நீதித்தலைவர்கள்

முனைவர் மேதகு ஆயர் அ. ஸ்டீபன்

விவிலிய அன்பர்களே,

விவிலிய நீதித்தலைவர்களை நீதிமன்றங்களில் அமர்ந்து வழக்குகளைவிசாரித்து நீதி வழங்கும் நீதியரசர்கள் என்று நாம் எண்ணினால் அது தவறு.மாறாக, வலிமைமிகு வீரர்களாக வாழ்ந்து இஸ்ரயேல் மக்களை எதிரிகளின்கையினின்று காத்தவர்களே நீதித்தலைவர்கள் ஆவர்.நீதித்தலைவர்கள் என்றவுடன் ஏகூது, தெபோரா, சிம்சோன் போன்றதலைவர்கள் மட்டுமே நம் நிiவுக்கு வருகின்றனர். ஆனால் இஸ்ரயேல் மக்களைஎகிப்திலிருந்து வழிநடத்தி வாக்களிக்கப்பட்டக் கானான் நாட்டில் குடியமர்த்தியயோசுவா இவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். அதனால்தான்இந்நூலில் யோசுவா பற்றியும் விளக்கமாகவே தருகிறோம்."யோசுவா கட்டளையை நிறைவேற்றியதால் இஸ்ரயேலின் நீதித்தலைவர்ஆனார்" என்று மக்கபேயர் நூல் குறிப்பிடுகிறது (1 மக் 2:55).இஸ்ரயேலின் வெற்றியும் வாழ்வும் "கடவுள் மீது அவர்கள் கொண்டிருந்தஆழ்ந்த நம்பிக்கையைப் பொறுத்திருந்தது" என்றக் கருத்தை நீதித்தலைவர்கள்பற்றிய வரலாறு வலியுறுத்துகிறது.

இப்பாடத்தை அழகுற எழுதிய முனைவர்பேரருள்திரு அ. ஸ்டீபன்அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.ஆண்டவரின் அருள் உங்களோடு இருப்பதாக!

இறைவார்த்தைப் பணியில்
அருள்திரு முனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்

1. முன்னுரை
2. நீதித் தலைவர்கள்
3. ஐந்நூல்களில் யோசுவா 8
4. யோசுவா நூலில் யோசுவா
5. தெபோரா
6. கிதியோன்
7. சிம்சோன்
8. நீதித் தலைவர்கள் நூலின் இறையியல் கருத்துக்கள்

1. முன்னுரை:

அந்நாட்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது.ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மை எனப்பட்டதைச் செய்துகொண்டிருந்தனர்" (நீத 21 : 25) என்று நீதித்தலைவர்கள் நூல்முடிகின்றது.மோசே மற்றும் யோசுவாவிற்குப் பிறகு தலைமையேற்றுஇஸ்ரயேலை ஆளவும், ஒருங்கிணைத்து இஸ்ரயேலரை மாற்றான்தாக்குதலிலிருந்து பாதுகாக்கவும் ஒரு தலைவரை ஆண்டவர்கொடுக்கவில்லை. மோசே யோசுவாவை தனக்குப்பின் இஸ்ரயேலரைவழிநடத்த தயாரித்திருந்தார். ஆனால் யோசுவாவிற்குப் பிறகுகேள்விக்குறியானது இஸ்ரயேல் வாழ்வு.இறைப்பற்று குன்றலாயிற்று. பிற தெய்வங்களை வழிபட்டனர்இஸ்ரயேலர். இஸ்ரயேலரின் கூட்டமைப்பிற்கு அபாயம் தொடர்ந்துகொண்டேயிருந்தது. சிதறி வாழ்ந்த இஸ்ரயேலர் சிறுமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் கடவுளை மறந்தபோதும் அவர் அவர்களைமறக்கவில்லை.

"உங்களுடன் செய்து கொண்ட எனது உடன்படிக்கையைஎன்றுமே முறியடிக்க மாட்டேன்" என்று இஸ்ரயேலரிடம் ஆண்டவர்சூளுரைக்கிறார் (நீத 2:1).ஆனாலும் இஸ்ரயேலர் பாவம் இழைத்துத் துன்புறுகின்றனர்.ஒடுக்கப்பட்ட அவர்களது அழுகுரலைக் கேட்டு ஆண்டவரும் ஓடோடிவருகிறார். இதனால் நீதித்தலைவர்களை அனுப்புகிறார். ஆனால்அவர்கள் இறந்ததும் மக்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.கி.மு. 1200 இலிருந்து 1040 வரை இந்நிலை நீடித்தது.இருளடர்ந்த இந்த நாட்களிலும் இறைவன் நீதித்தலைவர்கள் வழியாகஎவ்வாறு இஸ்ரயேலை வழிநடத்துகிறார் என்பதை இந்நூல் காட்டுகிறது.நீதித்தலைவர்களின் வீரம், நீதி செலுத்தி கடவுளின் திருவுளத்தைநிறைவேற்றும் தீரம் இங்கு காட்டப்படுகிறது. இஸ்ரயேலரின் வாழ்வு,நம்பிக்கை, நெறிமுறை, தங்களோடு - பிறரோடு கொண்டஉறவுமுறைகளையும் அரசனின்றியே எவ்வாறு வாழ்ந்தனர் என்பதையும்இங்கு காணலாம்,நீதித்தலைவர்களில் ஒருவராகக் காட்டப்படாவிட்டாலும்யோசுவா, மோசேயைப் போல் ஒரு சிறப்பான நீதித்தலைவர் என்பதையும்நாம் இங்குக் காணவிருக்கின்றோம்.

 

2. நீதித் தலைவர்கள்

விவிலியத்தில் ஏழாவது நூலாகக் காணப்படும் நீதித்தலைவர்கள்பன்னிரு நீதித்தலைவர்களைச் சுட்டிக்காட்டுகிறது. இந்நூல் இஸ்ரயேல்மக்கள் கானான் நாட்டில் நுழைந்தபின்பும் சவுல், தாவீது அரசர்கள்ஆட்சிக்கு முன்பும் இஸ்ரயேல் மக்களிடையே நடந்தேறியநிகழ்ச்சிகளைக் கூறுகிறது. கானான் நாட்டில் இஸ்ரயேலர் அடைந்தவெற்றிகளின் இறுதிப்பகுதிகள், அக்காலத்திய சமூகநிலை, இஸ்ரயேலர்தங்கள் குலத்தவரிடையே, அண்டை மக்களிடையே கொண்ட உறவுகள், மற்றும் பல வீரப்பெருமக்கள் பற்றிய குறிப்புகளையும்இந்நூலில் காணலாம்.

சவுல், தாவீது, சாலமோன் அரசர்கள்இஸ்ரயேலுக்கு நிலையான ஓர் அரசைநிறுவித் தந்தனர்; நிலைத்த அமைதியானஒரு வாழ்க்கையைப் பெற்றுத் தந்தனர்எனலாம். ஆனால் இஸ்ரயேலர் இந்நிலையைப் பெறுவதற்கு முன் நல்ல தலைவர்களின்றி "அச்சமும், அபாயமும், தெளிவில்லாநிலையும்" கொண்ட சூழலில் வாழ்ந்தனர். ஒருமக்களாக, ஒரு சக்தியாக, நம்பிக்கை பெற்று நிலைக்கும் ஒரு சமூகமாகஅல்லது கூட்டமைப்பாக உருவாகும் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்தனர்.தலைவர்களே இன்றி எப்படி இஸ்ரயேலர் ஓர் இனமாக (நன்றாகவாழ முடியாவிடினும்) வாழ்ந்தனர் என்ற கேள்விக்குப் பதில்தருவதுபோல் இந்நூல் அமைந்துள்ளது.

2.1. இது ஒரு சமய வரலாற்று இலக்கியம்
நீதித்தலைவர்கள் நூலில் இஸ்ரயேலரின் அரசியல், சமூகஅமைப்புக்கள், வாக்களித்த நாட்டில் வென்ற இடங்கள், வகுத்தஎல்லைகள் ஆகியவை பற்றிய அக்கறை தென்படுகிறது. அண்டைநாட்டாரோடு, கனானியரோடு எப்படிப் பழகினர், எத்தகைய உறவைக்கொண்டிருந்தனர், இஸ்ரயேலர் தங்களுக்குள்ளேயே எப்படி குலம்குலத்தோடும், குடும்பம் குடும்பத்தோடும் உறவையும் வாழ்வு நிலையையும்ஏற்படுத்திக் கொண்டனர் என்பதோடு இக்காலத்திலுள்ள வீரப்பெருமக்களின் தீரச்செயல்களையும் இந்நூல் இயம்புகிறது.இந்நூல் வரலாற்று நூல்போல் தோற்றமளிக்கிறது. ஆனால்அடிப்படையில் ஒரு சமய இலக்கியம் ஆகும்.

கடவுள் எப்படி இஸ்ரயேல் வரலாற்றிலும் வாழ்விலும் புகுந்துஅவர்களை வழிநடத்துகிறார் என்று இந்நூல் பகர்கிறது.நீதித்தலைவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாக இக்காலஇஸ்ரயேல் மக்களை கடவுள் வழிநடத்துகிறார். சமயக் கண்ணோக்கும்வரலாற்று நிகழ்ச்சிகளும் கைகோர்த்துச் செல்கின்றன. எனவே இதைஒரு சமய வரலாற்று இலக்கியம் என்கிறோம்.

2.2. நீதித்தலைவர்கள் யார்?
நீதித்தலைவர்கள் என்றவுடன் அவர்களின் சட்டங்களின்படிவழக்குகளை ஆய்ந்து நீதி வழங்கும் அதிகாரம் படைத்த நீதிபதிகள் என்றுகணிக்கக் கூடாது. ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த தந்தையர்கள் அக்குடும்பத்தின் நீதிபதிகள் ஆவர் (நீத 21 : 22, 27 ) என்று விவிலியம்கூறுகிறது.நீதித்தலைவர்கள் நூலுக்கு எபிரேயத்தில் சோபெதிம் (ளுழிநவiஅ)என்றும் கிரேக்கத்தில் கிரித்தாய் (முசவையi) என்றும் சொல்வர். ஆனால்கிரித்தாய் எனும் கிரேக்கச் சொல் சோபெதிம் என்ற எபிரேயச் சொல்லின்பொருளைத் துல்லியமாகத் தரவில்லை.

'சோபெதிம்" என்றால் "தலைவர்"" அல்லது 'இளவரசர்" என்றுகூறலாம். ஆதலால் நீதித்தலைவர்கள் என்று நாம் கூறுவது பரந்தபொருள்களை உள்ளடக்கியது.நீதித்தலைவர்கள் யாவேயின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்; மிகுந்த ஆவேசம் கொண்டவர்கள்; இறைவனால்அழைக்கப்பட்டவர்கள்; இறைவனின் கருவிகள்.மாற்றானின் பிடியிலிருந்து இறைமக்களை விடுவிப்பவர்கள்;இவர்கள் இறைமக்களின் காவலர்கள்; இவர்கள் போர்த்தலைவர்கள்;இறைமக்களின் இழந்துவிட்ட உரிமைகளை மீட்டுத் தருபவர்கள்; மக்கள்இறைக் கட்டளையைக் கடைபிடிக்க உதவுபவர்கள்.இவர்கள் இறைவனின் சிறப்பான உதவியோடு செயல்படுகிறார்கள். யாவேயின் மீட்பை மக்களுக்குக் கொணர்ந்து அவரது நீதியைநிலைநாட்டுவது இவர்களின் அரிய பணி.

2.3. விவிலியம் காட்டும் நீதி:
இங்கு நாம் குறிப்பாகக் காணவேண்டிய விவிலிய விளக்கம் மிகமுக்கியமானது.கடவுளை மறந்து இஸ்ரயேல்மக்கள் பிற தெய்வங்களைவழிபட்டு பெரிய பாவத்தைக் கட்டிக்கொள்கின்றனர். எனவே துன்பம்அவர்களை வதைக்கிறது (இச28:15, 68; நீத 2:11-15). ஆனால்மனந்திருந்தி கடவுள் பக்கம் திரும்பும்பொழுது துன்பங்களிலிருந்து மீட்புக்கிடைக்கிறது (இச 28:1-24; நீத 2:18).இதுவே யாவேயின் நீதியாகும்.யாவேயின் நீதி மாறாதது. அவர்உடன்படிக்கையில் பிரமாணிக்கமாயிருப்பார். யாவேயின் பற்றுறுதிஇதை வலியுறுத்துகிறது.எனவே நிதித்தலைவர்கள்சட்டங்களின் முறைமையின்படி நீதிசெலுத்தும் நடுவர்கள் அல்ல.மக்களை மாற்றானிடமிருந்துகாப்பவர்கள். குறிப்பாக இறை நீதியை மெய்ப்பிக்கும் கருவிகளாகஇறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள். அருங்கொடைபெற்றவர்கள். நீதி செலுத்தும் விடுதலைத் தலைவர்கள் இவர்கள் (நீத 9: 15-31). தெபோரா இக்குணங்களைப் பெற்று வாழ்கிறார் (4 : 4-5).நீதித்தலைவர்கள் இஸ்ரயேல் மக்களை ஆண்டதாகக்கூறினாலும், இவர்கள் இறைவனால் நியமனம் பெற்றவர்கள் (அதி. 4, 6,9). யாருமே தலை முறை வாரிசு வழியாக நீதித்தலைவராகவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

2.4. சிறிய பெரிய நீதித்தலைவர்கள்:
நீதித்தலைவர்களை சிறிய, பெரிய நீதித்தலைவர்கள் என்றுபகுக்கலாம். குறுகிய வசனங்களையுடையோர் சிறிய நீதித்தலைவர்கள்,பெரியவற்றைக் கொண்டவர்கள் பெரிய நீதித்தலைவர்கள் எனப்பகுக்கின்றோம். அவ்வாறு பகுக்கும்போது. ஆறு பேர் சிறிய நீதித்தலைவர்களாகவும் மற்றும் ஆறு பேர் பெரிய நீதித்தலைவர்களாகவும்விளங்குகின்றனர்.

