image

 

பொது

V. திருமணக் கொண்டாட்டம்

திருப்பலியில் திருமணம் நடைபெறுமானால் வெண்ணிறத் திருவுடையுடனோ திருவிழாத் திருவுடையுடனோ இத்திருச்சடங்குத் திருப்பலி பயன்படுத்தப்படும்.

எனினும் திருவழிபாட்டு நாள்கள் அட்டவணையில் எண் 1.4 குறிப்பிடப்பட்டுள்ள நாள்களில் அந்நாளுக்கு உரிய திருப்பலி பயன்படுத்தப்படும் . மணமக்கள்மீது ஆசி உரையையும், தேவைக்கு ஏற்ப, திருப்பலியின் முடிவில் உள்ள உரையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

கிறிஸ்து பிறப்பின் காலத்திலும், ஆண்டின் பொதுக் காலத்திலும் திரு கொண்டாடப்படுகின்ற ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியில் பங்குச் சமூகம் பங்கே ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலி பயன்படுத்தப்படும்.

வசதிக்காகத் திருப்பலிப் பாடங்கள் முழுவதும் இங்கே தரப்பட்டாலும், தேவையான குறிப்பாக மன்றாட்டுகளும் மணமக்கள் மீது ஆசியுரையும் மேற்கூறப்பட்டவற்றோம் மாற்றப்படலாம்.

வருகைப் பல்லவி

காண். திபா 19:3,5 தூயகத்திலிருந்து ஆண்டவர் உங்களுக்கு உதவி அனுப்புவாராக! சீயோனிலிருந்து அவர் உங்களைக் காப்பாராக! உங்களது இதயம் விரும்புவதை அவர் உங் களுக்குத் தந்தருள்வாராக! உங்கள் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றுவாராக (பாஸ்கா காலத்தில்,
அல்லேலூயா). பாவத்துயர்ச் செயல் விட்டுவிடப்படும்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, மானிட இனத்தின் வளர்ச்சிக்காக நீர் ஏற்படுத்திய திருமணத்தை உமது அன்பினால் நிலைநிறுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நீர் ஏற்படுத்திய அந்த ஒன்றிப்பு உமது உதவியினால் காக்கப்படுவதாக. உம்மோடு.

அல்லது

இறைவா,
மனிதக் குலத்தைப் படைத்தபோது, ஆணும் பெண்ணும் ஒன்றாக வேண்டும் எனத் திருவுளமானீரே: திருமண உடன்படிக்கையால் இணைக்கப்பெறவிருக்கும் உம் அடியார்கள் (பெயர்) . . . , (பெயர்) ... இவர்களை அன்பின் பிணைப்பால் ஒன்றாக இணைத்தருளும்; இவ்வாறு இவர்கள் உமது அருளால் அன்பில் வளம் பெற்று அன்புக்குச் சாட்சிகளாய் விளங்கச் செய்வீராக. உம்மோடு


==============23^ 9161 ^-----------

திருமணச் சடங்கு

அறிவுரை

குரு : அன்புமிக்க மணமக்களே, திருச்சபையின் திருப்பணியாளர்கள் முன்பாகவும், இத்திருக்கூடடத்தின் முன்னிலையிலும் உங்கள் அன்பை நம் ஆண்டவர் முத்திரையிட்டுக் காத்தருளுமாறு இங்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் அன்பைக் கிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிக்கின்றார். ஏற்கெனவே அவர் உங்களைப் புனித திருமுழுக்கால் அர்ச்சித்துள்ளார், இப்போதோ மற்றொரு திருவருட்சாதனத்தின் வழியாக உங்களுக்கு அருள்வளம் ஈந்து, நீங்கள் ஒருவருக்கொருவர் என்றும் பிரமாணிக்கமாய் இருக்கவும், திருமணத்தின் ஏனைய கடமைகளை ஏற்று நிறைவேற்றவும் உங்களுக்கு ஆற்றல் அளிக்கின்றார். எனவே, உங்கள் கருத்தை அறிந்து கொள்ள, திருச்சபையின் முன்னிலையில் உங்களை வினவுகிறேன்.

(மணமக்கள் இருவரும் தனித்தனியே வினாக்களுக்குப் பதில் கூற வேண்டும்)

குரு: (பெயர்...பெயர்) நீங்கள் இருவரும் முழுமனச் சதந்திரத்துடன் திருமணம் செய்து கொள்ள எவ்வித வற்புறுத்தலுமின்றி இங்கு வந்திருக்கிறீர்களா?

மணமக்கள் : ஆம் வந்திருக்கிறோம்.

குரு: நீங்கள் மணவாழ்க்கை நெறியைப் பின்பற்றி, வாழ்நாளெல்லாம் ஒருவரையொருவர் நேசிக்கவும் மதிக்கவும் தயாராய் இருக்கிறீர்களா?

மணமக்கள்: ஆம், தயாராய் இருக்கிறோம்.

குரு: இறைவன் உங்களுக்கு அருளும் மக்களை நீங்கள் அன்புடன் ஏற்று, கிறிஸ்துவின் போதனைக்கும் திருச்சபையின் சட்டத்திற்கும் ஏற்றப்படி வளர்ப்பீர்களா?
மணமக்கள்: ஆம் வளர்ப்போம்.

