image

 

புனிதருக்கு உரிய சிறப்புப் பகுதி

நவம்பர்
நவம்பர் 1 புனிதர் அனைவரும்
பெருவிழா

வருகைப் பல்லவி

புனிதர் அனைவரின் புகழ்ச்சிக்காக இன்று பெருவிழாக் கொண்டாடும் நாம் எல்லாரும் ஆண்டவரில் அகமகிழ்வோமாக; அவர்களுடைய பெருவிழாவில் வான தூதரும் மகிழ்ந்து,
இறைவனின் திருமகனைப் புகழ்கின்றனர். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, பேறு பயன்கள் நிறைந்த உம் புனிதர் அனைவரையும் நாங்கள் ஒரே விழாவில் வணக்கமுடன் கொண்டாடச் செய்தீரே; எண்ணற்ற புனிதர்களின் பரிந்துரையால் நாங்கள் விரும்பித் தேடும் உமது இரக்கத்தை எங்களுக்கு மிகுதியாகப் பொழிவீராக. உம்மோடு. "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனிதர் அனைவரின் பெருமைக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் உமக்கு உகந்தனவாய் இருப்பனவாக; இவ்வாறு அப்புனிதர்கள் ஏற்கெனவே சாகாத்தன்மையைப் பெற்றுவிட்டனர் என்பதை நம்புகின்ற நாங்கள் எங்களது மீட்பில் அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர் என்பதையும் உணரச் செய்வீராக. எங்கள்.

தொடக்கவுரை: நம் அன்னையாம் எருசலேமின் மாட்சி.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் இன்று உமது அருளால்
எங்கள் அன்னையாகிய விண்ணக எருசலேம் நகரின்
பெருவிழாவைக் கொண்டாட எங்களுக்கு அருளினீரே;
அங்கேதான் எங்கள் சகோதரர் சகோதரிகளாகிய புனிதர்கள்
உம்மைச் சூழ்ந்து நின்று, முடிவின்றிப் போற்றிப் புகழ்கின்றார்கள்.

அந்நகரை நோக்கியே நாங்கள் நம்பிக்கையோடு பயணம் செய்து,
ஆர்வமுடன் விரைகின்றோம்;
அங்கேதான் திரு அவையின் உறுப்பினர் உன்னத நிலையடைந்து,
மாட்சி பெறுகின்றனர் என மகிழ்கின்றோம்;
ஏனெனில் வலுவற்ற எங்களுக்குப்
பேருதவிகளையும் முன் மாதிரியையும்
அவர்கள் வழியாக அருளுகின்றீர்.

ஆகவே அப்புனிதர்களோடும் வானதூதரின் பெருந்திரளோடும்
நாங்கள் ஒன்றுசேர்ந்து உம்மைப் போற்றிப் புகழ்ந்துச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

மத் 5:8-10 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உம் புனிதர் அனைவரிலும் நீரே வியப்புக்கு உரியவர் எனவும் தூயவர் எனவும் உம்மை வழிபட்டு, நாங்கள் உமது அருளை வேண்டுகின்றோம்: உமது அன்பின் நிறைவாகிய புனிதத்தில் பங்குபெறும் நாங்கள் திருப்பயணிகளுக்கான இத்திருவிருந்திலிருந்து விண்ணக வீட்டின் விருந்துக்குக் கடந்து செல்வோமாக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 630 - 631).
புனிதர் அனைவரின் நேர்ச்சித் திருப்பலிக்காக (பக். 1186 - 1187).

நவம்பர் 2
இறந்த நம்பிக்கையாளர் அனைவர்
நினைவு

திருப்பலி நிறைவேற்றுபவர் பின்வரும் திருப்பலிகளில் ஒன்றைத் தேர்ந்து கொள்வார்.*

நவம்பர் 3-ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தாலும் இறந்த நம்பிக்கையாளர் அனைவருக்கான நினைவுத் திருப்பலியைப் பயன்படுத்தலாம்.

வருகைப் பல்லவி

காண்.1 தெச 4:14; 1 கொரி 15:22 :8-10 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தது போல, இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்கு உள்ளானது போல, கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகன் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் எனும் எங்கள் நம்பிக்கை எழுச்சியுறுவது போல உம் அடியார்களும் உயிர்த்தெழுவார்கள் எனக் காத்திருக்கும் எங்களது எதிர்நோக்கும் உறுதி பெறுவதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும்; அதனால் உம் திருமகனுடைய பரிவிரக்கத்தின் மாபெரும் அருளடையாளத்தில் ஒன்றுபடும் இறந்த உம் அடியார்கள் உம் திருமகனோடு மாட்சிக்கு உயர்த்தப்பெறுவார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

இறந்தோரின் தொடக்கவுரை (பக். 562 - 566).

* Incruentum altaris Sacrificium ( 10 ஆகஸ்ட் Sacrificium ( 10 ஆகஸ்ட் 1915) எனும் திருத்தூதுக் கொள்கை விளக்கத்தில் 15- ஆம் பெனடிக்ட் சொல்வது போல ஒவ்வோர் அருள்பணியாளரும் மூன்று திருப்பலிகளை இந்நாளில் நிறைவேற்றலாம்: A.A.S. 7 (1915) 101- 40 4

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 11:25, 26 . பிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்கிறார் ஆண்டவர்; சனிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். ...ரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இறந்த உம் அடியார்கள் நாங்கள் கொண்டாடும் பாஸ்கா மறைநிகழ்வால், ஒளியும் அமைதியும் நிறைந்த விண்ணக வீட்டுக்கு வந்து சேர்வார்களாக, எங்கள்.
சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 632 ).

2 (இரண்டாம் திருப்பலி)

வருகைப் பல்லவி

காண். 4 எஸ் 2:34-35 நிலையான இளைப்பாறுதலை அவர்களுக்கு அளித்தருளும்,
ஆண்டவரே, முடி வில்லாத ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, நம்பிக்கையாளரின் மாட்சியும், நேர்மையாளரின் வாழ்வுமானவரே, உம் திருமகனின் இறப்பினாலும் உயிர்ப்பினாலும் நாங்கள் மீட்கப்பெற்றுள்ளோம்; எமது உயிர்ப்பின் மறைபொருளை அறிந்து கொண்ட இறந்த உம் அடியார்கள் உமது இரக்கத்தால் நிலையான பேற்றின் மகிழ்ச்சியைச் சுவைக்கத் தகுதி பெறுவார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, இறந்த உம் அடியார்களை இப்பலியின் வழியாக, கிறிஸ்துவின் இரத்தத்தால் அவர்களின் பாவங்களிலிருந்து கழுவிப் போக்கிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் திருமுழுக்குத் தண்ணீரால் கழுவப்பட்ட அவர்களை எ ங்க ள், நீர் பரிவிரக்கத்துடன் மன்னித்து இடையறாது தூய்மைப்படுத்துவீராக.

