image

 

திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம்

இயல் 3

திருப்பலியில் கடமைகளும் பணிகளும்

91. நற்கருணைக் கொண்டாட்டம் கிறிஸ்துவின் செயல். அது ஆயரோடு ஒன்றிணைந்து அவருடைய ஆளுகையின்கீழ் உள்ள புனித மக்களாகிய திரு அவையின் செயலும் ஆகும்
""யலும் ஆகும். ஆதலின் அது திரு அவை எனும் முழு உடலுக்கும் உரித்தாகும். திரு அவையை அது வெளிப்படுத்தி, அதன் மீது தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. திரு அவையின் ஒவ்வோர் உறுப்பினரும் வேறுபட்ட வகைகளிலும் வேறுபட்ட திருநிலைகளிலும் பணிகளிலும் பங்கேற்கின்றனர்.75 இவ்வாறு "தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், புனித மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள்" என்று கூறப்படும் கிறிஸ்தவ மக்கள் தங்களது ஒன்றிணைப்பையும் திரு அவை ஆட்சி அமைப்பு நிலையையும் வெளிப்படுத்துகின்றனர்.76 ஆகவே திருநிலைப்படுத்தப்பட்ட பணியாளர், பொது நிலைக் கிறிஸ்தவ நம்பிக்கையாளர் ஆகிய எல்லாரும் தத்தமக்கு உரிய பணியையும் கடமையையும் மட்டுமே முழுமையாக நிறைவேற்றுவார்களாக.77

1. திருநிலையினரின் கடமைகள்

92. முறையான எல்லா நற்கருணைக் கொண்டாட்டத்தையும் ஆயர் தாமாகவோ தம் துணைவர்களான அருள்பணியாளர்களைக் கொண்டோ ஒழுங்குபடுத்துவார்.78
மக்கள் கூடியுள்ள திருப்பலியில் ஆயர் உடனிருக்கும்பொழுது, அவரே இந்தப் புனிதச் செயலில் அருள்பணியாளர்களைத் தம்முடன் இணைத்துக் கொண்டு கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்பது சிறந்தது. சடங்குமுறையின் வெளி ஆடம்பரத்தை அதிகரிப்பதற்காக அன்று; மாறாக ஒன்றிப்பின் அருளடையாளமாகிய திரு அவையின் மறைபொருளைத் தெளிவாகக் காட்டுவதற்காவே இவ்வாறு செய்யப்படுகின்றது.79

ஆயர் நற்கருணைப் பலியைக் கொண்டாடாமல் இருந்து, அப்பணியை வேறொருவரிடம் அளித்தாலும்கூட, ஆயர் மார்பணிச் சிலுவை, தோள்பட்டைத் திருத்துகில், நீள் வெண்ணாடை மேல் திருப்போர்வை ஆகியவை அணிந்து கொண்டு இறைவாக்கு வழிபாட்டுக்குத் தலைமை வகிப்பதும் திருப்பலியின் முடிவில் ஆசி அளிப்பதும் பொருத்தம் ஆகும்.

93. அருள்பணியாளர் திரு அவையில் கிறிஸ்துவின் பெயரால் பலி ஒப்புக்கொடுக்க அருள்பொழிவு பெற்ற திரு அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றார்.81 அவர் இங்கு இப்பொழுது கூடி இருக்கின்ற மக்களோடு உடனிருந்து அவர்களின் மன்றாட்டுக்குத் தலைமை வகிக்கின்றார்; அவர்களுக்கு மீட்பின் நற்செய்தியை அறிக்கையிடுகின்றார்; தூய ஆவியாரில் கிறிஸ்து வழியாக இறைத் தந்தைக்குப் பலி ஒப்புக்கொடுப்பதில் மக்களைத் தம்முடன் இணைத்துக் கொள்கின்றார்; நிலைவாழ்வின் அப்பத்தைச் சகோதரர் சகோதரிகளுக்கு அளித்து அவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கின்றார். எனவே நற்கருணைப் பலியைக் கொண்டாடும்போது இறைவனுக்கும் மக்களுக்கும் அருள்பணியாளர் மாண்புடனும் தாழ்மையுடனும் தொண்டாற்ற வேண்டும். மேலும் தாம் கொண்டாடுவதன் வழியாகவும் இறைவாக்குகளை அறிக்கையிடுவதன் வழியாகவும் கிறிஸ்துவின் உயிருள்ள உடனிருப்பை நம்பிக்கையாளருக்கு உணர்த்த வேண்டும்.

75 காண். திருவழிபாடு, 26.
76 காண். மேற்படி, 14.
77 காண். மேற்படி, 28.
78 காண். திருச்சபை, 26, 28; திருவழிபாடு, 42.
79 காண். திருவழிபாடு, 26.
80 காண். ஆயர்கள் திருச்சடங்கு, 1984, எண். 175 -186.
81 காண். திருப்பணியாளர்கள், 2; திருச்சபை, 28.
============== ↑ பக்கம் 42

94 திருநிலைப்படுத்தப்பட்டதன் காரணமாக, திருத்தொண்டர் திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது பணியாற்றுவோருள் அருள்பணியாளருக்கு அடுத்து முதலிடம் வகிக்கின்றார். ஏனெனில் திருத்தொண்டரின் இப்புனிதமான பணிநிலை திருத்தூதர்களின் தொடக்கக் காலத்திலிருந்து திரு அவையில் உயர் மதிப்பைப் பெற்றிருக்கின்றது. 2 திருப்பலியின்போது திருத்தொண்டருக்கே உரிய பணிகள் உள்ளன: நற்செய்தியைப் பறைசாற்றுதல், அவ்வப்போது இறைவார்த்தையைப் போதித்தல், பொது மன்றாட்டில் கருத்துக்களை எடுத்துரைத்தல், அருள்பணியாளருக்கு உதவி செய்தல், பீடத்தைத் தயார் செய்து திருப்பலிக் கொண்டாட்டத்தில் துணைபுரிதல், நம்பிக்கையாளருக்கு நற்கருணையை, சிறப்பாக இரசத்தின் வடிவத்தில் வழங்குதல், திருப்பலியின்போது திருக்கூட்டத்தின் சைகைகளையும் உடலின் நிலைகளையும் முறைப்படுத்த அவ்வப்போது தூண்டுதல் ஆகியவை ஆகும்.

II. இறைமக்களின் கடமைகள்

95. நம்பிக்கையாளர் திருப்பலிக் கொண்டாட்டத்தில் புனித மக்களினத்தினர், கடவுளின் உரிமைச் சொத்து, அரச குருக்களின் கூட்டத்தினர் ஆகின்றனர். இவ்வாறு இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்; மாசற்ற பலிப்பொருளை அருள்பணியாளர் கைகள் வழியாக மட்டுமன்றி அருள்பணியாளரோடு சேர்ந்தும் ஒப்புக்கொடுக்கின்றனர். தங்களையே கையளிக்கவும் கற்றுக் கொள்கின்றனர்.83 அவர்கள் தங்கள் ஆழ்ந்த மறையுணர்வாலும் அதே திருப்பலிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரர் சகோதரிகள் மீதுள்ள அன்பாலும் இதை வெளிப்படுத்தக் கவனம் செலுத்துவார்களாக.

ஆகவே தங்களுக்கு விண்ணகத்தில் ஒரே தந்தை உண்டு என்பதையும் இதனால் தாங்கள் அனைவரும் தங்களுக்குள் சகோதரர் சகோதரிகள் என்பதையும் கருத்தில் கொண்டு எல்லா வகையான வாழ்வின் தனித்தன்மை அல்லது பிரிவினை இவற்றின் அறிகுறிகளை அவர்கள் தவிர்ப்பார்களாக. 96. மேலும் இறைவார்த்தையைக் கேட்பதிலும் மன்றாட்டுகள், பாடல்கள் இவற்றில் பங்கெடுப்பதிலும், சிறப்பாக, பலியை ஒன்றுசேர்ந்து ஒப்புக்கொடுத்து ஆண்டவரின் திருப்பந்தியில் ஒருசேரக் கலந்துகொள்வதிலும் நம்பிக்கையாளர் ஒருடல் ஆவார்களாக. இந்த ஒன்றிப்பு, ஒன்றாகக் கடைப்பிடிக்கும் சைகைகள், உடலின் நிலைகள் ஆகியவற்றால் அழகுற வெளிப்படும். 97. நம்பிக்கையாளர் திருப்பலிக் கொண்டாட்டத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பணியோ பொறுப்போ ஆற்றக் கேட்கப்படும்போதெல்லாம் அவர்கள் இறைமக்களுக்கு மனமகிழ்வோடு ஊழியம் புரிய மறுக்காதிருப்பார்களாக.

III. தனிவகைப் பணிகள்

நியமனம் பெற்ற பீடத்துணைவர், வாசகர் ஆகியோரின் பணி

98. பீடத்தில் பணி புரியவும் அருள்பணியாளர், திருத்தொண்டர் ஆகியோருக்குத் துணைபுரியவும் பீடத்துணைவர் நியமிக்கப்படுகின்றார். பீடத்தையும் திருப்பலித் திருக்கலங்களையும் தயார் செய்வது அவரது முக்கிய பணி ஆகும். மேலும் தேவைப்படின் நற்கருணையின் சிறப்புரிமைத் திருப்பணியாளராக நம்பிக்கையாளருக்கு அவர் நற்கருணை வழங்குவார். 84

பீடப் பணியில் தமக்கு உரிய பணிகளைப் (எண். 187-193) பீடத்துணைவர் நிறைவேற்ற வேண்டும்.

82 காண். ஆறாம் பால், Sacrum diaconatus Ordinem, 18.06.1967: A.A.S. 59 (1967) பக். 697-704; Pontificale Romanum, De Ordinatione Episcopi, presbyterorum et diaconorum, 1989, எண் 173.
83 திருவழிபாடு, 48: திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண் 12: A.A.S. 59 (1967) பக். 548-549.
84 காண். திச. 91082; Ecclesiae de mysterio, 15.08.1997, art, 8: A.A.S. 89 (1997) பக். 871.
============== ↑ பக்கம் 43

99 நற்செய்தி தவிர ஏனைய திருவிவிலிய வாசகங்களை அறிக்கையிட வாசகர் நியமிக்கப் படுகின்றார்; மேலும் அவர் பொது மன்றாட்டின் கருத்துக்களை அறிவிக்கலாம்; திருப்பார் முதல்வர் இல்லாதபோது, வாசகங்களுக்கு இடையே வரும் திருப்பாடலை அவர் வாசிக்கலாம்

நற்கருணைக் கொண்டாட்டத்தில் வாசகர் தமக்கு உரிய பணியை (காண். எண். 10. 198) அவரே நிறைவேற்ற வேண்டும்.

பிற பணிகள்

100. நியமனம் பெற்ற பீடத்துணைவர் இல்லை எனில் அவருக்குப் பதிலாகப் பீடத்தில் உதவி செய்யவும் அருள்பணியாளர், திருத்தொண்டர் ஆகியோருக்கு உதவி செய்யவும் பொது நிலைப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படலாம். அவர்கள் திருச்சிலுவை, மெழுகுதிரிகள், தூபம், அப்பம், இரசம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு வருவர். நற்கருணை வழங்குவதற்கும் தனியுரிமைத் திருப்பணியாளராய் அவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படலாம், 85

101, நியமனம் பெற்ற வாசகர் இல்லை எனில், வேறு பொது நிலையினர் திருவிவிலியத்திலிருந்து வாசகங்களை வாசிக்கத் தற்காலிகமாக நியமிக்கப்படு கின்றனர். அவர்கள் இப்பணியை நிறைவேற்ற உண்மையிலேயே தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும், அதற்காகக் கவனத்துடன் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் திருவிவிலியத்திலிருந்து வாசிக்கப்பட்ட வாசகங்களுக்கு நம்பிக்கையாளர் செவிமடுத்து அதன்மீது இதமானதும் உயிருள்ளது மான பற்றுதலை உள்ளத்தில் கொண்டிருப்பார்களாக.

102. வாசகங்களுக்கு இடையே திருப்பாடலையோ ஏனைய விவிலியப் பாடலையோ பாடு வது திருப்பாடல் முதல்வரின் பணி ஆகும். இப்பணியைச் சரியாக நிறைவேற்றத் பெற்றிருத்தல் வேண்டும். திருப்பாடல் பாடும் கலையில் தேர்ச்சியும் தெளிவாக உச்சரித்துப் பேசுவதில் ஆற்றலும் அவர்

103. நம்பிக்கையாளர் நடுவில் சிறப்புப் பாடகர்களும் பாடகர் குழுவும் திருவழிபாட்டில் தமக்கே உரிய பணியினை நிறைவேற்றுவார்கள். பல்வகைப் பாடல்களின் தன்மைகளை மனதில் கொண்டு தமக்கே உரிய பகுதிகளைப் பாடுவதில் கவனம் செலுத்துவது அவர்களது கடமை. அவை முறையாகக் கையாளப்படுவதன் வழியாக நம்பிக்கையாளரின் செயல்முறைப் பங்கேற்பைப் பாடுதலில் ஊக்கப்படுத்த வேண்டும். " பாடகர் குழுவுக்குக் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் ஏனைய இசைக் கலைஞர்களுக்கும் முக்கியமாக ஆர்மோனியக் கருவியை வாசிப்போருக்கும் பொருந்தும்.

104. மக்கள் பாடு வதை நெறிப்படுத்தி உதவ இசை இயக்குநரோ பாடகர் குழுத் தலைவரோ வழிகாட்டியாக இருப்பார். குறிப்பாக பாடகர் குழு இல்லை எனில், இசை இயக்குநரே மக்கள் பாடிப் பங்கேற்கும்படி உதவுவார். 8

105. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களும் திருவழிபாட்டுப் பணியில் ஈடுபடுவர்:

அ) கோவில் திருப்பொருள் அறைப் பொறுப்பாளர்

திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தேவையான திருவழிபாட்டு நூல்கள், திருவுடைகள், பிறவற்றையும் நன்முறையில் எடுத்து வைப்பார்.

ஆ) விளக்கவுரையாளர்

இவர் தேவைக்கு ஏற்ப நம்பிக்கையாளருக்கு விளக்கவுரைகள், அறிவுரைகள் சுருக்கமாக வழங்குவார். இதனால் திருப்பலிக் கொண்டாட்டத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, அதை அவர்கள் ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவுவார். விளக்கவுரையாளரின் குறிப்புகள் நன்றாகவும் சுருக்கமாகவும் தயாரிக்கப்பட வேண்டும். விளக்கவுரையாளர் தம் பணியை நிறைவேற்றும்போது மக்கள்முன் தக்க இடத்தில் நிற்பார். ஆனால் அவர் வாசக மேடையைப் பயன்படுத்தக் கூடாது.

85 காண். அருளடையாளங்களின் ஒழுங்குமுறைத் திருப்பேராயம், Immensae caritatis, 29.01.197' எண் 1: A.A.S. 65 (1973) பக். 265-266; திச 230 $ 3.
86 திருவழிபாடு, 24. 87 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Musicam sacrum, 05.03.1967, எண் 19: A.A.S. 59 (1967) பக். 306. 88 காண். மேற்படி, அதே, எண் 21: A.A.S. 59 (1967) பக். 306-307.
============== ↑ பக்கம் 44

இ) கோவிலில் காணிக்கை எடுப்பவர்

ஈ) ஒரு சில பகுதிகளில், கோவிலின் வாயிலருகில் நின்று இறைமக்களை வரவேற்று, அவர்களை வசதியான இருக்கையில் அமர்த்தவும் பவனிகளை ஒழுங்குபடுத்தவும் சிலர் பணியாற்றுவர். 106. திருவழிபாட்டு நிகழ்வுகளைத் தகுந்தவாறு ஏற்பாடு செய்யவும் அவற்றைத் திருப்பணியாளரும் பொது நிலையினரும் சிறப்பாக, முறையாக, இறைப்பற்றுடன் நிறைவேற்றுமாறு கவனிக்கவும் தகுதி படைத்த ஒருவரோ வழிபாட்டு நெறியாளரோ நியமிக்கப்படுவது பொருத்தம் ஆகும். குறிப்பாக மறைமாவட்டத் தலைமைக் கோவில்களிலும் பெருங்கோவில்களிலும் இது மிக அவசியம்.

107. அருள்பணியாளரையோ திருத்தொண்டரையோ சாராத திருவழிபாட்டுப் பணிகளைப் (எண். 100 - 106) பங்குப் பணியாளர் அல்லது அதிபரால் தெரிவு செய்யப்படும் தகுதி வாய்ந்த பொது நிலையினரிடம் திருவழிபாட்டு ஆசி வழியாகவோ தற்காலிக நியமனத்தாலோ ஒப்படைக்கலாம். பீடத்தில் பணி புரியும் அருள்பணி யாளருக்கு உதவி செய்பவருக்கான ஒழுங்கு முறைகள் இன்னவை என்று ஆயர் தம் மறைமாவட்டத்துக்கு என ஏற்படுத்தியிருக்கும் வரைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

IV. பணிகளைப் பிரித்துக் கொடுத்தலும் கொண்டாட்டத்துக்கான தயாரிப்பும்

108. ஆயர் முன்னிலை வகிக்கும் திருப்பலியில் அவருக்கு உரிய பகுதிகளைத் தவிர திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளரே திருப்பலியின் எல்லாப் பகுதிகளுக்கும் எப்பொழுதும் தலைமை தாங்குவார் (காண். மேலே எண் 92).

109. ஒரே திருப்பணியை நிறைவேற்றக் கூடியவர்கள் பலர் இருப்பின், பணியின் அல்லது கடமையின் பகுதிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு நிறைவேற்றுவதில் எவ்விதத் தடையும் இல்லை. எ.கா. ஒரு திருத்தொண்டர் பாடல் பகுதிகளைப் பாடவும் மற்றொருவர் பீடத்தில் உதவி செய்யவும் நியமிக்கப்படலாம். பல வாசகங்கள் இருப்பின் அவற்றைப் பல வாசகர்களுக்குப் பிரித்துக் கொடுக்கலாம். மற்ற பணிகளுக்கும் இது பொருந்தும். இருப்பினும் கொண்டாட்டத்தின் ஒரே பகுதியைப் பலர் தங்களுக்குள் பிரித்துக் கொள்வது முறை அன்று. எ.கா. ஆண்டவருடைய பாடுகளின் வாசகத்தைத் தவிர, ஒரே வாசகத்தை இரண்டு வாசகர்கள் ஒருவர் பின் ஒருவராக வாசிப்பது.

110. மக்களோடு நிறைவேற்றப்படும் திருப்பலியில் ஓர் அருள்பணியாளர் மட்டுமே இருப்பின், அவரே பல்வேறு பணிகளையும் நிறைவேற்றுவார்.

111. திருப்பலி நூல் மற்றும் திருவழிபாட்டு நூல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு திருவழிபாட்டுக் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டிருக்கும் அனைவரும் பயன்தரும் வகையில் தயாரிக்கும்படி சடங்குகள், அருள்பணி, இசைக் கூறுகள் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து ஆர்வமுடன் செயல்பட வேண்டும். கோவில் அதிபரின் மேற்பார்வையிலும் நம்பிக்கையாளரைச் சார்ந்தவற்றிலும் இறைமக்களைக் கலந்து ஆலோசித்த பின்னும் இத்தயாரிப்பு நடைபெற வேண்டும். இருப்பினும் தமது பொறுப்பில் இருப்பவற்றை ஒழுங்குபட அமைத்துக்கொள்ளும் உரிமை, கொண்டாட்டத்துக்குத் தலைமை ஏற்கும் அருள்பணியாளருக்கு எப்போதும் உண்டு."

