இஸ்ரயேலின்ஒருங்கிணைந்தப் பேரரசு

எழுதியவர்:அருள்திரு பெ. கல்லரசு

விவிலிய அன்பர்களே, வணக்கம்.

திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டை சட்ட நூல்கள், இறைவாக்குநூல்கள், ஞான நூல்கள் என்று பிரித்துப் பார்ப்பது யூத ராபிகளின்வழக்கமாகும் (காண்க. லூக் 24:44). இதில் இறைவாக்கு நூல்களைமுற்கால இறைவாக்கினர்கள், பிற்கால இறைவாக்கினர்கள் என்றுஇரண்டாகப் பிரித்துப் பார்ப்பதும் யூதப் பாரம்பரியமாகும். முற்காலஇறைவாக்கினர் நூல்களை தற்கால விவிலிய அறிஞர்கள் வரலாற்றுநூல்கள் என்னும் பெயரிலேயே அழைக்க விரும்புகின்றார்கள். தம்பெயரில் நூல் எழுதாத இறைவாக்கினர்கள் பலரின் செயல்பாடுகள்இந்நூல்களில் காணக்கிடக்கின்றன. ஆயினும் இந்நூல்களில்இஸ்ரயேலரின் வரலாற்றில் அரச அமைப்பு கோவில் அமைப்புஆகியவை பற்றிய தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் போராட்டங்களும்நெருக்கடிகளும் ஏற்றமும் இறக்கமும் அதிகம் இடம்பெறுகின்றன.மிகவும் குறிப்பாக அரசர்களின் வரலாறும் செயல்பாடுகளும் அதிகமாகவிவரிக்கப்படுகின்றன.

இந்த வரலாற்று நூல்களில் பெரும்பாலான நூல்கள் இஸ்ரயேல்நாட்டின் ஒருங்கிணைந்த பேரரசின் செயல்பாடுகள்பற்றிப் பேசுகின்றன.அதாவது கி.மு. 12-ஆம் நூற்றாண்டில் இஸ்ரயேலரின் கடைசிநிதித்தலைவரான சாமுவேல் தொடங்கி பாலஸ்தீன நாடு இஸ்ரயேல்யூதா என்று இரண்டாகப் பிரிந்த கி.மு. 926-931 ஆம் ஆண்டு வரையிலானசவுல், தாவீது, சாலமோன் ஆகிய அரசர்களின் ஆட்சிக்காலம் இது.

இக்காலக் கட்டத்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல்மக்களின் இறையனுபவம் எப்படி இருந்தது? அவர்களைக் கடவுள் எப்படிவழி நடத்தினார்? இவை போன்ற சமய வினாக்களுக்கு விடையளிக்கும்விதத்தில் விவிலியத்தின் இந்த வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன.வெறும் வரலாறு மட்டுமே விவிலியத்தில் இல்லை; அதே சமயத்தில்வெறும் இறைநம்பிக்கைக் கோட்பாடுகள் மட்டும் திருவிவிலியத்தில்இல்லை. வரலாறும் நம்பிக்கையும், குறிப்பாக இந்த வரலாற்றுநூல்களில் (1, 2 சாமுவேல், 1, 2 அரசர்கள்; 1, 2 குறிப்பேடு) இணைந்தேசெல்கின்றன. இந்நூலை எழுதித்தந்த அருள்திரு பெ. கல்லரசுஅவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றி உரித்தாகுக.இறைவார்த்தைப் பணியில்அருள்திரு முனைவர் பெ.கல்லரசு அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திரு முனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்

உள்ளே
1. முன்னுரை
2. முடியரசின் பின்னணி
3. சவுல்
4. மீட்பின் வரலாறு
5. தாவீது மன்னர்
6. ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாடு
7. தாவீது அரசு
8. சாலமோன்
9. பேரரசின் பல நிலைகள்
10. எருசலேம் கோவில்

1. முன்னுரை

"யாவே" உடன்படிக்கையைத் தம் முன்னோரிடம் ஏற்படுத்தி வழிநடத்தி வந்தார் என இஸ்ரயேல் மக்கள் உறுதியாக நம்பினர். இதைச்சிறப்பாக எகிப்திலிருந்து விடுதலை அடைந்து வந்த நிகழ்ச்சியிலும், சீனாய்மலையில் யாவே தம்மை வெளிப்படுத்தியதிலும் கண்டு கொண்டனர்.இவர்கள் இனமாகவோ, நாடாகவோ உருவாவதற்கு முன்புஇறைமக்களாக இருந்தார்கள். உடன்படிக்கையானது வெறும்சட்டத்தொகுப்பு மட்டுமல்ல் உடன்படிக்கையின் வாயிலாக யாவேமக்களிடமிருந்து எதிர்பார்ப்பது "அன்பு". இந்த அன்பின் அடிப்படையில்எழுந்த உடன்படிக்கையில் தான் மக்கள் ஒரு சமூகமாக உருவானார்கள்.

இவ்வாறு உருவான சமூகம் யாவேயின் அரவணைப்பில் நீதித்தலைவர்களின் வழிகாட்டுதலில் நடைபோட்டது. மற்ற மக்களோடுஒப்பிடும் பொழுது அரசியலிலோ, பொருளாதாரத்திலோ, பண்பாட்டிலோசிறப்பு வாய்ந்தவர்களாகவோ அல்லது மற்றவர்களால்போற்றப்படும்படியோ இவர்கள் இல்லை. இறுதி நீதித் தலைவராகஇருந்து வழி காட்டிய சாமுவேல் வயது முதிர்ந்தவராக இருந்தார்; மேலும்அவரின் மக்களில் எவரும் இப்பணிக்குத் தகுதி உள்ளவர்களாக இல்லை.ஆகவே இஸ்ரயேல் மக்கள் தங்கள் தனித்தன்மையை உறுதிப்படுத்தவும்,வெளிப்படுத்தவும் தங்களுக்கு ஓர் அரசன் வேண்டும் எனக் கேட்டனர்.மக்களின் விருப்பப்படி அரசனைத் தேர்வு செய்ய யாவே இசைந்தார்(1 சாமு 8). நிறுவப்பட்ட அரசு பிளவுபடுவதற்கு முன்பு மூன்று அரசர்கள்ஆண்டார்கள். அவர்கள் சவுல், தாவீது, சாலமோன் ஆவர். இம்மூன்றுஅரசர்களின் நிறை, குறைகள், ஆட்சி முறைகள் இவற்றை விரிவாக,தெளிவாக ஆராய்வதுதான் இத்தொகுப்பின் நோக்கம்.

 

2. முடியரசின் பின்னணி

ஒன்றித்த முடியரசு தோன்றுவதற்குப் பல காரணங்கள் இருந்தன.இவை மதத்தின் அடிப்படையிலோ, சமுதாயத்தின் அடிப்படையிலோ,

2.1. மதம்:
யாவேயின் மக்கள் இஸ்ரயேலர்; உடன்படிக்கையின்படிஇஸ்ரயேலின் வரலாற்றுத் தொடக்க முதலே அவர்களின் கடவுள் யாவேஅவர்களை எகிப்திலிருந்து மீட்டு பாலைவனத்தில் வழிநடத்தி மோசேவைஅவர்களுக்குத் தலைவராகக் கொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சிகளால்(விப 13-14) இஸ்ரயேலரின் இறை நம்பிக்கை வளர ஆரம்பித்தது.இவர்களின் இறைநம்பிக்கை ஏதோ ஒரு சில மறைக்கோட்பாடுகளையோ அல்லது ஒழுங்குமுறைச் சட்டங்களையோ சார்ந்ததுஅல்ல. மாறாக அது அவர்கள் கொண்ட இறை அனுபவமே. இந்த இறைஅனுபவம் உடன்படிக்கையாக இருந்தது. அதில் இஸ்ரயேலருக்கு யாவேகடவுளாகவும் அவர்கள் இவருடைய மக்களாகவும் இருப்பதுதான்உடன்படிக்கையின் உட்பொருள்.

இஸ்ரயேலரின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவர்கள்தேர்ந்தெடுக்கப்பட்ட குலம், சிறப்பாக அழைக்கப்பட்ட மக்கள் என்றநம்பிக்கை இழையோடிக் கொண்டே இருந்தது. இவைகள் இருந்தும்இஸ்ரயேலர் அரசியல் அளவிலும், சமுதாய ளளதியிலும் பிற இனத்தவரைச்சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. காரணம் அவர்களின்எண்ணிக்கை மிகச்சிறிது. ஆகவே பிறஇனத்தவரோடு பழகும்போதுஅவர்களின் சமுதாய, பண்பாட்டு, மற்றும் மத நாட்களைப் பின்பற்றவேண்டியவர்களாக இருந்தனர். உள்ளார்ந்த விதத்தில் ஒரு கடவுள்வழிபாடு இருப்பினும் பல கடவுள் கொள்கையை இவர்கள்புறக்கணிக்கவில்லை. இதற்குக் காரணம் இஸ்ரயேலரின் பண்பாட்டுமதச் சார்புத்தன்மையே ஆகும்.

2.2. சமூகம்:
இஸ்ரயேல் மக்கள் நாடோடி வாழ்க்கையை மாற்றிபாலஸ்தீனத்திற்குள் குடியேறிய காலத்திலிருந்து முடியரசுதொடங்குகின்ற காலம் வரை (200 ஆண்டுகள்) இவர்கள் குலங்களாகப்(12 குலங்கள்) பிரிந்து ஒரு சில கட்டுக்கோப்புக்களோடு வாழ்ந்து வந்தனர்.இவ்வாறு குலங்களாக வாழ்ந்தாலும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள்என்ற சமூக உணர்வு இவர்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்து இருந்தது. ஒவ்வொரு குலமும் தங்களுக்குள்ள தன்மைகளைக் கட்டிக் காத்துவந்தனர். நில வரம்புடையவைகளாக இக்குலங்கள் இருந்தன(யோசுவா 13-19).

2.3. அரசியல்:
அரசியல் நோக்கோடு பார்க்கும்போது இஸ்ரயேலர் ஓர் அரசியல்அமைப்பின்றி வாழ்ந்தனர். இறைவனே அரசாக இருந்து வழி நடத்திவந்தார். நீதித்தலைவர்களும், இறைவாக்கினர்களும் மக்களுக்குஇறைவழியை உணர்த்தி வாழ்க்கைக்கு வழிகாட்டி வந்தனர். அண்டைநாட்டு பிலிஸ்தியர்கள் உருவத்தில் பெரியவர்களாகவும் படைபலத்தில்வலிமை பெற்றவர்களாகவும் இருந்து இஸ்ரயேலருக்குத் தொந்தரவுகொடுத்துக்கொண்டே வந்தனர். இந்நிலையில் சாமுவேல் வயதுமுதிர்ந்தவராகியதால் தன் மக்களை நீதிதலைவர்களாக ஏற்படுத்தினார்.ஆனால் இவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக மக்களிடம்கையூட்டுப் பெற்று நீதியைப் புறக்கணித்தனர். இதனால் இஸ்ரயேலரின்மூப்பர்கள் ஒன்று கூடி சாமுவேலிடம் தங்களுக்கு ஓர் அரசன் வேண்டும்என்று கேட்டனர் ( 1 சாமு 8:1-9).

இவ்வாறு மக்கள் அரசனைக் கேட்பதற்குப் பல காரணங்களைஅறியமுடியும்,
1. நீதித்தலைவர்கள் ஒழுங்காக நீதி செலுத்தவில்லை.
2. அருகிலுள்ள எல்லா நாடுகளிலும் அரசர்கள் உள்ளனர்.
3. அரசனைக் கொண்ட ஓர் அரசும் அதன் வாயிலாகமற்றவர்களுக்குத் தனி நாடு என்று தன்னடையாளம் (ளுநடக னைநவேவைல யள யயேவiடிn) காட்ட வேண்டும்.
4. பகைவர்களை வெல்லுவதற்கு அரசனும் படையும்உருவாக்கப்பட வேண்டும் என்ற நிர்பந்தம்.

 

3. சவுல்

3.1. முதல் அரசன்:
பெஞ்சமின் குலத்திலிருந்துசவுல் என்பவர் அரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இஸ்ரயேலரின் மரபுக்குப் புறம்பானதாகத்தெரிகிறது. சவுலின் தேர்வு இருவகையாக நமக்கு 1 சாமுவேல்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் ஒன்று அரசுரிமைக்குஆதரவா கவும், மற்றொன்றுஅதற்கு எதிராகவும் உள்ளது.முதலாவது சாமுவேல்இராமாவில் தனிமையாகசவுலை அரசனாக திருப்பொழிவுசெய்ததைப் பற்றிக் கூறுகின்றது( 1 சாமு 9:1-10:16). இரண்டாவதுமக்களின் கோபத்திற்கும் எதிர்ப்புக்கும் விட்டுக்கொடுத்து சவுலின்தேர்வுக்கு மிஸ்பா என்ற இடத்தில்தலைமை ஏற்கின்றார் சாமுவேல்(1 சாமு 10: 17-27).

இவ்விரு தொகுப்புக்களும்எப்படி இருப்பினும் ஒன்று மட்டும்நமக்குத் தெளிவாகின்றது தலையில் எண்ணெய் வார்த்துசவுலைத் திருப்பொழிவு செய்வதன் மூலம் இறைவனின் அனுமதியையும் இறை வாக்கினரின்உறுதிப்பாட்டையும் மக்களின்மகிழ்ச்சியான ஏற்பையும் தெரிவிக்கின்றது ( 1 சாமு 10:1-24).

3.2. சவுலின் வெற்றிகள;:
எந்த நோக்கத்திற்காக மக்கள் நம்பிக்கையுடன் சவுலைஅரசனாக்கினார்களோ அந்த நம்பிக்கை வீண் போகாமல் தன்நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டார் சவுல் அரசர். சிறப்பாகபெலிஸ்தியர்கள் மேல் வெற்றி கொண்டது இஸ்ரயேலருக்கு ஒரு புதியதெம்பையும், நம்பிக்கையையும் கொடுத்தது. சவுலின் மகன்யோனத்தானின் போரினாலும் இஸ்ரயேலர் வெற்றி மேல் வெற்றியைஅடைந்தனர். எப்ராயிம் மலையைச் சூழ்ந்திருந்த பிலிஸ்தியர்களைத்துரத்தி வெற்றி கொண்டது ஒரு மாபெரும் செயல். மக்கள் எதிரிகளின்பயமின்றி நடமாடத் தொடங்கினர்.

