இறைவாக்கினர்கள் எசாயா, எரேமியா, எசேக்கியேல்

அருள்திரு. அலோசியஸ் சேவியர்
பேராசிரியர், புனித பேதுரு குருத்துவக் கல்லூரி, பெங்கரூநரசழ்ரு

விவிலிய அன்பர்களே,

பதிப்புரைவிவிலிய அன்பர்களே,வணக்கம்."பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர்வழியாக நம் மூதாதையரிடம் கடவுள் பேசினார்" என்று எபிரேயத் திருமுகஆசிரியர் கூறுகிறார் (எபி 1:1). இறைவாக்கினர்களை தம் பெயரில் நூல்எழுதாத இறைவாக்கினர்கள், பெரிய இறைவாக்கினர்கள், சிறியஇறைவாக்கினர்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். பெரியஇறைவாக்கினர் என்னும் பிரிவில் எசாயா, எரேமியா, எசேக்கியேல்மற்றும் தானியேல் ஆகிய நூல்களையும் அதோடு இணைத்து புலம்பல்,பாரூயஅp;க்கு ஆகிய நூல்களையும் சேர்த்துப் படிப்பர்.

பெரிய இறைவாக்கினர்களுள் எசாயா, எரேமியா, எசேக்கியேல்ஆகியோரைப் பற்றியும் அவர்களின் எழுத்தோவியங்களைப் பற்றியவிளக்கவுரைகளும் இறையியல் கருத்துக்களும் தாங்கி இம்மாதக் கல்விஏடு வெளிவருகிறது. அதிகமான அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றகாரணத்தினாலேயே இவ்விறைவாக்கினர்கள் பெரிய இறைவாக்கினர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒருமுறையாகிலும் இந்தஇறைவாக்கினர்களின் எழுத்தோவியங்களை திருவிவிலியத்திலிருந்துமுழுமையாகப் படித்துப் பார்ப்பது நிரம்பிய பலனைத் தரும்.

இந்நூலைச் சிறப்புடன் எழுதித்தந்த விவிலியப் பேராசிரியர் அருள்திரு. அலோசியஸ் சேவியர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திரு முனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்

உள்ளே
1. எசாயா

1. முதல் எசாயா
2. எசாயாவின் அழைப்பு
3. இம்மானுவேல் பற்றிய பகுதி
4. இரண்டாம் மூன்றாம் எசாயா

2. எரேமியா

1. முன்னுரை
2. நூலின் பிரிவு
3. எரேமியாவின் அழைப்பு
4. எரேமியாவின் போதனை
5. எரேமியாவின் அடையாளச் செயல்கள்
6. எரேமியாவின் அறிக்கை
7. எரேமியாவின் துன்ப வாழ்வு

3. எசேக்கியேல

1 வரலாற்றுப் பின்னணி
2. நூலின் பிரிவு
3. எசேக்கியேல் கண்ட காட்சி
4. எசேக்கியேலின் அழைப்பு
5ஆண்டவரின் மாட்சி கோவிலை விட்டு வெளியேறல
6. அகதியான இறைவாக்கினர் எசேக்கியேல
7. உலர்ந்த எலும்புகள்
8. கடவுளின் மாட்சி மீண்டும் எருசலேம் திரும்புதல்
9.எசேக்கியேல் நூலில் முக்கிய இறையியல் கருத்துக்கள்

1. எசாயா

திருவிவிலியத்தில் எசாயா நூலில் மொத்தம் 66 அதிகாரங்கள் உள்ளன. இந்நூலை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வெரு பிரிவும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டது. முதல் அதிகாரத்திலிருந்து 39 ஆம் அதிகாரம் முடிய முதல் எசாயா நூல் என அழைக்கப் படுகிறது. இதன் ஆசிரியர் இறைவாக்கினர் எசாயா ஆவார். 40 முதல் 50 அதிகாரம் முடிய இரண்டாம் எசாயா என்று அழைக்கப்படுகிறது. இது இஸ்ராயேல் மக்கள் பாபிலேனியாவில் நாடு கடத்தப்பட்டபோது வாழ்ந்த இறைவாக்கினர் ஒருவரால் எழுதப்படி;டிருக்க வேண்டும். 56 முதல் 66 ஆம் அதிகாரம் முடிய மூன்றாம் எசாயா என அழைக்கப்படுகின்றது. இது இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவிலிருந்து எருசலேமுக்குத் திருமபி வந்தவிபின் எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் அக்காலத்தில் வாழ்ந் ஒருவராக இருக்கவேண்டும. இவ்வாறு மூன்று பகுதியையும் தனித்தனியாகப் காண்போம்.

1. முதல் எசாயா: எசாயா 1-39 அதிகாரங்கள்

1.1. வாழ்க்கைக் குறிப்பு
இப்பகுதியின் ஆசிரியர் இறைவாக்கினர் எசாயா ஆவார். இவரதுவாழ்வு, வரலாற்றுப் பின்னணி இரண்டையும் காண்போம். இவரைப்பற்றிநாம் அதிகமாக அறிவதில்லை. அவரது காலம், அவரைப்பற்றியவிவரங்கள் அதிகமாகக் குறிப்பிடப்படவில்லை. அவர் எருசலேம்கோவிலில் இறைவாக்கு உரைக்கும் பணிக்கு அழைக்கப்பட்டார். அவரதுஇறைவாக்குப் பணி எருசலேமிலும், சுற்றுப்புற பகுதியிலும் இடம்பெற்றது. அவர் மனைவியும் ஓர் இறைவாக்கினர் (8:3); அவருக்குஇரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டு பேருக்கும் அடையாளப்பெயர்கள் இடப்பட்டிருந்தன. ஒருவன் பெயர் செயார் யாசிப் (7:3).(இப்பெயருக்கு எபிரேய மொழியில் "எஞ்சியோர் திரும்பிவருவார்” என்பதுபொருள்). அடுத்த மகனின் பெயர் மகேர் சாலால் கஸ்பாசு (8:3).(இப்பெயருக்கு எபிரேயத்தில் கொள்ளைப் பொருள் வேகமாகவருகின்றது, இரை விரைகின்றது என்பது பொருள்) தடையின்றிஅரசனைச் சந்திக்க முழ்?த அவரது நிலை, உயர்ந்த இலக்கிய நடை,எழுத்து ஆற்றல், வரலாறு, நாட்டு நடப்புப் பற்றிய ஆழ்ந்த அறிவு இவையாவும் எசாயா உயர்குடி மகன் என்பதைக் காட்டுகின்றன. அவர் நல்லகல்வி கற்றவராக இருந்திருக்க வேண்டும்.

1.2. வரலாற்றுச் சூழல;
எந்த ஓர் இறைவாக்கினரையும் நன்கு புரிந்து கொள்ள அவர்வாழ்ந்த கால வரலாற்றுப் பின்னணி பற்றிய அறிவு அவசியம்.ஏனெனில் இறைவாக்குப் பணி வரலாற்றுச் சூழலுடன் பின்னிப்பிணைந்தது. எசாயா கால வரலாற்றைக் காண்போம்.

1.2.1. அண்டை நாடுகள் - எகிப்து
கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எகிப்துநாடு பிளவுபட்ட நாடாக இருந்தது. எந்தப்பகுதியின் தலைவனும் அல்லது அரசனும்நாட்டை ஒன்று படுத்தி ஆளும் நிலையில்இல்லை. உள்நாட்டுக் குழப்பம் மிகுந்தநிலை. இருந்தபோதிலும் எகிப்து நாடுசுற்றியுள்ள சிறு நாடுகள் மீது ஆதிக்கம்செலுத்தியது. அசீரியப் பேரரசு பலம்வாய்ந்ததாக இருந்தபொழுது சிரியா,பாலஸ்தீன் போன்ற நாடுகள் எகிப்தின்உதவியை நாடி நின்றன. ஆனால், யூதாஎகிப்துடன் கொண்டிருந்த உறவை எசாயா கண்டித்தார்.

1.2.2. அசீரியா
அசீரியா கி.மு. எட்டாம் நூற்றாண்டில் பலம் வாய்ந்த பேரரசாகவிளங்கியது. அதாத் நிராய் என்ற அசீரிய மன்னன் பல போர்களில்வெற்றி பெற்று நாட்டை விரிவாக்கினான். பல நாடுகள் அவனுக்கும்கப்பம் கட்டின. இஸ்ரயேல் அரசன் யோவாசும் அசீரிய நாட்டின் கீழிருந்து,கப்பம் கட்டி வந்தான். கி.மு. 745இல் அரியணை ஏறிய அசீரிய மன்னன்திக்ளக் பிளாசரும் பல நாடுகளை வென்றான். இஸ்ரயேல் நாடுஅசீரியாவுக்கு எதிராகச் செய்த கலகம் பலனளிக்க வில்லை. கி.மு. 722ஆம் ஆண்டு அசீரிய மன்னன் சால்மனாசு இஸ்ரயேலை கைப்பற்றவேஇஸ்ரயேல் அழிந்தது. தென்பகுதி யூதா மட்டுமே எஞ்சியது. அசீரியமன்னன் சனகெரிப் யூதா நாட்டிற்கு வந்து எருசலேமைமுற்றுகையிட்டான். இறுதி நேரத்தில் எருசலேம் அழிவிலிருந்து தப்பியது.ஆனால் அசீரிய மன்னனுக்குப் பெரும் தொகை அளிக்கவேண்டியிருந்தது (2 அர 18:13-16). இறைவனின் உதவியால் எருசலேம்அதிசயமாக அசீரியப் பிடியிலிருந்து தப்பியதாக ஒரு கதையும் உள்ளது(எசா 36:2-37:38).

1.2.3. இஸ்ரயேல்கி.மு.
931-922 இல் சாலமோனின் மறைவுக்குப் பின் பாலஸ்தீன்நாடு இரண்டாகப் பிரிந்து வடபகுதி இஸ்ரயேல் நாடாக உருவாகியது.இதன் தலைநகர் சமாரியா. தென்பகுதி யூதா என்று அழைக்கப்பட்டது.இதன் தலைநகர் எருசலேம்.

அசீரிய நாடு தலைதூக்கியபொழுது, இஸ்ரயேல் அதற்குஅடிபணிந்து பெரும் தொகை செலுத்தியது. அடுத்து வந்த அரசன் திக்ளத்பிளாசரின் படையெடுப்பால் இஸ்ரயேல் நாடு பெரும் பகுதியை இழந்தது.எப்ராயிம் மலையும் சமாரிய நகரும் எஞ்சி நின்றன.எகிப்து நாடடின் தூண்டுதலின் பேரில் இஸ்ரயேல் அசீரியாவுக்குஎதிராகக் கிளம்ப, இஸ்ரயேல் நாடு தன் முடிவைக் கண்டது.இறைவாக்கினர் எசேக்கியேல் அசீரிய நாட்டை எதிர்த்துப் போரிடவேண்டாம் என்று கூறிய வார்த்தைகள் பயனற்றவை ஆயின. சமாரியாகி.மு. 722-இல் அழிவுற்றது. அசீரிய நாட்டின் ஒரு மாநிலமாக மாறியது.

1.2.4. யூதா
பாலஸ்தீன் நாட்டின் தென் பகுதியான யூதா அமட்சியா காலத்தில்செல்வாக்குப் பெற்றிருந்து. போர் புரிந்த நாடுகளை வென்று, நிலப்பரப்பைப் பெரிதாக்கினான் உசியா மன்னன். அவன் தொழுநோய் கண்டுகி.மு. 740இல் இறந்தான். அத்துடன் யூதாவின் செல்வாக்கு சரிந்தது.அக்காலத்தில்தான் இறைவாக்கினர் எசாயாவின் பணி ஆரம்பமாகியது.தொடர்ந்து 50 ஆண்டுகள் யூதா வளமாக வாழ்ந்தது. வேறு எந்த நாடும்யூதா மீது படை எடுக்கவில்லை. அச்சமயத்தில் அசீரியா நாடு மெதுவாகப் பலம்பெறத் தொடங்கியது.யூதா நாட்டு அரசன் உசியாவின்மகன் யோத்தாமின் காலம் அச்சம் மிகுந்தகாலம். எல்லா நாடுகளும் அசீரியாவுக்குக் கப்பம் கட்டின. அசீரியாவுக்குஎதிராகப் போர் புரிய விரும்பிய யூதா,அதற்கு அடிபணிய வேண்டிய நிலைஏற்பட்டது; கப்பம் கட்ட ஆரம்பித்தது.அச்சமயத்தில் தமஸ்கு, சமாரியா, தீர்ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்துஅசீரியாவைத் தாக்கத் திட்டம் தீட்டின.யூதா அரசன் ஆகாசையும் அந்தக்கூட்டணியில் சேர அழைத்தன. அவன் மறுத்தான். ஆனால் ஆகாசுஅசீரியா உதவியை நாடினான். உதவிக்கு வந்த அசீரியாவின் கீழ் யூதாகொண்டு வரப்பட்டு கப்பம் கட்ட ஆரம்பித்தது (காண். 2 அர 16:9-20).ஆகாசு அசீரியாவுடன் செய்த உடன்பாட்டை யூத மக்கள் விரும்பவில்லை.அதிருப்தியுற்றனர். எசாயா 7:3 இந்நிலையைச் சுட்டிக்காட்டுகின்றது.ஆகாசுக்கு பின் அவனது மகன் எசேக்கியா பதவிக்கு வந்தான்.கி.மு. 750 ஆம் ஆண்டு அசீரிய மன்னன் சார்தனின் மறைவுக்குப்பின் எல்லாச் சிறு நாடுகளும் அசீரியாவை எதிர்த்தன. அசீரிய மன்னன்எருசலேமுக்கு வந்து அதை முற்றுகையிட்டான். அமைதியைக் கொண்டுவர எசாயா செய்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அனைவரும்நம்பிக்கை இழந்த சமயத்தில் எசாயா, எருசலேம் நகர் அசீரியமுற்றுகையிலிருந்து காக்கப்படும்க எனக் கூறினார்.

1.3. நூலின் பிரிவு(1-39)

1) எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 1:1-12:6
2) வேற்றினத்தாருக்குரிய தண்டனைகள் 13:1-23:18
3) உலகின் மீது ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்புகள் 24:1-27:13
4) எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 28:1-35:10
5) யூதாவின் அரசன் எசேக்கியாவும் அசீரியரும் 36:1-39:82.

எசாயாவின் அழைப்பு (அதி 6)

எரேமியா, எசேக்கியேல் ஆகியோரின் இறைவாக்கும் பணிக்கானஅழைப்பும் அவர்களது நூலின் தொடக்கத்தில், முதல் அதிகாரத்தில்தரப்பட்டுள்ளன. எசாயா நூலில் 6 முதல் 9 ஆம் அதிகாரம் முடிய உள்ளபகுதி ' 'இம்மானுவேல் பற்றிய பகுதி” என அழைக்கப்படுகிறது.இப்பகுதியில் எசாயாவின் அழைப்புடன் இம்மானுவேல் பற்றியஇறைவாக்குகளும் உள்ளன. எசாயாவின் அழைப்பு யூதா மன்னன்உசியா மறைந்த ஆண்டு இடம் பெறுகின்றது (6:1).

2.1. இலக்கிய அமைப்பு
இப்பகுதியில் காணுதல், கேட்டல், கூறல் ஆகிய மூன்று செயல்கள்அதிகமாகக் காணப்படுகின்றன. அரியணையில் அமர்ந்திருக்கும்ஆண்டவரை எசாயா காணுவதிலிருந்து எசாயாவின் அழைப்புஆரம்பமாகின்றது. "படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள்கண்டனவே” என்று எசாயா கூறுகின்றார் ( 6:5). எசாயா காட்சி காணும்அதே நேரத்தில் மக்களோ காணுகின்ற மனநிலையில் இல்லை. அவர்கள்எதையும் காண்பதில்லை. காணப்போவதுமில்லை.எசாயா காட்சியின் பொழுது சேராபீன்களின் வாழ்த்தொலியை கேட்கின்றார்; ஆண்டவரின் குரலையும் கேட்கின்றார்.ஆண்டவர் எசாயாவுடன் உரையாடுகின்றார். கடவுளின் கேள்விக்குஎசாயா பதிலளிக்கக் கடவுள் அவருக்கு "நீ இந்த மக்களை அணுகி,அவர்கள் கண்களால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால்உணராமலும், மனம்மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி இந்தமக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்; காதுகளை மந்தமாகச்செய்; கண்களை மூடச் செய்” என்றார் (6:9-10).

ஆண்டவர் எசாயாவின் உதடுகளைத் தூய்மைப் படுத்துகின்றார்.அவர் ஆண்டவரது வார்த்தைகளைப் பேசத் தயாராகின்றார். 6 ஆம்அதிகாரத்தின் முதல் 4 வசனங்களும் (6:1-4) இறுதி இரண்டுவசனங்களும் எதிர்மாறாக உள்ளன (6:11-13). முதல் 4 வசனங்களில்எல்லாவற்றிலும் நிறைவைக் காண்கின்றோம்.

