image

பொது

திருச்சடங்குத் திருப்பலிகள்

IIV. திருநிலைப்பட்டங்கள் அளித்தல்

1. ஆயரின் திருநிலைப்பாடு பெருவிழாக்கள், திருவருகைக் கால, தவக் கால, பாஸ்கா கால ஞாயிற்றுக்கிழமைகள், பாஸ்கா எண் கிழமைகள், திருத்தூதர்களின் திருவிழாக்கள் தவிர பிற நாள்களில் வெண்ணிறத் திருவுடையுடனோ திருவிழாத் திருவுடையுடனோ இத்திருச்சடங்குத் திருப்பலி பயன்படுத்தப்படும். மேற்கூறப்பட்ட நாள்களில் திருச்சடங்கு இடம் பெறுமேயானால் அந்நாள்களுக்கு உரிய திருப்பலி இடம்பெறும்.

ஆயர் ஒருவரின் திருநிலைப்பாடு

வருகைப் பல்லவி

காண். லூக் 4:18 ஆண்டவருடைய ஆவி என் மேல் உள்ளது; ஏனெனில் அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும் நொறுங்குண்ட உள்ளத்தை நலமாக்கவும் அவர்
என்னை அனுப்பினார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா). ""உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, சொல்லற்கரிய உமது பேரருளால் இந்நாளில் உம் அடியாராகிய (பெயர்) ... எனும் அருள்பணியாளரை உமது (மறைமாவட்டப் பெயர்) ... திரு அவைக்கு ஆயராக நியமித்தீரே; இவர் ஆயருக்கு உரிய பணியைத் தகுதியுடன் ஆற்றவும் எல்லாவற்றிலும் உமது பராமரிப்பால் இவரிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களைத் 'தம் சொல்லாலும் செயலாலும் வழிநடத்தவும் இவருக்கு அருள்வீராக. உம்மோடு.

அல்லது

தல மறைமாவட்டத்தைச் சாராத ஒருவர் திருநிலைப்படுத்தப்படும்போது:

இறைவா, என்றுமுள்ள ஆயரே, மிகவும் விழிப்போடு உமது மந்தையைப் பராமரிக்கும் நீர் உம் அடியாராகிய (பெயர்) ... எனும் அருள்பணியாளரை இன்று ஆயர் குழுவில் சேர்த்துக்கொள்ளத் திருவுளமானீரே; அதனால் இவர் தமது புனித வாழ்வால், கிறிஸ்துவுக்கு எங்கும் உண்மையுள்ள சாட்சியாகத் திகழ அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருச்சடங்கு ஒழுங்குகளுக்கு ஏற்றவாறு "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்; பொது மன்றாட்டு விட்டுவிடப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் திருப்பலிக்குத் தலைமை தாங்கினால் அவர் சொல்கின்றார்:

ஆண்டவரே, நாங்கள் உமக்குப் புரியும் ஊழியம் வளர்ச்சி பெற இப்புகழ்ச்சிப் பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் தகுதியற்ற எனக்கு நீர் வழங்கியதைக் கனிவுடன் நிறைவுக்குக் கொண்டு வருவீராக. எங்கள்.

திருநிலைப்பாடு அளித்த ஆயர் திருப்பலிக்குத் தலைமை தாங்கினால், அவர் சொல்கிறார்

ஆண்டவரே, உமது திரு அவைக்காகவும் ஆயரான உம் அடியார் (பெயர்) . . . க்காகவும் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை உமக்கு உகந்ததாய் இருப்பதாக; உம் மக்களுக்காகத் தலைமைக் குருவாக நீர் ஏற்படுத்திய இவரை மந்தையின் வளர்ச்சிக்காகத் திருத்தூதர்களின் நற்பண்புகளால் அணிசெய்வீராக. எங்கள்.

இத்தொடக்கவுரை சொல்லப்படலாம்.

தொடக்கஉரை: கிறிஸ்துவின் குருத்துவமும் அருள்பணியாளர்களின் பணியும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

நீர் உம் ஒரே திருமகனைத் தூய ஆவியாரின் அருள்பொழிவால்
புதிய, நிலையான உடன்படிக்கையின் தலைமைக் குருவாக நியமத்தீர்;
திரு அவையில் அவருடைய ஒரே குருத்துவம் தொடர்
காய முறையில் நீர் ஏற்பாடு செய்யத் திருவுளம் கொண்டீர்.

ஏனெனில் அவர் தமக்கு உரிமையாக்கிக்கொண்ட மக்களை
அரச குருத்துவத்தால் அணிசெய்தார்;
அது மட்டும் அன்றி, அவர்கள் மீது தம் கைகளை வைத்து,
தமது புனிதப் பணியின் பங்கேற்பாளர்கள் ஆவதற்காக

அவர்களைத் தம் சகோதர அன்பினால் தேர்ந்துகொண்டார்.
அவர்கள் அவர் பெயரால், மனித மீட்பின் பலியைப் புதுப்பிக்கின்றார்கள்;
உம்முடைய பிள்ளைகளுக்குப் பாஸ்கா விருந்தைத் தயாரிக்கின்றார்கள்;
உம்முடைய புனித மக்களை அன்பினால் வழிநடத்துகின்றார்கள்;
வார்த்தையால் ஊட்டம் அளித்து,
அருளடையாளங்களால் அவர்களுக்குப் புத்துயிர் அளிக்கின்றார்கள்.

அவர்கள் உமக்காகவும்
தங்கள் சகோதரர் சகோதரிகளின் மீட்புக்காகவும்
தங்கள் உயிரைக் கையளித்து,
அதே கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருக்க முயலுகின்றார்கள்.
இடைவிடாமல் தங்கள் நம்பிக்கைக்கும் அன்புக்கும் உமக்குச் சான்று பகர்கின்றார்கள்.

ஆகவே ஆண்டவரே, வானதூதர், புனிதர் அனைவரோடும் நாங்கள் சேர்ந்து,
உமக்குப் புகழுரைத்து, அக்களிப்புடன் சொல்வதாவது: தூயவர்.

கீழுள்ள வாய்பாடுகளுக்கு ஏற்றவாறு, புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் குறிப்பிடப்படுகிறார்:
அ) உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், இந்நாளுக்கு உரிய "ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய ...'' எனும் மன்றாட்டைப் புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் சொல்கின்றார்:

ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் உமது குடும்பம் முழுவதும் ஆயர் நிலைக்கு நீர் உயர்த்தத் திருவுளம் கொண்ட தகுதியற்ற உம் அடியாராகிய நானும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை உளம் கனிந்து ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இறை ஏற்பாட்டால் நான் பெற்றுக்கொண்ட பணியை அதே இறைவனின் துணையால் நிறைவேற்ற உம் கொடைகளை என்னில் பாதுகாத்தருளும். எங்கள்.

அல்லது வேறோர் ஆயர் சொல்கின்றார்:

ஆகவே ஆண்டவரே,
உம் ஊழியர்களாகிய நாங்களும் உமது குடும்பம் முழுவதும்
ஆயர் நிலைக்கு நீர் உயர்த்தத் திருவுளம் கொண்ட உம் அடியாராகிய (பெயர்) ... ம்
உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை உளம் கனிந்து ஏற்றருள் உம்மை வேண்டுகின்றோம்:

இறை ஏற்பாட்டால் இவர் பெற்றுக்கொண்ட பணியை
அதே இறைவனின் துணையால் நிறைவேற்ற
உம் கொடைகளை இவரில் பாதுகாத்தருளும். (எங்கள்.)

