image

 

புனிதருக்கு உரிய சிறப்புப் பகுதி

செப்டம்பர்
செப்டம்பர் 3 பனிதப் பெரிய கிரகோரி: திருத்தந்தை, மறைவல்லுநர்
நினைவு

வருகைப் பல்லவி

பேதுருவின் அரியணைக்கு உயர்த்தப்பட்ட புனித கிரகோரி ஆண்டவரின் திருமுகத்தை என்றும் தேடினார்; அவருடைய அன்பின் சிறப்பில் வாழ்ந்தார்.

திருக்குழும மன்றாட்டு

உம் மக்களை இரக்கத்துடன் கண்காணித்து அன்புடன் ஆண்டுவரும் இறைவா, திருத்தந்தை புனித கிரகோரியின் பரிந்துரையால் நீர் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருப்போருக்கு ஞானத்தின் ஆவியை அளித்தருளும்; அதனால் புனித மக்களின் வளர்ச்சியே அருள்நெறியாளர்களின் நிலையான மகிழ்ச்சியாய் அமைவதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருப்பலியின் வழியாக அனைத்துலகின் பாவங்களை மன்னிக்கத் திருவுளம் கொண்ட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புனித கிரகோரியின் விழாவில் நாங்கள் கொண்டுவரும் காணிக்கை எங்களுக்குப் பயன் அளிக்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

லூக் 12:42 நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான ஊழியரை ஆண்டவர் தம் வீட்டுக்குத் தலைவராக ஏற்படுத்தினார்; அதனால் அவர்
அவர்களுக்கு வேளா வேளை படியளப்பார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உயிருள்ள அப்பமாகிய கிறிஸ்துவினால் ஊட்டம் அளித்தவர்களுக்கு ஆசிரியராகிய கிறிஸ்துவினால் முழுமையாகக் கற்றுத் தருவீராக; அதனால் புனித கிரகோரியின் விழாவில் அவர்கள் உமது உண்மையை அறிந்து அதை அன்பில் செயல்படுத்துவார்களாக, எங்கள்.

 

செப்டம்பர் 5
கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா: கன்னி

புனிதர் பொது: இரக்கப் பணி செய்தோர் (பக். 953), அல்லது கன்னியர் பொது (பக். 936).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உலவையில் தாகத்தோடு தொங்கிய உம் திருமகனின் அன்புக்கு -மை எளியோர் மீது காட்டிய பேரன்பின் வழியாகப் பதிலன்பு காட்டக் கன்னியான புனித தெரசாவை நீர் அழைத்தீரே; துன்புறும் எங்கள் சகோதரர் சகோதரிகளில் கிறிஸ்துவுக்குப் பணி புரிய அவரது பரிந்துரையின் வழியாக எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


செப்டம்பர் 8

புனித கன்னி மரியாவினுடைய பிறப்பு
விழா

வருகைப் பல்லவி

புனித கன்னி மரியாவினுடைய பிறப்பு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்; ஏனெனில் அவரிடமிருந்து நீதியின்
கதிரவனாகிய நம் கடவுள் கிறிஸ்து தோன்றினார்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, புனித கன்னி மரியா தம் திருமகனைப் பெற்றெடுத்தது எங்கள் மீட்பின் தொடக்கமாய் இருக்கச் செய்தீரே; அந்த அன்னையின் பிறப்பு விழாவில் உம் அடியார்களாகிய எங்களுக்கு விண்ணக அருள்கொடைகளை ஈந்து நாங்கள் அமைதியில் வளரச் செய்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மனிதர் ஆன உம் ஒரே திருமகன் எங்களை ஆதரிப்பாராக; கன்னியிடமிருந்து பிறந்த அவர் தம் தாயின் கன்னிமைக்குப் பழுதின்றி அதைப் புனிதப்படுத்தினார்; அவர் எங்கள் பாவங்களைப் போக்கி, எங்கள் காணிக்கையை உமக்கு ஏற்றதாய் இருக்கச் செய்வாராக. எங்கள்.

அல்லது

ஆண்டவரே, புனித கன்னி மரியாவினுடைய பிறப்பு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாங்கள் எங்கள் காணிக்கைகளை உமக்கு அளித்து உம்மை வேண்டுகின்றோம்: அந்தக் கன்னியிடமிருந்து மனிதராகப் பிறக்கத் திருவுளம் கொண்ட உம் திருமகன் எங்களுக்கு உதவுவாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை (பிறப்பு விழாவில்), பக். 546 அல்லது II, பக். 547.

திருவிருந்துப் பல்லவி

எசா 7:14; மத் 1:21 இதோ, கன்னி ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவர் தம் மக்களை
அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, திரு உணவால் ஊட்டம் பெற்றுள்ள உமது திரு அவை அக்களிப்பதாக; அனைத்துலகின் எதிர்நோக்காகவும் மீட்பின் விடியலாகவும் விளங்கிய புனித கன்னி மரியாவினுடைய பிறப்பில் அத்திரு அவை மகிழ்வதாக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 629).

செப்டம்பர் 9

புனித பீட்டர் கிளாவர்: அருள்பணியாளர்

அருள் நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் தருவார் (பக். 923) அல்லது புனிதா ( 14 ) இரக்கப் பணி செய்தோர் (பக். 953).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, பனித பீட்டர் கிளாவரை ஊழியர்களின் ஊழியராக விளங்கச் செய்து வியத்தகு அன்புப் பணியிலும் பொறுமையிலும் அவரை உறுதிப்படுத்தினீரே; அவருடைய பரிந்துரையால் நாங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவற்றையே நாடி, பிறரன்புப் பணிகளில் உண்மையுடன் ஈடுபடச் செய்வீராக. உம்மோடு.

செப்டம்பர் 12

மரியாவின் தூய்மைமிகு பெயர்

வருகைப் பல்லவி

காண். யூதி 13:18-19 கன்னி மரியே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட நீர் ஆண்டவராகிய உன்னத கடவுளின் ஆசி பெற்றவர்; ஏனெனில் உமது புகழ் மாந்தரின் வாயிலிருந்து ஒருபோதும் நீங்காவண்ணம் அவர் உமது பெயரைப் பெரிதும் உயர்த்தியுள்ளார். |

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, புனித கன்னி மரியாவின் மாட்சிக்கு உரிய பெயரைக் கொண்டாடி மகிழும் நாங்கள் அனைவரும் உம்மை வேண்டுகின்றோம்: அந்த அன்னை உமது இரக்கத்தின் கொடைகளை அனைவருக்கும் பெற்றுத் தருவாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, என்றும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையால் எங்கள் காணிக்கைகள் உமக்கு ஏற்றவை ஆகும்படி உம்மை வேண்டுகின்றோம்: அவருடைய பெயரை வணங்கும் நாங்கள் உமது மாண்புக்கு உரியவர்கள் ஆவோமாக. எங்கள்.
காண். லூக் 1:48

திருவிருந்துப் பல்லவி

எல்லாத் தலைமுறையினரும் என்னைப்
எனபர்; ஏனெனில் கடவுள் அடிமையின் தாழ் நிலையைக் கண்ணோக்கினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இறை அன்னையாகிய மரியாவின் பரிந்துரையால் உமது ஆசியின் அருளை நாங்கள் பெற்றுக்கொள்வோமாக; பதனால் மரியாவின் பெயரை வணங்கிக் கொண்டாடும் நாங்கள் அதனால் ம அவருடைய உதவியை எல்லாத் தேவைகளிலும் கண்டடைவோமாக. எங்கள்.

