image

 

புனிதருக்கு உரிய சிறப்புப் பகுதி

மே
மே 1 தொழிலாளர் புனித யோசேப்பு
திபா 127:1-2

வருகைப் பல்லவி

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் அனைவரும் பேறு பெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் பேறுபெற்றவர்; உமக்கு நலம் உண்டாகும், அல்லேலூயா.
_என்ெ
மறம் மனம்

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அனைத்தையும் உருவாக்கியவரே, மனிதர் உழைக்க வேண்டும் எனும் நெறிமுறையை வகுத்துள்ளீரே; அதனால் புனித யோசேப்பின் எடுத்துக்காட்டாலும் பாது காவலாலும் நீர் கட்டளையிட்டதை நாங்கள் நிறைவேற்றவும் நீர் வாக்களித்த பரிசைப் பெற்றுக்கொள்ளவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இரக்கம் அனைத்துக்கும் ஊற்றாகிய இறைவா, புனித யோசேப்பின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் உமது மாண்புக்காகக் கொண்டுவரும் எங்கள் காணிக்கைகளைக் கண்ணோக்கியருளும்; இவ்வாறு உம்மை மன்றாடுவோருக்கு இக்காணிக்கைகள் பாதுகாவலாய் இருக்கக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவதும்,
புனித யோசேப்பின் நினைவுக்கொண்டாட்டத்தில்
தக்க புகழுரை சாற்றி, உம்மை ஏத்திப் போற்றுவதும்
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

நேர்மையாளராகிய அவரைக்
கடவுளின் தாயாகிய கன்னி மரியாவுக்குக் கணவராகத் தந்தருளினீர்:
தூய ஆவி நிழலிட்டதால், அந்த அன்னை கருத்தரித்த
உம்முடைய ஒரே திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்குத்
தந்தையைப் போல இருந்து காப்பாற்றும்வண்ணம்,
நம்பிக்கையும் முன் மதியும் உள்ள பணியாளர் என
அவரை உமது குடும்பத்துக்குத் தலைவராக ஏற்படுத்தினீர்.

கிறிஸ்து வழியாகவே உமது மாண்பை வானதூதர் புகழ்கின்றனர்;
தலைமை தாங்குவோர் உம்மை வழிபடுகின்றனர்;
அதிகாரம் செலுத்துவோர் உம் திருமுன் நடுங்குகின்றனர்;
வானங்களும் அவற்றில் உள்ள ஆற்றல்களும் சேராபீன்களும்
ஒன்றுகூடி அக்களித்துக் கொண்டாடுகின்றனர்.
அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

காண். கொலோ 3:17 எதைச் சொன்னா லு ம் எதைச் செய் தா லு ம் அனைத்தையும் ஆண்டவர் பெயரால் செய்து, தந்தையாம் கடவுளுக்கு நன்றி செ லு த்து ங் கள், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இனிய விண்ணக விருந்தால் ஊட்டம் பெற்ற நாங்கள், உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் புனித யோசேப்பினுடைய எடுத்துக்காட்டின் வழியாக உமது அன்பின் சான்றுகளை எங்கள் இதயங்களில் பதித்து, முடிவில்லா அமைதியின் பயனை இடையறாது பெற்றுக்கொள்வோமாக. எங்கள்,
==============25^ 8827 ^-----------


மே 2
புனித அத்தனாசியுஸ்: ஆயர், மறைவல்லுநர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். சீஞா 15:5 திரு அவை நடுவில் அவர் தமது வாய் திறந்தார்; ஆண்டவர் அவரை ஞானமும் அறிவுக்கூர்மையும் உள்ள ஆவியால் நிரப்பினார். மாட்சியின் மேலாடையை அவருக்கு அணிவித்தார், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனின் இறைத்தன்மையை நிலைநாட்டுவதற்காகச் சிறந்த முறையில் போராடுமாறு ஆயரான புனித அத்தனாசியுசை ஏற்படுத்தினீரே; அவருடைய படிப்பினையையும் பாதுகாவலையும் பெற்று மகிழும் நாங்கள், உம்மை அறிவதிலும் அன்பு செய்வதிலும் நாளுக்கு நாள் வளர்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித அத்தனாசியுசின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் காணிக்கையைக் கண்ணோக்கியருளும்; அவரைப் போலவே நாங்களும் களங்கமற்ற நம்பிக்கையை அறிக்கையிட்டு உமது உண்மைக்குச் சான்று பகர்ந்து மீட்பு அடையச் செய்தருளும். எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

1 கொரி 3:11ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது, அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே திருமகனின் உண்மையான இறைத்தன்மையைப் புனித அத்தனாசியுசுடன் இணைந்து நாங்கள் உறுதியாக அறிக்கையிடுகின்றோம்; அது இந்த அருளடையாளத்தின் வழியாக எங்களுக்குப் புத்துயிர் ஊட்டி எங்களை என்றும் பாதுகாப்பதாக. எங்கள்.
==============26^ 8828 ^-----------


மே 3
புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு: திருத்தூதர்கள்
விழா

வருகைப் பல்லவி

ஆண்டவர் தமது உண்மையான அன்பினால் தேர்ந்து கொண்ட புனிதர்கள் இவர்களே. அவர் இவர்களுக்கு முடிவில்லா மாட்சியை
அருளினார். அல்லேலூயா. "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, திருத்தூதர்களான பிலிப்பு, யாக்கோபு ஆகியோரின் ஆண்டு விழாவால் எங்களை மகிழ்விக்கின்றீரே; அவர்களுடைய வேண்டலால் உம் ஒரே திருமகனின் பாடுகளிலும் உயிர்ப்பிலும் பங்குபெற்று என்றும் உம்மைக் காணும் பேற்றை அடைய நாங்கள் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதர்களான பிலிப்பு, யாக்கோபு ஆகியோரின் விழாவில் நாங்கள் கொண்டுவரும் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நாங்கள் தூய, மாசற்ற வாழ்வு நடத்த அருள்வீராக. எங்கள். திருத்தூதர்களின் தொடக்கவுரை (பக். 548 - 549).

