திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)

அருளதந்தை ஆர்.சே. இராசா, சே.ச.,
புனித பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி

விவிலிய அன்பர்களே,

ஒரு முறை பாடுவதுஇரு முறை இறை வேண்டல்செய்வதற்கு ஒப்பாகும்” என்றுகூறினார் புனித அகுஸ்தினார்.இதயத்து உணர்ச்சிகளை எல்லாம்இறைவனிடம் எடுத்துகூறுவதற்கு இஸ்ரயேல் மக்கள்கவிதைகள், பாடல்கள் என்னும்இலக்கிய வகையைப் பின்பற்றிப் புனைந்த திருப்பாக்களை (சங்கீதங்கள்)பயன்படுத்தினார்கள்.அன்றாட மனித வாழ்வில் வெளிப்படும் நவரசங்களையும்உடையதாக இத்திருப்பாக்கள் அமைந்துள்ளன. எல்லாத் தரப்பு மக்களும்புரிந்து கொள்ளும் விதத்தில் நேர்த்தியான வார்த்தைகளும் இசைஅமைப்பிற்கு இயைந்து செல்லும் எதுகை மோனை சந்தங்களும்கொண்ட இப்பாடல்கள் மனப்பாடம் செய்வதற்கும் நினைவில்கொள்வதற்கும் எளிமையானவை. ஆகவே தான் இஸ்ரயேல் மக்கள்வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இப்பாடல்கள் பின்னிப்பிணைந்திருந்தன.காலத்தால் பழமையான இத்திருப்பாடல்கள் கருத்தாலும்நயத்தாலும் என்றைக்கும் புதுமையானவையும் ஆகும். இன்றைக்கும்கிறிஸ்தவர்கள் இப்பாடல்களை வாசித்தும் தியானித்தும் இறை வேண்டல்செய்தும் பாடியும் தங்கள் உள்ளத்து எண்ணங்களை வெளிப்படுத்திபரவசம் அடைகின்றனர்.

திருவிவிலியத்தில் உள்ள அனைத்துநூல்களிலும் அதிகமாக விரும்பி வாசிக்கப்படுவது இத்திருப்பாடல்கள்என்று கூறினால் அது மிகையாகாது.இத்திருப்பாடல்களின் பின்னணி, இறையியல் மற்றும் அதைச்சார்ந்த கருத்துக்களை அழகுடன் நமக்கு வடித்துத் தந்துள்ளார்அருள்தந்தை ஆர்.சே. இராசா, சே.ச. அவர்கள். இவர் பலஆண்டுகளாகக் குருத்துவக் கல்லூரிகளிலும் துறவியர்,பொதுநிலையினர் கருத்தரங்குகளிலும் திருப்பாடல்களுக்கு வகுப்புகள்நடத்தியும் விளக்கவுரை நூல் எழுதியும் தமிழகத் திருச்சபைக்கு நன்குஅறிமுகமானவர்கள் ஆகும். எனக்கும் விவிலியப் பேராசிரியராகவும்குருத்துவக் கல்லூரி முதல்வராகவும் இருந்ததோடு அல்லாமல் மிகச்சிறந்த நண்பராகவும் இறைவார்த்தையை நான் ஆழ்ந்து படிக்கதூண்டுதலாகவும் அமைந்தவர்கள். அழகுடன் இந்நூலை ஆக்கித் தந்தநம் தந்தை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திரு முனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்

பொருளடக்கம்:

முன்னுரை
1. பெயர்
2. எண் அமைப்பு
3. பகுதிகள்
4. பிரிவுகள் விளக்கம்
5. ஆசிரியர்,ஆசிரியர்கள்
6. காலம்
7. யாப்பு முறை
8. திருப்பாக்களில் இறையியல்
9. திருப்பாக்களும் பாரம்பரியமும்

முன்னுரை:
தி ருப்பாக்கள் யூத-கிறிஸ்துவ மரபுகளின் செப வழிபாட்டில் மிகமுக்கிய இடம் பெறுகின்றன. 150 பாடல்கள்தான் எனினும் அவைசாவையும், வாழ்வையும், தாழ்வையும், துயரத்தையும், மகிழ்ச்சியையும்,இறப்பையும், உயிர்ப்பையும் பிரதிபலித்துக் காட்டும் 150 கண்ணாடித்துண்டுகள் ஆகும். இவற்றின் வழி மனிதன் சிந்திக்கிறான்; பேசுகிறான்;செயல்படுகிறான்; அழுகிறான்; ஆறுதல் பெறுகிறான்; ஆண்டவனைஅடைகிறான். அன்று இத்திருப்பாக்களைப் பாடி மகிழ்ந்த யூதருக்கும்இன்று அவற்றைச் செபித்துப் பயனுற விரும்பும் கிறிஸ்துவருக்கும் இதுஎவ்வளவு பொருந்தியமைகின்றது? ' 'திருப்பாக்களில் உன்னைமட்டுமன்று; உன்னைப் படைத்த கடவுளைக் காண்பாய்;படைப்பனைத்தையும் காண்பாய்'' என்ற மார்ட்டின் லூத்தரின்சொற்கள்தான் எத்துணை உண்மை வாய்ந்தன? திருச்சபையும்குருக்கள், கன்னியர், துறவிகள், இறைமக்கள் அனைவருக்கும் ஏற்றசெபமாக இத்திருப்பாக்கள் பயன்பட வேண்டுமென்று மிகவும்விரும்புகிறது. "குருத்துவப் பணியைக் கிறிஸ்து தமது திருச்சபைவழியாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார். திருச்சபை நற்கருணைப்பலியை நிறைவேற்றுவதோடு நில்லாமல் பிற வழிகளிலும் சிறப்பாகத்திருப்புகழ்மாலையைச் செபிப்பதாலும் ஆண்டவரை இடையறாதுபுகழ்கின்றது. உலகம் முழுவதின் மீட்புக்காகப் பரிந்து பேசுகிறது'' (2-ஆம்வத்: இறை பணி 83).

எனவேதான் திருப்பலியிலும், திருப்புகழ் மாலையிலும், ஏனையஇறைவழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் திருப்பாக்கள் தனி இடம் பெறுகின்றன.இவற்றை நாம் செபிக்கும்போது, கிறிஸ்துவே நம்மோடு தந்தையைநோக்கிச் செபிக்கிறார். "குருக்களும் இதற்கென்று திருச்சபையால்நியமிக்கப்பட்டுள்ள பிறரும், அல்லது ஒப்புதலைப் பெற்ற முறையில்குருவோடு சேர்ந்து செபிக்கும் கிறிஸ்துவ விசுவாசிகளும் இவ்வியத்தகுபுகழ்ச்சிப் பாடலை முறையாகச் செபிக்கும்போது அது உண்மையாகவேமணமகனுடன் (கிறிஸ்து) உரையாடும் மணமகளின் (திருச்சபை) குரலாகஅமைகிறது. ஏன், தந்தையை நோக்கித் தம் உடலோடு ஒன்றித்துக்கிறிஸ்து சொல்லும் செபமாகவும் திகழ்கின்றது'' (2-ஆம் வத்: இறைபணி. 84). மேலும், "புதிய இஸ்ரயேலர்'' என்ற முறையிலே, நம்முன்னோராகிய பழைய இஸ்ரயேலரின் இறையனுபவமானதுதிருப்பாக்கள் வழியாக நம்முடையதாகின்றது. இறைவனைக் "கண்டு,உண்டுயிர்த்து, உற்றறிந்த'' நம் முன்னோரின் வழி நாமும் திருப்பாக்களின்உதவியால் இறைவனை அனுபவிக்க முடியும்; அனுபவிக்கவும்வேண்டும். திருப்பாக்கள் அனைத்தும் கிறிஸ்துவிலேமுழுமையடைவதால் அக்கிறிஸ்துவில்தான் ஒரு கிறிஸ்துவன்இவ்வனுபவத்தைப் பெற முடியும் என்பதை மறக்கக்கூடாது.

1. பெயர்
"திருப்பாக்கள்'' என்ற சொல் "பிசாமோய்'' (Pளயடஅழi) என்ற கிரேக்கச்சொல்லின் மொழிபெயர்ப்பாகும் (காண்: ஆங்கிலத்தில் Pளயடஅ).இக்கிரேக்கச் சொல் எபிரேய மூலச் சொல்லான 'தெகில்லீம்' (வுநாடைடiஅ)என்ற சொல்லிலிருந்து வரலாம் (திபா 145). இதன் பொருள் போற்றிப்பாடல்கள், வாழ்த்துப் பாக்கள் என அமையும். 72-ஆம் பாவின் முடிவில்"எஸ்ஸேயின் மகன் தாவீதின் செபங்கள் முடிவுறுகின்றன'' (72:20)எனவுளது. ஈண்டுள்ள 'தெபில்லா'(வுநடிடைடய) (செபங்கள்) என்ற சொல் திருப்பாக்களின் தலைப்பாகவும் ஒரு காலத்தில்அமைந்திருந்தது.

எனினும், போற்றிப் பாடல்கள்,செபங்கள் என்ற இரு சொற்களுமேஉண்மையில் இப்பாடல்கள்அனைத்தையும் தம்முள் கொள்ளமுடியாதவையாய் உள்ளன. ஏனெனில்ஈண்டுள்ள பல பாக்கள் புகழ் மொழிகளாகஅமையவில்லை. ஒருமையில்"போற்றிப்பாடல்'' என்ற சொல் 145-ஆம்திருப்பாவின் தலைப்பில் மட்டுமேகாணக்கிடக்கிறது. "செபங்கள்'' என்ற சொல்லும் இப்பாடற்தொகுதிக்குஅமைதல் இயலாது. ஏனெனில்; ஈண்டுள்ள பல பாடல்கள் செபஇயல்பில் அமையவில்லை. மேலும் 17; 86; 90; 102; 142 ஆகிய பாடல்கள்மட்டுமே மன்றாட்டுத் தலைப்பில் இத்தொகுதியை அணி செய்கின்றன.

"பிசாமோய்'' என்ற சொல் 'தெகில்லீம்' என்ற பொருட்களை("போற்றிப்பா'', "செபம்'') விளக்கினும், உண்மையில் இதன் எபிரேயவேர்ச்சொல் "நரம்புக் கருவிகளின் பின்னிசையில் பாடப்படும் பாக்கள்''என்று பொருள்படும் 'மிசுமோர்' (அணைஅழச) என்பதாகும். இச்சொல் இத்தொகுதியின் 57 பாடல்களுக்குத் தலைப்பாக அமைதல் குறிப்பிடத்தக்கது(4; 5; 6; 8; 9; 12; 13; 15; 19 முதலியன). இங்கு 'மிசுமோர்' என்ற சொல்'புகழ்ப்பா' என்று மொழிபெயர்க்கப்பட்டது அவ்வளவு பொருத்தமாகஅமையவில்லை.

2. எண் அமைப்பு

திருப்பாடல்கள் மொத்தம் நூற்றைம்பது ஆகும். பழையகத்தோலிக்க மொழிபெயர்ப்புகளிலே, இத்திருப்பாடல் தொகுதி கிரேக்கமொழி பெயர்ப்பைப் பின்பற்றி எண்ணிக்கையிடப்படுகின்றது.இக்கிரேக்க மொழிபெயர்ப்பு ஏறத்தாழ கி.மு.250க்கு முற்பட்டதன்று. பலமொழிபெயர்ப்பாளர்களால் பரந்த கால அளவில் இவை மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் எபிரேய மூலப் பிரதிகளோ ஏறத்தாழகி.மு.1200 ஆண்டளவிலிருந்து வருகின்றன. யாவும் ஒரே காலத்தில்ஒருவரால் எழுதப்படாதது; கி.மு. 12-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.மு.3-4 ஆம் நூற்றாண்டு வரை பலரால் எழுதப்பட்ட "கதம்பம்'' இவை.இவற்றிலுள்ள எண்ணிக்கைகளும், கிரேக்க மொழிபெயர்ப்பின்எண்ணிக்கைகளும் சிறிது மாறுபட்டவை. எபிரேய மொழியின் இருதிருப்பாடல்கள் (9-10) கிரேக்க மொழிபெயர்ப்பில் ஒரே பாடல் (9)ஆகின்றன. வேறு இரு பாடல்களும் (114-115) கிரேக்க மொழிபெயர்ப்பில் ஒரே பாடல் (113) ஆகின்றன. கிரேக்கத்தில் 2 பாடல்கள்(114- 115), எபிரேயத்தில் 116 ஆம் பாடலாகவும், 147 ஆம் பாடலும் கிரேக்கமொழிபெயர்ப்பில் இரு பாடல்களாயும் (146-147) வெளிப்படுகிறது.இவ்வாறு எபிரேய, கிரேக்க எண்களை ஒப்பிட்டுக் காணும் விளக்கத்தைக்கீழே காண்க:

எபிரேய மொழியில் கிரேக்க இலத்தீன் மொழியில்
1 - 8 1 - 8
9 - 10 9
11 - 113 10 - 112
114 - 115 113
116 114 - 115
117 - 146 116 - 145
147 146 - 147
148 - 150 148 - 150

;
சாதாரணமாக, நம் பிரிந்த சகோதரர் எபிரேய மூலப்படிஎண்ணமைப்பையும், கத்தோலிக்கர், கிரேக்க - இலத்தீன்மொழிபெயர்ப்புப்படி எண்ணமைப்பையும் முறையே தத்தம் மொழிபெயர்ப்புகளில் பின்பற்றி வந்தனர். சில மொழிபெயர்ப்புகள், எபிரேயமொழி எண்ணமைப்பைப் பின்பற்றினும், கிரேக்க - இலத்தீன் முறைஎண்ணமைப்பையும் அடைப்புக்குறிகளில் தருகின்றன.பழைய ஏற்பாட்டில் 150 திருப்பாக்கள் மட்டுமே உள்ளன என்றுகுறிப்பிடுவது உண்மையன்று. "திருப்பாடல்கள்'' என்ற தலைப்பிலேஇடம் பெற்றவை இந்நூற்றைம்பதுதான். ஆனால் இத்தொகுப்பிலேஇடம் பெறாத வேறு பல திருப்பாக்களும் பழைய ஏற்பாட்டில் காணக்கிடக்கின்றன. (விப 15:1-18; 1 சாமு 2: 1-10; எசா 38 : 10-20, யோனா 2:2-29 முதலியன).

3. பகுதிகள்

3.1. எத்தனைப் பகுதிகள்
3.1.1. ஐந்து பகுதிகள் மரபு
தால்மூது (வுயுடுஆருனு) என்ற அரமேய மொழி மரபு, திருப்பாக்களை5 பெரும் பகுதிகளாகப் பிரித்துள்ளது. "மோசே எவ்வாறு ஒழுங்குமுறைப்புத்தகங்கள் (வுழுசுயு) ஐந்தைத் தந்தாரோ அவ்வாறே தாவீதும்திருப்பாக்களை ஐந்து பகுதிகளாகத் தந்தார்'' என்கிறது இம்மரபு. ஏறத்தாழ19-ஆம் நூற்றாண்டு வரை இப்பிரிவு முறைகளையே யாவரும்பின்பற்றினர். இப்பாகுபாட்டு முறை திருப்பாக்களின் அமைப்பிலேயேகாணக்கிடக்கிறது. சில பாக்களின் முடிவில் அமையும் இறை புகழ்இப்பிரிவுகளுக்கு அடிப்படையாகிறது.

1) "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவாராக! ஊழிஊழியாய்ப் புகழப் பெறுவாராக! ஆமென், ஆமென்'' (41 : 13)
2) "மாட்சிமை பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப்பெறுவதாக! அவரது மாட்சி உலகெலாம் நிறைந்திருப்பதாக! ஆமென்,ஆமென்''( 72:19)
3)"ஆண்டவர் என்றென்றும் புகழப் பெறுவாராக! ஆமென்,ஆமென்'' (89:52)
4)"மக்கள் அனைவரும் 'ஆமென்' எனச் சொல்வார்களாகஅல்லேலூயா'' (106:48)
5)"அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக!அல்லேலூயா!''(150:6)

மேற்கூறிய 5 பாடல்களில் வரும் வாழ்த்திசைகளின் உதவியாலும்ஒழுங்குமுறைப் புத்தகங்கள் போல் 5 நூற்பகுதிகளை ஈண்டும் காணவேண்டுமெனும் விருப்பாலும் கீழ்க்காணும் 5 பகுதிகளாக மக்கள்அருளிசைப் பாக்களைப் பகுத்தனர்.

முதற் பகுதி 1- 41
இரண்டாம் பகுதி 42-72
மூன்றாம் பகுதி 73-89
நான்காம் பகுதி 90-106
ஐந்தாம் பகுதி 106-150

இப்பாகுபாடு முறை நன்கு அமைந்துள்ளதெனினும் எந்தஉட்காரணத்திற்காக ஒவ்வொரு பகுதியும் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது என்று கூற முடியாத நிலை உண்டாகிறது. திருப்பாக்கள் 1-41 இன்கருத்துக்கள், அல்லது இலக்கியப் பாணி, எம்முறையில் 42-72-லிருந்துமாறுபட்டன? இது போன்ற மற்ற பிரிவுகளும் காரண காரியஅடிப்படையில் அமைந்துள்ளனவாக இல்லை. மாறாக, செயற்கைமுறையில் வலிந்து கொள்ளப்பட்டனவாகக் காணப்படுகின்றன.