செப்டம்பர் 13

புனித ஜான் கிறிசோஸ்தோம்: ஆயர், மறைவல்லுநர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். தானி 12:3ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண் மீன்களைப் போலவும்
என்றென்றும் முடிவில்லாக் காலத்துக்கும் ஒளி வீசித் திகழ்வர்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மை நம்பினோரின் ஆற்றலானவரே, ஆயரான புனித ஜான் கிறிசோஸ்தோம் வியத்தகு சொல்வன்மையாலும் துன்பம் தாங்கும் மனத்திடனாலும் சிறந்து விளங்கத் திருவுள மானீரே; நாங்கள் அவரது போதனையால் நல்லறிவும் அவரது தளராத பொறுமையின் எடுத்துக்காட்டால் மன உறுதியும் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, புனித ஜான் கிறிசோஸ்தோ மின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் உளம் கனிந்து செலுத்தும் பலி உமக்கு உகந்ததாய் இருப்பதாக; அவரது அறிவுரைப்படி, எங்களையே முழுமையாக உமக்கு அளித்து, உம்மைப் புகழ்ந்தேத்தச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். 1 கொரி 1:23-24 நா ங் கள் சி லு வை யில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்று கிறோம். கிறிஸ்து கடவுளின் வல்ல ைம யும் கடவுளின் ஞான மு மாய் இருக்கிறார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, புனித ஜான் கிறிசோஸ்தோமின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் உட்கொண்ட இத்திருவிருந்து உமது அன்பில் எங்களை உறுதிப்படுத்துவதாக; நாங்கள் உமது உண்மையை அறிக்கையிடுவதில் உறுதி உள்ளவர்களாய் விளங்கச் செய்வதாக. எங்கள்.

செப்டம்பர் 14

திருச்சிலுவையின் மாட்சி
விழா

வருகைப் பல்லவி

காண். கலா 6:14 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை பாராட்ட வேண்டும். அவரிலேதான் நமக்கு மீட்பும் வாழ்வும் உயிர்த்தெழுதலும் உண்டு. அவர் வழியாகவே நாம் மீட்கப்பெற்றோம்; விடுதலை அடைந்தோம்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, மனிதர் அனைவரின் மீட்புக்காக உம் ஒரே திருமகன் சிலுவையை ஏற்கத் திருவுளமானீரே; இவ்வாறு அச்சிலுவையின் மறைபொருளை இவ்வுலகில் அறிந்திருக்கின்ற நாங்கள் அதன் மீட்பின் பயனை விண்ணுலகில் பரிசாகப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெற அருள்புரிவீராக. உம்மோடு.

இத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை அன்று வரும்போது "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, சிலுவைப் பீடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கை அனைத்துலகப் பாவங்களையும் போக்கியது; இப்பீடத்தில் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை குற்றங்கள் அனைத்திலிருந்தும் எங்களைக் கழுவித் தாய்மைப்படுத்த அருள்புரிவீராக. எங்கள்.

தொடக்கவுரை: மாட்சிமிகு சிலுவையின் வெற்றி,

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
மனிதர் அனைவரும் சிலுவை மரத்தால்
மீட்பு அடைய வேண்டும் என நியமித்தீர்.
இவ்வாறு எதிலிருந்து சாவு தோன்றியதோ
அதிலிருந்து வாழ்வு புத்துயிர் பெறவும்,
மரத்தினால் வெற்றி கண்டோர் காத்தினாலேயே தோல்வி காணவும் வேண்டும் என இருந்தது.

அவர் வழியாகவே உமது மாண்பை வானதூதர் புகழ்கின்றனர்;
தலைமை தாங்குவோர் உம்மை வழிபடுகின்றனர்;
அதிகாரம் செலுத்துவோர் உம் திருமுன் நடுங்குகின்றனர்;
வானங்களும் அவற்றில் உள்ள ஆற்றல்களும் சேராபீன்களும்
ஒன்றுகூடி அக்களித்துக் கொண்டாடுகின்றனர்.

அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து சொல்வதாவது:

தூயவர்.

'ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை 1-ஐயும் பயன்படுத்தலாம் (பக். 527).

திருவிருந்துப் பல்லவி

யோவா 12:32 நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும்
என்பால் ஈர்த்துக் கொள்வேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, உமது புனித உணவால் ஊட்டம் பெற்றுள்ள நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் வாழ்வு தரும் சிலுவை மரத்தால் நீர் மீட்டருளிய எங்களை உயிர்ப்பின் மாட்சிக்கு அழைத்துச் செல்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.


செப்டம்பர் 15

புனித மரியாவின் துயரங்கள்
நினைவு

வருகைப் பல்லவி

காண். லூக் 2:34-35சிமியோன் மரியாவை நோக்கிக் கூறினார்: இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, சிலுவையில் உயர்த்தப்பட்ட உம் திருமகனோடு அவருடைய அன்னையும் அருகில் இருந்து துன்புறத் திருவுளமானீரே; உமது திரு அவை மரியாவோடு கிறிஸ்துவின் பாடுகளில் பங்கேற்பதால் அவருடைய உயிர்ப்பிலும் பங்கேற்கத் தகுதி பெறுவதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, இயேசுவின் சிலுவை அருகில் நின்ற புனித கன்னி மரியாவை இறைப்பற்றுள்ள அன்னையாக எங்களுக்குக் கனிவுடன் வழங்கினீரே; அந்தக் கன்னி மரியாவின் விழாவில் நாங்கள் அளிக்கும் வேண்டல்களையும் பலிப்பொருள்களையும் உமது பெயரின் மாட்சிக்காக ஏற்றுக்கொள்வீராக. எங்கள். 'புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1 (விழா நாளில்), பக். 546 அல்லது 11, பக். 547.

