image

 

திருப்பலியின் அமைப்புமுறை

தொடக்கச் சடங்குகள்

மக்கள் ஒன்றுகூடியிருக்க, அருள்பணியாளர் பணியாளர்களுடன் - செல்கின்றார். அப்போது வருகைப் பாடல் பாடப்படும்.

பீடத்தை அடைந்ததும், பணியாளர்களுடன் பணிந்து வணங்குகின்றார். பின் - முத்தமிட்டு அதற்கு வணக்கம் செலுத்துகின்றார். தேவைக்கு ஏற்ப, சிலுவைக்கும் பீடத்துக்கும் காபம் காட்டுகின்றார். அதன்பின் பணியாளர்களுடன் இருக்கைக்குச் செல்கின்றார்

வருகைப் பாடல் முடிந்ததும் அருள்பணியாளரும் நம்பிக்கையாளரும் நின்றுகொண்டு கொண்டு, தங்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்கின்றனர். அப்பொழுது அருள்பணியாளர் மக்களை நோக்கிச் சொல்கின்றார்:

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

மக்கள் பதிலுரைக்கின்றனர்:

ஆமென்.

2. பின் அருள்பணியாளர் கைகளை விரித்து மக்களை வாழ்த்திச் சொல்கின்றார்:

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

அல்லது

நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உங்களோடு இருப்பதாக.

மக்கள் பதிலுரைக்கின்றனர்:

உம் ஆன்மாவோடும் இருப்பதாக.

அல்லது, அருள்பணியாளர் தம் கைகளை விரித்து மக்களை வாழ்த்திச் சொல்கின்றார்:

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

மக்கள் பதிலுரைக்கின்றனர்:

உம் ஆன்மாவோடும் இருப்பாராக.


ஆயர் இந்த முதல் வாழ்த்தில், "ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்பதற்குப் பதிலாகச் சொல்கின்றார்:

அமைதி உங்களோடு இருப்பதாக.

மக்கள் பதிலுரைக்கின்றனர்:

உம் ஆன்மாவோடும் இருப்பதாக.

அருள்பணியாளர் அல்லது திருத்தொண்டர் அல்லது வேறொரு பணியாளர் அந்த நாளின் திருப்பலி பற்றி நம்பிக்கையாளருக்கு மிகச் சுருக்கமாக முன்னுரை வழங்கலாம்.
=================↑ பக்கம் 501

பாவத்துயர்ச் செயல்*

பின் பாவத்துயர்ச்செயல் நடைபெறும். அதற்கு அருள்பணியாளர் நம்பிக்கையால் அழைத்துச் சொல்கின்றார்:

சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு அனைவரும் சேர்ந்து பொதுப் பாவ அறிக்கையினைச் சொல்கின்றனர்:

எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.

மார்பில் தட்டிக்கொண்டு அவர்கள் சொல்கின்றனர்:

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.

மீண்டும் தொடர்ந்து சொல்கின்றனர்:

ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும் வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.

ஞாயிற்றுக்கிழமை, சிறப்பாகப் பாஸ்கா காலத்தில், வழக்கமான பாவத்து செய லுக்குப் பதிலாக, கூடு மானவரை, திருமுழுக்கின் நினைவாக, தண் 0 60 புனிதப்படுத்தித் தெளிக்கும் சடங்கு நடைபெறலாம் (பிற்சேர்க்கை , பக். 1263 - 1266).

அருள்பணியாளரின் மன்னிப்பு வேண்டல் தொடர்கின்றது:


எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

மக்கள் பதிலுரைக்கின்றனர்:

ஆமென்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

அல்லது

5. பாவத்துயர்ச் செயலுக்கு அருள்பணியாளர் நம்பிக்கையாளரை அழைக்கின்றார்:

சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.

சிறிது நேர அமைதிக்குப்பின்

அ.ப. : ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பதில் : ஏனெனில் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
அ.ப. : ஆண்டவரே, எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும்.
பதில் : உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.

அருள்பணியாளரின் மன்னிப்பு வேண்டல் தொடர்கின்றது:

வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்... மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

மக்கள் பதிலுரைக்கின்றனர்:

ஆமென்.

அ.ப: ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்

பதில்: ஏனெனில் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

அ.ப: ஆண்டவரே, எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும்.

பதில்: உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.

அ.ப: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
பதில்: ஆ - மென்

--------------------------------------------------------------------------------------------------------------

அல்லது

பாவத்துயர்ச் செயலுக்கு அருள்பணியாளர் நம்பிக்கையாளரை அழைக்கின்றார்'

சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.