1) ஆண்டவரின் தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.
2) மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது.
3) கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.

ஆனால் இறுதி இரு வசனங்களில் அழிவும் வெறுமையும்குறிப்பிடப்பட்டுள்ளன. நகரங்கள் அழிந்து குடியிருப்பார் இல்லாதனவாகும்; வீடுகளில் வாழ்வதற்கு மனிதர் இரார். நாடு முற்றிலும் பாழ்நிலமாகும் (6:11); நாட்டில் குடியிருப்பாரின்றி வெற்றிடங்கள் பலதோன்றும். பத்தில் ஒரு பங்கு மட்டும் நாட்டில் எஞ்சியிருந்தாலும் அதுவும்அழிக்கப்படும் (6:12).

2.2. காட்சியின் சூழ்நிலை
காட்சி கோவிலில் நடைபெறுகின்றது. அரச அவையின்தோற்றமாக உள்ளது. மண்ணில் அரசன் இறந்துவிட்டான். காட்சியில்எசாயா காணும் உயர்ந்த அரியணையும் தொங்கலாடையும் ஆண்டவர்அரசர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. காட்சியைக் கண்ட எசாயா,"படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே”என்கிறார். பழைய ஏற்பாட்டில் முதன் முறையாக யாவே படைகளின்ஆண்டவர் என அழைக்கப்படுகின்றார். "நமது பணிக்காக யார் போவார்?”என்ற கேள்வி அரச அவையை நினைவூட்டுகின்றது. கடவுள் ஒருதூதனை அனுப்ப விரும்புகின்றார்.கடவுள் இறைவாக்கினரை மக்களிடையே அனுப்புகின்றார்.பொதுவாக அக்காலத்தில் இத்தகைய பணிக்கு அனுப்பப்பட்டவர்அரசனின் சுவிகாரப் (சொந்த) பிள்ளையாகக் கருதப்பட்டனர். இறைவாக்கினரின் பணி ஆண்டவராகிய அரசரின் பணியாகும். கடவுள்பெயரால் மக்களுக்கு ஆற்றும் பணி; கடவுளிடம் மக்களுக்காகப் பரிந்துபேசுபவர்.

இவ்வதிகாரத்தின் இறுதி வசனம், " அந்த அடிமரம்தான் தூயவித்தாகும்” (6:13) என்பதாகும். அடிமரம் என்பது தாவீது அரசனின்வம்சம் என்றும் நிலைத்து நிற்கும் என்பதைக் குறிப்பதாகும். 6:1இல்உசியாவின் மரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2.3. அழைப்பு
பழைய ஏற்பாட்டில் கடவுள் அவர்தம் பணிக்குக் குறிப்பிட்ட நபரைஅழைக்கும் நிகழ்ச்சியை கூறும் பகுதிகள் பல உள்ளன. எடுத்துக்காட்டாகஎசேக்கியேல் ஆகியோரின் அழைப்பைக் குறிப்பிடலாம். இவ்வழைப்பு சிலஅடிப்படைப் பண்புகளைக் கொண்டுள்ளது.

முதலாவதாக, கடவுள் காட்சி அளித்தார். கடவுளோ, அவரதுமாட்சியோ, அவருடைய தூதரோ தோன்றலாம். இப்பகுதியில் (எசாயா 6)கடவுளின் மாட்சி பிரமிப்பூட்டுவதாக உள்ளது. எசாயா கடவுளைக்காணுவதை, அவரது அரியணையைக் காணுவதை, அவரது குரலைக்கேட்பதை நாம் உணர்கின்றோம்.

இரண்டாவதாக, பணிக்குஅழைக்கப்பட்டவர் தமக்கு இட்ட பணியைநிறைவேற்ற வேண்டும். கடவுள்அளிக்கும் பணி, கட்ட ளையிடும் கடமைமக்களுக்காகச் செய்ய வேண்டிய பணி.மக்களைக் காக்க வேண்டும்.(எடுத்துக்காட்டாக மோசேயின்அழைப்பு இஸ்ரயேல் மக்களைஅடிமைத்தனத்திலிருந்து மீட்பது). இதுபொதுப்பணி. மக்களின் நன்மைக்காகச்செய்யப்படுகின்ற பணி, பணியின் பயன்அழைக்கப்பட்டவருக்கல்ல, மாறாகமக்களுக்கு.

மூன்றாவதாக கடவுளின் பணிக்குஅழைக்கப்பட்டவர்கள் பணியை ஏற்கத் தயங்குகின்றனர். மோசேயும்எரேமியாவும் தங்களுக்குப் பேசத் தெரியாதே என்று கூறிப் பின்வாங்கமுயல்கின்றனர். எசாயா மறுப்பு ஏதுமின்றி பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றார்.

நான்காவதாக, இறைவாக்கினரின் பணி தம் பணி என்று காட்டகடவுள் அடையாளம் ஒன்று அளிக்கின்றார். மோசேவுக்கும் விடுதலைவீரர்களுக்கும் இத்தகைய அடையாளம் அளிக்கப்பட்டது (நீதி 6:17,36;விப 3:11). நெருப்புப்பொறி எசாயாவின் உதட்டைத் தொடுவது இங்குஆண்டவர் அளிக்கும் அடையாளமாகும்.எசாயாவின் அழைப்பு ஆழ்ந்த இறை இயலைக் கொண்டது.கடவுளின் தூய்மை, மக்களின் பாவநிலை, தண்டனையின் அவசியம்,இறைபணியின் தன்மை, கடவுளின் உறுதி ஆகியவற்றை இப்பகுதியில்காண்கின்றோம்.

 

3. இம்மானுவேல் பற்றிய பகுதி (எசா 7:1-9:38)

இப்பகுதியில் வரவிருக்கும் மெசியா பற்றிய இறைவாக்குகள்உள்ளன.

3.1. பின்னணி
இப்பகுதியை எசாயா உரைக்கின்றபோது, வரலாற்றுப் பின்னணிஎன்ன எனக் காணவேண்டும். தொடக்கத்தில்கூறியதுபோல், சிரியா, சமாரியா (எப்ராயிம் என்பதுசமாரியாவின் மற்றொரு பெயர்) இரண்டும்இணைந்து அசீரியாவைத் தாக்கத் திட்டமிட்டன.இவ்விரு நாடுகளும் கூட்டுச் சேர்ந்தன என்றுகேட்டவுடன் யூதாவின் அரசனும் மக்களும்கலங்கினர் (காண் 7:2). நிலைமையைச் சமாளிக்கயூதா அரசன் அசீரிய மன்னனுக்கு ஆள் அனுப்பி,"நான் உம் பணியாளர்; உம் மகன்; நீர் புறப்பட்டுவந்து என்னை முற்றுகையிட்டிருக்கும் சிரியாமன்னர் கையினின்றும் இஸ்ரயேல் அரசன் கையினின்றும் விடுவிப்பீர்” என்றான் (காண் 2 அர 16:7).இச்சொற்கள் யூத மன்னன் ஆகாசு அசீரிய மன்னர்மீது வைத்த நம்பிக்கை கடவுள் மீது வைத்த நம்பிக்கையைவிடப் பெரியதுஎனக் காட்டுகிறது. இஸ்ரயேல் மரபுப்படி அரசன் யாவேயின் சுவிகாரமகன், ஆண்டவரது ஊழியன். ஆனால் ஆகாசோ அசீரியப் பேரரசனிடம்நான் உம் மகன், உம் பணியாளன் என்று கூறுகின்றான். யாவேக்கும்தாவீது அரச வம்சத்திற்கும் இடையே இருந்த உறவு தந்தை மகன் உறவு;கடவுள் - ஊழியன் உறவு (2 சாமு 7:5-14). ஆனால் யூதா மன்னன்ஆகாசு யாவேயிடமிருந்து பிரிந்து அசீரிய மன்னன் திக்ளத் பிளாசருக்குத்தன்னையே அடிமைப்படுத்திக் கொள்கிறான். இத்தகைய சூழ்நிலையில்எசாயா இம்மானுவேல் பிறப்புப் பற்றிய இறைவாக்குரைக்கின்றார்.

3.2. எசாயா 7:1-17
இப்பகுதியில் இரண்டு பிரிவுகள் உள்ளன: 1) 7:1-9 2) 7:10 - 17.முதல் வசனம் சூழ்நிலையை நமக்குக் கூறும் வசனம்.இது 2 அர 16:5 லிருந்து எடுக்கப்பட்டது.

3.2.1. முதல் பகுதி 7:1-9
சிரியா - எப்ராயிம் கூட்டுச் சேர்ந்ததைக் கேட்டு யூதாவின் அரசனும்மக்களும் கலங்கும் வேளையில், கடவுள் எசாயாவை அரசனிடம்அனுப்புகின்றார். எசாயாவுடன் அவரது மகனையும் அழைத்துச்செல்லுமாறு கடவுள் கூறுகின்றார். எசாயாவின் மகனின் பெயர்நம்பிக்கையூட்டும் பெயர். ஆகவே நிலைமை அச்சத்தையூட்டுவதாகஇருந்தாலும் கடவுள் கைவிடமாட்டார் என்ற கருத்து இங்குவலியுறுத்தப்படுகின்றது.எசாயா அரசனைச் சந்திக்க வேண்டிய இடமும் கூறப்படுகின்றது(7:3). இடம் கால்வாய்ப் பகுதி; சிரியா - எப்ராயிம் நாடுகள் எருசலேமைமுற்றுகையிட்டால் நகருக்குள் நீர் வரவேண்டிய ஏற்பாடுகளைச் செய்யஅரசன் அங்கே செல்கின்றான். கடவுள் எசாயா வழியாக அரசனுக்குதெம்பூட்டும் வார்த்தைகளைக் கூறுகின்றார்: " நீ அமைதியாய் இரு;அஞ்சாதிருந்து நடப்பவற்றை உற்றுப்பார்”. இவ்வார்த்தைகள் கடவுளின்உதவி, அவரது பிரசன்னத்தை உறுதிப்படுத்தும் வார்த்தைகள் (காண்14:13; இச 20:1-3; 1 சாமு 23:17; 2 அர 19:6; எசா 10:14).எசாயா இவ்விரு நாடுகளும் கொள்ளிக் கட்டைகளிலிருந்து வரும்புகை போன்றவை என்கிறார். இரு நாடுகளும் தகர்க்கப்படும். அவைநிலைத்து நிற்கா என உறுதி கூறுகின்றார். ஆனாலும் இந்நிலைவரவேண்டுமெனில் யூதா கடவுளின் ஆற்றலில் நம்பிக்கை வைக்கவேண்டும்.

3.2.2. எசாயா 7:10-17
இரண்டாம் பகுதியில் கடவுள் அரசரிடம் அடையாளம் கேட்கத்தூண்டுகின்றார். அடையாளம் என்பது புதுமை அல்ல் எதிர்காலத்தில்நடக்கக் கூடியதை உறுதிப்படுத்தும் நிகழ்கால நிகழ்ச்சி, அல்லதுவிரைவில் நடக்கக்கூடிய நிகழ்ச்சி.அரசன் ஆகாசு அடையாளம் கேட்காததற்கு முதல் காரணம்கடவுளைச் சோதிக்கக்கூடாது என்ற கட்டளை. ஆனால் இங்கு கடவுளேஅடையாளம் கேட்கத் தூண்டுவதால், கடவுளைச் சோதிப்பது என்பதற்குஇடமில்லை. அதன் உண்மைக் காரணம் அரசனுக்கு நம்பிக்கைஇல்லை. நம்பிக்கையற்றவனுக்கு அடையாளம் பொருளற்றது. ஆனால்கடவுளே ஆகாசுக்கு அடையாளம் ஒன்று தருகின்றார்.

"ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தைஅருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு 'இம்மானுவேல்' என்றுபெயரிடுவார்” (எசா 7:14). (இயேசுவின் பிறப்பு பற்றிய பகுதியில் மத்தேயுஇவ்வாக்கியத்தைக் குறிப்பிடுகின்றார். இயேசுவின் பிறப்பில்இவ்விறைவாக்கு நிறைவேறியதாகக் கூறுகின்றார் (மத் 1:22-23).இவ்வாக்கியம் ஒரு பெண் தன் முதல் குழந்தையைப் பெறப்போவதை அறிவிக்கப் பயன்படுத்தும் வாக்கியம் (எசா 7:14; தொநூ 16:11;நீதி 13:3-5). இளம் பெண் என்று இவ்வாக்கியத்தில் குறிக்க எபிரேயத்தில்"ஆல்மா” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. "ஆல்மா” என்ற எபிரேயச் சொல்லுக்குக் கிரேக்கப் பழைய ஏற்பாடும் அதைப்பின்பற்றிமத்தேயும் "கன்னி” என்று மொழி பெயர்த்துள்ளார். "அந்த இளம்பெண்” என்று எசாயா கூறும்பொழுது ஒரு குறிப்பிட்ட பெண்ணை அவர்குறிப்பிடுகின்றார். அந்தப் பெண் அநேகமாக யூதா அரசன் ஆகாசின்இளம் மனைவியாக இருக்கலாம். தன் முதல் குழந்தையைப்பெற்றெடுக்கப்போகும் இளம் அரசியாகும்.

குழந்தையின் பெயர் இம்மானுவேல் ( இறைவன் நம்மோடுஉள்ளார் என்பது பொருள்). பழைய ஏற்பாட்டில் "நான் உன்னோடுஉள்ளேன்” #8220;கடவுள் உன்னோடு இருப்பார்” அல்லது இதுபோன்றவாக்கியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன (காண். யோசு 1:9; நீதி 6:12, 13,16; இச 20:4; 1 சாமு 20:13; 2 சாமு 7:3; 1 அர 11:38). குழந்தையின்பெயர் கடவுளின் பராமரிப்பு தாவீதின் மரபிற்கும் மக்களுக்கும் என்றும்உள்ளது என்பதைக் குறிக்கின்றது.எசாயா இவ்வாக்கை உரைத்த சூழ்நிலையில் இதன் பொருள்தெளிவாகின்றது. யூதாவின் எதிரிகள் எருசலேமின் அரசரை மாற்றமுயற்சி செய்கின்றனர். இது தாவீதின் அரியணை என்றும் நிலைத்துநிற்கும் என்று கடவுள் தாவீது அரசனுக்குக் கொடுத்த வாக்குறுதிக்குமாறுபட்டது. ஆபத்தைக் கருத்திற்கொண்டு யூதா மன்னன் ஆகாசு அசீரியமன்னனின் உதவியை நாடுகின்றான். இது கடவுள் மீது அவன்கொண்டிருந்த அவநம்பிக்கையைக் காட்டுகின்றது. எசாயாஅடையாளத்தைக் கூறி கடவுளின் உறுதி மொழியை நினைவூட்டுகின்றார்.

4. இரண்டாம் மூன்றாம் எசாயா (எசா 40-66)

இரண்டாம் (எசா 40-55) மூன்றாம் (56-66) எசாயா, முதல்எசாயாவிலிருந்து மாறுபட்டவை. ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறுஆசிரியரால் எழுதப்பட்டது. முதல் எசாயா (1-39) எருசலேமில் வாழ்ந்தமக்களுக்கு எழுதப்பட்டது. இரண்டாம் மூன்றாம் எசாயாபாபிலோனியாவில் வாழ்ந்த நாடு கடத்தப்பட்ட மக்களுக்கும் அதன் பின்எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்களுக்கும் முறையே எழுதப்பட்டது.முதல் எசாயாவில் மக்களை அச்சுறுத்தும் பகுதிகளும் தண்டனைத் தீர்ப்பும் கூறப்பட்டுள்ளன. இரண்டாம் எசாயாவில் மக்களுக்குஆறுதல் கூறப்படுகின்றது. மக்களின் நிலை கண்டு வருந்தும் பகுதிகள்உள்ளன. அதே போன்று மூன்றாம் எசாயா முதல் இரண்டுபகுதிகளிலிருந்து மாறுபட்டு எருசலேமுக்கு வளமான வாழ்வு தரும்எதிர்காலக் காட்சியைக் காட்டுகின்றது.

4.1. நூலின் முக்கிய இறை இயல் கருத்துக்கள்

4.1.1. விடுதலை அனுபவம்
இரண்டாம் எசாயா இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிலிருந்துவிடுதலை பெற்று எருசலேம் திரும்பும் நிகழ்ச்சி, மோசே தலைமையில்இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுவாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு வந்த விடுதலைப் பயண நிகழ்ச்சியுடன்ஒப்பிடப்படுகின்றது.

4.1.2. ஆற்றல் மிக்க யாவே
உலகைப்படைத்த யாவே, இஸ்ரயேல் மக்களுக்குப் பாபிலோனியஅடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுத் தருவது அவரதுஆற்றலைக் காட்டுவதாகும்.

4.1.3. கடவுளின் நீதி
கடவுள் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதின் மூலம்தாம் நீதியுள்ளவர் எனக் காட்டுகின்றார் ( 41:2,16; 42:6; 61:3; 62:11-12).