89 காண். Pont. Cons. De Legum Textibus Interpretandis, Ca. 2308 2: A.A.S. 86 (1994) எண் 541.
90 காண். திருவழிபாடு, 22.
============== ↑ பக்கம் 45

====================

இயல் 4

திருப்பலிக் கொண்டாட்டத்தின் பல்வேறு வகைகள்

112. அருள்பணியாளர் குழாமும் திருத்தொண்டர்களும் பொது நிலையம் திருப்பணியாளர்களும் சூழ்ந்து நிற்க, ஆயர் தலைமை வகிக்கும் திருப்பலிக்கு அதன் சிறப்பு முன்னிட்டுத் தலத் திரு அவையில் உறுதியாக முதலிடம் வழங்கப்பட வேண்டும். 1 இது. இறைவனின் புனித மக்கள் நிறைவாகவும் செயல்முறையிலும் பங்கேற்கின்றார்கள். ஏனெனில் இதில்தான் திரு அவை தலைசிறந்த வகையில் வெளிப்படுத்தப்படுகின்றது.

ஆயர் நிகழ்த்தும் திருப்பலியில் அல்லது, அவர் நற்கருணைக் கொண்டாட்டம் இன்றி தலைமை வகிக்கும்போது, 'ஆயர்களின் திருச்சடங்கு நூலில் காணப்படும் ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். 92

113. மக்கள் குழுமத்தோடு, சிறப்பாகப் பங்குக் குழுமத்தோடு நிகழ்த்தப்படும் திருப்பலிக்கும் மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஏனெனில் அக்குழுமம் ஒரு குறிப்பிட்ட காலத்திலும் இடத்திலும் குறிப்பாக ஞாயிறு பொதுக் கொண்டாட்டத்தில் உலகளாவிய திரு அவையைச் சிறப்பாக முன்னிலைப்படுத்துகின்றது. 93

114 சில குழுமங்களில் நிகழ்த்தப்படும் திருப்பலிகளில், துறவுக் குழுமத் திருப்பலி தனி இடம் வகிக்கின்றது; ஏனெனில் அது அன்றாட திருப்புகழ்மாலையின் ஒரு பகுதியாகவோ குழுமத் திருப்பலி'யாகவோ இருக்கின்றது. இத்திருப்பலிகளின் கொண்டாட்டத்துக்கெனத் தனிவகை வழிபாட்டு முறை இல்லையெனினும் குழுமத் துறவியர் அல்லது திருப்புகழ்மாலைப் பாடகர் குழுமத்தினர் யாவரும் முழுமையாகப் பங்கேற்கும் பாடலுடன் கூடிய திருப்பலியாக அமைவது மிகவும் பொருத்தம் ஆகும். எனவே தங்கள் பணியை ஆற்ற ஒவ்வொருவரும் தம் திருநிலைக்கும் அல்லது திருப்பணிக்கும் ஏற்ப இத்திருப்பலிகளில் செயல்பட வேண்டும். இவ்வாறு, நம்பிக்கையாளரின் அருள்பணி நலன் கருதித் தனித்தனியாகத் திருப்பலி நிறைவேற்றக் கடமை இல்லாத அருள்பணியாளர்கள் எல்லாரும் கூடுமானவரையில் அத்திருப்பலிகளில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுவது விரும்பத்தக்கது. மேலும் ஒரு குழுமத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் ஒவ்வொருவரும் நம்பிக்கையாளரின் அருள்பணி நலன் கருதி, தனித்தனியாகத் திருப்பலி நிறைவேற்றக் கடமைப்பட்டவர்களாய் இருந்தாலும் அதே நாளில் துறவுக் குழுமத் திருப்பலியிலோ குழுமத் திருப்பலியிலோ சேர்ந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம்.'' திருப்பலிக் கொண்டாட்டத்தில் உடனிருக்கும் அருள்பணியாளர்கள், தகுந்த காரணம் இருந்தாலன்றித் தங்களது திருநிலைக்கு ஏற்பப் பணி ஆற்றுவதும் திருவுடை அணிந்து கூட்டுத்திருப்பலியில் பங்கேற்பதும் விரும்பத்தக்கது. இல்லை எனில் பாடகர் குழுவிற்கான சிறப்பான உடை அல்லது துறவு உடைமீது குறுகிய வெண்ணாடை அணிந்து பங்கேற்பர்.

I மக்களோடு திருப்பலி

15 நம்பிக்கையாளர் பங்கேற்போடு கொண்டாடப்படும் திருப்பலி 'மக்களோடு திருப்பலி எனப்படும். மேலும் கூடுமானவரை இது, சிறப்பாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் இசையோடும் போதுமான பணியாளர்களோடும் கொண்டாடப்படுவது பொருத்தம் ஆகும். எனினும் இது பாடலின்றியும் ஒரே ஒரு பணியாளருடனும் நடைபெறலாம்.

91 காண். திருவழிபாடு, 41. 92 காண். ஆயர்களின் திருச்சடங்கு, 1984, எண். 119-186.
93 காண். திருவழிபாடு, 42; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண" A.A.S. 59 (1967) பக். 555; திருச்சபை, 28; திருப்ப ணியாளர்கள், 5.
94 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண் 47: A.A.S. 59 (1967) பசு "
95 காண். மேற்படி, எண் 26: A.A.S. 59 (1967) பக். 555; திருச்சடங்குத் திருப்பேராயம், Music " 05.03.1967, எண். 16, 27: A.A.S. 59 (1967) பக். 305, 308.
==============↑ பக்கம் 46

116. திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது திருத்தொண்டர் உடனிருந்தால், அவர் தமக்கே உரிய பணியைச் செய்ய வேண்டும். பொதுவாக, திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளருக்குப் பீடத்துணைவர், வாசகர், பாடகர் ஆகியோர் உதவுவது விரும்பத்தக்கது. உண்மையாக, கீழே தரப்படுகின்ற வழிபாட்டுமுறை இன்னும் பலர் பணி புரியவும் வழிசெய்கின்றது.

தயாரிக்கப்பட வேண்டியவை

117. பீடம் ஒரு வெள்ளைத் துகிலாலாவது மூடப்பட்டிருக்க வேண்டும். அத்தோடு அதன்மீது அல்லது அதன் அருகில் எரியும் திரிகளுடன் மெழுகுதிரித் தண்டுகள் வைக்கப்பட வேண்டும். அவை சாதாரணக் கொண்டாட்டத்தில் இரண்டாகவோ, முக்கியமாக ஞாயிறு திருப்பலியின்போது அல்லது கடன் திருநாளின்போது நான்கு அல்லது ஆறாகவோ இருக்கும். மறைமாவட்ட ஆயர் திருப்பலி நிறைவேற்றும்போது ஏழு எரியும் திரிகள் பீடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும். அது போல, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் திரு உருவத்தோடு கூடிய சிலுவை பீடத்தின்மீதோ அதன் அருகிலோ இருக்க வேண்டும். மெழுகுதிரித் தண்டுகளும் கிறிஸ்துவின் திரு உருவத்தோடு கூடிய அணிசெய்யப்பட்ட சிலுவையும் வருகைப் பவனியில் கொண்டு வரப்படலாம். நற்செய்தி வாசக நூல் அல்லது வாசக நூல் வருகைப் பவனியில் கொண்டுவரப்படவில்லை எனில், அதைப் பீடத்தின் மீது வைத்துக்கொள்ளலாம்.

118. மேலும் தயாரிக்கப்பட வேண்டியவை:

அ) அருள்பணியாளரின் இருக்கையின் அருகில்: திருப்பலி நூல், தேவைக்கு ஏற்பப் பாடல் நூல்;
ஆ) வாசக மேடையில்: வாசக நூல்;
இ) திரு மேசைமீது : திருக்கிண்ணம், திருமேனித் துகில், திருக்கிண்ணத் துகில், தேவைக்கு ஏற்பத் திருக்கிண்ண அட்டை, தேவைப்பட்டால், அப்பத் தட்டும் நற்கருணைக் கலங்களும்; தலைமை வகிக்கும் அருள்பணியாளரும் திருத்தொண்டர், திருப்பணியாளர்கள், மக்கள் ஆகியோரும் நற்கருணை உட்கொள்ளத் தேவையான அப்பம், இரசமும் தண்ணீரும் உள்ள குப்பிகள் (இவை நம்பிக்கையாளரால் காணிக்கைப் பவனியின்போது கொண்டு வரப்படாதபோது); புனிதப்படுத்தப்பட வேண்டிய தண்ணீர் அடங்கிய கலம்; நம்பிக்கையாளர் நற்கருணை உட்கொள்ளும்போது பயன்படுத்தப்படும் நற்கருணைத் தட்டும், கை கழுவுவதற்குத் தேவையானவையும்.
கூடுமாயின் திருக்கிண்ணத்தை அந்தந்த நாளுக்கு உரிய நிறத் துகிலாலோ வெண் துகிலாலோ மூடிவைத்தல் சிறப்புக்கு உரியது ஆகும்.

119. திருப்பொருள் அறையில் திருப்பலிக் கொண்டாட்டத்தின் பல வகைக்கு ஏற்ப, அருள்பணியாளருக்கும் திருத்தொண்டருக்கும் மற்ற பணியாளர்களுக்கும் தேவையான (காண். எண். 337-341) திருவுடைகள் தயாரிக்கப்படுகின்றன.

அ. அருள்பணியாளருக்கு : நீள் வெண்ணாடை, தோள்துகில், திருப்பலி உடை.
ஆ. திருத்தொண்டருக்கு: நீள் வெண்ணாடை, தோள்து கில், இவற்றோடு திருத்தொண்டர் திருவுடை ; தேவையின் பொருட்டும் ஆடம்பரம் குறைந்த கொண்டாட்டத்தின்போதும் திருத்தொண்டரின் திருவுடையை விட்டுவிடலாம்.
இ. மற்ற பணியாளர்களுக்கு: நீள் வெண்ணாடைகள் அல்லது முறையான அனுமதி பெற்ற வேறு உடைகள்.96
நீள் வெண்ணாடை அணியும் அனைவரும் இடைக்கச்சையும் கழுத்துத் துணியும் பயன் படுத்துவர். நீள் வெண்ணாடை வடிவமைப்பில் ஆடை இருப்பின், அவை தேவைப்படா.

96 காண். Ecclesiae de mysterio, 15.08.1997, art, 6: A.A.S. 89 (1997) பக். 869.
==============↑ பக்கம் 47

வருகைப் பவனி நடைபெற்றால், பின்வருபவையும் தயாராக இருக்க வேண்டும்: நற்செய் வாசக நூல்; ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருநாள்களிலும் தூபம் பயன்படுத்தினால் கா : கலமும் சாம்பிராணிக் கலமும்; சிலுவை; எரியும் மெழுகுதிரிகளுடன் மெழுகுதிரித் தண்டுகள்

அ) திருத்தொண்டர் இல்லாத திருப்பலி

தொடக்கச் சடங்குகள்

120. மக்கள் கூடிவந்தபின் அருள்பணியாளரும் பணியாளர்களும் திருவுடைகள் அணிந்து பின்வரும் வரிசைப்படி பீடத்துக்குப் பவனியாகச் செல்வர்:

அ) தூபத்தைப் பயன்படுத்தினால், புகையும் தூபக் கலம் ஏந்திய தூபப் பணியாளர்,
ஆ) எரியும் திரிகளை ஏந்திய பணியாளர்கள், இவர்கள் நடுவில் பீடத்துணைவர் அல்லது திருச்சிலுவை ஏந்திய ஒரு பணியாளர்;
இ) பீடத்துணைவரும் பிற பணியாளர்களும்;
ஈ) வாசக நூல் (Lectionary) அல்லாத, நற்செய்தி வாசக நூலைச் (Book of the Gospels) சிறிது உயர்த்திப் பிடித்துக்கொண்டு வரும் வாசகர்;
உ) திருப்பலியைக் கொண்டாட இருக்கும் அருள்பணியாளர்.
தூபத்தைப் பயன்படுத்தினால், அருள்பணியாளர் பவனி தொடங்கும் முன் தூபக் கலத்தில் சாம்பிராணி இட்டு, அமைதியாக அதன் மீது சிலுவை அடையாளம் வரைந்து ஆசி வழங்குவார்.

121. பவனி பீடத்தை நோக்கிச் செல்லும்போது வருகைப் பாடல் பாடப்படும் (காண். எண். 47-48).

122. அருள்பணியாளரும் பணியாளர்களும் பீடத்தை அணுகியவுடன் தாழ்ந்து பணிந்து வணங்குவர்.

பாடுபட்ட கிறிஸ்துவின் திரு உருவத்தோடு கூடிய அணிசெய்யப்பட்ட சிலுவையைப் பவனியில் கொண்டு வந்தால், அதைப் பீடத்தின் அருகில் வைக்கலாம். அது பீடச் சிலுவையாக இருக்கும். அவ்வாறெனில் அதுவே பயன்படுத்தப்பட வேண்டிய ஒரே சிலுவை ஆகும். இன்றேல் அதை வேறு ஒரு தகுதியான இடத்தில் வைத்து விடலாம். மெழுகுதிரித் தண்டுகள் பீடத்திலோ அதன் அருகிலோ வைக்கப்படும். நற்செய்தி வாசக் நூலைப் பீடத்தின் மீது வைத்தல் சிறப்புக்கு உரிய செயல் ஆகும். 123. அருள்பணியாளர் பீடத்துக்கு ஏறிச்சென்று அதற்கு முத்தமிட்டு வணக்கம் செலுத்துவார்: பின் தேவைக்கு ஏற்ப, பீடத்தைச் சுற்றிவந்து சிலுவைக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டுவார்:

124. இவற்றுக்குப்பின் அருள்பணியாளர் தம் இருக்கைக்குச் செல்வார். வருகைப் பாட முடிந்ததும் நின்றுகொண்டிருக்கும் அருள்பணியாளர், நம்பிக்கையாளர் ஆகிய அனைவரு" தம்மீது சிலுவை அடையாளம் வரைவர்; அப்போது "தந்தை, மகன், தூய ஆவியா' பெயராலே" என அருள்பணியாளர் சொல்ல, மக்கள் "ஆமென்" எனப் பதிலளிப்பார்

பின்பு, அருள்பணியாளர் மக்களை நோக்கி, கைகளை விரித்து, தரப்பட்டு வாய்பாடுகளுள் ஒன்றைச் சொல்லி அவர்களை வாழ்த்துவார். அந்த ந திருப்பலியைப் பற்றி அருள்பணியாளரோ மற்றொரு பணியாளரோ மிகச் சுரு" நம்பிக்கையாளருக்கு முன்னுரை கூறலாம்.

125. பின்னர் பாவத்துயர்ச் செயல் தொடரும். அதன்பின் சடங்குமுறைக் குறிப்புகளுக்கு ஏற்ப ஆண்டவரே, இரக்கமாயிரும்" பாடப்படும் அல்வா சொல்லப்படும் (காண் எண் 52.)

==============↑ பக்கம் 48

126. நிர்ணயிக்கப்பட்டுள்ள கொண்டாட்டங்களில் "உன்னதங்களிலே" பாடப்படும் அல்லது சொல்லப்படும் (காண். எண் 53).

127 தென்பின் அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து "மன்றாடுவோமாக எனக் கூறி, மக்களை மன்றாட அழைப்பார். அருள்பணியாளருடன் ஒன்றித்து அனைவரும் சிறிது நேரம் அமைதியாக மன்றாடுவர். பின்பு அருள்பணியாளர் தம் கைகளை விரித்துத் திருக்குழும மன்றாட்டைச் சொல்வார்; அதன் முடிவில் மக்கள் "ஆமென்" என ஆர்ப்பரிப்பார்கள்.

வார்த்தை வழிபாடு

128. திருக்குழும மன்றாட்டு முடிந்ததும் எல்லாரும் அமர்வர். அருள்பணியாளர் வார்த்தை வழிபாட்டை நம்பிக்கையாளருக்கு மிகச் சுருக்கமாக அறிமுகப்படுத்தலாம். வாசகர் வாசக மேடைக்குச் சென்று அங்கே திருப்பலி தொடங்கும் முன் வைக்கப்பட்டிருக்கும் வாசக நூலிலிருந்து முதல் வாசகத்தை வாசிப்பார். மக்கள் யாவரும் கவனமுடன் அதைக் கேட்பார்கள். முடிவில் வாசகர் "ஆண்டவரின் அருள் வாக்கு" என ஆர்ப்பரிப்பார். எல்லாரும் "இறைவனுக்கு நன்றி" எனப் பதில் கூறுவர்.

பின்னர் தாங்கள் கேட்டவற்றைத் தியானிக்கும் பொருட்டு, தேவைக்கு ஏற்ப மக்கள் சிறிது நேரம் அமைதி காப்பர். 129. பின்னர் திருப்பாடல் முதல்வர் அல்லது வாசகரே திருப்பாடலின் வசனங்களை எடுத்துரைப்பார்; மக்கள் வழக்கம் போல பதில் அளிப்பர்.

130. நற்செய்திக்குமுன் இரண்டாம் வாசகம் இருப்பின் வாசகர் வாசக மேடையிலிருந்து அதனை வாசிப்பார். எல்லாரும் கேட்டு முடிவில் மேலே குறிப்பிட்டது போல (காண். எண் 128) ஆர்ப்பரிப்புக்குப் பதில் கூறுவர். பின்னர் வசதிக்கு ஏற்ப, சிறிது நேரம் அமைதி காக்கலாம்.

131. அதன் பின்னர், எல்லாரும் எழுந்து நிற்க, "அல்லேலூயா' அல்லது திருவழிபாட்டுக் காலத்துக்கு ஏற்ப வேறொரு பாடல் பாடப்படும் (காண். எண். 62-64).

132. "அல்லேலூயா" அல்லது வேறு பாடல் பாடப்பெறும்போது, தூபம் பயன்படுத்தினால் அருள் பணியாளர் தூபக் கலத்தில் சாம்பிராணி இட்டு ஆசி வழங்குவார். பின்பு, தம் கைகளைக் குவித்துப் பீடத்துக்கு முன்பாகத் தாழ்ந்து பணிந்து, "எல்லாம் வல்ல இறைவா, உமது நற்செய்தியை...." என்னும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்வார்.

133. நற்செய்தி வாசக நூல் பீடத்தின் மீது இருந்தால், அருள்பணியாளர் அதை எடுத்து, சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு வாசக மேடைக்குச் செல்வார். பொது நிலைப் பணியாளர்கள் தூபக் கலத்தையும் எரியும் மெழுகுதிரிகளையும் ஏந்தி அவருக்கு முன் செல்வர். கிறிஸ்துவின் நற்செய்திக்குக் காட்டும் சிறப்பு மரியாதையின் அடையாளமாக அங்கு இருப்போர் வாசக மேடை நோக்கித் திரும்புவர்.

134. வாசக மேடையில் அருள்பணியாளர் வாசக நூலைத் திறந்து, தம் கைகளைக் குவித்து "ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" எனச் சொல்ல, மக்கள் "உம் ஆன்மாவோடும் இருப்பாராக" எனப் பதில் கூறுவர்; பின்னர் அவர் பெருவிரலால் நூலின்மீதும் தம் நெற்றி, வாய், நெஞ்சிலும் சிலுவை வரைந்து கொண்டே "... எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்" எனச் சொல்வார். மக்கள் ஒவ்வொருவரும் அவ்வாறே செய்துகொண்டு "ஆண்டவரே, மாட்சி உமக்கே" எனக் கூறி ஆர்ப்பரிப்பர். தூபம் பயன்படுத்தினால் (காண். எண். 276-277), அருள்பணியாளர் நற்செய்தி வாசக நூலுக்குத் தூபம் காட்டுவார். பின்னர் அவர் நற்செய்தியைப் பறைசாற்றி முடிவில் "ஆண்டவரின் அருள்வாக்கு" எனச் சொல்ல, எல்லாரும் "கிறிஸ்துவே, உமக்குப் புகழ்" எனப் பதில் கூறுவர். அருள்பணியாளர் "இந்நற்செய்தியின் வார்த்தைகளால் நம் பாவங்கள் நீங்குவனவாக" என அமைந்த குரலில் மன்றாடி, நூலை முத்தமிடுவார்.
==============↑ பக்கம் 49

135. வாசகர் எவரும் இல்லை எனில், எல்லா வாசகங்களையும் பதிலுரைத் திருப்பாடலை...... அருள்பணியாளரே வாசக மேடையில் நின்று கொண்டு வாசிப்பார். தூபம் பயன்படுத்தின. வாசக மேடையில் நின்றுகொண்டே தூபக் கலத்தில் சாம்பிராணி இட்டு, ஆசி வழங்கித் தாம் .. பணிந்து "எல்லாம் வல்ல இறைவா, உமது நற்செய்தியை ..." எனச் சொல்வார்.

