image

 

திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம்

இயல் 5

நற்கருணைக் கொண்டாட்டத்துக்கு ஏற்பக் கோவிலை அமைத்தலும் அணிசெய்தலும்

I. பொது விதிகள்

288. நற்கருணைக் கொண்டாட்டத்துக்காக இறைமக்கள் பொதுவாகக் கோவிலில் கூடுவார்கள்; கோவில் இல்லாதபோது அல்லது அது மிகச் சிறியதாக இருக்கும்போது, மாண்புமிகுந்த இம்மறைநிகழ்ச்சிக்குத் தகுதியான வேறொரு மதிப்புக்கு உரிய இடத்தில் கூடுவார்கள். எனவே கோவில்களோ மற்ற இடங்களோ திருப்பலி நிறைவேற்றுவதற்கும் நம்பிக்கையாளர் செயல்முறையில் பங்கெடுப்பதற்கும் ஏற்றவையாய் இருத்தல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, திருக்கட்டடங்களும் திருவழிபாட்டுக்கான பொருள்களும் தகுதியும் அழகும்கொண்டு விண்ணைச் சார்ந்தவற்றைக் குறிக்கும் அடையாளங்களாகத் திகழ வேண்டும்.108

289. எனவே திரு அவை கலைகளின் சிறந்த துணையை எப்போதும் தேடியுள்ளது. எல்லா மக்கள் இனங்களுடையவும் நிலப்பகுதியினுடையவும் கலைகளுக்குத் திரு அவை முக்கியத்துவம் அளித்திருக்கின்றது.109 மேலும் பண்டைக் காலத்துக் கலைப் படைப்புகளையும் கலைச் செல்வங்களையும் கவனமாய்ப் பாதுகாத்து, 110 அவசியமானால் புதிய தேவைகளை நிறைவு செய்ய அவற்றைப் பயன்படுத்தவும் அந்தந்தக் காலத்தின் போக்குக்குப் பொருத்தமான புதிய கலைப் படைப்புகளை ஊக்குவித்து வளர்க்கவும் அது முயலுகின்றது."111

ஆகவே, கோவில் பயன்பாட்டிற்காகப் பொருள்களை உருவாக்கக் கலைஞர்களை அமர்த்தும்போது அல்லது பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது உண்மையான கலைச் சிறப்பைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்; அது நம்பிக்கை, இறைப்பற்று ஆகியவற்றை வளர்க்கவும் அதன் அடையாளத்தின் உண்மைத்தன்மையை விளக்கவும் அதற்கு உரிய அலுவலுக்கு ஏற்றதாகவும் அமைந்திருக்க வேண்டும்.113

290. எல்லாக் கோவில்களையும் நேர்ந்தளிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் புனிதப்படுத்த வேண்டும். தலைமைக் கோவில்களையும் பங்குக் கோவில்களையும் சிறப்புச் சடங்குகளினால் நேர்ந்தளிக்க வேண்டும்.

291. கோவில்களை முறையாகக் கட்டுவதிலும் மாற்றியமைப்பதிலும் சீரமைப்பதிலும் ஈடுபடுவோர் அனைவரும் மறைமாவட்டத் திருவழிபாட்டு மற்றும் திருக்கலைப் பணிக்குழுவைக் கலந்து ஆலோசிப்பார்களாக. இதற்கு ஏற்ற விதிமுறை வகுப்பதில் அல்லது புதிய கோவில்களுக்கான வரைபடங்களுக்கு அனுமதி அளிப்பதில் அல்லது இவ்வகையான முக்கிய செயல்பாடுகளை முடிவு செய்வதில் மறைமாவட்ட ஆயர் மேற்குறிப்பிட்ட குழுவின் கருத்துகளையும் உதவியையும் பயன்படுத்த வேண்டும். 113

108 காண். திருவழிபாடு, 122-124; திருப்பணியாளர், 5; திருச்சடங்குத் திருப்பேராயம், Inter 0ecumenici, 26.09.1964, எண் 90: A.A.S. 56 (1964) பக். 897; மேற்ப டி, Eucharisticum mysterium, 25.05.1967, எண். 24: A.A.S. 59 (1967) பக். 554; திச 93281.
109 காண். திருவழிபாடு, 123.
110 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 26.09.1967, எண் 24: A.A.S. 59 (1967) பக். 554.
111 காண். திருவழிபாடு, 123, 129; திருச்சடங்குத் திருப்பேராயம், Inter 0ecumenici, 26.09.1964, எண் 13e: A.A.S. 56 (1964) பக். 880.
112 காண். திருவழிபாடு, 123.
113 காண். திருவழிபாடு, 126; திருச்சடங்குத் திருப்பேராயம், Inter 0ecumenici, 26.09.1964, எண் 91: A.A.S. 56 (1964) பக். 898.

==============↑ பக்கம் 75

393. கோவிலை அணிசெய்தல் பகட்டுக்காக அன்றி அதன் மாண்புமிகு எளி உணர்த்துவதாய் இருக்க வேண்டும். அழகு செய்வதற்காகப் பொருள்களைத் .ெ செய்யும்போது அவற்றின் மெய்ம்மையும் நம்பகத்தன்மையும் கவனத்தில் கொள்ள, வேண்டும். அவை மக்களுக்குப் படிப்பினையாகவும் புனித இடத்தின் பெருமையை உணர்த்தும் வகையிலும் அமைந்திட வேண்டும்.

293. கோவிலையும் அதன் சுற்றுப்புறத்தையும் சரியான விதத்தில் ஒழுங்குபடுத்தும்போது தற்காலத் தேவைகளைத் தகுந்த விதமாக நிறைவு செய்யும்படி கவனமுடன் செயல்பட வேண்டும். திருநிகழ்ச்சிகளின் கொண்டாட்டத்துக்கு மிகுந்த தொடர்புடைய கூறுகளைக் கவனிப்பதோடு மட்டும் அல்லாமல் வழக்கமாக மக்கள் கூடும் இடங்களில் எழும் தேவைகளை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது போலவே நம்பிக்கையாளர் கூடிவரும்போது செய்ய வேண்டும்.

294 திருப்பலிக்காகக் கூடியிருக்கும் இறைமக்கள், கொண்டாட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்பக் குறிக்கப்பட்டுள்ள வெவ்வேறு பணியாளர்களையும் பல்வகைச் செயல்களையும் உணர்த்தும் ஒருங்கிணைந்த படி நிலை அமைப்புமுறையைக் கொண்டுள்ளனர். திருக்கோவிலின் பொதுவான அமைப்பு, கூடியிருக்கும் திருக்கூட்டத்தின் சாயலை ஒருவகையில் பிரதிபலிக்கும்படியாக இருக்க வேண்டும். கொண்டாட்டத்தில் பங்கேற்போர் அனைவரையும் சரியான முறையில் ஒழுங்குபடுத்துவதாகவும் ஒவ்வொருவரும் தத்தம் பணியைச் செவ்வனே செய்யத் துணைபுரிவதாகவும் இருக்க வேண்டும்.

நம்பிக்கையாளருக்கும் பாடகர் குழுவினருக்கும் ஒதுக்கப்படும் இடம் அவர்களின் ) செயல்முறைப் பங்கேற்புக்கு உதவிடும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.114

திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர், திருத்தொண்டர், பிற பணியாளர் ஆகியோருக்கான இருக்கைகள் திருப்பீட முற்றத்தில் இருக்கும். கூட்டுத்திருப்பலியாளருக்கும் அங்கே இருக்கைகள் தயார் செய்யப்பட்டிருக்கும். இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோவிலின் வேறொரு பகுதியில், பீடத்துக்கு அருகில் இருக்கைகள் போடப்படும்.

இவையெல்லாம் படி நிலை அமைப்பு முறையையும் பணிகளின் பன்முகத் தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என்றாலும் இவை தமக்குள் நெருங்கிய, இணைந்த ஒன்றிப்பை உருவாக்குகின்றன. இதுவே இறைமக்கள் அனைவரின் ஒன்றிப்பைத் தெளிவாகக் காட்டுகின்றது. அந்த இடத்தின் இயல்பும் அழகும் அங்குள்ள பொருள்களும் இறைப்பற்றைத் தூண்டி வளர்ப்பவையாகவும் கொண்டாடப்படும் மறைநிகழ்வுகளின் புனிதத்தை வெளிப்படையாகக் காட்டுபவையாகவும் அமைதல் வேண்டும்.

II. திருக்கூட்டத்துக்காகத் திருப்பீட முற்றத்தை அமைத்தல்

295. திருப்பீட முற்றத்தில் பீடம் அமைந்திருக்கும்; அங்கேதான் கடவுளின் வார்த்தை அறிவிக்கப்படுகின்றது. அருள்பணியாளர், திருத்தொண்டர், மற்ற பணியாளர்கள் அனைவரும் தத்தம் பணியை நிறைவேற்றுவர். அது கோவிலில் மக்கள் அமரும் இடத்தை விடச் சிறிது உயர்ந்து அல்லது தனிப்பட்ட வடிவமைப்புடன் அழகு செய்யப்பட்டு வேறுபட்டிருக்கும். நற்கருணைக் கொண்டாட்டம் வசதியாக நடைபெறுவதற்கும் மா" பார்ப்பதற்கும் ஏதுவாகப் பெரிதாக அமைந்திருக்கலாம்."115

114 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Interecumenici, 26.09.1964, எண். 97-98: A.A.S. 56 எண், 97-98: A.A.S. 56 (1964) பக். 899.
115 காண். மேற்படி, எண் 91: A.A.S. 56 (1964) பக். 898.

==============↑ பக்கம் 76

பீடமும் அதை அணிசெய்தலும்

996. பீடத்தின் மீது அடையாள முறையில் சிலுவைப்பலி நிறைவேற்றப்படுகின்றது; பீடம் ஆண்டவரின் திருவிருந்து மேசையும் ஆகும். திருப்பலியில் பங்கேற்க இறைமக்கள் இந்த மேசையைச் சுற்றி ஒன்றுகூட்டப்படுகிறார்கள்; மேலும் நற்கருணை வழியாக நிகழும் நன்றியறிதலின் மையமாகவும் அது அமைகின்றது. 297. புனித இடத்தில் பீடத்தின் மீது திருப்பலி நடைபெறும்; பிற இடங்களில், தக்கதொரு மேசையைப் பீடமாகப் பயன்படுத்தலாம்; ஆனால் எப்போதும் பீடத் துகிலும் திருமேனித் துகிலும் சிலுவையும் மெழுகுதிரிகளும் பயன்படுத்தப்பட வேண்டும்.

298. ஒவ்வொரு கோவிலிலும் அசையாப் பீடம் இருப்பது நல்லது. ஏனெனில் அது உயிருள்ள கல்லாகிய (1 பேது 2:4; காண். எபே 2:20) இயேசு கிறிஸ்துவை மிகத் தெளிவாகவும் நிரந்தரமாகவும் குறிக்கின்றது. திருக்கொண்டாட்டங்கள் நிறைவேற்றப்படும் பிற இடங்களில் அசையும் பீடம் இருக்கலாம்.
பீடம் நகர்த்த முடியாதபடி தளத்தோடு பொருத்தப்பட்டிருந்தால் அசையாப் பீடம் என்றும், நகர்த்தக்கூடியதானால் அசையும் பீடம் என்றும் சொல்லப்படும்.

399. எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் பீடத்தைச் சுற்றிவரவும் மக்களைப் பார்த்துத் திருப்பலி நிறைவேற்றவும் பீடம் சுவரோடு பொருத்தப்படாமல் தனித்து இருக்குமாறு அமைவது விரும்பத்தக்கது. நம்பிக்கையாளர் திருக்கூட்டத்தின் கவனத்தை இயல்பாக ஈர்த்திடும் வண்ணம் பீடம் மையமான இடத்தில் அமைய வேண்டும். 116 பீடம் வழக்கமாக அசையாததும் நேர்ந்தளிக்கப்பெற்றதாயும் இருக்கும்.

300. அசையாப் பீடமோ அசையும் பீடமோ உரோமைச் சடங்கு நூலில் கண்டுள்ளபடி நேர்ந்தளிக்கப்பெறும். எனினும் அசையும் பீடத்தைப் புனிதப்படுத்தினால் போதும்.

301. திரு அவையின் மரபுப்படியும் பீடத்துக்கு உரிய உட்பொருள் விளங்கவும் அசையாப் பீடத்தின் மேசை, கல்லால் - அதுவும் இயற்கைக் கல்லால் - ஆனதாக இருக்க வேண்டும். எனினும் ஆயர் பேரவையின் முடிவின்படி தகுதி வாய்ந்த, திண்ணிய, கைவேலைப்பாடு உள்ள வேறு பொருள்களையும் பீட மேசை உருவாக்கப் பயன்படுத்தலாம். பீடத் தூண்களும் அதன் ஆதாரங்களும் தகுதியும் உறுதியும் உள்ள எவ்வகைப் பொருளாலும் அமைக்கப்படலாம்.

அசையும் பீடத்தை அமைப்பதற்கு, அந்தந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதி மரபுகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் ஏற்ப, வழிபாட்டு உபயோகத்துக்குச் சிறப்பும் உறுதியும் வாய்ந்த எந்தப் பொருளையும் பயன்படுத்தலாம்.

302. புனிதர்களின் திருப்பண்டங்களை, நேர்ந்தளிக்கப்பெறும் பீடத்துக்கு அடியில் வைக்கும் வழக்கம் தொடர்ந்து நடைபெறும்; அப்பண்டங்கள் மறைச்சாட்சியருடையனவாய் இல்லாவிட்டாலும்கூட அவற்றின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். உண்மையாகவே புனிதர்களுடையனவாய் இருப்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.

303. புதிய கோவில்களைக் கட்டும்போது ஒரு பீடம் மட்டும் அமைப்பது சிறந்தது. ஏனெனில் அது நம்பிக்கையாளர் திருக்கூட்டத்தில் ஒரே கிறிஸ்துவையும் திரு அவையின் ஒரே நற்கருணையையும் உணர்த்தும்.

