image

 

பொது

திருச்சடங்குத் திருப்பலிகள்

திருவருகைக் கால, தவக்கால, பாஸ்கா காலத்தின் ஞாயிற்றுக்கிழமைகள், பெருவிழாக்கள், பாஸ்கா எண்கிழமைகள், இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவு நாள், திருநீற்றுப் புதன், புனித வார நாள்கள் ஆகிய நாள்களில் திருச்சடங்குத் திருப்பலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இத் திருபபலிகளிலும் திருச்சடங்கு நூல்களிலும் கொடுக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கவேண்டும்.

1. கிறிஸ்தவப் புகுமுக அருளடையாளங்களை நிறைவேற்றல்

எல்லா மன்றாட்டுகளையும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்றவாறும், ஒருவரைக் குறிப்பனவற்றைப் பலருக்கு ஏற்றவாறும் மாற்றி இப்பாடங்களைப் பயன்படுத்தலாம்.

1. தேர்ந்தெடுப்பு அல்லது பெயர்ப் பதிவு


பாஸ்கா திருவிழிப்பில் கிறிஸ்தவப் புகுமுக அருளடையாளங்களுக்கு அனுமதிக்கப்பட உள்ள புகுமுகநிலையினருக்கான தேர்ந்தெடுப்பு அல்லது பெயர்ப் பதிவுச் சடங்கு தவக் கால முதல் ஞாயிறு திருப்பலியின்போது கொண்டாடப்பட வேண்டும் (பக். 216-217), அருள்பணிக் காரணங்களுக்காக, இத்திருப்பலி இந்நாளிலிருந்து வேறொரு நாளுக்கு மாற்றப்பட்டால், திருவழிபாட்டு நாள்கள் அட்டவணையில் உள்ள எண் 1-4-ல் கொடுக்கப்பட்டுள்ளவை தவிர மற்ற நாள்களில் ஊதா நிறத்திருவுடை இத்திருப்பலியில் பயன்படுத்தப்படும். தவக்கால நான்காம் வார வெள்ளிக்கிழமைத் திருப்பலியும் பயன்படுத்தப்படலாம் (பக். 248).

வருகைப் பல்லவி

காண். திபா 104:3-4, ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக! ஆண்டவரைத் தேடுங்கள், உறுதிபெறுங்கள். அவரது திருமுகத்தை என்றும்
நாடுங்கள்!

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, மனிதருக்கு எப்போதும் நீர் மீட்பு அளிக்கின்றீர் எனினும், இக்காலத்தில் மிகுதியாக அருள் பொழிந்து உம் மக்களை மகிழ்விக்கின்றீர்; அதனால் நீர் தேர்ந்து கொண்ட மக்கள் மீது இரக்கமுடன் கண்ணோக்கி புதுப்பிறப்பு அடைந்தோர், அடைய இருப்போர் ஆகிய அனைவருக்கும் உமது பரிவும் பாதுகாப்பும் உள்ள உதவியை அளிப்பீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உமது பெயரை அறிக்கையிடுவதால் திருமுழுக்கு எனும் அருளடையாளத்தின் வழியாக எங்களை நிலைவாழ்வுக்குத் தயாரிக்கின்றீர்; அதனால் உம் அடியார்களின் காணிக்கைகளையும் வேண்டல்களையும் கனிவாய் ஏற்று, உம்மை எதிர்நோக்கியிருப்போரின் பாவங்களை அகற்றி, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீராக. எங்கள்.

காலத்துக்கு உரிய தொடக்கவுரை சொல்லப்படும்.

'திருவிருந்துப் பல்லவி

எபே 1:7 கிறிஸ்து இரத்தம் சிந்தித் தம் அருள் வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம் மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட அருளடையாளத் திரு உணவு எங்களைத் தூய்மைப்படுத்தவும் உம் அடியார்களைக் குற்றங்கள் அனைத்திலிருந்தும் விடுவிக்கவும் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு குற்றமுள்ள மனச்சான்றினால் கட்டுண்டவர்கள் விண்ணக உதவியின் நிறைவால் மாட்சி அடைவார்களாக. எங்கள்

