன்றியதாகக் கூறுகின்றனர். வானசாஸ்திரிகளின்கணிப்புப்படி, இந்தச் சந்திர கிரகணம் உரோமையஆண்டு750 மார்ச் மாதம், 12-13 தேதிகளில் நிகழ்ந்தது. இயேசு பிறந்த போது,ஏரோதுஉயிரோடுஇருந்திருக்கிறார் (மத் 2). எனவே, ஏரோதுஇறக்குமுன்(உரோமைய ஆண்டு 750) இயேசு பிறந்திருக்க வேண்டும்.

எனவே, நமதாண்டவர் உரோமைய ஆண்டு 747-750 (கி.மு. 7-4)இடைப்பட்டக் காலத்தில் பிறந்திருக்கவேண்டும். அதாவது, இயேசுவின்பிறப்பு ஆண்டினை, இளையடென்னிஸ், சுமார் 4 அல்லது5 ஆண்டுகள்குறைத்துக் கணித்து விட்டார். இதன்படி பார்த்தால், இப்பொழுது கி.பி.2003 என்பது கி.பி. 2007 அல்லது 2008 என்று இருக்க வேண்டும்.ஆனால், இன்றைய அன்றாட நடைமுறையில் இளையடென்னிஸ்கணிப்பு முறையே பயன்படுத்தப்படுகிறது.

3. பாலஸ்தீனா: சமயப் பின்னணி

இயேசு கிறிஸ்துவின் காலத்தில், பாலஸ்தீனாவில் யூதமதத்தைக்கட்டிக் காக்க, போற்றி வளர்க்க சமயத்தலைவர்கள் பலர் வாழ்ந்தனர்.சட்டமே முக்கியம் என்று பறைசாற்றிய பரிசேயர்கள், மனித சுதந்திரமேஅடிப்படை உண்மை என்று போதித்த சதுசேயர், கடுமையான துறவறவாழ்க்கையை மேற்கொண்ட எசேனியர்கள் என்ற பல்வேறுசமயவாதிகளை நாம் பாலஸ்தீனாவில் காண்கிறோம்.

3.1. பரிசேயர்கள்
பரிசேயர்கள் என்ற வார்த்தைக்கு, "தனித்து நிற்பவர்'', "பிரிந்துநிற்பவர்'' என்றுபொருள். பாலஸ்தீனநாடு கிரேக்கப் பண்பாடுள்ளசிரியாமன்னனால் கைப்பற்றப்பட்டபோது, கிரேக்கப் பண்பாடும், அவர்கள் பால்ஊடுருவநேர்ந்தது; இதனைஎதிர்த்துமக்கபேயர் போரிட்டனர்; யூதர்களில்ஒரு சிலர் இதை ஆதரித்தனர். மேலும், யூதச் சட்டத்திற்கு சற்றேமாறுபாடான எதையும் எதிர்த்து அதனின்று பிரிந்து வாழ்ந்தனர்.ஆதலால், அவர்கள்தனித்துநிற்பவர் என்றழைக்கப்பட்டனர் (காண்1 மக்2 : 42).

இவர்களதுஇயக்கம் கி.மு. 150 ஆண்டுகளுக்குமுன்தோன்றியது,கி.மு. 134-104 ஜான் 'pர்கானுஸ் என்ற மன்னன் பரிசேயர்களைவெறுத்ததனால் சுமார் 50, 000 பரிசேயர்களை அழித்தான். ஆனால்,கி.மு. 76-67-இல் அரசி சலாமே அலெக்சாந்தராவின் காலத்தில்,இவர்களின் செல்வாக்கு ஓங்கியது. ஆதலால், பல யூதர்கள்பரிசேயர்களின்கொள்கைகளைஆதரித்தனர். இயேசுவின்காலத்திலும்இவர்களின் செல்வாக்குக் குறைந்ததாகத் தெரியவில்லை.

'தோரா' என்ற சட்ட நூலுக்கே இவர்கள் முதலிடம் கொடுத்தனர்.சட்டம் பயிலாதவர்களை 'நாட்டுப் புறத்தினர்' என்று அழைத்தனர்(யோவா7: 49). இயேசுவையும், இந்த நாட்டுப் புறத்தினர்களின்ஒருவராகத்தான் கருதினர். தேவ பராமரிப்பில் நம்பிக்கை வைத்துஅவர்கள், பாவிகளுக்கு மறுவாழ்வில் தண்டனையுண்டு என்பதையும்போதித்தனர். பாரம்பரியத்தைக் காப்பாற்ற, 'தோரா' எனப்படும் மோசேசட்ட நூலுக்குத் தங்கள் விருப்பம் போல் விளக்கம் தந்தனர்.

சட்டங்களை நுணுக்கமாக கடைப்பிடிப்பதனால்தான், யூதரினம்நிலைத்து நிற்கும் என்று நம்பினர். அதனால், உயிரே போனாலும் ஓய்வுநாளைஅனுசரித்தனர். எளிய வாழ்க்கை வாழ்ந்தனர்; இன்ப வாழ்வைக்கண்டித்தனர். அடிக்கடி உபவாசம் இருந்தனர்; ஒரு நாளில் பலமுறை தங்கள் கைகால்களைக் கழுவிச் சுத்தம் செய்யும் மூடப் பழக்கத்தைக்கொண்டிருந்தனர். பரம்பரையை அனுசரிக்க வேண்டும் என்றபோர்வையில், கடவுளின் கட்டளைகளை மீறுவது பற்றிக்கவலைப்படாதவர்கள்.

"பரிசேயனும் வரிதண்டுபவரும்'', என்ற உவமையில் இயேசுபரிசேயர்களின் தற்பெருமையை வெகு அழகாகச் சுட்டிக் காட்டுகிறார்."கடவுளே! கள்வர், அநீதர், விபசாரர் முதலான கீழான மனிதரைப்போலவோ, இந்த ஆயக்காரனைப் போலவோ, நான்இராததுபற்றிஉமக்குநன்றி கூறுகிறேன். வாரத்தில் இருமுறை நோன்பிருக்கின்றேன்''(லூக் 18 : 11-13) என்று சொல்கிறான். தம்மை நீதிமான்கள் என்றுஎண்ணி, பிறரைப் புறக்கணிக்கும் இவர்களது இந்த மனப் பான்மையைஇயேசு கண்டிக்கிறார் (லூக் 18 : 9). சட்டம்தெரியாத ஆயக்காரர்களை விடத்தாங்கள் உயர்ந்தவர்கள் என்றேகருதினர்.இந்தப் பரிசேயர்களைச்சட்டவல்லுநர்களிடமிருந்து நாம்பிரித்துக் காணவேண்டும். சட்டங்களை ஆழ்ந்து கற்று, அவற்றினைவிளக்குவதில் தேர்ந்தவர்களாகசட்டவல்லுநர்கள்இருப்பர். மாறாக பரிசேயர் சட்டங்களைநுணுக்கமாகக்கடைப்பிடிப்பவர்களாகத் தான் இருப்பர். சட்டத்தில் அறிஞர்களாகஇருப்பதில்லை

3.1.1. இயேசுவும் பரிசேயரும்
'விரியன் பாம்புக் குட்டிகளே', என்று திருமுழுக்கு யோவானால்கழ்?துரைக்கப்படுகின்ற பரிசேயர்கள், இயேசுவின் போதனைகளில்,எப்பொழுதும் குறைகாணவே காத்திருக்கின்றனர். இயேசு,பாவிகளோடும், ஆயக்காரர்களோடும் உறவாடுவதுஅவர்களுக்குபெரும்இடறலாகப்படுகிறது. ஓய்வு நாளை அனுசரிப்பதில் இயேசுவின் சீரியநோக்கம், வெற்றுச் சடங்குகளை எதிர்க்கும் அவரது போக்கு, மிகவும்வெற்றிகரமாகச் சீடர் பலர் அவரைப் பின்தொடர்வது- ஆகியஅனைத்தும்,பரிசேயர்களால் ஏற்க முடியாத உண்மைகள். ஆதலால், இயேசுவைகொல்ல வாய்ப்புத் தேடினர்.இயேசுவும் அவர்களது போக்கை வன்மையாகக் கண்டிக்கிறார்;'வெள்ளையடிக்கப்பட்டகல்லறை' யென்றும், ‘கபடுள்ளவர்களே' என்றும்,"நீங்கள்நீதியையும், கடவுளன்பையும் பொருட்படுத்துவதில்லை'' என்றும்கண்டிக்கிறார் (மத் 23; லூக் 11 : 37-54).