திருவிருந்துப் பல்லவி

நிலையான ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக; ஆண்டவரே, என்றும்
உம் புனிதரோடு ஒளிர்வதாக: ஏனெனில் நீர் இரக்கம் உள்ளவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்காகப் பலியாகி மாட்சியுடன் உயிர்த்தெழுந்த உம் ஒரே திருமகனின் திரு உணவை உட்கொண்ட நாங்கள், இறந்த உம் அடியார்களுக்காக உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் பாஸ்கா மறைநிகழ்ச்சிகளால் அவர்கள் தூய்மை பெற்று, வரவிருக்கும் உயிர்ப்பின் கொடையால் மாட்சியுறுவார்களாக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 63).

3 (மூன்றாம் திருப்பலி)

வருகைப் பல்லவி

-காண். உரோ 8:11 இறந்தோரிடமிருந்து இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுள், நம்முள் குடிகொண்டிருக்கும் ஆவியார் வழியாக, சாவுக்கு உரிய நம்
உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் ஒரே திருமகன் சாவை வென்று விண்ணுலகுக்குக் கடந்து செல்லச் செய்தீரே; அதனால் இறந்த உம் அடியார்கள் இம்மை வாழ்வுக்கு உரிய இறக்கும் தன்மைமீது வெற்றி கொண்டு தம்மைப் படைத்தவர் எனவும் மீட்பவர் எனவும் உம்மை முடிவின்றிக் கண்டுகளித்திட அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கிறிஸ்துவில் துயில்கொண்ட உம் அடியார்கள் அனைவருக்காகவும் 'நாங்கள் ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருளைக் கனிவுடன் ஏற்றருளும்; அதனால் ஒப்பற்ற இப்பலியின் வழியாக அவர்கள் சாவின் தளைகளிலிருந்து விடுபட்டு நிலைவாழ்வு பெறத் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

இறந்தோரின் தொடக்கவுரை (பக். 56 2 - 566).

திருவிருந்துப் பல்லவி

காண். பிலி 3:20-21 சாம்வக்கு உரிய நம் உடலை மாட்சிக்கு உரிய கம் தாழ்வுக்கு உரிய நம் உடல் ம-ககு உரிய தமது உடலின் சாயலாக உருமாற்றும் மீட்பரும் ஆண்டவ
ம் மீட்பரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவை நாம் எதிர்நோக்குவோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியை ஏற்றுக்கொண்டு, இறந்த உம் அடியார்கள் மீது உமது இரக்கத்தைப் பொழிவீராக; நீர் திருமுழுக்கின் அருளை வழங்கியுள்ள அவர்களுக்கு நிலையான மகிழ்ச்சியின் முழுநிறைவையும் அளிப்பீராக. எங்கள். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக்.632).

நவம்பர் 3

புனித மார்ட்டின் தெ போரஸ்: துறவி

புனிதர் பொது: துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித மார்ட்டினை அவரது தாழ்மையின் பாதையில் வழிநடத்தி விண்ணக மாட்சிக்கு இட்டுச் சென்றீரே; அவரது தலைசிறந்த எடுத்துக்காட்டை நாங்கள் இப்போது பின்பற்றவும் அதனால் அவரோடு விண்ணக மாட்சிக்கு உயர்த்தப்பெறவும் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

நவம்பர் 4

புனித சார்லஸ் பொரோமெயோ: ஆயர்

நினைவு

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக்.919).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, ஆயரான புனித சார்லசுக்கு நீர் நிறைவாக அளித்த மனநிலையை உம் மக்களுக்கும் அளித்துக் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது திரு அவை இடைவிடாமல் புதுப்பிக்கப்பெற்று, கிறிஸ்துவின் சாயலைத் தாங்கி, அவரை உலகுக்கு எடுத்துக்காட்டத் தகுதி பெறுவதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

'ஆண்டவரே, பனித சார்லசின் நினைவு நாளில் நாங்கள் உம் பீடத்தில் அர்ப்பணிக்கும் வெக்காணிக்கைகளைக் கண்ணோக்கியருளும்; அவர் விழிப்புடன் அருள்பணி ஆற்றவும் நற்பண்புகளில் சிறந்து விளங்கவும் நீர் செய்தது போல நாங்களும் இப்பலியின் ஆற்றலால் நற்செயல்களின் பயன்களில் செழித்தோங்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களைக் காத்தருளுமாறு உம்மை வேண்டுகின்றோம்: புனித சார்லசுக்கு எந்த மன வலிமை அவரது பணியில் நம்பிக்கையையும் பிறரன்பில் ஆர்வத்தையும் தந்ததோ அதே மன வலிமையை நாங்களும் அடைவோமாக. எங்கள்.

நவம்பர் 9

இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு
விழா

வருகைப் பல்லவி

காண். திவெ 21:2 புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன். தன் மண மகனுக்காகத் தன்னையே அணிசெய்து கொண்ட மண மகளைப் போல அது ஆயத்தமாய் இருந்தது.

அல்லது

காண். திவெ 21:3 இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உயிருள்ளவையும் தேர்ந்தெடுக்கப்பட்டவையுமான கற்களைக் கொண்டு உமது மாட்சிக்கு நிலையான இல்லத்தைத் தயாரித்துள்ளீர்; உமது திரு அவைக்கு நீர் அளித்துள்ள அருளின் ஆற்றலைப் பெருகச் செய்தருளும்: அதனால் உம்முடைய நம்பிக்கையாளர் விண்ணக எருசலேமைக் கட்டியெழுப்பி, என்றும் வளர்ச்சியுறச் செய்வார்களாக. உம்மோடு.

அல்லது

இறைவா, உமது திரு அவையை மணமகள் என அமைச்
யை மணமகள் என அழைக்கத் திருவுளம் கொண்டீரே; உமது பெயருக்கு ஊழியம் புரியும் மக்கள், உமக்க
சியம் மக்கள், உமக்கு அஞ்சி நடந்து, உம்மை அன்பு செய்து, உம்மைப் பின்பற்றி, ----விக்கப்பட்ட விண்ணகத்துக்கு வந்து சேரவும் அருள்வீராக, உம்மோடு. இத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை வரும்போது "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, ஒப்புக்கொடுக்கப்படும் காணிக்கையை நீர் ஏற்றுக்கொள்ள உம்மை மன்றாடுவோருக்கு நீர் இரங்கியருள வேண்டுகின்றோம்: அதனால் இங்கு அருளடையாளங்களின் ஆற்றலையும் எங்கள் வேண்டல்களின் பயன்களையும் பெறுவோமாக. எங்கள்.

தொடக்கவுரை: திரு அவை, கிறிஸ்துவின் மணமகள், தூய ஆவியாரது கோவிலின்

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

இறைவேண்டலின் வீட்டில்
வாரி வழங்கும் வள்ளலாக நீர் வீற்றிருக்கின்றீர்;
உமது முடிவில்லா அருள் உதவியால் கட்டியெழுப்பப்பட்ட
தூய ஆவியாரின் கோவிலாக எங்களை நிறைவு செய்கின்றீர்;
உமக்கு உகந்த மாட்சிமிக்க வாழ்வினால் இக்கோவிலை ஒளிரச் செய்வீராக.

