image

 

பொது

புனிதர், புனிதையர் பொது

அ. புனிதர் பலர்

1

 


கீழே உள்ள திருப்பலிகள், தனி வகையைச் சார்ந்த புனிதருக்கெனக் - மிப்பிடப்பட்டிருந்தால் அத்தனிவகைப் புனிதருக்காகப் பயன்படுத்தப்படும்; தனிக் குறிப்பு | இல்லை எனில், எவ்வகைப் புனிதருக்கும் பயன்படுத்தப்படலாம்.

வருகைப் பல்லவி

காண். திபா 144:10-11 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய புனிதர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையை
எடுத்துரைப்பார்களாக (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, புனிதர்களை மாட்சிப்படுத்துவதன் வழியாக உமது புதுமையான பேரன்பை எங்களுள் வளரச் செய்கின்றீரே; இவ்வாறு இப்புனிதர்களின் பரிந்துரையால் தூண்டப்பெற்று உம் ஒரே திருமகனை நாங்கள் உண்மையாகவே கண்டுபாவிக்கவும் அவரது எடுத்துக்காட்டைக் கடைப்பிடிக்கவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுகளைப் பரிவன்புடன் ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருப்பீடங்களில் நாங்கள் தகுதியுடன் பணி புரிய உம் புனிதர்களின் பரிந்துரையால் எங்களைக் காத்தருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 67:4 நேர்மையாளரே, மகிழ்ச்சியடைவீர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பீர்; மகிழ்ந்து கொண்டாடுவீர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

லூக் 12:37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய் து , அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா).

=============6^ 9084 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, ஆறுதல், அமைதி ஆகிய அனைத்துக்கும் தந்தையே, உம் புனிதர்களின் நினைவைக் கொண்டாடும் உமது குடும்பத்துக்கு உமது பெயரைப் புகழ அருள் தாரும்; அதனால் உம் ஒரே திருமகனின் திருவிருந்தை உட்கொண்ட இக்குடும்பம் நிலையான மீட்பின் அச்சாரத்தைப் பெறுவதாக. எங்கள்.

2

வருகைப் பல்லவி

காண். திபா 63:11 நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்; அவரில் நம்பிக்கை கொள்வர்; நேரிய உள்ளத்தோர் அனைவரும் அவரைப் போற்றிடுவர்
(பாஸ்கா காலத்தில், அல்லேலூயா). திருக்குழும் மன்றாட்டு

இறைவா, எங்கள் வலுவின்மையை உணருகின்றவர் நீரே; உம் புனிதர்களின் எடுத்துக்காட்டால் நாங்கள் உமது அன்பில் புதுப்பிக்கப்பட எங்கள் மீது இரக்கம் கொள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் புனிதர்களின் பெருமைக்காக நாங்கள் அளிக்கும் தாழ்மையான எங்கள் காணிக்கை உமக்கு உகந்ததாய் இருக்கவேண்டும் என உம்மை வேண்டுகின்றோம்: இது எங்கள் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்துவதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 12:26
எனக்குத் தொண்டு செய்பவர் என்னைப் பின்பற்றுகிறார், என்கிறார் ஆண்டவர். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும்
இருப்பார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனிதர்களின் விண்ணகப் பிறப்பு நாளில் இத்திருவிருந்தின் கொடையால் வளம் பெற்றுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உமது அருளின் வழியாக நலன்களால் வளப்படுத்தப்படும் நாங்கள் என்றும் இன்புறுவோமாக. எங்கள்.

==============7^ 9085 ^-----------

3

வருகைப் பல்லவி

காண். திபா 91:13-14 நேர்மையாளர் பேரீச்சை மரம் எனச் செழித்தோங்குவார்; லெ பனோனின் கேதுரு மரம் எனத் தழைத்து வளர்வார். ஆண்டவரின் இல்லத்திலும் நம் கடவுளின் கோவில் முற்றங்களிலும்
நடப்பட்டவர் அவரே (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா ).