ஆ) 2ஆம் நற்கருணை மன்றாட்டில், "தூய ஆவியார் ஒன்றுசேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்" எனும் வார்த்தைகளும் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் சொல்கின்றார்:

ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை,
சிறப்பாக எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும்
(எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும்)
இன்று (மறைமாவட்டப் பெயர்) . . . திரு அவைக்கு ஆயராக
நீர் அளிக்கத் திருவுளம் கொண்ட
தகுதியற்ற உம் அடியாராகிய என்னையும்
திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
எங்கள் அனைவரையும் இறை அன்பினால் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் ...

அல்லது வேறோர் ஆயர் சொல்கின்றார்:

ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை,
சிறப்பாக எங்கள் திருத்தந்தை (பெயர்) ... ஐயும்
எங்கள் ஆயர் (பெயர்) . . . ஐயும்
இன்று (மறைமாவட்டப் பெயர்) ... திரு அவைக்கு ஆயராக
நீர் அளிக்கத் திருவுளம் கொண்ட உம் அடியார் (பெயர்) . . . ஐயும்
திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
எங்கள் அனைவரையும் இறை அன்பினால் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் ..

இ) 3- ஆம் நற்கருணை மன்றாட்டில், "உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தர் வேண்டும் என மன்றாடுகின்றோம்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் சொல்கின்றார்:

இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திரு அவையை,
சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும்
(எங்கள் ஆயர் (பெயர்) . . . ஐயும்)
இன்று (மறைமாவட்டப் பெயர்) ... திரு அவைக்கு ஆயராக
நீர் திருநிலைப்படுத்திய தகுதியற்ற உம் அடியாராகிய என்னையும்
ஏனைய ஆயர்கள், திருநிலையினர் அனைவரையும்
உமக்குச் சொந்தமான மக்கள் அனைவரையும்
நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக.
அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி. . .

அல்லது வேறோர் ஆயர் சொல்கின்றார்:

இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திரு அவையை,
சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) .... ஐயும்
எங்கள் ஆயர் (பெயர்) ... ஐ
(மறைமாவட்டப் பெயர்) . . . திரு அவைக்கு ஆயராக
நீர் திருநிலைப்படுத்திய உம் அடியார் (பெயர்) .... ஐயும்
ஏனைய ஆயர்கள், திருநிலையினர் அனைவரையும்
உமக்குச் சொந்தமான மக்கள் அனைவரையும்
நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி ...

ஈ) இதற்கு உரிய தொடக்கவுரை பயன்படுத்தப்படவில்லை எனில், 4- ஆம் நற்கருணை மன்றாட்டுச் சொல்லப்படலாம். இம்மன்றாட்டின் விண்ணப்ப வேண்டலில் "கனிவாய்
உள்புரியும்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் சொல்கின்றார்:

எனவே ஆண்டவரே,
யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோமோ
அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவுகூர்ந்தருளும்.
சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) ... ஐயும்
(எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும்
உம் மக்களுக்குப் பணி செய்ய
இன்று நீர் தேர்ந்தெடுக்கத் திருவுளம் கொண்ட
தகுதியற்ற உம் அடியாராகிய என்னையும்
ஏனைய ஆயர்கள், திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
இப்பலியில் பங்கெடுப்போர் அனைவரையும்
உம் திருமுன் கூடியிருப்போரையும் உம் மக்கள் எல்லாரையும்
நேரிய இதயத்தோடு உம்மைத் தேடுவோர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
உம் கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் ...

அல்லது வேறோர் ஆயர் சொல்கின்றார்:

எனவே ஆண்டவரே,
யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோமோ
அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவுகூர்ந்தருளும்.
சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) ... ஐயும்
எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும்
உம் மக்களுக்குப் பணி செய்ய
இன்று நீர் தேர்ந்தெடுக்கத் திருவுளம் கொண்ட
உம் அடியார் (பெயர்)... ஐயும்
ஏனைய ஆயர்கள், திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
இப்பலியில் பங்கெடுப்போர் அனைவரையும்
உம் திருமுன் கூடியிருப்போரையும் உம் மக்கள் எல்லாரையும்
நேரிய இதயத்தோடு உம்மைத் தேடுவோர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
உம் கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் . . .

திருவிருந்துப் பல்லவி

யோவா 17:17-18தூய தந்தையே, உண் மையினால் அவர்களை உமக்கு பண மாக்கியருளும். நீர் என்னை உலகிற்கு அனுப்பிய து
வம் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன், என்கிறார் போல், நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகி வண்டவர் (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா),

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

--- திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் திருப்பலியில் தலைமை தாங்கினால் அவர் சொல்கின்றார்: ஆண்டவரே, உமது இரக்கத்தின் விருந்து எங்களுக்கு முழுமையான நலம் தரும் மருந்தாய்ச் செயல்பட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமது இரக்கத்தில் முழுமையாக நிலைபெற்றிருந்து அனைத்திலும் உமக்கு உகந்தவர்களாக இருக்கத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

அல்லது திருநிலைப்பாடு அளிக்கும் ஆயர் திருப்பலியில் தலைமை தாங்கினால் அவர் சொல்கின்றார்:

ஆண்டவரே,
இம்மறைநிகழ்வுகளின் ஆற்றலால் ஆயரான
உம் அடியார் (பெயர்) ... இல் உம் அருள்கொடைகள் பெருகச் செய்வீராக;
அதனால் இவர் உமக்கு ஏற்றவாறு அருள்பணியை நிறைவேற்றி
நம்பிக்கையுள்ள ஊழியருக்கு உரிய நிலையான பரிசைப்
பெற்றுக்கொள்வாராக. எங்கள்.

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி

புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் திருப்பலியில் தலைமை தாங்கினால் அவர் மக்களை நோக்கித் தம் கைகளை விரித்து, பின்வரும் ஆசியை வழங்குகின்றார்:

உம் மக்களை இரக்கத்துடன் கண்காணித்து
அன்புடன் ஆண்டுவரும் இறைவா,
நீர் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருப்போருக்கு
ஞானத்தின் ஆவியை அளித்தருளும்;
அதனால் புனித மக்களின் வளர்ச்சியே
அருள்நெறியாளர்களின் நிலையான மகிழ்ச்சியாய் அமைவதாக.

பதில்: ஆமென்.

எங்கள் வாழ்நாள்களின் எண்ணிக்கையையும்
காலத்தின் அளவையும் மாண்புக்கு உரிய உமது ஆற்ற
""' 4ம் மாண்புக்கு உரிய உமது ஆற்றலால் வரையறுத்துள்ளார்.
எங்கள் தாழ்மையான ஊழியத்தைக் கனிவுடன் கண்ணோக்கி,
பெருகும் உமது அமைதியை எங்களுக்கு இக்காலத்தில் வழங்குவராக.

பதில்: ஆமென்.

நீர் அருளிய ஆயர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட என்மீது இரங்கியருளும்.
இப்பொறுப்புக்கு ஏற்ற பணிகளை நான் நிறைவாகச் செய்து
உமக்கு உகந்தவனாய் இருக்கச் செய்வீராக;
மக்கள், அருள்நெறியாளர்கள் ஆகியோரின் இதயத்தை
நீரே வழிநடத்துவதால்
மந்தையின் கீழ்ப்படிதல் ஆயருக்கும் ஆயரின் கண்காணிப்பு மந்தைக்கும்
குறைவின்றிக் கிடைப்பதாக.

பதில்: ஆமென்.

