திருவெளிப்பாடு

முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர்

விவிலிய அன்பர்களே,
வணக்கம்.அஞ்சல்வழி விவிலியக ;கல்வியின் கடைசிப்பாடத்திற்கு வந்துள்ளோம்.திருவிவிலியத்தின் கடைசிநூலான திருவெளிப்பாடுபற்றி இந்தப்பாடத்தில்படிக்கவுள்ளோம்.புதிய ஏற்பாட்டு நூல்களிலேயே புரிந்துகொள்வதற்கு மிகவும்கடினமான நூல்திருவெளிப்பாடு என்ற எண்ணம ;பெரும்பாலான கிறித்தவர் மத்தியில் நிலவுகின்றது.இதுவும் தூயஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்ட ஒருநூல் என்னும் கருத்தையும்இன்றையச் சூழலில் நமது கிறித்தவ ஆன்மிகத்திற்கு இந்நூல் மிகுந்த நம்பிக்கையைஊட்டக்கூடியது என்னும் சிந்தனையையும் இப்பாடம் மிகவும் எளிய முறையில்விளக்கிச்சொல்கிறது.திருவெளிப்பாட்டு நூலில் பல ஆண்டுகள் ஆய்வுசெய்து முனைவர்பட்டம்பெற்றுள்ள நமது விவிலிய நிலையத்தின் முன்னாள் இயக்குநர்அருள்திரு. பீட்டர் அ. அபீர் அவர்கள் இந்தப்பாடத்தை எழுதியுள்ளார். ஆழ்ந்தபுலமையையும் உயர்ந்த எண்ணங்களையும் அறிஞர்களின் கூற்றுகளையும் ஆய்வின்முடிவுகளையும் மிகவும் எளிய தமிழில் வெகுசிறப்பாக இப்பாடத்தில் தந்துள்ளார்.அருள்தந்தை அவர்களுக்கு நமதுநன்றி கலந்த பாராட்டுக்கள்.நன்றி.

அன்புடன்
அருள்திரு. ஜோமிக்ஸ்
;இயக்குநர்.

உள்ளே

1. திருவெளிப்பாடு: புதிரான நூல்
2. யோவான் கண்ட காட்சி
3. புரியாத மொழிகள்
4. திருச்சபையின் சவால்கள்
5. இறுதியுகப் போர்
6. ஆசிரியர்
7. எங்கிருந்து? எப்பொழுது?
8. இறைவாக்கும் கடிதமும்
9. திருச்சபையின் சந்திப்புகள்
10. திருவெளிப்பாடு: மூலமும், அமைப்பும்

1. திருவெளிப்பாடு : புதிரான நூல்

கொம்புடன்குழந்தை! உலகை அழிக்கும் பேய்க் குழந்தை! என்றுஇன்றைய நாளில் பலர் பேசுகிறார்கள். வளைகுடா போர், கம்யூனிசசிதைவுபோன்ற சூழலில்உலக முடிவுபற்றிப் பலர் பேசி, எழுதி மக்களின்பயத்தில் பணம் சம்பாதிக்கின்றதையும் நாம் காண்கிறோம். 666 என்றபுதிரான எண்ணை பற்றி தவறாக எழுதியும் பேசியும் மக்களைக்குழப்புகிறார்கள். "1,44,000 பேரில் நீயும் ஒருவரா? அப்போது நீஇரட்சிக்கப்படுவாய்” என்று வேதப் போதகர்கள் சிலர் கூட்டத்தைக்கவர்ந்திழுக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் திருவிவிலியத்தின்இறுதி நூலான திருவெளிப்பாட்டு நூலில் வரும் ஒரு சில குறிப்புகளைத்தவறாகப் பயன்படுத்துவது மட்டுமல்ல, அந்த நூலைப் பற்றி நம்மில்பெரும்பாலோருக்கு ஒன்றுமே தெரியாததும் முக்கிய காரணம்.

வெளிப்படுத்தப்பட்ட நூலான அது நமக்கு மறைந்த நூலாகவேஉள்ளது. ஏன்இந்த நிலை?இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்:

(1) திருவெளிப்பாடுஎழுதப்பட்டுள்ள விதம் புரியாத மொழியாக உள்ளது. எடுத்தக்காட்டாக,ஏழு கொம்புகளும் ஏழு கண்களுமுடைய ஆட்டுக்குட்டி (5:6), இரத்தம்கலந்த கல்மழை (8:7), பெண்களின் கூந்தலையும் சிங்கத்தின்பற்களையும் கொண்ட வெட்டுக்கிளி(9:8), நீர்திரள்மேல் அமர்ந்திருக்கும்விலைமகள் (17:1) என்று இயல்புக்கு மாறான பல உருவங்கள்! தன்வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின் மீதுஇழுத்துப்போடும் அரக்கப் பாம்பின்அசுர செயல்கள்(12:4) என்றுபுதிரானமுறையில் எழுதப்பட்டுள்ளது. புனித நூலாக எடுத்து வாசிக்கும் நமக்குஅது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அதனைப் படிக்காமல்ஒதுக்கி விடுகிறோம்.

(2) ஆசியாவின்ஏழுதிருச்சபைகளுக்குகூறும் செய்திகளைத் (1:4-5) தவிர்த்து மற்ற அதிகாரங்களில் காணப்படும் முத்திரைகள்,எக்காளங்கள், வாதைகள் போன்ற செய்திகள் யாவும் நமது அன்றாடவாழ்வுடன் தொடர்புடையதாகத் தோன்றுவதில்லை என்று நினைத்து,பலர் இந்நூலைபடிப்பதில்லை. அதனால்இந்நூல்ஒதுக்கப்பட்ட நூலாகஉள்ளது.

இந்நிலைஇன்றுநேற்றுஉருவானதல்ல் திருச்சபையின்தொடக்ககாலம் தொடங்கி திருவெளிப்பாடு என்று இந்த நூல் பல சவால்களைச்சந்திக்க வேண்டியிருந்தது.திருநூல் தொகுப்பில் இறுதிநூல் இது. அவ்வாறே கடவுளின் தூயஆவியால் ஏவப்பட்டதாக திருச்சபை வரலாற்றிலும் இது இறுதியில்தான்ஏற்றுக் கொள்ளப்பட்டது.இத்திருவெளிப்பாடு முதன் முதலில் சிறிய ஆசியாவின் ஏழுதிருச்சபைகளுக்கு அளிக்கப்பட்டது. அப்போது அதனை அங்கேஎல்லாருமே ஏற்றுக் கொண்டனர் என்று சொல்ல முடியாது (2:2, 6, 14-15, 20-23).திருச்சபைத் தந்தையர் ஐஸ்டின்மார்டர் (கி.பி130), இரனேயுஸ்(கிபி177) மற்றும் சிறிய ஆசியாவின் சார்திஸ் என்ற இடத்தின் ஆயர்மெலித்தோ (கி.பி. 175) போன்றவர்கள்எல்லாம் திருவெளிப்பாடுஎன்னும்இந்நூல்கடவுளால்ஏவப்பட்டநூலாகஏற்றுப் பயன்படுத்திவந்தனர் என்றுதிருச்சபை வரலாறு கூறுகிறது.

இருப்பினும், இந்நூலின் புரியாத மொழிகளை ஆதாரமாகக்கொண்டு வேறு சில தந்தையர்கள் இதனை ஒதுக்கி வைத்தனர்.எடுத்துக்காட்டாக செசாரியா ஆயர் எவுசேபியஸ்(கிபி4 ஆம்நூற்றாண்டு),எருசலேமில் சிரில் (கிபி 315-385), கிறிசோஸ்தம் (கிபி 347-407) போன்றகீழைத்திருச்சபையின் தந்தையர்கள் இந்நூலை உடனே ஏற்கவில்லை.மேலும் சீரியா மொழி பெயர்ப்பான விவிலியத்தில் கி.பி. 500 வரைதிருவெளிப்பாடு இடம் பெறவில்லை. இத்தகைய தயக்கம் அன்றோடுமுழ்?துவிடவில்லை. கிபி 16-ஆம் நூற்றாண்டின் சமய மறுமலர்ச்சிக்காலத்தில் மார்டின்லூத்தர், கால்வின், ஸ்விங்கிலிபோன்ற அறிஞர்கள்கூடி இந்நூலைப் புனித நூலாக ஏற்பதில் தயக்கம் காட்டினர்.அதனால்தான் விவிலியத்தில்மற்ற எல்லா நூல்களுக்கும் விளக்கவுரைஎழுதிய மார்டின் லூத்தர் திருவெளிப்பாட்டை மட்டும் ஒதுக்கி வைத்தார்.இன்றும் கூட கிரேக்க ஆர்தடோக்ஸ்(ழுசநநம டிசவாடினடிஒ) கிறிஸ்தவவழிபாட்டு வாசக நூலில் திருவெளிப்பாடு இடம் பெறவில்லை.அதுமட்டுமல்ல, இயேசுவின் நற்செய்தி நூல்களையும், பவுலின்மடல்களையும் படித்து, கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு, இரக்கம் போன்றபண்புகளில் நிலைத்துவிட்டு, திருவெளிப்பாட்டு நூலுக்குச் சென்றால்அங்கே நமக்கு குழப்பங்களும், உள்ள நெறுடல்களும் வராமலில்லை.ஏனெனில், இந்நூலில் பாவ நகரமான பாபிலோன்மன்னிக்கப்படுவதில்லை. மாறாக மிகத் தீவிரமாகக் தண்டிக்கப்படுகிறது(18:6), கடவுள் பழிவாங்க வேண்டுமென்று வேதசாட்சிகள்வேண்டுகிறார்கள்(6:10), "தந்தையே இவர்களை மன்னியும்” என்ற(லூக்23:34) செம்மறியான இயேசுவின் முன்னிலையில் பாவிகள் எரிநெருப்பினாலும் கந்தகத்தாலும் தண்டிக்கப்படுகின்றனர் (14:10). ஆக,வன்முறைகளும் தண்டனைத ;தீர்ப்பும் ஒன்றன்பின் ஒன்றாக கடவுளாலும் அவரது மகன் இயேசுவாலும் நிகழ்த்தப்படும் காட்சிகள்திருவெளிப்பாட்டில் ஏராளம் (6:1-8; 8:7-9:21; 16:1-20). இவையாவும்இந்நூலைப் புரியாதப் புதிராகக் காட்டுவதுடன், நாம் எளிதாகஒதுக்கிவிடவும் செய்கின்றன.

ஆனால், ஆழ்ந்து நோக்கினால் இந்நூல் எழுந்த வரலாற்று சமூகசமயச் சூழலை ஆராய்ந்து பார்த்தால் இந்நூல் எழுதப்பட்ட விதம்,நோக்கம் கண்டால் - திருநூலின் மற்ற நூல்களைப் போன்று இதுவும்கடவுளின் வார்த்தைதான் என்பது தெளிவாகும். அதுமட்டுமல்ல,விவிலியத்தின் மற்ற எல்லா நூல்களுக்கும் திருவெளிப்பாடு ஒருநிறைவாக இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம்.

2. யோவான் கண்ட காட்சி
கி.பி. 95-ல்திருவெளிப்பாடு என்ற இந்த நூலையோவான்எழுதியபோது, அன்றைய நாளில்நிலவிய சமூக - சமய நெருக்கடிகள், அதனால்திருச்சபை அனுபவித்த வேதனைகள் - இவற்றைப் பின்னணியாகக்கொண்டு, ஆறுதலும் நம்பிக்கைச் செய்தியும் அளிக்க எழுதினார் என்பதுஉண்மையே. அப்படியெனில் அச்செய்தியை நேரடியாக எழுதவேண்டியதுதானே, எதற்காக, "நான்காட்சிகண்டேன்”, என்றும், "சிங்கப்பற்களைக் கொண்ட வெட்டுக்கிளி' (9:8), 'கொம்புள்ள ஆடு” (6:5),"கதிரவனை ஆடையாக உள்ளப் பெண்” (12:1) என்றும் புரியாதமொழிகளில் எழுத வேண்டும். இதனால் தான் இந்நூலைப் படிக்கவேபலருக்கு மனம் வரவில்லை என்று கேட்பது புரிகிறது.இதற்கு விடை காணவேண்டுமானால் இந்த ஆசிரியர் சொல்லவிரும்பிய நம்பிக்கைச் செய்தியை எந்த இலக்கிய முறையில் எழுதினார்என்றுஆராய வேண்டும்.

திருவெளிப்பாடு
யோவான் தனது நூலை, "இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு” (1:1) என்று ஆரம்பிக்கிறார். இதிலிருந்து இந்நூல்'திருவெளிப்பாட்டு இலக்கிய வகையை சேர்ந்தது என்று புரிகிறது."அப்போகலிப்ஸ்” என்ற கிரேக்க வார்த்தையைத்தான் திருவெளிப்பாடுஎன்று கூறுகிறோம். இதற்கு, 'மறைவாயுள்ளதை வெளிப்படுத் துதல்,என்பது பொருள். இன்னும் குறிப்பாக இதன் பொருளை வரையறுக்கவேண்டுமானால், 'திருவெளிப்பாடு என்பது இவ்வுலகிற்கு அப்பாற்பட்டஅடையாளங்களால் உலகின்இறுதிநாட்களில்தீமைக்குஎதிராக கடவுள்கொணரவிருக்கும் வெற்றியைப் பற்றி துன்பத்தில் வாழும் மனிதருக்குஎடுத்துரைக்கும் ஒரு வெளிப்பாட்டு இலக்கியமாகும்' என்று கூறலாம்.

3. புரியாத மொழிகள்
வெளிப்பாட்டு இலக்கியத்தின் தன்மைகள்புரியாத அடையாளங்கள் என்னவென்று ஆராயும் தருணத்தில்யோவான்எழுதியத் திருவெளிப்பாடுபோன்ற "வெளிப்பாட்டு” நூல்களின்(யுpழஉயடலிளந) பொதுவானதன்மைகள்என்னவென்றுகாண்போம்.

1. வெளிப்பாட்டு நூல்கள், யூத மரபிலும் சரி, கிறிஸ்தவ மரபிலும்சரி, புனைப் பெயரில்நூல்கள்எழுதப்படுவதுவழக்கம். எடுத்துக்காட்டாக,கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து இறந்த தானியேல் என்றஇறைவாக்கினரின் பெயரில் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பாபிலோனிய,கிரேக்கஅரசர்கள்காரணமாகஎழுந்த சமயநெருக்கடியின்பின்னணியில்தானியேல் ஆகமம் எழுதப்பட்டது. கிறிஸ்தவ மரபில் இதற்கு ஒருவிதிவிலக்குஉண்டு. அதுதான்திருவெளிப்பாடு. இதன்ஆசிரியர் தனதுஉண்மைப் பெயரிலேயே எழுதுகிறார் (1:1, 4,9). புகழ் பெற்ற முன்னோர்ஒருவரின் பெயரில் திருவெளிப்பாட்டு நூலை ஒருவர் எழுதுவதற்கு பலகாரணங்கள் இருந்தன. குறிப்பாக இந்நூல் பழமை வாய்ந்தது என்றுகாட்ட, பொதுமக்களின்அங்கீகாரத்தை எளிதில்பெற... ஆனால், பொதுமக்களுக்கு (கிறிஸ்தவர்களுக்கு) தான் நன்கு அறிமுகமானவர்என்பதாலும், தான் அவர்களின் துன்பச் சூழலில் வாழ்வதாலும் (1:9)யோவான்தனதுசொந்தப் பெயரில்இயேசு அருளியத் திருவெளிப்பாட்டைஎழுதத் தயங்கவில்லை.

2. அடையாள மொழிகள் வெளிப்பாட்டு இலக்கியத் தன்மைகளில்மிக முக்கியமானவை. இவை பல வகைப்படும். கடவுள் அளிக்கும்காட்சியாக இந்நூல்கள் எழுதப்படுவதால் (தானி8:1, 15; திவெ 1:11; 12:1,3;15:1; 18:1; 20:1), இயல்புக்குமாறானஅடையாளங்களையும் கண்டதாகஎழுதப்படும். (எ.கா) 1 ஏனோக்கு 86:1-4ல் ஒரு காட்சி. விண்மீன்கள்வானத்திலிருந்து விழுந்து எருதுகளாக மாறி, பிறகு இவை யானை,ஒட்டகம் கழுதைகளைப் பெற்றெடுக்கின்றன.தானியேல்கண்டகாட்சிகளில்ஒன்று: கடலிலிருந்துநான்குபெரியவிலங்குகள் வெளிவர, அவற்றில் ஒன்றின் உருவம் கழுகின்இறகுகளைக் கொண்டது. ஆனால் சிங்கத்தைப் போல் இருந்தது (7:4).இதைப்போன்று விகாரத் தோற்றமுடைய வெட்டுக்கிளி பற்றிதிருவெளிப்பாடு வருணிக்கிறது (அதி 9).

