புனித பவுலின் கடிதங்கள்

பேரருள்திரு. வ. மரியதாசன்
கோட்டாறு

விவிலிய அன்பர்களே,

கிறிஸ்தவர்களைத் தொலைப்பதற்காக யூதத் தலைவர்களின்அனுமதியுடன், தமஸ்கு சாலையில்பயணம் செய்த பவுல் (திப 9:1) அதேகிறிஸ்துவின்தூதுவராக அழைக்கப்படுகிறார். இது ஏதோ திடீரெனஏற்பட்டகடவுளின்அழைப்புஎன்றுசொல்லிவிடமுடியாது. பவுல்தன்தாயின்வயிற்றில் இருந்தபோதே கடவுளின் அருளால் நற்செய்தியின் பணியாளராகஅழைக்கப்பட்டிருந்தார்(கலா15: 1).தனது அழைப்பின் மேன்மையை நன்குஉணர்ந்த பவுல், "நற்செய்தியைஅறிவிக்கவில்லையெனில் ஐயோ எனக்குக்கேடு”(1கொரி9:16) என்றுகூறும்அளவுக்குத் தனது நற்செய்திப்பணியை கி.பி43 முதல் 63 வரையிலும ;தீவிரமாகஆற்றினார்.புனிதப் பவுலின ;நற்செய்திப்பணியின் காரணமாக இரண்டு முக்கியமானதிருப்புமுனைகள் திருச்சபையில் உருவாயின.முதலாவது, பிறஇனத்தவரிடையே தலத்திருச்சபைகள் உருவாயின.இரண்டாவது, திருச்சபையின் இறையியல் போதனைகளை விளக்கிக்கூறும்மடல்கள ;எழுந்தன.திருச்சபையில் இதுவரை யாருமே ஆற்றியிராத அளப்பரியப் பணியைபுனித பவுல் தனது குறுகிய கால தூதுரைப் பணியில் செய்து முடித்தார்.இருப்பினும் அவர் இறுமாப்புக்கொள்ளவில்லை. "கிறிஸ்து இயேசுஎன்னைஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்துஓடுகிறேன்” (பிலி 3:12) என்று தாழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் தமதுவாழ்க்கைப்பயணத்தைத்தொடர்ந்து, இளந்திருச்சபையின்இருதூண்களில்ஒருவராகத்திகழ்ந்து(மற்றவர் புனிதபேதுரு), மறைசாட்சியாகதமதுஉயிரைநீத்தார்.புனித பவுல் எழுதிய மடல்களின் சுருக்கத்தை இங்கே தெளிவாகத்தருகிறார்பேரருள் திரு. வ. மரியதாசன்அவர்கள். அவர்களுக்கு எனதுநன்றிஉரித்தாகுக.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திருமுனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்

பொருளடக்கம்

1 . திருமுகங்கள்
2. திருமுகமா? சுற்றறிக்கையா?
3. திருமுகம் எழுதும் இனிய பணி
4. புனித பவுலின் வாழ்க்கைக் குறிப்புகள்
5. ஐ தெசலோனிக்கர்
6. பிலிப்பியர்
7. 1 கொரிந்தியர்
8. 2 கொரிந்தியர்
9. கலாத்தியர்
10. உரோமையர்
1 1 . கொலோசையர்
12. எபேசியர்
13. ஆயர் மடல்கள் (1 திமொ, தீத்து, 2 திமொ)
14. பிலமோனுக்கு எழுதிய கடிதம்
15. எபிரேயர்

1. திருமுகங்கள்

"திருமுகம்” (கடிதம், மடல்) என்பது இலக்கிய வகைகளுள்ஒன்று.புதிய ஏற்பாட்டின் 27 நூல்களில் 21 நூல்கள் திருமுகங்கள் எனஅறிவோம். திருவெளிப்பாடுகூட ஏழுசபைகளுக்குஅனுப்பப்பட்ட கடிதம்வடிவையே பெற்றுள்ளது!பழைய ஏற்பாட்டை நாம் வாசிக்கும்போது அங்கும்திருமுகங்களைப் பார்க்கிறோம். தாவீது யோவானுக்கு எழுதிய கடிதம் (2சாமு 11 : 14-15); ஈசபேல் அரசி எழுதிய குற்றச்சாட்டுக் கடிதங்கள் (1 அர21:8-10); சிரியா அரசன்எழுதியகடிதம்(2 அர 5:5-6); ஏகூஎழுதியகடிதம்(2 அர 10:1-6) ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

அடிமைத்தனத்தின் காலத்திலும் கடிதங்கள் எழுதப் பெற்றன்எஸ்ரா 4:11-16 இல் "பொதுமக்களின் மனு” ஒன்றும், 4:17-22 - இல்அரசன்அனுப்பிய பதிலும் காணப்படுகிறது.திருமுகங்கள்வரைவதுபண்டைய பழக்கம். எரேமியா பாபிலோன்அடிமைத்தனத்திலுள்ள மக்களுக்கு எகிப்திலிருந்து எழுதிய தொன்மைவாய்ந்த மடல் மிகவும் குறிப்பிடத்தக்கது (எரே 29:1-23).

புதிய ஏற்பாட்டில் புனித பவுல் எழுதியவை அனைத்தும்கடிதங்களாகும். அக்கடிதங்கள் இறை ஏவுதல் பெற்றவை.

1.1. கடிதங்களின்இலக்கிய அமைப்பு
புனித பவுலின் காலத்தில் கிரேக்க உரோமைய கடிதங்களில்நான்கு முக்கியப் பகுதிகளைக் காணலாம்.

1) தொடக்கவுரை:- இதுகடிதத்தின்தொடக்க பாகம்(ஏட்டைச் சுருட்டிஅதன்மேல் எழுதும் முகவரி அல்ல இது). தொடக்கவுரையில், விடுநர்,பெறுநர், தேதி, சிறு வாழ்த்து ஆகியவை இடம்பெறும் (1 மக் 10:18-25;11:30; திப. 15:23; 26:23 ஆகிய பகுதிகளை வாசித்தல் நலம்).
2) நன்றி கூறல்:நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தும் பகுதி இது.
3) உட்பொருள்: இப்பகுதியில்தான் செய்தி இடம்பெறும்.
4) முடிவு வாழ்த்து:கடிதம் வாழ்த்துடன்முடிவு பெறும் (திப 15:29)

2 மக் 11 : 21; 11 : 33; 38-இல்காண்பதுபோல்அதிகாரப் பூர்வமானகடிதங்களில் 'தேதி குறிப்பிடலாம் 'இறுதி வாழ்த்துரை' எழுதப்பட்டால்அது தற்கால 'கையொப்பத்திற்கு' இணையாகும். சொல்லச் சொல்லவேறு யாராவது எழுதியிருந்தால், இறுதியில் அனுப்புவர் ஒரு சிலவார்த்தைகள் எழுதி அதையே கையொப்பமாக கருதுவது வழக்கம்.

1.2. புதிய ஏற்பாட்டுத் திருமுகங்கள்
புனித பவுலின் திருமுகங்களைப் பற்றி படிக்கும்போது, அவைகிரேக்கர், உரோமையர் கடித முறையை ஒத்திருப்பதைக் காண்கிறோம்.சான்றாக

1) தொடக்கவுரை:இது கிரேக்கர் - உரோமையர் முறையைத்தழுவி உள்ளது; ஆனால் சற்று விரிவாக உள்ளது. தொடக்கவுரையில்நாம் காண்பவை: விடுநர், பெறுநர், விடுநரைப் பற்றிய குறிப்பு,பெறுநரைப் பற்றிய விளக்கம். தேவைப்படும்போது விடுநரைப்பற்றிய குறிப்பு நீளும். பெறுநர்பற்றிய விளக்கம் குறுகும். சில சமயங்களில்உடனிருப்போர் பெயர் சேர்க்கப் படுகிறது. (காண்1 கொரி 1:1-2; 2 கொரி 1:1; பிலி1:1 1 தெச 1:1; 2தெச 1 : 1).ஷலோம்ஷலோம்ஷலோம்என்று "வாழ்த்து” மட்டும்கூறாமல் "அருளும் சமாதானமும்” என்றுவாழ்த்துவார். இது பவுலுக்கே உரிய வாழ்த்து.கிரேக்க "காரேயா” எபிரேய "ஷலோம்” கலந்தவாழ்த்து இது. இத்தகைய வாழ்த்து குருத்துவஆசீரில் இல்லாமல் இல்லை (எண் 6:24-26).புதிய ஏற்பாட்டு திருவழிப்பாட்டிலுள்ளவாழ்த்தைபவுல் தம் கடிதங்களில் பயன்படுத்தினார் என்றுகூறுவாருமுண்டு.

2) நன்றியுரை: கிரேக்க, உரோமைய மடல்களைப் போல் பவுலின்திருமுகங்களும் நன்றியுரை கொண்டுள்ளன. திருமுகத்தின்உட்பொருளை இது முன்னுணர்த் தும். ஆயினும் கலாத்தியருக்குகோபமுடன் எழுதிய திருமுகத்தில் இது "கண்டிப்புப்” பகுதியாக உள்ளதுஇயல்பே. சிலவேளை நீண்டதோர் ஆசீர் இடம் பெறுவதும் உண்டு(2கொரி 1:3-11; எபே 1:3-14). எங்கே நன்றியுரை முழ்?து கடிதத்தின்உட்பொருள்தொடங்குகிறதுஎன்றுகண்டுபிடிப்பதுஎப்போதும்எளிதன்று.

3) உட்பொருள்: ஒரு சில கடிதங்களில் பவுல் உட்பொருளை(செய்தியை) இரண்டாகப் பிரிக்கிறார்.

(1) போதனைப் பகுதி (2) அறிவுரைப் பகுதி

சான்றாக: உரோமையர் 1-11; 12-16கலாத்தியர் 1-4; 5-6எபேசியர் 1-3; 4-6கொலோசையர் 1-2; 3-4

ஏனைய கடிதங்களில் போதனையும் அறிவுரையும் கலந்துகாணப்படுகின்றன.

4) முடிவும் இறுதி வாழ்த்தும்: இப்பகுதியில் பவுல் பொதுவாகதம்மைப் பற்றிய செய்திகளை வழங்குகிறார். சில நபர்களுக்குச் சிறப்புச்செய்திகள் அறிவுரைகள் வழங்குவதுண்டு.இறுதிவாழ்த்து, "நம் ஆண்டவராகிய...” என்றுஅமைகிறது(1 தெச5:28; 2 தெச 3:18). பவுல் சில கடிதங்களின்இறுதியில் தம் கைப்பட ஒருசில வரிகள் எழுதுவதுண்டு. அது அவருடைய சொந்தக் கையெழுத்து....! சிறப்பு கையொப்பத்துக்கு இணையானது (கொலோ 4:18; 2 தெச 3:17,18; கலா 6:11-18; 1கொரி 16:21; உரோ 16:17-22).

--------------------------

2. திருமுகமா? சுற்றறிக்கையா?

பவுல் எழுதியவை திருமுகமா (கடிதம், மடல்) அல்லதுசுற்றறிக்கையா (நிருபம்) என்பதுஆராய்ச்சிக்குரியது. டாய்ஸ்மான்என்றஅறிஞரின் ஆய்வுக்குப்பின் "சுற்றறிக்கை” என்ற வார்த்தையை விட்டுவிட்டு, "திருமுகம்” என்ற வார்த்தையையே பயன்படுத்தி வருகிறோம்.இதற்குக் காரணங்கள் உள்ளன.

2. 1. திருமுகத்தின் (கடிதம், மடல்) பண்புகள்

1) திருமுகம் இரகசியம் வாய்ந்தது.
2) அது குறிப்பிட்ட ஆளுக்கோஅல்லது குழுவுக்கோ உரியது.
3) யார் முகவரிக்கு அனுப்பப்படுகிறதோ,அவருக்கே வாசிக்கும் உரிமையுண்டு. மற்றவர்க்கன்று.
4) கடிதத்தின்நடை, தொனி, கட்டுக்கோப்பு ஒருவரின்விருப்பத்தைப் பொறுத்தது. மனம்விட்டுப் பேசும் வகையைச் சார்ந்தது.
5) குறிப்பிட்ட ஆள்மட்டுமன்று,குறிப்பிட்ட குழுவும் வேறொரு குழுவுக்கோ, தனி நபருக்கோ கடிதம்வரைய முடியும்.

2.2.சுற்றறிக்கையின்(நிருபம்) பண்புகள;

1) இது இலக்கிய அமைப்பில் கடிதம் போன்றது.
2) ஆயினும்இதிலுள்ள உட்பொருள் யாரும் வாசிக்கக் கூடியது; அனைவருக்கும்என்றேஎழுதப்படுவது.
3) குறிப்பிட்ட சூழ்நிலையினால்பொதுமக்களுக்குஎழுதுவது.
4) எனவே இரகசியம் வாய்ந்ததோ, மனம் விட்டுஉறவாடுவதோ, உறவின்நடைகொண்டதோ அல்ல.

