image

 

புனித சனிக்கிழமை

1. புனித சனிக்கிழமை அன்று திரு அவை ஆண்டவருடைய கல்லறை அருகில் அவருடைய பாடுகள், இறப்பு ஆகியவற்றையும் அவர் பாதாளத்தில் இறங்கனதையும் சிந்தித்துக் கொண்டும் அவரது
உயிர்ப்பை எதிர்பார்த்துக்கொண்டும் காத்திருக்கின்றது. பீடம் வெறுமையாக இருக்கின்றது.

2. பாஸ்கா மகிழ்ச்சிக்கான நேரம் வரும்வரை - அதாவது உயிர்ப்பின் இரவாகிய சிறப்புத் திருவிழிப்பவரை - வெறுமையாய் இருக்கும் பீடத்தில் திரு அவை திருப்பலி ஒப்புக் கொடுப்பதில்லை. இப்பாஸ்கா மகிழ்ச்சி ஐம்பது நாள்கள் தொடரும்.

3. திருப்பயண உணவாக மட்டுமே இன்று நற்கருணை வழங்கப்படலாம்.

==========================
புனித இரவில் பாஸ்கா திருவிழிப்பு


1. மிகத் தொன்மையான மரபுப்படி இவ்விரவு ஆண்டவருக்காகத் திருவிழிப்புக் கொண்டாடும் இரவாக இருந்து வந்துள்ளது (விப 12:42). அன்று நற்செய்தியின் அறிவுரைப்படி (லூக் 12:35-37) எரியும் விளக்குகளைக் கைகளில் ஏந்தி நம்பிக்கையாளர் ஆண்டவர் எப்பொழுது வருவார் எனக் காத்திருப்போரைப் போன்று இருப்பார்கள். இவ்வாறு, அவர் வந்ததும், அவர்கள் விழித்திருக்கக் கண்டு அவர்களைத் தம் பந்தியில் அமர்த்துவார்.

'இத்திருவிழிப்பைக் கொண்டாடும் முறையாவது:

முதல் பகுதி: திரு ஒளி வழிபாடும் பாஸ்கா புகழுரையும்;

இரண்டாம் பகுதி: வார்ததை வழிபாடு - ஆண்டவராகிய கடவுள் தொடக்கத்திலிருந்தே தம் மக்களுக்குப் புரிந்துள்ள அரும்பெரும் செயல்களைப் புனிதத் திரு அவை சிந்தித்து, அவரது வார்த்தையிலும் வாக்குறுதிகளிலும் நம்பிக்கை கொள்ள முனைகின்றது;

மூன்றாம் பகுதி: திருமுழுக்கு வழிபாடு. விடியல் நெருங்கி வர, திரு அவையின் புது உறுப்பினர் திருமுழுக்கினால் புதுப் பிறப்பு அடைவர்;

நான்காம் பகுதி: நற்கருணை வழிபாடு. ஆண்டவர் தம் இறப்பினாலும் உயிர்பினாலும் முன்னேற்பாடு செய்த திருவிருந்தில், அவர் மீண்டும் வரும்வரை பங்குகொள்ளத் திரு அவை அழைக்கப்படுகின்றது.

3. பாஸ்கா திருவிழிப்பு முழுவதும் இரவிலேயே கொண்டாடப்பட வேண்டும்; எனவே அதை இரவுக்குமுன் தொடங்கக் கூடாது; ஞாயிறு விடியுமுன் முடிக்க வேண்டும்.

4. திருவிழிப்புத் திருப்பலியை நள்ளிரவுக்கு முன்னரே ஒப்புக்கொடுத்தாலும், அது ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு திருப்பலி ஆகும்.

5. இவ்விரவுத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள், பகலில் நடைபெறும் திருப்பலியிலும் நற்கருணை உட்கொள்ளலாம். தனியாகவோ கூட்டாகவோ இவ்விரவுத் திருப்பலியை நிறைவேற்றிய அருள்பணியாளர் பகலில் தனியாகவோ கூட்டாகவோ இரண்டாவது திருப்பலி நிறைவேற்றலாம். பாஸ்கா திருவிழிப்புக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் வாசகத் திருப்புகழ்மாலையில் பங்குபெறுவதில்லை.

6. அருள் பணியாளரும் திருத்தொண்டரும் திருப்பலிக்கான வெண்ணிறத திருவுடைகளை அணிவர்.

7. திருவிழிப்பில் பங்கெடுக்கும் அனைவரும் மெழுகுதிரிகளை வைத்திருக்க வகை செய்ய வேண்டும். கோவிலில் உள்ள விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்கும்.

முதல் பகுதி திருவிழிப்பின் சிறப்புத் தொடக்கம் அல்லது திரு ஒளி வழிபாடு

தீயையும் பாஸ்கா திரியையும் புனிதப்படுத்துதல்

8. கோவிலுக்கு வெளியே வசதியான இடத்தில் தீ தயாராய் இருக்கும். இறைமக்கள் அங்கே கூடியிருப்பார்கள். அருள்பணியாளர் பிற பணியாளர்களோடு அங்கு . பணியாளர் ஒருவர் பாஸ்கா திரியைக் கொண்டு வருவார். அங்குப் பவனிக்க , சிலுவையையும் எரியும் திரிகளையும் கொண்டு வருவதில்லை.

கோவிலுக்கு வெளியே தீயைப் பற்றவைக்க முடியாதெனில், கீழே எண் 13-இல் உள்ளபடி திருச்சடங்கை நடத்தலாம்.

9. ''தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே என்று அருள் பணியாளர் சொல்கின்றபொழுது, அவரும் நம்பிக்கையாளரும் தங்கள்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்கின்றனர். அருள்பணியாளர் கூடியுள்ள இறைமக்களை வழக்கம் போல் வாழ்த்தி, கீழுள்ளவாறு அல்லது இது போன்று சுருக்கமாகத் திருவிழிப்பைப் பற்றி அறிவுரை கூறுவார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து சென்ற புனிதமிக்க இவ்விரவில்
திரு அவை உலகெங்கும் பரந்து வாழும் தன் மக்களை
விழித்திருக்கவும் மன்றாடவும் ஒன்றுகூடுமாறு அழைக்கின்றது.
இவ்வாறு இறைவார்த்தையைக் கேட்டும்
அவருடைய மறைநிகழ்வுகளைக் கொண்டாடியும்
அவருடைய பாஸ்காவை நாம் நினைவுகூர்ந்தால்,
சாவின் மீது அவர் கொண்ட வெற்றியில் நாமும் பங்குபெறுவோம்,
அவரோடு இறைவனில் வாழ்வோம் என்னும் எதிர்நோக்கைக் கொண்டிருப்போம்.

10. பின் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துத்தீயின் மீது ஆசி வழங்கிச் சொல்கின்றார்:

மன்றாடுவோமாக. இறைவா,
உம் திருமகன் வழியாக,
நம்பிக்கையாளர் மீது உமது மாட்சியின் பேரொளி சுடர்ந்திடச் செய்தீரே;
இப்புதுத் தீயைப் 4 புனிதப்படுத்தியருளும்;
இவ்வாறு இப்பாஸ்கா திருவிழா வழியாக
விண்ணகத்தின் மீது கொண்ட ஆவலால் நாங்கள் பற்றியெரிவோமாக;
அதனால் தூய்மையான உள்ளத்தோடு
முடிவில்லா மாட்சியின் விழாவுக்கு வந்து சேரும் வலிமை பெறுவோம்" எங்கள்.

பதில்: ஆமென்.

11. புதுத் தீயைப் புனிதப்படுத்தியபின் பணியாளர்களுள் ஒருவர் பாஸ்கா திரியை அருள்பணியாளரிடம் கொண்டுவர, அருள்பணியாளர் எழுத்தாணி கொண்டு அதில் சிலுவை அடையாளம் வரைகின்றார்; பின், சிலுவைக்கு மேல் "ஆல்பா என்னும் கிரேக்க எழுத்துக்கு இணையான 'அ' எனும் தமிழ் எழுத்தையும் சிலுவைக்குக் கீழே "ஒமேகா" என்னும் கிரேக்க எழுத்துக்கு இணையான 'ன' எனும் தமிழ் எழுத்தையும் எழுதுகின்றார். சிலுவையின் நான் கு பக்கங்களிலும், நிகழும் ஆண்டின் நான்கு எண்களையும் குறிக்கின்றார். அப்பொழுது அவர் சொல்கின்றார்:

as as 1. கிறிஸ்து நேற்றும் இன்றும் (சிலுவையின் நேர் கோட்டை வரைகின்றார்)
2. முதலும் முடிவும் (குருக்குக் கோட்டை வரைகின்றார்)
3. அகரமும் (நேர் கோட்டுக்கு மேல் 'அ' என்னும் எழுத்தை எழுதுகிறார்)
4. னகரமும் (நேர்க்கோட்டுக்குக் கீழே 'ன' எனும் எழுத்தை எழுதுகின்றார்);
5. நேரங்கள் அவருடையன (நிகழும் ஆண்டின் முதல் எண்ணைச் சிலுவையின் இடப் பக்க மேற்பகுதியில் குறிக்கின்றார்);
6. காலங்களும் அவருடையன (நிகழும் ஆண்டின் இரண்டாம் எண்ணைச் சிலுவையின் வலப் பக்க மேற்பகுதியில் குறிக்கின்றார்);
7. மாட்சியும் ஆட்சியும் அவருக்கே ( நிகழும் ஆண்டின் மூன்றாம் எண்ணைச் 'சிலுவையின் இடப் பக்கக் கீழ்ப்பகுதியில் குறிக்கின்றார்);
8. என்றென்றும் எக்காலமுமே, ஆமென். (நிகழும் ஆண்டின் நான்காம் எண்ணைச் சிலுவையின் வலப் பக்கக் கீழ்ப்பகுதியில் குறிக்கின்றார்).

