திருச்சபைச் சட்டத் தொகுப்பு

 

நூல் 2

தனித்திருச்சபைகளும் அவற்றில் அதிகாரமும்

 

பகுப்பு 2

தனித்திருச்சபைகளும் அவற்றின் குழுக்களும்

தலைப்பு 1

தனித்திருச்சபைகளும் அவற்றில் நிறுவப்பட்டுள்ள அதிகாரமும்

இயல் 1

தனித்திருச்சபைகள்

தி.ச 368 ஒரே, தன்னிகரற்ற கத்தோலிக்கத் திருச்சபை தனித்திருச்சபைகளிலும் தனித்திருச்சபைகளாலும் உள்ளது; இத்தனித் திருச்சபைகள் முதன்மையாக மறைமாவட்டங்கள் ஆகும்; வேறொன்று தெளிவாக இருந்தாலன்றி, பின்வருபவை மறைமாவட்டத்திற்கு இணையானவை; எல்லை சார்ந்த மேல்நர் மறை ஆட்சிவட்டம், எல்லை சார்ந்த ஆதீனம், திருத்தூதரக மறை ஆட்சி வட்டம், திருத்தூதரக ஆளுகை வட்டம் மற்றும் நிரந்தரமாக நிறுவப்பட்ட திருத்தூதரக நிர்வாகம்

தி.ச 369 மறைமாவட்டம் என்பது குருகுழாமின் ஒத்துழைப்புடன் மேய்ப்புப் பணிக்காக ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை மக்களின் ஒரு பகுதியாகும்; இவ்வாறு, தன் மேய்ப்பரோடு இணைந்து, தூய ஆவியில் நற்செய்தி, நற்கருணை வழியாக அவரால் ஒன்று கூட்டப்பட்டு அது ஒரு தனித்திருச்சபையாக உருப்பெறுகிறது; அதில் ஒரே, தூய கத்தோலிக்க, திருத்தூதுவர் திருச்சபை உண்மையாகவே உள்ளது; செயலாற்றுகிறது.

தி.ச 370 எல்லை சார்ந்த மேல்நர் மறை ஆட்சி வட்டம் அல்லது எல்லை சார்ந்த ஆதீனம் என்பது எல்லையால் வரையறுக்கப்பட்டுள்ள இறைமக்களின் ஒரு பகுதியாகும்; அதன் கண்காணிப்பு, சிறப்பான சூழ்நிலைகளின் பொருட்டு, ஒரு மேல்நரிடம் அல்லது ஆதீனத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; அதை, அதன் உரிய மேய்ப்பராக, ஒரு மறைமாவட்ட ஆயரைப்போல் அவர் ஆள்கிறார்.

தி.ச 371 §1 திருத்தூதராக மறைஆட்சி வட்டம் அல்லது திருத்தூதராக ஆளுகை வட்டம் என்பது, சிறப்பான சூழ்நிலைகளின் பொருட்டு, இன்னும் மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும்; அதன் மேய்ப்புப் பணி உச்சத் தலைமைக் குருவின் பெயரால் அதை ஆளுகின்ற ஓர் திருத்தூதராகப் பதில் ஆள் அல்லது ஓர் திருத்தூதரக ஆளுநரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

§2. திருத்தூதரக நிர்வாகம் என்பது, சிறப்பான மற்றும் தனிப்பட்ட கனமான காரணங்களுக்காக, உச்சத் தலைமைக்குருவால் ஒரு மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும். அதன் மேய்ப்புப் பணி உச்சத் தலைமைக்குருவின் பெயரால் ஆளுகின்ற ஒரு திருத்தூதரக நிர்வாகியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

தி.ச 372 §1. மறைமாவட்டமாகவோ மற்றொரு தனித்திருச்சபையாகவோ நிறுவப்பட்டுள்ள இறை மக்களின் ஒரு பகுதி, பொதுவாக வரையறுக்கப்பட்ட ஒர் எல்லைக்கு உட்பட்டது; இவ்வாறு அந்த எல்லையில் வாழும் அனைத்து விசுவாசிகளையும் அது உள்ளடக்கியுள்ளது.

§2. ஆயினும் தொடர்புடைய ஆயர் பேரவையைக் கலந்தாலோசித்தபின், திருச்சபையின் உச்ச அதிகாரியின் கணிப்பில் அது பயனுள்ளதாக இருந்தால், விசுவாசிகளின் வழிபாட்டு முறையால் அல்லது அதையொத்த மற்றொரு காரணத்தினால் வேறுபட்டுள்ள தனித்திருச்சபைகள் அதே எல்லைக்குள் நிறுவப்படலாம்.

தி.ச 373 தனித்திருச்சபைகளை நிறுவுவது உச்ச அதிகாரிக்கு மட்டுமே உரியது; சட்டமுறைமைப்படி அவை நிறுவப்பட்டபின், சட்டத்தாலேயே சட்ட ஆளுமையை அவை கொண்டுள்ளன.

தி.ச 374 §1. ஒவ்வொரு மறைமாவட்டமும் அல்லது மற்றத் தனித்திருச்சபையும் வெவ்வேறு பகுதிகளாக அல்லது பங்குகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.

§2. பொதுச் செயல்பாடுகள் வழியாக மேய்ப்புப் பணி சார்ந்த அக்கறையைப் பேணி வளர்க்க, அருகாமையிலுள்ள பல பங்குகள் மறைவட்டங்களைப் போன்ற சிறப்புக் குழுக்களாக ஒன்றிணைக்கப்படலாம்.

இயல் 2

ஆயர்கள்

உட்பிரிவு 1

ஆயர்களைப் பற்றிப் பொதுவானவை

தி.ச 375 §1. இறை ஏற்பாட்டினால் ஆயர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தூய ஆவியின் வழியாக, திருத்தூதர்களின் வழிவருபவர்கள், கோட்பாட்டின் ஆசிரியர்களாகவும், திருவழிபாட்டின் குருக்களாகவும் மற்றும் ஆளுகையின் பணியாளர்களாகவும் இருக்குமாறு, திருச்சபையில் மேய்ப்பர்களாக அவர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.

§2. ஆயர்கள் ஆயர் திருநிலைப்பாட்டின் மூலமாகவே புனிதப்படுத்தும் பணியுடன் போதிக்கும் மற்றும் ஆளும் பணியையும் பெறுகின்றனர்; ஆயினும், இவை, தம் இயல்பிலேயே, குழாமின் தலைவரோடும் அதன் உறுப்பினர்களோடும் திருச்சபை ஆட்சி உறவு ஒன்றிப்பில் இருந்தால் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும்.

தி.ச 376 ஆயர்களிடம் ஒரு மறைமாவட்டத்தின் கண்காணிப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளபோது அவர்கள் மறைமாவட்ட ஆயர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்; மற்றவர்கள் பட்டம் சார்ந்த ஆயர்கள் எனப்படுகின்றனர்.

தி.ச 377 §1 உச்சத் தலைமைக்குரு ஆயர்களைத் தன்னுரிமையுடன் நியமிக்கிறார்; அல்லது சட்ட முறைமைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உறுதிப்படுத்துகிறார்.

§2. குறைந்த அளவு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஓர் உயர் மறைமாவட்டத்தின் ஆயர்கள் அல்லது, சூழ்நிலைகள் அதைக்கோரினால், ஆயர் பேரவையின் ஆயர்கள், பொதுவான ஆலோசனை மூலம் மற்றும் இரகசியமாக, அர்ப்பண வாழ்வுச் சபைகளின் உறுப்பினர்கள் உட்பட, ஆயர் நிலைக்குப் பொருத்தமான குருக்களின் பட்டியலைத் தயாரித்து, அதைத் திருத்தூதராக ஆட்சிப்பீடத்திற்கு அனுப்பவேண்டும்; ஆயர் பணிக்குத் தகுதியும் பொருத்தமும் உள்ளவர்கள் எனத் தாம் கருதுகின்ற குருக்களின் பெயர்களை ஒவ்வொரு ஆயரும் தனித்தனியாகத் திருத்தூதரக ஆட்சிப்பீடத்திற்குத் தெரிவிக்கும் உரிமை கொண்டுள்ளார்.

