image

திருப்பலியின் அமைப்புமுறை

தொடக்கவுரைகள்

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை 1

கிறிஸ்துவின் இரு வருகைகள்

33. திருவருகைக் கால முதல் ஞாயிறு தொடங்கி, டிசம்பர் 16-ஆம் நாள் முடியத் திருப்பலிகளில் இத்தொடக்கவுரை பயன்படுத்தப்படும்; இக்காலத்தில் நடைபெறும் மற்றத் திருப்பலிகளிலும் அவற்றுக்கு உரிய தனித் தொடக்கவுரை இல்லை எனில் இது பயன்படுத்தப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்து தம்மையே தாழ்த்தி, உடலெடுத்து முதன்முறை வந்தபோது,
தொடக்கத்திலிருந்தே நீர் வகுத்த திட்டத்தை நிறைவேற்றி,
முடிவில்லா மீட்பின் வழியை மீண்டும் எங்களுக்குத் திறந்து வைத்தார்;
எனவே அவர் மறுமுறை தம் மாண்புக்கு உரிய
மாட்சியுடன் வரும்பொழுது,
இறுதியில் வெளிப்படும் நீர் வாக்களித்த மீட்பை
உமது கொடை எனப் பெற்றுக்கொள்வோம்.
அதையே நாங்கள் இப்பொழுது விழிப்பாயிருந்து
துணிவுடன் எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.
=============↑ பக்கம் 517

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை II

கிறிஸ்துவை இருமுறை எதிர்பார்த்தல்

34 திருவருகைக் காலத்தில் டிசம்பர் 17-ஆம் நாள் தொடங்கி, 24-ஆம் நாள் முடியத் திருவருகைக் காலத்துக்கு உரிய திருப்பலிகளில் இத்தொடக்கவுரை பயன்படுத்தப்படும், கெகாலத்தில் நடைபெறும் மற்றத் திருப்பலிகளிலும் அவற்றுக்கு உரிய தனிக்கொடகா இல்லை எனில், இது பயன்படுத்தப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

இறைவாக்கினர் அனைவரின் திருவுரைகள் கிறிஸ்துவை முன்னறிவித்தன;
சொல்லற்கரிய அன்புடன் கன்னித் தாய்
அவரைத் தம் திருவயிற்றில் தாங்கினார்;
அவர் வரவிருக்கின்றார் என யோவான் அறிவித்தார்;
வந்தபின் அவரைச் சுட்டிக்காட்டினார்.
நாங்கள் விழிப்போடு வேண்டுவதையும்
அக்களிப்போடு தமது புகழ் பாடுவதையும்
அவர் காணும்பொருட்டு தமது பிறப்பின் மறைபொருளை
முன்னரே மகிழ்வுடன் எதிர்பார்த்திருக்க எமக்கு அருளினார்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 518

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை 1

ஒளியாம் கிறிஸ்து

25. ஆண்டவர் பிறப்புத் திருப்பலிகளிலும் அதன் எட்டாம் நாள் திருப்பலியிலும் -டவர் பிறப்பின் எண்கிழமைத் திருப்பலிகளிலும் இத்தொடக்கவுரை பயன்படுத்தப்படும். சக உரிய தொடக்கவுரை உள்ள திருப்பலிகள் இந்த எண்கிழமையில் வருமானால் அவற்றிற்குப் பதிலாக இத்தொடக்கவுரையே சொல்லப்படும். இறை மறைபொருள்கள் அல்லது இறை ஆள்கள் பற்றிய தொடக்கவுரை உள்ள திருப்பலிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு ஆகும். மேலும் ஆண்டவர் பிறப்புக் கால வாரநாள்களிலும் இது சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் வாக்கு மனிதர் ஆனார் எனும் மறைநிகழ்வின் வாயிலாக
உமது மாட்சியின் ஒளி
எங்கள் மனக் கண்களுக்குப் புதிதாய் ஒளி வீசியது.
எனவே அவரில் நாங்கள் கடவுளைக் கண்கூடாய்க் காண்கின்றோம்;
அவர் வழியாகவே கண் காணாதவை மீதுள்ள அன்பினால்
நாங்கள் ஆட்கொள்ளப்படுகின்றோம்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

"உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன் படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய உம்முடைய புனிதர் அனைவருடனும் ....." எனும் மன்றாட்டுச் சொல்லப்படும் (பக். 571).

ஆண்டவர் பிறப்பின் திருவிழிப்புத் திருப்பலியிலும், இரவுத் திருப்பலியிலும் "புனித இரவை ..." என்றும், ஆண்டவர் பிறப்பின் எட்டாம் நாள் வரை திருப்பலிகளில் "புனித நாளை .. " என்றும் சொல்லவும்.

=============↑ பக்கம் 519

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை II

மனிதராகி எல்லாவற்றையும் புதுப்பித்தல்

36. ஆண்டவர் பிறப்புத் திருப்பலிகளிலும் அதன் எட்டாம் நாள் திருப்பலியிலும் ஆண்டவர் பிறப்பின் எண்கிழமைத் திருப்பலிகளிலும் இத்தொடக்கவுரை பயன்படுத்தப்படும். தமக்கு உரிய தொடக்கவுரை உள்ள திருப்பலிகள் இந்த எண்கிழமையில் வருமானால், அவற்றுக்குப் பதிலாக இத்தொடக்கவுரையே சொல்லப்படும். இறை மறைபொருள்கள் அது அல்லது இறை ஆள்கள் பற்றிய தொடக்கவுரை உள்ள திருப்பலிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு ஆகும். மேலும் ஆண்டவர் பிறப்புக் கால் வாரநாள்களிலும் இது சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

தம் இறை இயல்பில் கண்ணுக்குப் புலப்படாத கிறிஸ்து
எங்கள் இயல்பில் காணத்தக்கவராக,
வணக்கத்துக்கு உரிய மறைநிகழ்வாகிய இப்பெருவிழாவில் தோன்றினார்;
காலங்களுக்கு முன்னரே உதித்தவராயினும்
காலத்துக்கு உட்பட்டு வாழத் தொடங்கினார்;
இவ்வாறு அவர் வீழ்ச்சியுற்ற எல்லாவற்றையும் தம்மில் எழுச்சி பெறச் செய்யவும்
படைப்புகள் அனைத்தையும் புதுப்பிக்கவும்
அழிவுற்ற மனிதரை விண்ணரசுக்கு மீண்டும் அழைத்துச் செல்லவும் திருவுளமானார்.

ஆகவே நாங்கள் வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
உம்மைப் புகழ்ந்தேத்தி, அக்களித்துக் கொண்டாடி,
ஆர்ப்பரிப்பதாவது:

தூயவர்.

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு 21/11 உம்முடைய புனிதர் அனைவருடனும் ..." எனும் மன்றாட்டு சொல்லப்படும் (பக். 571).

ஆண்டவர் பிறப்பின் திருவிழிப்புத் திருப்பலியிலும், இரவுத் திருப்பலியிலும் புனித இரவை ..." என்றும் ஆண்டவர் பிறப்பின் எட்டாம் நாள் வரை திருப்பலிகளில் "புனித நாளை . . ." என்றும் சொல்லவும்.

