யோவான் நற்செய்தி

அருட்திரு. கு. எரோணிமுசு
புனித பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி

விவிலிய அன்பர்களே,

நற்செய்தி நூல்களிலேயே தனிச் சிறப்பு வாய்ந்தது புனித யோவான் நற்செய்தி.மற்ற ஒத்தமைவு நற்செய்திகளிலிருந்துஅமைப்பிலும், வலியுறுத்தும் கருத்திலும் அதிகவேறுபாடுகளைக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் நிகழ்வுகளை மிகவும் வித்தியாசமாகத் தருகிறது இந்த நான்காம்
நற்செய்தி.இந்நூலின் முன்னுரையையும், இதில் பொதிந்துள்ளஆழ்ந்த இறையியல் கருத்துக்களையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் இங்கே தந்திருக்கிறார் விவிலியப்பேராசிரியர் அருள்திரு.கு. எரோணிமுசு அவர்கள். யோவான் நற்செய்தி நூலுக்கு விளக்கவுரை எழுதியும் குருத்துவக்
கல்லூரிகளிலும் துறவியர் பயிற்சி நிலையங்களிலும் விரிவுரைகள்ஆற்றியும், இன்னும்பல்வேறுவிவிலியப்பணிகள்ஆற்றியும் வரும் தந்தையவர்கள் இப்பாடநூலை வடித்துத் தந்தது நமக்குமிகுந்தமகிழ்ச்சி தருகிறது. வாழ்க தந்தை எரோணிமுசு அவர்களின் விவிலியத் திருப்பணி !

நன்றி.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திரு முனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்


பொருளடக்கம்பொருளடக்கம்

1. அன்புச் சீடர்வரைந்த காவியம்
2. நம்பிவாழ்வுபெற
3. இலக்கியக்கூறுகள்
4. அனுபவமேஆரம்பம்
5. பழையனகழிதலும்புதியனபுகுதலும்
6. புதியகோவில்
7. புதியவழிபாடு
8. புதியசட்டம்
9. புதியவாழ்க்கைமுறை-பகிர்வு
10. புதியதலைமை
11. சீடருக்கானஇயேசுவின்செபம்
12. மாட்சிமையின்நேரம்
13. வாழ்வின்வெற்றி


1. அன்புச் சீடர் வரைந்த காவியம்
(நற்செய்தியின் ஆசிரியர்)

நற்செய்திநூல்கள், ஏனைய விவிலிய நூல்களைப் போல, கிறிஸ்தவச் சமூகத்தின்படைப்புகள். எந்தத் தனி நபர்கள்அவற்றிற்கு நூல்வடிவம் கொடுத்தனர் என்பது முக்கியமானதாகக்கருதப்படவில்லை. 'மத்தேயு எழுதிய நற்செய்தி' 'யோவான்எழுதிய நற்செய்தி' போன்றதலைப்புகளில் நான்கு நற்செய்திகளும் கிறிஸ்தவர் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டபோதுஅவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துக் காட்டுவதற்காகச் சேர்க்கப்பட்ட தலைப்புகள். எனினும்இந்தத்தலைப்புகள் என்பதுதான் யதார்த்தம் தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் இந்நூல்களுக்குயார் யாரை ஆசிரியராகக் கருதினார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

1.1. புறச்சான்றுகள்
பன்னிரு திருத்தூதருள் ஒருவரும் செபதேயுவின் மகனுமான யோவான்தான் நான்காம்நற்செய்திக்கு ஆசிரியர் என்னும் கருத்து மிகத் தொடக்ககாலத்திலிருந்தே திருச்சபையில் இருந்துவந்துள்ளது. "இறுதியாக, இரவு உணவின்போது ஆண்டவரின் மார்பில் சாய்ந்திருந்தவரானயோவான் எபேசுநகரில் வாழ்ந்தபோது ஒருநற்செய்திநூலை வெளியிட்டுள்ளார்”என்றுபுனிதஇரேனியு கி.பி 180-ஆம் ஆண்டை ஒட்டி எழுதியுள்ளார் (திரிபுக்கொள்கையினருக்கு எதிராக 111,1:9). இச்செய்தியைத் திருத்தூதர் யோவானை நேரடியாக அறிந்திருந்த போலிக் கார்ப்பிடமிருந்துதாம் பெற்றதாக அவர் கூறுகிறார் (எசேபியுவின் திருச்சபைவரலாறு 20:4-8).புதியஏற்பாட்டுத் திருமுறைகளுள் மிகப் பழமையானது மூரத்தோரி திருமுறை (கி.பி. 170-200); இதில் பின் வருமாறு வாசிக்கிறோம்: "நான்காவது நற்செய்தி சீடர்களுள் ஒருவரானதிருத்தூதரால் ஆனது. அவருடைய உடன்சீடர்களும் ஆயர்களும் எழுதுமாறு அவரைவேண்டியபோது அவர் இன்றும் இன்னும் மூன்று நாளைக்கும் என்னோடு நோன்பு இருங்கள். யார்யாருக்கு எதெல்லாம் வெளிப்படுத்தப்படுகிறதோ அதையெல்லாம ;ஒருவர் ஒருவருக்குக் கூறுவோம்”என்றார். அன்றிரவே திருத்தூதருள் ஒருவரான யோவான், அனைவரின் ஒப்புதலையும் பெற்றுஅனைத்தையும் தம்பெயரில் எழுதவேண்டும் எனத்திருத்தூதருள் ஒருவரான அந்திரேயாவுக்குவெளிப்படுத்தப்பட்டது.கி.பி. 200-ஆம் ஆண்டை ஒட்டிய மார்சியனுக்கு எதிரான முன்னுரையில்: யோவான்நற்செய்தி யோவான் உயிரோடு இருக்கும் போதே அவரால் திருச்சபைகளுக்கு வழங்கப்பட்டது.யோவானின் அன்புச்சீடர் ர்நைசயிழடளை-இயராப்பொலி நகர் பப்பியா அதனைத் தன் ஐந்து விளக்கநூல்களில் குறித்து வைத்தார். யோவான் சொல்லச் சொல்ல அவர் சரியாக எழுதிவைத்தார். ஆனால்திரிபுக்கொள்கையினரான மார்சியனை அவரது மாறுபட்ட கருத்துகளுக்காகக் கடிந்த பின் அவரையோவான் ஒதுக்கிவைத்தார்.திருத்தூதரான யோவானே நான்காம் நற்செய்தியின்ஆசிரியர் என்னும் கருத்துஇரண்டாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து யாவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

1.2. அகச்சான்றுகள்
1) நற்செய்தி ஆசிரியர் இயேசுவோடு வாழ்ந்தவர்
நான்காம் நற்செய்தியை எழுதியவர் இயேசுவோடு வாழ்ந்த ஒருவராக இருக்கவேண்டும்.அவருடைய நற்செய்தியில் காணப்படுகின்ற நுணுக்கமான குறிப்புகளைப் பார்க்கும்போது,நேரடியாகக் கண்ட ஒருவர் எழுதியுள்ளார் என்றே கூறத் தோன்றுகிறது. யோர்தானுக்கு அப்பாலுள்ளபெத்தானியா(1: 28), கானா(2:1, 11:4: 46; 21:2), அயினோன், சலீம்(3:23), சிக்கார்(4:5), திபேரியா(6:1, 23), பாலைநிலத்திற்கு அருகிலுள்ள எப்பிராயிம்(11:54), ஆகிய ஊர்கள்அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தன. யாக்கோபின் கிணறு4:5), பெத்சதாகுளம் (5:2), சீலோவாம்குளம்(9:7), சாலமோன்மண்டபம்(16:23), கெதிரோன்நீரோடை(18:1), கல்தளம்(19:13) ஆகியவை இருந்த இடங்கள்அவருக்குத் தெரிந்திருந்தன. நத்தனியேல்(1:45), நிக்கதேம்(3), லாசர்(11), மால்கு(18:10) போன்றநபர்கள் நான்காம் நற்செய்தி ஆசிரியருக்கே அறிமுகமானவர்கள். சீடர்கள் இயேசுவிடம் சென்றுதங்கியபோது பிற்பகல் நான்குமணி ஆகியிருந்தது. (1:39); இயேசுயாக்கோபின் கிணற்றுக்குவந்தபோது நண்பகல்(4:6); கானாவில், திருமணத்தின்போது ஆறுகல் தொட்டிகள் இருந்தன(2:6); இயேசுவின் அங்கி தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது (19:23) ;சீடர்கள் ஐந்து அல்லதுஆறு கிலோமீட்டர் தொலை படகு ஓட்டிய பின் இயேசுகடல் மீது நடந்துவந்தார் என்பது போன்றநுணுக்கமானகுறிப்புகள் யோவான் நற்செய்தியிலே காணப்படுகின்றன. இவையனைத்தும்நற்செய்தி ஆசிரியர் இயேசுவோடு வாழ்ந்த ஒருவராக இருக்கவேண்டும் என்று சொல்லத்தூண்டுகின்றன.2) இயேசுவின் அன்புச் சீடராக இருந்தார்இந்நற்செய்தி ஆசிரியர் இயேசுவோடு மிக நெருங்கிப் பழகியஒருவர்; அவரதுதனிஅன்புக்கு உரித்தானவர்; இறுதி இரவு உணவின்போது அவர் இயேசுவின் மார்புப்பக்கமாய்ச்சாய்ந்திருந்தார்(13:23-26); பிற திருத்தூதரெல்லாரும் ஒடிப்போன நேரத்திலும் இவர் இயேசுவின்சிலுவையடியில் நின்று கொண்டிருந்தார். இவரிடம் தான் இயேசுதம் அன்புத் தாயை ஒப்படைத்தார்(19:24-27). இயேசுவின் நினைவாகவே இருந்த இந்த அன்புச்சீடர் ஓய்வுநாளுக்கு அடுத்தநாள்காலையில் பேதுருவோடு சேர்ந்து இயேசுவின் கல்லறைக்கு ஓடிச் சென்றார் (20:2-10).கடற்கரையில் நின்று உயிர்த்த இயேசுவை இவரே முதன் முதலில் அடையாளம் கண்டு பிடித்தார்(21:7). இந்த அன்புச்சீடரைப் பற்றித்தான் இயேசு, "நான் வரும்வரை இவன் இருக்கவேண்டும்எனநான் விரும்பினால் உனக்கென்ன?”என்றுகேட்டார்(21:22). இவரே நான்காம் நற்செய்தியைஎழுதியவர். நற்செய்தியின் இறுதிச் சொற்றொடர் கூறுவது போல், "இந்தச் சீடரே இவற்றிற்குச்சாட்சி, இவரே இவற்றை எழுதிவைத்தார். இவருடைய சான்று உண்மையானது எனநமக்குத்தெரியும்” (21:24).

3) யார் இந்த அன்புச்சீடர்
ஒத்தமை நற்செய்திகளுள ;மூன்று சீடர்கள் இயேசுவோடு மிக நெருங்கிப் பழகியதாகப்படிக்கிறோம். இவர்கள் அவர் தம் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாய்த் திகழ்ந்தவர்கள்.இவர்கள் பேதுருவும், யாக்கோபும், யோவானும் ஆவார்கள். இவர்கள் மூவருமே இயேசுவின் வாழ்வின்முக்கிய கட்டங்களில ;(தோற்றம்மாறுதல், யாயீரின் மகள் உயிர்பெற்றெழுதல், கெத்சமனித் தோட்டம்)இயேசுவோடு இருக்க அழைக்கப்பட்டவர்கள், இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான பங்குவகித்தவர்கள். இந்நற்செய்தியை எழுதிய அன்புச் சீடர் இம் மூவரில் ஒருவராய் இருக்கலாம் எனஎண்ணத் தோன்றுகிறது. ஆனால் பேதுருவாய் இருக்க முடியாது. ஏனெனில் பல வேளைகளில்பேதுருவும் அன்புச் சீடரும் இணைந்தே வருகின்றனர் (13:23; 20:24; 21:7). யாக்கோபாகவும் இருக்கமுடியாது. அவர்கி.பி. 44-ஆம்ஆண்டே கொல்லப்பட்டு விட்டார். நற்செய்தி எழுதப்பட்டதே கி.பி.90-100 ஆண்டுகளில்தான். ஆகவே, மூன்றாமவராகிய யோவானே இதை எழுதியிருக்கவேண்டும்.

4) அன்புச் சீடர் யோவான் - அவரே நற்செய்தி ஆசிரியர்
திருத்தூதரான யோவானே அன்புச்சீடராய் இருந்திருக்கவேண்டும் என்பது நான்காம்நற்செய்தியை வாசிக்கும்போது தெளிவாகிறது. இந்நற்செய்தியில் பேதுருவின் பெயர் சுமார் 40முறை வருகின்றது. அவரைப் போன்று இயேசுவின் வாழ்வில் முக்கியத்துவம் வகித்த யோவானின்பெயரோ ஒரு முறை கூடக் குறிப்பிடப்படவில்லை. இந்நற்செய்தியில் திருத்தூதர் யோவான்முற்றிலும் மறைந்து நிற்கிறார்.முதல் அதிகாரத்தில் ஐந்து சீடர்களை இயேசு அழைக்கும் நேரத்தில் கூட நான்கு பேர்களின்பெயர்கள் (அந்திரேயா, பேதுரு, பிலிப்பு, நத்தனியேல்) கொடுக்கப்பட்டுள்ளன. முதன் முதலில்அழைக்கப்பட்ட இருவருள் அந்திரேயா ஒருவர் (1:40) எனக் கூறப்பட்டுள்ளது. மற்றவர்மறைந்துநிற்கிறார். இதன் பொருள் என்ன? தாம், ஆசிரியராய் இருந்த காரணத்தினால் தம் பெயரைமறைத்துக் கொள்கிறார் என்பதுதானே? இவ்வாறு நற்செய்தி ஆசிரியர் யோவான் 'அன்புச்சீடர்' ''அந்தச்சீடர்'' என்னும் சொற்களில் மறைந்து நிற்பதாகத் தெரிகிறது.

1.3. நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் யோவான்- எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?
நான்காம் நற்செய்தியை அதன் இன்றையவடிவில் அப்படியே யோவான் எழுதியிருக்கவேண்டுமென்று கூறமுடியாது. கி.பி.30-50 ஆண்டுகளில் இயேசுவைப் பற்றிய செய்திகள் பரவின.போதனையின் விளைவாக இயேசுவைப் பற்றிய பொதுமரபு உருவாகியது. இப்பொதுமரபு கி.பி.50-70 ஆண்டுகளில் யோவான் சமூகத்தில் தனிவடிவம் பெற்றது. யோவானும் அவர் தம் சீடரும்இயேசுவையும் அவரது நற்செய்தியையும் அளிக்கும் போது தங்கள் சமூகத்தின் தேவைகளுக்கேற்பச்செய்திகளைத் தெரிந்தெடுத்து, தழுவியமைத்துத் தேவையற்றவற்றை விட்டுவிட்டு இயேசுவைப்பற்றிய மரபுக்குத் தனிவடிவம் கொடுத்தனர். இயேசுபற்றிய பொதுமரபுக்கு யோவான் சமூகத்தில்#8220;யோவான் முத்திரை குத்தப்பட்டது. கி.பி. 70-85(?) ஆண்டுகளில் யோவான் சமூகத்தில் தனிவடிவம்பெற்ற இயேசுவைப் பற்றிய இந்த மரபுகள் எழுத்து வடிவம் பெற்றிருக்கவேண்டும். கி.பி.85-90 ஆண்டுகளில் எழுதப்பட்ட நற்செய்தியில் ஒரு சிலமாற்றங்கள் செய்யப்பட்டிருக்கவேண்டும்.ஒருசிலசெய்திகள் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.கிறிஸ்துவ சமூகத்தின் தேவைகளுக்கேற்ப இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்கவேண்டும்.எடுத்துக்காட்டாகப் பிறவிலேயே பார்வையற்றிருந்தவரைத் தொழுகைக்கூடத்திலிருந்துவெளியேற்றிய நிகழ்ச்சி (அதி9). இறுதியாக, கி.பி.90-100 ஆண்டுகளில், யோவானின் இறப்புக்குப்பிறகுசீடர் ஒருவர் முன்னுரை, பிற்சேர்க்கை போன்றவற்றை இணைத்து நான்காம் நற்செய்திக்குஇன்றைய வடிவம் கொடுத்திருக்க வேண்டும். இவ்வாறு அன்புச்சீடராகிய திருத்தூதர் யோவானின்இயேசு அனுபவம், சிந்தனை, போதனை ஆகியவற்றிலிருந்து எழுந்ததே நான்காம் நற்செய்தி என்றுஓரளவு துணிந்து கூறலாம்.

 

2. நம்பி வாழ்வு பெற

(நற்செய்தியின் நோக்கம்)தொடக்க காலத் திருச்சபையில் ஏற்கனவே மூன்று நற்செய்திகள் எழுதப்பெற்றுப்பயன்படுத்ததப்பட்ட வேளையிலே இன்னுமொரு நற்செய்தி -நான்காம்நற்செய்தி- தேவையாஎன்னும் கேள்வி எழுவது இயல்பு. தேவையென்று நான்காம் நற்செய்தி ஆசிரியருக்குப்பட்டிருக்கவேண்டும். மாற்கு நற்செய்தி துன்புறுத்தப்பட்ட உரோமைக் கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின்வாழ்விலிருந்தும் போதனையிலிருந்தும் துன்பத்தின் பொருளை உணர்த்தும் வண்ணம்எழுதப்பட்டது. மத்தேயு நற்செய்தி நம்பிக்கையில் தளர்ச்சியுற்ற யூதக் கிறிஸ்தவர்களுக்கு இயேசுவேயூதமுன்னோர்களின் எதிர்பார்ப்புகளின் நிறைவு எனக்காட்டும் வண்ணம் வரையப்பட்டது. மாறாக,லூக்கா நற்செய்தி பிற இனத்துக் கிறிஸ்தவர்களை ஆழத்தொடும் முறையிலும் அவர்களின்பிரச்சனைகளுக்கு விடைகாணும் முயற்சியிலும் இயேசுவை எடுத்துக் காட்டுகிறது.ஆனால் ஏற்கனவே பல ஆண்டுகள் கிறிஸ்த வவாழ்வு வாழ்ந்து தளர்ந்துபோனகிறிஸ்தவர்களுக்கு என்று ஒரு நற்செய்தி இல்லாதிருந்தது! கிறிஸ்தவ நம்பிக்கைவெறும்

வார்த்தைகளாய், வழிபாடுகள் வாடிக்கையாய், வெறும் சடங்குகளாய் மாறிவிட்ட ஒருகாலக்கட்டத்திலே கிறிஸ்தவவாழ்வை ஊக்கப்படுத்த, கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்த,கிறிஸ்தவ வழிபாட்டை வாழ்வோடு தொடர்புபடுத்திக் காட்ட, அத்தோடு, இயேசுவை நேரடியாகக்கண்டிராத, யூதர்களால் துன்புறுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறைக் கிறிஸ்தவர்களுக்கு இயேசுவைப்பற்றிச் சான்றுபகர, ஒரு சில தவறான கருத்துக்களைத் திருத்த ஒருநற்செய்தி தேவைப்பட்டது.அதுவே யோவான் (நான்காம்) நற்செய்தி. இந்நற்செய்தி எழுதப்படுவதற்குக் கீழ்வரும் நான்குநோக்கங்கள் முக்கியமானவையாக இருந்திருக்க வேண்டும்.

2.1. கிறிஸ்துவ நம்பிக்கையை ஆழப்படுத்தல்
நான்காம் நற்செய்தி எழுதப்பட்டதன் நோக்கத்தை அந்நூல் ஆசிரியரே நூலின் இறுதியில்வெளிப்படையாகக் கூறிவிடுகிறார்: "இயேசுவே இறை மகனாகிய மெசியா என நீங்கள்நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவும் இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன”(20:31). ஆம் நம்புவதும் அதன் வழி வாழ்வு பெறுவதும் தான் நான்காம் நற்செய்தியின்நோக்கங்கள்.கிறிஸ்தவம் தோன்றி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. நான்காம் நற்செய்திஎழுதப்பட்டதாகக் கருதப்படும் சின்ன ஆசியாவில் (இன்றைய துருக்கிநாடு) கூடதிருச்சபைநிறுவப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இந்நிலையில் மக்களிடையே கிறிஸ்தவநம்பிக்கையில் ஒருதளர்ச்சி ஏற்பட்டது.யோவானின் பணிக்குட்பட்ட சர்தைசபையில் இத்தளர்ச்சி ஏற்பட்டதாகத் திருவெளிப்பாட்டுநூலில் தெளிவாய்க் காண்கிறோம். "உன் செயல்களை நான் அறிவேன். நீ பெயரளவில்தான்உயிரோடிருக்கிறாய் உண்மையில் இறந்துவிட்டாய். எனவே விழிப்பாயிரு. உன்னுள்எஞ்சியிருப்பதை உறுதிப்படுத்து. அதுவும் இறக்கும் தறுவாயில் உள்ளது. என் கடவுளின் திருமுன்உன்செயல்கள் நிறைவற்றனவாய் இருக்கக்கண்டேன். நீ

கற்றதையும் கேட்டதையும் நினைவில்கொள். அவற்றைக்கடைபிடி மனம்மாறு நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடனைப்போல்வருவேன்...”(திவெ3:1-3). அதுபோலவே யோவான் சமூகமான லவோதிக்கியாவிலும் நம்பிக்கைமிகவும் தளர்ச்சியுற்றிருந்தது. "உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை,சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ, சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய்இருந்திருக்கும். இவ்வாறு நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால்என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்”(திவெ3:15-16).

யோவான் சமூகத்தினரின் கிறிஸ்தவ நம்பிக்கைத் தளர்ச்சி அவர்களுடைய வாழ்வில்வெளிப்பட்டது. அன்பே கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் வாழ்வுக்கும் உரைகல். அன்பு வாழ்க்கைதான்கிறிஸ்தவ வாழ்க்கை. ஆனால் யோவானின் சமூகத்தினர் பலர் அன்பற்ற வாழ்க்கை நடத்தி வந்தனர்.இது கடவுளை அறியாத வாழ்க்கை (1யோவா4:7-8) ,இருளின்வாழ்க்கை (1யோவா2:9-11), சாவில்நிலைத்த வாழ்க்கை (1யோவா3:14). எனவே இந்நிலைமாறி அன்பு வாழ்வு மலர, நம்பிக்கைசிறக்கத் திருமுகத்திலும், நற்செய்தியிலும் யோவான் பெரும் முயற்சி செய்கிறார்.இவ்வாறு கிறிஸ்தவநம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட்டவேளையில் நான்காம் நற்செய்திஆசிரியர் ஊக்கம் ஊட்டுகிறார்; ஓர் ஆழ்ந்த நம்பிக்கைக்கு அழைத்துச்செல்கிறார்; கிறிஸ்தவநம்பிக்கை என்றால் என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.

திருமுழுக்கு, நற்கருணைப் போன்ற திருவருட்சாதனங்கள் கிறிஸ்தவ வாழ்வில்கொண்டுள்ள தாக்கத்தை வெளிப்படுத்துகிறார்; வாழ்வோடு தொடர்புடைய வழிபாடுபற்றிப்பேசுகிறார்; அன்புக் கட்டளையை மிகவும் வலியுறுத்துகிறார் துன்பங்களின் போது ஆறுதல் கூறிவழிநடத்தும் துணையாளர் பற்றிப் பேசுகிறார். இங்ஙனம் கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்திக்கிறிஸ்தவ வாழ்வை வலுப்படுத்துவதே இந்நற்செய்தியின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது.

2.2. இரண்டாம் தலைமுறையினருக்குச் சான்று பகருதல்
நான்காம் நற்செய்தி கி.பி. 90-100 ஆண்டுகளில் எழுதப்பட்டது. அதன் வாசகர்கள்இயேசுவை நேரில்கண்டிராதவர்கள். இயேசுவைக் கண்டவர்களுள் பலரும் இறந்துவிட்டனர்.கண்ணால் கண்டவர்களின் சான்றுகள் மூலமாக இவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றுக்கொண்டவர்கள். இரண்டாம் தலைமுறையினரான இவர்களின் நம்பிக்கை கண்ணால்கண்டவர்களின் நம்பிக்கையைவிட எவ்விதத்திலும் குறைந்தது அல்லஎன்பதை யோவான் எடுத்துக்காட்டுகிறார். தோமா உயிர்த்த இயேசுவைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் (20:24-29) கூறப்படும்வார்த்தைகள் இதனைத் தெளிவாக்குகின்றன."நீ என்னைக் கண்டதால் நம்பினாய் காணாமலேநம்புவோர் பேறுபெற்றோர்”(20:29).

இந்த இரண்டாம் தலைமுறையினரின் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு ஒருசான்றாக ஆசிரியர்இந்நற்செய்தியை எழுதுகிறார். நற்செய்தித் தொடக்கத்திலேயே திருமுழுக்கு யோவானை ஒருசான்றாக எடுத்துக்காட்டுகிறார் (1:6-9, 15, 29, 34; 3:26-28, 32; 5:31-33). நற்செய்தி முழுவதுமேதந்தையிடத்தில் கண்டவற்றையும் கேட்டவற்றையும் குறித்த சான்றாக அமைகிறது. இயேசுவுக்கேஏழு சான்றுகள் இருப்பதாக யோவான் நற்செய்தியில் காண்கிறோம்.இறுதியாக, இந்நற்செய்தியின் ஆசிரியரே இரண்டாம் தலைமுறையினருக்குச் சாட்சியாகவருகின்றார். இயேசுவின் விலாவிலிருந்து இரத்தமும் நீரும்வெளிவந்த நேரத்தில், "இதைநேரில்கண்டவரே இதற்குச்சாட்சி; அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார்என்பதுஅவருக்குத்தெரியும். நீங்களும்நம்பவேண்டும்என்பதற்காகவேஅவர்இதைக்கூறுகிறார்”(19:35) என்கிறார்.

