image

 

பொது

திருச்சடங்குத் திருப்பலிகள்

திருத்தொண்டர் பாஸ்டின் சஜி அவர்களின்
அருட்பொழிவு திருப்பலி (09.08.2013)

பவனி

இன்று நம்மில் ஒரு மகிழ்ச்சி. நம்மூர் இளைஞர்களிடம் ஒரு புத்தெழுச்சி. காரணம் தான் என்ன? மறைமாவட்டம் போற்றும், உலகம் கண்டு வியக்கும், தமிழ் மன்னர்களின் வாரிசுகள் நிறைந்த அழகப்பபுரத்தில் (கன்னியாகுமரி மாவட்டம்) திரு. அருள் மிக்கேல் ஹென்றி, திருமதி.பனிமேரி இவர்களின் மூன்றாவது மகன் திருத்தொண்டர் அ. பாஸ்டின் சாஜி மண்ணில் 25வது குருவாக திருப்பொழிவுப் பெரும் ஒரு பொன்னாள். "மகிழ்வோடும், தாழ்ச்சியோடும் இறைபணியாற்ற" என்ற விருதுவாக்குடன் ஈழத்து (இலங்கை) மண்ணில் பணிபுரிய தன்னையே அர்ப்பணிக்கின்ற ஒரு திருநாள். இதோ அவரை உடன் அழைத்துக்கொண்டு பவனி ஒன்று புறப்படுகின்து.

1. இது தொ.நூ 12: 1-4ல் ஆபிரகாம் யாவே கடவுளை முழுமையாக நம்பி, ஊர் என்ற ஊரிலிருந்து கானானேயரின் நாடு நோக்கிப் புறப்பட்ட நம்பி;க்கையின் பவனியா?

2. இல்லை, இது தொ.நூ 37:12-28ல் வரும் யோசேப்பு தன்னுடன் பிறப்புகளால் எகிப்து நோக்கி அடிமைப் பவனி மேற்கொள் நிற்பந்திக்கப்பட்டு, மாபெரும் அரசுப்பணியாளராக எகிப்து நகர் முழுவதும் வலம் வந்த இறையாசீர் நிறைந்த பவனியா…….. இல்லை.

3. வி.ப 12:13ல் அடிமை இசுராயேல் மக்கள் ஆண்டவரின் போராட்டத்தால், மோயீசன் வழியாக வெற்றிக் கொண்டு, இறைவன் வாக்களித்த நாடு நோக்கிப் பயணித்த வெற்றி ஆர்ப்பரிப்புமிகு பவனியா……..!

4. இல்லை, யோசுவா 6:1-16ல் யேசுவாவின் வழிக்காட்டுதலில் போர்வீரர்களும், ஏழு குருக்களும் 6 நாட்கள் சமாரியா நகரின் கோட்டையைப் பவனியாக வர ஒரேமுறை மட்டும் கொம்பூதி, கோட்டைச் சுவரையே வீழ்த்திய கீழ்படிதல் மிகுந்தப் பவனியா…… இல்லை.

5. நீதித்தலைவர்11:34 இப்தாவின் ஒரே மகனின் பாசத்தை தந்தை மீது காட்ட ஓடிவந்த சோதனை மிகுந்த குறும்பவனியா…….இல்லை.

6. இசுராயேல் மக்களுக்கு வெற்றியை என்றுமே பெற்றுக்கொடுத்த யாவேயின் நம்பிக்கைத் தரும் வெற்றிப் பவனி போன்றதா இந்தப் பவனி……..இல்லை

7. 1சாமு18:6-7ல் அடிமைப் பெண்கள் ஆடிப்பாடி, சவுல் ஆயிரமே… தாவீது பதினாராயிரமே என்று விடுதலைப் பாடல் பாடினார்களே அத்தகைய உரிமைக்குரலின் பவனியா….

8. தாவீது அரசன், தாவீது நகருக்கு ஆண்டவரின் பேழையை ஆடை நெகிழ்வது மறந்து, ஆடிப்பாடிக் கொணர்ந்த இறைஈடுபாடுமிக்க ஆர்ப்பரிப்பு பவனியா…….? இல்லை

9. 2அர10:1-2 சேபா நாட்டு அரசி, சாலமோனின் நுண்ணறிவு காண வந்துயிறங்கிய அறிவுத்தாகப் பவனியா…..!

10. 2அர17:6 இசுராயேல் மக்கள் அசிரிய மன்னரால் நாடு கடத்தப்பட்டு, ஈழத்தமிழரின் இன்றைய இழிநிலையை அன்று அனுபவித்த அலகிலும், கோசானின் ஆபோர் நதிக்கரையிலும், மேதியர் நகர்களிலும் அகதிகளாக குடியமர்த்தப்பட்ட இன்றைய ஈழத் தமிழரின் வாழ்வை அன்றே வெளிப்படுத்திய அடிமைத்துவ பவனியா….?

11. 2அர25:7 பாபிலோனிய மன்னன் எருசலேம் அழித்து, யூதர்களை கொன்று, எஞ்சியவர்களை அன்றைய முள்வேலிக்குள் அடைக்க, பாபிலோன் இழுத்துச் செல்லப்பட்ட அவமான பவனியின் ஓர் அடையாள பவனியா….?

12. இல்லை ஆயனில்லா ஆடுகளாய், ஆண்டவர் இயேசுவைத் தேடி அலைமோதிய அவலை ஏழையரின் நம்பிக்கைத் தேடல் போன்ற பவனியா……..?

13. இல்லை நான்கு நற்செற்தியாளர்கள் சுட்டும் நம் நெஞ்சில் கொட்டு;ம் கல்வாரி நோக்கிய இயேசுவின் சிலுவைத் தாங்கிய மீட்பின் வெற்றிப் பவனியா…….?

14. இல்லை, இல்லை, தன்யினம் அழிக்கப்பட்டபோது துடித்துயெழுந்த மக்கபேயராகிய மத்தத்தியா, யூதா மக்கபேயரின் விடுதலை படையின் அணிவகுப்பு பவனியா?

