பன்னிரு இறைவாக்கினர்கள்

அருள்திரு எம். எஸ். மார்டின்
சேலம்

விவிலிய அன்பர்களே,

மக்கள் என்னை யார் எனச் சொலகிறார்கள்” என இயேசு கேட்டக்கேள்விக்கு சீடர்கள் பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களை (எசாயா,எரேமியா) நினைவு கூர்ந்து அவர்களின் பெயர்களை ஒப்பிட்டுச் சொல்வதைஇயேசுவின் வாழ்விலே பார்க்கிறோம் (காண்க. மாற் 8:27-29).

இஸ்ரயேலரின் வரலாற்றிலே மக்களை வழிநடத்திச் சென்ற தலைவர்கள்பலர் உண்டு. மறக்க முடியாத சிறந்த கதாப்பாத்திரங்களும் உண்டு. இவர்கள்அனைவரிலும் இதயத்தில் இடம் பிடித்து காலங்கள் கடந்தும் நினைவில்வாழும் கதாப்பாத்திரங்கள்தான் இறைவாக்கினர்கள் ஆகும். இறைவனின்குரலை, செய்தியை, அறிவுரைகளை காலத்தின் சூழலுக்கு ஏற்ப கடவுளிடமிருந்துபெற்று அரசர்களுக்கும் மக்களுக்கும் தனிநபர்களுக்கும் தந்தவர்கள் இந்தஇறைவாக்கினர்கள் ஆகும். வாழ்க்கையை நம்மைச் சுற்றி நடப்பதைஇறைவனின் பார்வையில் பார்ப்பதும் விழிப்புணர்வுடன் நடக்க வேண்டியதைஎடுத்துரைப்பதும் இவர்களின் அரும்பணியாகும். தூய்மை, நீதி, நம்பிக்கை,உண்மையான இறைப்பற்று . . . என்ற இவர்கள் தொட்ட துறைகள், பேசியதலைப்புகள் பல உண்டு.

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது என்னும் பழமொழிக்கேற்பகுறைவாகவே பேசியிருந்தாலும் சிறிய இறைவாக்கினர்களின் சிந்தனையும்செய்தியும் காரம் குறையாத சிந்தனைகளாகும்.இந்தச் சிறிய இறைவாக்கினர்கள் பன்னிருவரைப் பற்றியும் சுருக்கமாகவும்தெளிவாகவும் எழுதித்தந்த அருள்திரு எம்.எஸ். மார்டின் அடிகளார்அவர்களுக்கு நமது நன்றி உரித்தாகுக.நன்றி.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திரு முனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்

பொருளடக்கம்:
1. ஆமோஸ்
2. ஓசேயா
3. மீக்கா
4 . நாகூம்
5. அபக்கூக்கு
6. செப்பனியா
7. ஆகாய்
8. செக்கரியா
9. மலாக்கி
10. ஒபதியா
11. யோவேல்
12. யோனா

ஆமோஸ்

பன்னிரு இறைவாக்கினர்களில் முதலில் வருபவர். இவர் போதித்ததோடு நின்றுவிடாது, போதித்ததை எழுதியும் வைத்தார் #8220;நீதியின்இறைவாக்கினர்” என்று அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில் நிலவியஅநீதிகளைக் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

1. சமுதாயப் பின்னணி
எகிப்திய அடிமை வாழ்வு முடிந்து கானான் என்னும் வாக்களிக்கப்பட்ட நாட்டில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களுக்குத்தனிப்பட்ட அரசர் இல்லை. அவர்களின் முக்கியத் தொழில் விவசாயம்.சுற்றியுள்ள மக்களோடு உறவாடியபோது புதிய பண்பாடு, வழிபாட்டுமுறைகளைக் கற்றுக் கையாண்டனர். நாட்கள் செல்லச் செல்ல, மற்றநாட்டினரைப் போன்று தங்களுக்கும் அரசர் வேண்டுமென்று கேட்டனர்.முதலில் சாமுவேல் மறுத்தாலும் இறைவனின் ஆணைப்படி சவுல்,அதற்குப்பின் தாவீது, சாலமோன் என்று அரசர்களானார்கள். செல்வச்செழிப்புடன் வாழ்ந்த இவர்கள், மக்களின் கடின உழைப்பே அதற்கு காரணம்என்பதை மறந்தனர். அடிமைத்தனம் புகுந்தது. ஒரு சிலர்செல்வந்தர்களாகவும், பலர் பரம ஏழைகளாகவும் மாறினர். நீதி- நியாயம்மறைந்து, பணம் படைத்த பலசாலிக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி என்றுநீதி மன்றங்கள் தீர்ப்பிட்டன. இக்காலத்தில்தான் ஆமோஸ் இறைவாக்கினர்தோன்றினார். அநீதியைக் கண்டித்தார்.

2. வரலாற்றுப் பின்னணி
ஆமோஸ் இறைவாக்குரைக்கும்போது தென்நாடான யூதாவைஅரசன் உசியாவும் (783-742) வட நாடான இஸ்ரயேலை மன்னர் 2-ஆம்எரொபவாமும் (786-746) ஆண்டனர். அமைதி நிலவியது. செல்வம்கொழித்தது. அதே சமயத்தில் இஸ்ரயேல் எதிரி தமஸ்கு பலமிழந்து, அசீரியபலத்தை எதிர்த்துப் போரிட முடியாத நிலையில் வீழ்ச்சியுற்றது. அசீரியஅரசன் தமஸ்குவைத் தோற்கடித்துவிட்டுத் திரும்பிவிட்டான். இதனால்இஸ்ரயேல் அமைதியில் வாழ்ந்தது; பெரிய அரசாகவும் விளங்கிற்று (2அர14:28).

3. வாழ்க்கைக் குறிப்பு
இவர் தெக்கோவா என்ற ஊரிலிருந்து வருகிறார் (ஆமோ 1:1).எப்பொழுது தனது பணியை ஆரம்பித்தார் என்று தெளிவாகக் கூற இயலாது.#8220;நில நடுக்கம் உண்டாவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்” (1:2) என்றுகூறப்பட்டுள்ளது. எந்த நிலநடுக்கம் என்று குறிப்பிடப்படவில்லை. விவிலியஅறிஞர்களின் கருத்துப்படி கி.மு.760 ஆண்டு ஒரு நில நடுக்கம் நிகழ்ந்ததாகக்கருதப்படுகிறது (செக் 14:5). அதன்படிஇவர் தனது பணியை 762-இல்ஆரம்பித்திருக்க வேண்டும். இவரதுவாழ்க்கைக் குறிப்பு 7:10-17-இல்கொடுக்கப்பட்டுள்ளது. தென்னாட்டைச்சார்ந்தவர். வட நாட்டில் பெத்தேல் என்றஇடத்திலுள்ள கோவிலில் போதித்தார்.

முதலில் எருசலேமில் மட்டும்தான் கோவில் இருந்தது. நாடு பிரிந்தபின்னரும் ஆரம்பத்தில் மக்கள் எருசலேம்சென்று கொண்டிருந்தனர். சிலஆண்டுகளில் பெத்தேலில் வட நாட்டுஅரசர்கள் தங்களுக்கென ஒருகோவிலைக் கட்டிக்கொண்டனர்.ஆனால் ‘இது உண்மையான கோவில்அல்ல' என்று இறைவாக்கினர்கூறுகின்றார். கோவிலின் அர்ச்சகராகியஅமேட்சியா இவரைத் தடுக்கின்றார். வட நாட்டில் நுழையக்கூடாது என்றுதடை செய்கிறார். #8220;காட்சி காண்பவனே; இங்கிருந்து போய்விடு” என்றும்விரட்டுகிறார் (7:12-13). இவருக்குப் பதில் கூறும்போது, தனக்கு எப்படிஇறைவனின் அழைப்பு வந்ததென்று ஆமோஸ் கூறுகிறார்.இவர் இறைவாக்கினர் குழுவைச் சேர்ந்தவரல்லர். அந்த மரபில்தோன்றியவருமில்லை. ஆடு மாடுகளை மேய்ப்பவர், பணத்திற்காகஇறைவாக்கு உரைப்பவரல்லர். காட்டு அத்தி மரங்களைக் கண் காணிப்பவர்என்று தன்னைப்பற்றிக் கூறுகிறார். ஆடு மேய்ப்பவன் என்பதற்கு இங்கே‘சூடிளூநவ' என்று எபிரேயச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதற்குஆடுகளுக்குச் சொந்தமானவர் என்று பொருள்.

4. நூலின் அமைப்பு

1 : 1-2 முன்னுரை
1 : 3 - 2:5 மற்ற நாடுகளின் மீது தீர்ப்பு
2 : 6 - 16 இஸ்ரயேலுக்கு எதிராக வழங்கப்படும் முதல் தீர்ப்பு
3 : 1 - 6 : 14 இஸ்ரயேலின் பாவங்கள்
7 : 1 - 9 : 10 ஆமோசின் காட்சி
9 : 11-14 மீட்பின் செய்தி.

வழக்கமாக மற்ற இறைவாக்கினர்கள் முதலில் இஸ்ரயேலைத்தாக்கிப் பேசுவார்கள். அதற்குப்பின்தான் மற்ற நாடுகளின் மேல் சாடுவார்கள். #8220;நீங்கள் இஸ்ரயேல் மக்களைத் தாக்கியதால், கடவுள்உங்களைத் தண்டிக்கப்போகிறார்” என்று கூறுவார்கள். ஆனால் ஆமோஸ்இவர்களிலிருந்து மாறுபட்டு இருக்கின்றார்.ஆமோஸ் முதலில் மற்ற நாடுகளைத் திட்டுகிறார். பின் இஸ்ரயேல்நாட்டைப் பற்றிப் பேசுகிறார். இவருடைய எண்ணப்படி, இஸ்ரயேல் மக்கள்என்றோ, இஸ்ரயேல் அரசு என்றோ எவ்வித சலுகையும் கிடையாது என்றுஆணித்தரமாக அடித்துக் கூறுகிறார்.மேலும், ஆமோஸ் மற்ற நாடுகளைத் திட்டுவது, அவர்கள்இஸ்ரயேல் மக்கள் மேல் படையெடுத்து வந்ததற்காக அல்ல. யாவேக்கடவுளை மதிக்காததற்கல்ல, மாறாக அவர்கள் சமூகத்தின் அடிப்படைகுணநலத்திலிருந்து, சமுதாய நீதியிலிருந்து மாறுபட்டிருப்பதால்தான்(2 அர8:12). யாவே எல்லோருக்கும் கடவுள் ஆகையால், படைப்புகள-னைத்தையும் படைத்து, காத்து வருவதால் அவர்களைக் கண்டிக்கிறார்.

5. ஆமோசின் போதனைகள்
இறைவாக்கினர் ஆமோஸ், ஏற்கனவே நாம் கூறியது போல், நீதியின்இறைவாக்கினர். இஸ்ரயேல் மக்கள் எப்படி கடவுளின் அன்பை, கடவுளின்கட்டளையை மீறிப் பாவங்கள் செய்கின்றனர் என்று கூறுகிறார். இவர்களின்பாவச் செயல்களினால், நீதி எந்த அளவுக்குத் தாழ்ந்துவிட்டது என்றுஅன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சித்திரிப்பதின் மூலம் எடுத்துக்காட்டுகின்றார். அவர்களுடைய நீதிமன்றங்களில் நீதி நிலைநாட்டப்படுவதில்லை. அடிமைகளைக் கொடுமைப்படுத்துகின்றனர். வியாபாரத்தில்விளையாடுகின்றனர். ஏன், அவர்கள் இறைவனுடைய திருநாட்கள்எப்போது முடியும், நாம் எப்போது வேலையை ஆரம்பிக்கலாம் என்றஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால் இதே நேரத்தில் அவர்கள்பக்தியுள்ளவர்கள். கடவுளின் திருநாட்களைப் பரிசுத்தமாய் அனுசரிக்கமறப்பதில்லை. எனவேதான் ஆமோஸ் கூறுகிறார், "உங்கள் திரு விழாக்களை நான் வெறுத்து அருவருக்கிறேன்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங் களில்எனக்கு விருப்பமே இல்லை” என்று (5:21). எளியவர்கள், காலில் அணியப்படும் செருப்பை விடவும் தரம் தாழ்த்தப்பட்டுவிட்டார்கள். அவர்கள் ஒரு சோடிசெருப்புக்காக விற்கப்படுகிறார்கள். தந்தையும், மகனும் ஒரே அடிமைப்பெண்ணைத் தங்கள் வைப்பாட்டியாக வைத்துக் கொள்கிறார்கள்(2:6-8).விதிமுறைப்படி, மதிக்கப்பட வேண்டும் (இச 27:30; விப 21:18). ஆனால்இங்கு, எல்லாம் தலைகீழாக நடைபெறுகிறது. தங்களிடம் அடைமானம்வைத்த ஏழைகளின் பொருளை (முக்கியமாக அடிமைகளின்மேலாடைகளை) அன்று மாலையே அவர்களிடம் (அடிமைகள் பணத்தைத்திருப்பி கொடுக்காவிட்டாலும்), திரும்பிக் கொடுத்துவிட வேண்டும் (விப 22 :26). ஆனால், இவர்கள் அதைத் திருப்பிக் கொடுப்பதற்குப் பதிலாக, தங்களின்உடமையாக்கிக் கொள்கிறார்கள்.

2:9-12கடவுள் அவர்களுக்கு என்னவெல்லாமோ செய்துள்ளார். அவர்கள்மேல் படையெடுத்து வந்த சக்திவாய்ந்த அமோரியர்களை அழித்தார்.எகிப்திலிருந்து விடுவித்து, 40 ஆண்டுகள் பாலைவனத்தில் நடத்திவந்துஇறுதியில் வாக்களித்த நாட்டையும் கொடுத்தார். இவைகளையெல்லாம்மக்கள் பெருமையாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு இறைவாக்கு உரைக்க,இறைவாக்கினர்கள், நாசரேயர்களைஅனுப்பினார். ஆனால் மக்கள் இவர்களைஏற்றுக் கொள்ள வில்லை. ஆகஇறைவாக்கினர்களை ஏற்றுக் கொள்ளாதது,இஸ்ரயேல் செய்த மற்றொரு குற்றம்.

3:1-2இஸ்ரயேல் மக்கள், தாங்கள்கடவுளின் மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்டமக்கள், இறைவனோடு உடன்படிக்கைசெய்து கொண்ட மக்கள் என்றும், அதனால்தங்களைக் கடவுள் தண்டிக்கமாட்டார் என்றஎண்ணத்தோடு வாழ்ந்து வந்தார்கள். ஆனால்இங்கே ஆமோஸ் கடவுளின் எண்ணத்தைவிளக்குகிறார். #8220;உலகத்திலுள்ள எல்லாமக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான்நான் சிறப்பாக அறிந்து கொண்டேன்; ஆதலால் உங்கள் தீச்செயல்அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்” (3:2). அவர்கள்தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக இருப்பதால்தான், இறைவன் அவர்களைஅவர்கள் செய்கிற அக்கிரமங்கள் அனைத்திற்காகவும் தண்டிக்கப் போகிறார்.

4:4-5மனம் மாறாமல் பலிகளை மட்டும் செலுத்துவதால் ஒரு பயனும்இல்லை, என்று அடித்துக் கூறுகிறார். பலிகள் பாவங்களை அதிகமாக்குகின்றன என்று ஆமோஸ் கூறுகிறார். பெத்தேல், கில்கால் (டீநவாநட யனெ புடைபயட) என்ற இரு இடங்களிலும் தொடக்கத்திலிருந்தே கோவில் கள்இருந்து வந்தன. பெத்தேல் என்ற இடத்தில் தான் யாக்கோபு கனவு கண்டார்.இஸ்ரயேல் மக்கள் யோர்தானைக் கடந்து, முதலில் அவர்கள் அடைந்த இடம்கில்கால் (புடைபயட). இங்கு தான் அவர்கள் முதல் கடத்தல் (பாஸ்கா)விழாவைக் கொண்டாடினார்கள்.

எப்போதுமே மக்கள் இந்த இரண்டுஇடங்களுக்கும் வந்து கடவுளுக்கு பலிகளைச்செலுத்துவது வழக்கம். அதுபோன்றுதான்ஆமோஸ் காலத்திலும் மக்கள் பலி செலுத்தினர்,பலிகளைவிட, உள்ளத்தை இறைவன்விரும்புகிறபடியால், அவர்கள் உள்ளம் மாறாமல்,வெறும் பலிகளை மட்டும் செலுத்த பெத்தேல்,கில்காலுக்கு வருவதால் அவர்கள் பாவத்தையேகட்டிக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார்ஆமோஸ்.