4.1.4. கடவுளின் வார்த்தை ஆற்றல் மிக்கது
தொடக்கம் முதல் (40:5,8) இறுதி வரை (55:10-11) கடவுளின்வார்த்தை ஆற்றல் மிக்கது என்பதைக் காட்டுகின்றார். கடவுளின்வார்த்தையின் ஆற்றல் அவர் செய்யும் செயல்களில் அடங்கியுள்ளது(காண் 55:60-11).

4.1. 5. எருசலேம்
;இரண்டாம் மூன்றாம் எசாயாவில் எருசலேம் முக்கிய இடத்தைப்பெறுகின்றது. எருசலேம் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவிலிருந்துஎருசலேம் திரும்புவதை அறிவிக்கும் இறைவாக்கினராகப் (40:9-10) பலகுழந்தைகளைப் பெற்றெடுக்கும் மகிழ்ச்சி மிக்க தாயாகக் (54:1-10; 65:17-25) காட்டப்படுகின்றது.

4.2. பிற முக்கியக் கருத்துக்கள்
இரண்டாம் எசாயா மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் நூல்; நாடுகடத்தப்பட்டு பாபிலோனியாவில் நலிவுறும் மக்களுக்கு விடுதலை என்றமகிழ்வு தரும் செய்தியைக் கூறும் நூல் இது. ஆகவேதான் இப்பகுதி,"ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனி மொழி கூறுங்கள்என்கிறார் ஆண்டவர்” என்ற வார்த்தைகளுடன் தொடங்குகின்றது (40:1).இந்த விடுதலையை சைரஸ் என்ற பெர்சிய மன்னன் வழியாக கடவுள்அளிக்கின்றார். அவ்வரசன் பாபிலோனியாவை வென்று ஆட்சிக்கு வந்தபின், இஸ்ரயேல் மக்கள் நாடு திரும்பவும், அழிந்த எருசலேம் கோவிலைக் கட்டி எழுப்பவும் அனுமதி அளிக்கின்றார் (44:28-29). ஆண்டவர் சைரசுமன்னனைப் பற்றி, "அவன் நான் நியமித்த ஆயன்” என்று கூறுகின்றார்.

இப்பகுதியில் காணப்படும் மிக முக்கியமான பகுதி இறைவனின்ஊழியனைப் பற்றிய நான்கு பாடல்கள். அவை 42:1-7; 49:1-7; 50:4-9; 52:13- 53:12 ஆகும். இவ்வூழியன் கடவுளுக்கு ஏற்றவர். (இந்நான்குபாடல்களையும் வாசிக்கவும்). அவர் அமைதியானவர்; நேர்மையாளர்;ஆண்டவர் அவரைத் தேர்ந்தெடுத்தார்; துன்புறும் ஊழியன்என்றெல்லாம் இந்நான்கு பாடல்களில் அவரைப்பற்றிக்கூறப்பட்டுள்ளது. ஆனால் யார் இந்த ஊழியன்? என்ற பிரச்சனைக்குவிடை காணுவது கடினம்.சிலர் இது சைரசு பற்றியது என்றும், சிலர் இஸ்ரயேல் மக்களைக்குறிக்கின்றது என்றும் கூறுவர். யூத மக்கள் ஆண்டவரின் ஊழியன்வரவிருக்கும் மெசியாவைக் குறிக்கின்றது எனக் கருதினர். இயேசுதம்மை ஆண்டவரின் ஊழியனுக்கு ஒப்பிடுகின்றார்.

 

2. எரேமியா

1.முன்னுரை
யூத வரலாறு கண்ட இறைவாக்கினர்களில் சிறப்பான இடத்தைப்பெறுபவர் எரேமியா இறைவாக்கினர் ஆவார். #8220;எரேமியாவாழ்ந்திராவிடில் மனித சமுதாயத்தின் மத வாழ்வே வேறு விதமாகஇருந்திருக்கும்” என்று கூறுமளவுக்கு எரேமியாவின் சொற்கள்முக்கியமானவை. எரேமியாவின் நூல் பழைய ஏற்பாட்டில் 52அதிகாரங்களைக் கொண்ட நீண்ட நூலாகும். இறை வார்த்தையைப்போதிப்பதில் ஆர்வமிக்கவராய், இறைவனுடன் ஆழ்ந்த உறவுகொண்டவராய், இறைவாக்குப் பணியின் பொருட்டுத் துன்பங்களைஅனுபவித்தவராக எரேமியாவின் நூல் அவரைக் காட்டுகின்றது.எரேமியாவின் வாழ்வும் சொல்லும் நமக்கு ஓர் எடுத்துக்காட்டு.எரேமியாவின் நூலை அறிந்து கொள்ள அவர் வாழ்ந்த வரலாற்றுசூழ்நிலை மற்றும் அவரது வாழ்வு பற்றி அறிவது அவசியம். ஆகவேஇவ்விரண்டையும் முதலில் காண்போம்.

1.1. எரேமியாவின் கால வரலாறு
எரேமியா இறைவாக்குரைத்த காலம் கி.மு. 627 முதல் 587 வரைஆகும். அக்காலம் கீழை நாடுகளின் குழப்பமான காலம் என்றுகூறலாம். கி.மு. 884ஆம் ஆண்டு முதல் அசீரியா பலம் மிக்க பேரரசாகவிளங்கியது. அசுர்பனிபால் (884 - 860) சாலமனசார் (859 - 825) ஆகியஇரு அசீரிய பேரரசர்களின் சிறப்பு மிக்க வெற்றிகள் அசீரியாவை அடுத்தஇருநூறு ஆண்டுகளுக்கு வலிமை மிக்க பேரரசாக மாற்றியது. ஆனால்கி.மு. 669 முதல் 633 வரை அரசாண்ட மன்னன் காலத்தில் அதுவலுவிழந்து, பாபிலோனியா நாடு வலிமை பெற்றது. நபோபோலசாரின்(கி.மு. 626 - 605) போர் புரியும் ஆற்றலால் அசீரிய நாட்டுத் தலைநகர்நினிவே கி.மு. 612 ஆம் ஆண்டு அடியோடு அழிக்கப்பட்டது. அடுத்துஅரியணை ஏறிய பாபிலோனிய மன்னன் நபுகத்நேசரின் காலத்தில்பாபிலோனியா மேலும் வலிமை பெற்றது. அண்டை நாடுகள் அனைத்தும்பாபிலோனியாவுக்கு அடிபணிய, எகிப்து நாடு மட்டுமேபாபிலோனியாவுக்கு அடிபணிய மறுத்தது.

இந்நிலையில், மனாசே அரசர் காலத்தில் (கி.மு. 687 - 642) யூதாஅசீரியரின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. அசீரியரின் அரசியல் ஆதிக்கம்மதத்திலும் புகுந்தது. பிறநாட்டுத் தெய்வங்களும் யூதாவில்வணங்கப்பட்டன. யோசியா அரசன் காலத்தில் எருசலேம் கோவிலில்இணைச்சட்ட நூலின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அது மத வாழ்வில்சீர்த்திருத்தத்தையும் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. மக்கள்அரசருக்கு ஆதரவு அளித்தனர். உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டு, வேறுதெய்வங்களின் வழிபாட்டு இடங்கள் அழிக்கப்பட்டன. எருசலேம் கோவில்ஒரே வழிபாட்டு இடமாக மாறியது. கி.மு. 609 ஆம் ஆண்டில் யோசியாபோரில் கொல்லப்பட்டார்.யோசியாவுக்குப் பின் யூதா அரசன் யோயாக்கிம் (கி.மு. 609 - 598)காலத்தில் மீண்டும் மத வாழ்வு சீரழிந்து மக்கள் பிற தெய்வங்களைவணங்க ஆரம்பித்தனர்.

பாபிலோனியாவை எதிர்ப்பது யூதா அரசனின் முக்கியப் பணியாகஇருந்தது. ஆனால் பாபிலோனிய மன்னன் எருசலேமைத் தாக்கி கி.மு.597 இல் முதல் முதலாக யூதா நாட்டினரைப் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தினான். இதற்குள் யோயாக்கிம் இறக்கவே, அவன் மகன்யோயாக்கின் பதவிக்கு வந்தான். அவனும் நாடு கடத்தப்பட்டு,பாபிலோனியாவிலிருந்து திரும்பி வரவில்லை. நபுகத்நேசர்செதேக்கியாவை அரியணையில் அமர்த்தினான். நாட்டு மக்கள்இரண்டாகப் பிரிந்தனர். ஒரு சாரார் பாபிலோனியாவுக்கு அடிபணிந்துவாழ்வதே சிறந்தது எனக்கருதினர். மற்றொரு சாரார் எகிப்து மற்றும் சிலசிறு நாடுகளுடன் கூட்டு சேர்ந்து பாபிலோனியாவை எதிர்க்க ஆர்வம்காட்டினர். இரண்டாவது சாரார் வெற்றி பெற்றனர். பாபிலோனியாவைஎதிர்த்ததின் விளைவாக கி.மு. 587 இல் எருசலேம் கோவிலும்பாபிலோனியரால் அழிக்கப்பட்டது. மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். யூதா பாபிலோனியப் பேரரசின் ஒரு மாநிலமாக மாறியது.செதேக்கியாவிற்குப் பதிலாக யூதாவின் ஆளுநராக கெதாலியா நியமிக்கப்பட்டார். அவரும் இரு மாதங்களில் கொலை செய்யப்பட்டார். எஞ்சி நின்றமக்களில் பலர் எகிப்து நாட்டிற்குச் சென்றனர். எரேமியாவும்அவர்களுடன் எகிப்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

1.2. எரேமியாவின் வாழ்க்கைக் குறிப்பு
எரேமியாவின் வாழ்வு பற்றிய செய்திகளை அவரது நூலிலிருந்துதிரட்டலாம். அவர் கி.மு. 650 லிருந்து 645 க்குள் பிறந்திருக்க வேண்டும்.அவர்தம் இறைவாக்குப் பணியை ஆரம்பிக்கும் பொழுது அவருக்குஇருபது வயது இருந்திருக்கலாம்.எரேமியா, அனத்தோத் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.எருசலேமின் வடக்கே 6 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்திருந்தது.இது பென்யமின் குலத்தவர் வாழ்ந்த பகுதி ஆகும். அனத்தோத்எருசலேம் அரசரின் ஆட்சியின் கீழ் இருந்தது. எரேமியாவின் குடும்பம்குரு அபியத்தார் வழி வந்த குடும்பம். சாலமோன் அபியத்தாரைஅனத்தோத்தில் குடியேறக் கட்டளையிட்டார். ஏனெனில் அபியத்தார்அதோனியாவை அரசராக்க முயன்றவர் (1 அர 1:7). ஆகவேதான்எரேமியா, #8220;பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள்ஒருவரான இலிக்கியா வின் மகன் எரேமியா” என்று நூலின்தொடக்கத்தில் தன்னை அறிமுகப்படுத்துகின்றார். மேலும் அனத்தோத்லேவியருக்கு ஒதுக்கப்பட்ட நகரம் என்று யோசுவா புத்தகம் குறிப்பிடுகின்றது (21:18). அப்படியாயின் எரேமியாவின் தந்தை குருவாகஇருந்திருக்கலாம். எரேமியாவும் அவர் தந்தையின் பணியைத்தொடர்ந்திருக்கலாம். சாதோக் வழிவந்த குருக்களின் ஏளனத்திற்கும்வெறுப்புக்கும் எரேமியா ஆளாவதைக் காண்கிறோம் (எரே 20). அளவுக்குமீறி எருசலேம் கோவிலின் மீது நம்பிக்கை வைப்பதை எரேமியாகண்டிக்கின்றார் (எரே 7).

எரேமியா தன் சொந்த ஊரான அனத்தோத்தின் மீது பற்றுக்கொண்டவர். இக்கட்டான நிலையில் அங்கு தனக்கென ஒரு நிலம்வாங்குகின்றார் ( எரே 32:1-15; 37:11,12).கிராமப்புறச் சூழ்நிலையில் வளர்ந்து இயற்கையோடு ஒட்டிவாழ்ந்தவர் எரேமியா. பறவையின் பழக்க வழக்கங்கள் (17:11; 8:7),வருந்தத்தக்க வறட்சியான நிலை, அது மக்கள், விலங்குகள் ஆகியவற்றிற்கு விளைவிக்கும் துன்பநிலை (14:3-6), நீரூயஅp;ற்றுக்கள்மீதுகொண்டிருக்க வேண்டிய கவனிப்பு (2:13) இவற்றைக் கூர்ந்துகவனித்தவர் எரேமியா.

எரேமியாவின் நூலை வாசிக்கும்பொழுது, எரேமியாவின்சிந்திக்கும் ஆற்றலும் மனப்போக்கும் நமக்குத் தெரிகின்றன. எளியஇவ்விறைவாக்கினரின் நிலை நமக்குக் கடவுளைக் காட்டுகின்றது.கடவுளின் மேலான தன்மையை எடுத்தியம்புகின்றது. கடவுளைப் பற்றிநமக்குக் கூறுகின்றது. இத்தகைய கூர்ந்து நோக்கும் ஆற்றல் படைத்தவரை இறைவன் இறைவாக்குரைக்கும் பணிக்கு அழைக்கின்றார்.

1.3. எரேமியா கண்ட பல அரசர்கள்

1) கி.மு. 627 முதல் 609 முடிய (யோசியா அரசரின் காலத்தில்)எரேமியா , வட பகுதியான இஸ்ரயேல் மனந்திரும்ப அழைப்புவிடுக்கின்றார். நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கூறுகின்றார்.இக்காலம் அவரது பணிகளின் தொடக்க நாட்கள், எரேமியாவின்வாழ்வில் மகிழ்ச்சிமிக்க நாட்கள். அரசரின் ஊழியர்கள் எரேமியாவிற்குஊக்கமும் உதவியும் அளித்தனர் (எரே 26:24; 36:12).

2) கி.மு. 609 முதல் 598 முடிய (யோயாக்கிம் அரசனின் காலம்)யோயாக்கிம் எரேமியாவை எதிர்த்தவர். எரேமியா இக்காலத்தில்உரைத்த இறைவாக்குகள் அவரது நூலில் 7 முதல் 20 அதிகாரம் முடியஉள்ள பகுதிகளில் காண்கின்றோம். கோவிலுக்கு எதிராக அவர்கூறியவை குருக்களின் கோபத்திற்குக் காரணமாக இருந்தன (எரே 26:1).அரசன் அவரது ஏட்டுச் சுருளை எரித்தான் (எரே 36).

3) கி.மு. 597 முதல் 587 முடிய (செதேக்கியா மன்னனின் காலம்)597 இல் பாபிலோனியரின் முதல் படையெடுப்பு நிகழ்ந்தது. அரசஅலுவலர்கள் முன், பாபிலோனியர்களுக்கு அடிபணிய எரேமியா கூறியஅறிவுரை செதேக்கியாவுக்கு அச்சமூட்டுகின்றது. எகிப்தை நம்பியிருந்தஅரச அலுவலர்க்குக் கோபத்தை மூட்டுகின்றது. எரேமியாவின்வாழ்க்கைக் குறிப்புகள் இக்காலத்தைப்பற்றிக் கூறுகின்றன (காண்எரே 27-29; 34-35; 37-38).

4) கி.மு. 587 (பாபிலோனியரின் ஆதிக்கத்தின் கீழ்)எரேமியா எகிப்து நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார் (எரே40-43). எரேமியாவின் இறப்பு பற்றி நமக்கு எதுவும் தெரிவதில்லை.ஆனால் அவரது படிப்பினைகள் என்றும் நிலைத்து நிற்கும்.

2. நூலின் பிரிவு
எரேமியாவின் நூலை 6 பிரிவுகளாகப் பிரிக்கலாம்

1) எரேமியாவின் அழைப்பு 1:1-9
2) யூதா, எருசலேமுக்கு எதிரான இறைவாக்குகள் 2:1-25:38
3) நல் வாழ்வு பற்றிய இறைவாக்குகள் 26:1-35:19
4) எரேமியாவின் துன்பங்கள் 36:1-45:5
5) வேற்றினத்தார்க்கு எதிரான இறைவாக்குகள் 46:1-51:64
6) பிற்சேர்க்கை: எருசலேமின் வீழ்ச்சி 52:1-34.

எரேமியாவின் நூலில் ஒரு சில பகுதிகளை மட்டுமே நாம் காண்போம்அவை:

1) எரேமியாவின் அழைப்பு
2)எரேமியாவின் அறிவுரை
3) காட்சியும் செயலும்
4) எரேமியாவின் முறையிடல்
5) நம்பிக்கையூட்டும் புதிய உடன்படிக்கை
6) துன்ப வாழ்வு

3. எரேமியாவின் அழைப்பு (எரே 1:4-19 )
எரேமியாவின் அழைப்பு பற்றிக் கூறும் இப்பகுதி இந்நூலின்முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். இறைவாக்கினர்களின் பணிஎன்ன? இறைப்பணிக்கு அழைக்கப்பட்டவர்களின் பணி என்ன? என்றுஇப்பகுதி கூறுகின்றது.