மேலும் மக்கள் அனைவருக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை , X மகன், * தூய * ஆவியார் இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

அல்லது திருநிலைப்பாடு அளிக்கும் ஆயரே திருப்பலிக்குத் தலைமை தாங்கினால், புதிதாகத் திரு நிலைப்படுத்தப்பட்ட ஆயரை நோக்கித் தம் கைகளை விரித்து, பின்வரும் ஆசி வழங்குகின்றார்:

ஆண்டவர் உமக்கு ஆசி வழங்கி, உம்மைக் காப்பாராக; தம் மக்களுக்குத் தலைமைக் குருவாக உம்மை ஏற்படுத்த அவர் திருவுளம் கொண்டது போல இம்மை வாழ்வில் உம்மை மகிழ்வுறச் செய்து மறுமையில் நீர் நிலையான பேரின்பத்தில் பங்குபெறச் செய்வாராக.

பதில்: ஆமென்.

திருநிலையினரையும் மக்களையும் தமது அருள் உதவியால் ஒன்றிணைக்கத் திருவுளமான இறைவன், தமது பராமரிப்பினாலும் உமது கண்காணிப்பாலும் வருங்காலங்களில் அவர்கள் மகிழ்ச்சியுடன் வழிநடத்தப்பட அருள்புரிவாராக.

பதில்: ஆமென்.

இறைமக்கள் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து இடர்ப்பாடுகளிலிருந்து விடுதலை அடைவார்களாக. உமது பணிக்கு உண்மையுடன் துணை நின்று நன்மையானவை அனைத்தையும் பெற்றுக்கொள்வார்களாக. இவ்வாறு இக்காலத்தில் நீடித்த அமைதியில் இன்புற்று நிலைவாழ்வில் உம்முடன் உள்ளவர்களின் தோழமையில் பங்குகொள்ளத் தகுதி பெறுவார்களாக.

பதில்: ஆமென்.

மேலும் மக்கள் அனைவருக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை , X மகன், * தூய * ஆவியார் இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

==============24^ 9132 ^-----------

2. அருள்பணியாளர்களின் திருநிலைப்பாடு

பெருவிழாக்கள், திருவருகைக் கால, தவக் கால, பாஸ்கா கால . பாஸ்கா எண்கிழமைகள் தவிர, பிற நாள்களில் வெண்ணிறத் திருவுடைய திருவுடையுடனோ இத்திருச்சடங்குத் திருப்பலி பயன்படுத்தப்படும். மேற்கூறப்பட்ட திருச்சடங்கு இடம் பெறுமேயானால் அந்நாள்களுக்கு உரிய திருப்பலி இடம்பெறும்

அருள்பணியாளர்கள் பலரின் திருநிலைப்பாடு

வருகைப் பல்லவி

என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பே அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்.
(பாஸ்கா காலத்தில், அல்லேலூயா). "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உம் மக்களை வழிநடத்த
அருள்பணியாளர்களின் பணியைப் பயன்படுத்துகின்றீர்;
குருத்துவப் பணிக்காக இன்று நீர் தேர்ந்து கொண்ட
உமது திரு அவையின் இத்திருத்தொண்டர்கள்
உமது திருவுளத்துக்கு ஏற்றவாறு பணி புரிவதில் நிலைத்திருக்கச் செய்தருளும்.
இவ்வாறு இவர்கள் தங்கள் பணியாலும் வாழ்வாலும்
கிறிஸ்துவில் உமக்கு மாட்சி அளிக்கும் ஆற்றல் பெறுவார்களாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருச்சடங்கு ஒழுங்குமுறைகளுக்கு ஏற்றவாறு "நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும், பொது மன்றாட்டு விட்டுவிடப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா,
உம் அருள்பணியாளர்கள் புனிதப் பீடத்தில் திருப்பணி ஆற்றவும்
உம் மக்களுக்குத் தொண்டு ஆற்றவும் விரும்பினீரே;
அதனால் உம் அடியார்களது ஊழியம்
உமக்கு எப்பொழுதும் ஏற்புடையதாக இருக்கவும்
என்றும் நிலைத்திருக்கும் கனிகளை உமது திரு அவைக்குக் கொடுக்கவும்
இப்பலியின் ஆற்றலால் வரம் அருள்வீராக. எங்கள்.

தொடக்கவுரை: கிறிஸ்துவின் குருத்துவமும் அருள்பணியாளர்களின் பணியும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

நீர் உம் ஒரே திருமகனைத் தூய ஆவியாரின் அருள்பொழிவால்
புதிய, நிலையான உடன்படிக்கையின் தலைமைக் குருவாக நியமித்தீர்;
திரு அவையில் அவருடைய ஒரே குருத்துவம் தொடர
சொல்லற்கரிய முறையில் நீர் ஏற்பாடு செய்யத் திருவுளம் கொண்டீர்.

ஏனெனில் அவர் தமக்கு உரிமையாக்கிக்கொண்ட மக்களை
அரச குருத்துவத்தால் அணிசெய்தார்;
அது மட்டும் அன்றி, அவர்கள்மீது தம் கைகளை வைத்து,
தமது புனிதப் பணியின் பங்கேற்பாளர்கள் ஆவதற்காக
அவர்களைத் தம் சகோதர அன்பினால் தேர்ந்து கொண்டார்.

அவர் பெயரால், அவர்கள் மனித மீட்பின் பலியைப் புதுப்பிக்கின்றார்கள்;
உம்முடைய பிள்ளைகளுக்குப் பாஸ்கா விருந்தைத் தயாரிக்கின்றார்கள்;
உம்முடைய புனித மக்களை அன்பினால் வழிநடத்துகின்றார்கள்;
வார்த்தையால் ஊட்டம் அளித்து,
அருளடையாளங்களால் அவர்களுக்குப் புத்துயிர் அளிக்கின்றார்கள்.

அவர்கள் உமக்காகவும்
தங்கள் சகோதரர் சகோதரிகளின் மீட்புக்காகவும்
தங்கள் உயிரைக் கையளித்து,
அதே கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருக்க முயலுகின்றார்கள்.
இடைவிடாமல் தங்கள் நம்பிக்கைக்கும் அன்புக்கும்
உமக்குச் சான்று பகர்கின்றார்கள்.

ஆகவே ஆண்டவரே, வானதூதர், புனிதர் அனைவரோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழுரைத்து, அக்களிப்புடன் சொல்வதாவது:

தூயவர்.

கீழ்க்கண்ட வாய்பாடுகளுக்கு ஏற்றவாறு, நற்கருணை மன்றாட்டுகளில் புதிதாகத உருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்கள் குறிப்பிடப்படுகின்றனர்:

==============1^ 9139 ^-----------

அ) உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், இந்நாளுக்கு உரிய " உம் ஊழியர்களாகிய ..." எனும் மன்றாட்டு சொல்லப்படும்:

ஆகவே ஆண்டவரே,
உம் ஊழியர்களாகிய நாங்களும் உமது குடும்பம் முழுவதும்
குருத்துவ நிலைக்கு நீர் உயர்த்தத் திருவுளம் கொண்ட
உம் அடியார்கள் இவர்களும்
உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை உளம் கனிந்து ஏற்றருள
உம்மை வேண்டுகின்றோம்:
இறை ஏற்பாட்டால் இவர்கள் பெற்றுக்கொண்ட பணியை
அதே இறைவனின் துணையால் நிறைவேற்ற
உம் கொடைகளை இவர்களில் பாதுகாத்தருளும். (எங்கள்.)

