ஆண்டின் பொதுக்காலம்
30ஆம் வாரம்

விண்ணைத் தொடும் கரங்கள்

ஒளிப்படம் 01:
இறை இயேசுவில் அன்பிற்கினிய இறைமக்கள் அனைவருக்கும் ஆண்டின் பொதுக்காலம் 30 ஆம் வாரத்தில் என் வணக்கத்தையும் வாழ்த்தையும் உரித்தாக்குகிறேன். இவ்வுலக வாழ்வில் பற்பல தேவைகள் நமக்கு இவ்வுலக மாந்தர் அனைவருக்குமே உள்ளன. அனைத்தையும் உண்டாக்கி உலகோர்க்குத் தருபவர் இறைவனே என நம்புவோர் தங்களின் தேவைகளைப் பெற இறைவனை நோக்கி மன்றாடுகின்றனர். தங்கள் கரங்களை> அனைத்தையும் படைத்து கொடையாக வழங்கிய ஆண்டவரை நோக்கி உயர்த்தி இறைவேண்டல்கள் செய்கின்றனர். இன்றைய திருப்பலி வழிபாடு இத்தகைய இறைவேண்டல்கள் எத்தன்மை உடையதாயிருத்தல் மாண்புள்ளது எனவும்> எத்தகைய வேண்டல்கள் மாண்பற்றது என பகுத்துப்பார்க்க நம்மைத் தூண்டுகின்றன.

ஒளிப்படம் 02:
இறைவன் மாந்தர்மேல் பாகுபாடற்ற அன்பு கொண்டவர். நம்பிக்கை கொண்டோரின் தேவைகளை நன்கு அறிந்துள்ள அவர் உண்மையான நம்பிக்கைஉடையோரின் துயர் துடைக்க தன் அன்புக்கரத்தை நீட்டுகிறார். அத்தனை துயர்களுக்கும் காரணமானவைகளை முற்றிலும் அகற்றிட தன்னையே அளிக்க முன்வந்தார். அத்தனை அன்பும் பரிவும் கொண்ட ஆண்டவர் இன்றும் இத்திருப்பயில் நமக்காகத் தன்னை வழங்குகிறார். பலியில் இன்று அவரோடு ஒன்றாவோம்.

ஒளிப்படம் 03:
தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும். சீராக்கின் ஞானம் நூலிலிருந்து முதல் வாசகம் அதிகாரம் 35: இறை மொழிகள் 12 முதல் 14 வரையும்> 16 முதல் 18 வரையும்.

ஒளிப்படம் 04:
பதிலுரைப்பாடல் - பல்லவி : இந்த ஏழை கூவி அழைத்தான்@ ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்

ஒளிப்படம் 05:
எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றிவாகையே – திருத்தூதர் தூய பவுல் திமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து இரண்டாம் வாசகம் அதிகாரம் 4: இறைமொழிகள் 6 முதல் 8 வரையும்> 16 முதல் 18 வரையும்.

ஒளிப்படம் 06:
வாழ்த்தொலி : கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்.

ஒளிப்படம் 07:
பரிசேயர் அல்ல> வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். தூய லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். அதிகாரம் 18: இறைமொழிகள் 9 முதல் 14 வரை.

ஒளிப்படம் 08:
இன்று திருப்பலி வழிபாட்டில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் அன்பிற்கினியவர்களே> அன்புக்குழந்தைகளே> அன்புள்ள இளையோரே> அன்புள்ள பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் இந்த நாளில் இறைவனின் பெயரால் என் அன்பு வாழ்த்தைக் கூறி மகிழ்கிறேன். இயேசு தன் சீடருக்கு இறைவேண்டல் செய்ய கற்பித்துத் தந்தார் என்பதை நாம் அறிவோம்.  இந்த நாளில் நாம் எத்தகைய மன நிலையில் நாம் அவரிடம் வேண்டவேண்டும்  நாம் வேண்டுதல் செய்யும் நம் இறைவன் எத்தகையவராயிருக்கிறார் என உணர்த்தப்படுகிறோம். இன்றைய முதல் வாசகத்தில் சீராக் ஞானம்  கூறும் அருள் மொழிகள் அவர் நீதியுள்ள நடுவராயிருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றன.

ஒளிப்படம் 09:
அவரிடம் ஒருதலைச்சார்பு என்பதே கிடையாது. அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார். ஏனெனில் அவர் ஏழையர் சார்பாகவே எப்போதும் இருக்கிறவராயிருக்கிறார்.

ஒளிப்படம் 10:
இந்த உலகில் பலர் தமிமிடம் உள்ள செல்வ பலத்தால் ஆட்பலத்தால்> தங்களின் ஆதிக்க உணர்வுகளால் பலவித தீமைகளைச் செய்து பலரைப் பாதிப்பிற்குள்ளாக்குகிறார்கள். ஆண்டவரைகிய இறைவன் தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார்.

ஒளிப்படம் 11:
நீதியற்ற முறையில் தங்கள் பொறுப்பில் வைத்துக் காப்பாற்ப்படவேண்டிய வலிமையற்றோர்> மாற்றுத்திறனாளிகள்> முதியோர் போன்றோர் கைவிடப்பட்ட நிலையில் அக்கைவிடப்பட்டோர் ஆண்டவரை நோக்கி எழுப்பும் வேண்டுதலை ஆண்டவர் ஒருபோதும் புறக்கணிக்கமாட்டார்.

