உரோமையர், கலாத்தியர்

பேரருள்திரு. வி. இரபேல் மற்றும; அருள்திரு. கி.வி. சுந்தரிமைந்தன்

விவிலிய அன்பர்களே,

புனித பவுலின் பெயரில்விளங்கும் பதிமூன்று திருமுகங்களுள் ஆழ்ந்த இறையியல்கருத்துக்கள் கொண்டவைகலாத்தியரும் உரோமையரும்ஆகும். திருச்சபைத் தந்தையர்களின் எழுத்துக்களிலும் திருச்சபையின் வரலாற்றிலும் மிக அதிகமாக விளக்கப்பட்டதும் விவாதிக்கப்பட்டதும் மாறுபட்ட கோட்பாட்டு எண்ணங்களை விதைத்ததும் இவ்விருதிருமுகங்களாகும். சீர்திருத்தக் காலத்தில் #8220;பவுலின் எழுத்துக்களுள்விஞ்சி நிற்பது நம்பிக்கையினால் ஏற்புடையராகுதல்” என்னும் கருத்தேஓங்கி ஒலித்தது. இக்கோட்பாட்டிற்கு இறையியல் வலிமை சேர்த்தபெருமை இவ்விரு மடல்களையேச் சாரும்.

ஒருவர் ஏற்புடையராகுதல் என்பது அவர் நீதிச் சட்டத்திற்குக்கீழ்ப்படிததால் அல்ல, மாறாக கிறிஸ்துவின் இறப்பால் நடந்தேறியது(உரோ 5:4; கலா 2:21) என்கிறார் பவுல். இது எவ்வாறு நடந்தது என்றுபவுல் விளக்கமாகக் குறிப்பிடவில்லை. ஆயினும், உரோமையர் 3:21-30 ல் இதை ஓரளவிற்கு விளக்கியும் காட்டுகின்றார். ஒருவர்கிறிஸ்துவில் வைக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளால்ஏற்றவரெனக் கொள்ளப்படுவாரே தவிர (உரோ 3:26; கலா 2:16) நீதிச்சட்டத்தின்செயல்களைச் செய்வதால் இந்நிலையை எய்த முடியாது எனதிட்டவட்டமாகக் கூறுகின்றார் (2:16; 3:11). மேலும், கடவுளற்ற நிலையில்வாழ்பவர்களையும்கடவுள்ஏற்புடையவராக்குகிறார் (உரோ 4:5). எனவே,செயலின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயேஒருவர் கடவுளால்ஏற்றுக்கொள்ளப்படுகிறார் என்பதுபவுலின்உறுதியானநம்பிக்கையாகும்.

மேலும், இத்திருமுகங்களில் திருச்சட்டத்தைப் பற்றி பவுல்கொண்டிருந்த கருத்தும் வரலாற்றில் விரிவாகப் பேசப்படுகிறது.வெல்கவுசன் என்னும் ஆசிரியர் பவுலை #8220;யூத சமயத்தின் நோய்க்குறியாய்வு வல்லுனர்” எனக் குறிப்பிடுகிறார். திருச்சட்டத்தைப் பற்றிபவுல் தரக்குறைவான எண்ணம் கொண்டிருந்தார் என்பது அவர் மீதுபொதுவாக சொல்லப்படும் குற்றச்சாட்டு. ஏனெனில், திருச்சட்டம்பாவத்தைப் பெருக்கக் கொடுக்கப்பட்டது (கலா 3:19; உரோ 5:20).கடவுளால் கொடுக்கப்படாமல் இறைத் தூதர்களால் கொடுக்கப்பட்டது(கலா 3:19). திருச்சட்டம் வழித்துணையாகிய காப்பாளர் மட்டுமே (3:24).

ஆபிரகாம் திருச்சட்டத்தின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின்அடிப்படையிலேயே ஏற்புடையவராகக் கருதப்பட்டார் (உரோ 4).கிறிஸ்துவில்திருச்சட்டம் தன்நிறைவைக் கண்டது(10:4) என்றெல்லாம்பவுல் கூறுவதால் திருச்சட்டத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்றுகுற்றம் சுமத்துகின்றனர்.

ஆனால், உண்மையில் சட்டமில்லாத நற்செய்தியையூதரல்லாதாருக்குச் சொன்னாரே தவிர யூதருக்குச் சொல்லவில்லை.எனவே, பவுல் யூதர்களுக்கோ, யூதச் சட்டத்திற்கோ எதிராளி அல்ல.ஆயினும் தேவையற்ற முரண்பட்ட யூத வைராக்கியத்திற்கே எதிரானவர்என்பது இத்திருமுகங்களில் அதிகம் வலியுறுத்தப்படுகின்ற தன்னிலைவிளக்கம் தரப்படுகின்ற கருத்து ஆகும்.இத்திருமுகங்களுள் காலத்தால் முந்தியது கலாத்தியருக்கு எழுதியமடல்ஆகும். தான்பறைசாற்றியநற்செய்திக்குமாறுபட்ட நற்செய்தியைப்பறைசாற்றிய கோட்பாடுகளுக்குச் செவிமடுத்த மக்கள்மேல் கோபம்கொண்டுஎழுதப்பட்டதே இத்திருமுகமாகும். சட்டங்களையும் அவற்றைச்சார்ந்த செயல்களையும் விட கடவுள்மேல்நாம் கொள்ளும் நம்பிக்கையேமுதன்மையானதாய் இருக்க வேண்டும் என்று இம்மடலில் பவுல்வலியுறுத்துகிறார்.யூதச் சமயத்திலும், யூதச் சடங்கு முறைகளிலும் ஊறிப்போயிருந்தயூதக் கிறிஸ்தவர்கள் பவுலின் இந் நற்செய்தியைப் புரிந்துகொள்ளவில்லை. மேலும், உரோமையில் வாழும் கிறிஸ்தவர்கள்மத்தியிலும் பவுல் பற்றியும் அவரின் நற்செய்திப் பற்றியும் தவறானகருத்துக்களை எதிரிகள் விதைத்தனர்.

இந்தப் பின்னணியில், உரோமைக்குச் செல்ல விரும்பிய பவுல்,தன்னிலை விளக்கம் தரவும், தனது கோட்பாடுகள் பற்றியஉண்மைகளை விரிவாக எடுத்துரைக்கவும், உரோமைக் கிறிஸ்தவமக்களுக்கு இத்திருமுகத்தை எழுதினார். கடவுள் மேல் கொள்ளும்நம்பிக்கையினாலேயே ஒருவர் மீட்புஃவாழ்வு பெற முடியும் என்ற தனதுஇறையியல் கொள்கையை இம்மடலில் உறுதிபட வலியுறுத்துகிறார்.

இத்திருமுகங்களுக்கு தெளிவான, சுருக்கமான விளக்கவுரைஎழுதியுள்ள அருட்தந்தையர்கள்வி. இரபேல், கி.வி. சுந்தரிமைந்தன்அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக. இதனைப் படித்துபயனுற உங்களை அன்புடன்வாழ்த்துகிறேன்.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திருமுனைவர் ஜோமிக்ஸ்இயக்குநர்


உள்ளே

உரோமையர் திருமுகம்

1.முன்னுரை
2. முக்கியப்பகுதிகளுக்குவிளக்கம்
3. ஆபிரகாமின்நிலையினின்றுஎடுத்துக்காட்டு
4. உரோமைக் கிறிஸ்தவர்களைப்பாதித்தயூதப்பிரச்சனை
5. அறிவுரைப்பகுதி


கலாத்தியர் திருமுகம்

1.முன்னுரை
2. நிகழ்ச்சிப் பகுதி
3. கொள்கைப்பகுதி
4. அறிவுரைப்பகுதி
5.முடிவுரை
6. திருமுகத்தின்சிறப்புகள்

புனித பவுல் உரோமையருக்குஎழுதிய திருமுகம் -சிறுவிளக்கவுரை

1. முன்னுரை

1.1. முக்கியத்துவம்
உரோமையர் திருமுகம் பவுலின்மற்ற எல்லாத் திருமுகங்களையும்விட சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. அவர் எழுதிய 13திருமுகங்களில் நான்கு திருமுகங்கள் பெரிய திருமுகங்கள்எனப்படுகின்றன. அந்த நான்குபெரியதிருமுகங்களிலும் முதலிடத்தைப்பெறுவது உரோமையர் திருமுகமே.எல்லாத் திருமுகங்களையும் விட இது நீளமானதும் நல்லஅமைப்பும் கொண்டதுமாகும். மற்றத் திருமுகங்களை விட மிகுதியானவகையில் சிறந்த கொள்கைப்பகுதி இத்திருமுகத்தில் காணப்படுகிறது.

1.2. உரோமையில் கிறிஸ்துவ சமூகம்
புனித பவுல் தான் போகாத நகர்களுக்கு எழுதிய திருமுகங்களில்உரோமையர் திருமுகமும் ஒன்று. பின்னரே அவர் உரோமைக்குச்சென்றார். அப்படியாயின், பவுல்போதிப்பதற்குமுன்னரே உரோமையில்கிறிஸ்துவ மதம் பரவி இருந்தது.ஆயினும் எப்படி பரவியது என்பது குறித்துச் சரியாக யாருக்கும்தெரியவில்லை. ஒருவேளை திருத்தூதர் காலத்தின்தொடக்கத்திலேயேகிறிஸ்துவ மதம் பரவியிருக்கலாம்.

அக்காலத்தில் உரோமை நகரம் அகில உலகின் தலைநகர் போல்காணப்பட்டது. நிறைய பயணிகள் உரோமைக்குச் சென்றனர்.ஒருவேளைபெந்தகோஸ்துதிருநாளின்போதுஎருசலேமில்கூடியிருந்தமக்களில் சிலர் நற்செய்தியை எருசலேமிலிருந்து உரோமைக்குக்கொண்டு சென்றிருக்க வேண்டும். இதுதவிர மற்ற பயணிகள், சிறுசிறுநற்செய்தி பணியாளர்கள் மற்றும் வணிகர்களாலும் கிறிஸ்துவ மதம்உரோமை நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம்.

பேதுருவும்பவுலும்உரோமைத் திருச்சபையைத் தொடங்கியவர்கள்என்றும் அத்திருச்சபையின் தூண்கள் என்றும் சொல்லப்படுகின்றனர்.ஆயினும் இது அவர்கள் பிற்காலத்தில் சிறந்த தலைவர்களாகக் கருதப்பட்டதாலும் இருவரும் மறைசாட்சியராய் அங்கே உயிர் விட்டதாலும்ஏற்பட்ட கணிப்பேயாகும்.

இந்தக் கிறிஸ்தவர்கள் யூதக் கிறிஸ்தவர் மற்றும் பிற இனத்துக்கிறிஸ்தவர்கள் ஆவர். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச்சார்ந்தவர்களாய் இருந்திருக்க வேண்டும். பவுல் உரோமையர்திருமுகத்தை எழுதிய காலத்தில் இவர்கள் கிரேக்க மொழியே அதிகம்பேசியிருக்க வேண்டும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான்இலத்தீன் மொழி கிறிஸ்தவர்களின் அதிகாரப்பூர்வ மொழியாயிற்று.

1.3. திருமுகத்தின் நோக்கம்
உரோமைத் திருச்சபையின் முக்கியத்துவத்தைப் பவுல் நன்குஉணர்ந்திருந்தார். யூதமயமாக்கலை விரும்பிய கிறிஸ்தவர்கள் பவுல்குறித்து சில குற்றசாட்டுகளை வைத்திருந்தனர்.ழூ அவர் உண்மையானதிருத்தூதரல்லர்.ழூ நம்பிக்கை மட்டுமே போதும் என்பதைஅதிகம் போதித்து, விருப்பப்படி வாழ மனிதனைவிட்டு விடுகிறார்.ழூ கிறிஸ்துவசுதந்திரத்தை அதிகம் பேசுவதுகட்டுப்பாடற்ற நிலையை உருவாக்கிவிடும்.மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் மத்தியில்பவுல்தன்னிலைவிளக்கம்கூறிதன்சார்பாகவும்,தான் போதிக்கும் நற்செய்தி சார்பாகவும் பேசவேண்டியகட்டாயம் ஏற்பட்டுவிட்டது.எனவே அவரிடம் பல நோக்கங்கள்இருந்தன.

அவையாவன:
(1) யூதமயமாக்கலைச் செய்தவர்கள் நற்செயல் மற்றும்சட்டத்தினால்மட்டுமேமீட்பு எனபோதித்ததால்உரோமைத் திருச்சபையில்ஏற்படும் பாதிப்பைத் தடுத்தல்
(2) தான்உண்மையானதிருத்தூதர் எனஎண்பித்தல்
(3) தன் எதிரிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தல்
(4) கலாத்தியர் திருமுகத்தில் எழுதிய கருத்துக்கள் தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டிருந்தன. அந்தத் தவறானகண்ணோட்டத்தைக் களைதல்.
(5) தான் இதுவரை போதித்த போதனைகள் குறித்து மொத்தவிளக்கத்தைத் தருதல்.

(எ.கா) நம்பிக்கைக்கும் சட்டத்திற்கும்இடையேயான உறவு சட்டத்திற்கும் சுதந்திரத்திற்கும் இடையேயானஉறவு திருச்சபையில்யூதர்களுக்கும், பிறஇனத்தாருக்கும்இடையேயானஉறவை அனைவருக்கும் மீட்பு என்பது இறைத்திட்டம் எனும் ஒளியில்விளக்குவது.இப்படி ஆழமான சில நோக்கங்களைப் புனித பவுல் மனதில்கொண்டே இத்திருமுகத்தை வரைந்துள்ளார். ஆனால்அந்நோக்கங்கள்மறைவாகவே உள்ளன. வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.எனினும் இந்நோக்கங்களை நாமும் மனதில் வைத்து இத்திருமுகத்தைவாசித்தால்தான் பல பகுதிகளை நன்கு புரிந்து கொள்ள இயலும்.

1.4. காலமும் இடமும்
இத்திருமுகம் எழுதப்பட்ட காலத்தைச் சரியாகக் கணித்தல்இயலாது. பெரும்பாலும் இது பவுலின்மூன்றாம் பயணத்தின்இறுதியில்எழுதப்பட்டிருக்கலாம்.கி.பி. 57-லிருந்து 58-க்குள் எழுதப்பட்டிருக்கலாம்.கொரிந்திலிருந்து இத்திருமுகத்தை எழுதியுள்ளது போல்தெரிகிறது.உரோ 16:1-2 பகுதியில் கெங்கிரேயாவில் இருக்கும் சபைக்குத்திருப்பணி புரிகிற பெயிபாவை அன்போடு ஏற்கும்படி வாசகரைவேண்டுகிறார். அது கொரிந்தின் கிழக்குப் பகுதியில் இருந்ததுறைமுகமாகும். எனவே பவுல் கொரிந்திலிருந்து இக்கடிதத்தைவரைந்திருக்கலாம்.

