ஆண்டின் பொதுக்காலம்
24ஆம் ஞாயிறு

 

மன்னிக்கும் மாண்பு
பொதுக்காலம் 24 ஆம் வாரம்.

நிலைப்படம் 01: ஆண்டின் பொதுக்காலம் 24 ஆம் வாரத்திதில் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க வந்திருக்கும் இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்று வாழ்க> இறையருள் பெருக  என மகிழ்வோடு வாழ்த்துகிறேன். இந்தநாளில் நம் செயல்பாடுகளின் காரணமாக பல வேளைகளில் அறியாமையினால்> பலவித நெறுக்கடிகள்> சில வேளைகளில் சுற்றுச் சூழல்களின் காரணமாக நாம் செய்துவிடும் தவறுகளினால் இறைவனிடம் மன்னிப்புப் பெறவேண்டிய தேவை நமக்கு உருவாகிறது. தவறு செய்வது மனித இயல்பு மன்னிக்கும் மாண்பு இறைஇயல்பு. மாந்தரும் தங்களுக்கு எதிராக தவறிழைத்தவர்களை மன்னித்து மாண்புறவேண்டும். இறைவனிடம் மன்னிப்புப் பெற விளையும் மாந்தர்> அவரிடமிருந்து அம்மன்னிப்பைப் பெற எத்தகைய தகுதிநிலையில் இருக்கவேண்டும் என்று இன்றைய வழிபாடு> இறைவாக்குகள்> மன்றாட்டுகள்> மூலமாக நம்மை நல்வழிப்படுத்துகிறது.

நிலைப்படம் 02:  தங்கள் தங்கள் தன்னலத்திற்காக அடுத்திருப்பவரின் நிலையை சரியாக அறியாது> அல்லது உணராது>  அவர்களுக்கு எதிராக பலவகைகளில் தீமையானவற்றைச் செய்துவிடும் மாந்தர் தங்கள் செய்பாடு தவறானது என உணராமல் இருக்கும்போது> அவர்களுடைய தீவினையால் பாதிப்படைந்தவர்கள் பல வகைகளில் சீரான வாழ்வடைய முயலும் போராட்ட வாழ்வில் ஆண்டவரின் உடனிருப்பு அவர்களுக்கு உறுதியாக உள்ள நிலையில் தீமைகள் புரிந்தவரிள் எல்லைக் கோடு என்னவாக இருக்கும்?  ஆண்டவர் முன் தீமை புரிந்தவர் எந் நிலையில் நிற்பர் என்ற சிந்தனைகளுடன் இன்றைய வழிபாட்டில் பங்கேற்று பயனடைவோம்.

நிலைப்படம் 03: உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு;  அவ்வாறெனில் நீ மன்றாடும்போது> உன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

நிலைப்படம் 04: பதிலுரைப்பாடல் திபா. 103 நாமனைவரும் இணைந்து பாடவேண்டிய பல்லவி: “ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; பொறுமையும் பேரன்பும் உள்ளவர்”.

நிலைப்படம் 05: வாழ்ந்தாலும் இறந்தாலும் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.- திருத்தூதர் தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலிலிருந்து 2ஆம் வாசகம்.அதிகாரம் 14: இறை மொழிகள் 7 முதல் 9 வரை.

நிலைப்படம் 06:  வாழ்த்தொலி : - புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல  நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்பு செலுத்துங்கள்> என்கிறார் ஆண்டவர்.

நிலைப்படம். 07:  ‘ஏழு முறை  மட்டுமல்ல ;  எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்லுகிறேன்.’ தூய மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து நற்செய்தி வாசகம். அதிகாரம் 18: இறைமொழிகள்  21 முதல் 35 வரை.

நிலைப்படம் 08: ஆண்டவரின் புனித நாளாகிய இன்று திருப்பலியில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளும்> வணக்கமும் உரியனவாகுக. ஆண்டின் பொதுக்காலம் 24 ஆம் வாரத்தில் நமக்குப் படிக்கப்பட்ட இறைமொழிகள் மன்னிப்பு எனும் இறை மதிப்பீட்டை நன்கு சிந்தித்துப்பார்க்க நம்மைத் தூண்டுகிறது. இன்றைய முதல்வாசகத்தில் நமக்குப் படித்துக்காட்டப்பட்ட சீராக் ஞான நூல் 27 ஆம் அதிகாரம் 30 ஆம் இறைமொழி கூறுகிறது வெகுளி> சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை. இவற்றைப் பற்றிக்கொண்டிருப்பவர்கள் பாவிகள்தான். இதன் விழைவு பழிவாங்குதல் நிகழ்கிறது. இதுகுறித்து இறைமொழி கூறுகிறது> பழி வாங்வோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர்.