சான்றாக:-பத்திரிகைகளில் காணப்படும்"ஆசிரியருக்குக்கடிதம்'

2.3. பவுலின் படைப்புக்கள் எத்தகையவை?
பவுலின்எழுத்துப் படைப்பு பொதுவாகக் கடிதங்கள்(திருமுகங்கள்)என்றே கருதப்படுகின்றன. கடிதங்களின் பண்பு அனைத்தும் இங்கேகாணப்படுகின்றன.அவை குறிப்பிட்ட ஆளுக்கென்றோ (பிலமோன்)சபைகளுக்கென்றோ (பிலிப்பியர்) சூழ்நிலைச் சந்தர்ப்பங்களில்,தேவைக்கேற்ப எழுதப்பட்டன் அக்குறிப்பிட்ட ஆள், சபைகள்வாசிப்பதையே முதன் முதல் பவுல் கருத்தில் கொண்டிருந்தார்.(இதனால்தான் அதிகமாக அன்பு காட்டுவது (1 தெச), அல்லதுகோபப்படுவது(கலா), நாய்கள், பிரம்பு... எனபேசுவது(பிலி3:2; 1 கொரி4:21).

அடிப்படையில் அவை கடிதங்களே எனினும், இக்கடிதங்கள்அவற்றின் சிறப்பால், வரவரப் பொது கடிதங்களாகக் போற்றப்பட்டுபிறராலும் வாசிக்கப்பட்டன.இவ்வாறு தம் மடல்கள் வேறு சபைகளில் வாசிக்கப்படுவதுபவுலுக்கே தெரியும் (2கொரி 10:10). சில கடிதங்கள் அவ்வாறுவாசிக்கப்படுவதையும் அவர் விரும்பினார் (கொலோ 4:16).மேலும் உரோமையர், எபேசியர் போன்ற பின்னையக் கடிதங்களைஅவர் ஏறத்தாழ சுற்றறிக்கை வடிவிலேயே எழுதினார்.பவுல் தனி மனிதன் என்ற முறையில் மட்டும் கடிதம் எழுதாமல்"திருத்தூதர்” என்ற முறையில் சபைகளுக்குக் கடிதங்கள் எழுதி இந்தக்கடித இலக்கியத்தை தம் மறைபரப்பும் பணிக்குப் பயன்படுத்தியதால்,சுற்றறிக்கையின்தன்மைகள் உள்ளடங்குகின்றன.

தனிப்பட்ட பிரச்சினைகளுக்குப் பதில் அனுப்பும் கடிதங்களிலும்பொதுவாக யாவருக்கும் தேவையான நற்செய்தி தூதுரை (கலா 1:3-4), மறையுரை (உரோ 1:18-32), அறவுரைகள் (கலா 5:19-24), குடும்பஒழுக்கம் (எபே 5;21-33; 6:1-9), புகழ் கீதம் (பிலி 2:6-11; பாடல் 1 கொரி13; உரோ 8: 13-39), திருவழிபாட்டு உரை (1 கொரி 11:23-26), சாட்சியம்(உரோ 3:10-18) ஆகியவற்றைப் புகுத்தியுள்ளார். இவை யாவருக்கும்பொதுவானவை அல்லவா? ஆக, பவுல் கடிதம் எழுதினாலும் கடிதத்தின்இலக்கிய பண்புகளுக்கு அடிமைப்பட்டவர் அல்லர்.

2.4. பவுலின் மடல்களின் தொகுப்பு
பவுல் எழுதிய 13 கடிதங்கள் மட்டுமே புதிய ஏற்பாட்டு நூல்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. எபிரேயர் மடலைச் சேர்த்தால்கடிதங்கள் 14 ஆகும்.ஆயினும் பவுல் இன்னும் பல கடிதங்கள்எழுதியிருக்க வேண்டும்.ஆங்காங்கே இதற்கானசான்றுகள் உள்ளன.1 கொரிந்தியர் என நாம் அழைக்கும் திருமுகம் எழுதப்படும்முன்னரே அவர் கொரிந்தியருக்கு வேறொரு கடிதம் எழுதியிருந்ததாக 1கொரி 5:9இல் குறிப்பிட்டுள்ளார். பரத்தமையில் ஈடுபடுவோரோடு உறவுவைத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர் அறிவுரை கூறியிருந்தகடிதம் அது. அது எங்கே? மறைந்துவிட்டதா? (இக்கடிதம் 2 கொரி 6:14--7:1 என்ற பகுதியே எனக் கூறுவாரும் உண்டு).

மேலும் "கண்ணீர் கடிதம்” ஒன்று கொரிந்தியருக்கு எழுதியதாகபவுல் 2 கொரி 2:3-4-இல் கூறுகிறார். 1 கொரிந்தியர் கடிதத்திற்குப் பின்இதுஎழுதப்பட்டிருக்க வேண்டும். இஃதும் மறைந்துவிட்டதா? (இக்கடிதம்2 கொரி 10:1-13:10 என்ற பகுதியே என்பாரும் உண்டு.).கொலோ 4:16இல் "லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தைநீங்களும் வாசியுங்கள்” என்கிறார் பவுல். லவோதிக்கேயருக்கு அவர்எழுதிய கடிதம் எங்கே? (அது எபேசியருக்கு எழுதிய கடிதம்தானா?)

ஆக பவுல் 13 + 1 க்கும் அதிகமான கடிதங்கள் எழுதியிருக்கவேண்டும்.

2.5. கடிதங்களின ;வரிசை
1) நீள வரிசை:- புனித பவுலின் திருமுகங்களை அவற்றின்நீளத்தை மனதிற்கொண்டு நீண்ட கடிதத்திலிருந்துசிறிய கடிதமாக புதியஏற்பாட்டில் ஒழுங்குப்படுத்தியுள்ளனர். 13 கடிதங்களையும்வரிசைப்படுத்தியபின், எபிரேயருக்கு எழுதப்பட்ட நீண்ட கடிதம்வைக்கப்பட்டுள்ளது.
2) காலவரிசை:-

கி.பி. 51-52 - 1, 2 தெச
கி.பி. 56 - பிலி
கி.பி. 57 - 1 கொரி
கி.பி. 57 - கலா
கி.பி. 57 - 2 கொரி
கி.பி. 57-58 - உரோ
கி.பி. 61-63 - கொலோ, எபே, பிலே
கி.பி. 64-66 - 1 தீமோ, தீத்து
கி.பி. 67 - 2 தீமோ

2.6. கடிதங்களின்பிரிவு
பவுலின்"முதற் கடிதங்கள்” இரண்டு: 1 தெச, 2 தெச.நான்கு மடல்கள் "பெரிய மடல்கள்” எனப்படுகின்றன: உரோ., 1கொரி., 2 கொரி., கலா.சிறையிலிருந்து எழுதப்பட்ட நான்கு கடிதங்கள் "சிறைக்கூடமடல்கள்” எனஅழைக்கப்படுகின்றன. அவைபிலி, பில., கொலோ., எபே.மூன்றுகடிதங்கள்ஆயர்களுக்கு எழுதப்பட்டவையாகும். எனவேஅவை "ஆயர் மடல்கள்” எனப்படுகின்றன: 1, 2 திமோ, தீத்து.பவுலின் சீடர் ஒருவரின் கடிதம் என திருச்சபை கருதியதால்எபிரேயர் திருமுகம் "இறுதி இடம் பெறும் கடிதம்” ஆகும்.

மனப்பாடம் செய்க: ம., மா., லூ., யோவான் பணிஉரோமை., கொரிந்துக்குகலா, எபே, பிலி, கொலோதெச, திமோ, தீத்துக்குப்போபில, எபிரே, யாக்கோபு, பேதுருயோவான், யூதா, வெளிப்பாட்டுக்கு வா.

---------------------------

3. திருமுகம் எழுதும் இனிய பணி

"ஆயினும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் இக்கடிதத்தின்சில பகுதிகளில் மிகத் துணிவுடன் எழுதியுள்ளேன்” என்றுஉரோமையருக்கு எழுதும் பவுல் (உரோ 15:15) தனது மடல்கள் மூலம்கிறிஸ்தவ மக்களைத் தொடர்ந்து வழி நடத்தினார் என்று அறிகிறோம்.மாபெரும் நற்செய்திப் பயணங்கள் பல ஆற்றிய பவுல்,அப்பயணங்களுடே தான் நிறுவிச் சென்ற தலத் திருச்சபைகளுக்கு பலதரப்பட்ட காரணங்களைமுன்னிட்டுப் பலகடிதங்களையும் எழுதினார்.அவருடைய மடல்கள் கிறிஸ்தவ போதனை, நெறி முறைகள், விசுவாசசத்தியங்களின் விளக்கங்களாகவும், கிறிஸ்தவ சமயத்தின் மாபெரும்இலக்கியங்களாகவும் திகழ்கின்றன. அவை பற்றி விளக்கமாககாணுமுன், பவுல்வாழ்ந்த கி.பி. முதல் நூற்றாண்டில் எழுத்துக் கலையின்தன்மைகளைப் புரிந்துகொள்வோம்.

எபிரேயருக்குஎழுதியதிருமுகம்நீங்கலாக, பதிமூன்றுகடிதங்களை(திருமுகங்கள்) பவுல் எழுதினார் என்று பொதுவாக கருதப்படுகிறது.வெவ்வேறு காரணங்களுக்காகவும், வெவ்வேறு சூழ்நிலைகளிலும்,பலதரப்பட்ட மக்களுக்கும் இக்கடிதங்களை பவுல் எழுதினாலும் அவரதுமடல்கள் எல்லாமே அக்கால சமுதாயச் சூழ்நிலையின்கட்டுப்பாட்டுக்குள்தான் உருவாயின் இம்மடல்களை உருவாக்க அவர்பயன்படுத்திய பொருட்கள் என்னவென்று ஆராய்ந்தால், அக்கடிதங்களைஎழுத அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் அவற்றிலடங்கியுள்ளசிறப்பியல்பகளும் புலப்படும்.

3.1. பயன்படுத்தப்பட்ட பொருட்கள;

1)நாணல் ஓலை
நாணற் கோரையின் நடுப்பகுதியிலிருந்து செய்த பாப்பிரஸ்சுவடியையே பவுல் தனது மடல்களை எழுதப் பயன்படுத்தினார்.பழங்காலத்தில் தமிழகத்தில் பனைஓலைச் சுவடிகளை எழுதுவதற்ககுப்பயன்படுத்தினர். அக்கால கிரேக்க, உரோமையர், எகிப்தியர் நாணல்சுவடிகளையும், பதப்படுத்தப்பட்ட தோலையும் பயன்படுத்தினர். பாப்பிரஸ்செய்யப் பயன்பட்ட நாணற்புல்நைல்நதியோரத்தில்அதிகம் விளைந்தது.கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எகிப்தியர் இந்த பாப்பிரஸைஎழுதுவதற்குப் பயன்படுத்தினர். இயேசுவின் காலத்தில் பாப்பிரஸ்வியாபாரம் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது.ஒரு பாப்பிரஸ் தாளின் அளவு 20 முதல் 30 செ.மீ.அகலமுள்ளதாகவும், ஒருபக்கத்தில்அக்கால1,500 கிரேக்க எழுத்துக்கள்அடங்கக் கூடியதாகவும் இருக்கும் என்று அறிஞர் கூறுகின்றனர்.பவுலின் காலத்தில் ஒரு நாணல் ஓலையில் 9 வரிகளிலிருந்து 73 வரிவரை கூட ஒரு பக்கத்தில் எழுதினார்கள். இதன்படி பார்க்கும்போதுபவுலின் மிகச் சிறிய மடலான (335 வார்த்தைகள் கொண்ட)"பிலமோனுக்கு எழுதிய திருமுகம்”(42 வரிகள் கொண்டதாகவும்),மிகப்பெரிய மடலான (7,101 வார்த்தைகள் கொண்ட)"உரோமையருக்குஎழுதிய திருமுகம்” 956 வரிகள் கொண்ட 53 பக்கங்களிலும்எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இந்த பாப்பிரஸ்தாள் எகிப்தில் விளைவதனால், அதன்அரசியல்,சமூகச் சூழ்நிலையைச் சார்ந்தே இத்தாளின்விலையும்மாறுபட்டது. கி.மு.4-இல் ஒரு பாப்பிரஸ் தாள் 13 திராக்மா அதாவது ரூயஅp;. 15, ரூயஅp;. 25விலையிருந்தது. பவுலின் காலத்தில் இதன் விலை சற்றேகுறைந்திருப்பினும் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் 53 தாளின்விலை மட்டும் சுமார் ரூயஅp;. 400- ஆகியிருக்கும். அப்படியென்றால் ஒருதிருமுகம் எழுத எவ்வளவு செலவு செய்ய வேண்டுமென்று அறிந்துகொள்வோம். இதனால் தான் பலவித விளக்கங்களை பவுல் தனதுமடல்களில் விட்டுவிடுகிறார்.

2)எழுதுகோல்
ஒருவகை நாணற் குச்சியைக் காய வைத்து ஒரு முனையில்கூர்மையாக்கி அதனை எழுதுகோலாகப் பயன்படுத்தினர். இறகுகளைப்போன்றோ அல்லது கம்பிகளைப் போன்றோ இலகுவாக இருப்பதில்லை.அதனால்கையாளக் கடினமாயிருக்கும். ஆதலின்மிகவும்மெதுவாகவேஎழுத முடிந்தது. ஒரு நிமிடத்தில் மூன்று அசைகளே எழுதினர் (72வார்த்தை எழுத சுமார் 1 மணி ஆகும்). அதன்படி பார்த்தால்தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்தை எழுத 20 மணிநேரமும், "கொரிந்தியர்” எழுத 94 மணி நேரமும், உரோமையருக்குஎழுதியத் திருமுகத்தை எழுத 98 மணிநேரமும் ஆகும்.