3.1.2. மூன்று பகுதிகள் மரபு

1) ஐம்பகுதிப் பாகுபாட்டுக்குச் சிறிது முற்பட்ட காலத்திலேதிருப்பாக்கள் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
2) கடவுளை "யாவே'' என்று பெயரிட்டழைக்கும் பாடல்கள் (3-41)முதற்பகுதியைச் சார்வன. இங்கு கடவுளை 272 முறைகள் "யாவே''என்ற பெயராலும் (விப 3:14), 15 முறைகள் மட்டுமே "எலோகீம்'' என்றபெயராலும் பாடகர் அழைப்பர்.
3) 42-89 பாடல்களில் கடவுளுக்கு 207 இடங்களில் "எலோகீம்''என்ற சொல்லும் 74 தடவை "யாவே'' என்ற சொல்லும்பயன்படுத்தப்படுகின்றன.

90-150 பகுதிகளில் இரண்டு பாடல்களைத் தவிர (108, 144)மற்றனைத்திலும் "யாவே'' என்ற சொல்லே இறைவனைக் குறிக்கின்றது."யாவே'' 339 தடவையும், "எலோகீம்'' 9 தடவையும் வருகின்றன.எனினும் இவற்றில் 2 ஆம் பகுதியில் (42-89). ஒரு வகையில்முதற்பகுதியிலும் கூட, யாதொரு காரண காரியமுமின்றி இப்பெயர்கள்உபயோகிக்கப்பட்டிருக்கின்றன என்பதை வாசகர் மனத்திலிருத்தல்வேண்டும். இன்றைய விவிலிய ஆராய்ச்சியாளர், இப்பகுப்பினையும்ஏற்பது கிடையாது.

3.1.3. அண்மைக் கால மரபு
அண்மைக் காலத்தில் n'ர்மான் குங்கல் (ழநசஅயn ழுரமேடந 1862-1932) என்ற செர்மானிய விவிலிய அறிஞர், அருட்பாக்களின் இலக்கியப்பாணியைப் பின்பற்றி அறிவியல் முறையிலே இப்பாக்களைப் பிரித்தார்.இப்பிரிவு முறையையே அருட்பாக்களின் ஆராய்ச்சியில் இன்றுஅனைவரும் பின்பற்றுகின்றனர். இனி, குங்கல் அவர்களின் ஆராய்ச்சிமுறையைக் காண்போம்.

3.2. இலக்கிய மரபுகள்
அனைத்து மொழிகளிலும் இயல், இசை, நாடகம் முதலிய இலக்கியமரபுகள் உள. இவ்வொவ்வொரு மரபிலும் ஏனைய மரபுகளும்,இலக்கியப் பாணிகளும் விரவி அமைவது இயல்பு. எடுத்துக்காட்டாக,லூக்காவின் நற்செய்தி, இயல் வடிவம் பெற்றது. ஆனால், இங்கும்இடையே இசை வடிவம் காணப்படுகிறது (லூக் 1:14-17; 1:46-55, 1:68-79). எசாயா இறைவாக்கினர் கூற்றுக்களும் இயலிலும் இசையிலும்மாறி மாறி அமைதல் காண்க. மேலும் ஒரே இசை இலக்கியம் பல்வேறுதுணைப் பாணிகளைப் பெறுதலுமுண்டு. இப்பாணிகளுக்கேற்பஇவ்விலக்கியத்தைப் பல்வகையாகப் பிரித்தல் கூடும். மேற்கோளாக,திருப்பாக்களில் வாழ்த்துக்கள், நன்றிப் பாக்கள், புலம்பல் பாக்கள் பலஅமைந்துள்ளன. இவ்வாறு இத்திருப்பாக்களை ஒழுங்குப்படுத்திய பின்அவற்றின் தோற்றம், வாழ்வு முதலிய சூழ்நிலைகளை ஆய்தல்அடுத்தமைகிறது.

3.3. வாழ்க்கைச் சூழ்நிலையும், வழிபாடும்
எந்த இலக்கியமும் அதன் தோற்றச் சூழலில் அல்லது வாழ்க்கைச்சூழ்நிலையில் (ளுவைண-in டுநடிநn டகைந ளவைரயவழைn) வைத்துஆராயப்பட வேண்டும். ஓர் இலக்கியம் எங்குஎவர்க்கு எக்காரணம் கொண்டு எவ்வாறுஎழுதப்பட்டது என்று அறிந்தால்தான், அதைஎழுதிய ஆசிரியரின் மனநிலையை அறிந்துஅவ்விலக்கியத்திற்குத் தக்க பொருள் காணஇயலும். இது "எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'' என்ற வள்ளுவர் கூற்றினைப் பின்பற்றியஆய்வாக அமையும். இம்முறையில் திருப்பாக்களை ஆராயின், அவை இஸ்ரயேலரின் சமூகச் சூழலிலே உருவானவைஎன்பது புலப்படும். இஸ்ரயேலர் ஒன்றுபட்டு ஒரே சமுதாயத்தினராய்இறை வழிபாடு நடத்திய சூழ்நிலையிலே இவ்வருட்பாக்கள்முகிழ்த்துள்ளன. ஈண்டுள்ள தனிப்பாடல்களும் இப்பொதுத் தன்மையைஅடிப்படையாகக் கொண்டுள்ளன என்பது விவிலிய ஆய்வுநர் தேர்ந்துகண்ட முடிவு. இஸ்ரயேல் இனத்தில் தனி மனிதன் என்ற நியதி "பொதுச்சமூகம்'' என்ற உண்மைக்கு உட்பட்டது. எனவே தனி மனிதர்ஏக்கத்திலும் அங்கலாய்ப்பிலும், மகிழ்ச்சியிலும், நன்றிக் கீதத்திலும்இஸ்ரயேலரின் பொது வாழ்வே எதிரொலித்தது. இப்பொது வாழ்வின்அடிப்படை எருசலேம் கோவில். இங்குதான் தனி மனிதரும், சமுதாயமும்தம் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர். எனவே, திருப்பாக்களின்தோற்றத்தலம் எருசலேமில் இறைவன் குடிகொண்ட திருக்கோவிலாகும்.இக்கோவில் வழிபாட்டிலே மலர்ந்தவைதாம் இவ்வருட்பாக்கள்.

3.4. இலக்கிய மரபுப் பின்னணி
திருப்பாக்களின் இலக்கிய மரபு இஸ்ரயேல் இனத்தவர்க்குப்புதியதன்று. இதே மரபு பழைய ஏற்பாட்டில் வேறு சில பகுதிகளிலும்காணக்கிடக்கிறது. விப நூல் 15-ஆம் அதிகாரத்தின் மோசேயின் பாடலும்,நீதிதலைவரின் 5 ஆம் அதிகாரத்தின் "நன்றிப் பாடலும்'' இன்னும் இவை போன்ற பிற பகுதிகளும் உள்ளன. இவ்விசை மரவு, கானானிய, எகிப்திய,அசிரிய, பாபிலோனியப் பண்பாடுகளிலும், மறைகளிலும்காணக்கிடக்கிறது. இப்புற மறைகளின் பக்திப் பாடல்கள் ஒருவேளைஇஸ்ரயேலரின் பக்திப் பாடல்களுக்கு மூலமாக இருந்திருக்கலாம் என்றுஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். வடிவ அமைப்பிலும், இலக்கியமுறையில் இத்தொடர்பு இருந்திருக்கவே முடியாது. ஏனெனில், இவ்விருகுழுக்களின் இறையியலும் வட தென் துருவங்களென முழுக்க முழுக்கமாறுபட்டவை என்பது தீர்க்கமான உண்மை.

மேற்கூறிய மூன்றடிப்படை வழியில் அறிஞர் ஹெர்மான் குங்கல்திருப்பாக்களைக் கீழ்க்கண்ட முறையிலே பகுத்துள்ளனர். இப்பாகுபாடு,பாடல்களின் கருத்துச் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டது.எனவேதான் பலவிடங்களிலே பரவிக் கிடக்கும் ஒரே கருத்துப் பாடல்கள்ஒரு தொகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன.அவை.

1) இறைபுகழ் திருப்பாக்கள்
2) தனியாரின் புலம்பல்,நம்பிக்கை, செய்நன்றிப் பாடல்கள்,
3) சமூகப் புலம்பல், நம்பிக்கைசெய்நன்றிப் பாடல்கள்,
4) அரச பாடல்கள்,
5) அறிவுரைப்பாடல்கள்என்பனவாகும்.

இவ்வமைப்பு நாம் ஏற்கக் கூடிய ஒரு நல்லமைப்புமட்டுமன்று; திருப்பாக்களைக் கற்றுணர்ந்து செபிப்பதற்கும் மிகுதியாகஉதவுகின்றது. எனினும் இப்பாகுபாடு உறுதியானதே என்றுகூறுவதற்கில்லை. ஏனெனில் ஒரு தொகுதிப் பாக்களின் கருத்துக்கள்பரவலாக மற்ற தொகுதிகளிலும் காணப்படுகின்றன! இவைகளின் சிறுவிளக்கத்தைக் காண்போம்.

3.4.1. இறைபுகழ் திருப்பாக்கள்
இவை இஸ்ரயேலின் கடவுளையும், அவர் உறையும் சீயோன்மலையையும், கடவுளின் அரச மாண்பினையும் வாழ்த்துவன.
இவற்றை3 பிரிவுகளாகக் காணலாம்.

1) இறைபுகழ் பாக்கள் (இப) 8; 19; 29; 33; 99; 100; 104; 113; 114; 117; 135; 136; 145;146; 147; 148; 149; 150. பொதுவிலே இறைவனின் மகிமையைநினைந்து பாடிப் புகழ்ந்தேத்துவன இப்பாடல்கள்.
2) யாவேயின் அரச மாண்புப் பாடல்கள;(யா அ) 47; 93; 95; 96; 97; 98; 99. "ஆண்டவர் ஆட்சிசெய்கின்றார்'' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளன இப்பாக்கள்.
3) சீயோன் புகழ் திருப்பாக்கள் (சீபு) 46; 48; 76; 84; 87; 122. கடவுளே கோவில் கொண்டஇடமான சீயோன் மலையை ஏத்தித் துதிப்பன இப்பாடல்கள்.

3.4.2. தனியாரின் புலம்பல், நம்பிக்கை, செய்நன்றிப் பாடல்கள்
இப்பாடல்களில் தனி மனிதன் இறைவனுடன் கொண்டுள்ளதொடர்பும் அதன் வழிப் பிறக்கும் பல்வேறு பண்பு நலன்களும்வெளிப்படுகின்றன.

1) தனியார் புலம்பல்
(தபு)-அருட்பாக்களிலே அதிக எண்ணுடையது இத்தொகுதிதான்,5; 6; 7; 10; 12; 13; 17; 22; 25; 26; 28; 31; 35; 36; 38; 39; 41; 42; 51; 54;55; 56; 59; 61; 63; 64; 69; 70; 71; 86; 88; 102; 109; 120; 130; 140; 141;142; 143. தனி நபருக்கு விளையும் துன்ப துயரங்கள், நோய் நோக்காடு,மரணம், கீழுலகில் தண்டிப்பு முதலியவை இப்பாடல்களின் கருவூலமாய்அமைகின்றன.
2) தனியார் நம்பிக்கை (தந) - 3; 4; 11; 16; 23; 27; 62; 121; 131, தனியொருவர் இறைவன்மேல் கொண்டுள்ள தன்னம்பிக்கை உணர்வைக் காட்டும் இப்பாடல்கள்" என் ஆன்மா இறைவனிடம் நம்பிக்கை கொண்டுள்ளது'' என்றபாணியிலே அமைவன. ஏறத்தாழ அனைத்து அருட் பாடல்களும்இந்நம்பிக்கை உணர்வைத் துலக்கிக் காட்டுகின்றனவெனினும், ஈண்டுஇடம் பெறுபவை சிறப்பாக இந்நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.
3) தனியார் செய்நன்றி (தசெ) - 9; 30; 32; 34; 40; 92; 107; 115; 138. நோய் நொடி, துன்பதுயரம், மாற்றானின் பிடி, மரணம் முதலியவற்றிலிருந்து தன்னைக் காத்தஇறைவனைத் தனியொருவன் செய்நன்றி மறவாது பாடுவனஇத்தொகுதியில் அடங்கும் பாடல்கள்3.4.3. சமூகப் புலம்பல், நம்பிக்கை செய்நன்றிப் பாடல்கள்

1) சமூகப் புலம்பல;
(சபு) - 12; 44; 58; 60; 74; 77; 79; 80; 82; 85; 90; 106; 108; 123;126; 137. மாற்றார் படையெடுப்பு, பஞ்சம், பிணி, கொள்ளை நோய்இவற்றால் துன்புற்ற மக்கள், பாம்பின் வாய்த் தேரையாகப் பெருமூச்சுவிட்டுக் கதறுதல் இப்பாடல்களின் கருத்தாய் அமைகிறது.

2) சமூக நம்பிக்கை
(சந) - 116; 125; 129, துன்ப வேளைகளில் இறைவனை நோக்கிமுறையிட்டு, அவன் உதவியை நம்பிக்கையுடன் நாடும் இறை மக்களின்குரலாய் அமைகின்றன இப்பாடல்கள்.

3) சமூகச் செய்நன்றி
(சசெ) - 65; 66; 67; 68; 118; 124. நாட்டுக்கும், மக்களுக்கும்ஏற்பட்ட தீவினைகளிலிருந்து மக்களைக் காத்த இறைவனுக்குப்பொதுநன்றி செலுத்துவன இப்பாடல்கள்.

3.4.4. அரசப் பாடல்கள்
(அபா) - 2; 18; 20; 21; 45; 72; 89; 101; 132; 144. இப்பாடல்கள்இஸ்ரயேலர் தம் அரசரின் மகிமை பற்றியும் இறைவனால் அவர்கள்முறைப்படி, ஆட்சிக்கு வந்தது பற்றியும் அவர்களது நீதிமுறை, வம்சவாரிசுபற்றியும் பாடுகின்றன. இப்பாடல்களிலேயே அவ்வரசன் அரியணை ஏறும்விழா, திருமண விழா முதலியவை இடம் பெறுகின்றன.

3.4.5. அறிவுரைப் பாடல்கள்
இத்தொகுதியில் வரும் பாடல்கள் அனைத்தும்"நல்லது செய்; அல்லது விலக்குக'' என்றுஅமைதலின் அவை இப்பெயர் பெறுகின்றன.இது நாற்பகுதிகளை உடையது.

1) அறிவு கேட்டல்
(அகே) - 1; 37; 49; 73; 91; 112; 119;127; 128; 133; 139. அறியத்தகு அறிவுஒன்றே. அஃது இறையறிவு. அவ்வறிவுஇறைவனின் நற்கொடையாகும். எனவேஅவ்வறிவை வேண்டிப் பாடப்பட்ட பாடல்கள்இவையாம். அறிவைப் புகழும் பாடல்களும்ஈண்டுள.
2) வரலாற்றுப் பாடல்கள்
(வபா) -78; 105. மக்களின் விடுதலைக்கு இறைவன் ஆற்றியஉதவிகளையும், அவர்களின் நல்வாழ்வுக்காக அவர் செய்தசெயல்களையும் வரலாற்றுக்கண் கொண்டு பார்த்து அவ்வனைத்துச்செயல்களுக்காகவும் அவ்விறையை வாழ்த்துதல், ஈண்டு இடம்பெறுகின்றன. இவற்றை மீட்புச் செயற்பாடல்கள் எனவும் அழைக்கலாம்.வேறு சில பாடல்களையும் (68; 77; 85; 106; 129; 136; 144)இத்தொகுதியில் சேர்க்கலாம்.
3) இறைவாக்குப் பாடல்கள்
(இபா) - 14; 50; 52; 53; 75; 81; 82. இப்பாக்களின் கருத்துக்கள்எசாயா இறைவாக்கினர், ஏனைய இறைவாக்கினர் கருத்துக்களைஅறிவுரையாகப் படிப்பிக்கின்றன4) திருவழிப்பாட்டுப் பாடல்கள்(திவ) - 15; 24; 134. இவற்றில் திருவழிப்பாட்டு நிகழ்ச்சிகள்பரவிக்கிடத்தலின் இவை இத்தொகுயில் வைக்கப்பட்டுள்ளன.

4. பிரிவுகள் விளக்கம்

மேற் தொடருமுன் பொதுவான ஐம்பிரிவுகளைப் பற்றி ஓரிரு சொற்கூறல் நலமுடைத்தாகும்.