§3. சட்டமுறைமைப்படி வேறுவிதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலன்றி, எப்பொழுதெல்லாம் மறைமாவட்ட ஆயர் அல்லது வாரிசு ஆயர் நியமிக்கப்பட்ட வேண்டுமோ அப்பொழுது 'மூவர் பட்டியல்' எனப்படும் பட்டியல் ஒன்று திருத்தூதரக ஆட்சிப்பீடத்திடம் முன்மொழியப்பட வேண்டும்; இப்பட்டியலைத் தயாரிப்பதில் திருத்தந்தையின் தூதரின் பொறுப்பு வருமாறு; ஏற்பாடு செய்யப்பட வேண்டிய மறைமாவட்டம் சார்ந்திருக்கும் அல்லது ஒரு தொகுதியாக இணைக்கப்பட்டிருக்கும் உயர் மறைமாவட்டத்தின் தலைமை ஆயர், சார்புநிலை ஆயர்கள் மற்றும் ஆயர் பேரவையின் தலைவர் ஆகியவர்களின் கருத்துக்களைத் தனித்தனியாக அவர் நாடவேண்டும்; மேலும் ஆலோசகர் குழாம் மற்றும் மறைமாவட்ட பேராலயப் பேரவைக் குருக்கள் குழுவின் ஒருசில உறுப்பினர்களையும் அவர் கேட்டறிய வேண்டும்; அது நலம் பயக்கும் என அவர் கருதினால், மற்ற மறைமாவட்ட, துறவறத் திருப்பணியாளர்கள் மற்றும் அறிவு நுட்பத்தில் தலைசிறந்த பொதுநிலையினர் ஆகியவர்களின் கருத்துக்களையும் தனித்தனியாகவும் இரகசியமாகவும் அவர் கேட்கவேண்டும்; அதன்பின் இக்கருத்துக்களை, தம்முடைய சொந்தக் கருத்துடன் திருத்தூதராக ஆட்சிப் பீடத்திற்கு அவர் அனுப்ப வேண்டும்.

§4. சட்டமுறைமைப்படி வேறுவிதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலன்றி தமது மறைமாவட்டத்திற்குத் துணை ஆயர் ஒருவர் கொடுக்கப்பட வேண்டும் என்று கருதும் மறைமாவட்ட ஆயர் இப்பதவிக்குப் பொருத்தமான, குறைந்த அளவு மூன்று குருக்களின் பெயர்ப்பட்டியலைத் திருத்தூதரக ஆட்சிப்பீடத்திற்கு முன்மொழிய வேண்டும்.

§5. ஆயர்களின் தேர்தல், நியமித்தல், முன்நிறுத்துதல், அல்லது பெயரிட்டுக் குறிப்பிடுதல் ஆகிய உரிமைகள் மற்றும் சலுகைகள் எதுவும் எதிர்காலத்தில் அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்படாது.

தி.ச 378 §1 ஆயர் நிலைக்குத் தகுதியான வேட்பாளராக ஒருவர் இருக்கத் தேவையானவை;

1 உறுதியான விசுவாசம், நல்லொழுக்கம், பக்தி, அருள்வாழ்வு சார்ந்த தாகம், அறிவுநுட்பம், விவேகம் மற்றும் மனிதப்பண்புகள் ஆகியவற்றில் தலைசிறந்தவராக விளங்கி, தொடர்புடைய பணியை நிறைவேற்ற அவரைத் தகுதியுள்ளவராக்கும் மற்றத் திறமைகளையும் அவர் கொண்டிருக்க வேண்டும்;

2 நன்மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும்

3 குறைந்த அளவு முப்பத்தைந்து வயது நிறைவுபெற்றவராக இருக்க வேண்டும்.

4 குருப்பட்டம் பெற்று குறைந்த அளவு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

5 திருத்தூதரக ஆட்சிப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஓர் உயர்நிலைக் கல்வி நிறுவனத்தில் திருமறைநூல், இறையியல், அல்லது திருச்சபைச் சட்டம் ஆகியவற்றில் முனைவர் பட்டம் அல்லது குறைந்த அளவு முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது குறைந்த அளவு இப்பாடங்களில் உண்மையில் வல்லுநராய் இருக்க வேண்டும்.

§2. உயர்த்தப்பட வேண்டியவரின் தகுதியைப் பற்றிய இறுதி முடிவு திருத்தூதரக ஆட்சிப்பீடத்தைச் சார்ந்தது.

தி.ச 379 சட்டமுறையான தடை குறுக்கிட்டாலன்றி, ஆயர்நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள எவரும் திருத்தூதராகக் கடிதம்; பெற்றுக்கொண்ட மூன்று மாதங்களுக்குள் மற்றும் உண்மையில் தம் பணிப்பொறுப்பை ஏற்பதற்குமுன் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட வேண்டும்.

தி.ச 380 திருச்சபைச் சட்டமுறைமைப்படி தம் பணிப்பொறுப்பை ஏற்பதற்குமுன், உயர்த்தப்பட்டுள்ள ஒருவர் திருத்தூதரக ஆட்சிப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வாய்பாட்டிற்கு ஏற்ப விசுவாச அறிக்கையிட வேண்டும்; மற்றும் திருத்தூதரக ஆட்சிப்பீடத்திற்கு உண்மையாயிருக்க உறுதிமொழி எடுக்க வேண்டும்.

உட்பிரிவு 2

மறைமாவட்ட ஆயர்கள்

தி.ச 381 §1. மறைமாவட்ட ஆயர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மறைமாவட்டத்தில் மேய்ப்புப் பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணியோடு இணைந்த, உரிய மற்றும் நேரடியான அனைத்து அதிகாரத்தையும் கொண்டுள்ளாh; ஆயினும் சட்டத்தால் அல்லது உச்சத் தலைமைக்குருவின் ஆணையால் திருச்சபையின் உச்ச அல்லது மற்றோர் அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட காரியங்கள் மறைமாவட்ட ஆயரின் அதிகாரத்திற்கு உட்பட்டவை அல்ல.

§2. காரியத்தின் இயல்பிலிருந்து அல்லது சட்டத்தின் விதியமைப்புகளிலிருந்து வேறொன்று தெளிவாக இருந்தாலன்றி, தி.ச 368 ல் குறிப்பிடப்பட்டுள்ள விசுவாசிகளின் மற்ற சமூகங்களுக்குத் தலைமை வகிப்பவர்கள், சட்டத்தில் மறைமாவட்ட ஆயருக்கு இணையானவர்கள்.

தி.ச 382 §1. ஆயராக உயர்த்தப்பட்டுள்ள ஒருவர், திருச்சபைச் சட்ட முறைமைப்படி மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்பதற்குமுன் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணியை நிறைவேற்றுவதில் ஈடுபடக்கூடாது; ஆயினும், தி.ச 409, §2 ன் விதியமைப்பைக் கருத்திற்கொண்டு பதவி உயர்வின் போது அதே மறைமாவட்டத்தில் அவர் ஏற்கெனவே கொண்டிருந்த பணிகளை நிறைவேற்றலாம்.

§2. சட்டமுறைமையான தடை குறுக்கிட்டாலன்றி, ஆயராக உயர்த்தப்பட்டுள்ள ஒருவர், அவர் ஏற்கெனவே ஆயராகத் திருநிலைப்படுத்தப்படவிலை;லையெனில், திருத்தூதரகக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட நான்கு மாதங்களுக்குள் திருச்சபைச் சட்டமுறைமைப்படி தமது மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்கவேண்டும்; அவர் ஏற்கெனவே ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டிருந்தால், அக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட இரண்டு மாதங்களுக்குள் பொறுப்பை ஏற்கவேண்டும்.