அடுத்து, நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் இறுதிப் போரில் இந்தபிரபஞ்சம் முழுவதும் ஈடுபடுவதாக வெளிப்படுத்த விண்ணகம்,விண்மீன்கள், கதிரவன், கடல், தரை (திவெ 12-13) என்றுபிரபஞ்சப்பகுதிகள் யாவும் இப்போராட்டத்தில் பங்கெடுக்கும். இத்துடன்,பிரபஞ்சத்தில் (ஊடிளஅடிள) காணப்படும் நிலநடுக்கம், இடி முழக்கம்,மின்னல் (16:18), ஏழு இடிகள் (10:4), நெருப்பு புகை, கந்தகம் (9:17)போன்ற அழிவின் அடையாளங்கள் பற்றியும் எழுதி, கடவுள் தனதுநீதித்தீர்ப்புக்கு இவற்றையும் பயன்படுத்துகிறார் என்று வெளிப்பாட்டுஇலக்கியங்கள் எழுதுவது வழக்கம்.

விலங்கின் அடையாளங்களை மிகவும் தாராளமாக இந்நூல்கள்பயன்படுத்துகின்றன (தானி 7). இவற்றில் நன்மையைக் குறிக்கும்விலங்குகள் (சிங்கம், ஆட்டுக்குட்டி, நான்கு உயிர்கள்), தீமையைக்குறிக்கும் விலங்குகள் (அரக்கப்பாம்பு, பாம்பு 12:9; கடல் விலங்கு 13:1;தரை விலங்கு13:11) என்றுதிருவெளிப்பாடுநிறையவேதருகிறது. மேலும்,ஆட்களையும் வெளிப்பாட்டு அடையாளங்களாகத் தந்து உயரியக்கருத்தை உள்ளடக்கித் தருகின்றன, இத்தகைய நூல்கள். (உ-ம்) வானில்தோன்றிய பெண் (12:1), மணமகள் (21:9), இவர்களுக்கு எதிர்மாறாக,நீர்மேல் பெண், விலைமகள் (17:1).

மேலும், சோதோம், எகிப்து (திவெ 11:9), பாபிலோன் (18:2) என்றநகரங்களை தீமைக்கும் புதிய எருசலேமே (அதி 19) நன்மைக்கும்அடையாள மொழிகளாகத் தருகிறார் திருவெளிப்பாட்டு ஆசிரியர்.இந்த வெளிப்பாட்டு இலக்கியங்கள் இவ்வாறு நமது இயற்கைக்குமாறான உருவகங்கள் பற்றி எழுதுவதைப் படிக்கும் போது நமக்குப்புரியாமலும், இது வெறும் கதையென்றும் தோன்றலாம். ஆனால் இப்படிஎழுதுவதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

(1) ஆழ்ந்த இறைவெளிப்பாட்டைப் புராணக் கதைகள் முறையில்வருணிப்பது பழங்கால மரபு (திவெ 12-ஆம் அதிகாரம்)

(2) நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் இறுதிப் போராட்டமாககடவுளின்மக்களுக்கும் பேரரசு போன்ற கடவுளின் எதிரிக்கும் நடக்கும்போராட்டத்தைக் கண்டு, இத்தகைய போராட்டத்தில் கடவுளே வெற்றிகொள்வார். அவரதுபோருக்கு, அவர் தீமையைத் தண்டிக்க எத்தகையக்கருவியையும் பயன்படுத்துவார். அது நமது மனித - உலக -நடைமுறைக்கு ஒவ்வாத அடையாளங்களாகக் கூட இருக்கலாம்.ஏனெனில் இது கடவுளின்போர்.

(3) இவற்றைப் புரிந்து கொள்ள மிக முக்கியமானது - படிப்போரின்மனநிலை. வெளிப்பாட்டு இலக்கியங்களைக் கதை போன்றோ அல்லதுவரலாறு போன்றோ படிக்கக்கூடாது. மாறாக இந்நூல் யாருக்குநேரடியாக எழுதப்பட்டதோ, உரோமைப் பேரரசின்நெருக்கடியில் தங்கள்நம்பிக்கையை வாழ்வதில் சோதனைகளை யார் அனுபவித்தார்களோ,அவர்களின்மனநிலையில் நாம் படிக்க வேண்டும்.

3. வெளிப்பாட்டு இலக்கியத்தில் வான தூதர்கள் பெரும்பங்கேற்கிறார்கள்.
வான தூதர்கள் கடவுளின் பணியாளர்கள் (திவெ19:10; 22:9); கடவுள்தாம் வெளிப்படுத்த விரும்பியச் செய்திகளைத் தனதுதூதர்கள் மூலமாக வெளிப்படுத்துகிறார், என்பது மட்டுமல்ல (1:1; 22:6),தனதுதூதர் மூலமாகவும்தனதுநீதித் தீர்ப்பைக் கடவுள்அளிக்கிறார் (16:1)என்பதுயூதர்கள்எண்ணம், அப்படியேஇளந்திருச்சபையும் நம்பிவந்தது.திருவெளிப்பாட்டில்- வெளிப்பாட்டைஅளிப்பவரே வானதூதர்தான்(1:1; 22:6) இத்துடன், ஆயிரக்கணக்கான வானதூதர்கள் (5:11) மிக்கேல்என்ற குறிப்பிட்ட வானதூதர் (12:7) என்று பலர் தோன்றுகின்றனர்.அறுபது முறை வானதூதர் என்ற வார்த்தை இந்நூலில் வருகிறது.இவர்கள் கடவுளுக்கு இணையாளர்கள் அல்லர் (19:10; 22:9). மாறாக,மனிதருக்கும் கடவுளுக்கு மிடையில் உள்ள இணைப்பாளர்கள் (தொநூ22:11; நீதி13:3-5) இன்னொருகோணமும் உண்டு. கிறிஸ்தவர்களையும்வானதூதர்களாக யோவான்ஓரிருஇடங்களில் அழைக்கிறார் (1:20; 2:1,8). இது, உலகத்திருச்சபையின் விண்ணக அடையாளங்களைகுறிப்பதாக சிலர் எடுத்துக்கொள்வர் (சு.ழ. ழடிரnஉந) இருப்பினும்,அங்குள்ள கிறிஸ்தவர்கள் கடவுளின் பணியாளர்களாக வாழ்ந்தஅவர்களின்மனநிலையை இது வெளிப்படுத்துகிறது.

4. வெளிப்பாட்டு நூல்கள் எண்களை அடையாள மொழிகளாக அதிகம் பயன்படுத்துகின்றன. தானியேல் புத்தகத்தில் 4 பெரியவிலங்குகள் (7:4), - பத்து கொம்புகள், (7:7) இரண்டு கொம்புகள் (8:3), 31ஃ2 ஆண்டுகள் (7:25, 12:7), 70 ஆண்டுகள் (9:1). 1260 நாள்கள், 1330நாள்கள் (12:12) என்று பல எண்கள் வருகின்றன. அதைப் போன்று,திருவெளிப்பாடும் இரண்டு (11:13) மூன்று (1:4-5), 3 1ஃ2 (12:14), நான்கு7:1; 21:13), 1260 நாள்கள் (12:6) 1,44,000 (14:1), ஆயிரம் ஆண்டுகள்(20:2), 666 (13:18) என்று பல எண்களை உபயோகப்படுத்துகிறது.குறிப்பாக ஏழு என்ற எண்ணுக்கு மிக முக்கியத்துவம் (52 முறைவருகிறது) கொடுப்பதைக் காண்கிறோம்.

நூலின்அமைப்பிலேயே ஏழுஎன்பதற்குயோவான்முக்கியத்துவம்அளிக்கிறார்: ஏழு முத்திரைகள் (6:1-8:1), ஏழு எக்காளங்கள் (8:6-11:18),தீர்ப்பின் வானதூதர்கள் ஏழு (14:6-20), ஏழு வாதைகள் (அதி 15), ஏழுகிண்ணங்கள் (16:1-21), இறுதிக் காட்சிகள் ஏழு (19:11-22:7); இத்துடன்ஏழு பேறுகள், ஏழு வாக்குறுதிகளையும் குறிப்பிடுகிறார்.

பொதுவாக, மூன்றுஎன்பதுகடவுளுக்குரியஎண்ணாகவும், நான்குபடைப்பைக் குறிப்பதாகவும் திருவெளிப்பாட்டில் வருகிறது. மூன்றையும்(கடவுள்) நான்கையும் (படைப்பு) சேர்த்தால் ஏழு வருகிறது.அப்படியெனில் ஏழு என்பது யோவானின் எண்ணப்படி முழுமையைக்குறிக்கிறது. மற்ற எண்களுக்கான விளக்கம் அந்தந்தப் பகுதியில்அளிக்கப்படும்.

இந்த விளக்கம் திருவெளிப்பாட்டு இலக்கியம் சமுதாயத்தில எந்தச்சூழ்நிலையில் எழுகிறது, எத்தகையத் தன்மைகளைக்கொண்டிருக்கிறது, இறுதியில் எந்த நோக்கத்தை கொண்டிருக்கிறதுஎன்பதைத் தெளிவுப்படுத்துகிறது.மேற்கண்ட கருத்தை மேலும் புரிந்து கொள்ள அதில் உள்ளசெய்தியை நாம் இங்கே ஒவ்வொன்றாக விளக்குவோம்.

சூழ்நிலை: துன்பத்தில் வாழும் மனிதர்கள்
ஒரு குறிப்பிட்ட சிறுபான்மைச் சமுதாயம் பெருபான்மைச்சமுதாயத்தினாலோ அல்லது அரசினாலோ துன்பத்துக்கு உள்ளாகும்போது அச்சிறுபான்மைச் சமுதாயத்துக்கு ஆறுதலாகவும் நம்பிக்கைச்செய்தியாகவும் கடவுளின் மீட்புச் செய்தி திருவெளிப்பாட்டு இலக்கியமுறையில்வருவதுஉண்டு. இத்தகையஇலக்கியயூத வரலாற்றில்கி.மு.200 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான்அதிகம் தோன்றியது. அவற்றில் ஒருசில எடுத்துக்காட்டுகளை இங்கு காண்போம்.

(அ) 1 ஏனோக்கு
கி.மு. 165 - ல்எழுதப்பட்ட இந்த நூல்கி.மு. 167 - 165 இல்நிலவியமக்கபேயர் புரட்சியின் பின்னணியை எடுத்துரைக்கிறது. கடவுளின்மக்களான(தொநூ6:1-4) உண்மையானயூதர்கள் வேற்றினமக்களானகிரேக்கர்களிடம் துன்புற்று, அவர்களது யூத சமயத்தை நிறைவாகவாழ்வதில் சோதனையும் வேதனையும் அடைந்தார். இத்தகையவேதனையானச் சூழ்நிலையில் மக்களுக்கு ஆறுதல் தரும் பொருட்டு 1ஏனோக்கு என்று திருவெளிப்பாட்டு நூல் எழுந்தது. கடவுள் தீமையைஅழிப்பார் என்ற அடிப்படை செய்தியை இது அளித்தது. வன்முறையும்அடக்குமுறையும் இவ்வுலகில் ஆட்சி செய்தாலும் ஒரு நாள் வரும் -அப்போது எல்லாம் அழிக்கப்பட்டு கடவுளின் மீட்பு உருவாகும் என்றுசொன்னது.

(ஆ) தானியேல்
7-12தானியேல் ஆகமம் 12 அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. இதுஇருபெரும் பிரிவுகளைக் கொண்டது. பாபிலோனிய, பாரசீக வரலாற்றுப்பின்னணியில் (கி.மு. 560-350) தானியேலும் அவரது தோழர்களும்எப்படி கடவுளுக்குப் பணிந்து நடந்து எதிரிகள் மேல் வெற்றிகொண்டனர் என்பதுமுதல்பாகம் (அதி 1-6). அதி 7-12 இரண்டாம் பாகம்.இது காட்சி இலக்கிய வகையில் எழுதப்பட்டுள்ளது. இதுதான் பழையஏற்பாட்டின்திருமறை நூல்களில் கடவுளால் ஏவப்பட்ட பகுதியாக வரும்வெளிப்பாடு நூல்.

கி.மு. 165-ல் எழுதப்பட்ட இப்பகுதி பாபிலோனியா தொடங்கி,அதைத் தொடர்ந்து வந்த பாரசீக, கிரேக்க காலத்தில் யூதர்கள்அனுபவித்தத் துன்பங்களின் பின்னணியில் கடவுள் அளிக்கும் மீட்புச்செய்தியை தானியேல் கண்ட காட்சிகளாக வருணிக்கிறது.வேற்றினத்துக் கொடுங்கோலன் சாத்தானின் கருவியாகவருணிக்கப்பட்டு (7:3; 11:31), குறிப்பிட்டக் காலம் வரை (12:7) கடவுளின்மக்களுக்குத் துன்பம் நேரும் (10:16; 11:24; 12:1), ஆனால் இறுதியில்தீயவன்தோல்வியுற்று(12:7) புனிதர்கள், ஞானிகள்எழுச்சியுறுவர் (12:3)என்ற நம்பிக்கைச் செய்தியைத் தருகிறது. யூதர்களின் வெளிப்பாட்டுஇலக்கியத்தில் இதுதான் மிகச் சிறந்ததும் மேன்மை மிக்கதுமாகும்.கடவுளின்இறுதித் தீர்ப்பில் தீமைஅழிக்கப்பட்டுநன்மைவெற்றியடையும்என்றுதுன்புற்றஅக்காலத்துமக்களுக்கு இந்த வெளிப்பாட்டுஇலக்கியம்,பறவை நாகம், விகாரமான விலங்குகள், நான்கு கொம்புகளுடையவெள்ளாடு, பலவீனமுள்ள செம்மெறி - என்று இயல்புக்கு மாறான பலஉருவங்களால் அணிசெய்யப்பட்டுள்ளது.

(இ) 4 எஸ்ரா
திருமுறை நூல்களில் சேர்க்கப்படாத மற்றொரு நூல் 4 எஸ்ரா.இது எபிரேய மொழியில் கி.பி. 90-120 க்கும் இடைப்பட்ட காலத்தில் யூதஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட நூலாகும். கி.பி. 70-ல் உரோமைத்தளபதி டைட்டசால் எருசலேம் அழிக்கப்பட்ட வலாற்றுப் பின்னணியைமையமாக வைத்து எழுதப்பட்டதுதான் நான்காம் எஸ்ரா என்ற நூல்.

7 காட்சிகளாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்ட இந்நூலில் கபிரியேல்என்ற வானதூதர் தோன்றுகிறார். எருசலேம் சீயோனாகவும் உரோமைகழுகாகவும் வருணிக்கப்படுகின்றன. ஆலயத்தையும் நகரையும் இழந்துதவிக்கும் மக்களுக்கு அத்துன்பத்திற்குக் காரணமான உரோமைப்பேரரசை, சாத்தானாக உருவகித்து, கடவுள் வீழ்த்துவார்; அவரது நீதித்தீர்ப்பு தீமையின் மேல் வந்தே தீரும் என்ற நம்பிக்கைச் செய்தியைஇந்நூல் இயல்புக்கு மாறான அடையாள உருவகங்கள் கொண்டுதருகின்றது. இந்நூலின் அமைப்பும் சூழ்நிலையும் கிறிஸ்தவ வழிபாட்டு நூலான யோவானின் திருவெளிப்பாட்டிற்கு மிகவும் ஒத்திருக்கிறது.இரண்டும் ஒரே காலக்கட்டத்தில்ஒரே அரசின்(உரோமை) பின்னணியில்எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

(ஈ) சிபில்லின் வாக்குகள்
கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.7 ஆம் நூற்றாண்டு வரை யூத வரலாற்றில்இஸ்ரயேல்மக்கள்சந்தித்த அரசியல்சமூகப்போராட்டங்களின் அடிப்படையில்"சிபில்லின்வாக்குகள்” என்ற பெயரில் பலநூல்கள் உருவாயின. கி.பி. 80-ல்எழுதப்பட்ட "சிபில்லின் வாக்கு”களின்நான்காவது புத்தகம் யோவான் எழுதியதிருவெளிப்பாட்டுக்கு, ஒத்திருப்பதுடன், நீரோபற்றி அவர் எழுதியவற்றிற்கு இதிலுள்ளபாரம்பரியம் மூலமாகவும் அமைந்திருக்கவாய்ப்புகள் உள்ளன.

உரோமைப் பேரரசின் ஒழுக்கமின்மையையும் சர்வாதிகாரத்தையும் கண்டிக்கும் இந்த நான்காவது நூல்நீரோ பற்றிய ஒரு புராணத்தையும் குறிப்பிடுகிறது. நீரோ கி.பி. 68-ல்இறந்த போது மக்களில் குழப்பமும் நகரில் புரட்சியும் தோன்றும் என்றுபயந்த அரசு குடும்பத்தார் அவனது இறப்பு செய்தியை உடனேவெளிப்படுத்தவில்லை. இத்தருணத்தில், நீரோ பற்றிய புராணம் ஒன்றுமக்களில் உருவானது. நீரோ உண்மையில் இறக்கவில்லை. மாறாககிழக்கு நாடுகளுக்கு ஓடிச்சென்று பார்த்திய மக்களுடன் வாழ்கிறான்.பார்த்தியப் போர் வீரர்களை ஒன்று திரட்டி, அப்படைக்குத் தலைவராக,மீண்டும் உரோமைக்கு வந்து தன்னைப் புறக்கணித்தவர்களை (நேசழசநனரஒ) முறியடிப்பான் என்று நம்பினர். அதாவது, இறந்தது போன்றநிலையில்ஓடிவிட்ட நீரோ மீண்டும் வருவான்.இதை ஆதாரமாகக் கொண்டு யோவானும் நீரோ பற்றிக் குறிப்பிடுகிறார்என்று நம்ப வழியுண்டு (திவெ 13:3; 13:18; 17:11).