அ. ப.: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு, நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு அருள்பணியாளர் அல்லது திருத்தொண்டர் அல்லது வேறொரு திருப்பணியாளர் கீழே கண்டவற்றையோ இத்தகைய வேறு வேண்டல் களையோ "ஆண்டவரே இரக்கமாயிரும்" என்பதோடு இணைத்துச் சொல்கின்றார்:

அ.ப. : உள்ளம் நொறுங்கி வருந்துவோரை நலமாக்க அனுப்பப்பெற்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.

பதில் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப. : பாவிகளைத் தேடி வந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

பதில் : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

அ.ப. : தந்தையின் வலப் பக்கம் வீற்றிருந்து, எங்களுக்காகப் பரிந்து பேசுகின்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.

பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அருள்பணியாளரின் மன்னிப்பு வேண்டல் தொடர்கின்றது:

எல்லாம் வல்ல இறைவன் நம் மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

மக்கள் பதிலுரைக்கின்றனர்:

ஆமென்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

7. பாவத்துயர்ச் செயலில் ஏற்கெனவே இடம் பெறாவிடில், "ஆண்டவரே, இரக்கமாயிரும்" எனும் வேண்டல் இப்பொழுது சொல்லப்படும்.

அ.ப. : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
பதில் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப. : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
பதில் : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

அ.ப. : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
பதில் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.

பின், குறிப்பிட்டுள்ளபடி, கீழ்வரும் பாடல் பாடப்படுகின்றது அல்லது சொல்லப்படுகின்றது:


உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
உலகினிலே நன் மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,
'ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,
தந்தையின் திருமகனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள்மேல் இரக்கமாயிரும்
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர். நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய
இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.

9 இப்பாடல் முடிந்ததும், அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்துச் சொல்கின்றார்:

மன்றாடுவோமாக.

'சிறிது நேரம் அருள்பணியாளரோடு அனைவரும் அமைதியாக மன்றாடுகின்றனர். பின் அருள் பணியாளர் தம் கைகளை விரித்து, திருக்குழும மன்றாட்டைச்
சொல்கின்றார். அதன் முடிவில் மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர்:

ஆமென்.

வார்த்தை வழிபாடு

10. பின்னர் வாசகர் வாசகமேடைக்குச் சென்று, முதல் வாசகத்தை வாசிக்கின்றார். அனைவரும் அமர்ந்தவாறு அதனைக் கேட்கின்றனர்.

வாசக முடிவில், அது முடிந்தது எனக் காட்டும் வண்ணம், வாசகர் ஆர்ப்பரிக்கின்றார்:

ஆண்டவரின் அருள்வாக்கு.

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:

எல். இறைவனுக்கு நன்றி.

திருப்பாடல் முதல்வர் அல்லது பாடகர் திருப்பாடலைப் பாடுகின்றா" - சொல்கின்றார். மக்கள் பதிலுரைக்கின்றனர்.

13. அதன்பின், இரண்டாம் வாசகம் இருந்தால், வாசகர் அதனை மேல்கூறப்பட்டது போல வாசக மேடையிலிருந்து வாசிக்கின்றார். வாசக முடிவில், அது முடிந்துவிட்டது எனக் காட்டும் வண்ணம், வாசகர் ஆர்ப்பரிக்கின்றார்:

ஆண்டவரின் அருள்வாக்கு.

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்: இறைவனுக்கு நன்றி.

இதனைத் தொடர்ந்து அல்லேலூயா அல்லது திருவழி பாட்டுக் காலம் குறித்துக்காட்டும் ஒழுங்குமுறைக்கு ஏற்றவாறு வேறொரு பாடல் பாடப்படுகின்றது. 14. இதற்கிடையில், திருப்பலியில் தூபம் பயன்படுத்தப்பட்டால், அருள்பணியாளர் தூ பக் கலத்தில் சாம்பிராணி இடு கின்றார். பின்பு, நற்செய்தியினை அறிக்கையிட இருக்கும் திருத்தொண்டர் அருள் பணியாளர் முன் பணிந்து வணங்கி, ஆசி கேட்டுத் தாழ்ந்த குரலில் சொல்கின்றார்:

தந்தையே, ஆசி வழங்கும்.

அருள்பணியாளர் தாழ்ந்த குரலில் சொல்கின்றார்:

தமது நற்செய்தியைத் தகுதியுடனும் முறையாகவும் நீர் அறிவிக்குமாறு, ஆண்டவர் உம் இதயத்திலும் உதடுகளிலும் இருப்பாராக. தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

திருத்தொண்டர் தம்மீது சிலுவை அடையாளம் வரைந்து பதிலுரைக்கின்றார்:

ஆமென்.

திருத்தொண்டர் இல்லாவிடில், அருள்பணியாளர் பீடத்தின் முன் தலை வணங்கி, அமைந்த குரலில் சொல்கின்றார்:

எல்லாம் வல்ல இறைவா, உமது நற்செய்தியைத் தகுதியுடன் நான் அறிவிக்குமாறு என் இதயத்தையும் உதடுகளையும் தூய்மைப்படுத்தியருளும்.

