image

 

பொது

திருச்சடங்குத் திருப்பலிகள்

II. நோயில்பூசுதல் அளித்தல்

திருச்சடங்குத் திருப்பலிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நாள்களில் எப்போழுதெல்லாம் திருப்பலியில் நோயில்பூசுதல் வழங்கப்படுகின்றதோ (பக. 1139 - 1140) அப்போதெ. வெண்ணிறத் திருவுடையுடன் நோயுற்றோருக்கான திருப்பலி கொண்டாடப்படும்.

எல்லா மன்றாட்டுகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்றவாறு மா படலாம். மேலும் ஒருவர்-பலருக்கு ஏற்றவாறும் உரிய மாற்றங்களுடன் பயன்படுத்தப் படலாம்

நோயில் பூசுதல் தனிச் சடங்கு:

குரு : ஆண்டவரின் அமைதி உங்களோடு இருப்பதாக.

எல் : உம்மோடும் இருப்பதாக.

குரு : (நோயாளியின் மீதும் அறையிலும் தீர்த்தம் தெளித்துக் கொண்டு) இத்தீர்த்தம் நாம் பெற்ற திருமுழுக்கை நினைவூட்டுவதாக, தம் பாடுகளாலும் உயிர்ப்பினாலும் நம்மை மீட்ட கிறிஸ்துவையும் நமக்கு நினைவுப்படுத்துவதாக.

அன்புள்ள சகோதரர்களே, நோயுற்றோர் உடல் நலம் தேடி ஆண்டவரிடம் வந்தார்கள் என்று நற்செய்தி கூறுகிறது. அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமக்காக கொடிய பாடுபட்ட எம்பெருமான், இதோ, தம் பெயரால் கூடியிருக்கும் நம் மத்தியில் எழுந்தருளியிருக்கிறார்.

உங்களுள் யாரேனும் நோயிற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர் மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும் போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார் என்று அப்போஸ்தலரான புனித யாகப்பர் வழியாக நமக்குக் கட்டளை தருபவரும் அவரே.

எனவே, நோயிற்றிருக்கும் நம் சகோதரர் (சகோதரி) மீது கிறிஸ்து பெருமானின் அருளும் வல்லமையும் இறங்கி இவரது வேதனையைத் தணித்து, உடல் நலம் அருளுமாறு உருக்கமாக மன்றாடுவோம்.

மன்னிப்பு :

குரு : சகோதரரே இத்திருச்சடங்கில் நாம் தகுதியுடன் பங்கு பெற, நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.

எல் : எல்லாம் வல்ல இறைவனிடமும் ..

குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!
மக் : ஆமென்.

இறைவாக்கு :

சகோதரரே, மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் கேட்போம் :

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்,.. (மத். 8 : 5 - 13)

மன்றாட்டுக்கள் :

குரு : சகோதரரே, நம் சகோதரர் (சகோதரி) ....க்காக இறைவனைத் தாழ்ந்து பணிந்து விசுவாசத்தோடு வேண்டிக் கொள்வோம்.

1. ஆண்டவரே, இத்திருப்புசுதல் வழியாகத் தேவரீர் பரிவன்புடன் இவரைச் சந்தித்துத் தேற்றியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்ருளும்.

2. தீமை அனைத்திலுமிருந்து இவரை விடுவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. இங்குள்ள நோயாளிகள் அனைவருடைய வேதனைகளையும் நீர் தணித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. நோயாளிகளைப் பராமரிக்கும் அனைவருக்கும் நீர் துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. இவரைப் பாவத்திலிருந்தும், சோதனை அனைத்திலுமிருந்தும் விடுவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

6. குரு : உமது பெயரால் நாம் இவர் தலைமீது கைகளை வைப்பதால், இவருக்கு நல் வாழ்வும், உடல் நலமும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

திரு எண்ணெய் மீது நன்றி மன்றாட்டு :

குரு : எங்களுக்காகவும் எங்கள் மீட்புக்காகவும் உம் திருமகனை உலகிற்கு அனுப்பிய எல்லாம் வல்ல தந்தையாம் இறைவா, போற்றி.

எல் : இறைவா போற்றி, போற்றி.

குரு : எங்கள் மனித நிலைக்குத் தாழ்ந்து வந்து, எங்கள் பிணிகளைப் போக்கத் திருவுளமான ஒரே திருமகனான இறைவா, போற்றி.

எல் : இறைவா போற்றி, போற்றி.

குரு : உமது நிலையான வல்லமையால் எங்கள் உடலின் சோர்வினைப் போக்கி, திடப்படுத்தி எங்களுக்குத் துணை நிற்கும் தூய ஆவியாம் இறைவா, போற்றி.

எல் : இறைவா போற்றி, போற்றி.

குரு : அன்புத் தந்தையே, உம் அடியார் மீது திரு எண்ணெய் பூசுகிறோம். இதனால் இவர் வேதனை தணிந்து, ஆறுதல் பெற வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

திரு எண்ணெய் பூசுதல் :

(குரு நோயாளியின் நெற்றியிலும் கைகளிலும் திரு எண்ணெய் பூசி கூறுவதாவது :)

இப்புனித பூசுதலினாலும், தம் அன்பு மிகுந்த இரக்கத்தாலும், ஆண்டவர் தூய ஆவியின் அருளைப் பொழிந்து உமக்குத் துணை புரிவாராக.