==============25^ 9103 ^-----------

2. ஆய்வுக் கொண்டாட்டம்

பாஸ்கா திருவிழிப்பில் புகுமுக அருளடையாளங்களுக்கு அனுமதிக்கப்பட உள்ள கிறிஸ்தவப் புகுமுகநிலையினருக்கு உரிய ஆய்வுகள் தவக் கால 3, 4, 5-ஆம் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படும்பொழுது இத்திருப்பலிகளில் ஊதா நிறத் திருவுடை அணியப்படும். எனினும், அருள்பணிக் காரணங்களுக்காக, இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஆய்வுகள் இடம் பெறவில்லை எனில், தவக் காலத்தின் தகுந்த பிற வாரநாள்களிலோ பாஸ்கா திருவிழிப்புக்குப் புறம்பே இடம்பெறும் திருமுழுக்கிலோ ஆண்டின் பிற நேரங்களிலோ நடைபெறலாம். இருப்பினும் தவக் கால் 3, 4, 5-ஆம் ஞாயிற்றுக்கிழமைகளில் முறையே கொடுக்கப்பட்டுள்ளவாறு முதல் ஆய்வுத் திருப்பலியில் சமாரியப் பெண் பற்றிய நற்செய்தியும் இரண்டாம் ஆய்வுத் திருப்பலியில் பிறவியிலேயே பார்வையற்றவர் பற்றிய நற்செய்தியும் மூன்றாம் ஆய்வுத் திருப்பலியில் இலாசர் பற்றிய நற்செய்தியும் வாசிக்கப்படும்.

அ முதல் ஆய்வுக்காக

வருகைப் பல்லவி

எசே 36:23-26 நான் உங்களில் என் தூய்மையை நிலைநாட்டும்போது பல நாடுகளிலிருந்து உங்களைக் கூட்டிச்சேர்ப்பேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்: உங்கள் எல்லா அழுக்குகளிலிருந்தும் நீங்கள் தூய்மை ஆவீர்கள்; புதிய ஆவியை உங்களுக்குக் கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர்.

அல்லது

காண். எசா 55:1 தாகமாய் இருப்பவர்களே, நீர் நிலைகளுக்கு வாருங்கள்; பணம்
இல்லாதவர்களே, வந்து, மகிழ்வுடன் பருகுங்கள், என்கிறார் ஆண்டவர்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் தகுதியுடனும் ஞானத்துடனும் உமது புகழை அறிக்கையிட முன் வர உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு பிறப்புநிலைப் பாவத்தால் இழந்துவிட்ட தங்களின் முன்னைய மேன்மையை இவர்கள் மீண்டும் அடைந்து, உமது மாட்சியால் புதுப்பிக்கப்பெறுவார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, இமமறைநிகழ்வுகளைத் தகுதியுடன் கொண்டாட உம் அடியார்களை உமது இரக்கத்தால் தயாரிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இறைப்பற்றுள்ள வாழ்வினால் அவர்களை வழிநடத்துவீராக. எங்கள்.

தவக் கால் மூன்றாம் ஞாயிறுக்கு உரிய தொடக்கவுரை சொல்லப்படும் (பக். 233). உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது "வாழ்வோர் நினைவுப்", பகுதியில் ஞானப் பெற்றோர் பின்வருமாறு நினைவுகூரப்படுவர். தொடர்ந்து, இநநாளுக்கு -""- ஆகவே ஆண்டவரே, ...'' என்னும் பகுதியும் சொல்லப்படும்.

==============26^ 9104 ^-----------

வாழ்வோர் நினைவு

ஆண்டவரே, உமது திருமுழுக்கின் தூய அருளைப் பெற்றுக்கொ உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உம் அடியார்களாகிய இச்சகோதரர் சகோதரிகளையும்

இங்கு ஞானத் தாய் தந்தையரின் பெயர்கள் சொல்லப்படுகின்றன.

உம்மிடம் நம்பிக்கை கொண்டு இங்கே கூடியுள்ள அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். ..

(ஆகவே ஆண்டவரே,...)

ஆகவே ஆண்டவரே, நிலைவாழ்வு அடையவும் உமது அருளின் புனிதக் கொடையைப் பெற்றுக்கொள்ளவும் நீர் தேர்ந்தெடுத்து அழைக்க விருப்பம் கொண்ட உம் அடியார்களுக்காக நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம். (எங்கள்.)

2-ஆம் நற்கருணை மன்றாட்டு பயன்படுத்தப்படும்போது, "நிறைவு பெறச் செய்தருளும்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்:

ஆண்டவரே, திருமுழுக்கில் மறு பிறப்பு அடையும்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை முன்னிலைப்படுத்தும் உம் ஊழியர்களையும் நினைவுகூர்ந்தருளும். மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன். . .

3-ஆம் நற்கருணை மன்றாட்டு பயன்படுத்தப்படும்போது, "நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக." எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக் கொள்ளப்படும்:

ஆண்டவரே, தங்கள் சொல்லாலும் எடுத்துக்காட்டாலும் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவில் புது வாழ்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உம் ஊழியர்களை வழிநடத்தும் ஞானப் பெற்றோருக்கு உமது அருளால் துணைபுரிவீராக. நீர் விரும்பியபடி...

