image

 

திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம்

உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை

முன்னுரை

1. கிறிஸ்து ஆண்டவர் தம் உடலையும் இரத்தத்தையும் பலியாக நிறுவிய பாஸ்கா இருவிருந்தைச் சீடர்களுடன் கொண்டாடத் தேவையான வசதிகள் அமைந்த ஒரு பெரிய உணவு அறையை ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டார் (லூக் 2 2:12), இக்கட்டளை தனக்கும் தரப்பட்டதாகத் திரு அவை என்றுமே கருதி வந்துள்ளது, எனவேதான் திரு அவை தாய்மைமிகு நற்கருணைக் கொண்டாட்டத்துக்கு ஏற்ற மக்களின் உளப்பாங்கு, இடங்கள், சடங்குகள், பாடங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை வகுத்துத் தந்திருக்கின்றது. இன்று இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் விருப்பத்துக்கு இணங்க விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றின்படி உரோமை வழிபாட்டு முறைத் திரு அவை திருப்பலிக் கொண்டாட்டத்துக்கு இனி புதிய திருப்பலி நூலைப் பயன்படுத்த வேண்டும். இது திரு அவையின் அக்கறைக்கும் ஆர்வத்துக்கும் சான்று பகர்கின்றது; நற்கருணை என்னும் ஒப்பற்ற மறைநிகழ்வின் மீது திரு அவை கொண்டுள்ள நம்பிக்கையையும் மாறாத அன்பையும் வெளிப்படுத்துகின்றது; மேலும் புதியன சில புகுத்தப் பெற்றிருப்பினும், திரு அவையில் தொடர்ந்து ஒருங்கிணைந்துவரும் மரபை உறுதிப்படுத்துகின்றது.

மாறாத நம்பிக்கைக்குச் சான்று

2. திருப்பலியின் பலி இயல்பைத் திரெந்துச் சங்கம் முறைப்படி அறுதியிட்டுக் கூறியது;" இப்போதனை அனைத்துத் திரு அவையின் மரபுக்கும் ஒத்திருந்தது; இதே போதனையைத்தான் இரண்டாம் வத்திக்கான் சங்கமும் அறிக்கையிட்டுள்ளது. திருப்பலி பற்றி இச்சங்கம் மிகுந்த பொருள் ஆழத்துடன் கூறுவதாவது: "நம் மீட்பர் தமது இறுதி இரவு விருந்துப் பந்தியில் தம் உடல், இரத்தம் ஆகியவற்றாலான நற்கருணைப் பலியை ஏற்படுத்தினார்; தாம் மீண்டும் வருமளவும் எல்லாக் காலங்களிலும் தமது சிலுவைப் பலியை நிலைபெறச் செய்தார். தம் அன்பு மண மகளாம் திரு அவையிடம் தமது இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றின் நினைவுச் சின்னத்தை விட்டுச் செல்லவும் இப்பலியை ஏற்படுத்தினார்."

இவ்வாறு சங்கம் போதிப்பதைத்தான் திருப்பலியின் பாடங்கள் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன. புனித லியோவின் திருப்பலி மன்றாட்டு நூலில் உள்ள "இந்நினைவுப் பலியைக் கொண்டாடும்போதெல்லாம் நமது மீட்புப் பணி நிறைவேற்றப்படுகின்றது" என்னும் கூற்று தெளிவாகக் குறிப்பிடும் போதனை, நற்கருணை மன்றாட்டுகளில் பொருத்தமாகவும் திருத்தமாகவும் விளக்கம் பெற்றுள்ளது. எவ்வாறெனில், இம்மன்றாட்டுகளில் மீட்பின் மறைநிகழ்வை நினைவுகூரும்போது, மக்கள் அனைவரின் பெயராலும் அருள்பணியாளர் கடவுளை நோக்கி நன்றி செலுத்துகின்றார்; உயிருள்ள பலியை ஒப்புக்கொடுக்கின்றார். இப்பலியினால் கடவுள் உளம் கனியத் திருவுளமானார். மேலும், கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும் விண்ணகத் தந்தைக்கு உகந்ததும் அனைத்து உலகுக்கும் மீட்பு அளிப்பதுமான பலியாகிடுமாறு அருள்பணியாளர் மன்றாடுகின்றார்."

எனவே புதிய திருப்பலி நூலில் திரு அவையின் இறைவேண்டலின் விதிமுறை (lex orandi), நிலையான நம்பிக்கையின் விதிமுறைக்கு (lex credendi) ஏற்றவாறு அமைந்துள்ளது. இது நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால்: ஒப்புக்கொடுக்கின்ற முறையில் உள்ள வேறுபாட்டைத் தவிர, சிலுவைப் பலியும் அதனைத் திருப்பலியில் அருளடையாள முறைப்படி புதுப்பித்தலும் ஒன்றே; இதைக் கிறிஸ்து ஆண்டவர் தமது திருவிருந்தின்போது ஏற்படுத்தி, தம் நினைவாக நிறைவேற்றுமாறு திருத்தூதர்களுக்குக் கட்டளையிட்டார். எனவே புகழ்ச்சிப் பலியாகவும் நன்றிப் பலியாகவும் ஒப்புரவுப் பலியாகவும் பரிகாரப் பலியாகவும் திருப்பலி அமைந்துள்ளது.

1 திரெந்துச் சங்: அமர்வு XXII, 1562, செப். 17: DS 1738-1759,
2 திருவழிபாடு, 47; காண். திருச்சபை, 3, 28; திருப்பணியாளர்கள், 2,4,5.
3 காண். Sacramentarium Veronense, ed. L.C. Mohlberg, எண். 93.
4 காண். நற்கருணை மன்றாட்டு III.
5 காண். நற்கருணை மன்றாட்டு IV.
============== ↑ பக்கம் 17

3. மேலும் நற்கருணை வடிவங்களுக்குள் ஆண்டவர் உண்மையாகவே உடனிருக்கின்றார் என்னும் வியப்புக்கு உரிய மறைநிகழ்வை நம்பும்படி, திரெந்துச் சங்கம் எடுத்துக்கூறியதை அதே பொருளிலும் கருத்திலும் இரண்டாம் வத்திக்கான் சங்கமும்? திரு அவை ஆசிரியத்தின் மற்ற ஏடுகளும் உறுதிப்படுத்துகின்றன. அப்போதனையே திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது கிறிஸ்துவைக் கருப்பொருள் மாற்றத்தால் உடனிருக்கச் செய்யும் அதே அர்ச்சிப்பு வாய்பாட்டாலும் நற்கருணை வழிபாட்டின்போது உணர்ந்து காட்டப்படும் மாண்புயர் மரியாதைக்கு உரிய வணக்கத்தாலும் அறிக்கையிடப்படுகின்றது. இவ்வாறே பெரிய வியாழன் அன்றும் கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத்தின் பெருவிழா அன்றும் இவ்வியப்புக்கு உரிய அருளடையாளத்தைச் சிறப்பாக வணங்கி வழிபடு மாறு கிறிஸ்தவ மக்கள் தூண்டப்பெறுகின்றார்கள்.

4 கிறிஸ்துவுக்குப் பதிலாளாகப் பலி ஒப்புக்கொடுப்பதிலும் புனித மக்களின் வழிபாட்டுக் கூட்டத்தில் தலைமை வகிப்பதிலும் ஆயருக்கும் அருள்பணியாளருக்கும் உரிய பணிக் குருத்துவத்தின் இயல்பு அடங்கி இருக்கின்றது. இப்பணிக் குருத்துவம் திருப்பலிச் சடங்குமுறை அமைப்பிலேயே, அதாவது அங்கு அருள்பணியாளருக்குத் தரப்பட்டுள்ள மிகச் சிறப்பான இடம், பணி ஆகியவற்றால் விளங்குகின்றது. குருத்துவம் நிறுவப்பட்டதை நினைவுகூரும் பெரிய வியாழன் அன்று நடைபெறும் கிறிஸ்மா எண்ணெய்த் திருப்பலித் தொடக்கவுரையில் பணிக் குருத்துவத்தின் பண்புகள் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கப்படுகின்றன. மேலும் தலைமீது கைகளை வைத்து அளிக்கப்பட்ட குருத்துவ அதிகாரம் இத்தொடக்கவுரையில் விளக்கப்படுகின்றது; இந்த அதிகாரம் புதிய ஏற்பாட்டின் தலைமைக் குருவாம் கிறிஸ்துவின் அதிகாரத்தினுடைய தொடர்ச்சி ஆகும். திருப்பணிகள் ஒவ்வொன்றையும் பட்டியலிடும்போது இது விளக்கப்படுகின்றது.

5. மேலும், பணிக் குருத்துவத்தின் இயல்பினால் முக்கியமாகக் கருதப்பட வேண்டிய மற்றொன்றும் விளக்கம் பெறுகின்றது; அது நம்பிக்கையாளரின் அரச குருத்துவம்; அவர்களுடைய தூய உயிருள்ள பலி. ஆயர், அருள்பணியாளர்களின் திருப்பணி வழியாக, ஒரே இணைப்பாளரான கிறிஸ்துவின் பலியோடு ஒன்றிணைந்து நிறைவு பெறுகின்றது; ஏனெனில் நற்கருணைக் கொண்டாட்டம் என்பது உலகளாவிய திரு அவையின் செயல் ஆகும். இச்செயலில் ஒவ்வொருவரும் நம்பிக்கையாளர் கூட்டத்தில் தமக்குள்ள நிலைக்கு ஏற்பத் தமக்கு உரியதை மட்டும், ஆனால் அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இதன் விளைவாக, திருப்பலிக் கொண்டாட்டத்தில் காலப்போக்கில் அவ்வப்போது கவனக் குறைவுக்கு உள்ளான சில கூறுகளை அதிகமாகக் கவனிக்க வேண்டியதாகிறது. ஏனெனில் இம்மக்கள் இறைவனின் மக்கள்; கிறிஸ்துவின் திரு இரத்தத்தால் மீட்கப்பட்டு, ஆண்டவரால் ஒன்று சேர்க்கப்பெற்று, அவருடைய வாக்கினால் ஊட்டம் பெறும் மக்கள்; மானிடக் குடும்பத்தின் வேண்டல்களை இறைவனிடம் எடுத்துச் செல்ல அழைக்கப்பட்ட மக்கள்; மீட்பின் மறைநிகழ்வுக்காகக் கிறிஸ்துவின் பலியை ஒப்புக்கொடுத்து, அவரில் நன்றி செலுத்தும் மக்கள்; இறுதியாக, கிறிஸ்துவின் திரு உடலிலும் திரு இரத்தத்திலும் பங்குகொள்வதால் ஒன்றாக இணைக்கப்படும் இம்மக்கள் தாங்கள் தொடக்கம் முதலே புனிதர்களாய் இருந்தாலும் நற்கருணைக் கொண்டாட்டத்தில் அறிவால் உணர்ந்து செயல்முறையிலும் பயனுள்ள விதத்திலும் பங்கெடுப்பதால் இன்னும் புனிதத்தில் தொடர்ந்து வளர்ச்சியுறுகின்றார்கள்.10 தொடர்ந்துவரும் மரபு அறிக்கையிடப்படுகின்றது

6. இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருப்பலி அமைப்புமுறையைத் திருத்தி அமைப்பதற்கான விதிகளைத் தொகுத்தபொழுது, திரெந்துச் சங்கத் திருப்பலி நூலை 1570-ஆம் ஆண்டு 200 primum என்ற திருத்தூது அமைப்பு விதிமுறைகளை

6 காண். திரெந்துச் சங்: அமர்வு XIII, 1551, அக். 11: DS 1635-1661.
7 திருவழிபாடு, 7, 47; திருப்பணியாளர்கள், 5, 18.
8. காண். 12-ஆம் பயஸ்: Humani generis: A.A.S. 42 (1950) பக். 570-571; ஆறாம் பால்: Mysterium Fidel: A.A.S. 57 (1965) பக். 762-769; சிறப்பான நம்பிக்கை அறிக்கை , 30-6-1968, எண் 24-26; A.A.S. 60 (1968) பக். 442443; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25-5-1967, எண் 3f. 9: A.A.S. 59 (1967) பக். 543, 547.
9 காண். திருப்பணியாளர்கள், 2. 10 காண். திருவழிபாடு, 11.
============== ↑ பக்கம் 18

வெளியிட்டபோது திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ் கூறிய "புனிதத் தந்தையரின் பண்டைய விதியைப் பின்பற்றி"11 என்ற அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி, திருப்பலியின் ஒரு சில சடங்குமுறைகள் அதன்படி மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்று பணித்துள்ளது. இவ்வாறு அதே சொற்களைப் பயன்படுத்தியதிலிருந்து, நான்கு நூற்றாண்டுகள் இடைவெளி இருந்தபோதிலும் இவ்விரண்டு திருப்பலி நூல்களும் ஒரே மரபைக் கொண்டுள்ளன என்பது தெளிவாகின்றது. இத்தகைய மரபின் உள்கூறுகளை மதிப்பீடு செய்தால், முன்னையதைப் பின்னைய உரோமைத் திருப்பலி நூல் சிறப்பாகவும் பயனுள்ள விதத்திலும் நிறைவு செய்கின்றது.

7. திரெந்துச் சங்கக் காலம் மிக இக்கட்டான காலம். திருப்பலியின் பலித்தன்மை, பணிக் குருத்துவம், நற்கருணை வடிவங்களுக்குள் கிறிஸ்துவின் உண்மையான, நீடித்த உடனிருப்பு ஆகியவை பற்றிய ஐயப்பாடுகள் எழுந்த காலம். அச்சமயம் காரணம் இன்றித் தாக்கப்பட்ட மரபைக் காப்பாற்றுவதே புனித ஐந்தாம் பயஸின் முதல் நோக்கமாய் இருந்தது; எனவே, திருச்சடங்குகளில் சிறிய மாற்றங்களே இருந்தன. திருத்தந்தை மூன்றாம் இன்னோசென்ட் காலத்துத் திருப்பலி நூலின் உண்மையான மறு பதிப்பாக 1474-ஆம் ஆண்டு வெளிவந்த முதலாவது திருப்பலி நூலின் மாதிரிப் படிவத்திலிருந்து 1570-ஆம் ஆண்டு வெளிவந்த திருப்பலி நூல் சிறிதளவே வேறுபட்டது. மேலும் வத்திக்கான் நூலகத்தில் உள்ள கையெழுத்துப்படிகளில் ஒரு சில சொல் திருத்தங்கள் இருந்தபோதிலும் முன்னைய, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் எழுதியவை ஆராயப்பட்டபோது, இடைக்காலத்துத் திருவழிபாட்டு விளக்கவுரைகளை மட்டும் எடுத்துக்கொள்ள அவை இடம் அளித்தன.

8. மாறாக, புனித ஐந்தாம் பயஸின் திருப்பலி நூலைத் திருத்தியமைத்தவர்கள் பின் பற்றிய "புனிதத் தந்தையரின் விதி" எண்ணற்ற அறிஞர்களின் நூல்களால் வளமாக்கப்பெற்றுள்ளது. ஏனெனில் கிரகோரியின் திருப்பலி மன்றாட்டு நூல் முதன்முதலாக 1571-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்குப்பின் பழைய உரோமைத் திருப்பலி மன்றாட்டு நூல்களும் அம்புரோசின் திருப்பலி மன்றாட்டு நூல்களும் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அவ்வாறே ஸ்பானிய, கல்லிக்கன் திருவழிபாட்டுப் பழஞ்சுவடிகள் வெளிவந்தன. இவை அதுவரை அறியப்படாத ஆன்ம வள மிக்க இறைவேண்டல்களைக் கொண்டிருந்தன.

