image

 

திருவழிபாட்டு ஆண்டு, உரோமைப் பொது ஆண்டுக் குறிப்பேடு பற்றிய பொது விதிகள்

தாமாக விடுத்த திருத்தூதுத் திருமுகம்
ஒப்புதல் பெற்ற
திருவழிபாட்டு ஆண்டு, புதிய உரோமைப் பொது ஆண்டுக் குறிப்பேடு பற்றிய
பொது விதிகள்
திருத்தந்தை ஆறாம் பால்

பாஸ்கா மறைநிகழ்வின் கொண்டாட்டம் கிறிஸ்தவர்களின் வழிபாட்டில் மிகச் சிறந்த முக்கியத்துவம் வாய்ந்ததென்றும் அது நாள்கள், வாரங்கள், முழுமையான ஆண்டு ஆகிய கால் வட்டத்தால் விரிவடைகின்றது என்றும் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் தெளிவாக்க கற்பிக்கின்றது; திருவழிபாட்டு ஆண்டைச் சீரமைக்கத் தேவையான விதிகளையும் அது வழங்கியுள்ளது. எனவே திருவழிபாட்டு ஆண்டைச் சீரமைக்கும்போது, அந்தந்தக் காலத்துக்கும் புனிதருக்கும் உரிய பகுதிகளைத் திருத்தியமைத்தும் உரோமைப் பொது ஆண்டுக் குறிப்பேட்டைப் புதுப்பித்தும் கிறிஸ்துவின் மறைநிகழ்வை மிகத் தெளிவாக விளங்கச் செய்ய வேண்டும்.

காலப்போக்கில் திருவிழிப்புகளையும் விழாக்களையும் அவற்றின் எண்கிழமைகளையும் பெருக்கிக் கொண்டாடியதாலும் கிறிஸ்தவ மக்கள் அவ்வப்போது புகுத்திய தனி பக்தி முயற்சிகளின் விளைவாகவும் அவர்களுடைய உள்ளம் மீட்பின் இன்றியமையாத மறைநிகழ்வு களிலிருந்து விலகியதாகத் தெரிகின்றது.

நமக்கு முன் இப்பதவியிலிருந்த புனித 10-ஆம் வயசும் வணக்கத்துக்கு உரிய 23-ஆம் ஜானும் இதைப் பற்றிச் சில விதிகளைப் பிறப்பித்ததை அனைவரும் அறிவர்; இவற்றால் ஞாயிற்றுக்கிழமை தன் பழைய மதிப்பைப் பெற்று, எல்லாரும் மெய்யாகவே அதைத் தொடக்கத்திலிருந்தே வந்த பெருநாளாக ஏற்றுக்கொள்ளவும், தவக் காலத்தின் திருவழிபாட்டுக் கொண்டாட்டம் சீரமைக்கப்படவும் அவர்கள் வகை செய்தார்கள். அவ்வாறே நமக்கு முன் பதவியிலிருந்த வணக்கத்துக்கு உரிய 12-ஆம் பயசும் பாஸ்கா இரவிலே திருவிழிப்பு மீண்டும் சிறப்பாக நடைபெறவும் அதில் புகுமுக அருளடையாளங்களை இறைமக்கள் கொண்டாடி, உயிர்த்தெழும் கிறிஸ்துவோடு தங்கள் ஞான உடன்படிக்கையைப் புதுப்பிக்கவும் கட்டளையிட்டார்.
திரு அவைத் தந்தையரின் படிப்பினையை உறுதியாய்ப் பின்பற்றியும் வழிவழியாக ஒப்படைக்கப்பட்ட கத்தோலிக்கத் திரு அவைக் கோட்பாட்டைச் சரிவர உணர்ந்தும் இத்தலைமை ஆயர்கள் திருவழிபாட்டு ஆண்டின் சிறப்பை நன்கு புரிந்துகொண்டனர்; அதாவது, திருவழிபாட்டு ஆண்டு வழியாக, கிறிஸ்து இயேசு தம் இறப்பால் நம்மை மீட்டருளிய கடந்த கால நிகழ்வுகளின் நினைவு புதுப்பிக்கப்படுகின்றது; இவ்வாறு எளிய கிறிஸ்தவ நம்பிக்கையாளரும் படிப்பினையும் ஆன்ம ஊட்டமும் பெற வாய்ப்புக் கிடைக்கின்றது என்று மட்டும் கருதாமல், திருவழிபாட்டு ஆண்டுக் கொண்டாட்டம் கிறிஸ்தவ வாழ்வை ஊட்டி வளர்க்கும் தனியொரு அருளடையாள ஆற்றலையும் பயன் அளிக்கும் வல்லமையையும் கொண்டுள்ளது என்றும் அத்திருத்தந்தையர் தெளிவாகப் போதித்தனர். இதுவே எமது கருத்தும் படிப்பினையும் ஆகும்.

1 காண். திருவழிபாடு, 102-111. 2 காண். மேற்படி, 106. 3 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Dominicae Resurrectionis, 09.02.1951: A.A.S. 43 (1951) பக் 128-129. * திருச்சடங்குத் திருப்பேராயம் Maxima Redemptionis nostrae Mysteria, 16.11.1955: A.A.S. 47 (1955) பக். 839.
==============↑ பக்கம் 103

எனவேதான் நாம் கிறிஸ்து பிறப்பின் மறையுண்மையையும் உலகில் அவரது வெளிப் பாட்டையும் கொண்டாடும்போது, "தோற்றத்தில் எங்களைப் போன்று இருக்கும் அவரை கண்டுணர்ந்து அவர் வழியாக அகத்தில் மாற்றம் பெறத் தகுதி அடைந்திட எங்க அருள்புரிவீராக" என வேண்டுகின்றோம்; கிறிஸ்துவின் பாஸ்காவைப் புதுப்பிக்கும்... அவரோடு நாம் புத்துயிர் பெற்று, "நம்பிக்கையால் பெற்றுக்கொண்ட அருளடையாளம் வாழ்ந்து காட்டுவதில் நிலைத்து நிற்கச் செய்வீராக"' என எல்லாம் வல்ல இறைவனை மன்றாடுகின்றோம். ஏனெனில் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் கூறுவது போல, மீட்பின் மறைநிகழ்வுகளை இவ்வாறு நினைவுகூர்ந்து, திரு அவை தன் ஆண்டவரின் மீட்புச் செயல்கள் மற்றும் பேறுபயன்களினுடைய செல்வங்களை நம்பிக்கையாளர் பெற்றிட வழிவகுக்கின்றது. இதனால் இந்த மறைநிகழ்வுகள் ஒருவகையில் எக்காலங்களுக்கும் உடனிருக்கின்றன. நம்பிக்கையாளர் இவற்றுடன் தொடர்பு கொண்டு மீட்பின் அருளால் நிரப்பப்படுகின்றனர்."

ஆகவே திருவழிபாட்டு ஆண்டின் சீரமைப்பும் அதைத் தொடர்ந்து எழும் விதிகளும் நம்பிக்கையாளரின் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பின் வழியாக, 'ஒர் ஆண்டுக் கால வட்டத்துக்குள் வெளிப்படுத்தப்படும் கிறிஸ்துவின் மறைநிகழ்வு முழுவதிலும் மிகுந்த பற்றுதலுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்னும் குறிக்கோளையே அவை கொண்டிருக்கின்றன.

II

'தம் மகனின் மீட்புப் பணியில் பிரிக்க முடியாத முறையில் இணைந்துள்ள'10 புனித கன்னி மரியாவின் விழாக்களும் புனிதர்களின் நினைவுகளும் மேற்கூறிய விளக்கத்துக்கு முரணானவை அல்ல எனக் கருதுகின்றோம்; புனிதர் நினைவுத் தொகுதியில் 'நம் தலைவர்களாகிய மறைச்சாட்சியர், வெற்றி வீரர்கள்' 11 ஆகியோரின் பிறப்பு விழாக்கள் சிறப்புற்று விளங்குகின்றன. ஏனெனில், 'கிறிஸ்து தம் ஊழியர்களிடத்தில் ஆற்றிய வியத்தகு செயல்களைப் புனிதர்களின் திருவிழாக்கள் பறைசாற்றுகின்றன; பின்பற்றுதற்கெனத் தகுந்த எடுத்துக்காட்டுகளை நம்பிக்கையாளருக்கு அளிக்கின்றன';13 புனிதரின் விழாக்கள் கிறிஸ்துவின் பாஸ்கா மறைநிகழ்வை எடுத்துரைத்துப் புதுப்பிக்கின்றன என்பது கத்தோலிக்கத் திரு அவை எக்காலத்திலும் உறுதியாகக் கொண்டிருக்கும் கொள்கை ஆகும்."