சிறிய நீதித்தலைவர்கள; பெரியவர்கள் நீதித்தலைவர்கள்
சம்கார் 3:31 ஒத்னியேல் 3:7-11
தோலா 10:1-2 ஏகூது 3:12-30
யாயிர் 10:3-16 தெபோரா 4:1-5:32
இப்சான் 12:8-10 கிதியோன் 6:1-8:35
ஏலோன் 12:11-12 அபிமெலக்கு 9:1-57
அப்தோன் 12:13-15 இப்தாகு 10:17-12:7
  சிம்சோன் 13:1-16:31
(இவன் இஸ்ரயேலருக்கு எதிராய்இருந்ததால் தலைவர்களில் ஒருவன்அல்ல)

 

நீதித் தலைவர்கள் என்று கூறுகின்றபோது இதுகாறும் நாம்கூறிவந்த கருத்துக்களின்படி மோசே தொடங்கி சாமுவேல் வரையிலும்பணியாற்றிய தலைவர்களையும் நீதித்தலைவர்கள் என நாம்கொள்ளலாம். ஏலியும் சாமுவேலும் (1 சாமு 1 : 7) இப்பட்டியலில்சேர்க்கப்பட வேண்டியவர்கள்.இவர்கள் இருவர் மட்டுமே இஸ்ரயேல் நாடு முழுவதற்கும்நடுவர்களாக இருந்ததாகத் தெரிகிறது. நீதித்தலைவர்களுக்குமுன்னோடியாக விளங்கும் யோசுவாவையும் இப்பட்டியலில் சேர்ந்து நாம்ஆராய்வோம்.

2.5. காலக்கணிப்பு:
நீதித்தலைவர்கள் காலம் கி.மு. 1200-1040க்கு இடைப்பட்டகாலமாகும். இந்நூலில் வரும் குறிப்புக்களைக் கொண்டு கணித்தால்,இந்நிகழ்ச்சிகள் நடக்க 410 அல்லது 480 ஆண்டுகள் எடுத்திருக்கலாம்என்பது கணிப்பு. ஆனால் இக்கணிப்புக்களை விளக்க முற்படுகையில்பல குழப்பங்கள் தோன்றும். ஏனெனில் இங்கு தரப்படும் நிகழ்ச்சிகள்காலவரையின்படித் தரப்படவில்லை, ஒன்றன்பின் ஒன்றாகநடந்ததாகவும் தெளிவு இல்லை.

2.6. எழுதியவர்:
சாமுவேல் இறைவாக்கினர் இந்நூலை எழுதினார் என்றுராபிக்கள் பாரம்பரியம் கூறுகிறது. இதை ஒத்துக்கொள்வது கடினம்.ஏனெனில் இதில் வருகின்ற நிகழ்ச்சிகள், கருத்துக்கள் எல்லாம் பலநூற்றாண்டுகளின் தொகுப்பாகும். நீதித்தலைவர்களை "முற்காலஇறைவாக்கினர்கள்" என்றும் அழைப்பர்.நீதித்தலைவர்கள் பற்றிய ஆழ்ந்த படிப்பிற்கு உறுதுணையாகஇருப்பது மார்டின் நோத் என்பவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகும்.இதைத் தொடர்ந்து க்லோஸ்டர்மான், ஐஸ்பெல்ட், ரிக்டர் போன்றவர்கள்ஆராய்ச்சி செய்து பல விளக்கங்களைத் தருகின்றனர்.

2.7. நூலின் தோற்றம்:
நீதித்தலைவர்கள் நூலின் தோற்றத்தை நான்கு படிகளில்காணலாம்.
(அ) முதற்படி
வீரர்களின் வரலாறு, குடும்பவீரகாவியங்கள், பெயர் காரணக்கதைகள் ஆகியவை வாய்மொழிப்பாரம்பரியங்களாகப் பாதுகாக்கப் பட்டுவந்தன.பல இடங்களில் பரவியிருந்தமக்கள் குழுக்களிலும் சிறப்பாக வழிபாட்டு மையங்களிலும் அவைகளைப்பேசியும் கூறியும் வந்தனர். வட நாட்டு,தென்னாட்டு மரபுகளில்காணப்பட்டவைகள் மாற்றியமைக்கப்பட்டு நினைவில் காக்கப்பட்டன.இது கி.மு. 12 ஆம் 11 ஆம் நூற்றாண்டுகாலத்தது.

(ஆ) இரண்டாம்படி
வாய்மொழி மரபுகள் இணைச்சட்ட வடிவில் ஒன்றுசேர்க்கப்பட்டு எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டது, நீதித்தலைவர்களால்சட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது இஸ்ரயேல் அனைத்துமக்களுக்கும் ஏற்றதாகிறது. இது தாவீது, சாலமோன் காலத்தது.

(இ) மூன்றாம்படி
வட அரசு வீழ்ந்த பிறகு (கி.மு. 721) இம்மரபுகள் இணைக்கப்பட்டுமுதற்பதிப்பு தோன்றியது. பல நிகழ்ச்சிகளைக் கோர்த்து தனக்குரியபாணியில் இணைச் சட்ட ஆசிரியர் இதை இயற்றுகிறார்.மீண்டும் மீண்டும் வரும் வாய்ப்பாட்டுச் சொற்கள். வரலாற்றுவிளக்கம், உடன் படிக்கை இவைகள் இடம் பெறுகின்றன."பாவம் செய்தல், துன்பப்படல், மனந்திருந்தல், விடுதலை,அமைதி"" என்ற கருத்துக்கள் கோர்வையாக மீண்டும் மீண்டும் வருவதைக்காணலாம். இப்பதிப்பாசிரியர் தன் நோக்கத்திற்கு ஒவ்வாததைவிலக்கியிருக்கலாம் (சான்றாக 9, 16 அதிகாரங்கள், சிறியஇறைவாக்கினர்கள்).ஆனால் இவருக்குப் பின் வந்தவர் இந்த இறைவாக்கினர்களையும், 9, 16 அதிகாரங்களையும் இணைத்துத் தந்திருக்கலாம். இது7ஆம் நூற்றாண்டில் நடந்ததாகக் கருதுகின்றனர்.

(ஈ) நான்காம்படி
அதிகாரங்கள் 17-18ல் வரும் தாண் திருத்தலம், அதிகாரங்கள் 19-21இல் வரும் உள்நாட்டுப் போர்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவைஎன்கின்றனர். ஏனெனில் அதி 1-16 வரையில் காணப்படும் இறையியல்நோக்கு இங்கு இல்லை.இவைகள் இஸ்ரயேல் நாடு கடத்தப்பட்ட பின் (கி.மு. 587) எழுதப்பட்டிருக்க வேண்டும்.எனவே பல நூற்றாண்டுகளாக பல மாற்றங்களைப் பெற்று,கருத்துக்களால் வேறுபட்டும் மாறுபட்டும் பதிப்பிக்கப்பட்டு நமக்குக்கிடைக்கிறது இந்நூல்.ஆனால் இறைவனே தங்கள் மீட்பர்; அவர் மீது பற்றுறுதி கொள்ளவேண்டுமென்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றனர்.இப்போது நீதித்தலைவர்களெனப் போற்றப் பெறும் யோசுவா,தெபோரா, கிதியோன், சிம்சோன் இவர்களைப் பற்றிக் காண்போம்.

 

3. ஜநூல்களில் யோசுவா

சட்டங்களின்படி நீதி செலுத்துபவர்கள், இஸ்ரயேலை மாற்றான்தாக்குதலிலிருந்து காப்பவர்கள் மட்டுமல்ல, விவிலியம் கூறும்நீதித்தலைவர்கள்,"இறை நீதியை மெய்ப்பிக்கும் கருவிகள்,அருங்கொடை பெற்றவர்கள்,விடுதலை தருபவர்கள்,ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு வாழ்பவர்கள்" ஆவர்.இப்பாணியில் நோக்கும்போது யோசுவாவும் அவர்களில்ஒருவராகிறார். அவரைப் பற்றிப் பார்ப்போம்.

31. யோசுவா யார்?:
யோசுவா நூனின் மகன். மோசேயின் ஊழியன் என்று யோசுவாநூல் அறிவிக்கிறது. மோசேக்குப் பின் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர். இஸ்ரயேல் மக்களின் தலைவராகச் செயல்பட்ட இவர்எப்பிராயிம் குலத்தைச் சார்ந்தவர். இறைவன் இஸ்ரயேல் மக்களுக்குக்கொடுத்த வாக்குறுதியாம் "பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை"யோசுவா வழியாக அவர்களுக்குப் பெற்றுத் தருகிறார். மோசேஉடன்படிக்கைச் சட்டத்தை வழங்கும் தலைவராகத் தோன்றுகிறார்.யோசுவா இந்த உடன்படிக்கையைப் புதுப்பிக்கிறார், அதை மக்கள்வாக்களிக்கப்பட்ட நாட்டில் கடைப்பிடிக்க வைக்கிறார். இஸ்ரயேலின்பன்னிரு குலங்களுக்கும் அந்நாட்டைப் பங்கிட்டுத் தருகிறார். இவரதுவாழ்வு முழுவதும் போர்கள் நிறைந்ததாக உள்ளன. பல வெற்றிகளைஇஸ்ரயேலுக்குப் பெற்றுத்தந்த இவர் ஒரு மாபெரும் வீரர். மக்கள்இறைக்கட்டளைக்கு செவிமடுக்க வேண்டுமென்று அயராதுபாடுபடுகிறார்.

3.2. யோசுவா: ஓர் ஒப்பற்ற வீரர்:
யோசுவாவை விடுதலைப் பயணநூல் ஓரு படையை நடத்திச்செல்லும் தலைவராகக் காட்டுகிறது (17:8-16). அமலேக்கியரோடு போர்புரியும் யோசுவாவின் வெற்றி வெறுமனே அவரின் வெற்றியல்ல. அதுஆண்டவரின் வெற்றி. இந்தச் செய்தியை யோசுவாவின் காதுகளிலேபோட்டு வைக்கிறார் மோசே. இதுவும் ஆண்டவரின் வேண்டுகோளின்படியே நடக்கிறது.இளைய துடிப்புள்ள போர்த்தலைவராக இருக்கின்றபொழுதேஆண்டவரின் அளப்பெரும் செயல் அவரிடம் இருந்ததாக கூறப்படுகிறது.ஆண்டவரின் வழிநடத்துதலை இவ்வாறு அவர்என்றும் மறக்கவில்லை. பல போர்களை வென்றுஇஸ்ரயேலருக்கு மீட்பும் வெற்றியும் தேடித் தந்தயோசுவா - தனது பெயரிலே மீட்பர் என்றபொருளைத் தாங்கியுள்ளார். யோசு என்றால்மீட்பவர் என்று பொருள். யோசுவாவும் யேசுவின்முன்னோடியான ஒரு மீட்பராக விளங்குகிறார்.

3.3. யோசுவா மோசேயின் உதவியாளர்:
யோசுவாவைப் பற்றி விடுதலைப் பயணநூல் பின்வரும் குறிப்புக்களைத் தருகின்றது.அவர் மோசேயின் துணையாளராக இருந்தவர்(விப 24 : 13). இந்தப் பகுதியில் நாம் மோசே, ஆரோன், நாதாபு, அபிகூஆகியோரையும் இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களையும் காண்கிறோம்.இவர்கள் இறைவனைச் சந்திக்கின்றனர். உடன்படிக்கைநடந்தேறுகின்றது. கடவுள் தனது சட்டதிட்டங்களை மோசேவுக்குக்கொடுக்க வாக்களிக்கிறார். அப்போது யோசுவாவுடன் எழுந்து சென்றமோசே மலைமீது ஏறும்போது தனித்துச் செல்வதாகக் காட்டப்படுகிறது(காண். விப 24) .உடன்படிக்கைச் சட்டம் அளிக்கப்படும்போது யோசுவாதுணையிருப்பதை இந்நூல் காட்டுகிறது. இதிலிருந்து யோசுவாவின் சமயஅறிவு, பயிற்சி, பற்று போன்றவை மிகத் தெளிவாக விளங்குகின்றது.ஏனெனில் மோசேயின் பணியைப் பின்னால் தொடரவிருக்கும் யோசுவாமோசேயின் அருகிலிருந்தே கடவுள், உடன்படிக்கை, சட்டதிட்டங்கள்அனைத்தையும் அறிந்து கொள்கிறார்.

3.4. யோசுவாவும் கட்டளைப் பலகையும்:
நாம் யோசுவாவைப் பற்றி மேற்கூறிய கருத்துக்கள்வலுப்பெறுகின்றன. ஏனெனில் நாம் மறுபடியும் மோசே கட்டளைப்பலகைகள் இரண்டைத் தாங்கி வரும் காட்சியில் யோசுவாவைபார்க்கின்றோம். இப்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை.இப்பலகைகள் மீது எழுதப்பட்டிருந்த எழுத்தும் கடவுளுடையதாகஇருந்தது (விப 32:15 தொட.).இக்காட்சி அருமையான காட்சி. மோசே பத்துக்கட்டளைப்பலகையை ஏந்தி மக்களை நோக்கி வர யோசுவாவும் கூட வருகிறார்.இருவரும் பேசிக்கொண்டே வருகின்றனர். கீழே இறங்கி வந்த மோசேஇஸ்ரயேல் மக்கள் பொற்கன்றை வழிபடுவதைக் கண்டு கோபம்கொண்டார். கையிலிருந்த பலகைகளை வீசியெறிந்து உடைத்துப்போடுகிறார் (விப. 32 : 15-20). இவைகளை யோசுவா உடனிருந்துகாண்கிறார். பிற்காலத்தில் இஸ்ரயேல் மக்களைத் தயாரித்து, உடன்படிக்கைச் சட்டத்தை அவர்களுக்கு ஊட்டித் தெளிவுபடுத்த இப்போதேகடவுளால் தயார் செய்யப்படுகிறார் யோசுவா. இயேசு சீடர்களைத்தயாரித்ததுபோல் யோசுவாவும் கடவுளால் தயாரிக்கப்படுகிறார்.

3.5. மோசே கூடாரத்தில் யோசுவா:
சந்திப்புக் கூடாரம் என்று விடுதலைப் பயண நூல் அழைக்கும்மோசேயின் கூடாரத்தில் ஆண்டவர் அவருடன் மேகத்தூண் நடுவேபேசுவார் (விப 33 : 7 தொட.). ஒரு நண்பனிடம் பேசுவதுபோல் ஆண்டவர்முகமுகமாய் மோசேவுடன் பேசுவார். யோசுவா இப்போது ஓர் இளைஞன்.இவர் மோசேயின் உதவியாளர். இவர் கூடாரத்தை விட்டகலாமல்இருப்பார் (33 : 11) . மோசேயும் கடவுளும் சந்திப்பதை விடாமல் பார்க்கும்பேறு இளைஞனாயிருக்கும்போதே யோசுவாவுக்குக் கிடைக்கிறது.கடவுளின் மீது யோசுவா பின்னால் வெளிப்படுத்தும் பற்றுறுதிக்குஇச்சூழல் அதிகமாக உதவுகிறது.