கல்லியோ எனும் ஆளுநர் அகாயப் பகுதியில் ஆளுநராகஇருந்தார். அப்போது பவுலை யூதர்கள் அவர்முன் கொண்டு வந்தனர்.அகாயப் பகுதியில்தான் கொரிந்து இருந்தது. இந்த நிகழ்ச்சி திப. 18:12தொடக்கப் பகுதியில் உள்ளது. இது கி.பி. 51 இல் நடந்தது. பிறகு திப.18-20 வரையுள்ள பகுதியின் நிகழ்வுகளைக் கணக்கிட்டால் பவுல்கொரிந்தில் கி.பி. 54-க்குப் பின் பணிபுரிந்திருக்க வேண்டும். அதன்அடிப்படையில்தான் கி.பி. 57 லிருந்து 58 க்குள் இக்கடிதம்எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

1.5. ஆசிரியர்
புனித பவுல்தாம் இத்திருமுகத்தை எழுதினார் எனப் பொதுவாகஏற்றுக் கொள்ளப்படுகிறது. திருமறைத் தந்தையர் ஐயமின்றி இதனை ஏற்றுக்கொண்டனர். இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக்குள்இத்திருமுகம் பவுல் திருமுக வரிசையில் இடம் பெற்றுவிட்டது. பவுலால்எழுதப்பட்டது எனும் அடிப்படையில் மேற்கோள் காட்டப்பட்டுவிட்டது.மொழி, நடை, வரலாறு, இறையியல் கருத்துக்கள் ஆகியவற்றின்அடிப்படையில் பார்த்தாலும் பவுலே இதை எழுதினார் என உறுதியாய்கூறலாம்.

1.6. அமைப்பு

1. தொடக்கவுரையும் மையக்கருத்தும் 1:1-17
2. மனிதருக்கு மீட்பு தேவை 1:18-3:20
3. கடவுள் மீட்கும் விதம் 3:21-4:25
4. கிறிஸ்துவில் புதுவாழ்வு 5:1-8:39
5. கடவுளின்திட்டத்தில் இஸ்ரயேல் 9:1-11:36
6. கிறிஸ்தவ நடத்தை 12:1-15:13
7. முடிவுரையும் தனிப்பட்ட வாழ்த்துக்களும் 15:14-16:27

2. முக்கிய பகுதிகளுக்கு விளக்கம்
பவுலும் வாசகர்களும் (1:1 - 3:20)

2.1. பவுல் தன்னைக் குறித்தும; தன் நற்செய்தி குறித்தும்பேசுதல் (1:1-7)

2.1.1. தன்னைக் குறித்துபுனித பவுல் தன்னைக் குறித்து மூன்று அடைமொழிகளைஇப்பகுதியில் தருகிறார்.ஊழியன், திருத்தூதன், நற்செய்தி அறிவிக்கக் குறிக்கப்பட்டவன்.

2.1.2. ஊழியன்கிரேக்க மொழியில் 'டூலோன்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்குஅடிமைஎன்றேபொருள். ஆயினும்விவிலியத்தில்அது பயன்படுத்தப்படும் பொழுது சாதாரண அடிமையை அதுகுறிப்பதாகக் கொள்வதற்கில்லை.பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம், மோசே (யோசுவா 14:7) யோசுவா(யோசுவா 24:29) தாவீது (எரே 33:21) ஆகியோர் கடவுளின் ஊழியர்(அடிமை) என்றே அழைக்கப்படுகின்றனர். எனவேகடவுள்பணிக்காகத்தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையும் தங்களையே அப்பணிக்காகஅர்ப்பணித்துக் கொண்டவர்களையும் இது குறிக்கிறது.

புதிய ஏற்பாட்டில் இது கிறிஸ்துவின்பணியாளர்களைக் குறிக்கும்சொல்லாயிற்று. எனவே திருத்தொண்டர் எனப் பொருள்படும் 'தியோக்கோனோஸ்' எனும் சொல்லுக்கு இணையான சொல்லாகும் இது.பவுலைப் பொறுத்தவரை அவருக்கும் கிறிஸ்துவுக்கும்இடையேயான தனிப்பட்ட உறவை இதுசுட்டிக் காட்டுகிறது. முன்பு அவர்தலைமைக் குருவின் ஊழியராக இருந்தார். இப்போது கிறிஸ்துவின்ஊழியராகிவிட்டார் (திப 9:1-6).பவுல் உரோமை அதிகாரிகள் முன்னிலையில் தன்னை உரிமைக்குடிமகன் என அறிவித்தார். ஆனால், இங்கு கிறிஸ்துவின் அடிமைஎன்கிறார். அவர் முற்றிலும் கிறிஸ்துவின் சீடராக மாறி முழுகீழ்படிதலையும் அவருக்கு கொடுத்துவிட்டார்.தன்னைக் கிறிஸ்துவின் ஊழியன் எனும்போது கிறிஸ்துவே தன்ஆண்டவர் எனும் அறிக்கை இதில் தொக்கி நிற்கிறது.

2.1.3. திருத்தூதர்
இது கிறிஸ்துவுக்கும் பவுலுக்கும் இடையேயான அதிகாரப்பூர்வமானஉறவைக் காட்டுகிறது.'அப்போஸ்தோலோஸ்' எனும் கிரேக்கச் சொல் ‘அனுப்பப்பட்டவர்'எனும் பொருளைக் கொடுக்கிறது. ஒரு முக்கிய நோக்கத்திற்காகஅனுப்பப்பட்டவர். இவ்வாறுகிறிஸ்துவால்அனுப்பப்பட்டவர்கள்அவரின்அதிகாரத்தில்பங்கெடுத்தனர்; அவரின்கட்டளைகளைநிறைவேற்றினர்;தாங்கள் செய்தவற்றைக் குறித்து அவரிடம் திரும்பி வந்து தெரிவித்தனர்.யூதத் தலைவர்களும் திருத்தூதர்களை அனுப்பினர். அதுபோலஇளந்திருச்சபையில் தலச்சபைகளும் திருத்தூதர்களை அனுப்பின.

ஆனால் பவுலோ கிறிஸ்துவால் நேரடியாக அனுப்பப்பட்டவர். அவர்உயிர்த்த இயேசுவைக் கண்டார். இயேசுவின் உயிர்ப்புக்கு சான்று பகரபணிக்கப்பட்டார் (கலா 1:16). அவர் கிறிஸ்துவிடமிருந்து பெற்ற செய்திமற்ற திருத்தூதர்கள் போதித்த அதே செய்திதான் (கலா 1:11,12, 1கொரி15:11). அவர் புதிய பகுதிகளில் திருச்சபை நிறுவ அனுப்பப்பட்டவர் (திப9:15). கலா 1:15-ல்தன்தாயின்வயிற்றில்இருக்கும்போதே இறைவனால்அழைக்கப்பட்டவர் என்பார்.

பவுல் இயேசுவைக் கண்டவரல்லர். எனவே அவர் உண்மையானதிருத்தூதரல்லர் எனும் குற்றச்சாட்டை மறுக்கின்ற வண்ணமாகவும் இவர்தன்னைக் கிறிஸ்துவின்திருத்தூதன்எனஅழைப்பது அமைகின்றது.

2.1.4. நற்செய்திக்காகக் குறிக்கப்பட்டவர்
இது பவுலுக்கும் நற்செய்திக்கும் இடையேயான உறவைக்குறிக்கிறது. 'குறிக்கப்பட்டவர்' என்பது‘தனியே பிரித்துவைக்கப்பட்டவர்'என்ற பொருளில் வருகிறது. இது அரமேயத்தில் 'பெரிஸ்' என்ற மூலச்சொல்லிலிருந்து வருகிறது. பரிசேயர் என்றால் யூதப் பாரம்பரியங்கள்,சட்டங்கள், சடங்குகளைக் காக்கத் தனியே பிரிக்கப்பட்டவர்கள் என்றேபொருள். இங்கேயும் புனித பவுல் அந்தக் கருத்தை வெளிப்படுத்துகிறார்.அவர் முன்பு தன்னை ஒரு பரிசேயராகக் காட்டிக் கொண்டார். யூதமதத்தைக் கட்டிக் காக்க முனைந்துநின்றார். இப்போதுஅதே பாணியில்கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றவும் தன் செய்தியை அல்லதுகடவுளின் செய்தியை அறிவிக்கவும் முனைந்து நிற்கிறார். ஏனெனில்அவர் இப்போது அதற்காகப் பிரிக்கப்பட்டவர் (குறிக்கப்பட்டவர்).

2.1.5.பவுலின் செய்தி
தூதுவரை விட அவர் கொண்டு வரும் செய்தி முக்கியமானது.எனவே பவுல் உடனடியாகத் தான் போதிக்கும் செய்தியின் கருத்தைத்தருகிறார்.

1) இந்த நற்செய்தி கடவுளின் நற்செய்தி, எனவே எல்லோருக்கும்போதிக்கப்பட வேண்டும்.
2) இது புதிய செய்தியல்ல. ஏற்கனவே இறைவாக்கினர் மூலமாகஅறிவிக்கப்பட்டதே.
3) இது கடவுளின் மகனைப்பற்றியது. அதாவது கடவுள் தன்மகனில் என்ன செய்தார்என்பதைப் பற்றியதாகும்.

அந்த மகனிடம் மனிதத்தன்மையும் உண்டு. தெய்வத்தன்மையும் உண்டு. அவரின்உயிர்ப்பினால்தான் அவர் ஆண்டவர் எனஅழைக்கப்பட்டார்.அவர் நம் ஆண்டவராகியஇயேசு கிறிஸ்து. இது தொடக்கக்கிறிஸ்துவர்களின் நம்பிக்கைஅறிக்கை. 'இயேசு' என்றால்"மீட்பர்” என்று பொருள் (மத் 1:21).இது வரலாற்றுக் கிறிஸ்துவைக் குறிக்கும். 'கிறிஸ்து' என்பதுஅவருக்கானபட்டம். கிறிஸ்துஎன்றால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்என்று பொருள்.இது கிரேக்கச் சொல். இதே பொருளைத் தரும் எபிரேயச் சொல்'மெசியா' என்பதாகும். மெசியா என்பவர் கடவுள் பணியைச் செய்யஅருள்பொழிவு செய்யப்பட்டவர்.இங்கு இயேசு அந்த பழைய ஏற்பாட்டு மெசியா பற்றியஎதிர்பார்ப்பை நிறைவு செய்பவராக இருக்கிறார்.

'ஆண்டவர்' எனும்போது இயேசு கிறிஸ்து வெறும் வரலாற்றுக்கிறிஸ்துவல்ல, ஒரு தோற்றம் மட்டுமல்ல, மாறாக நம்முடன் வாழும்ஆண்டவர், அவருக்குநாம் எல்லாரும் பணிய வேண்டும் எனும் பொருள்காணப்படுகிறது.

2.1.6. முடிவுரை
இந்தப் பகுதியில் பவுல் தன்னை உண்மையான திருத்தூதர் எனஅழைக்கிறார். தான் போதிக்கும் நற்செய்தி உண்மையானது எனஅறிவிக்கிறார். தான் பிற இனத்தாருக்கு போதிப்பது சரியானதுதான்என்கிறார். உரோமைக் கிறிஸ்தவர்கள் இறையழைப்பைப் பெற்றதால்தனியே பிரிக்கப்பட்டவர்கள் என்கிறார்.அருளும் சமாதானமும் உண்டாகுக என்கிறார். இது பவுலுக்கேஉரிய வாழ்த்து முறை. கிரேக்க வாழ்த்தாகிய#8220;கைரே”#8220;கைரே”#8220;கைரே” என்பதை#8220;காரிஸ்”#8220;காரிஸ்”#8220;காரிஸ்” எனக் கிறிஸ்துவ முறைப்படிஅருள்அருள்அருள் என்று மாற்றுகிறார்.ஷலோம்ஷலோம்ஷலோம் என எபிரேயர் வாழ்த்துவதை எபிரேனே என கிரேக்கத்தில்கூறுகிறார். இது அமைதியைக் குறிப்பது. ஆயினும் மீட்புக்குஇணையான ஆழ்ந்த பொருள் கொண்ட சொல்லாகும். அருள் என்பதுநாம்பெறும்எல்லா ஆசீர்களுக்கும்அடிப்படை. அமைதிஎன்பதுகிறிஸ்துதரும் மிகப் பெரும் கொடைகளுள் ஒன்று.

2.2. பவுலின் திட்டங்கள் (1:8-15)
இப்பகுதியில்

1) பவுல்தன் வாசகர்களுக்காக வேண்டுகிறார் (வச 9) அவர்களைநேரடியாக அறியாதவராயிருந்தும் அவர்களுக்காக வேண்டுகிறார்.

2) உரோமைக்கு வர விரும்பும் திட்டம் குறித்துக் கூறுகிறார்.ஏனெனில் முக்கிய நகரங்களில் திருச்சபையை நிறுவுவது அவரதுவழக்கம். உரோமை என்பது மிக முக்கிய நகரம் (வச 10, 11).

3) அங்குள்ள கிறிஸ்துவர்கள் தனக்கு விளக்கம் அளிப்பார்கள்என நம்புகிறார் (வச 12).

4) நற்செய்தி அறிவிப்பதுபற்றிய கடமையைக் கூறுகிறார் (வச 13-15).

5) பவுல் மக்களைப் பிரித்துப் பார்க்காதவர். கிரேக்க மக்களும்,உரோமை மக்களும் உலகினரை இருவகையாகப் பிரித்தனர்: அறிவுள்ளநாகளளகமானவர் எனவும், அறிவற்ற மிலேச்சர் எனவும் பிரித்தனர்.ஆனால் பவுலோ எல்லோருக்கும் நற்செய்தி வேண்டும் என்கிறார் (வச16,17).

2.3. திருமுகத்தின் மையக்கொள்கை (1:16-17)
இப்பகுதியில் திருமுகத்தின் மையக்கொள்கையாகியநம்பிக்கையினால் ஏற்புடைமையாதல் குறித்து பவுல் பேசுகிறார்.இப்பகுதியில் அக்கொள்கையை முன்மொழிந்து பிறகுவிரித்துரைக்கிறார்.இத்திருமுகத்திலுள்ள முக்கியக் கலைச்சொற்கள் பல இவ்விருவசனங்களில் வருகின்றன: நற்செய்தி, மீட்பு, கடவுளின் வல்லமை,நம்பிக்கை, ஏற்புடைமை, வாழ்வு பெறுதல், இறையருள் செயல்முறை.

2.3.1. நற்செய்தி
இத்திருமுகத்தில் ஏற்கனவே இதற்குமுன் நான்கு இடங்களில்இச்சொல்லைப் பயன்படுத்திவிட்டார். பவுலுக்கு இதைவிட மேலானதுஎதுவும் இல்லை. இத்திருமுகம் முழுவதுமே அந்நற்செய்தியைக் குறித்துஉரோமைக் கிறிஸ்தவர்க்கு விளக்குவதுதான்.

2.3.2. வெட்கப்படமாட்டேன்
இது கிரேக்க முறையில் இலக்கியச் சுவையுடன் கூறுதலாகும்.பவுல் நற்செய்தி குறித்துப் பெருமைப்படுகின்றார். அதைஎடுத்துரைப்பதை தனக்கு கிடைத்த சலுகையாக நினைக்கிறார்.இது யூதருக்குத் தடைக்கல்லாகவும், பிற இனத்தாருக்குமடமையாகவும் இருக்கிறது (1 கொரி 1:23). ஏனெனில் இந்நற்செய்திமனித மதிப்பீடுகளுக்கு மாறானது.

