தம் பெயரில் நூல் பெறாத இறைவாக்கினர்

முனைவர்பேரருள்திரு வ. மரியதாசன்

விவிலிய அன்பர்களே,

வணக்கம்.யூத ராபிகள் பழைய ஏற்பாட்டை மூன்று பெரும் பிரிவுகளாகப்பிரித்தார்கள். 1. சட்ட நூல்கள், 2. இறைவாக்கு நூல்கள், 3. அறிவுரை நூல்கள்.நம் ஆண்டவர் இயேசுவும் எம்மாவு நோக்கிச் சென்ற சீடர்களிடம் இந்தப்பிரிவுகள் குறித்துப் பேசுவது ஈண்டு கவனிக்கத்தக்கது (லூக் 24:44).இறைவாக்கு நூல்களை முற்கால இறைவாக்கினர், பிற்காலஇறைவாக்கினர் என்று இருபெரும் பிரிவுகளாகவும் யூத ராபிகள்பிரித்திருந்தனர். பிற்கால இறைவாக்கினரை பெரிய, சிறிய இறைவாக்கினர்என்று இருபிரிவுகளாகப் பிரித்திருந்தனர். அவர்கள் முற்காலஇறைவாக்கினர்கள் என்று அழைத்த நூல்களை இன்றைய விவிலிய அறிஞர்கள்வரலாற்று நூல்கள் என்னும் பெயரில் அழைக்கின்றார்கள். ஆயினும்இந்நூல்களில் #8220;தம் பெயரில் நூல் எழுதாத இறைவாக்கினர்கள்” பலரின்வாழ்க்கையும் செயல்பாடுகளும் காணக்கிடக்கின்றன.

அரசர்கள் தவறு இழைக்கிற போது நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம்குற்றமே என இடித்துப் பேசுகிறவர்கள் இறைவாக்கினர்கள். அரசர்களுக்கும்அஞ்சாது ஆண்டவனுக்கு மட்டுமே அஞ்சி துணிச்சலுடன் செயல்பட்டவர்கள்இந்த இறைவாக்கினர்கள். இஸ்ரயேல் வரலாற்றில் அரசர்களைவிடஇறைவாக்கினர்களுக்குத்தான் முதன்மை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுஎன்பதும் இங்கே நினைவு கூறத்தக்கது.தம் பெயரில் நூல் எழுதாத இறைவாக்கினர்களின் பணிகளையும்செயல்பாடுகளையும் அழகுறத் தொகுத்து சுருக்கமாகவும் அதே நேரத்தில்விளக்கமாகவும் பேரருட்திரு வ. மரியதாசன் அவர்கள் இச்சிற்றேட்டைஎழுதியுள்ளார்கள். அவர்களுக்கு நமது நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

இப்பாட நூலிலும் ஏராளமான விவிலியக் குறிப்புகள் உள்ளன. அன்புகூர்ந்து விவிலியத்தை அருகில் விரித்து வைத்து இக்குறிப்புகளை வாசித்துஇச்சிற்றேட்டில் சொல்லப்பட்டுள்ளவற்றை முழுமையாக அறிந்து கொள்ளமுயற்சிகள் எடுக்க வேண்டுமென்று மாணவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திரு முனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்


பொருளடக்கம்

பகுதி - 1

1 . இறைவாக்கினர் - பொது முன்னுரை
1.1. இறைவாக்கினரின் வெவ்வேறு பெயர்கள்
1.2. இறைவாக்கினர் வரலாற்றின் வளர்ச்சிப் பருவங்கள்
1.3. வேற்றினத்தாரிடையில் இறைவாக்கினர்
2. இஸ்ரயேல் நாட்டில் இறைவாக்கினர்
2.1 இறைவாக்கினருக்கு முன் இறைவாக்கினர்
2.2. இறைவாக்கினர் சங்கம்
2.3. இறைவனால் நேரடியாக அழைக்கப்பட்ட இறைவாக்கினர்
2.4. போலி இறைவாக்கினர்கள்
2.5. இறைவாக்கினரின் ஏனைய பிரிவுகள்
3. அரசர்களும் இறைவாக்கினர்களும்
4. தம் பெயரில் நூல் பெறாத இறைவாக்கினர் (பெயர்ப் பட்டியல்)


பகுதி - 2
1. சாமுவேல் மற்றும் ஓர் இறையடியார்
2. காது
3. நாத்தான்
4. அகியா
5. செமாயா
6. இறையடியாரும் வயது முதிர்ந்த ஓர் இறைவாக்கினரும்
7. இத்தோ
8. அனானி
9. அசரியா
10. ஏகூ
11. யாகசியேல்
12. எலியேசர்
13. மீக்கா
14. எலியா
15. எலிசா
16. யோனா
17. ஓதேது
18. குல்தா
19. உரியா
முடிவுரை

பகுதி 1
1. இறைவாக்கினர்

பொது முன்னுரை:
தம் பெயரில் நூல் பெறாத இறைவாக்கினரைப் பற்றி நாம் இந்தச்சிற்றேட்டில் காண்போம். அவர்களைப் பற்றிப் படிக்கும் முன் இறைவாக்கினரைப்பற்றிய பொதுவான கருத்துக்களைத் தெரிந்து கொள்வது நல்லது.முதலாவதாக, இறைவாக்கினரின் வெவ்வேறு பெயர்கள், அவர்களைவகைப்படுத்தும் முறை ஆகியவற்றைக் காண்போம்.

1.1. இறைவாக்கினரின் வெவ்வேறு பெயர்கள்

1. நபி - பரவச நிலையில் பேசுபவர், (1 சாமு 10 :10)அழைக்கப்பட்டவர்
2. ஹோசே - காட்சி காண்பவர் (2 சாமு 24:11; ஆமோ 7:12;2 குறி 16:17)
3. ஹோலம் - கனவு காண்பவர் ( எண் 12:6 )
4. ரேயே - காண்பவர் (1 சாமு 9:9, 11, 18, 19)
5. மலாக்கின் - தூதர்கள் (எசா 44:26; ஆகா 1:13; மலாக் 3:1-2)
6. ஈஷ் ஏலோகிம் - கடவுளின் மனிதன் (யோசு 14:6; 1 சாமு 2:27;9:6-10; 1 அரச 12:22; 13:1; 17:18, 24:2அர1:9-13; 4:7, 9, 16, 25, 27, 40, 42; 4:38-42; 6:6.
7. கடவுளின் ஊழியர் - ஆமோ 3:7; எரோ 7:25; 25:4
8. ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர் - 2 குறி 20:14; ஓசே 9:7; எசே 3:22; 8:1
9. இறைவனின் வாய் - எரே 1: 9-10; 15:19
10. ஆயர்கள் - எரே 17:16; திபா 11:4
11. காவலர் - எசா 62:6
12. சாமக்காவலர் - எசே 3:17; 33:2-7; ஆமோ 3:4
13. இறையடியார் - 1 அர 13:1

மேற்காணும் பெயர்கள் இறைவாக்கினர்களின் அழைப்பு, அவர்கள்இறைவாக்குப் பெறும் முறை, அவர்களின் குண நலன்கள், அவர்களின் பொறுப்பு,இவற்றைச் சிறப்புறச் சுருக்கிக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

1.2. இறைவாக்கினர் வரலாற்றின் வளர்ச்சிப் பருவங்கள்: ஐந்து வகைஇறைவாக்கினர்கள்

1. வேற்றினத்தாரிடையே இறைவாக்கினர்கள்
2. இஸ்ரயேல் நாட்டில் இறைவாக்கினருக்கு முன் இறைவாக்கினர்
3. இறைவாக்கினர்களின் புதல்வர்கள் (ளுடிளே டிக வாந யீசடியீhநவள) (அல்லது)இறைவாக்கினரின் சங்கம்
4. இறைவனால் நேரடியாக அழைக்கப்பட்ட இறைவாக்கினர்
5. போலி இறைவாக்கினர்கள்

1.3. வேற்றினத்தாரிடையில் இறைவாக்கினர்கள்

இவர்கள் கூட்டமாகக் கூடிப் பாடி ஆடுவார்கள்; பரவசநிலை அடைவர்;இந்த நிலை மற்றவர்க்கும் பரவக்கூடியது, இந்தப் பரவச நிலையில் அவர்கள்கூறுவதுஇறைவாக்காகக் கருதப்படும்.

1. பாகால் தெய்வத்தின் பொய் இறைவாக்கினர் பற்றி விவிலியம்கவினுற எடுத்துரைப்பதை அறிவோம் (1 அரச 18:22-29; 2 அரச 10:19-25).வேற்றினத்தாரிடையே நல்ல பல இறைவாக்கினர்களும் இருந்ததற்கு மாதிரியாகநிற்பவர் பிலயாம் (வாசிக்க: எண் 22-23).

2. மேலும் கி.மு. 950ஐச் சார்ந்த பாப்பிரஸ் ஏடு பெனிசியாவில் உள்ளபிப்லோஸ் என்னுமிடத்தில் அரசவையில் ஒரு வாலிபனால் சொல்லப்பட்டஇறைவாக்குகளைப் பற்றிச் சொல்லுகிறது. பலி செலுத்தும் போது பரவசநிலையிலுள்ள அர்ச்சகர் ஒருவர் தெய்வ வாக்குரைப்பார் என்பதை அந்தப்பாப்பிரசிலிருந்து அறிகிறோம்.

3. கி.மு. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரசன் ஜாக்கிர் (ஷ்யமசை)என்பவனது கல்வெட்டிலிருந்து, அரமேயர் மத்தியிலும் இறைவாக்கினர்கள்இருந்து தெய்வவாக்கு மொழிந்தனர் எனத் தெரிகிறது. ஜாக்கிர் மன்னனுக்குப்பாகால் தெய்வம் இறைவாக்கினர்கள் வழியாய்ப் பேசினதாகச்சொல்லப்படுகிறது. அந்தத் தெய்வ வாக்கு 'அஞ்ச வேண்டாம்'... என்றுதொடங்குகிறது.

4. மாரி (ஆயசi) என்னும் நகரத்தில் (கி.மு. 18 ஆம் நூற்றாண்டு)அமுராபி காலத்தில் கடவுளுக்கும் அரசனுக்கும் இடையே இணைப்பாளர்களாகமுள்ளு (ஆரடடர) என்ற இறைவாக்கினர் குழு ஒன்று இருந்ததாம். அந்தக்குழுவினர் ஆதாத் என்ற கடவுளின் இறைவாக்கை அரசனுக்குக் கூறி வந்தனர்.

5. அசிரோ-பாபிலோனிய அரசர்களான அசார்-கதோன், அசுர்பனிபால் ஆகியவர்களைப் பற்றிய தெய்வ வாக்குகள் குறிப்பிடத்தக்கன. அவற்றின்அமைப்பு முறை, இறைவாக்குத் தொடக்கம், இறைவாக்கின் உள்ளடக்கம், இவைஆராய்ச்சியாளருக்கு விருந்தாக அமைகின்றன. இஷ்டார் தெய்வத்தின்பெயரால் இறைவாக்குரைத்தவர்கள் பெண்களாவர்.

6. கிரேக்கரிடையே டெல்ஃபி என்னுமிடத்தில் தெய்வ வாக்குக்கூறியவர் பித்தியா என்ற பெண். அவர் சொன்னதை அரசர்கள் விளக்கினர்.இவர்கள் இறைவாக்கு எடுத்துரைக்கும் முறையிலும் இஸ்ரயேலர்இறைவாக்கு கூறும் முறையிலும் ஒற்றுமையுள்ளது. ஆனால் கூறும் பொருளிலும்(கடவுளைப்பற்றி, ஒழுக்கத்தைப் பற்றி) நோக்கத்திலும் தான்(பொருள்ஆதாயமா?) மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.

 

2. இஸ்ரயேல் நாட்டில் இறைவாக்கினர்கள்

2.1. இறைவாக்கினருக்கு முன் இறைவாக்கினர்
பிற்காலத்திய, குறிப்பாக இஸ்ரயேல் அரசர் காலத்தியஇறைவாக்கினரை மனக்கண்முன் கொண்டு முற்காலத்திய இறையடியார்கள்சிலர் இறைவாக்கினரென அழைக்கப்பட்டனர் (காண்க: ஏலோகிம் மரபு).அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் :

ஆபிரகாம் - தொநூ 20:7
ஆரோன் - விப 7:1
மிரியாம் - விப 15:20
மோசே - இச 34:10; இச 18:15-19
மூப்பர்கள் - எண் 11:16, 25-30;
தெபோரா - நீத 4:4
ஓர் இறைவாக்கினர் - நீத 6:10
தாவீது - திப 2:30-31
சவுல் - 1 சாமு 10:5-11; 19:20-24

இவர்கள் ஏன் இறைவாக்கினர் என அழைக்கப்பட்டனர்? ஏனெனில்இவர்களும் கடவுளோடு பேசினர். சான்றாக, ஆபிரகாமும் மோசேவும் கடவுள்பெயரால் பேசினர். கடவுளுக்கும் மக்களுக்கும் இடைநிலையாளராக நின்றனர்.ஆயினும் இவர்களது சிறப்புப் பெயர் வேறு ஆகும். ஆபிரகாம் குலமுதுவர்ஆவார். ஆரோன் குரு, மோசே சட்ட வல்லுநர், மற்றும் தெபோரா பெண் நடுவர்,தாவீது மற்றும் சவுல்-அரசர்கள்ஆவர்.

2.2. இறைவாக்கினர் சங்கம்
;ஓர் இறைவாக்கினர் தலைமையில் சீடர் பலர் சங்கம் அமைத்துக்கொண்டனர். இதுவே இஸ்ரயேல் நாட்டு இறைவாக்குப் பணியின் தொடக்கநிலை எனலாம். இவர்கள் அனைவரும் இறைவனிடமிருந்து நேரடியாகஅழைப்புப் பெற்றதாகத் தெரியவில்லை. எனவே விரிந்த பொருளில்தான்இவர்கள்'இறைவாக்கினர்' எனப்படுகின்றனர். இறைவன் பெயரால்பேசுவதைத் தம் தொழிலாகக் கொண்டு இராமா, பெத்தேல், கில்கால், மிஸ்பாபோன்ற திருத்தலங்களின் அருகில் பணியாற்றினர். இதனால் இவர்களைவழிபாட்டுத்தல இறைவாக்கினர் என்பாரும் உண்டு. இவர்களைஇறைவாக்கினரின் புதல்வர்கள் என்றும் அழைப்பதுண்டு (2 அரச 2:3).மக்களும் மன்னர்களும் இவர்களிடம் ஆலோசனை கேட்பர்.

நீதித்தலைவரின் காலத்திலும் (சாமுவேலின் காலம்) அதற்குப் பின்னரும்இறைவாக்கினரின் சங்கம் இருந்தது. ஒருவகையான 'பொதுவாழ்வு' வாழ்ந்ததால் சங்கம் எனப்பட்டது. இவர்கள் சில சமயங்களில் ஒன்று கூடுவர். சான்றாக,

சாமுவேல் காலம்
1 சாமு 10:5-13
1 சாமு 19:20-22
1 அரச 20:35-43 ; 2 குறி 29:25-30

எலியாவின் காலம்
1 அரச 22:6-12
2 அரச 2:3-8

சி எலிசாவின் காலம்
2 அரச 4:1
2 அரச 4:38-44
2 அரச 5:22
2 அரச 6:1-2
2 அரச 9:1-4

எனவே சாமுவேல், எலியா, எலிசா என்பவர்களுக்கு இச்சங்கத்தோடுதொடர்பிருந்தது என்பது தெளிவு. சாமுவேல் காலத்திலேயே இறைவாக்குஉரைப்பதற்காக அவர்கள் சமயப் பண்ணுக்கேற்ப ஆடுவது வழக்கம். இதுஇறைவாக்குப் பணியின் குழந்தைநிலை ஆகும். இவர்கள் அடிக்கடி பரவச நிலைஅடைந்ததாகவும், பரவசநிலை அடைவதற்காகக் கள்ளும், இசையும் நாட்டியமும்பயன்படுத்தியதாகவும் அறிகிறோம் (1 சாமு 10:5-10; 2 அரச 3:15; 2 குறி 29:25-30).எலிசா காலத்தில் அவர்கள் ஒன்றாகச் சமைத்து உண்டனர் (2 அரச 4:38).சங்கத்தில் 50 பேர், 100 பேர், 400 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களுள் சிலர்இளைஞர்; சிலர் மணமானவர். சிலசமயங்களில் அவர்கள் பழித்துரைக்கப்பட்டனர்(2 அரச 9:1-11 ). ஒருமுறை 400 பேர் அடங்கிய சங்கம்கூட தவறாக இறைவாக்குரைத்து விடுகிறது (1 அரச 22:6-12,22) அவர்கள் வாக்குப் பலித்துவிடலாம் (2அரச 9:1-3). பொதுவாகப் பொய்த்துவிடுவதும் உண்டு.

