image

 

திருப்பலியின் அமைப்புமுறை

திருவிருந்துச் சடங்கு


124 திருக்கிண்ணத்தையும் திரு அப்பம் உள்ள தட்டையும் பீடத்தின் மீது வைத்துவிட்டு அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்துச் சொல்கின்றார்:

மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு,
இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:

அவர் தம் கைகளை விரித்து, மக்களோடு சேர்ந்து சொல்கின்றார்:

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

125. அருள்பணியாளர் மட்டும் தம் கைகளை விரித்துத் தொடர்ந்து சொல்கின்றார்:

ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து,
எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள
உம்மை மன்றாடுகின்றோம்.
உமது இரக்கத்தின் உதவியால்
நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று,
யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக.
நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும்
எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

மக்கள் ஆர்ப்பரித்து மன்றாட்டை நிறைவு செய்கின்றனர்:

ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.

ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை வி டு வித்து,
எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள் உம் மை
மன்றாடுகின்றோம். உ மது இரக்கத்தின் உதவியால் நாங்கள்
பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று,
யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக.
நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய
இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில், ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.


106. பின்பு அருள்பணியாளர் தம் கைகளை விரித்துத் தெளிவான குரலில் சொல்கின்றார்:

ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே,
"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன்.
என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று
உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே;
எங்கள் பாவங்களைப் பாராமல்,
உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி,
உமது திருவுளத்துக்கு ஏற்ப
அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

மக்கள் பதிலுரைக்கின்றார்கள்: ஆமென்.

127. அருள் பணியாளர் மக்களை நோக்கித் தம் கைகளை விரித்து, பின் குவித்துச் சொல்கின்றார்:

ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.

மக்கள் பதிலுரைக்கின்றார்கள்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.

128. பின்பு தேவைக்கு ஏற்பத் திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளர் தொடர்ந்து சொல்கின்றார்:

ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.

==============3^ 8715 ^-----------

அனைவரும் அந்தந்த இடத்தின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அமைதியையும் நட்புறவை அன்பையும் வெளிப் படுத்தும் அடையாளத்தைத் தங்களுக்குள்
பகிர்ந்து கொள்கின்றனர். அருள் பணியாளர் திருத்தொண்டருக்கு அல்லது பணியாளருக்கு அமைதியை வழங்குகின்றார்.

129 பின்பு, அருள்பணியாளர் திரு அப்பத்தை எடுத்து, திரு அப்பத் தட்டின்மீது அதைப் .:0 எரு சிறு அப்பத்துண்டைத் திருக்கிண்ணத்தினுள் இடுகின்றார். பின் அமைந்த குரலில் சொல்கின்றார்:

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும
் இங்கு ஒன்றாய்க் கலந்து,
இதை உட்கொள்ளும் நமக்கு நிலைவாழ்வு அளிப்பதாக.

130. அப்போது மக்கள் பாடுவது அல்லது சொல்வது:

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.

திரு அப்பம் பிடும் சடங்கு நீண்டதாயின் அது முடியும்வரை இவ்வேண்டலைப் பல முறை சொல்லலாம். ஆனால் "எங்களுக்கு அமைதியை அளித்தருளும் முடிக்க வேண்டும்,

131. பின்பு அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து அமைந்த குரலில் சொல்கின்றார்.

ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, உயிருள்ள இறைவனின் திருமகனே,
தந்தையின் திருவுளப்படி, தூய ஆவியாரின் ஒத்துழைப்பால்
உமது இறப்பின் வழியாக உலகுக்கு வாழ்வு அளித்தீர்.
இந்தப் புனிதமிக்க உம் உடலாலும் இரத்தத்தாலும்
என்னுடைய எல்லாக் குற்றங்களிலிருந்தும்
தீமை அனைத்திலிருந்தும் என்னை விடுவித்து,
நான் என்றும் உம்முடைய கட்டளைகளில் கருத்தூன்றி நிற்கச் செய்தருளும்.
நான் ஒருபோதும் உம்மை விட்டுப் பிரிய விடாதேயும்.

அல்லது

ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே,
நான் உட்கொள்ளும் உம் திரு உடலும் திரு இரத்தமும்
என்னை நீதித் தீர்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல்,
உமது பரிவிரக்கத்தால் என் மனதுக்கும் உடலுக்கும் பாதுகாப்பாகவும்
நலம் அளிக்கும் அருமருந்தாகவும் இருப்பனவாக.

132. முழங்காலிட்டு வணங்கியபின், அருள்பணியாளர் திரு அப்பத்தை எடுத்து, திரு அப்பத் தட்டின்மீது அல்லது திருக்கிண்ணத்தின்மீது அதைச் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு, 'மக்களை நோக்கித் தெளிவான குரலில் சொல்கின்றார்:

இதோ, இறைவனின் செம்மறி,
இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்:
செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்.

மக்களோடு சேர்ந்து ஒரு முறை சொல்கின்றார்:

ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்;
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும்,
எனது ஆன்மா நலம் அடையும்.

133. அருள்பணியாளர் பலிப்பீடப் பக்கம் திரும்பி நின்றுகொண்டு அமைந்த குரலில் சொல்கின்றார்:

கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நிலைவாழ்வு அளிப்பதாக.

அவர் கிறிஸ்துவின் திரு உடலை வணக்கத்துடன் உட்கொள்கின்றார்.

பின்பு, அவர் திருக்கிண்ணத்தை எடுத்து, அமைந்த குரலில் சொல்கின்றார்:

கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நிலைவாழ்வு அளிப்பதாக.

அவர் கிறிஸ்துவின் திரு இரத்தத்தை வணக்கத்துடன் உட்கொள்கின்றார்.