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 4:14 நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எ
உற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும், என்கிறார் ஆண்டவா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது மீட்பின் பயன்களால் எங்களுக்குத் துணைHTTP உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நிலைவாழ்வின் அருளடையாளங்களைத் தகுதியுடன் பெற நீர் தேர்ந்தெடுத்தவர்களைக் காத்தருள்வீராக. எங்கள்.

==============27^ 9105 ^-----------

2-ஆம் ஆய்வுக்காக

வருகைப் பல்லவி

'காண். திபா 24:15-16 என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன; ஏனெனில் அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்; ஏனெனில் நான்
ஆதரவற்றவன், ஏழை.

திருக்குழும் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உமது திரு அவையில் அருள்வாழ்வின் மகிழ்ச்சியைப் பெருகச் செய்தருளும்; இவ்வாறு பிறப்பால் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் புதுப் பிறப்பினால் விண்ணகத்தின் குடிமக்களாய்த் திகழ்வார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, பணிவுடன் உம்மை வேண்டி, நிலையான உதவி அளிக்கும் காணிக்கைகளைப் பேரின்பத்துடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் நாங்கள் இவற்றைத் தகுந்த முறையில் போற்றவும் மீட்பைத் தேடுவோருக்காக உமக்கு உகந்தவாறு ஒப்புக்கொடுக்கவும் செய்வீராக. எங்கள். தவக் கால 4-ஆம் ஞாயிறுக்கு உரிய தொடக்கவுரை பயன்படுத்தப்படும் (பக். 242). மேலே உள்ளது போல நற்கருணை மன்றாட்டுகளில் ஞானப் பெற்றோர்களின் நினைவுக் கொண்டாட்டம் இடம் பெறுகின்றது (பக். 964); உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டு பயன்படுத்தும்போது முதல் ஆய்வில் (பக். 964) உள்ளது போல, இந்நாளுக்கு உரிய ஆகவே ஆண்டவரே, ...." சொல்லப்படும்.

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 9:11,38 ஆண்டவர் என் கண்களில் பூசினார்; நான் சென்றேன்,
கழுவினேன், பார்த்தேன், கடவுளை நம்பினேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தினரை நீர் என்றும் கனிவுடன் ஆதரித்து அவர்களைத் திருத்திப் பக்குவப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: உமக்குக் கீழ்ப்படியுமாறு அவர்களை உமது அருளால் பாதுகாத்து முடிவில்லா உமது அன்பால் மடபின் பாதையில் அவர்களை வழிநடத்துவீராக. எங்கள்.

==============28^ 9106 ^-----------

3-ஆம் ஆய்வுக்காக

வருகைப் பல்லவி

காண். திபா 17:5-7சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; பாதாளக் கயிறுகள் என்னைக் சுற்றி இறுக்கின; என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்
2018

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் தூய மறையுண்மைகளை நன்கு கற்றறிய அருள்புரிந்தருளும்; இவ்வாறு இவர்கள் திருமுழுக்கு ஊற்றிலே புது வாழ்வு பெற்று உமது திரு அவையின் உறுப்பினர்களாக எண்ணப்படுவார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்தவ நம்பிக்கையின் முதற்கனிகளால் நீர் நிரப்பியுள்ள உம் அடியார்களுக்கும் எங்களுக்கும் செவிசாய்த்தருளும். இப்பலியின் பயனாக இவர்களைப் புனிதப்படுத்துவீராக. எங்கள்.

தவக் காலத்தின் 5-ஆம் ஞாயிறுக்கு உரிய தொடக்கவுரை பயன்படுத்தப்படும் (பக். 250-251).
மேலே உள்ளது போல் நற்கருணை மன்றாட்டுகளில் ஞானப் பெற்றோரின் நினைவுக் கொண்டாட்டம் இடம் பெறுகிறது (பக். 964); உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது முதல் ஆய்வில் (பக். 964) உள்ளது போல், இந்நாளுக்கு உரிய ஆகவே ஆண்டவரே, ..." சொல்லப்படும்.

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 11:26 உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும்
என்றுமே சாகமாட்டார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்கள் ஒன்றிணைந்து முழு இதயத்துடன் உமக்குக் கீழ்ப்படிந்து நடக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவர்கள் கலக்கங்கள் அனைத்திலிருந்து நலம் அடைந்து மீட்பின் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் கொண்டாடவும் புதுப் பிறப்பு அடைய இருப்பவர்களுக்காக உம்மை இரந்து மன்றாடவும் செய்வீராக. எங்கள்.