136. அருள்பணியாளர் தம் இருக்கையில் அல்லது வாசக மேடையில் அல்லது தேவைக்கு ஏற்ப, தகுதியான வேறோர் இடத்தில் நின்றுகொண்டு மறையுரை ஆற்றுவார். மறையுரைக்குப்பின் சிறிது நேரம் அமைதி காக்கலாம்.

137. எல்லாரும் எழுந்து நிற்க, மக்களோடு சேர்ந்து அருள்பணியாளர் நம்பிக்கை அறிக்கையைப் பாடுவார் அல்லது சொல்வார் (காண். எண் 68). "தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்" எனும் வார்த்தைகளைப் பாடும்போது / சொல்லும்போது அனைவரும் தாழ்ந்து பணிந்து வணங்குவர். ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு, ஆண்டவருடைய பிறப்பு ஆகிய பெருவிழாக்களில் அனைவரும் முழங்காலிடுவர்.

138. நம்பிக்கை அறிக்கைக்குப்பின், அருள்பணியாளர் தமது இருக்கையில் நின்றுகொண்டு தம் கைகளைக் குவித்து, சிறிய அறிவுரை கூறி, பொது மன்றாட்டுகளில் பங்கேற்கும்படி நம்பிக்கையாளருக்கு அழைப்பு விடுப்பார். பின்னர் பாடகரோ வாசகரோ மற்றொருவரோ வாசக மேடையிலிருந்து அல்லது வசதியானதோர் இடத்திலிருந்து மக்களைப் பார்த்துக் கருத்துகளை எடுத்துரைக்க, மக்கள் பணிவுடன் பதில் கூறுவர். இறுதியாக அருள்பணியாளர் தம் கைகளை விரித்து இறைவேண்டலுடன் மன்றாட்டை நிறைவு செய்வார்.

நற்கருணை வழிபாடு

139. பொது மன்றாட்டு முடிந்ததும் எல்லாரும் அமர்வர். பின்பு காணிக்கைப் பாடல் தொடங்கும் (காண். எண் 74).

பீடத்துணைவர் அல்லது வேறொரு பொது நிலைப் பணியாளர் திருமேனித் துகில், திருக்கிண்ணத் துகில், திருக்கிண்ணம், திருக்கிண்ண அட்டை, திருப்பலி நூல் ஆகியவற்றைக் கொண்டு வந்து பீடத்தின் மீது வைப்பார். 140. திருப்பலிக் கொண்டாட்டத்துக்கான அப்பத்தையும் இரசத்தையும் அல்லது கோவில் தேவைகளுக்கும் ஏழை எளியவர்களுக்கும் பயன்படும் நன்கொடைகளையும் காணிக்கையாகக் கொடுத்து, நம்பிக்கையாளரின் பங்கேற்பை வெளிக்காட்டுவது விரும்பத்தக்கது.

அருள்பணியாளர் நம்பிக்கையாளரின் காணிக்கைப் பொருள்களை ஏற்றுக்கொள்வார். அவருக்குப் பீடத்துணைவரோ வேறொரு பணியாளரோ உதவி செய்வார். திருப்பலிக்கான அப்பமும் இரசமும் பலி நிறைவேற்றும் அருள்பணியாளரிடம் எடுத்துச் செல்லப்படும். அவர் அவற்றைப் பீடத்தின் மீது வைப்பார். பிற காணிக்கைப் பொருள்கள் வேறொரு தகுந்த இடத்தில் வைக்கப்படும் (காண். எண் 73).

141. பீடத்தில் அருள்பணியாளர் அப்பம் உள்ள தட்டைப் பெற்று அதை இரு கைகளிலும், பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு, "ஆண்டவரே, அனைத்தும் இறைவா ..." எனும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்வார். பின்பு, அப்பம் உ" தட்டைத் திருமேனித் துகில்மீது வைப்பார்.

==============↑ பக்கம் 50

142 அடுத்து, அருள்பணியாளர் பீடத்தின் ஒரு பக்கம் நின்று, பணியாளர் வழங்கும் இரசம், தண்ணீர் உள்ள குப்பிகளைப் பெற்று, இருக்கிண்ணத்தில் இரசத்தையும் சிறிதளவு தண்ணீரையும் ஊற்றில் இருவது இது மனித இயல்பில் எனும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்வார். பீடசுலின் நடுப்பகுதிக்குத் திரும்பி வந்து, திருக்கிண்ணத்தை இரு லைனிலும் பிடித்து, பிடத்துக்கு மேல் சற்று உயர்த்தி, ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா எனும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்வார், பின், திருக்கிண்ணத்தைத் திருமேனித் இல்மீது வைத்து, தேவைக்கு ஏற்ப, அதைத் திருக்கிண்ண அட்டையால் மூடுவார்.

காணிக்கைப் பாடல் பாடப்படாமலோ இசைக்கருவி மீட்டப்படாமலோ இருப்பின், அப்பத்தையும் இரசத்தையும் ஒப்புக்கொடுக்கும்பொழுது அவற்றுக்கு உரிய ஆசி வாய்பாடுகளை அருள்பணியாளர் உரத்த குரலில் சொல்ல, மக்கள் "இறைவன் என்றென்றும் வாழக்கப்பெறுவாரா* என ஆர்ப்பரிப்பார்கள்.

13. பீடத்தின்மீது இருக்கிண்ணத்தை வைத்தபின்னர் அருள்பணியாளர் தாழ்ந்து பணிந்து, ஆண்டவரே, தாழ்மையான மனமும் என அமைந்த குரலில் மன்றாடுவார்.

144 பின்னர், தூபத்தைப் பயன்படுத்தினால், அருள்பணியாளர் தூபக் கலத்தில் சிறிது சாம்பிராணி இட்டு, அமைதியாக ஆசி வழங்குவார். காணிக்கைப் பொருள்கள், சிலுவை, பீடம் ஆகியவற்றுக்குத் தூபம் காட்டுவார். பணியாளர் பீடத்தின் ஒரு பக்கமாக நின்று கொண்டு அருள்பணியாளருக்குத் தூபம் காட்டுவார்; பிறகு மக்களுக்கும் தூபம் காட்டுவார்.

145"ஆண்டவரே, தாழ்மையான மனமும் எனும் மன்றாட்டுக்குப்பின் அல்லது தூபம் காட்டி யபின் அருள்பணியாளர் பீடத்தின் ஒரு பக்கம் நிற்பார்; பணியாளர் தண்ணீர் அமைந்த குரலில் சொல்வார். வார்க்க, தம் கைகளைக் கழுவி ஆண்டவரே, எனது குற்றம் நீங்க... எனும் மன்றாட்டை

146. அருள்பணியாளர் பீடத்தின் நடுப்பகுதிக்குத் திரும்பி வந்து, மக்களை நோக்கி நின்று கொண்டு, தம் கைகளை விரித்து, பின் குவித்து, "சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான . எனச் சொல்லி மக்களை வேண்டுதல் செய்ய அழைப்பு விடுப்பார். இதற்கு மக்கள் எழுந்து நின்று ஆண்டவர் தமது திருப்பெயரின்' எனும் பதில் மொழி சொல்வார்கள். பின்னர் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துக் காணிக்கைமீது மன்றாட்டைச்' சொல்வார். இதன் இறுதியில் மக்கள் "ஆமென் என ஆர்ப்பரிப்பார்கள்.

147. அதன் பின்னர், அருள்பணியாளர் நற்கருணை மன்றாட்டைத் தொடங்குவார். சடங்குமுறைக் குறிப்புகளின்படி (காண். எண் 365) உரோமைத் திருப்பலி நாலில் தரப்பட்டுள்ள அல்லது திருத்தூது ஆட்சிப் பீடம் அனுமதித்துள்ள நற்கருணை மன்றாட்டுகளுள் ஒன்றைத் தேர்வு செய்வார். அருள்பணியாளர் மட்டுமே தமது திருநிலைப்பாட்டின் ஆற்றலினால் நற்கருணை மன்றாட்டை அதன் இயல்பின் காரணமாக, சொல்ல வேண்டும் என்பதை அது வலிந்து கோருகின்றது. மக்கள் நம்பிக்கையோடும் அமைதியாகவும் அருள்பணியாளரோடு ஒன்றித்திருப்பார்கள். நற்கருணை மன்றாட்டின்போது தங்களுக்கு உரிய பகுதிகளில் பங்கேற்பதினாலும் தங்களை ஒன்றிணைத்துக் கொள்வார்கள். அதாவது தொடக்கவுரையில் வரும் பதில் உரையாடல், "தூயவர்', அர்ச்சிப்புக்குப்பின் வரும் ஆர்ப்பரிப்பு, சிறப்புப் புகழுரையின் முடிவில் பெற்றுள்ள பிற ஆர்ப்பரிப்புகள். *ஆமென், மற்றும் ஆயர் பேரவையின் அனுமதியும் திரு ஆட்சிப் பீடத்தின் ஒப்புதலும் பெற்றுள்ள பிற ஆர்ப்பரிப்புகள்.

இசைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் நற்கருணை மன்றாட்டின் பகுதிகளை அருள்பணியாளர் பாடுவது சாலப் பொருத்தமானது.

==============↑ பக்கம் 51

148. அருள்பணியாளர் நற்கருணை மன்றாட்டைத் தொடங்கும்போது, தம் கைகட. "ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" எனப் பாட அல்லது சொல்ல, மக்கள்
பாா'' எனப் பதிலுரைப்பார்கள். அருள்பணியாளர் தொட "இதயங்களை மேலே எழுப்புங்கள்" எனத் தம் கைகளை உயர்த்தியவாறு சொல்ல, "ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்" எனப் பதிலுரைப்பார்கள். அருள்பணியாளர் தம் கை, விரித்தவண்ணம் "நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம் எனச் சொல்ல, மக். அது தகுதியும் நீதியும் ஆனதே" என மறுமொழி கூறுவார்கள். பின்னர் அருள்பணியாளர் : கைகளை விரித்தவாறே தொடக்கவுரையைத் தொடர்வார். அவ்வுரையின் முடிவில் : கைகளைக் குவித்து, குழுமி உள்ளோரோடு ஒன்றுசேர்ந்து, தெளிவான குரலில் "தாய, எனப் பாடுவார் அல்லது சொல்வார் (காண். எண் 79b).

149. ஒவ்வொரு நற்கருணை மன்றாட்டிலும் குறித்துள்ள சடங்குமுறைக் குறிப்புகளின்படி, அருள்பணியாளர் நற்கருணை மன்றாட்டைத் தொடர்வார்.

திருப்பலி நிறைவேற்றுபவர் ஆயராக இருந்தால், நற்கருணை மன்றாட்டுகளில் "எங்கள் திருத்தந்தை (பெயர்)" எனும் சொற்களுக்குப்பின் "உம்முடைய தகுதியற்ற ஊழியன் எனக்காகவும்" எனச் சொல்வார். ஆயினும் ஆயர் தமது மறைமாவட்டத்துக்கு வெளியே திருப்பலி நிறைவேற்றினால், "எங்கள் திருத்தந்தை.." எனும் சொற்களுக்குப்பின் இந்த மறைமாவட்ட ஆயரான என் சகோதரர் ... க்காகவும் தகுதியற்ற ஊழியனான எனக்காகவும்" எனச் சேர்த்துச் சொல்வார்.

மறைமாவட்ட ஆயர் அல்லது சட்டத்தின் அடிப்படையில் அவருக்குச் சமநிலையில் உள்ள மற்றவர்கள் கீழ்வரும் முறையில் குறிப்பிடப்பட வேண்டும்: எங்கள் திருத்தந்தை (பெயர்), எங்கள் ஆயர் (அல்லது பதிலாள், மேல்நிலையாளர், மேல்நர், துறவு மடத்துத் தலைவர்) பெயர்.

நற்கருணை மன்றாட்டில் இணையுதவி ஆயரையும் துணை ஆயரையும் குறிப்பிடலாம். அங்கிருக்கும் பிற ஆயர்களின் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது. பலரின் பெயர்களைக் எனச் சொல்லவும். குறிப்பிட வேண்டின் பொதுப்பாடமாக எங்கள் ஆயரும் (பெயர்), அவருடைய துணை ஆயர்களும் எனச் சொல்லவும்.

இந்தப் பாடங்களின் அடிப்படையில் அந்தந்த நற்கருணை மன்றாட்டுக்கு ஏற்றவாறு இலக்கண விதிப்படி இவ்வாய்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

150 அர்ச்சிப்புக்குச் சற்றுமுன், தேவைக்கு ஏற்ப, நம்பிக்கையாளருக்கு ஒரு முன்னறிவிப்பாகப் பணியாளர் ஒருவர் மணி ஒலிக்கச் செய்வார். அவ்வாறே ஒவ்வோர் எழுந்தேற்றத்தின்போதும் இடத்தின் வழக்கத்துக்கு ஏற்ப மணி ஒலிக்கச் செய்வார். காட்டும்போது அவற்றிற்குப் பணியாளர் தூபம் காட்டுவார்.
தாபம் பயன்படுத்தினால், அர்ச்சிப்புக்குப்பின் திரு அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும்

151. அர்ச்சிப்புக்குப்பின் அருள்பணியாளர் "நம்பிக்கையின் மறைபொருள்" எனச் ஆர்ப்பரிப்பார்கள். சொன்னவுடன் கொடுக்கப்பட்டுள்ள வாய்பாடுகளில் ஒன்றைச் சொல்லி மக்கள் ஆர்ப்பரிப்பார்கள்.

நற்கருணை மன்றாட்டின் முடிவில் திரு அப்பம் உள்ள சட் கிண்ணத்தையும் எடுத்து இரண்டையும் உயர்த்திப் பிடித்துக்கொண்டு
முடிவில் திரு அப்பம் உள்ள தட்டையும் திருக் மட்டும் "இவர் வழியாக, இவரோடு, இவரில் ...." எனும் இறுதி இறைப்புகழும் இறுதியில் மக்கள் " ஆமென்" என ஆர்ப்பரிப்பார்கள். பின்னர் அம்
இவரில் ...." எனும் இறுதி இறைப்புகழுரையைச் சொல்வார். இறுதியில் மக்கள் ஆமென் என ஆர்ப்பரிப்பார்கள். பின்னர் அருள் பணியாளர் திரு அப்பம் உள்ள தட்டையும் திருக்கிண்ணத்தையும் திருமேனித் துகில்மேல் வைப்பார்.

152. நற்கருணை மன்றாட்டின் இறுதியில், அருள்பணியாளர் தம் கை ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலுக்கு முன்னுரை வழங்குவார். பின்
இல் அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து விரித்து மக்களோடு சேர்ந்து அதைச் சொல்வார்.
==============↑ பக்கம் 52

15.3. ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டல் முடிந்தபின், அருள் பற்றியாளர் மாட்டியே தம் கைகளை விரித்து, ஆண்டவரே, நீமை அமத்திலிருந்தும் எனும் தொடர் இறை 2வண்டலைச் சொல்வார். அதன் முடிவில் மக்கள், ''எனெனில் ஆட்சியர் 1101' என ஆர்ப்பரிப்பார்கள்.

158 அதன்பின் அருள்பணியாளர் தம் கைகளை விரித்து ஆடவரே யார் " அமைதியை எனும் மன்றாட்டைத் தெளிவான குரலில் சொல்வார், அதன் இறுதியில் தம் கைகளை விரித்து, பின் குவித்து, "ஆண்டவருடைய அமைதி படங்களோடு என்றும் இருப்பதாக என மக்களை நோக்கிச் சொல்லி, அமைதி வாழ்த்தை வழங்குவார். மக்களும் "1" ஆன்மாவோடும் இருப்பதாக, எனப் பதில் கூறுவார்கள், பின் அருள்பணியாளர் தேவைக்கு ஏற்ப, ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம் என்பார்,

அருள்பணியாளர் அமைதியின் வாழ்த்தைப் பிற பணியாளர்களுக்குத் தெரிவிக்கலாம். ஆனால் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படா வண் ராம் அவர் திருப்பீட முற்றத்துக்குள்ளேயே இருக்க வேண்டும். தகுந்த காரணத்தை முன்னிட்டு, நம்பிக்கையாளர் சிலருக்கும் அமைதியின் வாழ்த்துக் கூற விரும்பினால் அவ்வாறே செய்யலாம். ஆயர் பேரவை நிர்ணயித்தபடி அனைவரும் ஒருவர் மற்றவருக்கு அமைதியையும் ஒன்றிணைப்பையும் அன்பையும் வெளிப்படுத்துவர். ஒருவர் மற்றவருக்கு ஆண்டவரின் அமைதியை வழங்கும்போது "ஆண்டவருடைய அமைதி மங்களோடு என்றும் இருப்பதாக எனச் சொல்லலாம். அதற்கு "ஆமென்" எனப் பதில் அளிக்கலாம்.

155, அடுத்து அருள்பணியாளர் திரு அப்பத்தை எடுத்து திரு அப்பத் தட்டின் மீது அதைப் பிட்டு, ஒரு சிறு துண்டைத் திருக்கிண்ணத்துள் இட்டு, "நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் - எனச் சொல்லியவாறு அமைந்த குரலில் மன்றாடுவார். அப்பொழுது "உலகின் பாவங்களைப் போக்கும் என்பதைப் பாடகர் குழுவும் மக்களும் சேர்ந்து பாடுவார்கள் அல்லது சொல்வார்கள் (காண். எண் 83).

156. பிறகு அருள்பணியாளர் நற்கருணை உட்கொள்ளும்முன் தம் கைகளைக் குவித்து, "ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, எனும் மன்றாட்டையோ" ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் எனும் மன்றாட்டையோ அமைந்த குரலில் சொல்வார்.

157. இம்மன்றாட்டு முடிந்தபின் அருள்பணியாளர் முழங்காலிட்டு அதே திருப்பலியில் அர்ச்சிக்கப்பட்ட திரு அப்பத்தை எடுத்து, அதைத் திரு அப்பத் தட்டின் மீது அல்லது திருக் கிண்ணத்தின் மீது சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு மக்களை நோக்கி, "இதோ இறைவனின் செம்மறி ...." எனச் சொல்லி, பின் மக்களோடு சேர்ந்து "ஆண்டவரே, நீர் என மன்றாடுவார்.

158. பின்பு, பலிப்பீடப் பக்கமாய்த் திரும்பி நின்றுகொண்டு, "கிறிஸ்துவின் திரு உடல் ..." என்பதை அமைந்த குரலில் சொல்லி, வணக்கத்துடன் கிறிஸ்துவின் திரு உடலை உட்கொள்வார். அடுத்து, திருக்கிண்ணத்தை எடுத்து "கிறிஸ்துவின் திரு இரத்தம் என்பதை அமைந்த குரலில் சொல்லி, வணக்கத்துடன் கிறிஸ்துவின் திரு இரத்தத்தைப் பருகுவார்.

159. அருள்பணியாளர் நற்கருணை உட்கொள்ளும்போது திருவிருந்துப்பாடல் தொடங்கப்பெறும் (காண். எண் 86).

160. பின்னர் அருள்பணியாளர் திரு அப்பத் தட்டை அல்லது நற்கருணைக் கலத்தை எடுத்துக்கொண்டு, நற்கருணை வாங்குவோரை நோக்கிச் செல்வார். அவர்கள் வழக்கப்படி பவனியாக வருவர்.