3.2.விளைவுகள், வேறுபாடுகள்
பவுல்காலத்தில்எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட தாளையும், மை,எழுதுகோல் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால், ஒரு கடிதம்எழுத ஒருவர் எடுத்துக் கொள்ளும் அரிய முயற்சிகள் தெளிவாகும்.மேற்கண்ட குறிப்புகள்படி பார்த்தால், உரோமையருக்கு எழுதியதிருமுகத்தை பவுல் எழுத குறைந்தது 49 நாட்கள் பிடித்திருக்கும் (தினம்2 மணிநேரம்). இதனால்கருத்தின்தொடர்பு பாதிக்கப்படுகிறது. நாளுக்குநாள்இறையியல்நோக்கில்வளர்ச்சியடைவதைத் திருமுகத்திலும் காணநேரிடுகிறது. திருப்பி திருப்பி கூறும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. மேலும்எழுத்து நடையில் மாற்றம்... உணர்ச்சியில் மாற்றம்... இத்தகையவேறுபாடுகளை இடைச் செருகல் என்று கருத வேண்டியதில்லை.

3.3. கடிதங்கள் எழுதும் முறைகள்
பழங்காலந்தொட்டே கடிதங்கள் எழுதுவதில் பலவித முறைகளைமக்கள்கையாண்டனர். பொதுவாக நான்குமுறைகளைக் குறிப்பிடலாம்.

1) தன்கையாலேயே எழுதுவது; வறியோரும் எளியோரும் அதிகம்தங்கள் கைகளாலேயே எழுதினர். செல்வமிக்கோரும் அதிகம் எழுதவிரும்பினோரும் இம்முறையை அதிகம் கையாளவில்லை.பெரும்பாலும் இரகசியக் கடிதம் மட்டுமே தங்கள் கைகளாலேயேஎழுதினர்.
2) ஒருசெயலர் மூலம், வார்த்தைக்குவார்த்தை எடுத்துச் சொல்லிகடிதம் எழுதும் முறையும் இருந்தது.
3) கருத்துக்களை மட்டும் சொல்லி கடிதத்தைச் செயலரே எழுதப்பணிக்கும் முறையும் நிலவியது.
4) சிசரோ போன்றோர் செய்தது போன்று தனது நண்பரை பதில்கடிதம் பணிப்பதும் வழக்கத்திலிருந்தது.

3.4. பவுலுக்குச் செயலர்
"இந்தக் கடிதத்தை எழுதிக் கொடுத்த தெர்த்தியுவாகிய நான்ஆண்டவருக்குள் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன்” என்றுஉரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் காண்கிறோம் (உரோ 16:22).மற்றும், "இவ்வாழ்த்து பவுலாகிய நான் என் கைப்பட எழுதியது” என்றுகொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறும்போது, அம்மடலின்மற்றப் பகுதிகளை இவரே தன் கைப்பட எழுதவில்லையெனத்தெரிகிறது. இதைப் போன்றதொரு வசனத்தை (இவ்வாழ்த்து பவுலாகியநான்என்கைப்பட எழுதியது) கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தின்இறுதியிலும் (4:18) காண்கிறோம்.

மேலும், "என் கைப்பட” நானே உங்களுக்கு எழுதுகிறேன்."இப்பொழுது” என்ற வசனத்தைக் கலாத்தியருக்குஎழுதியதிருமுகத்தின்இறுதியிலும் (6:11) பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலும் (19)காண்கிறோம். இவற்றைக் கூர்ந்து நோக்கும்போது, இப்படிக்குறிப்பிடுகின்ற பகுதியைத் தவிர்த்து மற்றப் பகுதிகளை பவுல் தன்கைப்பட எழுத வில்லையென்றுபுலனாகிறது. ஆதலின், தமதுதிருமுகங்களை எழுத பவுல் செயலர்களைப் பயன்படுத்தினார் என்பதுதெளிவாகிறது.ஆனால், அவர்களை எப்படிப் பயன்படுத்தினார்?வார்த்தைக்கு வார்த்தை எடுத்துச் சொன்னாரா அல்லதுகருத்துக்களை மட்டும் கூறி, தமது செயலரை முழு திருமுகமாக எழுதச்சொன்னாரா? என்ற வினாக்கள் எழுகின்றன. பெரும்பாலானஆராய்ச்சியாளர்களின்கருத்துப்படி, பொதுவாக, பவுல்தமதுகடிதங்களைஅப்படியே பேசியிருப்பார்; அவற்றை அப்படியே மனதில் வைத்துக்கொண்டுஅவரதுசெயலர் எழுதியிருப்பார். இருப்பினும்உரோமையருக்குஎழுதிய திருமுகத்தின் அஞ்சல் (1:1-7) போன்ற பகுதிகளை பவுல்வார்த்தைக்கு வார்த்தை எடுத்துச் சொல்லி அவற்றை அவரது செயலர்எழுதியிருப்பார்.

3.5. அக்காலத் தபால் முறை
எவ்வளவோ சிரமப்பட்டுக் கடிதம் எழுதினாலும், அக்கடிதத்தைஉரியவருக்குச் சேர்ப்பிப்பது வெகு சிரமமான முயற்சியாக இருந்தது.முதலாம் தெரியுஸ்என்ற பாரசீக மன்னனின்காலத்தில்பாரசீகத்தில்தான்முதல் முதலில் தபால் முறை கண்டுபிடிக்கப்பட்டது. அரசாங்கப்பணிசம்பந்தமாக மட்டுமே அது நடைமுறையில் இருந்தது. ஒரு நாட்டிற்கும்மற்றொரு நாட்டிற்கும் இடையில் நெடுஞ்சாலையில் பல நூறுமைல்களுக்கு ஒரு தபால் நிலையமும் காவல் நிலையமும் இருக்கும்.தபாலைக் குதிரையில் ஒரு நிலையத்திலிருந்து மற்றொருநிலையத்திற்குக் கொண்டு சேர்ப்பர். ஜுலியஸ் சீசரின் காலத்தில்உரோமையர் இதனை விரிவுபடுத்தினாலும் பவுல்காலத்தில் தனிப்பட்டவர்எழுதிய கடிதத்தை அவரே ஆட்களை அமைத்து கடிதத்துக்குரியவரிடம்சேர்ப்பிக்க வேண்டும். ஆதலின் பவுல் தமது கடிதங்களை அந்தந்ததலத்திருச்சபைகளுக்குஅனுப்ப நம்பிக்கைக்குரிய நபர்களையும் ஏற்பாடுசெய்ய வேண்டியிருந்தது.முடிவாக பழங்காலத்தில் கடிதம் எழுதுவதற்கு மேற்கண்டமுறைகளைக் காணும்போது பின்வரும் கருத்துக்கள் புலப்படுகின்றன.இயேசு கிறிஸ்துவின்நற்செய்தி சாரமானது. மக்களின்மனத்தில் ஆழப்பதியவேண்டுமென்ற ஆவலில் பவுல், தாம் போதித்த மக்களுக்குத்தொடர்ந்து கடிதங்கள்மூலம் அறிவுறுத்த விரும்பினார். அம்முயற்சியில்அவர் மேற்கொண்ட சிரமங்கள் பலப் பல. பொருட்செலவு, நேரம்,உதவியாளர் அமைத்தல், அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தல் போன்றவை.அடுத்து, இவ்வாறு பல சிரமங்கள் இருப்பினும், மற்ற எந்ததிருத்தூதரையும் விடஅதிகமாகவும், அதிகமானமக்களுக்கும்எழுதினார்.அவரது மடல்கள்ஆன்மீக ஒளியை அளிப்பனவாக, மனந்திறந்து பேசுவதுபோல் உள்ளதால் "திருமுகங்கள்” என்று செல்லமாக அழைக்கப்படுகின்றன. (நன்றி: அருள்தந்தை அபீர்)

காலம் வாழ்க்கை ஆதாரம் கடிதம் சமகால வரலாறு
1-20 சவுலின்பிறப்பு(தார்சு)
எருசலேமில் கல்வி
தி.பணி 7:58 பில1:9
தி.பணி 22:3; 26:4 23:16
  பேரரசன்அகுஸ்துஸ்13-18? இறந்தான். திபேரியுஸ் செசார்பேரரசனானான்.
14-30       (கி.பி.14ஆகஸ்ட் 19 பிலாத்துயூதேயாவில்ஆளுநன் 29- 36).இயேசு 30 இல் மரணமடைந்தார்.
36-37 ஸ்தேவான்வேதசாட்சியாதலும்
பவுலின்அழைப்பும்(தமஸ்கு)
நகருக்குப்பயணம்;அரேபியாவில் சில காலம்; பன் தமஸ்குவில்
தி.பணி7:58
9:1-19;22:4-20;26;
கலா1:13-16தி.பணி9;20-22கலா1:17, தி.பணி9:23-252கொரி11:32
  திபேரியஸ்இறந்தான்(கி.பி.37).
கலிகுலாபேரரசனானான் (மார்ச்16,37)
39 எருசலேம் செல்வுதல் அங்கே 15 நாட்கள் தி. பணி 9:26-28, கலா 1:18-20    
39-43 தர்சு நகருக்குச் செல்லுதல் தி.பணி 9:29,30 கலா 1:21-24   கலிகுலா இறத்தல் (கி.பி. 41) கிளாடியுஸ் பேரரசனாதல்
43-44 அந்தியோக்கியா எருசலேம் தி.பணி 11:25-26,11:27-30,12:25    
45 பஞ்சம், பொருள் திரட்டுதல் தி.பணி 11:27-30, 12:25    
45-49 முதல் தூதுரைப் பயணம்
சைப்ரஸ், சின்ன ஆசியா
தி.பணி 13, 14ஈ 2தீமோ 3:11    
49(50?) முதல் பொதுச் சங்கம் எருசலேமில் தி.பணி 15:1-25; கலா 2:1-10   கிளாடியு யூதரை எருசலேமிலிருந்து வெளியேற்றினான் (தி.பணி 18:2)
49(50) பவுல் கேபாவுடன் விவாதம் செய்தல்
(அந்தியோக்கியா)
கலா 2:11    
50-52 இரண்டாவது பயணம் (சின்ன ஆசியா
மாசிதோனியா, அகாயா)
தி.பணி 15:36-18-22
கலா 4:13-15
   
50(51) பிலிப்பி தி.பணி 16:11    
51 தெசலோனிக்கா தி.பணி 17:1    
51-52 கொரிந்து தி. பணி 18:1 1,2 தெசலோ கல்வியோன் அகாயாவின் ஆளுனன் (52,53?)
பெலிக்சு யூதேயாவின் ஆளுனன் (52-60)
53-58 மூன்றாவது பயணம் தி பணி 18:23-21:17    
53 கலாத்தியா, பிரிஜியா      
54-57 எபேசு, கொரிந்துக்கு மின்னல் பயணம்
எபேசக்கு வருதல்
தி.பணி19:1; 1 கெரி 57
1 கொரி 11:34, 2 கொரி 13:1
பிலிப்பியர் கிபி 56
கலா? உரோ
கிளாடியுஸ் இறத்தல் (54) நீரோ 13 அக்டோபர் 54) பேரசனாதல்
57 எபேசு விட்டுப் புறப்படல்மாசிதோனியாவில் பயணம், இல்லிர்pக்கத்தில் பயணம் உரோ15:19      
57-58 கொரிந்து (3 மாதங்கள்) தி. பணி 20:3 கலா(?) உரோ  
58 எருசலேமில் கைதியானார் தி.பணி 20:3; 23:25    
58-60 தொடர்ந்து செசாரியாவில் சிறைவாசம் 24:27   பொக்கியு பெஸ்து யூதேயாவில்
ஆளுநன் (60-62)
60-61 உரோம் நோக்கி கப்பற் பயணம்
மால்த்தாவில் கப்பல் சேதம், உரோம் வந்தடைதல்
27:1, 28:18    
61-63 உரோமையில் முதல் சிறைவாசம்? 28:17, 28:31 கொலோ, எபேசியர் பிலமோன் உரோமையில் நெருப்பு
(64 ஜுலை) வேதகலாபனை
63-64 விடுதலைக்குப் பின் ஸ்பெயின் பயணம்? உரோ 15:24    
64 இத்தாலியில் பயணம்      
64-66 கீழ் நாடுகளில் பயணம்: எபேசு, கிரேத்தா
மக்கதோனியா, தெக்கப்போலி
தீமோ 1:3, தீத்து 1:5 3:12 1 தீமோத், தீத்து  
67 உரோமில் 2வது சிறைவாசம்? 2 தீமோ 1:15-18
2 திமோ 4:9-21, எபிரேயர்
2 தீமோத்தேயு யூதர்களின் புரட்சி (66-70)
67 வேதசாட்சியாதல்     நீரோவின் மரணம் (ஜுன் 6, 68)

-------------------

4. 1தெசலோனக்கர்

4.1. தெசலோனிக்கா நகர்(காண்க. திப 17:1-9)
இரண்டாவது தூதுரைப் பயணத்தின்போது (1,100 கற்கள்)தெருபை, லிஸ்திரா, இக்கோனியா, பிசிதியா நாட்டு அந்தியோக்கியா,துரோவா, பிலிப்பி போன்ற நகர்களுக்குச் சென்றபின் பவுல்தெசலோனிக்கா நகரை அடைந்தார் (கி.பி. 51), அங்குபோதித்தார். மேலும்பாடுபட்டு உழைத்து பணம் திரட்டி உணவுண்டார் (1 தெச 2:9; 3:8).வருவாய் பற்றாமல் போகவே இருமுறை பிலிப்பியரிடம் பணம்தண்டினார் (பிலி4:16).