§3. ஓர் ஆயர் தாமாகவோ பதில்ஆள் வழியாகவோ மறைமாவட்டத்தின் எல்லைக்குள் திருத்தூதரகக் கடிதத்தை ஆலோசகர் குழாமிடம் மறைமாவட்டச் செயலகத் தலைமைச் செயலரின் முன்னிலையில் காண்பிக்கும்போது திருச்சபைச் சட்டமுறைமைப்படி மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்கிறார்; மறைமாவட்டச் செயலகத் தலைமைச் செயலர் இந்நிகழ்வைப் பதிவு செய்கிறார்; ஆனால், புதிதாக நிறுவப்பட்டுள்ள மறைமாவட்டங்களில், ஓh ஆயர் மறைமாவட்டப் பேராலயத்தில் உள்ள திருப்பணியாளரின் குழாம் மற்றும் மக்களுக்குத் திருத்தூதரகக் கடிதத்தை அறிவிக்கும்போது திருச்சபைச் சட்டமுறைமைப்படி மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்கிறார்; அங்கு இருக்கும் குருக்களின் வயதால் மூத்தவர் இந்நிகழ்வைப் பதிவு செய்கிறார்.

§4. திருச்சபைச் சட்டமுறைமையான பொறுப்பேற்றல் திருவழிபாட்டுச் செயலுடன் மறைமாவட்டப் பேராலயத்தில், திருப்பணியாளர்கள் மற்றும் மக்களின் முன்னிலையில் நடைபெறவேண்டுமென்று வலியுறுத்திப் பரிந்துரைக்கப்படுகிறது.

தி.ச 383 §1 மறைமாவட்ட ஆயர் தமது மேய்ப்புப் பணியை நிறைவேற்றும்போது தம்முடைய கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து விசுவாசிகளிடத்திலும், அவர்களது வயது, நிலமை மற்றும் நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் தம் எல்லைக்குள் வாழ்கின்றவர்களாகவோ அதில் தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்களாகவோ இருந்தாலும், தமக்கு அக்கறை உண்டு என்பதைக் காட்ட வேண்டும்; தங்கள் வாழ்க்கை நிலையின் பொருட்டுச் சாதாரண மேய்ப்புப் பணிக் கண்காணிப்பிலிருந்து போதுமான அளவு பயனடைய இயலாதவர்கள் மற்றும் தங்கள் சமயத்தைக் கடைப்பிடிப்பதை விட்டுவிட்டவர்கள் ஆகியவர்களிடத்திலும் தம் மறைத்தூதுப்பணி மனநிலையை அவர் காட்ட வேண்டும்.

§2. வேறுவழிபாட்டு முறையைச் சார்ந்த விசுவாசிகளைத் தம் மறைமாவட்டத்தில் அவர் கொண்டிருந்தால், அதே வழிபாட்டு முறையைச் சார்ந்த குருக்கள் அல்லது பங்குகள் வழியாகவோ அல்லது ஆயர் பதில் ஆள் வழியாகவோ அவர்களுடைய அருள்வாழ்வு சார்ந்த தேவைகளுக்கு அவர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

§3. கத்தோலிக்கத் திருச்சபையோடு முழுமையான உறவு ஒன்றிப்பில் இல்லாத சகோதரர், சகோதரிகளுடன் மனித நேயத்துடனும் அன்புடனும் அவர் நடந்து கொள்ள வேண்டும்; திருச்சபை புரிந்துகொள்ளும் விதத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பை அவர் பேணி வளர்க்க வேண்டும்.

§4. கிறிஸ்துவின் அன்பு திருமுழுக்குப் பெறாதவர்கள் மேலும் ஒளிவீசும் பொருட்டு அவர்களைத் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களாக அவர் கருதவேண்டும்; அக்கிறிஸ்துவுக்கு ஆயர் அனைவர் முன்பாகவும் சாட்சியாக இருக்க வேண்டும்.

தி.ச 384 மறைமாவட்ட ஆயர் குருக்கள் மீது சிறப்பான அக்கறை கொண்டிருக்க வேண்டும்; தமது உதவியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் போன்றுள்ள அவர்களுக்கு அவர் செவிமடுக்க வேண்டும்; அவர்களின் உரிமைகளை அவர் பாதுகாக்க வேண்டும்; தங்கள் நிலைக்குரிய கடமைகளைத் தக்கவித்தில் அவர்கள் நிறைவேற்றுகின்றனர் என்பதை அவர் கவனித்துக் கொள்ள வேண்டும்; அவர்களின் அருள்வாழ்வு மற்றும் அறிவுசார்ந்த வாழ்வைப் பேணிவளர்க்கத் தேவையான வழிமுறைகளும் நிறுவனங்களும் அவர்களுக்குக் கிடைக்கும்படி அவர் பார்த்துக் கொள்ள வேண்டும்; சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப, அவர்களுடைய தகுந்த வாழ்வாதாரத்திற்கும் சமூகநலனுக்கும் அவர் ஏற்பாடு செய்யவும் வேண்டும்.

தி.ச 385 மறைமாவட்ட ஆயர் பல்வேறு பணிகள் மற்றும் அர்ப்பண வாழ்வுக்கான அழைத்தல்களை மிகப்பெரிதும் பேணி வளர்க்க வேண்டும்; குருத்துவ மற்றும் மறைத்தூதுப் பணிக்கான அழைத்தலின் மீது அவர் சிறப்பாக அக்கறை காண்பிக்க வேண்டும்.
தி.ச 386 §1. நம்பப்பட வேண்டியதும், ஒழுக்கநெறிக்குப் பயன்படுத்தப்பட வேண்டியதுமான விசுவாச உண்மைகளை மறைமாவட்ட ஆயர் விசுவாசிகளுக்கு வழங்கி விளக்க வேண்டும்; அவர்தாமே அடிக்கடி போதிக்க வேண்டும்; இறைவார்த்தைப் பணி, சிறப்பாக மறையுரை மற்றும் மறைக்கல்விப் போதனை ஆகியவற்றைப் பற்றிய திருச்சபைச் சட்ட விதியமைப்புகள் கடைப்பிடிக்கப்படுவதைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்; இவ்வாறு கிறிஸ்தவக் கோட்பாடு முழுவதும் அனைவருக்கும் வழங்கப்படும்.

§2. நம்பப்பட வேண்டிய விசுவாசத்தின் முழுமையையும் ஒற்றுமையையும், மிகப்பொருத்தமான வழிமுறைகள் மூலம் அவர் உறுதியாகப் பாதுகாக்க வேண்டும்; ஆயினும் உண்மைகளைப் பற்றி மேற்கொண்டு ஆய்வு செய்வதில் நியாயமான தன்னுரிமையை அவர் அங்கீகரிக்க வேண்டும்.

தி.ச 387 அன்பு, தாழ்ச்சி, வாழ்வில் எளிமை ஆகியவற்றில் புனிதத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கத் தாம் கடமைப்பட்டவர் என்பதை மறைமாவட்ட ஆயர் மனதில்கொண்டு ஒவ்வொருவருக்கும் உரிய அழைத்தலுக்கு ஏற்பக் கிறிஸ்தவ விசுவாசிகளின் புனிதத்தை எல்லாவிதத்திலும் மேம்படுத்த அவர் முயற்சி செய்ய வேண்டும். இறைவனின் மறைபொருள்களின் முதன்மையான பகிர்ந்தளிப்பவராக அவர் இருப்பதால், அவருடைய கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ விசுவாசிகள் அருளடையாளங்களின் கொண்டாட்டம் வழியாக அருளில் வளரவும் மற்றும் பாஸ்கா மறைபொருளை உணர்ந்து வாழவும் அவர் இடைவிடாமல் முயற்சி செய்ய வேண்டும்.