மேற்கண்ட யூத வெளிப்பாட்டு நூல்களை நாம் ஆராயும் போதுவெளிப்பாட்டு நூல் எழுந்த சூழ்நிலை எப்பொழுதும் வேற்றுமனிதர்களிடமிருந்து கடவுளின் மக்களுக்கு எழுந்த துன்ப துயரங்கள்தான் என்பது புலனாகும்.

4. திருச்சபையின் சவால்கள்

வேதனையும் வேதகலாபனையும் திருவெளிப்பாட்டு நூலில்இழையோடிச் செல்வதை நாம் தெளிவாகக் காணலாம். "உங்கள்சகோதரனும் இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள்வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பெவனுமான யோவான்” என்று ஆரம்பிக்கும் ஆசிரியர் (1:9)திருச்சபை வாழ்வு என்பது சவால்களும் போராட்டங்களும் நிறைந்தனஎன்பதை சுட்டிக் காட்டுகிறது.2-3 அதிகாரங்களில்ஆசியாவிலுள்ள7 திருச்சபைகளுக்குஎழுதும்கடிதங்களில் அவர்கள் தாங்கிவரும் துன்பங்கள் பற்றியே ஆசிரியர்அதிகம் பேசி வருகிறார் (2:3; 9, 13, 19).

சான்றுபகர்ந்ததற்கான கொலை செய்யப்பட்டவர்களின் செபத்தைநோக்கும் போது (6:9), இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் கிறிஸ்தவவாழ்வுஎன்பது போராட்டமும் சவால்களும் நிறைந்ததாகவே இருந்தன என்பதுதெளிவாகிறது. இச்சவால்களை உருவாக்கச் சாத்தானின் கருவிகளாகசமுதாயத்தில் பலர் செயல்பட்டனர்.

1. யூதர்களோடு போராட்டம்
கி.பி. முதல்நூற்றாண்டின்யூதர்கள்அன்றையஇளந்திருச்சபைக்குமுதல் சவாலாக இருந்தனர். மிக நீண்ட, உறுதியானச் சமய மரபும், இனஒற்றுமையும், நாட்டுப் பற்றும் கொண்ட யூதர்கள் கிறிஸ்தவர்களைதாழ்த்தப்பட்ட மக்களாக ஒதுக்கி விட்டனர். மேற்கு ஆசியா பகுதியில்வாழ்ந்த யூதர்கள் கிறிஸ்தவர்களோடு அடிக்கடி மோதினர். "தாங்கள்யூதர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் உன்னைப் பழித்துப் பேசுவதும்எனக்குத் தெரியும் அவர்கள்யூதர்கள்அல்லர். சாத்தானுடையகூட்டமே”(2:9) என்ற வசனங்கள் அன்றைய யூதருக்கும் கிறிஸ்தவருக்குமிடையேநிலவிய பகைமையை வெளிப்படுத்துகிறது.சிமிர்னா என்ற திருச்சபையில் அங்குள்ள உரோமைஅதிகாரிகளுடன்சேர்ந்துகொண்டுயூதர்கள்கிறிஸ்தவர்களுக்குஎதிரானகுழப்பத்தை உருவாக்கினார். கிறிஸ்தவ யூதர்கள் யூத செபக்கூட்டத்திலிருந்துவெளியேற்றப்பட்டனர்.பிலதெல்பியா திருச்சபையின் நிலையும் இதேச் சூழ்நிலையைஎடுத்துரைக்கிறது. "சாத்தானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் யூதர்கள்”என்று அங்குள்ள யூதர்கள் கண்டிக்கப்படுகின்றனர் (3:9). யூதசுயநலத்தையும் பிடிவாதக் குணத்தையும் கண்டிக்கும் இந்த ஆசிரியர் யூத நம்பிக்கைக்குஎதிராக"தாவீதுகுடும்பத்தாரின்திறவுகோலைஅவன்தோளின்மேல்வைப்பேன்” (3:7) இயேசுவைக் காட்டுகிறார் (காண். எசா22:22).

"எருசலேம்' என்றவார்த்தையைப் பயன்படுத்துவதிலும்யூதருடன்இளந்திருச்சபைக்கு இருந்தப் போராட்டம் வெளிப்படுகிறது. எருசலேம்"சோதோம்” எனவும் "எகிப்து” எனவும் உருவகமாக அழைத்துயூதமரபினரின் மூடநம்பிக்கையைக் கண்டிக்கும் ஆசிரியர், அந்தஎருசலேமின் உண்மை மரபு கிறிஸ்தவரில், இளந்திருச்சபையில்நிலவுவதாக வேதனைகளில் வெற்றி பெற்று வாழ்வின் நூலில் இடம்பெற்றவர்களின் குடியிருப்பாக புதிய எருசலேம் (21:9-27) இருக்கும்என்றும் விவரிக்கிறார்.

யூதர்கள் உரோமைப் பேரரசில் சமயச் சுதந்திரம் பெற்றிருந்தனர்.இது அரசியல் ளளதியாக செல்வாக்கு பெறவும் உதவியது. இதனால்சிறுபான்மைச் சமூகமாக இருந்த கிறிஸ்தவர்கள் தாழ்த்தப்பட்டுஒடுக்கப்பட்டார்கள்.

2. பிற இன மக்களுடன் போராட்டம்
முதல் இரண்டு நூற்றாண்டுகளில் உரோமை அதிகாரிகள்கிறிஸ்தவர்களைப் பலவித காரணங்களால் வெறுத்தனர். அதில்முக்கியமானது: கிறிஸ்தவர்கள் தங்கள் சமய நம்பிக்கையின் காரணமாகமற்றவர்களிடமிருந்து தங்களையே தனிமைப்படுத்திக் கொண்டதைஅவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இயேசுவின்"உடலை”உட்கொள்கிறார்கள் - அதுவும் மறைவாக என்று பிற இனத்தார் கருதிகிறிஸ்தவர்களை வெறுத்தனர். பொதுமக்களிடையே நிலவியஇத்தகைய வெறுப்பைப் பயன்படுத்திதான் உரோமையை எரிப்பதற்குகிறிஸ்தவர்களை பலியாடாக மாற்றத் துணிந்தார் நீரோ மன்னன்(தாசிதுஸ்) - (காண்: திப 19). யூதராலும் பிற இனத்தாராலும் வெறுத்துஒதுக்கப்பட்ட கிறிஸ்த வர்கள் - இப்படிப்பட்ட துயர் நிலையைதிருவெளிப்பாட்டு ஆசிரியர் எப்படி வெளிப்படுத்துகிறார்? இருஇடங்களில் காண்கிறோம்.

நிக்கொலாய் என்ற குழுஎபேசு திருச்சபையிலும் (2:6), பெர்காமும்திருச்சபையிலும் (2:15) மிகவும் தீவிரமாகச் செயல்பட்டனர்.இவர்களைப் போன்று பிலயாமையும் இசபேலையும் பின்பற்றும் வேறுஇரு குழுக்கள் பெர்காமும் மற்றும் தியத்திரா (2:14; 2:20) போன்றசபைகளில் செயல்பட்டனர்.இந்த மூன்று குழுக்களும் ஒரே விதக் கொள்கையைத்தான்பின்பற்றினர்: i) சிலைகளுக்குப் படைக்கப்பட்ட மாமிசத்தை உண்பது;ii) விபசாரம் செய்வது - அதாவது, யூத மரபுப்படி,சிலைவழிபாட்டைக் குறிப்பது, பொருளாதார, சமூக வசதிக்காககிறிஸ்தவர்கள்இத்தகையச் செயல்களைச் செய்யத் தூண்டும் - பிற இனமக்களின்போக்குபோராட்டத்துக்குரியது. அதைப்போன்று, தியத்திராவில்தொழில் சங்கங்களில் உறுப்பினராயிருக்கும் கிறிஸ்தவர்களும் தங்கள்கிறிஸ்துவவிசுவாசத்திற்குஆபத்துஏற்படும் சூழ்நிலையைச் சந்தித்தனர்.

3. பொருளாதாரப் போராட்டம்
திருவெளிப்பாட்டுதிருச்சபை பொருளாதாரத்திலும்போராட்டத்தைச்சந்திக்க வேண்டியிருந்தது. அந்தக் கால இளந்திருச்சபையின்உறுப்பினர்கள் பலர் ஏழை எளியவர்கள். ஏழைகளாயிருந்ததால் -வசதியைப் பெருக்கிக் கொள்ளும் ஆசை பிறக்கிறது. அந்த முயற்சியில்கிறிஸ்தவ நம்பிக்கை மழுங்கடிக்கப்படுகிறது. இத்தகையப் போக்கைஇலவதோக்கியத் திருச்சபையில் கண்ட யோவான் அவர்களைக்கண்டிக்கிறார் (3:17). தங்கள் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம்வறுமையிலிருந்து விடுபட அவர்கள் உண்மையில் போராடவேண்டியிருந்தது.

4. உரோமைப் பேரரசு: மிகப் பெரிய சவால்
மேற்கண்ட சமூகச் சூழல்கள் இளந்திருச்சபைக்குப்பிரச்சினைகளாகவும், வேதனைகளாகவும் இருந்தாலும், அது சந்தித்தமிகப்பெரிய சவால்உரோமைப் பேரரசுதான். "உரோமைப் பேரரசு” என்றுகுறிப்பிடும் போது - அரசியல் சூழ்நிலைமட்டுமல்ல் அதன் சமூக சமயச்சூழ்நிலைகளும் அரசியலோடு ஒன்றிணைந்து சென்று, கிறிஸ்துவவாழ்வுக்குச் சவால்களாக அமைந்தன.இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உரோமையருக்கும்கிறிஸ்தவருக்கும் இடையே நிலவிய உறவைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே உரோமைப் பேரரசு பொலிவுடன்இருந்தது. பல சிற்றரசர்கள் அதன் அரசை ஏற்று கப்பம் கட்டி வந்தனர்.பலரும் உரோமைப் பேரரசையும், உரோமை நகரையும், "தேவதையாக”வணங்கினர். கி.மு. 165-ல்சிமித்னா என்றஇடத்தில்"ரோம்தேவதைக்கு கோவில்கட்டப்பட்டு வழிபாடு நடந்தது.யூலியுஸ் சீசர் இறப்பிற்குப் பிறகு "பேரரசு வழிபாடு” - பேரரசர்வழிபாடாக”(கி.மு. 29-ல்) மாறியது. அவருக்குக் கோவில்களும்எழுந்தன.பேரரசர் போம்பே கி.மு. 63-ல் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டு,சுமார் 80 ஆண்டுகள் உரோமானிய அரசுக்குக் கீழ் கொண்டு வந்தான்.இக்காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் "ரோம் அமைதி” (ஞயஒ -சுடிஅயயே) என்றுஅழைத்தனர். இயேசுவின்பிறப்பு, போதனை, மரணம்- யாவும் இக்காலத்தில்தான் நடந்தன. திருச்சபை உருவானது. சுமார்கி.பி. 50 வரை திருச்சபையுடனும் சுமுகமான உறவு இருந்தது (உரோ13:1).

கி.பி. 50-ல் கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்தது. இதுஉரோமையர்களிடையே பயத்தை உருவாக்க, அவர்கள் அழிக்கமுயன்றனர். கி.பி. 60 வாக்கில்நாடுதழுவிய, திட்டமிட்ட வேத கலாபனைநடத்தப்பட்டது. இதற்கு அவர்கள் பயன்படுத்தியக் கருவி: பேரரசர்வழிபாடு.

1. கலிகுல்லா (கி.பி. 37-41) - தற்புகழ்ச்சிப்பித்தன்.
2. நீரோ (கி.பி 54-68) - கி.பி. 64 உரோமையை எரித்து -கிறிஸ்தவர்கள் மேல் பழி சுமத்தினான். கொடிய மிருகங்களைக்கொண்டு வதைத்தான்.
3. தொமிசியன் (கி.பி. 81-96): தற்புகழ்ச்சியும், கொலை வெறியும்கொண்டவன். "நம் ஆண்டவரும் கடவுளுமான தொமிசியன்” என்றுசாத்தானின்மறுவுருவமாகவேசெயல்பட்டான்(19:10; 22:9). #8220;நாங்களும்மனிதர்கள் தான்” என்று பேதுருவும், பவுலும் கூறி மனித வழிபாட்டைஎதிர்க்கின்றனர் (காண். திப 10 : 26; 14:15).

எவ்வவு தூரம்கிறிஸ்தவர்களை உரோமைப் பேரரசு எதிர்த்ததென்றால் -உரோமையைப் பாபிலோன் என்று வருணித்து #8220;விலைமகள்” என்றும்உலகிலுள்ள அருவருப்பான யாவற்றுக்கும் தாய் என்றும் கூறுகிறார்(திவெ 17:5-6); அத்துடன் "கொடிய விலங்கு” (13:1-3) என்றும்சாத்தானின்கருவிஎன்றும் வருணிக்கிறார்.

5. இறுதியுகப் போர்இறுதிப்போர்
;இறுதியுகத்தை "எஸ்கதோன்” என்றுகிரேக்க மொழியில்கூறுவதுவழக்கம். இறுதியுகம் பற்றிய இறையியலை, 'எஸ்கத்தோலஜி, என்றுஆங்கிலத்தில் விவிலிய அறிஞர்கள் அழைப்பது உண்டு. இதன்கருத்தோட்டமானது இறுதியுகப்போர், அதனால் இவ்வுலகின் அரசுதகர்க்கப்படல், கடவுளின்நீதித் தீர்ப்பு வருதல், இறுதியில்கடவுளின்அரசுஎன்ற புதிய உலகம் தோன்றுதல் - என்ற வகையில் அமையும்இஸ்ரயேலர் வேற்று நாட்டவரின் அடிமைத்தனத்தில் தங்களின் சமயவாழ்வை முறையாக வாழ இயலாதச் சூழ்நிலைகளில் இத்தகையஎண்ணங்கள் உருவாயின. பாபிலோனிய அடிமைத்தன பயத்தில்இஸ்ரயேலர் வாழ்ந்தபோது, "இதோ, ஆண்டவர் பூவுலகைவெறுமையாக்கிப் பாழடையச் செய்து, அதன்நிலப்பரப்பை உருகுலையச்செய்து, அதில் வாழ்வோரைச் சிதறடிப்பார்” என்று எசாயா கூறியதைநினைவு கூறுவோம் (24:1). இந்த அதிகாரம் முழுவதுமே இறுதியுகப்போரில் கடவுளின் நீதித் தீர்ப்பு பற்றி எடுத்துரைக்கிறது.

பாபிலோன் அடிமைத்தன வாழ்வின் சூழலில், "எங்கள் மீட்பரின்பெயர், படைகளின்ஆண்டவர்”என்றுவருணித்து(எசா 47:4), பாபிலோன்மேல் அளிக்கவிருக்கும் நீதித் தீர்ப்புப்பற்றி எசாயா கூறுவதும் இதேபின்னணியில்தான். இஸ்ரயேலர் பாபிலோனிலிருந்து விடுதலைஅளிக்கும் கடவுள்'இறுதியுகப் போரை' நடத்துவார் என்று 3-ஆம் எசாயாஎழுதுவதையும் கண்ணோக்குவோம் (அதி 63). "இதோ, ஓர் அரசர்நேர்மையுடன்அரசாள்வார்” என்றுகடவுளின்'படைகளின்ஆண்டவராக'நின்று(32:1) இறுதியுகப் போரை நடத்துவார் என்றுவருணிக்கிறார். இதேஎண்ணத்தை, யோவேல் (2-3), மீக்கா (5) செக்கரியா (9-14) போன்றஇறைவாக்கினர்களும் வெளிப்படுத்துகின்றனர் (காண். மலா 4:1-6; செப்1:1-18).

1. இறைவாக்குகளின் குழந்தை
கடவுள் தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டுவார் என்றுபொதுவாக எல்லா இறைவாக்குநூல்களும் வெளிப்படுத்துகின்றன. யூதவரலாற்றில் கி.மு. 2-ஆம் நூற்றாண்டோடு பல இறைவாக்கு நூல்கள்முழ்?து விட, அவற்றின்குழந்தையாக திருவெளிப்பாட்டு இலக்கியமான3 ஆம் எசாயா, தானியேல் நூல் போன்ற நூல்கள் தோன்றின என்றுஅறிஞர்கள் கருதுவர். அப்படியெனில், இறைவாக்குகளின் இடத்தைதிருவெளிப்பாட்டு நூல் எடுத்துக் கொண்டது என்று கருத முடியாது. மாறாக, இறைவாக்குகள்வெளிப்படுத்தியக் கருத்துக்களைவெளிப்பாட்டுஇலக்கியங்கள் விரிவாகவும் தெளிவாகவும் தந்தன. அவற்றில், இந்த'இறுதியுகப் போர்' பற்றியது மிக முக்கியமானஒன்று.

