ஒத்தமைபு நற்செய்திகள்

அருட்திரு. எஸ். ஜே. அந்தோணிசாமி
தூய நெஞ்சக் குருத்துவக் கல்லூரி, பூந்தமல்லி, சென்னை

விவிலிய அன்பர்களே,

விவிலியத்தின் இதயமாகஇருப்பது நற்செய்தி நூல்கள்.இயேசுவின் பிறப்பு, பணி, இறப்பு,உயிர்ப்பு இவற்றினை மையமாகவைத்து எழுதப்பட்ட நற்செய்திநூல்கள் வெறும் வரலாற்றுக்குறிப்புகளை மட்டுமல்ல, இளந்திருச்சபையின் இறைநம்பிக்கைக் கோட்பாடுகளையும ;உள்ளடக்கி நிற்கின்றன.'விவிலியத்தை அறியாதவன் இயேசுவை அறியாதவன்' என்றுகூறுவர்.ஆனால், நற்செய்திநூல்களை அறியாதவன் இயேசுவை அறியவேமுடியாதுஎன்பதே உண்மையாகும். திருத்தூதர்கள் இயேசுவைக ;கண்டபார்வையின்மூலம் அவரைப ;பற்றிமக்களுக்கு எடுத்துரைத்தனர். மக்களின்சமயமரபில்இயேசுவைபற்றியஆழ்ந்த நம்பிக்கைகள்உருவாயின. அந்தநம்பிக்கைகளைத்தொகுத்து, நுணுக்கமாக ஆய்ந்து எழுதினர் நற்செய்தியாளர்கள்(லூக் 1 : 1-4).

இந்த நற்செய்திகளில் முதல் மூன்று நற்செய்திகள் ஒத்தமைவுநற்செய்திகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் தன்மைகள்,நோக்கங்கள், வலியுறுத்தும் உண்மைகள்போன்றவற்றினைத் தெளிவாக எழுதிஇப்பாடத்தைத் தயாரித்துள்ளார் விவிலியப் பேராசிரியர் அருள்திருஎஸ்.ஜே.எஸ்.ஜே.அந்தோணிசாமிஅவர்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்உரித்தாக்குக.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திரு முனைவர் ஜோமிக்ஸ்
இயக்குனர்

;பொருளடக்கம்
1. நற்செய்தி: பொதுமுன்னுரை

1. நற்செய்தி: பொருள்விளக்கம்
2.மூன்றுகட்டங்களில்உருவானநற்செய்தி
3.ஒத்தமைவுநற்செய்திகள்

2. ஒத்தமைவுநற்செய்திகள்

4.மாற்குநற்செய்தி
5.மத்தேயுநற்செய்தி
6. லூக்கா நற்செய்தி

3.இயேசுவின்பிறப்பும்பொதுவாழ்க்கையின்தொடக்கமும்

7. இயேசுவின்பிறப்புநற்செய்தி
8. திருமுழுக்குயோவான்
9. இயேசுவின்பணிக்குமுன்பயிற்சிகள்
10. இயேசுவின்பணிவாழ்வுத்தொடக்கமும்கொள்கைஅறிவிப்பும்

4. இயேசுவின்போதனையும்பணியும்

11. மலைப்பொழிவு
12. இயேசுவின்புதுமைகள்-இறையாட்சியின்அருங்குறிகள்
13 . இயேசுவின்உவமைகள்-இறையாட்சியின்விளக்கங்கள்
14. இயேசுவும்தாழ்த்தப்பட்டமக்களும்
15. இயேசுவும்பெண்களும்

5. இயேசுவின்இறப்பும்உயிர்ப்பும்

16. இயேசுவின்பாடுகள், மரணம்
17. இயேசுவின்உயிர்ப்பு

 

நற்செய்தி: பொது முன்னுரை

1. நற்செய்தி - பொருள் விளக்கம்
எபிரேய மொழியில் "பஸார்'' என்றும் கிரேக்கத்தில்"எயுஅங்கேலியோன்'' என்றும் வழங்கிய சொற்கள்தான் தமிழில்"நற்செய்தி'' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இன்றைய தமிழ்வழக்கில் நம்மை மகிழ்விக்கும் செய்தியெல்லாம் நற்செய்தியே. ஆனால்விவிலிய வழக்கில்சிலகுறிப்பிட்ட செய்திகள்தான்"நற்செய்தி'' என்னும்தகுதியைப் பெற்றன. எதிரியை வீழ்த்திப் போரில் வெற்றி பெறுவது (2சாமு 18 : 26-27), எதிரியிடமிருந்து மீட்புப் பெறுவது (திபா 96 : 2),இத்தகையமகிழ்ச்சிச் செய்தியைக் கொண்டுவருபவருக்குஅளிக்கப்படும்பரிசு போன்றவையே நற்செய்தியாகக் கருதப்பட்டன. மெசியாநம்பிக்கையைச் சார்ந்த செய்தியை நற்செய்தி என்று இறைவாக்கினர்எசாயா குறிப்பிடுகிறார் (எசா 40 : 9; 52 : 7; 61 : 1). அரச குடும்பத்தில்வாரிசு பிறந்தது, அரசன் அரியணை ஏறியது போன்ற செய்திகளும்உரோமை அரசு காலத்தில் நற்செய்தியாக முழக்கமிடப்பட்டன.

தம் பிறப்பினால் உலகில் ஒரு மகிழ்ச்சியான சகாப்தத்தைத்தொடங்கிய இயேசு, தம் பாடுகள் - மரணம் - உயிர்ப்பினால் தீமையைவென்ற இயேசு, பிறகு உயிர்த்து வெற்றி வாகை சூடிய இயேசு - இவரே"நற்செய்தி'' ஆவார் என்னும் கருத்தில் புனித பவுல்தான் இச்சொல்லைமுதலில் தம் திருமுகங்களில் கையாளுகிறார். பிறகு இயேசுகிறிஸ்துவின்மீட்புப் பணியைத் தொகுத்துஎழுதியமுதல்நற்செய்தியாளர்மாற்கு, தமது தொகுப்பிற்கு நற்செய்தி என்று தலைப்புத் தருகிறார் (மாற்1 : 1). ஆக, நற்செய்தி என்றால் இயேசு கிறிஸ்து; நற்செய்தி என்றால்அவர் அளித்த மீட்பு, அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகும்.

2. மூன்றுகட்டங்களில்உருவானநற்செய்தி
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி நம்மை அடைந்ததுஎவ்வாறு? நடந்ததை நடந்தவாறே குறிப்பிட்டு எழுதும் வழக்கம் அன்றுஇல்லை. வழிவழிச் செய்திகளைத்தான் பிற்காலத்தில் வரலாறாகத்தொகுத்தார்கள். நம்மிடம்வழக்கில்உள்ளநான்குநற்செய்திஏடுகள்தான்இயேசுவைப் பற்றிய வரலாற்றை நமக்குத் தருகின்றன. இயேசு வாழ்ந்தபோதே ஆசிரியர்கள் குறிப்பெடுத்து இயேசுவின் பணிகளைப்பற்றிஎழுதினார்களா? இல்லை. இயேசு கிறிஸ்துவைப் பற்றியசெய்தியைஉள்ளடக்கிய நற்செய்தி நூல்கள் நம்மை வந்தடைவதற்குமுன் அவைவரலாற்றின்மூன்று கட்டங்களில் உருப்பெற்றன.

2.1. கட்டம் ஒன்று - வரலாற்று இயேசு
இயேசு வாழ்ந்த 33 ஆண்டுகளில் வரலாற்றுப் பூர்வமாக அவரைப்பற்றி வழங்கிய செய்திகள் உருவான கட்டம் இது. இயேசு கிறிஸ்து ஒருகுறிப்பிட்ட நாளில் பிறந்தார். ஏனைய யூதக் குழந்தைகள் போல்வளர்ந்தார். தம் பிற்காலப் பணிக்காகத் தன்னைத் தயாரித்துக்கொண்டார். கலிலேயா பகுதியில் போதித்தார். சீடர்களைத் தேர்ந்துகொண்டார். போதனைகள், செயல்கள் வழியாக இறையாட்சி மலரச்செய்தார். எருசலேமில்அவருக்குஎதிர்ப்பு ஏற்பட்டது. அவர் பாடுபட்டார்,இறந்தார், உயிர்த்தார். இந்தச் செய்திகள் எல்லாம் வரலாற்றுப்பூர்வமானவை; மக்கள் உள்ளங்களில் பதிந்திருந்தவை.

2.2. கட்டம் இரண்டு - தொடக்கத் திருச்சபையின் போதனையில் இயேசு
இயேசுவின்சீடர் வழியாக இயேசுவின்பணிதொடர்ந்தது. அவர்போதிக்கப்பட்டார். அவரதுபெயரால்மக்கள்ஒன்றுகூடினார்கள். அவரதுநினைவைக் கொண்டாடினார்கள். அவரைப்பற்றிய செய்திகளைப்பகிர்ந்து கொண்டார்கள். அவரது புதுமைகள், உவமைகள்,உரையாடல்கள், இறையாட்சி பற்றிய செய்திகள், அவர் சந்தித்தஎதிர்ப்புகள், பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளும்தொடக்கத் திருச்சபையால் நினைவு கூரப்பட்டன. இயேசு கிறிஸ்துஉயிர்த்து தங்களோடு தொடர்ந்து வாழ்கிறார் என்னும் அடிப்படைநம்பிக்கையில் இயேசுவின் பணியும், வாழ்வும், போதனைகளும்,சாதனைகளும் புதுமெருகுடன்புரிந்துகொள்ளப்பட்டன. நாளுக்குநாள்திருச்சபை வளர வளர, நற்செய்தியும் விரிவாக்கம் பெற்றது. முதல்கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் யூத மதத்திலிருந்து வந்து இயேசுவைஏற்றவர்கள். அவர்கள்தங்களுக்கே உரிய முறையில்பழைய ஏற்பாட்டுப்பணிகளை இயேசுவைப் பற்றிய பல்வேறு செய்திகளுடன் இணைத்து,மேலும் அவரைப்பற்றி தெளிவுரைகளை ஏற்படுத்திக் கொண்டனர்.நற்செய்தியானதுவழிவழிச் செய்தியாக இருந்த இந்த நிலைஏறக்குறையநாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகள் நீடித்திருக்கலாம்.

2.3. கட்டம் மூன்று - நற்செய்தி நூல்கள்
வாய்மொழிப் போதனையாகவும்வழிவழிச் செய்தியாகவும்விரிந்துகொண்டிருந்த நற்செய்தி மூன்றாவது காலக்கட்டத்தை அடைகிறது.அதுதான் எழுத்து வடிவம் பெற்ற நிலை. நற்செய்தி இனிநெடுந்தொலைவிலுள்ளமக்களுக்குப் போதிக்கப்பட வேண்டுமென்றால்அதற்கு நூல் வடிவம் தரவேண்டும். அதோடு இயேசுவைப் பற்றியவழிவழிச் செய்திகள் ஒரு தொகுப்பாக அமையவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. இனி புதியபோதகர்களுக்கு ஒரு வழிகாட்டியும்தேவைப்பட்டது. அனைத்தையும் மனதில்கொண்டு அடுத்தடுத்து நால்வர் நற்செய்தியைத்தொகுத்தனர். அவர்கள்நற்செய்தியைப் புதியதாகஎழுதவில்லை. மக்கள் மத்தியில் இருந்தவழிவழிச் செய்திகளையும் தங்களிடம் இருந்தவேறு ஆதாரங்களையும் கொண்டு இயேசுகிறிஸ்துவை மீண்டும் உருவாக்கினர்.அவர்களை ஆசிரியர்கள் என்று சொல்லஇயலாது. அவர்கள் தொகுப்பாளர்கள்; ஒரு குறிப்பிட்ட மக்கள், சமூகச்சூழல், கலாச்சாரம் ஆகியவற்றிற்கேற்ப இயேசுவைப் படைத்தஇறையியலாளர் என்று கூறலாம்.

3. ஒத்தமைவுநற்செய்திகள்
;நான்கு நற்செய்தி நூல்களுள் மாற்கு, மத்தேயு, லூக்காஆகியோரின் நற்செய்தி நூல்களில் ஒருவகை மேலோட்ட ஒத்தமைவுஉள்ளதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, இந்த மூன்றுநற்செய்திகளையும் தொகுத்த ஆசிரியர்கள் ஒருமித்தகண்ணோட்டத்துடன்தங்கள்நூல்களைப் படைத்தனர். நிகழ்ச்சிகளின்தொகுப்பு, இவற்றில் கூறப்பட்டுள்ள செய்தியின் உள்ளடக்கம்,சொற்களின் வடிவமைப்பு ஆகியவற்றில் ஒத்தமைப்பு உள்ளது. இதைஇன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் கீழ்வருமாறுவிளக்கலாம்.

மாற்கு, மத்தேயு, லூக்கா நற்செய்திகளில்முறையே661, 1068, 1150வசனங்கள் உள்ளன. இவற்றுள் 330 வசனங்கள் மூன்றுநற்செய்திகளுக்கும் பொதுவாகவே உள்ளன. 230 வசனங்கள்மத்தேயுவுக்கும் லூக்காவுக்கும் பொதுவானவை. இன்னும் மாற்குவில்50 வசனங்களும் மத்தேயுவில் 315 வசனங்களும், லூக்காவில் 500வசனங்களும் தனித்து நிற்கின்றன. மாற்கு நற்செய்தியில் 50வசனங்கள் தவிர மற்ற வசனங்கள் மத்தேயுவில் உள்ளன. ஆகவேஇவர்கள் ஒருவர் ஒருவரைச் சார்ந்து இந்நற்செய்திகளைத்தொகுத்தனரா? யார் எவரைச் சார்ந்து நிற்கிறார் போன்ற கேள்விகள்எழுகின்றன. அதே சமயத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறுவதில்இவர்களிடையேவேறுபாடுகளும் உள்ளன. ஒருவர் தந்துள்ளநிகழ்ச்சியை இன்னொருவர் தரவில்லை. தந்தாலும் பொருளிலும்சொல்லிலும் வேறுபாடுகள் பல உள்ளன. ஆகவே இக்கேள்விகள்எழுகின்றன. இக்கேள்விகளுக்குப் பல்வேறு பதில்களும் ஒவ்வொருகாலத்திலும் தரப்பட்டு வருகின்றன.

பல அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு விளக்கம் கீழ்வருமாறு:நற்செய்தி நூல்கள் உருவாகுமுன்னர் இயேசுவின் போதனைத்தொகுப்பு ஒன்று இருந்திருக்க வேண்டும். அத்தொகுப்பை என்றபெயரால் அறிஞர்கள் அழைக்கின்றனர். ( என்பது ஞரநடடந என்றஜெர்மன் வார்த்தையின் முதல் எழுத்து அதற்கு ளுழரசஉந மூலம், ஊற்றுஎன்று பொருள்). அத்தொகுப்பையும் இயேசுவின் வல்ல செயல்கள்பற்றிக் கூறும் இன்னொரு தொகுப்பையும் பயன்படுத்தி மாற்கு நற்செய்திதோன்றியிருக்க வேண்டும். மாற்கு நற்செய்தியையும் போதனைத்தொகுப்பையும் மற்றும் தமக்கே உரிய வேறொரு மூலத்தையும்ஆதாரமாகக் கொண்டு மத்தேயு நற்செய்தி தோன்றியிருக்க வேண்டும்.அதுபோலவே லூக்காவும் தமக்கே உரிய வேறொரு மூலத்தையும் மாற்குநற்செய்தியையும் போதனைத் தொகுப்பையும் ஆதாரமாகக் கொண்டுநற்செய்தி நூல் ஒன்றை எழுதினார். அதுவே லூக்கா நற்செய்திஎன்றழைக்கப்படுகிறது.