12 சிலுவை அடையாளத்தையும் எழுத்து, எண் குறிகளையும் இவ்வாறு பாஸ்கா தாயின்மீது வரைந்தபின், அதில் ஐந்து சாம்பிராணி மணிகளைச் சிலுவை வடிவில் பதிக்கலாம். அப்பொழுது அவர் சொல்கின்றார்:

1. தம்முடைய தூய  
1
2. மாட்சிக்கு உரிய காயங்களால்  
3. ஆண்டவராகிய கிறிஸ்து  
4
2
5
4. நம்மைக் கண்காணித்துப்  
5. பேணிக் காப்பாராக. ஆமென்.  
3





 

13. பெரும் இடையூறுகளால் தீயைப் பற்றவைக்க இயலாது எனில் தீயைப் புனிதப்படுத்தும் திருச்சடங்கைச் சூழ்நிலைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். வழக்கம் போல மக்கள் கோவிலில் கூடியிருக்க, அருள்பணியாளரும் பிற பணியாளரும் பாஸ்கா திரியுடன் கோவிலின் வாயிலுக்கு வருவார்கள். மக்கள் இயன்றவரை அருள்பணியாளரை நோக்கித் திரும்பி நிற்பார்கள்.

எண் 9-இல் குறிப்பிட்டுள்ளபடி அருள்பணியாளர் மக்களை வாழ்த்தி, அறிவுரை கூறுகின்றார்: பின் மேல் காணும் 10 - 13-களில் உள்ளவாறு தீயானது புனிதப்படுத்தப்படு மெழுகுதிரி தயாரிக்கப்படுகின்றது.

14. அருள்பணியாளர் புதுத் தீயிலிருந்து பாஸ்கா திரியைப் பற்றவைத்துச் சொல்கின்றார்:

மாட்சியுடன் உயிர்த்தெழும் கிறிஸ்துவின் ஒளி
இதயத்திலும் மனதிலும் இருள் அகற்றுவதாக.

மேற்சொன்னவற்றைப் பொறுத்தவரையில் மக்களின் பண்பாட்டுக்கு ஏற்ப ஆயர் பேரவைகள் மிகப் பொருத்தமான வேறு திருச்சடங்குகளைப் பயன்படுத்தப் பணிக்கலாம்.

15. திரி ஏற்றப்பட்டவுடன், பணியாளர்களுள் ஒருவர் எரிந்து கொண்டிருக்கும் தீக் கங்குகளைத் தீயிலிருந்து எடுத்துத் தூபக் கலத்தில் இடுகின்றார். அருள்பணியாளர் வழக்கம் போல அதனுள் சாம்பிராணி இடுகின்றார். திருத்தொண்டர் அல்லது - அவர் இல்லை எனில் - தகுதியான வேறொரு பணியாளர் பாஸ்கா திரியை எடுத்துக் கொள்கின்றார். பவனி தொடங்குகின்றது. தூபக் கலத்தை ஏந்தி இருப்பவர் பாஸ்கா திரியை ஏந்திச் செல்லும் திருத்தொண்டரின் அல்லது வேறொரு பணியாளரின்முன் புகையும் தூபக் கலத்துடன் செல்கின்றார். அவர்களை அருள் பணியாளர் ஏற்றப்படாத திரிகளை வைத்திருக்கும் பணியாளர்களுடனும் மக்களுடனும் பின்தொடர்கின்றார். பின் திருத்தொண்டர், கோவில் வாயிலில் நின்று பாஸ்கா திரியை எடுத்து உயர்த்திப் பிடித்துக்கொண்டு பாடுகின்றார்:

கிறிஸ் து வின் ஒளி இதோ!


எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:
இறைவ னுக் கு நன் றி.

அருள்பணியாளர் தமது மெழுகுதிரியைப் பாஸ்கா திரியிலிருந்து பற்றவைக்கின்றார்.

16. கோவிலின் நடுப் பகுதிக்கு வந்து நின்று, மெழுகுதிரியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மீண்டும் பாடுகின்றார்:

கிறிஸ் து வின் ஒளி இதோ!

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:
இறைவ னுக் கு நன் றி.

அனைவரும் தத்தம் திரிகளைப் பாஸ்கா திரியிலிருந்து பற்றவைத்துக்கொண்டு பவனியாகச் செல்கின்றனர்.

17. திருத்தொண்டர் பீடத்தின் முன் வந்ததும், மக்களை நோக்கித் திரும்பி நின்றுகொண்டு மெழுகுதிரியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு மூன்றாம் முறையாகப் பாடுகின்றார்:

கிறிஸ் து வின் ஒளி இதோ!

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:
இறைவ னுக் கு நன் றி.

பின் திருத்தொண்டர் வாசகமேடையின் அருகில் அல்லது திருப்பீட முற்றத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பெரிய விளக்குத் தண்டின்மீது பாஸ்கா திரியை வைக்கின்றார்.

பீடத்தின் மேலுள்ள மெழுகுதிரிகள் தவிர, கோவில் விளக்குகள் எரியவிடப்படுகின்றன.

பாஸ்கா புகழுரை

18. பீடத்தை அடைந்ததும் அருள் பணியாளர் தம் இருக்கைக்குச் சென்று தம் கையி. உள்ள மெழுகுதிரியைப் பணியாளரிடம் கொடுத்து விட்டு, பின்பு தாபர் பயன் படுத்தினால், திருப்பலியில் நற்செய்திக்குமுன் செய்வது போல, தூபக் கலத்து, சாம்பிராணி இட்டு அதற்கு ஆசி வழங்குகின்றார்; திருத்தொண்டர், "தந்தையே, உம் ஆசி வழங்கும்" எனக் கூறி அருள்பணியாளரிடம் ஆசி வேண்டுகின்றார்; அருள்பணியாளர் தாழ்ந்த குரலில் பின்வருமாறு சொல்லி ஆசி வழங்குகின்றார்:

தமது பாஸ்காவின் புகழுரையைத் தகுதியுடனும் முறையாகவும் நீர் அறிவிக்குமாறு, ஆண்டவர் உம் இதயத்திலும் உதடுகளிலும் இருப்பாராக. தந்தை, மகன், * தூய ஆவியாரின் பெயராலே.

திருத்தொண்டர் பதிலுரைக்கின்றார்: ஆமென்.

திருத்தொண்டர் அல்லாதவர் பாஸ்கா புகழுரையைப் பாடினால், இந்த ஆசியுரை விடப்படும்.

19. திருத்தொண்டர் திருப்பலி நூலுக்கும் பாஸ்கா திரிக்கும் தூபம் இட்டு, வாசக மேடையில் நின்றுகொண்டு பாஸ்கா புகழுரையைப் பாடுகின்றார்; அப்பொழுது அனைவரும் எரியும் திரிகளைத் தம் கைகளில் ஏந்தி நிற்பர்.

தேவையானால், திருத்தொண்டர் இல்லாதபோது திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரோ கூட்டுத்திருப்பலித் திருப்பணியாளருள் ஒருவரோ பாஸ்கா புகழுரையைப் பாடலாம். பொதுநிலையினருள் பாடகர் ஒருவர் பாஸ்கா புகழுரையைப் பாடலாம்; அப்படியெனில் "எனவே, இத்திருவிளக்கின்" எனும் சொற்களிலிருந்து "ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" எனும் வாழ்த்துரைவரை உள்ள பகுதியை விட்டுவிட வேண்டும்.

பாஸ்கா புகழுரையின் குறுகிய பாடத்தையும் பாடலாம் (பக். 346 - 348).

பாஸ்கா புகழுரை: நீண்ட பாடம்

பாஸ்கா புகழுரை: நீண்ட பாடம்

விண்ணகத் தூதர் அணி மகிழ்வதாக;
இப்புனித நிகழ்வில் பெருமகிழ்ச்சி பொங்குவதாக;
மாபெரும் மன்னரது வெற்றிக்காக
எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.
இப்பெரும் சுடர்களால் ஒளிவீசப்பெற்று இவ்வுலகம் பெருமகிழ்ச்சி கொள்வதாக:
முடிவில்லா மன்னரது பேரொளியால் உலகெல்லாம் துலங்கி,
தன்னைச் சூழ்ந்த இருள் அனைத்தும் ஒழிந்ததென உணர்வதாக.
இப்பெரும் சுடர்களால் அழகுபெற்று
அன்னையாம் திரு அவையும் களிகூர்வதாக.
எனவே மக்கள் அனைவரின் பேரொலியால்
இக்கோவில் எதிரொலித்து முழங்குவதாக.


(எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச்
சூழ்ந்து நிற்கும் அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
உங்களை வேண்டுகின்றேன். என்னுடன் சேர்ந்து,
எல்லாம் வல்ல இறைவனின் இரக்கத்தை இறைஞ்சுவீர்களாக.
தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள் சேர்த்திட
அருள்கூர்ந்த இறைவன்தாமே திருவிளக்கின் பேரொளியை என் மீது வீசி
இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக).

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்
இதயப் பற்றுதலோடும் முழு மனதோடும் வாயாரப் பாடிப் புகழ்வது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்.

ஆதாமினால் வந்த கடனைக்
கிறிஸ்துவே என்றுமுள்ள தந்தைக்கு நமது பெயரால் செலுத்தி,
பாவத்துக்கு உரிய கடன்சீட்டைத்
தாம் சிந்திய திரு இரத்தத்தால் அழித்துவிட்டார்.

ஏனெனில் பாஸ்கா விழா இதுவே:
இதில் மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்;
அவரது இரத்தத்தால் நம்பிக்கையாளரின் கதவு நிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.

முற்காலத்தில் எம் முன்னோரான இஸ்ரயேல் மக்களை
நீர் எகிப்திலிருந்து விடுவித்து அவர்கள் கால் நனையாமல்
செங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.

'நெருப்புத் தூணின் வெளிச்சத்தால்
பாவத்தின் இருளை அகற்றிய இரவு இதுவே.

பூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களை
உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,
அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும்
இந்த இரவேதான்.

சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து,
கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும்
இந்த இரவிலேதான்.

ஏனெனில் இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில்,
பிறந்ததால் எப்பயனும் இல்லையே.

நீர் எம்மீது அருள்கூர்ந்து காட்டிய பரிவிரக்கம்
எத்துணை வியப்புக்கு உரியது!
அடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த
அளவில்லா அன்புப் பெருக்கே!