அதுபோல மேலை, கீழை வழிபாட்டு முறைகள் என்று பிரிவதற்கு முன்னைய திருவழிபாட்டு ஏடுகள் மிகுதியாகக் கண்டு பிடிக்கப்பட்டதால், தொடக்கக் கால மரபுகள் இப்போது நன்றாக அறியப்படுகின்றன.

மேலும் புனிதத் தந்தையரின் போதனைகளைப் பற்றிய ஆய்வுகள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் இவை புனித இரனேயுஸ், புனித அம்புரோஸ், எருசலேம் நகர்ப் புனித சிரில், புனித ஜான் கிறிசோஸ்தோம் முதலிய கிறிஸ்தவத் தொடக்கக் காலத் தந்தையரின் போதனை ஒளியில், நற்கருணை மறைநிகழ்வு பற்றிய இறையியலைப் பரவச் செய்துள்ளன.

9. எனவே"புனிதத் தந்தையரின் விதி" அண்மைக் கால முன்னோர்கள் விட்டுச் சென்ற மரபுகளைக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவதோடு, பல்வேறு மனிதச் சமூகப் பண்பாட்டுச் சூழல்களில், சிறப்பாக எபிரேய, கிரேக்க, இலத்தீன் நிலப்பகுதிகளில் வெளிப்படுத்தப்பட்ட திரு அவையின் ஒரே நம்பிக்கையின் பல்வேறு விதங்களைக் கண்டறியவும் ஆழமாகப் புரிந்து கொள்ளவும் வலியுறுத்துகின்றது. மேற்கண்டவாறு திரு அவையில் பல்வேறு மன்றாட்டுகளும் வழிபாட்டு முறைகளும் வேறுபட்டாலும் மாறா நம்பிக்கைக் கருவூலத்தைப் பேணிக் காப்பதில் தூய ஆவியார் இறைமக்களுக்கு வியப்புக்கு உரிய பற்றுறுதியைத் தந்து உதவுகின்றார் என்பதை இந்தப் பரந்த நோக்கு நமக்கு உணர்த்துகின்றது. புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தழுவியமைத்தல்

10. எனவே புதிய திருப்பலி நூல் உரோமைத் திரு அவையின் இறைவேண்டலின் விதிமுறைக்குச் சான்று பகர்ந்து, அண்மைக் காலத்துச் சங்கங்களால் வழங்கப்பட்ட நம்பிக்கைக் கருவூலத்தைப் பேணிக் காக்கின்றது. மேலும் அது திருவழிபாட்டு மரபில் சிறந்த ஒரு வளர்ச்சியைக் குறித்துக் காட்டுகின்றது.

11 மேற்படி, 50.
============== ↑ பக்கம் 19

ஏனெனில் இரண்டாம் வத்திக்கான் சங்கத் தந்தையர் திரெந்துச் சங்கம் கோட்பாடுகளையே வலியுறுத்தினாலும் அவற்றை உலக வரலாற்றின் வேறுபட்ட காலம் சூழலில் கூறியுள்ளார்கள். இதனால் நானூறு ஆண்டுகளுக்குமுன் எண்ணிப் பார்க்க முடியாத அருள்பணி சார்ந்த குறிக்கோளையும் அறிவுரைகளையும் அவர்கள் தர முடிந்தது.

11. திருப்பலிக் கொண்டாட்டத்தில் பொதிந்துள்ள மிகப் பெரும் மறைக்கல்வியின் பயனை அந்நாளிலே திரெந்துச் சங்கம் அறிந்திருந்தது. ஆயினும் அதன் அனைத்து விளைவுகளையும் வாழ்வுக்குப் பயனுள்ள முறையில் தொகுத்துத் தர அச்சங்கத்தால் இயலவில்லை. உண்மையில், பலர் அக்காலத்தில் திருப்பலியைக் கொண்டாடுவதில் தாய்மொழியைப் பயன்படுத்த அனுமதி வேண்டினர். வழிவழியாக வந்துள்ள திரு அவையின் கோட்பாட்டை அழுத்தம் திருத்தமாக மீண்டும் போதிப்பது தன் கடமை என்று கருதிய திரெந்துச் சங்கம் அக்காலக் கட்டத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அந்த வேண்டுகோளுக்கு பின்வரும் பதிலைத் தந்தது. நற்கருணைப் பலி எல்லாவற்றுக்கும் மேலாகக் கிறிஸ்துவின் செயலாய் இருப்பதால் அதில் நம்பிக்கையாளர் பங்கெடுக்கும் முறையால் அதன் பயன் பாதிக்கப்படுவதில்லை என்ற கோட்பாட்டை நிலைநிறுத்த அச்சங்கம் உறுதியாகவும் தெளிவாகவும் பின்வருமாறு வரையறுத்தது: "திருப்பலி மக்களுக்குப் பெரும் படிப்பினையைத் தந்தாலும் திருப்பலியை மக்களின் தாய்மொழியில் ஒழுங்குமுறை இன்றிக் கொண்டாடுவது சங்கத் தந்தையருக்கு ஏற்புடையதாய் இல்லை."12 "உரோமை வழிபாட்டு முறைப்படி நற்கருணை மன்றாட்டின் ஒரு பகுதியையோ அர்ச்சிப்பு வாய்பாட்டையோ அமைந்த குரலில் சொல்ல வேண்டும் என்றும் திருப்பலி தாய்மொழியில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்றும் கருதுபவர்கள் கண்டனத்துக்கு உரியவர்கள்" என்று இச்சங்கம் அறிக்கையிட்டது.13 எனினும், திருப்பலியில் மக்களின் தாய்மொழியைப் பயன்படுத்துவதைத் தடுத்தாலும் மறுபுறம் ஆன்ம மேய்ப்பர்கள் தகுந்த மறைக்கல்வி அளிக்கச் சங்கம் பணித்தது: "கிறிஸ்துவின் மந்தை பசியால் வாடாதபடி மேய்ப்பர்களும் ஆன்ம நலம் பேணும் அனைவரும் அடிக்கடி, சிறப்பாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருநாள்களிலும் திருப்பலியின்போது வாசிக்கப்படும் வாசகங்கள் பற்றியும் திருப்பலியின் சடங்குகளுள் ஏதாவது ஒரு மறைநிகழ்வைப் பற்றியும் தாங்களோ பிறரைக் கொண்டோ விளக்கம் தர வேண்டும்" என்று புனிதச் சங்கம் கட்டளையிடுகின்றது.14

12. திருத்தூதுப் பணியின் தேவைகளுக்கு ஏற்ப இக்காலத்தில் திரு அவையைத் தழுவியமைக்குமாறு கூட்டப்பெற்ற இரண்டாம் வத்திக்கான் சங்கம் திரெந்துச் சங்கம் செய்தது போல, திருவழிபாட்டின் கற்பிக்கும் தன்மையையும் அருள்பணித் தன்மையையும் ஆழ்ந்து சிந்தித்தது.15 இலத்தீன் மொழியில் நடைபெற்று வரும் திருச்சடங்கு, முறையானதும் பயனுடையதும் ஆனது என்பதைக் கத்தோலிக்கர் எவரும் மறுப்பதற்கு இல்லை; எனினும் "அந்தந்த இடத்து மொழிகளைக் கையாளுதல் மக்களுக்குப் பொதுவாகப் பெரும் பயன் தரக்கூடும்" என்பதால் அவற்றைப் பயன்படுத்த இரண்டாம் வத்திக்கான் சங்கம் அதிகாரம் அளித்தது.16 இதை ஏற்றுக் கொண்ட இடங்களில் விளங்கிய ஆர்வத்தின் விளைவாக, மக்கள் பங்கெடுக்கும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் அனைத்தும், ஆயர்களும் திரு அவையின் தலைமைப் பீடமும் வழிகாட்ட, அந்தந்த இடத்து மக்களின் மொழியிலேயே நடைபெற வகை செய்யப்பட்டது. இவ்வாறு, தாங்கள் கொண்டாடும் மறைநிகழ்வை மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

13. திருவழிபாட்டில் அடங்கியுள்ள மறைபொருள் பற்றிய மறைக்கல்வியைத் தெளிவாக எடுத்துரைக்கத் தாய்மொழி மிக இன்றியமையாத கருவி ஆகும். திரெந்துச் சங்கம் தந்த, ஆனால் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படாத, ஒருசில விதிகளை நடைமுறைப் படுத்து மாறு இரண்டாம் வத்திக்கான் சங்கம் கட்டளையிட்டது. இதன்படி ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருநாள்களிலும் மறையுரை வழங்கப்பட வேண்டும்;'' திருச்சடங்குகளிடையே சில விளக்கவுரைகள் வழங்க அனுமதி உண்டு.18

12 திரெந்துச் சங்: அமர்வு XXII, Cap. 8: DS 1749.
13 மேற்படி, Cap. 9: DS 1759.
14 மேற்படி, Cap. 8: _DS 1749,
15 காண். திருவழிபாடு, 33.
16 மேற்படி, 36.
17 மேற்படி, 5 2.
18 மேற்படி, 35, 3.
============== ↑ பக்கம் 20

எல்லாவற்றுக்கும் மேலாக, "அருள்பணியாளர் நற்கருணை அருந்தியபின் நம்பிக்கையாளரும் அதே பந்தியிலிருந்து ஆண்டவரின் திரு உடலை உண்டு திருப்பலியில் மழுமையாகப் பங்குபெறுவதைத் 19 தூண்டுகின்றது இரண்டாம் வத்திக்கான் சங்கம். "தாங்கள் கலந்துகொள்ளும் ஒவ்வொரு திருப்பலியிலும் நம்பிக்கையாளர் நற்கருணை அருந்த விரும்புவதோடு மட்டுமல்லாமல், அருளடையாள முறையிலும் அதை அருந்துவார்களாக " என்று உரைத்த திரெந்துத் தந்தையரின் விருப்பத்தையும் இவ்வாறு வத்திக்கான் சங்கம் நடைமுறைப்படுத்தி மக்கள் நற்கருணைப் பந்தியில் நிறைவாகப் பங்கெடுக்க வகை செய்துள்ளது.

14 அதே மனப்பான்மையாலும் மந்தையைப் பேணும் அக்கறையாலும் உந்தப்பட்டு ரெண்டாம் வத்திக்கான் சங்கம் இரு வடிவங்களில் நற்கருணை உட்கொள்ளுதல் பற்றிய திரெந்துச் சங்கப் படிப்பினையைப் புதிய கண்ணோட்டத்துடன் ஆய்ந்தது. அப்ப வடிவில் மட்டும் நற்கருணை உட்கொள்ளும்போது நற்கருணை உட்கொள்வதன் முழுப் பயனும் உள்ளது என்னும் படிப்பினையைப்பற்றி இன்று ஐயமில்லை என்பதால், இரண்டாம் வத்திக்கான் சங்கம் அவ்வப்போது இரு வடிவங்களிலும் நற்கருணை உட்கொள்வதை அனுமதிக்கின்றது. ஏனெனில் இரு வடிவங்களிலும் நற்கருணை உட்கொள்வது நம்பிக்கையாளர் அருளடையாள அமைப்பையும் தாங்கள் பங்குகொள்ளும் மறைநிகழ்வையும் இன்னும் ஆழ்ந்து புரிந்துகொள்வதற்கான சிறந்த வாய்ப்பினை அளிக்கின்றது. 1

15. இவ்வாறு திரு அவை "பழையவற்றை" - அதாவது, மரபுக் கருவூலத்தைப் பேணிக் காக்கும் தன் கடமையில் பற்றுறுதியாய் நிலைத்திருக்கும் அதே வேளையில், "புதியவற்றையும்" சீர்தூக்கிப் பார்த்து அவற்றை விவேகத்துடன் நிறைவேற்றுகின்றது (காண். மத் 13:52).

புதிய திருப்பலி நூலின் ஒரு பகுதி இக்காலத் தேவைகளுக்கெனத் திரு அவையின் இறைவேண்டல்களை மேலும் தெளிவாக ஒழுங்குபடுத்துகின்றது; இப்பகுதியின் மிகச் சிறப்பான கூறுகள் திருச்சடங்குகளுக்கான திருப்பலிகளும் பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகளும் ஆகும். இத்திருப்பலிகளில் மரபும் புது முறைகளும் தமக்குள் பொருத்தமாக இணைந்துள்ளன. எனவே திரு அவையின் பழங்கால மரபுகளிலிருந்து வந்துள்ள சொல் வழக்குகள் உரோமைத் திருப்பலி நூலில் காணப்படுவது போல மாற்றம் இன்றி நீடிக்கின்றன; பல மன்றாட்டுகள் இக்காலத் தேவைகளையும் சூழ்நிலைகளையும் தழுவி அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, திரு அவை, பொது நிலையினர், மனிதரின் உழைப்பைப் புனிதப்படுத்துதல், எல்லா இனத்தவரின் ஒன்றிப்பு, இக்காலத்தின் தனிப்பட்ட தேவைகள் ஆகியவற்றுக்கு உரிய மன்றாட்டுகள் இடம் பெற்றுள்ளன. சங்கத்தின் அண்மைக் கால ஏடுகளில் உள்ள சிந்தனைகள், சொல்முறைகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மன்றாட்டுகள் முழுமையாக உருவாக்கப்பட்டன.

மேலும் இன்றைய உலகின் நிலையைக் கருத்தில் கொண்டு பழைய மரபுப் பாடங்களைப் பயன்படுத்தும்போது ஒரு சில வாக்கியங்களை மாற்றியமைப்பதால் மதிப்புக்கு உரிய நம்பிக்கைக் கருவூலத்துக்கு எவ்வித ஊறும் நேராது எனத் தோன்றியது. இப்பாடங்கள் இன்றைய இறையியல் சொல்லாட்சிக்கும் திரு அவை ஒழுங்குமுறையின் இன்றைய சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்கும். ஆகவே இவ்வுலக நலன்களின் மதிப்பையும் பயனையும் குறிக்கும் சில மொழிநடைகள் மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறே திரு அவையில் முற்காலங்களுக்கு ஏற்றவையாய் இருந்த சில வெளித் தவ முயற்சிகளைக் குறிக்கும் மொழிநடைகளும் மாற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு திரெந்துச் சங்கம் தந்த திருவழிபாட்டு விதிகளை இரண்டாம் வத்திக்கான் சங்க விதிகள் பெரும்பாலும் முழுமையாக்கி நிறைவு செய்துள்ளன. இங்ஙனம் இறைமக்களைத் திருவழிபாட்டுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு வர, கடந்த நான்கு நூற்றாண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலத்தில் புனித பத்தாம் பயசும் அவரின் வழித்தோன்றல்களும் வழிபாடு சார்ந்தவற்றில் மேற்கொண்ட முயற்சிகளை இரண்டாம் வத்திக்கான் சங்கம் செயல்படுத்தியுள்ளது.