5:10-13பொது இடங்களில், அதாவது நீதி வழங்கப்படும் இடங்களில், நீதிவழங்கப்பட வில்லை. நீதிக்காகக் குரல் கொடுப் பவனை, ஏழைகளுக்காகப்பரிந்து பேசுபவனைத் துன்புறுத்துகிறார்கள். ஏழைகளிடமிருந்து பெற்றபணத்தில் பெரிய மாளிகைகள் கட்டி, தங்கக் கட்டில்களில் வாழ்க்கையைஅனுபவிக்கிறார்கள். ஏழைகளிடமிருந்து கையூட்டுப் பெறவும்மறப்பதில்லை. நீதி பணத்திற்கு விலைபோகிறது.

5:21-24இறை வழிபாட்டுக்குத் திருவிழாக்கள், பலிகள், பாடல்கள், இசைகள்முக்கியமே. எல்லா மதங்களுமே இவைகளை ஏற்றுக் கொள்கின்றன. ஏன்யாவே கடவுளும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து இவைகளைக் கேட்டுப்பெற்றார். தனக்காகக் கோவில் ஒன்றை அமைக்கச் சொன்னார். பலவகையான பலிகளை, தகனப்பலி, பாவப்பரிகாரப்பலி, சமாதானப்பலி, (லேவி1:1- 7 :38) ஒப்புக்கொடுக்கச் சொன்னார். இசை அமைத்து தன்னைப்போற்றச் சொன்னார்.ஆனால் இங்கே, இஸ்ரயேலின் பலிகள் வேண்டாம், இசைகள்வேண்டாம், திருவிழாக்கள் வேண்டாம் என்று கூறுகிறார். மேலும்#8220;இஸ்ரயேல் வீட்டாரே, பாலைவனத்தில் இருந்த அந்த நாற்பதாண்டுகளில்பலிகளும், காணிக்கைகளும் நமக்குக் கொடுத்தீர்களோ?” (5:25) என்றுகேட்கின்றார். அதாவது, இந்தப் பலிகளெல்லாம் மக்களைக் கடவுளிடம்எடுத்துச் செல்வதாக அமைய வேண்டும். அதற்கு இவைகள் பயன்படவில்லையென்றால், வெளிக் கொண்டாட்டங்களெல்லாம், வீண் ஆடம்பரமாகவே அமைந்துவிடும். சுருக்கமாகக் கூறின், இறைவன் எதிர்பார்ப்பதுஇந்த வெளிக் கொண்டாட்டங்களையல்ல, மாறாக நல்ல வாழ்க்கையே. #8220;நீதிவெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்துவருக”(5:24) என்கிறார் இறைவாக்கினர்.

8:4-6இஸ்ரயேல் மக்கள் வாழ்வில் அமாவாசை ஒரு புனித நாள் ( 2 அர4:25; எசா 1:15; ஓசே 2:11). அத்தோடு ஓய்வு நாளாகவும் கொண்டாடப்பட்டுவந்தது. (விப 25; 12 : 16 ). இப்போது பெரிய பெரிய வியாபாரிகள், இந்தநாட்களை அனுசரிக்கத் தங்களுடைய வியாபாரங்களையெல்லாம்நிறுத்திவிட்டு, செல்கி றார்கள். ஆனால் அங்கு சென்றாலும், அவர்களுடையஉள்ளங்களில் இறைவனைத் தியானிப்பதற்குப் பதிலாக அந்த இழப்பைப்பற்றி நினைத்து மனம் வருந்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த ஓய்வு நாள்எப்போது முடியும், எப்போது நம் வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிக்கலாம்என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் வியாபா ரத்தில்,கள்ளத் தராசுகளைப் பயன்படுத்துகின்றனர். வாங்குவதற்கு ஒரு தராசையும்,விற்பதற்கு ஒரு தராசையும் பயன்படுத்துகிறார்கள்.

6. நீதியும், நேர்மையும் (துரளவiஉந யனெ சiபாவநழரளநௌள)
ஆமோசின் அடிப்படைப் போதனை நீதி, நேர்மை ஆகும். எனவேதான் அவர் நீதியின் இறைவாக்கினர் என்று அழைக்கப்படுகின்றார்.சமுதாயத்தில் நிகழும் பல நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டி, அங்கெல்லாம்நீதியும், நேர்மையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று எடுத்துக் கூறுகிறார்.இவர் (ஆமோஸ்) நீதி, நேர்மை என்னும் இரண்டையும் சேர்த்தேஉபயோகிக்கிறார் (ஆமோஸ் 5 : 7, 14,15,24; 6 : 12).

நீதி, நேர்மை என்பது ஒரு முக்கியமான படிப்பினை. இதுவிவிலியத்தின் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருவதை நாம் பார்க்கிறோம்(எசா 1 : 21; 5 : 7; 28 : 7).ஆரம்ப காலங்களில், இந்த நீதி, நேர்மையானது, மக்களை ஆண்டுவந்த அரசர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஓர் அரசன் நல்லவனா,அல்லது கெட்டவனா என்பது அரசனுடைய நீதியான, நேர்மையான ஆட்சிமுறையிலிருந்து பார்க்கப்பட்டது ( திபா 72: 1-4,12-14).நேர்மை என்பது ஏற்கனவே வரையறுக்கப்பட்ட ஒரு நிலையானவாழ்வை வாழ்வது. இது உறவு முறையிலும் அமைந்துள்ளது. இந்த உறவுமனிதனுக்கும், கடவுளுக்குமிடையே இருக்கலாம். அல்லது மனிதனுக்கும்,மனிதனுக்குமிடையே இருக்கலாம்; அல்லது மனிதனுக்கும், பொருட்கள்,விதிமுறைகள், வாழ்க்கை முறைகள், இவைகளுக்கும் இடையேயும்இருக்கலாம் (ஆiளியவ - நீதி).தனி மனிதன் ஒருவன் எப்போது தன் கடமைகளைத் தவறாதுகடைப்பிடிக்கிறானோ, அப்போது அவன் நேர்மையுடையவன் என்று அழைக்கப்படுகிறான் (எசா58:2). இறைவன் எப்போதும் நீதியுடையவராகஇருக்கின்றார். ஏனெனில் அவர் தன் உடன்படிக்கையை மீறுவதேகிடையாது. எப்போதும் அதைக் கடைப்பிடிக்கிறார் ( செப்பனியா 3:5).

7. முடிவு நெருங்கிவிட்டது

2 : 13 - நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன்.
3 : 11 - பகைவன் ஒருவன் வந்து நாட்டை சூழ்ந்துக்கொள்வான்.
5 : 3 - இஸ்ரயேல் வீட்டாரின் கதி இதுவே (அடிமைத்தனம்).
6 : 4 - ஐயோகேடு (சண்டைகள் வரும்).
7 : 11 - அரசனும் மடிவான்.
8 : 2 - என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது.
9 : 1 - ஒருவர் கூட தப்பி பிழைக்கமாட்டார்.

8. முடிவுரை
மக்களின் அநீதியைப் பற்றி பேசிய ஆமோஸ், அவர்கள் அவர்வார்த்தையைக் கேட்பதற்கோ தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்வதற்கோ தயாராக இல்லை. ஆதலால், முடிவின் காலம்நெருங்கிவிட்டது என்று கூறுகிறார். அவ்வாறே நடந்தது!

 

2. ஒசேயா

1. முன்னுரை
ஆமோஸ் அறிவித்துச் சென்ற பயங்கரமான முடிவு ஓசேயாவின்காலத்தில்தான் தொடங்கியது. இவரை ஆமோஸ் இறைவாக்குப் பணிக்குவாரிசு என அழைக்கலாம். இவர் சுமார் கி.மு. 742 - 715 காலத்தில்இஸ்ரயேலின் குழப்பமான ஆட்சி நிலையில் போதித்தார். இஸ்ரயேல் நாடுஅழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இவர் போதித்தார்.சமாரியாவின் வீழ்ச்சியைப் பற்றிக் கூறுகிறார். ஆனால் அப்போது அவர்அங்கு இல்லை (13 : 16).

அவர் வடநாட்டைச் சார்ந்தவர். தென்நாட்டைப் பற்றி ஏதும்குறிப்பிடவில்லை. எருசலேமைப் பற்றிக்கூட அவர் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் பெத்தேல், கில்கால் போன்ற நகரங்களைப் பற்றியசெய்திகளைத் தெளிவாகத் தருகின்றார். இவைகள் வட நாட்டில்அமைந்திருந்தவை. நாடு மிகவும் பிளவுபட்டுக் குழப்பமடைந்திருந்த காலம்.உலகச் செல்வத்தில் தங்களையே பறிகொடுத்த செல்வர்கள் ஆமோசின்போதனையைக் கேட்கவில்லை. அதனால் ஒழுக்கம், நீதி, உடன்படிக்கையின் பிரமாணிக்கம் ஆகியவை சீர்குலைந்தன. அதே சமயத்தில்வடநாட்டில் நிலையான அரசு இல்லை. அரசர்கள் அடிக்கடி கொல்லப்பட்டனர். நாட்டில் அமைதியற்ற நிலை உருவாயிற்று.

2. நூலை எழுதியது யார்?
இந்நூலை இறைவாக்கினர் ஓசேயா எழுதவில்லை. அறிஞர்களின்கருத்துப்படி இது தென்னாட்டில் எழுதப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும்வடநாட்டில் இறைவாக்கு உரைத்த போதிலும், இறுதியில் நிலைமைமோசமானதால் தன்னையே காப்பாற்றிக் கொள்ளத் தென்னாட்டிற்குஓடுகிறார். அங்கு இவருக்குச் சீடர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் இந்தப்புத்தகத்தை எழுதியிருக்கக்கூடும். அவரே தன் எழுத்தில் முத்திரையைப்பதித்துள்ளார். அதாவது யூதாவை ஆண்ட அரசர்களின் பெயர்களைத்தெளிவாகத் தந்துள்ளார். ஓசேயா இறைவாக்குரைத்துக் கொண்டி ருந்தகாலத்தில் தென்னாட்டை நான்கு அரசர்கள் ஒருவர்பின் ஒருவராகஆண்டனர். உசியா(ருணணiயா) (783-742) யோத்தாம் (துழயவாயஅ) (742-735)ஆகாசு (யுhயண) (735-715), எசேக்கியா (ர்நணநமiயா) (715-687) இவர்களின்ஆட்சிக் காலத்தில், 742-735 வரை போதித்திருக்கக்கூடும்.

3. வரலாற்றுப் பின்னணி
2-ஆம் எரொபவாம் (துநசழடியஅ) (786-746) என்ற வடநாட்டின்ஒரேயொரு அரசன் பெயரை மட்டும் ஒசேயா குறிப்பிட்டுள்ளார். இவ்வரசன்காலத்தில் நாட்டில் அமைதி நிலவிற்று. செல்வச் செழிப்பும் மிகுந்திருந்தது(2 : 9). ஆனால் அரசனுடைய இறப்பிற்குப் பிறகு நாடு அனைத்தையும்இழந்தது. நாட்டில் அமைதி இல்லை. பிற நாடுகளின் தாக்குதல்கள்அதிகரித்தன. உள்நாட்டு கலகமும் அவ்வப்போது நடை பெற்றது. பதவிஆசைப்பிடித்து, பல அரசர்கள் கொல்லப்பட்டு ஆட்சி மாறிக்கொண்டேஇருந்தது. இந்நிலையில் அசீரிய மன்னன் திக்ளத் பிளேசர்(வுiபாடயவா Pடைநணநச)(744-727), சக்தி வாய்ந்தவன், இஸ்ரயேல் மீது படையெடுத்து நாட்டைதோற்கடித்தான்.

யூதாவின் அரசர் திக்ளத்பிளேசரின் உதவியை நாடவே திக்ளத்பிளேசர் போர் தொடுத்து 733 ஆம் ஆண்டு இஸ்ரயேலையும், சீரியாவையும்தோற்கடித்தார். இஸ்ரயேலின் தலைநகரான சமாரியா, எப்ரேம் மலைப்பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளைத் தனதாக்கிக் கொண்டு திரும்பிச் சென்றுவிட்டான். அரசன் பெக்கா கொலை செய்யப்பட்டான். அதன் பிறகு ஒசேயா(ர்ழளாநய 732-721) அரசரானார். அசீரிய மன்னன் சொற்படி கேட்டுநடந்தான். எனவே நாட்டில் அமைதி ஏற்பட்டது. ஆனால் இது நிலையானஅமைதியல்ல. அசீரியாவின் பிடியிலிருந்து விடுபட விரும்பிய மன்னன்எகிப்து அரசனின் உதவியை நாடினான். அதே வேளையில் திக்ளத்பிளேசர்இறந்து சால்மனசர் (ளூயடஅயயேணநச 726 -722) அசீரியாவின் அரசரானார்.ஒசேயாவின் திட்டத்தை அறிந்து, 722-இல் இஸ்ரயேல் மீது படையெடுத்துநாடு முழுவதையும் அழித்தான். எனவே 722 ஆம் ஆண்டு சமாரியா வீழ்ந்தது.

4. இறைவாக்கினர் ஒசேயாவின் திருமணமும் அதன் உட்பொருளும்
யாவே, ஓசேயாவை ஒரு விலைமகளை திருமணம் செய்து கொள்ளச்சொல்கிறார். ஓசேயாவும் இறைவார்த்தைக்குப் பணிந்து கோமேர் என்றவிலைமகளை திருமணம் செய்து தன் மனைவியாக ஏற்றுக் கொள்கிறார்.யூத மக்களிடையே விலைமகளை மணப்பது என்பது கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. ஆனால் இந்த இளைஞன் ஓசேயா, கடவுளின்கட்டளைக்குப் பணிந்து, விலைமகளை மணந்து கொள்கிறார். இஸ்ரயேலர்இவரை உற்று நோக்குகின்றனர். இச்செயலின் வழியாக ஆண்டவர்அவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறார். இவருடைய திருமணம் ஓர் அடையாளச்செயலாக அமைகிறது (ளுலஅடி0டiஉ யுஉவழைn)

விலைமகளை திருமணம் செய்து கொள்ளும் ஒசாயா யாவேக்கடவுளை குறிக்கிறது. விலைமகளாகிய கோமேர் இஸ்ரயேல் மக்களைக்குறிக்கிறாள். எப்படி கோமேர் வேசித்தனம் செய்தாளோ அதைப் போன்று,இஸ்ரயேல் மக்கள், தங்கள் கடவுளாகிய யாவேயை மறந்து, ‘பாகால்' என்றகடவுளிடம் சென்றதால் வேசித்தனம் செய்தார்கள். கோமேர் ஓசேயாவுக்குமனைவியாகி குழந்தைகள் பெற்ற பின் மீண்டும் தன் வேசித் தொழிலுக்குச்செல்கிறாள். இஸ்ரயேல் மக்கள் பாவம் செய்தார்கள். யாவே அவர்களைமன்னித்து தன் மக்களாக ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர்கள் மீண்டும்,மீண்டும் யாவேயை மறந்து பாகால் (டீயயட) என்ற அசீரியத் தெய்வத்திடமேசென்றார்கள். இதையே ஓசேயா - கோமேர் திருமணம் உணர்த்திற்று.

இறைவாக்கினர்களில் பலர் தாங்கள் மக்களுக்குச் சொல்லவேண்டிய செய்திகளை, தங்களின் அடையாளச் செயல்களை (ளுலஅடி0டiஉ யுஉவழைn) வழியாகக் காட்டியுள்ளார்கள். உதாரணமாக எரேமியா,புதுப்பானையைத் தூக்கி வந்து பொதுவான இடத்தில் போட்டு உடைக்கிறார்;பெரிய நுகத்தடி ஒன்றை மக்கள் காணத் தன் தோள் மேல் சுமந்து செல்கிறார்( எரேமி 27:1). இதே போன்றுதான் எசேக்கியலும் ஓர் அடையாளச் செயல்செய்கிறார். தன் தலையிலுள்ள முடிகளை சீவியெடுத்து (மழித்து எடுத்து)நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று எறிகிறார். இதன் வழியாக நாட்டில்நடக்கவிருக்கும் அழிவை உணர்த்துகிறார்கள் இந்த இரண்டுஇறைவாக்கினர்களும். இதே போன்றுதான் ஓசேயாவும் ஒருவிலைமகளைத் திருமணம் செய்து கொண்டு, இஸ்ரயேல் மக்களுக்குஉண்மையை விளக்குகிறார்.

இறைவாக்கினர்களின் இப்படிப்பட்ட அடையாளச் செயல்களில்மூன்று பகுதிகள் அடங்கியிருப்பதை நாம் பார்க்கலாம்.