134 பின்பு அருள்பணியாளர் திரு அப்பம் உள்ள தட்டை அல்லது நற்கருணைக் கலத்தை எடுத்துக்கொண்டு நற்கருணை உட்கொள்வோரை நோக்கிச் சென்று, ஒவ்வொருவருக்கும் திரு அப்பத்தைச் சற்று உயர்த்திக்காட்டிச் சொல்கின்றார்:

கிறிஸ்துவின் திரு உடல்.

நற்கருணை உட்கொள்வோர் பதிலுரைக்கின்றார்: ஆமென்.

அவர் நற்கருணை உட்கொள்கின்றார்.

திருத்தொண்டர் தூய நற்கருணை வழங்கினால், அவரும் இவ்வாறே அதை வழங்குவார்.

135. இரு வடிவங்களில் நற்கருணை பெறவேண்டியவர் இருந்தால், அதற்கு உரிய இடத்தில் தரப்பட்டுள்ள சடங்கைப் பின்பற்றவும்.

136. அருள்பணியாளர் கிறிஸ்துவின் திரு உடலை உட்கொள்ளும்போது திருவிருந்துப் பாடல் பாடப்படும்.

137. நற்கருணை வழங்கி முடிந்ததும், அருள்பணியாளர் அல்லது திருத்தொண்டர் அல்லது பீடத்துணைவர் திரு அப்பத் தட்டை திருக்கிண்ணத்தின்மேல் வைத்துத் தூய்மைப் படுத்துகின்றார். பிறகு திருக்கிண்ணத்தையும் தூய்மைப்படுத்துகின்றார்.
அருள்பணியாளர் தூய்மைப்படுத்தும்போது அமைந்த குரலில் சொல்கின்றார்:

'ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட திரு உணவை
தூய உள்ளத்தோடு பெற்றுக்கொள்வோமாக.
இவ்வாழ்வில் நாங்கள் பெற்றுக்கொண்ட இக்கொடை
நிலைவாழ்வு அளிக்கும் அருமருந்தாகிட அருள்புரியும்.

138. பின்பு அருள் பணியாளர் தம் இருக்கைக்குச் சென்று அமரலாம். அப்போது தேவைக்கு ஏற்பச் சிறிது நேரம் அமைதி காக்கப்படலாம் அல்லது ஒரு திருப்பாடல் அல்லது புகழ்ப் பாடல் அல்லது வேறொரு பாடல் பாடப்படலாம்,

139. பின்பு அருள் பணியாளர் இருக்கை அருகில் அல்லது பீடத்தின் அருகில் நின்றுகொண்டு சொல்கின்றார்:


மன்றாடுவோமாக.

ஏற்கெனவே சிறிது நேரம் அமைதி காக்கப்படவில்லை எனில், இப்போது எல்லாரும் அருள்பணியாளரோடு சேர்ந்து சிறிது நேரம் அமைதியாக வேண்டுகின்றனர். பின்பு அருள்பணியாளர் தம் கைகளை விரித்து, திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொல்கின்றார். அதன் முடிவில் மக்கள் ஆர்ப்பரிக்கின்றார்கள்:

ஆமென்.

=============↑ பக்கம் 615

நிறைவுச் சடங்கு

140. தேவைப்படின் மக்களுக்கான சிறு அறிவிப்புகள் தொடரும்.
141. அதன்பின் அருள்பணியாளர் மக்களை நோக்கித் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்.

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள் பதிலுரைக்கின்றார்கள்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

பின்வருமாறு கூறி, அருள்பணியாளர் மக்களுக்கு ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.

மக்கள் பதிலுரைக்கின்றார்கள்: ஆமென்.


142, சில குறிப்பிட்ட நாள்களில் அல்லது வேளைகளில், ஆசி வழங்கும் சொல்லலாம் (பக். 620 முதல்). இப்பாடத்துக்குமுன், சடங்கு விதிப்படி, வேறு சிறப்பான ஆசியோ மக்கள் மீது மன்றாடடோ சொல்லலாம் (பக். 620 முதல்)

==============7^ 8719 ^-----------

அயர் திருப்பலியில், திருப்பலிக்குத் தலைமை ஏற்கும் அவர் தம் தலைச்சீராவைப் பெற்றுக் கொண்டு, தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள் பதிலுரைக்கின்றார்கள்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக..

திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் சொல்கின்றார்:

ஆண்டவருடைய பெயர் போற்றப்படுவதாக.
எல்லாரும் பதிலுரைக்கின்றனர்: இன்றும் என்றும் போற்றப்படுவதாக.

திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் சொல்கின்றார்:

ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்: அவரே விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்தவர்.


பின் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர், தம் செங்கோலைப் பயன் படுத்துவதாக
இருந்தால், அதைப் பெற்றுக்கொண்டு, சொல்கின்றார்:

'எல்லாம் வல்ல இறைவன்,

மும்முறை மக்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து

தந்தை, மகன், தூய * ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.

எல்.: ஆமென்.

144. அதன்பின் திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து மக்களை நோக்கிச் சொல்கின்றார்:

சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று.

அல்லது

ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிக்கச் சென்று வாருங்கள்.

அல்லது

உங்களது வாழ்வால் ஆண்டவரை மாட்சிப்படுத்த அமைதியுடன் சென்று வாருங்கள்.

அல்லது

அமைதியுடன் சென்று வாருங்கள்.

மக்கள் பதிலுரைக்கின்றார்கள்: இறைவனுக்கு நன்றி.


145. தொடக்கத்தில் செய்தது போல, அருள்பணியாளர் பீடத்தை முத்தம் இடுகின்றார், இறுதியாக, பணியாளர்களுடன் இணைந்து தாழ்ந்து பணிந்து வணங்கி அவர்களோடு திரும்பிச் செல்கின்றார்.