15. இல்லை…….. எஸ்ரா1:5ல் நாம் காணும் சைரஸின் ஆணையில் பிறந்த விடுதலை நோக்கிய தாய் மண் நோக்கிய பவனியா……..?

நம்மவர் விடுதலைப் பெறுவது எப்போது, வந்தேறிகளின் கொடுங் கைகள் உடைக்கப்பட்டு மண்ணின் மைந்தர்கள் அரியணை ஏறுவது எப்போது? இதோ நம் மண்ணின் மைந்தர் பாஸ்டின் சாஜி புறப்பட்டுவிட்டார். வன்னிகாடு மறந்து மட்டகளப்பு மறைத்தலத்தில் ஒரு மோயீசனா! வில்லிருந்து புறப்பட்ட அம்பு வீழுமா இல்லை முறிக்கப்படுமா? இதோ புறப்பட்டு விட்டடார். நம் திருத்தொண்டர் பாஸ்டின் சாஜி, தன் ஆயர் தலைமையில், மக்களின் அடிமை விலங்குகள் தகர்த்தெரிய.

திருப்பலி முன்னுரை

இயேசுவின் சிலுவையை நெஞ்சில் சுமந்து, மக்களின் சிலுவையை இறக்கி வைப்பவர் தானே குருவானவர். குருத்துவப் பாதை பசும்புல் பாதையல்ல. கல்வாரிப்பாதையே! பாண்டிய மன்னர்கள் கண்ட குமரி பெருங்கடலில் கரையாது திருஅவைக்கு கலங்கரை விளக்காய் திகழும் அழகப்பபுரத்திற்கு இது ஒரு பேறுபெற்ற நன்னாள். ஆம் அழகப்பபுரத்தின் 25வது குருவாக நம் திருத்தொண்டர் பாஸ்டின் சஜி குருவாக திருநிலைப்படுத்தப்பட போகின்ற நன்னாள். இன்றுவரை இயேசுவை பகிர்ந்தளித்த இவர், இன்றுமுதல் இயேசுவை, கல்வாரி நினைவுப் பலி மூலம் பெற்று தருகின்ற, முப்பெரும் பணிகள் செய்கின்ற இறை ஊழியராக உயரவிருக்கின்றார். இவரின் சிறப்பென்ன? நமக்கு தாய் தமிழகமான ஈழத்திருக்கு திரும்பி சென்று இறைப்பணியாற்ற முன் வந்திருப்பதே. இவரை திருநிலைப்படுத்த வந்திருக்கும் மட்டகளப்பு ஆயர் பொன்னையா அவர்களை வாழ்த்தி அவர் உரை கேட்போம். இத்தெய்வீகப் பலியில் திருத்தொண்டர் பாஸ்டின் சாஜியுடன் இணைந்து நம் மண்ணின் இறைப்பணியாளருக்காக மன்றாடுவோம்.

சபை மன்றாட்டு

அனைத்தையும் அமைத்தாளும் இறைவா,
உம் ஒரே மகனை என்றென்றும் பெரிய குருவாக ஏற்படுத்தினீர்
தம்முடைய பணியாளராகவும் மறைபொருள்களின் கண்காணிப்பாளராகவும்
அவர் தேர்ந்துகொண்ட மறைப்பணியாளர்கள்,
தாங்கள் ஏற்றுக்கொண்ட பணியை நிறைவேற்றுவதில்,
உண்மையுள்ள ஊழியராய் விளங்கச் செய்தருளும்.
உம்மோடு…

அல்லது

சபை மன்றாட்டு

அன்புமி;க்க இறைவா,
நீர் உம் மக்களை வழிநடத்துவத்ற்கு
மறைப்பணியாளர்களின் தொண்டினைப் பயன்படுத்துகின்றீர்;
எனவே, உமது திருவுளத்திற்கு ஏற்றவாறு பணிபுரிவதில்
மறைப்பணியாளர்கள் இறுதிவரை நிலைத்திருக்கச் செய்தருளும்.
இவ்வாறு தங்கள் மறைப்பணியாலும் புனித வாழ்க்கையாலும்
அவர்கள் கிறிஸ்துவில் உமக்கு மிகுந்த மகிமை அளிப்பார்களாக. உம்மோடு…

முதல் வாசக முன்னுரை
எரேமியா 1:3-12

இறைவனின் வார்த்தையை அப்படியே எடுத்துரைக்க அஞ்சாதவர்கள் இறைவாக்கினர்கள். இறைவனுக்கு முப்பொழுதும் ஒன்றே. இதோ எரேமியா தனது அழைத்தல், தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே, திருநிலைப்படுத்தின கொடை எதற்காக?.... தவறுகளைச் சுட்டிக்காட்ட, தீமைகளைஅழிக்க, அடிமைப்படுத்தப்பட்டோரை விடுவிக்க என்ற நற்செய்தியை உலகிற்கு அறிவிக்க. இறைவன் தன் ஊழியருடன் உடனிருக்கிறேன் என்றும் எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்கு செவிமடுப்போமா?

இரண்டாம் வாசக முன்னுரை
எபிரேயர் 5:1-6

குருக்கள் மக்கள் சார்பாக கடவுளுக்கு முன் பணியாற்ற அழைக்கப்படுகின்ற இடைநிலையாளர்கள்… இவர் குற்ற இயல்புடைய தனக்காகவும், மக்களின் குற்றங்கள், மற்றும் பாவங்களுக்காக பலி செலுத்துகின்றவர். மெல்கிசதேக்கின் முறைமைப்படி என்றென்றும் குருவானவர் ஒரு குரு. குருத்துவம் இறைவனின் கொடை என்றுரைக்கும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போமா?