தொழுகைக்கூட்டத்தில்போதித்தார். யூதர், யூத மதத்தைத் தழுவியகிரேக்கர், பெருங்குடி மகளிர் பலர் மனந்திரும்பினர். தெசலோனிக்கர்சபையில் ஆவியின் வரங்கள் இருந்தன (1 தெச 5:12, 19-22). அவைமெதுவாக வளர்ந்து வந்தன(1 தெச 1:5, 6). தெசலோனிக்கர் இரண்டாம்வருகையில் நம்பிக்கை வைத்திருந்தனர்.

தெசலோனிக்கா நகரில் பொறாமை கொண்ட யூதர்கள் அமளிஉண்டாக்கினர். அன்றிரவே பவுல் பெரோயா சென்று விட்டார்.

4.2. திருமுகம்
புனித பவுல் நீண்டகாலம் தெசலோனிக்கர் நகரில் தங்கி போதிக்கஇயல வில்லை. அங்கிருந்து பெரோயாவுக்கு ஓடிச் சென்ற பவுல்தெசலோனிக்கரைப் பற்றி கவலை கொண்டார். திமொத்தேயுவைஅங்கேஅனுப்பிவைத்தார் (1 தெச 3;1). நல்லசெய்தியோடுதிரும்பிவந்தார்அவர். அப்பொழுது ஏற்கனவே பவுல் கொரிந்து நகரை வந்தடைந்துவிட்டார் (கி.பி. 51). அங்கிருந்து ஒரு கடிதம் வரைந்தார். இரண்டாம்வருகையின் போது வாழ்வோருக்கும், இறந்தோருக்கும் என்ன நேரிடும்என்றபிரச்சினை தெசலோனிக்கரை வாட்டிக்கொண்டிருந்தது. அதற்கும்பதிலளிக்கிறார் (1 தெச 4:13-18). மேலும் ஆவியாரைப் பற்றிய தெளிவு,உழைத்து உலகை மேம்படுத்தும் கடமை இவற்றைநினைவுப்படுத்துகிறார்.

4.3. உள்ளடக்கம்

1) முன்னுரை 1:1
2) நன்றி 1:2-10
3) தெசலோனிக்காவில் பவுலுடைய முன்மாதிரியானபணி 2:1-12
4) தெசலோனிக்கரின் நம்பிக்கையும் பொறுமையும் 2:13-16
5) திமொத்தேயுவின் பணி

அ) திருத்தூதர்களின் கவலை 2 : 17-20
ஆ) தெசலோனிக்காவுக்குத் திமொத்தேயுவை அனுப்புதல் 3 : 1-5
இ) திமொத்தேயு கொண்டுவந்த செய்தியைக் கேட்டுபவுல் அடைந்த மகிழ்ச்சியும் நன்றியும் 3 : 6-13

6) அறவுரையும் அறிவுரையும்

அ) புனித வாழ்வும் அன்பும் 4 : 1-12
ஆ) ஆண்டவரின்வருகை 4 : 13-18
இ) இறந்தவர்களின்நிலை 5 : 1-11
ஈ) பொது அறிவுரைகள் 5 : 12-22

7) முடிவுரை 5 : 23-28

4.4. இரண்டாம் வருகை
கடிதத்தின் முக்கிய பிரச்சினை "இயேசுவின் 2-ஆம் வருகை”ஆகும். பழையஏற்பாட்டில்யாவேயின்நாளைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது.லூக் 1:68இல் "இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்... தன் மக்களைத்தேடிவந்தார்” (சந்திக்க வந்தார்) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால்கிறிஸ்து வருகை தருவதாக முதல் முதல் எழுதியவர் பவுல் (1:3, 10; 2:19;3:13).

தெசலோனிக்கருக்கு எழுதிய திருமுகங்களில் மட்டும் ஆறுமுறை,"இரண்டாம் வருகை” எனும் சொல்வருகிறது(1:3, 10; 2:19; 3:13). முதல்திருமுகத்தில் பிரச்சினையை விவாதிப்பதற்கு முன்னரே ஐந்து முறைஇரண்டாம் வருகை சுட்டிக்காட்டப்படுகிறது. பின் விளக்கமான பதிலும்கூறப்பட்டுள்ளது (1 தெச 4:13-5:11).ஒருவன் வெற்றி கொள்கிறான் என்றால் வெற்றி வீரனாக,அரசனாக பட்டணப் பிரவேசம் செய்கிறான்; மக்கள் திரண்டு வருவர்;பட்டணத்துக்குவெளியேவந்துவரவேற்பர்; பட்டணத்திற்குள்பவனியாகஅழைத்து வருவர்; அத்தோடு அரசன் தன்னை எதிர்த்தகுற்றவாளிகளுக்குத் தண்டனையும், தனக்குக் கைகொடுத்தவர்க்குநல்லாசியும் அருள்வான்.

அவ்வாறே தம்மையே வெறுமையாக்கி இவ்வுலகில் மனிதனாகவாழ்ந்த இயேசு மரணத்தை வென்றார்; உயிர்த்த இயேசு தந்தைக்குஇணையானார்; அவர் மீண்டும் மகிமையில் வருவார்; அப்போதுஉயிர்த்தவரும் உருமாற்றம் பெற்றவரும் அவரை எதிர்கொள்வர் (1 தெச4:17). பொதுத்தீர்வையும் நடைபெறும். நல்லோர் இயேசுவோடுபுதுவாழ்வு வாழ்வார். இதுவே பவுல் தரும் செய்தியின் சாரம்.

4.5. இரண்டாம் வருகைக்காகக் காத்திருப்போரின் கடமைமுக்கிய கடமை
வானினின்று வரும் கடவுளின் மகனுக்காககாத்திருத்தல். எனவே, அச்சம் அகற்றி மகிழ்ச்சியான அந்நாளுக்காகஆவலாய் காத்திருத்தல் வேண்டும்; எதிர்நோக்கு வேண்டும்; நம்பிக்கைவேண்டும். "நம்பிக்கையற்ற ஏனையோரைப் போல் நீங்கள்வருந்தலாகாது” (1தெச 1:3; 4:13; 5:8). மேலும்தேவையானதுபொறுமை;அதாவது தீமையை எதிர்ப்பதில் மனந்தளரக்கூடாது. கிறிஸ்துவின்பொறுமையைப் பெற்றிருக்க வேண்டும் (2 தெச 1:4; 3:5).

கடவுள்நம்மை தூயவாழ்விற்காகவேஅழைக்கின்றார் (1 தெச 2:11;5:23; 2 தெச 1:11). ஆண்டவர் இயேசுவின்வருகையின்போது நல்லவர்மட்டுமே அவரைப் புடைசூழ்ந்து நிற்கவியலும் (1தெச 3;12, 13).இவ்விறுதிக் காலம் தூயஆவியின்காலம்; எனவேதூயஆவியில்செயல்பட வேண்டும் (1 தெச 4:3-8; 5:19; 2தெச 2:13). இதுஇறைவனில்வளரும் காலம்.

அரசனாக வரும் இயேசுவை எதிர்கொள்ள "இராணுவ தயாரிப்பு”வேண்டும் 1 தெச 5:8; காண்க எபே 6:10-20; உரோ 13:11,12).மேலும்சோம்பல் தகாது (1தெச 5:14; காண்க 2 தெச 3:6-12).

---------------------

5. 2தெசலோனிக்கர்

5.1. திருமுகம்
இரண்டாம் வருகை விரைவில் வரும் என மகிழ்ச்சியோடுஎதிர்பாத்திருந்த தெசலோனிக்கர்கள் ஆண்டவருடைய நாள்வந்துவிட்டதென்றே எண்ணினர். ஏன்?

1) புனித பவுல் எழுதிய முதல் கடிதத்தைத் தவறாகப் புரிந்துகொண்டனரோ? (காண்க 1 தெச 4:13-18).
2) போலிக் கடிதம் அவர்களது கைக்குக் கிட்டியதோ ? (2 தெச2:2)இரண்டாம் திருமுகம் வரைந்தார் பவுல். இரண்டாம் வருகைஇன்னும் ஆரம்பமாகவில்லை; அறிகுறிகள் இன்னும் தோன்றவில்லைஎன்கிறார் பவுல். எனவே மகிழ்ச்சி மட்டுமல்ல, கிறிஸ்து வரும்வரைபொறுமை நம்பிக்கை, துன்பத்தைத் தாங்கும் இதயம் ஆகியவைவேண்டும். உழைக்காதவன்உண்ணலாகாது (2 தெச 3 : 6-12).

5.2. உள்ளடக்கம்

1) முன்னுரை 1:1,2
2) நன்றி கூறுதலும் ஊக்கமளித்தலும் 1:3-12
3) ஆண்டவருடைய வருகை 2:1-3:5

அ) ஆண்டவருடைய வருகையின்அடையாளங்கள் 2:1-12
ஆ) நன்றி செலுத்துதலும், உற்சாகப்படுத்துதலும், 2:13-3:17

4) ஆணையும் ஆறுதலும் 3:6-15
5) முடிவுரை 3:16-18

5.3. எப்பொழுது இரண்டாம் வருகை?
விரைவில்வருகை தருவார் என்பதுபொதுவானநம்பிக்கை. ஒருவேளை தாம் இறந்துபோகலாம். (1கொரி 6:14; 2கொரி 5:1; 4:14; உரோ14:7; பிலி1:20; 3:11). எனினும் தன்வாழ்நாளிலேயேஇரண்டாம் வருகைஇருக்கும் என்றாற்போல் பன்முறை கூறியுள்ளார் பவுல் (1 தெச 4:13-17; 1 கொரி 15:51; 1 கொரி 7:28, 29, 31; 2கொரி 5:3; பிலி 3:21).அதையொட்டி ஒரு சில அறிவுரைகளும் வழங்கியுள்ளார்.சான்றாக கன்னிமை (1 கொரி 7:26-31).

எனினும் எப்பொழுது வருவார் என்பது நிச்சயமில்லை,ஆண்டவரின் நாள் திருடனைப் போலவும், கர்ப்பவதிகளுக்கு வேதனைபோலவும் வரும் (1 தெச 5:1-3). மின்னல்போல் அந்நாள் வரும்(மத்24:27). தந்தைக்குத் தெரியுமேயன்றி வான தூதருக்கும், மானிடமகனுக்கும்கூட தெரியாது என்று இயேசுவே கூறியுள்ளார் (மாற் 13:32).எனவேதான்விழிப்பு தேவை (1 தெச 5:6-11).இரண்டாம் வருகையும் முன்னடையாளங்களும் (காண்க 2 தெச2:1-12).சோம்பல் தவிர்த்து விண்ணரசின் மதிப்பீடுகளையும் இவ்வுலகின்வளர்ச்சிநிலைகளையையும்கட்டியெழுப்ப வேண்டும்(3:6-15). நிலைஏன்இரண்டாம் வருகைக் காலதாமதம்? (காண்க 2 பேதுரு 3:8-9)

--------------------------

6. பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்

6.1. பிலிப்பி நகர்(காண்க. திப 16:11-34)
இரண்டாம் பயணத்தின்போதுமுதன்முறையாக பிலிப்பிநகருக்குச்சென்றிருந்தார் பவுல் (கி.பி. 50). மகா அலெக்சாந்தரின் தந்தை பிலிப்புபேரரசன்கட்டிய நகரம் பிலிப்பி. கி.பி. 42 முதல் அந்நகர் உரோமையின்இராணுவத் தளமாயிருந்தது.

ஐரோப்பாவில் கிரேக்க நாட்டில் பவுல் முதல் முதல் சந்தித்த நகரம்பிலிப்பி. யூதர் ஒரு சிலர் அங்கு வாழ்ந்து இருந்தனர். ஆனால்தொழுகைக் கூடம் இல்லை. இரத்தாம்பரம் விற்கும் லீதியா என்ற யூதமறையைத் தழுவியவளும், அவள் வீட்டாரும் மனந்திரும்பினர்; தன்வீட்டில்தங்கஅவள்அவரை அழைத்தாள். வற்புறுத்தினாள். பிலிப்பியில்பெரும்பான்மையான கிறிஸ்தவர் பிற இனத்தாரிடமிருந்துமனந்திரும்பியவர்.சில மாதங்கள் பிலிப்பியில் தங்கியிருந்தார் பவுல். அவருக்குஎயோதியா, சிந்திக்கேயா போன்ற பெண்கள் பெரிதும் துணைநின்றனர்(பிலி4:2,3).

துன்பத்தில் மகிழ்பவர் பவுல். பிலிப்பி நகரிலும் பெருந்துன்பம்அவருக்காகத் காத்திருந்தது.

பவுலும் சீலாவும் சிறைப்பட்டது திப 16:16-24
விடுதலை திப 16:25-40

மூன்றாம் பயணத்தின்போதும் பவுல்அவர்களைச் சந்தித்தார் (கி.பி.57). அதுவரை லூக்கா அதனைகண்காணித்து வந்தார். பவுல் மிகவும்அன்புசெய்த சபை பிலிப்பி. பொதுவாக உதவி பெற மறுக்கும் பவுல்தாராள குணம் கொண்ட பிலிப்பியரிடமிருந்து இரு முறை உதவிபெற்றிருந்தார் (பிலி 4:10-23).