==============29^ 9107 ^-----------

3. திருமுழுக்கு அளித்தல்

பாஸ்கா திருவிழிப்பில் முதியோருக்கான புகுமுக அருளடையாளங்கள் வழக்கமாக நிறைவேற்றப்படுகின்றன. தேவையின் பொருட்டு, பாஸ்கா பெருவிழாவுக்குப் புறம்பே
அவை கொண்டாடப்பட்டால், வெண்ணிறத் திருவுடையுடன் அல்லது திருச்சடங்குத் கப்பலிகள் அனுமதிக்கப்படும்போது உள்ள திருவிழாவுக்கு உரிய நிறத் திருவுடையுடன் இத்திருப்பலி பயன்படுத்தப்படும்.

இதே நிபந்தனைகளுடன், குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிக்கவும் இத்திருப்பலி பயன்படுத்தப்படலாம்.

இத்திருப்பலியில், பாவத்துயர்ச் செயல், "ஆண்டவரே, இரக்கமாயிரும்," நம்பிக்கை அறிக்கை சொல்லப்படுவதில்லை. ஆனால் "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

குரு : உங்கள் குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறீர்கள்?

பெற் : ............................... என்ற பெயரிட விரும்புகிறோம்.

குரு : (பெயர்)க்காக நீங்கள் இறைவனின் திருச்சபையிடம் கேட்பது என்ன?

பெற் : திருமுழுக்கு (அல்லது ஞானஸ்தானம்)

குரு : உங்கள் குழந்தை(களு)க்கு திருமுழுக்குக் கேட்கிறீர்கள். உங்கள் குழந்தை(கள்) கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து, கிறிஸ்து நமக்கு கற்பித்தது போல், இறைவனுக்கும், தங்கள் அயலாருக்கும் அன்பு செய்து வாழ அவர்களை விசுவாசத்தில் வளர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு; இதை உணர்ந்திருக்கிறீர்களா?

பெற் : உணர்ந்திருக்கிறோம்.

குரு : ஞானத்தாய் தந்தையரே, இக்குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற நீங்கள் உதவி புரிவீர்களா?

குரு : (பெயர் ...................) (அல்லது குழந்தைகளே) கிறிஸ்தவ சமூகம் உங்களைப் பெருமகிழ்வுடன் வரவேற்கின்றது. இந்த சமூகத்தின் பெயரால் நான் உங்கள் மீது சிலுவை அடையாளம் வரைகிறேன். பின்னர் உங்கள் பெற்றோரும், ஞானத்தாய் தந்தையரும் மீட்பராம் கிறிஸ்துவின் அடையாளத்தை உங்கள் மீது வரைவார்கள்.

(குரு மௌனமாக குழந்தையின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைய, தொடர்ந்து பெற்றோரும், ஞானப் பெற்றோரும் அவ்வாறே செய்கின்றனர்)

விசுவாசிகளின் மன்றாட்டு

குரு : அன்பார்ந்த சகோதரர்களே, திருமுழுக்கின் அருளைப் பெறஇருக்கும் இக்குழந்தை(களு)க்காகவும், இவர்களுடைய பெற்றோர், ஞானத்தாய் தந்தையருக்காகவும் திருமுழுக்குப் பெற்றுள்ள அனைவருக்காகவும், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை இறைஞ்சுவோமாக!

குரு : உம்முடைய இறப்பு, உயிர்ப்பு என்னும் ஒளிவீசும் தெய்வீக மறைபொருளால் திருமுழுக்கின் வழியாக இக்குழந்தைகள் மறுபிறப்பு அடைந்து திருச்சபையில் சேர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு : திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் வழியாக இவர்கள் விசுவாசமுள்ள சீடர்களாகவும், உமது நற்செய்தியின் சாட்சிகளாகவும், விளங்கச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஒரு : தூய ஆவியின் வழியாக இவர்களை விண்ணரசின் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஒரு : பெற்றோரும் ஞானப்பெற்றோரும் இக் குழந்தைகளுக்கு விசுவாசத்தின் சிறந்த மாதிரியாய் விளங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஒரு : இவர்களுடைய குடும்பங்களை உமது அன்பில் என்றும் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஒரு : எங்கள் அனைவரிடமும் திருமுழுக்கின் அருளைப் புதுப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

புனிதர்களை நோக்கி மன்றாட்டு

குரு : 1. இறைவனின் அன்னையாம் புனித மரியாயே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
2. புனித சூசையப்பரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
3. புனித ஸ்நானக அருளப்பரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
4. புனித இராயப்பரே, சின்னப்பரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
5. புனித தோமையாரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
6. புனித சவேரியாரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