நம்பிக்கையாளர் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்தை அல்லது திருக்கிண்ணத்தைத் தாங்களாகவே எடுத்து உட்கொள்ளுதல் கூடாது. அவற்றை ஒருவர் மற்றவருக்கு பரிமாறிக் கொள்ளுதலும் கூடாது. ஆயர் பேரவையின் விதிமுறைகளுக்கு ஏற்ப நம்பிக்கையாளர் முழங்காவிலிருந்தோ நின்றுகொண்டோ நற்கருணை உட்கொள்வார்கள். நின்றுகொண்டு நற்கருணை வாங்கினால் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி நற்கருணை வாங்கும்முன் தகுந்த வணக்கம் செய்ய வேண்டும்,
==============↑ பக்கம் 53

161. அப்பத்தின் வடிவத்தில் மட்டும் நற்கருணை வழங்கப்பட்டால் அருள்பணி... திரு அப்பத்தை சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் "கிறிஸ்துவ திரு உடல் எனச் சொல்லிக் காண்பிப்பார். நற்கருணை உட்கொள்வோர் "ஆமென்" --- பதில் அளித்து, நற்கருணையை நாவிலோ, அனுமதிக்கப்பட்டிருந்தால், நற்கருணை உட்கொள்வோரின் விருப்பத்துக்கு ஏற்ப, கைகளிலோ பெற்றுக்கொள்ளலாம் நற்கருணையைப் பெறுவோர் திரு அப்பத்தைப் பெற்று அதனை முழுமையாக உடனே உட்கொள்வர்.

இரு வடிவங்களிலும் நற்கருணை வழங்கும்போது அதற்கு உரிய சடங்கு முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் (காண். எண். 284 - 287).

162. நற்கருணை வழங்குவதில் அருள் பணியாளருக்கு அங்கு இருக்கும் வேறு அருள் பணியாளர்களும் உதவலாம். அத்தகையோர் இல்லை எனில், நற்கருணை உட்கொள்வோர் மிகப் பெரும் எண்ணிக்கையில் இருந்தால், அருள்பணியாளர் சிறப்புரிமைத் திருப் பணியாளர்களை அதாவது நியமனம் பெற்ற பீடத்துணைவரையோ இச்சடங்கிற்கென தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நம்பிக்கையாளரையோ உதவிக்கு அழைக்கலாம்.97 தேவை ஏற்படும்பொழுது தகுதியுள்ள நம்பிக்கையாளரை இந்த ஒரு நிகழ்வுக்கு மட்டும் நியமிக்கலாம்."

அருள்பணியாளர் நற்கருணை உட்கொள்ளும்முன் இத்திருப்பணியாளர்கள் பீடத்தை அணுகக் கூடாது. அத்தோடு அவர்கள் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்குவதற்காக வைத்திருக்கும் திருக்கலங்களை எப்பொழுதும் அருள்பணியாளரின் கைகளிலிருந்தே பெறுவர்.

163. நற்கருணையை வழங்கியபின், அர்ச்சிக்கப்பட்ட இரசம் எஞ்சி இருப்பின், அருள்பணியாளர் அதனை உடனே முற்றிலும் பீடத்திலேயே உட்கொள்வார். எஞ்சி இருக்கும் அர்ச்சிக்கப்பட்ட அப்பங்களைப் பீடத்திலேயே உட்கொள்வார் அல்லது நற்கருணை வைக்கப்படும் இடத்துக்குக் கொண்டு செல்வார்.

அருள்பணியாளர் பீடத்துக்குத் திரும்பிவந்து, அப்பத் துகள்கள் இருந்தால் அவற்றை ஒன்றுசேர்ப்பார்; பீடத்தின் ஒரு பக்கமாக நின்றுகொண்டு அல்லது திருமேசைக்குச் சென்று, திரு அப்பத் தட்டையோ நற்கருணைக் கலத்தையோ திருக்கிண்ணத்தின்மேல் தூய்மைப்படுத்துவார்; பின்னர் திருக்கிண்ணத்தையும் தூய்மைப்படுத்துவார். அப்பொழுது அவர் "ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட ..." எனும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்வார். அப்பொழுது திருக்கிண்ணத் துகிலால் திருக்கிண்ணத்தைத் துடைப்பார். கலங்கள் பீடத்தின் மீது தூய்மைப்படுத்தப்பட்டால் அவற்றைப் பணியாளர் ஒருவர் திரு மேசைக்கு எடுத்துச் செல்வார். தவிர, தூய்மைப்படுத்தப்படவேண்டிய கலங்களை, முக்கியமாக அவை பலவாக இருப்பின், பீடத்தின் மீது அல்லது திரு மேசைமீது வசதிக்கு ஏற்றாற் போலத் துகிலால் மூடி, திருப்பலி முடிந்து மக்கள் சென்றவுடனே தூய்மைப்படுத்தும் பொருட்டு திருமேனித் துகில் மீது வைக்கலாம். 164 பின்பு, அருள்பணியாளர் தம் இருக்கைக்குத் திரும்பலாம். இப்பொழுது, சிறிது நேரம் திரு அமைதி காக்கப்படலாம் அல்லது திருப்பாடலையோ மற்றொரு புகழ்ச்சிப் பாடலையோ ஒரு பாடலையோ பாடலாம் (காண். எண் 88).

165. அடுத்து அருள்பணியாளர் தம் இருக்கை அருகில் அல்லது பலிப்பீடத்துக்கு அருகில் மக்கள் பக்கமாய்த் திரும்பி நின்றுகொண்டு, தம் கைகளைக் குவித்து ''மன்றாடுவோமாக எனக் கூறுவார்; பின்பு, தம் கைகளை விரித்து, திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொல்வார். திருவிருந்துக்குப்பின் அமைதி காக்கவில்லை எனில், அனைவரும் இப்போது, சிறிது நேரம் அமைதியாக மன்றாடுவர். இந்த மன்றாட்டின் முடிவில் மக்கள் ஆடும் என ஆர்ப்பரிப்பார்கள்.

97 காண். அருளடையாளங்கள், திருவழிபாட்டுக்கான திருப்பேராயம், Inaestimabile 40". 03.04.1980, எண் 10: A.A.S. 72 (1980) பக். 336; Ecclesiae de mysterio, 15.08.1997, af'' A.A.S. 89 (1997) பக். 871.
98 காண். பிற்சேர்க்கை, தூய நற்கருணை வழங்கப் பணியாளருக்கு உரிமை அளிக்கும் சடங்கு பக் '
==============↑ பக்கம் 54

நிறைவுச் சடங்குகள்

66. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு முடிந்ததும் தேவைக்கு ஏற்ப, மக்களுக்குச் சுருக்கமான அறிவிப்புகள் வழங்கலாம்.

167. பின்பு அருள்பணியாளர் தம் கைகளை விரித்து "ஆண்டவர் உங்களோடு இருப்பாராக எனச் சொல்லி மக்களை வாழ்த்துவார். அதற்கு மக்கள் "உம் ஆன்மாவோடும் இருப்பாராக எனப் பதிலுரைப்பார்கள். அருள்பணியாளர் மீண்டும் தம் கைகளைக் குவித்து, உடனே, தமது இடக் கையைத் தம் மார்பில் வைத்து வலக் கையை உயர்த்தி எல்லாம் வல்ல இறைவன் எனச் சொல்லி மக்கள்மேல் சிலுவை அடையாளம் இட்டு "தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக" எனத் தொடர்வார். எல்லாரும் "ஆமென் எனப் பதில் கூறுவர்.
ஒழுங்குமுறைக் குறிப்புகளுக்கு இணங்க, குறிப்பிட்ட நாள்களிலும் நிகழ்வுகளிலும் இந்த ஆசி மக்கள் மீது மன்றாட்டினாலோ சிறப்பு ஆசி வாய்பாடு ஒன்றினாலோ விரிவாகச் சொல்லப்படும்.

ஆயர் உரிய வாய்பாட்டோடு மக்கள் மீது மூன்று முறை சிலுவை அடையாளம் வரைந்து மக்களுக்கு ஆசி வழங்குவார்."

168. ஆசி வழங்கியவுடன் அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து, "சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று" எனச் சொல்ல, எல்லாரும் "இறைவனுக்கு நன்றி" எனப் பதில் கூறுவர். 169. இதன்பின், அருள்பணியாளர் வழக்கம் போலப் பீடத்தை முத்தமிட்டு அதற்கு வணக்கம் செலுத்துவார். அடுத்து பிற பொது நிலைப் பணியாளர்களுடன் இணைந்து தாழ்ந்து பணிந்து வணங்கிவிட்டு அவர்களோடு திரும்பிச் செல்வார்.

170. திருப்பலியைத் தொடர்ந்து வேறு ஒரு திருவழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றால் நிறைவுச் சடங்குகள், அதாவது வாழ்த்துரை, ஆசி, பிரியாவிடை ஆகியவை விட்டுவிடப்படும்.
ஆ) திருத்தொண்டருடன் திருப்பலி

171. திருப்பலிக் கொண்டாட்டத்தில் திருத்தொண்டர் பங்கேற்றால் அவர் தமக்கு உரிய திருவுடைகளை அணிந்து தமது பணியை நிறைவேற்றுவார்:

அ) அருள்பணியாளருக்கு உதவி செய்வார்; அவர் அருகில் நடந்து செல்வார்;
ஆ) பீடத்தில் திருக்கிண்ணத்தையும் திருப்பலி நூலையும் பயன்படுத்த உதவி செய்வார்;
இ) நற்செய்தியைப் பறைசாற்றுவார். திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் பணித்தால், மறையுரை நிகழ்த்துவார் (காண். எண் 66);
ஈ) பொருத்தமான அறிவுரைகள் வழியாக நம்பிக்கையாளரை வழிநடத்துவார்.
பொது மன்றாட்டின் கருத்துக்களை எடுத்துரைப்பார்;
உ) நற்கருணை வழங்குவதில் திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளருக்கு உதவி செய்வார். திருப்பலிக் கலங்களைத் தூய்மைப்படுத்தி அவற்றை ஒழுங்காக வைப்பார்.
ஊ) வேறு பணியாளர்கள் இல்லை எனில், தேவைக்கு ஏற்ப, அவர்களுடைய பணிகளையும் செய்வார்.

99 காண். ஆயர்களின் திருச்சடங்கு நூல், 1984, எண் 1118 - 1121

==============↑ பக்கம் 55

தொடக்கச் சடங்குகள்

172. பீடத்தை நோக்கிச் செல்லும்போது, திருத்தொண்டர் நற்செய்தி வாசக நாலை, உயர்த்திப் பிடித்துச் சென்றால் அருள்பணியாளருக்குமுன் செல்வார்; அவ், இல்லாதபோது அருள்பணியாளருக்கு அருகில் நடந்து செல்வார். 173. பீடத்தை நெருங்கியதும் அவர் நற்செய்தி வாசக நூலைக் கொண்டு வந்தால், வணக்கம் செலுத்தாமல் நேரே பீடத்துக்குச் செல்வார். பின்னர் நற்செய்தி வாசக நூலைப் பீடத்தின்மீது வைப் போற்றுதற்கு உரியது. அதன்பின் அவர் அருள்பணியாளரோடு சேர்ந்து பீடத்தை முத்தமிடுவார்.

அவர் நற்செய்தி வாசக நூலைக் கொண்டு வரவில்லை என்றால் அருள்பணியாளரோடு சேர்ந்து வழக்கத்துக்கு ஏற்ப பீடத்தைத் தாழ்ந்து பணிந்து வணங்குவார்; அதை முத்தமிட்டு வணக்கம் செலுத்துவார்.

தூபத்தைப் பயன்படுத்தினால், அருள்பணியாளர் தூபக் கலத்தில் சாம்பிராணி இடவும் சிலுவைக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டவும் அவருக்கு உதவுவார். 174 பீடத்துக்குத் தூபம் காட்டியபின், அருள்பணியாளருடன் இருக்கைக்குச் செல்வார். அங்கு அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து, தேவைப்படும்போது உதவுவார்.

வார்த்தை வழிபாடு

175. தூபத்தைப் பயன்படுத்தினால், "அல்லேலூயா' அல்லது வேறு பாடல் பாடும்போது, தூபக் கலத்தில் சாம்பிராணி இடுவதற்குத் திருத்தொண்டர் அருள்பணியாளருக்கு உதவுவார். பின் அருள்பணியாளருக்குமுன் பணிந்து வணங்கி "தந்தையே, ஆசி வழங்கும்" என்று தாழ்ந்த குரலில் கூறி ஆசி கேட்பார்; அருள்பணியாளர், "தமது நற்செய்தியைத் தகுதியுடனும் ..." என வேண்டி ஆசி வழங்க, திருத்தொண்டர் தம்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு "ஆமென்" எனப் பதில் அளிப்பார். பின்னர் பீடத்துக்கு வணக்கம் செய்துவிட்டு அதன்மீது வைக்கப்பட்டுள்ள நற்செய்தி வாசக நூலை எடுத்து, சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு வாசக மேடை நோக்கிச் செல்வார். புகையும் தூபக் கலத்துடன் தூபப் பணியாளரும் எரியும் மெழுகுதிரிகளுடன் பணியாளர்களும் முன் செல்வர். அங்கே தம் கைகளைக் குவித்து அவர், "ஆண்டவர் உங்களோடு இருப்பாராக எனச் சொல்லி மக்களை வாழ்த்துவார். அதன்பின் "... தூய நற்செய்தியிலிருந்து வாசகம் எனச் சொல்லும்போது பெரு விரலால் நற்செய்தி வாசக நூல்மீதும் தம் நெற்றி மீதும் வாய், நெஞ்சின் மீதும் சிலுவை அடையாளம் வரைந்து கொள்வார். வாசக நூலுக்குத் தூபம் காட்டிவிட்டு நற்செய்தியைப் பறைசாற்றுவார். மடிவில் "ஆண்டவரின் அருள்வாக்கு என ஆர்ப்பரிப்பார். எல்லாரும் கிறிஸ்துவே, உமக்குப் புகழ்" எனப் பதில் கூறுவர். பின்னர் இந்நற்செய்தியின் வார்த்தைகளால் நம் பாவங்கள் நீங்குவனவாக என அமைந்த குரலில் வேண்டி, நூலை முத்தமிட்டு அதற்கு வணக்கம் செலுத்துவார். பின்பு அருள்பணியாளரிடம் திரும்புவார்.

திருத்தொண்டர் ஆயருக்கு உதவி செய்யும்போது, அவர் நூலை முத்தமிடும்படி அதனை அவரிடம் கொண்டு செல்வார் அல்லது திருத்தொண்டரே "இந்நற்செய்தியின் வார்த்தைகளால் நம் பாவங்கள் நீங்குவனவாக என அமைந்த குரலில் வேண்டி அதனை நூலைக் கொண்டு மக்களுக்கு ஆசி வழங்குவார். முத்தமிடுவார். சூழ்நிலைக்கு ஏற்ப, பெருவிழாக் கொண்டாட்டங்களில் ஆயர் நற்செய்தி

இறுதியாக, திருத்தொண்டர் நற்செய்தி வாசக நூலை எடுத்துச் சென்று திரு மேசையில் அல்லது அதற்கு உரிய தகுதி வாய்ந்த மதிப்புக்கு உரிய இடத்தில் வைக்கலாம்.

176. தகுதி வாய்ந்த வேறொரு வாசகர் இல்லை எனில், மற்ற வாசகங்களையும் திருத்தொண்டரே அறிக்கை இடுவார்.
==============↑ பக்கம் 56

177. அருள் பணியாளர் முன்னுரை கூறியபின் வழக்கப்படி திருத்தொண்டரே பொது மன்றாட்டின் கருத்துக்களை வாசக மேடையிலிருந்து எடுத்துரைப்பார்.

நற்கருணை வழிபாடு

178. பொது மன்றாட்டு முடிந்தவுடன் அருள்பணியாளர் தம் இருக்கையில் அமாவா": திருத்தொண்டர் பீடத்தைத் தயார் செய்வார். அவருக்குப் பீடத்துணைவர் உதவி செய்வார்; திருத்தொண்டரே திருக்கலங்களைக் கையாளுவார். அருள்பணியாளர் மக்கள் அளிக்கும் கொடைகளை ஏற்றுக்கொள்வதற்கு அவர் உதவி செய்வார். பின்னர் அர்ச்சிக்கப்பட இருக்கும் அப்பம் உள்ள தட்டை அருள்பணியாளரிடம் கொடுப்பார். "கிறிஸ்து நமது மனித இயல்பில் . . . எனும் வார்த்தைகளை அமைந்த குரலில் சொல்லி, திருக்கிண்ணத்தினுள் இரசமும் சிறிதளவு தண்ணீரும் ஊற்றித் திருக்கிண்ணத்தை அருள்பணியாளரிடம் கொடுப்பார். திரு மேசையிலும் இவ்வாறு திருக்கிண்ணத்தைத் தயார் செய்யலாம். தூபத்தைப் பயன்படுத்தினால், அருள்பணியாளர் காணிக்கைப் பொருள்களுக்கும் சிலு வைக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டும்போது அவருக்கு உதவி செய்வார். பின்னர் திருத்தொண்டர் அல்லது பீடத்துணைவர் அருள்பணியாளருக்கும் மக்களுக்கும் தூபம் காட்டு வார்.

179. நற்கருணை மன்றாட்டின்போது, திருத்தொண்டர் அருள்பணியாளருக்கு அருகில், ஆனால் சற்றுப் பின்னால் நின்றுகொண்டு, தேவைப்படும்போது திருக்கிண்ணம், திருப்பலி நூல் ஆகியவற்றைப் பயன்படுத்த உதவுவார்.

பின்னர் அருள்பணியாளர் தூய ஆவி இறங்கி வருவதற்காகச் சொல்லும் மன்றாட்டிலிருந்து திருக்கிண்ணத்தை உயர்த்திக் காட்டும் வரை திருத்தொண்டர் வழக்கப்படி முழங்காலில் இருப்பார். திருத்தொண்டர்கள் பலர் இருப்பின், அர்ச்சிப்புக்காக அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும் உயர்த்திக்காட்டும்போது, அவர்களுள் ஒருவர் தூபக் கலத்தில் சாம்பிராணி இட்டு தூபம் காட்டுவார்.

180. நற்கருணை மன்றாட்டின் இறுதியில் வரும் இறைப்புகழுரையில் அருள்பணியாளர் திரு அப்பம் உள்ள தட்டை உயர்த்திப் பிடிக்கும்போது மக்கள் "ஆமென் எனக் கூறும்வரை திருத்தொண்டர் அவருக்கு அருகில் நின்று, திருக்கிண்ணத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பார்.

181. அமைதிக்கான மன்றாட்டை அருள்பணியாளர் சொல்லி, "ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக எனக் கூற, மக்கள், "உம் ஆன்மாவோடும் இருப்பதாக என மறுமொழி கூறுவார்கள். உடனே தேவைக்கு ஏற்ப, திருத்தொண்டர் அமைதி வாழ்த்துக் கூற மக்களை அழைத்து, தம் கைகளைக் குவித்து, மக்களை நோக்கி, ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம் எனச் சொல்வார். தாமும் அருள்பணியாளரிடமிருந்து அமைதி வாழ்த்தைப் பெற்றுக்கொள்வார்; தமக்கு அருகில் உள்ள மற்றப் பணியாளர்களுக்கும் அவர் அமைதி வாழ்த்து வழங்கலாம்.

182. அருள்பணியாளர் நற்கருணை உட்கொண்டதும் திருத்தொண்டர் அவரிடமிருந்து இரு வடிவங்களிலும் நற்கருணையைப் பெற்றுக்கொள்வார். பின்பு மக்களுக்கு நற்கருணை வழங்க அருள்பணியாளருக்கு உதவுவார். மக்களுக்கு இரு வடிவங்களிலும் நற்கருணை வழங்கப்படும்போது, திருக்கிண்ணத்திலிருந்து உட்கொள்வோருக்கு அதைக் கொடுத்து உதவுவார். நற்கருணை பகிர்ந்தளிப்பு நிறைவுற்றதும், உடனே பீடத்தில் எஞ்சி இருக்கும் கிறிஸ்துவின் திரு இரத்தம் முழுவதையும் வணக்கத்துடன் உட்கொள்வார். தேவைப்பட்டால் பிற திருத்தொண்டர்களும் அருள்பணியாளர்களும் அவருக்கு உதவுவர்.