திருவிருந்துப் பல்லவி

காண். 1 பேது 4:13 கிறிஸ்து வின் துன்பங்களில் நீங்கள் பங்குகொள்வதில் மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளை யில்
இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலையான மீட்பின் அருளடையாளங்களைப் பெற்றுக்கொண்ட நாம், உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: புனித கன்னி மரியாவின் பாடுகளை நினைவுகூரும் நாங்கள், கிறிஸ்து திரு அவைக்காக மேலும் படவேண்டிய வேதனையை எங்களில் நிறைவு செய்வோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

செப்டம்பர் 16

புனிதர்கள் கொர்னேலியுஸ்: திருத்தந்தை; சிப்பிரியன்: ஆயர், மறைச்சாட்சியர்
நினைவு

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர் (பக். 898) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அயரா விழிப்புள்ள ஆயர்களாகவும், வீரமிகு மறைச்சாட்சியராகவும் புனிதர்களான கொர்னேலியுஸ், சிப்பிரியன் ஆகியோரை மக்களுக்கு அளித்துள்ளீரே; இவ்வாறு அவர்களுடைய பரிந்துரையால் நாங்கள் நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்து நிற்கவும் திரு அவையின் ஒற்றுமைக்காக ஈடுபாட்டுடன் உழைக்கவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மறைச்சாட்சியரான உம் புனிதர்களுடைய பாடுகளின் நினைவாக உம் மக்களின் காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவை கொர்னேலியுஸ், சிப்பிரியன் எனும் புனிதர்களுக்கு மறைத் துன்புறுத்தலின்போது மன வலிமையை அளித்தது போல எங்களுக்கும் எதிர்ப்புகளின் நடுவில் நிலையான மனத்திடனை அளிப்பனவாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருவிருந்தில் பங்குபெற்ற நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: மறைச்சாட்சியரான கொர்னேலியுஸ், சிப்பிரியன் எனும் புனிதர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நாங்கள் உம் ஆவியாரின் வலிமையால் உறுதி பெற்று நற்செய்தியின் உண்மைக்குச் சான்று பகர்வோமாக. எங்கள்.


செப்டம்பர் 17
புனித ராபெர்ட் பெல்லார்மின்: ஆயர், மறைவல்லுநர்


அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது திரு அவையின் நம்பிக்கையை நிலைநாட்ட ஆயரான புனித ராபெர்ட் பெல்லார்மினை வியத்தகு அறிவாற்றலாலும் நற்பண்புகளாலும் அணிசெய்தீரே; உம்முடைய மக்களாகிய நாங்கள் அவரது பரிந்துரையால் அதே நம்பிக்கையின் முழுமையில் என்றும் பேரின்பம் கொள்ளச் செய்வீராக. உம்மோடு.

செப்டம்பர் 19
புனித ஜனுவாரியுஸ்: ஆயர், மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர் (பக். 905) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, மறைச்சாட்சியான புனித ஜனுவாரியுசின் நினைவைக் கொண்டாட எங்களுக்கு வாய்ப்பளிக்கின்றீரே; நிலையான பேற்றினில் அவரோடு தோழமை கொண்டு மகிழ எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

செப்டம்பர் 20
புனிதர்கள் ஆண்ட்ரு கிம் தே கோன்: அருள்பணியாளர்;
பால் சோங் காசாங்சும் தோழர்களும்: மறைச்சாட்சியர்
நினைவு

வருகைப் பல்லவி

சிகர்களான மறைச்சாட்சியரின் இரத்தம் கிறிஸ்துவுக்காக மண்ணில் சிந்தப்பட்டது. எனவே அவர்கள் நிலையான பரிசைப் பெற்றார்கள்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்முடைய சொந்த மக்கள் உலகம் எங்கும் பலுகிப் பெருகத் திருவுளமானீரே; மறைச்சாட்சியரான புனித ஆண்ட்ரூ , அவருடைய தோழர்கள் ஆகியோரின் இரத்தம், மிக அதிகமான கிறிஸ்தவர்களைத் தோன்றச் செய்யும் வித்தாகும்படி செய்தீர்; அவர்களுடைய உதவியால் வலுப்பெற்ற நாங்கள் அவர்களுடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றித் தொடர்ந்து வளர்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் மக்கள் கொண்டுவரும் காணிக்கையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; புனித மறைச்சாட்சியரின் பரிந்துரையால் அனைத்துலகின் மீட்புக்காக எங்களையே உமக்கு உகந்த பலியாக ஏற்றுக்கொள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 10:32 மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள் பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும்
ஏற்றுக்கொள்வேன், என் கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித மறைச்சாட்சியரின் விழாவில் ஆற்றல் அளிக்கும் உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: அதனால் கிறிஸ்துவில் பற்றுறுதியுடன் நாங்கள் இணைந்திருந்து, திரு அவையில் அனைவரின் மீட்புக்காக உழைப்போமாக, எங்கள்.


செப்டம்பர் 21

புனித மத்தேயு: திருத்தூதர், நற்செய்தியாளர்
விழா

வருகைப் பல்லவி

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாருக்கும் போதித்துத் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும்
அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள், என்கிறார் ஆண்டவர். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, வரிதண்டு வோரான புனித மத்தேயுவைச் சொல்லற்கரிய உமது இரக்கத்தினால் திருத்தூதராகத் தேர்ந்தெடுத்தீரே; அவருடைய எடுத்துக்காட்டாலும் பரிந்துரையாலும் வலுப்பெற்ற நாங்கள் உம்மைப் பின்பற்றி, உம்மையே உறுதியாய்ப் பற்றிக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித மத்தேயுவின் விழாவைக் கொண்டாடும் நாங்கள் எம் வேண்டல்களையும் பலிப்பொருள்களையும் உம்மிடம் கொண்டுவந்து, பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் திருத்தூதர்களின் போதனையால் நீர் வளப்படுத்திய நம்பிக்கையில் உமது திரு அவையைக் கனிவுடன் கண்ணோக்குவீராக. எங்கள்.

திருத்தூதர்களின் தொடக்கவுரை (பக். 548 - 549).

திருவிருந்துப் பல்லவி

மத் 9:13 நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்,
என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித மத்தேயு தமது இல்லத்தில் மீட்பரை விருந்தினராக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்; மீட்பு அளிக்கும் அம்மகிழ்ச்சியில் பங்குபெற்ற நாங்கள், நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மீட்புக்கு அழைக்க வந்த கிறிஸ்துவின் திரு உணவால் என்றும் புத்துயிர் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 630),

 


செப்டம்பர் 23
பெட்ரெல்சினா நகர்ப் புனித பியோ: அருள்பணியாளர்
நினைவு

எள்நெறியாளர் ஒருவர் (பக. 923), அல்லது புனிதர் பொது:
அருள்நெறியாளர்கள் பொது 'துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனின் பாடுகளில் பங்கேற்கும் பேற்றைத் தனிப்பட்ட அருளால் அருள்பணியாளரான புனித பியோவுக்கு வழங்கி, அவரது பணியால் உமது இரக்கத்தின் வியத்தகு செயல்களை மீண்டும் நிகழ்த்தினீரே; அவரது பரிந்துரையால் கிறிஸ்துவின் துன்பங்களில் நாங்கள் என்றும் பங்குபெற்று . உயிர்ப்பின் மாட்சிக்கு மகிழ்ச்சியுடன் வந்து சேர்வோமாக. உம்மோடு.