திருவிருந்துப் பல்லவி

'காண். யோவா 14:8-9 ஆண்டவரே, தந்தையை எ ங் களுக்குக் காட்டும்; அது வே எங்களுக்குப் போதும்; பிலிப்பே, என்னைக் காண் கிறவர் என்
தந்தையைக் காண் கிறார், அல்லே லூ யா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட திரு உணவால் எங்கள் மனங்களைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: அதனால் திருத்தூதர்களான பிலிப்பு, யாக்கோபு ஆகியோரோடு நாங்களும் உம் திருமகனில் உம்மைக் கண்டு நிலைவாழ்வு அடையத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்ப்பாடு பயன்படுத்தலாம் (பக். 630)

==============27^ 8829 ^-----------

மே 133
மே 12 புனிதர்கள் நெரேயுஸ், அக்கிலேயுஸ்: மறைச்சாட்சியர்

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர், பாஸ்கா காலத்துக்குப் புறம்பே (பக். 898) அல்லது பாஸ்கா காலத்தில் (பக். 908)

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, மாட்சிமிகு மறைச்சாட்சியரான நெரேயுஸ், அக்கிலேயுஸ் எனும் புனிதர்கள் தங்கள் நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்து நின்றார்கள் என அறிகின்றோம்; அதனால் அவர்கள் எங்களுக்காக உம்மிடம் பரிவன்புடன் பரிந்துரைக்கின்றார்கள் என்பதை நாங்கள் கண்டுணர அருள்புரிவீராக. உம்மோடு.

புனித பங்கிராஸ்: மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர், பாஸ்கா காலத்துக்குப் புறம்பே (பக். 905) அல்லது பாஸ்கா காலத்தில் (பக். 910).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, மறைச்சாட்சியான புனித பங்கிராசின் பரிந்துரையில் உமது திரு அவை நம்பிக்கை கொண்டு பேரின்பம் கொள்வதாக; அவருடைய மாட்சிக்கு உரிய வேண்டலால், திரு அவை பற்றுறுதியில் நிலைத்து நின்று உமது அருள்காவலைப் பெற்று மகிழ்வதாக. உம்மோடு.

மே 13
பாத்திமா நகர்ப் புனித கன்னி மரியா

புனித கன்னி மரியா பொது (பக். 886).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் திருமகனின் அன்னையை எங்களுக்கும் அன்னையாகத் தந்துள்ளீரே; உலகின் மீட்புக்காக நாங்கள் தவத்திலும் மன்றாட்டிலும் நிலைத்து நின்று, கிறிஸ்துவின் ஆட்சியை நாளுக்கு நாள் திறம்பட வளர்க்க எங்களுக்கு ஆற்றல் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


மே 14
புனித மத்தியா: திருத்தூதர்
விழா

வருகைப் பல்லவி

யோவா 15:16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ள வில்லை என்கிறார் ஆண்டவர்; நீங்கள் சென்று கனி தர வும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் நான் தான் உங்களைத் தேர்ந்து கொண் டேன்.

பாஸ்கா காலத்தில், அல்லேலூயா). ""உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித மத்தியாவைத் திருத்தூதர் குழுமத்தில் இணைத்துக்கொண் டீரே; இப்புனிதரின் பரிந்துரையால், உமது அன்பைச் சுவைத்து மகிழவும் நீர் தேர்ந்து கொண்டவர்களின் கூட்டத்தில் இடம் பெறவும் நாங்கள் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித மத்தியாவின் விழாவில் உமது திரு அவை வணக்கத்தோடு ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளை ஏற்றருளும்; இவற்றின் வழியாக உமது அருளின் ஆற்றலால் எங்களை உறுதிப்படுத்துவீராக. எங்கள். திருத்தூதர்களின் தொடக்கவுரை (பக். 548 - 549).
யோவா 15:12

திருவிருந்துப் பல்லவி

நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என்
கட்டளை, என்கிறார் ஆண்டவர் (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தை விண்ணகக் கொடைகளால் தொடர்ந்து நிரப்பியருளும்; புனித மத்தியா எங்களுக்காகப் பரிந்து பேசுவதால், புனிதர்களோடு எங்களுக்குப் பங்களித்து உமது பேரொளியில் எங்களை ஏற்றருள்வீராக. எ ங்கள்.

சிறப்பு ஆரிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 630).
==============29^ 8831 ^-----------

மே 18
புனித முதலாம் ஜான்: திருத்தந்தை, மறைச்சாட்சி

மறைசாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர், பாஸ்கா காலத்துக்குப் புறம்பே (பக். 905)
பாஸ்கா காலத்தில் (பக். 910) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: திருத்தந்தை ஒருவர் (பக். 916).

திருக்குழும மன்றாட்டு

இறைவா,
பிக்கையாளரின் ஆன்மாக்களுக்குக் கைம்மாறு அளிப்பவரே, இந்த நாளைத் திருத்தந்தை ஜானின் மறைச்சாட்சியத்தால் புனிதமாக்கியுள்ளீரே; இப்புனிதருடைய பேறுபயன்களைப் போற்றிப் புகழும் நாங்கள் அவரது உறுதியான நம்பிக்கையைப் பின்பற்றுமாறு உம் மக்களின் வேண்டலுக்குக் கனிவுடன் செவிசாய்ப்பீராக. உம்மோடு.


மே 20
சியன்னா நகர்ப் புனித பெர்னார்தின்:

அருள்பணியாளர் அருள்நெறியாளர்கள் பொது: மறைதூதுப் பணியாளர்கள் (பக். 928) அல்லது புனிதர் பொது: துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, இயேசுவின் திருப்பெயர்மீது அருள் பணியாளரான புனித பெர்னார்தின் அளப்பரிய அன்பு கொண்டிருக்கச் செய்தீரே. அவருடைய பேறு பயன்களாலும் வேண்டல்களாலும் தூண்டப்பட்டு, உமது அன்பின் அனலால் நாங்கள் என்றும் பற்றியெரியச் செய்வீராக. உம்மோடு.

==============0^ 8832 ^-----------

மே 21
சிகர்கள் கிறிஸ்டோபர் மகல்லானஸ்: அருள்பணியாளர்;
தோழர்கள்: மறைச்சாட்சியர்

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர், பாஸ்கா காலத்திற்குப் புறம்பே (பக். 898) அல்லது பாஸ்கா காலத்தில் (பக். 908).