2. ஒத்தமைவு நற்செய்திகள்

4. மாற்கு நற்செய்தி
மாற்கு பவுலிடமும், பேதுருவிடமும் சீடராக இருந்தவர் (திப 12 : 12,25; 13 : 5, 13; கொலோ 4 : 10; 1 பேது 5 : 13; 2 திமோ 4 : 11). தாம் பெற்றஅனுபவங்களையும் நடைமுறையில் மக்களிடம் இருந்தநற்செய்திகளையும்தொகுத்துஇயேசுஎன்னும்நற்செய்திக்குநூல்வடிவம்தந்தவர் மாற்குஆவார். இன்றைய 'மாற்குநற்செய்தி' எழுதப்பட்ட காலம் கி.பி.65 என்று கருதப்படுகிறது. திருத்தூதர் பணிகள் நூல், யோவான்மாற்கு என்று இந்நூலின் ஆசிரியரை அழைக்கிறது (திப12 : 12). இவர்தமதுநற்செய்தியை உரோமையில்எழுதியிருக்க வேண்டும். அங்கிருந்தபிறவினத்தாரை குறிப்பாக மனத்தில் கொண்டு தொகுத்திருக்கவேண்டும். பேதுருவின்சீடராக இருந்த இவருக்குஇயேசு பற்றிப் பேதுருபோதித்தது எல்லாம் ஓர் அடிப்படை ஆதாரமாக இருந்திருக்க வேண்டும்.உதாரணமாக மாற்குநற்செய்திதிருமுழுக்குயோவானின்பணிவாழ்வில்தொடங்கி இயேசுவின் விண்ணேற்பில் முடிவது கிறிஸ்துவின் பணிபற்றிய பேதுருவின்போதனையே (திப 1 : 22; 2 : 22-24). மாற்கு இயேசுகிறிஸ்துவின் அரும் செயல்களுக்குமுக்கியத்துவம் தராமல், அவருடையபாடுகளை அதிகம் வலியுறுத்தியுள்ளமைக்குக் காரணம், இயேசுஅருஞ்செயல்களை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளைகொடுத்துள்ளதாக எழுதுவதும்,ஒருவேளை புனித பவுல் அளித்தபோதனையின் தாக்கமாகமும்இருக்கலாம் (1 கொரி 1 : 18-25). புதுமைகளை மக்கள் பெரிதுபடுத்தத்தேவையில்லை என்னும் கருத்தை ஆங்காங்கே மாற்குசொல்லியிருப்பது (மாற் 1 : 34, 44; 3 : 12; 5 : 43; 7 : 36) இயேசுகிறிஸ்துவின் மீட்பு அவரது பாடுகளிலும் இறப்பிலும்தான் நிறைவாகஅடங்கியிருக்கிறது என்னும் கருத்தை வலியுறுத்தவேதான்.

நூல் அமைப்பு

1:1- 13 முன்னுரை
1: 14-8: 30இயேசுவின்கலிலேயப் பணி
8 : 31 - 16 : 8 இயேசுவின்எருசலேம் பணி
16:9- 20 முடிவுரை

5. மத்தேயு நற்செய்தி
நற்செய்தியாளர் மாற்குவைத் தொடர்ந்து இயேசுவின் பன்னிருசீடருள்ஒருவரானவரிதண்டுவோராகியமத்தேயுவும்இயேசுவைப் பற்றியநற்செய்தியைப் படைத்தார். தம் இனத்தவரானயூதமக்கள்எதிர் பார்த்துக்கொண்டிருந்த மெசியா இயேசு கிறிஸ்துவே என்று காட்ட மத்தேயு இந்தநற்செய்தியை கி.பி.70 ஆம் ஆண்டில் சிரியாவிலுள்ள அந்தியோக்குநகரில்எழுதியிருக்கலாம். இயேசுவின்போதனைகளைமத்தேயுமுதலில்அரமேய மொழியில் தொகுத்தார் என்றும், பிறகு அதைக் கிரேக்கமொழிக்குமாற்றிஏற்கனவேஇருந்த மாற்குநற்செய்தியைப் பயன்படுத்திதமது நற்செய்தி நூலை யூதமக்களுக்கு உருவாக்கித் தந்தார் என்றும் பலஆசிரியர்கள்கருதுகின்றனர். மாற்குநற்செய்தியில்இல்லாத இயேசுவின்பிறப்பு நிகழ்ச்சிகளும், இயேசுவின் போதனைகளும் மத்தேயுநற்செய்தியில் இடம் பெற்றிருக்கின்றன.

யூதமக்கள் இயேசு கிறிஸ்துவைத் தங்கள் மெசியாவாக ஏற்கவேண்டும் என்னும் நோக்கத்தைக் கொண்டு வரையப்பட்டது மத்தேயுநற்செய்தி. ஆபிரகாம், தாவீது ஆகியோரிலிருந்து தொடங்கும்இயேசுவின் பிறப்பு அட்டவணை; இயேசுவின் வாழ்க்கை பழையஏற்பாட்டின் நிறைவுதான் என்று குறிக்கப்படும் விதம் (மத்1: 23;2: 6,15, 18;3: 3;4 : 15-16); யூதர்கள் பெரிதும் போற்றிய ஐந்நூல் பாணியில்நற்செய்தி நூலை ஐந்து பிரிவுகளாக்கி, ஒவ்வொரு பிரிவிலும் போதனை- செயல் என இணைத்திருக்கும் நடை இவையனைத்தும் யூதமக்களிடையேஇயேசுவைஅறிவிக்கப் பயன்படுத்தப்பட்டவழிமுறைகளே.

நூல் அமைப்பு

அதி 1-4 முன்னுரை பிறப்பு நிகழ்வுகள்திருமுழுக்கு யோவான்
அதி 5-7; அதி8-9 - நூல் 1 - மலைப்பொழிவு,அரும்செயல்கள்
அதி 10; அதி 11-12 - நூல் 2 - அனுப்புதல் உரை,செயல்கள்
அதி 13; அதி 14-17 - நூல் 3 - உவமைகள், செயல்கள்
அதி 18; அதி 19-23 - நூல் 4 - சீடருக்குஉரை,செயல்கள்
அதி 24-25 அதி 26-27 - நூல் 5 - இறுதி உரை, பாடுகள்,மரணம்,அதி 28 - உயிர்ப்பு

 

6. லூக்கா நற்செய்தி
அந்தியோக்கியா நகரத்தாராகிய மூன்றாம் நற்செய்தியாளரானஇவர், யூதரல்லாத பிறவினத்தைச் சார்ந்தவர். பிறவினத்தார் இயேசுகிறிஸ்துவை ஏற்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் தம்நற்செய்தியைக் கி.பி. 75-இல்தொகுத்துஅளித்தார். ஆசிரியர் சிலர் கி.பி.80க்கு மேல்தான்இந்நற்செய்தி எழுதப்பட்டது என்று கூறுவர்.

லூக்கா ஒரு மருத்துவராக இருந்தவர் (கொலோ 4 : 14). பண்பட்டஎழுத்தாளர் இவர் என்பது இவரது கிரேக்க நடையிலிருந்துதெளிவாகிறது. நற்செய்தியைத் தொடர்ந்து திருத்தூதர் பணிநூலைஎழுதியவரும் இவரேதான். தூய பவுலின் இரண்டாவது தூதுரைப்பயணத்தின்போது லூக்கா அவரைச் சந்தித்து உடன் போதகராய்அவருடன்பயணம் செய்தார் (திப 16 : 10-41). அவருடன்எருசலேமிற்கும்உரோமைக்கும் சென்றபின், கொலோசியர், பிலமோன், திமொத்தேயுஆகியோருக்கு பவுல் திருமுகம் வரைந்தபோது லூக்கா அவருடன்இருந்திருக்கிறார் (கொலோ 4 : 14; பில 24; 2 திமோ 4 : 11). லூக்காநற்செய்தியில் பல சிறப்புகள் உண்டு.

1) இயேசு கிறிஸ்துவின்வாழ்க்கையையும் அவரது மீட்புப்பணியையும்ஒரு வரலாற்றுப் பார்வையுடன்படைத்திருக்கிறார் ஆசிரியர்.

2) இயேசு யூதருக்குமட்டுமல்ல,அனைத்துலக மக்களுக்குமேஉரிய மீட்பர் என்னும்கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

3) ஏழைகள், பாவிகள், புறக்கணிக்கப்பட்டோர் அன்றையசமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர், பெண்கள் போன்றவர்க ளுக்குச்சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது (18-19).

4) இயேசு கிறிஸ்துவின்இரக்கமும் நீதியும் வெகுவாக இங்குவலியுறுத்தப்பட்டுள்ளன(7 : 11-17; 13 : 11-17; 14 : 1-6; 17 : 11-19).

5) இயேசுவின்மீட்பு மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஎன்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (1 : 4, 28, 58; 2 : 10; 10 : 17, 20).

6) இந்நற்செய்தியில் இறைவேண்டுதலுக்குச் சிறப்பிடம்தரப்பட்டுள்ளது (3 : 21; 5 : 16; 6 : 12; 9 : 18; 10 : 21).

நூல் அமைப்பு

1 : 1-4 - முன்னுரை
1-5-2 : 52 - குழந்தைப்பருவம், திருமுழுக்குயோவான்
3 : 1-20 - யோவானின்பணி
3 : 21-4 : 13 - இயேசுவின்திருமுழுக்கு -சோதனைகள்
4 : 14-9 : 50 - கலிலேயாப்பணி, சீடர்கள்தேர்வு,பயிற்சி, போதனை,மோதல்கள், உருமாற்றம் .
9 : 51-19 : 27 - எருசலேம் பயணம், சீடர் பயிற்சி,போதனைகள், புதுமைகள்
19 : 28-24:53 - எருசலேமில் நுழைதல் - பணி,பாடுகள், மரணம், உயிர்ப்பு

3. இயேசுவின் பிறப்பும் பொதுவாழ்க்கையின் தொடக்கமும்

7. இயேசுவின்பிறப்பு நற்செய்தி
நற்செய்தி நூல்கள் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைத்தரவில்லை. இயேசு என்னும் மாபெரும் நற்சசெய்திப் போதனையைஒவ்வொரு நற்செய்தியாளரும் தங்களுக்குக் கிடைத்த செய்திகளைத்தங்களுக்குஉரியபாணியில்தொகுத்து, தாம் எழுதியமக்களுக்காக ஏற்றமுறையில் அறிவிக்கின்றனர். இயேசுவின் குழந்தைப் பருவத்தை ஒருநற்செய்தியாக மத்தேயு, லூக்கா நூல்கள் மட்டுமே அறிவிக்கின்றன.இவர்கள் தாங்கள் பெற்ற செய்திகளைத் தங்களுக்கே உரிய பாணியில்தொகுத்தளிக்கின்றனர்.

7.1. இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி மத்தேயு தரும் செய்திகள்

இயேசுவின்தலைமுறை அட்டவனை(1 : 1-17)இயேசுவின் பிறப்பு (1 : 18-25)
ஞானிகள் வருகை (2 : 1-12)
எகிப்துக்குச் சென்று மறைந்து வாழ்தல் (2 : 13-18)
எகிப்திலிருந்து நாசரேத்து வருதல் (2 : 19-23)

7.2. இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி லூக்கா தரும் செய்திகள்

இயேசுவின்முன்னோடியான திருமுழுக்குயோவானின்பிறப்புஅறிவிப்பு (1:5: 25)
இயேசுவின்பிறப்பு அறிவிப்பு (1 : 26-38)
மரியாள் - எலிசபெத் சந்திப்பு (1 : 39-45)
மரியாளின்பாடல் (1 : 46-56)
திருமுழுக்கு யோவானின் பிறப்பு (1 : 57-66)
செக்கரியாவின்பாடல் (1 : 67-80)
இயேசுவின்பிறப்பு (2 : 1-10)
இயேசுவின்விருத்தசேதனம் (2 : 21)
இயேசுவை ஆலயத்தில் காணிக்கையளித்தல் (2 : 22-40)
அவரைப் பற்றிய சாட்சியங்கள்சிறுவன்இயேசு ஆலயத்தில் (2 : 41-62)
இயேசுவின்தலைமுறை அட்டணை(3 : 23-37)

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் காணப்படும் இயேசுவின்குழந்தைப் பருவ நிகழ்வுகளை ஆய்ந்து பார்க்கும்போது கீழ்க்காணும்உண்மைகள் தெளிவாகின்றன.

1) இயேசு ஒருகன்னியிடம் பிறந்துஒருபுதுயுகத்தை ஏற்படுத்த வந்துவிட்டார் என்னும் கருத்தை இரு நற்செய்தியாளரும்அறிவிக்கின்றனர்.
2) மத்தேயு நற்செய்தியில் தரப்படும் தலைமுறை அட்டவணையில்யூத குல முதல்வர் ஆபிரகாமுக்கும், அவ்வினத்தின் மன்னராக,மெசியாவின் முன்னோடியாக விளங்கிய தாவீதுக்கும் வாரிசாகவந்தவரே இயேசு கிறிஸ்து என்று காட்டப்படுகிறது.
3) யூதருக்குமட்டுமல்ல, பிறவினத்தாருக்கும் மீட்பராகத் தோன்றியவர்இயேசு என்னும் உண்மையைக் கீழ்த்திசை ஞானிகளின்வருகையில் குறிப்பிடுகிறார் மத்தேயு.
4) மத்தேயு தருகின்ற பிறப்பு நிகழ்ச்சிகளில் பழைய ஏற்பாட்டு வசனங்கள் எதிரொலிக்கின்றன. யூதமக்கள் எதிர்பார்த்த மெசியா இயேசுகிறிஸ்துவே என்னும் உண்மையைக் கூற மத்தேயு கையாளும்உத்தி இது.
5) லூக்கா நற்செய்தியில் இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, அவரதுமுன்னோடியான திருமுழுக்கு யோவானின் பிறப்பு, வளர்ப்புடன்பிணைக்கப் பட்டுள்ளது. ஆகவே இரு பிறப்பு அறிவிப்புகள், இருபிறப்புகள், இரு பாடல்கள், இருசந்திப்புகள், இருசாட்சிகள்என்றுஎழுதி லூக்கா தமக்கே உரிய ஓர் இலக்கியப் பாணியைஉருவாக்கியுள்ளார்.
6) கருவுறஇயலாதவர் என்றுகருதப்பட்ட எலிசபெத்திடமிருந்துபிறந்ததிருமுழுக்கு யோவானையும், கன்னியிடம் பிறந்த இயேசுவையும்பொருத்தி இரு நிகழ்ச்சிகளிலும் கடவுளின் செயல்பாடுஉள்ளதைக்காட்டுகிறார் லூக்கா. ஆவியின் செயல்பாட்டால்நிகழ்ந்த இயேசுவின்பிறப்பு, இயேசு அறிவிக்க வந்த புது யுகத்தின்ஒரு முன் அடையாளம் என்றும் பறைசாற்றுகிறார்.
7) மரியாள் எலிசபெத்தைச் சந்தித்துப் பாடிய பாடலில் இயேசுஇனிவரும் நாட்களில் முழங்கவிருந்த இறைநீதி, இரக்கம்,ஏழைகளுக்கு முன்னுரிமை போன்ற கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதை நாம் காணமுடிகின்றது.
8) இயேவின் பிறப்பு நிகழ்ச்சியில் ஏழை இடையருக்குத் தரப்பட்டசிறப்பிடம் ஒரு தெளிவான நற்செய்தி உண்மை. அதுபோலவேஇயேசு சத்திரத்தில் பிறக்காமல் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது,இயேசு நம்மோடு தங்கவே வந்தார் எனக்காட்டுகிறது.துணிகளால் போர்த்தப்பட்ட இயேசு அரச குலத்தைச் சார்ந்தவர்என்றும் அவர் தீவணத் தொட்டியில்கிடத்தப்பட்டதை அவர் உலகிற்கு உணவாக வந்தார் என்றும்லூக்கா விளக்குகிறார்.
9) லூக்கா நற்செய்தி தரும் இயேசுவின் தலைமுறை அட்டவணைஆதாம்வரைசென்றுஅவர் அனைவருக்கும்மீட்பராகவந்தவர் எனஅறிவிக்கிறது.