3.1. இலக்கிய அமைப்பு
"எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு” (1:4) என்று இப் பகுதிஆரம்பமாகின்றது. இதே வார்த்தைகள் 11, 13 வசனங்களிலும்தரப்பட்டுள்ளன. இறைவாக்குரைக்கும் பணியில் ஆண்டவரின் வாக்குமுக்கிய இடம் பெறுகின்றது. எரே 1:4-10 வசனங்கள் வரை எரேமியாவின்பணிக்கு அழைப்பு விடுக்கப்படுவதைக் கூறுகின்றது. இது கடவுளுக்கும்எரேமியாவுக்கும் இடையே ஓர் உரையாடலாக அமைந்துள்ளது. எரேமியாகாதால் கேட்கும் கடவுளின் வார்த்தை முக்கிய இடம் பெறுகின்றது.மாறாக, மற்ற இறைவாக்கினர்களின் அழைப்பில் கண்ணால் காணும்காட்சி முக்கியத்துவம் பெறுகின்றது (காண்எசா 6; எசே 1).

எரே 1:9 ' கடவுள், இதோ பார்! என்சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்' என எரேமியாவிடம் கூறுகின்றார்.இவ்வார்த்தைகள் யாவே மோசேயிடம்'உன்னைப் போல ஓர் இறைவாக்கினனைஅவர்களுடைய சகோதர்களினின்று நான்அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என்வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன்' (இச 18:18) என்றசொற்களை ஒத்துள்ளது. இது, எரேமியாவும் மோசேயைப் போல் ஒருபெரும் இறைவாக்கினர் என்பதைக் காட்டுகின்றது.

எரே 1:4-8 வசனங்கள் எரேமியாவின் அழைப்புப் பற்றிக்கூறுகின்றன. இதில் யாவே எரேமியாவை அவர் தன் தாயின் வயிற்றில்உருவாகும் முன்பே அறிந்திருந்ததையும் , எரேமியாவின் பணி என்னவாகஇருக்கும் என்பதையும் ஆண்டவர் ஏற்கனவே அறிந்திருப்பதையும்காட்டுகின்றது ( காண். திபா 139:13-16; உரோ 8:29).எரேமியாவின் இறை அனுபவத்தையும் இது காட்கின்றது. தன்வாழ்க்கையில் கண்ட அனுபவங்கள், கடவுளின் இறைவாக்குரைக்கும்பணியில் பெற்ற அனுபவங்கள் கடவுளின் திட்டத்தை இறைவாக்கினருக்கு வெளிப்படுத்தின.கடவுளின் அழைப்பு எரேமியாவை மக்களுக்கு இறைவாக்கினராகஏற்படுத்துவதுதான். எரேமியாவின் பணி இஸ்ரயேல் மக்களுக்கும்அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த எகிப்து, அசீரியா, பாபிலோனியா,மோவாப் ஆகிய அண்டை நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்டவரின் அழைப்பைக் கேட்ட எரேமியா, #8220;என் தலைவராகியஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, நான் சிறு பிள்ளைதானே”என்கிறார் (1:6). ஆண்டவர், "சிறு பிள்ளை நான் என்று சொல்லாதே”என்கின்றார் (1:7). சிறுபிள்ளை என்ற எரேமியாவின் சொற்களை அவர்சிறு குழந்தை எனப் பொருள் கொள்ளக் கூடாது.ஆண்டவரின்அழைப்பைப் பெற்றபோது எரேமியாவுக்கு 20 அல்லது 30 வயதுஇருக்கும். முதிர்ந்த வயதும் ஆழ்ந்த வாழ்க்கை அனுபவமும்இப்பொறுப்புக்கு அதிகப் பொருத்தமாக இருக்கும் என எரேமியாகூறுகின்றார். ஆனால் ஆண்டவர் அவர் ஆட்சேபணையை ஏற்காது,#8220;நான் உன்னோடு இருக்கிறேன்” (1:8) என வாக்கு அளிக்கின்றார்.

'பிடுங்கவும் தகர்க்கவும், அவிழ்க்கவும் கவிழ்க்கவும், கட்டவும்நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும்பொறுப் பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்' (1:10) என்ற ஆண்டவரின் வாக்குஇறைவாக்கினரின் பணியை விரிவாகக் கூறுகின்றது. எரேமியாவின்வாக்கு இஸ்ரயேல் மக்களின் மனந்திரும்தபுதலுக்கு மீண்டும் ஒருவாய்ப்பாக அமையும்.

எரேமியாவின் அழைப்பு இரண்டு காட்சிகளுடன் தொடர்கின்றது.எரேமியா காணும் முதல் காட்சி எரே 1:11-12இல் கூறப்பட்டுள்ளது.இக்காட்சி ஆமோஸ் கண்ட சில காட்சிகளை ஒத்திருக்கின்றது (காண்.7:1-9;8:1-3; 9:1-4).எரேமியா கண்ட வாதுமை மரத்திற்கு மற்றொரு பொருள்விழிப்பாயிருத்தல். இக்காட்சியின் பொருள் கடவுள் தன் வார்த்தையைநிறைவேற்றுவதில் விழிப்பாயிருக்கின்றார் என்று அதை மறுப்போருக்குநினைவூட்டுகின்றார். மேலும் இது கடவுளின் வார்த்தை என்றும்நிறைவேறும் என்பதைக் காட்டும் காட்சியாகும்.எரேமியா கண்ட மற்றொரு காட்சி எரே 1:13-16 இல்கூறப்பட்டுள்ளது. கொதிக்கும் பானை மக்களுக்கு வரவிருக்கும்தண்டனைத் தீர்ப்பினைக் குறிக்கின்றது. அத்தண்டனைத் துன்பம் வடக்கிலிருந்து வரும். அது யூதாவுக்குப் பெருந்துன்பத்தைவிளைவிக்கும். அத்தகைய துன்பம் வரக்காரணம் என்ன என்பதை 16ஆம் வசனம் கூறுகின்றது.

எரே 1:17-19 எரேமியாவின் அழைப்பை உறுதிப்படுத்த, அவருக்குதெம்பு அளிக்க கூறப்படுகின்ற வார்த்தைகள். இவ்வாக்கியங்கள் மீண்டும்எரேமியாவுக்கு அவரது துன்ப காலத்தில் கூறப்படுகின்றன (காண். 11:18-15:20). துன்பத்தில் எரேமியா தன் பணியைச் செய்ய வேண்டும் என்பதைஇவ்வசனங்கள் வலியுறுத்துகின்றன.எரேமியாவை இறைப்பணிக்கு அழைப்பது முதல் அதிகாரத்தின்கருத்தாகும். மேலும் இங்கு ஆண்டவரின் வார்த்தை பற்றிய இறைஇயலையும் காண்கின்றோம். ஆண்டவரின் வார்த்தை ஆற்றல் பெற்றது.அது என்றும் நிறைவு பெறும் என்ற கருத்து இங்குக் கூறப்பட்டுள்ளது.எதிர்ப்புகளுக்கிடையேயும் இறைவனின் வார்த்தை ஆற்றல் மிக்கது,பயன் அளிப்பதாகும். இறைவாக்கினர் கடவுளின் வார்த்தையைஎடுத்துரைக்க அனுப்பப்பட்டவர்.

4. எரேமியாவின் போதனை (எரே 2:20)
ஆண்டவரின் வாக்கைத்தான் அவர் போதிக்கின்றார் என்று காட்டஎரேமியா தம் போதனையில் சில சொற்றொடர்களைப் பயன்படுத்துகின்றார். அவைகளில் சிலவற்றை மட்டும் இங்குக் குறிப்பிடலாம்.

4.1. ஆண்டவர் கூறுவது இதுவே. . .
கடவுளின் வார்த்தையை அறிமுகப்படுத்த, ஆரம்பிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் இவை. அன்றாட வாழ்வில் பணியாளர்கள் தம்தலைவரின் வார்த்தைகளை மற்றவருக்கு எடுத்துக் கூற, இத்தகையசொற்றொடர்களைப் பயன்படுத்தினர். இறைவனின் வார்த்தையைக்கூற ஆரம்பிக்கும்பொழுது ஆண்டவர் கூறுவது இதுவே என எரேமியாகூறுகிறார் ( எரே 2:25). இறைவனின் தூதுவரே இறைவாக்கினர்என்பதை இச்சொற்றொடர்கள் கூறுகின்றன.

4.2. ஆண்டவர் கூறுகின்றார் . . .
இச்சொற்கள் எரேமியாவின் நூலில் 171 முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. உரையின் ஆரம்பத்தில் இல்லாமல் இறைவாக்கின்இறுதியில் பயன்படுத்தப்படும் சொற்றொடர் இது (காண். 2:8; 2:3).முக்கியக் கருத்துக்களை வலியுறுத்த உரையில் நடுவிலும் இதுபயன்படுத்தப்படுகின்றது (எரே 2:29; 5:29).

4.3. எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் இறைவாக்கு . . .
இச்சொற்றொடரும் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது( எரே 1:4; 11:13;2:1; 16:1).

4.4. ஆண்டவர் எரேமியாவிற்கு அருளிய வாக்கு . . .
(7:1; 11:1; 18:1; 21:1) மேற்கூறிய இரண்டு சொற்றொடர் களும்இறைவனுக்கும் இறைவாக்கினருக்கும் இடையே உள்ள உறவைக்காட்டுகின்றன. இறைவாக்கினர் இறைவனின் சார்பாக பேசுபவர்என்பதைக் காட்டுகின்றன. இதைத் தவிர சில தலைப்புகளில் முக்கியப்போதனைகளைக் குறிப்பிட்டுக் காட்டலாம்.

4.5. பாவத்திற்கு எதிர்ப்பு
பாவத்தைக் கண்டனம் செய்வதும் மனந்திரும்புதலுக்குஅழைப்பதும் இறைவாக்கின் முக்கியக்கருத்தாகும். பல்வேறு உவமைகள்,உருவகங்கள் வழியாகப் பாவத்தைஎதிர்க்கின்றார். எடுத்துக்காட்டாக எரேமியா,‘உன் நுகத்தடியை முறித்து விட்டாய், உன்தலைகளை அறுத்துவிட்டாய்' என்று உவமைவழியாக கடவுளுக்கு அடிபணிய மறுக்கும்மக்களின் நிலையைச் சுட்டிக்காட்டுகின்றார்(எரே 2:20-28). தரங்கெட்ட, கெட்டுப்போனதிராட்சைக் கொடி (2:21; காண் எரே 5:10; 6:9;8:12; எசா 5). அங்கும் இங்கும் அலையும்பெண் ஒட்டகம் (2:23) இவைகள் மக்கள்பாவம் செய்து அடையும் இழி நிலையைக் குறிப்பிட எரேமியாபயன்படுத்தும் உவமைகள். இத்தகையோர் தண்டனை அடைவர்என்பதைக் கூறுகின்றார்.ஆண்டவர் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் வல்லச் செயல்கள் பலசெய்தவர். எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டவர் (2:6).செழிப் பான நாட்டில் குடியேறச் செய்தவர் (2:7). அத்தகைய ஆண்டவரைமக்கள் தம் பாவத்தால் கைவிட்டனர் (12:13,19). அத்தகைய ஆற்றல்மிக்கஅன்பு மிக்க கடவுளை மறந்தனர் (2:32). இது இஸ்ரயேல் மக்களின்பாவம்.

4.6. மனிதரின் இழிநிலை
கடவுளை மறந்து, அவருக்கு அடிபணிய மறுக்கும் மக்களின் பாவநிலையைக் கண்டு எரேமியா மனம் உடைந்து காணப்படுகின்றார்.அவர்களது கடின இதயத்தைக் கடிகின்றார். மக்கள் அனைவரும்பேராசை மிக்கவர்கள் (6:13); பொய்யாணை இடுபவர்கள் (5:2); பொல்லாங்கு பேசும் ஊர் சுற்றிகள் (6:24); ஏழைகளின் உரிமைகளைத்தட்டிப் பறிப்பவர்கள் (5:28) மக்களிடையே ஒற்றுமை இல்லை. இந்தஇழிநிலைக்குக் காரணம் என்ன? கடவுளை மறந்ததே காரணம்.கடவுளை மறந்து, மற்ற நாடுகளின் உறவை நாடிச் செல்கின்றனர் (2:18,36-37; 13:20-21). வேற்றுத் தெய்வங்களின் மீது நம்பிக்கைவைக்கின்றனர். ஆண்டவரின் நீதியை உணராதவர்கள். வானத்துகொக்கு தன் காலத்தை அறிந்துள்ளது. புறாவும் தகைவிலானும்நாரையும் தாம் இடம் பெயரும் காலத்தை அறிந்துள்ளன (8:7) எனக்குறிப்பிடுகின்றார். பறவைகள் கடவுளின் நியமத்தைப் பின்பற்றுகின்றன.மனிதனோ கடவுளின் திட்டத்தை மறந்துவிடுகின்றான் ( 5:22-25).

மக்கள் இதயமற்றவர்கள், மதிகெட்டவர்கள் (5:21); மக்களின் இதயம்கடவுளுக்கு எதிராக எழுகின்றது (5:23).எரேமியா பின்னர் கடவுளுடன்செய்யவிருக்கும் புதிய உடன்படிக்கையைப் பற்றிக் கூறும் பொழுது, கடவுளின்சட்டம் மக்களின் இதயத்தில் எழுதப்படும்என்கிறார். இயேசுவும் தீயது அனைத்தும்என்றார் (காண். மாற் 7:21-23).

4.7. மனந்திரும்ப அழைப்பு
பாவத்தை எதிர்ப்பதும் அதைச் சுட்டிக் காட்டுவதும் மட்டுமல்லஇறைவாக்கினரின் பணி. மக்களை மனந்திரும்ப அழைப்பதும்இறைவாக்கி னரின் முக்கியமான பணியாகும். கடவுளுக்கும்மனிதனுக்கும் இடையே உள்ள உறவு பாவத்தால் அறுந்துவிட, மீண்டும்இறை வனுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள இறைவாக்கினர் அழைப்புவிடுக்கின்றார். எரேமியா மனந்திரும்ப மக்களை அழைக்கும் பகுதிகளைஅவர் நூலில் காண்கின்றோம். மக்கள் கடவுளிடம் திரும்பி வரவேண்டும்.ஏனெனில் கடவுள் நமக்கு வாழ்வளிக்கும் ஊற்று. ஆண்டவரே!இஸ்ரயேலின் நம்பிக்கையே! உம்மைப் புறக்கணித்தோர் யாவரும் வெட்கமுறுவர். ஏனெனில் அவர்கள் வாழ்வளிக்கும் நீரூயஅp;ற்றாகிய ஆண்டவரைப்புறக் கணித்தார்கள் (17:13 ; 2:13). கடவுள் நம் தந்தை (3:4,19); பேரன்புகொண்டவர் (3:12) சீயோனின் அரசர் (8:19) அவரே இஸ்ரயேலின்விடுதலை (3:23) இஸ்ரயேலின் நம்பிக்கை (14:18) இத்தகைய கடவுளிடம்ஏன் தயக்கம் என்று வினவுகின்றார். விழுந்தவன் எழுவதில்லையா?பிரிந்து சென்றவன் திரும்பி வருவதில்லையா? (8:4) இஸ்ரயேலே, நீதிரும்பி வருவதாக இருந்தால் என்னிடம் திரும்பிவா! என்கிறார்ஆண்டவர் (4:1) என்று கூறி, எரேமியா மக்களை மனந்திரும்பஅழைக்கின்றார்.

மனந்திரும்புதலின் மூலம் மனிதன் தன் வாழ்வில் ஒருதிருப்பத்தைக் காண வேண்டும். அதுவே உண்மை மனந்திரும்புதல். மீட்புஎன்பதில் மனிதனின் பங்கும் உண்டு.

4.8. கடவுளின் தண்டனை
மனம் திரும்பாவிடில் மனிதன் கடவுளிடமிருந்து தொலை தூரம்சென்று விடுகின்றான். பாவம் செய்த இஸ்ரயேல் மக்கள் கடவுளின்மக்களாக இருக்க முடியாது (9:14; 12:7). அத்தோடு கடவுளின் தண்டனைஅவர்கள் மீது விழும் என்று எரேமியா கூறுகின்றார். மழ்?துவிழுந்தவர்களோடு அவர்களும் மழ்?து விழுவர். நான் அவர்களைத்தண்டிக்கும்பொழுது அவர்கள் வீழ்த்தப்படுவர் (8:12) யூதா மக்களின் மீதுவரும் துன்பத்திற்கு அவர் களது பாவமே காரணமாகும் (9:12-16)."ஆண்டவர் கூறுவது, நீ என்னைப் புறக்கணித்துவிட்டாய்; என்னைக்கைவிட்டு ஓடி விட்டாய். எனவே உன்னை அழிப்பதற்கு என் கையைஉனக்கு எதிராக நீட்டினேன்” (15:6).மக்கள் அனைவருமே கடவுளை மறந்தனர். தீய வழியில்நடந்தனர். சிறியோர் முதல் பெரியோர் வரை (6:13) அரசன் முதல் ஆண்டிவரை அனைவரும் பாவம் செய்தனர் (13:18-19). இறைவாக்கினர் உரைகாற்றோடு காற்றில் போய் பலனில்லாது போயிற்று (5:13).

