image

 

புனிதருக்கு உரிய சிறப்புப் பகுதி

ஜூலை
ஜூலை 3 புனித தோமா: இந்தியாவின் திருத்தூதர்
பெருவிழா

வருகைப் பல்லவி

காண். திபா 117:28, 21 நீரே என் இறைவன் என நான் அறிக்கையிடுகின்றேன்; நீரே என் கடவுள் என உம்மைப் புகழ்ந்தேத்து கின்றேன். நீரே என்
மீட்பரானதால் உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்கள் நாட்டுக்கு நற்செய்தியைக் கொண்டு வந்த திருத்தூதரான புனித தோமாவின் விழாவை முன்னிட்டு நாங்கள் பெருமை கொள்ள அருள்வீராக. அவரது பரிந்துரையின் ஆற்றலால் நேர்மையான இதயத்தோடு உம்மைத் தேடுகின்ற அனைவரும் இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் எனவும் கடவுள் எனவும் ஏற்று அவர் திருவடிகளில் சரணடையச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமக்கு உரிய பணியை நாங்கள் புரிகின்றோம்; திருத்தூதரான புனித தோமாவின் நம்பிக்கை அறிக்கையைப் போற்றி உமக்குப் புகழ்ச்சிப் பலி செலுத்தும் நாங்கள் உம் கொடைகளை எங்களில் பாதுகாக்க உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம். எங்கள்.

தொடக்கவுரை: திருத்தூதர் தோமா - நற்செய்தி அறிவிப்பாளர்.

 

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

என்றும் வாழும் ஆயராகிய நீர்
வழியும் உண்மையும் வாழ்வுமான இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க
உம் திருத்தூதரான புனித தோமாவை எங்கள் நாட்டுக்கு அனுப்பினீர்;
தூய ஆவியாரின் ஆற்றலால்
கண்ணால் காணாமலேயே உம்மில் நம்பிக்கை கொள்வோரின்
பேறுபெற்ற நிலையை நாங்களும் கண்டுணரச் செய்கின்றீர்.

ஆகவே இன்றும் என்றும் வானதூதர்களின் படைகளோடு இணைந்து
முழு இதயத்தோடு நாங்கள் பாடி
உமக்குக் குரலெழுப்பிச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 20:27 உன் கையை இடு. ஆணிகள் இருந்த இடத்தைக் கண்டறிவாய்.
ஐயம் தவிர்த்து, நம்பிக்கை கொள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உம்முடைய ஒரே திருமகனின் திரு உடலை இவ்வருளடையாளத்தில் உண்மையாகவே உட்கொண்டுள்ளோம்; அதனால் திருத்தூதரான புனித தோமாவுடன் கிறிஸ்துவை எங்கள் ஆண்டவர் எனவும் எங்கள் கடவுள் எனவும் நம்பிக்கையால் கண்டுணரவும் அவரை எங்கள் செயல்களாலும் எங்கள் வாழ்க்கையாலும் அறிவிக்கவும் அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

சிறப்பு ஆசி

திருத்தூதரை அடித்தள மாகக் கொண்டு
உறுதியாய் நிலைத்து நிற்க உங்களுக்கு அருளிய தந்தையாகிய கடவுள்,
திருத்தூதரான புனித தோமாவின் மாட்சிக்கு உரிய பேறு பயன்களினால்
உங்களுக்குக் கனிவுடன் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

மிகச் சிறந்த பாதுகாவலரின் உதவியை உங்களுக்கு அளித்த திருமகனாகிய கடவுள்,
உங்கள் நிலையான வீட்டை அடையும்வரை
உங்கள் உள்ளங்களை ஒளிர்வித்து, உங்களை வழிநடத்துவாராக.

பதில்: ஆமென்.

உண்மையின் நிறைவுக்கு எல்லாரையும் அழைத்துச் செல்லும்
தூய ஆவியாராகிய கடவுள்,
வழியும் உண்மையும் வாழ்வுமான இயேசுவிடம்
நம் மக்கள் அனைவரையும் கொண்டு சேர்ப்பாராக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

வாசகங்கள்

வாசகம் 1 திப 10:24-35
பதிலுரைத் திருப்பாடல் : திபா 117 (116) :1. 2
பதிலுரை (மாற் 16:15) : உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

வாசகம் 2 எபே 2:19 - 22

அல்லேலூயா (யோவா 20:29) : அல்லேலூயா, அல்லேலூயா!
நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே
நம்புவோர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி யோவா 20:24- 29

ஜூலை 4

போர்த்துக்கல் நாட்டுப் புனித எலிசபெத்

புனிதர் பொது: இரக்கப் பணி செய்தோர் (பக். 953).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அமைதியின் காரணரும் அன்பினை விரும்புகின்றவருமானவரே, பிளவுபட்டிருப்போரை ஒன்றிணைக்கும் வியத்தகு அருளினால் புனிதை எலிசபெத்தை அணிசெய்தீரே; அவருடைய பரிந்துரையால் நாங்களும் அமைதியை ஏற்படுத்தவும் அதனால் கடவுளின் மக்கள் என அழைக்கப்படவும் தகுதி பெறுவோமா உம்மோடு.

ஜூலை 5

புனித அந்தோனி மரிய சக்கரியா: அருள்பணியாளர்

அருள்நெறியாளர்கள் பொது (பக். 316), அல்லது
புனிதர் பொது: கல்விப் பணியாளர்கள் (பக். 954)
அல்லது துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, புனித அந்தோனி மரியா, திருத்தூதரான புனித பவுலின் வழி நின்று இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஒப்பற்ற அறிவைப் பெற்று மீட்பு அளிக்கும் வார்த்தையை உமது திரு அவையில் தொடர்ந்து அறிவித்தார்; நாங்களும் அவ்வறிவைப் பெற்றிட அருள்வீராக. உம்மோடு.ஷ

ஜூலை 6

புனித மரிய கொரற்றி: கன்னி, மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: கன்னி மறைச்சாட்சி ஒருவர் (பக். 914) அல்லது கன்னியர் பொது: கன்னி ஒருவர் (பக். 936).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, மாசின்மையின் காரணரும் கற்பை விரும்புகின்றவருமானவரே, உம் அடியார் புனித மரிய கொரற்றி இளம் வயதிலேயே மறைச்சாட்சி முடி பெற அருள்புரிந்தீரே; தமது கற்பைக் காக்கப் போராடிய அப்புனிதருக்கு நீர் வெற்றி வாகை சூட்டியது போல உம் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் நாங்கள் நிலைத்து நிற்க அவரது பரிந்துரையால் எங்களுக்கு அருள் புரிவீராக. உம்மோடு.


ஜூலை 9

புனித அகுஸ்தின் சவோ ரோங்: அருள்பணியாளர், தோழர்கள்:

மறைச்சாட்சியர் மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர் (பக்., 898),

திருக்குழும மன்றாட்டு

இறைவா, மறைச்சாட்சியரான புனித அகுஸ்தின் சவோ ரோங், அவருடைய தோழர்கள் ஆகியோரின் நம்பிக்கை அறிக்கையால் உமது திரு அவையை வியத்தகு கொடைகளால் வலுப்படுத்தியுள்ளீரே; அதனால் தங்களிடம் ஒப்படைக்கப்பெற்ற பணியை உம் மக்கள் உண்மையுடன் நிறைவேற்றி தன்னுரிமையில் வளர்ச்சி பெற்று உலகில் உண்மைக்குச் சான்று பகர அருள்வீராக. உம்மோடு.