எல்லாப் பரிசேயர்களையும் ஆண்டவர் கண்டிக்கவும் இல்லை.பரிசேயர்களில்நல்லவர்களும், நீதிமான்களும்கூடஇருந்தனர் என்பதைநாம் மறக்கவியலாது. இயேசுவைஇரவில்சந்தித்துவிளக்கம் தேட வந்தநிக்கதேமு (யோ 3: 1; 7 : 50) தன்னுடன் உண்பதற்கு அழைத்தவர்கள்(லூக் 7: 36; 14 : 37; 14 : 1). ஏரோது அந்திப்பாரின் சதித்திட்டத்தைக்குறித்து இயேசுவை எச்சரித்தவர்கள் (லூக் 13 : 31) ஆகியோரும்பரிசேயர்கள்தான். ஒரு சில வேளைகளில், இவர்களே, இயேசுவைக்காப்பாற்றவும் முன்வந்துள்ளனர் (யோவா 7 : 50).

"யூதர்களின் நம்பிக்கை கிறிஸ்துவில் நிறைவேறுகிறது'' என்றநற்செய்தியைப் பிற இனத்தார்க்குப் போதிக்கக் கடவுள் தேர்ந்தெடுத்தபுனித பவுல் அடியார் ஒரு பரிசேயர் (திபா2: 5, பிலி3: 5). இயேசுஇறந்தபோது, அவரை அடக்கம் செய்யப் புனித பேதுருவோ யோவானோமுன்வரவில்லை. ஆனால், பரிசேயரான நிக்கதேமும், சதுசேயரானஅரிமத்தேயா யோசேப்பும்தான் முன் வந்தனர். வெள்ளைப் போளமும்,அகில்தூளும் கலந்து நூறு இராத்தல் கொண்டு வருகிறார் நிக்கதேமு;தனது தோட்டத்தில் ஒரு புதுக் கல்லறையை இயேசுவுக்குத் தானம்செய்கிறார் அரிமத்தேயா யோசேப்பு.

இன்று பொதுவாக, கிறிஸ்துவப் பூச்சுடன் விளங்கும்போதனையையும் உள்ளத்தையும், வெளி வேடத்துடன் காணப்படும்அனைத்தையும், பரிசேயத் தன்மை என்றுகூறுகின்றோம். இது பரிசேயயூதர்களை இகழ்வதற்கன்று; மாறாக நற்செய்திக்கு முரணானதன்மையைக் கண்டிப்பதுதான் இச்சொல் வழக்கின் நோக்கமாகும்.நீதியின் முகமூடியில் வாழும் கபட மனம் படைத்தவர், ஒழுக்கத்தின்திரைமறைவில் உலவும் அக்கிரமிகள், தனது குறுகிய சமய அறிவினால்கடவுளன்பைப் பிறரன்போடுஇணைக்க மறுக்கும் கிறிஸ்துவர்கள்ஆகியஅனைவரிடமும் - பரிசேயத் தன்மை இல்லாமல் இல்லை.ஊர்க் கட்டுப்பாடு, பள்ளி ஒழுங்கு, கோயில் ஒழுங்கு, மடத்துஒழுங்குகள் - இவை தேவை; நல்லவை. ஆனால் இவற்றையேஆதாரமாகக் கருதி மனித உணர்வுகளைமதிக்க மறுப்பவர்களும் தம்மில்பரிசேயத் தன்மையைக் கொண்டுள்ளனர் என்பதும் உண்மை.

3.2. சதுசேயர
"சட்டங்களைக் குறையற அனுசரிக்க வேண்டும்'' என்றுசொல்பவர்கள் பரிசேயர்கள். ஆனால், "ஊரோடு ஒத்து வாழ்ந்தால்போதும்'' என்பவர்கள் சதுசேயர்கள். மோசேயின் சட்டங்களில் மிகமுக்கியமானவற்றினை உறுதியாகக் கொண்டு, காலத்துக்கேற்றவாழ்க்கைநடத்த வேண்டும்என்றுரைக்கும்சதுசேயர்கள்பரிசேயர்களின்முரட்டு வாதங்களை, அடியோடு எதிர்ப்பவர்கள். இயேசுவின்காலத்தில்,பாலஸ்தீனாவில் சதுசேயர் பலர் வாழ்ந்தனர்.

;3.2.1. தோற்றம்
சதுசேயர் என்பது 'சாதோக்' என்ற புகழ் வாய்ந்த ஒரு குருவின்பெயரிலிருந்து வந்தது. இந்த சாதோக் என்றகுரு, இயேசுவின் காலத்திற்கு சுமார் ஆயிரம்ஆண்டுகளுக்குமுன்தாவீதுஅரசன்காலத்தில்வாழ்ந்தவர். சாலமோன்அரசனைஅபிஷுகம்செய்தவர் (1அர 1: 32-45); அவர் வழிவந்தஆலயக் குருக்கள் யாவரும் சாதோக்கின்மக்கள் என்று அழைக்கப்பட்டனர் (எஸ்ரா 40 :46; 43 : 19; 45 : 15). எருசலேம் ஆலயக்குருக்களும் இவர்களைச் சார்ந்தவர்களே.இவர்கள் சதுசேயர்கள் என்ற பெயரில்ஒரு குழுவாக வளர ஆரம்பித்தது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், ஜான் 'pர்கானுஸ் என்பவரின்காலத்தில்தான். கி.மு. 69-63 ஆண்டுகளில்இரண்டாம்அரிஸ்டோபுளுஸ்காலத்தில் பாலஸ்தீனாவில் இந்தச் சதுசேயர்கள், பல சலுகைகளைப்பெற்றனர். அவர்களது எண்ணிக்கை பெருகியது. இவர்கள்பெரும்பாலும், ஆலயப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்றோ இவர்கள்வரலாற்றிலிருந்தே மறைந்துவிட்டனர்.

3.2.2.வாழ்க்கை நிலை
நிலைபரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இடையே சமூக வாழ்க்கைநிலையிலும், சமயக் கொள்கைகளிலும், அரசியல் கருத்துக்களிலும் பலவேறுபாடுகள் இருந்தன. நடுத்தர மக்களாகத்தான் பரிசேயர்கள்இருந்தனர். ஆனால் சமுதாயத்தில் மேல் மட்டத்திலிருந்தவர்கள்சதுசேயர்களாயிருந்தனர். பணக்கார வியாபாரிகள், நிலச்சுவான்தார்கள்,ஆலயத் திருப்பணியாளர்கள் (குருக்கள்) போன்றவர்கள் யாவரும்சதுசேயர்களாயிருந்தனர். நாட்டின் முக்கிய பொறுப்புக்களை இவர்கள்வகித்தனர். இவர்களிடையே செல்வம் புரண்டது; அதிகாரம் தவழ்ந்தது.

3.2.3. கொள்கைகள்
;இவர்கள் தேவ பராமரிப்பை நம்பவில்லை; நன்மை, தீமைசெய்வதுமனிதனின்சுதந்திரத்தைப் பொறுத்ததுஎன்றனர். உயிர்ப்பிலும்மறு வாழ்விலும், ஆன்மாவின் அழியாத் தன்மையிலும் இவர்களுக்குநம்பிக்கைக் கிடையாது (மத் 22 : 23). வானதூதர்கள் உண்டென்பதைமறுத்தனர் (திப 23 : 8).

3.2.4. இயேசுவும் சதுசேயரும்
ஆலயத்தில் வியாபாரம் செய்பவர்களை இயேசுவிரட்டும்போதுதான், முதன் முதலில் சதுசேயர்களுடன் மோதுகிறார்.சதுசேயர்களின் கண் காணிப்பில்தான், அங்கு வியாபாரம் நடந்தது.இறுதியில், சதுசேயர்களானஅன்னாஸ், கைப்பாஸ்போன்றகுருக்களின்தூண்டுதலினால்தான், பிலாத்து இயேசுவைச் சாவுக்கு தீர்ப்பிடுகிறார்.பரிசேயர்களும் சதுசேயர்களும் ஒன்றாகச் சேர்ந்து பாலைவனத்தில்திருமுழுக்கு யோவானைச் சந்திக்க வருகின்றனர். இக்கூட்டத்தையேதிருமுழுக்கு யோவான்'விரியன்பாம்புக் குட்டிகளே' என்கிறார்.'வானத்திலிருந்து அருங்குறியொன்று காட்டவும்' என்றுசதுசேயர்கள் தான், நமதாண்டவர் இயேசுவைக் கேட்கின்றனர்.உயிர்தெழுதலைப் பற்றி இயேசுவைக் கேள்வி கேட்டு, அவரைத்தோற்கடிக்க வேண்டுமென்று விரும்பிய சதுசேயர் இயேசுவின்மறுமொழியினால் வாயடைத்துப் போயினர் (மத் 22 :33); அவர்களதுகெட்ட எண்ணத்தைக் கருதித்தான் இயேசுவும் அவர்களைக் குறித்துஎச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்றார் (காண். மத் 16 : 6). இயேசுவின்காலத்தில், இவர்களுடைய செல்வாக்கு குறைந்திருந்தாலும்,தங்களுக்கு இடையூறாக இயேசுவின் போதனையும், வாழ்வும்இருந்ததால், அவரை ஒழித்துவிடத் திட்டமிட்டனர் (யோ 11 : 47-48).இயேசுவின் காலத்திற்குப் பிறகும், இளந்திருச்சபைக்கு தொல்லைகொடுத்ததை திருத்தூதர் பணிவழியே அறிகின்றோம்.