காணப்படும் கட்டடங்களில் முன்குறிக்கப்படுகின்ற
கிறிஸ்துவின் மணமகளாகிய திரு அவையை
என்றென்றும் புனிதப்படுத்துகின்றீர்;
அதனால் அத்திரு அவை எண்ணற்ற மக்களைப் பெற்றத் தாயாக மகிழ்ந்தி,
உமது விண்ணக மாட்சியில் இடம் பெறச் செய்வீராக.

ஆகவே புனிதர், வானதூதர் அனைவரோடும்
நாங்கள் உம்மைப் புகழ்ந்தேத்தி முடிவின்றிச் சொல்வதாவது :

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

காண். 1 பேது 2:5 நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, தூய குருக்களின் கூட்டம் என
ஆவிக்குரிய இல்லமாகக் கட்டியெழுப்பப்படுவீர்களாக!

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, இவ்வுலகில் திகழும் உமது திரு அவை வழியாக எங்களுக்கு விண்ணக எருசலேம் முன்குறிக்கப்படத் திருவுளமானீரே: அதனால் இவ்வருளடையாளத்தில் பங்குகொள்ளும் நாங்கள் உமது அருளின் கோவிலாகக் கட்டப்படவும் உமது மாட்சி நிறைந்த இல்லிடத்துக்கு வந்து சேரவும் அருள்புரிவீராக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 631).


நவம்பர் 10

புனித பெரிய லியோ: திருத்தந்தை, மறைவல்லுநர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். சீஞா 45:30 ஆண்டவர் அவருடன் அமைதியின் உடன் படிக்கை செய்து கொண்டார். அவருக்குக் குருத்துவத்தின் மேன்மை என்றும் நிலைக்க
அவரைத் தலைவராக்கினார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, திருத்தூதர்கள் எனும் பாறைமீது உறுதியாகக் கட்டப்பட்ட உமது திரு அவையின்மேல் பாதாளத்தின் வாயில்கள் வெற்றிகொள்ள ஒருபோதும் நீர் அனுமதிப்பதில்லை ; இவ்வாறு திருத்தந்தை புனித லியோவின் பரிந்துரையால் உமது திரு அவை உண்மையில் நிலைத்து நின்று, நீடித்த அமைதியில் வளமை பெற அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளை ஏற்று, உமது திரு அவையைக் கனிவுடன் ஒளிரச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது மந்தையின் நல்வாழ்வு எங்கும் செழித்தோங்கவும் உமது வழிநடத்து தலால் அருள்நெறியாளர்கள் உமது பெயருக்கு ஏற்றவர்களாக விளங்கவும் செய்வீராக. எங் கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 16:16,18 பேதுரு இயேசுவிடம், "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் என்று உரைத்தார். அதற்கு இயேசு, "நீ பேதுரு: இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்,'' என்று மறுமொழி கூறினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித உணவால் ஊட்டம் பெற்ற உமது திரு அவையை நீரே உளம் கனிந்து வழிநடத்த உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அது உமது ஆற்றலால் நெறிப்படுத்தப்பட்டு உரிமை வாழ்வில் வளர்ச்சி பெறவும் சமய வாழ்வில் உறுதியுடன் நிலைத்து நிற்கவும் செய்வீராக. எங்கள்.

நவம்பர் 11

தூர் நகர்ப் புனித மார்ட்டின்: ஆயர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். 1 சாமு 2:35என் இதயத்துக்கும் ஆன்மாவுக்கும் ஏற்பச் செயல்படும் நம்பிக்கைக்கு
உரிய ஒரு குருவை நான் எனக்கு எழுப்புவேன், என்கிறார் ஆண்டவர்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஆயரான புனித மார்ட்டினின் வாழ்வாலும் சாவாலும் மாட்சியுற்ற நீர் எங்கள் இதயங்களில் உமது அருளின் வியத்தகு செயல்களைப் புதுப்பித்தருளும்; அதனால் சாவோ வாழ்வோ எதுவும் உமது அன்பிலிருந்து எங்களைப் பிரிக்காதிருக்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, புனித மார்ட்டினின் நினைவாக நாங்கள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: இவற்றின் வழியாக, வெற்றி தோல்விகளுக்கு இடையே எங்கள் வாழ்வு என்றும் வழிநடத்தப்படுவதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 25:40 என் சின்னஞ்சிறிய சகோதரர் களுள் ஒருவருக்கு நீ ங் க ள் செய்தபோதெல்லாம் எனக்கே செ ய் தீர்கள் என உறுதியாக உங் களுக்குச் சொல்கிறேன், என் கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, ஒற்றுமையின் அருளடையாளத்தால் ஊட்டம் பெற்ற நாங்கள் அனைத்திலும் உமது திருவுளத்துக்கு ஏற்றவாறு வாழச் செய்தருளும்; புனித மார்ட்டின் தம்மை முற்றிலும் உமக்குக் கையளித்தது போல நாங்களும் உமக்கே உரியவர்களாய் இருப்பதில் உண்மையிலே பெருமை கொள்வோமாக. எங்கள்.

நவம்பர் 12

புனித ஜோசபாத்: ஆயர், மறைச்சாட்சி
நினைவு

வருகைப் பல்லவி

ஆண்டவரின் உடன்படிக்கைக்கும் மூதாதையரின் சட்டங்களுக்கும் ஏற்ப, இறைவனின் புனிதர்கள் சகோதர அன்பில் நிலைத்து நின்றார்கள். ஏனெனில் ஒரே மனநிலையும் ஒரே நம்பிக்கையும் அவர்களிடம் என்றும் இருந்தன.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, தம் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கையளிக்க புனித ஜோசபாத்தை நிரப்பிய தூய ஆவியாரை உமது திரு அவையில் தூண்டியெழுப்ப உம்மை வேண்டுகின்றோம்: அப்புனிதரின் பரிந்துரையால் நாங்களும் அதே தூய ஆவியாரால் வலுப்பெற்று, எம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைத் துறக்க அஞ்சாதிருப்போமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

கனிவுமிக்க இறைவா, இக்காணிக்கைகள் மீது உமது ஆசியைப் பொழிந்தருளும்; புனித ஜோசபாத் இரத்தம் சிந்தி அறிக்கையிட்ட நம்பிக்கையில் எங்களையும் உறுதிப்படுத்துவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 10:39என் பொருட்டுத் தம் உயிரை இழப்பவர் அதை என்றும் காத்துக் கொள்வார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்விண்ணக விருந்து ---ளக்குத் துணிவும் அமைதியும் நிறைந்த உளப்பாங்கை அளிப்பதாக. ---கள் பனித ஜோசபாத்தின் எடுத்துக்காட்டால் தூண்டப்பெற்று. --கள் வாழ்வைத் திரு அவையின் மாண்புக்காகவும் ஒற்றுமைக்காகவும் மனம் உவந்து கையளிக்க அருள்வீராக. எங்கள்.
நவம்பர் 15 புனித பெரிய ஆல்பர்ட்: ஆயர், மறைவல்லுநர்

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) மறைவல்லுநர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஆயரான புனித ஆல்பர்ட் இவ்வுலக ஞானத்தையும் இறைநம்பிக்கையையும் இணைப்பதில் சிறந்து விளங்கச் செய்தீரே; அதனால் அவர் போதித்த படிப்பினைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் அறிவு வளர்ச்சி பெற்று, உம்மை ஆழ்ந்து அறிந்து அன்பு செய்யவும் எங்களுக்கு அருள் புரிவீராக. உம்மோடு.