19 மேற்படி, 55.
20 திரெந்துச் சங். XXII Cap. 6: DS 1747.
21 காண். திருவழிபாடு, 55.
============== ↑ பக்கம் 21

================================

இயல் 1

நற்கருணைக் கொண்டாட்டத்தின் முதன்மையும் மாண்பும்

16. திருப்பலிக் கொண்டாட்டம் கிறிஸ்துவும் திரு ஆட்சிமுறைப்படி அமைந்த இறைமக்களம் சேர்ந்து ஆற்றும் செயல் ஆகும். எனவே அது அனைத்துலகத் திரு அவையினுடையவும் தலக் திரு அவையினுடையவும் நம்பிக்கையாளர் ஒவ்வொருவருடையவும் முழுமையான கிறிஸ்தவ வாழ்வின் மையம் ஆகும்.22 ஏனெனில் திருப்பலிக் கொண்டாட்டத்தில்தான் கடவுள் கிறிஸ்துவில் உலகைப் புனிதப்படுத்தும் செயலின் சிகரம் அமைந்துள்ளது; இதில்தான் மக்கள் கிறிஸ்து வழியாகத் தூய ஆவியாரில் தந்தைக்குச் செலுத்தும் வழிபாடு வெளிப்படுகின்றது.23 மேலும் இதில் மீட்பின் மறைநிகழ்வு ஆண்டின் கால வட்டத்தில் நினைவுகூரப்பட்டு, ஒரு வகையில் உடனிருக்கச் செய்யப்படுகின்றது.24 எல்லாப் புனிதச் செயல்களும் கிறிஸ்தவ வாழ்வின் எல்லாச் செயல்பாடுகளும் திருப்பலியோடு இணைந்து, அதிலிருந்து தொடங்கி, அதை நோக்கியே நாடி நிற்கின்றன.25

17. எனவே திருப்பலி, அதாவது ஆண்டவரின் இரவு விருந்துக் கொண்டாட்டம் முறைப்படுத்தப்படுவதால், திருப்பணியாளர்களும் நம்பிக்கையாளரும் தத்தம் நிலைகளுக்கு ஏற்பத் திருப்பலியில் பங்கேற்று, அதன் பயன்களை நிறைவாகப் பெறுவது மிக இன்றியமையாதது;26 இவற்றை அடைவதற்காக ஆண்டவராகிய கிறிஸ்து தம் உடலாலும் இரத்தத்தாலுமான நற்கருணைப் பலியை நிறுவி, அதைத் தம் பாடுகள், உயிர்ப்பு ஆகியவற்றின் நினைவுச் சின்னமாகத் தம் அன்பு மணமகளாம் திரு அவையிடம் ஒப்படைத்தார்.27

18. இந்நோக்கம் நிறைவேற ஒவ்வொரு திருவழிபாட்டுக் குழுமத்தின் தன்மைக்கும் இதரச் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு திருப்பலிக் கொண்டாட்டம் அமைய வேண்டும்; இதன் பயனாக, நம்பிக்கையாளர் பொருள் உணர்ந்தும் செயல்முறையிலும் முழுமையாகவும் பங்குகொள்வதற்குத் தூண்டப்பட வேண்டும். அதாவது அவர்கள் ஆர்வமிக்க நம்பிக்கையுடனும் எதிர்நோக்குடனும் அன்புடனும் உள்ளத்தாலும் உடலாலும் செயல்முறையிலும் முழுமையாகவும் இக்கொண்டாட்டத்தில் பங்குகொள்வதைத் திரு அவை மிகவே விரும்புகின்றது; இது கொண்டாட்டத்தின் இயல்புக்கே இன்றியமையாதது. இது திருமுழுக்கினால் கிறிஸ்தவ மக்களின் உரிமையும் கடமையும் ஆகின்றது.38

19. நம்பிக்கையாளரின் உடனிருப்பும் செயல்முறைப் பங்கேற்பும் கொண்டாட்டத்தின் திரு அவைப் பண்பைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன;39 இத்தகைய பங்கேற்பு இயலாதபோதும் திருப்பலிக் கொண்டாட்டம் எப்போதும் தன் ஆற்றலையும் மாண்பையும் கொண்டுள்ளது; ஏனெனில் அது கிறிஸ்துவினுடையவும் திரு அவையினுடையவும் செயல் ஆகும்; இக்கொண்டாட்டத்தில் அருள்பணியாளர் தமது முக்கிய கடமையை நிறைவேற்றி, மக்களின் மீட்புக்காக எப்பொழுதும் செயல்படுகின்றார்.

எனவே கூடுமானவரை ஒவ்வொரு நாளும் திருப்பலி நிறைவேற்ற வேண்டும் என அருள்பணியாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றது.30

20. எல்லாத் திருவழிபாட்டு நிகழ்ச்சிகளைப் போலவே திருப்பலிக் கொண்டாட்டமும் புலப்படும் அடையாளங்களால் நிகழ்த்தப்படுகின்றது; இதனால் நம்பிக்கை பேணி வளர்க்கப்படுகின்றது, உறுதிப்படுத்தப்படுகின்றது, வெளிப்படுத்தப்படுகின்றது.31 எனவே

22 காண். திருவழிபாடு, 41; திருச்சபை, 11; திருப்பணியாளர்கள், 2, 5, 6; ஆயர்கள், 30; கிறிஸ்தவ ஒன்றிப்பு, 15; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25-5-1967: எண், 38, 6: A.A.S. 59 (1967) பக். 542, 544-545.
23 காண். திருவழிபாடு, 10.
24 காண். மேற்படி, 10 2.
25 காண். திருவழிபாடு, 10; திருப்பணியாளர்கள், 5,
26 காண். திருவழிபாடு, 14, 19, 26, 28, 30.
27 காண். மேற்படி, 47.
28 காண். மேற்படி, 14.
29 காண். மேற்படி, 41
30 காண். திருப்பணியாளர்கள், 13; திருச்சபைச் சட்டத் தொகுப்பு (இனி திச), 904.
============== ↑ பக்கம் 22


திருப்பலியில் பங்குகொள்ளும் மக்களுடையவும் இடத்தினுடையவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, திரு அவையால் தரப்பட்டுள்ள அமைப்புகளையும் கூறுகளையும் தேர்ந்துகொள்ளக் கவனம் செலுத்த வேண்டும். இவை செயல்முறையான, முழுமையான பங்கேற்பை வளர்க்கட்டும்; இவை நம்பிக்கையாளரின் ஆன்ம பயனுக்கு ஏற்றவை ஆகும்.

21 ஆகவே நற்கருணைக் கொண்டாட்டத்தைத் தக்கவாறு முறைப்படுத்தும் பொது விதிகளை வகுப்பதும் அதன் கொண்டாட்டச் சடங்குமுறைகளை விளக்கிக் கூறுவதும் இப்பொதுப் படிப்பினையின் நோக்கம் ஆகும்".32

22. திருப்பலிக் கொண்டாட்டம் தலத் திரு அவையில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.

ஏனெனில் கடவுளின் மறைபொருள்களுக்கு முதன்மையான கடமை உடையவர் மறைமாவட்ட ஆயர்; அவரது பொறுப்பில் தலத் திரு அவை ஒப்படைக்கப்பட்டுள்ளது; அவர் அனைத்துத் திருவழிபாட்டு வாழ்க்கை முறைக்கும் நெறியாளரும் ஊக்குவிப்பவரும் கண்காணிப்பாளரும் ஆவார்.'' ஆயர் தலைமை ஏற்று நடத்தும் கொண்டாட்டங்களில், குறிப்பாக அருள்பணியாளர்களும் திருத்தொண்டர்களும் மக்களும் பங்கேற்கும் திருப்பலிக் கொண்டாட்டத்தில் திரு அவையின் மறைபொருள் வெளிப்படுகின்றது. இதனால் இத்தகைய சிறப்புத் திருப்பலிக் கொண்டாட்டங்கள் மறைமாவட்டம் முழுவதற்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

திருவழிபாட்டின் சடங்கு முறைகள், பாடங்கள் இவற்றின் உண்மைப் பொருளை உணர்ந்து அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், பொது நிலையினர் ஆகியோர் திருப்பலிக் கொண்டாட்டத்தில் செயல்முறையிலும் பயனுள்ள வகையிலும் பங்கேற்க ஆயர் வழிவகுக்க வேண்டும். இந்நோக்குடன் இக்கொண்டாட்டங்களின் மதிப்பு உயரும் வண்ணம் ஆயர் கவனமுடன் செயல்பட வேண்டும்; புனித இடம், இசை, கலை ஆகியவற்றின் அழகு இக்கொண்டாட்டத்தின் மாண்பை உயர்த்தப் பெருமளவு பங்களிக்க வேண்டும்.

23. மேலும் இக்கொண்டாட்டம் திருவழிபாட்டின் விதிமுறைகளுக்கும் உட்பொருளுக்கும் ஏற்ப அமையவும் அருள்பணி நலன் பெருகவும் இப்பொதுப் படிப்பினையிலும் திருப்பலியின் சடங்குமுறையிலும் ஒரு சில விரும்பத்தக்க மாற்றங்களும் தழுவியமைத்தலும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.

24 இத்தகைய தழுவியமைத்தல் ஒரு சில சடங்கு முறைகளையும் பாடங்களையும் தெரிவு செய்து கொள்வதில் அடங்கும். அதாவது பங்கேற்கும் மக்களின் தேவைகள், தயாரிப்பு, இயல்பான பண்புகள் ஆகியவற்றுக்கு ஏற்றபடி பாடல்கள், வாசகங்கள், மன்றாட்டுகள், அறிவுரைகள், சைகைகள் அமையட்டும்; இவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பு திருச்சடங்குகளை நிறைவேற்றும் அருள்பணியாளருக்குத் தரப்பட்டுள்ளது. எனினும் அருள்பணியாளர் திருவழிபாட்டின் ஊழியர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் திருப்பலி நிறைவேற்றும்போது தன்னிச்சையாக எதையும் சேர்க்கவோ நீக்கவோ மாற்றவோ அனுமதி இல்லை .34

25. மேலும் திருவழிபாட்டுக் கொள்கை விளக்கத்துக்கு ஏற்பத் திருப்பலி நூலில் உரிய இடத்தில் ஒரு சில தழுவியமைத்தல்களைச் செய்து கொள்ள மறைமாவட்ட ஆயருக்கோ ஆயர் பேரவைக்கோ அதிகாரம் உண்டு 35 (காண். கீழே எண். 387, 388-393).

26. மக்களின் மரபுக்கும் பண்பாட்டுக்கும் நிலப்பகுதிகளுக்கும் ஏற்பச் செய்யப்படும் மாற்றங்களும் தழுவியமைத்தல்களும் "திருவழிபாடு" எனும் கொள்கை விளக்கம் எண் 40-இன்படி அமைய வேண்டும். மக்களின் தேவைகளையும் நலனையும் கருத்தில் கொண்டு "உரோமைத் திருவழிபாடும் பண்பாட்டு மயமாக்கலும்" என்ற ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி அவை செயல்படுத்தப்பட வேண்டும்36 (கீழே எண். 395-399).

31 காண். திருவழிபாடு, 59.
32 தனிக் குழுக்களுக்கான திருப்பலி: திருவழிபாட்டுத் திருப்பேராயம், Actio pastoralis. 15-5-1969: A.A.S. 61 (1969) பக். 806-811; சிறுவரோடு திருப்பலி: 1-11-1973: A.A.S. 66 (1974) பக். 30-46; திருப்பலியோடு திருப்புகழ்மாலையை இணைப்பது : திருப்புகழ்மாலை, பொதுப் படிப்பினை, 1971 பதிப்பு, எண். 93-98; உரோமைத் திருச்சடங்கு, ஆசியுரைகளும் புனிதப்படுத்தலும் - முன்னுரை, 1984, எண் 28; புனித கன்னி மரியாவின் திரு உருவத்துக்கு முடிசூட்டும் அமைப்புமுறை, 1981, எண். 10, 14.
33 காண். ஆயர்கள், 15; காண். திருவழிபாடு, 41.
34 காண். திருவழிபாடு, 22
35 காண். மேற்படி, 38, 40
36 திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம், Varietates legitimae, 25.01.1994: A.A.S. 87 (1995) பக். 288-314.
============== ↑ பக்கம் 23

==============================

இயல் 2

திருப்பலியின் அமைப்பும் அதன் கூறுகளும் பகுதிகளும்

1. திருப்பலியின் பொது அமைப்பு

27. ஆண்டவரின் இரவு விருந்தாகிய திருப்பலியில் கிறிஸ்துவின் பதிலாளாக அருள்பணியாளர் தலைமை வகிக்க, ஆண்டவரின் நினைவாகிய நற்கருணைப் பலியைக் கொண்டாடுவதற்காக இறைமக்கள் ஒன்றுசேர அழைக்கப்படுகின்றார்கள்.37 ஆகவே புனிதத் திரு அவை இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடுவது "இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்" (மத் 18:20) என்ற கிறிஸ்துவின் வாக்குறுதிக்குப் பொருத்தமாக உள்ளது; ஏனெனில் சிலுவைப் பலியை நிலைத்திருக்கச் செய்யும் திருப்பலிக் கொண்டாட்டத்தில், 38 கிறிஸ்து தம் பெயரால் ஒன்றுசேர்க்கப்பட்ட திருக்கூட்டத்திலும் திருப்பணியாளரிடத்திலும் தம் அருள்வாக்கிலும் இறுதியாகப் பொருள் தன்மையில், இடையறாது நற்கருணை வடிவங்களிலும் உண்மையாகவே உடனிருக்கின்றார்.39

28. திருப்பலி இறைவாக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகிய இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் ஒரே வழிபாட்டுச் செயலின் கூறுகளாகத் தம்முள் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன;40 ஏனெனில் இறைவாக்காலும் கிறிஸ்துவின் உடலாலு மான திருப்பலித் திருப்பந்தியிலிருந்து நம்பிக்கையாளர் படிப்பினையும் ஊட்டமும் பெறுகின்றனர்.41 சில சடங்குகள் திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தொடக்கமாகவும் முடிவாகவும் அமைந்துள்ளன.

II. திருப்பலியின் பல்வேறு கூறுகள் இறைவார்த்தை வாசகமும் அதன் விளக்கமும்

29. திரு அவையில் வாசிக்கப்படும் திருமறைநூல் வழியாகக் கடவுளே தம் மக்களோடு பேசுகின்றார். கிறிஸ்துவும் தமது வார்த்தையில் உடனிருந்து நற்செய்தியை அறிவிக்கின்றார்.
ஆகவே இறைவார்த்தை வாசகங்கள் திருவழிபாட்டின் கூறுகளில் மிக இன்றியமையாத இடம் வகிக்கின்றன. எனவே அவற்றை எல்லாரும் வணக்கத்துடன் கேட்க வேண்டும். திருநூல் வாசகங்கள் அந்தந்தக் காலத்து மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும்படி இருந்தாலும் வழிபாட்டுச் செயலின் ஒரு பகுதியும் இறைவார்த்தையின் உயிருள்ள விளக்கவுரையுமாகிய மறையுரை இறைவார்த்தையின் முழுமையான புரிதலையும் செயல்படுத்தும் ஆற்றலையும் வளர்க்கின்றது.42

37 காண். திருப்பணியாளர்கள், 5; திருவழிபாடு, 33.
38 காண். திரெந்துச் சங்: அமர்வு XXII, Cap, 1: DS 1740; ஆறாம் பால்: சிறப்பு நம்பிக்கை அறிக்கை , 30-06-1968, எண் 24: A.A.S. 60 (1968) பக். 442.
39 காண். திருவழிபாடு, 7; ஆறாம் பால்: Mysterium Fidei, 03-09-1965: A.A.S. 57 (1965) பக். 764; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25-05-1967, எண் 9: A.A.S. 59 (1967) பக். 547.
40 காண். திருவழிபாடு, 56; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium 25-05-1967, எண் 3: A.A.S. 59 (1967) பக். 542.
41 காண். திருவழிபாடு, 48, 51; இறைவெளிப்பாடு, 21; திருப்பணியாளர்கள், 4.
42 காண். திருவழிபாடு, 7, 33, 5 2.