மன ஒப்புதல்:

குரு : நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதால், உங்கள் வலது கைகளைச் சேர்த்துப் பிடியுங்கள், இறைவன் திருமுன், திருச்சபையின் முன்னிலையில் உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்.

(இருவரும் கைகளைச் சேர்த்து பிடிக்கிறார்கள்)

மணமகன் : (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

மணமகள் : (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உங்களை என் கணவராக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உமக்குப் பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உம்மை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

குரு : திருச்சபையின் முன்னிலையில் நீங்கள் தெரிவித்த இந்த சம்மதத்தை ஆண்டவர் கனிவுடன் உறுதிப்படுத்தி, தம் ஆசியை உங்கள் மீது நிறைவாய் பொழிந்தருள்வாராக! இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.

எல் : ஆமென்.

மாங்கலியம் அணிவித்தல்:

குரு : (மாங்கலியத்தை ஆசீர்வதித்து) ஆண்டவரே, உம் அடியார் இவர்களையும் இவர்களது அன்பையும் ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இந்த மாங்கலியம் இவர்களுக்குப் பிரமாணிக்கத்தின் அடையாளமாய் அமைந்து, ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பை ஆழந்த அன்பையும் நினைவூட்ட வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்

மணமகன் : (மணமகளின் பெயரைச் சொல்லி) ... என் அன்புக்கும் பிரமாணிக்கத்துக்கும் அடையாளமாக இந்தத் திருமாங்கலியத்தை பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே அணிந்து கொள்.
(மாலைகள் அருகிலிருந்தால் அவற்றை குரு எடுத்துத் தர, மணமக்கள் ஒருவரொருவருக்கு மாலை அணிவிக்கலாம்.)

விசுவாசிகளின் மன்றாட்டு ;

(தொடக்கத்தையும் இறுதி செபத்தையும் குரு சொல்ல, நான்கு மன்றாட்டுக்களை சபையில் உள்ள மணமக்களின் பெற்றோரும் உறவினரும் ஆளுக்கொரு மன்றாட்டாகச் சொல்வது நல்லது.)

குரு : அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே, இப்புதிய குடும்பத்தின் அன்பு எப்போதும் தொடர்ந்து வளர வேண்டுமென்று இவர்களுக்காக மன்றாடுவோம்.

1. இப்பொழுது திருமணத்தில் ஒன்றிணைந்த இப்பதிய மணமகனும் மணமகளும் தங்கள் இல்லற வாழ்வில் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமென்றும், திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர வேண்டுமென்றும் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. கானாவூர் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசியளித்தது போல், இம்மணமக்களுக்கும் ஆசியளித்து , உம் அன்புக்கு அடையாளமாக மக்களைப் பெற்று அவர்கள்என்றும் மகிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. இப்புதிய மணமக்கள் (பெயர்...) அமைக்கும் இல்லமும், மற்ற கிறிஸ்தவக் குடும்பங்கள் அனைத்துமே தம் திருமண அருளில் என்றும் நிலைத்து நிற்கவும், உம் திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாயத் திகழவும் வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு: நமது தனிப்பட்ட தேவைகளுக்காக சற்று நேரம் மௌனமாக ஜெபிப்போம்....

குரு : தந்தையே, உம் பிள்ளைகளாகிய இப்புதிய மணமக்களுக்கு உண்மையான அன்பை நீர் தாராளமாய் வழங்குவதால், நிறை ஒற்றுமையோடு இவர்கள் வாழச் செய்தருளும். நீர் இணைத்த இவ்விருவரையும் எதுவும் பிரிக்காதிருப்பதாக. உம் ஆசி பெற்ற இவர்களை எத்தீங்கும் தீண்டாதிருப்பதாக.எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

=================

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, திருமணத்தின் புனித ஏற்பாட்டைச் சிறப்பிக்க நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை ஏற்க உம்மை வேண்டுகின்றோம்: உமது நன்மையால் நீர் நிறுவிய இவ்வேற்பாட்டை உமது பராமரிப்பினால் தொடர்ந்து காத்தருள்வீராக. எங்கள்.

தொடக்கவுரை: திருமண உடன்படிக்கையின் மாண்பு.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


திருமண உடன்படிக்கையை மன ஒற்றுமையின் இனிய நுகத்தாலும்
அமைதியின் முறிவுறாத பிணைப்பாலும் நீர் ஏற்படுத்தினீர்.
அதனால் புனிதத் திருமணத்தின் தூய, பயனுள்ள அன்பு
உமக்குச் சொந்தமான பிள்ளைகளைத் தருவதற்கு உதவுகின்றது.

ஏனெனில் ஆண்டவரே, உமது பராமரிப்பினாலும் அருளினாலும்
திருமணத்தின் இரு பயன்களைச்
சொல்லற்கரிய முறையில் விளைவிக்கின்றீர்:
பிள்ளைகளின் பிறப்பால் உலகத்தை அணிசெய்கின்றீர்;
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக வரும்
அவர்களது மறு பிறப்பால்
திரு அவையை வளரச் செய்கின்றீர்.