ஜூலை 11

புனித பெனடிக்ட்: துறவு மடத்துத் தலைவர்
நினைவு

வருகைப் பல்லவி

வண ங் கத்தக்க வாழ்வும் பெயருக்கு ஏற்ற அருளும் ஆசியும் கொண்டவர் பெனடிக்ட். தந்தையின் இல்லத்தையும் செல்வத்தையும் துறந்து, கடவுள் ஒருவரையே மகிழ்விக்க விரும்பித் தூய வாழ்வின் நெறியைத் தேடினார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, துறவு மடத்துத் தலைவரான புனித பெனடிக்டை இறைப்பணியைக் கற்றுத் தரும் தலைசிறந்த ஆசிரியராக ஏற்படுத்தினீரே; அதனால் நாங்கள் எதையும் உமது அன்புக்கு மேலாகக் கருதாமல், உம் கட்டளைகள் காட்டும் வழியில் பரந்த உள்ளத்துடன் விரைந்து செல்ல அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித பெனடிக்டின் விழாவில் நாங்கள் கொண்டுவரும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; நாங்கள் அவருடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றி உம்மையே தேடவும் உம் ஊழியத்தில் ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளைப் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

லூக் 12:42
நம்பிக்கைக்கு உரிய வரும் அறிவாளியுமான ஊழியரை ஆண்டவர் தம் வீட்டுக்குத் தலைவராக ஏற்படுத்தினார்; அதனால் அவர்
அவர்களுக்கு வேளா வேளை படியளப்பார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலைவாழ்வின் பிணையாகிய திரு உணவைப் பெற்றுக்கொண்ட நாங்கள், உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: புனித பெனடிக்டின் படிப்பினைகளைக் கடைப்பிடித்து, பற்றுறுதியுடன் உமக்கு ஊழியம் புரியவும் சகோதரர் சகோதரிகளை ஆர்வத்துடன் அன்பு செய்யவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.
==============28^ 8860 ^-----------

ஜூலை 13

புனித ஹென்றி

புனிதர் பொது: புனிதர் ஒருவர் (பக். 945).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது அருளை நிறைவாகப் பெற்றுக்கொண்ட புனித ஹென்றியின் உள்ளத்தை இவ்வுலக ஆட்சி பற்றிய கவலைகளிலிருந்து விடுவித்து மேலுலகு சார்ந்தவற்றை வியத்தகு முறையில் நாடச் செய்தீரே; அதனால் மாறுபடும் மண்ணகக் கவலைகள் நடுவே நாங்கள் அவருடைய பரிந்துரையால் தூய்மையான உள்ளத்தோராய் உம்மையே நாடச் செய்வீராக. உம்மோடு.


ஜூலை 14

புனித கமில்லஸ் தெ லெல்லிஸ்: அருள்பணியாளர்

புனிதர் பொது: இரக்கப் பணி செய்தோர் (பக். 953).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, நோயாளர் மீது அன்புகாட்டும் சிறப்பான அருளால் அருள்பணியாளரான புனித கமில்லசை அணிசெய்தீரே; அவருடைய பேறு பயன்களை முன்னிட்டு உமது பேரன்பை எங்கள் மீது பொழிந்தருளும்; அதனால் எம் சகோதரர் சகோதரிகளில் நாங்கள் உமக்கு ஊழியம் புரியவும், இறப்பின் வேளையில் அச்சமின்றி உம்மிடம் வந்து சேரவும் அருள்வீராக. உம்மோடு.

ஜூலை 15

புனித பொனவெந்தூர்: ஆயர், மறைவல்லுநர்
நினைவு

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக்.919) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, ஆயரான புனித பொனவெந்தூரின் விண்ணகப் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாங்கள், அவருடைய மாண்புமிக்க அறிவாற்றலால் பயன் அடைய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவருடைய அன்பின் ஆர்வத்தை நாங்கள் என்றும் பின்பற்றுவோமாக. உம்மோடு.

ஜூலை 16

கார்மல் மலை புனித கன்னி மரியா

புனித கன்னி மரியா பொது (பக். 886).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, மாட்சிமிக்க கன்னி மரியாவின் வணக்கத்துக்கு உரிய பரிந்துரை எங்களுக்குத் துணை புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவரது பாதுகாவலால் வலிமை பெற்ற நாங்கள் கிறிஸ்து எனும் மலையை வந்து சேர ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

 

ஜூலை 20

புனித அப்போலினாரிஸ்: ஆயர், மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர் (பக். 905) அல்லது அருள்நெறியாளர் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, ஆயரான புனித அப்போலினாரிஸ் தம் போதனையாலும் மறைச்சாட்சியத்தாலும் சுட்டிக்காட்டிய நிலையான மீட்பின் பாதையில் உம் நம்பிக்கையாளரான எங்களை நடத்தியருளும்; அவருடைய பரிந்துரையால் நாங்கள் உம் கட்டளைகளில் நிலைத்திருக்கவும் அவரோடு வெற்றி வாகை சூட்டப்பெறவும் தகுதி பெறுவோமாக, உம்மோடு.


ஜூலை 21
பிரிந்திசி நகர்ப் புனித லாரன்ஸ்: அருள்பணியாளர், மறைவல்லுனர்

அருள்நெறியாளர்கள் பொது (பக். 916) அல்லதுமா அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக் 332 வ. புனிதர் பொது: துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது பெயரின் மாட்சிக்காகவும் மக்களின் மீட்புக்காகவும் அருள்பணியாளரான புனித லாரன்சுக்கு அறிவுரைத் திறனையும் ஆற்றலையும் தரும் ஆவியாரை அளித்தீரே; அதே ஆவியாரின் வழியாக நாங்கள் செய்ய வேண்டியதை அறியவும் அறிந்ததைச் செயல்படுத்தவும் அப்புனிதரின் பரிந்துரையால் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

ஜூலை 22
புனித மகதலா மரியா
விழா

வருகைப் பல்லவி

யோவா 20:17 ஆண்டவர் மகதலா மரியாவிடம் கூறியது : நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தை யும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளு மானவரிடம் ஏறிச் செல்கிறேன் என்று சொல்."

திருக்குழும மன்றாட்டு

இறைவா, பாஸ்கா மகிழ்ச்சியை அறிவிக்கும் பணியை 'உம் ஒரே திருமகன் முதன் முதல் மகதலா மரியாவிடம் ஒப்படைத்தார்; அதனால் அவருடைய எடுத்துக்காட்டாலும் வேண்டலாலும் கிறிஸ்து வாழ்கின்றார் என நாங்கள் எடுத்துரைக்கவும் உமது மாட்சியில் அவர் ஆட்சி செய்கின்றார் எனக் கண்டு மகிழவும் எங்களுக்கு அருள் புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் உம்மை மன்றாடுகின்றோம். இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித மகதலா மரியா புரிந்த அன்புப் பணியை உம் ஒரே திருமகன் கனிவுடன் ஏற்றுக்கொண்டார்; அப்புனிதரின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் அளிக்கும் காணிக்கைகளை ஏற்றுக்கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

தொடக்கவுரை: திருத்தூதர்களின் திருத்தூதர்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

எல்லாம் வல்ல தந்தையே, உம்முடைய இரக்கம் உமது ஆற்றலைவிடத்
தரம் குறைந்தது அல்ல என உணர்ந்து
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக
எல்லாவற்றிலும் உம்மை வாழ்த்திப் போற்றுவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

அவர் மகதலா மரியாவுக்குத் தோட்டத்தில் தோன்றி தம்மை வெளிப்படுத்தினார்;
ஏனெனில் மகதலா மரியா கிறிஸ்து வாழ்ந்தபோது அவரை அன்பு செய்தார்.
சிலுவையில் அவர் இறப்பதைக் கண்டார்;
கல்லறையில் கிடத்தப்பட்டிருந்த அவரைத் தேடினார்;
இறந்தோரினின்று உயிர்த்தெழுந்த அவரை முதன்முதலில் வழிபட்டார்;
இவ்வாறு அவர் வழியாக புது வாழ்வுக்கான நற்செய்தி
உலகின் கடையெல்லைவரை சென்றடையும் பொருட்டு
கிறிஸ்து அவரைத் திருத்தூதர்கள் முன்னிலையில்
திருத்தூதுப் பணிக்கு உயர்த்தினார்.

ஆகவே ஆண்டவரே, வானதூதர், புனிதர் அனைவரோடும்
நாங்கள் சேர்ந்து உம்மை அறிக்கையிட்டு
அக்களிப்புடன் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

2 கொரி 5:14,15எங் களை ஆட்கொள்கிறது. வயாம். --- வின் பேரன்பே னிெ தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக .
உயிர்பெற்றெழுந்தவருக்காகவே வாழ்கின்றனர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித மகதலா மரியா சும் போதகராகிய கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தார், நாங்கள் பெற்றுக்கொண்ட உம் மறைபொருள்கள் எங்களிலும் உமது அன்பு நிலைகொண்டிருக்கச் செய்வனவாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

ஜூலை 23

புனித பிரிட்ஜிட்: துறவி

புனிதர் பொது: புனிதையர் (பக். 955) அல்லது துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் திருமகனின் பாடுகளை ஆழ்ந்து சிந்தித்ததன் வழியாக வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் புனித பிரிட்ஜிட்டை வழிநடத்தி, சிலுவையின் ஞானத்தை வியத்தகு முறையில் அவருக்குக் கற்பித்தீரே; உமது அழைத்தலுக்கு ஏற்ப நாங்கள் வாழ்ந்து எல்லாவற்றிலும் உம்மையே தேட ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு.