திருக்குழும மன்றாட்டு

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, அருள்பணியாளரான புனித கிறிஸ்டோபரும் தோழர்களும் கிறிஸ்து அரசருக்காகத் தங்கள் உயிரைக் கையளிக்கும் அளவுக்கு அவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கச் செய்தீரே; அவர்களுடைய பரிந்துரையால் நாங்கள் உண்மையான நம்பிக்கையை உறுதியுடன் அறிக்கையிட்டு, உம் அன்புக் கட்டளைகளில் என்றும் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு.

மே 22
காசியா நகர்ப் புனித ரீத்தா: துறவி

புனிதர் பொது: துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, சிலுவை தரும் ஞானத்தாலும் மன உறுதியாலும் புனித ரீத்தா சிறப்பு அடையச் செய்தீரே; அதனால் துன்பங்களில் நாங்கள் கிறிஸ்துவுடன் இணைந்து நின்று அவருடைய பாஸ்கா மறைநிகழ்வில் முழுமையாகப் பங்குபெறும் ஆற்றல் பெற அருள் புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


மே 25

வணக்கத்துக்கு உரிய புனித பீடு:
அருள்பணியாளர், மறைவல்லுநர்

மறைவல்லுநர்கள் பொது (பக். 932) அல்லது புனிதர் பொது: மடத்துத் துறவி ஒருவர் (பக். 948).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அருள் பணியாளரான புனித பீடு என்பவரின் அறிவாற்றலால் உமது திரு அவையை ஒளிர்வித்தீரே; உம் அடியார்கள் அவரது ஞானத்தால் என்றும் ஒளியூட்டப்பெற்று அவருடைய பேறுபயன்களால் உதவி பெற்றிடக் கனிவுடன் அருள்வீராக. உம்மோடு .
==============1^ 8833 ^-----------


புனித ஏழாம் கிரகோரி: திருத்தந்தை

அருள்நெறியாளர்கள் பொது: திருத்தந்தை ஒருவர் (பக். 916).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தந்தை புனித கிரகோரியில் நீர் ஒளிரச் செய்த மன உறுதியையும் நீதியின்பால் பேரார்வத்தையும் உமது திரு அவைக்குத் தந்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் திரு அவை தீமையானவற்றை வெறுக்கவும், சரியானவற்றை விரும்பி, அன்புடன் கடைப்பிடிக்கவும் ஆற்றல் பெறச் செய்வீராக. உம்மோடு.


பாத்சி நகர்ப் புனித மதலேன் மரியா: கன்னி

கன்னியர் பொது: கன்னி ஒருவர் (பக். 936) அல்லது புனிதர் பொது: துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, கன்னிமையை விரும்புகின்றவரே, உமது அன்பினால் பற்றியெரிந்த கன்னியான புனித மதலேன் மரியாவை விண்ணகக் கொடைகளால் அணிசெய்தீரே; அதனால் அவருக்கு இன்று வணக்கம் செலுத்தும் நாங்கள் தூய்மையிலும் பிறரன்பிலும் அவரது எடுத்துக்காட்டைப் பின்பற்றுவோமாக. உம்மோடு.


மே 26
புனித பிலிப்பு நேரி: அருள்பணியாளர்
நினைவு

வருகைப் பல்லவி

உரோ 5:5; காண். 8:11 அவருடைய ஆவி நம்முள் குடி கொண்டிருப்பதன் வழியாகக் கடவுளின் அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது (பாஸ்கா
காலத்தில், அல்லே லூயா).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மீது பற்றுறுதி கொண்ட ஊழியர்களைப் புனிதத்தின் மாட்சிக்கு உயர்த்த நீர் தயங்குவதில்லை; அதனால் புனித பிலிப்புவின் இதயத்தில் வியத்தகு முறையில் பற்றியெரிந்த அன்புத் தீயைத் தூய ஆவியார் எங்களிலும் பற்றியெரியச் செய்வாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது புகழ்ச்சிக்காக நாங்கள் இப்பலிப்பொருள்களை ஒப்புக்கொடுத்து உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புனித பிலிப்புவைப் பின்பற்றி நாங்கள் உமது பெயரின் மாட்சிக்காகவும் பிறரன்புப் பணிக்காகவும் என்றும் மகிழ்ச்சியுடன் உழைத்திட அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 15:9 தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன், என்கிறார் ஆண்டவர். என் அன்பில்
நிலைத்திருங்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இனிய விண்ணக விருந்தால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புனித பிலிப்புவைப் பின்பற்றி, உண்மையான வாழ்வை அளிக்கும் உணவின் மீது நாங்கள் என்றும் ஆவல் கொள்ளச் செய்வீராக. எங்கள்.

மே 27
காண்டர்பரி நகர்ப் புனித அகுஸ்தின்: ஆயர்

அருள்நெறியாளர்கள் பொது: மறைத்தூதுப் பணியாளர்கள் (பக். 928) அல்லது ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஆயரான புனித அகுஸ்தினின் போதனையால் ஆங்கிலேய மக்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளச் செய்தீரே; அதனால் அவருடைய உழைப்பின் பயன் உமது திரு அவையில் என்றும் வளமுடன் நிலைத்து நிற்க அருள்புரிவீராக. உம்மோடு.

மே 31

புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
விழா

வருகைப் பல்லவி

கா ண், திபா 6:1:16 கடவுளுக்கு அஞ்சி நடக்போரே, அனைவரும் வாரீர் கேளீர்! ஆண்டவர் என ஆன்மாவுக்குச் செய்தது எத்துணை என்பதை எடுத்துரைப்பேன் ( பாஸ்கா காலத்தில், அல்லேலூயா

**உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனைக் கருத்தாங்கிய புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்திக்கத் தூண்டுதல் தந்தீரே; அதனால் நாங்கள் தூய ஆவியாரின் ஏவுதலுக்குப் பணிந்து, அந்த அன்னையோடு உம்மை என்றும் போற்றிப் பெருமைப்படுத்த அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் புனிதமிக்க அன்னை புரிந்த அன்புப் பணி உமக்கு ஏற்புடையதாய் இருந்தது; அது போல நாங்கள் ஒப்புக்கொடுக்கும் மீட்பின் பலி உமது மாட்சிக்கு உகந்ததாய் இருப்பதாக. எங்கள். புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை II (பக். 547).