நிலைப்படம் 09: ஆகவே  ஆண்டவர் அறிவுறுத்துகிறபடி உனக்கு அடுத்திருப்வர் செய்கிற அநீதியை மன்னித்து  ஆண்டவரின் மக்களாக நடந்துகொள்ள முயல்வது நல்லது. தவறு செய்வது மனித இயல்புதான். தவறு செய்தவன் மனம் மாறவேண்டும். திருந்தி புது மனிதனாக நல்வழி நடக்கவேண்டும். அதுநடைபெற தவறு செய்தவனுக்குத் தேவைப்படுவது மன்னிப்பு. மனமுவந்து மன்னிப்பது தவறு செய்தவனைப் புது மனிதனாக்கும். மன்னிக்கும் செயல் இறைத்தன்மையது. தவறு செய்தவர் தன்தவறை ஏற்றுக் கொள்ளுதல் இழிவானது அல்ல. தன் தவறை ஏற்றுக் கொள்பவர் புதுப் படைப்பாகிறார். தவறு செய்தவரை மன்னிப்பவர் இறைத்தன்மையர் ஆகின்றார்.தவறு நடந்தபின் மன்னிப்புக் கேட்பதும்> தவறிழைக்கப்பட்டவர்> தீமைகளால் பாதிப்படைந்தவர்> மனமுவந்து மன்னிப்பதும் மாண்புள்ளசெயல்களாகப் பார்க்கப்படவேண்டியவை ஆகும்.

நிலைப்படம் 10:  இன்றைய திருப்பாடல் 103 மன்னிக்கும் மாண்பினையுடைய இறைவனை நம் கண்முன் நிறுத்தி> ஆண்டவர் நம்மை மன்னிக்கிறார். நமது தீவினைகளைக் கண்டு உடனே தண்டிப்பதில்லை; அவர் அளவற்ற பொறுமையுடனும்> அன்புடனும்> இரக்கத்துடனும் தன் தவறிழைத்த மக்கள் தன்னைத் தேடும் காலத்தை எதிர்நோக்கிப் பொறுமையுடக் காத்திருக்கிறார் – என்று தெளிவாகக் கூறுகிறது.

நிலைப்படம் 11:  இதில் மனிதர்களின் மனங்கள் இறைவனின் எண்ணங்களுக்கு இசைந்தாற்போல் வருகின்றனதான். ஆயினும் அதற்கும் ஒரு அளவு வேண்டுமே எனச் சிந்திக்கின்றது. திருத்தூதர் பேதுரு இயேசு ஆண்டவரிடம் கேட்டார். “சரி> மன்னிக்கிறோம். தவறு செய்தவர் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறாரே! அப்படியானால் எத்தனை முறை அவரை மன்னிப்பது?” திருவிவிலியக் கூற்றுப்படி “ஏழு”  ஒரு முழுமையான எண். அதை வைத்தே கேட்டார். “ஏழுமுறை மட்டும் மன்னிக்கலாமா?”  இதை திருத்தூதர் பேதுரு சொன்னபோது இதுவே அதிகம் என்பது அவரது எண்ணம். திருத்தூதர் பேதுருவுக்கு இயேசு ஆண்டவர் மிக உறுதியாகச் சொன்னார். “ஏழுமுறை மட்டுமல்ல. எழுபது தடைவ ஏழுமுறை “ என்று ஆண்டவர் இறைவனின் மனநிலையை நம முன் வைக்கிறார். அதற்கு ஏற்றார்ப்போல ஒரு உவமையையும் கூறினார்.

