image

 

புனிதருக்கு உரிய சிறப்புப் பகுதி

1. திருக்கொண்டாட்டத்தின் தரம் பெருவிழா, விழா, நினைவு என அந்தந்த நாள்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது; எந்த விதக் குறிப்பும் இல்லை எனில், அது விருப்ப நினைவுக் கொண்டாட்டம் ஆகும்.

2. பெருவிழாக்களுக்கும் விழாக்களுக்கும் ஏற்றவாறு அவற்றுக்கு உரிய முழுத் திருப்பலியும் தரப்பட்டுள்ளது. அவை மாற்றமின்றிப் பயன்படுத்தப்படும்.

3. நினைவுகளைப் பொறுத்தவரையில், கீழே வருபவை பின்பற்றப்பட வேண்டும்

அ) சில நாள்களுக்கே உரிய பாடங்கள் எப்பொழுதும் பயன்படுத்தப்பட வேண்டும்

ஆ) 'பொதுப் பாடங்களிலிருந்து எடுக்குமாறு எப்போதெல்லாம் குறிப்பு இருக்கின்றதோ, அப்போதெல்லாம் பொது முன்னுரையில் விளக்கப்பட்டுள்ள ஒழுங்குகளுக்கு ஏற்றவாறு, அப்பாடங்களில் மிகப் பொருத்தமானவற்றைத் தேர்ந்து கொள்க. ஒவ்வொரு திருப்பலியிலும் தரப்பட்டுள்ள பக்க எண்கள் பொருத்தமான பாடத்தைக் குறிப்பிடுகின்றன.

இ) எனினும் பொதுப் பாடங்கள் பல குறிப்பிடப்பட்டிருந்தால், அருள்பணி நலன் கருதி அவற்றுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்; ஆனால் ஒரே பொதுத் தொகுப்பில் உள்ள பாடங்களுள் ஒன்றை விருப்பத்துக்கு ஏற்பத் தேர்ந்துகொள்ள அனுமதி உண்டு.
எ.கா. புனிதர் ஒருவர் மறைச்சாட்சியாகவும் ஆயராகவும் இருந்தால், 'மறைச்சாட்சியர் பொதுப் பாடத்தை அல்லது அருள்நெறியாளர் பொதுப் (ஆயர்) பாடத்தைப் பயன்படுத்தலாம்.

ஈ) புனிதரின் சிறப்பு வகையைக்(எ.கா. மறைச்சாட்சியர், கன்னியர், அருள்நெறியாளர், போன்றவை) குறிக்கும் பொதுப் பாடங்களுக்குப் பதிலாகப் புனிதர் பொது (ஆண், பெண்) என்னும் தொகுப்பிலிருந்து எப்பொழுதும் பயன்படுத்த அனுமதி உண்டு; ஏனெனில் இத்திருப்பலிப் பாடங்கள் புனித நிலையைப் பொதுவாகக் குறிப்பிடுகின்றன.

உ) காணிக்கைமீது மன்றாட்டுகளும் திருவிருந்துக்குப்பின் மன்றாட்டுகளும் புனிதரின் விழாவுக்கு உரியவை இல்லை எனில், பொதுப் பாடங்களிலிருந்து அல்லது திருவழிபாட்டுக் காலத் திருப்பலியிலிருந்து எடுக்கப்படும்.

4. புனிதருக்கு உரிய சிறப்புப் பகுதியில் உள்ள திருப்பலிகளை நேர்ச்சித் திருப்பலிகளாகவும் பயன்படுத்தலாம். ஆனால் நம் ஆண்டவர், புனித கன்னி மரிய117 ஆகியோருடைய வாழ்க்கையின் மறைநிகழ்வுகள் பற்றிய திருப்பலிகளும் (உரோமைத் திரு 11 / நூலின் பொதுப் படிப்பினை, எண் 375) தனிப்பட்ட நேர்ச்சித் திருப்பலியில் உள்ள சில புனிதரின் திருப்பலிகளும் இதற்கு விதிவிலக்கு ஆகும். இவ்வாறு புனிதருக்கு உரிய சிற) 11/2 திருப்பலியை நேர்ச்சித் திருப்பலியாகப் பயன்படுத்தும்போது பிறப்பு நாள், பெருவிழா, விழா! என்னும் குறிப்புகளை மன்றாட்டுகளிலிருந்து அகற்றிவிட்டு, அவ்விடத்தில் "நினைவு அல்லது "நினைவுக்கொண்டாட்டம்" எனக் குறிப்பிடுக.

=============↑ பக்கம் 684

ஜனவரி

ஜனவரி 2

புனிதர்கள் பெரிய பேசில், நசியான்சு நகர்ப் புனித கிரகோரி:
ஆயர்கள், மறைவல்லுநர்கள்

நினைவு

வருகைப் பல்லவி

காண். சீஞா 44:15,14 மக்கள் புனிதர்களுடைய ஞானத்தை எடுத்துரைப்பார்கள்; அவர்களது புகழைத் திரு அவை பறைசாற்றும். அவர்களுடைய பெயர் தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஆயர்களாகிய புனிதர்கள் பேசில், கிரகோரி ஆகியோருடைய வாழ்வின் எடுத்துக்காட்டாலும் படிப்பினையாலும் உமது திரு அவையை மேன்மையுறச் செய்தீரே; அதனால் மனத் தாழ்மையுடன் உமது உண்மையை நாங்கள் கற்றுக்கொள்ளவும் அதை அன்புடனும் உண்மையுடனும் செயல்படுத்தவும் அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் இப்பலியை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புனிதர்கள் பேசில், கிரகோரி ஆகியோரைச் சிறப்பிக்கும் வகையில் உமக்கு ஒப்புக்கொடுக்கப்படும் இக்காணிக்கை வழியாக எமக்கு முடிவில்லா மீட்பை அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். 1 கொரி 1:23-24 நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். கிறிஸ்து கடவுளின் வல்லமையும் கடவுளின் ஞானமுமாய் இருக்கிறார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, புனிதர்கள் பேசில், கிரகோரி ஆகியோரின் விழாவைக் கொண்டாடி விண்ணக விருந்தில் பங்குபெற்ற அனைவரிடமும் விண்ணக ஆற்றல்களை உறுதிப்படுத்தி வளர்ப்பீராக; அதனால் நம்பிக்கையின் கொடையை நாங்கள் முழுமையாகப் பாதுகாத்து நீர் காட்டும் மீட்பின் பாதையில் நடப்போமாக. எங்கள்.