2.3.3. கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை
நற்செய்தி என்பது வெற்றி, மீட்பு மற்றும் உள்ளார்ந்த அடிப்படைமாற்றம் ஆகியவற்றிற்கான வல்லமை. அது கடவுளின் வல்லமை.பவுல் இத்திருமுகத்தை எழுதிய போது உலகில் மிகவும் வல்லமைவாய்ந்த மனிதர், உரோமைப் பேரரசராவார். ஆயினும் அவரைக் குறித்துஎப்பிக்தெத்துஸ் எனும் எழுத்தாளர், "இந்த பேரரசருக்கு, மண்ணிலும்,கடலிலும்போரினின்றுஅமைதியைக் கொடுக்கும்வல்லமைஇருப்பினும்,துக்கம், கோபம், பொறாமை ஆகியவற்றினின்று அமைதி தரும் வல்லமைகிடையாது. இதய அமைதியைஅவரால் தர இயலாது. மனிதச்செயல்கள் பலவற்றைச் சாதித்தாலும்மீட்பை அவர் பெற்றுத் தரமாட்டார்”,என்றுகூறுவார்.கடவுளின் வல்லமையானது,அவருடைய மகனின் பணிவாழ்வில்செயல்புரிந்து, இப்போது அம்மகனின்உயிர்ப்பினால் முன்னைவிட மேலாகஉலகெங்கும் செயல்புரிகிறது.இந்த வல்லமை நற்செய்தியுடன் தொடர்புடையது. ஏனெனில்மீட்கும் செயலை அது நற்செய்தி வழியாகவே செயல்படுத்துகிறது.

2.3.4. யூதருக்கும் கிரேக்கருக்கும;
யூதருக்கு என்பது முதலில் வருகிறது. ஏனெனில் யூதர் மீட்புக்காகமுதலில் தேர்ந்து கொள்ளப்பட்டவர். எனவே கிறிஸ்து கொண்டு வந்தமீட்பும் அவர்களுக்கு வருகிறது. பவுல் இக்கருத்தை உரோ 9-11வரையிலானஅதிகாரங்களில் விளக்குவார்.கிரேக்கருக்கும் என்பது யூதரல்லாத மற்ற பிற இனத்தவர்அனைவரையும் குறிக்கிறது.

2.3.5. நம்பும் ஒவ்வொருவருக்கும்
கிரேக்கர்கள் அறிவாளிகளுக்கே மீட்பு உண்டு என எண்ணினர்.யூதர்களோ மதச் சடங்குகளை நிறைவேற்றுபவர்களுக்கே மீட்பு உண்டுஎனஎண்ணினர். ஆனால், மீட்பு உலகளாவியது; யாவருக்கும் உரியது.ஏனெனில், அதுகடவுளின்வல்லமையினால்வருவது. இருப்பினும் ஒருநிபந்தனைஉள்ளது. யார் யாரிடம் நம்பிக்கை உள்ளதோ அவர்களுக்கேமீட்பு வரும்.

2.3.6. நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர். இந்த மேற்கோள் அபாக்கூக் 2:4-லிருந்து எடுக்கப்பட்டது:"நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்”புனித பவுல் அதை #8220;நம்பிக்கையினால் இறைவனுக்குஏற்புடையவனாக்கப்பட்டவரே வாழ்வு பெறுவார்” என மாற்றியுள்ளார்.முன்னையதில் வாழ்வு பெறுதல் நம்பிக்கையினால் நடக்கிறது.வாழ்வு என்பதை விவிலிய ஆசிரியர்கள் ‘இறைவனோடு உள்ளநல்லுறவு' என்ற பொருளிலேயே பெரும்பாலும் தருகின்றனர். உரோ 5-8 அதிகாரங்களில், புனித பவுல் இந்த வாழ்வு பற்றி விளக்குகிறார்.ஏற்புடையவராக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் இப்போது எப்படி இவ்வுறவைஅனுபவிக்கின்றனர் என்றும் கூறுகிறார்.

2.3.7. ஏற்புடையவராதல் பழைய ஏற்பாட்டில் இச்சொல் சட்டப்பூர்வமானது. தவறற்றநிலையில்இருத்தலைஇதுசுட்டிக் காட்டுகிறது. ஒழுக்கம் சார்ந்த கருத்துஅதில் அப்போது இல்லை.ஆயினும் ஏற்புடையவராக்கும் இறையருள் செயல்முறை என்பதுவேறானது. இது பாவத்திற்குத் தண்டனையோ புண்ணியத்திற்குச்சம்பாவனையோ கொடுக்கும் செயல்முறை அல்ல. இது மீட்பளிக்கும்நீதியைச் செயல்படுத்துதலாகும். அதாவது கடவுள் நம் பாவப்புண்ணியங்களைப் பாராமல் தன் மீட்பளிக்கும் நீதியினால் நம்மைஏற்புடையவராக்கிவிடுகிறார். அவ்வகையில் பழைய ஏற்பாட்டுக்கருத்தினின்று முற்றிலும் மேம்பட்ட ஒரு நிலை ஏற்படுகிறது.

2.4.கடவுளின் நீதியை பற்றிய வெளிப்பாட்டிற்குமுன்னர் மனிதனின் நிலை 1:18-3:20

பிற இனத்தாரும் சரி, யூதர்களும் சரி அனைவரும் பாவம்செய்தவர்களே. எனவே கடவுளின் சினம் எல்லோர் மேலும் விழுந்துவிட்டது.கிரேக்கர்கள்தங்கள்அறிவுத்திறன்குறித்துபெருமை பாராட்டினர்.யூதர்களோ தங்களுக்கு மோசேயின் சட்டம் கொடுக்கப்பட்டதால்தங்களை உயர்ந்தவர் என என்ணினர். ஆனால், யாவரும் இப்போதுபாவத்தின்பிடியிலேயே உள்ளனர்.

2.4.1. பிற இனத்தாரின் பாவம் 1:18-32 பிற இனத்தாரின் ஒழுக்கக்கேடு உலகறிந்தது. இது கடவுளைப்பற்றிய அவர்களின் தவறான கண்ணோட்டத்தினின்று எழுந்தது.அவர்களுக்கு கடவுள் பற்றிய அறிவு கிடைக்கும் வாய்ப்பு இருந்தும்,தங்கள் அகக் கண்களை மூடிக் கொண்டனர். கடவுளுக்கு கொடுக்கவேண்டிய மகிமையை உலகப் பொருள்களுக்குக் கொடுத்து சிலைவழிபாட்டினராயினர். இவ்வாறு சிலைவழிபாடு எல்லா ஒழுக்கக்கேட்டிற்கும் காரணமாயிற்று.

வச.18-இல் வரும் கடவுளின் சினம் என்பது மனிதரின் சினம்போன்றதன்று. இதுகடவுளைமாற்றும் குணமல்ல, மனிதனில்ஏற்படும்பயனே. பாவிகளை தண்டிப்பதில் இது வெளிப்படுகிறது. இதில்பழிவாங்குதல் இல்லை.

வச. 24-26, 28- இல்'கடவுள்விட்டுவிட்டார்' என்றபதம்வருகிறது.இது நிலைமையின்கடுமையைச் சுட்டிக் காட்டுகிறது.யூதர்கள் உலகில் நடக்கும் எல்லா செயல்களுக்கும் கடவுளேகாரணம் எனக் கருதினர். ஆயினும் இங்கே 'விட்டுவிட்டார்' எனும்போதுகடவுள்தானாகக் கையளிப்பதை அல்ல, மாறாக மனிதன்தன்தாழ்நிலைபுத்தியால் பாவங்கள் புரிதலை சகித்துக் கொள்ளுதலையே இதுகுறிக்கிறது. அப்படிப்பார்க்கையில், மனிதர்களே தங்கள் செயல்களுக்கான காரணமும், கருவியுமாகமாறிவிடுகின்றனர்.

வச. 29, 32-இல் நீண்ட பாவப்பட்டியல் உள்ளது. கொரிந்துநகரிலிருந்து இத்திருமுகத்தை எழுதுவதால் அங்கு நிலவிய சூழ்நிலையைமனதில்வைத்துஎழுதுகிறார் எனலாம்.பிறஇனத்தாரின்பாவநிலையைபவுல் இப்படி எடுத்துரைத்தாலும்அவர்கள் முழுவதும் கெட்டவர்களல்லர். அவர்களில் நல்லவர்களும்உண்டு. ஆயினும் பவுல் வலியுறுத்திக் கூறுவது, பிற இனத்தார் தங்கள்ஞானம் குறித்தும், பண்பாடு குறித்தும் பெருமை பாராட்டினர். ஆனால்இப்போது கடவுளின் சினத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனவேஅவர்களுக்குக் கடவுளின் நீதி பற்றிய வெளிப்பாடு தேவை எனத்தெரிகிறது என்பதாம்.

2.4.2. யூதர்களின் பாவ நிலை 2:1-3:8
இப்பகுதியில் யூதர்களின் பாவநிலை சொல்லப்படுகிறது. 2:1-11பகுதியாரைக் குறித்தது என்பதில் தெளிவில்லை. இது யூதரையோ, பிறஇனத்தாரையோ, அல்லது மற்றவர்களைவிட தங்களைஉயர்ந்தவர்களாகக் கருதும் அனைவரையுமே குறிக்கிறது என பலர்கூறுவர். இருப்பினும் பொதுவாக இது யூதரைக் குறிக்கிறது எனகொள்ளப்படுகிறது (2:1, 4).

2 சாமுவேல் 12:1-9 பகுதியில் வரும் நிலையை இது ஒத்துள்ளது.தாவீது மன்னரிடம் நாத்தான் என்ற இறைவாக்கினர், ஒரு செல்வந்தர்ஏழைக்குச் செய்த அநியாயத்தை உரைக்க, யாநூ?த மனிதர் என தாவீதுகோபப்பட, ' நீரே அந்த மனிதர்' எனநாத்தான்கூறும்போது (2 சாமு12:7)நிலைமை தலைகீழாக மாறுகிறது. அதுபோல இங்கும் பிற இனத்தாரின்நிலைகுறித்து பவுல் முதலில் கூறியபோது யூதர்கள், அது அடுத்தவரைகுறித்தது என்றும் தாங்கள் நீதிமான்கள் எனவும் நினைத்திருக்கலாம்.ஆனால்நிலைமை அவர்களுக்குஎதிராகவும் இருக்கிறதுஎன்பதை பவுல்இப்பகுதியில் உரைக்கிறார்.யூதரின் நிலை பிற இனத்தாரின் நிலையைவிட மேலானதல்ல,உண்மையில் அவர்களுக்கு பல சலுகைகள் கொடுக்கப்பட்டுஅவற்றுக்கேற்றபடி நடவாததால் அவர்கள் பிற இனத்தாரைவிட அதிகதண்டனைக்குஉள்ளாக்கப்பட்டுள்ளனர்.பிறஇனத்தார் மேல்தீர்ப்பு சொல்லும்யூதர்கள்தங்களுக்குத் தானேதீர்ப்பு சொல்லிக் கொள்கின்றனர்.

வச 12-16 இல், ஏற்கனவேவச. 6-11-இல் சொன்னதை விரிவாக எடுத்துரைக்கிறார்.மோசேயின் சட்டம் அடிப்படையில் எந்த வேறுபாட்டையும்தருவதில்லை. ஆயினும் நீதித் தீர்ப்பை செயல்படுத்துவதில் வேறுபாடுஇருக்கும். யூதர் மோசேயின் சட்டத்தின் அடிப்படையில் நீதித்தீர்ப்புபெறுவர். பிற இனத்தாரோ அச்சட்டம் இன்றி நீதித்தீர்ப்பு பெறுவர்.ஏனெனில் பிற இனத்தாருக்கு அச்சட்டம் இல்லை.ஆயினும் பிற இனத்தாருக்கு வேறு சட்டம் உள்ளது. அதுமனச்சான்றுஆகும்.

வச. 17-24 -இல் யூதர்கள்தங்கள்பொறுப்பை உணராமல் தங்கள்பெருமையை மட்டும் நினைப்பது கூறப்படுகிறது.அதிக சலுகைகள் என்றால் அதிக பொறுப்பு ஏற்படுகிறது.யூதர்களின் சலுகைகளைப் பார்த்து பிற இனத்தார் கடவுளைமகிமைப்படுத்தத் தூண்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில்யூதர்களின்தவறானவாழ்வால்கடவுள்பிற இனத்தாரிடம் அவமதிப்புக்குஉள்ளாக்கப்படுகிறார்.எசா 52:5 - ஆம் வசனம் இங்கே நினைவு கூறப்படுகிறது.#8220;எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகிறது என்கிறார்ஆண்டவர்”.யூதர்களின்நாடுகடத்தப்பட்டவாழ்வின்போதுஅவர்களின்அவலம்கண்டு பிற இனத்தார் இஸ்ரயேலரின்கடவுளைப் பழித்தனர். ஏனெனில்அவரால் தன் மக்களைக் காப்பாற்ற முடியவில்லை என எண்ணினர்.இங்கே யூதர்களின் அவலம் அல்ல, மாறாக அவர்களின் தவறானவாழ்வே பிற இனத்தார் உண்மைக் கடவுளைப் பழித்துரைக்கவைத்துவிடுகிறது.

வச 25-29 யூதர்கள், விருத்த சேதனத்தைக் குறித்து மிக உயர்ந்த மதிப்பீடும்எதிர்பார்ப்பும் கொண்டிருந்தனர். அது உடன்படிக்கையின் அடையாளமாகவும்மீட்பின்உறுதிப்பாடாகவும்இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்டமக்கள்கூட்டத்தில் ஒருவரை அது சேர்த்தது.ஆனால், பவுல் இக்கருத்தை மாற்றுகிறார். உண்மையான யூதர்என்பவர் உள்ளார்ந்த முறையில் விருத்தசேதனம் செய்து கொண்டவர்.உண்மையான விருத்தசேதனம் என்பது உள்ளத்தில் செய்யப்படுவதுஎன்கிறார்.இக்கருத்தும் பழைய ஏற்பாட்டிலேயே உள்ளதுதான்."உன் கடவுளாகிய ஆண்டவர்உன் உள்ளத்தை யும் உன்வழிமரபின் உள்ளத்தையும்விருத்த சேதனம் செய்து ...”(இச 30:6). "உங்கள்இதயத்தின் நுனித்தோலைஅகற்றிவிடுங்கள்” (எரே4:4).

வச. 3:1-8 இப்பகுதியில்பவுல்நான்குகேள்விகளைக் கேட்கிறார். யூத விவாதமுறைப்படி கற்பனைப் பாத்திரம் ஒன்று கேட்பதுபோல கேட்டுப்பதிலளிக்கிறார். இவற்றுள் முதல் கேள்வி அறிவுப்பூர்வமானது,இரண்டாவது பரவாயில்லை, மூன்றாம் கேள்வி சிறிது முட்டாள்தனமானது, நான்காம் கேள்வியோ மிகவும் முட்டாள்தனமானது. எனவேபவுல் அதற்கு பதிலளிக்கவே மறுத்துவிடுகிறார்.