ஏற்கெனவே கட்டப்பட்ட கோவில்களில் பழைய பீடத்தின் அமைப்பு மக்களின் பங்கேற்புக்குக் கடினமாக இருந்தால், அதே சமயத்தில் அதன் கலை நயம் எந்தச் சேதமும் இல்லாமல் அதை மாற்றி அமைக்க முடியாத நிலையில் இருந்தால் கலை அழகுடனும் முறையாக நேர்ந்தளிக்கப்பட்டதுமான வேறொரு அசையாப் பீடம் எழுப்பப்பட வேண்டும்; அதன்மீது மட்டுமே திருச்சடங்குகள் நிறைவேற்றப்பட வேண்டும். புதிய பீடத்தின் மீதுள்ள கவனம் பிறழ்ந்து போகா வண்ணம் பழைய பீடத்தைச் சிறப்பான முறையில் அணிசெய்யக் கூடாது.

116 காண். மேற்படி.

==============↑ பக்கம் 77

304. ஆண்டவருடைய நினைவுக்கொண்டாட்டத்தின் மீதும் அவருடைய திரு உட... இரத்தமும் வழங்கப்படும் திருவிருந்தின் மீதும் இருக்க வேண்டிய இறைப்பட முன்னிட்டு, பீடத்தின்மேல் வெண்ணிறத்தில் ஒரு பீடத் துகிலாவது விரிக்க வேம் அதன் அளவும் தோற்றமும் ஒப்பனையும் பீட அமைப்புக்கு ஏற்றதாயும் இருக்க வேண்டும்

305. பீடத்தை அணிசெய்வது மிதமான அளவோடு இருக்க வேண்டும்.

திருவருகைக் காலத்தில் அக்காலத்தின் தன்மைக்கு ஏற்ப, பீடத்தை மிதமான அளவில் மலர்களால் அணிசெய்தல் வேண்டும். அது ஆண்டவருடைய பிறப்பின் நிறை மகிழ்வை முன்னறிவிப்பதாய் அமைதல் கூடாது. தவக் காலத்தில் பீடத்தை மலர்களால் அணிசெய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. "அகமகிழ்" ஞாயிற்றுக்கிழமை (தவக் கால 4-ஆம் ஞாயிறு), பெருவிழா, விழா நாள்கள் இதற்கு விதிவிலக்கு ஆகும்.

மலர்களால் அணிசெய்வது எப்பொழுதும் அளவுக்கு மிகாமல் இருத்தல் நல்லது. மலர்கள் பீட மேசையின் மீது வைக்கப்படுவதைவிட பீடத்தைச் சுற்றி வைக்கப்பட வேண்டும்.

306. பீடத்தின்மீது திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தேவைப்படுபவற்றை மட்டும் வைக்கலாம். அவையாவன: கொண்டாட்டத்தின் தொடக்கமுதல் நற்செய்தி அறிவிப்புவரை நற்செய்தி வாசக நூல், காணிக்கைப் பொருள்களை ஒப்புக்கொடுத்தல் முதல் திருக்கலங்களைத் தூய்மைப் படுத்தும்வரை திருக்கிண்ணமும் திரு அப்பத் தட்டும், தேவைப்படின் நற்கருணைக் கலம், திருமேனித் துகில், திருக்கிண்ணத் துகில், திருக்கிண்ண அட்டை, திருப்பலி நூல் ஆகியவை.

அருள்பணியாளரின் குரலைப் பெருக்கிக் கொடுப்பதற்காக ஒலிவாங்கிகள் ஏற்ற வகையில் அமைக்கப்படும்.

307. திருவழிபாட்டு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றின்போதும் வணக்கத்துக்கும் விழாச் சிறப்பின் தரத்துக்கும் அடையாளமாக அமையும் மெழுகுதிரித் தண்டுகள் தேவைப்படுகின்றன (காண். எண் 117). பீடம், திருப்பீட முற்றம் ஆகியவற்றின் அமைப்புக்குப் பொருத்தமாக இத்தண்டுகள் பீடத்தின் மீதோ பீடத்தைச் சுற்றியோ வைக்கப்படும்; ஆனால் நம்பிக்கையாளர் பீடத்தின் மீது இருப்பனவற்றையும் நிகழ்வனவற்றையும் எளிதில் பார்ப்பதற்குத் தடை ஏற்படாதவாறு இத்தண்டுகள் வைக்கப்பட வேண்டும். 308. அவ்வாறே திருக்கூட்டம் எளிதில் காணுமாறு கிறிஸ்துவின் உருவம் தாங்கிய திருச்சிலுவை பீடத்தின் மீதோ அதன் அருகிலோ இடம்பெறும்.

ஆண்டவருடைய மீட்பளிக்கும் பாடுகளை நம்பிக்கையாளருக்கு நினைவூட்டும் வண்ணம் இச்சிலுவை திருவழிபாட்டுச் சடங்குகளுக்குப் புறம்பேயும் பீடத்தின் அருகில் இருக்கும்.

வாசக மேடை

309 இறைவார்த்தையின் மாண்புக்கு ஏற்ப கோவிலில் இறைவார்த்தை அறிவிக்கப்பட ஒரு பொருத்தமான இடம் அமைய வேண்டும். வார்த்தை வழிபாட்டின்போது வேண்டும்.117 நம்பிக்கையாளரின் கவனத்தை இயல்பாகவே ஈர்க்கும் வண்ணம் வாசக மேடை அமைய வேண்டும்.

இறைவார்த்தை அறிவிக்கும் இடம் வழக்கமாக நிலையான வாசக மேடையாக இருக்க வேண்டும். அது இடம் பெயரக்கூடிய புத்தகத் தாங்கி மட்டும் அல்ல. அந்தந்தக் கோவிலில் அமைப்புக்கு ஏற்ப இம்மேடை தகுந்த இடத்தில் அமைய வேண்டும். இதன் பார்க்கவும் கேட்கவும் முடியும். நம்பிக்கையாளர் வாசகரையும் திருநிலைப்படுத்தப்பட்ட பணியாளரையும் எளிதாகப் பார்க்கவும் கேட்கவும் முடியும்.

117 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Interecumenici, 26.09.1964, எண். 97-98: A.A.S. 56 எண், 97-98: A.A.S. 56 (1964) பக். 898.

==============↑ பக்கம் 78

வாசக மேடையிலிருந்து மட்டும் வாசகங்களும் பதிலுரைத் திருப்பாடலும் பாஸ்கா அறிக்கையும் அறிவிக்கப்படும். இங்கிருந்தே மறையுரை வழங்கப்படும். பொது மன்றாட்டின் கருத்துகள் அறிவிக்கப்படும். வாசகப்பணியாளர் மட்டும் வாசக மேடையில் ஏறுவது அதன் மாண்பை நிலைநிறுத்துவது ஆகும்.

புதிய வாசக மேடையைத் திருவழிபாட்டில் பயன்படுத்தும் முன் உரோமைத் திருச்சடங்கு நூலில் விவரித்துள்ளபடி புனிதப்படுத்துதல் ஏற்புடையது ஆகும்.

திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளருக்கான இருக்கையும் மற்ற இருக்கைகளும்

310. திருக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி மன்றாட்டை வழிநடத்தும் பணியைத் திருப்பல் நிகழ்த்தும் அருள்பணியாளருடைய இருக்கை உணர்த்த வேண்டும். எனவே அருள்பணி யாளருக்கும் திருக்கூட்டத்துக்கும் இடையே உள்ள தொடர்புக்கு இடையூறாக உள்ள அதிக தூரம், பீடத்துக்குப் பின்னால் நற்கருணைப் பேழை நடுவில் இடம் பெறுதல் போன்ற அக்கட்டடத்தின் உருவ அமைப்போ மற்ற வடிவங்களோ இடையூறாக இல்லாதிருந்தால், மக்களைப் பார்த்த வண்ணம் திருப்பீட முற்றத்தின் மேல் பகுதியே அத்தகைய இருக்கைக்கு உரிய பொருத்தமான இடம் ஆகும். எவ்வாறாயினும் பகட்டான அரியணைக்கு உரிய எந்தத் தோற்றமும் இருக்கக் கூடாது.119 திருவழிபாட்டின் பயன்பாட்டுக்கு வரும்முன், அந்த இருக்கையை உரோமைத் திருச்சடங்கு நூலில் கொடுக்கப்பட்டுள்ள சடங்கின்படி புனிதப்படுத்துதல் சரியானது.120

அதே போன்று திருப்பீட முற்றத்தில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர்களுக்கும் கூட்டுத்திருப்பலியில் கலந்து கொள்ளாமல் அங்கே பாடல் குழுவினர் உடை அணிந்திருக்கும் பிற அருள்பணியாளர்களுக்கும் இருக்கைகள் போடப்படும்.

திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளருக்கு அருகில் திருத்தொண்டருக்கு இருக்கை வைக்கப்பட்டிருக்கும். பிற பணியாளர்களின் இருக்கைகள் திருநிலையினரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையிலும் தங்களுக்கு உரிய பணியை எளிதில் செய்யும் வகையிலும் பிரித்துப் போடப்பட்டிருக்கும்.131

III. கோவிலின் ஒழுங்கமைவு

நம்பிக்கையாளருக்கு உரிய இடங்கள்

311. நம்பிக்கையாளர் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களை நன்கு கண்டு, உணர்ந்து பங்கேற்பதற்கு ஏற்றவாறு, உரிய கவனத்துடன் அவர்களுக்கு இடங்கள் அமைக்க வேண்டும். வழக்கம் போல அவர்கள் பயன்பாட்டுக்கு மரத்தினாலான நீள் இருக்கைகள் அல்லது நாற்காலிகளை அமைப்பது விரும்பத்தக்கது. ஆனால் தனிப்பட்ட ஆள்களுக்கென்று இருக்கைகளை ஒதுக்கி வைக்கும் வழக்கம் கண்டனத்துக்கு உரியது ஆகும்.132 நம்பிக்கையாளர் வழிபாட்டுக் கொண்டாட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்ற உடலின் நிலைகளை எளிதில் மேற்கொள்ளவும் திருவிருந்துக்கு வசதியாகச் சென்று வரவும் தக்கவாறு அவற்றைக் குறிப்பாக புதிதாகக் கட்டப்பட்ட கோவில்களில் அமைக்க வேண்டும்.

நம்பிக்கையாளர் அருள்பணியாளர்களையும் திருத்தொண்டரையும் வாசகர்களையும் கண்டால் மட்டும் போதாது; அவர்கள் சொல்வதையும் எளிதாகக் கேட்க வேண்டும். இதற்குத் தேவையானால் நவீன தொழில் நுட்பக் கருவிகளையும் பயன்படுத்தலாம்.

118 காண். உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 900-918.
119 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Inter 0ecumenici, 26.09.1964, எண் 92: A.A.S. 56 (1964) பக். 898.
120 காண். உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 880-899
121 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Inter 0ecumenici, 26.09.1964, எண் 92: A.A.S. 56 (1964) பக். 898.
122 காண். திருவழிபாடு, 32.

==============↑ பக்கம் 79

பாடகர் குழு, இசைக் கருவிகளுக்கு உரிய இடம்

313. அந்தந்தக் கோவிலின் அமைப்புக்கு ஏற்ப, பாடகர் குழு தன் இயல்பை வெளிப்பா: வகையில் கோவிலில் இடம் பெற வேண்டும்; இதனால் அது கூடியுள்ள நம்பிக்கை குழுமத்தின் ஒரு பகுதி என்பதும் அது ஒரு தனிப்பட்ட பணியை ஆற்றுகின்றது என்பது விளங்கும். மேலும் கோவிலில் பாடகர் குழுவுக்கு அளிக்கப்பட்ட இடம் அக்குழு . வழிபாட்டுப் பணியை எளிதாக ஆற்றுவதற்கும் அக்குழுவினர் ஒவ்வொருவரும் திருப்பலியில் அருளடையாள முறையில் முழுமையாகப் பங்கெடுப்பதற்கும் ஏதுவாக இருக்க் வேண்டும்.

313. இசைப் பெட்டியும் அனுமதிக்கப்பெற்ற பிற இசைக் கருவிகளும் பாடகர் குழுவினருக்கும் பாடுகின்ற திருக்கூட்டத்தினருக்கும் துணைபுரியப் பொருத்தமான இடத்தில் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு இவற்றைத் தனித்து இயக்கும்போது அனைவரும் எளிதில் கேட்கலாம். திருவழிபாட்டில் பயன்படுத்துவதற்குமுன் இசைப் பெட்டியை உரோமைத் திருச்சடங்கு நூலில் விவரித்துள்ளபடி புனிதப்படுத்துதல் நல்லது.

திருவருகைக் காலத்தில், அதன் தன்மைக்கு ஏற்றவாறு, இசைப் பெட்டியையும் பிற இசைக் கருவிகளையும் மிதமாக, ஆண்டவருடைய பிறப்பின் நிறை மகிழ்வை முன்னறிவிக்காத அளவில் மீட்டுதல் வேண்டும்.

தவக் காலத்தில் இசைப் பெட்டியும் பிற இசைக் கருவிகளும் பாடுவதற்கு மட்டுமே உதவியாக வாசிக்கப்படும். "அகமகிழ்" ஞாயிற்றுக்கிழமை (தவக்கால 4-ஆம் ஞாயிறு), பெருவிழா, விழா நாள்கள் இதற்கு விதிவிலக்கு ஆகும்.