வெளிப்பாட்டு இலக்கியத் தன்மைகளைக் கொண்டு கடவுள்(இயேசு) நடத்தும் இறுதியுகப் போர் பற்றிய புதிய ஏற்பாட்டு நூல்கள் பலகுறிப்பிடுகின்றன. ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையாகஇதனைப் புனித பவுல் வருணித்தார் (1 தெச 1:10; 4:13-18, பிலி 3:20-21; உரோ 8:18-25). நற்செய்திகளும் திருத்தூதர் பணியும் கூட இத்தகையஇறுதியுகப் போர் பற்றிக் குறிப்பிடுகின்றன. நற்செய்திகளிலே மாற்கு 13முழுவதும் வெளிப்பாட்டு இலக்கிய முறையில் இறுதியுகப் போர் பற்றியும்இதில்தெளிவுற எழுதுகிறார் மாற்கு(காண். மத் 24; லூக் 17:20-37; 21:5-36; யோவா 5:25-29 திப 17:30-31).

2. கிறிஸ்தவத் திருவெளிப்பாடு
கிறிஸ்தவ வெளிப்பாட்டு நூலான யோவானின் திருவெளிப்பாடுதீமையை(சாத்தானை) எதிர்த்துகடவுள்நடத்தவிருக்கும்இறுதியுகப் போர்பற்றி தொடக்கம் முதல் முடிவு வரை மிகவும் விரிவாகவே எழுதுகிறது."நான்திருடனைப் போல் வருவேன்” (3:3), "இதோ, நான்கதவு அருகில்நின்றுதட்டிக் கொண்டிருக்கிறேன்” (3:20) என்றுஇறுதியுகப் போருக்காகவரவிருக்கும் இயேசுவை இதில் அறிமுகப்படுத்தி, அந்த போர்எத்தன்மையுடையதாக இருக்கும் என்பதை ஏழு முத்திரைகள் (6-7),மற்றும் ஏழு எக்காளங்கள் (8-11) பற்றியக் காட்சிகளில் விவரிக்கிறார்.இன்னும் குறிப்பாக, "ஏழாம் வானதூதர் எக்காளம் முழக்கப்போகும்காலத்தில், கடவுள் தம் பணியாளர்களான இறைவாக்கினர்களுக்குஅறிவித்தபடியே அவரது மறைவான திட்டம் நிறைவேறும்” என்றுஅறிவிக்கிறார் (10:7).

இந்த இறுதியுகப் போர் மிக்கேலுக்கும் அரக்கப்பாம்புக்கும் நடக்கும்போராக உருவாகிறது (12:7-12), கடவுள் தீமையை எப்படி அழிக்கத்தொடங்கிவிட்டார் என்பதைச் சுட்டிக் காட்டிய யோவான், இறைவனின்மகனான இயேசு என்ற ஆட்டுக்குட்டி 1,44,000 பேருடன் போருக்குஆயத்தமாக நிற்கும் காட்சியை வருணிக்கிறார் (14:1). இதைத் தொடர்ந்து"கடவுளுக்கு அஞ்சுங்கள்; அவரைப் போற்றிப் புகழுங்கள். ஏனெனில்அவர் தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது” என்று அறிவித்து (14:7),மண்ணுலகின்மேல் கடவுளின்சினம் எப்படி வருகின்றது என்பதை ஏழுவானதூதர் கடவுளின் சீற்றம் என்னும் சினம் எப்படி வருகின்றதுஎன்பதை #8220;ஏழு வானதூதர் கடவுளின் சீற்றம் என்னும் கிண்ணத்தைஊற்றினார்கள்” என்று உருவகமாக எழுதுகிறார் (16:1). அந்த இறுதியுகப்போரின் தொடக்கம் பாபிலோனின் (உரோமை) அழிவில் ஆரம்பிக்கிறது.ஏனெனில்இந்த உலகில்சாத்தானின்மறுஉருவமாக உரோமைப் பேரரசுஅன்றைய நாளில் இருந்தது (காண். அதி 17-18).

"நீதியோடு தீர்ப்பளித்துப் போர்தொடுப்போரின் 'கடவுளின் வாக்கு'என்பவர் (19:11-13) தனதுபடைகளோடுதீமையின்உருவானவிலங்குகள்(பேரரசர்கள்), போலி இறைவாக்கினர்கள் யாவரையும் கொன்று (19:20-21), இறுதியில் சாத்தானையும் அவனது இறுதிப் பிடிப்பான சாவு,பாதாளத்தையும் அழித்து,நெருப்பு ஏரியில் எறிந்து விட்டார்(20:10,14) என்று யோவான்வருணித்து, கடவுளின்இறுதியுகப் போரின்வெற்றியானமுடிவை விவரிக்கிறார்.

3. நன்மைக்கும்தீமைக்கும் போராட்டம்
யூத, பிற இன மக்களிடமிருந்தும், உரோமைப் பேரரசரிடமிருந்தும் கிறிஸ்தவர்கள்அனுபவிக்கும் துன்பப்போராட்டம் ஏதோ ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல, இதுநன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் யுகப் போராட்டத்தின் அடையாளமேஅல்லது பிரதிபலிப்பே என்று யோவான் கருதினார். இப்படித்தான்இஸ்ரயேல்மக்களும் கருதினர் (தொநூ3:15). இப்படிக் கருதுவது, மேலேநாம் குறிப்பிட்டது போன்று, வெளிப்பாட்டு இலக்கியங்களின்தன்மையுமாகும் (காண். தானி7-12).

இதேப் பின்னணியில்தான்யோவானும் தனதுநூலில்எழுதி, இதுஏதோ கிறிஸ்தவருக்கும் உரோமை அரசுக்கும் நடக்கும் போராட்டமல்ல,மாறாக கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் போராட்டம் என்று(12:7-12) எழுதினார். ஆனால் இத்துடன் நில்லாமல், இச்சூழலில்,தீமையின் உருவான சாத்தானை அழிக்கக் கடவுள் துணிந்து விட்டார். இது இறுதியுகப் போராக அமைகிறது. இந்த இறுதியுகப் போரில் தீமைஅறவே அழிக்கப்பட்டு, கடவுள் புதிய விண்ணகத்தையும் புதியமண்ணகத்தையும் (திவெ 21-22) ஏற்படுத்துவார் என்று வெளிப்பாட்டுஇலக்கியங்களின் தன்மைக்கு ஏற்ப எழுதுகிறார்.

துன்புறும் மக்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கவேகடவுள் தம் சார்பாக இறுதிப் போரை நடத்துகிறார் என்று யோவான்எழுதுகிறார். அது 'விரைவில் நடக்கும்' என்று அவர் கூறுவது (1:3; 3:3;19; 16:15; 22:6) காலத்தின் கணிப்பு அல்ல் மாறாக, இறுதியுகப் போர்தொடங்கிவிட்டது என்ற நம்பிக்கைச் செய்தியை அளிக்கவே (காண். மத்8:29; மாற் 13:33; 1 கொரி 4:5).

6. ஆசிரியர்
"ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான்எழுதுவது” என்றுதனதுபெயரைக்குறிப்பிடும்திருவெளிப்பாட்டுஆசிரியர்(1:4-5) தன்னை ஒரு இறைவாக்கினராகவும், கடவுளின்பணியாளராகவும் (1:1-2), அதே சமயத்தில், இயேசுவுக்குச் சான்றுபகர்ந்ததால் பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்ட வேதசாட்சியாகவும் (1:9)வருணிக்கிறார். இவர் எந்த யோவான் என்று அறிந்து கொள்வதில்பலவித கருத்துக்கள் உள்ளன.

1)தொடக்க காலப் பாரம்பரியம்
திருவெளிப்பாட்டின்ஆசிரியர் திருத்தூதர் யோவான்என்றுஎபேசில்வாழ்ந்த ஜஸ்டின் மார்ட்டர் (கி.பி. 135) என்பவர்தான் முதன் முதலில்சான்றுபகர்ந்தார் (னுடியடடிபநூ றiவா கூசலயீhடி 81:15). இவரைத் தொடர்ந்துஆரிஜன், இரனேயுஸ் (கி.பி. 180), அலெக்சாந்திரியாவின் கிளமெந்து,தெர்த்துல்லியன் போன்றோர் யாவரும் இதே கருத்தை வெளியிட்டனர்.ஆனால் இவர்களில் யோவான் நற்செய்திக்கும் திருவெளிப்பாட்டிற்கும்திருத்தூதர் யோவான் மட்டுமே ஆசிரியர் என்று இரனேயுஸ் மட்டுமேகூறினார். இக்கருத்தைத்தான் திருச்சபையில் சமீபகாலம் வரைஎல்லாரும் ஏற்று வந்தனர். குறிப்பாக பெரும்பாலான கத்தோலிக்கஅறிஞர்கள் இக்கருத்துக்கு ஆதரவு தந்தனர்.

இதற்கு அவர்கள் தரும் காரணங்கள்

1. தொடக்க காலப் பாரம்பரியம் இவ்வளவு உறுதியாகஇருக்கிறதென்றால் அதில் உண்மை இல்லாமல் இருக்க முடியாது.

2. கடவுளின் சீற்றத்தைப் பற்றி மிகவும் தெளிவாக அளிக்கும்திருவெளிப்பாடு (அதி 16) திருத்தூதரான யோவானின் மனநிலைக்குஒத்திருக்கிறது (மாற் 3:17) இடியைப் போன்றவர்.

3. திருவெளிப்பாட்டு இலக்கிய முறைப்படி தனது முழுப்பெயரைவெளிப்படுத்தாமல், வெறும் யோவான் என்று மட்டும் இங்கேகுறிப்பிடுகிறார்.

4. நான்காம் செம்மெறி பற்றி இருநூல்களும் பேசுகின்றன (21முறை திவெ1 முறை யோவான்1:29, 36); "வாக்கு” பற்றிஇருநூல்களும்குறிப்பிடுகின்றன(திவெ19:13; யோவா 1:1, 14); "வாழ்வுதரும் வார்த்தை”(திவெ7:17; 21:6, 22:1; யோவா 4:14; 6:35; 7:37-38), கோவில்இல்லாதசூழ்நிலை (திவெ 21:22; யோவா 2:19; 4:20-26) போன்றவையும்இருநூல்களிலும் காணப்படுகின்றன.

ஆனால் மேற்கண்ட உதாரணங்களைஒவ்வொன்றாக ஆராய்ந்துபார்த்தோமேயானால்இருநூல்களும் ஒரே ஆசிரியரிடமிருந்து(திருத்தூதர்யோவான்) வந்திருக்க முடியும் என்று உறுதியிட்டுக் கூற இயலாது.

2)திருத்தூதர் அல்லர்
கி.பி. 3ஆம் நூற்றாண்டில் எகிப்தில் வாழ்ந்த தியொருநுசியுஸ்என்பவர் அலெக்சாந்திரியா நகரின் ஆயராயிருந்தார். அவர் யோவான்நற்செய்தியையும் திருவெளிப்பாட்டையும் நன்கு ஆராய்ந்து விட்டு,இருநூல்களும் ஒரே ஆசிரியரிடமிருந்து வந்திருக்க முடியாது என்றமாற்றுக் கருத்தைக் கூறினார். அப்போஸ்தலிக்க ஆசிரியர் பற்றிவெளிப்புறச் சான்றுகள் (திருச்சபையின் தந்தையர்கள் பலர்) மிகவும்உறுதியாக இருந்தாலும், இன்றையவிவிலியஅறிஞர்கள்பெரும்பாலோர்தீயொருநுசியுஸ் கருத்தை ஆதரித்து திருவெளிப்பாட்டை நான்காம்நற்செய்தியை எழுதிய யோவான் எழுதியிருக்க முடியாது என்றுகூறுகின்றனர்.

இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் முழுக்க முழுக்கஅகச்சான்றின்அடிப்படையில்அமைந்தன:

1. திருவெளிப்பாட்டின் ஆசிரியர் தன்னை வெறும் யோவான்என்றும் (1:1), கடவுளின் பணியாளர் என்றும் (1:1), தனது வாசகர்களின்சகோதரர் என்றும் (1:9), ஒரு இறைவாக்கினர் என்றும் (22:8)குறிப்பிடுகிறாரேயொழிய ஓரிடத்தில் கூட தன்னைஓர் திருத்தூதர் என்றுகுறிப்பிடவில்லை.

2. வரலாற்று இயேசுவை அறிந்தவராக திருவெளிப்பாட்டில்ஓரிடத்தில் கூட ஆசிரியர் குறிப்பிடவில்லை.

3. யோவான் கி.பி. 64-70ல் வேதசாட்சியாக இறந்தார் என்ற மரபு இருக்க, அவர் எப்படி எபேசு பகுதியில் கி.பி. 90ல் இருந்திருக்க முடியும்?ஆனால் இதற்கு மாற்றுக் கருத்தும் உள்ளது(க்ஷநஉமறiவா, 366-93).

4. மொழிநடை, இறையியல் கருத்தில் வேறுபாடு போன்றவையேமிக முக்கியக் காரணங்களாக சுட்டிக் காட்டப்பட்டன.

நான்காம் நற்செய்தியானது தெளிவான, சரியானஇலக்கணத்துடன், நல்ல கிரேக்க மொழியில் எழுதியிருக்க,திருவெளிப்பாடு ஒரு பாமரன் பேசும் கிரேக்கத்தில் எழுதப்பட்டுள்ளது."நம்பு” (வுழ டிநடநைஎந)என்ற வார்த்தை 98 முறை நான்காம் நற்செய்தியில்வரும்போது, திருவெளிப்பாட்டில் இந்த வார்த்தை ஒருமுறை கூடவருவதில்லை.

மேலும், 'ஆட்டுக்குட்டி' என்ற வார்த்தையை இரு நூல்களும்குறிப்பிட்டாலும் வெவ்வேறுகிரேக்க வார்த்தைகளைஉபயோகிக்கின்றன(திவெ. அர்னியோன்; 4-ஆம் நற்செய்தி: அம்னோஸ்). பிரபஞ்சம் (ஊழளஅழள) என்ற வார்த்தை திருவெளிப்பாட்டில் மூன்று முறை வருகிறது.படைப்பின் பொதுத்தன்மைப் பொருளில்தான் எல்லாமே வருகிறது.ஆனால் நான்காம் நற்செய்தி இவ்வார்த்தையை இருபொருள்தன்மையில் (னரயடளைவiஉ உhயசயஉவநச) பயன்படுத்துகிறது; உதாரணமாகஅன்பு வெறுப்பு; வாழ்வு சாவு; பாதுகாப்பது இழப்பது.

இதுமட்டுமல்லாமல், திருவெளிப்பாடு அதிகம் பயன்படுத்தும்,"எல்லாம் வல்லவர்” (Pயவெழமசயவழச), "அரசருக்கெல்லாம் அரசர்,”"அரியணை”, "உறுதியுடன் நிலைத்திருத்தல்”, "துன்பம்” - போன்றவார்த்தைகள் நான்காம் நற்செய்தியில் அறவே காணப்படுவதில்லை.இத்துடன், இருநூல்களும் பொதுவாக "ஆட்டுக்குட்டி” என்றவார்த்தையைப் பயன்படுத்துகின்றன - என்று கூறி இரு நூல்களுக்கும்ஒற்றுமையைக் காண்பர். ஆனால் ஆட்டுக்குட்டி (யசnழைn) என்பதுதிருவெளிப்பாட்டில்கிறிஸ்துவுக்குஅளிக்கப்படும்மிகமுக்கியமானபெயர்.ஆனால் நான்காம் நற்செய்தியில் இது முக்கியமான பெயர் இல்லை.மேலும், 'உலகின் பாவங்களைப் போக்கும் செம்மெறி' (யோவா 1:29, 36)என்ற கருத்தில் தன்னையே பலியாக்கும் ஆட்டின் அடையாளந்தான்நான்காம் நற்செய்தியில் வருகிறது. மாறாக, திருவெளிப்பாட்டில் ஓரிருஇடத்தில் 'பாஸ்கா ஆட்டுக்குட்டியை' அரினியோன் (செம்மறி)வெளிப்படுத்தினாலும் (5:9-10; 15:3-4), மனிதரை மீட்கும் அரசதோற்றந்தான்முதன்மையானமுறையில் காணப்படுகிறது(காண்17:14;5:6; 1:17-18). தன்னையேகையளிக்கும்ஆட்டுக்குட்டியைவிட போராடும்ஆட்டுக்குட்டியாகத்தான் கிறிஸ்துவை திருவெளிப்பாடு காட்டுகிறது(5:6; 14:4; 17:14).

இதேப்போன்று, 'வாக்கு' (லோகோஸ்) என்ற வார்த்தையைஇருநூல்களும் பயன்படுத்தும் விதமும், வெளிப்படுத்தும் பொருளும்ஒன்றாக இல்லை (காண். யோவா 1:1, 14; திவெ 19:13; கடவுளின்வாக்கு'). மேலும் ஆண்டவரின் இரண்டாம் வருகை இவ்வுலகிலேயேஆரம்பித்துவிட்டது என்று நான்காம் நற்செய்தி கூறுகிறது; மாறாக,உலகின் இறுதியில் உலகைத் தீர்ப்பிடும் அவரது இரண்டாம் வருகைஇருக்குமென திருவெளிப்பாடு கூறுகிறது. மேற்கூறிய காரணங்களால்திருத்தூதரானயோவான்திருவெளிப்பாட்டின்நேரடி ஆசிரியர் என்பதைஏற்றுக் கொள்ள இயலாது.