146. வேறொரு திருவழிபாட்டு நிகழ்ச்சி உடனடியாக நடைபெறுமானால் நிறைவுச் சடங்குகள் விட்டு விடப்படும்.

=============↑ பக்கம் 619

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி உரைகளும்
மக்கள்மீது மன்றாட்டுகளும்

சிறப்பு ஆசி உரைகள்

திருப்பலி, இறைவார்த்தை வழிபாடு, திருப்புகழ்மாலை, அருளடையாளக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் இறுதியில் அருள்பணியாளரின் விருப்பப்படி பின்வரும் ஆசி உரைகளைப் பயன்படுத்தலாம்.

திருத்தொண்டர் அல்லது - அவர் இல்லாதபோது - அருள்பணியாளர் "இறை ஆசி பெறத் தலை வணங்குவோமாக எனக் கூறி அழைப்பு விடுக்கின்றார். பிறகு அருள்பணியாளர் மக்கள் மீது தம் கைகளை விரித்து, ஆசி உரைகளைக் கூறுகின்றார். மக்கள் "ஆமென்" எனப் பதிலுரைக்கின்றார்கள்.

1. திருவருகைக் காலம்

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவன்,
தம் ஒரே மகனின் வருகையில் நம்பிக்கைகொண்டு
அவரது மறு வருகையை எதிர்பார்த்திருக்கும் உங்களை
அவரது வருகையின் ஒளியால் புனிதப்படுத்தித்
தமது ஆசியால் வளப்படுத்துவாராக.

பதில்: ஆமென்.

இம்மை வாழ்வில் உங்களுக்கு நம்பிக்கையில் உறுதியையும்
எதிர்நோக்கில் மகிழ்ச்சியையும் அன்பில் செயல்திறனையும் அவர் அளிப்பாராக.

பதில்: ஆமென்.


என் மீட்பர் மனிதராகி நம்மிடம் வந்ததால் அகமகிழும் நீங்கள்
அவர் மீண்டும் தமது மாட்சியில் வரும்போது
நிலைவாழ்வின் கொடைகளால் வளம் பெறுவீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.


2. ஆண்டவருடைய பிறப்பு

அளவற்ற நன்மையின் இறைவன்,
தம் திருமகனின் மனிதப் பிறப்பால் உலக இருளை அகற்றி
அவரது மாட்சிமிகு பிறப்பால்
புனிதமிக்க இந்த இரவை (நாளை) ஒளிர்வித்தார்;
அவர் உங்களிடமிருந்து பாவ இருளை அகற்றி
நற்பண்புகளின் ஒளியால் உங்கள் இதயங்களை ஒளிரச் செய்வாராக.

பதில்: ஆமென்.

அவரது மீட்புதரும் பிறப்பின் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை
இடையர்களுக்குத் தம் வானதூதர் வழியாக
அறிவிக்கத் திருவுளம் கொண்ட இறைவன்,
உங்கள் மனங்களையும் மகிழ்ச்சியால் நிரப்பித்
தம் நற்செய்தியின் அறிவிப்பாளர்களாய்
உங்களை விளங்கச் செய்வாராக.

பதில்: ஆமென்.

அவரது மனிதப் பிறப்பால்
விண்ணகத்தோடு மண்ணகத்தை இணைத்த இறைவன்,
உங்களைத் தம் அமைதி, நல்லெண்ணம் எனும் கொடைகளால் நிரப்பி
விண்ணகத் திரு அவையில் நீங்கள் பங்குபெறச் செய்தருள்வாராக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

==============13^ 8725 ^-----------

3. புத்தாண்டு நாள் ஆசி

அனைத்துக்கும் ஊற்றும் தொடக்கமுமான இறைவன்,
உங்களுக்குத் தமது அருளை அளித்து,
தமது அளவில்லா ஆசியை உங்கள் மீது பொழிந்து
இவ்வாண்டு முழுவதும் உங்களை மீட்டு, தீங்கின்றிக் காப்பாராக.

பதில்: ஆமென்.

அவர் உங்கள் நம்பிக்கையின் முழுமையைப் பாதுகாத்து
உங்கள் எதிர்நோக்கை நீடித்திருக்கச் செய்து
நீங்கள் இறுதிவரை புனிதமான பொறுமையுடன்
அன்பில் நிலைத்திருக்கச் செய்வாராக.

பதில்: ஆமென்.

அவர் உங்கள் நாள்களையும் செயல்களையும்
தமது அமைதியில் செம்மையுறச் செய்து
இங்கும் எங்கும் உங்கள் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்து
உங்களை நிலைவாழ்வுக்கு மகிழ்வுடன் அழைத்துச் செல்வாராக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

4. ஆண்டவருடைய திருக்காட்சி

இருளினின்று உங்களைத் தமது வியத்தகு ஒளிக்கு அழைத்த இறைவன்,
தமது ஆசியைக் கனிவுடன் உங்கள் மீது பொழிந்து,
உங்கள் இதயங்களை
நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் அன்பிலும் உறுதிப்படுத்துவாராக.

பதில்: ஆமென்.

இன்று உலகுக்குத் தம்மை வெளிப்படுத்தி
இருளில் ஒளி வீசிய கிறிஸ்துவை
நம்பிக்கையுடன் நீங்கள் பின்பற்றி வாழ்வதால்
நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு ஒளியாகத் திகழச் செய்வாராக.

பதில்: ஆமென்.

ஞானிகள் விண்மீனைப் பின்தொடர்ந்து
ஒளியின் ஒளியாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை
மிகுந்த மகிழ்ச்சியோடு கண்டடைந்ததைப் போன்று
நீங்களும் இம்மை வாழ்வின் பயணத்துக்குப்பின்
அவரிடம் வந்து சேர்வீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள்மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.