நற்செய்திநூலின் இறுதிவசனத்திலும், "இந்தச்சீடரே இவற்றுக்குச்சாட்சி. இவரேஇவற்றைஎழுதிவைத்தவர். இவருடையசான்றுஉண்மையானதுஎனநமக்குத்தெரியும்”(21:24)எனக் கூறுகிறார். இவ்வாறு இரண்டாம் தலைமுறையினரின் கிறிஸ்தவ நம்பிக்கைக்குச் சான்றுபகர்வதும், கண்ணால் காணாத அவர்களின் நம்பிக்கை கண்ணால் கண்ட முதல்தலைமுறையினரின் நம்பிக்கையைவிடக் குறைந்தது அல்ல என்று காண்பிப்பதும ;நற்செய்திஆசிரியரின் நோக்கங்களாக இருந்தனஎனக் கூறமுடியும்.

2.3. பழையன கழிதலும் புதியன புகுதலும்
நான்காம் நற்செய்தி எழுதப்பட்ட காலக்கட்டத்தில் (கி.பி. 90-100) யூதர்கள்கிறிஸ்தவர்களை அதிகமாகத்துன்புறுத்தி வந்தார்கள்; கிறிஸ்துவையும் கிறிஸ்தவர்களையும்கடுமையாகத் தாக்கிப் பேசிவந்தார்கள். தங்கள் செபத்தில்கூட கிறிஸ்தவர்களுக்கு எதிரானசாபத்தை புகுத்தினார்கள் பலவேளைகளில் கிறிஸ்தவர்களைத் தங்கள் சமூகங்களிலிருந்து புறம்பேதள்ளினார்கள். (9:22; 7:42; 16:2).

இந்தச்சூழ்நிலை யூதக்கிறிஸ்தவர் பலருக்குவேதனையை அளித்தது. கிறிஸ்தவராய்மாறியகாரணத்தால் தானே இத்தனைத் துன்புறுத்தல்களுக்கும் சமூகப்புறம்பாக்கலுக்கும்ஆளாகவேண்டியிருக்கிறது என அவர்கள் வருந்தினார்கள். யோவான் நற்செய்தியை எழுதும் போதுஅவர்களின் பிரச்சனையைக் கண்முன் கொண்டுள்ளார். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றார்;ஊக்கம் ஊட்டுகின்றார்; யூதருடைய மனப்பான்மைபற்றியும் தங்களைச் சமூகத்திலிருந்துபுறம்பாக்குதல் பற்றியும் கவலைப்படவேண்டாம் என்கிறார் ஏனெனில் தங்களை இப்போது தாக்கும்இந்தயூதர்கள் இயேசுவையும் இதுபோலவே தாக்கினார்கள் என்கிறார். அவர்கள் இயேசுவைத்தாக்கியதையும், இயேசு அவர்களைத் திருப்பித் தாக்கியதையும் பல இடங்களில் யோவான ;விரிவாகச்சித்தரித்துக்காட்டுகிறார் (தொநூ5:10; தொ 6:41; 52; 7:4; 8:39; தொ 48, 55; 9:10, 20, தொ 31;11:33) திருவெளிப்பாட்டுநூலில், "...தாங்கள் யூதர்கள் எனச்சொல்லிக் கொள்வோர் உன்னைப் பழித்துப்பேசுவதும் எனக்குத் தெரியும். அவர்கள் யூதர்கள் அல்ல சாத்தானுடைய கூட்டமே”(திவெ2:9) என்கிறார்.

இதே கருத்து திவெ3:8-லும் காணப்படுகிறது.யூதர்கள் தங்களைச் சமூகத்திலிருந்து புறம்பாக்குவார்கள் என்பதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம் என்கிறார். ஏனெனில் யூத சமூகத்தில் உறுப்பினராய் இருப்பதில் இப்போது மதிப்புஒன்றும் இல்லை. ஏனெனில் அவர்களுடைய சமயமும் சமயமுறைகளும் அர்த்தமற்றுப் போய்விட்டன. கிறிஸ்து வந்ததில்இருந்து இப்போது ஒரு புதிய வாழ்க்கை நெறி கொடுக்கப்பட்டுள்ளது. பழைய யூத நெறி இனி இருக்க வேண்டியதேவையில்லை, அதைப் பின்பற்றுவதில் பொருள் இல்லை.பழையன கழிந்துவிட்டன் புதியன புகுந்துவிட்டன. பழையஆலயம் அழிக்கப்பட்டு புதிய ஆலயம் மூன்று நாளில்கட்டப்பட்டுவிட்டது (அதி2). இனியூதராகப் பிறப்பதில் சிறப்புஇல்லை மாறாக ஒருவர் நீரினாலும் ஆவியினாலும் பிறக்கவேண்டும் (அதி 3). யாக்கோபின் கிணற்றுத் தண்ணீர்சாதாரணமானது இயேசுவே வாழ்வுதரும் தண்ணீரைத்தருகின்றார். கெரிசீம், எருசலேம் ஆகிய இடங்களில்நடைபெற்ற வழிபாடுகள் மறைந்துவிட்டன. இப்போது"உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மைஇயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்” (அதி4). ஆட்டுக் குளத்து நீர் தராத உடல் நலத்தைஇயேசு கொடுக்கிறார். வாழ்வைமையமாகக் கொண்டிராத பழையசட்டம் மீறப்பட்டு மனிதவாழ்வுக்கான புதியசட்டம் அமுலாக்கப்படுகிறது (அதி5). பழைய மன்னாவை உண்டவர்கள்இறந்தார்கள்; இயேசுதரும் உணவை உண்பவரோ முடிவில்லா வாழ்வு பெறுகின்றனர்(அதி6).கூடாரத் திருவிழாவின் போதுஎருசலேம் ஆலயத்தை மிளிரச்செய்த ஒளிமறைந்து போகக்கூடியது.இயேசுவே உலகின்ஒளி (அதி7-8). பழைய(யூத) தலைவர்கள் ஆபத்து நேரத்தில் தங்கள் ஆடுகளைவிட்டு விட்டு ஓடிவிடுபவர்கள், இயேசுவோ ஆடுகளுக்காக உயிர்தரும ;நல்லஆயர் (அதி10).இப்படி யூத மதமும், யூத ஆலயமும், வழிபாடும், பிறப்பும், சட்டமும், சடங்குகளும், தலைமையும்பொருளற்று மறைந்து வரும் நேரத்தில் யூதச் சமூகத்திலிருந்து புறம்பாக்கப்படுதல் பற்றிக்கவலைப்படத் தேவையில்லை அது ஒரு இழப்பு அல்ல. மாறாக, புதிய சமூகத்தில், கிறிஸ்துவின்சீடர் குழாமில் உறுப்பினராய் இருப்பதே பெருமை என யோவான் கூறுகிறார்.

2.4. தவறான நம்பிக்கைகளைத் திருத்துதல்
தம்சபையில் இருந்த சில தவறான நம்பிக்கைகளைத் திருத்துவதும் நற்செய்தி ஆசிரியரின்நோக்கங்களுள் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். சின்ன ஆசியக் கிறிஸ்தவர்களிடையே இருந்தஇரண்டு தவறான நம்பிக்கைகள் திருத்தம் பெறுவதை நாம் காண்கிறோம்.

1) திருமுழுக்கு யோவானே மெசியா என்று ஒரு சிலர் எண்ணி வந்தனர் (லுக்3:15).இயேசுவின் காலத்திலேயே அவருக்குப் பல சீடர்கள் இருந்தனர். இந்நற்செய்தி ஆசிரியர்கூடமுன்பு அவருடைய சீடராய் இருந்தவர்தான் (1:35-39). இயேசுவிடம் அதிகமான சீடர்கள்வருகிறார்கள் என்று கண்டு திருமுழுக்கு யோவானின் சீடர் பொறாமைப்படுவதையும்பார்க்கின்றோம்: "ரபி, யோர்தான்ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே!நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார்.எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்”(3:26). ஒரு முறை சிலர் இயேசுவிடம் வந்து, "யோவானுடையசீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன்நோன்பிருப்பதில்லை?”எனக்கேட்டனர் (மாற்2:18).திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கு முன்பு வந்தவர் என்பதாலும், இயேசுவுக்கே அவர்திருமுழுக்குக் கொடுத்தார் (திருமுழுக்கு என்பது ஒருவரைச் சீடராக ஏற்றுக் கொள்ளும் சடங்கு)என்பதாலும் தன்னுடைய போதனையால் பெருந்திரளானமக்களைக் கவர்ந்தார் என்பதாலும் சிலர்திருமுழுக்கு யோவானே மெசியா எனக் கருதினர். இப்படி நம்பியவர்கள் எபேசில் இருந்ததாக நாம்திருத்தூதர் பணியில்படிக்கின்றோம்(19:1-7). பெரும் போதகரான அப்போலாவுக்குக்கூடயோவானின் திருமுழுக்கு மட்டுமே தெரிந்திருந்தது (18:25-28). இப்படி யோவானே மெசியாஎனநம்பியோர் சின்ன ஆசியாவில் நான்காம் நற்செய்தி எழுதப்பட்ட நேரத்திலும் இருந்தனர்.இவர்களது கொள்கை தவறு எனக்காட்டிச் சரியான நம்பிக்கையை உருவாக்குவதுயோவானின் நோக்கங்களுள் ஒன்றாக இருந்தது. எனவேதான் ஒத்தமை நற்செய்திகள் திருமுழுக்குயோவானை ஒரு பெரும் போதகராகவும், தம் போதனையால் பெரும்மக்கள் கூட்டத்தை ஈர்ப்பவராகவும்,பலருக்குத் திருமுழுக்கு அளிப்பவராகவும் (மாற்1:1-11 இணை) இறைவாக்கினருக்கெல்லாம்மேலானவராகவும் (மத்11:9) மனிதராய்ப் பிறந்தோரில் மிகப் பெரியவராகவும் (மத்11:11; லூக்7:28)காட்டும் நேரத்தில் நான்காம் நற்செய்தி ஆசிரியர் அவரை வெறும் ஒரு சான்றாகவே எடுத்துக்காட்டுகிறார்(1:6). அவர் அந்த ஒளி அல்ல மாறாக ஒளியைக் குறித்துச் சான்று பகரவந்தவர் (1:8)என்கிறார். அவரது திருமுழுக்கு, பணி, பிறப்பு, வளர்ப்புப் பற்றியும் எந்தத்தகவலும் தரவில்லை;மாறாக யோவான்தாம் மெசியாவோ, எலியாவோ, இறைவாக்கினரோ அல்ல எனஒப்புக் கொண்டார்;மறுக்காமல் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் (1:19-21) என எடுத்துக் காட்டுகிறார்.இந் நற்செய்தியில் யோவான் மெசியாவுடைய "மிதியடிவாரை அவிழ்க்கக் கூட எனக்குத்தகுதியில்லை”(1: 27) எனத் தம்மைப் பற்றிக் கூறுகிறார் காலத்தால் 'எனக்குப் பின் வரும் இவர்என்னைவிட முன்னிடம் பெற்றவர்' என அறிக்கையிடுகிறார் (1:30); சீடர்கள் தம்மைப் பற்றியதவறான எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்பதற்காக "நான்மெசியா அல்ல, மாறாக அவருக்குமுன்னோடியாக அனுப்பப்பட்டவன் என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள்”(3: 28) எனத்திட்டவட்டமாகக் கூறுகிறார்."அவரது செல்வாக்குப் பெருக வேண்டும், எனதுசெல்வாக்குக ;குறையவேண்டும்”(3:30 )எனஎடுத்துரைத்து, தம்மை யாராவது இன்னும் மெசியா எனக்கருதினால் அந்தஎண்ணத்தை அவர்கள் கைவிட்டுவிடவேண்டும் எனத் தெளிவுபடுத்துகிறார். இவ்வாறுதிருமுழுக்கு யோவான் வாயிலிருந்தே அவர் மெசியா அல்ல என்று காட்டி, அவரை மெசியா என்றுகருதியோர் உண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்கிறார் நற்செய்தி ஆசிரியர்.

2) தோற்றக் கொள்கையினருக்கு எதிரான கருத்துகளும் நான்காம் நற்செய்தியில்காணப்படுகின்றன. இந்தத் தோற்றக் கொள்கையினரின் கருத்துப்படி இயேசு கடவுள் தன்மைகொண்டவர் அவர் மனிதரல்ல. அவர் மனிதராகத் தோற்றம் தந்தார் என்பது உண்மை ஆனால்உண்மையான மனிதத் தன்மை அவரிடம் இருக்கவில்லை. அவர் உண்மையான மனிதராய ;இருக்கமுடியாது. ஏனெனில், ஞான உணர்வுச் சிந்தனை அடிப்படையில், நன்மைத்தனமான கடவுளுக்கும்தீமையாகிய பருப் பொருளுக்கும் இடையே எந்தத்தொடர்பும் இருக்க முடியாது.பருப் பொருளாகியஉடல ;தீமையானது. அந்தத் தீமையான உடலை நன்மையான கடவுள் ஏற்க முடியாது. எனவேகடவுள் மனிதராக முடியாது. அவர் மனிதத் தோற்றம் தரலாமே ஒழிய அவரிடம் உண்மையானமனித இயல்பு இருக்க முடியாது.இந்தத் தவறான கொள்கைசின்னஆசியாவில் பரவத் தொடங்கியது. எனவேதான் தன்முதல் திருமுகத்தில் யோவான், "இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும ;உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது”(4:2) என்கிறார். இந்தக் கருத்து2:18-27) இலும் காணப்படுகிறது. தன் இரண்டாம் திருமுகத்திலும் "ஏமாற்றுவோர் பலர் உலகில்தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர் கிறிஸ்துகள்”(7) என்கிறார்.

இந்தத் தோற்றக் கொள்கையினரைக் கண்முன் கொண்டுதான் தன்நற்செய்தியின்முன்னுரைப் பாடலிலேயே "அனைத்தும் அவரால் உண்டாயின உண்டானது எதுவும் அவரால் அன்றிஉண்டாகவில்லை” (1:3) என்று கூறி ஞானவுணர்வுக் கொள்கையினரும் தோற்றக்கொள்கையினரும் தீமை என்று கருதிய பருப் பொருள், உலகம், உடல் எல்லாமே கடவுளாலேயேஉண்டானது என வலியுறுத்துகிறார். (அவர்கள் கருத்துப்படி உலகைப்படைத்தது கடவுள் அல்ல,மாறாக ஓர் இடை நிலைசக்தியான 'டெமியூர்கு').1:14-ல் மிகத் தெளிவாக" வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்”எனக்கூறித் தோற்றக் கொள்கையினரின் கருத்தை உதறித் தள்ளுகிறார். படைவீரர் ஒருவர் இயேசுவின்விலாவை ஈட்டியால் குத்த, "உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன” (19:34) என்ற கூற்றும்இயேசுவின் உண்மை மனிதத தன்மையைக் கோடிட்டுக் காட்டுகிறது. யோவான் 6:51-58 வசனங்கள்நற்கருணை இயேசுவின் தசை என ஏற்றுக் கொள்ளாத தோற்றக் கொள்கையினருக்கு எதிராகஅமைகின்றன. அத்தோடு இயேசுவின் மனிதத் தன்மையை வலியுறுத்தும் வகையில் அவர் கோபம்கொண்டார் (2:15தொ), பயணத்தால் களைப்புற்றிருந்தார் (4:6), உள்ளங்குமுறிக்கலங்கினார் (11:33,38), கண்ணீர் விட்டு அழுதார் (11:35), தாகமாய் இருந்தார் (19:28) என்பன போன்றவை மிகவும்வலியுறுத்துகின்றன. இவ்வாறு தோற்றக் கொள்கையினரின் தவறான கருத்தைத் திருத்துவதும்நான்காம் நற்செய்தியின் நோக்கங்களுள் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் எனத ;துணிந்துகூறலாம்.

3. இலக்கியக் கூறுகள்
(நற்செய்தியின் சிறப்புப் பண்புகள்)

;யோவான் நற்செய்தியில் பல்வேறு இலக்கியச் சிறப்புக்கூறுகள் காணப்படுகின்றன. அவைபற்றியோவான் நற்செய்திவிளக்கவுரைகள் விரிவாகப் பேசுகின்றன. ஈண்டு யோவானின்இலக்கியச் சிறப்புக் கூறுகளில் நான்கு பற்றி மட்டும் பார்ப்போம்.

3.1. 'ஏழு' என்ற எண்ணிற்குச் சிறப்பிடம்
யூதருடைய பார்வையில் ஏழு என்னும் எண் முக்கியத்துவம் பெற்றிருந்தது; அதுமுழுமையைக் குறிப்பதாய்க் கருதப்பட்டது. யோவானின் திருவெளிப்பாட்டு நூலில் ஏழு என்னும்இந்த எண் 52 முறை பயன்படுத்தப் பட்டுள்ளது. நற்செய்தியிலும் அதற்குச் சிறப்பிடம்கொடுக்கப்பட்டது கண்கூடு.1) இயேசுவுக்கு ஏழு பெயர்கள்முதல் அதிகாரத்தில் யோவான் இயேசுவுக்கு ஏழுபெயர்களைச் சூட்டுகிறார்:

1. கடவுளின் ஆட்டுக்குட்டி(29)
2. இறைமகன்(34)
3. ரபி(38)
4. மெசியா(41)
5. யோசேப்பின் மகன்(45)
6. இஸ்ரயேலின் அரசர்(49)
7. மானிடமகன்(51)

2) இயேசுவின் அரும் அடையாளங்கள் ஏழு
யோவான் நற்செய்தியில் இயேசு ஏழு அரும் அடையாளங்களைச் செய்ததாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.

1. கானாவில் தண்ணீரைத் திராட்சை இரசமாய் மாற்றல் (2:1-12)
2. அரச அலுவலர் மகனை நலமாக்குதல் (4:43-54)
3.பெத்சதாக் குளக்கரையில் உடல் ஊனமுற்றவருக்கு நலமளித்தல்(5:1-9).
4. ஐயாயிரம் பேருக்கு அப்பம் பகிர்ந்தளித்தல் (6:1-15)
5.பிறவியிலேயே பார்வையற்றிருந்தவருக்குப் பார்வைஅளித்தல் (9:1-12)
7. இலாசர் உயிர் பெறச் செய்தல ;(11:1-54)பிற்சேர்க்கையில் குறிப்பிடப்படுகின்ற மிகுதியான மீன்பாடு (21:4-8) ஓர் அரும்அடையாளமாகக் கொள்ளப்படுவதில்லை

3) இயேசுவுக்கு ஏழு சான்றுகள்

1. திருமுழுக்கு யோவான் (1:7, 15, 34; 5:36)
2. இயேசுவின் செயல்கள் (5:36)
3. தந்தை (5:37)
4. மறைநூல்(5:39)
5. இயேசுதாமே (8:14)
6. தூயஆவியார் (15:26)
7. சீடர்கள் (15:27)

4) இயேசுவின் ஏழு 'நானே' சொற்றொடர்கள்

1. வாழ்வு தரும ;உணவுநானே (6:35)
2. உலகின்ஒளிநானே(8:12)
3. ஆடுகளுக்குவாயில்நானே(10:7)
4. நல்லஆயன்நானே(10:14-5)
5. உயிர்த்தெழுதலும்வாழ்வும்நானே( 11: 25)
6.வழியும்,உண்மையும்,வாழ்வும்நானே(14:6)
7. உண்மையானதிராட்சைச்செழ்?னே(15:1)

3.2. தவறாகப் புரிய வைத்துத் தெளிவுப்படுத்துதல்
உவமைகள் வழியாக இயேசு எளியமக்களுக்குக் கற்பித்ததாக ஒத்தமை நற்செய்திகளில்வாசிக்கிறோம். யோவான் நற்செய்தியில் இரண்டே இரண்டு உவமைகள் தான் வருகின்றன (நல்லஆயன்10:1-16; திராட்சைச்செடி15:1-11). யோவான் நற்செய்தியில் உவமைகள் வழியாகக்கற்பிப்பதற்குப் பதிலாக இயேசுதவறாகப் புரியவைத்துத் தெளிவுப்படுத்துகிறார்.யோவா2:19-222:19-222:19-22 இயேசு இக்கோவிலை இடித்துவிடுங்கள் என்கிறார். மக்கள்"இக்கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் இதை மூன்றே நாளில் கட்டி எழுப்பிவிடுவீரோ?” எனக்கேட்டனர். "ஆனால் இயேசுவோ தம ;உடலாகிய ஆலயத்தைப் பற்றியேபேசினார்.”யோவா3:3-53:3-53:3-5 இயேசு நிக்கோதேமிடம் மறுபடியும்பிறத்தல் பற்றிப் பேசுகிறார். நிக்கோதேம்இயேசுவிடம், "வயதானபின் எப்படிப் பிறக்கமுடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்துபிறக்கமுடியுமா? என்று கேட்டார். தவறாகப் புரிந்துக்கொண்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி,இயேசு நீராலும் தூய ஆவியாலும் பிறத்தல் பற்றி விளக்குகிறார்.

இது போன்றே 4:10-15, 31-34; 6:51-53; 7:33-36; 8:21-22, 32-34, 56-58; 11:11-15;16:16-19 ஆகிய பகுதிகளிலும் இயேசு தவறாகப் புரியவைத்துத் தெளிவுப்படுத்துகிறார்.

3.3. இரு பொருள்படப் பேசுதல்
பலவேளைகளில் இயேசு இருபொருள்படப் பேசுவதைக் காண்கிறோம். இங்கு ஒரு சிலஎடுத்துக்காட்டுகளை மட்டும் பார்ப்போம்.யோவா 8:3 மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது”என்பதைமேலிருந்து எனவும் பயன்படுத்தலாம். 'ஆனொதேன்' என்னும் கிரேக்கச்சொல் 'மறுபடியும்' ,'மேலிருந்து' என்னும் இரு பொருளையும் கொண்டுள்ளது.யோவா 3:14"... மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்”என்பதை... மானிடமகனும்மாட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் மொழிபெயர்க்கலாம்.யோவா 4:10" வாழ்வு தரும் தண்ணீர்”என்பதற்கான கிரேக்க மூலமொழிச் சொல்லை,ஓடுகின்ற தண்ணீர், வாழ்வு தரும் தண்ணீர், இறைவார்த்தை, தூய ஆவி என்று பலவிதங்களில்மொழிபெயர்க்கலாம்.யோவா 19:30 'ஆவியை ஒப்படைத்தார்' என்பதை "இறந்தார்”என்றும்" தூய ஆவியைக்கொடுத்தார்”என்றும் மொழி பெயர்க்கலாம்.

3.4. வஞ்சப் புகழ்ச்சி
வஞ்சப் புகழ்ச்சிவஞ்சப்புகழ்ச்சி என்பது பொதுவாகப் 'புகழ்வது போல்இகழ்வது'. அதைப் போல இகழ்வதுபோல் புகழ்வதும் வஞ்சப் புகழ்ச்சியே. யோவான் நற்செய்தியில் வஞ்சப் புகழ்ச்சி அப்படியேவராவிட்டாலும் வஞ்சப் புகழ்ச்சி போன்ற பலபகுதிகள் காணப்படுகின்றன. பல வேளைகளில்அலட்சியமாகப் பேசுவதாக, தாக்கிப் பேசுவதாக, நம்ப முடியாதவையாகத் தென்படும்சொற்றொடர்களை நற்செய்த pவாசகர்கள் பெருமைக் குரியவையாக, உயர்ந்த உண்மைகளாக,நம்பிக்கைக் குரியவையாகப் புரிந்து கொள்கிறார்கள்.யோவா 4:12 "எம்தந்தை யாக்கோபை விடநீர் பெரியவரோ?” எனச் சமாரியர்கள்அலட்சியமாகக் கேட்பது உண்மையாகிறது.யோவா7:35" நாம்காண முடியாதவாறு இவர் எங்கே செல்லப் போகிறார்? ஒருவேளைகிரேக்கரிடையே சிதறி வாழ்வோரிடம் சென்று கிரேக்கருக்கும் கற்றுக் கொடுக்கப்போகிறாரோ?”என்று நம்பிக்கையின்றிப ;பேசியது விண்ணேற்றம், கிறிஸ்தவச் செய்தி கிரேக்கரிடையே பரவுதல்போன்ற உயர்ந்த உண்மைகளைக்குறிப்பதாகவே அமைகிறது.யோவா7:41-42" கலிலேயாவிலிருந்தா மெசியாவருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர்குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார ;என்றல்லவா மறைநூல் கூறுகிறது”என்று தாக்கிப் பேசியது, இயேசுவே மெசியா என்று காட்டுவதாயிற்று!யோவா 11:50 இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காகஇறப்பது நல்லது” எனக் கயபா இயேசுவுக்கு எதிராகப் பேசியது இயேசுவின் பெருமையைக்காட்டுவதாய்அமைந்தது.

