image

 

பொது

புனித கன்னி மரியா பொது

கீழ்க்காணும் திருப்பலிகள் சனிக்கிழமையில் புனித மரியாவின் நினைவாகவும், புனித கன்னி மரியாவின் நேர்ச்சித் திருப்பலிகளாகவும் கொண்டாடப்படலாம். எல்லா மன்றாட்டுகளிலும் எங்கெல்லாம் "நினைவுக்கொண்டாட்டம்" என்ற தொடர் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் தேவைக்கு ஏற்ப "நினைவு" கூட பயன்படும்

1. "ஆண்டின் பொதுக் காலம்

அன்றன்றைக்கு உரிய நாள்காட்டியில் புனித கன்னி மரியாவின கொண்டாட்டம் முறையாகக் குறிக்கப்பட்டிருந்தால் இந்த வாய்பாடுகள் ஒழுங்குக்கு ஏற்றவாறு, தவக் காலத்திலும்கூட பயன்படுத்தப்படலாம்.

வருகைப் பல்லவி

வாழ்க புனித அன்னையே, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் எக்காலத்தும் ஆளும் அரசரை ஈன்றவர் நீரே.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, உம் அடியார்களாகிய நாங்கள், என்றும் மன, உடல் நலம் பெற்று மகிழச் செய்தருளும்; என்றும் கன்னியான மாட்சி நிறைந்த புனித மரியாவின் பரிந்துரையால், இன்றைய துயரங்களினின்று விடுதலை பெறவும் நிலையான பேரின்பத்தைத் துய்த்துணரவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிப்பொருள்களோடு உம் மக்களின் மன்றாட்டுகளை ஏற்றருள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமமுடைய திருமகனின் தாயான புனித மரியாவின் பரிந்துரையால் எந்தவொரு மன்றாட்டும் புறக்கணிக்கப்படாமலும் எந்தவொரு வேண்டலும் வீணாகாமலும் இருப்பனவாக. எங்கள்.

அல்லது

ஆண்டவரே, மனிதா ஆன உம் ஒரே திருமகன் எங்களை ஆதரிப்பாராக; கன்னியிடமிருந்து பிறந்த அவர் தம் தாயன
ஊமது பிறந்த அவர் தம் தாயின் கன்னிமைக்குப் பழுதில் அதைப் புனிதப்படுத்தினார்; அவர் எங்கள் பாவங்களைப் பே எங்கள் காணிக்கையை உமக்கு ஏற்றதாய் இருக்கச் செய்வாராக. எங்கள்

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1 (நேர்ச்சித் திருப்பலிகளில். வ பக். 546

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 11:27 என்றுமுள்ள தந்தையின் மகனைத் தாங்கிய கன்னி மரியாவின் திருவயிறு பேறுபெற்றதே.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவை உட்கொண்ட நாங்கள் உமது கனிவை வேண்டுகின்றோம்: என்றும் கன்னியான புனித மரியாவின் நினைவுக்கொண்டாட்டத்தில் மகிழ்வுறும் நாங்கள் அதே கன்னியைக் கண்டுபாவித்து, எங்கள் மீட்பின் மறையுண்மையைப் பெற நாங்கள் தகுதி பெறுவோமாக. எங்கள்.

2

வருகைப் பல்லவி

அனைத்தையும் படைத்தவரைச் சுமந்த கன்னி மரியே! நீர் பேறு பெற்றவர். உம்மை உண்டாக்கியவரைப் பெற்றெடுத்தீர். என்றென்றும் கன்னியாக நிலைத்திருக்கின்றீர்.