சவுலின் ஆட்சி காலமொல்லாம் போரிலேயே கழிந்தது ( 1 சாமு14:47-52). அமலேக்கியரின் மேல் கொண்ட வெற்றியை 1 சாமு15-ல்காணலாம். காதேசு பாலைவெளியில் வாழ்ந்த அமலேக்கியர்கள்இஸ்ரயேலரின் வலுவின்மையைக் கண்டு போர் தொடுத்னர். ஆனால்சவுலின் தலைமையில் இவர்களை முறியடித்துச் சாதனை புரிந்துஇஸ்ரயேலை ஒரு நாட்டின் அந்தஸ்திற்கு உயர்த்திய பெருமைசவுலையேச் சாரும்.

3.3. சவுலின் அரசுரிமை இயல்:
அக்காலத்தில் ஒரு நாட்டுக்கு அரசனை ஏற்படுத்துவது என்பதுபிறஇனத்தாரின் மரபு. அது இஸ்ரயேலருக்குத் தகாத ஒன்று என்றநிலைமையில் சாமுவேல் அதை எதிர்த்தும் அதன் பின் இறைவனிடம்சென்று முறையிடவும் செய்தார். ஆயினும் இறைவனோ மக்கள்விருப்பத்திற்கு இணங்கினார். ஆனால் அரசனை ஏற்படுத்தினால்இன்னின்ன நெருக்கடிகள், கடமைகள், தொல்லைகள் நிகழும் என்றுஇறைவன் தெளிவாக அறிவுறுத்தினார். எனினும் இந்த நோக்கோடுஇஸ்ரயேலின் அரசைக் கண்ணுறுகின்ற அதே வேளையில்இஸ்ரயேலரின் அரசுத்தன்மையோ தனித்தன்மை வாய்ந்ததாக இருந்ததுஎன்பதையும் இங்கேக் குறிப்பிட வேண்டும். இங்கே இது கானானியர்கள்,பெலிஸ்தியர்களைப் போல நகர், மாநிலம் போன்ற அமைப்புக்களைக்கொண்டதாக இல்லை இஸ்ரயேலரின் அரசுரிமை.

சவுல் தனக்கு முன்பாக இருந்த நீதித் தலைவர்களைப் போன்ற ஒருதலைவனாகத்தான் இருந்தான். அவனை சாமுவேல் திருப்பொழிவுசெய்வது ஒன்றுதான் புதிய முறையாய் அமைந்தது. மற்றபடி எல்லாம்பழைய முறைமைப்படிதான் நிகழ்ந்தன. மக்கள் சவுலை அரசனாக ஏற்றுஆர்ப்பரித்தனர். ஆனால் சவுலை முழுமையான அரசராக (ஆநடநம)பெரியவர்கள் சொல்லவில்லை. மாறாகத் தலைவனாகவும்,தளபதியாகவும் (சுயபனை) எண்ணினர். அதாவது சாமுவேலும் குலத்தலைவர்களும் சவுலை மரபுப்படி அரசராக ஏற்காமல் நிரந்தரமான ஒருபடைத்தளபதியாக நியமித்தனர். இவர்கள் எப்படி நினைத்தாலும் மக்கள்சவுலை அரசராக ஏற்றனர். அரசராகவோ, படைத்தளபதியாகவோ சவுல்கருதப்பட்டாலும் அவரின் கடமையோ, நீதித்தலைவராக இருந்துயாவேயின் எதிரிகளை முறியடித்து இஸ்ரயேல் மக்களைக் காப்பதுதான்.

சவுல் உள்ளாட்சி அமைப்புக்களில் எந்த மாறுதலையும்கொணரவில்லை. அதில் அதற்கு விருப்பமும் இல்லை. வாய்ப்பும்ஏற்படவில்லை. அரசப் பதவி புதியதாக இருந்தமையால் பெரிய படையும்,செயலகங்களும் திட்டங்களும், அரச குலமும் இல்லை. கில்காவில் சவுல்இருந்த இடம் ஓர் அலுவலகமாக இருந்ததேத் தவிர மன்னனின்மாளிகையாக இல்லை. தேவையை உணர்ந்து இளம் வீரர்களைப்படைக்குச் சேர்ந்து நிரந்தரப் பணிக்கு அமர்த்தினார் மன்னர் சவுல் ( 1 சாமு14:52). சவுல் மக்களின் நன்மதிப்பைப் பெற்று வந்தார். கிலயாது நாட்டுயாபேசு (துயடிநளா - புடைநயன) மக்களை எதிரியிடமிருந்து காப்பாற்றி அந்நகரமக்களின் அன்பையும் வணக்கத்தையும் பெற்றார் சவுல் ( 1 சாமு 31:11-13). சவுலின் அரசாட்சி இஸ்ரயேல் மக்களுக்கு புதிய நம்பிக்கையையும்ஊக்கத்தையும் கொடுத்தது.

3.4. சவுலின் தோல்விகள்
சவுலின் ஆட்சிக்காலம் எத்தனை வருடங்கள் இருந்தன என்றுதெளிவாகத் தெரியவில்லை. ஏறக்குறைய 10 ஆண்டுகள்இருந்திருக்கலாம். இஸ்ரயேல் மக்களை முன்பு இருந்ததைவிடமோசமான நிலைக்கு இட்டுச் சென்று பெரும் தோல்வியாக முழ்?ததுசவுலின் அரசாட்சி. இதற்குப் பல காரணங்கள் உள.

3.4.1. சாமுவேலோடு சவுலின் முரண்பாடு:
உயர்ந்த தோற்றமும் ( 1சாமு 9:2;10:23) அடக்க குணமும் (1 சாமு 9:21)குற்றத்தை ஏற்றுக்கொள்ளுகின்றதன்மையும் ( 1 சாமு 11:12டி; 24:16-18)அஞ்சா நெஞ்சமும் கொண்ட சவுலுக்குத்தேவையற்ற முன்கோபமும், உணர்ச்சிவசப்படுதலுமே மேற்கூறிய நற்பண்புகளைஅழித்து விட்டன ( 1 சாமு 10:9-13; 11:6).பிரச்சனைகள் வரும்பொழுதுநிதானத்தையும், தைரியத்தையும் இறைவன்பாலுள்ள நம்பிக்கையையும்இழக்க எளிதில் இடம் கொடுத்து விடுவது சவுலின் வழக்கம்.பெலிஸ்தியர்களோடு போரிடுவதற்கு முன்பு யாவேக்குப் பலிஒப்புக்கொடுக்கத் திட்டமிட்டு சாமுவேல் இறைவாக்கினர் கில்கால் (ழுடைபயட)பாளையத்திற்கு வார இறுதியில் வருவதாக உறுதி அளித்திருந்தார்.ஆனால் வருவதற்குத் தாமதம் ஆகிவிட்டது. மக்கள் சவுலை விட்டு அகலஆரம்பித்தனர். ஆகவே பொறுமை இழந்தவராக இறைவாக்கினர்சாமுவேல் நிகழ்த்த வேண்டிய பலியைத் தானே நிறைவேற்றி விட்டார்.சாமுவேல் வந்ததும் நடந்ததை அறிந்து வேதனையுற்றார். சவுல் அரசபதவி போதாதென்று இறைவாக்கினர் பணியையும் கவர்ந்து கொண்டுபலி செலுத்தியது யாவேயிடம் சவுல் நம்பிக்கை கொள்ளவில்லை என்றுசாமுவேலுக்குத் தோன்றியது. யாவே, சவுல் குடும்பத்தாரிடமிருந்து அரசபதவியையே எடுத்து விடுவார் என்று சாமுவேல் எச்சரித்தார். சவுலின்படை பெலிஸ்தியர்களைத் தாக்கியபொழுது குறைந்த எண்ணிக்கைஉடைய இஸ்ரயேலரை எளிதில் முறியடித்து விட்டனர்.

3.4.2. சவுலின் கீழ்ப்படியாமை:
சாமுவேல் சவுலிடம் தூது அனுப்பித் தங்களின் பழம்பெரும்எதிரியான அமலேக்கியர்களை அழித்துவிடும்படி கூறினார். இந்தஅமலேக்கியர்தான் எகிப்திலிருந்து விடுதலையாகி வந்த இஸ்ரயேலரை(எபிரேயர்) துன்புறுத்தினர். சவுலுக்கு யாவேயின் ஆணையானது,படையெடுத்துச் சென்று அமலேக்கியர் அனைவரையும் அழித்துவிடவேண்டும் என்பதாகும். மேலும் அங்கு எவரையும் எந்தப் பொருளையும்விட்டு வைக்கவும்கூடாது. ஆனால் சவுல் அமலேக்கியர் மீது வெற்றிகொண்டு அங்குள்ள ஆடு மாடுகளைக் கவர்ந்து அவர்களுடையமன்னன் ஆகாகை ('பயப) யும் கொணர்ந்தான். இக்கீழ்ப்படியாமையாவேயின் கோபத்தைத் தூண்டியது. கடவுளுக்குப் பலி செலுத்தத்தான்கொழுப்பு நிறைந்த ஆடுமாடுகளைக் கொண்டு வந்ததாகக் கூறினான்சவுல். ஆனால் கடவுளுக்குப் பலிகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலேசிறந்தது. ஈண்டு, இறைவனைப் புறக்கணித்த சவுலை இறைவன்புறக்கணித்து விட்டார் ( 1 சாமு அதி. 15).

3.4.3. சவுலின் பொறாமை:
பெலிஸ்தியர்கள், யூதா நாட்டுப்புறத்தில் பாளையமிட்டுஇஸ்ரயேலரை அச்சுறுத்தி வந்தனர். சவுல் தம் படைவீரர்களை ஏலா(நுடயா) சமவெளியின் ஒரு புறத்தில் நிறுத்தினான். பிலிஸ்தியர்கள் அதேசமவெளியின் மறுபுறம் இருந்தனர். பெலிஸ்தியர்களில் மாபெரும்வீரனான கோலியாத்து ஏழு அடி உயரமும் கனத்த உருவமும் உடையவன்.அவன் தினமும் தன் சமவெளி முனையில் நின்று இஸ்ரயேலரைப் பார்த்துசவால் விடுவான். போர் எதுவும் தேவையில்லை. இஸ்ரயேலரின் மிகச்சிறந்த வீரன் தனித்து வந்து தன்னுடன் போரிடட்டும். போரில் கோலியாத்துஇஸ்ரயேல் வீரனைக் கொன்றால் இஸ்ரயேல் பெலிஸ்தியருக்கு அடிமை.கோலியாத்து கொல்லப்பட்டால் அவர்கள் இஸ்ரயேலருக்கு அடிமை.இதுதான் சவால். ஆனால், இதை சவுல் மன்னரால் ஏற்க இயலவில்லை.காரணம் படைவீரர்களில் எவரும் கோலியாத்துக்கு நிகராக இல்லை.ஒருநாள் ஆடு மேய்க்கும் சிறுவன் தாவீது சவுலின் படையில் பணிபுரியும்தன் மூன்று சகோதரர்களுக்கு உணவு கொண்டு சென்றான். அப்போதுகோலியாத்து உரக்கச் சவால் விட்டான். அங்குள்ளவர்களோ, இவனைக்கொன்றால் அரசன் தன் மகளை மணமுடிக்கவும் பெரும் பொருளும்கொடுப்பான் என்றார்கள். தாவீது யாவே மீது நம்பிக்கை வைத்துசவுலிடம் சென்று தன்னைக் கோலியாத்தோடு போரிட அனுமதிக்குமாறுவேண்டினார். நம்பிக்கை இழந்த நிலையில் தாவீதை அனுப்பினார் சவுல்.தாவீது கவணும் கல்லுமாகச் சென்ற கோலியாத்தைக் கொன்றார்.மக்கள் மகிழ்ந்து பாடினார்கள்.

"சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்" (1 சாமு 18:7)இது சவுலை பொறாமை கொள்ளச் செய்தது. அதனால் தாவீதைகொல்லுவதற்கு முயற்சி செய்தார் ( 1 சாமு 18:11:19:1).இவ்வாறு இறைவன் யாவேயைப் புறக்கணித்து, குற்றம்புரிந்தமையால் சவுலிடமிருந்து கடவுளின் ஆவி வெளியே செல்ல, தீயஆவி குடிகொண்டு அலைக்கழித்தது ( 1 சாமு 18:10).3.4.4. சவுல் சாவுசவுல் தாவீதைத் துரத்துவதிலும் கொல்ல முயல்வதிலுமே தன்கவனம் எல்லாம் செலுத்தினான். இதற்கு இடையில் பெலிஸ்தியர்கள்மீண்டும் போர் தொடுக்க ஆரம்பித்தார்கள். சவுலின் படையினர் மலைச்சாரல் வழியாக எஸ்ரலோன் சமவெளிக்கு வருவதற்குப் பதிலாககடற்கரைப் பகுதி வழியாக வந்தனர். எஸ்ரலோன் சமவெளிப்பாதைபெலிஸ்தியரின் கைவசம் இருந்தது. அத்துடன் கானானியர்களின்உதவியும் இவர்களுக்கு இருந்தது. கில்போவாவில் இஸ்ரயேலர் படைசிதறியது. சவுலின் மூன்று மகன்களும் கொலையுண்டனர். இச்சூழலில்சவுல் தோல்வியைக் கண்டு தன்னையே மாய்த்துக் கொண்டார்.

 

4. காலம்

மீட்பின் வரலாறு - கால அட்டவணை
?

