image

 

திருப்பலியின் அமைப்புமுறை

நற்கருணை மன்றாட்டு 1

அல்லது உரோமை நற்கருணை மன்றாட்டு

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

திருவழிபாட்டுச் சடங்குமுறைகள் சுட்டிக்காட்டும் தொடக்கவுரை தொடர்கின்றது. அதன் இறுதியில்:

தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!

84. அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

C: ஆகவே கனிவுமிக்க தந்தையே, இக்கொடைகளையும் இக்காணிக்கைகளையும்
புனித மாசற்ற பலிப்பொருள்களையும்

அவர் தம் கைகளைக் குவித்துச் சொல்கின்றார்:

நீர் ஏற்று

அப்பத்தின் மீதும் திருக்கிண்ணத்தின்மீதும் ஒரு முறை சிலுவை அடையாளம் வரைந்து சொல்கின்றார்:

ஆசி வழங்கிட உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய
இயேசு கிறிஸ்து வழியாக உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

அவர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

உமது புனிதக் கத்தோலிக்கத் திரு அவைக்காக
இவற்றை நாங்கள் முதலில் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்;
உலகெங்கும் அதற்கு அமைதியும் பாதுகாப்பும் ஒற்றுமையும் அளித்து
அதனை வழிநடத்தியருளும்.
உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) ... ... க்காகவும்
எங்கள் ஆயர் (பெயர்)* . . . க்காகவும் திருத்தூதர் வழிவரும் உண்மையான கத்தோலிக்க
நம்பககையைக் கடைப்பிடிப்போர் அனைவருக்காகவும்
இக்காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கின்றோம்.

85. வாழ்வோர் நினைவு

C1: ஆண்டவரே, உம் அடியார்களாகிய (பெயர்) .... ......, ஆகியோரையும் நினைவுகூர்ந்தருளும்.

அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து, யார் யாருக்காக மன்றாட விரும்புகின்றாரோ அவர்களுக்காகச் சிறிது நேரம் வேண்டுகின்றார். பின்னர் தம் கைகளை விரி. தொடர்கின்றார்:

இங்கே கூடியுள்ள அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
உம்மீது இவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இறைப்பற்றையும் நீர் அறிவீர்.
இவர்களுக்காக நாங்கள் இவற்றை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
இவர்களும் தமக்காகவும் தம்மவருக்காகவும்
இப்புகழ்ச்சிப் பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றார்கள்.
தங்களுடைய ஆன்மாக்களின் மீட்புக்காகவும்
தாங்கள் எதிர்நோக்கியிருக்கும் நலவாழ்வுக்காகவும்
பாதுகாப்புக்காகவும் என்றும் வாழ்பவரும் உயிருள்ளவரும்
உண்மையுள்ளவருமான கடவுளாகிய உமக்கு
இவர்கள் தங்கள் பொருத்தனைகளைச் செலுத்துகின்றார்கள்.

86. புனிதர் நினைவு

C2: உம்முடைய புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள்,
முதன்முதலாக, இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய
இயேசு கிறிஸ்துவின் தாயும் என்றும் கன்னியுமான மாட்சிக்கு உரிய மரியாவையும்
அதே கன்னியின் கணவரான புனித யோசேப்பு,
திருத்தூதர்களும் மறைச்சாட்சியருமான பேதுரு, பவுல்,
அந்திரேயா (யாக்கோபு, யோவான், தோமா, யாக்கோபு,
பிலிப்பு, பார்த்தலமேயு, மத்தேயு: சீமோன், ததேயு; லீனஸ்,
கிளீட்டஸ், கிளமெண்ட், சிக்ஸ்துஸ், கொர்னேலியுஸ்,
சிப்பிரியான், லாரன்ஸ், கிரிசோகொனுஸ்,
ஜான், பால், கோஸ்மாஸ், தமியான்)
ஆகியோரையும் வணக்கத்துடன் நினைவுகூருகின்றோம்.
இவர்களுடைய பேறு பயன்களாலும் வேண்டல்களாலும்
நாங்கள் யாவற்றிலும் உமது உதவி பெற்றுக்
காக்கப்படுமாறு அருள் புரியும்.
(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)

ரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை எண் 149 இல் (குறிப்பிட்டுள்ளவாறு இணையுதவி ஆயர் அல்லது துனண ஆயரின் பெயர்களையும் இங்குச் சொலலாம்.