1) வேறுபட்ட, வித்தியாசமான செயலைச் செய்ய இறைவனிடமிருந்து கட்டளை வருதல் :
2) அந்த வேறுபட்ட, வித்தியாசமான செயல் என்ன பொருளைத்தாங்கி நிற்கிறது, என்ன பொருளை உணர்த்துகிறது என்று விளக்குதல்.
3) இறைக்கட்டளைகளுக்குப் பணிந்து, அக்காரியத்தை அப்படியேசெய்தல்.இந்த மூன்று கருத்துக்களும், ஓசேயாவின் செயலில்அமைந்துள்ளதை நாம் தெளிவாகக் காணமுடியும் (1 : 2-3).

5. கனானேய பழக்க வழக்கமும், இஸ்ரயேலும்
கனானேய மக்கள் பாகால் (டீயயட) என்ற கடவுளை தெய்வமாகவழிபட்டு வந்தனர். அவர்களின் மதத்தில் ஓர் எண்ணம் உண்டு. அதாவது,அவர்கள் பாகால் கடவுளை ஆணாகவும், நிலத்தைப் (பூமியை) பெண்ணாகவும் கருதி வந்தனர். கடவுள் மழையின் வடிவில் இந்த மண்ணிற்கு வந்துஅதோடு உடலுறவு கொள்கிறார். இந்தக் கடவுள் - நிலம் உடலுறவின்பயனாகப் பிறப்பதே இப்பூமியில் முளைக்கும் புல்பூண்டுகள், மரம், செடி,கொடிகள் போன்றவை. இஸ்ரயேல் மக்கள் யாவே ஒருவரே உண்மையானகடவுள், அவரே எல்லாவற்றையும் படைத்துக் காத்து வருகின்றார் என்பதைமறந்து இந்தக் கனானேய பழக்க வழக்கத்தில் ஈடுபட்டு, நல்ல மழை பொழியவேண்டுமென்று யாவேயை விட்டுவிட்டு, பாகால் தெய்வத்திடம் சென்றுவேண்டிக் கொள்கின்றனர்.

மேலும் ஒரு பழக்கம் கனானேய மக்களிடம் உண்டு. ஒவ்வொருகோவிலிலும் தேவதாசிகளாக இளம் பெண்கள் இருப்பார்கள். ஆண்கள்இந்தப் பெண்களோடு உடலுறவு கொள்வார்கள்.இந்த உடலுறவுகளின் வழியாக அவர்கள் பாகால்கடவுளை நிறைவுப்படுத்துகிறார்கள் என்றஎண்ணம் அவர்களிடையே உண்டு. திருமணம்ஆனபின் தங்களுக்குக் குழந்தைப் பேறுகிடைப்பதற்காக அங்கே வருகிற ஆண்களோடுஉடலுறவு கொள்வார்கள். இச்செயலின் மூலம்,அவர்கள் பாகால் தெய்வத்தோடு உடலுறவுகொள்வதாகக் கருதி வந்தனர்.இந்தக் கொள்கைகளைப் பின்பற்றி,இஸ்ரயேல் மக்களும் தேவதாசிகளைஏற்படுத்தினர். பாலஸ்தீன நாடு ஒரு வறண்ட பூமி.அவர்களுக்கு மழை மிக மிக முக்கியம். மழைக்காக அவர்கள் எதையும்செய்யத் தயாராயிருந்தார்கள்.

ஓசேயா திருமணம் செய்து கொண்ட கோமேரும், இவ்வாறாக ஒருகோவில் தேவதாசியாக இருக்கக்கூடும் என்று ஒரு சில வல்லுநர்கள்கருதுகின்றார்கள். பணத்திற்காக வேசித் தொழில் செய்யவில்லையானாலும், குறைந்தது ஒரு தேவதாசியாக இருந்திருக்கக் கூடும்.

6. ஓசேயாவின் குழந்தைகள்
ஓசேயா கோமேரை மணந்து, முதல் மகனைப் பெற்றெடுக்கிறார்.அந்தக் குழந்தைக்கு யாவே ‘ 'இஸ்ரியேல்' என்று பெயரிடச் சொல்கிறார்.அவ்வாறே அவரும் அதே பெயரை அக்குழந்தைக்கு இடுகிறார். இந்தப்பெயரானது இஸ்ரயேல் மக்களுக்கு நடக்கவிருக்கும் ஒரு பரிதாப நிகழ்ச்சியைஉணர்த்துகிறது. அதாவது இஸ்ரியேலின் இரத்தப் பழிக்காக ஏகூவின்குடும்பத்தைக் கடவுள் பழிவாங்கப் போகிறார்(1.4 காண்: 2 அரசர் 9:10).இது கி.மு.733 - ஆம் ஆண்டு திக்ளத்பிளேசர் இஸ்ரயேலையும்,சீரியாவையும் தோற்கடிக்கும்போது நிறைவேறியது. இந்தச் சண்டை‘இஸ்ரியேல்' என்ற இடத்தில்தான் நடைபெற்றது.

கோமேர் கருவுற்று இரண்டாவது ஒரு பெண் குழந்தையைப்பெற்றெடுக்கிறார். அவளுக்கு ‘ 'லே ருகாமா -கருணை பெறாதவள்' என்றுபெயரிடச் சொல்கிறார் இறைவன். இதன் வழியாக இறைவன் இனிமேல்அழைக்கும்போதெல்லாம், அவர்கள் செய்த பாவச்செயல்களும், அதன்விளைவாக அவர்கள் இறை அன்பை இழந்ததும் ஞாபகம் வரும் (1:6-7).மீண்டும் கோமேர் கருவுற்று, ஓர் ஆண் மகனைப் பெற்றெடுக்கிறாள்.இவனுக்கு '‘லே அம்மீ - என் மக்கள் அல்லர்' என்று பெயர் சூட்ட இறைவன்பணிக்கின்றார். அதாவது உடன்படிக்கை மறக்கப்பட்டுவிட்டது என்றுமறைமுகமாகக் கூறுகிறார். ‘என் மக்கள்' என்பது உடன்படிக்கையின்விளைவாக, பயனாக வந்தது ( விப 6:7; லேவி 26:12; இச 26:17; 2 சாமு7:24; எரே 7:23; 11 ;4). இப்போது ‘என் மக்கள் அல்லர்' என்று பெயரிடுவதன்மூலம் அவர்களோடு செய்திருந்த உடன்படிக்கையை மறந்துவிட்டதைகடவுள் சுட்டிக்காட்டுகிறார்.

நீதிமன்றத்தில் வாதாடும் கணவன், மனைவியின் கதைபோல்அமைந்திருக்கிறது 2-வது அதிகாரம் . யாவே கணவனாக நீதிமன்றத்தில்வாதாடுகிறார். தன் மனைவி (இஸ்ரயேலர்) செய்த பாவச் செயல்களைஎடுத்துக் கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் அவர் கடந்த காலத்தில்எவ்வளவு நன்மை செய்துள்ளார் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.இப்போதும் அவர் நீதிமன்றத்தில் வாதாட வந்திருப்பது திருமண உறவைமுறிப்பதற்கல்ல் மாறாக அவள் மனம் மாறி, மீண்டும் தனக்கு ஒரு நல்லமனைவியாக வர வேண்டுமென்று வேண்டுகிறார்; இறைஞ்சுகின்றார். அவர்கூறும் குறைகள் எல்லாம், அவள் அழிந்து போக வேண்டும் என்பதற்கல்ல.அவள் மீண்டும் மனம் மாற வேண்டும் என்பதற்காகவே.

அவள் மனம் மாறி வரும்போது இஸ்ரயேலின் மன்றாட்டைஏற்பதாகவும், ‘அன்பு பெறாதவள்' மேல் ‘அம்மீ - அன்பு கூர்வதாகவும்' ‘எம்மக்களல்லர்' என்பதை ‘ருகாமா- எம் மக்கள்' என்று அழைப்பதாகவும்வாக்குக் கொடுக்கிறார் (2:22-24). மீண்டும் அவர்களோடு புதியஉடன்படிக்கை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்.

7. இறைவாக்கினர் ஓசேயாவின் போதனைகள்
4:1-3.உண்மை, பரிவு, கடவுளை அறியும் அறிவு ஆகிய இம்மூன்றும் ஒருமனிதனுடைய வாழ்வில் மிக மிக முக்கியம். இம்மூன்றும் இருந்தால்தான்ஒருவன் கடவுளை அன்பு செய்ய முடியும். இப்போது இஸ்ரயேல் மக்கள்கடவுளிடமிருந்து வெகு தூரம் சென்றுள்ளதற்குக் காரணம், அவர்களிடையேஇம்மூன்றில் ஒன்றுக்கூடக் காணப்படவில்லை.உண்மை என்பது ஒரு மனிதனின் வார்த்தையில் காணப்படவேண்டும். அவன் கூறும் வார்த்தை மற்றவர்களால் நம்பக்கூடியதாகஇருக்க வேண்டும். அதன்படி அவன் நடக்க வேண்டும். வார்த்தையில்உண்மையும், நடத்தையில் நேர்மையும் இருக்க வேண்டும். இவைகளைத்தான் எபிரேய சொல் ‘'எமத்' (ந"அநவ) குறிக்கிறது.ஹெசத் 'ர்நளநன' என்ற எபிரேயச் சொல் பரிவைக் குறிக்கிறது. ஒருசிலர் இந்த வார்த்தையை, நிலையான அன்பு, பக்தி என்றும் மொழிபெயர்ப்பார்கள். பரிவு என்பது ஒருவருக்கும் மற்றவருக்கு மிடையே நிலவும்உறவைப் பலப்படுத்த உதவுகிறது. இந்த உறவு எந்த வகையில் வந்ததாகவும்இருக்கலாம்; அதாவது பிறப்பால், சமுதாய அமைப்பால்,அல்லது ஒருவர் தானாகச் சென்று மற்றொருவரோடுஉடன்படிக்கை செய்து கொண்டதன் மூலமும் வரலாம்.எனவே ஒவ்வொருவரும் மற்றவர்களின் மேல் பரிவுகாட்ட வேண்டும். யாவே கடவுள் இதைத்தான்இஸ்ரயேல் மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

ஓசேயா மிகவும் வற்புறுத்திக் கூறுவது கடவுள்அறியும் அறிவைப் பற்றியே (4:1;6:6; 8:2; 2:20; 5:4; 6:3;2:8; 11:3). இது எபிரேய மொழியில் ‘னயயவ' என்றழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு இறைவனைப் பற்றியஅறிவானது இன்றியமையாதது.இஸ்ரயேல் மக்களின் பெரிய குற்றம் கடவுளை மறந்ததே. அவர்கள்தங்கள் கடவுளை மறந்து, தங்கள் கடவுளைப் பற்றிய அறிவை இழந்து, பிறகடவுளை நாடிச்செல்கின்றனர். கடவுளை அறியும் அறிவு என்பதுஅவருடைய செயல்களையும், அவருடைய விருப்பத்தையும் அறிதலே;

இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளை அவரின் செயலைக் கொண்டேஅறிந்து வந்தார்கள். அவர்களின் விசுவாசமானது அறிவுப் பூர்வமாககணக்கிடப்பட்டதல்ல. மாறாக இறைவனின் செயலைத் தங்கள் வாழ்வில்உணர்ந்தார்கள், அனுபவித்தார்கள், குறிப்பாக எகிப்தில் இறைவன்அவர்களுக்குச் செய்த செயல்கள், 40 ஆண்டுகள் பாலைவனத்தில்கண்ணின் மணிபோல பாதுகாத்தது, வாக்களிக்கப்பட்ட நாட்டில்குடியேற்றியது போன்றவை . . .ஆனால் இப்போது, இவற்றையெல்லாம் மறந்து கடவுளையே மறந்துவிட்டார்கள். எனவேதான் ஓசேயா அவர்களுக்கு நினைவு படுத்துகிறார்.

6:6தகனப்பலிகள் நமக்கு வேண்டியதில்லை, கடவுளை அறியும்அறிவையே நாம் விரும்புகிறோம்.இங்கு ஓசேயா ஏறக்குறைய ஆமோசைப் பின்பற்றுகிறார். அதாவதுபலிகளை விட உள்ளமும், அதன் தூய்மையுமே முக்கியம். பலிகள்உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். வெறும்வெளி ஆடம்பரப் பலிகளை கடவுள் விரும்புவதில்லை. அவர்கள்அவரைப்பற்றி அறியவும் அதன்படி நடக்கவும், வாழவும் வேண்டும்என்றுதான் அவர் விரும்புகிறார்..

8. முடிவுரை
இறைவாக்கினர் ஓசேயா கடவுளின் மட்டற்ற அன்பைப்பற்றிப்பேசுகிறார். இறைவனின் அன்பு எவ்வளவு மேலானது என்பதை அழகாகத்தருகிறார். அதுவும் முக்கியமாக #8220; நான் இறைவன் வெறும் மனிதன் அல்ல்நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர், ஆதலால், நான் நகருக்கு எதிராகவரமாட்டேன்” (11:9) என்று கூறும்போது இறைவனின் அன்பு பொங்கிவழிவதை நாம் பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டிலே மிகவும் முக்கியமானபகுதிகளில் ஒன்று 11- ஆம் அதிகாரம். மக்கள் தன்னை விட்டு வெகுதூரம்செல்கிறார்களே என்று கடவுள் அங்கலாய்க்கிறார். அவர்களைத்திருத்துவேன், அழிக்கமாட்டேன் என்று கூறுகிறார். ஆக, ஓசேயாஇறைவாக்கினர் ‘ அன்பின் இறைவாக்கினர்' என்று அழைக்கப்படுகிறார்.

 

3. மீக்கா

1. முன்னுரை
இறைவாக்கினர் மீக்காவைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது.அவரைப் பற்றிய குறிப்புகள் மிகவும் குறைவாகவேஅவருடைய புத்தகத்தில்காணப்படுகின்றன. அவர் மோரசேத் என்ற நகரத்திலிருந்து வருகிறார்.மோரசேத் எருசலேமிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது. இதுயூதாவின் கடைசிப் பகுதியானாலும் முக்கியமான நகரங்களில் இதுவும்ஒன்று. நிறையச் சண்டைகள் இங்கு நடைபெற்றிருக்கின்றன. இது சண்டையிடுவதற்குவசதியான இடமாகையால், மற்றவர்களின்தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளாகிக்கொண்டிருந்தது. எனவே இங்கு படைகள்எப்போதும் தயாரான நிலையில் இருந்தன.

மீக்கா என்ற பெயருக்கு #8220; ஆண்டவருக்குநிகர் யார்?” என்று பொருள். ஆமோஸ் தன்பணியை முடித்த பின் தம் பணியை ஆரம்பிக்கிறார்மீக்கா. எனவே ஆமோசின் பாதிப்புகள், அவருடையகொள்கைகள், அவருடைய தைரியம், அவருடையகடுமையான வார்த்தைகள் ஆகியவைகளைமீக்காவிடமும் நாம் காணமுடியும். இறைவாக்கினர்எசாயா வாழ்ந்த காலத்தில், இவர் இறைவாக்கு உரைக்கிறார். இவர் தென்நாட்டிலிருந்து வந்தவர். தென்னாட்டிலேயே இறை வாக்கு உரைக்கிறார்.ஒருவேளை அவர் எருசலேமில் தம் பணியைச் செய்திருக்க வேண்டும்.எனவேதான் எருசலேம் அதிகாரிகளையும் இவர் கடுமையாகத் தாக்குகிறார்(2 : 1-2).

2. வரலாற்றுப் பின்னணி
இறைவாக்கினர் மீக்கா இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தகாலங்களில், யூத நாடாகிய தென்னாட்டை 3 அரசர்கள் ஒருவருக்குப்பின்ஒருவராக ஆண்டு வந்துள்ளனர்: யோத்தாம் (742-735), ஆகாசு (735-715),எசேக்கியா (715-687), யோத்தாம் அரசர், உசியா அரசரின் மகன். நாம்ஏற்கனவே ஆமோசைப் பற்றிப் பார்க்கும் போது, உசியா அரசர் எந்தஅளவுக்குப் புகழோடும், சிறப்போடும் இருந்தார் என்று பார்த்தோம். ஆனால்அவருடைய இறுதி நாட்களில் அவருக்கு தொழுநோய் வரவே, ஆட்சிப்பொறுப்பைத் தன் மகன் யோத்தாமிடம் ஒப்படைத்தார். யோவாத்தாமும் தன்தந்தையைப் போலவே சிறந்த அரசராக விளங்கினார்.