வரலாற்றுக்கு முன்னைய நிகழ்ச்சிகள் ((ஏ) ஏறக்குறைய)
படைப்பு
ஆதாம் - ஏவாள்
காயின் - ஆபேல்
நோவா - பெருவெள்ளம்
பாபிலோன் - கோபுரம்

கி.மு.
2000
இஸ்ரயேலின் மூதாதையர்
ஆபிரகாம் கானான் நாட்டிக்கு வருதல் (ஏ) கி.மு. 1,900
ஈசாக்கு
யாக்கோபு
பன்னிரு குலத்தலைவர்கள்
யோசேப்பு எகிப்து மன்னனின் ஆலோசகர் ஆகுதல்
எகிப்தில் இஸ்ரயேலர்யாக்கோபின் வழிமரபினர் எகிப்தில் அடிமைகளாகுதல்
(ஏ) 1700 - 1250கி.மு
கி.மு.
1250
எகிப்தினின்று இஸ்ரயேலரை மோசே அழைத்துச் செல்லல் (ஏ)1250
இஸ்ரயேலர் பாலை நிலத்தில் பயணம் செய்தல்
மோசே சீனாய் மலையில் திருச்சட்டம் பெறுதல்
கி.மு.
1200
கானான் நாட்டைக் கைப்பற்றி அதில் குடியேறுதல்
கானான் நாட்டைக் கைப்பற்றும் முதல் கட்டத்தில் யோசுவாதலைமை தாங்குதல், இஸ்ரயேலர் குலங்கள் கூட்டமைப்பாகவிளங்குதல்.
நீதித்தலைவர்கள்" தலைமை ஏற்றல்.
ஒருங்கிணைந்த இஸ்ரயேலர் அரசு
சவுலின் ஆட்சி (ஏ) 1020 - 1000
கி.மு.
1000

தாவீதின் ஆட்சி (ஏ) 1000 - 962
சாலமோனின் ஆட்சி (ஏ) 962 -(931) 922

இஸ்ரயேலின் இரண்டு அரசுகள்
யூதா (தெற்கு அரசு) இஸ்ரயேல் (வடக்கு அரசு)
ரெகபெயாம் 922 - 915 (913)
அபியாம் 915 (913) -913 (911)
ஆசா 913 (911) - 873 (870)




யோசபாத்து 873 (870)-849 (848)

யோராம் 849(852)- 842 (841)
அகசியா 842 (841)
அத்தலியா 842 (835)-807 (796)
அமடசியா 800 (796) - 783 (781)
உசியா 783 (767) - 742 (740)
யோத்தாம் 742 (740) - 735
ஆகாசு 735-715
எசேக்கியா715-687(686)

எரொபவாம் 922 (931) - 901 (910)
நாதாபு 901 (910) - 909 (909)
பாசா 900 (909) - 887 (886)
ஏலா 887 (886) - 876 (885)
சிம்ரி 876 (885) (7 நாள்கள்)
ஓம்ரி 876 (885) - 869 (874)
ஆகாபு 869 (874) - 850(853)
யோராம் 849 (848)-842 (841)
யோவகாசு 815 (814) - 801 (798)
யோவாசு 801 (798) (782) - 746 (753)
எரொபவாம் 786 (782) 746 (753)செக்கரியா 746 (753) (6 மாதங்கள்)
சல்லூம் 745 (752) -738 (742)
பெக்காகியா 738 (742)- 737 (740)
பக்கா 737 (740) - 732
ஓசேயா 732-721 (723ஃ722)
சமாரியாவின் வீழ்ச்சி 722

 

கி.மு.
722
கி.மு. யூதா அரசின் இறுதி ஆண்டுகள்722
மனாசே 687 (686) -642
ஆமோன் 642 - 640
யோசியா 640 - 609
யோவகாசு 609 (3 மாதங்கள்)
யோயாக்கிம் 609 - 598
யோயாக்கின் 598 (3 மாதங்கள்)
செதேக்கியா 597
இரண்டாம் எருசலேமின் வீழ்ச்சி: ஜுலை 587-586 (எஸ்ரா, நெகேமியா)
கி.மு.
587,586
கி.மு. 587-586 பாபிலோனியாவுக்கு யூதர்கள் நாடுகடத்தப்படல்
பாலஸ்தீன நாட்டில் பாரசீக ஆட்சி

கி.மு.
538

515

யூதர்கள் தாழ்நாடு திரும்ப மன்னன் சைரசு அனுமதி அளித்தல் 538
புதிய கோவிலுக்கு அடித்தளமிடல் 537
vUrNyk; Nfhtpy; fl;b Kbf;fg;gl;lJ 515
vUrNykpd; kjpy;fisr; nrg;gdply; 445 - 443
கி.மு.
333

பாலஸ்தீன நாட்டில் கிரேக்க ஆட்சி
பேரரசர் அலக்சாந்தர் பாலஸ்தீனில் கிரேக்க ஆட்சியை நிறுவுதல்
எகிப்தை வென்ற அலக்சாந்தரின் படைத்தளபதிகளுள் ஒருவரின் வழிமரபினரான
தாலமியர் பாஸ்ழதீனை ஆட்சி புரிதல் 323 - 198.

சிரியாவை வென்ற அலக்சாந்தரின் படைத்தளபதிகளுள் ஒருவரின்வழிமரபினரான செலூக்கர் பாகூழதீனை ஆட்சிப் புரிதல் 198-166.

கி.மு.
166
மக்கபேயர் ஆட்சி
யூதா மக்கபேயின் தலைமையில் யூதர்கள் கிளர்ந்தெழல்
யூதாவின் குடும்பத்தினரும் வழிமரபினருமான அஸ்மோனியர் (மக்கபேயர்)
பாலஸ்தீனை ஆட்சிப் புரிதல் 166-63
கி.மு.
63
உரோமை ஆட்சி
உரோமைப் படைத்தளபதியான போம்பே எருசலேமைக் கைப்பற்றல்(கி.மு. 63)
பெரிய ஏரோது (கி.மு. 37-4)
உட்பட உரோமையரால் நியமிக்கப் பட்டோர்பாலஸ்தீனை ஆட்சிப் புரிதல்.
கி.மு.
1
புதிய ஏற்பாட்டின் காலம்கி.மு. 1
இயேசுவின் பிறப்பு (ஏ) கி.மு. 6-5
திருமுழுக்கு யோவானின் திருப்பணிஇயேசுவின் திருமுழுக்கு
திருப்பணியின் தொடக்கம் (ஏ) கி.பி. 27.
இயேசுவின் இறப்பும் உயிர்ப்பும் (ஏ) கி.பி. 30
பவுல் (சவுல்) திருத்தூதரின் அழைப்பு (ஏ) கி.பி. 33-35
எருசலேம் சங்கம் (ஏ) கி.பி. 49
திருத்தூதர் பவுல் கொல்லப்படல் கி.பி. 64-67கி.பி.
கி.பி.
70
எருசலேமின் அழிவு (கி.பி. 70)
கி.பி.
95
பத்மு தீவில் யோவான்

 

5. தாவீது மன்னர்


இஸ்ரயேல் சந்தித்த படுதோல்வியினால் பெலிஸ்தியர்களின்தயவில் வாழவேண்டியவர்களாக இருந்தார்கள். சவுல் மன்னர் ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு முன்பு இஸ்ரயேல் எப்படி இருந்தனரோஅப்படியேதான் இப்பொழுதும் இருந்தது. இஸ்ரயேல் மக்கள் நம்பிக்கைஇழந்த நிலையில் இருந்தனர். தாவீது தன் திறமையினால்இஸ்ரயேலை ஒரு பலமுள்ள நாடாக ஆக்கினார்.

5.1. தாவீதும் இஸ்பொசேத்தும்:
சவுலின் அரசுரிமையை அவனது மகன் இஸ்பொசேத். அவனதுஉறவினனான அப்னேருடன் யோர்தானுக்கு அப்பாற்பட்ட பகுதியிலுள்ளமகனாயிமுக்குச் சென்று அங்கே அரசராகப் பதவி ஏற்றார் (2 சாமு 2:8).இவ்வரசுரிமை சவுலின் மகன் என்பதால் அவருக்கு அளிக்கப்பட்டதுஎன்பதை காட்டிலும் அப்னேரும் சவுலின் உறவினர்களும் சேர்ந்துஅரசராக்கினர் என்பதுதான் பொறுத்தமாகும்.

இதற்கு இடையில் தாவீது யூதாவிலுள்ள எபிரோன் என்னும்இடத்தில் அரசரானார் (2 சாமு 2:1-40). பெலிஸ்தியரின் கீழுள்ளகுறுநிலமன்னனான தாவீது அவர்களின் ஒப்புதலோடு அரசபதவி ஏற்றார்.யூதா நாட்டை ஆளுவதற்கு, யூதா மக்கள் தாவீது அரசராவதை மிகவும்வரவேற்றார்கள். ஏனெனில் தாவீது பெலிஸ்தியர்களுக்கும் இஸ்ரயேல்மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து பரிந்துரைத்தார்.தாவீது சவுலைப் போல் படைவீரராக இருந்து அரசராகத்தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் சவுலைக்காட்டிலும் தாவீது வீரமும்தந்திரமும் அதிகம் உடையவர். தாவீது யூதா நாட்டிற்கு மட்டுமே அரசராகஇருந்தபோதிலும் அவனது அதிகாரம் பல குலங்களுக்கிடையேயும் பரவிஇருந்தது ( 1 சாமு 27:10; 30:14; நீத 1:1-21). யூதா ஒரு தனி நாடாகவும்,அதற்குத் தாவீது மன்னராகவும் இஸ்ரயேல் தனி நாடாகவும் அதற்குஇஸ்பொசேத் மன்னராகவும் இருந்தனர்.

5.2. இஸ்பொசேத் முடிவு:
இஸ்பொசேத் அரசு இரண்டே ஆண்டுகள் நிலைத்தது. (2 சாமு2:10). இஸ்பொசேத் தன் எதிரி அரசர்களிடம் உடன்பாடோ முரண்பாடோகொள்ளவில்லை. இஸ்பொசேத் படை பலமின்மையால் யார் மீதும்படையெடுக்க முடியவில்லை. இதே சமயத்தில் தாவீது இஸ்ரயேலைத்தந்திரமாகத் தன்பக்கம் இழுக்க முயன்றார். இந்நிலையில் மக்கள் இவர்மேல் இருந்த நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார்கள். இறுதியாகஇஸ்பொசேத் அப்னேரோடு சண்டையிட்டார். அதாவது அப்னேர் சவுலின்தாசியோடு உறவு கொள்ளுவதாக குற்றம் சாட்டி அதன் வழியாகஅரசபதவி அடைய முயற்சி செய்வதாக இஸ்பொசேத் கூறினார். இதனால்அப்னேர் தாவீதின் பக்கம் சேர்ந்துவிட்டார். தான் மட்டும்சேர்ந்ததுமல்லாமல் இஸ்ரயேல் நாட்டிலுள்ள மற்றவர்களையும் இழுத்துவந்தார். தாவீது இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் ( 2 சாமு 3:12-21).

இஸ்பொசேத் மக்களின் ஒத்துழைப்பை இழந்தவராய் அவருடையஇரு அதிகாரிகளாலேயே சொல்லப்பட்டார் (2 சாமு 4). கொன்றவர்கள்அவர் தலையைத் தாவீதிடம் கொண்டு வந்து கொடுத்தால் பரிசுகிடைக்கும் என்று நினைத்து எடுத்துச் சென்றனர். ஆனால் தாவீது அந்தஇருவரையும் கொன்றார். இது இன்னும் அதிகமாக மக்களின்நன்மதிப்பைத் தாவீது பெறுவதற்கு உதவியது.

5.3. தாவீது அனைத்து இஸ்ரயேலுக்கும் அரசர்:
சவுலின் அரசுரிமையைத் தக்க வைத்துக் கொள்ள அவர்குடும்பத்தில் யாரும் இல்லாததால் மக்கள் எல்லோரும் எபிரோனில்இருக்கும் தாவீதிடம் சென்று உடன்படிக்கை செய்து கொண்டு தாவீதைஇஸ்ரயேலர் அனைவருக்கும் அரசராக ஏற்றுக் கொண்டனர் ( 2 சாமு 5:1-3). யாவேயின் ஆவியானது தாவீதின்மீது தங்கியதை மக்கள்உணர்ந்தனர். சவுலைப் போலவோ, நீதித் தலைவர்கள் போலவோ தாவீதுதலைமைப் பொறுப்பை ஏற்கவில்லை எனினும் சிறந்ததலைமைத்தன்மையும் தொடர்ந்த வெற்றியும் யாவே தாவீதைத் தேர்ந்துகொண்டுள்ளார் என்று மக்களுக்கு வெளிப்படுத்தின. சவுலைப் போலவேதாவீதும் இறை அச்சாரத்தால் தலைவராகவும், (Nயுபுஐனு) மக்களோடுஉடன்படிக்கை செய்ததன் மூலம் அரசராகவும் (ஆநுடுகுமு) ஆனார்.சவுலைப்போலவே திருப்பொழிவும் செய்யப்பட்டார்.

பெலிஸ்தியர்களின் அனுமதியின் பேரில் தெற்குப் பகுதியானயூதாவிற்கு மன்னரான தாவீது இஸ்பொசேத் இறப்பினால் யோர்தான் அக்கரைப்பகுதிக்கும் அரசராகி தெற்கு நாடும், வடக்கு நாடும்ஒன்றிணைந்து ஒரே நாடானது.

 

6. ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாடு

புதிய அரசு தனது நிலைமையைப் பாதுகாக்கப் போரிட வேண்டிஇருந்தது. ஒன்றிணைந்த இஸ்ரயேலுக்குத் தாவீது மன்னர் ஆனதுஅந்நாட்டிற்குத் தனித் தன்மையும் சுதந்திரமும் வரும் என்றுபெலிஸ்தியர்கள் எண்ணினார்கள். இதை அவர்களால் சகித்துக்கொள்ளஇயலவில்லை. இஸ்ரயேல் எப்பொழுதும் அவர்களுக்குஅடிமைகளாகவே இருக்க விரும்பினர். அதனால் தாவீதை உடனேதொலைக்கத் திட்டமிட்டனர்.

6.1. பெலிஸ்தியர்களோடு இறுதிப் போராட்டம்:
கானானியர்கள் வசமிருந்த எருசலேம் நகர் அருகில்பெலிஸ்தியர்கள் தங்கள் படைகளை நிறுத்தி வைத்திருந்தனர்.ஏனெனில் கானானியர்கள் பெலிஸ்தியர்களின் தயவை இன்னும் எதிர்நோக்கியவர்களாக இருந்தனர். எருசலேம் நகர் அருகே பெலிஸ்தியர்கள்கூடுவதற்கு முக்கியக் காரணம் வடக்கு பகுதியின் மக்களிடமிருந்துதாவீதைப் பிரித்துத் தனிமைப்படுத்துவதற்குத்தான் (2சாமு 5:17-25)அதுல்லாம் என்னும் இடத்தில் பெலிஸ்தியர்களைத் தாவீது வெற்றிகொண்டார். (2 சாமு 23:13-17). இருப்பினும் பெலிஸ்தியர்கள் மீண்டும்படையெடுக்கையில் தாவீது தன் சிறிய வலுவான படைகொண்டுதீர்க்கமான வெற்றி கொண்டார் ( 2 சாமு 5:25:1 குறி 14:16). இதிலிருந்துஇஸ்ரயேலர் பெலிஸ்தியர் அச்சுறுத்தலிலிருந்து விடுபட்டதுமட்டுமல்லாமல் இஸ்ரயேலரின் தயவில் பெலிஸ்தியர் வாழ வேண்டியநிலை ஏற்பட்டது ( 2 சாமு 8:12).