5. ஆண்டவருடைய பாடுகள்

தம் ஒரே மகனின் பாடுகளால் அன்பின் எடுத்துக்காட்டை
உங்களுக்குத் தந்த இரக்கத்தின் தந்தையாகிய இறைவன்,
நீங்கள் இறைவனுக்கும் மனிதருக்கும் செய்யும் பணி வழியாக,
தமது ஆசியின் சொல்லற்கரிய கொடையை நீங்கள் பெற்றுக்கொள்ளச் செய்வாராக.

பதில்: ஆமென்.

அவர் இம்மைக்கு உரிய தமது சாவினால்
நமது நிலையான சாவை அழித்துவிட்டார் என நம்பும் நீங்கள்
அவரிடமிருந்து நிலைவாழ்வின் கொடையை அடைவீர்களாக.

பதில்: ஆமென்.

அவர் காட்டிய தாழ்ச்சியின் போதனைகளைப் பின்பற்றும் நீங்கள்
அவரது உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெறுவீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

6. பாஸ்கா காலம்

தம் ஒரே மகனின் உயிர்ப்பால்
மீட்பின் பயனையும் தம் பிள்ளைகளாகும் பேற்றையும்
உங்களுக்கு அளிக்கத் திருவுளம் கொண்ட இறைவன்,
தமது ஆசியால் நீங்கள் என்றும் அவரோடு மகிழ்ந்திருக்க அருள்வாராக.

பதில்: ஆமென்.

அவரது மீட்பால்
முடிவில்லா விடுதலை என்னும் கொடையைப் பெற்றுக்கொண்ட நீங்கள்
அவரது இரக்கப் பெருக்கால்
நிலைவாழ்வின் உரிமைப் பேற்றைப் பெறும் தகுதி பெறுவீர்களாக,

பதில்: ஆமென்.

திருமுழுக்கில் நம்பிக்கை கொண்டு
அவரோடு உயிர்த்தெழுந்த நீங்கள்
இம்மையில் உங்களது நேர்மையான வாழ்வால்
விண்ணக வீட்டை அடையும் தகுதி பெறுவீர்களாக,

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

7. ஆண்டவருடைய விண்ணேற்றம்

இன்று விண்ணகம் சென்று உங்கள் விண்ணேற்றத்துக்கு வழிவகுக்கும்
ஒரே மகனின் தந்தையாகிய எல்லாம் வல்ல இறைவன்,
உங்களுக்கு ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

தமது உயிர்த்தெழுதலுக்குப்பின் கிறிஸ்து சீடருக்குத் தோன்றி,
தம்மை வெளிப்படுத்தியது போல
அவர் உங்களுக்குத் தீர்ப்பு வழங்க வரும்போது
நிலையான மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாராக.

பதில்: ஆமென்.

அவர் தம் தந்தையின் மாட்சியில் வீற்றிருப்பதை நம்பும் நீங்கள்
தாம் வாக்களித்தது போல உலகம் முடியும்வரை
அவர் உங்களோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து
மகிழ்ச்சியுடன் வாழும் பேறு பெறுவீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.


8. தூய ஆவியார்

தம் சீடர்களின் மனங்களில்
துணையாளராம் தூய ஆவியாரைப் பொழிந்து
ஒளிர்விக்கத் திருவுளம் கொண்ட ஒளிகளின் தந்தையாகிய இறைவன்,
தமது ஆசியால் உங்களை மகிழ்வுறச் செய்து
அதே ஆவியாரின் கொடைகளால் உங்களை என்றும் நிரப்புவாராக.

பதில்: ஆமென்.

வியத்தகு முறையில் சீடர்களுக்குத் தோன்றிய அதே தீ
உங்கள் இதயங்களைத் தீமை அனைத்திலிருந்தும்
ஆற்றலுடன் தூய்மைப்படுத்தித்
தமது ஒளியை உட்செலுத்தி ஒளிர்ந்திடச் செய்வாராக.

பதில்: ஆமென்.

பல்வேறு மொழியினரை ஒரே நம்பிக்கை அறிக்கையில்
ஒருங்கிணைக்கத் திருவுளம் கொண்ட அவர்,
உங்களை அதே நம்பிக்கையில் நிலைத்திருக்கச் செய்து
அதன் வழியாக நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் கண்டடையச் செய்வாராக

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

9. ஆண்டின் பொதுக் காலம் 1

ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களைக் காப்பாராக.

பதில்: ஆமென்.

ஆண்டவர் தமது திருமுகத்தை உங்கள்மேல் ஒளிரச் செய்து
உங்களுக்கு இரக்கம் காட்டு வாராக.

பதில்: ஆமென்.

ஆண்டவர் தமது திருமுகத்தை உங்கள் பக்கம் திருப்பி,
உங்களுக்குத் தம் அமைதியை அருள்வாராக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

10. ஆண்டின் பொதுக் காலம் II

புலன்கள் அனைத்தையும் கடந்த இறைவனின் அமைதி,
உங்கள் இதயங்களையும் அறிவாற்றல்களையும்
இறைவனுடையவும் அவர்தம் மகன்
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடையவுமான
அறிவிலும் அன்பிலும் என்றும் காப்பதாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

11. ஆண்டின் பொதுக் காலம் II

எல்லாம் வல்ல இறைவன், உங்கள்மேல் கனிவு கொண்டு,
உங்களுக்குத் தமது ஆசியை வழங்கி
மீட்பின் ஞான அறிவை உங்களுக்கு அருள்வாராக.

பதில்: ஆமென்.

நம்பிக்கைப் போதனையால்
அவர் என்றும் உங்களுக்கு ஊட்டம் அளித்து,
புனிதச் செயல் புரிவதில் நீங்கள் நிலைத்திருக்கச் செய்வாராக.

