பழைய ஏற்பாடு - பொது முன்னுரை

ஆசிரியர் : மேதகு ஆயர் தேவதாஸ் அம்புரோஸ்
உதவி ஆசிரியர் : அருட்திரு கி.வி. சுந்தரி மைந்தன்

பொருளடக்கம்:

1. முன்னுரை
2. இஸ்ரயேல் மக்களின் வரலாறு
3.ஏற்றமிகு காலம்
4.மரபுகள்
5.வளமுறை பிறை நாடுகள்
6.பழைய ஏற்பாடும் பிற சமயங்களும்
7. பழைய ஏற்பாட்டின் பிரிவுகள

1. முன்னுரை

பழைய ஏற்பாட்டை யூதர்களும் கிறிஸ்தவர்களும் புனித நூலாகக்கருதுகின்றனர். இதில் வரலாற்றில் சிறப்பிடம் பெறாத மக்களின்வாழ்க்கை வரலாறு உண்டு; இறை நம்பிக்கைக் காவியங்கள் உண்டு;வாழ்வில் மாறாத உண்மைகளை உணர்த்த எழுந்த கற்பனைக்கதைகளின் அடிப்படை உண்டு; வரலாற்றிலே 'யாவே' யின்செயலாக்கத்தையும், அவர் தம் மக்கள்மீது கொண்ட அன்பையும்,பராமரிப்பையும் உணர்த்த எழுதப்பட்ட வீர காவியங்கள் உண்டு.இவையெல்லாம் வரலாற்றில் வடிந்த இறையனுபவத்தினால் உருவானஇறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் கருவிகளாகும்.

2. இஸ்ரயேல் மக்களின் வரலாறு

2.1. வரலாறு:
மானிட வாழ்க்கையின் பட்டறிவுகள் பல. ஒருவரின் பட்டறிவேஅவரது வரலாற்றை வகுக்கின்றது. அவரது நிகழ்காலச் செயல்களையும்வருங்கால ஏக்கங்களையும் திட்டங்களையும் வழிப்படுத்துகின்றது.எடுத்துக்காட்டாக ஒருவரது முந்தைய பட்டறிவு தோல்வியும் துயரமுமாகஇருப்பின், அவரது நிகழ், எதிர்காலங்கள் அவருக்கு இருண்டதாகவேகாணப்படுகின்றன. மாறாக, தோல்வியையும் துயரத்தையும் ஏற்றுமனத்தளர்ச்சிக்கு இடம் கொடாது அவைகளை வெற்றியின் படிகளாகப்பயன்படுத்தி, புத்தொளி கண்டவராக இருப்பின், அவரது நிகழ்,எதிர்காலங்கள் நம்பிக்கையுள்ளவைகளாக காட்சியளிக்கின்றன.ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அறிந்து கொள்ள அவரதுவாழ்க்கை வரலாற்றை ஆராழ்ந்து பார்ப்பது வழக்கம். பழைய ஏற்பாடு நூல் இஸ்ரயேல் மக்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? அவர்களின்இறையனுபவங்கள் யாவை? என்பதை விளக்குகின்றது.

2.2. நம்பிக்கை அறிக்கைகளும், வெற்றிப்பாடல்களும்:
பழைய ஏற்பாட்டை நாம் புரட்டும்போது அதில் பல இடங்களில் "யிம்பிக்கை அறிக்கைகளும்", "வெற்றிப் பாடல்களும்"காணப்படுகின்றன. இவைகள் தொடக்கக் காலத்தில் இஸ்ரயேல்மக்களால் வழிபாட்டிலே வாழ்மொழியாகச் சொல்லப்பட்டவை.'யாவே'யின் ஆற்றலையும், அன்பையும் எண்ணி மகிழ்ந்து மக்கள் நன்றிகூறினார்கள். நம்பிக்கையை அறிக்கையிட்டார்கள். தாங்கள் யார்என்பதை உணர்ந்து கொள்ளவும், தங்கள் கடமை என்ன என்பதைஅறிந்து கொள்ளவும் முயற்சித்தார்கள்.

எடுத்துக்காட்டுகள்:
வெற்றிப் பாடல்:விப 15:1-18 -ல்'யாவே'யைப் போர் வீரராகச் சித்தரித்தார்கள். அவர்இஸ்ரயேல் மக்கள் பொருட்டு எகிப்தியரை வீழ்த்தியதையும், இஸ்ரயேல்மக்களுக்கு அவர் செழ்த நன்மைகளையும் உணர்ந்து மகிழ்ந்துபோற்றினார்கள்.

நம்பிக்கை அறிக்கைகள்:
விப 6 : 20-24; இச 26:5-24; யோசுவா 24:1-13 ஆகியஇந்நம்பிக்கை அறிக்கைகளில்'யாவே' தங்கள் முன்னோராகியஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியையும், மோசேயின் வழி அவர் தந்தவிடுதலையையும் தாங்கள் கொடையாகப் பெற்ற நாட்டையும் பற்றிஎடுத்துச் சொல்லி நன்றி கூறினார்கள், நம்பிக்கை அறிக்கையிட்டார்கள்.இவ்வெற்றிப்பாடலிலும், நம்பிக்கை அறிக்கையிலும் நாம் காண்பதுவரலாறாகும்.

2.3. மீட்பின் வரலாறு:
நம்பிக்கை அறிக்கையின் மற்றும் வெற்றிப்பாடல்களின்கருப்பொருள் மீட்பு. ஏனெனில் அவர்கள் பல்வேறு இனத்தையும்பண்பாட்டையும் கொண்டிருந்தாலும், ஒரு குடும்பமாக, இறை மக்களாகஅவர்களை இணைத்தது "பாஸ்கா" விடுதலை "மீட்பு" என்ற வரலாற்றுநிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி அவர்கள் வாழ்விலேயே நீங்காநினைவாகவும் அவர்களின் தனித்தன்மைக்கு ஓர் அடிப்படையாகவும்அமைந்தது.இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றிலே இறைவன்'யாவே'யின் மீட்புச் செயலை உழ்த்து உணர்ந்ததாலேயே தங்கள்நம்பிக்கை அறிக்கையில் அதை வெளிப்படுத்தினர். இறைவன்'யாவே'யின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை விடுதலை - மீட்புவரலாற்றிலிருந்து எழுந்ததாகும். தொடக்க காலத்தில் இறைவனைஇஸ்ரயேலின் மீட்பராகவே கருதினர். இதைத் தொடக்கக் கால நம்பிக்கைஅறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன (இச 6:20-24; 56:5-10; யோசுவா24:1-13). இறைவன் "படைப்பாளர்" என்ற எண்ணம் பிற்காலத்தில்எழுந்ததாகும். இதைப் பிற்கால நம்பிக்கை அறிக்கைகள்வெளிப்படுத்துகின்றன (நெகே 9: 6-31). இறைவன் 'யாவே' அளித்த

மீட்பிலே, அவர் இயற்கையின் மீது கொண்டிருந்த ஆற்றலைக்கண்டுணர்ந்தனர் (விப 15:12). இத்தகைய ஆற்றல்மிக்க ஆண்டவர் தான்இவ்வுலகையும் படைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.ஒருவர் தனது வாழ்க்கை வரலாற்றைத் தான் பிறந்ததிலிருந்துஎழுதத் தொடங்குவதில்லை. மாறாக வாழ்க்கையின் சிறப்புக் கட்டத்திலேதனது முந்தைய வாழ்வை அலசிப் பார்க்கின்றார். தனது பிறப்பு,இளமைப்பருவம், வாலிபப் பருவத்தின் நிகழ்ச்சிகளில் எவையெவைதன்னை இந்நிலைக்கு உருவாக்கியதோ, எவையெல்லாம் தன்உள்ளத்தைத் தொட்டனவோ அவைகளை எழுதுகின்றார். தனதுவாழ்வின் திருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு தன் முந்தையவாழ்க்கையை நோக்குகின்றார். இத்திருப்பத்தின் கண்ணோட்டத்திலேதனது வாழ்க்கை வரலாற்றைப் படைக்கின்றார்.அதேபோன்று, இஸ்ரயேலின் வரலாறு ஆபிரகாமிலிருந்து, ஏன்உலகப் படைப்பிலிருந்து தொடங்கினாலும் இஸ்ரயேல் மக்களின் மீட்புவரலாறு எகிப்திலிருந்து விடுதலை அடைந்த வாழ்க்கைத்திருப்பத்திலிந்துதான் தொடங்குகிறது. எனவேதான் விவிலிய ஆசிரியர்படைப்பையும், ஆபிரகாமின் அழைப்பையும் விடுதலை - மீட்பின்கண்ணோட்டத்தில் எழுதுகின்றார் (திபா 10: 15).

படைப்பில் மீட்பு:
விவிலிய ஆசிரியர் படைப்பைப் பற்றிப் பேசினாலும் அவருடையஅடிப்படைக் கருத்து 'மீட்பு' என்பதைத் தெளிவாக உணரலாம். படைப்பைமீட்பின் கண்ணோட்டத்தில் அவர் சித்தரிப்பதைக் காணலாம்.

எடுத்துக்காட்டுகள்:
- தொநூ 1: 1-2:4அ. இது'யாவே'யின் மீட்பைப் புகழ்ந்தேத்த எழுந்தபாடலாகும். இதில்'யாவே'யை மீட்பராகக் காண்கின்றார் ஆசிரியர்."ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்"'யாவே' பிரித்துமீட்டார் (தொநூ 1:4). உலகை மீட்க'யாவே' மேல் நீரையும், கீழ் நீரையும்பிரித்தார் (தொநூ 1:9). பகலையும், இருளையும் பிரிக்க வான்வெளியில்சுடர்களை உண்டாக்கினார் (தொநூ 1:4).

- இச 32:6-12 இங்கு படைப்பும், மீட்பும் இணைந்தேபேசப்படுகின்றது."ஞானமற்ற, மதிகெட்ட மக்களே! ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும்கைமாறு இதுதானா? உங்களைப் படைத்து, உருவாக்கி, நிலைநிறுத்தியஉங்கள் தந்தை அவரல்லவா?... பாழ்வெளியில் அவர் அவனைக்கண்டார்; அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்; கண்ணின்மணியென அவனைக் காத்தருளினார்.

- எசா. 42:5-6 -படைப்பின் ஆண்டவர்மீட்பராக விளங்குவதைக்காணலாம் (எசா 40:26;43:1,7-15; 45:1-18)."விண்ணுலகைப்படைத்து விரித்து,மண்ணுலகைப் பரப்பிஉயிரினங்களைத்தோன்றச் செழ்து அதன்மக்களுக்கு உயிர் மூச்சு தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியைஅளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே;ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்;உம் கையைப் பற்றிப் பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்"- திபா 74: 12-17-ல் தொடக்கத்திலிருந்து ஆண்டவர் மீட்பராகஉள்ளார் என்ற நம்பிக்கையைக் காணலாம் (திபா 8, 19,105)"கடவுளே! முற்காலத்திலிருந்தே நீர் எங்கள் அரசர்; நீரேஉலகெங்கும் மீட்புச் செயலைச் செழ்து வருகின்றீர். பகலும் உமதே;இரவும் உமதே; கதிரவனையும் நிலவையும் தோற்றுவித்தவர் நீரே".

ஆபிரகாமின் அழைப்பு ஒரு மீட்பு:
ஆபிரகாமை இறைவன் தனிப்பட்ட வகையில் தேர்ந்தெடுத்தார்.அவர் வழியாக ஒரு சமுதாயத்தையே உருவாக்கினார். இந்த அழைப்பும்விடுதலையின் கண்ணோட்டத்தில் விவரிக்கப்படுகின்றது. ஆபிரகாமுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் உடன்படிக்கை செய்த இறைவன்தன்னை நெருப்பின் வடிவில் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

1. நெருப்பின் வடிவில் இறைவெளிப்பாடு
"சீனாய் மலை முழுவதும் புகைந்துகொண்டிருந்தது. ஏனெனில்ஆண்டவர் அதன் மீது நெருப்பில்இறங்கி வந்தார். அதன் புகைதீச்சூளையிலிருந்து எழும் புகைபோல்தோன்றியது. மலை முழுவதும் மிகவும்அதிர்ந்தது" (விப 19:18). "கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது.அப்பொழுது புகைந்து கொண்டிருந்ததீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.""தொநூ 15:17).
2. நாடு வாக்களிக்கப்படுதல்
"என் தூதர் உனக்கு முன் சென்றுஉன்னை எமோரியர், இத்தியர், எபூசியர்இவர்களிடம் கொண்டு போழ்ச்சேர்க்கும்போது நான் அவர் களைஅழித்தொழிப்பேன்" (விப :23:23) "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்ரத்தீசுபேராறு வரை உள்ள இந்த நாட்டை உன்வழி மரபினர்க்கு வழங்குவேன்" என்றார்(தொநூ 15:18)
3. விடுதலை கொடுத்தவர் ஆண்டவர்
"அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்துமன்னராகிய பார்வோனின்கையினின்றும் உங்களை விடுவித்தார்""(இச 7:8) "இந்நாட்டை உனக்கு உரிமைச்சொத்தாக அளிக்க உன்னைக்கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்துஇங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே"என்றார்" (தொநூ 15:7)

மீட்பின் ஆண்டவருக்கு நேர்மையாக .....
கானான் நாட்டில் வளமையோடு வாழ்ந்தபோது, இஸ்ரயேல் மக்கள்விடுதலை கொடுத்த'யாவே'யை மறந்து 'பாகாலை'" வணங்கினர்.அவ்வேளையில் இஸ்ரயேல் மக்களை உடன்படிக்கைக்கு நேர்மையாகவாழ இறைவாக்கினர்கள் அழைத்தார்கள்; ஆண்டவர் அவர்களுக்கு'மீட்பளித்துள்ளார்' என்ற கருத்தை வலியுறுத்தினார்கள் (ஓசே 13:11;எசேக் 20:56).இஸ்ரயேல் மக்களின் விடுதலை ஆபிரகாமின் அழைப்பு

"இஸ்ரயேல் குழந்தையாழ் இருந்தபோது அவன்மேல் அன்புகூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்.எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்குஎன்னை விட்டுப் பிடிவாதமாழ் விலகிப்போனார்கள். பாகால்களுக்குப்பலியிட்டார்கள்" (ஓசே 11:1-2).