3.6. உண்மை உரைத்த உளவாளி:
மோசே ஓசேயா என்ற நூனின்மகனை" யோசுவா" என்று பெயரிட்டுஅழைத்தார் என எண்ணிக்கை நூல் (13: 16) கூறுகிறது. எப்பிராயிம் குலத்தவரான யோசுவா கானான் நாட்டில்உளவு பார்க்க மோசேயினால் அனுப்பப்படுகிறார். தனது பணியை நேர்மையோடும், உறுதியோடும் செய்துமுடிக்கிறார். காலேபும் யோசுவாவும்உளவு பார்த்துவிட்டு வந்து உண்மையைக் கூறுகின்றனர் (எண் 14 : 6-8).இதற்கு எதிரிடையாக மற்றஉளவாளிகள் கூற, எகிப்துக்குச்சென்றுவிட இஸ்ரயேல் கூட்டமைப்புமுடிவெடுக்கிறது. அது மட்டுமன்றுஅவர்களைக் கொல்லவும் உத்தரவிடுகின்றனர். காலேபும் யோசுவாவும்பயப்படவில்லை. துணிவோடு "கடவுள் நம்மோடு இருக்கிறார்.கனானேயர்களுக்கு நாம் அஞ்ச வேண்டாம்" என்று யோசுவா வீர உரைதருகின்றார் (எண் 14 : 6-10). இது வீர உரை மட்டுமன்று, ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையுரையுமாகும்.இந்த நம்பிக்கை வீண் போகவில்லை. எகிப்திலிருந்து புறப்பட்டுவந்தவர்களுள் யோசுவாவும் காலெபும் மட்டுமே கானான் நாட்டில்நுழைய கடவுளின் அனுமதி பெறுகின்றனர் (14 : 30). மற்றஉளவாளிகளைப் போன்று உண்மையைத் திரிக்காமல் யோசுவாவும்காலெபும் பேசுவதால் கடவுளின் சினத்துக்குத் தப்பித்துக் கொள்கின்றனர்.மற்றவர்களோ மடிகின்றனர் (எண் 14 : 37-38; 26 : 65; 32 : 12).

3.7. பொறுப்பாளர் யோசுவா:
எண்ணிக்கை நூலும் (27 : 18-23) இணைச் சட்டமும் (31 : 7-29)யோசுவா இஸ்ரயேலருக்குப் பொறுப்பாளராக எற்படுத்தப்படும்நிகழ்ச்சியைக் கூறுகின்றன. மோசே தன் அதிகாரத்தை அவரோடு பகிர்ந்துகொள்கிறார். யோசுவாவின் மீது தன் கரங்களை வைத்து அவரைப்பொறுப்பாளராக நியமிக்கிறார்.யோசுவா பொறுப்பேற்கும் நியமனத்தை மோசே குருஎலயாசருக்கும் மக்கள் கூட் டமைப்பிற்கும் முன்பாகச் செய்கிறார். எனவேமோசேயின் சொல் கேட்டு கீழ்ப்பழ்?த மக்கள் இனிமேல் யோசுவாவுக்குக்கீழ்ப்படிவர்.மோசே யோசுவாவுக்குத் திடமளிக்கும் வார்த்தைகளைக்கூறுகிறார். இஸ்ரயேல் மக்களோடு வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள்நுழைய வேண்டும். "ஆண்டவரே உமக்கு முன் செல்வார். அவர்உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர்உன்னைக் கைவிடவுமாட்டார். அஞ்சாதே, திகைக்காதே" . இந்த அற்புதவார்த்தைகள் யோசுவாவிற்கு ஆசீர்வாதமாக அமைந்தன. ஏனெனில்மோசேவுக்குப் பின் அனைத்துப் பொறுப்புக்களையும் இவர் ஏற்கவேண்டியிருந்தது.

3. 8. ஞானமுள்ள பொறுப்பாளர்:
மோசே தம் கைகளை யோசுவாவின் மேல் வைத்ததால், அவர்ஞானத்தின் ஆவியால் நிரப்பப்படுகிறார் (இச 34 : 9). இஸ்ரயேல் மக்கள்யோசுவாவிற்குச் செவிமடுக்கிறார்கள். கடவுள் சொன்ன வாக்குப்படிநடக்கிறார்கள். எனினும் இப்பொறுப்பு எத்தகைய பளுவானது என்பதுயோசுவாவுக்குத் தெரியும். ஏனெனில் இஸ்ரயேலர் "வணங்காகழுத்துள்ள "மக்கள், அடம் பிடிப்பவர்கள், வேற்றுத் தெய்வங்களைநாடுபவர்கள், உடன்படிக்கையை மீறுபவர்கள், ஆண்டவருக்கு எதிராகக்கலகம் செய்பவர்கள். இவர்களைச் சமாளிக்க இறையருளின்றி இயலாதுஎன்பதை யோசுவா அறிந்திருந்தார் (காண். இச 31 : 7-29).

 

4. யோசுவா நூலில் யோசுவா

இதுகாறும் யோசுவாவைப் பற்றி நாம் அறிந்தவை எல்லாம்தோரா (ஐந்நூல்) நூல்களிலிருந்து அறிந்தவையாகும். சில அறிஞர்கள்இங்கு காணக்கிடக்கும் குறிப்புகள் இரண்டாந்தரமானவை, யோசுவாபற்றின உண்மையை ஆணித்தரமாக உரைப்பவை என நினைக்கவேண்டாம் என்கின்றனர்.ஆனால் மோசே தேர்ந்தெடுத்த எழுபது மூப்பர்கள் அல்லாதஎல்தாது, மேதாது என்பவர்கள் மீது ஆவி இறங்கி வந்து இறைவாக்குரைத்தனர். இதைத்தடுத்து நிறுத்துமாறு "தேர்ந்தெடுக்கப்பட்டோரில்ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தனுமான யோசுவாகேட்பது கண்டிப்பாக உண்மை எனலாம்" (எண். 11:24-28).அதுபோல காலெப் என்பவரோடு உளவாளியாகச் சென்றதும்உண்மையாக இருக்கலாம் (எண் 14; விப 33 : 11).

யோசுவா நூலிலிருந்து யோசுவாவைப் பற்றியும், அவர் புரிந்தவீரச்செயல்கள், நிலத்தை குலங்களுக்குப் பங்கிடல், உடன்படிக்கையைப்புதுப்பித்தல் போன்ற அளப்பெரும் செயல்களை இங்கே காணவிருக்கிறோம். இருப்பினும் யோசுவாவைப் புதிய மோசேயாக, அரசருக்குரியமாண்புடைய தீரனாக இஸ்ரயேல் பாரம்பரியம் காணத் தவறவில்லை.அவைகளைப் பற்றி இப்போது அலசுவோம்.

4.1. யோசுவா மோசேயின் வழித்தோன்றல்:
யோசுவாவை மோசேயின் வழித்தோன்றலாக யோசுவா நூல்காட்டுகிறது. மோசேயின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஆண்டவர்யோசுவாவைப் பணிக்கிறார். யோசுவா இஸ்ரயேல் மக்களோடு புறப்பட்டுவாக் களிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்ல வேண்டும். திடமும் உறுதியும்கொண்டு மோசே சட்டதிட்டங்களைக் கடைபிடிக்க வேண்டும்.இறைவன் இன்னுமொரு சிறந்த வாக் குறுதியளிக்கிறார். "மோசேயுடன்நான் இருந்தது போல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கை நெகிழமாட்டேன், கைவிடவும் மாட்டேன்" (1 : 1-17) என்பதே அவ்வாக்குறுதி.இஸ்ரயேல் மக்கள் யோசுவாவைத் தங்கள் தலைவராகஒருமனதாக ஏற்றுக் கொள்கின்றனர். "நாங்கள் மோசேக்குக் கீழ்ப்பழ்?தது போல் உமக்கும் கீழ்ப்படிவோம்" என்று உறுதியளிக்கின்றனர்."ஆண்டவர் மோசேயுடன் இருந்ததுபோல் உம்மோடும் இருப்பாராக"" என்றுஆசியும் வழங்குகின்றனர் (1 : 16-18).

4.2. யோசுவா மோசேயைப் போல் ஆற்றும் செயல்கள்:
யோசுவா யோர்தான் நதியைக் கடந்து இஸ்ரயேல் மக்களைநடத்திக் கொண்டு போகிறார் (3 : 7-4 : 24) . இந்நிகழ்ச்சிகள் மோசேசெங்கடலைக் கடந்து இஸ்ரயேல் மக்களைக் கூட்டி வந்ததைநினைவுபடுத்துகிறது (காண். 4 : 23).யோசுவா மோசேயைப் போன்று (விப 19 : 14) இஸ்ரயேல் மக்களைத்தூய்மைப்படுத்துகிறார். ஆண்டவரும் மோசேயைப் போல யோசுவாவை"இஸ்ரயேலரின் பார்வையில் உயர்த்துகிறார்" (3 : 7; 4 : 14) .எரிக்கோவில் ஆண்டவரின் படைத்தலைவன் யோசுவாவுக்குத்தோன்றுகிறார். யோசுவா முகம் தரையில் பட அவரை வணங்கவே "உன்காலணியை உன் காலிலிருந்து அகற்று. ஏனெனில் நீ நிற்கும் இடம்புனிதமானது" என்கிறார். யோசுவாவும் அப்படியே செய்கிறார். இதுயாவே மோசேவுக்கு எரியும் புதரில் தோன்றியதை ஒத்துள்ளது (காண்.5:15; விப. 3:5).ஆண்டவர் யோசுவாவின் குரலைக் கேட்டார் (10 : 12, 14 )மனிதக்குரலைக் கேட்டு இஸ்ரயேலருக்காகப் போராடினார். மோசேயும்ஆண்டவரிடம் மன்றாட அம்மன்றாட்டை ஆண்டவர் கேட்டதைக்காண்கிறோம் (இச 9 : 19; 10 : 10).ஆண்டவருடன் பேசி இஸ்ரயேலர் கண்முன், கதிரவனையும்,நிலவையும் அசையாது நிற்கச் செய்திருக்கிறார் யோசுவா (10 : 12-14).மோசேயிடம் ஒரு நண்பனைப் போல் பேசிய கடவுள் யோசுவாவிடமும்பேசினார். என்னே யோசுவாவின் இறைப்பற்று! மிகவும் இறைஅனுபவம் யோசுவா பெற்றிருந்தார். எனவேதான் இது வெறும் வரலாற்றுநூலல்ல (யோசுவா நூல்) , சமய வரலாற்று நூல் என்கிறோம்.

4.3. கடவுள் கட்டளைகளைக் கல்லில் எழுதுகிறார்:
யோசுவா ஏபால் மலையில் ஆண்டவருக்கு ஒரு பீடம்எழுப்பினார். அதன் மீது எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும்ஒப்புக்கொடுத்தார். பின்பு அங்கு கற்களின் மீது மோசேயின் கட்டளையையோசுவா இஸ்ரயேல் முன்னிலையில் எழுதுகிறார்.அதைத் தொடர்ந்து சுற்றியிருந்த கூட்டத்திற்கு முன்பு திருச்சட்டத்திலுள்ள அனைத்து நியமனங்களையும் வாசிக்கிறார். வழிபாட்டுச்சூழலில் வாசிக்கப்படும் இச்சட்டங்கள் மோசே கட்டளையாயினும் அதுஉண்மையாக ஆண்டவனின் கட்டளை (8 : 30-35).யோசுவா கில்கால் என்னுமிடத்தில் கற்களால் கத்திகள் செய்துஇஸ்ரயேலருக்கு விருத்தசேதனம் செய்தார். ஏனெனில் ஆண்டவர்அதைக் கட்டளையிட்டிருந்தார் (5 : 2-7). இவ்வாறு கடவுளுக்குஅவர்களை நேர்ந்தளித்தார்.

4.4. யோசுவாவின் அரசத்தன்மை:
யோசுவா நூலைப் புரட்டினால் நாம் பல இடங்களில் அவர் ஓர்அரசருக்குரிய பண்புகளோடு தனது பணிகளை நிறைவேற்றுவதைப்பார்க்கலாம்.மேய்ப்பனில்லா குறையை நீக்கி ஆண்டவர் தனது மக்கள்கூட்டமைப்புக்கு "ஆவியைத் தன்னுள் கொண்ட மனிதனைத் தருகிறார்.குரு எலயாசரும் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் கண்டுகளிக்குமாறு மோசே யோசுவாவின் மீது கையை வைத்துத் தனதுஅதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்" (காண். எண் 27 : 18; இச 34 : 9.ஒப். 1 சாமு 10 : 10; 16 : 13).ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பெற்ற யோசுவா ஆண்டவரின்ஊழியர் என அழைக்கப்படுகிறார் (24:19). யோசுவா என்ற பெயர்ஒசியாவிலிருந்து மாற்றம் பெற்று நமக்குக் கிடைக்கிறது (எண் 13:16). இதுஅரசப் பரம்பரையில் செய்யும் ஒரு பழக்கம். ஆள்வதற்குப் பொருத்தமானஒரு பெயரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். யோசுவா என்றால் மீட்பர்என்பது நமக்குத் தெரிந்ததே.

4. 5. நாட்டைப் பகிர்ந்தளித்தல்:
யோசுவா தலைமையேற்று நாட்டைப் பன்னிரு குலங்களுக்கும்பகிர்ந்தளிக்கிறார். கடினமான இப்பணியைத் துணிச்சலோடு செய்கிறார்.ரூயஅp;பன், காத்து, மனாசே, யூதா, எப்ராயிம், பென்யமின், சிமியோன்,செபுலோன், இசக்கார், ஆசேர், நப்தலி, தாணு, லேவி ஆகியோருக்குநிலத்தைப் பகிர்ந்தளிப்பதை யோசுவா நூல்விரிவாகக் கூறுகின்றது (13-22). யோசுவாவின்தலைமையில் இஸ்ரயேலர்கள் போர் செய்துநிலங்களைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.ஆனால் அது கடவுளின் இரக்கச் செயல். நிலம்அனைத்தும் யாவேதான் இஸ்ரயேலருக்குஅளிக்கின்றார். இதனால் பெயரும் புகழும்ஆண்டவர்க்கே என்ற எண்ணம்இஸ்ரயேலரிடையே வலுவாக இருந்தது.யோசுவா நிலங்களைப் பகிர்ந்தளிப்பதுசாலமோன் இஸ்ரயேல் நாட்டில் பன்னிருஆளுநர்களை ஏற்படுத்தி ஆண்டு வந்த அரசநிகழ்ச்சியை ஒத்திருக்கிறது (1 அர 4 : 1-18).