============== ↑ பக்கம் 24

அருள்பணியாளருக்கு உரிய மன்றாட்டுகளும் மற்றப் பகுதிகளும்

30. அருள்பணியாளருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுள் முதலிடம் பெறுவது நற்கருணை மன்றாட்டு ஆகும். இது கொண்டாட்டம் முழுவதற்கும் சிகரமாய் விளங்குகின்றது. அடுத்துத் திருக்குழும மன்றாட்டு, காணிக்கைமீது மன்றாட்டு, திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு ஆகியவை இடம் பெறுகின்றன. கிறிஸ்துவுக்குப் பதிலாளாக மக்கள் குழுவுக்குத் தலைமை வகிக்கும் அருள்பணியாளர், புனித மக்கள் திருக்கூட்டம் முழுவதன் பெயராலும் சூழ்ந்து நிற்கும் அனைவர் பெயராலும் கடவுளை நோக்கி மேற்சொன்ன மன்றாட்டுகளை எழுப்புவார். 48 ஆகவே இவை "வழிபாட்டுத் தலைவரின் மன்றாட்டுகள்" எனப் பொருத்தமாக அழைக்கப்படுகின்றன.

31, மேலும் கூடியுள்ள திருக்கூட்டத்தின் தலைவர் எனும் முறையில், அருள்பணியாளர் சடங்குமுறையில் அடங்கியுள்ள அறிவுரைகளை எடுத்துரைப்பார். எங்கெல்லாம் சடங்கு ஒழுங்குமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளனவோ அங்கெல்லாம் மக்களுடைய புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கு ஏற்றவாறு ஓரளவு தழுவியமைக்கத் தலைவருக்கு அனுமதி உண்டு. திருப்பலி நூலில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் பொருளை என்றும் பின்பற்றிச் சுருக்கமாக அருள்பணியாளர் எடுத்துரைக்கலாம். இறைவார்த்தையைப் பறைசாற்றுவதை முறைப்படுத்துவதும் இறுதி ஆசி வழங்குவதும் தலைமை தாங்கும் அருள்பணியாளருக்கு உரியது. அன்றைய நாள் திருப்பலியின் முன்னுரையிலும் (தொடக்க வாழ்த்துரை, பாவத்துயர்ச் செயல் இவற்றுக்கு இடையில்) இறைவார்த்தை வழிபாட்டில் வாசகங்களுக்கு முன்பும், நற்கருணை மன்றாட்டின் தொடக்கவுரைக்கு முன்பும் மிகச் சுருக்கமான முன்னுரையை வழங்கலாம். ஆனால் நற்கருணை மன்றாட்டுக்கு இடையில் ஒருபோதும் அவ்வாறு செய்யக் கூடாது. பிரியாவிடைக்குமுன் முழுக் கொண்டாட்டத்துக்கும் முடிவுரை கொடுக்கலாம்.

32. இயல்பாகவே வழிபாட்டுத் தலைவருக்கு உரிய பகுதிகள் மக்கள் அனைவரையும் ஈர்க்கக்கூடிய விதத்தில் தெளிவாகவும் உரத்தக் குரலிலும் சொல்லப்பட வேண்டியது அவசியம். மக்களும் இவற்றைக் கவனத்துடன் கேட்க வேண்டும்.44 ஆகவே அருள்பணியாளர் இவற்றை எடுத்துரைக்கும்போது வேறு எந்த மன்றாட்டுக்கும் பாடலுக்கும் இடமிருக்கக் கூடாது; ஆர்மோனியத்தையும் மற்ற இசைக் கருவிகளையும் மீட்டக் கூடாது.

33. அருள்பணியாளர் வழிபாட்டுத் தலைவர் என்னும் முறையில் திரு அவை மற்றும் கூடியுள்ள மக்கள் பெயரால் வேண்டல்களை எழுப்புவார். தம் பணியை மிகக் கவனத்தோடும் இறைப்பற்றோடும் நிறைவேற்றுமாறு சில வேளைகளில் தம் பெயரால் வேண்டுவார். இத்தகைய வேண்டல்கள் நற்செய்தி வாசிக்கும் முன்பும் காணிக்கைப் பொருள்களைத் தயார் செய்யும்பொழுதும் நற்கருணை அருந்துவதற்கு முன்னும் பின்னும் அமைந்த குரலில் சொல்லப்படும்.
திருப்பலிக் கொண்டாட்டத்தில் வரும் மற்றப் பாடங்கள்

34. திருப்பலிக் கொண்டாட்டம் இயல்பாகவே "சமூக"ப் பண்பைக் கொண்டிருப்பதால், 45 திருப்பலியில் அருள்பணியாளருக்கும் திருக்கூட்டத்துக்கும் இடையே நிகழும் உரையாடல்களும் ஆர்ப்பரிப்புகளும் மிகுந்த பொருள் செறிந்தவையாக உள்ளன.46 அவை சமூகக் கொண்டாட்டத்தின் வெளியடையாளங்கள் மட்டும் அல்ல, அருள்பணியாளருக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள ஒன்றிப்பை அவை வளர்த்துச் செயல்படுத்துகின்றன.

43 காண். மேற்படி, 33. ** காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Musicam sacram, 05-03-1967, எண் 14: A.A.S. 59 (1967) பக். 304.
* காண். திருவழிபாடு, 26-27; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25-05-1967, எண் 3d: A.A.S. 59 (1967) பக். 542.
46 காண். திருவழிபாடு, 30.
============== ↑ பக்கம் 25

35. அருள்பணியாளருடைய வாழ்த்துரைகளுக்கும் மன்றாட்டுகளுக்கும் நம்பிக்கையாளர் எழுப்பும் ஆர்ப்பரிப்புகளும் பதிலுரைகளும் அவர்களுடைய செயல்முறை ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன. இது எல்லா வகையான திருப்பலியிலும் கூடியிருக்கும் மக்களால் வெளிப்படுத்தப்பட வேண்டும். இது திருக்கூட்டம் முழுவதன் பொதுச் செயல்பாடு என்பது இதனால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது.''

36. நம்பிக்கையாளர் செயல்முறையில் பங்குகொள்வதை வெளிப்படுத்தி வளர்ப்பதற்கு மிகப் பயனுள்ள வேறு சில பகுதிகளும் உள்ளன; அவை திருக்கூட்டம் அனைத்துக்கும் உரியவை. அவற்றுள் பாவத்துயர்ச் செயல், நம்பிக்கை அறிக்கை, பொது மன்றாட்டு, ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டல் ஆகியவை சிறப்பானவை.

37. இறுதியாக மற்றப் பாடங்களில்:

அ. ஒரு சில தனித்து நிற்கும் சடங்குகளோ செயலோ ஆகும். அவை: "உன்னதங்களிலே" பதிலுரைத் திருப்பாடல், "அல்லேலூயா", நற்செய்திக்குமுன் வசனம், "தூயவர்", நினைவு ஆர்ப்பரிப்பு, திருவிருந்துப் பல்லவி ஆகியன.

ஆ. வேறு சில குறிப்பிட்டதொரு சடங்குடன் இணைந்து வருவன. அவை: வருகைப் பாடல், காணிக்கைப் பாடல், அப்பம் பிடுதலின்போது "உலகின் பாவங்களைப் போக்கும்" என்னும் பாடல், திருவிருந்துப் பாடல் ஆகியன.

பல்வேறு பாடங்களை எடுத்துரைக்கும் முறைகள்

38. அருள்பணியாளர், திருத்தொண்டர், வாசகர், மக்கள் அனைவரும் முறையே வாசகம், மன்றாட்டு, அறிவுரை, ஆர்ப்பரிப்பு உரை, பாடல் ஆகியவற்றைத் தெளிவாக உரத்தக் குரலில் சொல்லும்போது அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு தொனி அமைந்திருக்க வேண்டும். நடைபெறும் கொண்டாட்டத்தின் வகைக்கும் சிறப்புக்கும் ஏற்றவாறு இது அமைய வேண்டும். மேலும் பல்வேறு மொழிகளின் இயல்பையும் மக்களின் பண்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே கீழே தரப்படும் சடங்கு ஒழுங்குமுறைகளிலும் விதிகளிலும் காணப்படும் "சொல்லுதல்" அல்லது "அறிக்கையிடுதல்" என்னும் வார்த்தை, மேற்சொன்னவற்றின் அடிப்படையில் பாடுவதையோ உரைப்பதையோ குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

இசையின் முதன்மை

39. தங்கள் ஆண்டவரின் வருகைக்காகக் காத்திருக்கும் மக்களாக ஒன்றாய்க் கூடிவரும் நம்பிக்கையாளர் திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் சேர்ந்து பாடுமாறு தூண்டுகிறார் திருத்தூதர் (காண். கொலோ 3:16). ஏனெனில் பாடுவது இதய மகிழ்ச்சியின் அடையாளம் (காண். திப 2:46). எனவே 'பாடுவது அன்பு செய்பவரின் இயல்பு' என்று புனித அகுஸ்தின் பொருத்தமாகச் சொல்கின்றார்; மேலும் பழமொழி. 'இனிது பாடுகிறவர் இருமுறை வேண்டுகின்றார்' என்னும் வாக்கு தொன்று தொட்டு வரும்

40. ஆகவே மக்களின் பண்புக்கும் அந்தந்த வழிபாட்டுக் கூட்டத்தின் திறமைகளுக்கும் ஏற்பத் திருப்பலிக் கொண்டாட்டத்தில் பாடல்கள் இடம் பெற வேண்டும். பாட வேண்டிய எல்லாப் பகுதிகளையும் எப்பொழுதும் பாடத்தான் வேண்டும் எனும் கட்டாயம் இல்லை; (எ.கா. வாரநாள் திருப்பலி), எனினும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் நடைபெறும் திருப்பலிக் கொண்டாட்டங்களில் பாடல் குழுவும் மக்களும் பாடிப் பங்கேற்பதை நிறுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

47 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Musicum sacram, 05.03.1967, எண் 16a: A.A.S. 59 (1967) பக். "
48 புனித அகுஸ்தின் மறையுரை, 336, I: PL 38, 1472.
============== ↑ பக்கம் 26

பாடுவதற்கெனத் தேர்ந்தெடுக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்தவைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். குறிப்பாக அருள்பணியாளர், திருத்தொண்டர், வாசகர், பதிலுரைக்கும் மக்கள், அருள்பணியாளரும் மக்களும் சேர்ந்து பாடும் பகுதிகள் பாடப்பட வேண்டும்.49

41. எல்லா இசை வகைகளும் சமமாகக் கருதப்பட்டாலும் கிரகோரியின் இசை உரோமை வழிபாட்டுக்கு உரியது என்பதால் அது முதலிடம் பெறுகின்றது. திரு இசையின் ஏனைய வகைகள், சிறப்பாகப் பல்லிசை திருவழிபாட்டு நிகழ்ச்சியின் உள்ளுணர்வுக்கு இயைந்தவையாகவும் நம்பிக்கையாளர் அனைவரின் பங்கேற்பை வளர்ப்பவையாகவும் இருப்பின், அவற்றை எவ்வகையிலும் விட்டுவிடக் கூடாது.''

பல்வேறு நாடுகளிலிருந்து நம்பிக்கையாளர் ஒன்றுகூடி வருவது தற்போது அதிகமாவதால், திருப்பலியின் அமைப்புமுறையில் ஒரு சிலவற்றையாவது, குறிப்பாக, நம்பிக்கை அறிக்கை, ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டல் ஆகியவற்றையாவது அவர்கள் எளிய இசையில் இலத்தீன் மொழியில் ஒன்றுசேர்ந்து பாடத் தெரிந்திருப்பது நலம்.

சைகைகளும் உடலின் நிலைகளும்

42. அருள்பணியாளர், திருத்தொண்டர், ஏனைய பணியாளர்கள், மக்கள் ஆகியோரின் சைகைகளும் உடலின் நிலைகளும் கொண்டாட்டம் முழுவதற்கும் அழகும் மேன்மையும் எளிமையும் சேர்க்கும் வண்ணம் அமையட்டும். இதனால் கொண்டாட்டத்தின் பல்வேறு பகுதிகளின் உண்மையான, முழுமையான பொருள் தெளிவாகும்படி மக்கள் அனைவரின் பங்கேற்பும் ஊக்குவிக்கப்படும்.53 எனவே பொதுப் படிப்பினை மரபு வழி வரும் "உரோமை வழிபாட்டு முறை" வரையறுத்துள்ள படி தனிப்பட்ட விருப்பங்களையும் தன்னிச்சையான போக்கையும் தவிர்த்து, இறைமக்களின் பொதுவான ஆன்மீக நலனுக்கு உதவும் வகையில் கவனம் செலுத்த வேண்டும்.

திருவழிபாட்டில் பங்கு கொள்வோர் அனைவரும் கடைப்பிடிக்கின்ற பொதுவான உடலின் நிலை, திருவழிபாட்டுக்குக் கூடியுள்ள கிறிஸ்தவக் குழும உறுப்பினர்களின் ஒன்றிப்புக்கு அடையாளம். அது பங்கெடுப்போரின் மனதையும் உள் உணர்வுகளையும் வெளிப்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும்.

43. வருகைப் பாடலின் தொடக்கம் அல்லது அருள்பணியாளர் பீடத்தை அணுகுதல்முதல் திருக்குழும மன்றாட்டு முடியும்வரை நம்பிக்கையாளர் நிற்க வேண்டும். நற்செய்திக்குமுன் வரும் "அல்லேலூயா" பாடல், நற்செய்தி அறிவித்தல், நம்பிக்கை அறிக்கை, பொது மன்றாட்டு இவற்றின்போதும் அவர்கள் நிற்க வேண்டும். மேலும் காணிக்கைமீது மன்றாட்டுக்குமுன் சொல்லப்படும் "சகோதர சகோதரிகளே," தொடங்கிக் கீழே குறிப்பிடப்படும் பகுதிகளைத் தவிர்த்து, திருப்பலி முடியும்வரை நிற்க வேண்டும்.

நற்செய்தி வாசகத்துக்குமுன் வரும் வாசகங்களின்போதும் பதிலுரைத் திருப்பாடல், மறையுரை, காணிக்கைப் பொருள்களைத் தயார் செய்தல் ஆகிய நேரங்களிலும் மக்கள் அமர்ந்திருக்கலாம். திருவிருந்துக்குப்பின் அமைதி காக்கும்போது, சூழ்நிலைக்கு ஏற்ப அமரலாம்.

49 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Musicam Sacram, 05.03.1967, எண் 7.16:A.A.S. 59 (1967) பக். 302, 305; திருப்பலி நூல், பாடல் திருப்பலி முறை, முன்னறிய வேண்டிவை.
50 காண். திருவழிபாடு, 116, 30.
51 காண். திருவழிபாடு, 54; திருச்சடங்குத் திருப்பேராயம், Inter Decumenici, 26-09-1964, எண் 59: A.A.S. 1964) பக். 891; திருச்சடங்குத் திருப்பேராயம், Musicam Sacram, 05-03-1967, எண் 47: A.A.S. 59 (1967) பக். 314.
52 காண். திருவழிபாடு, 30, 34, 21.
============== ↑ பக்கம் 27

அர்ச்சிப்பு நேரத்தில் உடல் நலம், இட நெருக்கடி, பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை மிகுதி அல்லது வேறு தகுந்த காரணங்கள் தடையாக இருந்தால் தவிர நம்பிக்கையாளர் முழங்காலிடு வர். அர்ச்சிப்புக்குப்பின் அருள்பணியாளர் முழங்காலிடும்போது, முழங்காலிட முடியாத மக்கள் தாழ்ந்து பணிந்து வணங்க வேண்டும்.