=============↑ பக்கம் 685

ஜனவரி 3
இயேசுவின் தூய்மைமிகு பெயர்

வருகைப் பல்லவி

பிலி 2:10-11இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக
"இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் வார்த்தை மனிதர் ஆன மறைநிகழ்வில் மனித இனத்தின் மீட்புக்கு அடித்தளம் இட்டீரே; உம் மக்களின் வேண்டல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு இரக்கம் காட்டியருளும். அதனால் உம் ஒரே திருமகனின் பெயரைத் தவிர வேறொரு பெயரை அழைத்து மன்றாடத் தேவை இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்வார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் சாவை ஏற்கும் அளவுக்கு உமக்குக் கீழ்ப்படிந்த கிறிஸ்துவுக்கு மீட்பு அளிக்கும் பெயரை நீர் அருளியது போல அப்பெயரின் ஆற்றலால் உமது பாதுகாப்பை எங்களுக்கு வழங்குவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 8:2 எங்கள் ஆண்டவராகிய ஆண்டவரே, உமது பெயர் பூவுலகெங்கும்
எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, கிறிஸ்துவின் பெயரைச் சிறப்பித்து, மாட்சிக்கு உரிய உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுத்து உட்கொண்ட இத்திரு உணவு எங்கள்மீது உமது அருளை மிகுதியாகப் பொழிய உம்மை வேண்டுகின்றோம். அதனால் எங்கள் பெயரும் விண்ணகத்தில் எழுதப்பட்டிருப்பதை நினைத்து மகிழ்வோமாக. எங்கள்:

=============↑ பக்கம் 686

ஜனவரி 7
புனித பென்யபோர்ட் ரெய்மண்ட்: அருள்பணியாளர்

அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, பாவிகள் மீதும் சிறைப்பட்டோர் மீதும் இரக்கம் காட்டும் பண்பால் அருள்பணியாளராகிய புனித ரெய்மண்டின் வாழ்வை அணிசெய்தீரே; இவ்வாறு அவருடைய பரிந்துரையால் நாங்கள் பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை அடைந்து உமக்கு ஏற்றவற்றை விருப்பமுடன் நிறைவேற்ற அருள்வீராக. உம்மோடு.

ஜனவரி 13
புனித ஹிலாரி: ஆயர், மறைவல்லுநர்

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, ஆயரான புனித ஹிலாரி உம் திருமகனின் இறைத்தன்மையை உறுதியுடன் எடுத்துரைத்தார்; அதனால் நாங்கள் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் உண்மையுடன் அறிவிக்கவும் ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு.

ஜனவரி 14
அருளாளர் தேவசகாயம்: மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர் (பக். 905)

திருக்குழும மன்றாட்டு

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, மறைச்சாட்சியாகும் அளவுக்குத் தேவசகாயம் எனும் உம் அடியாரை ஆண்டவர் கிறிஸ்துவுக்கு உண்மை உள்ளவராக விளங்கச் செய்தீர்; அவருடைய எடுத்துக்காட்டாலும் பரிந்துரையாலும் நாங்கள் உண்மையான நம்பிக்கையைப் பணிவுடன் ஏற்று, துணிவுடன் அதனை அறிக்கையிட எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு

=============↑ பக்கம் 687

ஜனவரி 16
பனித ஜோசப் வாஸ்: அருள்பணியாளர்

அருள்நெறியாளர்கள் பொது: மறைத்தூதுப் பணியாளர்கள் (பக். 928).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஜோசப் வாஸ் எனும் புனிதரின் எடுத்துக்காட்டாலும் அருள்பணியாலும் ஆசியாவில் உள்ள உமது திரு அவையை மேன்மையுறச் செய்தீரே; உண்மையின் வார்த்தையால் வளம் பெறச் செய்து வாழ்வு அளிக்கும் அருளடையாளத்தால் உம் ஊழியர் ஊட்டம் அளித்த உம் மக்களைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவரது பரிந்துரையின் வழியாக அவர்கள் நம்பிக்கையில் தொடர்ந்து வளரவும் நற்செய்திக்கு என்றும் ஆற்றல்மிகு சாட்சிகளாக விளங்கவும் இரக்கமுடன் அருள்வீராக. உம்மோடு.


ஜனவரி 17
புனித அந்தோனியார்: துறவு மடத்துத் தலைவர்

நினைவு

வருகைப் பல்லவி

காண். திபா 91: 13-14 நேர்மையாளர் பேரீச்சை மரம் எனச் செழித்தோங்குவார்; லெ பனோனின் கேதுரு மரம் எனத் தழைத்து வளர்வார். ஆண்டவரின் இல்லத்திலும் நம் கடவுளின் கோவில் முற்றங்களிலும் நடப்பட்டவர் அவரே.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, பாலைநிலத்தில் வியத்தகு முறையில் உமக்கு ஊழியம் செய்து வாழ்ந்திட துறவு மடத்துத் தலைவரான புனித அந்தோனியாருக்கு அருளினீரே; நாங்கள் எங்களை மறுத்து, உம்மையே அனைத்துக்கும் மேலாக என்றும் அன்பு செய்திட அவரது பரிந்துரையால் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, னித அந்தோனியாரின் நினைவுக்கொண்டாட்டத்தில் உமது பீடத்துக்கு நாங்கள் கொண்டுவரும் எங்கள் பணியின் காணிக்கைகள் உமக்கு உகந்தனவாய் ஏற்றுக்கொள்ளப்பட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உலகப் பற்றுகளிலிருந்து விடுபட்டு, உம்மை மட்டுமே எங்கள் செல்வமாகக் கொண்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 19:21 நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். பின்பு என்னைப் பின் பற்றும்,
என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித அந்தோனியார் இருளின் ஆற்றல்களை எதிர்த்துப் போராடிச் சீரிய வெற்றி பெற அருள்புரிந்தீரே; நலம் தரும் உமது அருளடையாளத்தால் ஊட்டம் பெற்ற நாங்கள் பகைவனின் அனைத்துச் சூழ்ச்சிகளையும் என்றும் மேற்கொள்ள அருள்வீராக. எங்கள்.