கேள்வி 1) - சட்டமோ, விருத்தசேதனமோ கடவுளின் மீட்பைப்பெற்றுத்தர முடியாது என பவுல் கூறினார். அப்படியானால்யூதராயிருப்பதன்சிறப்பு என்ன? (வசனம் 1)இக்கேள்விக்குப் பவுல் கூறும் பதில் இஸ்ரயேல் எனும் இனத்தில்உறுப்பினராக இருப்பதுசிறப்புத்தான். ஏனெனில்அவ்வினத்திற்குத்தான் சட்டமும், இறைவாக்குகளும் கொடுக்கப்பட்டன. அவை நம்மைமீட்காவிடினும் அவைமீட்பின்வழியைச் சுட்டிக் காட்டுகின்றன(வசனம்2, காண் 2:25). பவுல் இது குறித்து 9-11 அதிகாரங்களில் சிறப்பாகவிவரித்துரைக்கிறார்.

கேள்வி - 2) கடவுள் தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்போவாரா? அப்படியாயின் மனிதர் தங்கள் கீழ்ப்படியாமையால் கடவுள்வாக்களித்ததை நிறைவேற்றவிடாமல் செய்துவிடுவாரா? (வச 3).பவுல் இக்கேள்விக்கான விடையையும் 9 முதல் 11 வரையிலானஅதிகாரங்களில் விளக்கியுரைக்கிறார். இங்கே அவர் கூறுவது கடவுள்அப்படி வாக்குறுதி நிறைவேற்றாவிடில் அவர் நீதியுடையவராய் விளங்கஇயலாது என்பதாகும். மனிதர் பொய்யர், கடவுள் நீதியுடையவர். பவுல்திபா 52:4-லிருந்து மேற்கோள் காட்டி கடவுள் எப்படி தாவீது மட்டில்நடந்து கொண்டார் எனக் கூறுகிறார்.

கேள்வி 3) நம்முடைய பாவம் கடவுளின் நீதியைவெளிப்படுத்துமாயின் நாம் பாவம் செய்யும்போது அவருக்கு நல்லதுசெய்கிறோம் என்று தானே பொருள்? அப்படியாயின் அவர் நம்மைத்தண்டிப்பது முறையற்றது அல்லவா? (வச 5).இதற்கு பவுல் கூறும் பதில், கடவுள் பாவத்தைத் தண்டிக்காவிடில்அவர் நீதியுடையவர் என்பது வெளிப்படுத்தப்படாது என்பதாம் ( வச 6) .

கேள்வி 4) கடவுள் பாவிகளை மன்னிப்பதில் அவரின் பெரும்அன்பை நாம் உணர்கிறோம். எனவேநாம் தொடர்ந்துபாவம் செய்யலாம்என்போமா? பவுலே இப்படிப் பேசினார் எனப் பலர் குற்றம் சாட்டினர்.பவுல் இதற்குப் பதிலாகக் கூறுவது: இப்படி நினைப்பவர்கள்கடவுளுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வோராகும் என்பதே. அவர்கள்தண்டிக்கப்படுவர். இப்பிரச்சினை குறித்து பவுல் மேலும் 6- ம்அதிகாரத்தில் கூறுகிறார்.மொத்தத்தில் இந்த நான்கு கேள்விகளுக்கும் அவர் தெளிவானபதிலைஇங்குக் கூறியுள்ளார் எனக் கொள்ளஇயலாது. ஆனால், பிறகுஇக்கடிதத்தில் இவற்றை விளக்கமாக உரைக்கிறார் எனலாம்.3:9-20: இப்பகுதி மாந்தர் நிலைபற்றிய பகுதிக்கு முடிவுரையாகவருகிறது. இது உலகளாவிய பாவநிலையை எடுத்துரைக்கிறது.

பழைய ஏற்பாட்டிலிருந்து 6 மேற்கொள்கள் காட்டி உலகளாவியபாவ நிலையை எடுத்துரைக்கிறார். பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள்எடுக்கப்படுவதால் அவை நேரடியாக யூதர்களின் பாவ நிலையைச்சுட்டிக்காட்டினாலும் பிற இனத்தாருக்கும் பொருந்தும். யூதர்களும் பிறஇனத்தாரும் ஒருங்கே பாவிகளாக உள்ளனர். அவர்களுடைய பாவம்செயல் சார்ந்தது, எண்ணம் சார்ந்தது, கடவுள்மட்டிலானஅணுகுமுறைசார்ந்தது (10-18).இப்படி முதலில் பிற இனத்தார் நிலையைக் கூறி, பின்னர் யூதர்நிலையைக் கூறிய பவுல் இறுதியில் எல்லோருமே ஒரு சேர பாவிகளாய்உள்ளனர் என்பதை நிரூயஅp;பித்துஎல்லோருக்குமே கடவுளின்மீட்பு தேவைஎன்பதை உணர்த்த முற்படுகிறார்.

2.4.3. இறையருள் செயல்முறை 3:21 தொ. இப்பகுதி இத்திருமுகத்தின் முக்கிய பகுதி. திருமுகத்தின்இறையியலைப் புரிந்துகொள்ள உதவும் பகுதி.'இப்பொழுதோ' என இப்பகுதி துவங்குகிறது. அது முக்கியசொல்லாகும். இதுவரை இருந்த நிலைமாறிவிட்டது. இறைவெளிப்பாடுவந்துவிட்டதுஎனஉணர்த்துகிறது. அதுமட்டுமன்றுஇப்பொழுதுஎன்பதுஇறுதிக்கால யுகம் தொடங்கிவிட்டது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

2.5. இப்பகுதியின் முக்கிய கருத்துக்கள்

1) இறையருள் செயல்முறை என்பது பாவிகளுக்கு கடவுள்வழங்கும் கொடையாகும். அதன்மூலம் கடவுள் மனிதரைத் தமக்குஏற்புடையவராக்குகிறார் (வச 22, 24).

2) மனிதர்கள் நம்பிக்கை மூலமே இக்கொடையைப்பெறுகின்றனர். நற்செயல்கள் ஆற்றுவதன் மூலம் அல்ல (வச 22:28).

3) இக்கொடையானது யூதருக்கும், பிற இனத்தாருக்கும்இடையேயான வேறுபாட்டைக்களைகிறது. ஏனெனில் எல்லாரும் ஒருசேர கடவுளுக்கு எதிராகப் போய்விட்டனர். எல்லாரும் நம்பிக்கையின்வழிதான்கடவுளுக்கு ஏற்புடையவராக இயலும் (வச 22, 23, 27, 30).

4) இக்கொடையானது இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம்மனிதருக்குக் கிட்டுகிறது. பவுல் அம்மரணத்தை விடுதலைச் செயல்என்றும், பரிகாரச் சாதனம் என்றும் வருணிக்கின்றார் (வச 24, 25).

5) இப்போதனை பழைய ஏற்பாட்டில் உள்ளது. ஆயினும் இயேசுகிறிஸ்துவில்தான் இது தெளிவாக வெளியாக்கப்பட்டுள்ளது (வச 21,25,26).

6) பாவிகளை தமக்கு ஏற்புடையவராகவே நடத்திக் கொள்கிறார்(வச 25,26).

7) இது மனிதர் முறித்து விட்ட சட்டத்தை நிலைநாட்டும் கடவுளின்வழியாகும் (வச 31).

2.6. கவனிக்க இப்பகுதியில் வச 21 இல் திருச்சட்டத்தின் சார்பின்றியேஎனும்போது, பொதுவாகச் சட்டம்கூறப்படுகிறது. தோரா, இறைவாக்கினர்நூல்கள், யூதச் சட்டங்கள்ஒழுங்குமுறைகள்யாவும் குறிக்கப்படுகின்றன.ஆனால் திருச்சட்டமும் இறைவாக்கினரும் முன்னறிவித்தனர்எனும்போது அங்கே திருச்சட்டம், தோரா எனும் ஐந்நூல்களையும்இறைவாக்கினர் நூல்களையும் மட்டுமே குறிக்கிறது. எப்படியும் கிறிஸ்துவழியாய் ஏற்படும் ஏற்புடமை என்பது புதிதல்ல. ஏற்கனவே பழையஏற்பாட்டில் முன்னறிவிக்கப்பட்டதுதான் என்கிறார் பவுல். யூதர்கள்மூவகையாய்யுகங்களைப் பிரித்தனர். ஒன்றுமோசே மற்றும்சட்டத்திற்குமுந்தைய காலம், இரண்டாவது சட்டத்தின் காலம், மூன்றாவதுமெசியாவின் காலம். பவுல் இது மெசியாவின் காலத்து ஏற்புடமைஎன்கிறார்.

3. ஆபிரகாமின்நிலையினின்றுஎடுத்துக்காட்டு 4:1-25

நம்பிக்கையினால் மட்டுமே நாம் இறைவனுக்கு ஏற்புடையவராகமுடியும், செயல்களால் அன்று எனக்கூறிய பவுல், ஆபிரகாம் எப்படிஏற்புடையவரானார் என்றும், தாவீது எப்படி ஏற்புடையவரானார் என்றும்கூறுகிறார். இவர்கள் இருவரும் யூதமக்களுக்கு மிகப் பெரியவர்கள்.இவர்கள் நம்பிக்கையினால்தான் ஏற்புடையவர்கள் ஆயினர் என்பதை,யூதர்கள் ஏற்றுக்கொள்ளும் பழைய ஏற்பாட்டு நூல்களின் வழி நின்றேநிரூயஅp;பிக்க முயல்கிறார்.ஆபிரகாம் விருத்தசேதனம் செய்தது உண்மைதான். ஆயினும்,அதற்கு முன்பே நம்பிக்கையினால் எற்புடையவராகிவிட்டார். தாவீதுபாவம் செய்தும் கடவுளின்அருளால்இறைவனுக்குஏற்புடையவரானார்.

1) ஆபிரகாமின்ஏற்புடைமை அவரின்நம்பிக்கையால்வந்தது(வச1-5). (யாக்கோபு திருமுகத்தில்2:21-ல்செயல்கள்குறித்துகூறப்பட்டாலும்அது வேறு கோணத்தில் சொல்லப்பட்டதாகும்).

2) தாவீதின்ஏற்புடைமைஅவரின்விருத்தசேதனத்தால்வந்ததன்று(வச 9-12)

3) விருத்தசேதனம் ஏற்புடைமைக்கு ஓர் அடையாளமே.

4) ஆபிரகாமின் ஏற்புடைமை சட்டத்திற்கு கீழ்ப்பழ்?ததன் மூலம்வரவில்லை. உண்மையில் சட்டம் வந்ததே ஆபிரகாமுக்கு 400ஆண்டுகளுக்குப் பின்னர்தாம் (வச 13-17).

5) ஆபிரகாமின் நம்பிக்கை ஆழமானது. அவர் வயதானவராகஇருந்தும் தனக்கு ஒரு மகன் பிறப்பான் என கடவுள் கூறியதால்நம்பினார் (வச 18-25).

6) ஆபிரகாம் விருத்தசேதனத்திற்கு முன்பே ஏற்புடைவரானதால்அவர் யூதருக்கு மட்டுமன்று, நம்பிக்கையுடைய யாவருக்கும் தந்தையாகவிளங்குகிறார்.

3.1. ஏற்புடைமையாதலின் விளைவுகள் (வச 5-8)
உரோமையர் திருமுகம் 1 முதல் 4 வரையிலான அதிகாரங்களில்ஒரு மனிதர் எங்ஙனம் கடவுளுக்கு ஏற்புடையவனாகிறார் என்பதுசொல்லப்பட்டது. அபக்கூக் நூலில் 2:4 வசனத்தின் இரண்டாம்பகுதியாகிய ஏற்புடையவரின்வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது5 முதல்8 வரையிலான அதிகாரங்களில் சொல்லப்படுகிறது. இந்த நான்குஅதிகாரங்களும் கிறிஸ்தவர் சில சக்திகளிடமிருந்து விடுதலை பெற்றுவாழ்வதைச் சுட்டிக் காட்டுகின்றன.இப்பகுதியில் வரும் முக்கிய கருத்துக்களை மட்டும் பார்ப்போம்.

3.1.1. அதி 5: சினத்தினின்று விடுதலை'ஆகையால்' என்ற வார்த்தையுடன் தொடங்கும் இப்பகுதிமுந்தைய பகுதியின் தொடர்ச்சியாய் வருகிறது என்றும், முந்தையபகுதியில் சொல்லப்பட்ட நம்பிக்கையினால் ஏற்புடைமை ஆதலின்பயன்பற்றி இங்கு சொல்லப்போகிறார் என்றும் அறியலாம்.

1) நாம் கடவுளுடன் நல்லுறவு கொண்டிருக்கிறோம் (5:1)

2) நாம் வேதனைகளில் பெருமகிழ்வு கொள்கிறோம் (5:2-3).கிறிஸ்தவர்கள் வெறுமனே துன்பத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள்மட்டுமல்லர், மாறாக, துன்பத்தில் பெருமை கொள்கிறவர்கள். இதுஉயர்வானகருத்து.

3) நம்பிக்கையுடையோர் கடவுளுடன் புது உறவைக் கொண்டுள்ளார்கள். அதில் ஓர் உறுதிப்பாடு உள்ளது. அந்த உறுதிப்பாடு ஒருபுறத்தில் இயேசுவின் சிலுவை மரணத்தினால் ஏற்படுகிறது (5:6-8);மறுபுறத்தில் அதே மீட்பரின்உயிர்த்த வாழ்வினால் ஏற்படுகிறது (6:9-11).

4) ஒப்புரவுகொண்டிருக்கிறோம் (5:11) 'கத்தல்லாகே' என்ற கிரேக்கசொல்லுக்குமாற்றம் அல்லது பரிமாற்றம் என்றுபொருள். மனிதர்களில்இது பகைமையிலிருந்து நட்புறவுக்கான மாற்றத்தைக் குறிக்கிறது.எனவே ஒப்புரவு எனப்படுகிறது. ஆயினும் கடவுளில் மாற்றம் எதுவும்இருக்க இயலாது. கடவுளுடைய உணர்வுகளில் மாற்றம் இல்லை.மாறாக கடவுளுக்கும்மனிதருக்கும்இடையேயானஉறவில்தான்மாற்றம்ஏற்படுகிறது. கடவுள் ஏற்கனவே கிறிஸ்துவின் மரணத்தினால்பகைமையைஒழித்துவிட்டார். இப்போதுமனிதர்தான்அந்த ஒப்புரவைப்பெறவேண்டும்.

5) ஏற்புடைமையானது அருளினால் உண்டானது. எனவேஆதாமுக்கும் கிறிஸ்துவுக்கும் இடை யேயான வேறுபாடு கூறப்படுகிறது(5:12-21). ஆதாம் மூலம் பாவம் வந்தது. கிறிஸ்து வழியாய் அருள்வந்தது. ஆனால் இரண்டாவதானது மிக அதிகமாய் வந்தது.மேற்கண்ட கருத்தை புனித பவுல் அழகாக விவரித்துள்ளார்.கீழ்கண்ட அட்டவணை இதனை நமக்குத் தெளிவாகஎடுத்துரைக்கும்.

