image

 

பொது

திருச்சடங்குத் திருப்பலிகள்

உறுதிப்பூசுதல் அளித்தல்

சிவப்பு நிறம்அல்லது வெண்ணிறத் திருவுடையுடன் அல்லது திருச்சடங்குத் திருப்பலிகள் அனுமதிக்கப்படும்போது உள்ள திருவிழா நிறத் திருவுடையுடன் இத்திருப்பலி உறைவேற்றப்படும். "உன்னதங்களிலே சொல்லப்படும். 'நம்பிக்கை அறிக்கை'
விட்டுவிடப்படும்.

வருகைப் பல்லவி

எசே 36:25-26 | ஆண்டவர் கூறுகிறார்: நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்; நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை
உங்களுக்குள் புகுத்துவேன் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா). '

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, வரவிருக்கும் தூய ஆவியார் எங்களிடத்தில் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் அவரது மாட்சியின் கோவிலாக மாறும் தகுதி பெற அருள்வீராக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே, எங்கள் மீது இரக்கம் கொண்டு உமது வாக்குறுதியை நிறைவேற்ற உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்கு நாங்கள் உலகினர்முன் சாட்சிகளாய்த் திகழ தூய ஆவியார் தமது வருகையால் அருள்வாராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

வேறு மன்றாட்டுகளும் பயன்படுத்தப்படலாம் (பக். 975).

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகன் தம் மீட்புப் பணியால் தூய ஆவியாரைப் பெற்றுத் தந்தார்; அம்மீட்பின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் புரியும் வேண்டலுக்குக் கனிவுடன் செவிசாய்த்தருளும்: இவ்வாறு நாங்கள் கிறிஸ்துவை மேன்மேலும் ஒத்திருந்து அவருக்கு உறுதியுடன் சான்று பகரச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

==============5^ 9113 ^-----------

தூய ஆவியாரின் தொடக்கவுரை 1 (பக. 1166) அல்லது II (பக். 1படி, பயன்படுத்தப்படலாம்.
டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இது
வரே, உம் ஊழியர்களாகிய . . . பின்வருமாறு சொல்லப்படும்: -

ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் உமது குடும்பம் முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை உளம் கனிந்து - உம்மை வேண்டுகின்றோம்: திருமுழுக்கில் புதுப் பிறப்பு அடைந்தவர்களுக்காகவும் தூய ஆவியைப் பொழிந்து உறுதிப்படுத்த நீர் திருவுளம் கொண்ட இவர்களுக்காகவும் நாங்கள் இக்காணிக்கையை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இவர்களிடம் உமது அருளை இரக்கமுடன் காத்தருள்வீராக. (எங்கள்.)

2-ஆம் நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, "நிறைவு பெறச் செய்தருளும்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்:

ஆண்டவரே, இன்று தூய ஆவியைப் பொழிந்து உறுதிப்படுத்த நீர் திருவுளம் கொண்ட உம் அடியார்களையும் நினைவுகூர்ந்து அவர்கள் உமது அருளில் நிலைத்திருக்கச் செய்தருளும். மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன். . .

3-ஆம் நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, "நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்:

ஆண்டவரே, திருமுழுக்கில் புதுப் பிறப்பு அடைந்து, இன்று தூய ஆவியைப் பொழிந்து உறுதிப்படுத்த நீர் திருவுளம் கொண்ட உம் அடியார்களையும் நினைவுகூர்ந்து அவர்களை உமது அருளில் காத்தருளும். நீர் விரும்பியபடி. . .

திருவிருந்துப் பல்லவி

காண். எபி 6:4
ஒளியைப் பெற்று விண்ணகக் கொடையைச் சுவைத்து, தூய ஆவியில் பங்குபெற்றிருக்கிற நீங்கள் அனைவரும் ஆண்டவாயில்
அகமகிழுங்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டு, உம் திருமகனின் திரு உணவால் வளம் பெற்றவர்கள் மீது இனிவரும் நாள்களில் உமது ஆசியைப் பொழிந்தருளும்; அதனால் இவர்கள் இடர்கள் அனைத்தையும் மேற்கொண்டு, தங்கள் தூய வாழ்வினால் திரு அவையை மகிழ்விக்கவும் தங்கள் அன்புப் பணிகளால் இவ்வுலகில் அதன் வளர்ச்சிக்குத் துணைபுரியவும் அருள்வீராக. எங்கள்.

==============6^ 9114 ^-----------

திருப்பலி முடிவில் சிறப்பு ஆசி

புதிதாக உறுதிப்பூசுதல் பெற்றவர்களை நோக்கித் தம் கைகளை விரித்து, ஆயர் சொல்கின்றார்:

தண்ணீராலும் தூய ஆவியாராலும் புதுப் பிறப்பு அடைந்த உங்களைத் தம் சொந்த மக்களாக்கிய எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவன், உங்களுக்கு ஆசி வழங்கி, உங்களை அன்போடு காத்தருள்வாராக.

பதில்: ஆமென்.