8. திருமுழுக்கு யோவான்
லூக் 1 : 5-25, 57-66; மத் 3 : 1-12; யோவா 1 : 6-8, 19-28; மாற் 6: 14-29

- பல நூற்றாண்டுகளாக முன்னறிவிக்கப்பட்ட மெசியா காலம்நிறைவுற்றபோது இயேசுவின் மீட்புப் பணிதொடங்குகிறது. ஆனால்அந்தப் பணியின் சிறப்பையும், முழுமையையும் காட்ட ஏற்கனவேமுன்னறிவிக்கப்பட்ட பாணியில்ஒருமுன்னோடிதேவையாக இருந்தார்.நற்செய்தியாளர்கள் திருமுழுக்கு யோவானை இயேசு கிறிஸ்துவின்பிறப்புக்கும், பணிவாழ்வுக்கும், இறப்புக்கும் முன்னோடியாகக்காட்டுகின்றனர்.

- யோவானின்பிறப்பு முன்னறிவிக்கப்பட்டுஅவர் இயேசுவுக்குமுன்பாகப் பிறந்ததையும், அவர் தன்தாய்வழியில்இயேசுவுக்குஉறவினர்என்பதையும் லூக்கா சுட்டிக் காட்டுகிறார்.ழூ இயேசுவின் மீட்புப் பணியில் பங்கு பெற மக்களைத்தயார்படுத்தும் பணியை ஏற்கும் யோவான்,துறவியாக வாழ்ந்தும் தாம் வழங்கியபோதனையாலும் மக்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்துகின்றார்.யோவான் எஸ்ஸேனியரா என்ற கேள்விஎழுகிறது. எஸ்ஸேனியர்கள் மெசியாவின்வருகையை எதிர்பார்த்து, கும்ரான் என்றபாலை நிலப்பகுதியில் துறவற சமூகம்போல்ஒன்றுசேர்ந்து வாழ்ந்தவர்கள்.இவர்களிடையே திருமுழுக்குச் சடங்குஇருந்ததாகத் தெரிகிறது. யோவானும்திருமுழுக்கு அளித்ததால் அவர் ஒருவேளை எஸ்ஸேனியராகஇருப்பாரோ என்று சில அறிஞர்கள் ஐயுறுகின்றனர்.

- இயேசுஆற்றியமீட்புப் பணியின்நிறைவு, அவருடையபாடுகள்,மரணம் உயிர்ப்பு ஆகும். யோவான் தான் கூறிய போதனையின்காரணமாக ஏரோதுவினால் சிறைப்படுத்தப் பட்டு பிறகு ஏரோதியாளின்வஞ்சகத்தால் தலைவெட்டப்பட்டு இறந்தது இயேசுவுக்கு இறுதியாகமுன்னோடியாக இருந்தவர் என்பதைக் காட்டுகிறது.

9. இயேசுவின் பணிக்கு முன் பயிற்சிகள்
இயேசுவின் மீட்புப்பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுஎன்றால் ஒத்தமைவு நற்செய்தியாளர் மூவரும் அப்பணிக்குரியதயாரிப்பைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். அவர்கள் குறிப்பிடும்தயாரிப்பாவது:

1. இயேசுவின்திருமுழுக்கு
2. இயேசுவின்நாற்பது நாள் நோன்பும் சோதனைகளும்.

9.1. இயேசுவின் திருமுழுக்கு: (மாற் 1:9-11; மத் 3:13-17; லூக் 3:21-22)
'இயேசுவின் திருமுழுக்கு' அவருடைய பணிவாழ்வுக்கு ஒருதொடக்கம். 30 ஆண்டுகள் மறைந்து மக்களோடு வாழ்ந்த இயேசுதிருமுழுக்கு நிகழ்ச்சியில் தமது மீட்புப் பணிபற்றிய உறுதி பெறுகின்றார்.திருமுழுக்கில்பரம தந்தை பற்றிய ஓர் ஆழ்ந்த அனுபவம் பெறுகிறார். தூயஆவியின் உந்துதல் அவருக்குத் தரப்படுகின்றது. அவரது பணியால்உருவாக இருக்கும் ஒரு புதுயுகம் அடையாளமாக வெளிப்படுகிறது.ஆவியின் வருகை, வானம் பிளவுபடுதல் (எசா 64 : 1) அனைத்துமேஅவரதுபணிக்குமுன்னோட்டம். அத்துடன்இறைத்தந்தை இயேசுவைத்தம் அன்பு மகனாக அறிக்கையிடுகிறார். இயேசு தாம் யார் என்பதைப்பற்றி உறுதி கொண்டவராகப் புறப்படுகிறார்.9.2. இயேசுவின் நோன்பும் சோதனைகளும்:

9.2. இயேசுவின் நோன்பும் சோதனைகளும்: (மத் 4 : 1-11; (மத் 4 : 1-11;மாற் 1 : 12-13; லூக் 4 : 1-13)
இயேசுவின்40 நாள் நோன்பு பழைய ஏற்பாட்டில் மோசே, எலியாஆகியோரின்நோன்பை ஒத்துள்ளது (விப 34 : 28; 1 அர 19 : 8). நோன்புமனத்தாழ்ச்சியையும், அவர் ஆற்றவிருக்கும் பணிக்கு இறைவனின்அருளையும்வேண்டும்ஓர் ஒப்பற்றமுயற்சி. இயேசுதம்மீட்புப் பணியைத்தொடங்குமுன்பு இத்தகைய முயற்சியை மேற்கொண்டது பொருத்தமாகஉள்ளது.

இந்த நோன்பு நாட்களில்தான் இயேசு கிறிஸ்து தமது மீட்புப்பணிக்குத் தடைகளாக இருக்கக்கூடியசிலசுயநலசக்திகளுக்குஎதிராகப்போரிடுகிறார். இவற்றைத் தான் சாத்தானின் சோதனைகள் என்றுநற்செய்தியாளர் குறிப்பிட்டுள்ளனர். உண்பது குடிப்பது பற்றிய சுயநலச்சோதனையை, கடவுளின்வார்த்தையால்வழிநடத்தப்பட்டுவாழ்வதே சரிஎன்ற வாதத்துடன்முறியடிக்கிறார் (இச 8 : 3). தான்என்ற அகந்தையை வளர்த்து வஞ்சனை செய்தாவது உலக சொத்துக்களைச் சேர்க்கத்தூண்டும் பொருளாசை என்ற சோதனையைக் கடவுள் ஒருவருக்கேஆராதனைஎன்ற இறை வார்த்தையை முன்வைத்து வெற்றிகாண்கிறார்(இச 6 : 13). இறுதியாக அதிசயச் செயல்புரிந்து மக்களின் பாராட்டைப்பெற வேண்டும் என்னும் சோதனையைக் கடவுளின் திட்டமே நமதுவாழ்வின்சட்டம் என்னும் கொள்கையை மனதில்கொண்டு கடவுளுக்குஎதிராக எந்தச் சோதனையும் நிற்காது என்னும் துணிவானவாதத்தைக்காட்டி முறியடிக்கிறார்.

சோதனைகளில் இயேசு பெற்ற வெற்றி, இனி அவர் தம் மீட்புப்பணிக்கு முழுச் சுதந்திரத்துடனும் மனவுறுதியுடனும் செல்கிறார்என்பதைக் குறிக்கிறது. நாற்பது நாள் நோன்பின்போது இயேசு சந்தித்தசோதனைகள், இஸ்ரயேல் மக்கள் தங்கள் 40 ஆண்டுகால விடுதலைப்பயணத்தில் எதிர்கொண்ட பல்வேறு துன்பங்களையும்சோதனைகளையும்ஒத்துள்ளன. அன்றையமக்கள்மோசே கூறியவாறுகடவுள்வார்த்தையின்துணைகொண்டு அனைத்துத் துன்பங்களையும்வென்றனர்.

10. இயேசுவின்பணிவாழ்வுத்தொடக்கமும்கொள்கைஅறிவிப்பும்
(மாற் 1 : 15; லூக் 4 : 18-20)எந்தக் கொள்கையை அல்லது எத்தகைய திட்டத்தை மக்கள்முன்வைத்து இயேசு தம் பணிவாழ்வைத் துவங்கினார்?ஒத்தமைப்பு நற்செய்தியாளர்கள் வெவ்வேறுவிதமாக இந்தக்கேள்விக்குப் பதில் தருகின்றனர். ஆனால் இயேசு படைக்க வந்த புதியசமுதாயத்தை அல்லது மனித நேயத்தை மையமாகக் கொண்டஇறையாட்சி என்பதை மூவரும் முன்வைத்து அதனையே இயேசுவின்பணிக் கொள்கை யாகக் தருகின்றனர்.

10.1. மாற்கு 1:1510.
மாற்கு நற்செய்தியில் இரத்தினச்சுருக்கமாகக் "காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கிவந்து விட்டது; மனம்மாறிநற்செய்தியைநம்புங்கள்,'' என முழங்கி, இயேசு தம் பணியைத் தொடங்குகின்றார்.பல்லாண்டுக் காலமாக அடிமைத்தனத்தில் வாழ்ந்த யூத மக்கள்தங்களுக்கு விடுதலைத்தர மெசியா வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய காலம் தம்பணியில் மலர்ந்துவிட்டது என்று இயேசு அறிவிக்கிறார். இனிவருவதுவெறும் வரலாற்றுக் காலம் அல்ல. இது மீட்பின்காலம், இறையருளின்காலம், ஏனென்றால் கடவுளுக்கே உரித்தான மதிப்பீடுகள் வழியாகஇறைவனை மையமாகக் கொண்ட ஆட்சி நெருங்கிவிட்டது என்றுநம்பிக்கையூட்டுகிறார் இயேசு. இந்த இறையாட்சியை மக்கள் ஏற்கவேண்டும். இதற்காக அவர்கள் தங்களுடைய வாழ்க்கையைமாற்றவேண்டும். கடவுளுக்கு விரோதமான ஏற்றத்தாழ்வுகள் மிக்கமனநிலையிலிருந்து அவர்கள் தங்களையே விடுவித்துக் கொள்ளவேண்டும். புதியவாழ்வையும்இறையாட்சிமதிப்பீடுகளையும்மக்களுக்குநற்செய்தியாக அறிவிக்கிறார் இயேசு.

10.2. லூக்கா 4 : 16-30
திருமுழுக்குப் பெற்று, ஆவியில் நிறைந்து, சோதனைகளையும்வென்று, முழுச்சுதந்திரத்துடன் செயல்படத் தயார்நிலையில் இருந்தஇயேசு, மிக எழுச்சியானஒருபணிக் கொள்கையைமுன்வைக்கின்றார்.இயேசு தம் கொள்கையை வெளிப்படுத்திய இடமும், அவர் கையாண்டஎசாயா 61 : 1-2 என்ற இறைவாக்கும் அர்த்தமுள்ளவை. இயேசு தம்யூதப் பின்னணியையும் பண்பாட்டையும் விட்டு விட்டு அகில உலகப்பண்பாட்டிற்குள் நுழைந்தார். எசாயா இறைவாக்கினர் கூற்றுப்படிமெசியா உலக மக்கள் யாவருக்கும் மீட்பராக வருவார். எசாயாவின்கூற்றினையே இயேசு தம் பணியைக் குறிக்கும் பகுதியாகஎடுத்துக்கொண்டார். ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்குவிடுதலை, பார்வையற்றோருக்குப் பார்வை எனஇனிஅவர் செயல்பாடுஅமையும். அதாவது, அவருடைய பணித்தலங்கள் ஏழைகள்,சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர் நடுவில்தான் இருக்கும். ஏழைகளும்ஒடுக்கப்பட்டோரும் விடுதலைபெறுவர் என்பதுதான்நற்செய்தி. யூதர்கள்50 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடிய யூபிலி ஆண்டு அல்லதுஅருள் தரும் ஆண்டு இனி இயேசுவின் விடுதலைப்பணிவழியாகக்காலமெல்லாம் நீடிக்கும்.

இயேசுவின்பணிஇனியூதரல்லாத பிறவினத்தாரையும் அடையும்என்பதற்குப் பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் இரண்டினை அவர்தருகிறார். எலியா காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் பிறவினத்தைச் சார்ந்தஒரு விதவைக்கு வாழ்வு அளிக்கப்பட்டது (1 அர 17 : 1); எலிசாவின்காலத்தில் நாடெங்கும் பல தொழுநோயாளர் இருக்க சிரியா நாட்டுநாமானுக்குகுணமளித்தார் இறை வாக்கினர் (2 அர 5 : 1-14). இவ்வாறே இயேசுவின் பணியும் ஏழைகள், ஒதுக்கப்பட்ட பிறவினத்தார்போன்றவருக்கே இருக்கும்.

4. இயேசுவின் போதனையும் பணியும்

11. மத்தேயு 5-7: மலைப்பொழிவு
மத்தேயு நற்செய்தியில் சிறப்புடன் விளங்கும் பகுதிமலைப்பொழிவு. இதில்தான் இயேசுவின் மீட்புப் பணிக்கொள்கைஅடங்கியுள்ளது என்று கூறலாம். மத்தேயு நற்செய்தியில்கொடுக்கப்பட்டுள்ள ஐந்து போதனைப் பகுதிகளுள் முதலாவதாகஇருப்பது இந்த மலைப்பொழிவே. யூத மக்களுக்காகவே தம்நற்செய்தியைத் தொகுத்த மத்தேயு, இயேசு கிறிஸ்துவை ஒரு புதியமோசேயாகவும், புதிய மலையில் ஒரு புதிய சட்டத்தை, ஒரு புதியஇஸ்ரயேல் மக்களுக்கு அளிப்பவராகவும், இங்கே உருவாக்கியுள்ளதுகவனிக்கத்தக்கது. மத்தேயுதரும்மலைப்பொழிவில்இயேசு பழையயூதச்சட்டத்தை விலக்கி ஒரு புதிய நெறியைத் தருகிறார். இப்புதுநெறிஇறையாட்சிக்கே உரித்தானமதிப்பீடுகளைக் கொண்டது.மத்தேயு தரும் மலைப்பொழிவுலூக்கா நற்செய்தியில்சுருக்கமாகச்சமதளப் பொழிவாக இடம் பெற்றுள்ளது (லூக் 6 : 17-49).இனி, மலைப்பொழிவுகாட்டும் அறநெறிக் கருத்துக்களைச் சற்றுக்கவனிப்போம்.