ஆ) 3-ஆம் நற்கருணை மன்றாட்டில், "தூய ஆவியார் ஒன்றுசேர்க்க வேண்டும்: உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம் எனும் வார்த்தைகளுக்குப் பின்வருபவை சொல்லப்படும்:

ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை,
சிறப்பாக எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும்
எங்கள் ஆயர் (பெயர்) .... ஐயும்
இன்று திரு அவைக்கு அருள்பணியாளர்களாக
நீர் அளிக்கத் திருவுளம் கொண்ட உம் அடியார்கள் இவர்களையும்
திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
எங்கள் அனைவரையும்
இறை அன்பினால் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் ...

இ) 3- ஆம் நற்கருணை மன்றாட்டில், "உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தர வேண்டும் என மன்றாடுகின்றோம்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திரு அவையை,
சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும்
எங்கள் ஆயர் (பெயர்) . . . ஐயும் ஏனைய ஆயர்களையும்
இன்று திரு அவைக்கு அருள்பணியாளர்களாக நீர் திருநிலைப்படுத்திய
உம் அடியார்கள் இவர்களையும் திருநிலையினர் அனைவரையும்
உமக்குச் சொந்தமான மக்கள் அனைவரையும்
நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக.
நீர் விரும்பியபடி ...

ஈ) உரிய தொடக்கவுரை பயன்படுத்தப்படவில்லை எனில் 4ஆம் நற்கருணை மன்றாட்டுச் சொல்லப்படலாம்; இம்மன்றாட்டின் விண்ணப்ப வேண்டலில், 'கனிவாய அU எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

எனவே ஆண்டவரே,
யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோமோ
அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவுகூர்ந்தருளும்.
சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும்
உங்கள் ஆயர் (பெயர்) . . . ஐயும் ஏனைய ஆயர்களையும்
அருள்பணியாளருக்கு உரிய பணியை உம் மக்களுக்குப் புரிந்திட
இன்று நீர் தேர்ந்தெடுக்கத் திருவுளம் கொண்ட
உம் அடியார்கள் இவர்களையும்
திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
இப்பலியில் பங்கெடுப்போர் அனைவரையும்
உம் திருமுன் கூடியிருப்போரையும் உம் மக்கள் எல்லாரையும்
நேரிய இதயத்தோடு உம்மைத் தேடுவோர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
உம் கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும்...

திருவிருந்துப் பல்லவி

மாற் 16:15; மத் 28:20 உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உட்கொண்ட இத்திரு உணவு உம் அருள்பணியாளர்களுக்கும் உம் அடியார்கள் அனைவருக்கும் புது வாழ்வு அளிப்பதாக; அதனால் அவர்கள் உமது முடிவில்லா அன்பில் இணைந்திருந்து உமது மாண்புக்கு உகந்த பணி செய்ய அருள்வீராக. எங்கள்.

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி

புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்கள் மீதும் மக்கள் மீதும் ஆயர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

திரு அவையைத் தோற்றுவித்தவரும் ஆள்பவருமான இறைவன்,
அருள்பணிக் கடமைகளை உண்மையான உள்ளத்துடன்
நீங்கள் நிறைவேற்ற, தமது அருளால் தொடர்ந்து உங்களைக் காப்பாராக.

பதில்: ஆமென்.

இவ்வுலகில் இறை அன்புக்கும் உண்மைக்கும்
ஊழியர்களாகவும் சாட்சிகளாகவும்
ஒப்புரவின் உண்மையுள்ள பணியாளர்களாகவும்
உங்களை அவரே ஏற்படுத்துவாராக.

பதில்: ஆமென்.

கிறிஸ்துவினுடைய உடலின் ஒன்றிப்பில் நம்பிக்கையாளர் தொடர்ந்து வளரும் பொருட்டு
அவர்களுக்கு உயிருள்ள அப்பத்தையும் வாழ்வின் வார்த்தையையும் வழங்கிட
உண்மையுள்ள அருள்நெறியாளர்களாக உங்களை அவர் ஏற்படுத்துவாராக

பதில்: ஆமென்.

மேலும் தொடர்ந்து எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய * ஆவியார் இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

அருள்பணியாளர் ஒருவரின் திருநிலைப்பாடு

வருகைப் பல்லவி

எரே 3:15 என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்
(பாஸ்கா காலத்தில், அல்லேலூயா). "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உம் மக்களை வழிநடத்த அருள்பணியாளர்களின் பணியைப் பயன்படுத்துகின்றீர்; குருத்துவப் பணிக்காக இன்று நீர் தேர்ந்து கொண்ட உமது திரு அவையின் இத்திருத்தொண்டர் உமது திருவுளத்துக்கு ஏற்றவாறு பணி புரிவதில் நிலைத்திருக்கச் செய்தருளும்: இவ்வாறு இவர் தம் பணியாலும் வாழ்வாலும் கிறிஸ்துவில் உமக்கு மாட்சி அளிக்கும் ஆற்றல் பெறுவாராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருச்சடங்கு ஒழுங்குமுறைகளுக்கு ஏற்றவாறு "நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும் பொது மன்றாட்டு விட்டுவிடப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உம் அருள்பணியாளர்கள் புனிதப் பீடத்தில் திருப்பணி ஆற்றவும் உம் மக்களுக்குத் தொண்டு ஆற்றவும் விரும்பினீரே; அதனால் உம் அடியார்களது ஊழியம் உமக்கு எப்பொழுதும் ஏற்புடையதாக இருக்கவும் என்றும் நிலைத்திருக்கும் கனிகளை உமது திரு அவைக்கு இப்பலியின் ஆற்றலால் வரம் அருள்வீராக. எங்கள்.

தொடக்கவுரை: கிறிஸ்துவின் குருத்துவமும் அருள்பணியாளர்களின் பணியும்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

நீர் உம் ஒரே திருமகனைத் தூய ஆவியாரின் அருள்பொழிவால்
புதிய, நிலையான உடன்படிக்கையின் தலைமைக் குருவாக நியமித்தீர்;
திரு அவையில் அவருடைய ஒரே குருத்துவம் தொடர
சொல்லற்கரிய முறையில் நீர் ஏற்பாடு செய்யத் திருவுளம் கொண்டீர்.

ஏனெனில் அவர் தமக்கு உரிமையாக்கிக்கொண்ட மக்களை
அரச குருத்துவத்தால் அணிசெய்தார்;
அது மட்டும் அன்றி, அவர்கள் மீது தம் கைகளை வைத்து,
தமது புனிதப் பணியின் பங்கேற்பாளர்கள் ஆவதற்காக
அவர்களைத் தம் சகோதர அன்பினால் தேர்ந்து கொண்டார்.

அவர்கள் அவர் பெயரால்,
மனித மீட்பின் பலியைப் புதுப்பிக்கின்றார்கள்;
உம்முடைய பிள்ளைகளுக்குப் பாஸ்கா விருந்தைத் தயாரிக்கின்றார்கள்;
உம்முடைய புனித மக்களை அன்பினால் வழிநடத்துகின்றார்கள்;
வார்த்தையால் ஊட்டம் அளித்து,
அருளடையாளங்களால் அவர்களுக்குப் புத்துயிர் அளிக்கின்றார்கள்.

அவர்கள் உமக்காகவும்
தங்கள் சகோதரர் சகோதரிகளின் மீட்புக்காகவும்
தங்கள் உயிரைக் கையளித்து,
அதே கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருக்க முயலுகின்றார்கள்.
இடைவிடாமல் தங்கள் நம்பிக்கைக்கும் அன்புக்கும்
உமக்குச் சான்று பகர்கின்றார்கள்.