(கடைசியாக ) இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே.
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ங்கள்

பேய் ஓட்டும் செபம்

குரு : நித்தியரான எல்லாம் வல்ல இறைவா, தீமையின் ஆவியான சாத்தானின் ஆதிக்கத்தை எங்களிடமிருந்து அகற்றவும், இருளிலிருந்து மனிதனை விடுவித்து, உமது ஒளியின் வியத்தகு அரசில் கொண்டுவந்து சேர்க்கவும், உம் திருமகனை இவ்வுலகிற்கு அனுப்பினீர். இக்குழந்தைகளை சென்மப் பாவத்திலிருந்து மீட்டு உமது மாட்சியின் ஆலயமாக்கி, இவர்களில் தூய ஆவி குடிகொள்ளச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
எல் : ஆமென்.

ஆயத்த எண்ணெய் பூசுதல்

குரு : உங்கள் மீது கிறிஸ்து இரட்சகரின் அடையாளம் வரைந்து மீட்பின் எண்ணெய் பூசுகின்றோம். நம் ஆண்டவராகிய அதே கிறிஸ்துவின் ஆற்றல் உங்களைத் திடப்படுத்துவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் அவரே.

திருமுழுக்கு விழா முன்னுரை

குரு : அன்பார்ந்த சகோதரர்களே, எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர், இக்குழந்தைகளுக்கு நீரினாலும், பரிசுத்த ஆவியினாலும் புதுவாழ்வு அளித்தருளுமாறு செபிப்போமாக.

குரு : அன்பார்ந்த பெற்றோரே, ஞானத்தாய் தந்தையரே, ஞானஸ்நானம் எனும் திருவருட் சாதனம் வழியாக நீங்கள் ஒப்புக்கொடுத்த இக்குழந்தைகள் அன்புள்ள இறைவனிடமிருந்து நீரினாலும், ஆவியினாலும் புதுவாழ்வு பெறப்போகின்றார்கள். இவர்களில் இந்த இறைவாழ்வு பாவநோயிலிருந்து பாதுகாக்கப் பெற்று நாளுக்கு நாள் வளர்ச்சியடையுமாறு இவர்களை நீங்கள் விசுவாசத்தில் வளர்க்க முயல வேண்டும்.

ஆகவே. உங்கள் விசுவாசத்தினால் தூண்டப்பெற்று, இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் உங்கள் ஞானஸ்நானத்தை நினைவில்கொண்டு பாவத்தை விட்டு விடுங்கள்; இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை அறிக்கையிடுங்கள். அதுவே திருச்சபையின் விசுவாசம்; அதிலேதான் குழந்தைகள் ஞானஸ்நானம் பெறுகின்றனர்.

குரு : இறைமக்களுக்குரிய சுதந்திரத்துடன் வாழ, நீங்கள் பாவத்தை விட்டுவிடுகிறீர்களா?
எல ;: விட்டுவிடுகிறேன்

குரு : பாவம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமலிருக்க நீங்கள் பாவத்தின் மாயக் கவர்ச்சிகளை விட்டுவிடுகிறீர்களா?
எல ;: விட்டுவிடுகிறேன்

குரு : பாவத்திற்குக் காரணனும், தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?
எல ;: விட்டுவிடுகிறேன்

விசுவாசப் பிரமாணம்

குரு : வானமும், வையமும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை விசுவசிக்கிறீர்களா?
எல் : விசுவசிக்கிறோம்

குரு : அவருடைய ஒரே மகனும், கன்னிமரியிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரில் நின்று உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் விற்றிருப்பவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கிறீர்களா?
எல் : விசுவசிக்கிறேன்

குரு : பரிசுத்த ஆவியையும், பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் சமூக உறவையும், பாவமன்னிப்பையும் உடலின் உயிர்ப்பையும், நித்திய வாழ்வையும் விசுவசிக்கிறீர்களா?
எல் : விசுவசிக்கிறேன்

குரு : இதுவே நமது விசுவாசம். இதுவே திருச்சபையின் விசுவாசம். இதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அறிக்கையிடுவதில் பெருமை கொள்கிறோம்.
எல் : ஆமென்.

திருமுழுக்கு அளித்தல்

குரு : ஆகவே உங்களோடு சேர்ந்து இப்பொழுது நாமெல்லாரும் அறிக்கையிட்ட திருச்சபையின்; விசுவாசத்தில் (பெயர் அல்லது இவர்கள்) திருமுழுக்குப் பெறுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?
பெற். ஞானப்.: விரும்புகிறேன்

குரு : (மும்முறை தண்ணீர் ஊற்றி) பெயர் ...... பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்.