11.1. பேறுகள் ( 5 : 1-12)11.1. பேறுகள் ( 5 : 1-12)ஏழைகள் மற்றும் பசிப்பிணிகளால் வருந்துவோர், பல்வேறுகாரணங்களால் துன்புறுவோர், மக்களிடையே நேர்மையாக உழைக்கும்சாந்தமனம் படைத்தோர் ஆகியோர் பேறுபெற்றோர் என இயேசுகுறிப்பிடுகிறார். இயேசு இத்தகையோரைப் பாராட்டுவதுஏன்? இவர்கள்தங்கள்ஏழ்மை, துயரம், சாந்தத்தின்காரணமாக இறைவனில்நம்பிக்கைகொண்டுள்ளனர் எனபதற்காக மட்டுமல்ல இனி, இயேசுவின்வருகையால்இவர்களுக்குமுன்னுரிமைவழங்கப்படும். அதாவதுஇயேசுநிறுவவந்த இறையாட்சியில்ஏழை, ஏழையாகஇருக்கத் தேவையில்லை.துன்பத்தில் இருந்தோர் இனி துன்புறத் தேவையில்லை. இயேசுவின்போதனைகளிலும் செயல்களிலும் அவர்களுக்கே முதலிடம். இதுவேஇயேசுவின்முதற்கொள்கையாக இருக்கும். இதுஅக்காலமனநிலைக்குநேர்மாறானது.

11.2.யூதச்சட்டமும் இயேசுவின் நெறியும் ( 5 : 21-48)பழைய யூதச் சட்டத்தை இயேசு முறிக்கவில்லை, அதைநிறைவுபடுத்துகிறார். கடவுள் தந்த சட்டம் மக்கள் நலனுக்காகஅளிக்கப்பட்டது. ஆனால்காலப்போக்கில்யூதச் சட்ட வல்லுநர்கள்மனிதநேயத்தை மறந்து உயிரற்ற வெறும் வார்த்தைகளால் மட்டுமேகட்டுப்படுத்தும் கருவியாக சட்டத்தைக் கருதினர். இயேசு இந்நிலையைஅதிகாரப் பூர்வமாக மாற்றுகிறார். பழையஏற்பாட்டுச் சட்டத்தின்நெறியைவலியுறுத்துகிறார்.வெவ்வேறுஎதிர்மறைக்கூற்றுகள்வழியாகச் சட்டத்தின்உட்பொருளாகிய அன்பு என்னும் அறநெறியை இயேசு எடுத்துரைக்கிறார்.

1) கொலைச் செயல் மட்டும்தான் பாவம் அல்ல் மாறாக அந்தக்கொலைக்குஇட்டுச் செல்லக் கூடியவன்சொற்களும் பாவம். அவையும்தண்டனைக்குரியவையே. ஒரு செயலைவெளித்தோற்றத்தால் மட்டும் எடை போடக்கூடாது. அதைச் செய்பவரின்மனநிலையையும்கருத்தில் கொள்ள வேண்டும். கோபத்தைவளர்ப்பதைவிட சமரசம் செய்வதே மேல்.
2) விபசார செயல்கள் கண்டிக்கத்தக்கவையே; ஆனால் விபசாரத்தைத் தூண்டும்பார்வைகளும், இச்சைகளும் கூடப்பாவங்களே; இவற்றைத் தவிர்க்கும்வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.சுயகட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கவேண்டும்.
3) பெண்களுக்கு எதிராக அமைந்தஅன்றைய மணவிலக்கு முறையைக்கண்டிக்கிறார் இயேசு. பெண்ணின்உரிமைகள்பாதுகாக்கப் பட வேண்டும்.
4) பொய்யாணைஇடுவது தவறு. அதுமட்டுமல்ல, ஆணையிடுவதே தவறுதான். ஏனெனில் இது கடவுளின்உயர்நிலையை அவமதிக்கும் குற்றம். நம்முடைய உறவுகள்நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட வேண்டும்; ஒருவர் சொல்வதைமற்றவர் நம்பி ஏற்கவேண்டும்.
5) பிறர் செய்த தீமைக்குப் பதிலாக அது போன்ற தீமையைச்செய்யலாம் என்றுசட்டம் அனுமதிக்கிறது. இதனால்தீமைகள்நீடிக்கும்.ஆனால் தீமைக்கு எதிராக நன்மை புரிந்து அமைதி ஏற்படச் செய்வதேஇயேசுவின்புரட்சிகரமானபுது நெறி.
6) இயேசு காட்டியபுதுநெறிகளின்அடிப்படைக் கொள்கை அன்பு.பகைவருக்கும் துன்புறுத்துவோருக்கும் அன்பு காட்டவேண்டும். இதுகடவுள் தன்மை கொண்ட ஒரு செயல்பாடு. ஏனெனில் கடவுள்நல்லோருக்கும் தீயோருக்கும் சமமாகவே தமது இயற்கைக்கொடைகளைத் தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கிறார்.

11.3. அறச்செயல்கள் (6:48)
அறம் என்பது மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகச்செய்யப்படும்செயல்கள்அல்ல. இத்தகையபரிசேயமனநிலையைஇயேசுகண்டிக்கிறார். யூதருக்கே உரித்தானஈகை, இறை வேண்டல், நோன்புஇருத்தல் போன்ற செயல்களில் வெளிவேடத்தை அறவே ஒழித்து,அவற்றால்நமதுஉள்ளார்ந்த உறவுமுறைவளரவேண்டும்என்றுஇயேசுவலியுறுத்துகிறார். நமது அறச்செயல்கள் தந்தைக்குப் புகழ்ச்சிதருவனவாகவும், பிறர் நலம் பேணுபவையாகவும் இருத்தல் வேண்டும்.இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டல், தந்தையின்புகழ்ச்சியாகவும், இறை மதிப்பீடுகள் மக்களிடையே வரவேண்டும் என்றஆவலாகவும் உள்ளது. அதற்கு ஏற்ப "விண்ணுலகிலிருக்கிற எங்கள்தந்தையே!'' என்னும் செபத்தைக் கற்றுத்தருகிறார்.

11.4. இயேசுவின் புது நெறி
மறை நூல் அறிஞரின் சட்ட நெறியையும், பரிசேயரின் பக்திநெறியையும் விமர்சித்து, ஒரு புதிய வாழ்வு நெறியை அளித்த இயேசு,இதைச் சார்ந்த இன்னும் சில அறிவுரைகளை இங்கே வழங்குகின்றார்.இறைவனே நமது அழியாத செல்வம் என்னும் மனநிலையோடு(6 : 19-21) அவர் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொள்வதும் அவர் நம்வேண்டுதலைக்கேட்கிறார் என்னும்மனஉறுதிகொண்டிருப்பதும்தேவைஎனஇயேசு காட்டுகிறார் (7 : 7-11).நாம் ஒருசமூகத்திலேவாழ்கின்றோம். பிறர் நமக்குஎன்னசெய்யவேண்டுமென்று விரும்புகின்றோமோ அதை நாமே பிறருக்குச் செய்துவாழ்ந்தால் நம் உறவுகள் சுமூகமாக இருக்கும் (7 : 12). யாரையும்தாழ்வாகக் கருதி, தீர்ப்பிட்டு வாழ்வது முறையல்ல (7 : 1-16).நமது வாழ்க்கையானது தியாகங்கள் நிறைந்ததாகவும் (7 : 13-14)சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியற்றதாகவும் இருக்கவேண்டும்(7 : 21-23).

12. இயேசுவின்புதுமைகள்- இறையாட்சியின்அருங்குறிகள்
இயேசுவின் பணியில் பல புதுமைகள் இடம் பெற்றிருந்தன.இவற்றைக் குணமளிக்கும் புதுமைகள், பேய் ஓட்டும் புதுமைகள்,உயிரளிக்கும் புதுமைகள், இயற்கைப் புதுமைகள் என்றுபிரித்துக்கூறலாம். இயேசு தம் புதுமைகளில் மக்களுக்குப் பல்வேறுநோய்களிலிருந்தும் தீய ஆவிகளிலிருந்தும் விடுதலை கொடுத்தார்;புதுவாழ்வு கொடுத்தார். இயேசு எங்குச் சென்றாலும் மக்கள் கூட்டம்அவரைத் தொடர்ந்தது. அவரிடம் புதுமைகள்பெற்றுக் குணம டையவும்,அல்லது வேறு வரங்கள்பெறவும் இந்த மக்கள்கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டிருந்தது.ஆனால் இயேசு பாமரமக்கள் மீது மனமிரங்கிஅவர்களுக்கு நல்வாழ்வுதரப் புதுமைகள் ஆற்றினார்என்றாலும், இவ்வல்லசெயல்கள் வழியாக வேறு சில ஆழ்ந்த பாடங்களையும் அவர் தரவிரும்பினார் என்றுதான் நாம் நினைக்க வேண்டும். ஆகவே மக்கள்தம்மை வெறும் புதுமை செய்யும் மெசியாவாக மட்டுமே எண்ணிவிடக்கூடாது என்பதில் இயேசு கவனமாக இருந்தார்.

மாற்கு - மத்தேயு நற்செய்திகளில் இயேசு தாம் புதுமை செய்த பின்"இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்'' (மாற்கு 1 : 43; 5 : 43) என்றுகூறுகிறார். அப்பம் பலுகிய புதுமைக்குப் பின் மக்கள் கூட்டம் தன்னைநாடி வந்தபோது, அவர்கள் வயிறார உண்டதால்தான் தன்னிடம்வந்தார்கள்என்றுகூறி, தன்புதுமைகளிலேவேறுஆழ்ந்த கருத்துஒன்றுஉள்ளது என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார் (யோவா 6 : 26). அதைஉணராமல் தம்மிடம் அருங்குறிகள் காணவேண்டும் என்று விரும்பியவர்களின்ஆவலை இயேசு கண்டித்தும் இருக்கிறார் (மத் 16: 4).

விவிலியத்தில் வரும் புதுமைகளை நாம் ஏதோ அற்புதச்செயல்களாகவோ அல்லது கடவுளின் வல்ல செயலகளாவோ மட்டும்பார்க்காமல் கடவுள் மக்களிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்என்பதற்கு அடையாளங்களாகக் காணவேண்டும். அதனால்தான்இறுதியாக நற்செய்தி எழுதிய யோவான்இயேசுவின்வல்லசெயல்களை"அரும் அடையாளங் கள்'' என்றே குறிப்பிடுகிறார்.

குறிப்பு: புதிய திருவிவிலிய மொழிப் பெயர்ப்பில் "அரும்அடையாளம்'' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. "அருள்அடையாளம்'' என்ற சொல் திருவருட்சாதனத்தைக் குறிக்க ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதால், குழப்பம் ஏற்படுவதைத்தவிர்க்க "அருங்குறி'' என்ற சொல்லை(முன்னைய விவிலிய மொழிப் பெயர்ப்பைப்பின்பற்றி) பயன்படுத்துகிறோம்.அதாவது புதுமை என்று கருதப்படும்ஒரு நிகழ்ச்சி வேறு ஒரு முக்கியமானகருத்தைக் காட்டும் ஓர் அடையாளம்.கடவுள் தொடர்பு கொண்ட கருத்தாகஇருப்பதால் அது ஓர் அரும் அடையாளம். உதாரணமாக, கானாவூரில்இயேசுதண்ணீரை இரசமாக மாற்றினார் என்பது, மக்கள்கண்டுமகிழ்ந்தநிகழ்ச்சி. ஆனால் இப்புதுமையின் வழி கடவுளின் மாட்சிமையைவெளிப்படுத்தி, ஒரு புது யுகத்தை இயேசு படைக்க வந்து விட்டார்என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் அருங்குறி, அரும் அடையாளம்.

தாம் யாரென்று அறிய வந்த திருமுழுக்கு யோவானின் சீடருக்குஇயேசு கூறிய பதில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. "நீங்கள்கண்டதையும் கேட்டதையும் யோவானிடம் சென்று அறிவியுங்கள்.பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர், கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணம் பெறுகின்றனர். காது கேளாதோர்கேட்கின் றனர். இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர். ஏழைகளுக்குநற்செய்தி அறிவிக்கப்படுகிறது''(மத் 11:4-6).

இயேசு தம்மை மெசியா என்றோ, இறைமகன் என்றோ,அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. பழைய ஏற்பாட்டில் எசாயாஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி மெசியா பற்றிய முன்னறிவிப்புகள்நிறைவேறிவிட்டன என்று சொல்லுகிறார் (எசா35:5-6). அருஞ்செயல்களும் புதுமைகளும் ஒருவகையில் நற்செய்திப் போதனையேஎன்று கூறுகிறார். இவற்றின் வழியாகக் கடவுளின் மீட்பும், அவரதுமாட்சிமையும் மண்ணகத்தில் வந்துவிட்டனஎன்று காட்டுகிறார்.இயேசு எந்தப் புதுமையையும் தம் பெயர் விளங்கவோ, தம்சுயநலத்திற்காகவோ செய்யவில்லை. பாழ்வெளியில் பசியுற்ற போதுகூடக் கற்களை அப்பங்களாக மாற்றும் சோதனையை எதிர்த்துப்போரிட்டார் (லூக் 4 : 3-4).

இயேசு பேய்களைஓட்டிமக்களைக் குணப்படுத்தினார் என்றுநாம்நற்செய்தியில்வாசிக்கின்றோம். இப்புதுமைகள்மூலம்இயேசு ஏதோ பேய்பிசாசுகளை விரட்டியடித்தார் என்பதைவிட உலகில் தீமையின்ஆதிக்கத்தை எதிர்த்தார், தகர்த்துவிட்டார் என்றும், இவைதீமைஒழிப்பின்அருங்குறிகள் என்றும், இறையரசு வந்துவிட்டது என்பதற்கானஆதாரங்கள் என்றும் உணரவேண்டும் ஆகும்.இறந்தோருக்கு இயேசு உயிரளித்ததாக (இலாசர், கைம்பெண்மகன், யாயீரின்மகன்) மூன்றுநிகழ்ச்சிகள்குறிப்பிடப்படுகின்றன.ஏதோ பரபரப்பு ஏற்படுத்துவதற்காக, இயேசு இப்புதுமைகளைச்செய்யவில்லை. இயேசுவின் வேறுமதிப்பீடுகள்இங்குமறைந்துள்ளன.இரு சகோதரிகளுக்கு ஏற்பட்ட மாபெரும் துயர் துடைக்கவும், ஏழைக்கைம்பெண்னுக்கு இரக்கம் காட்டவும், அழுகையும் புலம்பலுமாக இருந்தவீட்டில் ஆறுதல் தரவும் இப்புதுமைகள்செய்யப்படுகின்றன( யோவா 11 :17-25; லூக் 7 : 13; மாற் 5 : 35-43).