ஜூலை 24

புனித ஷார்பெல் மாக்லூப்: அருள்பணியாளர்

அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923) அல்லது புனிதர் பொது: மடத்துத் துறவி ஒருவர் (பக். 948).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அருள் பணியாளரான புனித ஷார்பெல்லைச் சிறப்பான வனத்துறவு வாழ்வின் போராட்டத்துக்கு அழைத்து அவரை எல்லா வகையிலும் பக்தியால் நிரப்பினீரே; அதனால் நாங்கள் ஆண்டவருடைய பாடுகளின் பாதையில் வழிநடந்து அவரது அரசில் பங்கேற்பாளர்களாகும் தகுதி பெற அருள் புரிவீராக. உம்மோடு.


ஜூலை 25

புனித யாக்கோபு: திருத்தூதர்
விழா

வருகைப் பல்லவி

காண். மத் 4:18, 21 இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடக்கும்போது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர் அவர்களை அழைத்தார்.

''உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருத்தூதர்களுள் முதல் மறைச்சாட்சியாகச் செந்நீர் சிந்தும் பேற்றினைப் புனித யாக்கோபுக்கு அளித்தீரே; உமது திரு அவை அவருடைய நம்பிக்கை அறிக்கையினால் வலிமை பெறவும் அவருடைய பாதுகாவலால் தொடர்ந்து உதவி பெறவும் அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் மீட்பு அளிக்கும் பாடுகளாகிய திருமுழுக்கினால் எம்மைக் கழுவியருளும்; உமது திருவுளப்படி திருத்தூதர்களுள் முதன்முதலாகக் கிறிஸ்துவின் துன்பக் கிண்ணத்தில் பருகிய புனித யாக்கோபின் விழாவில் உமக்கு உகந்த பலியை நாங்கள் ஒப்புக்கொடுப்போமாக. எங்கள்.

திருத்தூதர்களின் தொடக்கவுரை (பக். 548 - 549).

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவரின் கிண்ணத்தில் அவர்கள் குடித்தார்கள், கட நண்பர்கள் ஆனார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதரான புனித யாக்கோபின் விழாவிலே உமது திருவிருந்தில் பேரின்பத்துடன் நாங்கள் பங்குபெற்றுள்ளோம்; அவருடைய பரிந்துரைகளால் நாங்கள் உமது உதவியைப் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. எ ங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 630).

ஜூலை 26

பனிதர்கள் சுவக்கின், அன்னா: புனித கன்னி மரியாவின் பெற்றோர்
நினைவு

வருகைப் பல்லவி

'காண். சீஞா 44:1,25 சுவக்கினையும் அன்னாவையும் அவர்களுடைய தலைமுறை வரிசைப்படி புகழ்வோம். ஏனெனில் எல்லா இனத்தாரின்
ஆசியையும் ஆண்டவர் அவர்களுக்கு அளித்தார்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் தந்தையரின் இறைவா, மனிதர் ஆன உம் திருமகனின் அன்னையைப் பெற்றெடுக்கும் பேரருளைப் புனிதர்களான சுவக்கின், அன்னாவுக்கு அளித்தீரே; அதனால் உம் மக்களுக்கு வாக்களித்த மீட்பை அவர்களின் வேண்டலால் எங்களுக்குத் தந்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் இறைப்பற்றோடு அளிக்கும் காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: ஆபிரகாமுக்கும் அவர்தம் வழிமரபினருக்கும் நீர் வாக்களித்த ஆசியில் நாங்கள் பங்குகொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 23:5 இவர்கள் ஆண்டவரிடமிருந்து ஆசியையும் தம் மீட்பராம்
கடவுளிடமிருந்து இரக்கத்தையும் பெற்றனர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, வியப்புக்கு உரிய அருளடையாளத்தால் மனிதர் உம்மிடமிருந்து புதுப் பிறப்பு அடையும் பொருட்டு, உம் ஒரே திருமகன் மனிதரிடமிருந்து பிறக்கத் திருவுள மானிரே; இவ்வாறு பிள்ளைகளுக்கு உரிய உணவால் நிறைவு பெற்ற எங்களுக்கு உமது கனிவிரக்கத்தால் சொந்த மக்களுக்கு உரிய மன நிலையைத் தந்து நாங்கள் புனிதம் அடைய அருள் புரிவீராக. எங்கள்.
==============5^ 8867 ^-----------

ஜூலை 28

புனித அல்போன்சா முட்டாத்துப்படத்து: கன்னி நினைவு

வருகைப் பல்லவி

கொலோ 1:24 இப்பொழுது, உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் பட வேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, துன்புறும் வாழ்வின் வழியாக உமக்கு மகிழ்வுடன் பணி புரியக் கன்னியான புனித அல்போன்சாவை அழைத்தீரே; அன்றாடச் சிலுவையைத் தாங்கும் அவரது பொறுமையைப் பின்பற்றி கிறிஸ்துவின் பாஸ்கா மறைநிகழ்வில் நாங்கள் இன்னும் மிகுதியாகப் பங்கேற்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, புனித அல்போன்சாவின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் பனிப்பொருள்களைக் கண்ணோக்கியருளும்; உமது பார்வையில் நாங்கள் பற்றுறுதியும் தூய்மையும் கொண்ட அன்பினால் தொடர்ந்து பற்றியெரிவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

உரோ 8:35 வியெ 23:3 கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதைன யா ? நேருக்கடியா ? இன்னலா? பட்டிணியா ?
ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட உம் மறைபொருள்கள் எங்கள் அன்றாடச் சிலுவையைச் சுமக்க எங்களுக்கு ஆற்றல் அளிப்பனவாக; அதனால் உம் திருமகனின் சாயலுக்கு ஏற்ப நாங்கள் வளர்ச்சி பெற்று! ஒரு நாள் உம்மை விண்ணுலகில் கண்டு என்றும் மகிழ்ந்திருப்போமாக. எங்கள்.

வாசகங்கள்
வாசகம் 1 : 2 கொரி 4:7-18
பதிலுரைத் திருப்பாடல் : திபா 63 (62):1-8 பதிலுரை (63:3)
உமது பேரன்பு உயிரினும் மேலானது.

அல்லேலூயா (கலா 6:14) : அல்லேலூயா, அல்லேலூயா
நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில், நானும் சிலுவையில்
அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.

நற்செய்தி மத் 25:1-13


ஜூலை 29

புனித மார்த்தா
நினைவு

வருகைப் பல்லவி

காண். லூக் 10:38 இயேசு ஒர் ஊருக்குள் நுழைந்தார். அங்கே மார்த்தா எனும் பெயர்
கொண்ட பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, புனித மார்த்தாவின் இல்லத்தில் உம்முடைய திருமகன் விருந்தினராக இருக்கத் திருவுளம் கொண்டார்; அப்புனிதரின் பரிந்துரையால், எங்கள் சகோதரர் சகோதரிகளில் நாங்கள் கிறிஸ்துவுக்கு உண்மையுடன் பணி புரிந்து விண்ணக வீட்டில் உம்மால் வரவேற்கப்படும் தகுதி பெற அருள் புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித மார்த்தாவில் விளங்கிய உம் வியத்தகு படிப்பினைகளைப் போற்றி மாண்புக்கு உரிய உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: அவருடைய அன்புப் பணி உமக்கு உகந்ததாய் இருந்தது போல கடமை உணர்வுடைய எங்கள் ஊழியமும் . உமக்கு ஏற்புடையதாய் இருப்பதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 11:27 மார்த்தா இயேசுவிடம், "நீரே மெசியா, வாழும் கடவுளின் மகன்.
உலகிற்கு வந்தவர், என்று கூறினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் வணக்கத்துடன் உட்கொண்ட உம் ஒரே திருமகனின் உடலும் இரத்தமும் அம்ச்சியுற்றவை அனைத்திலிருந்தும் எங்களை விடுவிப்பதாக; புனித மார்த்தாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, மண்ணுலகில் உண்மையான பிறரன்பில் நாங்கள் வளரவும் விண்ணுலகில் உமது முடிவில்லாக் காட்சியைக் கண்டு மகிழவும் அருள்வீராக. எங்கள்.