183. நற்கருணை வழங்கி முடிந்ததும் அருள்பணியாளருடன் பீடத்துக்குத் திரும்பி வந்து, அப்பத் துகள்கள் இருந்தால் அவற்றை ஒன்றுசேர்ப்பார்; பின்பு, திருக்கிண்ணத்தையும் ஏனைய திருக்கலங்களையும் திரு மேசைக்கு எடுத்துச்சென்று அவற்றை அங்கே தூய்மைப்படுத்தி, வழக்கம் போல ஒழுங்காக வைப்பார்: இவ்வேளையில் அருள்பணியாளர் தம் இருக்கைக்குத் திரும்புவார். திரு மேசையில் தூய்மைப்படுத்தப்படவேண்டிய கலங்களை வசதிக்கு ஏற்றாற்போலத் துகிலால் மூடித் திருப்பலி முடிந்து மக்கள் சென்றவுடனே, அவற்றைத் தூய்மைப்படுத்தும் பொருட்டு, திருமேனித் துகில்மீது வைக்கலாம்.

==============↑ பக்கம் 57

நிறைவுச் சடங்குகள்

184 திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு முடிந்ததும் திருத்தொண்டர் மக்களுக்குச் சி. அறிவிப்புகளை வழங்குவார். அருள்பணியாளர் விரும்பினால், தாமே அவ்வாறு செய்யலாம்

185. மக்கள் மீது மன்றாட்டையோ சிறப்பு ஆசிக்கான வாய்பாட்டையோ பயன்படுத்தினால் திருத்தொண்டர் "இறை ஆசி பெறத் தலை வணங்குங்கள் எனச் சொல்வார். அருள்பணியாளர் ஆசி வழங்கியவுடன் திருத்தொண்டர் மக்களை நோக்கி தம் கைகளைக் குவித்தவாறு "சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று என மக்களுக்குப் பிரியாவிடை கூறுவார்.

186. அடுத்து, அருள்பணியாளருடன் பலிப்பீடத்தை முத்தமிட்டு வணக்கம் செலுத்துவார். பின்பு தாழ்ந்து பணிந்து வணங்கிவிட்டு, பீடத்துக்கு வந்தவாறே அங்கிருந்து பவனியாகத் திரும்பிச் செல்வார்.

இ) பீடத்துணைவரின் பணிகள்

187. பீடத்துணைவர் செய்ய வேண்டிய பணிகள் பல வகை ஆகும்; அவற்றில் பலவும் ஒரே நேரத்தில் இடம் பெறலாம். எனவே அவற்றைப் பலரிடம் பகிர்ந்தளிப்பது விரும்பத்தக்கது. பீடத்துணைவர் ஒருவர் மட்டும் இருந்தால், மிக இன்றியமையாததை அவர் செய்வார்; மற்றவை வேறு பணியாளரிடம் பகிர்ந்தளிக்கப்படலாம்.

தொடக்கச் சடங்குகள்

188. பீடத்துக்குப் பவனியாக வரும்போது, எரியும் மெழுகுதிரிகள் தாங்கும் இரு பணியாளர்கள் நடுவில் அவர் திருச்சிலுவை ஏந்தி வரலாம். பீடத்தை அடைந்தபின், அதன் அருகில் திருச்சிலுவையை வைப்பார். அதுவே பீடச் சிலுவையாக இருக்கும். இல்லை எனில், அதைத் தகுதியான ஓர் இடத்தில் வைப்பார்; பின்னர் திருப்பீட முற்றத்தில் உள்ள தமது இடத்துக்குச் செல்வார்.

189, கொண்டாட்டத்தின்போது, தேவைக்கு ஏற்ப, அருள்பணியாளரை அல்லது திருத்தொண்டரை அணுகி நூல்களைக் கொடுப்பதும், வேறு தேவைகளில் அவர்களுக்கு உதவுவதும் பீடத்துணைவரின் பணிகள் ஆகும். இவற்றிற்கு ஏற்ப, அருள்பணியாளர் இருக்கைக்கு அருகிலோ பீடத்துக்கு அருகிலோ தம் பணிகளைத் தேவையானபோதெல்லாம் செய்வதற்கு வசதியாக, உகந்ததோர் இடத்தில் பீடத்துணைவர் இருப்பார்.

நற்கருணை வழிபாடு

190. திருத்தொண்டர் இல்லாதபோது, பொது மன்றாட்டு முடிந்தபின், அருள்பணியாளர் தம் இருக்கையில் அமர்ந்திருக்க, பீடத்துணைவர் திருமேனித் துகில், திருக்கிண்ணத் துகில், திருக்கிண்ணம், திருக்கிண்ண அட்டை, திருப்பலி நூல் ஆகியவற்றைப் பீடத்தின் மீது வைப்பார். பின் தேவையானால் மக்களின் காணிக்கைப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள அருள்பணியாளருக்கு உதவி செய்வார்; தேவைக்கு ஏற்ப அப்ப, இரசத்தை பீடத்துக்குக் கொண்டு வந்து அருள்பணியாளரிடம் அளிப்பார். தூபம் பயன்படுத்தப்பட்டால் தூங்க கலத்தை அருள்பணியாளருக்குமுன் உயர்த்திப் பிடிப்பார்; காணிக்கைப் பொருள்கள் மீதும் பீடத்துக்கும் சிலுவைக்கும் தூபமிட அருள்பணியாளருக்கு உதவி செய்வார். பின்னர் அருள்பணியாளருக்கும் மக்களுக்கும் தூபம் காட்டுவார்.

191. மக்களுக்கு நற்கருணை வழங்கத் திருத்தொண்டர் இல்லை எனில், முறையாக நியமனம் பெற்ற பீடத்துணைவர் நற்கருணையின் சிறப்புரிமைத் திருப்பணியாளராக அருள்பணியால் உதவி புரியலாம்.100 இரு வடிவங்களில் நற்கருணை வழங்கினால், திருத்தொ '' இல்லாதபோது, அவரே திருக்கிண்ணத்தை மக்களுக்கு வழங்குவார் அல்லது திருக்கின" தோய்த்து நற்கருணை வழங்கினால் அவர் திருக்கிண்ணத்தை ஏந்திக் கொள்வார்.

==============↑ பக்கம் 58

192. அதே போல, நற்கருணை வழங்கியபின், முறையாக நியமனம் பெற்ற பீடத்துணைவர் திருக்கலங்களைத் தூய்மைப்படுத்தி ஒழுங்காக வைப்பதில் அருள்பணியாளருக்கு அல்லது திருத்தொண்டருக்கு உதவி செய்வார். திருத்தொண்டர் இல்லை எனில், முறையாக நியமனம் பெற்ற பீடத்துணைவர் திருக்கலங்களைத் திரு மேசைக்குக் கொண்டுபோய் வழக்கப்படி அங்கே அவற்றைத் தூய்மைப்படுத்தி, துடைத்து, ஒழுங்காக வைப்பார்.

193. திருப்பலி முடிந்ததும் பீடத்துணைவரும் மற்றப் பணியாளர்களும் அருள்பணியாளரோடும் திருத்தொண்டரோடும் பீடத்துக்கு வந்த முறையிலும் வரிசையிலும் பவனியாகத் திருப்பொருள் அறைக்குத் திரும்பிச் செல்வர்.

ஈ) வாசகரின் பணிகள் தொடக்கச் சடங்குகள்

194. பீடத்துக்குப் பவனியாக வரும்போது, திருத்தொண்டர் இல்லை எனில், அவர் தமக்கு உரிய உடைகளை அணிந்து நற்செய்தி வாசக நூலைச் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு அருள்பணியாளருக்கு முன் செல்வார்; அவ்வாறு இல்லை எனில், மற்றப் பணியாளரோடு வருவார்.

195. பீடத்தை அடைந்ததும் அவர் பிறருடன் தாழ்ந்து பணிந்து வணக்கம் செலுத்துவார். நற்செய்தி வாசக நூலை ஏந்திச் சென்றால் பீடத்துக்குச் சென்று நற்செய்தி வாசக நூலை அதன்மீது வைப்பார். பின் திருப்பீட முற்றத்தில் மற்றப் பணியாளரோடு தமக்கு உரிய இடத்துக்குச் செல்வார். வார்த்தை வழிபாடு

196. நற்செய்திக்குமுன் வரும் வாசகங்களை வாசக மேடையில் இருந்து வாசிப்பார். திருப்பாடல் முதல்வர் இல்லாதபோது முதல் வாசகத்துக்குப்பின் பதிலுரைத் திருப்பாடலை எடுத்துரைப்பார். 197. திருத்தொண்டர் இல்லாதபோது, பொது மன்றாட்டுக்கு அருள்பணியாளர் முன்னுரை கூறியபின் வாசகர் பொது மன்றாட்டின் கருத்துக்களை வாசக மேடையிலிருந்து எடுத்துக் கூறலாம். 198. வருகைப் பாடல், திருவிருந்துப் பாடல் பாடப்படவில்லை அல்லது நம்பிக்கையாளரால் திருப்பலி நூலில் உள்ள பல்லவிகள் சொல்லப்படவில்லை எனில், வாசகரே உரிய நேரத்தில் அவற்றை வாசிக்கலாம்.

II. கூட்டுத்திருப்பலி

199. குருத்துவம், திருப்பலி, மற்றும் இறைமக்கள் அனைவரின் ஒருமைப்பாட்டைக் கூட்டுத்திருப்பலிச் சடங்குமுறை முறையாக வெளிப்படுத்துகின்றது. எனவே ஆயர் மற்றும் அருள்பணியாளர்களின் திருநிலைப்பாட்டின்போதும் துறவு மடத்துத் தலைவர் அர்ச்சிக்கப்படும்போதும் கிறிஸ்மா எண்ணெய் அர்ச்சிக்கப்படும் சடங்கின்போதும் கூட்டுத்திருப்பலியே நடைபெற வேண்டும்.

கிறிஸ்தவ நம்பிக்கையாளரின் நலன் கருதி வேறொருவகைக் கொண்டாட்டம் தேவைப்பட்டால் தவிர பின்வரும் நேரங்களில் கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றப் பரிந்துரைக்கப்படுகின்றது.

அ) ஆண்டவரின் இரவு விருந்து மாலைத் திருப்பலி;
ஆ) பொதுச் சங்கங்கள், ஆயர்களின் கூட்டங்கள், மன்றங்கள் ஆகியவற்றின்போது நிறைவேற்றப்படும் திருப்பலி;
இ) துறவுக் குழுமப் பொதுத் திருப்பலி, கோவில்களிலும் தொழுகைக் கூடங்களிலும் நடைபெறும் முக்கியத் திருப்பலிகள்;

==============↑ பக்கம் 59

ஈ) மறைமாவட்ட அல்லது துறவு அருள்பணியாளர்கள் கூடி வரும் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் திருப்பலி.101

தனியாகத் திருப்பலி நிறைவேற்ற எந்த அருள்பணியாளருக்கும் உரிமை உண்டி ஆயினும் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படும் கோவிலிலோ சிற்றாலயத்திலோ அ.ே நேரத்தில் தனியாகத் திருப்பலி நிறைவேற்றக் கூடாது. அவ்வாறே பெரிய வியாழன் ஆண்டவருடைய இரவு விருந்துக் கொண்டாட்டம், பாஸ்கா திருவிழிப்பு ஆகிய நாள்களில் தனியாகத் திருப்பலி நிறைவேற்ற அனுமதி இல்லை.

200. அறிமுகம் இல்லாத, பயணம் மேற்கொண்டுள்ள அருள்பணியாளர்களின் குருத்துவ நிலை உறுதி செய்யப்பட்டபின், கூட்டுத்திருப்பலியில் கலந்துகொள்ள அவர்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளலாம். 201. அருள்பணியாளர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும்போது, தேவையை முன்னிட்டும் அருள்பணி நலன் கருதியும் ஒரே நாளில் பல முறை கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப் பரிந்துரைக்கப்படுகின்றது. ஆயினும் வெவ்வேறு நேரங்களிலும் வெவ்வேறு புனித இடங்களிலும் நிகழ வேண்டும்.102

202. தம் மறைமாவட்டத்தின் எல்லாக் கோவில்களிலும் வழிபாட்டு இடங்களிலும் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றும் முறையைச் சட்ட முறைமைப்படி நெறிப்படுத்துவது ஆயரைச் சாரும்.

203. மறைமாவட்ட அருள்பணியாளர்கள் தங்கள் ஆயருடன் இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவது தனி மதிப்புடையதாகக் கருதப்பட வேண்டும். சிறப்பாக, பொதுக் கூட்டுத் தலத் திருப்பலி, திருவழிபாட்டு ஆண்டின் பெருவிழாத் திருப்பலிகள்; மறைமாவட்டத்தின் புதிய ஆயர், அவரின் இணையுதவி ஆயர், துணை ஆயர் ஆகியோரின் திருநிலைப்பாட்டுத் திருப்பலி; கிறிஸ்மா எண்ணெய்த் திருப்பலி; ஆண்டவருடைய இறுதி இரவு விருந்து மாலைத் திருப்பலி; தலத் திரு அவையை நிறுவியவர் அல்லது மறைமாவட்டப் பாதுகாவலரின் விழா; ஆயரின் திருநிலைப்பாட்டு ஆண்டு விழா மற்றும் அருள்பணியாளர்களின் மாமன்றம், ஆயரின் அருள்பணி ஆய்வு.

அவ்வாறே அருள்பணியாளர்களின் அருள்வாழ்வுப் பயிற்சிகள், மற்றும் கூட்டங்களின்போது தங்கள் ஆயருடன் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவது பரிந்துரைக்கப்படுகின்றது. ஒவ்வொரு கூட்டுத்திருப்பலியும் குருத்துவத்தின் ஒற்றுமையையும் திரு அவையின் ஒன்றிப்பையும் எடுத்துக்காட்டினாலும், மேற்குறிப்பிட்ட கூட்டுத்திருப்பலிகளில் இது மேலும் தெளிவாக விளங்குகின்றது.103

204. குறிப்பிட்ட சடங்குமுறையின் உட்பொருளை உணர்த்துவதற்காக அல்லது விழாச் சிறப்புக்காக ஒரே நாளில் பல முறை திருப்பலி நிறைவேற்ற அல்லது கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப் பின்வரும் சூழல்களில் அனுமதிக்கப்படுகின்றது:

அ) புனித வார வியாழனன்று கிறிஸ்மா எண்ணெய்த் திருப்பலி அல்லது கூட்டுத்திருப்பலி நிறைவேற்றியவர் அதே நாளில் ஆண்டவருடைய இரவு விருந்து மாலைத் திருப்பலி அல்லது கூட்டுத்திருப்பலி நிகழ்த்தலாம்;

ஆ) பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலியைத் தனியாகவோ பிற அருள்பணியாளர்களோடு இணைந்தோ கொண்டாடி யவர் பாஸ்கா ஞாயிறு பகல் திருப்பலியையும் தனியாகவோ பிற அருள்பணியாளர்களோடு இணைந்தோ நிகழ்த்தலாம்.

இ) ஆண்டவர் பிறப்பு விழாவின் மூன்று திருப்பலிகளையும் அருள்பணியாளர்கள் எல்லாரும் தனித்தனித் திருப்பலியாகவோ கூட்டுத்திருப்பலியாகவோ நிறைவேற்றலாம் ஆனால் இம்மூன்று திருப்பலிகளும் அவ்வவற்றுக்கு உரிய நேரத்தில் நடைபெற வேண்டும்'

101 காண். திருவழிபாடு, 57; திச, 902.
102 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண். 47: A.A.S. 59 (1967) பக் 566.
103 காண். மேற்படி, பக் 565
==============↑ பக்கம் 60

ஈ) இறந்த நம்பிக்கையாளரின் நினைவு நாளில் அருள்பணியாளர்கள் எல்லாரும் மூன்று திருப்பலிகளையும் தனித்தனித் திருப்பலியாகவோ கூட்டுத்திருப்பலியாகவோ நிறைவேற்றலாம். அவை வெவ்வேறு நேரங்களில் நடைபெற வேண்டும். இரண்டாம், மூன்றாம் திருப்பலிகள் விதிமுறைகளில் குறிக்கப்பட்ட கருத்துகளுக்காக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்."
உ) மாமன்றங்கள், அயரின் அருள்பணி ஆய்வு இவற்றின்போது ஆய?" அவரது பிரதிநிதியோடு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றியவர், அருள்பணியாளர்களின் இதரக --- ங்கள் ஆகிய வேளைகளில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றியவர் நம்பக"""" -லனை முன்னிட்டு மீண்டும் திருப்பலி நிறைவேற்றலாம். தேவைப்பட்ட மாற்றம்"" இந்த விதிமுறை துறவுக் கூட்டங்களுக்கும் பொருந்தும்.

205 எவ்வகைக் கூட்டுத்திருப்பலியும், நடைமுறையிலுள்ள விதிமுறைகளுககு ??" ஒழுங்குபடுத்தப்படும் (காண். எண். 112 - 198). எனினும் பின்வருவனவற்றைக் கடைப்பிடித்தோ தழுவியமைத்தோ செயல்படுத்தலாம்.

206, திருப்பலி தொடங்கிய பின் வருகின்ற அருள்பணியாளர்கள் ஒருபோதும் கூட்டுத் திருப்பலியாளர்களாகச் செயல்படக்கூடாது; அத்தகையோரை அனுமதிக்கவும் கூடாது.

207. திருப்பீட முற்றத்தில் தயாராக இருக்க வேண்டியவை:

அ) இருக்கைகளும் கூட்டுத்திருப்பலியில் பங்கேற்கும் அருள்பணியாளர்களுக்கான கையேடுகளும்;

ஆ) திரு மேசையின்மேல்: தேவையான அளவுக்கு ஒரு பெரிய திருக்கிண்ணம் அல்லது சில திருக்கிண்ணங்கள்;

208. திருத்தொண்டர் இல்லை எனில், அவருக்கு உரிய கடமைகளைக் கூட்டுத்திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர்களுள் சிலர் மேற்கொள்ளலாம்.
வேறு பணியாளர்களும் இல்லை எனில், அவர்களுடைய பணிகளைத் தகுதி வாய்ந்த நம்பிக்கையாளர் சிலரிடம் ஒப்படைக்கலாம்; இல்லை எனில், கூட்டுத்திருப்பலியில் பங்கேற்கும் அருள்பணியாளர்களுள் சிலர் அவற்றைச் செய்வர்.

209. கூட்டுத்திருப்பலியாளர்கள் திருப்பொருள் அறையிலோ வேறு தகுந்த இடத்திலோ திருப்பலிக்கு உரிய உடைகளை, தனியாக திருப்பலி நிறைவேற்றும்போது அணிவது போன்று அணிந்து கொள்வர். எனினும் தகுந்த காரணம் இருப்பின் (எ.கா. கூட்டுத்திருப்பலியாளர்கள் எண்ணிக்கை மிகுதியாக இருத்தல் அல்லது போதுமான திருவுடைகள் இன்மை) கூட்டுத்திருப்பலியின் முதல்வர் நீங்கலாக மற்றவர் திருப்பலி உரை அணியாது நீள் வெண்ணாடைமீது தோள் துகில் மட்டும் பயன்படுத்தலாம்.

தொடக்கச் சடங்குகள்

210. அனைத்தும் முறையாய்த் தயாரானபின் வழக்கம் போலப் பவனி கோவில் வழியாகப் பீடத்தை நோக்கிச் செல்லும். கூட்டுத்திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர்கள் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர்முன் செல்வார்கள்.