ஆகவே ஆண்டவரே, வானதூதர், புனிதர் அனைவரோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழுரைத்து, அக்களிப்புடன் சொல்வதாவது:

தூயவர்

==============5^ 9143 ^-----------

கீழ்கண்ட வாய்பாடுகளுக்கு ஏற்றவாறு, நற்கருணை மன்றாட்டுகளில் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர் குறிப்பிடப்படுகின்றார்:
அ) உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், இந்நாளுக்கு உரிய "ஆகவே ஆண்டவரே உம் ஊழியர்களாகிய..." எனும் மன்றாட்டு சொல்லப்படும்:

ஆகவே ஆண்டவரே,
உம் ஊழியர்களாகிய நாங்களும் உமது குடும்பம் முழுவதும் குருத்துவ நிலைக்கு நீர் உயர்த்தத் திருவுளம் கொண்ட உம் அடியார் இவரும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை உளம் கனிந்து உம்மை வேண்டுகின்றோம்: இறை ஏற்பாட்டால் இவர் பெற்றுக்கொண்ட பணியை அதே இறைவனின் துணையால் நிறைவேற்ற உம் கொடைகளை இவரில் பாதுகாத்தருளும். (எங்கள்)

ஆ) 2-ஆம் நற்கருணை மன்றாட்டில், "தூய ஆவியார் ஒன்றுசேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம் எனும் வார்த்தைகளுக்குப் பிறகு 'பின்வருபவை சொல்லப்படும்:

ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை, சிறப்பாக எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) . . . ஐயும் இன்று திரு அவைக்கு அருள்பணியாளராக நீர் அளிக்கத் திருவுளம் கொண்ட உம் அடியார் இவரையும் திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். எங்கள் அனைவரையும் இறை அன்பினால் நிறைவு பெறச் செய்தருளும். மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் . . .

இ) 3-ஆம் நற்கருணை மன்றாட்டில், "உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தர வேண்டும் என மன்றாடுகின்றோம்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு பின்வருபவை சொல்லப்படும்:

இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திரு அவையை, சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) • • • ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும் ஏனைய ஆயர்களையும் இன்று திரு அவைக்கு அருள்பணியாளராக நீர் திருநிலைப்படுத்தும் உம் அடியார் இவரையும் திருநிலையினர் அனைவரையும் உமக்குச் சொந்தமான மக்கள் அனைவரையும் நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக.
நீர் விரும்பியபடி...

ஈ) உரிய தொடக்கவுரை பயன்படுத்தப்படவில்லை எனில் 4ஆம் நற்கருணை மன்றாட்டுச் சொல்லப்படலாம்; இம்மன்றாட்டின் விண்ணப்ப வேண்டலில், "கனிவாய் அருள்புரியும்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

எனவே ஆண்டவரே,
காக இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோமோ அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவுகூர்ந்தருளும். சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) .... ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும் ஏனைய ஆயர்களையும் அருள்பணியாளருக்கு உரிய பணியை உம் மக்களுக்குப் புரிந்திட
சறு நீர் தேர்ந்தெடுக்கத் திருவுளம் கொண்ட உம் அடியார் இவரையும், திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். இப்பலியில் பங்கெடுப்போர் அனைவரையும் உம் திருமுன் கூடியிருப்போரையும் உம் மக்கள் எல்லாரையும் நேரிய இதயத்தோடு உம்மைத் தேடுவோர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். உம் கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் ...

திருவிருந்துப் பல்லவி

மாற் 16:15; மத் 28:20 உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உட்கொண்ட இத்திரு உணவு உம் அருள்பணியாளர்களுக்கும் உம் அடியார்கள் அனைவருக்கும் புது வாழ்வு அளிப்பதாக; அதனால் அவர்கள் உமது முடிவில்லா அன்பில் இணைந்திருந்து, உமது மாண்புக்கு உகந்த பணி செய்ய அருள்வீராக. எங்கள்.

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி

புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர் மீதும் மக்கள் மீதும் ஆயர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

திரு அவையைத் தோற்றுவித்தவரும் ஆள்பவருமான இறைவன், அருள்பணிக் கடமைகளை உண்மையான உள்ளத்துடன் நீர் நிறைவேற்ற, தமது அருளால் தொடர்ந்து உம்மைக் காப்பாராக.

பதில்: ஆமென்.

இவ்வுலகில் இறை அன்புக்கும் உண்மைக்கும் ஊழியராகவும் சாட்சியாகவும் ஒப்புரவின் உண்மையுள்ள பணியாளராகவும் உம்மை அவரே ஏற்படுத்துவாராக.

பதில்: ஆமென்.

கிறிஸ்துவினுடைய உடலின் ஒன்றிப்பில் நம்பிக்கையாளர் தொடர்ந்து வளரும் பொருட்டு அவர்களுக்கு உயிருள்ள அப்பத்தையும் வாழ்வின் வார்த்தையையும் வழங்கிட உண்மையுள்ள அருள்நெறியாளராக உமமை அவர் ஏற்படுத்துவாராக

பதில்: ஆமென்.

மேலும் தொடர்ந்து எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், - தூய X ஆவியார் இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

பதில்: ஆமென்.
==============8^ 9146 ^-----------

3. திருத்தொண்டர்களின் திருநிலைப்பாடு

பெருவிழாக்கள், திருவருகைக் கால, தவக் கால, பாஸ்கா கால ஞாயிற்றுக்கிழமைகள், பாஸ்கா எண் கிழமைகள் தவிர, பிற நாள்களில் வெண்ணிறத் திருவுடையுடனோ திருவிழாத் திருவுடையுடனோ இத்திருச்சடங்குத் திருப்பலி பயன் படுத்தப்படும். மேற்கூறப்பட்ட நாள்களில் திருச்சடங்கு இடம்பெறுமேயானால் அந்நாளுக்கு உரிய திருப்பலி இடம்பெறும்.

திருத்தொண்டர்கள் பலரின் திருநிலைப்பாடு

வருகைப் பல்லவி

யோவா 12:26 எனக்குத் தொண்டு செய்பவர் என்னைப் பின்பற்றுகிறார், என்கிறார் ஆண்டவர். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும்
இருப்பார் (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா). "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, தொண்டு ஏற்பதற்கு அன்று, தம் சகோதரர் சகோதரிகளுக்குத் தொண்டு ஆற்றவே உமது திரு அவையின் பணியாளர்களுக்குக் கற்பித்தீர்; அதனால் திருத்தொண்டர் பணிக்கு இன்று நீர் தேர்ந்து கொள்ளத் திருவுளமான உம் அடியார்கள் இவர்கள் தங்கள் செயலில் திறமையும் பணியில் கனிவும் இறைவேண்டலில் நிலைத்திருக்கும் வரமும் கொண்டிருக்க அருள்புரிவீராக. உம்மோடு. திருச்சடங்கு ஒழுங்குமுறைகளுக்கு ஏற்றவாறு "நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்; பொது மன்றாட்டு விட்டுவிடப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

தூயவரான தந்தையே, எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க உம் திருமகன் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவத் திருவுளமானார்; அதனால் எங்கள் பணியின் காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு எங்களையே உள்ளார்ந்த பலியாக உமக்குக் கையளித்து, பணிவும் தளரா ஊக்கமும் கொண்ட மனப்பாங்கினால் நிரப்பப்படுவோமாக. எங்கள்

தொடக்கவுரை: கிறிஸ்து, திரு அவையின் அனைத்துப் பணிகளின் ஊற்று.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

நீர் உம் ஒரே திருமகனைத் தூய ஆவியாரின் அருள்பொழிவால்
புதிய, நிலையான உடன்படிக்கையின் தலைமைக் குருவாக நியமித்தீர்;
திரு அவையில் அவருடைய ஒரே குருத்துவம் தொடர
சொல்லற்கரிய முறையில் நீர் ஏற்பாடு செய்யத் திருவுளம் கொண்டீர்.