=============↑ பக்கம் 520

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை III

வாக்கு மனிதர் ஆனதால் ஏற்பட்ட உறவு

37. ஆண்டவர் பிறப்புத் திருப்பலிகளிலும் அதன் எட்டாம் நாள் திருப்பலியிலும் ஆண்டவர் பிறப்பின் எண்கிழமைத்திருப்பலிகளிலும் இத்தொடக்கவுரை பயன்படுத்தப்படும். தமக்கு உரிய தொடக்கவுரை உள்ள திருப்பலிகள் இந்த எண்கிழமையில் வருமானால், அவற்றுக்குப் பதிலாக இத்தொடக்கவுரையே சொல்லப்படும். இறை மறைபொருள்கள் அல்லது இறை ஆள்கள் பற்றிய தொடக்கவுரை உள்ள திருப்பலிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு ஆகும். மேலும் ஆண்டவர் பிறப்புக் கால வார நாள்களிலும் இது சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

எமக்கு மீட்புத் தரும் உறவுப் பரிமாற்றம்
கிறிஸ்துவில் இன்று ஒளி வீசுகின்றது.
ஏனெனில் உமது வாக்கு வலுக்குறைந்த
எங்கள் இயல்பை எடுத்தபோது,
சாவுக்கு உரிய மனிதத்தன்மை முடிவில்லா மாட்சி பெறுவதோடல்லாமல்
நாங்களும் வியப்புக்கு உரிய இந்த உறவு ஒன்றிப்பினால்
நிலைவாழ்வில் பங்குபெறுகின்றோம்.

ஆகவே நாங்கள் வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
உம்மைப் புகழ்ந்தேத்தி, அக்களித்துக் கொண்டாடி,
ஆர்ப்பரிப்பதாவது:

தூயவர்.

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இநநாளுக்கு உரிய "உம்முடைய புனிதர் அனைவருடனும் ..."' எனும் மன்றாட்டு சொல்லப்படும் (பக். 571).

ஆண்டவர் பிறப்பின் திருவிழிப்புத் திருப்பலியிலும், இரவுத் திருப்பலியிலும் "புனித இரவை . . ." என்றும், ஆண்டவர் பிறப்பின் எட்டாம் நாள்வரை திருப்பலிகளில் "புனித நாளை . . ." என்றும் சொல்லவும்.

=============↑ பக்கம் 521

ஆண்டவருடைய திருக்காட்சியின் தொடக்கவுரை

கிறிஸ்து, பிற இனத்தாருக்கு ஒளி

38. இது ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலியில் சொல்லப்படும் திருக்காட்சி விழாவிலிருந்து திருமுழுக்கு விழாவுக்குமுன் வரும் சனிக்கிழமைவரை வரும் நாள்களில் ஆண்டவரின் பிறப்புத் தொடக்கவுரைகளோடு இதையும் பயன்படுத்தலாம்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் பிற இனத்தாருக்கு ஒளியாகிய கிறிஸ்துவில்
எமது மீட்பின் மறைபொருளை இன்று வெளிப்படுத்தினீர்;
சாவுக்கு உரிய எங்களது மனிதத்தன்மையில் அவர் தோன்றியபோது
அவருக்கு உரிய சாகாத் தன்மையின் மாட்சியால்
எங்களைப் புதுப்பித்தீர்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

திருக்காட்சிப் பெருவிழாவில் உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும் சொல்லப்படும் (பக். 571). போது, இந்நாளுக்கு உரிய "உம்முடைய புனிதர் அனைவருடனும் ....." எனும் மன்றாட்டு சொல்லப்படும்.

=============↑ பக்கம் 522

தவக் காலத்தின் தொடக்கவுரை 1

தவக் காலத்தின் உட்பொருள்

39. தவக் காலத்தில், சிறப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், வேறு மிகவும் பொருத்தமான தொடக்கவுரை சொல்ல வேண்டியது இல்லை எனில், இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் உமது பேரருளால் உம் நம்பிக்கையாளர் மனத் தூய்மை பெற்று,
ஆண்டுதோறும் பாஸ்கா விழாவின் மறைபொருள்களை
மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கச் செய்கின்றீர்;
அதனால் பக்தியுள்ள வேண்டல்களிலும் அன்புச் செயல்களிலும்
அவர்கள் மேன்மேலும் ஈடுபட்டு,
தங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் மறைநிகழ்வுகளில் பங்குகொண்டு
பிள்ளைகளுக்கு உரிய அருளை நிறைவாகப் பெறச் செய்கின்றீர்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 523

தவக் காலத்தின் தொடக்கவுரை II

உள்ளார்ந்த தவம்

40. தவக் காலத்தில், சிறப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், வேறு மிகப் பொருத்தமா தொடக்கவுரை சொல்ல வேண்டியது இல்லை எனில், இத்தொடக்கவுரை சொல்லப்படும்

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

உம்முடைய பிள்ளைகளின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்திப் புதுப்பிக்க,
பயனுள்ள இச்சிறப்பான காலத்தை ஏற்படுத்தினீர்;
அதனால் நாங்கள் மட்டுமீறிய பற்றுதல்களிலிருந்து விடுதலை பெற்று,
நிலையற்றவற்றில் மனதை ஈடுபடுத்தாது
நிலையானவற்றில் மேன்மேலும் மனதைச் செலுத்துமாறு
எங்களைத் தூண்டுகின்ற காலம் இதுவே.

ஆகவே புனிதர், வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
நாங்கள் உம்மைப் புகழ்ந்தேத்தி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 524

தவக் காலத்தின் தொடக்கவுரை III

தவ முயற்சிகளின் பயன்கள்

41. தவக் கால வார நாள்களிலும் நோன்பு நாள்களிலும் இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

எங்கள் தவ முயற்சிகளால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்தவும் எ
ங்கள் ஆணவத்தைத் தளர்த்தவும்
ஏழைகளுக்கு உணவு அளிக்கவும்
இவ்வாறு உமது கனிவிரக்கத்தைப் பின்பற்றவும்
நீர் திருவுளமானீர்.

ஆகவே புனிதர், வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
நாங்கள் உம்மைப் புகழ்ந்தேத்தி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 525

தவக் காலத்தின் தொடக்கவுரை IV

உண்ணா நோன்பின் பயன்கள்

தவக் கால வாரநாள்களிலும் உண்ணா நோன்பு நாள்களிலும் இத்தொடக்கவுரை சொல்லப்படும்

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

எங்கள் உண்ணா நோன்பின் வழியாக
நீர் எங்கள் தீய நாட்டங்களை அடக்குகின்றீர்;
மனதை மேலே எழுப்புகின்றீர்;
நற்பண்புகளையும் அவற்றிற்கான பரிசுகளையும்
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாகப் பெருகச் செய்கின்றீர்.

அவர் வழியாகவே உமது மாண்பை வானதூதர் புகழ்கின்றனர்;
தலைமை தாங்குவோர் உம்மை வழிபடுகின்றனர்;
அதிகாரம் செலுத்துவோர் உம் திருமுன் நடுங்குகின்றனர்;
வானங்களும் அவற்றில் உள்ள ஆற்றல்களும் சேராபீன்களும்
ஒன்றுகூடி அக்களித்துக் கொண்டாடுகின்றனர்.

அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப்
புகழ்ந்து சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 526

ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை 1

திருச்சிலுவையின் ஆற்றல்

43. தவக் கால 5-ஆம் வாரத்திலும் திருச்சிலுவை, ஆண்டவரின் பாடுகள் ஆகிய மறைபொருள்களின் திருப்பலியிலும் இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் உம் திருமகனின் மீட்பு அளிக்கும் பாடுகளினால்
உலகம் அனைத்தும் நல்லுணர்வைப் பெறுகின்றது;
உமது மாண்பை அறிக்கையிடுகின்றது;
சிலுவையின் வியத்தகு வலிமையினால்
உலகத்தின் மீது தீர்ப்பும் சிலுவையில்
அறையுண்டவரின் அதிகாரமும் விளங்குகின்றன.