 

தண்டனைத் தீர்ப்புக்கும் ஏற்புடையவராக்குதலுக்கும் இடையேயானவேறுபாடு
 
தண்டனைத் தீர்ப்பு
ஏற்புடமை
1 . மூலம் ஒருமனிதனால் ஒரு மனிதரால்முதல் ஆதாம் இரண்டாம் ஆதாம்கிறிஸ்து
;2. யாருக்கு? எல்லோருக்கும் எல்லோருக்கும்(நம்பிக்கை வழி)
3. காரணம் கீழ்படியாமை மீறல் கீழ்படிதல் அருள்
4. தன்மை தீர்ப்பு நியாயமானதே தகுதியற்றநிலையில்தரப்பட்டக் கொடை
5. அளவு அதிகம் மிக அதிகம
;6. பயன் பாவம் மரணம் ஏற்புடைமைவாழ்வு

 

3.1.2. அதி 6: பாவத்தினின்று விடுதலை
இவ்வதிகாரத்தில் சில கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும்தரப்பட்டுள்ளன.

1) உரோ 5:20 இல் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கிவழிந்ததுஎனசொல்லப்பட்டுள்ளது. எனவேஇப்போதுகேள்விஎழுகிறது.நாம் தொடர்ந்து பாவம் செய்யலாமா? இது பவுலுக்கு எதிரானகுற்றச்சாட்டு. பாவத்தில் நிலைத்திருக்க அவர் கூறுகிறார் எனப் பலர்குற்றம் சாட்டினர். இப்பிரச்சனையை ஏற்கனவே 3:8-ல் அவர்தொட்டிருந்தார். இங்கே 6ஆம் அதிகாரத்தில் அதை மீண்டும்விளக்கியுரைக்கிறார் (6:2-10).

நாம் ஏற்கனவே பாவத்திற்கு இறந்து விட்டோம். கிறிஸ்துவோடுஉயிர்த்துவிட்டோம். எனவே நாம்தொடர்ந்துபாவத்தில்நிலைத்திருத்தல்ஆகாது.

நாம் எப்படி பாவத்திற்கு இறந்தோம் என்பதை பவுல் அழகாகஎடுத்துரைக்கிறார். நாம் நம் திருமுழுக்கின்மூலம் நம் பாவத்திற்குஇறந்துவிட்டோம். திருமுழுக்கு அளித்தலை அல்லது பெறுதலைக் குறிக்கும்'பப்திசோ' எனும் கிரேக்கச் சொல்லின் முதல் அர்த்தம் 'மூழ்குதல்' எனும்நிகழ்வை அடிப்படையாக வைத்து, பவுல் அழகிய உருவகம் ஒன்றைஅமைக்கிறார். மூழ்கி பின்எழுதலைஇறந்துஉயிர்த்தலுக்குஉருவகமாகமாற்றுகிறார்.

2) 6:14 - இல் நாம் சட்டத்தின் அதிகாரத்தில் இல்லை என்றுகூறுகிறார். இப்போது ஒரு கேள்வி எழுகிறது. நாம் சட்டத்தின்அதிகாரத்தில் இல்லை என்பதால் நம்விருப்பப்படி எதையும் செய்யலாமா?இதுவும் பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டுதான்.இதற்கான பதிலை 6:15-23பகுதியில் தருகிறார். இதற்கான பதில்கூடாது என்பதே. கிறிஸ்தவர்கள்சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர்,அருளுக்கு உட்பட்டவர்கள். அவர்கள்கடவுளை சார்ந்திருப்பவர்கள். பவுல்இக்கருத்தை விளக்க அக்காலஅடிமைச் சட்டத்தைக் கையாண்டுள்ளார். அக்காலமுறைப்படிஓர் அடிமை,தான் விடுதலை பெற விரும்பினால்ஒரு தொகையைக் கடவுளுக்குக்கொடுக்க வேண்டும். கடவுள் சார்பாககுருக்கள் போன்றோர் அதைப் பெற்றுப் பின்னர் அவ்வடிமையின்தலைவருக்குக் கொடுப்பர். இப்படித் தொகை கொடுத்த அடிமை, தன்விடுதலையைப் பெற்றுக் கொள்கிறார். அக்கடவுள்அவனுக்குவிடுதலைபெற்றுத்தருகிறார். ஆயினும் அவர் இப்போது அக்கடவுளுக்குஅடிமையாகிறார்.

3.1.3. அதி.7: சட்டத்தினின்று விடுதலை
உரோ 6:14 இல் கிறிஸ்தவர் சட்டத்தின் அதிகாரத்தில் இல்லைஎன்றார். இப்போது அவ்வதிகாரத்தில் அது குறித்து மேலும் விளக்கம்கூறுகிறார்.

7:1-6 இப்பகுதியில் திருமணத்தினின்று ஓர் உருவகத்தை எடுத்துவைக்கிறார். திருமண ஒப்பந்தம் என்பது இவ்வுலக வாழ்வுமுடிகிறவரைக்கும் தான் மதிப்புள்ளது. திருமண தம்பதியரில் ஒருவர்இறந்தால்ஒப்பந்தம் காலாவதியாகிவிடுகிறது. மற்றவர் வேறுஒருவரைத்திருமணம் செய்து கொள்ளலாம். அங்கே நாம் சட்டத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. ஏனெனில் சட்டத்தைப்பொறுத்தவரை நாம் இறந்துவிட்டோம். இப்போது கிறிஸ்துவோடுஇணைக்கப்பட்டிருக்கிறோம்.நாம் சட்டத்தை மீறியதால் அது நமக்குத் தீர்ப்பு சொல்கிறது.ஆனால், நாம் இப்போது கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள். எனவே, நாம்சட்டத்தின் தீர்ப்பினின்று விடுதலை அடைந்தவர்கள். நாம் சட்டத்தின்அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர்.இக்கூற்று ஒரு கேள்வியை எழுப்புகிறது. கிறிஸ்து நம்மைசட்டத்தினின்று விடுவித்தார் என்றோ அல்லது சட்டம் பாவத்தைப் போல்தீமையானது என்றோ அல்லது சினத்தைப் போன்றோ, மரணத்தைப்போன்றோ தீமையின்பயன்பாடு என்றோ கூறலாமா?

7:7-13 பகுதியில்தன்அனுபவத்தினின்றுஇதற்குப் பதலளிக்கிறார்.சட்டம் தன்னிலேயே தீமையானது அல்ல, மாறாக நம் பாவமேதீமையானது என்கிறார்.தான் பாவி என்பதைச் சட்டமே உணர்த்தியது என்கிறார்.ஒவ்வொரு யூதச் சிறுவனும் 13 வயதில் சட்டத்தைப் படிக்க வேண்டும்.பவுல் இங்கே பத்துக் கட்டளைகளில் பத்தாவது கட்டளையைக்குறிப்பிடுகிறார் எனலாம். அதுதான் தவறான ஆசையைப் பற்றிக்கூறுகிறது. ஒருபொருளைப் பார்க்கவோ, எடுக்கவோ, தொடவோ கூடாதுஎனக்கட்டளையிடும்போதுஅதைப் பார்க்க, எடுக்க, அல்லதுதொடஆசைஉண்டாகிறது. பவுல் இத்தகு நிலையையே குறிப்பிடுகிறார்.

7:14-25 பகுதியில் கடவுளின்சட்டம் எப்படித் தன்னைஇன்னமும்பாதிக்கிறது என்பதை நன்கு விவரிக்கிறார். அவர் சட்டத்தினின்றுவிடுதலை பெற்றிருப்பினும் அது இன்னும் அவர் வாழ்வில் ஒரு முக்கியஇடத்தைப் பெறுகிறது. அவர் அதைக் கடைப்பிடிக்க முனைகிறார்.ஆனால் தோல்வியுறுகிறார். இதுவே கிறிஸ்தவ யுத்தமாகும். இதுகிறிஸ்தவர்கள்சட்டத்தை நல்லதெனக் கொள்தலைச் சுட்டிக்காட்டுகிறது.

3.1.4. அதி 8: கிறிஸ்தவர் மரணத்தினின்று விடுதலை பெற்றவர்

(1) இங்கே பவுல் ஆவிக்குரிய வாழ்வு பற்றி பேசுகிறார்.8-ம் அதிகாரத்திற்குமுன்வரை மொத்தம் மூன்றுமுறைதான்ஆவிஎன்ற சொல் வருகிறது. 8-ம் அதிகாரத்திலோ இருபது முறை அதுவருகிறது. கிறிஸ்துவின் ஆவியைப் பற்றிப் பேசாமல் கிறிஸ்தவரின்வாழ்வைப் பற்றிப் பேச இயலாது.

1) ஊன்அல்ல மாறாக ஆவியே கிறிஸ்தவர்களை வழிநடத்துகிறது (8:5-8)
2) கிறிஸ்தவரின்வாழ்வின்ஊற்று ஆவியே (8:9-11)
3) கிறிஸ்தவர்கள்கடவுளின்பிள்ளைகள்என்பதை ஆவி உறுதிப்படுத்துகிறது (8:12-17).
4) கிறிஸ்தவர்களுக்குஅவர்களின்இன்பத்தில்ஆவியேஊக்கமும்நம்பிக்கையும் ஊட்டுகிறது (8:18-25).
5) சரியானமுறையில் செபிப்பதற்கு கிறிஸ்தவர்களுக்கு ஆவியேதுணைசெய்கிறது (8:26-27).

ஆ) இப்பகுதியில் பவுல் துன்பம் பற்றி பேசி கிறிஸ்தவர்களுக்குச்சில அறிவுரைகள் வழங்குகிறார்.கிறிஸ்தவர்கள் துன்புறுகையில் அவர்களுக்கு மூன்றுவகைஊக்கம் உள்ளது.

1) எதிர்கால நம்பிக்கை (8:18-25) (படைப்பும் மனிதகுலம்முழுவதுமே விடுதலைக்காக ஏங்குகின்றன).
2) நிகழ்கால உதவி (8:26,27) (ஆவியானவர் துணைநிற்கிறார்)
3) முன் கூட்டியே நம்மைத் தேர்ந்து கொண்டது (8:28-30).(அவர் மகனின்சாயலையே நாம் தாங்குகிறோம்).

கடவுள்நம் பக்கம் இருக்க எதுவும் அவர் அன்பினின்று பிரிக்கஇயலாது எனும் அழகிய பாடலைத் தருகிறார் (8:31-39). இதில் நம்மைமுறியடிக்கத் துடிக்கும் இரு வகை எதிரிகளைக் கூறுகிறார். ஒன்றுஇவ்வுலகு சார்ந்தது. அது பவுலுக்குத் தெரியும் (உரோ 16:4; 1 கொரி 4;11; 15:30; 2 கொரி 11:23-27). இன்னொன்று ஆவிசார்ந்த சக்திகள்(வானதூதர், தலைமை ஏற்போர், வானத்தில் உள்ளவை, ஆழத்தில்உள்ளவை....)முதல் நூற்றாண்டு கிரேக்க கருத்துப்படி, நமக்குத் தெரியாத பலசக்திகள் மனிதவாழ்வை ஆட்டிப்படைக்கின்றன. ஆனால், பவுல்கருத்துப்படி, கிறிஸ்து இச்சக்திகளை முறியடித்து நமக்கு விடுதலைதந்துவிட்டார்.

3.2.யூதர்களுக்கும் பிற இனத்தாருக்கும் கடவுளின்திட்டம் (உரோ 9-11)
பவுல்இதுவரை ஏற்புடைமையாதல் குறித்தும்பலசக்திகளினின்றுவிடுதலை பெற்று வாழ்தல் குறித்தும் பேசினார்.நற்செய்தியானது நம்பிக்கையினால் எற்புடைமையாதல் குறித்துப்பேசுகிறது. சட்டத்தினால் ஏற்புடைமையாதலை அல்ல. இது பிறஇனத்தாருக்கும் மீட்பின் வாசலைத் திறந்துவிடுகின்றது. இதுஉடன்படிக்கையினால் யூத இனத்திற்கு ஏற்பட்ட உரிமைகளையும்,சலுகைகளையும் அழித்து விடுகிறது.இப்போதுஇருப்பதுஅருளின்காலம். இதில்புதியநியதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய நியதியின்படி யூதர்களின்சிறப்பு குறைக்கப்பட்டுள்ளது மட்டுமன்றுஅவர்கள் புறக்கணிக்கவும் பட்டுள்ளார்கள்.இப்போது ஒரு கேள்விஎழும்புகிறது. இஸ்ரயேலைத் தேர்ந்துகொண்டது மற்றும் அதற்குக் கொடுத்தவாக்குறுதிகளின்அர்த்தம் யாது?ஏற்கனவே 3:1-8 பகுதியில்இப்பிரச்சனையைத் சுட்டிக் காட்டி பதில்கூறியுள்ளார். இங்கே 9 முதல் 11வரையிலான அதிகாரங்களில் அப்பதிலைவிரிவாகக் கூறுகின்றார்.

1) கடவுள் முழு அதிகாரமுள்ளவர். அவருக்குத் தம் திருவுளப்படிஎதையும் செய்யும் முழு உரிமை உண்டு. அவர் தேர்ந்துகொண்டவர்களிடத்தில் அவருடைய வார்த்தைகள் பயனளித்துவந்துள்ளன (9:6-29).

2) கடவுளிடம் நம்பிக்கை கொள்ள எல்லா மனிதருக்கும் கடமைஉண்டு. ஆனால் இஸ்ரயேல் ஓர் இனம் என்ற வகையில்அவநம்பிக்கையைக் கொள்ளவில்லை (9:30-10:21).

3) கடவுள் தம் திட்டத்தை நிறைவேற்றுகிறார்; அது வருமாறு (1)இப்போதுகூட சிலயூதர்கள்மனந்திரும்புகின்றனர் (11:1-10); (2) யூதர்கள்

நற்செய்தியைப் புறக்கணித்ததால் அந்நற்செய்தியைக் கேட்க வந்த பலபிற இனத்தார் மனந்திரும்புகின்றனர் (11:11-24). (3) கடவுள் பிறஇனத்தாரிடம் செயலாற்றுவதால் இறுதியில் இஸ்ரயேல் என்ற இனமும்மனந்திரும்பும் (11:25-36). போட்டி மனப்பான்மையை உருவாக்கவேபிறஇனத்தார் மனந்திரும்புகின்றனர். 9 முதல் 11 வரையிலானஅதிகாரங்களில்பவுல்தனிப்பட்ட நபர்களைவிட இனங்களையேமனதில்வைத்து அதிகம் பேசுகின்றார்.