ஆகவே வானதூதர், புனிதர் அனைவரோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து,
முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

பின் வரும் வாய்பாடுகளுக்கு ஏற்றவாறு, நற்கருணை மன்றாட்டுகளில் மணமக்களின் நினைவு இங்கு குறிப்பிடப்படுகின்றது:


அ) உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், இந்நாளுக்கு உரிய "அக.ே உம் ஊழியர்களாகிய ... எனும் மன்றாட்டு ச சொல்லப்படும். பிறைக் உள்ளவற்றைத் தேவைக்கு ஏற்ப விட்டுவிடலாம்.

ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் (பெயர்) . . . , (பெயர்) . . . எனும் உம் அடியார்களும் இவர்களுக்காக மாண்புக்கு உரிய உம்மை வேண்டி நிற்கின்ற உமது குடும்பம் முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் காணிக்கையை உளம் கனிந்து ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவர்களைத் தங்கள் திருமண நாளுக்கு நீர் அழைத்து வந்துள்ளீர். உமது அருளால் தாங்கள் விரும்பும் பிள்ளைகளைப் பெற்று மகிழவும் உமது அன்பினால் இவர்கள் தாங்கள் எதிர்நோக்கும் நீடிய வாழ்வைப் பெறவும் செய்தருளும். (எங்கள்.)

ஆ) 2-ஆம் நற்கருணை மன்றாட்டில், "நிறைவு பெறச் செய்தருளும்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்:


ஆண்டவரே, இன்று திருமணத்தால் ஒன்றிணைக்க நீர் திருவுளம் கொண்ட (பெயர்) . . . , (பெயர்) . . . இவர்களை நினைவுகூர்ந்தருளும். இவ்வாறு உமது அருளால் ஒருவர் மற்றவருக்கு உரிய அன்பிலும் அமைதியிலும் இவர்கள் நிலைத்திருக்கச் செய்தருளும். மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன். . .

இ) 3-ஆம் நற்கருணை மன்றாட்டில், ''கனிவுடன் செவிசாய்த்தருளும்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்:

திருமண நாளுக்கு நீர் மகிழ்வுடன் அழைத்து வந்துள்ள (பெயர்) . . . , (பெயர்) ... எனும் மணமக்களை மணவாழ்வின் அருளினால் உறுதிப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமுன்னிலையில் செய்து கொண்ட உடன்படிக்கையில் என்றும் நிலைத்திருக்க இவர்களைப் பாதுகாத்தருள்வீராக. கனிவுள்ள தந்தையே, எங்கும் ...


திருமண ஆசியுரை


ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டல்' சொல்லப்பட்டபின் 'ஆண்டவரே தீமை அனைத்திலிருந்தும் . . .' எனும் மன்றாட்டு விட்டுவிடப்படும். அருள்பணியாளர் மணமக்கள் பக்கம் திரும்பி நின்று, கடவுளின் ஆசிக்காக வேண்டுவார். இ விட்டுவிடலாகாது.

==============25^ 9163 ^---------

மண மககளில் ஒருவரோ இருவருமோ நற்கருணை உட்கொள்ளவில்லை எனில் வழப்பு வார்த்தைகளில் பிறைக்கோட்டுக்குள் உள்ள வார்த்தைகள் விட்டுவிடப்படும். அன்றாட்டில், தேவைக்கு ஏற்ப, பிறைக்கோட்டுக்குள் உள்ள வார்த்தைகள் விட்டுவிடப்படும். காரண மாக, மணமகனும் மணமகளும் முதிர்ந்த வயதினராய் இருந்தால்.

மணமகனும் மணமகளும் பீடத்தை அணுகுகின்றனர்

அல்லதுஅதேவைக்கு ஏற்ப, அவர்கள் தங்கள் இடத்தில் நிற்கவோ முழங்காலிடவோ செய்யலாம்.

அருள் பணியாளர் நின்று, தம் கைகளைக் குவித்து, அங்கிருப்போரை வேண்ட அழைத்துச் சொல்கின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவில் இப்போது மணமுடித்த அவரது அடியார்களாகிய இம் மணமக்கள் மீது ஆண்டவர் தம் அருளின் ஆசியை இரக்கமுடன் பொழியவும் புனித உடன்படிக்கையால் இணைந்த இவ்விருவரும் (தூய நற்கருணை வழியாக) அன்பினால் ஒரே உள்ளம் படைத்தவர்களாகத் திகழவும் ஆண்டவரிடம் பணிவுடன் மன்றாடுவோம்.

எல்லாரும் சிறிது நேரம் அமைதியாக மன்றாடுகின்றனர்.
பின் அருள்பணியாளர் மணமக்கள் மீது தம் கைகளை விரித்து மன்றாடுகின்றார்:

இறைவா, நீர் உமது வல்லமையினால் ஒன்றுமில்லாமலே அனைத்தையும் படைத்தீர்: படைப்புகளின் உற்பத்தியை எல்லாம் ஒழுங்குபடுத்தியபின், உமது சாயலாக ஆணையும் பெண்ணையும் படைத்து, ஆணுக்குப் பெண்ணை இணைபிரியாத் துணையாக ஏற்படுத்தினீர்; இவ்வாறு அவர்கள் இனி இருவரல்லர், ஒரே உடல்; எனவே நீர் ஒன்றாக இணைக்கத் திருவுளம் கொண்டதை ஒருபோதும் பிரித்தலாகாது எனக் கற்பித்தீர்.