15, அதன்பின் திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளர், தேவைக்கு ஏற்ப, தூபக் கலத்தையும் எரியும் திரிகளையும் தாங்கிவரும் பணியாளர்களுடன் வாசகமேடையை நோக்கிச் செல்கின்றார்; வாசக மேடையை அடைந்ததும் அவர் சொல்கின்றார்:

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

மக்கள் பதிலுரைக்கின்றனர்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளர் :
(பெயர்) எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்.

சொல்லும்போது நூலின்மீதும் தம் நெற்றி, வாய், நெஞ்சின்மீதும் சிலுவை அடையாளம் வரைகின்றார்.

மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர்: ஆண்டவரே, மாட்சி உமக்கே!

பின் திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளர், அன்று தூபம் பயன்படுத்தினால், நூலுக்குத் தூபம் காட்டிவிட்டு, நற்செய்தியைப் பறைசாற்றுகின்றார்.
16. நற்செய்தி வாசகத்தின் முடிவில் திருத்தொண்டர் அல்லது அருள் பணியாளர் ஆர்ப்பரிக்கின்றார்:

ஆண்டவரின் அருள்வாக்கு.

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:

கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.

பின்பு அவர் நூலை முத்தமிட்டு அமைந்த குரலில் சொல்கின்றார்:

இந்நற்செய்தியின் வார்த்தைகளால் நம் பாவங்கள் நீங்குவனவாக.

=============↑ பக்கம் 510

17. அதன்பின் மறையுரை தொடர்கின்றது; அருள்பணியாளரோ திருத்தொண்டரோ எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் இதனைக் கட்டாயம் நிகழ்த்த வேண்டும். ஏனைய நாள்களில் இது பரிந்துரைக்கப்படுகின்றது.

18. மறையுரைக்குப் பின், குறிப்பிட்டுள்ள படி, "நம்பிக்கை அறிக்கை" பாடப்படுகின்றது அல்லது சொல்லப்படுகின்றது:

ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை யாவும் படைத்த
எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
("... மனிதர் ஆனார்" எனச் சொல்லும்வரை எல்லாரும் தலை வணங்கவும்).
தூய ஆவியால் கன்னி மரியாவிடம்
உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப்
பாடுபட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும்
ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.

=============↑ பக்கம் 511

19. மேலே கூறப்பட்டுள்ள நீசே-கான்ஸ்டான்ட்டி நோப்பிள் நம்பிக்கை அறிக்கை பதிலாக, குறிப்பாகத் தவக் காலம், பாஸ்கா காலங்களில் தவக் காலம், பாஸ்கா காலங்களில் திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை என அழைக்கப்படும் உரோமைத் திரு அவை திருமுழுக்கு நம்பிக்கை அறிக்கையைச் சொல்லலாம்.

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த
எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன்.
அவருடைய ஒரே மகனாகிய
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
(":... பிறந்தார்" எனச் சொல்லும்வரை எல்லாரும் தலை வணங்கவும்).
இவர் தூய ஆவியால் கருவுற்று,
கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டுச்
சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள்
இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி,
எல்லாம் வல்ல தந்தையாகிய
கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.
அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும்
தீர்ப்பு வழங்க வருவார்.
தூய ஆவியாரை நம்புகின்றேன்.
புனித, கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன்.
புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்பை நம்புகின்றேன்.
உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன்.
நிலைவாழ்வை நம்புகின்றேன். ஆமென்.

20. இதன்பின் நம்பிக்கையாளரின் மன்றாட்டு எனப்படும் பொது மன்றாட்டு இடம் பெறும்.

நற்கருணை வழிபாடு

21 வார்த்தை வழிபாட்டுக்குப்பின் காணிக்கைப் பாடல் தொடங்கும். அப்போது பணியாளர் திருமேனித் துகில், திருக்கிண்ணத் துகில், திருக்கிண்ணம், திருக்கிண்ண அட்டை, திருப்பலி நூல் ஆகியவற்றைக் கொண்டு வந்து பலிப்பீடத்தின்மீது வைக்கின்றார்.

22. திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தேவையான அப்பம், இரசம் ஆகியவற அல்லது திரு அவைக்கும் ஏழைகளுக்கும் தேவையான பொருள்களை நம்பிக்கையான கொண்டு வந்து கொடுப்பது விரும்பத்தக்கது. இதனால் இவர்கள் திருப்ப பங்குபெறுகின்றார்கள் என்பது வெளிப்படும்.