வழக்கில் இருப்பதை அழிப்பது முறையன்று எனக் கருதியதால் காலப்போக்கில் புகுத்தப்பட்ட புனிதரின் விழாக்கள் அளவுக்கு மிஞ்சிவிட்டன என்று திருச்சங்கம் எச்சரித்துள்ளது; 'மீட்பின் மறைநிகழ்வை நினைவுக்குக் கொணரும் திருவிழாக்களைவிடப் புனிதர்களின் திருவிழாக்கள் முதன்மை பெறாதிருக்கும் பொருட்டு, அவற்றுள் பலவற்றைத் தனிப்பட்ட சபையின், நாட்டின், துறவு இல்லத்தின் கொண்டாட்டங்களுக்கு விட்டுவிட வேண்டும். உண்மையிலேயே பொதுவாக முக்கியத்துவம் வாய்ந்த புனிதர்களை நினனவுகூரும் திருவிழாக்களை மட்டும் திரு அவை முழுவதிலும் கொண்டாட வேண்டும்'.14

5 புனித பெரிய லியோ : மறையுரை , XXVII, In Nativitate Domini 7, 1: PL 54, 216.
6 காண். உரோமைத் திருப்பலி நூல் (1962): Oratio de Epiphania (இந்நாலில், ஆண்டவருடைய திருமுழுக்கு விழா, இரண்டாம் திருக்குழும மன்றாட்டு, பக் 203). 7 காண், அதே திருப்பலி நூல், பாஸ்கா எண்கிழமையில், செவ்வாய் (இந்நூலில், பாஸ்கா எண்கிழமை
உமா என்கிழமை திங்கள், திருக்குழும மன்றாட்டு, பக் 376).
8 திருவழிபாடு, 102.
9 காண். மேற்படி.
10 மேற்படி, 103.
11 காண். B. Mariani ed. சிரியாக்கு திருப்புகழ்மாலை
==============↑ பக்கம் 104

ஆகவே பொதுச் சங்கத்தின் விதிகளைச் செயல்முறைப்படுத்தச் சில புனிதர்களின் பெயர்கள் பொது ஆண்டுக் குறிப்பேட்டி லிருந்து நீக்கப்பட்டுள்ளன; அதே நேரத்தில் வேறு சில புனிதர்களின் நினைவுகளும் வணக்கமும் தேவைக்கு ஏற்ப அவரவர் நாடுகளுக்கு அளிக்கப்பட்டு, மீண்டும் தகுந்த முறையில் கொண்டாட அனு மதி தரப்பட்டுள்ளது. இதன் பயனாக உலகில் பொதுவாக அறியப்படாத புனிதர்கள் சிலரின் பெயர்கள் உரோமை ஆண்டுக் குறிப்பேட்டி, லிருந்து நீக்கப்பெற்றாலும் அண்மைக் காலங்களில் நற்செய்தி விதைக்கப்பட்ட சில நாடுகளில் பிறந்த மறைச்சாட்சியர் சிலரின் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன; இவ்வாறு எல்லா நாட்டின் பிரதிநிதிகளும் கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தியதால் அல்லது மேலான புண்ணிய வாழ்வு வாழ்ந்ததால் சிறப்புற்று, சம மாண்புக்கு உரியவர்களாய் இந்த ஏட்டில் இடம் பெறுகின்றார்கள்.

இலத்தீன் சடங்குமுறையின் பயன்பாட்டுக்காகச் சீரமைக்கப்பட்ட இப்புதிய பொது ஆண்டுக் குறிப்பேடு தற்காலப் பக்திமுறைகளுக்கும் உணர்வுகளுக்கும் மிகுதியாகப் பொருந்துகின்றது என்றும் திரு அவையின் பொதுமைப்' பண்பைத் தகுந்த வகையில் தெளிவாகக் காட்டுகின்றது என்றும் மேற்சொன்ன காரணங்களை முன்னிட்டு நாம் கருதுகின்றோம். பல்வேறு வகையான நற்பண்புகளைப் பயின்று, இறைமக்கள் அனைவருக்கும் புனிதத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக வாழ்ந்த புகழ்மிகு புனிதர்களின் பெயர்களை இக்குறிப்பேடு இனிமேல் கொண்டிருக்கும். இது கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எத்துணை ஆன்ம பயன் அளிக்கும் எனச் சொல்லத் தேவையில்லை.

எனவே இவற்றையெல்லாம் ஆண்டவர் திருமுன் கருத்தூன்றிச் சிந்தித்த பின், திருவழிபாட்டுக் கொள்கை விளக்கத்தின் செயலாக்கக் குழு உருவாக்கிய புதிய உரோமை ஆண்டுக் குறிப்பேட்டுக்கும் திருவழிபாட்டு ஆண்டை முறைப்படுத்தும் புதிய விதிகளுக்கும் எமது திருத்தூது அதிகாரத்தால் இசைவு வழங்குகின்றோம். திருச்சடங்குத் திருப்பேராயமும் முன்குறிப்பிட்ட குழுவும் உருவாக்கிய விதிகளின்படி இவை அடுத்து வரும் 1970, ஜனவரி முதல் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்; திருத்தி அமைக்கப்பெற்ற புதுத் திருப்பலி நூலும் திருப்புகழ்மாலையும் வெளியாகும்வரை இவ்விதிகள் நடைமுறையில் இருக்கும்.

மேற்குறிப்பிட்ட நம் விதிகளும் சட்டங்களும் இன்றும் வருங்காலத்திலும் நிலைத்துச் செயலாக்கம் பெற வேண்டும் என விரும்புகின்றோம். இவற்றை நம் முன்னையவர்கள் வெளியிட்ட திருத்தூது அமைப்பு விதிமுறைகளோ ஆணைத் தொகுப்புகளோ குறிப்பிடத்தக்க, விதிவிலக்கு அளிக்கக்கூடிய கட்டளைகளோ தடைசெய்ய முடியாது.

உரோமை நகரில், புனித பேதுரு பெருங்கோவிலிலிருந்து, 1969 பெப்ருவரி 15-ஆம் நாள், எமது ஆட்சியின் ஆறாம் ஆண்டில் வழங்கப்பட்டது.

திருத்தந்தை ஆறாம் பால்

==============↑ பக்கம் 105

திருவழிபாட்டு ஆண்டு, ஆண்டுக் குறிப்பேடு பற்றிய பொது விதிகள்

இயல் 1
திருவழிபாட்டு ஆண்டு

1. புனிதத் திரு அவை ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட நாள்களில் கிறிஸ்துவின் மீட்புப் பணியைப் புனிதமுடன் நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றது. ஒவ்வொரு வாரத்திலும், ஞாயிற்றுக்கிழமை அன்று ஆண்டவருடைய உயிர்ப்பின் நினைவை நிகழ்த்துகின்றது; இதை ஆண்டுக்கு ஒரு முறை, பாஸ்கா பெருவிழாவில் அவருடைய பாடுகளோடு இணைத்துக் கொண்டாடுகின்றது. மேலும் ஓராண்டுக் கால வட்டத்துக்குள் கிறிஸ்துவின் மறைநிகழ்வு அனைத்தையும் விளக்குகின்றது. புனிதர்களின் விண்ணகப் பிறப்பையும் நினைவுகூருகின்றது.
திருவழிபாட்டு ஆண்டின் பல்வேறு காலங்களில் மரபு வழிவரும் விதிமுறைப்படி, திரு அவை ஆன்ம, உடல் பக்தி முயற்சிகளாலும் போதனை, மன்றாட்டு, தவம், இரக்கச் செயல்களாலும் நம்பிக்கையாளருக்கு நிறைவாக அறிவூட்டுகின்றது.'

2. பின்வரும் கோட்பாடுகள் உரோமை வழிபாட்டுமுறைக்கும் மற்ற எல்லா வழிபாட்டு முறைகளுக்கும் பொருந்தும்; பொருந்தவும் வேண்டும். நடைமுறை விதிகளைப் பொறுத்தமட்டில் அவை உரோமை வழிபாட்டு முறைக்கே உரியவை எனக் கருதப்பட வேண்டும்; ஒரு வேளை அவற்றிலும் ஒரு சில தம் இயல்பாகவே மற்ற வழிபாட்டு முறைகள் மீது தாக்கம் ஏற்படுத்துபவையாய் இருக்கலாம்.?

தலைப்பு 1 - திருவழிபாட்டு நாள்கள்

1. திருவழிபாட்டு நாள் பற்றிப் பொதுவாக

3. இறைமக்களின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களினால் சிறப்பாகத் திருப்பலி திருப்புகழ்மாலையால் ஒவ்வொரு நாளும் அர்ச்சிக்கப்படுகின்றது.
திருவழிபாட்டு நாள், நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவுவரை நீடிக்கும். ஞாயிற்றுக்கிழமை, பெருவிழா ஆகியவற்றின் கொண்டாட்டம் அவற்றின் முந்திய நாள் மாலையிலேயே தொடங்கும்.

11. ஞாயிற்றுக்கிழமை

4 கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளிலிருந்தே உருவான திருத்தூதர்களின் மரபுப்படி, திரு அவை பாஸ்கா மறைநிகழ்வை ஒவ்வோர் எட்டாம் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடுகின்றது; இந்நாள் ஆண்டவருக்கு உரிய நாள் அல்லது ஆண்டவரின் நான் விழாவாகக் கொள்ள வேண்டும்.' என அழைக்கப்படுவது முறையே. எனவே ஞாயிற்றுக்கிழமையை முதன்மையான விழாவாக கொண்டாடவேண்டும்.