4.9. மூட நம்பிக்கை
மக்கள் சிலவற்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து,கடவுளின் கட்டளைகளை மறந்தனர். கடவுளின் தண்டனைகளி லிருந்துஅவை காப்பாற்றும் என நம்பினர். எருசலேம் கோவில், அங்குசெலுத்தப்படும் பலிகள், சட்டம் இவை தங்களுக்குக் கை கொடுக்கும்,தண்டனையிலிருந்து தப்புவிக்கும், காப்பாற்றும் என எரேமியா காலத்துயூத மக்கள் நம்பினர்.எருசலேம் கோவில் யூத மக்களின் வாழ்வில் சிறப்பானஇடத்தைப் பெற்றிருந்தது. கடவுளின் பெயர் வாழும் இடம் அது.மக்களுக்கு ஆசீரையும் வாழ்வையும் மீட்பையும் அளிக்கும் ஊற்றாகஎருசலேம் கோவிலை யூத மக்கள் கருதினர். இறைவாக்கினர்களின்சொற்கள் எவ்வாறு எருசலேம் யூத வாழ்வின் மையமாகத் திகழ்ந்தனஎன்பதைக் காட்டுகின்றன. மனந்திரும்பாமல் கடவுளை மறந்துவிட்ட நிலையில் எருசலேம் கோவிலின் மீது வைக்கும் நம்பிக்கை பயனற்றது,வீணானது என்று எரேமியா எடுத்துரைத்தார் (எரே 7:1-15 ). பத்துக்கட்டளைகள் காட்டும் வழியைப் பின்பற்றி இறைவனின் விருப்பத்தைநிறைவேற்றாமல், எருசலேம் கோவிலின் மீது நம்பிக்கை வைத்துப் பயன்என்ன? என்று சாடுகின்றார் எரேமியா. முற்காலத்தில் சிலோவாவில்இருந்த வழிபாட்டுத்தலம் சிறப்பு மிக்கதாக இருந்தாலும் மக்களின்பாவத்தின் பொருட்டு கடவுள் அதை அழித்தார் என்றும் அதேபோல் மக்கள்மனந்திரும்பாவிடில் எருசலேம் கோவிலும் அழிவுறும் என்றும் எரேமியாஎடுத்துரைத்தார்.

மக்கள் தாம் கடவுளுக்குச் செலுத்தும் பல்வேறு பலிகள் தம்மைஅழிவிலிருந்து காக்கும் என நம்பினர். இறைவாக்கினர் எசேக்கியேல்ஏற்கனவே நல்மனதற்ற பலிகளைக் கடவுள் வெறுக்கின்றார் என்றுகாட்டியுள்ளார் (எசே 6:20). வேற்றுத் தெய்வங்களை வணங்கிக் கொண்டுயாவேயுக்குப் பலி செலுத்துவதில் பொருள்இல்லை என்கின்றார் எரேமியா (2:28).அடுத்து கடவுளின் சட்டம் தங்களைஅழிவிலிருந்து காக்கும் எனக் கருதினர்.எரேமியா இத்தகைய மனபோக்கைக் கண்டித்தார்(8:8-9). சட்டம் அவர்களது வாழ்வின் சட்டமாக,வழிநடத்தும் சட்ட மாக மாறவில்லை. கடவுளின்சட்டம் வாழ்வளிக்கும் வார்த்தையாக மனிதன்மனதில் பதியாத வரை சட்டத்தினால் பயன்இல்லை.

5. எரேமியாவின் அடையாளச் செயல்கள்
இறைவன் அளிக்கும் செய்தியைமக்களுக்கு அறிவிக்க எரேமியா வார்த்தைகளைமட்டும் பயன்படுத்தவில்லை. அடையாளச் செயல்களின் மூலமும் தம்இறைவாக்குரைக்கும் பணியைச் செய்தார் (16:1-9; 27:1-12; 28:10-11;43:8-13; 51:59-64). இங்கு எரேமியா செய்த மூன்று அடையாளச்செயல்களைக் காண்போம் .

5.1. நார்ப்பட்டுக் கச்சையின் அடையாளம் ( 13:1-11 )
எரேமியாவின் இவ்விறைவாக்கு அடையாளச் செயல் இலக்கியநயத்துடன் எழுதப்பட்டுள்ளது.

5.1.1. இலக்கிய அமைப்பு

13:1 கடவுளின் கட்டளை
13:2 எரேமியா இறைவனின் கட்டளையை நிறைவேற்றல்
13:3-4 கடவுளின் இரண்டாம் கட்டளை
13:5 எரேமியா அதை நிறைவேற்றல்
13:6 கடவுளின் மூன்றாவது கட்டளை
13:7 எரேமியா கடவுளின் கட்டளையை நிறைவேற்றல்
13:8-11 நார்ப்பட்டு இற்றுப் போதல்

5.1.2. பொருள் விளக்கம்
கடவுள் கூறியபடி மறைத்து வைக்கப் பட்ட இடைக்கச்சை எதற்கும்பயன்படாத அளவுக்கு இற்றுப் போகின்றது. ஆரம்பத்தில் கச்சை புதிதாகமறைத்து வைக்கப்பட்டு இறுதியில் எதற்கும் பயன்படாத அளவுக்குஇற்றுப்போகின்றது. "இற்றுப்போதல்” முக்கியமான கருத்தாகும். என்சொற்களுக்குச் செவி கொடுக்க மறுத்து, தங்கள் இதயப் பிடிவாதத்தின்படிநடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றிற்கு ஊழியம் செய்துவழிபட்டு வரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப்போல் ஆவார்கள் (13:10) என்ற ஆண்டவரின் வாக்கு கவனிக்கத்தக்கது.அதே போன்று 13:11ஆம் வசனத்தில் கடவுள் மக்களைத் தண்டிப்பதின்காரணம் விளக்கப்படுகிறது.கச்சை இடையில் ஒட்டியிருப்பதுபோல், இஸ்ரயேல் வீட்டார்தன்னோடு ஒன்றித்திருக்கச் செய்தார் கடவுள். அவர்கள் அவருடையமக்களாக இருந்தனர். மக்களை தனது மகிமையாகப் புகழாக விளங்கச்செய்தார் கடவுள். ஆனால் மக்களோ கடவுளின் வார்த்தையைக்கேட்கவில்லை. மக்கள் கடவுளோடு ஒன்றித்திருக்க வேண்டுமெனஇணைச் சட்ட நூல் கூறுவதும் இங்கு கவனிக்கத்தக்கது (காண். எசா10:20; 13:5; 30:20).

எரேமியா தனது இடைக்கச்சையை எங்கே வைத்தார் என்பதுகேள்வி? கடவுள் "எழுந்து பேராத்து ஆற்றுக்கு செல். அங்கு அதனைப்பாறை இடுக்கில் மறைத்து வை” என்கிறார் (13:4,7). பேராத்து என்பதுயூப்ரதீசு நதிக்கு மற்றொரு பெயர். அது பாபிலோனியா நாட்டில் உள்ளது.பாலஸ்தீன் நாட்டிலிருந்து அவ்விடத்துக்குச் செல்வது எளிதல்ல.அநேகமாகப் போத்து என்பது "பாரா” என்ற ஓர் ஓடையாகஇருக்கலாம். இவ்வோடை அனத்தோத்துக்கு வடக்கில் எருசலேமிலிருந்து சில மணி நேரத்தில் சென்றடையக்கூடிய இடமாகும். யோசுவா18:23 இல் பாரா என்ற பெயர் கொண்ட கிராமம் ஒன்று பென்யமினுக்குஉட்பட்ட எல்லையில் உள்ளதாய்க் குறிப்பிட்டுள்ளது. யூதாவுக்கு வரும்துன்பம் வடக்கிலிருந்து வரும் என்பதைக் காட்டுவது இப்பெயரின் முக்கியநோக்கமாகவும் இருக்கலாம்.

5.2. குயவர் வீட்டில் எரேமியா ( 18:1-12 )
இவ்வடையாளச் செயல் மேற்கூறப்பட்ட செயலிலிருந்துமாறுபட்டது. குயவரின் வீட்டில் நுழையும் எரேமியா தம் கையால் செய்தமண்கலம் சரியாக அமையாதபொழுதெல்லாம் குயவர் தம் விருப்பப்படிஅதை வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார் என்பதைக் கண்டுஅதைப்பற்றிச் சிந்திக்கின்றார். இச்செயல், தம் மக்களைப் பொறுத்தவரைகடவுள் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டுகின்றது. குயவரைப்போலகடவுளும் சுதந்திரமாகச் செயல் படுகின்றார் என்பதை எரேமியாஉணருகின்றார்.

இப்பகுதியில் 11 ஆம் வசனம் முழுப்பொருளைக் கொண்டுவருகின்றது. யூதா நாட்டினரையும் எருசலேம் வாழ் மக்களையும்நோக்கிக் கூறவேண்டிய செய்தி எரேமியாவுக்கு அருளப்படுகின்றது."ஆண்டவர் கூறுவது இதுவே; உங்களுக்கு எதிராய் வரப்போகும்தீமைக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். உங்களுக்குஎதிராய் ஒரு திட்டம் தீட்டுகிறேன். ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும்உங்கள் தீய வழியிலிருந்து திரும்புங்கள்; வழிகளையும் செயல்களையும்திருத்திக்கொள்ளுங்கள்.எரேமியாவின் சொற்களைக் கேட்டு மனந்திரும்ப மறுப்பவருக்குஇறைவாக்கினர் கூறும் தண்டனையைக் கடவுள் நிறைவேற்றுவாரா எனஐயுறும் மக்களுக்கு வரவிருக்கும் தீமையைக் கடவுள்எடுத்துரைக்கின்றார். குயவரைப்போல் கடவுளுக்கும் தம் மனம் போல்செய்யச் சுதந்திரம் உண்டு.

5.3. அத்திப்பழங்களின் அடையாளம் ( 24:1-10 )
அத்திப்பழங்கள் நிரம்பிய இரு கூடைகளை எரேமியா தம் காட்சியில்காண்கின்றார். ஏற்கனவே நூலின் ஆரம்பத்தில் (1:11-14) எரேமியாஇரண்டு காட்சிகளைக் காண்கின்றார். ஆமோஸ் இறைவாக்கினர் கண்டகாட்சிகள் சிலவற்றை அவர் நூலில் வாசிக்கின்றோம்.

இக்காட்சி தெளிவானது. ஆண்டவர் எரேமியா வழியாக 597 இல்பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களுக்கு நல்லது செய்யவிழைகின்றார். இவை நல்ல அத்திப்பழங்கள். நாடு கடத்தப்படாமல்யூதேயாவில் தங்கியவர்கள் தீய அத்திப்பழங்களுக்கு ஒப்பாவர். ஏன்இத்தகைய பாகுபாடு? கி.மு. 597 இல் நாடு கடத்தப்படாமல் எருசலேமில்தங்கியவர்களைப் பற்றி எசேக்கியேல் இறைவாக்கினர் கூறியதை நாம்நினைவு கூற வேண்டும் (காண். எசே 11:15). எருசலேமில் வாழ்ந்தோர்,நாடு கடத்தப் பட்டோர் வேற்று நாட்டில் வாழ்ந்ததால் கடவுளின்பிரசன்னத்தை உணராத நிலையில் உள்ளனர். கடவுள் அவர்களுடன்இல்லை. மாறாக எருசலேமில் தங்கியிருப்போர் தங்களைக் கடவுளின்கொடைகளைப் பெற்றவர்களாகக் கருதினர். வாக்களிக்கப்பட்ட நாட்டில்,எருசலேமில் வாழ்வதே தங்களுக்கு வாழ் வளிக்கும் என நினைத்தனர்.இத்தகைய எண்ணம் வேண்டாம் என்பதை எரேமியா குறிப்பிடுகின்றார்.நாடு கடத்தப்பட்டவர்களைக் கடவுள் கைவிடுவதில்லை. அவர்கள் மீதுஅக்கறை காட்டுகின்றார் என்பதை எரேமியா உணர்த்துகின்றார்.

6. எரேமியாவின் அறிக்கை
எரேமியாவின் நூலில் காணப்படும் எரேமியாவின் அறிக்கைகள்எரேமியா இறைவனை நோக்கி எழுப்பிய பாடல்கள் ஆகும். திருப்பாடல்வடிவில் காணப்படும் இம்மன்றாட்டுக்கள் எரேமியாவின் ஆழ்ந்த இறைஉணர்வைக் காட்டுகின்றன. இத்தகைய மன்றாட்டுக்களை எரேமியாவின்நூலில் 12:1-5; 15:10-21; 17:14-18; 18:19-23; 20:7-8 ஆகிய பகுதிகளில்காண்கின்றோம்.எரேமியாவின் இம்மன்றாட்டுக்கள் புலம்பல் திருப்பாடல்களைப்போன்று உள்ளன. அவர் இம்மன்றாட்டுக்கள் மூலம் திறந்த உள்ளத்துடன் கடவுளை நோக்கிக் கேள்விகளை எழுப்புகின்றார்.

6.1. தீயோர் வாழ்வு வளம் பெறுவது ஏன்? (எரே 12:1-5)
எரேமியா தன் குடும்பத்தாரால் துன்புறுத்தப்பட்டார் (காண் 11:8-23;12:6). கடவுள் நீதியுள்ளவர் என்று நம்பினாலும், அதே சமயத்தில் தீயவர்தம் வாழ்வில் வளம் பெறுகின்றனர். இம் முரண்பாட்டில் எழுவதுதான்எரேமியாவின் இம்மன்றாட்டு. ஏன் இந்நிலை? என்ற கேள்வியைஎழுப்புகின்றார் எரேமியா. தீயோர் கடவுளின் ஆசீரைப் பெற்றதுபோல்தோன்றினாலும், அவர்களது வளமை கடவுளின் ஆசீரின் விளைவன்று.அவர்களது வாழ்வில் கடவுள் இடம் பெறுவதில்லை. அவர்களின்உதடுகளில் நீர் எப்போதும் இருக்கின்றீர்; அவர்கள் உள்ளத்திலிருந்தோவெகு தொலைவில் உள்ளீர் (12:2). வெளிப்பார்வைக்குக் கடவுள்அவர்களுடன் இருப்பதாகத் தோன்றினாலும் கடவுள் அவர்களுடன்இல்லை. ஆனால் எரேமியாவின் உள்ளத்திலோ இறைவன்வாழ்கின்றார். துன்பங்களைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளக் கடவுள்அவருக்குக் கூறுகின்றார். "ஏனெனில் உங்களுக்காக நாம் வகுத்திருக்கும்திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமானஎதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கானநல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள்அல்ல என்கிறார் ஆண்டவர்” (29:11).

6.2. எரேமியாவின் மனப்போராட்டம் ( எரே 15:10-21)இப்பகுதி எரேமியாவின் புலம்பலாகும். பொறுமை இழந்தஎரேமியா மனக்கசப்புற்றவராகக் கடவுளுக்கு எதிராகச் சரமாரியாகப்பேசுகின்றார். ஏன், இறைவனின் அழைப்பையே எதிர்க்கின்றார்.

'என்னைப் பெற்றெடுத்த என் தாயே! எனக்கு ஐயோ கேடு' (15:10)என்று கூக்குரலுடன் மனப்போராட்டம் ஆரம்பமாகின்றது. யோபுவைப்போன்று தானும் பிறந்தநாளைச் சபிக்கின்றார் (காண். யோபு 3:3-26).இம்முறைப்பாடு எரேமியா படும் துன்பத்தின் கொடூரத்தைக் காட்டுகின்றது.

எரேமியா எல்லோராலும் கைவிடப்பட்டார். குழப்பத்தைஉண்டாக்கும் மனிதன் எனக் கருதப்பட்டார். துன்ப காலத்தில் தனதுகடந்த கால வாழ்வை, இறைவாக்குப் பணிக்கு இறைவன் தன்னைஅழைத்த அந்த நாளை நினைத்து மகிழ்வுறுகின்றார். "நான் உம்சொற்களைக் கண்டுணர்ந்தேன்; அவற்றை உட்கொண்டேன்; உம்சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன் என் உள்ளத்திற்கு உவகைஅளித்தன” (15:6) என மகிழ்ந்தார். கடவுளின் பணிக்கெனத் தன்வாழ்வை, மகிழ்ச்சியை, களியாட்டக் கூட்டங்களை எரேமியா தியாகம்செய்தார் (15:17). ஆனால் தனிமையும் துன்பமுமே அவர் கண்ட பலன்.பொங்கி வழியும் நீரூயஅp;ற்றாகிய கடவுள் என ஒரு காலத்தில் கூறிய எரேமியா(2:13) இப்பொழுது கடவுளைக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையெனப்புலம்புகின்றார் (15:18).