ஏனெனில் அவர் தமக்கு உரிமையாக்கிக்கொண்ட மக்களை
அரச குருத்துவத்தால் அணிசெய்தார்;
அது மட்டும் அன்றி, அவர்கள் மீது தம் கைகளை வைத்து,
தமது புனிதப் பணியின் பங்கேற்பாளர்கள் ஆவதற்காக
அவர்களைத் தம் சகோதர அன்பினால் தேர்ந்து கொண்டார்.

அவர்கள் புனித மக்களை அன்பினால் வழிநடத்துகின்றார்கள்;
வார்த்தையால் ஊட்டம் அளித்து,
அருளடையாளங்களால் அவர்களுக்குப் புத்துயிர் அளிக்கின்றார்கள்.

அவர்கள் உமக்காகவும்
தங்கள் சகோதரர் சகோதரிகளின் மீட்புக்காகவும்
தங்கள் உயிரைக் கையளித்து,
அதே கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருக்க முயலுகின்றார்கள்.
இடைவிடாமல் தங்கள் நம்பிக்கைக்கும் அன்புக்கும்
உமக்குச் சான்று பகர்கின்றார்கள்.

ஆகவே ஆண்டவரே, வானதூதர், புனிதர் அனைவரோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழுரைத்து, அக்களிப்புடன் சொல்வதாவது:

தூயவர்

==============10^ 9148 ^-----------

கீழ்க்கண்ட வாய்பாடுகளுக்கு ஏற்றவாறு, நற்கருணை மன்றாட்டுகளில், புதிதாகத் இருநிலைப்படுத்தப்பட்ட திருத்தொண்டர்கள் குறிப்பிடப்படுகின்றனர்:
அ) உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், இந்நாளுக்கு உரிய "ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய ... எனும் மன்றாட்டு சொல்லப்படும்:

ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் உமது குடும்பம் முழுவதும் திருத்தொண்டர் திருநிலைக்கு நீர் உயர்த்தத் திருவுளம் கொண்ட உம் அடியார்கள் இவர்களும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை உளம் கனிந்து ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இறை ஏற்பாட்டால் இவர்கள் பெற்றுக்கொண்ட பணியை அதே இறைவனின் துணையால் நிறைவேற்ற உம் கொடைகளை இவர்களில் பாதுகாத்தருளும். (எங்கள்.)

அ) 2-ஆம் நற்கருணை மன்றாட்டில், "தூய ஆவியார் ஒன்றுசேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம் எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை, சிறப்பாக எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும் இன்று திரு அவைக்குப் பணியாளர்களாக நீர் அளிக்கத் திருவுளம் கொண்ட உம் அடியார்கள் இவர்களையும் திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். எங்கள் அனைவரையும் இறை அன்பினால் நிறைவு பெறச் செய்தருளும். மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் ...

இ) 3-ஆம் நற்கருணை மன்றாட்டில், "உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தர வேண்டும் என மன்றாடுகின்றோம் எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திரு அவையை, சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) ... ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும் ஏனைய ஆயர்களையும் இன்று திரு அவைக்குப் பணியாளர்களாக நீர் திருநிலைப்படுத்திய உம் அடியார்கள் இவர்களையும் திருநிலையினர் அனைவரையும் உமக்குச் சொந்தமான மக்கள் அனைவரையும் நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி ...

==============12^ 9150 ^-----------

ஈ) உரிய தொடக்கஉரை பயனபடுத்தப்படவில்லை எனில், 4-ஆம் நற்கருணை மன்றாட்டு
எனில், 4-ஆம் நற்கரு ஈ) உரிய தொடக்கவுரை பயன்படுத்தப்படவில்லை சொல்லப்படலாம்; இம்மன்றாட்டின் விண்ணப்ப வேண்டலில், "'கனிவாய் - எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

எனவே ஆண்டவரே, யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோமோ அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவுகூர்ந்தருளும். சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) . . . ஐயும் ஏனைய ஆயர்களையும் உம் மக்களுக்குத் திருத்தொண்டாற்ற இன்று நீர் தேர்ந்தெடுக்கத் திருவுளம் கொண்ட உம் அடியார்கள் இவர்களையும் திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். இப்பலியில் பங்கெடுப்போர் அனைவரையும் உம் திருமுன் கூடியிருப்போரையும் உம் மக்கள் எல்லாரையும் நேரிய இதயத்தோடு உம்மைத் தேடுவோர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். உம் கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் .....

திருவிருந்துப் பல்லவி

மத் 20:28 மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்
(பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவாலும் பானத்தாலும் உம் அடியார்களுக்கு நிறைவு அளித்துள்ளீர்; அதனால் உமது மாட்சிக்காகவும் நம்பிக்கையாளரின் மீட்புக்காகவும் நற்செய்தியை அறிவிப்பதிலும் அருளடையாளங்களை வழங்குவதிலும் அன்புப் பணியாற்றுவதிலும் உண்மையுள்ள பணியாளர்களாக விளங்க இவர்களுக்கு அருள்வீராக. எங்கள்.

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி

புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்ட திருத்தொண்டர்கள் மீதும் மக்கள்மத் விரித்துச் சொல்கின்றார்:
படுத்தப்பட்ட திருத்தொண்டர்கள் மீதும் மக்கள்மீதும் ஆயர் தம் கைகளை தமது திரு அவையில் மக்களுக்குப் பணி புரிய உங்களை அழைத்த இறைவன், எல்லாருக்காகவும் குறிப்பாக இன்னலுறுவோருக்காகவும் ஏழைகளுக்காகவும் பணி ஆற்றும் பேரார்வத்தை உங்களுக்குத் தருவாராக.

பதில்: ஆமென்.

கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை உங்களுக்கு அளித்த இறைவன், அவரது வார்த்தைக்கு ஏற்ப நீங்கள் வாழவும் அதற்கு உண்மையும் ஆர்வமும் உள்ள சாட்சிகளாகத் திகழவும் உங்களுக்கு உதவுவாராக.

பதில்: ஆமென்.

தம் மறைநிகழ்வுகளின் பணியாளர்களாக உங்களை ஏற்படுத்திய இறைவன், தம் மகன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகவும் இவ்வுலகில் ஒற்றுமை, அமைதியின் பணியாளர்களாகவும் நீங்கள் விளங்கச் செய்வாராக.

பதில்: ஆமென்.

மேலும் தொடர்ந்து எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, X மகன், X தூய X ஆவியார் இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

திருத்தொண்டர் ஒருவரின் திருநிலைப்பாடு

வருகைப் பல்லவி

யோவா 12:26எனக்குத் தொண்டு செய்பவர் என்னைப் பின்பற்றுகிறார், என்கிறார் ஆண்டவர். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும்
இருப்பார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா). "உன்னதங்களிலே " சொல்லப்படும்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, தொண்டு ஏற்பதற்கு அன்று, தம் சகோதரர் சகோதரிகளுக்குத் தொண்டு ஆற்றவே உமது திரு அவையின் பணியாளர்களுக்குக் கற்பித்தீர்; அதனால் திருத்தொண்டர் பணிக்கு இன்று நீர் தேர்ந்துகொள்ளத் திருவுளமான உம் அடியார் இவர் தம் செயலில் திறமையும் பணியில் கனிவும் இறைவேண்டலில் நிலைத்திருக்கும் வரமும் கொண்டிருக்க அருள்புரிவீராக. உம்மோடு.