தி.ச 388 §1 மறைமாவட்ட ஆயர், திருச்சபைச் சட்டமுறைமைப்படி மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்றபின், தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மற்றும் அவருடைய மண்டலத்தின் மற்றக் கடன்திருநாள்களிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்க வேண்டும்.

§2. §1 குறிப்பிடப்பட்டுள்ள நாள்களில் ஆயர் தாமே மக்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றி மற்றும் அதை ஒப்புக்கொடுக்க வேண்டும்; ஆயினும், இக்கொண்டாட்டத்திலிருந்து சட்டமுறைமைப்படி அவர் செயல்பட இயலாத நிலையில் அந்நாள்களில் மற்றொரு குருவழியாக அல்லது வேறு நாள்களில் அவர் தாமே திருப்பலி ஒப்புக்கொடுக்க வேண்டும்.

§3. ஓர் ஆயரிடம் அவரது மறைமாவட்டத்தைத் தவிர மற்ற மறைமாவட்டங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தால், நிர்வாகி என்ற உரிமைத் தகுதியின் கீழ் அது இருந்தாலும் கூட தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்காக ஒரு திருப்பலி ஒப்புக்கொடுப்பதின் மூலம் அவர் இக்கடமையை நிறைவு செய்கிறார்.

§4. §§1-3 ல் குறிப்பிடப்பட்டுள்ள கடமையை நிறைவுசெய்யாத ஓர் ஆயர், அவர் எத்தணைத் திருப்பலிகளை ஒப்புக்கொடுக்காமல் விட்டுவிட்டாரோ, அத்தனைத் திருப்பலிகள் மக்களுக்காக கூடியவிரைவில் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

தி.ச 389 ஆயர் மறைமாவட்டப் பேராலயத்தில் அல்லது தமது மறைமாவட்டத்தின் மற்றோர் ஆலயத்தில் நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு அடிக்கடி மிகச்சிறப்பாக, கடன் திருநாள்களிலும் மற்றப் பெருவிழாக்களிலும் தலைமை ஏற்கவேண்டும்.

தி.ச 390 மறைமாவட்ட ஆயர் தமது மறைமாவட்டம் முழுவதிலும் தலைமைக்குருவுக்குரிய பணிகளை நிறைவேற்றலாம்; ஆயினும், தமது மறைமாவட்டத்திற்கு வெளியே தலத்திருச்சபை ஆளுநரின் வெளிப்படையான அல்லது குறைந்த அளவு அறிவுசார்ந்த வகையில் ஊகிக்கப்பட்ட ஒப்புதலின்றி அவர் அவற்றை நிறைவேற்றக்கூடாது.

தி.ச 391 ன1. மறைமாவட்ட ஆயர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தனித் திருச்சபையைச் சட்டத்தின் விதிமுறைக்கேற்ப, சட்டம் இயற்றும், செயற்படுத்தும் மற்றும் நீதி வழங்கும் அதிகாரத்துடன் ஆளுகின்றார்.

ன2. ஆயர் தாமாகவே சட்டம் இயற்றும் அதிகாரத்தைச் செயற்படுத்துகிறார்; செயற்படுத்தும் அதிகாரத்தைச் சட்டத்தின் விதிமுறைக்கேற்ப, தாமாகவோ அல்லது ஆயர் பொதுப் பதில்குருக்கள் அல்லது ஆயர் பதில்குருக்கள் வழியாகவோ செயற்படுத்துகிறார்; நீதி வழங்கும் அதிகாரத்தை சட்டத்தின் விதிமுறைக்கேற்ப, தாமாகவோ நீதித்துறை ஆயர் பதில்குரு மற்றும் நீதிபதிகள் வழியாகவோ செயற்படுத்துகிறார்.
தி.ச 392 ன1. ஆயர் அனைத்துலகத் திருச்சபையின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டி இருப்பதால் திருச்சபை முழுவதற்கும் பொதுவான ஒழுங்கு முறையை மேம்படுத்த அவர் கடமைப்பட்டுள்ளார்; எனவே, திருச்சபைச் சட்டங்கள் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவதை அவர் வலியுறுத்தவேண்டும்.

ன2. திருச்சபை ஒழுங்குமுறையில், சிறப்பாக இறைவார்த்தைப் பணி, அருளடையாளங்கள் மற்றும் அருள்வேண்டல் குறிகளின் கொண்டாட்டம், இறைவழிபாடு மற்றும் புனிதர்கள் வணக்கம் ஆகியவற்றில் தவறான வழக்கங்கள் நுழையாதவாறு அவர் விழிப்புடன் கவனிக்க வேண்டும்.

தி.ச 393 மறைமாவட்ட ஆயர், மறைமாவட்டத்தின் சட்டமுறைமையான அனைத்து நடவடிக்கைகளிலும் அதன் பெயரால் செயல்படுகிறார்.

தி.ச 394 ன1 ஆயர் தமது மறைமாவட்டத்தில் பல்வேறு வகையான திருத்தூதுப் பணிகளைப் பேணிவளர்க்க வேண்டும்; தமது மறைமாவட்டம் முழுவதிலும் அல்லது தனிப்பட்ட மறைவட்டங்களிலும் அனைத்துத் திருத்தூதுப் பணிகளும், அவை ஒவ்வொன்றின் தனிப்பட்ட இயல்பைக் கருத்தில்கொண்டு, அவரது வழிநடத்துதலின் கீழ் ஒருங்கிணைக்கப்படுவதை அவர் கவனித்தக் கொள்ள வேண்டும்.

ன2. தத்தம் நிலைமைக்கும் திறமைக்கும் ஏற்ப, விசுவாசிகள் திருத்தூதுப் பணியை ஆற்ற வேண்டிய கடமையை அவர் வலியுறுத்த வேண்டும்; இடம் மற்றும் காலத்தின் தேவைகளுக்கேற்ப பல்வேறு திருத்தூதுப் பணிகளில் அவர்கள் பங்கேற்கவும் மற்றும் அவற்றிற்குத் துணைபுரியவும் அவர் அறிவுறுத்த வேண்டும்.

தி.ச 395 ன1. மறைமாவட்ட ஆயர் ஓர் இணை அல்லது துணை ஆயரைக் கொண்டிருந்தாலும் கூட தமது மறைமாவட்டத்தின் ஆள்முறையில் தங்கி வாழ்தல் என்னும் சட்டத்தால் கட்டுப்பட்டுள்ளார்.

ன2. திருத்தந்தை சந்திப்பு, பங்கேற்க வேண்டிய சங்கங்கள், ஆயர் மன்றம், ஆயர் பேரவை அல்லது சட்டமுறைமைப்படி அவரிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றொரு பணி ஆகியவற்றிற்காகச் செலவிடும் காலம் தவிர மறைமாவட்ட ஆயர் நியாயமான ஒரு காரணத்திற்காகத் தமது மறைமாவட்டத்தில் தொடர்ச்சியாகவோ இடைவெளிவிட்டோ ஒரு மாதத்திற்கு மிகாமல் இல்லாதிருக்கலாம்; ஆனால் அவர் இல்லாதிருப்பதால் மறைமாவட்டம் எவ்விதத் தீங்கினாலும் பாதிக்கப்படாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ன3. கனமானதும் அவசரமானதுமான காரணத்தின் பொருட்டு அன்றி, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, புனித வாரம், ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா, தூய ஆவி பெருவிழா மற்றும் கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா ஆகிய நாள்களில் ஆயர் தமது மறைமாவட்டத்தில் இருக்க வேண்டும்.

ன4. சட்டமுறைமையற்ற விதத்தில் ஆயர் ஆறுமாதங்களுக்கு மேல் மறைமாவட்டத்தில் இல்லையென்றால் உயர் மறைமாவட்ட ஆயர் திருத்தூதரக ஆட்சிப்பீடத்திற்கு அவர் இல்லாதிருத்தலைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். உயா மறைமாவட்ட ஆயர் இல்லாதிருந்தால், வயதால் மூத்த சார்புநிலை ஆயர் அவ்விதமே செய்ய வேண்டும்.