==============28^ 8680 ^-----------

சில விழாக்களுக்கான சிறப்பு நினைவுகள்

ஆண்டவருடைய பிறப்பு விழாவும் எண்கிழமையும்

உம்முடைய புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள், கன்னிமை குன்றாப் புனித மரியா இவ்வுலகுக்கு மீட்பரைப் பெற்றுத் தந்த (புனிதமிக்க இரவை) நாளைக் கொண்டாடுகின்றோம். முதன்முதலாக, இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் தாயும் என்றும் கன்னியுமான மாட்சிக்கு உரிய மரியாவையும் +

ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழா

உம்முடைய புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள், உமது மாட்சியில் உம்மோடு என்றென்றும் இருக்கும் உம்முடைய ஒரே திருமகன் உண்மையாகவே எமது மனித உடலெடுத்து, காணத்தக்க விதத்தில் தோன்றிய புனிதமிக்க நாளைக் கொண்டாடுகின்றோம். முதன்முதலாக, இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் தாயும் என்றும் கன்னியுமான மாட்சிக்கு உரிய மரியாவையும்

பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலி முதல் பாஸ்கா 2-ஆம் ஞாயிறுவரை

உம்முடைய புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள், எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உடலோடு உயிர்த்தெழுந்த (புனிதமிக்க இரவை) நாளைக் கொண்டாடுகின்றோம். முதன்முதலாக, இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் தாயும் என்றும் கன்னியுமான மாட்சிக்கு உரிய மரியாவையும்

ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழா

உம்முடைய புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள், உம்முடைய ஒரே திருமகனாகிய எங்கள் ஆண்டவர் தம்முடன் இணைத்துக் கொண்ட வலுவற்ற எங்கள் இயல்பை மாட்சிக்கு உரிய உமது வலப் பக்கத்துக்கு உயர்த்திய புனிதமிக்க நாளைக் கொண்டாடுகின்றோம். முதன்முதலாக, இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் தாயும் என்றும் கன்னியுமான மாட்சிக்கு உரிய மரியாவையும்


பெந்தக்கோஸ்து ஞாயிறு

உம்முடைய புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள், தூய ஆவியார் நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் வடிவில் திருத்தூதர்களுக்குத் தோன்றிய பெந்தக்கோஸ்து பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். முதன்முதலாக, இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் தாயும் என்றும் கன்னியுமான மாட்சிக்கு உரிய மரியாவையும் !

87. அவர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

C: ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் உமது குடும்பம் முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இப்பலியை உளம் கனிந்து ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம். எங்கள் வாழ்நாள்களில் உமது அமைதியைத் தந்தருளும். மேலும் நிலையான அழிவிலிருந்து எங்களைக் காத்து, உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களின் திருக்கூட்டத்தில் நாங்களும் சேர்க்கப்படக் கட்டளையிட்டருளும்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)


பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலி முதல் பாஸ்கா 2-ஆம் ஞாயிறுவரை

ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் உமது குடும்பம் முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இப்பலியை உளம் கனிந்து ஏற்றருளும். பாவங்கள் அனைத்திலிருந்தும் அவர்களுக்கு மன்னிப்பு அளித்து, தண்ணீராலும் தூய ஆவியாராலும் அவர்கள் மறு பிறப்பு அடையத் திருவுளமானீர். அவர்களுக்காகவும் இப்பலியை உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கின்றோம். எங்கள் வாழ்நாள்களில் உமது அமைதியைத் தந்தருளும்; மேலும் முடிவில்லாத் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி, உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களின் திருக்கூட்டத்தில் நாங்களும் சேர்க்கப்படக் கட்டளையிட்டருளும்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)

பலிப்பொருள்கள் மீது அவர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC: இறைவா, இக்காணிக்கையைப் புனிதப்படுத்தி, 'உமக்கு உரிமையுடையதாகவும் தகுதியுடையதாகவும் உமக்கு ஏற்புடையதாகவும் உகந்ததாகவும் இருக்கச் செய்தருளும். இவ்வாறு உம் அன்புத் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் இது மாறுவதாக.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

89.பின்வரும் வாய்பாடுகளில் ஆண்டவரின் வார்த்தைகளை அவற்றின் பொருள்) ஏற்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்,
பின்வரும் வாய்பாடுகளில் ஆண்டவரின் வார்தைகளை அவற்றின் பொருளுக்கு ஏற்ப அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும்.

==============0^ 8682 ^-----------

CC: அவர் தாம் பாடுபடுவதற்கு முந்திய நாள்,

அவர் அப்பத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:

வணக்கத்துக்கு உரிய தம் திருக் கைகளில், அப்பத்தை எடுத்து,

அவர் தம் கண்களை உயர்த்துகின்றார்.

வான்நோக்கிக் கண்களை உயர்த்தி,
எல்லாம் வல்ல இறைவனும் தம் தந்தையுமாகிய உமக்கு நன்றி செலுத்தி,
ஆசி வழங்கி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.

அவர் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின் அதைத் திரு அப்பத் தட்டின் மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

90. அதன்பின் அவர் தொடர்கின்றார்:

அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்திய பின்,

அவர் திருக்கிண்ணத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:

எழில்மிகு இக்கிண்ணத்தை வணக்கத்துக்கு உரிய தம் திருக் கைகளில் எடுத்து,
மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி,
தம் சீடர்களுக்கு அளித்து, அவர் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

அவர் திருக்கிண்ணத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டியபின், அதைத் திருமேனித் துகில்மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

91. அதன்பின் அவர் சொல்கின்றார்:

C: நம்பிக்கையின் மறைபொருள்.