தூய்மைமிகு நற்கருணையைப் பாதுகாக்கும் இடம்

314 ஒவ்வொரு கோவிலின் அமைப்புக்கும் அவ்விடத்து முறையான மரபுகளுக்கும் ஏற்ற வகையில் கோவிலின் ஒரு பகுதியில் திருப்பேழை ஒன்றில் தூய்மைமிகு நற்கருணை பாதுகாக்கப்படும். அது மேன்மைமிக்கதும் எடுப்பான தோற்றமுடையதும் தெளிவாகக் காணக்கூடியதும் தகுந்த இடத்தில் அணிசெய்யப்பட்டதும் இறைவேண்டல் செய்வதற்கு ஏற்றது மாக இருக்கும்.' 15

கோவிலில் வழக்கமாக ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே இருக்கும். அது அசைக்க முடியாதவாறு அமைக்கப்பட்டிருக்கும். அது உறுதியான, உடைக்க முடியாத, ஒளி ஊடுருவாத பொருளால் ஆனதாக இருக்க வேண்டும். அது இறை நிந்தனை எனும் ஆபத்தைத் தவிர்க்கும் வண்ணம் மிகுந்த பாதுகாப்புடன் பூட்டி வைக்கப்படும்.126 அத்தோடு விவரித்துள்ளபடி புனிதப்படுத்துதல் நல்லது.127 அதைத் திருவழிபாட்டில் பயன்படுத்தும் முன் உரோமைத் திருச்சடங்கு நூலில்

315. தூய்மைமிகு நற்கருணை பாதுகாக்கப்பட்டிருக்கும் திருப்பேழை மிகப் வைக்கப்படுவது ஏற்றது அல்ல.128 பொருத்தமான ஓர் அடையாளம் என்ற வகையில் திருப்பலி நிறைவேற்றப்படும் பீடத்தில்

123 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Musican Sacram, எண் 23: A.A.S. 59 (1967) பக். 307.
124 காண். உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 10521067.
125 --- திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticummysterium, 25.05.1967. எண் 54: A.Aப்ட் (1967) பக். 568; Inter 08ccumenici, 26.09.1964, எண் 95: A.A.S. 56 (1964) பக். 898.
126 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Euclitaristicum hysterium, 25.05.1967, எண் 52: A.A.S. 59 (1967) பக். 9 Inter Occcumenici, 26.09.1964, எண் 95: A.A.S. 56 (1964) பக். 898, அருளடையாளங்களின் பேராயம், NIM umquam tempore, 28.05.1938, எண் 4: A.A.S. 30 (1938) பக். 199- 200; உரோமைத் திருச்சடங்கு இ' De Sacra Communione et de cultu mysterii eucharistici extra Missam, 1973, எண். 10-11; திச 938S'
127 காண். உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 919-929, (1967) பக். 569.
128 காண், திருச்சடங்குத் திருப்பேராயும், Eucharisticum mysterium, 25.05.1967, எண் 55: AA'

==============↑ பக்கம் 80

ஆதலின் மறைமாவட்ட ஆயரின் முடிவுக்கு ஏற்ப நற்கருணைப் பேழையைப் பின்வரும் முறையில் வைக்கலாம்:

அ) திருப்பீட முற்றத்தில் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் பீடத்தை விடுத்து, அதனைக் கொண்டாட்டங்கள் நடத்தப்படாத பழைய பீடம் உட்பட வேறொரு பொருத்தமான இடத்தில் நல்லதொரு வடிவமைத்து வைக்க வேண்டும் (காண். எண் 303).

ஆ) அல்லது நம்பிக்கையாளரின் தனி ஆராதனைக்கும் இறைவேண்டலுக்கும் ஏதுவான ஒரு சிற்றாலயத்தில் வைக்கலாம்.129 ஆனால் அது கோவிலின் வடிவமைப்பில் இணைந்தும் கிறிஸ்துவில் நம்பிக்கையாளர் தெளிவாகக் காணக்கூடியதாயும் இருக்க வேண்டும்.

316. தொன்மையான மரபுப்படி நற்கருணைப் பேழையின் அருகில் எண்ணெயினாலோ மெழுகினாலோ எரியும் சிறப்பு விளக்கு எப்போதும் சுடர்விட்டுக்கொண்டிருக்கும். அது கிறிஸ்துவின் உடனிருப்பைக் குறித்துக் காட்டி அதற்கு மதிப்பு அளிக்கின்றது.''

317. தூய்மைமிகு நற்கருணையைப் பாதுகாப்பது பற்றி விதிமுறைகளில் குறிக்கப்பட்டுள்ள பிறவற்றைச் சிறிதும் மறத்தலாகாது.131

திரு உருவங்கள்

318. புனித நகராம் எருசலேமில் கொண்டாடப்படும் விண்ணகத் திருவழிபாட்டை முன்சுவைப்பதாகவே மண்ணகத் திருவழிபாட்டில் திரு அவை பங்கு கொள்கின்றது. திரு அவை அந்நகரை நோக்கிப் பயணம் செய்கின்றது. அங்கேதான் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றார். புனிதர்களை வணக்கத்துடன் நினைவுகூர்வதால் அவர்களோடு பங்குகொள்ளவும் தோழமை கொள்ளவும் திரு அவை எதிர்நோக்குகின்றது.132

திரு அவையின் மிகத் தொன்மை வாய்ந்த மரபுப்படி ஆண்டவர், புனித கன்னி மரியா, புனிதர் ஆகியோரின் திரு உருவங்கள் நம்பிக்கையாளரின் வணக்கத்துக்காகக் கோவில்களில் வைக்கப்படும்.133 அங்கே நடைபெறும் நம்பிக்கையின் மறைநிகழ்வுகளுக்கு நம்பிக்கையாளரை இட்டுச் செல்லும் வண்ணம் அவை அமைக்கப்படும். ஆகவே அவை வரைமுறையின்றி எண்ணிக்கையில் மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையாளரின் கவனம் திருநிகழ்ச்சிகளிலிருந்து சிதறிவிடா வண்ணம் அத்திரு உருவங்கள் சரியான ஒழுங்கு முறையில் அமைக்கப்படும்.134 வழக்கமாக ஒரே புனிதரின் திரு உருவம் ஒன்றுக்கு மேல் இருக்கக்கூடாது. பொதுவாக, திரு உருவங்களைக் கோவிலில் வைத்து அணி செய்வதில் திருக்கூட்டம் முழுவதின் இறைப்பற்றையும் திரு உருவங்களின் அழகு, அவற்றின் மாண்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

129 மேற்படி, எண் 53: A.A.S. 59 (1967) பக். 568; உரோமைத் திருச்சடங்கு நால், De Sacra Communione et de cult mysteri eucharistici extra Missan, 1973, எண் 9; திச 938$2; இரண்டாம் ஜான் பால் Dominicae Caenae, 24.02.1980, எண் 3: A.A.S. 72 (1980) பக். 117-119.
130 காண். திச 940; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum nysterium, 25.05.1967. எண் 57, A.A.S. 59 (1967) பக். 569; உரோமைத் திருச்சடங்கு நூல், De Sacra Communione et de cultu mysterii eucharistici extra Missam, 1973, எண் 11.
131 காண். அருளடையாளங்களின் பேராயம், Nulli umquam tempore, 28.05.1938: A.A.S. 30 (1938) பக். 198-207; திச 934-944.
132 காண். திருவழிபாடு, 8.
133 காண், உரோமை அயர் திருச்சடங்கு நூல், Ordo Dedicationis ecclesiae et altaris, 1977, cli, 4. எண் 10; உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 984-1031.
134 காண். திருவழிபாடு, 125.

==============↑ பக்கம் 81

இயல் 6
திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தேவையானவை

1. நற்கருணைக் கொண்டாட்டத்துக்கான அப்பமும் இரசமும்

319. கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றித் திரு அவை ஆண்டவரின் திருவிருந்து, கொண்டாடுவதற்கு அப்பத்தையும் தண்ணீர் கலந்த திராட்சை இரசத்தையும் என்றால் பயன்படுத்தி வந்துள்ளது.

320. நற்கருணைக் கொண்டாட்டத்துக்குப் பயன் படுத்தப்படும் அப்பம் கோதுரை, மாவினால் அண்மையில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அது இலத்தீன் திரு அவையின் பழமை வாய்ந்த மரபுப்படி புளிப்பற்றதாகவும் இருத்தல் வேண்டும்.

321. அதனுடைய அடையாளத்தன்மையைக் காணும்படியாக, நற்கருணைம். கொண்டாட்டத்துக்குப் பயன்படும் பொருள் உண்மையாகவே உணவின் தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும். நற்கருணை அப்பம் புளிப்பற்றதாகவும் மரபு வழிவந்த வடிவத்தில் செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மக்களோடு சேர்ந்து திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர் திரு அப்பத்தைப் பல துண்டுகளாகப் பிட்டு அவற்றை நம்பிக்கையாளர் சிலருக்கேனும் பகிர்ந்து அளிக்கும் வகையில் அவ்வப்பம் தயாரிக்கப்பட வேண்டும். நற்கருணை உட்கொள்பவரின் எண்ணிக்கையின் பொருட்டும் வேறு சில அருள்பணித் தேவைகளுக்காகவும் சிறிய அப்பங்களைப் பயன்படுத்துவது விலக்கப்படவில்லை. அப்பம் பிடும் செயல் திருத்தூதர் காலத்தில் நற்கருணை என்றே அழைக்கப்பட்டது. இச்செயல் ஒரே அப்பத்தில் அனைவருக்கும் உள்ள ஒன்றிப்பின் அடையாளத்தையும் அதன் ஆற்றலையும் தனிச் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றது. ஒரே அப்பம் சகோதரர் சகோதரிகளுக்குள் பகிர்ந்து கொள்ளப்படுவதால் அவர்களிடையே உள்ள அன்பை வெளிப்படுத்துகின்றது.

322. நற்கருணைக் கொண்டாட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் திராட்சை இரசம் இயற்கையான திராட்சைப் பழ இரசமாகவும் (காண். லூக் 22:18) கலப்படம் இல்லாததும் அதாவது வேற்றுப் பொருள்களின் கலவை இல்லாததுமாய் இருத்தல் வேண்டும்.

333. நற்கருணைக்கு எனப் பயன்படுத்தப்படும் அப்பமும் இரசமும் கெடாதவாறு மிகுந்த கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்; அதாவது, இரசம் புளிப்பேறக் கூடாது; அப்பம் கெட்டுவிடக் கூடாது அல்லது எளிதில் உடைக்க முடியாதபடி மிகவும் இறுகிவிடக் கூடாது.

334. அர்ச்சிப்புக்குப் பின்னரோ நற்கருணை உட்கொள்ளும்போதோ அருள்பணியாளர் இந்திண்ணத்தில் இரசம் ஊற்றப்படவில்லை, தண்ணீர் மட்டும் உள்ளது எனக் கண்டால், அவர் அத்தண்ணீரை வேறொரு பாத்திரத்தில் ஊற்றிவிட்டு, திருக்கிண்ணத்தில் இரசமும் சிறிது தண்ணீரும் ஊற்றி, திருக்கிண்ணத்தை அர்ச்சிப்பு செய்வதற்கு உரிய பகுதியைச் சொல்லி இரசத்தை அர்ச்சிப்பு செய்வார்; மீண்டும் அப்பத்தை அர்ச்சிக்கத் தேவை இல்லை.

II. கோவில் பொருள்கள், பொதுவாக

305. கோவில் கட்டுவது பற்றிக் குறிப்பிட்டது எல்லாக் கோவில் பொருள்களுக்கும் பொருந்தும்: அதாவது, திரு அவை அந்தந்த நிலப்பகுதியின் கலைகளுக்கு இடம் அளித்து, மக்களின் பண்பாட்டுக்கும் மரபுக்கும் ஏற்றவாறு தழுவியமைப்பதை ஆதரிக்கின்றது. ஆனால் இத்திருப்பொருள்களுக்கு உரிய பயன்பாட்டுக்கு அவை பொருத்தமாக இருக்க வேண்டும்' 135

135 காண். திருவழிபாடு, 128.
==============↑ பக்கம் 82

மேலும் இக்காரியத்திலும் மெய்யான கலையுணர்வுடன் சீர்மிகு எளிமையும் இணைந்திருக்க வேண்டும்.

326. திருப்பொருள்களைச் செய்வதற்கான மூலப்பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது, மரபுப்படி உள்ளவையோடு, நம் காலத்தின் மன நிலைக்கு ஏற்ப மேன்மைமிக்க, நிலைத்திருக்கக்கூடிய வழிபாட்டுப் பயன்பாட்டுக்குப் பொருந்தக் கூடியவற்றையே தேர்ந்தெடுக்க வேண்டும். இதை அந்தந்த நிலப்பகுதியின் ஆயர் பேரவை முடிவு செய்யும் (காண். எண் 390).
III. திருக்கலங்கள்

327. திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தேவையானவற்றுள் திருக்கலங்கள் தனிச் சிறப்பு உடையவை; அவற்றுள் திருக்கிண்ணமும் அப்பத் தட்டும் தனிச்சிறப்பு வாய்ந்தவை; ஏனெனில் இவை இரசம், அப்பம் ஆகியவற்றை ஒப்புக்கொடுக்கவும் அர்ச்சிப்பு செய்யவும் உட்கொள்ளவும் பயன்படுகின்றன.

328. திருக்கலங்கள் உயர்தர உலோகத்தால் செய்யப்பட வேண்டும். அவை துரு பிடிக்கக்கூடிய உலோகத்தாலோ தங்கத்தைவிட தாழ்ந்த தரம் கொண்ட ஓர் உலோகத்தாலோ செய்யப்பட்டால் பொதுவாக, உட்புறம் தங்க முலாம் பூசப்படல் வேண்டும்.

329. ஆயர் பேரவையின் முடிவின்படியும் திருத்தூது ஆட்சிப் பீடத்தின் ஒப்புதலின்படியும் திருக்கலங்களைச் செய்ய அந்தந்த நிலப்பகுதியில் மிக உயர்ந்த தரமும் உறுதியும் வாய்ந்த பொருள்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக திருப்பணிக்கு உகந்த வைரம் பாய்ந்த அல்லது உறுதி மிகுந்த மரத்தால் செய்யப்படலாம். ஆனால் இவை புனித பயன்பாட்டுக்கு உகந்தவையாய் இருக்க வேண்டும். இவ்வகையில் எளிதில் உடையாத, அழியாத பொருள்களே விரும்பத்தக்கன. இது நற்கருணை வைக்க வேண்டிய திரு அப்பத் தட்டு, நற்கருணைச் சிமிழ், நற்கருணைக் கலம், கதிர்ப் பாத்திரம் மற்றும் இவை போன்ற பிற திருக்கலங்களுக்கும் பொருந்தும்.

330. ஆண்டவரின் திரு இரத்தத்தைக் கொண்டிருக்கிற திருக்கிண்ணம் போன்ற கலங்களின் குவளைப் பகுதி திரவத்தை உறிஞ்சிடாத பொருளால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவற்றின் அடிப்பகுதி வேறு உறுதியான, தரமான பொருள்களால் செய்யப்படலாம்.

331. அர்ச்சிப்பு செய்யப்படுவதற்காக திரு அப்பங்கள் வைக்கப்படும் திரு அப்பத் தட்டு, அருள்பணியாளருக்கும் திருத்தொண்டர், பிற பணியாளர்கள், நம்பிக்கையாளர் ஆகியோருக்கும் தேவையான திரு அப்பத்தை வசதியாக வைக்கும் அளவுக்குப் பெரியதாக இருக்கலாம்.