பதில்: ஆமென்.

அமைதி, அன்பு ஆகியவற்றின் வழியை அவர் உங்களுக்குக் காட்டி
தம்மை நோக்கி நீங்கள் வரச் செய்வாராக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.


12. ஆண்டின் பொதுக் காலம் IV

ஆறுதல் அனைத்தின் இறைவன்,
உங்கள் வாழ்நாள்களைத் தமது அமைதியில் செம்மையுறச் செய்து
தமது ஆசியின் கொடைகளை உங்களுக்கு வழங்குவாராக.

பதில்: ஆமென்.

இடர்கள் அனைத்தினின்றும் அவர் உங்களை விடுவித்து
உங்கள் இதயங்களைத் தமது அன்பில் உறுதிப்படுத்துவாராக.

பதில்: ஆமென்.

எதிர்நோக்கு, நம்பிக்கை, அன்பு ஆகிய கொடைகளால் நீங்கள் வளம்பெற்று
இவ்வுலக வாழ்வில் ஆற்றல் வாய்ந்த செயல் வழியாக
நிலைவாழ்வை மகிழ்ச்சியுடன் அடைவீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.


13. ஆண்டின் பொதுக் காலம் V

எல்லாம் வல்ல இறைவன்,
உங்களிடமிருந்து தீமை அனைத்தையும் எந்நாளும் அகற்றி
உங்கள்மீது தமது ஆசியின் கொடைகளை இரக்கமுடன் பொழிவாராக.

பதில்: ஆமென்.

அவர் உங்கள் இதயங்களைத்
தமது அருள்வாக்கில் ஆர்வம் கொள்ளச் செய்து
அவற்றை என்றென்றுமுள்ள மகிழ்வால் நிரப்புவாராக.

பதில்: ஆமென்.

இவ்வாறு நீங்கள் நல்லவற்றையும் நேர்மையானவற்றையும் அறிந்தவர்களாய்
இறைவனுடைய கட்டளைகளின் வழியில் நடந்து சென்று
விண்ணக வீட்டின் உரிமைப் பேற்றைப் பெறுவீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

14. ஆண்டின் பொதுக் காலம் VI

இறைவன், விண்ணகத்தின் அனைத்துக் கொடைகளாலும் உங்களுக்கு ஆசி வழங்கி
நீங்கள் அவரது பார்வையில் என்றும் தூயோராகவும்
மாசற்றோராகவும் விளங்குமாறு செய்வாராக.
தமது மாட்சியின் வளத்தை உங்கள் மீது தாராளமாய்ப் பொழிந்து
உண்மையின் வார்த்தைகளை உங்களுக்குக் கற்றுத் தருவாராக.
மீட்பின் நற்செய்தியை உங்களுக்குப் படிப்பித்து
உங்களைச் சகோதர அன்பால் என்றும் வளப்படுத்துவாராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக,

பதில்: ஆமென்.

=============↑ பக்கம் 628

II. புனிதருக்கான கொண்டாட்டங்களில்

15. புனித கன்னி மரியா

புனித கன்னி மரியாவின் தாய்மைப் பேற்றின் வழியாக
மனித இனத்தைக் கனிவிரக்கத்துடன் மீட்கத் திருவுளம் கொண்ட இறைவன்,
தமது ஆசியால் உங்களை வளப்படுத்தத் திருவுளம் கொள்வாராக.

பதில்: ஆமென்.

அவர் வழியாக வாழ்வின் காரணரை அடையத்
தகுதி பெற்ற நீங்கள் அவரது பாதுகாவலை என்றும் எங்கும் உணர்வீர்களாக.

பதில்: ஆமென்.

இன்று இறைப்பற்றுதலோடு கூடியிருக்கும் நீங்கள்
அருள் வாழ்வின் மகிழ்ச்சி, விண்ணகப் பரிசுகள் ஆகியவற்றின் கொடைகளை
உங்களோடு எடுத்துச் செல்வீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.


16. திருத்தூதர்கள் புனித பேதுரு, புனித பவுல்

புனித பேதுருவின் மீட்பு அளிக்கும் நம்பிக்கை அறிக்கையில்
உங்களை நிலைநிறுத்தி,
அதன் வழியாக, திரு அவையின் உறுதியான நம்பிக்கையில்
உங்களை நிறுவிய எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கு ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

புனித பவுலின் அயராப் போதனையால் உங்களுக்கு அறிவுரை தந்த இறைவன்,
அவரது எடுத்துக்காட்டால்
நங்களும் பிற சகோதரர் சகோதரிகளைக் கிறிஸ்துவிடம் அழைத்து வர
உங்களுக்கு என்றும் அறிவுறுத்துவாராக.

பதில்: ஆமென்.

புனித பேதுரு சிலுவையாலும் புனித பவுல் வாளாலும்
பரிசாகப் பெற்ற அந்த விண்ணக வாழ்வுக்கு,
பேதுரு தமது தலைமைத்துவத்தாலும்
பவுல் தமது போதனையாலும் இவ்விருவரும் தமது பரிந்துரையாலும்
நம்மை மகிழ்வுடன் அழைத்துச் செல்வார்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

17. திருத்தூதர்கள்

திருத்தூதர்களின் அடித்தளத்தில் உங்களை உறுதியாய் நிற்கச் செய்த இறைவன்,
(பெயர்) . . . , (பெயர்) . . . எனும் புனிதத் திருத்தூதர்களின்
(புனித திருத்தூதர் - பெயர் . . . -இன்)
மாட்சி உள்ள பரிந்துரையின் பயனாக உங்களுக்கு ஆசி அளிப்பாராக.

பதில்: ஆமென்.