மேலும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் எபிரேய மொழியிலிருந்துகிரேக்க மொழியில் "செப்துவாசிந்து" என்ற விவிலிய நூல் எகிப்து நாட்டில்உள்ள அலெக்சாந்திரியாவில் மொழி பெயர்க்கப்பட்டது. அதிலுள்ளசாலமோனின் ஞான நூல் மீட்புச் செயல்" ஞானத்தின் ஆற்றலால்வெளிப்பட்டது என்று கூறுகின்றது.ஒடுக்கிய மக்களினத்தாரிடமிருந்து தூய மக்களையும் மாசற்றவழிமரபினரையும் ஞானம் விடுவித்தது" (சாஞா 10:15).

2.4. பழைய ஏற்பாடு - நம்பிக்கை வரலாற்று நூல்
பழைய ஏற்பாட்டு நூல்கள் மேற்காசிய நாடுகளில் நடந்தவரலாற்றை அப்படியே சித்தரிப்பவை அல்ல. மேற்காசிய நாடுகளின்வரலாற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இஸ்ரயேல் மக்களின் வரலாறுஅவ்வளவு சிறப்பானது என்று கூற இயலாது. நாகரீகத்திலும்கலாச்சாரத்திலும் இஸ்ரயேல் மக்கள் மற்ற மக்களைப் போன்றுஉயர்ந்தவர்களும் அன்று. மேற்காசிய நாடுகளில் நிகழ்ந்த வரலாற்றுநிகழ்ச்சிகளையோ அல்லது கலாச்சாரத்தையோ பற்றி பேச எழுந்ததுஅல்ல பழைய ஏற்பாடு. மாறாக, மேற்காசிய நாடுகளில் நிகழ்ந்த வரலாற்றுநிகழ்ச்சிகளின் வாயிலாக இறைவன் தன்னை வெளிப்படுத்தியதையும்விடுதலை அளித்து பணி செழ்ய அழைத்ததையும் இஸ்ரயேல் மக்கள்தங்கள் வாழ்வில் உணர்ந்தார்கள். இந்நிகழ்ச்சிகளை பற்றியநம்பிக்கைக் கண்ணோட்டமே இஸ்ரயேல் மக்களின் வரலாற்றுக்கு,விவிலியத்திற்குத் தனிச் சிறப்பைக் கொடுக்கின்றது. சுருங்கக்கூறின்இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தஇறையனுபவத்தின் சாட்சியே பழைய ஏற்பாடு.

மீட்பின் வரலாறு - கால அட்டவணை
?

வரலாற்றுக்கு முன்னைய நிகழ்ச்சிகள் ((ஏ) ஏறக்குறைய)
படைப்பு
ஆதாம் - ஏவாள்
காயின் - ஆபேல்
நோவா - பெருவெள்ளம்
பாபிலோன் - கோபுரம்

கி.மு.
2000
இஸ்ரயேலின் மூதாதையர்
ஆபிரகாம் கானான் நாட்டிக்கு வருதல் (ஏ) கி.மு. 1,900
ஈசாக்கு
யாக்கோபு
பன்னிரு குலத்தலைவர்கள்
யோசேப்பு எகிப்து மன்னனின் ஆலோசகர் ஆகுதல்
எகிப்தில் இஸ்ரயேலர்யாக்கோபின் வழிமரபினர் எகிப்தில் அடிமைகளாகுதல்
(ஏ) 1700 - 1250கி.மு
கி.மு.
1250
எகிப்தினின்று இஸ்ரயேலரை மோசே அழைத்துச் செல்லல் (ஏ)1250
இஸ்ரயேலர் பாலை நிலத்தில் பயணம் செய்தல்
மோசே சீனாய் மலையில் திருச்சட்டம் பெறுதல்
கி.மு.
1200
கானான் நாட்டைக் கைப்பற்றி அதில் குடியேறுதல்
கானான் நாட்டைக் கைப்பற்றும் முதல் கட்டத்தில் யோசுவாதலைமை தாங்குதல், இஸ்ரயேலர் குலங்கள் கூட்டமைப்பாகவிளங்குதல்.
நீதித்தலைவர்கள்" தலைமை ஏற்றல்.
ஒருங்கிணைந்த இஸ்ரயேலர் அரசு
சவுலின் ஆட்சி (ஏ) 1020 - 1000
கி.மு.
1000

தாவீதின் ஆட்சி (ஏ) 1000 - 962
சாலமோனின் ஆட்சி (ஏ) 962 -(931) 922

இஸ்ரயேலின் இரண்டு அரசுகள்
யூதா (தெற்கு அரசு) இஸ்ரயேல் (வடக்கு அரசு)
ரெகபெயாம் 922 - 915 (913)
அபியாம் 915 (913) -913 (911)
ஆசா 913 (911) - 873 (870)




யோசபாத்து 873 (870)-849 (848)

யோராம் 849(852)- 842 (841)
அகசியா 842 (841)
அத்தலியா 842 (835)-807 (796)
அமடசியா 800 (796) - 783 (781)
உசியா 783 (767) - 742 (740)
யோத்தாம் 742 (740) - 735
ஆகாசு 735-715
எசேக்கியா715-687(686)

எரொபவாம் 922 (931) - 901 (910)
நாதாபு 901 (910) - 909 (909)
பாசா 900 (909) - 887 (886)
ஏலா 887 (886) - 876 (885)
சிம்ரி 876 (885) (7 நாள்கள்)
ஓம்ரி 876 (885) - 869 (874)
ஆகாபு 869 (874) - 850(853)
யோராம் 849 (848)-842 (841)
யோவகாசு 815 (814) - 801 (798)
யோவாசு 801 (798) (782) - 746 (753)
எரொபவாம் 786 (782) 746 (753)செக்கரியா 746 (753) (6 மாதங்கள்)
சல்லூம் 745 (752) -738 (742)
பெக்காகியா 738 (742)- 737 (740)
பக்கா 737 (740) - 732
ஓசேயா 732-721 (723ஃ722)
சமாரியாவின் வீழ்ச்சி 722

 

கி.மு.
722
கி.மு. யூதா அரசின் இறுதி ஆண்டுகள்722
மனாசே 687 (686) -642
ஆமோன் 642 - 640
யோசியா 640 - 609
யோவகாசு 609 (3 மாதங்கள்)
யோயாக்கிம் 609 - 598
யோயாக்கின் 598 (3 மாதங்கள்)
செதேக்கியா 597
இரண்டாம் எருசலேமின் வீழ்ச்சி: ஜுலை 587-586 (எஸ்ரா, நெகேமியா)
கி.மு.
587,586
கி.மு. 587-586 பாபிலோனியாவுக்கு யூதர்கள் நாடுகடத்தப்படல்
பாலஸ்தீன நாட்டில் பாரசீக ஆட்சி

கி.மு.
538

515

யூதர்கள் தாழ்நாடு திரும்ப மன்னன் சைரசு அனுமதி அளித்தல் 538
புதிய கோவிலுக்கு அடித்தளமிடல் 537
vUrNyk; Nfhtpy; fl;b Kbf;fg;gl;lJ 515
vUrNykpd; kjpy;fisr; nrg;gdply; 445 - 443
கி.மு.
333

பாலஸ்தீன நாட்டில் கிரேக்க ஆட்சி
பேரரசர் அலக்சாந்தர் பாலஸ்தீனில் கிரேக்க ஆட்சியை நிறுவுதல்
எகிப்தை வென்ற அலக்சாந்தரின் படைத்தளபதிகளுள் ஒருவரின் வழிமரபினரான
தாலமியர் பாஸ்ழதீனை ஆட்சி புரிதல் 323 - 198.

சிரியாவை வென்ற அலக்சாந்தரின் படைத்தளபதிகளுள் ஒருவரின்வழிமரபினரான செலூக்கர் பாகூழதீனை ஆட்சிப் புரிதல் 198-166.

கி.மு.
166
மக்கபேயர் ஆட்சி
யூதா மக்கபேயின் தலைமையில் யூதர்கள் கிளர்ந்தெழல்
யூதாவின் குடும்பத்தினரும் வழிமரபினருமான அஸ்மோனியர் (மக்கபேயர்)
பாலஸ்தீனை ஆட்சிப் புரிதல் 166-63
கி.மு.
63
உரோமை ஆட்சி
உரோமைப் படைத்தளபதியான போம்பே எருசலேமைக் கைப்பற்றல்(கி.மு. 63)
பெரிய ஏரோது (கி.மு. 37-4)
உட்பட உரோமையரால் நியமிக்கப் பட்டோர்பாலஸ்தீனை ஆட்சிப் புரிதல்.
கி.மு.
1
புதிய ஏற்பாட்டின் காலம்கி.மு. 1
இயேசுவின் பிறப்பு (ஏ) கி.மு. 6-5
திருமுழுக்கு யோவானின் திருப்பணிஇயேசுவின் திருமுழுக்கு
திருப்பணியின் தொடக்கம் (ஏ) கி.பி. 27.
இயேசுவின் இறப்பும் உயிர்ப்பும் (ஏ) கி.பி. 30
பவுல் (சவுல்) திருத்தூதரின் அழைப்பு (ஏ) கி.பி. 33-35
எருசலேம் சங்கம் (ஏ) கி.பி. 49
திருத்தூதர் பவுல் கொல்லப்படல் கி.பி. 64-67கி.பி.
கி.பி.
70
எருசலேமின் அழிவு (கி.பி. 70)
கி.பி.
95
பத்மு தீவில் யோவான்

 

3. ஏற்றமிகு காலம்

3.1. தாவீது சாலமோனின்
அரசாட்சிகி.மு. 1000-இல் தாவீது எருசலேமைக் கைப்பற்றினார். தென்குலங்களையும், வடகுலங்களையும் திருப்தி செழ்ய இரண்டிற்கும்இடையே உள்ள எருசலேமைத் தலைநகராக்கினார். இவ்வாறு அனைதுக்குலங்களையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொணர்ந்தார். அவர் மகன்சாலமோன் இஸ்ரயேல் நாட்டை ஒரு வல்லரசாக்கினார். 12 வரிமாவட்டங்களாகப் பிரித்து பல ஒழுங்கு முறைகளை அமைத்தார்.வாணிபத்தைப் பெருக்கினார். எருசலேம் அரண்மனைகளையும்கோவிலையும் அமைத்தார். இவருடைய புகழ் பல நாடுகளுக்கும்பரவியது.இஸ்ரயேல் மக்கள் இதுவரையில் தங்களைப் பற்றியும் தங்கள்முன்னோரைப் பற்றியும் எதுவும் எழுதவில்லை. ஆயினும்'யாவே'யைவிடுதலையின் ஆண்டவர் என்றும், மீட்பின் ஆண்டவர் என்றும் மக்கள்ஏற்று வாழ்ந்தனர். விடுதலைப் பயணம் அவர்களை ஒரு சமுதாயமாகஉருவாக்கி இருந்தது. அது அவர்களுக்கு நீங்கா நினைவாகஅமைந்திருந்தது.

விடுதலைப் பயணம் மற்றும் தங்கள் மூதாதையர் பற்றியசெழ்திகளையும், மோசே தந்த கட்டளைகளையும் இதுவரையில்வாழ்மொழியாக, வாழையடிவாழையாகச் சொல்லி வந்தனர். நீதித்தலைவர்கள் காலத்தில் இஸ்ரயேல் மக்களின் வழிபாட்டுத் தலங்களான"கில்கால்" "செக்கேம்" "பெத்தேல்" "சீலோ" போன்ற இடங்களில்வழிபாட்டின்போது இவ்வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லி வந்தனர்.காலப்போக்கில் இவை வீர காப்பியங்களாக உருப்பெற்றன. மோசேயின்சட்டங்களும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப விரிவடைந்தன. ஒரு சிலபகுதிகள் எழுதப்பட்டிருக்கவும் கூடும்.சாலமோனின் காலத்தில், அவரின் அரசவையிலிருந்தபுலவர்களும், எழுத்தாளர்களும் தங்கள் நாட்டில் நிலவி வந்த வீரக்காப்பியங்களைத் தொகுத்தனர். அதோடு தங்கள் மூதாதையரைப் பற்றியசெழ்திகளையும் சேர்த்தனர். ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதிதாவீதில் நிறைவுற்றதாக உணர்ந்தனர். தங்கள் வரலாற்றை இன்னும்சற்று நீட்டி உலகத்தோற்றத்தைப் பற்றியும் கூறினர். ஏனெனில்'யாவே'தங்களின் மீட்பர் மட்டுமன்று, உலக மக்கள் அனைவரின் மீட்பர்என்பதையும் ஏற்றுக்கொண்டதால், உலகைப் படைத்தவர் யாவே எனஅறிவித்தனர். அவர்கள் இறைவனை'யாவே' என்று அழைத்தால்அப்பகுதிகளை'யாவே' மரபு என்று விவிலிய அறிஞர்கள் இன்றுஅழைக்கின்றார்கள்.

3.2. இரு அரசுகள்: யூதா, இஸ்ரயேல்
அரசர் சாலமோனின் இறப்பிற்குப்பின் அவரது அரசு கி.மு. 922(921)- இல் இரண்டாக உடைந்தது. தென்னாடு யூதா என்றும், வடநாடுஇஸ்ரயேல் என்றும் அழைக்கப்பட்டன. யூதாவில் தாவீதின் வழிமரபினர்ஆட்சி புரிந்தனர். யூதாவின் அரசர்கள் மக்களின் உடன்படிக்கையின்அடையாளமாக, நம்பிக்கையின் பாதுகாவலராகத் திகழ்ந்தார்கள்.'யாவே'யின் உடன் உறைவு எருசலேம் கோவிலின் மூலம் அவர்களிடம்நிலைபெற்றிருந்தது. தாவீது, சாலமோன் இவர்களின் காலத்தில்தொடங்கிய மரபு யூதாவின் புனித வரலாறாக நிலைபெற்றது. யூதாவில்எசாயா, மீக்கா போன்ற இறைவாக்கினர்கள் இறைவாக்குரைத்தனர்.