திருவிருந்துப் பல்லவி

லூக் 1:48-49 எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறு பெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவர் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பது அவரது பெயர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உம் நம்பிக்கையாளருக்கு அரும்பெரும் செயல் செய்யும் உம்மை உமது திரு அவை போற்றிப் பெருமைப்படுத்துவதாக; மரியாவின் வயிற்றில் இருந்த இயேசுவைப் புனித யோவான் அக்களிப்போடு கண்டுகொண்டது போல், என்றும் வாழும் அதே இயேசுவை உமது திரு அவை இவ்வருளடையாளத்தில் பேரின்பத்துடன் கண்டுகொள்ளச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 629).
==============4^ 8836 ^-----------


பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்குப்பின் வரும் 2- ஆம் ஞாயிற்றுக்கிழமையை அடுத்த சனிக்கிழமை
புனித கன்னி மரியாவின் மாசற்ற இதயம்
நினைவு

வருகைப் பல்லவி

திபா 12:6 உமது மீட்பில் என் இதயம் அக்களிக்கும்; எனக்கு நன்மை செய்த
ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித கன்னி மரியாவின் இதயத்தில் தூய ஆவியாருக்கு ஏற்றதோர் உறைவிடத்தை ஏற்பாடு செய்தீரே; அதனால் அதே கன்னியின் பரிந்துரையால் நாங்கள் உமது மாட்சியின் கோவிலாக விளங்கும் தகுதி பெற இரக்கத்துடன் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கடவுளின் தாய் புனித மரியாவின் நினைவுக்கொண்டாட்டத்தில் உம் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகளையும் காணிக்கைகளையும் கண்ணோக்கியருளும்; அதனால் இவை உமக்கு ஏற்றவையாகி உமது மன்னிப்பின் உதவியை எங்களுக்குப் பெற்றுத் தருவனவாக. எங்கள். புனித கன்னி மரியா தொடக்கவுரை 1 (பிறப்பு விழாவில் (பக். 546) அல்லது II (பக். 547).

திருவிருந்துப் பல்லவி

லூக் 2:19 மரியா இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் இருத்திச்
சிந்தித்துக் கொண்டிருந்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
உம் திருமகனுடைய தாயின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் நிலையான மீட்பில் பங்குபெற உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உமது அருளின் நிறைவால் மாட்சியுறும் நாங்கள் மீட்பின் தொடர் வளர்ச்சியைத் துய்த்துணரச் செய்வீராக, எங்கள்.
==============5^ 8837 ^-----------

ஜூன்
ஜூன் 1
புனித ஜஸ்டின்: மறைச்சாட்சி
நினைவு

வருகைப் பல்லவி

காண். திபா 118:85,46 தீயோர் என்னிடம் வீணானவற்றை எடுத்துரைத்தனர்; உமது சட்டத்தை அல்ல, ஆனால் உம் ஒழுங்குமுறைகளைப் பற்றி நான் அரசர் முன்னிலையிலும் பேசிக் கொண்டிருந்தேன்; நான்
வெட்கமுறவில்லை ( பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, இயேசு கிறிஸ்து பற்றிய ஒப்புயர்வற்ற அறிவைச் சிலுவையின் மடமை வழியாக மறைச்சாட்சியான புனித ஜஸ்டினுக்கு வியத்தகு முறையில் கற்பித்தீரே; அவர் எங்களுக்காகப் பரிந்து பேசுவதால் நாங்கள் தவறான கொள்கைகளின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நம்பிக்கையில் உறுதியோடு இருப்போமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித ஜஸ்டின் பற்றுறுதியுடன் போராடி கிறிஸ்துவினுடைய மறைநிகழ்வின் உண்மையை நிலைநாட்டினார்; நாங்களும் இம்மறைநிகழ்வில் தகுதியோடு பங்குபெற அருள் புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். 1 கொரி 2:2
மெசியாவாகிய இயே சுவைத் தவிர, அதுவும் சில வைய அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் நீங்கள் அறிய வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டேன் (பாஸ்கா காலத்தில் அல்லேலூயா ).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: மறைச்சாட்சியான புனித ஜஸ்டினுடைய படிப்பினைகளைக் கடைப்பிடித்து, நாங்கள் பெற்றுக்கொண்ட கொடைகளுக்காக என்றும் நன்றி உள்ளவர்களாய் இருப்போமாக. எங்கள்.
==============6^ 8838 ^-----------

ஜூன் 2
பனிதர்கள் மார்சலீனஸ், பீட்டர்: மறைச்சாட்சியர்

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர், பாஸ்கா - அல்லது பாஸ்கா காலத்தில் (பக். 908).
மறைச்சாட்சியர் பலர், பாஸ்கா காலத்துக்குப் புறம்பே (பக். 898)

திருக்குழும மன்றாட்டு

இறைவா, மறைச்சாட்சியரான மார்சலீனஸ், பீட்டர் எனும் புனிதர்களின் மாட்சிமிக்க நம்பிக்கை அறிக்கையால் எங்களைப் பாதுகாத்து அரவணைக்கின்றீரே; அவர்களைப் பின்பற்றுவதால் நாங்கள் பயன் பெறவும் அவர்களின் வேண்டலால் வலிமை பெறவும் அருள்வீராக. உம்மோடு.
ஜூன் 3 புனிதர்கள் சார்லஸ் லுவாங்காவும் தோழர்களும்: மறைச்சாட்சியர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். சாஞா 3:6-7,9 பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல, ஆண்டவர் தேர்ந்து கொண்டோரைப் புடமிட்டார். எரிபலி போல அவர்களை ஏற்றுக் கொண்டார். உரிய நேரத்தில் அவர்களைப் பெருமைப்படுத்துவார். கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களுக்கு அருளும் அமைதியும்
உண்டு (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா) .