(நற்செய்திக்குப்பின் குருப்பட்ட நிகழ்வு ஆரம்பமாகிறது)

குருத்துவ திருநிலைப்பாட்டு சடங்கு

1. பெற்றோரிடம் ஆசீர்
தலைபேறு ஆண்டவருக்கென அர்ப்பணம் செய்யப்பட்டது. (வி.ப.13:12) என்பதற்கு ஏற்ப திருத் தொண்டர் அ. பாஸ்டின் சஜி அவர்கள் தன் கண்முன் காணும் தெய்வங்களான பெற்றோரிடம் சென்று ஆசீர் பெற்று வருகின்றார். இப்போது ஆயர் அவர்கள் திருப்பலி மேட்டின் முன் உரிமையுடைய ஆயர் தம் தலைச்சீராவுடன் அமர்வார்கள். அனைவரும் அமர்ந்திருப்போம்.

2. ஆசீர் பெற்று திரும்பிய பின்
திருத்தொண்டர் அ. பாஸ்டின் சஜி அவர்கள் அவரின் அவையின் பொறுப்பாளரால் குருத்துவத்தை ஏற்க அழைக்கப்படுவார். இவரும் இதோ வருகிறேன் என்று முகம் மலர கூறி ஓரிரு அடிகள் முன் வருவார்.

ஒரு : குருவாகத் திருநிலைப்படுத்தப்பட வேண்டியவர்(கள்) முன் வருக.

(பெயர்(கள்)) : திருத்தொண்டர் பாஸ்டின் சஜி...

பெறுவோர் :இதோ வருகிறேன்.

3. முன் வந்ததும் தகுதியை ஆயர் கேட்டு அறிதல்
"பாத்திரம் அறிந்து பிச்சையிடு கோத்திரம் அறிந்து கொள்வன கொடுப்பன செய்" என்ற தமிழ் கூற்றுக்கு ஏற்ப இப்போது ஆயர் அவர்கள் திருத்தொண்டர் அ. பாஸ்டின் சஜி அவர்கள் இறைவனின் தலைசிறந்த அழைப்பாகிய குருத்துவ அழைத்தலைப் பெற இவர் தகுதியுடையவர்தான என்பதை அறிய இவரை குருத்துவத்திற்கு பரிந்துரைக்கும் மேலாளரிடம் கேட்டு ஆய்ந்து அறிய வருகின்றார்… ஆயர் இவரை குருத்துவ நிலைக்குத் தேர்ந்து கொள்கிறோம் என்றதும் மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'இறைவனுக்கு நன்றி' என்று பதில் அளிக்கவும்.

குரு : பேரருள் தந்தையே, நம் சகோதரர் இவரை(களை)க் குருவாகத் திருநிலைப்படுத்த அன்னையாம் திருச்சபை தங்களைக் கேட்டுக்கொள்கின்றது.

ஆயர் : இப்பணிக்கு இவர்(கள்) தகுதியுள்ளவர்(கள்) என உமக்குத் தெரியுமா?

குரு : கிறிஸ்தவ மக்களைக் கேட்டறிந்ததிலிருந்தும் இவருக்குப் பயிற்சியளித்தவர்களின் பரிந்துரைகளிலிருந்தும், இவர் தகுதியுள்ளவர் எனச் சான்று பகர்கின்றேன்.

ஆயர் : நம் இறைவனும் மீட்பருமான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் துணையில் நம்பிக்கை வைத்து, நம் சகோதரர் இவரை(ர்களை)க் குருத்துவ நிலைக்குத் தேர்ந்து கொள்கிறோம்.

எல் : இறைவனுக்கு நன்றி !

4. ஆயரின் அறிவுரைகள்
ஈழத்து ஆயர் மேதகு சோசப் பொன்னையா அவர்கள் திருநிலைப்படுத்தும் பொறுப்பினை ஏற்றிருப்பதால், மக்களுக்கும், திருத்தொண்டருக்கும், பொதுக்குருத்துவத்தின் சிறப்பையும், பணிக்குருத்துவத்தின் மாண்பினையும், இயேசுவின் குருத்துவத்தில் அடங்கியுள்ள இடித்துரைக்கும் இறைவார்த்தையை எடுத்துரைத்தல், தூய்மைப்படுத்தும் அர்ச்சிப்பு, வழிநடத்தும் இறையரசுப் பணி என்னும் முப்பெரும் பணிகளின் சிறப்பை எடுத்துரைப்பார். அனைவரும் அமர்ந்து அறிவுரையைக் கேட்போம்.

(ஆயர் தொடர்ந்து குருக்களின் கடமைகளைப் பற்றி மறையுரை ஆற்றுகிறார்.)

அன்பு மிக்க சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் உறவினர் அல்லது நண்பரான இவரை குருத்துவ நிலைக்கு உயர்த்த வேண்டிய இந்நேரத்தில் எத்தகைய நிலையைத் திருச்சபையில் இவர் அடையவிருக்கின்றார் என்று நீங்கள் கருத்துடன் சிந்திக்க வேண்டும்.

இறைவனின் புனித மக்கள் அனைவரும் கிறிஸ்துவில் அரச குருத்துவத் திருக்கூட்டம் ஆகின்றனர் என்பது உண்மை. ஆயினும், நம் பெரிய குருவாகிய இயேசுகிறிஸ்து திருச்சபையில் குருத்துவப் பணியைத் தமது பெயரால் மக்களுக்கு நிறைவேற்ற சீடர் சிலரைத் தேர்ந்தெடுத்தார். எவ்வாறெனில் தந்தை அவரை அனுப்பினதுபோல் அவரும் ஆசிரியர், குரு, மேய்ப்பர் என்ற தம் முப்பணியைத் தொடர்ந்தாற்ற திருத்தூதர்களையும் அவர்கள் வழிவரும் ஆயர்களையும் உலகிற்கு அனுப்பினார். குருக்களோ ஆயரின் நிலைக்கு உதவியாளராக நியமனம் பெறுகின்றனர். ஏனெனில், குருக்கள் ஆயரோடு குருத்துவப்பணியில் ஒன்றித்து, இறைமக்களுக்கு ஊழியம் செய்ய அழைக்கப் பெறுகின்றனர்.