ஆனால் அவருக்குப் பின் வந்த ஆகாசு காலத்தில் நாட்டின் பெருமைசற்றுக் குறையத் தொடங்கிவிட்டது. இவர் இஸ்ரயேலின் வீழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இவர் தன் ஆட்சியைப் பாதுகாத்துக்கொள்வதிலே கண்ணும் கருத்துமாக இருந்தார் (2 அர 16:3; எசா 7:1-2).இவர் வழிபாட்டில், அசீரியர்களின் வழிபாட்டு முறைகளைப் புகுத்தினார்.எருசலேமில் அந்நியக் கடவுளுக்கு ஒரு பீடமும் அமைத்தார் (2 அர 16:10-16). இவருடைய ஆட்சியில் நீதியின்மையும், நேர்மையின்மையும்சர்வசாதாரணமாக மக்களிடையே காணப்பட்டன. இவர் தன் மகனையே தகனப்பலியாக அந்நிய தெய்வங்களுக்குக் காணிக்கையாக்கினார். அரசியல்வாழ்வில், இவர் ஒருபோதும் எசாயா இறைவாக்கினரின் வார்த்தைக்குமதிப்புக் கொடுத்தது கிடையாது.

மீக்கா மக்களை எருசலேமுக்கு வரும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தார். இரண்டு நாட்டவர்களையும் எருசலேமிற்கு வந்துஇறைவனை வழிபட இறைவனுக்குப் பலிகள் செலுத்த, அழைத்தார். இதன்வழியாக, மக்களிடையே ஓர் ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றார். ஆனால்அரசர்களால் இவர் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளானார். இவர்ஏறக்குறைய 740 -ஆம் ஆண்டிலிருந்து 695- ஆம் ஆண்டுவரைஇறைவாக்கு உரைத்திருக்க வேண்டும். இவர் சமாரியாவைப் பற்றிப் பேசும்போது, சமாரியா நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார். பின் அதன்வீழ்ச்சியைப் பற்றியும் எடுத்துரைக்கிறார். எனவே இவர், தனது பணியைச்சமாரியாவின் வீழ்ச்சிக்கு முன்னால் அதாவது 722 -ஆம் ஆண்டிற்குமுன்னால் ஆரம்பித்திருக்க வேண்டும்; அதாவது இவர் ஏறக்குறைய 740-ஆம் ஆண்டு தம் பணியை ஆரம்பித்திருக்க வேண்டும்.மேலும் எரேமியா தன் புத்தகத்தில் மீக்காவைப் பற்றி பேசுகிறார். மீக்கா(3:12) சொன்னதை மேற்கோள்காட்டி விளக்குகிறார். #8220;யூதாவின் அரசரானஎசேக்கியாவின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்கா இறைவாக்குஉரைத்துக்கொண்டிருந்தார்” (எரே 26:18) என்று கூறுகிறார்.அப்படியானால், எசேக்கியா (725-687) அரசன் காலத்திலும் இவர்இறைவாக்குரைத்துள்ளார். எனவே, இவருடைய பணி 740-695 வரைஎன்று நாம் கணக்கிடலாம்.

3. மீக்காவின் போதனைகள்
5:1-2பெத்லகேமிலிருந்தே இஸ்ரயேலை ஆட்சி செலுத்தப் போகிறவர்வரவிருக்கிறார்.6:6-8இறைவன் தகனப்பலிகளையோ, ஆட்டுக்கடாக்களையோ,குழந்தையையோ காணிக்கையாகக் கேட்கவில்லை. அவர் விரும்புவதுநீதியோடு நடத்தல், அன்பு கூர்தல், கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடிருத்தல் போன்றவையே இதன் பொருள். தன்னையே அழித்துக்கொள்வதல்ல. மாறாக, தன் விருப்பத்தை அழித்து, கடவுள் விருப்பத்தைநிறைவேற்றுவதாகும்.

4. புத்தக அமைப்பு
1 : 2-5 : 15 - முதல் பகுதி
6 : 1-7 : 20 - 2 வது பகுதி.

இரண்டு பகுதிகளுமே ஒன்று போல் இருந்தாலும், இரண்டிற்கும் சிலவித்தியாசங்கள் இருக்கின்றன.முதல் பகுதி :1) உலக மக்கள் அனைவருக்காகவும் கொடுக்கப் பட்டுள்ளது.2) கடவுளின் சினத்தோடு முடிவடைகிறது.

ஆனால், 2 -ஆம் பகுதி1) இஸ்ரயேல் மக்களுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது.2) இறைவனின் இரக்கப் பெருக்கோடு முடிவடைகிறது.

 

4. நாகூம்

1. முன்னுரை
எல்கோசை என்ற ஊரினரான நாகூம், நினிவே வீழ்ச்சியடை வதற்குச்சிறிது காலத்திற்கு முன்னர் போதித்தார். ஆண்டவர் உலகை நடத்தும்ஒழுங்கு முறையைப்பற்றியும், தனக்கு இறைவன் அளித்த உயர்ந்த அதிகாரத்தை அசீரியர்கள்தவறான வழியில் பயன்படுத்தியதால், தண்டனையைப் பெற்றனர் என்பதையும் விளக்கிக் கூறுகிறார். நினிவே நகரத்தின் வீழ்ச்சி இறைவனின்நீதி நிலை நாட்டப்படுவதை எடுத்துக் காட்டுகிறது.

நாகூம் ஒரு திறமை வாய்ந்த புலவர்.இந்தப் புத்தகம், எபிரேய மொழியில் சிறந்த ஒருகவிதையாகத் திகழ்கிறது. இந்தக் கவிதையானது மிகவும் மோசமான, கடினமான நேரத்தில்எழுதப்பட்டதாகும். எங்கும் அமைதி இல்லை; நேர்மையில்லை. இந்தநேரத்தில் இதை எழுதுகிறார் நாகூம். கொடிகட்டிப் பறந்த பெருமையின்,புகழ்ச்சியின் உச்சிக்கே சென்ற நினிவே நகரின் வீழ்ச்சியைமுன்னறிவிக்கிறார். கி.மு. 612-ஆம் ஆண்டு நினிவே நகர் வீழ்ந்தது.அசீரியர்கள் 661- ஆம் ஆண்டு தெபெஸ்சைத் தோற்கடித்தார்கள்.நாகூம் இதைப் பற்றியும் பேசுகிறார். எனவே, இவர் தம் பணியை இந்தநிகழ்ச்சிக்குப் பின் ஆரம்பித்திருக்க வேண்டும். எனவே இவருடையபணிக்காலம் 661-612 வரை இருந்திருக்கலாம்.

அசீரிய அரசர் செனாகெரிபு, தெபேஸ்சின் மீது வெற்றி பெற்றார்.அசீரியப் பேரரசானது விரிந்து கொண்டே சென்றது. இஸ்ரயேல் மக்கள்மட்டுமன்றி, அந்த பக்கத்திலிருந்த அனைத்து நாடுகளுமே, அசீரியாவிற்கு எதிரிகளாக மாறின. அசீரியர்களின் வாழ்க்கை முறைகளும், நடத்தைகளும்நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே சென்றன. எனவே மற்றநாட்டினர்களெல்லாம் அசீரியாவின் வீழ்ச்சிக்காக காத்திருந்தனர்.

செனாகெரிபு இறந்தபின், அவர் மகன் அசுர்பாணிபால் அரசரானார்.அவர் தன் சகோதரன் சாமாஸ் குழுவைப் பாபிலோனியாவுக்குஅரசராக்கினார். 652 - ஆம் ஆண்டு சாமாஸ் அசுர்பாணி பாலுக்கு எதிராககலகம் விளைவித்தார். இவரை அடக்குவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு மேல்எடுத்தது. எனவே, அசீரியாவின் பலம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டேவந்தது.அசுர்பாணிபால் இறந்தபின், அவரது மகன் அரசராகப் பதவி ஏற்றார்.ஆனால் இவர் அவ்வளவு திறமை வாய்ந்தவராக இருக்கவில்லை. எனவேஇவருடைய படைத் தளபதி நபுபோலசர் தன்னை பாபிலோனியாவின்அரசராகப் பிரகடனப் படுத்தினார். அத்தோடு நில்லாது, மற்றப் பகுதிகளுக்குப்படையெடுத்துச் சென்று வெற்றிவாகை சூடினார். மீதஸ் நாட்டு அரசர்சியாக்ஸ் ஆரே, நபுபோலசரோடு சேர்ந்து அசீரியப் பேரரசைத்தோற்கடித்தார்கள்.நாகூம் நினிவேயின் வீழ்ச்சியை விளக்குகிறார்.

2. அவரது போதனைஅசீரியர்கள்
அநீதியைப் பின்பற்றினர், மக்களைக் கொடுமைப்படுத்தினர். எனவேதான் கடவுள் அவர்கள் மேல் கோபம் கொண்டு,அவர்களைத் தண்டித்தார்.

3. நூலின் பிரிவுகள்
1:1 நூலின் தலைப்பு
1:2-10 கடவுள் தம் எதிரிமேல் வெற்றிகொள்வதைப் பற்றிய பாடல்
1:11-15 யூதேயா நாட்டுக்கு அறிவுரை. நினிவே வீழ்ச்சிகுறித்துக்காட்டும் எச்சரிக்கையை தேர்ந்தெடுக்கப்பட்டமக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
2:1-3:19 நினிவே வாழ் மக்களுக்கு அறிவுரை ( அனைத்தும் கடவுள்செயல் என அறிய அழைப்பு.)

 

5. அபக்கூக்கு

1. முன்னுரை
இறைவாக்கினர் அபக்கூக்கைப் பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ளமுடியவில்லை. தானியேல் அவருடைய புத்தகத்தில் ‘அபக்கூக்கு என்றஇறைவாக்கினர் ஒருவர் இருந்தார்' என்று கூறுகிறார். அவர் கூறும் அந்தஅபக்கூக்குதான் இவரா என்பது சரியாகத் தெரியவில்லை. இவர்இறைவாக்கினர்கள் எரேமியா, நாகூம் ஆகியோர் வாழ்ந்த காலத்தில்வாழ்ந்து வந்துள்ளார்.

2. வரலாற்றுப் பின்னணி
ஆரம்ப காலத்தில் அசீரியா பெரும் புகழ் வாய்ந்த பேரரசாக, பநூ?தபேரரசாக விளங்கியது. இப்போது இதற்கு இணையாக, பாபிலோனியாவளர்ந்து கொண்டிருந்தது. எனவே, பாபிலோனியாவின் அதிகாரத்தில்இருந்து தப்பித்துக் கொள்ள அசீரிய அரசர் பாரேரெக்கோ, அசீரிய அரசரோடுநல்லுறவு அமைத்துக் கொண்டு, பல வழிகளிலும் எகிப்திய மக்கள்நெக்கோவுக்கு உதவி புரிந்து வந்தார். சிரியாவையும், பாலஸ்தீனத்தையும்எகிப்தோடு இணைக்க முயன்று அதன் மீது படையெடுத்து வந்தார். இதைக்கேட்ட யூதாவின் அரசர் யோசியா அவரை எதிர்கொண்டு மெகிதோவில் என்றஇடத்தில் சந்தித்தார். இந்தப் போரில் யோசியா கொல்லப்பட்டர்ர் (2 அர 23:29).யூதா நாடு தோற்கடிக்கப்பட்டது. நெக்கோ யூதாவிற்கு அரசராக யோவகாசைஅமர்த்தினார். யோவகாசு இறந்த பின் யோயாக்கிம் யூதாவின் அரசரானார்.

கி.மு. 605- ஆம் ஆண்டு கார்கேமிஸ் என்ற இடத்தில் ஒரு பெரியயுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தில், அசீரியாவும், எகிப்தும் ஒரு பக்கம்,பாபிலோனியாவும், மற்ற நாடுகள் எல்லாம் இன்னொரு பக்கம். போர் மிகப்பயங்கரமாக நடைபெற்றது. இறுதியாக அசீரியாவும் எகிப்தும் முழுவதுமாகத்தோற்கடிக்கப்பட்டன ( எரே 46 : 2 ; 2 அர 24 : 7).எனவே, இப்போது யூதா பாபிலோனியா அரசரான நெபுகத்னேசரின்அடியில் வந்தது. அப்போது, யூதாவின் அரசராக இருந்தவர் யோயாக்கிம்.இவர் தன் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கிக் கொண்டிருந்தார். மக்களின் மேல்அக்கறை சிறிதளவேனும் கிடையாது. இவரிடம் இறைவாக்கினர் எரேமியாஎவ்வளவோ கூறிப் பார்த்தார். ஆனால் எரேமியாவின் வார்த்தைகள்விழலுக்கு இறைத்த நீராக அமைந்தது ( எரே 22:13-19; 2 அர 24:4).

மூன்று ஆண்டுகள் கழித்து யோயாக்கிம், நெபுகத்னேசரை எதிர்த்தார்.இவரை அடக்குவதற்காக பாபிலோனிய அரசர் நெபுகத்னேசர் தன் படையைஅனுப்பி வைத்தார் (2 அர 24:12). நெபுக்னேசரின் படைகள் யோயாக்கிமைஅடக்கின. யோயாக்கிமும் இறந்தார். ஒரு சிலரின் கருத்துப்படி இப்போரில்யோயாக்கிம் கொலை செய்யப்பட்டார். பின் அவர் மகன் (598 : 3 மாதங்கள்மட்டுமே) யூதாவின் அரசரானார்.நெபுகத்னேசர் நிறைய யூதர்களை நாடு கடத்தி, அடிமைகளாகபாபிலோ னுக்குக் கொண்டு சென்றார். இது கி.மு. 598-ஆம் ஆண்டுநடைபெற்றது. இதுவே முதல் நாடு கடத்தல் ஆகும்.

இறைவாக்கினர் அபக்கூக்கு இந்த நேரத்தில் தன் பணியை ஆற்றிவந்தார். யோயாக்கிமின் கொடூரத்தை நேரில் இவர் பார்த்திருக்கிறார்.இவருடைய சில பேச்சுகள் முதல் நாடு கடத்தலுக்குப்பின் இடம் பெற்றதாகத்தெரிகிறது.

3. புத்தக அமைப்பு

1:2-2:4 முதல் பகுதி, உரையாடல் பகுதி.
1:2-4 அபக்கூக்கின் முதல் முறையீடு
1 : 5-11 கடவுளின் பதில்
1 : 12-17 இறைவாக்கினரின் இரண்டாம் முறையீடு
2 : 1-4 இறைவனின் பதில்
2 : 5-20 இரண்டாம் பகுதி, பாபிலோனியர்களுக்கு எதிராக சாபங்கள்
2 : 5-6 முன்னுரை
7-8 முதல் சாபம்
8-11 2 வது சாபம்
12-14 3 வது சாபம்
15-17 4 வது சாபம்
18-20 5 வது சாபம்
3:1-19 அபக்கூக்கின் பாடல்
3 : 1 செபம்
3 : 2 முன்னுரை
3 : 3-7 கடவுளின் தோற்றம்.
3 : 8-11 கடவுள் இயற்கையோடுபோராடுகிறார்.
3 : 12-15 யாவேயின் வெற்றி
3 : 16-19 முடிவுரை

 

6. செப்பனியா

1. முன்னுரை
செப்பனியா என்ற பெயருக்கு #8220; கடவுள் பாதுகாக்கிறார்” என்றுபொருள். இறைவாக்கினர் செப்பனியா தென்நாட்டிலிருந்து வருகிறார்.ஒருவேளை எருசலேமே அவரது சொந்த ஊராக இருக்கக்கூடும்.எருசலேமைப்பற்றி அதிகம் விளக்கமாக, தெளிவாகப் பேசுகிறார்.இறைவாக்கினர் செப்பனியா மக்கள் பாபிலோனுக்கு அடிமைகளாகச்செல்லுமுன் வாழ்ந்த இறுதி இறைவாக்கினர். இவருடைய காலத்திலும்மக்கள் மனம் மாறியது கிடையாது. ஆமோஸ் காலத்தில் இருந்ததுபோல்,இப்பொழுதும் மக்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கவில்லை. பிறதெய்வத்தை நாடிச் சென்றார்கள். நீதி என்பது மறக்கப்பட்ட ஒன்றாகமாறிவிட்டது. அவர்கள் கடவுளின் வார்த்தையை ஏற்று அதன்படிநடக்காததால், கடவுள் அவர்களைத் தண்டிக்கப் போகிறார் என்று செப்பனியாகூறுகிறார்.