இறைவா,
கிறிஸ்துவும் திரு அவையும் ஒன்றித்திருக்கும் மறைபொருளைத் திருமண உடன்படிக்கையால் முன்னுணர்த்தும்படி, திருமணத்தின் பிணைப்பைப் புனிதப்படுத்திச் சிறப்பித்தீர்.

இறைவா,
ஆணுடன் பெண்ணை இணைத்து முதன்முதலாக ஏற்படுத்திய குடும்பத்துக்கு நீர் அருளிய ஆசி 'பிறப்புநிலைப் பாவத்தின் தண்டனையாலோ பெருவெள்ளத்தின் தீர்ப்பினாலோ எடுக்கப்படவில்லை.

திருமணத்தில் ஒன்றாய் இணைக்கப்பெற்று, உமது ஆசியை நாடி நிற்கும் உம் அடியார்கள் இவர்களைக் கனிவாய்க் கண்ணோக்கியருளும். தூய ஆவியாரின் அருளை இவர்களில் பொழிந்து இவர்களின் இதயங்களில் உமது அன்பை ஊற்றியருளும். அதனால் திருமண உடன்படிக்கையில் இவர்கள் உண்மையில் நிலைத்திருப்பார்களாக.

உம் அடியார் (மணமகள் பெயர்) . . . இல் அன்பும் அமைதியின் அருளும் குடி கொண்டிருப்பனவாக. திருநூலில் போற்றப்பெறும் புனித மகளிரை இவர் பின்பற்றுவாராக; இவருடைய கணவரின் இதயம் இவர்மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக: இவரைத் தமக்குச் சமமான துணைவர் என்றும் அருள் வாழ்வில் தம்மோடு பங்காளர் என்றும் ஏற்று, இவருக்குத் தகுந்த மதிப்பு அளித்து, கிறிஸ்து தம் திரு அவையை அன்பு செய்வது போல அவரும் தம் மனைவியை என்றும் அன்பு செய்வாராக.

எனவே ஆண்டவரே, உம்மை இப்போது வேண்டுகின்றோம்: உம் அடியார் இவர்கள் இருவரும் இணைந்து நம்பிக்கையிலும் உம் கட்டளைகளிலும் நிலைத்திருப்பார்களாக; தம் மண வாழ்வில் ஒன்றிணைந்து, நன்னடத்தையில் சிறந்து விளங்குவார்களாக; நற்செய்திப் படிப்பினையால் உறுதியடைந்து, அனைவர் முன்னும் கிறிஸ்துவுக்குச் சிறந்த சாட்சிகளாய்த் திகழ்வார்களாக. (ஆண்டவரே, இவர்களுக்கு மக்கட்பேறு அளித்தருளும். நற்பண்புகளில் சிறந்த பெற்றோராய் இவர்கள் வாழ்ந்து, தங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பார்களாக). இவர்கள் தாங்கள் விரும்பும் முதுமை அடைந்து புனிதருக்கு உரிய வாழ்வுக்கும் விண்ணரசுக்கும் வந்து சேர்வார்களாக. எங்கள்.

பதில்: ஆமென்.

ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே . . ." எனும் மன்றாட்டு விட்டு விட ஆண்டவருடைய அமைதி உங்களுடன் என்றும் இருப்பதாக உடனே சொல்லப்படும்.

இடத்தின் வழக்கப்படி அமைதி, ஒன்றிப்பு, அன்பு இவற்றை வெளிப்படுத்தும் அடையாளத்தை
மணமகனும் மணமகளும் மற்றும் அனைவரும் ஒருவர் மற்றவருக்குத் தெரிவிக்கின்றனர்.

திருவிருந்துப் பல்லவி

காண். எபே 5:25,27 கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். இவ்வாறு தூய, மாசற்ற மண மகளைத் தம் முன் விளங்கச் செய்தார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருப்பலியின் ஆற்றலால் உமது பராமரிப்பின் ஏற்பாடுகளை உமது கனிவான அன்போடு நிறைவேற்றியருளும்; இவ்வாறு புனிதக் குடும்பமாக நீர் ஒன்றிணைத்த இவர்கள் (ஒரே அப்பத்தாலும் ஒரே கிண்ணத்தாலும் நிறைவு அடைந்துள்ள இவர்கள்) அன்பினால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி

அருள்பணியாளர் மணமக்கள்மீது தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

என்றுமுள்ள தந்தையாகிய இறைவன், 'நீங்கள் ஒருவர் மற்றவருக்குக் காட்டும் அன்பினால் உங்களை ஒருமனப்படுத்தி, கிறிஸ்துவின் அமைதி உங்களில் குடி கொள்ளவும் உங்கள் இல்லத்தில் என்றும் நிலைத்திருக்கவும் செய்தருள்வாராக.

பதில்: ஆமென்.