இச்சகோதரர் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்தபின் குருவாக திருநிலைப்படுத்தப்பட இருக்கிறார். ஆசிரியரும், குருவும், மேய்ப்பருமான கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை இறைமக்களாகவும் திருக்கோயிலாகவும் உருவாக்கி வளர்ப்பதே இவரது பணியாகும்.

என்றென்றும் பெரிய குருவாம் கிறிஸ்துவைக் கண்டுபாவிக்கவும் ஆயரின் குருத்துவத்தில் இணைக்கப்பெறவும் இவர் புதிய ஏற்பாட்டின் மெய்யான குருவாக திருநிலைப்படுத்தப் பெறுவார். இதனால், இவர் நற்செய்தியை எடுத்துரைப்பார், இறைமக்களை வழிநடத்துவாh,; திருவழிபாடு நிகழ்த்துவாh,;;;; சிறப்பாக ஆண்டவரின் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்.

அன்புமிக்க மகனே, நீர் குருத்துவ நிலையை அடையப் போகிறீர். மகிழ்ச்சியுடன் நீர் பெற்றுக் கொண்ட கடவுளின் வார்த்தையை, ஆசிரியராகிய கிறிஸ்துவின் பெயரால் யாவருக்கும் எடுத்துரைத்துப் போதகப் பணியைக் கடமையுணர்வுடன் நிறைவேற்றும். ஆண்டவரின் நெறிகளை மனதிற்கொண்டு, நீர் படிப்பதை விசுவசிக்கவும், விசுவசிப்பதைப் போதிக்கவும், போதிப்பதைப் பின்பற்றவும் கருத்தாய் இரும்.

எனவே உம் போதனை இறைமக்களுக்கு ஊட்டமளிக்கும் உணவாய் இருக்கட்டும். உம் வாழ்வின் நறுமணம் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக. இவ்வாறு உம் சொல்லாலும் செயலாலும் கடவுளின் திருச்சபையாகிய ஆலயத்தைக் கட்டியெழுப்பும்.

மேலும், கிறிஸ்துவின் அர்ச்சிக்கும் பணியையும் நீர் நிறைவேற்றும். ஏனெனில், உம் கையினால்தான் கிறிஸ்துவின் திருப்பலி அருட்சாதன முறையில் பீடத்தின்மீது ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. இப்பலியோடு விசுவாசிகளின் ஆன்மப் பலிகளை இணைத்து நிறைவுறச் செய்வதும் உம் பணியே; ஆகவே நீர் செய்வதன் உட்பொருளை உணர்ந்து கொள்ளும். நிகழ்த்தும் பலிக்கேற்றப்படி வாழ்க்கை நடத்தும். அப்பலியில் ஆண்டவருடைய இறப்பு உயிர்ப்பு என்ற மறை நிகழ்ச்சிகளை நீர் கொண்டாடுவதால் உம்மையே தியாகப் பலியாக்கிப் புத்துயிர் பெற்றவராய் வாழக்கருத்தாய் இரும்.

திருமுழுக்கின் வழியாக, மனிதரை இறைமக்கள் கூட்டத்தில் சேர்ப்பது; ஒப்புரவு அருட்சாதனத்தால், கிறிஸ்துவின் பெயராலும் திருச்சபையின் பெயராலும் மன்னிப்பது, திரு எண்ணெய் ப+சி நோயாளிகளுக்கு நலமளிப்பது, திருவழிபாடு நிறைவேற்றுவது; இறைமக்களுக்காக மட்டுமின்றி உலகம் அனைத்திற்காவும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரங்களில் நன்றி கூறிப் புகழுரைத்து மன்றாடுவது - இவையாவும் உம் கடமையாகும். நீர் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்று கடவுளைச் சார்ந்தவற்றிற்கென மனிதரின் சார்பாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறீர் என்பதை மறக்க வேண்டாம். எனவே பெரிய குருவாகிய கிறிஸ்துவின் பணியை மனமுவந்து மெய்யன்புடன் நிறைவேற்றும். உம் நலத்தையன்று; கிறிஸ்துவுக்கு உரியவற்றையே தேடும்.

இறுதியாக அன்புமிக்க மகனே, திருச்சபையின் தலைவரும் ஆயருமான கிறிஸ்துவின் பணியைத் தொடர்ந்து நடத்தும். நீர் பணியாற்றும் மறைமாவட்டத்தின் ஆயருடனும், உம் சபைத் தலைவருடனும் மனமொத்து, கீழ்ப்படிதலுடன் பணி புரியும். கிறிஸ்தவ விசுவாசிகளை ஒரே குடும்பமாக இணைக்கக் கருத்தாய் இரும். இவ்வாறுதான் நீர் அவர்களைக் கிறிஸ்து வழியாகத் தூய ஆவியில் தந்தையாகிய இறைவனிடம் கொண்டு சேர்க்க முடியும். நல்லாயனின் முன்மாதிரியை என்றும் உம் கண்முன் நிறுத்தி அவர் பணிவிடை பெறுவதற்கன்று; பணிவிடை புரிவதற்கே வந்தார் என்றும், இழந்துபோனதைத் தேடி மீட்க வந்தார் என்றும் நினைவில் கொள்வீராக

5. மறையுரை முடிந்தப்பின்
குருத்துவ பணி ஏற்புக்கு தேவையான முதன்மை பண்பு குருப்பட்டத்தை ஏற்போரின் இயல்பான யாருடைய நேர்முக மறைமுக கட்டாயமில்லாத விருப்பமே. இவ்விருப்பத்தை, இக்கருத்தை உடைந்த ஈழத்து ஆயர், உடையா உள்ளத்துடன், நம்பிக்கையுடன் கேட்கின்றார். நான்கு முறை விரும்புகிறேன் என்றும், ஐந்தாம் முறை 'இறைவனின் துணையை நம்பி நான் விரும்புகிறேன்.' எனவும் நம் திருத்தொண்டர் பதில் தருவார்.