6.2. எருசலேம் - புதிய தலைநகர்:
புறத்திலிருந்த ஆபத்துக்கள் நீங்கி உள்ளாட்சி அமைப்பில் தாவீதுகவனம் செலுத்தினார். n'புரோனில் சிறிது காலம் ஆட்சி செய்த பிறகுஎருசலேம் நகரை முற்றுகை இட்டு வென்று அதைத் தலைநகராக்கிக்கொண்டார். எருசலேமிற்கு "தாவீதின் நகர்" என்றும் பெயர் விளங்கியது.நகரிலிருந்து ஜெபு செயல்களை (துநடிரளவைநள) தாவீது அழித்தொழிக்கவோநாடு கடத்தவோ இல்லை (2 சாமு). படிப்படியாக இஸ்ரயேல் மக்கள்எருசலேம் நகரில் குடியேறினர்.

6.3. எருசலேமில் உடன்படிக்கைப் பேழை:
என்னதான் மாறுதல்கள் செய்தாலும் இஸ்ரயேலின்இறைப்பற்றையும் தனித்தன்மையையும் தாவீது மறந்துவிடவில்லை.அதனால் யாரும் கவனிப்பாரற்று கிரியத் எயாரிம் (முசைதையவா துநயசiஅ)என்னும் இடத்தில் இருந்த உடன்படிக்கையின் பேழையைத் தாவீதுஎருசலேமிற்குக் கொண்டு வந்து புனித இடம் ஒன்று அமைத்து அதில்வைத்தார் ( 2 சாமு 6). பேழையை இங்கு கொண்டு வந்ததின் நோக்கம்எருசலேமை அரசியல் தலை நகராக மட்டும் இல்லாமல் இஸ்ரயேலின்திருமறைக்கும் தலைநகராக இருக்க வேண்டும் என்பதற்குத்தான்.

சவுலைக் காட்டிலும் தாவீது ஞானமிக்கராய்த் திகழ்ந்தார். சவுல்கடவுளின் பேழையைப் புறக்கணித்து குருக்களை வெளியேற்றினார்.ஆனால் தாவீது பேழையைப் புனித இடத்தில் வைத்து குருக்களைநியமித்தார். எருசலேம் எல்லாக் குலங்க ளையும் ஈர்க்கும் இடமாகஅமைந்தது. தனக்னெ தாவீது அரண்மனை யைக் கட்டும்பொழுது ஏன்பேழைக்கு கோவில் எழுப்பவில்லை என்ற கேள்வியும் எழுந்தது (2 சாமு4:11; 7:2). பேழையானது பாளையம் விட்டு பாளையம் சென்றுதங்கக்கூடிய நிலைமையில் இருந்தது. அதை மாற்றி ஒரே இடத்தில்வைத்தால் இஸ்ரயேலின் மறைமரபுக்கு ஒத்து வராது என்ற எண்ணத்தில்கோவில் முதலில் எழுப்பவில்லை. இருப்பினும் இறைவாக் கினர்நாத்தானின் ஆலோசனையின்படி தாவீது இறைவனுக்கு கோவில்எழுப்ப எத்தனித்தான். ஆனால் இறைவன் அதை விரும்பவில்லை.தாவீதின் மகன் அதைக் கட்டுவான் என இறைவாக்குக் கூறப்பட்டது (2சாமு 7:1-13).

6.4. தாவீதின் வெற்றிகள்:
தாவீது மற்ற அண்டை நாடுகளோடு போர் தொடுத்து வெற்றிகாணும் அளவிற்குப் படைபலம் வாய்த்திருந்தார்.

6.4.1. அம்மோனியர்களுடன் போர்:
தாவீதின் தூதுவர்களுக்கு அம்மோனியர்கள் இழைத்த துன்பம்சினத்தைத் தூண்டியது (2 சாமு 10:1-5). தாவீது தனது படைத்தளபதியானயோவாபை அனுப்பி போர் தொடுத்தார். அம்மோனியர்கள் அவர்களதுஅண்டை நாட்டினரான சிரியர்களை உதவிக்கு அழைத்தனர்.முன்னேறிச் சென்று கொண்டு இருக்கும் இஸ்ரயேலரின் படையைப்பின்புறமிருந்து தாக்க சிரியர்கள் வந்தனர். ஆனால் சூழ்ச்சியை அறிந்துயோவாபு படையைப் பிரித்து ஒரு பகுதியை அம்மோனியர்களைத்தாக்கவும் மறுபகுதியை யோர்தானுக்கு அப்பாலிலுள்ள சிரியர்களைத்தாக்கவும் செய்தனர். அம்மோனியர்கள் தாவீதின் கீழ் அடிமைகளாகவந்தனர்.

6.4.2. யோர்தான் அக்கரைப் பகுதியின் வெற்றி:
மோவாபையும் (ஆடியடி) ஏதோமையும் (நுனடிஅ ) வெற்றிகொண்டதன் மூலம் தாவீது தனது கிழக்கு எல்லைப் பகுதியைப்பலப்படுத்திக் கொண்டான். சாக்கடலின் தெற்கேயுள்ள அரபா என்னும்இடத்தில் ஏதோமியர்களை வெற்றி கொண்டார். தாவீது மோவாமியர்கள்(ஆடியடிவைநள) படைக்களத்தில் படைவீரர்களைப் படுகொலை செய்துவெற்றி கொண்டார். தாவீது ஆளுநர்களை ஏற்படுத்தித் தான் வெற்றிகொண்ட மோவாப், ஏதோம் நாடுகளை ஆட்சி புரிந்தார்.

6.4.3. சிரியா மீது வெற்றி:
அம்மோனியர்களோடு தாவீது போர் புரியும்பொழுது அவர்களுக்குஒத்துழைத்த (சிரியர்) அரமேயர்களின் மீது சினம் கொண்டார். பழிதீர்க்கத் திடீரெனப் படையெடுத்து சோபா (ஷ்டியெடி) வின் அரசனானஅததேசரை (ழயனயனநணநச) வென்றார் (2 சாமு 8:3-8). இதன் வாயிலாகநாடோடிகளான சிரியர்களும் தாவீதின் அதிகாரத்தின் கீழ் வந்தனர்.தாவீதின் போரை அறிந்த தமஸ்கு நாட்டு அரமேயர்கள் அததேசருக்குஉதவிக்கு வந்தனர். ஆனால் இவர்களையும் முழு வெற்றி கொண்டார்தாவீது மன்னர்.

 

7. தாவீது அரசு

தாவீதின் வெற்றிகள் பாலஸ்தீனாவிலும், சிரியாவிலும்இஸ்ரயேலை ஒரு வல்லரசாக மாற்றியது. அன்றைய உலகில், மேலும்மற்றெல்லா நாடுகளுக்கும் இணையான ஒரு நிலையைத் தாவீதின் அரசுபெற்றது.

7.1. அரசின் இயல்பும் தன்மையும்:
தாவீதின் பேரரசு நம் கண்ணோட்டத்தில் அவ்வளவு பெரியதாகத்தோன்றாவிட்டாலும் அன்றைய உலகில் ஒரு பேரரசாக விளங்கியது.பெலிஸ்தியர்கள் எந்த ஒரு பேரரசைத் தங்களின் பெயரில் நிறுவவேண்டும் என்று நினைத்தனரோ அதைத் தாவீது தனது பெயரில் நிறுவிசாதனை புரிந்தார். தாவீதின் பேரரசு மோசேயின் காலத்து எகிப்தியபார்வோன் மன்னனின் அரசை ஒத்திருந்தது. கிழக்கிருந்து மேற்கு வரைஉள்ள எல்லாப் பாலஸ்தீன நாடுகளும் பாலைவெளி முதல் கடற்கரைவரையும், சீனாய்ப் பாலைவனம் முதல் மத்திய தரைக்கடல் வரையும்பரந்து விரிந்திருந்தது.

தாவீது ஒரு படைத்தளபதி மட்டுமல்ல, மாறாகப் பேரரசரும் ஆவார்.புதிய இஸ்ரயேலின் மையமாகத் தாவீது விளங்கினார். குல மரபுகள்விலகிவிட்டன. தலைநகரான எருசலேம் தாவீதின் நகர் என்றுஅழைக்கப்பட்டு தாவீதின் சொந்தமாகவே கருதப்பட்டது. இஸ்ரயேல் நாடுபுதிய வழிமுறையில் இயங்க ஆரம்பித்தது. அதிகாரக்குவியல் அரசனிடம்இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது.

7.2. நாட்டின் செயலமைப்புகள்:
தாவீதின் அரசில் இருந்த செயல்திட்ட அலுவலர்களின் பெயர்அட்டவணை சாமுவேல் நூலில் கொடுக்கப்பட்டிருக்கின்றது (2சாமு 8:15-18; 20:23-26). யோவாபு இஸ்ரயேல் படைத்தளபதியாகவும்அந்நியப்படையின் தளபதியாகப் பெனாயாவும் குருக்களாக சாதோக்கும்,அபிமெலக்கும், தாவீதின் மக்களும் இருந்தனர். தாவீது தன் அரசியலைஎகிப்திய முறையில் அமைத்தார். இவர்களைத் தவிர பல அலுவலர்கள்இருந்தனர். அரண்மனைப் பணியாளர்கள் ஆளுநர்கள் வெற்றிகொண்ட இடங்களிலுள்ள பணியாளர்கள் ஆகியோர்குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களின் பணி விரிவாகச்சொல்லப்படவில்லை.

7.3. தாவீதின் பாவம் ( 2 சாமு 11:1-12:23)
தாவீது ஒரு நாள் நண்பகலுக்குப் பின் தன் படுக்கையினின்றுஎழுந்து அரண்மனை மாடியில் உலாவுகையில் அவருக்கு எதிரே தம்மேல் மாடியில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டார்.அப்பெண் தனது படைவீரன் உரியாவின் மனைவி என்பதை அறிந்துஅவனை, போர் கடுமையாக நடக்கும் இடத்தில் நிறுத்தி அவன் வெட்டுண்டுசாகும்படி செய்து உரியாவின் மனைவி பத்சேபாவைத் தனதுமனைவியாக்கிக் கொண்டார். தாவீதின் இச்செயல் ஆண்டவருக்குவருத்தத்தை அளித்தது.

7.3.1. இறைவாக்கினர் நாத்தானின் அறிவுரை:
தாவீதின் செயலால் வருத்தமுற்ற ஆண்டவர் இறைவாக்கினர்நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் தாவீதின் தீயச் செயலைஇடித்துரைத்து மனந்திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார்.நாத்தானது அறிவுரையால் மனம் வருந்திய தாவீது "நான் ஆண்டவருக்குஎதிராகப் பாவம் செய்தேன்" என்றார். இறைவழி செல்லும் மனமுடையதாவீது நாத்தான் சொன்ன உவமை, கடவுள் இறைவாக்கினர் வழியாகத்தந்த செய்தி என்பதை ஏற்று மனம்மாறி கடவுளிடம் திரும்பினார்.

7.3.2. தாவீதின் வாரிசு:
தாவீதுக்கு வயதாகிக் கொண்டிருந்த வேளையில் அவருக்குப் பின்அரசராவது யார் என்பது ஒரு பெரும் பிரச்சனையாக மாறியது. தாவீதின்அரசு நிலைத்திருக்கும் என்று இறைவாக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், யார்அப்பதவியை வகிப்பார் என்பது முடிவாகாத நிலையில் இருந்தது.குடும்பத்தில் ஏற்பட்டக் குழப்பங்களால் தாவீது மிகவும் நொந்து போனார்.

தாவீதின் மகனான அப்சலோம் இறந்தபின்னர், தாவீதின் மூத்தமகன் அதோனியாதான் தகுதியான வாரிசு என்று அதோனியாவின்ஆதரவாளர்கள் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பினர். ஆனால் தாவீதுசாலமோன்தான் தனது வாரிசு என பத்சேபாவுக்கு வாக்களித்திருந்தார்.அதோனியா தனது ஆதரவாளர்களை விருந்துக்கு அழைத்து தன்னைஅரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். இதைக் கண்ட நாத்தானும்பத்சேபாவும் தாவீது அரசரைத் தூண்டி சாலமோனை உடனடியாகஅரசராக முடிசூட்டினார்.

7.4. தாவீது ஆட்சி - ஒரு மதிப்பீடு:
தாவீது ஒரு சிறந்த இசைக்கலைஞர். பேச்சாற்றல் மிக்கவர். போர்வீரர். நிர்வாகத்திறமையுடைய ஓர் அரசர். தாவீதின் வீரம் இளம் வயதில்அவர் கோலியாத்தின் சவாலை எதிர்கொண்டு அவனை வீழ்த்துதில்தெளிவாகிறது. பெண்கள் அவரது வீரத்தை வியந்து பாராட்டியதாகவரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். திறமை வாய்ந்த போர்வீரராயினும் பக்தியுள்ள தெய்வ பயமுள்ள ஓர் அரசராகத் தாவீது மக்கள்மனங்களில் இடம் பெற்றார். கடவுள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டிருந்ததை அவர் இயற்றிய திருப்பாடல்கள்வெளிப்படுத்துகின்றன. கோலியாத்தை எதிர்கொள்ளும் போது கூடகடவுளின் பெயரில் நம்பிக்கை வைத்துத்தான் போரிடுகிறார்(1 சாமு 17:45-54).

நாத்தான் தாவீதின் பாவநிலையை நயமாகச் சுட்டிக் காட்டிய போதுதனது பாவ நிலையை ஏற்றுப் பரிகாரம் செய்யத் தயக்கம் காட்டாததுஅவரது தாழ்ச்சியைக் காட்டுகிறது. பாவத்தில் வீழ்ந்த போதும்இறைவனது தண்டனையான தன் மகனின் இறப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் தனது மன வலிமையை வெளிப்படுத்துகிறார். அதேபோல் அப்சலோம் முன்னிலையிலிருந்து தப்பி ஓடியபோதும், சிமயி( 2 சாமு 19:18-23) நிந்தனைக்கு ஆளானபோதும் அதனை ஏற்றுக்கொள்கிறார். இறைவனது திட்டத்திற்கு மாறாக மக்கள் தொகைக்கணக்கெடுத்ததால் இறைவனின் தண்டனையைத் தாழ்மையோடுஏற்றுக் கொள்கிறார் (2 சாமு 24).