வடநாடாகிய இஸ்ரயேல் தாவீதின் குலத்திலிருந்து பிரிந்ததினால்,இவர்களுடைய அரசர்கள் உடன்படிக்கையின் அடையாளமாகவிளங்கவில்லை. பற்றுறுதியின் பாதுகாவலர்களாகவும் திகழவில்லை.மாறாக இறைவாக்கினர்கள்தான் இஸ்ரயேல் மக்களிடம் நம்பிக்கையின்பாதுகாப்பாளர்களாகத் திகழ்ந்தார்கள். கனானிய தெழ்வமான 'பாஆல்'(பாகால்) வழிபாட்டினால் இஸ்ரயேல் மக்கள் 'யாவே' வுக்குநேர்மையின்றி வாழ்ந்தபோது 'யாவே' அவர்களோடு செழ்தஉடன்படிக்கையை நினைவுறுத்தி மனந்திரும்ப அழைத்தனர் இறைவாக்கினர்கள். வடநாட்டில் தங்களுக்கென ஒரு வரலாற்று மரபு தேவைஎன்பதைச் சிலர் உணர்ந்து கி.மு. 9 ஆம் நூற்றாண்டில் ஒரு மரபைஉருவாக்கினர். இந்த மரபில் கடவுளை 'ஏலோகிம்' என்று அழைப்பதால்இது 'ஏலோகிம் மரபு' என்று அழைக்கப்படுகின்றது. இம்மரபுவிடுதலைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள்மூதாதையரான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களின்வரலாற்றோடு தொடங்குகின்றது. ஆனால் உலகப் படைப்பைப் பற்றிக்கூறவில்லை. வடநாட்டில் இறைவாக்கினர்களான எலிசா, ஆமோஸ்,ஓசேயா ஆகியோர் இறைவாக்குரைத்தனர்.

மோசே தங்களுக்கு கொடுத்த சட்டங்களையும் பிறகு தங்கள் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப மோசேயின் சட்டங்களை விரித்து உருவாக்கியசட்டங்களையும் வடநாட்டு இஸ்ரயேல் மக்கள் சிலர் ஒன்றிணைத்தனர்.இது "இணைச் சட்ட மரபு" என்று அழைக்கப்பட்டது. கி.மு. 722-இல்வடநாட்டை அசீரியர்கள் கைப்பற்றியதால் அங்கிருந்து தப்பிய மக்கள் "ஏலோகிம்" மரபையும் "இணைச்சட்ட" மரபையும் தெற்கே கொண்டுவந்திருக்கக்கூடும். அங்கு'யாவே' மரபை அடிப்படையாகக் கொண்டுகி.மு. 622-க்குப் பிறகு யோசியா அரசரின் காலத்தில் "இணைச்சட்ட நூல்"உருவாகியிருக்கக்கூடும். இவ்வேளையில் இறைவாக்கினர் எரேமியாயூதாவில் இறைவாக்குரைத்தார்.

3.3. பாபிலோனிய அடிமைத்தனம்
கி.மு. 587-இல் யூதாவை பாபிலோனியர்கள் கைப்பற்றினர்.பாபிலோனுக்கு அடிமைகளாக யூத மக்களை இழுத்துச் சென்றார்கள்.இஸ்ரயேலர் தங்கள் நாட்டையும், அரசரையும், கோவிலையும் இழந்துவருந்தினர். இறைவன் தங்களைக் கைவிட்டுவிட்டதாகவும் கருதினர்.அவ்வேளையில் இறைவாக்கினர்களான எசேக்கியேலும், எசாயாவின்சீடரான இரண்டாம் எசாயாவும் நம்பிக்கையிழந்த மக்களுக்குநம்பிக்கையூட்டினர். அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஆறுதல்அளிக்கவும் தங்கள் சட்ட முறைகளில் நேர்மையுடன் வாழ்ந்துநம்பிக்கையில் நிலைபெறவும் வாழ்மொழியாழ் தங்களிடம் நிலவிய மரபுச்செழ்திகளை ஒன்றுதிரட்டி, யூதாவிலிருந்து தாங்கள் கொண்டு வந்த"யாவே-ஏலோகிம்" மரபுகளோடு இணைந்து ஒரு நூலை உருவாக்கினர். "யாவே-ஏலோகிம்" மரபுகளோடு குருக்கள் தங்களிடம் வைத்திருந்த மரபைஇணைத்து அதனை "குருக்கள் மரபு" என்று அழைத்தனர்.

அடிமைத்தனத்தின் இறுதிக் காலத்தில் "இணைச்சட்ட நூல்" மரபு "யாவே - ஏலோகிம் - குருக்கள், மரபுகளோடு இணைத்திருக்க வேண்டும்.பாபிலோனின் அடிமைத்தனத்தின்போது இணைக்கப் பட்ட இந்த நான்குமரபுகளைக் கொண்ட நூல்களை நாம் இன்று ஐந்நூல் அல்லது "தோரா"அல்லது "திருச்சட்ட நூல்" என்று அழைக்கின்றோம்.

3.4. பாரசீக அரசாட்சி
கி.மு. 538ல் பாரசீக மன்னரான சைரசு இஸ்ரயேல் மக்களுக்குவிடுதலை கொடுத்தார். துன்பத்தால் தூய்மையாக்கப்பட்ட மக்கள் தங்கள்சொந்த நாடான பாலஸ்தீனாவுக்கு திரும்பினார்கள். அவர்களின்வாழ்க்கை முறைகளை ஒழுங்குபடுத்த "எஸ்ரா" என்ற சட்ட வல்லுநர்இந்த நான்கு மரபுகளையும் தழுவிய சட்ட நூலைத் தந்தார். அதைவாசித்து உடன்படிக்கையைப் புதுப்பித்தார் (நெகே 8: 1-38).

3.5. கிரேக்க உரோமையர் அரசாட்சிகள்
கி.மு. 332-இல் அலெக்சாந்தர் மத்திய கிழக்கு நாடுகளைக்கைப்பற்றினார். அவர் தன் காலத்தில் கிரேக்க மொழியையும்கலாச்சாரத்தையும் பரப்ப முயன்றார். அவ்வேளையில், இஸ்ரயேல்நாட்டில், சாலமோன் காலத்திற்கும் முன்பிருந்தே தோன்றிய ஞானவிளக்கங்களை ஒன்றிணைத்து ஞான நூல்களைத் தொகுத்தனர்.இதன் விளைவாக உருவானவைதான் "ஞானநூல்" "யோபு",யிPதிமொழிகள்", "தோபித்து" போன்றவைகளாகும்.கி.மு. 167-இல் அலெக்சாந்திரியாவின் மன்னரான அந்தியோக்குஎப்பிபான் யூத மறையைப் புறக்கணிக்க யூதர்களுக்குக் கட்டளையிட்டான். மறுத்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கினான். அப்போதுமக்கபேயர் கிரேக்கத் திணிப்புகளுக்கு எதிராகப் போரிட்டனர். மக்களையூதப் பற்றுறுதியில் நிலைப்படுத்த முயன்றனர். போராளிகளைஉற்சாகப்படுத்த "திருவெளிப்பாட்டு இலக்கிய" நூலான "தானியேல்"எழுதப்பட்டது. கடவுள் தன் மகிமையோடு வெளிப்படும் நாளைப்பற்றிஅந்நூல் அறிவிக்கினறது.கி.மு. 63-இல் உரோமையர் பாலஸ்தீனாவை அ(ஹ)சுமோனியரிடமிருந்து கைப்பற்றினார். கி.மு. 40 முதல் 4-ஆம் ஆண்டு வரை பெரியஏரோது பாலஸ்தீனாவை ஆண்டு வந்தார்.

 

4. மரபுகள்

ஐந்நூலில் நான்கு மரபுகள் உள்ளன. அவை வெவ்வேறுஇடங்களில் வெவ்வேறு நூற்றாண்டுகளில் எழுதப்பட்டன என்பதைஇன்றைய விவிலிய ஆராழ்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.ஆனால் ஐந்நூலை "மோசே" தான் எழுதினார் என்று யூத, கிறிஸ்தவமரபுகள் கருதி வந்தன. எனவே, இந்த முரண்பாட்டிற்கு விளக்கம்தேவைப்படுகிறது.

4.1. மோசே ஐந்நூலின் ஆசிரியரா?
"மோசே" தான் "தோரா" அல்லது ஐந்நூலின் ஆசிரியர் எனக்கூறும் யூத - கிறித்தவ மரபு எப்பொழுது தோன்றியது என்பதை நாம் ஆராயவேண்டும். முதன் முதல் இதை "மோசேயின் திருச்சட்டம்" என்றுகுறிப்பேடு கூறுகின்றது (2 குறி 30:16). குறிப்பேடு எழுதப்பட்டக் காலம்கி.மு. 4 -ம் நூற்றாண்டு. ஆனால், "மோசே" வாழ்ந்த காலம் கி.மு. 13ஆம் நூற்றாண்டு. எனவே "மோசே" தன் கைப்பட எழுதினார் என்றுகுறிப்பேடு கூறவில்லை; கூறவும் முடியாது.ஐந்நூலை "மோசே" எழுதவில்லை என்று "போர்பிரி" "செல்சுஸ்"
(ஞடிசயீhநசலஇ ஊநடளரள) என்பவர்கள் தொடக்கத் திருச்சபையின் காலத்தில்கூறினார்கள். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத, விவிலியஅறிஞர் "எபென் எசுரா" (நுநெn நுணசய) ஐந்நூலை "மோசே" எழுதினார்என்ற மரபை மறுத்தார். இதற்கு இவர் பின்வரும் காரணங்களைக்குறிப்பிடுகின்றார்.

1). முரண்பாடுகள்
- மோசேயின் இறப்பு கூறப்படுகின்றது (இச 34:5).
- "தாண்" என்ற இடம் குறிப்பிடப்படுகின்றது (தொநூ 14:14).
ஆனால் இந்தப் பெயர் நீதித் தலைவர்கள் காலத்தில்தான் கொடுக்கப்பட்டது (நீத 18:29).- இஸ்ரயேலின் அரசர் (தொநூ 36:31). சவுல்தான் இஸ்ரயேலின்முதல் அரசர் (1 சாமு 9-10). எனவே பிற்காலத்தில்தான் எழுதியிருக்கவேண்டும்.

- வெள்ளப்பெருக்கு தொநூ 7:4,17 படி 40 நாட்கள்
தொநூ 8:8-10, 12 படி 21நாட்கள் 61 நாட்கள்
தொநூ
7:24 படி 150 நாட்கள்

இதில் எது உண்மை - பெட்டகத்தினுள் சென்ற விலங்குகள்தொநூ 6:19-20 படி -வகைக்கு இரண்டு
தொநூ 7:3-7 படி வகைக்கு எட்டு

மோசேயின் மாமனார்: விப 2:18; எண் 10:20 படி இரகுவேல்
விப 3:1; 18:1 படி இத்திரோ

இவ்வாறு முரண்பட்ட செய்திகள் காணப்படுவதால் இதை ஒருவர்எழுதியிருக்க இயலாது.

2). நிகழ்ச்சிகள் இருமுறை கூறப்படுகின்றன.
- படைப்பு: தொநூ 1 : 1 முதல் 2 : 4 அ இரண்டாம் முறையாக
தொநூ 2:4ஆ-25
- காயினின் வழிமரபினர; - தொநூ 4:17-24; மற்றும் 5:21-37
- வெள்ளப்பெருக்கு - தொநூ 6, 7
- ஆபிரகாம் - சாராழ் தனது தமக்கை - தொநூ 12:10; மற்றும் 20:1
- மோசேயின் அழைப்பு - விப 3, 6
- மெரிபாவில் முணுமுணுத்தச் செயல; - விப 17:7; எண் 20:13

எனவே இந்நூல் ஒரே ஆசிரியரின் கைவண்ணத்தில்உருவானதில்லை என்பது தெளிவாகிறது. இவைகள் இருமுறை நடந்தநிகழ்ச்சிகளா? அல்லது ஒரே நிகழ்ச்சியை இருவர் எழுதியுள்ளனரா?

3). நிகழ்ச்சிகள் கூறப்படும்போது கோர்வையின்றி தொடர்பில்லாமல்தொக்கி நிற்பதைக் காணலாம்.
தொநூ 2:4அ மற்றும் 2:4ஆ 4:26-5:1

4). இறைவனை வெவ்வேறு பெயர்கள் கொண்டுஅழைத்திருப்பதைக் காணலாம்.தொநூ 1:1 - கடவுள் (எலோகிம்)தொநூ 2:4ஆ - ஆண்டவராகிய கடவுள் (யாவே)

 

5. நான்கு மரபுகள்

வாழ்மொழி மரபு - சிறு நம்பிக்கை அறிக்கைகள் - பழைய வீரகாப்பியங்கள் - சட்டங்கள்

ab

எனவே, இந்நூல் ஒருவர் (மோசே) எழுதியது அல்ல பல நூற்றாண்டுகளில் எழுந்த மரபுகளின் தொகுப்பே "ஐந்நூல்".

4.2.'யாவே' மரபு
இம்மரபு தொடக்க நூல், விடுதலைப் பயணநூல், எண்ணிக்கை நூல் (10-ம் பிரிவு முதல்) ஆகியவைகளில் காணப்படுகின்றன. லேவியர் நூலிலும் இணைச்சட்ட நூலிலும் காணப்படுவதில்லை. இருப்பினும்இணைச்சட்டத்தின் இறுதிப்பகுதி (இச 34:1-4, 10-12) இம்மரபைச்சார்ந்தது.

சிறப்பியல்புகள்:
1) கடவுளை'யாவே' என்று அழைக்கின்றார்.
2) நிகழ்ச்சிகளை வர்ணிப்பதிலே கைதேர்ந்தவர். கதாபாத்திரங்களையும் அவர்களின் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில்வல்லுநர். கவனத்தை ஈர்க்க வல்லவர். உளநூல் தத்துவங்களைகதைமூலம் விளக்குபவர் (வாசிக்க. தொநூ 3:1-25).
3) இறைவனின் செயலை மனித உருவக மொழியில்விளக்குகின்றார் (தொநூ 2:7-12:1-25).
4) மூதாதையரின் வழிபாட்டுத் தலங்கள் (செக்கேம், பெத்தேல்,எபிரோன், பெயர்செபா), அவர்கள் செழ்த பயணங்கள் இவைகளைச்சிறப்பாக விவரிக்கின்றார் (தொநூ 12:6-8; 13:4,18; 26:25; 35:14).
5) இடங்கள், ஆட்கள் இவர்களின் பெயர்களின் காரணத்தைவிளக்கு கின்றார்.தொநூ 2:23- பெண்தொநூ 28:19- பெத்தேல்ஆட்களின் பெயரும் பணியும்: தொநூ 27:33 பெயர்செபாதொநூ 32:29 - யாக்கோபு, இஸ்ரயேல்
6) விறுவிறுப்பான, கவர்ச்சியான, தெளிவான நடையில்கருத்துக்களை விளக்குகின்றார்.