3.3. எசேனியர்கள்
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன், பாலஸ்தீனாவின் சாக்கடல்பகுதியில், சில வரலாற்றுச் சுருள்கள் (னுநயன ளநய ளுஉசழடடள)கண்டெடுக்கப்பட்டன. அதன் மூலம், எசேனியர்கள் என்ற சமயத்தலைவர்களைப் பற்றி விரிவாக நாம் அறிய முடிகிறது. யூதத்துறவு நிலையின் கோட்பாடுகள் அடங்கிய 'ஒழுக்கநூல்' (ஆயரெயட ழக னுளைஉipடiநெ)என்ற புத்தகத்தை உருவாக்கியவர்களும் இவர்களே. 1947-ஆம் ஆண்டுவரை இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளஉதவியவர்கள்பிலேவியுஸ்ஜோஸேபுஸ் என்ற யூத வரலாற்று ஆசிரியரும், பிளினிஎன்ற உரோமவரலாற்று ஆசிரியர்களுமேயாவர். ஆனால் இன்றோ, சாக்கடல்சுருள்கள் வழியே இவர்களைப் பற்றிய பல செய்திகள் வெளிவந்துள்ளன.

மக்கபேயர் காலத்தில் இவர்கள் தோன்றினார்கள் (மத் 2 : 42).சுமார் கி.மு. 150-ஆம் ஆண்டில்இவர்கள்தனிப்பிரிவினராக வாழ்ந்தனர்என்றுகருதஇடமுண்டு; சாக்கடலின்மேற்குப் பகுதியில், எரிக்கோவிற்கும்என் இடி என்ற இடத்திற்கும் இடையில் இவர்கள் ஒரே குழுவாகவாழ்ந்தனர் என்று பிளினி கூறுகின்றார். ஆனால் சமீப காலக்கண்டுபிடிப்பில், இர்பித் - கும்ரான் என்ற இடத்தில் இவர்கள்வாழ்ந்ததாகத் தெரியவருகிறது; அதனால், இவர்களைக் 'கும்ரான்மக்கள்'என்று அழைப்பதும் உண்டு; அந்தியோக்குஸ் மன்னனுக்கு எதிராகமக்கபேயர் புரட்சி செய்ததாக, மக்கபேயர் நூல் கூறுகிறது(1 மக் 2 : 42). இவர்களுடன் எசேனியர்களும் இணைந்துபோராடியதற்குச் சான்றுகள்உள்ளன. எனவே, மக்கபேயர் காலத்தில்தான்,இக்குழுதோன்றியிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டபொது வாழ்க்கையை, இவர்கள் மேற்கொண்டனர். ஆழ்தியானத்தின்மூலம், விண்ணக மறைபொருளைப் பற்றிஅறிந்துகொள்ளமுற்பட்டனர்.'மெசியாவின்' வருகைக்காகத் தங்களையே தயார் செய்து கொண்டனர்.சடங்கு சம்பிரதாயங்களை அறவே நீக்கி, கடுமையான துறவறவாழ்க்கையைப் பின்பற்றினர்.

இந்தக் கும்ரான்மக்கள் குழுவில் சேர விரும்புவோர், தொடக்கத்தில்மூன்றாண்டுகள் பயிற்சி பெற வேண்டும். பிறகு எல்லா ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கவும், அவர்களதுகொள்கைகள், பாரம்பரியம்,வேத நூல்கள் ஆகிய அனைத்தையும் இரகசியமாக வைத்திருப்பதாயும்சத்தியப் பிரமாணம் செய்தபின், குழுவில் ஒரு உறுப்பினராகச் சேர்த்துக்கொள்வர்.இவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. சொந்த உடைமைஎன்று எதுவும் இருக்காது. தலைவருக்குக் கீழ்படிவ தாய் வார்த்;தைபாடுகொடுக்க வேண்டும். அவர்கள்வெள்ளைஉடை அணிந்திருப்பர்.செபமும், உடலுழைப்பும் அவர்களதுமுக்கியப் பணியாகும். இன்றைய சிலதுறவறசபைகளில் கடைப்பிடிப்பது போன்று, முன்இரவிலிருந்து காலை வரை கண்டிப்பானமௌன நேரம்; காலை செபம் முடிநத பிறகு11 மணிவரை வேலை; அதன்பிறகு குளியல்நடைபெறும். இதையும்ஒருசமயச் சடங்காகக்கருதினர். அடிமைகளையோ,பெண்களையோ, அவர்கள் அனுமதிப்பதில்லை. மௌனமாகத்தான் உணவுஉட்கொள்ள வேண்டும்; அதன் பிறகு மாலைவரை தோட்ட வேலை. அதன் பிறகு, செபம், இரவு - உணவு எல்லாம்மௌனமாகவே நடைபெறும். கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் ஆகியவைமிக முக்கியமானஅம்சங்களாகும்.

நாம் கண்ட மற்ற இரு சமயவாதிகளைவிட இவர்கள்மோசேயின்சட்டங்களைப் பெரிதும்போற்றினர். எசேனியர் அல்லாதவருடன் தொடர்புகொண்டவுடன் சுத்திகரிப்புச் சடங்கு செய்வது இவர்களது வழக்கம்.ஆனால் இவர்கள் மற்ற யூதரிடையே அதிகச் செல்வாக்குப் பெற்றதாகத்தெரியவில்லை.

பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, இவர்களின்பெயர் கூடக் குறிப்பிடப்படவில்லை. எனினும் புனித திருமுழுக்குயோவான் இவர்களிடையே வாழ்ந்திருக்கலாம் என்று பலர்கருதுகின்றனர். இவர்களது வாழ்க்கை முறை புதிய ஏற்பாட்டில்ஆங்காங்கு காணப்படுவதால், நற்செய்தி ஆசிரியர்கள் இவர்களதுகொள்கைகளையும் மனத்தில்கொண்டே தம் நூல்களைஎழுதினர் என்றுகருதுவோரும் உண்டு. எது எப்படியாயினும், இளந்திருச்சபையின்வாழ்க்கை முறை இவர்களது வாழ்க்கை முறையைத்தழுவியதாயிருந்ததென்பதை மறுக்கவியலாது. கிறிஸ்துவ ஆயர்கும்ரான் மக்களின் தலைவரை ஒத்திருக்கிறார் என்றும் பல அறிஞர்கள்கருதுகின்றனர் (காண். 2 பேது 2 : 25; திப 20 : 25; தீத்து 1 : 7-9).

4. தாழ்த்தப்பட்டோர்

4.1. வரிதண்டுபவர்கள்
பாலஸ்தீனா யூதர்கள், கடவுளால் தேர்தெடுக்கப்பட்ட மக்கள்;அவர்களது குலத்தில்தான், மீட்பர் இயேசு பிறந்தார். அதனால், யூதகுலத்தைச் சாராதவர் யாவரும் பாவிகள், ஒதுக்கப்பட வேண்டியவர்கள்என்றும், சமுதாயத்தின்அடிமட்டத்தில்இருக்கவேண்டியவர்கள்என்றுமேநினைத்தனர். பாவிகள், சமாரியர், பிறவினத்தார் பற்றியூதர்கள்இப்படிக்கருதியதில் வியப்பில்லை. ஆனால், யூத குலத்தைச் சார்ந்தவரிதண்டுபவர்களையும் (ஆயக்காரர்) இவர்களது வரிசையில் சேர்த்துஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று ஏன் நினைத்தனர் என்ற வினாஎழுவது இயல்பேயாகும். இதற்கு முக்கிய காரணம், இவர்கள்உரோமையர்களுக்காக யூதர்களிடையே வரி வசூலிக்கும் தொழிலைச்செய்ததேயாகும். இத்தொழிலை இவர்கள் மேற்கொண்டதனால்இவர்கள் 'வரிதண்டுபவர்கள் (ஆயக்காரர்)' என்று அழைக்கப்பட்டனர்.நேரடியாக வரிவசூலிக்கும் இந்த யூதர்களுக்குத் தலைவராக உரோமைஅதிகாரிகள் இருந்தனர். அவர்களது கெடுபிடியின் காரணமாகவும்,குறைந்த ஊதியத்தின் காரணமாகவும், வரி வசூலிப்பதில் மக்களிடம்இவர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொண்டனர்.