எனினும் திருப்பலிச் சடங்குமுறையில் விவரிக்கப்பட்டுள்ள சைகைகள், உடலின் நிலைகள் இவற்றுக்கான ஒழுங்குமுறைகளை ஆயர் குழுக்கள் தங்கள் மக்களின் தனித் திறமைக்கும் ஏற்புடைய மரபுக்கும் தகுந்தாற்போல் தழுவியமைக்கலாம். அவ்வாறு தழுவியமைக்கும்போது கொண்டாட்டத்தின் பகுதி ஒவ்வொன்றின் பொருளுக்கும் பண்புக்கும் ஏற்றவாறு அவை இருக்கும்படி கவனிக்க வேண்டும். "தூயவர்" ஆர்ப்பரிப்பின் முடிவிலிருந்து நற்கருணை மன்றாட்டு முடியும்வரையிலும், மேலும் திருவிருந்துக்குமுன் அருள்பணியாளர் "இதோ, இறைவனின் செம்மறி" எனச் சொல்லும் வரையிலும் மக்கள் முழங்காலிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது போற்றுதற்கு உரியது.

ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் சைகைகளும் உடலின் நிலைகளும் ஒரே சீராக இருக்கும் பொருட்டு, திருத்தொண்டரோ பொது நிலைப் பணியாளரோ அருள்பணியாளரோ திருப்பலி நூலில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்தையும் பின்பற்ற அறிவுறுத்தும்போது, மக்கள் அவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

44 அருள்பணியாளர் திருத்தொண்டரோடும் பணியாளர்களோடும் பீடத்தை நோக்கி வருதல், திருத்தொண்டர் நற்செய்தி அறிவிக்கும் முன்னர் வாசக மேடைக்கு நற்செய்தி வாசக நூலை எடுத்து வருதல், நம்பிக்கையாளர் காணிக்கைப் பொருள்களைக் கொண்டு வருதல், திருவிருந்தை உட்கொள்ளப் பவனியாக வருதல் ஆகிய செயல்களும் பவனிகளும் சைகைகளில் அடங்கும். இத்தகைய செயல்களும் பவனிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைப்படி அவற்றுக்கு உரிய பாடலுடன் அழகுற நடைபெறுவது விரும்பத்தக்கது.

அமைதி

45, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்ட நேரத்தில் திரு அமைதி காக்கப்பட வேண்டும்.54 திரு அமைதியின் தன்மை ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் அதனைக் கடைப்பிடிக்கும் நேரத்தைப் பொறுத்தது. பாவத்துயர்ச் செயலிலும் மன்றாடுவோமாக என்னும் அழைப்புக்குப் பின்னும் ஒவ்வொருவரும் தம்மைப் பற்றிச் சிந்திப்பர். வாசகமும் மறையுரையும் முடிந்தபின் தாங்கள் கேட்டவற்றைச் சிறிது நேரம் தியானிப்பர். திருவிருந்துக்குப்பின் தம் உள்ளத்தில் இறைவனைப் புகழ்ந்து வேண்டுவர்.
கொண்டாட்டத்துக்கு முன்னரே கோவிலிலும் திருப்பொருள் அறையிலும் திருத்துகில் அணியும் அறையிலும் மற்றும் சுற்றியுள்ள இடங்களிலும் அமைதி காத்தல் போற்றுதற்கு உரியது. இவ்வாறு எல்லாரும் திரு நிகழ்ச்சிகளை இறைப்பற்றுடனும் தகுந்த முறையிலும் நிறைவேற்றத் தங்களையே தயாராக்கிக் கொள்வர்.

53 காண். திருவழிபாடு, 40; திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம்: Varietates legitimae, 25-01-1994, எண் 41: A.A.S. 87 (1995) பக். 304.
54 காண். திருவழிபாடு, 30; திருச்சடங்குத் திருப்பேராயம், Musicam sacram, 05-03-1967, எண 1'' A.A.S. 59 (1967) பக். 305.
============== ↑ பக்கம் 28

III. திருப்பலியின் பல்வேறு பகுதிகள்

அ) தொடக்கச் சடங்குகள்

6. இறைவார்த்தை வழிபாட்டுக்கு முன்வரும் சடங்குகளான, அதாவது வருகைப் பாடல், வாழ்த்துரை, பாவத்துயர்ச் செயல், "ஆண்டவரே, இரக்கமாயிரும்", "உன்னதங்களிலே", இருக்குழும மன்றாட்டு முதலியன, தொடங்குதல், முன்னுரைத்தல், தயாரித்தல் ஆகிய பண்புகளைக் கொண்டவை.

ஒன்றுகூடி வரும் நம்பிக்கையாளர் ஒரு குழுமமாகத் தங்களை உருவாக்கவும் இறைவார்த்தையை நன்முறையில் கேட்பதற்கும் நற்கருணையை மாண்புடன் கொண்டாடுவதற்கும் தங்களையே தயாரித்துக் கொள்வதே இவற்றின் நோக்கம்.

திருப்பலியோடு இணைந்திருக்கும் சில கொண்டாட்டங்களில் திருவழிபாட்டு நூல்களின் விதிமுறைகளுக்கு ஏற்றபடி தொடக்கச் சடங்குகள் விட்டு விடப்படுகின்றன அல்லது தனிப்பட்ட வகையில் நிகழ்த்தப்படுகின்றன.

வருகை

அருள்பணியாளர் திருத்தொண்டரோடும் 47. மக்கள் ஒன்றுகூடியபின் பணியாளர்களோடும் வரும்போது வருகைப் பாடல் தொடங்கப்படும். கொண்டாட்டத்தைத் தொடங்கவும் திருக்கூட்டத்தின் ஒன்றிப்பை வளர்க்கவும் வழிபாட்டுக் காலத்தின் அல்லது திருநாளின் மறையுண்மையைப் பற்றிய அவர்களுடைய சிந்தனையைத் தூண்டவும் அருள்பணியாளரும் பிற பணியாளர்களும் வரும் பவனி இணைந்திருப்பதும் இவ்வருகைப் பாடலின் நோக்கம் ஆகும்.

48. பாடகர் குழுவும் மக்களும் வருகைப் பாடலை மாறி மாறிப் பாடலாம் அல்லது பாடகர் ஒருவரும் மக்களும் அவ்வாறே பாடலாம் அல்லது அனைத்து மக்களும் அல்லது பாடகர் குழு மட்டும் பாடலாம். உரோமைப் படிக்கீத நூலில் அல்லது சாதாரணப் படிக்கீத நூலில் உள்ள பல்லவியையும் அதன் திருப்பாடலையும் வருகைப் பாடலாகப் பயன்படுத்தலாம் அல்லது குறிப்பிட்ட கொண்டாட்டத்துக்கும் நாள், காலம் ஆகியவற்றின் தன்மைக்கும் பொருத்தமான, ஆயர் குழுவின் அனுமதியைப் பெற்ற வேறு பாடலைப் பயன்படுத்தலாம்.55

வருகைப் பாடலைப் பாடவில்லை என்றால், நம்பிக்கையாளர் அல்லது அவர்களுள் ஒரு சிலர் திருப்பலி நூலில் கண்டுள்ள வருகைப் பல்லவியை வாசிப்பர் அல்லது வாசகர் வாசிப்பார்; இல்லை எனில் அருள்பணியாளரே அதைத் தொடக்க அறிவுரை போன்று தழுவியமைப்பார்.

பலிப்பீட வணக்கமும் குழுமியுள்ள மக்களுக்கு வாழ்த்தும்

49 அருள்பணியாளர், திருத்தொண்டர், பணியாளர்கள் ஆகியோர் திருப்பீட முற்றத்துக்கு வந்ததும் பீடத்துக்குத் தாழ்ந்து பணிந்து வணக்கம் செலுத்துவர்.

இவ்வணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அருள் பணியாளரும் உருத்தொண்டரும் பீடத்தை முத்தமிடுவர்; சூழ்நிலைக்கு ஏற்ப, அருள் பணியாளர் சிலுவைக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டுவார்.

55 காண். இரண்டாம் ஜான் பால், Dies Domini, 31-05-1998, 50: A.A.S. 90 (1998) பக். 745,
============== ↑ பக்கம் 29

50, வருகைப் பாடல் முடிந்ததும் அருள்பணியாளர் தமது இருக்கைமுன் நி.. திருக்கூட்டத்தினரோடு இணைந்து தம்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்வ: பின்பு அவர் ஆண்டவரின் உடனிருப்பை வாழ்த்துரை வழியாகத் திருக்கூட்டக்க உணர்த்துவார். இவ்வாறு அவர் வாழ்த்துவதிலும் அதற்கு மக்கள் பதில் அளிப்பதிலும் கூடியுள்ள திரு அவையின் மறைபொருள் வெளிப்படுகின்றது.

மக்களை வாழ்த்திய பின் அருள்பணியாளர், திருத்தொண்டர் அல்லது பொது நிலைப் பணியாளர் மிகச் சுருக்கமாக முன்னுரை வழங்கி அந்நாளின் திருப்பலிக்கு நம்பிக்கையாளரை இட்டுச் செல்லலாம்.

பாவத்துயர்ச் செயல்

51. அதன்பின் அருள்பணியாளர் பாவத்துயர்ச் செயலுக்கு அழைப்பார். சிறிது நேரம் அமைதி காத்தபின் திருக்கூட்டத்தினர் அனைவரும் சேர்ந்து பொதுப் பாவ மன்னிப்பு வாய்பாட்டைச் சொல்வர். அருள்பணியாளர் சொல்லும் பாவ மன்னிப்பு மன்றாட்டோடு இச்செயல் முடிவுறும். எனினும் இதற்கு ஒப்புரவு அருளடையாளத்தின் ஆற்றல் கிடையாது.

ஞாயிற்றுக்கிழமைகளில், குறிப்பாக பாஸ்கா காலத்தில் வழக்கமாக நடைபெறும் பாவத்துயர்ச் செயலுக்குப் பதிலாக முடிந்தவரையில் திருமுழுக்கை நினைவுபடுத்தும் விதமாகத் தண்ணீரைப் புனிதப்படுத்தித் தெளிக்கலாம். 56

ஆண்டவரே, இரக்கமாயிரும்

52. பாவத்துயர்ச் செயலிலேயே இடம் பெற்றிருந்தாலொழிய பாவத்துயர்ச் செயலுக்குப்பின் எப்பொழுதும் "ஆண்டவரே, இரக்கமாயிரும்" என்பது தொடங்கப்படும். இப்பாடல் இறைவனைப் புகழ்வதாகவும் அவருடைய இரக்கத்தை இறைஞ்சி மன்றாடுவதாகவும் இருப்பதால், இது வழக்கமாக எல்லாராலும் பாடப்படும். அந்தப் பகுதியை மக்களுடன் பாடகர் குழுவோ பாடகர் ஒருவரோ பாடலாம்.

ஆர்ப்பரிப்பு வழக்கமாக இரு முறை சொல்லப்படும்; எனினும் மொழி, இசை, சூழ்நிலை முதலியவற்றின் தன்மைக்கு ஏற்ப அதைப் பல முறை சொல்லலாம். பாவத்துயர்ச் செயலின் ஒரு பகுதியாகிய "ஆண்டவரே, இரக்கமாயிரும்" பாடப்படும்பொழுது, ஒவ்வொரு ஆர்ப்பரிப்புக்கு முன்னும் சிறு வசனத்தைச் சேர்த்துக் கொள்ளலாம். உன்னதங்களிலே

53. "உன்னதங்களிலே" எனும் பாடல் மிகப் பழமையானதும் வணக்கத்துக்கு உரியதும் ஆகும். தூய ஆவியாரால் ஒன்றுகூட்டப்பெற்ற திரு அவை இப்பாடலில் இறைத் தந்தையையும் திருச் செம்மறியையும் மாட்சிப்படுத்தி இறைஞ்சி மன்றாடுகின்றது. இந்தப் பாடலின் பாடத்துக்குப் பதிலாக வேறு எந்தப் பாடத்தையும் பயன்படுத்தக்கூடாது. இப்பாடல் அருள்பணியாளரால் தொடங்கப்படும்; பொருத்தமானால் பாடகர் ஒருவரோ பாடகர் குழுவோ தொடங்கலாம். இப்பாடலை நம்பிக்கையாளர் எல்லாரும் சேர்ந்து பாடுவர்; அல்லது மக்களும் பாடகர் குழுவும் மாறி மாறிப் பாடுவர்; அல்லது பாடகர் குழு மட்டும் பாடும். இதனைப் பாடவில்லை என்றால் அனைவரும் சேர்ந்தோ மாறிச் சொல்வர்.

திருவருகைக் காலம், தவக் காலம் தவிர்த்து ஞாயிற்றுக்கிழமைகள், பெருவிழாக்கள், சொல்லப்படும். விழாக்களிலும் இன்னும் சில சிறப்புக் கொண்டாட்டங்களிலும் இது பாடப்படும் அல்லது சொல்லப்படும்.

56 காண். பிற்சேர்க்கை , பக். 1263 - 1266.
============== ↑ பக்கம் 30

திருக்குழும மன்றாட்டு

54. அடுத்து அருள்பணியாளர் மக்களை இறைவேண்டல் செய்ய அழைப்பார். அனைவரும் அருள்பணியாளரோடு சேர்ந்து இறைவன் திருமுன் தாங்கள் இருப்பதை உணரவும் தங்கள் கருத்துகளை மனத்தில் நினைவுகூரவும் சிறிது நேரம் அமைதியாய் நெப்பர். பின் அருள்பணியாளர் மன்றாட்டைச் சொல்வார். இது வழக்கமாக "திருக்கும் மன்றாட்டு" என அழைக்கப்படுகின்றது. இதன் வழியாகக் கொண்டாட்டத்தின் பண்பு வெளிப்படுத்தப்படுகின்றது. திரு அவையின் தொன்றுதொட்டு வரும் மரபுப்படி இறைத் தந்தையை நோக்கிக் கிறிஸ்து வழியாக தூய ஆவியாரின் ஒன்றிப்பில் வழக்கமாகச் சொல்லப்படும் இம்மன்றாட்டு மூவொரு கடவுளைக் குறிப்பிடும் நீண்ட முடிவுரையைக் கொண்டிருக்கும். அவை பின்வருமாறு:

- அதாவது இம்மன்றாட்டு தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டால், "உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்" என முடிவுறும்;

- தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டாலும் முடிவில் திருமகனைக் குறிப்பிட்டிருந்தால், "உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம் என முடிவுறும்;

- திருமகனை நோக்கிச் சொல்லப்பட்டால், "தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம் என முடிவுறும்.

மக்கள் இம்மன்றாட்டோடு தங்களை ஒன்றுபடுத்தி, "ஆமென்" எனும் ஆர்ப்பரிப்பு வழியாக அதைத் தமதாக்கிக் கொள்வர்.

திருப்பலியில் எப்பொழுதும் ஒரே ஒரு "திருக்குழும மன்றாட்டு" சொல்லப்படும்.

ஆ) வார்த்தை வழிபாடு

55. வார்த்தை வழிபாட்டின் சிறப்பான பகுதி திருநூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகங்களும் அவற்றிற்கு இடையில் வரும் திருப்பாடலும் ஆகும். மறையுரை, நம்பிக்கை அறிக்கை, பொது மன்றாட்டு அல்லது நம்பிக்கையாளர் மன்றாட்டு ஆகியவை இவ்வார்த்தை வழிபாட்டை வளர்த்து, நிறைவுக்குக் கொண்டு வருகின்றன. எவ்வாறெனில் மறையுரை விளக்கும் வாசகங்களில் கடவுள் தம் மக்களுடன் பேசுகின்றார்;58 அவர்களுக்கு மீட்பு-ஈடேற்றம் பற்றிய மறைபொருள் நிகழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆன்ம ஊட்டம் அளிக்கின்றார்; கிறிஸ்து தம் வாக்கினால் நம்பிக்கையாளர் நடுவில் உடனிருக்கின்றார்.59 இந்த இறைவார்த்தையை மக்கள் தம் அமைதியினாலும் பாடல்களாலும் தமதாக்கிக் கொள்கின்றார்கள்; நம்பிக்கை அறிக்கை வழியாக அதை ஏற்றுக்கொள்கின்றார்கள். இவ்வாறு வளம் பெற்று, பொது மன்றாட்டு வழியாகத் திரு அவை முழுவதன் தேவைகளுக்காகவும் அனைத்துலகின் மீட்புக்காகவும் மன்றாடுகின்றார்கள்.