இறையியல்:
1) இஸ்ரயேல் மக்களின் வரலாறு - உலக மக்களின் மீட்பின்வரலாறு (தொநூ 12:1-3).
2) மீட்பு என்பது இறைவனின் செயல் - அவர் சொல் தவறாதவர்.ஆபிரகாம் ஒரு நாடோடி. ஆண்டவர் அவருக்கு ஒரு நாட்டைக் கொடுத்தார்(தொநூ 15:7).
3) தொடக்க நிகழ்ச்சிகள் - மீட்பின் நிகழ்ச்சிகள். மீட்பு என்பதுமனிதன் இறைவனோடு இணைந்திருத்தல் (தொநூ 2:16-19)இறைவனோடு இணைந்த நிலை நீங்கி வாழ்வதே சாவு. பாவப் பெருக்கம்(தொநூ 4:1- 6 காயின் 6:1-8 மனித பாவம், 11:1-9 பாபேல் கோபுரம்)இப்பகுதிகளில் காணலாம்.
4) வாக்குறுதியும் நம்பிக்கையும் அடிப்படைக் கருத்துக்களாகும்(தொநூ 3:15; 4:1; 8:15-22).5) யூதா வழிமரபிற்குத் தனி இடம் அளிக்கின்றது- யாக்கோபின் ஆசீர் (தொநூ 49:10)- பிலயாமின் ஆசீர் (எண் 24:5-7).இடம்: தென்னாடு - யூதாகாலம்: கி. மு. 10-ஆம் நூற்றாண்டு

4.3. ஏலோகிம் மரபு:
தொடக்க நூலில் முதல் 11 அதிகாரங்களுக்குப் பிறகேகாணப்படுகின்றது. விடுதலைப் பயண நூலின் பெரும் பகுதியிலும்லேவியர் நூலிலும் காணப்படுவதில்லை. எண்ணிக்கை நூலிலும்இணைச்சட்ட நூலிலும் ஒரு சில பகுதிகளில் காணப்படுகின்றது.

சிறப்பியல்புகள்:
1) இறைவனை "ஏலோகிம்" என்று அழைக்கின்றது.
2) இறைவன் எல்லாவற்றையும் கடந்தவர். எனவே அவர்நேரடியாக யாரிடமும் பேசுவதில்லை. கனவின் வழியாகவோ அல்லதுவானதூதர் வழியாகவோ பேசுகின்றார் (தொநூ 15:1; 20:3,6; 21:17; 22:11,15; 28:12; விப 19:11).
3) வடநாட்டு வழிபாட்டுத் தலங்களுக்கு முக்கியத்துவம்அளிக்கின்றது (சிக்கேம், பெத்தேல், சீலோ) வடநாட்டு வழிபாட்டுக்குலங்களுக்கும் முக்கியத்துவம் வழங்குகின்றது (யோசேப்பு - தொநூ47:31).
4) விறுவிறுப்பான நடை காணப்படுவதில்லை. இறையியல்கருத்தும் ஒழுக்க நெறிக் கருத்தும் மிகுந்து காணப்படுகின்றது(விப 20:1-17).

"மோசே" எதற்கு ஆசிரியர்?
ஐந்நூலை மோசே தன் கைப்பட எழுதாவிட்டாலும் ஐநூலுக்குவித்திட்டார் என்று கூறலாம். அதிலுள்ள வரலாற்றுப் பகுதிகள் மற்றும்சட்டப் பகுதிகளின் கருப்பொருளுக்கு அவர் காரணமாயிருக்க வேண்டும். இவற்றை வாழ்மொழியாக மக்கள் தங்கள் தலைமுறையினருக்குத்தந்திருக்க வேண்டும். பின்பு அவர் தந்த மரபையும் சட்டங்களையும் மக்கள்சிந்தித்து அவற்றின் அடிப்படையில் விளக்கவுரைகளும் அவர் பெயரால்உருவாக்கியிருக்க வேண்டும். எனவே, மரபுகளும் சட்டங்களும்நாளடைவில் விளக்கம் பெற்றன. எனவே "மோசே" தான் இந்தஐந்நூலின் ஆசிரியர் என்று அழைத்தனர்.

1) சீனாழ் மலையை "ஓரேப்" என்றும் இரகுவேலை "இத்திரோ"என்றும் இம்மரபு அழைக்கின்றது.
2) இறைவாக்கினருக்குச் சிறப்பிடம் அளிக்கப்படுகின்றது.ஆபிரகாம் (தொநூ 20:7) மிரியம், மோசே (விப 15:20).

இறையியல்:
1) சீனாழ் மலையில் இறைவன் தன்னை மீட்பராகவும், பூவுலகைஆண்டு நடத்துபவராகவும் வெளிப்படுத்தினார்.
2) மீட்பு என்பது பாவத்திலிருந்து விடுதலை பெறுவதாகும்(தொநூ 15:20).
3) உடன்படிக்கைக்கும் வாழ்விற்கும் நெருங்கிய தொடர்புள்ளது.உடன்படிக்கையை வாழ்வில் காட்டுவது இன்றியமையாதது. வாழ்வு பெறஉடன்படிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் (விப 19:5-6).
4) குருட்டு நம்பிக்கையையும், சாத்திரத்தையும் வெறுத்துப்பேசுகின்றார் (தொநூ 31:18; 35:2). பொற்கன்று வழிபாடு - பாவம்(விப 32).இடம்: வடநாடு - இஸ்ரயேல்காலம்: 9-ஆம் நூற்றாண்டு

4.4. இணைச்சட்ட நூல் மரபு:
காணப்படும் பகுதிகள்தொடக்க நூலிலும், லேவியர் நூலிலும் எண்ணிக்கை நூலிலும்இம்மரபு காணப்படுவதில்லை. விடுதலைப் பயண நூலில் ஒரு சிலபகுதிகளிலும் இணைச்சட்ட நூலில் பெரும் பகுதியிலும் இம்மரபுகாணப்படுகின்றது.

சிறப்பியல்புகள்:
1) மறையுரையாளரின் நடை காணப்படுகின்றது. கருத்துக்கள்மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது. (இச 6:5,7-9, 10-12; 11:1). இந்தமரபுப் பகுதிகள் திருவழிபாட்டில் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் (இச4:1; 6:4; 9:1).
2) ஒரு சில சொற்றொடர்கள் இணைச்சட்ட நூல் மொழி நடைக்குச்சான்றுகளாக உள்ளன. இந்த மொழிநடை பரவலாகக் காணப்படுகிறது.- வலிய கரம், ஓங்கிய புயம் ( 4:34; 5:15; 7;19)- உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் (4:40; 15:7)- அடிமைத்தன வீட்டினின்று (6:12; 7:8; 9:14)- தூய மக்களினம் (7:6; 14:2, 21; 26:18)- தம் பெயர் விளங்க ( 12:5; 14:23; 16:2)- ஆண்டவரிடம் அன்பு (6:51; 7:9; 10:12; 11:1)- இறைவனுக்கு ஏற்புடையதைச் செழ் (4:25; 9:18; 12:25;13:19; 17:2).
3) சொல்வளம் இந்த மரபில் காணப்படுகிறது (இச 7:6-11).4) கட்டளைகளைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது.

இறையியல்:
1) தெரிந்தெடுத்தல்:இஸ்ரயேலைத் தன் சொந்த மக்களாழ் இறைவன் தெரிந்தெடுத்தார்(இச 4:34). எனவே இஸ்ரயேல் தனது சொந்த உரிமைச் சொத்து (இச7:6-7). இஸ்ரயேல் எப்பொழுது தனது வாழ்வு இறைவனோடு கொண்டஉறவு வாழ்வு என்பதை உணர்ந்து நேர்மையோடு வாழ்கின்றதோஅப்பொழுது வாழ்வு பெறுகின்றது.
2) இறையன்புஇறையன்பே இஸ்ரயேலைத் தெரிந்தெடுப்பதற்கும் மீட்பதற்கும்காரணமாகும். தெரிந்தெடுத்தலுக்குக் காரணம் எதுவுமில்லை.அன்புதான் காரணமாக உள்ளது (இச 7:7, 10-15). இறைவனுக்கும்மக்களுக்கும் உள்ள உறவை கணவன் - மனைவி உறவுபோல்இறைவாக்கினர்களான எரேமியாவும் ஓசேயும் சித்தரிக்கின்றார்கள்(எரே2:2-7; ஓசே 2:14-15). ஆனால் இணைச்சட்டமரபு தந்தைக்கும்மகனுக்கும் உள்ள உறவாகச் சித்தரிக்கின்றது (இச 1:31; 8:5; 14:1; 32:8-12).
3) தேர்ந்தெடுத்தலும், நேர்மையும்இஸ்ரயேலுக்கு வாழ்வும், தாழ்வும் உடன்படிக்கைக்கு அதுகொடுக்கும் பதிலிலே அடங்கியுள்ளது (இச 30:19).'யாவே' ஒருவரேகடவுள். மற்ற கடவுள்கள் இல்லை என்பதால்'யாவே'க்குக்காட்டப்படவேண்டிய அன்பு முழுமையாக இருக்க வேண்டும்.

இரு வழிகளில் யாவேக்கு நேர்மையாக வாழலாம்.
அ) மற்ற வழிபாட்டுத் தலங்களை ஒழித்துவிட்டு எருசலேமில்தான்உண்மை வழிபாடு நடத்தப்படவேண்டும் (இச 4:7; 14:23-25; 15:20;16:2,6,7,11,15,16).
ஆ) சட்டங்களை நேர்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும்(இச 10:12-13). வெளிச்சட்டங்களாக மட்டுமல்ல, உள்ளார்ந்த விதமாகஇச்சட்டங்களை அனுசரிக்க வேண்டும் (இச 6:6; 11:18).இடம்: வடநாடு - தென்னாடுகாலம்: 7 -ஆம் நூற்றாண்டு

4.5. குருக்கள் மரபு:
காணப்படும் பகுதிகள்ஐந்நூலில் மிக அதிகமாகக் காணப்படும் மரபு (87 பிரிவுகள்).தொடக்க நூலிலும், விடுதலைப் பயண நூலிலும், எண்ணிக்கை நூலிலும்,லேவியர் நூலிலும், இணைச்சட்ட நூலிலும் குருக்கள் மரபுகாணப்படுகின்றது.

சிறப்பியல்புகள்:
1) இறைவன் எல்லாவற்றையும் கடந்தவர். எனவே அவர் தனது "வார்த்தையால்" உலகை உருவாக்குகின்றார் (தொநூ 1:3-6). உலகம்இறைவனின் ஒரு பாகமன்று, மாறாக, உலகம் வேறு, இறைவன் வேறு.
2) உலகப் படைப்பை 6 நாட்கள் அமைக்கின்றார். பிரித்தல் 3நாட்கள், அணி செழ்தல் 3 நாட்கள் என்று வரம்பு ஒன்று அமைத்து அதில்படைப்பை அடக்கி விடுகின்றார்.
3) படைப்பைப் பற்றிக் கூறியதற்குக் காரணம் வழிபாட்டைவலியுறுத்தவே. எனவே 7-ம் நாள் கடவுள் ஓழ்வு எடுத்துக் கொண்டார்என்று கூறுகின்றார்.
4) குருக்களின் மரபானதால் திருவழிபாடு, திருவிழாக்கள்,வழிமரபினர் பட்டியல், தீட்டு, தூய்மை இவைகளில் கவனம்செலுத்துகின்றனர்.
5) இறைவன் தூயவரானதால் இறைமக்களும் தூய்மையாக வாழதூய்மைச் சட்டங்கள் பல பரவியிருக்கின்றன.

இறையியல்:
1). இறை உடன் உறைவு: குருக்கள் மரபு, மீட்பின் வரலாற்றை 4 பாகங்களாகப் பிரிக்கின்றது.
அ) படைப்பு ஆ) நோவாவின் காலம் இ) ஆபிரகாமின் காலம் ஈ)மோசேயின் காலம். எனவே இதற்கு முன் வழிமரபினர் பட்டியல்கொடுக்கப்படுகின்றது. இந்த முக்கியக் கட்டங்களில் இறைவன் உடன்உறைவதைக் காணலாம். ஆதாம் (தொநூ 1:26-39) நோவா (தொநூ 9:8)ஆபிரகாம் (தொநூ 17:2), மோசே (விப 25:15அ-18ஆ, 25-31, 35-40).
2). இஸ்ரயேல் மக்களின் தனித்தன்மை: குருக்கள் மரபு இஸ்ரயேல் மக்களின் இருண்ட காலத்தில்உருவானது. அவர்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த காலத்தில்எழுதப்பட்டது. அவர்கள் தங்கள் அரசரை இழந்தார்கள். நாட்டையும்எருசலேம் கோவிலையும் இழந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் தங்கள்தனித்தன்மையைக்காக்க "சாபாத்" - ஓழ்வு நாளை அனுசரித்தல்,விருத்தசேதனம் செழ்தல் போன்றவைகளை வலியுறுத்தினார்கள் (தொநூ17: 10; லேவி 12:3; விப 31:12-17; 35:1-3).
3). நம்பிக்கையூட்டல்: வாக்களிக்கப்பட்ட நாட்டைப் பற்றி அதிகம் பேசுகின்றது.ஏனெனில் மக்கள் பாபிலோனி லிருந்;த தங்கள் சொந்த நாட்டிற்குச்செல்ல ஆவலாக இருந்;தார்கள் (தொநூ 17:8; விப 6:4, 8; எண் 27:12).இறைவனுடைய நேர்மை, மனித நேர்மையைச் சார்ந்தது அல்ல.இறைவன் என்றும் நேர்மையா னவர்; எனவே மனந்திரும்பி வாருங்கள்என்று அழைப்பு விடுக்கின்றார் (தொநூ 17:7-8).இடம்: பாபிலோன் (?)காலம்: 6-ஆம் நூற்றாண்டு.

 

5. வளமுடைப் பிறை நாடுகள்

தொன்மையான நாகரீகங்கள் பொதுவாக ஆற்றங்கரைப்பகுதிகளில் தோன்றின என்பது வரலாறு. மத்திய கிழக்கு நாடுகளில்தோன்றிய தொன்மையான கலாச்சாரங்கள் நைல் நதிக்கரையிலும்,யூப்பிரத்தீசு, திக்ரீசு நதிக்கரையிலும் தோன்றியன.