திருக்குழும் மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, வலுவற்ற எங்களுக்கு உதவி புரிந்தருளும்; கடவுளைப் பெற்றெடுத்த புனித அன்னையின் நினைவைக் கொண்டாடும் நாங்கள், அவருடைய பரிந்துரையின் உதவியால் எங்கள் பாவங்களினின்று விடுபட்டு எழுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனுடைய தாயின் நினைவைக் கொண்டாடும் நாங்கள், 'உமமை வேண்டுகின்றோம்: இப்பலியின் காணிக்கை, உமது எல்லையற்ற அருள்துணையால் -மக்கு நிலையான கொடையாக மாறுவதாக. எங்கள்.

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை I (நேர்ச்சித் திருப்பலிகளில்: வணக்க நாளில்), 'பக். 546 அல்லது II, பக். 547.

திருவிருந்துப் பல்லவி

லூக் 1:49வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனுடைய தாயின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் நிலையான மீட்பில் பங்கு பெற உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உமது அருளின் நிறைவால் மாட்சியுறும் நாங்கள் மீட்பின் தொடர் வளர்ச்சியைத் துய்த்துணரச் செய்வீராக. எங்கள்

3

வருகைப் பல்லவி

காண். யூதி 13:18-19 கன்னி மரியே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட நீர் ஆண்டவராகிய உன்னத கடவுளின் ஆசி பெற்றவர்; ஏனெனில் உமது புகழ் மாந்தரின் வாயிலிருந்து ஒருபோதும் நீங்காவண்ணம்
அவர் உமது பெயரைப் பெரிதும் உயர்த்தியுள்ளார்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, புனிதமிக்க கன்னி மரியாவின் மாட்சிக்கு உரிய நினைவைக் கொண்டாடும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவரது பரிந்துரையால் நாங்கள் உமது அருளின் நிறைவிலிருந்து பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனுடைய தாயின் நினைவுக்கொண்டாட்டத்தில் மகிழும் நாங்கள் உமக்குப் புகழ்ச்சிப் பலியை ஒப்புக்கொடுக்கின்றோம்; இப்புனித உறவுப் பரிமாற்றத்தால் எங்கள் நிலையான மீட்புப் பயணத்தில் 'நாங்கள் முன்னேற அருள்புரிவீராக. எங்கள்.

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை I (நேர்ச்சித் திருப்பலிகளில்: வணக்க நாளில்), 'பக். 546 அல்லது II, பக். 547.

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 1:48 எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர் ஏனெனில் கடவுள் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

==============9^ 9027 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவால் ஊட்டம் பெற்றுள்ள நாங்கள் உம்மைக் கெஞ்சி வேண்டுகின்றோம்: அருள்மிகு கன்னியிடம் பிறந்த உம் திருமகனை இவ்வருளடையாளத்தின் வழியாக உட்கொண்டுள்ளோம்; அதனால் எங்கள் சொற்களால் அவரை அறிவிக்கவும் செயல்களால் அவரைப் பற்றிக்கொள்ளவும் அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

4

வருகைப் பல்லவி

காண். திபா 44:13,15,16 செல்வ மிகு சீமான்கள் உன்னருள் வேண்டி வருவர்; கன்னித் தோழியரும் புடை சூழ்ந்து மன்னரிடம் வந்திடுவர்; மகிழ்ச்சியோடும்
அக்களிப்போடும் அவர்கள் அழைத்து வரப்படுவர்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்களின் குற்றங்களை மன்னித்தருள உம்மை வேண்டுகின்றோம்: எங்கள் செயல்களால் உமக்கு உகந்தவர்களாகிட இயலாத நாங்கள் உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவருடைய தாயின் பரிந்துரையால் மீட்பு அடைவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு அளிக்கும் காணிக்கைகளை ஏற்றருளும்; தாய ஆவியாரின் ஒளியால் ஒளிர்விக்கப்பட்ட எங்கள் இதயங்கள் புனித கன்னி மரியாவின் எடுத்துக்காட்டால் -மமுடையவற்றை என்றும் ஆவலாய்த் தேடவும் பாதுகாக்கவும் அருள்வீராக. எங்கள்.