ஓ ஆதாமின் பாவமே! உன்னை அழிக்கக்
கிறிஸ்துவின் சாவு திண்ணமாய்த் தேவைப்பட்டது!

இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடைந்ததால்
பேறுபெற்ற குற்றமே!

ஒ மெய்யாகவே பேறுபெற்ற இரவே!
பாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்த
காலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்!

இரவு பகல் போல் ஒளிபெறும்; நாள் மகிழ்வுற இரவும் ஒளிதரும்
என எழுதியுள்ளது இந்த இரவைக் குறித்தே.

ஆகவே புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி
தீமையை ஒழிக்கின்றது, குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது;
தவறினோருக்கு மாசின்மையையும்
துயருற்றோருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது;
பகைமையை விரட்டுகின்றது, ஆணவத்தை அடக்குகின்றது;
மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.

ஆகவே தூய தந்தையே, அருள்பொழியும் இவ்விரவில்
நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்;
தேனீக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப்
புனிதத் திரு அவை தன் பணியாளரின் கையால்
மிகச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.

இறைவனின் மாட்சிக்காகச் செந்தழலாய்ச் சுடர்விட்டெரியும்
இந்த நெருப்புத் தூணின் பெருமையை அறிந்திருக்கின்றோம்:
இத்தீயிலிருந்து பல விளக்குகளை ஏற்ற,
தன் ஒளியிலிருந்து பங்கு கொடுத்தாலும், அது குறைவுபடுவதில்லை;
ஏனெனில் தாய்த் தேனீ தந்த மெழுகு உருகுவதால்
உயர்மதிப்புள்ள தீ வளர்க்கப்படுகின்றது.

விண்ணுக்கு உரியவை மண்ணுக்கு உரியவையோடும்
கடவுளுக்கு உரியவை மனிதருக்கு உரியவையோடும் இணைந்தது
மெய்யாகவே பேறுபெற்ற இந்த இரவிலேதான்

எனவே ஆண்டவரே, உம்மை வேண்டுகின்றோம்:
உமது பெயரின் மாட்சிக்காக நேர்ந்தளிக்கப்பட்ட இந்த மெழுகுதிரி,
இவ்விரவின் இருளை ஒழிக்குமாறு,
குறைவுபடாமல் நின்று எரிவதாக.

இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,
விண்ணக விளக்குகளுடன் கலந்து கொள்வதாக.
விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.
ஒருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி
உம் திருமகன் கிறிஸ்துவேதான்;
பாதாளத்திலிருந்து திரும்பி வந்து,
மனித இனத்தின் மீது அமைதியுடன் ஒளி வீசி,
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் அவரே.

பதில்: ஆமென்.

பாஸ்கா புகழுரை: குறுகிய பாடம்

விண்ணகத் தூதர் அணி மகிழ்வதாக;
இப்புனித நிகழ்வில் பெருமகிழ்ச்சி பொங்குவதாக;
மாபெரும் மன்னரது வெற்றிக்காக
எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.
இப்பெரும் சுடர்களால் ஒளிவீசப்பெற்று
இவ்வுலகம் பெருமகிழ்ச்சி கொள்வதாக:
முடிவில்லா மன்னரது பேரொளியால்
உலகெல்லாம் துலங்கி, தன்னைச் சூழ்ந்த
இருள் அனைத்தும் ஒழிந்ததென உணர்வதாக.
இப்பெரும் சுடர்களால் அழகுபெற்று
அன்னையாம் திரு அவையும் களிகூர்வதாக.
எனவே மக்கள் அனைவரின் பேரொலியால்
இக்கோவில் எதிரொலித்து முழங்குவதாக.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்
இதயப் பற்றுதலோடும் முழு மனதோடும் வாயாரப் பாடிப் புகழ்வது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்.

ஆதாமினால் வந்த கடனைக்
கிறிஸ்துவே என்றுமுள்ள தந்தைக்கு நமது பெயரால் செலுத்தி,
பாவத்துக்கு உரிய கடன்சீட்டைத்
தாம் சிந்திய திரு இரத்தத்தால் அழித்துவிட்டார்.

ஏனெனில் பாஸ்கா விழா இதுவே:
இதில் மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்;
அவரது இரத்தத்தால் நம்பிக்கையாளரின் கதவு நிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.

முற்காலத்தில் எம் முன்னோரான இஸ்ரயேல் மக்களை
நீர் எகிப்திலிருந்து விடுவித்து அவர்கள் கால் நனையாமல்
செங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.

'நெருப்புத் தூணின் வெளிச்சத்தால்
பாவத்தின் இருளை அகற்றிய இரவு இதுவே.

பூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களை
உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,
அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும்
இந்த இரவேதான்.

சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து,
கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும்
இந்த இரவிலேதான்.

ஏனெனில் இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில்,
பிறந்ததால் எப்பயனும் இல்லையே.

நீர் எம்மீது அருள்கூர்ந்து காட்டிய பரிவிரக்கம்
எத்துணை வியப்புக்கு உரியது!
அடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த
அளவில்லா அன்புப் பெருக்கே!

ஓ ஆதாமின் பாவமே! உன்னை அழிக்கக்
கிறிஸ்துவின் சாவு திண்ணமாய்த் தேவைப்பட்டது!

இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடைந்ததால்
பேறுபெற்ற குற்றமே!

ஆகவே புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி
தீமையை ஒழிக்கின்றது, குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது;
தவறினோருக்கு மாசின்மையையும்
துயருற்றோருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது;
பகைமையை விரட்டுகின்றது, ஆணவத்தை அடக்குகின்றது;
மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.

ஆகவே தூய தந்தையே, அருள்பொழியும் இவ்விரவில்
நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்;
தேனீக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப்
புனிதத் திரு அவை தன் பணியாளரின் கையால்
மிகச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.

விண்ணுக்கு உரியவை மண்ணுக்கு உரியவையோடும்
கடவுளுக்கு உரியவை மனிதருக்கு உரியவையோடும் இணைந்தது
மெய்யாகவே பேறுபெற்ற இந்த இரவிலேதான்

எனவே ஆண்டவரே, உம்மை வேண்டுகின்றோம்:
உமது பெயரின் மாட்சிக்காக நேர்ந்தளிக்கப்பட்ட இந்த மெழுகுதிரி,
இவ்விரவின் இருளை ஒழிக்குமாறு,
குறைவுபடாமல் நின்று எரிவதாக.

இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,
விண்ணக விளக்குகளுடன் கலந்து கொள்வதாக.
விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.
ஒருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி
உம் திருமகன் கிறிஸ்துவேதான்;
பாதாளத்திலிருந்து திரும்பி வந்து,
மனித இனத்தின் மீது அமைதியுடன் ஒளி வீசி,
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் அவரே.

பதில்: ஆமென்.


இரண்டாம் பகுதி
வார்த்தை வழிபாடு


20. திருவிழிப்புகளுக்கெல்லாம் அன்னையாகிய இத்திருவிழிப்பில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும் புதிய ஏற்பாட்டிலிருந்து (திருமுகம், நற்செய்தி என) இரண்டும் ஆக மொத்தம் ஒன்பது வாசகங்கள் இடம்பெறுகின்றன. நீண்ட நேரம் நிகழும் திருவிழிப் பின் தன்மையை வெளிப்படுத்தும் வண்ணம், இயன்றவரை வாசகங்கள் அனைத்தும் வாசிக்கப்பட வேண்டும்.

21 மத்திய அருள் பணிச் சூழலை முன்னிட்டுப் பழைய ஏற்பாட்டு வாசதங்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்; ஆனால் இறைவாக்கு வாசகம் இத்திருவிழிப்பின் மிக இன்றியமையாப் பகுதி என் பதை எப்பொழுதும் கருத்தில் கொள்ள வேண்டும். பழைய எம்பாட்டிலிருந்து (திருச்சட்டம், இறைவாக்குப் பகுதிகளிலிருந்து) அவற்றுக்கு உரிய பதிலுரைத் திருப்பாடல்களும் பாடப்பட வேண்டும்; மூன்று வாசகங்களாவது வாசிக்கப்பட வேண்டும். விடுதலைப் பயணம் 14-ஆம் பிரிவிலிருந்து எடுக்கப்படும் வாசகத்தையும் அதற்கு உரிய சிறு பாடலையும் ஒருபோதும் விட்டுவிடலாகாது.

22. அனைவரும் மெழுகுதிரிகளை அணைத்துவிட்டு அமர்ந்திருப்பர். வாசகங்களைத் தொடங்கும் முன் அருள் பணியாளர் கீழுள்ளவாறு அல்லது இது போன்று மக்களுக்கு அறிவுரை கூறுகின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
இத்திருவிழிப்பைச் சிறப்புடன் தொடங்கியுள்ள நாம்,
அமைதியான இதயத்தோடு இப்போது இறைவார்த்தையைக் கேட்போமாக:
கடந்த காலங்களில் கடவுள் தம் மக்களை எவ்வாறு மீட்டார் என்றும்,
இறுதியாகத் தம் திருமகனை நமக்கு மீட்பராக அனுப்பினார் என்றும் சிந்திப்போமாக.
மேலும் விடுதலை அளிக்கும் இந்தப் பாஸ்கா நிகழ்வினால்
மீட்பின் நிறைவுக்கு நம் இறைவன் நம்மை இட்டுச்செல்வாராக.

உயிர்ப்பு விழா திருப்பலி வாசகங்கள்as

திருவிழிப்புகளுக்கெல்லாம் அன்னையாகிய இத்திருவிழிப்பில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும், புதிய ஏற்பாட்டிலிருந்து (திருமுகம், நற்செய்தி என) இரண்டும் ஆக ஒன்பது வாசகங்கள் இடம் பெறுகின்றன.

மக்களின் பொது நன்மைக்குத் தேவையானால், பழைய ஏற்பாட்டு வாசகங்களைக் குறைக்கலாம்; ஆனால் இறைவாக்கு வாசகம் இத்திருவிழிப்பின் மிக முக்கியமான பகுதி என்பதை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவேண்டும். பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று வாசகங்களாவது வாசிக்கவேண்டும்: மிகவும் முக்கியமான காரணங்களுக்காக இதை இரண்டாக்கலாம். ஆனால் யாத்திராகமம் 14ஆம் அதிகாரத்தை ஒருபோதும் விட்டுவிடலாகாது.