5.1. தொன்மையான நாகரீகங்கள்:
தெற்கே நைல் நதிக்கரையில் கி.மு. 3000 அளவில் தோன்றியதுஎகிப்து என்ற நாடு. அதில் பார்வோன் என்ற அரசர்கள் சில காலம்"மெம்பீசு" என்ற இடத்திலும் மற்றும் சில காலம் "தேப்சு" என்றஇடத்திலும், தலைநகர்களை அமைத்து ஆண்டு வந்தனர். அவர்கள்ஆட்சியில் சுமார் கி.மு. 1250-இல் இராம்சேசு ஐஐ - வின் காலத்தில்யூதர்களின் விடுதலைப் பயணம் நிகழ்ந்திருக்க வேண்டும் எனக்கருதப்படுகின்றது.வடக்கே சிறிய ஆசியாவில் கி.மு. 1500 அளவில், ஏத்தையர்கள்பேரரசை ஏற்படுத்தினர். அவர்கள் வலிமை வாழ்ந்தவர்களாக இருந்தனர்.கிழக்கே யூப்ரத்தீசு, திக்ரீசு பள்ளத்தாக்கில் பல நாகரீகங்கள் ஒரேசமயத்தில் செழித்து வளர்ந்தன. அவை சுமேரியா, அக்காதியா,பாபிலோனியா அசீரியா போன்றவைகளாகும். மேலும் கிழக்கில் பெர்சியா,மேதியா போன்ற நாடுகளும் செழித்து வளர்ந்தன. இந்த நாடுகள்தற்போது ஈராக்கிலும், ஈரானிலும் உள்ளன.மேற்கிலிருந்து பிற்காலத்தில் படையெடுத்து வந்தவர்கள்:கிரேக்கர்கள் (கி.மு. 3-ஆம் நூற்றாண்டில்) உரோமையர்கள் (கி.மு. 63,கி.பி. 70).மேற்கிலிருந்த மற்ற பெரிய நாடுகளான ஏத்தையர்கள், அசீரியர்கள், பாபிலோனியர்கள் போன்றவரும் ஒத்துப் போனதில்லை.ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். எகிப்து என்றவல்லரசுக்கும் அசீரிய, பாபிலோனிய வல்லரசுக்குமிடையே பகைஇருந்தது. அரேபிய பாலைவனம் அசீரியர்களும் பாபிலோனியர்களும்எகிப்தியர்களும் நேரிடையாக மற்றவர்கள் நாட்டிற்குச் செல்லத் தடையாகஇருந்தது. இவர்கள் எப்பொழுதும் பாலஸ்தீனம் வழியாகத்தான் மற்றநாட்டை அடைந்தார்கள். பாலஸ்தீனம் வழியாகத் தான் படைகள்சென்றன. ஆசியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் பாலஸ்தீனம்வழியாகத்தான் வாணிபமும் நடைபெற்றது. இரு வல்லரசுகளுக்கும்இடையே சண்டைகளும் இங்குதான் நடைபெற்றன. எனவேஇச்சண்டைகளில் பாலஸ்தீனம் ஏதாவது ஒரு வல்லரசோடு இணைந்திருந்தது. போரில் வெற்றி பெற்ற வல்லரசு பாலஸ்தீனத்தில்தன் ஆட்சியை நிறுவியது. கப்பங்கட்டச் சொன்னது. இதை நாம்விவிலியத்திலிருந்து அறிகிறோம்.

5.2. கானான் நாடு:
"கானான்" என்ற சொல் விவிலியத்திலும் விவிலியமல்லாத மற்றஏடுகளிலும் ஒரு நாட்டையோ அல்லது மக்களையோ குறிக்கும்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. இதன் நீளம் 150 மைல்கள். அகலம்வடக்கில் 30 மைல்களும் தெற்கில் 50 மைல்களும் ஆகும். இதை 5பகுதிகளாகப் பிரிக்கலாம். 1) கடற்கரையும், கடற்கரைச் சமவெளிப்பகுதிகளும் 2) மத்தியில் உள்ள மலையும், மலையைச் சார்ந்த பகுதிகளும்3) சாக்கடலுக்கருகிலும், அதற்குத் தெற்கிலும் உள்ள வறண்ட பாலைநிலமும் 4) யோர்தான் நதியும், அதன் சமவெளிப்பகுதிகளும் 5)செழுமையும், வறட்சியும் கொண்ட யோர்தானுக்கு அக்கரைப் பகுதிகள்.

அந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் கனா(னை)னியர் என்றுஅழைக்கப்பட்டார்கள். கி.மு. 12-ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்தகோத்திரங்கள் இணைக்கப்பெற்றன. ஒருங்கிணைந்த நாட்டுக்கு தாவீதுஅரசர் ஆனார். தாவீதுக்குப் பின் அவர் மகன் சாலமோன் பேரரசைநிறுவினார். சாலமோனுக்குப் பிறகு அரசு பிளவுபட்டது. தென்னாடு யூதாஎன்றும், வடநாடு இஸ்ரயேல் என்றும் அழைக்கப்பட்டது.தென்னாட்டிற்குத் தலைநகராக எருசலேமும், வடநாட்டுத் தலைநகராகசமாரியாவும் விளங்கின.மேலும், 12-ஆம் நூற்றாண்டில் பெலிஸ்தியர் என்பவர்கள் கிரேக்கநாட்டிற்கு அருகிலிருக்கும் எசியன் தீவுகளிலிருந்து புறப்பட்டு கானானின்தெற்குப் பகுதியில் கடற்கரை ஓரமாகக் குடியேறினார்கள். அவர்களுக்குப்பின் அங்கு குடியேறிய கிரேக்கர்கள் கானானை பாலஸ்தீனம் என்றுஅழைத்தார்கள்.கானானுக்கு வடக்கே வலிமையுடைய ஒரு சிற்றரசு இருந்தது.இதன் பெயர் சிரியா. இதன் தலைநகர் தமாஸ்கு ஆகும்.இவ்வாறு பாலஸ்தீனத்தைப் பல நாடுகள் சூழ்ந்து இருந்ததால்அதன் வரலாறு மற்ற நாடுகளின் வரலாற்றோடும், கலாச்சாரத்தோடும்,பண்பாட்டோடும், வழிபாட்டோடும் தொடர்புள்ளதாக விளங்கியதைவிவிலியத்திலிருந்து அறிகிறோம்.

 

6. பழைய ஏற்பாடும் - பிற சமயஇலக்கியங்களும்

இஸ்ரயேல் மக்கள் தங்களைச் சூழ்ந்த பிற சமயத்தைச் சார்ந்தமக்களோடு என்றும் தொடர்பு கொண்டிருந்தனர். அவர்களின்இலக்கியங்களையும் அறிந்திருந்தனர். "இலக்கியம்" என்பது ஒரு நாட்டின்அமைப்பு, மக்களின் பண்பாடு இவைகளைப் படம்பிடித்துக் காட்டும்கண்ணாடி.

6.1. மித் என்றால் என்ன?
"மித்தோசு" என்ற கிரேக்கச் சொல்லை ஆங்கிலத்தில் மித் (ஆலவா)என்றும் தமிழில் புராணம் என்றும் மொழிபெயர்க்கின்றோம். இம்மொழிபெயர்ப்புகள் கிரேக்கச்சொல்லின் ஆழ்ந்த கருத்தை வெளிப்படுத்துவதுஇல்லை. எனவே இதை கட்டுக்கதை என்று வெறுத்து ஒதுக்கிவிடுகின்றோம். ஆனால் "மித்தோசு" என்பது பகுத்தறிவால் ஆராழ்ந்துவிளக்கம் கூற இயலாத ஒருசில அடிப்படை உண்மைகளை விளக்கஎழுந்த காட்சிக் கதைகள் ஆகும். கடவுளர்களையும், முந்தைய சிறந்தமனிதர்களையும் கதாபாத்திரங் களாகக் கொண்டு "மித்தோசு"எழுதப்பட்டுள்ளன. இந்த உலகம் எங்கிருந்து வந்தது? எதற்காக மனிதன்இவ்வுலகில் வாழ்கிறான்? இவ்வுலகில் துன்பமும் சாவும் ஏன்?ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறவில் கவர்ச்சி ஏன்? கடவுளுக்கும்மனிதனுக்கும் என்ன தொடர்பு? இவை போன்ற அடிப்படைக்கேள்விகளுக்கு விடை காண எழுந்தவை. இன்று இந்த கேள்விகளுக்குவிடை காணப் பல மறை நூல்களும், உளவியல் நூல்களும் (Pளலஉhழடழபiஉயட) மானிட இயல் (யுவொசழிழடழபiஉயட) நூல்களும் எழுந்துள்ளன. ஆதிகாலத்தில் இத்தகைய நூல்களுக்கு பதிலாக "மித்தோசு" கதை வடிவாகவிளக்கம் கூறியது.

மனிதன் தனது விருப்பங்களை இவ்வுலகில் நிறைவேற்றஇயலாது துடிக்கின்றான். ஒரு சில பண்புகளும் கொள்கைகளும்இவ்வுலகில் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். அவைகளைஇவ்வுலகில் காணாது மறு உலகில் காண விரும்புகின்றான். இதை ஒருகதையாக வடிக்கின்றான். கடவுளர்களை கதாபாத்திரங்களாகவைக்கின்றான். எனவே இந்தக் கடவுளர்களின் வரலாறு, மனிதவரலாற்றின் பிரதிபலிப்புதான். அவனது ஏக்கங்களையும்,ஆவல்களையும் அதிலே அவன் காண்கின்றான். "மித்தோசு" மனிதஏக்கங்களின் முதல் பிரதிபலிப்புகளாகும் (எ.கா. இராமாயணம்).சில வேளைகளில் நல்ல உளவியல் புதினங்களைவாசிக்கின்றோம் (Pளலஉhழடழபiஉயட ழேஎநடள). அதில் தோன்றும்கதாபாத்திரங்கள் அனைவரும் ஆசிரியரின் அனுபவத்தின் படைப்புகள்ஆகும். இந்த கதாபாத்திரங்களிலே ஒரு சிலரோடு நம் வாழ்வும்ஒத்திருப்பதைக் காண்கின்றோம். அவர்கள் படும் வேதனை அல்லதுஅவர்களால் மற்றவர்கள் படும் வேதனை சுட்டிக்காட்டப்படுகின்றது.இவை நமக்கு ஒரு பாடமாக அமைகின்றது. எனவே "மித்தோசு" என்பதுமனிதனின் அடிப்படைக் கேள்விகளையும் உணர்வுகளையும்படம்பிடித்துக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றது.

விவிலிய ஆசிரியர் தன் சூழ்நிலையில் நிலவிய புராணக்கதைகளின் இலக்கியங்களைப் பயன்படுத்துகிறார். யாவேயின் மீதுகொண்ட நம்பிக்கையை மற்றவர்களுக்குப் புரியும் வண்ணம்விளக்குகின்றார். நம்பிக்கை உணர்விற்கு ஏற்ப கருத்துக்களை இக்கதைகளின் உருவங்களில் பயன்படுத்துகின்றார். சில கருத்துக்களைஉதறித்தள்ளி புதுக்கருத்துக்களைப் பயன்படுத்துகின்றார்.விவிலியத்திற்குத் தொடர்புள்ள புராணக் கதைகளை (ஆலவாள) இனிபார்ப்போம்.

6.2. எகிப்திய இலக்கியங்கள்:
எகிப்து மக்களின் இலக்கியம் அந்நாட்டின் நில அமைப்புக்கு ஏற்பஅமைந்துள்ளது. எகிப்திய மக்கள் கதிரவன் ஒளி மிகுந்த நாட்டில்வாழ்ந்து வந்தனர். அவர்கள் கதிரவன் உதிப்பதையும் மறைவதையும்பார்த்திருந்தனர். கதிரவன் உதிப்பதைக் கண்டவுடன் மானிடன்மகிழ்வுற்றான்; மறைவதைக் கண்டவுடன் வருத்தப்பட்டான். கதிரவனின்ஒளியை விரும்பினான். கதிரவனைக் கடவுளாகக் கருதி, பல பெயர்கள்இட்டு வழிபட்டான். கி.மு. 1350-இல் எகிப்தில் வாழ்ந்த பார்வோன் "அக்கனாட்டோன்" கதிரவக் கடவுளைப் புகழ்ந்து வழிபட இயற்றிய பாடல்பின்வருமாறு.

"அடி வானின் உதயத்தில்அழகுக் கதிர் பரப்பி நின்றாய்.
உயிரோட்ட ஒளி வட்டமேவாழ்வின் அகரமே
கீழ்வானில் நீ எழுந்தபோதுஉனது ஒளிக் கரத்தால்
இவ்வுலகை அருள்பொழிவு செய்தாய்.
மேல்வானில் நீ துயின்றபோதோ,
இவ்வுலகம் இருள்போர்வையைபோர்த்திக் கொண்டது.
இவ்வுலகில் மௌனம் ஆட்சி புரிகின்றது.
படைத்தவனுக்கோ அதுஅடிவானில் அயர்ந்துள்ளது.
உன்அடிவானத் தோற்றத்திலே இவ்வுலகு ஒளி (உயிர்) பெற்றது.
ஒளிப் பிழம்பாழ் பகலில் ஒளிர்பவனேஉன் ஒளி கண்டு மனிதன் விழித்தெழுகின்றான்.
உன் புதுப்பிறப்பால் அவன் கரங்கள்உனை வழிபட இணைகின்றன.
உன்னால் உயிர்பெற்று ஒளிபெற்றஇவ்வுலகம் பணி செழ்யச் செல்கிறது.
விலங்கினத்திற்குப் பசி அடங்கியதால்நிறைகின்றது மனதில் நிறைவுணர்வு.
செடி கொடிகள் பசுமை சிரிப்பை உதிர்க்கின்றன.
புல்லினங்களின் பசுமையான இராகங்கள்உம்மைப் புகழ்ந்தேத்த எழுகின்றன.
உம்மை வழிபடச் சிறகு விரித்துப் பறக்கின்றன.மாந்தரை இவ்வுலகில் படைத்தீர்.
இவ்விரண்டையும் உமக்காய்ப் படைத்தீர்.
அனைத்தையும் ஆள்கின்றீர்.எழுந்தருளும் ஆண்டவா!
என் நெஞ்சத்தில் வீற்றிருக்கும் நாயகா.

திபா 104 எழுதிய ஆசிரியர் இந்தக் கதிரவப் பாடலோடு தொடர்புகொண்டிருக்க வேண்டும் என கருதப்படுகின்றது. எகிப்தில் பாயும் நைல்நதி, நாட்டில் சமவெளிப்பகுதியில் வண்டலை வாரி வழங்கியது.தண்ணீரைத் தாராளமாகக் கொடுத்தது. இதனால் அவர்களின் உணர்வு,நம்பிக்கையின் உணர்வாக இருந்தது (ழுpவஅளைவiஉ). கடவுளர்களைநல்லவர்களாகக் கருதினர். அவர்களை மக்களுக்கு நன்மைசெழ்பவர்களாகவும், காப்பவர்களாகவும் கருதினர். எனவே, சாவிற்குப்பிறகு மறுவாழ்வு உண்டு என்பதை நம்பினர்.