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, புனிதர்களின் நேரிய இறைவேண்டல் உம் நம்பிக்கையாளருக்கு உதவியைப் பெற்றுத்தர உம்மை வேண்டுகின்றோம்: 'அப்புனிதர்களின் விழாவை இறைப்பற்றுடன் கொண்டாடும் அவர்கள் அப்புனிதர்களுடைய தோழமையில் என்றும் பங்குபெற அருள்வீராக. உம்மோடு. '

காணிக்கைமீது மன்றாட்டு

2018 11
ஆண்டவரே, உம் புனிதர்களில் நீர் உருவாக்கிய அதே பக்தியை உமது திருப்பீடத்தில் பலிப்பொருள்களை ஒப்புக்கொடுக்கும் எங்களுக்கும் அளித்தருளும்; அதனால் தூய மனதோடும் ஆர்வமுள்ள இதயத்தோடும் இத்திருவழிபாட்டில் நாங்கள் பங்குபெறவும் உமக்கு உகந்ததும் எங்களுக்குப் பயனுள்ளதுமான இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கவும் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 11:28 பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார்
ஆண்டவர் (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களை உம்மோடு ஒன்றிக்கச் செய்து எங்களுக்கு மீட்பு அளிப்பதாக; அது எங்களை உமது உண்மையின் ஒளியில் உறுதிப்படுத்துவதாக. எங்கள்.

==============8^ 9086 ^----------

4

வருகைப் பல்லவி

எரே 17:7-8 ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் ஆசிபெற்றோம் ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அரு நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக வேர் விடுகின்றது. வெப்ப மிகு காலத்தில் அதற்கு அச்சமில்லை, (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் புனிதர்களின் எடுத்துக்காட்டு எங்கள் நல்வாழ்வுக்குத் தூண்டுதலாய் இருக்க உம்மை வேண்டுகின்றோம்: புனிதர்களான (பெயர்) . . . , (பெயர்) . . . ஆகியோரின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் இடைவிடாது அவர்களின் செயல்களைப் பின்பற்றச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய புனிதர்களின் இவ்விழாவில், உமது திருப்பீடத்தில் எங்கள் காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கும் நாங்கள் உம்மைக் கனிவுடன் வேண்டுகின்றோம்: இவ்வாறு இக்காணிக்கைகள் உமக்குத் தலைசிறந்த மாட்சி அளித்து எங்களுக்கு மிகுதியான அருளைப் பெற்றுத் தருவனவாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 15:9
என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங் கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கர் காலத்தில், அல்லே லூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உம் புனிதர்களின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் பங்கேற்கும் விண்ணக மறைநிகழ்வுகள் மடபையும் நிலையான அமைதியையும் எங்களில் செயல்படுத்துவனவ எங்கள்.

==============9^ 9087 ^-----------

ஆ. புனிதர் ஒருவர்

1

வருகைப் பல்லவி

உம்
'காண். திபா 20:2-3 ஆண்டவரே, உமது வல்லமையில் நேர்மையாளர் பூரிப்படைகின்றார்; உமது மீட்பு அவருக்கு எத்துணையோ அக்களிப்பூட்டுகின்றது. அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர் ( பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, எங்கள் வலுவின்மையில் உமது மீட்பின் வழியில் நாங்கள் நடக்க உம் புனிதர்களின் எடுத்துக்காட்டையும் பாதுகாவலையும் அளித்தீரே; அதனால் புனித (பெயர்) ... இன் விண்ண கப் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாங்கள் அவருடைய எடுத்துக்காட்டு வழியாக உம்மிடம் வந்து சேர்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் புனிதர் (பெயர்) .... இன் நினைவுக்கொண்டாட்டத்தில் காணிக்கைகளை ஒப்புக்கொடுத்து உம்மை வேண்டுகின்றோம்: உம் நம்பிக்கையாளருக்கு அமைதி, ஒற்றுமை ஆகிய கொடைகளைத் தாராளமாய் வழங்குவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 16:24 என்னைப் பின்பற்ற விரும்புகிறவர் தம்மையே துறந்து, தம் சிலு வையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

, பொதுத் துறையில் பணிபுரிந்தோருக்காக. மத் 6:33 அனைத்துக்கும் மேலாக கடவுளின் ஆட்சியை நாடுங்கள்; அப்போது அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்,
என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) ... இன் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்கள் மனங்களையும் இதயங்களையும் புனிதப்படுத்துவதாக; அதனால் நாங்கள் உம்முடைய இறை இயல்பில் பங்குபெறத் தகுதியுள்ளவர்கள் ஆவோமாக. எங்கள்.