1 காண். திருவழிபாடு, 102-105.
2 காண். மேற்படி, 3
3. 2 காண். மேற்படி, 106
==============↑ பக்கம் 106

5. ஞாயிற்றுக்கிழமை தனி முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே அது பெருவிழாக்களுக்கும் கிறிஸ்துவின் விழாக்களுக்கும் மட்டுமே இடம் தரும்; ஆனால் திருவருகைக் கால், தவக் கால், பாஸ்கா கால் ஞாயிற்றுக்கிழமைகள் ஆண்டவருடைய விழாக்களுக்கும் மற்றெவ்வகைப் பெருவிழாக்களுக்கும் மேலான இடம் பெறும். குருத்து ஞாயிற்றுக்கிழமை அல்லது ஆண்டவருடைய உயிர்த்தெழுதல் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பெருவிழாக்கள் அடுத்து வரும் திங்கள்கிழமை அன்று கொண்டாடப்படும்.

6. ஞாயிற்றுக்கிழமை தன்னிலேயே வேறு நிலையான கொண்டாட்டங்களுக்கு இடம் தராது. ஆயினும்,

அ) கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்குடும்ப விழா"

ஆ) ஜனவரி 6-ஆம் நாளுக்குப்பின் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிறிஸ்துவின் திருமுழுக்கு விழாவும்

இ) தூய ஆவியார் விழாவுக்குப்பின் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மூவொரு கடவுள் பெருவிழாவும்

ஈ) ஆண்டின் பொதுக் காலத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்துக்கும் அரசராம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெருவிழாவும் நடைபெறும்.

7. திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும் ஆகியவற்றின் பெருவிழாக்கள் கடன் திருநாள்களாகக் கடைப்பிடிக்கப்படாத இடங்களில் அவை கீழ்க்கண்ட ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும்:

அ) திருக்காட்சி விழா, ஜனவரி 2-ஆம் நாளுக்கும் 8-ஆம் நாளுக்கும் இடையில் வரும்ஞாயிற்றுக்கிழமை அன்று;

ஆ) விண்ணேற்றம், பாஸ்கா காலத்தில் 7-ஆம் ஞாயிற்றுக்கிழமை அன்று;

இ) கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும் பெருவிழா, மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று. ப. பெருவிழாக்கள், விழாக்கள், நினைவுகள்

8. கிறிஸ்துவின் மறைநிகழ்வுகளை ஒர் ஆண்டுச் சுழற்சிக்குள் கொண்டாடும்போது புனிதத் திரு அவை கடவுளின் அன்னையாம் புனித மரியாவுக்குத் தனி அன்பு காட்டி வணங்குகின்றது. மேலும் மறைச்சாட்சியர் மற்றும் புனிதர்களின் நினைவுகளை நம்பிக்கையாளர் இறைப்பற்றுள்ள வணக்கத்தோடு கொண்டாடத் தூண்டுகின்றது. 4

9. அனைத்துலகத் திரு அவையில் பொது முக்கியத்துவம் பெற்ற புனிதரின் நினைவுகள் கட்டாயமாகக் கொண்டாடப்படுகின்றன; ஏனைய புனிதர்களின் நினைவுகளை விருப்பம் போலக் கொண்டாடலாம் என்னும் குறிப்புடன் ஆண்டுக் குறிப்பேட்டில் இடம் பெறுகின்றன அல்லது குறிப்பிட்ட தலத் திரு அவையோ நாடோ துறவு இல்லமோ கொண்டாடும்படி விடப்பட்டுள்ளன.'

10. கொண்டாட்டங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு ஏற்ப அவை பெருவிழா, விழா, நினைவு எனத் தமக்குள் வரையறுக்கப்பட்டு, அவ்வாறே அழைக்கப்படுகின்றன.

11. பெருவிழாக்கள் மிக முக்கியமான நாள்களாகக் கருதப்படுகின்றன, இடம் பெறுகின்றன; அவற்றின் கொண்டாட்டம் முந்திய நாளின் முதல் மாலை வழிபாட்டிலிருந்து தொடங்கும்; சில பெருவிழாக்களுக்கு உரிய திருவிழிப்புத் திருப்பலியும் உள்ளது; இத்திருப்பலியை மாலை வேளையில் கொண்டாடினால் அது முந்திய நாள் மாலையில் நடைபெற வேண்டும்.

4 காண். மேற்படி, 103-104.
5 காண். மேற்படி, 111.
==============↑ பக்கம் 107

12 பாஸ்கா, கிறிஸ்து பிறப்பு ஆகிய இரு பெருவிழாக்களின் கொண்டாட், ....... நாள்களுக்கு நீடிக்கும். இவற்றின் எண்கிழமைக் கொண்டாட்டங்கள் தக்கம் விதிகளின்படி ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

13. ஓர் இயல்பான நாளின் வரம்புக்குள் விழாக்கள் கொண்டாடப்படும்; எனவே இவர் முதல் மாலை வழிபாடு இல்லை; ஆனால் பொதுக் கால' ஞாயிற்றுக்கிழமைகளிலும் தி. பிறப்புக் கால ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரும் ஆண்டவருடைய விழாக்கள் இதற்கு : விலக்கு. ஞாயிற்றுக்கிழமையின் முதல் மாலை வழிபாட்டுக்குப் பதிலாக இவ்விழாக்களின் ஒரு மாலை வழிபாடு இடம்பெறும்.

14 நினைவுகள் கட்டாயமானவை அல்லது விருப்பத்துக்கு உரியவை ஆகும்; இவற்றின் கொண்டாட்டத்தை நிகழும் வார நாள் கொண்டாட்டத்தோடு பொருத்துவதற்கான விதிமுறைகளைத் திருப்பலிப் பொதுப் படிப்பினையும் திருப்புகழ்மாலைப் படிப்பினையும் விளக்குகின்றன.

தவக் கால வாரநாள்களில் வரும் கட்டாய நினைவுகளை விருப்ப நினைவுகளாகக் கொண்டாடலாம். ஆண்டுக் குறிப்பேட்டில் ஒரு நாளில் விருப்ப நினைவுகள் பல தரப்பட்டிருந்தால், அவற்றில் ஒன்றைக் கொண்டாடலாம்; மற்றவற்றை விட்டுவிடலாம். 15. கட்டாய நினைவு இல்லாத பொதுக் காலத்தின்' சனிக்கிழமைகளில், புனித கன்னி மரியாவின் விருப்ப நினைவைக் கொண்டாடலாம்.

IV. வாரநாள்கள்

16. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்றவை வார நாள்கள் எனப்படும்; அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப, அவை பல வகையாகக் கொண்டாடப்படும்: அ) திருநீற்றுப் புதனும் புனித வாரத்தில் திங்கள் முதல் வியாழன் உட்பட உள்ள வாரநாள்களும் மற்றெல்லாக் கொண்டாட்டங்களுக்கும் மேலாகக் கருதப்படும். ஆ) திருவருகைக் காலத்தில் டிசம்பர் 17 முதல் 24வரை உள்ள வாரநாள்களும் தவக் காலத்தின் எல்லா வாரநாள்களும் கட்டாய நினைவுகளைவிடச் சிறப்புப் பெறுகின்றன; இ) மற்ற வார நாள்கள் எல்லாப் பெருவிழாக்களுக்கும், விழாக்களுக்கும் நினைவுகளுக்கும் இடம் அளிக்கும்.

தலைப்பு II - ஆண்டுச் சுழற்சி

17. கிறிஸ்து மனிதர் ஆனது முதல் பெந்தக்கோஸ்து பெருவிழாவரையும், அதிலிருந்து ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்தல்வரையும் ஓர் ஆண்டுச் சுழற்சிக்குள் திரு அவை கிறிஸ்துவின் மறைநிகழ்வு முழுவதையும் நினைவுகூருகின்றது.*

1. பாஸ்காவின் மூன்று நாள்கள்

18. மனிதரை மீட்கும் இறைவனுக்கு நிறைவான மாட்சி அளிக்கும் பணியைக் கிறிஸ்து சிறப்பாகத் தம் பாஸ்கா மறைநிகழ்வால் நிறைவேற்றினார்; இதில் அவர் "நம் சாவைத் தம் சாவினால் அழித்து, தம் உயிர்ப்பினால் நமக்கு மீண்டும் உயிர் அளித்துள்ளார். எனவே அவருடைய பாடுகளையும் உயிர்ப்பையும் கொண்டாடும் பாஸ்காவின் மூன்று நாள்களம் திருவழிபாட்டு ஆண்டின் சிகரமாய் விளங்குகின்றன. ஆகவே ஒரு வாரம் பெருவிழா கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கொண்டிருக்கும் மாண்பைத் திருவழிபாட்டு ஆண்டில் பாஸ்காப் பெருவிழா கொண்டுள்ளது.8

6 காண். திருவழிபாடு, 102.
7 காண். மேற்படி, 5.
8 காண். மேற்படி, 106
==============↑ பக்கம் 108

19. ஆண்டவருடைய பாடுகள், உயிர்ப்பின் பாஸ்காவைக் கொண்டாடும் மூன்று நாள்கள் புனித வியாழக்கிழமை மாலைத் திருப்பலியோடு தொடங்கி, பாஸ்கா திருவிழிப்பை மையமாகக் கொண்டு, உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை வழிபாட்டோடு முடிவடைகின்றன.