தி.ச 396 ன1. ஆயர் ஒவ்வோர் ஆண்டும் தமது மறைமாவட்டத்தை, முழுமையாகவோ அல்லது அதன் ஒரு பகுதியையோ பார்வையிடக் கடமைப்பட்டுள்ளார்; இவ்வாறு அவர் தாமாகவோ அல்லது சட்ட முறைமைப்படி அவர் செயல்பட இயலாத நிலையில் இணை ஆயர், துணை ஆயர், ஆயர் பொதுப் பதில்குரு அல்லது ஆயர் பதில்குரு அல்லது மற்றொரு குரு வழியாகவோ குறைந்த அளவு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளில் மறைமாவட்டம் முழுவதையும் அவர் பார்வையிட்டிருக்க வேண்டும்.

ன2. பார்வையிடுதலின்போது தமது உடனிருப்பவர்களாக அல்லது உதவியாளர்களாகத் தாம் விரும்பும் திருப்பணியாளர்களைத் தேர்ந்துகொள்ள ஆயருக்கு உரிமை உண்டு; எவ்வித நேர்மாறான சலுகை அல்லது வழக்கம் புறக்கணிக்கப்படுகிறது.

தி.ச 397 ன1. மறைமாவட்ட எல்லைக்குள் உள்ள ஆள்கள், கத்தோலிக்க நிறுவனங்கள், புனிதப் பொருள்கள் மற்றும் இடங்கள் ஆயரின் சாதாரணப் பார்வையிடுதலுக்கு உட்பட்டவை.

ன2. சட்டத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்களில் மட்டுமே திரு ஆட்சிப்பீட அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள துறவற சபையின் உறுப்பினர்களையும் அவர்களது இல்லங்களையும் பார்வையிடலாம்.

தி.ச 398 ஆயர் தமது மேய்ப்புப் பணி பார்வையிடுதலைத் தக்க கவனத்துடன் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்; தேவையற்ற செலவுகளால் எவருக்கும் பெருஞ்சுமையாய் இராதபடி அவர் கவனமுடன் இருக்க வேண்டும்.

தி.ச 399 ன1. மறைமாவட்ட ஆயர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மறைமாவட்டத்தின் நிலைமைபற்றி, திருத்தூதரக ஆட்சிப்பீடத்தால் வரையறுக்கப்பட்ட முறைக்கும் காலத்திற்கும் ஏற்ப உச்சத் தலைமைக்குருவுக்கும் ஓர் அறிக்கை அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்.

ன2. ஆயர் இந்த அறிக்கையை அளிப்பதற்குக் குறிப்பிட்ட ஆண்டு, முழுமையாகவோ பகுதியளவிலோ அவரது மறைமாவட்ட ஆளுகையின் முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் வந்தால் அவ்வேளையில் அறிக்கை தயாரிப்பதையும் அளிப்பதையும் அவர் தவிர்க்கலாம்.

தி.ச 400 ன1. திருத்தூதரக ஆட்சிப்பீடத்தால் வேறுவிதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலன்றி, உச்சத் தலைமைக்குருவுக்கு மறைமாவட்ட ஆயர் அறிக்கை அளிக்க வேண்டிய ஆண்டில் பேறுபெற்ற திருத்தூதர்களான பேதுரு, பவுல் ஆகியவர்களின் கல்லறைகளுக்கு வணக்கம் செலுத்த அவர் உரோமைக்குச் செல்ல வேண்டும்; மற்றும் உரோமைத் தலைமைக்குருவுக்குத் தம்மை முன்னிலைப்படுத்த வேண்டும்.

ன2. சட்டமுறைமைப்படி செயல்பட இயலாத நிலையில் ஆயர் இருந்தாலன்றி மேற்கூறப்பட்டுள்ள கடமையை ஆயர் தாமே நிறைவு செய்ய வேண்டும்; அவர் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இணை ஆயர் இருந்தால் அவர் வழியாகவோ துணை ஆயர் அல்லது அவருடைய குருக்குழாமைச் சார்ந்த மற்றும் அவருடைய மறைமாவட்டத்தில் தங்கி வாழ்கின்ற பொருத்தமான ஒரு குரு வழியாகவோ அவர் இக்கடமையை நிறைவு செய்ய வேண்டும்.

ன3. ஒரு திருத்தூதரகப் பதில் ஆளுநர் உரோமையில் தங்கி வாழும் ஒரு பதில் ஆள் வழியாகவும் இக்கடமையை நிறைவு செய்ய முடியும்; ஒரு திருத்தூதரக ஆளுநர் இக்கடமையால் கட்டுப்பட்டவரல்லர்.

தி.ச 401 ன1. எழுபத்தைந்து வயதை நிறைவு செய்த ஒரு மறைமாவட்ட ஆயர் தமது பணித்துறப்பை உச்சத் தலைமைக்குருவிடம் கையளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்; உச்சத் தலைமைக்குரு அனைத்துச் சூழ்நிலைகளையும் ஆராய்ந்த பின் உரிய ஏற்பாடு செய்வார்.

ன2. உடல்நலக்குறைவாலோ வேறொரு கனமான காரணத்தினாலோ தம் பணியை நிறைவேற்ற தகுதி குறைந்தவராகிவிட்ட மறைமாவட்ட ஆயர் தமது பணித்துறப்பைக் கையளிக்க வலிந்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

தி.ச 402 ன1 ஓர் ஆயரின் பணித்துறப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால், அவர் தமது மறைமாவட்டத்தில், மாண்புடன் ஒய்வு பெற்றவர் என்ற உரிமைத் தகுதியைப் பெறுகிறார்; அவர் விரும்பினால், அம்மறைமாவட்டத்திலேயே தங்கி வாழலாம். சுpறப்பான சூழ்நிலைகளின் பொருட்டு ஒருசில காரியங்களில் திருத்தூதரக ஆட்சிப்பீடம் வேறுவிதமாக ஏற்பாடு செய்யலாம்.

ன2. பணித்துறப்பு செய்த ஆயரின் வாழ்வாதாரத்திற்குப் பொருத்தமான மற்றும் தக்க ஏற்பாடு செய்யப்படுவதை ஆயர் பேரவை கவனித்துக் கொள்ள வேண்டும்; அவர் பணிபுரிந்த மறைமாவட்டம் இக்காரியத்தில் முதன்மையான கடமையைக் கொண்டுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

 

உட்பிரிவு 3

இணை மற்றும் துணை ஆயர்கள்

தி.ச 403 ன1. ஒரு மறைமாவட்டத்தின் மேய்ப்புப் பணித் தேவைகள் கோரும்போது, மறைமாவட்ட ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு அல்லது பல துணை ஆயர்கள் நியமிக்கப்பட வேண்டும்; துணை ஆயருக்கு வழிவரும் உரிமை கிடையாது.

ன2. மிகக் கனமான சூழ்நிலைகளில், அவை ஆள்சார்ந்த இயல்புடையவையாக இருந்தாலும் கூட சிறப்புச் செயலுரிமைகளைக் கொண்டுள்ள ஒரு துணை ஆயர் மறைமாவட்ட ஆயருக்கு அளிக்கப்படலாம்.

ன3. திரு ஆட்சிப் பீடத்திற்குப் பொருத்தமானதாகத் தோன்றினால், பணி அடிப்படையில் சிறப்புச் செயலுரிமைகளைக் கொண்டுள்ள ஓர் இணை ஆயரையும் அது நியமிக்கலாம்; இணை ஆயருக்கு வழிவரும் உரிமை உண்டு.