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை I (நேர்ச்சித் திருப்பலிகளில்: வணக்க நாளில்), 'பக். 546 அல்லது II, பக். 547.

திருவிருந்துப் பல்லவி

நம் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள். ஏனெனில் அவர் தம் அடியார் மரியாவில் இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களித்த தமது இரக்கத்தை நிறைவு செய்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பினுடையவும் நம்பிக்கையினுடையவும் அருளடையாளங்களால் நிறைவு பெற்ற நாங்கள், உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: புனித கன்னி மரியாவைப் பற்றுதலுடன் பெருமைப்படுத்தும் - அவருடன் இணைந்து இறை அன்பில் பங்குபெறும் தகுதி பெறுவோமாக. எங்கள்.

5

வருகைப் பல்லவி

காண். லூக் 1:28,42 அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு. பெண்களுள்
நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றின் கனியும் ஆசி பெற்றதே!

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, தாழ்ந்தோர், வறியோரிடையே மிகச் சிறந்தவரான புனித கன்னி மரியாவை மீட்பரின் தாயாகத் தேர்ந்து கொண்டுள்ளீர்; அவருடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றி, உமக்கு உண்மையான நம்பிக்கையோடு பலி செலுத்தவும் மீட்பின் முழு எதிர்நோக்கினை உம்மில் கொண்டிருக்கவும் எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் இக்காணிக்கைகளை ஏற்றருளும்; உம் திருமகனுடைய மாபெரும் அன்பின் பலியை நினைவுகூரும் நாங்கள் புனித கன்னி மரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி உமது அன்பிலும் அயலார் அன்பிலும் உறுதி பெறுவோமாக. எங்கள்:

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை I (நேர்ச்சித் திருப்பலிகளில்: வணக்க நாளில்), 'பக். 546 அல்லது II, பக். 547.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 86:3; லூக் 1:49
கன்னி மரியே! உம்மைப் பற்றி மாட்சிக்கு உரியவை சொல்லப்பட்டுள்ளன. ஏனெனில் வல்லவராம் கடவுள் உம் அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையை இவ்வருளடையாளத்தின் ஆற்றலால் உறுதிப்படுத்துவராக; தாழ்ச்சி நிறைந்த உம் அடியாராகிய கன்னி மரியா ஏற்கெனவே கண்டு மகிழ்ந்த அமைதியின் புனிதக் காட்சியைக் காணும்வரை அத்திரு அவை நற்செய்தியின் பாதையில் ஆவலுடன் செல்வதாக. எங்கள்.

6

வருகைப் பல்லவி

எஸ்ஸேயினின்று ஒரு தளிர் தோன்றியது. கடவுளும் மனிதரும் ஆனவரைக் கன்னி பெற்றெடுத்தார். கடவுள் விண்ணகத்தையும்
மண்ணகத்தையும் தம்மிலே ஒப்புரவாக்கி அமைதியை மீட்டருளினார். '

திருக்குழும் மன்றாட்டு

'ஆண்டவரே, என்றும் கன்னியான புனித மரியாவின் வணக்கத்துக்கு உரிய பரிந்துரை 'எங்களுக்குத் துணைபுரிய உம்மை வேண்டுகின்றோம்: ஆபத்துகள் அனைத்தினின்றும் அது எங்களைப் பாதுகாத்து, உமது அமைதியில் நாங்கள் மகிழ்வுறச் செய்வதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மன நிறைவும் புகழ்ச்சியும் அளிக்கும் காணிக்கைகளை உமக்கு ஒப்புக்கொடுக்கும் நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் புனித கன்னி மரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, உமக்கு உகந்த புனிதப் பலிப்பொருளாக எங்களையே அர்ப்பணிக்க வரம் அருள்வீராக. எங்கள்.
புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1 (நேர்ச்சித் திருப்பலிகளில்: வணக்க நாளில்), பக். 546

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை I (நேர்ச்சித் திருப்பலிகளில்: வணக்க நாளில்), 'பக். 546 அல்லது II, பக். 547.