உங்கள் பிள்ளைகளால் ஆசியும் நண்பர்களிடமிருந்து ஆறுதலும் பெற்று அனைவருடனும் உண்மையான அமைதியுடன் வாழ்வீர்களாக.

பதில்: ஆமென்.

உலகிலே நீங்கள் இறையன்புக்குச் சாட்சிகளாய்த் திகழுங்கள்: இவ்வாறு உங்கள் அன்பைப் பெற்று இன்னலுற்றோரும் வறியோரும் இறைவனின் நிலையான வீட்டில், உங்களை ஒரு நாள் நன்றியுணர்வுடன் வரவேற்பார்களாக.

பதில்: ஆமென்.


மேலும் தொடர்ந்து எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியார் அங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

 

வருகைப் பல்லவி

காண். திபா 89:14.17 ஆண்டவரே, காலையில் உமது இரக்கத்தால் நிரப்பப்பட்டோம்; எம் வாழ்நாளெல்லாம் நாங்கள் களி அகமகிழ்வோம்: ஆண்டவரின் பேரொளி எங்கள்மேலும் நீ செய்யும் வேலைகளிலும் இருப்பதாக! (பாஸ்கா காலத்தில் அல்லேலூயா) .

பாவத்துயர்ச் செயல் விட்டுவிடப்படும். “உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் வேண்டல்களுக்குச் செவிசாய்த்து, உம் அடியார்கள் (பெயர்) . . . , (பெயர்) .... இவர்கள்மீது உமது அருளைக் கனிவுடன் பொழிவீராக; அதனால் உமது திருப்பீடத்தின்முன் திருமணத்தால் இணைக்கப்பெறும் இவர்கள், ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள அன்பில் உறுதி பெறச் செய்வீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, இச்சிறப்புமிகு அருளடையாளத்தில் மணவாழ்வின் இணைப்பைப் புனிதப்படுத்தியுள்ளீர்; கிறிஸ்துவும் திரு அவையும் ஒன்றித்திருக்கும் மறைபொருளைத் திருமண உடன்படிக்கையால் முன்குறித்துக் காட்டியுள்ளீர்: அதனால் உம் அடியார்கள் இவர்கள் நம்பிக்கையால் பெற்றுக்கொண்டதை வாழ்வில் செயல்படுத்த அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் பேரின்பத்துடன் உமக்கு அளிக்கும் இக்காணிக்கையைக் கனிவுடன் ஏற்றருளும்; அருளடையாளத்தின் உடன்படிக்கையால் இணைக்கப்பெற்ற இவர்கள்" தந்தைக்கு உரிய பரிவிரக்கத்துடன் பாதுகாப்பீராக. எங்கள்.


தொடக்கவுரை: திருமணம், ஒரு மாபெரும் அருளடையாளம்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்பு எனும் மறைநிகழ்வுகள் வழியாக
மீட்கப்பெற்ற உம் மக்கள்
அதே கிறிஸ்து வழியாக இறை இயல்பில் பங்குகொள்ளவும்
அவருடன் விண்ணக மாட்சிக்கு உரிமை பெறவும்
நீர் அவர்களோடு புதியதோர் உடன்படிக்கை செய்து கொண்டீர்;

மேலும் அவர் பரிவுடன் தந்த இவ்வருள்பெருக்கைக்
கணவன், மனைவி இவர்களின் திருமண உறவில் விளங்கச் செய்தீர்;
இவ்வருளடையாளத்தின் வழியாக
உமது அன்பின் சொல்லற்கரிய திட்டத்தையும்
நாங்கள் நினைவுகூரச் செய்தருளினீர்.

ஆகவே வானதூதர், புனிதர் அனைவரோடும் சேர்ந்து
நாங்கள் உம்மைப் புகழ்ந்து, முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

நற்கருணை மன்றாட்டுகளில் மணமக்களுக்கு உரிய வேண்டல்கள் (காண். பக். 1016). திருமண ஆசியுரை

"ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டல்" சொல்லப்பட்டபின் "ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் ...." எனும் மன்றாட்டு விட்டுவிடப்படும். அருள்பணியாளர் மணமக்கள் பக்கம் திரும்பி நின்று, கடவுளின் ஆசிக்காக வேண்டுவார். இதை ஒருபோதும்

மணமக்களில் ஒருவரோ இருவருமோ நற்கருணை உட்கொள்ளவில்லை எனில் விட்டுவிடலாகாது. அழைப்பு வார்த்தைகளில் பிறைக்கோட்டுக்குள் உள்ள வார்த்தைகள் விட்டுவிடப்படும் மன்றாட்டில், தேவைக்கு ஏற்ப, பிறைக்கோட்டுக்குள் உள்ள வார்த்தைகள் விட்டுவிடப்படும். உதாரணமாக, மணமகனும் மணமகளும் முதிர்ந்த வயதினராய் இருந்தால்,

சுமகனும் மணமகளும் பீடத்தை அணுகுகின்றனர் அல்லது தேவைக்கு ஏற்ப, அவர்கள் தங்கள் இடத்தில் நிற்கவோ முழங்காலிடவோ செய்யலாம்.