23. பின் வாசகங்கள் தொடரும். வாசகர் வாசகமேடைக்குச் சென்று முதல் வாசகத்தை அறிக்கையிடுவார். அடுத்து, திருப்பாடல் முதல்வர் அல்லது பாடகர் ஒருவர் திருப்பாடலைப் பாட, மக்கள் பதிலுரையைப் பாடுவார்கள். அது முடிந்தபின் எல்லாரும் எழுந்து நிற்க, அருள்பணியாளர் "மன்றாடுவோமாக" எனச் சொல்லி அழைப்பார்; அனைவரும் சிறிது நேரம் அமைதியாக மன்றாடிய பின், அருள் பணியாளர் அவ்வாசகத்துக்கு உரிய மன்றாட்டைச் சொல்லுவார். பதிலுரைத் திருப்பாடலுக்குப் பதிலாக, சிறிது நேர அமைதி மன்றாட்டு இடம் பெறலாம். அப்படியானால், "மன்றாடுவோமாக" எனும் அழைப்புக்குப்பின் அமைதி தேவை இல்லை.

=====================

முதல் வாசகம் (படைப்பு: தொநூ 1:1-2:2 அல்லது 1:1, 26-31 அ: சி. 103 அல்லது 32).

தியானப் பாடல்கள்:

முதல் வாசக தியானப் பாடல்: திருப்பாடல் 104:1-2, 5-6, 10, 12, 13-14, 24-25

பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!
நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்;
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்;
அது என்றென்றும்; அசைவுறாது.
அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது;
மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது;
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்;
அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;
நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன;
அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன;
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்;
உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது.
கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்;
மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்;
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை!
நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்!
பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

வாசகங்களுக்குப்பின் மன்றாட்டு

24. முதல் வாசகம், தியானப் பாடலுக்குப் பின்

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
உம்முடைய செயல்கள் அனைத்தையும்
நீர் வியப்புக்கு உரிய வகையில் சீர்படுத்துகின்றீர்;
தொடக்கத்தில் நீர் உலகத்தைப் படைத்தது மாபெரும் செயலே;
இறுதி நாள்களில் எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்து பலியானார் என்பது
அதைவிட மாபெரும் செயல் ஆகும்:
மீட்பு அடைந்த உம் மக்கள் இதைக் கண்டுணரச் செய்வீராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக
உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.

அல்லது (மனிதப் படைப்பு)

இறைவா,
மனிதரை வியத்தகு முறையில் படைத்தீர்,
அதனினும் வியத்தகு முறையில் மீட்டருளினீர்;
நாங்கள் மெய்யறிவுடன் பாவ நாட்டங்களை உறுதியாய் எதிர்த்து நின்று
முடிவில்லா மகிழ்ச்சிக்கு வந்து சேரும் தகுதி பெற அருள்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

=================

 

25. இரண்டாம் வாசகம் (ஆபிரகாமின் பலி: தொநூ 22:1-18 அல்லது 1- 2, 9 அ, 10-13, 15-18; திபா 15).

2ம் வாசக தியானப் பாடல்: திருப்பாடல் 16:5,8 9-10, 11

பல்லவி : இறைவா, என்னைக் காத்தருளும்;
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;
அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.
பல்லவி : இறைவா, என்னைக் காத்தருளும்;
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;
என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்;
உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
பல்லவி : இறைவா, என்னைக் காத்தருளும்;
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;
உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு;
உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
பல்லவி : இறைவா, என்னைக் காத்தருளும்;
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

25. இரண்டாம் வாசகம், தியானப் பாடலுக்குப் பின்

மன்றாடுவோமாக.

இறைவா, நம்பிக்கையாளரின் உன்னதத் தந்தையே,
உமது வாக்குறுதியால் நீர் சொந்த மக்களாக்கிக் கொண்டவர்களை
உலகம் முழுவதிலும் பெருகச் செய்தீர்;
உம் ஊழியராகிய ஆபிரகாம்
அனைத்துலக மக்களின் தந்தையாவார் எனும் உமது உறுதிமொழியை
நீர் வாக்களித்தபடி பாஸ்கா மறைபொருளின் வழியாக நிறைவேற்றினார்:
உம் மக்கள் உமது அழைப்பின் அருளைப் பெற்றுக்கொள் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

பதில்: ஆமென்.

=======================

26. மூன்றாம் வாசகம் (செங்கடலைக் கடத்தல்: விப 14:15-15:1; சிறு பாடல் விப 15).

3ம் வாசக தியானப் பாடல்: விடுதலைப் பயனம் 15:1-2, 3-4, 5-6, 17-18 

தியானப் பாடல்: விடுதலைப் பயனம் 15:1-2, 3-4, 5-6, 17-18 

பல்லவி : ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்;
ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;

ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்;
ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;

குதிரை வீரனை குதிரையுடன் அவரே கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
எனக்கு மீட்பராய் அவரே என் ஆற்லும் பாடலும் ஆயினரே
பல்லவி : ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்;
ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;

கடவுள் எனக்கு இவர் தாமே அவரை நான் புகழ்ந்தேத்துவேன்
என் மூதாதயரின் கடவுள் இவர் அவரை நான் ஏற்றி போற்றிடுவேன்
பல்லவி : ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்;
ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;

போரிகளில் வல்லவர் ஆண்டவரே "ஆண்டவர்" என்பது அவர் பெயராம்.
பல்லவி : ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்;
ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;

26. மூன்றாம் வாசகம், தியானப் பாடலுக்குப் பின்

மன்றாடுவோமாக.

இறைவா, நீர் முற்காலத்தில் ஆற்றிய அருஞ்செயல்கள்
எங்கள் காலத்திலும் தொடர்வதை உணர்கின்றோம்:
உமது வலக் கையின் ஆற்றலால்
ஓர் இனத்தாரைப் பார்வோனின் கொடுமையிலிருந்து விடுவித்தீர்;
அவ்வாறே புதுப் பிறப்பு அளிக்கும் நீரினால்
பிற இனத்தாருக்கு மீட்பு அளித்து வருகின்றீர்;
எனவே உலக மாந்தர் அனைவரும்
உமது அருளினால் ஆபிரகாமின் மக்களாகி,
இஸ்ரயேல் இனத்தாருக்கு உரிய மேன்மையின் முழுமையை அடையச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

அல்லது

இறைவா, முற்காலத்தில் நிறைவேற்றிய அருஞ்செயல்களைப்
புதிய உடன்படிக்கையின் ஒளியால் தெளிவுபடுத்தினீர்:
இவ்வாறு திருமுழுக்கு நீரின் சாயலாகச் செங்கடல் விளங்கவும்
அடிமைத்தளையிலிருந்து மீட்கப்பெற்ற மக்கள்
கிறிஸ்தவ மக்களின் முன்னடையாளமாகத் திகழவும் செய்தீர்;
இஸ்ரயேல் மக்கள் பெற்ற சிறப்பு உரிமையை
எல்லா மக்கள் இனத்தாரும் நம்பிக்கையால் பெற்றுக்கொண்டு
உம் தூய ஆவியார் வழியாகப் புதுப் பிறப்பு அடையச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

=========================

27. நான்காம் வாசகம் (புதிய எருசலேம்: எசா 54:5-14; திபா 29).

4ம் வாசக தியானப் பாடல்: திருப்பாடல் 30:2,4 5-6, 11-12

பல்லவி : ஆண்டவரே, நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
ஆகவே உம்மைப் புகழ்வேன்;

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்;
ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்;
என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;
சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்.
பல்லவி : ஆண்டவரே, நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
ஆகவே உம்மைப் புகழ்வேன்;

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்;
அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;
மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.
பல்லவி : ஆண்டவரே, நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
ஆகவே உம்மைப் புகழ்வேன்;

ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்;
ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
என் கடவுளாகிய ஆண்டவரே,
உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.
பல்லவி : ஆண்டவரே, நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
ஆகவே உம்மைப் புகழ்வேன்;

27. நான்காம் வாசகம், தியானப் பாடலுக்குப் பின்

மன்றாடுவோமாக. என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
உமது பெயரின் மாட்சிக்காக,
எங்கள் மூதாதையரது நம்பிக்கையின் பொருட்டு நீர் வாக்களித்ததையும்
உம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்ட
உமது வாக்குறுதியின் மக்களுடைய எண்ணிக்கையையும்
நீர் பெருகச் செய்தருளும்;
அதனால் எங்கள் முற்காலப் புனிதர்கள்
ஐயமின்றி எதிர்பார்த்திருந்தவை அனைத்தும்
எங்களில் நிறைவேறி வருவதை நாங்கள் கண்டுணரச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

==========================

 

28. ஐந்தாம் வாசகம் (அனைவருக்கும் கொடையாக அருளப்படும். எசா 55:1-11; சிறுபாடல் எசா 12).

5ம் வாசக தியானப் பாடல்: எசாயா 12:2-3, 4, 4-6 

பல்லவி : மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்,
நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன்,
என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து
நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.
பல்லவி : மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; 
மக்களினங்களிடையே அவர்செயல்களை அறிவியுங்கள்;
அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.
பல்லவி : மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்;
அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.
பல்லவி : மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.

28. ஐந்தாம் வாசகம், தியானப் பாடலுக்குப் பின்

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
உலகின் ஒரே எதிர்நோக்கு நீரே.
இக்காலத்தில் நாங்கள் கொண்டாடும் மறைநிகழ்வுகளை
உம் இறைவாக்கினர்களின் வழியாக முன்னறிவித்தீர்;
இன்றைய காலங்களின் மறைநிகழ்வையும் வெளிப்படுத்தினீர்;
உமது தூண்டுதலால் அன்றி
உம் நம்பிக்கையாளரின் எந்த விதமான நற்பண்பும் வளம் பெறாது என்பதால்,
உம் மக்களில் இறை ஆவல்களைக் கனிவுடன் பெருகச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

=================

29. ஆறாம் வாசகம் (ஞானத்தின் ஊற்று: பாரூ 3:9-15, 31-4:4; திபா 18).

