ஞான நூல்கள்

மேதகு ஆயர். செ. சூசைமாணிக்கம்
சிவகங்கை

விவிலிய அன்பர்களே,

விவிலிய அன்பர்களே
கிறிஸ்தவ மரபுப்படி பழையஏற்பாட்டின் மூன்றாம் பகுதி ஞானநூல்கள். இஸ்ரயேல் மக்களின்உள்ளக்கிடக்கையை, ஆழ்ந்தஅனுபவத்தை வெளிப்படுத்தும்திருப்பாடல்களையும் கூட உள்ளடக்கிய ஞானநூல்கள் தொகுப்பு மனிதனின்அனுபவச் சுரங்கம் என்றால் அது மிகையாகாது. சமீப காலம் வரை யூதகிறிஸ்தவ வாழ்வில் சமய, மற்றும் ஓழுக்கவியல் போதனைகளுக்குஅடிப்படை மூலமாக ஞான நூல்கள் இருந்தன. சட்ட நூல்களுக்கெல்லாம்‘'மோசே' மூல ஆசிரியர் என்று கருதுவது போல் ஞானநூல்களுக்கெல்லாம்மூல ஆசிரியராக சாலமோன் கருதப்படுகிறார். இருப்பினும் இது ஒரு மரபுக்கருத்துதான்.

ஆய்வு முறையில் நோக்கும்போது இஸ்ரயேலின் வாழ்வில் கி.மு.10-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 2-ஆம் நூற்றாண்டுவரை பலவித சூழ்நிலைகளில்பலதரப்பட்ட மக்களால், யூத, கிரேக்க, மெசபடோமிய கலாச்சாரப் பின்னணியில்எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பே ஞானநூல்கள்.
இந்நூல்கள் பற்றியத் தெளிவான விளக்கத்தை எழுதித் தந்தஅருள்திரு செ. சூசைமாணிக்கம் அவர்களுக்கு எமது மனமார்ந்தபாராட்டுகளும் நன்றியும்.

இறைவார்த்தைப் பணியில்
அருள்திரு முனைவர் ஜோமிக்ஸ்
இயக்குநர்


பொருளடக்கம்
1. முன்னுரை
2. ஞானஇலக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
3. ஞானத்தின் குறிக்கோள்
4. ஞான இலக்கியத்தின் ஆசிரியர்
5. ஞான நூல்களின் இலக்கிய வகைகள்
6. நீதி மொழி
7. சபை உரையாளர்
8. யோபு
9. இனிமை மிகு பாடல்
10. சீராக்கின் ஞானம்
11. சாலமோனின் ஞானம்
12. முடிவுரை

1. முன்னுரை
1.1. ஞானக் கலவைபழைய ஏற்பாட்டைச் சேர்ந்த யோபு, நீதிமொழிகள், சபை உரையாளர்,திருப்பாடல்கள், இனிமைமிகு பாடல், சீராக்கின் ஞானம், சாலமோனின் ஞானம் ஆகியஏழு நூல்களுள் பொதுவாக ஞானநூல்கள் அல்லது நீதி நூல்கள் எனப் பெயர்பெறுகின்றன.திருப்பாடல்களைப் பரந்த பொருளில்தான் நீதி நூல்களின் பட்டியலில் சேர்க்கமுடியும். ஏனெனில் அவற்றுள் ஒரு சில மட்டுமே ஞான திருப்பாடல் அல்லதுஅறிவுரைப் பா என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தவை (எடுத்துக்காட்டாகத் திருப்பாடல்கள்1;15;18;24;33;36;37;49;73;78;91;92;101;111;112;119;127;128;133;139;145). இவைமனித வாழ்வை உலுக்கக்கூடிய சிக்கல்களான தீயோரின் செல்வச் செழிப்புப் பற்றியும்நேர்மையாளரின் துன்பம் பற்றியும் ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வு காணமுற்படுகின்றன (திபா 37;49;73).

இனிமைமிகு பாடல் என்னும் நூல் காதல் கவிதைகளின் தொகுப்பாகும்.இளைஞரின் நல்வாழ்வுக்கு உதவக்கூடும் என்னும் காரணத்திற்காக இது நீதிநூலாகக் கொள்ளப்பட்டது.சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம் ஆகிய இரண்டும் இணைத்திருமுறையைச் சார்ந்தவை. சீர்திருத்தச் சபையர் இவற்றைத் திருமுறைப் புறநூல்களாகக் கொள்வர்.மேற்கூறிய ஏழு நூல்கள் தவிர, தோபி 4:1-21 ( தோபித்தின் அறிவுரை), தோபி12:6-15 (இரபேலின் அறிவுரை) பாரூயஅp; 3:9-4:4 ( ஞானத்தின் புகழ்ச்சி) போன்றவைஞானப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன.

மேலும், ஞானம் என்பது நீதி நூல்களில் மட்டும் பொதிந்து கிடக்கும் ஒன்றுஅன்று, ஞானத்தின் தாக்கங்கள் பழைய ஏற்பாடு முழுவதும் பரவிக்கிடக்கின்றன.எடுத்துக்காட்டாக தொநூ 2-3 (முதல் பெற்றோரின் வீழ்ச்சி) தொநூ 37-50(யோசேப்பின் கதை), 2 சாமு 9-20; 1 அர 1-2 (தாவீதுக்குப் பின் சாலமோன்அரசராதல்) முதலிய பகுதிகளைக் குறிப்பிடலாம். இணைச் சட்டம் , ஆமோஸ்,எசாயா, எரேமியா, ஓசேயா, ஒபதியா, அபக்கூக்கு, யோனா,எஸ்தர் யூதித்து ஆகியநூல்களில் ஞானத்தின் தாக்கங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. தானியேல்நூலுக்குக் ‘காட்சி ஞானம்' என்றொரு பெயரும் வழங்குகிறது.இவ்வாறு பழைய ஏற்பாடு முழுவதும் ஞானம் விரவிக்கிடக்கிறது. இதனால்பழைய ஏற்பாட்டை ஒரு ஞானக் கலவை என அழைப்பது சாலப் பொருந்தும்.

1.2. பன்னாட்டு பின்னணி
pஞானம் யாருடைய தனியுரிமையும் அன்று, அது உலக மாந்தர் அனைவர்க்கும்பொதுவானது. எனவே இஸ்ரயேலின் ஞான இலக்கியத்தைப் பன்னாட்டுப்பின்னணியோடு பொருத்திப் பார்ப்பதே முறையாகும்.நாகரிகத்தின் தொட்டில் எனப் போற்றப்படும் எகிப்தில் கி.மு. 3000-த்திலேயேசிறந்த அறிவுரை நூல்கள் தோன்றின. #8220;மோசே எகிப்து நாட்டின் கலைகள்அனைத்தையும் பயின்று சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்” எனக்குறிப்பிடுகிறது திப 7:22. ‘அமெனெமோப்பேயின்' அறிவுரை என்னும் நூலில்,நீமொ 22:17-24:22- இல் காணப்படும் முப்பது முதுமொழிகளுக்கு இணையானபகுதிகள் உள்ளன. ‘தற்கொலை பற்றிய தர்க்கம்,' 'சொல்லாற்றல் மிக்ககுடியானவரின் எதிர்ப்பு' போன்ற நூல்களுக்கும் விவிலியத்தில் வரும் யோபு, சபைஉரையாளர் ஆகிய நூல்களுக்கும் இடையே பல பொதுமைக் கூறுகள்காணப்படுகின்றன.

பழங்கால மேற்கு ஆசியாவின் ஒரு பகுதியான மெசபொத்தாமியாவும் கி.மு.3000 -க்கு முன்பே நீதி இலக்கியத்தில் சிறந்து விளங்கியது ‘ஞானத்தின்அறிவுரைகள்'என்னும் தொகுப்பு நூல் கி.மு. 14,13 -ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்றிருந்தது. ‘ஞானத்தின் ஆண்டவரைப் போற்றுவேன்' என்னும் நூல் யோபுநூலைப் பல வகையிலும் ஒத்திருப்பதால், ‘பாபிலோனியயோ' என அதுஅழைக்கப்படுகிறது. இது போன்று 'அவல நம்பிக்கை பற்றிய உரையாடல்' என்னும்நூலுக்கும் சபை உரையாளர் நூலுக்கும் இடையே பல பொருத்தங்கள் இருப்பதுகண்கூடு.கானான் நாட்டு இலக்கியங்களையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.குறிப்பாக உகரித்திய மொழியின் தாக்கங்கள் பழைய ஏற்பாட்டுக் கவிதைகளில்சிறப்பாகத் திருப்பாடல்களில் மிகுந்து காணப்படுகின்றன (காண்: திபா 19 : 29).#8220;

உன்னையே நீ அறிவாய்”என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கிரேக்கர்கி.மு. 500-லிருந்தே மெய்யியல்மீது நாட்டம் காட்டிவந்தனர். இவர்களுள் பெரிக்லசு,சாக்ரடீசு, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கிரேக்கஇலக்கியப் பண்பாட்டுத் தாக்கங்கள் சீராக்கின் ஞானம், சாலமோனின் ஞானம் ஆகியநூல்களில் மிகுதியாக உண்டு.இத்தகைய தாக்கங்களுக்கும் ஒற்றுமைகளுக்கும் பல காரணங்கள் உண்டு.ஞானத்தின் மீது நாட்டம் கொள்வது உலக மக்கள் எல்லார்க்கும் பொதுவானது.வாழ்வில் அவர்கள் எதிர்க் கொள்ளும் சிக்கல்கள் பொதுவானவை. அவற்றுக்கானதீர்வுகளும் பொதுவானவையே. இவை காலம், இடம், இனம் ஆகியவற்றைக் கடந்துநிற்பவை. இதனால்தான், #8220;நீதிநூல்கள் உலகப் பட்டறிவின் பட்டறையிலிருந்துவார்க்கப்பட்டவை” என்பர்.மேலும் இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைகளாகத் துன்புற்றபோது, கானானில்குடியேறி வாழ்ந்தபோது, பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபோது அம்மக்களுடைய பண்பாடு, பழக்க வழக்கங்கள், இலக்கியங்கள், இன்னும் பிறவற்றோடு நேரடித்தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அவற்றிலும் இறைவெளிப்பாட்டைக் கண்டு,அவற்றிலும் பொதிந்து கிடக்கும் கருத்துகளுல் சிலவற்றைத் தங்களின் சமயஇலக்கியங்களுக்குள் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

ஞானத்திலே உயர் நாடான பாரத நாட்டில் தோன்றிய இந்து, புத்த சமயங்கள்ஞானத்தை அடையும் வழியைக் காட்டுகின்றன. தமிழகத்தில் கி.மு.200 தொட்டேநீதி இலக்கியங்கள் தோன்றி மக்களை வழிவழியாக நெறிப்படுத்தி வந்துள்ளன.இவற்றுள் ஞானச் சித்தர்களின் பாடல்களும், நாலடியார், பழமொழி போன்றபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் குறிப்பிடத்தக்கவை. நீதி நூல்களுக்கெல்லாம்முனனோடியாகவும் முத்தாய்ப்பாகவும் திருக்குறள் விளங்கிச் சிறப்பிடம் பெறுகிறது.இவற்றையும் விவிலிய ஞான நூல்களோடு தொடர்புபடுத்திப் படிப்பது நன்மைபயக்கும்.

2. ஞான இலக்கத்தின்தோற்றமும் வளர்ச்சியும்

இஸ்ரயேலில் தோன்றி வளர்ச்சி பெற்ற ஞான இலக்கியத்தைச் சரியாகப்புரிந்துகொள்வதற்கு அதைத் தோற்றுவித்த ஞான இலக்கியம் பற்றி அறிந்திருப்பதுஅவசியம்.

2.1. மக்கள் ஞானம் (கி.மு.1020 -க்கு முன்)
மாந்தர் தம் கண்களை அகலத் திறந்து தம்மைச் சுற்றியுள்ள உலகை,இயற்கையை உற்றுநோக்குகின்றனர். அங்கு அரங்கேறும் நிகழ்வுகளைக்கண்ணோக்குகின்றனர். அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்திப்பார்க்கின்றனர். தம் வாழ்வோடும் பொருத்திப் பார்க்கின்றனர். இது அனுபவத்துக்குவித்திடுகிறது. பட்டறிவைப் பெற்றெடுக்கிறது. எடுத்துக்காட்டாக, எறும்பைப்பார்த்துச் சுறுசுறுப்புடன் இருக்க மனிதர் கற்றுக்கொள்கின்றனர் (நீமொ 6 : 6-11).இத்தகைய ஞானம் படித்தவர், பாமரர் என்னும் பாகுபாடு இன்றி எல்லா மக்களுக்கும்உண்டு. எனவேதான் இதை மக்கள் ஞானம் என அழைப்பர்.

முறையாகச் சிந்திக்க தெரிந்த ஞானியர் ( ஆசிரியர், பெரியோர்) மக்களிடம்காணப்படும் அன்றாட அனுபவத்தை ஆய்வு செய்து, நல்வாழ்வுக்கான சிலஉண்மைகளை, உறுதிப்பாடுகளை, நெறிமுறைகளைப் பிற்காலத் தலைமுறையினரின்நலன் கருதித் தொகுத்து, பழமொழி, மூதுரை, விடுகதை, புதிர் முதலிய இலக்கியவகைகள் வாயிலாக வழங்குகின்றனர். எடுத்துக்காட்டாக, #8220;ஆத்திரக்காரனுக்குப்புத்தி மட்டு” #8220;முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”- இத்தகைய பழமொழிகள்இடம், இனம், மொழி ஆகிய குறுகிய வட்டங்களைக் கடந்து அமரத்துவமும்பொதுமையும் அடைந்துவிட்ட வாழ்க்கை நெறிகள்.#8220;

அனுபவம் என்பது வழுக்கை விழுந்த பிறகு வாழ்க்கையில் கிடைக்கும்சீப்பு” என்பது அயர்லாந்துப் பழமொழி. இதனால் முதியோர் அனுபவசாலிகளாக,அறிவாளிகளாகக் கருதப்படுகின்றனர். ஆனால் முதுமை அடைந்துவிட்ட ஒரேகாரணத்தால் ஒருவர்க்கு ஞானம் தானே வந்துவிடும் எனச் சொல்வதற்கில்லை (காண்யோபு 32 : 6-10; சாஞா 4 : 7-8). அதே வேளையில், வாழ்க்கையில் அடிபட்டு இன்னும்அனுபவம் பெறாததால் இளைஞர் அறிவிலிகளாகக் கருதப்படுகின்றனர். ஆனால்பெரியோரின் அறிவுரையைக் கேட்டு அதற்கேற்ப நடக்கும்பொழுது அவர்கள் ஞானம்பெறுவார்கள் (நீமொ 1 : 4; திபா 119 : 9)#8220;மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்'அல்லவா?வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைகளிலும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்என்பதைப் பெரியோர் இளைஞர்க்கு எடுத்துரைப்பர். சிறப்பாக தம் மக்கள் வாழ்வில்வெற்றி பெறும் பொருட்டு ஒரு தந்தை தமது அனுபவத்தை அவர்களோடுபகிர்ந்துகொள்வார். இதெல்லாம் குடும்பச் சூழலிலேயே நடைபெறும். #8220;பிள்ளாய்!உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி. உன் தாய் கற்பிப்பதைத்தள்ளிவிடாதே” (நீமொ 1:8: காண் 4:1-27; தோபி 4:1-21) . #8220;தந்தை சொல்மிக்கமந்திரமில்லை, தாய் சொல் துறந்தால் வாசகமில்லை!”

மக்கள் ஞானம் பழைய ஏற்பாடு முழுவதும் பரவிக்கிடக்கிறது. நீதிநூல்களில் இது மிகுதியாகக் காணப்பட்டாலும் வரலாற்று நூல்கள் ( 1 சாமு 24 : 13;1அர 20 : 11) இறைவாக்கு நூல்களில் அங்குமிங்கும் காணப்படுகிறது (எசா 10 : 15;எரே 17:11; 31 : 29; எசே 16 : 14; 18 : 2). ஐந்நூலில் காணப்படும் சட்டங்கள் மக்கள்ஞானத்தின் வளர்ச்சி பெற்ற நிலை என்பர் (காண். விப 23 : 8; இச 16 : 19; லேவி 18).இது குல ஞானம் எனவும் அழைக்கப்படுகிறது.

2.2. அரசவை ஞானம் (கி.மு.1020 -587)
இஸ்ரயேலில் மன்னராட்சி மலர்ந்தபோது, நுண்ணறிவும் நிர்வாகத்திறமையும்படைத்த எழுத்தர், செயலர், ஆலோசகர், அமைச்சர் போன்ற அலுவலர்கள்தேவைப்பட்டனர். பல்வேறு மட்டங்களிலும் அமைப்புகளிலும் பணியாற்றிய இவர்கள்எல்லாரும் ஞானியர் என்றே அழைக்கப்பட்டனர் (தானி 2:48-49). அந்தந்தத்துறையில் அரசர்க்கு அறிவுரை வழங்குவது இவர்களின் தலையாய பணி.#8220;அந்நாள்களில் அகிதோபலின் ஆலோசனை கடவுளின் வாக்காகக் கருதப்பட்டது.இவ்வாறுதான் தாவீதும் அப்சலோமும் அகிதோபலின் அனைத்து ஆலோசனைகளையும் கருதினர்”(2 சாமு 16 : 23). இவ்வாறு ஞானம் ஆட்சிக் கலையோடுதொடர்பு உடையதாக மாறியது. அரசு அலுவலர்களுக்குத் தேவையான கல்வி, பயிற்சிஅளிக்கக் கல்விக்கூடங்கள் எழுந்தன (காண். தானி 1:4-6; 17-20).