திருச்சடங்கு ஒழுங்குமுறைகளுக்கு ஏற்றவாறு நம்பிக்கை அறிக்கை" சொல்ல பொது மன்றாட்டு விட்டுவிடப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

தூயவரான தந்தையே, எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க
நமகன் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவத் திருவுளமானார்; அதனால் எங்கள் பணியின் காணிக்கைகளை ஏற்றருள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு எங்களையே உள்ளார்ந்த பலியாக உமக்குக் கையளித்து பணிவும் தளரா ஊக்கமும் கொண்ட மனப்பாங்கினால் நிரப்பப்படுவோமாக. எங்கள்.

தொடக்கவுரை: கிறிஸ்து, திரு அவையின் அனைத்துப் பணிகளின் ஊற்று.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

நீர் உம் ஒரே திருமகனைத் தூய ஆவியாரின் அருள்பொழிவால்
புதிய, நிலையான உடன்படிக்கையின் தலைமைக் குருவாக நியமித்தீர்;
திரு அவையில் அவருடைய ஒரே குருத்துவம் தொடர
சொல்லற்கரிய முறையில் நீர் ஏற்பாடு செய்யத் திருவுளம் கொண்டீர்.

ஏனெனில் அவர் தமக்கு உரிமையாக்கிக்கொண்ட மக்களை
அரச குருத்துவத்தால் அணிசெய்தார்;
அது மட்டும் அன்றி, அவர்கள் மீது தம் கைகளை வைத்து,
தமது புனிதப் பணியின் பங்கேற்பாளர்கள் ஆவதற்காக
அவர்களைத் தம் சகோதர அன்பினால் தேர்ந்து கொண்டார்.

அவர்கள் புனித மக்களை அன்பினால் வழிநடத்துகின்றார்கள்;
வார்த்தையால் ஊட்டம் அளித்து,
அருளடையாளங்களால் அவர்களுக்குப் புத்துயிர் அளிக்கின்றார்கள்.

அவர்கள் உமக்காகவும்
தங்கள் சகோதரர் சகோதரிகளின் மீட்புக்காகவும்
தங்கள் உயிரைக் கையளித்து,
அதே கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருக்க முயலுகின்றார்கள்.
இடைவிடாமல் தங்கள் நம்பிக்கைக்கும் அன்புக்கும்
உமக்குச் சான்று பகர்கின்றார்கள்.

ஆகவே ஆண்டவரே, வானதூதர், புனிதர் அனைவரோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழுரைத்து, அக்களிப்புடன் சொல்வதாவது:

தூயவர்

==============10^ 9148 ^-----------

கீழ்க்கண்ட வாய்பாடுகளுக்கு ஏற்றவாறு, நற்கருணை மன்றாட்டுகளில், புதிதாகத் இருநிலைப்படுத்தப்பட்ட திருத்தொண்டர்கள் குறிப்பிடப்படுகின்றனர்:
அ) உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், இந்நாளுக்கு உரிய "ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய ... எனும் மன்றாட்டு சொல்லப்படும்:

ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் உமது குடும்பம் முழுவதும் திருத்தொண்டர் திருநிலைக்கு நீர் உயர்த்தத் திருவுளம் கொண்ட உம் அடியார்கள் இவர்களும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை உளம் கனிந்து ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இறை ஏற்பாட்டால் இவர்கள் பெற்றுக்கொண்ட பணியை அதே இறைவனின் துணையால் நிறைவேற்ற உம் கொடைகளை இவர்களில் பாதுகாத்தருளும். (எங்கள்.)

அ) 2-ஆம் நற்கருணை மன்றாட்டில், "தூய ஆவியார் ஒன்றுசேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம் எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை, சிறப்பாக எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும் இன்று திரு அவைக்குப் பணியாளர்களாக நீர் அளிக்கத் திருவுளம் கொண்ட உம் அடியார்கள் இவர்களையும் திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். எங்கள் அனைவரையும் இறை அன்பினால் நிறைவு பெறச் செய்தருளும். மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் ...

இ) 3-ஆம் நற்கருணை மன்றாட்டில், "உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தர வேண்டும் என மன்றாடுகின்றோம் எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திரு அவையை, சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) ... ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும் ஏனைய ஆயர்களையும் இன்று திரு அவைக்குப் பணியாளர்களாக நீர் திருநிலைப்படுத்திய உம் அடியார்கள் இவர்களையும் திருநிலையினர் அனைவரையும் உமக்குச் சொந்தமான மக்கள் அனைவரையும் நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி ...

==============12^ 9150 ^-----------

ஈ) உரிய தொடக்கஉரை பயனபடுத்தப்படவில்லை எனில், 4-ஆம் நற்கருணை மன்றாட்டு
எனில், 4-ஆம் நற்கரு ஈ) உரிய தொடக்கவுரை பயன்படுத்தப்படவில்லை சொல்லப்படலாம்; இம்மன்றாட்டின் விண்ணப்ப வேண்டலில், "'கனிவாய் - எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

எனவே ஆண்டவரே, யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோமோ அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவுகூர்ந்தருளும். சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) . . . ஐயும் ஏனைய ஆயர்களையும் உம் மக்களுக்குத் திருத்தொண்டாற்ற இன்று நீர் தேர்ந்தெடுக்கத் திருவுளம் கொண்ட உம் அடியார்கள் இவர்களையும் திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். இப்பலியில் பங்கெடுப்போர் அனைவரையும் உம் திருமுன் கூடியிருப்போரையும் உம் மக்கள் எல்லாரையும் நேரிய இதயத்தோடு உம்மைத் தேடுவோர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். உம் கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் .....

திருவிருந்துப் பல்லவி

மத் 20:28 மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்
(பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவாலும் பானத்தாலும் உம் அடியார்களுக்கு நிறைவு அளித்துள்ளீர்; அதனால் உமது மாட்சிக்காகவும் நம்பிக்கையாளரின் மீட்புக்காகவும் நற்செய்தியை அறிவிப்பதிலும் அருளடையாளங்களை வழங்குவதிலும் அன்புப் பணியாற்றுவதிலும் உண்மையுள்ள பணியாளர்களாக விளங்க இவர்களுக்கு அருள்வீராக. எங்கள்.

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி

புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்ட திருத்தொண்டர்கள் மீதும் மக்கள்மத் விரித்துச் சொல்கின்றார்:
படுத்தப்பட்ட திருத்தொண்டர்கள் மீதும் மக்கள்மீதும் ஆயர் தம் கைகளை தமது திரு அவையில் மக்களுக்குப் பணி புரிய உங்களை அழைத்த இறைவன், எல்லாருக்காகவும் குறிப்பாக இன்னலுறுவோருக்காகவும் ஏழைகளுக்காகவும் பணி ஆற்றும் பேரார்வத்தை உங்களுக்குத் தருவாராக.

பதில்: ஆமென்.

கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை உங்களுக்கு அளித்த இறைவன், அவரது வார்த்தைக்கு ஏற்ப நீங்கள் வாழவும் அதற்கு உண்மையும் ஆர்வமும் உள்ள சாட்சிகளாகத் திகழவும் உங்களுக்கு உதவுவாராக.

பதில்: ஆமென்.

தம் மறைநிகழ்வுகளின் பணியாளர்களாக உங்களை ஏற்படுத்திய இறைவன், தம் மகன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகவும் இவ்வுலகில் ஒற்றுமை, அமைதியின் பணியாளர்களாகவும் நீங்கள் விளங்கச் செய்வாராக.

பதில்: ஆமென்.