உலக படைப்பைப் பற்றி எகிப்திய "பப்பிரசு" (கி.மு. 1100-950)கூறுவது பின் வருமாறு: 'நுட்' என்ற வானக் கடவுளும் "கெப்" என்றபூமியின் கடவுளும் இணைந்திருந்தனர். இவர்களை "சூ" என்ற காற்றின்கடவுள் பிரித்து பூமியையும் வானத்தையும் படைத்தார் என்றுகூறப்படுகின்றது. இதற்கும் தொடக்கநூல் முதல் அதிகாரத்திற்கும் சிறிதுதொடர்பு இருப்பதைக் காணலாம்.

6.3. மெசப்பத்தோமிய இலக்கியங்கள்:
மெசப்பதோமியாவில் வாழ்ந்தவர்கள் பள்ளத்தாக்குப் பகுதியில்வாழ்ந்து வந்தனர். அங்கு அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுண்டு.மேலும் நாடோடி மக்கள் அரேபியப் பாலைவனத்திலிருந்தும், ஈரானின்சமவெளிப் பகுதிகளிலிருந்தும் வந்து கொள்ளையிட்டுச் செல்வதுவழக்கம். எனவே மெசப்பத் தோமிய இலக்கியத்தில் நம்பிக்கையற்றநிலை (ஞநளளiஅளைவiஉ) மேலோங்கியிருப்பதைக் காணலாம்.

மெசப்பத்தோமியக் கடவுளர்கள் சாதாரணமாக மனம் போனபோக்கில் நடப்பவர்கள் (ஊயிசiஉழைரள) என்றும், ஒருவரோடு ஒருவர்சண்டையிடுபவர்கள் என்றும் எண்ணி, கடவுளர்களின் சண்டையினால்ஏற்படும் கோப விளைவிற்குப் பயந்து வாழ்ந்தான் மானிடன். மறுவுலகம்என்பது மகிழ்வுற்றதாகவும், அங்கே இறந்தவர்கள் ஒன்றுகூடியிருப்பதாகவும் கருதினர்.

"எனுமா எலிஸ்"
1) உலக படைப்புஇப்புராணம் மிகப் பழமை வாழ்ந்தது. ஆனால் நமக்குக்கிடைத்திருக்கும் படிகள் கி.மு. 1100 அளவில் எழுதப்பட்டதாகக்கருதப்படுகின்றது. தொடக்கத்தில் "அட்சு" என்ற ஆண் கடவுளும் "தியமாத்" என்ற பெண் கடவுளும் இருந்தனர். இவர்கள் இருவரும் நல்லதண்ணீராலும் உப்பு நீராலும் கழுவப்பட்டனர். இவர்கள் இருவரும்இணைவதால் மற்ற குட்டிக் கடவுளர்கள் தோன்றினர். குட்டிக்கடவுளர்கள் "அட்சு"வின் தூக்கத்தைக் கலைத்ததால் அவர்களைக்கொல்ல முடிவு செழ்தது. தங்கள் சகாக்களைக் காப்பாற்ற "ஓயா" என்றகுட்டிக் கடவுள் முன்வந்தது. "ஓயா" "அட்சு"வைக் கொன்று, அதன்மனைவியோடு கூடி "மார்தூக்" என்ற கடவுளைப் பெற்றெடுத்தது. தன்கணவனை இழந்த "தியமாத்" குட்டி கடவுளர்களைக் கொல்ல முயற்சிசெழ்தது. குட்டி கடவுளர்கள் மார்துக்கிடம் பரிந்து கேட்டதனால் "மார்துக்"தியமாத்தைக் கொன்று உடலை இரண்டு பகுதிகாளகப் பிரித்து, மேல்பகுதியை வானமாகவும், கிழ்ப்பகுதியை நிலமாகவும் உண்டாக்கியது.கடவுளர்களுக்கு வானத்தில் பல இடங்களை அமைத்துக்கொடுத்து,கதிரவனையும் விண்மீன்களையும் தோற்றுவித்து காலங்களையும்ஆண்டையும், மாதங்களையும், நாளையும் ஒழுங்குப்படுத்தியது.தியமாத்தோடு இணைந்து தன்னோடு போரிட்ட மற்ற குட்டி கடவுளர்களைஇவ்வுலகில் அடிமை வேலை செழ்யக் கட்டளையிட்டது.

இவ்வுலகம் எப்படித் தோன்றியது என்று கூற எழுந்தது அல்லஇப்புராணம். மாறாக "மார்துக்" கடவுளைப் புகழ்ந்து பாட பாபிலோனியக்குருக்களால் இயற்றப்பட்டது. (இது புத்தாண்டின் 4 வது நாளில்பாபிலோனில் பாடப்பட்டது). மார்துக் கடவுள் பாபிலோனுக்குவெற்றியைக் கொணர்ந்தார். மார்துக் தியமாத்தின் மீது வெற்றியைக்கொண்டதால் எல்லாக் கடவுளர்களுக்கும் மேலான கடவுளாகவிளங்குகின்றார். எனவே அவரைப் போற்றிப் புகழ்வது தகுமே.மார்துக்கைப் போற்றிப் புகழும் பாடலில் மார்துக் மற்ற கடவுளரிலும்ஆற்றல் மிக்கவர் என்பதும் இவ்வுலகத்தை உருவாக்கியவர் என்பதும்கூறப்படுகிறது.

தொடக்க நூலில்: இதேபோன்று தொடக்க நூல் முதல் பிரிவு, கடவுள் எப்படிஇவ்வுலகை உண்டாக்கினார் என்பதைக் கூற எழுதப்பட்டது அல்ல.மாறாக'யாவே'யைப் போற்றிப் புகழ்வதன் காரணத்தைக் கூற எழுந்தது.அவர் மீட்பின் ஆண்டவர்; அவர் வரலாற்றில் செழ்த மீட்பை நினைவுகூறவும், தங்கள் வாழ்வில் தொடர்ந்து மீட்புச் செயலைச்செழ்யக்கூடியவர் என்ற நம்பிக்கையை உருவாக்கவும் எழுந்ததாகும்.எனவேதான் படைப்பும் மீட்பின் கண்ணோட்டத்திலேஎழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

எனுமா எலிஸ் தொடக்க நூல்
1)இரு கடவுளர்கள் (ஆண் ரூயஅp; பெண்) தொடக்கமுதல் இருக்கின்றார்கள 1) கடவுள் ஒருவர்தான் தொடக்க முதல்இருக்கின்றார் (தொநூ 1:2)
2) "தியமாத்" நீர்த்திரளின் அடியில் உள்ளஇருளில் இருந்தது. 2) மண்ணுலகு உருவம் அற்றதாகவும்வெறுமையாகவும் இருந்தது (தொநூ 1:2)
3) கடவுளரிடமிருந்தே ஒளி வெளிப்பட்டது. 3) ஒளியைக் கடவுள் ஒரு வார்த்தையால்படைத்தார் (தொநூ 1:3).
4) தியமாத்தினுடைய உடலில் மேல் பகுதிவானமாக உருவாக்கப் பட்டது. 4) வானத்தைக் கடவுள் ஒரு வார்த்தையால்படைத்தார் (தொநூ 1:6)
5) தியமாத்தினுடைய உடலின் கீழ் பகுதிமண்ணுலகமாக உருவாக்கப் பட்டது. 5) மண்ணுலகைக் கடவுள் ஒரு வார்த்தையால்படைத்தார் (தொநூ 1:9).

 

2) மானிடப் படைப்பு
மார்துக், தியமாத்தோடு இணைந்து போரிட்ட குட்டிக்கடவுளர்களை அடிமை வேலைசெழ்யப் பணித்தார். இந்தக் குட்டிக்கடவுளர்களால் அடிமை வேலைசெழ்ய இயலாததால், மார்துக்கைப்பார்த்துத் தங்களை அடிமை வேலை செழ்வதிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே தியமாத்திற்கு உதவிசெழ்த "கிங்கு" என்ற பூதத்தைக் கிழித்து அதன் இரத்தத்தையும்,களிமண்ணையும் சேர்த்துப் பிசைந்து மனிதனைப் படைத்தார்.அம்மனிதர்கள் மீது அடிமை வேலையைச் சுமத்திவிட்டுக் குட்டிக்கடவுளர்களை அடிமை வேலையிலிருந்து விடுவித்தார். 300கடவுளர்களை விண்ணகத்திற்கும், 300 கடவுளர்களைமண்ணுலகத்திற்கும் அனுப்பி அவர்களுக்கு வேலையை நிர்ணயித்தார்.இந்தக் கடவுளர்கள் மார்துக்குக்கு நன்றி செலுத்தும் வண்ணம்பாபிலோனில் மார்துக்குக்கு கோவில் ஒன்றைக் கட்டி, அதில்மார்துக்கைப் புகழ்ந்துப்பாடி, மகிழ்வுடன் நன்றி கூறி விருந்தாடினர்,இதேப்போன்று மக்கள் யாவரும் மார்துக்கின் 50 புகழ்ப் பெயர்களையும்பயன்படுத்தி அவரைப் புகழந்து பாடினால் அனைவரும் நலமுடன்வாழ்வார்கள் என்று இப்புராணம் கூறுகின்றது.

எனுமா எலிஸ் தொடக்க நூல்
1) மனிதனைப் படைத்தது அடிமைவேலைக்கு 1) மனிதனைப் படைத்தது இவ்வுலகிற்குஅரசராக (தொநூ 1:28)
2) மனிதனைப் படைத்த விதம்:களிமண்ணோடு "கிங்கு"வின்இரத்தம் சேர்க்கப்பட்டது. 2) மனிதனைப் படைத்த விதம்: களி மண்ணில் ஆவியானவர் ஊதப்பட்டார்(தொநூ 2:7)
3) கடவுளர்கள் மகிழ்ந்து கொண்டாடினார்கள் 3)கடவுள் ஓழ்வு எடுத்துக் கொண்டார், நாளைபுனிதப் படுத்தினார் (தொநூ 2:2-3).

 

கில்கமேஷ்
மெசப்பத்தோமியாவில் வழங்கி வந்த புராணங்களில் மிகச்சிறப்புடையது "கில்கமேஷ்" என்பதாகும். இது சுமேரிய மக்களிடம்தோன்றியது. பின்பு இது அசீரிய, பாபிலோனிய மக்களிடம் விரிவாக்கப்பட்டது. பாலஸ்தீனாவில் மீண்டும் பிரதியெடுக்கப்பட்டது.கில்கமேஷ் என்பவன் சுமார் கி.மு. 3000 ஆண்டில் "ஊருக்கு"என்ற ஊரில் சிறந்து விளங்கினான். அவனது அறிவையும்,ஞானத்தையும் புகழ்ந்துரைக்கும் காவியமாக "கில்கமேஷ்"விளங்குகின்றது.

"கில்கமேஷ்" என்பவனின் ஞானத்தையும், அறிவையும் கண்டு, "இஸ்தார்" என்ற பெண் கடவுள் அவனை மணந்துகொள்ளவிரும்பினாள். ஆனால் கில்கமேஷ் அதற்கு உடன்படவில்லை. எனவேகோபம் அடைந்த இஸ்தார், விண்ணக காளையைச் சண்டையிடஅனுப்பினாள். விண்ணகக் காளையை "என் இடு" என்ற தனதுநண்பனின் உதவியினால் கில்கமேஷ் கொன்றான். எனவே, கடவுளர்கள்கோபமடைந்து கில்கமேஷையும், "என் இடு" வையும் கொல்லத்திட்டமிட்டார்கள். திடீரென்று "என் இடு" இறந்து விடுகின்றான். இதனால்வருத்தமடைந்த கில்கமேஷ் என்றும் நிலைப்பெற்றிருக்கும் வாழ்வின்இரகசியத்தை அறிய முற்பட்டான். பாபிலோனில் ஏற்பட்ட வெள்ளத்தில்தப்பியவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் "உட்னா பிஸ்டிம்"அவனிடம் சென்று வாழ்வின் இரகசியத்தைக் கூற வேண்டினான். அவன்கில்கமேஷிடம் "கடலின் அடியில் ஒரு செடி இருக்கிறது. அதை எடுத்துவந்து வயதானபோது உண்டால் இளமை பெறுவாழ். சாவின் பிடியில்அகப்படமாட்டாழ்" என்றான். அப்படியே கில்கமேஷ், அந்தச் செடியைக் கண்டு பிடித்துப் பிடுங்கிக் கொண்டு தன் ஊருக்குச் செல்கின்றான்.வழியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக, கரையில் அந்தச் செடியைவைத்துவிட்டு தண்ணீரில் இறங்கியபோது பாம்பு ஒன்று அந்தச்செடியைத் தின்றுவிட்டது. எனவே கில்கமேஷ் வாழ்வின் உணவைஇழந்துவிட்டான். வருத்தமடைந்த கில்கமேஷ் தன் ஊருக்கு வந்துசேர்ந்தான்.

தொடக்க நூலில்: தொடக்க நூலின் ஆசிரியர் கூறுவது என்ன?கில்கமேஷ் புராணத்திற்கும் தொடக்க நூலுக்கும் சற்று தொடர்புஇருப்பதைக் காணலாம். மனிதனைப் பாவத்தில் விழத்தூண்டியதுபாம்பு. இதனால் வாழ்வு பறிக்கப்பட்டது. மனிதன் சாவு அடைய நேரிட்டதுஎன்று கூறுகின்றார். கில்கமேஷ் புராணத்தில் வாழ்வைப் பறித்தது பாம்புஎன்று சொல்வதற்குக் காரணம் உண்டு. மனித ஆசையைப் பாம்பிற்குஒப்பிடுவது வழக்கம். மனித ஆசைக்கு அளவு இல்லை. அந்த ஆசைபேராசையாக மாறும்போது பாவத்தையும் அழிவையும் தரும் என்றஉண்மையையும் உணர்த்துவதால் அதைப் பாம்பிற்கு ஒப்பிட்டார்கள்.

