image

 

பொது

மறைவல்லுநர்கள் பொது
1

வருகைப் பல்லவி

காண். சீஞா 15:5 வை நடுவில் அவர் தமது வாய் திறந்தார்; ஆண்டவர் அவாை ஞானமும் அறிவுக்கூர்மையும் உள்ள ஆவியால் நிரப்பினார். மாட்சியின் மேலாடையை அவருக்கு அணிவித்தார் (பாஸ்கா காலத் அல்லேலூயா) .

அல்லது

திபா 36:30 31 நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நீதிநெறியை எடுத்துரைக்கும். கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, ஆயரான புனித (பெயர்) ... ஐ உமது திரு அவைக்கு மறைவல்லு நராகக் கொடுத்துள்ளீரே; ஆவியாரின் அருளால் தூண்டப்பெற்று, அவர் எங்களுக்குப் போதித்தது எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பதாக; உமது கொடையால் அவரை நாங்கள் பாதுகாவலராகப் பெறுவது போல உமது இரக்கத்தைப் பெறப் பாதுகாப்பாளராகவும் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, புனித (பெயர்) ... இன் விழாவில் நாங்கள் உளம் கனிந்து செலுத்தும் பலி உமக்கு உகந்ததாய் இருப்பதாக; அவரது அறிவுரைப்படி, எங்களையே முழுமையாக உமக்கு அளித்து, உம்மைப் புகழ்ந்தேத்தச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 12:42 உம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் ஏற்படுத்திய 2 பாகைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் இவரே (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா .

அல்லது

காண். திபா 1:2-3
=வரது சட்டத்தை இரவும் பகலும் சிந்திப்பவர், உரிய காலத்தில் அதன் கனி தருவார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா .

==============27^ 9075 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உயிருள்ள அப்பமாகிய கிறிஸ்துவினால் ஊட்டம் அளித்தவர்களுக்கு, ஆசிரியராகிய அதே கிறிஸ்துவினால் முழுமையாகக் கற்றுத்தருவீராக, அதனால் புனித (பெயர்) . . . இன் விழாவில் அவர்கள் உமது உண்மையை அறிந்து, அதை அன்பில் செயல்படுத்துவார்களாக. எங்கள்.

வருகைப் பல்லவி

காண். தானி 12:3 ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண் மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்துக்கும் ஒளி வீசித் திகழ்வர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

அல்லது

காண். சீஞா 44:15,14 மக்கள் புனிதர்களுடைய ஞானத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களது புகழைத் திரு அவை பறைசாற்றும். அவர்களுடைய பெயர் தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, புனித (பெயர்) ... ஐ விண்ண கப் படிப்பினையால் நிரப்பத் திருவுளம் கொண்டீரே; அவருடைய பரிந்துரையால், அதே படிப்பினையை நாங்கள் உண்மையுடன் பாதுகாக்கவும் எங்கள் நன்னடத்தையால் அதை அறிவிக்கவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு. '

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாடும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உமது மாட்சியைப் பரப்பிட புனித (பெயர்) . . . ஐ இடையறாது ஒளிர்வித்தது போல், தூய ஆவியாருடைய நம்பிக்கையின் ஒளியால் எங்களை நிரப்புவீராக. எங்கள்.

திருவிருந்துப்பல்லவி

காண். 1 கொரி 1:23-24 நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து வைப் பற்றிப் பறைசாற்றுகிறோம்; கிறிஸ்து கடவுளின் வல்லமையும் கடவுளின் ஞானமுமாய் இருக்கிறார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: புனித (பெயர்) . . . இன் படிப்பினைகளைக் கடைப்பிடித்து, நாங்கள் பெற்றுக்கொண்ட கொடைகளுக்காக என்றும் நன்றி உள்ளவர்களாய் இருப்போமாக. எங்கள்.

==============29^ 9077 ^-----------

கன்னியர் பொது

கன்னி மறைச்சாட்சியர் (பக். 914).