==============10^ 9088 ^-----------

2

வருகைப் பல்லவி

மலா 2:6 மெய்ப்போதனை அவர் வாயில் இருந்தது. தீமை அs உதடுகளில் காணப்படவில்லை; அவர் என்னோடு அமைதியின்
+மையிலும் நடந்து கொண்டார். நெறிகேட்டிலிருந்து பலரைக் திருப்பிக் கொணர்ந்தார் (பாஸ்கர் காலத்தில், அல்லேல

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நீர் ஒருவரே தூயவர், உம்மைத் தவிர வேறு நல்லவரே இல்லை; புனித (பெயர்) . . . இன் பரிந்துரையால் உம்மை வேண்டுகின்றோம்: உமது மாட்சியை இழக்காதிருப்போரிடையே நாங்களும் எண்ணப்பட எங்களுக்குக் கட்டளையிடுவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) ... இன் விழாவில் நாங்கள் இப்பலியை மாண்புக்கு உரிய உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; இவை எங்கள் மீட்புக்குப் பயனுள்ளவையாகவும் உமது பரிவிரக்கத்துக்கு உகந்தவையாகவும் அமைவனவாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 5:8-9
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்
(பாஸ்கா காலத்தில், அல்லேலூயா .

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, தூய கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: புனித (பெயர்) ... இன் விழாவில் | உமக்கு ஏற்ற ஊழியம் புரிந்து, நாங்கள் கொண்டாடும் இப்பணியால் உமது மீட்பின் வளர்ச்சியை உணர்ந்துகொள்வோமாக. எங்கள் .

==============11^ 9089 ^-----------

II. மடத்துத் துறவியரும் பிற துறவியரும்

அ. துறவு மடத்துத் தலைவர் ஒருவர்

வருகைப் பல்லவி

காண். திபா 91:13-14 நேர்மையாளர் பேரீச்சை மரம் எனச் செழித்தோங்குவார்; லெபனோனின் கேதுரு மரம் எனத் தழைத்து வளர்வார். ஆண்டவரின் இல்லத்திலும் நம் கடவுளின் கோவில் முற்றங்களிலும் நடப்பட்டவர் அவரே (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா)
2011 |

அல்லது

திபா 36:30-31 நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதி நெறியை எடுத்துரைக்கும்: கடவுளின் திருச்சட்டம் அவர்களது
உள்ளத்தில் இருக்கின்றது (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, பல்வேறு உலகச் செயல்பாடுகள் மத்தியில் வாழும் நாங்கள் விண்ணுலகு சார்ந்தவற்றை முழு இதயத்தோடு பற்றிக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: துறவு மடத்துத் தலைவரான புனித (பெயர்) . . . இன் வழியாக, நிறைவுக்கு இட்டுச்செல்லும் நற்செய்திப் படிப்பினைகளை எங்களுக்குத் தருவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, துறவு மடத்துத் தலைவரான புனித (பெயர்) ... ஐப் பற்றியெரியச் செய்த அதே பற்றுணர்வை உமது திருப் பீடத்தை அணுகி வரும் எங்களுக்கும் தாரும்; அதனால் தூய இதயத்தோடும் ஆர்வம் மிகுந்த பிறரன்போடும் உமக்கு இத்திருப்பலியை ஒப்புக்கொடுக்க நாங்கள் ஆற்றல் பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 12:42 தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் இவரே (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).
மத் 23:11

அல்லது

உங்களுக்குத் தலைவராக இருப்பவர் உங்களுக்குத் தொண்டராக இருப்பார், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

==============12^ 9090 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவின் ஆற்றலால் எங்கள் இதயங்களைப் புதுப்பித்தருளும்; அதனால் துறவு மடத்துத் தலைவரான புனித (பெயர்) . . . இன் எடுத்துக்காட்டைப் பின்பற்றி இவ்வுலகு சார்ந்தவற்றை அல்லாமல் மேலுலகு சார்ந்தவற்றை ஞானத்துடன் வாழ்ந்து, கிறிஸ்துவோடு மாட்சியில் தோன்றத் தகுதி பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
2018 11 பு
ஆ. மடத்துத் துறவி ஒருவர்

வருகைப் பல்லவி

எங்கெல்லாம் சகோதரர்கள் சகோதரிகள் இணைந்து கடவுளைப் புகழ்கின்றார்களோ, அங்கெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

காண். திபா 70:8,23 உம்மை நான் புகழ்ந்து போற்ற என் வாய் உமது புகழால் நிரப்பப்படுக; நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் நா அக்களிக்கும் (பாஸ்கா
காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் அடியார் புனித (பெயர்) ... ஐக் கிறிஸ்துவைப் பின்பற்றக் கனிவுடன் அழைத்தீரே; அவருடைய பரிந்துரையால் நாங்கள் எங்களையே மறுத்து, எங்கள் முழு இதயத்தோடு உம்மைப் பற்றிக்கொள்ளும் ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு .

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே,
உம் மக்களின் மீட்புக்காக ஒப்புக்கொடுக்கப்படும் இபபலிப்பொருள்களை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம் இவற்றின் வழியாகப் புனித (பெயர்) ... இன் பரிந்துரையால், பாவக் கவர்ச்சிகளை விட்டு விலகவும் விண்ணகத்தில் இருப்போரை நெருங்கி வரவும் 'நாங்கள் ஆற்றல் பெறுவோமாக. எங்கள்.

==============13^ 9091 ^-----------

திருவிருந்துப் பல்லவி

- காண். லூக் 8:15 சீரிய நல் உள்ளத்தோடு கடவுளின் வார்த்தையைக் காப்போர் மனவுறுதியுடன் பலன் தருவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

' காண். திபா 83:5 ஆண்டவரே, உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்
(பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, புனித (பெயர்) . . . இன் பாதுகாப்பால் காக்கப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது ஞானத்தின் அருளடையாளம் வழியாக நாங்கள் கட்டுப்பாட்டுடன் வாழ்வோமாக. எங்கள்.

இ. அருள்சகோதரி

வருகைப் பல்லவி

காண். திபா 51:10
நானோ கடவுளின் இல்லத்தில் செழித்து வளரும் ஒலிவ மரக்கன்று போல இருக்கின்றேன். கடவுளின் இரக்கத்தில் எப்போதும் நான் நிலையாக நம்பிக்கை வைத்திருக்கின்றேன் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

அல்லது

என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்புக்காக, இந்த உலகின் ஆட்சியையும் உலகின் அனைத்து அணிகலன்களையும் வெறுத்தேன். என் ஆண்டவரை நான் கண்டேன். அவரை நான் விரும்பினேன், அவரில் நம்பிக்கை வைத்தேன், அவரை அன்பு செய்தேன் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, எல்லாவற்றுக்கும் மேலாக உம்மை மட்டுமே தேட உம் ஊழியரான புனித (பெயர்) ... ஐ அழைத்துள்ளீரே; அவருடைய எடுத்துக்காட்டாலும் பரிந்துரையாலும் புனித, தாழ்மையுள்ள இதயத்தோடு நாங்கள் உமக்கு ஊழியம் புரிந்து, உமது நிலையான மாட்சிக்கு வந்து சேர எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) . . . இன் நினைவுக்கொண்டாட்டத்தில் உமக்கென அர்ப்பணிக்கப்பட்ட எங்கள் இறைப்பற்றின் காணிக்கைகளைக் கொண்டு வருகின்றோம். இவை நிலையற்ற ஆறுதலைக் குறித்துக் காட்டினாலும் நீர் வாக்களித்த நிலையானவற்றின்மேல் நாங்கள் நம்பிக்கை இழக்காதிருப்போமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 44:2 இனியதொரு செய்தியால் என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது. ஆகவே மன்னரைக் குறித்து யான் கவிதை புனைகின்றேன் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

லூக் 10:42 தேவையானது ஒன்றே. அவர் நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்; அது அவரிடமிருந்து எடுக்கப்படாது (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா) .

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது மீட்பின் நீரூற்றுகளினால் புத்துணர்ச்சி பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: கிறிஸ்துவோடு இவ்வுலகில் நாளுக்கு நாள் நெருக்கமாக ஒன்றித்திருக்கும் நாங்கள், புனித (பெயர்) ... இன் பரிந்துரையால் மறுவுலகில் அவருடைய அருளின் ஆட்சியில் பங்கேற்பாளர்களாகும் தகுதி பெறுவோமாக. எங்கள்.

ஈ. துறவியர்

வருகைப் பல்லவி

காண். திபா 15:5
ஆண்டவர் என் உரிமைச் சொத்து ; என் கிண்ணம்; எனக்கு உள்ள பங்கைக் காப்பவர் நீரே (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா .

அல்லது, பெண் துறவிக்காக

காண். ஓசே 2:21-22 நேர்மையிலும் இரக்கத்திலும் ஆண்டவர் அவரை எந்நாளும் தமக்கென மண ஒப்பந்தம் செய்து கொண்டார் (பாஸ்கர் காலத்தில் அல்லேலூயா .

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உமது கொடையால், புனித (பெயர்) ..... ஏழைமையும் தாழ்மையும் நிறைந்த கிறிஸ்துவை இறுதிவரை பின்பற்றினார்; அதனால் அவருடைய பரிந்துரையால் எங்கள் அழைத்தலில் நாங்கள் உண்மையுள்ளவர்களாக நடந்து உம் மகனில் முன்னிறுத்தியுள்ள அந்த நிறைவை வந்தடைய ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

கனிவுமிக்க இறைவா, பழைய மனிதனைக் களைந்து, உமது சாயலுக்கு ஏற்றவாறு புதிய மனிதனைப் புனித (பெயர்) . . . இல் உருவாக்கத் திருவுளம் கொண்டீரே; அதனால் நாங்களும் அவரைப் போன்று புதுப்பிக்கப்பெற்று, உமக்கு உவப்பு அளிக்கும் ஏற்புடைய இப்பலிப்பொருளை ஒப்புக்கொடுக்கக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 19:27-29 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னைப் பின்பற்றிய நீங்கள் நூறு மடங்காகப் பெறுவீர்கள். நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவீர்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா .

அல்லது பெண் துறவி

காண். புல 3:24-25 ஆண்டவரே என் பங்கு: அவரைத் தேடும் ஆன்மாவுக்கு அவர் நல்லவர்
(பாஸ்கா காலத்தில், அல்லேலூயா .

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருவிருந்தின் ஆற்றலால், புனித (பெயர்) . . . இன் எடுத்துக்காட்டைப் பின்பற்ற, உமது அன்பில் என்றும் எங்களை வழிநடத்தியருளும்; எங்களில் நீர் தொடங்கிய இந்த நற்செயலை இயேசு கிறிஸ்து வரும் நாள்வரை நிறைவுக்கு இட்டுச் செல்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

==============16^ 9094 ^-----------

வருகைப் பல்லவி

காண். திபா 23:5-6ஆண்டவரிடம் ஆசி பெற்றவரும் தம் மீட்பராம் கடவளி ரொக்கம் பெற்றவருமான இவர்களே புனிதர்கள். ஏனெனி
டவரை நாடுவோரின் தலைமுறை இதுவே (பாஸ்கா காலத்தில் அல்லே லூயா ).

அல்லது

காண். திபா 104:3-4, ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக! ஆண்டவரை தேடி உறுதிபெறுங்கள். அவரது திருமுகத்தை என்றும் நாடுங்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).
2018 11

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நிறைவான அன்பைத் தேடுவதன் வழியாக புனித (பெயர்) . . . ஐ இவ்வுலகில் உமது ஆட்சியை நாட அழைத்தீரே; அதனால் அவருடைய பரிந்துரையால் நாங்கள் ஊக்கமடைந்து அன்பு வழியில் மகிழ்ச்சிநிறை மனப்பாங்கோடு முன்னேறிச் செல்ல அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) . . . இன் நினைவுக்கொண்டாட்டத்தில் உமது பீடத்துக்கு நாங்கள் கொண்டு வரும் எங்கள் பணியின் காணிக்கைகள் உமக்கு உகந்தனவாய் ஏற்றுக்கொள்ளப்பட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உலகப் பற்றுகளிலிருந்து விடுபட்டு, உம்மை மட்டுமே எங்கள் செல்வமாய் கொண்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 33:9 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் நம்பிக்கை கொள்வோர் பேறுபெற்றோர் (பாஸ் காலத்தில், அல்லேலூயா ).

அல்லது

மத் 5:3 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணர் அவர்களுக்கு உரியது (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

==============17^ 9095 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, இத்திருவிருந்தின் ஆற்றலால் வலிமை அடைந்த நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: புனித (பெயர்) . . . இன் எடுத்துக்காட்டைப் பின்பற்றி எல்லாவற்றுக்கும் மேலாக எப்பொழுதும் உம்மையே நாடவும் இவ்வுலகில் புதிய மனிதனின் சாயலைத் தாங்கவும் அருள்வீராக. எங்கள்.