இயேசு நிலைநாட்ட வந்த இறையரசுக்கு இவை மிகச் சிறப்பானஅருங்குறிகள். இந்த இறையரசு மக்கள் மகிழ்ச்சியும் நிறைவாழ்வும்பெறுவதிலும் தான்அடங்கியுள்ளது என்பதை இவை காட்டுகின்றன.

13. இயேசுவின்உவமைகள்: இறையாட்சியின்விளக்கங்கள்
இயேசுபுரிந்தஅருஞ்செயல்கள்அவர் நிறுவவந்தஇறையாட்சியின்வெளிப்பாடுகள் அல்லது அடையாளங்கள் என்றால், அவர் தமதுபோதனையில் கையாண்ட பல்வேறு உவமைகள், இறையாட்சி பற்றிய எளிய விளக்கங்களாகும். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோரின்நற்செய்திகளில் சிறியவையும், பெரியவையுமாக நாற்பது உவமைகள்இடம்பெற்றுள்ளன.

உவமை என்பது எல்லா மொழிகளிலும் பரவலாகப்பயன்படுத்தப்படும் ஓர் இலக்கியப் பாணி. வெளிப்படையாக ஒன்றைச்சொல்லி அதனுடைய உட்கருத்தை மறைமுகமாகப் புரிய வைப்பதுதான்உண்மை. அது ஒரு சொல்லாக இருக்கலாம். அல்லது, சொற்றொடராகஇருக்கலாம்; ஒருநீண்ட கதையாகவும் இருக்கலாம். உப்பு, ஒளிபோன்றசொற்களை இயேசு உவமைகளாகப்பயன்படுத்தியுள்ளார் (மத் 5 : 13-14). "நீங்கள்வெள்ளையடிக்கப் பட்ட கல்லறைகள்''(மத் 23: 27) "விண்ணரசு ஒரு கடுகுமணிக்குஒப்பாகும்'' போன்றவை உவமைச்சொற்றொடர்கள், உருவகங்கள்.நற்செய்தி நூல்களில் நாம் பரவலாகக்காண்பவை உவமைக் கதைகளே. ஊதாரிமைந்தன் உவமை (லூக் 15 : 11-32), நல்லசமாரியன் உவமை (லூக் 10 : 25-37),பணக்காரன், ஏழை இலாசர் உவமை (லூக் 16 :19-13), தாலந்துகள் உவமை (மத் 25 : 14-30) போன்றவை மிகவும் புகழ்பெற்றவை. இயேசு சொன்ன பல்வேறு உவமைகளில் கீழ்க்காணும்கருத்துக்களை நாம் தெளிவாகப் பார்க்கிறோம்.

13.1. உவமைகள் இறையரசின் விளக்கங்கள்
உவமைகள் இறையரசின் விளக்கங்கள ;என்ற கருத்துஅனைத்துஉவமைகளிலும் அடிப்படையாக உள்ளது. இருப்பினும் இறையரசின்தொடக்கம், வளர்ச்சி, முழுமை, மாட்சிமை போன்ற சிந்தனைகள்மத் 13,மாற்கு4 ஆகிய பகுதிகளில் வெளிப்படையாகச் சொல்லப் பட்டுள்ளன.ஒரு காலக் கட்டத்திலே இஸ்ரயேல் மக்கள் தங்களை ஆளவும்பாதுகாக்கவும் அரசன் வேண்டுமென்று வருந்திக் கேட்டுப் பெற்றனர்.ஆனால்காலப்போக்கில்தங்கள்அரசர்களின்ஆணவத்தால்ஏமாந்தனர்.இருப்பினும் தங்களுக்கு ஒரு நல்ல ஆட்சி ஒரு நாள் கிடைக்கும் என்றுநம்பியிருந்தனர். குறிப்பாக மெசியா வரும்போதுதங்களுக்குச் சிறப்பானஆட்சி மலரும் எனநம்பினர் (2சாமு 7 : 5-16; திபா 2, 20, 21, 110; எசா 2: 1-15; 9 : 5-8; 11 : 1-10).

இயேசு தமது மீட்புப் பணியைத் தொடங்கியபோது மக்கள்ஆவலுடன் எதிர்பார்த்த இறையரசு நெருங்கிவிட்டது என்றஅறிக்கையுடன் தான் செயல்படுகிறார் (மாற் 1 : 15; மத் 3 : 2). இந்தக்கருத்தைத் தொடர்ந்து தம் உவமைகளிலே சொல்லி அந்த இறையரசுஎத்தகையது என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். உதாரணமாக,விதைவளர்ச்சி உவமைகள் வழியாகத் தான் நிறுவ வந்த இறையரசுஎளிமையாகத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து அனைத்து மக்களையும்ஆட்கொள்ளும் என்பதைச் சொல்கிறார். நல்லசமாரியன், ஏழை இலாசர்போன்ற உவமைகளில் நீதி, சமத்துவம் போன்ற மதிப்பீடுகளேஇறையரசுக்கு ஏற்றவை எனக் காட்டுகிறார். ஊதாரிப்பிள்ளை,காணாமல் போன ஆடு போன்ற உவமைகளில் இரக்கம் என்பதுஇறையரசின் தனிப்பெரும் மதிப்பீடு என்பதைக் காட்டுகிறார்.

13.2. மக்கள் வாழ்வின் பின்னணியில் உவமைகள்
இயேசுதம் போதனைகளை உவமைகள் வழியாகச் சொன்னபோதுஅன்றைய மக்கள் செய்து வந்த தொழில், அவர்கள் குடும்ப வாழ்க்கை,அவர்கள் சந்தித்த அன்றாடப் பிரச்சனைகள் போன்றவற்றையேபின்னணியாகக் கொண்டு கதைகளைப் புனைந்தார். ஆகவே இந்தஉவமைகளில் மக்கள் உடனடியாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும்அவற்றின்இறையாட்சிக் கொள்கைகளை ஏற்பதும் எளிதாக இருந்தது.

உதாரணமாக "விதை'' என்ற வேளாண்மை சார்ந்த கருத்தைமுன்வைத்தும் பல கதைகள் சொன்னார். பயிர்த்தொழில் செய்தமக்களைக் கவர்ந்து, இறையரசு என்பதுவிதைக்குஉரியதன்மைகளைக்கொண்டது என்பதைத் தெளிவுப்படுத்துகிறார் (மத் 18 : 12-14; 13 : 47-50). திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளும் அவரது உவமைகளில்இடம் பெற்றன (மத் 22 : 1-14).

13.3. சமூக ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியில் பல சவால்கள்
இயேசு தம் மீட்புப் பணியை ஆற்றிய அக்காலத்தில்பாலஸ்தீனாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளும், அடக்குமுறைகளும்மலிந்திருந்தன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை வாழ்வு தருவதுதனது இறையரசின் முக்கியக் கொள்கை என்பதை இயேசு தன்உவமைகளில் எடுத்துக் கூறுகிறார். லூக்கா நற்செய்தி 15 ஆம் அதிகாரத்தை "இரக்கத்தின் நற்செய்தி'' என்று கூறுவர். இங்கேகாணாமற் போனமைந்தன், காணாமற் போனஆடு, காணாமற் போனபணம் போன்ற உவமைகளில் கடவுளின் பரிவும் இரக்கமும்பாவிகளுக்கும் ஒடுக்கப்பட் டோருக்கும் உரித்தானவைஎன்பதை இயேசுஉறுதிப்படுத்துகிறார் (லூக் 15 : 1-2).

மரபுசார்ந்த உணர்வுகளாலும்,சமயச் சடங்குகளை நிறைவேற்றும்காரணத்தாலும் தங்களையே உயர்வாகக்கருதிய அன்றைய யூத குருக்கள்,பரிசேயர்கள் போன்றவர்களின் நெறியில்மனிதநேயம் இடம்பெற வில்லை. நல்லசமாரியர், பணக்காரன்- இலாசர், பரிசேயர்- வரிதண்டுபவர் போன்ற உவமைகளில்இத்தகைய மேட்டுக் குடி ஆதிக்கத்தைக்கண்டித்து, சமூக ஏற்றத்தாழ்வுகள்மாறவேண்டும் என்பதையும் இயேசு சுட்டிக் காட்டுகிறார்.

14. இயேசுவும் தாழ்த்தப்பட்ட மக்களும்
;இயேசுவின் காலத்திலும் அதற்கு முன்னரும் யூதர்கள்தங்களிடையே பல்வேறு சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்தனர்.குருக்கள், பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர் போன்றவர்கள்சமுதாயத்தின் மேல் மட்டத்திலும், வரிதண்டுவோர், சமாரியர், பிறஇனத்தார், பெண்கள், வெவ்வேறுதொழிலில்ஈடுபட்டோர் கீழ்மட்டத்திலும்இருந்தனர். கீழ்மட்டத்தில் இருந்தவர் களை "பாவிகள்'' என்றேமேல்மட்டத்தினர் குறிப்பிட்டனர். இயேசு கிறிஸ்துவின்மீட்புப் பணியில்இந்தப் பாவிகள் முக்கியத்துவம் பெற்றனர்.

யூதர்கள் இனப்பாகுபாட்டை அதிகமாக மனதில் கொண்டவர்கள்.ஆகவே சமுதாயக் கீழ்மட்டத்தில் இருந்தவர்களுள் குறிப்பாகத் தங்கள்இனத்தினின்று பிரிந்துவிட்ட சமாரியரையும், தங்கள் இனத்தைச் சாராதபிறஇனத்தாரையும்வெறுத்தனர். ஆகவேஇயேசுவின்புரட்சிப் பணியில்சமாரியரும் பிற இனத்தாரும் சிறப்பிடம் பெற்று, யூத மக்களுக்கு ஒருபெரும் சவாலாக இருப்பதை நாம் நற்செய்தி நூல்களில் காண்கிறோம்.நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில் சாதியின் அடிப்படையில்மக்களைப் பிரிக்கும் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அன்றையதாழ்த்தப்பட்ட மக்களுடன் இயேசு கொண்டிருந்த உறவுகள் நமக்கும்சவால்களே!

இயேசு - சமாரியர் உறவுகள் லூக்கா நற்செய்தியிலும், இயேசு -பிறவினத்தார் உறவுகள் மாற்கு நற்செய்தியிலும் பரவலாக உள்ளன.அவற்றை ஈண்டுக் காண்போம்.

14.1. லூக்கா நற்செய்தியில் சமாரியர்
பிறவினத்தாரானலூக்கா, இயேசுவின்இரக்கம், நீதி, பாசம்போன்றமேன்மையான குணங்களுக்கு வடிவுதரும் நற்செய்தியாளர் ஆவார்.இவர் சமாரியருக்குத் தன் நற்செய்தியில் சிறப்பிடம் தந்துள்ளார்.நாடு கடத்தலுக்குப் பின்அசீரியரும், யூதரும் கலப்பு மணம் புரிந்துஇதன்வழியாக வந்தவர்களைத்தான்சமாரியர் என்றனர். இந்தக் கலப்புஇனம் ஒதுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது.

1) இயேசு சொன்ன உவமைகளுள் மிகச் சிறந்த ஒன்று நல்லசமாரியர் உவமை (லூக் 10 : 25-37). இதன்கதாநாயகனேஒருசமாரியர்தான். குற்றுயிராகக் கிடந்தவனைக் குருவும், லேவியும் கண்டனர்.ஆனால் விலகிச் சென்றனர். இவர்கள் சமுதாயத்தில் மேல்மட்டத்தினர்.இருப்பினும் மனித நேயம் அவர்களிடம் இல்லை. இவர்களுக்குச்சட்டம்தான் பெரிது. குற்றுயிராக இருப்பவரைத் தொட்டு தீட்டுஏற்பட்டுவிட்டால் அவர்கள் பலிகளைச் செலுத்த முடியாதே! ஆனால்தாழ்த்தப்பட்ட சமாரியருக்குத் தெரிந்த ஒரே சட்டம் மனித நேயம்தான்.நற்செய்தியாளர் லூக்கா இதனைச் சிறப்பானமுறையில்காட்டி சமாரியர்மீது நமக்கு நன்மதிப்பு ஏற்படச் செய்கிறார். குற்றுயிராய்க் கிடந்தவரை'அவர் கண்டார், பரிவு கொண்டார், அவரை அணுகினார், காயங்களில்திராட்சை மதுவும், எண்ணெயும் வார்த்தார், சாவடிக்குக்கொண்டுபோனார், அவரைக் கவனித்துக் கொண்டார், அவருக்காகச்சாவடியில் பொறுப்பேற்றார்.' குற்றுயிராகக் கிடந்தவருக்கு அயலாராகஇருந்தவர் இவரே. மூவருள் சிறந்தவர் இச்சமாரியரே என்பதைஅனைவரும் ஏற்கச் செய்கின்றார் இயேசு. ஆகவே உயர்வு தாழ்வுகள்பிறப்பால் வரவில்லை. குணத்தால் வருகின்றன என்னும்உண்மையையும் எடுத்துரைக்கிறார் இயேசு.

2) இயேசு ஆற்றிய பல வல்ல செயல்களில் ஒன்று அவர் பத்துத்தொழுநோயாளருக்குக் குணமளித்தது (லூக் 17 : 11-19). ஆனால்அவர்களுள் ஒருவர் மட்டுமே கடவுளைப் புகழ்ந்து கொண்டேதிரும்பிவந்துஇயேசுவுக்குநன்றிகூறினார். நன்றிஉணர்வோடு நடந்துகொண்ட இவர் ஒரு சமாரியர்.

சமுதாயம் பல்வேறு அர்த்தமற்ற காரணங்களுக்காக ஒருவரைஒதுக்கி விடலாம். அப்படிப்பட்டவர்களிடம் குடிக்கொண்டிருந்த மென்மையான உயர்வுகளைப் பாராட்டும் இயேசு, இங்கே எழுப்பும் கேள்விஉண்மையாகத் தாழ்ந்தவர்கள் யார் என்பதுதான்! பத்து பேர்களின்நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? (லூக் 17 : 17).

3) சமாரியரிடம் இயேசு காட்டிய பாசம் மற்றுமொரு நிகழ்ச்சியில்தெளிவாக வெளியாயிற்று. இயேசு எருசலேம் நோக்கிப் பயணம்செய்தபோது அவரது நோக்கம் எருசலேமை அடைவதாக இருந்ததால்சமாரியர் அவரை ஏற்கத் தயங்கினர். இதனால் கோபமடைந்த இடியின்மக்கள் யாக்கோபும், யோவானும் இந்த மக்களை அழிக்கவானத்தினின்று தீ வர வேண்டுமென்று விரும்பியபோது, இயேசு இதைஏற்கவில்லை. மாறாக, "அவர் அவர்கள் பக்கம் திரும்பி அவர்களைக்கழ்?து கொண்டார்'' (லூக் 9 : 51-56). தாழ்த்தப்பட்ட மக்கள் என்றால்அவர்களைஎப்படியும்கொடுமைப்படுத்தலாம்என்னும்சீர்கெட்டபண்பாடுஇன்று இருப்பதுபோல அன்றும் இருந்தது. ஆனால் இயேசு காட்டியஅன்பு, நீதி, உண்மை என்ற விழுமியங்கள் இதற்கு நேர் எதிரானவை.