திருத்தைலம் பூசுதல்

குரு : நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய எல்லாம் வல்ல இறைவன் உங்களைப் பாவத்திலிருந்து விடுவித்து, நீரினாலும், பரிசுத்த ஆவியினாலும் உங்களுக்கு மறுபிறப்பு அளித்துள்ளார். இப்பொழுது அதே கிறிஸ்து உங்கள் மீது மீட்பின் தைலம் பூசுகிறார். எனவே, நீங்கள் இறைமக்களோடு இணைக்கப்பெற்று, குருவும், ஆசிரியரும் அரசருமாகிய கிறிஸ்துவின் உறுப்புக்களாய் நிலைத்திருந்தது, நித்திய வாழ்வு பெறுவீர்களாக.

(பிறகு குரு கிறிஸ்மா (ஊhசளைஅய) எனும் திருத்தலத்தை திருமுழுக்குப்பெற்ற ஒவ்வொருவரின் உச்சந்தலையில் மௌனமாகப் பூசுகிறார்.)

வெண்ணிற ஆடை அணிவித்தல்

குரு : (திருமுழுக்கு வெண்ணிற ஆடையை ஒவ்வொருவருக்கும் கொடுத்து) நீங்கள் புதுப்படையாக மாறி, கிறிஸ்துவை அணிந்திருக்கிறீர்கள். இந்த வெண்ணிற ஆடை உங்களது மேன்மையின் அடையாளமாய் இருப்பதாக. உங்கள் உறவினரின் சொல்லாலும், முன்மாதிரிகையாலும் நீங்கள் உதவிபெற்று, இதை மாசுபடாமல் நித்திய வாழ்வுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பீர்களாக.
எல் : ஆமென்.

எரியும் திரி கொடுத்தல்

குரு : (பாஸ்கா திரியை கையில் தொட்டவாறு) கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
(குழந்தை(களி)ன் தந்தை(யர்) பாஸ்கா திரியிலிருந்து (தத்) தம் குழந்தையின் சார்பில் திரியைப் பற்ற வைக்கின்றனர்)

குரு : பெற்றோர்களே, ஞானத்தாய் தந்தையரே உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் அணையாது காக்கும்பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் ஒளிபெற்று இக்குழந்தைகள் ஒளியின் மக்களாய் என்றும் வாழ்வார்களாக. விசுவாசத்தில் இவர்கள் நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது புனிதர் அனைவரோடும், வான்வீட்டில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதிபெறுவார்களாக.

குரு : எப்பேத்தா (திறக்கப்படு)

குரு : செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் ஆண்டவர் இயேசு செய்தருளினார், நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும், மகிமையும் விளங்கக் காதல் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் அவரே செய்தருள்வாராக.
எல் : ஆமென்.

(திருப்பலியில் பெற்றோர், ஞானப்பெற்றோர் காணிக்கைப் பொருட்கள் எடுத்துச்சென்று குருவிடம் அளிக்கலாம்)

கிறிஸ்து கற்பித்த செபம்

குரு : அன்பார்ந்த சகோதரர்களே, திருமுழுக்கினால் மறுபிறப்பு அடைந்து இறைவனின் மக்களாகவே இருக்கும் இக்குழந்தைகள் உறுதிபூசுதலால் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெறுவார்கள். ஆண்டவரின் பீடத்தை அணுகி வந்து, அவரது திருப்பலி விருந்தில் பங்குகொள்வார்கள். திருச்சபையில் இறைவனைத் தந்தையென அழைப்பார்கள். நாம் அனைவரும் பெற்றுக்கொண்ட சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உணர்வுடன், ஆண்டவர் நமக்குக் கற்பித்தது போல் இக்குழந்தைகளின் பெயரால் இப்போது ஒன்றாய்ச் சேர்ந்து மன்றாடுவோம்.

எல் : விண்ணுலகில் இருக்கிற ....................

ஆசியுரை

குரு : எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர் கன்னிமரியிடமிருந்து பிறந்த தம் திருமகன் வழியாக குழந்தைகள் மீது ஒளிரும் நித்திய வாழ்வின் நம்பிக்கையால் கிறிஸ்தவத் தாய்மார்களை மகிழ்விக்கின்றார். அவரே, இக்குழந்தைகளின் தாய்மார்களை ஆசீர்வதிப்பாராக. தாங்கள் பெற்றெடுத்த மக்களுக்காக இப்பொழுது நன்றிசெலுத்தும் இத்தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் எக்காலமும் நன்றி செலுத்துவார்களாக.
எல் : ஆமென்.