திருவிருந்துப் பல்லவி

திபா 44:3
உம் இதழினின்று அருள் வெள்ளம் பாய்ந்தோடியது; அதனால்
கடவுள் உமக்கு என்றென்றும் ஆசி வழங்குகிறார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகக் கொடைகளால் நாங்கள் வளம் பெற்றுள்ளோம்; புனித கன்னி மரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, புனித வாழ்க்கையால் உமக்கு ஊழியம் புரியவும் வருடன் இணைந்து உண்மையான புகழ்ச்சியினால் "ம் மாட்சிப்படுத்தவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

7

வருகைப் பல்லவி

மரியா கூறினார்: என் மீட்பராம் கடவுளில் என் உள்ளம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் ஆண்டவர் தம் அடிமையின் தாழ் நிலையைக் கண்ணோக்கினார்.
2018 11

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் வார்த்தையானவர் குடி கொள்வதற்குப் புனித மரியாவின் திரு வயிற்றைத் தேர்ந்துகொள்ளத் திருவுளம் கொண்டீரே; அதனால் அவருடைய துணையால் பாதுகாக்கப்பட்டு, அவருடைய நினைவைக் கொண்டாடும் நாங்கள், மகிழ்ச்சியோடு வாழ அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மரியா தம் கன்னிமையால் உமக்கு உவப்பு அளித்து உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவரைத் தாழ்ச்சியினால் கருத்தரித்தார்; புனித மரியாவின் நினைவுக்கொண்டாட்டத்தில் உம் மக்கள் நாங்கள் கொண்டு வரும் இக்காணிக்கைகள் உமக்கு உகந்தவையாய் இருப்பனவாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை I (நேர்ச்சித் திருப்பலிகளில்: வணக்க நாளில்), 'பக். 546 அல்லது II, பக். 547.

திருவிருந்துப் பல்லவி

லூக் 2:19
மரியா இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் இருத்திச்
சிந்தித்துக்கொண்டிருந்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உமது திருவிருந்தில் பங்குகொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம் புனித கன்னி மரியாவை இடைவிடாது பின்பற்றி,
உமது திரு அவையின் ஊழியத்தில் என்றும் நாங்கள் கருத்தாய் இருந்து, பணியினால் மகிழ்ச்சியைக் கண்டுணர்வோமாக. எங்கள்.

8

வருகைப் பல்லவி

புனித கன்னி மரியே, நீர் மகிழ்ச்சிக்கு உரியவர். புகழ் அனைத்துக்கும் மிகவும் தகுதியுள்ளவர்; ஏனெனில் நீதியின் கதிரவனாகிய எங்கள் கடவுளாம் கிறிஸ்து உம்மிடம் இருந்தே தோன்றினார். அவர் வழியாகவே நாங்கள் காப்பாற்றப்பட்டோம், மீட்கப்பெற்றோம்.
2018 11

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, புனிதமிக்க கன்னி மரியாவின் பாதுகாப்பின்கீழ் மகிழ்கின்ற உம் நம்பிக்கையாளர் எங்களுக்கு நீர் அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அவருடைய கனிவான பரிந்துரையால் மண்ணுலகின் தீமைகள் அனைத்திலிருந்தும் நாங்கள் விடுவிக்கப்பெற்று, விண்ணகத்தில் நிலையான மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கடவுளின் தாய் புனித மரியாவின் நினைவுக்கொண்டாட்டத்தில் உம் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகளையும் காணிக்கைகளையும் கண்ணோக்கியருளும்; அதனால் இவை உமக்கு ஏற்றவையாகி, உமது மன்னிப்பின் உதவியை எங்களுக்குப் பெற்றுத் தருவனவாக. எங்கள்.
புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1 (நேர்ச்சித் திருப்பலிகளில்: வணக்க நாளில்), பக். 546

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை I (நேர்ச்சித் திருப்பலிகளில்: வணக்க நாளில்), 'பக். 546 அல்லது II, பக். 547.