யோசுவா நீதிபதியாயிருந்து நிலங்களைப் பிரிக்கும் முறைமையில்உதவிக்கு வருகிறார். இவர் நடுவராயிருந்து நீதி வழங்கியபோதுமுறையீடுகள் எல்லாம் கவனிக்கப்படுகின்றன. அனைவரும்மகிழ்ச்சியடைகின்றனர். முறைகேடுகள் நடந்ததாக எப்பகுதியும்கூறவில்லை (14 : 6-15; 17 : 4; 14-18) (காண் ஏசா 11 : 3). இங்கு நாம்யோசுவாவை ஒரு நீதியுள்ள நடுவராகக் காண்கின்றோம்.யோசுவாவை எலயேசர் குருவோடு அடிக்கடி பார்க்கின்றோம்.வழிபாடு, திருச்சட்டம், உடன்படிக்கை இவைகளை நிறைவேற்றும்போதுயோசுவாவும் எல்லா நிகழ்ச்சிகளிலும் உடனிருந்து உதவி புரிகிறார்.எனவே இவர் ஒரு குருவும் ஆவார் என்று சொல்லும் அளவுக்கு யோசுவாநூல் சித்தரிக்கின்றது.யோசுவா இஸ்ரயேல் மக்களின் தலைமையேற்று உன்னதசெயல்கள் பல புரிந்துள்ளதைக் கண்டோம். இச்செயல்களுக்கெல்லாம்முத்தாய்ப்பு வைப்பதுபோல் அவரது பின்வரும் செயல் உள்ளது (33:11).

4.6. சிக்கேமில் இஸ்ரயேலரை ஒன்று கூட்டல்:
இஸ்ரயேல் மக்கள் இறைவனைப் பல முறை கோபமூட்டியவர்கள். தீச் செயல்களைப் புரிந்தவர்கள். உடன்படிக்கையைமீறியவர்கள், திருச் சட்டங்களுக்குச் செவி சாய்க்க மறுத்தவர்கள்.எனவே இவர்களை வணங்காக் கழுத்துள்ள மக்கள், கலகக்காரர்கள்,குழப்பக்காரர்கள் என்று பழைய ஏற்பாடு கூறுகிறது. மோசேயைக் கல்லாலெறிந்து கொள்ளத் திட்டமிட்டவர் கள் என்பதை நினைவில்கொள்வோம்!இத்தகைய மக்களை,மோசேக்குப்பின் தலைமையேற்று வாக்களிக்கப்பட்டநாட்டை வென்று அங்குகுடியேற வைத்த பெருமை யோசுவாவைச் சாரும். பல நெருக்கடியான நேரங்களிலும் நிதானம்இழக்காது, நம்பிக்கை குன்றாது,இறைவனுக்குப் பிரமாணிக்கமாக இருந்தார் யோசுவா.இறைவனின் திருச்சட்டங்களைக் கடைபிடிப்பதில் கண்ணாயிருந்தார். வாய்ப்புக்கிடைத்தபோதெல்லாம் அச்சட்டங்களை மக்களுக்குஎடுத்துக்கூறி அவைகளைக்கடைப்பிடிக்க அதிகச் சிரமம்மேற்கொண்டார்.

தனது பணியின் இறுதியும், உச்சகட்டமுமாக யோசுவாஇஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்றுகூட்டுகிறார்.இஸ்ரயேலின் தலைவர்கள், முதியவர்கள், நடுவர்கள், அதிகாரிகள்அனைவரையும் அழைக்கிறார். இறைவனின் அளப்பெரும் செயல்களைஅவர்களுக்கு எடுத்துக்கூறுகிறார். "ஆண்டவருக்கே நாங்கள் ஊழியம்செய்வோம்" (24 : 15, 16, 21-25) அவர்க்குக் கீழ்ப்படிவோம் என்றுஇஸ்ரயேல் மக்கள் உறுதி கூறுகின்றனர். இது ஓர் அற்புதமானஉறுதிவாக்கு. இஸ்ரயேலரின் தளர்ந்த பற்றுறுதி புதுப்பிக்கப்படுகிறது.இத்தகைய உறுதிப்பாட்டுக்கு இஸ்ரயேலரைத் தயாரித்த பெருமையோசுவாவைச் சேரும். எவ்வாறு இந்நிலைக்கு அவர்களைத் தயாரிக்கமுழ்?தது?

4.7. யோசுவாவின் பற்றுறுதி:
யோசுவா கடவுளின் மீது கொண்டிருந்த பற்றுறுதிக்குப் பலகாரணங்கள் உள்ளன. இளைஞனாக இருந்தபோதே (எண் 33:11)மோசேயின் நம்பிக்கைக் குரிய ஊழியனாக இருந்தார் (எண் 1 : 28).சீனாய் மலையில் மோசே நாற்பது நாட்கள் கடவுளோடு உரையாடியபோதுபுனிதத்தலத்துக்கருகே தங்கியிருந்து (விப. 24:13-18; 32:15-17) புதியஇறையனுபவம் இவரும் பெறுகிறார். இறைவனும் மோசேயும் சந்திக்கும்கூடாரத்தருகே காப்பாளனாக இருந்தார் (விப 33:11). யோசுவாவால்மறக்க முடியாத இன்னொரு அனுபவம் கடவுளின் கட்டளைப்பலகையைத் தாங்கிவந்த மோசே இஸ்ரயேல் மக்கள் பொற்கன்றைவழிபடுவது கண்டு சினமுற்று கட்டளைப் பலகையை உடைத்துப்போடுவது ஆகும். இஸ்ரயேல் மக்கள் உடன்படிக்கையை மறந்துபிரமாணிக்கம் இழந்து வேறு கடவுளை வழிபடத் தொடங்கியதுயோசுவாவின் நினைவினின்று நீங்கவில்லை (விப 32:15-21).

ஏற்கனவே மோசேயின் உளவாளியாக இருந்தபோது பாதகமானசெய்தி கொண்டு வந்த உளவாளிகளின் செய்தியை உடைத்து உண்மையை நிலைநாட்டிய வீரம் இவரிடம் உண்டு. காலெபோடு இவரைஇஸ்ரலேயர் கல்லாலெறிய முயன்றனர் (யோசு. 14:4-10). ஆனால்இவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டில் கடவுளால் காப்பாற்றப்படுகின்றனர். மேலும் வாக்களிக்கப்பட்ட நாட்டில் நுழைய ஆண்டவரின்அனுமதியும் பெறுகின்றனர் (யோசு 14:30; 26:65 காண் 1 மக் 2:55;எபி 3:17-18).இந்நிகழ்ச்சிகளெல்லாம் யோசுவாவின் பற்றுறுதியைஆழப்படுத்தியது. இறைவன் மீதுள்ள நம்பிக்கை வளர்ந்து கொண்டேபோனது. அதன் வளர்ச்சியைத்தான் பின்வரும் நிகழ்ச்சி காட்டுகிறது.

4.8. நானும் என் வீட்டாரும் ஆண்டவர் பக்கம்
பல போர்கள் புரிந்து வெற்றி பெற்ற யோசுவா தனது வெற்றிகளுக்கெல்லாம் காரணம் கடவுளே என்பதை ஆணித்தரமாக நம்பினார்( 6:20,10:10-14). பிரமாணிக்கமான வாழ்வில் இஸ்ரயேலை இட்டுச்சென்றிருக்கிறார் (8:30-35; 24). இப்போது இவருக்கு வயது முதிர்ந்துவிட்டது.இஸ்ரயேலின் மூப்பர்களை சிக்கேமில் அழைத்த யோசுவா தனதுஇறுதி வார்த்தைகளை உறுதிப்பாட்டுடன் சொல்லும் பாணி பற்றுறுதிசெறிந்தது."இப்போது ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் புரியுங்கள். ........ ஆண்டவருக்கு ஊழியம்புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால்....... மற்றதெய்வங்களுக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே...... முடிவுசெய்யுங்கள். ஆனால் நானும் என்வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம்செய்வோம்" (24:14-15) என்றுநம்பிக்கையும், உற்சாகமும் மேலிடகண்டிப்போடும் எச்சரிக்கையோடும்உரைக்கிறார்.இஸ்ரயேலர் வாக்களிக்கப்பட்டநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டது,அந்நாட்டை உடைமையாக்கிக் கொள்ளமட்டுமல்ல, இறைவனோடுஉடன்படிக்கையை நிலப்படுத்தவும்,அவரது சட்டத்தைக் கடைப்பிடித்துநேர்மையுடன் வாழவுமாகும் என்பதையோசுவா அறிந்திருந்தார். தன்னையேஅதற்கு மாதிரியாகக் காட்டுகிறார். தனதுஇறுதி மொழிகளில் யோசுவா உரைப்பது(அதி. 23), இஸ்ரயேலர்

1) நிலங்களை உடைமையாக்கிக் கொள்வது
2) திருச்சட்ட நூலைக் கடைப்பிடிப்பது
3) வேற்றினத்தாரோடு சேராதிருப்பது
4) ஆண்டவரைப் பற்றிக்கொள்வது
5) அவரின் மீது அன்பு கூர்வது போன்ற செய்திகளாகும்..

யோசுவா இவ்வாறு கடவுள் மீது பற்றுறுதி கொண்ட மனிதனாகவெளிப்படுகிறார். இஸ்ரயேல் மக்களும் இப்பற்றுறுதியைக் காட்டவேண்டுமென்றும், அதில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் மிகுந்தகருத்தாயிருக்கிறார்.

4.9. யோசுவா உடன்படிக்கையைப் புதுப்பித்தல்:
மோசே செய்த உடன்படிக்கையை இஸ்ரயேலர் மீறினர்.உண்மைக் கடவுளை விட்டு வேறு தெய்வங்களுக்கு வழிபாடு செய்தனர்.மோசே ஆண்டவரின் கட்டளையை ஏற்று உடன்படிக்கையைப்புதுப்பிக்கிறார். இஸ்ரயேலர் 'நாங்கள் கடவுளின் வார்த்தைக்குச்செவிமடுப்போம், அவருக்குக் கீழ்ப்படிவோம்" என வாக்குறுதி தருகின்றனர்(விப 34).இப்போது அவ்வுடன்படிக்கையை சிக்கேமில் யோசுவாபுதுப்பிக்கிறார். மோசேயைப் போல உடன்படிக்கையைப் புதுப்பிப்பதற்குமுன் ஆண்டவர் இஸ்ரயேலர் சார்பாக நின்று அவர்களுக்கு ஆற்றியநன்மைகளை எடுத்துக் கூறுகிறார். இஸ்ரயேலருக்காகப் போரிட்டவர்ஆண்டவர். எதிரிகளை ஒழித்ததும் அவரே. எகிப்தி லிருந்து மீட்டஆண்டவர் இப்போது வாக்களிக்கப்பட்ட நிலத்தை அருளுகிறார்.இவ்வளவு நன்மை செய்தி ருந்தும் ஆண்டவரை இஸ்ர யேலர் பன்முறைபுறக்கணித் தனர் (காண். 24).

எனவே 'ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும்அவருக்கு ஊழியம் புரிய" யோசுவா அழைக்கின்றார்."ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள்கடவுள்"" என்றனர் இஸ்ரயேல் மக்கள். நேர்மை தவறுதல் கூடாது என்றுஎச்சரிக்கை விடுத்த யோசுவாவுக்கு மக்கள் "ஆண்டவருக்கு ஊழியம்புரிவோம். இதற்கு நாங்களே சாட்சிகள்அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம்""(24:19-28) என்று மறுமொழி உரைத்தனர். (காண். வசனங்கள் 16, 21,24 நாங்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம் என்று மும்முறைதயக்கமின்றிக் கூறுகின்றனர்).

யோசுவா அன்று மக்களுக்காக உடன்படிக்கை செய்தார்.மக்களுக்கு விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் கொடுக்கிறார்.யோசுவா இவ்வார்த்தைகளைத் திருச்சட்ட நூலில் எழுதுகிறார். ஒருபெருங்கல்லை எடுத்து அதை ஆண்டவரின் திருத்தலத்தில் ஒரு கருவாலிமரத்தின் கீழ் நாட்டினார். அக்கல்லை உடன்படிக்கைக்குச் சாட்சியாகவும்அத்தாட்சியாகவும் வைக்கிறார். பின்பு அவர்களைத் தங்கள் பகுதிகளுக்குஅனுப்பி வைத்தார்.இவ்வாறு உடன்படிக்கை வழியாக ஒரு புதுயுகத்தை,நம்பிக்கையை யோசுவா இஸ்ரயேலருக்கு ஊட்டுகிறார்.4.10. யோசுவா இறைவனில் துயில்தல்யோசுவா வயது முதிர்ந்த ஞானியானார். நல்ல பணியாற்றியமனநிறைவு அவருக்குக் கிடைத்தது.தனது நூற்றுப்பத்தாவது அகவையில் இறைவனில் துயில்கொண்டார். அவரை திம்னத்செரா என்ற இடத்தில் அடக்கம் செய்தனர்.ஆண்டவருக்காகவும் மக்களுக்காகவும் அரிய பணியாற்றியயோசுவா பல நிலைகளில் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்பதில்ஐயமில்லை. இவர் ஒரு சிறந்த நீதித்தலைவர் எனலாம்.