வசூலிப்பது அனைத்தையும் அப்படியே அதிகாரியிடம் இவர்கள்கொடுப்பதில்லை. நேர்மையற்ற முறையில் வரிப் பணத்தைச் சுருட்டிக்கொள்வதும் உண்டு. இவர்களதுஇந்த நேர்மையற்ற முரட்டுக் குணமானநடத்தைக்காகவும், உரோமையர்களுடன்சேர்ந்துகொண்டுபலவிதமானவரிகளைவசூலித்ததினாலும்இவர்களைமக்கள்வெறுத்தனர். பாவிகள்,தீண்டப்படாதவர் என்று ஒதுக்கி, பாவிகளோடும் புறவினத்தார்களோடும்நாளடைவில், அநீதிக்கும், அக்கிரமத்துக்கும் முரட்டுத் தனத்திற்கும்,இரக்கமற்றதன்மைக்கும், வரிதண்டுபவர்களையேஉதாரணம்காட்டினர்.

4.1.1. இயேசுவும் வரிதண்டுபவரும்
புனித திருமுழுக்குயோவான்யோர்தான்நதிக்கரையில்போதித்துக்கொண்டிருந்தார். பலர் அவரிடம் வந்தனர். ஆயக்காரர்களும் வந்தனர்.'உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும்தண்டாதீர்கள்' ' (லூக் 3:13) என்று அவர்களை நோக்கி கூறுகின்றார்யோவான். ' 'உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்புசெலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?வரிதண்டுவோரும் இவ்வாறுசெய்வதில்லையா?(மத் 5:46) என்றுஇயேசுகூறும் பொழுது, அவர்களது குறைகளைக் குறிப்பிடுகின்றார்."இத்தகைய வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள்உண்பதும்குடிப்பதும்ஏன்?'' என்று இயேசுவிடமே மறைநூல் அறிஞர்கள்கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக "நோயற்றவர்க்குஅல்ல்நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை; நேர்மையாளர்களை அல்ல,பாவிகளையே மனமாற அழைக்க வந்தேன்'' (லூக் 5 : 31, 32) என்றார்.அவரது இந்த அன்புதான், வரிதண்டுபவர்களான மத்தேயுவையும்சக்கேயுவையும் நீதிமான்களாக மாற்ற முநடிந்தது.

4.1.2. வரிதண்டுபவரான மத்தேயு
மத்தேயுகப்பர்நாகூம் என்ற ஊர் பாலஸ்தீனாவில் உரோமையர்களின்படைத்தளமாக இருந்தது. கலிலேயேக் கடல் அருகேஅமைந்திருந்ததனால் சுங்கத்துறையாகவும் இருந்தது. இந்தச்சுங்கத்துறையில் வரி வசூலிப்பவராகத்தான்மத்தேயு வாழ்ந்து வந்தார்.அவரைச் சந்தித்த இயேசு "என்னைப் பின்செல்'' என்று அழைப்புவிடுத்தார் (மத் 9 : 9). உடனேஅனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப்பின் தொடர்ந்தார். அறிமுகமில்லாதவர். அழைத்தவுடன், அவரைப்பின்தொடர்வது எப்படி இயலும் என்று போர்பரி ஜுலியனைப் போன்றவேத விரோதிகள் கேள்விஎழுப்பினர். ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும்என்றனர். ஆனால், இயேசுநாதர் கப்பர்நாவுமில் அறிமுகமில்லாதவரல்லர்; அவரைப் பற்றிப் பலருக்கு நன்றாகத் தெரியும் என்று புனிதஎரோணிமுஸ்அதற்கு விடையளித்தார்.

சமுதாயத்தில் தாழ்நிலையில் இருந்த தன்னை, தனது பாவங்கள்அனைத்தையும் மன்னித்து அன்போடு அழைத்த இயேசுவை மிகவும்பிரமாணிக்கத்தோடு பின்தொடர்ந்தார் மத்தேயு.நன்றிக்கடனாக, இயேசுவின்நற்செய்தியைஒருநூலாகவும் எழுதினார்; போதித்தார். அதேஇயேசுவுக்காக, தனது உயிரை அர்ப்பணித்தார்.ஆக வரிதண்டுபவர் (ஆயக்காரர்) மத்தேயுஇன்று, இயேசுவின் 12 திருத்தூதர்களில்ஒருவரான புனித மத்தேயுவாகத் திகழ்கிறார்.

4.1.3. வரிதண்டுபவரான சக்கேயு
எரிகோவில் நடந்து செல்லும்மெசியாவைக் காண சக்கேயுவைப் போல்,பலரும் ஆசைப்பட்டனர். ஆனால் இயேசுவின் தனிப்பட்ட பார்வை, சக்கேயுவின் மேல்தான் விழுந்தது. "இன்று இந்தவீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று'' (லூக் 19:9) என்ற இயேசுவின் மீட்புச்சொற்களைக் கேட்டவர் சக்கேயு மட்டுமேயாவார்.

4.2. சமாரியர்கள்
சமாரியர்கள் என்றவுடன் நம் மனத்தில் இயேசு கூறிய நல்லசமாரியர் உவமை, இயேசு சந்தித்த சமாரியப் பெண், நன்றி சொன்னசமாரியர் போன்றநற்செய்திநிகழ்ச்சிகளே- நம்நினைவிற்குவருகின்றன.பாலஸ்தீனாவில் யூதேயாவிற்கும் கலிலேயாவிற்கும் இடையில்உள்ளதுதான் சமாரியப் பகுதியாகும். கி.மு. 722 ஆம் ஆண்டில் அசீரியமன்னன்இரண்டாம்சார்கன்சமாரியாவைக்கைப்பற்றினான். ஆயிரக்கணக்கானசமாரியர்களை (கலைஞர்கள், குருக்கள்,தனவந்தர்கள்) அசீரியாவிற்குக்கைதிகளாகக் கொண்டு சென்றான்.இவர்களுக்குப் பதிலாக இந்த சமாரியநாட்டில், அசீரியர்களைக் குடியிருக்கச்செய்தான் சார்கன் மன்னன். இந்தவெளிநாட்டவர், அப்பகுதியில் வாழ்ந்தயூதர்களுடன் கலந்து, அவர்களின்கடவுளையும், பழக்க வழக்கங்களையும்ஏற்று வாழ்ந்ததால் ஒரு புதிய இனம் உருவானது. இவர்கள்தான்சமாரியர்கள்எனஅழைக்கப்பட்டனர்.

யூதர்கள் வழிபட்ட 'யாவே' என்ற கடவுளையே, இவர்களும்வழிபட்டனர்; மோசேயையும்அவரதுசட்டங்களையும்மதித்தனர்; ஆனால்,மற்ற யூதர்கள் இவர்களைத் தங்களைச் சார்ந்தவர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. குறைவாகவேகருதினர். யூதர்களுடன்சமாரியர்கள்நல்ல உறவு கொண்ட போது தாங்களும் யூதர்களே என்றும், உறவுகெடும்போது தாங்கள் அசீரிய இனத்திலிருந்து உருவானவர்கள் என்றும்சமாரியர் சொல்வது வழக்கம் என்றுஜோசபுஸ்என்ற வரலாற்றுஅறிஞர்கூறுகிறார்.

4.2.1. யூதர்களுளுடன் ஏன் பகை?
கி.மு. 538 ஆம் ஆண்டில், பாபிலோனியா அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, பாலஸ்தீனாவுக்கு யூதர்கள் திரும்பினர்.எருசலேம் ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பும்போது தங்களை விட்டுப்பிரிந்த சகோதரர்களான சமாரியர்களின் உதவியை ஏற்றுக்கொள்ளமறுத்தனர். இது அவர்களது உறவைப் பாதித்தது. யூதர்களைப் போன்றேகடவுள் நம்பிக்கை கொண்ட சமாரியர்கள் (யோ 4:25) கி.மு. 4-ஆம்நூற்றாண்டில் எருசலேமை விடுத்து கெரிசிம் மலையைத் தம் வழிபாட்டுமையமாகத் தேர்ந்தெடுத்தனர். கி.மு. 128-ஆம் ஆண்டில் ஜான்'pர்கானுஸ் அங்கேயுள்ள ஆலயத்தை அடியோடு அழித்தாலும்சமாரியர்கள் அங்கேதான் வழிபாடு செலுத்தினர். கலிலேயாவிலிருந்துயூதேயாவிற்குச் செல்லும் வழியில்தான்சமாரிய நாடு உள்ளது. தங்கள்நாட்டின்வழியே யூதர்கள்செல்ல சமாரியர் அனுமதிப்பதில்லை. எனவே,யூத மக்கள் யோர்தான் நதியைக் கடந்து சுற்றிக்கொண்டுதான்,வடக்கேயிருந்து தெற்கே செல்வதுண்டு. கடவுள் நம்பிக்கையில்வேறுபாடு இல்லையென்றாலும் சமாரியர்களின் இனக் கலப்பினால்காலஓட்டத்தினால் யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் பகைமை வளர்ந்தது.இயேசுவின் காலத்தில் சமாரியர்கள், தீண்டத்தகாதவர் என்றேயூதர்களால் கருதப்பட்டனர் (யோவா 4).