3)காட்சியாளர் யோவான;
2, 3 யோவான்திருமுகங்களை எழுதிய ஆசிரியர் தன்னைமூப்பர்என்றுகுறிப்பிடுகிறார் (1 யோவா 1:2). இவர்தான்திருவெளிப்பாட்டையும்எழுதினார் என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், நான்காம்நற்செய்தியும் திருவெளிப்பாடும் திருத்தூதரானயோவான்எழுதவில்லை;மாறாக, இரு நூல்களும் ஓர் ஆசிரியக் குழுவினால் உருவாக்கப்பட்டனஎன்று (ர்யசயெஉமஇ டழாஅநலநச) கருதுகின்றனர். ஆனால் இவர்களின்கருத்து புற, அகச் சான்றுகளின்அடிப்படையில் ஏற்கத் தகுந்தது அல்ல.அதே போன்று திருவெளிப்பாடு உருவாக திருமுழுக்கு யோவான்பின்னணியாக இருந்திருக்கிறார் என்றகருத்தும்(விவிலியப் பேராசிரியை து.ஆ. குழசன) ஏற்கக் கூடியதல்ல.

நான்காம் நற்செய்திக்கும் திருவெளிப்பாட்டுக்கும் அதிக ஒற்றுமைஇருப்பதையும், ஆரம்ப திருச்சபையின் புறச் சான்றையும் முழுவதுமாகஒதுக்கிவிட முடியாது. அதே சமயம் இரண்டையும் திருத்தூதர் யோவானேதம் கைப்பட எழுதினார் என்பதை விட, யோவானிடம் பயிற்சி பெற்றஅவரதுசீடர் - அவர் பெயரும் யோவான்- திருவெளிப்பாட்டை எழுதினார்என்பதுதான் இன்று பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்து.தொடக்க காலத் திருச்சபையின் துன்ப துயரங்களில் பங்கேற்று(1:9), திருச்சபை வாழ்வின்மேம்பாட்டுக்காகஇறைவனால்அழைக்கப்பட்டு(1:1) ஓர் இறைவாக்கினராக (1:1; 22:10), தான் கண்ட காட்சிகளை பத்முதீவிலிருந்து (1:9) இந்த யோவான் எழுதினார். இருப்பினும் நான்காம்நற்செய்தியின் இறையியல் மற்றும் அமைப்பின் சாயலை ஒத்து இந்நூலை அவர் எழுதி, இந்நூலுக்கும் திருத்தூதர் யோவான்தான் மூலஆசிரியர் என்று தெளிவு படுத்துகிறார்.

7. எங்கிருந்து? எப்போது?
பத்மு தீவு"உங்கள் சகோதரன்... யோவான் என்னும் நான் கடவுளின்வாக்கை அறிவித்து இயேசுவுக்கு சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வரநேர்ந்தது” என்றுயோவானேகூறும்சாட்சியத்தை நோக்கும்போதுதனதுநற்செய்திப் பணியினைமுன்னிட்டு அவர் பெற்ற தண்டனைதான்இந்தபத்மு என்ற தீவுக்கு அவர் வந்தது (1:9). அங்கிருந்து தான் கண்டகாட்சிகளை ஏழு திருச்சபைகளுக்கும் ஒரு கடிதமாக எழுதத்தொடங்கினார்.

சிறிய ஆசியப் பகுதியில் ஏஜியன் கடலில் உள்ள தீவுதான் பத்மு.இது மிலேத்திலிருந்து (ஆடைநவரள) தென் மேற்கில் 60கி.மீ. தூரத்தில்உள்ளது. இன்றைய துருக்கி நாட்டிற்குச் சேர்ந்த ஒரு சிறிய தீவு.மொத்தம் 24 சதுர கி.மீ. பரப்பளவுகொண்டது. கி.பி. முதல்நூற்றாண்டில்இங்குமக்கள்அதிகம் வாழாத ஒருகரடுமுரடானஒருதீவு. பிளினிஎன்றஉரோமை வரலாற்று ஆசிரியரின் கூற்றுப்படி அரசியல்குற்றவாளிகளுக்கு அளிக்கும் தண்டனையாக உரோமை அதிகாரிகள்அக்காலத்தில் பத்மு தீவுக்கு அவர்களை நாடு கடத்தினர்.கிறிஸ்தவப் போதகரான யோவான் எபேசில் போதித்துக்கொண்டிருந்தார். ஏற்கனவேபுனித அப்பொல்லோவும் (திப 18:24) புனிதபவுலும் இங்கே தீவிரப் பணிசெய்து திருச்சபையை ஏற்படுத்தியிருந்தனர்(1 கொரி 15:32; திப 19:8). அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு,எழுந்துள்ளஅரசியல், சமூக நெருக்கடியின்மத்தியில் யோவான்இங்கேஎபேசில் பணிபுரிந்த போது பேரரசர் வழிபாட்டுக்கு அவரது பணிபெருந்தொல்லையாகவும் தடையாகவும் இருந்தது. இவரதுநற்செய்திப்பணி சமூகத்தில் கலகத்தையும் அரசுக்கு எதிரானசூழ்நிலையும் ஏற்படுத்தியதை அறிந்த உரோமை அதிகாரிகள் அவரைக்கைது செய்து பத்மு தீவிற்கு நாடு கடத்தினர்.இது எப்போது நடந்தது?

நூல் எழுந்தக் காலம்
பத்மு தீவிற்கு வந்தவுடன் சிறிய ஆசியா திருச்சபையில் நிலவும்சூழ்நிலைக்கு ஏற்று கடவுளின் செய்தியை திருவெளிப்பாடாக யோவான்எழுத ஆரம்பித்தார்.எந்தக் காலத்தில் அவர் எழுதினார் என்பதில் அறிஞர்களிடையேஒத்தக் கருத்து இல்லை. இந்நூலில் காணப்படும் வேதகலாபனைச்சூழலைநோக்கும் போதுஇதுகி.பி. 54-68க்கும் இடைப்பட்டக் காலத்தில்நீரோவின்கொடுங்கோல்ஆட்சியின்போதுஎழுதப்பட்டிருக்க வேண்டும்என்று சிலர் கூறுகின்றனர் (து.'.கூ.சுடிடிiளேடிn) . இதற்கு அவர்கள்கொடுக்கும் காரணம் திவெ 13:18 "அந்த எண்ஓர் ஆளைக் குறிக்கும்;அது 666” என்ற வரிகள் நீரோவைத்தான் குறிக்கிறது (இந்த எண்பற்றிய விரிவானவிளக்கத்தை பிறகுதருகிறேன்). அதுமட்டுமில்லாமல்திவெ 17:10-11ல் காணப்படும், "இப்போது ஒருவர் ஆட்சி செய்கிறார்”என்ற வரிகள் நீரோவைத்தான் குறிக்கிறது என்றனர். ஆனால் இருகாரணங்களும் சரியல்ல. எண் விடுகதையின் அடிப்படையில்666யைக் கண்டால் அது நீரோவைக் குறிக்குமென்றாலும் அதுவேமுடிவான விடையல்ல (காண். புனித இரனேயுஸ், 'னஎ. ழயநச. 5-28-30).மேலும் திவெ 17:10-11ல் காணப்படும் குறிப்புகள் அப்பொழுதுஆட்சியிலிருக்கும் நீரோவைக் குறிக்கிறதுஎன்பதுவரலாற்றுக்குஎதிராகஉள்ளது. எப்படி? உரோமைப் பேரரசின்ஏழு அரசர்களைக் குறிப்பிட்டு," இதில் ஐவர் வீழ்ச்சியுற்றனர்; இப்பொழுது ஒருவர் ஆட்சி செய்கிறார்”என்று எழுதுகிறார் யோவான் (17:9-10). விழ்ச்சியுற்ற ஐவரை எடுத்துக்கொண்டால், முதல் பேரரசரான அகுஸ்துஸ் (கி.மு. 31 கி.பி. 14),திபேரியுஸ்(14-37), காலிகுலா (37-41), இனொதியுஸ்(41-54), நீரோ (54-68) என்று கணக்கிட வேண்டும். அப்படியெனில் வீழ்ச்சியுற்ற ஐவரில்நீரோவும் ஒருவர். அவர் எப்படியோவானின்காலத்தில்வாழ்ந்திருப்பார்?மேலும் திவெ 2:8-11ல் சிமிர்னா திருச்சபை பற்றிப் பேசுகிறது."சோதிப்பதற்காக அலகை உன்னைச் சேர்ந்தோரில் சிலரை சிறையில்தள்ளவிருக்கிறது” என்ற வேதகலாபனையின் சூழலைஎடுத்துரைக்கிறது (திவெ 2:10). ஆனால் புனித போலிகார்ப்பிலிப்பியருக்கு எழுதிய மடலின் அடிப்படையில் (11:3) கண்டால் புனிதபவுல் உரோமையில் இறப்பதற்கு முன் (கி.பி. 64-65) சிமிர்னாவில்திருச்சபை உருவாகவில்லைஎன்றுதோன்றுகிறது. கி.பி. 68க்குப் பிறகேஅங்கே நற்செய்தி போதிக்கப்பட்டது. ஆனால் கி.பி. 68ல் நீரோ மன்னன்இறந்து விட்டான். எனவே திருவெளிப்பாடு நீரோ மன்னன் காலத்தில்(கிபி 54-68) எழுதியிருக்க வேண்டுமென்ற கருத்தை ஏற்றுக் கொள்ளஇயலாது.

தொமீசியன் காலம்
(கிபி 81-96)தொமீசியன் காலத்தில்தான் திருவெளிப்பாட்டை யோவான்எழுதினார் என்று இரனேயுஸ் (கி.பி. 269) முதல் முதலில் சான்றுபகர்ந்தார் ('னஎ.ழயசந5:30). இதனையே எசுசேபியுசும், அலெக்சாந்திரியாவின் கிளமந்தும் கூறினர். கி.பி. 304-ல் விக்டோரினுஸ் என்பவர்இந்நூல் முழுவதற்கும் லத்தீன் மொழியில் எழுதிய விளக்கவுரையிலும்இக்கருத்தையே கூறுகிறார். இக்கருத்தை இன்றைய விவிலியஆராய்ச்சியாளர்கள் ஏறக்குறைய எல்லாருமே ஏற்றுக் கொள்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் தொமீசியன் காலத்து ஆட்சி நிலை.நீரோவின்காலம்வரை யோவான்தனதுநூலைஎழுதவில்லையென்பதுஉறுதி. அவனுக்கடுத்து வந்த வெஸ்பாசியனைத் தவிர (69-79) மற்றபேரரசர்கள்யாவரும் (கால்பா, ஓத்தோ, வித்தலியுஸ், டைட்டஸ்) குறுகியகாலமே ஆட்சி செய்தனர். அவர்கள் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள அரண்மனைக் குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தினர்.கிறிஸ்தவர்களுக்குஒருவேதனையாக அமையவில்லை. அடுத்து, பத்துஆண்டுகள் ஆட்சி செய்த வெஸ்பாசியன், பேரரசர் வழிபாட்டை அதிகம்வற்புறுத்தவில்லை. அதை ஆதரிப்பதாகவும் காட்டிக் கொள்ளவுமில்லை. அதனால் நீரோ காலத்திலிருந்த வேதகலாபனையின்தீவிரம்இக்காலத்தில் இல்லை.ஆனால் தொமீசியன் காலத்தில் நிலைமை மாறிவிட்டது. கி.பி.81-ல் அரியணையேறிய தொமீசியன் முதல் முதலில் கொடுத்தக்கட்டளை: ‘தன்னை மக்கள் கடவுளாக வணங்க வேண்டும்' என்பதே.தியோகாசியுஸ் என்ற உரோமை வரலாற்று ஆசிரியர் கூற்றுப்படி, "நம்ஆண்டவரும்கடவுளுமானதொமீசியன்கட்டளையிடுகிறார்” என்றுதான்எல்லா உரோமைச் சட்டமும்ஆரம்பிக்கவேண்டுமென்பதுதொமீசியனின்ஆணை (சுழஅயn ர்ளைவழசல 67:14).

தனது விருப்பத்திற்கு இணங்காதவர்களை, நீரோ செய்ததுபோன்று, கொடுமையான முறையில் தண்டித்தான் - பெரும்பாலும்கொலை தண்டனைதான். தான் பொதுமேடையில் தோன்றும் போது,"நமது ஆண்டவருக்கு புகழ்” என்று மக்கள் கத்த வேண்டும்;"ஆண்டவரும் கடவுளுமான தொமீசியனே” என்று ஆரம்பத்தில்விளித்துதான்யாரும் உரையாற்ற வேண்டுமென்ற கட்டளை இருந்தது.தனது அரசியல் முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பவர்யாராயிருந்தாலும்அவர்களை ஒழித்துக் கட்ட தொமீசியன்தயங்கியதில்லை. உதாரணமாக தனது நெருங்கிய உறவினரானபிளேவியுஸ் கிளமென்ஸ் என்பவரை - கொலை செய்தான். தனதுசகோதரனின் மகளான தொமதித்தில்லாவை போந்தியா என்ற தீவுக்குநாடு கடத்தினான். தியோகாசியுசின் கூற்றுப்படி இந்த தொமத்தில்லாகிறிஸ்தவளாக மாறியதால் தொமீசியனைக் கடவுளாக வணங்கமறுத்தாள். அதனால்பேரரசன்அவளைநாடுகடத்தினான். அங்குஅவள்ஒரு கிறிஸ்தவளாக இறந்தாள் என்பது வரலாறு.

தொமீசியன் காலத்தில்தான் சமயக் காரணங்களால்கிறிஸ்தவர்கள்அதிகம் சித்திரவதைக்குஉள்ளாயினர். இதேக் காலத்தில்உரோமையில்வாழ்ந்த புனித கிளமெந்துஇத்தகையவேதகாலபனைக்குச்சான்று பகர்கிறார் (எவுசேபியுஸ், திருச்சபை வரலாறு 3:18). எனவே,இத்தகைய வேதனையின் காலத்தில் திருவெளிப்பாட்டை யோவான்எழுதினார் என்பதில் ஐயமில்லை.இத்துடன், எபேசு, சார்திஸ், இலவோதிக்கேயா போன்றஇடங்களில்திருச்சபை புனித பவுலின் காலத்தில் உருவானது. யோவான் எழுதும்காலத்தில் இங்கெல்லாம் கிறிஸ்துவ நம்பிக்கையில் ஒருவித மந்தநிலையைக் காண்கிறார். இத்தகைய மந்த நிலை உடனேவந்திருக்காது.மாறாக, தொமீசியன்போன்றவனின்மிகக்கொடூரமானஆட்சியின்போது,அதுவும் பேரரசர் வழிபாட்டை மிகவும் தீவிரப்படுத்திய தருணத்தில்ஏற்பட்டிருக்க வழியுண்டு.ஆதலின்தொமீசியன்ஆட்சியின்இறுதிக்காலத்தில், குறிப்பாக கி.பி.95-ல் திருவெளிப்பாடு எழுதப்பட்டிருக்கலாம் என்பதே இன்றையஅறிஞர்களின்பொதுவானகணிப்பு.

8. இறைவாக்கும் கடிதமும்
"இதுஇயேசுகிறிஸ்துஅருளியதிருவெளிப்பாடு” என்றுஆரம்பித்துயோவான்தனது நூலை ஆரம்பிக்கிறார் (1:1). அதற்கேற்ப, வெளிப்பாட்டுஇலக்கியங்களில் காணப்படும் தன்மைகளான, இயற்கைக்கு மாறானஉருவ அடையாளங்கள் (ளுலஅடிழடளைஅ), கடவுளில் மக்கள் உறுதியோடுநிலைத்து நின்றால் அடையவிருக்கும் வெற்றியை 'இறுதியுகப்போர்'என்றும் யோவானின், திருவெளிப்பாடு வெளிப்படுத்துகிறது. இருப்பினும்,தானியேல் ஆகமம், 1 ஏனோக்கு போன்ற வெளிப்பாட்டு இலக்கியங்கள்போன்று, யோவானின்நூலும் வெறும் வெளிப்பாட்டுநூல்மட்டுமே என்றுநாம்முடிவுசெய்யக்கூடாது. யோவானின்திருவெளிப்பாடு, வெளிப்பாட்டு இலக்கியங்களுக்கு அப்பாற்பட்ட சில தன்மைகளையும்கொண்டிருக்கிறது.