211 பீடத்துக்கு வந்ததும் கூட்டுத்திருப்பலியாளர்களும் திருப்பலி முதல்வரும் தாழ்ந்து பணிந்து, பீடத்தை முத்தமிட்டு வணக்கம் செலுத்துவர். பின்னர் தம்தம் இருக்கைகளுக்குச் செல்வர். திருப்பலி முதல்வர் தேவைக்கு ஏற்ப, பலிப்பீடத்துக்கும் சிலு வைக்கும் தூபம் காட்டுவார். பின் தம் இருக்கைக்குச் செல்வார்.

==============↑ பக்கம் 61

வார்த்தை வழிபாடு

212. வார்த்தை வழிபாட்டின்போது கூட்டுத்திருப்பலியாளர்கள் திருப்பலிக்குத் தலை ஏற்பவர் செய்வது போன்று தம் இருக்கைகளில் அமர்வார்கள் அல்லது நிற்பார்கள்.

"அல்லேலூயா' தொடங்கியவுடன் ஆயர் தவிர எல்லாரும் எழுந்து நிற்பர். ஆயர் ஒன்றும் சொல்லாமல் தூபக் கலத்தில் சாம்பிராணி இடுவார். நற்செய்தியைப் பறைசாற்ற இருக்கும் திருத்தொண்டருக்கோ அல்லது அவர் இல்லாதபோது கூட்டுத்திருப்பலியாளர் ஒருவருக்கோ ஆயர் ஆசி வழங்குவார். அருள்பணியாளர் ஒருவர் கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை வகிக்கும்போது, திருத்தொண்டர் இல்லை எனில், நற்செய்தியைப் பறைசாற்றும் கூட்டுத்திருப்பலியாளர் திருப்பலி முதல்வரிடம் ஆசி கேட்பதும் இல்லை , அவரிடமிருந்து பெறுவதும் இல்லை .

213. திருப்பலிக்குத் தலைமை ஏற்கும் முதல்வர் அல்லது கூட்டுத்திருப்பலியாளர்களில் ஒருவர் வழக்கம் போல மறையுரை நிகழ்த்துவார்.

நற்கருணை வழிபாடு

914 பிற கூட்டுத்திருப்பலியாளர்கள் தம் இருக்கைகளில் அமர்ந்திருக்க, கூட்டுத்திருப்பலி முதல்வர் காணிக்கைப் பொருள்களைத் (காண். எண். 139-146) தயார் செய்வார்.

215. கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் காணிக்கைமீது மன்றாட்டைச் சொல்லி முடித்தவுடன் கூட்டுத்திருப்பலியாளர்கள் பீடத்தை அணுகி அதைச் சுற்றி நிற்பர். இருப்பினும் அவர்கள் சடங்குகள் சரியாக நடைபெறுவதற்கோ நம்பிக்கையாளர் திருச்சடங்குகளை நன்றாகக் காண்பதற்கோ திருத்தொண்டர் தம் பணியை நிறைவேற்றப் பீடத்தை அணுகுவதற்கோ தாங்கள் தடையாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

திருக்கிண்ணம், திருப்பலி நூல் இவை பொருட்டுத் தேவையான நேரத்தில் உதவி செய்வதன் வழியாக திருத்தொண்டர் பீடத்தில் தம் பணியை நிறைவேற்றுவார். இருப்பினும் இயன்ற அளவு கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரைச் சுற்றி நிற்கும் கூட்டுத்திருப்பலியாளர்களுக்குச் சற்றுப் பின்னே நிற்பார்.

நற்கருணை மன்றாட்டைச் சொல்லும் முறை

216. கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்கும் அருள்பணியாளர் மட்டுமே தொடக்கவுரையைப் பாடுவார் அல்லது சொல்வார். "தூயவர்' எனும் பாடலைக் கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாரும் மக்களோடும் பாடல் குழுவினரோடும் சேர்ந்து பாடுவர் அல்லது சொல்வர். 217. ''தாயவர் " முடிந்ததும் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றும் அருள் பணியாளர்கள் நற்கருணை மன்றாட்டைக் கீழே விவரித்துள்ளபடி தொடர்ந்து சொல்வர். வேறுவிதமாகக் செய்வார். குறிப்பிட்டிருந்தாலன்றி, கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டுமே சைகைகள்

218. கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாரும் ஒருமித்துச் சொல்லும் பகுதிகளைக் குறிப்பாக எல்லாரும் சொல்ல வேண்டிய அர்ச்சிப்பு வார்த்தைகளைக் கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரின் குரல் தெளிவாகக் கேட்கும் வகையில் கூட்டுத்திருப்பலியாளர்கள் கொள்ளப்பட முடியும். மெல்லிய குரலில் சொல்வார்கள். இதனால் சொற்கள் மக்களால் எளிதில் புரிந்து
சிறந்தது ஆகும்.

கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாரும் ஒருமித்துச் சொல்ல வேண்டிய பகுதிகளுக்கு? திருப்பலி நூலில் இசைக் குறியீடுகள் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றைப் பாடு?
==============↑ பக்கம் 62

நற்கருணை மன்றாட்டு 1 அல்லது உரோமை நற்கருணை மன்றாட்டு

219. உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் தம் கைகளை விரித்து "ஆகவே கனிவுமிக்க தந்தையே. . . எனச் சொல்வார்.

220. "ஆண்டவரே, உம் அடியார்களாகிய ... " என்பதைக் கூட்டுத்திருப்பலியாளருள் ஒருவரும் உமமுடைய புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள்...' என்பதை மற்றொருவரும் தம் கைகளை விரித்து உரத்த குரலில் சொல்வர்.

221. ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும்...' என்பதைத் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் கைகளை விரித்துச் சொல்வார்.

222. "இறைவா, இக்காணிக்கையைப் புனிதப்படுத்தி ..." என்பதிலிருந்து "எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய வானதூதர் ...'' எனும் மன்றாட்டுவரை திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் பின்வருமாறு சைகை செய்வார். கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாரும் ஒன்றாக அனைத்தையும் சொல்வர்.

அ. "இறைவா, இக்காணிக்கையைப் புனிதப்படுத்தி" என்பதை எல்லாரும் தம் கைகளைக் காணிக்கைப் பொருள்கள் பக்கமாய் நீட்டிச் சொல்வர்;

ஆ. "அவர் தாம் பாடுபடுவதற்கு முந்திய நாள்" என்பதையும் "அவ்வண்ணமே இரவு விருந்தை அருந்தியபின்" என்பதையும் தம் கைகளைக் குவித்துச் சொல்வர்;

இ. ஆண்டவரின் வார்த்தைகளை உச்சரிக்கும்போது, பொருத்தம் எனத் தெரிந்தால், கூட்டுத்திருப்பலியாளர்கள் தம் வலக் கையை திரு அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும் நோக்கி நீட்டுவர்; திரு அப்பமும் திருக்கிண்ணமும் சற்று உயர்த்திக் காட்டப்படும்போது அவற்றை உற்று நோக்குவர், பின்பு தாழ்ந்து பணிந்து வணங்குவர்;

ஈ. "ஆகவே ஆண்டவரே, உம் திருமகனும் ...." என்பதையும் "இவற்றை இரக்கத்துடனும் கனிவுடனும் கண்ணோக்கியருளும் ... என்பதையும் தம் கைகளை விரித்துச் சொல்வர்;

உ."எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய வானதூதர் ..." என்பதிலிருந்து "நாங்கள் அனைவரும் ... வரை தம் கைகளைக் குவித்துத் தலை குனிந்து சொல்வர்; பின்பு "எல்லா விண்ணக ஆசியையும் அருளையும் நிறைவாகப் பெற்றுக்கொள்ளச் செய்தருளும்" எனச் சொல்லும்போது நிமிர்ந்து நிற்பர்; "எல்லா விண்ணக ஆசியையும் எனச் சொல்லும்போது தங்கள் மீது சிலுவை அடையாளம் வரைவர்.

223. "ஆண்டவரே, நம்பிக்கையின் அடையாளத்தோடு...' என்பதைக் கூட்டுத் திருப்பலியாளருள் ஒருவரும் "பாவிகளாகிய உம் ஊழியர்கள் நாங்களும் ..." என்பதை மற்றொருவரும் தம் கைகளை விரித்து உரத்த குரலில் சொல்வர். 234 "பாவிகளாகிய உம் அடியார்கள் நாங்களும்" எனும் சொற்களின்போது கூட்டுத் திருப்பலியாளர்கள் எல்லாரும் மார்பைத் தட்டிக்கொள்வர்.

225. "இவர் வழியாகவே, ஆண்டவரே ... என்பதைக் கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் சொல்வார்.

நற்கருணை மன்றாட்டு II

226, இரண்டாவது நற்கருணை மன்றாட்டில் "ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர்.'' என்பதைத் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் தம் கைகளை விரித்துச் சொல்வார்.

227. "ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து ... என்பதிலிருந்து உம்மைத் தாழ்மையுடன் பின்வருமாறு சொல்வர்: மன்றாடுகின்றோம்...'' வரை கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாரும் ஒன்றாக அனைத்தையும் பின்வருமாறு சொல்வர்:
=============↑ பக்கம் 63

அ) "ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து' என்பதை எல்லாரும் தம் கை காணிக்கை பக்கமாய் நீட்டிச் சொல்வர்;
கைகளைக் காணிக்கை பக்கமாய் நீட்டிச் சொல்வார்:

ஆ) "அவர் பாடுபட உளம் கனிந்து ... என்பதையும் "அவ்வண்ண மே. அருந்தியபின்.." என்பதையும் தம் கைகளைக் குவித்துச் சொல்வர்;

இ) ஆண்டவரின் வார்த்தைகளை உச்சரிக்கும்போது, பொருத்தம் -- தெரிந்தால், கூட்டுத்திருப்பலியாளர்கள் தங்கள் வலக் கையைத் திரு அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும் நோக்கி நீட்டுவர்; திரு அப்பமும் திருக்கிண்ணமும் சற்று உயர்த்திக் காட்டப்படும்போது, அவற்றை உற்றுநோக்குவர்; பின்பு தாழ்ந்து பணிந்து வணங்குவர்;

ஈ) "ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் ..." என்பதிலிருந்து "உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்...'' வரை தம் கைகளை விரித்துச் சொல்வர்.

228. வாழ்வோருக்காகச் சொல்லப்படும் "ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை ... " எனத் தொடங்கும் மன்றாட்டை ஒருவரும் இறந்தோருக்காகச் சொல்லப்படும் "மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் ...." எனத் தொடங்கும் மன்றாட்டை மற்றொருவரும் சொல்லலாம். அவர் மட்டும் தம் கைகளை விரித்து உரத்த குரலில் இம் மன்றாட்டுகளைச் சொல்வார்.

நற்கருணை மன்றாட்டு III 229. மூன்றாவது நற்கருணை மன்றாட்டில், "ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர்..." எனத் தொடங்கும் மன்றாட்டைத் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் தம் கைகளை விரித்துச் சொல்வார்.

230. "எனவே ஆண்டவரே, உமக்கு அர்ப்பணிக்க நாங்கள் கொண்டு வந்துள்ள ..." என்பதிலிருந்து, "கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும் ஒரே உள்ளமும் உடையவராக விளங்கச் செய்வீராக ...'' வரை கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாரும் ஒன்றாக அனைத்தையும் பின்வருமாறு சொல்வர்:

அ) "எனவே ஆண்டவரே, உமக்கு அர்ப்பணிக்க நாங்கள் கொண்டு வந்துள்ள ..." எனும் மன்றாட்டைத் தம் கைகளைக் காணிக்கைப் பக்கமாய் நீட்டிச் சொல்வர்;

ஆ) "ஏனெனில் அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில்" எனும் மன்றாட்டையும் "அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின்' எனும் மன்றாட்டையும் தம் கைகளைக் குவித்துச் சொல்வர்;

இ) ஆண்டவரின் வார்த்தைகளை உச்சரிக்கும்போது, பொருத்தம் எனத் தெரிந்தால், கூட்டுத்திருப்பலியாளர்கள் தங்கள் வலக் கையைத் திரு அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும் நோக்கி நீட்டுவர்; திரு அப்பமும் திருக்கிண்ணமும் சற்று உயர்த்திக்காட்டப்படும்போது அவற்றை உற்று நோக்குவர்; பின்பு தாழ்ந்து பணிந்து வணங்குவர்;

ஈ) ஆகவே ஆண்டவரே, உம் திருமகனின் மீட்பு அளிக்கும் பாடுகளையும் என்பதிலிருந்து கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும் ஒரே உள்ளமும் உடையவராக விளங்க செய்வீராக...'' வரை தம் கைகளை விரித்துச் சொல்வர்.

231. "இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக... எனும் மன்ற" கூட்டுத்திருப்பலியாளருள் ஒருவரும் ஆண்டவரே, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் !
" எனும் மன்றாட்டை மற்றொருவரும் இறந்துபோன ... எனும் மகே" இன்னொருவரும் தம் கைகளை விரித்து உரத்த குரலில் சொல்வர்.

==============↑ பக்கம் 64

நற்கருணை மன்றாட்டு IV

032. நான்காவது நற்கருணை மன்றாட்டில், "தூயவரான தந்தையே, உம்மைப் புகழ்கின்றோம்..." என்பதிலிருந்து, "புனிதமாக்கும் பணியை நிறைவேற்றி வருகின்றார்" வரை திருப்பலிக்குத் தலைமை ...வர் மட்டும் தம் கைகளை விரித்துச் சொல்வார். 99 ஆகவே ஆண்டவரே, அதே தூய ஆவியார்...' என்பதிலிருந்து கிறிஸ்துவில் உயிருள்ள வலிப்பொருளாகுமாறு கனிவாய் அருள்புரியும் வரை கூட்டுத்திருப்பலி நிறைவேற்றும் எல்லாரும் எல்லாவற்றையும் ஒன்றாகப் பின்வருமாறு சொல்வர்:

அ) "ஆகவே ஆண்டவரே, அதே தூய ஆவியார்..." எனும் மன்றாட்டை எல்லாரும் தம் கைகளைக் காணிக்கைப் பக்கமாய் நீட்டிச் சொல்வர்;

ஆ) "ஏனெனில் தூயவரான தந்தையே, உம்மால் அவர்..." எனும் மன்றாட்டையும் "அவ்வண்ணமே, திராட்சை இரசம் . . . எனும் மன்றாட்டையும் தம் கைகளைக் குவித்துச் சொல்வர்;

இ) ஆண்டவரின் வார்த்தைகளை உச்சரிக்கும்போது, பொருத்தம் எனத் தெரிந்தால், கூட்டுத்திருப்பலியாளர்கள் தங்கள் வலக் கையை திரு அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும் நோக்கி நீட்டுவர்; திரு அப்பமும் திருக்கிண்ணமும் உயர்த்திக்காட்டப்படும்போது அவற்றை உற்று நோக்குவர், பின்பு தாழ்ந்து பணிந்து வணங்குவர்.

ஈ) "ஆகவே ஆண்டவரே, எங்கள் மீட்பின் நினைவை ...." என்பதிலிருந்து "கிறிஸ்துவில் உயிருள்ள பலிப்பொருளாகுமாறு கனிவாய் அருள்புரியும் ... வரை தம் கைகளை விரித்துச் சொல்வர்.

234 "எனவே ஆண்டவரே, யாருக்காக இப்பலியை ..." எனத் தொடங்கும் மன்றாட்டைக் கூட்டுத்திருப்பலியாளருள் ஒருவரும் கனிவுள்ள தந்தையே ... எனும் மன்றாட்டை மற்றொருவரும் தம் கைகளை விரித்து உரத்த குரலில் சொல்வர்.

235. திருத்தூதுப் பீடத்தின் ஒப்புதல் பெற்ற பிற நற்கருணை மன்றாட்டுகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மன்றாட்டுக்கும் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

236. நற்கருணை மன்றாட்டின் இறுதி இறைப்புகழுரை திருப்பலிக்குத் தலைமை ஏற்கும் அருள்பணியாளரால் மட்டும் அல்லது ஏற்புடையதாயின் கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாராலும் சேர்ந்து சொல்லப்படும். இது பொதுநிலை நம்பிக்கையாளர் சொல்வதற்கு உரிய பகுதி அல்ல.

திருவிருந்துச் சடங்கு

237. பின்பு திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் தம் கைகளைக் குவித்து, ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலுக்கான முன்னுரை வழங்குவார்; பின்னர் அவர் தம் கைகளை விரித்துக் கூட்டுத் திருப்பலியாளர்கள் எல்லாருடனும் மக்களுடனும் சேர்ந்து அவ்வேண்டலைச் சொல்வார்.

238. "ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும்... எனும் தொடர் இறைவேண்டலைத் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் தம் கைகளை விரித்துச் சொல்வார். இறுதியில் கூட்டுத்திருப்பலியாளர்கள் மக்களோடு சேர்ந்து, ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் . . . என்ற இறுதி ஆர்ப்பரிப்பைச் சொல்வர்.

239. "ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம் எனத் திருத்தொண்டரோ அவர் இல்லை எனில் கூட்டுத்திருப்பலியாளர்களுள் ஒருவரோ சொல்வார். அதன்பின் ஒருவர் மற்றவருக்கு அமைதி வாழ்த்தை வழங்குவர்; திருத்தொண்டருக்கு முன்பாக, உருப்பலிக்குத் தலைமை ஏற்பவருக்கு அருகில் உள்ள கூட்டுத்திருப்பலியாளர்கள் அமைதி "உதை முதலில் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்.

==============↑ பக்கம் 65

240. "உலகின் பாவங்களைப் போக்கும் எனும் மன்றாட்டு சொல்லப்படும்போது கட்டி, திருப்பலியாளர்கள், மக்கள் ஆகியோருக்குத் தேவையான அப்பத்தைப் பிடுவதில் திருப்பலி தலைமை ஏற்பவருக்குத் திருத்தொண்டர்கள் அல்லது கூட்டுத்திருப்பலியாளர்களுள் சில: உதவலாம்.

241. சிறு அப்பத் துண்டு ஒன்றைத் திருக்கிண்ணத்துள் இட்டபின் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் தம் கைகளைக் குவித்து "ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே. .." எனு. மன்றாட்டையோ "ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் ..." எனும் மன்றாட்டையோ அமைந்த குரலில் சொல்வார்.

242. திருவிருந்துக்கு முந்திய மன்றாட்டு முடிந்ததும் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் முழங்காலிட்டு, சிறிது பின்நோக்கிச் செல்வார். கூட்டுத்திருப்பலியாளர்கள் ஒருவர்பின் ஒருவராய்ப் பீடத்தின் நடுப்பகுதிக்கு வந்து, முழங்காலிட்டு, பின் பீடத்திலிருந்து கிறிஸ்துவின் திரு உடலை வணக்கத்துடன் எடுத்து அதை வலக் கையில் பிடித்து இடக் கையால் அதை தாங்கிக்கொண்டு தம் இடத்துக்குத் திரும்புவர்; அல்லது கூட்டுத்திருப்பலியாளர்கள் தம் இடத்திலேயே இருக்க, திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரோ கூட்டுத்திருப்பலியாளருள் ஒருவரோ பலரோ திரு அப்பம் உள்ள தட்டை ஏந்திவர அத்தட்டிலிருந்து கூட்டுத்திருப்பலியாளர்கள் கிறிஸ்துவின் திரு உடலை எடுத்துக்கொள்ளலாம் அல்லது அவர்கள் திரு அப்பம் உள்ள தட்டைத் தங்களுக்கு அடுத்து இருப்பவர்முதல் இறுதி இருக்கையில் நிற்பவர்வரை கொடுத்துக் கிறிஸ்துவின் திரு உடலை எடுத்துக்கொள்ளலாம்.

343. பின்பு திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் அந்தத் திருப்பலியில் அர்ச்சிக்கப்பட்ட திரு அப்பத்தை எடுத்து, திருக்கிண்ணத் தட்டுக்குமேல் அல்லது திருக்கிண்ணத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு, மக்கள் பக்கமாய்த் திரும்பி "இதோ, இறைவனின் செம்மறி ..." எனச் சொல்வார்; தொடர்ந்து, "ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் ...." என்பதைக் கூட்டுத்திருப்பலியாளரோடும் மக்களோடும் சேர்ந்து சொல்வார்.