செப்டம்பர் 26

புனிதர்கள் கோஸ்மாஸ், தமியான்: மறைச்சாட்சியர்

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர் (பக். 898).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, நிலையான மாட்சியால் நீர் அணிசெய்த உம்முடைய புனிதர்கள் கோஸ்மாஸ், தமியான் ஆகியோரின் நினைவு நாளை நாங்கள் கொண்டாடுவதால் நீர் மாட்சி பெறுவீராக; உமது சொல்லற்கரிய பராமரிப்பினால் நீர் எங்களுக்கு உதவி புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய நேர்மையாளர்களின் உயர் மதிப்புள்ள இறப்பினை நினைவுகூர்ந்து, மறைச்சாட்சியத்தின் ஒரே ஊற்றாகிய இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுப்போமாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

'ஆண்டவரே, உமது கொடையை எங்களுள் பாதுகாத்தருளும்; மறைச்சாட்சியரான கோஸ்மாஸ், தமியான் எனும் புனிதர்களின் நினைவுக்கொண்டாட்டத்தில் ம்மிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட திரு உணவு எங்களுக்கு மீட்பையும் அமைதியையும் அளிப்பதாக. எங்கள்.

செப்டம்பர் 27

புனித வின்சென்ட் தெ பால்: அருள்பணியாளர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். லூக் 4:18 ஆண்டவருடைய ஆவி என் மேல் உள்ளது ; ஏனெனில் அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும் நொறுங்குண்ட உள்ளத்தை நல மாக்கவும் என்னை அனுப்பினார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஏழைகளின் நலனைக் காக்கவும் அருள்பணியாளர்களை உருவாக்கவும் அருள்பணியாளரான வின்சென்ட் தெ பால் எனும் புனிதரைத் திருத்தூதருக்கு உரிய நற்பண்புகளால் நிரப்பினீரே; இவ்வாறு நாங்கள் அவருடைய உள்ளுணர்வால் நிரப்பப்பெற்று அவர் அன்பு செய்ததை நாங்கள் அன்பு செய்யவும் அவர் கற்பித்ததை நாங்கள் கடைப்பிடிக்கவும் அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, புனித வின்சென்ட் தாம் வழிபாட்டில் கொண்டாடிய மறைநிகழ்வுகளுக்கு ஏற்றவாறு வாழச் செய்தீரே; இத்திருப்பலியின் ஆற்றலினால் நாங்களும் உமக்கு உகந்த காணிக்கையாய் மாறுவோமாக. எங்கள்.
'காண். திபா 106:8-9

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டும் மானிடருக்காக அவர் செய் த வியத்தகு செயல்களை முன்னிட்டும் அவர்கள் அவருக்குப் புகழ் சாற்று வார்களாக. ஏனெனில் வெறுங்கையருக்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகத் திரு உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: எமைகளுக்கு நற்செய்தி அறிவித்து, உம் திருமகனைப் பின்பற்றிய பனித வின்சென்ட்டின் எடுத்துக்காட்டை நினைவுகூரும் நாங்கள் அவருடைய பாதுகாவலால் உதவி பெறுவோமாக. எங்கள்.

செப்டம்பர் 28

புனித வென்செஸ்லாஸ்: மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர் (பக். 905).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, விண்ணக அரசு மண்ணக அரசைவிட மேலானது எனக் கருது மாறு புனித வென்செஸ்லாசுக்குக் கற்பித்தீரே; அவருடைய வேண்டலால் நாங்கள் எங்களை மறுத்து உம்மையே முழு உள்ளத்துடன் பற்றிக்கொள்ள ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு.
புனிதர்கள் லாரன்ஸ் ரூய்சும், அவரது தோழர்களும்: மறைச்சாட்சியர் மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர் (பக். 898).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் உமது அரசில் பேறுபெற்றோர் ஆவர் என்று மொழிந்தீரே; உம் மறைச்சாட்சியரான புனித லாரன்சும் அவருடைய தோழர்களும் உமக்கும் பிறருக்கும் ஊழியம் புரிவதில் கொண்டிருந்த இடையறா ஊக்கத்தை எங்களுக்கும் அருள்வீராக. உம்மோடு.

செப்டம்பர் 29

புனிதர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல், முதன்மை வானதூதர்கள்

விழா

வருகைப் பல்லவி

காண். திபா 102:20 ஆண்டவரின் வானதூதர்கள் அனைவருமே அவரைப் போற்றுங்கள். ஆண்டவரின் குரலைக் கேட்டு, அவர் சொற்படி நடக்கும்
வலிமைமிக்கோரே, அவரைப் போற்றுங்கள்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் அவர்களின் பணிகளை வியத்தகு முறையில் அமைத்துள்ளீரே; இவ்வாறு அவர்கள் விண்ணகத்தில் உமக்கு என்றும் பணி புரிவது போல, மண்ணகத்தில் எங்கள் வாழ்வைப் பாதுகாக்கக் கனிவுடன் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புகழ்ச்சிப் பலியை உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: வானதூதர்களின் பணியால் மாண்புக்கு உரிய உமது திருமுன் கொண்டுவரப்பட்ட இக்காணிக்கை உமக்கு ஏற்புடையதாகவும் எங்கள் மீட்புக்குப் பயன் உள்ளதாகவும் செய்வீராக. எங்கள்.

தொடக்கவுரை: வானதூதர்கள் வழியாகக் கடவுளின் மாட்சி.

 

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

உம்முடைய முதன்மை வானதூதர்கள், வானதூதர்கள் வழியாக
உமது புகழ் குறைவின்றிப் பறைசாற்றப்படுகின்றது;
ஏனெனில் உம் படைப்புகளாகிய வானதூதர்கள் பெறுகின்ற புகழ் எல்லாம்
உமது மாண்பையும் மாட்சியையும் மேம்படுத்த உம்மிடமே வந்து சேருகின்றது;
அவர்கள் பல்வேறு அணிகளால் அலங்கரிக்கப்பட்டுச் சிறந்து விளங்குவதால்,
நீர் அளவுகடந்த மாண்புடையவர் எனவும் அனைத்துக்கும் மேலானவர் எனவும்
எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாகக் காட்டுகின்றீர்.

அவர் வழியாகவே வானதூதரின் பெருந்திரள்
உமது மாண்பைக் கொண்டாடுகின்றது;
அவர்களோடு நாங்களும் அக்களித்து,
உம்மைத் தொழுது வணங்கி
ஒரே குரலாய்ப் புகழ்ந்து பாடிச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

திபா 137:1 ஆண்டவரே! என் முழு இதயத்துடன் உமக்குப் புகழ் சாற்றுவேன்;
வானதூதர்கள் முன்னிலையில் உமக்குப் பண் இசைப்பேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: அதனால் இந்த உணவின் ஆற்றலால் வலிமை பெற்ற நாங்கள் உம் வானதூதர்களின் உண்மையான பாதுகாப்பால் மீட்பின் பாதையில் துணிவுடன் முன்னேறிச் செல்வோமாக. எங்கள்.