ஆகவே புனிதர், வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
நாங்கள் உம்மைப் புகழ்ந்தேத்தி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 527

ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை II

பாடுகளின் வெற்றி

புனித வாரத் திங்கள், செவ்வாய், புதன்கிழமை ஆகிய நாள்களில் இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

எங்களுக்கு மீட்பு அளிக்கும் அவருடைய பாடுகளின் நாளும்
மாட்சிமிக்க உயிர்ப்பின் நாளும்
அண்மையில் வருவதை நாங்கள் அறிந்திருக்கின்றோம்;
அவருடைய பாடுகளினாலும் உயிர்ப்பினாலுமே
பழம்பெரும் எதிரியாகிய
அலகையின் செருக்கின் மீது வெற்றி கொண்டீர்;
அதில் எங்களது மீட்பின் மறைபொருளை
நாங்கள் நினைவுகூருகின்றோம்.

அவர் வழியாக உமது மாண்பை
வானதூதர்களின் அணிகள் வழிபடுகின்றன;
உம் திருமுன் எக்காலத்தும் மகிழ்கின்றன;
அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் தாழ்மையுடன் உம்மை இறைஞ்சிப் புகழ்ந்து அ
க்களிப்புடன் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 528

பாஸ்காவின் தொடக்கவுரை 1

பாஸ்கா மறைநிகழ்வு

45. இத்தொடக்கவுரை பாஸ்கா காலத்தில் சொல்லப்படும்.

பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலியில் "இச்சிறப்பான இரவில்" எனவும், உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமையிலும் பாஸ்கா எண்கிழமையிலும் "இச்சிறப்பான நாளில்" எனவும், பாஸ்கா காலத்தின் மற்ற நாள்களில் "இச்சிறப்பான காலத்தில்" எனவும் சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, எக்காலத்திலும் உம்மைப் புகழ்ந்துரைப்பதும்,
எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்து பலியான
இச்சிறப்பான இரவில் / இச்சிறப்பான நாளில் / இச்சிறப்பான காலத்தில்)
உம்மை இன்னும் மிகுதியாக வாழ்த்திப் போற்றுவதும்
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் உலகின் பாவங்களைப் போக்கும்
மெய்யான செம்மறி அவரே.
எங்கள் சாவைத் தமது சாவால் அழித்தவரும்
தமது உயிர்ப்பினால் எங்கள் வாழ்வைப் புதுப்பித்தவரும் அவரே.

ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க
அனைத்துலகின் மாந்தர் அனைவரும் அக்களிக்கின்றனர்;
அவ்வாறே ஆற்றல்மிக்கோரும் அதிகாரம் கொண்ட தூதர்களும்
உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, "உம்முடைய புனிதர் அனைவருடனும் .. " எனும் மன்றாட்டும் "ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய -.." எனும் மன்றாட்டும் கீழுள்ளவாறு சொல்லப்படுகின்றன (பக் 571 - 572).

பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலியில் "உம்முடைய புனிதர் அனைவருடனும் . . ." எனும் மன்றாட்டில் "புனிதமிக்க இரவைக் கொண்டாடுகின்றோம்" என்பதும் சொல்லப்படுகின்றது.

=============↑ பக்கம் 529

பாஸ்காவின் தொடக்கவுரை II

கிறிஸ்துவில் புது வாழ்வு

46. இத்தொடக்கவுரை பாஸ்கா காலத்தில் சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, எக்காலத்திலும் உம்மைப் புகழ்ந்துரைப்பதும்,
எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்து பலியான
இச்சிறப்பான காலத்தில்
உம்மை இன்னும் மிகுதியாக வாழ்த்திப் போற்றுவதும்
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்து வழியாகவே ஒளியின் மக்கள் நிலைவாழ்வில் நுழைகின்றனர்;
விண்ணரசின் கதவுகள் நம்பிக்கையாளருக்குத் திறந்து விடப்படுகின்றன;
ஏனெனில் சாவுக்கு உரிய எங்கள் வாழ்வும்
அவரது சாவால் மீட்பு அடைந்து
அவரது உயிர்ப்பிலே அனைவரது வாழ்வும் உயிர்த்தெழலாயிற்று.

ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க
அனைத்துலகின் மாந்தர் அனைவரும் அக்களிக்கின்றனர்;
அவ்வாறே ஆற்றல்மிக்கோரும் அதிகாரம் கொண்ட தூதர்களும்
உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 530

பாஸ்காவின் தொடக்கவுரை III

என்றும் வாழ்ந்து நமக்காகப் பரிந்துபேசும் கிறிஸ்து

47. இத்தொடக்கவுரை பாஸ்கா காலத்தில் சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, எக்காலத்திலும் உம்மைப் புகழ்ந்துரைப்பதும்,
எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்து பலியான
இச்சிறப்பான காலத்தில்
உம்மை இன்னும் மிகுதியாக வாழ்த்திப் போற்றுவதும்
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்து எங்களுக்காக இன்னும் தொடர்ந்து தம்மைக் கையளித்து,
உமது திருமுன் இடையறாது பரிந்து பேசி,
எங்களைப் பாதுகாத்து வருகின்றார்;
பலியான அவர் இனிமேல் சாகமாட்டார்;
கொலை செய்யப்பட்ட அவர் என்றும் வாழ்கின்றார்.

ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க
அனைத்துலகின் மாந்தர் அனைவரும் அக்களிக்கின்றனர்;
அவ்வாறே ஆற்றல்மிக்கோரும் அதிகாரம் கொண்ட தூதர்களும்
உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 531

பாஸ்காவின் தொடக்கவுரை IV

பாஸ்கா மறைநிகழ்வால் அனைத்தும் புதுப்பிக்கப்படுதல்

48. இத்தொடக்கவுரை பாஸ்கா காலத்தில் சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, எக்காலத்திலும் உம்மைப் புகழ்ந்துரைப்பதும்,
எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்து பலியான
இச்சிறப்பான காலத்தில்
உம்மை இன்னும் மிகுதியாக வாழ்த்திப் போற்றுவதும்
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் பழையன அழிக்கப்பட்டு,
வீழ்ச்சியுற்ற படைப்பு அனைத்தும் புதுப்பிக்கப்பெறுகின்றது;
எங்கள் வாழ்வும் கிறிஸ்துவில் சீரமைக்கப்பட்டு
நிறைவு பெறுகின்றது.

ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க
அனைத்துலகின் மாந்தர் அனைவரும் அக்களிக்கின்றனர்;
அவ்வாறே ஆற்றல்மிக்கோரும் அதிகாரம் கொண்ட தூதர்களும்
உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 532

பாஸ்காவின் தொடக்கவுரை V

குருவும் பலிப்பொருளுமான கிறிஸ்து

9. இத்தொடக்கவுரை பாஸ்கா காலத்தில் சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, எக்காலத்திலும் உம்மைப் புகழ்ந்துரைப்பதும்,
எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்து பலியான
இச்சிறப்பான காலத்தில்
உம்மை இன்னும் மிகுதியாக வாழ்த்திப் போற்றுவதும்
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்து தம் திரு உடலை ஒப்புக்கொடுத்து
சிலுவையின் மெய்யான பலியில்
முற்காலப் பலிகள் நிறைவு பெறச் செய்தருளினார்;
எங்கள் மீட்புக்காக அவர் உம்மிடம் தம்மையே கையளித்தபோது
அவரே குருவாகவும் பலிப்பீடமாகவும் செம்மறியாகவும் விளங்கினார்.

ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க
அனைத்துலகின் மாந்தர் அனைவரும் அக்களிக்கின்றனர்;
அவ்வாறே ஆற்றல்மிக்கோரும் அதிகாரம் கொண்ட தூதர்களும்
உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 533

ஆண்டவருடைய விண்ணேற்றத்தின் தொடக்கவுரை I

விண்ணேற்றத்தின் மறைபொருள்

50 இத்தொடக்கவுரை ஆண்டவரின் விண்ணேற்ற நாளிலும் அதற்குப்பின் - சேக்கோஸ்து பெருவிழாவுக்கு முன் வரும் சனிக்கிழமை வரை அவற்றுக் தொடக்கவுரை இல்லாத நாள்களின் திருப்பலிகளிலும் சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் ஆண்டவராகிய இயேசு, மாட்சியின் மன்னர்,
பாவத்தின் மீதும் சாவின் மீதும் வெற்றி கொண்டவர்;
வானதூதர் வியப்புற, (இன்று) வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.
கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் உலகுக்குத் தீர்ப்பிடுகிறவரும்
ஆற்றல்மிக்க அணிகளின் ஆண்டவரும் அவரே.
இவ்வாறு அவர் சென்றது,
எங்கள் தாழ்நிலையிலிருந்து விலகிச் செல்வதற்காக அன்று;
மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்
முன் சென்ற அவ்விடத்துக்கு
அவர்தம் உறுப்பினர்களாகிய நாங்களும் அவரைப் பின்தொடர்வோம் என
நம்பிக்கை கொள்வதற்காகவே.

ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க
அனைத்துலகின் மாந்தர் அனைவரும் அக்களிக்கின்றனர்;
அவ்வாறே ஆற்றல்மிக்கோரும் அதிகாரம் கொண்ட தூதர்களும்
உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

விண்ணேற்ற நாளில், உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது சொல்லப்படும் (பக். 571).
இந்நாளுக்கு உரிய "உம்முடைய புனிதர் அனைவருடனும் . . ." எனும் மன்றாட்டு

=============↑ பக்கம் 534

ஆண்டவருடைய விண்ணேற்றத்தின் தொடக்கவுரை II

விண்ணேற்றத்தின் மறைபொருள்

51. இத்தொடக்கவுரை ஆண்டவரின் விண்ணேற்ற நாளி லு ம் அதற்குப்பின் --பெந்தகோஸ்து பெருவிழாவுக்குமுன் வரும் சனிக்கிழமைவரை அவற்றுக்கு உரிய தொடக்கவுரை இல்லாத நாள்களின் திருப்பலிகளிலும் சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் தம் சீடர் எல்லாருக்கும்
வெளிப்படையாகத் தோன்றினார்;
தமது இறை இயல்பில் நாங்கள் பங்குபெறும் பொருட்டுச்
சீடர்கள் கண் முன்பாக விண்ணேற்றமானார்.

ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க
அனைத்துலகின் மாந்தர் அனைவரும் அக்களிக்கின்றனர்;
அவ்வாறே ஆற்றல்மிக்கோரும் அதிகாரம் கொண்ட தூதர்களும்
உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 535

ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை 1

பாஸ்கா மறைபொருளும் இறைமக்களும்

52. இத்தொடக்கவுரை ஆண்டின் பொதுக்கால் ஞாயிறுத்திருப்பலிகளில் சொல்லப்படும்

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

பாஸ்கா மறைநிகழ்வு வழியாக
கிறிஸ்து புரிந்த அற்புதச் செயல் இதுவே:
தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர்,
புனித மக்களினத்தார், அவரது உரிமைச் சொத்தான மக்கள் எனும் மாட்சியை
நாங்கள் இப்பொழுது அடையுமாறு, எங்களைப் பாவத்திலிருந்தும்
சாவின் பிடியிலிருந்தும் அழைக்க அவர் திருவுளமானார்;
இவ்வாறு இருளிலிருந்து உமது வியத்தகு ஒளிக்கு அழைக்கப்பட்ட நாங்கள் உ
மது வல்லமையை எங்கும் எடுத்துரைக்கச் செய்தருளினார்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 536

ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை II

மீட்பின் மறைபொருள்

53. இத்தொடக்கவுரை ஆண்டின் பொதுக்கால ஞாயிறு திருப்பலிகளில் சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

தவறிழைத்த எங்கள் மீது கிறிஸ்து இரக்கம் கொண்டு
கன்னி மரியாவிடமிருந்து பிறக்கத் திருவுளமானார்;
சிலுவையில் பாடுபட்டு, முடிவில்லாச் சாவிலிருந்து எங்களை விடுவித்தார்;
இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து நிலைவாழ்வை எங்களுக்கு அருளினார்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 537

ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை II

ஒரு மனிதரால் மனிதர் அனைவருக்கும் மீட்பு

54 இக்தொடக்கவுரை ஆண்டின் பொதுக்கால ஞாயிறுத் திருப்பலிகளில் சொல்லப்படும்

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

அழிவுக்கு உரிய மனிதருக்கு
உமது இறை இயல்பின் ஆதரவை அளிக்கின்றீர்;
மேலும் மனிதனின் சாகும் தன்மையைப்
பிணி போக்கும் மருந்தாகப் பயன்படுத்தி,
நாங்கள் எவ்வாறு அழிவுற்றோமோ
அவ்வாறே எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எங்களுக்கு மீட்பு அருளுகின்றீர்;
இவை அனைத்தாலும்
அளவற்ற மாட்சி உமக்கே உரியது என்பதை உணர்கின்றோம்.

அவர் வழியாக உமது மாண்பை
வானதூதர்களின் அணிகள் வழிபடுகின்றன;
உமது திருமுன் எக்காலத்தும் மகிழ்கின்றன;
அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து
அக்களிப்புடன் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 538

ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை IV

மீட்பின் வரலாறு

55. இத்தொடக்கவுரை ஆண்டின் பொதுக்கால ஞாயிறு திருப்பலிகளில் சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் கிறிஸ்து பிறந்து
முன்னைய பாவ நிலையிலிருந்து மனிதரைப் புதுப்பித்தார்;
பாடுபட்டு, எங்கள் பாவங்களை அழித்தார்;
இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து நிலைவாழ்வுக்கு வழிவகுத்தார்;
தந்தையே, அவர் உம்மிடம் விண்ணேறி வந்து,
விண்ணகத்தின் கதவுகளைத் திறந்து வைத்தார்.

ஆகவே வானதூதர் அணிகளோடும் புனிதரின் பெருந்திரளோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து,
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 539

ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை V

படைப்பு

56. இத்தொடக்கவுரை ஆண்டின் பொதுக்கால ஞாயிறு திருப்பலிகளில் சொல்லப்படு

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் நீர் உலகு அனைத்தையும் படைத்தீர்,
காலங்களின் மாற்றங்களையும் முறைப்படுத்தினீர்,
உமது சாயலில் மனிதரை உருவாக்கினீர்;
இவ்வுலகின் வியத்தகு பொருள்கள் எல்லாவற்றையும்
அவர்களுக்குப் பணிய வைத்தீர்.
இவ்வாறு அவர்கள் உமது படைப்புகள் அனைத்தின் மீதும்
உம் பதிலாள்களாக ஆட்சி செலுத்தவும்
உம் செயல்களின் மேன்மையைக் கண்டு
உம்மை இடையறாது புகழ்ந்தேத்தவும்
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாகச் செய்தருளினீர்.