உண்மையின் ஆவியார் தம் திரு அவையில் என்றும் தங்கியிருப்பாரென வாக்களித்த கடவுளின் ஒரே திருமகன், உங்களுக்கு ஆசி வழங்கி, தம் ஆற்றலால் உண்மையான நம்பிக்கையை அறிக்கையிடுவதில் உங்களை உறுதிப்படுத்துவாராக.

பதில்: ஆமென்.

சீடர்களின் இதயங்களில் அன்புத் தீ பற்றியெரியச் செய்த தூய ஆவியார், உங்களுக்கு ஆசி வழங்கி, தீமையிலிருந்து விடுவித்து, இறையாட்சியின் மகிழ்ச்சியில் உங்களை ஒன்றாய்க் கூட்டிச்சேர்ப்பாராக.

பதில்: ஆமென்.

மேலும் மக்கள் அனைவருக்கும் ஆசி வழங்குகின்றார்: இங்கு ஒன்றாய்க் கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன், தந்தை, X மகன், X தூய * ஆவியார் ஆசி வழங்குவாராக. பதில்: ஆமென்.

அல்லது

மக்கள்மீது மன்றாட்டு புதிதாக உறுதிப்பூசுதல் பெற்றவர்கள் மீதும் மக்கள் மீதும் தம் கைகளை விரித்து, ஆயர் சொல்கின்றார்:

இறைவா, நீர் எங்களிடம் நிகழ்த்தியவற்றை உறுதிப்படுத்தி, உம்முடைய நம்பிக்கையாளர் இதயங்களில் தூய ஆவியாரின் கொடைகளைப் பாதுகாத்தருளும்; இவ்வாறு அவர்கள், சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை உலகினர்முன் வெட்கமின்றி அறிக்கையிடவும் அன்புடனும் பற்றுறுதியுடனும் அவருடைய கட்டளைகளை என்றும் நிறைவேற்றவும் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென்.

==============9^ 9117 ^-----------

எல்லாம் வல்ல இறைவன்,
ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி,
உங்களோடு என்றும் தங்குவதாக. பதில்: ஆமென்.

வருகைப் பல்லவி

காண். உரோ 5:5, 3:11
5 5 11
அவருடைய ஆவி நம்முள் குடி கொண்டிருப்பதன் வமி கடவுளின் அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது (பால்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய தூய ஆவியை உளம் கனிந்து எம்மீது பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் அனைவரும் நம்பிக்கையில் ஒன்றுபட்டு வாழ்ந்து, அவருடைய அன்பின் ஆற்றலால் உறுதிபெற்று, கிறிஸ்துவின் முழுநிறைவில் பங்குகொள்வோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
வேறு மன்றாட்டுகளும் பயன்படுத்தப்படலாம் (பக். 1007).

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கிறிஸ்துவின் சிலுவையாலும் அருள்வாழ்வின் தைலத்தாலும் முத்திரையிடப்பட்டு அவரோடு தங்களையும் இடையறாது உமக்கு ஒப்புக்கொடுத்த உம் அடியார் இவர்களை உம் ஒரே திருமகனோடு ஒன்றாகக் கனிவுடன் இணைத்தருளும்; இவ்வாறு உம்முடைய ஆவியின் மிகுதியான அருள்பொழிவை இவர்கள் அன்றாடம் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

தூய ஆவியாரின் தொடக்கவுரை (பக்.1166)

அல்லது

ப(பக். 1167-1168) பயன்ப நற்கருணை மன்றாட்டுகளில் உரிய விண்ணப்பங்கள் தேர்ந்துகொள்ளப்படும்

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவரை அணுகுங்கள், மிளிர்வீர்கள்; அவர் எ இனியவர் எனச் சுவைத்துப் பாருங்கள் | அல்லேலூயா .
"வைத்துப் பாருங்கள் (பாஸ்கா காலத்தில்,

==============10^ 9118 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய தூய ஆவியாரின் கொடைகளைப் பெற்றுக்கொண்டு உம் ஒரே திருமகனின் திரு உணவால் வளம் பெற்ற இவர்களுக்கு உமது திருச்சட்டத்தை முழுமையாகக் கற்றுக்கொடுப்பீராக; அதனால் நீர் உமக்குச் சொந்தமாக்கிக்கொண்ட மக்களுக்கு உரிய விடுதலையை உலகுக்கு இடையறாது வெளிப்படுத்தவும் தங்களின் புனித வாழ்வால் உம் மக்களுக்கு உரிய இறைவாக்கு உரைக்கும் பணியை ஆற்றவும் இவர்களுக்கு அருள்வீராக. எங்கள்.

சிறப்பு ஆசி அல்லது மக்கள்மீது மன்றாட்டு (பக். 973). தேவையானால் வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம்மிடமிருந்து புறப்படும் துணையாளர் எங்கள் மனங்களை ஒளிரச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகன் வாக்களித்தவாறு, நிறையுண்மையை நோக்கி அவர் எங்களை வழிநடத்துவாராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பம் அளிக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் தூய ஆவியாரின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட இவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்டதைப் பேணிக் காக்கவும் நிலையான பரிசைப் பெறவும் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு ஒரே விண்ணக உணவால் நிறைவு பெற்ற நாங்கள் 'ஒரே பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

==============13^ 9121 ^-----------

=============↑ பக்கம் 885

====================

image