குரு : மண்ணக வாழ்வையும், விண்ணக வாழ்வையும் வழங்கும் எல்லாம் எல்ல இறைவனாகிய ஆண்டவர் இக்குழந்தைகளின் தந்தையரை ஆசீர்வதிப்பாராக. இதனால் இவர்கள் தத்தம் மனைவியருடன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் தம் மக்கள் முன் சொல்லாலும், முன்மாதிரியாலும் விசுவாசத்தின் முதற்சாட்சிகளாய் விளங்குவார்களாக.
எல் : ஆமென்.

குரு : நாம் நித்திய வாழ்வுபெற நீரினாலும், தூய ஆவியினாலும் நமக்கு மறுபிறப்பளித்த எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர் தம் விசுவாசிகளாகிய இந்த ஞானப் பெற்றோர்க்கு (இவர்களுக்கு) நிறை ஆசீர் அளிப்பாராக. இதனால், இறைமக்களிடையே இவர்கள் என்றும் எங்கும் உயிராற்றல்மிக்க உறுப்பினர்களாய்த் திகழ்வார்களாக. இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் தமது சமாதானத்தை வழங்குவாராக.
எல் : ஆமென்.

குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல் : ஆமென்.

ஆசீர் :

===============================

வருகைப் பல்லவி

காண்.எபே 4:24 உண்மையின் நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும் கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதனுக்கு உரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).


திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் திருமகனின் பாடுகள், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளில் பங்குபெற எங்களை அழைத்துள்ளீரே; அதனால் நீர் சொந்தமாக்கிக்கொண்ட உம் பிள்ளைகளுக்கு உரிய மனப்பாங்கில் நாங்கள் உறுதி அடைந்து, என்றும் புது வாழ்வு வாழ அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனை ஒத்திருப்பவர்களை, (கிறிஸ்மா எண்ணெயின் முத்திரையால் உறுதிப்படுத்தப்பட்டவர்களை) குருத்துவத் திருக்கூட்டத்தில் கனிவுடன் சேர்த்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நீர் அவர்களை உமக்கு உகந்த பலிப்பொருள்களாக ஏற்று உமது திரு அவையின் காணிக்கைகளோடு அவர்களையும் கனிவுடன் ஏற்றுக்கொள்வீராக. எங்கள்.

'பாஸ்கர் காலத்தில், பாஸ்கா II-ஆம் தொடக்கவுரையும் (பக். 530) ஆண்டின் பிற காலங்களில் பொதுக் கால் ஞாயிறு 1-ஆம் தொடக்கவுரையும் (பக். 536) பயன்படுத்தப்படலாம்.
2" மை முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, "வாழ்வோர் நினைவுப்" பகுதியில் ஞானப் பெற்றோர் பின்வருமாறு நினைவுகூரப்படுவர்.

==============1^ 9109 ^-----------

வாழ்வோர் நினைவு

ஆண்டவரே, உமது திருமுழுக்கின் தூய அருளைப் பெற்றுக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட. உம் அடியார்களாகிய இச்சகோதரர் சகோதரிகளையும்

இங்கு ஞானத் தாய் தந்தையரின் பெயர்கள் சொல்லப்படுகின்றன.

உம்மிடம் நம்பிக்கை கொண்டு இங்கே கூடியுள்ள அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். . .

'நற்கருணை மன்றாட்டுகளில் இந்த வாய்பாடுகளுக்கு ஏற்றவாறு புதிதாகத் திரு. பெற்றவர் நினைவுகூரப்படுவர்.

1ஆம் நற்கருணை மன்றாட்டில் இந்நாளுக்கு உரிய "ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய ...... சொல்லப்படும்:

ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் உமது குடும்பம் முழுவதும் தண்ணீராலும் தூய ஆவியாராலும் புதுப் பிறப்பு அடைந்த இவர்களுக்காக உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை உளம் கனிந்து ஏற்றருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நீர் இவர்களைக் காணும் பொருட்டு இவர்களின் பாவங்கள் அனைத்துக்கும் மன்னிப்பு அளித்தருளும். இவர்களின் பெயர்கள் வாழ்வோரின் நூலில் எழுதப்படக் கட்டளையிடுவீராக. (எங்கள்).