6.2. திருமுகம்
இத்திருமுகம் நிச்சயமாக சிறையிலிருந்து எழுதப்பட்டது (பிலி 1:712-17, 20-23; 4:22). எங்கே சிறைப்பட்டிருந்தார்?

கொலோசையர், பிலமோன், எபேசியர் திருமுகங்கள் 61-63 இல்உரோம் சிறையிலிருந்து எழுதப்பட்டன. பிலிப்பியருக்கு அங்கிருந்தேதிருமுகம் எழுதப்பட்டதெனப் பலர் கருதி வந்தனர்.ஆனால் மூன்றாம் பயணத்தின்போது 56 ஆம் ஆண்டு எபேசுசிறையில் மரண ஆபத்தில் இருந்தபோது (காண்க 2 கொரி 1:8-10; 2கொரி 11:23) இது வரையப்பட்டது என இன்று பலர் கருதுகின்றனர்.

6.3. உள்ளடக்கம்

1)அஞ்சலி 1:1-2நன்றியும்,
இறைவேண்டலும் 1:3-11
பவுலின்நிலைமை 1:12-26
கிறிஸ்த வாழ்வுக்கானஅறிவுரைகள்(இயேசு பாடல்.. .) 1:27-2:18
தனிப்பட்ட செய்திகள் 2:19-3:1
சபையின்அமைதிக்காக அறிவுரை 4:2-9

குறிப்பு: பவுல் பிலிப்பியருக்கு எழுதிய பல கடிதங்கள் ஒரே கடிதமாகத்தொகுக்கப்பட்டுள்ளன என்பர் ஆராய்ச்சியாளர். மேற்குறித்த பகுதிகள்தனிக் கடிதமாகக் கருதப்படுதலும் உண்டு.

2)மீட்பிற்கு உண்மையான வழி3:2-4:1

குறிப்பு: இதனை ஒரு தனிக்கடிதமாகக் (கண்டிப்புக்கடிதம்)கொள்பவர் பலர். இங்கே திடீர் மாற்றம்; சூழ்நிலை வேறுபடுகிறது. பிறஇனத்தார் சட்டம், விருத்தசேதனம் ஏற்கவேண்டும் என வற்புறுத்துவோரைக் கண்டிக்கிறார் (3:2, 1:28) பவுல். எச்சரிக்கிறார்; மனம்புண்படவும் பேசுகிறார்.

3)நன்கொடைகளுக்கு நன்றி 4:10-20

குறிப்பு: இதனைத் தனிக் கடிதமாகக் (நன்றிக்கடிதம்)கொள்ளலாம். இங்கே நன்றியுணர்ச்சி வெளிப்படுதல் காண்க. பவுல்பிலிப்பியரிடமிருந்து மட்டுமே பொருளுதவிபெற்றுள்ளார்.

4)இறுதி வாழ்த்துரை 4:21-23

6.4.கருத்தியல் அடிப்படையில் உள்ளே

1)பிலிப்பியர்க்கு எழுதிய கடிதம் மகிழ்ச்சியின் கடிதம் பிலி 1:18,25; 2:2,17,18,28,29; 3:1; 4:1,4,10
காண்க 1 தெச 5:16; உரோ 12:12,15

புனித பவுலின் சீடரான லூக்கா எழுதிய நற்செய்தி ஏடு "மகிழ்ச்சி”எனும் கருத்தால் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2)கிறிஸ்துவை மையமாகக் கொண்ட புகழ்பாடல் தரும் கடிதம்
2:6-11இல் காணப்படும் இப்பாடல் புனித பவுலால் இயற்றப்பட்டதுஎனசிலர் கூறுவர். ஆனால்தொடக்கத் திருச்சபை இயற்றிய ஒருபாடல்

இது என்பதும் ஒருகருத்து. "துன்புறும் ஊழியன்” இயேசு எனும் கருத்துதொடக்கத் திருச்சபையின் போதகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது.இப்பாடலும் துன்புறும் ஊழியனைப் பற்றி அமைந்ததே.இப்பாடலின் மையம் இயேசுவே. நமது வாழ்வும் இயேசுமயமாகவேண்டும் எனஇப்பாடல் அழைக்கிறது.

3)நன்றியுணர்ச்சியைத் தட்டியெழுப்பிய கடிதம்: குறிப்பாக 4:10-20

------------------------------

7.1கொரிந்தியர்

7.1. கொரிந்து நகர்
இரண்டாம் தூதரைப் பயணத்தின்போது (1100 கற்கள்) தெருபை,லீஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா, துரோவா, பிலிப்பி,தெசலோனிக்கே, பெரோயா, ஏதென்சு போன்ற இடங்களுக்குச்சென்றபின் பவுல் கொரிந்து நகரை அடைந்தார். கி.பி. 51-53 வரைஅங்கேயே தங்கினார்.

அந்நகர் ஒரு துறைமுகப் பட்டணம். பணமும், மோகமும் அதன்இரு தெய்வங்கள். இத்தகைய நகரில் எளியோர் பேறு பெற்றோர், தூயஉள்ளத்தோர் பெறுபெற்றோர் எனும் நற்செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்வது கடினம். கொரிந்து எனும் கோலியாத் முன் தாவீது போலகாட்சி தந்தார் பவுல். "அஞ்சாதே, நான் உன்னோடு இருக்கிறேன்”(காண்க. திப 18:1-17). உரோமிலிருந்து வெளியேற்றப் பட்டு சமீபத்தில்கொரிந்துக்கு வந்திருந்த அக்கிலா என்ற யூதன், அவனுடைய மனைவிபிரிஸ்கில்லா இவர்கள் வீட்டில் தங்கியிருந்தார் பவுல். முதலில்யூதர்களுக்கும், பின்பிறவினத்தாருக் கும் போதித்தார்,மனந்திரும்பியவர் நல்லொழுக்கம் நாடி நடைபோட்டனர்.ஆவியின்வரங்கள் அதற்குப் பெரிதும் உதவிற்று. எனினும் கொரிந்தியசபைதான்தன்ஸ்தாபகருக்குப் பெரிதும் தொல்லைகொடுத்த சபை. கி.பி.53-இல் பயணம் முடிவுற்றது (கொரிந்திலிருந்துதான் பவுல்தெசலோனிக்கேயருக்குக் கடிதங்கள் இரண்டு எழுதினார் எனக்கண்டோம்).

அதே வருடம் மூன்றாம் தூதுரைப் பயணம் (1350 கற்கள்)தொடங்கிற்று. கலாத்தியா, பிரிகியா நாடெங்கும் சுற்றி எபேசுவந்தடைந்தார் (திப 18:22). அங்கே 54-57 வரை தங்கினார். அங்கிருந்துபிலிப்பி சபைக்கும் கடிதம் வரைந்தார் கொரிந்து சபைக்கு திருமுகங்கள்எழுதலானார் எனக் காண்போம்.

7. 2. திருமுகங்கள்

1) #8220; பரத்தமையில் ஈடுபடுவோருடன் உறவு வைத்துக் கொள்ளவேண்டாம்” என ஒரு கடிதம் வரைந்திருந்தார் (கிபி 55?).இக்கடிதம் நம் கைக்கு வந்து சேரவில்லை (1 கொரி 5:9).
2) கொரிந்திய சபையின் கட்சிப் பிரிவினைகளைப் பற்றி குலோயிவீட்டினர் வாயிலாக அறிந்து(1 கொரி 1:11) திமோத்தேயுவைஅங்குஅனுப்பியதோடு (1கொரி 4:17; 16:10), ஒருதிருமுகமும் வரைந்தார்.வரைந்து கொண்டிருக்கும்போது (அல்லது சற்றுமுன்) ஸ்தேபனா,பொர்த்துனாத்து, அக்காயிக்கு ஆகியோரடங்கிய தூதுக்குழு ஒன்றுபல பிரச்சினைகளடங்கிய கடிதத்துடன் கொரிந்திலிருந்துவந்திருந்தினர். இப்பிரச்சினைகளுக்கு தம் திருமுகத்தில்பதிலளிக்கிறார் புனித பவுல். இதுவே இன்றைய 1 கொரிந்தியர்.

7.3. உள்ளடக்கம்

அஞ்சலி 1:1-3
நன்றி 1:4-91)
கண்டனம்(1:10-6:20)

கொரிந்து நகர திருச்சபையில் கட்சிகள் 1:10-4:21
கூடா ஒழுக்கமுள்ளவன் 5:1-13
வேற்று மறையினர் முன்வழக்காடல் 6: 1-11
கெட்ட நடத்தை 6:12-20

2)வினாக்களுக்குப் பதில்வினாக்களுக்குப் பதில்வினாக்களுக்குப் பதில் (7:1-15; 58)

திருமணமும், கன்னிமையும் 7:1-40
சிலைகளுக்குப் படைத்ததை உண்ணலாமா?8:1-11:1
பெண்களுக்கு அறிவுரை: முக்காடு 11:2-16
ஆண்களுக்கு அறிவுரைஆண்டவரின்திருவிருந்து 11:17-34
துhய ஆவியின்கொடைகள் 12:2-14:40
இறந்தோர் உயிர்தெழுதல் 15:1-58
முடிவுரை 16:1-18அஞ்சலி 16:19-24

------------------------------------

 

8. 2கொரிந்தியர்

8.1. திருமுகம்
மூன்றாம் தூதுரைப் பயணத்தின் போது கலாத்தியா, பிரிசியாநாடெங்கும் சுற்றி எபேசு நகர் வந்தடைந்தார் பவுல். கி.பி. 54-57 இல்அங்கேயே தங்கியிருந்தார். அப்பொழுது நடந்தேறியவை.

அப்பொல்லோ (யோவானின் திருமுழுக்கு) திப 18:24-28
யோவானின் திருமுழுக்கு பெற்றவருக்கு ஆவியார் 19:1-7
எபேசு திருச்சபை உருவாகியது 19:8-10
பேயோட்டிகள் 19:11-20
பவுல் கைதி-எபேசு விட்டு செல்லல் 19:23-41

எபேசு நகரில் தங்கியிருந்த போது திமொத்தேயு என்பவரைகொரிந்துக்கு அனுப்பி வைத்தார். 1 கொரிந்தியர் எழுதப்பட்ட இடம் எபேசுநகரமே.இவற்றால் பயனில்லை எனக் கண்டு பவுல் கொரிந்து நகருக்குப்பயணமாகிச் சென்றார்(டீசநைக pயiகெரட எளைவை: 2 ஊழச 2:1). நீண்ட காலம்கொரிந்தில் பின்பு தங்குவதாக வாக்களித்துவிட்டு எபேசு நகருக்குவிரைவில் திரும்பிவிட்டார்.

இதற்குப் பின் கொரிந்தியர் பவுலின் தூதுவரை அவமதித்து,பவுலின் அதிகாரத்தையே பழித்துப் பேசினர். அதற்குக் காரணம் பிறஇனத்தார் மோசேயின்சட்டத்தைப் பின்பற்றவேண்டும்எனவாதாடுவோர்(இவர்களைப்பற்றி - காண்க திப 15:5).இத்தகையோர் கொரிந்து நகருக்கு வந்துவிட்டனர் (2 கொரி 1:22);பின்வரும் பெயர்கள் இவர்களைக் குறிப்பிடுகின்றன.

வருத்தம் வருவிருத்தவர் 2 கொரி 2:5-10
அநீதி செய்தவன் ” 7:12
போலிதிருத்தூதர் ” 11:12
பேர்போனதிருத்தூதர் ” 11:5
வஞ்சக வேலையாட்கள் ” 11:13

எனவே "வேதனையோடு ஒரு கடிதம்” அனுப்பினார் (2 கொரி2:4,9); துயர் தரும் கடிதம் அது (2 கொரி 7:8). அதுநன்மைபயக்காமலில்லை. கி.பி. 57இல் அக்கடிதத்தின் பலனைக்கண்டுவரச் சென்றிருந்தார் தீத்து. அவரைக் காணாததால் உள்ளம்அமைதியின்றி தவித்தவராய் மாசிதோனியாவுக்கு பவுல் வந்துவிட்டார்(கி.பி. 57). தீத்து நல்ல செய்தியுடன் அங்கு வந்து சேர்ந்தார் (தி.பணி19:21-22; 2 கொரி 2:12-13; 7:5-13; 11:18).

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் மாசிதோனியாவிலிருந்தே அனுப்பப்பட்டது. அதுபொதுவாகஅமைதிநிறைந்த கடிதமாகும்.

8.2. உள்ளடக்கம்
ஒப்புரவுக் கடிதம்

1) அஞ்சலி 1:1-2
2) நன்றியுரை 1:3-11
3) கடந்த நிகழ்ச்சிகள்(அ) கொரிந்துக்குப் பயணம் 1:12-2:13(ஆ) திருத்தூதர் திருப்பணி 2:14-6:10, 7:2-7:16

குறிப்பு:இது அமைதி விளங்கும் கடிதம்

4) தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார் 6:11-7:1

குறிப்பு: பரத்தமையில் ஈடுபடுவோரோடு உறவு வைத்துக் கொள்ளவேண்டாம் என்று கண்டித்து எழுதியிருந்த கடிதத்தில் ஒரு பாகம் இதுஎன்பர் சிலர்.

1கொரி 6:10க்குப்பின் ஏற்கனவே விளக்கப்பட்டிருந்த விவாதத்தைமுறிக்கும் அளவில் திடீரென்று புதிய கருத்து புகுத்தப்படுகிறது. இப்பகுதிகும்ரான்இலக்கியத்தோடு தலைசிறந்த ஒற்றுமை கொண்டுள்ளது. ஒளிஇருள் இவற்றின் போர்பற்றி விளக்கப்பட்டுள்ளது.