ஜூலை 30

புனித பீட்டர் கிறிசோலோகுஸ்: ஆயர், மறைவல்லுநர்

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது மறைவல்லு நர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, மனிதர் ஆன உம் வார்த்தையாம் கிறிஸ்துவை அறிவிப்பதில் தலைசிறந்த போதகராகப் பீட்டர் கிரிசோலோகுஸ் எனும் புனிதரை உருவாக்கினீரே; அவரது பரிந்துரையால் உமது மீட்பின் மறையுண்மைகளை உள்ளத்தில் இருத்தி, இடைவிடாது சிந்திக்கவும் அவற்றைச் செயலில் உண்மையுடன் வெளிப்படுத்தவும் செய்வீராக. உம்மோடு.

ஜூலை 31

லொயோலா நகர்ப் புனித இஞ்ஞாசியார்: அருள்பணியாளர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். பிலி 2:10-11 இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது பெயரின் அதிமிக்க மாட்சியைப் பரப்ப, உமது திரு அவையில் புனித இஞ்ஞாசியாரைத் தேர்ந்தெடுத்தீரே; அதனால் அவருடைய உதவியாலும் எடுத்துக்காட்டாலும் மண்ணுலகில் தீமைகளை எதிர்த்துப் போராடவும் விண்ணுலகில் அவரோடு வெற்றி வாகை சூடவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, புனித இஞ்ஞாசியாரின் விழாவில் நாங்கள் அளிக்கும் காணிக்கைகள் உமக்கு உகந்தனவாய் இருப்பனவாக; புனிதத்திற்கெல்லாம் ஊற்றாக நீர் ஏற்படுத்தும் தாய்மைமிகு இம்மறைபொருள்கள் எங்களையும் உண்மையினால் புனிதப்படுத்துவனவாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 12:49 மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது பற்றியெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு ஏது என் விருப்பம், என்கிறார்
ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித இஞ்ஞாசியாரை நினைவுகூர்ந்து இப்புகழ்ச்சிப் பலி வழியாக உமக்கு நன்றி கூறுகின்றோம்; உமது மாட்சியை நாங்கள் முடிவில்லாமல் புகழ இப்பலி எங்களை அழைத்துச் செல்வதாக. எங்கள்.
==============9^ 8871 ^-----------


ஆகஸ்ட் 1

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி: ஆயர், மறைவல்லுநர்
நினைவு

அருள் நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, நற்பண்புகளுக்குப் புதிய எடுத்துக்காட்டுகளாகப் பலரைத் திரு அவையில் தோன்றச் செய்கின்றீர்; மக்களின் நலனுக்காக உழைப்பதில் ஆயரான புனித அல்போன்ஸ் மரியாவிடம் விளங்கிய ஆர்வத்தை நாங்கள் பின்பற்றவும் அதனால் அவருக்குக் கிடைத்த பரிசை விண்ணகத்தில் நாங்களும் பெற்றுக்கொள்ளவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருப்பலியை நிறைவேற்றவும் அதன் வழியாகத் தம்மையே புனிதப் பலிப்பொருளாக உமக்கு ஒப்புக்கொடுக்கவும் புனித அல்போன்ஸ் மரியாவுக்கு வரம் அளித்தீரே; அதனால் எங்கள் இதயங்கள் தூய ஆவியாராகிய விண்ணகத் தீயால் பற்றியெரியக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, மாண்புமிக்க இம்மறைபொருளின் நம்பிக்கைக்கு உரிய பணியாளராகவும் போதகராகவும் புனித அல்போன்ஸ் மரியாவைத் தந்தருளினீரே; இத்திருவிருந்தில் உம்முடைய நம்பிக்கையாளர் அடிக்கடி பங்குகொள்ளவும் அதனால் முடிவின்றி உம்மைப் போற்றிப் புகழவும் அருள்வீராக. எங்கள்.

வெர்செல்லி நகர்ப் புனித யுசேபியுஸ்: ஆயர்

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, . திருமகனின் இறைத்தன்மையை நிலைநாட்டுவதில் ஆயரான புனித யுசேபியுஸ் கொண்டிருந்த மனவுறுதியை நாங்கள் பின்பற்றச் செய்தருளும்; அதனால் அவர் கற்றுத் தந்த நம்பிக்கையை நாங்கள் கடைப்பிடித்து உம் திருமகனின் வாழ்வில் பங்குபெறத் தகுதி பெறுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

புனித பீட்டர் ஜூலியன் எய்மார்டு: அருள்பணியாளர்

புனிதர் பொது: துறவியர் (பக். 950) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் திருமகனின் திரு உடல், திரு இரத்தம் ஆகிய மறைபொருள்கள் மீது கொண்டுள்ள வியப்புக்கு உரிய அன்பினால் புனித பீட்டர் ஜூலியனை அணிசெய்தீரே; அதனால் இத்திருவிருந்திலிருந்து அவர் பெற்ற ஆன்மீக வலிமையை நாங்களும் பெற்றிடத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

ஆகஸ்ட் 4

புனித ஜான் மரிய வியான்னி: அருள்பணியாளர்

அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923).

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இரக்கமுள்ள இறைவா, அருள்பணியாளரான புனித ஜான் மரிய வியான்னியை அருள்பணியில் வியக்கத்தக்க ஆர்வம் கொண்டிருக்கச் செய்தீரே; அவருடைய எடுத்துக்காட்டாலும் பரிந்துரையாலும் எங்கள் சகோதரர் சகோதரிகளைக் கிறிஸ்துவிடம் கொண்டு சேர்க்க அன்புடன் உழைத்து, அவர்களுடன் நிலையான மாட்சியை அடைய ஆற்றல் பெறுவோமாக, உம்மோடு.


ஆகஸ்ட் 5
புனித மரியாவின் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு

பனித கன்னி மரியா பொது: (பக். 886).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்களின் குற்றங்களை மன்னித்தருள உம்மை வேண்டுகின்றோம்: எங்கள் செயல்களால் உமக்கு உகந்தவர்களாகிட இயலாத நாங்கள் உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவருடைய தாயின் பரிந்துரையால் மீட்பு அடைவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

 

ஆகஸ்ட் 6

ஆண்டவருடைய தோற்ற மாற்றம்
விழா

வருகைப் பல்லவி

காண். மத் 17:5 ஒளிமயமான மேகத்தில் தூய ஆவியார் தோன்றினார். என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்.
இவருக்குச் செவிசாயுங்கள் என்ற தந்தையின் குரல் கேட்டது. "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்முடைய ஒரே திருமகனின் மாட்சிக்கு உரிய தோற்ற மாற்றத்தின்போது மூதாதையரின் சாட்சியத்தால் எங்கள் நம்பிக்கையின் பேருண்மைகளை உறுதிப்படுத்தினீரே; மக்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாகும் நிறைவான உரிமைப் பேற்றினைப் பெறுவர் என வியத்தகு முறையில் முன்னறிவித்தீர்; உம்முடைய அடியார்களாகிய நாங்கள் அன்பார்ந்த உம் திருமகனின் குரலுக்குச் செவிசாய்த்து அவரோடு உடன் உரிமையாளர் ஆகும் தகுதியை அடைவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

இவ்விழா ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட்டால் "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்,

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே,
மகனின் மாட்சிக்கு உரிய தோற்ற மாற்ற விழாவில் - எப்புக்கொடுக்கும் காணிக்கைகளைப் புனிதப்படுத்து நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அவருடைய மாட்சியின் பேரொளியால் பாவ மாசுகளிலிருந்து எங்களைத் தூய்மைப்படுத்துவீராக. எங்கள்.

தொடக்கவுரை: தோற்ற மாற்றத்தின் மறைபொருள்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

அவர் தாம் தேர்ந்தெடுத்த சாட்சிகள் முன்பாகத்
தமது மாட்சியை வெளிப்படுத்தினார்.
அனைவருக்கும் பொதுவான மனித வடிவைத் தாங்கிய
தமது உடலைப் பேரொளியால் துலங்கச் செய்தார்.