ஜனவரி 20

புனித பபியான்: திருத்தந்தை, மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர் (பக். 905) அல்லது அருள் நெறியாளர்கள் பொது: திருத்தந்தை ஒருவர் (பக். 916).

திருக்குழும மன்றாட்டு

உம் அருள்பணியாளர்களின் மாட்சியான இறைவா, உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம்முடைய மறைச்சாட்சியான பபியானுடைய பரிந்துரையின் உதவியால், அவர் கொண்டிருந்த இறைநம்பிக்கையின் தோழமையிலும் தகுதியான ஊழியம் செய்வதிலும் நாங்கள் முன்னேறுவோமாக. உம்மோடு.

புனித செபஸ்தியார்:
மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர் (பக். 905).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, மனத் துணிவை எங்களுக்கு அருள் உம்மை வேண்டுகின்றோம்: உம்முடைய மறைச்சாட்சியான புனித செபஸ்தியாரின் சிறந்த எடுத்துக்காட்டால் நாங்கள் தூண்டப்பெற்றுள்ளோம்; இவ்வாறு மனிதருக்குக் கீழ்ப்படி வதைவிட உமக்கே கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளும் மனத் துணிவைப் பெற எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு.
ஜனவரி 21 புனித ஆக்னஸ்: கன்னி, மறைச்சாட்சி
நினைவு மறைச்சாட்சியர் பொது: கன்னி மறைச்சாட்சி ஒருவர் (பக். 914) அல்லது கன்னியர் பொது: கன்னி ஒருவர் (பக். 936).

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, வலியோரை நாணச் செய்ய வலுவற்றவை என உலகம் கருதுவதைத் தேர்ந்தெடுக்கின்றீர்; அதனால் உம்முடைய மறைச்சாட்சியான புனித ஆக்னசின் விண்ணகப் பிறப்பைக் கொண்டாடும் நாங்கள் அவர் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையைப் பின்பற்றிடக் கனிவுடன் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.
ஜனவரி 22 புனித வின்சென்ட்: திருத்தொண்டர், மறைச்சாட்சி
நினைவு மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர் (பக். 905).

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, மறைச்சாட்சியான புனித வின்சென்ட் தமது உடலை வருத்திய துன்பங்களை எல்லாம் உம்மீது கொண்ட ஆற்றல்மிக்க அன்பினால் வென்றார்; அதனால் அதே அன்பை எங்கள் இதயங்களும் பெற்றுக்கொள்ள உம்முடைய ஆவியை கனிவுடன் எம்மீது பொழிந்தருள்வீராக. உம்மோடு.

=============↑ பக்கம் 690

ஜனவரி 24
சலேசு நகர்ப் புனித பிரான்சிஸ்: ஆயர், மறைவல்லுநர்
நினைவு

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஆயரான புனித பிரான்சிஸ் மனிதரின் மீட்புக்காக எல்லார்க்கும் எல்லாம் ஆகிடத் திருவுளமானீரே; எங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு என்றும் பணி புரிவதில் நாங்கள் அவருடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றி உம்முடைய அன்பின் கனிவை வெளிப்படுத்துவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித பிரான்சிசின் சாந்தம்மிக்க உள்ளத்தைத் தூய ஆவி எனும் நெருப்பினால் வியத்தகு முறையில் பற்றியெரியச் செய்தீரே; நாங்கள் ஒப்புக்கொடுக்கின்ற மீட்பு அளிக்கும் இப்பலிப்பொருள் வழியாக, எங்கள் இதயமும் அதே நெருப்பினால் பற்றியெரியச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் உட்கொண்ட இத்திருவிருந்தினால் மண்ணகத்தில் புனித பிரான்சிசின் அன்பையும் பரிவையும் பின்பற்றி விண்ணக மாட்சியில் பங்குபெறுவோமாக. எங்கள்.

=============↑ பக்கம் 691

ஜனவரி 25
திருத்தூதரான புனித பவுலின் மனமாற்றம்
விழா

வருகைப் பல்லவி

2 திமொ 1:12; 4:8 நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். நேர்மையான அந்த நடுவர் என்னிடம் ஒப்படைத்ததை அந்நாள் வரை
காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு. "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, திருத்தூதரான புனித பவுலின் போதனையால் உலகம் முழுமைக்கும் நீர் கற்பித்தீரே; அதனால் அவருடைய மனமாற்றத்தை இன்று கொண்டாடும் நாங்கள், அவருடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றி உலகில் உமது உண்மைக்குச் சாட்சிகளாய்த் திகழ அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாடும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உமது மாட்சியைப் பரப்பிட திருத்தூதரான புனித பவுலை ஆவியார் இடையறாது ஒளிர்வித்தது போல், நம்பிக்கையின் ஒளியால் அவர் என்றும் எங்களை நிரப்புவாராக. எங்கள். திருத்தூதர்களின் தொடக்கவுரை 1 (பக். 548).
காண், கலா 2:20

திருவிருந்துப் பல்லவி

இறைமகன் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் வாழ்கிறேன். அவர் என் மீது அன்புகூர்ந்தார். எனக்காகத்
தம்மையே ஒப்புவித்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, திருத்தூதரான புனித பவுலைத் திரு அவைகள் அனைத்தின் மீதும் கொண்டிருந்த ஆர்வத்தால் பற்றியெரியச் செய்தீரே; நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு அதே அன்புத் தீயை எங்களிலும் வளர்ப்பதாக. எங்கள்.
சிறப்பு அரிசிக்கான வாய்ப்பாடு பயன்படுத்தப்படகபாம் (பா. 890),

=============↑ பக்கம் 692


ஜனவரி 27
புனிதர்கள் திமொத்தேயு, தீத்து: ஆயர்கள்

வருகைப் பல்லவி

திபா 95:3-4 பிற இனத்தாருக்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
ஏனெனில் ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத்தக்கவர்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, திமொத்தேயு, தீத்து எனும் புனிதர்களைத் திருத்தூதர்களுக்கு உரிய நற்பண்புகளால் அணிசெய்தீரே; அதனால் இவ்விருவரின் பரிந்துரையால் நாங்கள் மண்ணுலகில் நீதியோடும் இறைப்பற்றோடும் வாழ்ந்து, விண்ணக வீட்டை அடையத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, திமொத்தேயு, தீத்து எனும் உம் புனிதர்களின் திருவிழாவைக் கொண்டாடும் உம் மக்களாகிய நாங்கள் அளிக்கும் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: நீர் கனிவுடன் எம்மை ஏற்று, நாங்கள் நேர்மையான இதயம் கொண்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மாற் 16:15; மத் 28:20 உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். எந்நாளும்
நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, திமொத்தேயு, தீத்து எனும் புனிதர்கள் திருத்தூதுப் போதனையால் நம்பிக்கையைப் போதித்து, அக்கறையுடன் பாதுகாத்தனர்; நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு அதே நம்பிக்கையை எங்களில் ஊட்டி வளர்ப்பதாக, எங்கள்.