நாளடைவில் ஆளும் வர்க்கத்தினர் பொது மக்களின் அன்றாடப்பிரச்சினைகளில் ஆர்வமும் அக்கறையும் காட்டி, அவர்களுக்குத் தேவையானஅறிவுரைகளை வழங்கலாயினர். எடுத்துக்காட்டாக, சாலமோனின் நீதிமொழிகளுள்பல பொதுமக்களுக்கு அறிவு புகட்டுபவை (நீமொ 10 : 1-22 : 16; 25 : 1-29 : 27).முடியாட்சிக் காலத்தில் தோன்றியதுதான் ஐந்நூலில் காணப்படும் ‘யாவே மரபு'.இதில் ஞானத் தாக்கங்கள் மிகுதியாக உள்ளன. குறிப்பாகப் படைப்பு இறையியல்பளிச்சிடுகிறது ( காண். தொநூ 2 : 4-3 : 24). இதற்கு ஞானியரே பொறுப்பு என்றால்அது மிகையாகாது.அரசவை ஞானத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக, சிகரமாக மன்னர்சாலமோன் திகழ்ந்தார். இதனால் ஞான இலக்கியத்தின் புரவலர் என்றுபோற்றப்பெற்றார்.

2.3. இறையியல் ஞானம் (கி.மு.587-க்குப் பின்)
யூதாவின் மேல்தட்டு மக்கள் கி.மு.597-82 -இல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். கோவிலோ வழிபாடோ அங்கு இல்லாத நிலையில் அவர்கள்திருச்சட்டத்தின்மீது மிகுந்த நாட்டம் காட்டினார்கள்; தங்களது தாய்நாடு திரும்பியபின்னர், திருச்சட்டத்தை மையமாக் கொண்ட வாழ்க்கை முறையைமேற்கொண்டார்கள் (காண். நெகே 8 : 1-18). திருச்சட்டத்தைக் கற்றுத் தேர்ந்தமறைநூலறிஞர் இக்கட்டத்தில் முன்னணிக்கு வந்து மக்களை நன்னெறிக்கு இட்டுச்சென்றனர்.

கடவுளே ஞானத்தின் ஊற்று, அவரே அதை மானிடர்க்கு வழங்குபவர் ( சீஞா1:8-10; யோபு 28 : 23-28; பாரூயஅp; 3 : 9-4 : 4). எனவே கடவுள்பால் மனிதர் கொள்ளும்அச்சமே, பயபக்தியே ஞானத்தின் தொடக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது (நீமொ 1 : 17; 9 : 10; 15 : 33; யோபு 28 :2;ழூ திபா 111 : 10; சீஞா 1 : 11-21; சஉ 3 : 14; 12 : 13)ஞானத்தின் ஆணிவேராக (சீஞா 1 : 20), மணிமுடியாக(சீஞா 1 : 18); நிறைவாக (சீஞா 1 : 14) போற்றப் பெற்றது.நாளடைவில் மறைநூலறிஞரின் செல்வாக்கால்திருச்சட்டமே ஞானமாகக் கருதப்பட்டது. #8220;ஞானத்தை”நீஅடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி;அப்போது ஆண்டவரே உனக்கு ஞானத்தை வாரிவழங்குவார்” (சீஞா 1:26; காண் 24 : 23; பாரு 4 : 1; இச 4: 5-6). இதனால் இறையியல் ஞானத்துக்கு இணைச் சட்ட ஞானம் என்றும் பெயர்.இதில் இஸ்ரயேலருடைய ஞானத்தின் சிறப்பும் தனித்தன்மையும் விளங்குகின்றன.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது, கடவுள் நம்பிக்கை கொண்டவரே ,நேர்மையாளரே ஞானி; இறையச்சம் இல்லாதவர், கடவுள் நம்பிக்கையற்றவர் அறிவிலிஆவார் (சாஞா 3:1-2;15:7-8;திபா 14:1; 53:1 ; 36:1). #8220;கற்றதனால் ஆய பயனென்கொல்வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்”- குறள்

3. ஞானத்தின் குறிக்கோள்

3.1. வாழ்வு
நீதி நூல்கள் மனித வாழ்வை முன்னிலைப்படுத்துகின்றன. வாழ்வே அவைபோதிக்கும் நற்செய்தி என்பர் அறிஞர் (நீமொ 3 : 13-18; 8 : 32-36; 10 : 17; 27; 13 :14; சீஞா 4 : 12). இதனால் வாழ்வின் மரம் (நீமொ 2 : 19; 5 : 6; 10 : 17; 15 : 24);வாழ்வின் வழி (நீமொ 2 : 19; 5 : 6; 6 : 23; 10 : 17; 15 : 24); வாழ்வின் ஊற்று (நீமொ10:11; 13:14; 16:22) போன்ற சொற்றொடர்கள் இந்நூல்களில் திரும்பத் திரும்ப வரும்.மேலும், பெண்ணாக, பெருமாட்டியாக ஆளுருப்படுத்தப்பெற்ற ஞானம்தெருக்கோடியில் நின்றுகொண்டு இளைஞர்க்கு அறிவுரை வழங்குகிறது ( நீமொ 1 :20-33; 8 : 32-36) வாழ்வை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறது (நீமொ 8 : 35;3 : 1-2, 13-18; 4:1-27); விருந்துக்கு அழைக்கிறது (நீமொ 9 : 1-12).

வாழ்வு என்றால் அது மறுமை வாழ்வைக் குறிக்காது, மாறாக, இம்மைவாழ்வையே, இங்கு இப்பொழுது மனிதர் வாழும் முழுமையான, நிறைவான,மகிழ்ச்சியான வாழ்வையே குறிக்கும் (நீமொ 3 : 16; 13 : 25); நல்ல மனைவி எண்ணற்றகுழந்தைகள், உண்மையான நண்பர்கள், மிகுதியான உறவினர்கள், கணக்கற்றபணியாளர்கள், எல்லையற்ற செல்வம், உடல் நலம், நீடிய ஆயுள், வெற்றி, மதிப்பு,புகழ் முதலியவற்றின் வழியாகவே மனிதர் வையத்து வாழ்வாங்கு வாழ முடியும் என்பதுஞானியரின் அசையா நம்பிக்கை. மேற்சொன்ன நலன்கள் அனைத்தும்நேர்மையாளர்க்கு இறைவன் வழங்கும் ஆசிகளாகக் கருதப்பட்டன (யோபு 1 : 1-5;இச 28 : 1-14).

3.2. நன்னடத்தை
கடவுள் தம் படைப்பில் ஓழுங்கை, நியதியை, முறைமையை வைத்துள்ளார்.இந்த முறைமையைக் கண்டுணர்வதோடு நீதி, நேர்மை, வாய்மை, பற்றுறுதிமுதலிய விழுமியங்களை வளர்ப்பதன் வழியாக மனிதர் தம் சொந்த வாழ்வில்முறைமையைத் தோற்றுவிக்க வேண்டும். தொடர்ந்து பிளவு, பிணக்கு , மோதல்,பூசல், சமூக ஆநீதி முதலிய தீமைகள் இல்லாத சமத்துவ, சகோதரத்துவசமுதாயத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும். எனவே முறைமை உள்ளவரே,முறைமைமீது நாட்டம் கொண்டவரே ஞானி ஆக முடியும்.நன்னெறியே மனிதரை வாழ்வுக்கு இட்டுச் செல்லும். நன்னெறிஅமைந்திடக் கீழ்ப்படிதல் ( நீமொ 6 : 20 : 23), அடக்கமுடைமை, குறிப்பாகநாவடக்கமும் ( நீமொ13 : 3 17 : 27 புலனடக்கமும் (நீமொ 16 : 32) தேவை.அடக்கமுடைமைக்குச் சிறந்த துணையாக நல்ல மனைவி அமைகிறார் என்பதுஅறவோரின் கருத்து ( நீமொ 5 : 15-23; 31 : 10-31, சீஞா 26 : 1-27).

3.3. தீய நடத்தை
அறிவிலிகளோ நேரிய வழியை விடுத்துத் தீய வழியைத் தேர்ந்துகொள்கிறார்கள், தீய நடத்தையில் ஈடுபடுகிறார்கள். தீய நடத்தை எவற்றால்அமையும்? விபசாரம் (நீமொ 5 : 1-23; 6 : 20-7 : 27); மது ( நீமொ 23 : 29-35;சீஞா 31 : 25-31); சோம்பல் ( நீமொ 6 : 6-11; சீஞா 22 : 1-27); சினம் ( சீஞா27:30-28:7, நீமொ 29 : 22); புறணி ( சீஞா 28 : 13-26; நீமொ 25 : 9-10)முதலிய தீய பழக்கங்களால் அமையும் என்பது ஆன்றோர் வாக்கு.பெருமாட்டி ஞானம் போன்று ஆளுருப்படுத்தப்பெற்ற மதிகேடும் பரத்தைஉருவில் தெருக்கோடிகளுக்கு வந்து இளைஞர்களிடம் தேனொழுகப் பேசிநயவஞ்சகமாக அவர்களை மயக்கித் தன் வலையில் சிக்க வைக்கவும்நெறிபிறழச் செய்யவும் முயல்கிறது ( நீமொ 9:13-18; 7:6-27). இவ்வாறு நெறிதவறித் தீய வழியில் செல்வோர் சாவையே கண்டடைவர் (நீமொ 11:19; 12:28;சஞா 1:12).

3.4. வினைப் பயன்
தமது முடிவைத் தாமே நிர்ணயிக்கும் தலையாய பொறுப்பு ஒவ்வொருமனிதருக்கும் உண்டு. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சூழ்நிலையிலும்முன்மதியோடு தேர்ந்தெடுக்கவும் பொறுப்போடு முடிவெடுக்கவும் அவர்களுக்குஉரிமையும் கடமையும் உண்டு. இதனால் தம் செயல்களுக்குத் தாமே பொறுப்புஏற்கின்றனர். இப்பின்னணியில்தான், #8220;தான் வெட்டின குழியில் தானேவிழுவார்; தான் புரட்டின கல் தன்மேலேயே விழும்” முதலிய பழமொழிகள்தோன்றலாயின (காண் நீமொ 13:6; 14:32; 26:27; 28:10).இதன் அடிப்படையில் தோன்றியதே ‘வினைப் பயன்' கோட்பாடு, நன்மைசெய்தவர்க்கு நன்மை, வெகுமதி கிடைக்கும், தீமை செய்தவர்க்குத் தீமை,தண்டனை கிடைக்கும் என்பது அதன் பொருள். #8220;அநீதியை விதைப்பவன்கேட்டை அறுப்பான்; அவனது சீற்றம் அவனையே எரித்துவிடும்”. #8220;முற்பகல்செய்யின் பிற்பகல் விளையும்”போன்ற பழமொழிகள் இக்கோட்பாட்டை விளக்கஎழுந்தவையே ( காண் நீமொ 22:8).

ஆனால் அன்றாட வாழ்க்கை அனுபவம் இதற்கு மாறுபட்டிருக்கிறது.பொல்லார் செல்வச் செழிப்புடன் வாழ, நல்லார் வளம் குன்றிப் பலவாறுதுன்புறுகின்றனர். அகால மரணத்தையும் எதிர் கொள்கின்றனர். இப்பிரச்சினைஞானியரை மட்டுமல்ல (யோபு 21 : 7-15; சஉ 2 : 16) இறைவாக்கினரையும் ( எரே12 : 1; அப 1 : 13; மலா 3 : 15) திருப்பாடல்களின் ஆசிரியரையுமே (திபா 73:3-5)கலங்கவைத்தது.

3.5. இறப்பு
ஞானியரின் கருத்துப்படி இறப்பு என்பது உடலை விட்டு உயிர் பிரியும்நிலையை அன்று. மாறாக மேற்கண்ட நிறை வாழ்வு முடிந்த நிலையையேஉணர்த்தும். இது அறிவிலிகளின் முடிவு. அவர்கள் உயிர் வாழ்ந்தாலும்இறந்தவர்களே (சாஞா 2 : 1-5; 3 : 17; 4 : 18-19; 5 : 4-15) எனவே சாவைத்தவிர்க்க முயல்வதே அறிவுடமை ( இச 30:15-19).

பருப்பொருளான உடல் என்றாவது ஒரு நாள்அழியத்தான் வேண்டும். இதனால் சாவு மனிதருக்குஇயல்பானது. அவர்தம் வாழ்நாள் குறுகியது (திபா90 : 10); இறந்தபின் அவர்கள் ‘ஷூயோல்' எனப்படும்கீழுலகில் செயலற்ற நிலையில் இருப்பர் என்பதுயூதரின் நம்பிக்கை (யோபு 10 : 21 -22). எனவேசாவைக் கண்டு ஞானியர் அதிர்ச்சிஅடையவில்லை; அஞ்சவில்லை; தீயோருடையசாவும் அவர்களுக்கு ஒரு பிரச்சனையாகத்தோன்றவில்லை (சாஞா 2 : 1-5; 3 : 10-19; 4 : 18-19;5 : 4-15). ஆனால் நல்லார்க்கு ஏற்படும் அகால மரணம், பொல்லாருடைய அநீதிஅக்கிரமங்களாலும் வன்முறையாலும் ஏற்படும் கொடிய மரணம் அவர்களுக்குப்பிரச்சினையாய் அமைந்தது. ஏனெனில் நல்லார் ஒருவர் நீண்ட காலம் வாழ்ந்து,தம் பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறைவரை கண்டுகளித்த பின் முதுமை அடைந்து இயல்பாக இறப்பதற்குப் பதிலாக( காண். யோபு 42 : 16-17), வாழ்வு இன்னும் முதிராத நிலையில், வாழ்வின்நலன்களை எல்லாம் அனுபவிக்கும் முன்னரே அவரது வாழ்நாள்முடிந்துவிடுகிறது. நாளடைவில் இயற்கை மரணமும் ஞானியர்க்கும்பிரச்சினையை உண்டாக்கியது ( சஉ 3 : 19-29; சாஞா 1 : 5).

நீண்ட நெடுங்காலமாக யூதர்கள் மறுவாழ்வில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை (யோபு 7 : 9-10, 21; 14 : 13). நல்லார்க்கு இவ்வுலகில் நல்வாழ்வு மறுக்கப்பட்டநிலையில் ஞானியர் மறுவாழ்வு பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். அவர்களுக்குச்சரியான வெகுமதி கொடுக்கப்படும் என்ற முடிவுக்கு வந்தனர். இவ்வாறு நல்லவன்வாழ்வான் என்னும் நம்பிக்கை அரும்பியது ( சாஞா 1 : 12-15; 2 : 13-24; 3 : 1-9;4 : 7-16; 5 : 1-7; 15-16; சீஞா 48 : 11; 7 : 17; யோபு 19 : 25-27). இருப்பினும்இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவர் என்னும் தெளிவான உறுதியான நம்பிக்கையூதரிடையே இன்னும் தோன்றவில்லை.

4. ஞான இலக்கியத்தின் ஆசிரியர்

நீதிமொழிகள் ( 1:1; 10:1; 25:1) சபை உரையாளர் ( காண் 1:1,12-2:26).சாலமோனின் ஞானம் ( காண் 8:9-15; 9:7-8, 12,) இனிமைமிகு பாடல் ஆகியநூல்களின் ஆசிரியராக மன்னர் சாலமோன் கருதப்படுகிறார். #8220;சாலமோனின்திருப்பாடல்கள்” ‘சாலமோனின் எழுச்சிப் பாடல்கள்' ஆகிய திருமறைப் புறநூல்களுக்கும் அவரே ஆசிரியராகக் கொள்ளப்படுகிறார். ஏன், இஸ்ரயேலில் நீதிஇலக்கியங்கள் அனைத்துக்குமே அவர் ஆசிரியராகப் போற்றப்பெறுகிறார். இதற்குப்பல காரணங்கள் உண்டு.

மாமன்னர் தாவீது தம் மகன் சாலமோனுக்கு ஞானம் கிடைக்குமாறுஇறைவனை வேண்டினார் (1 குறி 22 : 12); சாலமோன் ஞானத்தோடுநடந்துகொள்ளுமாறு அவருக்கு இறுதி அறிவுரை வழங்கினார் (1 அர 2 : 6); இதற்குஏற்பச் சாலமோனும் ஞானத்தை மட்டுமே விரும்பினார். அதற்கு இறை வேண்டல்செய்தார். அதுவும் அவருக்கு நிறைவாக அருளப்பட்டது (1 அர 3 : 5-14; 4 : 29-34;2 குறி 1 : 7-12; 2 : 12, காண் சாஞா 7-9); அவர் ஞானத்தையே தம் வாழ்க்கைத்துணையாகக் கொண்டார் (காண். சாஞா 8:2,9); அவரை ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்றால் அது மிகையாகாது (1 அர 4:32-33; காண். நீமொ 10-22; 25-29).ஒரே பிள்ளைக்குத் தானே தாய் என்று இரு பெண்கள் உரிமை கொண்டாடிய போது,அவர் வழங்கிய தீர்ப்பு உலகப் புகழ் பெற்றது (1 அர 7: 26 -28).

இஸ்ரயேலுக்கு வெளியிலும் சாலமோனின் புகழ் பரவிற்று. சேபா நாட்டுஇளவரசி அவரது ஞானத்தை நேரில் கேட்டறிய அவரை நாடிவந்தார் (1 அர 10 : 1-10; 2 குறி 9 : 1-8; லூக் 11 : 31). மண்ணுலகின் எல்லா மன்னர்களும், ஏன் உலகமாந்தர் அனைவருமே ஞானத்தைக் கேட்க அவரை நாடி வந்தார்கள் ( 2 குறி 1 :22-23; 1 அர 10 : 23-24).

மேலும், எகிப்திய ஆட்சிமுறையைப் பின்பற்றிச்சாலமோன் தமது அரசவையை அமைத்தார்.பல்வேறு அதிகாரிகள், அறிஞர்கள் , அலுவலர்கள்முதலியோரை ஏற்படுத்தினார் ( 1 அர 4:1-19).அவர்களைப் பயிற்றுவிக்கப் பள்ளிகளைத்தோற்றுவித்தார் ( காண் நீமொ 25 : 1). சாலமோனின்ஆட்சிக் காலத்தில்தான் அரசவை ஞானம் சிறப்புற்றுவிளங்கியது. இதனால் ‘ஞான இயக்கத்தின் புரவலர்'‘நீதி இலக்கியத்தின் ஆசிரியர்' ‘ஞான மரபின் காவலர்'என்றெல்லாம் அவர் போற்றப்படுகிறார்.