இவ்வாறு தம் சீடரின் உள்ளங்களிலிருந்து
சிலுவையைப் பற்றிய இடறலை அகற்றினார்.
தலையாகிய தம்மிடம் வியத்தகு முறையில் நிகழ்ந்தது எல்லாம்
தமது உடலாகிய திரு அவை முழுவதிலும்
நிறைவேறும் என்பதைத் தெளிவாக்கினார்.

ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து
நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,
முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

காண். 1 யோவா 3:2கிறிஸ்து தோன்றும்போது நாமும் அவரைப் போல இருப்போம்;
ஏனெனில் அவர் இருப்பது போல நாம் அவரைக் காண்போம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் பேரொளியை அவரது மாட்சிக்கு உரிய தோற்ற மாற்றத்தால் வெளிப்படுத்தத் திருவுளமானீரே; நாங்கள் உட்கொண்ட விண்ணக உணவு அவரது சாயலாக எங்களை மாற்றிட அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

ஆகஸ்ட் 7

புனிதர்கள் இரண்டாம் சிக்ஸ்துஸ்: திருத்தந்தை,
அவரது தோழர்கள்: மறைச்சாட்சியர்

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர் (பக். 898).

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, புனிதர்களான சிக்ஸ்துவும் அவர்தம் தோழர்களும் உமது வார்த்தைக்காகவும் இயேசுவுக்குச் சான்று பகர்வதற்காகவும் தங்கள் உயிரைக் கையளிக்க வரம் அளித்தீரே; தூய ஆவியாரின் ஆற்றலால் நாங்கள் நம்பிக்கையில் பணிவும் நம்பியதை அறிக்கையிடுவதில் துணிவும் கொண்டிருக்க அருள் புரிவீராக. உம்மோடு.


புனித கயத்தான்: அருள்பணியாளர்

நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923) அல்லது புனிதர் பொது:
துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அருள்பணியாளரான புனித கயத்தான் திருத்தூதர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்ற வரம் அளித்தீரே; அவருடைய எடுத்துக்காட்டாலும் பரிந்துரையாலும் நாங்கள் உம்மிடம் என்றும் நம்பிக்கை கொண்டு, உமது ஆட்சியை இடைவிடாமல் தேட அருள்வீராக. உம்மோடு.

ஆகஸ்ட் 8

புனித தோமினிக்: அருள்பணியாளர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். சீஞா 15:5 திரு அவை நடுவில் பேச அவர் தமது வாய் திறந்தார்; ஆண்டவர் அவரை ஞானமும் அறிவுக்கூர்மையும் உள்ள ஆவியால்
நிரப்பினார்; மாட்சியின் மேலாடையை அவருக்கு அணிவித்தார்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, புனித தோமினிக் தம் பேறு பயன்களாலும் படிப்பினைகளாலும் உமது திரு அவைக்கு உதவி செய்வாராக; உமது உண்மையை நிலைநாட்டுவதில் மிகச் சிறந்த போதகராக விளங்கிய அவர் எங்களுக்காக உம்மிடம் கனிவுடன் பரிந்து பேசுவாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் வேண்டல்களைப் புனித தோமினிக்கின் பரிந்துரையால் கனிவுடன் கேட்டருளும்; இப்பலியின் பேராற்றலால், இறை நம்பிக்கைக்காகப் போராடுவோரை உமது அருள்காவலால் உறுதிப்படுத்துவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

ஷாக் 12:12
நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியு மான ஊ ழியரை ஆண்டவர் தம் வீட்டுக்குத் தலைவராக ஏற்படுத்தினார்; அதனால் அவர் அவர்களுக்கு வேளா வேளை படியளப்பார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித தோமினிக்கின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் விருந்துண்ட விண்ணக அருளடையாளத்தின் ஆற்றலை உமது திரு அவை முழுமையான இறைப்பற்றுடன் உணர்வகாக: அவரது போதனையால் திரு அவை வளமையுற்றது போல அவரது பரிந்துரையால் அது உதவி பெறுவதாக. எங்கள்,


ஆகஸ்ட் 9

சிலுவையின் புனித தெரசா பெனடிக்டா: கன்னி, மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: கன்னி மறைச்சாட்சி ஒருவர் (பக். 914) அல்லது கன்னியர் பொது: கன்னி ஒருவர் (பக். 936).

திருக்குழும மன்றாட்டு

எங்கள் முன்னோரின் இறைவா, மறைச்சாட்சியான புனித தெரசா பெனடிக்டாவைச் சிலுவையில் அறையப்பட்ட உம் திருமகனை அறியவும் சாகும்வரை அவரைப் பின்பற்றவும் வழிநடத்தினீரே; அவரது பரிந்துரையால், கிறிஸ்துவே மீட்பர் என எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளவும் அவர் வழியாக உம்மை என்றும் கண்டு மகிழவும் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

ஆகஸ்ட் 10

புனித லாரன்ஸ்: திருத்தொண்டர், மறைச்சாட்சி
விழா

வருகைப் பல்லவி

திரு அவையின் செல்வத்துக்காகத் தம்மையே கையளித்த புனித லாரன்ஸ் இவரே. அதனால் இவர் மறைச்சாட்சியாய்ப் பாடுபட்டு
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் மகிழ்வுடன் ஏறிச் சென்றார். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மீது கொண்ட அன்பினால், புனித லாரன்ஸ் தமது பணியில் பற்றுறுதியுடன் இருந்து மாட்சிக்கு உரிய மறைச்சாட்சியாய் விளங்கினார்; அவர் அன்பு செய்ததை நாங்கள் அன்பு செய்யவும் அவர் கற்றுத்தந்ததை நாங்கள் செயல்படுத்தவும் அருள்வீராக. உம்மோடு .

காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, புனித லாரன்சின் விழாவில் நாங்கள் பேரின்பத்துடன் ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளைக் கனிவாய் ஏற்றருளும்; அவை எங்கள் மீட்புக்கு உதவியாய் இருக்கச் செய்வீராக. எங்கள்.

மறைச்சாட்சியரின் தொடக்கவுரை (பக். 552 - 553).

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 12:26 எனக்குத் தொண்டு செய்பவர் என்னைப் பின்பற்றுகிறார். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, தூய கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: புனித லாரன்ஸின் விழாவில் வணக்கத்துடன் நாங்கள் புரியும் ஊழியத்தால் உமது மீட்பின் வளர்ச்சியை உணர்ந்துகொள்வோமாக. எங்கள்.


ஆகஸ்ட் 11

புனித கிளாரா: கன்னி

நினைவு கன்னியர் பொது: (பக். 936) அல்லது புனிதர் பொது: அருள்சகோதரி ஒருவர் (பக். 949).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது இரக்கத்தால் புனித கிளாரா ஏழைமையை நாடச் செய்தீரே; அவரது பரிந்துரையால் நாங்கள் ஏழையரின் உள்ளத்தோடு கிறிஸ்துவைப் பின்பற்றி, விண்ணரசில் உம்மை நிறைவாகக் கண்டு மகிழத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.


ஆகஸ்ட் 12

பனித ஜேன் பிரான்செஸ் தெ ஷாந்தால்:

துறவி புனிதர் பொது: துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித ஜேன் பிரான்செசை வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் சிறந்த பேறு பயன்களால் அணிசெய்தீரே; அவரது பரிந்துரையால் எங்கள் அழைத்தலுக்கு ஏற்ப நாங்கள் பற்றுறுதியோடு வாழ்ந்து உமது ஒளியின் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் என்றும் விளங்குவோமாக. உம்மோடு.

ஆகஸ்ட் 13

புனித போன்சியான்: திருத்தந்தை;
புனித இப்போலித்துஸ்: அருள்பணியாளர், மறைச்சாட்சியர்

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர் (பக். 898) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர்கள் பலர் (பக். 922).