 

5. தெபோரா

அநீதி தலைவிரித்தாடுகின்றபோது, அறம் நீங்கி மறம் மானிடஉலகை வதைக்கின்றபோது, ஆண்டவன் உலகில் வந்து நீதியை,அறத்தை நிலை நாட்டுகிறான் என்ற நம்பிக்கை அனைத்துப்பக்தரிடையேயும் உண்டு.தீங்கிழைக்கப்பட்ட மக்கள் துன்புறுவார்கள். அதைத் தட்டிக்கேட்கத் துணியமாட்டார்கள். ஏனெனில் தட்டிக் கேட்டால் எல்லாமேபோய் விடும் என்ற அச்சம்.அவர்கள் தங்கள் வழக்கைக் கடவுளிடம்வைப்பர். இறைவன் கண்டிப்பாக நீதி வழங்குவான். ஏழை மக்களை அவன் மீட்பான் என்றநம்பிக்கை உண்டு. 'நம்பினோர் கெடுவதில்லை" இது நான்கு மறைத் தீர்ப்புஇல்லையா?

5.1. இஸ்ரயேல் நாடு:
கி.மு. 12-ஆம் நூற்றாண்டு அது.இஸ்ரயேல் மக்கள் மிகவும் துன்புற்ற நேரம்.ஆட்சோர் என்ற இடத்தை யாபினி என்றகானானிய மன்னன் ஆண்டு வந்தான்.இவனுக்குச் சீசரா என்ற படைத் தலைவன்உண்டு. இவன் அரோசத்கோயிமில் வாழ்ந்துவந்தான். இவனிடம் தொள்ளாயிரம் இரும்புத்தேர்கள் இருந்தன. தனது இரும்புக் கரத்தால் அரக்கஆட்சி புரிந்து இஸ்ரயேலை வதைத்தான். சுமார் இருபதுஆண்டுகள் இது நீடித்தது. துன்பம் தாளாத இஸ்ரயேல் மக்கள்இறைவனிடம் முறையிட்டனர். அழுது புலம்பினர். ஆண்டவரும்அவர்களது குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்கத் திருவுளம்கொண்டார் (நீத 4:1-3).

5.2. தெபோரா - வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்:
தெபோரா என்பவர் ஒரு யூத குலப் பெண். இக்குலத்தில்பெண்களுக்குச் சிறப்பிடம் இல்லை. சபையில் எழுந்து பேசஉரிமையில்லை என்ற காலம் உண்டு. எனினும் ஆண்டவர்தெபோராவைத் தனது கருவியாகக் கொள்கிறார். மனிதக் கண்களுக்குவியப்பூட்டுகிறார்."விடுதலைத் தலைவர்கள்"" என்றே கேள்விப்பட்ட'இஸ்ரயேலருக்கு விடுதலைத் தலைவி" ஒருத்தியைத் தந்து இஸ்ரயேல்வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்துகிறார்.

5.3. தெபோரா ஓர் இறைவாக்கினர்:
விவிலியத்தில் (நீத 4) தெபோராவை இலப்பிதோத்தின்மனைவியாகக் காண்கிறோம். இவர் நீதித் தலைவியாக இருந்தார்.இஸ்ரயேல் மக்கள் தீர்ப்புப் பெற வேண்டி இவரிடம் வருவர். இவர்எப்ராயிம் மலை நாட்டில் இராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் ஒருமரத்தடியில் அமர்ந்திருப்பார். அம்மரத்தின் பெயர் "தெபோரா பேளளட்சை"" .இன்றும் நமது ஊர்களில் ஊரின் நடுவே அல்லது பக்கத்திலுள்ளமரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டு ஊர்ப் பெரியவர்கள் வழக்குகள்விசாரித்து நியாயம் செலுத்துவது தெபோராவின் செயலைநினைவூட்டுகிறது.நீதித் தலைவியாகச் செயல்படுவது எளிய செயலன்று. அதனினும்மேலாக எல்லாரும் ஒத்துக் கொள்ளும் வகையில் ஒரு பெண்தலைமையேற்றுச் செயல்படுகிறார் என்றால் அவள் பெருமையைச்சொல்லவும் வேண்டுமோ!இவர் நீதி செலுத்தி வந்த ஓர் இறைவாக்கினரும் ஆவார். இறைஆவியால் ஆட்கொள்ளப்பட்டு செயல்பட்டதால் (6:34; 11:29; 14:6) இவர்ஓர் இறைவாக்கினர் என்றழைக்கப்படுகிறார் (4:4). எனினும் எவ்வாறுதனது இறைவாக்குப் பணியைச் செய்தார் என்ற குறிப்புகளில்லை.

நீதித் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார் என்றுபார்க்கும்போது திரு விவிலியம் பல கண்ணோட்டங்களைத் தருகின்றது.நீதித் தலைவர்கள் நாட்டின் காவலர்களாகச் செயல்படுகின்றனர்.நாட்டைப் பாதுகாத்து அன்னிய படையெடுப்புகள், ஆதிக்கங்களிலிருந்துவிடுதலையைத் தேடித் தந்தனர். முன்னின்று போரிட்டு உற்சாகமூட்டி'வெற்றியைப்' பெற்றுத் தந்து மக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும்வாழ வழி செய்பவர்கள். இவ்வாறு பல அலுவல்களை நீதித் தலைவர்கள்செய்து வந்தனர். இவர்கள் கடவுளால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள் என்பதையும் நாம் மறத்தலாகாது.

5.4. இஸ்ரயேலை மீட்டல்:
இறைவாக்கு உரைக்கும் தெபோரா நப்தலியில் இருந்த கெதேசில்பாராக்கை ஆள் அனுப்பிக் கூப்பிட்டார். பாராக் அபினொவாமின் மகன்.அவரிடம் தெபோரா, "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உமக்குக்கட்டளையிடுகிறார். ......... தாபோர் மலையில் நப்தலி செபுலோன்மக்களில் பத்தாயிரம் பேரைச் சேர்த்துக் கொள்ளும். யாபினியின்படைத்தலைவன் சீசராவையும் அவன் படைகளையும் கீசோன் ஆற்றின்அருகே இழுத்து வந்து உன் கையில் கொடுப்பேன்" (4:6, 7) என்றுஇறைவாக்காகக் கூறினார்.பாராக்கோ "நீர் என்னுடன் வந்தால் நான் செல்வேன்,இல்லையெனில் செல்ல மாட்டேன்" என்று பதிலளித்தார்.இதற்கு தெபோரா, "நான் உம்முடன் செல்வேன், ஆனால் உமக்குப்பெருமை ஒன்றும் கிடைக்காது. ஏனெனில் சீசராவை ஆண்டவர் ஒருபெண்ணிடம் ஒப்படைப்பார்" என்று கூறிவிட்டு, பாராக்குடன் கெதேசுநோக்கிச் சென்றார்.பாராக்கு தெபோரா கூறியவாறு பத்தாயிரம் போர் வீரர்களோடுஅணிவகுத்து தாபோர் மலை மீது தயாரானார்.

சீசராவுக்கு இச்செய்தி அறிவிக்கப்பட்டது. இரண்டு படைகளும் மோதின.தெபோரா பாராக்குக்கு வார்த்தைகள் கூறிஉற்சாகப்படுத்துகிறார். "ஆண்டவர்உம்மோடுள்ளார். வெற்றி உமதே,சீசராவை வெல்லப் போகிறீர்" என்றவார்த்தைகளைக் கேட்டதும் பாராக்கும்அவன் படைகளும் தீவிரமாகப் போர்புரிந்து சீசராவையும் அவன் படைகளையும் தாக்கினர். தாக்குதலைச்சமாளிக்க இயலாது சீசரா அரோசத்கோயிம் என்னுமிடத்தில் தோல்வி உறுதிஎன அறிந்து தப்பி ஓடினான்.கேனியரான எபேரின் மனைவியாவேல் கூடாரமொன்றிருந்தது.எபேரின் வீட்டுக்கும் ஆட்சோர் மன்னன்யாபினுக்கும் நல்லிணக்கம் இருந்தது.தப்பியோடிய சீசரா யாவேல்கூடாரத்திற்கு வந்து தஞ்சம் புகுந்தான். யாவேலோ அவன் அயர்ந்துதூங்கும் வேளையில் கூடார முளை (ஆணி) ஒன்றால் அவனது நெற்றிப்பொட்டில் முளை தரையிறங்கும் வரை சுத்தியலால் அடித்தாள். அவனும்மாண்டான். துரத்தி வந்த பாராக்கு யாவேலின் கூடாரத்தில் சீசராஇறந்து கிடந்ததைக் கண்டான்.

இவ்வாறு கனானேய மன்னனைக் கடவுள் ஒடுக்கியதைஇஸ்ரயேல் மக்கள் கண்டனர். யாவேல் என்ற பெண்ணின் மூலம் ஒருபெருந் தலைவனைக் கொன்று வெற்றி தேடித் தந்த இறைவனைஇஸ்ரயேல் மக்கள் புகழ்ந்தனர்.தெபோராவின் மகிழ்ச்சியைக் கூறவும் வேண்டுமோ! அதுபண்ணாகப் பாசுரமாக வெளிவந்தது. அவர் கடவுளைப் புகழ்ந்துபாடுகிறார்.நீதி செலுத்தியும் இஸ்ரயேல் மக்களை மீட்டும் இறைவாக்கினளாகச் செயல்படும் தெபோரா ஓர் "உன்னத நீதித் தலைவி"" என்றால் அதுமிகையாகாது.

5.5. தெபோராவின் வெற்றிப்பண்:
இறைவாக்குரைத்து, நீதி செலுத்திய தெபோரா இஸ்ரயேலின்காவலியாகின்றார். உண்மை, ஆண்டவர் தெபோராவை தனதுகருவியாகப் பயன்படுத்துகின்றார்.தெபோரா இறைவாக்கினரைப்போல், இஸ்ரயேலரின்தலைவர்களைப் போல் தன் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் கண்டுமனம் வருந்துகிறார். இன்ப துன்பங்களில் பங்கெடுத்ததோடல்லாமல்போர்முனை யிலும் பாராக்குடன் சென்று வீரத்திருமகளாகக்காட்சியளிக்கிறாள். தன் உயிரையும் பணயம் வைக்கத் தயங்கவில்லை.வெற்றி கிடைத்ததும் ஆண்டவரை நினைத்துப் பார்த்து நன்றிக்கீதமும் புகழ்ச்சிப் பண்ணும் பாடுகிறார்.இப்பண்ணில் இஸ்ரயேலர் கடவுள் செய்த அருஞ்செயல்களைக்கண்டு அவரைப் போற்றுகின்றனர்.அவர் தங்கள் சார்பாகப் போர் புரியும் ஆண்டவர். துன்ப நேரத்தில்துணை வரும் ஆண்டவர். இயற்கைச் சக்திகளின் மீது ஆற்றலும்வல்லமையும் உள்ள ஆண்டவர் என்று கண்டு கொள்கின்றனர்.தற்போதைய இறையியலும் மெய்யியலும் அவர்களுக்குத்தெரியாது. கி.மு. 12-ஆம் நூற்றாண்டில் அனுபவத்தில் தாங்கள்கண்டதை எடுத்துச் சொல்லிப் பாடுகின்றனர். இப்பாடல் மிகப்பழமையான எபிரேயப் பாடல் (கி.மு. 12ம் நூற்றாண்டு). இதன் வழியாகஎபிரேய இலக்கியம், வரலாறு, சமயம் இவற்றை அறியலாம்.சிறிய நிகழ்ச்சியும் ஒரு சிறந்த பாடலாக அமைக்கப்படலாம்என்பதை அறிய வருகிறோம். இஸ்ரயேலரின் பழங்கால உணர்வுகளைவெளிப்படுத்தும் இப்பாடலில் அவர்களது அப்போதைய நம்பிக்கைவெளிப்படுகிறது.

ஆண்டவர் அனைத்திற்கும் தலைவர்.
"நிலம் நடுங்கியது, வானம் பொழிந்ததுமலைகள் நடுங்கின, கார்முகிலும் நீர் சொரிந்தது"எ
ல்லாம் ஆண்டவரின் ஆற்றல் (5:4-5)
"வலியோரை எதிர்த்து நிற்க ஆண்டவர்இஸ்ரயேலருக்கு வலிமை மட்டும் தரவில்லை
அவர்களோடு இறங்கி வந்து தங்கினார்"(5:13),
- இது யாவேயின் புகழ் அஞ்சலிகேனியரான கெபேரின் மனைவி யாவேல்பெண்களுக்குள் பேறு பெற்றவள்.
இப்பெண்ணின் வழியாக இறைவன்இஸ்ரயேலுக்கு மீட்பளித்தார் (5:24).

ஒப்பிடு: மரியா "பெண்களுக்குள் பேறுபெற்றவள்" (லூக் 1:42).பெண்களைக் கருவியாகக் கொண்டு மக்களை மீட்கிறார்கடவுள்.யாவேல் மரியாவின் முன்னோடியாகத் திகழ்வதைத்தெபோராவின் இறைவாக்காக இப்பாடலின் வழியாகத் தருவது வியப்பாகஇருக்கிறது.பொது மக்களின் மனதில் பசுமையாக இருந்த நினைவுகளைச்சமய முறையில் மெருகூட்டி ஒரு பாடலாக வடிப்பது மிகச் சிறந்த அற்புதமுயற்சியாகத் திகழ்கிறது.

 

6. கிதியோன்

மனிதன் நன்றியுடையவனாய், நம்பிக்கைக்குரியவனாய்த் திகழவேண்டும் என்பது எல்லோரும் எதிர்பார்ப்பதுதான். ஆனால் அதைமனிதன் பல நேரத்தில் மறந்து விடுகிறான். கடவுளிடமும் அவ்வாறுநடந்து கொள்கிறான். நன்றி மறப்பது மட்டுமல்ல, நம்பிக்கை அல்லதுநேர்மை தவறி உண்மைக் கடவுளை மறந்துவிட்டு வேறு தெய்வத்திற்குச்சிலை செய்து பீடம் எழுப்பி, பலி கொடுக்கவும் முன்வருகிறான்.உண்மைக் கடவுள் அவனைத் திருத்த முன் வருகிறார்.துன்பங்களைக் கொடுத்து பின் இன்பங்களைப் பரிசாக்குகிறார். இவ்வாறுசெய்ய விழையும் கடவுள் ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து அம்மனிதனின்வழியாகத் தனது திருவுளத்தைச் செய்து முடிக்கிறார்.