6ம் வாசக தியானப் பாடல்: திருப்பாடல் 19:7, 8, 9, 10

பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் உள்ளன.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது;
அது புத்துயிர் அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;
எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் உள்ளன.

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;
அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை;
அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
பல்லவி: ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் உள்ளன.

ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது;
அது எந்நாளும் நிலைத்திருக்கும்.
ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை;
அவை முற்றிலும் நீதியானவை.
பல்லவி: ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் உள்ளன.

அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை;
தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.
பல்லவி: ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் உள்ளன.

29. ஆறாம் வாசகம், தியானப் பாடலுக்குப் பின்

மன்றாடுவோமாக.

இறைவா, உமது திரு அவையை என்றும் வளரச் செய்கின்றீர்;
திருமுழுக்குத் தண்ணீரால் கழுவப்பெறும் மக்களை
நீர் இடையறாது பராமரித்துக் காத்தருள்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

=========================

 

ஏழாம் வாசகம் (புதிய இதயமும் புதிய ஆவியும்: எசே 36:16-28; திபா 41-42).

7ம் வாசக தியானப் பாடல்: திருப்பாடல் 42:3, 5

பல்லவி: கலைமான் நீரோடைகளை ஆர்வமுடன் நாடிச் செல்வது போல்
கடவுளே! என் நெஞ்சம் உம்மை ஆர்வமுடன் நாடிசெல்கின்றது.

என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது;
எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?
பல்லவி: கலைமான் நீரோடைகளை ஆர்வமுடன் நாடிச் செல்வது போல்
கடவுளே! என் நெஞ்சம் உம்மை ஆர்வமுடன் நாடிசெல்கின்றது.

மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! 
ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! 
பல்லவி: கலைமான் நீரோடைகளை ஆர்வமுடன் நாடிச் செல்வது போல்
கடவுளே! என் நெஞ்சம் உம்மை ஆர்வமுடன் நாடிசெல்கின்றது.

உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, 
உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
பல்லவி: கலைமான் நீரோடைகளை ஆர்வமுடன் நாடிச் செல்வது போல்
கடவுளே! என் நெஞ்சம் உம்மை ஆர்வமுடன் நாடிசெல்கின்றது.

அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; 
கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்.
பல்லவி: கலைமான் நீரோடைகளை ஆர்வமுடன் நாடிச் செல்வது போல்
கடவுளே! என் நெஞ்சம் உம்மை ஆர்வமுடன் நாடிசெல்கின்றது.

ஏழாம் வாசகம், தியானப் பாடலுக்குப் பின்

மன்றாடுவோமாக.

இறைவா, என்றும் மாறாத ஆற்றலும் நிலையான ஒளியுமானவரே,
வியத்தகு அருளடையாளமாகிய திரு அவை முழுவதையும் கனிவுடன் கண்ணோக்கியருளும்:
முடிவில்லா ஏற்பாட்டின்படி மனிதரை மீட்கும் அதன் பணி
அமைதியுடன் நிறைவேறச் செய்தருளும்;
வீழ்ச்சியுற்றவை எழுச்சி அடைவதையும்
பழமையானவை புதுப்பிக்கப்பெறுவதையும்
கிறிஸ்துவில் தொடங்கிய அனைத்தும்
அவர் வழியாகவே முழுமை அடைவதையும் உலகம் கண்டுணர்வதாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அல்லது

இறைவா, பாஸ்கா மறையுண்மையைக் கொண்டாட
இரு உடன்படிக்கை நூல்களிலிருந்தும் எங்களுக்குக் கற்பிக்கின்றீர்;
உமது இரக்கத்தைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவியருளும்;
இவ்வாறு இக்காலத்தில் உம் அருள்கொடைகளை அறிந்துகொள்ளும் நாங்கள்
வரவிருக்கும் கொடைகளை உறுதியாய் எதிர்பார்த்திருக்கச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

===================

31. பழைய ஏற்பாட்டிலிருந்து இறுதி வாசகமும் அதற்கு உரிய பதிலுரைத்திருப்பாடலும் மன்றாட்டும் முடிந்தபின், பீடத்தில் திரிகள் பற்ற வைக்கப்படும். அருள்பணியாளர் "உன்னதங்களிலே எனும் பாடலைத் தொடங்க, எல்லாரும் தொடர்ந்து பாடுவர். அப்பொழுது அந்தந்த இடத்தின் வழக்கப்படி மணிகள் ஒலிக்கும்.

உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.
ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.
ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.
தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.
உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!
தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.
ஆமென்.

உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக
உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக
உம்மைப் புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்,
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே
ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே
தந்தையின் திருமகனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்,
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்,
நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின் மாட்சியில்
இருப்பவர் நீரே - ஆமென்

33. பாடல் முடிந்தபின், அருள்பணியாளர் வழக்கம் போலத் திருக்குழும மன்றாட்டைச் சொல்கின்றார்:

மன்றாடுவோமாக.

இறைவா, புனிதமிக்க இந்த இரவை
ஆண்டவருடைய உயிர்ப்பின் மாட்சியால் ஒளிர்விக்கின்றீர்;
உமது திரு அவையில் அனைவரும்
உம் சொந்த மக்கள் எனும் மனப்பாங்கைத் தூண்டி எழுப்பியருளும்:
அதனால் நாங்கள் உடலிலும் மனதிலும் புதுப்பிக்கப்பெற்று
உமக்குத் தூய்மையான ஊழியம் புரிவோமாக. உம்மோடு.

பதில்: ஆமென்.

========================

33. பின்பு வாசகர் திருத்தூதரின் திருமுகத்திலிருந்து வாசிக்கின்றார்.

34. திருமுக வாசகத்துக்குப்பின் அனைவரும் எழுந்து நிற்க, அருள் பணியாளர் ஆடம்பரமாக "அல்லேலூயா" எனப் பாடுகின்றார்; ஒவ்வொரு முறையும் குரலை உயர்த்தி மும்முறை பாடுகின்றார். மக்கள் எல்லாரும் அதைத் திரும்பப் பாடுகின்றார்கள். தேவையானால் திருப்பாடல் முதல்வரே "அல்லேலூயா பாடலைத் தொடங்கலாம்.

அதன்பின் திருப்பாடல் முதல்வர் அல்லது பாடகர் ஒருவர் திபா 117-ஐப் பாட, எல்லாரும் "அல்லேலூயா" எனப் பதிலுரைத்துப் பாடுகின்றனர்.

அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,

பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா

சரணம்

ஆண்ட ருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்:
என்றென்றும் உள்ளது அவரது இரக்கம். "என்றென்றும் உள்ளது
அவரது இரக்கம்" என்று இஸ்ரயேல் இனத்தவர் சாற்றுவார்களாக.
பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: 
என்றென்றும் உள்ளது அவரது இரக்கம். 
"என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்" என்று
இஸ்ரயேல் இனத்தவர் சாற்றுவார்களாக.
பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா

ஆண்டவரது வலக்கரம் என்னை நிலைநிறுத்தியது;
ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலாற்றியது. 
இறந்தொழியேன், உயிர்வாழ்வேன்:
ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் பறைசாற்றுவேன்.
பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா

வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே வீட்டுக்கு மூலைக்கல் ஆயிற்று:
ஆண்டவர் செயலிது; நம் கண்களுக்கு வியப்பாய் உள்ளது
பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா

(அல்லது)


அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,

சரணம்

1. (1,2) ஆண் ட வருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்:
என்றென்றும் உள்ளது அ வ ரது இ ரக் கம். "என் றென்றும் உள்ளது
அவரது இரக்கம்" என்று இஸ்ரயேல் இனத்தவர் சாற் றுவார்களாக.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்:
என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.
"என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்" என்று இஸ்ரயேல் இனத்தவர் சாற்றுவார்களாக.
(16-17) ஆண்டவரது வலக்கரம் என்னை நிலைநிறுத்தியது;
ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலாற்றியது.
இறந்தொழியேன், உயிர்வாழ்வேன்: ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் பறைசாற்றுவேன்.

(22-23)வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே வீட்டுக்கு மூலைக்கல் ஆயிற்று:
ஆண்டவர் செயலிது; நம் கண்களுக்கு வியப்பாய் உள்ளது.

அருள்பணியாளர் வழக்கம் போலத் தூபக் கலத்தில் சாம்பிராணி இடுகின்றார்.
திருத்தொண்டருக்கு ஆசி வழங்குகின்றார்.

35.எரியும் திரிகளை நற்செய்திக்குப் பயன்படுத்துவதில்லை. தூபம் காட

36. நற்செய்திக்குப்பின் மறையுரையைச் சுருக்கமாக ஆற்றலாம். மறையுரையை விட்டுவிடக்கூடாது.


மூன்றாம் பகுதி

திருமுழுக்கு வழிபாடு

37. மறையுரைக்குப்பின் திருமுழுக்கு வழிபாடு தொடரும். இறைமக்கள் எல்லாரும் எளிதாகப் பார்க்கக்கூடிய இடத்தில் திருமுழுக்குத் தொட்டி இருந்தால், அருள்பணியாளர் பணியாளரோடு அங்குச் செல்கின்றார்; இல்லை எனில், தண்ணீர் நிறைந்த பாத்திரம் ஒன்று திருப்பீட முற்றத்தில் வைக்கப்படும். 38. திருமுழுக்குப் பெறவேண்டியவர்கள் இருந்தால், அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களை ஞானப் பெற்றோர் திருக்கூட்டத்தின் முன் நிறுத்துவர் அல்லது சிறு குழந்தைகளின் பெற்றோரும் அவர்களின் ஞானப் பெற்றோரும் அவர்களை எடுத்து வருவர்.