நமதாண்டவர் சமாரியப் பகுதியில் உள்ள சிக்கார் என்ற ஊரில்உள்ள யாக்கோபின் கிணற்றருகே ஒரு சமாரியப் பெண்ணைச்சந்திக்கிறார். அப்பெண்ணிடம் இயேசு குடிக்கத் தண்ணீர் கேட்கிறார்;அவள் வியப்படைகிறாள். ஏனெனில், யூதர்கள் சமாரியர்களைத்தாழ்ந்தவராகக் கருதினர். தண்ணீர் முதலாய் அவர்கள் வீட்டில் குடிக்கமாட்டார்கள். எனினும், ஆண்டவர் அவளிடம் நீண்ட நேரம்உரையாடுகின்றார். இறுதியாகத் தானே மெசியாவென அவளிடம்கூறுகின்றார். தன் இறைத்தன்மையைப் பற்றி இவளிடமே முதன்முதலாக அறிவிக்கிறார்.தொழுநோயிலிருந்து இயேசுவின் புதுமையால் குணம் பெற்றபத்துப் பேரில் சமாரியரான ஒருவர் மட்டும் இயேசுவிடம் திரும்பி வந்துநன்றிசொல்கின்றார் (லூக் 17:16). மற்ற ஒன்பதுபேரும் யூதர்களானதால்இயேசுவிடம் குணம் பெறுவதை ஓர் உரிமையாகக் கருதினர் போலும்.ஆனால் அன்னியரான சமாரியர் இதனைப் பெரும் பாக்கியமாக எடுத்துக்கொண்டு இயேசுவுக்கு நன்றி செலுத்துகின்றார். ஆனால், இயேசு#8220; கடவுளைபோற்றிப் புகழ அன்னியராகியஉம்மைத்தவிர, வேறுஎவரும்திரும்பி வரக் காணோமே' ' (லூக் 17:18) என்று வருத்தப்படுகின்றார்.கடவுளின் அருளைப்பெற உரிமையுள்ளவர் என்று இறுமாப்புடன்இல்லாமல், அதனை ஒரு பாக்கியமாகக் கருதி, இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இயேசு இந்தசமாரியனைத்தான்உதாரணம் காட்டுகிறார்.

"எனக்கு அடுத்துதிருப்பவர் யார்?'' என்ற சட்ட வல்லுநரின்கேள்விக்கு விடையளிக்க இயேசு "நல்ல சமாரியர்'' உவமையைக்கூறுகிறார் (லூக் 10 : 30-37). சமயக் கடமைகளைச் சரியாகச் செய்கின்றகுருவையோ, சட்டங்களை அனுசரிக்கின்ற லேவியனையோ இயேசுபின்பற்றச் சொல்லவில்லை. மாறாக அடுத்தவனுக்கு,துன்பப்படுபவனுக்கு அன்பும் இரக்கமும் காட்டுபவன், ஒரு சமாரியராகஇருந்தாலும்கூட பின்பற்றினால் முடிவில்லா வாழ்வுபெறமுடியும்என்றுஉரைக்கின்றார். சமாரியர் ஒதுக்கப்பட்டவர்தான்! ஆனால் அவரதுநற்செயல்களால் அவர் யூதர்களைவிட மேலானவராக மாறுகிறார்.மனிதன் உயர்வடைவது பிறப்பினால் அல்ல் அவனதுநற்செயல்களால்தான்என்பதை இயேசு, இதன் மூலம் தெளிவாக்குகிறார்.

4.2.2. சமாரியாவும் கிறிஸ்துவ சமயமும்
தனது பணியின் காலத்தில் சமாரியாவுக்குச் செல்ல வேண்டாம்என்றுஇயேசுதிருத்தூதர்களிடம்கூறினாலும்(மத்10:5) தான்விண்ணகம்செல்லுமுன் அவர்கள் அங்கே சென்று சாட்சி பகருமாறு அவர்களுக்குப்பணித்தார் (திப 1 : 8). அதனால், திருத் தொண்டர் பிலிப்பும், பேதுருவும்யோவானும் கூட அங்கே போதித்தார்கள் (திப8:5, 25).மனந்திரும்பியவர்களில் திருத்தூதர் பணியில்எட்டாம் அதிகாரத்தில் நாம்காணும் மந்திரவாதி சீமோனும் ஒருவன். ஆனால் மீண்டும் பணத்துக்குஆசைப்பட்டு அவன் விசுவாசத்தை இழந்தான். திருச் சபையின்முக்கியமான மறை சாட்சியான புனித ஜஸ்டின்(கி.பி. 165) சமாரியாவைச்சார்ந்தவர். இன்று ஒரு சில சமாரியர்களே வாழ்கின்றனர். கெரிசிம்மலையில் தான் வழிபாடு நடத்துகின்றனர். பழைய இஸ்ரயேல்முறைமைப்படி அந்த மலையில் ஆண்டுக்கொரு முறை பாஸ்கா பலிஒப்புக் கொடுக்கின்றனர்.

5. தொழுகைக் கூடம்.

தொழுகைக் கூடம்நற்செய்திநூலைப் புரட்டும்போது'தொழுகைக் கூடம்(செபக்கூடம்)'என்ற வார்த்தை நம் கண்களில் பல இடங்களில் தென்படுகின்றது."யூதர்களுடைய தொழுகைக் கூடங்களில் அவர் போதித்து வந்தார்''(லூக் 4 : 10) என்று நாம் வாசிக்கின்றோம். பாலஸ்தீனாவில், இயேசுகாலத்தில் பல தொழுகைக்கூடங்கள் இருந்தன. "சினகாக்''(ளுலழெபழபரந)என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து 'தொழுகைக்கூடம்' என்ற வார்த்தைஉருவானது. இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில்அல்லலுற்றபோது, தங்கள் எருசலேம் ஆலயத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தனர். அப்போது ஒன்றாகக் கூடி செபம் செய்யவும்மோசே சட்டநூலையும் (தோரா) சமய ஒழுங்குகளையும் வாசிக்கவும்ஆர்வம் எழுந்தது. ஆலய வழிபாடு நிறைவேற்ற இயலாத காலத்தில்,இறைவனை ஆராதிக்க அவர்கள் அவ்வப்போது ஒன்றாகக்கூடவேண்டியதேவையை உணர்ந்தனர். அப்படிக் கூடிச் செபிக்கும் இடத்தைச்தொழுகைக் கூடம் என்றழைத்தனர்.

இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவிலிருந்து திரும்பிய நாளில்எஸ்ரா என்பவர், இஸ்ரயேலரின் குருவாகவும் தலைவராகவும்இருந்தார். இவரது காலத்தில்தான் பாலஸ்தீனாவில் தொழுகைக்கூடங்கள்உருவாகின.

5.1. அமைப்பு
யூதர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதிகளில், அப்பகுதிப் பெரியோர்கள்ஒன்று சேர்ந்து தொழுகைக்கூடங்கள் அமைப்பது வழக்கம். தனதுஊழியனுக்காக இயேசுவிடம் மன்றாடிய உரோமை நூற்றுவர் தலைவன்தன் சொந்தப் பணத்தில், தொழுகைக்கூடம் ஒன்றைக் கட்டியதுபோல்,தாராள குணமுள்ள யாராவது ஒருவரே தொழுகைக்கூடத்தைஅமைப்பதும் உண்டு.

பாலஸ்தீனாவில் உள்ள தொழுகைக்கூடங்கள் நீள் சதுர வடிவக்கட்டடங்களாகும். யூதர்கள் எருசலேம் நோக்கிச் செபம் செய்யவேண்டுமென்ற ஒழுங்கு இருப்பதனால் எருசலேமை நோக்கி,தொழுகைக்கூடங்கள் இருக்கும்படி அமைத்தனர். தொழுகைக்கூடத்தின்உட்பகுதியில் இறைவாக்குகளின் ஏட்டுச் சுருள் வைக்கப்பட்டிருக்குமிடம்திரைச்சீலை ஒன்றினால் மறைக்கப்பட்டிருக்கும். அதனைப் புனித இடம்என்றழைப்பர். அதனருகில், பேச்சு மேடை ஒன்றிருக்கும். அதில்நின்றுதான், விலியத்தை வாசிப்பர் (காண். லூக் 4 : 17).பெரியோர்களும், பணக்காரர்களும் அமர்வதற்கான வசதியும்செய்யப்படும் விவிலியச்சுருள் வைக்கப்பட்ட பகுதிக்கு அருகில்,செல்வாக்குடையவர்களுக்குத் தனிஇடமுண்டு. பெண்களுக்கானதனிஇடமும் உண்டு. கேரளத்தில் - கொச்சியில், யூத தொழுகைக்கூடம்ஒன்றை இன்றும் காணலாம்.