ஆகவே வானதூதர் அணிகளோடும் புனிதரின் பெருந்திரளோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து,
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 540

ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை VI

முடிவற்ற பாஸ்காவின் பிணை

57. இத்தொடக்கவுரை ஆண்டின் பொதுக்கால ஞாயிறு திருப்பலிகளில் சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

நாங்கள் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் உம்மிலேதான்;
இந்த உடலோடு வாழ்கையில்
உமது பரிவிரக்கத்தின் பயன்களை மட்டுமே
நாங்கள் நாள்தோறும் அனுபவிப்பதோடன்றி
இப்பொழுதே நிலைவாழ்வின் பிணையையும் கொண்டுள்ளோம்;
ஏனெனில் உம் ஆவியாரின் முதற்கனிகளைப் பெற்றுள்ள நாங்கள்,
பாஸ்கா மறைநிகழ்வின் பயன்
எங்களுக்கு என்றும் உண்டு என நம்புகின்றோம்;
அந்த ஆவியார் வழியாகவே
நீர் இயேசுவைச் சாவினின்று உயிர்த்தெழச் செய்தீர்.

ஆகவே வானதூதர் அணிகளோடும் புனிதரின் பெருந்திரளோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து,
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 541

ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை VII

கிறிஸ்துவின் கீழ்ப்படிதல்வழி மீட்பு

58. இத்தொடக்கவுரை ஆண்டின் பொதுக்கால ஞாயிறுத்திருப்பலிகளில் சொல்லப்படும்

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் நீர் எங்களுக்கு மீட்பரை அனுப்பும் அளவுக்கு
உலகின் மீது பரிவன்பு கொண்டீர்;
அவர் பாவம் தவிர மற்றனைத்திலும்
எங்களைப் போல இருக்கத் திருவுளம் கொண்டீர்;
இவ்வாறு நீர் உம் திருமகனிடம் செலுத்திய அன்பை
எங்கள் மீதும் செலுத்தினீர்;
நாங்கள் கீழ்ப்படியாமையால் பாவம் செய்து
இழந்த உம்முடைய கொடைகளை
அவருடைய கீழ்ப்படிதலால் மீட்டு எங்களுக்கு அருளினீர்.

ஆகவே வானதூதர் அணிகளோடும் புனிதரின் பெருந்திரளோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து,
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 542

ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை VIII

மூவொரு கடவுளின் ஒன்றிப்பில் ஒருங்கிணையும் திரு அவை

59. இத்தொடக்கவுரை ஆண்டின் பொதுக்கால ஞாயிறு திருப்பலிகளில் சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் பாவப் பழியால்
வெகுதொலைவில் அகன்றிருந்த உம் பிள்ளைகளை
உம் திருமகனின் இரத்தத்தாலும் தூய ஆவியாரின் வல்லமையாலும்
உம்மோடு மீண்டும் ஒன்றிணைக்கத் திருவுளமானீர்;
இவ்வாறு உம் மக்கள்
மூவொரு கடவுளின் ஒன்றிப்பால் ஒருங்கிணைக்கப்பட்டுக்
கிறிஸ்துவின் உடலும் தூய ஆவியாரின் கோவிலு மான
திரு அவையாகத் திகழச் செய்தீர்;
இதனால் பல்வகையில் வெளிப்படும் உமது ஞானத்தைப் புகழச் செய்தீர்.

ஆகவே வானதூதர் அணிகளோடும் புனிதரின் பெருந்திரளோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து,
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 543

தூய்மைமிகு நற்கருணையின் தொடக்கவுரை !

கிறிஸ்துவின் பலியும் அருளடையாளமும்

60. இத்தொடக்கவுரை பெரிய வியாழன், "ஆண்டவருடைய இரவு விருந்தும்" -வியில் சொல்லப்படும். "கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும் பெருவிழாவிலும் நற்கருணை நேர்ச்சித் திருப்பலிகளிலும் இது சொல்லப்படலாம்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

என்றுமுள்ள மெய்யான குருவாகிய அவர்
நிலையான பலிமுறையை ஏற்படுத்தினார்;
மீட்பு அளிக்கும் பலிப்பொருளாக
முதன்முதல் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்து,
தம் நினைவாக நாங்களும் பலி செலுத்த வேண்டுமென்று கற்பித்தார்.
எங்களுக்காகப் பலியான அவருடைய திரு உடலை உண்ணும்போதெல்லாம்
நாங்கள் வலிமை பெறுகின்றோம்.
அவர் எங்களுக்காகச் சிந்திய திரு இரத்தத்தைப் பருகும்போதெல்லாம்
நாங்கள் கழுவப்பட்டுத் தூய்மை அடைகின்றோம்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 544

தூய்மைமிகு நற்கருணையின் தொடக்கவுரை II

தூய்மைமிகு நற்கருணையின் கனிகள்

61 இத்தொடக்கவுரை "கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும்" என்னும் பெருவிழாவிலும் தூய்மைமிகு நற்கருணை நேர்ச்சித் திருப்பலிகளிலும் சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்து தம் திருத்தூதர்களுடன் இறுதி இரவு விருந்து அருந்துகையில்,
சிலுவையின் மீட்பு அளிக்கும் நினைவு
எக்காலத்துக்கும் நிலைத்திருக்கச் செய்தார்.
நிறைபுகழ்ச்சியின் ஏற்புடைய கொடையாகவும்
மாசற்ற செம்மறியாகவும் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்தார்;

இவ்வாறு வணக்கத்துக்கு உரிய இந்த மறைபொருளை
நீர் உம் நம்பிக்கையாளருக்கு உணவாகத் தந்து,
அவர்களைப் புனிதப்படுத்துகின்றீர்.
அதனால் ஒரே உலகில் வாழும் மனித இனம் ஒரே நம்பிக்கை ஒளி பெற்று,
ஒரே அன்பால் பிணைக்கப்படுகின்றது.

ஆகவே உமது அருளின் இனிமையை நிறைவாகச் சுவைத்து
நாங்கள் விண்ணகச் சாயலைப் பெறுமாறு,
இத்துணை வியப்புக்கு உரிய அருளடையாளத்தின் விருந்தில்
நாங்கள் பங்குபெறுகின்றோம்.

எனவே விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள அனைத்தும்
உம்மைத் தொழுது வணங்கிப் புதியதொரு பண் பாடுகின்றன;
வானதூதர்களின் அணிகள் அனைத்தோடும்
நாங்கள் சேர்ந்து முடிவின்றிப் பறைசாற்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 545

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1

புனித கன்னி மரியாவின் தாய்மை

62. புனித கன்னி மரியாவின் திருப்பலிகளில், அந்தந்தத் திருப்பலியில் குறித்தபடி, அந்த நாளின் கொண்டாட்டத் தரத்தைக் குறிப்பிட்டு இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின்
(தாய்மையின் பெருவிழாவில் / விழாவில் / வணக்க நாளில்)
நாங்கள் உம்மைப் போற்றிப் புகழ்ந்து மாட்சிப்படுத்துவதும்
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

தூய ஆவி நிழலிட்டதால்,
அந்த அன்னை உம்முடைய ஒரே திருமகனைக் கருத்தாங்கி,
தமது கன்னிமையின் மாட்சியில் நிலைத்து நின்று
நிலையான ஒளியாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை
உலகுக்கு அளித்தார்.