மக்கள் ஆர்ப்பரித்துத் தொடர்கின்றார்கள்:

ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை
அறிக்கையிடு கின்றோம். உமது உயிர்ப்பினையும்
எடுத்துரைக் கின் றோம்.

அல்லது

ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு
கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம்
நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.

அல்லது

உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும்.
உம் சிலுவையினாலும் உயிர்ப்பினாலும்
எங்களுக்கு விடுதலை அளித்தவர் நீரே.

92. அதன்பின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC: ஆகவே ஆண்டவரே, உம் திருமகனும்
எங்கள் ஆண்டவருமாகிய கிறிஸ்துவின்
புனிதமிக்க பாடுகளையும் இறந்தோரிடமிருந்து அவர் உயிர்த்தெழுந்ததையும்
இவரது மாட்சிக்கு உரிய விண்ணேற்றத்தையும்
உம் ஊழியர்களும் உம் புனித மக்களுமாகிய நாங்கள் நினைவுகூருகின்றோம்.
நீர் எங்களுக்கு வழங்கியுள்ள கொடைகளிலிருந்து
நிலைவாழ்வு தரும் புனித அப்பத்தையும்
முடிவில்லா மீட்பு அளிக்கும் திருக்கிண்ணத்தையும்
தூய, புனித, மாசற்ற பலிப்பொருளாக
மாண்புக்கு உரிய உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கின்றோம்.

இவற்றை இரக்கத்துடனும் கனிவுடனும் கண்ணோக்கியருளும்.
நீதிமானாகிய உம் ஊழியன் ஆபேலின் காணிக்கைகளையும்
எங்கள் நம்பிக்கையின் தந்தை ஆபிரகாமின் பலியையும்
உம்முடைய தலைமைக் குரு மெல்கிசேதேக்
உமக்கு அளித்த காணிக்கைகளையும்
நீர் உளம் கனிந்து ஏற்றுக்கொண்டது போல,
இவற்றையும் புனிதப் பலியாகவும் மாசற்ற பலிப்பொருளாகவும் ஏற்றுக்கொள்ளும்.

94 அவர் தம் கைகளைக் குவித்து, சிறிது குனிந்து தொடர்கின்றார்:

எல்லாம் வல்ல இறைவா,
உம்முடைய வானதூதர் தம் திருக் கைகளால்
இப்பலிப்பொருள்களை மாண்புக்கு உரிய உமது விண்ணகத் திருப்பீடத்துக்கு
எடுத்துச் செல்ல வேண்டும் என உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்.
இத்திருப் பீடத்திலிருந்து உம்முடைய திருமகனின்
புனிதமிக்க உடலையும் இரத்தத்தையும் பெறுகின்ற நாங்கள் அனைவரும்,

அவர் நிமிர்ந்து நின்று, தம்மீது சிலுவை அடையாளமிட்டுச் சொல்கின்றார்:

எல்லா விண்ணக ஆசியையும் அருளையும் நிறைவாகப் பெற்றுக்கொள்ளச் செய்தருளும்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)

95. இறந்தோர் நினைவு

அவர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

C3:ஆண்டவரே, நம்பிக்கையின் அடையாளத்தோடு
எங்களுக்கு முன் சென்று அமைதியில் துயில் கொள்ளும்
(பெயர்) .... , (பெயர்) . . . ஆகிய உம் அடியார்களையும் நினைவுகூர்ந்தருளும்.

அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து, யார் யாருக்காக மன்றாட விரும்புகின்றாரோ அவர்களுக்காகச் சிறிது நேரம் வேண்டுகின்றார். பின்னர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

ஆண்டவரே, இவர்களுக்கும் கிறிஸ்துவில் இளைப்பாறும் அனைவருக்கும்
ஆறுதலும் ஒளியும் அமைதியும் நிறைந்த இடத்தை
ஈந்திட வேண்டும் என இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)

96. அவர் தம் வலக் கையால் தன் மார்பைத் தட்டிச் சொல்கின்றார்.

C4:பாவிகளாகிய உம் அடியார்கள் நாங்களும்

அவர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

உமது பேரிரக்கத்தை எதிர்நோக்கி இருக்கின்றோம்.
உம்முடைய திருத்தூதர்களும் மறைச்சாட்சியருமாகிய
திருமுழுக்கு யோவான், ஸ்தேவான், மத்தியா, பர்னபா,
(இஞ்ஞாசியார், அலெக்சாண்டர், மார்சலீனுஸ், பீட்டர்,
பெலிசிட்டி, பெர்பேத்துவா, ஆகத்தா, லூசி,
ஆக்னஸ், செசிலியா, அனஸ்தாசியா) ஆகியோருடனும்
உம் புனிதர் அனைவருடனும் எங்களுக்கும் பங்களித்தருளும்.
எங்கள் தகுதியை முன்னிட்டு அன்று,
மாறாக உமது மிகுதியான மன்னிப்பினால்
அப்புனிதர்களோடு நாங்களும் தோழமை கொள்ள

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
உம்மை மன்றாடுகின்றோம்.