244. அதன்பின், திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் பலிப்பீடப் பக்கமாய்த் திரும்பி, அவர் மட்டும் "கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நிலைவாழ்வு அளிப்பதாக" என அமைந்த குரலில் சொல்லி, கிறிஸ்துவின் திரு உடலை வணக்கத்துடன் உண்பார்; இவ்வாறே கூட்டுத் திருப்பலியாளர்களும் செய்வார்கள். பின் திருத்தொண்டர் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரிடமிருந்து கிறிஸ்துவின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் பெற்றுக்கொள்வார். 245. ஆண்டவரின் திரு இரத்தத்தை நேரடியாகத் திருக்கிண்ணத்திலிருந்து பருகலாம் அல்லது திருக்கிண்ணத்தில் கிறிஸ்துவின் திரு உடலைத் தோய்த்தும் உட்கொள்ளலாம் அல்லது ஒரு குழாயையோ கரண்டியையோ பயன்படுத்தி உட்கொள்ளலாம். 246. திருக்கிண்ணத்திலிருந்து நேரடியாகப் பருகினால் பின்வரும் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்:

அ) திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் திருக்கிண்ணத்தை எடுத்து, பீடத்தின் நடுவில் நின்று "கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நிலைவாழ்வு அளிப்பதாக" என அமைந்த குரலில் சொல்லி, சிறிதளவு திரு இரத்தத்தை உட்கொண்டபின், திருத்தொண்டர் அல்லது கூட்டுத்திருப்பலியாளர் ஒருவரிடம் திருக்கிண்ணத்தைத் தருவார்; பின்னர் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்குவார் (காண். எண். 160-16 2).

கூட்டுத்திருப்பலியாளர் ஒருவர் பின் ஒருவராக அல்லது இரு திருக்கிண்ணங்க பயன்படுத்தினால், இருவர் இருவராகப் பீடத்துக்கு வந்து, முழங்காலிட்டு திரு இரத்தத உட்கொண்டபின், திருக்கிண்ணத்தின் விளிம்பைத் துடைத்ததும் தம் இருக்கைக்குத் திரும்புவார்.

ஆ) திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் வழக்கம் போலப் பீடத்தின் நடு' நின்றுகொண்டு ஆண்டவரின் திரு இரத்தத்தைப் பருகுவார்.
==============↑ பக்கம் 66

கூட்டுத்திருப்பலியாளர்கள் தங்கள் இடங்களிலேயே இருந்து கொண்டு, திருத்தொண்டர் அல்லது கூட்டுத்திருப்பலியாளர் ஒருவர் கொண்டு வந்து தரும் திருக்கிண்ணத்திலிருந்து ஆண்டவரின் திரு இரத்தத்தை உட்கொள்ளலாம் அல்லது ஒருவர் மற்றவரிடம் திருக்கிண்ணத்தைத் தந்து, உட்கொள்ளலாம். திருக்கிண்ணத்திலிருந்து உட்கொள்பவர் அல்லது திருக்கிண்ணத்தைக் கொடுப்பவர் அதன் விளிம்பைத் துடைப்பார்: பருகியவர் ஒவ்வொருவராகத் தம் இருக்கையில் அமர்வர்.

247. திருத்தொண்டர் பீடத்தின்மேல் எஞ்சி இருக்கும் திரு இரத்தம் முழுவதையும் வணக்கத்துடன் உட்கொள்வார். தேவைப்படின் கூட்டுத்திருப்பலியாளர்கள் சிலர் அவருக்கு உதவலாம். அவர் திருக்கிண்ணத்தைத் திரு மேசைக்கு எடுத்துச் செல்வார். அங்கு அவரோ முறையாக நியமனம் பெற்ற பீடத்துணைவரோ வழக்கம் போல அதைத் தூய்மைப்படுத்தி, துடைத்து ஒழுங்காக வைப்பர் (காண். எண் 183).

248. கூட்டுத்திருப்பலியாளர்கள் பின்வரும் முறையிலும் நற்கருணை உட்கொள்ளலாம்: அதாவது, ஒவ்வொருவராகப் பீடத்திலிருந்து ஆண்டவரின் திரு உடலை உண்டு, உடனே தொடர்ந்து திரு இரத்தத்தை உட்கொள்ளுதல்.

இம்முறைப்படி திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் வழக்கம் போல இரு வடிவங்களில் நற்கருணை உட்கொள்வார் (காண். எண் 158). இருப்பினும் திருக்கிண்ணத்திலிருந்து உட்கொள்ள ஒரு குறிப்பிட்ட முறையைத் தேர்ந்தெடுப்பார். அம்முறையையே கூட்டுத் திருப்பலியாளர்கள் எல்லாரும் பின்பற்றுவர்.

திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் நற்கருணை உட்கொண்ட பின்பு, பீடத்தின் ஓரத்தில் உள்ள மற்றொரு திருமேனித் துகில் மீது திருக்கிண்ணம் வைக்கப்படும். கூட்டுத் திருப்பலியாளர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பீடத்தின் நடுப்பகுதியை அணுகி, முழங்காலிட்டு, ஆண்டவர் திரு உடலை உட்கொள்வர்; பிறகு பீடத்தின் ஒரத்திற்குச் சென்று, மேலே கூறியுள்ள முறைப்படி திருக்கிண்ணத்திலிருந்து உட்கொள்வதற்கான சடங்குகளுள் ஒன்றைத் தேர்ந்து கொண்டு ஆண்டவரின் திரு இரத்தத்தை உட்கொள்வர்.

பின்பு திருத்தொண்டர் நற்கருணை உட்கொள்வதும் திருக்கிண்ணத்தைத் தூய்மைப் படுத்துவதும் மேலே விளக்கியபடி நடக்கும்.

249. கூட்டுத்திருப்பலியாளர்கள், திருக்கிண்ணத்தில் திரு உடலைத் தோய்த்து உண்ணும் முறையைப் பின்பற்றினால், திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் வழக்கம் போல ஆண்டவரின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உட்கொள்வார்; ஆனால் கூட்டுத்திருப்பலியாளரின் தேவைக்குப் போது மான திரு இரத்தம் திருக்கிண்ணத்தில் இருக்கும்படி அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். பின்பு திருத்தொண்டர் அல்லது கூட்டுத்திருப்பலியாளர் ஒருவர் பீடத்தின் நடுவில் அல்லது ஓரத்தில் மற்றொரு திருமேனித் துகில் மீது திருக்கிண்ணத்தை வைப்பார்; திரு அப்பத் துண்டுகளைக் கொண்ட தட்டையும் வசதியாகத் திருக்கிண்ணத்துக்கு அருகில் வைப்பார்.

கூட்டுத்திருப்பலியாளர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பீடத்தை அணுகி, முழங்காலிட்டு வணங்கி அப்பத் துண்டு ஒன்றை எடுத்துத் திருக்கிண்ணத்தில் சிறிதளவு தோய்த்து, வாய்க்குக் கீழே திருக்கிண்ணத் துகில் ஒன்றை ஏந்தி, தோய்த்தத் திரு அப்பத் துண்டை உண்பர்; பின் திருப்பலியின் தொடக்கத்தில் தாம் இருந்த இடத்துக்குத் திரும்புவர்.

திருத்தொண்டருக்கும் திரு இரத்தத்தில் தோய்த்து நற்கருணை வழங்கப்படும். நற்கருணை கொடுக்கும் அருள்பணியாளர், "கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும் எனச் சொல்ல, திருத்தொண்டர் "ஆமென் எனப் பதில் அளிப்பார். திருத்தொண்டர் பீடத்தின்மேல் எஞ்சி இருக்கும் திரு இரத்தம் முழுவதையும் உட்கொள்வார். தேவைப்படின் கூட்டுத்திருப்பலியாளர்கள் சிலர் அவருக்கு உதவலாம். அவர் திருக்கிண்ணத்தைத் திரு மேசைக்கு எடுத்துச் செல்வார். அங்கு அவரோ முறையாக நியமனம் பெற்ற பீடத்துணைவரோ வழக்கம் போல அதைத் தூய்மைப்படுத்தி, துடைத்து, ஒழுங்காக வைப்பார்.

==============↑ பக்கம் 67

நிறைவுச் சடங்குகள்

250. திருப்பலி இறுதிவரை உள்ள பகுதிகளை வழக்கம் போலத் திருப்பலி, தலைமை ஏற்பவர் நிறைவேற்றுவார் (காண். எண். 166-168); அப்பொம் கூட்டுத்திருப்பலியாளர்கள் தத்தம் இடத்தில் நிற்பார்கள். 251. பீடத்தை விட்டுச் செல்லு முன், கூட்டுத்திருப்பலியாளர்கள் பீடத்துக்குத் தாழ்ந்து பணிந்து வணக்கம் செய்வார்கள். திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் திருத்தொண்டருடன் சேர்ந்து வழக்கம் போலப் பீடத்தை முத்தமிட்டு வணக்கம் செலுத்துவார்.

III ஒரு பணியாளர் மட்டும் பங்கேற்கும் திருப்பலி

52. அருள்பணியாளர் நிறைவேற்றும் திருப்பலியில் ஒரு பணியாளர் மட்டும் உதவி புரிந்து பதிலளிக்கும்போது, மக்களோடு சேர்ந்து ஒப்புக்கொடுக்கும் திருப்பலி வழிபாட்டுமுறை பின்பற்றப்பட வேண்டும் (காண். எண். 120-169); தேவைக்கு ஏற்ப, பணியாளர் மக்களின் பகுதிகளைத் தகுந்த முறையில் சொல்வார்.

253. பணியாளர் ஒரு திருத்தொண்டராக இருப்பின், அவருக்கு உரிய பணிகளைச் (காண். எண். 171-186) செய்வார். மக்களுக்கு உரிய பகுதிகளையும் நிறைவேற்றுவார்.

254. தகுந்த, சரியான காரணமின்றி, பணியாளரோ பொது நிலையினர் ஒருவரோ பங்கேற்காத நிலையில் திருப்பலி நிறைவேற்றக் கூடாது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் வாழ்த்துகளும் அழைப்பு முன்னுரைகளும் திருப்பலி முடிவில் ஆசியும் விட்டுவிடப்படும்.

255. திருப்பலிக்கு முன்பு பீடத்தின் அருகில் உள்ள திரு மேசையின்மீது அல்லது பீடத்தின் வலப் பக்கத்தில் திருக்கிண்ணமும் தேவையானவையும் தயார் செய்யப்பட்டிருக்கும்.

தொடக்கச் சடங்குகள்

256. அருள்பணியாளர் பீடத்தை அணுகி, பணியாளருடன் தாழ்ந்து பணிந்து வணங்கிப் பீடத்தை முத்தமிட்டபின் தம் இருக்கைக்குச் செல்வார். அருள்பணியாளர் விரும்பினால் பீடத்திலேயே நிற்கலாம். அவ்வாறெனில், அங்கேயே திருப்பலி நூலும் தயாராக இருக்கும். பின் பணியாளர் அல்லது அருள்பணியாளர் வருகைப் பல்லவியைச் சொல்வார்.

257. பின்னர் அருள்பணியாளர் பணியாளருடன் நின்றுகொண்டு "தந்தை, மகன், தாய ஆவியார்... எனச் சொல்லிச் சிலுவை அடையாளம் வரைவார். தரப்பட்டுள்ள வாய்பாடுகளில் ஒன்றைத் தெரிவு செய்து பணியாளரை வாழ்த்துவார்.

258. பின்பு பாவத்துயர்ச் செயல் முடிந்ததும் சடங்குமுறைக் குறிப்புகளுக்கு ஏற்ப "ஆண்டவரே, ரொக்கமாயிரும்" எனும் மன்றாட்டும் "உன்னதங்களிலே எனும் பாடலும் சொல்லப்படும்.

259. பின் கைகளைக் குவித்து "மன்றாடுவோமாக" எனச் சொல்வார். தேவைக்கு ஏற்ப, சிறிது நேர அமைதிக்குப் பின், தம் கைகளை விரித்துத் திருக்குழும மன்றாட்டைச் சொல்வார். மன்றாட்டு முடிவில் பணியாளர் "ஆமென்' எனப் பதில் சொல்வார்.

வார்த்தை வழிபாடு

260 கூடுமானவரை, வாசக மேடையிலிருந்தோ புத்தகத் தாங்கியிலிருந்தோ வாசகங்கள் வாசிக்கப்படும்.

261. திருக்குழும மன்றாட்டு முடிந்ததும் பணியாளர் முதல் வாசகத்தையும் அத்தோடு சேர்?? திருப்பாடலையும் வாசிப்பார்; இரண்டாம் வாசகம் இருந்தால் அதைத் தொட"
--- வாடர்ந்து வாசிப்பார்; பின் "அல்லேலூயா' வசனத்தை அல்லது வேறு பாடலை வாசிப்பார்.

==============↑ பக்கம் 68

263. பின்னர் அருள்பணியாளர் தாழ்ந்து பணிந்து "எல்லாம் வல்ல இறைவா, உமது நற்செய்தியை ... எனச் சொன்ன பிறகு நற்செய்தியை வாசிப்பார். முடிவில் ஆண்டவரின் அருள்வாக்கு எனக் கூற, பணியாளர் "கிறிஸ்துவே, உமக்குப் புகழ் என்பார். முடிவில் "இந்நற்செய்தியின் வார்த்தைகளால் நம் பாவங்கள் நீங்குவனவாக..." என்று அமைந்த குரலில் சொல்லி, நூலை முத்தமிட்டு வணக்கம் செலுத்துவார்.

263. பின்னர் அருள்பணியாளர் ஒழுங்குமுறைக் குறிப்புகளுக்கு இணங்க, நம்பிக்கை அறிக்கையைப் பணியாளருடன் சேர்ந்து சொல்வார்.

264 பின்னர் பொது மன்றாட்டு தொடரும். இவ்வகைத் திருப்பலியிலும் இது இடம்பெறலாம், அருள்பணியாளர் முன்னுரையையும் இறுதி மன்றாட்டையும் கூறுவார். பணியாளரோ கருத்துக்களை எடுத்துரைப்பார்.

நற்கருணை வழிபாடு

265. நற்கருணை வழிபாட்டில் பின்வருபவை தவிர மற்றவை எல்லாம் மக்களோடு திருப்பலியில் உள்ளது போலவே நடைபெறும்.

266. ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலுக்குப்பின் வரும் தொடர் இறைவேண்டல் சொல்லப்படும். அதன் முடிவில் வரும் ஆர்ப்பரிப்புக்குப் பின் "ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, அமைதியை ...... எனும் மன்றாட்டைச் சொல்வார். தொடர்ந்து "ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக" என்பார். பணியாளர், "உம் ஆன்மாவோடும் இருப்பதாக" என்று பதிலளிப்பார். தேவைக்கு ஏற்ப, அருள்பணியாளர் பிற பணியாளருக்கு அமைதி ஆசி கூறுவார்.

267. பின்னர் "உலகின் பாவங்களைப் போக்கும் ... " எனும் மன்றாட்டைப் பணியாளரோடு சொல்லும்போது திரு அப்பத் தட்டின்மீது அப்பத்தைப் பிடுவார். "உலகின் பாவங்களைப் போக்கும் ... சொல்லி முடித்தபின் "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திரு உடலும் ... எனும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்லி சிறு அப்பத் துண்டைத் திருக்கிண்ணத்துள் இடுவார்.

268. சிறு அப்பத் துண்டைத் திருக்கிண்ணத்துள் இட்டபின் அருள்பணியாளர், "ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே ... எனும் மன்றாட்டையோ "ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும்..." எனும் மன்றாட்டையோ அமைந்த குரலில் சொல்வார். பின் முழங்காலிட்டு, அப்பத்தை எடுத்து, பணியாளர் நற்கருணை உட்கொள்கின்றார் எனில், அவர் பக்கமாய்த் திரும்பி, திரு அப்பத்தை அப்பத் தட்டுக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்தோ திருக்கிண்ணத்தின்மீது பிடித்தோ, "இதோ, இறைவனின் செம்மறி ... எனும் மன்றாட்டைச் சொல்வார். தொடர்ந்து பணியாளரோடு சேர்ந்து, "ஆண்டவரே, நீர் என் இல்லத்தில்... எனும் மன்றாட்டைச் சொல்வார். பின்னர் பலிப்பீடப் பக்கம் திரும்பி கிறிஸ்துவின் திரு உடலை உட்கொள்வார். பணியாளர் நற்கருணை உட்கொள்ளவில்லை எனில், அருள்பணியாளர் முழங்காலிட்டு, அப்பத்தை எடுத்து, பலிப்பீடப் பக்கம் திரும்பி, "ஆண்டவரே, நீர் என் இல்லத்தில்
" என்பதையும் "கிறிஸ்துவின் திரு உடல் ..... என்பதையும் அமைந்த குரலில் சொல்வார். பின் கிறிஸ்துவின் திரு உடலை உட்கொள்வார். அதன்பின் திருக்கிண்ணத்தை எடுத்து, "கிறிஸ்துவின் திரு இரத்தம் ... எனும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்லி கிறிஸ்துவின் திரு இரத்தத்தை உட்கொள்வார்.

369. பணியாளருக்கு நற்கருணை வழங்கும் முன் பணியாளர் அல்லது அருள்பணியாளரே திருவிருந்துப் பல்லவியைச் சொல்வார்.

270. அருள் பணியாளர் திருக்கிண்ணத்தை திரு மேசையிலோ பீடத்திலோ தூய்மைப்படுத்துவார். திருக்கிண்ணத்தைப் பீடத்தில் தூய்மைப்படுத்தினால், பணியாளர் வைக்கலாம். அதைத் திரு மேசைக்கு எடுத்துச் செல்லலாம் அல்லது பீடத்தின் ஒரு புறத்தில் வைக்கலாம்.

==============↑ பக்கம் 69

271. திருக்கிண்ணத்தைத் தூய்மைப்படுத்தியபின் அருள்பணியாளர் சிறிது நேரம் அமைதி காக்க வேண்டும். பின்னரே திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொல்வார்.

நிறைவுச் சடங்குகள்

272. மக்களோடு திருப்பலியில் உள்ளது போலவே இச்சடங்குகள் நடைபெறும், 'மெ. வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று" எனும் பிரியாவிடை சொல்வதில்லை, அருள்பணியாளர் வழக்கம் போலப் பீடத்தை முத்தமிட்டு அதற்கு வணக்கம் செலுத்துவார்; பின் பணியாளரோடு தாழ்ந்து பணிந்தபின் திரும்பிச் செல்வார்.

IV. எல்லாவகைத் திருப்பலிக்கும் உரிய சில பொதுவிதிகள்

பீடத்துக்கும் நற்செய்தி வாசக நூலுக்கும் வணக்கம்

273. திருவழிபாட்டு மரபுப்படி, பீடத்துக்கும் நற்செய்தி வாசக நூலுக்கும் முத்தமிட்டு வணக்கம் செலுத்தப்படும். ஆனால் அவ்வாறு வணக்கம் செலுத்தும் முறை குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியின் மரபுகளுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்புடையதாக இல்லை எனில், அதற்குப் பதிலாகப் பயன்படுத்த வேண்டிய வேறொரு முறையை ஆயர் பேரவை தீர்மானித்து, திருத்தூது ஆட்சிப் பீடத்தின் ஒப்புதலோடு பயன்படுத்த வேண்டும்.

முழங்காலிடுதலும் தலை வணங்குதலும்

274. முழங்காலிடுவது என்பது வலது முழங்காலை மடக்கித் தரைவரை தொடுவது ஆகும். இது ஆராதனையைக் குறிக்கும். மிகவும் தூய்மைமிகு நற்கருணைக்கும் ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளிக்கிழமை அன்று திருவழிபாட்டில் இடம் பெறும் ஆடம்பர வழிபாட்டிலிருந்து பாஸ்கா திருவிழிப்புத் தொடங்கும்வரை திருச்சிலுவைக்கும் இது உரியது.