332. திருக்கலங்களின் உருவத்தை அந்தந்த நிலப்பகுதியின் பண்பாட்டுக்குப் பொருத்தமாக அமைக்கக் கலைஞர்கள் முயல்வார்களாக; ஆனால் திருக்கலங்கள் ஒவ்வொன்றும் அதனதனுக்கு உரிய வழிபாட்டுப் பயன்பாட்டுக்கு ஏற்றதாய் இருக்க வேண்டும். ஆனால் அன்றாடம் உபயோகிக்கப்படும் கலங்களிலிருந்து தெளிவாக வேறுபட்டிருக்க வேண்டும்.

333. திருக்கலங்கள் திருவழிபாட்டு நூல்களில் குறிப்பிட்டுள்ள சடங்குமுறைப்படி புனிதப்படுத்தப்படும்.''

334, திருப்பொருள் அறையில் தூய தொட்டி ஒன்று அமைக்கும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதில் திருக்கலங்களையும் துகில்களையும் தூய்மை செய்யப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் ஊற்றப்படும் (காண். எண் 280).

136 காண். உரோமை ஆயர் திருச்சம்.ங்கு நூல், Ordo Dedicationis ecclesiae et altaris, 1977; உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 1068-1084.
==============↑ பக்கம் 83

IV. திருவுடைகள்

335, கிறிஸ்துவின் உடலாகிய திரு அவையில் உறுப்பினர் அனைவரும் ஒரே பா. ஆற்றுவதில்லை. நற்கருணைக் கொண்டாட்டத்தில் நடைபெறும் பல்வேறு திருப்பணி திருவுடைகளின் வேறுபாட்டால் வெளிப்படையாக உணர்த்தப்படுகின்றன. என.ே திருவுடைகள் பணியாளர் ஒவ்வொருவருக்கும் உரிய பணியின் அடையாளமாய் இருக்க வேண்டும். மேலும் இவ்வுடைகள் திருநிகழ்ச்சியின் சிறப்பை உணர்த்தவும் பயன்பட வேண்டும். அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள் ஆகியோர் அணியும் திருவுடைகளும் பொது நிலைப் பணியாளர்கள் அணியும் உடைகளும் திருவழிபாட்டில் பயன்படுத்தப்படும்முன் உரோமைத் திருச்சடங்கு நூலில் விவரித்துள்ளபடி புனிதப்படுத்தப்படுவது பொருத்தம் ஆகும்.137

336. திருப்பட்டம் பெற்ற எல்லாப் பணியாளர்களுக்கும், நியமனம் பெற்ற நிலைப்பணியாளர்கள் அனைவருக்கும் பொதுவான திருவுடை 'ஆல்பா' எனப்படும் நீள் வெண்ணாடை ஆகும்; அது உடலோடு பொருந்தியிருக்குமாறு தைக்கப்பட்டிருந்தால் ஒழிய, இடைக்கச்சையால் இடுப்பைச் சுற்றிக் கட்டப்படும். இந்தப் பொது உடை கழுத்தைச் சுற்றி முழுவதும் மறைக்கவில்லை என்றால் அதை அணிவதற்குமுன் கழுத்துத் துகில் அணியப்படும். நீள் வெண்ணாடைக்குப் பதிலாக குறுகிய வெண்ணாடையைப் பயன்படுத்தலாகாது. திருப்பலி உடையோ திருத்தொண்டர் உடையோ அணியப்படும் சமயங்களிலும், ஒழுங்குகளின்படி திருப்பலி உடையையோ திருத்தொண்டர் உடையையோ அணியாமல் தோள்துகில் மட்டும் அணியும் சமயங்களிலும் குறுகிய வெண்ணாடையோ அங்கியோ நீள் வெண்ணாடைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட முடியாது.

337. வேறுவிதமாகக் குறிப்பிட்டிருந்தாலன்றி, திருப்பலியின்போதும் திருப்பலியோடு நேரடியாகத் தொடர்பு கொண்ட வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளின்போதும் அருள்பணியாளருக்கு உரிய திருவுடை திருப்பலி உடை ஆகும். இதை அருள்பணியாளர் நீள் வெண்ணாடை, தோள் துகில் இவற்றின்மேல் அணிவார்.

338. திருத்தொண்டருக்கு உரியது திருத்தொண்டர் உடை ஆகும். அதை அவர் நீள் வெண்ணாடை, தோள்துகில் இவற்றின்மேல் அணிய வேண்டும். இருப்பினும் தேவையின் பொருட்டும் அல்லது குறைந்த ஆடம்பர விழாவின்போதும் திருத்தொண்டர் உடையை அணியாமல் விட்டுவிடலாம்.

339. பீடத்துணைவர், வாசகர், பிற பொது நிலைப் பணியாளர் நீள் வெண்ணாடை அணியலாம் அல்லது ஆயர் பேரவையின் முறையான ஒப்புதல் பெற்ற வேறு தகுதியான உடையையும் அணியலாம் (காண். எண் 390).

340. தோள் துகிலை அருள்பணியாளர் கழுத்தில் அணிந்து தமது நெஞ்சின் முன்புறம் தொங்கவிடுவார்; திருத்தொண்டரோ அதை இடப் புறத் தோள் மீது அணிந்து, முன் புறத்தில் குறுக்கே கொணர்ந்து, உடலின் வலப் புறத்தில் இழுத்துக் கட்டிக்கொள்வார்.

341. பவனிகளின்போதும் அந்தந்தச் சடங்குமுறையில் கண்டுள்ள விதிகளின்படி, மற்ற வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் அருள்பணியாளர் 'காப்பா' எனப்படும் திருப்போர்வையை அணிவார்.

342. அந்தந்த இடத்துத் தேவைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் ஏற்ப, திருவுடைகள் வடிவமைப்பை ஆயர் பேரவைகள் முடிவு செய்து, திருத்தூதுப் பீடத்துக்குத் தெரிவிப்பார்கள்

136 உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 1070.
137 காண், திருவழிபாடு, 128
==============↑ பக்கம் 84

343. திருவுடைகள் செய்வதற்கு வழக்கமாகப் பயன்படும் பொருள்களைத் தவிர அந்தந்த இடத்தில் கிடைக்கும் இயற்கைத் துணி வகைகளையும் பயன்படுத்தலாம்; மேலும் வழிபாட்டு நிகழ்ச்சியின் சிறப்பையும் திருப்பணியாளரின் நிலையையும் உணர்த்தக்கூடிய செயற்கைத் துணி வகைகளையும் பயன்படுத்தலாம். ஆயர் பேரவை இதை முடிவு செய்யும்:

344 ஒவ்வொரு திருவுடையின் அழகும் மேன்மையும் அதை மிகைப்பட அணிசெய்வதில் அன்று, அதைச் செய்யப் பயன்படுத்தப்படும் பொருளிலும் அதன் வடிவமைப்பிலும் வெளிப்படுவது பொருத்தம் ஆகும். திருவுடைகளை அணிசெய்வதில் வழிபாட்டுக்கு ஏற்ற வடிவங்களும் உருவங்களும் சின்னங்களும் பயன்படுத்தப்பெற வேண்டும். அதற்குப் பொருந்தாதவற்றை விலக்க வேண்டும்.

345. திருவழிபாட்டில் பல்வேறு நிறங்கள் கொண்ட திருவுடைகள் பயன்படுத்தப் படுகின்றன; கொண்டாடப்படுகின்ற நம்பிக்கையின் மறைநிகழ்வுகளைத் தக்கவாறு உணர்த்துவதற்கும் கிறிஸ்தவ வாழ்க்கை திருவழிபாட்டு ஆண்டின் காலப்போக்குடன் இணைந்து முன்னேறிச் செல்கின்றது என்பதைச் சிறப்பாகவும் வெளியரங்கமாகவும் காட்டுவதற்கும் இந்த நிற வேறுபாடுகள் பயன்படுகின்றன. 346. திருவுடைகளின் நிறத்தைப் பொறுத்தமட்டில் மரபுவழிப் பயன்பாடு பின்பற்றப்பட வேண்டும். அதாவது:

அ) வெண்ணிறம்: பாஸ்கா காலத்திலும் ஆண்டவருடைய பிறப்புக் காலத் திருப்பலிகளிலும் திருப்புகழ்மாலைக் கொண்டாட்டங்களிலும் திருப்பாடுகளைச் சாராத ஆண்டவருடைய விழாக்களிலும் புனித கன்னி மரியா, வானதூதர், மறைச்சாட்சியர் அல்லாத புனிதர்கள் ஆகியோரின் விழாக்களிலும் புனிதர் அனைவர் பெருவிழா (நவ. 1), புனிதத் திருமுழுக்கு யோவான் விழா (ஜூன் 24), நற்செய்தியாளரான புனித யோவான் விழா (டிச. 27), புனித பேதுரு தலைமைப்பீட விழா (பெப். 22), புனித பவுல் மனந்திரும்பிய விழா (ஜன. 25) ஆகிய நாள்களிலும் வெண்ணிறம் பயன்படுத்தப்படும்.

ஆ) சிவப்பு நிறம்: ஆண்டவருடைய திருப்பாடுகளின் ஞாயிறு, புனித வெள்ளிக்கிழமை, பெந்தக்கோஸ்து ஞாயிறு, ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டங்கள், திருத்தூதர்கள், நற்செய்தியாளர்கள், மறைச்சாட்சியரான புனிதர்கள் ஆகியோரின் விண்ணகப் பிறப்பு நாள்கள் ஆகியவற்றில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படும்.

இ) பச்சை நிறம்: ஆண்டின் பொதுக் காலத் திருப்பலிகளிலும் திருப்புகழ்மாலைக் கொண்டாட்டங்களிலும் பச்சை நிறம் பயன்படுத்தப்படும்.

ஈ) ஊதா நிறம்: திருவருகைக் காலத்திலும் தவக் காலத்திலும் ஊதா நிறம் பயன்படுத்தப்படும்; இறந்தோருக்கான திருப்பலிகளிலும் திருப்புகழ்மாலைக் கொண்டாட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம்.

உ) கறுப்பு நிறம்: வழக்கத்தில் இருப்பின் இறந்தோருக்கான திருப்பலிகளில் கறுப்பு நிறம் பயன்படுத்தப்படலாம்.

ஊ) இளஞ்சிவப்பு நிறம்: வழக்கத்தில் இருப்பின் திருவருகைக் கால 3-ஆம் ஞாயிறு அன்றும் ("மகிழுங்கள் ஞாயிறு) தவக்கால 4-ஆம் ஞாயிறு அன்றும் ("அகமகிழ் ஞாயிறு) இளஞ்சிவப்பு நிறம் பயன்படுத்தப்படலாம்.

எ) மிகச் சிறப்பான கொண்டாட்டங்களின்போது திருவுடைகள் வழிபாட்டு நாளுக்கு உரிய நிறமாக இல்லையென்றாலும் சிறப்புமிகு அல்லது உயர்வகைத் திருவுடைகள் பயன்படுத்தப்படலாம்.

139 காண். மேற்படி
==============↑ பக்கம் 85

திருவழிபாட்டு நிறங்களைப் பொறுத்தவரையில் மக்களின் தேவைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பொருத்தமான மாற்றங்களை ஆயர் பேரவைகள் முடிவு ெ திருத்தூதுப் பீடத்துக்கு எடுத்துரைக்கலாம்.

347. திருச்சடங்குத் திருப்பலிகளில், சடங்குக்கு உரிய அல்லது வெள்ளை அல்லது சிறப்ப... திருப்பலி உடையைப் பயன்படுத்தலாம். பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகள்: அந்தந்த நாளுக்கு அல்லது காலத்துக்கு உரிய நிறமுள்ள திருப்பலி உடைகளை அணியலாம். ஆனால் பாவத்துயரை வெளிப்படுத்தும் கொண்டாட்டங்களில் (எ.கா. உரோமை திருப்பலி நூல், எண். 31,33,38) ஊதா நிறம் பயன்படும். நேர்ச்சித் திருப்பலிகளுக்கு அந்தந்தத் திருப்பலிக்கு உரிய நிறம் அல்லது நாளுக்கோ காலத்துக்கோ உரிய நிறம் பயன்படும்.

V. கோவில் பயன்பாட்டுக்கான இதரப் பொருள்கள்

348. திருக்கலங்கள் செய்வதற்குக் குறிப்பிட்ட பொருள்களையும் திருவுடைகள் தயாரிப்பதற்குக் குறிப்பிட்ட துணி வகைகளையும் பயன்படுத்த வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது.140 இவை தவிர, வழிபாட்டுக்குப் பயன்படும் பொருள்களும் கோவிலில் பயன்படும் மற்றப் பொருள்களும் மேன்மை பொருந்தியனவாகவும் அவற்றின் பயன்பாட்டின் நோக்கத்துக்கு ஏற்றவையாகவும் இருத்தல் வேண்டும்.

349. திருவழிபாட்டு நூல்கள் குறிப்பாக நற்செய்தி வாசக நூலும் திருப்பலி வாசக நூலும் இறைவார்த்தையை அறிவிக்கப் பயன்படுவதால் தனி வணக்கம் பெறுகின்றன. திருவழிபாட்டுச் செயலின் உயர் நிகழ்வுகளின் அறிகுறியாகவும் அடையாளமாகவும் இருப்பதால், அவை உண்மையான தகுதியும் மதிப்பும் அழகும் வாய்ந்தவையாம். ஆதலின் இவை பற்றிய தனிப்பட்ட கவனம் தேவை.

350. மேலும் பீடத்தோடும் திருப்பலிக் கொண்டாட்டத்தோடும் நேரடித் தொடர்பு கொண்டுள்ள பொருள்களைக் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். எ.கா. பீடச் சிலுவை, பவனியில் பயன்படுத்தப்படும் சிலுவை.

351. குறைந்த முக்கியத்துவம் கொண்ட கலைப்பொருள்களைப் பொருத்தமான வகையில் தாய்மையாகவும் எளிமையாகவும் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும்.