4) சமாரியப் பெண்(யோவா 4 : 5-30): லூக்கா தவிர சமாரியரைப்பற்றி பேசும் ஒரே நற்செய்தியாளர் யோவான்தான். அவர் விவரிக்கும்'இயேசு-சமாரியப்பெண்' நிகழ்ச்சியும் உரையாடலும் மிகச் சிறப்பானது.பாவி, சமாரிய இனத்தவர், பெண் என்ற அடிப்படைகளில்தாழ்த்தப்பட்டிருந்த அவரை இயேசு மாண்புறச் செய்கிறார். தண்ணீரைஅடையாளமாகக் கொண்டு தாம் அருட்கொடையாகத் தரும் புதியவாழ்க்கையை இந்நிகழ்ச்சி வழியாக இயேசு சுட்டிக்காட்டுகிறார்.இப்பெண் இயேசுவைச் சந்தித்தபோது ஒழுக்கமற்றவராகவும்சமுதாயத் தில் ஒதுக்கப்பட்டவராகவும் இருக்கிறார். அவர் தன்னுடன்கொண்டுவந்த வெறும் குடத்திற்கு ஒப்ப உள்ளத்திலும் வாழ்விலும்வெறுமையுடன்தான் இருந்தார். இயேசு அன்பொழுகப் பேசிஇறையுண்மைகளை உணர்த்தி அவளுடைய பாவ வாழ்க்கையைநினைவுபடுத்தி அவளை முழுக்க முழுக்க மாற்றிவிடுகிறார். இனிஅப்பெண் நிறைகுடமாகிவிடுகிறார். இயேசு தாழ்ந்தோரிடம் காட்டியபரிவும் பாசமும், அவர்களைஉயர்த்த அவர் கையாண்ட வழிமுறைகளும்போற்றத்தக்கவை.

4.2. மாற்கு நற்செய்தியில் பிற இனத்தார்
பழைய ஏற்பாட்டில் யூத மக்கள் பிறவினத்தாரால் பெரிதும்துன்புறுத்தப்பட்டனர். எகிப்தியர், கனானியர், பிலிஸ்தியர், மோபத்தேயர்,பபிலோனியர், அசீரியர், பாரசீகர், கிரேக்கர், உரோமையர் போன்ற வேற்றுஇனமக்களின் கைகளில் நீண்ட காலமாக யூதர்கள் அனுபவித்தஇன்னல்கள் பல. ஆகவே யூதமக்கள் பிறவினத்தார் மீது வெறுப்புக்கொண்டனர். தங்களிடையே அவர்கள் வாழவும் தடை விதித்தனர்.பிறவினத்து மக்களை யூதர் வெறுக்க வரலாற்றுக் காரணங்கள்இருந்தாலும், தெரிந்து கொள்ளப்பட்டு கடவுளின் அன்புக்கும், நீதிக்கும்சாட்சிகளாகவிளங்கவேண்டியஇவர்கள்பிறவினத்தாரை நடத்தியவிதம்தவறு என்று இயேசு உணர்கின்றார். ஒரு யூதன்நாள்தோறும் சொன்னசெபம்: "இறைவா! நான் உமக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில் நான்ஒரு பிறவினத்தானாகப் பிறக்கவில்லை. ஒரு பெண்ணாகப்பிறக்கவில்லை. ஒரு நாயாகப் பிறக்கவில்லை.”

கடவுள் யூத இனத்தைத் தேர்ந்து கொண்டபோது ஆபிரகாமிடம்சொன்ன வார்த்தைகள்: "உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள்அனைத்தும் ஆசிர்பெறும்'' (தொநூ 12 : 3). அதே பாணியில் தான்இயேசுவைப் பற்றிப் "பிறவினத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி''என்று சிமியோன்குறிப்பிட்டார் (லூக் 2 : 32).

ஆகவே இயேசு பிறவினத்து மக்களை யூதரின் போக்குக்குநேர்மாறாக அன்புடன் நடத்துகிறார். தன் பணி அனைவருக்குமேஉரித்தானது என்பதை உணர்த்துகிறார். மாற்கு நற்செய்தியில்காணப்படும் கீழ்க்காணும் நிகழ்ச்சிகள் மனித இனம் முழுமைக்கும் மீட்புகிடைக்க வேண்டும் என்னும் அவரது பணிநோக்குக்குச் சான்றுகள்.

15. இயேசுவும் பெண்களும்

15.1. கனானியப் பெண் ( 7 : 24-30)15.1. கனானியப் பெண் ( 7 : 24-30)மக்களால்ஒதுக்கப்பட்ட தாழ்ந்த இனப்பெண்இயேசுவைச் சந்திக்கவருகிறார். தனதுமகளுக்குப் பிடித்திருந்த பேய்நீங்க, தனதுஇனத்தாரின்வாழ்க்கையைப் பின்பற்றி அவர் இயேசுவின் காலில் விழுந்துமன்றாடுகிறார். மக்களின் வழக்கிலிருந்த ஒரு பழமொழியைக்கையாண்ட இயேசு அப்பெண்ணின் நம்பிக்கை யைப் (விசுவாசத்தைப்)பரிசோதிக்கிறார். பிள்ளைகள் யூதரையும், நாய்கள் பிறவினத்தாரையும்குறித்த உருவகச் சொற்கள்ஆகும். கடவுளால் தெரிந்துக்கொள்ளப்பட்டயூதர்களாகிய பிள்ளைகளுக்கு முன்னுரிமைகள் உண்டு என்பதைஅப்பாமரப் பெண் மறுக்கவில்லை. ஆனால் தங்கள் இனம்பின்னுரிமையைப் பெற வேண்டுமென்றில்லை; பிள்ளைகள் சிந்தும்உணவுப் பொருளை உண்ணும் நாய்களுக்கு ஒப்ப, அதே நேரத்தில்சிறிதாவது மீட்புப் பெறலாமே என்று விண்ணப்பிக்கிறாள். இயேசுஅவரைப் பாராட்டிக் குறை தீர்த்து அனுப்புகிறார்.

முதல் நூற்றாண்டுத் திருச்சபையில்இருந்த வேறுபாடு, குறிப்பாக யூதக் கிறிஸ்தவர்பிறவினத்துக் கிறித்தவர் என்னும்ஏற்றத்தாழ்வுகள் இந்நிகழ்ச்சியில் மறைவாகஇடம் பெற்றுள்ளன. குறிப்பாக யூதக் கிறிஸ்தவர்ஒரே பந்தியில் அமர்ந்து பிறவினத்துக் கிறிஸ்தவருடன்உணவு கொள்ளாத அளவிற்குப் பிளவுஏற்பட்டிருந்தது. இதைத்தான்கனானியப் பெண்பற்றிய நிகழ்ச்சியில் குறிப்பாக உணர்த்து கிறார் நற்செய்தியாளர் மாற்கு.இயேசு கிறிஸ்து பிற இனத்துப் பெண்ணின் வேண்டுதலைக்கேட்டு, வல்ல செயல் ஒன்றைப் புரிந்து, எல்லா ஏற்றத் தாழ்வையும்உடைத்தெறிந்து விட்டதைத்தான்இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

15.2. கெரசேன் பகுதியில் பேய்பிடித்தவர் நலமாதல் (மாற் 5 : 1-20)
நற்செய்தியில்வரும்பேய்பிடித்தவர் நிகழ்ச்சிகளில்மிகவிரிவானதுஇதுவே. கடலுக்குஅக்கரையில்இருந்த பிறவினத்தார் பகுதியில்இயேசுஇந்தப் பேயை ஓட்டுகிறார். பேய்பிடித்தவர் ஒரு பிறவினத்தாரேஎன்பதற்குப் பல சான்றுகள் உண்டு. இந்நிகழ்ச்சியின் முதல் பகுதியில்பேய்பிடித்தவர் கல்லறையில் வாழ்ந்தார்; சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுத் திமிறிக் கொண்டிருந்தார்; எந்நேரமும் கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்; தம் பெயர் 'இலேகியோன்' என்று அவர் சொன்னார்;உரோமை ஆதிக்கப்படையின் எண்ணிக்கைக்கு ஏற்ப பலபேய்கள்அவரைப் பிடித்திருந்தன. இக்கருத்துக்கள் அனைத்தும் பிறவினத்துப்பகுதிகளில் வாழும் மக்களின் பரிதாப நிலையைத்தான் இங்குஎடுத்துக்காட்டுகின்றன. அங்குப் பன்றிகள்இருந்தனஎன்றகூற்றுஇதைஇன்னும் உறுதிப்படுத்துகின்றது.

இயேசு பன்றிகளைத் துரத்திவிட்டு, பேய்பிடித்தவரையும்குணப்படுத்துகிறார். பன்றிகளை இழந்துவிட்டோமே என்றுகவலைப்பட்ட சுயநலக்கும்பல்ஒன்றுஇயேசு தொடர்ந்துஇப்பணிகளைச்செய்யாதவாறு அவரைத் தடுக்க முயற்சி செய்கிறது.பேய்பிடித்திருந்தவர் முழுமையாகக் குணமடைந்து விடுகிறார்.அவர் தம்மக்களிடம்சென்று இயேசுவின்செய்தியைஅறிவிக்கவேண்டும்என்னும் கட்டளையும் பெறுகிறார். "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர்உம்மீது இரக்கம்கொண்டு உமக்கு செய்ததையெல்லாம் உம்உறவினருக்கு அறிவியும்'' என்று இயேசு வழங்கிய கட்டளையைநிறைவேற்றிய அவர் பிறவினத்தாரின் முதல் போதகராகவும்விளங்கினார்.

இயேசு தம் மீட்புப் பணியில் பெண்ணின் தாழ்வு நிலையைக்கருத்தில் கொள்ளவில்லை. மாறாகப் பல பெண்கள் அவரது பணியில்ஆண்களைப் போல் ஈடுபாடு கொள்கின்றனர். பெண்ணின்சிறப்புகளையும் இயேசு அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறார்.நற்செய்தியாளருள் 'பெண்ணின் நற்செய்தியாளர்' எனக்கருதப்படுபவர் லூக்கா. பெண்களின் பெருமையைச் சுட்டிக் காட்டுபவர்அவர்; பெண்களைப் பற்றிய அவரது அணுகுமுறை மூன்றுகட்டங்களில்வெளிப்படுவதை நாம் காணலாம்.

1) லூக்கா நற்செய்தியில் இயேசுவின் பிறப்பு அறிவிப்பு முதல்அவரது உயிர்ப்பு வரையிலான நிகழ்ச்சிகளில் பல பெண்கள்பங்கேற்றுள்ளதை நாம் பார்க்கிறோம். பெண்களை மையமாக வைத்துப்புனையப்பட்ட நிகழ்ச்சிகள் பலவற்றைத் தம் நற்செய்தியில் தருகிறார்லூக்கா.

- இயேசு பிறப்பின் முன்னறிவிப்புப் பெற்ற மரியா (1 : 26-38)
-எலிசபெத்தைச் சந்தித்த மரியா (1 : 39-45)
- வெற்றிக் கீதம் பாடிய மரியா (1 : 46-55)
- கோவிலில்குழந்தை இயேசுவைச் சந்தித்த அன்னா (2 : 36-38)
- எலியா பணிபுரிந்த சாரிபாத் கைம்பெண்(4 : 24-26)
- சீமோன்பேதுருவின்மாமியார் (4 : 38-39)
- நயீன் ஊர்க் கைம்பெண்(7 : 11-17)
- தைலம் பூசும் பாவிப் பெண்(7 : 38-50)
- இயேசுவின்பெண்சீடர்கள் (8 : 1-3)
-மார்த்தா, மரியா (10 : 38-42)
- இயேசுவைப் புகழ்ந்த பெண்(11 : 27-28)
- ஓய்வுநாளில் குணமடைந்த பெண்(13 : 10-17)
-புளிப்பு மாவு உவமை (13 : 20-21)
-காணாமற்போனகாசு உவமை (15 : 8-10)
-நடுவரிடம் நீதி கேட்ட பெண்(18:1-8)
- ஏழைக் கைம்பெண்ணின்காணிக்கை (21 : 1-4)
-பேதுரு அஞ்சிய பணிப்பெண்(22 : 54-61)
-இயேசுவுக்காக அழுத எருசலேம் பெண்கள் (23 : 26-31)
-சிலுவை அருகே நின்ற பெண்கள் (23 : 49)
-இயேசுவின்அடக்கத்தில் பங்கேற்ற பெண்கள் (23 : 55-56)
-உயிர்த்த இயேசுவைச் சந்தித்த பெண்கள் (24 : 1-12)2)

2) ஆணும், பெண்ணும் சமமே என்னும் கருத்தை வலியுறுத்தவிழையும் லூக்கா தம் நற்செய்தியில் பலமுறை ஆண்களைமையமாகக்கொண்ட நிகழ்ச்சிகளுக்கு நேர் இணையாகப் பெண்களை மையமாகக்கொண்ட நிகழ்ச்சிகளையும் தருகிறார். இதோ சில உதாரணங்கள்.

- சக்கரியாவுக்கு யோவான்பிறப்புப் பற்றிய முன்அறிவிப்பு(1 : 5- 38) மரியாவுக்கு இயேசு பிறப்புப் பற்றிய முன்அறிவிப்பு
-சக்கரியாயவின்பாடல் (1 : 46-55, 67-79) மரியாவின்பாடல்
-குழந்தை இயேசுவைச் சந்தித்த சிமியோன்(2 : 25-38)குழந்தை இயேசுவைச் சந்தித்த அன்னா
-எலிசா பணிபுரிந்த சாரிபாத் கைம்பெண்(4 : 25-27)எலிசா பணிபுரிந்த தொழுநோயாளர் நாமான்
-பேய் பிடித்தவர் குணமாதல் (4 : 31-39)பேதுருவின்மாமியார் குணமாதல்
-நூற்றுவர் தலைவனின் பணியாளர் குணமாதல் (7 : 1-17)நயீன்கைம்பெண்ணின்மகன்உயிர் பெறுதல்
- இயேசுவுக்கு விருந்தளித்த பரிசேயன்சீமோன்(7 : 36-50)இயேசுவுக்கு தைலம் பூசிய பாவிப்பெண்
-இயேசுவின்ஆண்சீடர்கள் (8 : 1-3)இயேசுவின்பெண்சிடர்கள்
-இயேசு பாராட்டிய நல்ல சமாரியன்(10 : 25-42)இயேசு பாராட்டிய மார்த்தாவின்சகோதரி மரியா
- இயேசுவைப் புகழ்ந்த பெண்(11 : 27-32)இயேசுவிடம் அடையாளம் கேட்ட பரிசேயர்
-கடுகு விதையைத் தோட்டத்தில் விதைக்கும் ஆண்(13 : 18-20)புளிப்பு மாவை மாவில் இடும் பெண்
- காணாமற்போனஆடு (15 : 1-10)காணாமற்போனகாசு
-நீதி கேட்ட பெண்(18 : 1-8)நீதி வழங்கத் தயங்கிய ஆண்
-செல்வந்தர்களின்தாராளக் காணிக்கை (21 : 1-4வறிய கைம்பெண்தந்த இரண்டு காசுகள்
-இயேசுவுடன்சிலுவையைத் தொடர்ந்த பெண்கள்(23 : 26-31)இயேசுவை விட்டு ஓடிய சீடர்கள்
-இயேசுவின்அடக்கத்தில்பங்கேற்ற அரிமத்தியா யோசேப்பு (23 :50-56)இயேசுவின்அடக்கத்தில் பங்கேற்ற பெண்கள்
-உயிர்த்த இயேசுவைச் சந்தித்த பெண்கள் (24 : 1-35)உயிர்த்த இயேசுவைச் சந்தித்த இரு சீடர்கள்

3) ஆண், பெண்இணைநிகழ்ச்சிகளைமிகத் திறமையாகக் கோத்தலூக்கா சில நிகழ்ச்சிகள் பெண்களுக்கே உரிய மென்மையானகுறைகளைக் கோடிட்டுக் காட்டி, அவற்றை இயேசுவின் பணியில்உபயோகித்த விதத்தையும் காட்டுகிறார்.இயேசுவுக்கு பரிசேயன் சீமோன் விருந்தளித்த அதே வீட்டில்அவருக்குத் தைலம் பூசிய பெண் பற்றிய நிகழ்ச்சியில் சீமோனின்அக்கறையற்ற மனப்பான்மையையும், பாவிப் பெண்ணின் ஆழ்ந்தஅன்பையும் நாம் கவனிக்கிறோம். பெண்ணுக்கே உரிய மென்மையான,தன்னலமற்ற, நிறைவான, பாசமுள்ள செயல்களால் தனது அன்பைவெளிப்படுத்துகிறார்.