20. திருப்பாடுகளின் புனித வெள்ளிக்கிழமை அன்றும், வசதிக்கு ஏற்பப் பாஸ்கா திருவிழிப்புவரை புனித சனிக்கிழமை அன்றும்,'' எங்கும் பாஸ்கா நோன்பு கடைப்பிடிக்கப்படும்.

21. ஆண்டவர் உயிர்த்தெழுந்த புனித இரவில் நிகழும் திருவிழிப்பு, புளித்த திருவிழிப்புகளுக்கு எல்லாம் அன்னையாகக் கருதப்படும். அதில் திரு அவை கிறிஸ்துவின் உயிர்ப்பை விழித்திருந்து எதிர்பார்த்து அதை அருளடையாளங்கள் வழியாகக் உயிர்ப்பை கொண்டாடுகின்றது. ஆகவே இத்திருவிழிப்பு இரவு நேரத்தில் கொண்டாடப்பட வேண்டும்: அதாவது, அதை இரவு தோன்றிய பின்னரே தொடங்க வேண்டும்; ஞாயிற்றுக்கிழமை காலையில் பொழுது புலர்வதற்குமுன் முடிக்க வேண்டும்.

II. பாஸ்கா காலம்

22. உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமை முதல் பெந்தக்கோஸ்து பெருவிழாவரையுள்ள ஐம்பது நாள்கள் ஒரே விழா நாளாக, ஒரே 'மாபெரும் ஞாயிற்றுக்கிழமையாக" 13 மகிழ்வுடனும் அக்களிப்புடனும் கொண்டாடப்படும்.

இந்நாள்களில் சிறப்பாக "அல்லேலூயா" பாடப்படும்.

23. இக்காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் பாஸ்கா ஞாயிற்றுக்கிழமைகளாகக் கருதப்படும். உயிர்ப்புப் பெருவிழாவுக்குப்பின் வரும் ஞாயிற்றுக்கிழமைகள், பாஸ்கா 2, 3, 4, 5, 6, 7-ஆம் ஞாயிறு என அழைக்கப்படும். இந்த 50 நாள்களைக் கொண்ட இப்புனித காலம் பெந்தக்கோஸ்து பெருவிழாவுடன் முடிவடையும்.

24. பாஸ்கா காலத்தின் முதல் எட்டு நாள்கள் பாஸ்கா எண்கிழமை ஆகும். இந்நாள்கள் ஆண்டவரின் பெருவிழாக்களாகவே கொண்டாடப்படும்.

25. பாஸ்கா விழாவுக்குப்பின் வரும் நாற்பதாம் நாளில் ஆண்டவரின் விண்ணேற்றம் கொண்டாடப்படும்; ஆனால் இந்நாள் கடன் திருநாளாகக் கடைப்பிடிக்கப்படாத இடங்களில், இது பாஸ்கா 7-ஆம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படும் (காண். எண் 7).

26. விண்ணேற்றத்துக்குப்பின், பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு முன் வரும் வார நாள்கள் துணையாளரான தூய ஆவியார் வருகைக்கு ஆயத்தம் செய்கின்றன.

III. தவக் காலம்

27. பாஸ்கா கொண்டாட்டத்துக்கு முன்னேற்பாடாகத் தவக் காலம் அமைந்துள்ளது; ஏனெனில் கிறிஸ்தவப் புகுமுகச் சடங்கின் பல படிகள் வழியாக ஆயத்தக் கிறிஸ்தவர்களும், தங்கள் திருமுழுக்கை நினைவுகூர்ந்து தவத்தில் ஈடுபடும் நம்பிக்கையாளரும் பாஸ்கா மறைநிகழ்வைக் கொண்டாடத் தக்க மனநிலை அடைவதற்குத் தவக் காலத் திருவழிபாடு வழிவகுக்கின்றது.13

28. தவக் காலம் திருநீற்றுப் புதன் முதல் புனித வியாழன் ஆண்டவருடைய இறுதி இரவு விருந்தின் மாலைத் திருப்பலிக்குமுன் வரை நீடிக்கும்.
தவக் காலத் தொடக்கமுதல் பாஸ்கா திருவிழிப்புவரை "அல்லேலூயா சொல்வதில்லை.

9 காண். ஆறாம் பால், Paenitenini, 17-02-1966, 11 எண் 3: A.A.S. 58 (1966) பக். 184.
10 காண். திருவழிபாடு, 110.
11 புனித அகுஸ்தின், மறையுரை, 219: PL 38, 1088.
==============↑ பக்கம் 109

29. தவக் காலத்தின் தொடக்கமான திருநீற்றுப் புதன் அன்று திருநீறு - அந்நாள் நோன்பு நாளாக எங்கும் கருதப்படும்.

30. இக்காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள், தவக் கால 1, 2, 3, 4, 5 -ஆம் எனப் பெயர் பெறும்; புனித வாரம் தொடங்கும் 6-ஆம் ஞாயிறு, 'ஆண்டவம் பாடுகளின் குருத்து ஞாயிறு' எனப்படும்.

31. கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூரும் புனித வாரம் அவர் மெசியா.. எருசலேமில் நுழைந்ததுமுதல் தொடங்கும்.

புனித வாரத்தின் வியாழன் அன்று காலையில் ஆயர் தம் அருள்பணியாளர்களோடு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி புனித எண்ணெய்களுக்கு ஆசி வழங்கி, கிறிஸ்மா எண்ணெயைத் தயாரிப்பார்.

IV. கிறிஸ்து பிறப்புக் காலம்

32. பாஸ்கா மறைநிகழ்வின் ஆண்டுக் கொண்டாட்டத்துக்கு அடுத்தபடியாக மிகப் பழமையான விழாவாகத் திரு அவை கொண்டாடுவது கிறிஸ்து பிறப்பின் நினைவும் அவருடைய தொடக்கக் கால வெளிப்படுதல்களின் நினைவுமே. இந்த நினைவு கிறிஸ்து பிறப்புக் காலத்தில் கொண்டாடப்படும்.

33. கிறிஸ்து பிறப்பு விழாவின் முதல் மாலை வழிபாட்டிலிருந்து திருக்காட்சி விழாவுக்கு அல்லது ஜனவரி 6-ஆம் நாளுக்குப்பின் வரும் ஞாயிற்றுக்கிழமை உட்பட வரும் நாள்கள் கிறிஸ்து பிறப்புக் காலம் ஆகும்.

34. கிறிஸ்து பிறப்பின் திருவிழிப்புத் திருப்பலி டிசம்பர் 24-ஆம் நாள் மாலையில், முதல் மாலைப் புகழுக்கு முன்னரோ பின்னரோ நிறைவேற்றப்படும்.

ஆண்டவருடைய பிறப்பு விழா நாளில், தொன்மையான உரோமை மரபின்படி நள்ளிரவில், விடியற்காலையில், பகலில் என மும்முறை திருப்பலி கொண்டாடப்படலாம்.

35. கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான எண்கிழமை கீழ்க்கண்டவாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றது:

அ) எண்கிழமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லது ஞாயிற்றுக்கிழமை இல்லை எனில், டிசம்பர் 30-இல் இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்ப விழா;

ஆ) டிசம்பர் 26 - இல், முதல் மறைச்சாட்சியான புனித ஸ்தேவான் விழா;

இ) டிசம்பர் 27 - இல், திருத்தூதரும் நற்செய்தியாளருமான புனித யோவான் விழா;

ஈ) டிசம்பர் 28 - இல், புனித மாசில்லாக் குழந்தைகள் விழா;

உ) டிசம்பர் 29, 30, 31 ஆகியவை எண்கிழமை நாள்கள்;

ஊ) ஜனவரி முதல் நாளில், அதாவது கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாளில் புனித மரியா கடவுளின் தாய் என்னும் பெருவிழா கொண்டாடப்படும்; அதில் இயேசுவுக்குத் திருப்பெயரிட்டதும் நினைவுகூரப்படும்.

36 ஜனவரி 2முதல் 5வரையுள்ள நாள்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்து பிற'' விழாவுக்குப்பின் வரும் 2-ஆம் ஞாயிறு ஆகும்.

37 ஆண்டவருடைய திருக்காட்சி ஜனவரி 6-இல் கொண்டாடப்படும்; ஆனால் அது ". திருநாளாகக் கடைப்பிடிக்கப்படாத இடங்களில், ஜனவரி 2முதல் 8வரையுள்ள நான் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் (காண். எண் 7). திருமுழுக்கு விழா ஆகும்.