2. வரலாற்றுப் பின்னணிகி.மு.
715-687 வரை எசேக்கியா யூதாவை ஆண்டு வந்தார். அவர்இறந்தபின், மனாசே (ஆயயேளளநா) (687-642) அரசரானார். இவர் யூதஅரசர்களிலே மிகவும் மோசமான அரசர். கனானேய தெய்வங்களின்வழிபாட்டை உடனடியாக வெகு விரைவில்தேவாலயத்தில் புகுத்தினார். குழந்தைகளைநரபலி இடுவதையும் சிலை வழிபாட்டையும்,புனித இடங்களில் விலைமாதர்கள் பழக்கத்தையும், குறிபார்த்துச் சகுனங்களைக் கூறும்பழக்க வழக்கத்தையும் கடைப்பிடித்து வந்தார்.அவருடைய நாட்களில் இறைவாக்கினர் யாரும்இல்லாததால் அவர் ஆண்டவர் திருமுன் யூதாநாட்டு மக்களைத் தீயனபுரியும்படி செய்தார்.அவர்களைப் பாவத்திற்கு ஆளாக்கினார்.எல்லாவற்றிற்கும் மேலாக எருசலேம் நகர்முழுவதும் நிரம்பும் அளவுக்கு அவர் மாசற்றவர்களின் குருதியைச் சிந்தினார்.ஆக யூதா நாட்டு அரசர்களிலே மிகவும் மோச மானவராகத் திகழ்ந்தார் (2 அர21:1-18). மனாசே அரசருக்குப்பின் அவர் மகன் ஆமோன் (642-640)அரசரானார். இவர் தன் தந்தையைப் போலவே ஆண்டவரின் பார்வையில்தீயன செய்து வாழ்ந்தார். இரண்டு ஆண்டுகள் எருசலேமில் அரசாண்ட பின்கொலை செய்யப்பட்டார். ஆமோன் கொலை செய்யப்பட்டபிறகு அவர் மகன்யோசியா (640-609) யூதாவின் அரசராக முடி சூடினார். இவர் ஒரு சிறந்தஅரசராகத் திகழ்ந்தார். மனாசே, ஆமோன் போன்ற அரசர்களின்கொடுங்கோல் ஆட்சிக்குப் பின் யூதா நாட்டில் எஞ்சியிருந்த மக்கள்,கடவுளுக்குப் பிரமாணிக்கமாக வாழ்ந்த மக்கள், யூதா நாட்டை மீண்டும்இறைவனை நம்பி வாழும் வழிமுறைக்குக் கொண்டு வர முற்பட்டனர். இந்நேரத்தில்தான் இறைவாக்கினர் செப்பனியா தோன்றி இறைவாக்குரைத்தார்.

யோசியா பதவிக்கு வரும்போது, எட்டு வயது நிரம்பிய சிறுவனாகஇருந்தார். ஆனால் பதவிக்கு வந்த பின் தன்னை ஒரு சிறந்த ஓர் அரசராகமாற்றிக்கொண்டார். இவர் 621 -ஆம் ஆண்டு கோவிலைச் சுத்தம் செய்துகொண்டிருக்கும் பொழுது பல ஆண்டுகளாகப் பொதிந்து கிடந்த திருச்சட்டநூலைக் கண்டெடுக்கிறார். சிலை வழிபாட்டையெல்லாம் ஒதுக்கி விட்டு,யாவே கடவுளை மட்டும் வழிபாடு செய்யுமாறு மக்களைப் பணிக்கிறார்.ஆனால் இறைவாக்கினர் செப்பனியா, இந்தத் திருச்சட்ட நூலைக் கண்டெடுத்ததைப்பற்றி எதுவும் பேசவில்லை. எனவே, இவர் தம் பணியை621 -ஆம் ஆண்டிற்கு முன்னே முடித்திருக்க வேண்டும். எனவே இவர்பணிக்காலம் ஏறக்குறையக் கி.மு. 640 - ஆம் ஆண்டிலிருந்து 622- ஆம்ஆண்டு வரை இருந்திருக்கலாம்.

621-ஆம் ஆண்டிலிருந்தே, இறைவனை எருசலேம் கோவிலில்வழிபட வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. இதற்கு முன் பலஇடங்களிலும் கோவில் கட்டியிருந்தார்கள். ஏன் ஆமோஸ், ஓசேயாபோன்றோர் மக்களை எச்சரித்தது பல கோவில்களைக் கட்டியதற்காக அல்ல.மாறாக அந்தக் கோவில்களில் யாவே கடவுளை வழிபடுவதற்குப் பதிலாகமற்ற தெய்வங்களை வழிபட்டுக் கொண்டிருந்ததற்க்காகவே. ஆனால் 621-ஆம் ஆண்டிலிருந்து திருநூல் கண்டெடுப்புக்குப் பின், இந்த எண்ணம்மாறுகிறது; அனைவரும் எருசலேமிற்கே வரவேண்டும். எருசலேம் நகரில்மட்டுமே இறைவனின் கோவில் இருக்க முடியும்; வேறு எங்கும் இருக்கமுடியாது. இந்த எண்ணம், பாபிலோனில் அடிமைத் தனத்திலிருக்கும்போதும் மக்களிடையே நிலவுகிறது.

3. புத்தக அமைப்பு

1 : 2-13 படைப்பு அனைத்தின் மேலும் யாவேயின் தீர்ப்பு.
1 : 7,14-18 ஆண்டவரின் நாள்.
2 : 1-3 யாவேயின் தீர்ப்புக்குத் தப்புவது எப்படி?
2 : 4-15 பிறவினத்தாருக்கு எதிராக இறைவாக்கு.
3 : 1-13 எருசலேமிற்கு எதிராக இறைவாக்கு.
3 : 14-17 எருசலேமின் மனமாற்றம்.
3 : 18-20 நல்லாயன் யாவே.

செப்பனியா கூறுவதெல்லாம் கடவுள் எப்போதும் உண்மையுடையவராக, தான் கூறிய வாக்கை நிறைவேற்றுபவராக இருக்கிறார். தன்உடன்படிக்கையைத் தவறாது கடைப்பிடிக்கிறார். ஆனால் மக்களின்மனத்தில்தான் மாற்றம் இல்லை. உடன்படிக்கையை மறந்து திரிகின்றனர்.இறைவாக்கினர் செப்பனியாவுக்கு நான்காம் எண் மேல் மிகுந்த பற்றுஉண்டு. மக்களைப் பற்றி பேசும் போதும் நான்கு வகைகளைக்குறிப்பிடுகிறார் (1.3,5;6:2,14; 3:3-4).செப்பனியாவின் இன்னொரு முக்கியமான போதனை.

4. #8220;ஆண்டவரின் நாள்” 1 :14-18#8220;
ஆண்டவரின் நாள்” என்பது இறைவாக்கினர்களுக்கு ஒருமுக்கியமான கருத்து. ஏறக்குறைய இனி வருகின்ற எல்லா இறைவாக்கினர்களுமே இதைப் பற்றிப் பேசுகிறார்கள். ( எசா 13:6; எசேக் 30: 3; யோவேல்1 : 15). ஆண்டவரின் நாள் கோபக் கனலாக வெளிவரும். அது ஒரு தீர்ப்புநாளாக அமையும் (எசா 7 : 19; சாஞா 14 : 4; யோவேல் 2 : 2). இந்நாளிலிருந்து யாருமே தப்பமுடியாது (ஆமோஸ் 2 : 2; எரே 4 : 4). மனத்துயரும்வேதனையும் நிறைந்த நாள் அந்த நாள்.இஸ்ரயேல் மக்கள், ஆண்டவரின் நாள்அழிவு நாளாக வேற்று நாட்டவர்களுக்குத்தான் அமையும் என்று எண்ணி இறுமாந்து இருந்தார்கள். இதிலிருந்து தப்பித்துவிடுவோம் என்று மெத்தனத்தோடிருந்தனர்.ஆனால் இங்கே, செப்பனியா ஆண்டவரின்நாள் அனைவருக்கும் வரும் என்று அடித்துக்கூறுகிறார். இஸ்ரயேல் மக்களும் இதிலிருந்துதப்ப முடியாது.புதிய ஏற்பாட்டிலும், ஆண்டவரின் நாள்தீர்ப்பின் நாளாக அமையும் என்றுகூறியிருப்பதையும் நாம் பார்க்கிறோம். (யோவா 6 : 40; 11 : 24; 12 : 48; 1தெச 5 : 2; 1 கொரி 3 : 12; 2 பேது 3 : 10; 1 கொரி 1 : 8 ; 5 : 5; பிலி 1 : 6; 10: 2, 16; 2 கொரி 1 : 11).

இறைவாக்கினர்களின் வார்த்தையை மக்கள் யாரும் கேட்டு வாழ்வில்கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் வாழ்வை மனம்போனபடிஅமைத்துக் கொண்டனர். இறைவாக்கினர்களை மதிக்கவே இல்லை.எனவே, இறுதியில் அவர்கள், இறைவாக்கினர்கள் கூறியபடியே,அடிமைகளாக பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்பட்ட மக்கள், அங்கே 539-ஆம் ஆண்டு வரை அடிமைகளாக வாழ்கின்றனர்.

 

7. ஆகாய்

1. முன்னுரை
ஆகாய் என்ற பெயருக்கு #8220;விழாக் கொண்டாட்டம்” என்று பொருள்.ஒரு சிலரின் கருத்துப்படி ஒருவேளை ஆகாய் கூடாரத் திருவிழாவன்றுபிறந்திருக்கக் கூடும். ஆனால் அக்காலத்தில் ‘ஆகாய்' என்பது ஒருபொதுவான பெயரே. பலர் இந்தப் பெயரைத் தாங்கியிருப்பதை நாம்பார்க்கிறோம். (தொநூ 46 : 16; எஸ்ரா 26 : 15). சிலர் இவர் ஒரு குரு என்றும்கூறுகிறார்கள். ஆனால் அவர் குருவா என்று உறுதியாக நமக்குத் தெரியாது.எஸ்ராவும், நெகேமியாவும், யூத மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்தபின் நடந்தவைகளை விளக்குகின்றனர்.அப்போது கலப்புத் திருமணமும் வழக்கத்திலிருந்திருக்கிறது. எனவேதான்,அவர்களிருவரும் கலப்புத் திருமணம் பற்றியும் பேசுகிறார்கள்.

ஆனால், இறைவாக்கினர்கள் ஆகாயும், செக்கரியாவும், மக்களைகோவிலைக் கட்டுமாறு வற்புறுத்தினார்கள். ஆகாய் இறைவனின் எருசலேம்தேவாலயம் மீண்டும் எழுப்பப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய்இருந்தார். எனவேதான், பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் கோவிலைக்கட்டுமாறு மக்களை தூண்டிவிட்டு, உற்சாகப்படுத்தினார்.

2. வரலாற்றுப் பின்னணி
சைரஸ் அரசனின் ஆணைப்படி யூதர்கள் பாபிலோனிலிருந்துவிடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாடாகியஇஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் திரும்பினார்கள். அவர்கள் தங்கள்நாட்டிற்குத் திரும்பி வரும்போது, பாபிலோனிய மன்னன் சைரஸ்,நெபுகத்நேசர் எருசலேமிலிருந்து அபகரித்துக் கொண்டு வந்திருந்தபொருட்களை அவர்களிடம் கொடுத்து அனுப்பினான். இது கி.மு. 538(7) -ஆம் ஆண்டு நடைபெற்றது.பாபிலோனுக்கு அடிமைகளாகச் செல்லும்போது யூதாவிலிருந்துஅரசரின் மகன் சேஷ்பாஸர் (ளுயளாடியணணயயச) ஆளுநராக அமர்த்தப்பட்டார்.யோசுவா தலைமைக் குருவாக நியமிக்கப்பட்டார். இவர்கள் மக்களை நல்லமுறையில் வழிநடத்திச் செல்ல பல முயற்சிகள் செய்தார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக முதன் முதலில், கோவிலைக் கட்ட திட்டமிட்டு,அதற்கு அடித்தளமும் இட்டனர். ஆனால் அடுத்து 18 ஆண்டுகளாக வேலைதொடரப் படாமலே இருந்தது.

கோவில் கட்டி முடியாததற்குப் பல காரணங்கள் உண்டு. மக்கள்இப்போதுதான், அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு, சொந்த நாட்டிற்குவந்திருக்கிறார்கள். பண விஷயத்தில், அவர்கள் மிகவும் ஏழைகளாகஇருந்தார்கள். சொந்த நிலங்களெல்லாம் சரியாகப் பயன்படுத்தப் படாமல்தரிசாகக்கிடந்தது. மழை வேறு பெய்ய வில்லை. அவர்களுக்குத் தங்கள்வாழ் நாளை கழிப்பதே பெரும்பாடாக இருந்தது; மேலும், ஒவ்வொருவரும்தங்கள், தங்கள் வீடுகளை கட்டி முடிப்பதிலே ஆர்வமுடனிருந்தனர்.கோவிலைக் கட்டுவதற்குத் தேவையான பெரிய, பெரிய பொறியாளர்கள்கலைத்திறமைப் படைத்தவர்கெளெல்லாம், பாபிலோனியாவிலேயே தங்கிவிட்டார்கள். அவர்களுக்கு வாழ்வு நல்ல முறையில் அங்கே அமைந்துவிட்டதால், அவர்கள் சொந்த நாடு திரும்பி வரவில்லை. இவையெல்லாம்மக்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விட்டது. #8220;அந்தக்காலத்தில் சாலமோன், பெரிய அழகான கலைத்திறன் வாய்ந்த கோவிலைக்கட்டியிருந்தார். அதை நாம் கனவிலும் கூட இனி நினைத்துப் பார்க்கமுடியாதே! நாம் எங்கே இனிமேல் அப்படிக் கட்ட முடியும்?” என்றுஎண்ணினர் மக்கள். ஆக யாருமே கோவில் வேலையில் மும்முரமாகஈடுபடவில்லை. எனவேதான், 18 ஆண்டுகளாக கோவில் கட்டப்படாமல்இருந்தது.

இதற்கிடையில், சைரஸ் மன்னன் இறந்து, பாபிலோனியாவில்அவர் மகன் 2-ஆம் காம்பிசஸ் (ஊயஅpலளநள) (530-522) அரசராகமுடிசூடினார். இவரும், அவருடைய தந்தையைப் போலவே, ஒரு திறமைவாய்ந்த அரசர். எகிப்தோடு போரிட்டு அதைத் தோற்கடித்தார்.

ஆனால் காம்பிசஸ்கு இரண்டு எதிரிகள் உள்நாட்டிலேதோன்றினார்கள். எப்போதும் அவருக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டுஎதிர்த்துக் கொண்டிருந்தார்கள். இதனால், காம்பிசஸ் மிகவும் கஷ்டப்படவேண்டியிருந்தது. இருந்த போதிலும், எல்லாவற்றையும் திறமையுடன்அடக்கினார். திரும்பவும் அரசுக்குக் கடும் எதிர்ப்பு வந்தது. மக்கள்பாபிலோனிய அரசே அழிந்து விடுமோ என்று எண்ணினார்கள்.

யூதாவில், செசபாஸார் ஆளுநர் இறந்து அவர் மகன் செருபாபேல்ஆளுநராக மாறியிருந்தார். இவர், மக்கள் பாபிலோனுக்கு அடிமைகளாகஎடுத்துச் செல்லப்பட்ட போது, யூதாவை ஆண்டு வந்த அரசருக்குப் பேரன்.எனவே, செருபாபேல் தாவீது குடும்பத்தின் வழிவந்தவர்.எனவே, இறைவாக்கினர்கள், ஆகாயும், செக்கரியாவும்பாபிலோனிய அரசுக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது; யூதாவில் தாவீதுகுடும்பத்தின் வழிவந்தவர் ஆட்சி செய்கிறார். எனவே தாவீதின் அரசு மீண்டும்நிலைநாட்டப்படும் என்று எண்ணினார்கள். எருசலேம், புதுப்பிக்கப்பட்டுதலைநகராக மாற்றப்படும். அப்போது கோவில் மிக முக்கியமாகதேவைப்படும். எனவேதான், இரு இறைவாக்கினர்களும், மக்களைக்கோவிலைக் கட்டி முடிக்குமாறு வற்புறுத்தினார்கள்.

ஆகாய் இறைவாக்குரைக்க ஆரம்பித்த நாளை, அவருடைய நூலின்ஆரம்பத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ‘தாரியுஅரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்றுஇறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது'(1:1).காம்பிஸஸ் இறந்தபின், தாரியு 522- ஆம் ஆண்டு பாபிலோனியமன்னராக முடிசூடினார். ‘இரண்டாம் ஆண்டு என்று குறிக்கப் பட்டிருப்பதால்,ஆகாய் தன்னுடைய பணியை 520 - ஆம் ஆண்டு ஆரம்பித்திருக்கிறார்.பாபிலோனியர்கள் ஆண்டை மார்ச், ஏப்ரலிருந்து கணக்கிட்டார்கள்.அப்படியானால் ஆகஸ்டு, செப்டம்பர் 6, 7 ஆம் மாதமாக வரும். ஆக கி.மு.520 - ஆம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் ஆகாய் தன் பணியைஆரம்பித்திருக்கிறார்.