6.1. யார் கிதியோன் ?
இஸ்ரயேலரில் மனாசே என்ற குலம் உள்ளது. அக்குலத்தில்அபியேசார் என்ற குடும்பத்தில் யோவாசின் தவப் புதல்வராக கிதியோன்பிறந்தார். இவர் இஸ்ரயேலின் நீதித் தலைவர்களில் ஒருவர். இவர்காலத்தில் மிதியானியர்கள் இஸ்ரயேல் மக்களுக்குத் தொல்லைகள்கொடுத்து அவர்கள் வாழ்க்கையை நரகமாக்கி வந்தனர் (நீதி 2:6).இந்நிலையில் ஆண்டவர் கிதியோனை அழைக்கிறார் (6:11-16).இஸ்ரயேல் மக்கள் இறைவாக்கினர் ஒருவரால் எச்சரிக்கப்படுகின்றனர்(6:7-10). ஆனால் அவர்கள் அவருக்குச் செவிசாய்க்கவில்லை.அம்மோனியரின் தெய்வங்களை வணங்கி வந்தார்கள். இறைவனால்தண்டிக்கப்பட்டனர். இறைவனை நோக்கி மக்கள் கூக்குரலிடஇறைவனே அவர்களுக்கு உதவ முன்வருகிறார்.

6.2. கிதியோனின் அழைப்பு:
ஒப்பிராவில் ஒரு கருவாலி மரம். அங்கு ஆண்டவரின் தூதர்வருகிறார். மரத்தடியில் அமர்கிறார். கிதியோன் மிதியானியர்களுக்குஅஞ்சி கோதுமையை மறைக்க திராட்சை ஆலையில் கதிர்களைக்கொய்து கொண்டிருக்கிறார்.ஆண்டவரின் தூதர் வந்து அவரைச் சந்திக்கிறார். "வலிமைமிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்" என்கிறார். கிதியோன்தனது இஸ்ரயேல் மக்களது துயரங்களை எடுத்துச் சொல்லிப்புலம்புகிறார்.இஸ்ரயேலரை விடுவிக்கும் பணியை நீயே செய்வாய்.உன்னைஅனுப்புவது நாம்தான் என்று தூதர்அழைப்பு விடுக்கிறார்.நலிந்தவன், சிறியவன் என்றாலும் "நீ தனியொரு ஆளாக மிதியானியரைவெல்வாய்" என்று உறுதி கூறுகிறார் (6:11-16).

6. 3. கிதியோன் அடையாளம் கேட்டல்:
தூதரின் கனிந்த வார்த்தைகளால் மகிழ்வுற்ற கிதியோன்எனக்கோர் அடையாளம் வேண்டும் என்று கேட்கிறார்.தூதரை 'கொஞ்ச நேரம் இங்கே தங்கும், திரும்பி வருகிறேன்'எனக் கூறிவிட்டு, புளியாத அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்து தூதர்கேட்டபடி பாறையில் வைத்து குழம்பை ஊற்றுகிறார். தூதரின்கோலிலிலிருந்து நெருப்பு தோன்றி உணவை எரித்துவிட்டது.இவ்வடையாளத்தின் வழியாக ஆண்டவர்தான் என்று கண்டுகொண்ட கிதியோன் அச்சம் மேலிடக் கதறுகிறார். ஆனால் ஆண்டவர்"உனக்கு நலமே ஆகுக! அஞ்சாதே, நீ சாக மாட்டாய்" என்றுகிதியோனைப் பலப்படுத்துகிறார். அங்கு கிதியோன் ஆண்டவுக்குப்பலிபீடம் ஒன்று கட்டுகிறார். அதை "நலம் நல்கும் ஆண்டவர்" எனஅழைக்கிறார் (6:11-24). இந்நிகழ்ச்சி அபிரகாம் தூதர்களை உபசரித்துஅனுப்பி ஆசிர் பெற்றது போல் உளது (தொடக்க நூல் 18). உணவைஆண்டவர் மனிதர் கோலால் எரித்தது, எலியா வானத்திலிருந்துநெருப்பை வரவழைத்து உணவை விழுங்க வைத்தது போல் உளது (1அர 18).

6.4. கடவுள் மீது தாகம்:
ஆண்டவரின் ஆணை கிதியோனுக்கு வருகிறது. பாகாலின்பீடத்தை இடித்து எறிந்துவிடவும் அதன் அருகிலுள்ள அசேராக் கம்பத்தைவெட்டி வீழ்த்தவும் ஆண்டவருக்கு கோட்டையின் உச்சியில் ஒரு பலிபீடம்கட்டவும் ஆண்டவர் கேட்கிறார்.ஆண்டவர் சொன்னவாறு இரவு நேரத்தில் அதைச் செய்துமுடிக்கிறார். ஆண்டவருக்குப் பீடம் கட்டி அசேராக் கம்பத்தை வெட்டிவிறகாக்கி ஏழு வயதுள்ள காளையை பலியாக்குகிறார். இதைப்பதின்மரின் துணையோடு செய்து முடிக்கிறார் (6:25-27).இதில் வேடிக்கை என்னவென்றால் பாகாலுக்குரிய பலி பீடம்கிதியோனின் தந்தைக்குச் சொந்தமானது (6:26). இதிலிருந்து நாம்யூகிப்பது என்னவென்றால் "கிதியோனும் தனது தந்தை யோவாசோடுபாவாலை வழிபட்டு வந்திருக்கிறார்". நகர மக்களும் இவ்வாறேபாவாலைப் பலியிட்டு உண்மைத்தெய்வத்தை மறந்திருந்தனர்என்பதாகும்.

6.5. நகர மக்களின் கோபம்:
உண்மைக் கடவுள் மீதுள்ளகிதியோனின் தாகம் நகர மக்களின்கோபத்தைத் தூண்டியது. அவர்கள்ஒருங்கே திரண்டு "கிதியோன் சாகவேண்டும்" என்று அவரின் தந்தையோவாசிடம் வந்தனர். யோவாசோகலங்கவில்லை. "பாகாலுக்காகப்போராடுபவன் காலைக்குள் கொல்லப்படுவான், பாகால் தெய்வமெனில்அவனே தகர்த்தவனோடு போராடிக்கொள்ளட்டும்" என்று மறுமொழி கூறி"எரு பாகால்"(அதாவது பாகாலே அவனைப் பழிவாங்கட்டும்) என்றுகிதியோனுக்கும் பெயரிட்டார் (6:25-32).

6.6. போருக்குத் தயாராதல்:
மிதியானியரும் அமலேக்கியரும் இன்னும் அப்பக்கம் வாழ்ந்தமக்கள் அனைவரும் ஒன்றுகூடி கிதியோனுக்கெதிராகப் போர் தொடுக்கஆயத்தம் ஆயினர்.மனாசே, ஆசேர், செபுலோன் நப்தலி குலத்துப் போர் வீரர்களைஒருங்கு திரட்டினார் கிதியோன். பின்பு ஆண்டவரிடம் அடையாளம் கேட்டுஅதன் வழியாக இறைவனின்திருவுளத்தை அறிந்து கொள்கிறார்(6:36-40). கடவுளால் மறுபடியும்தூண்டப் பட்டு வந்த போர் வீரர்களைத்திருப்பியனுப்பி விடுகிறார்.

6.7. போரில் வெற்றி:
ஆண்டவரின் ஆற்றல்கிதியோனை வழி நடத்தியது. வெறும்முன்னூறு வீரர்களோடு சுமார் 1,35,000வீரர்களைத் தோற்கடிக்கிறார்.மிதியானியர்களின் தலைவர்களானஒரேபு, செயேபு இவர்களையும்கொன்றார் (8). பின்னர் மிதியானியஅரசர்களான செபாகு, சால்முனாவையும் கொன்றார். சுக்கோத்து பானுவேல்நகர மக்களும் இவ்வாறே சரியாகத்தண்டிக்கப்பட்டனர்.

6.8. அரசர் ஆண்டவரே:
வெற்றி மேல் வெற்றி கண்டார் கிதியோன். ஆனால் ஆணவமோஇறுமாப்போ கொள்ளவில்லை. இஸ்ரயேல் மக்கள் அவரை அரசராக்கவிரும்பினர். அவரது மகனுக்கும் அரசுரிமை தர முன்வந்தனர் (8:22).ஆனால் கிதியோன் "ஆண்டவரே உங்களை ஆள்வார், நானோ என்மகனோ உங்களை ஆள மாட்டோம்" என்று மறுத்துவிட்டார்.இதுகாறும் நாம் காணும் கிதியோனின் அழைப்பு, ஆற்றல்மிக்கசெயல்கள், இஸ்ரயேலர் மீட்பு அனைத்தும் ஆண்டவராலானது. கடவுள்தன்னை வியத்தகு விதமாகக் கிதியோனுக்கு வெளிப்படுத்துகிறார்.துணிவும் திறமையும் கடவுளால் இவருக்கு ஏராளமாக அளிக்கப்படுகிறது.இறை நீதியை, துன்புற்ற இஸ்ரயேல் மக்களை மிதியானியர்கையிலிருந்து விடுவித்ததால், கிதியோன் சிறப்பாக நிலைநாட்டுகிறார்.இதனால் இவரை நீதித் தலைவர் என்றழைப்பது பொருத்தமே.

6.9. இறுதியில் வந்த இழுக்கு:
ஆண்டவரின் அடியானாக வாழ்ந்தாலும் இறுதியில் இவர் செய்தசெயல் நம்மை அதிர வைக்கிறது.கொள்ளையடித்த பொன், தங்கம், வெள்ளி இவைகளைக்கொண்டு ஓர் ஏப்போதைச் செய்கிறார். இந்தச் சிலையைத் தன் ஊரானஒப்பிராவில் வைக்கிறார். இது இஸ்ரயேலரைச் சிலை வழிபாட்டுக்குஇழுத்துச் செல்கிறது. அவர்கள் அனைவரும் வேசித்தனம் செய்ததாக(8:27) விவிலியம் கூறுகிறது.ஒரு சமய மீட்பரும் தவறி நடக்கக்கூடும் என்பதற்குக் கிதியோன்சாட்சியாகிறார். கிதியோனுக்கும் அவர் குடும்பத்திற்கும் இது கண்ணியாகஇருந்தது.கிதியோன் அவர் காலத்திலுள்ள கனானியரின் மதச்சோதனைக்கும் உள்ளாகிறார்.இவர் இறை நீதியை நிலைநாட்டினாலும் இவரைப் பற்றிய சமயவரலாற்றுத் தீர்ப்பு ஐயப்பாடுடையதாக உள்ளது. புனித திருமுழுக்குயோவான் சிறையிலிருந்து தன் சீடர்களை இயேசுவிடம் ஆள் அனுப்பி"வரவிருப்பவர் நீர்தாமா?" என்று ஐயப்பாடுடன் கேட்பது (மத். 11:2, 3)போல் இருக்கிறது. எனினும் அவர் இயேசுவால் புகழப்படுகிறார் (மத். 11:7-15).கிதியோனும் மிதியானியரிடமிருந்து இஸ்ரயேலரை மீட்டுஅமைதியை நிலைநாட்டியதால் மெசியா கொள்ளும் வெற்றிக்குமுன்னோடியாகிறார் (எசா 9:4).

6.10. கிதியோனின் கதை:
எகிப்திலிருந்து வெளியேறிய இஸ்ரயேலர் நாடோடிகளாகத்திரிந்தனர். பின்பு ஓர் இடத்தில் தங்கி விவசாயம் செய்து வாழ்ந்தனர்.இங்கு தரப்படும் நிகழ்ச்சிகளை வைத்து (6:1-6) இஸ்ரயேலர்பகைவர்களை எதிர்த்துப் போராடும் வலிமையற்றவர்களாய் இருப்பதாகத்தெரிய வருகிறோம். மிதியானியர் குதிரைகள், ஓட்டகங்களுடன் வந்துமக்களைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்று விடுகின்றனர். எதிர்த்துப்போராட விவசாயிகளுக்கு வலிமையில்லை.மேலும் கிதியோன் அரசாள மறுப்பது (8:22-28) அரசாட்சி முறைக்குஎதிர்வாதமாக அமைந்துள்ளது.கிதியோனைப் பற்றி மற்ற விவிலியப் பகுதிகளிலும் காண்கிறோம்(திபா 83:10; எசா 9:3; 10:26). அப்படியெனில் இவரது செயல்கள்இஸ்ரயேல் பாரம்பரியத்தில் சிறந்த செயல்களாக எண்ணப்பட்டிருக்கவேண்டும்.கிதியோனைப் பற்றிய கதையில் பல்வேறுபட்ட பதிப்புகளைஅறிஞர்கள் காணுகின்றனர் (நீதி 7:1-8:3) இரண்டாம் பகுதியில்கிதியோன் தன் குடும்பத்தாரையும் சகோதரர்களையும் கொலைசெய்தவர்களை வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார். இங்குள்ள தலைவர்களோசெபாகு, சால்முனா ஆகிய இருவருமாகும்.இருப்பினும் முதற் பகுதியில் கிதியோனின் வெற்றி அவரதல்லஆண்டவரதே என்பது தெளிவாக வலியுறுத்தப்படுகிறது.

 

7. சிம்சோன்

கிதியோனின் அழைப்பிலும் இரு பகுதிகள் காணப்படுகின்றன( 6:11-24; 6:25-35). இதிலும் பல பாதிப்புக்கள் உண்டு என்பதுஅறிஞர்கள் கருத்து.பாவம், தண்டனை, மனம் வருந்துதல், கடவுள் மீட்டல், அமைதிஇத்தகைய மாறி மாறி வருகின்ற ஒரு வட்டத்தைஇஸ்ரயேல் வரலாற்றில் பார்க்கின்றோம். பகலும்இருளும் மாறி மாறி வருவது இயற்கை.இன்பமும் துன்பமும் வாழ்வின் வரலாறாகஅமைவது எல்லாரும் கண்டுணரும் ஒன்று.ஆனால் துன்பத்திற்குக் காரணம் மனிதனின்பாவம், அவனின் தீய செயல்களே என்று சமயம்விளக்கவுரை தருகிறது. இன்பம் அது ஆண்டவன்மனிதனுக்கு அருளும் அருங்கொடை. இதைவாழ்வில், வரலாற்றில் அனுபவமாக மட்டுமல்லபடிப்பினையாகவும் நம்பிக்கையாகவும்கொண்டனர். எனவே மக்கள் தவறிழைத்தனர்.அன்னிய தெய்வத்தை வழிபட்டனர். இதனால்இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியர் கைகளில்துன்புற்றனர். இவ்வாறு இஸ்ரயேலரை பெலிஸ்தியர் கைகளில் தகாதசெயல்களின் காரணமாக ஒப்படைத்தவர் ஆண்டவரே (நீத 13:1) இப்போதுஅவர் அவர்களை மீட்க வருகிறார்.