நவம்பர் 16

ஸ்காட்லாந்து நாட்டுப் புனித மார்கரெட்

புனிதர் பொது: இரக்கப் பணி செய்தோர் (பக். 953).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஏழைகள் பால் கொண்ட தன்னிகரற்ற அன்பினால் புனித மார்கரெட்டை வியப்புக்கு உரியவராக விளங்கச் செய்தீரே; அவருடைய பரிந்துரையாலும் எடுத்துக்காட்டாலும் நாங்கள் உமது நன்மையின் சாயலாக மக்கள் நடுவில் விளங்கச் செய்வீராக. உம்மோடு.

புனித கெர்ட்ரூட்: கன்னி

கன்னியர் பொது (பக். 936) அல்லது புனிதர் பொது: அருள்சகோதரி ஒருவர் (பக். 949).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, கன்னியான புனித கெர்ட்ரூட்டின் இதயத்தில் உமக்கு உகந்த இல்லிடத்தைத் தயாரித்திருந்தீரே; இவ்வாறு அவருடைய பரிந்துரையால், இருள் நிறைந்த எங்கள் இதயத்தை இரக்கமுடன் ஒளிர்வித்து, நீர் எங்களுள் இருந்து செயலாற்றுகின்றீர் என்பதை மகிழ்ச்சியோடு கண்டுணரச் செய்வீராக. உம்மோடு.

நவம்பர் 17

அங்கேரி நாட்டுப் புனித எலிசபெத்

நினைவு புனிதர் பொது: இரக்கப் பணி செய்தோர் (பக். 953).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஏழைகளிடத்தில் இயேசுவைக் கண்டு போற்றப் புனித எலிசபெத்துக்கு வரம் அருளினீரே; அவருடைய பரிந்துரையால், நாங்கள் ஏழைகளுக்கும் துன்புறுவோருக்கும் இடையறாது அன்புப் பணி புரிய அருள்வீராக. உம்மோடு.


நவம்பர் 18

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு:
திருத்தூதர்கள்

வருகைப் பல்லவி

காண். திபா 44:17-18 அவர்களை நீர் உலகுக்கெலாம் இளவரசர் ஆக்கிடுவீர். வழிவழியாய் உம் பெயரை அவர்கள் நினைவுகூர்வார்கள். அதனால்
எல்லா இனத்தாரும் உம்மை என்றென்றும் வாழ்த்திடுவர்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருத்தூதர்களின் ஆதரவைத் தந்து, உமது திரு அவையைப் பாதுகாத்தருளும்; அவர்கள் வழியாக இறை அறிவின் தொடக்கத்தைப் பெற்றுக்கொண்ட திரு அவை, அவர்கள் வழியாகவே இறுதிவரை விண்ணக அருளின் வளர்ச்சியை அடைவதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் பணியின் காணிக்கையை ஒப்புக்கொடுத்து உமது கனிவை வேண்டுகின்றோம்: அதனால் பேதுரு, பவுல் எனும் திருத்தூதர்களின் பணியால் நாங்கள் பெற்றுக்கொண்ட உண்மை எங்கள் இதயங்களில் நிறைவாக நிலைபெறுவதாக. எங்கள். திருத்தூதர்களின் தொடக்கவுரை (பக். 548 - 549).

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 6:69,70 ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன; ஏனெனில் நீர் மெசியா, கடவுளின் மகன் என்று
நாங்கள் நம்புகிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவினால் ஊட்டம் பெற்ற உம் மக்கள் நாங்கள் பேதுரு, பவுல் எனும் திருத்தூதர்களின் நினைவுக்கொண்டாட்டத்தில் பேரின்பம் கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இத்திருத்தூதர்களுடைய பாதுகாவலால் வழிநடத்தப்பெறும் அருளை நாங்கள் பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.

நவம்பர் 21

புனித கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்

நினைவு புனித கன்னி மரியா பொது (பக். 886).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, புனிதமிக்க கன்னி மரியாவின் மாட்சிக்கு உரிய நினைவைக் கொண்டாடும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவரது பரிந்துரையால் நாங்கள் உமது அருளின் நிறைவிலிருந்து பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.


நவம்பர் 22

புனித செசிலியா: கன்னி, மறைச்சாட்சி
நினைவு

மறைசாட்சியர் பொது: கன்னி மறைச்சாட்சி ஒருவர் (பக். 914 அல்லது கன்னியர் பொது: கன்னி ஒருவர் (பக். 936).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித செசிலியாவின் ஆண்டுவிழாவைக் கொண்டாடி மகிழும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உம் அடியாராகிய அவரைப் பற்றி மரபு வழியாகச் சொல்லப்படுபவை நாங்கள் பின்பற்ற வேண்டிய எடுத்துக்காட்டுகளாகவும் உம் திருமகன் கிறிஸ்து தம் ஊழியர்களிடத்தில் ஆற்றும் அரிய செயல்களை அறிவிப்பவையாகவும் விளங்கச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


நவம்பர் 23

புனித முதலாம் கிளமெண்ட்: திருத்தந்தை, மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர் (பக். 905) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: திருத்தந்தை ஒருவர் (பக். 916).

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய புனிதர் அனைவரிடமும் விளங்கும் ஆற்றல் நீர் வியப்புக்கு உரியவர் என்பதைக் காட்டுகின்றது; உம் திருமகனின் அருள்பணியாளரும் மறைச்சாட்சியுமான புனித கிளமெண்ட் தாம் கொண்டாடிய மறைநிகழ்வைத் தம் சாட்சியத்தால் எண்பித்து, வாயால் போதித்ததைத் தம் செயலால் உறுதிப்படுத்தினார்; அவருடைய ஆண்டு நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் மகிழ்ந்திருக்க அருள்வீராக. உம்மோடு.

புனித கொலும்பன்: துறவு மடத்துத் தலைவர்

அருள்நெறியாளர்கள் பொது: மறைத்தூது பணியாளர்கள் (பக். 928) அல்லது புனிதர் பொது: துறவு மடத்துத் தலைவர் ஒருவர் (பக். 947).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, நற்செய்தியை அறிவிக்கும் பணியையும் துறவு மடத்து வாழ்வில் ஆர்வத்தையும் புனித கொலு ம்பனிடம் வியத்தகு முறையில் ஒன்றிணைத்திருந்தீரே; அவருடைய பரிந்துரையாலும் எடுத்துக்காட்டாலும் நாங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக உம்மையே தேடவும் நம்பிக்கையாளரின் எண்ணிக்கை பெருகச் செய்வதில் கருத்துள்ளவர்களாய் இருக்கவும் அருள்புரிவீராக. உம்மோடு.