2:1 மீண்டும் 1 மாதம் 21 நாட்கள் கழித்து ஆகாயுக்கு ஓர்இறைவாக்கு அருளப்பட்டிருந்தது.
2:11- இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஓர் இறைவாக்கைப்பெறுகிறார் ஆகாய்.
2:21 அதே மாதம், மேலும் இரண்டு காட்சிகளைப் பெறுகிறார் ஆகாய்.

ஆக, இறைவாக்கினர் ஆகாயின் இறைப் பணி கி.மு .520- ஆம்ஆண்டு ஆகஸ்டு செப்டம்பரில் ஆரம்பித்து, அதே ஆண்டு நவம்பர், டிசம்பர்மாதத்தோடு நிறைவு பெற்றிருக்கிறது.

3. ஆகாயின் போதனைகள்

1 : 2-14 ஆகாய் கோவிலைக் கட்டிமுடிக்குமாறு மக்களைக்கேட்கிறார்.
1 : 15- 2:15-19 கோவில் வேலை ஆரம்பிக்கப்படுகிறது.
2 : 1-9 எல்லா நாடுகளும் கட்டப்போகும் புதிய கோவிலுக்குவந்து யாவேயை வழிபடுவார்கள்.
2 : 10-14 யூதர்கள் மட்டுமே கோவில் கட்டும் வேலையில்அனுமதிக்கப்படுகிறார்கள்.மற்றவர்கள்அனுமதிக்கப்படவில்லை
2 : 20-25 எருசலேம், யாவே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம்.

மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி இறைவாக்கினர் ஆகாய்எதுவும் பேசவில்லை. அவர் மக்களுக்குக் கொடுக்கும் ஒரே செய்தி,#8220;கோவிலைக் கட்டி முடியுங்கள்; இப்போது நாட்டில் நிலவும் வறுமைக்குக்காரணம் கோவில் இல்லாமையே. கோவில் கட்டப்பட்டு விட்டால், யாவேநல்ல மழையைக் கொடுத்து, நாட்டை வளமுடைய நாடாக மாற்றுவார்”என்பது ஆகாயின் அசைக்க முடியா கருத்து.

 

8. செக்கரியா

1; முன்னுரை
இறைவாக்கினர் செக்கரியா, ஓர் இறைவாக்கினர் மட்டுமல்லாது, ஒருகுருவாகவும் இருந்திருக்கிறார் (எஸ்ரா 6:1, 14; நெகேமியா 12-14). இவர்குருவாகப் பணிபுரிந்ததால், கோவிலின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துஅதை மக்களுக்கும் உணர்த்துகிறார். இறைவாக்கினர் ஆகாய் போல்,அவரும் மக்களை, கோவிலைக் கட்டி முடிக்குமாறு தூண்டுகிறார்.இவருடைய கருத்துப்படி மக்களின் எதிர்காலமே அவர்கள் கட்டப்போகும்கோவிலில்தான் உள்ளது. தலைமைக் குருவுக்குத் தக்க மரியாதைகொடுக்கிறார். இவர் தலைமைக் குருவை ஓர் அரசராகவே கருதுகிறார்.வானதூதர்கள் இவரது நூலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.மக்களின் குறைகளை எடுத்துக் கூறி, முன்னோர்கள், இறைவார்த்தையைக்கேட்காததாலே தண்டிக்கப்பட்டனர் என்று மேற்கோள் கொடுத்து, அவர்கள்நல்ல வாழ்க்கையை, இறைவன் விரும்பும் வாழ்க்கையை வாழுமாறுபோதிக்கிறார் (1:4; 7:10).

2. செக்கரியாவின் பணி நாட்கள;
1:1 தாரியு அரசனின் இரண்டாம் ஆட்சி ஆண்டின் எட்டாம் மாதத்தில்அதாவது கி.மு. 520- ஆம் ஆண்டு ஆக்டோபர்ஃநவம்பர் மாதத்தில்.
7:1 #8220;அரசன் தாரியுவின் நான்காம் ஆட்சியாண்டில் கிஸ்லேவுஎன்னும் ஒன்பதாம் மாதத்தின் நான்காம் நாளன்று ஆண்டவரின் வாக்குசெக்கரியாவுக்கு அருளப்பட்டது”அதாவது கி.மு. 518-ஆம் ஆண்டு நவம்பர்ஃடிசம்பர் மாதத்தில்.இறைவாக்கினர் செக்கரியா இரண்டு ஆண்டுகள் இறைவாக்குஉரைத்துள்ளார். கி.மு. 520 -ஆம் ஆண்டிலிருந்து கி.மு. 518- ஆம்ஆண்டுவரை இறைவாக்கினர் ஆகாய் வாழ்ந்தபோது இவர் இறைவாக்குஉரைத்துள்ளார்.

3. புத்தக அமைப்பு
செக்கரியா நூலில் 14 அதிகாரங்கள் உள்ளன. இந்த 14அதிகாரங்களும், செக்கரியா என்ற ஒரே இறைவாக்கினரால் எழுதப்பட்டனவாஎன்பது ஒரு கேள்விக்குறி. முதலில், சிலர் இவையனைத்தும்ஒருவராலேயே எழுதப்பட்டது என்று கூறினர். ஆனால் இப்போது இந்தக்கருத்தை விவிலிய வல்லுநர்கள் ஏற்றுக் கொள்வதில்லை, இந்தப் புத்தகத்தைஇரண்டு பிரிவுகளாகப் பிரித்து, இரண்டு பேரைக் குறிப்பிடுகின்றனர்.

1-8 அதிகாரங்கள் முதல் செக்கரியா (Pசழவழ ணுயஉhயசயைள)
9-14 அதிகாரங்கள் 2- ஆம் செக்கரியா (னுநரவநசழ ணுயஉhயசயைள)

முதல் செக்கரியா நூல், செக்கரியா இறைவாக்குரைத்து முடித்தவுடன்எழுதப்பட்டிருக்க வேண்டும். இதில் நிகழ்ச்சிகள் தெளிவாக வரலாற்றுக்குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இறைவாக்கினர் எசேக்கியேலின் கருத்தும், எண்ணமும் இதில் மிளிர்வதைக் காண முடிகிறது. இறைவாக்கினர் எசேக்கியேலும், செக்கரியாவைப் போலவே, இறைவாக்கினரும்,குருவும் ஆவார். எனவே, செக்கரியா, எசேக்கியேல் எண்ணத்தில் மிக்கஈடுபாடு உள்ளவராக விளங்கியிருக்கலாம்.

ஆனால் இரண்டாம் செக்கரியா நூல் (அதாவது 9-14 அதிகாரங்கள்)முதல் பகுதியிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக விளங்குகிறது. இதுஅநேகமாக செக்கரியா இறைவாக்குரைத்து முடித்து நீண்ட நாள்கள்ஆனபின் எழுதப்பட்டிருக்க வேண்டும். எந்த நிகழ்ச்சிகளுக்கும், நாளோ,ஆண்டோ கொடுக்கப்படவில்லை. கோவில் கட்டப்படுவதைப் பற்றி இதுகண்டு கொள்வதாகவே இல்லை. ஆனால், இங்கு பல இறைவாக்கினர்களின் கருத்துக்கள் நேரடியாக மேற்கோள்களாகக் கொடுக்கப்பட்டுஇருக்கின்றன.

4. திருவெளிப்பாடு முறை
இந்தப் புத்தகமானது திருவெளிப்பாட்டு முறையில் எழுதப்பட்டிருக்கிறது (யுpழஉயடலிளவiஉந டுவைநசயசல கழசஅ). பாபிலோனுக்குச் செல்லுமுன் இருந்தஇறைவாக்கினர்கள் யாரும் இந்த முறையைக் கையாண்டது கிடையாது.ஏன் இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இம்முறையேபாபிலோனிலிருந்து வந்தபின்தான் பிறந்திருக்கின்றது.

திருவெளிப்பாடு என்பது மறைந்திருக்கும் ஒன்றை வெளிப்படுத்துதல்அல்லது தெளிவாக்குதல் என்று பொருள். கடவுள் ஒன்றைப் பற்றிஒருவருக்கு வெளிப்படுத்தி, அதை மக்களுக்குச் சொல்லச் செய்யும்முறைக்குத்தான் திருவெளிப்பாடு (யிழஉயடலிளந) என்று பெயர். பாபிலோனியஅடிமைத்தனத்திலிருந்து வந்தபின் மக்கள் மிக துன்பப்பட்டார்கள். எனவேகடவுள் திருவெளிப்பாட்டின் முறை வழியாக இறைவாக்கினர் செக்கரியாவுக்கு வெளிப்படுத்துகிறார். அவர்கள் படும் துன்பங்கள் நிலையானவைஅல்ல. இன்னும் சிறிது காலம்தான் இத்துன்ப நிலை நீடிக்கும். அதற்குப்பின்அவர்கள் மகிழ்ச்சியைக் காண்பார்கள் என்று இந்நூல்கள் அறிவித்தன.

தானியேல் நூலும் திருவெளிப்பாட்டு முறையில் எழுதப்பட்டவைதான்.மக்கள், மன்னர்களால், மற்றவர்களால் துன்புறுத்தப்படும்போதுஎழுதப்பட்டது தானியேல் நூல். அங்கு தானியேலும் இந்தக் கருத்தைத்தான்தெரிவிக்கிறார். அதாவது, அவர்கள் சந்திக்கும் துன்பம் நிலையானதல்ல.இறுதியாக, விவிலியத்தின் இறுதிப் புத்தகமாகிய ‘திருவெளிப்பாடும்'இம்முறையில் எழுதப்பட்டதே. இந்த புத்தகத்தில்தான், இம்முறை தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் இறுதியாக வெற்றி பெறுவது கடவுளே என்பதைஅடித்துக் கூறுகிறது.

செக்கரியா இப்போதுதான் பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து நாடுதிரும்பியிருக்கிறார். எனவே அவருடைய முறையில் அவ்வளவு தெளிவுதெரியவில்லை. தானியேல் நூல் இன்னும் 200 ஆண்டுகள் கழித்துஎழுதப்பட்டது. எனவே அதில் இம்முறை அழகாகக் கையாளப்பட்டிருக்கிறது.இவ்வகையாக எழுதும் முறை, திருவெளிப்பாட்டுப் புத்தகத்திலே முழுமைபெற்றிருக்கிறது.

செக்கரியாவின் வார்த்தைகள், புதிய ஏற்பாட்டிலே, பல இடங்களில்உபயோகிக்கப்பட்டிருக்கின்றன.

1 : 7 - திவெ 6 : 1-8
1 : 16 - திவெ 11 : 1-2
5 : 1-3 - திவெ 11 : 5-10
9 : 9 - மத் 21 : 9
11 : 12 - மத் 26 : 15
12 : 10 - யோவா 19 : 37
13 : 7 - மத் 26 : 315.

முதல் செக்கரியாமுதல் பகுதியில் நிறைய காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லாக்காட்சிகளும் ஒரே மாதிரியான அமைப்பைப் பின்பற்றுகின்றன.

- முன்னுரை
- காட்சி கொடுக்கப்படுதல்
- இறைவாக்கினர் புரிந்து கொள்வதில்லை
- வானதூதர் தோன்றி அக்காட்சியை விளக்குதல்

கடவுளின் இறைத் தன்மையை அதிகமாக விளக்குகிறார். கடவுள்ஒருபோதுமே நேராகப் பேசுவது கிடையாது. எப்போதுமே வான தூதர்வழியாகவே பேசுகிறார். கடவுளின் இறைத்தன்மையின் முன் மனிதன்நிற்கத் தகுதியற்றவன் என்பதையும் மறைமுகமாகக் கொடுக்கிறார்.வரவிருக்கும் மெசியாவைப் பற்றி அதிகம் பேசுகிறார். ஏற்கனவேஆகாய் செருபாபேல் வழியாக மீட்பர் வரப்போகிறார் என்று எதிர்பார்த்தார்(ஆகாய் 2:23). அதுபோலவே, செக்கரியாவும் மீட்பரின் வருகையைவிரைவில் எதிர்பார்க்கிறார். இரண்டு வகையான மீட்பரை எதிர்பார்க்கிறார்.ஒருவர் அரசக் குடும்பத்திலிருந்து வருபவர். தாவீது குடும்பத்திலிருந்துவரவிருக்கின்ற மீட்பர். ஆட்சி அமைக்கும் அரசராக வருவார் என்பதுஇவருடைய எண்ணம். அவர் காட்சி காணும் இரண்டு ஒலிவ மரங்கள்,வரவிருக்கின்ற இரண்டு மீட்பர்களை குறிக்கின்றன (4:11-14).

6. இரண்டாம் செக்கரியா

9 : 1-7 பெலிஸ்தியர்கள் எப்போதுமே யூதர்களுக்குஎதிரிகள். அரசியல் மெசியா இப்போது படையெடுத்து வந்துஅவர்களை ஒரேயடியாக அழிக்கப்போகிறார்.
9 : 9-10 வரவிருக்கும் மெசியா.
9 : 11-14 இஸ்ரயேல் மீண்டும் நன்னிலையை அடைதல்.
10 : 1-11 : 3 கடவுள் தீயோர்களை அழித்து, நல்லவர்கள் மேல் தன்அன்பைப் பொழிகிறார்.
11:4-17 இரண்டு இடையர்கள்.
12:1-14:12 எருசலேமின் மீட்பும் வளமும்

எல்லா நாடுகளும் எருசலேமைத் தாக்க வரும். அப்போது கடவுள்எருசலேமின் அரணாக நின்று, எதிரிகளை வெட்டி வீழ்த்துவார். அப்போதுயூதர்கள் மத்தியில் ஒருவன் சாவான். எங்கும் அழுகையும் புலம்பலுமாகஇருக்கும் (12:10-14).

அந்த ஒருவன் யார்? சிலர் இது துன்புறும் ஊழியனாக இருக்கக்கூடும்என்று கருதுகின்றனர் (யோவா 19 : 37; திவெ 1 : 7).

 

9. மலாக்கி

1. முன்னுரை
‘மலாக்கி' என்பதற்கு ‘என் தூதுவர்' என்று பொருள். எனவே, மலாக்கிஎன்பது இவர் சொந்தப் பெயரா அல்லது காரணப் பெயரா என்பதுவிவாதத்திற்குரியதாக இருக்கிறது. சிலர் கூறுகிறார்கள் இவர் சொந்தபெயரே மலாக்கிதான் என்று. ஆனால் வேறு சிலரின் கருத்துப்படி இவரதுஉண்மையான பெயர் கிடைக்கவில்லை; எல்லா இறைவாக்கினர்களுமேகடவுள் தூதர்கள்தானே! எனவே இவரும் கடவுளின் தூதர் என்றுபொருள்படும்படி ‘மலாக்கி' என்று அழைக்கப்படுகின்றார்.அவரது பணிக்காலத்தையும் நாம் தெளிவாக அறியமுடியவில்லை.

இவருடைய பணிக்காலம் எஸ்ரா, நெகமியா ஆகியோரின்பணிக்காலத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. எஸ்ரா, நெகமியா ஆகியோரின்பணிக்காலத்தைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமன்று.மலாக்கி பேசுவதைப் பார்த்தால் அவர் காலத்தில் கோவில் கட்டிமுடித்தாகிவிட்டது. ஆனால் மக்கள்தான் காணிக்கை செலுத்துவதைப் பற்றிஒன்றும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படியானால் இவரதுபணிக்காலம், ஆகாய், செக்கரியா ஆகியோரின் இறைவாக்குப் பணிக்குபின்னர்தான். ஏனெனில் ஆகாய், செக்கரியா இருவரும் கோவில் கட்டமக்களிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அதே நேரத்தில் இவருடைய போதனையும், எஸ்ரா, நெகமியாஆகியோரின் போதனையும் ஒத்துப் போகின்றன. எனவே மலாக்கியும்,அவர்கள் காலத்தில் இறைவாக்கு உரைத்திருக்கலாம். இறைவாக்கினர்மலாக்கியின் இறைவாக்கு பணி ஏறக்குறைய கி.மு.480 லிருந்து கி.மு. 460வரைக்குள் இடம் பெற்றிருக்கலாம்.