38. ஜனவரி 6-ஆம் நாளுக்குப்பின் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆண்டவருடைய திருமுழுக்கு விழா ஆகும்

==============↑ பக்கம் 110

V. திருவருகைக் காலம்

39. திருவருகைக் காலத்துக்கு இரு பண்புகள் உள்ளன: இறைமகன் மனிதரிடையே முதல் முறை வந்ததை நினைவுகூரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் தயாரிப்புக் காலம் ஆகும்; அவ்வாறே காலத்தின் நிறைவில் நிகழும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்திருக்க உள்ளங்கள் தூண்டப்படும் காலமும் அதுவே. இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது.

40. திருவருகைக் காலம் நவம்பர் 30-ஆம் நாளில் அல்லது அதற்கு அண்மையில் வரும் ஞாயிற்றுக்கிழமை, முதல் மாலைத் திருப்புகழோடு தொடங்கி, கிறிஸ்து பிறப்பு விழாவின் முதல் மாலைத் திருப்புகழுக்குமுன் முடிவடையும்.

41. இக்காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் திருவருகைக் கால 1, 2, 3, 4- ஆம் ஞாயிறு எனப்படும்.

42. டிசம்பர் 17 முதல் 24 உட்பட வரும் வாரநாள்கள் கிறிஸ்து பிறப்புக்கு நேரடி முன்னேற்பாடாக அமைக்கப்பட்டுள்ளன.

VI. ஆண்டின் பொதுக் காலம்

43, தமக்கு உரிய தனிப் பண்புகள் உள்ள காலங்களுக்குப் புறம்பே, ஆண்டுச் சுழற்சியில் 33 அல்லது 34 வாரங்கள் எஞ்சி நிற்கின்றன. இவற்றில் கிறிஸ்துவின் மறைநிகழ்வின் யாதொரு சிறப்பு நிகழ்வும் கொண்டாடப்படுவது இல்லை. மாறாக, கிறிஸ்துவின் மறைநிகழ்வே முழுமையாக நினைவுகூரப்படுகின்றது; இது சிறப்பாக ஞாயிற்றுக்கிழமைதோறும் நிகழ்கின்றது. இக்காலம் 'ஆண்டின் பொதுக் காலம்' என அழைக்கப்படும்.

44 ஆண்டின் பொதுக் காலம்' ஜனவரி 6-ஆம் நாளுக்குப் பின்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்து வரும் திங்கள்கிழமை அன்று தொடங்கி, தவக் காலத்துக்கு முன்வரும் செவ்வாய்கிழமை வரை நீடிக்கின்றது; மீண்டும், பெந்தக்கோஸ்து ஞாயிறுக்குப் பின்வரும் திங்கள்கிழமை அன்று தொடங்கி, திருவருகைக் கால முதல் ஞாயிறின் முதல் மாலைத் திருப்புகழுக்குமுன் முடிவுறும்.

இக்காலத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வாரநாள்களுக்கான திருப்பலி நூலிலும் திருப்புகழ்மாலை நூலிலும் (பகுதி III, IV) தரப்பட்டுள்ள பாடத் தொகுப்புகள் மேற்சொன்ன வகையாகப் பயன்படுத்தப்படும்.

VI. இறைவேண்டல் நாள்களும் ஆண்டின் நான்கு பருவக் காலங்களும்

45. இறைவேண்டல் நாள்களிலும் ஆண்டின் நான்கு பருவக் காலங்களிலும் திரு அவை மக்களின் பல்வேறு தேவைகளுக்காக, சிறப்பாக நிலத்தின் விளைச்சலுக்காகவும் மனிதரின் உழைப்புக்காகவும் இறைவனை மன்றாடுவதும் வெளிப்படையாக நன்றி கூறுவதும் வழக்கம்.

46. இறைவேண்டல் நாள்களையும் ஆண்டின் நான்கு பருவக் காலங்களையும் பலவகைப்பட்ட இடங்களுக்கும் மக்களின் தேவைகளுக்கும் ஏற்றவாறு அமைக்க, அவற்றைக் கொண்டாடும் காலத்தையும் முறையையும் ஆயர் பேரவை ஒழுங்குபடுத்துவது நலம்.

எனவே கொண்டாட்டத்தின் அளவு - அதாவது, அது ஒரே நாளில் அல்லது பல நாள்களாக நடப்பது - அதே ஆண்டில் அதை மீண்டும் மீண்டும் நடத்துவது ஆகியவை பற்றிய விதிகள், அதிகாரம் பெற்றவர்களால் இடத்தின் தேவைகளைக் கருதி, வகுக்கப்பட வேண்டும்.

47. பல்வேறு தேவைகளுக்கான திருப்பலி மன்றாட்டுகளின் கருத்துக்கு மிகுந்த பொருத்தமுடையவற்றை ஆராய்ந்து, இக்கொண்டாட்டங்களின் ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற திருப்பலிகள் தேர்ந்தெடுக்கப்படும்.

==============↑ பக்கம் 111

இயல் 2
ஆண்டுக் குறிப்பேடு

தலைப்பு 1 - ஆண்டுக் குறிப்பேடும் அதில் குறிக்கப்பட வேண்டிய கொண்டாட்டங்களும்

48. திருவழிபாட்டு ஆண்டின் கொண்டாட்ட முறைமையை ஆண்டுக் குறிப்பேடு நெறி படுத்துகின்றது; இக்குறிப்பேடு உரோமை வழிபாட்டுமுறை அனைத்தின் உபயோகத்திற்காகவோ அல்லது ஏதாவது ஒரு தலத் திரு அவை அல்லது துறவு இல்லம் ஆகியவற்றின் உபயோகத்திற்காகவோ நிர்ணயிக்கப்பட்டதற்கு ஏற்ப, அது பொதுக் குறிப்பேடு அல்லது தனிக் குறிப்பேடு எனப்படும்.

49. ஆண்டின் பொதுக் குறிப்பேட்டில் கொண்டாட்டங்களின் தொகுப்பு அனைத்தும் தரப் பட்டிருக்கும்; அதாவது, காலங்களுக்கு உரிய மீட்பின் மறைநிகழ்வுகளின் கொண்டாட்டங்களும் அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த புனிதர்களின் கொண்டாட்டங்களும் அதில் இடம் பெற்றிருக்கும்; எனவே இவற்றைக் கட்டாயமாக அனைவரும் கொண்டாட வேண்டும்; மேலும் இறைமக்களிடையே விளங்கும் புனிதத்தின் பொதுத் தன்மையையும் தொடர்ச்சியையும் எடுத்துக்காட்டும் புனிதர்களின் கொண்டாட்டங்களும் அதில் இடம்பெறும்.

ஒரு குழுவினருக்கு மட்டும் உரிய கொண்டாட்டங்களையே தனிக் குறிப்பேடு கொண்டிருக்கும்; அது பொதுக் காலச் சுழற்சியோடு இசைவாகப் பொருந்தி இருக்கும்.15 ஏனெனில் தலத் திரு அவைகள் அல்லது துறவு இல்லங்கள் ஆகியவை சிறப்புக் காரணங்களுக்காகத் தங்களுக்கு உரிய புனிதர்களுக்குத் தனி வணக்கம் செலுத்துகின்றன.

முறையான அதிகாரம் பெற்றோர் இத்தகைய ஆண்டின் தனிக் குறிப்பேடுகளை உருவாக்கி, அவற்றுக்குத் திருத்தூதுப் பீடத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.

50. தனிக் குறிப்பேடுகளை உருவாக்க, கீழுள்ளவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:

அ) திருவழிபாட்டு ஆண்டில் மீட்பின் மறைநிகழ்வை விளக்கிக்காட்டிச் சிறப்பிக்கும் சிறப்புக் காலங்கள், பெருவிழாக்கள், விழாக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய காலச் சுழற்சி முழுமையாக இருக்க வேண்டும்; அது எல்லாத் தனிக் கொண்டாட்டங்களுக்கும் மேலானதாக அமைய வேண்டும்.

ஆ) திருவழிபாட்டு நாள் அட்டவணையில் ஒவ்வொரு கொண்டாட்டத்துக்கும் உள்ள ஒழுங்கு வரிசையையும் முன்னுரிமையையும் கருத்தில் கொண்டு, தனிக் கொண்டாட்டங்கள் பொதுக் கொண்டாட்டங்களோடு இசைவாகப் பொருந்தி இருக்க வேண்டும். தனிக்குறிப்பேடு கள் சமநிலை இழக்காமலிருக்க, ஒவ்வொரு புனிதரும் திருவழிபாட்டு ஆண்டில் ஒரேயொரு கொண்டாட்டமே பெற்றிருப்பார்; அருள்பணி நலனை முன்னிட்டு, மற்றொரு கொண்டாட்டம் ஒரு விருப்ப நினைவாக அமையலாம். அதாவது, பாதுகாவலர் அல்லது தலத் திரு அவையையோ துறவு இல்லத்தையோ நிறுவியவர் ஆகியோரின் உடலைக் கண்டெடுத்த அல்லது மாற்றி அடக்கம் செய்த நாள்.