கடவுள் எரேமியாவை மனந்திரும்ப அழைக்கின்றார். மக்களைமனம்திரும்ப அழைப்பு விடுத்த எரேமியாவுக்கு மனந்திரும்ப கடவுளிடமிருந்த அழைப்பு வருகின்றது. "நீ திரும்பி வந்தால் உன்னை முன்னையநிலைக்குக் கொண்டு வருவேன்” என்கிறார் ஆண்டவர் (15:19). அவரைத்துன்புறுத்துவோரைப் பழிவாங்குவதைவிட, எரேமியாவை வலிமைமிக்கவராக, உறுதியுள்ளவராகமாற்றுவதாகக் கடவுள் கூறுகின்றார்(15:20-21). "உன்னோடு நான்இருப்பேன்” (1:7-19) என்று அவரைஇறைப்பணிக்கு அழைத்தபோது கூறியவார்த்தை களை மீண்டும்புதுப்பிக்கின்றார்.எரேமியாவின் தோள்மீது நிற்கும்சிலுவையை எடுத்துவிடுவதாகக் கடவுள்கூறவில்லை. ஆனால் சிலுவையும்,துன்பமும் அழைப்பின் ஒரு பகுதி எனக்கடவுள் வலியுறுத்துகின்றார்.

6.3. இஸ்ரயேலின் நம்பிக்கை - புதிய உடன்படிக்கை (எரே 31:31-34)
எரேமியாவின் நூலில், துன்புறும் இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல்தரும், நம்பிக்கையூட்டும் பகுதிகள் பல உண்டு.எரே 30:12-15-இல் இஸ்ரயேல் மக்களின் மனநிலை புரையோடியபுண்ணுக்கு ஒப்பிடப்படுகின்றது. "உனது காயத்தை ஆற்ற மருந்தேஇல்லை. உன்னைக் குணப்படுத்தவே முடியாது” (30:12). "உனது குற்றம்பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை” என்று கடவுள் கூறினாலும்.கடவுள் நல்ல மருத்துவராகக் காயங்களை குணமாக்குபவராகக்காணப்படுகின்றார். "நான் உனக்கு நலம் அளிப்பேன்; உன்னுடையகாயங்களை ஆற்றுவேன்” (30:17) என்கிறார். இஸ்ரயேல் மீண்டும்நிலைநாட்டப்படுவதை எரேமியா அழகாக வர்ணிக்கின்றார் (காண். எரே31:2-6).

தன் உறவை மீண்டும் புதுப்பிக்க இறைவன் ' 'இஸ்ரயேல்வீட்டாரோடும், யூதா வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன்” என்கிறார் (31:31)). 32 ஆம் வசனத்தில் வரும் புதியஉடன்படிக்கை மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியே வந்தபொழுதுசெய்த உடன்படிக்கையினின்று மாறுபட்டது. இறைவன் முன்னின்றுசீனாய் மலையில் செய்த உடன்படிக்கை பழைய உடன்படிக்கை.உடன்படிக்கை செய்த பொழுது கடவுளே அவர்களுக்கு பத்துக்கட்டளைகளையும் அளித்தார். "என் உடன்படிக்கையை அவர்கள்மீறிவிட்டார்கள்” (32) என்று கடவுள் கூறும்பொழுது அது இஸ்ரயேல்மக்களால் மீறப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.அது கடவுள் செய்த உடன்படிக்கை. ஆகவேதான் கடவுள் ' 'என்உடன்படிக்கை” எனக் கூறுகின்றார். கடவுள் அவர்களின் தலைவர்.யாவே தலைவராய் இருந்தும் இஸ்ரயேல் மக்கள் பல்வேறுதெய்வங்களைத் தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டனர். சிலைவழிபாடு, வேறு தெய்வங்களை வணங்குதல் உடன்படிக்கையை மீறக்காரணமாயிற்று.

உடன்படிக்கையை மீறியதைக் கண்டிக்கும் கடவுள் எழுதியஉடன்படிக் கையைச் செய்யவிருப்பதாகக் கூறுகின்றார் (33). புதியஉடன்படிக்கையின் சிறப்பான அம்சம்; "என் சட்டத்தை அவர்கள்உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்கள் இதயத்தில் எழுதுவேன்”என்பதாகும். சட்டம் அழிக்கப்படாது. அது கடவுளின் சித்தத்தைமக்களுக்குக் காட்டுவதாகும். ஆனால் சட்டம் மக்கள் உள்ளத்தில்எழுதப்படுவதின் மூலம் மனிதனின் வாழ்வில் அடிப்படை மாற்றம்காணப்பட வேண்டும். மனிதனின் இதயம் புதிய ஆற்றலைப்பெறுகின்றது. ஆண்டவர் அளிக்கும் இம்மாற்றம் கடவுளுக்குப்பணிபுரியவும் அவருக்குப் பிரமாணிக்கமாய் இருக்கவும் உதவ வேண்டும்.சட்டத்தை இதயத்தில் எழுதுவதின் விளைவு என்ன?ஆண்டவரைப் பற்றிய அறிவு சிறியோர் முதல் பெரியோர் வரைஅனைவருக்கும் அருளப்படுகின்றது. ஒருவர் மற்றொருவருக்குக் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. ஆண்டவரைப் பற்றிய அறிவுஅருமையான கொடை (2:8; 4:22; 5:4-5; 9:2,5,22,23; 24:7).

இறுதியாகப் புதிய உடன்படிக்கை பாவமன்னிப்பை அருளும்.பாவமன்னிப்பு புதிய உடன்படிக்கையின் கொடை.மற்றொரு நம்பிக்கையூட்டும் எரேமியாவின் வார்த்தையை 33:2-9வசனங்களில் வாசிக்கின்றோம். "எருசலேமின் நிலையை உயர்த்துவேன்;அது எனக்கு மகிழ்ச்சி, புகழ்ச்சி, மாட்சி தரும் நகராய் விளங்கும்”என்கிறார் ஆண்டவர். பாழடைந்து கிடக்கும் எருசலேமின் தெருக்களில்மகிழ்ச்சியின் ஒலியும் அக்களிப்பின் ஆரவாரமும், மணமகன், மணமகள்குரலொலியும் மீண்டும் கேட்கும் என ஆண்டவர் வாக்குறுதி அளிக்கின்றார்( காண். எரே 33:9,11).அடுத்து வரும் பகுதியில் தாவீதின் வம்சம் அரியணை ஏறும்என்றும், அரசர் நீதியையும் நேர்மையையும் நிலவச் செய்வார் என்றும்,குருக்கள் மீண்டும் திருவழிபாட்டை நடத்துவர் என்றும் ஆண்டவர்கூறுகின்றார் ( 33:15,18).

7. எரேமியாவின் துன்ப வாழ்வு
எரேமியா பட்ட துன்பங்கள் நம் கவனத்தைக் கவர்கின்றன. இறைவாக்கினர் என்ற ஒரே காரணத்திற்காக எரேமியா துன்புறுகின்றார்.கடவுளின் பணிக்குத் தன்னை அர்ப்பணித்த எரேமியாவின் வாழ்வு ஒருசிலுவைப்பாதை. அவரது துன்ப வாழ்வைக் கூறும் சில பகுதிகளைக்காண்போம்.

7.1. எரேமியா சிறைப்படல் (எரே 26)
ஆண்டவர் எரேமியாவை நோக்கி கோவில் முற்றத்தில் நின்றுகொண்டு, #8220;அங்கு வழிபாடு செலுத்தவரும் யூதாவின் எல்லாநகரினருக்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச்சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி” என்கிறார் (26:2). அதுமுக்கியமான திருவழிபாட்டு நேரமாக இருந்திருக்க வேண்டும். கோவிலில்மக்கட் கூட்டம் நிரம்பி வழிந்திருக்க வேண்டும். மக்கள் கடவுளின்கட்டளைப்படி நடவாமல் போனால் இக்கோவிலை சீலோவாமைப் போல்ஆக்குவேன். இந்நகரை சாபக்குறி ஆக்குவேன் என்று எரேமியாஅம்மக்களுக்குக் கூறவே சினமுற்ற குருக்களும், இறைவாக்கினரும்மக்களும் அவரைப்பார்த்து, 'நீ கண்டிப்பாகச் சாகவேண்டும்” என்றுகூக்குரலிட்டனர் (26:6,8-9). நகரத் தலைவர்கள் அவரை சாவின்பிடியிலிருந்து காப்பாற்றுகின்றனர். கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்குவேண்டாம் என்று கூறி அவரைச் சிறையில் அடைக்கின்றனர். எரேமியாதான் கூறிய சொற்கள் யாவும் இறைவனால் கூறப்பட்டவை என்பதைஆணித்தரமாக அம்மக்களுக்குக் கூறுகின்றார் (26:12,15). ஆண்டவர்எரேமியாவை இறைவாக்குரைக்கும் பணிக்கு அழைத்தபொழுது,"யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்;எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளையிடுகின்றேனோ, அவற்றைச்சொல்” (1:7) என்று கூறியதை எரேமியா செய்து முடிக்கின்றார்.

7.2. எரேமியாவின் சிறை வாழ்வு (எரே 37)
கல்தேயரின் படை எருசலேமைமுற்றுகையிட்டது. எகிப்து நாட்டுப் படை யூதாவின்உதவிக்கு வந்தாலும் அப்படை எகிப்துக்கே திரும்பிப்போகும். கல்தேயர் இந்நகரைத் தீக்கிரையாக்குவர்என்று எரேமியா கூறினார். இதற்கிடையில்எரேமியா தம் சொந்த ஊர்ப்பகுதிக்குச்செல்லுகையில், அவர் கல்தேயர் பக்கம் சார்ந்துஅவர்களுடன் பாபிலோனியாவுக்குத் தப்பிச் செல்லநினைக்கின்றார் என்று கூறி அவரைச் சிறையில்அடைத்தனர் (எரே 37:15). நீண்ட நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்பாபிலோனியர் எருசலேமைக் கைப்பற்றியபோது பாபிலோனிய மன்னன்நெபுகத்நேசர் ஆணைப்படி எரேமியாவுக்கு விடுதலை அளிக்கப்பட்டது.

எரேமியாவின் விடுதலை பற்றி 40 ஆம் அதிகாரத்தில் மற்றொருதகவல் தரப்படுகிறது. பாபிலோனியர்கள், யூதர்கள் நாடுகடத்தப்பட்டபொழுது, எரேமியாவும் அவர்களுடன் கூட்டிச் செல்லப்பட்டார் என்றும்,வழியில் அவரை அடையாளம் கண்டுகொண்ட பாபிலோனியஅதிகாரிகள் அவருக்கு விருப்பமான இடத்திற்குச் செல்ல அனுமதிஅளித்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. எரேமியா யூதா திரும்பியதாகக்கூறப்படுகின்றது.

7.3. எரேமியாவின் இறுதி நாட்கள் ( எரே 42:1-43:7 )
எருசலேமில் விடப்பட்ட மக்கள் எகிப்து நாட்டிற்குச் செல்லவிரும்பினர். அவர்கள் எரேமியாவிடம் வந்து என்ன செய்யலாம் என்றுஇறைவனிடமிருந்து கேட்டுச் சொல்ல அவரை வேண்டினார்.இந்நாட்டிலேயே தொடர்ந்து இருக்குமாறு கடவுள் கூறுகிறார் என்றும்கடவுள் அவர்களைக் காப்பார் என்றும் எரேமியா அவர்களிடம் கூறினார்.ஆனால் எகிப்துக்குச் சென்றால் "உங்களை இங்கு அச்சுறுத்தும் வாள்எகிப்து நாட்டில் உங்களைத் துரத்தி வந்து தாக்கும்.... நீங்கள் அங்கேயேமடிவீர்கள்...” என்றார் (42:16-17).ஆனால் மக்கள் எரேமியாவின் வார்த்தைகளைக் கேட்க மறுத்தனர்,"நீ பொய் சொல்லுகிறாய்” என்று எரேமியாவைக் குற்றம் சாட்டினர். அவர்கள் எகிப்து நாட்டிற்குச் சென்றனர்.

எரேமியாவையும்கட்டாயப்படுத்தி உடன் கூட்டிச் சென்றனர்.எரேமியா இறைவாக்கினர்களில் சிறப்பான இடத்தைப்பெறுகின்றார். ஆண்டவர் பணிக்காகத் துன்பத்தை அனுபவித்தவர்.இறை உணர்வு பெற்றவர்; மனிதாபிமானம் மிக்கவர்; அவரதுமன்றாட்டுக்கள் நம் உள்ளத்தை தொடுகின்றன.

 

3. எசேக்கியேல்

மற்ற இறைவாக்கினர்களுடன் ஒப்பிடும்பொழுது இறைவாக் கினர்எசேக்கியேல் நமக்கு அதிகமாக அறிமுகமாகாதவர். அவரது நூலிலும்வறண்ட எலும்புகள் உயிர் பெறும் காட்சி, தீய ஆயர்கள், ஆவிஅளிக்கவிருக்கும் புதுவாழ்வு போன்ற சில பகுதிகள் மட்டுமே நமக்குநன்கு அறிமுகமானவை.

புதிய ஏற்பாட்டில் எசேக்கியேலின் நூலிலிருந்து அதிகமானமேற்கோள்கள் இல்லை. திருவெளிப்பாடுநூல் மட்டுமே சில பகுதிகளைக்குறிப்பிடுகின்றது. இருந்தபோதிலும்எசேக்கியேல் தம் நூலில் பயன்படுத்தியுள்ளஉருவகங்கள் நம் கருத்தைக் கவர்கின்றன.உணர்ச்சி மிக்க இறைவாக்கினராகக்காணப்படுகின்றார்.எசேக்கியேல் ஒரு குரு.; அவர்எருசேமில் வாழ்ந்தவர் (1:3); அவர் தந்தைபூசி ஒரு குரு. எரேமியாவும் குருத்துவகுலத்தைச் சார்ந்தவர் என்றாலும்எசேக்கியேலைப் போன்று குருத்துவப் பணி ஆற்றவில்லை. பிறப்பால்குருவான எசேக்கியேல் இறைவாக்கினராக அழைக்கப்பட்டார்.

1. வரலாற்றுப் பின்னணி
அசீரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், யூதா சுதந்திரம் பெற்றது.அரசன் யோசியா சுதந்திரம் பெற்றவராய், மதச் சீர்த்திருத்தங்களைக்கொண்டு வந்தார். மக்களிடையே புது நம்பிக்கை பிறந்தது. ஆனால்யோசியா கி.மு. 609 ஆம் ஆண்டில் போர் ஒன்றில் மேக்கிதோ என்றஇடத்தில் கொல்லப்பட்டார்.பாபிலோனிய அரசர் நெபுகத்னேசர் தனது ஆட்சிக்காலத்தின்ஏழாவது ஆண்டில் எருசலேம் மீது படை எடுத்து வந்தார். நெபுகத்னேசர்எருசலேமைக் கைப்பற்றி அரசனையும் அவன் குடும்பத்தினரையும்பாபிலோனியாவுக்கு நாடு கடத்தினார். மதத் தலைவர், குருக்கள்பல்வேறு துறைப் பணியாளர்களும் நாடு கடத்தப்பட்டனர். இதுவே முதன்முறையாக யூத மக்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டநிகழ்ச்சியாகும். இது நடந்த ஆண்டு கி.மு. 597 ஆகும். கி.மு. 597 முதல்கி.மு. 587 முடிய ஆகும் (முதல் முறை நாடு கடத்தப்பட்டதிலிருந்துஇரண்டாம் முறை நாடு கடத்தப்பட்டது வரை)

கி.மு. 597 இல் நாடு கடத்தப்பட்ட யூத மக்கள் பாபிலோனியாவில்வாழ ஆரம்பித்தனர்.எசேக்கியேலும் நாடு கடத்தப்பட்டு பாபிலோனியா சென்றார்.மற்றொரு பகுதியினர் எருசலேமில் தங்கியிருந்தனர். மக்கள் விரைவில்பாபிலோனியாவிலிருந்து எருசலேம் திரும்புவோம் என நினைத்தனர்.அச்சமயத்தில் எருசலேமில் வாழ்ந்த இறைவாக்கினர் எரேமியாவும்பாபிலோனியாவில் வாழ்ந்த எசேக்கியேலும் அத்தகைய எண்ணம்தவறானது; விடுதலை அவ்வளவு விரைவில் கிடைக்காது என்றுமக்களுக்கு கூறினர்.மக்களில் சிலர் பாபிலோனியாவுக்கு அடிபணிவது நலம் எனக்கருதினர். வேறொரு சாரார் எகிப்து நாட்டோடு சேர்ந்துபாபிலோனியாவை எதிர்ப்பது பலன் தரும் எனக் கருதினர். எகிப்துநாட்டோடு கூட்டுச் சேர்ந்து பாபிலோனியாவை எதிர்த்துப் போரிடத்திட்டமிட்டனர். இந்நிலையில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்கி.மு. 588 ஆம் ஆண்டில் மீண்டும் எருசலேமை முற்றுகையிட்டார்.எருசலேம் நகர் கைப்பற்றப்பட்டு நகரும் கோவிலும் தீக்கிரையானது.முக்கியமானவர்கள் பாபிலோனி யாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். யூதாநாடு மறைந்தது.