இருப்பினும் நீதி நூல்களைச் சாலமோனேஎழுதியிருக்க முடியாது. ஏனெனில் அவைகாலத்தாலும் கருத்தாலும் பிந்தியவை. சாலமோன்இஸ்ரயேலை ஆண்ட காலம் கி.மு. 961-922. நீதிநூல்களோ விவிலியத்தின் ஏனைய நூல்களைப் போலப் பல நூற்றாண்டுகள்வாய்மொழி இலக்கியமாகவே இருந்து, பாபிலோனியாவிலிருந்து இஸ்ரயேலர் நாடுதிரும்பிய பின்னரே (கி.மு,5 - ஆம் நூற்றாண்டு) எழுத்து வடிவம் பெறத்தொடங்கின. சாலமோனின் ஞானம் என்னும் நூல் கி.மு. முதல் நூற்றாண்டின்நடுவில் எழுதப்ப்பட்டதாக் கணிப்பர் அறிஞர். மேலும், ஞான இயக்கத்தின் இறுதிக்கட்டத்தில் தோன்றிய இறையியல் ஞானம் சாலமோனின் காலத்துக்குப் பிற்பட்டதே.இதனால் சாலமோனே நீதி நூல்களை எழுதியிருக்க முடியாது.

சீராக்கின் ஞானம் என்னும் நூலைத் தவிர மற்ற நீதி நூல்கள் அனைத்தும்புனை பெயர் இலக்கியங்களே. அதாவது சாலமோன் பெயரால் பிற்காலத்தில்தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை என்பதே அறிஞர் கண்ட முடிவு. ஐந்நூலுக்குமோசேயும், திருப்பாடல்களுக்குத் தாவீதும் ஆசிரியர்களாகக் கருதப்படுவது போல,ஞான இலக்கியத்துக்குச் சாலமோன் ஆசிரியராகப் பண்டைக் காலம் முதலேகருதப்பட்டுவருகிறார்.

5. ஞான நூல்களின் இலக்கிய வகைகள்

5.1. கவிதை நடை
வாய்மொழி இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள் வடிவிலேயே உலகமொழிகள் அனைத்திலும் அமைந்துள்ளன. இது பழைய ஏற்பாட்டு நீதி நூல்களுக்கும்பொருந்தும். சபை உரையாளர் நூலில் உரைநடையும் செய்யுள் நடையும் கலந்துகிடக்கின்றன. மூன்றில் இரண்டு பகுதி உரைநடையிலும் எஞ்சிய பகுதி செய்யுள்நடையிலும் உள்ளன. யோபு நூலின் முன்னுரையும் ( 1 : 1; 2 : 13) முடிவுரையும் (42: 7-17) உரைநடையில் உள்ளன. நூலின் மையப் பகுதியான உரையாடல் கவிதைஅமைப்பைக் கொண்டுள்ளது. மற்ற நீதி நூல்கள் எல்லாம் முற்றிலும் கவிதை வடிவில்உள்ளன.கவிதையில் உணர்ச்சி, ஓசை நயம், தாளக் கட்டு, சொல்லாட்சி, எதுகை,மோனை போன்ற அழகுகள் பொதிந்து கிடக்கும். இதனால் கருத்துக்களைஅழகாகவும் நயம்படவும் எடுத்துரைக்கக் கவிதை சிறந்த ஊடகமாய் அமைகிறது.

5.2. இணையணி
ஒரு மொழியை அழகு செய்வது அதில் காணப்படும் அணிகளாகும். எபிரேயக்கவிதையின் சிறப்புக் கூறாக இணையணி விளங்குகிறது. இரு கருத்துக்கள்இணையாக வந்து அழகு சேர்ப்பதற்கு இணையணி எனப் பெயர். சீர் அசை அன்று,கருத்து, இசைவே முக்கியமானது. இணையணி மூன்று வகைப்படும்.

1) ஒரு பொருள் இணையணி: ஒரே கருத்தை வேறு சொற்களில் இருமுறைஇணையாகச் சொல்லுதல். எடுத்துக்காட்டு #8220;ஞானத்தின் வழிகளை உனக்குக்கற்பித்திருக்கிறேன், நேரிய பாதைகளில் உன்னை நடத்திவந்தேன்” (நீமொ 4:11).

2). எதிர்மறை இணையணி: எதிர்மறையான இரு கருத்துக்களைஇணையாகச் சொல்லி விளக்குதல். எடுத்துக்காட்டு:#8220;நல்லாரின் சொற்கள் தூயவெள்ளிக்குச் சமம், பொல்லாரின் எண்ணங்களோ பதருக்கு சமம்” (நீமொ 10:20).

2). கூட்டு இணையணி: முதல் வரியின் பொருளை நிறைவு செய்யும்வகையில் இரண்டாவது வரி அமைதல் எடுத்துக்காட்டு:#8220;வாக்குவாதத்தைத்வளருமுன் நிறுத்திவிடு” (நீமொ 17:14).

5.3. இலக்கிய வகைகள்
ஞான நூல்களில் கையாளப்படும் இலக்கிய வகைகளை ஞானம் பற்றியநீதிமொழிகள் என்றும், ஞானம் பற்றிய விரிவுரைகள் என்றும் இரு பெரும் பகுதிகளாகபிரிக்கலாம்.i. ஞானம் பற்றிய நீதிமொழிகள்: இஸ்ரயேல் மக்கள், குறிப்பாக ஞானிகள்,தங்கள் வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து, அவற்றின் அடிப்படையில் பலவாழ்க்கை நெறிமுறைகளை வகுத்து, அவற்றைப் பிற்காலத் தலை முறையினர்க்குவழங்கினார்கள். இவற்றை எடுத்துரைக்க அவர்கள் பெரிதும் கையாண்ட இலக்கியவகை ‘மஷால்' என அழைக்கப்படுகிறது.

மஷால் என்னும் எபிரேயச் சொல்லுக்கு இரு பொருள் உண்டு. ஒன்று‘ஆளுதல்' என்னும் பொருளுடைய எபிரேய வினைச் சொல்லின் அடிப்படையில்,ஆற்றல் வாய்ந்த சொல் அல்லது அதிகாரபூர்வமான கூற்று என அதற்குப் பொருள்சொல்லாம். இரண்டாவது பொருள், ‘போல இருத்தல்' என்னும்பொருளுடைய அரேபிய வேர்ச் சொல்லிலிருந்து வருவது,ஒப்புமையை அடிப்படையாகச் கொண்டது. எனவே உவமை,பழமொழி என்பது அதன் பொருளாகும். நீதிமொழி என்பதுஇன்னும் சிறப்புடையதாய் இருக்கும் . இரண்டாவது பொருளேமிகப் பொருத்தமானது எனப் பெரும்பாலான அறிஞர்கருதுகின்றனர். பன்னெடுங்காலமாக மக்களால் பட்டைதீட்டப்பட்டு உருவான நீதிமொழிக்கு காலத்தை விஞ்சி நிற்கும்ஆற்றல் உண்டு.

மஷால் என்னும் இலக்கிய வகைக்குள் பல துணைஇலக்கிய வகைகள் அடங்கும். பழமொழி (நீமொ 10:6; 13:3),பொன்மொழி ( நீமொ 11:22; 16:18), ஒப்புமை ( நீமொ 5:15-23), உவமை ( நீமொ25:4-5; சஉ 9:14-16), விடுகதை ( நீமொ25:14; சீஞா 22:14), புதிர் ( சஉ 12:1-7),முரண்தொடை (நீமொ 11:24; 13:24), எண்ணிக்கைக் கூற்று (சீஞா 25:1-2; நீமொ30:21-31), ஒப்பிட்டுக் கூற்று (சஉ 7:1 2:24; 8:15), முதலியன குறிப்பிடத்தக்கவை.இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பதைமறுத்தலாகாது.ii ஞானம் பற்றிய விரிவுரைகள் : தன் வரலாறு ( நீமொ 24:30-34; சாஞா7:1-21), வரலாறு ( சஞா 10:19; சீஞா 44:1-50:21), புகழ்ப்பா ( சீஞா 42:15-43; 51:1-12), அறிவுரை ( யோபு 8:8-22; 27:13-23; சஉ 11:9,10), உரையாடல் ( யோபு 3:31),தொடர் விவாதம் ( யோபு 3-31), விரிவுரை (நீமொ 1:8-19; 8:4-36), பட்டியல் ( யோபு28:36-37; 40:15-41 :26; திபா 148; சாஞா 7:17-20; 22-23; 14:25-26; 39:16-35;42:15-43:33) முதலியன இவற்றுள் அடங்கும்.

நீதிநூல்களில் கையாளப்படும் இலக்கிய வகைகளுக்கும் தமிழ்நாட்டார்வழக்காற்றியலில் பயன்படும் இலக்கிய வகைகளுக்கும் இடையே நெருங்கியதொடர்பும் பொதுமைக் கூறுகளும் உள்ளன.

6. நீதிமொழிகள்

நீதிமொழிகள் நூலில் மொத்தம் ஏழு தலைப்புகள் உள்ளன. #8220;தாவீதின்மகனும் இஸ்ரேயலின் அரசனுமாகிய சாலமோனின் நீதிமொழிகள்” என்னும் தலைப்புநூலின் தொடக்கத்திலே (1 : 1) வருகிறது. மீண்டும் #8220;சாலமோனின் நீதிமொழிகள்”என்னும் தலைப்பு 10 : 1-லும், பின்னர் 25:1 -லும் காணப்படுகின்றது. #8220;ஞானிகள்போதித்ததை நான் உனக்குக் கூறுகின்றேன்..” (22 : 17) என்னும் தலைப்பின்கீழ்முப்பது முது மொழிகளும் தொடர்ந்து ஞானிகளின் வேறு சில முதுமொழிகளும்(24 : 23) தொகுத்தளிக்கப்படுகின்றன. 22 : 17-24, 34. இவை எகிப்திய நீதி நூலான‘அமெனெமோபேயின் அறிவுரையினின்று எடுத்தாளப்பட்டுள்ளன என்பது ஈண்டுகுறிப்பிடத்தக்கது. அடுத்து #8220; மாசாவைச் சார்ந்த யாக்கேயின் மகன் ஆகூரின்மொழிகள்” (30 : 1) கொடுக்கப்படுகின்றன. இறுதியாக, மாசாவின் அரசனானஇலமுவேலின் மொழிகள்” (31 : 1) வழங்கப்படுகின்றன. எனவே இந்நூலில்காணப்படும் நீதிமொழிகள் எல்லாம் சாலமோனுடையவை அல்ல, இந்நூலுக்கு அவர்ஆசிரியராய் இருக்க முடியாது என்பது தெளிவு.

நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் இறுதி இரண்டு அதிகாரங்களிலும்தொடர்பும் வளர்ச்சியும் ஓரளவுக்கு உள்ளன. எஞ்சிய பகுதிகள் ஒன்றோடு ஒன்றுதொடர்பு இல்லாத, அன்றாட வாழ்வையும் நடைமுறை வழக்கையும் அடிப்படையாகக்கொண்ட பொன் மொழிகளால் ஆனவை, இதனால் இந்நூலை ஒரு ‘தொகை நூல்'என அழைப்பதே பொருந்தும்.

இஸ்ரயேலர் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதற்கு முற்பட்ட காலத்தைச்சேர்ந்த பல பகுதிகளை கி.மு. 500- க்குப் பின் இந்நூலின் பதிப்பாசிரியர் அழகுறத்தொகுத்து, அவற்றுக்கு நல்லதொரு முன்னுரையும் (1-9) முடிவுரையும் (31 : 10-31)அமைத்து ஒரு சிறந்த உரைச் சித்திரத்தை வழங்கியுள்ளார். ஞானிகளின்முதுமொழிகளிலும் (22 : 17-24 : 34) ஆகூர் இலமுவேலின் பொன்மொழிகளிலும்(30 : 1-31 : 9) மக்கள் ஞானம் புலப்படுகிறது. பொன்மொழிகளில் (10 : 1-22 : 16;25:1-29 : 27) அரசவை ஞானம் ஒளிர்கிறது, இவற்றுக்கெல்லாம் புதிய கண்ணோட்டம்வழங்கும் பதிப்பாசிரியரின் முன்னுரையிலும் முடிவுரையிலும் இறையியல் ஞானம் மிளிர்கிறது. இவ்வாறு இந்நூல் ஒரு சிறந்த ஞானக் கலவையாக, அறிவுரைக்கோவையாகத் திகழ்கிறது.

6.1. அமைப்பு

1) முன்னுரை ( 1 : 1-9 : 18)
2) சாலமோனின் நீதிமொழிகள், தொகுப்பு ( 10 : 1-22:16)
3) அ. ஞானிகளின் முப்பது முதுமொழிகள் ( 22 : 17-24;22)ஆ. ஞானிகளின் முதுமொழிகள், பிற்சேர்க்கை ( 24 : 23-34)
4) சாலமோனின் நீதிமொழிகள், தொகுப்பு ( 25 : 1-29 : 27)
5) ஆகூரின் பொன்மொழிகள் ( 30 : 1-33)
6) இலமுவேலின் பொன்மொழிகள் ( 31 : 1-9)
7) முடிவுரை ( 31 : 10-31).

6.2. செறிந்த சில கருத்துகள்
அ. இறையச்சம் மக்கள் ஞானத்தினின்று எடுக்கப்பெற்ற பழைய நீதிமொழிகள் புதியகண்ணோட்டத்துடன், அதாவது இறையச்சம் என்னும் இறையியல் ஞானத்தின்ஒளியில் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன. இந்த அடிப்படையில்தான் நாம்முழு நூலையும் முறையாகப் புரிந்துகொள்ள முடியும். #8220;ஆண்டவரிடம் கொள்ளும்அச்சமே ஞானத்தின் தொடக்கம், ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரேஅவமதிப்பார்” (1 : 7; காண். 9 : 10; 15ரூவசயனந்: 33) இதுவே பதிப்பாசிரியர் வழங்கும் புதியபயிற்சி. இஸ்ரயேல் ஞானத்தின்மீது காட்டிய நாட்டம் இதில் தெளிவாகவெளிப்படுகிறது எனலாம்.

1 : 1- 7- ஐ நூலின் நோக்கத்தை விளக்கும் பகுதியின் முடிவாகவும், அடுத்தபகுதியை இளைஞர்க்கு நல்லுரையின் தொடக்கமாகவும் ( 1 : 7-19) கொள்வர்; தனிக்கூற்றாகப் பார்ப்போரும் உளர்.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் என்பது இங்குப் பயத்தை உணர்த்தாது.‘யீரா' என்னும் எபிரேய வினைச் சொல்லுக்கு, ஆண்டவரை அன்புடன் ஏற்றுவழிபடுவது, அவருக்கு விருப்பமில்லாததைத் தவிர்ப்பது,அவரது திருவுளத்துக்குப்பணிந்து நடப்பது என்று பொருள். தீமை மீது மனிதர்க்கு எப்போதும் நாட்டம்இருக்கின்ற காரணத்தால், தீமையின் நடுவே அவர்கள் எங்கும் வாழ வேண்டியகாரணத்தால், ஆண்டவருக்குப் பற்றுறுதி இன்றி நடந்து கொள்ளக்கூடிய பேராபத்துஉள்ளது. இதனால் அவர்கள் ஆண்டவர்மீது கொள்ளும் அன்பில் ஒரு வகைஅச்சமும் கலந்துவிடுகிறது. அச்சத்தைப் பயபக்தி எனப் புரிந்துகொள்வதே மேல்.இது பண்டைக் கால யூதர் ஆண்டவர்பால் கொண்டிருந்த உண்மையான அன்பையும்முழு அர்ப்பணத்தையும் வெளிப்படுத்துகிறது (இச 6 : 4-5).ஞானம் பெற இது அடிப்படைத் தேவை (காண் 3 : 5-12; 10 : 27-32; 14 : 26-27). எனவேதான் இது ஞானத்தின் தொடக்கமாக, முதல் விதியாக, சாரமாக,இரத்தினச் சுருக்கமாக, அடியாக, மணிமுடியாக விளங்குகிறது (சீர 1:11-21). யோபுஇறைவனுக்கு அஞ்சி, தீமையை விலக்கி வாழ்ந்தார்; எனவே தலைச்சிறந்தஞானியாகத் திகழ்ந்தார் (யோபு 1 : 1-5).

இவ்வாறு 1:7 புதிய இறையியல் கண்ணோட்டத்தை வழங்கி வலியுறுத்துகிறது(திபா 34:7-11). ஞானம் நிலைப்பதும் நிலைகுலைவதும் மனிதர் கடவுள்மீது கொள்ளும்சரியான மனநிலையை, நேரிய உறவைப் பொறுத்தது (காண்: சீஞா 10:24; 19:20;23:27).

ஆ. படைப்பில் ஞானத்தின் பங்கு ( 8:22-23) #8220;இறைவன் இரண்டு நூல்களை எழுதினார், அவரது முதல் நூல் படைப்பு,இரண்டாவது நூல் விவிலியம்” என்றார் கலிலேயோ. இறைவன் படைப்பிலேஒழுங்கை, முறைமையை வைத்துள்ளார். அதன் வழியாக மனிதருக்குத் தம்மைவெளிப்படுத்தி அவர்களை நெறிப்படுத்திவருகிறார் (திபா 17 : 1-6; சீஞா 1 : 9-10).