வெள்ளப் பெருக்கு: வெள்ளப் பெருக்குப் பற்றி பாபிலோனியப்புராணம் ஒன்று உண்டு. இப்புராணம் "கில்கமேஷ்" புராணத்தில் வரும்கிளைக் கதையாகும். "என்வில்" என்ற கடவுள் மனிதன் மீது கோபம்கொண்டு வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தத் திட்டமிட்டது. "என்வில்லின்"கோபத்திற்குக் காரணம் மனிதர்களின் பாவமாகும். என்வில்லின்திட்டத்தை அறிந்த "ஏயா" என்ற கடவுள் "உட்னாபிஸ்டிம்" என்றவனுடையவீட்டின் சுவருக்கு முன் நின்று என்வில்லின் திட்டத்தைப் பற்றிக்கூறியது. அவனை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற ஒரு படகைக் கட்டவும்,அதில் பறவைகள், மிருகங்களைக் கோடி கோடியாகக் கொண்டுசேர்க்கவும் கட்டளையிட்டது. அதன்படியே உட்னாபிஸ்டிம் படகைக் கட்டிமிருகங்களையும், பறவைகளையும் உள்ளே கொண்டு சென்றான். தன்உற்றார் உறவினர்களையும் உள்ளே அழைத்துக்கொண்டான். வெள்ளம்தோன்றி மக்களையும், மிருகங்களையும், பறவைகளையும் அழித்தது.கடவுளர்கள் தங்கள் படைப்பு அழிந்ததைக் குறித்து வருத்தமடைந்து "என்விலை" கழ்;துகொண்டனர். இறுதியாக "என்வில்" வெள்ளத்தைவடியச் செழ்கிறது. "உட்னா பிஸ்டிம்" வெள்ளம் வடிவததைப் பார்க்கபறவைகளை அனுப்பினான். வெள்ளம் வடிந்தபின், என்வில்உட்னாபிஸ்டிமுக்கும் அவன் மனைவிக்கும் முடிவில்லா வாழ்வைஅளித்தது.

கில்கமேஷ் தொடக்க நூல்
1) என்வில் மற்ற கடவுளர்களின் உதவியால்வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. 1)'யாவே' தானாகவே வெள்ளப் பெருக்கைஏற்படுத்தினார் (தொநூ 6:7).
2) நல்லவர்களும், கெட்டவர்களும் வெள்ளத்தால் மடிந்தார்கள் 2) கெட்டவர்கள் எல்லோரும் மடிந்தார்கள். நல்லவரான நோவா மட்டும் தப்பினார்(தொநூ 6:8).
3) "ஏயா" கடவுள் தந்திரமாக வெள்ளப் பெருக்கைஉட்னாபிஸ்டிமிற்கு அறிவித்தது. 3) யாவே நேரடியாக நோவாவிற்கு வெள்ளப்பெருக்கைப் பற்றிக் கூறினார் (தொநூ 6:13).
4) வெள்ளத்தால் மக்களை என்வில் அழிக்கத்திட்டமிட்டது இரகசிய மாக வைக்கப்பட்டது. 4) வெள்ளப் பெருக்கைப் பற்றி இறைவன்வெளிப்படையாக அறிவித்தார் (தொநூ 6:13).
5) வெள்ளம் வழ்;ததை அறிய அனுப்பப்பட்டபறவைகள்- புறா- குருவி- காக்கை 5) வெள்ளம் வழ்;ததை அறிய அனுப்பப்பட்டபறவைகள்- காக்கை (தொநூ 8:5-7)- புறா (8:8-9)- புறா (8:10-11)- புறா (8:12)
6) வெள்ளம் வடிந்து பெட்டகத்தை விட்டுவெளியேறி வந்தபோது பலி ஒப்புக்கொடுத்தான் உட்னா பிஸ்டிம். அந்தப்பலியை உண்ணக் கடவுளர்கள் ஈயைப்போல் மொழ்த்தனர். ஏனெனில் அவர்கள்பசியாய் இருந்தார்கள். 6) நோவா பாவங்களுக்குப் பரிகாரமாகவும்வெள்ளத்திலிருந்து காப்பாற்றியதற்காகநன்றியாகவும் பலியை ஒப்புக்கொடுத்தார்.இறைவன் இதனால் மகிழ்வு அடைந்தார்(தொநூ 6:20-21).

 

6.4. கனானையர் இலக்கியங்கள்
கி.பி. 1929-இல் சிரியாவில் உள்ள "ராச்சாம்ரா" என்றுஅழைக்கப்படுகின்ற இடத்தில் புதைபொருள் ஆராழ்ச்சியாளர்கள் ஒருபழைய நகரைத் தோண்டி எடுத்தார்கள். அந்நகர்தான் தொன்மைவாழ்ந்த "உகரித்" ஆகும். இது கி.மு. 1500-இல் வளமையான நகராகவிளங்கியது.இந்நகர்வாழ் மக்கள் "பா ஆல்" (பாகால்) என்ற ஆண்தெழ்வத்தையும், "அஸ்தரோத்" என்ற பெண் தெழ்வத்தையும்வழிபட்டார்கள் (நீத 2:13). "பா ஆல்" என்றால் தலைவன், உடமை ஆனகணவன் என்றெல்லாம் பொருள் உண்டு. பா ஆல் உலகத்திற்கு உடமைஆவான். இடியையும் மழையையும் கொடுப்பவன். இதனால் நிலம்செழிக்கச் செழ்பவன் (திபா 69:5). "அஸ்தரோத்" என்ற பெண் தெழ்வம்நிலத்தால் குறிக்கப்பட்டது. இத்தெழ்வத்தின் மற்றொரு பெயர் "ஆநாத்".இவள் போரிடுபவள். அன்பிற்கும் வளமைக்கும் காரணமானவள்.

இத்தெய்வங்களின் உடலுறவினால் இவ்வுலகம் வளமை பெறுவதாகக்கருதினர். "பா ஆல்" கொடுக்கும் நீரினால் "அஸ்தரோத்" நிலம் வளமைபெறுகின்றது என்று கருதினர். "பா ஆலும்", "ஆநாத்தும் இணைகின்ற நாடகத்தை வழிபாட்டுத்தலங்களில் நடித்துக் காட்டினார்கள். வழிபாட்டுத் தேவதாசிகளோடுஉடலுறவு கொண்டார்கள். இவ்வாறு செழ்வதால் தங்கள் நிலமும்,மிருகங்களும், தாங்களும் வளம் பெறுவோம் என்று நம்பினார்கள்.

பா ஆல் நாடகம்: பா ஆலும் ஆநாத்தும் இணைந்து ஒரு கோவில்கட்ட முயல்கிறார்கள். கோடை மற்றும் வறட்சியின் தெழ்வமான "மோத்"பா ஆலைக் கொன்று பாதாளத்திற்குக் கொண்டு சென்றது. "ஆநாத்" பாஆலைக் காணாது தேடியது. இறுதியாக பா ஆலை "மோத்" பிடித்துவைத்திருப்பதை அறிந்து, மோத்தோடு சண்டையிட்டு மோத்தைக்கொன்று "பா ஆலை" உயிர்க்க வைக்கிறது. தம்பதிகள் இறுதியாகஒன்றிணைகிறார்கள். விண்ணகத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. பாஆலின் சாவும், உயிர்ப்புமே உலகத்தில் கோடையும், மழையும் ஏற்படக்காரணம் என்று கருதினர். எனவே இந்த சக்திகளைக் கட்டுப்படுத்த சமயவழிபாடுகள் பயன்படுவதாகக் கருதினர். மறைவழிபாட்டில் "பா ஆல்" "ஆநாத்" நாடகத்தை நடித்து தேவதாசி உறவு முறையைப் பின்பற்றினர்.இவ்வழிபாட்டின் மூலம் நல்ல மழையையும், வளமையையும்கடவுளர்கள் கொடுக்கச் செழ்ய முடியும் என்று கருதினர்.பா ஆல் வழிபாடு சமாரியாவில் பரவியிருந்தது. இதற்கு எதிராக,எலியா ஓசே இறைவாக்கினர்கள் மக்களைச் சாடினர்.

பா ஆல் வழிபாடு யாவே வழிபாடு
1. வழிபாட்டை ஒரு மாயசாலமாகக்கருதினர் (கடவுளர்களை) தங்கள்வழிபாட்டால் கட்டுப்படுத்த முடியும்என்று கருதினர். 1. மறை வழிபாட்டால் கடவுளைக் கட்டுப்படுத்த இயலாது. கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்திருத்தல் வேண்டும்.
2. கடவுளர்களை இயற்கையின் சக்திகளாகக்கருதினர் 2. கடவுள் ஓர் ஆள்; அவருக்கு சுதந்திரம்உண்டு.
3. இனப்பெருக்கச் சக்திகளைக் கடவுளாகக் கருதினர். எனவே இச்சைகளுக்கு அடிமையானார்கள். 3. இனப்பெருக்கச் சக்திகள் இறைவனின்கொடை. அதை முறையோடு பயன்படுத்த வேண்டும்.
4. கடவுளர்களை வழிபடுவது தாங்கள்இவ்வுலகப் பொருட்களில் வளமைபெற்றிடவே. 4. இவ்வுலகப் பொருட்களில் வளமைபெறுவது வழிபாட்டின் நோக்கமல்ல. இவ்வுலக வளமை கொடுப்பது இறைவிருப்பம், இறை ஆற்றல்.

 

 

7. பழைய ஏற்பாட்டின் பிரிவுகள்

திரு விவிலியம் ஓர் இறை நூல், ஏனெனில் அதற்கு இறையூக்கம்அளித்தவர் இறைவன். மனிதர்கள் இறையூக்கத்தினால் எழுதினார்கள்.பல நூற்றாண்டுகளில் பல இலக்கிய வகைகளோடும் நயங்களோடும்எழுதினர். இந்த இலக்கிய வகைகளின் பழைய ஏற்பாட்டை ஐந்துபகுதிகளாகப் பிரிக்கலாம்.

1. ஐந்நூல் (Pநவெயவநரஉh)
2. வரலாற்று நூல்கள் (ர்ளைவழசiஉயட டீழழமள)
3. இறைவாக்கினர்கள் (Pசழிhநவள)
4. ஞான நூல்கள் (றுளைனழஅ)
5. மறையுண்மை விளக்க நூல்கள் (ஆனைசயளா)

7.1. ஐந்நூல் (தோரா):
ஐந்நூல் என்பது தொடக்க நூல், விடுதலைப் பயண நூல், லேவியர் நூல், எண்ணிக்கை நூல், இணைச்சட்ட நூல் ஆகியவை அடங்கியதொகுப்பாகும். இஸ்ரயேல் மக்களுக்கு மற்ற நூல்களைக் காட்டிலும்ஐந்நூல் மிகப் புனிதமானது. இது யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும்பொதுவானது. சமாரியர்கள் பழைய ஏற்பாட்டிலுள்ள மற்ற நூல்களைப்புனித நூல்களாக ஏற்றுக் கொள்வதில்லை. ஐந்நூலை "தோரா" அல்லது"சட்ட நூல்"என்று அழைத்தார்கள். இந்த ஐந்நூலில் சட்டங்கள்மட்டுமல்ல் வரலாறும் உரைநடைப் பகுதிகளும் உள்ளன. இருப்பினும்இதைச் சட்ட நூல் என்று அழைக்க காரணம் உண்டு. வாழ்வுக்குவழிகாட்டும் சட்டங்கள் போன்று இதில் கூறப்படும் நிகழ்ச்சிகள்அமைந்திருக்கின்றன. இந்த விளக்கம் "தோரா" என்ற எபிரேயச்சொல்லை ஆராழ்ந்து பார்க்கும்போது நன்கு விளங்குகின்றது. "தோரா"என்றால் "கற்பிக்கப்பட்டது" என்று பொருள். எனவே இதில்"வாழ்விற்குரியப் போதனை" அடங்கியிருக்கின்றது என்றுதெளிவாகின்றது.

1) பொருளடக்கம;:பழைய ஏற்பாட்டின் கருப்பொருளாம் "விடுதலை - மீட்பு" என்பதேஐந்நூலின் கருப்பொருளாகவும் அமைந்துள்ளது. இம்மீட்பு,உடன்படிக்கையில் நிறைவு பெறுகின்றது. உடன்படிக்கையின் மக்கள்,உடன் படிக்கையில் நிலைபெற்று வாழ, சட்டங்களைத் தங்கள் வாழ்வில்ஏற்று வாழ வேண்டும். இதை தொடக்க நூல், இணைச்சட்ட நூல்போன்றவை விளக்குகின்றன.

தொடக்க நூல் இணைச்சட்ட நூலுக்கு முன்னுரையாக, உலகப்படைப்பின் செழ்தியும், பாவமும் அதன் பெருக்கமும் (தொநூ 1-11),மூதாதையரின் வரலாறும் (தொநூ 12-50) விளங்குகின்றது.

2 ) பெயர்: விவிலியத்தில் ஐந்நூலுக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
பழைய ஏற்பாடு 2 குறி 30:16 "மோசேயின் திருச்சட்டம்"எஸ்ரா 10:3 "திருச்சட்டம்"நெகே 8:3 "திருச்சட்டநூல்"

புதிய ஏற்பாடு மாற்கு 12:26 "மோசேயின் நூல்"லூக் 24:14 "சட்ட நூல்"

ஐந்நூலை "ஐஞ்சுருள்" என்றும் அழைக்கின்றார்கள். ஏனெனில்அதை ஐந்து சுருள்களில் (ளுஉசழடடள) எழுதி வைத்திருந்ததால் இப்பெயர்வந்தது. ஐந்நூல் (Pநவெயவநரஉh) கள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில்தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது.

7.2. வரலாற்று நூல்கள்:
இஸ்ரயேல் மக்களின் வரலாறு தொடக்க நூலிலிருந்துதொடங்கினாலும் வரலாற்று நூல்கள் என அழைக்கப்படுவதுஇணைச்சட்ட வரலாற்று நூல்களும், குறிப்பேடு வரலாற்று நூல்களுமேயாகும். ஏனெனில் ஐந்நூல் வரலாற்று நூல்களில் பலமரபுகள் இணைந்திருக்கின்றன. ஒரே தொடர்பான வரலாற்றுக்கண்ணோட்டம் இதில் காணப்படுவதில்லை.1) இணைச்சட்ட வரலாறுஇணைச்சட்ட வரலாற்று நூல்கள்: யோசுவா, நீதித் தலைவர்கள்,1, 2 சாமுவேல் 1, 2 அரசர்கள் ஆகும். இந்த நூல்களுக்கு இணைச்சட்ட நூல் ஒரு முன்னோடியாக அமைகின்றது.