4.1. இறைபுகழ் திருப்பாக்கள்
மூவகைப்பட்ட (மேற்காண்) இப்பாக்கள் இறையின் புகழையும்,மகிமையையும் பண்வழி ஏத்தி நிற்பன. இறைவன் தனித் தலைவன்;அனைத்துக் கடவுளரையும் விஞ்சியவன் என்ற முறையிலே அவன்பெருமை சாற்றுவன சில, "ஆண்டவரே! எங்கள் தலைவரே உமது பெயர்உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது” (8:1-9)."வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன'' (19:1);"இறைவன் மைந்தரே! மாட்சியையும், வலிமையையும் ஆண்டவருக்குஉரித்தாக்குங்கள்'' (29:1) முதலியன நம் கூற்றிற்குச் சான்று பகரும். 104,113, 114, 117, 134, 136, முதலிய பாடல்களையும் காண்க.

இறைவன் மாண்பு மிக்கவன் எனினும் அவனது மாண்பு அவன்செயல்களிலேதான் இஸ்ரயேல் மக்களுக்குப் புலனாகின்றது. படைப்பு,இறைவனின் செயலெனினும், எதிரிகளிடமிருந்து அவர்களை மீட்டதுஅவ்விறைவனின் தனிச் செயலாகும். ஆம், அவர் மீட்பின் இறைவன்:எனவே, இறைவனின் மீட்புச் செயல்களைப் பாடிப் புகழும் பாடல்கள்இத்தொகுதியிலும் பிற தொகுதிகளிலும் பலவுள. இறைவனுடைய மீட்புச்செயல்களில் முதன்மையும் முக்கியத்துவமும் வாய்ந்தது, அவர் இறைமக்களை எகிப்து நாட்டின் அடிமைத்தளையிலிருந்து மீட்ட அருஞ்செயலாகும். இஸ்ரயேல் மக்கள் இதை நன்கு உணர்ந்திருந்தனர்.எனவேதான் பழைய "எகிப்திய மீட்புச் செயலைத்'' தங்கள் வழிபாடுகளிலேமுன் நினைவாகப் புகுத்தி, மீண்டும் மீண்டும் இம்மீட்புச் சூழலிலேதங்களையும் சேர்த்து இம்மீட்பை, அதன் பலன்களைத் தாங்கள் மறுமுறையும் அனுபவித்து வாழ்வதாக உணர்ந்தனர். கடந்த கால நினைவு,நடப்பு வாழ்வோடு ஒன்றி, வழிபாடாக மாறியது. எகிப்தியரை அழித்தஇறைவன் தம் எதிரிகளையும் எதிர்த்தழிக்கிறார் என்ற திட நம்பிக்கைஇவ்வழிபாட்டின் துவக்கக்காரணம் மட்டுமன்று, அதன் முடிவுமாகும்."இன்று இங்கு இறைவன் எகிப்திய அடிமைத்தளையிலிருந்து நம்மைமீட்கிறார்''என்ற உணர்வு இஸ்ரயேலின் அடிப்படை நம்பிக்கை. எனவேதான்: நம் ஆண்டவர் "ஒரேபு'' மலையில் நம்மோடு உடன்படிக்கைசெய்தது நம் மூதாதையரோடு அன்று; இன்று, இங்கே உயிருடனிருக்கும்நம்முடனே (இச 5:3) என்றும்; "எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்;துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள் மீதுசுமத்தினர். அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகியஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம் ... பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார் (இச 26: 6-10) என்றும்விவிலியம் கூறுகிறது.

இம்மீட்பு இஸ்ரயேலரிடையே மட்டுமன்று நம்மிடையும் இன்றுநடைபெறுகிறது. நம்மைப் பாவ அடிமைத்தளையிலிருந்து மீட்டுஅருள்புரியும் இறை இயேசுவின் மீட்புச் செயல்தான் நமக்கு "எகிப்தியமீட்புச் செயல்''. எனவே இஸ்ரயேலரின் எகிப்திய மீட்பை நினைப்போம்,நம்முடைய மீட்பையும் நினைவுறுவோம்.

புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் (சிறப்பாக யோவானும், பவுலும்)இவ்வுண்மையைத் தௌ;ளிதின் விளக்குகின்றனர். இறைவன் உலகைப்படைத்தார்; மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டார் என்பது பழையஉடன்பாட்டின் (சிறப்பாகத் திருப்பாக்களின்) முடிவு. கிறிஸ்துவேஇவ்விறைவன்; கிறிஸ்துவே உலகைப் படைத்தார். அவரே இவ்வுலகின்மீட்பர் என்பது புதிய உடன்பாட்டின் சாரம். "அனைத்தும் அவரால்உண்டாயின. உண்டானது எதுவும் அவராலேயேயன்றி உண்டாகவில்லை'' (யோ 1:3) "விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை,கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர்,தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகியஅனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்'' (கொலோ 1:16) முதலியபகுதிகளும், "ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர்புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியனபுகுந்தன அன்றோ'' (2 கொரி 5:17), "அது (படைப்பு) அழிவுக்குஅடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின்பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும்பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது'' (உரோ 8:21)முதலிய எடுத்துக்காட்டுகளும் தமது படைப்பு மீட்புச் செயல்களைக்கிறிஸ்துவுக்கு அளித்த இஸ்ரயேலரின் இறைவனிடம் திருப்பாக்களால்வேண்டும்போது, நாம் கிறிஸ்துவிடமே வேண்டுகிறோம் என்றஉண்மையை விளக்குகின்றன.

இஸ்ரயேலர் தம் இறைவனை முதற்கண் மீட்பின் தலைவனாகக்கண்டனர். இதுதான் அனுபவ வாயிலாக அவர்கள் அறிந்த உண்மை.மீட்புத் தலைவனிடமிருந்துதான் படைப்பின் ஆண்டவனுக்குச் சென்றனர்.புகழ்ப்பாக்கள் அனைத்திலும், மீட்போ, படைப்போ, அல்லது இரண்டையும்இணைத்தோ இறைவனின் புகழ்ச்சிக்குக் காரணமாக கூறப்படுகின்றன(காண்: திபா 8:19; 29; 33; 104; 135; 136 முதலியன).உண்டாக்கி உயிரளித்த இறைவனை, பகைவனிடமிருந்து மீட்டுப்புது வாழ்வளித்த கடவுளை, இஸ்ரயேல் மக்கள் தங்கள் அரசனாகவும்போற்றிப் பாடினர். "யாவேயின் அரச மாண்புப் பாடல்கள்'' இதற்குச்சான்று பகர்வன. தாம் தேர்ந்தெடுத்த அரசர்கள் வழி, "யாவே'' தம்மக்களை ஆண்டு வந்ததால், "யாவே'' மட்டுமே இஸ்ரயேலின் அரசராவார்.அரசர்கள் ஆட்சியோச்சிய காலத்தும், அரசிழந்த காலத்தும் "யாவே''என்றும் இஸ்ரயேலரின் அரசராவார் என்ற கருத்தின் அடிப்படையிலே,மக்கள் பேரும் புகழும், சீரும் சிறப்பும் கொண்டு இவ்வரச மாண்புஎதிர்காலத்தில் விளங்கும் என்ற நம்பிக்கை உடையோராயிருந்தனர்.இஸ்ரயேலரின் இக்கருத்தை எசாயா இறைவாக்கினர் தெளிவுறுத்துகிறார்(எசா 9:1-6; 11:1-9).

அரச மாண்புப் பாடல்கள் பல கருத்துக்களைத் தம்முள்கொண்டுள்ளன "யாவே'' இப்போது மக்களை ஆள்கின்றார் (47:2-3;96:10; 99:1). எதிர்காலத்திலும் ஆள்வர் (96:13; 98:9-10).அப்போது நீதியாகிய தம் மீட்புச் செயலை மக்களிடம் நிறைவேற்றுவார். அவர் அரசுக்கு முன் பிற அரசுகளோதெய்வங்களோ கிடையா (47:3-4, 9; 97:10). அவரதுஆட்சி நீதியின் ஆட்சி; அதாவது, மீட்பளித்தல் (96:10;97:10; 99:4). இத்தகைய கருத்துக்கள் இப்பாடல்களில்பரவிக் கிடத்தல் காண்க.புதிய உடன்பாட்டில், சிறப்பாக, முதல் மூன்றுநற்செய்திகளில் "இறையாட்சி'' "விண்ணரசு'' ஆகியசொற்கள் பன்முறை காணக்கிடக்கின்றன. இவ்விறையாட்சிஇயேசுவையே குறித்து நிற்றலும் தெளிவு, இயேசுவின் வருகையைக்குறித்துக் திருமுழுக்கு யோவான் "மனம்மாறுங்கள், ஏனெனில்விண்ணரசு நெருங்கிவந்துவிட்டது''( மத் 3:2) என்கிறார். இயேசுவும்கலிலேயாவில் நற்செய்தி அறிவித்துக் கொண்டு, தம்மையே குறிக்கும்முகத்தான், "காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கிவந்துவிட்டது, மனம்மாறி, நற்செய்தியை நம்புங்கள்” என்கின்றார் (மாற்கு 1:15).எனவே கிறிஸ்துவிலேதான் "யாவே''யின் அரச மாண்புமுற்றுப்பெறுகிறது. ஏனெனில், புதிய உடன்பாட்டின் படி அவரே இறைமக்களின் அரசர்; அவருடைய நீதி மக்களுக்கு மீட்பாய் அமைகிறது.இம்மீட்புத்தான் மனிதனை முடிவில்லா காலத்திற்கும் வாழ வைக்கும்ஒன்றாம்.

"யாவே'' அரசன் உறையும் மாண்புமிகு அரண்மனை எருசலேம்நகரக்கோவில் (சீயோன் மலை). எருசலேம் நகரைத் தன்னில்கொண்டதால் சீயோன் மலையும் புகழ் பெற்றது எனலாம். எனவே,இஸ்ரயேலர் இக்குன்றையும் பண்ணிசைத்துப் பாடிப்பரவினர்.பாபிலோனியா நாட்டில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாயிருந்தபோதுஅவர்களிடம் "சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக் காட்டுங்கள்”(137 : 8) என்றனராம் பாபிலோனிய மக்கள். இச் "சீயோன் பாடல்களை''இப்பகைவர்கள் எருசலேம் நகரிலோ, அல்லது பாபிலோனிய நாட்டிலோயூத மக்கள் பாடக்கேட்டிருக்க வேண்டும்!!

ஆண்டவரின் திருத்தலம் சீயோன்; அங்குக் கடவுள் தங்கினார்;உடன்பாட்டுப் பெட்டகம் அங்கிருந்தது "சீயோன் மலை அனைத்துஉலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது'' (48:2); "படைகளின்ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது. என்ஆன்மா ஆண்டவருடைய கோவில் முற்றங்களுக்காக ஏங்கித்தவிக்கின்றது'' (84:1-2).

"வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில்முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது'' (84:10). "ஆண்டவரதுஇல்லத்திற்கு போவோம்''(122:1) என்று இஸ்ரயேலர் பாடி மகிழ்ந்தனர்.கடவுளின் மலை, இறைவனின் உறைவிடம், புனித குன்று,இறைவனின் தூய இருப்பிடம் என்றெல்லாம் இம்மலையை இவர்கள்வருணித்துப் போற்றுகின்றனர்.புதிய உடன்பாட்டிலும் சீயோன் மலை முக்கியத்துவம் பெறுகிறது.ஏனெனில் இங்குதான் இயேசு மனிதரை மீட்கும் அன்புச் செயல் அவரதுசிலுவையிலும், மரணத்திலும், உயிர்ப்பிலும் வெளியாகிறது.இக்கருத்தைக் கொண்டுதான் லூக்கா தம் நற்செய்தி முழுவதும்எருசலேமை நோக்கியே, இயேசுவை நடத்திச் செல்கின்றார் எனலாம்.(லூக் 9:51; 9:53; 13:22; 13:33; 17:11; 18:31; 19:1; 19:28; 24:50).திருத்தூதர் பணியிலும் இதே கருத்தில்தான் இயேசுவுக்குச் சாட்சிகூறவிருந்த திருத்தூதர்களையும் எருசலேமிலிருந்தே அனுப்புகிறார். (திப1:8) மேலும் திருச்சபைக்கு ஒரு முன்னோடியாகவும் சீயோன் அமைகிறது.எருசலேம் சீயோனில் கட்டப்பட்டுள்ளது போலத் திருச்சபையும் பாறைமேல் கட்டப்படுகிறது (மத் 16:18). இப்பாடல்களைப் பாடும்போதுஉண்மையிலே மக்களிடம் திருச்சபையின்பால் ஓர் ஆழ்ந்த அன்பும்நம்பிக்கையும் எழ வேண்டும். இறைவன் இத்திருச்சபையோடு எந்நாளும்இருப்பதால் ஏற்படும் அன்பு, அதே இறைவன் அத்திருச்சபை வழி,மக்களுக்கு இறுதி மீட்பளித்தல் நம்பிக்கையாக முற்றுப்பெற வேண்டும்.

4.2. தனியார் பாடல் (புலம்பல், நம்பிக்கை, செய்நன்றி)

1) புலம்பல்
துன்ப வேளையில் இறைவனிடம் தம் துன்பங்களைக் கூறிஅழுதனர் தனியார். திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணையென்றுஇறைவனை நாடி ஓடியவர்களின் எதிரொலியே இப்புலம்பற் பாடல்கள்.இத்துன்பம் (1) உடல் நோயால் வரலாம் . "நான் மிகவும்ஒடுங்கிப்போனேன். நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன். என் குடல்முற்றிலும் வெந்து போயிற்று; என் உடலில் சற்றேனும் நலம்இல்லை''(38:6-7) "என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது. என்வலிமை என்னைவிட்டு அகன்றது''(38:10). (2) எதிரிகளால் வரலாம்:"என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் எனக்குக் கண்ணிவைக்கின்றனர் . .. எப்போதும் எனக்கெதிராய் சூழ்ச்சி செய்கின்றனர்” (38:12); "என் எதிரிகள்என்னைப் பற்றி தீயது பேசி, 'அவன் எப்போது சாவான்?' அவன் பெயர்எப்போது ஒழியும் என்கின்றனர் ....என்னை வெறுப்போர் அனைவரும்ஒன்றுகூடி எனக்கு எதிராய்க் காதோடுகாதாய்ப் பேசுகின்றனர்'' (41:5-7);"எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய்மேலோங்கி நிற்பான்'' (13:2). ஏனையமேற்கோள்களைத் திருவிசைப்பாக்கள் 35;69 முதலியவற்றில் காண்க (3)பாவத்தாலும் இத்துன்பம் வரலாம்:"என்மீது சினங்கொண்டு என்னைகண்டியாதேயும்; என் மீது கடுஞ்சீற்றம்கொண்டு என்னைத் தண்டியாதேயும்...''(6:1-3); "உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்'' (71:2)"இதோ!தீவிணையோடு என் வாழ்வைத் தொடங்கினேன். பாவத்தோடே என்அன்னை என்னைக் கருத்தாங்கினாள்'' (51:5); "உமக்கெதிராக மட்டுமேபாவம் செய்தேன்” (51:4)... கடைசியாக,' (4) மரணத்தாலும், கீழுலகில்வாழவிருக்கும் நிலையாலும் இத்துன்பம் வரலாம். "பெரு வெள்ளம்என்னை அடித்துக் கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல் என்னைவிழுங்காதிருப்பதாக'' (69:15); "உமது சினம் என்னை அழுத்துகின்றது.உம் அலைகள் அனைத்தும் என்னை வருத்துகின்றன'' (88:7) "இருளேஎன் நெருங்கிய நண்பன்'' (88:18).

இத்தகைய துன்பச் சூழல்களில் எதிரிகளைப் பழித்துரைக்கவும்செய்தனர். "நெருப்புத் தழல் அவர்கள் மீது விழுவதாக் மீளவும் எழாதபடிபடுகுழியில் தள்ளப்படுவார்களாக'' (100:10); என் எதிரிகளுக்குத்திடீரெனச் சாவு வரட்டும்; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கட்டும்''(55:15). "வெகுண்டெழுந்து அவர்களை அழித்துவிடும். இனி இராதபடிஅவர்களை ஒழித்துவிடும்'' (59:13). இப்பழிப்புமொழிப் பாடல்கள்அனைத்தும் 'பழிக்குப்பழி வாங்கல்' என்ற இஸ்ரயேலரின்நம்பிக்கையையும், பழைய உடன்பாட்டில் இறைவன் மோசே வழி கூறியநீதி நெறியையுமே பின்பற்றுகின்றன. "கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்கு சூடு, காயத்துக்குக் காயம்,கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய்'' என்று இறைவன் கூறியதையேநினைவுறுத்துகின்றன (விப 21:24-25; லேவி 24:17-22; இச 19:16-19).இது "காயினுக்காக ஏழுமுறை பழிவாங்கப்பட்டால் இலாமேக்கிற்காக எழுபது ஏழு முறை பழிவாங்கப்படும்'' (தொநூ 4:24) என்ற இலா மேக்கின் கூற்றுக்கு எவ்வளவோ மேற்பட்டதெனினும், "தீமை செய்பவரைஎதிர்க்க வேண்டாம்; மாறாக உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்குமறு கன்னத்தையும் திருப்பிக்காட்டுங்கள்.. (மத் 5:39,43-48) என்றஇயேசுவின் மன்னிப்பு மொழிகளுக்கு முன் மிகவும் தாழ்ந்ததேயாகும்.எனினும், மீட்பு வரலாற்றின் கால அமைப்புக்கேற்ற சூழ்நிலையில் இப்பழிமொழிகளை வைத்து நாம் தீர்ப்புக் கூறல் வேண்டும். சிலர்இப்பழிமொழிகள் நம் ஆன்ம வாழ்வின் எதிரிகளைச் சார்ந்தன என்பர்.இம்முறையில் பொருள் கொண்டு நாம் இப்பாடல்களைச் செபிப்பதில்தவறேதுமில்லை.