140 உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, பகுதி III
==============↑ பக்கம் 86

இயல் 7
திருப்பலியையும் அதன் பகுதிகளையும் தேர்ந்துகொள்ளல்

350. வாசகப் பகுதிகள், மன்றாட்டுகள், திருவழிபாட்டுப் பாடல்கள் ஆகியவை திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தின் தேவைகளுக்கு ஏற்பவும் பங்கேற்போரின் உளப்பாங்கு, திறமை ஆகியவற்றுக்கு ஏற்பவும் கூடுமானவரையில் பொருத்தமாகவும் அமைந்திடின் அருள்பணி சார்ந்த பயன் மிகவும் சிறப்பாக அமையும். பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் வழியாக இப்பயனைப் பெறலாம். இது கீழே விளக்கப்பட உள்ளது:

திருப்பலிக்குத் தயார் செய்யும்போது, அருள்பணியாளர் தமது விருப்பு வெறுப்புக்கு இடம் கொடாமல் இறைமக்களின் பொதுவான ஆன்ம நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் வழிபாட்டுக் கொண்டாட்டத்தின் சில பணிகளை ஆற்றுகின்றவர்களையும் நம்பிக்கையாளர் அனைவரையும் அவரவருக்கான பணிகளைப் பற்றி அவர்களுடன் கலந்து ஆலோசித்துத் திருப்பலியின் பகுதிகளை ஒருமனப்பட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

திருப்பலியின் பல பாகங்களைத் தேர்ந்தெடுக்க பல்வேறு வாய்ப்புகள் தரப்பட்டிருப்பதால், திருத்தொண்டர், வாசகர், திருப்பாடல் முதல்வர், பாடகர், விளக்கவுரையாளர், பாடகர் குழு ஆகியோர் அவரவர் பணிக்கு ஏற்றபடி தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பலிப் பாடங்கள் எவையென கொண்டாட்டத்துக்கு முன்னதாக அறிந்திருக்க வேண்டும். முன் தயாரிப்பு இன்றி எதுவும் நடக்கக் கூடாது. ஏனெனில் சடங்கினை ஒருங்கமைத்து முறையாக நடத்துவது நம்பிக்கையாளர் திருப்பலியில் பங்கெடுப்பதற்கு அவர்கள் உள்ளத்தைத் தயாரிக்க உதவும்.

1. திருப்பலியைத் தேர்ந்துகொள்ளல்

353. பெருவிழாக்களில் அருள்பணியாளர் தாம் திருப்பலி நிறைவேற்றும் கோவிலின் ஆண்டுக் குறிப்பேட்டைப் பின்பற்ற வேண்டும்.

354. ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்புக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் வாரநாள்களிலும் விழாக்களிலும் நினைவு நாள்களிலும்:

அ) மக்களோடு திருப்பலி நடைபெற்றால், அருள்பணியாளர் தாம் திருப்பலி நிறைவேற்றும் கோவிலின் ஆண்டுக் குறிப்பேட்டைப் பின்பற்றுவார்;

ஆ) ஒரு பணியாளர் மட்டும் பங்கேற்கும் திருப்பலி நடைபெற்றால், அருள்பணியாளர் கோவிலின் ஆண்டுக் குறிப்பேட்டை அல்லது தமக்கு உரிய ஆண்டுக் குறிப்பேட்டைக் தேர்ந்து கொள்ளலாம்.

355. விருப்ப நினைவு நாள்களில்:

அ) டிசம்பர் 17-ஆம் நாளிலிருந்து 24-ஆம் நாள் முடிய வரும் திருவருகைக் கால வார நாள்களிலும் கிறிஸ்து பிறப்பு எண்கிழமையில் வரும் வாரநாள்களிலும் திருநீற்றுப் புதனும் புனித வார முதல் மூன்று நாள்களும் தவிர்த்து, ஏனைய தவக் கால வாரநாள்களிலும் அருள்பணியாளர் நிகழும் திருவழிபாட்டு நாளுக்கு உரிய திருப்பலியை நிறைவேற்றுவார்; இந்நாள்களில் ஆண்டின் பொதுக் குறிப்பேட்டில் நினைவு என்னும் குறிப்பு தரப்பட்டிருந்தால் அதன் திருக்குழும மன்றாட்டைப் பயன்படுத்தலாம்; ஆனால் திருநீற்றுப் புதனும் புனித வாரத்தின் வார நாள்களும் இதற்கு இடம் தரா. பாஸ்கா கால வாரநாள்களில் புனிதர்களின் நினைவு நாள்களை, நினைவுத் திருப்பலியை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டாடுவது முறை ஆகும்.
==============↑ பக்கம் 87

ஆ) டிசம்பர் 17-ஆம் நாளுக்கு முந்திய திருவருகைக் கால வாரநாள்களில. பிறப்புக் காலத்தில் ஜனவரி 2-ஆம் நாளுக்குப்பின் வரும் வாரநாள்களிலும் பால் வாரநாள்களிலும் அருள்பணியாளர் அந்தந்த வாரநாளின் திருப்பலியையோ புன திருப்பலியையோ நினைவு என்று குறிப்பிட்டுள்ள புனிதர் ஒருவரின் திருப்பலியை மறைச்சாட்சியரின் ஏட்டில் அந்த நாளுக்குக் குறிப்பிட்டுள்ள புனிதர்களுள் ஒருவரும் திருப்பலியையோ தேர்ந்து கொள்ளலாம்.

இ) ஆண்டின் பொதுக் கால வார நாள்களில், அருள்பணியாளர் குறிப்பிட்ட வாரநாள் திருப்பலியையோ, அந்த நாளில் வரக்கூடிய விருப்ப நினைவுக் திருப்பலியையோ, மறைச்சாட்சியரின் ஏட்டில் அந்த நாளுக்குக் குறிப்பிட்டுள்ள ஒரு புனிதரின் திருப்பலியையோ, பல்வேறு தேவைகளுக்கான திருப்பலியையோ, நேர்ச்சித் திருப்பலியையோ தேர்ந்துகொள்ளலாம்.

அருள்பணியாளர் மக்களோடு சேர்ந்து திருப்பலி நிறைவேற்றினால், அந்தந்த நாளுக்கென வாசக நூலில் குறிக்கப்பட்ட வாசகங்களை அடிக்கடியோ போதிய காரணமின்றியோ விட்டுவிடக் கூடாது. ஏனெனில் திரு அவை இறைவாக்குப் பந்தியில் நம்பிக்கையாளருக்கு வளமான விருந்தினை வழங்க விரும்புகின்றது.141

இதற்காகவே அருள்பணியாளர் இறந்தோருக்கான திருப்பலிகளை மிதமாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு திருப்பலியும் வாழ்வோருக்காகவும் இறந்தோருக்காகவும் ஒப்புக்கொடுக்கப்படுகின்றது; நற்கருணை மன்றாட்டில் இறந்தோர் நினைவுகூரப்படுகின்றனர்.

புனித கன்னி மரியா அல்லது புனிதர்களின் விருப்ப நினைவுக்கொண்டாட்டத்தில் நம்பிக்கையாளர் பேரார்வம் கொண்டிருந்தால் அவர்களுடைய முறையான இறைப்பற்று நிறைவு செய்யப்படலாம்.

பொது ஆண்டின் குறிப்பேட்டில் கண்டுள்ள நினைவு நாள், மறைமாவட்ட அல்லது துறவுச் சபைக் குறிப்பேட்டில் கண்டுள்ள நினைவு நாள் ஆகியவற்றுள் ஒன்றைத் தேர்ந்து கொள்ள நேரும்பொழுது, இவை ஒரே தரமுள்ளனவாகவும் மரபுக்கு ஏற்ப இருந்தால் தனிப்பட்ட குறிப்பேட்டில் கண்டுள்ள நினைவுக்கு முன்னுரிமை தரப்படுவனவாகவும் இருக்க வேண்டும்.

II திருப்பலியின் பகுதிகளைத் தேர்ந்துகொள்ளல்

356. திருவழிபாட்டு ஆண்டுக் காலத் திருப்பலிக்கும் புனிதர்களின் திருப்பலிக்கும் ஏற்ற 2. வேறு பாடங்களைத் தேர்ந்துகொள்வதில் கீழ்வரும் விதிகள் பின்பற்றப்படும்:

வாசகங்கள்

357. தாயிற்றுக்கிழமைகளுக்கும் பெருவிழாக்களுக்கும் முறையே இறைவாக்கி " கால்களிலிருந்தும், திருத்தூதர் திருமுகங்களிலிருந்தும், நற்செய்திகளிலிருந்தும் மூச்சி வாசகங்கள் தரப்பட்டுள்ளன; இறைவனின் வியத்தகு திட்டத்துக்கு ஏற்ப, மீட்புப் பணி தொடர்ந்து வருவது பற்றி இவை கிறிஸ்தவ மக்களுக்குக் கற்பிக்கின்ற இவ்வாசகங்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பாஸ்கா காலத்தில் ?? அவையின் மரபுக்கு ஏற்பப் பழைய ஏற்பாட்டு வாசகத்துக்குப் பதிலாகத் திருத்து?" பணிகள் நூலிலிருந்து வாசகம் எடுக்கப்படும்.

141 காண். திருவழிபாடு, 51.
==============↑ பக்கம் 88

விழா நாள்களில் இரு வாசகங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் வழுங்குகளின்படி பெருவிழாத் தரத்துக்கு விழா உயர்த்தப்படின், மூன்றாம் வாசகம் பொதுக் கால வாசக நூலிலிருந்து எடுக்கப்படும்.

புனிதர்களின் நினைவு நாள்களில், அந்நாள்களுக்கு உரிய வாசகங்கள் கொடுக்கப் பட்டிருந்தாலன்றி, வாரநாள்களுக்கு உரிய வாசகங்கள் வழக்கம் போல வாசிக்கப்படும். சில நினைவு நாள்களில் அவற்றுக்கு உரிய வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை அப்புனிதரின் ஆன்மீக வாழ்வின் அல்லது செயல்களின் தனிப்பட்ட பண்புகளை விளக்குபவையாக இருக்கும். மக்களின் ஆன் மீக நலனுக்குத் தேவைப்பட்டாலன்றி, இத்தகைய வாசகங்களின் பயன்பாட்டை வலியுறுத்த வேண்டியது இல்லை.

358. வாரநாள்களுக்கான வாசக நூலில் ஆண்டு முழுவதிலும் உள்ள எல்லா வாரங்களின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாசகங்கள் தரப்பட்டுள்ளன. எனவே அந்தந்த நாள்களுக்கு எனக் குறிக்கப்பட்டுள்ள வாசகங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். பெருவிழா, விழா மற்றும் நினைவு நாள்களில் அவற்றுக்கு உரிய புதிய ஏற்பாட்டு வாசகங்களில் கொண்டாடப்படும் புனிதர் பற்றிய குறிப்பு இருப்பின் அவ்வாசகங்களையே பயன்படுத்த வேண்டும்.

பெருவிழா, விழா, அல்லது தனிப்பட்ட கொண்டாட்டத்தினால் ஒரு வாரத்துக்கு உரிய வாசகத் தொடர் விட்டுப்போனால், அருள்பணியாளர் வார நாள்கள் வாசகங்களின் கருத்தை மனதிற்கொண்டு, விட்டுப்போனவற்றைப் பிற வாசகங்களுடன் இணைத்துப் பயன்படுத்தலாம் அல்லது எவை பிறவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த வாசகங்கள் என்று தெரிவு செய்து கொள்ளலாம்.

தனிப்பட்ட குழுக்களுக்காக நடைபெறும் திருப்பலிகளில், அருள்பணியாளர் அந்தத் தனிக் கொண்டாட்டத்துக்கு மிகப் பொருத்தமான வாசகங்களைத் தேர்ந்து கொள்ளலாம்; ஆனால் இவ்வாசகங்கள் அனுமதி பெற்ற வாசக நூலிலிருந்து எடுக்கப்பட வேண்டும்.

359. மேலும் சில அருளடையாளங்களையும் அருள்வேண்டல் குறிகளையும் இணைத்துக் கொண்டாடப்படும் திருச்சடங்குத் திருப்பலிகளுக்காகவும் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திருப்பலிகளுக்காகவும் திருநூலிலிருந்து சிறப்பாகத் தெரிவு செய்யப்பட்ட வாசகங்கள் வாசக நூலில் தரப்பட்டுள்ளன.

ஆகவே நம்பிக்கையாளர் தாங்கள் பங்கெடுக்கும் மறைநிகழ்வை நிறைவாகப் புரிந்து கொள்ள வழி செய்யும் இறைவார்த்தையைப் பொருத்தமான வகையில் கேட்கும் பொருட்டு இத்தகைய வாசகங்கள் தெரிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நம்பிக்கையாளர் இறைவார்த்தையின்மீது ஆழ்ந்த பற்றுக்கொள்ளப் பயிற்றுவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு, திருப்பலிக் கொண்டாட்டத்தில் வாசிக்கப்படும் வாசகங்கள், தரப்பட்டுள்ள வாய்ப்புகளையும் அருள்பணி நலனையும் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 360. சில வேளைகளில் ஒரே வாசகத்தின் நீண்ட, குறுகிய பாடங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றைத் தெரிவு செய்யும்போது அருள்பணி நலனை மனதில் கொள்ள வேண்டும். மேலும் நீண்ட அல்லது குறுகிய வாசகத்தைப் பயனுள்ள வகையில் கேட்கும் நம்பிக்கையாளரின் ஆற்றலையும் மறையுரையில் விளக்கப் பெறும் இன்னும் முழுமையான வாசகத்துக்குச் செவிமடுக்கும் ஆற்றலையும் அருள்பணியாளர் கருத்தில் கொள்ள வேண்டும். 142

361. குறிக்கப்பட்ட இரு வாசகங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பின் அல்லது விருப்பத்துக்கு ஏற்ப வாசகங்களைத் தேர்ந்து கொள்ளும்போதும் பங்கேற்போரின் மேலான நலன்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எளிதானதொரு வாசகத்தையோ ஒரு குழுவுக்கென மிகவும் பொருத்தமான இன்னொன்றையோ எடுத்துக் கொள்ளலாம் அல்லது

142 உரோமைத் திருப்பலி நூல், திருப்பலி வாசக அமைப்புமுறை. 1981, Praenotanda, எண் 80.
143 காண். மேற்படி 81
==============↑ பக்கம் 89

குறிப்பிட்ட கொண்டாட்டத்துக்குப் பொருத்தமானதெனக் குறிக்கப்பட்ட வாசகம் வே.. விருப்ப வாசகமாக இருக்குமாயின் அதனை எடுத்துக் கொள்ளலாம் அல்லது விட்டி..' இவ்வாறு வாசகங்களைத் தேர்ந்து கொள்ளும்போது மக்களின் அருள்பணி - உய்த்துணர்ந்து செயல்பட வேண்டும்.143

ஒரு குறிப்பிட்ட வாசகம் ஒரு சில நாள்களுக்குள் மீண்டும் வாசிக்கப்படும், எ. ஞாயிற்றுக்கிழமையிலும் அதைத் தொடர்ந்து வரும் வாரநாளிலும் ஒரு குறிப்பிட்ட வாசம் கிறிஸ்தவ நம்பிக்கையாளரின் ஒரு தனிப்பட்ட குழுவுக்குச் சில இடறல்கள் ஏற்படுத்தும் என்னும் அச்சம் ஏற்படும்போதும், இச்சூழல் ஏற்படலாம். எனினும் திருநூலின் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் சில பகுதிகளை எப்பொழுதும் விட்டுவிடாமல் இருக்கக் கவனம் செலுத்த வேண்டும்.