 

4. அனுபவமே ஆரம்பம்
(முதல் சீடரின் அழைப்பு 1:35-41).

4.1. அழைக்கப்பட்டோர்
இயேசுவுக்கு எண்ணிறந்த சீடர்கள் இருந்தனர். ஆண்களும் பெண்களும் அவருக்குச்சீடராய் இருந்தனர். எழுபத்திரண்டு பேர் சீடராக இருந்ததாக லூக்கா(10: 1) கூறுகிறார். சீடர்களுள்பன்னிருவரை நற்செய்தியாளர்கள் மையப்படுத்துகின்றனர். பழைய ஏற்பாட்டில்பன்னிருவர்குலத் தலைவர்களாய் இருந்தனர். அந்த முறையில் புதிய ஏற்பாட்டில் பன்னிருவர் புதிய இஸ்ரயேலின்தலைவர்களாக, தூண்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால் இயேசுவுக்குச் சீடர்கள் பன்னிருவர்மட்டுமல்ல, பலபேர்.சீடருள் ஒரு சிலருடைய அழைப்பே விளக்கமாகக் கூறப்படுகிறது. ஒத்தமைநற்செய்தியாளர்கள் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், மத்தேயு ஆகிய ஐந்துதிருத்தூதர்களுடைய அழைத்தலையே விளக்கமாகத் தருகின்றனர். ஏனையோருடைய அழைப்புபற்றி எதுவும் கூறப்படவில்லை. அதுபோல யோவானும் தம் அழைப்புபற்றியும் பேதுரு, பிலிப்பு,நத்தனியேல் ஆகியோருடைய அழைப்புப் பற்றியும் மட்டுமே விளக்கமாகக் கூறுகிறார்.நத்தனியேல் என்பது பார்த்தலோமேயின் இயற்பெயராய் இருந்திருக்கவேண்டும்.பார்த்தலோமே என்றால் 'தல்மாயின்மகன்' என்றுபொருள்படும். 'பார்' என்றால் மகன். இவர்தந்தையின் பெயர் தல்மாயி. எனவேஇவரதுஇயற்பெயர் நத்தனியேல். இவர் ஒத்தமைநற்செய்திகளில்தல்மாயின்மகன்எனஅறிமுகமாகிறார். இந்தஐவரும்நற்செய்திஉருவானதிருச்சபையில்சிறப்புற்றோராய்இருந்திருக்க வேண்டும். அதனால்தான்இவர்களதுஅழைப்புப்பற்றிமட்டும்சிறப்பாகப்பேசப்படுகிறது.

4.2. அழைக்கப்பட்ட காலம்
இயேசு தம் பணித் தொடக்கத்திலேயே சீடரை அழைத்தாகத்தெரிகிறது. யோவான்நற்செய்தியில் சீடரின் அழைப்பு இயேசுவின் ஒருவார காலப் பணியாகக்காட்டப்படுகிறது.

1. ஆம்நாள் - திருமுழுக்கு யோவான் எதிர்மறையாகவும்நேர்முகமாகவும் சான்றுபகர்கிறார் (1:19-28).
2. ஆம்நாள் - இயேசுவை 'கடவுளின் ஆட்டுக் குட்டி' எனச்சுட்டிக்காட்டுதல்(1:29-34)
3. ஆம்நாள் - அந்திரேயாவையும் யோவானையும் அழைத்தல்(1:35-39)
4. ஆம்நாள் - பேதுருவை அழைத்தல்(1:40-42)
5. ஆம்நாள் - பிலிப்பையும் நத்தனியேலையும்அ ழைத்தல்(1:43-51)
6. ஆம்நாள் - ஓய்வுநாள் - பணிஎதுவும் நடைபெறவில்லை(2:1)
7. ஆம்நாள் - கானாவில் திருமணம், இந்நிகழ்ச்சியில்மூன்றாம் நாள் மாட்சிமையை வெளிப்படுத்துதல்.

4.3. அழைக்கப்பட்ட இடம்
சீடர்கள் யாவரும் கலிலேயாக் கடலோரத்தில் அழைக்கப் பெற்றதாக ஒத்தமைநற்செய்தியாளர்கள் கூறுகின்றனர ;(மாற்1:16-20; மத்4:18-22; லூக்5:1-11). அவர்கள் யாவரும்மீனவர்கள். ஆனால் யோவான் நற்செய்தியின்படி சீடர்கள் யோர்தான் நதியோரத்தில்அழைக்கப்படுகின்றனர்(1:28). அவர்கள் திருமுழுக்கு யோவானின் சீடர்கள். இங்கு ஒருசிறுமுரண்பாடு காணப்படுகிறது. இந்த முரண்பாடு இயேசுவின் பணித் தளத்தைப்பற்றியது. ஒத்தமை நற்செய்திகளின்படி இயேசு முழுக்க முழுக்கக் கலிலேயாவில் பணியாற்றுகிறார். தம்வாழ்வின்இறுதி வாரம்மட்டுமே துன்புற்று இறப்பதற்கு எருசலேமிற்கு வருகிறார். ஆனால் யோவான்நற்செய்தியில் இயேசு அதிகமாக எருசலேமிலும் யூதேயாவிலும் பணியாற்றுகிறார். சீடரையும்அங்கே அழைக்கின்றார்(திப1:20-22). ஒருசில வேளைகளில் மட்டும் அவர் கலிலேயாவிற்குவந்து அங்கு செயல்படுகிறார். ஒத்தமையாளர்கள் கலிலேயாவையும் யோவான் எருசலேமையும்மையமாக வைத்து எழுதுவதால் இம்முரண்பாடு தோன்றியிருக்க வேண்டும். சீடர்கள்அழைக்கப்பெற்ற இடம்பற்றிய இந்த முரண்பாட்டைப் போக்கும் நோக்குடன் சில சீடர்கள் முதலில்யோர்தான் ஆற்றங்கரையில் இயேசுவைப் பின்தொடர்ந்ததாகவும், பின்னர் சிறிதுகாலம் அவரைவிட்டு விட்டு மீண்டும் கலிலேயாவில் அவரைப் பின்பற்றியதாகவும் வலிந்து விளக்கம்கொடுக்கின்றனர்.

4.4. அழைப்பின் நிலைகள்
அழைத்தலின் பல்வேறு நிலைகளை யோவா 1:35-39 அழகாக எடுத்துக்காட்டுகிறது.யோவான் சான்றுபக ர(36) சீடர்கள்அதைக்கேட்டு(37) இயேசுவைப் பின் தொடர்ந்தனர் (37).அவர்கள் வந்து பார்க்கவேண்டும் (39) என்கிறார் இயேசு. அவர்களும் வந்து பார்த்து இயேசுவோடுதங்கினர் (39). இந்தப் பகுதி அழைப்பின் ஐந்து நிலைகளையும் கொண்டுள்ளது. 1. சான்றுபகரப்படல்; 2. கேட்டல்; 3. பின்தொடர்தல்- தேடல்; 4. வந்துபார்த்தல்; 5. தங்கியிருத்தல்-நிலைத்திருத்தல்.

1) சான்று பகரப்படல்
ஒருவர் அழைப்புப் பெற சான்று தேவைப்படுகிறது. இச்சான்று ஒரு பொருளாகஇருக்கலாம். ஒருநிகழ்வாக இருக்கலாம், அல்லது ஒருவர் வாழ்வாக இருக்கலாம் அல்லதுஒருவரின்வாய் மொழியாக இருக்கலாம். இங்கு திருமுழுக்கு யோவான் வார்த்தைகளால் சான்றுபகர்கிறார். "இதோ கடவுளின்ஆட்டுக் குட்டி”என்பது அவரது சான்று.

2) கேட்டல் - ஏற்றல்
இறைவனைப் பற்றிய சான்றுகள் உலகெங்கும் நிறைந்துள்ளன. ஆனால் பல வேளைகளில்நாம் அவற்றை உணர்வதில்லை அவை நம் கண்களில் படுவதில்லை நம் உள்ளத்தைத்தொடுவதில்லை அவை நமக்கு வெளியே, நம்மைத் தொடாதவையாக, நமக்கு அன்னியமானவையாகஇருந்துவிடுகின்றன. ஆனால் அழைப்புப் பெறவேண்டுமானால் சான்று ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். நாம ;திறந்த மனமுள்ளவர்களாய் இறைவனைச் சார்ந்தவர்களாய் இருக்கவேண்டும்.சான்றை ஏற்றுக் கொள்ளல் அழைத்தலின் இரண்டாம் நிலை.

;3) தேடல் - தொடர்தல்
சான்றை ஏற்றுக் கொண்டவர்கள் செயல்படத் தொடங்குகிறார்கள். தமக்கு வேண்டியதுஎன்ன, தாம்செய்ய வேண்டியது என்ன என்று தேடத் தொடங்குகின்றார்கள். இதை அறிந்தேஇயேசுவும் "என்ன தேடுகிறீர்கள்”(1:38) என்றுகேட்கிறார். அவர்கள் தேடுவது, உலகத்தொடக்கமுதல் அனைத்து மனிதரும் தேடியதே என்பது அவருக்குத் தெரியும். மனிதர்கள் யாவரும் உலகம்தொடங்கிய நாள் முதல் இன்று வரை வாழ்வை, நிறைவான வாழ்வை, நிலையான வாழ்வை,நிம்மதியான வாழ்வைத் தேடுகிறார்கள். நிலையாக (சாகாது) வாழலாம் என்னும் விருப்பத்துடன்பாலை நிலத்தில் பலநாள் பயணம் புறப்படுகிறான் பாபிலோனியரின் (கில்கமேஷ்காவியம்) வரலாற்றுமுதல்மனிதன். ஆதாமும் சாகாமல் நிலைத்து வாழலாம் என்னும் நோக்கத்துடன் வாழ்வின்மரக்கனியை உண்கிறான் (தொநூ3). மனிதவரலாற்றில் நிலையான வாழ்வை மதங்களும் நோய்நொடியற்ற நீண்ட வாழ்வை மருத்துவமும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. எனினும் உண்மையானநிறைவான நிலையான வாழ்வைத் தரவல்லவர் இயேசு ஒருவரே. ஏனெனில் அவரேவாழ்வு (14:6).அவர் மக்கள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்தவர் (யோவா10:10). அவரைப் பின்பற்றுவோர் வாழ்வைப் பெற்றுக்கொள்வர். இந்த வாழ்வுக்கான தேடலில்ஈடுபட்டோர், வாழ்வைத் தாமும் பெற்று, பிறரோடு பகிர்ந்து கொள்ள ஆர்வமுடையோர் அழைப்பைப்பெறத்தக்கவர்கள்.

;4) வந்து பார்த்தல்
தேடலில் ஈடுபட்டிருந்த சீடர்களிடம் இயேசு "வந்து பாருங்கள்”என்கிறார். உண்மையானசீடர், அழைப்பைப் பெற்றவர். இயேசுவைப் பற்றியும் அவர் தரும் வாழ்வு பற்றியும்கேள்விப்பட்டிருந்தாலோ, கேட்டறிந்தாலோ போதாது மூன்றாவது நபரின் சான்று மட்டும் போதாது விவிலியம் தரும் சான்றுகூடப் போதாது. (ஏனெனில் விவிலியச் சான்றும் தொடக்ககாலச்சீடர்களின் சான்றுதானே!) சீடர்களே நேரடியாக அறிய வேண்டும். அவர்களே வந்து பார்க்கவேண்டும். அது அவர்களது சொந்த அனுபவம் ஆக வேண்டும். ஆகவேதான், இயேசுநீங்களே"வந்துபாருங்கள்”என்கிறார். சீடர்கள் திருமுழுக்கு யோவானின்சான்றைப் பெற்றிருந்தார்கள்; இயேசுவைப் பற்றியும்நிறையஅறிந்திருந்தார்கள். அவைபோதா. சீடராகும் ஒருவருக்கு நேரடிஅனுபவம் இன்றியமையாதது. எனவே இயேசு வந்து பார்க்குமாறுகூறினர்.நத்தனியேலிடம் பிலிப்பும் "வந்துபாரும்" (1:46) என்கிறார்.விவிலியச் சான்று அடிப்படையில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள மறுத்த நத்தனியேல் (1:45ஸ்ரீ46) வந்து பார்த்த பின்இயேசுவின் சீடரானார் (1:49). இவ்வாறு வந்து பார்த்தவர்கள்தான்,அதாவது சொந்த இறையனுபவம் கொண்டவர்கள்தான்உண்மையான சீடர்களாக, இறைவனின் மனிதராக, இறைவனுக்குசான்று பகரக்கூடியவர்களாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவர்.

;5) நிலைத்திருத்தல்
இந்தச் சொந்த அனுபவம் ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்தில்மட்டும் வந்து போகும் ஒன்றாக இருக்கக்கூடாது அது தொடர்ந்த,நிலையான ஒன்றாக இருக்க வேண்டும். அது ஒருவரைஆட்கொண்டு அவரது அனைத்துச் சிந்தனைக்கும் செயலுக்கும் ஊற்றாக அமைய வேண்டும்.இந்த நிலையான தன்மையைக் குறிக்க யோவான் "மெனயோ"” என்னும் கிரேக்கச்சொல்லைப் பயன்படுத்துகிறார். இது யோவானுக்கே உரிய ஒரு சொல் (யோவான்66; பு.ஏ. பிறஇடங்கள்: 50). இது தந்தை-மகன் உறவையும், மகன்-சீடர் உறவையும் குறித்துக் காட்டுகிறது.மகன்-சீடர் உறவு திராட்சைச் செடி உவமையில் அழகாக விளக்கம் பெறுகிறது. இந்தமகன் -சீடர் உறவு ஓர் அன்புறவாக, அன்பு வாழ்வாக (15:4-7) மாறி, அன்புக் கட்டளையாக மலர்கிறது(15-17).இவ்வாறு பகரப்பட்ட சான்றை ஏற்று வாழ்வுக்கான தேடலில் ஈடுபட்டு, இயேசுவிடம் வந்துபார்த்து, அவரோடு நிலையாக இருப்பவர்களே உண்மையான சீடர்கள்.

5. பழையன கழிதலும் புதியன புகுதலும்
(கானாவில் திருமணம் 2:1-12)

5.1. திருமண நிகழ்வு
இயேசுவின் முதல் அரும் அடையாளம் யோவான் நற்செய்தியில் ஒரு திருமணத்தோடுதொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இத்திருமணம் ஒத்தமை நற்செய்திகளில் எங்கும் குறிப்பிடப்படாத'கானா' என்னும் ஊரில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. வரலாற்று ஆசிரியர் யோசேப்புஃபிளாவியின் குறிப்புகள் அடிப்படையில் பார்க்கும் போது நாசரேத்திலிருந்து ஏறக்குறை 15கி.மீதொலைவில் உள்ள 'கெபர் கெனா' (கெனா ஊர்) என்னும் இடத்தைத்தான் யோவான்குறிப்பிடுவதாகத் தெரிகிறது. நாசரேத்திலிருந்து ஏறக்குறை 6கி.மீ தொலைவில் 'கிர்பத்கானா'(அழிந்த கானா) என்னும் ஊர் உள்ளது. கிறிஸ்தவ மரபில் இதுவே அரும் அடையாளம் நிகழ்ந்தகானாவாகக் கருதப்பட்டு வருகிறது.கானாவில ;நடந்த ஒரு திருமணத்திற்கு இயேசுவும் அவருடைய தாயும் சீடர்களும்அழைக்கப்பட்டிருந்தனர். மணமகளை மணமகனின் வீட்டிற்குப் பவனியாக அழைத்து வருவதில்தொடங்கும் திருமணவிழா ஏழு நாட்கள் நடைபெற்றதாகத் தெரிகிறது. ஒரு கன்னிப் பெண்ணின்திருமணம் புதன் அன்று நிகழவேண்டும் என மிஷ்னா கூறுகிறது. அப்படிப் பார்க்கும்போது"மூன்றாம் நாளை”(2:1) புதன் கிழமையாகப் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் யூதருக்கு வாரத்தின்முதல் நாள் திங்கள். (ஞாயிறு வாரத்தின் இறுதி நாள், ஓய்வுநாள்). வேறு பலரின்கருத்துப்படி 'மூன்றாம்நாள்' என்பது இதற்கு முந்தின நிகழ்வுக்குப் பின் (பிலிப்பு, நத்தனயேல்அழைப்பு) மூன்றாம் நாள், அப்படியானால் அது ஒரு ஞாயிறாக இருக்கலாம். ஞாயிறு கிறிஸ்தவமரபில் மாட்சிமையின் நாள், இவ்வாறு முதன் முறை இயேசு தம்மாட்சிமையை வெளிப்படுத்தியதும்,மாட்சியின் நாளாகிய ஞாயிற்றுக் கிழமையிலேயே எனக்கொள்ளலாம்.இத்திருமணத்தின் போதுதிராட்சை மது தீர்ந்துவிட, இயேசுவின் தாய் அதுபற்றி முறையிடஇயேசு தண்ணீரைத ;திராட்சை மதுவாக்கிய நிகழ்வையே நாம் இப்பகுதியில் வாசிக்கிறோம்.

5.2. இயேசுவின் சொற்கள்
கானாத் திருமணத்தின் போது இயேசு கூறிய சிலசொற்கள் கிறிஸ்தவச் சபையாரிடையேகருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்துள்ளன.

1) தம் தாயைப் 'பெண்ணே' என அழைப்பதா?
இயேசுதம் தாயைப் "பெண்ணே"”என அழைப்பது பலருக்கு ஒரு புதிராக உள்ளது. பொதுமொழி பெயர்ப்பு விவிலியத்தில் இயேசு"அம்மா"”என அழைப்பதாக உள்ளது. இங்கு 'அம்மா' என்னும்சொல் 'தாய்' என்னும் பொருள் படும் சொல்லாக அல்ல, மாறாக ஒரு பெண்ணை மரியாதையோடுஅழைக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசு எல்லாப் பெண்களையும் மரியாதையோடுஇவ்வாறே அழைக்கிறார்: 4:21 (சமாரியப்பெண்); 8:10 (விபசாரத்தில் பிடிபட்ட பெண்); லூக்13:12(உடல் ஊனமுற்ற பெண்). சிலுவையிலிருந்தும் தம்தாயை அவர் இவ்வாறே அழைக்கிறார் (19:26);பெண்ணே என அழைப்பது அன்றைய யூத சமூதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, மரியாதைக்குரியஒருவழக்கமாக இருக்கலாம். எனினும் இயேசு தம் சொந்தத் தாயை அவ்வாறு அழைப்பது புரிந்துகொள்ளக் கடினமானதே. பின் வரும் விளக்கங்கள் ஓரளவுக்குத் தெளிவைத்தரலாம்.

மீட்புத் திட்டத்தில்பெண்: 'பெண்' தொடக்கமுதல் இறுதிவரை மீட்புத் திட்டத்தில்ஈடுபட்டிருக்கிறார். விவிலியத்தின் தொடக்கநூலில் (3:15) பெண்ணின் வழித்தோன்றலே தீமையைநசுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. விவிலியத்தின் இறுதிநூலில ;(திவெ12) தீமையிலிருந்து முழுவிடுதலையும் வெற்றியும் பெண்வழியாகவே வருவதாகக் காட்டப்படுகிறது. தொடக்கமுதல்இறுதிவரை மீட்புப்பணியில் ஈடுபட்டபெண் இயேசுவின் தாய் மரியாவே என யோவான் கிறிஸ்தவச்சமூகத்தினர் உறுதியாக நம்பினர். எனவே மரியாவைப் பெண் என்ற சிறப்புப் பெயரால் அழைத்தனர்.யோவான் சமூகத்தின் இச்சொல்லாட்சி அச்சமூகம் உருவாக்கிய நற்செய்தியிலும் புகுந்துஇயேசுவும் அவ்வாறே அழைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது எனக்கருதலாம்.விவிலியத்தில் உள்ளது போலவே யோவான் நற்செய்தியிலும் இயேசுவின் மீட்புப்பணியோடு தொடக்கத்திலும் (2:1-11) இறுதியிலும ;(19:25-27) மரியா தொடர்புபடுத்தப்படுவதுகுறிப்பிடத்தக்கது.

மீட்புப்பணியில் மனித உறவு: இயேசுவின் மீட்புப் பணியில் இயல்பான மனிதஉறவுகள் இரண்டாம் தரம் ஆக்கப்பட்டு, மீட்புப் பணி அடிப்படையிலான உறவுகள் முன்னிடம்பெறுகின்றன. எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட சிறுவன் இயேசு தம் பெற்றோரிடம் கேட்ட கேள்வி:"நீங்கள் ஏன் என்னைத் தேடிநீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?”(லூக்2:49) நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அதுபோலவே, "உம்மைக் கருத்தாங்கிப் பாலுட்டிவளர்த்த உம்தாய் பேறு பெற்றவர்”என்று கூறியபெண்ணிடம், "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம்பேறுபெற்றோர்”(லூக்11:27-28) என்னும் இயேசுவின் கூற்றும் இதையே வலியுறுத்துகிறது. "அதோ!உம்தாயும் சகோதரர்களும், சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்”என்று சிலர் சொன்னபோது, இயேசு, "என் தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு,"தம்மைச்சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, "இதோ என்தாயும் சகோதரர்களும் இவர்களே.கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும்தாயும் ஆவார்”(மாற்3:31-35) என்று திட்டவட்டமாகக்கூறியதைப் பார்க்கும் போதும் மீட்புப ;பணியாற்றும் வேளையில்இயல்பான உறவுகள் இரண்டாம் தரமாவது தெளிவாகிறது.

இவ்வாறு மீட்புப் பணியின் பின்னணியில் இயல்பான மனித உறவுகள் பின்னுக்குத்தள்ளப்பட்டு இறைவார்த்தை பணி அடிப்படையிலான உறவு முன்னணிப் படுத்தப்படுவதால்மரியாவைப் பொறுத்தவரையில் இயல்பான 'தாய்' என்னும் உறவுக்கு முக்கியத்துவம் தரப்படாது,இறை வார்த்தையை ஏற்று அதன்படி வாழும் 'ஒரு பெண் சீடர்' என்னும் உறவுமுன்னணிப்படுத்தப்படுவதாகக் கொள்ளலாம்.

2) அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்?
பொது மொழி பெயர்ப்பு விவிலியத்திலுள்ள இதே சொற்கள் முன்னைய விவிலியமொழிபெயர்ப்புகளில் "எனக்கும் உனக்கும் என்ன” என்று சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இந்த தெளிவற்ற மொழிபெயர்ப்பு அடிப்படையில் "இயேசுவுக்கும ;மரியாவுக்கும்இடையே உறவு முறிக்கப்படுகிறதே! இயேசு மரியாவை உதறித் தள்ளிவிட்டாரே”என்று பிறகிறிஸ்தவச் சபையார் சிலர் கூறிவந்தனர். அப்படிக்கூற இங்கு இடமில்லை! ஏனெனில் இச்சொற்றொடர் ஓர ;எபிரேய மரபுச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இம்மரபுச் சொல்லுக்கு இருபொருள்கள் உண்டு:

1. "நமக்குள் ஏன் பிரச்சனை”-நீதி11:12; 2அர35:21;
2. இது பற்றி நான் (நாம்) ஏன்கவலைப்படவேண்டும்? "இது பற்றி நாம் என்ன செய்யமுடியும்?”- 2அர3:13 ஓசே14:8.இங்கு இரண்டாம் பொருளே பொருத்தமானது.

இயேசு மரியாவைப் பார்த்து, "நீங்கள்திராட்சை மது அளிக்கச் சொல்கிறீர்கள் இது கடவுளின் செயல் மாட்சியின் செயல்மாட்சிமைப்படுத்துபவர் தந்தையே (17:5). எப்போது மாட்சிமைச் செயல்செய்யப்படவேண்டும் எனத்தீர்மானிப்பவரும் அவரே. இந்நிலையில் நாம் (நான்) என்ன செய்யமுடியும்”என்று சொல்வதாகக்கொள்ளலாம்.

இன்னொரு பார்வை: ஒவ்வொரு அரும் அடையாளத்திற்கு முன்பும், புதுமைக்கு முன்பும்அடையாளம் அல்லது புதுமை கோருபவரை இயேசு சோதிப்பது உண்டு இங்கு, அரும்அடையாளம்ஆற்றுமுன் இயேசு மரியாவின் நம்பிக்கையின் ஆழத்தைச் சோதிப்பதாகவும் கருதலாம். ஆனால்மரியா மிகுந்த நம்பிக்கையுடன், "அவர் உங்களுக்குச ;சொல்வதெல்லாம் செய்யுங்கள்”(2:5) என்றுகூறுகிறார். அரும் அடையாளம் நிகழ்கிறது.