57 காண். தெர்த்தூலியன், Adversus Marcionem, IV, 9: CCSL 1, பக். 560; ஒரிஜன், Disputatio cum Heracleida, 1 67, பக். 62; Statuta Concili Hipponensis Breviata, 21: CCSL 149, பக். 39.
58 காண். திருவழிபாடு, 33. 59 காண். மேற்படி, 7.
============== ↑ பக்கம் 31

அமைதி

56. தியானத்தை ஊக்குவிக்கும் வண்ணம் வார்த்தை வழிபாடு கொண்டாடப்பு, வேண்டும். ஆகவே எவ்விதத்திலும் விரைவாகச் செயல்படுதல் தியானத்துக்குத் தடையால், இருந்தால் அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒன்றுகூட்டப்பட்ட மக்களுக்கு ஏற்றவாறும் தூய ஆவியாரால் தூண்டப்பெற்று இறைவார்த்தையை மனதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் மன்றாட்டின் வழியாகப் பதிலை அளிக்கக் தயாராகும்படியாகவும் சிறிது நேரம் அமைதி காப்பது நன்று. வார்த்தை வழிபாடு தொடங்கும்முன், முதலாம் இரண்டாம் வாசகங்களுக்குப்பின், மறையுரைக்குப்பின் ஆகிய நேரங்களில் அமைதி காப்பது பொருத்தமானது.60

விவிலிய வாசகங்கள்

57. வாசகங்கள் வாயிலாக நம்பிக்கையாளருக்கு இறைவாக்கு விருந்து படைக்கப்படுகின்றது. விவிலியத்தின் கருவூலங்கள் அவர்களுக்குத் திறக்கப்படு கின்றன.61 விவிலிய வாசகங்களில் உள்ள அமைப்பு முறையைப் பின்பற்றுவது பெரிதும் விரும்பத்தக்கது. ஏனெனில் அது இரு ஏற்பாடுகளின் ஒன்றிணைப்பையும் மீட்பின் வரலாற்றையும் தெளிவுபடுத்துகின்றது. வாசகங்களும் பதிலுரைத் திருப்பாடலும் இறைவார்த்தையைக் கொண்டிருப்பதால், அவற்றுக்குப் பதிலாக விவிலியம் அல்லாத வேறு பாடங்களைப் பயன்படுத்தலாகாது.62

58. மக்களோடு கொண்டாடப்படும் திருப்பலியில் வாசகங்களை எப்பொழுதும் வாசக மேடையிலிருந்து வாசிக்க வேண்டும்.

59. மரபுப்படி வாசகங்களை அறிக்கையிடும் பணி திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தின் தலைவரை அல்ல, திருப்பணியாளரையே சார்ந்தது ஆகும். எனவே வாசகர் வாசகங்களை வாசிப்பார்; திருத்தொண்டர் நற்செய்தியைப் பறைசாற்றுவார். அவர் இல்லை எனில் மற்றோர் அருள்பணியாளர் பறைசாற்றுவார். திருத்தொண்டரோ வேறொரு அருள்பணியாளரோ இல்லை எனில் திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளரே நற்செய்தியைப் பறைசாற்றுவார். தகுதியான வாசகரும் இல்லை எனில் திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளரே மற்ற வாசகங்களையும் வாசிப்பார்.

ஒவ்வொரு வாசகத்துக்குப் பின்னரும் வாசகர் ஆர்ப்பரிப்பை முழக்கமிடுவார். கூடியுள்ள மக்கள் அதற்குப் பதில் கூறும் விதத்தில் நம்பிக்கையும் நன்றியுணர்வும் நிறைந்த உள்ளத்தோடு தாங்கள் பெற்றுக்கொண்ட இறைவார்த்தைக்கு மதிப்பு அளிப்பர்.

60. நற்செய்தியைப் பறைசாற்றுவதே வார்த்தை வழிபாட்டின் உச்சக்கட்டம் ஆகும். மிகச் சிறப்பான வணக்கம் இதற்கு வழங்கப்பட வேண்டும் என்று திருவழிபாடே போதிக்கின்றது. ஏனைய வாசகங்களைவிட நற்செய்தியைப் பறைசாற்றுதல் தனி மதிப்பு உடையது என்பதால், அதற்கு மிகச் சிறப்பான வணக்கம் செலுத்தப்பட வேண்டும் என்று திருவழிபாடு கற்பிக்கின்றது. நற்செய்தியைப் பறைசாற்றக் குறிப்பிடப்பட்ட திருப்பணியாளர் தேவை; தம் பணியை ஆற்றும் முன், அவர் ஆசி பெற்று அல்லது மன்றாடித் தம்மைத் தயாரித்துக் கொள்வார்; நம்பிக்கையாளரோ, தங்கள் ஆர்ப்பரிப்பு களால் கிறிஸ்து தங்களோடு உடனிருப்பதையும் பேசுவதையும் ஏற்று அறிக்கை இடுவார்கள்; நற்செய்தியை அவர்கள் நின்றுகொண்டு கேட்பார்கள்; மேலும் நற்செய்தி வாசக நூலுக்கு வழங்கப்படும் வணக்கத்துக்கு உரிய அடையாளங்களிலும் இது விளங்கும்.

60 காண். உரோமைத் திருப்பலி நூல், திருப்பலி வாசக அமைப்புமுறை, 1981, 28.
61 காண். திருவழிபாடு, 51.
62 காண். இரண்டாம் ஜான் பால், Vicesimus quintus annus, 04-12-1988, 13: A.A.S. 81 (1989) பக்."
============== ↑ பக்கம் 32

பதிலுரைத் திருப்பாடல்

61. முதல் வாசகத்துக்குப் பின்னர் பதிலுரைத் திருப்பாடல் தொடரும்; இது இறைவார்த்தை பொட்டின் முழுமையான பகுதி ஆகும்; இது இறைவார்த்தையைத் தியானிக்க உதவுவதால், - திருவழிபாட்டிலும் அருள்பணியிலும் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றது.

பதிலுரைத் திருப்பாடல் ஒவ்வொரு வாசகத்துக்கும் பொருத்தமாக அமைகின்றது. க. பொதுவாக வாசக நூலிலிருந்து எடுக்கப்படுகின்றது.

பதிலுரைத் திருப்பாடலைப் பாடுவது மிக நன்று; அதில் மக்களின் பதிலுரையாவது பாடப்பட வேண்டும். எனவே திருப்பாடல் நேரடியாகப் பாடப்படும் நேரம் தவிர, அதாவது எந்தவிதப் பதிலுரையும் இல்லாமல், திருக்கூட்டம் முழுவதும் அமர்ந்தவாறே கேட்டு, வழக்கமாகப் பதிலுரைத்துப் பங்கு கொள்ளும்போது, திருப்பாடல் முதல்வர் அல்லது திருப்பாடல் பாடகர், திருப்பாடல் வரிகளை வாசக மேடையிலிருந்தோ தகுந்த மற்றோர் இடத்திலிருந்தோ பாடுவார். மக்களும் பதிலுரைத் திருப்பாடலை எளிதாகப் பாடும் வண்ணம் பதிலுரைத் திருப்பாடலின் பாடங்கள் அல்லது திருப்பாடல்கள் திருவழிபாட்டு ஆண்டின் பல காலங்களுக்கும் அல்லது பல்வகைப்பட்ட புனிதர்களுக்கும் ஏற்றவாறு தெரிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பாடலைப் பாடுவதெனில் வாசகத்துக்கு ஏற்பப் பாடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். திருப்பாடலைப் பாட முடியாவிடில், இறைவார்த்தையைத் தியானிப்பதற்கு ஏற்ற வகையில் அதை வாசிக்க வேண்டும்.

வாசக நூலில் குறிக்கப்பட்டுள்ள திருப்பாடலுக்குப் பதிலாக, உரோமைப் படிக்கீத நூலிலிருந்து படிக்கீதம், சாதாரண படிக்கீத நூலிலிருந்து பதிலுரைத் திருப்பாடல் அல்லது அல்லேலூயாவுடன் கூடிய திருப்பாடல் ஆகியவற்றை இந்நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பாடலாம்.

நற்செய்தி வாசகத்துக்கு முன் ஆர்ப்பரிப்பு

63. நற்செய்திக்கு முன்வரும் வாசகத்தை வாசித்தபின் "அல்லேலூயா" அல்லது வேறொரு பாடல், சடங்குமுறை நூலில் உள்ளபடியும் திருவழிபாட்டுக் காலத்தில் குறிப்பிட்டபடியும் பாடப்படும். இவ்வகை ஆர்ப்பரிப்பு தன்னிலே ஒரு சடங்கு அல்லது செயல் ஆகும். இதன் வழியாக நம்பிக்கையாளரின் திருக்கூட்டம் நற்செய்தியில் தங்களோடு பேசவிருக்கும் ஆண்டவரை வாழ்த்தி வரவேற்கின்றது; பாடல் வழியாகத் தங்கள் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றது. பாடகர் குழுவினர் அல்லது பாடகர் ஒருவர் தொடங்கிப் பாட, எல்லாரும் நின்றுகொண்டு பாடுவர்; தேவைக்கு ஏற்பத் திரும்பப் பாடலாம். பல்லவியைப் பாடகர் குழுவினரோ பாடகர் ஒருவரோ பாடுவர்.

அ) தவக் காலம் தவிர எல்லாக் காலங்களிலும் "அல்லேலூயா" பாடப்படும். பல்லவி வாசக நூலிலிருந்து அல்லது படிக்கீத நூலிலிருந்து எடுக்கப்படும்;

ஆ) தவக் காலத்தில் "அல்லேலூயா'வுக்குப் பதிலாக வாசக நூலில் குறிப்பிட்டுள்ளபடி நற்செய்திக்குமுன் வசனம் பாடப்படும். எனினும் படிக்கீத நூலில் -ள்ளபடி மற்றொரு திருப்பாடலையோ தொடர்பாடலையோ பாடலாம்.

3 நற்செய்திக்குமுன் ஒரு வாசகம் மட்டும் இருக்கும்போது:

அ) "அல்லேலூயா' சொல்ல வேண்டிய காலத்தில் அல்லேலூயா பாடலைப் பயன்படுத்தலாம் அல்லது பதிலுரைத் திருப்பாடலுடன் தொடரும் "அல்லேலூயா" பாடலை தனுடைய வசனத்தோடு சேர்த்துப் பயன்படுத்தலாம்.

============== ↑ பக்கம் 33

ஆ) 'அல்லேலூயா" சொல்லப்படாத காலத்தில் திருப்பாடலையும் நற்செய்தி வரும் வசனத்தையும் சொல்லலாம் அல்லது திருப்பாடலை மட்டும் சொல்லலாம்,

இ) 'அல்லேலூயா" அல்லது நற்செய்திக்குமுன் வரும் வசனம் பாடப்படவி எனில், அவற்றை விட்டுவிடலாம்.

64 பாஸ்கா பெருவிழா, தூய ஆவியார் பெருவிழா தவிர, பிற நாள்களில் தொடர்பாடல்களை விரும்பினால் ''அல்லேலூயா"வுக்குமுன் பாடலாம்,

மறையுரை

65, மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதி ஆகும்; அது மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனெனில் கிறிஸ்தவ வாழ்வுக்கு ஊட்டம் அளிக்க அது தேவை. திருவிவிலிய வாசகங்களிலிருந்தோ திருப்பலியின் பொதுப் பகுதி அல்லது சிறப்புப் பகுதியிலிருந்தோ தெரிவு செய்யப்பட்ட ஒரு பாடத்தின் சில கூறுகளை விளக்குவதாக மறையுரை அமைய வேண்டும்; கொண்டாடப்பெறும் மறையுண்மையையும் கேட்போரின் தனிப்பட்ட தேவைகளையும் மறையுரையாளர் கருத்தில் கொள்ள வேண்டும். 64

66, திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளரே வழக்கமாக மறையுரை நிகழ்த்துவார்; அவர் தம்மோடு சேர்ந்து கூட்டுத்திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர் ஒருவரிடமோ அவ்வப்போது சூழ்நிலைகளுக்கு ஏற்பத் திருத்தொண்டரிடம்கூட இப்பணியை ஒப்படைக்கலாம். ஆனால் பொதுநிலையினரிடம் இதனை ஒருபோதும் ஒப்படைக்கக்கூடாது." சிறப்பான நிகழ்வுகளில் தக்க காரணத்துக்காக, கூட்டுத்திருப்பலி நிகழ்த்தாமல் திருப்பலியில் மட்டும் பங்கேற்கும் ஓர் ஆயர் அல்லது ஒர் அருள்பணியாளர் மறையுரை நிகழ்த்தலாம்.

ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கடன் திருநாள்களில் மக்கள் பங்கேற்கும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை நிகழ்த்துவது கட்டாயம் ஆகும்; தகுந்த காரணம் இருந்தாலன்றி, இதை விட்டுவிடக்கூடாது. பிற நாள்களில் குறிப்பாகத் திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் வாரநாள்களிலும் மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்து கூடும் திருநாள்களிலும் நிகழ்ச்சிகளிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகின்றது."

மறையுரைக்குப் பின் சிறிது நேரம் அமைதி காப்பது பொருத்தம் ஆகும். நம்பிக்கை அறிக்கை

67. திருவிவிலியத்திலிருந்து எடுக்கப்பட்ட வாசகங்களில் பறைசாற்றப்பட்டதும் மறையுரையில் விளக்கப்பட்டதுமான இறைவார்த்தைக்கு, கூடியுள்ள மக்கள் எல்லாரும் பதிலுரைப்பதும் திருவழிபாட்டுப் பயன்பாட்டுக்காக ஒப்புதல் பெற்ற வாய்பாட்டில் நம்பிக்கை அடிப்படை விதிகளை வெளிப்படுத்துவதன் வழியாக நம்பிக்கையின் மாபெரும் மறையுண்மைகளை மதிப்பதும் அறிக்கையிடுவதும் நம்பிக்கை அறிக்கையின் நோக்கம் ஆகும். நற்கருணை வழிபாடு தொடங்குவதற்கு முன்பு இதனை அவர்கள் செய்கின்றனர்.

68. ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெருவிழாக்களிலும் அருள் பணியாளரும் மக்களும் சேர்ந்து நம்பிக்கை அறிக்கையைப் பாட வேண்டும் அல்லது சொல்ல வேண்டும். தனிப்பட்ட சிறப்புக் கொண்டாட்டங்களிலும் நம்பிக்கை அறிக்கையைச் சொல்லலாம்.

63 காண். திருவழிபாடு, 52; திச 76781
64 காண், திருச்சடங்குத் திருப்பேராயம், Inter (ecumenici, 26.09.1964, எண் 54; A.A.S. 56 (1964) ப"
65 காண். திச 76781: A.A.S, 79 (1987) பக்., 1249; Ecclesiac de mysterin, 15.08.1997, art. 3: A.A.S, 89 (17)
66 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Inter 0ccumenici, 26.09.1964. எண் 53: A.A.S. 56 (19)
============== ↑ பக்கம் 34

இதைப் பாடி அறிக்கையிட்டால் அருள்பணியாளரோ சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு பாடகரோ பாடகர் குழுவினரோ தொடங்குவர். இதைப் பாடினால், எல்லாரும் சேர்ந்து பாடுவர் அல்லது மக்களும் பாடகர் குழுவினரும் மாறி மாறிப் பாடுவர்.