திருக்குழும மன்றாட்டு

'ஆண்டவரே, உம் நேர்மையாளர்களின் அரிய பொறுமை, நாங்கள் உம்மீது கொண்டுள்ள அன்பு ஆர்வத்தை எங்களில் வளரச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: எங்கள் இதயங்கள் தூய நம்பிக்கையில் நிலைத்திருக்கச் செய்ய அது உதவுவதாக. உம்மோடு.
ஆகஸ்ட் 14 புனித மாக்சிமிலியன் மரிய கோல்பே: அருள்பணியாளர், மறைச்சாட்சி
நினைவு

வருகைப் பல்லவி

மத் 25: 34,40 என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள் என்கிறார் ஆண்டவர். இச் சின்னஞ் சிறிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங் களுக்குச் சொல்கிறேன்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அருள்பணியாளரும் மறைச்சாட்சியுமான புனித மாக்சிமிலியன் மரிய கோல்பே கன்னி மரியாவின் மீது கொண்ட அன்பாலும் மனிதரின் மீட்புக்கான ஆர்வத்தாலும் பிறரன்பாலும் பற்றியெரியச் செய்தீரே; அவரது பரிந்துரையால் நாங்கள் உம்முடைய மாட்சிக்காகவும் மக்களின் நன்மைக்காகவும் விடாமுயற்சியுடன் ஊழியம் புரிந்து சாகும்வரை உம் திருமகனின் விருப்பத்துக்கு ஏற்ப வாழ இரக்கத்துடன் எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கொண்டு வந்து நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: புனித மாக்சிமிலியன் மரிய கோல்பேயின் எடுத்துக்காட்டால் இக்காணிக்கைகளோடு எங்கள் வாழ்க்கையையும் உமக்கு ஒப்புக்கொடுக்கக் கற்றுக்கொள்வோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 15:13 தம் நண்பர்களுக்காகத் தம் உயிரைக் கொடுப்பதைவிட மேலான
அன்பு யாரிடமும் இல்லை, என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனுடைய உடலாலும் இரத்தத்தாலும் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: புனித மாக்சிமிலியன் மரிய கோல்பே இந்த விருந்தினால் பெற்றுக்கொண்ட அன்புத் தீ எங்கள் உள்ளத்திலும் பற்றியெரிவதாக. எங்கள்.
==============20^ 8882 ^-----------


ஆகஸ்ட் 15

கன்னி மரியாவின் விண்ணேற்பு, இந்தியாவின் பாதுகாவலி; இந்தியாவின் சுதந்திர நாள்
பெருவிழா

திருக்குழும மன்றாட்டு, சிறப்பு ஆசி தவிர மற்றவை திருவிழிப்புத் திருப்பலிக்கும் நாள் திருப்பலிக்கும் உரோமைத்திருப்பலி நூலிலிருந்து பயன்படுத்தப்படும் (பக்.789-793). கீழே கொடுக்கப்பட்டுள்ள திருக்குழும மன்றாட்டு பயன்படுத்தப்படாத பொழுது, இம்மன்றாட்டு பொது மன்றாட்டின் முடிவுரையாகப் பயன்படுத்தப்படலாம்.

திருக்குழும மன்றாட்டு

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, மாசற்ற கன்னி மரியாவினுடைய மாட்சியின் மாபெரும் அடையாளமாக இந்தியா ஒரு சுதந்திர நாடாக உமது பராமரிப்பினால் உருவாகச் செய்தீரே; நாங்கள் அவருடைய மாட்சியில் பங்குகொள்ளும் பொருட்டு தீமை அனைத்திலிருந்தும் விடுதலை பெறவும், மேலுலகில் உள்ளவற்றின் மீது நாட்டம் கொள்ளவும் கனிவுடன் எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு.

சிறப்பு ஆசி

தந்தையாகிய கடவுள், உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
நம் பாதுகாவலராகிய நம் அன்னையின் பரிந்துரையால்,
நம் மக்கள் அனைவருக்கும் அமைதியும் வளமையும் வழங்குவாராக.

பதில்: ஆமென்.

இறைமகன், உங்களைக் கனிவுடன் கண்ணோக்குவாராக.
உயர்ந்த இலக்குகளைத் துணிவுடன் தேடும்
ஞானமுள்ள தலைவர்களைத் தந்து
உங்களுக்கு ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

தூய ஆவியார், கடவுளுடைய கட்டளைகளின் பாதையில் நீங்கள் நடக்கவும்
விண்ணவரோடு நீங்கள் உரிமைப் பேறு பெறவும் உங்களுக்கு அருள் புரிவாராக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.



புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு
பெருவிழா திருவிழிப்புத் திருப்பலி

இத்திருப்பலி ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாலையில் மாலைத் திருப்புகழ் 1-க்கு முன்போ பின்போ பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

மரியே! மாட்சி மிகு உம் புகழ் சாற்றப்பட்டிருக்கிறது; இன்று நீர் வானதூதர் அணிகளுக்கு மேலாக உயர்த்தப்பெற்றுள்ளீர்;
என்றென்றும் கிறிஸ்துவோடு வெற்றிப் புகழ் அடைகின்றீர். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித கன்னி மரியாவின் தாழ்நிலையைக் கண்ணோக்கி, உம் ஒரே திருமகன் மரியாவிடமிருந்து ஊனியல்பில் பிறக்கும் அருளை அவருக்கே அளித்து, இன்று அந்த அன்னைக்கு ஈடு இணையற்ற மாட்சியால் முடி சூட்டினீரே; அவரின் வேண்டலால், நாங்களும் உமது மீட்பின் மறைநிகழ்வால் காக்கப்பெற்று உம்மால் உயர்த்தப்பெறத் தகுதி பெறுவோமாக. உம்மோடு. "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கடவுளுடைய புனித தாயின் விண்ணேற்புப் பெருவிழாவில் மகிழ்வு, புகழ்ச்சி இவற்றின் பலிப்பொருளை ஏற்றருள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உம்முடைய மன்னிப்பைப் பெற்று நன்றிச் செயலில் இடைவிடாது நிலைத்திருக்க அருள்வீராக. எங்கள்.

தொடக்கவுரை : அடுத்து வரும் திருப்பலியில் உள்ளபடி (பக். 790 - 793).

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 11:27 என்றுமுள்ள தந்தையின் மகனைத் தாங்கிய கன்னி மரியாவின்
திருவயிறு பேறுபெற்றதே.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, இறை அன்னையின் விண்ணேற்பைக் கொண்டாடும் நாங்கள் விண்ணக விருந்தில் பங்குகொண்டு உமது கனிவை இறைஞ்சுகின்றோம்: உமை அனைத்திலிருந்தும் எங்களைக் காத்தருள்வீராக. எங்கள். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 6 29).

பகல் திருப்பலி

வருகைப் பல்லவி

காண். திவெ 12:1 பொனில் பெரியதோர் அடையாளம் தோன்றியது. பெண் ஒருவர் கதிரவனை ஆடையாக அணிந்து,
வடையாக அணிந்திருந்தார். நிலா அவருடைய --வடியில் இருந்தது. அவர் பன்னிரு விண் மீன்களைத் தலை மீது முடி யாகச் சூடியிருந்தார்.
அல்லது கன்னி மரியாவைப் பெருமைப்படுத்தி, விழா எடுக்கும் நாம் அனைவரும் ஆண்டவரில் அகமகிழ்வோமாக. அவரது விண்ணேற்பில் வானதூதர் மகிழ்கின்றனர். இறைமகனைப் போற்றிப் புகழ்கின்றனர்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனின் அன்னையாகிய மாசற்ற கன்னி மரியாவை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மாட்சிக்கு எடுத்துக்கொண்டீரே; நாங்கள் விண்ணகத்துக்கு உரியவற்றை என்றும் நாடி அவரது மாட்சியில் பங்குகொள்ளத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இறைப்பற்றுடன் நாங்கள் அளிக்கும் காணிக்கை உம்மிடம் வந்து சேர்வதாக; விண்ணேற்பு அடைந்த புனித கன்னி மரியாவின் பரிந்துரையால், எங்கள் இதயங்கள் அன்புத் தீயால் பற்றியெரிந்து என்றென்றும் உம்மை நாடுவனவாக. எங்கள்.

தொடக்கவுரை: மரியாவினுடைய விண்ணேற்பின் மாட்சி.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

எனெனில் கடவுளின் தாயாகிய கன்னி மரியா
இன்று விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
உமது திரு அவை அடைய இருக்கின்ற நிறைவின்
தொடக்கமும் சாயலு மாக இந்த விண்ணேற்புத் திகழ்கின்றது;
இவ்வுலகில் பயணம் செய்யும் மக்களுக்கு
உறுதியான நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கும்
முன்னடையாளமாகவும் அது விளங்குகின்றது.