362. மேலே குறிப்பிட்டுள்ளபடி மிகப் பொருத்தமான பாடங்களைத் தேர்வு செய்யும் உரிமை ஆயர் பேரவைகளுக்கு உண்டு. குறிப்பிட்ட வாசகங்களை மாற்றியமைக்கும் உரிமையும் அவற்றுக்கு உண்டு. ஆனால் அப்பாடங்கள் முறையாக அனுமதிக்கப்பட்ட வாசக நூலிலிருந்து எடுக்கப்படும்.

மன்றாட்டுகள்

363. ஒவ்வொரு திருப்பலியிலும் வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலன்றி, அதற்கு உரிய மன்றாட்டுகள் பயன்படுத்தப்படும்.

புனிதர்களின் நினைவு நாள்களில் அவற்றுக்கு உரிய திருக்குழும மன்றாட்டு பயன்படுத்தப்படும். இல்லை எனில் புனிதர்களுக்கான பொருத்தமான பொதுத் திருப்பலிகளிலிருந்து அது எடுக்கப்படும். எனினும் காணிக்கைமீது மன்றாட்டும் திருவிருந்துக்குப்பின் மன்றாட்டும் புனிதர்களின் நினைவு நாள்களுக்கு உரியவையாய் இருந்தாலன்றி, பொதுத் திருப்பலிகளிலிருந்தோ நிகழும் திருவழிபாட்டுக் காலத்தின் வாரநாள்களிலிருந்தோ அவை எடுக்கப்படும்.

எனினும் ஆண்டின் பொதுக் காலத்தின் வாரநாள்களில் முந்திய ஞாயிற்றுக்கிழமையின் மன்றாட்டுகளை எடுத்துக்கொள்ளலாம்; அவற்றைத் தவிர பொதுக் காலத்தின் மற்றொரு ஞாயிற்றுக்கிழமையின் மன்றாட்டுகளையோ திருப்பலி நூலில் பல்வேறு தேவைகளுக்கெனக் கொடுக்கப்பட்டுள்ள மன்றாட்டுகளையோ பயன்படுத்தலாம். இத்திருப்பலிகளிலிருந்து திருக்குழும மன்றாட்டை மட்டும் பயன்படுத்த எப்பொழுதும் அனுமதி உண்டு.

இவ்வாறு மன்றாட்டுப் பாடங்கள் மிகுதியாகத் தரப்பட்டுள்ளன. இதனால் நம்பிக்கையாளரின் இறைவேண்டல் வாழ்வு மிகுதியாக ஊட்டம் பெறுகின்றது.
முக்கியத்துவம் மிகுந்த திருவழிபாட்டு ஆண்டுக் காலங்களில் அந்தந்தக் காலத்து வார் நாள்களுக்கு உரிய மன்றாட்டுகள் திருப்பலி நூலில் தரப்பட்டுள்ளன. இது மேற்கூறிய பயன்பாட்டுக்கு வழி செய்கின்றது.

நற்கருணை மன்றாட்டு

364. உரோமைத் திருப்பலி நூலில் காணப்படும் பல்வேறு தொடக்கவுரைகளின் நோக்கம் என்னவென்றால், நற்கருணை மன்றாட்டில் நன்றி செலுத்துவதற்கான பல்வேறு காரணங்களை எடுத்தியம்பலும் மீட்புத் திட்டத்தின் பல்வேறு கூறுகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்தலுமே.

365. திருப்பலி அமைப்பு முறையில் உள்ள நற்கருணை மன்றாட்டுகள் தேவைக்கு ? பின்வரும் விதிகளின்படி தேர்ந்து கொள்ளப்படுகின்றன:
==============↑ பக்கம் 90

அ) நற்கருணை மன்றாட்டு-1 (உரோமை நற்கருணை மன்றாட்டு): இதை எப்போதும் பயன்படுத்தலாம்; மிகப் பொருத்தமாக, "உம்முடைய புனிதர் அனைவருடனும் வைகொண்டுள்ள நாங்கள்...' எனும் மன்றாட்டையோ "ஆகவே ஆண்டவரே, உம் அளமியர்களாகிய நாங்களும் ..." எனும் மன்றாட்டையோ மாறுதல்களுடன் சொல்ல வேண்டிய திருப்பலிகளிலும் இந்நற்கருணை மன்றாட்டில் நினைவுகூரப்படும் திருத்தூதர்கள், புனிதர்களின் கொண்டாட்டங்களிலும் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் இது பயன்படுத்தப்படும். ஆயினும் அருள்பணி நலனை முன்னிட்டு நற்கருணை மன்றாட்டு II-ஐ ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்ந்து கொள்ளலாம்.

ஆ) நற்கருணை மன்றாட்டு-2: இதற்கு உள்ள தனிக் கூறுகளின் காரணமாக, இது மிகப் பொருத்தமாக வாரநாள்களில் அல்லது தனிப்பட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும். இந்த மன்றாட்டுக்கு உரிய தனிப்பட்ட தொடக்கவுரை உண்டு ; என்றாலும் மற்றத் தொடக்கவுரைகளுடன், சிறப்பாக மீட்புத் திட்டத்தை எடுத்துரைக்கும் தொடக்கவுரைகள், எ.கா. பொதுத் தொடக்கவுரைகள் ஆகியவற்றுடன் பயன்படுத்தலாம். இறந்தோருக்கான திருப்பலியில், "மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் ..." எனும் மன்றாட்டுக்கு முன்னர் தரப்பட்டுள்ள சிறப்பு மன்றாட்டு பயன்படுத்தப்படும்.

இ) நற்கருணை மன்றாட்டு-3: இதை எந்தத் தொடக்கவுரையுடனும் பயன்படுத்தலாம். ஞாயிற்றுக்கிழமைகளிலும் விழாக்களிலும் பயன்படுத்த இது மிகப் பொருத்தமானது. இதில் இறந்தோருக்கான மன்றாட்டை அதற்கு உரிய இடத்தில், அதாவது "கனிவுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய பிள்ளைகளைக் கனிவுடன் உம்மோடு சேர்த்துக்கொள்ளும்" எனும் சொற்களுக்குப்பின் பயன்படுத்தலாம்.

ஈ) நற்கருணை மன்றாட்டு-4: இது மாற்ற முடியாத தொடக்கவுரையைக் கொண்டது; மீட்பின் முழு வரலாற்றுச் சுருக்கத்தைத் தருவது. திருப்பலிக்கென்று தனிப்பட்ட தொடக்கவுரை இல்லாதபோதும் ஆண்டின் பொதுக் கால ஞாயிற்றுக்கிழமைகளிலும் இதைப் பயன்படுத்தலாம். இதன் அமைப்பின் காரணத்தால் இதில் இறந்தோருக்கான சிறப்பு மன்றாட்டை இடையில் சேர்க்க முடியாது.

பாடல்கள்

366. திருப்பலி முறையில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்களுக்கு மாற்றாக - எ.கா. "உலகின் பாவங்களைப் போக்கும்...'' - வேறு பாடல்களைப் பயன்படுத்த முடியாது.
367. வாசகங்களுக்கு இடையில் வரும் பாடல்களையும் வருகைப் பாடல், காணிக்கைப் பாடல், திருவிருந்துப் பாடல் ஆகியவற்றையும் தேர்ந்து கொள்வதில் அவற்றுக்கு உரிய இடத்தில் தரப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும் (காண். எண். 40-41, 47-48, 61-64, 74, 86-88).

==============↑ பக்கம் 91

இயல் 8
பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகளும் மன்றாட்டுகளும்
இறந்தோருக்கான திருப்பலிகளும்

I. பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகளும் மன்றாட்டுகளும்

368. அருளடையாளங்கள், அருள்வேண்டல் குறிகள் ஆகியவற்றின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலிருந்து கிடைக்கும் பயன் யாதெனில்: பாஸ்கா மறைநிகழ்விலிருந்து வழிந்தோடும் இறையருளால் தகுந்த தயாரிப்பு நிலையில் உள்ள இறைமக்களின் வாழ்வில் ஏறக்குறைய எல்லா நிகழ்ச்சிகளும் புனிதப்படுத்தப்படுகின்றன.144 நற்கருணையே அருளடை யாளங்களுக்கெல்லாம் தலையாய அருளடையாளமாய் இருக்கின்றது. எனவே கிறிஸ்தவ வாழ்வின் பல்வேறு வேளைகளில், உலகம் அனைத்துக்காகவும் அல்லது பொதுத் திரு அவை, தலத் திரு அவை ஆகியவற்றின் தேவைகளுக்காகவும் வேண்டுதல் புரியப் பயன்படக்கூடிய திருப்பலிகள், மன்றாட்டுகள் ஆகியவற்றின் மாதிரிகளைத் திருப்பலி நூல் வழங்குகின்றது.

369. வாசகங்களையும் மன்றாட்டுகளையும் விருப்பம் போலத் தேர்ந்து கொள்வதற்கு மிகுந்த வாய்ப்பு இருப்பதால் பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகளை மிதமாக, அதாவது, தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம்.

370. பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகள் அனைத்திலும் வேறு விதமாக வெளிப்படையாகக் குறிக்கப்பட்டிருந்தாலன்றி, வாரநாள்களின் வாசகங்களும் இடையில் வரும் பாடல்களும், அன்றைய கொண்டாட்டத்துக்கு ஏற்றவையாயிருந்தால், அவை பயன்படுத்தப்படலாம்.

371. இத்தகைய திருப்பலிகளில் திருச்சடங்குத் திருப்பலிகள், பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகள் மற்றும் நேர்ச்சித் திருப்பலிகளும் அடங்கும்.

372. திருச்சடங்குத் திருப்பலிகள் சில அருளடையாளங்கள், அருள்வேண்டல் குறிகள் ஆகியவற்றின் கொண்டாட்டத்தைச் சார்ந்தவை. திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெருவிழாக்களிலும் பாஸ்கா எண்கிழமையில் வரும் நாள்களிலும் இறந்தோர் அனைவரின் நினைவு நாளிலும் திருநீற்றுப் புதன்கிழமையிலும் புனித வார நாள்களிலும் திருச்சடங்குத் திருப்பலிகளைப் பயன்படுத்தக் கூடாது. மேலும் திருச்சடங்கு நூல்களிலும் திருப்பலிகளிலும் தரப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

373. தேவைகள் எழுகின்றபோது அல்லது குறிப்பிட்ட காலங்களில், பல்வேறு தேவைகளுக்கான அல்லது பல்வேறு கருத்துகளுக்கான திருப்பலிகள் பயன்படுத்தப்படும். இவற்றிலிருந்து ஆயர் பேரவையின் ஒப்புதல் பெற்று ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்கு உரிய மன்றாட்டுகளுக்கான திருப்பலிகள் உரிய பொறுப்பாளரால் தேர்வு செய்யப்படும்.

374. பெருவிழாக்கள், திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் ஞாயிற்றுக்கிழமைகள், பாஸ்கா எண்கிழமை, இறந்தோர் அனைவரின் நினைவு நாள், திருநீற்றுப் புதன், புனித வார நாள்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, மற்றெல்லா நாள்களிலும் முக்கியமான தேவையை அல்லது மக்களின் அருள்பணி நலனை முன்னிட்டு இவற்றுக்கு" பயன்படுத்தலாம். பொருத்தமான திருப்பலியை மறைமாவட்ட ஆயரின் ஆணைப்படி அல்லது அனுமதிப்படி பயன்படுத்தலாம்.
==============↑ பக்கம் 92

375 ஆண்டவருடைய மறைநிகழ்வுகளின் நேர்ச்சித் திருப்பலிகள் அல்லது புனித கன்னி மரியா, வானதூதர், ஒரு புனிதர் அல்லது புனிதர் அனைவரும் ஆகியோரின் வணக்கத்துக்கான நேர்ச்சித் திருப்பலிகள், நம்பிக்கையாளரின் பக்திக்காகப் புனிதர்களின் விருப்ப நினைவு நாள்களில் குறுக்கிடினும் ஆண்டின் வாரநாள்களில் நிகழ்த்தப்படலாம். சியாவின் அமல உற்பவத் திருப்பலியைத் தவிர, ஆண்டவர் அல்லது புனித கன்னி மரியாவின் வாழ்க்கையின் மறைநிகழ்வுகளைக் குறிப்பவற்றை நேர்ச்சித் திருப்பலிகளாகக் கொண்டாட முடியாது. அவற்றின் கொண்டாட்டம் திருவழிபாட்டு ஆண்டில் இடம் பெறும்.

276. கட்டாய நினைவுகளிலும் டிசம்பர்-16 வரையுள்ள திருவருகைக் கால வாரநாள்கள், ஜனவரி 2-க்குப்பின் வரும் கிறிஸ்து பிறப்புக் காலம், பாஸ்கா எண்கிழமைக்குப்பின் வரும் பாஸ்கா காலம் ஆகியவற்றின் வாரநாள்களிலும் பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகளும் நேர்ச்சித் திருப்பலிகளும் அனுமதிக்கப்படுவதில்லை; ஆனால் உண்மையான தேவைக்கு அல்லது அருள்பணி நலனுக்கு அவசியமானால், மக்களோடுள்ள கொண்டாட்டத்தில், இத்தேவைக்கு அல்லது நலனுக்குப் பொருத்தமான திருப்பலிகளைப் பயன்படுத்தலாம்; அதைக் கோவில் அதிபர் அல்லது திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர் முடிவு செய்வார்.