97. மேலும் அவர் தொடர்கின்றார்:

C: இவர் வழியாகவே, ஆண்டவரே,
நீர் இவற்றை எல்லாம் எப்போதும் நல்லவையாக்கி,
புனிதப்படுத்தி, உய்வித்து, ஆசி அளித்து எங்களுக்கு வழங்குகின்றீர்.

98. அவர் திருக்கிண்ணத்தையும் திரு அப்பம் உள்ள தட்டையும் எடுத்து, இரண்டையும் உயர்த்திப் பிடித்துக்கொண்டு சொல்கின்றார்:

இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல
இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில்,
எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.

மக்கள் ஆர்ப்பரிக்கின்றார்கள்:

ஆமென்.

பின்பு திருவிருந்துச் சடங்கு தொடர்கின்றது (பக். 609).

=============↑ பக்கம் 576

=======================

நற்கருணை மன்றாட்டு 2

99 இந்த நற்கருணை மன்றாட்டுக்கு எனத் தனித் தொடக்கவரை. சாப்பட்டிருப்பினும், இதற்குப் பதிலாக வேறு தொடக்கவுரையோடும் இந்த மன்றாட்டைப் பயன்படுத்தலாம்; சிறப்பாக, மீட்பின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக்கூறும் பொதுத் தொடக்கவுரையைப் பயன்படுத்தலாம்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

உம் வார்த்தையான அவர் வழியாக அனைத்தையும் படைத்தீர்.
அவரையே மீட்பராகவும் ஈடேற்றுபவராகவும் எங்களுக்கு அனுப்பினீர்.
அவர் தூய ஆவியால் உடலெடுத்து,
கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
அவர் உமது திருவுளத்தை நிறைவேற்றி,
புனித மக்களை உமக்குப் பெற்றுத் தரத்
தம் கைகளை விரித்துப் பாடுபட்டார்.
இவ்வாறு அவர் சாவை வென்று உயிர்ப்பை வெளிப்படுத்தினார்.

ஆகவே வானதூதரோடும் புனிதர் அனைவரோடும் சேர்ந்து,
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்துரைத்து
ஒரே குரலாய்ச் சொல்வதாவது:

தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!

==============10^ 8692 ^-----------

100, அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

C: ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர்,
தூய்மை அனைத்துக்கும் ஊற்று.

101. அவர் தம் கைகளைக் குவித்து, பின் பலிப்பொருள்கள் மீது விரித்துச் சொல்கின்றார்:

CC: ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து,
இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்.

அவர் தம் கைகளைக் குவித்து, அப்பத்தின் மீதும் திருக்கிண்ணத்தின்மீதும் ஒரு முறை சிலுவை அடையாளமிட்டுச் சொல்கின்றார்:

இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
உடலும் * இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
103. பின்வரும் வாய்பாடுகளில் ஆண்டவரின் வார்த்தைகளை அவற்றின் பொருளுக்கு ஏற்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.

அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்தபோது

அவர் அப்பத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:

அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி,
அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.

அவர் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின் அதைத் திரு
அப்பத் தட்டின் மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.
103. அதன்பின் அவர் தொடர்கின்றார்:

CC:அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின்,

அவர் திருக்கிண்ணத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:

கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி,
தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.


அவர் திருக்கிண்ணத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின், அதைத் திருமேனிக் துகில்மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

104. அதன்பின் அவர் சொல்கின்றார்:

C: நம்பிக்கையின் மறைபொருள்.

மக்கள் ஆர்ப்பரித்துத் தொடர்கின்றார்கள்:

ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை
அறிக்கையிடு கின்றோம். உமது உயிர்ப்பினையும்
எடுத்துரைக் கின் றோம்.

அல்லது

ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு
கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம்
நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.

அல்லது

உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும்.
உம் சிலுவையினாலும் உயிர்ப்பினாலும்
எங்களுக்கு விடுதலை அளித்தவர் நீரே.

105. அதன்பின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC: ஆகவே ஆண்டவரே,
நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து,
வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்;
எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத்
தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என
உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.

C1: ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும்
உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும்.
எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . , எங்கள் ஆயர் (பெயர்)* ...
எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும்
உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.

இறந்தோருக்கான திருப்பலியில் இதைச் சேர்த்துக் கொள்ளலாம்.

நீர் (இன்று) இவ்வுலகிலிருந்து
உம்மிடம் அழைத்துக்கொண்ட (பெயர்) ... என்னும்
உம் அடியாரை நினைவுகூர்ந்தருளும்.
உம் திருமகனோடு அவரது இறப்பில் இணைக்கப்பட்டிருந்த இவர்
உயிர்ப்பிலும் அவரைப் போல இருக்கச் செய்தருளும்.

C2: மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும்
எங்கள் சகோதரர் சகோதரிகளையும்
இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து,
உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும்.
எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும்.
கடவுளின் கன்னித் தாயான புனித மரியா,
அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள்,
இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய
புனிதர் அனைவருடனும்
நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று,

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக
உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.

உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை எண் 149 இல் குறிப்பிட்டுள்ளவாறு இணையுதவி ஆயர் அல்லது துணை ஆயரின் பெயர்களையும் இங்கும் சொல்லலாம்.

106. அவர் திருக்கிண்ணத்தையும் திரு அப்பம் உள்ள தட்டையும் எடுத்து, இரண்டையும் உயர்த்திப் பிடித்துக்கொண்டு சொல்கின்றார்:

இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல
இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில்,
எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.

மக்கள் ஆர்ப்பரிக்கின்றார்கள்:

ஆமென்.

பின்பு திருவிருந்துச் சடங்கு தொடர்கின்றது (பக். 609).

=============↑ பக்கம் 586

=======================

நற்கருணை மன்றாட்டு 3

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

 

திருவழிபாட்டுச் சடங்குமுறைகள் சுட்டிக்காட்டும் தொடக்கவுரை தொடர்கின்றது. அது பின்வருமாறு முடிவுறும்.

தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!

108. அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர்,
உம்முடைய படைப்புகள் எல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே.
ஏனெனில் உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக
தூய ஆவியாரின் செயலாற்றலால்
அனைத்தையும் உய்வித்துத் தூய்மைப்படுத்துகின்றீர்.
கதிரவன் தோன்றி மறையும்வரை
உமது பெயருக்குத் தூய காணிக்கையை ஒப்புக்கொடுக்குமாறு
உமக்கென மக்களை இடையறாது ஒன்றுசேர்த்து வருகின்றீர்.

109. அவர் தம் கைகளைக் குவித்து, பலிப்பொருள்கள் மீது விரித்துச் சொல்கின்றார்:

CC: எனவே ஆண்டவரே,
உமக்கு அர்ப்பணிக்க நாங்கள் கொண்டுவந்துள்ள இக்காணிக்கைகளை
அதே ஆவியால் தூய்மைப்படுத்த உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.

அவர் தம் கைகளைக் குவித்து, அப்பத்தின்மீதும் திருக்கிண்ணத்தின் மீதும் ஒரு முறை சிலுவை அடையாளமிட்டுச் சொல்கின்றார்:

இவ்வாறு உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
உடலாகவும் * இரத்தமாகவும் இவை மாறுவனவாக.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

அவர் பணித்தவாறே இம்மறைநிகழ்வுகளைக் கொண்டாடுகின்றோம்.

110. பின்வரும் வாய்பாடுகளில் ஆண்டவரின் வார்த்தைகளை அவற்றின் பொருளுக்கு ஏற்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.

CC: ஏனெனில் அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில்

அவர் அப்பத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:

அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி,
அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.

அவர் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின், அதைத் திரு
அப்பத் தட்டின்மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

111. அதன்பின் அவர் தொடர்கின்றார்:

அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின்,

அவர் திருக்கிண்ணத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக் கொண்டு தொடர்கின்றார்:

கிண்ணத்தையும் எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி,
அதைத் தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

அவார் திருக்கினணத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டியபின். அதைத் திரும்ப துகில்மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

அதன்பின் அவர் சொல்கின்றார்:

104. அதன்பின் அவர் சொல்கின்றார்:

C: நம்பிக்கையின் மறைபொருள்.

மக்கள் ஆர்ப்பரித்துத் தொடர்கின்றார்கள்:

ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை
அறிக்கையிடு கின்றோம். உமது உயிர்ப்பினையும்
எடுத்துரைக் கின் றோம்.

அல்லது

ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு
கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம்
நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.

அல்லது

உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும்.
உம் சிலுவையினாலும் உயிர்ப்பினாலும்
எங்களுக்கு விடுதலை அளித்தவர் நீரே.

113. அதன்பின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC: ஆகவே ஆண்டவரே,
உம் திருமகனின் மீட்பு அளிக்கும் பாடுகளையும்
வியப்புக்கு உரிய உயிர்ப்பையும் விண்ணேற்றத்தையும்
நாங்கள் நினைவுகூருகின்றோம்.
இவர் மீண்டும் வருவார் என எதிர்பார்த்திருக்கும் நாங்கள்
இப்புனிதமான உயிருள்ள பலியை நன்றி செலுத்தி உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.

உமது திரு அவையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள
உம்மை மன்றாடுகின்றோம்;
இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர்;
இவ்வாறு உம்முடைய திருமகனின் திரு உடல்,
திரு இரத்தத்தால் ஊட்டம் பெறும் நாங்கள்,
அவருடைய தாய ஆவியால் நிரப்பப்பெற்று,
கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும் ஒரே உள்ளமும்
உடையவராக விளங்கச் செய்வீராக.