மேலும், பாடகரின் குறிக்கோள் எதிரி அழிய வேண்டு மென்பதன்று.தனக்கு வரவிருக்கும் அழிவு விலக வேண்டுமென்பதே. அதேவேளையிலே இறைவனை நீதியின் வெளிப்பாடாகக் கண்ட இஸ்ரயேலர்அந்நீதி, எதிரிகள்பால் வெளிப்பட வேண்டிச் செபித்ததில் யாதொருதவறுமில்லை. பயன்படுத்தியுள்ளச் சொற்கள் கடினமாயிருக்கலாம்;("அகிறிஸ்துவச் சொற்கள்'') ஆனால் பின்னணியோ கிறிஸ்துவத்தன்மை வாய்ந்ததே. இஸ்ரயேலரின் பயிற்சி நிலையில் வைத்துஇவற்றைக் காண வேண்டும்.

2) நம்பிக்கை
துயர் கண்டு புலம்பியவன்அத்துயரத்திலே நலிந்து அழிந்து விடாதுஇறைவன்பால் நம்பிக்கை கொள்கிறான்.இந்நம்பிக்கையின் எதிரொலியாக அமையும்தனியார் பாடல்களிலே கீழ்க்கண்ட கருத்துக்களைக் காணலாம்: ஆண்டவர் என்தலைவர், "என்னைக் காப்பவர்'', "எனக்குப்பெருமை தருபவர்'', "என்னைத் தலைநிமிரச்செய்பவரும் நீரே!'' (3:3); "என் ஆயர்'' (23:1)."என் ஒளி, மீட்பு'', "என் தாயும் தந்தையும்'' (27:1-10). "இத்தலைவர்என்னைத் தாயினும் மிக்க அன்புடன் காத்து வருகிறார் (131:2). என்னை"இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும்இல்லை'' (121:3-4). நான் "போகும் போதும் உள்ளே வரும்போதும்இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் (என்னைக்) காத்தருள்வார்''(121:8) "என் கற்பாறையும் மீட்பும் அவரே'' (62:6). எனவே, அவரிடம்என் நம்பிக்கை தளராது. "கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க்காத்திருக்கின்றேன்'' (62:1). "விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்'' (121:2) "அவர் என்வலப்பக்கம் உள்ளார். எனவே, நான் அசைவுறேன்'' (16:8) "எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது;எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்''(27:3). இத்தகைய ஆழ்ந்த செபமாக முகிழ்த்து எழும் குரல்இறைவன்பால் நமக்குள்ள பிடிப்பற்ற தன்மையையும் ஐயப்பாட்டையும்அழித்து "ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை'' (23:1)என்ற தளரா நம்பிக்கையுடன் நம்மை இறைவன்பாற் செலுத்தும்.

3) செய்நன்றி
இறைவனின் படைப்புச் செயலையும், மீட்புச் செயலையும்பொதுவில் கண்ட மனிதன் அவ்விறைச் செயல்களுக்கு நன்றிக்கடன்பட்டவனாகிறான். மேலும், மேலும் தன் தனி வாழ்வில் நேர்ந்ததுயரங்களைத் துடைத்துத் தனக்கு இறைவன் துணைபுரிந்தமைக்குஅவன் நன்றி கூறுகின்றான். இவற்றில் முன்னது பற்றி இறைபுகழ்பாக்களிலும் பின்னது பற்றித் (தனியாருக்கு இறைவன் செய்ததனியொரு பெருஞ்செயலுக்கு நன்றி கூறல்) தனியார் செய்ந்நன்றிப்பாடல்களிலும் காணலாம்.... முன்னதும் பின்னதும் இறைவனைத்தத்தம்....வழியில் புகழ்ந்துரைப்பதால் முன்னதை "வருணனைப்புகழ்க்கீதம்'' (னுநளஉசiயீவiஎந யீசயளைந) என்றும், பின்னதை "அறிக்கையிடும்புகழ்க்கீதம்'' (னுநஉடயசயவiஎந யீசயளைந) என்றும் வழங்குவர். இத்தகையதனியார் செய்ந்நன்றிப் புகழ்ப் பாக்களை விவிலியத்தில் பலவிடங்களில்காணலாம். எசாயா இறைவாக்கு (38:10-20); யோனாவின் இறைவாக்கு(2:3-10); புதிய உடன்பாட்டில் மரியாவின் வாழ்த்துப் பாடல் (லூக் 1:46-55) செக்கரியாவின் பாடல் (லூக் 1:67-79) முதலியன இவ்வழிமுறையையேப் பின்பற்றியுள்ளன.இந்நன்றிப்பாடல் பாடுபவன் தன் உற்றார் உறவினருடன்,காணிக்கைகளைக் கையில் ஏந்தி இறைவன் வதியும் ஆலயத்திற்குச்செல்வான். ஆலய வாயிலிலேயே நின்று இறையை ஏத்துவான் (9:14).ஆலய வாயிற் காப்பாளர்களிடம் வாயிலைத் திறக்கக் கேட்பது (118:19);அவர்கள் பதில் (118:20); பின் ஆலயத்தினுள் சென்று இறைவனைவாழ்த்துதல் (138:2); கடைசியாக நன்றியுரை (118:28); விருந்துமுதலியவும் (23:5) இவ்வழிபாட்டின் உட்பகுதிகளாக அமையும்."செய்ந்நன்றி கொன்றமகற்கு உய்வில்லை'' என்ற கருப் பொருள்இஸ்ரயேல் மக்கள் உள்ளத்திலே ஆழப் பதிந்திருந்ததென்பதற்குச்சான்றுகள் வேறு வேண்டியதில்லை. புதிய உடன்பாட்டிலும் அன்னைமரியா ஆண்டவன் தனக்குச் செய்த பேறுகளுக்கு நன்றி கூறலும்,இயேசுவே தாம் இறக்குமுன் இறைவனுக்கு நன்றிப் பலி செலுத்தலும்(நுரஉhயசளைவ) இவ்வுண்மையை விளக்கி நிற்றல் காண்க.

4.3. சமூகப்பாடல் (புலம்பல், நம்பிக்கை, செய்நன்றி)
தனியார் பாடல்கள் உண்மையில் சமூக உணர்வுகளின்எதிரொலியே யாயினும், இத்தனியார் பாடல்களில் இஸ்ரயேல் மக்கள் தம் குழு மனப்பான்மையை மறக்காவிடினும், தாங்கள் ஒருசமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், இறைவனால் "இறை மக்கள்''ஆக்கப்பட்டவர்கள், "தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்'' "தூய மக்களினம்''"குருத்துவ அரசர்'' (விப 19:6) என்ற முறையிலேயும் பொது வழிபாடுகள்நடத்தினர். இப்பொது வழிபாடுகளில் தனியார் தம்மை மறந்து, இறைவன்தம் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டுமென்றுஇறைஞ்சுவர். அவ்விறைவன் அத்தேர்ந்தெடுக்கப்பட்ட குலத்திற்குச்செய்த கைம்மாறு கருதாத நன்மைகளுக்கு நன்றி கூறுவர். இவ்வாறுஎழுந்தவையே இச்சமூகப் பாடல்களாகும்.

1) சமூகப் புலம்பல்
மாற்றார் படையெடுப்பால் நாட்டுக்குத் துன்பம் நேர்ந்தபோதும்பஞ்சம், பிணி முதலியவற்றால் மக்கள் நலிவுற்ற போதும் மக்கள்இறைவனிடம் அழுது புலம்பினர். "எங்கள் பகைவருக்கு நாங்கள்புறங்காட்டி ஓடும்படி செய்தீர். எங்களைப் பகைப்போர் எங்களைக்கொள்ளையிட்டனர். உணவுக்காக வெட்டப்படும் ஆடுகளைப்போல்எங்களை ஆக்கிவிட்டீர். வேற்றினத்தாரிடையே எங்களைச் சிதறியோடச்செய்தீர்... நொறுங்கும்படி விட்டுவிட்டீர்; சாவின் இருள் எங்களைக்கவ்விக்கொண்டது'' (44: 9-22) என்று ஏங்கித் தவித்தனர், அழுதுபுலம்பினர். இப்பாடல்கள் பொது மீட்பு வரலாறு நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறி இறைவனிடம் வேண்டுதல் முறையீடுகள் செய்தலும் ஈண்டுக்காணற்பாலது (44:1-7). (60:15; 74:18 முதலிய பாடல்களைக் காண்க)"ஆண்டவர் அவர்களுக்கு (இஸ்ரயேலருக்கு) மாபெரும் செயல் புரிந்தார்''என்று பிற மக்களும் கூறுகின்றனராம் (126:2). எனவே அதே இறைவன்தம்மிடமும் அன்பு காட்ட வேண்டுமென்று ஏங்குகின்றனர்.

இச்சூழலிலேதான் "இறைப்போர்'' அல்லது "மறைப்போர்'' (ர்ழடலறயச "ர்நசநஅ") என்ற தத்துவம் தோன்றுகிறது. இறைவனே மாற்றாரோடுபோர் தொடுக்கிறார். "என் மீது போர் தொடுப்பாரோடு போர்தொடுத்தருளும்'' (35:1) என்று இறைஞ்சிய மக்கள், "எங்கள் பகைவர்களை உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம். எங்களுக்கு எதிராய்எழுந்தோரை உமது பெயரால் மிதித்துப் போடுவோம்... நீரேபகைவரிடமிருந்து எங்களை காப்பாற்றுவீர் எங்களை வெறுப்போரைவெட்கமுறச் செய்தீர்'' (44:5-7) என்று மகிழ்வுப்பாடல் பாடுகின்றார்.அத்தோடு, கடவுளுக்கு மனிதப் பண்பேற்றி (யுவொசழிழஅழசிhளைஅ),அவரை நோக்கி "ஆண்டவரே கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்?விழித்தெழும், எங்களை ஒருபோதும் ஒதுக்கி தள்ளிவிடாதேயும், நீர் உமதுமுகத்தை ஏன் மறைத்து கொள்கின்றீர்'' என்று ஏங்கி நிற்கின்றனர்(44:23-24). இவ்வாறு கடவுளுக்கு மனித பண்பேற்றிக் காண்பதுஇப்பாடல்களின் தனிக் குணங்களிலொன்றாகும்.

2) சமூக நம்பிக்கை:
தங்களுடன் இறைவன் செய்து கொண்ட உடன்பாட்டால் தங்களைஇறைவன் என்றும் கைவிடார் என்ற திட நம்பிக்கை இஸ்ரயேலரிடம்இருந்தது. "மிக மிகத் துன்புறுகிறேன்'' என்று சொன்ன போதுங்கூட"நான் ஆண்டவரை நம்பினேன்'' (116:1) என்று மக்கள் பேரால்இசைக்கிறார் கவிஞர். இவ்வாறு அசையாப் பாறையாம் ஆண்டவர் மேல்நம்பிக்கை கொண்டவர்கள் "சீயோன் மலை போலிருக்கிறார்கள்'' (125:1)என்று பாடிய ஆசிரியர், அவ்வாண்டவரின் அசைக்க முடியாத பாதுகாப்பைவிவரிக்கும் முகத்தான் "எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பதுபோல, ஆண்டவர் இப்போதும் எப்போதும் தம் மக்களைச் சுற்றிலும்இருப்பார்'' (125:2), என்று திட மனதுடன் பாடுகிறார். ஆண்டவரின் மேல்முழு நம்பிக்கை வைப்பவர்கள் மீட்படைவர்: பிற தேவரிடத்தும்பொருட்களிடத்தும் நம்பிக்கை வைப்போர், நீர்மேற் குமிழிகளாய் ஒருங்கேஅழிந்து போவர் (எசா 31: 1-6) என்ற அடிப்படைக் கருத்தையும் ஈண்டுஒப்பிட்டுக் காண்க.

3) சமூகச் செய்நன்றி
இறுதியாக, நாட்டுக்கும் மக்களுக்கும் இறைவன் செய்த "மகத்தானசெயல்களுக்கு'' இஸ்ரயேலர் நன்றி உடையவர்களாய் இருந்தனர்என்பதும் திருப்பாக்களிலே புலனாகிறது. இப்பாடல்கள் சிலவேளைகளில் தனியொருவன் பாடல்களாகப் புலப்படினும், இவைஉண்மையிலே பொது நன்றியுரைப் பாடல்களேயாகும். தனியார்செய்நன்றிப் பாடல்களில் காணும் திருவழிபாட்டு முறையே ஈண்டும்காணக்கிடக்கிறது. மக்கள் குழுவாக ஆலய வாயிலில் வந்து செபிப்பர்,பாடுவர்; பின் வாயிற் காப்பாளரிடம் கதவைத் திறக்கும்படிக் கேட்டுக்கோவிலுள் நுழைந்து நன்றிப் பண் இசைப்பர். பலியும் விருந்தும்பின்தொடரும். 65, 66, 67, 118-ஆம் திருப்பாக்களில் இவ்வழிபாட்டுமுறை விரவிக்கிடக்கிறது. 118-ஆம் திருப்பா, நன்றி வழிபாடு இஸ்ரயேல்மக்களிடை எம்முறையில் அமைந்திருந்ததென்பதைத் தெளிவாகக்காட்டுகிறது. இவ்வழிபாடு "ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின்நாளில்'' நடைபெற்றது (118:24). "நன்றியின் நாள்'' என்று இதனைஅழைப்பர். இத்திருப்பாவின் அமைப்பு திருவழிப்பாட்டுச் சடங்கைச்சுட்டுவதால் கீழே அதன் பிரிவு தரப்படுகிறது.

118:1-4 பாடகரும், மக்களும் மாறி மாறி ஆண்டவரின் இரக்கத்தைப்பாடுகின்றனர். இஃது ஆலயத்தின் வாயிலில் நடைபெறுகிறது."திறப்புச் சடங்கு'' என்று இதைக் கூறலாம்.
5- 18 இறைவன் இஸ்ரயேலரை அடிமைத்தளையிலிருந்து மீட்டஅருஞ்செயலைப் பாடகரும் மக்களும் மாறி மாறிப்பாடுகின்றனர். ஒருவேளை அரசன் இப்பகுதியைப்பாடியிருக்கலாம் என்று கூறுவர்.
19-20 கோவிற் கதவைத் திறக்குமாறு கூறுவதும், நன்றிசெலுத்துவதற்காகக் கோவிலுட் செல்ல விழைவோரிடம் "இதன்வழியாக நீதிமான்களே நுழைவர்'' என்று குரு பதிலுரைப்பதும்இப்பகுதியில் காணப்படுகிறது.
21 கோவில் உட்பகுதியில் நன்றியுரை:"என் மன்றாட்டை நீர்கேட்டதால், உமக்கு நான் நன்றி செலுத்துவேன்'' (அரசன்இப்பகுதியைப் பாடியிருக்கலாம்).
22-26 கூடியுள்ள மக்களை குரு ஆசீர்வதித்தல்: "ஆண்டவர்இல்லத்தினின்று உங்களுக்கு ஆசிகூறுகின்றோம்''.
27-அ. மக்கள் பதில்: "ஆண்டவரே இறைவன்அவர் நம் மீதுஒளிர்ந்துள்ளார்.
27-ஆ. மரக்கிளைகளைக் கையிலேந்தி .........பீடத்தின் மூலைக்குத்தங்கள் காணிக்கைப் பொருட்களைஎடுத்துச் செல்லுமாறு குருபணித்தல். (வழிபாட்டு நடனம் ஈண்டுநடைபெற்றிருக்கலாம்).
28. முன் பாடகர் இறைவனுக்கு நன்றிகூறல்: "உமக்கு நான் நன்றிசெலுத்துகின்றேன்'' (அரசன் இப்பகுதியைப்பாடியிருக்கலாம்).
29. மக்களின் மறுமொழி: "ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்,ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரதுபேரன்பு'' இது "முடிவுச் சடங்காகும்''. இத்திருப்பாவின்முதலடியே மறுமுறையும் இறுதியில் பல்லவியாகப்பாடப்படுகிறது.