செப்டம்பர் 30

புனித ஜெரோம்: அருள்பணியாளர், மறைவல்லுநர்
நினைவு

வருகைப் பல்லவி

காண். திபா 1:2-3ஆண்டவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்
பேறுபெற்றவர். அவர் உரிய காலத்தில் அதன் கனி தருவார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அருள்பணியாளரான புனித ஜெரோமுக்குத் திருநூலின் மீது இனிய, உயிருள்ள பற்றினைத் தந்தருளினீரே; உம் மக்களாகிய நாங்கள் உமது வார்த்தையால் மேன்மேலும் நிறைவாக வளம் பெற்று, அதில் வாழ்வின் ஊற்றைக் காண்போமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித ஜெரோமின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நாங்கள் உமது வார்த்தையை உள்ளத்தில் இருத்த எங்களுக்கு அருள்வீராக; மீட்பு அளிக்கும் பனிப்பொருளை மாண்புக்கு உரிய உமக்கு ஒப்புக்கொடுக்க அதிக முனைப்புடன் எங்களை வரச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். எரே 15:16
எட
1411)
ஆண்டவராகிய இறைவா, நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்; அவற்றை உட்கொண்டேன்; உம் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி
தந்தன; என் உள்ளத்திற்கு உவகை அளித்தன.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித ஜெரோமின் விழாவில் நாங்கள் பேரின்பத்துடன் உட்கொண்ட திரு உணவு உம் நம்பிக்கையாளரின் உள்ளங்களைத் தூண்டுவதாக; அதனால் மக்கள் புனிதப் படிப்பினைகளில் கருத்தூன்றி, தாங்கள் பின்பற்ற வேண்டியவற்றை அறிந்து, அவற்றைக் கடைப்பிடித்து நிலைவாழ்வை என்றும் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

அக்டோபர் 1

குழந்தை இயேசுவின் புனித தெரேசா: கன்னி, மறைவல்லுநர்
விழா

வருகைப் பல்லவி

காண். இச 32:10-12 ஆண்டவர் அவரை வழி நடத்தி, அவருக்குப் போதித்தார்; தம் கண்ணின் மணியைப் போல் அவரைக் காத்தார்: கழுகு போலத் தம் சிறகுகளை விரித்து அவரை எடுத்துத் தம் தோள்களின்மேல் சுமந்து சென்றார். ஆண்டவர் ஒருவரே அவரின் தலைவர்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.=

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது ஆட்சி எளியோருக்கும் சிறுவருக்கும் உரியதாகும்படிச் செய்தீரே; புனித தெரேசாவின் சிறு வழியை நாங்களும் பின்பற்றச் செய்து, அவரது பரிந்துரையால் உமது நிலையான மாட்சியை எங்களுக்கு உறுதியுடன் வெளிப்படுத்துவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித தெரேசாவில் விளங்கிய உம் வியத்தகு படிப்பினைகளைப் போற்றி, மாண்புக்கு உரிய உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: அவருடைய பேறுபயன்கள் உமக்கு உகந்தவையாய் இருந்தது போல கடமை உணர்வுடைய எங்கள் ஊழியமும் உமக்கு ஏற்புடையதாய் இருப்பதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 18:3 ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்
போல் ஆகாவிட்டால், விண்ணரசில் புக மாட்டீர்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித தெரேசா தம்மையே உமக்கு அர்ப்பணித்து, எல்லாரும் உமது இரக்கத்தைப் பெற்றிட ஆர்வம் கொண்டிருந்தார்; நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவால், அதே அன்பின் ஆற்றல் எங்களிடம் பற்றியெரியச் செய்வீராக. எங்கள்.

அக்டோபர் 2

புனித காவல் தூதர்கள்
நினைவு

வருகைப் பல்லவி

காண். தானி 3:58ஆண்டவரின் வானதூதர்கள் அனைவருமே ஆண்டவரை வாழ்த்துங்கள்; என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி , ஏத்திப் போற்றுங்கள்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, சொல்லற்கரிய உமது பராமரிப்பினால் எங்களைப் பாதுகாக்க உம் புனித வானதூதர்களை அனுப்பத் திருவுளமானீரே; நாங்கள் என்றும் அவர்களின் அருள்காவலைப் பெற்று, அவர்களுடைய நிலையான தோழமையில் மகிழ்ந்திருக்கக் கனிவுடன் அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய புனித வானதூதர்களின் வணக்க நாளில் நாங்கள் அளிக்கும் காணிக்கைகளை ஏற்றருளும்; அவர்களுடைய முடிவில்லா அருள்காவலால் நாங்கள் இம்மையின் இடர்களிலிருந்து விடுதலை பெற்று, நிலைவாழ்வுக்கு மகிழ்ச்சியுடன் வந்து சேர்வோமாக. எங்கள்.

தொடக்கவுரை: வானதூதர்கள் வழியாகக் கடவுளின் மாட்சி.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

உம்முடைய முதன்மை வானதூதர்கள், வானதூதர்கள் வழியாக
உமது புகழ் குறைவின்றிப் பறைசாற்றப்படுகின்றது:
எனெனில் உம் படைப்புகளாகிய வானதூதர்கள் பெறுகின்ற புகழ் எல்லாம்
உமது மாண்பையும் மாட்சியையும் மேம்படுத்த உம்மிடமே வந்து சேருகின்றன;
அவர்கள் பல்வேறு அணிகளால் அலங்கரிக்கப்பட்டுச் சிறந்து விளங்குவதால்
நீர் அளவுகடந்த மாண்புடையவர் எனவும்
அனைத்துக்கும் மேலானவர் எனவும்
எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாகக் காட்டுகின்றீர்.

அவர் வழியாகவே வானதூதரின் பெருந்திரள்
உமது மாண்பைக் கொண்டாடுகின்றது:
அவர்களோடு நாங்களும் அக்களித்து, உம்மைத் தொழுது வணங்கி,
ஒரே குரலாய்ப் புகழ்ந்து பாடிச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 137:1 என் கடவுளே, வானதூதர்கள் முன்னிலையில் உமக்குப் பண் இசைப்பேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் நிலைவாழ்வு பெற இத்துணை மாண்புயர் அருளடையாளத்தால் உணவு அளிக்கின்றீர்; வானதூதரின் பணியால், மீட்பும் அமைதியும் தரும் பாதையில் எங்களை வழிநடத்துவீராக. எங்கள்.


அக்டோபர் 4

அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ்
நினைவு

வருகைப் பல்லவி

இறை மனிதர் பிரான்சிஸ் தம் வீட்டையும் உரிமைச்சொத்தையும் துறந்து, ஒன்று மில்லாத ஏழையானார். ஆனால் ஆண்டவர்
அவரை உயர்த்தினார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித பிரான்சிஸ் ஏழ்மையிலும் தாழ்மையிலும் கிறிஸ்துவை ஒத்திருக்கச் செய்தீரே; அவரது வழியில் நாங்கள் நடப்பதால் உம் திருமகனைப் பின்பற்றி, பேரின்பம் தரும் அன்பில் உம்மோடு ஒன்றித்திருக்கும் ஆற்றல் பெற அருள்வீராக, உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளை உமக்கு ஒப்புக்கொடுத்து வேண்டுகின்றோம்: புனித பிரான்சிஸ் ஆர்வத்தோடு தழுவிக்கொண்ட சிலுவையின் மறைபொருளை நாங்கள் உமக்கு ஏற்ற முறையில் கொண்டாடத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 5:3 ஏழையரின்
உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது திருவிருந்தை உட்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: புனித பிரான்சிசில் விளங்கிய அன்பையும் திருத்தூது ஆர்வத்தையும் நாங்கள் பின்பற்றி, உமது அன்பின் ஆற்றலைக் கண்டுணர்ந்து அது எல்லாருடைய மீட்புக்கும் பயன் பெறச் செய்வோமாக. எங்கள்.