39. திருமுழுக்குத் தொட்டி அல்லது திருமுழுக்கு இடம் நோக்கிய பவனி பின்வருமாறு நடைபெறும். பணியாளர் ஒருவர் பாஸ்கா திரியுடன் முன் செல்ல, திருமுழுக்குப் பெறுபவரும் அவர்களுடைய ஞானப் பெற்றோரும் பிற பணியாளர்களும் திருத்தொண்டரும் அருள்பணியாளரும் பின்தொடர்கின்றனர். பவனியின்போது புனிதர் மன்றாட்டுமாலை பாடப்படும். மன்றாட்டுமாலை முடிவில் அருள்பணியாளர் அறிவுரை கூறுகின்றார்.

40. திருமுழுக்கு வழிபாடு திருப்பீட முற்றத்தில் நடைபெறும் எனில், அருள்பணியாளர் உடனே பின்வருமாறு அல்லது இது போன்ற வார்த்தைகளால் தொடக்க அறிவுரை கூறுவார்:

திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்

அன்புமிக்கவர்களே, நம் சகோதரர் சகோதரிகளுக்குப் புனித எதிர்நோக்கு உண்டாக
நமது ஒருமித்த வேண்டலினால் துணை புரிவோமாக.
அதனால் புதுப் பிறப்பு அளிக்கும் ஊற்றை நோக்கிச் செல்லும் இவர்களுக்கு
எல்லாம் வல்ல தந்தை இரக்கத்துடன் தமது உதவி அனைத்தையும் அளிப்பாராக.

திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லை எனினும், திருமுழுக்குத் தொட்டியைப் புனிதப்படுத்த வேண்டியிருந்தால்:


அன்பு மிக்கவர்களே, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் அருள் இந்தத் தொட்டியின் மீது இறங்கியருள் மன்றாடுவோமாக: இதிலிருந்து புதுப் பிறப்பு அடைவோர் கிறிஸ்துவில் உரிமைப் பேறு பெற்ற மக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுவார்களாக.

41. இரு பாடகர் மன்றாட்டுமாலையைப் பாட (பாஸ்கா காலம் ஆனதால்) அனைவரும் எழுந்து நின்று பதில் பாடுவர்.

திருமுழுக்குத் தொட்டிக்கு நீண்ட பவனியாகப் போக வேண்டுமானால், பவனியின் போது மன்றாட்டுமாலை பாடப்படும்; அப்படியானால், திருமுழுக்குப் பெறவேண்டியவர் பவனி தொடங்கும் முன் அழைக்கப்படுவர். பவனியில் முதலாவது பாஸ்கா திரி கொண்டு போகப்படும்; பின் திருமுழுக்குப் பெறுவோர் ஞானப் பெற்றோருடன் செல்ல, பணியாளரும் திருத்தொண்டரும் அருள்பணியாளரும் பின்தொடர்வர். நீரைப் புனிதப் படுத்தும் முன் அறிவுரை வழங்கப்படும்.

43. திருமுழுக்குப் பெறுவோர் இல்லையென்றாலோ திருமுழுக்குத் தொட்டி புனிதப் படுத்தல் இல்லையென்றாலோ, மன்றாட்டுமாலையை விட்டுவிட்டு உடனே தண்ணா புனிதப்படுத்தப்படும் (எண் 54).

43. புனிதர் சிலரின் பெயர்களை, சிறப்பாகக் கோவிலின் பாதுகாவலர், ஒரு தலத்தின் பாதுகாவலர், திருமுழுக்குப் பெறுவோரின் பெயர் கொண்ட புனிதர் ஆகியோர் பெயர்களை மன்றாட்டு மாலையில் சேர்த்துக் கொள்ளலாம்.



ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்மாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்

ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.

புனித மரியே, இறைவனின் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இறைவனின் புனித தூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனிதத் திருமுழுக்கு யோவானே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித யோசேப்பே, புனித பேதுருவே, புனித பவுலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித அந்திரேயாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித யோவானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித மகதலா மரியாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித ஸ்தேவானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித லாரன்ஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித பெர்பேத்துவா, புனித பெலிசிட்டியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித ஆக்னஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித கிரகோரியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அகுஸ்தினே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அத்தனாசியுஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித பேசிலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித மார்ட்டினே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித பெனடிக்டே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித பிரான்சிஸே, புனித தோமினிக்கே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித பிரான்சிஸ் சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித வியான்னி மரிய ஜானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித சியன்னா கத்தரீனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அவிலா தெரேசே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

கனிவு கூர்ந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
தீமை அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
பாவம் அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
முடிவில்லாச் சாவிலிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
உமது மனித உடலேற்பினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
உமது இறப்பினாலே, உயிர்ப்பினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
தூய ஆவியாரின் வருகையினாலேஎங்களை மீட்டருளும் ஆண்டவரே.

பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகின்றோம் எங்கள் மன்றாட்டைக் கேட் ட ரு ளும்.

(திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்):
தேர்ந்து கொள்ளப்பெற்ற இவர்கள் திருமுழுக்கின் அருளினால்
புதுப் பிறப்பு அடையச் செய்தருள வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லையென்றால்):
உம் மக்களுக்குப் புதுப் பிறப்பு அளிக்கும் இந்த நீரூற்றை
உமது அருளினால் புனிதமாக்க வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம் -
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வாழும் கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை மன்றாடுகின்றோம் -
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

கிறிஸ் துவே, எங்களுக்குச் செவி சாய்த் தருளும்.
கிறிஸ் துவே, க னி வாய்ச் செவி சாய்த் தருளும்.

திருமுழுக்குப் பெறுவோர் அங்கு இருந்தால், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்வார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, திருமுழுக்கின் ஊற்று உமக்கு ஈன்றெடுக்கும் மக்களைப் புதிய மக்களாக மீண்டும் படைக்க உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களில் நீர் உடனிருப்பீராக; மனிதரை உம் பிள்ளைகளாக்கும் ஆவியாரை அனுப்புவீராக: இவ்வாறு எளியவராகிய நாங்கள் செய்யவேண்டிய திருப்பணி உமது ஆற்றலால் நிறை பயன் தருவதாக. எங்கள்.

பதில்: ஆமென்.


திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குதல்

44. பின் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்லி திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குகின்றார்:

இறைவா, அருளடையாளங்கள் வியத்தகு முறையில் பயனளிக்கக்
கண்ணுக்குப் புலப்படாத வலிமையால் செயலாற்றுகின்றீர்:
திருமுழுக்கின் அருளைக் குறித்துக்காட்டப்
"இப்புப் பொருளாகிய தண்ணீரைப் பல வகையில் தயார் செய்தீர்;
இறைவா, தண்ணீருக்குப் புனிதப்படுத்தும் ஆற்றலை அளிக்குமாறு
உலகின் தொடக்கத்திலேயே உமது ஆவியார் அதன் மீது அசைவாடிக்கொண்டிருந்தார்;

இறைவா, பெரும் வெள்ளத்தினைப் புதுப் பிறப்பின் அடையாள மாக்கி,
மறைபொருளாகிய அதே தண்ணீரால் குற்றங்கள் முடிவுறவும்
நற்பண்புகள் தொடங்கவும் செய்தீர்;
இறைவா, பார்வோனின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற
ஆபிரகாமின் மக்கள் செங்கடலைக் கால் நனையாமல் கடக்கச் செய்து,
திருமுழுக்குப் பெற்ற மக்களுக்கு முன்னடையாளமாக இருக்கச் செய்தீர்;
இறைவா, உம் திருமகன் யோர்தான் நீரில் யோவானால் திருமுழுக்குப் பெற்று,
தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டார்;
சிலுவையில் அவர் தொங்கியபொழுது,
தமது விலாவிலிருந்து இரத்தத்தோடு தண்ணீரையும் வழிந்தோடச் செய்தார்;
தமது உயிர்ப்புக்குப்பின் "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாருக்கும் கற்பித்து
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால்
அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுங்கள்' என்று
சீடர்களுக்குக் கட்டளையிட்டார்;
உமது திரு அவையைக் கண்ணோக்கி,
அதற்குத் திருமுழுக்கின் ஊற்றினைத் திறந்தருளும்;
இந்தத் தண்ணீர் உம் ஒரே திருமகனின் அருளைத்
தூய ஆவியாரினின்று பெற்றுக்கொள்ளச் செய்தருளும்;
இவ்வாறு உமது சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்
திருமுழுக்கு அருளடையாளத்தினால் பழைய பாவ அழுக்கெல்லாம் கழுவப்பெற்று,
தண்ணீராலும் தூய ஆவியாராலும் புதுப் பிறப்பு அடைந்து எழும் தகுதி பெறுவார்களாக.

அருள்பணியாளர் தேவைக்கு ஏற்பப் பாஸ்கா திரியை ஒரு முறை அல்லது மும்முறை தண்ணீரில் இறக்கிச் சொல்வதாவது:

ஆண்டவரே, இந்தத் தொட்டியில் உள்ள தண்ணீர் முழுவதிலும்
தூய ஆவியாரின் ஆற்றல் உம் திருமகன் வழியாக இறங்க உம்மை வேண்டுகின்றோம்.

திரியைத் தண்ணீரில் வைத்துப் பிடித்துக்கொண்டு சொல்வதாவது:

இவ்வாறு திருமுழுக்கினால் கிறிஸ்துவுடன் இறந்து
அடக்கம் செய்யப்பட்ட அனைவரும் அவரோடு வாழ்வுக்கு உயிர்த்தெழுவார்களாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.


47. பின் தண்ணீரிலிருந்து திரி அகற்றப்படும். அப்பொழுது மக்கள் கீழுள்ளவா ஆர்ப்பரிக்கின்றனர்:

நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள், என்றென்றும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.

48. திருமுழுக்குத் தண்ணீரைப் புனிதப்படுத்தியதை அடுத்து, மக்களின் ஆர்ப்பரிப்புக்குப் பிறகு, அருள்பணியாளர் நின்றுகொண்டு வயதுவந்தோரிடமும் குழந்தைகளின் பெற்றோர் அல்லது ஞானப் பெற்றோரிடமும் சாத்தானை விட்டுவிடும் அறிக்கையை வெளிப்படுத்தும் பொருட்டு உரோமைத் திருச்சடங்கு நூலில் உள்ள சடங்குமுறைகளுக்கு ஏற்பக் குறிக்கப்பட்ட கேள்விகளைக் கேட்கின்றார்.