4. உரோமைக் கிறிஸ்தவர்களைப்பாதித்த யூதப் பிரச்சனை

ஒருவேளைஉரோமைத் திருச்சபையில்யூதக்கிறிஸ்தவர்களுக்கும்பிற இனத்துக் கிறிஸ்தவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள்காணப்பட்டிருக்கலாம் (காண் அதி 14-15). ஒருவர் ஒருவருடையமனப்பான்மை, பழக்க வழக்கங்கள் வேறாக இருந்ததால் இருவேறுகுழுக்கள்உருவாகத் தொடங்கியிருக்கலாம். எனவேஅவர்கள்ஒருவரைஒருவர் புரிந்து கொள்ளவும், கடவுளின் திட்டத்தில், யூதர்களுக்கும் பிறஇனத்தாருக்கும் இடையேயான உறவைக் கண்டுபிடிக்கவும்வேண்டியிருந்தது. இவ்வுறவு 9 முதல் 11 வரையிலானஅதிகாரங்களில்சொல்லப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் வேறு எந்த பகுதியையும் விடஇப்பகுதியில் அவ்வுறவு நன்கு விளக்கப்பட்டுள்ளது எனலாம்.எனவே, அந்த கோணத்தில் 9 முதல் 11 வரையிலானஅதிகாரங்களின்கருத்தை ஈண்டு பார்ப்போம்.

4.1. யூதக் கிறிஸ்தவர்களைக் குறித்து பவுல் கூறுவது

1) யூதக் கிறிஸ்தவர்கள்இஸ்ரயேலில்சிறப்புச் சலுகைகளில்அதிகநம்பிக்கை கொள்ளலாகாது. எல்லோரையும் போலஇஸ்ரயேல்இனமும்அவநம்பிக்கையுடனும் கீழ்படியாமலும் நடந்து கொண்டது. எனவேகடவுள் தற்போது அதனைப் புறக்கணித்துள்ளார். அது நியாயமானதே.

2) அவர்கள் தங்கள் இனத்தைக் குறித்து அவநம்பிக்கைக்கொள்ளத் தேவையில்லை. தம் இரக்கத்தினால் கடவுள் தம்வாக்குறுதிகளை நிறைவேற்றி இஸ்ரயேலை மீண்டும் கூட்டி வருகிறார்.இந்த யூதக் கிறிஸ்தவர்கள்மனந்திரும்பியிருப்பதே மற்ற யூதர்களும் ஒருநாள் மனந்திரும்புவர் என்பதற்கு அடையாளம்.

3) அவர்கள் தங்களுடன்வாழும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களைஇழிவாகக் கருதலாகாது. ஏனெனில் கடவுள் பிற இனத்தார் வழியாகஇஸ்ரயேலை மீட்கத் திட்டம் வைத்துள்ளார்.

4.2. பிற இனத்துக் கிறிஸ்தவர்களுக்கு பவுல் கூறுவது(காண் 11:11-13)

1) யூதர்களின் அவநம்பிக்கைக்காக அவர்களை இழித்துரைக்காதீர். ஏனெனில் உங்கள் மீட்பு யூதர் வழியாக- குலமுதுவர், நாசரேத்தூர்இயேசு மற்றும் நம்பிக்கையில்லா யூதர் - வந்தது. அவர்கள்மூலமாகத்தான் நீங்கள் மீட்பின் நற்செய்தியை கேட்கவும் நம்பிக்கைவைக்கவும் வாய்ப்பு பெற்றீர்கள்.இக்கருத்தை விளக்கும் வண்ணம்ஒலிவமரம் பற்றிய அழகிய உவமையைத்தருகிறார் பவுல் (11:16-24). நல்ல ஒலிவமரக்கிளைகளாகிய யூதர்கள்தங்கள்அவநம்பிக்கையால் வெட்டப்பட்டு விட்டனர். ஆனால்காட்டொலிவமரக்கிளைகளாகிய பிற இனத்தார்அங்கிருந்து வெட்டப்பட்டு நல்ல ஒலிவ மரத்தில்ஒட்டப்பட்டிருக்கின்றனர். இவர்கள்அவர்களைப் பழித்தால் இவர்கள் மீண்டும்வெட்டப்படலாம். நல்ல ஒலிவமரக்கிளைகளாகிய யூதர்களை மீண்டும் ஒட்டவைக்க இறைவனால் முடியும்.

2) யூதர்கள் மத்தியில் இயேசுவுக்குச் சான்றுபகரும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். அவர்களுக்கு இந்த நற்செய்திதேவை. கடவுள்உங்கள்வழியாய் அவர்களைமீட்க வாக்களித்துள்ளார்.

4.3. உரோமைக் கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் பவுல் கூறுவது
கிறிஸ்தவர்களிடையே போட்டியோ, பொறாமையோஇருத்தலாகாது. ஏனெனில் எல்லோரும் ஒன்றே (10:12; 11:32)எல்லோருக் கும் ஒருவருக்கு ஒருவர் துணை தேவை (11:11-14).எல்லோரும் கடவுளின் இரக்கத்திற்கு கடன் பட்டவர்கள் (11:30,31).எல்லோரும் ஒன்றாகக் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும்.

4.4. நமது சிந்தனைக்கு
யூதருக்கும் பிற இனத்தாருக்குமான கடவுளின் திட்டம் நமக்கும்இன்று பொருளுள்ளது. கடந்த 1900 ஆண்டுகளில் பெருமளவில் பிற இனத்தாரே கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர். ஆனால் யூதர்கள்அவ்வளவாக மனந்திரும்பவில்லை.

1) புனித பவுல் இத்திருமுகத்தை எழுதிய காலத்தில் பல யூதர்கள்யூதேயாவை விட்டு விலகிய உரோமைப் பேரரசின் பல பாகங்களில்குடியேறிவிட்டனர். கி.பி. 70 மற்றும்கி.பி. 136 ஆகியஆண்டுகளில்நடந்தஇருபெரும் யூதக் கிளர்ச்சிகளுக்குப் பின்னர்உரோமையர்கள் எருசலேமை, உரோமைநகரமாக மாற்றிவிட்டனர். யூதர் யாரும் அங்கேநுழைய அனுமதிக்கப்பட வில்லை. இவ்வாறுயூதர்கள் தங்கள் நாட்டை இழந்து ஐரோப்பாமற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சிதறுண்டுபோயினர்.

2) அதிலிருந்து யூதர்கள் கடுமையாகத்துன்புறுத்தப்பட்டு வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக 1933 முதல் 1945 வரை 'pட்லர்முதலானோரால் ஜெர்மனியில் துன்புறுத்தப் பட்டனர். கிறிஸ்தவர்களும்அவ்வப்போது யூதர்களைக் கிறிஸ்துவின் பெயரால் துன்புறுத்திவந்துள்ளனர். கி.பி. 387 -ல் புனித கிறிஸோஸ்தோம் என்பவர்யூதர்களுக்குஎதிராக தொடர் சொற்பொழிவுகளைநிகழ்த்தினார். கடவுள்அவர்களை வெறுக்கின்றார் என்றும் அவர்களை அழிக்க விரும்புகிறார்என்றும் அவர் பேசினார். கிறிஸ்தவர்கள்யூதர்களைஅழிப்பதுஅவர்கள்கடமை என்றார்.பல புனிதர்களும் மத்திய காலத்தில் யூதர்களைத் தாக்கியேபேசினர். யூதர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்ததால் அவர்கள்என்றென்றும் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்று திருத்தந்தை3-ஆம் இன்னசென்ட் 1205 - ஆம் ஆண்டு அறிக்கையிட்டார். ஆனால்பொதுவாக மற்றத் திருத்தந்தையர்கள் யூதர்களையும் பாதுகாக்கவேமுற்பட்டனர்.

3) 1948-இல் பாலஸ்தீனாவில், இஸ்ரயேல் என்னும் நாடுஉருவாக்கப்பட்டது. உலகின் பல பாகங்களிலிருந்தும் யூதர்கள் தங்கள்முன்னோரின் பூமிக்குத் திரும்பி வந்தனர். சுமார் 1800 ஆண்டுகள்இஸ்ரயேல் என்ற இனம் பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும்சிதறடித்தல்களில் சிதைந்து போகாமல் மீண்டு வந்துள்ளது. இதுகடவுளின்புதுமைகளில் ஒன்று என்றே பலர் கூறுகின்றனர்.கத்தோலிக்கத் திருச்சபை நடத்திய வத்திக்கான்சங்கக் கூட்டத்தில்1965 ஆம் ஆண்டு யூதர்களை இதற்கு முன்னால் துன்புறுத்தியதுகண்டிக்கப்பட்டது. யூத இனம் என்பது இயேசுவைக் கொன்றதற்குக்குற்றவாளியாக முடியாது என்றும், அவர்கள் கடவுளால் புறக்கணிக்கப்படவோ, சபிக்கப்படவோ இல்லை என்றும் அறிவித்தது.

1967-இல் இஸ்ரயேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே நடந்தஆறு நாள் போரின் விளைவாக எருசலேம் நகரும், யோர்தான் நதியின்மேற்குக் கரையும் இஸ்ரயேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. இது கி.பி.70க்குப்பின் எருசலேமை இஸ்ரயேலர்கள் தங்கள் வசமாக்கிக்கொண்டமுதல் நிகழ்வாகும். யூதர்கள் இப்படித் தங்கள் பூமிக்குத் திரும்பியதுவிவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளபல இறைவாக்குகளின்நிறைவு எனநம்புகின்றனர். பலர் இதனை ஒத்துக்கொள்வதில்லை.

4) இப்போது இஸ்ரயேல் என்ற இனம் மீண்டும் நிலை பெற்றுஉள்ளது என நாம் கூறலாம் (11:26).உரோ 11:26 படி பார்த்தால் கடவுள் பிற இனத்தாருக்கும் இரக்கம்காட்டும் தன் திட்டத்தை நிறைவேற்றியபின் யூதர்கள் பலரை கிறிஸ்துவழியாக தன்னிடம் கூட்டி வருவார் (11:23) என்று கொள்ளலாமா?இஸ்ரயேலுக்கு கடவுள் அளித்த வாக்குறுதிகள் மாறவோ,தோல்வியுறவோ இல்லை (9:6; 11:2; 11:29). கடவுளின் இரக்கம் எல்லாமனிதருக்கும் உரியது. யூதர்களுக்கும் பணிபுரியும் ஒரு சிறப்புக் கடமைதிருச்சபைக்கு உள்ளது (11:32). நற்செய்தியை அவர்களுக்குஅறிவிப்பதோடு, பல நல்வழிகளையும் காட்டவேண்டும் (11:18, 23, 24).

5. அறிவுரைப் பகுதி

உரோமையர் 1 முதல் 11 வரையிலான பகுதியைக் கொள்கைப்பகுதி என்கிறோம். 12 முதல் 16 வரையிலானபகுதியை அறிவுரைப்பகுதிஎன்கிறோம்.கொள்கைப்பகுதியில் தூய பவுல் அடிகளார், கடவுளின் திருவருட்செயல் முறையை நன்கு விளக்கி, எப்படி அவர் நம்மைஏற்புடையவராக்குகிறார் என வருணித்தார்.இப்படி ஏற்புடையவராக்கப்படும் நம்பிக்கையுள்ளவர்கள் அதாவதுகிறிஸ்துவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளார்ந்த அனுபவமாகும். இவ்வனுபவம் வெளியரங்கமாகக் காட்டப்பட வேண்டும்.இதை பற்றி உரோ 12-16 பகுதியில் கூறுகிறார்.

'எனவே' எனப் பொருள்படும் 'ஊன்' எனும் கிரேக்க வார்த்தையைப்பயன்படுத்தியுள்ளார். இப்போதைய தமிழ்மொழி பெயர்ப்பில் அது விடப்பட்டுள்ளது. அச்சொல் முந்தைய பகுதியுடன் இப்பகுதியை இணைக்கும்சொல்லாக உள்ளது. கொள்கைப் பகுதியில் சொல்லப்பட்டகருத்துக்களை நடைமுறை வாழ்க்கைக்கு பொருத்திப் பார்க்க 'எனவே'எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்.இப்பகுதி கிறிஸ்துவின் சட்டத்தின் அடிப்படையில் அமைந்தது(காண்கலா 6:2; 1 கொரி 9:21). உரோ 12:3-13:14 பகுதிக்கும் இயேசுவின்மலைப்பொழிவு பகுதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

5.1. உள்ளத்தில் செய்யும் வழிபாடு (12:1-2)
இப்பகுதியில் நல்லொழுக்கத்திற்கான பொதுவான விதிதரப்பட்டுள்ளது. இப்பகுதியில் திருவழிபாட்டுச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்களுக்குஉண்மை வழிபாடு என்பது யூதர்களும்பிற இனத்தாரும் செய்தது போன்றமிருக பலிஅல்ல. இவ்வழிபாடுநம்முழுஉடலையும் சார்ந்தது. அதாவது உடல்,மனம் ஆகியவை சார்ந்த எல்லாசெயல்களையும் உள்ளடக்கியது.இந்த வழிபாடு வெளியரங்கமானது மட்டுமல்ல, மாறாக மிகவும்உள்ளார்ந்தது, ஆவிக்குரியது.யூத வழிபாடு வெளியரங்கமாக மாறிக்கொண்டேயிருந்ததால்உள்ளார்ந்த வழிபாடு செய்யுமாறுஇறைவாக்கினர் அறிவுறுத்தினர் (ஓசே6:6;17:7).

5.2. கிறிஸ்தவர்களின் பொதுவான வாழ்க்கை (12:3-8)
பொதுவான விதியை 12:1-2 பகுதியில் கொடுத்த பின், பவுல்எதார்த்தமான சில வழிகளை தருகிறார். ஒருவருக்கொருவர் அன்புகாட்டுதல்: இது சட்டத்தின்அடிப்படைத் தன்மை.இவ்வன்பு காட்டுவது மிக அவசரமாகும். ஏனெனில் இதுஇறுதிக்காலயுகமாகும். 1 தெச 5:1:3-.இல் வருகிறபடி உலகம் சீக்கிரம்முடியப் போகிறது எனும் பொருளில் இது சொல்லப்படவில்லை. மாறாகஇது மீட்பின்இறுதிக்கால யுகமாக இருப்பதால் அக்காலம் இத்தகு அன்புசெய்ய நம்மை முந்தித்தள்ளுகிறது.

5.3. மனவலுவற்றவர்களும் வலுவுடையவர்களும் (14:1-15:13) அறிவுரைப் பகுதியில் முக்கியமான அறிவுரைகள் அடங்கிய பகுதிஇது.மனவலுவற்றவர், மனவலுவுள்ளவர் குறித்த பிரச்சனைஉண்மையில் கொரிந்து நகரில் இருந்தது. உரோமைத் திருச்சபையில்அப்பிரச்சனை இருந்ததா எனத் தெரியவில்லை. ஒருவேளை அங்கும்ஓரளவுக்கு இப்பிரச்சினை இருந்திருக்கலாம்.யூத உணவு விதிகள், எசேனியர்களின் விதிமுறைகள்,பித்தகோரஸ் போன்றோரின் மறைபொருள், மதங்களின் விதிமுறைகள்ஆகியவற்றின்பாதிப்பாக இப்பிரச்சினைஉருவாகிஇருக்கலாம். இவர்கள்பெரும்பாலும் யூதக்கிறிஸ்தவர்களாக இருந்திருக்க வேண்டும். மற்றவர்சிலரும் இதில் அடங்கியிருக்கலாம்.இவர்களில் சிலர் இறைச்சி உண்ண மறுத்திருக்கலாம் (14:2);மற்ற சிலர் மதுகுடிக்க மறுத்திருக்கலாம் (14:21); வேறுசிலர் சிலதிருநாட்களை அனுசரிக்க வலியுறுத்திருக்கலாம் (14:5).