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 1:48 ஆண்டவர் தம் அடிமையின் தாழ் நிலையைக் கண்ணோக்கினார். இதோ! எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் அருளடையாளத்தால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: கடவுளைப் பெற்றெடுத்த புனித கன்னி மரியாவின் நினைவைப் போற்றிப் பெருமைப்படுத்தும் நாங்கள் என்றும் உமது மீட்பின் பயனை அனுபவிக்கத் தகுதி பெறுவோமாக. எங்கள்.


II திருவருகைக் காலம்


வருகைப் பல்லவி

காண். எசா 45:8 வானங்கள் மேலிருந்து பொழியட்டும்; மேகங்கள் நீதிம பொழியட்டும்; நிலம் திறக்க, மீட்பர் தோன்றட்டும்.

அல்லது

காண். லூக் 1:30-32 சாகர் மரியாவைப் பார்த்துக் கூறினார்: நீர் கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ! கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, வானதூதரின் அறிவிப்பால் புனித கன்னி மரியாவின் திருவயிற்றில் உம் வார்த்தையானவர் மனித உடல் எடுக்கத் திருவுளம் கொண்டீரே; அதனால் உண்மையிலே அவர் கடவுளின் தாய் என நம்பிக்கை கொள்ளும் எங்கள் மன்றாட்டுகளைக் கேட்டு, அவரின் பரிந்துரையால் நாங்கள் உமது உதவியைப் பெறுவோமாக. உம்மோடு.

அல்லது

இறைவா, மூதாதையருக்கு நீர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மீட்பரின் தாயாகிடப் புனித கன்னி மரியாவைத் தேர்ந்தெடுத்தீரே; அவருடைய தாழ்ச்சி உமக்கு உகந்ததாகவும் அவரது கீழ்ப்படிதல் எங்களுக்குப் பயன் உள்ளதாகவும் இருந்தது போல், நாங்களும் அவரது முன்மாதிரியைப் பின்பற்ற அருள்வீராக. உம்மோடு .

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கறைபடாதக் கன்னி வயிற்றில் சொல்லற்கரிய முறையில் பிறந்த உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து உண்மையான செம்மறியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட இப்பலி ச?" யாகள் அடையாள முறையில் ஒப்புக்கொடுத்த பலிகளை நிறைவுக்குக் கொண்டு வந்தது; எனவே இக்காணிக்கைகளை ஏற்று, இவற்றை உமது வல்ல மீட்பின் அருளடையாளமாக மாற்றியருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1(பக். 546) அல்லது II (பக். 547). திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை 1-ம் பயன்படுத்தப்படலாம் (பக். 518).

திருவிருந்துப் பல்லவி

காண். எசா 7:14 இதோ, கன்னி கருவுறுவார்; ஒரு மகனைப் பெற்றெடுப்பார்;
அவரது பெயர் இம்மானுவேல்' என அழைக்கப்படும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு என்றும் எங்களில் உமது இரக்கத்தை வெளிப்படுத்துவதாக; உம் திருமகனுடைய தாயின் நினைவை நம்பிக்கை உணர்வோடு கொண்டாடும் நாங்கள் அவரது மனிதப் பிறப்பால் மீட்பு அடைவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

III. கிறிஸ்து பிறப்புக் காலம்

வருகைப் பல்லவி

ஓர் அரசரை மரியா ஈன்றெடுத்தார். அவரது பெயர் நிலையானது. தாய்மையின் மகிழ்ச்சியும் கன்னிமையின் மாட்சியும் கொண்டு விளங்கினார் மரியா; அவருக்கு நிகரானவர் எவரும் இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை.