தி.ச 404 ன1. ஓர் இணை ஆயர் தமது நியமனத்தின் திருத்தூதரகக் கடிதத்தைத் தரமாகவோ பதில் ஆள் மூலமாகவோ, மறைமாவட்ட ஆயரிடமும் ஆலோசகர் குழாமிடமும் மறைமாவட்டச் செயலகத் தலைமைச் செயலர் முன்னிலையில் காண்பிக்கும் போது பணிப்பொறுப்பை ஏற்கிறார்; மறைமாவட்டச் செயலகத் தலைமைச் செயலர் இந்நிகழ்வைப் பதிவு செய்கிறார்.

ன2. ஒரு துணை ஆயர் தமது நியமனத்தின் திருத்தூதரகக் கடிதத்தை மறைமாவட்ட ஆயரிடம் மறைமாவட்டச் செயலகத் தலைமைச் செயலர் முன்னிலையில் காண்பிக்கும் போது பணிப்பொறுப்பு ஏற்கிறார்; மறைமாவட்டச் செயலகத் தலைமைச் செயலர் இந்நிகழ்வைப் பதிவு செய்கிறார்.

ன3. ஆயினும், மறைமாவட்ட ஆயர், முழுமையாகச் செயல்பட இயலாத நிலையில், இணை ஆயரும் துணை ஆயரும் தங்கள் நியமனத்தின் திருத்தூதரகக் கடிதத்தை ஆலோசகர் குழாமிடம் மறைமாவட்ட செயலகத் தலைமைச் செயலர் முன்னிலையில் காண்பித்தால் போதுமானது.

தி.ச 405 ன1 இணை ஆயர்களும் துணை ஆயர்களும் பின்வரும் திருச்சபைச் சட்டங்களின் விதியமைப்புகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள மற்றும் அவர்களின் நியமனக் கடிதத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கடமைகளையும் உரிமைகளையும் கொண்டுள்ளனர்.

ன2. இணை ஆயரும், தி.ச 403, ன2 ல் குறிப்பிடப்பட்டுள்ள துணை ஆயரும் மறைமாவட்ட ஆளுகை முழுவதிலும் மறைமாவட்ட ஆயருக்கு உதவி புரிகின்றனர்; மேலும் அவர் இல்லாதிருக்கும்போது அல்லது செயல்பட இயலாத நிலையில் அவரது இடத்தை வகிக்கின்றனர்.

தி.ச 406 ன1இணை ஆயரும் தி.ச 403 ன2 ல் குறிப்பிடப்பட்டுள்ள துணை ஆயரும் ஆயர் பொதுப் பதில்குருவாக மறைமாவட்ட ஆயரால் நியமிக்கப்பட வேண்டும்; சட்டத்தால் சிறப்பு உரிமைக்கட்டளை தேவைப்படும் காரியங்களை மறைமாவட்ட ஆயர் மற்றவர்களை விட இவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

ன2. திருத்தூதரக் கடிதத்தில் வேறுவிதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலன்றி, ன1 ன் விதியமைப்புகளைக் கருத்திற்கொண்டு, மறைமாவட்ட ஆயர் தமது துணை ஆயரை அல்லது ஆயர்களை ஆயர் பொதுப் பதில் குருக்களாக அல்லது குறைந்த அளவு ஆயர் பதில் குருக்களாக நியமிக்க வேண்டும்; அவர்கள் மறைமாவட்ட ஆயரின் அல்லது இணை ஆயரின் அல்லது தி.ச 403 ன2 ல் குறிப்பிடப்பட்டுள்ள துணை ஆயரின் அதிகாரத்தை மட்டுமே சார்ந்திருப்பர்.

தி.ச 407 ன1. மறைமாவட்ட ஆயர், இணை ஆயர் மற்றும் தி.ச 403 ன2 ல் குறிப்பிடப்பட்டுள்ள துணை ஆயர் மிகவும் முக்கியமான காரியங்களைப் பற்றித் தங்களுக்குள் கலந்தாலோசிக்க வேண்டும்; இவ்வாறு மறைமாவட்டத்தில் நிகழ்கால மற்றும் எதிர்கால நலனை மிகப்பெரிய அளவில் அவர்கள் பேணி வளர்க்க முடியும்.

ன2. மறைமாவட்ட ஆயர், மிகவும் முக்கியமான காரியங்களை, சிறப்பாக மேய்ப்புப் பணி இயல்புடையவற்றைக் கணிக்கும்போது மற்றவர்களைவிடத் தமது துணை ஆயர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

ன3. இணை ஆயரும் துணை ஆயரும் மறைமாவட்ட ஆயரின் அக்கறையில் பங்குகொள்ள அழைக்கப்பட்டிருக்கின்றனர்; எனவே அவர்கள் தங்கள் செயல்களிலும் எண்ணத்திலும் அவருடன் ஒன்றுபட்டுத் தங்;கள் பணிகளை ஆற்றும் வண்ணம் செயல்பட வேண்டும்.

தி.ச 408 ன1 இணை ஆயரும் துணை ஆயரும், நியாயமான தடையினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தாலன்றி, மறைமாவட்ட ஆயர் நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள தலைமைக்குருவுக்கு உரிய அல்லது மற்றப் பணிகளை நிறைவேற்றும்படி, மறைமாவட்ட ஆயர் அவர்களைக் கேட்கும்போதெல்லாம் அவற்றை நிறைவேற்ற அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

ன2. இணை அல்லது துணை ஆயர் நிறைவேற்றக்கூடிய ஆயருக்குரிய உரிமைகளையும் பணிகளையும் மறைமாவட்ட ஆயர் மற்றொருவரிடம் வழக்கமாக ஒப்படைக்கக்கூடாது.

தி.ச 409 ன1. மறைமாவட்ட ஆட்சிப்பீடம் காலியாகும் போது, இணை ஆயர் உடனே தாம் நியமிக்கப்பட்ட மறைமாவட்டத்தின் ஆயராகிறார்; அதற்கு அவர் சட்டமுறைமைப்படி அதன் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.

ன2. தகுதிவாய்ந்த அதிகாரியால் வேறுவிதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலன்றி, மறைமாவட்ட ஆட்சீப்பீடம் காலியாகும் போது, இணை ஆயர், புதிய ஆயர் ஆட்சிப் பீடத்தின் பொறுப்பை ஏற்கும் வரை, ஆட்சிப் பீடம் நிரம்பியிருந்த போது ஆயர் பொதுப் பதில்குருவாக அல்லது ஆயர் பதில் குருவாக அவர் கொண்டிருந்த அனைத்து அதிகாரங்களையும் செயலுரிமைகளையும், ஆனால் அவற்றை மட்டுமே, தக்கவைத்துக் கொள்கிறார்; அவர் மறைமாவட்ட நிர்வாகியாக நியமிக்கப்படவில்லை என்றால் சட்டத்தால் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதே அதிகாரத்தை மறைமாவட்டத்தின் ஆளுகைக்குத் தலைமை ஏற்கும் மறைமாவட்ட நிர்வாகியின் அதிகாரத்தின் கீழ் செயற்படுத்த வேண்டும்.

தி.ச 410 மறைமாவட்ட ஆயரைப்போலவே, இணை ஆயரும் துணை ஆயரும் மறைமாவட்டத்தில் தங்கி வாழக் கடமைப்பட்டுள்ளனர்; குறுகிய காலத்திற்கு மட்டுமேயன்றி அவர்கள் அதிலிருந்து வெளியே செல்லக்கூடாது; மறைமாவட்டத்திற்கு வெளியே நிறைவேற்றப்பட வேண்டிய பணி அல்லது ஒரு மாதத்திற்கு மிகாத விடுமுறைக்காகச் செலவழிக்கப்படும் காலம் இதில் அடங்காது.

தி.ச 411 பணித்துறப்பைப் பொறுத்தமட்டில் தி.சச 401 மற்றும் 402 ன2. விதியமைப்புகள் இணை ஆயருக்கும் துணை ஆயருக்கும் பொருந்தும்.