திருத்தூதர்களின் போதனையாலும் எடுத்துக்காட்டாலும் உறுதிபெற
உங்களுக்கு அருளிய இறைவன்,
அவர்களுடைய பாதுகாவலால் அனைவர் முன்னிலையிலும்
நீங்கள் உண்மைக்குச் சாட்சிகளாய்த் திகழச் செய்வாராக.

பதில்: ஆமென்.

திருத்தூதர்களுடைய போதனையால் நம்பிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட நீங்கள்
அவர்களுடைய பரிந்துரையால் நிலையான விண்ணக வாழ்வின்
உரிமைப் பேற்றினைப் பெறத் தகுதி பெறுவீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், து தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.


18. புனிதர் அனைவரும்

புனிதர்களின் மாட்சியும் அக்களிப்புமான இறைவன்,
அவர்களுடைய சிறப்புமிக்க வேண்டல்களால் உங்களுக்கு வலுவூட்டி ,
உங்கள் மீது தமது முடிவில்லா ஆசியைப் பொழிவாராக.

பதில்: ஆமென்.

நீங்கள் அவர்களின் பரிந்துரையால்
இம்மையில் தீமைகளிலிருந்து விடுதலையும்
அவர்களுடைய புனித வாழ்வின் எடுத்துக்காட்டினால் பயிற்சியும் பெற்று,
இறைவனுக்கும் சகோதரர் சகோதரிகளுக்கும் பணி செய்வதில்
என்றும் கருத்தூன்றியவர்களாய்க் காணப்படுவீர்களாக.

பதில்: ஆமென்.

இவ்வாறு தம் மக்கள் விண்ணகப் புனிதர் கூட்டத்தில் இணைந்து
முடிவில்லா அமைதி பெறுவதைக் கண்டு
அகமகிழும் திரு அவையின் பிள்ளைகளாகிய நீங்கள்
அனைவரோடும் வான்வீட்டின் மகிழ்ச்சியை அடைவீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

III. வேறு ஆசி உரைகள்

19. கோவில் நேர்ந்தளிப்பு

விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவராகிய இறைவன்,
இன்று இக்கோவிலின் நேர்ந்தளிப்பு விழாவில் உங்களை ஒன்றுசேர்த்துள்ளார்;
அவர் உங்கள் மீது தமது விண்ணக ஆசியை நிறைவாய்ப் பொழிவாராக.

பதில்: ஆமென்.

சிதறுண்ட மக்கள் அனைவரையும்
தம் திருமகனில் ஒன்றுசேர்க்க விரும்பிய இறைவன்,
உங்களைத் தமது கோவிலாகவும்
தூய ஆவியாரின் உறைவிடமாகவும் விளங்கச் செய்வாராக.

பதில்: ஆமென்.

இவ்வாறு நீங்கள் மகிழ்வுடன் தூயவராகி
இறைவனுக்கு உகந்த இல்லிடமாகத் திகழவும்
புனிதர் அனைவரோடும் நீங்கள் நிலையான பேற்றின்
உரிமைச் சொத்தைப் பெறவும் உங்களுக்கு அருள்வாராக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், து தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

20. இறந்தோர் நினைவு

சொல்லற்கரிய நன்மையால் மனிதரைப் படைத்தவரும்
தம் ஒரே திருமகன் உயிர்த்தெழுந்தார் என நம்புவோருக்கு
உயிர்ப்பின் எதிர்நோக்கை அளித்தவருமாகிய
ஆறுதலின் ஊற்றாகிய இறைவன், உங்களுக்கு ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

இறந்தோர் அனைவருக்கும் ஒளியும் அமைதியும் நிறைந்த இடத்தையும்
உயிர் வாழும் நமக்குப் பாவ மன்னிப்பையும் அவர் அருள்வாராக.

பதில்: ஆமென்.

கிறிஸ்து இறந்தோரினின்று உயிர்த்தெழுந்தார் என
உண்மையாக நம்பும் நாம் அனைவரும்
அவருடன் என்றென்றும் மகிழ்ந்து வாழ இறைவன் அருள் கூர்வாராக

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

=============↑ பக்கம் 632

மக்கள்மீது மன்றாட்டுகள்

திருப்பலி, இறைவார்த்தை வழிபாடு, திருப்புகழ் மாலை, அருளடையாளக் கொண்டாட்டங்கள் இவற்றின் இறுதியில் அருள்பணியாளரின் விருப்பப்படி, பின்வரும் மன்றாட்டுகள் பயன்படுத்தப்படலாம்.

திருத்தொண்டர் அல்லது அவர் இல்லாதபோது, அருள்பணியாளரே"இறை ஆசி பெறத் -லை வணங்குவோமாக' எனக் கூறி அழைப்பு விடுக்கலாம். பிறகு அருள்பணியாளர் மக்கள்மீது தம் கைகளை விரித்து மன்றாட்டைச் சொல்கின்றார். மக்கள் "ஆமென்" எனப் பதிலுரைக்கின்றனர்.
மன்றாட்டுக்குப் பிறகு அருள்பணியாளர் "எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக" எனக் கூறுகின்றார். மக்கள் "ஆமென்" எனப் பதிலுரைக்கின்றனர்.

1. ஆண்டவரே, நிலைவாழ்வை அடைய முயலும் உம் மக்கள் மீது இரக்கம் கொண்டு இவ்வுலக வாழ்வில் இவர்களுக்கு ஆறுதல் அளிக்கத் தவறாதேயும்.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஆண்டவரே, கிறிஸ்தவ மக்கள் தாங்கள் அறிக்கையிடுவதைப் புரிந்து கொள்ளவும் தாங்கள் பங்குகொள்ளும் விண்ணக மறைநிகழ்வை அன்பு செய்யவும் அருள்புரிவீராக. எங்கள்.