அக்டோபர் 6
புனித புரூனோ: அருள்பணியாளர்

புனிதர் பொது: மடத்துத் துறவி ஒருவர் (பக். 948) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித புரூனோவைத் தனிமை வாழ்வில் என்றும் உமக்கு ஊழியம் புரிய அழைத்தீரே; இவ்வாறு இந்த உலகின் பல்வேறு மாற்றங்களுக்கு நடுவிலும் நாங்கள் என்றும் உம்மோடு நிலைத்திருக்க அருள்வீராக. உம்மோடு.

அக்டோபர் 7

புனித செபமாலை அன்னை
நினைவு

வருகைப் பல்லவி

காண். லூக் 1:28,42 அருள் நிறைந்த மரியே வாழ்க, ஆண்டவர் உம்மோடு. பெண்களுள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றின் கனியும் ஆசி பெற்றதே.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உமது அருளை எங்கள் மனங்களில் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகன் கிறிஸ்து மனிதர் ஆனதை வானதூதர் வழியாக நாங்கள் அறிந்திருக்கின்றோம்; புனித கன்னி மரியாவின் பரிந்துரையால், அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் உயிர்ப்பின் மாட்சி பெற நீர் எங்களை அழைத்துச் செல்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளுக்கு ஏற்றவர்களாக எங்களை மாற்றியருள உம்மை வேண்டுகின்றோம்: உம் ஒரே திருமகனின் மறைநிகழ்வுகளை நினைவுகூர்வதன் வழியாக அவருடைய வாக்குறுதிகளுக்குத் தகுதியுடையோர்கள் ஆவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1, (விழாவில்) பக். 546 அல்லது 11, பக். 547.

திருவிருந்துப் பல்லவி

லூக் 1:31 இதோ, உம் வயிற்றில் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பீர்.
அவரது பெயரை இயேசு என அழைப்பீர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, இவ்வருளடையாளத்தில் உம் திருமகனின் இறப்பையும் உயிர்ப்பையும் நாங்கள் அறிக்கையிடுகின்றோம்; அதனால் அவருடைய பாடுகளில் நாங்கள் பங்கேற்று, அவருடைய ஆறுதலிலும் மாட்சியிலும் பங்குபெற்றிடத் தகுதி பெற அருள்புரிவீராக. எங்கள்.

அக்டோபர் 9

புனிதர்கள் டென்னிஸ்: ஆயர்; தோழர்கள்: மறைச்சாட்சியர்,

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சியர் பலர் (பக். 898).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, பிற இனத்தாருக்கு உமது மாட்சியை எடுத்துரைக்கவும் துன்பத்தின் நடுவில் நிலைகுலையாது நிற்கவும் புனிதர்கள் டென்னிசுக்கும் அவருடைய தோழர்களுக்கும் ஆற்றல் அளித்து அனுப்பினீரே; நாங்கள் அவர்களைப் பின்பற்றி இவ்வுலகச் செல்வங்களைப் புறக்கணிக்கவும் எல்லா எதிர்ப்புகளுக்கு நடுவிலும் துணிந்து நிற்கவும் அருள்புரிவீராக. உம்மோடு.

புனித ஜான் லெயோனார்டி: அருள்பணியாளர்

அருள்நெறியாளர்கள் பொது: மறைத்தூதுப் பணியாளர்கள் (பக். 928) அல்லது புனிதர் பொது: இரக்கப் பணி செய்தோர் (பக். 953).

திருக்குழும மன்றாட்டு

நலமெல்லாம் நல்கிடும் இறைவா, அருள்பணியாளரான புனித ஜானை மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் செய்தீரே; இப்புனிதரின் பரிந்துரையால், உண்மையான நம்பிக்கை என்றும் எங்கும் வளம் பெறச் செய்வீராக. உம்மோடு.


அக்டோபர் 11

புனித 23-ஆம் ஜான்: திருத்தந்தை

வருகைப் பல்லவி

ஆண்டவர் தமக்கென அவரைத் தலைமைக் குருவாகத் தேர்ந்தெடுத்தார்; தமது கருவூலத்தைத் திறந்து நன்மை செய்வதில் அவர் சிறந்து விளங்கச் செய்தார்.
திருக்குழும மன்றாட்டு என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, திருத்தந்தை புனித 23-ஆம் ஜான் நல்ல ஆயருக்கு உரிய எடுத்துக்காட்டாக இவ்வுலகில் ஒளிரச் செய்தி அவரது பரிந்துரையின் வழியாகக் கிறிஸ்தவ அன்பின் நிறைவை நாங்கள் மகிழ்ச்சியுடன் எங்கும் பரப்புவோமாக. உம்மோடு.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, திருத்தந்தை புனித 23-ஆம் ஜான் நல்ல ஆயருக்கு உரிய எடுத்துக்காட்டாக இவ்வுலகில் ஒளிரச் செய்தி அவரது பரிந்துரையின் வழியாகக் கிறிஸ்தவ அன்பின் நிறைவை நாங்கள் மகிழ்ச்சியுடன் எங்கும் பரப்புவோமாக. உம்மோடு.

அக்டோபர் 14
புனித முதலாம் கலிஸ்டஸ்: திருத்தந்தை, மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர் (பக். 905) அல்லது மறைச்சாட்சி ஒருவர் (பக். 905) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: திருத்தந்தை ஒருவர் (பக். 916).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, திருத்தந்தை புனித கலிஸ்டஸ் திரு அவைக்குப் பணி புரியவும் றெந்து போன கிறிஸ்தவ நம்பிக்கையாளர் மீது பற்றுணர்வு கொண்டிருக்கவும் செய்தீரே; அவருடைய நம்பிக்கைச் சாட்சியத்தால் நாங்கள் வலிமை பெற்று, அழிவின் அடிமைத்தளையிலிருந்து விடு பட்டு, அழியாத உரிமைப் பேற்றினைப் பெறும் தகுதியை எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

அக்டோபர் 15

இயேசுவின் புனித தெரேசா: கன்னி, மறைவல்லுநர்
நினைவு


வருகைப் பல்லவி

காண். திபா 41:2-3 கலைமான் நீரோடைகளுக்காக ஏங்குவது போல, கடவுளே! என் ஆன் மா உமக்காக ஏங்குகின்றது. வல்லவரான வாழும் கடவுள் மீது என் ஆன்மா தாகம் கொண்டுள்ளது.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் தூய ஆவியாரால் நிறைவான வாழ்வின் வழியைத் திரு அவைக்குக் காட்டப் புனித தெரேசாவைத் தூண்டியெழுப்பினீரே; அவருடைய விண்ணகப் படிப்பினை எனும் உணவால் நாங்கள் என்றும் வளம் பெற்று, உண்மையான புனிதத்தின் மீதுள்ள ஆர்வத்தால் பற்றியெரியச் செய்வீராக. உம்மோடு. காணிக்கைமீது மன்றாட்டு ஆண்டவரே, புனித தெரேசாவின் இறைப்பற்று நிறைந்த பணி உமக்கு மிகவும் உகந்ததாய் இருந்தது; அது போல நாங்கள் அளிக்கும் இக்காணிக்கைகள் உமது மாண்புக்கு ஏற்புடையனவாய் இருப்பனவாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 88:2 ஆண்டவரின் இரக்கங்களை நான் என்றும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உமக்குக் கீழ்ப்படிதல் உள்ள உமது குடும்பத்துக்கு விண்ணக உணவால் நிறைவு அளித்துள்ளீரே; அதனால் புனித தெரேசாவின் எடுத்துக்காட்டால் உமது இரக்கத்தை எப்போதும் பாடுவதில் அது மகிழ்ந்திருக்கச் செய்வீராக. எங்கள்.