II. இரக்கப் பணி செய்தோர்

வருகைப் பல்லவி

காண். மத் 25:34, 36,40 என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே! வாருங்கள், என்கிறார் ஆண்டவர்; நான் நோயுற்றிருந்தேன், என்னைச் சந்தித்தீர்கள்; இச்சின்னஞ் சிறிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

அல்லது

திபா 111:9
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும் (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, இறையன்புடனும் பிறரன்புடனும் விண்ணகக் கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க உமது திரு அவைக்குப் போதித்துள்ளீரே; அதனால் நாங்கள் புனித (பெயர்) ... இன் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, அன்புப் பணி ஆற்றி உமது ஆட்சியில் பேறுபெற்றவர்களாக எண்ணப்படத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் உம் திருமகனுடைய மாபெரும் அன்பின் பலியை நினைவுகூரும் நாங்கள், புனித (பெயர்) . . . இன் எடுத்துக்காட்டால் உமது அன்பிலும் அயலார் அன்பிலும் உறுதிபெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 15:13 தம் நண்பர்களுக்காகத் தம் உயிரைக் கொடுப்பதைவி அன்பு யாரிடமும் இல்லை (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா)

அல்லது

காண். யோவா 13:35= நீங்கள் வருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர், எம் ஆண்டவர் ( பாஸ்கா காலத்தில், அல்லேலூயா) .

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) . . . தளராத பக்தியுடன் உம்மை வழிபட்டு உம் மக்களுக்கு மாபெரும் அன்புப் பணி புரிந்தார்; எனவே தூய மறைபொருள்களால் ஊட்டம் பெற்ற நாங்கள், அவரின் எடுத்துக்காட்டைப் பின்பற்ற அருள்புரிவீராக. எங்கள்.

அல்லது

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் அருளடையாளத்தின் விருந்தில் திளைத்த நாங்கள் உமது பரிவிரக்கத்தைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் புனித (பெயர்) ... இன் பிறரன்பை நாங்கள் பின்பற்றி, மாட்சியில் பங்குபெறுவோமாக. எங்கள்.

IV. கல்விப் பணியாளர்கள்

வருகைப் பல்லவி

காண். மாற் 10:14 சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது, என்கிறார் ஆண்டவர் ( பாஸ்கா காலத்தில், அல்லேலூயா) -

அல்லது

காண். மத் 5:19
ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவர் விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார், என்கிறார் ஆண்டவர்
(பாஸ்கா காலத்தில், அல்லேலூயா .

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, அயலாருக்கு மீட்பின் வழியைக் காட்ட, உமது திரு அவையில் புனித (பெயர்) . . . ஐத் தேர்ந்தெடுத்தீரே; அதனால் அவருடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நாங்கள் எம் சகோதரர் சகோதரிகளுடன் உம்மை நோக்கி வரும் போதகராகிய கிறிஸ்துவை நாங்கள் பின்பற்றும் ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் புனிதர் (பெயர்) . . . இன் நினைவுக்கொண்டாட்டத்துக்காக உமக்கு அர்ப்பணிக்கப்பட்ட மக்களின் இக்காணிக்கைகள் உமக்கு உகந்தனவாய் ஏற்றுக்கொள்ளப்பட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இம்மறைநிகழ்வில் பங்குபெறுவதன் வழியாக உமது அன்பின் எடுத்துக்காட்டுகளை நாங்கள் பிரதிபலிப்போமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத்.18:3 நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல ஆகாவிட்டால், விண்ணரசில் புகமாட்டீர்கள், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா) .

அல்லது

யோவா 8:12 என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா) .

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, இத்திரு உணவு எங்களுக்கு ஊட்டம் அளிப்பதாக; அதனால் புனித (பெயர்) . . . இன் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, எங்கள் இதயத்திலும் செயலிலும் சகோதரத்துவ அன்பையும் உண்மையின் ஒளியையும் நாங்கள் வெளிப்படுத்துவோமாக. எங்கள்.
V. புனிதையர் புனித பெண் மறைச்சாட்சி (பக். 915.

வருகைப் பல்லவி

காண். நீமொ 31:30,28 ஆண்டவருக்கு அஞ்சும் பெண்ணே புகழப்படுவார்; அவருடைய பிள்ளைகள் அவரை மிகவும் பேறு பெற்றவர் என வாழ்த்துவார்கள்; அவருடைய கணவர் அவரைப் புகழ்வார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா) .