இயல் 3

செயல்பட இயலாத நிலையில் உள்ள அல்லது ஆயர் இல்லாத ஆட்சிப்பீடம்

உட்பிரிவு 1

செயல்பட இயலாத நிலையில் உள்ள ஆட்சிப்பீடம்

தி.ச 412 மறைமாவட்ட ஆயர் தமது மேய்ப்புப் பணியை மறைமாவட்டத்தில் நிறைவேற்றுவதிலிருந்து சிறைக்காவலில் இருத்தல், துரத்தப்படல், நாடுகடத்தப்படல், அல்லது இயலாமை ஆகிய காரணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர் தமது மறைமாவட்டத்தின் மக்களோடு கடிதம் மூலமாகக் கூட தொடர்பு கொள்ள இயலவில்லை என்றால் மறைமாவட்ட ஆட்சிப்பீடம் செயல்பட இயலாத நிலையில் உள்ளது என அறியப்படுகிறது.
தி.ச 413 ன1 திரு ஆட்சிப்பீடம் வேறுவிதமாக ஏற்பாடு செய்திருந்தாலன்றி, ஆட்சிப்பீடம் செயல்பட இயலாத நிலையில் இருக்கும்போது, மறைமாவட்டத்தின் ஆளுகை, இணை ஆயர் ஒருவர் இருந்தால், அவருக்கு உரியது; அவர் இல்லாத அல்லது செயல்பட இயலாத நிலையில் ஆளுகையானது துணை ஆயர் அல்லது ஆயர் பொதுப் பதில்குரு அல்லது ஆயர் பதில்குரு அல்லது மற்றொரு குருவுக்கு உரியது; இக்காரியத்தில் மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்றவுடன் மறைமாவட்ட ஆயரால் தயாரிக்கப்பட வேண்டிய பட்டியலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆள்களின் வரிசை முறையைப் பின்பற்ற வேண்டும்; உயர் மறைமாவட்ட ஆயரிடம் தெரிவிக்கப்பட வேண்டிய இப்பட்டியல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்; மற்றும் மறைமாவட்டச் செயலகத் தலைமைச் செயலரால் அது இரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ன2. இணை ஆயர் இல்லாத அல்லது அவர் செயல்பட இயலாத நிலையில் மற்றும் ன1 ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலும் இல்லையென்றால் மறைமாவட்டத்தை ஆள வேண்டிய ஒரு குருவைத் தேர்ந்தெடுப்பது ஆலோசகர் குழுவின் கடமையாகும்.

ன3.. ன1 அல்லது ன2 ன் விதிமுறைக்கேற்ப, மறைமாவட்டத்தின் ஆளுகையை ஏற்றுக் கொள்ளும் ஒருவர், ஆட்சிப்பீடம் செயல்பட இயலாத நிலையில் இருப்பதையும், தாம் பணி ஏற்றிருப்பதையும் கூடியவிரைவில் திரு ஆட்சீப்பீடத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

தி.ச 414 தி.ச 413 ன் விதிமுறைக்கேற்ப தற்காலிகமாக அதாவது, ஆட்சிப்பீடம் தடைசெய்யப்பட்டுள்ள காலத்தின் போது மட்டும் மறைமாவட்டத்தின் மேய்ப்புப் பணிக் கண்காணிப்பை ஏற்க அழைக்கப்படும் எவரும், மறைமாவட்டத்தின் அத்தகைய மேய்ப்புப் பணிக் கண்காணிப்பில் சட்டத்தால் மறைமாவட்ட நிர்வாகிக்கு உரிய கடமையால் பிணைக்கப்பட்டுள்ளார்; மற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

தி.ச 415 மறைமாவட்ட ஆயர் ஒரு திருச்சபைத் தண்டனையால் தம் பணியை நிறைவேற்றுவதிலிருந்து தடைசெய்யப்பட்டிருந்தால், திரு ஆட்சிப்பீடம் அதற்கு ஏற்பாடு செய்யும் பொருட்டு உயர் மறைமாவட்ட ஆயர் உடனே அதன் உதவியை நாடவேண்டும்; உயர் மறைமாவட்ட ஆயர் இல்லையென்றாலோ அல்லது அவரே தண்டனையால் பாதிக்கப்பட்டவர் என்றாலோ, பதவி உயர்வால் மூத்த சார்புநிலை ஆயர் அத்தகைய உதவியை நாடவேண்டும்.

உட்பிரிவு 2

ஆயரில்லாத ஆட்சிப்பீடம்

தி.ச 416 மறைமாவட்ட ஆயரின் இறப்பு, உரோமைத் தலைமைக்குருவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவரது பணித்துறப்பு, ஆயரிடம் தெரிவிக்கப்பட்ட பணிமாற்றம் அல்லது பணிநீக்கத்தால் ஒரு மறைமாவட்டம் காலியாகிறது.

தி.ச 417 ஆயர் பொதுப் பதில் குருவாலும், ஆயர் பதில் குருவாலும் நிறைவேற்றப்பட்ட அனைத்துச் செயல்களும், மறைமாவட்ட ஆயரின் இறப்பைப் பற்றிய உறுதியான அறிவிப்பை அவர்கள் பெற்றுக்கொண்ட வரையிலும் சட்டவலிமை கொண்டுள்ளன; அவ்வாறே மறைமாவட்ட ஆயர் அல்லது ஆயர் பொதுப் பதில் குரு அல்லது ஆயர் பதில்குரு ஆகியவர்களால் நிறைவேற்றப்பட்ட செயல்கள் மேற்கூறப்பட்டுள்ள தலைமைக்குருவின் செயல்களைப் பற்றிய உறுதியான அறிவிப்பை அவர்கள் பெற்றுக்கொண்ட வரையிலும், சட்டவலிமை கொண்டுள்ளன.

தி.ச 418 ன1 பணிமாற்றத்தின் உறுதியான அறிவிப்பைப் பெற்றுக்கொண்ட இரண்டு மாதங்களுக்குள் ஆயர், தாம் மாறிச்செல்லும் மறைமாவட்டத்திற்குச் சென்று திருச்சபைச் சட்டமுறைமைப்படி அதன் பொறுப்பை ஏற்கவேண்டும்; புதிய மறைமாவட்டத்தின் பொறுப்பை அவர் ஏற்ற நாளிலிருந்து தாம் விட்டுச் செல்லும் மறைமாவட்டம் காலியாகிறது.

ன2. பணிமாற்றத்தின் உறுதியான அறிவிப்பைப் பெற்றுக்கொண்டதிலிருந்து திருச்சபைச் சட்டமுறைமைப்படி புதிய மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்கும் வரை தாம் விட்டுச் செல்லும் மறைமாவட்டத்தில் ஆயர்;

1 ஒரு மறைமாவட்ட நிர்வாகியின் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்; மற்றும் அவருடைய கடமைகளால் பிணைக்கப்பட்டுள்ளார்; தி.ச 409 ன2 கருத்திற்கொண்டு, ஆயர் பொதுப் பதில்குரு மற்றும் ஆயர் பதில்குரு ஆகியவர்களின் அனைத்து அதிகாரங்களும் முடிவுக்கு வருகின்றன.

2 பணிக்குரிய முழு ஊதியத்தைப் பெறுகின்றார்.

தி.ச 419 ஆட்சிப்பீடம் ஆயரின்றி இருக்கும்போது உள்ளபோது மற்றும் மறைமாவட்ட நிர்வாகி நியமிக்கப்படும் வரை மறைமாவட்டத்தின் ஆளுகை துணை ஆயருக்கு உரியது; துணை ஆயர்கள் பலர் இருந்தால் அது பதவி உயர்வால் மூத்தவருக்கு உரியது; துணை ஆயர் இல்லையெனில், திரு ஆட்சிப்பீடம் வேறுவிதமாக ஏற்பாடு செய்தாலன்றி, அது ஆலோசகர்கள் குழாமுக்கு உரியது. இவ்வாறு மறைமாவட்டத்தின் ஆளுகையை ஏற்கும் ஒருவர் தாமதமின்றி மறைமாவட்ட நிர்வாகியை நியமிக்கக் குழாமை அழைக்க வேண்டும்.