5) எருசலேம் சபைக்காக நன்கொடை திரட்டும் திட்டம்: அதி 8-9
குறிப்பு: இது தனிப்பட்ட கடிதம் என்பார் பலர். மனமுவந்துநன்கொடை அளிப்பதற்கானகாரணங்கள்இதில்சித்தரிக்கப்பட்டுள்ளன.

6) தம்மைப் பற்றிய சாட்சியம்

(அ) குற்றச்சாட்டுகளுக்கு மறுமொழி 10:1-18
(ஆ) தம்மைப்பற்றிய பாராட்டுரை(பணி, துன்பம், காட்சி) 11:1-12:21
(இ) கொரிந்துக்கு மூன்றாவது பயணம் 13:1-10
(ஈ) முடிவுரை 13:11-13

குறிப்பு:இப்பகுதி (10:1-13:13) மிகவும் கண்டிப்பான தொனியில்எழுதப்பட்டுள்ளது. இது ஒரு தனி கடிதம் என்றனர் சிலர்; வேதனைதரும் (2 கொரி 2:4; 9) கடிதமே ஒரு பகுதி இது என்கின்றனர். இவர்

திருத்தூதர் பணி துன்பத்தோடு இணைந்தது என்பதை இக்கடிதம்உணர்த்துகிறது.இவ்வாறு பவுல் கொரிந்தியருக்குப் பல்வேறு கடிதங்கள்வரைந்துள்ளார் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

கவனிக்க: 1, 2 கொரிந்தியர் பற்றிய விளக்கவுரை அடுத்தப் பாடநூலில் வெளிவருகிறது.

-------------------------------

9. கலாத்தியர்

கி.பி. 57, 58இல்எழுதப்பட்டகலாத்தியர், உரோமையர் திருமுகங்கள்சுமாராக ஒரே ஆழ்ந்த கருத்தையே வலியுறுத்துகின்றன. கிறிஸ்துவில்விசுவாசம் வழியாய் மட்டுமே மீட்பு, ஏற்புடைமை ஏற்படுகிறது என்பதேஅக்கொள்கை (பழைய சட்டம், விருத்தசேதனம் வழியாக அன்று).இக்கொள்கையை கலாத்தியர் திருமுகத்தில் பொதுப்படையாகவும்,உரோமர் திருமுகத்தில் சிந்தனைக் கோர்வையாகவும் அளிக்கிறார் பவுல்.

9.1. கலாத்தியர்
கலாத்தியா பகுதியில் வட கலாத்தியா, தென்கலாத்தியா எனஇருபிரிவுகள் உண்டு. பவுல் முதல் பயணத்தின் போது தென் கலாத்தியாசென்றிருந்தார் (திப 13:4-14:26). இரண்டாம் பயணத்தின்போது அதைப்பார்வையிட்டார் (16:1-4).ஆனால் கலாத்தியருக்கு எழுதிய கடிதம் என்பது வடகலாத்தியாவுக்கு அனுப்பப்பட்டதாகும். பவுல் 2ஆம் பயணத்தில் அங்கேசென்றிருந்தார் (திப 16:6). 3 ஆம் பயணத்தின்போது கி.பி. 53இல் வடகலாத்தியாவில் பணியாற்றினார் (திப 18:23).

கடிதம் எழுதிய இடம், காலம்:
3 ஆம் பயணத்தின்போது கி.பி.57இல் எபேசிலிருந்து எழுதப்பட்ட கடிதம் இது.

9.2. உள்ளடக்கம்

1) முன்னுரை
1:1-9அஞ்சலி 1:1-5
நோக்கம் 1:6-10

2) நிகழ்ச்சிப் பகுதி1:11-2:21
நற்செய்தி கடவுளின்வெளிப்பாடு 1:11-24
எருசலேம் திருச்சபையின் ஒப்புதல் 2:1-10
பவுல் பேதுரு கொள்கையளவில் மோதல் 2:11-14
பவுல் அறிவுறுத்தும் நற்செய்தி 2:15-213)

3) கொள்கைப் பகுதி3:1-4:31
நம்பிக்கையினால் ஏற்புடைமை 3:1-25
கிறிஸ்தவ சுதந்திரம் 3:26-4:20
சுதந்திரத்தை விளக்க எடுத்துக்காட்டு 4:21-31

4) அறிவுரைப் பகுதி5:1-6:10
கிறிஸ்தவ உரிமையை இழந்துவிடாதீ 5:1-15
உரிமையை முறையாகப் பயன்படுத்தல்(ஆவியின் கனிகள்) 5:16-6:10

5) முடிவுரை6:11-189.3.

பொதுவான கொள்கைகள்பவுல் மனந்திருப்பிய கலாத்தியரிடையே, ஒரு சிலர் விரைவில்புகுந்து அங்குள்ள பிறவின கிறிஸ்தவரை யூத நெறிப்படி வாழுமாறுவற்புறுத்தினர். இவ்வாறு வற்புறுத்தி யவரே "யூத கட்சியினர்” அல்லது"போலிச் சகோதரர்கள்” நாய்ப்படை என அழைக்கப் படுகின்றனர்.பிறவினகிறிஸ்தவர் யூதச் சட்டத்தை ஏற்க வேண்டும், விருத்தசேதனம்பெற வேண்டும்; அப்போதுதான் அவர் மீட்பு பெறமுடியும் என "போலிச் சகோதரர்கள்” போதித்துக்குழப்பினர். இவர்களுக்குப் பதில் மொழியாக 1-4அதிகாரங்கள் அமைகின்றன.இயேசுவின் மேலுள்ள நம்பிக்கையினாலும், திருமுழுக்கினாலும் மனிதன்இறைவனுக்குஏற்புடையவன் ஆகிறான். மீட்பு பெறுகிறான்.கிறிஸ்துவன் யூதச் சட்டத்துக்கு (விருத்தசேதனம்உட்பட) அடிமையல்ல. சட்டத்தாலும்விருத்தசேதனத்தாலும் அவனுக்கு மீட்பு கிட்டப்போவதில்லை என்பதே முக்கிய கருத்து.

நற்செயல்கள் தேவையில்லை என்ற போக்குடையோரும்இச்சபையில்இருந்தனர். இத்தகையவிடுதலைவிரும்பிகளுக்கு எதிராகஎழுதப்பட்டவை 5-6ஆம் அதிகாரங்கள்.ஆவியில்வாழ்வு5:16-26; 4:6-7, அன்பின்பஞ்சத்திலிருந்து (4:3,8-11) கடமை (5:14)கிறிஸ்தவ சுதந்திரம் (பழைய சட்டசமயத்திலிருந்து, அடிமை நிலையிலிருந்து,சாவிலிருந்து (4:1-11), மேலும், கிறிஸ்தவசமத்துவ சமுதாயம் (4:26-29); கிறிஸ்தவர்க்குதனிக்கவனம் (6:10) ஆகிய கருத்துக்களும்இக்கடிதத்தில் இடம்பெறுவது தெளிவு.

9.4. அன்புக்கு மட்டுமே அடிமையாகலாம் (கலா 5:13)
தம் கொள்கை சரியானது என்பதை உணர்த்த தமதுஅழைப்பையும் அதிகாரத்தையும் பவுல் வலியுறுத்துவதும்முக்கியமானதாகும் (குறிப்பாக முதல் இரு அதிகாரங்கள்).நற்செய்தியின்தேவையைமேலும்வலியுறுத்துவதேயாக்கோபுஎழுதியதிருமுகம்.

----------------------------------

10. உரோமையர்

10.1. முக்கிய கொள்கை
கலாத்தியருக்கு எழுதிய அதே கருத்துக்களை மீண்டும் மீண்டும்சிந்தித்துக்கொள்கைக்கோர்வையாகஉரோமையருக்குஎழுதியகடிதமாககி.பி. 58 ஆம் வருடத்தில் பவுல் எழுதினார்.

10.2. உரோமைத் திருச்சபை
உரோமைத் திருச்சபையைநிறுவினவர் புனித பேதுருவோ பவுலோஅல்ல. புனித பேதுருகி.பி. 50க்குப்பின்உரோம் நகரில் காலடிவைக்கும்முன்னரே அங்கு கிறிஸ்தவர் வாழ்ந்திருந்தனர்.

உண்மையில் பெந்தகொஸ்தே தினம் அன்றே, உரோமையராகியயூதர்கள் எருசலேமில் மனந்திரும்பியிருக்க வேண்டும். (தி.பணி2:10).பின்னர் கிறிஸ்தவ வணிகர்கள் உரோமை நகரில் திருச்சபை பரவகாரணமாயிருந்திருக்க வேண்டும். இந்தக் கிறிஸ்தவ பெருந்தொகையினர் கி.பி. 50-இல்உரோமையிலிருந்துநாடுகடத்தப் பட்டதுபற்றிதி.பணி18:2 கூறுகிறது.

10.3. உரோமைத் திருச்சபையோடு பவுலின் தொடர்பு
முதல் முதலில் உரோமையிலிருந்து நாடுகடத்தப்பட்ட கிறிஸ்தவவணிகரோடு பவுல் தொடர்பு கொண்டிருந்தார் (உரோ 16:3-5; தி.பணி18:3). உரோமையில் அமைதி ஏற்பட்டு நாடுகடத்தப்பட்டோர் நாடுதிரும்பியபோது, பவுல் உரோமை சென்று அவர்களைச் சந்திக்கவிரும்பியது இயல்பே (திப 19:21). உரோமையில் யூதக் கிறிஸ்தவரும்பிற இனக் கிறிஸ்தவரும் இருந்தனர். இந்த யூத பிற இனக்கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ளும் முறையில் கடிதம் எழுதினார் பவுல்.

10.4. இடம் காலம்
இக்கடிதத்தை பவுல் தம் 3-ஆம் பயணத்தின் போது கி.பி. 57, 58-இல் கொரிந்து நகரத்திலிருந்து எழுதியிருக்க வேண்டும்.

10.5. உள்ளடக்கம்

1) முன்னுரை1:1-15
2) கோட்பாட்டுப் பகுதி - கடவுளின் நற்செய்தி1:16-11:36

அ) நம்பிக்கையினால் ஏற்புடைமை1:16-4:25
1. மீட்பின்நற்செய்தி 1:16-17
2. கடவுளின்சினம் 1:18-3:20
3. நம்பிக்கையால் ஏற்புடைமை 3:21-31
4. ஆபிரகாம் ஓர் எடுத்துக்காட்டு 4:1-25

ஆ) ஏற்புடைமை வழி மீட்பு5:1-11:36
1. மீட்பு 5:1-11
2. மூவகை விடுதலை (சட்டம், பாவம், சாவு) 5:12-7:25
3. தூய ஆவிஅருளும் வாழ்வு 8:1-39
4. மீட்புத்திட்டத்தினால் இஸ்ரயேல் 9:1-11:36

3) அறிவுரைப் பகுதி12:1-15:13

1. ஆன்மீக வழிபாடு (புதுவாழ்வு) 21:1-13:14
2. மனவலுவற்றவர்பால் அன்பு 14:1-15:13

4) முடிவுரை15:14-16:27
பழைய ஏற்பாட்டு சட்டத்தையும், அதன் முதற்படியான விருத்தசேதனத்தையும் அனுசரிக்காவிடில் மீட்புபெற முடியாது எனப் போதித்துகுழம்பிய 'போலிச் சகோதரர்கள்' (திப 15:1) பிறஇனக் கிறிஸ்தவர்கள்இருந்த திருச்சபைகள் அனைத்திலும் புகுந்துவிட்டனர்.

ஆனால் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வழியாகவே மீட்புஏற்படுகிறதுஎன்பதுபவுலின்போதனை: பரம்பரை கிறிஸ்தவபோதனை.இக்கொள்கையை உரோமையில் சென்று போதிக்க, முன்தயாரிப்பாக பவுல் அவர்களுக்கு மிக நீண்ட கடிதம் வரைகிறார்.பல்லாண்டு அனுபவத்தின்சுவையானகனிஇத்திருமுகம்.

மனிதர் பாவத் தளைகளில் சிக்கித் திணறுவதை மனநூல்நிபுணரும், உலகம் சமூகப் பாவ கட்டுக்களிலிருந்து விடுபட முடியாமல்தவிப்பதை சமூக இயல் வல்லுநரும் நமக்குத் தெளிவுப்படுத்துகின்றனர்.மனிதர் பாவி, இன்றைய உலகம் பாவ மயமானது என்பதை பவுலும்வலியுறுத்துகிறார். பிறவினத்தார் பாவிகள் (1:18-32); யூதரும் பாவிகள்(2:1-19); எனவே எல்லாரும் பாவிகள் (3:9-18) என்கிறார் பவுல். மேலும்,இதிலிருந்து நம்மை விடுவிப்பவர் இயேசுவே! (7:14-24). இயேசுவேபழைய சட்டங்களிலிருந்தும் நம்மை விடுவித்து புது வழிகாட்டியாய்விளங்குபவர். ஆவியை அளித்து நம்மை வாழ்விப்பவர் (8:1-10).அன்பையே சட்டமாகத் தருபவர் (8:31-39). எனவே பாவம், விடுதலை,திரு முழுக்கு, தூய ஆவி, அன்பு, அன்பின் செயல் இவைகள்பற்றிஇக்கடிதத்தில் வலியுறுத்துகிறார் பவுல்.தேர்ந்தெடுக்கப்பட்டஇஸ்ரயேல்குலத்தின்நிலைப்பற்றியும்கவலையோடு பேசுகிறார் பவுல் அடியார் (அதி 9-10-11).பின்வரும் அதிகாரங்களில் 12-15 கிறிஸ்தவ புதுவாழ்வுபற்றியவை யாகும்.