இந்த இயற்கை ஞானத்தை நீதி நூல்கள் பெண்ணாக, பெருமாட்டி ஞானமாகஆளுருப்படுத்துகின்றன. அதன் வழியாக அருளப்படும் இறை வெளிப்பாட்டைப்பற்றிச் சிந்திக்க மனிதரைத் தூண்டுகின்றன (1 : 20-23; 8 : 1-9 : 6; சாஞா 6 : 12-9 : 18; சீஞா 24 : 1-22). இவ்வாறு தொநூ 1-3 இல் விளக்கப்படும் படைப்பு இறையியல்பற்றிய ஆழமான கருத்துக்களை வழங்குகின்றன. இத்தகைய பகுதிகளுள் சிறந்தது,8 : 22-31 இல் வரும் ‘ படைக்கும் ஞானம் பற்றிய பாடல்.உலகப் படைப்புப் பற்றிய எகிப்திய, மெசபத்தோமிய புராணங்கள் மற்றும்தொடக்க நூலில் முதல் அதிகாரம் விளக்கும் உலகப் படைப்பு பற்றிய நிகழ்ச்சியுரைமுதலியவற்றின் பின்புலத்தோடு இக்கவிதையைப் படிப்பது இன்றியமையாதது.மேலும், எகிப்திய நீதி நூல்களில் காணப்படும் அடிப்படைக் கருத்தாகிய ‘மாத்'என்பது ஒழுங்கு தெய்வமாக உருவகிக்கப்பட்டது, தனித்தியங்கும் தேவதையாகக்கருதப்பட்டது. இது போன்றே மெசபத்தோமிய நீதி இலக்கியத்தில் வரும் ‘இஷ்தார்'ஞானத்தின் தேவதையாக வருணிக்கப்படுகிறது.

ஆனால் ஓரிறைக் கோட்பாட்டில் ஊறிப்போயிருந்த இஸ்ரயேலரால்,கடவுளினின்று தனித்து இயங்கும் தெய்வப் பிறவியாக ஞானத்தைப் பார்க்கமுடியவில்லை. எனவே முதன் முதல் ஞானம் கடவுளால் படைக்கப்படுகிறது (8 : 22-26); பின் அது கடவுளோடு இணைந்து செயலாற்றுகிறது. அதாவது அதன் வழியாய்கடவுள் அண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைக்கிறார் ( 8 : 27-31) எனஇங்கு விளக்கப்படுகிறது. #8220; ஆண்டவர் ஞானத்தால் பூவுலகிற்கு அடித்தளமிட்டார்.விவேகத்தால் வானங்களை நிலைபெறச் செய்தார்” (3 : 19; காண். திபா 90 : 4; 104: 24; சாஞா 9 : 9; யோவா 1 : 1-18).

இறுதியில் ஞானம் உலகிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மனிதரோடுஇருப்பதில் அது மகிழ்ச்சி கொள்கிறது. அவர்களை நல்வழிப்படுத்துகிறது (8:31;காண்: சாஞா 9:9-18) இங்கு இலைமறை காயாக இடம்பெறும் கருத்துகள் சீஞா14:1-22, சாஞா 7:22-8:1 ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பெற்ற நிலையை அடைகின்றன.

7. சபை உரையாளர்

7.1. ஆசிரியர்
சபை உரையாளர் என்னும் நூல் எபிரேயத்தில் ‘கோகெலெத்' எனஅழைக்கப்படுகிறது. இதற்கு இஸ்ரயேல் மக்களின் சபையைக் கூட்டுவித்துநடத்துபவர், சபைத் தலைவர், சபைப் போதகர் எனப் பொருள். இப்பொருளைத்தெளிவாக உணர்த்தும் வகையில் ‘சபை உரையாளர்' என இந்நூல் தமிழில் பெயர்பெறுகிறது. இப்பெயர் இந்நூலில் ஏழு இடங்களில் வருகிறது. (1 : 1, 2, 12; 7 : 27; 12: 28, 9, 10).

நூலின் தொடக்கத்தில் #8220;தாவீதின் மகனும்எருசலேமின் அரசருமாகிய சபை உரையாளர்” (1 : 1)என்றும், 1 : 12-இல் #8220;சபை உரையாளனாகிய நான்எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாக இருந்தேன்”என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்புகள் ஞானிசாலமோனைச் சுட்டுவனபோல் தோன்றுகின்றன.மேலும் 1 : 12-2 : 26 - இல் விளக்கப்படும் சபைஉரையாளரின் அனுபவம் சாலமோனை நமக்குநினைவுபடுத்துகிறது. இருப்பினும் இந்நூலைச்சாலமோனே எழுதியிருக்கமுடியாது. சாலமோனின்பெயரால் கி.மு. நான்காம் நூற்றாண்டிற்குப் பின் வேறொருவர் வரைந்திருக்கவேண்டும் என்பதே அறிஞர் கண்ட முடிவு.

7.2. இலக்கிய வகை
நூலின் மூன்றில் ஒரு பகுதி கவிதை நடையிலும் , எஞ்சியது உரைநடையிலும்அமைந்துள்ளது. இதில் பொதிந்து கிடக்கும் கருத்துக்கள் அனைத்தும், #8220;சபைஉரையாளர் உரைத்தவை” எனத் தலைப்பு (1:1) உணர்த்துகிறது. ‘உரைத்தவை'என்னும் வினைச்சொல்லுக்குப் பதிலாக எபிரேய மூலத்தில் ‘தெபாரிம்' (‘தபார்'என்பதன் பன்மை) என்னும் பெயர்ச்சொல் காணப்படுகிறது. சொற்கள், கூற்றுகள்,பேச்சு, உரை, அறிவுரை, போதனை என்றெல்லாம் அது பொருள்படும். இவை ‘மஷால்'என்னும் ஞான இலக்கிய வகைக்குள் அடங்கும் பல்வேறு துணை இலக்கிய வகைகள்ஆகும். இவை தவிர அறிவுரை (10 : 20; 11 : 9-10), கூற்றுகள், நீதிமொழிகள் ( 7 : 1-12; 4 : 5-6; 9; 17-18; 10 : 1-20), ஓப்பீட்டுக் கூற்று (7 : 1-3; 2 : 24; 3 : 12, 22; 8 : 15),உவமை (9 : 13-16), புதிர் (12 : 1-7) முதலிய துணை இலக்கிய வகைகள் இந்நூலில்கையாளப்படுகின்றன.

நூலாசிரியர் தம் சொந்த அனுபவத்தின் மீது ஆய்வு நடத்துகிறார் ( 1:12-2 : 26) நான் அறிவேன் (3 : 14,19) கண்டேன் (1 : 17; 2 : 13,14,24;10 : 7) கவனித்தேன்(1 : 14) ஆராய்ந்தேன் (2 : 12; 7 : 27) என் சிந்தையைச் செலுத்தினேன் (1 : 13, 17).எனக்குள் சொல்லிக் கொண்டேன் (1 : 16; 3 : 17, 18) என்னும் சொற்கள்,சொற்றொடர்கள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. தமது ஆய்வின்முடிவுகளை வழங்குவதற்கு மேற்கண்ட பல்வேறு துணை இலக்கிய வகைகளை அவர்கையாள்கிறார்.‘பிரியாவிடைப் பொழிவு' என்பது எகிப்தில் அதிகச் செல்வாக்குப் பெற்றிருந்தஓர் இலக்கிய வகை. எகிப்திய மன்னர்கள் தம் வழித்தோன்றல்களின் நலன் கருதி,தம் வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து அவற்றைத் தமது மரபுரிமையாக அவர்களுக்கு விட்டுச் செல்வதுண்டு. இது ‘தன்வரலாறு பாணியில் அமையும். இதுபோன்று சபை உரையாளர் நூலைப் பிரியாவிடைப் பொழிவாகக் கருதுவோரும்உண்டு.

7.3. அமைப்பு

1 ) முன்னுரை (1:1-11)
2) நூற்பயன் (1:12-18)
3) மகிழ்ச்சி பற்றிய ஆய்வு (2:1-26)
4) மகிழ்ச்சிக்கும் ஞானத்திற்க்கும் இடையே உள்ள தொடர்பு (3:1-9:10)
5) வாழ்வின் பொருளை உணர்தல் (9:11-12:8)
6) முடிவுரை (12:9-14)

7.4. மையக்கருத்து
கருத்துக்களைப் பொறுத்தமட்டில் இந்நூலில் ஒழுங்குமுறையோ வளர்ச்சியோஇருப்பதாகத் தெரியவில்லை. அரைத்த மாவையே அரைத்தல் போன்று நூலாசிரியர்கூறிய கருத்துக்களையே திரும்ப திரும்பக் கூறுகிறார். இது ‘கூறியது கூறல்' எனும்குற்றம் ஆகாது. ஏனெனில் பேராபத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒருவர்,#8220;என்னைக் காப்பாத்துங்க, என்னைக் காப்பாத்துங்க” என அபயக் குரல் எழுப்புவதுபோன்று, வாழ்வில் விரக்தியைச் சந்தித்த சபை உரையாளர் கதறுகின்றார்.

வாழ்வின் பொருள் பற்றிச் சபை உரையாளர் ஆழமாகச் சிந்தித்துப்பார்க்கின்றார். வாழ்க்கை நிகழ்ச்சிகளை அலசி ஆராய்கிறார் ( 1 : 13-18). மானிடவாழ்வு நீர்க் குமிழி போன்றது, முரண்பாடானது என்பதைக் காண்கிறார்.பிறப்பெல்லாம் இறப்பில் முடிகிறது. இறப்பெல்லாம் பிறப்பில் கொண்டுபோய்விடுகிறது. இவ்வாறு பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு என்னும் சுழற்சிக்குள்மனிதர் அனைவரும் சிக்கித் தவிப்பதை உணர்கிறார். அவரது பார்வையில்ஞானியரும் மூடரும் (1 : 14-16) மனிதரும் விலங்குகளும் ( 3:18-19) நல்லவர்களும்பொல்லாதவர்களும் ( 9 : 2-3) சமமாகவே நடத்தப்படுகின்றார்கள். அதாவது எல்லாம்விதிப்படியே செயல்படுகின்றன (3 : 1-8, 14-15)

எனவே, சபை உரையாளரின் கருத்துப்படி, உலகிலுள்ள எதற்குமே பொருள்இல்லை. குறிக்கோள் இல்லை. நிலைத்து நிற்கக் கூடிய மதிப்பீடு இல்லை. மானிடர்தம் வாழ்வில் அக்கறையோடு தேடும் இன்பம் ( 2 : 1-11; 7 : 3-4) செல்வம் (5 : 10-15; 4 : 8) ஞானம் (2 : 15; 7 : 23-24; 8 : 16-17) முதலிய எல்லாமே நிலையற்றவை,பயனற்றவை. பொருளற்றவை. இதனால் வாழ்க்கையில் வெறுப்பும், ஏமாற்றமும்,விரக்தியும் மேலிட #8220;எல்லாமே வீண், காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானது'என்னும் முடிவுக்குத் தள்ளப்படுகிறார்; #8220; வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபைஉரையாளர், வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்” (1 : 2). இக்கருத்து பல்லவிபோன்று மீண்டும் மீண்டும் வருகிறது ( 12 : 14, 17; 2 : 11, 17, 23, 26; 3 : 19; 12 : 18).

மானிட வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரு முடிவு உண்டு (3:20). இந்தமுடிவு பற்றிய எண்ணம் மாந்தர்க்குத் துன்பத்தைக் கொடுக்கிறது. இதற்குக்காரணம் வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படும் பிடிப்பே. எடுத்துக்காட்டாக,தற்கொலை முயற்சிக்கு மாந்தர் சிலர் தள்ளப்படுவதற்குக் காரணம், வாழ்க்கையைப்பொருளுள்ள முறையில் வாழ முயன்றதில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியே என்றால்அது மிகையாகாது.

அதே நேரத்தில் முடிவு, அதாவது சாவு மகிழ்ச்சியைஅளிக்கிறது. ஏனெனில் வாழ்க்கைப் பிரச்சினை களிலிருந்து, துன்பங்களிலிருந்து அது மானிடர்க்கு ஒரு வகைவிடுதலை கொடுக்கிறது. இதனால்தான் ஏமாற்றஉணர்வும் அவநம்பிக்கையும் கொண்ட சபை உரையாளர்சாவை மேலானதாகக் காண்கிறார்; அதை விரும்பிவரவேற்கிறார் (4:2-3). ஞானியர் வாழ்வைப் பற்றிப்போதிக்கின்றனர். சாவைத் தவிர்ப்பதற்கானவழிமுறைகளைக் காட்டுகின்றனர். சபை உரையாளரோசாவை நேர்நிலைக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்.சாவு இவ்வுலகத் துன்ப துயரங்களினின்று ஓய்வை,விடுதலையைக் கொடுக்கிறது என்கிறார். இது குறைகாணும் மனப்பான்மையா?

நிலையாமை பற்றிய உணர்வு வாழ்வைக் கண்டு அஞ்சி ஓட மனிதரைத் தூண்டக்கூடாது. மாறாக, ஈடுபாட்டுடன் அதை வாழ்ந்து காட்டுவதற்கு உந்துசக்தியாகவிளங்க வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே என்னும் உறுதிப்பாட்டை அளிக்கவேண்டும். இவ்வாறு சாவு பற்றிய எண்ணம் மனிதர்க்கு ஈடுபாட்டைக் கொடுக்கிறது.வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்துகிறது. வாழ்க்கை என்பது கடவுளின் கொடை. அதைமுற்றிலும் புரிந்துகொள்ள முடியாது என்றாலும் (3 : 11; 8 : 16-17; 11 : 5) அதை முழுஅளவில் வாழ வேண்டும். அனுபவித்து வாழவேண்டும் (9 : 4). எனவே கடுமையாகஉழைத்து வாழ்க்கையை அனுபவித்து மகிழ அழைப்பு விடுக்கிறார் ( 2 : 24).

இவ்வாறு ஏமாற்ற உணர்வுக்கு நடுவிலும் நம்பிக்கைக் கீற்று பளிச்சிடுகிறது.இதனால் பல முரண்பட்ட கருத்துக்கள் அருகருகே தோன்றுகின்றன.அறிஞர்கள் இந்நூல் பற்றி மாறுபட்ட, முரண்பட்ட கருத்துக்களைக்கூறியிருப்பினும் நூலின் அடிப்படைச் செய்தி விரக்தியைத் தூண்டுவதாகவோதற்கொலைக்குத் தள்ளுவதாகவோ இல்லை. மாறாக, வாழ்வை நேர்நிலையாகக்காண, வாழ்வை அனுபவித்து மகிழ அழைக்கிறது (12:13-14). இதனாலன்றோஇறைவனால் வெளிப்படுத்தப்பட்ட வாக்காக இந்நூல் திருமுறைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டது! யூதர்களின் கூடாரத் திருவிழாவின் போது இந்நூல்பொதுவில் படிக்கப்பட்டது.

8. யோபு

8.1. இலக்கிய வகைவிவிலியத்தில் மட்டுமன்று, உலக இலக்கியங்களிலும் தலைசிறந்ததாகப்போற்றப்படும் யோபு நூல் ஒரு நாடகமாகும்.

யோபு என்றதும் அவரது பொறுமையே நமது நினைவுக்கு வருகிறது( யாக் 5 : 11; தோபி 2 : 12- வுல்காத்தாப் பாடம்). இது நூலில் முன்னுரையில் வரும்யோபுக்கு மட்டுமே பொருந்தும் (1 : 20-22; 2 : 10). ஆனால் நூலின் மையப் பகுதியானகவிதை நடையில் உள்ள உரையாடலில் ( 3 : 1-42 : 6) நாம் சந்திக்கும் யோபு முற்றிலும்மாறுபட்டவர் ( 6 : 11). அவர் கேள்விக் கணைகளைச் சரமாரியாகத் தொடுக்கிறார்.'நான் மாசற்ற வாழ்வு வாழ்ந்து வந்துள்ளேன். அவ்வாறிருக்க, நான் ஏன் துன்புறவேண்டும்? அதே நேரத்தில், தீயோர் ஏன் செல்வச் செழிப்பின் களிப்பில் நாளும்திளைத்து இன்புற வேண்டும்?' இவை ‘நேர்மையாளரின் துன்பம்' பற்றிய பழையகேள்வியின் புதிய வார்ப்புகள் ( 21 : 7-16; காண். 36 : 17; எரே 12 : 1; அப 1 : 13;மலா 3 : 15; திபா 73 : 3). இறுதியில் கடவுளையே அவர் கேள்விக்குறி ஆக்குகிறார்.

யோபு ஒரு வரலாற்று மனிதரா? இந்நூலில் விளக்கப்படுபவை உண்மையானவரலாற்று நிகழ்ச்சிகளா? - இத்தகைய கேள்விகள் எழுவது இயற்கை.குலமுதல்வரான ஆபிரகாம் காலத்தில் ( கி.மு. 2000) யோபு வாழ்ந்திருக்கலாம்.ஆனால் அவரைப்பற்றிய பழங்கதை ஒன்று ( உரை நடையில் உள்ள முன்னுரை 1 : 1-2; 13, முடிவுரை 42 : 7-17) இஸ்ரயேலர் நடுவே மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது.அதைக் கருவாக வைத்து அரிய இலக்கிய நயம் மிகுந்த, மனித உணர்வுகளைத்தொடக்கூடிய ஒரு நாடகத்தை ஆசிரியர் உருவாக்கியிருக்கிறார்.

இந்நூல்வரையப்பட்ட காலம்பற்றி ஒன்றும் திட்டவட்டமாகச் சொல்வதற்கில்லை என்றாலும்,இஸ்ரயேலர் பாபிலோனிய அடிமைத்தளையினின்று விடுதலை பெற்றுத் தங்கள்தாய்நாடு திரும்பிய பின்னரே (கி.மு. 530-400) இது எழுதப்பட்டிருக்க வேண்டும்என்பது பல அறிஞர்கள் கருத்து.