ஏனெனில் உயிர்களுக்கெல்லாம் ஊற்றாகிய உம் திருமகனுக்குச்
சொல்லற்கரிய முறையில் மனித உடல் கொடுத்து
அவரைப் பெற்றெடுத்த அப்புனித அன்னையை
நீர் கல்லறையில் அழிவுறாமல் காத்தது மிகப் பொருத்தமே.

ஆகவே வானதூதர் திரளோடு ஒன்றுசேர்ந்து,
நாங்களும் உம்மைப் புகழ்ந்தேத்தி,
மகிழ்ச்சியுடன் அறிக்கையிட்டுச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

லூக் 1:48-49 எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறு பெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவர் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் அருளடையாளங்களில் பங்குபெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: விண்ணேற்பு அடைந்த புனித கன்னி மரியாவின் பரிந்துரையால் நாங்கள் உயிர்ப்பின் மாட்சிக்கு வந்து சேர்வோமாக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 629).

ஆகஸ்ட் 16

ஹங்கேரி நாட்டுப் புனித ஸ்டீபன்

புனிதர் பொது: புனிதர் ஒருவர் (பக். 945).

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, புனித ஸ்டீபன் இவ்வுலகில் அரசராய் இருந்தபோது உமது திரு அவையைப் பரவச் செய்வதில் ஆர்வம் உள்ளவராய் இருந்தார். உமது திரு அவையின் மாட்சிமிக்க காவலராக அவர் விண்ணுலகில் விளங்கச் செய்வீராக. உம்மோடு.

ஆகஸ்ட் 19

புனித ஜான் யூட்ஸ்: அருள்பணியாளர்

அருள் நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923) அல்லது புனிதர் பொது: துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, கிறிஸ்துவின் அளவிட முடியாத செல்வங்களை எடுத்துரைக்க அருள்பணியாளரான புனித ஜான் யூட்சை அரிய முறையில் தேர்ந்தெடுத்தீரே; அவருடைய எடுத்துக்காட்டாலும் அறிவுரையாலும் நாங்கள் உம்மைப் பற்றிய அறிவில் வளர்ச்சி பெற்று நற்செய்தியின் ஒளிக்கு ஏற்ப உண்மையுடன் வாழ்வோமாக. உம்மோடு

ஆகஸ்ட் 20

புனித பெர்னார்டு: துறவு மடத்துத் தலைவர், மறைவல்லுநர்
நினைவு

வருகைப் பல்லவி

ஆண்டவர் புனித பெர்னார்டை அறிவாற்றலால் நிரப்பினார். அவரோ
படிப்பினைகளை இறைமக்களுக்குத் தொடர்ந்து வழங்கினார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, துறவு மடத்துத் தலைவரான புனித பெர்னார்டு உமது இல்லத்தின் மீதுள்ள ஆர்வத்தால் பற்றியெரிந்து உமது திரு அவையில் அறிவொளி வீசவும் அன்புத் தீயை மூட்டவும் வரம் அளித்தீரே; அவருடைய பரிந்துரையால் நாங்கள் அவரைப் போலவே மிகுந்த ஆர்வத்தோடு ஒளியின் மக்களாக என்றும் வாழ அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, சொல்லிலும் செயலிலும் மாண்புற்ற துறவு மடத்துத் தலைவரான புனித பெர்னார்டு உமது திரு அவையில் ஒழுங்கும் ஒருமைப்பாடும் நிலவ அயராது உழைத்தார்; அப்புனிதரை நினைவுகூரும் நாங்கள் உமது மாட்சிக்காக ஒப்புக்கொடுக்கும் ஒற்றுமை, அமைதி ஆகியவற்றின் அருளடையாளத்தைக் கனிவாய் ஏற்றருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 15:9 தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன், என்கிறார் ஆண்டவர். என் அன்பில்
நிலைத்திருங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித பெர்னார்டின் விழாவில் நாங்கள் உட்கொண்ட திரு உணவு எங்களிடம் தன் நற்பயனை விளைவிப்பதாக; நாங்கள் அவரது எடுத்துக்காட்டால் திடமும் அவருடைய படிப்பினையால் பயிற்சியும் பெற்று மனிதர் ஆன உம் வார்த்தையின் மீது கொண்ட அன்பால் ஆட்கொள்ளப்படுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
மாடு.

ஆகஸ்ட் 21

புனித பத்தாம் பயஸ்: திருத்தந்தை
நினைவு

அருள்நெறியாளர்கள் பொது: திருத்தந்தை ஒருவர் (பக். 916).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, கத்தோலிக்க நம்பிக்கையைப் பேணிக் காக்கவும் கிறிஸ்துவுக்குள் அனைத்தையும் புதுப்பிக்கவும் திருத்தந்தை புனித பயசுக்கு விண்ணக ஞானத்தையும் திருத்தூதருக்கு உரிய மனத்திடனையும் நிரம்ப அளித்தீரே; நாங்கள் அவருடைய படிப்பினைகளையும் எடுத்துக்காட்டையும் பின்பற்றி நிலைவாழ்வைப் பரிசாகப் பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: திருத்தந்தை புனித பயசின் அறிவுரைகளைப் பின்பற்றி, இத்தூய மறைநிகழ்வை நேரிய வணக்கத்துடன் ஒப்புக்கொடுக்கவும் அதைப் பற்றுறுதியுடன் உட்கொள்ளவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, திருத்தந்தை புனித பயசின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இந்த விண்ணக விருந்தின் ஆற்றலால் நம்பிக்கையில் நிலைத்து நிற்கவும் உம்முடைய அன்பில் ஒன்றித்து வாழவும் அருள்புரிவீராக. எங்கள்.

ஆகஸ்ட் 22

அரசியான புனித கன்னி மரியா
நினைவு

வருகைப் பல்லவி

காண். திபா 44:10பொன்னாலான பல வகை ஆடைகள் அணிந்து உன் வலப்புறம் நிற்கின்றாள் அரசி.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்முடைய திருமகனின் அன்னையை எங்கள் அன்னையாகவும் அரசியாகவும் ஏற்படுத்தியுள்ளீரே; அதனால் நாங்கள் அவருடைய பரிந்துரையின் ஆதரவைப் பெற்று விண்ணரசில் உம் பிள்ளைகளுக்கு உரிய மாட்சியை அடைய அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித கன்னி மரியாவின் நினைவு நாளில் எங்கள் காணிக்கைகளை உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மை வேண்டுகின்றோம்: சிலுவையில் தம்மையே உமக்கு மாசற்ற பலியாக ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் மனித இயல்பு எங்களுக்குத் துணைபுரிவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை (விழா நாளில்), பக். 546 அல்லது II, பக். 547.

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 1:45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர்
பேறுபெற்றவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித கன்னி மரியாவின் நினைவை வணக்கத்துடன் கொண்டாடி உம்மை வேண்டுகின்றோம்: விண்ணக உணவை உட்கொண்ட நாங்கள் நிலையான விருந்திலும் பங்குபெறத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

.
ஆகஸ்ட் 23

லீமா நகர்ப் புனித ரோஸ்: கன்னி

கன்னியர் பொது: கன்னி ஒருவர் (பக். 936).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது அன்பினால் பற்றியெரிந்த புனித ரோசுக்கு உலகைத் துறக்கவும், ஒறுத்தல் நிறைந்த தவ வாழ்வு வாழ்ந்து உம்மைத் தவிர மற்ற அனைத்தையும் மறுக்கவும் வரம் அளித்தீரே; நாங்கள் அவருடைய பரிந்துரையால் இம்மையில் வாழ்வின் வழிகளைப் பின்பற்றி மறுமையில் உமது மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைத்திட அருள்வீராக. உம்மோடு.

ஆகஸ்ட் 24

புனித பர்த்தலமேயு: திருத்தூதர் விழா

வருகைப் பல்லவி

காண். திபா 95:2-3 ஆண்டவரின் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற
இனத்தாரிடையே அவரது மாட்சியை எடுத்துரையுங்கள். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதரான புனித பர்த்தலமேயு உம் திருமகன் மீது கொண்டிருந்த உண்மையான நம்பிக்கையை எங்களில் உறுதிப்படுத்தியருளும்; மேலும் அவரது வேண்டலால் உமது திரு அவை எல்லா இனத்தவருக்கும் மீட்பு அளிக்கும் அருளடையாளமாகத் திகழ்வதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதரான புனித பர்த்தலமேயுவைச் சிறப்பித்துக் கொண்டாடும் இவ்விழாவில் நாங்கள் உமக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துகின்றோம்; அவருடைய பரிந்துரையால் நாங்கள் உமது அருள் துணையைப் பெற்றுக்கொள்ள அருள் புரிவீராக, எங்கள்.