1)இது ஓர் இறைவாக்கு நூல்
பிரபஞ்சம், வானவியல் போன்றவற்றில் உலகின் தொடக்கவரலாறு தொடங்கி "மறைந்திருக்கும்” உண்மைகளை பொதுவாகவெளிப்பாட்டுஇலக்கியநூல்கள்எல்லாம் (யுpழஉயடலிவiஉ டுவைநசயவரசந) கூறமுயற்சிக்கும். ஆனால், தற்கால உலகில் நடக்கும் நிகழ்ச்சியின்பின்னணியிலும், முடிவில் நடக்கவிருக்கும் வெற்றிப் போரில் மட்டுமேயோவான் கவனம் செலுத்துகிறார். மற்ற நுல்களில் காண்பது போல்புனைப்பெயரில் (2-ம் தானியேல்) தான் எழுதாமல் யோவான் தனதுபெயரை தெளிவாகக் கூறுவதுடன் (1:1, 4:9; 22:8), யாருக்கு இதுஎழுதப்படுகிறதோ அம்மக்களை தான் நன்கு அறிந்தவராகவும்எழுதுகிறார் (1:9). "குறிக்கப்பட்ட நாள்வரையில் இந்த சொற்கள்மறைக்கப்பட்டு முத்திரைப்பட வேண்டும்” என்ற மற்ற வெளிப்பாட்டுஇலக்கியங்கள் கூறும்போது (தானி 12:9) "இந்த நூலில் உள்ளஇறைவாக்குகளைமுத்திரையிட்டுவைக்காதே” என்றுயோவான்எழுதி,தான் வெளிப்படுத்திய செய்தியை எல்லா மக்களும் படித்துப்பயனடையஆசிக்கிறார் (22:10).

மேலும் யோவானின் திருவெளிப்பாட்டில் கடவுளோடு மிகவும்நெருங்கிய ஒன்றிப்பில் இயேசு கிறிஸ்துவைக் காட்டுகிறார். கடவுளின்அரியணையின் நடுவில் இயேசு என்ற ஆட்டுக்குட்டி நிற்பதையும் (5:6),கடவுளுக்காக அவரே அனைத்து மக்களையும் மீட்டவராகவும் (5:9),சாத்தானுக்கெதிராக இறுதி வெற்றிக்கு அனைவரையும் அழைத்துச்செல்லும் வீரராக (மெசியாவாக) இயேசுவை யோவான் வெளிப்படுத்தி(19:1 முதல்) தான்எழுதியவெளிப்பாட்டுநூல்கிறிஸ்தவரின்இறைவாக்குநூல் என்றும் நிரூயஅp;பித்துள்ளார்.

2)நம்பிக்கை தரும் நூல்
'நாம் வாழும் இக்காலம் பொல்லாதது' என்று பொதுவாக எல்லாயூத வெளிப்பாட்டு இலக்கியங்களும் தற்காலத்தைப் பற்றியநம்பிக்கையற்ற தன்மையைத்தான் வெளிப்படுத்தின. இறுதியுகப்போராட்டத்தை நோக்கியேநம்கண்கள்காத்திருக்கவேண்டும்; ஏனெனில்அதில்தான்தீயசக்திஎன்னும் அரக்கன்வீழ்த்தப்படுவான்என்றுகூறின.யோவான் தனது திருவெளிப்பாட்டிலும் இறுதியுகப் போர் பற்றி மிகவிரிவாகவே எடுத்துரைக்கிறார். ஆனால், கடவுள் வரலாற்றில்செயல்படுபவராகவும், இந்த உலகையும் வரலாற்று நிகழ்வுகளையும்கடவுள் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவராகவும் யோவான்காட்டுகிறார். இயேசுவின் இறப்பினால் மீட்பு முன்னமேஉறுதியாக்கப்பட்டுவிட்டது (5:9); அவர் சிந்திய இரத்தத்தினால்சாத்தானுக்கு எதிரான வெற்றி அவர்கள் சீடர்கள் யாவருக்கும் இந்தஉலகிலேயே கிடைக்க வழியுண்டு(12:10-11) என்ற கிறிஸ்துகோணத்தில்யோவான் இவ்வுலக வரலாற்று நிகழ்வுகளைக் காண்கிறார். "உலகில்உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான்உலகின்மீதுவெற்றிகொண்டுவிட்டேன்” என்றுதனதுதலைவர் எழுதியஇயேசுவின்வார்த்தைகளை (யோவா 16:33) யோவான்மறக்கவில்லை.

பாபிலோனிய அடிமைத்தனத்தில் தங்களது சமூக, சமய வாழ்வைஇழக்க நேரிடும் ஆபத்தில் இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு, "அஞ்சாதே,ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன்” என்ற நம்பிக்கை தரும்கடவுளின் வார்த்தையை அறிவித்தார் எசாயா (43:5). அதே போன்று,சோதனையில் தத்தளிக்கும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு,"அஞ்சாதே! முதலும் முடிவும் நானே!” என்ற நம்பிக்கையின்நற்செய்தியை யோவான் தெளிவாக வெளிப்படுத்துகிறார் (1:7; காண்2:10).

3)இது ஒரு கடிதம்
யோவானின்திருவெளிப்பாடு ஒரு வெளிப்பாட்டு நூல் மட்டுமல்ல,இது ஓர் இறைவாக்கு நூல் என்றும் கண்டோம். அத்துடன், இது ஒருகடிதம் என்ற தன்மையிலும் யூத வெளிப்பாட்டு இலக்கியத்திலிருந்துஇதுவேறுபடுகிறது."ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் யோவான் எழுதுவது”என்றுயோவான்தொடங்குவதிலிருந்தே இதுஒருகுறிப்பிட்ட மக்களுக்குஅனுப்பப்படும் கடிதமாகத் தோன்றுகிறது (1:4) குறிப்பாக 1:1-3 கடிதத்தின்முகப்புரையாகவும், வச 4-6 கடிதத்தின் முன்னுரையாகவும்காணப்படுகிறது. இப்பகுதியில் வரும் வாழ்த்து முறை புனித பவுல் தனதுகடிதங்களில் எழுதியவாறும் (உரோ, கலா) பழங்கால கடிதமுறைக்கும்மிகவும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முன்னுரையானதுஇயேசுவின் புகழோடு முடிவது போல் (6 ஆ) இந்நூலின் (கடிதத்தின்)இறுதிவாழ்த்தும் இயேசுவின் மகிமையோடு முடிகிறது: 1:1- 22:6; 1:2-22:8; 1:3-22:7; 1:3-22:10; 1:8-22:13. மேலும், ஏழு ஆசியத் திருச்சபைகளுக்குயோவான்எழுதியவையும் (2-3) கடித அமைப்பிலேயேஉள்ளன.

யூத வெளிப்பாட்டு நூல்கள் போன்று மறைத்து வைக்கப்படவேண்டிய நூலாக இல்லாமல், இதனை மறைத்து வைக்காதே என்றவெளிப்படையான கட்டளை பெற்ற யோவான் (22:20), ஒரு வழிபாட்டுச்சூழலில் வாசிக்க வேண்டியக் கடிதமாக இதை எழுதியிருக்கிறார் (1:3).அதனால்தான், "இதைப் படிப்போரும் கேட்போரும்” என்று பிரித்துக்காட்டி, "கேட்கச் செவியுடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார்கூறுவதைக் கேட்கட்டும” என்று பல முறை வலியுறுத்திக் கூறுவதன்பின்னணியும் இதுவே (2:7, 11, 17, 29; 3:6, 13,22). புனித பவுலின்கடிதங்களில் காண்பது போன்று யோவானும் வாசகர்களை வாழ்த்திஆரம்பிப்பது போல் (1:3) இயேசு கிறிஸ்துவின்பெயரால் வாழ்த்தி முடித்து(22:21), இது ஒரு சிறந்த கடிதம் என்று தெளிவுபடுத்துகிறார். இந்நூலின்அமைப்பு முறையைக் கண்டு (திருச்சபைகளின் துன்பச்சூழல், கடவுள்தீர்ப்பின்அறிவிப்பு, தீயவன்அறிமகப்படுத்தப்படல், தீயன்- சாத்தான்மேல்கடவுளின் தீர்ப்பு, இறுதி வெற்றி) இந்நூல் ஒரு நாடக அமைப்பில்உள்ளது என்றும் சில அறிஞர்கள் வருணிப்பர் (து.க்ஷ. க்ஷடிறஅயn, கு.ஞயடஅநச, சு. க்ஷசநறநச). ஆதலின், யோவானின் இந்த நூல்வெளிப்பாட்டுஇலக்கியத்துக்குஅப்பாலும்படிக்கப்படவேண்டும். இன்னும்குறிப்பாகச் யோவானின் திருவெளிப்பாடு ஒரு "வெளிப்பாட்டுஇறைவாக்கு நூல்” என்று சொன்னால் சாலப் பொருந்தும்.

9. திருச்சபையின் சந்திப்புகள்

துன்பமும் போராட்டமும் நிறைந்த இச்சூழலில் யோவான்என்பவர்திருவெளிப்பாட்டை எழுதினார். அதற்கு இரண்டு முக்கியக்காரணங்களைக் கூறலாம்.

அ) துன்பங்களில் மன உறுதி
துன்பங்களில் துவண்டுவிடாமல் மனவுறுதியுடன் இருக்கத்தூண்டுகிறார். துன்பங்களைக் கண்டு, பயந்து, சோதனைக்குஅடிபணிந்து, கிறிஸ்துவ மதிப்பீடுகளை குழி தோண்டிப் புதைக்கும் பலகிறிஸ்தவர் இருந்தனர் (1 திமொ 2:2; திவெ 2:20-21). மனவுறுதியில்தளர்ச்சியுறாமல் இருக்கும் சிறுபான்மைக் கிறிஸ்தவர்களின் குரலாகயோவான் செயல்படுகிறார். ஆதலின் மன உறுதி வேண்டும் என்றுவலியுறுத்தி (7 முறை ஸ்ரீ 1:9; 2:2-3, 19; 3:10; 13:10; 14:12), நிலைத்துநின்றால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கைச் செய்தியை அளிக்கிறார்(12:11).இந்த வெற்றிக்கு மனித சக்தி மட்டுமன்று, கடவுளே காரணமாயிருக்கிறார் என்ற இறையியல் நிலைப்பாட்டை வலியுறுத்துகிறார்யோவான். இதனைஇரண்டு விதத்தில் விவரிக்கிறார்.

1)கடவுள்தான் எல்லாம் வல்லவர் மனித சக்திக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை என்று இறுமாந்துசெயல்பட்ட உரோமைப் பேரரசு தன்னையே கடவுளாகப் பாவித்துசெயல்பட்ட சாத்தானாக (அரக்கப்பாம்பு) உருவகித்து வருணிக்கின்றார்.இதற்கு எதிர்மாறாக - கடவுளை இந்நூலாசிரியர் எல்லாம் வல்லவராகஅழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

அ) கடவுள் விண்ணகத்தில் அரியணையில் வீற்றிருப்பதாகவருணிப்பதில்(62 முறை கூhசடிnடிள)என்றகிரேக்க வார்த்தையும், 47 முறை#8220;எல்லாம் வல்லவர்” என்ற வார்த்தையும் பயன்படுத்துகின்றார். அவரதுவல்லமைவிளங்குகிறது. அரசியல்தன்மையுடன்அரியணைஅறையைஅவர் விவரிப்பதில்(அதி4), "தூயவர்” என்றுமூன்றுமுறை பாடும் நான்குஉயிரினங்களின்தொனியில்(4:8), சாத்தானின்அரியணையையும்(2:13)விஞ்சும் அதிகாரம் கொண்டவராக கடவுளைக் காட்டுகிறார்.

ஆ) இதே அரசியல்பாணியில்கடவுளின்அதிகாரத்தை முத்திரைகள்பற்றிய காட்சிகளிலும் (6:1-17; 8:1; 3-5; எக்காளம் 8:2, 6-12; வாதைகள்(15:8) பற்றியக் காட்சிகளிலும் விளக்குகிறார்.

இ) கடவுளுக்கு இந்நூலின் ஆசிரியர் கொடுக்கும் பெயர்களைநோக்கினால் (பான்ட்தோ கிராதோர்; 1:8; 4:8; 11; 11:4, 15, 17; 15:3-4;16:5, 7; 18:8; 19:16; 21:22, முரசழைள. னுநளிழவநள. யுடphய யனெ ழுஅநபய (15 வiஅநள) ர்ழடல யனெ வுசரவா (6:10). அவரது வல்லமை பற்றி அவர் கூறும்கருத்து மேலும் புலனாகும்.

2)தீமையின் மேல் ஆதிக்கம்
பழைய ஏற்பாட்டில் யாவே கடவுள் தீமையின் மீது ஆதிக்கம்கொண்டிருக்கிறார் என்றுதெளிவுற எடுத்துரைக்கின்றன(திப 13:7 யோபு40:6, 41:26).டுநஎயைவாயnஇ வாந ளுடippநசல ளுநசிநவெ என்றும் பழங்காலப்புராணங்களில் காண்கிறோம். இதைதான் பெகமோத் என்றும்லிவியத்தான் என்றும் யோபு நூல் வருணிக்கிறது. (40-41). காண்எசா28:17, 27:13; இதனை யாவே அழித்தார் (திபா 74:12-14). இதேதொனியில் - கடவுள் தீய சாத்தானின் மேல் முழு அதிகாரம்கொண்டுள்ளார் என்பதை மிகவும் தெளிவுற எழுதுகிறார் (12:7-12).கடவுளின் வெற்றிவாகைச் சூடும் வல்லமையை (அதி 14-20 ஸ்ரீ"டுவைவடந 'யீடிஉயடலயீளந” மேலும் விவரிக்கிறார் "கடவுள்தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது” என்ற அறிவிப்பில் தொடங்கி (14:7),கடவுள்எவ்வாறு தீமையைஃசாத்தானைஅழிக்கிறார் என்று படிப்படியாகவிளக்கி, இறுதியில், "சாவும் பாதாளமும் நெருப்பு ஏரியில்எறியப்பட்டன”என்றுகூறி(20:14) கடவுளின்முழுஅதிகாரத்தை மட்டுமல்ல, சாத்தானின்மேல் அவருக்கிருக்கும் அதிகாரத்தையும் தெளிவுப்படுத்துகிறார் (காண்17:1-18; 19:17-21).

வேதனையின்காலம் முடிவற்றதல்லஎன்பதை இதனால்திருநூல்ஆசிரியர் மிகவும் தெளிவாக சுட்டிக் காட்டுகிறார் (19:17, 1 "வாருங்கள்கடவுள் அளிக்கும் பெரும் விருந்துக்கு வந்து கூடுங்கள்” - "அவர்இருப்புக் கோல் கொண்டு அவர்களை நடத்துவார்” (19:15). ஏழாவதுஎக்காளத் தொனியில் கேட்கும் பாடலின் உட்கருத்தும் - இந்தக் கடவுள்வல்லமையில் உருவாகும். அவரது சினம் - அவரது ஆட்சி தெளிவுறவெளிப்படுகிறது (11:15-18).

ஆ) செயல்பாட்டில் அர்ப்பணம் (கிளர்ந்தெழும் திருச்சபை)
துன்பத்தில் துவண்டுவிடாமல் இருக்க வெறும் நம்பிக்கை என்றஊக்க மருந்தை மட்டும் திருவெளிப்பாடு தரவில்லை. மாறாக,அரியணையில் வீற்றிருக்கும் ஆட்டுக் குட்டியின் செயல்பாட்டை ஒருமாதிரியாகவும்ஊற்றாகவும்தந்துவேதனைவேளையிலும்விழித்திருந்துசெயல்பட வேண்டுமென்றுதூண்டுகிறார் யோவான்.