இஸ்ரயேல் மக்களுடைய வரலாற்றில் 'இறைவாக்கினரின் புதல்வர்கள்' மிகமுக்கியப் பணியைச் செய்திருக்கிறார்கள். இவர்கள்தான் 'இறைவாக்குப் பள்ளியை'(ளுஉhழழட ழக pசழிhநவளைஅ) உருவாக்கியவர்கள்.

2.3. இறைவனால் நேரடியாக அழைக்கப்பட்ட இறைவாக்கினர்
தொடக்கத்தில் கூறப்பட்ட இறைவாக்கினரின் வெவ்வேறு பெயர்கள்இவர்களுக்கு நன்கு பொருந்தும்.

2.3.1. இவர்கள் கடவுளால் அழைக்கப்பட்டவர்கள்: குருக்கள்நியமிக்கப்படலாம். அரசர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் இறைவாக்கினர்?இஃது ஓர் அழைப்பு, இயற்கைக்கு மேம்பட்ட அருங்கொடை .
2.3.2. எப்பொழுது அழைப்பு கொடுக்கப்படுகிறது?'தாயின் கருப்பையிலேயே அழைத்தார்' (எசாயா 49:1; எரே 1:4-10; பவுல் - கலா 1:15) என்று கூறுவாரும்உண்டு; இளமையில் அழைக்கப்பட்ட சுவையான கட்டங்களை விளக்குவாரும் உண்டு.
2.3.3. மூன்று வெவ்வேறு வழிகளில் அழைக்கப்பட்டனர். சான்றாக:

அ. கனவு- (எண் 12:6; எரே 23:25-28; செக் 10:2 தானி 7:1). இறைவாக்கினருக்கு ஒரு பெயர் கனவு காண்பவர்; இஸ்ரயேல் அல்லாதார்க்கு கனவு வழிஇறைவாக்கு அருளப்படலாம் (தொநூ 41; தானி 2:4).

ஆ. காட்சி-இதுதான் இறைவன் செய்தியளிக்கும் சாதாரண வழி எசாயா6:1-13; எரே 1:11-15; எசே 1: 4-3:27). சில இறைவாக்கினர்கள் நூல் முழுவதுமேகாட்சி என்ற குறிப்போடு தொடங்கப்படுகிறது (எசாயா 1:1; நாகூம் 1:1; ஒப 1:1).காட்சி என்பது இறை வெளிப்பாடு (எசாயா 2:1; அபக் 2:1; ஒப 1:1). இவை புறகண்களுக்குப் புலப்படும் காட்சியாகவோ (தானி 5:5-24) அல்லது அகக்கண்களுக்குப் புலப்படும் காட்சியாகவோ (எசே 37; திபா 3) இருக்கக்கூடும்.‘காண்பவர், காட்சிக் காண்பவர்' என்பவையும் இறைவாக்கினரின் பெயர்களேஎன்பதை நினைவிற் கொள்க!

இ. மயக்க நிலை-உறக்க நிலையும் விழிப்பு நிலையும் இல்லாமல்இருக்கும் இடைநிலையை மயக்க நிலை என்பர். மெய்மறந்த நிலையும் ஒருவகையில் இப்படிப்பட்டதே (காண்க 1 சாமு 3:3-9; எசே 3:22-27).குறிப்பு : காட்சி , கனவு , மயக்கநிலை இவை முக்கியமானதன்று.இறைவாக்குப் பெறுவதே முக்கியம்.

2.3.4. தகுதியையும் பாராது இறைவன் ஒரு சிலரை அழைத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால்தான் 'எனக்குப் பேசத் தெரியாது சிறுபிள்ளைதானே' (எரே 1:6) என்றார் எரேமியர் 'தூய்மையற்ற உதடுகள் கொண்ட மனிதன்நான்' (எச 6:5 காண்க. விப 4:10) எனப் பகர்ந்தார் எசாயா.
2.3.5. இவர்கள் உரைப்பது 'ஆண்டவரின் அருள்வாக்கு' ஏனென்றால்:

(அ) இறைவாக்கு அன்றி தம் வாக்கை எடுத்துரைப்பவர் போலிஇறைவாக்கினர்கள் (எரே 23:16-18; 21:25-29).
(ஆ) நல்ல இறைவாக்கினர் கூறியது தாம் பெற்றுக் கொண்டதையே, தம்சொந்தக் கருத்தை அல்ல: ஆண்டவருடைய குரலைக் கேட்டேன் (எசா6:8). படைகளின் ஆண்டவர் எனக்குச் சொன்னார் (எசா 22:14).ஆதலால் ‘ஆண்டவர் கூறுகிறார் (எரே 11:21).ஆண்டவரின் வாக்குஎனக்கு அருளப்பட்டது' (எரே 16:1) போன்ற சொற்றொடர்கள்இறைவாக்கினர் இறைவனின் செய்தியையே வழங்கினார்கள் என்பதைச்சுட்டிக் காட்டுகின்றன.
(இ) எனவே இறைவாக்கினர்களை 'இறைவனின் வாய்' (எரே 15:19) எனலாம்(காண்க விப 4:14-16; 7:1, 2). அவர்கள் கூறுவது இறைவனின் வார்த்தை(எரே 1:6-7; 5:14; எசே 3:1, 17; எசா 6:6; 30:2; செக் 7:24). ஆயினும்இறைவன் சொல்லிக் கொடுப்பதை கிளிப்பிள்ளைப் பாடமாகக்கூறுபவராகக் கொள்ளலாகாது. கடவுள் ஒரு பொருளை வைப்பதுபோல்இறைச் செய்தியை அவர்களது வாயில் வைக்கிறார். அதை அவர்கள்முதலில் தங்களுடையதாக்கிக் கொள்ளவேண்டும். திடீர் கருத்துஎன்றாலும், நல்ல வளரும் கருத்து என்றாலும், வாக்குஇறைவனுடையது.எசேக்கியேல் சுருளைத் தின்று இறைவாக்கைத் தன்னுடையதாக்கிக்கொள்கிறார். இறைவன் இறைவாக்கினரை ஆட்கொள்வதால்அவர்களது பண்பு மாறிவிடுவதில்லை. அவர்களது சொந்த மொழி,பேச்சுவழக்கு, அனுபவம், கல்வி, பண்பாடு, சூழ்நிலை யாவும்இறைவாக்குகளில் பிரதிபலிக்கின்றன.(ஆமோ 9:11-15- மெசியாவின் காலம். . . பயிர் செழிப்பு).இறைவாக்கினர் எதிர்காலத்தை முன் அறிவிப்பவர் மட்டும் அன்று (ஞசடியீhநவளகடிசவா-வநடட சயவாநச வாயn கடிசவநடட). இறந்த காலம், நிகழ்காலம், வரும்காலம்இவை யாவற்றையும் இறைவனது கண்ணோட்டத்தில் உற்று நோக்குவதுஅவர்களது பணி. அவர்கள் கடவுளுக்கும் மனிதனுக்கும்இடைநிலையாளர். கடவுள் பெயரால் பேசுபவர். கடவுள் சொல்லவிரும்புவதைச் சொல்பவர். கடவுள் எழுத விரும்புவதை எழுதுபவர்.இறைவாக்கினர் இறைவன் இடத்தை வகிக்கின்றனர் என இஸ்ரயேல்மக்கள் கருதினர் (விப 4:16; 7:1,2). 'கடவுளின் சொற்களை மனிதருக்குஅறிவிப்பவர் இறைவாக்கினர்' என்றார் புனித அகுஸ்தினார்.இறைவாக்கினருக்குச் செவிகொடாதவன் இறைவனுக்குச் செவிகொடாதவனே (எசே 3:7; எரே 7:25, 26).
(ஈ) அவர்கள் கடவுளின் தூதர்களாகச் செயல்புரிகிறார்கள். கடவுளின்திட்டத்தை அறிவிக்கிறார்கள். அதனை மனிதருக்கு விளக்குகிறார்கள்.வான தூதர்கள் இறைவன் பக்கம் நின்று அவரது விருப்பம் அறிவதுபோல்(யோபு 1:6; 2:1; செக் 1:11), இறைவாக்கினரும் அறிகிறார்கள் (எரே 23:18,22; 1 அர 22:19-23). கடவுள் அவர்களுக்குக் கூறாது எதையுமேமறைத்ததில்லை (ஆமோ 3:7; காண்க தொநூ 18:17). எனவே,இறைவாக்கினர் கடவுளின் இரகசியங்களை அறிகிறார்கள் (எண்24:16,17). இறை விருப்பத்தைப் புரிந்து கொள்கிறார்கள் (1 சாமு 15:16).
(உ) அழைப்பின் வாயிலாகக் கடவுள் இறைவாக்கினரை முற்றிலும் ஆட்கொள்கிறார். விருப்பு, வெறுப்பு பாராது, அச்சம், ஆபத்து மறந்துஅவர்கள் இறைவாக்கு கூறவேண்டும். அவர்களது சுதந்திரம்எடுபடவில்லைதான், எனினும் இறைவாக்குக் கூறுவது அடிக்கடிஇறைவாக்கினரின் போக்குக்கும், உணர்ச்சிகளுக்கும் மாறுபட்டுள்ளது(மோசேயின் தயக்கம்-விப 4:10; சாமுவேலின் ஆர்வம்- 1 சாமு 3:10)ஆமோ 3:8 - 'தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க இறைவாக்குஉரைக்காதவர் எவர்?' 7:12 'பெத்தேலில் காட்சி கூறாதே' என்கின்றனர்.எனினும் நான் பேசாமலிருக்க முடியாது.எசாயா 6:8 'எனக்குப் பேசத் தெரியாது. . . நாம் எதைச் சொல்லக்கற்பிப்போமோ அதை நீ அறிவிப்பாய்'எரே 4:19-21 ' என் இதயம் துயரத்தால் பதைபதைக்கின்றது; நான்வாளாவிருக்க முடியுமா?' (எரே 15:16).எரே 6:11- ஆண்டவரின் சீற்றம் என்னில் நிறைந்துள்ளது. அதனைஅடக்கிச் சோர்ந்து போனேன்.எரே 20:7-9 - 'ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும்ஏமாந்து போனேன். நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல்வெற்றி கொண்டு விட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்குஆளானேன்; எல்லாரும் என்னை ஏளனம் செய்கிறார்கள். அவர் பேரால்இனிப் பேச மாட்டேன் என்பேனாகில், என் எலும்புகள் எரியும் நெருப்பால்பற்றி எரிவதுபோல் இருக்கிறது'.எசேக்கியேல் இறைவாக்கினரும் இறைவன் தன்னை உந்தித்தள்ளுவதை உணர்கிறார். எசே 3:14 -‘ஆவி என்னைத் தூக்கிக்கொண்டு சென்றது. நானோ மனம் கசந்து சினமுற்றுச் சென்றேன்'.எசே 3:18-20 - சொல்லவேண்டியதைச் சொல்லாமல் போனால் அவன்இரத்தப்பழி உன்மேல் விழும். யோனா இறைவாக்கினரின் அனுபவம் குறிப்பிடத்தக்கது. இறைவாக்குரைக்காமல் தப்பித்துக்கொள்ள முயன்றும் தோல்வி காண்கிறார்அவர் (யோனா 1:1-10).
(ஊ) இறைவாக்கு உரைப்பதற்காகவே ஆண்டவரின் ஆவி இறைவாக்கினர்சங்கத்தாரிடம் குடியிருந்தது. எனினும் ஆடல், பாடல் இவற்றோடுஅவர்கள்ஆவியின் செயலையும் ஒன்று கலந்தனர் (1 சாமு 19:20-24;10:6-10; 1 அர 19:11-13; 2 அர 3:11-20) . இதனை இறைவனால்நேரடியாக அழைக்கப்பட்ட இறைவாக்கினர் விரும்பவில்லை (ஆமோ7:10-17). இறைவாக்கினரின் சங்கத்தாரிடமிருந்து தங்களைவேறுபடுத்துவதற்காக ஆண்டவரின் ஆவி தங்கள் மேல் வந்ததாகக்கூறாமல், ஆண்டவரின் ஆற்றல்மிகு கைவன்மை தங்கள்மேல்இருப்பதாகக் கூறினர் (எசா 8:11; எரே 1:9; 15:17; எசே 3:14). இறைவாக்குதங்களுக்கு வந்ததாகவும் கூறினர்.இறைவனது கரங்கள் அணைப்பதும், ஆண்டவரின் ஆவிஆட்கொள்வதும் ஒன்றே (1 அரச 18:12-45; எசே 3:14-8:3). எனவேஆண்டவரின் ஆவிக்கும் இறைவாக்கிற்கும் தொடர்பு உள்ளது.எழுந்து நிற்க ஆற்றல் (எசே 2:1; 3:24), இறைவாக்குரைக்க உறுதி (11:5),இவற்றைத் தந்தவர் ஆண்டவரின் ஆவியே. இறைவாக்கினர் வழியாய்ஆவியானவர் இறைவனுக்குச் சாட்சியாகத் திகழ்கிறார். மக்களின்பாவத்தை கண்டித்து உணர்த்தினார்.எலியா ஓரேபு மலையில் தென்றல் அமைதியில் இறைவாக்குப் பெற்றார்(1 அரச 19:12, 13). ஆவி ஆட்கொண்டதால் (ஆண்டவரின் கை) தான்ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார் எரேமியா, புரட்சி செய்தார் (எரே 20:7;15:17).இறைவனால் நேரடியாக அழைக்கப்பட்ட இறைவாக்கினர், ஆவிதங்களை ஆட்கொண்டதாகக் கூறுவது வழக்கம் இல்லை. எனினும்,எசேக்கியேலின் காட்சிகள் ஆண்டவரின் ஆவியிடமிருந்து வந்ததாகப்பொதுவாகக் கூறப்பட்டுள்ளது (3:12-44; 8:3; 11:1-24; 43:51).
(எ) இறைவாக்குப் பணி வாழ்நாள் முழுவதும் நீடிப்பதே! ஆயினும் எந்நேரமும்இறைவாக்குரைக்கும் நிலையிலேயே அவர்கள் இருந்தார் அல்லர்.இறைவன் அருளும் போதுதான் அவர்கள் இறைவாக்குக் கூறுவர்; தான்விரும்பிய போதெல்லாம் ஒருவர் இறைவாக்கு உரைக்க முடியாது.சில வேளைகளில் இறைவாக்கு தேடாமலே அருளப்படும் (எசே 1:3).சில சமயங்களில் வேண்டுதலுக்கு விடையாக அளிக்கப்படும்(எரே 32:16 -44; தானி 2 :17, 19; 9: 3-27சில வேளைகளில் இறைவாக்குப் பெற மன்றாடும்படி கடவுளேகற்பித்திருக்கிறார் (எரே 33:2,3).சில சமயங்களில் இறைவாக்கினர் கடவுளின் வார்த்தைக்காககாத்திருக்கவும் வேண்டியதிருக்கும் (அபக் 2:1; எரே 42:4-7).இறைவாக்குப் பெற்றபின் அதைக் கூறாமல் அவர்களால் இருக்கமுடியாது. (சுதந்திரமுண்டு; இருப்பினும் கூறாவிட்டால் குற்றவாளி).இறைவாக்கினர் கூறுவது 'மனிதனின் வார்த்தையில் இறைவனின்வாக்கு'. எனவே அது சக்திவாய்ந்தது (ளுயஉசயஅநவெயட கழசஉந). பஞ்சம்,மீட்பு, தோல்வி பற்றி எடுத்துரைத்தால் அது நிகழ்வதாக விவிலியம்கூறுகிறது.1 அரச 15:29; 16:12; 2 அரச 1:17; 7:16; 9:26; 10:17இறைவாக்கு பிடுங்கிப் பறிக்கவும், நிர்மூலமாக்கிச்சிதறடிக்கவும், தட்டி எழுப்பவும் வல்லமையுள்ளது.1 சாமு 16:4 ; 1 அர 2:24; எரே 1:10அது பாறையை உடைக்கும் சம்மட்டியை ஒத்தது.எரே 5:14; 23:29அது கொல்லும் வாள் - ஓசே 6:5அது பலன் தராமல் போனதில்லை.எசா 31:2; 40:6-8; 45:23எனவே இறைவாக்கினர் வரலாற்றிற்கு விளக்கம் கொடுப்பவர் மட்டும்அன்று; வரலாற்றை உருவாக்குபவர்களும் அவர்களே. இறைவாக்கினர்பொதுவாக அழிவைக் கூறுபவர். எனினும் நம்பிக்கையையும் அவர்கள்வளர்ப்பவர்கள் 'மன்னிப்பு', 'மீட்பு', 'புது உடன்படிக்கை', 'புதுக் கடத்தல்','மீட்பரின் தன்மை' இவற்றை முன் உணர்த்துபவர்.
(ஏ) வெற்றிப்பலன், நன்றி கிடைக்கும் என அவர்கள் எதிர்ப்பார்க்கக் கூடாது.மக்களின் மனம் கடினப்படக்கூடும் (எசா 6:9-10; எசே 1:19, 7:27; 3:6).மனிதன் செவி கொடுக்காவிடினும் பேச வேண்டும்; ஏனெனில் ஓர்இறைவாக்கினர் எச்சரித்தார் என்பதை என்றாவது மக்கள் அறியவேண்டும் (எசே 2:5, 7; 3:11, 27). இறைவாக்கினர் செயலில்துணிந்தவராக இருக்க வேண்டும். நன்மையைப் புகழ வேண்டும்,தீமையைக் கண்டிக்க வேண்டும். இறைவனது தண்டனையை அறிவிக்கவேண்டும். மனம் திரும்பத் தூண்ட வேண்டும், பிறர் தங்களிடம்வரட்டும் எனக் காத்திருத்தல் ஆகாது. இறைவனால் அழைக்கப்பட்டஇறைவாக்கினரின் வாழ்வில் துன்பம் பெரிதும் இடம் பெற்றிருந்தது.இறை வாக்கு கூறாதிருந்தாலும் துன்பம். கூறினாலும் துன்பம். உடுக்கைக்கு ஒரு பக்கத்தில்தான் இடி. மத்தளத்திற்கு இரு பக்கத்திலும் அடி.எனவே எதையும் தாங்கும் இதயம் வேண்டும். ஆபத்து நிறைந்த வாழ்வுஅவரது வாழ்வு (மத் 5:1); தைரியம் தருபவர் கடவுளே (எரே 1:8).