புதிய உடன்பாட்டில் இயேசுவின் வாழ்வே நன்றி வாழ்வாகத் தான்அமைந்தது (யோ 17:1-19). அதன் கொடு முடியும் இறைவனுக்குத்தம்மையே பலியாக அளிக்கும் நன்றிக் கடனேயாகும். இந்நன்றிக்கடனையே நாம் இன்னும் திருப்பலியில் இறைவனுக்கு இடையறாதுசெலுத்தி வருகிறோம்.

இந்நோக்குடன் செய்நன்றித் திருப்பாக்களைக் கண்ணுறுவோமாயின் அவற்றின் ஆழ்ந்த பொருள் நம் வாழ்விலும் கலந்துநம்மையும் நன்றிப் பெருக்கால் இறைவனை வாழ்த்தத் தூண்டும்என்பதில் ஐயமில்லை. இதனால் "தேவ ஆவி ஏவிய திருப்பாக்களையும்,புகழ்பாக்களையும், பாடல்களையும்'' நன்றியோடு உளமார நாமும் பாடமுடியும் (கொலோ 3:16). எனவே திருப்பலியும் பொருளுள்ள நன்றிக்கடன்மிக்க பலியாகும்.

திருவெளிப்பாடு நூல் நமக்கு வலியுறுத்தும் விண்ணகத்திருவழிபாடும் இந்நன்றிக் கடனையே வலியுறுத்துகிறது. ஆங்கு நமதுநன்றி, கிறிஸ்துவை மையமாகக் கொண்டு இறைவனுக்குப் புகழ்க்கீதம்பாடும். " கடவுளாகிய ஆண்டவரே! எல்லாம் வல்லவரே, இருக்கின்றவரும் இருந்தவருமான உமக்கு நன்றி செலுத்துகின்றோம்'' (திவெ 11:17)என்று நம் உள்ளக் கிடக்கையினின்று நன்றி நாதம் எழும். (திவெ 4:9-11; 15:3-4; 19:1-8)

4.4. அரசப்பாடல்கள்
"யாவே''யின் அரச மாண்புப் பாக்களும் ஈண்டுக் கூறப்படும் அரசப்பாடல்களும் மாறுபட்ட கருத்துடையன. முன்னவை "யாவே'' அரசன்என்று வாழ்த்தும்; பின்னவை "அரசன் யாவேயின் ஊழியன்'' என்றுபறைசாற்றும். தம் மன்னர் இறைவனால் அரியணை ஏற்றப்பட்டதால்இஸ்ரயேலர் தம் மன்னரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தனர். அதேவேளையில் மக்களின் பதிலாளியாகவும் (சநயீசநளநவேயவiஎந)மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். எனவேதான் இறைவன் மக்களோடு செய்துகொண்ட உடன்பாடும் (விப 19:5-6; இச 7:6-11) தாவீதுடன் செய்துகொண்ட உடன்பாடும் (2 சாமு 7:13-16) ஒன்றேயென்பர் ஆராய்ச்சியாளர்.மன்னன் மக்களுடைய பதிலாளியாகவும் இறைவனின் மறுஉருவமாகவும் விளங்குவதைத் தமிழ் இலக்கியங்களிலும் காணலாம்."குடி உயரக் கோன் உயர்வான்'' என்பது மன்னன் மக்களின் பிரதிபலிப்புஎன்று உணர்த்துகின்றது. "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக்கண்டேன்'' என்பது இறைவனின் மறுவுருவே மன்னன் என்றுஉணர்த்துகிறது. மன்னன், இறை, காவலன் என்ற பெயர்களும்இவ்வுண்மையை வலியுறுத்தலைக் காண்க.

அரசர் இறைவனின் பெயரால் ஆட்சி புரிகிறார். அவரிடமிருந்துஅரசுரிமையைப் பெற்றார் (விப 15:18; எண் 23:21; 1 சாமு 8:7; 12:12; 1அர 22:19). எனவே எருசலேமிலுள்ள அவரது ஆட்சிப்பீடம் "ஆண்டவரின்அரியணை'' என்று அழைக்கப்பட்டது. ஆண்டவரின் ஆட்சியாதலின்இவ்வாட்சி என்றென்றும் முடிவிலாது நிலைத்திருக்கும் தன்மையதுஎன்பது புலப்படுகிறது.

அரச பாடல்களில் பல, காலத்தால் மிகவும் முற்பட்டவை தாவீதரசன்காலத்திலேயும் உடனே அவருக்குப் பிந்திய காலத்திலேயும் இவைபாடப்பட்டுள்ளன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அரசர்கள்தாவீதரசனின் வாரிசில் வந்தவர்கள் என்றும் புகழப்படுகின்றனர் (18:15;89:49). இப்பாக்களில் அரசர் அரியணை ஏறும் சடங்கு, அரசருக்காகச்செபம் (72 : 109) அரசனின் திருமணம் (45) முதலிய பல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

நாட்டையும், மக்களையும் நலத்துடன் காத்து வந்த மன்னரை"யாவேயின் ஊழியன்'' "யாவேயின் மகன்'' (72; 89) என்றும், உலகெங்கும்ஆட்சி செய்பவரென்றும் (2:8) பாடிப் பரவினர் இஸ்ரயேலர். அதேவேளையிலே அவ்வரசனுக்காக இறைவனிடம் வேண்டவும்தவறவில்லை (45:17-19; 20; 2-5; 21:9-14; 72:15).இவ்வரசப் பாடல்கள் அனைத்தும் அன்று நாட்டை ஆண்டு வந்தஅரசர்களையே பெரும்பாலும் குறிப்பன போலிருந்தாலும், நிறைவானமுறையில் எல்லா மன்னர்களையும் குறிப்பிட்டன எனலாம். இஸ்ரயேலரின் அரசரில் பலர் நெறி தவறியதால் இப்பாடல்கள் உண்மை யிலேயேபண்புமிக்க, அருள் நிரம்பிய வரவிருக்கும் வேந்தரொருவரை (ஆநளளiயா)எண்ணிப் பாடப்பட்டவை எனலாம். தாவீதரசின் வாரிசு பாபிலோனியஅடிமைத்தளையாலே (கி.மு.587) அடியோடு அழிந்தது எனினும், 2 சாமு.7:12-16-.ல் இறைவன் அளித்த வாக்குறுதி: "உன் அரசோ என்றென்றும்உனக்கு முன்பாக இருக்கும்; உன் அரியணை என்றும் நிலைபெற்றிருக்கும்'' என்பது நிறைவேற வேண்டியிருந்தது. எசாயாஇறைவாக்கினரும் பிறரும் இதை நினைத்தே வரவிருந்த மாட்சிமை மிக்கஅரசனொருவனைப் பற்றி எழுதினர் (எசா 9:1-6; 11:1-9; ஆமோஸ்9:11,எசேக் 24: 23-24.....) பாபிலோனிய அடிமைத்தனத்தில் மக்கள்இவ்வரசனை நோக்கியே நம்பிக்கையுடன் ஏங்கினர் எனலாம். முடிவுக்காலத்தில் வரவிருக்கும் இவ்வரசனை ஆன்மிகக் குணங்களால்கற்பனை செய்தனரெனினும் உலகியல் அரசையும் அவர்கள்எதிர்பார்த்தனர். எனவேதான் வரவிருப்பவரை "அரசியல் மெசியா'' வாகக்காண விழைந்தனர் (தானி 7: 13-14).

ஆனால் எதிர்பார்க்கப்பட்டவரோ, அரசராயிருந்தாலும் "என் ஆட்சிஇவ்வுலக ஆட்சி போன்றது அல்ல'' (யோ 18, 36) என்று ஆணித்தரமாகக்கூறினார். ஆம், கிறிஸ்து உண்மையிலே தாவீதின் குலக் கொழுந்து,அரச மகன். எனவே, புதிய ஏற்பாட்டில் வரும் இவ்வரசப் பாடல்களைவாசிக்கும்போது மட்டுமன்றி, திருப்பாக் குழுவில் இப்பகுதிகளைப்பாடும்போது கிறிஸ்துவை மனத்துட் கொள்ளல் வேண்டும். கிறிஸ்துதான்அரசர், அவர்தான் "மெசியா'' அவரே "இறைவனால்நிலைநாட்டப்பட்டவர்'', அவரே"யாவே'' அவரே 'யாவேயின் மகன்' அவரே"மெல்கிசதேக் முறைப்படி குரு'' அவரே " ஆண்டவர்க்கெல்லாம்ஆண்டவர்'' "அரசர்க்கெல்லாம் அரசர்'' (திருவெளி 17:14). "உலகின்ஆட்சி உரிமை நம் ஆண்டவருக்கும் அவருடைய மெசியாவுக்கும்உரியதாயிற்று. அவரே என்றென்றும் ஆட்சி புரிவார்'' (திவெ 11:15).

4.5. அறிவுரைப் பாடல்கள்
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கும், வாலறிவன் நற்றாள்தொழுதற்கும் விதிமுறைகள் எம்மறையிலும் உள. இவ்விதிமுறைகள்பல தோற்றங்களிலே மக்களுக்கு அளிக்கப்படல் உண்டு. இஸ்ரயேல்குலப் புலவர் பெருமக்களும், மறையாசிரியர்களும், இறைவாக்கினர்களும், இந்நல்லுரைகளை வேறுபட்ட சூழ்நிலைகளிலே வெவ்வேறுஇலக்கிய அமைப்புகள் வழி மக்கட்கு தெளிவுறுத்தி வந்தனர்.

1) அறிவு கேட்டல் அல்லது அறிவு உணர்தல் என்ற பாடற்குழுவில் அடங் கும் திருப்பாக்கள் கடவுள் தந்த திருச்சட்டத்தைப் பற்றியன(1:2; 37:31; 119:15). திருச்சட்டத்தைச் சிந்தித்து அதனைக்கடைப்பிடிப்பவனே இணையிலா மகிழ்வுறுவான், ஏனையவன்இழிவுறுவான் (1; 37). எனவே, மக்கள் தீமையை அகற்றி நன்மையைநாட வேண்டும். "தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும்நாட்டில் நிலைத் திருப்பாய்'' (37:27) . இதுதான் உண்மை அறிவு, காலம்,இடம் ஆகிய தளைகளற்ற, இணையற்ற இறுதி வாழ்வு ஒன்று உண்டு;அதில் நல்லோர் இட.ம் பெறுவர், தீயோர் இடம் பெறார் என்ற உண்மையும்ஈண்டு வெளிப்படுகிறது (49:14-15; 73:24).இவ்வறிவுணர்த்தும் பாடல்கள் குறள், உவமை, பழமொழி முதலியவடிவங்களில் எம்மொழியிலும் வழக்கத்திலுள்ளன எனலாம். (எடு.திருக்குறள், நாலடியார், ஆத்திச்சூடி, பழமொழி நானூறு)திருவிசைப்பாக்களில் அறிவுணர்த்தும் பாடல்களில் பலஇம்முறையையே பின்பற்றல் காண்க.

"ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில்அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும் (127:1)

"இளமையில் ஒருவருக்குப் பிறக்கும் மைந்தர் வீரரின்கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்'' (127:4)

"எர்மோனின் மலைப்பனி சீயோனின் மலைகள் மேல்இறங்குவதற்கு ஒப்பாகும்'' (133:3)

சில பாடல்கள் நமது அ, ஆ, இ, ஈ, என்ற எழுத்து முறை மரபுப்படிஎபிரேய மொழி எழுத்து மரபைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளன (ஆலெப்பெத் காமெல்; டாலெத் ...) (37:111; 112; 119). 119ஆம் திருப்பாடலின்176 அடிகளும் தேவனின் திருச்சட்டத்தைப் பற்றியன."ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக்காசுகளை விட எனக்குமேலானது'' (119:72) என இச்சட்டத்தை எபிரேய மொழியிலேயே பற்பலசொற்களால் ஆசிரியர் பாடி மகிழ்கிறார். தமிழ் மொழிபெயர்ப்பும்இப்பற்பலச் சொற்கள் விரவப் பெற்றிருப்பது போற்றத்தக்கது. (உம்.திருச்சட்டம்: ஆணை; நெறி; கட்டளை; நியமம்; கற்பனை; விதி; வார்த்தை;முறைமை; வழி; வாக்குறுதி; நீதி; வாக்கு...)

இப்பாடல்கள் அறிவுரை புகட்டினும் உண்மையில் இவையும்செபம்தான். ஏனெனில், அறிவுணர்த்தல் மத்தியிலும் ஆன்மா இறைவனோடு ஆழ்ந்த ஈடுபாட்டில் ஊன்றித் திளைக்கிறது என்பதைஇப்பாடல்களைக் கற்போர் தௌ;ளிதிற் கண்டுணரலாம்.

"ஆண்டவரை நம்பு! நலமானதை செய்'' (37:3)

ஆண்டவரிலேயே மகிழ்ச்சிகொள்'' (37:4)

"உன் வாழியை ஆண்டவரிடம்ஒப்படைத்து விடு; அவரையே நம்பியிரு:'' (37:5)

"ஆண்டவரே, இரவிலும் நான் உமது பெயரைநினைவுக் கூருகிறேன்'' (119:5)

முதலியவற்றைக் காண்க.

2) வரலாற்றுப் பாடல்கள் என்பன மீட்பு வரலாற்றின்நிகழ்ச்சிகளை எடுத்தியம்பி, மக்கட்கு அறிவுரை வழங்குவனவாகும்.வரலாற்றுப் பாடல்களென்று அறிவுரைப் பாடல்களுள் நாம் சேர்த்துள்ள2 பாடல்களும் (78; 105) வரலாறு கற்பிக்கும் பாடம் இறைவனின்ஆணைகளைக் கடைப்பிடிப்பதே என்ற கருத்தை வலியுறுத்துவன.

"அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும், இறைவனின் செயல்களைமறவாதிருக்கவும், அவர்தம் கட்டளைகளைக் கடைபிடிக்கவும் ' (78:7-8,10, 37, 56, 57),

"அவர் தந்த கட்டளையைக் கடைப்பிடிப்போர்பேறுபெற்றோர்'' (105:3, 5, 23, 44, 46)

என்பதைப் புகட்டவும் இப்பாடல்கள்எழுந்ததால் வரலாறு வழி அறிவுரை கூறும் பாடல்களின் குழுவில் இவைஅமையும்.

3) இறைவாக்குகள் வழி அறிவுரைப் புகட்டும் பாடல்களைஇறைவாக்குப் பாடல்கள் என்ற குழுவில் அடக்கியுள்ளோம். வாழ்வும்,வீழ்வும் முன்னுரைக்கும் இறைவாக்கி னர்சொல் போன்று, இவை அமைந்திருப்பதாலும் அறிவுரை கூறும் தன்மையைத்தம்மகத்துக் கொண்டிருப்பதாலும்இக்குழுப் பாக்களுக்கு இப்பெயர் சாலப்பொருந்தும். திருவழிபாடு நடத்தும்குருக்கள் இறைவாக்கினராகவும்இருந்தனர் என்பதற்கு இப்பாக்கள்சான்றாக உள.கடவுளின் திருச்சட்டத்தைகடைப்பிடியாதவர்களை இறுதியில் அவர்எவ்வாறு தண்டிப்பாரென்பதையும், அதே வேளையிலே,இறையாணைக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களை எவ்வாறு இறுதியில் அவர்ஆசீர்வதிப்பாரென்பதையும் இப்பாடல்கள் கூறும்.

"கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரைபரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்'' கடவுள் (50:1).

"நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும்கேடு விளைவிப்பனவே! ஆகவே கடவுள் உன்னை என்றும் மீளாதபடிநொறுக்கிவிடுவார். உன்னைத் தூக்கி எறிவார். கூடாராத்தினின்றுஉன்னை பிடுங்கி எறிவார். உயிர் வாழ்வோரின் உலகினின்று உன்னைவேரோடு களைந்துவிடுவார்'' (52:4-5)."கடவுள் நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்றார்''(14:5)

"ஆண்டவர் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக!'' (14:7)

ஆம் "கடவுளிடமிருந்தே தீர்ப்பு வரும்; ஒருவரைத் தாழ்த்துகின்றார்;இன்னொருவரை உயர்த்துகிறார்'' (75:7)

என்ற உண்மையைஇப்பாடல்கள் வலியுறுத்துவன.

4) திருவழிபாட்டுப் பாடல்கள; மூன்றிலும் (15; 24; 134)வழிபாட்டுச் சடங்குகள் பரவியிருத்தலின் இவை இப்பெயர் பெற்றன.தேவனின் திருவில்லத்துட் செல்வதற்கு வேண்டிய விதிமுறைகளைஇப்பாடல்கள் காட்டுதலின் இவற்றைக் "கோவிலின் உட்புகும்ஒழுங்குப் பாடல்கள்'' என்றும் ஆய்வுநர் அழைப்பர்.

ஆண்டவரே, உம் கூடாத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?
மாசற்றவராய் நடப்போரே!-
இன்னோர்நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர்;
தம் நாவினால் புறங்கூறார்;தம் தோழருக்குத் தீங்கிழையார்;
தம் அடுத்தவரைப் பழித்துரையார்
நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்
ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்
தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;மாசற்றவருக்கு எதிராககையூட்டு பெறார்;
- இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்''(15).