5.2. பயனும் பணியும்
;செப வழிபாடு நடக்கும் ஆலயமாகவும், சமயக் கடமைகளைப்பயிற்றுவிக்கும் பள்ளியாகவும், நீதி விசாரிக்கும் மன்றமாகவும்,தொழுகைக்கூடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், சட்டங்களைப்போதிப்பதும், நீதி விசாரணை நடத்துவதும், தொழுகைக்கூடத்தின்பக்கத்து அறைகளில் நிகழ்வதுதான் வழக்கம் (காண். மத் 10 : 17).தொழுகைக்கூடங்களில் கிறிஸ்துவர்களைப் பலமுறை தானேதண்டித்திருப்பதாகவும், தானே ஐந்து முறை தண்டிக்கப்பட்டிருப்பதாகவும்புனித பவுல் அடியார் கூறுகிறார் (திப 22 : 19, 11 2 கொரி 11 : 24).ஊர்ப் பெரியோர்களின்குழுதான், ஒவ்வொரு ஊரின் தொழுகைக்கூடத்தைக் கண்காணிக்கும் (லூக் 7 : 3-5). தொழுகைக்கூடத்தைக்கண்காணிக்க ஒரு தலைவர் நியமிக்கப்படுவார். அவர்தான்,கூட்டங்களுக்கு தலைமை வகிப்பார். அவர்தான் தொழுகைக்கூடச்சொத்துக்களுக்குப் பொறுப்பாளி(லூக் 13 : 14); குறிப்பிட்ட ஒருவரேயன்றிவிருப்பமுடைய எவரும் வழிபாடுகளை நடத்தலாம். எனவேதான், இயேசுபலமுறை தொழுகைக் கூடங்களில் விவிலியத்தை வாசித்தும், போதித்தும்வந்தார் (மத்4: 3; லூக்4 : 16). மக்களுக்கு அறிவுரை கூறதொழுகைக்கூடத் தலைவர்களால், பவுல் அடியாரும் பர்னபாவும்அழைக்கப்பட்டுள்ளனர் (திப 13 : 15).

எருசலேமிலிருந்து பல மைல் தூரத்தில் வாழ்ந்தஇஸ்ரயேலர்களுக்கு எருசலேம் வழிபாட்டினை ஈடுசெய்யும் முறையில்,தொழுகைக்கூட வழிபாடுபயன்பட்டது. எருசலேம் ஆலயம் கி.பி. 70 இல்அழிக்கப்பட்டது. அதன் பிறகு, இத்தகைய தொழுகைக்கூடங்கள்பெருகின. ஓய்வுநாளின் காலையிலும், மாலையிலும், சமயக்கூட்டங்கள்நடைபெற்றன. சிலஆண்டுகளுக்குப் பிறகு, திங்கள், வியாழன்போன்றநாட்களிலும் கூட ஆரம்பித்தனர்.ஒவ்வொருசெப வழிபாட்டிலும், ஷூமா(ளூநஅய) என்றுகூறப்படும்விசுவாச சத்தியங்களை வாசித்தனர். இது பழைய ஏற்பாட்டு மூன்றுவாசகங்களாகும் (காண். இச 6 : 4-9; 11 : 13-21; எண் 15 : 37-41). ஒருகடவுளின் மேல் அவர்களுக்குள்ள அன்பையும், விசுவாசத்தையும் இதுஉறுதிப்படுத்துகின்றது.

ஆதலால், எல்லாவற்றிலும் முதல் கட்டளை எது? என்றுமறைவல்லுநன் இயேசுவைக் கேட்டபோது இந்த ஷூமாவை அவர்குறிப்பிடுகின்றார் (மாற் 12-29). இத்துடன் தோராவையும்,இறைவாக்குகளையும் வாசிப்பது வழக்கம். எபிரேய மொழியில்தான்வழிபாடு நடக்கும். ஆலயத்திற்கும் தொழுகைக் கூடத்திற்கும் வேறுபாடுஉண்டு. ஆலயத்தில்பல்வேறுபலிகள்செலுத்தப்பட்டன. செபவழிபாடும்நடைபெறும். தொழுகைக்கூடத்தில்வார்த்தை வழிபாடும், செபவழிபாடும்மட்டுமே நடைபெறும்.

5.3. திருச்சபையும் தொழுகைக்கூடமும்
இளந்திருச்சபையில் தொழுகைக்கூடம் முக்கியமான இடத்தைப்பெற்றிருந்தது. இயேசு எப்படி தொடர்ந்து தொழுகைக்கூடத்திற்குச்சென்று வந்தாரோ, அதே போன்று திருத்தூதர்களும் அங்குச் சென்றுசெபித்தனர்; போதித்தனர் (திப6: 9; 13 : 14-41; 16 : 13).

விசுவாசத்தில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர்கள்ஆக்கப்படுவதற்கு திருச்சட்டம் நம்மைக் கிறிஸ்துவிடம் அழைத்துச்செல்லும்வழித்துணையாக அமைந்தது(கலா3: 24). அத்திருச்சட்டத்திற்குமிக முக்கியத்துவம் கொடுத்தது, யூதரின்தொழுகைக்கூடங்கள். எனவே,கிறிஸ்துவில் இளந்திருச் சபையினர், இறைவனுக்கு உகந்தவர்களாகமாறுவதற்கு இத்தகைய தொழுகைக்கூடங்கள் ஒரு தயாரிப்புக்களங்களாக அமைந்தன எனலாம்.

6. விவிலிய மொழிகள்

உலகம் உருவானது முதல், கடவுள் மனிதனோடு உறவாடினார்.ஆதியில் பிதாப்பிதாக்கள், இறைவாக்கினர்கள், அரசர்கள் மூலம்உறவாடிய இறைவன், புதிய ஏற்பாட்டில் இறைமகன் இயேசு, அவரதுதிருத்தூதர்கள், சீடர்கள் வாயிலாகவும் உறவாடினார். இவர்கள்எல்லோரும் பேசியமொழிகளைக் கையாண்டார். அந்த வார்த்தைநிலைத்து நிற்க, இவர்கள் பேசின மொழிகளில் அதனை எழுதிவைத்தனர். எபிரேய மொழியிலும், அரமேய மொழியிலும், கிரேக்க மொழியிலும் விவிலியம் முதன்முதலில் உருவாயின. ஆதலால்,எபிரேயம், அரமேயம், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளே - விவிலியமொழிகள் எனப்படும்.

6.1. எபிரேயம்
பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான நூல்கள், எபிரேய மொழியில்எழுதப் பட்டன. கி.மு. 13 ஆம்நூற்றாண்டில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குஇஸ்ரயேல்மக்கள்வந்தபோது, எபிரேயம் அவர்கள் மொழியாக இருந்தது.பாலஸ்தீனாவை இஸ்ரயேலர் அடைந்தபோது அங்கே வாழ்ந்தகனானேயர்களின் மொழியின் செல்வாக்கினால், எபிரேய மொழிஉருவாகியிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தமொழியைப் பேசியதால்தான், இஸ்ரயேல் மக்கள் எபிரேயர்கள் என்றுஅழைக்கப்படுகின்றனர்.இறைவாக்கினர் எசாயாவின் காலமான கி.மு. 8 ஆம்நூற்றாண்டில், எபிரேய மொழி நல்ல வளர்ச்சியடைந்தது. ஆனால்,பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு இம்மொழி அரமேயிக்குமொழியின்கலப்பைக் கண்டது.

;6.2. அரமேயம்
இயேசுவின்காலத்தில்பாலஸ்தீனாவில் அரமேயம் பேசும் மொழியாகஇருந்தது. அரேபியாப் பகுதியில் வாழ்ந்தநாடோடி இனத்தவர் பேசிய இம்மொழி,நாளடைவில் மெசபடோமியாப் பகுதியில்பரவி, சீரியா, பாலஸ்தீனா பகுதிகளிலும்பரவ ஆரம்பித்தது. கி.மு. 4 ஆம்நூற்றாண்டு முதல் எபிரேய மொழியின்இடத்தை, பாலஸ்தீனாவில்அரமேயம் பெற்றது. அ துமுதல், அரமேயமும் பொதுமக்கள் மொழியானது. சமய வழிபாட்டிலும்,நூல்களிலுமே எபிரேயம் பயன்படுத்தப்பட்டது. தானியேல் என்றஇறைவாக்குநூலின்ஒருபகுதி(2 : 4-7 : 28) அரமேயத்தில்எழுதப்பட்டது.