1. கன்னியர் பலர்


வருகைப் பல்லவி காண். திபா 148:12-14 கன்னியர் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக. அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது; அவரது மாட்சியோ விண்ணையும் மண்ணையும் கடந்தது (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

காண். திபா 44:16 கன்னியர் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அரசரிடம் அழைத்து வரப்படுவர். அரசரும் ஆண்டவருமானவரிடம் அவர்கள் கோவிலுக்குள் இட்டுச் செல்லப்படு கின்றனர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும்; கன்னியரான (பெயர்) . . . , (பெயர்) . . . எனும் புனிதையரின் விழாவை இறைப்பற்றுடன் கொண்டாடி நாங்கள் மகிழ்வது போல, உமது அருளால் அவர்களது முடிவில்லாத் தோழமையில் பயன் அடைவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கன்னியரான (பெயர்) . . . , (பெயர்) ... எனும் புனிதையரின் நினைவுக்கொண்டாட்டத்தில், உமது வியத்தகு படிப்பினைகளால் நாங்கள் இக்காணிக்கைகளை உமக்கு உவப்புடன் ஒப்புக்கொடுக்கின்றோம்; அவர்களுடைய பேறுபயன்கள் உமக்கு உகந்தவையாய் இருந்தது போல, கடமை உணர்வுடைய எங்கள் ஊழியமும் உமக்கு ஏற்புடையதாய் இருக்க அருள்புரிவீராக. எங்கள்.
காண். மத் 25:10

திருவிருந்துப் பல்லவி

மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாயிருந்த கன்னியர் அவரோடு திருமண மண்டபத்துக்குள் நுழைந்தார்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).
யோவா 14:21,23

அல்லது

என் மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம் (பாஸ்கா 'காலத்தில், அல்லேலூயா).

==============30^ 9078 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, கன்னியரான (பெயர்) . . . , (பெயர்) . . . எனும் புனிதையரின் விழாவில் நாங்கள் உட்கொண்ட திரு உணவு எங்களைத் தூண்டியெழுப்பி என்றும் ஒளிரச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனின் வருகைக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாக்கப்பட்டு விண்ணரசின் திருமண விருந்துக்குள் நுழைவோமாக. எங்கள்.

II. கன்னி ஒருவர்

வருகைப் பல்லவி

ஞானமுள்ள கன்னி இவரே! எரியும் விளக்கை ஏந்திக் கிறிஸ்துவைச் சந்திக்கச் சென்ற முன் மதியுள்ள கன்னியருள் இவரும் ஒருவரே (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

ஆண்டவரின் முடியையும் முடிவில்லாக் கன்னிமையின் முடியையும் பெற்றுக்கொள்ளத் தகுதி பெற்ற கிறிஸ்துவின் கன்னியான நீர்
எவ்வளவு அழகுள்ளவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, எங்கள் மீட்பரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்: கன்னியான புனித (பெயர்) . . . இன் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் மகிழ்வுறுவது போல, அவரது அன்புமிகு இறைப்பற்றால் பயிற்றுவிக்கப்பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கன்னியான புனித (பெயர்) .... இல் விளங்கிய உமது வியத்தகு படிப்பினைகளைப் போற்றி, மாண்புக்கு உரிய உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: அதனால் அவருடைய பேறு பயன்கள் உமக்கு உகந்தவையாய் இருந்தது போல கடமை உணர்வுடைய எங்கள் ஊழியமும் உமக்கு ஏற்புடையதாய் இருப்பதாக. எங்கள்.

==============1^ 9079 ^-----------

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 25:6 இதோ மண மகன் வருகிறார். ஆண்டவராகிய கிறிஸ்துவை எதிர்கொள்ளச் செல்லுங்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

' காண். திபா 26:4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்: அதையே நான் நாடித் தேடுவேன்; அதனால் ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருப்பேன் (பாஸ்கா காலத்தில், (அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

'ஆண்டவரே எங்கள் இறைவா, விண்ணகக் கொடையின் பங்கேற்பால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: 'புனித (பெயர்) ... இன் எடுத்துக்காட்டால் இயேசுவின் பாடுகளை எங்கள் உடலில் தாங்கி, உம்மை மட்டுமே பற்றிக்கொள்ள நாங்கள் முயல்வோமாக. எங்கள்.

வருகைப் பல்லவி

மகிழ்வோம், அக்களிப்போம்; ஏனென்றால் அனைத்துக்கும் ஆண்டவர் இப்புனித, மாட்சிமிகு கன்னியை அன்பு செய்தார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா.

அல்லது

ஞானம் நிறைந்த கன்னி இவரே. ஏனெனில் ஆண்டவர் இவரை விழிப்புடன் இருக்கக் கண்டார். விளக்கோடு தன்னுடன் எண்ணெயும் எடுத்துச் சென்ற இவர் ஆண்டவர் வரும்பொழுது அவருடன் திருமண மண்டபத்துக்குள் நுழைந்தார் (பாஸ்கா காலத்தில்,
அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, கன்னியான புனித (பெயர்) ... ஐ விண்ணகக் கொடைகளால் நிரப்பினீரே; இவ்வாறு இவ்வுலகில் அவருடைய நற்பண்புகளைப் பின்பற்றும் நாங்கள், மறுவுலகில் அவருடன் நிலையான மகிழ்ச்சியைச் சுவைக்க 'அருள்புரிவீராக. உம்மோடு.