இவையேஇறைவன் இல்லத்துட் செல்ல மக்களிடம் இருக்க வேண்டியநுழைவுச்சீட்டு. இக்கருத்து எசாயா இறைவாக்கினரிடமும் (எசா 33:15-16) மீக்கா இறைவாக்கினரிடமும் (மீக் 6:6-8) எதிரொலிப்பதைக் காண்க.

5. ஆசிரியர் - ஆசிரியர்கள்

புதிய உடன்பாட்டில் ஆசிரியர் யார் என்று இயேசு சுட்டுகிறார்.(மத்22:43; மாற்கு 12:35; லூக் 20:42). பவுலும் தம் மடல்களில் திருப்பாக்களின் ஆசிரியராகத் தாவீதைக் குறிப்பிடுகிறார் (உரோ 4:6; 11:9).

பழைய உடன்பாட்டில் பலயிடங்களில் தாவீது இசை வல்லுநர்என்பதைப் பல்வேறு ஆசிரியர்கள் கூறிப் போந்தனர். 1- ஆம் சாமுவேல்நூல் ஆசிரியர், தாவீது "யாழிசைஞன்'' அவன் "யாழ் எடுத்து மீட்டுவான்''என்பர் (16:16-23). 2 ஆம் சாமுவேல் நூலில் தாவீதின் புலம்பற் பாடல்இடம் பெறுகிறது (1:17-27). "தாவீதைப் போல் புதிய இசைக் கருவிகளைக்கண்டுபிடிக்கி றார்கள்'' (ஆமோஸ் 6:5) என்று இசைக் கருவி செய்யும்தாவீதின் நுண்ணறிவை ஆமோஸ் இறைவாக்கினர் ஈண்டு புகழக்காண்கிறோம். 2-ஆம் சாமுவேல் 22-ஆம் அதிகாரம் முழுவதும் தாவீதுஇசைத்த நன்றிப் பாடல் ஆகும். இப்பாடல் முழுவதும் ஏறத்தாழ 18-ஆம்திருப்பாவில் அமைவுறுவதும் ஈண்டுக் கருதற்பாலது.

மரபு "தாவீதின் வேதாகம திருப்பாடல்கள்'' என்றே இப்பாடல்தொகுதியைக் குறிக்கிறது. விவிலியத்தின் முதல் 5 புத்தகங்களையும்மோசே எழுதியதாகக் கருதிய அதே மரபுதான் 5 பகுதிகள் அடங்கியதிருப்பாத் தொகுதியையும் ஒரே ஆசிரியர் தாவீது எழுதியதாகக்கூறியுள்ளது.

திருப்பாக்களே தரும் சான்று கீழே தரப்படுகிறது. பல பாக்களின்தொடக்கத்தில் "லெஃ தாவித்'', "லெ-ஆசாப்'' "லெ-பெனி கோரா''ஃ "லெஃஸ்லம்மோ'' என்ற குறிப்புகள் உள. எபிரேய மொழியில் "லெ'' என்பதுவேற்றுமை உருபு ஆகும். எபிரேய மொழியின் வேற்றுமை உருபுகள்பெயருக்கு முன்னரே வருவன் 'லெ' எனும் உருபு தமிழில் "கு'' 'இன்' 'அது'என்ற 4-ஆம் 5-ஆம் 6-ஆம் வேற்றுமை உருபுகளுக்குச் சமம்.

இம்முறைப்படி திருவிசைப்பாக்களின் தலைப்பில் வரும் பெயர்களாவன;

"லெ'' "மொஸே”- மோசேக்கு, மோசேயின், மோசேயது- பாடல் 90.
"லெ'' "ஆசாப்''- ஆசாப்புக்கு, ஆசாப்பினது-பாடல்கள் 50; 73-83.
"லெ'' "பெனிகோரா'' - கோராவின் மகனுக்கு, கோராவின்மகனது- பாடல்கள் 42,49,84,87 முதலியன.
"லெ'' "ஏமான்'' - ஏமானுக்கு, ஏமானது - பாடல் 88: (39)
"லெ'' "தாவித்'' - தாவீதுக்கு, தாவீதின். தாவீதிது- பாடல்கள் 3; 4;5; 6; 7; 8; 11-32; 34-41; 51-65; 68-70; 86; 101-103; 108-110; 122; 124;131; 133; 138-145.

தாவீதின் பெயரிலே 73 பாடல்கள் உள்ளன. "லெ'' எனும்வேற்றுமை உருபு இப்பாடல்கள் தாவீதிடம் இருந்தன் தாவீது - தாவீதின்உடைமை என்று கூறுவனவேயன்றி தாவீதுதான் இவற்றின் ஆசிரியர்என்று கூறவில்லை. தாவீது இசை வல்லுநர் என்று அறியக் கிடத்தலின்ஈண்டமைந்துள்ள 73 பாடல்களின் வேற்றுமை உருபுகள், இந்த 73பாடல்களுக்குமாவது தாவீது ஆசிரியராயிருக்க முடியும் என்றஉண்மையை வலியுறுத்துகின்றன என்பர் சிலர். மற்ற பாடல்களைப்பற்றி யாதும் கூறுவதற்கில்லை, "பாடகரான ஏமான், ஆசாப் ஏத்தான்''பற்றி முதலாம் குறிப்பேடு 15:19-இல் கூறப்பட்டிருப்பதால் இவர்களின்திருப்பாக்களில் அவர்கள் பெயர்களுக்குரிய பாக்களைப் பாடிஇருக்கலாம் என்று எண்ண இடமுண்டு.

எனினும் திருப்பாக்களின் இத்தலைப்புகள் பிந்திய காலத்தினஎன்பது உணரற்பாலது. பாடகர்களின் உதவிக்காக இசை வல்லுநர்களால் இவை எழுதப் பட்டிருக்கலாம். பல தலைப்புகளுக்குப்பொருளே புதிராகவுளது!மேற்கூறியவற்றிலிருந்து தாவீதுதான் திருப்பாக்கள் அனைத்தின்ஆசிரியர் என்று திண்ணமாகக் கூற முடியாத நிலையில் உள்ளோம். பலஆசிரியர்களாலும், இசை வல்லுநர்களாலும் பல்வேறு காலங்களிலேஇவை எழுதப்பட்டன என்று மட்டும் கூறலாம். தாவீதுக்கும் இப்பாடல்களில் சிலவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதென்றுதான்எபிரேய மொழி மூலத்திலிருந்து கூற முடியுமேயொழிய அவரே ஆசிரியர்என்று ஐயமுறக் கூற முடியாது.

6. காலம்

திருப்பாக்களின் ஆசிரியர்களைக் கணிக்கும் ஆராய்ச்சியுடன்தொடர்பு கொண்டது அவற்றின் கால ஆய்வு எனினும் அதைவிடக்கடினமானது இப்பாக்குழுவின் காலத்தைக் கணித்தல். பற்பல ஆய்வுநர்பற்பல வழிகளிலே இவ்வாய்வுப் பொருளை அணுகுகின்றனர்.பாக்களில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகளின் உதவியால்இவற்றின் காலம் கணிப்பர் சிலர், திருவழிப்பாட்டுச் சூழலிலே இவைதோற்றமளிப்பதின் காரணத்தால் திருவழிபாட்டு முறையமைப்பின் வழிக்காலம் கணித்துணருவர் சிலர். இவற்றின் இலக்கிய மரபை ஆய்ந்துபிற இலக்கிய மரபுகளோடு ஒப்பிட்டு இவ்வழி, காலம் காட்டுவர் வேறுசிலர். இவ்வெவ்வேறு குழுவினரும் தத்தம் ஆராய்ச்சிக்கொப்ப, தத்தம்ஒருதலைச்சார்புக்கு ஒப்ப, மிகவும் வேறுபட்ட, மாறுபட்ட முடிவுகளுக்குவருதலும் காணக் கிடக்கிறது. உதாரணமாக 2; 110 திருப்பாக்களைக்கொள்ளலாம்.

எசா 63:1-6-உடன் இலக்கியப் பாணியிலே தொடர்புடைமையின், திருப்பாடல்கள் 2, 110 எருசலேமின் வீழ்ச்சிக்குச் (கி.மு. 587) சிறிதுபிற்பட்டன என்பர் சிலர். கனானிய மொழியைத் (உகரித்து ருபயசவை )தேர்ந்துணர்ந்த மறைத்திரு தாகுது (ஆ. னுயாழழன. ளு.து.) மேற்கூறியபாடல்கள் பழங்கனானியப் பாடல்களுடன் இலக்கிய முறைத் தொடர்புகொண்டிருத்தலின் இவை இரண்டுமே காலத்தால் மிகவும் முற்பட்டன(கி.மு. 10-ஆம் நூற்றாண்டு) என்பார். மேலும் பழைய உடன்பாட்டைக்கிரேக்க மொழியில் பெயர்த்தோர் (கி.மு. 3- ம் நூற்றாண்டு) சரியானமுறையிலே எபிரேய மூலத்தை அறியாது, பலவிடங்களில் தவறாகமொழிபெயர்த்துள்ளனர். இக்காரணம் கொண்டும் எபிரேய மூலத்திற்கும்கிரேக்க மொழிபெயர்ப்புக்கும் மிகுந்த கால வேறுபாடு இருந்திருக்கும்என்று இவ்வாசிரியர் கூறுவார்.

தேர்ந்த ஆய்வுநர்களே 68-ஆம் திருப்பாடலுக்குக் காலவரையறைகணிக்கமுகத்தான் நீதித் தலைவர்கள் காலத்திலிருந்து (கி.மு. 1200-1000) மக்கபேயர் காலம் வரை (கி.மு. 200-150) ஏறத்தாழ 1000ஆண்டுகள் வேறுபாட்டிலே, காட்டி நிற்கின்றனர். வெகு சிலபாடல்களைத் தவிர ஏனையவை அனைத்திற்கும் கி.மு. 1000 முதல் 200வரை பற்பல காலங்கள் தரப்பட்டுள்ளது. வெல்கவுசன் (றுநடடாயரளநn)போன்ற விவிலியப் பேராசிரியர்கள், அதிகப்படியான திருப்பாடல்கள்பிற்காலத்தவை, ஏறத்தாழ எல்லாத் திருப்பாக்களுமே பாபிலோனியஅடிமைத்தளைக்குப் (கி.மு. 587) பிற்பட்டவை என்பர். மோவிங்கல்(ஆழஎiமெயட) என்பார் திருவிசைப்பாக்களின் பொற்காலம் கி.மு. 1000-600என்று முடிவு கட்டுவார்.

இவ்வேறுபட்ட முடிவுகளுக்குக் காரணம் தத்தம் ஆராய்ச்சியில் தாம்பின்பற்றும் வழிமுறைகளேயாம். (ஒருதலைச் சார்புப் பார்வை, தன் முன்முடிவுப் பாதை). திருவிசைப்பா ஆராய்ச்சியில் நாம் மனத்தினிலிருத்தவேண்டியது, இப்பாக்களுக்கு அடிப்படிவம் ஒன்றிருந்தது என்பதாகும்.எனவே நம் ஆராய்ச்சி, கையிலுள்ள வழிப்படிவங்களை நாடாது,அடிப்படிவத்திற்குச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான்காலவரையறையை ஒரு வழியாகத் திட்டமாகக் கூற முடியும். ஆய்வுநரில்பலர் வழிப்பிரதிகளோடு நின்று விடுதல் தவறு. இத்தவற்றைஉணர்ந்தோர் சிலர், பழங்கால செமித்திய, கானானிய மொழிகளின்ஆராய்ச்சி வழி, எபிரேய அடிப்பிரதியை ஒருவாறு காண முயன்று சிறிதுவெற்றியும் கண்டுள்ளனர். இவர்களின் முயற்சியால் திருப்பாக்கள்அனைத்தும் பிற்காலத்தவை என்ற முடிவு அறிஞர் உலகில் தற்போதுபழங்கதையாகிவிட்டது. இவ்வழியில் அரிய சேவை செய்துள்ளவரில்ஒருவராக (சிறப்புடையவராக) மறைத்திரு தாகுது (ஆ. னுயாழழன. ளு.து.) என்பவரைக் கூறலாம். திருப்பா அறிஞர் உலகிலே இன்று ஒரு புதுத்திறனாய்வைத் தூண்டிவிட்ட பெருமை இவரையேச் சாரும். இவருடையபல துணிந்த முடிவுகளை ஆய்வுநருலகிற் சிலர் ஏற்றுக் கொள்ளத்தயங்கினும், இவரின் முடிவுகளும், ஊகங்களும் திருப்பாத்திறனாய்வில்வருங்காலத்தில் அசை போடுவதற்கு மிகவும் உதவும்.

அறிஞர் தாகுதின் ஊகப்படித் திருப்பாக்களில் பல, பாபிலோனியஅடிமைத்தளைக்கு (கி.மு. 587)முற்பட்டவை. அவற்றில் சிலதாவீதரசனின் காலத்தில் (கி.மு.1000-960) இயற்றப்பட்டிருக்கவேண்டும். இக்கூற்றுக்குச்செமித்திய மொழி இலக்கியமுறைப்படி தகுந்த ஆதாரங்கள்காட்டி ஆசிரியர் நிறுவுகிறார்.கி.மு. 3-2 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மொழிபெயர்ப்பாளர்பலர் செமித்திய மொழி மரபுகளை அறியாமையினாலேதான் நம் கிரேக்கமொழிபெயர்ப்பில் பல தவறுகள் உளதாகத் தகுந்த மேற்கோள்களுடன்இவர் விளக்குகிறார். கிரேக்க மொழி பெயர்ப்பிற்கும் (கி.மு. 3-ஆம்நூற்றாண்டு). எபிரேய மூலத்திற்கும் (கி.மு. 1000-600) இடையே உள்ளகால இடைவெளியே அம்மூலத்தின் மரபுகளை மொழி பெயர்ப்பாளர்அறிய முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டது. எனவே தான்வேறுபாடுகள், தவறான பெயர்ப்பு முதலியன ஏற்பட்டுவிட்டன என்பதும்ஆசிரியரின் துணிபு.

பொதுவிலே, திருப்பாக்கள் காலவரையறையின்றி யூத மக்களின்வாழ்வோடு கலந்து வாழ்கின்றன எனலாம். எனவே அவற்றைக்காலத்தால் மிகவும் முற்பட்டனவென்றோ பிற்பட்டனவென்றோதிட்டமாகக் கூற முடியாது. கீழ்வரும் பட்டியலில் ஆய்வுநர் பலரால்பாபிலோனிய அடிமைத் தளைக்கு முற்பட்டன அல்லது பிற்பட்டன என்றுமுடிவு செய்யப்பட்டவற்றைத் தருகிறோம். அடைப்புக் குறிகளில்காணப்படுவன சிலரால் முற்பகுதியிலும், சிலரால் பிற்பகுதியிலும்சேர்க்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் குறிக்கப்படாதன பற்றி அறிஞர்உலகில் யாதொரு தீர்க்கமான முடிவும் அமையவில்லை.

பபிலோனிய அடிமைத்தளைக்கு முன் எழுதப்பட்டவை
7; 12; 18; 20; 21; 29; 36; 42; 43; 45; 47; 50; 52; 68; 78; 99; 101;108; 104; (2); (4); (16); (51); (60); (72); (76); (80); (82); (83); (89); (93);(110);

பபிலோனிய அடிமைத்தளைக்குப் பின் எழுதப்பட்டவை
1; 8; 19; 23; 25; 31; 32; 33; 34; 37; 46; 48; 65; 74; 75; 77; 79; 85; 86; 90; 96; 97; 98; 100; 102; 103; 106; 109; 111; 115; 116; 118; 119;122; 123; 125; 126; 128; 132; 135; 137; 143; 145; 146; 148; 149; 150;(2); (4); (16); (51); (60); (72); (76); (80); (82); (83); (93); (110);

மேற்கூறிய விளக்கங்களிலிருந்து திருப்பாக்களின் ஆசிரியர்(கள்)பற்றி எத்தனை ஐயப்பாடுகள் இருந்தனவோ, அத்தனையும் அதற்குமேலும் அவற்றைக் காலவரையறைப் படுத்துவதில் உள்ளது என்பதைநாம் அறிதல் வேண்டும். இலக்கிய மன்னன் தாவீதினால் விதைக்கப்பட்டவித்து முளைத்து வளர்ந்து பூத்துக் காய்த்துப் பலன் தரப் பன்னூறுஆண்டுகள் ஆயின என்று மட்டும் உறுதியாகக் கூற முடியும்.