திருக்குழும மன்றாட்டு

இறைவா, மறைச்சாட்சியரின் இரத்தம் கிறிஸ்தவர்களின் வித்தாக விளங்கச் செய்தீரே; புனித சார்லசும் அவருடைய தோழர்களும் தங்கள் இரத்தத்தால் நீர்பாய்ச்சிய திரு அவை எனும் தோட்டம் எக்காலமும் செழிப்புற்று மிகுதியான அறுவடையைத் தொடர்ந்து தரச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமக்கு இப்பலிப்பொருள்களை ஒப்புக்கொடுக்கும் நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: பாவம் செய்வதைவிட இறப்பதே சிறந்தது என்பதை இம்மறைச்சாட்சியருக்கு உணர்த்தியது போல உமக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட நாங்கள் இப்பலிப்பிடத்தில் பணி புரியச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 115:15 ஆண்டவர்தம் புனிதர்களின் சாவு அவரது பார்வையில் மிக
மதிப்புக்கு உரியது (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் புனிதர்களின் மறைச்சாட்சியத்தினுடைய வெற்றியின் நினைவாக, நாங்கள் திரு உணவை உட்கொண்டுள்ளோம்; அதனால் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள இத்திரு உணவு அவர்களுக்கு உதவி செய்தது போல், எங்களுக்கு நேரிடும் இன்னல்களில் நாங்கள் நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதியாய் இருக்க அது உதவிட அருள் புரிவீராக. எங்கள்.


ஜூன் 5

புனித போனிப்பாஸ்: ஆயர், மறைச்சாட்சி

நினைவு மறைச்சாட்சியர் பொது : மறைச்சாட்சி ஒருவர், பாஸ்கா காலத்துக்குப் புறம்பே (பக். 905) அல்லது பாஸ்கா காலத்தில் (பக். 910) அல்லது அருள் நெறியாளர்கள் பொது : மறைத்தூதுப் பணியாளர் (பக். 928).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, மறைச்சாட்சியான புனித போனிப்பாஸ் தாம் நாவினால் போதித்ததை இரத்தம் சிந்தி உண்மை என எண்பித்தார்; அவர் எங்களுக்காகப் பரிந்து பேசுவதால், நாங்கள் அதே நம்பிக்கையில் உறுதியாய் நின்று அதைச் செயலில் வெளிப்படுத்துவோமாக. உம்மோடு.

ஜூன் 6
புனித நார்பெர்ட்: ஆயர்

அருள் நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது புனிதர் பொது: துறவியர் (1

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஆயரான புனித நார்பெர்ட் தம் வேண்டலாலும் அருள்பணியில் கொண்டிருந்த ஆர்வத்தாலும் உமது திரு அவையில் சிறந்த பணியாளராக விளங்கச் செய்தீரே; அவருடைய வேண்டலின் உதவியால் உம் நம்பிக்கையாளரின் குழுமம் உமது இதயத்துக்கு உகந்த அருள்நெறியாளர்களையும் நலம் பயக்கக்கூடிய மேய்ச்சலையும் எந்நாளும் கண்டடையக் கனிவாய் அருள்புரிவீராக. உம்மோடு.
==============8^ 8840 ^-----------


ஜூன் 8
அருளாளர் மரியம் தெரசியா: கன்னி

பொது (பக். 936), அல்லது புனிதர் பொது: அருள்சகோதரி பக். 949)

திருக்குழும மன்றாட்டு

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இல்லற வாழ்வை வியத்தகு அக்கறையுடன் வளப்படுத்துவதில் கன்னியான அருளாளர் மரியம் தெரசியாவை அணிசெய்தீரே; அவரது பரிந்துரையால் ஒவ்வொரு குடும்பமும் ஒர் இல்லத் திரு அவையாகத் திகழ்ந்து வாழ்வின் தேவைகளின் நடுவே கிறிஸ்துவுக்கு உயிருள்ள சான்று பகரக் கனிவுடன் அருள்புரிவீராக. உம்மோடு.

ஜூன் 9
புனித எபிரம்: திருத்தொண்டர், மறைவல்லுநர்

மறைவல்லுநர் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தொண்டரான புனித எபிரம், தூய ஆவியாரின் தூண்டுதலால் உம்முடைய மறையுண்மைகளைப் பாடி மகிழ்ந்து உமக்கு மட்டுமே ஊழியம் புரியும் ஆற்றல் பெற்றிருந்தார்; அதே தூய ஆவியாரை எங்கள் உள்ளங்களிலும் கனிவுடன் பொழிந்தருள்வீராக. உம்மோடு.
==============9^ 8841 ^-----------

ஜூன் 11

புனித பர்னபா: திருத்தூதர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். திப 11:24 திருத்தூதர் அணியில் சேர்த்துக்கொள்ளப்படத் தகுதி வாய்ந்த இப்புனிதர் பேறு பெற்றவர். ஏனெனில் அவர் நல்லவர். தூய ஆவியாலும் நம்பிக்கையாலும் நிரம்பியவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, நம்பிக்கையாலும் தூய ஆவியாலும் நிரப்பப்பெற்ற புனித பர்னபாவைப் பிற இனத்தாரை மனமாற்றும் பணிக்கு என ஒதுக்கிவைக்க ஆணையிட்டீரே; அவர் பெருமுயற்சியுடன் போதித்த கிறிஸ்துவின் நற்செய்தி சொல்லாலும் செயலாலும் உண்மையுடன் அறிவிக்கப்படச் செய்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளை உமது ஆசியால் புனிதப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: பிற இனத்தாருக்கு நற்செய்தியின் ஒளியைக் கொண்டு செல்லப் புனித பர்னபாவைத் தூண்டிய உமது அன்புத் தீ எங்கள் உள்ளங்களிலும் பற்றியெரியச் செய்வீராக. எங்கள். திருத்தூதர்களின் தொடக்கவுரை (பக். 548 - 549).

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 15:15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நனனபர்கள் என்றேன். ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு
அறிவித்தேன் ( பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலைவாழ்வின் பிணையான இத்திரு உணவை உட்கொண்ட நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: அதனால் திருத்தூதரான புனித பர்னபாவின் நினைவாக நாங்கள் அடையாள முறையில் கொண்டாடிய இம்மறைபொருளைத் தெளிவாகக் கண்டுணரும் பேறு பெறுவோமாக. எங்கள்.