C1: இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக.
இவ்வாறு உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களோடு,
முதன்முதலாக, புனிதமிக்க கன்னியும் கடவுளின் தாயுமான மரியா,
அவருடைய கணவரான புனித யோசேப்பு,
புனித திருத்தூதர்கள், மாட்சிமிகு மறைச்சாட்சியர்,
(இன்று நாங்கள் கொண்டாடும் புனித (பெயர்) . . . / அல்லது
எங்கள் பாதுகாவலராகிய புனித (பெயர்) ...)
மற்ற புனிதர்கள் அனைவரோடும்
நாங்கள் உரிமைப் பேற்றுக்குத் தகுதியுடையோர் ஆவோமாக.
இவர்களின் வேண்டுதலால் நாங்கள் என்றும்
உமது உதவியைப் பெறுவோம் என உறுதியோடு இருக்கின்றோம்.

C2: ஆண்டவரே, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி
உலகுக்கெல்லாம் அமைதியும் மீட்பும் தர வேண்டும் என மன்றாடுகின்றோம்.
இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திரு அவையை,
சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) ... ,
எங்கள் ஆயர் (பெயர்)* . . . , ஏனைய ஆயர்கள், திருநிலையினர்,
உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரையும்
நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக.

நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற
இக்குடும்பத்தின் வேண்டல்களுக்குக் கனிவுடன் செவிசாய்த்தருளும்.
கனிவுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய பிள்ளைகளைக்
கனிவுடன் உம்மோடு சேர்த்துக்கொள்ளும்.

C3: இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும்
உமக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து
இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும்
உமது ஆட்சியில் கனிவுடன் ஏற்றருளும்.
நாங்களும் அங்கு வந்து சேர்ந்து,
அவர்களோடு உமது மாட்சியால் என்றும் மன நிறைவு அடைவோம் என

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எதிர்நோக்கியிருக்கின்றோம்.
இவர் வழியாகவே நீர் உலகுக்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.

உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை எண் 149 இல் குறிப்பிட்டுள்ளவாறு இணையுதவி ஆயர் அல்லது துணை ஆயரின் பெயர்களையும் இங்கு சொல்லலாம்.

114. அவர் திருக்கிண்ணத்தையும் திரு அப்பம் உள்ள தட்டையும் எடுத்து, இரண்டையும் உயர்த்திப் பிடித்துக்கொண்டு சொல்கின்றார்:

இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல
இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில்,
எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.

மக்கள் ஆர்ப்பரிக்கின்றார்கள்:

ஆமென்.

பின்பு திருவிருந்துச் சடங்கு தொடர்கின்றது (பக். 609).


115. இந்த நற்கருணை மன்றாட்டு இறந்தோருக்கான திருப்பலிகளில் பயன்படுத்தப்படும் போது, கீழ்வரும் மன்றாட்டு சொல்லப்படலாம்.

C4: + நீர் (இன்று) இவ்வுலகிலிருந்து
உம்மிடம் அழைத்துக்கொண்ட (பெயர்) ... என்னும்
உம் அடியாரை நினைவுகூர்ந்தருளும்.
உம் திருமகனோடு அவருடைய இறப்பில் இணைக்கப்பட்டிருந்த இவர்
உயிர்ப்பிலும் அவரைப் போல இருக்கச் செய்தருளும்.
கிறிஸ்து இறந்தோரை மண்ணிலிருந்து உடலோடு உயிர்த்தெழச்செய்து,
தாழ்வுக்கு உரிய எங்கள் உடலை
மாட்சிக்கு உரிய தமது உடலின் சாயலாக மாற்றும் அந்நாளில்,
இறந்த இவரும் உயிர்ப்பில் கிறிஸ்துவைப் போல இருப்பாராக.

மேலும் இறந்துபோன எங்கள் சகோதரர் சகோதரிகளையும்
உமக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும்
உமது ஆட்சியில் கனிவுடன் ஏற்றருளும்.
நாங்களும் ஒரு நாள் அங்கிருப்போம் எனவும்,
அவர்களோடு நாங்களும் உமது மாட்சியைக் கண்டு
என்றும் மன நிறைவு அடைவோம் எனவும்,
அப்பொழுது எங்கள் கண்களிலிருந்து
கண்ணீர் அனைத்தையும் துடைப்பீர்
எனவும் எதிர்பார்த்திருக்கின்றோம்.
ஏனெனில் எங்கள் கடவுளாகிய உம்மை நீர் இருப்பது போல
நாங்கள் கண்டு, என்றென்றும்
உம்மைப் போலவே இருப்போம்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்:

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
உம்மை முடிவின்றிப் புகழ்ந்தேத்துவோம்.
இவர் வழியாகவே நீர் உலகுக்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.