அவர் வழியாகவே உமது மாண்பை வானதூதர் புகழ்கின்றனர்;
தலைமை தாங்குவோர் உம்மை வழிபடுகின்றனர்;
அதிகாரம் செலுத்துவோர் உம் திருமுன் நடுங்குகின்றனர்;
வானங்களும் அவற்றில் உள்ள ஆற்றல்களும் சேராபீன்களும்
ஒன்றுகூடி அக்களித்துக் கொண்டாடுகின்றனர்.

அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 546

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை II

மரியாவின் சொற்களில் திரு அவை இறைவனைப் புகழ்கின்றது

63. புனித கன்னி மரியாவின் திருப்பலிகளில் இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
புனிதர் அனைவரிலும் விளங்கும் மேன்மையைக் கண்டு
நாங்கள் உம்மை வியப்புக்கு உரியவர் என அறிக்கையிடுவதும்
மிகச் சிறப்பாக, புனித கன்னி மரியாவை நினைவுகூரும் இன்று
அவருடைய நன்றி கலந்த புகழுரையால்
உமது கனிவை ஏத்திப் போற்றுவதும்
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் உலகெங்கும் அதன் இறுதி எல்லைவரை
நீர் அரும்பெரும் செயல்கள் பல புரிந்துள்ளீர்;
சிறப்பாக, உம் அடியாரின் தாழ்நிலையைக் கண்ணுற்று,
அவர் வழியாக மனித மீட்பின் காரணராம் உம் திருமகன்
எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எங்களுக்கு அளித்ததால்
உமது இரக்கப் பெருக்கை
எல்லாக் காலங்களிலும் நீடிக்கச் செய்து வருகின்றீர்.

அவர் வழியாக உமது மாண்பை
வானதூதர்களின் அணிகள் வழிபடுகின்றன;
உம் திருமுன் எக்காலத்தும் மகிழ்கின்றன;
அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து
அக்களிப்புடன் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 547

திருத்தூதர்களின் தொடக்கவுரை 1

திருத்தூதர்கள்: இறைமக்களின் அருள்நெறியாளர்கள்

64. திருத்தூதர்களின் திருப்பலிகளில், சிறப்பாக, புனிதர்களான பேதுரு, பவுல் திருப்பலிகளில் இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

என்றுமுள்ள ஆயரே, உமது மந்தையை நீர் கைவிட்டுவிடாமல்
உம் புனித திருத்தூதர் வழியாக என்றும் கண்காணித்து வருகின்றீர்;
அதனால் அதனை ஆள்வதற்கு
உம் திருமகனின் பதிலாளிகளாகவும்
மந்தையை வழிநடத்தும் முதன்மை ஆயர்களாகவும்
நீர் அவர்களை நியமித்தீர்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 548

திருத்தூதர்களின் தொடக்கவுரை II

அடித்தளமும் சாட்சியுமான திருத்தூதர்

65. திருத்தூதர், நற்செய்தியாளர் திருப்பலிகளில் இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனென்றால் உமது திரு அவை
உம்முடைய புனிதத்தின் அடையாளமாக
என்றும் இம்மண்ணகத்தில் விளங்கவும்
மக்கள் அனைவருக்கும் விண்ணகப் படிப்பினைகளை வழங்கவும்
அது திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு
நிலைத்திருக்கவும் செய்தருளினீர்.

ஆகவே நாங்கள் இன்றும் என்றென்றும்
வானதூதர்களின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து,
இதயப் பற்றுதலோடு உமது புகழைப் பாடிக்
குரலெழுப்பிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 549

புனிதரின் தொடக்கவுரை I

புனிதர்களின் மாட்சி

66 புனிதர் அனைவரின் திருப்பலிகளிலும் பாதுகாவலரின் திருப்பலிகளிலும் புனிதர்களின் பெருவிழாக்களிலும் விழாக்களிலும், தனித் தொடக்கவுரை இல்லாதபோது, இத் தொடக்கவுரை சொல்லப்படும்; புனிதரின் நினைவுத் திருப்பலிகளிலும் இதைக் சொல்லலாம்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் புனிதர்களின் திருக்கூட்டத்தில் நீர் ஒருவரே புகழ் பெறுகின்றீர்;
அவர்களின் பேறு பயன்களுக்கு ஏற்ப நீர் வெற்றிவாகை சூட்டும்போது
உம் கொடைகளுக்கே மணிமுடி சூட்டுகின்றீர்;
அவர்களுடைய வாழ்க்கை நெறி எங்களுக்கு எடுத்துக்காட்டாகவும்
அவர்களோடு உள்ள உறவு ஒன்றிப்பு எங்களுக்குத் தோழமையாகவும்
அவர்களது பரிந்துரை எங்களுக்குப் பேருதவியாகவும் இருக்க
நீரே எங்களுக்கு அருளுகின்றீர்.
இவ்வாறு இத்தகைய திரளான சாட்சிகளால் நாங்கள் உறுதி பெற்று,
வாழ்க்கைப் போராட்டத்திலே தோல்வியுறாது நிலைத்து நின்று,
அழியாத மாட்சியின் முடியை அப்புனிதர்களோடு
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாகப் பெற்று மகிழ்வோமாக.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
புனிதரின் பெருந்திரளோடும் சேர்ந்து
நாங்கள் உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து
முடிவின்றிச் சொல்வதாவது:

தாயவர்,

=============↑ பக்கம் 550

புனிதரின் தொடக்கவுரை II

புனிதர்களின் பணி

67. புனிதர் அனைவரின் திருப்பலிகளிலும் பாதுகாவலரின் திருப்பலிகளிலும் சிகர்களின் பெருவிழாக்களிலும் விழாக்களிலும், தனித் தொடக்கவுரை இல்லாதபோது, இத் தொடக்கவுரை சொல்லப்படும்; புனிதரின் நினைவுத் திருப்பலிகளிலும் இதைச் சொல்லலாம்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் உம் புனிதர்களின் வியத்தகு சாட்சியத்தால்
உமது திரு அவை என்றும் புதிய ஆற்றல் பெற்று வளமடைகின்றது;
இவ்வாறு எங்கள் மீது நீர் கொண்டிருக்கும் பரிவன்பைத்
தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றீர்.
மேலும் எங்களது மீட்பின் மறைநிகழ்வை நாங்கள் நிறைவேற்றுவதில்
அப்புனிதர்களின் சிறப்புமிக்க எடுத்துக்காட்டால் தூண்டப்பெற்று,
அவர்களது தகுந்த பரிந்துரையால் என்றும் ஊக்கம் பெறவும் அருளுகின்றீர்.