2 குறி 16:1-10 - அனானி இறைவாக்கினரை (திருக்காட்சியாளரை)ஆசா மன்னன் சிறைப்படுத்தினான்.
1 அரச 19:2 - எலியாவைக் கொல்லத் தேடினாள் ஈசபேல் அரசி.1 அரச 19:10-14 - பல இறைவாக்கினர்கள் கொல்லப்பட்டதாகக்கூறுகிறார் எலியா.
1 அரச 22:19-28 - கடவுள் கூறியதை எடுத்துக்கூறிய குற்றத்திற்காகமீக்காயாவின் கன்னத்தில் போலி இறைவாக்கினன்செதேக்கியா அறைந்தான். . .ஆகாபு அரசன்மீக்காயாவைச் சிறையில் தள்ளினான்.
அரச 6:31-32 - சீரிய அரசனால் எலிசா உயிருக்கு ஆபத்து.
யூதப் மரபுப்படி - மனாசே மன்னன் காலத்தில் எசாயா மர வாளால்அறுக்கப்பட்டார்.
எரே 11: 18-23 - வெட்டுவதற்குக் கொண்டுசெல்லப்படும் சாந்தமானசெம்மறிப்போல் .... தீமை வரச்செய்வேன்.
எரே 12: 5-6 - சகோதரரும், உன் தந்தையின் வீட்டாரும் கூடஉனக்கு நம்பிக்கை துரோகம் செய்தார்கள்.
எரே 15:15-21 - களியாட்டக் கூட்டத்தில் அமர்ந்து நான் மகிழ்ச்சிகொண்டாடவில்லை. நான் தனியனாய்இருந்தேன்... எனக்கு ஏன் தீராத வேதனை?
எரே 18:18-23 - எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி.
எரே 20:2-3 - மன்னன் யோவாக்கிம் காலத்தில் எரேமியாவைபஸ்கூர் என்னும் குரு பிடித்து, அடித்துசிறையில் இட்டான்.
எரே 20:14-18 - தம் வாழ்வில் எவ்வளவு துன்பமெனில் எரேமியாதன் பிறப்பை-வாழ்வை-சபிக்கிறார்.
எரே 26:20-24 - சில இறைவாக்கினர்கள் கொல்லப்பட்டனர்.
எரே 32:1-5 - எரேமியாவின் சிறை வாழ்வு.
எரே 37:14-16 - கைதியாக்கப்பட்டார்-அடிபட்டார், சிறைவாசம்.
எரே 38:1-6 - பாழும் கிணற்றில் எரேமியா( எரேமியா எகிப்தில்கல்லால் எறிபட்டு உயிர் துறந்த யூதப்பரம்பரையை எரோனிமுசு குறிப்பிடுகிறார்).
2 குறி 24:20-22 - செக்கரியா கோவிலில் கொல்லப்பட்டார்(மத் 23:35 புதிய ஏற்பாட்டில் திருமுழுக்குயோவான் தலைவெட்டப்பட்டார்).

(ஐ) கடவுளின் செய்தியை மக்களுக்கு உணர்த்துவதற்காக இறைவாக்கினர்சொற்களை மட்டுமன்று, அடையாள வாழ்க்கை நிலை, அடையாளச்செயல்கள், அடையாளப் பெயர்கள் இவற்றையும் பயன்படுத்தினர். சான்றாக,

(1) அடையாள வாழ்க்கை நிலை

ஓசேயாவின் மணவாழ்க்கை (நூல் முழுவதும்)
எரேமியாவின் திருமணம் செய்யாத வாழ்க்கை (எரே. 16:1-9).
மணம் செய்து மனைவியை இழந்த எசேக்கியேலின் வாழ்க்கை(எசே 24:15-27).

(2) அடையாளச் செயல்கள்

அகியா தன் மேலாடையை 12 பாகங்களாகப் பிரித்து அவற்றுள் பத்தைஎரொபவாமுக்குக் கொடுத்தார் (1 அர 11:29-39); எரேமியாவின் அரைக்கச்சை(எரே 13:1-14); எரேமியா பெருங்குடி மக்கள் காண மண்கலயம் ஒன்றைஉடைத்தார் (எரே 19:1-15); இரு கூடைகள் (எரே 28:1-17); நிலம் வாங்குதல்(எரே 32:8-9); புத்தகத்தை ஆற்றிலே எறிதல் (எரே 51:59-61); எசாயாஆடையின்றியும், வெறுங்காலோடும் எருசலேம் வீதிகளில் திரிந்தது (எசா 20:1-6); எசேக்கியேல் நகர அழிவைச் சித்திரித்தல் (எசே 4:1-17); தலையையும்,தாடியையும் மழித்தல் (எசே 5:1-4); சுவரில் துவாரம் (எசே 12:3-16);நடுக்கத்தோடு அப்பத்தை உண்ணுதல் (எசே 12:17-20); வாள் வீச்சு (எசே 21);இணைந்த கோல்கள் (எசே 37:15).

(3) அடையாளப் பெயர்கள்ரூரஅட்

ஓசேயா 1:4-9 மகன் இஸ்ரியேல் : தண்டனை பெறுபவர், கடவுள்விதைக்கிறார்.மகள் லோ - ருகாமா : கருணை பெறாதவள்.மகள் லோ - அம்மீ : என் மக்கள் அல்ல.ரூரஅட்
எசா 7 : 3 எசாயா தன் மகனுக்கு செயார் - யாசிபு என பெயர் கொடுத்தார்.இதன் பொருள் "எஞ்சியோர் திரும்பி வருவர்” என்பதாகும்.(எசா 8:1-3)மகேர் - சாலால் - கஸ்பாசு - கொள்ளைப் பொருள்வேகமாக வருகிறது.
எசேக்கியேல் 23:4 ஓகோலா என்பவள் சமாரியா, ஒகலிபா என்பவள்எருசலேம்.எசாயா 7:14; 9:6 மெசியாவின் பெயர்கள்.

(ஒ) இறைவாக்கினர் வழியாய் இறைவன் பேசாவிடில் அது தண்டனையாகக்கருதப்பட்டது. ஆமோ 8:11-12; எசே 7:26.மலாக்கி என்ற இறைவாக்கினருக்குப்பின் நெடுங்காலமாகஇறைவாக்கினர் இல்லை (1 மக் 9:27; புல 2:9; தானி 3:38; திபா74:9). இதனால் ஓர் இறைவாக்கினரை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர் (1 மக் 4:46; 14:41).எனவேதான் திருமுழுக்கு யோவானுக்கு நல்ல வரவேற்பு இருந்தது (மத் 3:1-12; 11:7-19; 21:25-27; யோவா 10:41). அவரே பழைய ஏற்பாட்டின் இறுதிஇறைவாக்கினர் - புதிய ஏற்பாட்டின் முன்னோடி. இயேசுவே புதிய ஏற்பாட்டின்ஈடு இணையற்ற இறைவாக்கினர் ஆவார்.

2.4. போலி இறைவாக்கினர்கள்:
இறைவாக்குரைக்க உண்மை அழைப்பு இவர்களுக்கு இல்லை. இறைவன் பெயரால்பேசி இறைவாக்கைத் தவறாகத் தந்தவர்கள் இவர்கள். இவர்கள் அடையாளச் செயலும்செய்து மக்களை மயக்கினர்.

இஸ்ரயேல் நாட்டில் இருந்த உண்மையான இறைவாக்கினருக்குப் பெரும் எதிரிகளாக இவர்கள் திகழ்ந்தனர். மேலும் இவர்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருந்தனர்.மன்னன் எதிர்பார்ப்பதையே எடுத்துச் சொல்லி மன்னனிடம் நன்மதிப்புப் பெற்று இருந்தனர்.சிலர் அரசவையில் கூட இடம் பெற்றிருந்தனர். மக்களின் தலைவராய் இருந்தவரும் உண்டு.எனவே போலி இறைவாக்கினரால் இஸ்ரயேல் நாட்டில் பெரும் தொல்லை ஏற்பட்டது என்றேகூற வேண்டும்.

ஓசேயா, எசாயா, மீக்கா, செப்பனியா, எரேமியா, எசேக்கியேல் போன்றஉண்மையான இறைவாக்கினர் இதனைக் குறிப்பிடுகின்றனர்.

1 அரச 18:19 - எலியாவின் காலத்தில் வடநாட்டில் ஈசபேல் அரசியின்உணவுண்டு வாழ்ந்த பாகாலின் தீர்க்கதரிசிகள்450 பேர்.அசேராவின் 400 இறைவாக்கினர்களோடு எலியா கார்மேல்மலையில் போட்டியிடுகிறார். அவர்கள் போலி இறைவாக்கினர் எனநிரூயஅp;பிக்கிறார்.

1 அர 22:24 - போரில் வெற்றி கிடைக்குமென இறைவாக்கினர் சங்கத்தவர்400 பேர் அறிவிக்கின்றனர். மீக்காயா தோல்வியைஅறிவிக்கிறார். செதேக்கியா மீக்காயாவை கன்னத்தில்அறைகிறான். அரசன் பொய்யுரைத்த 400 பேரை நம்புகிறான்.

ஓசே 4:5 - இரவிலே (போலி) இறைவாக்கினரும் உன்னோடே இடறி விழுவான்.

எசா 28:7 - காட்சி காணுகையில் மருள்கின்றனர்;

மீக் 3:5-8 - வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் 'அமைதி உண்டாகுக!'என உரக்கச் சொல்கின்றார்கள்; வாய்க்குத் தீனி போடாதவரிடம்‘புனிதப் போர் வரும்' எனக் கூறுகின்றார்கள்.

செப் 3:3 - (போலி) இறைவாக்கினர்கள் நம்பத்தகாதவர், வஞ்சகர்.எரே 5:31 - (போலி) இறைவாக்கினர் பொய்யை இறைவாக்காகச்உரைக்கிறார்கள்.

எரே 6:13; - அமைதியே இல்லாத பொழுது 'அமைதி, அமைதி'8:11 என்று சொல்லி நடக்கிறார்கள்.

எரே 14:13-16 - ‘நீங்கள் வாளைச் சந்திக்க மாட்டீர்கள். உங்களிடையே பஞ்சம்வராது; மாறாக இந்த இடத்தில் நிலையான அமைதியைஉங்களுக்குத் தருவேன்' என இறைவாக்கினர் அவர்களுக்குகூறுகின்றனர்.... அவர்களின் இறைவாக்கை கேட்கும் மக்களும்வாள், பஞ்சம் ஆகியவற்றின் காரணமாக எருசலேமின்தெருக்களில் தூக்கி வீசப்படுவார்கள்.

எரே 23:13-30 - அவர்கள் பாகால் பெயரால் பொய் வாக்குரைத்து என் மக்கள்இஸ்ரயேலைத் தவறான வழியில் நடத்தினார்கள். அவர்கள்உரைப்பது ஆண்டவருடைய வாய்மொழியன்று.

எரே 28:11-17 - அனனியா இறைவாக்கினரின் சொல்லுக்கும்,அடையாளச்செயலுக்கும் அரசவையில் மதிப்பு. உண்மை உரைக்கும்எரேமியாவின் சொல்லுக்கு மதிப்பில்லை.

எசே 13:1-23 - பொய்க்காட்சி கண்டு, ஏமாற்றுக் குறிதரும் போலிஇறைவாக்கினருக்கு எதிராக என் கை இருக்கும் (13:9).2.4.1.

 

போலி இறைவாக்கினரைக் கண்டுபிடிப்பது எப்படி?

1) அவர்களது வாக்கு நிறைவேறாது (இச 18:21-22); உண்மையான இறைவாக்கினர் வரும் பொருள் உரைப்பர். அது நிறைவேறும் (1 சாமு 12:16-18; 1 அரச 17:1, 18:1;22:28; 2 அரச 6:32-33; 8:13-15; 19:32-36; எசா 41:23; 44:24-26; 48:1-8; எரே 28:9, 16;32:6-8). ஆனால் பல காலம் காத்திருக்க வேண்டும். அதற்குள் ஒரு தலை முறைகூடக்கடந்து போகலாம்.

2) இறைவன் இறைவாக்கினர் வழியாய்ப் புதுமை ஆற்றுவதுண்டு. உண்மைதான்.ஆயினும், இதுவும் நிச்சயமான அருங்குறி அல்ல. (இச 13:2-6) புதுமை போல் செய்து பிறதெய்வத்தை வழிபடத்தூண்டியவர்களும் உண்டு. அவர்கள் போலி இறைவாக்கினர்கள்.தம் பணி இறைவனிடமிருந்து வந்தது என எண்பிக்க அந்த இறைவன் யாவே ஒருவரேஎன்று காட்ட உண்மை இறைவாக்கினர் புதுமை செய்யும் வரம் பெற்றிருந்தனர் (1 சாமு12:12-19; 1 அரச 13:1-5; 17:24; 18:37-39; 2 அரச 20:1-11; எசா 7:11-14; 38:7). ஆம்யாவே இறைவனுக்குப் பிரமாணிக்கமாயிருப்பதுதான் இறைவாக்கினருக்கு உரைகல் (எரே23:13-32).

3) அழிவை எடுத்துரைப்பவர் உண்மை இறைவாக்கினர். ஏற்றவிதம் கூறுபவர்ஏமாற்றுபவர். நல்ல இறைவாக்கினர் தம் அழைப்புக்குப் பிரமாணிக்கமாயிருந்து தியாகம்செய்பவர்கள்; உண்மைக்காகத் தன் உயிரையே கொடுப்பவர்கள் (எரே 11:4-6; 26:12-15).சுருங்கக்கூறின், உண்மையான இறைவாக்கினர் பிற்காலத்தைஅறிவிக்கும்போது, அது நிகழும் (வுசரவா). பல தெய்வ வழிபாட்டை அகற்றி 'ஒரே தெய்வவழிபாட்டைப் போதிப்பவர்' (அழழெவாநளைஅ); நல்வாழ்வு வாழ்ந்து பிறரும் நல்வாழ்வு வாழத்தூண்டுபவர். நடத்தையைச் சீர்திருத்திக் கொள்ளாமல் வெறும் திருக்கோவிலையும்,இறைப்பணியை யுமே நம்பினவர்களைக் கண்டிப்பவர் (அழனயடவைல) (எரே 7:4-1

5; மீக். 3:11;ஆமோ 2:6-16) (ஆமோஸ் - சமூக நீதி; ஓசேயா - அன்பு; எசாயா- தூய்மை) (Pசழிhநவள யசந வாந சநடபைழைரள உழளெஉநைnஉந ழக ஐளசயநட).

 

2.5. இறைவாக்கினரின் ஏனைய பிரிவுகள்
இறைவாக்கினர்களை பின்வரும் விதத்திலும் பிரிக்கலாம்:

2.5.1. நூலின் அடிப்படையில்நூல் பெற்ற இறைவாக்கினர்
பெரியவர்: (நூலின் அளவு பெரிது - 4 பேர்)எசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல்பெரிய இறைவாக்கினர் நூல்களோடு எரேமியாவின் சீடரான பாரூயஅp;க் நூலையும்,பலும்பலையும் சேர்த்து படிப்பர்.
சிறியவர்: (நூலின் அளவு சிறிது - 12 பேர்)நூல் பெறாத இறைவாக்கினர்சவுல் காலத்தில் சாமுவேல், தாவீது காலத்தில் நாத்தான், காது .சாலமோன் காலத்தில் அகியா. . . இன்னும் பலர்.
2.5.2. பணி செய்த இடங்களின் அடிப்படையில்வடநாட்டு (இஸ்ரயேல்), தென்னாட்டு (யூதா) இறைவாக்கினர்கள்
2 .5.3. காலத்தின் அடிப்படையில்அடிமைத்தனத்திற்கு முந்திய இறைவாக்கினர் (கி.மு. 587- க்கு முன்).அடிமைத்தனத்திற்கு பிந்திய இறைவாக்கினர் (கி.மு. 587க்கு பின்).