377. ஆண்டின் பொதுக் கால வாரநாள்களில் விருப்ப நினைவு குறிக்கப்பட்டிருந்தாலும் அல்லது வாரநாளுக்கு உரிய திருப்புகழ்மாலையை வேண்டினாலும், திருச்சடங்குத் திருப்பலிகளின்போது தவிர, அன்று எந்தத் திருப்பலியையும் நிகழ்த்தலாம்; பல்வேறு தேவைகளுக்கான எந்த மன்றாட்டையும் பயன்படுத்தலாம்.

378. சனிக்கிழமையில் புனித மரியாவின் நினைவைக் கொண்டாடச் சிறப்பாகப் பரிந்துரைக்கப்படுகின்றது; ஏனெனில் திரு அவையின் திருவழிபாட்டில் மீட்பரின் அன்னைக்குப் புனிதர் அனைவருக்கும் மேலான முதன்மை வணக்கம் அளிக்கப்படுகின்றது.145

II. இறந்தோருக்கான திருப்பலிகள்

379. திரு அவை இறந்தோருக்காகக் கிறிஸ்துவின் பாஸ்காவாகிய நற்கருணைப் பலியை ஒப்புக்கொடுக்கின்றது. இதன் பயனாக, ஒருவர் மற்றவரோடு ஒன்றிணைக்கப்பெற்ற கிறிஸ்துவின் உறுப்பினர் அனைவரும் சிலருக்கு ஆன்ம உதவியை மன்றாடிப் பெறுகின்றனர்; வேறு சிலருக்கு நம்பிக்கையின் ஆறுதலை அளிக்கின்றனர்.

380. இறந்தோருக்கான திருப்பலிகளில் முதலிடம் பெறுவது அடக்கத் திருப்பலி ஆகும்; கடன் திருநாளாகக் கடைப்பிடிக்கப்படும் பெருவிழாக்களும் பெரிய வியாழனும் பாஸ்கா விழாவின் மூன்று நாள்களும், திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் ஞாயிற்றுக்கிழமைகளும் தவிர, மற்றெல்லா நாள்களிலும் இத்திருப்பலி இடம்பெறலாம். ஆனால் சட்டத்தின் மற்ற எல்லா ஒழுங்கு முறைகளையும் மதித்துச் செயல்பட வேண்டும்.146

381. இறந்த செய்தி கேட்டதும் கொண்டாடப்படும் திருப்பலி அல்லது அடக்க இறுதி நாள் திருப்பலி அல்லது இறந்த முதல் ஆண்டுத் திருப்பலி முதலியன கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் வரும் நாள்கள், திருநீற்றுப் புதன், புனித வாரநாள்கள் தவிர, மற்றெல்லா வார நாள்களிலும் கட்டாய நினைவு நாள்களிலும் நடைபெறலாம்.

விருப்ப நினைவுக்கொண்டாட்டமோ வாரநாள் திருப்புகழ்மாலையோ இடம்பெறும் ஆண்டின் பொதுக் கால வாரநாள்களில் இறந்தோருக்கான வேறு திருப்பலிகளை அல்லது இறந்தோருக்கான 'அன்றாடத்' திருப்பலிகளை நிறைவேற்றலாம். ஆனால் இறந்தோருக்காகவே அவை ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்.

145 காண். திருச்சபை, 54; ஆறாம் பால், Marialis cultus, 02.02.1974 எண் 9: A.A.S. 66 (1974) பக். 122-123.
146 காண். திச 1176-1185; உரோமைத் திருச்சடங்கு நூல், Ordo Essequiaruin, 1969.
==============↑ பக்கம் 93

382. வழக்கமாக, அடக்கத் திருப்பலியில் சுருக்கமான ஒரு மறையுரை இருக்க, இறந்தோரைப் பற்றிய எவ்வகைப் புகழுரையும் தவிர்க்கப்பட வேண்டும்.

383. இறந்தோருக்காக ஒப்புக்கொடுக்கப்படுகின்ற நற்கருணைப் பலியில் பங்.ெ நற்கருணையை உட்கொள்ளவும் நம்பிக்கையாளரை, சிறப்பாக இறந்? குடும்பத்தினரைத் தூண்ட வேண்டும்.

384 அடக்கத் திருப்பலி நேரடியாக அடக்கச் சடங்கோடு தொடர்பு கொண்டிருந். திருப்பலியில் திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு முடிந்ததும் முடிவுச் சடங்குகள் விடப்படும் பிரியாவிடைச் சடங்கு நடைபெறும்; இச்சடங்கு இறந்தவர் உடல் அங்கு இருந்தால் மட்டும் நடைபெறலாம்.

385. இறந்தோருக்கான திருப்பலியின், முக்கியமாக அடக்கத் திருப்பலியின் மாறும் பகுதிகளை (எ.கா. மன்றாட்டுகள், வாசகங்கள், பொது மன்றாட்டுகள் ஆகியவற்றைக் தேர்ந்தெடுத்து ஒழுங்குபடுத்துவதில் இறந்தவர், அவர்தம் குடும்பத்தினர், மற்றும் பங்கேற்போர் ஆகியோரின் அருள்பணி நலனைக் கருத்தில் கொள்வது அவசியம்.

மேலும் அடக்கச் சடங்குகளில் கலந்து கொள்வோர், நற்செய்தியைக் கேட்கும் கத்தோலிக்கர், கத்தோலிக்கரல்லாதோர், கத்தோலிக்கரில் ஒருபோதும் திருப்பலியில் பங்கேற்காதோர் அல்லது அரிதாகப் பங்கேற்போர், நம்பிக்கை இழந்தோர் முதலானோரைப் பற்றி அருள்நெறியாளர்கள் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். ஏனென்றால் அருள்பணியாளர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை அனைவருக்கும் எடுத்துரைக்கும் திருப்பணியாளர்கள்.

==============↑ பக்கம் 94

இயல் 9
ஆயர்கள், ஆயர் பேரவைகளின் அதிகாரத்துக்கு உட்பட்ட
தழுவியமைத்தல்

386. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஒழுங்கு முறைகளுக்கு ஏற்ற வகையில் இக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உரோமைத் திருப்பலி நூலைப் புதுப்பிக்கும் பப்' நம்பிக்கையாளர் அனைவரும் திருவழிபாட்டின் இயல்புக்கு உகந்த வகையில், நற்கருனை" கொண்டாட்டத்தில் முழுமையாகவும் உணர்ந்தும் செயல் முறையிலும் பங்குகொண்டு ஈடுபட வேண்டும் என்னும் மிகுந்த அக்கறையுடன் நடைபெறுகின்றது. இத்தகைய பங்கேற்பு நம்பிக்கையாளரின் தகுதிநிலையிலிருந்து எழும் உரிமையும் கடமையும் ஆகும்."
இருப்பினும், இத்தகைய கொண்டாட்டம் திருவழிபாட்டின் விதிமுறைகளுக்கும் இயல்புக்கும் முழுமையாக ஒத்திருக்கும் வண்ணம் இந்தப் போதனையிலும் திருப்பல் அமைப்பு முறையிலும் மேலும் சில தழுவியமைத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை மறைமாவட்ட ஆயர் அல்லது ஆயர் பேரவைகளின் தீர்ப்புக்கு உட்பட்டவை.

387. மறைமாவட்ட ஆயர் தமது மந்தையின் தலைமைக் குருவாக இருப்பதால், அவரது கண்காணிப்பில் உள்ள நம்பிக்கையாளரின் கிறிஸ்தவ வாழ்வு ஒருவகையில் ஆயரிடமிருந்து வருகின்றது, அவரைச் சார்ந்தும் உள்ளது.148 அவர் தமது மறைமாவட்டத்தில் திருவழிபாட்டு வாழ்வை ஊக்குவித்து, ஒழுங்குபடுத்திக் கண்காணித்து வர வேண்டும். கூட்டுத்திருப்பலியின் ஒழுங்குமுறையை (காண். எண். 20 2, 374) நெறிப்படுத்துவதும் பீடத்தில் பணி புரியும் அருள்பணியாளருக்கு உதவி செய்பவருக்கான ஒழுங்குமுறைகள் (காண். எண். 107), இரு வடிவங்களில் தூய நற்கருணை வழங்குவது (காண். எண். 283), கோவில்களைக் கட்டிச் சீரமைப்பது (காண். எண் 291) ஆகியவற்றுக்கான விதிமுறைகளை ஏற்படுத்துவதும், இந்தப் படிப்பினையின்படி, மறைமாவட்ட ஆயரிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், நம்பிக்கையாளர் ஆகியோரிடம் திருவழிபாட்டு உணர்வை வளர்ப்பது அவரது தலையாய பொறுப்பு ஆகும்.

388. பெருமளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய பின்வரும் தழுவியமைத்தல்கள் ஆயர் பேரவையின் விதிமுறைப்படி முடிவு செய்யப்பட வேண்டும்.

389. ஒப்புதல் பெற்ற தாய்மொழிகளில் உரோமைத் திருப்பலி நூலைத் தயார் செய்து அதன் பதிப்புக்கு ஒப்புதல் அளிப்பது ஆயர் பேரவைகளின் அதிகாரத்துக்கு உட்பட்ட க. ஆகும். இதற்கு உரிய திருத்தூது ஆட்சிப் பீடத்திடமிருந்து ஒப்புதல் பெற்றுத் தங்கள் பொறுப்பில் உள்ள நிலப்பகுதிகளில் இதைப் பயன்படுத்தலாம்.149
இலத்தீன் மொழியிலோ ஒப்புதல் பெற்ற தாய்மொழிகளிலோ தயார் செய்யப்பட்ட உரோமைத் திருப்பலி நூல் முழுமையாக வெளியிடப்பட வேண்டும்.

390. இந்தப் பொதுப் படிப்பினையிலும் திருப்பலி அமைப்புமுறையிலும் குறிக்கப்பட்டுள்ள தழுவியமைத்தல்களைப் பற்றித் தீர்மானிப்பது ஆயர் பேரவைகளின் கடமை ஆகும். இதற்கு உரிய திருத்தூது ஆட்சிப் பீடத்திடமிருந்து ஒப்புதல் பெற்று, அவை உரோமைத் திருப்பலி நூலிலேயே சேர்க்கப்படும். அவையாவன:

147 காண். திருவழிபாடு, 14.
148 காண். மேற்படி, 41.
149 காண். திச 838$3.
==============↑ பக்கம் 95

- நம்பிக்கையாளரின் சைகைகளும் உடலின் நிலைகளும் (காண். மேலே எண் 43);

- பீடத்துக்கும் நற்செய்தி வாசக நூலுக்கும் உரிய வணக்கச் சைகை (காண். எண் 273);

- வருகைப் பாடல்கள், காணிக்கைப் பாடல்கள், திருவிருந்துப் பாடல்கள் (காண். மேலே எண். 48, 74, 87);

- தனிப்பட்ட சூழ்நிலைகளுக்காகத் திருநூலிலிருந்து எடுக்கப்படும் வாசகங்கள் (காண். மேலே எண் 36 2)

- அமைதி அடையாளத்தை வெளிப்படுத்தும் முறை (காண். மேலே எண் 82);

- தூய நற்கருணையை வாங்கும் முறை (காண். மேலே எண். 160, 283);

- பீடத்துக்கும் கோவில் பொருள்களுக்கும் குறிப்பாக, திருக்கலங்களுக்குத் தேவையான மூலப்பொருள்கள், வழிபாட்டுத் திருவுடைகளுக்கான பொருள்கள், வடிவமைப்பு, நிறம் ஆகியவை (காண். எண். 301,326, 329, 339, 342-346).

ஆயர் பேரவைகள் பயன்படக்கூடியவை எனக் கருதும் விதிமுறைகளை அல்லது அருள்பணி அறிவுரைகளைத் திருத்தூது ஆட்சிப் பீடத்தின் ஒப்புதல் பெற்று உரோமைத் திருப்பலி நூலில் பொருத்தமான இடத்தில் சேர்க்கலாம்.

391. ஆயர் பேரவைகள் தனிப்பட்ட கவனம் செலுத்தி, திருப்பலிக் கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்படும் விவிலியப் பகுதிகளை மொழிபெயர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். திருநூலிலிருந்து தான் வாசகங்கள் வாசிக்கப்படுகின்றன; மறையுரையில் அவை விளக்கப்படுகின்றன; திருப்பாடல்கள் பாடப்படுகின்றன. மன்றாட்டுகளும் இறைவேண்டல்களும் திருவழிபாட்டுப் பாடல்களும் விவிலியத்திலிருந்துதான் உள்ளுணர்வும் தூண்டுதலும் பெறுகின்றன. விவிலியத்திலிருந்து திருவழிபாட்டுச் செயல்களும் அடையாளங்களும் தம் பொருளைப் பெறுகின்றன.150
அவற்றின் மொழிநடை நம்பிக்கையாளர் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்றவாறு அமைய வேண்டும். அது பொது அறிக்கையிடலுக்கு ஏற்றதாகவும் இருத்தல் வேண்டும். அதே சமயம் விவிலிய நூல்களில் காணப்படும் வெவ்வேறு வகைகளில் பேசும் சிறப்புப் பண்புகளைக் கையாளுதல் பொருத்தம் ஆகும்.

392. ஆயர் பேரவைகள் பிற பாடங்களை மொழிபெயர்க்கும்போது அக்கறையுடன் ஆய்ந்து செய்தல் வேண்டும். ஆனால் ஒவ்வொரு மொழியின் தனித்தன்மையை மதித்துச் செயல்படினும், இலத்தீன் மூல பாடத்தின் பொருளை முழுமையாகவும் மாறாமலும் தர வேண்டும். இப்பணியைச் செய்யும்போது திருப்பலியில் பயன்படுத்தப்படும் பல்வேறு இலக்கிய வகைகளான வழிபாட்டுத் தலைவரின் மன்றாட்டுகள், முன்மொழிகள், ஆர்ப்பரிப்புகள், பதிலுரைகள், மன்றாட்டு மாலைகள் இன்னும் பிறவற்றையும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

பாடங்களை மொழிபெயர்ப்பதன் முதல் நோக்கம் தியானம் செய்வதற்காக அன்று; மாறாக, நடைபெறும் கொண்டாட்டத்தின்போது அவற்றை அறிக்கையிடவோ பாடவோ வேண்டும் என்பதற்காக எனும் நோக்கினை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு நிலப்பகுதியைச் சார்ந்த நம்பிக்கையாளருக்கு ஏற்ப மொழிநடை பயன்படுத்தப்பட வேண்டும். அதே சமயத்தில் அது மேன்மையும் இலக்கிய நயமும் கொண்டிருக்க வேண்டும் சில சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் விவிலியம், கிறிஸ்தவ சமயம் ஆகியவற்ற' "" பின்னணியில் பொருள் கூறுவதற்கு மறைக்கல்விப் பாடமும் தேவைப்படும்.