ஆகவே ஆண்டவரே, வானதூதர், புனிதர் அனைவரோடும்
நாங்கள் சேர்ந்து, உமது பெருமையைப் பறைசாற்றி,
அக்களிப்புடன் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 551

புனித மறைச்சாட்சியரின் தொடக்கவுரை I

மறைச்சாட்சியம் தரும் அடையாளமும் எடுத்துக்காட்டும்

68 பனித மறைச்சாட்சியரின் பெருவிழாவிலும் விழாவிலும் இத்தொடக்கவுரை சொல்லப்படும். அவர்களுடைய நினைவுத் திருப்பலிகளிலும் இதைச் சொல்லலாம்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் மறைச்சாட்சியான புனித (பெயர்) . . .
உமது பெயரை அறிக்கையிட்டுக் கிறிஸ்துவைப் பின்பற்றி,
இரத்தம் சிந்தி மாண்புமிக்க உம் அரும்பெரும் செயல்களை
உலகறியக் காட்டுகின்றார். இவ்வாறு நீர்,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,
எங்கள் வலுவின்மையில் உமது வல்லமை சிறந்தோங்கச் செய்து,
வலுவற்றவர்களை உமது ஆற்றல்மிகு சாட்சிகளாய்த் திகழச் செய்கின்றீர்.

ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து
நாங்களும் இம்மண்ணுலகில்
இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,
முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 552

புனித மறைச்சாட்சியரின் தொடக்கவுரை II

மறைச்சாட்சியரின் வெற்றியில் வெளிப்படும் கடவுளின் அருஞ்செயல்கள்

69. புனித மறைச்சாட்சியரின் பெருவிழாவிலும் விழாவிலும் இத்தொடக்கவுரை சொல்லப்படும். அவர்களுடைய நினைவுத் திருப்பலிகளிலும் இதைச் சொல்லலாம்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் உம் புனிதர்கள் பெருமை அடைவதால்
நீர் மாட்சி பெறுகின்றீர்;
அவர்களுடைய பாடுகளைச் சார்ந்தவை அனைத்தும்
உம்முடைய ஆற்றலின் வியத்தகு செயல்களே.
நீரே எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
அவர்களுக்கு இத்தகைய நம்பிக்கை ஆர்வத்தைக்
கனிவுடன் கொடுக்கின்றீர்;
நிலைத்திருக்கும் உறுதிப்பாட்டை ஊட்டுகின்றீர்;
கடுந்துயரிலும் வெற்றியை அளிக்கின்றீர்.

ஆகவே விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள அனைத்தும்
உம்மைத் தொழுது வணங்கிப் புதியதொரு பண் பாடுகின்றன;
வானதூதர்களின் அணிகள் அனைத்தோடும் நாங்கள் சேர்ந்து
முடிவின்றிப் பறைசாற்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 553

புனித அருள்நெறியாளர்களின் தொடக்கவுரை

திரு அவையில் புனித அருள்நெறியாளர்களின் உடனிருப்பு

70. புனித அருள்நெறியாளர்கள் பெருவிழாவிலும் விழாவிலும் இத்தொடக்கவுரை சொல்லப்படும். அவர்களுடைய நினைவுத் திருப்பலிகளிலும் இதைச் சொல்லலாம்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் புனித (பெயர்) ... உடைய விழாவில்
உமது திரு அவை மகிழ்ந்திருக்கச் செய்கின்றீர்;
அவருடைய இறைப்பற்று மிக்க வாழ்க்கை நெறியின் எடுத்துக்காட்டால்
அதற்கு வலுவூட்டுகின்றீர்; அவருடைய படிப்பினையால் பயிற்றுவிக்கின்றீர்;
அவருடைய மன்றாட்டால் பாதுகாத்து வருகின்றீர்.

ஆகவே வானதூதர் அணிகளோடும் புனிதரின் பெருந்திரளோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து,
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 554

புனித கன்னியர், துறவியரின் தொடக்கவுரை

இறை அர்ப்பண வாழ்வின் அடையாளம்

71 புனித கன்னியர், துறவியர் பெருவிழாவிலும் விழாவிலும் இத்தொடக்கவுரை சொல்லப்படும். அவர்களுடைய நினைவுத் திருப்பலிகளிலும் இதைச் சொல்லலாம்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் விண்ணரசுக்காகக்
கிறிஸ்துவுக்குத் தங்களையே அர்ப்பணித்த புனிதர்களில்
உமது வியத்தகு பராமரிப்பைக் கொண்டாடுவதும்
உம்மைப் போற்றிப் புகழ்வதும் தகுமே;
உமது இந்தப் பராமரிப்பினால்
நீர் மனிதரைத் தொடக்கத்தில் இருந்த புனித நிலைக்கு
மீண்டும் அழைத்துச் செல்கின்றீர்.
புத்துலகில் கிடைக்க இருக்கும் அருள்கொடைகளை
இவ்வுலகிலேயே பெற்று அனுபவிக்க அவர்களை வழிநடத்துகின்றீர்.

ஆகவே புனிதர், வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
நாங்கள் உம்மைப் புகழ்ந்தேத்தி முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 555

பொதுத் தொடக்கவுரை 1

கிறிஸ்துவில் அனைத்தையும் புதுப்பித்தல்

72 தனித் தொடக்கவுரை இல்லாத திருப்பலிகளில், காலத்துக்கு உரிய தொடக்கம் சொல்லக் கட்டாயம் இல்லை எனில், இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்துவில் அனைத்தையும் புதுப்பிக்கவும்
அவருடைய நிறைவில் நாங்கள் அனைவரும்
பங்குபெறவும் நீர் திருவுளமானீர்;
ஏனெனில் கடவுள் வடிவில் விளங்கிய அவர் தம்மையே வெறுமையாக்கி,
சிலுவையில் சிந்திய தமது இரத்தத்தால்
யாவும் அமைதி பெறச் செய்தார்.
எனவே அவர் அனைத்துக்கும் மேலாக உயர்த்தப்பட்டு,
தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவருக்கும் நிலையான மீட்பின் காரணரானார்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 556

பொதுத் தொடக்கவுரை II

கிறிஸ்து வழியாக மீட்பு.

73. தனித் தொடக்கவுரை இல்லாத திருப்பலிகளில், காலத்துக்கு உரிய தொடக்கவுரை --ால்லக் கட்டாயம் இல்லை எனில், இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

உமது நன்மை மிகுதியால்
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
நீர் மனிதராகிய எங்களைப் படைத்தீர்;
நாங்கள் நீதியின்படி தண்டனைக்கு உரியவராயினும்,
உமது இரக்க மிகுதியினால் எங்களை மீட்டருளினீர்.

அவர் வழியாகவே உமது மாண்பை வானதூதர் புகழ்கின்றனர்;
தலைமை தாங்குவோர் உம்மை வழிபடுகின்றனர்;
அதிகாரம் செலுத்துவோர் உம் திருமுன் நடுங்குகின்றனர்;
வானங்களும் அவற்றில் உள்ள ஆற்றல்களும் சேராபீன்களும்
ஒன்றுகூடி அக்களித்துக் கொண்டாடுகின்றனர்.

அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 557

பொதுத் தொடக்கவுரை III

மனிதரின் படைப்புக்காகவும் மீட்புக்காகவும் கடவுளுக்குப் புகழ்

74 தனித் தொடக்கவுரை இல்லாத திருப்பலிகளில், காலத்துக்கு உரிய தொடக் சொல்லக் கட்டாயம் இல்லை எனில், இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

உம்முடைய அன்புத் திருமகன் வழியாக
நீர் மனித இனங்களைப் படைத்தது போல
மிகுந்த கனிவிரக்கத்தால் அவற்றைப் புதுப்பிக்கவும் திருவுள மானீர்;

ஆகவே படைப்புகள் அனைத்தும் உமக்குப் பணிபுரிகின்றன;
மீட்பு அடைந்தோர் அனைவரும் உம்மை ஏற்றவாறு புகழ்கின்றனர்;
உம்முடைய புனிதர்களும் ஒரே இதயத்தோராய் உம்மைப் போற்றுகின்றனர்.