இதைப் பாடவில்லை எனில், எல்லாரும் சேர்ந்தோ மக்கள் இருபகுதியாகப் பிரிந்தோ மாறி மாறிச் சொல்ல வேண்டும்.

பொது மன்றாட்டு

69. பொது மன்றாட்டில் அல்லது நம்பிக்கையாளரின் மன்றாட்டில் மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்ட இறைவார்த்தைக்கு ஒரு வகையில் பதில் அளிக்கின்றார்கள். திருமுழுக்கில் தாங்கள் பெற்ற பொதுக் குருத்துவத் திருப்பணியை நிறைவேற்றி எல்லாருடைய மீட்புக்காகவும் இறைவனுக்கு மன்றாட்டுகளை ஒப்புக்கொடுக்கின்றனர். மக்களோடு சேர்ந்து நிகழ்த்தும் திருப்பலிகளின்போது இத்தகைய மன்றாட்டு இடம் பெறுவது விரும்பத்தக்கது. இம்மன்றாட்டுகள் புனிதத் திரு அவைக்காகவும் நம்மை ஆளும் அதிகாரிகளுக்காகவும் பற்பல தேவைகளில் உழல்வோருக்காகவும் மக்கள் எல்லாருக்காகவும் உலக முழுவதன் மீட்புக்காகவும் அமைந்திருக்க வேண்டும்."

70. வழக்கமாகக் கீழ்வரும் வரிசையில் கருத்துக்கள் அமைய வேண்டும்.

அ. திரு அவையின் தேவைகளுக்காக;
ஆ. நாட்டு அதிகாரிகளுக்காகவும் அனைத்துலக மீட்புக்காகவும்;
இ. எல்லாவகையான இன்னல்களிலும் உழல்வோருக்காக;
ஈ. கூடியுள்ள குழுமத்துக்காக.

எனினும் உறுதிப்பூசுதல், திருமணம், அடக்கச் சடங்கு முதலான கொண்டாட்டங்களின்போது மன்றாட்டுகளின் வரிசை குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமையலாம். 71. திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர் தம் இருக்கையிலிருந்து இம்மன்றாட்டுகளை வழிநடத்துவார். அவரே சுருக்கமான முன்னுரை கூறி நம்பிக்கையாளரை மன்றாட அழைப்பார். அவரே இறுதியில் ஒரு மன்றாட்டுடன் முடிப்பார். கருத்துக்கள் ஆழ்ந்தமைந்த மனதோடும் முன் மதியுள்ள சுதந்திரத்தோடும் சுருக்கமான சொற்களோடும் குழுமம் முழுவதன் வேண்டலை வெளிப்படுத்தும் தன்மையோடும் அமைந்திருக்க வேண்டும்.

திருத்தொண்டர், பாடகர், வாசகர் அல்லது பொது நிலையினருள் ஒருவர் வாசக மேடையிலிருந்து அல்லது வேறொரு வசதியான இடத்திலிருந்து கருத்துக்களை அறிவிப்பார்.
மக்கள் எல்லாரும் நின்றுகொண்டு ஒவ்வொரு கருத்துக்குப்பின்னும் சேர்ந்து, பதில் மொழியாலோ அமைதியாக மன்றாடியோ தங்கள் வேண்டலை வெளிப்படுத்துவர்.

இ) நற்கருணை வழிபாடு

72. கிறிஸ்து இறுதி இரவு விருந்தின்போது தமது பாஸ்கா பலியையும் விருந்தையும் ஏற்படுத்தினார். இதன் வழியாகச் சிலுவைப் பலி திரு அவையில் தொடர்ந்து நிகழ்வாக்கப்படுகின்றது. ஆண்டவர் தாமே நிறைவேற்றியதோடு தம் நினைவாகச் செய்ய வேண்டும் என்று தம்முடைய சீடர்களுக்கு விட்டுச் சென்ற அதே பலியை அருள்பணியாளர் ஆண்டவர் கிறிஸ்துவின் பதிலாளாயிருந்து நிறைவேற்றுவார்."

67 காண். திருவழிபாடு, 53.
68 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Inter Decumenici, 26.09.1964, எண் 56: A.A.S. 56 (1964) பக். 890.
69 காண். திருவழிபாடு, 47; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண் 3a, b: A.A.S. 59 (1967) பக். 540-541.
============== ↑ பக்கம் 35

கிறிஸ்து அப்பத்தையும் கிண்ணத்தையும் எடுத்து, நன்றி செலுத்தி, அப்பத்தைப் பிட்டு தம் சீடருக்கு அளித்துக் கூறியதாவது : "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள், உண்மை பருகுங்கள்; இது என் உடல், இது என் இரத்தத்தின் கிண்ணம். இதை என் நினைவா செய்யுங்கள். எனவே திரு அவை கிறிஸ்துவின் இச்சொற்களுக்கும் செயல்களுக்கும் எம். பகுதிகளை அமைத்து, நற்கருணை வழிபாடு அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளது. எவ்வாறெனில்:

அ. காணிக்கைப் பொருள்களைத் தயாரிக்கும்போது, அப்பமும் இரசாயம் தண்ணீரும் பீடத்துக்குக் கொண்டு வரப்படுகின்றன; கிறிஸ்துவும் இதே பொருள்களைத் தம் கைகளில் ஏற்றார்.
ஆ. நற்கருணை மன்றாட்டில் மீட்புச் செயல் முழுவதற்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்தப்படுகின்றது ; காணிக்கைப் பொருள்கள் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன.
இ. அப்பத்தைப் பிடுவதிலும் நற்கருணையை உட்கொள்வதிலும் நம்பிக்கையாளர் பலராயினும் திருத்தூதர்கள் கிறிஸ்துவின் கைகளிலிருந்து பெற்றுக்கொண்டதைப் போல ஒரே அப்பத்திலிருந்து ஆண்டவரின் உடலையும் ஒரே கிண்ணத்திலிருந்து ஆண்டவரின் இரத்தத்தையும் பெற்றுக்கொள்கின்றனர்.

காணிக்கைகளின் தயாரிப்பு

73. நற்கருணை வழிபாட்டின் தொடக்கத்தில், கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறப்போகும் காணிக்கைகள் பலிப்பீடத்துக்குக் கொண்டு வரப்படுகின்றன.
ஏற்கெனவே பலிப்பீடத்தின் அருகேயுள்ள திரு மேசையில் தயாரிக்கப்படாமல் இருந்தால் திருமேனித் துகில், திருக்கிண்ணத் துகில், திருப்பலி நூல், திருக்கிண்ணம் ஆகியவை நற்கருணை வழிபாடு அனைத்துக்கும் மையமாக இருக்கும் பலிப்பீடத்தின் மீது'' வைக்கப்படும்பொழுது முதன்முதலாக அப்பீடம் தயாரிக்கப்படுகின்றது.
பின் காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன; நம்பிக்கையாளர் அப்பத்தையும் இரசத்தையும் காணிக்கையாகக் கொடுப்பது பாராட்டுக்கு உரியது; அருள்பணியாளரோ திருத்தொண்டரோ வசதியான இடத்தில் நின்றவாறு, இக்காணிக்கைப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு, பீடத்துக்குக் கொண்டு வர வேண்டும். முற்காலத்தில் நடந்தது போல, இன்று நம்பிக்கையாளர் தங்கள் உடைமைகளிலிருந்து திருவழிபாட்டுக்காக அப்ப, இரசத்தைக் கொண்டுவருவதில்லை என்றாலும் காணிக்கைப் பொருள்களைக் கொண்டுவரும் சடங்கு இன்றும் ஆன்மீக ஆற்றலும் பொருளும் கொண்டுள்ளது.

மேலும் ஏழைகளுக்காகவும் திரு அவைக்காகவும் நம்பிக்கையாளர் கொண்டுவந்த அல்லது கோவிலில் காணிக்கையாக எடுக்கப்பட்ட பணத்தையும் மற்றக் கொடைகளையும் ஏற்றுக் கொள்ளலாம்; இவற்றைப் பலிப்பீடத்துக்குப் புறம்பே தகுந்த இடத்தில் வைக்க வேண்டும்.

74. காணிக்கைப் பொருள்களைக் கொண்டு வருவதற்காக அமையும் பவனியின்போது காணிக்கைப் பாடல் பாடப்படுகின்றது (காண் எண் 37b). இக்காணிக்கைப் பொருள்கள் பீடத்தின் மீது வைக்கப்படுகின்றவரையிலாவது பாடல் தொடர்கின்றது. இப்பாடலைப் பற்றிய விதிமுறைகள், வருகைப் பாடலைப் பாடுவதற்கு உரிய விதிமுறைகளைப் போன்றவை (காண் எண் 48). காணிக்கைகளைப் பவனியாகக் கொண்டு வரவில்லை என்றாலும் காணிக்கைப் பொருள்களை ஒப்புக்கொடுக்கும் சடங்கின்போது காணிக்கைப் பாடல் எப்போதும் இடம்பெறும்.

70 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Inter ecumenici, 26-09.1964, எண் 91: A.A.S.'' பக். 898; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25-05-1967, எண் 24: A.A. பக். 554.
============== ↑ பக்கம் 36

75. குறிக்கப்பட்ட மன்றாட்டோடு அருள் பணியாளர் அப்பத்தையும் இரசத்தையும் பீடத்தின் மீது வைப்பார். அருள் பணியாளர் பீடத்தின் மீது வைக்கப்பட்ட காணிக்கைகளுக்குத் தூபம் காட்டுவார்; பின்னர் சிலு வைக்கும் பீடத்துக்கும் அவ்வாறே செய்வார். இது கடவுளின் திருமுன் திரு அவையின் காணிக்கையும் இறைவேண்டலும் தூபம் போல மேலெழும்புவதைக் குறிக்கும். பின்னர் திருத்தொண்டரோ பணியாளர் ஒருவரோ புனிதப் பணியின் பொருட்டு அருள்பணியாளருக்கும் திருமுழுக்கினால் வரும் மாண்பின் பொருட்டு மக்களுக்கும் தூபம் காட்டலாம்.

76. பின்னர் அருள்பணியாளர் பீடத்தின் அருகில் தம் கைகளைக் கழுவுவார்; இச்சடங்கு அகத்தூய்மை பெற அருள்பணியாளர் கொண்டிருக்கும் ஆவலை வெளிப்படுத்துகின்றது.

காணிக்கைப் பொருள்கள்மீது மன்றாட்டு

77. காணிக்கைப் பொருள்களைப் பீடத்தின் மீது வைத்து அதற்கான சடங்குகளை நிறைவேற்றிய பின், அருள்பணியாளர் தம்மோடு சேர்ந்து மன்றாட மக்களை அழைப்பார்; அதன் பின் காணிக்கைப் பொருள்கள் மீது மன்றாட்டைச் சொல்வதன் வழியாகக் காணிக்கைப் பொருள்களைத் தயார்செய்தல் முற்றுப் பெறுகின்றது. இதன் பின் நற்கருணை மன்றாட்டுக்குத் தயாரிப்பு தொடங்குகின்றது.

திருப்பலியில் ஒரே ஒரு "காணிக்கைமீது மன்றாட்டு" சொல்லப்படும். அது "எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் எனும் குறுகிய முடிவுரையைக் கொண்டிருக்கும். இம்மன்றாட்டின் முடிவில் "திருமகன்" குறிப்பிடப்பட்டால் "என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம் என்றிருக்கும்.
மக்கள் இம்மன்றாட்டோடு தங்களை ஒன்றுபடுத்தி "ஆமென் எனும் ஆர்ப்பரிப்பு வழியாக அதைத் தமதாக்கிக் கொள்வர்.

நற்கருணை மன்றாட்டு

78. திருப்பலிக் கொண்டாட்டம் முழுவதற்கும் மையமும் சிகரமுமாய் உள்ள நற்கருணை மன்றாட்டு இப்பொழுது தொடங்கும். இது நன்றி மன்றாட்டாகவும் புனிதப்படுத்தும் மன்றாட்டாகவும் உள்ளது. மக்கள் தங்கள் உள்ளங்களை இறைவேண்டலுடனும் நன்றியுணர்வுடனும் இறைவனை நோக்கி எழுப்பும்படி அருள்பணியாளர் அழைப்பார். அவர்களைத் தம்முடன் இறைவேண்டலில் இணைத்து, திருக்கூட்டம் முழுவதன் பெயரால் இறைத் தந்தையை நோக்கி இயேசு கிறிஸ்து வழியாக தூய ஆவியாரில் மன்றாடுவார். நம்பிக்கையாளரின் திருக்கூட்டத்தினர் எல்லாரும் கிறிஸ்துவோடு ஒன்றித்து கடவுளின் மாபெரும் செயல்களை அறிக்கையிடுவதிலும் பலி ஒப்புக்கொடுப்பதிலும் இந்த மன்றாட்டின் பொருள் அடங்கியுள்ளது. நற்கருணை மன்றாட்டைத் திருக்கூட்டத்தினர் எல்லாரும் வணக்கத்துடனும் அமைதியுடனும் செவிமடுக்க வேண்டும் என அது வலியுறுத்துகின்றது.

79. நற்கருணை மன்றாட்டு சிறப்பான அடிப்படைக் கூறுகளால் ஆனது. அவற்றைப் பின்வருமாறு பாகுபடுத்தலாம்:

அ) நன்றி கூறுதல் (இது குறிப்பாகத் தொடக்கவுரையில் தெளிவாக்கப்படுகின்றது): இதில் அருள்பணியாளர் திருக்கூட்டத்தினர் எல்லாருடைய பெயராலும் இறைத்தந்தையை மாட்சிப்படுத்துவார்; திருவழிபாட்டின் பல்வேறு நாள்கள், விழாக்கள், காலங்கள் இவற்றுக்கு ஏற்றவாறு மீட்பின் செயல் முழுவதற்காகவும் அல்லது ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவும் அருள்பணியாளர் இறைத் தந்தைக்கு நன்றி செலுத்துவார்.
============== ↑ பக்கம் 37

ஆ) ஆர்ப்பரித்தல்: திருக்கூட்டம் முழுவதும் வான்படைகளோடு சேர்ந்து "தாய, எனும் பாடலைப் பாடுகின்றது. நற்கருணை மன்றாட்டின் ஒரு பகுதியாக அமையும் .. ஆர்ப்பரிப்பு அருள்பணியாளரோடு சேர்ந்து மக்கள் எல்லாராலும் எழுப்பப்படுகின்றது.

இ) தூய ஆவியாரின் வருகைக்காக மன்றாடுதல்: மக்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டு, காணிக்கைகள் அர்ச்சிக்கப்பெறவும் அல்லது கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறவும் திருவிருந்தில் பெறப்படும் மாசற்ற அப்பம் அதில் பங்கு பெறுவோருக்கு மீட்பு அளிக்கவும் திரு அவை தனிப்பட்ட மன்றாட்டுகள் வழியாகத் தூய ஆவியாரின் ஆற்றலுக்காக இறைஞ்சி மன்றாடுகின்றது.