மேலும் தொடர்ந்து எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, X மகன், X தூய X ஆவியார் இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

==============18^ 9156 ^-----------

4. ஒரே திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தில் திருத்தொண்டர்கள், அருள்பணியாளர்களின் திருநிலைப்பாடு

திருத்தொண்டர்கள், அருள்பணியாளர்களின் திருநிலைப்பாடு ஒரே திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தில் நிறைவேற்றப்படும்போது, பெருவிழாக்கள், திருவருகைக் கால, தவக்க பாஸ்கா கால ஞாயிற்றுக்கிழமைகள், பாஸ்கா எண்கிழமைகள் தவிர, பிற நா வெண்ணிறத் திருவுடையுடனோ திருவிழாத் திருவுடையுடனோ இத்திருச்சடங்குத் திருப்பலி பயன்படுத்தப்படும். அத்தகைய நாளில் திருச்சடங்கு இடம் பெறுமேயானால் அந்நாளம் உரிய திருப்பலி இடம் பெறும்.

வருகைப் பல்லவி

யோவா 12:26 எனக்குத் தொண்டு செய்பவர் என்னைப் பின்பற்றுகிறார், என்கிறார் ஆண்டவர். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும் மன்றாட்டு

உம் மக்களுக்கு மேய்ப்பர்களைத் தந்தருளத் திருவுளமான இறைவா, பக்தியும் துணிச்சலும் கொண்ட மனப்பாங்கை உமது திரு அவையின் மீது பொழிந்தருளும்; அதனால் உம் அடியார்கள் இவர்களை உம் பீடங்களுக்குத் தகுதியுள்ள பணியாளர்களாக்கி, உமது நற்செய்தியைத் துணிவுடனும் கனிவுடனும் 'அறிவிக்கச் செய்வீராக. உம்மோடு.

திருச்சடங்கு ஒழுங்குமுறைகளுக்கு ஏற்றவாறு "நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்; பொது மன்றாட்டு விட்டுவிடப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

தூயவரான தந்தையே, எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க உம் திருமகன் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவத் திருவுளமானார் அதனால் எங்கள் பணியின் காணிக்கைகளை ஏற்றருள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் எங்களையே உள்ளார்ந்த பலியாக உமக்குக் கையுது' பணிவும் தளரா ஊக்கமும் கொண்ட மனப்பாங்கினால் நிரப்பப்படுவோமாக. எங்கள்.

தொடக்கவுரை: கிறிஸ்து, திரு அவையின் அனைத்து பணிகளின் ஊற்று (பக். 1002) சொல்லப்படும்.

==============19^ 9157 ^-----------

கீழ்க்கண்ட வாய் பாடுகளுக்கு ஏற்றவாறு, நற்கருணை மன்றாட்டுகளில், புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்டவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்: அ) உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், இந்நாளுக்கு உரிய "ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய ..." எனும் மன்றாட்டு சொல்லப்படும்:

ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் உமது குடும்பம் முழுவதும் திருத்தொண்டர் திருநிலைக்கும் அருள்பணியாளர் திருநிலைக்கும் | நீர் உயர்த்தத் திருவுளம் கொண்ட உம் அடியார்கள் இவர்களும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை உளம் கனிந்து ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இறை ஏற்பாட்டால் இவர்கள் பெற்றுக்கொண்ட பணியை அதே இறைவனின் துணையால் நிறைவேற்ற உம் கொடைகளை இவர்களில் பாதுகாத்தருளும். (எங்கள்.)

ஆ) 2-ஆம் நற்கருணை மன்றாட்டில், "தூய ஆவியார் ஒன்றுசேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை, சிறப்பாக எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும் திரு அவைக்கு இன்று திருத்தொண்டராகவும் அருள்பணியாளராகவும் நீர் அளிக்கத் திருவுளம் கொண்ட உம் அடியார்கள் இவர்களையும் திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். எங்கள் அனைவரையும் இறை அன்பினால் நிறைவு பெறச் செய்தருளும். மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் ...

இ) 3-ஆம் நற்கருணை மன்றாட்டில், "உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தர வேண்டும் என மன்றாடுகின்றோம்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திரு அவையை, சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) ... ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும் ஏனைய ஆயர்களையும் இன்று திரு அவைக்குத் திருத்தொண்டராகவும் அருள்பணியாளராகவும் நீர் திருநிலைப்படுத்திய உம் அடியார்கள் இவர்களையும் திருநிலையினர் அனைவரையும் உமக்குச் சொந்தமான மக்கள் அனைவரையும் நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி ...

==============20^ 9158 ^-----------

ஈ) உரிய தொடக்கவுரை பயன்படுத்தப்படவில்லை எனில், 4-ஆம் நற்கருவி சொல்லப்படலாம்; இம்மன்றாட்டின் விண்ணப்ப வேண்டலில், "கனிவாம் எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

எனவே ஆண்டவரே, யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோமோ அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவுகூர்ந்தருளும். சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) . . . ஐயும் ஏனைய ஆயர்களையும் உம் மக்களுக்குத் திருத்தொண்டாற்றவும் அருள்பணியாளருக்கு உரிய பணி செய்யவும் இன்று நீர் தேர்ந்தெடுக்கத் திருவுளம் கொண்ட உம் அடியார்கள் இவர்களையும் திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். இப்பலியில் பங்கெடுப்போர் அனைவரையும் உம் திருமுன் கூடியிருப்போரையும் உம் மக்கள் எல்லாரையும் நேரிய இதயத்தோடு உம்மைத் தேடுவோர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். உம் கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் . . .

திருவிருந்துப் பல்லவி

யோவா 17:17-18
தூய தந்தையே, உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல், நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா )

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவாலும் பானத்தாலும் உம் அடியார்களுக்கு நிறைவு அளித்துள்ளீர்; அதனால் உமது மாட்சிக்காகவும் நம்பிக்கையாளரின் மீட்புக்காகவும் நற்செய்தியை அறிவிப்பதிலும், அருளடையாளங்களை வழங்குவதிலும் அன்புப் பணியாற்றுவதிலும் உண்மையுள்ள பணியாளர்களாக விளங்க இவர்களுக்கு அருள்வீராக எங்கள்.

==============21^ 9159 ^-----------

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி

இகாகத் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்கள் மீதும் திருத்தொண்டர்கள்மீதும் ஆயர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

திரு அவையை நிறுவி, அதை வழிநடத்தும் இறைவன், உங்கள் கடமைகளை உண்மையான உள்ளத்துடன் நீங்கள் நிறைவேற்ற, தமது அருளால் தொடர்ந்து உங்களைக் காப்பாராக.

பதில்: ஆமென்.

நற்செய்தி அறிவிக்கவும் பீடத்துக்கும் மக்களுக்கும் பணியாற்றவும் திருத்தொண்டர்களை அழைத்த இறைவன், நற்செய்திக்கு உகந்த சாட்சிகளாகவும் இவ்வுலகில் அன்பின் பணியாளர்களாகவும் நீங்கள் திகழச் செய்வாராக.

பதில்: ஆமென்.

கிறிஸ்துவினுடைய உடலின் ஒன்றிப்பில் நம்பிக்கையாளர் தொடர்ந்து வளரும் பொருட்டு அவர்களுக்கு உயிருள்ள அப்பத்தையும் வாழ்வின் வார்த்தையையும் வழங்க அருள்பணியாளர்களான உங்களை உண்மையுள்ள அருள்நெறியாளர்களாக அவர் ஏற்படுத்துவாராக.

பதில்: ஆமென்.

மேலும் தொடர்ந்து எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, X மகன், - தூய ஆவியார் இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

==============22^ 9160 ^-----------

=============↑ பக்கம் 1013

====================

image