வயதுவந்தோரைத் திருமுழுக்குக்காகத் தயார் செய்யும் எண்ணெயால் பூசுதல் முன்னரே நடைபெறவில்லை எனில், உடன் தயாரிப்புச் சடங்காக இது இந்நேரத்தில் நடைபெறும்.

49. பின் அருள் பணியாளர் நம்பிக்கை பற்றி வயது வந்தோரிடம் தனித்தனியாக வினவுகின்றார். குழந்தைகள் திருமுழுக்குப் பெற இருந்தால், குறிப்பிட்ட சடங்குமுறைகளின்படி அருள்பணியாளர் பெற்றோரிடமும் ஞானப் பெற்றோரிடமும் நம்பிக்கை அறிக்கைக்கான மூன்று கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்கின்றார்.

இவ்விரவில் பலர் திருமுழுக்குப் பெறவேண்டி இருந்தால், இச்சடங்கைப் பின்வருமாறு நடத்தலாம். திருமுழுக்குப் பெறுவோர், அவருடைய பெற்றோர், ஞானப் பெற்றோர் ஆகியோரின் பதிலுரைக்குப் பிறகு, அருள்பணியாளர் அங்கு இருப்போர் அனைவரிடமும் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிக்கும்படி வினவுகின்றார்.

50. கேள்விகள் கேட்டபின், தேர்ந்தெடுக்கப்பட்ட வயதுவந்தோருக்கும் குழந்தைகளுக்கும் அருள்பணியாளர் திருமுழுக்கு வழங்குகின்றார்.

51. திருமுழுக்குக்குப் பிறகு அருள்பணியாளர் குழந்தைகளைக் கிறிஸ்மா எண்ணெயால் அருள்பொழிவு செய்கின்றார். வயது வந்தோராயினும் குழந்தைகளாயினும் அவர்கள் ஒவ்வாருவருக்கும் வெண்ணாடை அணிவிக்கின்றார். பின் அருள்பணியாளர் அல்லது திருத்தொண்டர் பாஸ்கா திரியைப் பணியாளரின் கையிலிருந்து பெறுகின்றார். புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்களின் மெழுகுதிரிகள் அதிலிருந்து ஏற்றப்படுகின்றன. குழந்தைகளுக்கான 'எப்பேத்தா' சடங்கு விட்டுவிடப்படும்.

52. திருமுழுக்குச் சடங்குகள் அனைத்தும் திருப்பீட முற்றத்தில் நடைபெறாதபொழுது ஏற்கெனவே வரையறுக்கப்பட்டது போலப் புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்கள் : ஞானப் பெற்றோர் அல்லது பெற்றோர் எரியும் மெழுகுதிரிகளோடு திருபீட முற்றம் நோக்கிப் பவனியாகத் திரும்பிச் செல்வர். பவனியின்போது "கோவிலின் வலப்புறமிருந்து எனும் திருமுழுக்குப் பாடல் அல்லது தகுந்ததொரு பாடல் பாடப்படும் (எண் 56).

53 வயதுவந்தோர் திருமுழுக்குப் பெற்றிருந்தால் ஆயர் அல்லது ஆயர் இல்லாத""" திருமுழுக்கு வழங்கிய அருள்பணியாளர் ஆயர் திருச்சடங்கு நூலில் அல்லது - திருச்சடங்கு நூலில் குறிப்பிட்டுள்ளவாறு உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை வழங்குவார்.
சடங்கு நூலில் அல்லது உரோமைத் பபட முற்றத்தில் அவர்களுக்கு உடனே உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை வழங்குவார்.

54. திருமுழுக்கு அளித்தலோ திருமுழுக்குத் தொட்டியைப் புனிதப்படுத்தலோ நடைபெறவில்லை எனில், அருள்பணியாளர் நம்பிக்கையாளரைத் தண்ணீருக்கு ஆசி வழங்கும் சடங்குக்கு இட்டுச் சென்று சொல்கின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
நம் திருமுழுக்கின் நினைவாக
நம்மீது தெளிக்கப்படும் படைப்புப் பொருளான இத்தண்ணீருக்குக்
கனிவுடன் ஆசி வழங்க நம் இறைவனாகிய ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியாருக்கு
உண்மையுள்ளவர்களாக இருக்க அவர் நம்மைப் புதுப்பிப்பாராக.

சிறிது நேரம் அமைதியாக மன்றாடியபின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்து:

ஆண்டவரே எங்கள் இறைவா,
இப்புனிதமிக்க இரவில் கண்விழித்துக் காத்திருக்கும் உம் மக்களுடன்
கனிவாய்த் தங்கியருளும். வியத்தகு முறையில் எங்களைப் படைத்தீர் எனவும்
அதிலும் வியத்தகு முறையில் எங்களை மீட்டருளினீர் எனவும்
நினைவுகூரும் எங்களுக்காக இத்தண்ணீர் மீது உமது ஆசியைக் கனிவுடன் பொழிந்தருளும்.
ஏனெனில் நிலத்தை வளப்படுத்தவும்
எங்கள் உடலுக்குப் புத்துணர்வும் தூய்மையும் தரவும் இத்தண்ணீரைப் படைத்தீர்;
உமது இரக்கத்தின் கருவியாகவும் இத்தண்ணீரை அமைத்தீர்;

எவ்வாறெனில், தண்ணீரின் வழியாக
உம் மக்களின் அடிமைத்தளையை அகற்றினீர்;
பாலைநிலத்தில் அவர்களது தாகத்தைத் தணித்தீர்.
அதன் வழியாக மனித இனத்தோடு நீர் செய்ய இருந்த
புதிய உடன்படிக்கையை இறைவாக்கினர் முன்னறிவித்தனர்;
இறுதியாக, யோர்தானில் கிறிஸ்து புனிதமாக்கிய தண்ணீரின் வழியாகப்
பாவக் கறை படிந்த எங்கள் மனித இயல்பைப்
புதுப் பிறப்பு அளிக்கும் திருமுழுக்கினால் கழுவிப் புதுப்பித்தீர்.
ஆகவே நாங்கள் பெற்றுக்கொண்ட
திருமுழுக்கின் நினைவாக இத்தண்ணீர் இருப்பதாக.
பாஸ்கா பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்ற எங்கள் சகோதரர் சகோதரிகளோடு
நாங்களும் ஒன்றுசேர்ந்து பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்தருளும். எங்கள்.

பதில்: ஆமென்.


திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்தல்

55. திருமுழுக்கு (உறுதிப்பூசுதல் ஆகிய) சடங்குகள் முடிந்தபின் அல்லது - அவை இல்லை எனில் - தண்ணீருக்கு ஆசி வழங்கிய பின், பின்வரும் வாக்குறுதிகள் திருமுழுக்குப் பெற்றவரோடு சேர்ந்து புதுப்பிக்கப்படாதிருந்தால், அனைவரும் எழுந்து நின்று, எரியும் திரிகளைப் பிடித்துக்கொண்டு, தம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிக்கின்றனர் (காண். எண். 49).

அருள்பணியாளர் கீழுள்ளவாறு அல்லது இது போன்று சிற்றுரை ஆற்றுகின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
பாஸ்கா மறைநிகழ்வு வழியாக நாம் புது வாழ்வு பெற்றுக்
கிறிஸ்துவோடு வாழுமாறு புனிதத் திருமுழுக்கில்
நாம் அவரோடு அடக்கம் செய்யப்பட்டுள்ளோம்.
ஆகவே தவக் காலச் செயல்பாடுகள் முடிவடைந்திருக்கும் இவ்வேளையில்
சாத்தானையும் அதன் செயல்களையும் விட்டுவிடுவதாகவும்
புனிதக் கத்தோலிக்கத் திரு அவையில் இறைவனுக்கு ஊழியம் புரிவதாகவும்
முன்பு திருமுழுக்கின்போது நாம் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது புதுப்பிப்போம்.
எனவே,

அ.ப. : சாத்தானை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.

அ.ப.: அவன் செயல்களை எல்லாம் விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.

அ.ப. அவன் ஆரவாரங்களை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.

அல்லது

அ.ப.: கடவுளின் பிள்ளைகளுக்கு உரிய உரிமையுடன் வாழ நீங்கள் பாவத்தை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.

அ.ப. : பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தாதிருக்க, நீங்கள் தீயக் கவர்ச்சிகளை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.

அ.ப. : பாவத்திற்குக் காரணனும் தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.

தேவையானால் இந்த இரண்டாம் பாடத்தை ஆயர் பேரவை நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம். பின் அருள்பணியாளர் தொடர்கின்றார்:

அ.ப. : விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றீர்களா?
எல். : நம்புகின்றேன்.

அ.ப. : அவருடைய ஒரே மகனும், கன்னி மரியாவிடமிருந்து பிறந்து, பாடு பட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றவருமாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றீர்களா?
எல். : நம்புகின்றேன்.

அ.ப. : தூய ஆவியாரையும் புனிதக் கத்தோலிக்கத் திரு அவையையும் புனிதர்களுடைய சமூக உறவையும் பாவ மன்னிப்பையும் உடலின் உயிர்ப்பையும் நிலைவாழ்வையும் நம்புகின்றீர்களா?
எல். : நம்புகின்றேன்.

அருள்பணியாளர் முடிவுரையாகச் சொல்கின்றார்:

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும், தண்ணீராலும் தூய ஆவியாராலும் நமக்குப் புதுப் பிறப்பு அளித்துப் பாவ மன்னிப்பு வழங்கியவரும் எல்லாம் வல்ல தந்தையுமாகிய கடவுளே தமது அருளால் நாம் நிலைவாழ்வு பெறும் பொருட்டு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் நம்மைப் பாதுகாப்பாராக.

பதில்: ஆமென்.

06. அருள் பணியாளர் மக்கள் மீது புனிதப்படுத்தப்பட்ட நீரைத் தெளிக்கின்றார்; அப்போது அனைவரும் பாடுகின்றனர்:

கோவிலின் வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன், அல்லேலூயா;
அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ
அவர்கள் யாவருமே மீட்பினைப் பெற்றுக் கூறுவர்: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.