நவம்பர் 24

புனிதர்கள் ஆண்ட்ரு டுங் லாக்: அருள்பணியாளர்,
தோழர்கள்: மறைச்சாட்சியர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். கலா 6:14; காண். 1கொரி 1:18 நாமோ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் பெருமை பாராட்ட மாட்டோம். ஏனெனில் சிலுவையின் வார்த்தை மீட்புப் பெற்றுள்ள நமக்கோ கடவுளின் வல்லமை.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, தந்தைமைக்கெல்லாம் ஊற்றும் தொடக்கமுமானவரே, மறைச்சாட்சியரான புனித ஆண்ட்ருவும் அவர் தோழர்களும் இரத்தம் சிந்தும் அளவுக்கு உம் திருமகனுடைய சிலுவையின் மீது பற்றுக்கொண்டிருக்கச் செய்தீரே; அவர்களுடைய பரிந்துரையால், பெயரிலும் வாழ்விலும் நாங்கள் உமது அன்பை எம் சகோதரர் சகோதரிகளிடையே பரப்பி, உம்மோடு. உம்முடைய பிள்ளைகளாக விளங்கும் ஆற்றல் பெற அருள்வீராக.

காணிக்கைமீது மன்றாட்டு

தூயவரான தந்தையே, பனித மறைச்சாட்சியரின் பாடுகளை வணக்கத்துடன் நினைவுகூர்ந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளை ஏற்றருளும்; எங்கள் வாழ்வில் ஏற்படும் இன்னல்களுக்கு நடுவில் நாங்கள் என்றும் உமக்கு உண்மை உள்ளவர்களாய் இருக்கவும், எங்களையே உமக்கு உகந்த பலிப்பொருளாகக் கையளிக்கவும் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 5:10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித மறைச்சாட்சியரின் நினைவுக் கொண்டாட்டத்திலே ஒரே அப்பத்தால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: நாங்கள் உமது அன்பில் ஒன்றிணைந்து பொறுமைக்கு உரிய நிலையான பரிசை அடையத் தகுதி பெறச் செய்வீராக. எங்கள்.



நவம்பர் 25

அலெக்சாந்திரியா நகர்ப் புனித கத்தரின்: கன்னி, மறைச்சாட்சி


மறைச்சாட்சியர் பொது: கன்னி மறைச்சாட்சி ஒருவர் (பக். 914) அல்லது கன்னியர் பொது : கன்னி ஒருவர் (பக். 936).

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கத்தரினாவைக் கன்னியாகவும் வீரமுடைய மறைச்சாட்சியாகவும் உம் மக்களுக்கு அளித்துள்ளீரே; அவரது பரிந்துரையால் நாங்கள் நிலையான நம்பிக்கையில் வலுப்பெற்று திரு அவையின் ஒற்றுமைக்காக ஆர்வத்துடன் உழைக்கச் செய்வீராக. உம்மோடு.

நவம்பர் 30

புனித அந்திரேயா: திருத்தூதர்
விழா

வருகைப் பல்லவி

காண். மத் 4:18-19ஆண்டவர் கலிலேயாக் கடலோரத்தில் பேதுரு, அந்திரேயா எனும் இரு சகோதரர்களைக் கண்டார்; என் பின்னே வாருங்கள், நான் உங்களை
மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று அவர்களை அழைத்தார். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, மாண்புக்கு உரிய உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: திருத்தூதரான புனித அந்திரேயா உமது திரு அவையின் போதகராகவும் வழிகாட்டியாகவும் விளங்கியது போல அவர் எங்களுக்காக உம் திருமுன் என்றும் பரிந்துரைப்பவராகவும் இருப்பாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, புனித அந்திரேயாவின் விழாவில் இக்காணிக்கைகளை உமக்கு அளிக்கின்றோம்; இவ்வாறு இவற்றை உமக்குப் படைப்பதால் நாங்கள் உமக்கு உகந்தவர்களாக மாறவும் இவற்றை நீர் ஏற்றுக்கொள்வதால் நாங்கள் புத்துயிர் பெறவும் செய்வீராக. எங்கள்.

திருத்தூதர்களின் தொடக்கவுரை (பக். 548 - 549).

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 1:41-42 கிறிஸ்து என்னும் மெசியாவை நாங்கள் கண்டோம் என்று அந்திரேயா தம்
சகோதரர் சீமோனிடம் கூறினார்; அவரை இயேசுவிடம் அழைத்து வந்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது திருவிருந்தில் பங்குகொள்வதால் நாங்கள் ஆற்றல் பெறுவோமாக; திருத்தூதரான புனித அந்திரேயாவின் எடுத்துக்காட்டால் நாங்கள் கிறிஸ்துவின் பாடுகளைத் தாங்கி அவரோடு மாட்சியில் வாழும் தகுதி பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 630).
==============28^ 8950 ^-----------


டிசம்பர் 3

புனித பிரான்சிஸ் சவேரியார்: அருள்பணியாளர்
இந்தியாவின் பாதுகாவலர்
விழா

வருகைப் பல்லவி

திபா 17:50; 21:23 உம் மக்களிடையே உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித பிரான்சிஸ் சவேரியாரின் படிப்பினை வழியாக எங்கள் நாட்டில் எண்ணற்ற மக்களை உம்பால் ஈர்த்துக் கொண்டீரே; அதனால் அவர்களின் உள்ளங்கள் நம்பிக்கைக்காக அதே ஆர்வத்தால் பற்றியெரியவும், புனிதத் திரு அவை தம் மக்கள் பெருகி வளர்வதைக் கண்டு எங்கும் மகிழ்ந்திருக்கவும் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித பிரான்சிஸ் சவேரியாரின் விழாவில் நாங்கள் கொண்டுவரும் காணிக்கைகளை ஏற்றருளும்; அவர் மனிதரை மீட்கும் ஆர்வத்தினால் தொலைதூர நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்; அவ்வாறே நாங்களும் நற்செய்திக்குப் பயனுள்ள முறையில் சான்று பகர்ந்து, எம் சகோதரர் சகோதரிகளோடு உம்மை நோக்கி ஆர்வமுடன் விரைந்து வருவோமாக. எங்கள்.

தொடக்கவுரை: இறைவாழ்வினுடைய புதிய ஊற்றின் அடையாளம்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் புனித பிரான்சிஸ் சவேரியாரின்
வியப்புக்கு உரிய நற்செய்தி அறிவிப்பால்
உமது திரு அவையை என்றும் புதிய ஆற்றலுடன்
பலன் தரும்படி உருவாக்கி,
உமது அன்பின் உறுதியான அடையாளமாக எங்களுக்கு அளித்தீர்;
எங்கள் நாட்டில் உள்ள திரு அவைக்காக
இறைவாழ்வினுடைய புதிய ஊற்று எழும்படியாகக்
கீழை நாடுகளில் நற்செய்தி அறிவிக்க அவரை அனுப்பினீர்;
அவரது மாபெரும் எடுத்துக்காட்டு
உமக்குச் சான்று பகர எங்களுக்குத் துணிவைத் தருகின்றது;
அவருடைய இடைவிடா இறைவேண்டல்கள்
நாங்கள் புரியும் எல்லாச் செயல்களிலும் எங்களை நிலைத்திருக்கச் செய்கின்றன.