ஆ) 2-ஆம் நற்கருணை மன்றாட்டின் விண்ணப்பங்களில், ''நிறைவு பெறச் செய்தருளும் எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்:

ஆண்டவரே,
புதிதாகத் திருமுழுக்குப் (உறுதிப்பூசுதல்) பெற்று இன்று உமது குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ள இவர்களை நினைவுகூர்ந்தருளும். இவர்கள் உம் திருமகன் கிறிஸ்துவைத் தாராள இதயத்தோடும் விருப்பமுள்ள மனப்பாங்கோடும் பின்பற்றச் செய்தருளும். மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் . . .

இ) 3-ஆம் நற்கருணை மன்றாட்டின் விண்ணப்பங்களில், ''கனிவுடன் செவிசாய்த்தருள் எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்:

மறு பிறப்பு அளிக்கும் தண்ணீராலும் தூய ஆவியாரின் பொழிவினாலும் கழுவப்பெற்று உம் மக்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்ட உம் அடியார்களைE புனிதத் திட்டத்தில் உறுதிப்படுத்தியருளும். அவர்கள் என்றும் புது வாழ்வு வாழ்வதில் முன்னேறச் செயவரா கனிவுள்ள தந்தையே, எங்கும் ...

==============2^ 9110 ^-----------

ஈ) 4- ஆம் நற்கருணை மன்றாட்டின் விண்ணப்பங்களில், புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்களின் நினைவுக்கொண்டாட்டம் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது:

திருநிலையினர் அனைவரையும் இப்பலியை ஒப்புக்கொடுப்போரையும் இங்கே கூடியிருப்போரையும் இன்று தண்ணீராலும் தூய ஆவியாராலும் நீர் புதுப் பிறப்பு அடையச் செய்த புதிதாகத் திருமுழுக்குப் பெற்றோரையும் உம் மக்கள் அனைவரையும்...

திருவிருந்துப் பல்லவி

காண். 1 யோவா 3:1 நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள்; இவ்வாறு நாம் கடவுளின் மக்களென அழைக்கப் படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கின்றோம் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).
2018 11 |

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் திரு உடல், திரு இரத்த அருளடையாளத்தால் வளம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் தூய ஆவியாரின் ஒன்றிப்பிலும் ஒருவர் மற்றவரை அன்பு செய்வதிலும் வளர்ந்து, அன்புப் பணி புரிவதன் வழியாக கிறிஸ்துவின் மறையுடல் முழுநிறைவை அடைய எங்களுக்கு அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

வருகைப் பல்லவி

தீத் 3:5,7 புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்: நாம் அவரது அருளால் ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வுக்கு உரிமையாளராய்
இருக்கிறோம் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

வாழவுதரும் வார்த்தையால் எங்களுக்குப் புதுப் பிறப்பு அளிக்கும் இறைவா, நாங்கள் உமது வாக்கை நேர்மையான இதயத்தோடு ஏற்றுக்கொண்டு, உண்மையோடு வாழ ஆர்வம் கொள்ளச் செய்தருளும்; இவ்வாறு சகோதர அன்பின் கனிகளை நிறைவாகத் தர எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அப்பத்தையும் இரசத்தையும் தயாரித்து ஒப்புக்கொடுக்கும் எங்களை உமது திருவிருந்தில் பங்குகொள்ளச் செய்தருளும்; அதனால் நாங்கள் விண்ணக விருந்தை மகிழ்வுடன் கொண்டா புனிதர்களின் தோழமையில் இடம்பெற்று உமது குடும்பத்தின் உறுப்பினர்களாக எண்ணப்படுவோமாக. எங்கள்.

பாஸ்கா காலத்தில், பாஸ்கா II-ஆம் தொடக்கவுரையும் (பக். 530) ஆண்டின் பிற பொதுக் கால ஞாயிறு 1-ம் தொடக்கவுரையும் (பக். 536) பயன்படுத்தப்படலாம். நற்கருணை மன்றாட்டுகளில் உரிய விண்ணப்பங்கள் தேர்ந்து கொள்ளப்படும் 968-969).

திருவிருந்துப் பல்லவி

காண். 1 யோவா 3:2 இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம்; இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை
(பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

2018 114
ஆண்டவரே, உம் திருமகனுடைய இறப்பு, உயிர்ப்பு இவற்றின் மாட்சிமிகு மறைநிகழ்வை இக்கொண்டாட்டத்தில் அறிக்கையிட்டுள்ளோம்; இவ்வாறு இவ்வருளடையாளத்தின் ஆற்றலால் எங்கள் வாழ்விலும் அவற்றை அறிக்கையிட அருள்வீராக. எங்கள்.
==============4^ 9112 ^-----------

 

=============↑ பக்கம் 970

====================

image