2. மலாக்கியின் போதனை
பாபிலோனியாவில் அடிமை வாழ்வு வாழும்போது, மக்களுக்குத்திருச்சட்டத்தின் மேல் தனிப்பட்ட அன்பு பிறக்கிறது. யூதர்கள் தங்கள்வாழ்விலே, எருசலேம் கோவில், எருசலேம் நகர், அரசு இம்மூன்றையும்முக்கிய பொருள்களாகக் கருதி வந்தனர். ஆனால் அவர்கள் பாபிலோனுக்குஅடிமைகளாக நடத்திச் செல்லும்போது, இம்மூன்றையுமே இழந்துவிட்டார்கள். எருசலேம் நகர் அழிந்துவிட்டது. அரசு தோற்கடிக்கப்பட்டு விட்டது.எருசலேம் கோவில் அழிக்கப்பட்டு விட்டது. எனவே யாவே கடவுளேதங்களை மறந்துவிட்டதாக எண்ணி மனம் வருந்துகின்றனர். இந்தநேரத்தில் இவர்கள் கையிலிருந்தது இறைவார்த்தை ஒன்றுதான்.அதைத்தான் எப்போதுமே தியானித்து வந்தார்கள். இணைச்சட்ட நூல்மற்றும் சில புத்தகங்களையும் இந்த நேரத்தில்தான் எழுதினார்கள்.

ஆனால் சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்தபின் - இறைவனுக்குக்காணிக்கைகள், பலி செலுத்துவதில் அக்கறையற்று இருக்கிறார்கள். எனவேமலாக்கி மக்களை எச்சரிக்கிறார். மேலும், பாபிலோனியாவில் பழகியமற்றுமொரு கெட்ட பழக்கத்தைக் கடைபிடித்தார்கள். அதுதான் கலப்புத்திருமணமும், மணமுறிவும். மலாக்கி, மணமுறிவை கடுமையாகஎதிர்க்கிறார். இறைவாக்கினர் மலாக்கி திருமணத்தின் புனிதத் தன்மையைஎடுத்துரைக்கிறார்.

3. புத்தக அமைப்பு

1:2-5 இஸ்ரயேல் மீது ஆண்டவர் கொண்டுள்ள அன்பு.
1:6-2:9 குருக்களைக் கண்டித்தல், முழுமையான பலிகளைச்செலுத்த அழைப்பு.
2:10-16 திருமணத்தின் புனிதத்தன்மை (நம்பிக்கை துரோகம்)
2:17- 3:7தண்டனைத் தீர்ப்பு அண்மையில் உள்ளது. (ஆண்டவரின் நாள்)
3:6-12 கோவிலுக்கு வரி செலுத்தத் தவறுதல்.
3:13-4:3 ஆண்டவரின் நாளில் புண்ணியவான்களின் உயர்வு
4:4 உடன்படிக்கையை மதித்தல்
4:5-6 எலியாவின் திருப்பணி

 

10. ஒபதியா

1. முன்னுரை
பழைய ஏற்பாட்டிலே மிகவும் சிறிய புத்தகம் ஒபதியா நூல்தான்.இறைவாக்கினர் ஒபதியாவைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. அவர்எங்கிருந்து வந்தவர், எந்த நேரத்தில் இறைவாக்குரைத்தார் என்பதெல்லாம்எதுவுமே நமக்குத் தெரியாது. ஆனால் அவர் இறைவாக்குரைத்தது,எருசலேமின் வீழ்ச்சிக்குப் பின்தான் என்பது நிச்சயம். ஏனெனில் ஏதோம்,பாபிலோனோடு சேர்ந்து போரிட்டதையும் கூறுகிறார். இந்தப் புத்தகத்தின்முழுக்கருத்துமே ஏதோமுக்கெதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பாகவே உள்ளது.

2. யார் இந்த ஏதோமியர்கள்?
யாக்கோபின் சகோதரனான ஏசாவின் வழிவந்தவர்கள்தான்ஏதோமியர்கள் (தொநூ 25:30). இஸ்ரயேலர்களுக்கும், ஏதோமியர்களுக்குமிடையே எப்போதுமே சண்டைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

ஏசா, ஏதோமில் சென்று குடியேறியதும், அங்கே அவர்கள்செல்வந்தர்களாக மாறினார்கள். ஏதோம் அரேபியாவுக்குச் செல்லும் வழிமேல் உள்ளது. எனவே அரேபியா, எகிப்துக்குச் செல்லும் பெரிய பெரியவணிகர்களெல்லாம் ஏதோமைக் கடந்தே செல்ல வேண்டும். அவர்கள் மேல்இவர்கள் மிகுந்த வரி விதித்து பணம் சம்பாதித்தார்கள். மற்றவர்களோடுபழகும் வாய்ப்பு இருந்தததால், இவர்கள் உலகைப் பற்றிய அறிவில் நாளுக்குநாள் வளர்ந்து வந்தார்கள்.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வெளிவந்தஇஸ்ரயேலர்கள், தாங்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும் வழியில்ஏதோம் வழியாகச் செல்வதற்காக ஏதோம் அரசனிடம் உத்தரவு கேட்டதற்குஅவன் மறுத்துவிட்டான் (எண் 20:41-21). எனவே அவர்கள் வெகுதூரம்பயணம் செய்து வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று.

தாவீது இஸ்ரயேலுக்கு அரசராக மாறியதும், ஏதோமின் மீதுபடையெடுத்துச் சென்று, அதன் மீது வெற்றி பெற்று, அதைத் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தார். அவருக்குப்பின் அரசாட்சிக்கு வந்த அவர் மகன்சாலமோன் காலத்திலும் ஏதோமியர்கள் இஸ்ரயேலின் ஆட்சிக்குக் கீழேஇருந்தார்கள். எனவே ஏதோமியர்கள் எப்போதுமே இஸ்ரயேலர்களைப் பழிவாங்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாபிலோனிய மன்னன்இஸ்ரயேலர்கள் மீது படை யெடுத்துச் சென்றபோது, பாபிலோனியர்களோடுசேர்ந்து, ஏதோமியர்களும் எருசலேமைத் தாக்கினார்கள். மேலும்இஸ்ரயேலர்கள் அடிமைத்தனத்திலிருக்கும் போதும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஏதோமியர்கள் சென்று அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்துவந்தார்கள் ( ஒப 1:10-14; எசே 25:12; திபா 137;7).இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிலிருந்து, சொந்த நாடு திரும்பியதும்,ஏதோமியர்கள் அவர்களைத் தாக்கும் நிலையில் இருக்கவில்லை.நாபாட்டியன் (யேடியவநயளெ) என்ற ஒரு குழு ஏதோமோடு போரிட்டு, ஏதோமைமுழுவதும் தனதாக்கிக் கொண்டது.ஒபதியா இங்கே, ஏதோம் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக வெகுண்டுஎழுந்து துன்பங்கள் பல தந்ததால், ஆண்டவர் ஏதோமுக்குக்கொடுக்கப்போகும் தண்டனையைப் பற்றி, ஏதோமின் அழிவைப் பற்றிப்பேசுகிறார்.

3. புத்தகத்தின் அமைப்பு

1 : 1-9 ஏதோமின் மேல் தீர்ப்பு
1 : 10-14 ஏதோமின் அழிவிற்குக் காரணம்
1 : 15-16 வேற்றினத்தார் மேல் வரும் தீர்ப்பு
1 : 17-21 இஸ்ரயேலின் வெற்றி

 

11. யோவேல்

1. முன்னுரைஇறைவாக்கினர் யோவேல் ஒருவேளை யூத நாட்டைச் சேர்ந்தவராகஇருக்க வேண்டும். எருசலேம் பற்றிய குறிப்புகளைத் தெளிவாகத் தருகிறார்.யூதா நாட்டை ‘நம் நாடு' என்று அழைக்கின்றார் ( 1:6; 2:1, 15, 25). மேலும்யூதாவை, யாவேக்குச் சொந்தமான நாடு என்றும் கூறுகிறார் (2:17, 18,19,26). தென்நாட்டிலே அவருக்கு மிகவும் பிடித்தது சீயோன் மலை, எருசலேம்நகர், அங்கிருக்கும் இறைவனின் தேவாலயம் (2 : 1; 3 : 17). இந்தக்குறிப்புகளையெல்லாம் பார்க்கும்போது, அவர் தென் நாட்டைச்சார்ந்தவராகவே இருக்க வேண்டும்.

யோவேல் இறைவாக்குப் பணியோடு, கோவிலில் பலி செலுத்தும்குருவாகவும் பணியாற்றி வந்துள்ளார். இறைவார்த்தையை ஏற்றுமக்களுக்குப் போதித்துள்ளார். அதே வேளையில் குருவாகவும் இருந்ததால்,கோவிலின் மேன்மையையும் உணர்ந்திருக்கிறார். அவர் ஒரு திறமைவாய்ந்த கவிஞர், கல்விமான். அவர் நூலிலே, பலவகையான எழுத்துமுறைகளைக் (டுவைநசயசல கழசஅ) கையாண்டுள்ளார். திருவெளிப்பாடு(யுpழஉயடலிவiஉ) முறையையும் நாம் அவர் புத்தகத்தில் பார்க்கிறோம்.

2. யோவேலின் பணிக்காலம்
இறைவாக்கினர் யோவேல் எப்போது வாழ்ந்தார், எப்போதுஇறைவாக்கு உரைத்தார் என்பதெல்லாம் ஒன்றுமே தெளிவாகத்தெரியவில்லை. அவருடைய வரலாற்றுக் குறிப்புகள் எங்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அதே நேரத்தில் அவர் நூலை நாம் ஊன்றிப்படிப்போமானால், சில குறிப்புகளை, கருத்துக்களை நாம் பெற முடியும்.

3:2, #8220;நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்று சேர்த்துயோசப்பாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்.......”அதாவது, கடவுள் தன் மக்களை மீண்டும் ஒன்று சேர்க்கப் போவதாககூறுகிறார். மேலும் அரசர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் கொடுக்கப்படவில்லை. அதாவது அரசர்கள் யாரும் அந்த நேரத்தில் இல்லை. அதேநேரத்தில் அர்ச்சகர்களுக்கும், பீடத்தில் பணி செய்வோர்களாகிய குருக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது (1:13, 14). அப்படியானால்,அரசர் இல்லாத அந்தக் காலம், அடிமைத்தனத்திலிருந்து திரும்பிவந்தகாலமாகத்தான் இருக்க வேண்டும்.

கோவில் திரும்ப கட்டி முடித்தாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக‘'ஆண்டவரின் நாள்' திருவெளிப்பாடு எழுதும் முறை வழியாகவிளக்கப்பட்டிருக்கிறது. இந்த எழுத்து முறை வளர்ந்ததே பாபிலோனிலிருந்து திரும்பிய பின்தான். எனவே அவர் மக்கள் பாபிலோனிலிருந்து சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்தபின் கோவில் கட்டிய பின்புதான் இறைவாக்குப்பணியைச் செய்திருக்க முடியும். ஆக யோவேலின் பணிக்காலம் ஏறக்குறையகி.மு. 440-400 ஆண்டிற்குள் இருக்கவேண்டும்.

3. புத்தக அமைப்பு
தமிழ் விவிலியத்தில், யோவேல் நூலில் 3 அதிகாரங்கள் உள்ளன.ஆங்கில சு.ளு.ஏ. பதிப்பு, கிரேக்க மொழி ‘செப்துவாசிந்த்' (டுஓஓ), லத்தீன்உல்காத்தா ஆகிய பதிப்புகளிலும் 3 அதிகாரங்களே உள்ளன. ஆனால்வேறுசில பதிப்புப் பிரதிகளில் 4 அதிகாரங்கள் உள்ளன.

தமிழ் ரூயஅp; சு.ளு.ஏ. வேறு பதிப்பு

1. 1- ஆம் அதிகாரம்.
2 : 1-27 2- ஆம் அதிகாரம்
2 : 28-32 3- ஆம் அதிகாரம்.
3 4- ஆம் அதிகாரம்.1:1-2:27 முதல் பகுதிவெட்டுக்கிளிகள் விளைத்த அழிவு.

யு. 1:1-20 நாட்டின் அழிவு பற்றிய புலம்பலும், மனமாற்றத்திற்கு அழைத்தலும்.

ய) 1 : 1-12 நாட்டின் அழிவு பற்றிய புலம்பல்
டி) 1 : 13-14 மனம் வருந்தி மன்றாடும்படி அழைப்பு
உ) 1 : 15-20 செபம்.

டீ. 2 : 1-17 ஆண்டவரின் நாளும் வரவிருக்கும் வேதனையும

;ய) 2 : 1-11 எச்சரிக்கை
டி) 2 : 12-17 மனம் வருந்தும்படி அழைப்பு
உ) 2 : 17டி- செபம்.

. 2 : 18-27 மன்றாட்டு கேட்கப்பட்டது

னு. 2 : 28-3 : 21 புத்துலகமும் ஆண்டவரின் நாளும்.

ய) 2 : 28-32 எருசலேமின் இறுதி வெற்றி.
டி) 3 : 1-15 பிறவினத்தார் மீது தீர்ப்பு
உ) 3 : 16-18 ஆண்டவரின் நாள்.
ன) 3 : 19-21 இஸ்ரயேலின் மகிமையுள்ள எதிர்காலம்.

4. யோவேலின் போதனைகள்
முதல் இரண்டு அதிகாரங்களில் வெட்டுக்கிளிகள் விளைவிக்கின்றஅழிவைப் பற்றிக் கூறினார். வெட்டுக்கிளிகள் எல்லாவற்றையும் வெட்டிதின்றுவிட்டுச் செல்கின்றன. விளைச்சல் முழுவதும் பாழாகிறது. மேலும்மழை வேறு சரியாகப் பெய்யவில்லை. மேகம் பொய்த்துவிட்டது (1:17-20).இவைகளிலிருந்து யோவேல் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிக்கூறுகிறார். மக்களின் செயல்கள் அவர்களைக் கடவுளிடமிருந்து வெகுதூரம்எடுத்துச் சென்றுவிட்டன. ஆனால் மக்கள் மனம் மாறி வந்தால், யாவேஅவர்களை மன்னித்து, ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார் (2:12-14).இறைவனின் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதால், யோவேல் மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கிறார்.

இரண்டாம் பகுதியிலே, யோவேல் பல காட்சிகளைக் காண்கிறார்.ஆண்டவரின் நாள் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பார்க்கிறார்.எல்லோர் மேலும் ஆவி பொழியப்படும் என்று கூறுகிறார் (2:28-29).ஏறக்குறைய, எல்லா இறைவாக்கினர்களுமே, ஆண்டவரின் நாளில், மக்கள்மேல் ஆவி பொழியப்படும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர் ( எசேக் 26: 25-27; 39:29; எசா 44:3).

நீதித்தலைவர்கள் நூலில், கடவுள் தேர்ந்தெடுத்த நீதித் தலைவர்கள்மீது, ஆவி தங்கி அவர்களை வழிநடத்தியதை நாம் வாசிக்கிறோம் ( நீத 3:10).இங்கு ஆவி, உடல் வலிமையையே அதிகம் குறித்து நின்றது. ஆனால்இறைவாக்கினர்கள் எசேக்கியேல், எசாயா ஆகியோரின் பார்வையில் ஆவிஒரு புதிய கருத்தைப் பெறுகிறது. ஆவி அருங்கொடைகளை பொழியும் ஒருதுணையாக மாறுகிறது. இங்கு யோவேல், எசக்கியேலின் கருத்தையேபின்பற்றுகிறார்.

பெந்தகொஸ்தே நாளில், தூய ஆவியைப் பெற்ற பின்,பேதுருபேசுகையில், அவர் யோவேலின் இந்தப் பகுதியையே (2:28) மேற்கோளிட்டுக்காட்டுகிறார். அவர் யோவேலின் கருத்துப்படி ஆவியானது எல்லோர் மேலும்பொழியப்படவில்லை. யூதர்கள் மேல் மட்டும்தான் ஆவி பொழியப்படுகிறது.#8220;ஆவி பொழியப்படும்” என்று கூறுகிறார், இது எப்போது நிகழும் என்பதைஅவர் கூறவில்லை. ஆனால் அதே நேரத்தில் ‘ஆவி பொழியப்படல்'யோவேல் நூலில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

 

12. யோனா

1. முன்னுரை
பன்னிரு சிறிய இறைவாக்கினர்களில் யோனா இறைவாக்கினர்ஐந்தாம் இடத்தை வகிக்கின்றார். மற்ற இறைவாக்கினர்கள் இஸ்ரயேல்மக்கள் உண்மை கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும்என்று போதித்தார்கள். ஆனால் யோனா இறைவாக்கினர் போதித்ததாக நாம்பார்ப்பது கிடையாது. மாறாக கடவுளின் தீர்ப்பை அறிவிப்பவராக நாம்காண்கின்றோம். யோனா என்றால் ‘புறா' என்று பொருள்படும். இதுவேஇஸ்ரயேலின் சின்னமாகும் ( திபா 74:19; ஓசே 11:11).