==============30^ 9168 ^-----------


அருள்பணியாளர் நின்று, தம் கைகளைக் குவித்து, அங்கிருப்போரை வேக சொல்கின்றார்:

இப்பீடத்தின் முன் திருமணம் புரியும் இம் மணமக்கள் (கிறிஸ்துவின் திரு உடலையும் இரத்தத்தையும் உட்கொண்டு ஒருவர் மற்றவரோடு கொள்ளும் அன்பினால் ணக்கப்பெற வேண்டும் என்று ஆண்டவரை மன்றாடுவோம்.

எல்லாரும் சிறிது நேரம் அமைதியாக மன்றாடுகின்றனர். பின் அருள்பணியாளர் தம் கை விரித்துச் சொல்கின்றார்:

தூயவரான தந்தையே, நீர் உமது சாயலாக மனிதரை ஆண், பெண் எனப் படைத்தீர்; இவ்வாறு கணவனும் மனைவியும் உடலிலும் உள்ளத்திலும் ஒன்றிணைந்து இவ்வுலகில் தங்கள் பணியை நிறைவேற்றச் செய்தீர்.

இறைவா, உமது அன்பின் திட்டத்தை வெளிப்படுத்தவும் உம் மக்களோடு நீர் செய்தருளிய உடன்படிக்கையை நினைவூட்டவும் மணமக்கள் ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள அன்பை ஓர் அடையாளமாகத் தந்தருளினீர்; இதுவே அருளடையாளமாக நிறைவு பெற்றதால், உம்முடைய நம்பிக்கையாளரின் திருமண இணைப்பில் கிறிஸ்துவுக்கும் திரு அவைக்கும் இடையே உள்ள மண உறவாகிய மறைபொருள் விளங்கச் செய்தீர்.

(மணமகன், மணமகள் பெயர்கள்) . . . , . . . எனும் உம் அடியார்கள் இவர்கள் மீது இரங்கி, உமது வல்லமையால் இவர்களைப் பாதுகாத்தருளும். நீர் அருள்கூர்ந்து இவர்கள் மீது உமது வலக் கையை நீட்டி இவர்களின் உள்ளங்களில் தூய ஆவியாரின் ஆற்றலைப் பொழிந்தருள் உம்மை வேண்டுகின்றோம்.

ஆண்டவரே, இவ்வருளடையாளம் ஏற்படுத்திய உறவினால் இவர்கள் உமது அன்பின் கொடைகளை ஒருவர் மற்றவரோடு பகிர்ந்துகொள்வார்களாக; மேலும் இவர்கள் ஒருவர் மற்றவருக்கு உமது உடனிருப்பின் சின்னமாக விளங்கி சர இதயமும் ஒரே ஆன்மாவும் உடையவர்களாய்த் திகழ்வார்களாக.

ஆண்டவரே, இவர்கள் இருவரும் ஒன்றாய் உருவாக்கும் குடும்பத்தைத் தம் உழைப்பால் பேணிக் காப்பார்களாக; (தம் பிள்ளைகளை நற்செய்தி நெறியில் பயிற்றுவித்து 'உமது விண்ணகக் குடும்பத்தில் இணைக்க அவர்களைத் தயாரிப்பார்களாக)

உம் அடியார் (மணமகள் பெயர்) ... மீது உமது ஆசியை நிறைவாகப் பொழிந்தருளும்: அதனால் இவர் மனைவிக்கும் (அன்னைக்கும்) உரிய பணிகளை நிறைவேற்றி, காய அன்பினால் குடும்பத்தைப் பேணி, இனிய பண்பினால் அதை அணிசெய்வாராக.

உம் அடியார் (மணமகன் பெயர்) ... மீதும் உமது விண்ணக ஆசியைப் பொழிந்தருளும்: இதனால் இவர் நம்பிக்கையுள்ள கணவராக (வும் முன்மதியுள்ள தந்தையாகவும்) தம் கடமைகளை நிறைவேற்றுவாராக. தூயவரான தந்தையே, உம் திருமுன் மணவாழ்வில் இணைக்கப்பட்ட இவர்கள் உமது திருப்பந்தியில் அமர விரும்புகின்றார்கள்; ஒரு நாள் இவர்கள் விண்ணக விருந்திலும் மகிழ்ச்சியுடன் பங்குகொள்ளச் செய்தருளும். எங்கள்.

பதில்: ஆமென்.


"ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே . . ." எனும் மன்றாட்டு விட்டுவிடப்படும். "ஆண்டவருடைய அமைதி உங்களுடன் என்றும் இருப்பதாக" உடனே சொல்லப்படும். இடத்தின் வழக்கப்படி அமைதி, ஒன்றிப்பு, அன்பு இவற்றை வெளிப்படுத்தும் அடையாளத்தை மணமகனும் மணமகளும் மற்றும் அனைவரும் ஒருவர் மற்றவருக்குத் தெரிவிக்கின்றனர்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 13:34
நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்: நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது திருவிருந்தில் பங்குகொண்டுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் திருமண அருளடையாளத்தால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள இவர்கள் உம்மிடம் என்றும் பற்றுதல் கொண்டிருக்கவும் உமது திருப்பெயரை மனிதர் முன்பாக எடுத்துரைக்கவும் அருள்வீராக. எங்கள்.