=============↑ பக்கம் 595

=======================

நற்கருணை மன்றாட்டு 4

116. இந்த நற்கருணை மன்றாட்டுக்கான தொடக்கவுரையை மாற்றலாகாது; இது தொடக்கவுரையையும் இணைத்து மீட்பு வரலாறு முழுவதையும் சுருக்கமாக எடுத்துரைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

தூயவரான தந்தையே,
உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதி ஆகும்;
உம்மை மாட்சிப்படுத்துவது உண்மையிலேயே நீதியும் ஆகும்.
ஏனெனில் நீர் ஒருவரே உயிருள்ள, உண்மையான கடவுள்;
நீர் காலங்களுக்கெல்லாம் முன்னரே இருக்கின்றீர்;
அணுகமுடியாத ஒளியில் வாழ்கின்ற நீர் என்றும் நிலைத்திருக்கின்றீர்.
நீர் ஒருவரே நல்லவர். உயிரின் ஊற்றாகிய நீர் யாவற்றையும் படைத்து,
படைப்புகளை நலன்களால் நிறைத்து,
உமது ஒளியின் மாட்சியால் மக்களை மகிழ்விக்கத் திருவுளமானீர்.

ஆகவே எண்ணற்ற வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று,
இரவும் பகலும் உமக்குப் பணி புரிகின்றனர்;
உமது திருமுகத்தின் மாட்சியைக் கண்டு, உம்மை இடையறாது போற்றுகின்றனர்.
அவர்களோடு நாங்களும், எங்கள் பூவுலகப் படைப்புகள் அனைத்தும்
உமது பெயரை அக்களிப்புடன் ஒரே குரலில் அறிக்கையிட்டுப் பாடுவதாவது:

தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!

117. அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

C; தூயவரான தந்தையே, உம்மைப் புகழ்கின்றோம்:
ஏனெனில் நீர் மாண்புமிக்கவர்;
உமது ஞானமும் பேரன்பும் விளங்க, அனைத்தையும் செய்தருளினீர்.
மனிதர் எங்களை உமது சாயலாகப் படைத்து,
படைத்தவராகிய உமக்கே நாங்கள் பணி புரியவும்,
படைப்புகளை எல்லாம் ஆண்டு நடத்தவும்,
உலகம் அனைத்தையும் எங்கள் பொறுப்பில் ஒப்படைத்தீர்.
கீழ்ப்படியாமையால் நாங்கள் உமது நட்புறவை இழந்தபோதிலும்
நீர் எங்களைச் சாவின் அழிவுக்கு விட்டுவிடவில்லை;
ஏனெனில் தேடுவோர் யாவரும் உம்மைக் கண்டடைய
நீர் இரக்கத்துடன் துணைபுரிந்தீர்;
மேலும் எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளப் பன்முறை முன்வந்தீர்;
மீட்பினை எதிர்பார்க்க இறைவாக்கினர் வழியாக எங்களுக்கு இயம்பினீர்.

தூயவரான தந்தையே, காலம் நிறைவுற்றபோது
உம் ஒரே திருமகனை மீட்பராக அனுப்பும் அளவுக்கு நீர் எங்களை அன்பு செய்தீர்.
அவர் தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடலெடுத்து
மனிதராகப் பிறந்து பாவம் தவிர மற்ற அனைத்திலும் எங்களைப் போல வாழ்ந்தார்;
ஏழைகளுக்கு ஈடேற்றம், சிறைப்பட்டோருக்கு விடுதலை,
துயருறும் இதயத்துக்கு மகிழ்ச்சி என்று நற்செய்தி கூறினார்;
உமது திட்டத்தை நிறைவேற்ற, தம்மைத் தாமே சாவுக்குக் கையளித்தார்;
இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, சாவை அழித்து, புது வாழ்வு தந்தார்.

தந்தையே, நாங்கள் இனிமேல் எங்களுக்காக வாழாமல்
எங்களுக்காக இறந்து, உயிர்த்த அவருக்காகவே வாழும் பொருட்டு
நம்பிக்கையாளர் எங்கள் மீது தூய ஆவியாரை
உம்மிடமிருந்து முதற்கொடையாக அனுப்பினார்.
இவ்வாறு அவரது அலுவலைத் தூய ஆவியார்
இவ்வுலகில் தொடர்ந்து நடத்தி,
புனிதமாக்கும் பணியை நிறைவேற்றி வருகின்றார்.

118. அவர் தம் கைகளைக் குவித்து, பின் பலிப்பொருள்கள் மீது விரித்துச் சொல்கின்றார்:

CC: ஆகவே ஆண்டவரே, அதே தூய ஆவியார்
வெக்காணிக்கைகளைப் புனிதப்படுத்தியருள வேண்டும் என
நாங்கள் மன்றாடுகின்றோம்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

இவ்வாறு எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
நிலையான உடன்படிக்கையாக எங்களுக்கு விட்டுச் சென்ற
இந்த மாபெரும் மறைநிகழ்வைக் கொண்டாடுமாறு

அவர் அப்பத்தின் மீதும் திருக்கிண்ணத்தின் மீதும் ஒரு முறை சிலுவை அடையாளமிட்டுச் சொல்கின்றார்:

இக்காணிக்கைகள் அவரது உடலும் * இரத்தமுமாக மாறுவனவாக.

119. பின்வரும் வாய்பாடுகளில் ஆண்டவரின் வார்த்தைகளை அவற்றின் பொருளுக்கு ஏற்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.