3. ஆண்டவரே, உம்முடைய மக்கள் புனித ஆசியின் கொடையைப் பெற்றிட உம்மை வேண்டுகின்றோம்: இவர்கள் தீமை அனைத்தையும் தவிர்த்து, தாங்கள் விரும்பும் நலன்களைக் கண்டடைவார்களாக. எங்கள்.

4 ஆண்டவரே, உம் மக்கள் முழு இதயத்தோடு உம்மிடம் திரும்பி வரச் செய்தருள வேண்டுகின்றோம்: ஏனெனில் வழி தவறிச் செல்வோரை நீர் பாதுகாக்கின்றீர்; உமக்கு உண்மையாக ஊழியம் செய்வோரையோ
என்னும் அதிக பரிவிரக்கத்துடன் தாங்கிக்கொள்கின்றீர். எங்கள்

5 அண்டவரே, மனம் இரங்கி உமது குடும்பத்தை ஒளிர்விக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இக்குடும்பம் உமக்கு உகந்ததை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு நல்லவை அனைத்தையும் செயல்படுத்தும் தகுதி பெறுவதாக. எங்கள்.

6. ஆண்டவரே, உம் நம்பிக்கையாளருக்கு மன்னிப்பையும் அமைதியையும் அளித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் குற்றங்கள் அனைத்திலிருந்தும் கழுவப்பட்டு உறுதியான மனதோடு உமக்கு ஊழியம் புரிவார்களாக. எங்கள்.

7. ஆண்டவரே, 'உமது விண்ணக இரக்கத்தால் உமக்குக் கீழ்ப்படியும் மக்களைப் பெருகச் செய்தருள உம்மை வேண்டுகின்றோம்: உம் கட்டளைகளை அவர்கள் என்றும் கடைப்பிடிக்கச் செய்வீராக. எங்கள்.

8. இறைவா, தீமை அனைத்திலிருந்தும் உம் மக்கள் விடுதலை அடைந்து முழு இதயத்தோடு உமக்கு ஊழியம் புரியவும் எந்நாளும் உமது பாதுகாப்பில் நிலைத்திருக்கவும் இரக்கத்துடன் நீர் அருள்வீராக. எங்கள்.

9. இறைவா, அவரது மீட்பின் மறைநிகழ்வுகளை இணைந்து கொண்டாடுவதில் உமது குடும்பம் மகிழ்ந்திருக்கவும் அதன் கொடைகளை எப்போதும் பெற்றுக்கொள்ளவும் அருள்வீராக. எங் கள்.

10. ஆண்டவரே இறைவா, உமது இரக்கத்தின் நிறைவால் உம் அடியார்களுக்கு ஊட்டம் அளித்துப் பாதுகாத்தருளும்; இவ்வாறு அவர்கள் உமது ஆசியால் உறுதிப்படுத்தப்பட்டு உமக்கு எப்போதும் மிகுதியாக நன்றி செலுத்தி முடிவில்லா அக்களிப்போடு உம்மைப் போற்றுவார்களாக. எங்கள்.

11. ஆண்ட வரே, உமது தொடர் பரிவிரக்கத்தால் உமது குடும்பத்தைக் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது பாதுகாப்பால் அது இன்னல்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டுத் தன் நற்செயல்களால் உமது பெயருக்கு உகந்ததாய் இருப்பதாக. எங்கள்.

12. ஆண்டவரே, உம் நம்பிக்கையாளரின் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது தூண்டுதலால் மனம் வருந்தித் தீய நாட்டங்ளைத் தவிர்க்கவும் எந்நாளும் உமது இனிமையால் ஊட்டம் பெறவும் அருள்வீராக. எங்கள்.

13. ஆண்டவரே, உம் தூய ஆசியின் விளைவுகள் உம் நம்பிக்கையாளரின் மனங்களுக்கு அருள் வாழ்வின் ஆதாரமாய்த் திகழ்வனவாக; இவ்வாறு உமது அன்பின் ஆற்றலால் அவர்கள் உம் பணிகளை நிறைவேற்ற உறுதி பெறுவார்களாக. எங்கள்.

14 ஆண்டவரே, உமது பெயருக்குப் பணிந்திருக்கும் நம்பிக்கையாளரின் இதயங்கள் உமது உதவியை வேண்டுகின்றன; உமது உதவியின்றி அவர்கள் நேர்மையான எதையும் செய்ய முடியாது என்பதால் உமது பேரிரக்கத்தை அவர்கள் மீது பொழிந்தருளும்: அதனால் அவர்கள் சரியானவற்றை உணர்ந்து கொள்ளவும் தமக்கு நலமானவற்றை அவர்கள் பெற்றுக்கொள்ளவும் செய்வீராக. எங்கள்.

15. ஆண்டவரே, உம்மை இறைஞ்சி மன்றாடும் உம் நம்பிக்கையாளரின் திருக்கூட்டத்துக்கு உதவிட விரைந்தருள உம்மை வேண்டுகின்றோம்: மனித வலுக்குறைந்த அவர்களுக்குக் கனிவுடன் ஆற்றல் அளித்தருளும்; அதனால் நேர்மையான மனதோடு உம்மிடம் பற்றுக் கொள்ளவும் இன்றும் இனி வரும் நாள்களிலும் தங்களது வாழ்வில் நலம் அளிக்கும் உம் கொடைகளைப் பெற்று மகிழவும் செய்வீராக. எங் கள்,

16. ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடும் உமது குடும்பத்தைப் பரிவுடன் கண்ணோக்கி முடிவில்லா உமது இரக்கத்தைப் பொழிந்தருளும்; உமது இரக்கமின்றி, உமக்கு உகந்த எதையும் அதனால் செய்ய இயலாது என்பதால் மீட்புக்கு வழிகாட்டும் உம் கட்டளைகளை நிறைவேற்ற 'அது தகுதி பெறுவதாக. எங்கள்.