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி அருள்பணியாளர் மணமக்கள்மீது தம் கைகளை நீட்டிச் சொல்கின்றார்:

எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவன், உங்களுக்குத் தம் மகிழ்ச்சியை வழங்கி உங்கள் பிள்ளைகள் வழியாக ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

இறைவனின் ஒரே திருமகன், உங்களுக்கு வாழ்விலும் தாழ்விலும் இரக்கமுடன் துணை நிற்பாராக.

பதில்: ஆமென்.

இறைவனின் தூய ஆவியார், தம் அன்பை உங்கள் இதயங்களில் என்றும் பொழிவாராக.

பதில்: ஆமென்.

மேலும் தொடர்ந்து எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், X தூய ஆவியார் இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

==============3^ 9171 ^-----------

வருகைப் பல்லவி

காண். திபா 144:2,9 ஆண்டவரே, நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஏனெனில் ஆண்டவரே, நீர் எல்லாருக்கும் இனியவர்; நீர் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

பாவத்துயர்ச் செயல் விட்டுவிடப்படும். "உன்னதங்களிலே சொல்லப்படும்.

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, திருமணம் எனும் அருளடையாளத்தால் இணைக்கப்பெறவிருக்கும் உம் அடியார்கள் இவர்கள் தாங்கள் அறிக்கையிடும் நம்பிக்கையில் வளர அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவர்கள் நன்மக்களைப் பெற்று உமது திரு அவையை வளமுறச் செய்வார்களாக. உம்மோடு.

அல்லது

இறைவா, உலகைப் படைத்தது முதல் நீர் ஆசி வழங்கி மக்கள் இனம் பலுகிப் பெருகச் செய்தீர்; எங்கள் மன்றாட்டுகளுக்குக் கனிவுடன் செவிசாய்த்து இந்த உம் அடியார்கள் (பெயர்) . . . , (பெயர்) ... இவர்கள் மீது உமது ஆசியைப் பொழிந்தருளும்: இவ்வாறு இவர்கள் திருமண உறவால் இணைக்கப்பெற்று ஒருவர் மற்றவரை அன்பு செய்து ஒத்த கருத்துடையோராக வாழ்ந்து புனிதத்தை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் வேண்டலுக்கு இரங்கி, திருமணம் எனும் புனித உடன்படிக்கையால் இணைக்கப்பெற்ற உம் அடியார்கள் இவர்களுக்காக 'நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இவ்வாறு இவ்வருளடையாளத்தால் இவர்கள் உம்மீதும் ஒருவர் மற்றவர்மீதும் கொள்ளும் அன்பில் உறுதி பெறச் செய்வீராக. எங்கள்.

தொடக்கவுரை: திருமணம், இறை அன்புக்கு அடையாளம்.
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

உமது பரிவிரக்கத்தால் நீர் மனிதரைப் படைத்து,
ஆண், பெண் உறவிலே உமது மெய்யன்பின் சாயல் விளங்கும் அளவுக்கு
அவர்களை மேன்மைப்படுத்தத் திருவுளமானீர்;
எவ்வாறெனில், உமது அன்பினால் படைக்கப்பட்ட இவர்கள்
உமது நிலையான அன்பில் பங்குகொள்ளுமாறு
இவர்களை அன்புநெறிக்கு இடையறாது அழைத்துக்கொண்டிருக்கின்றீர்;
மேலும் திருமணம் எனும் புனித அருளடையாளம்
உமது பேரன்பின் அடையாளமாய் இருந்து
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
மனிதரின் அன்புறவைப் புனிதப்படுத்துகின்றது.

அவர் வழியாகவே வானதூதர், புனிதர் அனைவரோடும்
நாங்கள் சேர்ந்து உமக்குப் புகழ்ப் பாக்கள் இசைத்து முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.

நற்கருணை மன்றாட்டுகளில் மணமக்களுக்கு உரிய வேண்டல்கள் (காண். பக். 1016).

திருமண ஆசியுரை

ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டல்" சொல்லப்பட்டபின் "ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் ..." எனும் மன்றாட்டு விட்டுவிடப்படும். அருள்பணியாளர்
உம் திரும்பி நின்று, கடவுளின் ஆசிக்காக வேண்டுவார். இதை ஒருபோதும் விட்டுவிடலாகாது.

மணமக்களில் ஒருவரோ இருவருமோ நற்கருணை உட்கொள்ளவில்லை எனில் அழைப்பு வார்த்தைகளில் பிறைக்கோட்டுக்குள் உள்ள வார்த்தைகள் விட்டுவிடப்படும். உதாரணமாக, மணமகனும் மணமகளும் முதிர்ந்த வயதினராய் இருந்தால்.

மகனும் மணமகளும் பீடத்தை அணுகுகின்றனர் அல்லது தேவைக்கு ஏற்ப, அவர்கள் தங்கள் இடத்தில் நிற்கவோ முழங்காலிடவோ செய்யலாம்.