இயேசுவின் காலத்தில் அரமேயந்தான் அனைவரின் பேச்சுமொழியாக இருந்தது. ஆதலால், அரமேயந்தான் இயேசு கிறிஸ்துவின்தாய்மொழியாகும். மரியாளும் யோசேப்பும், அரமேயமே பேசினர் என்றுமுடிவுக்குவரலாம். இயேசுவின்உரையாடல்களைநற்செய்திநூல்களில்படிக்கும்போது அப்பா, எபேத்தா, அக்கலிதமா, கபாத்தா, கொல்கொத்தா,பம்மோன், கேபாஸ், ரபூணி போன்ற அரமேய வார்த்தைகளைக்காணலாம்.தொழுகைக்கூடத் தலைவனான யாயிர் என்பவனின் மகளைஉயிர்ப்பிக்கும், "தலித்தாகூம்'' என்ற வார்த்தையையும் (மாற் 5 : 41) அவர்சிலுவையில் தொங்கியபோது, "ஏலி ஒலிலெமா சபக்தாணி'' என்றவார்த்தைகளையும் (மத் 24 : 6) இயேசு கூறியதாக வாசிக்கிறோம்.

இவையனைத்தும் அரமேயச் சொற்கள். எனவே நம் ஆண்டவர்,வீட்டிலும், தான்போதித்த பொழுதும், அரமேய மொழியில்தான்பேசினார்என்பது உறுதி.அரமேயம் பெரிதும் பேசப்பட்டபோதிலும், வெகு சிலரேஇம்மொழியில் எழுதினர். பழைய ஏற்பாட்டு நூல்களில் ஒரு சிலஅதிகாரங்களும், புனித மத்தேயு நற்செய்தியும், முதன்முதலாக அரமேயமொழியில் எழுதப்பட்டன.

எபிரேய மொழிக்கும், அரமேயத்திற்கும் மிக்க தொடர்பு உண்டு.ஆங்கிலம், தமிழ் போன்ற பல மொழிகளை நாம் இடமிருந்து வலமாகஎழுதுகிறோம். ஆனால், எபிரேயமும் அரமேயமும் வலமிருந்து இடமாகஎழுதப்படுகின்றன. உயிர் எழுத்துக்களைப் பொதுவாக இரண்டும்பயன்படுத்துவதில்லை. பொருள் விளக்கத்திலும், எழுத்து முறையிலும்,இரண்டு மொழிகளுக்கும் அதிக ஒற்றுமைகள் உள்ளன.அரமேயமும் எபிரேயமும் சென்ற நூற்றாண்டு வரை இறந்தமொழிகளாகவே எண்ணப்பட்டன. ஆனால், கடந்த நூறு ஆண்டுகளாகஎபிரேய மொழியில், மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாகஇன்று, இஸ்ரயேல் நாடு முழுவதும் எபிரேயம் பேசப்படுகிறது. இதுஅந்நாட்டின் ஆட்சி மொழியாகவும் உள்ளது. உலக மொழிகளில் வேறுஎம்மொழியும் பெற்றிராத மறுமலர்ச்சியினை எபிரேயம் மட்டும்பெற்றுள்ளது. 1964 ஆம் ஆண்டில் திருத்தந்தையை இஸ்ரயேல்நாட்டின் ஜனாதிபதி சந்தித்தபோது எபிரேய மொழியில்தான்திருத்தந்தையுடன் தமது உரையை ஆற்றினார்.லெபனான் பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் இன்றும்,அரமேயம் பேசப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, எபிரேய- அரமேய மொழிகள் முற்றிலும் இறந்த மொழிகளாகஎண்ணுவதற்கில்லை.

6.3. கிரேக்கம்
விவிலிய மொழிகளில் மூன்றாவது கிரேக்க மொழியாகும். புதியஏற்பாட்டு நூல்களும், பழைய ஏற்பாட்டின் செப்துவாஜின்த் (ளுநிவரயபiவெ)மூலமும், கிரேக்க மொழியில்தான் முதன் முதலில் எழுதப்பட்டன.பாலஸ்தீனாவை அடுத்துள்ள பகுதியில் வாழ்ந்த மக்களின் பேச்சுமொழியாக இது இருந்து வந்தது. எனவே, முதல் இரண்டுநூற்றாண்டுகள்கிறிஸ்துவவழிபாட்டுமொழியாகவும்கிரேக்கம்இருந்தது.

உயர்ந்த கலாச்சார மொழியாகவும், அனைத்து நாட்டுத் தொடர்புமொழியாகவும் விளங்கியது கிரேக்கம். இயேசுவின்காலத்தில் நகர்வாழ்மக்களின் மொழியாக விளங்கினாலும், மத்திய தரைக் கடலின் கிழக்குப்பகுதியில் வாழ்ந்த எல்லா மக்களுக்குமே கிரேக்கம் தெரிந்திருந்தது.எனவேதான், புனித பவுல்அடியார் எபிரேயமொழியைஅறிந்திருந்தாலும்யூதரல்லாதவர் களிடையே கிரேக்க மொழியிலே நற்செய் தியைப்போதித்தார். ஆசீரியம் அராமேயம், எபிரேயம், அராபிக், எத்தியோப்பியம்ஆகியவற்றை உள்ளிட்ட மொழிகளை செமித்திய மொழி என்றழைக்கிறோம். செமித்திய மொழிகளின் கலப்பினால் இலக்கிய எபிரேயம் அதன்தூயதன்மையை இழந்தது பேசும் எபிரேயம் உருவானது. இயேசுவின்காலத்தில் மக்கள் பேசிய அரமேய மொழியில்தான் முதன் முதலில்இயேசுவின் போதனைகள் என்ற நூலை மத்தேயு எழுதினார். ஆனால்,இந்நூல் மறைந்துவிட்டது. மக்களில் அதிகம் புழக்கத்திலிருந்த கிரேக்கமொழியில் மத்தேயுவும் மற்ற நற்செய்தியாளர்களும் தங்கள் நூல்களைஎழுதினர்.

7. புதிய ஏற்பாடு: முக்கியக் காலஅட்டவணைஅட்டவணை

கி.மு.63

போம்பேஎருசலேமில்நுழைதல் (பாலஸ்தீனம்உரோமையர்வசமாதல்)

கி.மு.37

ஏரோதுமன்னன்அரியணைஏறுதல்

கி.மு. 4

இயேசுவின்பிறப்பு

 கி.மு.4

ஏரோதுஏப்ரலில்மரணம். அவனதுஅரசுமூன்று மகன்களுக்குள்பகிர்வு; அர்கெலாவுக்கு யூதேயாவும்சமாரியாவும்; ஏரோது அந்திப்பாஸ{க்கு கலிலேயாவும் பெரையாவும்; வடகிழக்குப்பகுதி பிலிப்புவுக்கு.

 கி.பி.6

அகுஸ்துஸ்சீசர்அர்கெலாவைதள்ளிவிட்டு யூதேயாவைஉரோமைஆளுநனின்பொறுப்பில் ஒப்படைத்தல்.

 கி.பி.14

திபேரியுசீசர் அகுஸ்துஸ{க்குப்பின்அரியணை ஏறுதல்(ஆகஸ்டு19)

கி.பி.26-36

போன்சியுஸ்பிலாத்துயூதேயாவின்ஆளுநன்

கி.பி.28

திருமுழுக்குயோவான்போதிக்கத்துவங்குதல், இயேசுவின்பணிவாழ்வுதுவக்கம் (நற்செய்திகளின் முதல்வாய்மொழி பாரம்பரியம்).

கி.பி.30

இயேசுவின்பாடுகள், மரணம், உயிர்ப்பு, தூய  ஆவிபொழியப்படல் (பின்னாளில்நற்செய்தியாளர் பயன்படுத்திய சிலஎழுத்துவடிவங்கள்)

கி.பி.36-37

புனிதஸ்தேவான்கொலை, சின்னப்பரின் மனமாற்றம்

கி.பி. 45-49

புனிதபவுல்முதல்தூதரைப்பயணம்

கி.பி. 49

எருசலேம்திருச்சங்கம்(அரமேயமத்தேயு நற்செய்தி)

கி.பி50  52

புனிதபவுலின்இரண்டாம்பயணம் (1, 2 தெசலோனிக்கேயர்)

கி.பி.53-58

புனிதபவுலின்மூன்றாம்பயணம் கி.பி. 56

கி. பி 56

பிலிப்பியர்திருமுகம்

கி.பி. 57

1 கொரிந்தியர், கலாத்தியர், 2 கொரிந்தியர், உரோமையர், யாக்கோபுதிருமுகங்கள் கி.பி.58 60

கி.பி.58-60

புனிதபவுல்செசரியாவில்கைதி

கி.பி.60

புனிதபவுலின்உரோமைப்பயணம், கப்பல்புயலில் சிக்குதல், மால்தாஅனுபவம், கொலோசையர், எபேசியர், பிலமோன்திருமுகங்கள்