-------------


11. கொலோசையர்

பிலி., கொலோ., பில., எபே., ஆகிய கடிதங்கள்சிறைக்கூடமடல்கள்மடல்கள்மடல்கள் ஆகும். இவற்றுள் பிலி. எபேசு சிறையிலிருந்து (கி.பி. 56)எழுதப்பட்டதுஎனக்கண்டோம். கொலோ., எபே, பிலஆகியவைஉரோமைசிறையிலிருந்து (கி.பி. 61-62) எழுதப்பட்டவையாகும்

11.1. கொலோசை நகர்எபேசிலிருந்து 100 கல் தொலைவில் லைகஸ் ஆற்றருகேஅமைந்த நகர் இது. வளமானநகர். மேலும்நிலநடுக்கத்தால்தாக்கப்படும்நகர். வியாபாரத்திற்குப் பேர் பெற்ற இடம். மந்தைகளுக்கு இங்கேகுறை வில்லை. உயர்ரக துணி நெய்தலுக்கும், சாயம் ஏற்றும்தொழிலுக்கும் பெயர் பெற்ற பட்டணம்.பிற்காலத்தில்லவோதிக்கேயர் நகர் புகழ்பெறவே, கொலோசை நகர்பொலிவிழந்து அழிந்தது. அது இருந்த இடத்தைக் கண்டுப்பிடிப்பதுகூடஇன்று கடினமாயுள்ளது.சுமார் 50,000 யூதர்கள்அங்குதங்கி குடியிருந்தனர். பவுலின்சீடர்எப்பாபிரா ஒரு சிலரை மனந்திருப்பி அங்கே சபை நிறுவினார். பவுல்இச்சபைக்குநேரே சென்றதில்லை(2:1). ஆனாலும் உரிமையோடுகடிதம்எழுதுகிறார்.

11.2. உள்ளடக்கம்

1) முன்னுரை1:1-14
வாழ்த்து 1:1-2
நன்றி கூறல் 1:3-8
மன்றாட்டு 1:9-14
கிறிஸ்துவின் முதன்மை 1:15-20
மீட்பில் கொலோசையர் பங்கு 1:21-23
மீட்பை உணர்த்த பவுல் பங்கு 1:24-2:3

2) தவறான படிப்பினைக்கு எச்சரிக்கை2:4-3:3
நிலைத்து நிற்க அறிவுரை 2:4-7
நற்செய்தியும், போலிஞானமும் 2:8-15
கிறிஸ்தவச் சுதந்திரம் 2:16-23

3)கிறிஸ்துவில் புது வாழ்வு3:1-4:1
உயிர்த்த வாழ்வின்பயன் 3:1-17
குடும்ப வாழ்க்கை 3:18-4:1

4) இறுதி அறிவுரைகள்4:2-6
தன்னைப்பற்றிய செய்திகள் 4:7-9
இறுதி வாழ்த்து 4:10-18

11.3. முக்கிய நோக்கங்கள்
கிறிஸ்தவ வாழ்வு தழைத்த கொலோசை சபையில் சிலதவறுகளும் முளைத்தன் சில கொள்கைகள், சில தவறானபழக்கவழக்கங்கள். சான்றாக யூதர் மத்தியில்தூதர்கள்பால்ஒருவித பயம்இருந்தது. மேலும் விருத்தசேதனம் (2:11), உணவுமுறைகள் (2:2),முழுநிலவு பார்த்தல் (2:20) போன்ற சடங்குகளில் பற்று, மணவாழ்க்கையைப்பழிக்கும் நோக்கு (2:23) இருந்து வந்தன.பிற இனத்தாரின்சமய வாழ்வு வானியலோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்தது.

எனவே தூதர்களின் உண்மைநிலை, கிறிஸ்துவின் மேன்மை,உண்மை விருத்தசேதனம், உண்மை தவம், காலநேர நம்பிக்கை, குடும்பவாழ்க்கை இவை பற்றி பவுல் நல்ல பல கருத்துக்கள் அளிக்கிறார்.

---------------------


12. எபேசியர்

12.1. எபேசு நகர்எபேசு நகர் 'சின்ன ஆசியா'வில் கய்ஸ்டர் நதிக்கரையில் அமைந்துள்ளது. இது உரோமை ஆட்சியின்போது ஒரு மாவட்டத் தலைநகராகவிளங்கி யது. செல்வம் கொழிக்கும் நகர்; வியாபார மையமானதுறைமுகம்; புகழ்வாய்ந்த மாபெரும் தியானா தேவதையின் கோயில்இங்கிருந்தது. மேலும் விளையாட்டு அரங்கம், ஜிம்னாசியம்முதலியவற்றைக் கொண்டிருந்தது எபேசு மந்திரவாதிகளுக்கும்பேர்போனபட்டணமாகும்.பவுல் 2 ஆம் பயணத்தின்முடிவு காலத்தில் எபேசு சென்றிருந்தார்(கி.பி. 52).

மூன்றாவது பயணத்தின்போது கி.பி. 54-57இல் எபேசில் நீண்டநாள் தங்கினார். அப்போது எபேசு நகரில் நடந்தவை:

அப்பொல்லோ போதனை திப 18:24-28
பவுல் ஆவிஅருள்தல் திப 19:1-7
திருச்சபை உருவாதல் திப 19:8-10
பேயோட்டிகள் திப 19:11-20
பவுலின்திட்டங்கள் திப 19:21-23
எபேசு நகரில் கலகம்
எபேசு நகர் விட்டுச் சென்றது திப 19:23-41

எபேசு நகரில் தங்கியிருந்த அந்நீண்ட காலத்தில் ஒரு முறைகொரிந்து நகருக்கு 'மின்னல் பயணம்' செய்து திரும்பி வந்தார் (1 கொரி11:34). எபேசு நகரில்கொடியசிறைவாசம்அனுபவித்ததுமுண்டு(2 கொரி11:23). அப்போதுதான் பிலிப்பியருக்குத் திருமுகம் (சிறைக்கூட மடல்)எழுதினார். விடுதலை பெற்றபின் கொரிந்தியருக்கு முதல் கடிதம்வரைந்தார். கலாத்தியருக்கும் இங்கிருந்தே கடிதம் வரையப்பட்டது.பல்வேறு துன்பங்களுக்கிடையில் திருச்சபை எபேசு நகரில் நிலைநாட்டியபின் பவுல், மாசிதோனியா, அக்காயா பகுதிகளுக்குச் சென்றார்.பின் திரும்பி வருகையில் மிலேத்தில் இருக்கும்போது எபேசியரைவரவழைத்துபிரியாவிடை நல்கினார் (திப 20:17-38). பின்னர் எருசலேம்சென்றார். ஆக, மூன்றாம் பயணம் முழுவதும் எபேசியருக்கு மிகுந்தமுக்கியத்துவம் அளிக்கிறது.

12.2. இடம், காலம்
கொலோசையர், பிலமோன் திருமுகங்களைப் போலவேஎபேசியருக்கு எழுதப்பட்ட கடிதம் பவுல் 61-62ஆம் ஆண்டில் உரோம்சிறையிலிருந்த போது எழுதி அனுப்பப்பட்டது. கடித சாயலைவிடகட்டுரைச்சாயலே இதில் அதிகம் தென்படுகிறது.

12.3. கடிதத்தின் உள்ளே

1) முன்னுரைவாழ்த்துக்கள் 1:1,2
2) கொள்கைப் பகுதி1:3-3:21 (இறைவனின்மீட்புத் திட்டம்)
இறைப்புகழ் 1:3-14
கிறிஸ்துவில் இறையாற்றல் 1:15-23
மீட்பு கிறிஸ்துவின்கொடை 2:1-10
திருச்சபையில் புத்துறவு 2:11-22
பணியும் மறைபொருளும் 3:1-13
புகழுரையும், மன்றாட்டும் 3:14-21
அறிவுரைப் பகுதி4:1-6:20(கிறிஸ்தவ வாழ்வு)
கிறிஸ்தவ ஒற்றுமை 4:1-16
பழையனகழிதல் 4:17-24
ஒற்றுமைக்கானவழிகள் 4:25-5:2
தூய்மையானஒளிவாழ்வு 5 : 3-20
கிறிஸ்தவத் திருமணம் 5 :21-23
குடும்ப ஒழுக்கம் 6:1-9
கிறிஸ்தவப் போராட்டம் 6:10-20
3)முடிவுரை
தனிச்செய்தி 6:21,22
இறுதி வாழ்த்து 6: 23,24

12.4.கொள்கைகள்

1) இக்கடிதம் உயிர்த்து உயர்த்தப்பட்ட இயேசுவுக்குமுக்கியத்துவம் அளிக்கிறது.
2) திருச்சபையின்வளரக்கூடிய தன்மையும் பொதுத் தன்மையும்வலியுறுத்தப்படுகின்றன.
3) திருச்சபை இயேசுவின்மறையுடல்; தலைவர் கிறிஸ்து;கிறிஸ்தவர் உறுப்புக்கள்.யூதரும், பிற இனத்தாரும், இறைமக்களாகத் திருச்சபையில்ஒன்றிணைந்து, புது இனம் உருவாக வேண்டும். திருச்சபைகிறிஸ்துவின்மணவாளி.
4) அறிவுரைப் பகுதியில் திருமணம், குடும்பம், வாழ்க்கைப்போராட்டம் பற்றிய ஆழமானகருத்துக்கள் அளிக்கப்படுகின்றன(எபே 5:21-6:4).

---------------------------


13. ஆயர் மடல்கள் (1திமொ, தீத்து, 2 திமொதிமொ, தீத்து, 2 திமொதிமொ, தீத்து, 2 திமொ )

பவுல் ஆயர்களுக்கு ஆயர் பணி பற்றி எழுதிய கடிதங்கள்மேற்குறித்தவை.இவற்றுள்திமொத்தேயுவுக்கு வரைந்த முதல் கடிதம் கி.பி. 65 ஆம்ஆண்டில்எழுதப்பட்டது. அக்காலத்தில்திமொத்தேயுஎபேசு நகர் ஆயராகஇருந்தார் என்பது பொதுவானநம்பிக்கை. இக்கடிதம் எழுதப்பட்ட இடம்மாசிதோனியா பகுதி என்பர்.இக்கடிதத்தின்உட்பிரிவை விளக்கமாகக் கொடுக்கிறோம். அதைவாசித்தவுடனேயே வெவ்வேறு நிலையினருக்காக இக்கடிதத்தில்அளிக்கப்படும் அறிவுரைகள் எளிதாகப் புரியும்.

1 திமொத்தேயு

உட்பிரிவு: மடலின்அமைப்பு


1) வாழ்த்துரை 1:1,2
2) போலிப் போதகர்கள் 1:3-20

அ) போலிப் போதகர்களால் ஏற்படும் கெடுதி 1:3-7
ஆ) திருச்சட்டத்தின்நோக்கம் 1:8-11
இ) பவுலும் அவருடைய அழைத்தலும் 1:12-17
ஈ) திமொத்தேயுவின்கடமை 1:18-20

3) திருக்கூட்டத்திற்குரிய வாழ்க்கை முறை 2:1-3:13

அ) பொது மன்றாட்டு 2:1-8
ஆ) வழிபாட்டு கூட்டங்களில் பெண்கள் 2:9-15
இ) திருச்சபையின்அதிகாரிகள் 3:1-7
ஈ) 1) மேற்பார்வையாளர் 3:1-72) திருப்பணியாளர் 3:8-13

4) விவாதப் பிரிவு3:14-4:16

அ) ஆலயமும், செபத்தின் மறைபொருளும் 3:14-16
ஆ) தவறானபோதனைகளும் உண்மை பக்தியும் 4:1-10
இ) திமொத்தேயுவுக்கு அறிவுரைகள் 4:11-16

5) மேய்ப்பர் பணியை விவரிக்கும் பகுதி5:1-6:2

அ) பொதுவாக கிறிஸ்தவர் மட்டில் மேய்ப்பரின் கடமை 5:1-2
ஆ) கைம்பெண்கள் மட்டில் மேய்ப்பரின் கடமை 5:3-16
இ) மூப்பர்கள் மட்டில் மேய்ப்பரின் கடமை 5:17-25
ஈ) அடிமைகளின்கடமைகள் 6:1-2

6) விவாதமும் அறிவுரைகளும்6:3-19

அ) போலிபோதகர்கள் 6:3-10
ஆ) திமொத்தேயுவுக்கு இறுதி அறிவுரை 6:11-16
இ) செல்வந்தரான கிறிஸ்தவர்களுக்குஆக்கப்பூர்வமான அறிவுரை 6:17-19

7)முடிவுரையும் வாழ்த்தும்6:20,21

 

தீத்து

ஆயர் திருமுகங்களில் காலவரிசையில் இரண்டாவது இடம்பெறுவது தீத்துவுக்கு பவுல் எழுதிய திருமுகமாகும்.இவர் ஒரு பிற இனத்தார் (கலா 2:3). பவுலால் மனந்திருப்பப்பட்டவர் (தீத்து 1:4). பவுலுடனும், பர்னபாவுடனும் எருசலேமில் நடந்ததிருத்தூதர் கூட்டத்தில் கலந்து கொண்டார் (கலா 2:1). மூன்றாவது மறைஅறிவிப்புப் பயணத்தின்போது அவர் கொரிந்து சபையில் உருவான சிலமுக்கிய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்படி பவுலால் கொரிந்துக்குஅனுப்பப்பட்டார். அதில்வெற்றியும் கண்டார் (2 கொரி 7:5-7). எருசலேம்கிறிஸ்தவர்களுக்காகப் பிரிக்கப்பட்ட நன்கொடையைப் பெற்று வருமாறுமீண்டும் கொரிந்துக்குச் சென்றார் (2 கொரி 8:16-17). முதல் முறைஉரோமையில்கைதானபிறகுபவுல்கிரேத்துநகரில்திருச்சபையைநிறுவி அதற்குத் தலைவராகத் தீத்துவை நியமித்தார். அதைத் தொடர்ந்துதீத்துவுக்கு கி.பி. 64-65-இல் இம்மடலை வரைந்தார்.