 

 

3. அரசர்களும் இறைவாக்கினர்களும்

(சாமுவேல்)- சவுல் கி.மு. 1020 - 1000
(காது, நாத்தான்) - தாவீது கி.மு. 1000 - 962
(அகியா) - சாலமோன் கி.மு. 962 - 931

யூதா (தென்நாடு)
இறைவாக்கினர் - அரசர்
ஆண்டு இஸ்ராயேல் (வடநாடு)
அரசர் - இறைவாக்கினர்
  ரெகபெயாம் 931-922 எரொபவாம்-1 செமாயா
  அபியாம்
(இத்தோ
அனானி, அசரியா)
913   அகியா
ஆசா   911    
    910 நாதாபு  
    909 பாசா ஏகூ
    886 ஏலா  
    885 சிமரி-ஓம்ரி  
    874 ஆகாபு மீக்காயா
ஏகூ, யாகாசியேல் யோசபாத்து 870   எலியா
    853 அகசியா எலிசா
    852 யோராம்
  யோராம் 841  
  அகசியா-அத்தலியா 841 ஏகூ
  யோவாசு 835  
    814 யோவாசு
    798 யோவாசு
  அமட்சியா 796  
    782 எரொபாவாம் -2 யோனா, ஆமோஸ்
  அசரியா-உசியா 781   ஓசேயா
  யோத்தாம்(படைத்தலைவர்) 750  
    753 செக்கரியா
    752 சல்லூம்-மெனகேம்
    742 பெக்ககியா

மீக்கா,
எசாயா

யோத்தாம் மன்னன் 740  
  740 பெக்கா
(ஓதேது) ஆகாசு 735  
    723 ஒசேயா
    722 (இஸ்ராயேலின் அழிவு) சமாரியாவின் அழிவு

அபகூக்கு,
நாகூம்

எசேக்கியா 715    
மனாசே 686    
ஆமோன் (செப்பனியா) 642  
(குல்தா) யோசியா 640 எரேமியா
Nர்யவகாசு 609
  (உரியா) யோயாக்கிம்) 609
புலம்பல்,
எசாயா 2
யோயாக்கின் 598 எசேக்கியேல்
செதேக்கியா 598  
எருசலேமின் அழிவு 587  
  அடிமைத்தன காலம்    
  அடிமைத்தனத்திற்குப் பின;   இருதி இறைவாக்கினர்கள்
ஆகாப்   6ம் நூற் தானியேல்
செ;கரியா     2ஆம் செக்கரியா (12-14 அதிகாரங்கள்)
ஒபதியா   5ம் நூற்  
யோனா   4ம் நூற் பாரூயஅp;க்கு

 

 

4. தம் பெயரில் நூல் பெறாத இறைவாக்கினர்

 

1. சாமுவேல்

1 சாமு 1-25
2.கடவுளின் மனிதர் ; 1 சாமு 2 : 27-36
3. காது 1 சாமு 22 : 52 சாமு 24 : 10-15 ( 1 குறி 21: 1-30)
4.நாத்தான் 2 சாமு 7 : 1-17 ( 1 குறி 17:1-15)
2 சாமு 12 : 1-15, 1 அர 1: 5-37
5. அகியா 1 அர 11 : 29-30, 14 : 1-18
6. செமாயா 1 அர 12 : 22-24
7. ஓர் இறையடியார் ; 1 அர 13 : 1-32
8. ஏகூ 1 அர 16 : 1-4, 7-12
9. எலியா 1 அர 17 : 1-19:21,
10. ஓர் இறைவாக்கினர் 1 அர 20 : 13-14
11. மீக்காயா 1 அர 22 : 1-38 ( 2 குறி 18: 4-28)
12. எலிசா 2 அர 2 : 1-9:1
13. யோனா 2 அர 14 : 25-27
14. குல்தா (பெண்) 2 அர 22 : 3-20 ( 2 குறி 34:28)
15. ஆகாபு 1 குறி 25 : 1-2
16. எதுத்தூன் 1 குறி 25 : 3
17. இத்தோ 2 குறி 13 : 22
18. அசரியா 2 குறி 15 : 1-7
19. அனானி 2 குறி 16 : 7 -10
20. யாகசியேல் 2 குறி 20 : 14-17
21. எலியேசர் 2 குறி 20 : 35- 37
22. கடவுளின் மனிதர் 2 குறி 25 : 7- 10
23. உரியா எரே 26 : 20-24
   

பகுதி இரண்டு

(ஒவ்வோர் இறைவாக்கினரைப் பற்றிப் படிக்கும்போதும் 'அரசர்களும்இறைவாக்கினரும்' என்ற பெயர் வரிசையையும், 'நூல் பெறாத இறைவாக்கினர்'என்ற பெயர்ப் பட்டியலையும் ஒரு முறையேனும் நோக்குக).

1. சாமுவேல்

சாமுவேல் எப்ராயிம் குலத்தைச் சார்ந்த எல்கானாஃஅன்னாஎன்பவர்களின் மகன் ஆவார். இவர் 'நீதித்தலைவர்' (விடுதலை வீரர்)வரிசையில் இறுதியானவர். அரசர் காலத்திலிருந்து தொடங்கும்'இறைவாக்கினர்' வரிசையில் முதல்வர். சவுல், தாவீது, சாலமோன், வடநாட்டுஅரசர்கள், தென்னாட்டு அரசர்கள் ஆகிய அரசர்களைப் பற்றிய நூல்களின்தொடக்கத்தில் இவர் இடம் பெறுகிறார். எனவே நூல் பெறாத இறைவாக்கினர்வரிசையில் இவர் எண்ணப்படுவது சரியே. 1 சாமுவேல், 2 சாமுவேல் என்றுபெயர் கொண்டாலும் கூட டுஓஓ கிரேக்க மொழிபெயர்ப்பு '1, 2, 3, 4 அரசர்கள்'என்றே அரசர் வரலாற்று நூல்களுக்குப் பெயர் இட்டுள்ளது.

1.1. சாமுவேல் விடுதலைத் தலைவர்
சாமுவேல் 12 நீதித் தலைவர்களுக்குப் பின்வரும் விடுதலைத் தலைவர்.இவர் நீதித்தலைவர்கள் என்பதற்குச் சிறந்த சான்றாக விளங்குவதுகீழ்க்காணும் பகுதிகள்.

1 சாமு 7:15-17,1 சாமு8:1-5,1 சாமு12:1-5
'சாமுவேல் ஒரு நீதித்தலைவர் ( விடுதலைத் தலைவர்)' என்பதுவலிந்து விளக்கம் கொள்வதன் பலனேயாகும் என்பர் ஆராய்ச்சியாளர்.

1.2. சாமுவேல் இறைவாக்கினர்
சாமுவேல் ஓர் இறைவாக்கினர் என்பது உண்மை. ஒரு சிலபகுதிகளில் அது அழகுபட விவரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
1 சாமு 1 - சாமுவேலின் பிறப்பின் நிகழ்ச்சி விளக்கம்.
1 சாமு 2 - தாய் அன்னாவின் புகழ்ப்பாடல்
1 சாமு 3 - சாமுவேல் இறைவாக்கினராக அழைப்புப் பெறும்அற்புத நிகழ்ச்சி. வாசிக்க இன்பமான பகுதிகள் இவை.

1.3. சாமுவேல்: இஸ்ரயேலுக்கு முதன்முதலாக அரசரை ஏற்படுத்தியஇறைவாக்கினர்
'நாட்டை ஆள அரசர் வேண்டும்' என்று கேட்ட இஸ்ரயேலின் பன்னிருகுல மக்களுக்கு ஓர் அரசரை மனமுவந்து ஏற்படுத்திக் கொடுத்ததுஇறைவாக்கினர் சாமுவேலின் முக்கியப் பணிகளுள் ஒன்றாகும். அரசரும்அரசாட்சியும் இல்லாத நாட்டில் இப்புதுமுறை புகுத்தப்பட்டது. 'நாட்டிலே அரசர்ஒருவர் இருக்க வேண்டும்' என்ற மக்களின் ஆவலும், அரசரைப் பற்றி அவர்கள்கொண்டிருந்த மனநிறைவும், சாமுவேல் அதை இறை விருப்பமாகக் கருதியதும்,கீழ்க்காணும் பகுதிகளில் எதிரொலிக்கின்றன.

1 சாமு 9:1-27 அரச திருப்பொழிவுக்காகச் சாமுவேல்சவுலை தேர்ந்தெடுத்தல்.
1 சாமு 10:1-16 சாமுவேல் சவுலுக்கு அரச திருப்பொழிவுஅளித்தல்.
1 சாமு 11:1-15 சவுலின் ஆட்சி பலன் தரல்.
1 சாமு 13:1-23 சவுல் பிலிஸ்தியரை முறியடித்துஅரசாட்சியின் தேவையை நிரூயஅp;பித்தல்.
1 சாமு 14:1-52 சவுலின் மகன் வெற்றி பெறல்.சவுலின் அரசு உறுதியடைதல்.

பென்யமின் குலத்துச் சவுல் அரசனானதற்கு மட்டுமல்ல,அக்குலத்தை ஒழித்து யூதா குலத்துத் தாவீது அரசரானதற்கும் காரணமாகஇருந்தவரும் சாமுவேல்தான் (1 சாமு 16:1-13).ஆயினும் இறைவாக்கினர் சாமுவேல் விரும்பாமல் இவ்வாறு அரசைக்கொடுத்தார் என்றதோர் 'அரசர் வேண்டாம் என்ற மரபு' ( 'யுவெi-ஆழயெசஉhiஉ வுசயனவைழைn) சாமுவேலைப் பற்றிய பகுதிகளுக்கிடையே இழையோடிச் செல்வது நம்கண்களில் படுகிறது.

விவிலிய ஆராய்ச்சியாளர் இதற்கு விடை காண முயலுகின்றனர்.தொடக்கப் மரபைப் பின்பற்றிய எழுத்தாளர், சாமுவேல் விரும்பியே அரசரைஏற்படுத்தினார் என்று அவர் மனதைப் மேற்காணும் விவிலியப் பகுதிகளிலேபடம் பிடித்துக் காட்டினர்.ஆனால் சவுல்-தாவீது-சாலமோன் அரசர்களுக்குப் பிறகு வடநாட்டில் வரும் மதத்துரோகி அரசர்களை - அநீத அரசர்களைப் பார்த்தபின்,தென் நாட்டை ஆளும் இறைப் பற்றற்ற அரசர்களைக் கண்டு சலித்துப்போனபின்-பக்தர்கள் மனம் உடைந்துபோய் 'அரசர்கள் தேவையே இல்லை','சாமுவேல் இறைவாக்கினர் அப்படியொன்றும் விரும்பி நாட்டில் அரசரைஏற்படுத்தவில்லை' என்று சாமுவேலின் மனத்துக்கு உள் ஆழம் கொடுக்கத்தொடங்கினர்.இவ்வாறு, இஸ்ரயேல் நாட்டுக்கு 'அரசர் தேவையில்லை' என்றுசாமுவேல் இறைவாக்கினர் நினைப்பதாக எழுதுகின்றனர். அந்த நினைவுக்குஉரமூட்டும் நிகழ்ச்சிகளைப் பிற்கால மரபு சித்தரிக்கிறது. இத்தகைய அரசர்எதிர்ப்புப் பகுதிகள் பின் வருவன:

1 சாமு 8:1-22 'அரசன் வேண்டாம்'.
அரசனால் தொல்லைகளே வரும்.
10:17-27 'அரசன் வேண்டும்' என்பது உங்கள் விருப்பமே
(இறைவாக்கினர் விருப்பம் அன்று!)

எப்படியும், சாமுவேல் இறைவாக்கினரின் முக்கியமான பணிஇஸ்ரயேல் நாட்டில் அரசர்களைத் தோற்றுவித்ததேயாகும். இந்த அரசர்களால்நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளையும், ஆட்சிச் சூழலில் இறைவாக்கினர்பணியாற்றிய விதத்தையும் பின்வரும் பக்கங்களில் காணலாம் (1 சாமு 2 :27 -36).

குறிப்பு: சாமுவேல் நூல் தொடக்கப் பகுதியில், இறையடியார்(கடவுளின் மனிதர்) என்ற ஊர் பேர் இல்லாத, நூல் எழுதாதஇறைவாக்கினரைச் சந்திக்கிறோம். சாமுவேல் இறைவாக்கினர் இளைஞனாகஇருந்த காலத்தில் வாழ்ந்தவர் இந்த ஊர் பெயர் இல்லா இறைவாக்கினர்.

'சீலோ' திருத்தலத்தில் பணியாற்றிய ஏலி என்ற பெரிய குருவின்குடும்பம் அர்ச்சகர் பணியிலிருந்து அகற்றப்படும் என அறிவிப்பதே அவர்பணியாகும். இதற்குமேல் இந்த இறைவாக்கினரைப் பற்றி நமக்கு ஏதும்தெரியாது.

 

2. காது

காது என்ற பெயர் 'செல்வம், சம்பத்து' என்று பொருள்படும். இந்தஇறைவாக்கினர் தாவீது அரசனின் காலத்தவர் (கி.மு.1010-970). அவரதுஅரசவையில் இடம்பெற்றவர்.

இவரைப் பற்றிய விவிலியப் பகுதிகள்:
அ. 1 சாமு 22:5 ;
ஆ. 2 சாமு 24:10-17 (1 குறி 21:1-17)
இ. 2 சாமு 24:18-25 (1 குறி 21:18-30);
ஈ. 1 குறி 29:29.

2.1 இளைஞன் தாவீதின் உயிரைக் காத்த இறைவாக்கினர்
இஸ்ரயேல் நாட்டில் முதல் அரசனாக இருந்தவர் 'பென்யமின்குலத்து'ச் சவுல் என அறிவோம்.தன்னுடைய அவையில் 'யூதா குலத்து'த் தாவீது புகழ் பெறுவதையும்தனக்குப்பின் வேற்றுக் குலத்துத் தாவீது, ஆட்சியைப் பிடிக்கப் போவதையும்உணர்ந்த சவுல், வீரப்புகழ் பெற்றிட்ட தாவீதைக் கொல்லச் சதி செய்தான்.அப்போதுதான் முதன்முதல் தோற்றம் தருகிறார் இறைவாக்கினர் காது.

1 சாமு. 22:5 : இறைவாக்கினரான காது என்பவர், தாவீதை நோக்கி'நீ குகையில் தங்காதே, யுதா நாட்டுக்குப் புறப்பட்டுப் போ' என்றார். தாவீதுபுறப்பட்டு எரேத்து என்ற காட்டை அடைந்தார். இதனால், தாவீதுபேராபத்திலிருந்து தப்பி விடுகிறார்.தாவீது அரசனின் காலம் இஸ்ரயேல் நாட்டு முடியரசின் பொற்காலம்ஆகும். தாவீது மாமன்னன் பல்வேறு பகுதிகளையும் இணைத்துஒருங்கிணைந்த அரசை உருவாக்கினார். எப்ரோனிலிருந்த தலைநகரைஎருசலேமுக்கு மாற்றினார். இது மையமான இடம்; 12 குலத்தவரும் அவர்ஆட்சியில் மகிழ்ச்சி கண்டனர்.

ஆண்டவரின் பேழையை அவர் கிரியத் எயாரி மிலிருந்துஎருசலேமுக்குக் கொண்டு வந்து, புனிதத் தலத்தில் வைத்தார். மேலும் அரண்மனையைக் கட்டி முடித்தார். கோயில் கட்டத் தேவையான பொருட்களையும்சேகரித்தார். சுற்றிலும் இருந்த நாடுகளின் பகைவர்களை ஒடுக்கி அமைதியைநிலைநாட்டினார். தாவீது ஒரு வீரர் மட்டுமன்று, ஓர் இசைக்கலைஞரும் கூட.பாடற் குழுவுக்கும், திருப்பாக்களுக்கும் வித்திட்டு வளர்த்தவர் அவரே. இறைவழிபாட்டைச் சிறப்பான விதத்தில் நடத்திக் காட்டியவரும் அவரே.காது இறைவாக்கினர் இந்த மாமன்னரது காலத்தில் வாழ்ந்தவர்; அரசஅவையில் நாள் குறிப்புக் காப்பாளராக அவர் விளங்கினார் (1 குறி 29:29).எனவே தாவீதின் வாழ்க்கையில் ஒரு சில முக்கிய நிகழ்ச்சிகளில் அவர்பங்குகொள்ள முடிந்தது.

2.2 குடிக்கணக்கு எடுத்தலும், தாவீதுக்குத் தண்டனை அறிவித்தலும்
வெற்றிப் பெருமையில் திளைத்த தாவீது, படைபலம் காண விரும்பிநாட்டில் வடக்கே தாண் முதல் தெற்கே பெயெர்சபா வரையுள்ள இஸ்ரயேல்மக்களைக் குடிக்கணக்கு எடுக்க ஆணையிட்டார். இதைத் தாவீதின் படைத்தலைவர்கள் கூட விரும்பவில்லை; மனிதர் மட்டுமன்று இறைவனும்விரும்பவில்லை. இறைவாக்கினரும் விரும்பவில்லை.ஆயினும், அரசன் தாவீது விருப்பப்படியே குடிக்கணக்கு எடுத்துமுடிக்கப்பட்டது. அப்போது, தண்டனை அறிவிக்க வருகிறார் தாவீதின்திருக்காட்சியாளர் காது. ஏனெனில் அவருக்கு ஆண்டவரின் வார்த்தைவந்தது.