ஆகவே ஆண்டவரே, வானதூதர், புனிதரோடு
நாங்களும் சேர்ந்து உமக்கு நன்றி கூறி,
ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

மத் 10:27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து
அறிவியுங்கள், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, புனித பிரான்சிஸ் சவேரியார் மனிதரை மீட்கும் ஆர்வத்தால் பற்றியெரியலானார்; நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவின் ஆற்றலால் எங்கள் உள்ளத்திலும் அன்புத் தீ பற்றியெரியச் செய்தருளும்: அதனால் எங்கள் அழைத்தலுக்கு ஏற்றவாறு என்றும் வாழ்ந்து, உமது அறுவடையில் நன்கு ஊழியம் புரிபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள பரிசை எங் கள். இப்புனிதரோடு சேர்ந்து நாங்களும் பெற்றுக்கொள்வோமாக.

சிறப்பு ஆசி

புனித பிரான்சிஸ் சவேரியாரின் படிப்பினையால்
நற்செய்தியின் ஒளியை உங்களுக்கு அளித்த கடவுள்,
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய கொடைகளோடு
நீங்கள் வளம் பெற அருள்கூர்வாராக.

பதில்: ஆமென்.

தந்தையின் தலைப்பேறானவரான இயேசு கிறிஸ்து,
நம்பிக்கைப் படிப்பினைகளால் நீங்கள் எப்போதும் ஊட்டம் பெற்று
நற்செயல்களில் உங்களை நிலைத்திருக்கச் செய்வாராக.

பதில்: ஆமென்.

உண்மையான நம்பிக்கையில் உங்களை ஒளிர்வித்த தூய ஆவியார்,
கிறிஸ்தவ வாழ்வாலும் விண்ணகக் கொடைகளாலும்
நீங்கள் வளரச் செய்வாராக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி
உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.


வாசகங்கள் :

வாசகம் 1 : எரே 1:4-8 (அ) 1 கொரி 9:16-19, 22- 23
பதிலுரைத் திருப்பாடல்: திபா 71 (70):1-5. 15-17

பதிலுரை (71:154) என் வாய் உமது நீதியை எடுத்துரைக்கும்.

அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா!
ஒளிரும் விண்மீன்களைப் போல நீங்கள் இவ்வுலகில் (காண். பிலி 2:15-16)
ஒளிர்வீர்கள்; ஏனெனில் நீங்கள் உலகிற்கு வாழ்வின்
வார்த்தையை அளிக்கிறீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி: மாற் 16:15- 20


டிசம்பர் 4

தமஸ்கு நகர்ப் புனித ஜான்: அருள்பணியாளர், மறைவல்லுநர்

அருள் நெறியாளர்கள் பொது: அருள் நெறியாளர் ஒருவர் (பக். 9 23) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, அருள்பணியாளரான புனித ஜானின் மன்றாட்டுகள் எங்களுக்குத் துணைபுரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர் சிறப்பாகக் கற்பித்த உண்மையான நம்பிக்கை எங்களுக்கு என்றும் ஒளியாகவும் ஆற்றலாகவும் விளங்கச் செய்வீராக. உம்மோடு.

டிசம்பர் 6

புனித நிக்கோலாஸ்: ஆயர்

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தைத் தாள்பணிந்து வேண்டுகின்றோம்: ஆயரான புனித நிக்கோலாசினுடைய பரிந்துரையின் உதவியால் நாங்கள் இடர்கள் அனைத்திலிருந்தும் பாதுகாக்கப்பெற்று மீட்பின் பாதையில் விரைந்து செல்ல அருள்வீராக. உம்மோடு.


டிசம்பர் 7

புனித அம்புரோஸ்: ஆயர், மறைவல்லுநர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். சீஞா 15:5 திரு அவை நடுவில் அவர் தமது வாய் திறந்தார்; ஆண்டவர் அவரை ஞானமும் அறிவுக்கூர்மையும் உள்ள ஆவியால் நிரப்பினார்;
மாட்சியின் மேலாடையை அவருக்கு அணிவித்தார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஆயரான புனித அம்புரோசைக் கத்தோலிக்க நம்பிக்கையைப் போதிப்பதில் வல்லு நராகவும் துணிவுடன் திருத்தூதுப் பணி புரிவதில் எடுத்துக்காட்டாகவும் விளங்கச் செய்தீரே; உமது திரு அவையை மனவுறுதியோடும் அறிவாற்றலோடும் வழிநடத்த உமது இதயத்துக்கு ஏற்ற பணியாளர்கள் தோன்றச் செய்வீராக. உம்மோடு

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, -ாய மறைநிகழ்வுகளைக் கொண்டாடும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உமது மாட்சியைப் பரப்பிட புனித அம்புரோசை இடையறாது ஒளிர்வித்தது போல, தூய ஆவியாருடைய நம்பிக்கையின் ஒளியால் எங்களை நிரப்புவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 1:2,3 ஆண்டவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் உரிய காலத்தில் அதன் கனி தருவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருவிருந்தின் ஆற்றலால் உறுதி அடைந்த நாங்கள் புனித அம்புரோசின் படிப்பினைகளால் பயன் பெறச் செய்வீராக; அதனால் நீர் காட்டும் வழியில் துணிவுடன் விரைந்து சென்று விண்ணக விருந்தைச் சுவைக்க நாங்கள் தகுதி பெறுவோமாக. எங்கள்.

==============3^ 8955 ^-----------


டிசம்பர் 8

புனித கன்னி மரியாவின் அமல உற்பவம்
பெருவிழா

வருகைப் பல்லவி

எசா 61:10 ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் அன்மா பூரிப்படையும்: ஏனெனில் நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போல விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார். நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, கன்னி மரியாவின் அமல உற்பவத்தின் வழியாக உம் திருமகனுக்கு உகந்த இல்லிடத்தை ஏற்பாடு செய்தீரே; இவ்வாறு உம் திருமகனுடைய இறப்பின் முன்விளைவாக மரியாவை மாசுகள் அனைத்திலிருந்தும் பாதுகாத்த நீர், அவரது பரிந்துரையால் நாங்களும் தூய்மை அடைந்து உம்மிடம் வந்து சேர அருள் புரிவீராக. உம்மோடு. "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கன்னி மரியாவின் அமல உற்பவப் பெருவிழாவில் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் மீட்பின் பலிப்பொருளை மனம் இரங்கி ஏற்றருளும்; அவரை மாசுகள் அனைத்திலிருந்தும் நீர் உமது அருளால் முன்னரே காப்பாற்றியது போல, அவரது பரிந்துரையால் நாங்கள் குற்றம் அனைத்திலிருந்தும் விடுதலை பெறச் செய்வீராக. எங்கள்.

தொடக்கவுரை: மரியா, திரு அவை பற்றிய மறையுண்மை

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

புனிதமிக்க கன்னி மரியாவைப்
பிறப்புநிலைப் பாவத்தின் மாசுகள் அனைத்திலிருந்தும் காப்பாற்றினீர்;
உமது நிறை அருளால் அவரை அணிசெய்து
உம் திருமகனுக்கு ஏற்ற அன்னையாக அவரை முன்னேற்பாடு செய்தீர்;
அம்மகனுடைய மண மகளாகிய மாசுமறுவற்ற எழில் மிகுந்த
திரு அவையின் பிறப்பை முன்னறிவித்தீர்;

ஏனெனில் புனிதமிக்க கன்னியே
எங்கள் பாவங்களைப் போக்கும் மாசற்ற செம்மறியான
உம் திருமகனை எங்களுக்குத் தருபவராகவும்
மற்ற எல்லாருக்கும் மேலாக
அக்கன்னியே உம் மக்களுக்காகப் பரிந்துரைப்பவராகவும்
புனித வாழ்வின் முன்மாதிரியாகவும் விளங்கச் செய்தீர்.