அக்டோபர் 16
புனித எட்விஜ்: துறவி

புனிதர் பொது: துறவியர் (பக். 950) அல்லது புனிதையர் (பக். 955).

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, புனித எட்விஜின் வியத்தகு வாழ்வு எல்லாருக்கும் தாழ்மையின் எடுத்துக்காட்டாய் விளங்கச் செய்தீரே; அதனால் வணக்கத்துக்கு உரிய அவருடைய பரிந்துரையால் எங்களுக்கு விண்ணக உதவியைப் பெற்றுத்தர அருள்புரிவீராக. உம்மோடு.


புனித மார்கரெட் மரியா அலக்கோக்: கன்னி

கன்னியர் பொது: கன்னி ஒருவர் (பக். 936).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, புனித மார்கரெட் மரியாவில் சிறந்து விளங்கிய மனநிலையால் எங்களை நிரப்ப உம்மை வேண்டுகின்றோம்: அறிவுக்கு எட்டாத கிறிஸ்துவின் அன்பை அறியும் ஆற்றல் பெற்று உமது முழு நிறைவினால் நாங்கள் நிரப்பப்படுவோமாக. உம்மோடு.


அருளாளர் அகுஸ்தின் தேவாரம்பரம்பில்: அருள்பணியாளர்

அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923).

திருக்குழும மன்றாட்டு

படையோரின் நண்பராம் எங்கள் ஆண்டவராகிய இறைவா, எடுக்கப்பட்டோர், அல்லலுற்றோர் ஆகியோரின் நலனில் அக்கறை காட்ட அருளாளரான அகுஸ்தின் எனும் உம் ஊழியரைப் பணித்தீரே; அவரது எடுத்துக்காட்டைப் பின்பற்றி, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை உண்மையாகவே பின்தொடரும் பொருட்டு ஏழையருக்கும் தேவையில் உழல்வோருக்கும் நாங்கள் எப்பொழுதும் இரக்கம் காட்ட எங்களுக்குக் கனிவுடன் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
_
அக்டோபர் 17

அந்தியோக்கு நகர்ப் புனித இஞ்ஞாசியார்: ஆயர், மறைச்சாட்சி
நினைவு

வருகைப் பல்லவி

காண், கலா 2:19-20 கிறிஸ்துவோடு நான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனினும் வாழ்கிறேன். ஆனால் வாழ்வது நான் அல்ல; கிறிஸ்து உண்மையிலே என்னுள் வாழ்கிறார். இறைமகன் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் நான் வாழ்கிறேன். இவரே என் மீது அன்புகூர்ந்தார்; எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, புனித மறைச்சாட்சியரின் நம்பிக்கை அறிக்கையால் உமது திரு அவை எனும் மறையுடலை அழகு செய்கின்றீரே; இன்று நாங்கள் நினைவுகூரும் புனித இஞ்ஞாசியாரின் மாட்சிக்கு உரிய பாடுகள் அவருக்கு நிலையான மேன்மையை வழங்கியது போல, எங்களுக்கு முடிவில்லாப் பாதுகாப்பாய் விளங்கிட அருள் புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மின்துவின் கோதுமை மணியாகிய புனித இஞ்ஞாசியாரை அவரது மறைச்சாட்சியத்தின் பாடுகளால் தூய அப்பமாக ஏற்றுக்கொண்டீரே; நாங்கள் இறைப்பற்றுடன் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை உமக்கு உகந்ததாய் இருப்பதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

நான் கிறிஸ்துவின் கோதுமை மணி; தூய அப்பமாக விளங்குமாறு விலங்குகளின் பற்களால் அரைக்கப்படு வேனாக.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித இஞ்ஞாசியாரின் விண்ணகப் பிறப்பு நாளில் நாங்கள் உட்கொண்ட விண்ணக உணவு எங்களுக்கு ஊட்டம் அளிப்பதாக; நாங்கள் சொல்லிலும் செயலிலும் கிறிஸ்தவர்களாய் வாழ அது எங்களுக்கு ஆற்றல் அளிப்பதாக. எங்கள்.

அக்டோபர் 18

புனித லூக்கா: நற்செய்தியாளர்
விழா

வருகைப் பல்லவி

எசா 52:7 அமைதியை அறிவித்துப் பறைசாற்றும், நலம் தரும் செய்தியைப் பறைசாற்றி மீட்பை அறிவிக்கும் காலடிகள் மலைகள் மேல்
எத்துணை அழகாய் இருக்கின்றன! "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, ஏழைகள் மீது நீர் கொண்டிருந்த அன்பின் மறைபொருளைத் தம் போதனையாலும் எழுத்துகளாலும் வெளிப்படுத்தப் புனித லூக்காவைத் தேர்ந்தெடுத்தீரே; அதனால் உமது பெயரில் ஏற்கெனவே பெருமை கொள்ளும் நாங்கள் ஒரே இதயமும் ஒரே ஆன்மாவுமாய் நிலைத்திருக்கவும் க்கள் அனைவரும் உமது மீட்பைக் காணவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகக் கொடைகளின் வழியாக நாங்கள் உமக்கு மனம் உவந்து ஊழியம் புரிய உம்மை வேண்டுகின்றோம்: புனித லூக்காவின் விழாவில் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் எங்களுக்கு நலமும் மாட்சியும் அளிப்பனவாக. எங்கள்.

திருத்தூதர்களின் தொடக்கவுரை II (பக். 549).

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 10:1,9 10) இறையாட்சி உங்களிடையே நெருங்கி வந்து விட்டது என நகரங்களுக்கு அறிவிக்க ஆண்டவர் சீடர்களை அனுப்பினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உமது புனிதப் பீடத்திலிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட திரு உணவு, எங்களைப் புனிதப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புனித லூக்கா போதித்த நற்செய்தியின் மீதுள்ள நம்பிக்கையில் அவ்வுணவு எங்களை உறுதியாய் இருக்கச் செய்வதாக. எங்கள்.