5.3. நிகழ்வின் பொருள்
1) பழையனர் கழிதலும் புதியன புகுதலும்
இந்நிகழ்வில் பழைய இரசம் தீர்ந்துவிட இயேசு புதிய இரசம் கொடுக்கிறார். தீர்ந்துவிட்டபழைய இரசம் யூதமுறைமைகளைக் குறித்து நிற்கிறது. அவை அர்த்தமற்றுப் போய்விட்டன.அவற்றிற்கு இனி தேவையில்லை. அவற்றிற்குப் பதில் இயேசு புதியமுறைமைகளை, வாழ்க்கைநெறிகளைத் தருகிறார். இதற்கு உருவகமாகப் புதிய இரசம் தரப்படுகிறது. புதிய இரசமே சிறந்தது.அதனைச் சுவைத்த பந்தி மேற்பார்வையாளர், "எல்லோரும் நல்ல இரசத்தை முதலில் பரிமாறுவர்,யாவரும் விருப்பம்போல் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்லஇரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?”(2:10) எனக்கேட்கிறார்! ஆம், இயேசுதரும் புதியமுறைமைகள் யூத முறைமைகளைவிட மிகவும் சிறந்தவை, அர்த்தம் தருபவை, வாழவைப்பவை. எனவே அவை புகுந்துவிட்டபின் பழையன கழியவேண்டியதுதானே!

பழையன (யூத முறைமைகள்) கழிதலும் புதியன (இயேசுவின் முறைமைகள்) புகுதலும்என்னும் கருத்து யோவான் நற்செய்தி முழுவதும் காணப்படுகிறது. யூத ஆலயம ;இடிக்கப்பட்டுப்புதிய ஆலயம ;மூன்றே நாளில்கட்டப்படும் (அதி2). யூதராகப் பிறப்பதைவிட தண்ணீராலும் தூயஆவியாலும் பிறப்பதே சிறப்பு (அதி3). யாக்கோபின் கிணற்றுத் தண்ணீர் திரும்பத் திரும்பத்தாகம் வருவிப்பது ஆனால் இயேசு தரும் தண்ணீர் நிலைவாழ்வு அளிப்பது. வழிபாடு இனிஎருசலேமிலோ, கெரிசம் மலையிலோ நடைபெறாது. தந்தையை உண்மையில் வழிபடுவோர் அவரதுஉண்மை இயல்புக்கேற்ற உள்ளத்தில்தான் வழிபடுவர் (அதி4). முப்பத்தெட்டு ஆண்டுகளாகநோயுற்றிருந்தவரை பெத்சதா குளத்துத ;தண்ணீரால் குணமாக்க முடியவில்லை. இயேசுகுணமாக்குகிறார். பழையசட்டம் இனி செல்லாது வாழ்வை மையப்படுத்தும் புதிய சட்டம்வந்துவிட்டது (அதி5). மன்னா அழிந்து போகும் உணவு இயேசு தருவதுநிலை வாழ்வு தரும்உணவு (அதி6). கூடார வாழ்வின் போது ஆலயத்தில ;ஏற்பட்ட ஒளி எருசலேம் நகரின் ஒருபகுதியையே ஒளிர்வித்தது. ஆனால் இயேசு உலகம் முழுவதற்கும் ஒளி (அதி8). பார்வை பெற்றோர்பார்வையற்றவராக, பார்வையற்றோர் பார்வை பெறத் தொடங்கிவிட்டனர ;(அதி9). இஸ்ரயேலரின்தலைவர்கள்குருடர்களும் திருடர்களுமாகித் தலைமையை இழந்துவிட்டனர்; புதிய தலைமைநல்லாயன் இயேசுவால் பிறந்துவிட்டது (அதி10).

2) மீட்பின் காலம் வந்து விட்டதற்கான அடையாளம்
மீட்பின் காலத்திற்குத் திருமணம், விருந்து ஆகியவை உருவகங்களாக அமைகின்றன:மத்8:11; 22:1-14; திவெ19:9 திராட்சை மது நிரம்பக் கிடைப்பது மீட்பரின் காலத்தின் அறிகுறியாகக்கருதப்பட்டது: ஆமோ9:13-15; ஓசே14:7; எரே31:12 பாரூயஅp;29:5. இவ்வாறு கானாத் திருமணத்தில்திராட்சை மதுவை நிரம்பக்கொடுத்து மீட்பரின் காலம் தொடங்கிவிட்டது என்பதை இயேசு குறித்துக்காட்டுகிறார்.

3) ஏழைகளின்பால் மரியாவின் முன் சார்பு
"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது”(2:4) என்னும் மரியாவின் சொற்கள் மணமக்களைக்கண்முன் கொண்டுசொல்லப்பட்டவையாகத் தெரியவில்லை. கடைசிப்பந்திக்கு அனுமதிக்கப்படும்ஒதுக்கப்பட்டோருக்கும். ஏழைகளுக்கும் திராட்சை மது இல்லையே எப்போதாவது ஒருமுறை மட்டும்தங்களுக்குக் கிடைக்கும் திராட்சை மதுவைக் குடிக்க எவ்வளவு ஆர்வத்துடன் அவர்கள்வந்திருப்பார்கள். ஆனால் இந்த மகிழ்ச்சி இந்த ஏழை எளியவர்களுக்கு, மறுக்கப்படுகிறதேஎன்பதுதான் மரியாவின் கவலை. 'இவர்களுக்குத் திராட்சை மது இல்லையே', 'தீர்ந்துவிட்டதே',என இயேசுவிடம் முறையிட்டு, இறுதியில் முன்னையதை விடச்சிறந்த திராட்சைமதுவை மரியாபெற்றும் கொடுக்கிறார். வேறு யாரும் கவலைப்படாத வேளையில் மரியாவின் பார்வைமட்டும்ஒதுக்கப்பட்டோர், ஏழைகள் பால்விழுகிறது! இதுவே கடவுளின் பார்வை. இயேசுவின் பார்வையும்மாறுபட்டு இருக்க முடியாது. ஏழைகள் பால்கடவுளின் கனிவைக்காட்டும் அரும் அடையாளத்தைத்செய்ய இதைவிடப் பொருத்தமான நேரமும் வராது! எனவே அரும் அடையாளம் நிகழ்கிறது: ஏழைகள்மகிழ்கின்றனர். கடவுள் மாட்சியுறுகிறார்.

6. புதிய கோவில்
கோவிலைத் தூய்மைப் படுத்துதல் 2:13-22).

6.1. எருசலேம் கோவில்கள்
எருசலேம் நகரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கோவில்கள் இருந்தன.எருசலேமின் முதல்கோவில் சாலமோன் மன்னனால் (கி.மு.10 ஆம்நூற்றாண்டின் மையப்பகுதியில்- பணித்தொடக்கம் கி.மு. 957 முடிவு கி.மு. 937) கட்டப்பட்டது. இந்தக் கோவில் கி.மு. 587-.ல்பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் அழிவுக்குள்ளானது. யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர். பாரசீக அரசர் சைரசு நாடுகடத்தப்பட்ட யூதர்களுக்கு விடுதலை அளித்தார்.சொந்த நாடு திரும்பியயூதர்கள் செருபாபேலின் தலைமையில் அழிக்கப்பட்ட தங்கள் ஆலயத்தைமீண்டும்கட்டினர். கி.மு.538-இல் தொடங்கிய இவ்வாலயப்பணி கி.மு.515-இல் முற்றுப்பெற்றது.சொந்த நாடுதிரும்பிய அகதிகளால் கட்டப்பட்ட இவ்வாலயம் சாலமோன் ஆலயத்தைப்போல்அவ்வளவு சிறந்ததாய் இல்லை. பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி ஒருசில பகுதிகள் அழிவுற்றநிலையில் இருந்த இவ்வாலயத்தை பெரிய ஏரோது தன் அரசியல் ஆதாயத்திற்காக ஈடுஇணையற்றஓர்அழகிய ஆலயமாகக் கட்டினார். கி.மு. 20-இல் கட்டடப்பணி தொடங்கியது. 18 மாதங்களில்ஆலயத்தின் முக்கிய பகுதிகள் முடிவுற்றன. ஆலய வளாகம் முற்றிலும் முழுமையாய் நிறைவுற 84ஆண்டுகள்ஆயின. ஆலயத்தை இயேசு தூய்மைப்படுத்திய நிகழ்ச்சி ஆலயம் கட்டத் தொடங்கி46 ஆண்டுகள்ஆகியபோது (கி.பி. 26-27) நடந்தது. அப்போது ஆலயப் பணிகள்முற்றுப்பெறவில்லை. இதுவே இயேசு காலத்து ஆலயம். இந்த ஏரோதின் ஆலயத்தைத ;தூய்மைப்படுத்தியநிகழ்ச்சியைப் பற்றிதான் இப்பகுதி பேசுகிறது.

6.2. கோவில் கள்வர் குகை ஆகியது
ஆகியதுஎருசலேம் ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகளும் நேர்மையற்ற செயல்களும்நடைபெற்றன. "என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்”(2:16) என இயேசுவேவேதனையுடன ;கூறுகின்றார். "என் இல்லம் இறைவேண்டலின் வீடு; ஆனால் நீங்கள் அதைக்கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்”(மாற்11:17) என அவர் கடிந்து கொள்கிறார்.உண்மையில் எருசலேம் கோவில் கள்வர் குகையாக மாறியது. அதற்குப் பொறுப்பாய் இருந்ததலைமைக் குருக்கள் பணம் கொடுத்து தலைமைக் குருத்துவ நிலையை அடைந்தவர்கள். கி.மு. 170-இல் இருந்தே பெரிய குருத்துவப் பதவி பணத்திற்கு விற்கப்பட்டது. பெரிய ஏரோது பதவியேற்றகாலத்திலிருந்து (கி.மு. 37) எருசலேமின் அழிவுவரை 28 பேர் பெரிய குருத்துவப் பதவியை பணம்கொடுத்துப் பெற்றுக்கொண்டனர். அவர்களுள் யாருக்கும் சளைக்காதவர் அன்னாஸ்தான். அவர்தமக்கும் (கி.பி. 6-15). தம் ஐந்து மகன்களுக்கும் தம்மருமகன் கயபாவுக்கும( கி.பி. 18-36) பெரியகுருத்துவப் பதவியைப் பணம் கொடுத்து வாங்கினார்.

18 வயது வந்த யூத ஆண்கள் 12 செக்கல் ஆலய வரி செலுத்த வேண்டும். செக்கல்வழக்கில் இல்லாத நாணயமாதலால் வழக்கில் இருந்த தெனாரியம், திராக்மா போன்றநாணயங்களைக்கொடுத்து பணமாற்று செய்தாகவேண்டும். இவ்வாறு பணமாற்று செய்யும் போது16 பங்கு மாற்றுக் கூலியாகப் பறிக்கப்பட்டது. எவ்வளவு பெரியதொகை கொடுத்தாலும் அதில்1ஃ6பங்குமாற்று கூலியாக எடுக்கப்பட்டது. இது நேர்மையற்ற ஒரு செயல்; பணப் பறிப்பு.

யூதர்கள் பல்வேறு வேளைகளில் பல்வேறு காணிக்கைப் பொருள்களைச் செலுத்தவேண்டும் என்று சட்டம் வரலாம். ஆனால் பல நேரங்களில் கோவில் அதிகாரிகள் மக்கள் கொண்டுவரும் காணிக்கைப் பொருள்கள் தகுதியற்றவை எனக்கூறிக் கோவில் வளாகத்திலேயேகாணிக்கைப் பொருள்களை வாங்கவேண்டிய கட்டாய நிலையை உருவாக்குவர். அங்கு கொள்ளைவிலை! சில வேளைகளில் ஆலய வளாகத்தில் விற்கப்படும் பொருள்களின் விலை அதன் உண்மைவிலையை விட 20 மடங்கு வரை அதிகமாக இருக்க முடியும். இது முழுக்கமுழுக்கக் கொள்ளை!செம்மறி ஆட்டைக ;காணிக்கையாக்க இயலாத ஏழைகள் இரண்டு புறாக்களைக் காணிக்கையாகக்கொடுத்தால் போதும் (லேவி12:6-8) என்னும் ஏழைகள் பால் முன் சார்பு கொண்ட இறைவனின்கட்டளைகளை இதுகேலிக் கூத்தாக்கியது! ஆலயமே கள்வரின் குகையாக மாறியது!

6.3. புதிய கோவில்
சாலமோன் மன்னன் கட்டிய எருசலேம் கோவில் அழிவுறும் என எரேமியா இறைவாக்கினர்முன்னுரைத்தார் (7: 1-15). அவ்வாறே நிகழ்ந்தது. பாபிலோனிய மன்னனான நேபுகத்னேசர்அதனைத் தரைமட்டம் ஆக்கினான். ஆனால் சிறப்பான ஒரு புதிய ஆலயம் எழுப்பப்படும் எனஎசேக்கியேல் இறைவாக்குரைத்தார் (எசே40:5-47:21). செருபாபேல் கட்டிய இரண்டாம் கோவில்எளிமையாக இருந்தது. அடிமைத்தனத்துக்குப் பின் நாடு திரும்பிய அகதிகளால் சாலமோன் கட்டியஆலயம் போல் சிறப்பாகக் கட்ட முடியவில்லை. இந்தத் தற்காலிகமான எளிய ஆலயம் எசேக்கியேல்இறைவாக்குரைத்த இலட்சிய ஆலயமாக இருக்கவாய்ப்பில்லை.

இயேசுவின் பிறப்புக்குச் சிலஆண்டுகளுக்கு முன்பாக (கி.மு20) ஏரோது கட்டிய எழில்மிகுஆலயம் மிகச்சிறப்பாக இருந்தது. ஆனால் இதில் இறைவனுக்கு அதிக இடம் இருந்ததாகத்தெரியவில்லை. இது பெரிய ஏரோதின் அரசியல் லாபத்திற்காகக் கட்டப்பட்டது. பாதி இதுமேயனும்பாதி யூதனுமாக இருந்த தன்னை யூதர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக ஏரோதுஇந்தக் கோவிலைக் கட்டினான். இந்தக் கோவில் முன்பு கூறப்பட்டது போல, கள்வர்களின்குகையாகமாறியது. பணமே வழிபாட்டு பொருளாகியது. இயன்ற வழிகளிலெல்லாம் பணம் பறிப்பதுஆலய அதிகாரிகளின் இலட்சியமாக இருந்தது. ஆலயப் பொறுப்பாளர்கள் கடவுளுக்கும்பணத்திற்கும் வழிபாடு செலுத்த முயன்றனர். இது இயலுமா? (மத்6:24; லூக்11:13).இவ்வாறு எசேக்கியேல் முன்னுரைத்த ஆலயம் இதுவரை இருந்த எந்த ஆலயமும் அல்ல.அது முற்றிலும் புதுமையான ஒன்று! அங்கு இறைவன் முழுமையாக வாழ்வார். அந்த ஆலயம்மனிதக்கைகளால் கட்டப்பட்டதாக இருக்க முடியாது. (திப7:48-49; எபி9:11). அது அனைத்துத்தீமைகளையும் அழித்து இறந்த இயேசுவை உயிர்பெற்றெழச் செய்த இறைவனின் வலக்கரம்கட்டியெழுப்பிய ஆலயம். அவரில்தான் கடவுள் முழுமையாகக் குடி கொண்டுள்ளார். அவரில்இறைவனும் மனிதரும் முழுமையாகச் சந்திக்கின்றனர். உயிர்த்த இயேசுவாகிய இந்த ஆலயம்தான்மூன்றுநாளில் கட்டிஎழுப்பப்பட்டது (1கொரி15:4). இவ்வுண்மையை இயேசுவின் சீடர்கள் அவர்உயிர்த்தெழுந்தபின்னரே உணர்ந்தனர் (2:21-22).

புதியகோவில் கட்டி எழுப்பப்பட்டுள்ளதால் இனிஎருசலேம் மலையிலோ, கெரிசிம்மலையிலோ வழிபாடு நடைபெறத் தேவையில்லை (4:21). கெரிசிம்மலை வழிபாட்டுத்தலம் ஏற்கனவேகி.மு.109-இல்தரைமட்டம் ஆக்கப்பட்டுவிட்டது. எருசலேம் ஆலயமும் அர்த்தமிழந்துவிட்டது.அதுவும் இனி இருக்கத் தேவையில்லை. இதைக் குறிக்கத்தான் இயேசு இறந்தபொழுது ஆலயத்திருத்தூயகத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்ததாகக் கூறப்பட்டுள்ளது (மத்27:51). இனிஇருக்கத் தேவையில்லாத எருசலேம் ஆலயம் கி.பி.70-இல் உரோமையரால் முற்றிலும் தரைமட்டம்ஆக்கப்படும். இனிமேலாகத் தந்தையை உண்மையாய் வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்குஏற்ப உள்ளத்தில் வழிபடுவர் (4:23-24).

7. புதிய வழிபாடு
(சமாரியப் பெண்ணோடு உரையாடல் 4:1-26)

7.1. யூதர் சமாரியர் உறவு
யூதருக்கும் சமாரியருக்கும் இடையே உறவு சீர் குலைந்திருந்தது. அவர்கள் ஒருவர்மற்றவரை வெறுத்தனர் அவர்களிடையே பகைமை முற்றி ஒருவர் மற்றவரைத் தவிர்த்தனர். கலிலேயயூதர்கள் எருசலேமுக்குச் செல்லும் போது சமாரியா வழியாக நேர்வழியில் செல்லாது யோர்தான்ஆற்றைக் கடந்து பெரேயா வழியாக இருமடங்கு தூரம் பயணம் செய்து எருசலேமை அடைவர்.

கி.மு. 721 -ம் ஆண்டிலிருந்தே இப்பகைமை உருவாகியது. அசீரியப் படையெடுப்பின்விளைவாகக் கலப்புத் திருமணங்கள் நடந்து, கலப்பு இனமாகிவிட்ட வடநாட்டவரைத் தென்னாட்டுயூதர்கள் தாழ்ந்தவர்களாகக் கருதினர். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் பாபிலோனிலிருந்து திரும்பிவந்த யூத அகதிகள் அழிவுற்ற தங்கள் ஆலயத்தைக் கட்டத் தொடங்கிய போது (கி.மு. 539ஃ38)சமாரியரின் ஒத்துழைப்பை உதறித்தள்ளினர். இது வெறுப்பை அதிகரித்தது. எருசலேம் ஆலயம்கட்டுவதில் தங்களுக்குப் பங்குதரப்படாததால் சினமுற்ற சமாரியர்கள் மாமன்னன் அலக்சாந்தரின்அனுமதிபெற்றுக் கெரிசிம்மலையில் தங்களுக்கென தனியொரு ஆலயத்தைக் கட்டினர் (கி.மு.323). இதுயூதருக்கு எரிச்சலைக்கொடுத்தது. இந்தப் போட்டி ஆலயத்தைத் தகர்ப்போம் எனஅவர்கள் சபதமிட்டவாறே மக்கபேய மன்னன் யோவான் இர்க்கான் இந்த ஆலயத்தைத் தரைமட்டமாக்கினார் (கி.மு. 135-109). இந்த ஆலயத்தின் எந்ததடையமும் இருக்கக்கூடாது என்பதற்காகஆலயத்துக்குக் கீழே இருந்த பாறையை வெட்டி சமாரியரின் ஆலயம் இருந்ததற்கான அடையாளமேஇல்லாமல் செய்தான். இது சமாரியரின் கோபவெறியைக் கிளறிவிட்டது பகைமை முற்றியது.இயேசுவின் காலத்திற்குச் சற்றுமுன்பு, பெரிய ஏரோது சமாரியரை ஆதரித்து, சமாரியாவில் பலதிட்டங்களை நிறைவேற்றினான். சமாரியர் நகரையும் திரும்பக் கட்டினான். இது யூதரின்கோபத்தையும் பகைமையையும் அதிகரித்தது. இயேசு இளைஞனாக இருந்தகாலத்தில் சமாரியர்எருசலேம் ஆலயத்தில் மனித எலும்புகளைப் போட்டு அதனைத் தீட்டுப் படுத்தினர். இதுவெறுப்புணர்வை இன்னும் வளர்த்தது.

இவ்வாறு பல நிகழ்வுகள் யூதர் சமாரியரிடையே உயர்வு - தாழ்வு மனப்பான்மை, போட்டி,பொறாமை, வெறுப்பு, பகைமை ஆகியவற்றை வளர்த்தன. எனவேதான், யூதர் சமாரியரோடுபழகுவதில்லை (4:9) என்ற குறிப்பு இங்கு காணப்படுகிறது.

7.2. இயேசுவும் சமாரியரும்
ஆனால் இயேசு முற்றிலும் மாறுபட்டுச் செயல்படுகிறார். அவர் சமாரியாவுக்குச் செல்கிறார்(4:4); சமாரியருக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார். ஒரு சமாரியரை அதுவும் ஒரு பெண்மணியைத்தம் முதல் திருத்தூதராகச் செயல்பட வைக்கிறார் (4:29). சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள் (4:39,41:42). இயேசுவைப் பற்றிய மிகஉயர்ந்த உண்மை - அவரே உலகின் மீட்பர்என்னும் உண்மை - சமாரியர் வாயிலிருந்தே வருகிறது.

7.3. சமாரியப் பெண்
இந்தப்பகுதியில் வரும் முக்கியநபர் சமாரியப்பெண். இவரை எவ்வாறுபுரிந்து கொள்வதுஎன்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிலர் இவரை ஒரு தனி நபராகப்பார்க்கின்றனர். ஐந்து கணவர்களைக் கொண்டிருந்த இவர ;வாழ்க்கையில ;வழுக்க pவிழுந்தவராகஅல்லது வஞ்சிக்கப்பட்டவராகக் கருதப்படுகின்றார். இத்தகையோர் மேல் இரக்கம் காட்டிஆற்றுப்படுத்துவது இயேசுவின் சிறப்புப் பண்பல்லவா?

வேறுசிலர் இலேவியர் திருமணமுறை அடிப்படையில் இவருக்கு ஐந்து கணவர்கள்இருந்ததாக எண்ணுகின்றனர். இலேவியர் திருமண முறைப்படி மூத்த சகோதரர் இறந்தால் இளையசகோதரர் அவர் மனைவியைத் திருமணம் செய்து அவருக்கு மகப்பேறு கொடுக்க வேண்டும்.இம்முறையில் ஒரு பெண் ஏழுகணவர்களைக் கொண்டிருந்ததாக ஒத்தமை நற்செய்திகளில்வாசிக்கின்றோம் (மாற் 12:18-27). அது போல் இங்கு வரும் சமாரியப் பெண்ணும் ஐந்துகணவர்களைக் கொண்டவராக இருந்திருக்கலாம். ஆனால் பல அறிஞர்களின் கருத்துப் படிசமாரியப்பெண் இங்கு சமாரிய மக்களுக்குப் பிரதிநிதியாக - உருவகமாக - நிற்கிறார். அவரது'ஐந்து கணவர்கள்' சமாரியர்கள் திருமறை நூல்களாகக் கருதித் தம் வாழ்வின் வழிகாட்டிகளாகஏற்றுக் கொண்ட ஐந்து நூல்களைக் (தோரா) குறிப்பாகக் கொள்ளலாம் (ஒரிஜன்). அல்லது இன்னும்சிறப்பாக இந்த ஐந்து கணவர்கள் சமாரியர்கள் (பாபிலோன், கூத்தா, அவ்வா, ஆமாத்து, செபர்வயிம்நகரத்துத் தெய்வங்கள்- 2அர17:24) குறிப்பதாகவும் புரிந்துகொள்ளலாம். இது பொருத்தமாகஇருக்கிறது. ஏனெனில் கணவன் என்பதைக் குறிக்கும் 'பாகால்' என்னும் எபிரேயச் சொல்லுக்குத்'தெய்வம்' என்றும் பொருள் உண்டு. எனவே "உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள்”(4:18)என்பதை "உனக்கு (உங்களுக்கு) ஐந்து தெய்வங்கள் இருந்தார்கள்”என்றும் மொழிபெயர்க்கலாம்.அது சமாரிய வரலாற்றைக் குறிப்பதாக அமையும். "உம்முடன் இப்போது இருப்பவர் உம் கணவர்அல்லர்”(4;18) என்பதை இப்போது சமாரியர் வழிபடும் யாவேயைக் குறிக்கும் அவரை அவர்கள்முறையாக வழிபடவில்லை. இவ்வாறு இப்பகுதியில் வரும்சமாரியப ;பெண்ணைத் தனிநபராகஅன்றி, சமாரியர்களின் பிரதிநிதியாகப் பார்ப்பதே அதிக அர்த்த முள்ளதாக அமைகிறது.

;7.4. வாழ்வு தரும் தண்ணீர்
தம்முடன் உரையாடிய சமாரியப் பெண்ணிடம் இயேசு வாழ்வுதரும் தண்ணீரைத் தருவதாகவாக்களிக்கிறார் (4:10). இதன் பொருள் நமக்குத் தெளிவாய் இல்லை. ஆனால் யோவானின்வாசகர்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கவேண்டும். வாழ்வு தரும் தண்ணீர் என்னும் இச்சொற்றொடருக்கு இருபொருள் இருப்பதாகத் தெரிகிறது.