ஆகவே வானதூதர் திரளோடு ஒன்றுசேர்ந்து,
நாங்களும் உம்மைப் புகழ்ந்தேத்தி,
மகிழ்ச்சியுடன் அறிக்கையிட்டுச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

மரியே! உம்மைப் பற்றி, மாட்சிக்கு உரியவை சொல்லப்பட்டுள்ளன. ஏனெனில் நீதியின் கதிரவனும் எங்கள் கடவுளுமாகிய கிறிஸ்து
உம்மிடமிருந்தே தோன்றினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

'ஆண்டவரே எங்கள் இறைவா, புனித மரியாவின் உற்பவத்தில் அவரை மாசுகளிலிருந்து தனிப்பட்ட முறையில் காப்பாற்றினீரே; நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு 'அப்பாவக் காயங்களிலிருந்து எங்களுக்கு நலம் அளிப்பதாக. எங்கள். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 629).

டிசம்பர் 9

புனித ஜான் டியேகோ கெளற்லாற்றோயாற்சின்

புனிதர் பொது: புனிதர் ஒருவர் (பக்.945).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித ஜான் டியேகோ வழியாக உம் மக்களுக்குப் புனிதமிக்க கன்னி மரியாவின் அன்பை வெளிப்படுத்தினீரே; அவரது பரிந்துரையால், எங்கள் அன்னை குவாதலூப்பில் வழங்கிய படிப்பினைகளை நாங்கள் பின்பற்றி உமது திருவுளத்தை நிறைவேற்றுவதில் என்றும் நிலைத்திருப்போமாக. உம்மோடு.


டிசம்பர் 11

புனித முதலாம் தமசுஸ்: திருத்தந்தை

அருள்நெறியாளர்கள் பொது: திருத்தந்தை ஒருவர் (பக். 912)

திருக்குழும மன்றாட்டு

'ஆண்டவரே, திருத்தந்தை புனித தமசுஸ் உம் மறைச்சாட்சியருக்கு அன்பும் வணக்கமும் செலுத்தி வந்தார்; அதனால் அவர் வழிநின்று நாங்களும் உம் மறைச்சாட்சியரின் பேறுபயன்களை இடையறாது கொண்டாட அருள்புரிவீராக. உம்மோடு.

டிசம்பர் 12

குவாதலூப் நகர்ப் புனித கன்னி மரியா

புனித கன்னி மரியா பொது (பக். 886).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, இரக்கம் நிறைந்த தந்தையே, உம் திருமகனுடைய புனிதமிக்க ஒரே அன்னையின் பாதுகாப்பின் கீழ் உம் மக்களைக் கொண்டு வந்தீரே; இவ்வாறு குவாதலூப்பின் புனித கன்னியை வேண்டுகின்ற அனைவரும் மேலான, உயிருள்ள நம்பிக்கையோடு நீதியும் அமைதியும் உள்ள வழிகளில் மக்களின் முன்னேற்றத்தைத் தேடுவார்களாக. உம்மோடு.

டிசம்பர் 13

புனித லூசி: கன்னி, மறைச்சாட்சி
நினைவு

மறைசாாட்சியர் பொது: கன்னி மறைச்சாட்சி ஒருவர் (பக்.914) அல்லது கன்னியர் பொது: (பக். 936).

திருக்குழும் மன்றாட்டு ஆண்டவரே, கன்னியும் மறைச்சாட்சியுமான புனித லூசியின் மாட்சிக்கு உரிய பரிந்துரை எங்களுக்குப் புதிய இதயத்தைத் தந்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் அவரது விண்ணகப் பிறந்த நாளை இன்று கொண்டாடி நிலையானவற்றைப் பெற்றுக்கொள்ளச் செய்வீராக. உம்மோடு.

டிசம்பர் 14

சிலுவையின் புனித ஜான்: அருள்பணியாளர், மறைவல்லுநர்
நினைவு

வருகைப் பல்லவி

கலா 6:14 நானோ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் பெருமை பாராட்ட மாட்டேன். அவர் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில் உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும்
சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அருள்பணியாளரான புனித ஜான் முழுமையாகத் தம்மையே மறுத்து சிலுவையைச் சிறப்பாக அன்பு செய்ய அருள்கூர்ந்தீரே; அவரை நாங்கள் அனைவரும் தொடர்ந்து பின்பற்றி உமது விண்ணக மாட்சியைக் கண்டு மகிழ அங்கு வந்து சேர்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, புனித ஜானின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இவ்வாறு ஆண்டவருடைய பாடுகளின் மறைநிகழ்வுகளைக் கொண்டாடும் நாங்கள் அதற்கு ஏற்றவாறு வாழ வரம் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 16:24 என்னைப் பின்பற்ற விரும்புகிறவர் தம்மையே துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். என்கிறார் ஆண்டவர்.
கோல்பிங்வந்தியா

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, புனித ஜானின் வாழ்வில் சிலுவையின் மறைபொருள் வியத்தகு வகையில் ஒளிரச் செய்தீரே; அதனால் இப்பலியின் வழியாக நாங்கள் வலுப்பெற்று கிறிஸ்துவோடு உண்மையாகவே இணைந்திருக்கவும், திரு அவையில் அனைவரின் மீட்புக்காக உழைக்கவும் அருள்வீராக. எங்கள்.


டிசம்பர் 21

புனித பீட்டர் கனிசியுஸ்: அருள்பணியாளர், மறைவல்லுநர்

அருள்நெறியாளர்கள் பொது (பக். 916) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, கத்தோலிக்க நம்பிக்கையைப் பாதுகாக்க, அருள்பணியாளரான புனித பீட்டரை நற்பண்பாலும் அறிவாற்றலாலும் வலுப்படுத்தினீரே; உண்மையைத் தேடுவோர் அவருடைய பரிந்துரையால் உம்மையே கடவுள் எனக் கண்டு மகிழ்வதிலும் உம்மீது நம்பிக்கை கொண்ட மக்கள் உம்மை அறிக்கையிடுவதிலும் நிலைத்திருக்கச் செய்வீராக. உம்மோடு.


டிசம்பர் 23

கான்டி நகர்ப் புனித ஜான்: அருள்பணியாளர்

அருள்நெறியாளர்கள் பொது (பக். 916) அல்லது புனிதர் பொது: இரக்கப் பணி செய்தோர் (பக். 953).

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, கப்பணியாளரான புனித ஜானின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, புனிதர்களின் ஞானத்தில் நாங்கள் முன்னேற உம்மை வேண்டுகின்றோம்: அனைவருக்கும் நாங்கள் இரக்கம் காட்டி உமது மன்னிப்பைப் பெறச் செய்வீராக. உம்மோடு.