ஆயர் : அன்பு மகனே, (மக்களே) நீர் (நீங்கள்) குருத்துவ நிலை பெறுமுன் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்திருக்கிறீர் என்று இத்திருக்கூட்டத்திற்குமுன் எடுத்துரைப்பது பொருத்த மானதாகும்.

எனவே, நீர் (நீங்கள்) குருத்துவநிலையில் இருந்துகொண்டு ஆயர் நிலையில் இருப்போருக்கு உண்மையான உதவியாளராக விளங்கி, தூய ஆவியின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஆண்டவருடைய மந்தையை இடைவிடாமல் மேய்த்து உம் (உங்கள்) பணியை நிறைவேற்ற விரும்புகிறீரா?(ர்களா?)

பெறு : விரும்புகிறேன்

ஆயர் : நற்செய்தியை அறிவிப்பது, கத்தோலிக்க விசுவாசத்தை விளக்குவது ஆகிய அருள்வாக்குப் பணியைத் தகுதியுடனும் ஞானத்துடனும் நிறைவேற்ற நீர் (நீங்கள்) விரும்புகிறீரா?(ர்களா?)

பெறு : விரும்புகிறேன்

ஆயர் : இறைவனின் மகிமைக்காகவும் கிறிஸ்தவ மக்களின் அர்ச்சிப்புக்காகவும் கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளை, சிறப்பாக நற்கருணைப் பலியையும் ஒப்பரவு அருட்சாதனத்தையும் திருச்சபையின் மரபுக்கேற்ப பக்தியுடனும் பிரமாணிக்கத்துடனும் நிறைவேற்ற நீர் (நீங்கள்) விரும்புகிறீரா?(ர்களா?)

பெறு : விரும்புகிறேன்

ஆயர் : இடையறாது செபிக்க வேண்டுமென்ற கட்டளைக்குப் பணிந்து, உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காக எம்மோடு இணைந்து இறைவனின் இரக்கத்தை இறைஞ்சி மன்றாட நீர் (நீங்கள்) விரும்புகிறீரா?(ர்களா?)

பெறு : விரும்புகிறேன்

ஆயர் : நமக்காகத் தம்மையே தூய பலிப்பொருளாகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்த நம் பெரிய குருவாகிய கிறிஸ்துவுடன் நீர் (நீங்கள்) நாளுக்கு நாள் நெருங்கி ஒன்றித்து மனிதரின் மீட்புக்காக அவரோடு உம்மையே கடவுளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறீரா?(ர்களா?)

பெறு :இறைவனின் துணையை நம்பி நான் விரும்புகிறேன்.

6. கீழ்ப்படிதல் வாக்குறுதி
இயேசுவின் தலைசிறந்த பண்பு, தந்தைக்கு சிலுவைச் சாவு மட்டும் கீழ்படிந்திருந்தது. இன்று குருத்துவப் பணியை ஏற்க விரும்புவோர் பணியவும், குனியவும், குறையவும், மறையவும், இழக்கவும், ஈர்க்கவும் தயாராக இருக்க வேண்டும். ஒரு துறவிக்கு கீழ்படிதல் மிகவும் முதன்மையானது. அதன் அடையாளமாக, வாழை மொட்டுப் போன்ற குவிந்த தன் கைகளை ஆயரின் அடைக்கலம் மிகுந்த கைகளில் ஒப்புகின்றார்.

(குருப்பட்டம் பெறுவோர் ஆயரின் முன் முழங்காலிருந்து, அவருடைய கைகளில் ஒப்புவிக்கும் முறையில் இருக்க)

ஆயர் : எனக்கும் என்; வழி வரும் ஆயருக்கும் நீர்; வணக்கமும் கீழ்ப்படிதலும் தர வாக்களிக்கிறீரா?

பெறு : வாக்களிக்கிறேன்.

(If the Bishop is not the candidate's own Ordinary, he asks:)

ஆயர் : உம் ஆயருக்கு நீர் வணக்கமும் கீழ்ப்படிதலும் தர வாக்களிக்கிறீரா?

பெறு : வாக்களிக்கிறேன்.

ஆயர் : இந்த நற்செயலை உம்மிடம் தொடங்கிய கடவுள் அதை நிறைவுறச் செய்வாராக.

(அனைவரும் நிற்க,)

7. புனிதர்கள் மன்றாட்டுமாலை
தூயவர்கள் இயேசுவை தங்களின் வாழ்க்கையில் அடையாளம் காட்டியவர்கள். நம் நலனின் மீது அக்கறைக் கொண்டவர்கள். இப்போது தூயவர்களின் மன்றாட்டு மாலை பாடப்படும்;. அந்நேரத்தில் திருத்தொண்டர் தன்னுடைய வெறுமையை இறைவனுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்தும் முகமாகவும், மோசே, ஆரோன் போல குப்புறவிழுந்து மன்றாடுவார். இறைமக்கள் வசதிக்கு ஏற்ப (முழந்தாள்படியிடலாம் அல்லது) எழுந்து நிற்கவும். இறுதி வேண்டுதலை ஆயர் உயர்த்தக்குரலில் சொல்லி இறைவனை வேண்டுவார்.

ஆயர் : அன்புச் சகோதரரே, எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவன், தாமே குருத்துவப் பணிக்குத் தேர்ந்தெடுத்த இவ்வூழியர்(கள்) மீது தம் வானகக் கொடைகளைப் பொழியுமாறு மன்றாடுவோம்.

ஒரு : முழந்தாழிடுவோமாக !