1) இறை வார்த்தை பழைய ஏற்பாடு வாழ்வுக்கு வழிகாட்டும ;ஞானத்தைத் தண்ணீராக உருவகிக்கிறது.சீராக்கின் ஞானம் (15:3) ஞானத்தை நீராக வர்ணிக்கிறது. அதே நூல் ஞானம் பற்றிப் பேசுகையில்அதை உணவாகவும் பானமாகவும் உருவகிக்கிறது. "என்னை உண்பவர்கள் மேலும் பசிகொள்வார்கள ;என்னைக் குடிப்பவர்கள் மேலும் தாகம் கொள்வார்கள்”(24:21) என்கிறது. அதுபோலவே நீதிமொழிகளும் ஞானத்தை ஓர் ஊற்றாக உருவகிக்கிறது (13:14; 18:4). ஞானத்தைப்பற்றிப் பேசும ;எசாயா அதனைத் தண்ணீராக உருவகித்து "தாகமாய் இருப்பவர்களே நீங்கள்அனைவரும் நீர் நிலைகளுக்கு வாருங்கள்”(55:1) என்கிறார்.காலப் போக்கில் திருச்சட்ட நூலும் நீராக உருவகிக்கப்படுகிறது. திருச்சட்டத்தைப்பெருக்கெடுத்தோடும் பீசோன், திக்ரிசு, யூப்பிரத்தீசு, யோர்தான், நைல் ஆகிய ஆறுகளுக்குஒப்பிட்டுச் சீராக்கின் ஞானம் (24:25-27) பேசுகிறது. மறைநூல் அறிஞர்கள் திருச்சட்டத்தைத்தண்ணீருக்கு ஒப்பிட்டனர். கும்ரான் ஏடுகளில் திருச்சட்டநூல் "வாழ்வு தரும் தண்ணீர்”எனவர்ணிக்கப்படுகிறது. இவ்வாறு அன்றைய வழக்கில் வாழ்வு தரும் தண்ணீர் என்பது திருச்சட்ட நூல்;அதாவது இறைவார்த்தையைக் குறித்தது.

2) தூய ஆவp"வாழ்வு தரும் தண்ணீர்” என்னும் சொற்றொடருக்குத் 'தூயஆவி' என்னும் பொருளும்உண்டு. பழைய ஏற்பாட்டில் ஆவியும் தண்ணீரும் நெருங்கிய தொடர்புள்ளவையாகக்காட்டப்படுகின்றன: எசே36:25-26 "நான் தூய நீரை உங்கள் மேல் தெளிப்பேன்... புதிய ஆவியைஉங்களுக்குள் புகுத்துவேன்” அதுபோலவே எசா 44:3 இலும்"தாகமுற்ற நிலத்தில் நீரைஊற்றுவேன்... உன் வழி மரபினர் மீது என்ஆவியைப் பொழிவேன்”எனக் கூறப்பட்டுள்ளது.இன்னும் பல இடங்களிலும் தண்ணீரும் தூய ஆவியும் இணைத்துப் பேசப்படுகின்றன.மெசியா காலத்தின் கொடை தூயஆவி (யோவேல், எசேக்கியேல்). மெசியாவின் காலம்வந்துவிட்டது என சமாரியப் பெண் பேசுவதால் (4:25) இங்கு கொடையாகப் பேசப்படும் 'வாழ்வு தரும்தண்ணீர்' தூய ஆவியாகத்தான் இருக்கவேண்டும். தொடக்ககாலக் கிறிஸ்தவர்களும் தூயஆவியைக் கடவுளின் கொடையாகத்தான் பார்த்தார்கள் (திப2:38; 8:20; 10:45; 11:47).சமாரியப் பெண்ணோடு இயேசு நிகழ்த்திய இந்த உரையின் இரண்டாம் பகுதி (4:22-24)தூய ஆவி பற்றி வெளிப்படையாகப் பேசுகிறது (பொது மொழி பெயர்ப்பு விவிலியத்தின் பாடத்தில்உள்ளம் என்றும் அடிக்குறிப்பில் 'தூயஆவி' என்றும் உள்ளது). யோவா7:37-39இல் வாழ்வுதரும்தண்ணீரே தூய ஆவி எனத் தௌ;ளத்தெளிவாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு இப்பகுதியில் வரும் 'வாழ்வு தரும் தண்ணீர்' என்னும் சொற்றொடர் இறைவார்த்தை, தூய ஆவி என்று இரு பொருள்படும்.

7.5. உண்மை வழிபாடு
இவ்வுரையாடல் பகுதியின் மையக் கருத்து 'வழிபாடு'. இதற்குத் தயாரிப்பாகவே முன்னையவசனங்கள் அமைந்திருக்கின்றன. சமாரியரின் வழிபாட்டுமையமாகிய சிகேமில் (சீக்காரில்)உரையாடல் நடைபெறுகிறது (4:5). உண்மையான வழிபாடு 'உண்மையிலும் ஆவியிலும்' நடைபெறவேண்டும் (4:23, 25). ஆகவேதான் உண்மை (இறைவார்த்தை) என்றும் தூய ஆவி என்றும்பொருள்படும் 'வாழ்வு தரும் தண்ணீர்' பற்றி இவ்வுரையாடலின் முதல் பாகத்தில் பேசப்பட்டது (4:10-15). சமாரியப் பெண் ஐந்து கணவர்களைக் கொண்டிருந்தது சமாரியர்கள்வழிபட்டு வந்த ஐந்துதெய்வங்களைக் குறித்து நிற்கிறது (4:16-18). இறுதியாய் வழிபாட்டுத் தலங்களல்ல (எருசலேம், கெரிசீம்) (4:19-21), வழிபடும் முறையே முக்கியம் என்றுகூறி உண்மையான வழிபாடு தந்தையைஅவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில் வழிபடுதலில் அடங்கியுள்ளது (4:23, 25) எனஎடுத்துரைக்கப்பட்டுள்ளது.

1) உண்மையில் வழிபாடு உண்மையான வழிபாட்டின் தன்மையை எடுத்துரைக்க கிரேக்க மூலமொழி 'பினெய்மா''அலெத்தையா' என்னும் இருசொற்களைப் பயன்படுத்துகிறது. இவற்றையே 'உண்மையிலும்ஆவியிலும்' எனமொழி பெயர்த்து வந்துள்ளோம். இது சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்புஇதில் பொருள் தெளிவு இல்லை. எனவேதான் இதற்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற முறையில்வெவ்வேறு விளக்கங்களைக் கொடுத்து வருகின்றனர்.'உண்மை என்னும் சொல்லுக்கு யோவானில் அதன் நேரடிப் பொருள் தவிர இரண்டுபொருள்கள் உள்ளன. (1) இறை வெளிப்பாடு, (2) பற்றுருதி.

இறைவெளிப்பாடு: உண்மை என்பது உள்+மை. அது உள்ளதை உரைப்பது உள்ளத்தைவெளிப்படுத்துவது. இயேசு கடவுளாம் தந்தையிடம் உள்ளதையும் அவரது உள்ளத்தையும்வெளிப்படுத்தினார். தந்தையிடம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் அவர் கூறினார் (8:40). அவர்உண்மை நிறைந்தவராய் விளங்கினார் அவரே உண்மை (14:6) ;உண்மையை எடுத்துரைப்பதே அவர்பணி, அவர் இதற்காகவே பிறந்தவர் (18:37).

பற்றுறுதி: உண்மை என்பதற்குப் பற்றுறுதி என்னும் பொருளும் உண்டு. இயேசுவேதந்தையை முற்றிலும் பற்றி நின்றவர்: உறுதியாகப் பற்றிநின்றவர் (பிரமாணிக்கமானவர்), அவர்இறுதிவரை, சிலுவைச் சாவுவரை பற்றுறுதியாய் இருந்தார். சிலுவையின் இழிவுச்சாவு கூட அவர்தந்தையைப் பற்று வதிலிருந்து தடுக்க முடியவில்லை. இயேசுவின் வாழ்வு முழுவதும், குறிப்பாகஅவரது சிலுவைச் சாவு இறைவனாம் தந்தையிடம் அவர் கொண்டிருந்த பற்றுறுதிக்குச் சான்றாகஅமைந்தது. எனவேதான் பிலாத்து "உண்மையா?”அதுஎன்ன? (18:38) என்று கேட்டபோது இயேசுவிடையளிக்கவில்லை. அதற்கு விடைவார்த்தைகள் அல்ல, அவரது வாழ்வே, குறிப்பாக அவரதுசிலுவையே விடை. இவ்வாறு சிலுவைச் சாவுவரை தந்தையிடம் பற்றுறுதி கொண்டிருந்த இயேசுவேஉண்மை (14:6). எனவே உண்மையில் வழிபாடு என்பது இயேசு வெளிப்படுத்திய இறைத் தந்தையின்உண்மை இயல்புக்கு ஏற்ப அவரை வழிபடுதல் இறைத் தந்தையை முற்றிலும் பற்றி நின்று வழிபடுதல்.

2.ஆவியில் வழிபாடு: இச்சொல்லாட்சிக்கு அடிப்படையாகஇருக்கும் 'பினெய்மா' என்னும்சொல்லுக்குப் பலபொருள்கள் உள்ளன. 'காற்று' என்பது பொதுவான ஒரு பொருள் (3:8). 'தீய'என்னும் அடைமொழியோடு வரும்போது பேய்களைக் குறிக்கும். 'தூய' என்னும் அடைமொழியோடும்சிலவேளைகளில் அவ்வடைமொழி இன்றியும் வரும் போது ஆவியானவரைக் குறிக்கும். பலவேளைகளில் இச்சொல் உள்ளம் என்னும் பொருளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இங்கு காற்று, தீய ஆவி என்னும் பொருள்களுக் குஇடமில்லை. பலருடைய பார்வையில்பினெய்மா என்னும் இச்சொல் தூய ஆவியைக் குறிக்கும். அப்படியானால் உண்மையாக வழிபாடுதூய ஆவியின் துணைகொண்டு தூய ஆவியானவரோடு இணைந்து நடைபெறவேண்டும். இந்தத்தமிழாக்கம் பொது விவிலியத்தில் அடிக்குறிப்பில் காணப்படுகிறது. பொது விவிலிய மொழிபெயர்ப்பு'உள்ளம்' என்னும் பொருளை முன்னிலைப்படுத்துகிறது. ஏனெனில் உண்மையான வழிபாடு நடக்கவேண்டியது எருசலேம் என்னும் இடத்திலுமல்ல, கெரிசீம் என்னும் இடத்திலுமல்ல: மாறாகஇடத்திற்குப் பொருத்தமான மாற்றாக வருவது 'உள்ளம்'. ஆகவேதான் "உண்மையாய் வழிபடுவோர்தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடவேண்டும்' (4:23,25) எனமொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உண்மையான வழிபாடு இடம்சார்ந்த ஒன்று அல்ல, அது உள்ளம் சார்ந்தது,இயேசு வெளிப்படுத்திய தந்தையின் உண்மை இயல்புக்கு ஏற்ப அது நிகழவேண்டும். தந்தையைமுற்றிலும் பற்றிநின்று வாழும் வாழ்வாக அது மலரவேண்டும்.

 

8 . புதிய சட்டம்
(ஓய்வு நாளில் நலம் பெறல் 5:1-47)

8.1. ஓய்வு நாளில் நலமாக்கல்
யூதர்களின் ஒரு திருவிழாவின்போது இவ்வரும் அடையாளம் நிகழ்கிறது. பிற இடங்களில்வெளிப்படையாக விழாக்களின் பெயர்களைக் குறிப்பிடும் யோவான் இங்கு 'யூதர்களின் திருவிழா'என்று மட்டும் பொதுவாகக் கூறுகிறார். இது 'யூதர்களின் முக்கிய மூன்று விழாக்களுள் (பாஸ்காவிழா, கூடாரவிழா, பெந்தெக்கொஸ்தேவிழா) ஒன்றாக இருக்கவேண்டும். இந்த அதிகாரம்முழுவதும் சட்டம் பற்றிப் பேசப்படுவதால் திருச்சட்டம் கொடுக்கப்பட்ட நிகழ்வைக் கொண்டாடும்பெந்தெக்கொஸ்தே விழாதான் இங்கு 'யூதர்களின் திருவிழா' எனக் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரைப் பெத்சதாகுளக் கரையில்இயேசு நலமாக்குகிறார். பெத்சதா என்பதற்கு 'இரக்கத்தின் இடம்' என்பதுபொருள். ஐந்துமண்டபங்களைக் கொண்ட இக்குளத்தை அகழ்வாராய்ச்சி இன்று கண்டுபிடித்துள்ளது.இக்குளக்கரையில் பல ஆண்டுகளாய்ப் படுத்துக்கிடந்த நோயாளர் இயேசுவைச் சந்தித்து முழுநலம்பெறுகிறார். "தம் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கிறார்”(5:9). இதை ஒத்த நிகழ்வுகள்ஒத்தi மநற்செய்திகளிலும் (மாற்2:1-12; மத்9:1-8; லூக்5:17-26) ஒரு சில வேறுபாடுகளுடன்காணப்படுகின்றன.

இயேசு குணமாக்கிய நாள் ஓய்வுநாள் (5:9). 38 ஆண்டுகளாக நோயுற்றிருந்த இந்தமனிதர் இன்று நலம் பெற்றிருக்கிறாரே என்றுயூ தத்தலைவர்கள் மனம் மகிழமுடியவில்லை. மாறாகஒரு சட்டம் மீறப்பட்டுவிட்டதே எனத்தான் அங்கலாய்க்கிறார்கள் இது கடவுளுக்கு எதிரான செயல்என்று எண்ணுகிறார்கள். என்னே பரிதாபம்!

8.2. பழைய சட்டம் போர்க் கொடி தூக்கல்
யூதர்களின் சட்டப்படி ஓய்வுநாளில் வேலைசெய்வது குற்றம் (விப20:8-11; இச5:12-15;எண்15:32-36). ஏனெனில் கடவுளின் சாயலில்படைக்கப்பட்ட மனிதருக்குக் குறிப்பாகஅடிமைப்படுத்தப்பட்ட மனிதருக்கு வாரத்திற்கு ஒருமுறை கூடஓய்வு கொடுக்காமலிருத்தல்இறைவனைப் பழித்தல் ஆகும். அதுபாவம்.

ஆனால், யூதத் தலைவர்கள் ஓய்வுநாள் சட்டத்தின் இந்நோக்கத்தை மறந்தவர்களாக,சட்டத்தின் வார்த்தைகளைப் பெரிதுப்படுத்தி, விரித்துத் திரித்து, இன்னும் பல சட்டங்களைஏற்படுத்தினர். ஓய்வுநாளில் செய்யக்கூடாத வேலைகளை 34 வகையாகப் பிரித்தனர். அவற்றுள்ஒன்று ஓய்வுநாளில் சுமை சுமக்கக்கூடாது என்பது.ஓய்வுநாளில் சுமை சுமக்கக்கூடாது என்னும் எரேமியாவின் (17:19-27) கண்டிப்பானகட்டளையும் நெகேமியாவின் கடுமையான வார்த்தைகளும் (13:15-22) இவர்களுக்குச் சாதகமாகஅமைந்தன. காலப்போக்கில் இக்கட்டளை இன்னும் கடினமாகியது. மக்களால் தாங்க முடியாதஅளவுக்கு நுணுநுணுக்கமாய் விளக்கம் பெற்றது. சாபாத் என்னும் மிஷ்னாவின்படி ஓய்வுநாளில்தூக்கக்கூடாத சுமைகளின் பட்டியல் ஓர் உலர்ந்த அத்திப்பழம் அளவு கனமுள்ள உணவு, ஒரு சிறு கிண்ணத்தில் கொள்ளக்கூடிய திராட்சைமது, ஒருவாய்ப ;பால், தலையில் ஒருமுறை தேய்ப்பதற்கானஎண்ணெய், ஒருபடி மண்ணை ஈரமாக்குமளவு தண்ணீர், இரு எழுத்துக்களை எழுதுவதற்கானமை... இப்படி நீண்டு கொண்டே போனது! ஓய்வுநாளில் வீட்டில் விளக்கை ஓரிடத்திலிருந்து மற்றோர்இடத்திற்கு மாற்றலாமா? கடிக்க வரும் நாயைக் கல்லால் எறியலாமா? செயற்கைமுடி அணியலாமா?எனும் கேள்விகளுக்குப் பலர் கூடாது என்றே கூறினர். பெற்றதாய் தன் குழந்தையைத் தூக்கிக்கொஞ்சி விளையாடலாமா என்பது கூட சிலருக்கு ஒருகேள்விக ;குறியாகவே இருந்தது! சட்டத்தின்புரிதல் இவ்வாறிருக்க ஓய்வுநாளில்n வளிப்படையாகப் படுக்கையை எடுத்துச் செல்வதைத்தலைவர்கள் எப்படிப் பொறுத்துக்கொள்வர்? ஓய்வுநாளில் ஒரு பொது இடத்திலிருந்து தனிவீட்டுக்கு எதையாவது சுமந்து சென்றால் அவ்வாறு சுமந்து சென்றவர் கல்லால் எறிந்து கொல்லப்படவேண்டும் என்னும் சட்டம்தான் அவர்கள் மனதிற்கு வந்தது. எனவே அவர்கள் நலம் பெற்றவரையும்நலமாக்கியவரையும் தண்டிக்க வேண்டும் என்னும் வெறியுடன் இருந்தார்கள்.

8.3. சட்டம் பற்றிய இயேசுவின் புதிய பார்வை
சட்டம் பற்றிய யூதத்தலைவர்களின் பார்வையையும் செயல்பாட்டையும் கண்டு இயேசு மனம்குமுறினார். இப்படிச ;சட்டத்தின் நோக்கத்தை முற்றிலும் மறந்தவர்களாய், தங்கள் இதயத்தைஇழந்த அரக்கர்களாய், கண்ணிருந்தும் குருடர்களாய் இருக்கிறார்களே எனவருந்தினார்.இறைவனின் திருச்சட்டத்தை ஒருகேலிக்கூத்து ஆக்கிவிட்டார்களே எனவேதனையுற்றார்.இப்படிப்பட்ட அர்த்தமற்ற, வேடிக்கையான, கடைபிடிக்கமுடியாத சட்டங்களைக் கடவுள் தந்ததாகக்கூறி அவர் பெயரையும் வீணாகப் பயன்படுத்திவிட்டார்களே (விப20:7) எனப் பொருமினார்.இ

யேசுவின் பார்வையில் இந்தத் தலைவர்கள் கடவுளைச் சார்ந்தவர்கள் அல்லர் மாறாகஅவரை மறுப்பவர்கள், வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும்,வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் உள்ளாகி ஆதரவும் ஆறுதலும் தேடி நம்பிக்கையோடுகடவுளை நாடி வருவோருக்கு இத்தகையசட்டங்கள் தடைக்கற்கள். ஏற்கனவே வேதனையால்உடைந்து போயிருக்கும் உள்ளங்கள் அர்த்தமில்லாத, தேவைஇல்லாத, கடைபிடிக்கமுடியாத,தாங்கமுடியாத, பளுவாயிருக்கின்ற இந்தச் சட்டங்களை ஏற்றுக்கொள்ளத்தயங்கும். இவற்றைத்திணிக்கும் கடவுளும் தங்களுக்குத் தேவையில்லை என முடிவுசெய்யும். இவ்வாறு கடவுளைஇரக்கமில்லாதவராகவும், புரிந்துகொள்ள சக்தியில்லாதவராகவும் அர்த்தமற்ற செயல்களைக்கோருபவராகவும், தாங்கமுடியாத பளுவைச் சுமத்துபவராகவும் காட்டுவது கடவுளை மறுப்பதாகும்.மறுக்கச் செய்வதாகும். இவர்களே இயேசுவின் பார்வையில் உண்மையான நாத்திகர்கள்.

ஆகவே இயேசு இத்தகைய தலைவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்குமாறுமக்களிடம் கேட்டுக் கொள்கிறார். "சுமத்தற் கரியபளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில்அவர்கள் வைக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூடமுன் வரமாட்டார்கள்”(மத்23:4) என்கிறார். "ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது. மனிதர்ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை”(மாற்2:27) எனப் பலமுறை அடித்துக் கூறுகின்றார்.மக்களைச் சிந்திக்கத்தூண்டும் பொருட்டு வேண்டுமென்றே ஓய்வுநாள்களில் குணமாக்குகிறார்.

8.4. நலமாக்கும் பணிக்கு ஓய்வு நாள் இல்லை
இங்கு ஓய்வுநாளில் நலமாக்கியது முறையே என இயேசு வாதாடுகிறார். அவ்வாறுகுணமாக்குவதுதன் உரிமை என நிறுவுகின்றார். தந்தையாம் கடவுள் மட்டுமே ஓய்வுநாளில்செயலாற்ற முடியும் என யூதர்கள் நம்பினர். ஆனால் இயேசு தாமும் ஓய்வுநாளில் செயலாற்றமுடியும் எனக் கூறுகிறார்(5:17). இது தம்மையே கடவுளுக்கு இணையாக்கும் இறை நிந்தனை எனயூதர்கள் இயேசுவைக் கொல்ல முயன்றனர்(5:18).

தாம் கடவுளுக்கு இணையானவர், அவரோடு இணைந்திருப்பவர் என்பதை இயேசு எடுத்துச்சொல்கிறார். எனெனில் தந்தை மட்டுமே செய்யக்கூடிய உயிர்அளித்தல் (இறந்தோரை உயிர்பெறச்செய்தல், குழந்தை பிறக்கவைத்தல், மழை பொழியவைத்தல்) தீர்ப்பு அளித்தல் ஆகிய செயல்களைமகனும் செய்யவேண்டும் எனத் தந்தை திருவுளம் கொண்டுள்ளார். எனவே மகனும் அவற்றைச்செய்கிறார் (5:19-30). ஆகவே தந்தையும் இயேசுவும் இணைந்து இருப்பவர்கள். இணைந்துசெயல்படுபவர்கள், இணையானவர்கள்.

இது இயேசு தாமே தம்மைப்பற்றிக் கூறும் சான்றல்ல. இயேசுவும் கடவுளும் இணைந்தேசெயல்படுகின்றனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. திருமுழுக்கு யோவான் (5:37-38)திருமறைநூல். இறுதியாக மாபெரும் சான்று மோசே (5:41-47). இயேசுவும் தந்தையும் இணைந்தேசெயல்படுகின்றனர். எனவே ஓய்வுநாளில ;உயிர் கொடுப்பது (நலமாக்குவது) தமது பணியேஎன்பதை இத்தனை சான்றுகள் வழியாக அவர் தெளிவுப்படுத்துகிறார்.

எனினும் இதனை யூதத்தலைவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அவர்கள் இயேசுவைநம்பவில்லை. தாங்கள் மோசேயின் சீடர்கள் என எண்ணினர். ஆனால் அவர்கள் மோசேயையும்புரிந்துகொள்ளவில்லை. அவர் வழிவந்த சட்டத்தை மாற்றி, திரித்து, பலவாக்கி, பளுவாக்கி, தாங்கமுடியாதசுமையாக்கி, கேலிக்கூத்தாக்கிவிட்டார்கள். எனவே மோசே அவர்களை மன்னிக்கப்போவதில்லை."தந்தையின் முன்னிலையில் உங்கள் மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் எனநினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள் மேல்குற்றம் சுமத்துவார்”(5:45) என இயேசு வேதனையோடும் விரக்தியோடும்கூறி, நலமாக்கும்பணிக் குஓய்வுநாள் இல்லை என எண்பிக்கிறார்.

8.5. நலமாக்கும் பணியாளனின் தன்மையும் இலக்கு மக்களும்
1) இலக்கு மக்கள்
இயேசு நலமாக்கிய மனிதர் 38 ஆண்டுகளாய் நோயுற்றிருந்தவர்; யாருடைய உதவியும்இல்லாதவர். தண்ணீர் கலங்கும் போது அவரைக் குளத்தில் இறக்கிவிடயாரும் இல்லை (5:7).எல்லோராலும் கைவிடப்பட்ட இம்மனிதர் மேல ;இயேசுவின ;பார்வை பதிகிறது. அவரே தம் நலமாக்கும்பணிக்கு முன்னுரிமை பெற்றவர் என்னும் தெளிவு இயேசுவுக்குப் பிறக்கிறது. எனவே நலமாக்கும்அருங்குறி நிகழ்கிறது.இன்றும ;இறைப்பணியாளரின் இலக்குமக்கள் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும். 38 ஆண்டகளென்ன, 38 நூற்றாண்டுகளுக்கு மேலாக ஓரங்கட்டப்பட்டு,புறக்கணிக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, தாழ்த்தப்பட்டு யாருடைய உதவியும் இன்றித் தவிக்கும் தலித்மக்கள் போன்றவர்கள் தான் இறையரசுப் பணியாளர்களின் இலக்கு மக்கள் என்னும் தெளிவு பிறக்கவேண்டும்.

2) நம்பிக்கை இழந்த மக்கள்
வாழ்வில் 38 ஆண்டுகள் நோயுற்ற நலிந்த ஒரு மனிதர் இனிநோய் நீங்கும் என்னும்நம்பிக்கையே இழந்து விடுவார். இத்தனை ஆண்டுகளாக யாருடைய உதவியும் பெற்ற அனுபவம்இல்லாத அவரிடம் யாராவது வந்து உதவிசெய்வதாகக் கூறினாலும் அது அவரில் நம்பிக்கை எழச்செய்யாது. இயேசு அவரிடம் "நலம்பெற விரும்புகிறீரா”(5:6) என்று கேட்ட பொழுது எனக்கு யார்இருக்கிறார்கள்? எனக்கெங்கே நலம் கிடைக்கப்போகிறது? (5:7) என்னும் தொனியில்தான் அவர்பேசுகிறார். இது இயல்பானது. இறையரசுப்பணியின் இலக்கு மக்களும் பலவேளைகளில்இப்படித்தான் இருப்பார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக நலிவுற்றிருக்கும் அவர்களில் எளிதாகநம்பிக்கை எழாது. வாழ்க்கையில ;முன்னேறிய அனுபவம் இல்லாத அவர்கள் நம்புவது கடினம்.எனவே பல வேளைகளில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர்களிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பும் கிடைக்காது. இந்தநேரத்தில் நலமாக்கும் பணியாளர் மனம் தளர வாய்ப்பு உண்டு. இதுஒருசோதனை. ஆனால் இறையரசு மனப்பான்மையில் ஊறிய பணியாளர்கள் நன்குதிட்டமிட்டு,தொடர்ந்து செயல்பட்டு, பின்னடைவுகளை வெற்றியின் படிகளாகக்கொண்டு மக்களின்ஒத்துழைப்பையும் படிப்படியாகப் பெற்றுப் பணிபுரிவர்.