தி.ச 420 திரு ஆட்சிப்பீடம் வேறுவிதமாக நிர்ணயித்தாலன்றி ஒரு திருத்தூதராக மறை ஆட்சி வட்டத்தில் அல்லது ஆளுகையில் ஆட்சிப்பீடம் காலியாக இருந்தால் பதில் - பதில்குரு அல்லது பதில் - ஆளுநர் ஆளுகையை ஏற்கிறார்; பொறுப்பை ஏற்றவுடனே பதில்குருவால் அல்லது ஆளுநரால் இந்நோக்கத்திற்காக மட்டுமே இவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

தி.ச 421 ன1. ஒரு மறைமாவட்ட ஆட்சிப்பீடம் ஆயரின்றி உள்ளது என்ற அறிவிப்பைப் பெற்றுக்கொண்ட எட்டு நாள்களுக்குள், ஆலோசகர் குழாமினால் ஒரு மறைமாவட்ட நிர்வாகி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அவர் மறைமாவட்டத்தை இடைப்பட்ட காலத்தில் ஆள்கிறார்; இக்கரியத்தில் தி.ச 502 ன3. ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ன2. மறைமாவட்ட நிர்வாகி, ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு, குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் சட்டமுறைமைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அவரின் நியமனம் உயர் மறைமாவட்ட ஆயருக்கு உரியது; உயர் மறைமாவட்ட ஆட்சிப்பீடமே ஆயரின்றி இருந்தால் அல்லது உயர் மறைமாவட்ட ஆட்சிப்பீடமும் சார்புநிலை ஆட்சிப்பீடமும் ஆயரின்றி இருந்தால் மறைமாவட்ட நிர்வாகியின் நியமனம் பதவி உயர்வால் மூத்த சார்புநிலை ஆயருக்கு உரியது.

தி.ச 422 துணை ஆயர் அல்லது அவர் இல்லை என்றால் ஆலோசகர்கள் குழாம் ஆயரின் இறப்பைப் பற்றி, கூடியவிரைவில் திரு ஆட்சிப்பீடத்திற்குத் தெரிவிக்க வேண்டும்; அவ்வாறே மறைமாவட்ட நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தமது தேர்தலைக் கூடியவிரைவில் திருத்தூதரக ஆட்சிப்பீடத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

தி.ச 423 ன1. ஒருவர் மட்டும் மறைமாவட்ட நிர்வாகியாக நியமிக்கப்பட வேண்டும்; நேர்மாறான வழக்கங்கள் புறக்கணிக்கப்படுகின்றன; இல்லையெனில் தேர்தல் செல்லத்தக்கதல்ல.

ன2. மறைமாவட்ட நிர்வாகி ஒரே நேரத்தில் பொருளாளராகவும் இருக்கக்கூடாது; மறைமாவட்டத்தின் பொருளாளர் மறைமாவட்டத்தின் நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், நிதிக்குழு மற்றொரு தற்காலிகப் பொருளாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தி.ச 424 தி.ச ச 165 -178 ன் விதிமுறைகளுக்கேற்ப மறைமாவட்ட நிர்வாகியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தி.ச 425 ன1 முப்பத்தைந்து வயதை நிறைவு செய்தவரும் ஆயரில்லாத அதே ஆட்சிப்பீடத்திற்கு ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்படாத நியமிக்கப்படாத, அல்லது முன் நிறுத்தப்படாதவருமான ஒரு குரு மட்டுமே மறைமாவட்ட நிர்வாகியின் பணிக்குச் செல்லத்தக்க விதத்தில் நியமிக்கப்பட முடியும்.

ன2. கோட்பாட்டிலும் விவேகத்திலும் தலைசிறந்து விளங்கும் ஒரு குரு மறைமாவட்ட நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ன3. ன1 ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் கடைப்பிடிக்கவில்லை என்றால், உயர் மறைமாவட்ட ஆயர் அல்லது உயர் மறைமாவட்ட ஆட்சிப்பீடமே ஆயரின்றி இருந்தால் பதவி உயர்வால் மூத்த சார்புநிலை ஆயர் காரியத்தின் உண்மையை உறுதி செய்தபின், அவ்வேளைக்கு மறைமாவட்ட நிர்வாகியை நியமிக்க வேண்டும்; ன1 ன் விதியமைப்புகளுக்கு நேர்மாறாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரின் செயல்கள் சட்டத்தாலேயே செல்லத்தக்கவை அல்ல.

தி.ச 426 மறைமாவட்ட ஆட்சிப்பீடம் ஆயரின்றி இருக்கும்போது மறைமாவட்டத்தை மறைமாவட்ட நிர்வாகியின் நியமனத்திற்கு முன் ஆளுகின்ற ஒருவர், ஆயர் பொதுப் பதில்குருவுக்குச் சட்டம் வழங்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.

தி.ச 427 ன1 மறைமாவட்ட நிர்வாகி காரியங்களின் இயல்பினால் அல்லது சட்டத்தினாலேயே விலக்கப்பட்டவை நீங்கலாக, ஒரு மறைமாவட்ட ஆயரின் கடமைகளால் பிணைக்கப்பட்டுள்ளார்; அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.

ன2. மறைமாவட்ட நிர்வாகி தமது தேர்தலை ஏற்றுக்கொண்டவுடன் தமது அதிகாரத்தைப் பெறுகின்றார்; எவருடைய உறுதிப்படுத்துதலும் தேவை இல்லை. ஆனால் தி.ச 833 4 குறிப்பிடப்பட்டுள்ள கடமையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

தி.ச 428 ன1 ஆட்சிப்பீடம் ஆயரின்றி இருக்கும்போது புதியன புகுத்தப்படக் கூடாது

ன2 மறைமாவட்டத்தின் ஆளுகையை இடைப்பட்ட காலத்தில் கொண்டுள்ளவர்கள், மறைமாவட்டத்திற்கோ ஆயரின் உரிமைகளுக்கோ தீங்கிழைக்கக்கூடிய எதையும் எவ்விதத்திலும் செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளனர்; அவர்களும், அவ்வாறே மற்ற எவரும் தாமாகவோ மற்றவர்கள் மூலமாகவோ மறைமாவட்டத்தின் எவ்வித ஆவணங்களும் நீக்குதல், அழித்தல் அல்லது எவ்விதத்திலும் மாற்றுதல் ஆகியவற்றிலிருந்து சிறப்பான வித்தில் தடைசெய்யப்பட்டுள்ளனர்.

தி.ச 429 மறைமாவட்ட நிர்வாகி மறைமாவட்டத்தில் தங்கி வாழவேண்டிய மற்றும் தி.ச 388 ன் விதிமுறைக்கேற்ப மக்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்க வேண்டிய கடமைகளால் பிணைக்கப்பட்டுள்ளார்.

தி.ச 430 ன1 புதிய ஆயர் மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்கும்போது மறைமாவட்ட நிர்வாகியின் பணி முடிவுறுகிறது.

ன2. மறைமாவட்ட நிர்வாகியின் நீக்கம் திரு ஆட்சிப்பீடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள; அவர் பணித்துறப்பு செய்ய நேர்ந்தால், அது தேர்ந்தெடுக்கத் தகுதிவாய்ந்த குழாமிடம் நம்பத்தக்க முறையில் அளிக்கப்பட வேண்டும்; ஆனால் அத குழாமால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தேவையில்லை; மறைமாவட்ட நிர்வாகி நீக்கப்பட்டால் அல்லது பணித்துறப்பு செய்தால் அல்லது இறந்துவிட்டால், தி.ச 421 ன் விதிமுறைக்கேற்ப மற்றொரு மறைமாவட்ட நிர்வாகி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.