==============21^ 8793 ^-----------

புனித ஆஞ்சலா மெரிச்சி: கன்னி

கன்னியர் பொது: கன்னி ஒருவா் (பக. 30) அல்லது புனிதர் பொது: கல்விப் பணியாளர்கள் (பக். 954).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தை நாங்கள் பெற்றுக்கொள்ளுமாறு கன்னியான புனித ஆஞ்சலா எங்களுக்காக என்றும் பரிந்து பேச உம்மை வேண்டுகின்றோம்: தனால் அவருடைய அன்பையும் முன்மதியையும் நாங்கள் பின்பற்றி, உம் போதனைகளில் நிலைத்து நிற்கவும் அவற்றை வாழ்ந்துகாட்டவும் ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு.
ஜனவரி 28 அக்குயினோ நகர்ப் புனித தாமஸ்: அருள்பணியாளர், மறைவல்லுநர்
நினைவு மறைவல்லுநர்கள் பொது (பக். 932); அல்லது அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித தாமஸ் தூய வாழ்வை நாடுவதில் ஆர்வமும் மறைப்போதனைகளைக் கற்று அறிவதில் புகழும் பெற்று விளங்கச் செய்தீரே; அவர் கற்பித்தவற்றை நாங்கள் அறிந்து கொள்ளவும் அவரது வாழ்வைப் பின்பற்றவும் அருள்வீராக. உம்மோடு.
ஜனவரி 31 புனித ஜான் போஸ்கோ : அருள்பணியாளர்
நினைவு அருள் நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923) அல்லது புனிதர் பொது: கல்விப் பணியாளர்கள் (பக். 954),

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அருள்பணியாளரான புனித ஜான் போஸ்கோவை இளைஞர்களுக்குத் தந்தையாகவும் ஆசிரியராகவும் ஏற்படுத்தினீரே; அவரைப் போல நாங்களும் அன்புத் தீயால் பற்றியெரிந்து, ஆன்மாக்களைத் தேடிச்செல்லவும் உமக்கு மட்டுமே ஊழியம் புரியவும் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

=============↑ பக்கம் 694

பெப்ருவரி 2
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்

விழா

மெழுகுதிரியைப் புனிதப்படுத்துதலும் பவனியும்

முதல் வகை: பவனி

1. சிற்றாலயத்திலோ கோவிலுக்கு வெளியே உள்ள தகுதியான ஓர் இடத்திலோ இறைமக்கள் தகுந்த நேரத்தில் ஒன்றுகூடுவர். ஒளி ஏற்றப்படாத மெழுகுதிரியை நம்பிக்கையாளர் தங்கள் கையில் பிடித்திருப்பர்.

2. அருள்பணியாளர் வெண்ணிறத் திருப்பலி உடை அணிந்து பணியாளர்களுடன் வருகின்றார். திருப்பலி உடைக்குப் பதிலாக அவர் திருப்போர்வையை அணியலாம். பவனி முடிந்ததும் அதை அகற்றிவிடுவார்.

3. திரிகளைப் பற்றவைக்கும்போது இப்பல்லவி பாடப்படும்: -இதோ, நம் ஆண்டவர் வலிமையோடு வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளியூட்டு வார், அல்லேலூயா.


இதோ, நம் ஆண்டவர் வ லி மை யோடு வருவார்;

தம் ஊழியரின் கண்களுக்கு ஒளியூட்டுவார், அல் லே லூ யா.

(அல்லது பொருத்தமான வேறு பாடல் பாடலாம்).

4. - பாடல் முடிந்ததும் அருள்பணியாளர் மக்கள் பக்கம் திரும்பிச் சொல்கின்றார்: தந்தை மகன், தூய ஆவியாரின் பெயராலே. பிறகு வழக்கம் போல மக்களை வாழ்த்துகின்றார். அதன்பின் நம்பிக்கையாளர் இத்திருச் சடங்கின் உட்பொருளை நன்கு உணர்ந்து முழுமையாகப் பங்கெடுக்கும் பொருட்டு, பின்வரும் வார்த்தைகளாலோ வேறு வார்த்தைகளாலோ அறிவுரை வழங்கி அழைப்பு விடுக்கின்றார்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நாற்பது நாள்களுக்குமுன் ஆண்டவரின் பிறப்பு விழாவை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். இன்று மரியாவும் யோசேப்பும் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்த புனித நாள் வந்துள்ளது. இந்த நாளில் இயேசு திருச்சட்டத்தை வெளிப்படையாக நிறைவேற்றினாலும் உண்மையில் தம்மீது நம்பிக்கை கொண்ட தம் மக்களை அவர் சந்தித்தார். முதியோரான புனிதர்கள் சிமியோனும் அன்னாவும் தாய ஆவியாரின் ஏவுதலால் கோவிலுக்கு வந்தனர். அதே ஆவியாரால் உள்ளொளி பெற்று அவரை ஆண்டவர் என அறிந்து அக்களிப்புடன் அறிக்கையிட்டனர். அதே போல தூய ஆவியாரால் ஒன்றுகூடி யுள்ள நாம் கிறிஸ்துவை எதிர்கொள்ளக் கடவுளின் இல்லம் செல்வோமாக. அவர் மாட்சியுடன் வரும்வரை, அப்பத்தைப் பிடும்போதெல்லாம் நாம் அவரைக் கண்டு கொள்வோமாக.

5. இந்த அறிவுரைக்குப் பிறகு அருள்பணியாளர் தம் கைகளை விரித்து மெழுகுதிரிகளை புனிதப்படுத்துகின்றார்.

மன்றாடுவோமாக.