நீதி கேட்கச் சென்ற பெண் ஓயாமல் கேட்டுக் கொண்டேஇருக்கிறாள். நேர்மையை நிலைநாட்ட அரும்பாடுபட்ட பெண்நேர்மையற்ற ஒருவரோடு ஒப்பிடப்படுகிறார்.ஏழைக் கைம்பெண் தமக்கிருந்த அனைத்தையும் தியாகம்செய்கிறார். செல்வர் கொடுத்த பணம் மிகுதியாக இருந்தாலும் அங்கேதியாகம் இல்லை. ஏழைப் பெண்ணின்தியாகத்தை காட்டுகிறார் லூக்கா.

இயேசுவுக்காக அழுத பெண்ணின் இளகிய மனம் பாச உள்ளம்மட்டுமல்ல எதிரிகளுக்கு அஞ்சாத அவர்களின்துணிச்சலையும் இங்கேஎடுத்துக் கூறுகிறார் நற்செய்தியாளர். மாறாக, இயேசுவை விட்டுஓடிவிட்ட சீடரிடம் துணிச்சல் இல்லை. பற்று இல்லை, பாசம் இல்லை.இயேசுவின் கல்லறையை மறக்காத பெண்கள், அங்கு நறுமணப்பொருட்களுடன் சென்ற பெண்கள் உயிர்த்த இயேசுவை முதலில்சந்திக்கும் வரம் பெற்றார்கள். அவர்களுக்குப் பிறகுதான் பேதுரு அங்குஓடிச் செல்கிறார்.

15.3. இயேசு கிறிஸ்து - வாழ்வு தரும் உணவு
நற்செய்தி நூல்களில் வரும் புதுமை நிகழ்ச்சிகளில் மிகச்சிறந்தவையாகவும், நீடித்த தாக்கம் கொண்டவையாகவும்கருதப்படுபவை அப்பம் பலுகுதல் புதுமைகளே. இவை நற்செய்திகளில்இடம்பெறும் முறை கீழ்வருமாறு:

மாற்கு : இருமுறை6 : 30-44 8 : 1-10(5000 பேர்) (4000 பேர்)
மத்தேயு : இருமுறை14 : 13-21 15 : 32-39(5000 பேர்) (4000 பேர்)
லூக்கா : ஒருமுறை 9 : 10-17(5000 பேர்)

மேற்கண்டவாறு அப்பம் பலுகிய நிகழ்ச்சி ஆறு முறை (யோவா 6 :1-15) நூல்களில் இடம் பெற்றுள்ளதெனில் இந்நூல்கள் எழுதப்பட்டமுதல் நூற்றாண்டிலே மக்கள் இதைப் பற்றிப் பரபரப்பாக பேசியிருக்கவேண்டும். மக்களிடையே அப்பம் பலுகிய நிகழ்ச்சி பற்றிய மரபு மிகத்தெளிவானதாகவும் இருந்திருக்க வேண்டும்.

இனிஅப்பம் பலுகுதல் நிகழ்ச்சி தரும் பாடங்கள் என்ன? இயேசுஅன்று புதுமை செய்து அற்புதமாக மக்களுக்கு வயிறார உணவு தந்தார்.எனினும் புதுமைக் கண்ணோட்டத்துடன் மட்டுமே இந்த நிகழ்சசியைப்பார்ப்பவர் பலர். இன்னும் இயேசு புதுமை செய்து மக்களுக்குஉணவுதரவேண்டுமென்று விரும்புகிறவர்கள் இவர்கள்.அப்பம் பலுகுதல்நிகழ்ச்சிகளைஆழ்ந்துவாசிக்கும்போதுநாம் பலஉண்மைகளை உணர முடியும். குறிப்பாக நாம் வாழும் சமுதாயத்தில்இன்றும் பல மக்கள் பட்டினியால் வாடும் சூழலில் இந்தப் புதுமைஏற்படுத்த வேண்டிய தாக்கம் என்ன என்னும் கேள்வியுடன் நாம்இந்நிகழ்ச்சிகளைஅணுக வேண்டும்.

1) இயேசு இப்புதுமையைப் பாலை நிலத்தில் செய்தார் (மாற் 6 : 35; மத்13:5). ஏற்கனவே பழையஏற்பாட்டில் நாற்பது ஆண்டுகள்பாலை நிலத்தில் வாழ்ந்தஇஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள்மன்னாவைப் பொழிந்துபசியாற்றினார். இந்த வல்லசெயல் போலவே இயேசு புரிந்தவல்ல செயலாகிய அப்பங்கள்பலுகுதலும் கடவுள் இரக்கத்திற்குஒரு சிறந்த அடையாளம் ஆகும்.

2) இயேசு புதுமையாக மக்களுக்குஉணவு படைத்ததற்குக் காரணமாகஇருந்தது அவரது இரக்கமே என்னும்கருத்தை அப்பம் பலுகிய நிகழ்ச்சிகள்அனைத்துமே கோடிட்டுக் காட்டுகின்றன( மத் 13 : 14; மாற் 6: 34;8: 2; லூக் 9 : 13; யோவா 6 : 5). இயேசுவிடம் மக்கள்உணவு கேட்கவில்லை. சீடர்கள் மக்களை அனுப்பிவிடவேண்டுமென்றுதான் கேட்டனர். ஆனால் இயேசு மட்டும், தாமேவிரும்பிப் புதுமை செய்கிறார்.

3) இயேசுஒன்றுமில்லாமையிலிருந்துஅப்பம்பலுகச் செய்யவில்லை.ஏற்கனவே மக்கள் வைத்திருந்த உணவை வாங்கி அதைத்தான்பலுகச் செய்து மக்களுக்கு அளிக்கின்றார்.

4) அப்பம் பலுகச் செய்த அனைத்துநிகழ்ச்சிகளும் தெளிவாகக் கூறும்ஒரு செய்தி என்னவெனில் இயேசு அப்பங்களைப் பிட்டுப் பகிர்ந்தளிக்கின்றார். இப்படிப் பகிர்ந்தளிக்கத் தன் சீடரையும்பணிக்கின்றார். அப்பம் பலுகலும், அப்பம் பகிர்தலும் ஒன்றோடொன்று இணைந்தே செல்கின்றன.

5) அனைவரும் வயிறார உண்ட தும் எஞ்சியதுபலகூடைகளில்நிரப்பப் பட்டதும் குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்பம் பலுகியநிகழ்ச்சி இன்றைக்கு நம்மிடையே ஏற்படுத்த வேண்டிய தாக்கம்என்ன? யோவான் நற்செய்தியில் வயிறார உண்ட மக்கள்உடனடியாக இயேசுவைஅரசனாக்க விரும்புகின்றனர். இதுதான்இன்றைய நிலையையும்கூட. புதுமைகளுக்காக இயேசுவைஅரசனாக்க விரும்பு கின்றனர். அதற்காகவே இயேசுவை நாடும்மக்களே இன்று அதிகம் (யோவா 6 : 26). இந்நிகழ்ச்சி வழியாகஇயேசு தரும் அழியாத உணவு எனன? நாம் இங்கே அறியவேண்டிய இறை வார்த்தை என்ன?

6) பாலை நிலத்தில் அன்று கடவுள் புரிந்த இரக்கச் செயல், இயேசுவின் இரக்கச் செயல் இன்றும் தொடரவேண்டும். நம் வழியாகக்கடவுளின் இரக்கம் இன்றும் செயல்பட வேண்டும். இறையாட்சிதொடர்ந்து நம் வழியாக நிறுவப்பட வேண்டும்.

7) நமதுஉள்ளத்தில்இரக்கம் சுநூ?தால்இன்றும் புதுமைகள்நடக்கும்.ஏழை எளியவர் வாழ்க்கையில் நிறைவு வரும். இரக்கம், நீதி,சரியான பங்கீடு ஆகிய மதிப்பீடுகளைத்தான் இன்று இயேசுவலியுறுத்துவார். இவற்றின்வழியாக எல்லா மக்களும்நல்வாழ்வுவாழ முடியும்.

8) இன்றையச் சமுதாயத்தில் பற்றாக்குறை உளது என்பது உண்மையல்ல. உண்மையில் இருப்பது பகிர்வுக்குறைதான். இயேசுஅப்பங்களைப் பிட்டு அவற்றைச் சீடர் வழியாகப் பகிர்ந்தளித்துஅனைவருக்கும் உணவளித்தார். இந்தப் பகிர்தல் மனப்பான்மைதான் இந்தப் புதுமையின் அடிப்படை உண்மையாக இருக்கவேண்டும்.

9) நம்மிடையே இரக்கமும் பகிர்தல் உணர்வும் இருந்தால் சமுதாயத்தில் வெறும் நிறைவு மட்டுமல்ல, எல்லையற்ற நிறைவும் ஏற்படும்,மகிழ்ச்சி பொங்கும்.

5. இயேசுவின் இறப்பும் உயிர்ப்பும்

16. இயேசுவின்பாடுகள், மரணம்
1. கிறிஸ்தவ மரபானது தொன்றுதொட்டு இயேசு கிறிஸ்துவின்பாடுகள் - மரணம் - உயிர்ப்பு ஆகிய நிகழ்ச்சிகளை நற்செய்தியின் வேர்அல்லது மையம் என்றே கருதி வந்துள்ளது. நற்செய்தி நூல் வடிவம்பெறுவதற்கு முன்பாகப் போதனை நிலையில் இருந்தபோது, இயேசுபாடுபட்டார், மரித்தார், உயிர்த்தார் என்ற மூலப் போதனையே மக்களுக்குஅளிக்கப்பட்டது. இந்தப் போதனையில்தான்மக்கள்தங்கள்ஈடுபாட்டைசெலுத்தினார்கள். இதுவே அடித்தள நற்செய்தியாக இருந்தது. முதல்நூற்றாண்டுத் திருச்சபையில் சிறப்பிடம் பெற்றிருந்த தூய பவுல்இப்போதனையைத்தான் அதிகம் வலியுறுத்தினார் என்பதை நாம்அவருடைய திருமுகங்கள் மூலம் அறிகிறோம்.

"நானோ, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமைப்பட மாட்டேன்''(கலா6 : 14)."யூதர்கள்அரும்அடையாளங்கள்வேண்டும்என்றுகேட்கிறார்கள்.கிரேக்கர் ஞானத்தைத் தே(நா)டுகிறார்கள். ஆனால்நாங்கள்சிலுவையில்அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம்'' (1 கொரி 1 :22-23).இயேசு பற்றிய முழுப் போதனையையும் அவரது மரணத்திலும்வெற்றிகரமான உயிர்ப்பிலும் அடக்கிய ஒரு பாடலைப் பவுல் தருகிறார்(பிலி 2 : 6-11)."அவர் இறந்தார். பாவத்தை ஒழிக்க ஒரே ஒரு முறை இறந்தார்.இப்போது அவர் வாழ்கிறார்'' (உரோ 6:10).

தொடக்கத் திருச்சபையில் இயேசுவின் பாடுகள் - மரணம் -உயிர்ப்புப் பற்றிய போதனை மரபு பல்வேறு நிகழ்ச்சிகளைக் கொண்டுபடிப்படியாகத் தொகுக்கப்பட்டது. இத்தொகுப்பைத்தான் நான்கு நற்செய்தியாளரும் பயன்படுத்தித் தங்கள் நற்செய்திகளுக்குள்இணைத்துக் கொண்டனர்.இயேசுவின் பாடுகள் - மரணம் - உயிர்ப்பு பற்றிய தொகுப்புஅன்றைய மக்கள் வாழ்விலும் வழிபாட்டிலும் பெருமளவு இடம்பெற்றிருக்க வேண்டும். ஆகவேதான் ஒத்தமைவு நற்செய்திகள்மட்டுமன்றி யோவான் நற்செய்தியும் ஏறக்குறைய ஒரே பாணியில்இந்நிகழ்ச்சிகளை இணைத்துள்ளன.

2. முதலில் இயேசுவின் பாடுகள் - மரணம் என்ற தொகுப்பில்வரும் நிகழ்சசிகளை மட்டும் இங்கே குறிப்பிடுவோம்.

நிகழ்ச்சிகள; மத்தேயு மாற்கு லூக்கா
இயேசுவைக் கொல்லச் சதித்திட்டம் ;26 : 1-5 14 : 1-2 22 : 1-2
பெத்தானியாவில் நறுமணத்தைலத்தால்இயேசுவைப்பூசுதல் 26 : 6-13 14 : 3-9 7 : 36-50
யூதாஸ் காட்டித்தர உடன்பாடு 26 : 14-16 14: 10-11 22 : 3-6
பாஸ்கா விழாவிற்கு தயாரிப்பு 26 : 17-19 14 : 12-16 22 : 7-13
இராஉணவும், நற்கருணையும் ;26 : 20-29 14 : 17-26 22 : 14-38
கெத்சமெனியில் பாடுகள் 26 : 30-46 14 : 27-42 22 : 39-46
இயேசுவைக் கைது செய்தல் 26 : 47-56 14 : 43-52 22 : 47-53
தலைமைச் சங்கத்தின் முன் இயேசு 26 : 57-75
27 : 1-10
14 : 53-72
15 : 1
22 : 54-71
23 : 1
பிலாத்துமுன் இயேசு 27 : 11-31 15 : 2-20 23 : 2-25
இயேசுவைச்சிலுவையில்அறைதல; 27 : 32-49 15 : 21-32 23 : 26-43
இயேசுஉயிர்நீத்தல் ;27 : 50-56 15 : 33-41 23 : 44-49
இயேசுவின்அடக்கம் 27 : 57-61 15 : 42-47 23 : 50-56

 

3) இயேசுவின்பாடுகள், மரணத்தைப் பற்றியஒருசிலஇறையியல்கண்ணோட்டங்களை இங்குக் காண்போம்.

1.)இயேசுவின் பாடுகளும் மரணமும் அவரது மீட்புப் பணியின்சிகரம்என்றே கூரலாம். அவர் இந்த நேரத்திற்காகவே துடிப்புடன்காத்திருந்தார் என்னும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. ஏற்கனவேஇயேசுதம்பாடுகளைப் பற்றிமும் முறை முன்னறிவித்து அவற்றை எதிர் நோக்கிக்கொண்டே இருந்தார் என்னும்உணர்வையும் ஏற்படுத்தினார்.