ஜூன் 13
பாதுவா நகர்ப் புனித அந்தோனியார்: அருள்பணியாளர், மறைவல்லுநர்
நினைவு

பொது (பக். 916) அல்லது மறைவல்லுநர் பொது (பக். 932) அல்லது புனிதர் பொது: துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, புனித அந்தோனியாரைத் தலைசிறந்த போதகராகவும் எங்கள் தேவைகளில் பரிந்து பேசுபவராகவும் உம் மக்களாகிய எங்களுக்கு வழங்கியுள்ளீரே; அதனால் அவரது உதவியால் நாங்கள் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைக் கடைப்பிடிக்கவும் எங்களுக்கு நேரிடும் இன்னல்களில் எல்லாம் உமது உதவியைக் கண்டுணரவும் செய்வீராக. உம்மோடு.
ஜூன் 19 புனித ரோமுவால்டு: துறவு மடத்துத் தலைவர் புனிதர் பொது: துறவு மடத்துத் தலைவர் ஒருவர் (பக். 947).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித ரோமுவால்டு வழியாக வனத் துறவு வாழ்வை உமது திரு அவையில் புதுப்பித்தீரே; அதனால் நாங்கள் எங்களையே மறுத்து, கிறிஸ்துவைப் பின்தொடர்ந்து விண்ணரசை நோக்கி மகிழ்வுடன் செல்லத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.


ஜூன் 21

புனித அலோசியுஸ் கொன்சாகா: துறவி
நினைவு

வருகைப் பல்லவி

காண். திபா 23:4,3 கறைபடாத கைகளும் மாசற்ற இதயமும் உடையவர் யாரோ அவரே
ஆண்டவரது மலையில் ஏறி, அவரது திருத்தலத்தில் நிற்பார். திருக்குழுமம் மன்றாட்டு இறைவா, விண்ணகக் கொடைகளின் காரணரே, புனித அலோசியுசின் வாழ்வில், வியத்தகு மாசின்மையும் தவமும் இணைந்திருக்கச் செய்தீரே; அவருடைய மாசின்மையை நாங்கள் பின்பற்றத் தவறினாலும் அவரது தவத்தையேனும் பின்பற்ற அவருடைய பேறுபயன்களாலும் பரிந்துரையாலும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித அலோசியுசின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நாங்கள் எப்போதும் திருமண ஆடை அணிந்தவர்களாய் விண்ணக விருந்தில் பங்குகொள்ளச் செய்தருளும்; இவ்வாறு இம்மறைநிகழ்வில் பங்கேற்பதால் நாங்கள் உம் அருள் செல்வங்களை நிறைவாகப் பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 77:24-25 அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். விண்ணோரின்
உணவை மனிதன் உண்டான்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, வானதூதர்களின் உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் தூய வாழ்வால் உமக்கு ஊழியம் புரியச் செய்தருளும்; இன்று நாங்கள் வணங்கும் புனித அலோசியுசின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, உமக்கு என்றும் நன்றியுள்ளவர்களாய் விளங்க அருள்வீராக. எங்கள்.
==============12^ 8844 ^-----------


ஜூன் 22

நோலா நகர்ப் புனித பவுலினுஸ்: ஆயர்

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஆயரான புனித பவுலினுஸ் ஏழையர் மீது அன்பும் அருள்பணியில் அக்கறையும் கொண்டு விளங்கச் செய்தீரே; அதனால் அவர்தம் பேறுபயன்களைக் கொண்டாடும் நாங்கள் அவரது எடுத்துக்காட்டைப் பின்பற்றிப் பிறரன்பில் சிறந்து விளங்கச் செய்வீராக. உம்மோடு.
புனிதர்கள் ஜான் பிஷர்: ஆயர்; தாமஸ் மூர்: மறைச்சாட்சியர் மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர் (பக். 898).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனிதர்கள் ஜான் பிஷர், தாமஸ் மூர் ஆகியோரின் உண்மையான நம்பிக்கையை மறைச்சாட்சியத்தில் நிறைவு பெறச் செய்தீரே; அவர்களது பரிந்துரையால் நாங்கள் ஆற்றல் பெற்று, எங்கள் நாவினால் அறிக்கையிடும் நம்பிக்கையை உம்மோடு. வாழ்வின் சாட்சியத்தால் உறுதிப்படுத்த எங்களுக்கு அருள்வீராக.
==============13^ 8845 ^-----------

ஜூன் 24 புனிதத் திருமுழுக்கு யோவானின் பிறப்பு
பெருவிழா


திருவிழிப்புத் திருப்பலி ஜூன் 23-ஆம் நாள் மாலையில் இத்திருப்பலிப் பெருவிழா மாலைத் திருப்புகழ் 1-க்கு முன்போ பின்போ பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

லூக் 1:15,14 அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார். தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படு வார்.
அவரது பிறப்பில் பலரும் மகிழ்ச்சியடைவர். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உமது குடும்பம் மீட்புப் பாதையில் முன்னேறிச் செல்ல நீர் அருள்புரிய நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: முன்னோடியான புனிதத் திருமுழுக்கு யோவானின் அறிவுரைகளைப் பின்பற்றி, அவர் முன்னறிவித்த எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் பாதுகாப்புடன் அது வந்து சேர்வதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனிதத் திருமுழுக்கு யோவானின் பெருவிழாவில் உம் மக்களாகிய நாங்கள் கொண்டுவரும் காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; அதனால் நாங்கள் மறைபொருளாகக் கொண்டாடுவதை ஆர்வமிக்க ஊழியத்தால் செயல்படுத்துவோமாக. எங் கள். தொடக்கவுரை: அடுத்து வரும் திருப்பலியில் உள்ளபடி (பக். 751 - 753).