நிலைப்படம் 12:  அரசனிடம் பத்தாயிரம் தாலந்து கடன் பெற்ற பணியாள் ஒருவனை அரசன் அழைத்தான். அவன் அரசனிடம் கொண்டுவரப்பட்டபோது> தான் பெற்ற கடனைத் திருப்பித் தர இயலாதவனாக அவன் இருந்தான்.அரசன் அவனுடைமையெல்லாம் விற்று பணத்தைச் செலுத்துமாறு கட்டளையிட்டான். அப்பணியாள் பொறுத்தருள்க  எல்லாம் தந்துவிடுகிறேன் என்று  கூறினான். அரசன் அவன்மேல் பரிவு கொண்டு அவன் கடனையெல்லாம் தள்ளுபடிசெய்து அனுப்பினார்.

நிலைப்படம் 13: தன் கடனெல்லாம் மன்னிப்புப்பெற்ற அந்த பணியாள் தன்னிடம் 100 தெனாரியம் கடன்பட்டிருந்த  தன் உடன்பணியாளனைக் கண்டு அந்த 100 தெனாரியத்தை உடனே கொடு என்று அவன் கழுத்தைப் பிடித்து நெறித்தான். அந்தப் பணியாளனும் பொறுத்தருள்க எல்லாம் தந்துவிடுகிறேன் என்று  அவனைக் கெஞ்கிக் கேட்டான். ஆனால் அவன் அந்த உடன் பணியாளனை சிறையில் அடைக்க வைத்தான்.

நிலைப்படம் 14: அவனுடைய மற்ற உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டு வருந்தி> அதை அரசனிடம் தெரிவித்தார்கள். அப்போது அரசர் அப்பணியாளனை வரவழைத்து அவனைக் கடிந்துகொண்டார். “நான் உன்னை மன்னித்ததுபோல் நீ உன் உடன் பணியாளனை  மன்னித்திருக்க வேண்டுமல்லவா ?” என்று கூறி அவனையும் அவன் கடன் முழுவதையும் அடைக்கும் வரை வதைப்போரிடம் ஒப்படைத்தார். ஆண்டவரின் எண்ணங்கள் மன்னிப்பைப் பொறுத்தமட்டில் மிகத் தெளிவாக இங்கு வலியுறுத்தப்படுகின்றன. இறைவனிடம் மன்னிப்பைப் பெற விரும்புபவர்  மன்னிக்கும் மனநிலை கொண்டவராக இருக்க வேண்டும்.

நிலைப்படம் 15:  இறைவன் படைத்த உலகம் இது. இங்கு உள்ள எல்லாமே அவருயவையே. அவருடைய விருப்பமே இங்கு செயலாக்கம் பெற வெண்டும். அனைத்தையும் அவருக்காகவே அவர் விருப்பப் படி செய்யும்படி> அவர் எதிர்பார்க்கிறார்.அவர் விருப்பத்திற்கு ஏற்றவடி எல்லாம் நடைபெறும் வரை அவர் பொறுமையுடன் காத்திருக்கிறார். அனைத்தையும் பயன்படுத்தும் மனிதன்> எல்லாம் அவருக்காக என்ற முறையில் செயல்படவேண்டும்.

நிலைப்படம் 16: எனவே எல்லாம் கடவுளுடையவை> கடவுளுக்காகவே எல்லாச் செயல்முறையும் இருக்கவேண்டும் என்ற மன நிலைத் தெளிவு பெற்றவராய்: தவறிழைப்பவர் மனம்மாறி வாழ்வதுடன்> தவறு செய்தவரை மன்னித்து

1. மன்னிப்பது இறைஇயல்பு என உணர்ந்து மன்னிப்பில் மாண்புறுவோம்.
2. எல்லாவற்றுக்கும் முதலும் முடிவுமான இயேசுவை  நம் மையமாகக்கொண்டு எல்லாம் அவருக்காக என்றும்> அவரது மதிப்பீடே சரியான வாழ்வுமுறை என்று உணர்ந்து வாழ்வோம்.

நிலைப்படம் 17: இத்தகைய உயர்ந்த எண்ணங்கள் தான் சிறந்த வாழ்வு . அதை வாழ்ந்து காட்டுவதுதான்  வழிபாடு. நம் வழிபாடுதான் சிறந்த வாழ்வு  என்ற உணர்வுகளுடன் திருப்பலியில் பங்கேற்போம். ஆமென்.

 

 

 


text