2) யூதர்களின் பாஸ்கா விழாவுக்கும், இயேசுவின் இறுதிநிகழ்ச்சிகளான பாடுகள், மரணம் உயிர்ப்புக்கும் நேரடித் தொடர்புஉள்ளதைக் காண்கிறோம். யூத மக்கள் எகிப்தினின்று விடுதலைபெற்றதைக் குறித்தது பழைய பாஸ்கா. இயேசுவின் பாடுகள் மரணம்,உயிர்ப்பு ஒரு புதிய பாஸ்காவை உருவாக்குகின்றன. பாவத்திற்குஇறப்பு,விடுதலைவாழ்வுக்குஉயிர்ப்பு எனஇந்தப் பாஸ்கா இன்றுதொடர வேடும்.கிறிஸ்துவ வாழ்வில் இந்த பாஸ்கா வாழ்விற்கு ஏற்ற உணவாகவிளங்குவதே நற்கருணை.

3) மத்தேயு, மாற்கு நற்செய்திகளில் இயேசு தைலத்தால் பூசப்பட்டபிறகு தம் பாடுகளைச் சந்திக்கச் செல்கிறார். இயேசு தம் பாடுகளிலும்,இறப்பிலும்தான் தம் மெசியாத் தன்மையை நினைவுப்படுத்து கிறார்என்றும், அவரது மீட்புப் பணியும்இப்பாடுகள், மரணத்திலே முழுமையடைகிறதுஎன்றும் நாம் பொருள்கொள்ளலாம்.

4) கெத்சமெனித் தோட்டத்தில்இயேசுவின் போராட்டம் வலுக்கிறது.இருளின் சக்திகள், ஆதிக்க வெறிகள்இவற்றால்வரவிருக்கும்உடல்துன்பங்கள்இவை ஒருபுறம் அவரை இழுத்துத் தள்ள,தந்தையின் திருவுளம், மீட்புப்பணிஆகியவை இன்னொருபுறம் அழைக்கின்றன. மீண்டும் இயேசுவே வெற்றிபெறுகிறார். அவரது உருக்கமான இறைவேண்டல் அவருக்குத் துணை நிற்கிறது. கிறிஸ்தவ மதிப்பீடுகளின்படிவாழாத அன்றைய முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர் சிலருக்கும்சுயநலத்திற்காக கிறிஸ்தவ மதிப்பீடுகளைக் காற்றில் பறக்க விடும்இன்றையகிறிஸ்தவர்களுக்கும் இயேசுவின்உருக்கமானகெத்சமெனிப்போராட்டம் ஒரு மாபெரும் சவால்.

5) இரு நடுவர் மன்றங்களுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டு இயேசுகிறிஸ்து குற்றவாளியாகத் தீர்ப்பிடப் படுகிறார். ஒன்று சமயச் சார்புகொண்டயூதத்தலைமைச் சங்கம், இரண்டாவதுஅரசியல்சார்பு கொண்டஉரோமை அதிகாரியாகிய ஆளுநர் பிலாத்துவின் அவை. இருமன்றங்களின் நடவடிக்கை களையும், இயேசு நடந்து கொண்டவிதத்தையும் கூர்ந்து கவனிக்கும்போது குற்றவாளியாக தீர்ப்புக்கு உள்ளானவர் இயேசுவல்ல, யூத தலைமைச் சங்கத்தி னரும் பிலாத்துவும்தான். தாம் எதிர்பார்க்கப்பட்ட மெசியா என்பதையும், தாம் நிறுவ வந்தஇறையாட்சி இவ்வுலகப் பாணியில் அமைந்த அரசு அல்ல என்பதையும்அனைவரும் அறியச் செய்கிறார் இயேசு. இவ்வாறு இயேசு தம்மைத்தீர்ப்பிட்ட இரு அவைகளிலும் வெற்றிகரமாகத் தம் பணியை ஆற்றிவிட்டார்.

6) இயேசு சிலுவையில் அறையப்பட்ட போதும்கூட அவரதுசொற்களும் செயல்களும் அவரது மெசியாத் தன்மையைவெளிப்படுத்தின. இறையாட்சிப் பணியைச் சிலுவையிலும் அவர்தொடர்ந்து ஆற்றினார். நல்ல கள்வனை அவர் ஏற்றுக்கொண்டபெருந்தன்மை, தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களையும் அவர்மன்னித்த மாண்பு (லூக்கா), அவர் தம்உயிரைத் தந்தையிடம்கையளித்தவிதம் அனைத்துமே அவருடையதெய்வீக மாட்சிமைக்குச் சான்றுகளாகவிளங்கின. தம் அன்னையைச் சீடருக்கும்,சீடரைத் தம் அன்னைக்கும் அவர்ஒப்படைத்த விதம் (யோவான்) அவர்உருவாக்கியஇறையாட்சியும், திருச்சபையும்தம் அன்னையின் அரவணைப்பில் தொடரவேண்டும் என்று அவரது விருப்பத்தைவெளிப்படுத்துகிறது.

7) இயேசு இறந்த வேளையில்நடந்தபல்வேறு நிகழ்ச்சிகள்ஆழமான இறையியல்அர்த்தங்களைக் கொண்டவை. இயேசு தம்உயிரைக் கையளித்த வேளையில்திருக்கோவிலின்திரை, மேலிருந்துகீழ்வரைஇரண்டாக கிழிந்தது முதல் நிகழ்ச்சி. இதன் வழியாக யூத சுயநலமும்,யூத அநீத முறைகளும் குறிப்பாகக் கடவுள்தங்களுக்குமட்டுமே உரியவர்என்னும் குறுகிய நோக்கமும் முடிவடைந்து விட்டன என்றுஅடையாளமாகக் காட்டப்படுகிறது. இனி கடவுள் அனைத்துமக்களுக்குமே உரியவர். திருக்கோவிலின்திரைக்குப் பின்னால் இருந்ததூயகமும், இறைப் பிரசன்னமும் இனிஅனைவருக்கும் உரித்தாயிற்று.இதை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பது இரண்டாவது நிகழ்ச்சி.யூதர்கள் வெறுத்த பிறவினத்தைச் சார்ந்த நூற்றுவர் தலைவர்சிலுவையில் அவலமாக இறந்த இயேசுவை இறைமகனாக ஏற்கிறார்.இனி இயேசுவின் இறையாட்சி யும், அவரது கோட்பாடுகளும்அனைத்துல கிற்கும் உரியவை. அனைத்துப் பண்பாடுகளும் அவரில்நிறைவு காண முடியும். இவ்வாறு இயேசுவின் இறப்பு அவரது மீட்புப்பணியின்கொடுமுடியாகவே விளங்கிற்று.

 

17. இயேசுவின்உயிர்ப்பு

இறந்தோருக்கு உயிரளித்த மூன்று நிகழ்ச்சிகள்: இயேசுவின்பணியில் யாயீர் மகன்(மத் 9 : 18-26), கைம்பெண்ணின்மகன்(லூக் 7 :11-17), இலாசர் (யோவா11 : 1-44). இங்குஇறந்தவர் உயிர் பெற்றதற்கும்,இயேசு மரித்து மூன்றாம் நாள் உயிர் பெற்று எழுந்ததற்கும் வேறுபாடுஉண்டு. முந்தியவர் தாங்கள் இழந்தஉயிரை, பூதஉடலைமீண்டும்பெற்றுஅதே வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆனால்இயேசுவின்நிலைவேறு.அவரது வாழ்வு புதிதாக இருந்தது. அவர் காட்சியளித்தார், மறைந்தார்.மூடிய கதவுகள் வழியே அறைக்குள் வந்தார். அவர் ஏற்றிருந்தது பூதஉடல் அன்று, மகிமை பெற்ற உடல்.

இயேசு கிறிஸ்துஉயிர்த்துவிட்டார் என்பதைப் பற்றிய தெளிவானமரபுகள் தொடக்கத் திருச்சபையில் நிறையவே இருந்தன. மிகத்தொன்மையான ஒரு மரபாகக் கருதப் படுவது பவுல் எழுதியுள்ள "நான்பெற்றுக் கொண்டதும், முதன்மையானதும் எனக் கருதி உங்களிடம்ஒப்படைத்ததும் இதுவே. மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம்பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில்எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்” (1 கொரி15: 3-8) என்பதுதான். இதேபோலஇயேசுவின்உயிர்ப்புப் பற்றியவிசுவாசஅறிக்கைகள்(திப 8:37; உரோ 10: 9; 1 கொரி 12:3), வழிபாட்டுப் பாடல்கள்(எபே 5: 14; 1 திமோ 3:16), போதனைக் கருத்துக்கள் (திப 2:24-28; 3:15,26; 4:10) போன்றவை புதிய ஏற்பாட்டில் ஆங்காங்கே காணக்கிடக்கின்றன.

மக்களிடையே நிலவிய விசுவாசம் மற்றும் பாரம்பரியத்தையும்தாங்கள் பெற்ற வரலாற்றுக் கண்ணோட்டங்களையும் இணைத்துநற்செய்தியாளர் இயேசுவின்உயிர்ப்பு நிகழ்ச்சிகளைத் தொகுக்கின்றனர்.இந்நிகழ்ச்சிகள் இரு அடிப்படைக் கருத்துக்களை மையமாக வைத்துதொடக்கத் திருச்சபையில் வளர்ந்தன. ஒன்று, இயேசுவின் கல்லறைவெறுமையாக இருந்தது. அதாவது, இயேசு தம் உடலுடன்உயிர்த்தெழுந்தார். இரண்டு அவர் காட்சியளித்தார். அதாவது, அவரதுபூத உடலில் மாற்றம் இருந்தது. அவர் தொடர்ந்து வாழ்ந்தார். மக்களிடையே நடமாடினார்.

நற்செய்தியில் வரும் உயிர்ப்பு நிகழ்ச்சிகளைக் கீழ்வருமாறுகாணலாம்

இயேசுவின் உயிர்ப்பு மத்தேயு மாற்கு லூக்கா யோவான்
பெண்கள் வழிச் செய்தி 28: 1-10 16:1-8 24: 1-12 20: 1-10
;மறைபரப்புக்கட்டளை 28: 16-20 16:14-18 24:36-49 20:19-23
எம்மாவு சீடருக்குக் காட்சி - 16 : 12-13 24: 13-25 -
தோமாவுக்குக் காட்சி - - - 20:24-29
திபேரியாக்கடல்அருகேகாட்சி - - - 21:1-23

மேலேக் குறிப்பிட்டுள்ள உயிர்ப்பு நிகழ்ச்சிகளை ஆய்வுசெய்யும்போது சில உண்மைகளை நாம் ஏற்க வேண்டும்.

1) இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்ச்சியை நான்குநற்செய்தியாளரும் முக்கியமானதாகக் கருதித் தங்கள்நற்செய்திகளில் சேர்த்துள்ளனர்.

2) காலியாக இருந்த கல்லறை நிகழ்ச்சியும், இயேசுவை அதிகம்அன்பு செய்த பெண்கள் குறிப்பாக மரிய மதலேன், உயிர்த்தஇயேசுவைச் சந்தித்த போதும் முதல் மரபுச் செய்தியாக உள்ளது.அதுபோலவே திருச்சபையின்மறைபரப்புத் தன்மைக்கும் உயிர்த்தஇயேசுவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இரண்டாவதுநிகழ்ச்சியின் மூலம் நான்கு நற்செய்தியாளர்களும் எடுத்துக்காட்டுகின்றனர்.

3) உயிர்ப்பு நிகழ்ச்சிகளில்சிறப்பிடம்பெறும்இருவர் மரியமதலேன்,பேதுரு. இவர்கள் இயேசுவிடம் கொண்டிருந்த நெருக்கம்தெரிந்ததே.

4) வெறுமையாக இருந்த கல்லறையைக் குறிப்பிட்டுச் சொல்வதன்நோக்கம் இயேசு தம் உடலோடு உயிர்த்து எழுந்து விட்டார்என்பதற்காகவே. அவர் வாழ்ந்து துன்புற்ற அதே உடல்,அவருடைய வெற்றியிலும் பங்கு பெற்றுவிட்டது.

5) அதே உடலுடன்இயேசு உயிர்த்துவிட்டார் என்பதற்கு அவருடையஉயிர்ப்புக் காட்சிகள் முரணாக உள்ளன. இருப்பினும், இயேசுஉயிர்த்தபின்அவரது பழைய உடல் புதிய தன்மையை, அதாவதுஒரு மகிமை பெற்ற நிலையைப் பெற்றுவிட்டது எனப் பொருள்கொள்ளலாம். இனிஇயேசுவின் உடல் துன்புறாது, இறப்புக்குஉட்படாது. அது உன்னதமானவெற்றி நிலையைஅடைந்துவிட்டது.

6) மத்தேயு, மாற்கு தரும் நிகழ்ச்சிகளை விட, அவர்களுக்கு பின்னர்எழுதிய லூக்காவும் இன்னும் குறிப்பாக யோவானும் இயேசுவின்உயிர்ப்புக் காட்சிகளைகூடுதலாகத் தருகின்றனர். காலம் செல்லச்செல்லஇயேசுவின்உயிர்ப்பில்விசுவாத்தைப் பெருக்க, மேலும்பலமரபு வழிச் செய்திகள் இடம்பெற்று விட்டன என்பது விவிலியஅறிஞரின்கருத்து.

இயேசுவின்உயிர்ப்பு ஏற்படுத்தும் சில இறையியல் ஆன்மீகத்தாக்கங்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1) இயேசு தமது மீட்புப் பணிக்காலத்தில் பல முறை தம் பாடுகளைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசியபோது, தம் உயிர்ப்பையும் சேர்த்தேகுறிப்பிட்டார் (மாற் 8 : 31; 10 : 33; மத் 16 : 21; 17 : 22-23; 28 : 18-19). இதன் உட்கருத்து என்னவென்றால் இயேசுவின் உயிர்ப்புகடவுளின் நீதிக்கும் நிலையான தன்மைக்கும் ஒரு மாபெரும்அருங்குறி என்பதே.

2) இயேசுவின்உயிர்ப்பு, அவரது மீட்புப் பணிக்குக் கிடைத்த வெற்றி.தொடரும் இறையாட்சிப் பணிஒரு சிறப்பானஊன்றுகோல்.திருச்சபையின்வாழ்வுக்கு ஓர் ஆதாரம் (உரோ 10 : 9).

3) இயேசுவின்உயிர்ப்பு தூய ஆவியின்மாபெரும் செயல்.திருச்சபையில் உயிர்த்த இயேசுவின்ஆவிதொடர்ந்துசெயல்பட்டுக் கொண்டே இருக்கிறார் (கலா 5 : 16; 6 : 8;உரோ 6 : 8).

4. மக்கள் பாவங்களை விட்டுப் புதிய வாழ்வு மேற்கொள்ளவேண்டும் என்பதற்கு இயேசுவின் உயிர்ப்பு ஒரு சவால்(2 கொரி 5 : 17-21).

5. அனைவரும் ஒரு நாள் உயிர்ப்பர் என்பதற்கு இயேசுவின்உயிர்ப்பு ஒரு மாபெரும் முன்உறுதிப்பாடு (1 தெச 4 : 14; 1 கொரி15 : 12-19).

 

------------------------------------------
--------------------------
----------------
------
--