எல் : ஆமென்.

குரு : இவ்வாறு, உம் பாவங்களைப் போக்கி, உமக்கு நலம் அளித்து தயவாய் உம்மைத் தேற்றுவாராக.

எல் : ஆமென்.

குரு : செபிப்போமாக. இரக்கமுள்ள எங்கள் மீட்பரே, தூய ஆவியின் அருளால், இந்த நோயாளியின் சோர்வையும் பிணிகளையும் தணித்து, இவருடைய புண்களை ஆற்றி பாவங்களைப் போக்கி, உள்ளத்திலும் உடலிலும் இவர் படும் வேதனைகளை அகற்றி, உள்ளும் புறமும் இவர் முழுமையாக நலம்பெறத் தயைபுரியும். இவ்வாறு இவர் உமது பரிவன்பினால் நலமடைந்து, பழைய நிலை பெற்று, தம் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகிறோம்.

நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு கற்பித்தபடியே நாம் ஒருமித்து இறைவனை வேண்டுவோம்.

எல் : விண்ணுலகில் இருக்கிற....
(தேவைப்படின், இங்கு இறுதி வழியுணவு வழங்கலாம்.)

திருப்பலி முடிவில் கீழ்க்காணும் சிறப்பு ஆசிக்கான வாய்பாடுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

தந்தை இறைவன் உமக்கு ஆசி வழங்குவாராக.

எல்.: ஆமென்.

இறைவனின் திருமகன் உமக்கு நலம் அளிப்பாராக.

எல்.: ஆமென்.

தூய ஆவியார் உம்மீது ஒளி வீசுவாராக.

எல்.: ஆமென்.

இறைவன் உமது உடலைக் காத்து ஆன்மாவை மீட்பாராக.

எல்.: ஆமென்.

அவர் உமது உள்ளத்தை ஒளிர்வித்து, உம்மை விண்ணக வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்.

இங்கே ஒன்றாய்க் கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், X தூய ஆவியார் ஆசி வழங்குவாராக.

எல்.: ஆமென்.

அல்லது

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உம்மைக் காப்பாற்ற உம்மோடு இருப்பாராக.

எல்.: ஆமென்.

அவா உம்மை வழிநடத்த உம் முன்னும், உம்மைப் பாதுகாக்க உம் பின்னும் இருப்பாராக.

எல்.: ஆமென்.

அவர் உம்மைக் கண்ணோக்கி, உம்மைக் காத்து உமக்கு ஆ° வழங்குவாராக.

எல்.: ஆமென்.

இங்கே ஒன்றாய்க் கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், ¥ தூய ஆவியார் ஆசி வழங்குவாராக.

எல். ஆமென்.

==============14^ 9122 ^-----------

II. இறுதிப் பயண உணவு அளித்தல்


திருச்சடங்குத் திருப்பலிகள் அனுமதிக்கப்படும் நாள்களில் வெண்ணிறத் திருவுடையுடன் இத்திருப்பலிகள் பயன்படுத்தப்படும்.
எல்லா மன்றாட்டுகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்றவாறு மாற்றிக் கொள்ளப்படலாம். மேலும் ஒருவர் - பலருக்கு ஏற்றவாறும் உரிய மாற்றங்களுடன் பயன்படுத்தப்படலாம்.

வருகைப் பல்லவி

காண். திபா 80:17 கோதுமையின் கொழுமையால் அவர் அவர்களுக்கு உணவளித்தார்; மலைத் தேனால் அவர்களுக்கு நிறைவளித்தார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

காண். எசா 53:4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் து ன் ப ங் களைச் சுமந்து கொண்டார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா) .

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் திருமகனே எங்களுக்கு வழியும் உண்மையும் வாழ்வுமாக இருக்கின்றார்; உம் அடியார் (பெயர்) ... ஐக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இவ்வாறு இவர் உம்முடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து, உம் திருமகனின் திரு உணவால் வலிமை பெற்று, உமது ஆட்சிக்கு அமைதியில் வந்து சேர அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

தூயவரான தந்தையே, 'தம் பாடுகளால் விண்ணக வாயில்களைத் திறந்து வைத்த பாஸ்கா செம்மறியான கிறிஸ்துவைக் குறித்துக்காட்டும் எங்கள் பலியைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இவ்வாறு உம் அடியார் (பெயர்) . . . ஐ உமது அருளால் நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வீராக. எங்கள்.
யோவா 6:54

திருவிருந்துப் பல்லவி

எனது சதையை உண்டு, எனது இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், என்கிறார் ஆண்டவர்; நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).
கொலோ 1:24

அல்லது

கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

==============15^ 9123 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம்மை நம்புவோருக்கு நிலையான மீட்பு அளிப்பவர் நீரே; அதனால் விண்ணக அப்பத்தினாலும் பானத்தினாலும் உட்பட உம் அடியார் (பெயர்) . . . ஒளியும் வாழ்வும் நிறைந்த ஆட்சிக்குப் பாதுகாப்புடன் வந்து சேர அருள்புரிவீராக. எங்கள்.

==============16^ 9124 ^-----------

=============↑ பக்கம் 978

====================

image