ஒளி அனைத்துக்கும் ஊற்றும் தொடக்கமு மாகிய இறைவா, பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளியாகிய இயேசுவை நேர்மையாளர் சிமியோனுக்கு இன்று வெளிப்படுத்தினீரே; இத்திரிகளை உமது ஆசியால் * புனிதப்படுத்தியருளும்; உமது பெயரின் மாட்சிக்காகத் தங்கள் கைகளில் திரிகளை ஏந்திப் பணிந்து உம்மை மன்றாடும் உம் மக்களின் வேண்டலை ஏற்றருளும். அதனால் அவர்கள் நன்னெறியில் நடந்து என்றும் குன்றாப் பேரொளிக்கு வந்து சேரத் தகுதி பெறுவார்களாக. எங்கள்

பதில்: ஆமென்.

அல்லது

மன்றாடுவோமாக.

உண்மை ஒளியாகிய இறைவா, நிலையான ஒளியைப் பரப்புபவரும் அதன் காரணருமானவரே, நம்பிக்கையாளரின் இதயங்களில் முடிவில்லா ஒளியின் மாட்சியைப் பொழிந்தருளும்; இவ்வாறு உமது புனிதக் கோவிலில் மிளிரும் ஒளியால் எழில் பெற்றவர்கள், உமது மாட்சியின் ஒளிக்கு மகிழ்வுடன் வந்து சேர்வார்களாக. எங்கள். பதில்: ஆமென்.

அருள்பணியாளா திரிகளின் மீது அமைதியாகப் புனித நீரைத் தெளித்து பவனிக்காகத் தூபக், கலத்தில் சாம்பிராணி இடுகின்றார்.

6. பின்னர் அருள் பணியாளர் தமக்கெனத் தயாரிக்கப்பட்ட திரியைக் 'திருத்தொண்டரிடமிருந்தோ பணியாளர் ஒருவரிடமிருந்தோ பெற்றுச் சொலண டன, தொடங்குகின்றது. திருத்தொண்டர் அவர் இல்லாவிடில் அருள்பணியாளர் பின்வருமாறு சொல்ல பவனி தொடங்குகிறது.

 

அண்டவரை எதிர்கொள்ள அமைதியுடன் செல்வோமாக.

அல்லது

அமைதியுடன் செல்வோமாக.

இதற்கு எல்லாரும் பதிலுரைக்கின்றார்கள்:

கிறிஸ்துவின் பெயரால், ஆமென்.

7. அனைவரும் எரியும் திரிகளுடன் செல்கின்றனர். பவனியின்போது பின்வரும் பல்லவிகளில் ஏதாவது ஒன்று பாடப்படும். அதாவது, லூக் 2:29-33-இல் சொல்லப்படும் "பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி இதுவே" என்னும் பல்லவி கொண்ட பாடல் அல்லது "சீயோனே, உன் உறைவிடத்தை அழகுபடுத்து" எனத் தொடங்கும் பல்லவி கொண்ட பாடல் அல்லது வேறு பொருத்தமான ஒரு பாடல் பாடப்படும்.

(பல்லவி)

பல்லவி பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி இதுவே.
உம் மக்களாகிய இஸ்ரயேலின் மாட்சியும் இதுவே.

ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியானை
இப்போது அமைதியுடன் போகச் செய்கின்றீர். (பல்லவி)

ஏனெனில் நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டு கொண்டன. (பல்லவி)

மக்கள் அனைவரும் காணுமாறு
நீர் அதை ஏற்பாடு செய்துள்ளீர். (பல்லவி)

=============↑ பக்கம் 697

பல்லவி

சீயோனே, உன் உறைவிடத்தை அழகுபடுத்து;
கிறிஸ்து அரசரை வரவேற்பாய்;
விண்ணக வாயிலாம் மரியாவைத் தழுவிக்கொள்;
ஏனெனில் அவரே புத்தொளியான
மாட்சியின் அரசரை ஈன்றெடுத்தார்.
கன்னியாக இருந்து கொண்டே விடிவெள்ளியாய்
உதித்த திருமகனைத் தம் கைகளில் தாங்கினார்.
அவரைச் சிமியோன் தம் கைகளில் ஏந்தி,
"இவரே வாழ்வுக்கும் சாவுக்கும் ஆண்டவர், உலகின் மீட்பர்" என மக்களுக்கு அறிவித்தார்.

8. பவனி கோவிலுக்குள் நுழையும்போது, திருப்பலியின் வருகைப் பல்லவி பாடப்படும். அருள்பணியாளர் பீடத்துக்கு வந்து வணக்கம் செலுத்துகின்றார்; தேவைக்கு ஏற்ப, பீடத்துக்குத் தூபம் காட்டுகின்றார். பின்னர் அவர் தமது இருக்கைக்குச் சென்று, திருப்போர்வையைப் பவனியில் பயன்படுத்தியிருந்தால் அதை அகற்றிவிட்டு, திருப்பலிக்கு உரிய உடையை அணிகின்றார். "உன்னதங்களிலே எனும் பாடலுக்குப்பின், திருக்குழும மன்றாட்டைச் சொல்கின்றார். பிறகு திருப்பலி வழக்கம் போலத் தொடரும்.

மற்றொரு வகை: சிறப்பு நுழைவு

3. மேற்கூறியவாறு பவனி நடைபெற இயலாது எனில், நம்பிக்கையாளர் தம் கைகளில் திரிகளை ஏந்தியவாறு கோவிலில் ஒன்றுகூடுவர். அருள்பணியாளர் திருப்பலிக்கான வெண்ணிறத் திருவுடைகளை அணிந்து, பணியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட 'நம்பிக்கையாளர் சிலரோடு தக்கதோர் இடத்துக்கு வருகின்றார். இந்த இடம் பெரும்பான்மையான மக்கள் திருச்சடங்கில் பங்குகொள்வதற்கு வசதியாக, கோவில் முற்றத்தில் அல்லது கோவிலுக்குள் அமைந்திருக்கலாம்.

10. திரிகளைப் புனிதப்படுத்துவதற்கான இடத்துக்கு அருள்பணியாளர் வந்ததும், திரிகள் பற்றவைக்கப்படும். அப்போது இதோ, நம் ஆண்டவர் எனத் தொடங்கும் பல்லவியுடன் கூடிய பாடல் (எண் 3) அல்லது பொருத்தமான வேறு பாடல் பாடப்படும்.