திருமறை காரியங்களில் மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு மரபு மீறாமல் தாவீது முன்னேற்றம் கண்டார். எருசலேமுக்குஉடன்படிக்கைப் பேழையை கொண்டு வந்தார். எருசலேமை அரசியல்மையமாக மட்டுமல்ல சமய மையமாகவும் ஆக்கினார். இஸ்ரயேலருக்குஅரசியலும் சமயமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஓர்அமைப்பாகம். ஆதலின் கோவிலை தம் அரசரின் கோவிலாக ஆக்கினார்.மதகாரியங்கள் இரண்டு குருக்களால் நடத்தப்பட்டன. 'குறிப்பேட்டுமரபுப்படி' தாவீது திரு இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பேரரசின்எல்லாப் பகுதிகளிலும் லேவியர்களைக் குடியமர்த்தி மக்களிடையேஒற்றுமை மனப்பான்மையையும், நாட்டுணர்வையும் வளர்த்தார் தாவீது.

தாவீது உடன்படிக்கைப் பேழையை எருசலேமுக்குக் கொண்டுவந்தார். கோவில் வழிபாட்டைச் சிறப்பான விதத்தில் நடத்தினார்.வழிபாட்டில் இசைக்கும் பாடலுக்கும் முக்கியத்துவம் அளிக்கச் செய்தார்.தாவீது திருப்பாடல் ஆசிரியராகக் குறிப்பிடப்படுகிறார். எல்லாதிருப்பாடல்களையும் தாவீது இயற்றாவிட்டாலும் பெரும்பாலானசங்கீதங்களை அவர் இயற்றியுள்ளார் என்பது மறக்க முடியாத உண்மை.மக்கள் மனத்தில் மோசே தாவீதை விட உயர்ந்து நின்றாலும் தாவீதுமக்கள் மீது கொண்ட அன்பினால் மக்கள் மனங்களில் உயர்ந்து நிற்கிறார்.

 

8. சாலமோன்

தாவீது தனக்குப்பின் சாலமோன்தான் அரசராக வேண்டும் என்றுபத்சேபாவுக்கு வாக்களித்திருந்தபோதிலும் தனது இறுதிக் காலத்தில்அவ்வாக்குறுதியை உறுதி செய்யும் வகையில் ஏதும் செய்யாத நிலையில்தாவீதின் மூத்த மகனான அதோனியா அரசப் பதவியைக் கைப்பற்றவேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்தான். ஒரு நாள் தன்னுடையசகாக்களான யோவாபு, குரு அபியத்தார் மற்றும் விருந்துக்குஅழைக்கப்பட்டிருந்த மற்ற அரச அலுவலர்கள் மத்தியில் தன்னைஅரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார் (1 அர 1:5-8). இதையறிந்தசாலமோனது சகாக்களான இறைவாக்கினர் நாத்தான் குரு சாதோக்மற்றும் பெனாயா துரிதமாகச் செயல்பட்டனர். தாவீதுக்கு உடனடியாகச்செய்தி அறிவிக்கப்பட்டவுடன் தாவீதும் சாலமோனை அரசராகஅதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சாலமோன் கீகோன் அருவியின்அருகே குரு சாதோக்கால் அரசராக முடிசூட்டப்பட்டார். சாலமோன்அரசராக அறிவிக்கப்பட்டவுடன் தன்னை சாலமோன் விட்டுவைக்கமாட்டார் என்பதை உணர்ந்து அதோனியா கோவில் பீடத்தின்அடியில் புகுந்துகொண்டு தன்னைக் கொல்லமாட்டார் என்று சாலமோன்உறுதியளித்தால்தான் வெளியே வருவேன் என்று கூற சாலமோனும்அதோனியாவை மன்னித்தார் (1 அர 1:49-53).

8.1. சாலமோன் ஞானம் பெறுதல் (1 அர 3):
சாலமோன் பதவியேற்றவுடன் கிபயோனில் ஆண்டவருக்குத்தகனப்பலிகள் செலுத்தும் வண்ணம் மிகப்பெரிய மதக் கொண்டாட்டம்ஒன்றை நடத்தினார். அன்றிரவு கடவுள் அவருக்குத் தோன்றி"நீ விரும்புவதைக் கேள்" என்று கேட்டார். சாலமோன் கடவுளை நோக்கி,"ஆண்டவரே என் தந்தை தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியைநிறைவேற்றும்படியும் மக்களை வழி நடத்திச் செல்ல வேண்டியஞானத்தையும் அறிவையும் அடியேனுக்குத் தாரும்" என்றார் ( 1 அர 3:9).அப்போது கடவுள், "நீ செல்வத்தையும் சொத்தையும் நீடிய ஆயுளையும்கேளாமல் அரசாளும்படி மக்களுக்கு நீதி வழங்கத் தேவையானஞானத்தையும், அறிவையும் அளிப்போம்" என்றார்

சாலமோன் தனது அரசை நிலைநாட்டுவதில் ஒரு சிலச்சிக்கல்களை எதிர்கொண்டார். ஆட்சிப்பீடத்தில் அமரத்துடித்தஅதோனியா சரணடைந்து விட்டதால் ஒரு சிலத் தொல்லைகள்தவிர்க்கப்பட்டன. தாவீது இறந்தவுடன் தனது அரசுக்குக் குந்தகம்விளைவிக்க எண்ணியவர்களைத் திறமையுடன் சமாளித்தார்.அதோனியா தாவீதின் வைப்பாட்டியான அபிசாக்கைத் தூண்டிவிட்டுகலகம் விளைவிக்க முயற்சி செய்ததால் அவரும் தண்டனைக்குட்பட்டார்.ஆனால் அபியத்தார் தாவீதுக்குப் பிரமாணிக்கமாக இருந்ததால் அவர்விடுவிக்கப்பட்டார். சிமயி தாவீதை நிந்தித்ததால் சிறையிலடைக்கப்பட்டார்.சாலமோன் தனது தந்தையைப் போல் ஒரு மிகப்பெரிய போர்வீரன்அல்ல எனினும் எதிரிகளைத் திறம்பட முறியடித்தார். மேலும் அரசியல்ளளதியாக அவரது பணி நாட்டை விரிவாக்குவதோ அல்லது இருப்பதைப்பாதுகாப்பதோ அல்ல. மாறாக நாட்டைப் பிளவுபடாமல்ஒருங்கிணைப்பதே அவரது முக்கியப் பணியாகக் கொண்டு செயல்பட்டார்.அதில் வெற்றியும் கண்டார்.

8.2. அயல்நாட்டுக் கொள்கை:
சாலமோனின் அரசில் முழுமையான சமாதானம் நிலவாவிட்டாலும்பெரியபடையெடுப்பு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை நாட்டைவிரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொள்ளாமல் நாடுகளுக்கிடையேநல்லுறவை நிலைநாட்டுவதே சாலமோனின் பிரதானப் பணியாகக்கொண்டார். பல நாடுகளோடு திருமண உறவு ஏற்படுத்துவதன் மூலம்தனது நாட்டை விரிவுப்படுத்தினார்.

8.2.1. தீர்:
தீர் நாட்டுடன் தாவீது ஏற்கனவே செய்திருந்த உடன் படிக்கையைசாலமோன் புதுப்பித்தார். இவ்வுடன்படிக்கையால் புதிய வாணிபஉறவுகள் ஏற்படுத்தப்பட்டன. கோதுமையும், ஆலிவ் எண்ணெய்யும்பாலஸ்தீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்குப் பதிலாகலெபனானிலிருந்து சாலமோனின் கட்டிடப் பணிகளுக்காக மரங்கள்இறக்குமதி செய்யப்பட்டன ( 1 அர 5:1-18).

8.2.2. எகிப்து (968-967):
சாலமோனின் ஆட்சியின் போது எகிப்திய படைகள் மன்னன்பார்வோனின் தலைமையில் பாலஸ்தீனாவை முற்றுகையிட்டன. இதன்விளைவாக கெசேர் நகர் பிடிப்பட்டது. ஆனால் இதற்குமேல்பார்வோனின் படைகள் செல்ல முடியவில்லை. ஏனெனில்,சாலமோனின் அரசு வலிமை மிக்கதாய் இருந்ததால் மட்டுமல்லாதுசாலமோனும் போரிடும் விருப்பம் இல்லாமல் தனது ராஜதந்திரத்தின்மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் பார்வோன் தனதுமகளைத் திருமண உடன்படிக்கையின் மூலம் சாலமோனுக்கு அளித்து(1 அர3;1) கொசோ நகரைச் சீதனமாக வழங்கினார் (1 அர 9:16).எகிப்துடன் நட்புறவை தொடர்வதற்காகத் தனது மனைவியானபார்வோனின் மகளை அதிக மரியாதையுடன் நடத்திவந்தார்.அவளுக்காகத் தனி அரண்மனையை எழுப்பினார் (2 குறி 8:11).இருப்பினும் எகிப்து சாலமோனின் அரசுக்கு ஒரு தொடர்ந்ததொல்லையாகவே விளங்கியது.

8.3. சமயக் கொள்கைகள்:
தாவீது தனது இறுதிக்காலத்தில் சாலமோன் மதக்கொள்கைகளுக்கு பிரமாணிக்கமாயிருக்க வேண்டும் எனஅறிவுறுத்தினார். தொடக்கத்தில் சாலமோன் யாவே வழிபாட்டில்பிரமாணிக்கமாய்த் திகழ்ந்தார். ஆனால் சாலமோன் பல நாட்டுப்பெண்களை மணந்ததால், அப்பெண்கள் தங்கள் நாட்டுத்தெய்வங்களைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர். தொடக்கத்தில்சாலமோன் அதை வெறுத்தாலும், தனது நாட்டின் பாதுகாப்பைமுன்னிட்டு அவர் அதைத் தடைசெய்ய முடியவில்லை. மேலும்மனைவியர்களின் வற்புறுத்தலின் பேரில் மற்ற தெய்வங்களுக்குப்பலிபீடம் எழுப்பி பலிசெய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டார்.சாலமோனின் ஆட்சியில் பல புதிய வாணிப உறவுகள்ஏற்படுத்தப்பட்டதால் பல வெளி நாட்டவர்கள் வாணிபம் செய்வதற்காகஎருசலேமிற்கு வந்தனர். அவர்களும் தங்களது கடவுளர்களையேவழிபட்டு வந்தனர். இதைத் தடுக்க முடியாத சூழ்நிலையில் மோவாபியரின்கெமோசுக்கும், அம்மோனியரின் மோலேக்குக்கும் தொழுகைமேடுகளைக் கட்டினார். சீதோனியரின் தேவதையானஅஸ்தரோத்தையும், அம்மோனியரின் மிக்கோமையும் வழிபட்டார் ( 1 அர11:5-8). இத்தகைய பலகடவுள் வழிபாடு மக்களுக்குத் துர்மாதிரியாகஇருந்தது. அரசரை வழி நடத்திச் செல்ல, அறிவுரை வழங்கவும் யாரும்இல்லை நாத்தான் இறைவாக்கினரும் ஏற்கனவே இறந்துவிட்டார்.

8.4. உள்நாட்டுக் கொள்கைகள்:
சாலமோன் ஓர் அமைதியின் அரசர். ஆதலால், உள்நாட்டுக்கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். நீதி நிர்வாகம்சிறப்பாகச் செயல்பட ஏற்பாடு செய்தார். அதிகமாகப் புதிய பதவிகளைஏற்படுத்தி, புதியவர்களைப் பதவியில் அமர்த்தினார். நாட்டை 12மாவட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓர் ஆளுனரைஏற்படுத்தினார் ( 1 அரசர் 4:7-19). மேலும், சாலமோன் தனது படைபலத்தைஅதிகரிப்பதில் கவனம் செலுத்தினார். பல புதிய ஆயுதங்களைப்பயன்படுத்தினார். போருக்காகப் பல புதிய படை ரதங்களைப்பயன்படுத்தினார். தனது படைபலத்தின்மூலம் எதிரிகளின் ஊடுருவலைத்தவிர்த்தார்.

8.5. வணிகத் தொடர்புகள்:
சாலமோனது திறமை அவரது வணிக நடவடிக்கைகள் மூலம்புலப்படுகிறது. சிரியா, அரேபியா ஆகிய நாடுகளுடன் வாணிபத் தொடர்புகொண்டு தனது பொருளாதாரத்தை மேம்படுத்தினார் (1அர 10:22).8.5.1. சேபா நாட்டு இளவரசிசேபா நாட்டு மக்கள் நாடோடிக் கூட்டத்தவராயினும், சாலமோனின்ஆட்சிக்காலத்தில் தங்களது ஆட்சியை நிலைநாட்டியிருந்தனர். சேபாநாட்டு அரசி தனது நாட்டுச் செல்வங்களைக்காட்டி, சாலமோனுடன்வாணிப உடன்படிக்கையை ஏற்படுத்தினார் ( 1 அர 10:1-13).

8.6. கட்டுமானப் பணிகள்:
சாலமோனின் கட்டிடப் பணிகளுள் குறிப்பிடத் தக்கதுஆண்டவருக்கு அவர் எழுப்பிய கோவிலே ஆகும். கோவில் எழுப்பதாவீது விட்டுச் சென்ற பொருட்கள் போதுமானதாக இல்லை. எனவேதீர் நாட்டு அரசன் ஈராம் கோவில் கட்டுவதற்குத் தேவையானபொருட்களை வாரி வழங்கினார் ( 1அர 5:1-5). கோவில் கட்டும் பணிசாலமோன் பதவிக்கு வந்த நான்காம் ஆண்டு (968) இரண்டாம் மாதம்ஆரம்பிக்கப்பட்டு பதினொன்றாவது வருடம் (961) எட்டாம் மாதம்முடிக்கப்பட்டது. கோவில் அர்ச்சிப்பு விழா, 12 ஆம் ஆண்டு கூடாரத்திருவிழா அன்று சிறப்பாக நடத்தப்பட்டது. சாலமோன் எழுப்பியபிரமாண்டமான கோவில் (1 அர 6,7,8) நாட்டின் திருத்தலமாகச்செயல்பட்டது.