எனவே வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
நாங்கள் உம்மைக் கொண்டாடி,
மகிழ்வுடன் எப்பொழுதும் அறிக்கையிட்டுச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 558

பொதுத் தொடக்கவுரை IV

கடவுளைப் புகழ்வதும் அவரது கொடையே

75. தனித் தொடக்கவுரை இல்லாத திருப்பலிகளில், காலத்துக்கு உரிய தொடக்கவுரை --ால்லக் கட்டாயம் இல்லை எனில், இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் எங்கள் புகழுரை உமக்குத் தேவை அன்று;
ஆயினும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
உமது அருள்கொடையாலேயே.
நாங்கள் உம்மைப் புகழ்ந்துரைப்பது
உமது மாட்சியை மிகுதிப்படுத்தாது எனினும்,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
நாங்கள் மீட்பு அடையப் பயன்படுகின்றது.

ஆகவே வானதூதர் திரளோடு ஒன்றுசேர்ந்து,
நாங்களும் உம்மைப் புகழ்ந்தேத்தி,
மகிழ்ச்சியுடன் அறிக்கையிட்டுச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 559

பொதுத் தொடக்கவுரை V

கிறிஸ்துவின் மறைநிகழ்வைப் பறைசாற்றுதல்

76. தனித் தொடக்கவுரை இல்லாத திருப்பலிகளில், காலத்துக்கு உரிய தொடக்க சொல்லக் கட்டாயம் இல்லை எனில், இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்துவின் இறப்பினை
நாங்கள் அன்போடு கொண்டாடுகின்றோம்.
உயிர்ப்பினை உயிராற்றலுள்ள நம்பிக்கையோடு அறிக்கையிடுகின்றோம்.
மாட்சியுடன் அவர் மீண்டும் வருவார் என
உறுதியோடு எதிர்நோக்குகின்றோம்.

ஆகவே புனிதர், வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
நாங்கள் உம்மைப் புகழ்ந்தேத்தி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 560

பொதுத் தொடக்கவுரை VI

கிறிஸ்துவில் மீட்பின் மறைபொருள்

77. தனித் தொடக்கவுரை இல்லாத திருப்பலிகளில், காலத்துக்கு உரிய தொடக்கவுரை சொல்லக் கட்டாயம் இல்லை எனில், இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

உம் வார்த்தையான அவர் வழியாக அனைத்தையும் படைத்தீர்.
அவரையே மீட்பராகவும் ஈடேற்றுபவராகவும் எங்களுக்கு அனுப்பினீர்.
அவர் தூய ஆவியால் உடலெடுத்து,
கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
அவர் உமது திருவுளத்தை நிறைவேற்றி,
புனித மக்களை உமக்குப் பெற்றுத் தரத்
தம் கைகளை விரித்துப் பாடுபட்டார்.
இவ்வாறு அவர் சாவை வென்று உயிர்ப்பை வெளிப்படுத்தினார்.

ஆகவே வானதூதரோடும் புனிதர் அனைவரோடும் சேர்ந்து,
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்துரைத்து
ஒரே குரலாய்ச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 561

இறந்தோர் தொடக்கவுரை 1

கிறிஸ்துவில் உயிர்த்தெழுவோம் எனும் எதிர்நோக்கு

78. இறந்தோர் திருப்பலிகளில் இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்துவில்தான் மேன்மையான உயிர்ப்பின் எதிர்நோக்கு
எங்களுக்கு ஒளிர்கின்றது;
சாவது திண்ண ம் எனும் நியதி எங்களை வருத்தத்தில் ஆழ்த்தினாலும்
வரவிருக்கும் அழிவில்லா வாழ்வு இனி உண்டு எனும் வாக்குறுதி
எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றது. ஏனெனில் ஆண்டவரே,
உம் நம்பிக்கையாளருக்கு வாழ்வு மாறுபடுகிறதேயன்றி அழிக்கப்படுவதில்லை;
இந்த மண்ணக வாழ்வின் உறைவிடம் அழிந்ததும்
விண்ணகத்தில் நிலையான வீடு ஆயத்தமாய் இருக்கின்றது.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 562

இறந்தோர் தொடக்கவுரை II

நாம் வாழ்வு பெறக் கிறிஸ்து இறந்தார்

79. இறந்தோர் திருப்பலிகளில் இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் நாங்கள் அனைவரும் சாகாமலிருக்கக்
கிறிஸ்து ஒருவரே சாவை ஏற்றுக்கொண்டார்;
நாங்கள் அனைவரும் என்றும் உமக்காக வாழ்ந்திட
அவர் ஒருவரே சாகத் திருவுள மானார்.

ஆகவே வானதூதர் திரளோடு ஒன்றுசேர்ந்து,
நாங்களும் உம்மைப் புகழ்ந்தேத்தி,
மகிழ்ச்சியுடன் அறிக்கையிட்டுச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 563

இறந்தோர் தொடக்கவுரை III

மீட்பும் வாழ்வுமான கிறிஸ்து

80. இறந்தோர் திருப்பலிகளில் இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் கிறிஸ்துவே உலகின் மீட்பு;
அவரே மனிதருக்கு வாழ்வு;
இறந்தோரின் உயிர்ப்பும் அவரே.

அவர் வழியாக உமது மாண்பை
வானதூதர்களின் அணிகள் வழிபடுகின்றன;
உமது திருமுன் எக்காலத்தும் மகிழ்கின்றன. அ
வர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து
அக்களிப்புடன் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 564

இறந்தோர் தொடக்கவுரை IV

மண்ணக வாழ்வினின்று விண்ணக மாட்சி நோக்கி

21 இறந்தோர் திருப்பலிகளில் இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

உமது ஆணைப்படி நாங்கள் பிறக்கின்றோம்;
உமது திருவுளம் எங்களை ஆண்டு நடத்துகின்றது;
உமது கட்டளைக்கு ஏற்ப மண்ணினின்று உருவான நாங்கள்
பாவத்தின் விளைவாக மண்ணுக்கே திரும்புகின்றோம்;
எனினும், உம் திருமகனின் சாவால் மீட்கப்பெற்றுள்ள நாங்கள்
உமது திருவுளப்படி
அவருடைய உயிர்ப்பின் மாட்சிக்கு எழுப்பப்படுகின்றோம்.

ஆகவே வானதூதர் அணிகளோடும் புனிதரின் பெருந்திரளோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து,
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 565

இறந்தோர் தொடக்கவுரை V

கிறிஸ்துவின் வெற்றியால் நமக்கு உயிர்ப்பு

82. இறந்தோர் திருப்பலிகளில் இத்தொடக்கவுரை சொல்லப்படும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் பாவத்தின் விளைவாக நாங்கள் அழிவுறுகின்றோம்;
பாவத்தால் சாவுக்கு ஆளாயினும்
கிறிஸ்துவின் வெற்றியினால் மீட்கப்பட்டு
அவரோடு மீண்டும் வாழ்வுக்கு அழைக்கப்படுவது
உமது பரிவிரக்கம் உள்ள அருளினால்தான்.

ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து
நாங்களும் இம்மண்ணுலகில்
இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,
முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:

தூயவர்.

=============↑ பக்கம் 566

====================

image