(அனைவரும் முழந்தாழிட, குருப்பட்டம் பெறுவோர் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்க, புனிதர்களின் மன்றாட்டு மாலை பாடப் படுகிறது)

( இறைஅலைகள் பாடல் :1201)

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
புனித மரியாயே, இறைவனின் தாயே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித மிக்கேலே
இறைவனின் புனித தூதர்களே
புனித சூசையப்பரே
புனித ஸ்நானக அருளப்பரே
புனித இராயப்பரே, சின்னப்பரே
புனித பெலவேந்திரரே
புனித அருளப்பரே
புனித மரிய மதலேனம்மாளே
புனித முடியப்பரே
புனித லவுரேஞ்சியாரே
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே
புனித அஞ்ஞேசம்மாளே
புனித பெர்பேத்துவா, பெலிசித்தம்மாளே
புன்pத கிரகோரியாரே
புனித அகுஸ்தீனாரே
புனித அத்தனாசியாரே
புனித பசிலியாரே
புனித மார்த்தீனாரே
புனித ஆசீர்வாதப்பரே
புனித பிராஞ்சீஸ்குவே, சாமிநாதரே
புனித பிராஞ்சீஸ்கு சவேரியாரே
புனித வியான்னி மரிய அருளப்பரே
புனித தெரேசம்மாளே
புனித சீயன்னா கத்தரீனம்மாளே
இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே

கருணைகூர்ந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தீமை அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பாவம் அணைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே
நித்திய மரணத்திலிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மனிதவதாரத்தினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மரணத்தினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பரிசுத்த ஆவியின் வருகையினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே

உமது பரிசுத்த திருச்சபையை ஆண்டு காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…..
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருச்சபைத் தலைவரையும், திருநிலைகளில் பணியாற்றும் அனைவரையும், திருமறை வாழ்வில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைத்துலக மக்களுக்கும், சமாதானமும் மெய்யான ஒற்றுமையும் தந்தருளவேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உமது புனித ஊழியத்தில், எங்களை உறுதிப்படுத்திக் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
தேர்ந்துகொள்ளப்பெற்ற இவரை, ஆசீர்வதிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
தேர்ந்துகொள்ளப்பெற்ற இவரை ஆசீர்வதித்து, புனிதப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
தேர்ந்துகொள்ளப்பெற்ற இவரை ஆசீர்வதித்து, புனிதப்படுத்தி, அர்ச்சிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிர்வாழும் கடவுளின் திருமகனாகிய யேசுவே, உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்களுக்குச் செவிசாய்த்தருளும் (2)
கிறிஸ்துவே எங்களுக்குச் செவிசாய்த்தருளும் (2)

8. நிறைவுச் செபம்
(ஆயர் மட்டும் எழுந்து நின்று)

ஆயர் : ஆண்டவரே, எம் இறைவா, எங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். உம் ஊழியர் இவரை(ர்களை) நீர் அர்ச்சிக்குமாறு இரக்கம்மிக்க உம் திருமுன் அழைத்து வந்துள்ளோம். இவர்(கள்) மீது தூய ஆவியின் ஆசியையும், குருத்துவ அருளின் ஆற்றலையும் பொழிவீராக. இவ்வாறு உம் கொடைகளை எந்நாளும் இவர்(கள்) நிறைவாய்ப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

ஒரு : எழுந்து நிற்போமாக !

8. தொடர் மன்றாட்டு முடிந்து
இது முதன்மையான நேரம். தூய பவுல் 2திமோ 1:6ல் சொல்லுவது "உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்திய போது உனக்குள் எழுந்த கடவுளின் அருட்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்" என்கிறார். இப்போது ஆயர் திருத்தொண்டரின் தலையின் மீது தனது அர்ச்சிக்கும் ஆசீர் நிறைந்த கைகளை வைத்து அமைதியுடன் மன்றாட இப்பலியில் பங்கெடுக்கும் அனைத்துக் குருக்களும், தாங்களும் அருள் ஆசீர் நிறைந்த கைகளை வைத்து தூய ஆவியைப் பொழிய அமைதியாக மன்றாடுவார்கள். இறைமக்கள் இருந்த இடத்திலிருந்தே மன்றாடுவர். தேவையான தூய ஆவியாரின் பாடல்கள் பாடப்படும்.

(அனைவரும் எழுந்து நிற்க, குருப்பட்டம் பெறுவோர் ஒவ்வொருவராக ஆயர் முன் செல்ல, ஆயர் அவர் மேல் தம் இருகைகளையும் வைத்து மெளனமாக செபிக்கிறார் அவ்வாரே அங்கிருக்கும் குருக்கள் அனைவரும் தம் கைகளை வைத்து மெளனமாக செபிக்கின்றனர். பிறகு குருப்பட்டம் பெறுவோர் ஆயருக்கு முன் முழந்தாளிட, ஆயர் திருநிலைப்படுத்தும் செபத்தைச் சொல்லுகிறார்.

9. ஆயர் திருப்பொழிவு செய்தல்:
யோவான் 17:1 "தந்தையே நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்" என்ற இயேசுவின் கூற்றுக்கு ஏற்ப, இறைமக்கள் திருத்தொண்டர் அ. பாஸ்டின் சஜியை குருவாக இறைவேண்டுதல் புரியும் நேரம். ஆயர் திருநிலைப்பாட்டு வேண்டுதல் முடிக்க அந்த நொடியிலிருந்து இவர் குருவாக உயர்கின்றார்.

ஆயர் : ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! எங்களுக்குத் துணையாக வந்தருளும். மனித மாண்பின் ஊற்றும் அனைத்து அருட்கொடைகளின் வள்ளலும் நீரே. அனைத்தும் உம்மால் தோன்றுகின்றன. உம்மால் நிலைபெறுகின்றன. குருத்துவ மக்களினத்தைக் கிறிஸ்துவின் திருப்பணியாளர்களாய் உருவாக்க தூய ஆவியின் ஆற்றலினால் அம்மக்களிலே வெவ்வேறு நிலைகளை ஏற்படுத்துபவர் நீரே.