2 சாமு 24: 12-14 தாவீது அதிகாலையில் எழுந்திருந்தபோதுஇறைவாக்கினரும், திருக்காட்சியாளருமான காது என்பவருக்கு ஆண்டவருடைய வார்த்தை வந்தது. நீ தாவீதிடம் போய் 'இம்மூன்று காரியங்களில் ஒன்றைநீ தேர்ந்து கொள்ளலாம். அதில் உனக்குப் பிடித்தமானது எதுவோ அதை நான்உனக்குச் செய்வேன் என்று ஆண்டவர் சொன்னார் என்று சொல்' என்பதாம்.அதன்படியே காது, தாவீதிடம் வந்து அவரை நோக்கி 'உனது நாட்டில் ஏழுஆண்டுகள் பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப் பின்தொடர மூன்றுமாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள்கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் மறுமொழிசொல்லவேண்டும். எனவே சிந்தித்து முடிவு செய்' என்றார். அப்பொழுதுதாவீது, அவரை நோக்கி 'நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன்.ஆண்டவரது கையில் நாம் விழுவோம். ஏனெனில் அவரது இரக்கம் பெரிது.மனிதரின் கையில் விழவேண்டாம்' என்று கூறினார்.

2.3. களம் வாங்கிப் பீடம் கட்டுதல; ( பிற்கால எருசலேம் கோவில் நிலம் )
காது இறைவாக்கினரை நாம் காணும் மூன்றாவது கட்டம்மேற்கூறப்பட்ட தண்டனையின் தொடர்ச்சியே ஆகும்.

குடிக்கணக்கு எடுத்த தாவீது அரசர் மனம் கலங்குகிறார். அப்போதுகாது தாவீதிடம் 'எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்திலேயேஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பும்' என்றார் ( 2 சாமு 24:18-19 ) .அவ்வாறே பலியிடுமாறு களம் வாங்கப்பட்டது. பலிபீடம் கட்டப்பட்டது.பிற்காலத்தில் தாவீதின் மகன் சாலமோன் மாமன்னரால் இந்த இடத்தில்எருசலேம் பேராலயம் கட்டப்பட்டது. எனவே இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தநிகழ்ச்சியாகும்.

 

3. நாத்தான்

நாத்தான் (கடவுள் தந்தார்) என்ற பெயரைப் பழைய ஏற்பாட்டில் பலர்தாங்கியிருப்பினும் அவர்களில் மிக சிறப்பானவர் நாத்தான் இறைவாக்கினர்ஆவார். காது இறைவாக்கினரைப் போலவே இவரும் தாவீது மாமன்னரின்காலத்தவர்; அரசவை இறைவாக்கினர், எனினும் இறைவனால் நேரடியாகஅழைக்கப்பட்டவர். மீட்பின் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவர்; எருசலேம் கோவில்கட்டத் தூண்டுதல் தந்தவரும் பின்னர் தற்போது கட்டவேண்டாம் எனத்தடுத்தவரும் இவரே; வழிபாட்டு சீரமைப்புக்கு உதவியவர் இவர்; காது என்றஇறைவாக்கினரும் அவரோடு ஒத்துழைத்தார். நாத்தான் இறைவாக்கினர்'உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்' (2 சாமு 7:16)என இறைவாக்கு அறிவித்தார். மெசியாவை எதிர்பார்க்கையில் நாம் சிறப்பாகநினைவுகூரும் அருள்வாக்கு இதுவே. தாவீதுக்குப்பின் அவரது மகன்சாலமோன் மாமன்னராவதற்குப் பின்னணியில் நின்று உதவியவரும் அவரே.நாத்தானின் இளமை வாழ்வு நமக்குத் தெரியாது. அவரது வாழ்வின்இறுதிக் கட்டங்களும் மறைந்தே நிற்கின்றன.

நாத்தான் இடம்பெறும் விவிலியப் பகுதிகள்
(அ) 2 சாமு 7:1-17 (1 குறி 17:1-15)
(ஆ) 1 அரச 1:5-40
(இ) 2 குறி 29:25-29

3.1. (2 சாமு 7:1-17) 'தாவீதின் அரசுக்கு முடிவே இல்லை ' எனஅறிவித்தவர் நாத்தான்இப்பகுதி முக்கியமானதொன்றாகும்.

7:1-2 - சூழ்நிலை: எருசலேமில் தாவீதின் அரண்மனை வேலைமுடிவு பெற்றுவிட்டது. நாட்டிலே அமைதியும் நிலவுகிறது.
7:3 - இறைவாக்கு: தொடர்ந்து கோவில் வேலையில் தாவீதுமன்னரை ஈடுபடத் தூண்டுகிறார் நாத்தான்.
7:4-10 - மாற்று இறைவாக்கு: இரவில் கனவு-காட்சி கண்டு,கோவில் கட்டும் பணியைத் தாவீது தன் மகனிடமேவிட்டுவிட வேண்டும் எனக் கூறுகிறார் நாத்தான்.
7:11-17 - 'என் வீட்டை (கோவில்) நீ கட்ட வேண்டாம். நான் உன்வீட்டைக் (குலத்தை அழியாது) கட்டிக் காப்பேன்' எனவாக்களிக்கிறார் இறைவன்.

புதிய ஏற்பாட்டில் இறைத்தூதர் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னபோது, நாத்தானின் வார்த்தையையே எதிரொலிக்கிறார். தாவீதின் மகன்இயேசு தாவீது குல அரசை நிலை பெற வைப்பவர்.லூக் 1:32-33. 'அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார். உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையானதாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர்யாக்கோபின் குலத்தின்மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்குமுடிவே இராது'.நாத்தானின் இறைவாக்கு சுமார் 1000 வருடங்களுக்குப் பின் இயேசுவில்நிறைவு காண்கிறது.

3.2. 2 சாமு 12:1-25 தாவீதின் பாவத்தைக் கண்டித்து, எளியோருக்காகப்பரிந்து பேசுபவர் நாத்தான்நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே! அரசன் இரகசியமாகப் பாவம்செய்தாலும் அது இறைத் துரோகமே என்று கூறுகிறார் இறைவாக்கினர்.தாவீது மன்னன் உரியாவின் மனைவி பத்சேபாவுடன் பாவம்செய்ததையும் (2 சாமு 11:1-5), பாவம் செய்துவிட்டு அவளது கணவனைஇரகசியமாகப் போர்க்களத்தில் கொன்றதையும் (2 சாமு 11:6-25) வன்மையாகக்கண்டிக்கிறார் நாத்தான்.அப்போது நாத்தான் கூறிய 'ஏழையும், செல்வந்தனும்' என்ற உவமைஉலகப் புகழ்பெற்றதாகும். வலியோன் முன் எளியோனுக்காகப் பரிந்து பேசுபவர்இறைவாக்கினர். நாத்தான் தன் மேல் சுமத்தப்பட்ட பணியை நன்முறையில்செய்து முடிக்கிறார்.உண்மை இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டு நடந்தஅரசர்கள் வாழ்வு பெற்றனர். நாடும் நலமுற்றது. நாத்தான் எவ்வளவுஅச்சமின்றிப் பேசுகிறார் பாருங்கள்! தாவீதின் ஏற்றுக் கொள்ளும்மனப்பான்மையும் பாராட்டிற்குரியது.

3.3. 1 அரச 1:5-40- சாலமோன் மாமன்னன் ஆக வழி செய்தவர் நாத்தான்(2 குறி 29:25-29)மாமன்னன் தாவீதுக்குப் பின் ஒன்றிணைந்த முடியரசைஆளவேண்டியது யார்? பதவிக்குப் போட்டிகள் இருந்தன. பத்சேபா வழியாகப்பிறந்த சாலமோனே ஆட்சிக்கு வரவேண்டும் எனக் கருத்துச் சொன்னவரும்,அதைச் செயல்படுத்தியவரும் நாத்தான் இறைவாக்கினரே. அவர் கருத்துஇறைவாக்காக மலர்ந்தது.மன்னன் அவையில் நாத்தான் இறைவாக்கினருக்குதான் எத்தனைசெல்வாக்கு! மேலே குறிப்பிட்ட பகுதிகள் மூன்றையும் நிறுத்திக் கவனமாகவாசித்தால் அரசவை இறைவாக்கினர் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும்.

 

4. அகியா

அகியா என்ற பெயரை (ஆண்டவரின் சகோதரன்) பழைய ஏற்பாட்டில்9 பேர் கொண்டுள்ளனர். நாம் காணும் 'அகியா இறைவாக்கினர்' நாடு பிரியும்முன்னும், நாடு பிரிந்த பின்னும் வடநாட்டில் (இஸ்ரயேல் நாடு) சீலோ என்னும்திருத்தலத்தில் எரொபவாம் மன்னன் காலத்திலும் (கி.மு. 931-910)பணியாற்றியவர்.

இவரைப் பற்றிய விவிலியப் பகுதிகள்:
(அ) 1 அர 11:29-39
(ஆ) 1 அர 14:1-18

4.1. நாடு இரண்டாகப் பிரியும்:
சாலமோன் மன்னன் இறப்பதற்கு முன்பே எதிர்பார்த்த 'நாடுஇரண்டாகும்' என்ற செய்தியை இளைஞனும், அறிவாளியும், கரும வீரனுமானஎரொபவாம் என்ற புரட்சிப் போக்குள்ள அலுவலனுக்கு அறிவித்தார் அகியாஇறைவாக்கினர்.இறைவாக்கினர் உண்மைகளை வார்த்தைகளால் மட்டுமல்ல,அடையாளச் செயலாலும் தெளிவுபடுத்துதல் வழக்கமாகும்.

இதோ, அகியா இறைவாக்கினர் செயல்படுத்திய ஓர் அடையாளச்செயல்:
1 அர 11 : 29-31 : அக்காலத்தில் எரொபவாம் எருசலேமிலிருந்துவெளியே போகிறபோது புதுச் சால்வையைப் போர்த்தியிருந்த சீலோவைச்சார்ந்த அகியா என்ற இறைவாக்கினர் வழியிலேயே அவனைக் கண்டார்.இருவரும் வயல் வெளியில் தனித்திருக்கையில் அகியா தாம் போர்த்தியிருந்தபுதுச் சால்வையை எடுத்து அதைப் பன்னிரு துண்டுகளாகக் கிழித்து,எரொபவாமை நோக்கி "இவற்றில் பத்துத் துண்டுகளை உனக்கெனஎடுத்துக்கொள். ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உனக்குஇவ்வாறு கூறுகிறார் 'இதோ நான் சாலமோன் கையினின்று அரசைப் பறித்துபத்து குலங்களை உனக்கு அளிக்கப்போகிறேன்' என கூறினார்”.இறைவாக்கினர் அரசியலில் புகுந்து அரசியலில் திருப்பம் ஏற்படுத்துவதை இவண் காண்க! கி.மு. 931ஃ 922 இல் சாலமோன் மரணமடைந்ததும்,நாடு இரண்டாக வேண்டும் என்பது கடவுளின் திருவுளம். இறைவாக்கினர்அதை உறுதிப்படுத்திச் சென்றனர். (காண்க: செமாயா 1 அர 12:21-24).

4.2. 'எரொபவாம் குலம் அழியும்
'இந்த அலுவலன் எரொபவாம் வடநாட்டில் அரசனான போது கடவுள்கட்டளைப்படி வாழவேண்டும் என அகியா இறைவாக்கினர் கூறியிருந்தார்(1 அர 11 : 38).ஆனால் அவன் அப்படி வாழவில்லை. வடநாட்டில் பெத்தேல், தாண்என்ற இடங்களில் பொற்கன்று வழிபாட்டை நிறுவினான். வட நாட்டினர் தென்நாட்டில் எருசலேமுக்குச் சென்று ஆண்டவரை வழிபடாதவாறு தடை செய்தான்.இதைச் சீலோவில் குடியிருந்த அகியா இறைவாக்கினர் கண்டார்;கலங்கினார்; மனம் குமுறினார்.அரசன் எரொபவாம் தன் மகன் அபியா கடும் நோயுற்ற போது அகியாஇறைவாக்கினரிடம் தன் மனைவியை 'மாறு வேடத்தில்' அனுப்பிவைத்தான்.

1 அரச 14:5-10 அந்நேரத்தில் ஆண்டவர் அகியாவிடம், #8220;இதோ!எரொபவாமின் மனைவி நோயுற்றிருக்கிற தன் மகனைப் பற்றி உன்னிடம் கேட்கவருகிறாள். நான் கூறும் வண்ணம் நீ அவளிடம் பேச வேண்டும். அவள் மாறுவேடத்தில் வருகிறாள்” என்றார். அவ்வாறே அவள் வாயிலில் நுழைந்தவுடன்,அவளது காலடி ஓசையைக் கேட்ட அகியா கூறியது: #8220;எரொபவாமின்மனைவியே! உள்ளே வா! மாறுவேடத்தில் நீ வருவது ஏன்? துயரமானசெய்தியையே உனக்குச் சொல்ல வேண்டும் என்பது எனக்கு வந்த கட்டளை.நீ எரொபவாமிடம் போய், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறுகூறுகின்றார்; மக்களிடையே நான் என்னை உயர்த்தினேன். என் மக்களாகியஇஸ்ரயேலருக்கு உன்னைத் தலைவனாக்கினேன். தாவீதின் வீட்டினின்றுஅரசைப் பிடுங்கி, அதை உன் கையில் ஒப்படைத்தேன். ஆயினும் என் ஊழியன்தாவீதைப் போல் நீ நடந்து கொள்ளவில்லை. அவன் என் விதிமுறைகளைக்கைக்கொண்டு, நான் காட்டிய வழியில் தன் முழு இதயத்தோடு நடந்து, என்பார்வையில் ஏற்புடையவற்றை மட்டுமே செய்தான். நீயோ அவ்வாறுசெய்யவில்லை. அது மட்டுமின்றி, உனக்கு முன் ஆட்சியில் இருந்தஎல்லாவற்றையும் விட நீ மிகுதியான தீமைகளைச் செய்துள்ளாய். நீ போய்வேற்றுத் தெய்வங்களை, வார்ப்புச் சிலைகளை உனக்கென உருவாக்கிக்கொண்டு என்னை ஒதுக்கித் தள்ளினாய்; எனக்கு சினமூட்டினாய். ஆகையால்,எரொபவாம் வீட்டுக்கு அழிவு வரும். இஸ்ரயேலில் அடிமையாகவோ,குடிமகனாகவோ உள்ள எரொபவாமின் ஆண் மக்கள் அனைவரையும் அழித்து விடுவேன். குப்பையை எரித்து ஒன்றும் இல்லாமல் ஆக்குவது போல்,எரொபவாமின் வீட்டை அறவே அழித்தொழிப்பேன்.

அவ்வாறே, அரச மகன் அபியா இறந்தான். குலமும் முழுக்கஅழிந்தது. இந்த இறைவாக்கினரும் வட நாட்டின் அரசியலில் மிகுந்த ஈடுபாடுகொண்டிருந்தார் என்பது தெளிவு.

 

5. செமாயா

செமாயா (ஆண்டவர் கேட்டுக்கொண்டார்) என்ற பெயரில் இருஇறைவாக்கினர் உள்ளனர்.மன்னன் எரொபவாம் காலத்தில் (931-910) வடநாட்டில் வாழ்ந்து அகியாஇறைவாக்கினருடன் பணியாற்றியவர் ஒருவர். இன்னொருவர் தென் நாடுஅழியும் காலத்தில் இறைவாக்கினர் எரேமியா காலத்தில் தென் நாட்டில் போலிஇறைவாக்குப் பணியாற்றியவர் (எரே 29:24-32).

மத அடிப்படையில் சீரழிந்துபோன வடநாட்டில் மன்னன் எரொபவாம்காலத்தில் வாழ்ந்த இறைவாக்கினர் செமாயா என்பவரைப் பற்றி இவண்காண்போம்.

இவரைப் பற்றிய விவிலியப் பகுதிகள்:
அ. 1 அர 12:22-24
ஆ. 2 குறி 12:5-8
இ. 2 குறி 12:15

அரசியல் சூழ்நிலை:
கி.மு. 931 - 922 இல் மாமன்னன் சாலமோன்தன் முன்னோருடன் துயில் கொண்டு தாவீதின் நகரில் அடக்கம்செய்யப்பட்டார். அரசியல் குழப்பம் நிறைந்திருந்த நாடு அப்போது இரண்டாகப்பிரிந்தது எனக் கண்டோம். தென் நாட்டை ஆட்சி செய்தவர் சாலமோன் மகன்ரெகபெயாம். வட பகுதியைக் கைப்பற்றி ஆட்சி செய்தவன் எரொபவாம்.

