இதய காணிக்கை இறவாத காணிக்கை

download

0231. இதய காணிக்கை இறவாத காணிக்கை
இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை (2)
இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய் -2

1. மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே
உன் அருளுக்குச் சான்றாகுமே (2)
இறைவா உனைப்போல் வார்த்தையை வாழ்வாக்கி
வழிகாட்டிச் சென்றிட வரம் ஒன்று தா (2) இதய காணிக்கை

2. எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோயிலாகுமே
நல்வாழ்வு அதன் பரிசாகுமே (2)
கருணா உனைப்போல் மாறாத அன்பினால்
அயலாரை நேசிக்கும் நல் உள்ளம் தா (2) இதய காணிக்கை