7. யாப்பு முறை

எபிரேய மொழியில், ஒரு குறிப்பிட்ட யாப்பு முறைப்படிசெய்யுளிலக்கியம் அமையவில்லை. குறட்பா, வெண்பா, அகவற்பாபோன்ற இலக்கிய மரபுகள் எபிரேய மொழியிலிருந்தாலும் அவைநுணுக்கமாகப் பின்பற்றப்படவில்லை என்பது ஆய்வுநர் முடிவு. அதேவேளையில் திருப்பா ஆசிரியர்கள் இந்த யாப்பு மரபுகளை முற்றும்பின்பற்றவில்லை என்றும் கூறமுடியாது. அடியையே அளவாகக்கொண்டு ஒவ்வோர் அடிக்கும் 2,3 அல்லது 4 ஒலியழுத்தங்களைக்கொடுத்துப் பாக்கள் இயற்றினர். தமிழ், ஆங்கில இலக்கியங்கள் போலஅசைகளின் எண்ணையோ அல்லது இலத்தீன் இலக்கியம் போலஅளவுகளையோ பின்பற்றாது ஒலியழுத்தமே துணையாகக் கொண்டுஇப்பாக்கள் இயற்றப்பட்டன. பழைய மொழிபெயர்ப்பு அவ்வளவு சிறப்பாகஅமையவில்லை. எடுத்துக்காட்டுகள்:

"அவர்களது- வாயில்- ஆசிமொழி;அவர்களது- உள்ளத்திலோ- சாபமொழி” (3 ஒலியழுத்தம்) (62:4)

"இளைஞரே-கன்னியரே-முதியோரே - மற்றும் சிறியோரே நீங்கள் எல்லாரும்-ஆண்டவரைப்- போற்றுங்கள்''(2 ஒலியழுத்தம்) (148:12)

"நேர்மையாளரின்-நெறியை ஆண்டவர்-கருத்தில் கொள்வார்பொல்லாரின்-வழியோ அழிவைத்- தரும்” (4 ஒலியழுத்தம்) (1:6)

"என் தந்தையும்- தாயும்- என்னைக் கைவிட்டாலும்- ஆண்டவர்என்னை- ஏற்றுக்கொள்வார்” (குறள் முறை 27:10)

"மனிதர்- தம் மேன்மையிலேயே- நிலைத்திருக்க-முடியாதுஅவர்கள்- விலங்குகளைப்- போலவேமாண்டழிவர்” (குறள் முறை 49:20)

"கடவுளே! உமது கோவிலின்-நடுவில்உம் பேரன்பை-நினைந்து-உருகினோம்” (3,4 ஒலியழுத்தம் 48:9)

இவ்வாறு ஒரு பாடல் முழுவதும் ஒரு குறிப்பிட்ட ஒலியழுத்தமுறையை எபிரேயர் பின்பற்றுதல் கிடையாது ஒரே பாடலிலே பாய்ந்துசெல்லும் நீரோட்டம் போலத் திடீரென்று 3 ஒலியழுத்தம் 2 ஆகவும் வேறுவகையாகவும் மாறல் உண்டு.

எனினும் ஒலியழுத்த மரபைவிட எபிரேய இலக்கிய ஆசிரியர்(திருப்பா ஆசிரியர்களும்) இணை வரை மரபை (Pயசயடடநடளைஅ) மிகவும்பின்பற்றினர் என்பது திருப்பாக்களிலிருந்து புலனாகிறது. இவ்விணைவரை மரபு, நேர் முறையாக (ளுலழெலெஅழரள) அல்லது எதிர் முறையாக(யுவெiவாநவiஉ) அமையலாம். இவ்விணைவரை மரபுகளைத்திருப்பாக்களைப் பாடிய புலவர் பெருமக்கள் மிகவும்பயன்படுத்தியுள்ளனர். பாடல்களுக்கு எழிலும், நயமும் தருவன இவையேஎன்றால் மிகையாகாது.

1) நேர்முறை இணைவரை மரபுக்குச் சில எடுத்துக் காட்டுகள்:
'என் இதயம் அக்களிக்கின்றது என்உள்ளம் மகிழ்ந்து துள்ளுகிறது' (16:9)
"செருக்குற்றோரின் கால் என்னை நசுக்க விடாதேயும்பொல்லாரின் கை என்னைப் பிடிக்க விடாதேயும் (36:11)
"பொல்லார் கருவிலிருந்தே நெறிதவறிச் செல்கின்றனர்பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர் (58:3)

ஈண்டு இரண்டாம் வரி, முதல் வரியின் கருத்தையே வேறு சொற்களில்கூறல் காண்க.

2) எதிர்முறை இணைவரை மரபுக்கு எடுத்துக்காட்டுகள் சில:
"நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்” (1:6)
"ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியைஅறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றியஅறிவை வழங்குகின்றது (19:2)
"செழிப்பான நிலத்தை உவர் நிலமாக்கினார்பாலை நிலத்தையோ நீர் தடாகமாக மாற்றினார்'' (107:34-35)

ஈண்டு இரண்டாம் வரி முதல் வரிக்கு எதிரான கருத்தைக் கூறி,முதல் வரியின் கருத்தை முழுமை பெறச் செய்கிறது.

3) நேர்முறை இணைவரைச் சொற்கள்:
"உமக்கு நன்றி செலுத்துகின்றோம், கடவுளேஉமக்கு நன்றி செலுத்துகின்றோம்” (75:1)
"நான் படுத்திருக்கையில்.. இரா விழிப்புக்களிலும்” (63:6)
"நேர்மையாளர் ... நேரிய உள்ளத்தோர்” (64:10)4)

4) எதிர்முறை இணைவரைச் சொற்கள்:
"நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்'' (3:5)
"பொல்லா பாதாளத்திற்கேச் செல்வர் . . .வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை'' (9: 17-18)
"தீமையினின்று விலகு; நல்லது செய்'' (37:27)
"கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ . . .பாலைவெளியிலிருந்தோ, மலைகளிலிருந்தோ....''(75:6)

நூற்றுக்கணக்காக இவ்வாறு மேற்கோள்களைக் காட்டிச்செல்லலாம். திருப்பா இயற்றிய புலவர் பெருமக்களின் மன நிலையையும்,அவர்களின் இலக்கிய நுண்மையையும், புலமையையும்,இயற்கையறிவையும் இவை காட்டிச் செல்வது உணரற்பாலது.

8. திருப்பாக்களின் இறையியல்

காலத்தாலும், கருத்தாலும், இலக்கிய அமைப்பாலும் இயற்றியோர்வேறுபட்டாலும் திருப்பாக்கள் பல்வகைப்பட்டனவாதலின்,இவையனைத்திற்கும் பொதுப்பட்ட இறையியலைப் பிரித்தெடுத்துக்கூறல் எளிதன்று. இஸ்ரயேலர் கண்ட கடவுள், மனிதன், உலகம்,மறுவுலக வாழ்வு, கடவுள்-மனிதத் தொடர்பு, இன்னோரன்ன தத்துவஉண்மைகள், அவர்களின் வாழ்வுச் சூழலிலே பெறும் திருப்பங்கள் -இவை காலத்திற்கேற்ப மாறுபட்ட தன்மையன. எனினும், இஸ்ரயேலர்சமூகத்தின் மறையனுபவ முதிர்ச்சி இப்பாடல்களில் வெளிப்படுதலாலும்,அனைத்துப் பாடல்களும் ஒரே கடவுளாகிய வரலாற்றின் ஆண்டவரைநோக்கி, எழுப்பப்படுதலாலும் பரந்துபட்ட முறையிலே, இஸ்ரயேலரின்இறையியலை ஒருவாறு எடுத்தியம்பலாம்.

8.1. கடவுள்
இறைவன் ஒருவரே; அவர் தவிர வேறு ஓர் இறைவனே கிடையாது(18:31; 83:18, 135:15-17). எனவே, பிற இனத்தார் வழிபடும் சிலைகள்கடவுளர் அல்லர் என்பது இஸ்ரயேலரின் அசைக்க முடியாத துணிபு.அதே வேளையில் தமக்குப் போன்று ஏனையோருக்கும் கடவுள்இருப்பதாகவும் நம்பினர். எனவேதான் "அவர்களுடையதெய்வச்சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதகைவேலையே'' அவற்றிற்கு "மூச்சில்லை'' (115:4-6; 135:15-17) என்றுபாடியவர்கள், "ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள்அனைத்திற்கும் மேலான பேரரசர்”. ஆனால் ஒரு வேறுபாடு; பிறருக்குத்தெய்வங்கள் இருக்கலாம் இருப்பினும் "உயர்வற உயர்நலம்உடையவரும்; அயர்வரும் அமரர்கள் அதிபதியுமான'' (திருவாய்மொழி)தங்கள் ஆண்டவருக்கு அவ்வனைத்துத் தெய்வங்களும் கீழ்ப்பட்டனவேஎன்பது இவர்களது தேர்ந்த நம்பிக்கை (காண் 95:3; 135:5). எனவேதான்அனைத்து மக்களும் இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவரைத்தாள்பணிய வேண்டுமென்று அவர்கள் பிறமக்களுக்கு அழைப்புவிடுக்கின்றனர் (22:27; 24:1). மேலேகூறப்பட்டவற்றிலிருந்து இஸ்ரயேலரின்கடவுட்கோட்பாடு வளர்ச்சியும், திருப்பாக்கள்காலத்தால் வேறுபட்டன என்பனவும்புலனாகின்றன.

இறைவனது செயல்கள் பற்றிப் பேசும்போதுஇஸ்ரயேலர் அவருக்கு மனிதவியல்பு சார்த்திப்பேசினர் (யுவொசழிழஅழசிhளைஅ). மனித குணநலன்களும், பண்புகளும் கடவுள் மேல் ஏற்றிக்கூறப்பட்டன. எனவே திருப்பாக்களில் - இறைவன்நகைப்பார் (2:4) கடும்சினம் கொண்டெழுவார் (18:7)உறங்குவார், விழித்தெழுவார் (35:23), போர்புரிவார், அம்புகொண்டெய்வார் (18:14). மிகவும் நெருங்கிய முறையிலே பாடகர்,இறைவனை உரிமையோடு விளிப்பார்: இறைவா "உற்றுக்கேளும்,செவிசாய்த்தருளும்'' (17:1), "உம் பார்வையைத் திருப்பிக் கொள்ளாதேயும்(143:7), "எழும்புவீராக'' (7:6), "ஆண்டவரே எதுவரை? எத்துனை நாள்?எவ்வளவு காலம்?'' (13:1-2), "ஏன்''? (21:1), "என்ன?'' (39:7), "எங்கே?''முதலியவற்றைக் காண்க. இவை ஒருவேளை பழக்கப்பட்ட வழக்குமுறைகளாயிருக்கலாம் (ளுவநசநழவலிந கழசஅரடயந), அல்லது ஆண்டவரின்மேல் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடாயுமிருக்கலாம்.

திருப்பாக்கள் பல கோணங்களில் இறைவனைப் படம் பிடித்துக்காட்டுகின்றன. அவற்றில் சிறப்பிடம் பெறும் ஒரு சில பற்றி, ஓரிரு சொல்.

1) இரங்கும் இறைவன்
கருணைமிக்கவர். "அவரை நோக்கி மன்றாடும் அனைவருக்கும்பேரன்பு காட்டுபவர்” (86:5); கழ்?து கொள்பவரல்லர், என்றென்றும்சினங்கொள்பவரல்லர் (103:8, 9); இரக்கமும் கனிவும் உடையவர் (145:8-9); பேரன்பு உள்ளவர் (136:3) என்று பற்பல சொற்களாலே இறைவனின்அடிப்படைக் குணங்களாகிய நிறைந்த அன்பையும் (hநளநன-ளவநயனகயளவ டழஎந) நிலைதவறா வாக்குறுதிகளையும் (நஅநவா-கனைநடவைல) திருப்பாக்கள்வெளிக் கொணர்கின்றன. 136-ஆம் பாடல் ஆண்டவரின் இவ்விரக்கக்குணத்தை "என்றும் உள்ளது அவரது பேரன்பு'' என்று அடிக்கொருமுறை பல்லவியாகப் பாடிப் பரவுகிறது.

2) மீட்கும் கடவுள்
துன்பத் துயரங்களிலிருந்தும் நோய் நோக்காடுகளிலிருந்தும்எதிரிகளிடமிருந்தும் விடுதலையளிப்பவர் இறைவனே. சிறப்பாக எகிப்தியஅடிமைத்தளையிலிருந்து மீட்பளித்த இறைவன் பல பாடல்களில்ஏத்தப்படுகிறார். "நம் மீட்பளிக்கும் கடவுள்'' (68:20) என்றுஇறைவனையேத்தி, "கடவுளே, என்னைக் காப்பாற்றும்'' (69:1);"ஆண்டவரே, காத்தருளும்'' (121) "நீரே என் கற்பாறை. என் அரண், என்மீட்பர்'' என்று பாடகர்கள் இறைவனை விடுதலை வீரனாகக்காண்கின்றனர். உடுக்கையிழந்தவன் கைபோல, உற்றுழி உதவிடும்உறவினர் (ழுழ்ட) என அவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துவேண்டுகின்றனர்.

3) வரலாற்றின் நாயகன்
வரலாற்றின் எழுச்சிகளும் இறைவனின் கையிலேயே உள.வரலாற்றைச் சமைத்து, வருடத்தின் கணக்காகி, அதை நடத்திச்செல்பவன் அவ்விறைவனே. எதிரிகள் அழிவதும், இறைமக்கள்வாழ்வதும் இறைவனாலேயே (44:1-3) என்ற ஆழ்ந்த நம்பிக்கைதிருப்பாக்களில் வெளிப்படுகிறது. மிகவும் சிறப்பான முறையிலே திபா 105;106 முதலியன இஸ்ரயேல் தம் வரலாற்றில் ஆண்டவன் புரிந்தநற்செயல்களைப் படமெடுத்துக் காட்டுகின்றன. எகிப்திய அரசனாகியபார்வோனிடமிருந்து இறைமக்களை இறைவன் விடுவித்ததுஇப்பாடல்களில் வரலாற்றுப் பாணியில் விளக்கமுறுகிறது. வரலாற்றுவழியில் இறைவன் தம் மக்களின் எதிர்ப்படுகிறார். அதே வரலாறு வழிஇஸ்ரயேலரும் தம் இறைவனை எதிர்ப்படுகின்றனர், இறைவனையும்மக்களையும் திருவரலாற்று நிகழ்ச்சிகள் வழி இணைக்கும் பாலமாகவரலாற்று திருப்பாக்கள் காட்டிச் செல்கின்றன.

4) இயற்கையின் ஆண்டவன்
உலகமும் அதிலுள்ள யாவும் ஆண்டவன் கையிலிருந்துதான்உயிரும் வாழ்வும் பெறுகின்றன. "மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும்ஆண்டவருடையன'' (27:1); வானங்களும், விண்மீன்களும், நிலவும்அவருடையன (8:3) ஆடு மாடுகள், எல்லா வகையான காட்டுவிலங்கினங்கள் அவருடையன (8:7); வானத்துப் பறவைகளும் கடலின்மீனினங்களும் அவருடையன (8:8); ஆழ் பகுதிகளும், உயர் மலைகளும்அவருடையன.(148:7-10).இவ்வாறு இயற்கை முழுவதும் இறைவனுக்குக் கீழ்ப்பட்டு அவர்அடிபணிந்து நிற்கிறது (104). பிற இன மக்களும், பிறநாட்டவரும்இயற்கையையே கடவுளாகக் கண்டு. "அனைத்தும் நீ, அனைத்தின்உட்பொருளும் நீ'' (பரிபாடல்) என்று கையெடுத்து வணங்கியபோது.இஸ்ரயேல் மக்கள் மட்டுமே இயற்கையை இறைவனின் கைத்திறனாகக்கண்டனர்; இறைவனை இயற்கையின் முதற்காரணமாகக் கண்டனர்.