காதர்களின் தொடக்கவுரை (பக். 548 - 549).

திருவிருந்துப் பல்லவி

லூக். 22:29-30 என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். அதனால் என் ஆட்சியில் நீங்கள் என்னோடு உண்டு குடிப்பீர்கள், என்கிறார் ஆண்டவர்,

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதரான புனித பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடும் நாங்கள் நிலையான மீட்பின் பிணையை உட்கொண்டுள்ளோம்; இது எங்கள் இவ்வுலக வாழ்வுக்கும் மறுவுலக வாழ்வுக்கும் ஏற்ற துணையாய் அமைந்திட அருள்புரிவீராக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 630)


ஆகஸ்ட் 25

புனித லூயிஸ்

புனிதர் பொது: புனிதர் ஒருவர் (பக். 945).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித லூயிசை இவ்வுலக ஆட்சி பற்றிய கவலையிலிருந்து விடுவித்து விண்ணக ஆட்சியின் மாட்சிக்கு உயர்த்தினீரே; அவரது பரிந்துரையால் நாங்கள் இவ்வுலகில் புரியும் பணிகள் வழியாக உமது நிலையான ஆட்சிக்கு வந்து சேர அருள்புரிவீராக. உம்மோடு.


கலாசான்ஸ் நகர்ப் புனித ஜோசப்: அருள்பணியாளர்

பனிகர் பொது: கல்விப் பணியாளர்கள் (பக். 954) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அருள்பணியாளரான புனித ஜோசப்பை அளவற்ற அன்பினாலும் பொறுமையினாலும் அணிசெய்து, சிறுவர்களுக்குக் கல்வி அறிவை ஊட்டுவதிலும் எல்லாவித நற்பண்புகளில் பயிற்சி அளிப்பதிலும் இடைவிடாமல் உழைக்கச் செய்தீரே; அதனால் ஞானத்தின் ஆசிரியராக அவரைப் போற்றும் நாங்கள், அவர் உண்மையின் உடனுழைப்பாளர் என்பதை உணர்ந்து அவரை என்றும் பின்பற்ற அருள்புரிவீராக. உம்மோடு.

ஆகஸ்ட் 27

புனித மோனிக்கா

நினைவு புனிதர் பொது: புனிதையர் (பக். 955).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, துயருறுவோருக்கு ஆறுதலானவரே, புனித மோனிக்கா தம் மகன் அகுஸ்தினின் மனமாற்றத்துக்காகப் பரிவுடன் சிந்திய கண்ணீரை இரக்கத்துடன் ஏற்றுக்கொண்டீரே; இவ்விரு புனிதர்களின் வேண்டலால், நாங்கள் எங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி, உமது அருளின் மன்னிப்பைக் கண்டடைவோமாக. உம்மோடு.


ஆகஸ்ட் 28

புனித அகுஸ்தின்: ஆயர், மறைவல்லுநர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். சீஞா 15:5 திரு அவை நடுவில் அவர் தமது வாய் திறந்தார்; ஆண்டவர் அவரை ஞானமும் அறிவுக்கூர்மையும் உள் ள ஆவியால் நிரப்பினார். மாட்சியின் மேலாடையை அவருக்கு அணிவித்தார்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, ஆயரான புனித அகுஸ்தினுக்கு நீர் அளித்த உளப்பாங்கை உமது திரு அவையில் புதுப்பித்தருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் அதே உளப்பாங்கினால் நிரப்பப்பட்டு மெய்ஞ்ஞானத்தின் ஊற்றாகிய உம்மீது மட்டும் தாகம் கொள்ளவும் உன்னத அன்பின் காரணராகிய உம்மையே நாடவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் மீட்பின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் இந்த பரிவிரக்கத்தின் அருளடையாளம் எங்களுக்கு ஒற்றுமையின் அடையாளமாகவும் பிறரன்பின் பிணைப்பாகவும் அமைவதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 23:10,8 கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். நீங்கள் யாவரும் சகோதரர்
சகோதரிகள், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் பங்குகொண்ட கிறிஸ்துவின் திரு உணவு எங்களைப் புனிதப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: அதனால் கிறிஸ்துவினுடைய உடலின் உறுப்பினராகிய நாங்கள் அவராகவே வாழ அருள்வீராக. எங்கள்.


ஆகஸ்ட் 29

புனிதத் திருமுழுக்கு யோவானின் பாடுகள்
நினைவு

வருகைப் பல்லவி

காண். திபா 118:46-47ஆண்டவரே, உம் ஒழுங்குமுறைகளைப் பற்றி நான் அரசர் முன்னிலையிலும் பேசுவேன்; வெட்கமுற மாட்டேன். உம் கட்டளைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனிதத் திருமுழுக்கு யோவான் உம் திருமகனின் பிறப்பையும் இறப்பையும் முன்னறிவிப்பவராக இருக்கத் திருவுளமானீரே; அவர் உண்மைக்கும் நீதிக்கும் சாட்சியாகத் தம் உயிரைக் கொடுத்தது போல, நாங்களும் உம் படிப்பினைகளை அறிக்கையிட ஊக்கமுடன் போராடுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனிதத் திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் ஒலிக்கும் குரலாக போதித்து, இரத்தம் சிந்தி, ஆற்றலுடன் முத்திரையிட்டார்; அவர் போதித்தவாறு உம் பாதைகளைச் செம்மைப்படுத்த நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை அன்புடன் ஏற்றருள்வீராக. எங்கள்.

தொடக்கவுரை : முன்னோடியின் பணி.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்துவின் முன்னோடியான புனித யோவானை முன்னிட்டு,
நாங்கள் உமது உன்னத மாட்சியைப் புகழ்கின்றோம்.
பெண்களிடம் பிறந்தவர்களுள்
அவருக்குத் தலைசிறந்த மாட்சி அளித்து அருள்பொழிவு செய்தீர்.
அவரது பிறப்பு பெருமகிழ்ச்சியை முன்னறிவித்தது.
மனிதரின் மீட்பு வந்துவிட்டது எனத்
தாம் பிறக்கும் முன்னரே அக்களிப்பால் துள்ளினார்;
இறைவாக்கினர் அனைவரிலும் அவர் ஒருவரே
மீட்பு அளிக்கும் செம்மறியைச் சுட்டிக்காட்டினார்;

மேலும் தண்ணீருக்குப் புனிதப்படுத்தும் ஆற்றலைத் தரும்
திருமுழுக்கை ஏற்படுத்திய கிறிஸ்துவையே
அவர் திருமுழுக்காட்டினார்; அவர் இரத்தம் சிந்தி,
மறிஸ்துவுக்கு மிகச் சிறந்த முறையில் சான்று பகரவும் பேறு பெற்றார்.

ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து
நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,
முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 3:27,30 யோவான் பதிலுரையாகக் கூறினார்: அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனிதத் திருமுழுக்கு யோவானின் விண்ணகப் பிறப்பு நாளை நினைவுகூரும் நாங்கள் மீட்பு அளிக்கும் திரு உணவை உட்கொண்டுள்ளோம்; அதனால் அது உணர்த்தும் உட்பொருளை ஏற்றுக்கொண்டு அது எங்களிடம் செயல்படுவதைக் கண்டு மிகவும் மகிழ்வோமாக. எங்கள்.

ஆகஸ்டு 30

புனித யூப்ராசியா: கன்னி

கன்னியர் பொது (பக். 936), அல்லது புனிதர் பொது: அருள்சகோதரி (பக். 949).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, தூய்மை அனைத்தின் ஊற்றே, உம் ஒரே திருமகனைத் தம் பங்காகவும் உரிமைச் சொத்தாகவும் ஏற்றுக்கொள்ள புனித யூப்ராசியாவை வழிநடத்தினீரே; உமது நிலையான மாட்சிக்கு நாங்கள் இறுதியில் வந்து சேர உம்மை மட்டுமே இறுகப் பற்றிக்கொள்ளவும். பற்றன்புடன் உமக்குத் தொண்டாற்றவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

=============↑ பக்கம் 803

====================

image