17. ஆண்டவரே, உம் நம்பிக்கையாளர்மீது விண்ணக அருளைப் பெருகச் செய்வீராக; அவர்கள் தங்கள் நாவாலும் ஆன்மாவாலும் வாழ்வாலும் உம்மைப் புகழ்வார்களாக: உமது கொடையால்தான் நாங்கள் வாழ்கின்றோம் என்பதால் அனைத்திலும் உமக்காகவே வாழ்வோமாக. எங்கள்.

18. ஆண்டவரே, விண்ணகப் படிப்பினையால் உம் மக்களை வழிநடத்த வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் தீமை அனைத்தையும் தவிர்த்து நன்மைகள் அனைத்தையும் பற்றிக்கொள்வார்களாக: இவ்வாறு உமது சினத்தை அன்று, மாறாக உமது இரக்கத்தை எப்போதும் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

19. ஆண்டவரே, உம்மை இறைஞ்சி மன்றாடுவோருடன் இருந்து உமது இரக்கத்தில் நம்பிக்கை கொள்வோர் அனைவரையும் கனிவுடன் பாதுகாத்தருளும்; அதனால் அவர்கள் தங்களது புனித வாழ்வில் உறுதியுடன் நிலைத்திருக்கவும் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் போது மான அளவு பெறவும் உம் வாக்குறுதிகளுக்கு என்றும் முழு உரிமையாளர்களாக விளங்கவும் அருள்வீராக. எங்கள்.

20. ஆண்டவரே, உம்மை இறைஞ்சி மன்றாடும் மக்கள் மீது உமது பரிவிரக்கத்தின் அருளைப் பொழிந்தருளும்; அதனால் படைத்தவராகிய உம்மால் உருவாக்கப்பெற்று, காரணராகிய உம்மால் புதுப்பிக்கப்பெற்று, எங்கள், நீர் தொடர்ந்தாற்றுகின்ற உமது செயலால் மீட்கப்பெறுவார்களாக.

21. ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொள்ளும் மக்கள் உமது பரிவிரக்கத்தின் தூண்டுதல்களுக்கு ஏற்ப வாழ வேண்டுகின்றோம்: நலம் தரும் மனத் துயரால் அவர்கள் உந்தப்பட்டு உம் கட்டளைகளை மகிழ்வோடு நிறைவேற்றுவார்களாக; அதனால் நீர் வாக்களிப்பவற்றைப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

22. ஆண்டவரே, உம்மீது பற்றன்பு கொண்டுள்ள மக்களின் வலுக்குறைவு உமது பரிவிரக்கத்தைத் தூண்டிட வேண்டுகின்றோம்: அதனால் நம்பிக்கையோடு மன்றாடும் அவர்கள் உமது இரக்கத்தை அடைவார்களாக; இவ்வாறு, தங்கள் தகுதியினால் அடைய முடியாததை உமது பேரிரக்கத்தால் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

23. ஆண்டவரே, உம் பிள்ளைகளைப் பாதுகாக்க உமது மாட்சிக்கு உரிய வலக் கையை நீட்டுவீராக; இவ்வாறு தந்தைக்கு உரிய உமது திருவுளத்துக்குப் பணிந்து உமது பரிவிரக்கத்தின் முடிவில்லாப் பாதுகாப்பால் இவர்கள் உறுதி பெறுவார்களாக. எங்கள்.

24. ஆண்டவரே, உமது குடும்பத்தின் வேண்டல்களைக் கண்ணோக்கியருளும்; உம்மைப் பணிவோடு மன்றாடுவோருக்கு உமது உதவியை அளித்தருளும்; இவ்வாறு தேவையான உதவிகளால் அவர்கள் ஆற்றல் பெற்று உமது பெயரை அறிக்கையிடுவதில் நிலைத்திருப்பார்களாக. எங்கள்.

25. ஆண்டவரே, உமது குடும்பத்தைக் காத்து, உமது இரக்கத்தின் பயனை நிறைவாகப் பொழிந்தருளும்; இவ்வாறு விண்ணகப் படிப்பினைகளாலும் கொடைகளாலும் அது வளர்ச்சி அடைவதாக. எங்கள்.

26. ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொள்ளும் மக்கள் உமது வலப் பக்கத்துக்கு உயர்த்தப்படுவதை உணர்ந்து மகிழ்ந்திருக்க வேண்டுகின்றோம்: அதனால் தங்களது கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே, இன்றும் இனி வரும் நாள்களிலும் அவர்கள் நலன்களைப் பெற்று மகிழ்வார்களாக. எங்கள்.

புனிதர் விழாவில்

27. ஆண்டவரே, உம் திருமகனுடைய மாண்புக்கு உரிய உறுப்பினர்களின் மாட்சியைக் கண்டு கிறிஸ்தவ மக்கள் அக்களிப்பார்களாக; அப்புனிதர்களின் விழாவை இறைப்பற்றுடன் கொண்டாடும் அவர்கள் புனிதர்களுடைய முடிவில்லாப் பேரின்பத்தில் பங்குபெற்று அவர்களோடு உமது மாட்சியில் என்றும் மகிழ்ந்திருப்பார்களாக. எங்கள்.

28. ஆண்டவரே, உம் மக்களின் இதயங்களை என்றும் உம்மிடம் திருப்பியருள வேண்டுகின்றோம்: இத்தகைய பாதுகாவலர்களின் பேருதவியைப் பெறும் இவர்களை இடையறாது பராமரித்து வழிநடத்தத் தவறாதேயும். எங்கள்.

=============↑ பக்கம் 638

====================

 

image