ஒளிப்படம் 12:
அதுபோலவே ஏழைக் கைம்பெண்கள் எப்போதும் ஆண்டவரின் பார்வையில் உள்ளனர். அவர்களை ஆண்டவர் கைவிடுவதில்லை.

ஒளிப்படம் 13:
ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்ற பணி செய்வோர் ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் என்ற நிலையில் உள்ளவராவர். இதிதகையவர்களின் மன்றாட்டுக்கள் முகில்களை எட்டும். அதிலும் ஒருபடி அதிகமாக தங்களைத் தாழ்த்துவோரின் மன்றாட்டு முகில்களை ஊடுருவிச் செல்லும்.

ஒளிப்படம் 14:
சீராக்கின் ஞான நூலில் சொல்லப்பட்ட முன் சொன்ன நீதியுள்ள நடுவரின் நிலைப்பாட்டினை இன்றைய நற்செய்தியில் மிகத் தெளிவாக செபிக்கச் செபிக்கச் சென்ற இருவரின் இறைவேண்டல்> செயல்கள் மூலம் இயேசு நமக்குத் தெளிவாக விளக்குகிறார். பரிசேயர் ஒருவரும் வரிதண்டுபவர் ஒருவரும் இறைவேண்டலுக்காக கோயிலுக்குச் சென்றனர். பரிசேயர் நெஞ்சை நிமிர்த்தி தான் செய்த நல்லவைகளை பட்டியலிட்டு அதற்காக நன்றி கூறினார். அதே வேளையில் அங்கிருந்த வரிதண்டுபவரைவிட தன்னை உயர்வுள்ளவராக ஒப்பிட்டுக்கூறி வரிதண்டும் அவரைத் தன்னைவிட இழிவானவர் எனக் கூறினார். ஆனால் அந்த வரிதண்டுபவர் தலையை ஊயர்த்திப் பார்க்கவும் துணியாமல் தலையைத் தாழ்த்தி தன் குற்றங்களை மன்னிக்குமாறு வேண்டினார். இயேசு இந்த வரிதண்டுபவரே செபிக்க வேண்டிய முறையில் செபித்ததாகக் கூறினார்.

ஒளிப்படம் 15:
இறைவனிடம் வேண்டுபவர் இறைவனின் முன்னால் தன்னைத் தாழ்த்தி பணிவோடு இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பது இயேசுவால் முதலில் உணர்த்தப்படுகிறது.

ஒளிப்படம் 16:
இரண்டாவது தன் தவறுகளுக்கு மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புப் பெறவேண்டியது மிகத் தேவையானது என உணர்த்தப்படுகிறது.

ஒளிப்படம் 17:
மூன்றாவது தன் தவறுகள் பாவங்கள் ஆண்டவர் முன் தான் செல்லத் தகுதியிழக்கச் செய்பவை என்ற தன் உணர்வை உடைய நிலையில் தன்மீது இறைவன் இரக்கம் கொள்ள மன்றாடவேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது.

ஒளிப்படம் 18:
இந்த உயரிய மன்றாட்டு நிலையை உடையவராக உடைந்த உள்ளத்தினராய் நாம் அவர் முன் நிற்கும்போது அவர் நம் குரலுக்குச் செலிகொடுப்பவராயிருப்பது மட்டுமில்லாமல் நமக்கு மிக அருகாமையிலேயே அவர் இருப்பார் என திருப்பாடலாசிரியர் குறிப்பிட்டுக்காட்டுகிறார்.

ஒளிப்படம் 19:
இத்தகைய மன நிலைக்குத் தான் மாறியபின் அதே நம்பிக்கை நிலையில் வாழ்ந்து பணியாற்றி இறுதி நிலைக்கு வந்துள்ள தனக்கு வாழ்வில் வெற்றிபெற்றதற்கான பரிசைத் தர ஆண்டவர் வருவார் என்றும் தன்போன்று வாழ்பவர் அப்பேற்றினைப் பெறக் காத்திருப்போராக இருப்பார்கள் என திருத்தூதர் தூய பவுல் நமக்கு நம்பிக்கையூட்டுகிறார்.

ஒளிப்படம் 20:
எனவே இன்று நாம் கேட்ட இறைமொழிகளின்படி நாம் விண்ணகத்தை முகில்களை ஊடுருவி எட்டும்படியாக
1)          குற்றமுணர்ந்து பணிந்து வேண்டுபவர்களாக இருப்போம்
2)          தற்புகழ்ச்சி கொள்ளாது பிறரை இகழ்ச்சிக்கு உள்ளாக்காது அனைவரையும் ஏற்று வாழ்வோம்
3)          அத்துடன் இறைமை உணர்வில் நலிந்தோர்க்கும் இல்லாமையில் வாழ்வோருக்கும்  இரங்குவோம்

ஒளிப்படம் 21:
இத்தகையவர்களாக நாம் வாழ்வதே நாம் இறைமகனோடு இணைந்து பலியாகிறவர்களாக நம்மை எண்பிக்கும். அத்கைய உயர்ந்த மேலான பலியாக நம்மையே பலிப்பொருட்களோடு இணைத்து ஒப்புக்கொடுப்போம். ஆமென்.

- பணி.லியோ ஜெயசீலன்
நாகலாபுரம் பங்கு
தூத்துக்குடி மறைமாவட்டம்


 

text