5.1. போர் வேண்டாம்
இரு குலங்கள் (யூதா, பென்யமின்) தென் நாடாக உருவெடுத்தன.10 குலங்கள் வட நாட்டைச் சார்ந்திருந்தன.உருவத்தில் சிறுத்த தென் நாடு வட நாட்டைப் போர் வழியாய்க் கைப்பற்றவிழைந்தது இயல்பே. அப்போது இறைவாக்கினராக வந்து போரைத் தடுத்துபிரிந்த நாடு, பிரிந்த நிலையில் நிலைக்கச் செய்கிறார் செமாயா. இறைவாக்கினர் பலர் அரசியலில் ஈடுபாடு கொண்டவர்களே!1 அர 12:22-24 " இறையடியார் செமாயாவுக்கு கடவுள் அருளிய வாக்கு:சாலமோனின் மகனும் யூதாவின் அரசனுமான ரெகபெயாமிடமும் யூதா,பென்யமின் வீட்டார் அனைவரிடமும் ஏனைய மக்களிடமும் போய்ச் சொல்:நீங்கள் படையெடுத்து உங்கள் சகோதரரான இஸ்ரயேலரோடு போரிடச்செல்ல வேண்டாம். எல்லாரும் அவரவர் வீடு திரும்புங்கள். இது நிகழ்வதுஎன்னாலேயே என்று ஆண்டவர் உரைக்கிறார்”. ஆண்டவரின் வாக்கைக்கேட்ட அவர்கள் அவரது சொற்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.

5.2. பாவத்திற்குத் தண்டனை
சீசாக் என்னும் எகிப்திய மன்னன் (பார்வோன்) தென் நாட்டைக்கொள்ளையிட்டு கோவிலிலும், அரண்மனையிலும் இருந்த செல்வங்களை வாரிச்சென்றான். தென் நாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியைக் கடவுளின் தற்காலிகத்தண்டனையாக அறிவிக்கிறார் வட நாட்டைச் சார்ந்த செமாயா.

2 குறி 12:5-8 : இறைவாக்கினர் செமாயா சீசாக் அரசனுக்குப்பயந்தோடிய ரெகபெயாமிடமும் எருசலேமில் கூடியிருந்த மூப்பர்களிடமும் வந்துஅவர்களை நோக்கி 'ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என்னைபுறக்கணித்ததால் சீசாக்கின் கையில் பிடிபடும்படி நானும் உங்களைப்புறக்கணித்துவிட்டேன்” என்றார். அதை கேட்ட இஸ்ரயேல் தலைவர்களும்அரசனும் தங்களையே தாழ்த்தி, 'ஆண்டவர் நீதியுள்ளவர்' என்றனர். அவர்கள்தங்களையேத் தாழ்த்திக் கொண்டதைக் கண்டு ஆண்டவர் மீண்டும்செமாயாவிடம், "அவர்கள் தங்களையே தாழ்த்திக் கொண்டதால் அவர்களைநான் அழிக்க மாட்டேன். விரைவில் அவர்களுக்கு விடுதலை அளிப்பேன்; என்கடும் சினம் சீசாக்கின் வழியாக எருசலேம் மீது விழாது. ஆயினும் எனக்குஊழியம் செய்வதற்கும் மற்ற நாடுகளின் அரசர்களாக ஊழியம்செய்வதற்குமுள்ள வேறுபாட்டை உணரும் வண்ணம், அவர்கள் சீசாக்கின்அடிமைகளாக இருப்பார்கள்” என்றார்.

5.3.2 குறி 12:15: தென் நாட்டு மன்னன் ரெகபெயாமின் அரசவையில் வரலாற்று குறிப்புஎழுதிய இருவருள் ஒருவர் இறைவாக்கினர் செமாயா எனச் சாட்சியம்பகர்கிறார் குறிப்பேட்டு ஆசிரியர். எனவே இவரும் அரசவை இறைவாக்கினரே!

 

6. இறையடியாரும் வயது முதிர்ந்த ஓர்இறைவாக்கினர்

ஊர் பேர் அற்ற இந்த இறையடியார் தென்னாட்டைச் (யூதாவை)சார்ந்தவர்; வட நாட்டு முதல் அரசர் எரொபவாம் காலத்தில் (கி.மு. 931-911)ஒருமுறை வட நாட்டில், பெத்தேல் சென்று பணியாற்றியதாக அறிகிறோம்.எரொபவாம் மன்னர் பெத்தேல் கோவிலில் தூபம் காட்ட பீடத்தண்டையில் நிற்கையில் 'பலிபீடம் இடியும்' என்று அறிவித்தார். இதனால்சினமுற்று அவரைப் பிடிக்க அரசன் கை நீட்டியபோது அவனது கைமரத்துப்போயிற்று. மேலும் 'இறையடியார்' (கடவுளின் மனிதர்) அறிவித்ததுபோல்,பலிபீடமும் இழ்?தத hம். இறுதியில் அரசனது கை விளங்க வைத்தார் இவர்.

இவரைப் பற்றிய விவிலியப் பகுதிகள்:
1 அரச 13:1-10

யூதாவிலிருந்து வட நாடு வந்திருந்த 'இறையடியார்' ஆண்டவர்அறிவித்தபடி அரசனால் அளிக்கப்பட்ட உணவை உண்ணாமலும் குடியாமலும்வேறு வழியாய்த் திரும்பிச் சென்றார். அப்போது வட நாட்டில் பெத்தேலில்வாழ்ந்த 'வயது முதிர்ந்த ஓர் இறைவாக்கினர்' அவரைத் தம்மிடத்திற்குஅழைக்க, கடவுள் வாக்கை மீண்டும் நினைத்து அவர் போகவில்லை.அப்போது பெத்தேலின் 'இறைவாக்கினர்' அவரைப் பார்த்து. 'உம்மைப்போல் நானும் இறைவாக்கினர்தான்; உணவருந்தி தண்ணீர் குடிக்க நீ அவனைஉன் வீட்டிற்க்கு அழைத்துக் கொண்டு போ' என்று ஆண்டவர் ஒரு வானதூதர்வாயிலாக எனக்குச் சொன்னார்' என்றார் ( 1 அர 13:18).'இறையடியாருக்கு' தனக்குக் கிடைத்த கடவுளுடைய வார்த்தையில்அவநம்பிக்கை ஏற்பட்டதோ? கடவுள் தன்னிடம் அறிவித்ததை மறந்துவிட்டு'ஓர் (போலி) இறைவாக்கினர்' தெரிவித்த ஏமாற்று மொழியை நம்பிவிட்டார்;அவரோடு சென்றார்; உண்டார்; அதன் பலன் யாதெனில் பின்னர் அவர்சிங்கத்தால் அடிக்கப்பட்டுச் செத்தார். நல்ல இறைவாக்கினரும் போலிஇறைவாக்கினரால் ஏமாற்றப்பட முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

 

7. இத்தோ

சவுல், தாவீது, சாலமோன் அரசர்களின் 'ஒருங்கிணைந்த முடியரசு'முடிவு பெற்றபோது நாடு 'வட நாடு' (இஸ்ரயேல் நாடு) என்றும் 'தென்நாடு'(யூதா) என்றும் பிரிந்ததை (கி.மு. 931ஃ921) மீண்டும் நினைவிற்கொள்க.வட நாடு ஆண்டவரின் திருச்சட்டத்தை மீறி நடந்தது, பொற்கன்றுவழிபாட்டை ஆதரித்தது. தென் நாடு ஆண்டவரை எருசலேம் தேவாலயத்தில்போற்றியது. தென் நாட்டின் முதல் அரசன் ரெகபெயாம் அரசவையில்வரலாற்றுக் குறிப்பு எழுதிய ஒருவர் 'இத்தோ' என்பவர்.

இவரைப்பற்றிய விவிலியப் பகுதிகள்:
அ. 2 குறி 12:15 ஆ.
2 குறி 13:22

குறிப்பேட்டு ஆசிரியர் இறைவாக்கினர் இத்தோவைத் திருக்காட்சியாளர் எனக் குறிப்பிடுகிறார். அவரைப்பற்றிய ஏனையச் செய்திகள் நமக்குவந்து சேரவில்லை. இத்தோவின் நூல்களைத் தாம் பார்த்ததாகவும், அதனைப்பயன்படுத்தியதாகவும், அதன் உதவியோடு யூதாவின் முதல் அரசன்ரெகபெயாம் பற்றி அரசவைக் குறிப்பு எழுதியதாகவும் குறிப்பேட்டு ஆசிரியர்கூறுகிறார்.தென் நாட்டின் இரண்டாவது அரசனான அபியாமைப் பற்றியும் சுருக்கிஎழுத இத்தோவின் ஆய்வேடு பயன்பட்டது (2 குறி 13:22) எனக் குறிப்பேட்டுஆசிரியர் சாட்சியம் பகர்கிறார்.இத்தோ எழுதிய ஏடு நம் கைக்கு வரவில்லை. எனவே, அவரும் நூல்பெறாத இறைவாக்கினர் வரிசையில் இடம்பெறுவது இயல்பே!

 

8. அனானி

'ஆண்டவர் கருணையுள்ளவர்' என்பதே அனானி என்ற பெயரின்உட்பொருளாகும். இவரைப்பற்றிய விவிலியக் குறிப்பு குறிப்பேடு நூலில் மட்டுமேஉள்ளது (2 குறி 16:1-10).

இவர் திருக்காட்சியாளர் என அழைக்கப்படுகிறார்(2 குறி 16:7).இவரும் தென் நாட்டவர். அங்கு ஆட்சி செய்த மூன்றாவது அரசரானஆசாவின் (கி.மு. 911-870) காலத்தவர். தென் நாட்டு ஆசாவை எதிர்த்துவந்தான் வடநாட்டு மன்னன் பாசா. போரில் வெற்றி கிடைக்காது எனஎண்ணிய தென் நாட்டு அரசன் சீரிய மன்னனுக்கு பொன்னும் பொருளும்அனுப்பி அவனது உதவியைப் பெற்றுக் கொண்டான். எனவே இந்தப்போரிலிருந்து தப்பினான்.எனினும் யாவே கடவுளில் நம்பிக்கை வைக்காமல் வேற்று நாட்டுமன்னரில் நம்பிக்கை வைத்ததால் வேறு பல போர்கள் எழும் எனஅச்சுறுத்துகிறார் இறைவாக்கினர் அனானி.2 குறி 16:9 : #8220;உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்றுபார்க்கின்றன. அவர் தம்மை முழு மனத்துடன் நம்பும் அனைவர்க்கும் ஆற்றல்அளிக்கிறார். நீயோ இதன் மட்டில் மதியீனமாய் நடந்து கொண்டாய்; எனவேஇன்று முதல் நீ போர்களைச் சந்திக்க வேண்டும்” என்றார்.

 

9. அசரியா

அசரியா (ஆண்டவர் உதவுகிறார்) என்ற பெயர் கொண்டவர்கள்பழைய ஏற்பாட்டில் 22 பேர் உள்ளனர்.இவரைப் பற்றிய விவிலியப் பகுதி : 2 குறி 15:1-7 ஆகும்.

இவர் ஒதேதின் மகன்; ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர் எனத்திருநூல் கூறுகின்றது. இவர் தென் நாட்டில் (யூதா) ஆசா அரசன் காலத்தில்(கி.மு. 911-870) இறைவாக்குப் பணியாற்றியவர். இவரும் அரசவைஇறைவாக்கினர் ஆவார். ஆசா அரசனது காலத்தில் எருசலேமிலும்,கிராமப்பகுதியிலும் மதச் சீர்திருத்தம் தேவைப்பட்டது. நாட்டுப்புறங்களில்சிலைகள் அகற்றப்பட வேண்டும். எருசலேம் கோவிலில் பலிபீடம் சீர்படுத்தப்படவேண்டும்; உடன்படிக்கை புதுப்பிக்கப்பட வேண்டும். விழா கொண்டாடப்படவேண்டும் என்ற சூழல் நிலவின.இவற்றில் ஆசா மன்னன் புதுத் தெம்புடன் ஈடுபட அவனுக்குத்தூண்டுதல் தந்தவர் அசரியா என்ற இறைவாக்கினர். இவர் ஆவியால்ஆட்கொள்ளப்பட்டு சொன்ன இறைவாக்காவது:2 குறி 15:2-4 : 'ஆசாவே, யூதா, பென்யமின் எல்லா மக்களே!கேளுங்கள். நீங்கள் ஆண்டவரை நாடினால், அவரைக் கண்டடைவீர்கள்;

நீங்கள்அவரைப் புறக்கணித்தால், அவரால் நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள்.இஸ்ரயேல் நெடுங்காலமாக உண்மைக் கடவுளைப் போதிக்கும் குருக்களையும்திருச்சட்டத்தையும் கொண்டிருக்க வில்லை. எனினும், இஸ்ரயேலர் தங்கள்துன்பத்தில் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பினர்; அவ்வாறு அவர்கள்தேடியபொழுது அவரைக் கண்டு கொண்டனர்'அசரியா என்ற இறைவாக்கினர் சொல் நற்பலன் தந்தது. நாட்டில்சமயச் சீர்திருத்தம் ஏற்பட்டது. இறைவாக்கினர் நாட்டின் காவலர்கள்அன்றோ? அரசன் அவர்களை மதித்து நடந்தால், நாட்டில் நல்லதே நடக்கும்,நல்லொழுக்கம் சிறக்கும், வழிபாடும் பொலிவுறும் என்பதற்கு இது ஒரு சான்று.

 

10. ஏகூ

ஏகூ ('அவரே யாவே', 'கடவுளே ஆண்டவர்') என்ற பெயர்கொண்டவர்கள் ஐவர் பழைய ஏற்பாட்டில் உள்ளனர். அதில் ஒருவர் அரசர்;ஒருவர் இறைவாக்கினர். இந்த இறைவாக்கினர் வாழ்ந்த நாடு வட நாடாகியஇஸ்ரயேல் நாடு ஆகும். இவர் வாழ்ந்த காலம் மன்னன் பாசாவின் காலம் (கி.மு.909-886).

இவரைப் பற்றிய விவிலியப் பகுதிகள்
(அ) 1 அரச 16:1-4, 7, 12
(ஆ) 2 குறி 19:2-3
(இ) 2 குறி 20:34

இவர் அனானீயின் என்பவரின் மகன்.இவரது இளமை வாழ்க்கை பற்றி நமக்குஅதிகம் தெரியாது.

10.1. இவர் வடநாட்டின் பாசாஅரசனுக்கு எதிராக அச்சுறுத்தும் இறைவாக்கு அளித்தவர்.1 அர 16:1-4 : பாசாவுக்கு எதிராகஅனாருநுயின் மகனான ஏகூவுக்குஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது;"தூசிக்கு நிகரான உன்னை நான்உயர்த்தி, என் மக்களாகிய இஸ்ரயேலுக்குத் தலைவனாக ஏற்படுத்தினேன்.நீயோ எரொபவாமின் வழிநடந்து, என்மக்களாகிய இஸ்ரயேலர் பாவம் செய்யக்காரணமாய் இருந்து, அவர்களுடைய பாவங்களால் எனக்குச் சினமூட்டினாய்.எனவே, இதோ! நான் பாசாவையும் அவன் வீட்டையும் முற்றிலும்அழிக்கப்போகிறேன்”.இவ்வாறு உண்மையைச் சொன்னதால் இவருக்குக் கிடைத்த பரிசுமரணம் (1 அரச 16:7). அரசன் சினம் கொண்டு அனாருநுயின் மகன் ஏகூஎன்ற இறைவாக்கினரைக் கொலை செய்தான்.ஆபத்து இருந்தும் உண்மையைச் சொல்பவர் உண்மை இறைவாக்கினர்அல்லவா? ஏகூ இறைவாக்கினரும் உண்மையைச் சொல்லி அதற்காகஉயிரைக் கொடுத்தார். இறைவாக்கினர் சொல்வது நடக்கும். ஏகூசொன்னபடியே யாவும் நடந்தன.பாசாவிடம் அறிவித்த அழிவுச் செய்தி அம்மன்னனின் மகன் ஏலாஎன்பவனின் காலத்தில் நிறைவேறியது. மன்னன் ஏலாவின் படைத்தலைவன்சாம்பரி அவரைக் குடிபோதையில் இருக்கும் போது கொன்றதால் 2 வருடத்தில்அவன் ஆட்சி முற்றுப் பெற்றது. மேலும் பாசா ஏலா இவர்களின் குடும்பமும்அழிக்கப்பட்டது. வாசிக்க: 1 அர 16:12-13.