8.2. அமைப்பு

1) முன்னுரை ( 1:1-2:13)
2) யோபு - நண்பர்கள் உரையாடல் ( 31 : 1-40)

அ) யோபுவின் புலம்பல் ( 3 : 1-26)
ஆ) முதல் சுற்று உரையாடல் ( 4 : 1-14 : 22)
இ) இரண்டாம் சுற்று உரையாடல் ( 15 : 1-21 : 34)
ஈ) மூன்றாம் சுற்று உரையாடல் ( 22 : 1-27 : 23)
உ) ஞானம் பற்றிய பாடல் (28 : 1-28)
ஊ) யோபுவின் இறுதிப் புலம்பல் (29 : 1-31 : 40)

3) எலிகூவின் உரைகள் (32 : 1-37 : 24)
4) கடவுள் - யோபு உரையாடல் ( 38 : 1-42 : 6)அ) முதல் உரையாடல் (38 : 1-40 : 5)ஆ) இரண்டாம் உரையாடல் (40 : 6-42 : 6)
5) முடிவுரை (42:7-17)

8.3. செறிந்த சில கருத்துக்கள்


அ. வினைப் பயன் கோட்பாடு
யோபு பெரும் செல்வர், எனினும் நல்லவர், நேர்மையானவர், கடவுளுக்குஅஞ்சி நடப்பவர், தீமையை விலக்கி வருபவர்- ஒரே சொல்லில், அவர் தன்னிகரில்லாஞானி. இந்த உண்மையை நாடக ஆசிரியர் எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகிறார் (1: 1-5).

யோபுவின் ஒப்புயர்வற்ற இந்தப் பண்புபற்றிக் கடவுள் பெருமைப்படுகிறார் (1 :8; 2 : 3) சாத்தானும் இதை மறுப்பதற்கில்லை ( 1 : 9; 2 : 9). ஆனால் அவருடையசெயல் நோக்கம் பற்றி ஐயம் எழுப்புகிறான்- அதாவது, பயனை எதிர்பார்த்தே அவர்செயல்படுகிறார் என்பது அவனது வாதம் (1:9-11; 2:4-5). இதன் விளைவாக அவர்பல துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. மக்கள், பணியாளர், கால்நடைகள்,வீடு, நிலபுலன்கள் என எல்லாவற்றையும் இழந்த பின் (1 : 13-19), தம் உடல் நலனையும்இழந்தார். மனித உறவுகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், ஊருக்கு வெளியே இருந்தகுப்பை மேட்டில் அவர் புகலிடம் தேடினார் ( 2 : 7-8).#8220;பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்” என்னும்பழமொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் மாறினார்.இந்நிலையிலும் அவர் தமது மாசின்மையில் நிலைத்துநின்றார் (1 : 21-22; 2 : 10).

யோபுவுக்கு நேர்ந்த தீமைகள் பற்றிக்கேள்வியுற்ற அவருடைய நண்பர்கள் மூவர் துக்கம்விசாரிக்கவும், ஆறுதல் கூறவும் அவரிடம் வந்தார்கள்.துன்புற்ற யோபுவை உற்றுநோக்கியபோது அவர்கள்ஆறுதல் அளிப்பதற்குப் பதிலாக அறிவுரை கூறத் தலைப்பட்டார்கள். வறுமை, நோய்,சாவு முதலியன பாவத்தின் தண்டனை என்பது யூத மக்களின் அழுத்தமானநம்பிக்கை. கடவுள் நல்லவர்களுக்கு ஆசி வழங்குகிறார், தீயோர்களைத்தண்டிக்கிறார். யோபு பெரிதும் துன்புறுவதால் அவர் பெரும் பாவியாக இருக்கவேண்டும். வெளிப்படையாக அவர் பாவம் செய்திருக்காவிட்டாலும்,மறைமுகமாகவாவது, தம்மை அறியாமலே அவர் பாவம் செய்திருக்க வேண்டும் என்றமுடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இவ்வாறு வினைப் பயன் கோட்பாட்டுக்குச் சப்பைக்கட்டுக் கட்டி அதை நியாயப் படுத்தினார்கள் (4:7-9; 5:14-27; 8:11; 18:12-13).

இந்த மறை போதிக்கும் ‘கர்மா' வுக்கு இணையான வினைப் பயன்கோட்பாட்டை யோபு கடுமையாக எதிர்க்கிறார். தாம், குற்றமற்றவர் எனவாதாடுகிறார் ( 6:24-29; 29:1-31:40). நல்லார் ஏன்துன்புற வேண்டும், பொல்லார் ஏன் இன்புற வேண்டும்?(21:7-13) எனக் கேள்வி கேட்கிறார். கடவுளைக்குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவருக்குத் தண்டனைபெற்றுத் தரத் துடிக்கிறார் (9:32-35; 16:19). இதனால்,யோபு அகந்தை கொண்ட செவிகளில் தெய்வநிந்தனையாக ஒலித்தது. எனவே இன்னும் கடுமையானதண்டனை அவர்மீது வந்து விழும் என்றுஎச்சரித்தார்கள். யோபு மாசற்றவர் என்பதை அவர்கள்திட்டவட்டமாக அறிந்திருந்தாலும் அவர் தம் வாழ்நாள்முழுவதும் ஒரு பாவியாக, வெளிவேடக்காரராக இருந்திருக்க வேண்டும் என்னும்முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள் (22:1-30). இக்கருத்துக்களே மூன்றுசுற்றுரைகளிலும் மீண்டும் மீண்டும் பளிச்சிடுகின்றன (4 : 1-27 : 23).

யோபுவுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவரான எலிகூ அவர்கள் மீது சினம்கொண்டார் (32 : 2-3); கடவுள் பெயரால் பேசத் துணிந்தார் (36 : 2); புதிதாக ஏதோசொல்ல வருபவர் போல மேடை ஏறியவர், வினைப் பயன் கோட்பாட்டையே வலியுறுத்திநிலைநாட்டினார் (34 : 10-11).

இறுதியாகக் கடவுள் பேசுகிறார். வினைப் பயன் கோட்பாட்டைப் பற்றி அவர்ஒன்றுமே சொல்லவில்லை. யோபுவின் துன்பத்துக்குக் காரணம் என்ன என்பதற்கும்விளக்கம் கொடுக்கவில்லை. மாறாக இயற்கையின் எழில், அதில் வெளிப்படும் இறைஆற்றல், ஆளுகை , ஒழுங்கு முதலியவை பற்றி எடுத்துரைக்கிறார். இறைவனின்திட்டத்தை அறியவந்த யோபுவோ அவரிடம் சரண் அடைகிறார் ( 40:4-5; 42:2-6).நண்பர்கள்மீது கடவுள் சீற்றம் கொள்கிறார்; தம்மைப்பற்றி அவர்கள் சரியாகப்பேசாததால் பரிகாரம் செய்யுமாறு பணிக்கிறார் ( 42 : 7-8); யோபுவையோ தம்ஊழியராக உயர்த்துகிறார் (42 : 7-8; காண்: 1 : 8; 2 : 3). அவரை ஆசிர்வதித்து, இருமடங்காக எல்லாவற்றையும் அவருக்குத் திருப்பிக் கொடுக்கிறார் (42 : 10-17).அவரும் இறையடியார்களான ஆபிரகாம், தாவீது போன்று பல்லாண்டு வாழ்ந்தபின்இறவாப் புகழ் எய்தினார் ( 42 : 16-17).

இவ்வாறு நல்லவரும் எல்லாம் வல்லவருமான கடவுள் எவ்வாறு துன்பத்தைஅனுமதிக்க முடியும்? நல்லோர் ஏன் துன்புற வணெ;டும்? இத்தகையபிரச்சினைகளோடு வினைப் பயன் கோட்பாடுபற்றியும் யோபு நூல் அலசி ஆய்கிறது.எல்லாத் துன்பத்துக்கும் பாவமே காரணியாய் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.இறைத்திட்டத்தில் துன்பத்திற்கும் இடம் உண்டு (காண்: யோவா 9 : 2-3). ஆனால்நல்லவரான கடவுள் தீய சக்திகளின் அச்சுறுத்தல்களினின்று தமது படைப்பைக்காக்கிறார். எனவே துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாது யோபுவைப் போன்றுகடவுளிடம் சரண் அடைவதே ( 42:1-6) மனிதர்க்கு அழகு என்பதை நூல்உணர்த்துகிறது.

அதே நேரத்தில் துன்புறும் நேர்மையாளர் செழித்தோங்கும் தீயோரைக் கண்டுஅதிர்ச்சி அடையவோ, பொறாமை கொள்ளவோ தேவை இல்லை. ஏனெனில் நீரின்றிவாடி வதங்கும் செடி போல தீயோர் விரைவில் உறுதியாக அழிவர் (8:11-19; 15:20-35; 18:5-21; 20:4-29; 21:7-24). மாறாக, கடவுளை நம்பி அவருடைய கட்டளைகளைக்கடைப்பிடிக்கும் நல்லோர் ஏமாற்றம் அடையார், வாழ்வில் ஏற்றம் காண்பர் ( 5:17-27;8:5-7, 20-21) என்னும் கருத்தும் பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது.

ஆ. யோபுவின் இறைவேண்டல்
யோபுவின் நண்பர்கள் கடவுளைப் பற்றி எவ்வளவோ பேசினார்கள்.ஆனால் கடவுளிடம் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை. யோபுவோ தம்நண்பர்களிடம் பேசிப் பார்த்தார். அதனால் துளியும் பயினில்லை என்பதைஉணர்ந்தார். மேலும் அவரது பிரச்சினை கடவுளைப் பற்றியது. கடவுள் ஏன்என்னைக் காரணம் இன்றித் துன்புறுத்த வேண்டும்? இதனால் யோபு கடவுளைமுதலில் தம் எதிரியாகப் பார்த்தார். பின்னர் அவரிடமே பேசத் துணிந்தார். நேருக்குநேர் அவரோடு உரையாடினார். யோபு நாடகத்தில் இது ஒரு புதிய திருப்பம் எனலாம்.இதனால் யோபுவின் உரைகள் எல்லாமே உருக்கமான மன்றாட்டுகளாகவிளங்குகின்றன (அதி 7, 10, 13,14, 17,19).

யோபுவின் இறைவேண்டல் புலம்பல் வடிவத்தைப் பெறுகிறது. புலம்பலோடுதமது பேச்சைத் தொடங்குகிறார் (3 : 1-26),நீண்டதொரு புலம்பலோடு முடிக்கிறார்(29 : 1-31 : 40). இவற்றுக்கு இடையில் வரும் உரைகள் அனைத்தும் பெரும்பாலும்புலம்பல் அல்லது ஒப்பாரி வகையைச் சேர்ந்தவையே.

இ. ஏழைகள் மட்டில் யோபுவின் ஈடுபாடு
யோபு மாசற்றவர், நேர்மையாளர், இறையச்சம் கொண்டவர். தீயதை நாடாதவர்(1 : 1). அதாவது இறைவனோடும் பிற மானிடரோடும் நேரிய உறவுகளை வளர்த்துக்கொண்டவர். குறிப்பாகச் சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டோர் மட்டில் பரிவு காட்டியவர், அவர்களது நலனில் அக்கறை கொண்டவர், நீதியோடு அவர்களைநடத்தியவர். இதனால் நேர்மைக்கு அவர் ஒரு முன்மாதிரி ஆனார் ( எசே 14 : 4, 20;சீஞா 49 : 9). சிறந்த ஞானியான அவர் வாழ்வைத் தனிமையில் அன்று, தமதுசமுதாயத்தில் கண்டார். அதைப் பொதுவில் கொண்டாடி மகிழ்ந்தார் ( 1 : 1-5 காண்நீமொ 11 : 10-11).

வாழ்வின் நலன்களை எல்லாம் திடீரென இழந்துவிட்ட யோபு தமது இழி நிலைகண்டு கலங்கினார், குழம்பினார், புலம்பினார், சாவை விரும்பி வரவேற்றார் (3 : 3-13; 7 : 15-21; 10 : 18-22; காண். சஉ 6 : 4-6; சீஞா 30 : 17). ஏனெனில் அவரதுபார்வையில் இறந்தோரின் உறைவிடத்திலே சமூக வேறுபாடுகளோ, சமுதாய ஏற்றத்தாழ்வுகளோ கிடையா (3:14-15; காண்: சாஞா 18:11-12), வன்முறையோ அடக்கியாளும்தன்மையோ இல்லை. பெரியோர், சிறியோர் ஆகிய அனவைரும் தன்னுரிமையோடுஇருப்பர் (3 : 17-19; காண். சஉ 4 : 1-3), இவ்வாறு ஒதுக்கப்பட்டவராய்,வெறுக்கப்பட்டவராய் சமுதாயத்தின் அடிமட்டத்தில் இன்னல் இடர்ப்பாடுகளைஅனுபவித்த யோபு, சமுதாயத்தின் அட்டூழியங்களைக் கண்டறிந்த யோபு அவர்கள்அனைவரோடும் தம்மை இணைத்துப் பார்க்கிறார், ஒன்றித்துக்கொள்கிறார்.

அடித்தட்டு மக்களோடு யோபு கொண்டிருந்த தோழமை, கூட்டுப்பொறுப்புணர்வு முதலியன உரையாடல் முன்னேற, முன்னேற அதிகரிக்கின்றன.இதனால் தம் நண்பர்கள் மீது பழி சுமத்துகிறார். தங்களது நலனுக்காகத்திக்கற்றோரையும் நண்பர்களையுமே விற்கவும் துணிவார்கள் எனக் குற்றம்சாட்டுகிறார் (6 : 22-27). செல்வச் செழிப்பில் தாம் வாழ்ந்தபோது தாம் பலருக்குவாழ்வு கொடுத்திருந்ததை அவர்களுக்கு நினைவூட்டி (4 : 3-4) இக்கட்டானநிலையில் இப்போது இருக்கும் தம்மைக் காப்பற்ற அவர்கள் யாதொரு முயற்சியும்எடுத்துக்கொள்ளவில்லையே என அவர்களைச் சாடுகிறார் (26:2-4). உணவு, உடைஉறையுள் போன்ற அடிப்படைத் தேவைகளே இல்லாமல் ஏழை மக்கள் தவிக்கும்நிலைக்கு அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் எனத் துணிந்து கூறுகிறார்( 24 : 2-21).

வினைப் பயன் கோட்பாட்டை நியாயப்படுத்திய நண்பர்கள், யோபு ஏதாவதுபாவம்- மறைவான பாவமாவது - செய்திருக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியில்இறங்கினார்கள். ஆனால் அது என்ன பாவம் என்பதற்குத் தெளிவான குறிப்போதடயமோ கிடையாது. இதில் வியப்புக்குரியது என்னவென்றால், முதன் முதலில் பேசியஎலிப்பாசு, நேரிய வழியினின்று தவறினோரை, தளர்ச்சியடைந்தோரை யோபுஉற்சாகப்படுத்தி அவர்களுக்கு உறுதுணையாய் இருந்ததற்காக அவரைப்புகழ்கின்றார் (4 : 3-4) காண். 29 : 7-11, 21-25). ஆனால் சற்றும் எதிர்பாரத நேரத்தில்தமது இறுதி உரையில் அவர் யோபுவை வன்மையாகத் தாக்குகிறார், பல கடுமையானகுற்றங்களை அவர்மீது அடுக்குகிறார் ( 22 : 5-10). அதாவது, யோபு மனிதநேயம்அற்றவர், சமுதாய எதிரி என்பது எலிப்பாசின் குற்றச்சாட்டு, இதற்குக் கழுவாய்தேடிக்கொள்ள வேண்டும் என்றால், யோபு தம் தீச் செயல்களுக்காக மனம் வருந்தித்திருந்த வேண்டும். துன்பத்தின் கோரப் பிடியில் சிக்தித் தவிப்போரை விடுவிடுக்கவேண்டும் என அறிவுறுத்துகிறார் (22 : 21-30).

எலிப்பாசின் குற்றச்சாட்டுகள் உண்மை என எண்பிக்கப்பட்டால், யோபுமாசற்றவர் (1 : 1) என்பது முற்றிலும் பொய் ஆகிவிடும். அவரோ தாம் நேர்மையாளர்என்பதில் உறுதியாய் இருந்தார் (6 : 30; 9 : 20-22; 12 : 4; 16 : 17; 23 : 10-12; 27 : 4-6). எனவே தமது இறுதிப் புலம்பலில் ( 29 : 1-31 : 40) தம் வாதங்களை எல்லாம்தொகுத்து நண்பர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவிக்கிறார். சமுதாயத்தில்தாம் பெற்றிருந்த மதிப்பும் மரியாதையும் (29 : 1-11, 21-25) தம்முடையசெல்வத்தினாலோ செல்வாக்கினாலோ வரவில்லை. மாறாகத் திக்கற்றோரின்நலனுக்காகப் போராடியதாலேயே வந்தவை என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். மேலும்தம்முடைய ஆற்றலையும் அதிகாரத்தையும் ஓடுக்கப்பட்டோரின் மேம்பாட்டுக்காகவரையின்றிப் பயன்படுத்தியதாக வலியுறுத்துகிறார் (29 : 12-17; 30 : 24-25).அதாவது, இலட்சிய அரசர் போன்று அவர் ஏழை எளியவர்களின் உரிமைக்காகப்போராடிப் பாதுகாத்தார் (திபா 72). நீதி நேர்மைக்கு மறு பெயர் யோபு என்றால் அதுமிகையாகாது.

இறுதியாக தாம் நிரபராதி என்பதை நிரூயஅp;பிக்க ஆணையிடுகிறார். சகமானிடருக்கு எதிராக, அதுவும் வஞ்சிக்கப்பட்ட வறியோர்க்கு எதிராக எத்தீங்கும்இழைக்கவில்லை எனச் சாதிக்கிறார் (31:1-40). இதற்குக் காரணம் மாந்தர்அனைவர்க்கும் உள்ள பொதுப் பிறப்பிடம் மனித மாண்பு. அடிப்படைச் சமத்துவம்ஆகும். #8220;கருப்பையில் என்னை உருவாக்கியவர் தாமே அவனையும் (அடிமையையும்)உருவாக்கினார். கருப்பையில் எங்களுக்கு வடிவளித்தவர் அவர் ஒருவரே அல்லவோ?”(31 : 15; காண்: 34 : 6; 34 : 19; தொநூ 1 : 27; நீமொ 14 : 31; 17 : 5; 22 : 22; 29 : 13;மலா 2 : 10; சீஞா 17 : 1-10; 4:1-10) இவ்வாறு யோபுவின் இறுதிப் புலம்பல் அடித்தட்டுமக்கள்மீது யோபு கொண்டிருந்த உண்மையான ஈடுபாட்டை வலியுறுத்துவதோடுஅவரை ஏழைப் பங்காளனாக, ஓடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாகப் படம் பிடித்துக்காட்டுகிறது.