டிசம்பர் 26

புனித ஸ்தேவான்: முதல் மறைச்சாட்சி
விழா

வருகைப் பல்லவி

மறைச்சாட்சியரின் அணியில் முதல் இடம் வகிக்கும் புனித ஸ்தேவானுக்கு விண்ணகத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. எனவே அவர் முடிசூடி விண்ணகத்தில் வெற்றி விழாக் கொண்டாடுகின்றார்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, தம்மைத் துன்புறுத்துவோருக்காகவும் மன்றாடிய புனித ஸ்தேவானுடைய விண்ணகப் பிறப்பைக் கொண்டாடும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இன்று நாங்கள் நினைவுகூரும் அவரது எடுத்துக்காட்டைப் பின்பற்றி பகைவருக்கும் அன்பு காட்டக் கற்றுக்கொள்வோமாக. உம்மோடு.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 - 521).

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மறைச்சாட்சியான புனித ஸ்தேவானின் மாட்சிக்கு உரிய நினைவுக்கொண்டாட்டத்தில் உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இன்று இறைப்பற்றுடன் கொண்டுவரும் பலிப்பொருள்கள் உமக்கு உகந்தனவாய் இருப்பனவாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திப் 7:58 ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளம் என்று கூறி வேண்டிய ஸ்தேவான் மீது கல் எறிந்தனர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் பிறப்பால் எங்களை மீட்டு, மறைச்சாட்சி ஸ்தேவானின் விழாவில் எங்களை இன்புறச் செய்கின்றீரே. நீர் எங்களுக்காகப் புரியும் எண்ணற்ற இரக்கச் செயல்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்த அருள்வீராக. எங்கள்.

டிசம்பர் 27

புனித யோவான்: திருத்தூதர், நற்செய்தியாளர்
விழா

வருகைப் பல்லவி

இரவு உணவு வேளை யில் ஆண்டவரின் மார்புப் பக்க மாய்ச் சாய்ந்திருந்த யோவான் இவரே; விண்ணக மறைபொருள் அப்புனித திருத்தூதருக்கு வெளிப்படுத்தப்பட்டது. வாழ்வு அளிக்கும் வார்த்தைகளை உலகெங்கும் பரவச் செய்தவரும் இவரே.

அல்லது

காண். சீஞா 15:5 திரு அவை நடுவில் அவர் தமது வாய் திறந்தார்; ஆண்டவர் அவரை ஞானமும் அறிவுக்கூர்மையும் உள்ள ஆவியால் நிரப்பினார்;
மாட்சியின் மேலாடையை அவருக்கு அணிவித்தார்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, திருத்தூதரான புனித யோவான் வழியாக உமது வார்த்தையின் மறையுண்மைகளை எங்களுக்கு வெளிப்படுத்தினீரே; அவர் எங்களுக்குச் சிறந்த முறையில் கற்பித்த உண்மைகளை நாங்கள் தகுந்த அறிவுத் திறனுடன் புரிந்துகொள்ள எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளை ஏற்றுப் புனிதப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: அதனால் திருவிருந்து எனும் ஊற்றிலிருந்து உம் திருத்தூதர் யோவானுக்கு நீர் வெளிப்படுத்திய நிலைவாழ்வு தரும் வார்த்தையின் மறைபொருளை நாங்களும் இவ்விருந்தின் வழியாகப் புரிந்து கொள்வோமாக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 - 521).

திருவிருந்துப் பல்லவி

யோவா 1:14,16 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடி கொண்டார்; அவரது
நிறைவிலிருந்து நாம் அனைத்தையும் பெற்றுக்கொண்டோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, மனிதர் ஆன வார்த்தையைத் திருத்தூதரான புனித யோவான் போதித்தார்; நாங்கள் கொண்டாடிய இம்மறைபொருள் வழியாக அவ்வார்த்தை எங்களிடையே என்றும் குடிகொள்வாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

டிசம்பர் 28

புனித மாசில்லாக் குழந்தைகள்: மறைச்சாட்சியர்
விழா

வருகைப் பல்லவி

மாசில்லாக் குழந்தைகள் கிறிஸ்துவுக்காகக் கொல்லப்பட்டார்கள். அவர்கள் மாசற்ற செம்மறியைப் பின்பற்றுகிறார்கள். 'ஆண்டவரே,
உமக்கு மாட்சி' என என்றும் அவர்கள் உரைக்கின்றனர். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, மறைச்சாட்சியரான மாசில்லாக் குழந்தைகள் உமது புகழை வாய்மொழியால் அல்ல, தங்கள் இறப்பினால் எடுத்துரைத்தார்கள்; நாங்கள் நாவினால் அறிக்கையிடும் நம்பிக்கை எங்கள் செயலிலும் வாழ்விலும் விளங்க அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, பற்றன்பள்ள உம் அடியார்களின் காணிக்கைகளை ஏற்றருள் உம்மை வேண்டுகின்றோம்: இவற்றால் அறியாப் பருவத்தினரையும் உமக்கு ஏற்புடையவராகச் செய்கின்ற நீர், பக்தியுடன் பலி ஒப்புக்கொடுக்கும் எங்களையும் தூய்மைப்படுத்துவீராக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 - 521).

திருவிருந்துப் பல்லவி

காண். திவெ 14:4 கடவுளுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனிதக் குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள் ஆட்டுக்குட்டி
சென்ற இடமெங்கும் அதைப் பின்தொடர்ந்தார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மாசில்லாக் குழந்தைகள் உம் திருமகனை வாய்மொழியால் அறிக்கையிடும் முன்னரே, அவரது பிறப்பை முன்னிட்டு விண்ணக அருளால் முடிசூட்டப்பெற்றார்கள்; அவர்களின் விழாவின்போது உமது திருவிருந்தில் பங்குபெற்ற உம் நம்பிக்கையாளராகிய எங்களுக்கு மீட்பை நிறைவாய் அளிப்பீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


டிசம்பர் 29

புனித தாமஸ் பெக்கெட்: ஆயர், மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர் (பக். 905) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, நீதிக்காகத் தம் உயிரைத் துணிவுடன் கொடுக்கும் வரத்தை மறைச்சாட்சியான புனித தாமசுக்கு அருளினீரே; அவருடைய பரிந்துரையால் நாங்களும் இவ்வுலகில் கிறிஸ்துவுக்காக எங்கள் உயிரை இழக்கவும் மறுவுலகில் அதைக் கண்டடையவும் அருள்வீராக. உம்மோடு .

டிசம்பர் 31

புனித முதலாம் சில்வெஸ்டர்: திருத்தந்தை

அருள்நெறியாளர்கள் பொது: திருத்தந்தை ஒருவர் (பக். 916).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தந்தை புனித சில்வெஸ்டரின் பரிந்துரையால் வலிமை பெற்ற உம் மக்களுக்கு உதவி அளிப்பீராக; நாங்கள் இம்மையில் உமது வழிகாட்டுதலின்படி வாழ்ந்து முடிவில்லா வாழ்வை விண்ணுலகில் மகிழ்ச்சியுடன் கண்டடைய எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

=============↑ பக்கம் 875

====================

image