==============2^ 9080 ^-----------

அல்லதுகன்னி, சபை நிறுவுநருக்காக

ஆண்டவரே எங்கள் இறைவா,
புனித கன்னியம் உமக்கு உண்மையுள்ள மணமகளுமான (பெயர்) .. - உமது திரு அவையின் நிலையான மாட்சிக்காக மற்றக் கன்னியருள் உமது அன்புத் தீயை மூட்டினார்; அதே இறை அன்புத் தீயை அவர் எங்கள் உள்ளங்களிலும் தூண்டியெழுப்புவாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, ஒப்புக்கொடுக்கப்படும் இக்காணிக்கையின் பயனை நாங்கள் பெற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புனித (பெயர்) . . . இன் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, இவ்வுலகின் பழைய நிலையிலிருந்து மனந்திரும்பித் தூய்மை பெற்று விண்ணக வாழ்வு நோக்கிய எமது பயணத்தில் நாங்கள் புதுப்பிக்கப்படு வோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 25:4-6 முன் மதியுடைய ஐந்து கன்னியர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். நள்ளிரவில் உரத்த குரல் ஒன்று ஒலித்தது: "இதோ மணமகன் வருகிறார். ஆண்டவராம் கிறிஸ்துவை எதிர்கொள்ளச் செல்லுங்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் வணக்கத்துடன் உட்கொண்ட உம் ஒரே திருமகனின் உடலும் இரத்தமும் வீழ்ச்சியுற்றவை அனைத்திலிருந்தும் எங்களை விடுவிப்பதாக; புனித (பெயர்) ... இன் எடுத்துக்காட்டைப் பின்பற்றி மண்ணுலகில் உண்மையான பிறரன்பில் நாங்கள் வளரவும் விண்ணுலகில் உமது முடிவில்லாக் காட்சியைக் கண்டு மகிழவும் அருள்வீராக. எங்கள்.

3

வருகைப் பல்லவி

கிறிஸ்துவின் மண மகளே வருக. ஆண்டவர் உமக்காக என்றென்றைக்கும் தயார் செய்துள்ள முடியைப் பெறுக (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்புக்காக, உலகின் அரசையும் இவ்வுலகின் எல்லாச் செல்வங்களையும் வெறுத்தவர் இவரே (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).
'

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, தூய இதயங்களில் நீர் குடி கொள்வதாக உறுதி அளித்துள்ளீரே; 'கன்னியான புனித (பெயர்) ... இன் பரிந்துரையால் நாங்களும் உமது அருளால் ஆட்கொள்ளப்பட்டு உமக்கு ஏற்புடைய இல்லிடமாகத் திகழ தகுதி பெறுவோமாக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே, 'கன்னியான புனித (பெயர்) . . . இன் நற்பண்பை இறைப்பற்றுடன் கொண்டாடும் எங்களின் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்க்க உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் உமது அன்பில் நிலைத்திருக்கவும் இறுதிவரை அதில் என்றும் வளரவும் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கன்னியான புனித (பெயர்) ... இன் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் தாழ்மையுடன் உமக்கு அளிக்கும் இக்காணிக்கையை ஏற்றருளும்; மாசற்ற இப்பலி வழியாக, உம் திருமுன் இறைப்பற்றினாலும் தூய அன்பினாலும் 'நாங்கள் என்றும் பற்றியெரிவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 10:42 முன் மதியுடைய கன்னி நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்; அது அவரிடமிருந்து எடுக்கப்படாது (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).


அல்லது

மத் 25:6 நள்ளிரவில் குரல் ஒன்று ஒலித்தது: இதோ! மண மகன் வருகிற அ வரை எதிர் கொள்ளச் செல் லு ங் கள் (பாஸ்கா கா அல்லே லூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள், உமது கனிவைக் கெஞ்சி வேண்டுகின்றோம்: கன்னியான புனித (பெயர்) . . . இன் நினைவுக்கொண்டாட்டத்தில்மகிழ்வுறும் நாங்கள் பாவ மன்னிப்பையும் உடலின் நல்வாழ்வையும் அருளையும் ஆன்மாக்களுக்கான நிலைமாட்சியையும் பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.

==============5^ 9083 ^-----------

=============↑ பக்கம் 940

====================

image