3) நன்றி உணர்வற்ற மக்கள்
ஆண்டுகள் நோயில் நலிந்த மனிதரிடம் எல்லா நல்ல பண்புகளையும் எதிர்பார்க்கமுடியாது "படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்”என்று உம்மிடம் கூறியது யார்?(5:12). 38 ஆண்டுகளாய்N நாயுற்றிருந்த தம்மைக் குணமாக்கிய நல்லவரின் பெயரைக்கூட அவர்தெரிந்து வைத்திருக்கவில்லை. தாம் பெற்ற பெருநன்மைக்கு அவர்நன்றியுணர்வு பாராட்டியதாகத்தெரியவில்லை. இது இயல்புதான். வாழ்க்கையில் எப்போதாவது நன்மையைப் பெற்று 'நன்றி'என்று கூறவாய்ப்பு இருந்திருந்தால்தானே இப்போதுநன்றி கூறஇயல்பாக வரும்! ஆனால் நன்மைசெய்யப் பெற்ற அனுபவமே இல்லையே! நன்றி என்றுகூற இதுவரை வாய்ப்பே இல்லை! நல்லதுசெய்தோர்க்கு நன்றி கூறவேண்டும் என்று யாராவது சொல்லியும் கொடுத்ததில்லையே! அத்தகையஅறிவுரையோ, கல்வியோ, உருவாக்கமோ பெற இவர்கள் கொடுத்துவைக்கவில்லையே!

இறையரசுப்பணியில் இலக்குமக்களுள் பலர் இப்படித்தான் இருப்பார்கள். பல காலமாகமனிதம் சிதைக்கப்பட்டு உள்ளமும் உடலும் ஊனமுற்ற அவர்கள் இப்படித்தான் செயல்படமுடியும்.இதுஅவர்கள் குற்றமல்ல. தம்பணிக் குட்பட்டமக்கள நன்றி உணர்வற்றவர்களாக இருக்கிறார்களேஎனப் பலபணியாளர்கள் மனம்வருந்தி முறையிடுவதுண்டு, "நன்றிகெட்ட ஜென்மங்கள்”என்றுவிரக்தியுடன் குமுறுவதும் உண்டு. இதனால் பணியிலிருந்து விலகுவதும் உண்டு. இதுபணியாளரை இனம்காட்டும் சோதனை! கொள்கைப்பிடிப்பும், இயேசுவின் மனநிலையும், இறையரசுஉணர்வும் கொண்டபணியாளர்கள், இயேசுவைப் போன்று நன்றியை எதிர்பாராது தொடர்ந்துப்பணியாற்றுவர். நலமாக்கும் தன் குறிக்கோளை அடைந்து நிறைவுபெறுவர். நன்றியை எதிர்பார்த்துஏமாந்து, விரக்தியுடன் நலமாக்கும் பணியைத் துறக்கும் பணியாளர்கள் தாங்கள் இறையரசுப்பணிக்கு உரியவர்கள் அல்லர் என்பதை எண்பிப்பர்.

4) காட்டிக் கொடுக்கும் மக்கள்
ஓய்வுநாளில் நலமாக்குவது குற்றம் எனக் கருதிய யூதத்தலைவர்கள், அவ்வாறுநலமாக்கியவரைத் தண்டிக்கும் நோக்குடன் தேடிக்கொண்டிருந்த நேரத்தில், நலமானவர் "தம்மைநலமாக்கியவர் இயேசுவே எனயூதத் தலைவர்களிடம் அறிவித்தார்”(5:15). அவர்களும் இயேசுவைத்துன்புறுத்தினார்கள் (5:16). தமக்கு ஆபத்துவரும் என உணர்ந்த அம்மனிதர் இயேசுவைக்காட்டிக்கொடுக்கிறார். இதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே! 38 ஆண்டுகளாய்ப் படுத்தபடுக்கையாய்இருந்த அவர் இப்போதுதான் வாழத்தொடங்குகிறார். இந்நேரத்தில் கல்லால் எறிந்துகொல்லப்படஅல்லது கடினமான வேறு ஒரு தண்டனையை ஏற்கமனம் பொறுக்குமா? யாருக்குத்தான்பொறுக்கும்? எனவே பழியை இயேசுவின் மேல் போட்டுவிடுகிறார் (5:11,15).

இறையரசுபணியின் இலக்கு மக்களும் சிலவேளைகளில் இப்படித்தான் செயல்படுவார்கள்.தங்கள் நலம்பறிக்கப்படும்போது, அல்லது தங்களுக்கு ஆபத்துவரும்போது அவர்களும் காட்டிக்கொடுப்பது இயல்பே! தங்களை விடுதலைக்கு இட்டுச்சென்ற மோசேயையே இஸ்ரயேல் மக்கள்தலைமைப் பதவியிலிருந்து தூக்கிஎறிந்துவிட்டு "நாம் வேறு ஒருதலைவனை நியமித்துக்கொண்டுஎகிப்துக்குத் திரும்பிப்போவோம்”(எண்14:4) என்று கூறிக் கல்லால் எறியத் திட்டமிடவில்லையா?

இயேசுவிடமிருந்து எண்ணிறந்த நன்மைகளைப் பெற்றமக்கள் அவரைச் "சிலுவையில்அறையும், சிலுவையில் அறையும்” என்றுகத்தவில்லையா? (மாற்15:13-14). இப்படிப்பட்டஅனுபவங்கள் உண்மையான இறையரசுப் பணியாளர்கள் வாழ்விலும் வந்தே தீரும். இத்தகையஅனுபவங்கள் மிகவும்கசப்பாக இருக்கும், மனம்வெதும்பி அழச்செய்யும். "உம் அடியானுக்கு ஏன்இந்தக்கேடு?... இம்மக்களை நானா கருத்தரித்தேன்? நானா அவர்களைப ;பெற்றெடுத்தேன்?என மோசேயைப் போன்று (எண்11:11-12) முறையிடும் சூழல்கள் எழலாம். "ஆண்டவரே நீர் என்னைஏமாற்றிவிட்டீர், நானும் ஏமாந்துபோனேன். .. நான் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன்”(எரே20:7) என்று எரேமியாவைப் போன்று நெஞ்சம் குமுறவும் நேரிடலாம். "என்இறைவா, ஏன் என்னைக்கைவிட்டீர்?”(மாற்15:34) என இயேசுவைப் போன்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து குரல் எழுப்பும்நேரம் வரலாம்.

இதுவே இறையரசுப் பணியாளரின் அக்னிப் பரிட்சையாக இருக்கும். இத்தகையபரிட்சையில் பணியாளருள் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்குமேல் தோற்றுவிடுவார்கள்.நல்லவை பல புரிந்த தாம் காட்டிக ;கொடுக்கப்பட்டதால் மனக்கசப்படைந்து பணியிலிருந்து விலகிவிடுவார்கள். இந்தச் சூழ்நிலையிலும் தம் இலக்குமக்களைப் புரிந்துகொண்டு அன்பு செய்துதொடர்ந்து பணிபுரிய முன்வருவோர் ஒருசிலரே! அவர்கள் மோசேயை, எரேமியாவை, இயேசுவைப்போன்றவர்கள். அவர்கள்தான் உண்மையான பணியாளர்கள். இப்படிப்பட்டவர்கள் பலர் இன்றுஇறையரசுப் பணிக்குத் தேவை.

9. புதிய வாழ்க்கை முறை - பகிர்வு
(அப்பம் பகிர்தல் 6:1-71)

;9.1. மூன்று வகை உணவுகள்
யோவான் 6ஆம் அதிகாரம்கடவுள் மனிதருக்குத் தரும் வெவ்வேறு வகையான உணவுகள்பற்றிப்பேசுகிறது. மனிதரைப் படைத்தவுடன் கடவுள் முதல் செயலாக அவர்களுக்கு உணவுஅளிக்கிறார் (தொநூ1:29). வரலாறு முழுவதுமே அவர்களைப் பராமரிக்கும் இப்பணியைக் கடவுள்செய்துவருகிறார்.

1) உடல் உணவு
மனிதருக்குத் தேவையான உணவுகளில் உடல் உணவே முதன்மையானது:இன்றியைமையாதது. உடல்உணவுஇல்லையேல்சாவுதான்விளைவு. இவ்வுணவுஇல்லாதநேரத்தில் பிற நல்லசெயல்களுக்கு வாய்ப்பே இராது. 'பசி வந்தால் பத்தும் பறந்துபோம்' என்பதுபழமொழி. உடல் உணவு இன்றி நலியும்மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கவும ;இயலாது. 'வயிற்றைநிரப்பியபின் வார்த்தையைப் போதி' என்பது முன்னோர் வாக்கு. இயேசுவும் தம் பணியின்தொடக்கமாக இன்றியமையாத உணவாகிய உடல் உணவைக்கொடுத்து மக்களை வாழவைக்கிறார்.இதுபற்றி இவ்வதிகாரத்தில் முதல்பகுதி (1-15) பேசுகிறது.

2) இறைவார்த்தை உணவு
உடல் உணவால் மட்டும் மனிதர் மனிதராக வாழ்ந்துவிடமுடியாது. அவர்கள் உள்ளத்திற்கும்உணவுதேவை. நல்ல ஆறுதலான ஊக்கமூட்டும், வாழவைக்கும் வார்த்தைகள் அவர்களுக்குத்தேவை. "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும்வாழ்வர்”(மத்4:4) என்பது இயேசுவின் வாக்கு. வாழவைக்கும் இறைவாக்கை மக்களுக்குத்தருவது இயேசுவின் முக்கியப்பணியாக இருந்தது. அவர் தந்த இறைவார்த்தை மக்களுக்குஉணவாக அமைந்தது. இறைவார்த்தை என்னும் இவ்வுணவைப் பெற மக்கள் பெருந்திரளாய் இயேசுவிடம் வந்தனர் இவ்வுணவை அருந்தி வாழ்வு பெற்றனர். "இறைவார்த்தை என்னும்உணவைத ;தரும் இயேசுதாமே இறைவார்த்தையாக இருக்கிறார்; அவரே உணவு, வானகத்திலிருந்து(தந்தையிடமிருந்து) வந்தஉணவு (6:41) வாழ்வுதரும்உணவு (6:48). இவ்வார்த்தை உணவுபற்றி -உள்ளத்திற்கான உணவுபற்றி இவ்வதிகாரத்தின் மையப்பகுதி (35-50) பேசுகிறது.

3) நற்கருணைஉணவு
இந்த அதிகாரத்தில் இறுதிப்பகுதியில் (51-59) இயேசுதம் சீடருக்குத் தருகின்ற சிறப்புஉணவுபற்றி யோவான் பேசுகிறார்: "என் சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்”(6:54) "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தவாழ்வு தரும் உணவுநானே”(6:51) என்று கூறி இந்த உணவை அருந்துமாறு யாவருக்கும் அழைப்பு விடுக்கின்றார்.உடல் உணவு உயிர் வாழச் செய்கிறது. வார்த்தைஉணவு மனிதராக வாழச் செய்கிறது. நற்கருணைஉணவு இயேசுவின் பார்வையிலே, பாதையிலே வாழச் செய்கிறது.

9.2. அப்பம் பகிர்ந்துண்ணல்
அப்பம் பகிர்ந்துண்ணும் நிகழ்வுகள் பற்றி எல்லா நற்செய்திநூல்களுமே குறிப்பிடுகின்றனமாற் 6:32-44; 8:1-19; மத் 14:13-21; 15:29-38; லூக் 9:10-17; யோவா6:1-15. இயேசுவின் வாழ்வில்நிகழ்ந்த ஏனைய நிகழ்வுகளை விட அப்பம் பகிரும் நிகழ்வு அதிகமானவேளையில் பேசப்படக்காரணம் அதற்கும் திருச்சபையில் கொண்டாடப்பட்ட நற்கருணை விருந்துக்கும் உள்ளதொடர்பாகத்தான் இருக்கவேண்டும்.

1) எலிசாவின் பகிரல்
இதுபோன்ற ஒரு நிகழ்வு 2அர 4:42-44 இல் கூறப்பட்டுள்ளது. அங்கு இறைவாக்கினர்எலிசா 20 சிறிய அப்பங்களைக ;கொண்டு 1000 பேருக்கு வயிறார உணவளித்து மீதியும் எடுத்தநிகழ்வுபற்றிப் பேசப்படுகிறது.

2 அரசர் 4: 42-44
யோவான் 6:1-15
நாட்டில் பஞ்சம் (4:38) உண்ணஉணவில்லை(6:5)
ஒருவர் 20 அப்பம் சிறுவன் ஐந்து அப்பம்
கொண்டுவரல்(4:42) கொண்டுவரல்(6:9)
மக்களுக்குஉணவைக் கொடு என்னும்
எலிசாவின்ஆணை(4:43)
மக்களைஅமரச்செய்யுங்கள் என்னும்
இயேசுவின் ஆணை(6:10)
பணியாளர்: நூறுபேருக்கு
இதைநான் எப்படிபரிமாறுவேன்(4:43)
அந்திரேயா: "இத்தனைபேருக்கு
(5000) இவை எப்படிப் போதும்”(6:9)
பணியாளர்பரிமாறல்(4:44) இயேசுபரிமாறல்(6:11)
அவர்கள் உண்டனர்(4:44) அவர்கள் வயிறார உண்டனர்(6:12)
மீதியும் இருந்தது(4:44) 12 கூடை நிறைய மீதிஇருந்தது (6:13)


2) நற்கருணைக் கூறுகள்
யோவான் நற்செய்தியில் நற்கருணையை ஏற்படுத்தும் நிகழ்ச்ச pகுறிக்கப்படாதது பலருக்குவியப்பாக இருக்கிறது. எனினும் அப்பம் பகிர்ந்துண்ணும் இப்பகுதியில் நற்கருணைக்கொண்டாட்டத்தின் கூறுகள் காணப்படுகின்றன.

நற்கருணைக் கொண்டாட்டம் அப்பம் பகிர்ந்துண்ணல்
இயேசுஅப்பத்தைஎடுத்து(மாற்-மத்-லூக்) இயேசு அப்பங்களை எடுத்து(6:11)
கடவுளுக்குநன்றிசெலுத்தி(லூக்-பவுல்) கடவுளுக்கு நன்றி செலுத்தி(6:11)
அவர்களுக்குக்கொடுத்தார் அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார் (6:11)
கிண்ணத்தைக் கொடுத்தார்(மாற்- மத்- லூக்) மீன்களைப் பகிர்ந்தளித்தார்(6:12)
பலருடைய பாவமன்னிப்புக்காக(மத்) ஒன்றும் வீணாகதபடி(6:12)

அப்பம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வுகளை நற்செய்தியாளர்கள் எழுதியபோது அன்றையநற்கருணைத் திருவழிபாட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். இதுயோவான்நற்செய்தியில்மிகத்தெளிவாகத்தெரிகிறது. ஆகவே அப்பம் பகிர்ந்தளித்த இந்தநிகழ்வில்நற்கருணை ஏற்படுத்திய நிகழ்வின் பிரதிபலிப்பைக் காணலாம்.

9.3. பலுகலா, பகிர்தலா
இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பலுக்கினாரா? அல்லதுபகிர்ந்துகொடுத்தாரா என்னும ;கேள்வி பலருடைய மனத்திலும் எழுகிறது. காலாகாலமாக இயேசு ஐந்துஅப்பங்களையும் இரண்டு மீன்களையும் பலுக்கி ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார் என்று கேட்டுவந்த பலருக்கு இயேசு உணவைப்பலுக்கியதாக இல்லை, பகிர்ந்தே அளித்தார் என்று சொல்லும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இது இயல்பானதே.

இந்த அரும் அடையாளநிகழ்வை (6:1-15) வாசித்துப் பார்க்கும் போது இயேசு அப்பம்பலுக்கினார் என்று சொல்லப்படவில்லை. மாறாக மக்களுக்குப ;பகிர்ந்தளித்தார் (6:11) என்றேஉள்ளது. ஆனால் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேர் உண்டுபன்னிரண்டு கூடை நிறைய மீதியும் எடுக்க வேண்டுமானால் அவ்வளவு அப்பம் எங்கிருந்து வந்தது?அப்பம் பலுகாமல் இருந்தால் இதுஎப்படி நிகழ முடியும்? எனவே அப்பம்பலுகியிருக்க வேண்டும்என்று மனம் முடிவு செய்கிறது (ஒத்தமைநற்செய்தி).

நடந்தது பின்வருமாறு: இயேசுவின் போதனையைக் கேட்ட பல்லாயிரம் பேர் இயேசுவோடுஇருக்கிறார்கள். மாலை ஆகிவிட்டது பலரிடம் உணவு இல்லை. உணவு வாங்கக் கடையும் இல்லை.யாவருக்கும் உண்ண உணவு வேண்டும் என்பதில் இயேசு முனைப்பாய் இருக்கிறார். "அவர்களுக்குஉணவு கொடுங்கள்”என அவர் சீடரிடம் கூறுகிறார். முதலில் ஒரு சிறுவன் வைத்திருந்த ஐந்துவாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே இயேசுவிடம் வந்து சேருகின்றன. இவைஎந்த மூலைக்கும் ஆகாது என்பது உண்மையே (6:9). இறுதியில் இயேசு அப்பங்களை எடுத்துக்கடவுளுக்கு நன்றிகூறிக் கொடுத்தார். யாவரும் உண்டனர். மீதியும் இருந்தது(6:11-13).

முதல்நிலையும் (ஐந்து அப்பங்கள் இரண்டு மீன்கள் மட்டும்) இறுதிநிலையும் (ஐயாயிரம்பேர் உண்டு பன்னிரண்டு கூடை நிறைய மீதியும ;இருந்தது) தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.இடையே என்ன நிகழ்ந்தது என்பது ஒரு கேள்விக்குறி.

இடையே அப்பம் 'பலுகியது' என நம் மனம் கூறுகிறது. அது இயல்பாகத் தெரிகிறது.எத்தனையோ அருங்குறிகள் செய்த இயேசுவுக்கு இது பெரிதல்ல. ஒன்றுமில்லாமையிலிருந்துஉலகையே படைக்கும் சக்திகொண்ட கடவுளின் மகனுக்கு இது இயலாத ஒன்று அல்ல. இத்தகையபுரிதலை உறுதிசெய்வது போல் ஒத்தமை நற்செய்திப் பகுதிகள் அமைந்துள்ளன. அவற்றில் இயேசு"அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப்பிட்டுப் பரிமாறக் கொடுத்தார் (மாற்6:41 இணை) என்று உள்ளது. அந்த ஐந்து அப்பங்களையே பரிமாறினார்கள் என்றால் அப்பம் பலுகியிருக்க வேண்டும் என்னும் முடிவு இயல்பானது.

ஆனால் யோவான் நற்செய்திப் பகுதியைப் பார்க்கும் போது, சற்று மாறுபட்டமுறையில்சிந்திக்கவாய்ப்பிருக்கிறது. முதலில் இயேசுவிடம் ஐந்து அப்பங்கள்தான் இருந்தன. இறுதியில்ஐயாயிரம் பேர்உண்டு மீதியும் எடுக்கும் அளவுக்கு இருந்தன. இடையே என்ன நடந்தது? அப்பம்பலுகியதா? பலுகியிருக்கலாம். ஆனால் பலுகத்தான் வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் இல்லை.பலர் தங்களிடம் இருந்த அப்பங்களை மக்கள் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பதற்காக இயேசுவிடம்கொடுத்திருக்கலாம். அப்பங்கள் உண்ட கூட்டத்தினரில் ஒருபகுதியினர் இயேசுவின்வார்த்தைகளால் கவரப்பட்டுத் தங்களையே மறந்தவர்களாய் அவரைப் பின்பற்றியவர்கள்.இவர்களிடம் உணவில்லை. மாறாக கூட்டத்தின் இன்னொரு பகுதியினர் பாஸ்காவிழாவைக்கொண்டாட எருசலேம் நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் (யூதருடையபாஸ்கா விழாஅண்மையில் நிகழவிருந்தது-6:4). இவர்கள் எருசலேம் செல்லும் வழியில்தான் (கலிலேயாக்கடலின் மறுகரை) இவ்வரும் அடையாளம் நிகழ்கிறது. இவர்களிடம் நிச்சயமாக உணவு இருந்திருக்கவேண்டும். அன்றையநாளிலே வழியில் உணவகங்கள் அதிகமாக இல்லாத காரணத்தால்,பயணத்தின்போது எல்லாரும் உணவு கொண்டு சென்றாக வேண்டும். அல்லது பாதிவழியில் சாகவேண்டிஇருக்கலாம்.

இத்தகைய பார்வையில் தவறில்லை. இதுவும் ஒர் அரும் அடையாளமே. இறைவல்லமையால்அப்பங்களைப் பலுகச் செய்வதை விடமனிதரின் கல் நெஞ்சங்களைக் கரைத்து அவர்களைப் பகிரவைப்பது கடினமான ஒன்றே! இயற்கை விதிகளைக் கடந்து செயல்பட்டால் தான் புதுமை அல்லதுஅரும் அடையாளம் என்னும் கருத்து தவறானது. இறைவனின் வல்லமை காட்டப்படுவதைத் தான்புதுமை அல்லது அரும ;அடையாளம் என்கிறோம். ஒத்தமை நற்செய்தியாளர் புதுமைகளைஇறைவனின் வல்ல செயல்கள் (துனமிஸ்) என்றே குறிப்பிடுகின்றனர். பசித்திருந்த மக்கள் சார்பாகச்செயல்பட்டு, கூட்டத்தினரைப் பகிரவைத்து, யாவரும் வயிறார உண்ணச்செய்த செயல் ஒருமிகப்பெரியஅரும் அடையாளமே என்பதில் ஐயமில்லை.

9.4. பகிர்தலே இன்றைய பணி
இயேசு செய்த அரும் அடையாளம் பலுகலாக இருக்கத் தேவையில்லை. பகிர்தலாகவும்இருக்கலாம் என்னும் இத்தகைய பார்வை தவறில்லை என்பதுமட்டுமல்ல, இதுநமக்கு ஒருநல்லபாடமாகவும்அமையலாம். இயேசு தம் வல்லமையால் அப்பங்களைப ;பலுக்க pமக்களுக்குக்கொடுத்திருந்தார் என்றால், நாம் அதனைப் போற்றத்தான ;முடியும்; அதற்காக இறைவனுக்குப்புகழ்பாடத்தான் முடியும். சாதாரண மனிதர்கள் நாம் அவ்வாறு செய்யமுடியாது. மாறாக, இயேசுஉணவைப் பதுக்கிவைத்திருந்த மக்களைத் தூண்டி அவர்கள் கல்மனத்தை மாற்றி, தங்களிடம்உள்ளதை மற்றவரோடு பகிர்ந்து உண்ணச்செய்தார் என்றால் அதை நாமும் செய்யமுடியும். அதுநமக்கு ஒருமுன் மாதிரி; இயேசுவின் செயல் நமக்கு ஒருபடிப்பினை ஆகிறது.

இன்றைய உலகின் பிரச்சனை பற்றாக்குறையல்ல, பகிராக்குறையே. இறைவன் படைத்தமக்களுக்குத் தேவையான அத்தனைப் பொருள்களையும் அவரே ஆக்கித்தந்துள்ளார். ஆனால்அவை நியாயமாகப் பகிரப்படவில்லை ஒரு சில தனிநபர்களும், குழுக்களும், நாடுகளும் இறைவன்எல்லா மனிதருக்கும் என்று கொடுத்த பொருள்களைத் தங்களுக்கு என்று பிடித்துவைத்திருக்கின்றனர் பதுக்கிவைத்திருக்கின்றனர். இந்நிலை மாறவேண்டும் எல்லாருக்குமென்றுபடைக்கப்பட்ட பொருள்கள் எல்லாருக்கும் போய்ச்சேரவேண்டும் பதுக்கிவைக்கப்பட்ட பொருள்கள்பகிரப்படவேண்டும். இதைச் செய்வது இயேசுவின் சீடரின் பணி.அன்று இயேசு மக்களைப் பகிர வைத்தது போல் இன்றும் மக்கள் பகிரத் தூண்டப்படவேண்டும் அதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். நிர்பந்தம் தேவையானால் அதுவும்செய்யப்படவேண்டும். மக்களிடையே பற்றாக்குறை, வறுமை நீங்க வேண்டும். இவற்றை நீக்கக்கடவுளிடம் செபித்தால் மட்டும் போதாது. வறுமைக்கும் பற்றாக்குறைக்கும் காரணம் கடவுளில்லைநாமேதான். எனவே நாம் தான் அவற்றைப் போக்கச் செயல்பட வேண்டும். அதற்கு இயேசு சிறந்தமுன்மாதிரி காட்டிச் சென்றுள்ளார்.