பொதுவாகஅம்னோஸ், அர்னியோன்அம்னோஸ், அர்னியோன்அம்னோஸ், அர்னியோன்என்ற இரு சொற்களும்ஆட்டுக் குட்டி என்ற பொருளை அளிக்கும். இரண்டுமே இயேசுவுக்குச்சாந்தும் போது அவரது சிலுவை மரணத்தையே குறிக்கவல்லது (யோ1:23, 36 - அம்னோஸ்). திருவெளிப்பாட்டில் ஆடடுக்குட்டி அல்லதுசெம்மறி மிகச் சிறந்த இடத்தை வகிக்கிறது - அர்னியோன் என்றவார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார்.இவ்வார்த்தையை யோவான் இரண்டு பொருள்களில்பயன்படுத்துகிறார்.

i)வெட்டப்பட்ட ஆட்டுக்குட்டி
"அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்க கண்டேன்.கொல்லப்பட்டது போல் அது காணப்பட்டது” (5:6) என்று இயேசு என்றசெம்மறியை முதன் முதலில் அறிமுகப்படுத்துகிறார் யோவான். இதில்தன்னையேபலியாக அர்ப்பணிக்கும் இயேசுவின்நிலைவெளிப்படுகிறது(காண் 5:6, 9, 12, 6:4; 13:8). "முத்திரை இடப்பட்ட ஏட்டுச் சுருளைப்பிரித்துப் படிக்கும் திறன் - இந்த ஆட்டுக்குட்டிக்கு வந்ததென்றால்,அதற்குக் காரணம் அவரது இந்த அர்ப்பண வாழ்வு (காண் 5:2-8).அதனால்தான் "ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்தசான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள்” என்று வேறொருஇடத்தில் தெளிவுபடுத்துகிறார் (12:11). ஏனெனில், வேதசாட்சிகள்"தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தில்துவைத்துவெண்மையாக்கிக்வெண்மையாக்கிக்வெண்மையாக்கிக் கொண்டவர்கள்” (7:14).துன்புறும் திருச்சபை தனது சவால்களை மீட்புக்காக தன்னையேஅழித்துக்கொண்டஆட்டுக்குட்டியைமுன்வைத்துசந்திக்கஅழைக்கிறார்யோவான். ஆட்டுக்குட்டியின்திருமணவிழா ஆட்டுக்குட்டியை மணந்துகொண்டவர் (19:17).சீயோன் மலை மீது நின்ற 1,44,000 பேர் ஆட்டுக்குட்டியோடுநின்றார்கள்என்று வருணிக்கிறாரே ஆசிரியர் (14:1) அந்த 1,44,000 பேர்யார்? இவர்கள் யாவரும் ஆட்டுக்குட்டியினால் விலை கொடுத்துமீட்கப்பட்டவர்கள். இவர்கள் இயேசுவின் பாதையில் துன்பதுயரங்களைச் சந்தித்துதான் ஆக வேண்டும். "என்னைப் பொறுத்தவரையில் உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப்பொறுத்தவரையில்நானும்சிலுவையில்அறையப்பட்டிருக்கிறேன்” என்றபவுலின் வார்த்தைகள் பொருத்தமாக அமைகிறது இங்கே (கலா 6:14;காண்; பிலி3:10-11). அதனால்தான், கிறிஸ்தவர்களுக்கு எதிர்க்கப்படும்அறிகுறிகளாக (லூக் 2:30) இருப்பதில் ஆச்சரியப் படக்கூடாது என்றுஏழு திருச்சபைகளுக்கும் அறிவுறுத்துகிறார் யோவான்.துன்புறுத்தப்பட்ட நிலையில் தானே இருக்கும் ஆசிரியர் (1:9),கிறிஸ்தவர்களின்வேதனையை நன்கு உணர்ந்தவர் (2:13; 11:7; 12:1-6;13-17) துன்பமும் துயரமும் சான்று பகரும் வாழ்வின் அன்றாட நியதிகள்என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தூண்டுகிறார்.

ii)போராடும் ஆட்டுக்குட்டி
வெட்டப்பட்ட நிலையில், இயேசு என்ற ஆட்டுக்குட்டி நின்றதாகவருணிக்கும் ஆசிரியர், அதே வேகத்தில், " அதற்கு ஏழுகண்களும், ஏழுகொம்புகளும் இருந்தததாகவும் - அது நின்று கொண்டிருந்ததாகவும்வருணிக்கிறார் (5:6). அதாவது, அளவில்லா ஆற்றலும் அறிவும்கொண்டு, போராடும் சூழலில் ஆட்டுக்குட்டி இருந்தது என்பதே இதற்குப்பொருள்.கொம்பு - ஆற்றலை குறிக்கிறது (எண் 23:22; இச 33:17; 1சாமு2:1; 1 அர 22:11; திப 75:4).இரண்டாவதாக இந்த ஆட்டுக்குட்டி, சிங்கத்தோடுஒப்பிடப்படுகிறது

(யூத குலத்தின்சிங்கம் 5:5). யூத குலத்தின்சிங்கமே இந்த இயேசு என்றஆட்டுக்குட்டி, என்று தெளிவுப்படுத்தி, இயேசுதான் யூதர்கள்எதிர்பார்த்திருந்த மெசியா என்று சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். இங்கேஆட்டுக்குட்டியும் சிங்கமும் ஒன்றாகின்றன.

இந்த ஆட்டுக்குட்டிதான் சாவின் மீதும் (5:5-6) சாத்தானின் மீதும்(17:14) வெற்றி கண்டு, "ஆண்டவருக்குக்கெல்லாம் ஆண்டவராகவும்,அரசருக்கெல்லாம் அரசராகவும் மாறுகிறது (17:14; 19:6). அமைதியின்ஆட்சியை நிறுவிய இவர் (7:9) விண்ணக மலைமீது நின்று (14:1),உலகைத் தீர்ப்பிடும் நீதிபதியாக காட்சியளிக்கிறார் (14:10).இவரது இத்தகைய நீதித் தீர்ப்புச் செயலினால் தீமைகள் யாவும்எரியும் நெருப்பில்சுட்டெரிக்கப்பட்டு (20:10), புதிய வானமும் புதிய பூமியும்உருவாகின்றன(அதி 21).

போராடும் இந்த ஆட்டுக்குட்டியின் மணமகளாக இருக்கும்திருச்சபை அனைத்திற்கும் அடிபணிந்து செல்லும் நிலையில் இருக்கமுடியாது. அநீதிகளை எதிர்த்து - நல்வாழ்வுக்காக போராடும் திருச்சபையாகஇருக்கவேதிருவெளிப்பாடுஅழைப்புவிடுக்கிறது. செம்மறியின்பெயரைத் தங்கள் நெற்றியில் பொறித்துக் கொண்ட திருச்சபை (14:1;22:3), தீமைக்கு அடிபணிந்து செல்பவர்களிடமிருந்து தனித்துநிற்கின்றனர்.

"வெற்றி பெற வேண்டும்” என்று திருச்சபையில் விடுக்கப்படும்அழைப்பில் (2:7, 11, 17, 29; 3:5; 12, 21) அவர்களது போராட்டம்இழையோடுகின்றது. பலவித போராட்டத்தின்விளைவினால்கிறிஸ்தவர்கடவுளின்அரசில் இடம் பெறுவர் என்று திருப்பாடல் கூறுகிறது.இறக்கும் வரை நம்பிக்கையோடிருக்க சிமிர்னா திருச்சபைக்குச்செல்லும் இயேசு (2:10) தனது சீடர்கள் தீமையை எதிர்த்துப் போராடவேண்டும் என்பதற்கே - அரக்கப் பாம்பும் மிக்கேல் வானதூதரும்போராடுவதை உருவகமாக வெளிப்படுத்துகிறார்.

சமுதாய அநீதிகளை எதிர்த்து, சமய முரண்பாடுகளைக் களைந்து,தனி மனித பலவீனக் கட்டிலிருந்து விடுபட்ட இறைமக்களாக வாழ -கடவுளின் வார்த்தையாக உள்ள இறை மக்கள் உலகில் எதிர்க்கப் படும்அறிகுறியாக மட்டுமன்றி, கிளர்ந்தெழும் திருச்சபையா கவும் இருக்கவேண்டுமென்பதே திருவெளிப்பாட்டுப் போதனை.பலிபீடத்தின்அடியில்இருந்த கொலைசெய்யப்பட்ட ஆன்மாக்கள்(6:9), மண்ணுலகின் ஆண்டவர்முன் நின்ற இரு சாட்சிகள் (11:3-4, 9)கொடியவிலங்கின்முன்தங்கள்உயிரைப் பணயம் வைத்த விசுவாசிகள்(13:15) பாபிலோனால் கொலை செய்யப்பட்ட இறைவாக்கினரும் இறைமக்களும் - இவர்கள் யாவரும் தீமைக்கு அடி பணிந்து செல்லும்செயலற்ற திருச்சபைக்கு அடையாளங்கள் அல்ல மாறாக, நற்செய்திமதிப்பீடுகளுக்காக தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து நேர்மைக்குநிமிர்ந்து நின்றபோராளி திருச்சபையின்போராளி திருச்சபையின்போராளி திருச்சபையின் கூறுகள். அதனால்தான்,"ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் மட்டு மின்றி, தாங்கள் பகர்ந்தசான்றுகளும்” அவர்கள் சாத்தானைவென்றார்கள் என்றும், "அவர்கள்தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவுமில்லை; இறங்கவுமில்லை”என்றுயோவான் எழுதுகிறார் (12:11).

வேதசாட்சி என்பது திரவ - எண்ணப்படி - உயிரைப் பணயம்வைப்பதுஎன்பதைவிட, தனது"தான்” என்றமனித தன்மைக்குதினமும்இறப்பது என்றபுதியநோக்கத்தைத்தருகிறது.இதுதான்உடலை சிலுவையில் அறைவது என்பதாகும்.இத்தகைய முயற்சியில் நாம் புதிய எருசலேமில் இப்போதேஇருக்கிறோம்.

10. திருவெளிப்பாடு: மூலமும் அமைப்பும்

யோவானின்திருவெளிப்பாடு முன்னுரை (1:1-3), முடிவுரை (2:16-21) என்ற ஒரு கட்டமைப்பில் எழுதப்பட்டாலும் இந்த நூல் எந்தஅமைப்பில் எழுதப்பட்டுள்ளது என்று எளிதில் முடிவு செய்ய இயலாது.ஒவ்வொரு விளக்கவுரையாளரும் பழங்காலந்தொட்டே ஒவ்வொருவிதமானஅமைப்பைத் தருகின்றனர்.

அ) இதற்கு என்ன காரணம்?
இந்நூல் எழுதப்பட்ட விதத்தில் பலவிதக் குறைபாடுகளைஆராய்ச்சியாளர்கள் கண்டனர். முதலில், இந்நூலில் பல ஒத்த பகுதிகள்காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஏழு திருமுகங்கள், ஏழுமுத்திரைகள், ஏழு எக்காளங்கள், ஏழு கிண்ணங்கள் - இவற்றில்ஒரேவிதமானகருத்தே (கடவுளின்தீர்ப்பே) வலியுறுத்தப்படுகின்றனஎன்றுகூறினர். மேலும், ஆறாம் எக்காளத்தில் கூறப்பட்ட கருத்தையே (9:13-21) மீண்டும் ஆறாவது கிண்ணத்தில் கூறப்படுகிறது (16:12-16).ஒரேவிதமாக சொற்றொடர் திரும்பத்திரும்ப வருகிறது. உதாரணமாக,"மின்னலும், பேரிரைச்சலும் இடிமுழக்கமும்” (4:5; 8:5; 11:9; 16:18).

மேலும் கருத்தோட்டத்தில் அவ்வப்போது ஒரு சில தடைகள்காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆறாவது முத்திரை உடைக்கப்பட்டவுடன் ஏற்படும் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு (6:17) ஏழாவது முத்திரைதொடர வேண்டும். ஆனால் திடீரென புதிய இஸ்ரயேல் பற்றிய செய்திவருகிறது (அதி 7). அதேபோன்று, "அப்பொழுது விண்ணகத்தில்கடவுளின் கோயில் திறக்கப்பட்டது” என்ற குறிப்புகளோடு (11:19)அதற்கடுத்துவரும், "வானில்பெரியதோர் அடையாளம்கண்டேன்” என்றுதொடங்கும் 12 ஆம் அதிகாரம் இணைந்துசெல்லவில்லை. அதுபோன்றஆட்டுக்குட்டியின் திருமணவிருந்து பற்றிப் பேசிக்கொண்டே வந்தவர்,அந்த ஆட்டுக்குட்டியான இயேசு பகர்ந்த சான்றே இறைவாக்குகளுக்குஉயிர்மூச்சு என்று கூறி விட்டு (19:10),

"பின்னர் நான் விண்ணகம்திறக்கக் கண்டேன்” என்று யோவான் எழுதுவது குழப்பத்தைஉருவாக்குகிறது (19:11). ஏனெனில், ஆட்டுக்குட்டியின்திருமணவிழாக்காட்சியே விண்ணகத்தில்தான் நடப்பதாக எழுதுகிறார் (19:1-10).முதல் லத்தீன் விளக்கவுரை எழுதிய பெத்தாவைச் சேர்ந்தவிக்டோரினுஸ் (கிபி 275-300) என்பவர்தான் முதன் முதலில் இதுபோன்றக் "குறைபாடுகளைக்” கண்டார். கடவுள் தீமையை அறவேஅழிக்கும்இறுதியுகப்போரை வலியுறுத்தவேமுதலில்சொன்னக்கருத்தை(எக்காளக் காட்சிகள்) மீண்டும்16-ஆம்அதிகாரத்தில்கூறுகிறார் என்றார்.

ஆ) மூலகாரணமாக இருக்கலாம்
ஆனால் மேற்கண்ட யோவானின்எழுத்தோவியத்தைப் பலர் ஒருகுறையாகக் கண்டனர். இதுபோன்றகுறைபாடுகளுக்குக் காரணம்அவர்எடுத்தாண்ட மூலமாகவும் இருக்கலாம் என்றும் கருதினர்.19-ஆம்நூற்றாண்டில்விவிலியஆராய்ச்சியில்மூலஆய்வுமுறை(ளுடிரசஉந ஊசவைiஉளைஅ) தோன்றியது. பழைய ஏற்பாட்டின்ஐந்தாகமங்களைப் புரிந்து கொள்ளவும், ஒத்தமைவு நற்செய்திகளைப்புரிந்து கொள்ளவும் இந்த ஆய்வுமுறை அதிகம் பயன்பட்டது.திருவெளிப்பாட்டையும் இம்முறையில் ஆய்ந்தால் இதிலுள்ள"குறைபாடுகள்” தெளிவாகும் என்றுகருதினர். உதாரணமாக, பொய்மார்என்றசிநூ?தப் பேராசிரியர் ஆய்வுப்படிதிருவெளிப்பாடுமூன்றுநிலைகளில்உருவாக்கப்பட்டது (ஆ.நு. க்ஷடிளைஅயசன, சுக்ஷ 56, 1949, 507-41). நீரோவின்காலத்தில்(கி.பி. 62-68) ஒருநூலையோவான்எழுதிஅடுத்து, தொமீசியன்காலத்தில் மற்றொரு நூலை யோவானே எழுதினார். இறுதியில்தொமீசியன் காலத்தின் கடைசி கட்டத்தில் (கிபி95) வேறொரு ஆசிரியர்எல்லாவற்றையும் தொகுத்து, தற்போதுள்ள நூலைத் தந்தார்.அதனால்தான் இந்தக் குழப்பம் என்றார். பொய்மார் எனபவர் மற்றொருவிளக்கத்தைத் தந்தார். அதி 4-11 ஆரம்பத்தில் ஒரு யூத வெளிப்பாட்டுநூலாக இருந்தது. இது திருமுழுக்கு யோவான் காலத்தில், அவரதுபோதனையின் தாக்கத்தில் எழுந்தது. அதி 12-22ம் கூட கிபி 60-ல் ஒருயூதத் திருவெளிப்பாடாகத்தான்ஆரம்பத்தில் எழுதப்பட்டது. அதன்பிறகு,திருமுழுக்கு யோவானின் சீடர் ஒருவர் கிபி 80க்குப் பிறகு அந்த இருபகுதிகளையும் ஒன்றாகத் தொகுத்தார். அப்படி அவர் தொகுக்கும்போது(அதி1-3; 22:16) 20,21) போன்ற பகுதிகளைச் சேர்த்தார் என்றுகூறுகிறார்.

இ) யோவானே முழுமையாக எழுதினார்
மேற்கண்ட மூல ஆய்வுக் கொள்கைகள் யோவானின்இறையியலுக்கும் திருவெளிப்பாட்டு இலக்கியத் தன்மைக்கும்பொருந்துவதாக இல்லை. இன்றைய விவிலிய அறிஞர்கள் பெரும்பாலும் இக்கருத்துக்களை ஏற்பதில்லை. இந்நூலின் மொழி, நடை,அடையாளங்கள், இறையியல்கண்ணோட்டம்- ஆகியவற்றைஆராய்ந்தபலஅறிஞர்கள் (ழு.ஆரளளநைள, ளுறநவந, ஊhயசடநள) இந்நூலின்ஒருங்கிணைந்ததன்மையையும், யோவான் என்ற ஒரே ஆசிரியர் ஒரே காலக்கட்டத்தில்எழுதினார் என்பதையும் வலியுறுத்திக் கூறுகின்றனர். இருப்பினும்,பழைய ஏற்பாட்டு மூலங்களையும் (உ-ம். எசேக்கியேல் இறைவாக்குநூலிலிருந்து 146 முறையும், 20 சதவீத தானியேல் இறைவாக்கினையும்பழைய ஏற்பாட்டின் மற்ற நூல்களிலிருந்து மேலும் பலமேற்கோள்களையும் யோவான் கையாள்கிறார்). கனானேய, எகிப்தியப்புராணக் கதைகளையும் (லுயசசெடி ஊடிடடiளே, ஊடிஅயெவ ஆலவா in வாந டிடிடிம டிசசுநஎநடயவiடிn)யோவான்பயன்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது.எனவே, மேற்கண்ட "குறைபாடுகள்” இந்நூலில் பலவீனமல்ல,மாறாக, தனது கருத்தை வலியுறுத்த யோவான் கையாண்ட அவரதுஎழுத்து நடையாகும்.

ஈ) யோவானின் சிறப்பு நடை
யோவான் தனது திருவெளிப்பாட்டு நூலை பழைய ஏற்பாட்டுஇறைவாக்கு நுல்களின் தன்iமையில் எழுதியுள்ளார். எசே 25-32ல்காணப்படுவது போல் திவெ 4-11ல் கடவுளின் சீற்றம் இஸ்ரயேலுக்குஎதிராகவும் 12-22-ல் திருச்சபையின்பிற இனஎதிரியானஉரோமையின்அறிவு பற்றியும் எழுதுகிறார் என்று குரடடநவ என்பவர் கூறினார்.ஆனால் திவெ 4-11 இஸ்ரயேலுக்கு எதிராக எழுதப்பட்டுள்ளது என்பதுஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் வரலாற்றுத் தொடர் நிகழ்ச்சியாகவும்யோவான் இதை எழுதவில்லை.