8.7. இஸ்ரயேலின் பொற்காலம்:
சாலமோனின் ஆட்சிக்காலத்தை இஸ்ரயேலின் பொற்காலமாகவிவிலியம் எடுத்தியம்புகிறது. இஸ்ரயேல் மக்கள் சமூக, பொருளாதாரவாழ்வில் மேம்பட்ட நிலையில் ஓர் அமைதியான வாழ்க்கைநடத்தினார்கள்.சாலமோனது பிரம்மாண்டமான கட்டிடப் பணிகள் பலருக்குவேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் பலர் வசதிபடைத்தவர்களாகத் திகழ்ந்தனர். பல புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டுகுடியேற்ற வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.கட்டிடப் பணியில் மட்டுமல்லாது கலைப்பணியிலும் சாலமோன்சிறந்து விளங்கினார். தாவீது, சவுல், சாமுவேல் இவர்களின் வாழ்க்கைநிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவம் பெற்றன. இஸ்ரயேல்மக்களின் தொடக்க கால வரலாறு குறிப்பாக குலத் தந்தையர்கள்,இஸ்ரயேல் மக்களின் விடுதலைப் பயணம், ஆகியவைதொகுக்கப்பட்டன.சாலமோன் ஞானம் மிக்கவர் என விவிலியம் எடுத்துரைக்கிறது( 1 அர 3:4-28, 10:7, 23). சாலமோன் காலத்தில்தான் பழமொழி ஆகமம்எழுதப்பட்டிருக்க வேண்டும்.

8.8. சாலமோன் ஆட்சி ஒரு மதிப்பீடு:
சாலமோன் தனது ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவரிடம்,தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த மக்களை நீதிநெறிப்படி நடத்திச்செல்ல ஞானத்தை அளிக்க வேண்டும் என்று கேட்டதிலிருந்து அவர்தனது மக்களை வழி நடத்தவும் ஆட்சிப் பொறுப்பை எவ்வளவு சீரியவிதத்தில் எடுத்துக் கொண்டார் என்பது விளங்குகிறது.இயல்பிலே அமைதி விரும்பும் சாலமோன் தனது ஆட்சிக்குக்குந்தகம் விளைவிக்க எண்ணியவர்களை முறியடித்து அமைதியைநிலைநாட்டினார். சிறந்த நிர்வாகத்திறம் கொண்ட சாலமோன் தனதுஆட்சிக் காலத்தில் சமூக, பொருளாதா, கலை. பண்பாட்டில்முன்னேற்றமடைந்த ஒரு நாட்டை உருவாக்குவதில் முழு மூச்சுடன்உழைத்தார். அதில் வெற்றியும் கண்டார்.பல்வேறு நாடுகளுடன் திருமண உறவு கொள்வதன் மூலம் போரைதவிர்த்து நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தியது .சாலமோனதுசிறப்பான ராஜதந்திரமாகும். தனது தந்தை தாவீது அயல்நாடுகளோடுகொண்டிருந்த உறவைத் தொடர்ந்து புதுப்பித்து வந்தார்.சாலமோனது கட்டிடப்பணிகள் மற்றும் கோவில் கட்டுதல் போன்றபிரம்மாண்டமான பணிகள் மக்களுக்கு வேலை வாய்ப்பைஏற்படுத்தித்தந்தாலும் அவரது ஆடம்பரப் பிரியம் குறிப்பாக மாளிகைகள்கட்டுதல் போன்ற பணிகள் அவரைப் பாமர ஏழை மக்களிடமிருந்துபிரித்து விட்டன. தாவீது மக்களோடு வாழ்ந்தார். மக்களது குறைகளைக்கேட்டார். ஏழைகள் அவரது அவைக்கு எளிதில் செல்லுமளவிற்குஅந்நியோன்யமாகப் பழகினார். ஆனால் சாலமோனின் பகட்டுவாழ்க்கையால் மக்கள் அரசனிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டனர்.சாலமோன் தனது ஆட்சியின் தொடக்க காலத்தில் ' யாவே'கடவுளுக்குப் பிரமாணிக்கமுள்ளவராகவே திகழ்ந்தார். ஆனால் பிற்காலவாழ்வில் ஞான வாழ்வில் அவரது ஈடுபாடு குறைந்தது. தன்னுடையபிறநாட்டு மனைவியரின் தூண்டுதலால் பல தெய்வங்களுக்குப் பீடம்எழுப்பி பலி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ( 1 அர11:1-13).

 

9. பேரரசின் பல நிலைகள்

9.1. சமயத் தலைவர்கள்:
இஸ்ரயேலரசின் நீண்டதொரு வரலாற்றில் இறைவாக்கினர்களுள் குறிப்பிட்ட ஒரு சிலர் கடவுளின் ஆவியால் உந்தப்பட்டவர்களாய்,குறிப்பிட்ட சமயப் பணிகளை ஆற்றுவதில் முன்னிலை வகிப்பதைவிவிலியத்தில் காண்கிறோம். இத்தகைய இறை ஏவுதலால்உந்தப்பட்டவர்கள் 'நபி' என அழைக்கப்பட்டனர். இறைவனுக்குச்சார்பாகப் பேசுவதும் இறைத்திட்டத்தை அறிவிப்பதும் தான் இவர்களதுபணி.

இறைவாக்குரைப்பவரின் பணி எதிர்காலத்தை முன்னறிவித்தல்என்ற குறுகிய வட்டத்தைச் சார்ந்தது மட்டுமல்ல. பல வேளைகளில்எதிர்காலத்தை முன்னறிவித்தும் வந்திருக்கின்றனர் இறைவாக்கினர்கள்.இறைவாக்கினர்களில் குறிப்பிடத்தக்கவர் மோசே. ஆபிரகாம்இறைவனது திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் மனிதர் என்ற விதத்தில்,இறைவனது மீட்புத் திட்டம் செயல்படக் காரணமாக இருந்தவர் என்றவிதத்தில் அவரும் ஓர் இறைவாக்கினராகக் கருதப்பட்டார்.பெண்களும் இறைவாக்கினர்களாகச் செயல்பட்டனர் என்பதற்குமோசேயின் சகோதரி மிரியம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, செங்கடலைகடந்த பின்னர் இறைவனது அருட்செயல்களை நினைத்து புகழ்ப்பாடல்இசைத்தவர் மிரியம் ( விப 15:19-21).

தெபோரா மக்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் இறைவனதுதிட்டங்களை மக்களுக்கு எடுத்து வைத்தவர் (நீத 4:4).நீதித் தலைவர்களின் காலம் முடிவுறுந்தறுவாயில் சாமுவேல்இஸ்ரயேல் மக்களின் தனிப்பெரும் இறைவாக்கினராகச் செயல்பட்டார்.சாமுவேல் மக்கள் சிலை வழிபாட்டை விடுத்து, உண்மைக் கடவுள்யாவேயை வழிபட வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தினார். மக்கள்மட்டுமல்லாமல் அதிகாரிகளையும் தனது கட்டளைக்குக் கீழ்ப்படியவைத்தார் சாமுவேல். இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் அரசரை ஏற்படுத்திக்கொடுத்தார். அவர் ஏற்படுத்திய அரசர் இறைவனுக்குக் கீழ்படியமறுத்தபோது வேறொரு அரசரை ஏற்படுத்தத் தயங்கவில்லை. தாவீதுதவறு செய்தபோதும், இறைவாக்கினர் நாத்தான் இடித்துரைக்கத்தவறவில்லை.

இஸ்ரயேல் மக்களின் நீண்டகால வரலாற்றுக்குப் பின்னர்அவர்களை வழிநடத்திச் செல்ல அரசர்கள் ஏற்படுத்தப்பட்டார்கள். பலஆண்டுகளுக்கு முன்னர், யாவே இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்டஉடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொண்டதாலும், மோசே மக்களுக்குசட்ட திட்டங்களைக் கொடுத்திருந்ததாலும், இஸ்ரயேல் கானான்நாட்டைக் கைப்பற்றியிருந்ததாலும், மற்ற நாடுகளைப் போல மதசம்பந்தப்பட்ட காரியங்களில் அரசன் முக்கியத்துவம் பெற வாய்ப்புக்கிட்டாமல் போயிற்று. குருத்துவம் சட்ட ளளதியாக ஆரோனின்குடும்பத்திற்குரியதாக மட்டுமே கருதப்பட்டது. குருக்கள் மட்டுமேகோவிலில் பலி செலுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஒரு சிலசமயங்களில் அரசர்கள் பலி செலுத்தினாலும் அவர்கள் குருக்களாகக்கருதப்படவில்லை.

மேலும், இஸ்ரயேல் மக்கள் 'யாவே' ஒருவரை மட்டுமே தங்களதுஅரசராக ஏற்றுக் கொண்டனர். 'யாவே'யின் மக்களை வழிநடத்துகின்றபொறுப்பை ஏற்ற அரசர்கள், அந்த சமயக் கொள்கைகளுக்கும், ஒழுக்கநெறிகளுக்கும் கட்டுப்பட்டவர்களாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம்ஏற்பட்டது.இறைவாக்கினர்கள் இறைவனது திட்டங்களை அறிவிக்கும்போதும், அரசர்கள் தவறிழைத்தபோதும் அதனைக் கண்டித்துத் திருத்தும்வேளையில் அரசர்களாக இருந்தபோதிலும் ஏற்றுக் கொள்ளவேண்டியகடமையாகக் கருதப்பட்டது.

இறைவாக்கினர்களுக்குக் கீழ்ப்படிந்து, இறை பயத்தோடு ஆள்வதுதான் அரசர்களின் பணியாகக் கருதப்பட்டது. இஸ்ரயேலின் அரசர்களில்பலர், 'யாவே' சமயத்தைப் பரப்பப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.இஸ்ரயேலை ஆண்ட அரசர்களில் பலர் மதத்தைப் பரப்ப முயற்சிசெய்தாலும் அரசர்களுக்கும், இறைவாக்கினர்களுக்கும் இடையேமோதல்களும் அடிக்கடி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில்முதல் மூன்று அரசர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சவுல் சாமுவேலைஎதிர்த்தார். எனவே சவுல் ஒதுக்கப்பட்டார். தாவீது மதத்தைப் பரப்பினார்;இறைவாக்கினர்களுக்குக் கீழ்ப்படிந்து வெற்றிகரமாக ஆட்சிசெலுத்தினார். சாலமோன் தொடக்க காலத்தில் கடவுள் பக்தியுள்ளவராகஆட்சி செலுத்தினாலும் பிற்காலத்தில் பல கடவுள் வழிபாட்டை ஆதரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்குத்தண்டனையாக இஸ்ரயேலின் ஒருங்கிணைந்தப் பேரரசு பிரிந்தது. சவுல்கடவுளுக்கேற்ற விதத்தில் ஆட்சி செய்தார். எனினும் இறைவன்பலிகளைவிட கிழ்ப்படிதலை அதிகம் விரும்புகிறார் என்பதை சவுல்உணரவில்லை. சாமுவேல் அவரைக் கண்டித்து திருத்தியபோது தனதுதவறுகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மனநிலை அவரிடம் இல்லை.தாவீது சமய வாழ்வில், தனிப்பட்ட ஆன்மீக வாழ்வில் யாவேவுக்கு உகந்தஅரசராக ஆட்சி செலுத்தினார் என்றால் அது மிகையாகாது. 'யாவே'இறைவனின் வழி நடத்துதலை, பராமரிப்பை, அன்பைத் தனது வாழ்வில்உய்த்துணர்ந்தவராகப் பல திருப்பாடல்களை இயற்றினார். அவரதுதிருப்பாடல்கள் குறிப்பாக திருப்பாடல் 51 அவரது ஆழ்ந்த நம்பிக்கையைஎடுத்துரைப்பவையாகவும் அமைந்துள்ளது.

இறைவனது மன்னிப்பில் அவர் கொண்டிருந்த தளராதநம்பிக்கையால் அவர் ஓர் 'இறைநம்பிக்கை மாதிரியாகத் திகழ்ந்தார்.மேலும் நாத்தானின் அறிவுறையால் மனந்திருந்துவதன் மூலம்முழுமையாகக் கடவுளுக்குக் கீழ்ப்படிபவராகவும், தண்டனையை ஏற்றுக்கொள்வதில் அவர் காட்டிய தாழ்ச்சியால் இறைவனது உள்ளத்தில்உயர்ந்து நிற்கிறார். சாலமோன் கொள்கைப் பிடிப்போடு தனது ஆட்சியைஆரம்பித்தார். தனது தந்தை தாவீதின் திட்டங்களைச் செயல்படுத்துவதில்மும்முரமாகச் செயல்பட்டார். ஆனால் தனது ஆடம்பரத்திட்டங்களினாலும், பகட்டான வாழ்க்கை முறையாலும் மக்களிடமிருந்துமட்டுமல்லாமல் இறைவனிடமிருந்தும் விலகிச் சென்றார். அவரதுஅதிமிக ஞானமும், அளவு கடந்த செல்வங்களும் மக்களுக்குப்பயன்படவேயில்லை.

9.2. கடவுள் கொள்கை:
முதல் மூன்று அரசர்களின் ஆட்சியின் கீழ் இஸ்ரயேல் இனம்குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்தது. முதல் மூன்று அரசர்களின்ஆட்சியில் மற்ற கடவுள்களை வழிபட ஏற்பட்ட சோதனைகள் குறைவு,ஏனெனில், தாவீது கானானியர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைப்கைப்பற்றித் தனது ஆளுமையின் கீழ் கொண்டு வந்தார். மேலும் தாவீதுதனது அண்டையிலுள்ள நாடுகளைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்ததால் 'யாவே' வழிபாட்டைத் தவிர வேறு கடவுள் வழிபாடுதவிர்க்கப்பட்டது.

9.3. உடன்படிக்கைப் பேழை:
தாவீதின் காலத்தில் உடன்படிக்கைப் பேழை எருசலேமுக்குக்கொண்டு வரப்பட்டது. உடன்படிக்கைப் பேழை இஸ்ரயேலர் மத்தியில்இறை பிரசன்னத்தின் அறிகுறியாக, அடையாளமாகத் திகழ்ந்தது.கோவில் யாவேயின் இருப்பிடமாகவும், பலிகள் தகனப்பலிகள் ஒப்புக்கொடுக்கும் இடமாகவும் விளங்கியது.

9.4. வழிபாடு:
நாட்டின் முக்கியத் திருத்தலம் கிபயோனில் இருந்தது. கிபயோனில்காலை, மாலை வழிபாடுகள் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்குப்பின்னர் எருசலேம் கோவில் முதன்மையாக மாறியது. நீதித்தலைவர்களைப் போலவே அரசர்களும் பலி செலுத்தினர். பேழைஎருசலேமுக்குக் கொண்டு வரப்பட்டவுடன் தாவீது பலி செலுத்தினார்.சாலமோன் கிபயோனிலும், கோவில் அர்ச்சிப்பின்போதும் பலியிட்டார்.பின் கோவில்திருப்பணி முடிவுற்றது. மேலும் முதல் மூன்று அரசர்கள்ஆட்சியில் ஆண்டுக்கு மும்முறையும், முக்கியத் திருவிழாக்களின் போதும்பலி செலுத்தப்பட்டது.