10 புதிய தலைமை
(நல்ல ஆயன் 10:1-21)

10.1. நல்ல ஆயன்
பார்வையற்றவருக்குப் பார்வைகொடுத்த இயேசு இங்கு வாழ்வுகொடுப்பவராகக்காட்டப்படுகிறார்.தம்மை ஓர்ஆயனாக உருவகப்படுத்தி, ஆடுகளுக்குத் தம் உயிரையே கொடுக்கும்நல்ல ஆயனாக அவர் வர்ணிக்கப்படுகிறார் (10:11, 15).ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்துவந்த இஸ்ரயேல் மக்கள், அத்தொழில்அடிப்படையிலான உருவகங்களைப ;பயன்படுத்தி வந்தனர். கடவுளையும் (தொநூ49:24;திபா23,78:52) குறிப்பாகத் தம் அரசர்களையும் (1அர22:17; எரே10:21; 23:1-2) ஆயராகப் பார்த்தனர். ஓர்ஆயருக்கு இருக்க வேண்டிய பண்புகளைத் தம் அரசரில் - தலைவர்களில் - எதிர்பார்த்தனர்.

1) நல்ல ஆயன் இருக்க ஆடுகளுக்குக் குறையேது?
திருப்பாடல் 23 நல்லஆயனைப்பற்றிப் பேசுகிறது. நல்ல ஆயன் ஆடுகளை மேய்க்கும்போது அங்கே குறையேதும் இராது. ஏனெனில் நல்ல ஆயன் பாதுகாப்புத் தருவார் (வச2,4); உணவும்நீரும் மிகுதியாக உள்ள நல்லமேய்ச்சல் நிலத்திற்குக் கூட்டிச்செல்வார் (வச2); புத்துயிரும் புதுஆற்றலும் தருவார்(வச3); அவர் நேரிய வழியில் நடத்திச் செல்வார். எனவே பாலை நிலத்தில்பாதை தவறிப் பாதிப்பு ஏற்படாது (வச3). அவரதுகோல் நெருங்கிய, நட்பு நிறைந்த, அன்பு தோய்ந்தஉறவுக்கு அடையாளம். அவரது நெடுங்கழி ஆயனின் அதிகாரத்திற்கும் நோய்களைக்கண்டுபிடித்து, ஒழுங்குப்படுத்தி, ஆபத்திலிருந்து பாதுகாக்கும் ஆயனின்செயல் முறைக்கும்சின்னமாய் விளங்குகிறது.நல்ல ஆயனுக்கு ஆடுகளைத் தெரியும் (10:15); அவைகளைப் பெயர் சொல்லிக்கூப்பிடுவான்(10:3-5). அவைகளும் அவன் குரலைக் கேட்டு அவனைப் பின் தொடர்கின்றன (10:3-5). அறிமுகமாகாத ஒருவரை அவைபின் தொடரா (10:5).

2) ஆட்டுக் கொட்டிலுக்கு வாயில்
நல்லஆயன் முறையாக வருபவன்; வாயில் வழியாக நுழைபவன் (10:1). காவலரும்அவனுக்கு வாயிலைத் திறந்து விடுகின்றனர். ஆடுகளை மேய்ச்சலுக்குக ;கொண்டு போகும்போது,திறந்த வெளிகளில், வாயிலற்ற தற்காலிகமான ஆட்டுக்கொட்டில்களுக்கு ஆயனே வாயிலாகஅமைகிறான ;ஆடுகளின் பாதுகாப்பிற்காக அவனே வாயிலாகப் படுத்துக் கொள்கிறான். ஆடுகள்அவன் வழியாகவே உள்ளேபோகும் வெளியேவரும ;(19:7-9); பாதுகாப்பாக இருக்கும்.

3) உயிரைக் கொடுப்பவன
;நல்ல ஆயன் ஆடுகளின் மேல் அக்கறை உள்ளவன்(10:13); ஆடுகளுக்கு ஆபத்துவரும ;போது துணிந்து நின்று பாதுகாப்பவன். ஓநாய் வரும்போது அவன் ஆடுகளை விட்டுஓடிப்போகமாட்டான் (10:12); ஆடுகளுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வான் தம் உயிரையே தம் ஆடுகளுக்காகக் கொடுக்க முன் வருவான் (10:11,15). ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும்நிறைவாகப்பெறும் பொருட்டுச் செயல் படுபவனே நல்ல ஆயன்.

10.2. பழைய தலைமை
1) இயேசுவுக்குமுந்திய தலைவர்கள்

இந்தப் பகுதி முழுவதிலும் ஆடுகள் மக்களையும் ஆயர்கள் தலைவர்களையும் குறித்துநிற்பது தெளிவு. ஆயர்கள் - தலைவர்கள் - நல்லவர்களாக இல்லை. அவர்கள் வாயில் வழியாகநுழையாமல் வேறுவழியாக ஏறிக்குதித்து வந்தவர்கள் (10:1). அதாவது முறையாகத் தலைமைநிலைக்கு வராது, பணம், செல்வாக்குப் போன்றவற்றால் வந்தவர்கள். அவர்கள் திருடர்கள்,கொள்ளையர்கள் (10:1). இயேசுவுக்கு முன் வந்த தலைவர்களுள் பலர் இத்தகையவரே (10:8). அவர்கள்திருடுவதற்கும் கொல்லுவதற்கும் வந்தவர்கள் (10:10). அவர்கள் கூலிக்கு மேய்ப்பவர்கள் (10:12).ஆபத்து வரும்போது அவர்கள் ஆடுகளை விட்டு விட்டு ஓடிப் போவார்கள் (10:12). அவர்களுக்குஆடுகள் மேல் அக்கறை இல்லை (10:13). ஏனெனில் அவர்கள் முறையான ஆயர்களும் அல்ல ஆடுகள் அவர்களுக்கு உண்மையில் சொந்தமும் அல்ல (10:12).

2) ஆடுகள் மீது அக்கறையற்ற ஆயர்கள்
நல்ல ஆயன் பற்றிய இவ்வுமைக்குப் பின்னணியாக இருப்பது எசேக்கியேல்இறைவாக்கினரின் 34ஆம ;அதிகாரம். அங்கு ஆடுகள் மீது கவலையற்ற ஆயர்கள் காட்டமானதாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இறைவன் ஆயர்களை - தலைவர்களை -பார்த்து, "நீங்கள்கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்தவற்றை அடிக்கிறீர்கள்;மந்தையையோ மேய்ப்பதில்லை. நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை பிணியுற்றவற்றிற்குக்குணமளிக்கவில்லை காயமுற்றவற்றிக்குக் கட்டுப்போடவில்லை வழிதப்பியவற்றைத் திரும்பக்கூட்டிவரவில்லை காணாமல் போனவற்றைத் தேடவில்லை” (எசே 34:3-4). எனவே,#8220;தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே என்மேல் ஆணை - என் மந்தை கொள்ளையிடப்பட்டது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. என்ஆயர்கள்... என் மந்தையைமேய்க்காமல் தாங்களே மேய்ந்து கொள்கிறார்கள்”(எசே34:6-8). எனவே ஆயர்களுக்கு எதிராகஇருக்கிறேன். #8220;என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வேன். மந்தைமேய்ப்பினின்று அவர்களை நீக்கிவிடுவேன்”(எசே34:10).

3) இறைவன்அனுப்பும் ஆயன்
பழைய ஆயர்கள் தம் மந்தையை முறையாக மேய்க்காததால் இறைவன் தாமே தம்மந்தையைமேய்க்கப்போவதாகக் கூறுகிறார் (எசே34:11-31); தாவீதின் மரபிலிருந்தே நல்ல ஆயன் தோன்றப்போவதாக உறுதி கூறுகிறார். (எசே34:23-23). அந்த நல்ல ஆயனே வரவிருக்கும் மெசியா (எசா40:11). அவரே இங்குப ;பேசிக்கொண்டிருக்கும் நாசரேத்தூர் இயேசு (யோவா10:11-14). அவரே"ஆயனில்லா மக்களைப்போலிருந்த”(மாற்6:34) மக்கள் மீது இரக்கம் கொள்பவர். காணாமற்போனஆட்டைத் தேடிக் கண்டுபிடிப்பவரும் அவரே (லூக்15:3-7).

10.3. புதிய தலைமை
புதிய தலைமை நல்ல தலைமை புதிய தலைமையின் மூன்று பண்புகள் இவ்வதிகாரத்தில்முன்னணிப் படுத்தப்படுகின்றன.

1) மக்களை நன்கு அறிதல்
தலைவர் மக்களை நன்கு அறிந்தவராய் இருக்கவேண்டும். பெயர்சொல்லி அழைத்தல்(10:3) என்பது மக்களை முழுமையாக அறிந்திருப்பதைக் குறிக்கிறது. இங்கு மக்களின் பெயர்களைத்தெரிந்து வைத்திருப்பது முக்கியமல்ல: மக்களின் அனைத்துப் பின்னணிகளையும்பிரச்சனைகளையும் சூழ்நிலைகளையும் தலைவர் தெரிந்துவைத்திருக்கவேண்டும். மக்களைப்பாதிக்கின்ற சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு, சமயப்பிரச்சனைகள் அனைத்தையும்பற்றி அவர் தெளிவும் நிலைப்பாடும் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் தலைவர் மக்களைஅறிந்துள்ளார் என்று கூறமுடியும்.

2) பாதை தெளிவாய்த் தெரிதல்
மக்களை வழிநடத்த வேண்டியபாதை தலைவருக்குத் தெளிவாய்த் தெரிந்திருக்கவேண்டும்.பாலை நிலத்திலே பாதை தெளிவில்லாது ஆடுகளை நடத்திச் சென்றால், அவைகள் பெரும்பாதிப்புக்குள்ளாகும் தண்ணீரும் பசும்புல்லும் இன்றி அவை சாக நேரிடலாம். அதுபோல் பார்வையும்பாதையும், தெளிவில்லாத தலைமை ஆபத்தானது. எல்லாவற்றையுமே பரிசோதித்துப் பரிசோதித்துச்செய்தால் தலைமையில் நம்பிக்கைவராது. தெளிவான, தீர்க்கமான திட்டவட்டமான செயல்முறைகள்தேவை.

3) பாதுகாக்க முன் வரல்
மக்கள்பாதிக்கப்படும் போது தலைவர் மக்களைப் பாதுகாக்க வல்லவராக இருக்கவேண்டும்.ஆடுகளுக்கு ஓநாயும் வேறுபல்வகையான ஆபத்துகளும ;(1சாமு17:34-36; எசா31:4) பாதிப்புஏற்படுத்துவது போலமக்கள் வாழ்வைப் பல்வேறு புதிய புதிய தீயசக்திகள் பாதித்துக்கொண்டேஇருக்கின்றன. அவற்றை இனம்கண்டு, அவற்றால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, அவற்றிலிருந்துமக்களைப் பாதுகாக்கவேண்டியது தலைவரின் தலையாய பொறுப்பு.இப்பணி ஆபத்தான ஒன்று.ஆடுகளைப் பாதுகாக்கும் ஆயனை ஓநாய்களும் கொடிய விலங்குகளும் தாக்குவது போல, தீயசக்திகளும் தலைவரைத் தாக்கலாம்; அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்; அவர் உயிரையேபறிக்கலாம். ஆடுகளுக்காக எந்ததியாகத்திற்கும் தலைவன் தயாராய் இருக்கவேண்டும்.இயேசுவைப் போலநல்ல ஆயர்-நல்லதலைவர் தம் ஆடுகளுக்காக - தம்மக்களுக்காக - தம்உயிரையே கொடுப்பார்(10:11,15).

11. சீடருக்கான இயேசுவின் மன்றாட்டு
(குருத்துவ மன்றாட்டு 17:1-26)

11.1. இயேசுவின் குருத்துவ மன்றாட்டு
இயேசுவின் பிரியாவிடையின் இறுதிப்பகுதி ஒருமன்றாட்டாக மலர்கிறது. யோவான் 17ஆம் அதிகாரத்தில் இம்மன்றாட்டு இடம்பெறுகிறது. பொதுவாகவே பிரியாவிடைகள் தம்இறுதிப்பகுதியில் ஒருமன்றாட்டாக உருவெடுப்பது உண்டு. மோசேயின் பிரியாவிடையின் இறுதிப்பகுதி(இச32-33) மன்றாட்டாகவும் ஆசியுரையாகவும் இருப்பது இதற்குநல்லதோர் எடுத்துக்காட்டு.

இம்மன்றாட்டு இயேசுவின் பிரியாவிடையின் முத்தாய்ப்பாய் அமைகிறது. தம்பிரிவுக்குப் பின் சீடர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்த இயேசு இப்போதுசீடர்களுக்காய் மன்றாடுகிறார்; அவர்களைத் தந்தையிடம் ஒப்படைக்கிறார். இயேசுதுன்புறுமுன்னர் செய்யப்பட்டதெனினும், இம்மன்றாட்டு இயேசுவின் மாட்சிமை பளிச்சிடுகிறது."தந்தாய் நேரம் வந்துவிட்டது. உம்மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு, நீர்மகனை மாட்சிப்படுத்தும் என்னும் வேண்டுகோளோடு தொடங்கும ;இம்மன்றாட்டு முழுவதிலும் இயேசுமாட்சி பெற்றவராகவேதோன்றுகிறார் (17:1, 4-5, 22, 24).இச்செபத்திற்குக் 'குருத்துவமன்றாட்டு' என்னும் பெயரும் உண்டு. இங்கு இயேசுஇறைவனுக்கும் மனிதருக்கும் இடையேநிற்கும் இடைநிலையாளராகச் செபிக்கிறார். அவர்இறைவனின் ஒரு குருவாக நின்று தம் இன்றையச் சீடருக்காகவும் வருங்காலச் சீடருக்காகவும்செபிக்கிறார். எனவேதான் அலக்சாந்திரியசிரில் காலத்திலிருந்தே (கி.பி. 5ஆம்நூற்றாண்டு)இது ஒரு குருத்துவச் செபமாகக் கருதப்பட்டுவருகிறது அவர் 'பலிஒப்புக் கொடுப்பவர்' என்னும்நிலையைவிட 'பரிந்துபேசுபவர்' (1யோவா2:1, உரோ8:34) என்னும் நிலையில்தான் இயேசு இங்குஒரு குருவாகக் கருதப்படுகிறார்.

11.2. ஐந்து வேண்டல்கள்

தம் சீடருக்காக மன்றாடும் இயேசு இக்குருத்துவச் செபத்தில் அவர்களுக்காக ஐந்துவேண்டல்களைத் தந்தையிடம் எழுப்புகிறார்.

1) மாட்சி அளித்தல்
தம்மை மாட்சிமைப்படுத்துமாறு இயேசுதந்தையிடம் வேண்டுகிறார் (17:1,4-5). இங்குஇயேசுதமக்காக வேண்டுவது போல் தென்படலாம். ஆனால் உண்மையில் அவர் சீடருக்காகவேவேண்டுகிறார். ஏனெனில் 'மாட்சி' என்பது அவர் துன்புற்று இறத்தலைக் குறிக்கும். அப்படியானால்,'என்னை மாட்சிப்படுத்தும்' என்னும் போது 'நான் துன்பத்தை ஏற்று, என் சீடருக்காக என் உயிரையேகையளிக்கச் செய்யும், என்பது பொருளாகிறது.

2) சீடரைக் காத்தல்
தந்தை தம் சீடர்களைக் காத்தருள இயேசு உருக்கமாய் வேண்டுகிறார் (15:11-15); அவர்உலகில் வாழ்ந்தபோது அவர்களைக் காத்து வந்தார். "நான் பாதுகாத்தேன்; அவர்களுள் எவரும்அழிவுறவில்லை”(15:12) என்று அவரே கூறுகிறார். இனி அவர் உலகில் இருக்கப் போவதில்லை(15:11); தந்தையிடம் செல்லவிருக்கிறார் (15:13). எனவே தாம் பிரிந்து செல்லுமுன் சீடர்களைத்தந்தையின் பாதுகாப்பில் ஒப்படைத்து, தந்தையே, "தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருளவேண்டுமென்று”(15:15) இயேசு வேண்டுகிறார்.

3) பணிக்காக அர்ப்பணித்தல்
சீடர்கள் இறைவார்த்தையை - உண்மையை - இயேசுவிடமிருந்து பெற்றவர்கள், தாங்கள்பெற்ற உண்மையை - வார்த்தையை - நற்செய்தியை - அவர்கள் பறைசாற்ற வேண்டும்.இந்தப்பணிக்காக அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அர்ப்பணிக்கப்பட்டவர்கள் (இதுவேஎபிரேய மொழியில் 'அர்ச்சித்தல்' - 'புனிதப்படுத்துதல்' என்னும் சொல்லின் பொருள்). இயேசு"தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு. உலகுக்குஅனுப்பப்பட்டவர்” (10:36). அதுபோலசீடரும்இறைவார்த்தை நற்செய்திப்பணிக்காகத் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அனுப்பப்படவேண்டும்(15:17-19) என இயேசு வேண்டுகிறார்.

4) ஒற்றுமை அளித்தல்
நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் இயேசுவின் சீடரிடையே ஒற்றுமை சீர்குலைந்திருந்தது.அவர்கள் நற்செய்திப ;பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்தவர்கள். அவர்கள் ஒன்றித்து நின்றுசெயல்பட்டதால் தான் தாங்கள் மேற்கொண்டுள்ள பணியை ஆற்றமுடியும். அவர்களுள் ஒற்றுமைஇல்லையேல், எதிர்சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகிச் சோர்ந்துவிடுவர். எனவே அவர்களுள்ஒற்றுமையை ஏற்படுத்துமாறு இயேசு உருக்கமாகவேண்டுகிறார் (17:21-23). தாம் தந்தையோடுஒன்றித்து இருந்ததால் தான் இயேசுவால் இறைத்திட்டத்தை நிறைவேற்ற முடிந்தது. எனவே"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போலஅவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக”(17:21) என அவர் செபிக்கிறார்.

5) இயேசு இருக்கும் இடத்திலே சீடரும் இருத்தல்
இயேசு தம் சீடருக்கு இடம் ஆயத்தம் செய்யத் தந்தையிடம் போகிறார். "நான்போய்உங்களுக்கு இடம் ஏற்பாடுசெய்த பின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன்.அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்”(14:3) என உறுதிமொழிகிறார்.இயேசுவைப் போல் அர்ப்பணிக்கப்பட்டவர்கள், அவரைப்போல் அனுப்பப்பட்டவர்கள், அவரைப் போல்பணியாற்றியவர்கள், பணியாற்றிய பொழுது அவரைப் போல ;துன்பங்களையும் சிலுவைகளையும்ஏற்றுக் கொண்டவர்கள் அவரைப்போல் மாட்சியடைவதும், அவர் இருக்கும் இடத்திலேயே அவரோடுஇருப்பதும் முறைதானே (17:24)!

11.3. இயேசு கற்பித்து வாழ்ந்த செபம்
செபங்களில் உன்னதமானது ஒப்பற்றது 'கர்த்தர்' கற்பித்தசெபம்! இயேசு கற்றுக் கொடுத்தஇந்தச் செபத்தின் நீண்டவடிவத்தை மத்தேயு நற்செய்தியிலும் (6:9-13) அதன் குறுகிய வடிவத்தைலூக்கா நற்செய்தியிலும் (11:2-4) காண்கிறோம். மத்தேயுவிலும் லூக்காவிலும் காணப்படும் கர்த்தர்கற்பித்த செபத்தின் இன்னொரு வடிவமாக இயேசுவின் குருத்துவச் செபத்தைப் பார்க்க முடியும்.இயேசு கற்பித்த செபத்தின் பல்வேறு கூறுகள் குருத்துவச் செபத்திலும் காணப்படுகின்றன.மத்தேயுவிலும் லூக்காவிலும் வார்த்தைவடிவில் காணப்படும் இயேசுவின் செபம் யோவானில்வாழ்வு வடிவம் பெறுகிறது. மத்தேயுவிலும் லூக்காவிலும் தாம் சொல்லிக் கொடுத்த செபத்தையோவானில் இயேசு வாழ்ந்து காட்டுகிறார்.

மத்தேயு,லூக்கா யோவான்
(விண்ணிலிருக்கிற எங்கள்) இயேசு இச் செபத்தில் கடவுளை 6 தடவைபிதாவே 'தந்தையே' எனஅழைக்கிறார்(17:1, 5, 11, 21, 24, 25)
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக அவர்கள் உமக்கு உரியவர்கள் ஆகும்படிஎன்னையே... அர்ப்பணிக்கிறேன்(அர்ச்சிக்கிறேன்) 17:19)
உம்முடைய சித்தம்.... என்னிடம் ஒப்படைத்த வேலையைச்செய்யப்படுவதாக செய்து முடித்தேன் 15:4
எங்கள் அனுதின உணவை
எங்களுக்குத் தந்தருளும்
உம்வார்த்தையே நான் அவர்களுக்குஅறிவித்தேன் (17:14) (உணவு என்பதன்ஒருபொருள் கடவுளின் வார்த்தை)
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும் நான்அ வர்களைக் காத்துவந்தேன்.எவரும் அழிவுறவில்லை..தீயோனிடமிருந்து அவர்களைக்காத்தருள வேண்டுகிறேன்(17:11-15)

 

12 மாட்சிமையின் நேரம்
(இயேசுவின் பாடுகள் 18:1-19-42)

12.1. பாடுகளின் நிகழ்ச்சியுரை
இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றிய காரணத்தால ;இயேசு கொடுமையாகத்துன்புறுத்தப்பட்டு, இறுதியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவரது பாடுகள்பற்றிநான்கு நற்செய்திநூல்களுமே விரிவாகப் பேசுகின்றன.பாடுகளின் நிகழ்ச்சியுரை ஒரு நீண்ட தொடர் நிகழ்வாகத் தரப்பட்டுள்ளது.இயேசுவைப்பற்றிய செய்திகளுள்ப hடுகளின் நிகழ்ச்சியுரையே முதன்முதலில் தொகுக்கப்பட்டு,எழுத்துவடிவம் பெற்றது. இயேசுவின் பாடுகளின் போது நிகழ்ந்தவற்றைக ;குறித்துதான் நான்குநற்செய்தி நூல்களுக்குள்ளும் அதிகஒற்றுமை காணப்படுகிறது.

1) ஒத்தமைவாளர் பார்வை
ஒத்தமை நற்செய்தியாளர்கள் இயேசுவின்பாடுகளை அவருக்கு வந்த துன்பமாக,பாவங்களுக்கான தண்டனையாக, அவருக்கு வந்த நிந்தனையாக, அவர் தாங்கவேண்டியஇகழ்ச்சியாகக் கருதினர். இயேசுவை அவர்கள் காயப்படுத்தப்பட்டவராக, நொறுக்கப்பட்டவராக,தண்டிக்கப்பட்டவராகப் பார்த்தனர். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றிய காரணத்தால்இழிவான சிலுவைச் சாவுக்கு உள்ளான அவரை இறைவன் உயிர் பெற்றெழச் செய்துபெருமைப்படுத்தினார்; மாட்சிப்படுத்தினார். இவ்வாறு ஒத்தமை நற்செய்தியாளர்கள் இயேசுவின்பாடுகளை இகழ்ச்சிக ;குரியவையாகவும் அவரது உயிர்ப்பை மாட்சிக்குரியதாகவும் பார்த்தனர்.

2) யோவானின்பார்வை
ஆனால்யோவானின் பார்வை முற்றிலும ;மாறுபட்டுள்ளது. அவருடைய பார்வையில்இயேசுவின் பாடுகளும ;இறப்பும் இகழ்ச்சிக் குரியவையல்ல அவை மாட்சிக்குரியவை அவரதுபாடுகளும் இறப்பும் மாட்சிமையின் வெளிப்பாடுகள். பாடுகளின் நேரம் நெருங்க நெருங்க இயேசு,"மானிடமகன் மாட்சிபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது' (12:23) என்கிறார். வரப்போகும்பாடுகளைப் பற்றி இயேசுவின் உள்ளம் கலக்கமுற்ற போது, அவர்,"தந்தையே உம் பெயரை மாட்சிப்படுத்தும்(12:28) என்று வேண்டினார். தம்மைக் காட்டிக் கொடுக்க யூதாசுபுறப்பட்ட உடனேஇயேசு, "இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார்”(13:31) எனக்கூறிப் பாடுகளைச் சந்திக்கத்தயாராகிறார். பாடுகள் தொடங்க நேரமாகியபோது இயேசு, "தந்தையே நேரம் வந்துவிட்டது. உம்மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்”(17:1,5) என வேண்டுகிறார்.இவ்வாறு யோவானின் பார்வையில் இயேசுவின் பாடுகளும் இறப்பும் கடவுள் அவருக்கு அளிக்கும்மாட்சிமை. மாட்சிமை பாடுகளுக்குப் பின்வருவது அல்ல அதுபாடுகள் வழியாக வருவது. இவ்வாறுஇயேசுவின் மாட்சிமைபற்றி ஒத்தமை நற்செய்தியாளரும் யோவானும் வித்தியாசமானகருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

12.2. யோவான் விட்டுவிடும் செய்திகள்
ஒத்தமை நற்செய்தி நூல்களில் காணப்படும் செய்திகளும் சில யோவானில்காணப்படுவதில்லை.