இந்த வரலாறு இஸ்ரயேல்மக்கள் எகிப்திலிருந்து விடுதலையடைந்தது முதல் பாபிலோனில் யூதேயாஅரசன் யோவாக்கின் விடுதலை பெற்றது வரையிலுள்ள நிகழ்ச்சிகளைக்கொண்டுள்ளது. யூதேயா அரசனான யோசியா (640-609) வின் ஆட்சிக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட திருச்சட்ட நூலை அடிப்படையாகக்கொண்டு (2 அர 22:3-10) தங்களிடம் இருந்த மற்ற சட்டங்கள்,இறைவாக்குகள் அரசர்களைப் பற்றிய செழ்திக் குறிப்புகள்ஆகியவற்றைத் தொகுத்து ஒரு வரலாற்றை பாபிலோனின்அடிமைத்தனத்தின்போது குருக்கள் எழுதியிருக்கக் கூடும் (கி.மு. 562)என்று கருதப்படுகின்றது.இந்த வரலாறு எழுதப்பட்டதன் நோக்கம் பின்வருமாறு: இஸ்ரயேல்மக்கள் இறைவாக்கினர்களின் போதனைகளைக் கேளாமல் தங்கள்மனம் போன போக்கில் வாழ்ந்ததால் வடநாடு அழிந்தது. பின் தென்னாடும்,அதன் ஆலயமும் அழிக்கப்பட்டது. அரசன் கைது செழ்யப்பட்டான். இந்தஅழிவிற்குக் காரணம் பிற இனத்தார்கள் கருதுவது போல் கடவுளின்வலிமையாகும். இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாவ நிலையை,நேர்மையின்மையை உணரச் செழ்வதற்காகவே இந்த தண்டனையைக்கொடுத்தார் என்பதாகும். எப்பொழுது இஸ்ரயேல் மக்கள் தங்கள்நேர்மையின்மையை உணர்ந்து மனந்திரும்பு கிறார்களோ அப்பொழுதுஅவர்கள் நாடு மீண்டும் கொடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.எனவே இவ்வரலாற்று நூல்களில் பல இடங்களில் அறிவுரைகள்காணப்படுகின்றன (இச 4:1; 6:1-4; யோசு 1:12-18; 10:16-43; 1 சாமு 2:22-36; 12:6-14; 2 அர 17:19).

அரசர்களின் வரலாற்றை அப்படியே கூறுவது இதன் நோக்கம்அல்ல. மாறாக ஒவ்வொரு அரசரைப் பற்றியும் உடன்படிக்கையின்கண்ணோட்டத்தில் தீர்ப்பு அளிப்பதே இதன் நோக்கமாக அமைகின்றது.உடன்படிக்கைக்கு நேர்மையாக வாழ்ந்த அரசரைப் புகழ்ந்து பேசுகின்றது.ஓர் அரசர் உலகத்தின் கண்ணோட்டத்தில் மிகச் சிறந்தவராக இருப்பினும்,அவன் நேர்மையற்றவராக இருப்பின் அவனைப் பழித்துரைக்கின்றது ( 1அர 21:25-26).இதில் பல நிகழ்ச்சிகள் சுருக்கமாகக் கூறப்படுகின்றன. சிலஉண்மைகளை உணர்த்த சில நிகழ்ச்சிகள் மிகைப்படுத்தியும்கூறப்பட்டிருப்பதைக் காணலாம். எனவே இணைச்சட்ட நூல் வரலாறுஒரு புனித வரலாறு. இறையுண்மைகளை விளக்கும் வரலாறாகக்காணப்படுகின்றது.

2) குறிப்பேட்டு வரலாறு:
குறிப்பேடு வரலாற்று நூல்கள்: 1,2 குறிப்பேடுகள், எஸ்ரா,நெகேமியா ஆகியவைகள்: இந்த வரலாறு ஆதாமில் தொடங்கி எஸ்ரா,நெகேமியா இவர்களின் சீர்திருத்தம் வரை அடங்கிய நிகழ்ச்சிகளைக்கொண்டுள்ளது. இவ்வரலாற்றில், ஐந்நூல் மற்றும் சட்ட வரலாற்று நூல்களில் உள்ள நிகழ்ச்சிகள் மீண்டும் கூறப்படுகிறது. விவிலியத்தைச்சாராத மற்ற மூலங்களிலிருந்தும் நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.எடுத்துக்காட்டு: இஸ்ரயேல், யூதா அரசர்களின் நூல்கள் (2 குறி 27:7; 35:8), இஸ்ரயேல் அரசர்களின் நாட் குறிப்புகள் (2 அர 15:11),அரசர்களைப் பற்றிய விளக்கம் (2 குறி 24:27), இறைவாக்கினர் பற்றியநாட்குறிப்பு ( 1 குறி 29:29), இறைவாக்கு (2 குறி 9:29), காட்சிகள் (2 குறி32:32).

இதை வரலாற்று நூல்கள் என்று சொல்வதைக் காட்டிலும்இஸ்ரயேல் மக்களின் வரலாற்றைப் பற்றிய விளக்கம், அல்லதுவரலாற்றைப் பற்றிய இறையியல் என்று கூறுவது சாலச் சிறந்தது. ஒரேநிகழ்ச்சிகளை இணைச் சட்ட வரலாறும், குறிப்பேடு வரலாறும்கூறினாலும் இரு வரலாறுகளுக்கும் வேறுபாடு உண்டு. குறிப்பேடுவரலாறு இறையாட்சியைப் பற்றி வலியுறுத்துகின்றது. இந்தஇறையாட்சியை நிறுவியது தாவீது, சாலமோன் அரசர்கள். எனவேஇவர்களைப் புகழ்ந்து கூறுகின்றது. இந்த இறையாட்சியைமுழுமைபெறச் செழ்ய மெசியா வருவார் என்றும் எதிர்பார்க்கின்றது. அவர்தாவீதின் வழியில் தோன்றுபவர். எனவே, அரச குருத்துவத்திருக்கூட்டமான இஸ்ரயேல் மக்கள் இறைவனின் கட்டளைக்குப்பணிந்து வாழ வேண்டும். உண்மையான வழிபாட்டில் நேர்மையாகஇருக்க வேண்டும் எனப் பணிக்கின்றது. வழிபாட்டைப் பற்றியும் குருக்கள்,லேவியர்களைப் பற்றியும், சட்டங்களைப் பற்றியும் சிறப்பாகவிளக்குகின்றது. இறையரசு இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமல்ல, எல்லாமக்களுக்கும் இஸ்ரயேலின் வழியாக நிறுவப்படுகின்றது என்றகருத்தையும் வலியுறுத்துகின்றது.

3) மக்கபேயர் வரலாறு:
இணைத் திருமுறை நூல்களில் வரும் 1, 2 மக்கபேயர் நூல்களில்கிமு 166 முதல் 63 முடிய உள்ள காலத்தில் இஸ்ரயேலர் தன்னாடசிஉரிமை பெற்றிருந்ததை அறிகிறோம். தாவீது அரசர் அரசாண்ட பரப்பளவுஉள்ள பெரிய நிலப்பகுதியை மக்கபேயர்கள் அரசாண்டார்கள்.அடிமைப்படுத்திய கிரேக்கக் கலாச்சாரத்தை எதிர்த்து யூதப் பண்பாட்டைப்பாதுகாக்கத் தோன்றிய இப்புரட்சி இயக்கம் காலப்போக்கில்பலவீனமடைந்து கிரேக்கத் தாக்கத்திற்கு அடிமையாகிப் போனது ஒருசோகக் கதை.

7.3. இறைவாக்கினர்கள்:
இறைவாக்கினர்கள் இஸ்ரயேல் மக்களின் மனச்சாட்சிகளாகவிளங்கினர். உடன்படிக்கையை விட்டு விலகிச் சென்றபோது,அவர்களைக் கழ்;து பேசியும், அவர்கள் தண்டனையால் தளர்ந்துநின்றபோது உற்சாகப்படுத்தியும் மீட்பின் வரலாற்றிலே வழிநடத்திச்சென்றவர்கள் இறைவாக்கினர்கள்.இஸ்ரயேல் மக்களின் இறையியல் இறைவாக்கினர்களின் நூல்களில் முழு விளக்கம் பெறுகின்றது. எடுத்துக்காட்டுகள்:இறைவனின் இரக்கம், இறைவனின் சொல்தவறாமை, இறைவனின்அன்பு, உடன்படிக்கை, மனிதனின் பாவம்.இறைவாக்கினர்கள் இஸ்ரயேல் வரலாற்றில் 9ஆம் நூற்றாண்டுமுதல் 6 ஆம் நூற்றாண்டு வரை பணிபுரிந்திருக்கிறார்கள். இவர்களின் நூல்கள் மொத்தம் 16. நான்கு நூற்றாண்டுகளில் 16 நூல்கள்உருவாகியிருப்பதைப் பார்க்கும்போது இறைவாக்கினர்களின் காலம்இஸ்ரயேல் வரலாற்றில் மிகச் சிறப்பிடம் பெற்றுள்ளதைக் காணலாம். நூல்கள் எழுதாத இறைவாக்கினர்களில் முக்கியமானவர்கள்சாமுவேல், நாத்தான், எலியா, எலிசா என்பவர்களும் நூல்கள்எழுதியவர்களில் எசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல்ஆகியோரும் ஒசேயா, யோவேல், ஆமோஸ், ஒபாதியா, யோனா, மீக்கா,நாகூம், அபக்கூக்கு, செப்பனியா, ஆகாழ், செக்கரியா, மலாக்கிஆகியோரும் ஆவர்.

7.4. ஞான நூல்கள்
விவிலியத்திலுள்ள நீதிமொழிகள், யோபு, சபை உரையாளர், சீராக்சாலமோனின் ஞானம், இனிமைமிகு பாடல், திருப்பாடல் ஆகிய ஏழு நூல்களும் ஞான நூல்களாகக் கருதப்படுகின்றன. இவைகளின்பொதுக்கருத்து ஞானமாகும். இருப்பினும், இந்த நூல்கள் பல வகையில்ஒன்றுக்கொன்று வேறுபாடு உள்ளதாக விளங்குகின்றன. ஞானஇலக்கியத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக நீதிமொழிகள், சீராக்கின்ஞானம் ஆகிய நூல்கள் அமைந்துள்ளன. சபை உரையாளர் நூல்தனித்தனியான பொருட்செறிவுடைய கூற்றுக் களையும், குறிப்பிட்டபொருட்கள் பற்றிய கூற்றுக்களின் தொகுப்புக் களையும் கொண்டுள்ளது.யோபு நூல் பற்றிய கூற்றுக்களின் தொகுப்புக்களையும் கொண்டுள்ளது.யோபு நூல் பழமொழி நடையில் இல்லாவிட்டாலும், "யிPதிமான்துன்புறுவது ஏன்?" என்ற கேள்விக்கு தீர்வுகாணும் வகையாகஅமைந்திருப்பதால், இதை ஞான இலக்கியம் என்று அழைக்கிறோம்.ஞான நூலில் தத்துவ இயல் தன்மை காணப்படுகின்றது. இது கிரேக்கமொழியில் எழுதப்பட்டுள்ளது.

திருப்பாடலிலும், இனிமைமிகு பாடலிலும் ஞானத்தின் தன்மைமுழுமையாக இல்லாவிட்டாலும், திருப்பாடலில் பல பாடல்கள்ஞானத்தைப் பற்றியதாகவும், இனிமைமிகு பாடலில் கணவன் மனைவிஉறவு பற்றிக் கூறுவதாலும், இவைகள் ஞான இலக்கியங்களாகக்கருதப்பட்டிருக்கலாம்.

7.5. மறைவிளக்கக் கதை நூல்கள் (ஆனைசயளா)
"மித்ராஸ்" என்பது மறையுண்மையை விளக்க புனையப்பட்டகதைகளாகும். இது யூத மக்களிடையே நிலவி வந்த இலக்கியவகையாகும். இதன் நோக்கம் சாதாரண மக்களுக்கு மறையுண்மையைகதைகள் மூலம் விளக்குவதாகும். கேட்டவர்களின் உள்ளத்தைத்தொடக்கூடிய வகையில் புனையப்பட்டதாகும். இதைக் கட்டுக்கதைஎன்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஆழ்ந்த மறையுண்மையைத்தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த "மித்ராசை" இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1) "கலக்கா"(நடத்தை) 2) "அகதா" (விளக்கம்).

"கலக்கா" என்பது சட்டங்களுக்குவிளக்கம் அளித்து மக்களை அதன்படி நடக்க அழைப்பதாகும். "அகதா(ஹகடா)" என்பது விவிலியத்தில் உள்ள ஏதாவதொரு மறையுண்மையை எடுத்துக்கொண்டு அதற்கு விளக்கம் கொடுப்பதாகும்.விவிலியத்தில் இந்த "மித்ராஸ்" வகையைச் சார்ந்த நூல்களாகக்கருதப்படுபவை தானியேல், யோனா, தோபித்து, எஸ்தர், யூதித்து ஆகும்.பழைய ஏற்பாட்டில் இறைவன் தன்னைச் சிறிது சிறிதாகவெளிப்படுத்துகின்றார். இந்த வெளிப்பாட்டின் நிறைவே கிறிஸ்து (எபி1:1-5).

பழைய ஏற்பாட்டில் இறைவன்'யாவே' ஆபிரகாமோடுஉடன்படிக்கை செழ்தார். மோசே வழியாக இஸ்ரயேல் மக்களிடம் அதைப்புதுப்பித்தார். ஆனால் மக்கள் நேர்மையின்றி வாழ்ந்தார்கள்.உடன்படிக்கைக்கு நேர்மையாக வாழ அவர்களால்இயலவில்லை. எனவே அவர்களுக்கு இறைவனின் உதவிதேவைப்பட்டது. நேர்மையாக வாழ, உடன்படிக்கையிலே நிலைத்திருக்க,கால நிறைவில் ஆவியானவரை அனுப்பி புதிய இதயத்தையும், புதியஆவியையும் தருவதாக இறைவாக்கினராகிய எரேமியா வழியாகவும்,எசேக்கியேல் வழியாகவும் யாவே வாக்குறுதி கொடுத்தார் (எரே 31:31-34; எசேக் 36:26-32). இந்த வாக்குறுதி இயேசுவில் நிறைவுபெறுகின்றது. இயேசு தம் ஆவியை அளித்து புதிய இஸ்ரயேல் மக்களைஉருவாக்குகின்றார்.எனவே, பழைய ஏற்பாடு வாக்களிப்பின் காலமாகவும், புதியஏற்பாடு நிறைவின் காலமாகவும் விளங்குகின்றது. பழையஏற்பாட்டிலே மறைமுகமாகச் சொல்லப்பட்டவை, புதிய ஏற்பாட்டிலேவெளிப்படையாகச் சொல்லப்படுகின்றன. எனவே, பழைய ஏற்பாட்டின்நிறைவு புதிய ஏற்பாடாகும்.பழைய ஏற்பாடு: ஒரு வாக்களிப்புவாக்களிப்புஇயேசுநிறைவுபுதிய ஏற்பாடு(உடன்படிக்கை)பழைய ஏற்பாடு(உடன்படிக்கை)பழைய இஸ்ரயேல்
புதிய இஸ்ரயேல்

ab