2. நூலின் பிரிவு

1. எசேக்கியேலின் அழைப்பு 1:1-3:27
2. எருசலேம் பற்றிய அழிவுச் செய்திகள் 4:1-24:27
3. மக்களினங்களுக்கு எதிரான கடவுளின் நீதித் தீர்ப்புகள்25: 1-32:32
4. கடவுள் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி 33:1-37:28
5. கோகுக்கு எதிரான இறைவாக்கு 38:1-39:29
6. வருங்காலக் கோவில் மற்றும் நாடு பற்றிய காட்சிகள் 40:1-48:35

இனி இந்நூலின் சில முக்கியப் பகுதிகளைக் காண்போம்.

3. எசேக்கியேல் கண்ட காட்சி ( எசே 1-3)
எசேக்கியேல் முதல் அதிகாரம் முதல் ஐந்து வசனங்கள் (1:1-5)காட்சி கண்ட காலம், விண்ணுலகம் திறக்கப்படல், ஆண்டவரின் கை வன்மை, புயல், காற்று, சுடர் வீசும் தீப்பிழம்பு ஆகியவற்றைப் பற்றிகூறப்பட்டுள்ளது.

எசே1:6-26 - ல் நான்கு உயிரினங்களின் வடிவம், நெருப்பு, மின்னல்ஆகியவை பற்றிக் கூறப்பட்டுள்ளது. எசேக்கியேல் தான் கண்ட காட்சிபற்றிக் கூறுவதைத் தனது அனுபவமாகக்கூறுகின்றார். தான் கண்டதை ஒப்பிட்டுப்பார்க்கின்றார். எசேக்கியேல் கடவுளின்மகிமையைக் கண்டதாகக் கூறவில்லை.கடவுளின் மாட்சியைக் காட்டும் காட்சியைக்காண்கின்றார். இக்காட்சியில் குறிப்பிட்டுள்ளசிலவற்றின் பொருளைக் காண்போம்.

3.1. விண்ணுலகம்
இது மனிதன் வாழும் உலகைக் கடவுளிடமிருந்து பிரிக்கும் ஒருகூடாரம். இக்கூரைக்குமேல் கடவுள் வாழும் இடம் இருந்தது. அது நீர்நிரம்பிய இடமாகக் கருதப்பட்டது. எசேக்கியேல் உற்றுப் பார்க்கையில்வடக்கிலிருந்து காற்று வந்தது. கடவுள் வடக்கே வாழ்வதாகக் கருதினர்.

3.2. சுடர் வீசும் தீப்பிழம்பு
பழைய ஏற்பாட்டில் தீப்பிழம்பு, கடவுளின் காட்சியைக் காட்டுவதாகும். தீப்பிழப்பில் கடவுள் தோன்றுகின்றார். இது கடவுளின் பிரசன்னத்தைக் காட்டும் அடையாளம். விடுதலைப் பயண நூலில் கடவுள்தீப்பிழம்பாக மக்களின் முன் வந்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது (விப14:12). சில சமயங்கள் தீப்பிழம்பு தண்டனையின் அடையாளமாகஇருக்கலாம் (எண் 16:35). சுடர் கடவுளின் வெளிப்பாட்டைக் காட்டுவது.கடவுளின் மகிமையின் தோற்றம் கதிரவனின் உதயத்திற்கு, சுடர் ஒளிக்குஒப்பிடப்பட்டுள்ளது (காண் எசா 9:2; 60:1-3).

3.3. நான்கு உயிரினங்கள்
நான்கு என்ற எண் முழுமையைக் குறிக்கும் எண்ணாகும். மனிதசாயலுக்கு ஒப்பாயிருந்த அவ்வுயிரினங்கள் தோன்றுவது உலகின்முழுமையைக் குறிக்கின்றது.மேற்கூறியவை கடவுளின் மகிமையைக் காட்டும் காட்சிக்குநம்மைத் தயாரிக்கின்றது. பழைய ஏற்பாட்டில் அநேகப் பகுதிகள்கடவுளின் மாட்சியைப் பற்றிக் கூறுகின்றன. கடவுளின் மகிமை கடவுள்அல்ல் ஆனால் கடவுளின் பிரசன்னத்தை விளக்கும் ஓர் உத்தி.பழைய ஏற்பாட்டில், கடவுளின் மாட்சி இரு விதங்களில்கருதப்பட்டது. ஒன்று கடவுளின் மகிமை இஸ்ரயேல் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அது அவர்களது வாழ்வில், செயலில் காட்டப்படவேண்டும். எவ்வாறு? கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலும்,அவருக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதிலும் அது அடங்கியுள்ளது.மற்றொன்று,

கடவுளின் மகிமையை மக்கள் வழிபாட்டில்உணரவேண்டும்.கடவுளின் மகிமை தோன்றுவதைச் சித்தரிக்கும் பல பகுதிகளைப்பழைய ஏற்பாட்டில் வாசிக்கின்றோம் (விப 16:10; 24:15-18; 40:34-36;லேவி 9:23-24). பாலை நிலத்தில் மக்களுக்கு உணவளிக்கும் பொழுதும்(விப 16), சீனாய் மலையில் கடவுள் தன்னை வெளிப்படுத்திய போதும்கடவுளின் மாட்சி தோன்றியது.எசேக்கியேலின் நூலில் கடவுளின் மாட்சி மூன்று முக்கியசமயங்களில் தோன்றியது. கடவுளின் மாட்சி, நாடு கடத்தப்பட்டோரின்நடுவில் பாபிலோனியா வருகின்றது (1:1-3:15); அது எருசலேம்கோவிலை விட்டு வெளியேறுகின்றது (8-11); புதுப்பிக்கப்பட்டகோவிலுக்கு மீண்டும் வருகின்றது (43). எசேக்கியேலின் கருத்துப்படிகடவுளின் மகிமை பொதுவாக எருசலேம் கோவில் உள்ளது

4. எசேக்கியேலின் அழைப்பு ( எசே 2-3 )
எசேக்கியேல் கடவுளின் வார்த்தையைக் கேட்கின்றார்.இறைவாக்கு உரைக்கும் பணிக்கு எசேக்கியேல் அழைக்கப்படும்இக்காட்சியில் மூன்று பேரைப் பற்றிக் குறிப்பிடலாம்.

4.1. கடவுள்
கடவுள் தலைவர். எசேக்கியேலின் காட்சியில் கடவுள்தோன்றுகின்றார். காட்சியின் ஆரம்பத்திலிருந்தே ஆண்டவரின்கைவன்மை எசேக்கியேலின்மீது இருந்தது (1:3). ஆண்டவர்எசேக்கியேலுடன் பேசும்பொழுது ஆவி அவருள் புகுந்து அவரை நிற்கச்செய்கின்றது (2:1). கடவுள் எசேக்கியேலிடம் "எனக்கெதிராகக் கிளர்ச்சிசெய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் உன்னை நான்அனுப்புகிறேன்”(2:3,4) என்றார். அவரது பணிக்கு ஆண்டவர் ஓர்அடையாளம் அளிக் கின்றார். இறைவாக்கினர் ஆண்டவர் கூறும்சொற்களை கேட்டால் மட்டும் போதாது; அவர் அதை விழுங்க வேண்டும்"உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைத் தின்றுவிடு” (2:8)என்கிறார். எசேக்கியேலும் அவர்தரும் சுருளேட்டைத் தின்கிறார் (3:2).

4.2. மக்கள்
இறைவாக்கைப் பறைசாற்ற இறைவாக்குரைக்க கடவுள்எசேக்கியேலை அழைக்கின்றார். "தலைவராகிய ஆண்டவர் கூறுவதுஇதுவே என்று சொல்” (2:4); "நீ என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக்கூறு” (2:7). நாடுகடத்தப்பட்ட மக்கள் இறைவனின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளச் செய்வது இறைவாக்கினரின் பணியாகும்.

கடவுள், தம் மக்கள் அவரது அன்பை உணரவேண்டும்என்பதற்காகப் பேசுகின்றார். ஆனால் மக்கள் கடவுளுக்கு எதிராகக்கலகம் செய்பவர்களாக இருக்கின்றனர் (2:5,6; 8:3,9). அவர்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது "இன்றுவரை அவர்களும் அவர்க ளுடையமூதாதையரும் எனக்கெதிராய்க் கிளர்தெழுந்து கலகம் செய்துள்ளனர்”(2:3) என்கிறார் (காண் 3:6-7).

4.3. இறைவாக்கினர்
எசேக்கியேல் அதிகம் பேசாது கடவுளின் கட்டளையை ஏற்றுக்கொள்கின்றார். எசாயாவும் எரேமியாவும் இறைவனின் அழைப்புக்குமறுப்புக் கூறியதுபோல் எசேக்கியேல் மறுப்புக் கூறவில்லை. பணியைஏற்கத் தயங்கவில்லை. பணியைப் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறார்.மக்களைப்போல் அவர் கலகக்காரர் அல்ல. எசேக்கி யேல் ஏற்கவிருக்கும்பணி எளிதல்ல என்றும் ஆண்டவர் கூறுகின்றார் (2:6). இருந்தபோதிலும்இறைவாக்கினர் அஞ்சவேண்டியதில்லை. கடவுள் அவருக்கு உதவிசெய்வார். கடவுளின் வார்த்தை கசப்பாக இருந்தாலும் எசேக்கியேலின்வாயில் அது தேனாக இனித்தது (3:3).

5. ஆண்டவரின் மாட்சி கோவிலை விட்டு வெளியேறல்
இக்காட்சியில் எருசலேம் கோவிலில் இஸ்ரயேல் மக்கள் செய்யும்பாவங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது ( 8:5-18). கடவுளின் தண்டனைஅறிவிக்கப்படுவதும், எசேக்கியேல் மன்னிக்க வேண்டி மன்றாடுவதும்இரண்டாம் பகுதியாகும் (9:1-3,5-6,7-11).கடவுளின் மாட்சி எருசலேம் கோவிலை விட்டு வெளியேறக்காரணம் தரப்படுகின்றது. எருசலேம் மக்களின் பாவங்களே கடவுளின்மாட்சி எருசலேம் கோவிலை விட்டு வெளியேறக் காரணமாயிருக்கின்றது.மக்கள் செய்யும் நான்கு தவறுகளை எசேக்கியேல் தம் காட்சியில்காண்கின்றார்.

முதலில், கோவிலில் பலி பீடத்தின் நுழை வாயிலில் சிலைகள்வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக எல்லாவகை ஊர்வ னவும்,வெறுக்கத் தக்க விலங்குகளும், இஸ்ரயேல் வீட்டாரின் தெய்வஉருவங்களும் அவரைச் சுற்றிலும் செதுக்கப்பட்டிருந்தன. மூப்பர்களில்எழுபதுபேர் அவற்றின் முன் தூபம் காட்டினர். மூன்றாவதாக, எசேக்கியேல்ஆண்டவரது இல்லத்தின் வடக்கு வாயிலுக்குக் கூட்டி வரப்படுகின்றார்.அங்கே பெண்கள் அமர்ந்து நிலவளம் காக்கும் தெய்வத்திற்காக அழுதுகொண்டி ருந்தனர். நான்காவதாக, 25 ஆண்கள் கிழக்கே கதிரவனைப்பார்த்துத் தொழுது கொண்டிருந்தனர். மக்கள் அருவருக்கத்தக்க சிலைவழிபாட்டில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இப்பாவத்தை ஆண்டவரதுஇல்லத்தில் மண்டபத்திற்கும் பீடத்திற்கும் இடையில் செய்கின்றனர்.ஆகவே, கடவுள் அத்தகைய பாவங்கள் செய்பவரைக் கொலைசெய்கின்றார். அருவருக்கத்தக்க இப்பாவங்களுக்காக வருந்துவோர்தண்டனையிலிருந்து தப்புகின்றனர். பாவம் செய்தவர்கள் கொல்லப்படுகின்றனர். நெருப்புத் தணலும் அவர்கள் மீது வீசப்படுகின்றது.ஆண்டவரின் மாட்சி எருசலேமை விட்டு விலகுகின்றது.

6. அகதியான இறைவாக்கினர் எசேக்கியேல் (எசே 12:1-16)
மற்ற இறைவாக்கினர்களைப் போல், எசேக்கியேலும் தம்அடையாளச் செயல்கள் மூலம் கடவுளின் வார்த்தையை மக்களுக்குப்போதித்தார். அவற்றில் ஒன்றைக் காண்போம்.நாடு கடத்தப்பட்டவர் போல் பொருள்களைத் தயாரிக்க வேண்டும்.இவ்வடையாளச் செயலை இறைவாக்கினர் எசேக்கியேல் தம் பணியின்முதல் பகுதியில் செய்கின்றார். எருசலேமின் வீழ்ச்சி வரை எசேக்கியேல்தம்மால் இயன்றவரை இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுளின் தண்டனைத்தீர்ப்பை உணர்த்த முயற்சி செய்தார். எருசலேம் நகர் அழிக்கப்படும்;மக்கள் பாவம் கொடியது; அழிவைத்தவிர வேறு வழி இல்லை என்றுகூறினார்.

கி.மு. 597 இல் தண்டனை வந்தது. முதலில் நாடு கடத்தப்படல்நடைபெற்றது. மக்கள் தம் உடைமைகளை மூட்டையாகக் கட்டித் தம்தோள்மீது தாங்கிக் கொண்டு பாபிலோனை நோக்கி நடந்தனர். ஆனால்மக்கள் தம் பாவத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆகவேதான்கடவுள் எசேக்கியேலிடம் "மானிடா! கலகம் செய்யும் வீட்டாரிடையே நீவாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை;கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை; ஏனெனில்அவர்கள் கலகம் செய்யும் வீட்டார் (12:2) என்கிறார்.அடுத்த தண்டனையும் விரைவில் வர இருந்தது. நாடு கடத்தப்படுவதும் வரவிருந்தது. ஆனால் நாடு கடத்தப்படாமல் எருசலேமில்விடப்பட்டோர் நாடும், நகரமும், கோவிலும் நலிவுற்றது, அழிவுற்றது எனஎண்ணினர். அழிவு விரைவில் வராது என நம்பினர். அழிவு நெருங்கிவருகின்றது என்பதை எசேக்கியேல் வலியுறுத்தினார். இறைவாக்கினர்உண்மை நிலையை உணர்பவர்; நடப்பதை அறிந்துகொள்பவர். ஆனால்மக்களோ, உண்மையை உணராது வாழ்ந்தனர். எருசலேமில் வாழ்ந்தோர்நாடு கடத்தப்படுவோம் என நினைக்கவில்லை.

ஆகவே, எசேக்கியேலின் அடையாளச் சொல் ஒரு பாடமாகஇருக்கட்டும் என ஆண்டவர் ஓர் அடையாளச் செயலை செய்ய எசேக்கியேலுக்குக் கட்டளையிடுகின்றார். நாடு கடத்தப்பட்டவர் போல்பொருட்களுடன் எசேக்கியேல் புறப்படுகின்றார். மக்கள் அதன் பொருளைஅறிய, அதை எவ்வாறு விளக்குவது என்பதை ஆண்டவர்எசேக்கியேலுக்குக் கூறுகின்றார்.

6.1. இஸ்ரயேலின் வரலாறு
எசேக்கியேலின் நூலில் 16,20,23 அதிகாரங்களில் இஸ்ரயேலின்வரலாறு கூறப்படுகின்றது. 16 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை இங்குக் காண்போம் (எசே 16ம் அதிகாரம்).இஸ்ரயேலின் வரலாறு இங்கு உருவக வடிவில்தரப்பட்டுள்ளது. சில பொருள் பொதிந்தவார்த்தைகள், வரலாற்றைச் சுட்டிக்காட்டும்வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.இவ்வதிகாரத்தை மூன்று பகுதிகளாகப்பிரிக்கலாம்.