1)இறுதி இரவு உணவின் போது நற்கருணை ஏற்படுத்தப்படவில்லை.
2) கெத்சமனித்தோட்டத்தில் இயேசு மனக்கலக்கமும் துயரமும் உற்றநிகழ்ச்சி இங்குக்குறிப்பிடப்படவில்லை.
3) பெரிய குருவின் வீட்டு முற்றத்தில் இறை நிந்தனைக் குற்றச்சாட்டு கொண்டு வரப்படவில்லை.
4)சிரேன் சீமோன் இயேசுவின ;சிலுவையைச ;சுமக்கஉதவி செய்யவில்லை இயேசு சிலுவையைத்தாமே சுமந்து சென்றார்.
5)எருசலேம் நகரத்துப் பெண்களின் அனுதாபமும் அழுகையும் இடம் பெறவில்லை;
6)சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் மேல் பழிப்புரையும் வசைமாரியும்பொழியப்படவில்லை.
7)சிலுவையில் இயேசுவோடு அறையப்பட்ட கள்வர்களுள் ஒருவனின் நல்ல வார்த்தைகள் இங்குஇடம்பெறவில்லை.
8)இயேசு சிலுவையில் கூறிய, "என்இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?”என்னும்சொற்கள் விடப்பட்டுள்ளன.

12.3. யோவானில் மட்டும் காணப்படும் செய்திகள்
1) இயேசு தாமே விரும்பி பாடுகளை ஏற்றுக்கொண்டார் என்னும் கருத்தை யோவான் மிகவும் வலியுறுத்துகிறார்; 'நீ செய்யவிருப்பதை விரைவில் செய்”(13:27) என்று யூதாசிடம்கூறிப் பாடுகளைத் தொடங்கிவைக்கிறார். நாசரேத்தூர் இயேசுயார் எனத்தேடிக்கொண்டிருந்த உரோமைப் படைவீரரிடம் "நான்தான்”என்று மூன்று முறை கூறித் தம்மைப்பிடித்துக் கொள்ளுமாறு அனுமதி அளிக்கிறார் (18:3-8). இயேசுவைப் பிடித்தபோதுமால்குவின் காதைவெட்டி எதிர்ப்புத் தெரிவித்த பேதுருவிடம், "வாளை உறையில்போடு,என் தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல்இருப்பேனா?”(18:11) என்கிறார். தாம் உயிர் துறந்தபோது கூட "அனைத்தும்நிறைவேறிவிட்டது என்பதை அறிந்து”(19:28), பாடுகளின் நிகழ்வுகள் அனைத்தையும்தாமே முடித்துவைப்பவராக, "எல்லாம்நிறைவேறிற்று”(19:30) என்றுகூறித் தலைசாய்த்துஆவியை ஒப்படைத்தார்.

2) ஒத்தமை நற்செய்திகளில் இயேசு இருமுறை மட்டுமே வாய்திறந்து பேசுகிறார். (இயேசுமெசியாவா, அரசரா என்னும் கேள்விகளுக்கு விடை). யோவான் நற்செய்தியில் பலமுறைசுடச் சுடப்பதில் மொழிகிறார்.

3) ஒத்தமை நற்செய்திகளில் காணப்படாத பல பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் யோவான்நற்செய்தியில் காணப்படுகின்றன (ஆடைகள்பங்கிடுதல், தாகமாய் இருத்தல், எலும்புகள்முறிக்கபடாமை, இயேசுவை ஊடுருவக்குத்துதல் போன்றவை பற்றிய மேற்கோள்கள்).

4) இயேசு தம்தாயை யோவானிடம் ஒப்படைத்தல் பற்றிய உருக்கமானசெய்தி

5) குத்தப்பட்ட இயேசுவின் விலாவிலிருந்து இரத்தமும் தண்ணீரும் வடிதல்.

6) இயேசுவின் உடலை நறுமணப் பொருள்களால் பொதிந்து அடக்கம் செய்தல்

12.4. மாட்சி விளங்கும் பாடுகள்
நற்செய்தி நூல்கள் ஒவ்வொன்றும் இயேசுவின் பாடுகளை ஒருதனிக் கோணத்திலிருந்துபார்க்கின்றன. மாற்கு நற்செய்தி இயேசுவின் பாடுகளில் இறைவனின் திட்டம் நிறைவேறிவிட்டதுஎன்பதைப் பறைசாற்றுகிறது. பறைசாற்றும் தன்மை இதில் முக்கியத்துவம் பெறுகிறது. மத்தேயுநற்செய்தியில் இயேசுவின் பாடுகள் திருச்சபையில் - இறைமக்கள் நடுவில் - நிகழ்வதாய்க்காட்டப்படுகிறது. 'திருச்சபைத் தன்மை' இதில் முன்னணிப் படுத்தப்படுகிறது. லூக்கா நற்செய்திஇயேசுவின் பாடுகள் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு விடப்பட்ட ஓர்அழைப்பு என்னும் பார்வையைத்தருகிறது. 'பாடுகள் வாழ்வின் பாடங்கள்' என்னும் தன்மை இதில் வலியுறுத்தப்படுகிறது.

யோவான் நற்செய்தி இயேசுவின் பாடுகளை மாட்சியின் வெளிப்பாடாகப ;பார்க்கிறது.பாடுகளிலும் பாடுகள் வழியாகவும் இயேசு மாட்சிமைப் படுத்தப்படுகிறார். இயேசுவின் பாடுகள்இயேசுவுக்கு இகழ்ச்சிஅல்ல அவை புகழ்ச்சியைத் தருகின்றன மாட்சியாக அமைகின்றன. இயேசுஓர் அரசராக நின்றுபாடுகளை ஏற்று உயிரைக்கை யளிப்பதாக யோவான் நற்செய்தி காட்டுகிறது.எனவே தான் யோவானில் காணப்படும் பாடுகளில் நிகழ்ச்சியுரையை அரச மாட்சி விளங்கும்பாடுகளின் நிகழ்ச்சியுரை' என்பர்.இவ்வாறு இயேசு தாமே விரும்பிப் பாடுகளை ஏற்றுக் கொண்டார் என்னும் உண்மையையோவான் மிகவும் வலியுறுத்துகிறார் (இ.1பகுதிகாண்க). ஓர் அரசன் என்னும் முறையில் அவருக்குஎருசலேம் பெண்களின் அனுதாபம் தேவையில்லை நல்ல கள்ளனின் ஆறுதலான சொற்களும்,அவருக்கு அவசியமில்லை; சீரேன் சீமோனின் உதவியும் அவருக்கு வேண்டாம். அரசராகக்காட்டப்படும் இயேசுவுக்கு எதிராகப் பழிப்புரைகளும் இந்நற்செய்தியில் இடம் பெறாது.

இயேசு அரசர் என்னும் கருத்து யோவான் நற்செய்திப் பாடுகளின் நிகழ்ச்சியுரையில்வலியுறுத்தப்படுகிறது. ஒத்தமை நற்செய்திகளில் 'இயேசு ஓர் அரசர்' என்பது அவரது கொலைக்கானகுற்றச்சாட்டு மட்டுமே. ஆனால் யோவான் நற்செய்தியில் இயேசு ஓர்அரசர் என்பது பாடுகளின்நிகழ்ச்சியுரை முழுமைக்கும் மையக் கருத்தாய் அமைகிறது. "நீயூதரின் அரசனா?”(18:33) என்னும்பிலாத்துவின் கேள்வியும், "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சிபோன்றது அல்ல”(18:36) என்னும்இயேசுவின் விடையும் இக்கருத்தைத் தெளிவுபடுத்து வனவாய் உள்ளன. இவ்வாறு இயேசுவின்பாடுகளையும் இறப்பையும் மாட்சிமையின் வெளிப்பாடாகப் பார்ப்பது யோவானின் தனித்தன்மை.ஆகவே யோவானின் பார்வையில் பாடுகளின் நேரம் மாட்சிமையின் நேரம்.

 

13. வாழ்வின் வெற்றி (உயிர் பெற்றெழுந்த இயேசு 20:1-21:25)

13.1. இயேசு உயிர் பெற்றெழுதல்

உண்மையைப் பேசியதற்காக, வாழ்வைக் கொடுத்ததற்காக, வாழும் வழியைக்காட்டியதற்காக இயேசுகொல்லப்பட்டார். தீமையின், அநீதியின், பாவத்தின்சக்திகள் அனைத்தும்சேர்ந்து அவரைக் கொலைக்குட்படுத்தின. ஆனால் இறந்து அடக்கம் செய்யப்பட்ட இயேசு உயிர்பெற்றெழுந்தார் இறந்த மூன்றாம் நாள் வெற்றிவீரராய்க் கல்லறiறுயிலிருந்து உயிரோடு வெளியேவந்தார். தம்மோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த தம் சீடருக்குத் தோன்றி அவர்களோடுஉரையாடினார் உணவுண்டு உறவாடி மகிழ்ந்தார். தந்தை தமக்குக் கொடுத்த பணியை முடித்துவிட்டுமீண்டும் தந்தையிடம் திரும்பினார்.

1) இயேசு நம்மோடு வாழ்கிறார்
இயேசு உயிர் பெற்றெழுந்தார் என்று சொல்லும் போது, அவர் இன்றும் என்றும் நம்மோடுவாழ்கிறார் என்பது தான் பொருள். இறந்து அடக்கம் செய்யப்பட்ட ஒருவர் மீண்டும் வாழவேண்டுமானால் அவர் உயிர் பெற்றிருக்கவேண்டும். இறந்தவர் மீண்டும் வாழ உயிர் பெற்றெழுதல்என்னும் கட்டாயம் தேவை. எனவே இயேசு உயிர்பெற்றெழுந்தார் என்னும் உண்மையைத் திரும்பத்திரும்பக் கூறுவதன் மூலம்அவர் உண்மையில் நம்மோடு வாழ்கிறார் என்பதை நற்செய்தியாளர்கள்வலியுறத்துகிறார்கள்.'உயிர் பெற்றெழுதல்' என்பது இறுதிக்காலம் சார்ந்த சொல். இறுதிக்காலத்தில் நடைபெறப்போவதாகக் கருதப்பட்ட அசாதாரண நிகழ்வுகளுள் உயிர்பெற்றெழுதலும் ஒன்று. இறுதிக்காலத்தில்இறந்தோர் உயிர்பெற்றெழுவர் எனயூதமக்கள் நம்பினர் (1தெச4:16; மாற்12:25; யோவா11:24).இயேசுவில் ஏற்கனவே இறுதிக்காலம் (நிறைவுக்காலம்) தொடங்கி விட்டதால்,இறுதிக்காலத்திற்குரிய 'உயிர் பெற்றெழுதல்' இறந்தும் வாழும் இயேசுவுக்குப் பொருத்தமாய்அமைகிறது.

;2) இயேசு இன்றும் வாழ்கிறார்
இறுதிக் காலத்திற்குரிய 'உயிர்த்தெழுதல்' என்னும் சொல்லுக்குப் பதிலாக இன்றையசொல்லாட்சியைப் பயன்படுத்தினால். 'இறந்த இயேசு இன்றும் வாழ்கிறார்' எனலாம். இப்படித்தான்திருத்தூதர் பவுலும் கூறுகிறார். "இயேசு இறந்தும் வாழ்கிறார்' (உரோ14:9)."அவர் வலுவற்றவராய்ச்சிலுவையில் அறையப்பட்டார் ஆனால் கடவுளின் வல்லமையால் உயிர்வாழ்கிறார்' (2கொரி 13:4)."இயேசு இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது வாழ்கிறார்கடவுளுக்காகவே வாழ்கிறார்' (உரோ6:10).3) இயேசு இறந்தும் வாழ்கிறார்

3) இயேசு இறந்தும் வாழ்கிறார்
இறந்தவர் மீண்டும் எவ்வாறு வாழ முடியும ;என்பது நியாயமாகஎழும் ஒருகேள்வி இறந்தவர் மக்களின் எண்ணத்தில், நினைவில் வாழலாம்; தொடர்ந்துகடைப்பிடிக்கும் தம் போதனைகளின் வழியாக வாழலாம். இயேசுவைப் பொறுத்தவரையிலும் அவர்இவ்வாறே தொடர்ந்து வாழ்கிறார் என்று எண்ணுவோரும் உண்டு. இயேசுவோடு அவர் போதித்தஅன்பு, மகிழ்ச்சி, நீதி, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மதிப்பீடுகளுக்கும் சமாதிகட்டிவிடுவதாக அன்றைய சமய, சமூக அரசியல் தலைவர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்.ஆனால் வெகுவிரைவிலே இயேசுவின் மதிப்பீடுகள் பலரால் போற்றப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு,வாழ்வில் கடைப்பிடிக்கப்பட்டன. இவ்வாறு இயேசுவே மக்கள் வாழ்வின் ஒளியாக, வழிகாட்டியாகஅமைகிறார். இதனையே சிலர் 'இயேசுவின் உயிர்ப்பு' என்று எண்ணுகின்றனர்.ஆனால் இது இயேசுவின் உயிர்ப்புக்கான முழுவிளக்கம் ஆகாது. இயேசுவின் உயிர்ப்புஎன்பது எண்ணத்திலும் நினைவிலும் கொள்கையிலும் அவர் வாழ்கிறார் என்பதன்று அவர்உண்மையிலே உயிர்வாழ்கிறார், தொடர்ந்து வாழ்கிறார்; சீடரைச் சந்திக்கிறார், அவர்களோடுஉரையாடி உறவுகொள்கிறார்; அவர்களின் தளர்ச்சியை, அச்சத்தைப் போக்கி அவர்களைஊக்குவிக்கிறார். வாழும் இயேசு தம்மோடு சீடர்கள் வலிமை பெற்றுப் புத்துணர்ச்சியோடு,துணிவோடு கிறிஸ்துவின் போதனையைப் பல்வேறு இடங்களிலும் பரப்புகின்றனர். இறந்தும்வாழும் இயேசுவின் கொள்கைகளுக்காய்த் தம் உயிரையும் மகிழ்ந்தளிக்கின்றனர்.இயேசு வெறும் நினைவிலோ, கொள்கையிலோ அல்ல, மாறாக உண்மையிலே உயிர்வாழ்கிறார் என்பதை வலியுறுத்தத்தான் தொடக்கக் காலக் கிறிஸ்துவர்கள் 'அவர் உடலோடு உயிர்பெற்றெழுந்தார்' என்பதை மீண்டும் மீண்டும் அறுதியிட்டுக் கூறினர். எனினும் சாவுக்குமுன்னிருந்த இயேசுவின் அதே உடல் அப்படியே இருந்தது எனக்கூற முடியாது. உயிர்த்த இயேசுகாலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறார். அடைப்பட்டிருந்த அறைக்குள்அவரால் நுழையமுந்தது. யூதேயாவிலும், கலிலேயாவிலும் பலருக்கு ஒரே காலத்தில் காட்சியளிக்க முடிந்தது.இவ்வாறு உயிர்த்த இயேசுவின் உடல், திருத்தூதர் பவுல் கூறுவதுபோல், 'அழியாதது','மாண்புக்குரியது', 'வலிமையுள்ளது', 'ஆவிக்குரியது' (1கொரி15:42-44). 'உடலோடு இயேசுவாழ்கிறார்' என்பதை வலியுறுத்தும் வகையில் காலியாய் இருந்த கல்லறை தொடக்கக் காலத்தில்மிகவும் முன்னணிப்படுத்தப்பட்டது.

13.2. யோவான் நற்செய்தியில் இயேசு உயிர் பெற்றெழல்
இயேசு உயிர்பெற்றெழுந்ததை எவராவது கண்டதாக எந்த நற்செய்திநூலும்குறிப்பிடவில்லை. உயிர் பெற்றெழுந்த இயேசுவைக் கண்டவர்களின் சான்றுகளிலிருந்தும் அவர் அடக்கம்செய்யப்பட்ட கல்லறைகாலியாய் இருந்ததிலிருந்தும் இயேசு உயிர்பெற்று எழுந்துவிட்டார்என்னும் நம்பிக்கை தோன்றியது. இயேசுவின் தோற்றம், காலியானகல்லறைஆகியவற்றின்அடிப்படையில்தான் நான்கு நற்செய்திகளுமே இயேசுவின் உயிர்ப்புப்பற்றிப்பேசுகின்றன.

1) காலியான கல்லறை
கல்லறை காலியாக இருந்ததாக நான்கு நற்செய்தியாளரும் கூறுகின்றனர். யோவான்நற்செய்தியின் படி காலியானகல்லறையை முதலில் கண்டவர் மகதலாமரியா. அங்கு வானதூதர்யாரும் காணப்படவில்லை (ஒத்தமை நற்செய்திகளில ;இயேசு உயிர்பெற்றெழுந்த செய்தியைவானதூதர் அறிவிக்கின்றார்). கல்லறையில் இயேசுவின் உடலைக்காணாத செய்தியை மரியாபேதுருவிடம் அறிவிக்கிறார் காலியான கல்லறையைக் கண்டு இயேசு உண்மையில்உயிர்பெற்றெழுந்து விட்டார் என நம்புகின்றனர்.இயேசுவின் உடலைச் சுற்றியிருந்த துணிகளும் தலையைச் சுற்றியிருந்த துண்டும்கல்லறையில் கிடந்த செய்திக்கு யோவான் முக்கியத்துவம் கொடுக்கிறார். இயேசுவின் உடல்திருடப்படவில்லை; அவர் உண்மையில் உயிர் பெற்றெழுந்துவிட்டார் என்பதை வலியுறுத்தவேஇச்செய்தியைத் தருவதாகத் தெரிகிறது. ஏனெனில் இயேசுவின் உடலைத் திருடியிருந்தால்உடலைச் சுற்றியிருந்த துணிகளையும் திருடியிருப்பார்கள் துணிகளைத் திருடாவிட்டால் கூடஅவற்றை அலங்கோலமாய்ப் போட்டிருப்பார்கள். ஆனால் இங்குத் துணிகள் எல்லாம் ஒழுங்கானநிலையில் இருந்ததாக யோவான் கூறுகிறார்.

2) இயேசு சீடருக்குத் தோன்றல்
உயிர்பெற்றெழுந்த இயேசு தம் சீடருக்குத் தோன்றினார் என்று எல்லா நற்செய்திகளுமேகுறிப்பிடுகின்றன. ஆனால் எங்குத் தோன்றினார ;என்பதில் கருத்துவேறு பாடுகாணப்படுகிறது.மாற்கு நற்செய்தியில ;(16:1-8) இயேசு கலிலேயாவில்தாம் தோன்றியிருப்பதாக வாக்குறுதிஅளிக்கிறார் (ஆனால் அங்கு தோன்றியதாகக் குறிப்பு தரப்படவில்லை). மத்தேயு நற்செய்தியில்அவர் கலிலேயாவில் சீடருக்குத் தோன்றி அவர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்புகிறார். யோவான்21-ஆம் அதிகாரத்திலும் (பிற்சேர்க்கை) இயேசு கலிலேயாவில்தான் தோற்றம் தருகிறார். மாறாக,லூக்கா நற்செய்தியில் இயேசு எருசலேமிலும், அதனை அடுத்துள்ள எம்மாவுபோகும் வழியிலும்தோன்றுகிறார். யோவான் நற்செய்தியிலும் (அதிகாரம்20) மாற்கு பிற்சேர்க்கையிலும் (மாற்16:9-20) இயேசு எருசலேமில் மட்டுமே தோன்றுகிறார். இவ்வாறு உயிர்பெற்றெழுந்த இயேசு தம்சீடருக்குத் தோன்றிய இடம் பற்றிய கருத்து வேறுபாடு காணப்படுகிறது. அன்று திருச்சபையில்பரவலாய் இருந்த இரு வேறுபட்ட மரபுகளையும் நற்செய்தியாளர்கள் பயன்படுத்தியிருக்கவேண்டும்.யோவான் இந்த இரண்டு மரபுகளில் எதையும் விட்டுவிடாது. இரண்டையுமே (20. எருசலேமில்தோன்றிய மரபு: 21-கலிலேயாவில் தோன்றிய மரபு) நமக்குத் தருகிறார்.உயிர் பெற்றெழுந்த இயேசுமுதன் முதல்மகதலா மரியாவைச் சந்திக்கிறார் (20:11-18),இச்சந்திப்பு உள்ளத்தை உருகச்செய்யும் அழகானஒருநிகழ்வு. அவர் 'மரியா' என்று பெயர் சொல்லிஅழைத்த நேரத்தில் மரியா அவரைஅடையாளம் கண்டுகொள்கிறார். அடுத்து இயேசு தம் சீடர்களைச்சந்தித்து பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும் கொடுத்து அவர்களை நற்செய்திப் பணிக்காகஅனுப்பிவைக்கிறார் (20:19-23). அப்போது தோமா அங்கு இல்லை. எனவே இயேசு ஒரு வாரத்திற்குப்பிறகு தோமாவுடன் சீடர்களை மீண்டும் சந்திக்கிறார். முதலில் நம்பமறுத்த தோமா, இறுதியில்"நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்”என விசுவாச அறிக்கை செய்கிறார். இறுதியாக இயேசுசீடர் எழுவரைச் சந்திக்கிறார். அவர்கள் பிடித்த மீன்களையும் அப்பங்களையும் அவர்களோடு உண்டபோது அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டு அவரை நம்பினர். இந்த எழுவருள் பேதுருவும்யோவானும் இருவர். பேதுரு தாம் காட்டிய அன்பின் காரணமாக தலைமைப்பணிப் பொறுப்புப்பெறுகிறார். அடுத்தவர், அன்புச் சீடர் யோவான், நிகழ்ந்த அனைத்திற்கும் நிலையானசான்றாகிறார்.

3) வளர்ச்சிப் பெற்ற நிலை
யோவான் நற்செய்தியில் உள்ள உயிர்ப்பு நிகழ்ச்சியுரை வளர்ச்சி பெற்ற நிலையில்காணப்படுகிறது. மாற்கு நற்செய்தி, பிற்சேர்க்கை இல்லாத நிலையில், அச்சத்துடன், நடுக்கத்துடன்முடிவடைகிறது. (16:8). இங்கு இயேசு யாரையும் சந்திக்கவில்லை (பிற்சேர்க்கையில் (16:9-20)சந்திப்பு பற்றி பேசப்படுகிறது). மத்தேயு நற்செய்தியில் உயிர் பெற்றெழுந்த இயேசு சீடரைக்கலிலேயாவில் சந்திக்கிறார் எல்லா மனிதரையும் சீடராக்கும் பணிப் பொறுப்பையும் கொடுக்கிறார்.லூக்கா நற்செய்தியில ;காலியான கல்லறையின் முக்கியத்துவம் குறைகிறது. உயிர்பெற்றெழுந்தஇயேசுவின் சந்திப்புகள் முன்னணிப்படுத்தப்படுகின்றன. இயேசு இன்னும் பலரைச் சந்திக்கிறார்.உயிர்த்த இயேசுவின் தன்மை பற்றியும் இங்குப் பேசப்படுகிறது. அவர் தம்பாடுகள், இறப்புஆகியவற்றின் நோக்கம் பற்றியும் எடுத்துரைக்கிறார். உலகளாவிய பணிசீடருக்குக்கொடுக்கப்படுகிறது. எருசலேம் மையப்படுத்தப்படுகிறது. யோவான் நற்செய்திநூல் இன்னும்வளர்ச்சியடைந்த நிலையைப் பிரதிப்பலிக்கிறது. லூக்கா நற்செய்தியில் காணப்படும் பண்புகளோடு,உயிர்பெற்றெழுந்த இயேசுவின் உடல் உண்மையானது என்பது வலியுறுத்தப்படுகிறது. உலகுதழுவிய அவர்கள் பணியோடு பாவமன்னிப்பு தொடர்புபடுத்தப்படுகிறது. தூய ஆவி என்னும்இறைவனின் கொடை வழங்கப்படுகிறது. இவ்வாறு யோவான் நற்செய்தியில் உயிர்ப்பு நிகழ்ச்சியுரைமிகவும் வளர்ச்சி பெற்ற நிலையில் உள்ளது.

13.3. என்றும் வாழும் இயேசு
இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றவர்கள் அவரை அழித்துவிட்டதாகநினைத்தார்கள், கல்லறையில் அவரைப் புதைத்தவர்கள் அவர் நினைவையே ஒழித்துவிட்டதாகஎண்ணினார்கள். ஆனால் இயேசு புதைக்கப் படவில்லை விதைக்கப்பட்டார். விதையைப்புதைத்தால் அது துளிர்த்து எழாமல்இருக்குமா? நீதியைப் புதைத்தால் அதுபுரட்சியாக வெடித்துஎழாமல் இருக்குமா? இயேசுவைப் புதைத்தால் அவர் உயிர் பெற்றெழாமல் இருக்கமுடியுமா?இயேசுவே நீதி, அவரே உண்மை, அவரே வாழ்வு, நீதியையும் உண்மையையும் வாழ்வையும் அழிக்கமுடியாது அதுபோல் இயேசுவும் அழியமுடியாது அவர் வாழ்ந்தே ஆகவேண்டும்.ஆம், இயேசு உயிர் பெற்றெழுந்துவிட்டார். அவர் நமக்காக வாழ்கிறார்; நம்மோடுஇருக்கிறார்."இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்”(மத்28:20)என்கிறார். "இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாககூடியிருக்கிறார்களோ அங்கே நான் இருக்கிறேன்”(மத்18:20) எனவும் உறுதியாகக் கூறுகிறார்.

 

------------------------------------------
--------------------------
----------------
------
--