தொடக்கக் காட்சியின் முடிவில், "நீ காண்பவற்றை, அதாவது,இப்பொழுது நிகழ்கின்றவற்றையும், இனி நிகழவிருப்பவற்றையும்எழுதியவை” என்ற இயேசுவின் கட்டளை வருகிறது (1:19). ஆக,யோவான் எத்தகைய காட்சிகளைக் கண்டாரோ அதே முறையில் எழுதிவைத்தார். இந்தக் காட்சிகளை நாம் இரண்டாகப் பிரித்துக் காணலாம்.ஏழு திருச்சபையில் கண்டவாறு திருச்சபையின் அன்றைய நிலை (2-3),இச்சூழ்நிலையில் கடவுளின் செய்தி (4-22), ஆக தெளிவானதொருகருத்துக் கோர்வையோடு யோவான் இந்நூலை எழுதியுள்ளார்.வெளிப்பாட்டு இலக்கியம் என்ற பலகையில் துன்புறும் மக்களுக்குகடவுள் தரும் இறைவாக்குச் செய்தி என்ற ஓவியத்தை வரைகிறார்ஆசிரியர். அவர் தரும் வெற்றிச் செய்தி கருத்து முன்னேற்றமாகதொடர்ந்துசென்று, திடீரெனபின்னுக்குவந்துதிருச்சபையின்அன்றையபோராட்டச் சூழலைநினைவுப்படுத்துகிறார். இருப்பினும்முழுவெற்றியைநோக்கிச் செல்லும் முன்னேற்றப் பாதையாகவே அவரது எழுத்து நடைஅமைகிறது. உதாரணமாக, முத்திரைக் காட்சிகள் (4-6) கடவுளின்நீதித்தீர்ப்பை அறிமுகப்படுத்த, "எக்காளங்கள்' (8-11) அவற்றைஅறிவிக்க,"கிண்ணங்கள்' அவற்றை நடைமுறைப்படுத்துகின்றன (அதி 16). ஆகயோவானின்நடையைஒருதொடர் வளையமாக வருணித்துக் காண்பதுபொருத்தமாகும். இப்பின்னணியில் நாம் இந்நூலின் அமைப்பைத்தருவோம்.

2) அமைப்பு

1. முன்னுரை (1:1-3)
2. ஏழு திருச்சபைகளுக்குக் கடிதம் (1:4-3:22)
3. ஏழு முத்திரைகள் (4:1-8:1)
4. ஏழு எக்காளங்கள் (8:2-11:19)
5. சவால்களும் சந்திப்புகளும் (12:1-13:18)
6. போரும், ஏழு வாதைகளும் (14-15)
7. ஏழு கிண்ணங்கள் (16)
8. தீமையின் அழிவு (17:1-20:15)
9. புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் (21:1-22:15)
10. முடிவுரை (22:16-21).

1. முன்னுரைதான் பெற்ற திருவெளிப்பாட்டினை ஒரு மடலாகத் தருகிறார்யோவான். இதனை மக்கள் சபையில் ஒரு வழிபாட்டுச் சூழலில் நடக்கவேண்டுமென்று விரும்பினார். அதனால்தான் "இந்தஇறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக் கேட்போரும் இந்நூலில்எழுதியுள்ளவற்றைக் கடைபிடிப்போரும் பேறு பெற்றோர்” என்றுதொடங்குகிறார் ஆசிரியர் (1:3). இம்மாபெரும் திருவெளிப் பாட்டினைஅளித்த கடவுள் எப்படிப்பட்டவர் என்றும், அத்திரு வெளிப்பாட்டினைவெளிப்படுத்தியஇயேசுவின்பண்புகள்என்னவென்றும்இம்முன்னுரைப்பகுதியில் தருகிறார் (1:4-20).

2. ஏழு திருச்சபைகளுக்குக் கடிதம்
யோவான் வாழ்ந்த பகுதியான சிறிய ஆசியாவில் ஏழுதிருச்சபைகள் இருந்தன. அவற்றின் சூழ்நிலைகளை அவர் நன்குஅறிந்தவர். அவற்றின் சமய, சமூக, அரசியல் பின்னணிகளை அவர்அறிந்ததோடில்லாமல் நற்செய்தியை முன்னிட்டு அவர்கள் அடைந்தவேதனைகள், நெருக்கடிகள்போன்றவற்றையும்அவர் நன்குஅறிந்தவர்.அதனால்இச்சபைகளுக்கு(எபேசு, சிமிர்னா, பெர்காம், தியத்திரா, சர்தை,பிலதெல்பியா, இலவோதிக்கேயா) இதனை எழுதினார். அது மட்டமல்லஏழு என்பது முழுமையைக் குறிக்கிறது. ஆதலின் உலக திருச்சபைமுழுமைக்கும் இதனை அளிப்பதாகக் கருதலாம்.இதனில், அந்தந்த திருச்சபையின் பலத்தையும், பலவீனத்தையும்சுட்டிக் காட்டுகிறார். அவர்களது பலத்திற்காக பாராட்டுதலையும்,பலவீனத்துக்காக எச்சரிக்கையும்தரப்படுகிறது. இறுதியில்நம்பிக்கையில்உறுதியோடு நிலைத்திருக்க அழைப்பு விடுக்கப்படுகிறது (2:7, 10-11, 17,23,29; 3:6, 12-13, 20-22). இந்த அழைப்பு வாக்குறுதியாகக்காணப்படுகிறது.

3. ஏழு முத்திரைகள் (4:1-8:1) இப்பகுதியை மூன்றாகப் பிரிக்கலாம்.

(அ) பேரரசரைக் கடவுளாக வணங்கும் மக்களுக்கு, உரோமைப்பேரரசருக்குப் பல மடங்கு மேலானவர் என்பதைக் காட்ட,அரியணையில் வீற்றிருக்கும் கடவுளை அறிமுகப்படுத்துகிறார்ஆசிரியர்.

(ஆ) கடவுளால் அனுப்பப்பட்ட அவரது மகன் இயேசு கிறிஸ்துவைஆட்டுக்குட்டியாகஇரண்டாவதாகஅறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.அவர் தன்னையே அர்ப்பணிக்கும் ஆட்டுக்குட்டி மட்டுமல்ல,போராடும் ஆட்டுக்குட்டியென (7 கொம்புகள், 7 கண்கள்)அறிமுகப்படுத்துகிறார்.

(இ) இப்பகுதியின் மூன்றாவது பகுதியில், தீமையை அழித்து வெற்றியைக் கொணரும் கடவுளின் வெளிப்பாடு அடங்கிய ஏழுமுத்திரைகளை இயேசு வெளிப்படுத்துவதாக வருகிறது.

இதற்கிடையில் தீமை அழிந்து நன்மை உருவாகும்போதுஎத்தகைய உன்னத நிலை ஏற்படும் என்பதைத் தெரிவிக்க புதியஇஸ்ரயேலின் பட்டியலை 7-ஆம் அதிகாரத்தில் தருகிறார் யோவான்.இவர்கள் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பில் இணைந்திருந்து,தங்கள் நற்செய்திக்குச் சான்று பகர்ந்தவர்கள் (7:14).

4. ஏழு எக்காளங்கள்
8:2-11:19கடவுளின் நீதித்தீர்ப்பு இந்த "எக்காளக் காட்சிகள்” மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தீமையின் உருவான சாத்தானுக்குத் துணைசெல்பவர்கள் எத்தகைய வேதனையையும், தண்டனையையும்அனுபவிப்பார்கள் என்று இங்கேவிளக்கப்படுகிறது.இப்பகுதியில் ஒரு இடைவேளையாகபதினோராம் அதிகாரத்தில் இரு சாட்சிகள்பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இவ்விருசாட்சிகள் யார் என்பதில் பல கருத்துக்கள்நிலவிடினும், திருவெளிப்பாட்டு இலக்கியப்பின்னணியில் நோக்கும்போது - இரண்டுஎன்பது ஆற்றலின் வேட்கையும்,சாட்சியத்தின்உறுதிப் பாட்டையும்குறிக்கிறது(இச 19:15). அதன்படி நோக்கின், திருச்சபைமக்களின்உறுதியானசாட்சியவாழ்வைஇந்த'இரு சாட்சிகள்' என்ற உருவகம்உணர்த்துகிறது.

5. சவால்களும் சந்திப்புகளும் (12:1-13:18)
இதனை இரு பெரும் பாகங்களாகக் காணலாம்i) 12-ஆம் அதிகாரம் நூலின்மையப்பகுதியாக வருகிறது. இதனில்திருச்சபையின் பயண வாழ்வையும், அப்பயண வாழ்வில் ஏற்படும்நெருக்கடிகளும், போராட்டமும், அதே நேரம், அந்தப் போராட்டங்களில்நிலைத்து நிற்பின் ஏற்படும் வெற்றியையும் இந்த அதிகாரம் தெளிவுடன்(புராணக்கதை வடிவில்) விளக்குகிறது.கதிரவனை ஆடையாக அணிந்திருக்கும் பெண் என்பவள்கிறிஸ்து என்ற மெசியாவை இவ்வுலகிற்குக் கொண்டு வர கடவுளால்தயாரிக்கப்பட்ட இஸ்ரயேல் என்ற பெண்ணைக் குறிக்கிறது (12:1-6).ஆனால் இயேசு இவ்வுலகில் பிறந்து, வாழ்ந்து, இறந்து உயிர்த்த போது,அந்த இயேசுதான்நம்மை மீட்கவந்த மெசியாவென்று ஏற்றுக் கொண்டஇஸ்ரயேலர் (பேதுரு, யோவான்போன்ற சீடர்கள், அன்னைமரியாள்...)புதிய இஸ்ரயேல் என்ற திருச்சபையைக் குறிக்கிறார் அப்பெண்(12:13-18). எனவே இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பயணம்செய்த இஸ்ரயேலும்,அவரையே மையமாக வைத்துப் பயணம் செய்யும் திருச்சபையுமேகதிரவனைஆடையாக அணிந்திருந்த அப்பெண்ஆகும்.வரலாற்றுப் பின்னணியில், இயேசுவுடன் நேரடித்தொடர்புடையதாகஇப்பெண்ணில்இயேசுவின்தாய்மரியாவையும்காணமுடிகிறது.

திருச்சபை என்ற இப்பெண்ணுக்கு ஏற்படும் விசுவாசப்போராட்டத்தையும் இவ்வதிகாரத்தில் ஆசிரியர் குறிப்பிட்டு,இப்போராட்டத்திற்குக் காரணமாக இருக்கும் தீயவர்களை அரக்கப்பாம்பாக வருணிக்கிறார். இருப்பினும் திருச்சபையைத் தீமை அழிக்கமுடியாது என்ற நம்பிக்கைக் செய்தியை அளிக்கவே, பேராட்டமும்வெற்றியும் என்ற கருத்தில் வான தூததர் மிக்கேலும் அரக்கப்பாம்பும்சண்டையிடுவதாகவும், அச்சண்டையில் அரக்கப்பாம்பு தோற்கடிக்கப்படுவதாகவும் உருவகமாக யோவான் குறிப்பிடுகிறார் (12:7-12).

இப்பகுதின் இரண்டாம் பாகத்தில் (அதி13) தீமையின் உருவானசாத்தானின் பிரதிநிதியாக இவ்வுலகில் கடவுளின் மக்களைத்துன்புறுத்தும் உரோமைப் பேரரசையும், பேரரசர், அவரது அலுவலர்கள்-போன்றோரை விலங்குகளாக வருணிக்கிறார் ஆசிரியர்.

6. போரும், ஏழு வாதைகளும் (14-15)
தீமையை அழிக்கப் புறப்படுகிறார் இயேசு என்ற ஆட்டுக் குட்டி.இயேசுவுக்குப் பிரமாணிக்கமாக இருப்பவர்கள் அவரோடு சேர்ந்துதீமையை அழிப்பார்கள். "நாடுகள் ஒன்று திரட்டப்பட்டு” என்று கூறி(14:14) உலகின் இறுதித் தீர்ப்பின்போது இயேசு எப்படி தண்டனைத்தீர்ப்பினைஉறுதியாக அளிப்பார் என்ற நம்பிக்கைச் செய்தி இப்பகுதியில்காணப்படுகிறது.

7. கிண்ணங்கள் (16)
தீமையின்மேலும்தீயவர்கள்மேலும்இயேசுஅளிக்கப் போகும்ஏழு(முழுமையான) வாதைகள் எப்படிப்பட்டவை என்பதனை "ஏழுகிண்ணங்கள்” என்ற பகுதிவிளக்குகிறது. "கடவுளின்சீற்றம்” நிறைந்தகிண்ணத்தை ஏழுவானதூதர்கள்தீயவர்கள்மேல்ஊற்றுவார்கள்என்று உருவகமாகக் கூறி கடவுளின் நீதித்தீர்ப்பின் உறுதிப்பாட்டையும்,கொடூரத்தையும் இப்பகுதி வெளிப்படுத்துகிறது. இவை யாவும்எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை கடவுள் மோசே மூலம்விடுவிப்பதற்காக அளிக்கப்பட்ட 10 கொடிய வாதைகளை ஒத்ததாகக்காட்டப்படுகிறது (காண் விப. 7-10). ஆண்டவர் கோபத்தின்உச்சநிலையைக் குறிக்கிறது இப்பகுதி.

ஆதலின் தீயவர்களை அழிக்கும் செயல்பாடுகள் இங்கேஆரம்பிக்கப்படுகின்றன. பிரபஞ்சம் முழுவதுமே ஆண்டவர் அளிக்கும்வாதைகளுக்குஉள்ளாக்கப்படும் என்ற நம்பிக்கைச் செய்தியைஆசிரியர்தருகிறார்.

8. தீமையின் அழிவு (17:1-10; 15)
இஸ்ரயேலின் நம்பிக்கை வாழ்வுக்கு இடையூறாக இருந்ததுஅன்றைய பாபிலோன். யோவானின் காலத்தில் திருச்சபைக்குவேதனையையும் போராட்டத்தையும் அளித்தது உரோமைப் பேரரசு,ஆதலின், உரோமைப் பேரரசை "பாபிலோன்” என்ற"விலைமாது” என்றுஉருவகமாக ஆசிரியர் அழைக்கிறார்.இப்பகுதியில்திருச்சபையின்எதிரிகளாகஇருந்தவர்எப்படிபடிப்படியாகஅழிக்கப்படுகிறார்கள் என்றுகாட்டப்படுகிறது.முதலில் பாபிலோன் என்றஉரோமை அழிக்கப்படுகிறது. அதனால்அதன் வழிபாட்டுக் கொள்கைகளுக்குத்துணை நின்றவர்கள் புலம்புவார்கள்என்றும், அப்படித் துணைநின்ற போலிஇறைவாக்கினர்களும் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்று வருணிக்கப்படுகிறது.

இத்தகையஅழிவிற்கானகாரணம்யார் என்பதும் (19:11-15), அதனால்ஏற்படும் வெற்றி முழக்கமும் (19:1-19) அளிக்கப்படுகிறது. அடுத்துதீமையின்மொத்த உருவானசாத்தான்(அரக்கப்பாம்பு) அழிக்கப்படுவதைஆசிரியர் வருணிக்கிறார் (அதி 20).இதனால் பொது உயிர்ப்புக்கு முன் கடவுளின் மக்கள்அனுபவிப்பது, முதல் உயிர்ப்பு என்றும் (20:5), தீமை முற்றிலும்அழிக்கப்படுவதை "இரண்டாம்இறப்பு” என்றும்(20:14, காண்எரே 51:39,57:7) வருணிக்கப்படுகிறது.இவ்வாறு தீமை முழுவதும் உலகிலிருந்து ஒருநாள் அழிக்கப்படும்என்ற உறுதிப்பாடு கொண்டு நம்பிக்கைச் செய்தியினைத் துன்புறும்திருச்சபைக்குத் தருகிறார் ஆசிரியர்.இத்தகையநிலையில்தான்புதியவிண்ணகமும்புதியமண்ணகமும்பிறக்கும். அதுவே புதிய எருசலேம் ஆகும்.

9. புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் (21:1-22:15)
எத்தகைய தீமையும், அதனால் விளையும் துன்பம் எதுவும்இல்லாத, கடவுளே கோவிலாகவும், விளக்காகவும் கொண்டிருக் கும்நிலையேபுதியவானம் புதியபூமியாகும் (காண்எசா 65:17; 66:2). இப்புதியவிண்ணகமும் புதிய மண்ணகமும் "புதிய எருசலேம்” என்றுவருணிக்கப்படுகிறது. "ஆட்டுக்குட்டி” என்றஇயேசுகிறிஸ்துவுக்குஉகந்தமணமகளாக இந்தப் புதிய எருசலேம் என்ற திருச்சபைவிவரிக்கப்படுகிறது (எசா 61:10).

இப்புதியஎருசலேமின்தன்மைகள்என்னவென்றுமுதலில்கூறும்ஆசிரியர் (21:1-8), அதன்வாழ்க்கை நிலைபற்றிஅடுத்துகூறுகிறார். புதியஆலயம் பற்றிய எசேக்கியேலின் கருத்துக்களுக்கு ஒப்ப இப்புதியஎருசலேமை யோவான்வருணிக்கிறார் (எசே 40:1-47:18).

10. முடிவுரை (22:16-21)
சபையில்படிக்க வேண்டியதொருகடிதமாக இந்நூலையோவான்எழுதுவதனால், அக்கடிதத்திற்கு ஏற்ற முடிவுரையாக இந்நூலைமுடிக்கிறார்.

------------------------------------------
--------------------------
----------------
------
--