11. 1. வாழ்த்துரைக்கும் அறிவுரைக்கும் பிறகு, மேலே எண்கள் 4-5 கூறுவது போல அருள்பணியாளர் திரிகளைப் புனிதப்படுத்துகின்றார். பீடத்தை நோக்கிப் பவனி செல்கின்றது. எண்கள் 6, 7-இல் உள்ளபடி பாடல் பாடப்படும், மேலே காணப்படும் எண் 8 இல் குறிப்பிட்டுள்ளபடி திருப்பலி நிகழும்.

==============26^ 8798 ^-----------

திருப்பலி

வருகைப் பல்லவி

காண். திபா 47:10-11 கடவுளே! உமது கோவிலின் நடுவில் நாங்கள் உமது இரக்கத்தைப் பெற்றுக்கொண்டோம். கடவுளே, உமது பெயருக்கு ஏற்ப, உமது புகழும் உலகின் எல்லைவரை எட்டுவதாக. உமது வலக் கை நீதியால்
நிறைந்துள்ளது. "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மனித இயல்பையே தமதாக்கிக்கொண்ட உம் ஒரே திருமகன் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட இந்நாளில் மாண்புக்கு உரிய உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்களும் அவ்வாறே தூய்மை அடைந்த உள்ளத்துடன் உமக்குக் காணிக்கை ஆகுமாறு அருள்வீராக. உம்மோடு.

(இந்த விழா ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட்டால் "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்).

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உலகம் வாழ்வு பெற உம் ஒரே திருமகன் மாசற்ற செம்மறியாக உமக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று திருவுளமானீரே; திரு அவை அக்களிப்புடன் ஒப்புக்கொடுக்கும் காணிக்கை உமக்கு உகந்ததாய் இருக்க அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

தொடக்கவுரை : ஆண்டவர் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட மறைபொருள்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் உம்மோடு என்றுமுள்ள உம் திருமகன்
இன்று கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டார்;
அவரே இஸ்ரயேல் மக்களுக்கு மாட்சி எனவும்
பிற இனத்தாருக்கு ஒளி எனவும்
ஆவியாரால் அறிவிக்கப்பெற்றார்.

ஆகவே உமது மீட்பை மனமகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளச் செல்லும் நாங்கள்,
வானதூதர்களோடும் புனிதர்களோடும் சேர்ந்து
உம்மைப் புகழ்ந்து முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

லூக் 2:30-31 மக்கள் அனைவரும் காணு மாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது
மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, கிறிஸ்துவைக் காணும் முன் தாம் சாவதில்லை என்ற சிமியோனின் எதிர்பார்ப்பை இன்று நிறைவேற்றினீரே; அதனால் நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு வழியாக எங்களிடம் உமது அருளை நிறைவு பெறச் செய்வதால் ஆண்டவர் கிறிஸ்துவை எதிர்கொள்ளப் புறப்படும் நாங்கள் நிலைவாழ்வை அடைய அருள்புரிவீராக. எங்கள்.

==============28^ 8800 ^-----------

பெப்ருவரி 3

புனித ப்ளேஸ்: ஆயர், மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர் (பக். 905) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, மறைச்சாட்சியான புனித ப்ளேசின் அருள்காவலைப் பெற்ற உம் மக்களாகிய நாங்கள் செய்யும் வேண்டலுக்குச் செவிசாய்த்தருளும்; இவ்வாறு இம்மை வாழ்வில் நாங்கள் அமைதியைப் பெற்று மகிழவும் நிலைவாழ்வுக்கான உதவியைக் கண்டடையவும் அருள்வீராக. உம்மோடு.

புனித ஆன்ஸ்கார்: ஆயர்

அருள்நெறியாளர்கள் பொது: மறைத்தூதுப் பணியாளர்கள் (பக். 928) அல்லது ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, திரளான மக்களினத்தார் ஒளி பெற ஆயரான புனித ஆன்ஸ்காரை அனுப்பத் திருவுளமானீரே; அதனால் நாங்கள் உமது உண்மையின் ஒளியில் தொடர்ந்து நடந்திட அவரது பரிந்துரையால் எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு.

பெப்ருவரி 4

புனித ஜான் தெ பிரிட்டோ : மறைச்சாட்சி
நினைவு

வருகைப் பல்லவி

ஓரக் 12:8
நான் உங்களுக்குச் சொல்கிறேன் : மக்கள் முன் னிலை யில் என்னை ஏற்றுக்கொள் பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள் வார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, எங்கள் நாட்டில் உமது மீட்பின் நற்செய்தியை அறிவிக்க புனித ஜான் தெ பிரிட்டோவின் இதயத்தை உம்மீதும் மக்கள் மீதும் கொண்ட குன்றா அன்பினால் நிரப்பினீரே; அவரது சாட்சியத்தாலும் பரிந்துரையாலும் உறுதிப்படுத்தப்பட்டு நற்செய்தியை நாங்கள் சுவைத்து மகிழவும் எங்களோடு வாழும் மக்களுக்கு அதைத் துணிவோடு அறிவிக்கவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளை உமது ஆசியால் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: உடல் துன்பங்கள் அனைத்தையும் உமது அன்பின் சுடரால் வென்ற புனித ஜான் தெ பிரிட்டோவைப் போல நாங்களும் உமது அருளால் பற்றியெரிவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 12:49 மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றியெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம், என்கிறார்
ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மகிழ்ச்சியால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: புனித ஜான் தெ பிரிட்டோவின் எடுத்துக்காட்டால் நாங்கள் இவ்வுலகில் உம்மீது கொண்ட உண்மையான அன்பில் வளரவும் விண்ணக மாட்சியை என்றும் அடையவும் செய்வீராக. எங்கள்.