150 காண். திருவழிபாடு, 24.
==============↑ பக்கம் 96

இயலும்போதெல்லாம் ஒரே மொழி பேசும் நிலப்பகுதிகளில் திருவழிபாட்டுப் பாடங்களிலும் குறிப்பாக விவிலியப் பாடங்களிலும் திருப்பலி அமைப்புமுறையிலும் ஒர மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துதல் உண்மையாகவே நன்மை பயக்கும்.

393. திருப்பலிக் கொண்டாட்டத்தில் பாடுதல் திருவழிபாட்டுக்குத் தேவையானதும் அதை மழுமைப்படுத்தும் பகுதியாகவும் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது." இதனைக் கருத்தில் கொண்டு, திருப்பலி அமைப்புமுறையில் மக்களின் பதிலுரைகளுக்கும் ஆர்ப்பரிப்புகளுக்கும் திருவழிபாட்டு ஆண்டுக் காலத்தில் வரும் தனிப்பட்ட சடங்குகளுக்கும் உரிய பாடல் பகுதிகளுக்கான பொருத்தமான இசைக்கு ஒப்புதல் அளிப்பது ஆயர் பேரவைகளின் கடமை ஆகும்.

இசை வடிவங்கள், பண்கள், இசைக் கருவிகள் ஆகியவற்றில் எவை ? பயன்பாட்டுக்குத் தகுதி வாய்ந்தவை அல்லது தகுதி பெறக் கூடியவை என்றறிந்து அவற்றைத் திருவழிபாட்டில் ஏற்றுக்கொள்வது பற்றித் தீர்மானிப்பது ஆயர் பேரவைகளின் பொறுப்பு ஆ9"

394. ஒவ்வொரு மறைமாவட்டமும் தனக்கெனத் திருவழிபாட்டுக் குறிப்பேட்டையும் தனக்கு உரிய திருப்பலிகளையும் தயாரிக்க வேண்டும். ஆயர் பேரவை தேசிய அளவில் தனக்கு உரிய திருவழிபாட்டுக் குறிப்பேட்டையோ அல்லது வேறு ஆயர் பேரவைகளோடு இணைந்து பரந்த ஆட்சிப் பகுதிகளுக்கு உகந்த திருவழிபாட்டுக் குறிப்பேட்டையோ ஏற்பாடு செய்ய வேண்டும். இவை திருத்தூது ஆட்சிப் பீடத்தின் ஒப்புதல் பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.153

இதைச் செயல்படுத்தும்போது கூடுமானவரையில் ஆண்டவரின் நாளை முதன்மை விழாவாகப் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டும். ஆதலின் பிற கொண்டாட்டங்கள் மிகவும் முக்கியமானவையாய் இருந்தாலன்றி, ஆண்டவரின் நாளில் முன்னிடம் பெறா.154 அதே போன்று இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கட்டளை ஆவணத்தால் சீரமைக்கப்பட்ட திருவழிபாட்டு ஆண்டு, இரண்டாம் தரக் கூறுகளால் மங்கிவிடாதிருக்கக் கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேசிய அளவில் திருவழிபாட்டுக் குறிப்பேட்டைத் தயார்செய்யும்போது "மன்றாட்டு" நாள்களையும் திருவழிபாட்டு நான்கு காலங்களையும் குறித்து (காண். எண் 373) அவற்றைக் கொண்டாடுவதற்கான அமைப்புகள், பாடங்களையும் குறிப்பிட வேண்டும். 155 வேறு சில தனிப்பட்ட வரையறைகளையும் மனதில் கொள்ள வேண்டும்.
திருப்பலி நூல் வெளியிடப்படும்போது, நாடு முழுவதற்கோ ஒர் ஆட்சிப் பகுதிக்கோ உரிய கொண்டாட்டங்களைப் பொதுவான திருவழிபாட்டுக் குறிப்பேட்டில் சரியான இடத்தில் சேர்ப்பது பொருத்தம் ஆகும். ஒரு நிலப்பகுதிக்கோ மறைமாவட்டத்துக்கோ உரியவை தனிப்பட்ட பிற்சேர்க்கையில் இடம்பெற வேண்டும்.

395 இறுதியாக, புனித கொண்டாட்டம் பல்வேறு மக்களின் பண்பாட்டுக்கும் மரபுகளுக்கும் பொருந்து மாறு நம்பிக்கையாளரின் பங்கேற்புக்கும் அவர்களின் ஆன்மீக நலனுக்கும் பல்வேறு விதமான ஆழ்ந்த தழுவியமைத்தல்கள் தேவைப்படின், ஆயர் பேரவைகள் திருவழிபாட்டுக் கொள்கைத் திரட்டின் 40-ஆம் பிரிவுக் கூற்றின்படி திருத்தூது ஆட்சிப் படத்துக்கு அவற்றை முன் மொழிந்து, அதன் ஒப்புதலோடு அவற்றை நடைமுறைப்படுத்தலாம்.

151 காண். மேற்படி, 3683. 15 2 காண். மேற்படி, 112.
காண். Normae Universales de Anno liturgico et de calendario, எண். 48-51, பக். 99; திருவழிபாட்டுக்
ஈயம், Calendaria particularia, 24.06.1970, எண், 4, 8: A.A.S. 62 (1970) பக். 652-653.
153 காண். N திருப்பேராயம், கே
54 காண். திருவழிபாடு, 106.
ண். Normae Universales de Anno liturgico et de calendario, எண் 46, பக். 98; திருவழிபாட்டுச் யம், Calendaria particularia, 24.06.1970, எண் 38: A.A.S. 62 (1970) பக். 660.
155 காண், Norw திருப்பேராயம், Calent
==============↑ பக்கம் 97

சிறப்பாக, அண்மையில் நற்செய்தி அறிவிக்கப்பட்ட மக்களிடையே நடைமுறைப்படுத்தலாம்.156 "உரோமைத் திருவழிபாடும் பண்பாட்டுமய மாக பற்றிய போதனையில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு விதிகளைக் கவன. கடைப்பிடிக்க வேண்டும்.157

இதைச் செயல்படுத்தும்போது பின்வரும் வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டி முதன்முதல் திருத்தூது ஆட்சிப் பீடத்துக்குமுன் வைக்கப்படும் முதற்கட்டப் பரிந்துரை விரிவானதாக இருக்க வேண்டும். இப்படிச் செய்து தேவையான அனுமதி பெற்றபின் தழுவியமைத்தலின் தனித்தனிக் குறிப்புகளையும் வரிசைப்படுத்தி நடைமுறைப்படுத்தக் தொடங்கலாம்.

திருத்தூது ஆட்சிப் பீடத்திலிருந்து முறையான ஒப்புதல் பெற்றபின், இப்பரிந்துரைகள் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட கால அளவில் பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பரிசோதனைச் செயல்முறைக் காலம் முடிந்தபின், தேவைப்படின் ஆயர்களின் பேரவை தழுவியமைத்தல்களைத் தொடர்ந்து செய்வது பற்றி முடிவு செய்யும். இது குறித்து முழுமையான வடிவமைப்பு அறிக்கையைத் திருத்தூது ஆட்சிப் பீடத்துக்கு அனுப்பி அதனுடைய தீர்ப்பைக் கோரும்.158

396. சிறப்பாக, புதிய தழுவியமைத்தல்களை, முழுமையாகச் செயல்படுத்தும் முன் அருள்பணியாளர்களும் நம்பிக்கையாளரும் அறிவார்ந்த, முறையான வகையில் இவை ஒவ்வொன்றையும் பற்றி ஒழுங்கு முறையுடன் நன்கு அறிந்துகொள்ள மிகுந்த அக்கறையுடன் வழிவகை செய்யப்பட வேண்டும். இதனால் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டாட்டத்தின் உள்ளுணர்வுக்கு ஏற்ப அருள்பணி விதிமுறைகளை முழுமையாகச் செயல்படுத்த முடியும்.

397. மேலும் ஒவ்வொரு தலத் திரு அவையும் நம்பிக்கைப் படிப்பினையாலும் அருளடையாளங்களாலும் மட்டுமன்றி, முறிவுபடாத திருத்தூது மரபினால் உலகளாவிய வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயன்பாடுகளாலும் அனைத்துலகத் திரு அவையோடு இசைந்திருக்க வேண்டும் என்றுணர்த்தும் கோட்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும். திரு அவையின் இறைவேண்டலின் அடிப்படை விதி நம்பிக்கையின் அடிப்படை விதிக்கு ஒத்திருப்பதால், தவறுகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமன்று, நம்பிக்கை முழுமையாக ஒப்படைக்கப்படுவதற்காகவும் இவற்றைப் பாதுகாத்து வர வேண்டும். 159

திருவழிபாட்டின் கருவூலம், கத்தோலிக்கத் திரு அவையின் மரபுச் சொத்து இவற்றின் குறிப்பிடத்தக்கதும் மிக மேன்மையானது மான பகுதியாய் உரோமைத் திருச்சடங்குமுறை அமைந்திருக்கின்றது. அதன் செல்வங்கள் அனைத்துலகத் திரு அவைக்குப் பயன் அளிப்பவை. எனவே அவற்றின் இழப்பு, திரு அவைக்குப் பெரிதும் தீங்கிழைக்கும்.
காலங்காலமாக உரோமைத் திருச்சடங்குமுறை உரோமை நகரில் தோன்றிய திருவழிபாட்டு வழக்கங்களைப் பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல் வேறு சில ஆழ்ந்த, உள்ளார்ந்த, ஒத்திசைவான பயன்பாடுகளை யும் தன்னில் உள்ளடக்கியுள்ளது.

156 திருவழிபாடு, 37-40. 54, 62-69: A.A.S. 87 (1995) பக். 30830 11
157 காண். திருவழிபாட்டு, அருளடையாளங்களின் பேராயம், Varietates legitimae, 25.01.18

==============↑ பக்கம் 98

அவை யாவும் பல்வேறு மக்களின் மரபுகள், பண்பாடு ஆகியவற்றிலிருந்தும் கீழை, மேலை நாட்டுப் பல்வேறு தலத் திரு அவைகளிலிருந்தும் பெறப்பட்டவை ஆகும். இந்த வகையில் உரோமைத் திருச்சடங்குமுறை ஒரு நிலப்பகுதியைக் கடந்த பண்பைப் பெற்றுள்ளது. இச்சடங்கின் தனித்தன்மையும் ஒருமைப்பாட்டை உணர்த்தும் தன்மையும் தலைமை ஆயர் அதிகாரப் பூர்வமாக வெளியிட்ட திருவழிபாட்டு நூல்களின் மாதிரிப் பதிப்புகளில் காணக்கிடக்கின்றன. ஆயர் பேரவைகள் திருத்தூது ஆட்சிப் பீடத்தின் ஒப்புதலுடன் தங்களுடைய ஆட்சிப்பகுதிகளுக்கென ஒப்புதல் அளித்து வெளியிடும் இப்பதிப்புக்கு ஒத்திசைவான திருவழிபாட்டு நூல்களிலும் அவற்றைக் காணலாம்."

398. திருவழிபாட்டைச் சீரமைக்கும்போது, உண்மையாகவும் திண்ண மாகவும் திரு அவையின் நலனுக்குத் தேவைப்பட்டாலொழிய புதிய மாற்றங்களைப் புகுத்தக் கூடாது. ஏற்கெனவே இருக்கும் அமைப்புகளிலிருந்து புதிய அமைப்புகள் ஒரு விதத்தில் உள்ளார்ந்த தொடர்புடைய முறையில் தோன்றி வளர வேண்டும்'' என்னும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தால் நிறுவப்பட்ட விதிமுறை உரோமைத் திருச்சடங்கைப் பண்பாட்டு மயமாக்கும் முயற்சிகளுக்கும் பொருந்தும்.162 மேலும் உண்மையான திருவழிபாட்டு மரபு அவசரமான, மற்றும் கவனக் குறைவான செயலால் தூய்மை கெடாமலிருக்கப் பண்பாட்டுமயமாக்கலுக்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது.

இறுதியாக, பண்பாட்டுமயமாக்கலைத் தொடர்வதன் நோக்கம் எவ்வகையிலும் புதிய வழிபாட்டு முறைக் குழுமங்களை உருவாக்குவது அன்று, மாறாக ஒரு குறிப்பிட்ட பண்பாட்டைச் சார்ந்த தேவைகளை நிறைவு செய்வதற்காகவே. திருப்பலி நூலிலோ மற்றத் திருவழிபாட்டு நூல்களிலோ புகுத்தப்படும் தழுவியமைத்தல்கள் உரோமைச் சடங்கின் தனிப் பண்பைச் சிதைக்கும் வகையில் அமையக் கூடாது.163

399. ஆதலின் உரோமைத் திருப்பலி நூல் வெவ்வேறு மொழிகளிலும் வேறுபட்ட சில பண்பாட்டு மரபுகளிலும் பயன்படுத்தப்பட்டாலும் 164 அது எதிர்காலத்தில் உரோமை வழிபாட்டு முறையின் முழுமை, ஒற்றுமை ஆகியவற்றின் கருவியாகவும் மிகத் தெளிவான அடையாளமாகவும் பாதுகாக்கப்பட வேண்டும். 165

160 காண். இரண்டாம் ஜான் பால், Vicesimus quintus annus, 04.12.1988, எண் 16: A.A.S. 81 (1989) பக். 912; திருவழிபாட்டு, அருளடையாளங்களின் பேராயம், Varietates legitimae, 25.01.1994, எண். 2, 36: A.A.S. 87 (1995) பக். 288, 302.
161 காண். திருவழிபாடு, 23.
162 காண். திருவழிபாட்டு, அருளடையாளங்களின் பேராயம், Varietates legitimae, 25.01.1994, எண் 46: A.A.S. 87 (1995) பக். 306. 13 காண். மேற்படி, 36: A.A.S. 87 (1995) பக். 302.
* காண். மேற்படி, 54: A.A.S. 87 (1995) பக். 308-309,
==============↑ பக்கம் 99

 

image