திருவிருந்துப் பல்லவி

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றப்பெறுவாராக; ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
லூக் 1:68

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனிதமிக்க இத்திருவிருந்தால் நிறைவு பெற்றுள்ள எங்களக்கப் புனிதத் திருமுழுக்கு யோவானின் சிறப்பான வேண்டல் காண எங்கள் பாவங்களைப் போக்கவிருக்கும் செம்மறி உம் திருமகனே என்று முன்னறிவித்த அவர் தமது வேண்டலால் உம் திருமகனின் அருள்துணையை எங்களுக்குப் பெற்றுத் தருவாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பகல் திருப்பலி

வருகைப் பல்லவி

யோவா 1:6-7; லூக் 1:17 கடவுளால் அனுப்பப்பட்ட மனிதர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் யோவான். அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்து ,
ஆண்டவருக்கு ஏற்ற மக்களை ஆயத்தம் செய்ய வந்தார். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஆண்டவராகிய கிறிஸ்துவுக்காக மக்களினத்தைச் சிறந்த முறையில் தயாரிக்கப் புனிதத் திருமுழுக்கு யோவானை ஏற்படுத்தினீரே; அதனால் உம் மக்களாகிய எங்களுக்கு உள மகிழ்வை அருளி நம்பிக்கையாளர் அனைவரின் மனங்களை மீட்புப் பாதையிலும் அமைதியின் வழியிலும் நடத்துவீராக. உம்மோடு. "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனிதத் திருமுழுக்கு யோவான் உலக மீட்பர் வருவார் என்று முன்னறிவித்து, வந்தபின் அவரைச் சுட்டிக்காட்டினார்; அவருடைய பிறப்பைத் தகுந்த வணக்கத்துடன் கொண்டாடும் நாங்கள் உமது படத்துக்குக் கொண்டுவரும் காணிக்கைகளை ஏற்றருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்துவின் முன்னோடியான புனித யோவானை முன்னிட்டு,
நாங்கள் உமது உன்னத மாட்சியைப் புகழ்கின்றோம்.
பெண்களிடம் பிறந்தவர்களுள்
அவருக்குத் தலைசிறந்த மாட்சி அளித்து அருள்பொழிவு செய்தீர்.
அவரது பிறப்பு பெருமகிழ்ச்சியை முன்னறிவித்தது.
மனிதரின் மீட்பு வந்துவிட்டது எனத்
தாம் பிறக்கும் முன்னரே அக்களிப்பால் துள்ளினார்;
இறைவாக்கினர் அனைவரிலும் அவர் ஒருவரே
மீட்பு அளிக்கும் செம்மறியைச் சுட்டிக்காட்டினார்;

மேலும் தண்ணீருக்குப் புனிதப்படுத்தும் ஆற்றலைத் தரும்
திருமுழுக்கை ஏற்படுத்திய கிறிஸ்துவையே அவர் திருமுழுக்காட்டினார்;
அவர் இரத்தம் சிந்தி,
கிறிஸ்துவுக்கு மிகச் சிறந்த முறையில் சான்று பகரவும் பேறு பெற்றார்.

ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து
நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,
முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 1:78 நம் கடவுளின் இரக்கப் பெருக்கத்தால் விண் ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வந்தது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகச் செம்மறியின் விருந்தை உட்கொண்டு ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உமது திரு அவை புனிதத் திருமுழுக்கு யோவானின் பிறப்பில் மகிழ்ச்சி அடைந்து, வருவார் என அவர் முன்னறிவித்த கிறிஸ்துவே தனது புதுப் பிறப்பின் ஊற்றானவர் என அறிந்து கொள்வதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


ஜூன் 27

அலெக்சாந்திரியா நகர்ப் புனித சிரில்: ஆயர், மறைவல்லுநர்

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனிதமிக்க கன்னி மரியா கடவுளின் தாய் என்று ஆயரான புனித சிரில் தளரா உறுதியோடு அறிவிக்கும்படி செய்தீரே; மரியா உண்மையிலேயே கடவுளின் தாய் என நம்பும் நாங்கள் மனிதரான உம் திருமகன் கிறிஸ்து வழியாக மீட்பு அடைவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


ஜூன் 28

புனித இரனேயுஸ்: ஆயர், மறைச்சாட்சி
நினைவு

அருள் நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது மறைவல் எல/ நர்கள் பெரிது (பக். 932).

வருகைப் பல்லவி

மலா 2:6 மெய்ப்போதனை அ வர் வாயில் இருந்தது; தீமை அவருடைய உதடுகளில் காணப்படவில்லை. அவர் என்னோடு அமைதியிலும் நேர்மையிலும் நடந்து கொண்டார். நெறிகேட்டிலிருந்து பலரைத் திருப்பிக் கொணர்ந்தார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, திருமறைப் படிப்பினைகளின் உண்மையையும் திரு அவையின் அமைதியையும் நிலைநாட்டும் வரத்தை ஆயரான புனித இரனேயுசுக்கு அளித்தீரே: அவரது வேண்டலால் நாங்கள் நம்பிக்கையிலும் அன்பிலும் புதுப்பிக்கப்பெற்று ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதில் என்றும் கருத்தாய் இருக்க எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித இரனேயுசின் விண்ணகப் பிறப்பில் நாங்கள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொடுக்கும் பலி உமக்கு மாட்சி அளிப்பதாக; நாங்கள் உண்மையை விரும்பி ஏற்கவும் திரு அவையின் வழுவிலா நம்பிக்கை, நிலையான ஒற்றுமை ஆகியவற்றைப் பற்றிக்கொண்டிருக்கவும் இது எங்களுக்கு உதவுவதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 15:4-5 நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள்; ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்தூய மறைநிகழ்வுகள் வழியாக, உமது இரக்கத்தால் நாங்கள் நம்பிக்கையில் வளர உம்மை வேண்டுகின்றோம்: ஆயரான புனித இரனேயுஸ் சாவை ஏற்கும் அளவுக்குத் தமது நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்து நின்று மாட்சி அடைந்தது போல் நாங்களும் அதே நம்பிக்கையை உண்மையாகவே பின்பற்றி, உமக்கு ஏற்புடையோர் ஆவோமாக. எங்கள்.