வாசகங்கள்

வாசகம் 1 : 1 கொரி 9:19- 29 பதிலுரைத்திருப்பாடல்
திபா 69 (68):31-32. 33-34. 35 பதிலுரை (67:5)
கடவுளே, மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக!
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

அல்லேலூயா (2 திமொ 1:10):
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி
யோவா 12:20-32

=============↑ பக்கம் 703

பெப்ருவரி 5
புனித ஆகத்தா: கன்னி, மறைச்சாட்சி

மறைச்சாசியர் பொது: கன்னி மறைச்சாட்சி ஒருவர் (பக். 914) அல்லது கன்னியர் பொன்.
ஒருவர் (பக். 936). கன்னி

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, கன்னியும் மறைச்சாட்சியுமான புனித ஆகத்தா கற்பின் சிறப்பாலும் மறைச்சாட்சியத்தின் வீரத்தாலும் உமக்கு உகந்தவராகத் திகழ்ந்தாரே; நாங்கள் இரக்கம் பெற அவர் எங்களுக்காக இறைஞ்சி வேண்டிட அருள்புரிவீராக. உம்மோடு.
பெப்ருவரி 6 புனிதர்கள் பால் மீக்கியும் தோழர்களும்: மறைச்சாட்சியர்
நினைவு மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர் (பக். 898).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனிதர் அனைவரின் மன உறுதியானவரே, மறைச்சாட்சியரான பால் மீக்கியையும் அவருடைய தோழர்களையும் சிலுவை வழியாக நிலைவாழ்வுக்கு அழைத்துக்கொள்ளத் திருவுள மானீரே; இவ்வாறு அவர்களின் பரிந்துரையால் நாங்கள் அறிக்கையிடும் நம்பிக்கையை இறுதி மூச்சுவரை உறுதியாகப் பற்றிக்கொள்ள அருள்புரிவீராக. உம்மோடு.


பெப்ருவரி 7

புனித கொன்சாலோ கார்சியா: மறைச்சாட்சி
நினைவு

வருகைப் பல்லவி

திபா 96:31
பிற இனத்தாருக்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள் : அனைதல் மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள் ஏனெனில் ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத்தக்கல் தெய்வங்கள் அனைத்துக்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனிதர் அனைவரின் ஆற்றலானவரே, சிலுவையின் மறையுண்மை வழியாக மறைச்சாட்சியத்தின் வெற்றியினால் புனித கொன்சாலோ கார்சியாவை அணிசெய்தீரே; அவரது பரிந்துரையால் எங்கள் இறப்பு வரை நாங்கள் நம்பிக்கையில் நிலைத்திருக்க அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித கொன்சாலோ கார்சியாவின் மதிப்புக்கு உரிய மறைச்சாட்சியத்தின் நினைவுக்கொண்டாட்டத்தில் இத்திருப்பீடத்தின் மீது நாங்கள் வைத்துள்ள காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் அடியார்களாகிய நாங்கள் நிறைவேற்றும் அதே மறைநிகழ்வுகள் வழியாக நாங்கள் தூய்மை பெற அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 16:24 என்னைப் பின்பற்ற விரும்புகிறவர் தம்மையே துறந்து, தம் சிலுவையைத்
தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகத் திரு உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: புனித கொன்சாலோ கார்சியாவின் எடுத்துக்காட்டால் உம் திருமகனின் அன்பு, பாடுகள் இவற்றின் அடையாளங்களை எங்கள் இதயங்களில் தாங்கிக்கொண்டு, நீடிய அமைதியின் கனியை என்றும் சுவைப்போமாக. எங்கள்.

வாசகங்கள்

வாசகம் 1 : 2 கொரி 6:4-10
பதிலுரைத் திருப்பாடல் : திபா 31 (30): 2-4. 17- 25 பதிலுரை (31:2)
என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும். அல்லேலூயா

அல்லே லூயா, அல்லே லூயா! (யோவா 12:25)
தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.
அல்லேலூயா.

நற்செய்தி
மத் 10:17-22

==============2^ 8804 ^-----------

பெப்ருவரி 8

புனித ஜெரோம் எமிலியானி புனிதர் பொது: கல்விப் பணியாளர்கள் (பக். 954).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, இரக்கம் நிறைந்த தந்தையே, ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவியாளராகவும் தந்தையாகவும் பணி புரியப் புனித ஜெரோமை ஏற்படுத்தினீரே; உம்முடைய பிள்ளைகள் என அழைக்கப்பட்டு, உம்முடைய பிள்ளைகளாகவே திகழும் நாங்கள், இந்த உரிமை வாழ்வை என்றும் பற்றுறுதியுடன் காத்துக்கொள்ள, இப்புனிதரின் பரிந்துரையால் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.


புனித ஜோசபின் பக்கீத்தா:

கன்னி கன்னியர் பொது : கன்னி ஒருவர் (பக். 936).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித ஜோசபின் பக்கீத்தாவைக் கொடிய அடிமைநிலையிலிருந்து விடுவித்து உம்முடைய மகளாகவும் கிறிஸ்துவின் மணமகளாகவும் மேன்மை அடையச் செய்தீரே; அவரது எடுத்துக்காட்டால் தூண்டப்பெற்று, சிலுவையில் அறையப்பட்ட இயேசு ஆண்டவரைத் தளரா அன்புடன் நாங்கள் பின்பற்றவும் பிறருக்குக் காட்டும் அன்பிலும் இரக்கத்திலும் நிலைத்து நிற்கவும் அருள்புரிவீராக. உம்மோடு.

பெப்ருவரி 10

புனித ஸ்கொலாஸ்திக்கா: கன்னி
நினைவு

கன்னியா பொது: கன்னிஒருவர் (பக். 936 அல்லது புனிதர் பொது: அருள்சகோதரி (பக.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, கன்னியான புனித ஸ்கொலாஸ்திக்காவின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அவரைப் பின்பற்றி, களங்கமற்ற அன்புடன் உமக்கு ஊழியம் புரிந்து, உமது அன்பின் பயனைப் பெற்று மகிழ்வோமாக. உம்மோடு.

=============↑ பக்கம் 706

பெப்ருவரி 11
லூர்து நகர்ப் புனித கன்னி மரியா

புனித கன்னி மரியா பொது (பக். 886).

திருக்குழும மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, வலுவற்ற எங்களுக்கு உதவி புரிந்தருளும்; அதனால் கடவுளுடைய மாசற்ற அன்னையின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் அவருடைய பரிந்துரையின் உதவியால் எங்கள் பாவங்களினின்று விடுபட்டு எழுவோமாக. உம்மோடு.