அக்டோபர் 19

புனிதர்கள் ஜான் தெ பிரபெப், ஐசக் ஜோக்ஸ்:
அருள்பணியாளர்கள்; தோழர்கள்: மறைச்சாட்சியர்

மறைச்சாட்சியர் பொது: மறைத்தூது மறைச்சாட்சியர் (பக். 912).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித ஜான், ஐசக், அவர்களுடைய தோழர்கள் ஆகியோரின் பணியிலும் அவர்கள் சிந்திய இரத்தத்திலும் என்றுமுள்ள ஆட்சியின் புனித எதிர்நோக்கை வெளிப்படுத்தத் திருவுள மானீரே; இப்புனிதர்களின் பரிந்துரையால் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் உறுதி பெறக் கனிவுடன் அருள்வீராக. உம்மோடு.

சிலுவையின் புனித பால்: அருள்பணியாளர்

வருகைப் பல்லவி
காண். 1 கொரி 2:2 மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் நீங்கள் அறிய
வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டேன்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, சிலுவையின் மீது தனிப் பற்றுதல் கொண்டிருந்த உம் அருள்பணியாளரான புனித பால் உமது அருளை எங்களுக்குப் பெற்றுத் தருவாராக; நாங்கள் அவருடைய எடுத்துக்காட்டால் மேலும் தூண்டப்பெற்று, எங்கள் சிலுவையைத் துணிவுடன் தழுவிக்கொள்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, பால் எனும் புனிதரின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இவ்வாறு ஆண்டவருடைய பாடுகளின் மறைநிகழ்வுகளைக் கொண்டாடும் நாங்கள் அதற்கு ஏற்றவாறு வாழ வரம் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி
1 கொரி 1:23,24 நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம்; கிறிஸ்து கடவுளின் வல்லமையும் கடவுளின் ஞானமுமாய் இருக்கிறார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, சிலுவையின் புனித பால் எனும் அருள்பணியாளரின் வாழ்வில் சிலுவையின் மறைபொருள் வியத்தகு வகையில் ஒளிரச் செய்தீரே; அதனால் இத்திருப்பலியின் வழியாக நாங்கள் வலுப்பெற்று கிறிஸ்துவோடு உண்மையாகவே இணைந்திருக்கவும் திரு அவையில் அனைவரின் மீட்புக்காக உழைக்கவும் அருள்வீராக. எங்கள்.

==============6^ 8928 ^-----------


அக்டோபர் 22
புனித இரண்டாம் ஜான் பால்: திருத்தந்தை

அருள்நெறியாளர்கள் பொது: திருத்தந்தை ஒருவர் (பக். 916).

திருக்குழும மன்றாட்டு

இரக்கம் நிறைந்த இறைவா, திருத்தந்தை புனித ஜான் பால் உமது அனைத்துலகத் திரு அவைக்குத் தலைமைப் பொறுப்பேற்க நீர் திருவுளமானீரே; அவரது படிப்பினையால் அறிவுறுத்தப்பெற்று, மனித இனத்தின் ஒரே மீட்பராகிய கிறிஸ்துவின் மீட்பு எங்களுக்குத் தருகின்ற அருளை, திறந்த உள்ளத்தோடு நாங்கள் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. உம்மோடு.

அருள்நெறியாளர்கள் பொது (திருத்தந்தைக்காக)

வாசகம் 1 : எசா 52:7-10

பதிலுரைத் திருப்பாடல் : திபா 96:1- 2 அ, 2 ஆ-3, 7-8 அ, 10
பதிலுரை (96:3)
: அனைத்து மக்களினங்களுக்கும் ஆண்டவர்தம்
வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

அல்லேலூயா (யோவா 10:14) : நல்ல ஆயன் நானே. என் ஆடுகளை நான்
அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை
அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி : யோவா 21:15-17 "என் ஆட்டுக் குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய்.

 

அக்டோபர் 23

கப்பெஸ்த்தரானோ நகர்ப் புனித ஜான்: அருள்பணியாளர்

அருள் நெறியாளர்கள் பொது: மறைத்தூதுப் பணியாளர்கள் (பக். 928) அல்லது புனிதர் பொது: துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, துன்புறும் நம்பிக்கையாளருக்கு ஆறுதல் அளிக்கப் புனித ஜானைத் தூண்டியெழுப்பினீரே; எங்களுக்கு உமது அருள்காவலின் பாதுகாப்பை நல்கி, உம்மோடு. உமது திரு அவைக்கு முடிவில்லா அமைதியை அளித்துக் காத்தருள்வீராக.

அக்டோபர் 24

புனித அந்தோனி மரிய கிளாரெட்: ஆயர்

அருள்நெறியாளர்கள் பொது: மறைத்தூது பணியாளர்கள் (பக். 928) அல்லது ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் மக்களுக்கு நற்செய்திப் பணி புரிய புனித அந்தோனி மரிய கிளாரெட் எனும் ஆயரை வியத்தகு அன்பாலும் பொறுமையாலும் உறுதிப்படுத்தினீரே; அவருடைய பரிந்துரையால் நாங்கள் உமக்கு உரியவற்றைத் தேடவும் எங்கள் சகோதரர் சகோதரிகளைக் கிறிஸ்துவுக்குச் சொந்தமாக்க ஊக்கமுடன் உழைப்பதில் கருத்தாய் இருக்கவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அக்டோபர் 28

புனிதர்கள் சீமோன், யூதா: திருத்தூதர்கள்
விழா

வருகைப் பல்லவி

ஆண்டவர் தமது உண்மையான அன்பினால் தேர்ந்து கொண்ட புனிதர்கள் இவர்களே. அவர் இவர்களுக்கு முடிவில்லா மாட்சியை
அருளினார். அல்லேலூயா. "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் புனித திருத்தூதர்கள் வழியாக நாங்கள் உம்மை அறிந்து ஏற்றுக்கொள்ளச் செய்தீரே; திருத்தூதர்களான சீமோன், யூதா எனும் புனிதர்களின் பரிந்துரையால் உம்மில் நம்பிக்கை கொள்ளும் மக்கள் பெருகி, திரு அவை என்றும் வளர்ச்சி பெறக் கனிவுடன் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதர்களான சீமோன், யதா எனும் புனிதர்களின் முடிவில்லா மாட்சிக்கு வணக்கம் செலுத்தி உம்மை வேண்டுகின்றோம்: எங்கள் வேண்டல்களை ஏற்று, இத்தாய மறைநிகழ்வைக் கொண்டாட நாங்கள் தகுதி பெறச் செய்வீராக. எங்கள்.

திருத்தூதர்களின் தொடக்கவுரை (பக். 548 - 549).

திருவிருந்துப் பல்லவி

யோவா 14:23 என் மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார், என்கிறார் ஆண்டவர். என் தந்தையும் அவர் மீது குடிகொள்வோம்.
அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, திருவிருந்தில் பங்குகொண்ட நாங்கள் தூய ஆவியாரோடு ஒன்றித்து உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: சீமோன், யூதா எனும் திருத்தூதர்களின் வணக்கத்துக்கு உரிய பாடுகள் எங்களை உமது அன்பில் நிலைத்திருக்கச் செய்வனவாக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 630).


====================

image