அல்லது திருமுழுக்குப் பண்பு உள்ள வேறு பாடல் பாடலாம்.

57. அதே வேளையில் புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்கள் நம்பிக்கையாளர் மத்தியில் தங்கள் இடங்களுக்குச் செல்கின்றனர்.

திருமுழுக்குத் தண்ணீரைத் திருப்பீட முற்றத்தில் புனிதப்படுத்தினால், அதைத் திருத்தொண்டரும் பணியாளர்களும் வணக்கத்தோடு திருமுழுக்குத் தொட்டிக்கு எடுத்துச் செல்கின்றனர்.

திருமுழுக்குத் தொட்டி புனிதப்படுத்தப்படவில்லை எனில், புனித நீர் வசதியான இடத்தில் வைக்கப்படும்.

58. புனிதப்படுத்தப்பட்ட நீரைத் தெளித்தபின் அருள்பணியாளர் த. சென்று, பொது மன்றாட்டை நடத்துகின்றார். இதில்
முறையாகப் பங்குபெறுவர். நம்பிக்கை அறிக்கை சொல்வதில்லை.


நற்கருணை வழிபாடு

59. அருள் பணியாளர் பீடத்துக்கு வந்து வழக்கம் போல நற்கருணை வழிபாட்டைத் தொடங்குகின்றார்.

60. புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்கள் அல்லது அவர்கள் குழந்தைகளாயின், பெற்றோர் அல்லது ஞானப் பெற்றோர் அப்பமும் இரசமும் காணிக்கைப் பவனியில் கொண்டு வருவது சிறந்தது.

61. காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்கள் ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளோடு
இவர்களுடைய மன்றாட்டுகளையும் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்:
பாஸ்கா மறைநிகழ்வுகளால் தொடங்கப்பெற்றவை
உமது செயலாற்றலால் எங்களுக்கு நிலைவாழ்வின் அருமருந்தாய் அமைவனவாக. எங்கள்.

62. பாஸ்காவின் தொடக்கவுரை 1: பாஸ்கா மறைநிகழ்வு (இச்சிறப்பான இரவில்), பக். 529.

63. திருமுழுக்குப் பெற்றவர்கள், அவர்களுடைய ஞானப் பெற்றோர் ஆகியோரை நற்கருணை மன்றாட்டில் நினைவுகூர்தல், திருப்பலி நூலிலும் உரோமைத்திருச்சடங்கு நூலிலும் ஒவ்வொரு நற்கருணை மன்றாட்டிலும் குறிப்பிட்டுள்ள வாய்பாட்டின்படி இடம்பெறும்.

64. புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்களுக்கு, "இதோ, இறைவனின் செம்மறி" என்பதற்குமுன், முதல் நற்கருணை பெறுதல் பற்றியும் புகுமுகச் சடங்குகளின் நிறைவும் கிறிஸ்தவ வாழ்வின் முழுமையும் மையமும் ஆகிய இம்மறைபொருளின் மாண்பு பற்றியும் சுருக்கமாக அருள்பணியாளர் அறிவுரை வழங்கலாம்.

65 புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்கள் தங்களது ஞானப் பெற்றோர், பெற்றோர், கத்தோலிக்க வாழ்க்கைத் துணைவர், வேதியர் ஆகியோரோடு இணைந்து இரு வடிவங்களில் நற்கருணை உட்கொள்வது விரும்பத்தக்கது. மறைமாவட்ட ஆயரின் அனுமதியோடு சூழ்நிலைக்கு ஏற்ப, எல்லா நம்பிக்கையாளரும் இரு வடிவங்களிலும் தூய நற்கருணை பெற அனுமதிப்பது முறை ஆகும்.

66. திருவிருந்துப் பல்லவி

1 கொரி 5:7-8 நமது பாஸ்காவாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு
கொண்டாடு வோமாக. அல்லேலூயா.

திருப்பாடல் 117-ஐப் பாடுவது பொருத்தம் ஆகும்.

67. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு பாஸ்கா அருளடையாளங்களால் நிறைவு பெற்ற நாங்கள் உமது பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

68. சிறப்பு ஆசி

எல்லாம் வல்ல இறைவன், இன்றைய பாஸ்கா பெருவிழாவின் கொண்டாட்டத்தால் உங்களுக்கு ஆசி வழங்கி பாவத்தின் தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் இரக்கத்துடன் காப்பாராக.

பதில்: ஆமென்.

அவருடைய ஒரே திருமகனின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு உங்களைத் தகுதி பெறச் செய்த இறைவன், அழியா வாழ்வின் கொடைகளால் உங்களை நிரப்புவாராக.

பதில்: ஆமென்.

ஆண்டவருடைய பாடுகளின் நாள்களுக்குப்பின் பாஸ்கா விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடும் நீங்கள் முடி வற்ற விண்ணகப் பாஸ்கா விழாவுக்கு அக்களிப்புடன் அவரது அருளால் வந்து சேர்வீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி என்றும் தங்குவதாக.

இறுதி ஆசிக்கான வாய்பாடு வயதுவந்தோர் அல்லது குழந்தைகள் திருமுழுக்குச்
சடங்கிலிருந்தும் சூழ்நிலைக்கு ஏற்பப் பயன்படுத்தப்படலாம்.

69. திருத்தொண்டர் அல்லது - அவர் இல்லை எனில் - அருள்பணியாளரே பின்வரும் வார்த்தைகளைப் பாடி அல்லது சொல்லி மக்களை அனுப்பி வைக்கின்றார்:

அ.ப. : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா.

அல்லது


அமைதியுடன் சென்று வாருங்கள், அல்லேலூயா, அல்லேலூயா.
எல்.' இறைவனுக்கு நன்றி, அல்லேலூயா, அல்லேலூயா.


பாஸ்கா எண்கிழமை முழுவதும் இது கடைப்பிடிக்கப்படும்.

70. பாஸ்கா காலத்தில் நடைபெறும் சிறப்புத் திருவழிபாட்டுக் போது பாஸ்கா திரி ஏற்றப்படும்.

=========================

பகல் திருப்பலி

71. வருகைப் பல்லவி

காண், திடகா 138:18,5-6 உயிர்த்தெழுந்தேன், உம்மோடு இன்றும் இருக்கிறேன், அல்லேலூயா. உமது கையை என்மீது வைத்தீர், அல்லேலூயா. உமது அறிவு வியப்பாய் உள்ளது, அல்லேலூயா, அல்லேலூயா.

அல்லது

லூக் 24:34; காண். திவெ 1:6 மெய்யாகவே ஆண்டவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா. மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் அவருக்கே உரியன, அல்லேலூயா, அல்லேலூயா.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

73. திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்முடைய ஒரே திருமகன் வழியாகச் சாவை வென்று
நிலைவாழ்வின் கதவை எங்களுக்கு இந்நாளில் மீண்டும் திறந்து வைத்தீர்;
அதனால் ஆண்டவருடைய உயிர்ப்பைப் பெருவிழாவாகக் கொண்டாடும் நாங்கள்,
உம்முடைய ஆவியாரால் புதுப்பிக்கப்பெற்று
ஒளிமிக்க வாழ்வுக்கு உயிர்த்தெழ அருள்புரிவீராக. உம்மோடு.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

73. காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, பாஸ்கா மகிழ்ச்சியில் அக்களிப்புறும் நாங்கள்
இப்பலிப்பொருள்களை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்;
இவற்றால் உமது திரு அவை வியத்தகு முறையில் புதுப் பிறப்பு அடைந்து
வளம் பெறுவதாக. எங்கள்.

74. தொடக்கவுரை: பாஸ்கா மறைநிகழ்வு.

இசையில்லாப் பாடம்: பாஸ்காவின் தொடக்கவுரை 1 (இச்சிறப்பான நாளில்), பக். 529.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

ஆண்ட வரே, எக்காலத்திலும் உம்மைப் புகழ்ந்துரைப்பதும்,
எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் பாஸ்கா வாகிய கிறிஸ்து பலியான
(இச்சிறப்பான நாளில்), உம்மை இன்னும் மிகுதியாக வாழ்த்திப் போற்றுவதும்
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் உலகின் பாவங்களைப் போக்கும் மெய்யான
செம்மறி அவரே. எங்களது சாவைத் தமது சாவால் அழித்தவரும்
தமது உயிர்ப்பினால் எங்கள் வாழ்வைப் புதுப்பித்தவரும் அவரே.

ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க அனைத்துலக மாந்தர்
அனைவரும் அக்களிக்கின்றனர்; அவ்வாறே ஆற்றல்மிக்கோரும்
அதிகாரம்கொண்ட தூதர்களும், உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.


'உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய "உம்முடைய புனிதர் அனைவருடனும் . . . எனும் மன்றாட்டும் "ஆகவே, ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய ..." எனும் மன்றாட்டும் சொல்லப்படும்.

75. திருவிருந்துப் பல்லவி

1கொரி 5:7-8 நமது பாஸ்காவாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார், அல்லேலூயா. ஆகையால் நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு கொண்டாடுவோமாக. அல்லேலூயா, அல்லேலூயா.

76. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உமது திரு அவையை என்றும் கனிவுடன் காத்தருளும்;
இவ்வாறு பாஸ்கா மறைநிகழ்வுகளால் அது புதுப்பிக்கப்பெற்று
உயிர்ப்பின் பேரொளிக்கு வந்து சேர்வதாக. எங்கள்.

77. திருப்பலி முடிவில் மக்களுக்கு ஆசி வழங்க அருள்பணியாளர் பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலிக்கான சிறப்பு ஆசி வாய்பாடடை தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தலாம் (பக். 372).

78. மக்களை அனுப்பக் கீழே உள்ளவாறு பாடலாம் (மேலே உள்ள படி. எண் 69) அல்லது சொல்லலாம்:

அ.ப. : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா.

அல்லது

அமைதியுடன் சென்று வாருங்கள், அல்லேலூயா, அல்லேலூயா.

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:

இறைவனுக்கு நன்றி. அல்லேலூயா, அல்லேலூயா.

=============↑ பக்கம் 375

====================

image