10.2. குறிப்பேட்டு ஆசிரியர் ஏகூ இறைவாக்கினரை யூதா நாட்டுயோசபாத்து அரசனது வாழ்க்கையோடும் இணைக்கிறார் (2 குறி 19:2). வடநாட்டு ஆகாபு மன்னனும் தென் நாட்டு யோசபாத்தும் நட்புக் கொண்டாடிகலாத் நாட்டு ராமோத்தின்மேல் படையெடுத்துச் சென்றபோது ஆகாபு கொலைசெய்யப்படுகின்றான். யோசபாத்து தப்பி எருசலேமிலுள்ள தன் வீட்டுக்குச்சமாதானமாய்த் திரும்பி வந்த போது அனாருநுயின் மகன் ஏகூ என்றதிருக்காட்சியாளர் அவனுக்கு எதிரே வந்து :'நீர் தீயவனுக்குத் துணை நிற்கலாமா? ஆண்டவரை வெறுப்பவனோடுநட்புக் கொள்ளலாமா? அதனால் ஆண்டவரின் சினம் உம்மேல் விழ இருந்தது.ஆயினும், நீர் சில நற்செயல்கள் புரிந்துள்ளீர்; அதாவது அசேராக் கம்பங்களைநாட்டிலிருந்து எரித்து அகற்றிருநுர்; கடவுளை நாடுவதில் உம் இதயம்நிலையாயிருந்தது” என்று கூறினார் ( 2 குறி 19:1-3).10.3. மேலும் ஏகூவின் நூல்களை (இஸ்ரயேல் அரசர் வரலாறு) பின்பற்றி, அதனைச் சுருக்கி பாசா மன்னனின் வாழ்வைத் தாம் எழுதியதாகக் குறிப்பேட்டு ஆசிரியர் குறிப்பிடுகிறார் (2 குறி 20:34). ஆயினும் ஏகூ இறைவாக்கினர் ஏடு நம் கைக்கு வந்து சேரவில்லை. எனவே ஏகூ நூல் பெறாதஇறைவாக்கினர் வரிசையில் இடம் பெறுகிறார். ஏகூ அரசவை இறைவாக்கினர்;உண்மை இறைவாக்கினர்; அவர் வரலாற்றை திசை திருப்பியவர் என்பதுதெளிவு.

 

11. யாகசியேல்

யாகசியேல் இறைவாக்கினர் தென் நாட்டவர். லேவி குலத்தவர். இவர்தந்தை சக்கரியர் யோசபாத்து அரசன் காலத்தில் (கி.மு. 870 -848) தென்நாட்டில் பணியாற்றியவர். ஆண்டவரின் ஆவியைப் பெற்றவர்.

இவரைப் பற்றிய விவிலியப் பகுதி :
2 குறி 20:14-17மோவாபியர் படையெடுத்து வந்த நேரம், அரசன் யோசபாத்து யூதாகுலத்தார் அனைவருடன் சேர்ந்து ஆண்டவரின் ஆலயத்தில் இறை வேண்டல்செய்கிறார். அந்நேரத்தில் ஆண்டவரின் ஆவி யாகசியேல் மேல் இறங்க, அவர்போரிடத் தூண்டி இறைவாக்குரைக்கிறார்.

2 குறி 20:15-17 "யூதா, எருசலேம் வாழ் மக்களே! அரசே யோசபாத்து!கவனமாய்க் கேளுங்கள், ஆண்டவர் உங்களுக்குக் கூறுவது இதுவே; இப்பெரும்படையினரைக் கண்டு நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; நிலை குலையவும்வேண்டாம். இப்போர் உங்களுடையதல்ல, கடவுளுடையது. நீங்கள்அவர்களுக்கு எதிராக நாளை படையெடுத்துச் செல்லுங்கள். அவர்கள் சீஸ்மலைச்சரிவின் வழியாக வருவார்கள்; நீங்கள் போய் எருசவேல் பாலைநிலத்திற்குஎதிரேயுள்ள பள்ளத்தாக்கின் எல்லையில் அவர்களைச் சந்திப்பீர்கள். அங்கேநீங்கள் போரிட வேண்டியதில்லை; அணிவகுத்து நின்றாலே போதும். யூதாவே!எருசலேமே! உங்கள் சார்பாக ஆண்டவர் கொள்ளும் வெற்றியைக் காண்பீர்கள்!எனவே, அஞ்சாமலும் நிலைகுலையாமலும் இருங்கள். நாளை அவர்களைநோக்கிச் செல்லுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார்” என்றார்.

 

12. எலியேசர்

எலியேசர் என்பதற்கு ' இறைவனே எனக்குதவி' என்று பொருள்.பழைய ஏற்பாட்டில் ஒன்பது பேருக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.இவர்களுள் முக்கியமான ஒருவர் இறைவாக்கினரான எலியேசர் ஆவார்.

இவரைப் பற்றிய விவிலியப் பகுதி: 2 குறி 20:35-37

இவரும் யோசபாத்து என்னும் தென்னாட்டு அரசன் காலத்தில் (கி.மு.870-848) இறைவாக்குப் பணியாற்றியவர். மாரேசா ஊரினர்; தோதவாஎனபவரின் மகன்.தென்னாட்டு அரசன் யோசபாத்து வடநாட்டு தீய அரசன் அகசியாஎன்பவனுடன் உடன்படிக்கை செய்ததும், அவனோடு சேர்ந்து கப்பல்கள்கட்டியதும் தவறு என எலியேசர் இறைவாக்கினர் உணர்த்தினார்.2 குறி 20:37 : மாரேசா ஊரானாகிய தோதவாவின் மகன் எலியேசர்யோசபாத்தை நோக்கி, 'நீர் அகசியாவோடு சேர்ந்து கொண்டமையால்,ஆண்டவர் உம் திட்டங்களை அழித்துவிடுவார்” என்று இறைவாக்குஉரைத்தார்.எலியேசர் கூறியபடியே கூட்டுச் சேர்ந்து அரசர்கள் கப்பல் கட்டியதுபயனற்றுப்போயிற்று. பயணத்தில் கப்பல்கள் உடைந்து போயின!

 

13. மீக்காயா

மீக்காயா (ஆண்டவர்க்கு நிகர் யார்?) வட நாடாகிய இஸ்ரயேல்நாட்டைச் சார்ந்தவர். இம்லா இவரது தந்தை ஆவார்.இவர் வாழ்ந்தது ஆகாபு மன்னனின் காலம் (கி.மு. 874-853). இவர்அரசவையோடு தொடர்புகொண்டவர்.

இவரைப் பற்றிய விவிலியப் பகுதிகள்:
(அ) 1 அர 22:8-28
(ஆ) 2 குறி 18:7-27

13.1. வடநாட்டு ஆகாபு அரசனும் தென்நாட்டு யோசபாத்தும் சேர்ந்துஇராமோத்தை எதிர்த்துச் சென்ற அரமேயப் போரில் ஏற்படவிருக்கும் ஆகாபின்தோல்வி, ஆகாபின் மரணம் பற்றி முன்னறிவித்தவர் இவரே. இவர் 'தீமையைஎடுத்துக் கூறும் இறைவாக்கினர் ' என அரசனால் அறிமுகம் செய்யப்படுகிறார்.தோல்வி, அழிவு போன்றவற்றை அறிவிப்பது அரசருடைய காதுகளுக்குஇனிமையானதல்ல. ஆனால் நல்ல இறைவாக்கினர் தோல்வியை, அழிவைமறைக்காமல் துணிந்து சொல்ல வேண்டுமே! இந்தத் துணிவு நல்லஇறைவாக்குக்கு உரைகல் என்கிறார் எரேமியா (28:6-9).அரசவை இறைவாக்கினர் 400 பேர் தப்பாக வெற்றி என்று அறிவித்துஅரசனுக்குத் தூபமிடுவதை 'பொய் ஆவியின் வேலை' என்று விளக்குகிறார்மீக்காயர் போலி இறைவாக்கினரை நன்றாகக் குத்திப் பேசுகிறார்!

13.2. உண்மை சொன்ன மீக்காயாவைப் போலி இறைவாக்கினர்தலைவன் செதேக்கியா கன்னத்தில் அறைந்தான்: ஆகாபு மன்னன் அவரைச்சிறைப்படுத்தினான். தான் வெற்றியோடு திரும்பி வரும் வரை சிறையில் அவரைஅடைக்க உத்தரவிடுகிறான். ஆனால் அரசன் உயிரோடு திரும்பி வரவில்லை!பின்னர் இந்த இறைவாக்கினருக்கு என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை.அரசவையில் 400 பேர் சொன்னாலும் அது இறைவனின் செய்திஇல்லையெனில் அது பொய்த்துவிடும். அரசவையில் ஒருவர் சொன்னாலும்,அது இறைவாக்கு எனில், அது நடந்து விடும்.

 

14. எலியா

எலியா இறைவாக்கினர் திஸ்பே ஊரினர். அவரது இளமைபற்றிநாமறியோம். எலியா என்றால் 'என் கடவுள் யாவே' என்று பொருள். கடவுள்ஒருவரே; 'அந்த ஒருவர் யாவே' என எலியா கார்மேல் மலையில் போட்டியிட்டுநிரூயஅp;பித்துக் காட்டவில்லையா? உண்மை இறைவாக்கினர் ஒரே இறைவனைச்சுட்டிக்காட்டுபவர்.

 

வட நாடாகிய இஸ்ரயேலில், ஆகாபு (கி.மு. 874-853) அகசியா (கி.மு.853-852) என்ற தெய்வப் பற்றற்ற, நீதி நேர்மையற்ற அரசர்கள் காலத்தில்பணியாற்றியவர் எலியா. இதனால்தான் எலியா ஒரு தெய்வக் கொள்கைக்காகப்போராடியதுபோலவே, நீதிக்காகப் போராடி நாபோத் என்ற எளியோனுக்காகப்பரிந்து பேசவேண்டியிருந்தது. 'நீதியற்ற இந்த நாட்டிலே மழை பெய்யாது' என்றதிடீர் அறிவிப்புடன் எலியாவின் வரலாறு தொடங்குகின்றது. இவரது காலம்பாகாலின் இறைவாக்கினர்கள் மலிந்திருந்த காலம். அரசர் ஆகாபுவின்மனைவி ஈசபெல் என்பவள் ஆதரவில் வாழ்ந்தவர்கள் இவர்கள். இதனால்உண்மை இறைவாக்கினர் எலியாவுக்கு மிகுந்த தொல்லை ஏற்பட்டது.எலியா, 'இறைவாக்கினர் சங்கத்தோடு' தொடர்பு கொண்டவர். எனினும்இறைவனிடமிருந்து சிறப்பு அழைப்பு பெற்றவர்.அன்னிய தெய்வ பக்தியை அழிக்க ஒரே வழி ஆகாபு குலம்அழிவதுதான் எனப் படிப்படியாக உணர்ந்தவர் இவர்.இவர் வாழ்க்கைப் பகுதியில் ஆறு நிகழ்ச்சிக் கோர்வைகள் உள்ளன.இந்த ஆறு சுற்று வட்டங்களில் ஆறு முறை எலியா பணிக்கெனப் புறப்படுவதும்பணியை முடிப்பதும் குறிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளுக்கிடையில் எட்டுப்புதுமைகளும் செருகப்பட்டுள்ளதை காண்க.

ஆறு நிகழ்ச்சி வட்டங்களும் எட்டுப் புதுமைகளும்
(1 அர 17-19; 2 அரச 1:1-2:18).

நிகழ்ச்சி வட்டம் - 1: 1அர 17:1 நாட்டில் 3 வருடம் மழை பெய்யாதுஎன்பது முன்னறிவிக்கப்படுகிறது.
காகம் எலியாவுக்கு உணவூட்டியது 1 அர 17:2-6 (புதுமை எண் 1).
சீதோன் நாட்டு சாரிபாத்து பட்டினத்திலுள்ள கைப்பெண்ணுக்கு
அற்புதமாக உணவளித்தல் 1 அர 17:9-16 (புதுமை எண்2).
கைம்பெண் மகனை உயிர்ப்பித்தல் 1 அர 17:17-24 (புதுமை எண்3).
மறைந்து வாழும் மர்மம் 1 அர 18:2-25 (புதுமை எண் 4).
பின்னர் மூன்று வருடம் சென்ற பின் அரசன் ஆகாபைச் சந்திக்கிறார்எலியா 1 அர 18:16-19

நிகழ்ச்சி வட்டம் - 2: 1 அர 18:20-40 கார்மேல் மலையில் போட்டி.
யாவே மட்டுமே உண்மை இறைவன் என நிரூயஅp;பித்துக் காட்டுதல்.

நிகழ்ச்சி வட்டம் - 3: எலியா செய்த பயணம்; 1 அர 19:1-14 ஈசபெல் அரசிக்குமிகவும் பயந்து எலியா ஓரேபு மலைக்கு ஓடினார் .
இது ஒரு புனிதயாத்திரை.வழியில் அற்புதமாக உணவு 1 அர 19:4-8 (புதுமை எண் 5).

இறைவனின் காட்சி 1 அர 19:9-13 (புதுமை எண் 6).
இது மோசே இறைவனைக் கண்ட காட்சியை ஒத்திருத்தலைக் காண்கிறோம்.முன்னர் இஸ்ரயேல் மக்கள் செய்த பயணத்தை இப்போது எலியாசெய்து காட்டுகிறார்.தெய்வ மலையான ஒரேபுமலை, சீனாய்மலைவரை சென்றார்,இஸ்ரயேலின் 40 ஆண்டுகளை நினைத்துக்கொண்டே 40 நாட்கள்நடந்தார். இறைவனைச் சிறப்பாகக் கண்டவர்கள் மோசேவும் எலியாவும்ஆவர். இஸ்ரயேல் மன்னா உண்டு வழி நடந்தது போல, எலியா உணவுஉண்டு வழிநடந்தார்.இஸ்ரயேலர் இறைவனைக் கண்டது இடிமுழக்கம் நடுவே; எலியாஇறைவனை அனுபவித்தது மெல்லிய தென்றலிலே!

நிகழ்ச்சி வட்டம் - 4: 1 அர 19:19-21 எலிசா மேல் தம் போர்வையை போர்த்திஅவரை இறைவாக்கினராக அழைத்தல்.

நிகழ்ச்சி வட்டம் - 5: 1 அர 21:1-29 நாபோத் என்பவனைஆகாபு அரசன் கொன்று அவனது தோட்டத்தைக்கவர்ந்ததால் அந்த அநீதியை முன்னிட்டு ஆகாபு அரச மரபுஅழியும் என முன்னறிவித்தல் ( 2 அர 10:11).நிகழ்ச்சி வட்டம் - 6: 2 அர 1:1-27 ஆகாபின் மகன் அகசியாஅரசன் தன் வாழ்வு, மரணம்பற்றி கடவுளிடம் விசாரிக்காமல்பாகால் செபூபு என்னும் தெய்வத்திடம் விசாரித்ததால் அவன்சாக வேண்டும்.50 பேர் அடங்கிய இரண்டு குழுவினர்மேல் விண்ணிலிருந்துஅற்புதமாக நெருப்பு விழுந்து அவர்களை அழித்தது 2 அர1:5-18.(புதுமை எண் 7).

பெத்தல். . . எரிக்கோ. . . வழி சென்ற எலியா யோர்தானை இரண்டாகப்பிளந்து கடந்து செல்லல். எலியாவும் எலிசாவும் நிற்கும்போது அக்கினிக்குதிரைகள் பூட்டிய ரதம் எலியாவை மேலே எடுத்துக் கொண்டது. எலியாவின்மேலாடை விழ அதை எலிசா எடுத்துக்கொண்டார் (2 அர 2:1-18; மத் 2:58;சீராக் 48:9). (புதுமை எண் 8).

 

15. எலிசா

எலியா இறைவாக்கினரோடு சேர்ந்தும் அவருக்குப் பின்னும் வடநாட்டில்பணிசெய்தவர் எலிசா. இவரது பணி ஐந்து அரசர்களின் காலத்திற்குவிரிந்திருந்தது.

மன்னன் அகசியா காலம் கி.மு. 853-852
மன்னன் யோராம் காலம் கி.மு. 852-841
மன்னன் ஏகூ காலம் கி.மு. 841-814
மன்னன் யோவகாசு காலம் கி.மு. 814-798
மன்னன் யோவாசு காலம் கி.மு. 798-783

அகசியா, யோராம் அரசர்களின் காலத்தில் எலியா இறைவாக்கினருடன் எலிசா கொண்டிருந்த தொடர்பை ஏற்கெனவே கண்டோம்.

சான்றாக,1 அர 19:19-21 எலிசா இறைவாக்கினராக அழைக்கப்படல்;
2 அர 2:1-27 எலியாவின் ஆவி எலிசாவில் தங்குதல்.