ஈ) நற்கருணை நிறுவுதல் பற்றிய விவரிப்பும் அர்ச்சிப்பும்: வார்த்தைகளாலும் செயல்களாலும் கிறிஸ்துவின் பலி நிகழ்த்தப்படுகின்றது. இப்பலியைக் கிறிஸ்துவே இறுதி இரவு விருந்தின்போது நிறுவினார்; அப்போது தம் உடலையும் இரத்தத்தையும் அப்ப, இரச வடிவங்கள் வழியாக ஒப்புக்கொடுத்தார்; அதை உண்பதற்கும் பருகுவதற்கும் திருத்தூதர்களுக்குக் கொடுத்தார்; இந்த மறைநிகழ்வு என்றென்றும் நீடிக்க அவர்களுக்குக் கட்டளை கொடுத்தார்.

உ) நினைவு ஆர்ப்பரிப்பு: இதில் திருத்தூதர்கள் வாயிலாகக் கிறிஸ்து ஆண்டவரிடமிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றி, திரு அவை குறிப்பாக கிறிஸ்துவின் புனிதப் பாடுகளையும் மாட்சிக்கு உரிய உயிர்த்தெழுதலையும் விண்ணேற்றத்தையும் நினைவுபடுத்திக் கிறிஸ்துவின் நினைவைக் கொண்டாடுகின்றது.

ஊ) ஒப்புக்கொடுத்தல்: இதன் வழியாக, இத்தகைய நினைவில், திரு அவை, குறிப்பாக இங்கே இப்போது கூடியுள்ள திருக்கூட்டம், தூய ஆவியாரில் தந்தைக்கு மாசற்ற பலிப்பொருளை ஒப்புக்கொடுக்கின்றது. மாசற்ற அப்பத்தை ஒப்புக்கொடுப்பதோடு மட்டும் அல்லாமல், தங்களையே கையளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும்71 இவ்வாறு கடவுளே எல்லாருக்கும் எல்லாமாய் இருக்கக் கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டு, கடவுளோடும் தங்களுக்குள்ளும் ஒருமைப்பாட்டை நாளுக்கு நாள் வளர்த்து நிறைவு செய்ய வேண்டும் என்பதும் திரு அவையின் நோக்கம்."

எ) வேண்டல்கள்: விண்ணக, மண்ணகத் திரு அவை முழுவதும் ஒன்றிணைந்து நற்கருணையைக் கொண்டாடுகின்றது என்பதையும் கிறிஸ்துவின் உடலாலும் இரத்தத்தாலும் கிடைத்த ஈடேற்றத்திலும் மீட்பிலும் பங்குகொள்ளுமாறு அழைக்கப்பெற்ற திரு அவைக்காகவும் அதன் உறுப்பினராக வாழ்வோர், இறந்தோர் எல்லாருக்காகவும் பலியை ஒப்புக்கொடுக்கின்றது என்பதையும் இவ்வேண்டல்கள் வெளிப்படுத்துகின்றன.

ஏ) இறுதி இறைப்புகழுரை: இறைவனைப் போற்றி மாட்சிப்படுத்தும் இப்புகழுரை மக்களின் "ஆமென்" என்ற ஆர்ப்பரிப்பால் உறுதி செய்யப்பட்டு நிறைவுறுகின்றது.

திருவிருந்துச் சடங்கு

80. நற்கருணைக் கொண்டாட்டம் பாஸ்கா விருந்து ஆகும். எனவே ஆண்டவரின் கட்டளைப்படி தக்க முறையில் தங்களைத் தயாரித்த நம்பிக்கையாளர் அவருடைய உடலையும் இரத்தத்தையும் ஆன்ம உணவாகப் பெற்றுக்கொள்வது அவசியம். அப்பம் பிடுதலும் நம்பிக்கையாளரை நற்கருணைப் பந்திக்கு நேரடியாக அழைத்துச் செல்கின்ற ஏனைய தயாரிப்புச் சடங்குகளும் இதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

11 திருவழிபாடு, 48; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25-05-1967, எண் 12 A.A.S. 59 (1967) பக். 548-549.
72 காண். திருவழிபாடு, 48; திருப்பணியாளர்கள், 5; திருச்சடங்குத் திருப்பேரா " " Eucharisticum mysterium, 25.05.1967, எண் 12: A.A.S. 59 (1967) பக். 548-549.
============== ↑ பக்கம் 38

ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டல்

81. ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலில் அன்றாட உணவுக்காக மன்றாடுகின்றோம்; அது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாக நற்கருணை உணவைக் குறிக்கும். மேலும் இவ்வேண்டலில் பாவத்திலிருந்து தூய்மை பெறவும் மன்றாடுகின்றோம்; இவ்வாறு பனிதமானவை உண்மையாகவே புனிதமானவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இறைவேண்டல் செய்யும்படி அருள்பணியாளர் அழைப்பு விடுக்க, நம்பிக்கையாளர் எல்லாரும் அவரோடு சேர்ந்து இவ்வேண்டல் செய்கின்றனர். பின்பு அருள்பணியாளர் மட்டும் தொடர் இறைவேண்டலைச் சொல்ல, மக்கள் அதற்குப் புகழுரை கூறி அதை நிறைவுக்குக் கொண்டு வருகின்றார்கள். இத்தொடர் இறைவேண்டல் ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டலின் இறுதி மன்றாட்டை விரிவுபடுத்தி, நம்பிக்கையாளரின் குழுமம் முழுவதற்கும் தீமையின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை கோருகின்றது.

இறைவேண்டலுக்கு அழைப்பு, மன்றாட்டு, அதன் பிற்சேர்க்கை, இவை அனைத்தின் முடி வாக மக்கள் சொல்லும் புகழுரை ஆகிய அனைத்தும் பாடப்படுகின்றன அல்லது தெளிவான குரலில் சொல்லப்படுகின்றன.

அமைதிப் பரிமாற்றச் சடங்கு

82. பின், அமைதிப் பரிமாற்றச் சடங்கு தொடர்கின்றது. இதில் திரு அவை தனக்காகவும் மனிதக் குடும்பம் முழுவதற்காகவும் அமைதியையும் ஒற்றுமையையும் இறைஞ்சி மன்றாடுகின்றது. மேலும் நம்பிக்கையாளர் நற்கருணையில் பங்குகொள்ளும் முன், திரு அவையின் ஒன்றிணைப்பையும் அன்பையும் தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

இவ்வாறு ஒருவருக்கொருவர் அமைதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் முறையை மக்களின் பழக்க வழக்கங்களுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப, ஆயர் பேரவை வரையறுக்கும். அமைதியின் அடையாளத்தைத் தம் அருகில் இருப்பவருக்கு மட்டும் ஒவ்வொருவரும் அடக்கமாகத் தெரிவித்தல் முறை ஆகும்.

அப்பம் பிடுதல்

83. அருள்பணியாளர் நற்கருணை அப்பத்தைப் பிடுவார். தேவைப்படின் திருத்தொண்டரோ கூட்டுத்திருப்பலி நிகழ்த்துபவரோ இதற்கு உதவி செய்வார். அப்பம் பிடுதல் இறுதி இரவு விருந்தில் கிறிஸ்து செய்த செயல் ஆகும்; திருத்தூதர் காலத்தில் முழு நற்கருணைக் கொண்டாட்டச் செயலுக்கும் இப்பெயர் கொடுக்கப்பட்டது. உலகின் மீட்புக்காக இறந்து உயிர்த்தெழுந்த, வாழ்வின் ஒரே அப்பமாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து திருவிருந்தைப் பெற்றுக்கொள்வதன் வழியாக, நம்பிக்கையாளர் பலர் ஒரே உடலாக மாற்றப்படுகின்றார்கள் (1கொரி 10:17) என்பதை இச்செயல் சுட்டிக்காட்டுகின்றது. அப்பம் பிடுதல் அமைதிப் பரிமாற்றத்துக்குப்பின் தொடங்கும். இது உரிய மரியாதையுடன் நடைபெறும். தேவையின்றி இதில் நீண்ட நேரம் செலவழித்தலோ மிகையான முக்கியத்துவம் கொடுத்தலோ கூடாது. இச்சடங்கு அருள்பணியாளருக்கும் திருத்தொண்டருக்கும் உரியது.

அருள்பணியாளர் அப்பத்தைப் பிட்டு, அதிலிருந்து ஒரு சிறு துண்டைத் திருக் கிண்ணத்தில் இடுவார். மீட்புச் செயலில் ஆண்டவரின் உடலும், அதாவது இயேசு கிறிஸ்துவின் வாழும், மாட்சியின் உடலும் இரத்தமும் ஒன்றிப்பதைக் குறிக்கும். "உலகின் பாவங்களைப் போக்கும் எனும் மன்றாட்டு பாடகர் குழுவால் அல்லது மக்கள் பதில் அளிக்க பாடகர் ஒருவரால் பாடப்படும் அல்லது உரத்த குரலில் சொல்லப்படும். அப்பம் பிடும் சடங்கு முடியும்வரை தேவைக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் பாடலாம் அல்லது சொல்லலாம். இறுதியாக "எங்களுக்கு அமைதியை அளித்தருளும் என்று முடிவுறும்.
============== ↑ பக்கம் 39

திருவிருந்து

84 கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் பயனுள்ள வகையில் பெற்றுக்.ெ அருள்பணியாளர் அமைதியாக வேண்டிக்கொண்டு தம்மைத் தயாரிப்பார். அது 2... நம்பிக்கையாளரும் அமைதியாக வேண்டுவார்கள்.

அடுத்து அருள்பணியாளர் நற்கருணை அப்பத்தைத் திரு அப்பத் தட்டின்?..., அல்லது திருக்கிண்ணத்தின்மேல் பிடித்துக்கொண்டு நம்பிக்கையாளருக்குக் காண்பிப். அவர்களைக் கிறிஸ்துவின் விருந்துக்கு அழைப்பார். நம்பிக்கையாளருடன் சேர்ந்து குறிப்பிடப்பட்ட நற்செய்திச் சொற்களைப் பயன்படுத்திப் பணிவோடு வேண்டுவார்.

85. அருள்பணியாளர் செய்யக் கடமைப்பட்டுள்ளது போன்றே நம்பிக்கையாளரும் அதே திருப்பலியில் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்திலிருந்து ஆண்டவரின் திரு உடலைப் பெற்றுக்கொள்வதும் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டபடி திருக்கிண்ணத்தில் பங்குகொள்வதும் மிக விரும்பத்தக்கனவாகும் (காண். எண் 283). இவ்வாறு செய்வதன் வழியாகத் தற்போது கொண்டாடப்பட்ட பலியில் பங்குகொள்வதை நற்கருணை உட்கொள்ளுதல் சிறப்பாகக் காட்டுகின்றது.73

86. அருள்பணியாளர் நற்கருணையை உட்கொள்ளும்போது திருவிருந்துப் பாடல் தொடங்கும். ஒரே குரலாக எழும் இப்பாடல் நற்கருணை உட்கொள்பவரின் ஆன்மீக ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றது; உள்ளத்து மகிழ்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது; நற்கருணை உட்கொள் வதற்காகப் பவனியாகச் செல்பவரின் குழும இயல்பையும் தெளிவாகக் காட்டுகின்றது. நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கப்படும்போது பாடல் தொடரும்.'4 திருவிருந்துக்குப்பின் பாடல் பாடப்படும் எனில், திருவிருந்துப் பாடலைத் தக்க நேரத்தில் முடிக்க வேண்டும்.
பாடகர்களும் வசதியாக நற்கருணை உட்கொள்ளும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

87. திருவிருந்துப் பாடலுக்காக, உரோமைப் படிக்கீத நூலிலுள்ள பல்லவியைத் திருப்பாடலோடு அல்லது தனியாகப் பயன்படுத்தலாம்; சாதாரணப் படிக்கீத நூலில் உள்ள திருப்பாடலோடு கூடிய பல்லவியையும் பயன்படுத்தலாம் அல்லது ஆயர் பேரவையின் ஒப்புதல் பெற்ற வேறு ஏற்ற பாடலைப் பயன்படுத்தலாம். இதனைப் பாடகர் குழு மட்டும் அல்லது பாடகர் குழுவோ ஒரு பாடகரோ மக்களோடு சேர்ந்து பாடலாம்.

பாடல் எதுவும் இல்லை எனில், நம்பிக்கையாளரோ அல்லது அவர்களுள் ஒரு சிலரோ அல்லது வாசகரோ திருப்பலி நூலில் தரப்பட்டுள்ள திருவிருந்துப் பல்லவியை வாசிக்கலாம்; பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் நற்கருணை உட்கொண்ட பின்பும், நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கும் முன்னும் இதனை வாசிப்பார்.

88. நற்கருணை வழங்கியபின், அருள்பணியாளரும் நம்பிக்கையாளர்களும் சூழ்நிலைக்கு ஏற்ப, சிறிது நேரம் அமைதி காத்து மன்றாடுவார்கள். விரும்பினால், திருக்கூட்டம் முழுவதும் ஒரு திருப்பாடலையோ வேறொரு புகழ்ச்சிப் பாடலையோ ஒரு பாடலையோ பாடலாம்.

இறைமக்களின் வேண்டலை நிறைவு செய்யவும் திருவிருந்துச் சடங்கு முழுவதையும் முடிவுக்குக் கொண்டு வரவும் அருள்பணியாளர் 'திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் அவர் வேண்டுவார். சொல்வார். இம்மன்றாட்டில் கொண்டாடப்பட்ட மறைநிகழ்ச்சியின் பயன்களுக்காக

73 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண். 31,32: A.A.'' 59 (1967) பக். 558-559; அருளடையாளங்களின் ஒழுங்குமுறைத் திருப்பேராயம், Imm ensae carital 29.01.1973, எண் 2: A.A.S. 65 (1973) பக். 267-268.
74 காண். அருளடையாளங்கள், திருவழிபாட்டுக்கான திருப்பேராயம், Inaestimabile 40"""" 03.04.1980, எண் 17: A.A.S. 72 (1980) பக். 338.
============== ↑ பக்கம் 40

திருப்பலியில் ஒரே ஒரு "திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு" சொல்லப்படும்; இம்மன்றாட்டு குறுகிய முடிவுரையோடு நிறைவுறும். அதாவது,

- திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டால் "எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்" என்றும்
- அது தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டாலும் இறுதியில் திருமகனின் பெயர் இடம் பெற்றால் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்" என்றும்
- அது திருமகனை நோக்கிச் சொல்லப்பட்டால், "என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்" என்றும் சொல்லப்படும்.
மக்கள் "ஆமென்" என்ற ஆர்ப்பரிப்புடன் அம்மன்றாட்டைத் தமதாக்கிக் கொள்வர்.

ஈ) நிறைவுச் சடங்கு

90. நிறைவுச் சடங்கு பின்வருமாறு அமையும்:
அ) தேவைப்படின், சுருக்கமான அறிவிப்புகள்;
ஆ) அருள்பணியாளரின் வாழ்த்தும் ஆசியும்: குறிப்பிட்ட நாள்களிலும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் இவ்வாழ்த்தும் ஆசியும் "மக்கள் மீது மன்றாட்டு" அல்லது வேறு வாய்பாடு வழியாக விரித்துரைக்கப்படும்;
இ) ஒவ்வொருவரும் கடவுளை வாழ்த்தி, புகழ்ந்தவாறு நற்பணி செய்யத் திரும்பிச் செல்லும்படி திருத்தொண்டரோ அருள்பணியாளரோ மக்களை அனுப்புதல்;
ஈ) அருள்பணியாளரும் திருத்தொண்டரும் பீடத்தை முத்தமிட்ட பின்னர், அருள்பணியாளரும் திருத்தொண்டரும் பிற திருப்பணியாளர்களும் பீடத்தைப் பணிந்து வணங்குதல்.
============== ↑ பக்கம் 41

 

 

image