1) வலுவுள்ளவர்கள்- அதாவதுவிருத்தசேதனம்செய்யப்படாதோர்,அது தேவையில்லை என்று எண்ணுவோர், மற்றும் யூத உணவுவிதிகளைக் குறித்துக் கவலைப்படாதோர் அவ்வகை விதிகள்கிறிஸ்தவர்களுக்குத் தேவையில்லை என எண்ணியிருக்கலாம்.அதனால், அவ்வகை விதிகளைக் கடைப்பிடித்தோரை தாழ்வாகநடத்தியிருக்கலாம்.

2) மன வலிமையற்றவர்கள் இத்தகு எண்ணமுடையோரைக்குறித்துத் தீர்ப்புக்கூறியிருக்கலாம்.

புனித பவுலோ, 'நான் மனவலிமையுள்ளோர் சொல்வதைஏற்றுக்கொள்கிறேன். மற்றவர் சொல்லுவது தவறு' என கூறவில்லை;மாறாக இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்கிறார்.

1) மனவலிமையுள்ளோர் மற்றவரை இழித்துரைத்தல் ஆகாது(14:1-2).

2) ஒவ்வொருவரும் தம் மனத்தில் செய்துக் கொண்ட முடிவின்படிசரியானது எதுவென தீர்மானித்த பின் அதை ஆண்டவரின்மாட்சிமைக்காகச் செய்யவேண்டும் (14:3-12).

3) தீமை என்பது மனிதர்களிடமே உள்ளது. கடவுள் படைத்தபொருள்களில் அல்ல (14:14; மத் 15 :11).

4) மனவலிமையற்ற சகோதரரின்மனசாட்சிமதிக்கப்பட வேண்டும்(14:13-23). எனவே தடை போடலாகாது.

5) ஒருவருக்கொருவர் அன்பு காட்டுதலே இப்பிரச்சனைக்குஉண்மையான தீர்வாகும் (15:1-13). கிறிஸ்துவே ஒற்றுமைக்கு மாதிரி.எனவே மனவலிமையற்றோரையும் ஏற்றுக் கொள்ளுங்கள். கடவுளின்இரக்கம் யூதருக்கும் பிற இனத்தாருக்கும் கொடுக்கப்படுகிறது.விருத்தசேதனம் செய்தோருக்கும், செய்யாதோருக்கும் இடையேஉண்மையானஒற்றுமை நிலவவேண்டும்.

பவுல் கூறும் இப்பிரச்சனை இன்றைய காலக்கட்டத்திலும் நம்தலத்திருச்சபைகளிலும் உள்ளன. முற்போக்கு எண்ணங்களும்பாரம்பரியத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கும் போக்கும் மோதுகின்றன.இரண்டில் ஒன்று சரி மற்றது தவறு எனஒட்டுமொத்தமாக தீர்ப்பிடுவதைவிட பவுலின்சமரச முயற்சியானபரிவர்த்தனையும், ஒருவருக்கொருவர்அன்பு காட்டி பிரச்சனைக்குத் தீர்வு காணலும் இருந்தால் நம்தலத்திருச்சபைகள் மேலோங்கி வளரும்.

5.4. முடிவுரை 15:14-16, 22-27இப்பகுதியில் பவுல் தம் திருத்தூதர் பணியை நியாயப்படுத்துகிறார்.தன்போதனைப் பணியைகுருத்துவப்பணிஎன்றே அழைக்கிறார் (15:16).ஏனெனில் கடவுளுக்கு ஏற்புடையவரான பிற இனத்தாரை அவருக்குஅர்ப்பணிக்கும் பணியை அவர் செய்கிறார். இவ்வகை உருவகம் 12:1,2மற்றும் பிலிப்பியர் 2:17-லும் உள்ளது. இப்படிச் சொல்வது யூதர்களைத்தாக்குவதாகவும்இருக்கலாம். ஏனெனில்யூதர்கள்பலிசடங்குமுறைகள்நிறைந்தவர்கள்; பிற இனத்தாரை அவர்கள் கடவுள் முன்னிலையில்தூய்மை அற்றவர்கள்எனக் கருதினர் (திப 10: 14, 15, 28). ஆனால்இங்குஅவர்கள் இறைவனுக்கு உகந்த காணிக்கையாகின்றனர்.தூய்மையற்றவர்கள் இப்படி ஆக இயலுமா?பவுல் தன் எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசுகின்றார்.ஸ்பெயினுக்குப் போக விரும்புகிறார். போகும் வழியில் உரோமைக்குச்செல்ல விரும்புகிறார்.

உரோமையிலுள்ள நண்பர்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார். சுமார்26 பேருக்கு வாழ்த்து . இது எபேசு நகருக்கு அனுப்பப்பட்ட கடித நகலில்இணைக்கப்பட்ட வாழ்த்துப் பகுதியாக இருக்கலாம். ஏனெனில்அங்குதான்சுமார் மூன்றுஆண்டுகள்அவர் தங்கியிருந்ததால்அவருக்குப்பலரை தெரியும். ஆயினும் பல்வேறு இடங்களில் அவர் சந்தித்த நபர்கள்உரோமையில் இருந்திருக்கலாம். எனவே உரோமையில்இருந்தவர்களுக்கே இவ்வாழ்த்து எனகூறுவோரும் உள்ளனர்.

 

2.கலாத்தியர் திருமுகம்

1.முன்னுரை
பவுலடியார் தனதுமூன்றாவதுபயணத்தின்போது, தான்முன்னமேஏற்படுத்திய திருச்சபை பலவற்றிற்கு கடிதங்கள் எழுதினார். கலாத்தியர்திருச்சபையை இருமுறை சந்தித்தபின் (கலா 4:13) அத்திருச்சபைக்கும்கடிதம் எழுதி, அவர்களில்நிலவியபிரச்சனைகளுக்குப் பதிலளிப்பதுடன்,கிறிஸ்தவ மறையுண்மைகளையும் அதனில் விளக்கினார் (திப 18:23).கிறிஸ்துவுக்கு ஒருவன் 'அடிமை'யாக வாழும்போது அவன் அதனால்உரிமை வாழ்வு பெறுகிறான். அதாவது கிறிஸ்துவில் நம்பிக்கைகொள்வதன்வழியாகமட்டுமேஒருவன்மீட்புப் பெறமுடியும்என்றமையக்கருத்து இக்கடிதத்தில் வலியுறுத்தப்படுகிறது (காண். கலா 3:21-29; 6:11-18).

பவுல் தனது முதல் நற்செய்திப் பயணத்திலேயே (கி.பி. 46-ல்ஆரம்பித்தார்) உரோமை மாநிலமான கலாத்தியாவின் தென் பகுதியில்கிறிஸ்து பற்றிய நற்செய்தியை அறிவித்தார். யூதர்களும், பிற இனத்தார்பலரும் நம்பிக்கை கொண்டு கிறிஸ்துவின்சீடராய் மாறினர் (திப 13:43).ஒரு சில யூதரிடையே எதிர்ப்பு தோன்றினாலும், அப்பயணத்தை முடித்துஅந்தியோக்கியா திரும்பும்போதும் கலாத்தியா சென்றார் (திப 13:13-14: 26).பவுலின் காலத்தில் கலாத்தியா நாடு என்று சொல்லும் போது, கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியாவில் வாழ்ந்து வந்த கால்லியர்அல்லதுசெல்ட் இனத்தினர் இடம் பெயர்ந்து, வடக்கே பிதீனியா, தெற்கேலிக்கோனியா, கிழக்கே போந்து, கப்பதோசியா, மேற்கே பிரிசியா ஆகியநாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் தங்கினர். இவர்களே கலாத்தியர்ஆவர். அதாவது பழைய வட கலாத்தியாவில் இருந்த அன்சீரா,இன்றைய துருக்கி நாட்டின்தலைநகரானஅங்காராவைச் சுற்றி வாழ்ந்த கிறிஸ்தவச் சபைகளுக்கே பவுல் திருமுகம் வரைந்தார் (செ. சூசைமாணிக்கம், உரிமை வாழ்வு அருள்வாக்கு மன்றம், 1977, 5-6).

1.1. கடிதம் உருவான காரணம்
ஆரம்பத்திலிருந்தே பவுலுக்கு கலாத்தியர் நல்ல வரவேற்புஅளித்தனர். கிறிஸ்துவைப் போலவேஅவரை ஏற்றுக்கொண்டனர் (4:13-15); அதனால், அவரும் அங்கு அதிகம்உழைத்தார் (4:11); குழந்தையைப்பெற்றெடுக்கும் தாய்போல அவர்களுக்காகவேதனையுற்றார் (4:19); எல்லாவற்றிலும்அவர்களைப் போலானார் (4:12).

ஆனால், கலாத்தியாவை இரண்டாம்முறையாக சந்தித்துவிட்டுச் சென்ற பின்னர்,"சில கலகக்காரர்கள்” (1:7) பவுல் போதித்தநற்செய்தியைத் திரித்துக் கூற ஆரம்பித்தனர்.பவுல் உண்மையான திருத்தூதர்இல்லையென்றும் (கலா 1:15-17), விருத்தசேதனக்கொள்கையில் நிலையானநம்பிக்கையைக் கொள்ளவில்லையென்றும்(5:11), அவர்கள் பவுல்மேல் குற்றம் சாட்டினர்.அவர்களை "போலிச் சகோதரர்கள்” என்றுபவுல் குறிப்பிடுகிறார் (2:4).

ஆக, பவுலுக்கு கலாத்தியாவில் இருவித எதிரிகள் உருவாயினர்.யூதக் கட்சியினர் ஒருபுறம், மறுபுறம், முற்போக்குவாதிகள். அதாவதுநம்பிக்கையினாலேயே மனிதர் ஏற்புடையவராக முடியுமென்ற பவுலின்கோட்பாட்டைத் திரித்து (3:5-29), "நற்செயல்கள் தேவையில்லை”என்னும் 'சோம்பேறிகள்' இவர்கள். இவர்களின் போதனையைகலாத்தியர் எளிதில் நம்பத் தொடங்கினர் (1:6); பஞ்ச பூதங்களுக்குமீண்டும் அடிமையானவர்கள் (4:9). இதனால் "அறிவிலிகளானகலாத்தியரே, உங்களைமயக்கியோர் யார்?” என்றுஅவர்கள்மேல்சினம்கொள்கிறாhர் (3:1).எனவே, கலாத்தியரையும் போலிச் சகோதரரையும் வன்மையாகக்கண்டிக்க விரும்பினார். அத்துடன், தன்னைப் பற்றிக் கூறப்பட்டஅவதூறுகளுக்கும் விளக்கம் கொடுக்க விரும்பினார். ஆகவேகி.பி. 57ல்எபேசு நகரிலிருந்து இத்திருமுகத்தை எழுதி அனுப்பினார்.

1.2. நூலின் அமைப்பும் விளக்கமும்
இம்மடலை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்

1) முன்னுரை 1:1-10
2) நிகழ்ச்சிப் பகுதி 1:11- 2:21
3) கொள்கைப் பகுதி 3:1-4:31
4) அறிவுரைப் பகுதி 5:1-6:10
5) முடிவுரை 6:11-18

1: 1-10: இப்பகுதியில்இக்கடிதத்தை எழுதுவற்கானநோக்கத்தைப்பவுல் விளக்குகிறார். இது குறித்து 'கடிதம் உருவான காரணம்' என்றதலைப்பில் ஏற்கனவே கண்டுள்ளோம்.

2. நிகழ்ச்சிப் பகுதி(1:11-2:21 )
1:11-24நற்செய்தி கடவுளின் வெளிப்பாடு:நற்செய்தி கடவுளின் வெளிப்பாடு:நற்செய்தி கடவுளின் வெளிப்பாடு: இறைவனின்வெளிப்பாடாகிய இந்த நற்செய்தி தனக்கு இயேசு ஆண்டவரால்நேரடியாக வெளிப்படுத்தப்பட்டது. எந்த மனிதரிடமிருந்தும் தான்இதைப்பெறவில்லை. எனவே அனைவரும் ஏற்கவேண்டிய ஒரே நற்செய்திஇதுதான்என்பதை விளக்குகிறார். இதோடு தனதுஅழைப்பிற்குப் பிறகுஅரேபியா சென்றது, பிறகு எருசலேம் சென்று கேபா, யாக்கோபுஆகியோரைச் சந்தித்தது போன்ற தன் வாழ்வின் நிகழ்ச்சிகள் குறித்தும்பேசுகின்றார்.

2:1-10: எருசலேம் திருச்சபையின் ஒப்புதல்:
திருட்டுத்தனமாகதிருச்சபைக்குள் நுழைந்த கள்ளச் சகோதரர்கள்தான், யூதரல்லாதோர்விருத்தசேதனம் பற்றிய சர்ச்சையை எருசலேம் திருச்சபையில்கிளப்பினார்கள். யோவான் ஆகியோர் தன்னையும், பிற இனத்தாருக்குநற்செய்தி அறிவிக்கும் பணியையும் ஏற்றுக்கொண்டனர் என்றும் பவுல்குறிப்பிடுகின்றார். பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கும் பணிதன்னிடம் சிறப்பாக ஒப்படைக்கப்பட்ட பணி என்பதையும் அதற்குஎருசலேம் திருச்சபை ஒப்புதல் வழங்கியது என்பதையும் இங்குவிளக்குகின்றார்.

2:11-14: பவுல் பேதுரு மோதல்:
எருசலேம் கூட்டத்திற்குப் பிறகுகேபாவும்(பேதுருவும்), பவுலும் அந்தியோக்கியா சென்றனர். அங்கே கேபாபிற இனத்தாரோடு வேற்றுமை பாராட்டாமல் உண்டு வந்தார். ஆனால்,யாக்கோபின் ஆட்கள் சிலர் அங்கு வந்ததும் கேபா இதைத் தவிர்க்கஆரம்பித்தார். கேபா இவ்வாறு நடந்து கொண்டதை பவுல் எல்லார் முன்னிலையிலும் கண்டித்தார் (2:14). அதை கேபா ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். இது இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதல்என்பதைவிட, திருச்சபைக்குத் தலைவரான கேபாவையே பவுல்கண்டித்துள்ளார் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

2:15-21: பவுலின் நற்செய்தி:
திருச்சட்டத்தை தவறாமல் கடைப்பிடித்துஒருவர் நற்செயல்கள் செய்வதால்இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகிறார்என்கின்ற யூதரின் (பரிசேயரின்) கூற்றைஏற்க இயலாது. அது இறைவனின்விருப்பமோ, வழிமுறையோ அல்ல. சீனாய்மலை உடன்படிக்கையின் பொழுதுஅளிக்கப்பட்டசட்டங்கள்அனைத்துமே'உடன்படிக்கையின்விளைவாய்'(ஊழளெநஙரநnஉந ழக வாந ஊழஎநயெவெயட சநடயவழைளொip)அமைந்திருந்தன. நிலம், கோவில், அரசன் ஆகியமூன்றையும் இழந்து பாபிலோனில்அடிமைகளானபோது சட்டத்தை'உடன்படிக்கைக்குநிபந்தனையாக”(ஊழனெவைழைn கழச உழஎநயெவெயட சநடயவழைளொip ) மாற்றினர் யூதர்கள். இம்மனநிலையை இங்கே பவுல்எதிர்க்கிறார்.மோசேயின் சட்டத்தைக் கடைப்பிடிப்பதால் அல்ல, மாறாக இறைமகன்இயேசு மீது நம்பிக்கை கொண்டு அவரோடு இணைந்த வாழ்வுவாழும்போது நாம் மீட்படைகிறோம் என்பதுதான் பவுல் அறிவிக்கும்நற்செய்தி.