திருப்பலிக் கொண்டாட்டத்தில் திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் திரு அப்ப எழுந்தேற்றத்துக்குப் பின்னும் திருக்கிண்ண எழுந்தேற்றத்துக்குப் பின்னும் திரு உணவை உண்ணும் முன்னும் என கூட்டுத்திருப்பலியில் மூன்று முறை முழங்காலிடுவார். கூட்டுத்திருப்பலியில் கடைப்பிடிக்கப்படவேண்டிய இதற்கான சில தனிப்பட்ட விதிமுறைகள் உரிய இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன (காண். எண். 210-251).

தாய்மைமிகு நற்கருணைப் பேழை திருப்பீட முற்றத்தில் இருந்தால், அருள்பணியாளர், திருத்தொண்டர், ஏனைய பணியாளர்கள் பீடத்தை அணுகும்போதும் அதை விட்டுத் திரும்பிச் செல்லும்போதும் முழங்காலிட வேண்டும். திருப்பலியின்போது இது தேவையில்லை.

மற்றபடி எல்லாரும் தூய்மைமிகு நற்கருணைக்குமுன் கடந்து செல்லும்போது மங்காலிடுவர். பவனியாகச் செல்லும்போது இப்படிச் செய்தல் தேவையில்லை.

திருச்சிலுவையை அல்லது மெழுகுதிரிகளை ஏந்திச் செல்லும் பணியாளர்கள் முழங்காலிடுவதற்குப் பதிலாகத் தலை வணங்குவர்.

275. தலை வணங்குதல் ஆள்களுக்கும் அவர்களைக் அடையாளங்களுக்கும் செலுத்தப்படும் வணக்கத்தையும் மரியாதையையும் குறிக்கும். தங்க வணங்குதல் இரு வகைப்படும்: தலைதாழ்த்துதல், குனிதல்.

அ) மூன்று இறை ஆள்களின் பெயரை ஒன்றாய்ச் சொல்லும்பே'' இயேசுவின் பெயர், புனித கன்னி மரியாவின் பெயர், எந்தப் புனிதரின் மாட்சி தாழ்த்தப்படும். திருப்பலி நடைபெறுகிறதோ அவருடைய பெயர் ஆகியவற்றைக் குறிப்பிடும்போதும் தலை தாழ்த்தப்படும்

==============↑ பக்கம் 70

ஆ) பீடத்துக்கு; "எல்லாம் வல்ல இறைவா, உமது நற்செய்தியைத் தகுதியுடன் நான் அறிவிக்குமாறு என் இதயத்தையும் உதடுகளையும் தூய்மைப்படுத்தியருளும் எனும் மன்றாட்டின்போதும் ஆண்டவரே, தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் ...." எனும் மன்றாட்டின்போதும் நம்பிக்கை அறிக்கையில், "தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்' என அறிக்கையிடும்போதும் உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், "எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய வானதூதர் . . . எனும் மன்றாட்டின்போதும் நற்செய்தி அறிக்கையிடும் முன்னர், திருத்தொண்டர் ஆசி கேட்கும்போதும் அருள்பணியாளர் ஆண்டவரின் வார்த்தைகளைக் கூறும்போதும் குனிதல் அல்லது தாழ்ந்து பணிதல் இடம் பெறும்.

தூபம் காட்டுதல்

276. தூபம் காட்டுதல் அல்லது நறுமணப்புகை எழுப்புதல் திருநூலில் குறிப்பிட்டுள்ளப்படி (திபா 141:2; திவெ 8:3) மரியாதையையும் மன்றாட்டையும் உணர்த்தும்.

விருப்பத்துக்கு ஏற்ப, எவ்வகைத் திருப்பலியிலும் தூபம் பயன்படுத்தலாம்:

அ) வருகைப் பவனியின்போது; ஆ) திருப்பலியின் தொடக்கத்தில், திருச்சிலுவைக்கும் பீடத்துக்கும்;

இ) நற்செய்தி வாசக நூல் பவனியின்போதும் நற்செய்தி அறிக்கையின்போதும்;

ஈ) திரு அப்பமும் திருக்கிண்ணமும் பீடத்தில் வைக்கப்பட்ட பின்னர், காணிக்கைப் பொருள்களுக்கு, திருச்சிலுவைக்கு, பீடத்துக்கு, அருள்பணியாளருக்கு, மக்களுக்கு;

உ) அர்ச்சிப்புக்குப்பின் திரு அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும் காட்டும்போது.

377. அருள்பணியாளர் தூபக் கலத்தில் நறுமணப்பொருளை இட்டபின், ஒன்றும் சொல்லாமல் சிலுவை அடையாளம் வரைந்து அதற்கு ஆசி வழங்குவார்.

பீடத்துக்கும் திருப்பலிக் காணிக்கைகளுக்கும் தவிர, தூபம் காட்டும் முன்னரும் பின்னரும் தூபம் காட்டப்படும் ஆளுக்கும் பொருளுக்கும் தாழ்ந்து வணக்கம் செலுத்தப்படும்.

மூன்று வீச்சுத் தூபம் காட்டுதல் : தூய்மைமிகு நற்கருணை, திருச்சிலுவையின் திருப்பண்டம், மக்களின் பொது வணக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஆண்டவரின் திரு உருவங்கள், திருப்பலிக்கான காணிக்கைப் பொருள்கள், பீடச் சிலுவை, நற்செய்தி வாசக நூல், பாஸ்கா திரி, அருள்பணியாளர், மக்கள்.

இரு வீச்சுத் தூபம் காட்டுதல்: மக்களின் பொது வணக்கத்துக்கு வைக்கப்படும் புனிதர்களின் திருப்பண்டங்கள், திரு உருவங்கள் ஆகியவற்றுக்குக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தில் பீடத்துக்குத் தூபம் காட்டியபின் இது நடைபெற வேண்டும்.

பீடத்துக்குப் பின்வருமாறு ஒற்றை வீச்சுகளில் தூபம் காட்டப்படும்:

அ) பீடம் தனித்திருந்தால், அருள்பணியாளர் தூபம் காட்டிக்கொண்டே அதைச் சுற்றி வருவார்.

ஆ) பீடம் சுவரோடு பொருந்தி இருந்தால், அருள்பணியாளர் முதலில் பீடத்தின் வலப் புறமும் பின்னர் அதன் இடப் புறமும் சென்று தூபம் காட்டுவார்.

திருச்சிலுவை பீடத்தின் மீதோ அதன் அருகிலோ இருப்பின், பீடத்துக்குமுன் அதற்குத் தூபம் காட்டுவார். திருச்சிலுவை பீடத்துக்குப் பின்னால் இருப்பின், அருள்பணியாளர் அதன்முன் கடந்து செல்லும்போது அதற்குத் தூபம் காட்டுவார்.

==============↑ பக்கம் 71

அருள்பணியாளர் திருச்சிலு வைக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டி, பீடத்தின் மீதுள்ள காணிக்கைப் பொருள்களுக்கு மூன்று வீச்சுத் தூபம் காட்டுவார் - சிலுவை வடிவிலும் காணிக்கைப் பொருள்கள் மீது தூபம் காட்டுவார்.

தூய்மைப்படுத்துதல்

278. திரு அப்பத் துகள் ஏதும் விரல்களில் ஒட்டியிருந்தால், முக்கியமாக திரு அப்பத்தைப் பிட்ட பின்னும் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கிய பின்னும் அவ்வாறு இருந்தால், அருள்பணியாளர் திரு அப்பத் தட்டின் மீது விரல்களைத் தூய்மைப்படுத்தி அல்லது தேவையானால் அவற்றைக் கழுவுவார். அவ்வாறே திரு அப்பத் தட்டுக்கு வெளியில் விழுந்த துகள்களை ஒன்று சேர்ப்பார்.

379. திருவிருந்துக்குப் பிறகு அல்லது திருப்பலி முடிவில் அருள்பணியாளரோ திருத்தொண்டரோ அல்லது நியமனம் செய்யப்பட்ட பீடத்துணைவரோ திருக்கலங்களைத் தூய்மைப்படுத்துவார்; கூடுமானவரையில் இது திரு மேசையில் செய்யப்படும். திருக்கிண்ணம் தண்ணீரால் மட்டும் அல்லது இரசமும் தண்ணீரும் விட்டுக் கழுவப்படும். தூய்மைப்படுத்துபவர் பாராய் இருந்தாலும் அதை உட்கொள்வார். வழக்கப்படி திருக்கிண்ணத் துகிலால் திரு அப்பத் தட்டைத் தூய்மைப்படுத்துவார்.

அருள்பணியாளர் நற்கருணை வழங்கிய பின்னர் எஞ்சியுள்ள கிறிஸ்துவின் திரு இரத்தம் முழுவதும் உடனடியாகப் பீடத்திலேயே உட்கொள்ளப்படக் கவனமாய்ப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

280. திரு அப்பமோ திரு அப்பத் துகளோ கீழே விழ நேர்ந்தால், அதை வணக்கத்தோடு எடுக்க வேண்டும்; திரு இரத்தம் சிந்த நேர்ந்தால், சிந்திய இடத்தைத் தண்ணீரால் கழுவி, அத்தண்ணீரைத் திருப்பொருள் அறையில் உள்ள தூய தொட்டியில் ஊற்ற வேண்டும்.

இரு வடிவங்களில் நற்கருணை உட்கொள்ளுதல்

281 இரு வடிவங்களிலும் தூய நற்கருணை உட்கொள்ளுவது அடையாள வகையில் மிக நிறைவான பொருள் கொண்டுள்ளது. ஏனெனில் அதில் நற்கருணை விருந்தின் அடையாளம் மிகத் தெளிவாகப் புலப்படுகின்றது; இதனால் புதிய, நிலையான உடன்படிக்கை நம் ஆண்டவரின் திரு இரத்தத்தால் நிறைவு பெறுகின்றது எனும் அவருடைய திருவுளமும் அத்தோடு, நற்கருணைத் திருவிருந்துக்கும் தந்தையின் ஆட்சியில் நிறைவுகால விருந்துக்கும் இடையே உள்ள தொடர்பும் இன்னும் தெளிவாகக் காட்டப்படுகின்றன.195

282 இச்சடங்கில் பங்கெடுக்கும் அல்லது உடனிருக்கும் நம்பிக்கையாளருக்குத் திருவிருந்து வகை பற்றித் திரெந்துப் பொதுச் சங்கம் தந்துள்ள கத்தோலிக்கப் படிப்பினையை அருள் நெறியாளர்கள் நினைவுபடுத்த வேண்டும். முதன்முதலாக, கத்தோலிக்க நம்பிக்கைப் படிப்பினைப்படி, ஒரு வடிவத்தில் மட்டும் நற்கருணை உட்கொண்டாலும் நம்பிக்கையாளர் முழுக் கிறிஸ்துவையும் உண்மையான அருளடையாளத்தையும் பெறுகின்றார்கள் என்பதையும் ஒரு வடிவத்தில் மட்டும் நற்கருணை உட்கொள்வதால் மீட்புக்குத் தேவையான எந்த அருள்கொடையையும் இழந்திடுவதில்லை என்பதையும் அருள்நெறியாளர்கள் நினைவுபடுத்த வேண்டும். 108

105 காண் திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண் 32: A.A.S. 39 (9) பக். 558
106 காண். திரெந்து சங். அமர்வு XX, Deer. de communione eucleistica, 16, 07.1562, capp. 1-3:DS 1725-1729.
==============↑ பக்கம் 72

மேலும் அருளடையாளங்களின் உட்பொருளுக்குக் குறைவு ஏற்படாத வகையில், பல்வேறு சூழ்நிலை, காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு அருளடையாளங்களின் வணக்கத்துக்கும் அவற்றைப் பெற்றுக்கொள்வோரின் தேவைகளுக்கும் எவை சாதகமானவை என மதிப்பிட்டு முடிவு செய்யவோ மாற்றம் செய்யவோ திரு அவைக்கு அதிகாரம் உண்டு என்பதையும் அருள்நெறியாளர்கள் கற்பிப்பார்களாக.107 அதே நேரத்தில், திருவிருந்தின் அடையாளத்தன்மை முழுமையாக வெளிப்படும் இத்திருச்சடங்கில் நம்பிக்கையாளர் ஆவலுடன் பங்குகொள்ள அருள்நெறியாளர்கள் அறிவுரை கூறுவார்களாக.

283. திருச்சடங்கு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களும் பின்வருபவர்களும் இரு வடிவங்களிலும் நற்கருணை உட்கொள்ளலாம்.

அ) தனியாக அல்லது கூட்டுத்திருப்பலி நிறைவேற்ற இயலாத அருள்பணியாளர்கள்; ஆ) திருப்பலியில் சில பணிகளை நிறைவேற்றும் திருத்தொண்டரும் பிறரும்;

இ) துறவு இல்லத் திருப்பலியில் பங்கேற்கும் இல்லத்து உறுப்பினர், குழுமத் திருப்பலியில் பங்கேற்போர், அருள்பணி மாணவர்கள், ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆன்மீக அல்லது அருள்பணிக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள்.

இரு வடிவங்களில் நற்கருணை உட்கொள்வதற்கான விதிமுறைகளை மறைமாவட்ட ஆயர் தமது மறைமாவட்டத்துக்கு என்று வரையறுக்கலாம். இவை துறவறத்தாரின் கோவில்களிலும் குழுமத் திருப்பலிகளிலும் கடைப்பிடிக்கப்படவேண்டும். அருள்பணியாளர் ஒரு குழுமத்துக்கு அருள் நெறியாளராக ஏற்படுத்தப்பட்டிருக்கும்போது, இரு வடிவங்களில் நற்கருணை வழங்குவது பொருத்தமானது எனக் கருதினால் அதற்கான அனுமதியை அவருக்கு வழங்க மறைமாவட்ட ஆயருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் நம்பிக்கையாளர் இது பற்றி நன்கு அறிவுறுத்தப்படவேண்டும். அருளடையாளத்துக்கு ஏற்படக்கூடிய எவ்வித அவமதிப்புக்கான ஆபத்தோ பங்கேற்போரின் மிகுதியான எண்ணிக்கையின் காரணமாக இச்சடங்கை நிறைவேற்றக் கடினமாகும் சூழ்நிலையோ வேறு எந்தக் காரணமோ இருத்தலாகாது.

எனினும் திருத்தூது ஆட்சிப் பீடத்தின் ஒப்புதலைப் பெற்று, ஆயர் பேரவை நம்பிக்கையாளருக்கு இரு வடிவங்களில் நற்கருணை வழங்கப்படும் முறைகளுக்கான விதிமுறைகளையும் அவ்வாறு செய்வதற்கான அதிகார நீட்டிப்பைக் குறித்தும் நிர்ணயிக்கலாம்.

284. நற்கருணை இரு வடிவங்களில் வழங்கப்படும்போது:

அ) திருக்கிண்ணத்தை வழக்கமாகத் திருத்தொண்டர் வழங்குவார். அவர் இல்லாதபோது ஒர் அருள்பணியாளர் அதை வழங்குவார்; அல்லது முறையாக நியமனம் செய்யப்பட்ட பீடத்துணைவரும் நற்கருணை வழங்குவதற்கு என நியமிக்கப்பட்ட சிறப்புரிமைத் திருப்பணியாளர் ஒருவரும் இப்பணியைச் செய்யலாம்; தேவைப்படின், நம்பிக்கையாளருள் ஒருவரிடம் அந்த ஒரு வேளையில் மட்டும் இப்பணியை ஒப்படைக்கலாம்.

ஆ) எஞ்சியுள்ள கிறிஸ்துவின் திரு இரத்தத்தை ஓர் அருள்பணியாளரோ, திருக் தொண்டரோ, திருக்கிண்ணத்தைப் பகிர்ந்தளிக்க முறையாக நியமனம் செய்யப்பட்ட பீடத்துணைவரோ பீடத்தில் உட்கொள்வார். இவரே வழக்கம் போலத் திருக்கலங்களைத் தூய்மைப்படுத்தி, துடைத்து அவற்றை ஒழுங்காக வைப்பார்.
தூய நற்கருணையை திரு அப்ப வடிவில் மட்டும் உட்கொள்ள விரும்பும் நம்பிக்கையாளர் எவருக்கும் அவ்வடிவில் வழங்கப்படல் வேண்டும்.

107 காண். மேற்படி, cap. 2: DS 1728.

==============↑ பக்கம் 73

285. இரு வடிவங்களில் நற்கருணை வழங்குவதற்குக் கீழ்க்கண்டவை தயார் செய்ய வேண்டும்:

அ) நற்கருணை உட்கொள்பவருக்குத் திருக்கிண்ணத்திலிருந்து நேரடியாக உட்கொள்ள வழங்கப்பட்டால், போது மான அளவில் பெரிய திருக்கிண்ணமோ பா திருக்கிண்ணங்களோ தயார் செய்யப்பட வேண்டும். திருக்கொண்டாட்டத்தின் இறுதியில் கிறிஸ்துவின் திரு இரத்தம் அதிக அளவில் எஞ்சியிருந்து அதனைப் பருகும் நிலை ஏற்படாதவாறு எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆ) திரு அப்பத்தை திரு இரத்தத்தில் தோய்த்துக் கொடுத்தால், திரு அப்பங்கள் மெல்லியனவாகவோ சிறியனவாகவோ இருத்தலாகாது. சாதாரண அப்பத்தைவிட சிறிது திண்மையாக இருத்தல் வேண்டும். இதனால் திரு அப்பத்தின் ஒரு பகுதியைக் கிறிஸ்துவின் திரு இரத்தத்தில் தோய்த்து நற்கருணையை எளிதாக வழங்க இயலும்.

286. திருக்கிண்ணத்திலிருந்து திரு இரத்தத்தை உட்கொள்ளக் கொடுத்தால் நற்கருணை உட்கொள்வோர் கிறிஸ்துவின் திரு உடலைப் பெற்றுக்கொண்டபின் திருக்கிண்ணம் வைத்திருக்கும் பணியாளர் முன் சென்று நிற்பார். அப்பணியாளர், "கிறிஸ்துவின் திரு இரத்தம்' எனச் சொல்ல, அதை உட்கொள்பவர் "ஆமென்" எனப் பதில் சொல்வார். பணியாளர் திருக்கிண்ணத்தை அவரிடம் கொடுக்க, அதை உட்கொள்பவர் அதனைக் கைகளில் வாங்கித் திருக்கிண்ணத்திலிருந்து சிறிது உட்கொண்டபின் அதனைப் பணியாளரிடம் கொடுத்துவிட்டுத் திரும்புவார்; பணியாளர் திருக்கிண்ணத்தின் விளிம்பைத் திருக்கிண்ணத் துகிலால் துடைப்பார்.

287. திருக்கிண்ணத்தில் தோய்த்து நற்கருணை வழங்கப்பட்டால், நற்கருணை உட்கொள்பவர் நற்கருணைத் தட்டைத் தம் வாய் அருகே பிடித்துக்கொண்டு அருள்பணியாளரை அணுகுவார். அருள்பணியாளர் நற்கருணைக் கலத்தைப் பிடித்து நிற்க, பணியாளர் ஒருவர் அவரது வலப் பக்கம் திருக்கிண்ணத்தைப் பிடித்துக்கொண்டு நிற்பார். அருள்பணியாளர் திரு அப்பத்தை எடுத்து, அதனைத் திருக்கிண்ணத்தில் சிறிது தோய்த்து, அதனைக் காட்டிக் "கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும்" எனச் சொல்வார். நற்கருணை உட்கொள்பவர், "ஆமென்" எனப் பதில் சொல்லி அருள்பணியாளரிடமிருந்து தமது வாயில் அதைப் பெற்று, பின்னர் இடம்பெயர்வார்.

==============↑ பக்கம் 74

 

image