பழைய உடன்படிக்கையின்போதே, மறைபொருளாக அமைந்திருந்த அருட்சாதனங்கள் வழியாக ஏற்படுத்தப்பட்ட பணி நிலைகள் வளரலாயின. மக்களை ஆண்டு நடத்திப் புனிதப்படுத்த மோசேயையும் ஆரோனையும் நியமித்தபோது அவர்களுடன் தோழமை கொண்டிருக்கவும் அவர்களது பணியில் துணை நிற்கவும் நீர் பல்வேறு நிலையிலும் மாண்பிலும் மனிதர்களைத் தேர்ந்தெடுத்தீர்.

எவ்வாறெனில் பாலைவனத்தில், மோசேயின் மனநிலையை விவேகமுள்ள எழுபதுபேருக்கு அளித்து, அவர்கள் வழியாகப் பரவச் செய்தீர். அவர்களை உதவியாளர்களாகப் பயன்படுத்தி மோசே உம் மக்களை எளிதாக வழி நடத்தினார்.

அவ்வண்ணமே வரப்போகும் நலன்களின் நிழல்போல் அமைந்திருந்த கூடாரப் பலிகள், குருக்களின் சட்ட முறைமைப்படி குறைவுப்படாமல் நிகழ்ந்திட ஆரோனின் வழிவந்தோர்மீது அவர்தம் தந்தைக்குரிய நிறைவின் வளமையை வழிவழியாய்ப் பொழிந்தீர்.

தூயவரான தந்தையே, இறுதியாக உமது திருமகனையே இவ்வுலகுக்கு அனுப்பிவைத்தீர். அந்த இயேசுவையே தனிப்பெரும் திருத்தூதர் என்றும், தலைமைக்குரு என்றும் நாங்கள் அறிக்கையிடுகிறோம்.

இவரே தூய ஆவி வழியாக மாசற்ற காணிக்கையாகத் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்தார். தம் திருத்தூதர்களை உண்மையினால் புனிதப்படுத்தித் தம் பணியில் பங்கேற்கச் செய்தார். அவர்களோடு மீட்பு பணியை உலகெங்கும் அறிவிக்கவும் செயல்படுத்தவும் நீர் அவர்களுக்கு உதவியாளர்களைத் தந்தீர்.

இப்போதும் ஆண்டவரே வலுக்குறைந்த எமக்கு இத்தகைய உதவியாளரைத் தந்தருள உம்மை மன்றாடுகிறோம். திருத்தூதருக்குரிய குருத்துவப் பணியில் எமக்கு இவர் தேவைப்படுகிறார்.

எல்லாம் வல்ல தந்தையே, உம் அடியாராகிய இவருக்குத் குருத்துவ நிலைக்குரிய மாண்பினை அளித்தருள உம்மை மன்றாடுகிறோம். இவருடைய உள்ளத்தின் ஆழத்தில் புனிதத்தின் ஆவியைப் புதுப்பித்தருளும். இறைவா, உமது கொடையாகக் குருத்துவத்தின் இரண்டாம் நிலைக்குரிய பொறுப்பை இவர் பெற்றுக்கொள்வாராக. தம் சிறந்த வாழ்வால் நன்னடத்தைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்வாராக.

இறைவா, இவர் தம் ஆயருக்கும், தம் சபைத் தலைவருக்கும்; தகுந்த உதவியாளராய் இருப்பாராக. இவர் போதனையின் வழியாகத் தூய ஆவியின் அருளால், நற்செய்தியின் வார்த்தைகள் உலகின் கடை எல்லைவரை மனிதரின் உள்ளங்களில் நிறைபலன் தருவனவாக.

உம்முடைய மக்கள் மறுப்பிறப்பளிக்கும் திருமுழுக்கால் புதுப்பிக்கப்படவும், உமது திருப்பீடத்திலிருந்து திருவுணவு உண்டு ஊட்டம் பெறவும், பாவிகள் ஒப்புரவாக்கப்படவும், பிணியாளர்கள் வலுப்பெற்றெழவும் இவர் எம்மோடு சேர்ந்து உம்முடைய மறைபொருள்களைப் பிரமாணிக்கமாய் வழங்குவாராக.

ஆண்டவரே, இவரிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காகவும் உலகம் அனைத்திற்காவும் உமது இரக்கப் பெருக்கத்தை இறைஞ்சி மன்றாட எம்மோடு இவர் இணைந்திருப்பாராக.

இவ்வாறு, அனைத்து நாடுகளும் கிறிஸ்துவில் ஒன்று சேர்க்கப்பட்டு உமது அரசில் ஒரே மக்கள் குலமாக மாற்றம் அடைவனவாக.

உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

10. திருவுடை அணிவித்தல்
எனக்கு குருத்துவப் பணிபுரியுமாறு ஆரோனைத் திருநிலைப்படுத்துவதற்காக திறமை வாய்ந்த வல்லுநர்கள் திருவுடைகள் செய்வார்கள்(வி.ப 28:2-3) என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப தன் மைந்தனுக்கு முதல் தரமான ஆடைகளை உடுத்துங்கள் (லூக்15:22) என்ற தந்தையின் கூற்றுக்கேர்ப்ப புதியக் குருவுக்கு குருத்துவ திருவுடைகள் அணிவிக்கப்படுகின்றது.

11. திருஎண்ணை பூசல்
தம் தமிழ் பண்பாட்டில் எண்ணைச் சடங்குகள் (நிகழ்வுகள்) என பல உண்டு. திருப்பொழிவு எண்ணெயை எடுத்துவந்து, அவன் தலைமேல் ஊற்றி அவனுக்கு அருள்பொழிவு செய் என வி.ப. 29:7 சொல்கின்றது. சாமுவேல் தாவீதை திருயெண்ணெயால் பூச, தூய ஆவியானவர் அவர்மீது நிறைவாக இருந்தது என 1சாமு 16:13 சொல்கின்றது. ஆயர் முன் விரிந்த தன் இரு கைகளோடு நிற்கின்றார் நம் புதிய குரு.