==============5^ 9173 ^-----------

கள்பணியாளர் நின்று, தம் கைகளைக் குவித்து, அங்கிருப்போரை வேண்ட அழைத்துச் சொல்கின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, இறைவன் இம்மணமக்கள்மீது தம் ஆசியைப் பொழியுமாறு தாழ்மையுடன் மன்றாடுவோமாக: அவர் திருமண அருளடையாளத்தால் இவர்களை வளமுறச் செய்து, கனிவுடன் துணைபுரிவாராக.

எல்லாரும் சிறிது நேரம் மெளனமாக மன்றாடுகின்றனர். பின் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

தூயவரான தந்தையே, உலகனைத்தையும் உருவாக்கியவரே, உமது உருவில் ஆணையும் பெண்ணையும் உண்டாக்கி, அவர்களின் குடும்ப வாழ்க்கைமீது உமது ஆசியைப் பொழியத் திருவுளமானீர்: இன்று திருமண அருளடையாளத்தால் இணைக்கப்பெற்ற உம் அடியார்களுக்காக நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். ஆண்டவரே, இம்மணமகள் (பெயர்) ... மீதும் இவருடைய வாழ்க்கைத் துணைவர் (பெயர்) ... மீதும் உமது ஆசியை நிறைவாய்ப் பொழிவீராக. உமது தூய ஆவியாரின் ஆற்றல், மேலிருந்து இறங்கி இவர்களின் இதயங்களைப் பற்றியெரியச் செய்வதாக. அதனால் இவர்கள் ஒருவர் மற்றவருக்கு அளிக்கும் திருமண உரிமைகளில் மகிழ்ச்சி கொள்வதோடு, (தங்கள் குடும்பத்தை மக்களால் அணிசெய்து), திரு அவை வளம் பெறச் செய்வார்களாக.

ஆண்டவரே, இவர்கள் இன்பத்தில் உம்மைப் புகழ்ந்து, துன்பத்தில் உம்மைத் தேடி வருவார்களாக; தம் உழைப்பில் நீர் இவர்களுக்குத் துணையாக இருக்கின்றீர் என்பதை உணர்ந்து மகிழ்வார்களாக; இவர்களுடைய தேவைகளில் ஆறுதல் அளிக்கின்றீர் என்பதை உணர்வார்களாக; திருக்கூட்டத்தில் உம்மை மன்றாடுவார்களாக; உலகில் உமக்குச் சாட்சிகளாக விளங்குவார்களாக. மேலும் வளமைமிக்க முதுமை எய்தியபின், இவர்கள் இங்குச் சூழ்ந்து நிற்கும் நண்பர்களுடன் விண்ணரசுக்கு வந்து சேர்வார்களாக. எங்கள்.

பதில்: ஆமென்.


ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே .. எனும் மன்றாட்டு விட்டுவிடப்படும். "ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே . . ." எனும் மன்றம் "ஆண்டவருடைய அமைதி உங்களுடன் என்றும் இருப்பதாக" உடனே சொல்லப்படும்.

இடத்தின் வழக்கப்படி அமைதி ஒன்றிப்பு, அன்பு இவற்றை வெளிப்படுத்தும் அடையாளத்தை எமகனும் மணமகளும் மற்றும் அனைவரும் ஒருவர் மற்றவருக்குத் தெரிவிக்கின்றனர்

திருவிருந்துப் பல்லவி

திபா 33:2,9 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவ எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். ஆண்டவர் எத்துணை இனியது : என்று சுவைத்துப் பாருங்கள். அவரை எதிர்நோக்கி இருப்போர் பேறுபெற்றோர் (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் அடியார்கள் இவர்கள் பெற்றுக்கொண்ட அருளடையாளத்தின் ஆற்றல் இவர்களில் வளர உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் ஒப்புக்கொடுத்த இத்திருப்பலியின் பயனை நாங்கள் அனைவரும் பெற்றுக்கொள்ளவும் செய்வீராக. எங்கள்.

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி அருள்பணியாளர் மணமக்கள்மீது தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

கானாவூர்த் திருமணத்தில் பங்குகொள்ளத் திருவுளமான ஆண்டவர் இயேசு, உங்களுக்கும் உங்கள் உற்றார் உறவினருக்கும் தம் ஆசியை நிறைவாய் அளிப்பாராக.

பதில்: ஆமென்.

திரு அவைமீது இறுதிவரை அன்பு செலுத்தி வரும் ஆண்டவர் தம் அன்பை இடையறாது உங்கள் உள்ளத்தில் பொழிவாராக.

பதில்: ஆமென்.

ஆண்டவரின் உயிர்த்தெழுதலுக்கு உங்கள் நம்பிக்கையால் சான்று பகர்ந்து, புனித எதிர்நோக்கில் நீங்கள் மகிழ்ந்திருக்கச் செய்வாராக.

பதில்: ஆமென்.

மேலும் தொடர்ந்து எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், X தூய ஆவியார் இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

திருமண ஆண்டு நாள் திருப்பலியைப் பல்வேறு தேவைகளுக்கான திருப் தேர்ந்து கொள்ளலாம் (பக். 1089 - 1091).

==============7^ 9175 ^-----------

=============↑ பக்கம் 1028

====================

image