அல்லது

காண். நீமொ 31:20,27 எளியவருக்கு உதவிடத் தம் கையைத் திறப்பார். ஏழையருக்குத் தம் உள்ளங்கைகளை நீட்டுவார். சோம்பலாய்த் தம் அப்பத்தை உண்ண மாட்டார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா .

==============20^ 9098 ^-----------

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, ஒவ்வோர் ஆண்டும் புனித (பெயர்) . . - இன் விழாவால் எங்களை இன்புறச் செய்கின்றீர்; அதனால் கடமை உணர்வுடன் அவரை வணங்கும் நாங்கள் அவரது புனித வாழ்வின் எடுத்துக்காட்டைப் பின்பற்ற எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு.

அல்லது பலருக்காக

எல்லாம் வல்ல இறைவா, புனிதையர் (பெயர்) . . . , (பெயர்) . . . ஆகியோரின் வியத்தகு வாழ்வு எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கச் செய்தீரே; அதனால் வணக்கத்துக்கு உரிய அவர்களது பரிந்துரை எங்களுக்கு விண்ணக உதவியைப் பெற்றுத் தர அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) ... இன் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் பலிப்பொருள்களை உம்மிடம் கொண்டு வந்து தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் இவை எங்களுக்கு மன்னிப்பையும் மீட்பையும் பெற்றுத்தர அருள்வீராக. எங்கள்

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 13:45-46
நல்ல முத்துகளைத் தேடிச் செல்லும் வணிகர் ஒருவருக்கு விண்ணரசு ஒப்பாகும். விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய் தமக்குள்ள அனைத்தையும் விற்று, அதை வாங்கிக் கொள்கிறார். (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, புனித (பெயர்) ... இன் விழாவில், தூய அருளடையாளத்தின் செயல் எங்களை என்றும் ஒளிர்வித்துச் சுடர்வீசச் செய்வதாக; அதனால் நாங்கள் என்றும் தூய விருப்பங்களில் தணியாப் பற்றுக் கொண்டு நற்செயல்களில் திளைக்க அருள்வீராக. எங்கள்.

==============21^ 9099 ^-----------

2

வருகைப் பல்லவி

காண். நீமொ 14:1-2 இதோ, ஞானமுள்ள பெண் தம் இல்லத்தைக் கட்டியெழுப்பினார். ஆண்டவருக்கு அஞ்சி நேர்மையான வழியில் நடந்தார், (பாஸ்கா
காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, தாழ்மையுற்றோரின் உயர்வானவரே, புனித (பெயர்) . . - ஐப் பிறரன்பு, பொறுமை ஆகிய அணிகலன்களால் மேன்மைப்படுத்த விரும்பினீரே; அதனால் அவருடைய பேறுபயன்களாலும் பரிந்துரையாலும் நாங்கள் எங்கள் சிலுவையை அன்றாடம் சுமந்து உம்மை எப்போதும் அன்பு செய்யும் ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு.
2018 11 1

அல்லது

ஆண்டவரே, உம் ஊழியரான புனித (பெயர்) . . . க்கு நீர் நிறைவாக வழங்கிய அறிவின் தெளிவையும் உமது அன்பையும் எங்கள் மீதும் பொழிந்தருளும்; அதனால் அவருடைய எடுத்துக்காட்டின்படி நாங்கள் உமக்கு நேர்மையுடன் பணி புரிந்து நம்பிக்கையாலும் செயலாலும் உமக்கு விருப்பமுள்ளவர்களாய் விளங்குவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் இப்பலிப்பொருள்களைக் கண்ணோக்கியருளும்; புனித (பெயர்) . . . இன் புகழுக்காக இறைப்பற்றுள்ள உள்ளத்தோடு கொண்டாடும் அவர்கள், தங்கள் மீட்புக்கான அவற்றின் ஆற்றலை உய்த்துணர்வார்களாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 12:50விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) . . . இன் விழாவில் நாங்கள் பெற்றுக்கொண்ட உம் கொடைகளால் நிரப்பப்பட்டுள்ளோம். -- இவ்வாறு இக்கொடைகளால் நாங்கள் தூய்மையாக்கப்பெற்று, அவற்றின் உதவியால் வலிமை பெற எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

=============↑ பக்கம் 958

====================

image