அல்லது

கடவுளைப் பெற்றெடுத்த கன்னித் தாயே, உலகனைத்தும் தன்னுள் கொள்ள முடியாதவர் மனிதராகி, உம் திருவயிற்றில் குடி கொள்ளத்
திருவுள மானார்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, புனித மரியாவின் வளமையான கன்னிமையால் மனிதக் குலத்துக்கு நிலையான மீட்பின் பரிசுகளை வழங்கினீரே; அவரது பரிந்துரையை நாங்கள் உணரவும் அவர் வழியாக வாழ்வின் ஊற்றாகிய உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அல்லது

இறைவா, என்றென்றும் பிறப்பெடுக்கும் உம் வார்த்தை கன்னியின் திருவயிற்றிலிருந்து புறப்படத் திருவுள மானீரே; புனித மரியாவின் பரிந்துரையால் அவருடைய உடனிருப்பின் பேரொளி எங்கள் இருளை ஒளிர்வித்து அவருடைய நிறைவால் நாங்கள் மகிழ்வும் அமைதியும் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் மண்ணகப் பிறப்பாலும் கன்னி மரியாவின் தாய்மையாலும் நீர் புனிதப்படுத்தியுள்ள இக்காலத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம்; இக்காணிக்கை எங்களைப் புனிதப்படுத்தவும் அவரில் நாங்கள் புதுப் பிறப்பு அடையவும் அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1 (பக். 546)

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1(பக். 546) அல்லது II (பக். 547).

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 11:27 என்றுமுள்ள தந்தையின் மகனைத் தாங்கிய கன்னி மரியாவின் திருவயிறு பேறு பெற்றதே.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மனிதர் ஆன உம் வார்த்தையானவரின் உடலையும் இரத்தத்தையும் உட்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புனித கன்னி மரியாவின் நினைவாக நாங்கள் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டுள்ள இவ்விண்ணக மறைபொருள்கள் அதே உம் திருமகனின் இறைத்தன்மையில் நாங்கள் என்றும் பங்குபெறச் செய்வனவாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக 'உம்மை மன்றாடுகின்றோம்.

==============21^ 9039 ^-----------

IV.பாஸ்கா காலம்

வருகைப் பல்லவி

காண். திபா 29:12 ஆண்டவரே, நீர் என் புலம்பலைப் பேரின்பமாக மாற்றினீர்;
என்னை மகிழ்ச்சியால் உடுத்தினீர், அல்லேலூயா.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பால், உலகம் பேரின்பம் கொள்ளத் திருவுளம் கொண் டீரே; அதனால் அவரைப் பெற்றெடுத்தக் கன்னி மரியா வழியாக முடிவில்லா வாழ்வின் மகிழ்ச்சியை நாங்கள் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

தூயவரான தந்தையே, புனித கன்னி மரியாவின் நினைவுக்கொண்டாட்டத்தில் பேரின்பத்துடன் உமக்கு அளிக்கும் எங்கள் தாழ்மையின் காணிக்கையை ஏற்றருளும்; கிறிஸ்துவின் பலியோடு இணைக்கப்பெற்ற நாங்கள் இவ்வுலக ஆறுதலையும் நிலையான மீட்பையும் பெற்றுக்கொள்ள அருள்வீராக. எங்கள்.

புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1(பக். 546) அல்லது II (பக். 547).

திருவிருந்துப் பல்லவி

கன்னித் தாயே! மகிழ்வீராக; ஏனெனில் கிறிஸ்து கல்லறையினின்று
உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, பாஸ்கா அருளடையாளத்தால் ஊட்டம் பெற்றுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகனுடைய தாயின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் சாவுக்கு உரிய எங்கள் உடலில் இயேசுவின் வாழ்வை வெளிப்படுத்துவோமாக. எங்கள்.

பாஸ்கா காலத்தில் புனித மரியா, திருத்தூதர்களின் அரசியின் திருப்பலியும் பயன்படுத்தப்படலாம் (பக். 1174).


=============↑ பக்கம் 897

====================

image