இ) சிறப்பு அனுமதி பெற்ற கொண்டாட்டங்கள் மீட்பின் மறைநிகழ்வுக் கொண்ட காலச் சுழற்சியில் ஏற்கெனவே இடம்பெற்றவற்றின் இரட்டிப்பாய் இருக்கக்கே" எண்ணிக்கையிலும் மிகுந்திருக்க விடக்கூடாது.
==============↑ பக்கம் 112

51. ஒவ்வொரு மறைமாவட்டமும் தனக்கு உரிய ஆண்டுக் குறிப்பேடும், திருப்புகழ் மாலையிலும் திருப்பலி நூலிலும் தனக்கு உரிய சிறப்புப் பகுதியும் கொண்டிருப்பது பொருத்தமாக இருப்பது முறையே. ஆயினும் ஒரு மண்டிலத்துக்கோ, நிலப்பகுதிக்கோ, நாட்டுக்கோ, அகன்ற நிலப்பரப்புக்கோ பொதுவான வகையில் அவை இருக்கத் தடை இல்லை; தேவைப்படுகிறவர்கள் ஒருங்கிணைந்து ஒத்துழைத்து இவற்றைத் தயாரிப்பர்.

இதே அடிப்படையில் துறவு அவைகள் ஒரே நாட்டிலுள்ள தங்களுடைய " மண்டிலங்களுக்குப் பொதுவான ஆண்டுக் குறிப்பேடுகளை உருவாக்கலாம்.

52 ஆண்டின் பொதுக் குறிப்பேட்டில் தங்களுக்கு உரிய பெருவிழாக்கள், விழாக்கள்: நினைவுகள் ஆகியவற்றைப் புகுத்துவதால் அவரவர்க்கு உரிய ஆண்டின் தனிக் குறிப்பேடு உருவாகின்றது. அதாவது:

அ) மறைமாவட்டத்தின் ஆண்டுக் குறிப்பேட்டில், பாதுகாவலர்களின் கொண்டாட்டங்களும் மறைமாவட்டத் தலைமைக் கோவில் நேர்ந்தளிப்பு விழாவும் தவிர, தங்கள் பிறப்பு, நீண்ட காலமாக தங்கி வாழ்தல், இறப்பு போன்ற காரணங்களால் மறைமாவட்டத்தோடு தனிவகையில் தொடர்புள்ள புனிதர் அல்லது அருளாளர் கொண்டாட்டங்கள்;

ஆ) துறவு அவையினரின் ஆண்டுக் குறிப்பேட்டில், துறவு அவைப் பெயர் விழா, நிறுவியவர், பாதுகாவலர் ஆகியோரின் விழாக்களோடு, அந்த அவையின் உறுப்பினரான அல்லது அந்த அவையோடு தனித் தொடர்பு கொண்டவரான புனிதர், அருளாளர் கொண்டாட்டங்கள்;

இ) தனிக் கோவிலின் ஆண்டுக் குறிப்பேட்டில், மறைமாவட்டத்துக்கு அல்லது துறவு அவைக்கு உரிய விழாக்களோடு திருவழிபாட்டு நாள் ஏட்டில் உள்ளதும் அக்கோவிலுக்குத் தனி வகையில் உரியதுமான கொண்டாட்டங்களும் அக்கோவிலில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள புனிதர்களின் கொண்டாட்டங்களும். துறவு இல்ல உறுப்பினர்களும் தலத் திரு அவைக் குழுமத்தோடு மறைமாவட்டத் தலைமைக் கோவில் நேர்ந்தளிப்பு ஆண்டு விழா, தலக் கோவிலின் மற்றும் அவர்கள் வாழும் நிலப் பகுதியின் பாதுகாவலர் விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள வேண்டும்.

53. ஒரு மறைமாவட்டம் அல்லது துறவு இல்லத்துக்கு உரிய புனிதர், அருளாளர் பலரானால் மறைமாவட்டம் அனைத்தின் குறிப்பேடு அல்லது நிறுவனம் அனைத்தின் குறிப்பேடு சமநிலை இழக்காமலிருக்கக் கவனம் செலுத்த வேண்டும். எனவே:

அ) மறைமாவட்டத்தின் அல்லது துறவு இல்லத்தின் அல்லது அதனுடைய தனிப் பிரிவின் புனிதர், அருளாளர் அனைவருக்கும் ஒன்றாக ஒரு பொது விழாக் கொண்டாடலாம்;

ஆ) மறைமாவட்டம் முழுவதுக்கும் அல்லது துறவு இல்லம் அனைத்துக்கும் தனிச் சிறப்பு வாய்ந்த புனிதரையும் அருளாளரையும் மட்டுமே ஆண்டுக் குறிப்பேட்டில் சேர்க்கலாம்;

இ) மற்றப் புனிதரும் அருளாளரும் அவர்களோடு நெருங்கிய வகையில் தொடர்பு கொண்டுள்ள இடங்களில் அல்லது அவர்களது உடல்கள் பாதுகாக்கப்படும் இடங்களில்
மட்டும் கொண்டாடப்படுவர்.

54. மேற்குறிப்பிட்ட, தனிக் குழுக்களுக்கு உரிய கொண்டாட்டங்களில் சிலவற்றுக்கு திருவழிபாட்டு நாள்களின் அட்டவணையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அல்லது அவை வரலாற்று முக்கியத்துவமோ அருள்பணி நலன்களுக்கு உரிய காரணங்களோ கொண்டனவாய் இருக்கும். இவை நீங்கலாக, ஏனையவை எல்லாம் கட்டாய அல்லது விருப்ப நினைவுகளாகக் குறிக்கப்படும். ஆயினும், மறைமாவட்டத்தில் அல்லது துறவு இல்லத்தில் உள்ளதைவிட மிகச் சிறப்பாகச் சில குறிப்பிட்ட இடங்களில் கொண்டாடப்படத் தடை இல்லை.

55, ஆண்டின் சிறப்புக் குறிப்பேட்டைக் கடைப்பிடிக்கக் கடமைப்பட்ட அனைவரும் அதில் இடம் பெற்றுள்ள கொண்டாட்டங்களை அதில் உள்ளவாறு நிகழ்த்தக் கடமைப்பட்டுள்ளனர்; திருத்தூதுப் பீடத்தின் ஒப்புதல் பெறாமல் அக்குறிப்பேட்டில் உள்ளவற்றை அகற்றவோ தரம் மாற்றவோ கூடாது.
==============↑ பக்கம் 113

தலைப்பு II - கொண்டாட்டங்களுக்கு உரிய சிறப்பு நாள்

56 புனிதரின் விண்ணகப் பிறப்பு நாளில் திரு அவை அவர்களுக்கு ... கொண்டாடுவது வழக்கம்; தேவைக்கு ஏற்ப ஆண்டின் தனிக் குறிப்பேடுக... இம்முறையைப் பின்பற்ற வேண்டும்.

ஆயினும், ஒவ்வொரு தலத் திரு அவைக்கும் துறவு இல்லத்துக்கும் தங்களுக்கு உரிய சிறப்புக் கொண்டாட்டங்கள் முக்கிய மானாலும், பொதுக் குறிப்பேட்டில் உள்ள பெருவிழாக்கள், விழாக்கள், கட்டாய நினைவுகள் ஆகியவற்றைக் கொண்டாடுவதில் கூடுமானவரை இணக்கம் கொண்டிருப்பது மிகுந்த பயன் தரும்.

எனவே ஆண்டின் தனிக் குறிப்பேட்டில் கொண்டாட்டங்களைப் பதிவு செய்யும்போது, பின்வருபவை பின்பற்றப்பட வேண்டும்:

அ) ஆண்டின் பொதுக் குறிப்பேட்டில் உள்ள கொண்டாட்டங்களை அங்குள்ளபடி அந்தந்த நாளில் தனிக் குறிப்பேட்டிலும் பதிவு செய்ய வேண்டும்; தேவையானால், கொண்டாட்டத்தின் தரத்தை மாற்றிக்கொள்ளலாம்.

தலக் கோவிலுக்கு உரிய கொண்டாட்டங்களைப் பதிவு செய்வதில், மறைமாவட்டத்துக்கு உரிய அல்லது துறவு அவைக்கு உரிய ஆண்டுக் குறிப்பேடுகளை மேற்குறித்த விதிப்படி கருத்தில் கொள்க.

ஆ) ஆண்டின் பொதுக் குறிப்பேட்டில் இடம்பெறாத புனிதரின் கொண்டாட்டங்களை அவர்களுடைய விண்ணகப் பிறப்பு நாளில் குறித்தல் வேண்டும். விண்ணகப் பிறப்பு நாள் தெரியாதென்றால், அப்புனிதருக்கு உரிய மற்றொரு நாளைத் தேர்ந்து கொள்ளலாம்: எடுத்துக்காட்டாக, புனிதரின் திருநிலைப்பாட்டு நாள், அவரது உடலைக் கண்டெடுத்த நாள், இடமாற்றம் செய்த நாள் அல்லது குறிப்பேட்டில் வேறு கொண்டாட்டங்கள் இல்லாத ஒரு நாள்.