3. 3:1-4:31:கொள்கைப் பகுதி

3:1-28 நம்பிக்கையினால் ஏற்புடைமை:
கலாத்தியரின்நம்பிக்கை தளர்ச்சியுற்றிருப்பதை நினைத்து வருந்தி அவர்களைச்சாடுகிறார். திருச்சட்டம்சார்ந்த செயல்கள்இல்லாமலேஅவர்கள்கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டதைஅவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார். மீட்பின்வரலாற்றில்அனைவருக்கும்தந்தையான ஆபிரகாம் நம்பிக்கையினால்தான் இறைவனுக்குஏற்புடையவரானார் என்பதை உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றார்.மேலும், சட்டத்தினால் விளைவது பாவமே என்றும், சட்டத்தின்அடிமைகளாய் இருந்த நம்மை கிறிஸ்து தனது மரணத்தினால்மீட்டருளினார் என்றும், கிறிஸ்துவோடு இணைந்திருக்கிற எவரும்தங்களுக்குள்ளே எவ்வித வேற்றுமையும் பாராட்டுதல் கூடாது என்றும்எடுத்தியம்புகிறார்.

3:29-4:20: கிறிஸ்தவ சுதந்திரம்:
நாம் அனைவரும்ஆபிரகாமின் வழித் தோன்றல்களாதலால் நம்மை மீட்க வந்தகிறிஸ்துவையும் திருச்சட்டத்திற்கு உட்பட்ட ஒருவராகவே கடவுள்அனுப்பினார். இந்த மீட்பர் நம் அனைவர் மீதும் தூய ஆவியைப்பொழிந்தருளினார். அந்த தூய ஆவியானவர், நம்மை சட்டத்தின்அடிமைத்தனத்திலிருந்துமீட்டுஇறைவனை"அப்பா” என்றுஅழைக்கும்உரிமைக் குடிமக்களாக மாற்றினார்.இப்பகுதியில் பவுல் கலாத்தியர்களை "என் பிள்ளைகளே” என்றுஅழைக்கின்றார். அவர்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு இதனால்வெளிப்படுகின்றது. இந்த அன்புறவு கலாத்தியர் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் உருவானது.

4:21-31: சுதந்திரத்தை விளக்க எடுத்துக்காட்டு:
சீனாய்மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கையை ஆகாருடனும், இயேசுவில்செய்யப்படுகின்ற புதியஉடன்படிக்கையைசாராவுடனுடம் ஒப்பிடுகின்றார்பவுல். முன்னையது அடிமை நிலையில் பிள்ளைகளைப்பெற்றெடுப்பதாலும், பின்னையது உரிமை நிலையில் பிள்ளைகளைப்பெற்றெடுப்பதாலும் இப்படிப்பட்ட ஒப்புமையைப் பவுல் உருவாக்குகிறார்.

4. 5:1-6:10: அறிவுரைப் பகுதி

5:1-12 சுதந்திரத்தை இழந்து விடாதிருக்க எச்சரிக்கை:
மீட்பிற்கு விருத்தசேதனம் தேவையில்லை, அன்புச் செயல்களில்வெளிப்படுகின்ற இறை நம்பிக்கையே போதுமானது. விருத்தசேதனம்செய்துகொள்வதால்எவ்விதப் பயனும்நேரப்போவதுகிடையாது. எனவேதேவையில்லாமல் மற்றவர் சொல்வதைக் கேட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். பெற்றுக் கொண்ட கிறிஸ்தவ உரிமை வாழ்வைஇழந்து விடாமல் கவனமாயிருங்கள் என்று எச்சரிக்கின்றார்.

5:13-6:10 உரிமை வாழ்வு பெற்றுள்ள கிறிஸ்தவர் யாரும் இனிஊனியல்பின் இச்சைகளுக்கு இடம் தரக்கூடாது என்றுஅறிவுறுத்துகிறார். ஊனியல்பின்இச்சைகள் எவை, எவை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார். அவைபரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு,பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு,குடிவெறி, களியாட்டம் முதலியவை. இவற்றை தவிர்த்துதூயஆவியின்கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம்,நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றை அணிந்து கொள்ளவேண்டும். இவையே கிறிஸ்தவ உரிமை வாழ்வை நிலைக்கச் செய்யும்.

மேலும் சட்டத்திற்கு அடிமைக ளாய் இருப்பதைத் தவிர்த்துஒருவருக்கொருவர் அன்பின்அடிமைகளாய் இருக்க வேண்டும் எனவும்தெளிவுப் படுத்துகிறார்.

5. முடிவுரை 6:11-18

சிறந்த நல்லொழுக்க அறிவுரைகளைக் கலாத்தியருக்குவழங்கியபின், பவுல் தம் திருமுகத்தைப் பின்வருமாறு முடிக்கின்றார்."நானோ நம்ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின்சிலுவையைஅன்றி,வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன். அதன்வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில்அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும்சிலுவையில்அறையப் பட்டிருக்கிறேன்”.

5.1. திருமுகம் வெளிப்படுத்தும் உண்மைகள்
கிறிஸ்தவ மறையின் சில மைய உண்மைகளை முக்கியமாக,கிறிஸ்து பற்றிய இறைவெளிப்பாட்டின் மையக் கருத்துக்களைஇத்திருமுகத்தில் பவுல் வெளிப்படுத்துகிறார். ஆகவே இக்கடிதம்வலியுறுத்தும் உண்மைகளைக் கிறிஸ்துவை மையமாக வைத்து,இரண்டு கோணங்களில் காணலாம்.

கிறிஸ்துவைஅறிந்துகொள்வோம்
பவுல் தனது கடிதங்கள் எல்லாவற்றிலுமே கிறிஸ்துவுக்குமுதலிடம் கொடுக்கிறார் என்பது உண்மை. இருப்பினும், இக்கடிதத்தில்கிறிஸ்துவைப் பற்றி மட்டுமே முதன்மையாக எழுதுகிறார். இயேசுகிறிஸ்துவை முதலில் தனது வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டுகாண்கிறார். ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாத கலாத்தியருக்கும், போலிச்சகோதரர்களுக்கும், பதிலளிக்கும் வகையில் எல்லா விளக்கத்தையும்கிறிஸ்துவை மையமாக வைத்தேகாண்கிறார். தான் ஒரு உண்மைதிருத்தூதர் என்று எண்பிக்க, எடுத்தஎடுப்பிலேயே, "எந்த ஒரு தனிமனிதராலோ, மனித அதிகாரத்தாலோ ஏற்படுத்தப்படாமல், இயேசுகிறிஸ்துவாலும்... திருத்தூதனாகஏற்படுத்தப்பட்ட பவுலாகியநானும்....” என்று எழுதுகிறார் (1:1).அடுத்து, ஆண்டவர் இயேசுவைத் தம்உடலில் பிரதிபலிக்கும் அளவுக்கு(6:17) இயேசுவுடன் அவர்இணைந்துள்ளார். அவர் கிறிஸ்துவுடன் இரண்டறக் கலந்துவிட்டநிலையை, "இனி வாழ்பவன் நான் அல்ல் கிறிஸ்துவே என்னுள்வாழ்கிறார்”(2:20) என்று முழக்கமிடுகிறார்.

கிறிஸ்துவின் ஊழியனாகச் செயலாற்றி அவருக்காக பலமுறைதுன்புற்று(5:11), கிறிஸ்துவின்தழும்புகளையும்ஏற்றுக் கொண்டார் (6:17).இத்தகைய ஒன்றிப்பு நிலையை வெளிப்படுத்தி தான்ஒரு உண்மையானதிருத்தூதர் என்பதை வெளிப்படுத்துகிறார். மேலும், அவரது இந்தஅழைத்தலை தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பெற்றதாகவும்அறிக்கையிடுகிறார் (1:15). அதன் மூலம், பழைய ஏற்பாட்டுஇறைவாக்கினருக்கு நிகராக (எரே 1:5; எசா 49:1) தன்னை இறைவன்அழைத்துள்ளார் என்றும் கூறுகிறார்.

இத்துடன் இதே போன்று ஒவ்வொரு கிறிஸ்தவரும் இயேசுகிறிஸ்துவுக்கே தன்னை அர்ப்பணிக்க வேண்டும்; அப்பொழுது தான்அவர் புதுப்படைப்பாகிறார் (6:15) என்று உணர்த்த விரும்பும் பவுல்,கிறிஸ்துவுடன் நமக்கிருக்க வேண்டிய ஒன்றித்த நிலையை விளக்க"கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள்அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்” என்று உருவகமொழியில் உரைக்கிறார் (3:27). இப்படி கிறிஸ்துவுடன் நாம்ஐக்கியப்படும்போது மனித உறவு உருவாகின்றது என்பதை, "கிறிஸ்துஇயேசுவோடுஇணைந்துள்ளநீங்கள்யாவரும் ஒன்றாய்இருக்கிறீர்கள்”(3:28) என்கிறார். ஆக கடவுளன்பு பிறரன்பையும் வளர்க்கிறது என்றுதெளிவாக்குகிறார். #8220;ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக்கொள்ளுங்கள். இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தைநிறைவேற்றுவீர்கள்” (6:2).ஆகவே, பவுலின் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும்கிறிஸ்துவே மையம் கொண்டிருந்தார். முக்கியமாக இயேசு கிறிஸ்துசிலுவையில் அறையப்பட்டதுதான்பவுலின்நற்செய்தியாயிருந்தது(3:1).

கிறிஸ்து விடுதலைவீரர்
பவுலின் இக்கடிதத்தை,"கிறிஸ்துவ விடுதலையின்நற்செய்தி”(வாந புழளிநட ழக கசநநனழஅ) என்று அழைப்பதுவழக்கம். யூத சட்டத்தின் பழமைவிரும்பிகளுக்கும், 'விடுதலைவிரும்பியென்றுதவறாகப் போதித்தசோம்பேறிகளுக்கும் இயேசு நமக்குஎப்படி விடுதலையளிக்கிறார் என்றுஇக்கடிதத்தில்விளக்குவதன்மூலம்தெளிவாகபதிலளிக்கிறார்.

கிறிஸ்துவ வாழ்வு என்பது முதன் முதலில் ஒரு விடுதலைவாழ்வாகும் என்று குறிப்பிடுகிறார். "நீங்களோ, சகோதரர்களே, உரிமைவாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்... அதனால் திருச்சட்டத்திற்குஉட்பட்டவர்களாய் இருக்க மாட்டீர்கள்” (5:13-18). இங்கே சட்டம்என்னும்போது, மோசே சட்டத்தையே பவுல் குறிப்பிடுகிறார். இச்சட்டம்கிறிஸ்துவிடம் செல்ல ஒரு ஊன்றுகோல். ஆனால் கிறிஸ்துவையேஊன்றுகோலாகக் கொள்ளும்போதுசட்டம் எதற்கு(3:23-25)? ஆதலின்,"அடிமைத்தளை எனும் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்” என்று கலாத்தியரை எச்சரிக்கிறார் (5:1).

இங்கே நாம் சற்று விளக்கம் பெற வேண்டும். சட்டம் எதற்கு?என்று கேட்டவுடன், கிறிஸ்துவர் இனி கட்டுப்பாடு அற்றவராக வாழவேண்டும் என்பதல்ல அவரது போதனை. மாறாக, பழைய சட்டத்தைவிடுத்து, கிறிஸ்து அளிக்கும் அன்பின் சட்டத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். அதனால்தான், "ஒருவருக்குஒருவர் அன்பின்அடிமைகளாய்இருங்கள்” என்று குறிப்பிடுவதுடன் (5:13), "உன் மீது நீ அன்பு கூர்வதுபோல், உனக்குஅடுத்திருப்பவர் மீதும்அன்பு கூர்வாயாக” என்றுலேவியர்நூல் வசனத்தை நினைவூட்டுகிறார் (5:14). மேலும், "தேவைப்படுவதுஅன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கையே” என்ற மாபெரும்உண்மையை எடுத்துரைத்து, இத்தகைய நிலையில்தான் நாம்கிறிஸ்துவின்விடுதலைவாழ்வில்பங்குபெறமுடியுமென்றுபோதிக்கிறார்பவுல் (5:6).

6. திருமுகத்தின் சிறப்புகள்

இறையியல் நோக்குடன் பார்க்கும் போது, புனித பவுல் எழுதியசிறந்த நான்கு மடல்களில் கலாத்தியருக்கு எழுதிய இக்கடிதமும் ஒன்று.மற்றவை கொரிந்தியருக்கு எழுதிய இரு கடிதங்களும், உரோமையருக்குஎழுதிய கடிதமுமாகும். கிறிஸ்தவ சமயம் யூத மறையினின்று பிரிந்து,உலக மதமாகத் தனித்து வளர்வதற்கு பவுலே காரணம் என்பது ஒருசிலரின்கருத்து. முக்கியமாக அவர் இக்கடிதத்தில்யூதருக்கும் தனக்குமிடையே இருந்தபிரச்சனைக்கு முடிவு கண்ட முறைதான்பெரிதும் உதவியது. இக்கடிதம்மார்ட்டின் லூத்தரை வெகுவாகக்கவர்ந்தது. 'கலாத்தியருக்கு எழுதியதிருமுகத்திற்கு நான் வாழ்க்கைப்பட்டுள்ளேன். அது என்மனைவி' என்றுகூறினார். ஏனெனில், "நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால்வாழ்வடைவர்” என்ற லூத்தரின்நம்பிக்கைக்குவித்தாக இம்மடல் அமைந்தது(3:11). எனவே, இக்கடிதம்,"சீர்த்திருத்தத்தின்பேருரிமைப் பத்திரம்” (ஆயபயெ ஊhயசவய ழக சுநகழசஅயவழைn)எனஅழைத்தார்.

இத்துடன், தூய ஆவியின் தூண்டுதலுக்குத் தன்னையேகையளிக்கத் தூண்டும் எழுச்சிக் கடிதம்; தேவையற்றசம்பிரதாயங்களைக் களையவைக்கும் ஆசிரியன்; இளந்திருச்சபைக்குமட்டுமல்லாமல், திருச்சபையின் எல்லா காலத்திற்கும், கிறிஸ்தவவிடுதலையை விளக்கும் கொள்கை திரட்டு இக்கடிதம்

------------------------------------------
--------------------------
----------------
------
--