கி.பி.63

பவுல்விடுதலை 1 தீமொத்தேயு , தீத்து, 1 பேதுரு, மாற்குநற்செய்தி

கி.பி.64 உரோமை நகரம் எரிதல்
கி.பி.67 கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படல் புனித பேதுருவேதசாட்சியாதல்
கி.பி.67 புனித பவுல் வேதசாட்சியாதல்- 2 திமொ , எபிரேயர் திருமுகம்
கி.பி.70 உரோமையர் எருசலேமை அழித்தல்
கி.பி.70-80 கிரேக்க மொழியில் மத்தேயுநற்செய்தி
கி.பி.80-85 லூக்கா நற்செய்தி , திருத்தூதர் பணிகள், யூதாதிருமுகம்
கி.பி.95 திருவெளிப்பாடு, 1 , 2, 3, யோவான்திருமுகங்கள்,2 பேதுரு
கி.பி.100 புனிதயோவான்இறத்தல்
   

 

8. புதிய ஏற்பாடு பற்றிஇரண்டாம்இரண்டாம் வத்திக்கான் சங்கம்

8.1. புதிய ஏற்பாட்டின்மேன்மை(இறைவெளிப்பாடு 17லிருந்து 20 வரை)

17. நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் நிறைவாழ்வளிக்கும்கடவுளின் வல்லமையாக இறைவார்த்தை (காண் உரோ 1 : 16) புதியஏற்பாட்டு நூல்களில் மிகவும் சிறப்பான முறையில் அடங்கியுள்ளதுஅவற்றில் தம் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றது. ஏனெனில், காலம்நிறைவேறியபோது (காண். கலா4: 4) வார்த்தை மனிதரானார்; அருளும்உண்மையும் நிறைந்து விளங்கி (காண். யோவா 1 : 14) நம்மிடையேகுடிகொண்டார். கிறிஸ்து கடவுளின் ஆட்சியை இவ்வுலகில்ஏற்படுத்தினார். தம் தந்தையையும் தம்மையும் செயலாலும் சொல்லாலும்வெளிப்படுத்தினார். தாம் இறந்து உயிர் பெற்றெழுந்ததாலும்மாட்சிமையுடன் விண்ணகம் சென்றதாலும் தூய ஆவியைஅனுப்பியதாலும் தமது அலுவலை நிறைவுசெய்தார். மண்உலகிலிருந்துஉயர்த்தப் பெற்று எல்லாமனிதரையும் தம்மிடம் ஈர்த்துக் கொள்கின்றார்(காண்யோவா 12:32). முடிவில்லா வாழ்வுதரும் வார்த்தைகளை(காண்யோவா 6:68) அவர் ஒருவரே கொண்டுள்ளார். நற்செய்தியைபோதிக்கவும் கிறிஸ்துவும் ஆண்டவருமான இயேசுவில் நம்பிக்கையைதூண்டவும் திருச்சபையை ஒன்று கூட்டவும் வேண்டி அவருடையதிருத்தூதர்களுக்கும் இறைவாக்கினருக்கும் தூய ஆவியின் வழியால்(காண் எபே3: 46 கிரேக்க மூலம்) இந்த இறைத் திட்டம் இப்போதுவெளியாக்கப்பட்டது போல மற்ற தலைமுறைகளுக்கு வெளியாக்கப்படவில்லை. இவ்வுண்மைகளுக்கு புதிய ஏற்பாட்டு நூல்கள் நிறைவானதெய்வீகச் சான்றாக நிலவுகின்றன.

8.2. நற்செய்தி நூல்கள்மறைத்தூதர் காலத்தவை
18. விவிலிய நூல்கள் அனைத்திலும், புதிய ஏற்பாட்டிலுங்கூட,நற்செய்தி நூல்கள் சிறந்த ஓர் இடத்தை வகிக்கின்றன என்பதைஅறியாதார் யாரும் இல்லை. மனிதரான வார்த்தையும் நமக்குநிறைவாழ்வு தருபவருமான இயேசுவின் வாழ்விற்கும் போதனைக்கும்அவையே முக்கியச் சான்றுகளாக விளங்குகின்றன.நற்செய்தி நூல்கள் நான்கும் திருத்தூதரிடமிருந்து தோன்றியவைஎன்பதைத் திருச்சபை என்றும் எங்கும் ஏற்றிருந்தது; ஏற்றும் வருகிறது.ஏனெனில் கிறிஸ்துவின் கட்டளைப்படி திருத்தூதர்கள் போதித்தனர்.பின்னர் அவர்களும்அவர்கள் காலத்தவரும் இறை ஆவியின்ஏவுதலால்அப்போதனைகளை எழுத்து வடிவில் நமக்கு விட்டுச் சென்றனர்.இவையே நமது நம்பிக்கையின்அடித்தளமான மத்தேயு, மாற்கு, லூக்கா,யோவான், ஆகியோரின் நான்கு வடிவ நற்செய்தியாகும்.

8.3. நற்செய்திநூல்களின்வரலாற்றுத்தன்மை
19. நற்செய்திநூல்கள்நான்கும்வரலாற்றுத் தன்மைகொண்டவைஎன்பதைத் திருச்சபைத் தாய்தயக்கமின்றிஎடுத்துக் கூறுகின்றார். இவைஇறைமகனான இயேசு மானிடரிடையே வாழ்ந்தபோது, அவர்விண்ணேற்ற மடைந்த நாள் வரை (காண் திப 1:1-2) மக்களின்நிலையான நிறை வாழ்விற்காக அவர் உண்மையிலேயேசெய்தவற்றையும் போதித்தவற்றையும் அப்படியே நமக்குத் தருகின்றன என்று திருச்சபை உறுதியாக என்றும் தொடர்ந்து ஏற்றுவந்தது; ஏற்றும்வருகின்றது. திருத்தூதர்கள் ஆண்டவர் கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்குப்பின், அவர் தம் மாட்சிமிகு நிகழ்ச்சிகளால் கற்பிக்கப்பட்டு,உண்மையின் ஆவியாரின் ஒளியால் பயிற்றுவிக்கப் பட்டதால்முழுமையான அறிவுடன் அவர் சொன்னவற்றையும் செய்தவற்றையும்தமக்குச் செவிசாய்த்தவர்களுக்குக் கூறிச்சென்றனர். திரு ஆசிரியர்கள்வாய்மொழி வடிவிலோ எழுத்து வடிவிலோ வழிவழியாக வந்த பற்பலமரபுகளிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மற்றும் சிலவற்றைத்தொகுத்து அல்லது தங்கள் சபைகளின் நிலைகளுக்குத் தக்கவிதத்தில்விவரித்து, அதே சமயத்தில் போதனை வடிவைக் காத்து, ஆனால்எப்போதும் இயேசுவைப் பற்றியுள்ள உண்மையானவற்றையும்நேர்மையானவற்றையும் மட்டுமே அறிவிக்கும் வகையில் நான்குநற்செய்தி நூல்களையும் எழுதினர். அவர் தம் வார்த்தைகளைப்பயின்றுள்ள நாம் அவற்றின் "உண்மையை” அறிந்து கொள்ளும்நோக்குடன் அவர்கள் தம் சொந்த ஞாபகத்திலிருந்தும், நினைவிற்குவந்தவற்றிலிருந்தும் அல்லது 'தொடக்கமுதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும்' இருந்தோரின் சான்றிலிருந்தும் அவற்றைஎழுதினர் ( காண். லூக் 1:2-4).

8.4. புதிய ஏற்பாட்டுப் பிற நூல்கள்
20. நான்கு நற்செய்தி நூல்களையும் தவிர தூய ஆவியால்ஏவப்பட்டுத் தூய பவுல் எழுதிய திருமுகங்களும் பிற திருத்தூதரின்நூல்களும் புதிய ஏற்பாட்டுத் திருமுறையில் அடங்கியுள்ளன.இந்நூல்களின்மூலம்கடவுளின்ஞானமிகுதிட்டத்தின்படிஆண்டவரானகிறிஸ்துவைப் பற்றிய உண்மைகள் உறுதிப் படுத்தப்படுகின்றன்அவருடைய உண்மையான போதனை மேன் மேலும் விளக்கப்படுகின்றதுகிறிஸ்துவின் தெய்வீகப் பணியால் வரும் நிறைவாழ்வின் வல்லமைஅறிவிக்கப்படுகின்றது திருச்சபையின் தொடக்கமும் அதன் வியத்தகுவளர்ச்சியும் எடுத்துரைக்கப்படுகின்றன் அதன் மாட்சிமிகு நிறைவும்முன்னுரைக்கப்படுகின்றது.ஏனெனில், ஆண்டவராகிய இயேசு தம் திருத்தூதர்களுக்குத் தந்தவாக்குப்படி அவர்களுடன் இருந்தார் (மத் 28:20); உண்மையின்முழுமைக்கு இட்டுச் செல்லும்படி துணையாளராகிய ஆவியைஅவர்களிடம் அனுப்பினார் (காண்யோவா 16:13).

------------------------------------------
--------------------------
----------------
------
--