7. 1. பெயர்:
சிம்சோன் என்ற சொல் 'சேமேஸ்' என்ற எபிரேயச்சொல்லிலிருந்து வருகிறது. சேமேஸ் என்றால் சூரியன் என்பது பொருள்.சிம்சோனின் (ஓன்) என்ற முடிவு சூரியன் போன்ற அல்லது சூரியனானஅல்லது சூரியன் மகன் என்ற பொருட்களைத் தருகிறது.இன்னும் இச்சொல்லை ஆராய்ந்து பார்த்தால் வலிமை, அழித்தல்என்ற பொருட்களும் உண்டு. ஆனால் ஆராய்ச்சியின்படி இதைக்கானானியப் பெயர் என்பர். சோரா பள்ளத்தாக்கில் சிம்சோன் பிறந்தார்.இதற்குப் பக்கத்தில் பெத்செமேஷ் என்ற இடம் (அதாவது சூரியனின் வீடு)உளது. சிம்சோனுக்கும் இந்த இடத்திலுள்ள சூரிய கடவுள்திருத்தலத்திற்கும் கண்டிப்பாகத் தொடர்பிருந்திருக்க வேண்டும்.

7.2. சிம்சோன் பற்றிய கதைத் தொகுப்பு:
சிம்சோன் பற்றி நாம் (13-16) நீதித் தலைவர்கள் நூலில்வாசிக்கும் பொழுது இது ஒரு புராணக் கதையா என்று கேட்கத்தோன்றுகிறது. புராண இலக்கியங்கள் போல அளவுக்கு மீறிய அசுரச்செயல்களை சிம்சோன் செய்து முடித்தாலும் இக்கதைத் தொகுப்புநாட்டுப்புறப் பாடல்கள் கதைகளில் வரும் கதாநாயகனை ஒத்துள்ளது.எபிரேயப் பாக்களையும் (14:18; 15:16) காணலாம்.யாவே மரபுத் தொகுப்பான இந்நூலில் இணைச் சட்ட மரபுத்தொகுப்பு குறைவாகவே உள்ளது (13:1; 15:20; 16:31ஆ) என்கின்றனர்வல்லுநர்கள். பல வேறுபாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும்மிகப் பழமையான தனித்தனிக் கதைகள் பேசப்பட்டு, மறுபடியும்மாற்றமடைந்து இறுதியில் இந்த அதிகாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

7.3. சிம்சோன் யார் ?
சிம்சோன் தாண் குலத்தைச் சார்ந்த மனோவாகு என்பவரின்மகன். சோரா இவரது பிறப்பிடம். இவர் காலத்தில் பெலிஸ்தியர்களால்பெருந் தொல்லைக்கு உள்ளானார்கள் இஸ்ரயேலர். இவர்களைவிடுவிக்கத் திருவுளம் கொண்டு ஆண்டவர் மனோவாகு மற்றும் அவரதுமனைவியைக் கருவிகளாகப் பயன்படுத்துகிறார். இவர்கள்குழந்தைப்பேறு இல்லாதவர்களாக இருந்தாலும் இறையருளால் குழந்தைஒன்று கிடைக்கிறது.இக்குழந்தைக்கு சிம்சோன் என்று பெயரிட்டனர். கடவுளால்வாக்களிக்கப்பட்ட இக்குழந்தை கடவுளுக்கென 'நசீர்" ஆக இருப்பான்,சவரக்கத்தி அவன் தலை மீது படக்கூடாது. பெலிஸ்தியர் கையிலிருந்துஇஸ்ரயேலரை விடுவிப்பான் (13:3-5) என கடவுளால் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தூதர் காட்சி தந்து வாக்குகள் கொடுப்பதை சாரா(தொநூ 16:1; 18:1-15), ரெபேக்கா (28:21-26) அன்னா (1 சாமு 1), எலிசபெத்(லூக் 1:5-25) இவர்கள் வாழ்க்கைகளிலும் காணலாம், சிம்சோனின் மீதுஆண்டவர் ஆவி தூண்டத் தொடங்கினார் (13:25).

7.4. விடுதலைப் போர்கள்:
சிம்சோன் பெலிஸ்தியர்களை தனியாக அடக்கி ஒடுக்கிஇஸ்ரயேல் மக்களை மீட்பது வேறுபாடானது!

அ) திமினாவின் இளம் பெண்
பெலிஸ்தியர் பெண்டிரில் ஒருத்தி இருந்தாள். அவளைசிம்சோனுக்கு மிகப் பிடித்திருந்தது. எனவே பெற்றோரிடம் சென்றுதிருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். நூலாசிரியர் கருத்துப்படி இதன்வழியாகவே இறைவன் பெலிஸ்தியரைத் தண்டிக்க வாய்ப்புத் தேடினார்(14:4).திருமணம் நடந்தேறியபோது சிம்சோன் பெண் வீட்டிலேவிருந்தளித்தார். சிம்சோனுக்கு திருமணத் தோழராய் முப்பது பேர்கிடைத்தனர். அவர்களிடம் விடுகதை ஒன்று போடுகிறார். ஆனால்சிம்சோனின் மனைவியிடம் விடுகதைக்குப் பதிலைக் கூறிவிட்டார்.அவள் அதைத் தோழருக்குக் கூறிவிடுகிறாள். எனவே சிம்சோன்தோற்றுப் போகிறார். ஆண்டவர் ஆவியால் ஆற்றல் பெற்றுஅஸ்கலோனில் முப்பது பேரைக் கொன்று அவர்களது உடைகளைஎடுத்து விடுகதைக்கு விடை கூறியவர்களுக்கு கொடுத்து விட்டுசினத்துடன் தன் வீடு திரும்புகிறார். இதனால் சிம்சோனின் மனைவிஇன்னொருவனுக்கு மனைவியாகிறாள் (14:20).காலந்தாழ்த்தி மனைவியை அழைத்துச் செல்ல வந்தசிம்சோனுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. அவள் அவரது தோழனின்மனைவியாகியிருந்தாள். அவளது தங்கையை மணக்க மறுத்து கோபம்மேலிட நரிகளின் வால்களில் தீப்பந்தங்களைக் கட்டிப் பயிர்களிடையேஓட விட்டார். விளைந்திருந்த பயிர்கள் நாசமாயின. திராட்சைகளும்அழிந்தன, இதற்குக் காரணம் திமினாவின் மருமகன் சிம்சோன்.சிம்சோன் மனைவியை இழந்ததால் இவ்வாறு செய்தார் என்றறிந்துபெலிஸ்தியர் திமினாவையும் சிம்சோனின் மனைவியையும் எரித்தனர்.இதனால் கோபமுற்று "பலரை வெட்டி வீழ்த்திப்" பழிவாங்கினார் (15:1-8)சிம்சோன்.

ஆ) பெலிஸ்தியரைத் தோற்கடித்தல்
பல பெலிஸ்தியரைக் கொன்ற காரணத்தால் அவர்கள் ஒன்றுசேர்ந்து சிம்சோனைப் பிடிக்க வந்தனர். அவர்கள் இஸ்ரயேலரைத் தாக்கஅவர்கள் பயந்து சிம்சோனைப் பிடித்துக் கட்டி பெலிஸ்தியரிடம் கொண்டுவந்தனர்.அந்நேரத்தில் ஆவி அவரை ஆட்கொள்ள ஒரு கழுதையின்பச்சைத் தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றுடிபிலிஸ்தியரை முறியடித்தார் (15:9-17).

இ) சிம்சோன் தெலீலா
தெலீலாவின் மீது மையல் கொண்டார் சிம்சோன். அவள் ஒருபெலிஸ்தியப் பெண்.அவள் காசுக்காகசிம்சோனைக் காட்டிக் கொடுக்கத்துணிந்தாள்.மூன்று முறை முயன்றுதோற்றாள் (16:4-14).இறுதியில் அன்பு மொழிபேசி சிம்சோனை மயக்கி உண்மையைப் பெற்றுக் கொண்டாள்.அதற்கேற்பத் தலையை மழிக்கவைத்தாள். ஆற்றல் இழந்தசிம்சோன் பிடிபடுகிறார். கண்பிடுங்கப்படுகிறது. கடினமாக நடத்தப்படுகிறார். மாடு போல் வேலைசெய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்.தாகோன் என்றதெய்வத்திற்கு விழா எடுக்க பெலிஸ்தியர் ஒன்று கூடினர். சிம்சோனும்அங்கு வேடிக்கை காட்டக் கொண்டு வரப்பட்டார்.துன்பத்தில் துவண்ட சிம்சோன் ஆண்டவரிடம் அபயக்குரல்எழுப்பி வேண்டுகிறார். ஆற்றல் கிடைக்கிறது. மண்டபத்தின் தூண்களைஅசைக்க மண்டபம் இழ்?து பெலிஸ்தியர் மீது விழ அனைவரும்இறந்தனர்."உயிரோடிருந்தபோது கொன்றதை விட அவர் சாகும்போதுஅதிகமாகக் கொன்றார்" என நூலாசிரியர் கூறுகிறார் (16:30).இவ்வாறு முப்போர் தொகுத்து பெலிஸ்தியரை முறியடித்த இவர்இருபது ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்குகிறார்.

7.5. சிம்சோனும் வாக்குறுதிகளும்:
வழக்கத்திற்கு மாறாகத் தூதர் மனோவாவின் மனைவியிடம்தோன்றுகிறார் (13:1-5). அவள் திராட்சை ரசமோ மதுபானமோ அருந்தக்கூடாது. சவரக்கத்தி குழந்தையின் (சிம்சோன்) தலை மீது படக்கூடாது.மகன் 'நாசீர்" ஆகக் கடவுளுக்கு இருப்பான் (காண், சாமுவேலுக்குவாக்குறுதி 1 சாமு 1:11). சாக்கடல் ஏடுகளும் நாசீர் கடமை உள்ளவன்எப்படி இருக்க வேண்டுமென்று கூறுகிறது (காண். எண் 6). தீட்டுப்பட்டதுஎதுவும் உண்ணக்கூடாது. பிறக்கும் குழந்தை பெலிஸ்தியரிடமிருந்து இஸ்ரயேலரை மீட்பான் (13:5)ஆனால் இந்த வாக்குறுதிகளில் சிம்சோனின் தலைமுடிவெட்டப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் மதுபானமோ (14:10-11)தீட்டுப்பட்ட உணவோ (14:8-9) குடிக்காமலோ உண்ணாமலோ இருப்பதுகடைப்பிடிக்கப்படவில்லை.

7.6. சிம்சோனும் வீரச் செயல்களும்:
சிம்சோன் யானைப்பலம் கொண்டவர், இவருக்கு அசுர வீரம்.நாட்டுப் பாடல்கள் கதைகளில் காணும் கதாநாயகன் போல தனியே நின்றுபெலிஸ்தியரைக் கொன்று வீர சாகசம் புரிந்தவர். இவரிடம் அடங்காக்கோபமும் இச்சையும் இணைந்திருந்தன. நூறு பேர் செய்து முடிக்கமுடியாததை ஒருவராக நின்று வியப்பூட்டும் வண்ணம் செய்து முடிப்பார்.இவரது வீரச் செயல்கள் மிகைப் படுத்தப்பட்டிருக்கின்றன.கதைகளை அப்படியே எடுத்துப் பார்த்தால் எந்தச் சமயக் கண்ணோட்டமும் இல்லை.இக்கதைகளைச் சேகரித்தவர் பெலிஸ்தியரை அடக்கி ஒடுக்கியஓரு வீரன் என்ற முறையில் இஸ்ரயேலருக்கு (தாண் குலம்) வெற்றிபெறத் துணை நின்றவர் என்ற நினைவில் சமயக் கண்ணோட்டத்தைப்புகுத்தியிருக்க முடியும்.சிம்சோனின் வாழ்வு ஒருதுன்பியல் நாடகம். வாக்குறுதியைக்கடைப்பிடிக்காது கட்டுக்கடங்காமல்இச்சைகளை நுகரும் இவரைகடவுளால் அனுப்பப்பட்ட ஒரு நீதித்தலைவராகக் கணிக்க முடியாது.

துவக்கத்தில் ஏழு சடைக்கூந்தல்களையுடைய வீரன்(கில்காமேஷ் என்ற காவியம் இதைக்கூறுகிறது) பின்பு 'நாசீர்" என்றவாக்குறுதி பெற்று நாட்டுப்புறக்கதாநாயகனாக இருந்தநிலையிலிருந்து சமய மீட்பராகவிவிலியத்தில் காட்டப்படுகிறார். இவர்கடவுளால் வாக்களிக்கப்பட்டவர் (13:14) கடவுள் ஆவியால்நிரப்பப்பட்டவர் (13:24) ஆற்றலோடு வீரச் செயல்கள் புரிந்தவர் (14:16, 19;15:14). இச்சைகளுக்கு ஆட்பட்டு வாக்குறுதி தவறினாலும் (16:20)இறுதியில் மன்றாடி ஆற்றல் பெற்று பெலிஸ்தியரை ஒடுக்குவதில் (16:28)இறைஅருளின் செயல்பாட்டை அறிய வருகிறோம். (காண். மன்றாட்டுசெய்து தண்ணீர் பெறுகிறார் சிம்சோன் (15:18-20).

புதிய ஏற்பாட்டில், சிம்சோன் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்,அவர் ஆவியால் நிரப்பப்பட்டவர் (13:4-5) என்பது திருமுழுக்குயோவானுடைய பிறப்புப் பகுதியில் எடுத்தாளப்படுகிறது (லூக் 1:15) (காண்.இயேசுவின் வளர்ப்பு: லூக் 2:40)எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் (11:32) சிம்சோன்நம்பிக்கையின் வீரன் என்று கூறுகிறது.நீதித் தலைவர்களிடம் வேறுபட்ட குணநலன்கள் இருந்தாலும்இறை இரக்கத்தால் இனிய நல் தலைவர்களாகச் செயல்படுகின்றனர்.இது ஆண்டவர் செயல்; நம் கண்களுக்கு வியப்பே!