இ) ஆண்டின் பொதுக் குறிப்பேட்டில் அல்லது தனிக் குறிப்பேட்டில் உள்ள கட்டாயக் கொண்டாட்டம், தரத்தில் குறைந்தது எனினும், ஒரு புனிதரின் விண்ணகப் பிறப்பு நாளை அல்லது அவருக்கு உரிய நாளைக் கொண்டாடத் தடையாய் இருக்குமானால், அண்மையில் இருக்கும் தடையற்ற மற்றொரு நாளில் அது கொண்டாடப்படலாம்.

ஈ) ஆனால் அருள்பணி நலனைக் கருதி, கொண்டாட்டத்தை வேறு நாளுக்கு மாற்றக் கூடாதென்றால், தடைசெய்யும் கொண்டாட்டத்தை வேறு நாளுக்கு மாற்றலாம்;

உ) சிறப்பு அனுமதி வழங்கப்பட்டவை என்று அழைக்கப்படும் கொண்டாட்டங்களை அருள்பணி நலனுக்கு ஏற்ப மிகப் பொருத்தமான நாளில் பதிவு செய்ய வேண்டும்.

ஊ) திருவழிபாட்டு ஆண்டுச் சுழற்சி முழுமையாகவும் தெளிவாகவும் விளங்கவும், புனிதரின் கொண்டாட்டங்கள் நிலையாகத் தடைபடாதிருக்கவும், தவக் காலத்திலும் பாஸ்கா எண்கிழமையிலும் மற்றும் டிசம்பர் 17 முதல் 31வரையுள்ள நாள்களிலும் புனிதரின் தனிப்பட்ட கொண்டாட்டங்களைக் குறிக்காமல் விட்டுவிடலாம்; ஆனால் நினைவுத் திருவழிபாட்டு நாள்களின் அட்டவணை எண் 8: அ, ஆ, இ, ஈ-இல் குறிப்பிட்டுள்ள விழாக்களும் வேறு காலத்துக்கு மாற்றக் கூடாத பெருவிழாக்களும் இவ்விதிக்கு விலக்காய் இருக்கும்.

புனித யோசேப்பு பெருவிழா கடன் திருநாளாக இருக்கும் இடங்களில், அது ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தால் அப்பெருவிழாவை அதன்முன் வரும் சனிக்கிழமை, அதாவது மார்ச் 18க்கு மாற்றலா " அது கடன் திருநாளாகக் கொண்டாடப்படாத இடங்களில் ஆயர் பேரவை அதைத் தம் காலத்திற்கும் புறம்பே உள்ள வேறொரு நாளுக்கு மாற்றலாம்.
==============↑ பக்கம் 114

57 ஆண்டுக் குறிப்பேட்டில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்ட புனிதர்கள் அல்லது அருளாளர் ஆகியோரின் விழாக்கள் ஒரே தரம் உள்ளவையாகக் கொண்டாடப்பட்டால், எப்பொழுதும் ஒன்றாகவே கொண்டாடப்பட வேண்டும்; அந்த நாள் அவர்களுள் ஒருவருக்கு மிகப் பொருத்தமானதாயினும் இவ்வாறு ஒன்றாகத்தான் கொண்டாடப்பட வேண்டும். ஆனால் இப்புனிதர்கள், அருளாளர்கள் ஆகியோரில் ஒருவரோ ஒரு சிலரோ உயர்தரக் கொண்டாட்டம் பெற்றிருந்தால், அவர்களைக் குறித்து மட்டும் திருப்புகழ்மாலை கொண்டாடப்படும்; ஏனையோருக்குக் கொண்டாட்டம் இராது அல்லது கட்டாய நி வேறு நாளைக் குறிப்பிடக்கூடுமானால், அப்படிச் செய்யலாம்.

58. வாரநாள்களில் வரும் விழாக்கள் நம்பிக்கையாளரின் இறைப்பற்றுதலைப் பெற்றிருந்தால், அவர்களின் அருள் பணி நலனைக் கருதி, அவ்விழாக்களை ஆண்டின் பொதுக்கால ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடலாம்; இவ்வாறு செய்ய, விழாத் தரத்தை நிர்ணயிக்கும் பட்டியலில் அவை ஞாயிற்றுக்கிழமையைவிட மேலான தரம் உடையனவாய் இருக்க வேண்டும். அன்று மக்கள் கூடி வரும் எல்லாத் திருப்பலிகளையும் இக்கொண்டாட்டத்துக்கு உரிய திருப்பலியாக நிகழ்த்தலாம்.

59. திருவழிபாட்டு நாள்களின் கொண்டாட்டத்தின் முன்னுரிமை கீழுள்ள அட்டவணைப்படி யே நிர்ணயிக்கப்பட வேண்டும்:
==============↑ பக்கம் 115

முன்னுரிமைப்படி ஒழுங்குபடுத்தப்பெற்ற திருவழிபாட்டு நாள்களின் அட்டவணை

1. ஆண்டவருடைய பாடுகள், உயிர்ப்பு இவற்றின் பாஸ்கா மூன்று நாள்கள்.

2 ஆண்டவருடைய பிறப்பு, திருக்காட்சி, விண்ணேற்றம், பெந்தக்கோஸ்து, திருவருகைக் கால், தவக் கால, பாஸ்கா கால ஞாயிற்றுக்கிழமைகள். திருநீற்றுப் புதன். திங்கள்முதல் வியாழன் வரை உள்ள புனித வாரநாள்கள்.
பாஸ்கா எண்கிழமை நாள்கள்.

3. பொது ஆண்டுக் குறிப்பேட்டில் இடம் பெறும் ஆண்டவரின் பெருவிழாக்களும்
புனித கன்னி மரியா, மற்றும் புனிதர்களின் பெருவிழாக்களும்.
இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவு.

4. சிறப்புப் பெருவிழாக்கள், அதாவது : அ) ஒரு குறிப்பிட்ட இடத்தின், ஊரின் அல்லது நகரின் முக்கிய பாதுகாவலரின்
பெருவிழா.

ஆ) ஒரு கோவிலின் நேர்ந்தளிப்பு நாள் அல்லது நேர்ந்தளிப்பு ஆண்டுப் பெருவிழா.
இ) ஒரு கோவிலின் பெயர் கொண்ட புனிதர் பெருவிழா.
ஈ) துறவு அவைகளின் பெயர் கொண்ட புனிதர் பெருவிழா அல்லது நிறுவுநர் பெருவிழா அல்லது முக்கிய பாதுகாவலர் பெருவிழா.

5. ஆண்டின் பொதுக் குறிப்பேட்டில் இடம்பெறும் ஆண்டவரின் விழாக்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளும்.

6. ஆண்டவருடைய பிறப்புக் கால ஞாயிற்றுக்கிழமைகளும் ஆண்டின் பொதுக் கால புனிதரின் விழாக்களும்.

7. ஆண்டுப் பொதுக் குறிப்பேட்டிலுள்ள புனித கன்னி மரியாவின் விழாக்களும்

8. சிறப்பு விழாக்கள், அதாவது:

அ) மறைமாவட்டத்தின் முக்கிய பாதுகாவலர் விழா.

ஆ) மறைமாவட்டத் தலைமைக் கோவில் நேர்ந்தளிப்பு ஆண்டு விழா

இ) நிலப்பகுதி அல்லது மண்டிலம், நாடு, அகன்ற நிலப்பரப்பு ஆகியவற்றின் முக்கிய பாதுகாவலர் விழா

ஈ) எண் 4-இல் உள்ள விதிகளுக்கு முரண்படா வண்ணம் துறவு அவையின் அல்லது பாதுகாவலர் விழா.
துறவு அவை மண்டிலத்தின் பெயர் விழா, நிறுவுநர் விழா, முக்க"

உ) குறிப்பிட்ட கோவிலுக்கு உரிய வேறு விழாக்கள்.

ஊ) அந்தந்த மறைமாவட்டத்தின் அல்லது துறவு அவைகளின் ஆண்டு
==============↑ பக்கம் 116

9. திருவருகைக் காலத்தில், டிசம்பர் 17 முதல் 24வரை வரும் வாரநாள்கள்.
ஆண்டவருடைய பிறப்பு எண்கிழமை நாள்கள். தவக் கால வாரநாள்கள்.

10. ஆண்டின் பொதுக் குறிப்பேட்டிலுள்ள கட்டாய நினைவுகள். 11. சிறப்புக் கட்டாய நினைவுகள், அதாவது:

அ) இடம், மறைமாவட்டம், நிலப்பகுதி, துறவு அவை, மண்டிலம் ஆகியவற்றின்
இரண்டாம் பாதுகாவலரின் நினைவுகள்.

ஆ) அந்தந்த மறைமாவட்டம் அல்லது துறவு அவைகளின் ஆண்டுக் குறிப்பேட்டில்
இடம்பெறும் வேறு கட்டாய நினைவுகள்.