ஈ. ஒடுக்கப்பட்டோர் மட்டில் கடவுளின் கரிசனை
ஆண்டவர் என யோபுவின் கடவுள் அறிமுகம் செய்யப்படுகிறார் (1 : 6).இஸ்ரலேயருடைய விடுதலையோடு தொடர்புடையது இப்பெயர் என்பதுகுறிப்பிடத்தக்கது ( காண். விப 3) ஆண்டவருக்கும் யோபுவுக்கும் இடையே நலமானஉறவுகள் நிலவுகின்றன (1 : 1-5). விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் ஆற்றலும் கொண்டிலங்கும் ஆண்டவர் சாத்தானின் செயல்பாட்டைக்கட்டுப்படுத்துகிறார் (1 : 12; 2 : 6). காரணமின்றி யோபுவை அழிக்க அவன் தம்மைத்தூண்டிவிட்டிருந்ததை எண்ணி வருந்துகிறார் (2 : 3). யோபுவை துன்புறுத்தியதுஆண்டவர் அல்லர் என்பது இவற்றினின்று தெளிவாகிறது.

யோபு கடவுளைத் தூற்றத் தொடங்கியதும், அவருடைய நண்பர்கள் கடவுளைப்பாதுகாக்க எதிர்த் தாக்குதல் நடத்தினார்கள். அவரைப் பற்றிய தவறானகருத்துகளை முன்வைத்தார்கள் (13 : 7-8); வினைப் பயன் கோட்பாட்டின்அடிப்படையில் செயல்படும் ஈவு இரக்கமற்ற, அன்பு அக்கறையற்ற விண்ணகநிர்வாகியாக அவரைச் சித்தரித்தார்கள் ( 4 : 7-10). இருப்பினும் அவர் வஞ்சகரின்திட்டங்களைத் தகர்த்தெறிந்து, தாழ்ந்தோரைக் கைதூக்கிக் காப்பவர், திக்கற்றவர்சார்பாகச் செயல்பட்டுச் சமூக நீதியை நிலைநாட்டுபவர் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர் (5 : 8-16; 22 : 29-30). அவர் பஞ்சம், போர், சாவு முதலிய பல்வேறுஅல்லல் களி னின்றும் பாதுகாப்பு அளிப்பார் ( 5 : 17-27; 8 : 20-21). அதே வேளையில்தீயோர் தற்காலிகமாகச் செழிப்புற்றாலும், இறுதியில் கடவுள் அவர்களைத் தண்டிப்பார்என மூவருமே ஒப்புக் கொள்கின்றனர் ( 4 : 7-11; 5 : 2-4; 8 : 11-22; 15 : 17-35; 18 :5-21; 22 : 12-20).

துன்பத்தின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த யோபுவின் கண்களுக்குக் கடவுள்குற்றவாளியாகத் தோன்றுகிறார். நல்லவர்களுக்கும் தீயோர்களுக்கும் இடையே அவர்வேறுபாடு காட்டாமல் (9 : 21-24; 21 : 22-26) ஆதரவற்றோர், ஆற்றலற்றோர்ஆகியோரை ஒடுக்குவதற்குத் தீயோரை ஆதரிக்கிறார் எனக் குற்றம் சாட்டுகிறார்(24 : 2-12). எனினும் அவர் தம்மை விடுவிப்பார் என நம்புகிறார், அவரை மீட்பராக(எபிரேயத்தில் ‘கோயேல்) காண்கிறார் ( 19 : 21-27 ). கோயேல் என்பவர் மகப்பேறுஇன்றி ஒருவர் இறக்க நேர்ந்தால், அவருடைய மனைவியோடு கூடிவாழ்ந்து அவருக்குவாரிசை உருவாக்கிக் கொடுக்கக் கடமைப்பட்டவர் (இச 25 : 5-6) அல்லது தமதுசொந்த நிலத்தை இழந்த ஒருவர் அதைமீட்டுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும்போது, அதை மீட்டுக் கொடுக்கும் கடமைஅவருடைய உறவினர்க்கு உண்டு (லேவி 25 : 47-50; ருத் 4 : 4-6) இவ்வாறு செயல்படுபவர்‘கோயேல்' என்று அழைக்கப்பட்டார். இச்சொல்அடிமைத் தளையிலிருந்து இஸ்ரயேலரை விடுவித்தஆண்டவரைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டது ( விப 6: 6; 15 : 13; எசா 41 : 14; 42 : 1-14). எனவேஎதிரிகளிடமிருந்தும் துன்பம், நோய், நோக்காடுமுதலிய அனைத்துத் தீமைகளிலிருந்தும் மக்களைவிடுவித்து, அவர்களுக்கு நல்வாழ்வைக்குறையின்றி அளிப்பவராக யோபு இங்குக்கடவுளைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

திடீரென மேடையில் தோன்றி மறையும் எலிகூ என்பவர் கூட கடவுள்நேர்மையாளர், நீதி தவறாதவர் (34 : 10-12; 37 : 23) மனிதர் எல்லாரையும் அவர்சமமாக நடத்தினாலும் (34 : 16-20; 36 : 5) வறுமையில் வாடுவோர் மட்டில் அவர்ஒருதலைச் சார்பாகச் செயல்படுகிறார், அவர்களின் அழுக்குரலைக் கேட்டு நீதிவழங்குகிறார் (34 : 24-28; 36 : 6; காண் திபா 82; சீஞா 35 : 15-19; சாஞா 6 : 6-8)என முழங்குகிறார். ஏழைகளை ஒடுக்குகின்ற காரணத்தால் சமுதாயத்தின்பலியாடுகளான ஒடுக்கப்பட்டோரையோ விடுவிப்பார் ( 36 : 5-16) என விளக்குகிறார்.

சூறாவளியினின்று பேசும் கடவுள், தாமே அண்டத்திற்கும் ஆண்டவர், அதைப்படைத்ததோடு அழிவின் ஆற்றல்களிடமிருந்து தொடர்ந்து காப்பவர் எனத்தொடக்கத்தில் தெளிவுப்படுத்துகிறார் ( 38 : 4-3). அது போலவே காட்டுவிலங்குகளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அவற்றைக் காப்பதும் அவரே(38 : 39-39 : 30; காண். திபா 50 : 10-11) அவர் பரிவுள்ளம் கொண்ட தந்தை ( காண்38 : 28); பால் நினைந்தூட்டிப் பசியாற்றும் அன்னை ( காண். 38 : 39-41); தீமையின்சக்திகள் மீது வெற்றி வாகை சூடுபவர் ( 40 : 15-41 : 34); செருக்குற்றோர், ஆற்றல்படைத்தோர், தீயோர் ஆகியோர் அழிவின் ஆற்றல்களுக்குத் துணை போகின்றகாரணத்தால் அவர்களையும் தமது நேரடிக் கட்டுபாட்டுக்குள் வைத்து (40 : 11-13; 41: 34) தமது படைப்பைப் பாதுகாப்பவர்; தீய சக்திகள் மீது வெற்றி சூடுபவர் ( 40 : 15-41 : 34) செருக்குற்றோர், ஆற்றல் படைத்தோர், தீயோர் ஆகியோரை அழிவின் நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் வைத்து ( 40 : 11-13; 41 : 34) தமது படைப்பைப் பாதுகாப்பவர்,தீய சக்திகளுக்கு எதிராகத் தாம் மேற்கொள்ளும் தொடர் போரட்டத்தின் வழியாகவேஅவனியில் அமைதியை, நீதியை நிலைநாட்ட முடியும் என இறுதியில்வலியுறுத்துகிறார்.

9. இனிமைமிகு பாடல்

9.1. தலைப்பு
ஒருவரை மன்னாதி மன்னன் என அழைத்தால், அவர் மன்னர்கள்அனைவரிலும் பெரியவர். அவர்களுள் தலைசிறந்தவர் என்பது பொருள். அதுபோல் இனிமைமிகு பாடல் என ஒன்றை குறிப்பிடும்போது , அது பாடல்களுள்தலைசிறந்தது, இனிமை மிக்கது எனப் பொருள்படும்.

காதல் மன்னன் சாலமோனே இந்நூலின் ஆசிரியர் என்பது மரபுக் கருத்து.அவர் ஆயிரத்து ஐந்து பாடல்களை இயற்றியதாக 1 அரச 4 : 32- இல் ஒரு குறிப்புஉள்ளது. அப்படியானால் அவர் இயற்றிய பாடல்களுள் இதுவே தலைசிறந்தஇனிமைமிகு பாடல் ஆகும் ( 1:1). எனினும் சாலமோனே இப்பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்க முடியாது. ஏனெனில் அவரது காலத்திற்குப் பிற்பட்ட பாடல்களும் இதில்அடங்கியுள்ளன.

9.2. காதல் கவிதைகள்
காதலை மையப் பொருளாகக் கொண்டு புனையப்பெற்ற பல கவிதைகளின்தொகுப்பு ஆகும் இந்நூல்.கவிதைகளுள் ஒரு பகுதி ஆயர் மற்றும் உழவர்களது வாழ்வைப் பிரதிபலிக்கிறது. இது வடநாடான இஸ்ரயேலில் தோன்றியிருக்க வேண்டும். மற்றொரு பகுதிஅரசவை, நகரச் சூழலைப் பிரதிபலிக்கிறது. இது தென்னாடான யூதாவில்தோன்றியிருக்க வேண்டும். பாபிலோனிய அடிமைத் தளையிலிருந்து தாய்நாடுதிரும்பிய ஞானிகளுள் ஒருவர் கி.மு. நான்காம் நூற்றாண்டில் மேற்கண்ட இரண்டுமரபுகளையும் இணைத்து இந்நூலைத் தொகுத்து இன்றைய வடிவில் வெளியிட்டிருக்கவேண்டும் என்பது பலரது கருத்து.

இவற்றுக்கு இணையான காதல் கவிதைகள் உலகின் பல மொழிகளிலும் உள்ளன.குறிப்பாக இந்திய பக்தி இலக்கியங்களில் காணப் படுகின்றன. அகநானூற்றுப் பாடல்கள், திருக்குறளின் இன்பத்துப் பால், திருவாசகம், திருப் பாவை, திருவெம்பாவை, திருக்கோவையார், திருச்சிற்றம்பலக்கோவை, ஆண்டாள் பாடல்கள், குற்றால குறவஞ்சி, பெத்லகேம் குறவஞ்சிமுதலியவற்றோடு இவற்றை ஒப்புநோக்குதல் பயன் தரும்.

9.3. இலக்கிய வகை
இந்நூலின் இலக்கிய வகைபற்றி அறிஞர்களிடையே இன்னும் கருத்துவேறுபாடு நிலவுகிறது. இது ஒரே ஆசிரியரின் கைவண்ணத்தில் உருவானது என்னும்கருத்து அடிப்படையில் தலைவி ( சூலாமியள்) தலைவன் ( சாலமோன்) பாடகர் குழுஆகியோர் பங்கேற்கும் ஒரு நாடகமாக இதைச் சிலர் பார்க்கின்றனர். இதை ஒருநாட்டிய நாடகமாகச் கொள்வாரும் உளர். இலக்கியத்தில் பதிவு பெற்ற முதல் காதல்கவிதையான தொநூ 2 : 23- ஐ விளக்க எழுந்த ‘மித்ராஷ்' என இதை இனம்காட்டுவாரும் உண்டு.

காதல் கவிதைகளின் தொகுப்பு என்னும் கருத்து அடிப்படையில் பாலஸ்தீனநாட்டு மக்கள் நடுவில் திருமணத்தின்போது பாடப்பட்ட பாடல்களின் திரட்டு எனச்சிலர் இதைக் கருதுவர். பாலஸ்தீனத்தில் திருமண விழா ஒரு வாரத்துக்குக்கொண்டாடப்படும். அப்பொழுது மணமகனும் மணமகளும் அரசன், அரசியாகக்கொண்டாடப்படுவர். அவர்களுக்கென்று அரசவையினர், தோழர், தோழியர் உண்டு.முதல் நாள் மணமகள் வாள் நடனம் ஆடுவார். அவ்வப்போது இளங்காதலர் ஒருவர்ஒருவருடைய உடல் அழகைப் புகழ்ந்துரைப்பர் ( காண். திபா 45); இரு குழுவினரும்மாறி மாறிப் பாடுவர்; மாலை வேளையில் புது மணமக்களின் குழந்தைப் பருவம்,இளைமைப் பருவம் முதலியவற்றை விளக்கும் சிறு நாடகங்கள் அரங்கேற்றப்படும்,அல்லது நகைச்சுவை இடம்பெறும். இவை எல்லாம் சிரியா நாட்டில் நிலவியதிருமணப் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக்கொண்டவை (காண் 3:6-11; 5:1) என்பது ஒருசிலரது கருத்து.

கானானியரின் கதிரவன் கடவுள்தமெசுக்கும் நிலாத் தேவதை இஸ்தாருக்கும்இடையே நிலவிய காதலை இக்கவிதைகள்எடுத்துரைக்கின்றன. மீனாட்சி திருக்கல்யாணம்போன்று அவர்களது திருமணம் ஆண்டுதோறும்பெரிய விழாவாகத் கொண்டாடப்பட்டது. இவற்றைஇஸ்ரயேலர் தங்களது பாஸ்கா விழாக்கொண்டாடத்தின்போது பாடிக் களித்தனர் என்பர்வேறு சிலர்.

#8220;உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல் என்னை பொறித்திடுக,இலச்சினைபோல் உம் கையில் பதித்திடுக, ஆம் அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது. அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது; அதன் பொறி, எரிக்கும் நெருப்புப்பொறி, அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து” (8:6). இதுவே நூலின் சிகரம்,நூல் கூறும் செய்தியின் சாரம். ஈமச் சடங்கு பண்டைய மேற்கு ஆசிய நாடுகளில்பெரிய விழாவாகக் கொண்டாடப்படும். மது, மாது, பாடல் ஆகியவை இடம்பெறும்.இத்தகைய ஈமக் கொண்டாட்டங்களில் பாடப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இவைஎன்பாரும் உண்டு.

ஆண், பெண் இருவருக்கும் நடுவில் மகிழ்விக்கும் இயல்பான காதலுணர்வைஇருவரும் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும். கவிதைகளின் திரட்டு, அல்லதுவெவ்வேறு கால இடச் சூழலில் ஏற்பட்ட வெவ்வேறு, காதல் அனுபவங்களைக்கொண்ட பல பாடல்களின் கோர்வை என்பதே பலரும் இன்று ஏற்றுக்கொள்ளும்கருத்தாகும்.பேசுபவர், கேட்பவர், இடம், மனநிலை, உருவகம் முதலியற்றில் ஏற்படும்மாற்றத்தை வைத்து இருபத்தெட்டுப் பாடல்களாக நூலைப் பிரிக்கலாம்.

9.4. அமைப்பு

1) தலைப்பு (1 : 1)
2) காதல் தொடக்கம் (1 : 2-5 : 1)அன்பு செய்தல் (1 : 2-3 : 5)திருமணம் (3 : 6-5 : 1)
3) காதல் வளர்ச்சி (5 : 2-8 : 14)ஊடல் (5 : 2-6 : 3)அன்பு வளர்ச்சி (6 : 4- 8 : 14)

9.5. பொருள் விளக்கம்
தொன்றுதொட்டு இந்நூலுக்குத் தொடர் உருவகப் பொருள் விளக்கம்அளிக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே விளங்கும்.உடன்படிக்கை உறவை வலியுறுத்தும் உருவகமாக ( காண்: எசா 54:5-6; 26:4-5;ஒசே 1-2), கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே நிலவும் உறவின் உருவகமாக( காண்: எபே 5:21-23; திவெ 19:6-8), கிறிஸ்துவுக்கும் ஆன்மாவுக்கும் இடையேஏற்படும் ஆன்மீக உறவின் உருவகமாக விளக்கப்பட்டு வந்துள்ளது.

நேரடிப் பொருள் விளக்கமும் இதற்குக் கொடுக்கப்படுகிறது. கடவுள் மனிதரைஆணும் பெண்ணுமாக, பாலுணர்வு கொண்டவர்களாகப் படைத்து ஆசிர்வதித்தார்(தொநூ 2:18-24; 4:1). எனவே மனித அன்பு புனிதமானது, அதைக் கொண்டாடுவதும்புனிதமானது. அது இறையன்பின் பிரதிபலிப்பு, இறைவன் மனிதர்களுக்குக்கொடுத்த அரிய பெரிய கொடை; அதில் எவ்வகைக் கேவலமும் இழிவும் இல்லை.இதனால்தான் #8220;இந்நூல் பக்தியுள்ள மக்களின் செவிகளுக்கு வெறுப்பைத் தருவதாய்உள்ளது” என்று கூறிய மாப்சுவேசியாவின் தியோடோருடைய கருத்துகண்டனத்துக்கு உள்ளானது.

காதலன் தன் காதலிமீது கொண்டுள்ள ஏக்கத்தில் தொடங்கும் காதல் ( 2:8-17) எவ்வாறு இறுதியாகத் திருமணத்தில் நிறைவு அடைகிறது என்பதை விளக்கும்கவிதைத் தொகுப்பாக இப்பாடலைப் புரிந்துகொள்வதே பொருளுடைத்து. ஆனால்அத்தோடு நின்றுவிடாது, காதலன் தன் காதலியோடு கூடி நுகரும் சிற்றின்பத்தைஆன்மா இறைவனோடு கூடி நுகரும் பேரின்பத்துக்கு உவமையாகக் கொள்வதே -உலகின்பக் காதலை இறைப் பேரின்பக் காதலை உணர்த்துவதாகப் பொருள்கொள்வதே சிறப்புடையது. இவ்வாறு நேரடிப் பொருள் விளக்கத்தையும் தொடர்உருவகப் பொருள் விளக்கத்தையும் இணைத்துப் பார்க்கும் முறையையே இன்றுபெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.#8220;

விவிலிய நூல்கள் எல்லாம் புனிதமானவை, ஆனால் இனிமைமிகு பாடல்புனிதத்திலும் புனிதமானது” என்கிறார் ரபி அக்கிபா. இத்தகைய நேர்நிலைக்கண்ணோட்டம் நிலவிய காரணத்தால்தான் இந்நூல் தொடக்கத்திலிருந்தேதிருமறைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாஸ்கா விழாவின்போது பொதுவில்படிக்கப்பட்டது.