9.5. இறைவனது நீதியும், புனிதத்துவமும்:
தாவீது தனது பாவங்களுக்காக மனம் வருந்தினாலும், பாவத்திற்குத்தண்டனை அளிக்கப்பட்டது. செமாயாயின் சாபம் கூட கடவுளின்தண்டனையாகவே கருதப்பட்டது. மேலும் அரசர்களின் பாவ வாழ்வினால்அவர்களது ஆட்சிக்குட்பட்ட குடிமக்களும் தண்டனைக்குள்ளாயினர்.சவுலின் கீழ்ப்படியாமையால் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.தாவீதின் பாவத்தால் கொடிய கொள்ளை நோய் மக்களை வாட்டியது ( 2சாமு 24). சாலமோனது பாவ வாழ்க்கையால் அவரது இறப்புக்குப் பின்னர்ஒருங்கிணைந்தப் பேரரசு பிரிந்தது.

9.6. இறைவனது இரக்கமும் பராமரிப்பும்:
தாவீது மனம் வருந்தியபோதிலும் தண்டிக்கப்பட்டார். ஆனால்அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாதது இறைவனதுஇரக்கத்தையே காட்டுகிறது. இறைவனது பராமரிப்பு நாட்டிற்குமட்டுமல்ல, தனிப்பட்ட நபருக்கும் அளிக்கப்பட்டது. இஸ்ரயேல் மக்கள்யாவேக்கு உகந்தவர்களாக நடந்தபோது, பாலைவனத்தில் வழிநடந்தபோதும், நீதித் தலைவர்கள் காலத்திலும் முதல் அரசர்கள்காலத்திலும் இறைவனது பாராமரிப்பை உய்த்துணர்ந்தனர்.இறைபராமரிப்பால் அரசர்கள் போரில் வெற்றி கண்டனர். சவுல்போர்க்களத்தில் இறந்தபோது, இஸ்ரயேல் அரசு வீழ்ச்சியடைந்துவிட்டதுபோல் தோன்றினாலும் ஒரு நில நாட்களில் இஸ்ரயேல் மற்றநாடுகளின் மேல் ஆட்சி செலுத்த ஆரம்பித்தது இறைவனதுபராமரிப்பால்தான்.தாவீது தனது ஆட்சியில் ஏற்பட்ட துன்பங்களைத் துணிவுடன்எதிர்கொண்டார். சவுலினால் கொடுக்கப்பட்ட தொடர் தொல்லைகள்,அப்சலோமின் எதிர்ப்பு, தனது சொந்த மகனின் இறப்பால் ஏற்பட்டவேதனைகளின்போதும் கடவுளின் காக்கும் கரம் வழிநடத்துவதைஉணர்ந்தார்.

9.7. அரசு:
சவுல் தனது ஆட்சியில் ஓர் எளிமையின் அரசராகக்காட்சியளித்தார். அரசராக இருந்தபோதும்கூட தனது நிலத்தில் தொடர்ந்துவேலை செய்தது அவரது எளிமைக்கு அத்தாட்சி. நீதி வழங்குதல்கூடஅரண்மனையில்லாமல் மரத்தினடியில் அமர்ந்து நீதி வழங்கப்பட்டது.தாவீது எருசலேமைத் தனது உறைவிடமாகக் கொண்டு அங்கு ஓர்அரண்மனையை எழுப்பினார். தாவீது சவுலுக்கு நேர்மாறாகத் தான் அரசர்என்பதை வெளியடையாளங்கள் மூலம் காட்டினார். இஸ்ரயேல் ஒருதனிநாடானது ஏதோ சில தலைவர்களது முயற்சியாலோ அல்லதுஅரசர்களாலோ அல்ல. மாறாக யாவே விரும்பியதால்தான் இஸ்ரயேல்ஓர் இனமாக ஒரு நாடாக உருவாகியது.

9.8. நீதி:
போர்க்காலங்களில் அரசனே படையின் முன்னின்று வழிநடத்தினான். அமைதிக் காலத்தில் அரசரே அமைதி சமாதானம்வழங்குபவராகவும் விளங்கினார். தாவீது தனது மக்களின்துன்பங்களைத் தீர்க்கும் அரசராக விளங்கினார். நீதி வழங்குவதில்இரக்கத்தோடு செயல்பட்டார். தாவீதைத் தொடர்ந்து சாலமோன் தனதுஞானத்தால் மக்களுக்கு நீதி வழங்கினார்.

9.9. படை:
சவுல் தனக்கு மெய்க்காப்பாளர்கள் சிலரைத்தான் வத்திருந்தார்.

- தாவீது ஒ ரு நிலையான படையை ஏற்படுத்தினார்.
- சாலமோன் அரண்மனையைச் சுற்றி மதில் எழுப்பினார்.போரில் ரதங்களைப் பயன்படுத்தும் முறையைஅறிமுகப்படுத்தினார்.
- போர்க்கைதிகள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டனர்.
- குழந்தைகளும் பெண்களும்கூட இவ்வாறு தண்டிக்கப்பட்டனர்.

9.10. இறுதியாககானா நாட்டில் குடியேறி பல்வேறு போராட்டங்களையும்,எதிரிகளின் தாக்குதலையும் சமாளித்து வந்த இஸ்ரயேலர் அரசாட்சி(மன்னராட்சி) முறை, காலத்தின் தேவை என்பதை உணர்ந்தனர்.கடவுளே ஆள்கின்றார் என்பதனால், அவரே அரசர்களைத் திருப்பொழிவுசெய்கின்றார். கடவுளின் திருவுளத்தால் சவுல், தாவீது, சாலமோன்போன்றோர் அரசர்களாகின்றனர். பலர் இந்த அரசாட்சி முறைக்குமுயன்றும் வெற்றிபெற முடியாமல் போனது. பல்வேறு குலங்களாகதாண் முதல் பெயர்செபாவரை வாழ்ந்த இஸ்ரயேலரை ஓர் அரசின் கீழ்கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முழு வெற்றிகிடைத்தது என்று சொல்ல முடியாது. ஒவ்வோர் அரசரும் எப்படிப்படிப்படியாக கடவுளிடமிருந்து விலகிப்போவதும், நிறுவன அமைக்குள்'யாவே' இறைவனைக் கட்டுப்படுத்துவதையும் அறிகின்றோம். எனினும்'யாவே'யின் மனசாட்சியாக செயல்பட்ட இறைவாக்கினர்கள் பல்வேறுசூழல்களில் அரசர்களுக்கு தொடக்ககால வழிகாட்டுகின்றனர்.ஒருங்கிணைந்த பேரரசை நிலைநாட்டுவதில் தொடக்க மூன்றுஅரசர்களின் பங்கு மிகப்பெரியதாகும்.

 

10. எருசலேம் கோவில்

இஸ்ரயேல் மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தபோது #8220;யாவே"கடவுளை, அவர்கள் நடுவில் தங்கும் கடவுளாகவும், கூடாரக்கடவுளாகவும் கண்டனர். ஆனால் அவர்கள் கானான் நாட்டில்குடியேறிய பிறகு நகரக் கலாச்சாரத் சிந்தனையும், நிரந்திரமாக ஓரிடத்தில்நிலைத்து வாழும் எண்ணமும் அவர்கள் மனதில் வளர்ந்தது. எனவேதங்கள் கடவுளையும் நிரந்தரமாக ஓரிடத்தில் குடி அமர்த்தத் திட்டமிட்டனர்.தாவீது அரசர் தனது நகரமாகிய எருசலேமில் யாவேக்கு ஓர் இல்லம் கட்டஎண்ணினார் (2 சாமு 7:1-7). ஆனால் தாவீதின் எண்ணம் சாலமோனின்கைகளால் நிறைவேற வேண்டும் என்பது இறைத்திருவுளம். தாவீதுஅரசர் கோவில் கட்ட முடியாமல் போனதற்கு அவர் நடத்திய போர்களும்(1 அர 5:2-3; 8:15-21), அவர் கொலை செய்தவர்களின் இரத்தப் பழியுமேகாரணம் என்று விவிலிய நூலாசிரியர்கள் விளக்கம் தருகின்றனர்.சாலமோன் கட்டிய கோவிலின் சிறப்பு, அதன் வரலாறு, அதன் அழிவு,தாயகம் திரும்பியோர் எழுப்பிய இரண்டாம் கோவில் - இஸ்ரயேல் மக்கள்வாழ்வின் சிந்தனையில் கோவில் ஏற்படுத்திய மாற்றம் முதலியவற்றைஇக்கட்டுரையில் காண்போம்.

10.1. சாலமோன் கோவில்:
சாலமோன் அரசர் அரசுரிமை பெற்ற 4 ஆம் ஆண்டில் கோவில்கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு, 11 ஆம் ஆண்டில் கோவில் பணிகள்நிறைவு பெற்றன. ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் (கி.மு. 958 - 951)கோவில் திருப்பணிகள் நடைபெற்றன (1 அர 6: 37-38). இஸ்ரயேல்மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய 480 ஆம் ஆண்டு கோவில் வேலைதொடங்கியது. கோவிலுக்குத் தேவையான மரங்களை தீர் நாட்டு அரசர்ஈராம், லெபனான் கேதுரு மரக்காடுகளிலிருந்து வழங்கினார் (1 அரச 5:5-12). தேவையான கற்கள் எருசலேம் நகருக்கு அருகிலிருந்தபாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டன (1 அர 5:15, 17).இஸ்ரயேலர்கள் கூலி ஆட்களாகப் பணியாற்றினர் (1 அர 56, 9, 13-16).கட்டிடக் கலைஞர்களும், சிற்பிகளும் பெனிசிய நாட்டிலிருந்துவரவழைக்கப்பட்டனர் (1 அர 5:6,18). எருசலேம் கோவில் அமைப்புக்குறித்தும், அதில் அமைந்த வேலைப்பாடுகள், அலங்கார அமைப்புகள்குறித்தும் 1 அர 5, 6 அதிகாரங்கள் விளக்கமாகக் கூறுகின்றன.

10.2. கோவில் கட்டப்பட்ட இடம்:
தாவீது தான் வாழ்ந்த காலத்திலேயே கோவில் கட்டுவதற்காகஎருசலேம் மலையில் இடம் குறித்திருந்தார். அரவுனாவுக்குச்சொந்தமான போரடிக்கும் களத்தில் காத் என்னும் இறைவாக்கினரின்கட்டளைப்படி விலைக்கு வாங்கி, ஒரு பலிப்பீடம் கட்டி எரிபலிகளும்நல்லுறவுப் பலிகளும் செலுத்தினார் (2 சாமு 24: 181-25). பின்னர்அவ்விடமே கடவுளாகிய ஆண்டவரின் கோவில் அமையும் இடம் என ( 1குறி 22:1) தாவீது சொன்னார். பிறகு அவ்விடத்திலே சாலமோன்கோவிலைக் கட்டினார் என 2 குறி 3:1 கூறுகிறது. எபூசியரானஅரவோனின் களம்தான் குன்றின் உயர்ந்த பகுதி. சாலமோன் கோவில்இருந்த இடத்தில் இன்று 'hராம் எஷ்-செரிப் மசூதி அமைந்துள்ளது.இதே இடத்தில்தான் செருபாபேல் கட்டிய கோவிலும்(கிமு 520-515), பெரிய ஏரோது கட்டிய கோவிலும் (கி.மு. 20 முதல்)அமைந்திருந்தது.

10.3. சாலமோன் கோவில் அமைப்பு:
சாலமோன் கோவில் மூன்று பகுதிகளைக் கொண்டது. 20 முழம்நீளம் கொண்ட முண் மண்டபமும் (எபி-உலாம்), 40 முழம் நீளம் கொண்டதூயகமும் (எபி-n'கால்), 20 முழ நீளம் கொண்ட திருத்தூயகமும் (எபி-தெபிர்) இதில் அடங்கும். திருத்தூயகப் பகுதியிலிருந்து, முண்மண்டபத்தின் பின்பகுதி வரை 20 முழம் அகலமும் முன் மணி மண்டபப்பகுதியில் 10 முழ அகலமும் கொண்டதாகக் கோவில் அமைந்திருந்தது.மேலும் கோவில் 30 முழம் உயரம் கொண்டதாகவும் இருந்தது.திருத்தூயகம் 20 முழம் உயரமாக இருந்தது என்றுகுறிப்பிடப்படுவதிலிருந்து (1 அர 6:20) திருத்தூயகம் 10 முழம்உயரத்தளத்தில் அமைந்திருந்ததாகக் கொள்ளலாம். திருத்தூயத்திற்கும்தூயகத்திற்கு மிடையே கீழ்தளம் முதல் மச்சுவரை கேதுரு பலகைகளால்தடுப்புச் சுவர் ஒன்று எழுப்பப்பட்டிருந்தது (1 அர 6:16). முன் மண்டபத்தின்முன்னால் பதினெட்டு முழம் உயரமுள்ள இரு வெண்கலத் தூண்கள்நிறுவப்பட்டிருந்தன. அதன் உச்சியில் 5 அடி உயரத்தில்வெண்கலத்திலான போதிகைகள் (ஊயயீவையட) பொருத்தப்பட்டிருந்தன.இத்தூண்கள் ஒருவேளை ஒளி ஏற்றி வைப்பதற்காகப்பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

10.4. கோவிலுக்கு அணி சேர்த்தவை:
கோவிலின் திருத்தூயகத்தில் உடன்படிக்கைப் பேழை இருந்தது.பேழையின்மேல் மனித முகமும், மிருகத்தின் உடல் அமைப்பும் கொண்டஇரு கெருபுகள் தங்கள் இரு இறக்கைகளையும் விரித்துக்கொண்டுபேழையை மூடியவாறு இருந்தன. கோவிலின் கருவறையில் இருந்தகெருபுகளும் உடன்படிக்கைப் பேழையும் யாவேயின் அரியணையைநினைவுபடுத்தின.