12. விருப்ப நினைவுகள்: இவற்றை உரோமைத் திருப்பலி நூலும் திருப்புகழ்மாலையும் தரும் பொதுப் படிப்பினைகளில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளபடி எண் 9-இல் குறிக்கப்பட்ட நாள்களிலும் கொண்டாடலாம். அவ்வாறே தவக் கால வாரநாள்களில் கட்டாய நினைவுகள் வர நேரிட்டால் அவற்றை விருப்ப நினைவுகளாகக் கொண்டாடலாம்.

13. டிசம்பர் 16 உட்பட வரும் திருவருகைக் கால வாரநாள்கள்.

ஜனவரி 2முதல் திருக்காட்சி விழாவுக்குப்பின் வரும் சனிக்கிழமைவரை உள்ள ஆண்டவரின் பிறப்புக் கால வாரநாள்கள். பாஸ்கா எட்டாம் நாளுக்குப்பின் வரும் திங்கள்கிழமை முதல் பெந்தக்கோஸ்து விழாவுக்கு முன் வரும் சனிக்கிழமை வரை வரும் பாஸ்கா கால வாரநாள்கள்.

"ஆண்டின் பொதுக் கால" வாரநாள்கள்.

60. ஒரே நாளில் பல கொண்டாட்டங்கள் சேர்ந்து வந்தால் திருவழிபாட்டு நாள்களின் அட்டவணையில் உயர்நிலை வகிக்கும் கொண்டாட்டம் நடைபெறும். எனினும், உயர்நிலை வகிக்கும் ஒரு திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தால் தடைபட்ட பெருவிழா, மேலாள அட்டவணையில் 1-8 எண்களில் காணப்படும் நாள்கள் இல்லாத மற்றொரு அருகிலுள்ள நாளுக்கு மாற்றப்படும்; இதற்கு எண் 5-இல் தரப்பட்ட விதிகள் கடைப்பிடிக்கப்படும். ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்புப் பெருவிழா புனித வார நாள்களில் வரும்போது, அது பாஸ்கா கால இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்து வரும் திங்கள்கிழமைக்கு எப்போதும் மாற்றப்படும்.

இவ்வாறு வரும் வேறு கொண்டாட்டங்கள் அந்த ஆண்டில் விட்டுவிடப்படும்.

61. ஒரே நாளில் நிகழும் திருப்புகழ்மாலையின் மாலை வழிபாடும் அடுத்த நாளின் முதல் மாலை வழிபாடும் கொண்டாட வேண்டியது நேர்ந்தால், திருவழிபாட்டு நாள்களின் அட்டவணையில் உயர்நிலை வகிக்கும் கொண்டாட்டத்தின் மாலை வழிபாட்டுக்கே இடம் அளிக்க வேண்டும்; இரண்டும் சரிநிகராய் இருந்தால், நிகழும் நாளின் மாலை வழிபாடு -
இடம்பெறும்.

==============↑ பக்கம் 117

திருவழிபாட்டுக் கொள்கை விளக்கத்தை நடைமுறைப்படுத்தும்
அறிவுரைக்குழு

வத்திக்கான் நகரம், ஏப்ரல் 25, 1969
தலைவர் இந்திய ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழு இந்தியா.

Prot. n. 802 / 69

மேதகு பேராயர் அவர்களே,

திருவழிபாட்டுக் கொள்கை விளக்கம், எண். 37-40-க்கு ஏற்றவாறு, திருவழிபாட்டில் தழுவியமைத்தல்களுக்காக இந்திய ஆயர் பேரவையின் முன்மொழிதல்களை "அறிவுரைக் குழுவின் தலைவர்" மேன்மைமிகு பென்னோ கர்தினால் குட் ஏற்றுக்கொண்டார். அவரது பெயரால் பின்வருபவற்றை நான் உறுதிப்படுத்துகின்றேன்.

1. இடத்தின் பழக்க வழக்கத்துக்கு ஏற்ப, திருப்பலியின்போது அருள்பணியாளரும் நம்பிக்கையாளரும் தரையில் அமர்தல், நிற்றல், இது போன்ற உடலின் நிலைகளை மேற்கொள்ளலாம்; காலணிகளையும் அகற்றிவிடலாம்.

2. முழங்காலிடு வதற்குப் பதிலாக, தலைக்குமேல் கைகளைக் குவித்துப் பணிந்து வணங்கலாம் (அஞ்சலி ஹஸ்தா).

3. பாவத்துயர்ச் செயலின் பகுதியாக, வார்த்தை வழிபாட்டுக்கு முன்பும், நற்கருணை மன்றாட்டின் இறுதியிலும் அருள்பணியாளரும் நம்பிக்கையாளரும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணக்கம் செலுத்தலாம் (பஞ்சாங்கப் பிரணாம்).

4. பொருள்களை முத்தமிடுதலுக்குப் பதிலாக, அவ்விடத்தின் வழக்கத்துக்கு ஏற்ப, விரல்களாலோ உள்ளங்கையாலோ அவற்றைத் தொட்டுக் கண்களிலோ நெற்றியிலோ ஒற்றிக்கொள்ளலாம்.

5. அமைதி முத்தத்திற்குப் பதிலாக, கைகளைக் குவித்து வணக்கம் செலுத்தியோ ஒருவரின் விரித்த கைகளிடையே மற்றவரின் குவித்த கைகளை வைத்தோ அமைதியை வழங்கலாம்.

6. தூபத்தைத் திருவழிபாட்டில் அதிகம் பயன்படுத்தலாம்; ஒரு சிறிய கைப்பிடி யுள்ள தூபக் கலத்தைப் பயன்படுத்தலாம்.

7. திருப்பலி உடைகளை எளிமையாக்கலாம். உரோமை வழிபாட்டு முறைப்படிப் பயன்படுத்தப்படும் வழக்கமான திருவுடைகளுக்குப் பதிலாகத் தோள் துகிலோடு (அங்கவஸ்திரம்) கூடிய நீண்ட அங்கி போன்ற திருப்பலி மேலாடையை அணிந்து கொள்ளலாம். இவ்வாறு மாற்றப்பட்ட உடைகளின் மாதிரிகள் "அறிவுரைக்குழுவுக்கு" அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

8. பீடத்தில் திருமேனித் துகிலுக்குப் பதிலாகப் பொருத்தமான பொருளால் செய்யப்பட்ட தாம்பாளத்தைப் பயன்படுத்தலாம்.
==============↑ பக்கம் 121

9. மெழுகுதிரிகளுக்குப் பதிலாக, எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தலாம்

10. திருப்பலியின் தயாரிப்புச் சடங்கில் கீழ்க்கண்டவற்றைச் சேர்த்துக்கொள்ள

அ) காணிக்கைப் பொருள்களை வழங்குதல்.

ஆ) திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளருக்கு இந்திய முறையில் ஆரத்தி எடுத்தோ கைகளைக் கழுவியோ வரவேற்றல்.

இ) விளக்கேற்றல்.

ஈ) நம்பிக்கையாளர் ஒப்புரவின் அடையாள மாக ஒருவர் மற்றவருக்கு அமைதி வாழ்த்துத் தெரிவித்தல்.

11. நம்பிக்கையாளரின் மன்றாட்டில் கருத்துக்களின் அமைப்பும் வடிவமும் தேவைக்கு ஏற்ப இயல்பாக இடம்பெறலாம். இருப்பினும், திரு அவையின் பொதுமைத்தன்மையை மறந்து விடலாகாது.

12. காணிக்கைச் சடங்கின்போதும், நற்கருணை மன்றாட்டின் இறுதியிலும் இந்திய மரபுப்படி அதாவது இரு முறையோ மும்முறையோ தீப, தூப, மலர் அஞ்சலி செலுத்தலாம். மேற்கண்ட தழுவியமைத்தல்களை ஆயர் பேரவையும் தலத் திரு அவை ஆட்சியாளரும் பொருத்தமான இடங்களிலும் நம்பிக்கையாளருக்கு ஏற்புடைய விதத்திலும் அளவிலும் நடைமுறைப்படுத்தலாம். இருப்பினும் இத்தகைய மாற்றங்களுக்கு முன் அவற்றைப் பற்றிய அறிவுரை வழங்கப்பட வேண்டும். தேவையானால் படிப்படியாக அவற்றைச் செயல்படுத்தலாம்.

பல்வேறு துறைகளில் புலமை பெற்றவரின் ஒத்துழைப்போடு இந்தியாவுக்கான புதிய நற்கருணை மன்றாட்டை உருவாக்குவதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது. நிறைவு பெற்றபின், அதன் படிகள் "அறிவுரைக்குழுவின்" ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதனை இந்நிலையில் அதிகம் பரவலாக்கம் செய்யாதிருப்பது நல்லது.

அருள்வாழ்வில் இயல்பாகவே ஈடுபாடு கொண்ட இந்திய மக்களுக்கு பாஸ்கா மறைநிகழ்வில் அவர்களது வாழ்வை ஆழப்படுத்த இத்தழுவியமைத்தல்கள் பெரிதும் உதவும் என நம்பி இறைவனை இறைஞ்சுகின்றோம்.

கிறிஸ்துவில்
Sd/- A. புஞ்ஜீனி
செயலர்
85 / 1971750
==============↑ பக்கம் 122

 

====================

 

 

image