 

8. நீதித் தலைவர்கள் நூலின்இறையியல் கருத்துக்கள்

சமய வாழ்வு இஸ்ரயேலரிடையே எப்படி இருந்ததென நாம்ஆராய்கின்றபொழுது இறைவன் இஸ்ரயேல் மக்கள் வழியாக எதைவெளிப்படுத்த விரும்புகிறார் என்பதை அறிய வருகிறோம்.நீதித் தலைவர்கள் நூலில் அதன் ஆசிரியர் சில நிகழ்ச்சிகளைத்தேர்ந்தெடுக்கிறார், சிலவற்றிற்கு சிறப்பு முக்கியத்துவம் தருகிறார்,சிலவற்றிற்குத் தனது விளக்கங் களைத் தருகிறார், சிலவற்றை ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகக் கணிக்கிறார். இவைகளை ஆராயும் போதுஇறையியல் கண்ணோட் டத்தை நம்மால் கண்டுணர முடிகிறது.

8.1. யாவேயின் கோபம்:
இஸ்ரயேலரின் துன்பத்திற்கும் தொல்லைக்கும் காரணம்அவர்களது பாவமே என்று நம்பினர். இஸ்ரயேலர் கடவுளின் மக்கள்.அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் கடவுளுக்குத் துரோகம்செய்தனர். நம்பிக்கை தவறினர். உடன்படிக்கையை மறந்தனர். நேர்மைகுன்றியது. கடவுளை விட்டுவிட்டு பாகால் தெய்வத்தை வழிபட்டனர்.உண்மைக் கடவுளை மறந்து பாகால் தெய்வத்தோடு உறவு கொண்டு'விபசாரம்" செய்தனர். எனவே கடவுளின் கோபம் சொந்த மக்களுக்குஎதிராக மூண்டது. ஆண்டவர் அவர்களை அன்னிய அரசர்கள் கையில்வதைபட விட்டுவிட்டார் (2:6-3:6; 10:6-16).கனானியரின் பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள்,வழிபாட்டுத் தலங்கள் எல்லாவற்றையும் இஸ்ரயேலர் பின்பற்றஆரம்பித்தனர். (6:25-32). இந்த நிலையை வன்மையாகஇறைவாக்கினர், நீதித்தலைவர்கள் கண்டிக்கின்றனர்.

8.2. யாவேயின் வெற்றிதுன்புற்றுநம்பிக்கை இழந்த மக்கள்கடவுளிடம் திரும்பி வந்துஅபயக் குரல் எழுப்புகின்றனர். கடவுள்மனமிரங்குகிறார். அவர்களுக்குச் சார்பாக வந்து போர் புரிகிறார்.

தெபோரா, கிதியோன், சிம்சோன் இவர்கள் எதிரிகளைப் போரில்வென்று இஸ்ரயேலை மீட்கிறார்கள். ஆனால் மீட்பு கடவுளிடமிருந்துதான் வருகிறது.வானிலிருந்து விண்மீன்கள் போரிட்டன: தங்கள் பாதையிலிருந்துசீசராவுடன் போரிட்டன (நீத 5:20).கடவுளே இறங்கி வந்து இஸ்ரயேல் மக்களுக்காகப் போர் புரிகிறார்.பன்னிரு கோத்திரமும் இணைந்து எதிரிகளுக்கு எதிராகத்தொடுக்கும் போர் புனிதப் போர். கடவுள் பிற இனத்தாருக்கு எதிராக,வேற்றுத் தெய்வங்களுக்கு எதிராக இஸ்ரயேல் கொள்ளும் வெற்றியில்உடனிருக்கிறார்.பாவம் புரிதல், கொடுமைக்குள்ளாதல், மனம் திருந்துதல்,விடுதலை, அமைதி ஆகியவை மீண்டும் மீண்டும் வரும் இணைச்சட்டஅமைப்பாகக் காட்சியளிக்கிறது.

இஸ்ரயேல் மக்களை .....
அ) அன்னிய ஆட்சியிலிருந்து, அடிமைத் தளையிலிருந்துமீட்பதற்காக மட்டுமல்ல.
ஆ) அன்னிய தெய்வங்களுக்குச் செலுத்தும் வழிபாடுகள், அவர்களுக்காக ஏற்படுத்தும் பலி பீடங்கள், மற்ற பழக்க வழக்கங்கள்அனைத்திலிருந்தும் மீட்டுக் கொண்டு வரவும்.
இ) யாவே தெய்வத்தின் மீது பற்று கொண்டு நேர்மையுடன் அவருக்கேபணி செய்து வாழவும் இப்புனிதப் போரைத்தொடுக்கின்றார்.நீதித் தலைவர்கள் நூலின் ஆசிரியர் இவைகளை கிதியோனின்வரலாறு வழியாகக் காட்டுகிறார் 6:22-27. நீதி என்பதுஇறைவனுடைய மீட்பளிக்கும் நீதியே என்பது இங்குதெளிவாகிறது.
ஈ) எனினும் கனானியரின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டுமுறைமைகளிலிருந்து மீட்புப் பெற முடியாத மக்களைச் சகித்துக்கொள்கிறார். இது அவர்களைத் திருத்துவதற்காகத்தான்.இறைவனுக்கு வழிபாட்டுத் தலங்கள், சிலைகள் எழுப்பப்படுகின்றன(காண். 6, 7; 8:24-27). மீக்கா சிலைகள் செய்ய குரு ஒருவரைஏற்படுத்துகிறார் (17:1-6). இப்தா தனது கன்னிமை கழியாப் பெண்ணைப்பலியிடுவது கனானியப் பழக்க வழக்கமாயிருந்தது (11:30-40). இதுவேபுலம்பல் ஆண்டு விழாவுக்குத் தொடக்கமாகவும் மாறியது (காண் 11:40).

8.3. இறைவனின் செயல்கள்:
இறைவன் தான் தேர்ந்தெடுத்த இஸ்ரயேல் மக்களோடுஇருக்கிறார். அவர்களைப் புனிதப்படுத்துகிறார். அவர்களது இன்பதுன்பங்களில் பங்கு கொள்கிறார்.அவர்களது வரலாற்றில் மற்றும் வாழ்வில் உட்புகுந்துஅம்மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறார். ஒத்னியேலின் மீதுஅண்டவரின் ஆவி இருந்தது (3:10) கிதியோனை அழைத்ததும்ஆட்கொண்டதும் ஆண்டவரே (6:11-24 36-40) ஆண்டவரின் ஆவிகிதியோனை ஆட்கொள்கிறது (6-34). அதே ஆவி இப்தாவுக்கும்அருளப்படுகிறது (11:29).இவ்வாறாக இஸ்ரயேல் தலைவர்களையும் காவலர்களையும்அழைத்தவரும், ஆட்கொண்டவரும், இஸ்ரயேல் மக்களை மீட்டவரும்யாவே என்று அம்மக்கள் நம்பினர்.

8.4. அபாயம்:
கனானியரிடையே வாழ்ந்த இஸ்ரயேலர், பண்பாட்டால், பழக்கவழக்கங்களால் வழி பாட்டு முறைமைகளால் தங்கள் விசுவாசத்தையேபறிகொடுத்து வாழ்ந்தார்கள்.தங்களை மீட்டுக் காத்துப் பராமரித்துவரும் ஒரே தெய்வம் யாவே என்பதை மறக்கும்அபாயம் அடிக்கடி எழலாயிற்று.உடன்படிக்கை உடைக்கப்படலாயிற்று. பிறதெய்வங்கள் விரித்த கண்ணிகளில்சிக்குண்டு திணற வேண்டியிருந்தது.பல முறை கடவுளின் வல்லமையைஅறிந்திருந்தும், உணர்ந்திருந்தும்இஸ்ரயேலர் தங்களுக்குள்ளே சண்டை-யிட்டு மடியும் இழிநிலைக்கு வந்தனர்.கடவுளின் இரக்கம், பரிவு, பொறுமையைமனதில் கொள்ளாமல் ஒவ்வொருவரும்அவரவர் பார்வையில் நேர்மையெனப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்(17 : 6; 21:25; காண். 19-21).

8.5. இறைவனும் இஸ்ரயேலரும்:
நீதித் தலைவர்கள் நூல் இறைவனின் ஆற்றலை, கனிவை,இஸ்ரயேல் மக்களைப் பாதுகாக்க அவர் கொண்ட முயற்சிகளைஒளிவுமறைவின்றிக் கூறுகிறது. இறைவன் இம்மக்களைத் தனதுஅன்பால், பரிவால் பாதுகாத்து வந்தாலும் இம்மக்கள் "வணங்காக்கழுத்துள்ள மக்கள், கலகக்காரர்கள், குழப்பக்காரர்கள்" என்று ஐந்நூல்(Pநவெயவநரஉh) சொல்வதை இந்நூல் உறுதிப்படுத்துகிறது.

இறைவன் உலக மக்களிலே எத்தகைய சிறிய, இழிந்த, நெறிதவறும் ஒர் இனத்தைத் தேர்ந்தெடுத்து அதற்குத் தனதுநெறிமுறைகளைக் கற்பிக்க முயல்கிறார் என்பதை அறிய வருகிறோம்.பழிக்குப்பழி வாங்குதல் இன்றல்ல அன்றும் நிலவி வந்தது.கிதியோன் மிதியானியரை வென்று பழிதீர்த்துக் கொள்கிறார்.பென்யமின் குலம் பூண்டோடு ஒழிக்கப்படுகிறது. பொல்லாதசெயலைச் செய்த அக்குலத்தவரை முறையாகத் தண்டிக்கசொல்லொண்ணாத் துன்பம் வந்து சூழ்கிறது (19-21). இனத்தானேஇனத்தானை அழிக்கிறான். கிதியோன் போர் செய்து வென்றதைப்பொறுக்கவியலாத எப்பிராயிம் குலத்தவர் பலத்த வாக்குவாதம் செய்துதங்கள் கோபத்தைக் காட்டிக் கொள்வதைப் பார்க்கிறோம் (8:1-3; 12:1-6).இக்குலத்தவர்கள் ஒருபோதும் ஒன்றாய் இணைந்து செயல்படுவதைக்காண முடியவில்லை.

ஒற்றுமையில்லாமல் அடிக்கடி தங்களுக்குள்ளேசண்டையிட்டும், அடித்தும் தொலைத்தும் வாழ்ந்தது இஸ்ரயேல்,கிதியோன் தனது மாட்சிமையில் கூட ஒரு குடையின் கீழ் ஆட்சியைக்கொணர முடியவில்லை (8:22-23).சில நீதித் தலைவர்களின் தன்மைகள் தலைவர்களா இவர்கள்என்று கேள்வியை எழுப்புகின்றன. சான்றாக சிம்சோன்: இவர் ஓர் அசுரசக்தி கொண்டவர். பல பெண்களை வென்றவர். காட்டு விலங்குகளைக்கொல்பவர். பல வீரர்களைத் தோற்கடிப்பவர். தனது கட்டுக்கடங்காதசிற்றின்ப ஆசைகளுக்கு அடிமையானவர்.தனது வஞ்சத்தைப் பழிக்குப் பழியாய்த் தீர்த்துக் கொள்பவர்.இவரும் நீதித் தலைவர்களுள் ஒருவராகக் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர் (13-16). எனினும், இறைவன் இவர்கள் வழியாகத்தனது செயலைத் தொடர்கிறார்.

8.6. இஸ்ரயேலரின் நெறிவாழ்வு:
இக்காலத்திலுள்ள இஸ்ரயேலரின் நெறி வாழ்வு மிக்க சீரழிந்தநிலையிலிருந்தது.போரின்போது மிகுந்த கொடூரமாக மக்களை நடத்தினர்.மிக்காவின் வீட்டுத் தெய்வங்களைத் திருடிச் செல்கின்றனர். (18:14-17).லேவியினுடைய மறுமனையாட்டியைப் பென்யமின் குலத்தவர் நடத்தியஇழிவை எண்ணிப் பார்க்கவும் முடியாது (19:22-30). சீலோ பாசறையில்பாதுகாத்துக் கொள்ள முடியாத யாபேசுவாழ் கன்னியர்களைக்கைப்பற்றிக் கொணர்வது சரியென சித்திரிக்கப்படுகிறது (21:8-14).

ஆனாலும் இடையர்களின் மிகச் சிறந்த பண்பானவிருந்தோம்பல் மீறப்பட்டு, இறப்பு என்னும் நிலைக்கே விருந்தாளியைஅழைத்துச் செல்லும் செயலைப் பெருஞ்செயல் எனப் போற்றுவது மனவருத்தம் தருகிறது. (4:17-22; 5:24-27). தஞ்சம் புகுந்தோருக்குத்தலையடி தந்து சாகடிப்பது மன்னிக்க முடியாத குற்றம். எப்படி இதைநாம் தெளிவுபடுத்துவது? தர்ம நெறி அளவே இல்லையே!கடவுள் இத்தகைய மக்களோடு உடன் படிக்கை செய்து கொண்டுதனது தெய்வீகப் படிப்பினையை முறைமையாகக் கற்பிக்க முயல்வதுஎவ்வளவு சிரமம் என நமக்குத் தோன்றுகிறதல்லவா.எனினும் இங்கு ஒரு கேள்விக்கு நாம் பதில் சொல்லக்கடமைப்பட்டிருக்கிறோம்.எப்படி ஓர் இரக்கத்தின் கடவுள், நீதியின் கடவுள் ஒரு பக்கமாகநின்று போர் புரிந்து மற்ற மக்களை ஒழிக்க ஓடோடி வர முடியும்?இதை எப்படி விளக்குவது? யோசுவா நூலிலும் இத்தகையநிலையையே பார்க்கின்றோம். இதற்கு ஏற்புடைய பதில் தரவியலாது.

ஆயினும் இஸ்ரயேல் மக்கள், கடவுள் தங்களோடு வந்து போர்புரியும் செயலை நம்பிக்கையாகக் கொண்டனர். அதைப் புனிதப் போர்என நம்பினர். கடவுள் துணை உள்ளது உண்மைதான். ஆனால்இஸ்ரயேலுக்கு பொறுப்பும் உள்ளது. கடவுளின் பாசம் பரிவைப்பெற்றவர்கள் அவரின் திருவுளத்தையும் நிறைவேற்ற வேண்டும்.அதற்குக் கீழ்ப்படிய வேண்டும்.எனவே இங்கு நாம் காணும் கருத்து கடவுளுக்கு இஸ்ரயேல்தனது நிலைமாறா பற்றுறுதியை, நம்பிக்கையை, கீழ்ப்படிதலைத் தரவேண்டும். இல்லையெனில் அவர்களும் துன்புறுவர் என்பதாகும்.

------------------------------------------
--------------------------
----------------
------
--