ஜூன் 29

புனிதர்கள் பேதுரு, பவுல்: திருத்தூதர்கள்
பெருவிழா

திருவிழிப்புத் திருப்பலி ஜூன் 28-ஆம் நாள் மாலையில் இத்திருப்பலி மாலைத்திருப்புகழ் 1-க்கு முன்போ பின்:பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

ஆண்டவரே, திருத்தூதரான பேதுருவும் பிற இனத்தாரின் போதகரான பவுலும் உம் திருச்சட்டத்தை எங்களுக்குக் கற்றுத்
தந்தனர். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, திருத்தூதர்களான பேதுரு, பவுல் எனும் புனிதர்களின் பரிந்துரைகளால் நாங்கள் உதவி பெற்றிட உம்மை வேண்டுகின்றோம்: அவர்கள் வழியாக விண்ணகக் கொடைகளைத் தொடக்கத்தில் உமது திரு அவைமீது பொழிந்தீரே; அதனால் அவர்கள் வழியாகவே முடிவில்லா மீட்பின் உதவிகளை உமது திரு அவைக்கு வழங்குவீராக. உம்மோடு. "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதர்களான பேதுரு, பவுல் எனும் புனிதர்களின் பெருவிழாவைக் கொண்டாடுவதில் பெருமை கொள்ளும் நாங்கள் இக்காணிக்கைகளை உமது திருப்பீடத்துக்குக் கொண்டு வருகின்றோம்; மீட்பு அடைய எங்களுக்கு உள்ள தகுதியைக் குறித்து அச்சமுறும் நாங்கள் உமது கனிவிரக்கத்தால் மீட்பு அடைவோம் என்பதில் மகிழ்ச்சியுறுவோமாக. எங்கள். தொடக்கவுரை: அடுத்து வரும் திருப்பலியில் உள்ளபடி (பக். 757 - 760).

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 21:15,17
யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என் மீது அன்பு செலுத்துகிறாயா? ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே; ஏனெ னில் ஆண்டவரே, நான் உம்மை அ என் பு செய்கிறேன் என் பதை நீர் அறிந்திருக்கிறீர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதர்களின் படிப்பினையால் உம் நம்பிக்கையாளரை ஒளிர்வித்தீரே; இவ்வாறு நாங்கள் விண்ணக அருளடையாளங்களால் ஆற்றல் பெற அருள்புரிவீராக. எங்கள். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 629 - 630).
பகல் திருப்பலி

வருகைப் பல்லவி

ஊனுடலில் வாழ்ந்தபோது தமது இரத்தம் சிந்தித் திரு அவையை நிறுவியவர்கள் இவர்களே. ஆண்டவரின் கிண்ணத்தில் பருகி, இறைவனின் நண்பர்களானவர்களும் இவர்களே,
""உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, திருத்தூதர்களான பேதுரு, பவுல் ஆகியோரின் வணக்கமும் புனிதமும் நிறைந்த பெருவிழாவில் எங்களுக்குப் பேரின்பம் தந்துள்ளீரே; அவர்களிடமிருந்தே உமது திரு அவை சமய வாழ்வைத் தொடக்கத்தில் பெற்றுக்கொண்டது போல அவர்களின் படிப்பினைகளை எல்லாவற்றிலும் கடைப்பிடிக்க அருள்புரிவீராக. உம்மோடு. "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

. ஆண்டவரே, நாங்கள் உமது திருப்பெயருக்கு ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருளோடு திருத்தூதர்களின் மன்றாட்டும் இணைந்து உம்மிடம் எழுவதாக; அவர்களின் வேண்டலால் நாங்கள் இறைப்பற்றுடன் இப்பலியை ஒப்புக்கொடுக்கச் செய்வீராக. எங்கள்.

தொடக்கவுரை: திரு அவையில் புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் இரு வகைப் பணிகள்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் உமது திருவுளப்படி,
திருத்தூதர்களான புனித பேதுருவும் புனித பவுலும் எங்களை மகிழ்விக்கின்றனர்:
பேதுரு நம்பிக்கையை அறிக்கையிடுவதில் முதன்மையானவராகத் திகழ்ந்து,
இஸ்ரயேலில் எஞ்சினோரைக் கொண்டு
தொடக்கத் திரு அவையை ஏற்படுத்தினார்;
பவுல் அந்நம்பிக்கையை உய்த்துணர்ந்து தெளிவாகப் போதித்து
அழைக்கப்பட்ட பிற இனத்தாருக்கு
ஆசிரியராகவும் போதகராகவும் விளங்கினார்.

இவ்வாறு வெவ்வேறு முறையில்
கிறிஸ்துவின் ஒரே குடும்பத்தை உருவாக்கிய அவர்கள்
ஒன்றாக வெற்றி வாகை சூடி, உலகம் எங்கும் வணக்கம் பெறுகின்றார்கள்.

ஆகவே புனிதர், வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
நாங்கள் உம்மைப் புகழ்ந்தேத்தி
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 16:16,18 பேதுரு இயேசுவிடம், "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் " என்று உரைத்தார். அதற்கு இயேசு, "நீ பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டு வேன்" என்று மறுமொழி
கூறினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்திரு உணவால் நாங்கள் ஊட்டம் பெற்றுள்ளோம்; அதனால் அப்பம் பிடு வதிலும் திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நிலைத்து நின்று, உமது அன்பால் உறுதி பெற்று ஒரே இதயமும் ஒரே ஆன்மாவும் கொண்டவர்களாய் உமது திரு அவையில் வாழ்வோமாக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 629 - 630).

புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் நேர்ச்சித் திருப்பலி (பக். 1183) அல்லது (பக். 1184).

ஜூன் 30

உரோமைத் திரு அவையின் முதல் மறைச்சாட்சியர்

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர் (பக். 898).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உரோமைத் திரு அவையின் திரளான முதற்கனிகளை மறைச்சாட்சியரின் இரத்தத்தால் புனிதப்படுத்தினீரே; அதனால் இத்தகைய துன்பமிக்க போராட்டத்தில் அவர்களிடம் விளங்கிய பற்றுறுதியில் நாங்கள் வலிமை பெற்று அவர்களின் வெற்றியில் என்றும் மகிழ்ந்திருக்க அருள் புரிவீராக.
உம்மோடு.

=============↑ பக்கம் 760

====================

image