தூயகத்தில் தூபப்பீடம் அமைக்கப்பட்டிருந்தது. இதுபொன்பீடமென்றும் (1 அர 7 : 48), கேதுரு பீடமென்றும் (1 அர 6 : 20-21)அழைக்கப்பட்டது. மேலும் திரு முன்னிலை அப்பத்திற்கான பொன்மேசையும், தென்புறம் ஐந்து, வடபுறம் ஐந்து என பத்து பசும் பொன்விளக்குத் தண்டுகளும் தூயகத்தில் அமைக்கப்பட்டிருந்தன.வெண்கலத்திலான பலிபீடமும் (1 அர 8:64) அமைக்கப்பட்டிருந்தது.

முன் மண்டபத்தின் வெளியே தென் கிழக்கில் ஐந்து முழம் உயரமும்,பத்து முழம் விட்டமும், 30 முழம் சுற்றளவும் கொண்ட வெண்கலவார்ப்புக்கடல் 12 காளை மாடு உருவங்கள் தாங்குவது போல்அமைக்கப்பட்டிருந்தது. இந்த வார்ப்புக்கடல் 12 ஆயிரம் குடம் தண்ணீர்கொள்ளும். குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்த இத்தொட்டியில்இருந்த தண்ணீர் பயன்பட்டது (விப 30:18-21). வெண்கலத்திலான 4முழம் நீளம், 4 முழம் அகலம், 3 முழம் உயரம் கொண்ட பத்து தொட்டிகள்கோவிலின் வடக்கில் ஐந்து, தெற்கில் ஐந்து என வைக்கப்பட்டிருந்தன.இத்தொட்டிகளில் நிரப்பப்பட்ட தண்ணீர் பலிப் பொருட்களைச்சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.

10.5. கோவில்: நாட்டு மக்களின் திருத்தலம்:
சாலமோன் கட்டிய கோவிலை அரசக் கோவில் என்றால் அதுதவறு இல்லை. அரச குடும்பத்திற்குரிய கோவில் அது. அரண்மனையும்கோவிலும் அருகருகே அமைந்திருந்தன. அரசரே அக்கோவிலைக் கட்டிஅதைக் குடமுழுக்குச் செய்தார். சாலமோனுக்குப் பிறகு வந்தஅரசர்களும் கோவில் திருப்பணிகளைச் செய்து வந்தனர் (1 அர 15:15; 2அர 112:19). அரசர் கோவில் திருப்பணிகளைச் செய்து வந்தாலும்அக்கோவில் அரசருக்குரியது மட்டுமல்ல, அவரது அரசு முழுமைக்கும்உரிய ஒன்று. தங்கள் கடவுளுக்கு மக்களும் அரசரும் இணைந்து பலிஒப்புக்கொடுத்ததாலும் வழிபாடு நடந்ததாலும் இக்கோவில் நாட்டுக்குரியகோவில். எனவேதான் நாடு இரண்டாகப் பிரிந்த போது வடநாட்டு மக்கள்எருசலேம் கோவில் செல்வதை எரொபவாம் தடை செய்தார் (1 அர 12:26-33). தாவீது கோவில் கட்ட எண்ணிய போது யாவேக்கு ஓர் இல்லம்வேண்டும், அத்துடன் பன்னிரு குலமும் ஒன்றிணைந்து வழிபட ஒருகோவில் வேண்டும் என்ற சிந்தனையே இருந்தது (2 சாமு 7:1-2).அத்தகையதொரு மக்கள் கோவிலைத்தான் சாலமோன் கட்டினார் (1 அர8:1-5, 13, 62-66). எனவே சாலமோனின் கோவில் அரசரின் கோவில்என்பதைவிட இஸ்ரயேல் மக்களின் வழிபாட்டுத்தளம் என்பதில்தான்தனது பெருமையைப் பெற்றிருந்தது.

10.6. சாலமோன் கோவிலின் அழிவு:
சாலமோன் கட்டிய கோவில் நாட்டின் தலைநகரில் இருந்ததால்,அரசியல்-சமய மையமாக இருந்ததால், அரசியல் மாற்றங்களும் சமயமாற்றங்களும் கோவிலையும் கோவில் வழிபாட்டையும் பெரிதும்பாதித்தது. கோவில் நிர்வாகத்தில் அரசர்களின் கை ஓங்கி இருந்தது.அரசின் அரசியல் சூழலும் சமய நம்பிக்கையும் கோவிலிலும் வழிபாட்டுமுறையிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தன. ஆகாசு அரசர்சாலமோன் அமைத்த வெண்கல பீடத்தை நீக்கிவிட்டு தமஸ்கு நகரில்உள்ளதுபோன்ற ஒரு பீடத்தை அமைத்தார் (2அர 16:10-16). அத்துடன்வார்ப்புக் கடலைத் தாங்கி நின்ற 12 காளை மாட்டு உருவங்களைநீக்கினார் (2அர16:17). அரச அரியணை மேடையையும், அரசநுழைவாயிலையும் நீக்கினார் (2அர16:18). அசீரியப் பேரரசரான திக்லத்பிளேசருக்குக் கட்ட வேண்டிய கப்பத்திற்காக இவ்வாறு ஆகாசு அரசர்செய்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு (2 அர 16 : 17). கி.மு 686 - 642வரை ஆண்ட மனாசே என்ற யூதா நாட்டு அரசர் கோவிலில் அசேராக்கம்பங்களை நிறுவினார். பாகாலுக்குப் பலிபீடங்களைக் கட்டினார்.அசேராவின் சிலையை ஆண்டவர் இல்லத்தில் நிறுவினார் (2அர 21 : 4-5, 7). எசேக்கியேல் 8 ஆம் அதிகாரம் எருசலேம் கோவில் அழிவுக்கு முன்எந்த விதமான வழிபாடுகள் அரசர்களின் அனுமதியோடு கோவிலில்நடந்தன என்பதை விளக்குகின்றது. கோவில் சாலமோன் அரசரால் எந்தநோக்கத்துக்காகக் கட்டப்பட்டதோ அந்த நோக்கம் 400 ஆண்டுகளில்காணாமல் போய்விட்டது. கி.மு. 597 இல் எருசலேமை நோக்கிப்படையெடுத்து வந்த பாபிலோனியப் பேரரசர் நெபுகத்னேசர் கோவிலின்செல்வங்களை எல்லாம் எடுத்துச் சென்றார் (2 அர 24:13). கி.மு. 587இல்மீண்டும் அவர் எருசலேமைத் தாக்கியபோது, எருசலேம் நகருக்கு நேர்ந்தகதியே சாலமோன் கட்டிய கோவிலுக்கும் நிகழ்ந்தது. கோவிலில் உள்ளபொருட்கள் எல்லாம்-இரு பெரிய வெண்கலத்தூண்கள், வெண்கலவார்ப்புக்கடல் - பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன (2அர 25:13-17, எரே 52:17-23). கோவில் தீக்கிரையாக்கப்பட்டது.

10.7. நாடுகடத்தலுக்குப்பின் எழுந்த இரண்டாம் கோவில்பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட காலத்தில் கெபார்நதிக்கரையோரம் வாழ்ந்த எசேக்கியேல் இறைவாக்கினர் புதிய கோவில்எழுப்பப்படுவதைக் காட்சியில் கண்டார் (எசே 40:1-44:9). இக்காட்சியேகி.மு. 515 இல் செருபாபேல் தலைமையில் மீண்டும் எருசலேமில் கோவில்கட்டப்படுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. கி.மு. 538 இல் சைரசு அரசர் இஸ்ரயேல் மக்களை அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுமதித்ததுமட்டுமல்லாது அரசு உதவியுடன் கோவில் கட்டவும் அனுமதித்தார்.எருசலேம் கோவிலிலிருந்து பாபிலோனியர்கள் கொள்ளையடித்து வந்ததங்கம், வெள்ளியிலான பொருட்களையும் திரும்பக் கொடுத்தார்.முதலில் பாலஸ்தினம் வந்த தாயகம் திரும்பியோர் எருசலேம் கோவிலின்முன்பு பலிபீடம் இருந்த இடத்திலே ஓர் பலிபீடம் கட்டினர் (எஸ் 3:2-6).நெகேமியா என்ற ஆளுநர் தலைமையில் கோவில் வேலை தொடங்கியது(எஸ் 5:16). கோவில் இடிபாடுகளையும் மணல் மேடுகளையும் அகற்றிக்கொண்டிருந்த பொழுதே சமாரியர்களது எதிர்ப்பால் கோவில் வேலைதடைபட்டது (எஸ் 4:1-5). இறைவாக்கினர்கள் ஆகாய், செக்கரியாஇவர்களது ஆதரவாலும் (எஸ் 4:24-4:2; ஆகா 1:1-20; சக் 4:7-10)செருபாபேல், எசுவா இவர்களது முன்முயற்சியாலும், தாரியூஸ் அரசரின்ஆட்சி காலத்தில் 2 ஆம் ஆண்டு (கி.மு. 520ஆம் ஆண்டு) கோவில்திருப்பணிகள் முடக்கிவிடப்பட்டன. கி.மு. 515 இல் இரண்டாம் கோவில்கட்டி முடிக்கப்பட்டுக் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. சாலமோனின்கோவிலுடன் ஒப்பிடும்போது இரண்டாவது கோவில் பொலிவற்ற ஒன்றுஎன்று சில சான்றுகளும் (எஸ் 3:12-13; ஆகா 2:3), இரண்டாம் கோவிலும்சாலமோன் கோவிலுக்கு நிகரானது என்று சில சான்றுகளும் ( 2 குறி 4:1;எசே 43:13-17) எடுத்துரைக்கின்றன.

கி.மு. 169 இல் அந்தியோக்குஸ் எப்பிபானுசு என்ற கிரேக்கப் பேரரசர்கோவிலில் நுழைந்து சூறையாடி கோவில் பொன்பீடம், விளக்குத்தண்டு,காணிக்கை அப்ப மேசை, நீர்மைப்படையலுக்கான குவளைகள், திரை,பொன் தூபக் கிண்ணங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றார் (1 மக்1:21-24; 2 மக் 5 : 15-16). இவ்வாறு கிரேக்க அரசர் கோவிலைத் தீட்டுப்படுத்தியதால் (இச 9:27; 11:31) கி.மு 164 இல் யூதா மக்கபேயர் கோவிலைப்புதுப்பித்து புதிய பலி பீடம் அமைத்து கோவிலைத் தூய்மைப்படுத்தியதாககுறிப்பு உள்ளது. இந்த நாளைத்தான் இன்று யூதர்கள் ஒளிவிழா(ழ'சூருமு'ழ) அல்லது கோவில் அர்ச்சிப்பு விழா என்றுகொண்டாடுகின்றனர்.

10.8. கோவிலும் இஸ்ரயேல் மக்களின் சமய நம்பிக்கையும்:
சாலமோனின் இறப்புக்குப் பிறகு நாடு இரண்டாக கூறு பட்டாலும்,எரோபவாம் அரசர் எருசலேமிற்கு எதிராக வடநாட்டில் உள்ள பெத்தேலில்திருத்தலம் ஒன்று அமைந்திருந்தாலும் வடநாட்டு மக்கள் எருசலேம்கோவிலைத் தங்களது சமய நம்பிக்கையின் மையமாகவேநினைத்திருந்தனர். சீலோவைச் சார்ந்த அகியா என்ற வடநாட்டுஇறைவாக்கினர் எருசலேமை இறைவன் தேர்ந்துகொண்டார் என்கிறார் (1 அர 11:32). எருசலேம் கோவில் தரை மட்டமான பிறகும்சிக்கேமிலிருந்தும், சீலோவிலிருந்தும் சமாரியாவிலிருந்தும்திருப்பயணிகள் எருசலேமில் கோவில் அழிந்துபோன இடத்தில் தங்கள்பலிகளைச் செலுத்தினர் (எரே 41:5). வட நாட்டு மக்களே எருசலேம்கோவிலின் மட்டில் இந்த அளவு ஆர்வம் கொண்டவர்களாக இருந்தால்,யூதா நாட்டு மக்கள் தங்கள் தலைநகரில் இருந்த கோவிலுக்கு எந்தஅளவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். எருசலேமின்கோவில் இஸ்ரயேல் மக்களது உணர்வுகளைத் தொடும் சிந்தனையாகஇருந்தது என்பது இதில் தெளிவாகிறது.

10.9. முடிவுரை:
இஸ்ரயேல் மக்களைப் பொருத்தமட்டில் எருசலேம் கோவில்இறைவன் உறையும் இல்லமாகும். யாவே எருசலேம் கோவிலைத்தான்இல்லமாகத் தேர்வு செய்திருந்தார். கோவில் இஸ்ரயேல் மக்களின்வாழ்வின் மையமாக விளங்கியது. எனவேதான் நாடு திரும்பியவர்கள்(கி.மு. 539) முதன் முதலில் கோவிலைக் கட்டத்திட்டமிடுகின்றனர். பெரியஏரோது கோவில் கட்டத் தொடங்கியதோடு (கி.மு 20 முதல்) பழையஏற்பாட்டுக் கால எருசலேம் கோவில் வரலாறு முடிவுக்கு வருகிறது. பெரியஏரோது எருசலேமில் கட்டியது மூன்றாவது கோவில்.... முதலிருகோவில்களும் இறைவன் தங்க ஓர் இல்லம் வேண்டும் என்றஎண்ணத்துடன்கட்டப்பட்டபோது மூன்றாவது கோவில் யூதர்களைத்திருப்திப்படுத்த பெரிய ஏரோது கட்டிய கோவிலாக அமைந்தது. எனவேபழைய ஏற்பாட்டுக்கால எருசலேம் கோவிலில் இருந்த சிறப்பு பெரியஏரோதின் கோவலில் இல்லை. எனவே தான் #8220;படைகளின் ஆண்டவரே!உமது உறைவிடம் எத்துணை அருமையானது" என்று கூறி உமதுபீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள்குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும்கிடைத்தது" (திப 84:1-2) என்று திருப்பாடல் ஆசிரியர் சாலமோன்கோவிலின் பயன்களையே அதன் சிறப்பாக எடுத்துக்கூற கோவில்வெளித்தோற்றத்தை, எழிலை அதன் சிறப்பாகச் சுட்டிக்காட்டுகின்றதுபுதிய ஏற்பாடு (லூக் 21:5-6). மக்களுக்கும் இறைவனுக்கும் இடையேஉருவான உறவுப் பாலம் சாலமோன் கால எருசலேம் கோவில்.விண்ணையும் மண்ணையும் இணைத்த உறவுப்பாலம் சாலமோன் காலஎருசலேம் கோவில்.

------------------------------------------
--------------------------
----------------
------
---
-