5) வாழும் வள்ளல்
ஓரிறைக் கோட்பாடு (ஆடிnடிவாநளைஅ) சீர்பட்டு வளர்ச்சியடையும்முன்னரே இஸ்ரயேலர் தம் கடவுளை வாழும் கடவுளாகக் கண்டனர் (1அர17:1) கடவுள் வாழ்பவர் மட்டுமன்று, பிறருக்கு வாழ்வு கொடுப்பவருமாவார்(86:242:22), "உயிரளிக்கும் இறைவனுமாவார். எனவே "வாழ்வு தரும்ஊற்று உம்மிடமே உள்ளது'' (36:9); "வாழ்வளிப்பவர்'' நீர் (86:2)என்றெல்லாம் பாடிப் பரவினர். வாழ்வின் முழுமையான இறைவனின்முன் தம் நிலையற்ற தன்மையையும், வெறுமையையும் ஒப்பிட்டுக்கண்டனர் (90:'-6). தங்கள் வாழ்வின் அடிப்படையாக இறைவனைக்கண்டு ஏத்தினர்,

6) தூய்மையின் இருப்பிடம்
தூய்மையென்பது விவிலியத்தில், வாழ்வளிக்கும் வலிமையைச்சுட்டும், கடவுளின் "திருப்பெயர் புனிதமானது; வணங்குதற்குரியது'' (111:9;99:3), ஏன். கடவுளே புனிதம், புனிதமே கடவுள் என்று கூடக் கூறலாம்."படைகளின் ஆண்டவர் தூயவர். தூயவர், தூயவர், மண்ணுலகம்முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது'' (எசா 6:3) எனஇசைக்கப்படும் ஆண்டவர், தந்தை எவ்வழி தனயன் அவ்வழியென,நாமும் புனிதமாக வாழ வேண்டுமென்று விரும்புகிறார். கடவுளின்தூய்மை அவருடைய தனித்தன்மையையும் எடுத்துக்காட்டுதல் காண்க:

8.2. மனிதன்
மனிதனைப் பற்றி எண்ணும்போது முதன்முதல் பாடகர்கள்மனத்தில் தோன்றுவது மனிதனின் ஒன்றுமில்லாமையும், அதேவேளையில், அவனுடைய மகிமையுமாகும். "மனிதப் பிறவியை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்''(8 : 5-8) என்றும்"ஒருவர் தன் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது; அவர்விலங்குகளைப் போலவே மாண்டழிவார்''(49:12) என்றும்; "மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்குநிகரானவை'' (144:4) என்றும் "மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது;வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள்''(103:15) என்றும்,மனிதனின் ஒன்றுமில்லாமையைப் பாடும் திருப்பாக்களே, "அவர்களைகடவுளாகிய உமக்கு சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர். மாட்சியையும்மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளார். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்'', உம் படைப்புகள்அனைத்தின் மீதும். அவனுக்கு அதிகாரம் தந்தீர்; அனைத்தையும்அவனுக்குக் கீழ்ப்படுத்திருநுர்... (8:5-6) என்றும் அவன் மகிமையையும்மாட்சியையும் பாடுவதையும் காண்க:

1) சமூகப் பிறவி (ளுழஉயைட டிநiபெ)
"மனிதன் ஒரு சமுகப் பிராணி'' என்பதற்கேற்ப இஸ்ரயேலர் தனிமனிதனைச் சமுக உறுப்பாகவே கண்டனர். சமுதாயத்தில்சமுதாயத்திற்காக வாழும் மனிதனைச் "சமுக ஆளுமையோன்''(ஊழஅஅரnவையசயைn Pநசளழயெடவைல) என உருக்கொடுத்தனர். பழைய ஏற்பாடுமுழுமையிலும், சிறப்பாகத் திருப்பாக்களிலும் இக்கருத்துபரவிக்கிடக்கிறது. எனவேதான் புலம்பற் பாடல்களில் மனிதன் தன்தனிமையை நினைத்து அழுவதாகக் காட்டுகின்றனர், "என் நண்பர்களும்தோழர்களும் நான் படும் வாதை கண்டு விலகி நிற்கின்றனர். என்உறவினரும் என்னை விட்டு ஒதுங்கிநின்றனர்” (38:7-11) என்று இனம் பிரிந்தமானாக, தனிமையால் வரும்துயரத்தைச் சுட்டுகின்றனர். மாறாக,மனிதன் மகிழ்வுறுவதேசமுதாயத்தில்தான் என்பதையும் காட்டிச்செல்கின்றனர். "மாபெரும் சபையில்உமக்கு நன்றி செலுத்துவேன். திரளானமக்களிடையே உம்மைப் புகழ்வேன்''(35:18). "உமது பெயரை என்சகோதரருக்கு அறிவிப்பேன்' (22:22)என்பன போன்ற கூற்றுகள் மனிதன்தனித்தீவு அல்ல - அவன் சமுதாயத்தோடு பிணைப்புக் கொண்டுள்ளவன்என நன்கு எடுத்துக் காட்டுகின்றன.

2) இறைவன்பால் ஏக்கம்
மனிதன் தான் சொன்ன சொல் தவறினாலும் இறைவன் தம்வாக்குறுதிகளில் தவறமாட்டார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடுஆண்டவரை நாடுகிறான். "கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித்தவிப்பது போல கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது''(42:1) அவனும் ஆண்டவருக்கு ஏங்குகிறான். "நீரின்றி வறண்ட தரிசுநிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது'' (63:1) அவனும்இறைவன் மீது வேட்கை கொள்கிறான். அதுமட்டுமன்று, இறைவனைப்பற்றிக் கொள்ள விரும்புகிறான், அவரைச் சார்ந்து கொள்கிறான் (63:81).ஆனால் அவன் ஆண்டவரை நெருங்கும் அதே வேளையில் "நானெனும்ஈனப் பாழ்நிலையான'' (தாயுமானவர்) தன் பாவ நிலையையும் உணரத்தவறுவதில்லை. "எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம்மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர்'' (32:1) "என் குற்றங்கள்தலைக்குமேல் போய்விட்டன. தாங்கவொண்ணாச் சுமைபோல அவைஎன்னை வெகுவாய் அழுத்துகின்றன'' (38:4); "உமக்கு எதிராக நான்பாவம் செய்தேன். உம் பார்வையில் தீயது செய்தேன்.'' (51:3-5) முதலியசொற்கள் இறைவன் முன்னர், மனிதனின் இழித்தன்மையைத்தெளிவாக விளக்குகின்றன.

எனினும். பாவமே உருவெடுத்த இம்மனிதன். தான் நீதிமானாகமாறுவதற்கு ஏங்குவதையும் திருப்பாக்கள் தெளிவுறுத்துகின்றன."ஆண்டவரே. உம் கூடாரத்தில் தங்கிட தகுதியுள்ளவர் யார்? உமதுதிருமலையின் குடியிருப்பவர் யார்?'' (15:1; 24:3) என்று பாடகர்கள்ஏக்கமுறுவதைக் காண்க. அதே வேளையில் ஆண்டவருடைய நீதியைத்தியானிப்பதிலும். ஆண்டவரை ஏத்திப் போற்றுவதிலும் மனிதன் தன்இன்பத்தைக் காண்பதாகவும் திருப்பாக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

3) சாவு, உயிர்ப்பு, நீடித்த வாழ்வு
பொதுவாக இஸ்ரயேலர் மனித உயிர்ப்பிலே நம்பிக்கைகொண்டிருக்கவில்லையென்றுதான் கூறவேண்டும். புலம்பல்திருப்பாக்கள்கூட இவ்வுலக வாழ்வின் துயரங்களிலிருந்து விடுதலைபெறுவது பற்றியும் இவ்வுலகில் உடல்நலம், வலிமை, மகிழ்ச்சி வாழ்வுபற்றியும்தான் பாடுகின்றனவேயொழிய மறுவுலக உயிர்ப்பு வாழ்வுபற்றியோ. சாவுக்குப் பின் மீட்புப் பற்றியோ பேசுவது கிடையாதுஎன்றுதான் கூறலாம் என்பது பல ஆய்வுநர்களின் முடிவு.ஆனால், அறிஞர் தாகுது, திருப்பாக்களில் பரவி வரும் பலசொற்கள், சொற்றொடர்களைக் கானானிய இலக்கியங்களில்காணப்படும் சொற்களோடு ஒப்பிட்டு, திருப்பாக்களில் (பிற்காலத்தியத்திருப்பாக்களில் இது திண்ணம்) "மறுவுலக வாழ்வு'' பற்றிய நம்பிக்கைஇருந்துள்ளது என்று எண்பிக்கிறார். "அல்லது வராது. உள்ளதும்போகாது'' என்பது ஆன்றோரின் கருத்து. எனவே அவர் கூறும்காரணங்கள் நம்பத் தகுந்தவையாகவே உள்ளன.

3.1) வாழ்வு (ர்யலலi)
இச் சொல் எதிர்கால, மறுவுலக வாழ்வையே சுட்டுகிறது.ஏனெனில் இவ்வாழ்வு "நிறைவான மகிழ்ச்சி உண்டு, எப்போதும்பேரின்பம் உண்டு''(16:11). "முடிவில்லா நீண்ட ஆயுள்'' (21:4)'ஆண்டவரின் நலன்களைக்''கொண்டுள்ள வாழ்வு (27:13), 'வாழ்வுதரும்ஊற்று'' (36:9). சாவினின்று காப்பளிக்கும் வாழ்வு (56:13) எனக்கூறப்படுகிறது. ஆதலின் இது சுட்டுவது என்றென்றும் அழிவுறாதமாறுதலற்ற வாழ்வாகும்.

3.2) சந்ததி (யாயசவை)
இச்செல்லும் எதிர்கால, இறுதிக்காலத்து வாழ்வைச் சுட்டும்(நளஉhயவடிடடிபiஉயட). "அமைதியை நாடும் அம்மனிதருக்கு வழிமரபினர்இருப்பர்'' (37:37) கூடோடு கைலாயம் செல்லட்டும் என்பது போல''அவன் வழிமரபு அடியோடு அழியட்டும்'' (109:13) என்று பாடகர்வேண்டும்போது அவனுக்கு முடிவில்லா வாழ்வு கிட்டாதிருக்கட்டும்என்றுதான் வேண்டுகிறார். சந்ததி என்ற சொல் கடைசி நாளைப் பற்றியநம்பிக்கையேயாகும் (நீமொ 23:18; 24:14).

3.3) விருந்து ( மiடிடிநன )
மறு உலக வாழ்வை நம் ஆண்டவரே விருந்துக்கு ஒப்பிட்டுக்கூறியிருப்பதை நற்செய்திகளில் காணலாம் (லூக் 14:16-24 மத் 22:2-10) திருப்பாக்களிலும் இக்கருத்து காணப்படுகிறது. "என்னுடையஎதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்''(23:5). "எளியோர் உண்பர், நிறைவு பெறுவர்'' (22:26) முதலியன கடைசிக்காலத்தில் வரவிருக்கும் மெசியா - திருவிருந்தைக் குறிப்பனவாகும்.

3.4) காட்சி (ர்யணயா)
ஆண்டவரை, அவரது மாட்சியைக் கண்கொண்டு காண்பதுஎன்பது புனிதர் மறுவுலகில் வாழும் முடிவற்ற வாழ்வைக் குறிக்கும்பாடகர்கள் பலவிடங்களிலே "திருமுன்'', "காட்சி'' "பார்வை” "உம் முகம்”என்ற சொற்களால் இவ்வெதிர்கால முடிவற்ற வாழ்வைச் சுட்டுகின்றனர்எனலாம். "உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்கச் செய்தீர்''(21:6). "நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன் ... உம்உருவம் கண்டு நிறைவு பெறுவேன்'' (17:15), "வாழ்வோரின் நாட்டினிலேஆண்டவருடைய நலன்களைக் காண்பேன்'' (27:13) முதலிய பகுதிகளைக்காண்க.

மேற்கூறியவற்றாலும், பிற எடுத்துக்காட்டுகள் வழியாகவும் அறிஞர்தாகுது திருப்பாக்களில் மறுவுலக வாழ்வும் அதைப் பற்றிய நம்பிக்கையும்வெளிப்படுவதாகக் காட்டுகிறார்.திருப்பாக்களில் பலவிடங்களில் சாவிலிருந்து மீட்பும் விடுதலையும்இவ்வுலக வாழ்வுப் பாணியிலேயே பேசப்படுகின்றன என்றாலும் (காண்9:13,16, 17:30; 86:13) புதிய ஏற்பாட்டின் இறைவெளிப்பாட்டுவளர்ச்சியிலே இவற்றிற்கு நாம் முதிர்ந்த முழுப்பொருள் அளிப்பதில்தவறேதுமில்லை. எதிர்காலம் பற்றிய கிறிஸ்துவனின் நம்பிக்கைஓரளவாவது இத்திருப்பாக்களில் வெளிப்படுகின்றது என்று கூறலாம்.

9. திருப்பாக்களும் பாரம்பரியமும்

முதலில் இத்திருப்பாக்கள் யாவும் இயேசுவை அழைக்கின்றன்இயேசுவில் முற்றுப் பெறுகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.இயேசு தம் இறுதி அறிவுரையிலே "மோசேயின் சட்டத்திலும்இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றிஎழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான்உங்களோடு இருந்தபோதே உங்களுக்கு சொல்லியிருந்தேன்'' என்றுகூறிப் போந்தார். (லூக் 24:44; மத் 21:16) "மறை நூலை ஆய்ந்துபார்க்கிறீர்கள் ... அம் மறை நூலும் எனக்கு சான்று பகர்கிறது'' என்றும்அதே இயேசு பார்க்கிறார் (யோவா 5:39). எல்லாம் புதிய உடன்பாட்டிலேநூற்றுக்கு நூறு கிறிஸ்துவுக்குப் பொருந்தியமைகின்றன என்பதைமுன்னரே கண்டோம்.

இயேசுவே இப்பாடல்களைச் செபித்ததாகவும், பயன்படுத்தியதாகவும் புதிய உடன்பாட்டிலே காணக்கிடக்கிறது.

"தந்தையே, உம் கையில் உயிரை ஒப்படைக்கிறேன்'' (லூக் 23:46-திருப்பா 31:5)

"கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல்ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இதுவியப்பாயிற்று'' (மத் 21:42- திருப்பா 118:22-23).

"இப்பொழுது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்னசொல்வேன்?” (யோ 12 : 27- திருப்பா 8:2)

"ஆம்! பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும்உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர்'' (மத் 21:16- திருப்பா 8 : 2)

புதிய உடன்பாட்டு ஆசிரியர்கள் மிகப் பரந்த அளவிலேதிருப்பாக்களைப் பயன்படுத்துகின்றனர் (112 முறை) சிலமேற்கோள்களைக் காண்க.

திருத்தூதர் பணி 4:25-26 - திருப்பா 2:1-2
எபேசி 4:26 - திருப்பா 4:4
உரோமர் 8:27 - திருப்பா 7:9,
எபிரே 5:6; 7:17 - திருப்பா 110:4
திருவெளிப்பாடு 4:9-10; 6:16- திருப்பா 47:8.

திருச்சபையின் தந்தையர் அம்புரோசு, அகுஸ்தீன், இரேனியுசு,தெர்த்துல்லியன், யுஸ்தீன் முதலியோர் இத்திருப்பாக்களுக்கு முழுக்கமுழுக்க இயேசுவின் பின்னணியிலே கிறிஸ்துவ விளக்கம்கூறியுள்ளதும் உணரற்பாலது. புனித அம்புரோசு, "திருவிசைப்பாடல்களிலே கிறிஸ்து நமக்காகப் பிறக்கிறார், துன்புறுகிறார்,கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார், உயிர்த்தெழுகிறார்,விண்ணுலகுக்கு உயர்ந்து செல்கிறார், தந்தையின் வலப்பக்கம்வீற்றிருக்கிறார்'' என்று நம் மீட்பு வரலாறு முழுமையும் திருப்பாக்களில்இலை மறைக்காயாக அடங்கியுள்ளமையை விளக்குகிறார்.பிறதந்தையரும் பன்முறைத் திருப்பாக்களைக் காப்புரை (யிழடழபல)யாகவும், ஆதார உரை (Pசழழக வநஒவ) யாகவும் தம் எழுத்துக்களிலேபயன்படுத்தியுள்ளனர்.

வழிவழியாகத் திருச்சபையும், கிறிஸ்துவப் பெருமக்களும்,திருப்பாக்களை மிகையாகவே திருவழிபாடு, செபப் புத்தகங்கள்முதலியவற்றில் பயன்படுத்தியுள்ளதை நம் கண்முன் நிலைநிறுத்தல்வேண்டும். 13 ஆம் நூற்றாண்டு தொடங்கி 16-ஆம் நூற்றாண்டு வரைவழக்கிலிருந்த செபப் புத்தகங்களில், அன்னையின் புகழ்மாலையும்,இறப்பு வேளைச் செபமும், புனிதர் வழிப்பாட்டுப் பாசுரமும், 15 பயணப்பாடல்களும் (120-134) தவப் பாடல்களும் (6;32; 38; 51; 102; 210; 143)பிறவும் இடம் பெற்றன. "திருப்புகழ் மாலை'' முழுவதுமே ஏறத்தாழத்திருப்பாக்களாலானதே எனலாம். 3- ஆம் நூற்றாண்டிலேதிருப்பாக்களுக்குக் கிறிஸ்துவத் தலைப்புகள் கொடுத்துத்திருவழிபாடுகளில் இவற்றைப் பயன்படுத்தினர் என்பதும்அறியக்கிடக்கிறது. இன்றைய திருப்பலியிலும் திருப்பாக்கள்பதிலுரைப்பாடலாயமைதல் உணரற்பாலது. "திருப்பாக்கள் கிறிஸ்துவப்பொருளுடையன. இவ்வுட் பொருள் ஏனோ தானோ என்ற முறையில்,நுனிப் புல்லாக அமையாது திருப்பாக்கள் ஒவ்வொன்றையும் ஊடுருவிச்செல்கின்றது'' என்பார் நியுமன் அடிகளார், நாமும் பொருள்மிகுஇப்பாடல்களை, அருளளிக்கும் இவ்விலக்கியக் குவியலை, கிறிஸ்துவைவிளக்கி, கிறிஸ்துவில் முற்றுப் பெறும் இச்செபங்களை, நமதாக மாற்றி,அவற்றின் இலக்கிய இனிமையிலேயும், பக்தி நயத்திலேயும்திளைப்போமாக.

 

------------------------------------------
--------------------------
----------------
------
--
-