10. சீராக்கின் ஞானம்

10.1. வரலாற்று பின்னணி
மகா அலக்சாண்டர் கி.மு. 323 இல் இறக்கவே , கிரக்கப் பேரரசை அவருடையபடைத்தலைவர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். இவர்களுள் நமதுகவனத்தை ஈர்ப்பவர்கள் எகிப்தைச் சேர்ந்த முதலாம் தாலமி லாகியும், சிரியாவைச் சேர்ந்தசெலூக்கு ஐ -ம் ஆவர்.கி.மு. 301-இல் தாலமி பாலஸ்தீனத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்தார். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலம் தாலமியர்களுக்கு அடியில்யூதர்கள் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். இதற்கிடையில் செலூக்கிய மன்னர்கள்பாலஸ்தீனத்தைத் தங்களது கைக்குள் கொண்டுவரப் பன்முறை முயன்றார்கள்.இறுதியில் கி.மு. 198 - இல் மன்னர் மூன்றாம் அந்தியோக்கு அதைக் கைப்பற்றினார்.

அலக்சாண்டருடைய கொள்கையைப் பின்பற்றித் தாலமியர், செலூக்கியர்ஆகிய இரு சாராருமே கிரேக்கமயமாக்கலில் தீவிர ஈடுபாடு காட்டிவந்தனர். கிரேக்கசிந்தனைகள், இலட்சியங்கள், பழக்கவழக்கங்கள், விழுமியங்கள், கலைமுதலியவற்றை யூதர்மீது திணிப்பதில் முனைந்து நின்றனர். யூதர் பலரும் இவற்றைவிரும்பி ஏற்கத் தொடங்கினர்.அரசியலில் ஒரு வகை நிலைத்தன்மையைக் கொண்டுவரும் பொருட்டு,செலூக்கிய மன்னர் அந்தியோக்கு ஐஏ எப்பிபான் (175-164) கிரேக்கத் திணிப்பில்முழு மூச்சுடன் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது ஓனியா ஐஐ - இன் மகன் சீமோன் ஐஐதலைமைக் குருவாக (219-196) இருந்தார். நேர்மையாளரான அவர் தம்முன்னோர்களின் நம்பிக்கையைக் கட்டிக் காப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். தம்மக்களை உறுதிப்படுத்துவதில் அக்கரைக் காட்டினார் (காண்: 50:1-21) ஆனால்அவருடைய உடன்பிறப்பான யாசோன் அரசருக்குக் கையூட்டுக் கொடுத்துத்தலைமைக் குரு பதவியைச் சீமோனிடமிருந்து கைப்பற்றிக் கொணடார் ழூ( 174-171).கிரேக்கப் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் யூதர்கள்மீது திணிப்பதில்சளைக்காமல் ஈடுபட்டார் ( 2 மக் 4:7-17). இதன் விளைவாக வெடித்ததுதான்மக்கபேயர் புரட்சி ( கி.மு. 167- 2 மக் 8:1-7) இதற்குச் சற்று முன் வாழ்ந்தவரேசீராக்கின் ஞானம் என்னும் நூலின் ஆசிரியர் (கி.மு. 250-175).

10.2. ஆசிரியர்
இந்நூலின் ஆசிரியர் பெயர் ஏசு, இவர் சீராவின் பேரனும் எலயாசரின்மகனும் ஆவார் ( 50:27); ஏசுவின் தந்தை எலயாசர் குறிப்பிடத்தக்க அளவுக்குச்சிறப்புப் பெற்றிராத காரணத்தாலோ என்னவோ, அன்று புகழ் பெற்று விளங்கியஅவருடைய பாட்டனாரின் பெயர் கொண்டு ‘பெண் சீரா' (சீராவின் மகன்) என அழைக்கப்படுகிறார். அவரது நூலும் ‘ சீராவின் மகன் ஏசுவின் ஞானம்' அல்லது ‘பெண் சீரா'என வழங்கப்படுகிறது. இறைவாக்கு நூல்களுக்கு அடுத்தபடியாகஇந்நூலே அதை எழுதிய ஆசிரியரின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஏசு எருசலேமில் வாழ்ந்தவர் (50:27); இளமையிலிருந்தே ஞானத்தைத்தேடியவர், ஞானத்தை மன்றாடிப் பெற்றுக்கொண்டவர் (51:13-22) திருச்சட்டம்,இறைவாக்கு நூல்கள், மற்றத் திருஏடுகள் ஆகியவற்றை ஆழ்ந்து கற்பதில் ஆர்வம்காட்டி வந்தார். அவற்றில் நன்கு தேர்ச்சியும் பெற்றார் ( காண. முகவுரை 39:1-11)இவர் ஒரு மறைநூலறிஞர், அதாவது இறையியல் ஞானத்தில் ஊறிய ஞானி; இவர்எருசலேமில் ஒரு பள்ளியை நிறுவியிருந்தார், திருநூல்பற்றிய அறிவு, ஒழுக்கநெறி,நற்பயிற்சி முதலியவற்றில் மதிப்புப் பெற்றிருந்தார்.

கிரேக்கமயமாக்கலால் யூதர்களின் நம்பிக்கைக்கும் பழக்க வழக்கங்களுக்கும்ஏற்படவிருந்த கேட்டை உணர்ந்தவராய், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களைநம்பிக்கையில் உறுதிப்படுத்தி ஊக்குவிக்க ஏறத்தாழ கி.மு. 190 - இல் இந்நூலைஎபிரேய மொழியில் எழுதினார். உண்மையான ஞானம் ஏதென்சில் அன்று, இறைஏவுதலால் எழுதப்பெற்ற இஸ்ரயேலின் திருநூலில் பொதிந்து கிடக்கிறது என்பதைவலியுறுத்துகிறார் (காண். 50:27-29).

10.3. கிரேக்க மொழி பெயர்ப்பு
ஏசுவின் பேரன்- அவரது பெயர், இவரின் வாழ்வுபற்றிய குறிப்புகளேகிடையாது. மன்னர் தாலமி ஏஐஐ இன் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டில் ( கி.மு.132)எகிப்துக்குச் சென்று அங்குச் சிறிது காலம் தங்கியிருந்தார். அப்பொழுது தம்பாட்டனாரின் பாணியில் அவரும் பணி செய்திருக்க வேண்டும். குறிப்பாகத் தம்பாட்டனார் எபிரேயத்தில் எழுதியிருந்த நூலை, பாலஸ்தீனத்துக்கு வெளியே கிரேக்கச்சூழலில் வாழ்ந்துவந்த யூதர்களின் நலன் கருதி ஏறத்தாழ கி.மு. 132- இல் கிரேக்கத்தில்மொழிபெயர்த்து, அதற்கு ஒரு முன்னுரையும் வரைந்தார் ( காண்: முகவுரை).கிரேக்கத்தில் இந்நூல் ‘ சீராக்கின் ஞானம்' என அழைக்கப்படுகிறது.

தொடக்கத் திருச்சபையில் திருப்பாடல்கள் நூலுக்கு அடுத்தபடி இந்நூல்திருவழிபாட்டில் மிகுதியாய் பயன்பட்ட காரணத்தால், இது ‘சபை நூல்' என்று பெயர்பெற்றது.இந்நூலின் எபிரேய பாடம் தொலைந்துவிட்ட நிலையில், இதன்மொழிபெயர்ப்பான கிரேக்கப் பாடமே நமக்கு மூலப்பாடமாகப் பயன்பட்டுவருகிறது.எபிரேயப் பாடத்தின் பெரும் பகுதி தொல்லியல் ஆராய்ச்சியின் பயனாக இன்றுநமக்குக் கிடைத்துள்ளதால், கிரேக்கப் பாடத்தை நன்கு புரிந்துகொள்ள இது பெரிதும்துணை புரிகிறது.அடுத்த யூதரும் சீர்திருத்தச் சபையாரும் இதைச் திருமுறைப் புறநூல்களுள்ஒன்றாகக் கருதுகின்றனர். கத்தோலிக்கரோ பழைய ஏற்பாட்டின் மற்ற நூல்களைப்போல இதுவும் இறைஏவுதலால் எழுதப்பெற்றதாக ஏற்றுக் கொள்கின்றனர். எனவேஇது இணைத் திருமுறை நூல்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது.

10.4. இலக்கிய வகை
ஞானம்பற்றிய நீதிமொழிகள் ( மஷால்) என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தநீதிமொழி (19 : 12; 28 : 17; 13 : 1) எண்ணிக்கைக் கூற்று (23 : 16-18; 25 : 1-2, 7-11;26 : 5-6; 28), அறிவுரை (28 : 1-7; 51 : 23-30) போன்ற பல துணை இலக்கியவகைகள் நூலில் இடம் பெறுகின்றன.

ஞானம்பற்றிய விரிவுரைகள் என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்த புகழ்ப்பா( 1 : 1-10; 18 : 1-17; 51 : 1-12) மன்றாட்டு ( 22 : 27-36 : 6; 36 : 1-22) தன் வரலாறு(33 : 16-18; 51 : 13-30) பட்டியல் (39 : 12-35; 42 : 15-43 : 33) வரலாறு(44 : 1-50 : 21) முதலியனவும் கையாளப்படுகின்றன.

10. 5. அமைப்பு

1) முன்னுரை (மொழிபெயர்ப்பாளருடையது)
2 ) ஞானம் வழங்கும் நன்னெறி ( 1:1-43:33)
3 ) மூதாதையர் புகழ்ச்சி ( 44:1-50:21)
4) முடிவுரை ( 50:22-29)
5) பிற்சேர்க்கை ( 51:1-30)

10.6. செறிந்த சில கருத்துகள்
சீராக்கின் ஞானத்தில் மையக் கருத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.ஆண்டவரிலிருந்து அணுவரை உள்ள எல்லாவற்றையும் பற்றிக் கிரேக்க ஞானிகள்பேசுவது, எழுதுவது வழக்கம். அந்தப் பாணியில் பெண் சீராவும் நூலின் முதல்பகுதியில் ( 1:1-43:33) வாழ்வின் பல்வேறு கூறுகள் பற்றி எழுதுகிறார்.நன்னடத்தைக்கான ஒழுக்க நெறிகளை வரையறுத்துக் கொடுக்கிறார்.

அ. திருச்சட்டமே ஞானம் இறைவனே ஞானத்தின் ஊற்று ( 1 : 1-10). எனவே இறைவனுக்கு அஞ்சிநடப்பதே ஞானத்தின் தொடக்கமாக ( 1 : 14) நிறைவாக ( 1 : 16) மணிமுடியாக ( 1 : 18)ஆணிவேராக (1 : 20) சாரமாகப் (1 : 1-12) போற்றப்படுகிறது, இறையச்சமும் ஞானமும்வாழ்வுக்குப் பொருள் தருகின்றன, நிறைவு அளிக்கின்றன. நீடிய ஆயுளைவழங்குகின்றன (1 : 20; 34 : 13-17; 32 : 14-16; 34 : 13-17; 25 : 10-11) இஸ்ரயேலர்பெற்ற இப்புதுக் கண்ணோட்டம் இறையியல் ஞானம் என அழைக்கப்படுகிறது.

மறைநூலறிஞர் மக்கள் நடுவே செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில்இறையச்சமே ஞானம் என்னும் கருத்து, திருச்சட்டமே ஞானம் என்னும் கருத்துக்குவித்திட்டது. அதாவது கடவுளுக்கு அஞ்சி அவருடைய கட்டளைகளைக்கடைப்பிடிப்பபோரே ஞானத்தை அடைவர் என்பது மறைநூலறிஞரின் ஆழ்ந்தநம்பிக்கை. இக்கருத்து இந்நூல் முழுவதும் இழையோடுகிறது. தொடக்கத்திலேயேஅழுத்தம் பெறுகிறது ( 1:11-2 : 18; காண். 19 : 20; 23 : 27; 24 : 23). அதாவதுஇணைச்சட்டம் கூறுவதுபோல கடவுளுக்கு அஞ்சுவது அவருக்கு அன்புசெய்வதாகும். அவருக்கு அன்பு செய்வது அவருடைய கட்டளைகளைக்கடைப்பிடிப்பதாகும். அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது அவருடையவழிகளில் நடப்பதாகும் (2 : 15-16; காண். இச 10 : 11-11; 30 : 16). இவ்வாறு ஞானம்இறைவனோடும் மனிதரோடும் நல்லுறவை, அன்புறவை உருவாக்கி வளர்க்கிறது(காண் 4 : 7-10; 35 : 1-5).

இத்தகைய ஞானம்பற்றிய அழகான புகழ்ப்பா ஒன்று 24 : 1-22 இல் இடம்பெறுகிறது. நீமொ 8 : 22-31 இங்கு மீண்டும் விளக்கம் பெறுகிறது எனலாம்.ஆனால் இம்முறை தெருக்கோடிகளில் அல்ல, மாறாக விண்ணக மன்றத்தில் அதுதிருவாய் மலர்ந்து பேசுகிறது. சாஞா 8 : 2 -18 இல் வரும் கவிதையோடும் இதைஒப்பிட்டுப் பார்ப்பது சிறப்புடையது.

ஆ. மூதாதையர் புகழ்ச்சி நூலில் இரண்டாவது பகுதியில் ( 44:1-50 : 21) இஸ்ரயேலில் மாட்சி நிறைவரலாற்றுக்கு ஆசிரியர் புகழாரம் சூட்டுகிறார். முதன் முதல் மீட்பின் வரலாறுஇங்குதான் ஞானத்தோடு இணைக்கப்படுகிறது. ஆதாமிலிருந்து தலைமைக் குருசீமோன் ஐஐ வரை வாழ்ந்த இஸ்ரயேலின் தலைவர்கள் பற்றிய மீள் பார்வை இது.

ஹோமர், சாக்ரட்டீசு, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் முதலிய பெரியோர்களைநினைத்துக் கிரேக்கர்கள் பெருமைப்பட்டார்கள். இஸ்ரயேலரோ தங்களின் வரலாற்றுநாயகர்களான ஆபிரகாம், மோசே, ஆரோன், யோசுவா, சாமுவேல், தாவீது,சாலமோன் போன்ற பெருந்தலைவர்களை எண்ணி எண்ணி இறும்பூது எய்தச்சீராக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்கள் சிறந்து விளங்கியதற்குக் காரணம்அவர்களை வழி நடத்திய ஞானமே ( 44:1-5) என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.அவர்களைப் பின்பற்றி வாழ இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். அவர்களைப்போல வாழ்ந்தால் இவர்களும் வரலாறு படைக்கலாம், வரலாற்றில் இடம் பிடிக்கலாம்என அழுத்தமாகக் கூறுகிறார்.

11. சாலமோனின் ஞானம்

11.1. நோக்கம்
கி.மு. இரண்டாவது நுற்றாண்டு யூத மறைக்குப் பெரியதொரு சோதனைக்காலம் எனலாம். மக்கபேயர் புரட்சியைத் ( கி.மு. 167) தொடர்ந்து, பாலஸ்தீனத்தில்வாழ்ந்த யூதர் பெரும்பாலும் கிரேக்கத் திணிப்பைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால்பாலஸ்தீனத்துக்கு வெளியே, குறிப்பாக எகிப்து நாட்டு அலக்சாந்திரியாவில் வாழ்ந்தயூதர் கிரேக்கமயமாக்கல் பற்றித் திறந்த மனப்பான்மை கொண்டிருந்தனர். சிலர்கிரேக்க மொழி, மெய்யியல், பண்பாடு, வாழ்க்கைமுறை, வழிபாட்டுமுறைமுதலியவற்றின்மீது அளவற்ற நாட்டம் காட்டியதோடு, யூத மறையைவிடக்கிரேக்கர்களின் மறைவான சமயச் சடங்குகள் உயர்ந்தவை என்னும் தவறானஎண்ணத்தால் தூண்டப்பெற்று யூத மறையைக் கைவிட்டனர்.

இவர்கள் அனைவரும் மனம் மாறி யூத மறைக்குத் திரும்பி வர அழைப்புவிடுப்பதே இந்நூலாசிரியரின் முதன்மையான நோக்கம். அதே நேரத்தில் யூதக்கோட்பாடுகளில் பிடிப்போடு இருந்தவர்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்துகிறார்ஆசிரியர். யூத நம்பிக்கையின் பொருட்டு அவர்கள் அனுபவிக்க வேண்டியிருந்ததுன்ப துயரங்களுக்கு வெகுமதியாக மறுவாழ்வு வழங்கப்படும் ( காண். 2:1-2:9) எனநியாயப்படுத்த முயல்கிறார்; யூத நம்பிக்கையில் தளர்ச்சியுற்றுத் தடுமாற்ற நிலையில்இருந்தவர்களை எச்சரிக்கிறார்; கிரேக்கருடைய சிலைவழிபாட்டின் மூடத்தனத்தைஅடையாளம் காட்டுவதோடு, யூத மறையின் நிரந்தர மதிப்பீடுகளை வலியுறுத்துகிறார். ஆண்டவர்மீது அச்சம் கொள்வதே, அவரது திருச்சட்டத்தின்படி ஒழுகுவதேஉண்மையான உயரிய ஞானம் ( 6:17-21) எனக் கோடிட்டுக் காட்டி யூத மறையைத்தழுவுமாறு வேற்றினத்தாரைத் தூண்டுகிறார்.