பவுல் இக்கடிதத்தை எழுதும்போது தீத்து கிரேத்து சபையைகண்காணித்து வந்தார் என்பது பரம்பரை.இக்கடிதத்தின் உட்பிரிவைப் பார்த்தவுடனே பவுல் எத்தகையஅறிவுரையை வலியுறுத்தினார் என்பது நமக்குப் புரியும்; கடிதத்தைத்தியானித்து வாசிக்கவும் உதவும்.

உட்பிரிவு

1) வாழ்த்துரை1:1-4
2) மூப்பர்களை ஏற்படுத்துதல்1:5-9
3) போலி போதகருடன் போராட்டம்1:10-16
4) கிறிஸ்தவ வாழ்க்கை நிலைக்கேற்ப அறிவுரை2:1-10

அ) வயது முதிர்ந்தவர்கள் 2 : 2-3
ஆ) இளம்பெண்கள் 2:4-5
இ) இளைஞர்கள் 2:6-8
ஈ) அடிமைகள் 2:9,10

5) கிறிஸ்தவ வாழ்வுக்கு இறையியல் அடிப்படை2:11-3:7

அ) அருள்வாழ்வு 2:11-15
ஆ) விசுவாசிகளின்பொதுக் கடமைகள் 3:1,2
இ) கிறிஸ்து இன்றி மனுக்குலத்தின் நிலை 3:3
ஈ) மீட்பரின்தோற்றமும் மீட்புப் பணியும் 3:4-7

6) இறுதி எச்சரிக்கை3:8-11

அ) நற்செயல்கள் பற்றி 3:8
ஆ) போலிப் போதகர் பற்றி 3:9-11

7)இறுதியுரையும் வாழ்த்தும் 3:12-15

2 திமொத்தேயு

உரோமையில் இரண்டாம் சிறையிருப்பின்போது கி.பி. 67 இல்திமொத்தேயுவுக்கு புனித பவுல் இக்கடிதத்தை வரைந்தார் என்பர். தமதுமரணம் அருகிலிருப்பதாக உணர்ந்து பவுல் இக்கடிதத்தை எழுதுகிறார்(2திமோ 4:6-8).கீழே மடலின்அமைப்பு தருகிறோம். அதைக் கண்முன்கொண்டுகடிதத்தைப் பத்தி பத்தியாக வாசியுங்கள்.

மடலின் அமைப்பு :

1) முன்னுரை1: 1-5

அ) வாழ்த்துரை 1:1,2
ஆ) நன்றி 1:3-5

2) அறிவுரைகள்1:6-2:13

அ) திமொத்தேயு பெற்ற அருட்கொடைகளும்கடமைகளும் 1:6-14
ஆ) பவுலும் அவருடைய பணித்தோழர்களும் 1:15-18
இ) திருத்தூதர் துன்பங்களை ஏற்கும் முறை 2:1-13
1. துன்பத்தை விளக்கும் உருவகங்கள் 2:1-6
2. பவுலின்போதனைப் பணியில் துன்பம் 2:7-10
3. கிறிஸ்தவப் பாடல் 2:11-13

3) விவாதப் பகுதி2:14-3:9

அ) போலிப் போதகர்களோடு போராட்டம் 2:14-26
1. ஆக்கவேலைகள் 2:14,15
2. விலக்க வேண்டியவை 2:16-18
3. இறுதி உறுதிப்பாடு 2:19
4. மதிப்பீடுகள் 2:20,21
5. போதகரின் (திமொத்தேயுவின்) நடத்தை 2:22-26
ஆ) இறுதிக் காலத்தைப் பற்றிய எச்சரிக்கை 3:1-9

4) ஆக்கவேலைகள்3:10-4:5

அ) பழைய துன்பங்களை நினைவு கூருதல் 3:10-13
ஆ) திருநூலைப்பற்றிய ஒரு குறிப்பு 3:14-17
இ) போதிக்கும் பாடம் 4:1-5

5) முடிவுரைப்பகுதி4:6-22

அ) பவுலுடைய வாழ்வின்இறுதிக்கட்டம் 4:6-8
ஆ) இறுதியுரை 4:9-18
1. தனிப்பட்ட வேண்டுகோள்கள் 4:9-13
2. தனிப்பட்ட எச்சரிக்கை 4:14,15
3. (பவுலின்) முதலாவது தற்காப்பு வாதம் 4:16-18
இ) இறுதி வாழ்த்துக்கள் 4:19-22

 

14. பிலமோனுக்கு எழுதிய கடிதம்

14.1. பிலமோன்
மிகச்சிறிய இம்மடல் எழுதப்பட்ட முகவரியுள்ளவர் ஓர் தனிப்பட்டஇளைஞர். ஓரளவு பொருளாதாரத்தில் உயர்ந்தவர். அனைவரின்மதிப்பிற்கும் உரிய கிறிஸ்தவர். பிரிஜியா நகர்களில் ஏதாவது ஒருநகரத்தைச் சேர்ந்தவர். ஒருவேளை கொலோசை நகரைச் சார்ந்திருக்கக்கூடும். அவருடைய வீடுகளில் ஒன்று கோவிலாகப் பயன்படுத்தப்பட்டுவந்திருக்க வேண்டும். இவர் பவுலின்முயற்சியால்மனந்திருப்பப்பட்டவர்(வ. 19).

14.2. இடம், காலம்
இக்கடிதத்தை பவுல் சிறையிலிருந்து எழுதியுள்ளார் (வ.1). இதுபவுல் உரோமையில் சிறைப்பட்டதையே குறிக்கும் என்று அறிஞர் பலர்கருதுகின்றனர் (கி.பி.61-63).

14.3. எழுதிய சூழ்நிலை, நோக்கம்
ஒனேசிம் ஓர் அடிமை-வேலையாள், தன்னுடையமுதலாளிடமிருந்து ஏதோ ஒன்றைத் திருடிவிட்டு (அ) நட்டப்படுத்தி விட்டுஓடிவிடுகிறான். உரோமை நகருக்கு ஓடி வந்துவிடுகிறான். பவுல்அவனுக்குப் புகலிடமளிக்கிறார். இறுதியில் திரு முழுக்கு அளித்துதிருச்சபையில் சேர்க் கிறார் (வ.10). பின்னர் ஒனேசிம் பிலமோன்என்பவருடைய அடிமை என்பதை பவுல் அறிய வருகிறார்.நற்செய்தியைப் போதிப்பதற்காக ஒனேசிமைத் தம்முடன் வைத்துக்கொள்ள பவுல் ஆசித்தாலும், பிலமோனுடைய உரிமையை உணர்ந்துஅவனிடம் அடிமையை அனுப்பி வைக்கத் தீர்மானிக்கிறார் (வ.14,16).ஓடிவந்துவிட்ட இந்த அடிமையை அடிமையாகக் கருதாதுசகோதரனைப்போல் ஏற்றுக்கொள்ளும்படி பிலமோனுக்குப் பவுல்எழுதுகிறார் (வ.16).

அடிமைகளை வைத்திருக்கும் சமுதாய அமைப்பை பவுல்உடனடியாக உடைத்துவிட இயலவில்லை; அதற்கான புதுகண்ணோட்டத்தைப் புகுத்துகிறார்.

14.4. உட்பிரிவு

முகவுரை 1-7
வாழ்த்து 1-3
நன்றிகூறல் 4-7
வேண்டுகோள்8-21
அடிமையின்மேல் பரிவு 8-14
அடிமைக்காகப் பரிந்துபேசல் 15-21
முடிவுரை 22-25
செய்திகள் 22
வாழ்த்து 23-25

 

15. எபிரேயர்

எபிரேயருக்கு எழுதப்பட்ட இம்மடல் கடித சாயலைவிட திருவுரைபோக்கையே அதிகமாகக் கொண்டுள்ளது.திருமறையில்சேர்ந்த யூதர்கள்(எபிரேயர்கள்) ஏனையயூதர்களால்ஒதுக்கப்பட்டனர்; துன்புறுத்தப்பட்டனர். இவர்களை ஆற்றுப்படுத்த ஒருகடிதம் தேவைப்பட்டது. கிறிஸ்தவமறையைப் பின்பற்றிய யூதர்களுக்கு,குறிப்பாக யூத குருக்களுக்கு இந்நூல் எழுதப்பட்டது யூதர்க்குஎழுதுவதால் பழைய ஏற்பாட்டு செய்திகள் தாரளமாகப்பயன்படுத்தப்படுகின்றன.

15.1. காலம்
கி.பி. 70க்குப்பின் அதாவது கோயில் அழிந்தபின், இந்நூல்எழுதப்பட்டது. இயேசுவின் குருத்துவம் பற்றி இந்நூல் அதிகமாக எடுத்துக்கூறுகிறது.

15.2. ஆசிரியர்
இந்நூலை எழுதியவர் புனித பவுலின் சீடர் ஒருவர்; குறிப்பாகஅப்பொல்லோ என்பாரும் உண்டு

15.3. நூலின் அமைப்பு

1.)முன்னுரை 1:1-4

2) இறை மகன்வானதூதரைவிட மேலானவர் 1:5-2;18
அரியணைஏறிய இறைமகன் 1:5-14
இறுதிவரை நிலைநிற்க அறிவுரை 2:1-4
தாழ்மையின்வழியே மேன்மை பெற்றவர் 2:5-18

3) இயேசு நம்பிக்கைக்குரிய இறைமகன்மோசே,யோசுவாவிலும்மேலானவர் 3:1-5:10
நம்பிக்கைக்குரிய கடவுளின்மகன்மோசேக்கும் மேலானவர் 3:16
இஸ்ரயேல் படிப்பிக்கும் எச்சரிக்கை 3:7-4:1
இரக்கமுள்ள இயேசுவே நம் தலைமைக்குரு 3:14-5:10

4) இயேசுவின் நித்திய குருத்துவமும்நிறைவுற்ற திருப்பலியும் 5:11-10:39
ஆன்மீகம் தளிர்க்க அறிவுரை 5:11-6:20
மெல்கிசதேக் முறைப்படிகிறிஸ்துவின் தலைமைக்குருத்துவம்7:1-28
மெல்கிசதேக்கும் லேவியக் குருத்துவமும் 7:1-10
லேவியக் குருத்துவம் தேவையற்றது 7:11-28

5) என்றென்றும் நீடிக்கும் இயேசுவின்திருப்பணி 8:1-9:28
பழைய உடன்படிக்கை பாசறை, திருப்பலி 8:1-9:28
இயேசுவின்விண்ணகக் குருத்துவம் 8:1-6
பழைய உடன்படிக்கைகளின்வேறுபாடு 8:7-13
பழைய உடன்படிக்கைகளின்பாசறை 9:1-5
பழைய உடன்படிக்கையின்பலிமுறை 9:6-10
இயேசுவின்திருப்பணி 9:11-28
வானக தூயகத்தில் நிறைவுபெறும் அரும்பலி 9:11-14
புதிய உடன்படிக்கையின்புதுப்பலி 9:15-22
நிறைவுற்ற திருப்பலி 9:15-23:28

6) என்றும் வாழவைக்கும் இயேசுவின்பலி 10:1-39
பல பலிகளும் ஒரே திருப்பலியும் 10:1-18
உறுதி, நீதி, நினைவு 10:19-397)
முன்மாதிரிகை, பணிவு, கீழ்படியாமை

7) முன்மாதிரிகை, பணிவு, கீழ்படியாமை11:1-12:29
முன்னோர் காட்டிய விசுவாசம் 11:1-40
இறைவன் தம் மக்களை நடத்தும் முறை 12:1-13
கீழ்படியாமைக்குத் தண்டனை 12:14-29

8) இறுதி அறிவுரை, ஆசியுரை, வாழ்த்துரை 13:1-25

15.4. கொள்கைகள்

அ) லேவிய குருத்துவத்தின் நிறைவு யூதா குலத்தில் பிறந்தஇயேசுவே.
ஆ) மெல்கிசதேக்கின் வரிசையில் இயேசுவின்குருத்துவம்அமைந்துள்ளது.
இ) கிறிஸ்துவின் குருத்துவம் புதுமையும், முழுமையும் வாய்ந்தது.மேலே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளைப் பின்பற்றி வாசகர்கள்முக்கியமானபகுதிகளை வாசித்தால் பயன்பெறுவர்.

------------------------------------------
--------------------------
----------------
------
--