23. அருள் பணியாளர் பலிப்பீடத்தின் அருகில் நின்றுகொண்டு அப்பத்துடன் திருத்தட்டை எடுத்து, பீடத்துக்குமேல் இரு கைகளாலும் சற்று உயர்த்திப் பிடித்துக் தாழ்ந்த குரலில் சொல்கின்றார்:

=============↑ பக்கம் 512

ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக.
ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து
நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்;
நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான
இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.

அருள்பணியாளர் அப்பத்துடன் திருத்தட்டைத் திருமேனித் துகில்மேல் வைக்கின்றார். காணிக்கைப் பாடல் இடம் பெறாவிடில், அருள்பணியாளர் மேலே காணப்படும் வார்த்தைகளைத் தெளிவான குரலில் சொல்லலாம்; முடிவில் மக்கள் கீழ்க்கண்டவாறு ஆர்ப்பரிக்கலாம்:

இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.

24 திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளர் இரசமும் சிறிதளவு தண்ணீரும் திருக் கிண்ணத்தில் ஊற்றி, அமைந்த குரலில் சொல்கின்றார்:

கிறிஸ்து நமது மனித இயல்பில் பங்குகொள்ளத் திருவுளமானார். இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.

25. பின்பு அருள் பணியாளர் திருக்கிண்ணத்தை எடுத்து , பீடத்துக்கு மேல் இரு கைகளாலும் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தாழ்ந்த குரலில் சொல்கின்றார்:

ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக.
ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து
நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம்.
திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான
இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.

அருள்பணியாளர் திருக்கிண்ணத்தைத் திருமேனித் துகில்மீது வைக்கின்றார். காணிக்கைப் பாடல் இடம் பெறாவிடில், அருள்பணியாளர் மேலே காணப்படும் வார்த்தைகளைத் தெளிவான குரலில் சொல்லலாம்; முடிவில் மக்கள் கீழ்க்கண்டவாறு ஆர்ப்பரிக்கலாம்:

இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.

26. அருள்பணியாளர் பணிந்து வணங்கி, அமைந்த குரலில் சொல்கின்றார்:

ஆண்டவரே, தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் கொண்ட எங்களை ஏற்றருளும். ஆண்டவரே இறைவா, நாங்கள் இன்று உமது திருமுன் ஒப்புக்கொடுக்கும் இப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.

27. தேவைக்கு ஏற்ப, அருள் பணியாளர் காணிக்கைப் பொருள் களுக்கும் சி துவைக்கும் படத்துக்கும் தூபம் காட்டுகின்றார். அதன் முடிவில் திருத்தொண்டர் அல்லது ஒரு பணியாளர் அருள்பணியாளருக்கும் மக்களுக்கும் தூபம் காட்டுகின்றார்.
=============↑ பக்கம் 513

28 பின்னர் அருள்பணியாளர் பீடத்தின் ஒரு பக்கம் நின்றவாறு க கழுவும்போது அமைந்த குரலில் சொல்கின்றார்:

ஆண்டவரே, எனது குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும்; என் பாவத்திலிருந்து என்னைத் தூய்மையாக்கும்.


29 அருள்பணியாளர் பீடத்தின் நடுவில் நின்று மக்களை நோக்கி, தம் கைகளை விரித்து, பிறகு குவித்துச் சொல்கின்றார்:


சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையது மான இப்பலி
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.

மக்கள் எழுந்து நின்று பதிலுரைக்கின்றனர்:

ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும் மாட்சிக்காகவும்
நமது நன்மைக்காகவும் புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும்
உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.


30. பின்னர் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துக் காணிக்கைமீது மன்றாட்டைச் சொல்கின்றார். அதன் முடிவில் மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர்: ஆமென்.
=============↑ பக்கம் 514

நற்கருணை மன்றாட்டு

31, பின்னர் அருள்பணியாளர் நற்கருணை மன்றாட்டைத் தொடங்குகின்றார்.

தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

=============↑ பக்கம் 515

அருள்பணியாளர் விரித்த தம் கைகளுடன் தொடக்கவுரையைச் சொல்கின்றார்:

அதன் முடிவில் தம் கைகளைக் குவித்து, மக்களுடன் சேர்ந்து தெளிவான குரலில் பால் அல்லது சொல்லித் தொடக்கவுரையை நிறைவு செய்கின்றார்:

தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!

32 எல்லாத் திருப்பலிகளிலும் திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் நற்கருணை மன்றாட்டின் முக்கிய பகுதிகளைத் தெளிவான குரலில் ஒவ்வொரு நற்கருணை மன்றாட்டுக்கும் பின் கொடுக்கப்பட்டுள்ள இசைக் குறிப்புகளுக்கு ஏற்பப் பாடலாம் (பக். 577 முதல் 608 வரை)

முதலாவது நற்கருணை மன்றாட்டில் பிறைக்கோட்டுக்குள் உள்ள சொற்களை விட்டுவிடலாம்.


=============↑ பக்கம் 516

====================

image