அலைகள் எழுந்து நடனம் புரியும்

download

0768. அலைகள் எழுந்து நடனம் புரியும்
கலைகள் திரண்டு கவிதை வரையும்
வேளை நகரிலே அழகு வேளை நகரிலே
தேவதாய் வந்தாள் நம்மைத் தேற்றவே வந்தாள் (2)

1. அன்பு வடிவமான இறை மைந்தன் தாயவள்
மைந்தன் மீட்ட மாந்தர்க்கும் மாதாவாகினாள் (2)
அன்புப் பணியைத் தொடரவே
அன்னை மரி இங்கெழுந்தாள்

2. தாயின் கையில் தவழும் சிறு குழந்தை அஞ்சுமோ
நோயில் வீழ்ந்து வாடும்படி தாயும் விடுவாளோ (2)
தாய்மரியின் கரங்களில் நம்மைத் தந்தால் துன்பமில்லை