11.2. ஆசிரியர்
சாலமோனின் ஞானம் என்னும் இந்நூல் சாலமோனைப்பற்றிய சிலமறைமுகக் குறிப்புகளைக் கொண்டிருந்தாலும் (காண் 8:9-15; 9:7-8:12) இதுபிற்காலத்தைச் சேர்ந்தது. பாலஸ்தீனத்துக்கு வெளியே அநேகமாக எகிப்து நாட்டுஅலச்சாந்திரியாவில் வாழ்ந்தவந்த ஒரு யூதரால் கி.மு. முதல் நூற்றாண்டின் நடுவில்இந்நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கிரேக்கருக்கும் கிரேக்கச்சூழலில் வாழ்ந்த யூதருக்கும் யூத நெறியின் கோட்பாடுகளை விளக்க எழுந்தஇந்நூலில் கிரேக்க நடை, சொல்லாட்சி, மெய்யியல் ( காண்: 9:12-21) முதலியனமிகுதியாகக் கையாளப்படுகின்றன. முழு நூலும் இனிய கவிதை நடையில்அமைந்துள்ளது. இதுவே பழைய ஏற்பாட்டு நூல்களுள் இறுதியாக எழுத்து வடிவம்பெற்றிருக்க வேண்டும் என அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர். இதுவும் இணைத்திருமுறையைச் சேர்ந்தது.

11.3. அமைப்பு

i) நிறைவு கால நூல் ( 1:1-5:23)
ii) ஞானத்தின் நூல் ( 6:1-9:18)
iii) வரலாற்று நூல் ( 10:1-19:22)

11.4. செறிந்த சில கருத்துகள்
அ. மாந்தரின் முடிவு
நூலில் முதல் பகுதி ( அதி 1-5) நல்லார், பொல்லார் ஆகிய அனைத்துமாந்தரின் முடிவுபற்றி, இறுதிக் கதிபற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. ஞானநூல்களிலேயே இதுதான் சாவு பற்றி அதிகமாக, நேர்நிலையாகப் பேசுகிறது.இதனால் இப்பகுதியை நிறைவுகால நூல் என அழைப்பர்.

கிரேக்கர்களின் எண்ணப்படி மனிதன் என்பவன் ‘மனுவுரு எடுத்த ஆவி'ஆவான். எனவே பருப்பொருளான உடல் அழிய, ஆன்மா அழியாமை பெறும் என்றுஅவர்கள் நம்பிவந்தார்கள். ஆனால் யூதர்களின் சிந்தனைப்படி மனிதன் என்பவன்‘ ஆவியைப் பெற்ற உடல்' ஆவான். வாழ்வு என்பது உடலோடு கூடிய வாழ்வுதான்.உடல் அழியும்பொழுது வாழ்வு முழுமையாக அழிந்துவிடும். இறுதிக் காலத்தில் உடல்ஆன்மாவால் உயிர்பெற்றெழும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.ஆனால் உடலின் உயிர்ப்புப் பற்றிய நம்பிக்கை கிரேக்கருக்கு அருவருப்பைஏற்படுத்தியது ( திப 17 :31: 32).

நீண்ட காலமாக யூதர்கள் உடலின் உயிர்ப்பில், அல்லது மறுவாழ்வில்நம்பிக்கை கொள்ளவில்லை (காண். யோபு 7:9-10). வினைப் பயன் கோட்பாட்டில்அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்ததால், இறைவன் நல்லார்க்குப் பரிசும் (நீடியஆயுள், குழந்தைச் செல்வம்) பொல்லார்க்குத் தண்டனையும் (குறுகிய வாழ்வுவாரிசின்மை) இவ்வுலகிலேயே அளிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். இதனால் மனிதர்அனனவரும் இறந்தபின் ‘ஷூயோல்' எனப்படும் கீழுலகிற்குச் செல்வர். அங்குச்செயலற்ற நிலையில் இருப்பர் என்று நம்பினார்கள் ( திபா 30:9;88:11-12). ஆனால்பாபிலோனிய அடிமைத்தளையின்போது நேர்மையாளர் பலர் துன்புற நேரிட்டதால்,கருணைக் கடவுள் எதிர்காலத்தில் தங்களுக்கு வாழ்வும் வளமும் அருள்வார் என்றஎண்ணம் அவர்களிடேயே மலர்ந்தது ( திபா 16:10-11; 17:15; 73:24-26). மக்கபேயர்காட்டிய வழி நின்று கிரேக்கத் திணிப்பை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்ட எல்லாரும்பற்பல இன்னல் இடையூறுகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது ( காண்: 1 மக்). யூதநம்பிக்கையின் பொருட்டு அவர்களுள் பலர் சாவையும் தழுவ வேண்டியிருந்தது (காண்: 2 மக் 6: 18-7:41). இக்கால கட்டத்தில்,கடவுளின் கட்டளைப்படி ஒழுகும் நல்லார்துன்புற்று இறந்தாலும் ஒரு நாள்உயிர்தெழுவர், அவர்களுக்கு மறுவுலக வாழ்வுஅல்லது நிலைவாழ்வு உண்டு என்றுஉறுதியாக நம்பத் தொடங்கினர் ( 2 மக் 7 : 9;14, 23, 27; 12 : 43-45).

கிரேக்கச் சூழல் சிந்தனை பண்பாட்டில்வளர்ந்த யூதர்களுக்காக இந்நூல் எழுதப்பட்டகாரணத்தால்,உடல் உயிர்ப்புப் பற்றியப்பேசுவதற்குப் பதிலாக ஆன்மாவின் அழியாமைபற்றிப் பேசுகிறார் நூலாசிரியர் (காண் 2:23; 3:4; 6:18-19; 8:13).நீதியை அதாவது ஞானத்தைத் தேடி மண்ணுலகை ஆள்வோர்க்கு வருந்திஅழைப்பு விடுக்கும் ஆசிரியர் அதைவிட்டு விலகிச் செல்வோர் உறுதியாக அழிவர்என எச்சரிக்கிறார் (1 : 1-15). இறைப் பற்றில்லா தோர், அதாவது அறிவிலிகள்தொடர்வதாகப் பாணியில் தங்களுக்குள் பேசிக் கொள்வது போல் இப்பகுதிஅமைந்துள்ளது.இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும், சாவை வரவழைத்துக் கொண்டார்கள் (1 : 16); ‘இருப்பதோ சில நாள், அணுவிப்போமே' என்னும்பாணியில் தவறான வழியில் வாழ்ந்தார்கள், குறிப்பாக ஏழை பாழைகளை ஒடுக்கிவாழத் தலைப்பட்டார்கள் ( 2 : 1-24); அவர்கள் சிறிது காலம் தழைத்தோங்கினாலும், இறுதியில் உறுதியாகத் தண்டிக்கப்படுவார்கள் ( 3 : 10-4 : 6), தீர்ப்பு நாளில்நீதிமான்களைக் கண்டு பேரச்சத்தால் நடுங்குவார்கள், தங்களது மடமையை எண்ணிநொந்துகொள்வார்கள் ( 4 : 20-5 : 14) என ஆசிரியர் தெளிவுறுத்துகிறார்.

அதே வேளையில் நீதிமான்கள் இறந்தாலும் வாழ்வார்கள், சாவு என்னும் நெருப்பால்புடமிடப்பட்டு ஒளிர்வார்கள், தீர்ப்பு நாளில் தங்களைத் துன்புறுத்தியோர் முன்துணிவோடு நிற்பார்கள் என்னும் செய்தி அழுத்தம் பெறுகிறது (3 : 1; 5 : 11).இருப்பினும் இறந்தோரின் உயிர்ப்புப் பற்றிய கருத்துத் தெளிவு இன்னும்ஏற்படவில்லை.

ஆ. ஞானத்தின் மேன்மை
நூலின் மையப் பகுதி ( அதி 6-9) முழுக்க முழுக்க ஞானத்தைப் பற்றிவிளக்குவதால், இது பெருமாட்டி ஞானத்தின் நூல் என அழைக்கப்படுகிறது.

ஐசிஸ் என்பது முற்கால எகிப்தியத் தெய்வங்களுள் ஒன்று. அது ஞானத்தின்தேவதையாகப் போற்றப்பெற்றது. அதன் வழிபாட்டைப் புதுப்பித்து மக்களிடையேபரப்பும் பொருட்டு வழிபாட்டுத் திருத்தலங்களிலும் திருப்பணத் தலங்களிலும் ஐசிஸின்அருமை பெருமைகளைப் பறைசாற்றும் பாமாலை அல்லது கீர்த்தனை அடங்கியபலகைகளையும் கல்வெட்டுகளையும் நாட்டி வைத்தார்கள். இவை ஐசிஸ்தேவதையின் படைக்கும், நலமாக்கும் ஆற்றலைத் தங்களது வாழ்வில் அனுபவித்துமகிழுமாறு மாந்தரைத் தூண்டின.

ஐசிஸின் பாமாலையுடைய அமைப்பைப் பின்பற்றி, பெருமாட்டி ஞானத்தின்தோற்றம், இயல்பு, மேன்மை, அடையும் வழி முதலியவற்றை மக்களுக்கு அறிமுகம்செய்து வைக்கிறார் நூலாசிரியர். ஏன், ஆளுருப்பெற்ற ஞானமே மன்னர்களுக்கும்,மக்கள் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது. ஞானிகளின் எண்ணிக்கையைப்பொறுத்தே உலகின் மீட்பு அமையும். அறிவுள்ள மன்னர் தம் குடிமக்களின்நிலைக்களனாய் இருக்கிறார்” ( 6:24) எனத் துணிந்து கூறுகிறது.

ஆசிரியர் சாலமோனோடு தம்மையே ஒன்றித்துப் பேசிகிறார். அவர்ஞானத்தை மதித்தார். இளமை முதல் அதன்மீது நாட்டம் கொண்டிருந்தார்.இறைவனிடம் மன்றாடி அதை அடைந்து கொண்டார். அதோடு எல்லாநலன்களையும் செல்வங்களையும் பெற்றுக் கொண்டார். ஆய கலைகள்அறுபத்திநான்கினையும் கற்றுக்கொண்டார் என விளக்கும் பகுதி ( 7:1-9:12)உள்ளத்தை தொடுவதாய் அமைகிறது. #8220;ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்புசெலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை” ( 7 :28). ஞானம் அருளும்படி ஆசிரியர் செய்யும் மிக உருக்கமான ஓர் இறைவேண்டலுடன்( அதி 9) இப்பகுதி நிறைவுறுகிறது.

ஞானத்தைப் போற்றும் பகுதிகளான நீமொ 8:22-31; யோபு 28; சீஞா 24:1-22; பாரூயஅp; 3:9-4:4 முதலியவற்றோடு இப்பகுதியை ஒப்பிட்டுப் படிப்பது பயன் தரும்.

இ. கடவுளின் அருளிரக்கம்
ஞானத்தின் ஆற்றலை விளக்க இஸ்ரயேலின் விடுதலையோடு தொடர்புடையநிகழ்ச்சிகள் சில இங்கு எடுத்தாளப்படுகின்றன ( காண். விப 7 : 14-17 : 7 திபா 78: 43-51; 105 : 27-36). சீராக்கின் ஞானத்தைப் போன்று ( 44 :1 -50 : 21) இந்நூலும்மீட்பு வரலாற்றை ஞானத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறது ( அதி 10 : 19) இதனால்இப்பகுதிக்கு வரலாற்று நூல் எனப் பெயர்.

நிகழ்ச்சிகளையும் கதைகளையும் பயன்படுத்தி யூதப் பெரியார்கள்திருநூலுக்குப் பொருள் விளக்கம் கொடுத்துவந்தார்கள். இம்முறைக்கு ‘மித்ராஷ்'எனப்பெயர். இம்முறை இங்குக் கையாளப்படுகிறது. கால வரிசையை ஆசிரியர்கண்டுகொள்வதே இல்லை. விடுதலைப் பயணத்துக்குத் தயாரிப்பாக எகிப்தில்நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சிகளான கொள்ளைநோய்களும், விடுதலைப்பயணத்தின்போது அல்லது அதற்குப் பின்னர் சீனாய்ப் பாலை நிலத்தில் இடம் பெற்றபல்வேறு நிகழ்ச்சிகளும் கருத்தளவில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப்படுகின்றன.நிகழ்ச்சிகளுக்கு உயிரோட்டம் கொடுப்பதற்காகச் சில குறிப்புகள்சேர்க்கப்படுகின்றன (18 : 1). நிகழ்ச்சிகளை அற்புதச் செயல்களாகக் காட்டும்பொருட்டு வியப்புக்குரிய பண்புகள் மிகைப்படுத்தப்படுகின்றன (16 : 16-21; 17 : 19-20) சூழ்நிலைகளுக்குப் பொருந்தாத காரணத்தால் சில குறிப்புகள் விடப்படுகின்றன.மேலும், எகிப்தியருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகுதியாகவலியுறுத்தப்படுகிறது. #8220;எவற்றால் பகைவர்கள் தண்டிக்கப்பட்டார்களோஅவற்றாலேயே சிக்கலான நேரங்களில் இஸ்ரயேலர் நன்மை அடைந்தார்கள்” (11:5)இதற்கு ‘மாறுபாடு' எனப் பெயர். ஏழு மாறுபாடுகள் இங்கு வரிசைப்படுத்தப்படுகின்றன.

1) 11 : 4-14 நைல் ஆற்று நீர் இரத்தமாக மாறுதல் ( விப 7:14-25)பாலை நிலத்தில் பாறையினின்று நீர் சுரத்தல்( விப 17 : 1-7; எண் 20 : 1-3)
2) 16 : 1-4 கொடிய விலங்குகள் ( தவளை - விப 8 : 1-15)காடை ( எண் 11 : 31-35)
3) 16 : 5-14வெட்டுக்கிளிகள் ( விப 10 : 1-20)ஈக்கள் ( விப 8 : 20-24).வெண்கலப் பாம்பு ( எண் 21 : 4-9)
4) 16 : 15-29 கல்மழை ( விப 9 : 13-26) ரூயஅp; நெருப்புமன்னா ( விப 16 : 1-36)
5எ) 17:1-18:4 இருள் ( விப 10 : 21-22)மேகத் தூண் ரூயஅp; நெருப்புத் தூண் ( விப 13 : 21-22)
6) 18 : 5-25 தலைப்பேறுகளின் அழிவு (விப 11 : 1-6)ஆரோனின் பலி
7) 19 : 1-9 செங்கடலால் அழிவு ( விப 13 : 21-22)செங்கடலிருந்து விடுதலை ( விப 14 : 1-22).

இவை கொள்ளை நோய்கள் பற்றிய விளக்கம் என்பதைவிட கடவுள் விடுதலைநிகழ்ச்சி வழியாகத் தம் மக்கள் மட்டில் காட்டிய அருளிரக்கம் பற்றிய விளக்கம்என்பதே பொருத்தம் ஆகும். மாறுபாடுகளை விளக்குமுன் ஆதாமிலிருந்து மோசே வரை வரலாற்றில் இடம் பெற்றிருந்த நிகழ்ச்சிகள் இரத்தினச் சுருக்கமாகவிளக்கப்படுகின்றன (10 : 1-11 : 3). முதல் மாறுபாட்டுக்குப் பின் (11 : 4-14), கடவுளின்அருளிரக்கம் பற்றிய நீண்டதொரு விளக்கம் தொடர்கிறது (11 : 15-12 : 27), #8220;நீர்எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றீர்.... படைப்புகள்அனைத்தின் மீதும் நீர் அன்புகூர்கிறீர் (11 : 23-24). அடுத்து, சிலை வழிபாடுபற்றியகண்டனம் இடம் பெறுகிறது (13 : 1-15 : 19; ஒப்புநோக்குக உரோ 1:18-25).

மாறுபாடுகள் பற்றிய விளக்கத்தின் முடிவில் , இயற்கையில் விளங்கியஇறைவனின் ஆற்றலை நயம்பட எடுத்துரைக்கிறார் ஆசிரியர் (19:18-22). அதாவதுகடவுள் தம் மக்கள் சார்பாக ஏற்கனவே செயல்படத் தொடங்கிவிட்டார். புதியதொருமண்ணகத்தையும் புதியதொரு விண்ணகத்தையும் படைக்கத் துவங்கிவிட்டார் ( காண்திவெ 21:1-3) எனும் நம்பிக்கையை ஊட்டுகிறார். இதற்கு ‘காட்சி ஞானம்' எனப்பெயர் (காண் தானியேல் நூல்).

12. முடிவுரை

நன்மை செய்வோர் நன்மையைக் கைம்மாறாகப் பெறுவர். அதாவது,வளமான வாழ்வுக்குத் தேவையான பொருளாதார நலன்கள், குழந்தைச் செல்வம்நீடிய ஆயுள் போன்ற இறையாசிர்களைப் பெறுவர். அதே போன்று தீமை செய்வோர்தீமையைக் கைம்மாறாகப் பெறுவர், வறுமை, நோய்,துன்பம், வாரிசின்மை, குறுகியஆயுள் போன்ற சாபங்கள் அடைவர் (காண். நீமொ 26:27; 11:4-31; 15:29; இச 28;லேவி 26) இது வினைப் பயன் கோட்பாடு அளிக்கும் விளக்கம் அப்படியென்றால்செல்வர் எல்லாரும் நேர்மையாளரா? துன்புறுவோர் அனைவரும் பாவிகளா? இதுநடைமுறை அனுபவத்துக்குப் புறம்பானது முரணானதும் கூட.இக்கூட்டத்தில் மனிதர் ஊமை ஆகிவிடுகின்றனர். #8220;மோனம் என்பது ஞானம்வரம்பு”என்பார் ஓளவையார். இங்குத் தேவைப்படுவது இறைவெளிப்பாடு (காண்யோபு 38:1-42:6, சாஞா 19:18-22). இச்சூழலில்தான் ‘காட்சி இயக்கம்' தோன்றியது,மறுவாழ்வு பற்றிய சிந்தனையும் வலுப்பெற்றது (யோபு 19:25-27).பழைய ஏற்பாட்டு ஞானத் தாக்கங்கள் புதிய ஏற்பாடு முழுவதும்காணப்படுகின்றன. இரண்டு ஏற்பாடுகளுக்கும் இடையில் ஞானம் முக்கியமானஇறையியல் தொடர்பை உருவாக்குகிறது குறிப்பாக, கிறிஸ்தவ அறநெறியைஉருவாக்க ஞானம் பெரும் உந்துசக்தியாக இருந்துள்ளது.

------------------------------------------
--------------------------
----------------
------
--