2. வாழ்க்கைக் குறிப்பு
யோனா என்னும் இறைவாக்கினர் ஒபேரில் அமைந்திருந்தக் கேத்என்னும் ஊரில் வாழ்ந்து வந்த அமித்தாய் என்பவரின் மகன். இவர் வாழ்ந்தயூதா நாட்டை இரண்டாம் எரொபவாம் ( கி.மு786 - 746 ) அப்போது ஆண்டுவந்தான். எரொபவாமுக்கு #8220;ஏமாத் முதல்பாலைவனக் கடல்வரை இஸ்ரயேலின்அரசாகும்” என்ற இனிய இறைவாக்கைஉரைத்தவர். இவ்வாறு இவர் இஸ்ரயேலின் நம்பிக்கை கொணரும் இறைவாக்கினராக இருந்தாரா அல்லது இறைவாக்கினர் குழுவைச் சேர்ந்தவரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இவர்ஒரு சாதாரணப் பேச்சாளராக இருந்திருக்கவேண்டும்.

கடவுளின் அன்பும், இரக்கமும்தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களிடத்தில் மட்டுமே இருக்க வேண்டும்; இஸ்ரயேலரைத் துன்புறுத்தும் மற்றபிறவினத்து நாடுகள் அனைத்தும் அவரின் தண்டனைக்கு ஆளாகி அழியவேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை உடையவராக யோனாகாணப்படுகின்றார். எனவேதான் இறைவனின் கட்டளைக்குத் தப்பித்துச்செல்பவராக யோனா நூலில் காட்டப்படுகின்றார்.

3. வரலாற்றுப் பின்னணி
'
நினிவே' என்றாலே #8220;நானே இருக்கிறேன், எனக்கு நிகர்யாருமில்லை” என்று ஆணவத்தோடு கொக்கரிக்கும் போர்க்களம் நிறைந்ததுஎன்று எண்ணப்பட்டது. (செப் 3:13-15). பொய்களும், கொள்ளைகளும்,வேசித்தனமும் நிறைந்த இடம் என்று கருதப்பட்ட இந்த ‘நினிவே'தான்அசீரியா நாட்டின் தலைநகராக இருந்தது.இந்த அசீரியா நாடு கிழக்கு நாடுகளைப் போரினால் அடிமைப்படுத்தி,இரத்தக்கறை பழ்?த நாடாகவும், பொய்களும், கொள்ளைகளும்,ஒழுக்கக்கேடுகளும், பொய் தேவதைகளை வணங்கும் தீயச் செயல்களும்மலிந்த நாடாகவும் காணப்பட்டது.இறைவாக்கினர் யோனாவின் பணிக்குப் பிறகு 50 ஆண்டுகள்சென்று, அசீரியர்கள், இஸ்ரயேலரின் ஆட்சியைக் கைப்பற்றினார்கள் ( கி.மு.722).

4. சமுதாயப் பின்னணி
ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களினத்தை மட்டுமேஅன்பு செய்ய வேண்டும்; அவர்கள் மீது யாவே இரக்கம் காட்ட வேண்டும்;அவர்களின் துன்ப வேளையில் உதவி செய்து காப்பாற்ற வேண்டும்; அவரதுஅருளால் தாங்கள் மட்டுமே எல்லாச் செல்வங்களும் நிரம்பப் பெற்றுமகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று எண்ணி வந்தார்கள் இஸ்ரயேல்மக்கள்.

அதே வேளையில் அசீரியர்கள் கொடியவர்கள், ஆண்டவரின்கோபத்திற்கு ஆளாக வேண்டியவர்கள், ஆண்டவரின் மீட்புக்குத்தகுதியற்றவர்கள் என்று குறுகிய நோக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள்.இந்நூலைப்பற்றி இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

4.1. இது ஒரு வரலாற்று நிகழ்ச்சி

1) யோனா என்பவர் இரண்டாம் எரொபவாம் ஆண்ட காலத்தில்கேத் என்ற ஊரில், அமித்தாய் என்பவரின் மகனாக பிறந்தார்.
2) இயேசு, யோனாவைப் பற்றி மத் 12:39-41- இல்குறிப்பிடுகின்றார். இவரால் நினிவே நகரத்து மக்கள் மனம்திரும்பினர் என்பது வரலாற்றில் இடம் பெற்றிருப்பது போல்தெரிகின்றது.
3) பிறவினத்தார் மத்தியில், குறிப்பாக நினிவே நகருக்குத்தூதுரைக்கச் சென்ற யோனா போன்று சீதோன், சிரியா போன்றபிற இன நாடுகளுக்கு எலியா, எலிசா போன்றவர்கள் (1 அர 17 :19; 2; 2 : 9) சென்றார்கள் என்று பார்க்கிறோம்.

4.2. வரலாற்று நிகழ்ச்சி அல்ல, மாறாக உவமை
யோனா நூலில் காணப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் வரலாற்றுநிகழ்ச்சிகளல்ல் மாறாக அது ஓர் உவமை என்று சில விவிலிய ஆசிரியர்கள்கருதுகின்றார்கள்.

1) யோனா என்றாலே ‘புறா' என்று பொருள். இதுவேஇஸ்ரயேலின் சின்னமாகும் ( திபா 74:19 ஓசே11:11).
2) யோனா நூலில் அரமேய மொழி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்தகைய வழக்கம் பாபிலோனியஅடிமைத் தனத்திற்குப் பிறகே உண்டானது.
3) பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகுஅதிகமான நல்லொழுக்கக் கதைகள் தோன்றின. உதாரணமாகதோபித்து , யூதித்து போன்றவைகளாகும். சில விவிலியத்தில்இடம் பெற்றன. மற்றவைகள் ராபீக்களால் மற்றபுத்தகங்களில்எழுதப்பட்டன.
4) #8220;நினிவே ஒரு மாபெரும் நகரம்” என்று யோனா நூலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் அதுஒரு சிறிய நகரம் என்று கூறுகின்றார்கள்.
5) இயேசு யோனாவைப்பற்றி ( மத் 12:39-41;லூக் 11:29-32) கூறுவதால், யோனாவரலாற்றில் இடம் பெற்றிருக்க வேண்டும்என்று கூறுவதற்கில்லை. இயேசு நல்லசமாரியர் நிகழ்ச்சியைஉவமையாகக் கூறுகின்றார்.

யோனா நூலின் ஆசிரியர், எரேமியா,எசேக்கியேல் என்ற இறைவாக்கினர்களால்கவர்ந்து இழுக்கப்பட்டவராய் அவர்களின் இறைவாக்குகளையும் படிப்பினைகளையும் யோனாவின்வழியாகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும்உலகிற்கு அளிக்கின்றார்.

4. ஆசிரியர் காலம்
யோனா நூலின் ஆசிரியர் யார் என்று சொல்வதற்கில்லை. காலம்கி.மு. 400-200 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டது.

5. மையப்பொருள்

1) இறைவன் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களை மட்டுமன்று,மற்றவர்களையும் அன்பு செய்கின்றார். கொடுமைகள் புரிந்துவரும் அசீரியர்களையும் கடவுள்அன்பு செய்கின்றார்.பராமரிக்கின்றார். மீட்பு வழங்குகின்றார். ஆனால் அவர்கள்அனைவரும் மனம் திரும்ப வேண்டும்.
2) யோனா இறைவாக்குப் பணிக்குச் செல்ல வேண்டும் என்றுகடவுள் விரும்புகின்றார். பல துன்ப சூழ்நிலைகளிலிருந்துஅவரைக் காப்பாற்றி, கொடுக்கப்பட்ட தூதுரைக்கும் பணியைநிறைவேற்ற வைக்கின்றார்.

6. புத்தக அமைப்பு

1) முதல் தூதுப்பணி (1:1-2:11)
அ) யோனாவின் அழைப்பு (1:1-2)
ஆ) தார்சீசுக்குத் தப்பியோடுதல் (1:3)
இ) புயல் (1:4-16)ஈ) பெரிய மீன் (2:1-11)2)

2) இரண்டாம் தூதுப்பணி (3:1-4:11)
அ) மறுமுறை அனுப்பப்படுதல் (3:1-4:11)
ஆ) நினிவேயின் மனமாற்றம் (3:5-10)
இ) யோனாவின் கோபம் (4:1-4)
ஈ) ஆமணக்குப் பந்தலின் நிழலில் (4:5-11)

 

7. விளக்கவுரை


1. யோனா தூதுப்பணி ஏற்க மறுக்கிறார்

;1:1 யோனா: யோனா என்றால் #8220;புறா, உண்மையின் மைந்தன்” என்றுபொருள்; கேத் என்ற ஊர் நாசரேத்துக்கு வடகிழக்காக நான்குகிலோமீட்டர் தொலைவில் உள்ளது.1:1 #8220;நினிவே என்னும் மாநகருக்குப் போய்”பொதுவாக இறைவாக்கினர்கள் ஒரு நாட்டையோ அல்லதுநகரத்தையோ அவர்களின் பாவங்களின் பொருட்டுதண்டிப்பதற்காகவே அனுப்பப்பட்டார்கள். இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள்யாரும் பிறவினத்தாருக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கு அனுப்பப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் யோனா நினிவே நகர மக்களுக்குஇறைவாக்குரைக்க அனுப்பப்படுகின்றார். யோனாவின் தப்பிக்கநினைக்கும் செயல் நினைத்துப்பார்க்க முடியாததாகத் தோன்றுகிறது.

1 : 1 நினிவே என்னும் மாநகரம்இது டைகிரிஸ் என்னும் நதிக்கரையின் மேல் அமைந்துள்ள நகரம்.இது அசீரியாவின் தலைநகராக விளங்கியது. இது 5 கீ.மீ நீளமும் 2கி.மீ அகலமும் 1800 ஏக்கர் நிலப்பரப்பும் கொண்டது. இது தீமைகளின்இருப்பிடமாகக் காணப்பட்டது.

1:3 தார்சிசுநினிவே நகரத்தின் எதிர்ப்புறமாக உள்ள நகரம் என்று சிலர்கருதுகின்றனர். ஸ்பெயின் நாட்டில் உள்ளது என்று சிலர்கூறுகின்றனர். இந்நகரம் வெள்ளி, இரும்பு போன்றவைகள் ஏற்றுமதிசெய்கின்ற இடமாக இருந்தது.1:4: கடவுளின் வல்லமையும் அதிகாரமும் இயற்கையின் வழியாகவெளிப்பட்டது. முக்கியமாக காற்று, கடல் இவைகளின் வழியாகவெளிப்படுத்தப்பட்டது. பிறவினத்து கப்பலோட்டிகள் ஒவ்வொருவரும்தங்களுடைய தெய்வங்களை வைத்திருந்தும், இஸ்ரயேலின்கடவுளால் உண்டாக்கப்பட்ட பெரும்புயலை அவைகளால் நிறுத்தமுடியவில்லை. இயேசு (மத் 8:24) புயலடித்த பொழுதும் அவர்உறக்கம் கலையாமல் தூங்கியதைப் போன்று இங்கே யோனாவும்புயலடிக்கும் பொழுது நிம்மதியாகத் தூங்குகின்றார்.1:9: கப்பலோட்டிகள் அனைவரும் தங்கள் தங்கள் இறைவனிடம்மன்றாடுகின்றனர். இறுதியில் சீட்டுப்போட்டுப் பார்க்கும்போது, அச்சீட்டுயோனாவின் பெயரில் விழுந்து விடுகின்றது. இறைவனுக்கெதிராகத்தவறு செய்தால் கடவுள் அவர்களைத் தண்டிப்பார் என்பது அவர்களதுநம்பிக்கை; எனவே நீ யார்? உன் தொழிலென்ன? என்று கேட்க,

"நான் ஓர் எபிரேயன், நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக்கடவுளாகிய ஆண்டவரை வழிபடுபவன்” என்று கூறுகின்றார்.பொதுவாக ‘எபிரேயன்' என்று பிறவினத்தார் இஸ்ரயேலரைப் பற்றிக்குறிப்பிடும்பொழுதும் அல்லது இஸ்ரயேலர் பிறவினத்தாரோடுஉரையாடும்பொழுதும் தங்களையே அறிமுகப்படுத்திக் கொள்வர்.

1:4: பிறவினத்துக் கப்பலோட்டிகள் யோனாவின் கடவுளிடம் புயலுக்குக்காரணமான சீட்டு விழுந்த யோனாவின் சாவுக்கு நாங்கள்பொறுப்பாளிகள் அல்ல.

2:1 புயலை உண்டாக்கிய இறைவன் இப்போது பெரிய மீனைத் தன்வல்லமைக்கு உட்படுத்துகின்றார். எல்லா உயிரினங்களின் மீதும்தனக்கு அதிகாரம் உண்டென்பதை நிரூயஅp;பிக்கின்றார். இந்நிகழ்ச்சியை,எலியாவுக்கு எவ்வாறு காகங்கள் காலையிலும் மாலையிலும்அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தனஎன்ற நிகழ்ச்சியோடு (1 அரசர்1:17) ஒப்பிட்டுஇறைவனின் வல்லமையை அறியலாம்.2:3: துன்பத்திலிருந்து மீட்க்கப்பட்டதை எண்ணிப்பாடிய புகழ்ச்சி அல்லது நன்றித்திருப் பாடலாகும். இந்தத்திருப்பாடல் யோனா நூலில்ஆசீரியரால் நுழைக்கப்பட்டிருக்க வேண்டும்,அல்லது பின்னால் வந்த ஆசிரியரால் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

2:11: பாபிலோனின் பேல் (வேதாளம்) விழுங்கப்பட்ட இஸ்ரயேல் (எரேமி 51:44) எவ்வாறுவாயினின்று கக்கப்பட்டதோ அவ்வாறேயோனா இறைவாக்கினரும் விழுங்கப்பட்டமீனினால் கடற்கரையில், அதுவும் பயணம் தொடங்கிய அதே கரையில் கக்கப்பட்டார். இறைவனின் இரக்கமும் குறுக்கீடும் இங்கேநன்றாக வெளிப்படுகின்றது.

3:1: யோனா தனது முதல் அழைப்பை ஏற்க மறுத்தாரா என்பது பற்றிஆசிரியரால் ஒன்றும் கூறப்படவில்லை. யோனாவின் மனதுஇன்னும் மாற்றம் அடைய வில்லை. இருப்பினும் வேண்டா வெறுப்போடு இம்முறை ஏற்கின்றார். ஏனெனில் தப்பித்துச் செல்வது முடியாதகாரியம். வீண்செயல் என்பதை இப்போது உணர்ந்திருக்கிறார்

3:5: நினிவே நகர மக்கள் யோனாவின் தூதுரைக் கேட்டவுடனேமனமாற்றம் அடைந்தார்களா அல்லது அரசனின் ஆணைகிடைத்தவுடன் தவம் செய்யத் தொடங்கினார்களா என்பது யோனாஆகமத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

4:1: யோனாவின் கோபம் அவரின் குணநலன்களையும் அவரின்நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது. நினிவே மக்கள் தவம்புரிந்தால், கடவுள் தன் கோபத்தைத் தணித்து அவர்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார். எனவேதான் அவர் ஓடிப்போக முயன்றார்.கடவுளின் கண்ணோட்டத்தில் யோனாவின் தூதுரை வெற்றி பெற்றதாகக் காணப்படுகின்றது. யோனாவின் கண்ணோட்டத்தில் அதுஒரு வெறுப்பு சூழ்நிலையை உருவாக்கியதாகக் காணப்படுகின்றது.

13: நினிவே நகரத்தைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அதன்மீது இரக்கம்காட்டியதால், அவர் வருத்தமுற்றவராக உயிரை இழந்தவர் போன்றுகாட்சி அளிக்கின்றார். ‘ வாழ்வதை விட சாவதே எனக்கு நல்லது'(4:8) என்ற யோனாவின் முறையீடு எலியா இறைவாக்கினரைப்பிரதிபலிப்பதாக இருக்கின்றது (1 அரசர் 19:4).

4:5-11: யோனா இறைவாக்கினர் நகருக்கு வெளியே இருந்து அதனைக்கவனித்துக் கொண்டிருக்கிறார். நினிவே நகர் இறைவனின்கோபத்திற்கு ஆளாகித் தண்டிக்கப்படும் என்ற நம்பிக்கையினைஇழந்தவராகத் தோன்றவில்லை. அதனுடைய அழிவைப் பார்க்கஇன்னும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றார்.

 

------------------------------------------
--------------------------
----------------
------
--