எலிசாவின் வாழ்க்கை வட்டம்
(2 அர 2:19-8:15)2:19-22 : உவர்ப்பு தண்ணீரைக் குழ்?ராக்குதல்.
2:23-25 : கேலிபண்ணின சிறுவர்கள் கரடிக்குப் பலியாதல்.
3:1-27 : மோவாபை எதிர்த்துச் செல்லுமுன் யூதா, இஸ்ரயேல்அரசர்கள் இறைவாக்கினரை விசாரித்தல். யாழ்இசை கேட்டு இறைவல்லமை பெற்று எலிசா இறைவாக்குரைத்தல்.
4:1-7 : இறைவாக்கினரின் மனைவி பிழைப்புக்காகஎண்ணெய் பலுகச் செய்தல்.
4:8-17 : சூனேம் நகர் பெண்ணுக்குக் குழந்தை வரம் தரல்.
4:18-37 : சூனேம் நகர் பெண்ணின் மகனுக்கு உயிர்கொடுத்தல்.
4:38-41 : சாப்பாட்டில் விஷம் அகற்றும் புதுமை.
4:42-44 : அப்பம் பலுகச் செய்யும் புதுமை.
5:1-19 : சீரியா நாட்டு நாமானின் தொழுநோய் குணமாதல்.
5:20-27 : எலிசாவின் ஊழியன் நாமானிடம் ஏமாற்றித்திருடியதால் அவ்வூழியனைத் தொழுநோய்தொற்றிக் கொள்ளுதல்.
6:1-7 : கோடரியை யோர்தான் நீரில் மிதக்கச் செய்தல்.
6:8-33 : எலிசா அளிக்கும் போர் ஆலோசனைகள்அரமேயரைப் (சிரியாக்) போரில் ஏமாற்றுதல்.
8: 1-15 : சூனேம் பெண் திரும்பி வருதல்; அசாவேல் தமஸ்குஅரசனாவதை முன் அறிவித்தல்.

மேலும் ஒரு சில நிகழ்ச்சிகள்
9:1-13 - தளபதி ஏகூ புரட்சி செய்து ஆகாபு மன்னன்குலத்தை அழித்து, வட நாட்டில் புதிய ஆட்சி அமைக்கத்தூண்டுதல் தரல். ஓர் இறைவாக்கினரை அனுப்பிஏகூவை திருப்பொழிவு செய்தல்.
13:14-19 - எலிசாவின் மரணம்.
13:20-21 - எலிசா கல்லறையின்மேல் போடப்பட்ட பிணம்உயிர்பெறல்.

இவை யாவும் தொடர்பற்ற நிகழ்ச்சிப் பகுதிகளாக உள்ளன. எலிசா கோடிஅற்புதர் அந்தோனியார்போல் தோன்றுகிறார்! எலியாவைவிட அதிக அற்புதம்செய்வதாகக் காட்டப்படுகிறார். எலிசாவின் புதுமைகள் பல இயேசுவின்அருங்குறிகளை நினைவூட்டுகின்றன. நீரை இரசமாக்குதல்; உயிர்கொடுத்தல்;அப்பம் பலுகுதல்; தொழுநோயைக் குணமாக்குதல்; கடலில் மிதந்து நடத்தல் .. . இன்னும் பல.எலிசா இறைவாக்கினர் ஒரு சில அரசியல் திருப்பங்களில் தொடர்புகொண்டவராகக் காட்டப்படுகிறார்; அவரது அரசியல் ஆலோசனை பயன்உள்ளதாக அமைகிறது.

 

16. யோனா

இந்த யோனா வட நாட்டவர்; கத்கேப்பரை சேர்ந்த அமித்தாயின் மகன்.இரண்டாம் எரொபவாம் (கி.மு. 783-743) அரசன் காலத்தில் பணி செய்தவர்.ஆமோஸ், ஓசேயா போன்ற இறைவாக்கினர் வாழ்ந்த காலமும் அதுவே. சமய,சமூக, அரசியல் சீரழிவு நிறைந்த காலக்கட்டம் அது.இவரைப்

பற்றிய விவிலியப் பகுதி: 2 அர 14:25-27.

ஆண்டவர் யோனா வழியாய் அறிவித்தது போல, அரசன் எரொபவாம்'அமாத்து முதல் அராபாத் கடல்வரை இஸ்ரயேலின் எல்லைகளைஇணைத்துக்கொண்டான்' என நாம் அறிகிறோம். யோனாவும் அரசவைஇறைவாக்கினரே!

 

17. ஒதேது

ஒதேது இறைவாக்கினர் தென்னக அரசன் ஆக்காசின் ஆட்சிக்காலத்தில் (கி.மு. 736-716) வாழ்ந்து இறைபணியாற்றியவர்; இந்த ஆக்காசின்காலத்தில் வாழ்ந்த வேறு இரு இறைவாக்கினர்கள் இலக்கியப்பணி விட்டுச்சென்ற எசாயாவும், நூல் பெறா இறைவாக்கினர் மீக்காயாவும் ஆவர்!

இவரைப் பற்றிய விவிலியப் பகுதி:
2குறி 28:9-15

சிரியாவுக்கும் இஸ்ரயேலுக்கும் தென்நாட்டு அரசன் ஆக்காசு நாள்களில் ஒதேதுதோன்றுகிறார். தென் நாட்டுக்காகப் பரிந்துபேசுகிறார்.

2 குறி 28:9-11 அங்கே ஓதேது என்பவர்ஆண்டவரின் இறைவாக்கினராக இருந்தார்.சமாரியாவுக்குள் வந்திருந்த போர்ப்படைக்குமுன் அவர் சென்று, அவர்களை நோக்கி,"இதோ உங்கள் மூதாதையர்களின் கடவுளானஆண்டவர் யூதாவின் மேல் சினம்கொண்டு,அவர்களை உங்களது கையில் ஒப்படைத்தார். நீங்களோ அவர்களைவெஞ்சினத்தோடு கொன்றீர்கள். அது வான்மட்டும் எட்டியுள்ளது. ஆதலால்இப்பொழுது, யூதா எருசலேம் மக்களை உங்களுக்கு ஆண், பெண்அடிமைகளாகக் கீழ்ப்படுத்த வேண்டுமென்று திட்டமிடுகிறீர்கள்; ஆனால்உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு முன் நீங்களும் குற்றவாளிகள்அல்லரோ? ஆதலால், இப்பொழுது எனக்குச் செவி கொடுங்கள், ஆண்டவரின்கோபக்கனல் உங்கள் மேலும் இருப்பதால், உங்கள் சகோதரரிடமிருந்து நீங்கள்சிறைப்பிடித்து வந்தோரைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்” என்றார்.ஒதேது அறிவித்த இறைவாக்குக்கு வடநாட்டுப் படையினர் பணிந்தனர்.தென் நாட்டுக் கைதிகள் நாடு திரும்பினர்.என்னே இறைவாக்கினரின் பணிகள்!

 

18. குல்தா

பெண்களும் இறைவாக்கினர் பணி செய்ததற்குச் சிறந்த சான்று குல்தாஎன்ற பெண்மணி ஆவார்.

இவரைப் பற்றிய விவிலியப் பகுதி:
2அர 22:14 20;
2குறி34 :22-28

குல்தா தென் நாட்டவர்; எருசலேமில் குடியிருந்தவர்; எருசலேம் கோவில்ஆடைகளைப் மேற்பார்த்து வந்த தோக்காத் என்பவரின் மருமகள். தென்நாட்டில் நல்ல அரசர் எனப் பெயர்பெற்ற யோசியாசின் காலத்தவர் (கி.மு. 640-609).

சமய சீரழிவினாலும், சமுகச் சீர்கேட்டினாலும் வடநாடு கி.மு. 721இல்அழிந்தொழிந்ததைத் தென்நாடு கண்டது. புனர்வாழ்வு ஏற்படாவிட்டால் தன்நாட்டுக்கும் இதே கதி நிகழலாம்.எனவே சமயச் சீர்திருத்தம் தேவைப்பட்டது. சமயச் சீர்திருத்தம்தொடங்கியவன் யோசியா மன்னன். (2 அர 22, 23) அவனுக்குப் பக்கபலமாகப்பல இறை வாக்கினர் இருந்தனர். குறிப்பாக செப்பனியா, எரேமியா, குல்தாபோன்றோர்.இந்தச் சீர்திருத்தத்திற்குத் தூண்டுகோலாக இருந்தது கி.மு. 622 -இல் எருசலேம் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நூல் ஆகும். அதுவேஇணைச்சட்ட நூல். இணைச்சட்ட நூல் வழியில் யோசியாக் காலத்தில்செய்யப்பட்ட மதச்சீர்த்திருத்தம் மாபெரும் சாதனையாகும்; ஆயினும் பலருக்குஅது வேதனையாக அமைந்தது.ஒரே கடவுளுக்கு ஒரே கோயில் என்ற கொள்கை சிறப்பிடம் பெற்றது.மேட்டுக் கோயில்கள் பல இடிக்கப்பட்டன. சிலைகள் தகர்க்கப்பட்டன.அங்குள்ள அர்ச்சகர்கள் கொல்லப்பட்டனர் அல்லது பணி இழந்தனர். இன்னும்பல கோயில்களை நம்பி தொழில் செய்தவர் வேலை இழந்தனர். ஒரே கோயிலான எருசலேம் திருக்கோயில் சிறப்பிடம் பெற்றது; திருவிழாக் கொண்டாட்டங்கள் அங்கே உயிரூயஅp;ட்டம் பெற்றன. பாஸ்கா விழா புதுப்பிக்கப்பட்டது

கோவிலில் 622 -இல் கண்டெடுக்கப்பட்ட திருச்சட்டம் (இணைச்சட்டம்) வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டது. ஆண்டவரை முழு இதயத்துடன் அன்புசெய்வதாக உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது. இவ்வாறு ஒரு பக்கம் சாதனை;இன்னொரு பக்கம் வேதனை.இந்தத் துணிச்சலான மதச்சீர்திருத்தக் காலத்தில் யோசியாமன்னனுக்குப் பக்கபலமாக நின்றவர் குல்தா என்ற பெண் இறைவாக்கினர்என்பது குறிப்பிடத்தக்கது.குரு இல்க்கியாவும் ஏனையோரும் அவளிடம் விசாரிக்கச் சென்றதாகஅறிகிறோம். அவர்களை அனுப்பிவைத்தவர் அரசன். எனவே குல்தா நகரத்தில்சிறப்பிடம் பெற்றவராக இருந்திருக்கவேண்டும்.அவர் கூறிய இறைவாக்கின் ஒரு பகுதி 2 அர 22:18-20.எதிர்ப்பு ஏற்பட்டாலும், மதச்சீர்திருத்தம் தேவை என்பதை குல்தாதெரிவித்தார். இல்லையெனில், நாடு முழுக்க அழிந்து போகும் எனஎச்சரித்தார். அவர் வாக்குக்கு மதிப்பு அளிக்கப்பட்டது.

 

19. உரியா

உரியா இறைவாக்கினர்பற்றி 1, 2 அரசர், 1, 2 குறிப்பேடு நூல்கள் எதுவும்கூறவில்லை. மாறாக 'எரேமியா நூல்' இந்த இறைவாக்கினரை நமக்குஅறிமுகம் செய்து வைக்கிறது.

வாசிக்க: எரே 26:20-24.

உரியா இறைவாக்கினர் தென்னாட்டு யோயாக்கிம்மன்னன் காலத்தவர் (கி.மு. 609-598). தென்னாடுஅழிந்துவிட இன்னும் ஒரு சில வருடங்களே உள்ளன.இவர் கிரியத்து என்னும் ஊரைச் சார்ந்தவர். இவரதுதந்தை செமாய் ஆவார். எரேமியாவின் இறைவாக்குப்பணிக்கு இணையாக இவரும் பணி செய்தார். நல்லஅரசன் காலத்தில் குல்தா அறிவித்த செய்தியையேஇவரும் அறிவித்தார். ஆனால் யோயாக்கிம் மன்னன்கொடியவன். எரேமியாவின் உயிருக்கு ஆபத்து இருந்ததுபோலவே இவருக்கும் ஏற்பட்டது.எரே 26:20-23-உரியா எரேமியா சொன்னவார்த்தைகளைப் போலவே சொல்லி, இப்பட்டணத்திற்கும் இந்நாட்டுக்கும்விரோதமாய் இரைவாக் குரைத்தார். யோயாக்கிம் அரசனும் தலைவர்களும்போர் வீரர்கள் அனைவரும் அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டார்கள்.அரசன் அவரைக் கொல்லத் தேடினான். ஆனால் உரியா அதைக் கேட்டுஅஞ்சி எகிப்துக்குத் தப்பி ஓடினார். யோயாக்கிம் அரசன் அக்போர்என்பவனின் மகன் எல்னாத்தானையும், அவனோடு வேறு சிலரையும்எகிப்துக்கு அனுப்பினான். அவர்கள் எகிப்திலிருந்து உரியாவைப் பிடித்துவந்துயோயாக்கிம் அரசன்முன் விட்டார்கள். அவன் அவரை வாளால் கொன்றுஉடலைப் பொதுமக்கள் புதைக் கப்படும் இடத்திலே எறிந்துவிட்டான்.எரேமியா, உரியா போன்ற இறைவாக்கினருக்கு அரசனும் அவையோரும் பணியாததால்தான் நாடு இத்துனை விரைவில் அழிந்தது (கி.மு.587இல்).

முடிவுரை

( அ) எண்ணிக்கை: தம் பெயரில் நூல் பெறாத முக்கியமானஇறைவாக்கினர் இத்தனை பேர் விவிலியத்தில் இடம் பெறுவது நம்மைவியக்கவைக்கிறது. ஒரு சிலர் நூல் எழுதியவரே ஆவர். ஆனால் அதுநம்மிடம் வந்து சேரவில்லை.

( ஆ) முக்கியத்துவம்: எழுதிய இறைவாக்கினர்களை நாம் பொதுவாகவாசிப்பதால், எழுதாதவர்களை மறப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆயினும்இவர்களும் மிக முக்கியமானவர்கள்! இவர்களும் தங்கள் அழைப்பைமுன்னிட்டு தியாகம் (உயிர்த்தியாகம்கூட) செய்திருக்கிறார்கள்(அனானியா, மீக்காயா, எலியா, உரியா).

( இ) பெண்களுக்கு இடம்: பெரும் பணி செய்து மதிப்போடு வாழ்ந்த பெண்இறைவாக்கினர் இருந்தனர் என்பது நம் உள்ளத்தைக் கொள்ளைகொள்கிறது. பெண்களுக்கும் இறைவாக்குப் பணியில் இடம் உண்டு(குல்தா).

( ஈ) சொல், அடையாளச் செயல்: ஏனைய இறைவாக்கினரைப் போலவேஇவர்களும் 'சொல்லாலும்', 'அடையாளச் செயலாலும்'இறைவிருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் (அகியா).

( உ) அரசியல் ஈடுபாடு: நூல் விட்டுச் செல்லாத இறைவாக்கினர் பலர்அரசனோடும் அரசவையோடும் தொடர்புகொண்டவர்கள். அரசியல்திருப்பங்களை அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். வரலாற்றைப்படைத்துள்ளார்கள்; நாடு பிரிதல் - போர் புரிதல் - போர் தவிர்த்தல் -அரசனை ஏற்படுத்தல் - அரசாட்சியைக் கவிழ்த்தல் - அரசகுலத்தைஅழித்தல். . . இவ்வாறு எத்தனை எத்தனையோ ஈடுபாடுகள்! சாமுவேல்,காது, நாத்தான், அகியா, செமாயா, அனானியா, ஏகூ, யாகாசியேல்,எலியேசர், மீக்காயா, எலியா, எலிசா, யோனா, ஒதேது, உரியா. . .ஆகியோரை நினைவிற் கொள்க.

( ஊ) மெசியானிசம்: ஏனைய இறைவாக்கினரைவிடச் சிறப்பாகத் தாவீதுகுல மெசியாவை முன்மொழிந்தவர் யார்? நூல் பெறாத இறைவாக்கினர்அல்லவா (நாத்தான்)!

( எ) இயேசுவின் பிரதிபலிப்பு: நூல் பெறாத இறைவாக்கினர் ஒரு சிலர்இயேசுவின் பணிவாழ்வையும், அவரது அருங்குறிகளையும்பிரதிபலிப்பது தெளிவு (எலியா, எலிசா).

( ஏ) பெயர்ப் பொருத்தம்: நல்ல இறைவாக்கினருக்கு அளிக்கப்பட்டபெயர்கள் அனைத்தும் இந்த இறைவாக்கினருக்கும் பொருந்துகிறது.ஆனால் 'கடவுளின் மனிதர்', 'ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்','திருக்காட்சியாளர்' போன்ற ஒரு சில பெயர்களே இவர்களுக்குப்பயன்படுத்தப்படுகின்றன.

( ஐ) ஏமாற்றம்: (பொய்) இறைவாக்கினரால் (உண்மை) இறைவாக்கினர்ஏமாற்றப்படுவது நமக்கு வியப்பையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.ஆயினும் இப்படியும் ஒன்று வரலாற்றில் நடந்தது! (இறையடியாரும் ஒருவயது முதிர்ந்த இறைவாக்கினரும்).

( ஒ) சமயச் சீர்திருத்தம்: மதச் சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டிகள் இந்தஇறைவாக்கினர் எனக் கண்டோம் (அகியா, அசரியா, எலியா, குல்தா).

( ஓ) நீதிப் போராட்டம்: நீதிக்காகப் போராடும் இறைவாக்கினரைப் பற்றிஇன்றைய மக்கள் அடிக்கடி பேசிக்கொள்கிறார்கள். நூல் பெறாத இறைவாக்கினரும் நீதிக்காக நின்றவர் அன்றோ? (நாத்தான், எலியா . . ).

 

------------------------------------------
--------------------------
----------------
------
--