ஆயர் : (குருப்பட்டம் பெறுபவரின் உட்கைகளில் பரிமள தைலம் பூசி) தூய ஆவியினாலும், அருளாற்றலினாலும் தந்தையாம் இறைவன் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் திருநிலைப்படுத்தினார். இறைவனுக்குப் பலி செலுத்தவும் கிறிஸ்தவ மக்களைப் புனிதப்படுத்தவும் வேண்டிய அருளை அதே இயேசு கிறிஸ்து உமக்கு வழங்கி உம்மைக் காப்பாராக.

எல் : ஆமென்.

12. அப்பத் தட்டும் இரசக் கிண்ணமும் அளித்தல்
நிறை நன்மையின்றி கிறிஸ்தவர்களின் வாழ்வில்லை நிறை நன்மையைத்தருவது திருப்பலி அத்திருப்பலியை நிறைவேற்றுவது ஒரு குரு. இதோ திருப்பலிக்குரிய அர்ப்பண பொருட்களை, தன்முன் முழந்தாள் படியிட்டுநிற்கும் புதிய குருவின் கைகளில் ஒப்புவிக்கின்றார். திருநிலைப்படுத்திய மறை ஆயர் அவர்கள்.

(தூய ஆவியாரின் பாடல் அல்லது சங்கீதம் 109 பாடப் படுகிறது. குருப்பட்டம் பெற்றவர்க்கு திருக்கிண்ணத்தையும் திருத்தட்டையும் அளித்து ஆயர் சொல்கிறார்:)

ஆயர் : கடவுளுக்கு ஒப்புக்கொடுக்குமாறு இறைமக்கள் கொண்டு வந்த இக்காணிக்கையை பெற்றுக் கொள்ளும். நீர் செய்வதின் உட்பொருளை உணர்ந்து கொள்ளும். நீர் நிகழ்த்த விருக்கும் திருச்சடங்கிற்கு ஏற்றபடி புனிதராயிரும். திருச்சிலுவையின் மறையுண்மைக்கு ஏற்ப உமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்.

13. அமைதியின் முத்தம் வழங்குதல்
தங்களை ஆரத்தழுவிக் கொண்ட எலிசபெத் அன்னை மரியாள் போல, குருத்துவம் வழங்கிய ஈழத்து ஆயர் பேரரருட்திரு ஜோசப் பொன்னையா அவர்கள், குருத்துவ திருப்பொழிவைப் பெற்ற பாஸ்டின் சஜியைத் தழுவி அமைதியின் முத்தத்தை வழங்குகின்றார்.

இறை அமைதி உம்மோடு இருப்பதாக.

புதிய குரு : உம்மோடும் இருப்பதாக.

காணிக்கை பவனியுடன் திருப்பலி தொடர்கிறிது...

காணிக்கை மன்றாட்டு

எங்கள் அன்புத் தந்தையே, உம்முடைய மறைப்பணியாளர்கள் பீடத்தில திருப்பணியாற்றவும் இறைமக்களுக்குச் சேவை செய்யவும் வேண்டுமென்று திருவுளமானீரே அவர்களது ஊழியம் உமக்கு உவப்பு அளித்து, என்றும் நிலைத்திருக்கும் நற்கனிகளைத் திருச்சபைக்குக் கொடுப்பதாக. இந்த வரத்தை இத்திருப்பலியின் ஆற்றலால் தயவாய்த் தர வேண்டுமென்று, எங்கள்…

நன்றி மன்றாட்டு

இறைவா, உம்முடைய மறைப்பணியாளர்களும் மக்காளகிய நாங்கள் அனைவரும் சேர்ந்து உமக்கு ஒப்புக்கொடுத்து உட்கொண்ட இத்திருவுணவுக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். நீர் எங்களுக்கு வழங்கிய மறைப்பணியாளர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்களை நீர் உமது அன்பில் என்றும் நிலைத்திருக்கச் செய்து, உமக்கு மக்கள் எல்லார்க்கும் பணிவுடன் தொண்டாற்றச் செய்தருளும். எங்கள்…

திருப்பலி முடிவில் ஆயரின் இறுதி ஆசீருக்குப் பின்..

14. புதிய குருவின் ஆசீர்
புதிய குருவின் ஆசீரை, திருப்பட்டம் வழங்கிய ஈழத்து ஆயரே தலை வணங்கி பெறும் போது நாமும் தலைவணங்கி பெறுவோமா?
(ஆயர் பலிபீடத்தின் முன்பாக நின்று புதிய குருவின்(க்களின்) ஆசீரைப் பெறுகின்றார்).

புதிய குரு(க்கள் இணைந்து) : எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவி உங்களை ஆசீர் வதிப்பாராக!

அனைவரும் : ஆமென்

குரு: சென்று வாழுங்கள், திருப்பலி நிறைவேறிற்று

மக்கள்: இறைவா உமக்கு நன்றி.

குருத்துவ மகிழ்ச்சிப் பாடல்: ( இறைஅலைகள் பாடல் :1198a)
("இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள் மயமே" என்ற பாடல் மெட்டு)

மகிழ்ந்திடாய் மானிலமே
உந்தன் மைந்தரின் மாட்சியிலே
இன்று பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால்
இன்பு புகழ்திடாய் திருமறையே

1. உலகத்தின் பேரோளியாய் - வாழும்
உள்ளத்தின் ஆறுதலாய்
எந்த காலமும் வாழ்திடும் எழில் நிலையாம்
இன்பக் காட்சியே குருத்துவமே

2. குருத்துவ நீர் சுணையால் -திகழ்
கிறிஸ்துவை ஈன்றவளே
இன்று காய்ந்திடும் ஆறுக்கு
நீர் தெளிக்க வரும் குருக்களை காத்திடுவாய்

=============↑ பக்கம்

====================

image