16:1-14- இல் எருசலேம் இளம்பெண்ணாக உருவகப்படுத்திக் கூறப்படுகின்றது. சிறு வயது முதல் அழகியமங்கையாக வளரும்வரை ஆண்டவர் செய்தநல்லவைகளைக் கூறுகின்றது. 15-36 கடவுள் அதன் குற்றங்களை,பாவங்களை எடுத்துரைக்கின்றார். 37-41 வரவிருக்கும் தண்டனைகூறப்படுகின்றது. பாவம் செய்யும் எருசலேம் விலைமகளாகச்சித்தரிக்கப்படுகின்றது. அது கடவுளை மறந்து, வேற்றுக் கடவுளைவணங்கும் வேசித்தனத்திற்கு அதன் மேல் கல் எறிந்து, வாளால் வெட்டிஎறிய வேண்டும் என்று கடவுள் கூறுகின்றார். இத் தண்டனை யூதச்சட்டத்தின்படி கற்பு நெறி பிறழ்ந்து வாழும் பெண்ணுக்கு அளிக்கும்தண்டனையாகும் (காண். இச 22:21,24; லேவி 21).இஸ்ரயேலின் பிறப்புப் பற்றிக் கூறும் எசேக்கியேல், அதுபெருமைக்கு அல்ல எனக் கூறுகின்றார். எருசலேம், இஸ்ரயேல் மக்கள்கானான் நாட்டின் பல்வேறு இனங்கள் இணைந்த ஓர் இனம் என்கிறார்.குறிப்பாக எமோரியரும் இத்தியரும் நிறைந்த இடம் எருசலேம்.

6.2. கடவுளின் கொடை
பல இன மக்களை ஓர் இனமாக மாற்றிய பெருமை கடவுளுக்கேஉரியது. அது மக்கள் பெற்ற கொடை. கடவுள் கவனித்திராவிடில்எருசலேம் அழிந்திருக்கும். #8220;இஸ்ரயேல் மக்களுடன் கடவுள்செய்துகொண்ட உடன் படிக்கை அதைப் பெருமைப்படுத்தியது” (16:8).

ஆனால் கடவுளோடு இணைந்து வாழ வேண்டிய இஸ்ரயேல்,கணவனை விட்டு வேறு ஆடவரோடு வேசித்தனம் செய்யும் மங்கை போல்,வேற்றுக் கடவுளை வணங்க ஆரம்பித்தது. ஆண்டவரைத் தவிர மற்றஅனைவரையும் வணங்கியது. கடவுள் அதற்குத் தண்டனைதரவிருக்கின்றார். காலம் நெருங்குகின்றது. எருசலேம் வீழ்ச்சியுறும்;அதன் அழிவு அண்மையிலுள்ளது.

6.3. திருமண உவமை
கடவுளுக்கும் அவரது மக்களுக்கும் இடையே உள்ள உறவைத்திருமண உறவுக்கு ஒப்பிடுகின்றார் எசேக்கியேல். ஓசேயா இந்தஉவமையை உருவாக்கியவர். எரேமியாவும் இவ்வுவமையைஉபயோகப்படுத்துகின்றார்.எசேக்கியேல் இந்த உவமையைப் பயன்படுத்தினாலும், அவரதுசொந்தக் கற்பனைத்திறனையும் இங்கு காண முடிகின்றது. ஓசேயாகருத்துப்படி தொடக்க நிலையில் இஸ்ரயேல் ஆண்டவருக்குப்பிரமாணிக்கமாய் இருந்தது. ஆனால் எசேக்கியேல் கருத்துப்படி,தொடக்கத்திலிருந்தே இஸ்ரயேல் இறைவனை விட்டு விலகி நின்றது.கடவுள் இஸ்ரயேலுடன் செய்த உடன்படிக்கை ஒரு கொடை என்பதைஎசேக்கியேல் வலியுறுத்துகின்றார்.

6.4. எசேக்கியேலின் போதனைகள்
எருசலேமின் இரண்டாம் வீழ்ச்சிக்குப் பின் (கி.மு. 587) நாடுகடத்தப்பட்ட மக்கள் பாபிலோனியா வந்தடைந்தனர். எருசலேமின்சுவர்கள் உடைக்கப்பட்டு, அதன் கோவில் அழிக்கப்பட்டது.எசேக்கியேலின் மனைவி இறந்து விடுகின்றாள். அவளதுஇறப்புமுதல் வாய்பேசாது இருந்த எசேக்கியேல் வீழ்ச்சி பற்றியசெய்தியைக் கேட்டதும் மீண்டும் பேசும் ஆற்றல் பெறுகின்றார்(24 : 26-27). தொடர்ந்து எசேக்கியேல் ஆண்டவரின் வார்த்தையைஎடுத்துரைக்கின்றார்.இப்பகுதி நம்பிக்கையூட்டும் பகுதி, மக்களுக்கு ஆறுதல் அளிக்கும்வார்த்தைகளைக் கூறுகின்றார். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

6.4.1. இஸ்ரயேலின் ஆயர்கள் (எசே 34)
இஸ்ரயேலின் ஆயர்கள் பற்றிக்கூறும் இப்பகுதி எசேக்கியேலின்நூலில் நம் கவனத்தைக் கவரும் பகுதிகளில் ஒன்றாகும். புதியஏற்பாட்டில் குறிப்பாக யோவான் நற்செய்தியில் இக்கருத்து விரிவாகக்கூறப்பட்டுள்ளது (யோவா 10). யோவான் நற்செய்தியில் கிறிஸ்து நல்லஆயனாகச் சித்திரிக்கப்படுகின்றார் (காண். எசே 34).இவ்வதிகாரத்தில் அரசர்கள் ஆயர்களாக, இஸ்ரயேல் என்னும்மந்தையை மேய்க்கும் ஆயர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்று கடவுள் குற்றம்சாட்டுகின்றார் (34:3-7). கடமையைச் சரிவரச் செய்யாத, மந்தையைக்கவனிக்க தவறிய ஆயர்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனை பற்றிஆண்டவர் கூறுகின்றார்.

மாறாக, ஆண்டவர் இனி ஆடுகளுக்குத் தான் செய்யவிருப்பதுஎன்ன என்பதைக் கூறுகின்றார் (11-15). இப்பகுதியில் மக்கள்ஆண்டவரின் மந்தை என்பதை வலியுறுத்தும் முறையில் ஆண்டவர்"என் மந்தை, என் மந்தை” எனத் திரும்பத் திரும்பக் கூறுவது ஆண்டவர்- மக்கள் இடையே உள்ள உறவைக் காட்டுகின்றது.அக்காலத்தில் பாலஸ்தீன், அதைச் சுற்றியுள்ள நாடுகளில் ஆடுகள்மக்களின் மிக முக்கியமான சொத்தாகும். ஆடுகளைக் கண்காணித்துவந்த இடையர்கள் ஆட்டைத் தம் மக்களைப் போன்று கண்ணும்கருத்துமாய்ப் பேணி வந்தனர் (காண். திபா 23). எரேமியாவும்இவ்வுவமையைப் பயன்படுத்துகின்றார் ( எரே 23:1-2). பொறுப்புள்ளஅரசியல் தலைவர்களை எரேமியா இஸ்ரயேலின் ஆயர்கள் எனஅழைக்கின்றார்.ஆயர்கள் என்ற பெயர் அரசர்களுக்கும் தெய்வங்களுக்கும் கீழைநாட்டில் பயன்படுத்தப் பட்டது. பாபிலோனிய மன்னன் அமுராபி, அசீரியமன்னன் அசுர்பனிபால் ஆகியோர் "ஆயர்” என அழைக்கப்பட்டனர்.எசாயா சைரசுக்கு இந்த அடைமொழியைச் சூட்டுகின்றார் (எசா 44:20).ஆயர்கள் என அரசர்கள் அழைக்கப்படுவதின் பொருள் அவர்கள்கடவுளின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டனர். மக்களை மேய்ப்பவர்இறைவனே. கடவுளின் பிரதிநிதிகளான அரசர்கள் தம் பணியைச்செவ்வனே செய்ய வேண்டும்.இஸ்ரயேல் மக்கள் கடவுளை ஆயர் என அழைத்தனர் (தொநூ 49;திபா 23,28,68). அரசர்கள் நேரடியாக ஆயர்கள் என அழைக்கப்படவில்லை. எரேமியாவும் எசேக்கியேல் மட்டுமே அரசர்களை ஆயர்கள் எனஅழைக்கின்றனர். இறைவாக்கினர் சிலர் எதிர்கால அரசர் ஒருவரைஆயர் என அழைக்கின்றனர் (செக் 10:3; 11:4; 13:7 மீக்5:3). காலம்செல்லச் செல்ல இப்பெயர் மெசியாவிற்கு உரித்தானது.

6.4.2. இஸ்ரயேலின் புதுவாழ்வு (எசே 36:16-38)
எசேக்கியேலின் நூலில் காணப்படும் அழகான பகுதிகளில் இதுவும்ஒன்றாகும். இப்பகுதியை மூன்றாகப் பிரிக்கலாம்.

36:16-21 மக்களின் வரலாறு
22-32 கடவுளின் சொல்லும் அதன் விளைவும்
33-38 வரவிருக்கும் வளமான வாழ்வு

1) வரலாறு (வச. 16-21)ஏற்கனவே 16, 20, 23 அதிகாரங்களில் இஸ்ரயேல் மக்களின்சரிதையை எசேக்கியேல் குறிப்பிட்டார். இப்பகுதியில் அழுத்தமாகக்கூறுகின்றார். இஸ்ரயேல் மக்களின் இன்றைய அவலநிலைக்குஅவர்களது பாவமே காரணம் என்கின்றார்.ஆகவேதான் கடவுள் அவர்களை மக்களிடையே சிதறடித்தார்.தங்கள் வாழ்வால் மக்கள், கடவுளது திருப்பெயருக்கும் அவரதுமகிமைக்கும் களங்கம் விளைவித்தார்கள். பழங்காலத்தில், இஸ்ரயேல்மக்கள் வாழ்ந்த பகுதியில் ஒவ்வொருவரும் தங்களைக் காக்கும்தெய்வங்களைக் கொண்டிருந்தனர். அத்தெய்வம் அக்குறிப்பிட்டமக்களைக் காக்கும் கடமையைப் பெற்றிருந்தது. மக்களுக்குத் துன்பம்ஏற்பட்டால் அது தெய்வத்தின் பலவீனத்தைக் காட்டிற்று. மக்கள்தண்டனைக்குள்ளானபோதும் கடவுளையே குறை கூறினர். இக்கருத்துதிருப்பாக்களில் காணப்படுகின்றது (திபா 6:6; 13:6). மோசே இக்கருத்தைஆண்டவர் முன் கூறுகின்றார் (விப 32:12; எண் 14:16).

2) கடவுளின் செயல், அதன் விளைவு (வச. 22-32)கடவுள் தம் நிலையை மாற்றுகின்றார். கடவுள் தம் திருப்பெயருக்குக் களங்கம் வருவதை விரும்பவில்லை. மக்கள் தம்மகிமையை உணர வேண்டும் என்பதற்காக தாம் இழைத்த தீங்கைநிறுத்துகின்றார். தன் தீர்ப்பை மாற்றுகின்றார். தம் பெயரைப்புனிதப்படுத்த மூன்று காரியங்களைச் செய்யப் போவதாகக் கூறுகின்றார்.1. மக்களை அவர்கள் நாட்டிற்கு மீண்டும் கூட்டி வருவார் (24)2. மக்களைத் தூய நீரால் புனிதப்படுத்துவார் (25). நீர் வாழ்வின்ஊற்று; தூய்மைப்படுத்தும் ஆற்றல் பெற்றது.3. இதன் மூலம் மனிதன் முற்றிலும் புது மனிதனாக மாற்றம்பெறுவான்.இதயம் என்பது அறிவின் மையம். புரிந்துகொள்ள உதவுவதுஇதயம். கல்லான இதயத்தின் மூலம் மனிதன் கடவுளை அறிந்துகொள்வதில்லை. சதையாலான இதயமும் ஆவியும் இணைந்து புதியமனிதனை உருவாக்கும். புதிய இதயமும் புதிய ஆவியும் இணைந்துமனிதன் புதுப்பலம் பெறுவான்.

3) வளமான வாழ்வு (வச. 33-38)மக்கள் அனைவரும் யாவே ஆண்டவர் என்பதை உணருவர்.யாவே ஆற்றல் மிக்கவர் என்பதை அறிவர். மேற்கூறிய கொடை மூலம்அவர்கள் கடவுளின் மக்களாக இருப்பர். ஆண்டவர் அவர்களின்கடவுளாக இருப்பார். உடன்படிக்கை மீண்டும் நிலை நாட்டப்படும். இதுமுழுமையாக ஆண்டவரின் வேலை.

7. உலர்ந்த எலும்புகள் ( 37:1-14)
அனைவருக்கும் அறிமுகமான பகுதி இது. இப்பகுதி மூன்றுபிரிவுகளைக் கொண்டது.

7.1. முதற்பகுதி (வச. 1-3 )
காட்சி நமக்கு அறிமுகமாகின்றது. கடவுளும் இறைவாக்கினரும்அங்கு உள்ளனர். கடவுள் எசேக்கியேலை நோக்கி, "மானிடா, இந்தஎலும்புகள் உயிர் பெற முடியுமா?” என்று கேட்கிறார். "உமக்குத்தெரியுமே” என்ற இறைவாக்கினரின் பதில் கேட்டு கடவுள் காட்சியைவிவரிக்கின்றார்.

7.2. இரண்டாம் பகுதி ( வச. 4-10 )
கடவுள் இரண்டு கட்டளைகளை அளிக்கின்றார். கடவுளின்கட்டளையைப் பின்பற்றி இறைவாக்கினர் கட்டளையிடுகின்றார்.எலும்புகள் உயிர் பெறுகின்றன (10).

7.3. மூன்றாம் பகுதி ( வச. 11-14 )
இந்நிகழ்ச்சியின் பொருள் என்ன என்று கடவுள் கூறுகிறார், "என்ஆவியை உங்கள் மீது பொழிவேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்'.மக்கள் நம்பிக்கை இழந்து வாழ்ந்தனர். அவநம்பிக்கையைஎதிர்த்துப் போரிட வேண்டிய மக்கள். மக்களின் நிலை உலர்ந்தஎலும்புகளைப் போன்றது. ஆண்டவரின் சொல் அவர்களுக்கு உயிர்கொடுக்கிறது. நம்பிக்கை ஊட்டுகின்றது. இஸ்ரயேல் மக்களைக் கடவுள்ஒன்று சேர்க்கிறார். நாடு, தேவாலயம், அரசன் ஆகிய அனைத்தையும்இழந்த மக்கள் கடவுளின் பார்வையால் புத்துயிர் பெறுகின்றனர்.

8. கடவுளின் மாட்சி மீண்டும் எருசலேம் திரும்புதல் (எசே 40-48)
இறுதிப் பகுதியில் மீண்டும் எருசலேம் வருவதை எசேக்கியேல்காண்கின்றார். புதிய கோவில் கட்டப்பட்டு வழிபாட்டு முறை சீராகநடைபெறுகின்றது. இப்பகுதியில் 43:1-12-இல் கடவுளின் மாட்சி மீண்டும்எருசலேம் வருவது கூறப்பட்டுள்ளது. புதிய கோவில் கடவுள் மாட்சிமக்கள் மத்தியில் தங்கும். இதுவே நாடு கடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு முடிவு.மக்கள் மீண்டும் நாடு திரும்புவர்.எருசலேம் கோவிலிலிருந்து புதிய நீரூயஅp;ற்று புறப்பட்டுச் செல்வதைஎசேக்கியேல் காண்கின்றார் (47:1-12). அது கிழக்குப்புறம் சென்றுவறண்ட பகுதி வழியாக ஓடுகின்றது. அந்நீரூயஅp;ற்றால் வறண்ட பகுதிசெழுமைமிக்க பகுதியாக மாறுகின்றது.9. எசேக்கியேல் நூலின் முக்கிய இறையியல் கருத்துக்கள்

9.1. கடவுள் ஆண்டவர்
"அப்போது நானே ஆண்டவரென அவர்கள் அறிந்துகொள்வார்கள்” என்ற சொற்கள் நூலில் அடிக்கடி கூறப்பட்டுள்ளன.கடவுள் தம் செயல்மூலம் தண்டிக்கவும் மீண்டும் மீட்கவும் தனக்குள்ளஅதிகாரத்தைக் காட்டுகின்றார். கடவுளின் உயிரளிக்கும் ஆற்றலையும்அது காட்டுகின்றது (காண் எசே 37).

9.2. கடவுளின் பரிசுத்தத்தனம்
கடவுள் எசேக்கியேலை "மானிடா” என்று அழைக்கின்றார்.கடவுளின் முன் மனிதனின் ஒன்றுமில்லாமையை அது குறிக்கின்றது.கடவுளின் பெயர் புனிதமானது (20:39; 36:20; 43:7).9.3. ஒழுக்கநெறிஅநீத, பொய் வழிபாடு ஆகியவற்றை எசேக்கியேல் வன்மையாகக்கண்டிக்கின்றார் ( அதி. 5-6; 17-18; 20-22) ஓய்வுநாளை மீறுவது (20:12-24), உயர்ந்த குன்றுகளில் பிற தெய்வங்களை வழிபடுவது (6:13; 20:28)ஆகியவை குறிப்பிட்ட தவறுகள். கடவுளையும்அவரது சட்டங்களையும்அறியாததே கடவுளை மறப்பதற்குக் காரணம்.

 

------------------------------------------
--------------------------
----------------
------
--