பெப்ருவரி 14
புனிதர்கள் சிரில்: மடத்துத் துறவி; மெதோடியஸ்: ஆயர்
நினைவு

வருகைப் பல்லவி

கடவுளின் நண்பர்களாக்கப்பெற்ற புனிதர்கள் இவர்களே; இறை
உண்மையின் மாட்சிமிகு தூதுவர்களும் இவர்களே.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, சகோதரர்களான சிரில், மெதோடியஸ் எனும் புனிதர்கள் வழியாக ஸ்லாவிய மக்கள் ஒளி பெறச் செய்தீரே; உம் படிப்பினைகளை எங்கள் உள்ளத்தில் உய்த்துணரவும் உண்மையான நம்பிக்கையிலும் அதைச் சரியாக அறிக்கையிடுவதிலும் ஒன்றுபட்ட மக்களாய் நாங்கள் வாழவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, சிரில், மெதோடியஸ் எனும் புனிதர்களின் நினைவுக்கொண்டாட்டத்தில் மாண்புக்கு உரிய உமக்கு நாங்கள் கொண்டுவரும் காணிக்கைகளைக் கண்ணோக்கியருளும்; இவ்வாறு பேரன்பால் உம்மோடு இணைக்கப்பட்ட புதிய மானிடத்தின் அடையாளமாக இவை அமைவனவாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். மாற் 16:20 சீடர்கள் புறப்பட்டுச் சென்று, நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து, நிகழ்ந்த அரும் அடையாள ங் க ள ால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்,

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, எல்லா இனத்தாருக்கும் தந்தையே, எங்களை ஒரே அப்பத்திலும் ஒரே ஆவியிலும் பங்குபெறச் செய்து. நிலையான விருந்துக்கு உரிமையாளர்கள் ஆக்கியுள்ளீர்; அதனால் சிரில், மெதோடியஸ் எனும் புனிதர்களின் திருநாளில் உம்முடைய பிள்ளைகளின் திருக்கூட்டம் அதே நம்பிக்கையில் நிலைத்து நின்று நீதியும் அமைதியும் விளங்கும் ஆட்சியை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப இரக்கத்துடன் அருள்வீராக. எங்கள்.

பெப்ருவரி 17

பனித கன்னி மரியாவின் ஊழியர் துறவு அவையை நிறுவிய புனிதர் எழுவர்

புனிதர் பொது: துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, புனித மரியாவின் ஊழியர் அவையை நிறுவிய புனித சகோதரர்கள் இறைவனின் அன்னையை மிகுந்த பற்றன்புடன் வணங்கியதோடு உம் மக்களையும் உம்மிடம் கொண்டு வந்தனர்; அதே பற்றுணர்வை எங்கள் மீதும் கனிவுடன் பொழிவீராக. உம்மோடு.

பெப்ருவரி 18
புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா: அருள்பணியாளர்

அருள் நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 9 23), அல்லது புனிதர் பொது: துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, திரு அவையின் ஒன்றிப்பை உறுதிப்படுத்த புனித குரியாக்கோஸ் எலியாஸ் எனும் உம் அருள்பணியாளரைத் தூண்டியெழுப்பினீரே; அவரது பரிந்துரையின் வழியாக நாங்கள் நம்பிக்கையில் ஒன்றுபட்டு வளர்ச்சி அடையவும், சொல்லா லும் எங்கள் அயலாருக்கு உகந்த பணியாலும் நற்செய்தியைப் பரப்பவும் கனிவுடன் அருள்வீராக. உம்மோடு.


பெப்ருவரி 21

புனித பீட்டர் தமியான்: ஆயர், மறைவல்லுநர்

மறைவல்லுநர்கள் பொது (பக். 932), அல்லது அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, ஆயரான புனித பீட்டர் தமியானின் போதனையையும் எடுத்துக்காட்டையும் நாங்கள் பின்பற்ற உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு கிறிஸ்துவை அனைத்துக்கும் மேலாகக் கொண்டு, உமது திரு அவையின் பணியில் என்றும் கருத்துள்ளோராய் இருந்து நிலையான ஒளியின் மகிழ்ச்சிக்கு வந்து சேர அருள்வீராக. உம்மோடு.

பெப்ருவரி 22 திருத்தூதர் புனித பேதுருவின் தலைமைப் பீடம்
விழா

வருகைப் பல்லவி

லூக் 22:32 சீமோன் பேதுருவிடம் ஆண்டவர் கூறினார்: "நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடி னேன், நீ மனந்திருந்திய பின் உன்
சகோதரர்களை உறுதிப்படுத்து. "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, திருத்தூதரான பேதுருவின் நம்பிக்கை அறிக்கை என்னும் பாறையின் மீது எம்மை உறுதிப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எந்தவிதக் கலக்கமும் எங்களைத் தாக்காதவாறு காத்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையின் வேண்டல்களையும் பலிப்பொருள்களையும் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு தலைமை ஆயரான புனித பேதுருவின் போதனையால் நாங்கள் நம்பிக்கையை முழுமையாகப் பற்றிக்கொண்டு நிலையான உரிமைப் பேற்றை அடைவோமாக. எங்கள்.

திருத்தூதர்களின் தொடக்கவுரை 1(பக். 548 ).

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 16:16,18 பேதுரு இயேசுவிடம், "நீர் மெசியா, வாமம் கடவளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு, "நீ பேதுரு; இந்தப் பாறையின்
மேல் என் திருச்சபையைக் கட்டு வேன்" என்று மறுமொழி கூறினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, இருக்காதரான புனித பேதுருவின் விழாவைக் கொண்டாடும் எங்களுக்குக் கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத்தை உணவாக அளித்திருக்கின்றீர்; அதனால் இத்தகைய மீட்பின் பரிமாற்றம் எங்களுக்கு ஒற்றுமை, அமைதி ஆகியவற்றின் அருளடையாளமாய் அமைய அருள்புரிவீராக. எங்கள். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 630).


பெப்ருவரி 23
புனித போலிக்கார்ப்பு: ஆயர், மறைச்சாட்சி
நினைவு

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர் (பக். 905) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

படைப்பு அனைத்தின் இறைவா, ஆயரான புனித போலிக்கார்ப்பை மறைச்சாட்சியரின் அணியில் சேர்க்கத் திருவுளமானீரே; அதனால் அவர் எங்களுக்காகப் பரிந்து பேசுவதால் கிறிஸ்துவின் துன்பக் கிண்ணத்தில் பங்குகொண்டு, தூய ஆவியார் வழியாக நாங்கள் நிலைவாழ்வுக்கு உயிர்த்தெழ அருள்வீராக. உம்மோடு.

=============↑ பக்கம் 710

====================

image