CC: ஏனெனில் தூயவரான தந்தையே,
உம்மால் அவர் மாட்சிப்படுத்தப்படும் நேரம் வந்ததும்,
உலகில் வாழ்ந்த தமக்கு உரியோர்மேல் அன்புகொண்டிருந்த அவர்
அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தி,
அவர்களோடு இரவு விருந்தை அருந்துகையில்,

அவர் அப்பத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:

அப்பத்தை எடுத்து, ஆசி வழங்கி, அதைப் பிட்டு,
தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.

அவர் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின், அதைத் திரு
அப்பத் தட்டின் மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

120, அதன்பின் அவர் தொடர்கின்றார்:


அவ்வண்ணமே,

அவர் திருக்கிண்ணத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:

திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து, நன்றி கூறி,
தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

அவர் திருக்கிண்ணத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின் அதைத் திருமேனிக்
துகில் மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

131. அதன்பின் அவர் சொல்கின்றார்:

C: நம்பிக்கையின் மறைபொருள்.

மக்கள் ஆர்ப்பரித்துத் தொடர்கின்றார்கள்:

ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை
அறிக்கையிடு கின்றோம். உமது உயிர்ப்பினையும்
எடுத்துரைக் கின் றோம்.

அல்லது

ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு
கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம்
நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.

அல்லது

உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும்.
உம் சிலுவையினாலும் உயிர்ப்பினாலும்
எங்களுக்கு விடுதலை அளித்தவர் நீரே.

122. அதன்பின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC: ஆகவே ஆண்டவரே,
எங்கள் மீட்பின் நினைவை இப்பொழுது கொண்டாடும் நாங்கள்,
கிறிஸ்து இறந்ததையும் பாதாளங்களில் இறங்கியதையும்
மீண்டும் நினைவுகூருகின்றோம்;
இவரது உயிர்ப்பையும்
உமது வலப் பக்கத்துக்கு இவர் எழுந்ததையும் அறிக்கையிடுகின்றோம்.
மாட்சியுடன் இவர் வருவார் என எதிர்பார்த்திருக்கும் நாங்கள்,
உமக்கு உகந்ததும் உலகுக்கு எல்லாம் மீட்பு அளிப்பது மான பலியாக
இவருடைய உடலையும் இரத்தத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.

ஆண்டவரே, உமது திரு அவைக்காக
நீரே ஏற்பாடு செய்துள்ள இப்பலிப்பொருளைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்.
இந்த ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்குபெறும் அனைவரும் தூய ஆவியாரால் ஒரே உடலாகக் கூட்டிச்சேர்க்கப்பட்டு, உமது மாட்சியின் புகழுக்காகக் கிறிஸ்துவில் உயிருள்ள பலிப்பொருளாகுமாறு
கனிவாய் அருள்புரியும்.

C1: எனவே ஆண்டவரே, யாருக்காக இப்பலியை
'உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோமோ,
அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவுகூர்ந்தருளும்.
சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ,
எங்கள் ஆயர் (பெயர்) * ..., அனைத்துலக ஆயர்கள்,
திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
இப்பலியை ஒப்புக்கொடுப்போரையும் இங்கே கூடியிருப்போரையும்
உம் மக்கள் அனைவரையும்
நேர்மையான இதயத்தோடு
உம்மைத் தேடி வரும் யாவரையும் நினைவுகூர்ந்தருளும்.

உம் கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் நினைவுகூர்ந்தருளும்.
இறந்தவர்களில் உம்மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்
யார் என நீர் ஒருவரே அறிவீர்;
அவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.

* சராமைத் திருப்பலி நூலின் பொதுப் பாடப்பினை எண் 119 இல் குறிப்பிட்டுள்ள இணையுதவி ஆயர் அல்லது துணை ஆயரின் பெயர்களையும் இங்குச் சொல்லலாம்.

C2: கனிவுள்ள தந்தையே,
புனித கன்னியும் கடவுளின் தாயுமான மரியா,
அவருடைய கணவரான புனித யோசேப்பு,
திருத்தூதர்கள், உம் புனிதர்கள் ஆகிய அனைவரோடும்
உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும்
விண்ணக உரிமைப் பேற்றினை அடைந்திட அருள்புரியும்.
பாவத்தினாலும் இறப்பினாலும் வரும் அழிவிலிருந்து விடுதலை பெற்ற
படைப்புகள் அனைத்தோடும் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
உமது ஆட்சியில் உம்மைப் புகழ்ந்தேத்துவோம்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

இவர் வழியாகவே நீர் உலகுக்கு
எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.

123. அவர் திருக்கிண்ணத்தையும் திரு அப்பம் உள்ள தட்டையும் எடுத்து, இரண்டையும் உயர்த்திப் பிடித்துக்கொண்டு சொல்கின்றார்:

இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல
இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில்,
எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.

மக்கள் ஆர்ப்பரிக்கின்றார்கள்:

ஆமென்.

பின்பு திருவிருந்துச் சடங்கு தொடர்கின்றது (பக். 609).


=============↑ பக்கம் 604

======================

 

image